PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 9



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

anm
18th October 2011, 08:06 PM
Dear Karthick Sir,

It was a re-enactment of those lovely days and how we were all overwhelmed by our Greatest Actor in the world.

An excellent Tribute by you for our Great Man.

Anm

RAGHAVENDRA
18th October 2011, 09:32 PM
டியர் பிரபுராம்,
எப்போதும் விடிவெள்ளி படம் தான் உங்கள் பதிவைக் கண்டதும் என் நினைவுக்கு வருகிறது. நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர்களைத் தங்களுடைய பெயரில் பதித்து என்றைக்கும் மறக்க முடியாத பெயரோடு திகழ்கிறீர்கள்.
எங்கிருந்தோ வந்தான் பாடலின் முடிவில் அந்த வீட்டின் வாசலில் நுழைவார், நுழையும் போதே வீட்டில் ஒரு விதமான அமைதி நிலவும், அதனைத் தான் உணர்வதைத் தன் முகத்திலேயே காட்டுவார், பின் ஒவ்வொரு பக்கமாகப் பார்த்துக் கொண்டே வருவார். அந்தக் காட்சி கிட்டத்தட்ட45 விநாடிகள் ஓடும், அதன் பிறகே ரங்கராவ் படத்தைப் பார்ப்பார். ஆனால் அந்த 45 விநாடிகள், பொதிகை ஒளிபரப்பில் இடம் பெறவில்லை. ஏதாவது தொழில் நுட்பக் காரணமாயிருந்திருக்கலாம். அதன் பிறகு அவர் உள்ளே கண்ணாம்பா அவர்களை அந்தக் கோலத்தில் கண்டதும் தன் உணர்வினைக் கட்டுப்படுத்த இயலாமல் தன் சோகத்தை வெளிப்படுத்துவார்.

உலகத்தில் எத்தனை நடிப்புக்கல்லூரிகள் உள்ளதோ அத்தனையிலும் பாடம் எடுக்க நிர்ணயிக்க வேண்டிய நடிப்பு....

இந்தப் படத்தைப் பற்றிய தங்களின் அற்புதமான கருத்துரை அத்தனை ரசிகர்களின் உள்ளத்தையும் பிரதி பலித்தது.

தங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

RAGHAVENDRA
18th October 2011, 09:58 PM
டியர் கார்த்திக்,
அக். 18, 1971ஐ கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். மறக்க முடியுமா அந்த நாட்களை...
தீபாவளியன்று சென்னையில் பார்க்க முடியாவிட்டாலும், உடனேயே ஒரு வாரத்தில் சென்னை திரும்பி முதல் வேலையாக சாந்தி திரையரங்கில் அட்டெண்டன்ஸ் கொடுத்து விட்டுத் தான் மறு வேலை...
பகல் காட்சிகளில் தாய்மார்களின் படையெடுப்பு... 0.84 பைஸா டிக்கெட்டுகள் கொடுக்கும் போதே 1.25 பைஸா டிக்கெட்டும் 1.66 டிக்கெட்டும் கொடுத்து விடுவார்கள். பால்கனி டிக்கெட் பெரும்பாலும் முன் பதிவிலேயே நிறைந்து விடும். 84 பைஸா டிக்கெட்டும் 1.25 பைஸா டிக்கெட்டும் ஆளுக்கு ஒரு டிக்கெட், 1.66 மட்டும் சில சமயங்களில் தாய்மார்கள் ஆண்களுக்கும் சேர்ந்து வாங்கிக் கொள்ளலாம். இது பொதுவாக அனைத்துத் திரையரங்குகளிலும் இருந்த நடைமுறை. இந்த டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக பங்களா தேஷ் அகதிகளுக்காக 5 பைஸா, 10 பைஸா அல்லது 40 பைஸா, என்று டிக்கெட் கட்டணத்தின் அடிப்படையில் வரியாக கூடுதலாக வசூலிப்பார்கள். அரங்கமே களையாக இருக்கும். மாலைக்காட்சிகளுக்கோ, கேட்கவே வேண்டாம், கார்களுக்குப் போக மீதம் மனிதர்களுக்கு என்ற அளவிற்கு வாகன நிறுத்துமிடம் நிறைந்திருக்கும்.. அந்த மாலையும் இரவும் சந்திக்கும் நேரங்களில், பிரகாசமான ஒளி விளக்கில் புதிதாய்க் கட்டிய தோரணங்களும் ஏராளமான ரசிகர் மன்ற ஸ்டார்களும் கண்ணைப் பறிக்கும் வண்ணம் அமர்க்களமாய் இருக்கும்.
என்ன இருந்தாலும் அந்தக் காலத்துத் திரையரங்க அமர்க்களங்களைக் காணக் கண் கோடி வேண்டும், தவம் செய்திருத்தல் வேண்டும்.

அன்புடன்

RAGHAVENDRA
18th October 2011, 10:00 PM
பாபு திரைப்படத்திற்காக பொம்மையில் வெளிவந்த விளம்பரத்தின் நிழற்படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/babubommai05fw.jpg

இந்த விளம்பரத்தினைப் பாருங்கள்... கம்ப்யூட்டர் என்றால் என்ன வென்று தெரியாத காலத்தில், ஈஸ்வர் ராவ் அவர்கள் தன் தூரிகையில் தத்ரூபமாக நடிகர் திலகத்தின் பாத்திரத்தைத் தீட்டியிருப்பதை...

இந்த ஈஸ்வர் அவர்களின் விளம்பரங்களுக்காக நான் தீவிர ரசிகனாகவே ஒரு சமயத்தில் ஆகி விட்டேன் என்றால் அது மிகையன்று... நடிகர் திலகத்தின் படங்களுக்கு பெரும்பாலும் ஈஸ்வர் அவர்களின் வரி ஓவியம் தவறாமல் இடம் பெற்று விடும், அது தினத் தந்தியில் முழுப் பக்கத்தில் பிரசுரமாகும் போது அதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருந்ததும் உண்டு.

RAGHAVENDRA
18th October 2011, 10:06 PM
பாபு திரைப்படத்தைப் பற்றி பொம்மை இதழில் வெளிவந்த படத் தொகுப்பின் நிழற்படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/babubommai04fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/babubommai03fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/babubommai0102fw.jpg

RAGHAVENDRA
18th October 2011, 10:10 PM
பாபு படத்தைப் பார்த்தோம், சிறந்த நடிகர் விருது வழங்கப் படவில்லை என்பதைப் பற்றியும் விவாதித்தோம்... ஆனால் திரையில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே அவர் பெற்ற விருதை நாம் அறிய வேண்டாமோ... இன்று வரை யாருக்கும் இப்படிப் பட்ட பெருமை கிடைத்தாய் நாம் அறியவில்லை...

முதலில் இந்த நிழற்படத்தைப் பாருங்கள்...

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/parasakthiadfw.jpg

தான் திரையில் தோன்றுவதற்கு முன்பாகவே தனக்கென்று ஒரு பத்திரிகையின் முகப்பில் விளம்பரம் வரப் பெற்றவர், அதுவும் தன் குரலுக்கு...

யாரையாவது சுட்டிக் காட்டுங்களேன்...

pammalar
19th October 2011, 02:19 AM
டியர் mr_karthik,

பொன்மனம் படைத்த "பாபு" பற்றிய தங்களின் பதிவுக்கட்டுரை 24-காரட் தங்கம். தீபாவளித் திருநாளான அக்டோபர் 18, 1971 அன்று நடந்த "பாபு" நிகழ்வுகளை தங்கள் எழுத்தின்மூலம் ஒளிப்பேழையாகத் தந்து அசத்திவிட்டீர்கள்.

"பாபு" வருகைக்கு முன் இருந்த சூழல்...

அக்காவியத்தின் ஆரம்பநாள் அமர்க்களங்கள்...

இத்திரைஓவியம் குறித்த ஒரு மினி திறனாய்வு...

"பாபு"வின் பிரம்மாண்ட வெற்றி பவனி...

என ஒரே பதிவில் ஒரு தகவல் பிரளயத்தையே தந்து "பாபு"வின் வெற்றிக்கீரிடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்துவிட்டீர்கள் !

தங்களுக்கு எனது உளங்கனிந்த பாராட்டுக்களுடன் கூடிய உளப்பூர்வமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th October 2011, 02:25 AM
டியர் வாசுதேவன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

"பாபு"வை மறக்க முடியுமா என வினவி மறக்க முடியாத பதிவுகளை அளித்து விட்டீர்கள் !

டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !

டியர் ராகவேந்திரன் சார்,

"பராசக்தி", "பாபு" ஆவணப்பதிவுகள் பிரமாதம், பாராட்டுக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th October 2011, 02:53 AM
குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா

கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா

சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்

பராசக்தி

[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்

புகைப்பட ஆல்பம்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Gunasekaran16-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Gunasekaran5a-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Gunasekaran14-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Gunasekaran12-1-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
19th October 2011, 09:54 AM
20.10 - மறக்க முடியாத நாள்

இதே நாளில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் சீனாவுடனான யுத்தம் தொடங்கிய நாள் ...

(இந்திய சீன யுத்தத்தைப் பற்றி அறிய வைக்கி (http://en.wikipedia.org/wiki/Sino-Indian_War)யின் இணைப்பில் காணுங்கள்)

எங்கெங்கு காணினும் யுத்த சூழல்... மாலையானால் கும்மிருட்டு, ஊரடங்கு உத்தரவு அமல், யாராயிருந்தாலும் ஏதேனும் விமான சத்தம் கேட்டால் உடனே படுத்து விட வேண்டும்... பொருட்கள் ரேஷனில் அளவுடன் தான் வழங்கப் படும்...

குழந்தைகளாகிய நாங்கள் பள்ளி விட்டு வரும் போது முழங்கிக் கொண்டே வருவோம்... இந்தியா வாழ்க, சீனா ஒழிக....

அந்த நாட்களை இன்று நினைவு கூர்வதற்கு காரணம் ரத்த திலகம் படம்...

இந்தியாவில் நிலவிய யுத்த சூழலை அப்படியே படத்தில் பிரதிபலித்தார்கள் தாதாமிராசியும் நடிகர் திலகமும். அதை நமக்கு பாடல் மூலம் தந்தார்கள் கவியரசர், கேவிஎம் டிஎம்எஸ் கூட்டணி....

ஏராளமான நினைவுகள் ஒவ்வொருவருக்கும் இருக்கலாம்...

தற்காலத் தமிழ் மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு, யுத்த சூழல் எல்லாம் என்ன வென்றே தெரியாது...

அந்தப் போர் சூழலை ஒலி வடிவில் தெரிந்து கொள்ள புத்தன் வந்த திசையிலே பாடலைக் கேளுங்கள்.

புத்தன் வந்த திசையிலே போர் (http://www.raaga.com/player4/?id=154882&mode=100&rand=0.12773932050913572)

kumareshanprabhu
19th October 2011, 09:56 AM
dear Karthi , raghavendra sir

what a superb note sir superb

regards
kumareshan prabhu

KCSHEKAR
19th October 2011, 10:52 AM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Nadigarthilagam%2084th%20Birthy%20Trichy%20-%2002October%20201/TrichyNewsAdhithyan.jpg

vasudevan31355
19th October 2011, 11:04 AM
அகிலனின் 'பாவை விளக்கு' 51-ஆம் ஒளி வீசும் ஆண்டு அமர்க்கள ஆரம்பம்.

வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்...(நடிகர் திலகத்தின் ரம்மியமான சொந்தக் குரலில்)
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே...
காவியமா நெஞ்சின் ஓவியமா...(சாகா வரம் பெற்ற பாடல்)
அற்புதப் பாடல்களும்,மயக்கும் ஷாஜஹானாக நம் நடிகர் திலகத்தின் நடையழகும், ஒரிஜினல் தாஜ்மஹாலில் படமாக்கப் பட்ட பெருமையும்,அகிலனின் அற்புதப் படைப்பு போன்ற பல பெருமைகளைத் தக்க வைத்துக் கொண்ட காவியம். காவியமாகவும் நெஞ்சில் ஓவியமாகவும் நிலைத்து நிலை பெற்றுவிட்ட அற்புதப் படைப்பு இந்த பாவை விளக்கு.

http://im.in.com/connect/images/profile/b_profile4/Paavai_Vilakku_300.jpg


http://lulzimg.com/i07/973aee.png


http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PaavaiVilakku0002.jpg


http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PaavaiVilakku0003.jpg


http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PaavaiVilakku0005.jpg

vasudevan31355
19th October 2011, 11:07 AM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PaavaiVilakku0010.jpg


http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PaavaiVilakku0011.jpg


http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PaavaiVilakku0009.jpg


http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/PaavaiVilakku0004.jpg

vasudevan31355
19th October 2011, 11:12 AM
http://lulzimg.com/i07/812663.png


http://lulzimg.com/i07/45eec2.png


http://raretfm.mayyam.com/pow07/images/paavaivilakku.jpg


http://img696.imageshack.us/img696/9025/snapshot20110301200920.jpg

vasudevan31355
19th October 2011, 11:21 AM
http://img707.imageshack.us/img707/5650/snapshot20110301201303.jpg


http://img809.imageshack.us/img809/1901/snapshot20110301200249.jpg


http://img13.imageshack.us/img13/4458/snapshot20110301200716.jpg


http://img145.imageshack.us/img145/8720/snapshot20110301201145.jpg



அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
19th October 2011, 11:46 AM
அன்புள்ள சந்திரசேகர் சார், சதீஷ் சார், பார்த்தசாரதி சார், ஆனந்த் சார், ராகவேந்தர் சார், பம்மலார் சார், குமரேசன் சார்......

உங்கள் அனைவரின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்.

'பாபு' திரைக்காவியம் பற்றி நம் அனைவரது எண்ண ஓட்டங்களும் ஒரே மாதிரியாக அமைந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.

அன்புள்ள வாசுதேவன் சார்,

தங்களின் 'பாபு' திரைக்காவியத்தின் நிழற்பட வரிசை மிகவும் அருமை, ஸ்டில்கள் அனைத்தும் தெள்ளத்தெளிவாக உள்ளன, நன்றிகள்.

அன்புள்ள ராகவேந்தர் சார்,

பொம்மை திரையிதழில் வெளிவந்த 'பாபு' விளம்பரமும், அப்படம் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய தகவல் பக்கங்களும் மிக அருமை. விளம்பரத்தில் வரைகோட்டு சித்திரம் மூலமாக நடிகர்திலகத்தின் கள்ளமில்லா வெள்ளைச்சிரிப்ப்புடன் கூடிய முகபாவங்களைப்படைத்த ஓவியர் ஈஸ்வர் ராவ் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

நீங்கள் குறிப்பிட்டது போல, அந்தப்பொன்னான நாட்கள் கோடி கோடியாய் கொட்டிக்கொடுத்தாலும் திரும்பி வாராது. நம் நினைவில் தங்கியுள்ள அந்த இனிய நாட்களை நம் தலைமுறையினருக்கு நினைவூட்டுவதும், இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வதும் ஒரு தனி இன்பம்தான். படம் வெளிவரும் முன்பே அட்டையில் இடம்பெற்ற 'பராசக்தி' விளம்பரம் ஒரு அரிய ஆவணம்.

அன்புள்ள பம்மலார் சார்,

பராசக்தி புகைப்படத்தொகுப்பு தொடர்வது கண்டு மகிழ்ச்சி. 'பாபு'வின் 100-வது நாள் விளம்பரம் காண ஆவலாயுள்ளோம்.

பிரபுராம் சார்,

படிக்காதமேதை ரங்கனைப்பற்றிய ஆய்வு மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

vasudevan31355
19th October 2011, 11:49 AM
'பாவை விளக்கு' நிழற்பட வரிசை தொடர்ந்து.......முடிகிறது.

http://padamhosting.com/out.php/i55439_vlcsnap108937.png


http://padamhosting.com/out.php/i55436_vlcsnap110521.png


http://padamhosting.com/out.php/i55435_vlcsnap109924.png


http://padamhosting.com/out.php/i55434_vlcsnap102218.png


http://padamhosting.com/out.php/i55433_vlcsnap102457.png


http://padamhosting.com/out.php/i55432_vlcsnap108701.png


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
19th October 2011, 12:04 PM
மனதை மயக்கும் காலத்தால் அழிக்க முடியாத காவியமா... நெஞ்சின் ஓவியமா..பாடற்காட்சி


http://www.youtube.com/watch?v=UYABJyxhbWk&feature=player_detailpage

'பாவை விளக்கு' படத்தில் வரும் புகழ் பெற்ற பாடலான 'ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே' பாடலை நம் அருமை ஷண்முக சுந்தரம் நாதஸ்வரத்தில் வாசிப்பதைக் கண்டு கேட்டு மகிழலாமா?..


http://www.youtube.com/watch?v=O5AY2kVHag4&feature=player_detailpage


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
19th October 2011, 12:29 PM
' பெற்றமனம்' நடிகர் திலகத்தின் 65- ஆவது படம். வெளியான நாள்: 19-10-1960. அற்புத பாடல்களுக்கான லிங்க் கீழே

http://www.inbaminge.com/t/p/Petra%20Manam/


அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
19th October 2011, 03:19 PM
திரு.வாசுதேவன் அவர்களே. பாவை விளக்கு புகைப்பட ஆல்பம் அருமை. அதையும் நமது சண்முகசுந்தரத்தின் நாதஸ்வரத்தில் பாவைவிளக்கு பாடலை அளித்ததற்கு உங்களுக்கு ஒரு சபாஷ்.

KCSHEKAR
19th October 2011, 03:25 PM
திரு.பம்மலார் அவர்களே, பராசக்தி புகைப்பட ஆல்பம் அருமை.

திரு.ராகவேந்திரன் சார், பாபு திரைப்படம் குறித்த பொம்மை தகவல்கள் அருமை. நன்றி.

pammalar
19th October 2011, 03:29 PM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

பாவை விளக்கு

[19.10.1960 - 19.10.2011] : 52வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

The Hindu : 14.1.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PVAd1-1.jpg

The Hindu : 9.9.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PVAd2-1.jpg

சுதேசமித்ரன் : 14.10.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PVAd3-1.jpg

கலைமகள் : தீபாவளி மலர் : 1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PVAd4-1.jpg

ஒளிரும்...

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
19th October 2011, 03:36 PM
டியர் வாசுதேவன் சார்,
பாவை விளக்கு வெளிவந்த போது, சில விமர்சனங்களில் நாவல் போல இல்லை என்ற பொத்தாம் பொதுவான பல்லவியைப் பாடி இன்றும் அதையே கூறி வருகின்றன. படிப்பது வேறு, பார்ப்பது வேறு என்ற அளவுகோலை குழி தோண்டி புதைத்து விட்டு எந்த விதத்தில் நடிகர் திலகத்தின் படங்களை தரமிறக்கலாம் என்கிற கண்ணோட்டத்தைக் கடைப்பிடிப்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இருந்து எழுதி வந்ததை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க முடியாது. தில்லானா மோகனாம்பாள் காவியத்தையே குறை சொன்னவர்கள் மற்றவற்றை விட்டு வைப்பார்களா.. அதில் பாவை விளக்கு விதிவிலக்காகி விடுமா என்ன..

இந்த Negative Attitude காரணமாகவே நடிகர் திலகத்தின் படங்கள் விமர்சனங்களில் எதிர்ப்பை சந்தித்தன, என்றாலும் அதையும் மீறி மக்கள் ஆதரவில் வெற்றி நடை போட்டன என்றால் அதற்கு முழு முதற் காரணம் நடிகர் திலகம் மட்டுமே.

அந்த வரிசையில் பாவை விளக்கு காவியமாகவும் நெஞ்சில் ஓவியமாகவும் நிலைத்து நிற்பது நிதர்சனம்.

குறிப்பாக காவியமாக பாடல் காட்சி படமாக்கப் பட்டபோது பாடல் தாஜ் மகாலில் ஒலிபரப்ப முடியாது. எனவே அதனைத் தன் நினைவில் கொண்டு, அதன் இசையையும், பாடகர் குரலையும், பாடல் சூழலையும், பாடல் வரிகளையும் நெஞ்சில் நிறுத்தி, நடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம்.

அது மட்டுமா, ஒரே நேரத்தில் வெளிவந்த தன்னுடைய இரு படங்களிலும் பாடலுக்கு இடையே தன் குரலில் பாடல் வரிகளை/ உரைகளை ஒலிக்கச் செய்ததிலும் சாதனை புரிந்துள்ளார் நடிகர் திலகம். பாவை விளக்கு படத்தில் வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி பாடலிலும், பெற்ற மனம் படத்தில் சிந்தனை செய்யடா பாடலில் எம்.எல்.வி. பாட, இவர் வசனம் பேசியும் குரல் கொடுத்ததும் ஒரு வகையில் சாதனையே.

பெற்ற மனம் படத்தில் நடிகர் திலகத்தின் குரலுடன் எம்.எல்.வி. அவர்கள் பாடிய உள்ளத்தைத் தொடும் பாடல்

சிந்தனை செய்யடா (http://123.108.40.92/music/track.php)

pammalar
19th October 2011, 03:45 PM
சகோதரி சாரதா, mr_karthik மற்றும் அனைவருக்கும்,

சபாஷ் மீனா, நாம் பிறந்த மண், பாபு திரைக்காவியங்களின் ஆவணப்பதிவுகள் விரைந்து வரவிருக்கின்றன !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th October 2011, 04:12 PM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

பாவை விளக்கு

[19.10.1960 - 19.10.2011] : 52வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : கிடைத்தற்கரிய முதல் வெளியீட்டு விளம்பரம்

Full Prints : சுதேசமித்ரன் : 26.10.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4799-2.jpg

ஒளிரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th October 2011, 04:37 PM
டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

சிவாஜி பேரவை சார்பில் திருச்சியில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 84வது ஜெயந்தி விழாவை நாளிதழ்கள் மட்டுமின்றி மாதமிருமுறை இதழான 'நவீன ஆதித்யன்' இதழும் வண்ணத்தில் ஒருபக்க விழாத்தொகுப்பை வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

தங்களின் சீரிய சிவாஜி பேரவைப்பணி மென்மேலும் சிறந்தோங்க இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
19th October 2011, 04:52 PM
திரு.பம்மலார் அவர்களே! - பரவசமூட்டும் பாவை விளக்கு பொக்கிஷ விளம்பரங்களுக்கு நன்றிகள்.

KCSHEKAR
19th October 2011, 04:54 PM
திரு.பம்மலார் - தங்கள் பாராட்டுக்கு நன்றிகள்.

mr_karthik
19th October 2011, 05:03 PM
அன்புள்ள பம்மலார் சார்,

கிடைத்தற்கரிய 'பாவை விளக்கு' விளம்பரப் பொக்கிஷங்களை அள்ளித்தந்தமைக்கு மிக்க நன்றி. ஐம்பதாண்டுகளைக்கடந்தும் இவைகளைக் காண முடிகிறதென்றால் உண்மையிலேயே அவை பொக்கிஷங்களன்றி வேறில்லை.

மற்ற படங்களின் பொக்கிஷப்பதிவுகளும் விரைவில் வர இருக்கின்றன என்ற அறிவிப்பு உள்ளத்தில் தேன் பாய்ச்சுகிறது.

தங்களின் அரிய சேவைக்குப்பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
19th October 2011, 07:12 PM
பெற்ற மனம் நிழற்படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/petramanamimg02fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/petramanamimg01fw.jpg
இந்தப் படத்தில் நடிகர் திலகத்துடன் இருப்பது, புஷ்பவல்லி

பெற்ற மனம் விளம்பரத்தின் நிழற்படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/petramanamadfw.jpg

RAGHAVENDRA
19th October 2011, 08:01 PM
உயிர்மை மாத இதழ் அக்டோபர் பதிப்பில் வெளிவந்த நடிகர் திலகத்தைப் பற்றிய கட்டுரையைப் படிக்க

http://www.uyirmmai.com/ViewIndex.aspx?eid=211&edtypeid=1

பதிவு செய்தவர்களால் மட்டுமே படிக்க முடிகிற வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

vasudevan31355
19th October 2011, 11:43 PM
டியர் கார்த்திக் சார்,

கள்ளமறியா, கவலையில்லா பள்ளிப்பருவம். ஆஹா...படிக்கும் போதே மனம் உற்சாகத்தில் துள்ளுகிறது. பாபுவின் ரிலீஸ் நாளன்று நடந்த அமர்க்களங்களை அம்சமாக, அழகாக ஒரு துப்பறியும் நாவலைப் படிப்பது போன்ற விறுவிறுப்புடன் பதித்து விட்டீர்கள். அருமை சார்.. பாபுவின் விஸ்வரூப வெற்றியில் மூழ்கிக் களித்தவர்களில் நானும் ஒருவன். எங்கள் கடலூரில் ஐந்து வாரங்கள் ஓடி சாதனை புரிந்தார் பாபு. கடலூரில் ஐந்து வாரங்கள் ஓடினால் சென்னையில் நூறு நாட்கள் நிச்சயம். எதிர்முகாம் படமோ பதினைந்து நாட்களுக்குள் சுருண்டு கொண்டது. கடலூரில் மிகக் குறைவான நாட்கள் ஓடிய எதிர்முகாம் நடிகரின் படம் என்ற பெருமையையும் அது தட்டிச் சென்றது. ஐந்து வாரங்கள் மக்கள் வெள்ளத்தில் மூழ்கித் தவித்தது கடலூர் நியூசினிமா. அதுமட்டுமின்றி பெரிய ஜவுளிக்கடைகளிலும்சரி, சிறிய துணிக்கடைகளிலும் சரி பாபு ஷர்ட் என்ற பெரிய சைஸ் கட்டம் போட்ட சட்டைத் துணி மிகவும் பாப்புலர் ஆனது. எல்லாக் கடைகளிலும் பாபு ஷர்ட் விளம்பர போர்டு தான். என்னுடய அம்மா எனக்கு அந்த ஷர்ட் கிளாத்தை எடுத்து சட்டை தைத்துக் கொடுத்தது பசுமையாக நினைவில் இருக்கிறது. அதிலிருந்து எந்த பெரிய கட்டம் போட்ட சட்டை யார் போட்டிருந்தாலும் எனக்கு பாபு ஞாபகம் வந்துவிடும் இன்றளவிலும். அதே போல 'சுமதி என் சுந்தரி' ஷர்ட்டும் ரொம்ப ரொம்ப பாப்புலர்.(கல்யாணச் சந்தையிலே பாடலுக்கு அழகாக ஒரு கருப்பும் பிரௌனும் கலந்தாற்போன்ற நிறத்தில் வெள்ளைக்கோடுகள் குறுக்கும் நெடுக்குமாய் பரவ, படு மாடர்ன் டிசைனில் கட்டம் போட்ட முழுக்கை ஷர்ட் போட்டுக் கொண்டு ஜமாயப்பாரே.. அது போல). அருமையான நினைவுப் பதிவை அளித்ததற்கு மிக்க நன்றிகள் சார். பாபு பட ஸ்டில்களுக்கான பாராட்டுக்கும் நன்றிகள் சார்.

அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
19th October 2011, 11:53 PM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

பாவை விளக்கு

[19.10.1960 - 19.10.2011] : 52வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணம்

நடிகன் குரல் : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர் : ஆகஸ்ட் 1962

நடிகர் திலகம் பற்றி சாகித்ய அகாடெமி விருது பெற்ற பெரும் எழுத்தாளர் திரு.அகிலன்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4801-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4802-1.jpg

ஒளிரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th October 2011, 12:03 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

பாவை விளக்கு

[19.10.1960 - 19.10.2011] : 52வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணம்

மதி ஒளி : 1.11.1962
[நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பத்தாண்டு நிறைவு [1952-1962] மலர்]

நடிகர் திலகம் பற்றி ஒலிப்பதிவு மேதை டி.எஸ்.ரங்கசாமி
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4800-1.jpg

உத்தரவு !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th October 2011, 12:23 AM
டியர் வாசுதேவன் சார்,

"பாவை விளக்கு" ஸ்டில்ஸ் கலெக்ஷன் மற்றும் பாடல் வீடியோக்கள் [சிக்கலார் வாசிப்போடு] வழக்கம் போல் அசத்தல் என்றால் "பெற்ற மனம்" ஆடியோ லிங்க் அட்டகாசம் ! பாராட்டுக்கள் !!

"பாபு" நினைவலைகள் மலர்க்கணைகள் !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th October 2011, 12:33 AM
டியர் mr_karthik, பொன்னான பாராட்டுதல்களுக்கு பசுமையான நன்றிகள் !

டியர் சந்திரசேகரன் சார், மிக்க நன்றி !

டியர் ராகவேந்திரன் சார், "பெற்ற மனம்" பதிவுகள் அரிய பொக்கிஷங்கள், பாராட்டுக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th October 2011, 02:48 AM
சிவாஜி பொக்கிஷம்

"சிவாஜி ரசிகன்" சிறப்பு மலர் : 1.10.1970

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR2-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR3-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR4-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th October 2011, 03:51 AM
சிவாஜி பொக்கிஷம்

"சிவாஜி ரசிகன்" சிறப்பு மலர் : 1.10.1970

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR5-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR6-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR7-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR8-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th October 2011, 04:39 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா

கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா

சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்

பராசக்தி

[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்

புகைப்பட ஆல்பம்

எஸ்.வி.சகஸ்ரநாமம், நடிகர் திலகம், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PS2-1.jpg


தேசம் ஞானம் கல்வி....
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PS5-1.jpg


நடிகர் திலகத்துடன் அவரது முதல் கதாநாயகி பண்டரிபாய்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PS9-1.jpg


நடிகர் திலகத்துடன் பண்டரிபாய், ஸ்ரீரஞ்சனி
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PS11-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
20th October 2011, 06:06 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பொம்மையில் வெளிவந்த பாபு திரைப்பட விளம்பரத்தின் நிழற்படத்தில் ஈஸ்வர் ராவ் அவர்களின் கடின உழைப்பு பளிச்சிடுகிறது. அந்தப் படத்தின் கருப்பு வெள்ளை இமேஜ் நான் வைத்திருந்தேன். லைனிங் ஒர்க் அதி அற்புதம்.

பாபு திரைப்படத்தைப் பற்றி பொம்மை இதழில் வெளிவந்த படத் தொகுப்பின் நிழற்படங்கள் அசத்தல்.

திரையுலகில் புதிய குரல் பதிவு திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் போதே அந்த மாபெரும் கலைஞனுக்கு கிடைத்த அங்கீகாரம். இதுவரை யாரும் கண்டிராத,கேட்டிராத அபூர்வ அற்புதப் பதிவு சார் அது. அதற்காக என் சிறப்பு நன்றிகள்.

சீன யுத்த நாளை நினைவு கூர்ந்து ரத்தத் திலகத்தைப் பற்றி சரியான தருணத்தில் எழுதி 'புத்தன் வந்த திசையிலே போர்' பாடலையும் அளித்து எங்கள் ரசிக வேந்தர் நாட்டுப் பற்றுடைய வேந்தர் என்றும் தெள்ளத் தெளிவாக நிரூபித்து விட்டீர்கள்.

'பாவை விளக்கு' பற்றிய கருத்துக்களுக்கும்,தகவல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

'பெற்ற மனம்' நிழற்படங்கள் நிஜமாகவே கிடைத்தற்கரிய புதையல்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th October 2011, 06:17 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்கள் பாராட்டுதல்களுக்கு மனமார்ந்த நன்றி. நவீன ஆதித்யன் சார்பாக நலத்திட்டங்கள் பல அளித்த நல் உள்ளங்களான தங்களுக்கும், திரு அண்ணாதுரை அவர்களுக்கும், இந்த நல்ல விழாவிற்காக பாடுபட்ட அன்பு இதயங்களுக்கும் வாழ்த்துக்கள். தலைவருக்கான விழா என்றால் அனுமதி கிடைக்காமல் போய் விடுமா தங்களைப் போல தூய தொண்டுள்ளம் கொண்டவர்கள் உள்ளபோது? உங்கள் அனைவரின் கூட்டு முயற்சிகள் அந்த மாபெரும் கலைஞரின் ஆசீர்வாதங்களால் பலிதமாகும் என்பது திண்ணம். தொடரட்டும் உங்களின் நற்பணி.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th October 2011, 06:40 AM
ஜீ பூம் பா பூதம் ஜாடியை உடைத்துக் கொண்டு வெளிவந்துவிட்டது. இனி அதைக் கட்டுப் படுத்த முடியாது. அதனால் நமக்கு பெருவிருந்து கிடைக்கப் போகிறது. வீறுகொண்டு வரும் வேங்கை போல வெளிக்கிளம்பிய எங்கள் அனைவரின் அன்புப் பூதம் எல்லோருக்கும் இன்பப் புதையலை அள்ளித் தர என்றுமே தவறியதில்லயே!

அன்பு பம்மலார் சார்,

பாவை விளக்கு முதல் வெளியீட்டு விளம்பரங்களைப் பார்த்தாலே பசி தீரும் வகையில் உள்ளன. அரிய பொக்கிஷங்கள்.

சபாஷ் மீனா, நாம் பிறந்த மண், பாபு திரைக்காவியங்களின் ஆவணப்பதிவுகள் எங்களை சந்தோஷக் கடலில் மிதக்க வைக்க ரெடியாகி கொண்டிருக்கின்றன என்று நினைக்கும் போதே ஆஹ்ஹா..இனிக்குதே என் மனதே!

பாவை விளக்கு சுதேசமித்ரன் முதல் வெளியீட்டு விளம்பரம், பராசக்தியின் தொடர் நிழற்படங்கள்,நடிகர் திலகம் பற்றி சாகித்ய அகாடெமி விருது பெற்ற பெரும் எழுத்தாளர் திரு.அகிலன் அவர்கள் நடிகன் குரலில் எழுதியிருந்த அட்டகாசப் பதிவு, ஒலிப்பதிவு மேதை டி.எஸ்.ரங்கசாமி அவர்களுடய தலைவருடனான பாடல் ஒலிப்பதிவு அனுபவங்கள், சிவாஜி பொக்கிஷ ஸ்டில்கள், இன்னும் அரிய பல ஆவணங்களைக் கொடுத்து தீபாவளிக்கு முன்னமையே பெருவிருந்து படைத்து விட்டீர்கள். உழைப்பிற்கு உங்களை வழிகாட்டியாய் அனைவரும் உதாரணம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆவண வள்ளலே! எங்கள் அன்பு பூதமே! நின் புகழ் வாழ்க!.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th October 2011, 09:15 AM
'பாவை விளக்கு' திரைப்படத்தில் இயல்பான தோற்றத்தில் நம் இதய வேந்தர். (அரிய வீடியோக் காட்சி)

அன்பு நண்பர்களே!

'பாவை விளக்கு' திரைக்காவியத்தில் நடிகர் திலகம் தன் அன்னை இல்லத்தில் சக நடிக நண்பர்களான வி.கே.ராமசாமி, கே.பாலாஜி, பிரேம்நசீர், ஸ்ரீராம் மற்றும் எஸ்.ஏ.அசோகன் ஆகியோருடன் பாவை விளக்கு நாவல் படித்துக் காண்பது போன்ற அதி அற்புதமான ஒரு வீடியோக் காட்சி. வீட்டில் மேக்-அப் இல்லாமல் இயல்பான தோற்றத்தில் இருக்கும் நடிகர் திலகத்தைக் காண 'ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே.'


http://www.youtube.com/watch?v=o7Ab2-TwUN0&feature=player_detailpage



http://www.youtube.com/watch?v=KPNRVPGHhus&feature=player_detailpage


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th October 2011, 10:15 AM
'பட்டாக்கத்தி பைரவன்' (19-10-1979 to 19-10-2011) 33-ஆவது ஆண்டு ஆரம்ப விழா சிறப்புப் பாடல்கள்.

http://4.bp.blogspot.com/_jo1xsRVxX7o/SovHRV0ZRYI/AAAAAAAACIU/lWy9lw-5Lwk/s400/Pattakathi-Bairavan.jpg

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்...


http://www.youtube.com/watch?v=-eLtA29tBiQ&feature=player_detailpage

யாரோ நீயும் நானும் யாரோ...


http://www.youtube.com/watch?v=g_-lZNLOa5Q&feature=player_detailpage

தேவதை...ஒரு தேவதை...


http://www.youtube.com/watch?v=8Tufh87q6SU&feature=player_detailpage


அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
20th October 2011, 11:24 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் மனமுவந்த பாராட்டுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகள்.

'பாவை விளக்கு' திரைப்படத்தின் அரிய வீடியோக் காட்சி - அரிய பொக்கிஷம் - நன்றிகள்

pammalar
20th October 2011, 09:13 PM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா

கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா

சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்

பராசக்தி

[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

The Hindu : 13.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4820-1.jpg


The Hindu : 14.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4821-1.jpg


திராவிட நாடு : 19.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PSAd1-1.jpg


திராவிட நாடு : 26.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/ParasakthiAd-1.jpg


The Hindu : 24.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/parasakthiad2a-1-1.jpg


The Hindu : 26.10.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4823aa-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
20th October 2011, 11:47 PM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா

கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா

சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்

பராசக்தி

[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்

நவரத்தினங்களுக்கும் மேலான பொக்கிஷம் : 50வது நாள் விளம்பரம்

தினத்தந்தி : 7.12.1952
[52வது நாளன்று கொடுக்கப்பட்டது]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Parasakthi50DaysAd-1.jpg

குறிப்பு:
1. "பராசக்தி" முதல் வெளியீட்டில் 72 பிரிண்டுகள் போடப்பட்டு சென்னை மற்றும் தென்னகமெங்கும் திரையிடப்பட்டது. நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களில் அதிக பிரிண்டுகள் போடப்பட்டது "பராசக்தி"க்குத்தான் [1990களில் வெளியான படங்கள் தவிர்த்து].

2. முதன்முதலில் 62 திரையரங்குகளில் [அதாவது வெளியான 72 பிரிண்டுகளில் 62 பிரிண்டுகள்] 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடி மாபெரும் வெற்றி கண்ட தமிழ்த் திரைப்படம் "பராசக்தி"யே.

3. 10 அரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும் அதில் இரண்டில் வெள்ளிவிழாவுக்கு மேலும் ஓடிய மகாமெகா வெற்றிக்காவியம் "பராசக்தி". 100வது நாள் மற்றும் வெள்ளிவிழா விளம்பரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் இங்கே இடுகை செய்கிறேன். "பராசக்தி"யின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகள் குறித்த புள்ளிவிவரங்கள் அடங்கிய சிறப்புப்பதிவு சில தினங்களில்.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
21st October 2011, 12:09 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்கள் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் அளித்த உயர்ந்த புகழுரைக்கு எனது உளப்பூர்வமான, ஆத்மார்த்தமான நன்றிகள் !

"பாவை விளக்கு" திரைக்காவியத்தில் இயல்பான தோற்றத்தில் நம் இதயதெய்வம் தோன்றும் அரிய வீடியோ காட்சிகள் கண்கொள்ளாக்காட்சி !

"பட்டாக்கத்தி பைரவன்" பதிவு பிரமாதம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st October 2011, 04:57 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

பெற்ற மனம்

[19.10.1960 - 19.10.2011] : 52வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

தென்றல் : 20.12.1955
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4829-1.jpg


The Hindu : 19.2.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4830-1.jpg


சுதேசமித்ரன் : 15.10.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4831-1.jpg


சுதேசமித்ரன் : 19.10.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4833-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st October 2011, 05:04 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

பாவை விளக்கு

[19.10.1960 - 19.10.2011] : 52வது உதயதினம்

அரிய பொக்கிஷம்

சிறப்பு வண்ணப் புகைப்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/PV1-1.jpg

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே !
அண்ணலின் அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st October 2011, 05:13 AM
வருகிறார்...

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Devan1a-1.jpg

goldstar
21st October 2011, 05:19 AM
Alla alla amudham alli alli tharum Pammalar nee valir, valir...

Cheers,
Sathish

pammalar
21st October 2011, 05:22 AM
Alla alla amudham alli alli tharum Pammalar nee valir, valir...

Cheers,
Sathish

Thank you so much, goldstar.

Regards,
Pammalar.

RAGHAVENDRA
21st October 2011, 09:11 AM
டியர் பம்மலார்,
நடிகர் திலகத்தின் சாதனைகளை ஆணித்தரமாக நிரூபிக்கும் ஆவணத் திலகமே, நீவிர் வாழ்க, வளர்க, உம் தொண்டு மேலும் மேலும் சிறக்க உளமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்

RAGHAVENDRA
21st October 2011, 09:13 AM
எங்க ஊர் ராஜாவின் எழில் மிகு நிழற்படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/eoraja04fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/eoraja01fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/eoraja02fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/eoraja03fw.jpg

இவையனைத்தும் பொம்மை மாத இதழில் வெளியானவை

vasudevan31355
21st October 2011, 09:31 AM
அன்பு வள்ளல் பம்மல் அவர்களே!
தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஆவணமும் ஒரு கோடி பெறும். பாவை விளக்கு, எங்க ஊர் ராஜா நிழற்படங்கள் விலை மதிப்பில்லாதவை என்றால் பராசக்தியின் நாளிதழ் வெளியீட்டு விளம்பரங்கள் இதயம் போன்று போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. அசத்துங்கள்.

நன்றிகளுடன்,
வாசுதேவன்.

டியர் ராகவேந்திரன் சார்,
ஆவணச் செம்மல் தூள் பரத்திக் கொண்டிருக்க, தாங்கள் தங்கள் பங்கிற்கு களேபரம் செய்து திக்கு முக்காடாச் செய்கிறீர்கள். எங்க ஊர் ராஜாவின் தங்களுடைய நிழற்படப் பதிவுகள் கண்களைக் கவர்ந்து காந்தமாய் இழுக்கின்றன. நன்றிகள் சார்.

அன்புடன்,
வாசுதேவன்.

kumareshanprabhu
21st October 2011, 09:50 AM
dear pammalar sir

great keep it up

parthasarathy
21st October 2011, 10:02 AM
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே நம் நடிகர் திலகத்தின் எழில் காண வண்ணக்கிளியே!

ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே நம் பம்மலாரின் பதிவுகளைப் பார்வையிட வண்ணக்கிளியே!!

ஆயிரம் வார்த்தைகள் போதாது வண்ணக்கிளியே நம் பம்மலாரைப் பாராட்டிட வண்ணக்கிளியே!!!

ஆயிரம் ஜென்மங்கள் போதாது வண்ணக்கிளியே நம் நடிகர் திலகத்தைப் பற்றிப் பேசிட, பார்த்து இன்புற, மகிழ்ந்திட, அவர்தம் நினைவுகளைப் பாதுகாக்க வண்ணக்கிளியே!!!!

ஆயிரம் திரிகள் போதாது வண்ணக்கிளியே நமது அருமை நண்பர்களுக்கு (திரு. ராகவேந்தர், திரு. முரளி, திரு. பம்மலார், சாரதா மேடம், திரு. வாசுதேவன், திரு. சந்திர சேகர், திரு.ஜோ, திரு. சதீஷ், திரு. கார்த்திக், திரு. பிரபு ராம், திரு. ராம ஜெயம், திரு. பாலா, திரு. ரங்கன், திரு. ராதா, திரு. குமரேஷ், மற்றும் நம் அனைத்து திரி நண்பர்கள்) நடிகர் திலகத்தைப் பற்றிப் பதிவிட, அவர்தம் பெருமையைப் பறைசாற்ற, அவர் நினைவாக சமூகத் தொண்டாற்றிட, வண்ணக்கிளியே!!!!!

ஆண்டவா, எனக்கு எத்தனை ஜென்மங்கள் நீ தந்தாலும், ஒவ்வொரு ஜென்மத்திலும், என்னுடைய இதே பெற்றோர்களையும், குடும்பத்தையும் தருவது மட்டுமல்லாமல், நடிகர் திலகத்தின் ரசிகனாகவும் பிறந்து, அதிலும், இந்தத்திரியின் அங்கத்தினனாக இருக்கும் பேறையும் தா!!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
21st October 2011, 11:07 AM
எங்க ஊர் ராஜா (21-10-1968) நடிப்புப் பேரரசரின் 123- ஆவது வெற்றிப் படைப்பு.

எங்க ஊர் ராஜாவில் எங்கள் தங்க ராஜா.


http://www.soniamusicworld.com/image/cache/data/ENGAVUR-RAJA-DVD-BOX-500x500.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000355883.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_001045710.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_001477647.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_001685727.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_000153083.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_050536002.jpg


யாரை நம்பி நான் பொறந்தேன்?...போங்கடா போங்க...நினைத்துப் பார்க்க முடியாத பிரம்மாண்ட நடிப்பில்.


http://www.youtube.com/watch?v=hpsmNenkXFA&feature=player_detailpage

L.R. ஈஸ்வரி அவர்களின் அட்டகாசக் குரல் பதிவில் "அத்தைக்கு மீசை வச்சிப் பாருங்கடி"....


http://www.youtube.com/watch?v=ehAtINva13k&feature=player_detailpagehttp://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSOAPGJlgbk9MPZflzHrtf2TTspumH6r yvblzyZpFcD2JsdXtgQJGjRJtzIzw L.R. ஈஸ்வரி


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
21st October 2011, 11:25 AM
'எங்க ஊர் ராஜா' நிழற்படங்கள்.

http://www.geocities.ws/ganeshkumar_r/bg68enga.jpg


http://www.buycinemovies.com/images/detailed/0400-vcd93.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
21st October 2011, 12:01 PM
டியர் வாசுதேவன் சார்,
நிழற்படத்திலகம், உயிர்ப்படத்திலகம் என இரு வேறு திலகங்களை ஒரே சமயத்தில் அணிந்து வெற்றியுலா வரும் தங்களை எப்படிப் பாராட்டுவது... த்வார பாலகர்களாய் திகழும் பம்மலாரையும் தங்களையும் தாண்டிச் சென்றால்தான் நடிகர் திலகம் என்ற மூலவரை சிறப்பாக தரிசிக்க முடியும் என்கிற அளவிற்கு அவருடைய சாதனைகளின் கேடயமாய் விளங்குகின்றீர்கள். பாராட்டுக்கள்.

டியர் பார்த்தசாரதி,
ஆயிரம் மொழிகள் போதாது, வண்ணக்கிளியே, சாரதியின் பங்குதனை பாடுதற்கு வண்ணக்கிளியே..
என்று கூறும் வகையில் தாங்களும் சிறப்புற தங்கள் பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்..

நமது மூத்த நண்பரும் ஹப்பருமான திரு ராமஜெயம் அவர்கள் அடியேனுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலின் மூலமாக தங்கள் அனைவருக்கும் தன்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார். அவர் அனுப்பியுள்ள ஆங்கில செய்தி இதோ நம் பார்வைக்கு



Subject:
HAPPY DIWALI TO ALL OUR SIVAJI RASIGARGAL- HUB FRIENDS
Type: Embeded HTML/Text

DEAR MR RAGHAVENDRAN,
diwali is one of the finest and luckiest festival to all of us as most movies released on
diwali day-week are ery much successful and box ofice hits for our super star for many years eversince parasakthi. we are defitnely missing those evergreen days that being compensated by colourful pictures and messages by our fellow RASIGARGAL in the hub and we continue to live with our NADIGAR THILAGAM on these days and moreso on deepavaliday.
paai vilakku messages are noteworthy. picures are eyecatching. we are lucky to have pammalar raghaendran asudevan trio in our team.
GREAT GUNS ARE SHOT IN THE HUB PL KEEPIT UP.
COLOURFUL DIWALI GREETINGS TO ALL OUR FRIENDS AND WE salute our NADIGATHILAGAM and HE WILL BLESS US.


Regards,
S.Ramajayam
for onward transmission toHUB hope mr raghaendran will do.

vasudevan31355
21st October 2011, 01:34 PM
விரைவில் பவனி வருகிறார் அம்சமான எங்கள் 'அம்பிகாபதி'.

http://www.dhool.com/gifs/8404.jpg http://www.dhool.com/gifs/8405.jpg http://www.dhool.com/gifs/8403.jpg http://www.indianfox.com/musicfilmimages/1277987813374609277AMBIGAPATHY.jpg

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=350&height=350&image=/ahtees/admin/movies/content/14266_17_ambikapathy.jpg http://i2.ytimg.com/vi/xsC2RB6SO-0/0.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

parthasarathy
21st October 2011, 05:49 PM
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)

7. மாமா... மாப்ளே; படம்:- பலே பாண்டியா (1962); பாடல்:- கவியரசு கண்ணதாசன்; பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் எம்.எஸ்.ராஜூ; இசை:- மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்/டி.கே.ராமமூர்த்தி; இயக்கம்:- பி.ஆர். பந்துலு; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன்/நடிக வேள் எம்.ஆர்.ராதா மற்றும் கே. பாலாஜி.

நடிக வேள் எம்.ஆர். ராதா பங்கேற்ற பல காட்சிகள் மற்றும் படங்களில், முதல் பத்து இடங்களில் எப்போதும் இடம் பெறும் பாடல் இது (இரத்தக் கண்ணீர், பாவ மன்னிப்பு வரிசையில் மூன்றாவதாக இடம் பெற வேண்டிய படம் இது என்றால் அது மிகையாகாது.)

இந்தக் கட்டுரையில் இது வரை இடம் பெற்ற பாடல்களில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்ற பாடல் இது. இந்த நிமிடம் வரை, எல்லோராலும், ஏன் இதற்குப் பின்னர் பிறப்பவர்களும் ரசிக்கும்/ரசிக்கப்போகும் பாடல். இந்தப் பாடலின் சுவையே அதில் இழையோடும் நகைச்சுவை கலந்த அற்புதமான கர்நாடக சங்கீதம், பாடிய விதம் மற்றும் நடித்த நடிகர்களின் ஜனரஞ்சகமான மற்றும் தீர்க்கமான நடிப்பு.

இந்தப் படத்தை முதன் முதலில் எழுபதுகளின் துவக்கத்தில் பார்த்தபோது, படம் நெடுகிலும் நடிகர் திலகத்திற்கும் நடிக வேளுக்கும் கிடைத்த ஆரவாரமான வரவேற்பை - முக்கியமாக - இந்தப் பாடலின் போது இது வரையிலும் மறக்க முடியவில்லை. அந்த வரவேற்பு இன்றும் தொடர்கிறது என்பது தான் இந்தப் பாடலின் தனிச்சிறப்பு.

முதலில் பாடல் - பொதுவாக பெண் பார்க்கும் படலத்தில், ஆண் தான் பெண்ணைப் பாடச் சொல்லுவார். மாறாக, இதில், வருங்கால மாமனார், மாப்பிள்ளையைப் பாடச் சொல்லி அவரது கர்நாடக சங்கீத ஞானத்தை சரி பார்ப்பார். இந்தப் பாடலும் அதற்கேற்ப கர்நாடக சங்கீத அடிப்படையில், அதே சமயம், ஜனரஞ்சகமாகவும் அமைய வேண்டும். ஏனென்றால், இந்தப் படம் அடிப்படையில் ஒரு நகைச்சுவைப் படம். இந்தப் பாடலின் சூழல் வரும் வரையிலுமே, அநியாயத்துக்கு நகைச்சுவை இழையோட சென்று கொண்டிருக்கும். அப்படிப்பட்ட சூழலுக்கு, மிகவும் பொருத்தமாக, - பாடலின் ஆரம்பமே அவரைப் பாராட்டுவதாக "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்று துவங்கி, இடையில், வருங்கால மாமனார் குஷியாவதைக் கண்டு கொண்டு "துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதைய்யா" என்று பெரிய துதியையே பாடி, அவரை ஒரேயடியாகக் குஷிப்படுத்தி, அதனால், மாமனாரும் குஷியாகி, மாப்ளே மாப்ளே என்று பாடுவதாகப் போகும். மறுபடியும், படித்தவன் முதல் பாமரன் வரை ஒரு சேர சென்று சேர்ந்த பாடல் - இந்த யுகக் கவி கண்ணதாசனின் பாடல்.

அடுத்து, பாடிய முறை. மறுபடியும், டி.எம்.எஸ். அவர்கள் நடிகர் திலகத்திற்குப் பாடுகிறாரா, இல்லை, நடிகர் திலகமே பாடுகிறாரா என்று அனைவரையும், அதிசயிக்க வைத்தார். ஆலாபனையில் துவங்கி, பல்லவிக்குள் புகுந்து, கடைசியில் ஸ்வரப்ரஸ்தாரத்துக்குள் வெடிக்கும் அழகு ... சிலிர்க்கும். இருப்பினும், எல்லா வித ரசிகர்களையும் ரசிக்க வைப்பார். பிறகு, எம்.எஸ்.ராஜூ - இவர் நடிக வேளின் அத்தனை கோணங்கித் தனத்திற்கும் ஈடு கொடுத்து ஸ்வரம் போட்ட அழகும், ஆர்பாட்டமும்... அப்பப்பா! இருப்பினும், இன்று வரை இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் இவர் தான் என்பது பலருக்குத் தெரியாது போனது துரதிர்ஷ்டம் தான்.

இப்பொழுது இசை. மெல்லிசை மன்னர்கள் எப்போதுமே கர்நாடக சங்கீதத்தில் அமையும் பாடல்களை வெகு ஜன ரசிகர்களும் ரசிக்கும்படி கொடுப்பதில் சமர்த்தர்கள் என்பதை மறுபடியும் நிரூபித்த பாடல். அதிலும், நடிக வேளுக்கேற்றாற்போல் குரல் வளம் அமைந்த பாடகரைத் தேர்வு செய்தது மிக அழகு.

இப்படியொரு பாடலை எல்லோரும் இன்றளவும் ரசிக்கும்படி எடுத்த இயக்குனர் பி.ஆர்.பந்துலு பாராட்டுக்குரியவர். பாலாஜி செய்யும் கொனஷ்டைகளையும் ரசிக்கும்படி எடுத்தது அற்புதம்.

இப்போது நடிப்பு. முதலில் பாலாஜி. ஆஹா! நகைச்சுவையில், பாலாஜியும் ஸ்கோர் செய்த படமாயிற்றே. விடுவாரா? கடம் வாசிக்கும் பாவனையையும் கூடவே சில பல கொனஷ்டைகளையும் சகஜமாக செய்திருப்பார். நடிக வேள்! இவர் ஸ்வரங்களுக்குச் சரியாக வாயசைத்தாரா என்பதை யாரும் கண்டு கொள்ள விடாமல், ஏகப்பட்ட கொனஷ்டைகளை செய்து அரங்கத்தை அதிரச் செய்திருப்பார். இந்தப் பாடல், உண்மையில், இவருக்காக அமைந்த பாடல் தான் என்ற போதிலும், வழக்கம் போல சில கோணங்கித் தனங்களை அவருக்கேயுரிய பாணியில் செய்து திரையில் உள்ள மற்ற நடிகர்களை இருட்டடிப்பு செய்தார் என்ற போதிலும், நடிகர் திலகம் என்ற அந்த மாபெரும் கலைஞன், கொஞ்சமும் கவலைப் படாமல், அலட்டிக்கொள்ளாமல், செய்திருப்பார் - குறிப்பாக, நடிக வேள் ஒரு பெரிய ஸ்வரத்தைப் போட்டு எல்லோரையும் சிரிக்க வைத்த பின், உடனேயே, "ம ப ப ப......" என்று ஒரு பெரிய ஸ்வரத்திற்கு அதியற்புதமாக வாயசைத்து, அரங்கத்தை அதிர வைத்த சாதுர்யம்; ஸ்வரம் மேலேறும் போதும் கீழிறங்கும் போதும், வாசயசைத்துக் கொண்டே கையால் அதற்கேற்றாற்போல் ஏற்றி இறக்கிச் செய்யும் பாவம்; பாடல் நெடுகிலும், அனாயசமாகக் பாவனைகளின் மூலம், அனைவரையும் சிரிக்க வைக்கும் நடிப்பு; அவர் செய்யும் ஒவ்வொரு கோணங்கித் தனத்தின் முடிவிலும், இவர் பாட ஆரம்பிக்கும் போது, சங்கடத்தில் நெளிந்து கொண்டே அதனை முகத்திலும் காட்டிக் கொண்டே ஆனால், மிகச் சரியாக ஸ்வரம் போட்டுக் கொண்டே (அதாவது, நடித்துக் கொண்டே) போவது. இனி ஒருவன் பிறக்க வேண்டும்!

கடந்த மாதத்தில் கூட, விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், வெளியேற்றப் பட்ட "சாய் சரண்" என்ற இளம் பாடகர் மீண்டும் "வைல்ட் கார்டு" ரவுண்டில் வந்து திரும்பவும் முக்கிய அணிக்குள் மீண்டும் வர வழி வகுத்த பாடல் இதுதான். இதற்காக, அன்று வந்திருந்த மெல்லிசை மன்னரிடமிருந்தே, முக்கியப் பரிசைப்பெற்றார்.

அந்த அளவிற்கு, இன்று வரை எல்லோராலும் ரசிக்கப்படுகின்ற பாடலாகையால், இந்தப் பாடலும் சிரஞ்சீவித்துவம் பெற்ற நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற பாடலாகிறது.

தொடரும்,

இரா. பார்த்தசாரதி

RAGHAVENDRA
21st October 2011, 05:58 PM
டியர் பார்த்தசாரதி,
மாமா மாப்ளே என்று ஒரு நகைச்சுவைத் தொடரையே ஒரு தொலைக்காட்சி தயாரிக்கின்ற அளவிற்கு அந்தப் பாடல் சிரஞ்சீவித்துவம் பெற்று விட்டதே...என்று நினைக்கிற போது, உடனேயே உங்களுடைய கருத்துரை... ஆஹா.... என்ன தெளிவான பதிவு...
நடிகர் திலகம் என்கிற இறைவனுக்கு எத்தனை சாரதிகள்...
கலக்குங்கள் சார்...

இன்று வெளிவந்துள்ள 27.10.2011 தேதியிட்ட புதிய தலைமுறை தீபாவளி சிறப்பிதழில் மறையாத சூரியன்கள் என்கிற தலைப்பில் நடிகர் திலகத்தைப் பற்றி திரு பாக்யராஜ் தன் கருத்துக்களை எழுதியுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள அனைத்து சாதனையாளர்களையும் மணியம் செல்வன் அவர்களின் ஓவியத்தையே படமாக வைத்துள்ளனர். அதில் அவர் வரைந்துள்ள நடிகர் திலகம் அவர்களின் திருவுருவம்.. நன்றி புதிய தலைமுறை இதழ்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/pudhiyathalaimuraiwriteupartfw.jpg

mr_karthik
21st October 2011, 06:34 PM
பம்மலார் சார்,

பராசக்தி திரைக்காவியத்தின் வெளியீட்டு விளம்பர வரிசை வெகு அற்புதம். காணக்கிடைக்காத பொக்கிஷங்களைக்கண்டு மிக்க மகிழ்ச்சி. இந்த திரியில் பங்கேற்கும் நம்மில் யாருமே பிறந்திராத காலத்தில் வெளிவந்த விளம்பரங்கள் இப்போதும் காணக்கிடைப்பதற்கு நிச்சய்ம பாக்கியம் செய்திருக்க வேண்டும். எங்க ஊர் ராஜா ஸ்டில்லும் வெகு நேர்த்தி. பாராட்டுக்கள்.

ராகவேந்தர் சார்,

'எங்க ஊர் ராஜா' வின் பொம்மை இதழ் செப்பேடுகள் கன கச்சிதம். இளமைத்தோற்றத்திலும் முதுமைத்தோற்றத்திலும் அடுத்தடுத்து அமைந்த ஸ்டில்கள் கண்கொள்ளாக்காட்சி.

வாசுதேவன் சார்,

எங்க ஊர் ராஜா நிழற்படத்தையும், பாடல் காட்சியையும் தந்து மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி. ஒரு படம் முடிந்ததும் அடுத்தது என்று சளைக்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் சேவை தொடரட்டும்.

mr_karthik
21st October 2011, 06:36 PM
பார்த்தசாரதி சார்,

உங்கள் அற்புத எழுத்தில் 'மாமா... மாப்பிளே' பாடலை விவரித்திருந்த விதம் மிக அருமை. ரொம்பவே ரசித்து, ரசித்து எழுதியிருக்கிறீர்கள். எம்.ஆர்.ராதாவின் சேஷ்டைகளால் முகத்தை சுழித்துக்கொண்டு அதே சமயம் ஸ்வரத்துக்கு தப்பாமல் வாயசைத்துக்கொண்டு நடிப்பது என்பது இவரால் மட்டுமே முடியக்கூடியது. தெளிவாக காட்சியமைப்புகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

படம் வெளிவந்த சமயங்களில் இந்தப்பாடல் அவ்வளவாக வானொலிகளில் ஒலிபரப்பானதாகத் தெரியவில்லை. 'வாழ நினைத்தால்', 'அத்திக்காய் காய் காய்' பாடல்கள்தான் டாமினேஷன் பாடல்களாக திகழ்ந்தன. சமீப ஆண்டுகளாக இப்பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ராகவேந்தர் சார் சொன்னபடி, ஒரு தொலைக்காட்சி நகைச்சுவை தொடருக்கு இது டைட்டில் பாடலாக, (சில பல ரீமிக்ஸுடன்) இடம்பெற்றுள்ளது.

உங்கள் ஆய்வு இப்பாடலை இன்னும் பல கோணங்களில் ரசிக்க வைக்கிறது. நான் எப்போதும் இப்பாடலைப் பார்க்கும்போது இவ்விருவரோடு பாலாஜியின் சேஷ்டைகளையும் வெகுவாக ரசிப்பதுண்டு (திரைக்குப்பின்னால் நின்று எட்டிப்பார்த்து ரசிக்கும் "நம்ம தேவிகா"வையும்தான்)

நல்ல ஆய்வு, தொடருங்கள் உங்கள் சேவையை.

vasudevan31355
21st October 2011, 07:38 PM
நாளை நம் அழகு 'அம்பிகாபதி' வருகிறார்.(22-10-1957)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000505765.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

J.Radhakrishnan
21st October 2011, 09:46 PM
டியர் பம்மலார் சார்,

நடிகர்திலகத்தை பற்றிய அகிலன் அவர்களின் பதிவை கண்டேன், ஒரு எழுத்தாளர் என்கிற பார்வையில் நம்மவரை பற்றி ரசித்து எழுதிஉள்ளார், இதனை பதிவிட்ட தங்களுக்கு எனது மேலான நன்றிகள்.

J.Radhakrishnan
21st October 2011, 10:16 PM
டியர் பார்த்தசாரதி சார்,
நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர்திலகத்தின் ஒரு அருமையான பாடல் பதிவோடு வந்துள்ளீர்கள் நன்றி , இந்த படத்திற்கு nt அவர்கள் கொடுத்த கால்ஷீட் மொத்தம் 14 நாட்கள் தான், இருப்பினும் அவசரகதியில் எதையும் செய்யாமல் மிக அருமையாக செய்ய இவரை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? இதே படத்தில் வாழ நினைத்தால் வாழலாம் பாடலில் தண்ணீரில் நீந்தும் காட்சியில் அவரின் செய்கை ரசிக்கும் படி இருக்கும்.

pammalar
21st October 2011, 11:58 PM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

பெற்ற மனம்

[19.10.1960 - 19.10.2011] : 52வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணம்

பாவேந்தர் பாரதிதாசனாரின் "குயில்" இதழ் : 1.11.1960
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4834-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4835-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

guruswamy
22nd October 2011, 12:00 AM
Dear Mr. Kumaresh,

Kindly excuse me if my feelings hurt you.

I'm unable to bear the disappointment of not releasing V.M. in Bangalore. We are there to give you the fullest support, please execute the release of V.M. I cannot stand when other actor movie can be released and why not our Legend's.

JAIHIND
M. Gnanaguruswamy

pammalar
22nd October 2011, 12:08 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் உளமார்ந்த பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது கனிவான நன்றிகள் !

'பொம்மை' இதழ் "எங்க ஊர் ராஜா" நிழற்படங்களை கண்ணிமைக்காமல் பார்க்க வைத்து அசத்திவிட்டீர்கள் !

Dear Ramajayam Sir,

Thank you for your kind words !

Wishing you a very Happy Deepavali !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
22nd October 2011, 12:11 AM
டியர் பம்மலார்,
பெற்ற மனம் பற்றிய புரட்சிக் கவிஞரின் கருத்துக்களை வெளியிட்டு இதுவரை இல்லாத அளவிற்கு ஆவணங்களின் சிகரத்திற்கே போய் விட்டீர்கள். இங்கு அனைவரின் பாராட்டுக்களும் உங்களுக்கு.
அன்புடன்

RAGHAVENDRA
22nd October 2011, 12:14 AM
எல்லோரும் கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணப் படங்களாய்க் கொடுத்த நேரத்தில் ஸ்ரீதரின் வைர நெஞ்சம் அதிக எதிர்பார்ப்புகளை உண்டாக்கிய படம். அப்படத்தில் செந்தமிழ் பாடும் என்ற பாடல் உலகப் பிரசித்தி பெற்றது. அப்பாடல் காட்சியினைத் தற்போது கருப்பு வெள்ளையில் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடே இப்போது நீங்கள் காணப்போகும் பாடல். கருப்பு வெள்ளையிலும் நடிகர் திலகம் இளமைத் தோற்றத்தைக் காணுங்கள்.


http://www.youtube.com/watch?v=khGkBKu4P68

pammalar
22nd October 2011, 12:32 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

பட்டாக்கத்தி பைரவன்

[19.10.1979 - 19.10.2011] : 33வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 19.10.1979
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4828a-1.jpg

குறிப்பு:
தமிழ்நாட்டில் கணிசமான அரங்குகளில் 50 நாட்களைக் கடந்து நல்லதொரு வெற்றியை அடைந்த இக்காவியம் அயல்நாடான இலங்கையின் கொழும்பு நகரிலுள்ள 'ஜெஸிமா' திரையரங்கில் 20 வாரங்கள் [140 நாட்கள்] மற்றும் யாழ்ப்பாணம் நகரிலுள்ள 'ஸ்ரீதர்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி மெகாஹிட். இந்த சாதனை விளம்பரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் இங்கே பதிவாக அளிக்கப்படும்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd October 2011, 12:43 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் இதயங்கனிந்த பாராட்டுக்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !

"எங்க ஊர் ராஜா" நிழற்படங்கள் மற்றும் பாடல்களின் வீடியோக்கள் எல்லாம் எப்பொழுதும் போல் TOP !

"அம்பிகாபதி" ஆரம்பப்பதிவுகள் அசத்தல் !

Dear kumareshanprabhu Sir,

Thanks a lot !

அன்புடன்,
பம்மலார்.

sakaLAKALAKAlaa Vallavar
22nd October 2011, 01:13 AM
http://lh6.ggpht.com/-tqtonisY98k/Tp99ZGWOJYI/AAAAAAAABgY/Pm4fIx1jXEs/s400/p46b.jpg


'' 'தேவர் மகன்’ படத்தில் நடித்த போது செவாலியே சிவாஜி கணேசனுட னான மறக்க முடியாத அனுபவம் ஏதாவது?''

''நா நேஷனல் அவார்டு வாங்கலனு ரொம்பப் பேரு வருத்தப்படுவாங்க. நா அவருகிட்ட அப்பவே அத வாங்கிட்டேன். 'தேவர் மகன்’ படத்தை தேவிஸ்ரீ தியேட்டர்ல ப்ரிவியூ போட்டுக் காண்பிச்சாங்க. அப்போ, கமலா அம்மாளக் கூப்புடுற மாதிரி கமல் சாரை, 'டே கமலா, இங்க வாடா’னு கூப்புட்டாரு சிவாஜி சார். 'இந்தப் படத்துல ஒரிஜினல் மதுரைப் பேச்சுப் பேசி நடிச்சவன் இவந்தான்டா... இவன் பெரிய ஆளா வருவான்டா’னு என்னயக் காட்டிச் சொன்னாரு. என்னைய பக்கத்துல அழைச்சு 'நல்லா வருவேடா’னு அழுத்தமா ஒரு முத்தம் கொடுத்தாரு. 'இத இப்புடியே வளத்துக்கடா. காமெடியில மட்டும் இல்ல... கழுவுற கையில திங்கணும்... திங்குற கையில கழுவணும்னு பேசி, சிம்பதி கேரக்டரையும் சிறப்பா பண்ணுன பாரு... லேசா என்னயவே ஒரு சிலுப்புச் சிலுப்பி விட்டுட்டேடா. நல்லா வருவடா’னு வாழ்த்தினாரு. காதாரக் கேட்டவன் அப்புடியே அவரு கால்ல நெடுஞ்சாண் கிடையா விழுந்துட்டேன். விழுந்தவன் எந்திரிக்கவே இல்ல. 'யேய், அவன் தூங்கிட்டான்போல இருக்கு. எழுப்பி வுடுங்கப்பா’னு சொன்னாரு சிவாஜி சார். அவரோட வாய் குளிர்ந்த வாழ்த்து வேர்ல்டு அவார்டுக்குச் சமம்ணே. அந்த மகராசனோட வாழ்த்து இன்னிக்கு வரைக்கும் நெலச்சு நிக்குது. வசிஷ்டர் கையால வாங்கிய வரம்ணே அது.

தேவர் மகன்’ படம் கமல் சார் எனக்குக் கொடுத்த லைஃப். என்னோட டேர்னிங் பாய்ன்ட்டே அதுதான். இனிமே, அப்புடி ஒரு படம் கிடைக்குமானு தெரியல. பெரிய இமயங்களான சிவாஜி சார், கமல் சார் ரெண்டு பேருக்கும் நடுவுல நடந்து வார பாக்கியம் அந்தப் படத்துலதான் எனக்கு அமைஞ்சது. வளர்ற நேரத்துல அந்த மகத்தான வாய்ப்பக் கொடுத்த கமல் சாருக்கு நா காலா காலத்துக்கும் கடமப்பட்டு இருக்கேன். 'தேவர் மக’னுக்குப் பெறகு, 'பசும்பொன்’ படத்துல சிவாஜி சாரோட நடிச்சேன். அதுக்கப்புறம் சிவாஜி சாரோட வீட்ல எடுத்த 'சந்திரமுகி’ படத்துல நடிச்சேன். தரயில மண்ணக் குமிச்சு சிவாஜி சாரைப் பாத்த வடிவேலு, அந்த மன்னவனோட ஒண்ணா நின்னு தெரயில நடிப்போம்னு நெனச்சதுகூட இல்ல. அவரு கண்ண மூடினப்ப அவரோட கால்மாட்டுலயே நின்னு கதறினேன். அது அழுகை இல்லங்க... அத்தன சொட்டுக் கண்ணீரும் நா மிச்சம் வெச்சிருந்த நன்றிங்க!''

anm
22nd October 2011, 02:57 AM
திரு. பம்மலார் சார்,

'பாவேந்தரின்" எழுத்தால் நமது நடிப்பு வேந்தரின் புகழ் பாடும் கவிதையையும், எழுத்தையும் எமக்கு வேண்டி அரும்பாடுபட்டு சேகரித்து அதை இவ்விடம் வெளியிட்டு மகிழ்ந்து எம்மையும் மகிழ்வித்த நீவிர் நீடுழி வாழ்க பெம்மானே.

Anm

anm
22nd October 2011, 03:03 AM
திரு. பார்த்தசாரதி சார்,

'பலேபாண்டியாவின்"பிரசித்தமான "மாமா', 'மாப்ளே" பாட்டை மிகவும் சிலாகித்து எழுதி அந்த வர்ணனையில் எங்களைக் குளிப்பாட்டி எல்லோரையும் மகிழ்வித்து விட்டீர்கள்!!!!

நன்றி!!!! நன்றி!!!!!

Anm

anm
22nd October 2011, 03:06 AM
திரு. ராகவேந்திர சார்,

"செந்தமிழ் பாடும்" பாடலின் லிங்கைக் கொடுத்து அதற்கு மேலும் சிறப்பு செய்துள்ளமைக்கு நன்றிகள்!!!!

Anm

pammalar
22nd October 2011, 03:49 AM
டியர் பார்த்தசாரதி சார்,

"ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே நம் சாரதி சாரின் ஆய்வேடுகளை வாசிக்க வண்ணக்கிளியே !"

மூத்த-பழுத்த ரசிக-பக்தரான தங்களின் கவித்துவமான பாராட்டு மழைக்கு இந்த எளியேனது எண்ணிலடங்கா நன்றிகள் !

தங்களின் 'நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்' கட்டுரைத்தொடரில், லேட்டஸ்டாக தாங்கள் அலசியிருக்கும் 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' ['மாமா-மாப்ளே'] பாடலின் திறனாய்வு அருமையோ அருமை ! இந்தப்பாடலில் தேவிகா பக்கம் கேமரா திரும்பும்போதெல்லாம் அவர் அழகுப்பதுமையாக காட்சிதருவது கண்கூடு.

தாங்கள் பாடலை அலசும்விதமே அலாதி. முதலில் அப்பாடலைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை அளித்து, அதன் பின் அப்பாடல் பாடப்பட்ட முறை மற்றும் அதன் இசை, அதன் பின் நடிப்பு என ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பிரித்து, அதே சமயத்தில் அதில் பங்கு பெற்றவர்களின் performanceஐ நடுநிலைமையோடு சிலாகித்து தாங்கள் வழங்கும் விதம் இருக்கிறதே, அதியற்புதம் ! முடிவில், அந்தப்பாடலைப் பற்றிய தகவல் துணுக்குகளையும் அளித்து வெளுத்துக் கட்டி விடுகிறீர்கள் !

தங்களுக்கு எனது அன்பான பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

இதோ தங்களுக்காகவும், இங்குள்ள அனைவருக்காகவும் காலத்தை வென்ற எவர்கீரின் 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்':


http://www.youtube.com/watch?v=b3ku7VgUi30

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd October 2011, 03:59 AM
டியர் mr_karthik,

தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !

டியர் ஜேயார் சார்,

தங்களுக்கு எனது கனிவான நன்றி !

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களது பாராட்டுக்கு அன்பான நன்றி !

கருப்பு-வெள்ளையிலும் வைரநெஞ்சம் பாடல் சூப்பர் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd October 2011, 04:10 AM
டியர் சகலகலாவல்லவர்,

நடிகர் திலகத்துடனான "தேவர் மகன்" அனுபவங்கள் குறித்து 'வைகைப்புயல்' வடிவேலு மொழிந்த உணர்ச்சிபூர்வமான உரையை இங்கே இடுகை செய்த தங்களுக்கும், பிரசுரித்த 'ஆனந்த விகடன்' இதழுக்கும் இனிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd October 2011, 04:16 AM
டியர் Mr.anm,

தங்களின் மேலான பாராட்டுக்கும், வளமான வாழ்த்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd October 2011, 04:24 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா

கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா

சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்

பராசக்தி

[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷம் : காவிய விமர்சனம்

கிளர்ச்சி : 1.11.1952
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/ParasakthiFilmReview-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
22nd October 2011, 04:37 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா

கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா

சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்

பராசக்தி

[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷம் : வரலாற்று ஆவணம்

பேசும் படம் : நவம்பர் 1952 : 'இம்மாத நக்ஷத்திரம்' பகுதி
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC19561-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
22nd October 2011, 05:27 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

எங்க ஊர் ராஜா

[21.10.1968 - 21.10.2011] : 44வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4837-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4836-1.jpg

குறிப்பு:
தமிழகத்தில் கணிசமான திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்த "எங்க ஊர் ராஜா" அதிகபட்சமாக சென்னை 'சித்ரா'வில் 85 நாட்கள் ஓடிய பெருவெற்றிக்காவியம். ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. 50வது நாள் விளம்பரம் கிடைத்தவுடன் இங்கே பதிவிடப்படும்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd October 2011, 05:53 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

அம்பிகாபதி

[22.10.1957 - 22.10.2011] : 55வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரம்

பேசும் படம் : நவம்பர் 1957
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4838-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd October 2011, 05:56 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

சித்ரா பௌர்ணமி

[22.10.1976 - 22.10.2011] : 36வது ஆண்டு தரிசனம்

பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரம்

மதி ஒளி : 1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4839-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
22nd October 2011, 06:10 AM
டியர் பம்மலார்,
சித்ரா பௌர்ணமி திரைக்காவியத்தின் சிறப்பினை அதனுடைய விளம்பரத்தை வைத்தே கூறி விடுவீர்கள்... அட்டகாசம்...

மெல்லிசை மன்னரின் சிறப்பான இசையில் இனிமையான பாடல்கள்.

எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய காலம் உண்டு, பருவம் உண்டு என்கிற இனிமையான பாடல்..


http://www.youtube.com/watch?v=fA0o1I2lflo

டி.எம்.சௌந்தர்ராஜன், சுசீலா குரல்களில் ...சூப்பரோ சூப்பர்...வெள்ளுடை வேந்தரின் வெளுத்துக் கட்டும் ஸ்டைல்... பார்த்து மகிழுங்கள்...

செந்தூர நெத்திப் பொட்டின் நளினம், அது சித்திரக் கோலம்...

சௌந்தர்ராஜனின் குரல்... ஆஹா... கேளுங்க கேளுங்க... கேட்டுக்கிட்டே.... பாருங்க பாருங்க... பார்த்துக்கிட்டே...


http://www.youtube.com/watch?v=8Fzm8HVzge0&feature=fvsr

vasudevan31355
22nd October 2011, 07:36 AM
'சித்ரா பௌர்ணமி' யில் சிகர நடிகரின் சிறப்புத் தோற்றங்கள்.

நடிக+நடிகைகள்:-"நடிகர்திலகம்"சிவாஜிகணேசன், "கலைச்செல்வி"ஜெயலலிதா, நாகேஷ், மனோகர், சுந்தர்ராஜன், ஜெய்குமாரி, செந்தாமரை மற்றும் பலர்.

இசையமைப்பு:-"மெல்லிசைமன்னர்"எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.

பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன் அவர்கள்.

கதை+வசனம்:-பாலமுருகன் அவர்கள்.

தயாரிப்பு:-கே.ஆர்.ஸ்ரீநிவாசன் & ஆர்.எம்.சுப்பிரமணியன் என்.நாகசுப்பிரமணியன் ஆகியோர்.

இயக்கம்:-பி. மாதவன் அவர்கள்.

http://padamhosting.com/out.php/i57751_vlcsnap9010.png http://www.whatsonindia.com/WhatsOnTV/images/ProgramImages/XLarge/30000000000011870.jpg


http://padamhosting.com/out.php/i57747_vlcsnap39069.png


http://padamhosting.com/out.php/i57748_vlcsnap38760.png


http://padamhosting.com/out.php/i57746_vlcsnap35289.png


http://padamhosting.com/out.php/i57744_vlcsnap39342.png


http://padamhosting.com/out.php/i57743_vlcsnap29402.png


http://padamhosting.com/out.php/i57742_vlcsnap38870.png


http://padamhosting.com/out.php/i57749_vlcsnap35875.png


http://padamhosting.com/out.php/i57750_vlcsnap35241.png



அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
22nd October 2011, 08:16 AM
'சித்ரா பௌர்ணமி' யில் சிங்கத்தமிழனின் சீர்மிகு,சீற்றமிகு நடிப்பில் அற்புதப் பாடல்கள்.

என்னடி சின்னக்குட்டி...போட்ட புள்ளி சரிதானா?....


http://www.youtube.com/watch?v=N8045Rvtzio&feature=player_detailpage

வந்தாலும் வந்தான்டி ராஜா...


http://www.youtube.com/watch?v=uckFlXsmneU&feature=player_detailpage

நீயும் வாழ வேண்டும்...


http://www.youtube.com/watch?v=xZj54M_kwx0&feature=player_detailpage


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
22nd October 2011, 09:55 AM
'அம்பிகாபதி' யில் அழகுப் பெட்டகமாய் அனைத்துலகமும் போற்றும் அருட்செல்வர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_001473722.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_002645651.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_000078203.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_000437087.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_002363911.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_000641200.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_001605723.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_002132728.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_020989202.jpg

vasudevan31355
22nd October 2011, 09:58 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_026317801.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_068307523.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_083343521.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
22nd October 2011, 10:24 AM
அகிலம் போற்றும் அரும்பெரும் நடிப்பு மேதையின் 42-ஆவது அழகோவியம் 'அம்பிகாபதி'.

தஞ்சை ராமையாதாஸ், கவியரசர், கே.டி.சந்தானம், கு.மா.பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ஆதிமூலம் கோபாலகிருஷ்ணன், கு.சா.கிருஷ்ண மூர்த்தி ஆகியோரின் அற்புத வைரவரிப் பாடல்கள்.

ஜி.ராமநாதன் அவர்களின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் இசை....

மன்மதனையே அழகில் மிஞ்சும் மகா நடிகர் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்...

அற்புதக் குரலில் அனாயாசமாய் பாடும் டி.எம்.எஸ். மற்றும் சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், வி என்.சுந்தரம், சுசீலா, ராஜேஸ்வரி....

இனிய குரலுக்கு ஒரு அஷ்டாவதானி பி.பானுமதி...

அருமையான இயக்கத்திற்கு ப.நீலகண்டன்.

எக்காலத்திலும் மனதில் ரீங்காரமிட்டு வலம் வந்து கொண்டிருக்கும் அழியாப் புகழ் பெற்ற பாடல்கள். கண்டும் கேட்டும் இன்புறுங்கள்.

சோறு மணக்கும் சோநாடாம்...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xsC2RB6SO-0

என் ஆசைக் கனியமுதே...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=N3t9kUnPL5k

அம்புலியைக் குழம்பாக்கி....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ga9Nrh7i0-U

கண்ணிலே இருப்பதென்ன ... கன்னி இளம் மானே...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_iV1tFns0Bs

மாசில்லா நிலவே நம்....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fb1uJPhkpLc

வாடா மலரே ! தமிழ்த் தேனே....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=45sjbjyko5I

வானம் எங்கே...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hFpRS6omL5Y

ஆடட்டுமா...கொஞ்சம் பாடட்டுமா...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sunl2TR9jC8

கண்ணிலே இருப்பதென்ன ... கன்னி இளம் மானே...(டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வெண்கலக் குரலில்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Eezd4TKyAyk

கண்ட கனவும் இன்று பலித்ததே...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=HMLqmEnAGE0


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
22nd October 2011, 11:00 AM
கண்ணே உன்னால் நான் அடையும்....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6ZPpeNHaFnM

இட்ட அடி நோக...எடுத்த அடி கொப்பாளிக்க....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lTD4RjgElMM

பொனா ...ய்யன்னா ...க்கன்னா...காவன்னா...லூனாக் குதிரையின்னான்....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=v9wyExaWn8c

நடிப்புலக நாயகரின் வாயடைத்துப் போகச் செய்யும் வாயசைப்பில்.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்.....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uYCh9ngEhWo

சிந்தனை செய் மனமே.....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=n6Pt-dKwvwQ

வடிவேலும் மயிலும் துணை....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UHAgZ7YnXMw


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
22nd October 2011, 12:59 PM
அன்பு நண்பர்களே!
எனக்கு மிக மிக மிக பிடித்தமான நடிகர் திலகத்தின் காவியங்களுள் அம்பிகாபதியும் ஒன்று. அந்த அழகு மதிவதன முகத்தை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
அதுவும்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_020991682.jpg

வடிவேலும் மயிலும் துணை
வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை

நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
தடமேவும் பொழில் சூழும் தணிகைவாழும் பரமஞான குருபரன்
வடிவேலும் மயிலும் துணை

தமிழ்மாலை தனைச் சூடுவான்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்

தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
தாளையளித்திட வேணுமெனத் துதிபாடலுனை கிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைத்து நினைத்து கவிமலர் தொடுத்த

தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்

சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட
சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம் புறப்பட்டதே...

பாடல் காட்சியில் இந்த மனிதப் புனிதர் வாயசைக்கும் அழகும், இம்மியளவு கூடப் பிசகாமல் முகபாவங்களில் புகுந்து விளையாடும் வித்தைகளும் இருக்கிறதே! நடிப்பின் இறைவா! நின்னை அடைய நாங்கள் செய்த புண்ணியம்தான் என்ன!

கண்களில் கண்ணீருடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
22nd October 2011, 08:02 PM
டியர் வாசுதேவன் சார்,
நிச்சயமாக ஒவ்வொரு ரசிகருக்கும் கண்ணீரால் கண்கள் குளமாகும் தங்கள் பதிவுகளைப் பார்த்தால்...
அதே உணர்வுடன்

RAGHAVENDRA
22nd October 2011, 08:06 PM
பல ஆண்டுகளுக்கு முன் கவி கா.மு.ஷெரீப் அவர்களின் புதல்வர் சீதக்காதியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் சொன்னார், திருவிளையாடல் படத்தில் வரும் பாட்டும் நானே பாடலை தன் தந்தை எழுதியதாகவும் ஆனால் படத்தில் கண்ணதாசன் பெயர் வந்ததாகவும் சொன்னார். சமீபத்தில் கவி கா.மு.ஷெரீப் அவர்களுக்கான ஒரு வலைப்பூவில் இதே தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆதாரம் உண்டா என்பது தெரியவில்லை. இருந்தால் அதனைப் பதியலாம். அப்பாடல் பதிவான ஒலிப்பதிவுக் கூடப் பொறியாளர் அல்லது அவருடைய உதவியாளர் அல்லது ஏ.பி.என். உதவியாளர் யாராவது இருந்தால் அவர்கள் தான் இதை உறுதி செய்ய முடியும்.

கவி.கா.மு.ஷெரீப் அவர்களுக்கான வலைப்பூ (http://kavikamu.wordpress.com/2009/03/12/64/)

அன்புடன்

vasudevan31355
22nd October 2011, 09:33 PM
பராசக்தி (வண்ணத்தில்)

அன்பு நண்பர்களே!

தற்கால தொழில் நுட்பம் நம்மை மலைக்க வைக்கிறது என்பதற்கு கீழ்க் கண்ட சுட்டி ஒரு சிறந்த உதாரணம். ஆமாம்.! 'பராசக்தி' திரைப்படத்தில் நடிகர் திலகத்தை முதன் முதலாக ஒரு சில வினாடிகள் வண்ணமயமாகக் காணப் போகிறீகள். வியப்பாக இருக்கிறதா? அதிசயம். ஆனால் உண்மை. இன்ப அதிர்ச்சிக்குத் தயாராகுங்கள். (அன்பு ராகவேந்திரன் சார் 'செந்தமிழ் பாடும் சந்தனக்காற்றை' கருப்பு வெள்ளையில் தந்து கலக்கியது போல).


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vVX40wjio3I

அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
23rd October 2011, 01:15 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

"சித்ரா பௌர்ணமி" பாடல்களின் ஒலி-ஒளிக்காட்சிகளை பதிவிட்டமைக்கு பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd October 2011, 01:17 AM
டியர் வாசுதேவன் சார்,

சில வினாடிகளே ஆனாலும், "பராசக்தி" வண்ணத்திலும் Superb !

"சித்ரா பௌர்ணமி" ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ ஆல்பங்கள் அசத்தலோ அசத்தல் !

தங்களின் மனதுக்கினிய காவியமான "அம்பிகாபதி" பதிவுகள் அசுரப் பதிவுகள் !

ஸ்டில்ஸ் மற்றும் பாடல்களின் ஆல்பங்கள் அந்த உன்னதக் கவிக்கோர் உணர்வுபூர்வமான அஞ்சலி !

தங்களின் பிரம்மாண்ட உழைப்பு பிரமிக்க வைக்கிறது !

தங்களுக்கு எனது பசுமையான பாராட்டுக்கள் ! வளமான வாழ்த்துக்கள் !! நெஞ்சார்ந்த நன்றிகள் !!!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd October 2011, 02:08 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா

கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா

சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்

பராசக்தி

[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷம் : வரலாற்று ஆவணம்

அமுதசுரபி : ஆகஸ்ட் 2006 : "பராசக்தி" பற்றி திரு.ஏவிஎம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/14a.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/15.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/16.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

jaiganes
23rd October 2011, 04:19 AM
past 2 days this video is in repeat mode...
Absolute delight on all levels...
http://www.youtube.com/watch?v=hbxVV7A1mjw

pammalar
23rd October 2011, 04:44 AM
சிவாஜி பொக்கிஷம்

"சிவாஜி ரசிகன்" சிறப்பு மலர் : 1.10.1970

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR21-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR22-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR23-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR24-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd October 2011, 05:20 AM
சிவாஜி பொக்கிஷம்

"சிவாஜி ரசிகன்" சிறப்பு மலர் : 1.10.1970

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR25-1.jpg
[இத்தொகுப்பில் 25வது காவியமாக "கோடீஸ்வரன்" கொடுக்கப்பட்டிருந்தாலும், அந்த சிறப்புப் பெருமையை உண்மையிலேயே பெற்ற காவியம் அதே தீபாவளித் திருநாளில் (13.11.1955) வெளியான "கள்வனின் காதலி" தான் ! ஆதாரபூர்வமாகவும் இதனை நிரூபிக்க முடியும், எப்படியென்றால்,

"கோடீஸ்வரன்" தணிக்கையான தேதி : 11.11.1955, தணிக்கை சான்றிதழ் எண் : 14004
"கள்வனின் காதலி" தணிக்கையான தேதி அதே 11.11.1955 ஆனால் தணிக்கை சான்றிதழ் எண் : 14005

எனவே, தணிக்கை சான்றிதழ் எண்களின் அடிப்படையில் 24வது காவியம் "கோடீஸ்வரன்", 25வது காவியம் "கள்வனின் காதலி"].

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR26-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR27-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SR28-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd October 2011, 05:42 AM
பல ஆண்டுகளுக்கு முன் கவி கா.மு.ஷெரீப் அவர்களின் புதல்வர் சீதக்காதியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் சொன்னார், திருவிளையாடல் படத்தில் வரும் பாட்டும் நானே பாடலை தன் தந்தை எழுதியதாகவும் ஆனால் படத்தில் கண்ணதாசன் பெயர் வந்ததாகவும் சொன்னார். சமீபத்தில் கவி கா.மு.ஷெரீப் அவர்களுக்கான ஒரு வலைப்பூவில் இதே தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஆதாரம் உண்டா என்பது தெரியவில்லை. இருந்தால் அதனைப் பதியலாம். அப்பாடல் பதிவான ஒலிப்பதிவுக் கூடப் பொறியாளர் அல்லது அவருடைய உதவியாளர் அல்லது ஏ.பி.என். உதவியாளர் யாராவது இருந்தால் அவர்கள் தான் இதை உறுதி செய்ய முடியும்.

கவி.கா.மு.ஷெரீப் அவர்களுக்கான வலைப்பூ (http://kavikamu.wordpress.com/2009/03/12/64/)

அன்புடன்

டியர் ராகவேந்திரன் சார்,

தாங்கள் எழுப்பிய சந்தேகத்திற்கு, சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் எழுதிய புத்தகத்திலிருந்து எடுத்தளிக்கப்பட்டிருக்கும் கீழ்க்காணும் ஆவணம் ஒரு சிறு விளக்கமாய் அமையும் என நம்புகிறேன் !

வரலாற்று ஆவணம்

நூல் : ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், ஆசிரியர் : ஜெயகாந்தன்

வெளியீடு : ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை - 17

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4840-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4841-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd October 2011, 05:50 AM
past 2 days this video is in repeat mode...
Absolute delight on all levels...
http://www.youtube.com/watch?v=hbxVV7A1mjw

டியர் திரு.ஜெய்கணேஷ்,

நடிகர் திலகத்தின் "ஒரு யாத்ரா மொழி" மலையாள திரைக்காவியத்தினுடைய 'காக்காலக் காரம்மா கண்விழிச்சுப் பாராம்மா' பாடலின் வீடியோவை பதிவிட்டமைக்கு மனமார்ந்த நன்றி ! நமது 'செவாலியே'வுக்கு நமது 'மேஸ்ட்ரோ' பின்னணி பாடிய அற்புதப்பாடல் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd October 2011, 06:02 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

வம்ச விளக்கு

[23.10.1984 - 23.10.2011] : 28வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : முதல் வெளியீட்டு விளம்பரம்

பொம்மை : அக்டோபர் 1984 [இணைப்பு இதழ்]
[நடிகர் திலகத்தின் 'கலையுலகப் பொன்விழா (1935-1984)' ஆண்டு தொடக்க சிறப்பு மலர்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4842-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
23rd October 2011, 06:03 AM
டியர் பம்மலார்,
திருவிளையாடல் திரைக்காவியத்தில் மன்னனுக்கு ஏற்பட்ட ஐயத்தை சிவபெருமான் தீர்த்து வைத்தது போல் உடனே ஜெயகாந்தன் புத்தகத்தின் மூலமாக தீர்த்து விட்டீர்கள். எனக்கு அதில் சந்தேகம் இல்லை, கா.மு.ஷெரீப் எழுதியது தான் என்பதை சீதக்காதி அவர்கள் அந்தக் காலத்தில் கூறிய போதே உறுதியாகி விட்டது. என்றாலும் திரையில் கவியரசரின் பெயரில் வந்ததால் நமக்குக் கிடைத்த தகவலை நாம் ஆதாரபூர்வமாக அல்லவா அறிய வேண்டும்.
அன்புடன்

vasudevan31355
23rd October 2011, 07:58 AM
'வம்ச விளக்கு' திரைப் படத்தில் தந்தையும் தனயனும்.[23.10.1984 - 23.10.2011] : 28வது உதயதினம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Dup01Photo-0001.jpg

(1985 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சமயத்தில் கடைகளில் கிடைத்த பொங்கல் வாழ்த்து அட்டையின் இமேஜைத்தான் மேலே காண்கிறீர்கள்.)

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
23rd October 2011, 11:56 AM
அன்புள்ள பம்மலார் சார்,

நாளுக்கு நாள் உங்கள் அசுர சாதனைகள் எல்லோரையும் மலைக்க வைக்கின்றன. அமுத சுரபி இதழில் வந்த ஏ.வி.எம்.செட்டியாரின் கட்டுரையைப் பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி. தான் முதலில் நடிகர்திலகத்தை பராசக்தியில் நடிக்க வைக்க மறுத்ததையும், இடையில் கூட அவரை மாற்றி கே.ஆர்.ஆரைப் போடச்சொன்னதையும் ஒப்புக்கொள்கிறார். அந்நேரத்தில் நடிகர்திலகத்தின் பக்கம் நின்று உறுதியாக வாதாடிய பெருமாள் முதலியாரின் பண்பு நம்மை சிலிர்க்க வைக்கிறது.

'பாட்டும் நானே' பாடல் கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள் எழுதியது என்று அவரது மகன் சீதக்காதி அவர்கள் (எனக்கும் அவர் நெருங்கிய நண்பர், இதுபற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன்) சொன்னதாக ராகவேந்தர் சார் சொன்னதும், உடனே ஜெயகாந்தனின் நூலில் இருந்து ஆதாரத்தைக்கொண்டு வந்து, அது உண்மைதான் என்று நிரூபித்த விதமும் வேகமும், உண்மையாகவே நீங்கள் 'ஜீபூம்பா' பூதம்தானோ என்ற ஐயத்தையே தோற்றுவிக்கிறது. திரு கா.மு.ஷெரீப் அவர்கள் பெயரை ஏ.பி.என். டைட்டிலில் போட்டிருக்க வேண்டும். கண்ணதாசனும் இதை பிற்பாடு எழுதிய தனது மனவாசம் நூலில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இருவரும் ஷெரீப் அவர்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. உண்மையை வெளிக்கொணர்ந்து சரியானவருக்குப் பெருமை சென்றடையச்செய்த ராகவேந்தர் சாரும், நீங்களும் பாராட்டுக்குரியவர்கள்.

எங்களை மலைக்க வைத்த இன்னொரு விஷயம், 'கள்வனின் காதலி' மற்றும் 'கோடீஸ்வரன்' விவகாரமம். இரண்டும் ஒரே நாளில் வெளியானதால் எதையாவது ஒன்றை 24 வது படமாகவும், இன்னொன்றை 25 வது படமாகவும் போடலாம் என்று அகில இந்திய தலை மன்றம், அதன் தலைவர் சின்ன அண்ணாமலை ஆகியோர் முடிவு செய்து 'கள்வனின் காதலிக்கு' 25 வது பட அந்தஸ்தைக்கொடுக்க (இத்தனைக்கும் மலர் தயாரிப்புக்குழுவில் பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களும் இடம்பெற்றுள்ளார்).....

நீங்களோ, ஒரே நாளில் தணிக்கையாகி, ஒரே நாளில் வெளியாகியிருந்தபோதிலும் தணிக்கைச் சான்றிதழ் எண்ணின் படி 'கோடீஸ்வரன்'தான் 25வது படம் என ஆணித்தரமாக நிரூபித்ததைப் பார்க்கும்போது.... 'அடடா ரசிகன் என்றால் இப்படியிருக்க வேண்டும். நாமும் நடிகர்திலகத்தின் தீவிர ரசிகன் என்று சொல்லிக்கொண்டு வெட்கமில்லாமல் வளைய வருகிறோமே' என்ற எண்ணம்தான் தோன்றியது. இதுதான் ரசிகனுக்கும், பக்தனுக்கும் உள்ள வித்தியாசம்.

இன்னும் எப்படியெப்படியெல்லாம் அசத்தப்போகிறீர்களோ.... காத்திருக்கிறோம்.

goldstar
23rd October 2011, 04:21 PM
Awesome Pammlar sir... You got NT details like "Karuvoolam".... Hats off to you sir...

Murali sir, looking for your detailed email about our NT.

Cheers,
Sathish

pammalar
24th October 2011, 12:07 AM
அன்புள்ள பம்மலார் சார்,

எங்களை மலைக்க வைத்த இன்னொரு விஷயம், 'கள்வனின் காதலி' மற்றும் 'கோடீஸ்வரன்' விவகாரமம். இரண்டும் ஒரே நாளில் வெளியானதால் எதையாவது ஒன்றை 24 வது படமாகவும், இன்னொன்றை 25 வது படமாகவும் போடலாம் என்று அகில இந்திய தலை மன்றம், அதன் தலைவர் சின்ன அண்ணாமலை ஆகியோர் முடிவு செய்து 'கள்வனின் காதலிக்கு' 25 வது பட அந்தஸ்தைக்கொடுக்க (இத்தனைக்கும் மலர் தயாரிப்புக்குழுவில் பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களும் இடம்பெற்றுள்ளார்).....

நீங்களோ, ஒரே நாளில் தணிக்கையாகி, ஒரே நாளில் வெளியாகியிருந்தபோதிலும் தணிக்கைச் சான்றிதழ் எண்ணின் படி 'கோடீஸ்வரன்'தான் 25வது படம் என ஆணித்தரமாக நிரூபித்ததைப் பார்க்கும்போது....

டியர் mr_karthik,

என்னைப் பாராட்டு மழையில் நனையச் செய்துவிட்டீர்கள். தங்களுக்கு எனது பணிவான நன்றிகள் !

நாம் அனைவருமே நமது இதயதெய்வத்திற்கு பக்தர்கள்தான் !

"திருவிளையாடல்" டைட்டில் கார்டில் 'பாட்டும் நானே பாவமும் நானே' பாடலை இயற்றியவர் கவி கா.மு.ஷெரிஃப் என்று போட்டிருக்கப்பட வேண்டும். எந்தவொரு படைப்பாளியினுடைய படைப்பையும் யாரும் இருட்டடிப்பு செய்யக்கூடாது. அது பச்சைத்துரோகம் அல்லாமல் வேறென்ன?! இது பற்றி தங்கள் பதிவில் தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரி !

மேலும், தங்கள் பதிவில் "கோடீஸ்வரன்", "கள்வனின் காதலி" காவியங்கள் குறித்து தாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் ஒரு திருத்தம்:

தணிக்கை சான்றிதழ் எண்களின் அடிப்படையில், "கோடீஸ்வரன்"தான் 24வது திரைக்காவியம்; "கள்வனின் காதலி" 25வது திரைக்காவியம்.

தற்பொழுது இந்த இரு காவியங்களையும் இந்த எண்ணிக்கைகளைக் கொண்டேதான் நாம் அணுகி வருகிறோம், இதுவே சரி !
("சிவாஜி ரசிகன்" [1.10.1970] சிறப்பு மலரில் தவறுதலாக இது மாறுபட்டு உள்ளது என்பதை தான் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தேன். அந்தப் பதிவை தாங்கள் மீண்டும் வாசித்தீர்களானால் தங்களுக்குத் தெரிய வரும் !)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th October 2011, 12:20 AM
டியர் ராகவேந்திரன் சார், மிக்க நன்றி !

டியர் வாசுதேவன் சார்,

நமது நடிகர் திலகத்தின் திரையுலக வம்ச விளக்கான அவரது இளைய புதல்வர் இளைய திலகத்துடன் கூடிய "வம்ச விளக்கு" [தந்தையும் தனயனும்] பொங்கல் வாழ்த்து அட்டை ஸ்டில் Simply Superb !

Dear goldstar, Thanks for your accolade !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th October 2011, 03:11 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

சபாஷ் மீனா

[3.10.1958 - 3.10.2011] : 54வது உதயதினம்

சாதனைச் செப்பேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 27.9.1958
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4843a-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4844a-1.jpg


50வது நாள் விளம்பரம் : The Hindu : 21.11.1958
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4845a-1.jpg


100வது நாள் விளம்பரம் : Indian Express : 10.1.1959
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4846a-1.jpg

குறிப்பு:
சென்னை 'காஸினோ'வில் 119 நாட்கள் ஓடி மாபெரும்வெற்றி பெற்ற "சபாஷ் மீனா", சேலம் 'ஓரியண்டல்' திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடி பெரும் வெற்றி கண்டது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th October 2011, 03:45 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

சபாஷ் மீனா

[3.10.1958 - 3.10.2011] : 54வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

சிறப்பு வண்ணப் புகைப்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SabashMeena1-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th October 2011, 04:46 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா

கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா

சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்

பராசக்தி

[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷம் : வரலாற்று ஆவணம்

தினத்தந்தி : ஞாயிறு மலர் : 2.9.2001
[நடிகர் திலகம் குறித்து அவரது முதல் கதாநாயகி பண்டரிபாய்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Pandaribai1-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Pandaribai2-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
24th October 2011, 04:50 AM
வீறு கொண்டு வருகிறார்கள்...

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Barrister1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/DevarMagan1-1.jpg

goldstar
24th October 2011, 07:56 AM
Friends,

Thillana Mohanammal is going to be shown at Russian International Film festivel refer the Dinamalar link http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=7550&ncat=2. More than 40 years old movies which is gonig to be shown with new Indian movies which clearly prove that NT movie will be watched by fans for another 100 years.

It also proves that in front of quality of NT movies, time pass movies won't stand for long time.

Cheers,
Sathish

vasudevan31355
24th October 2011, 09:10 AM
வருகிறார் தமிழ்த் திரையுலகின் 'தேவர்'

http://www.shotpix.com/images/80013577120912195276.png

http://lifestyle.iloveindia.com/lounge/images/shivaji-ganesan-biography.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
24th October 2011, 09:20 AM
டியர் பம்மலார்,
பராசக்தி பண்டரிபாயின் பண்பான வார்த்தைகளில் பாராட்டுக்கள் எந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் மேல் அவர் மரியாதை வைத்திருந்தார் என்பதைப் பறை சாற்றுகின்றன. தங்களின் பதிவுகளில் தீராத ஐயங்கள் தீர்கின்றன. தெளியாத கருத்துக்கள் தெளிகின்றன.
பாராட்டுக்கள்.
அன்புடன்

RAGHAVENDRA
24th October 2011, 09:21 AM
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் மேலான பதிவுகளில் இடம் பெறும் ஸ்டில்கள் புதுமையானவையாகவும் இதுவரை காணாததாகவும் உள்ளன. என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்

vasudevan31355
24th October 2011, 09:27 AM
'பராசக்தி' யின் பசுமை நினைவுகள் தொடர்கிறது.....

http://www.shotpix.com/images/31713868331032389396.png


http://www.shotpix.com/images/34017949594675238162.png


http://www.shotpix.com/images/40694571643093935649.png


http://www.shotpix.com/images/34925690649269226235.png


http://www.shotpix.com/images/53266212347988731348.png

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
24th October 2011, 09:35 AM
தேர்தல்களில் காங்கிரஸின் தொடர் வீழ்ச்சி

என்னடா இது இந்தத் திரிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என ஐயுறலாம். இயல்பே.

ஆனால் இருக்கிறது.

நாம் ஏற்கெனவே பல முறை கூறி வந்தது போல் ஏராளமான, எண்ணற்ற சிவாஜி ரசிகர்கள், அவருடைய கட்டளைக்குத் தலைவணங்கி தேசிய இயக்கமான காங்கிரஸைத் தங்கள் மார்பிலும் தோளிலும் குழந்தையைப் போல் தூக்கி வளர்த்தார்கள். மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து நின்ற திராவிய இயக்கத்தின் மாயைத் தோற்றத்துக்கு ஈடு கொடுத்து நின்றது, சிவாஜி ரசிகர்கள் பங்கு பெற்ற காங்கிரஸ் இயக்கம் தான். நடிகர் திலகம் மட்டும் இல்லையென்றால் 67லேயே காங்கிரஸ் தற்போதைய கேவலமான நிலையை அடைந்திருக்கும். தான் உயிருடன் இருந்தவரை தேசியத்தைத் தமிழ்நாட்டில் நீர்த்துப் போகாமல் காத்தது நடிகர் திலகம் மட்டும் தான். அது காங்கிரஸானாலும் சரி, தன்னுடைய சொந்த இயக்கமானாலும் சரி, தன்னைச் சார்ந்த எந்த இயக்கமானாலும் சரி, தன்னுடைய தேசிய மனப்பான்மையினையும் கொள்கையினையும் எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார். இது ஊரறிந்த உண்மை.

ஆனால் இன்று சில பத்திரிகைகள் காங்கிரஸின் தமிழ்நாட்டுத் தோல்விகளைப் பற்றி எழுதும் போது சௌகரியமாக மறைத்து விட்டு எழுதுகின்றன. நேற்று கூட ஒரு நாளிதழில் இந்த தோல்வியைப் பற்றி எழுதும் போது ஏதேதோ காரணங்களைத் தேடிப் பிடித்து கற்பனைக் கதையைப் போல் எழுதியுள்ளது.

நாம் பல முறை கூறி வந்தது போல்

சிவாஜி ரசிகர்களின் சாபம் இருக்கும் வரை தமிழ் நாட்டில் காங்கிரஸ் தேறாது. அப்படி காங்கிரஸ் தலை தூக்க வேண்டுமென்றால், அதற்கு சிவாஜி ரசிகர்கள் மனது வைத்தால் தான் முடியும்.

சிவாஜி ரசிகர்கள் மனது வைப்பார்களா. மாட்டார்கள்.

அதற்கும் மீறி அவர்களுடைய ஆதரவு காங்கிரஸ் விரும்பினால்

அதற்கு அவர்கள் விலை தரவேண்டியதிருக்கும். சும்மா வருவதில்லை சிவாஜி ரசிகனின் ஆதரவு, அதுவும் காங்கிரஸுக்கு..

அந்த விலை என்ன

காமராஜர் அவர்களுக்குப் பிறகு நடிகர் திலகம் மட்டுமே சிறந்த தேசியத் தலைவர் என்பதை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும்-
நடிகர் திலகம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..
அகில இந்திய சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகம் பெயரில் வழங்க வேண்டும்...
டெல்லியில் மத்திய அரசின் சார்பில் நடிகர் திலகத்திற்கு சிலை வைக்க வேண்டும்...

இது குறைந்த பட்ச விலை...

இதனடிப்படையில் நடிகர் திலகத்தின் மேல் உண்மையான பற்றுள்ள ஒவ்வொருவரும், இனிமேல் தாமாக வலிய சென்று காங்கிரஸுக்கு ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும். தேவைப் பட்டால் அவர்கள் வரட்டும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை, காங்கிரஸ் மீண்டும் தலை தூக்க வேண்டுமானால், அது

சிவாஜி ரசிகர்களால் மட்டுமே முடியும்..

vasudevan31355
24th October 2011, 10:28 AM
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பான வாழ்த்துக்கு மனம்நிறைந்த என் பணிவான நன்றிகள். தங்களைப் போன்ற ரசிக சிகரங்களின் வாழ்த்துக்களும், நம் அருமைத் தலைவரின் ஆசிகளும் உள்ளவரை எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

காமராஜர் அவர்களுக்குப் பிறகு நடிகர் திலகம் மட்டுமே சிறந்த தேசியத் தலைவர் என்பதை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும்-
நடிகர் திலகம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..
அகில இந்திய சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகம் பெயரில் வழங்க வேண்டும்...
டெல்லியில் மத்திய அரசின் சார்பில் நடிகர் திலகத்திற்கு சிலை வைக்க வேண்டும்...

இது குறைந்த பட்ச விலை...

இதனடிப்படையில் நடிகர் திலகத்தின் மேல் உண்மையான பற்றுள்ள ஒவ்வொருவரும், இனிமேல் தாமாக வலிய சென்று காங்கிரஸுக்கு ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும். தேவைப் பட்டால் அவர்கள் வரட்டும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை, காங்கிரஸ் மீண்டும் தலை தூக்க வேண்டுமானால், அது

சிவாஜி ரசிகர்களால் மட்டுமே முடியும்..
சத்தியமான உண்மை. ஆனால் எவ்வளவு உரைத்தாலும்.காங்கிரஸ்காரர்களுக்கு செவிடன் காதில்.........தான். மேடை ஏறிப் பேசும்போது ஆறு போலப் பேச்சு. கீழே இறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சு... உண்மையான தலைவருக்கு துரோகம் நினைத்ததற்கு அவர்களாகவே இறங்கிக் கெஞ்சிக் கேட்டாலும் நாம் மனமிரங்கவே கூடாது என்பதுதான் சரியானதாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. படுத்திய பாட்டிற்கு பட்டே தீர வேண்டும். வினை விதைத்தவர்கள் பலனை அனுபவித்தே தீர வேண்டும். சிவாஜி அவர்கள் தான் காங்கிரஸ் காங்கிரஸ்தான் சிவாஜி என்பதை உளப்பூர்வமாக அறிந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஏதோ தங்களால்தான் காங்கிரசே தழைத்தோங்கி வளர்ந்தது வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற செய்நன்றி கொன்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கும் வரையில் வெற்றி என்ற கனியின் சுவையை அவர்கள் ருசிக்கவோ,அனுபவிக்கவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
24th October 2011, 11:00 AM
அன்பு பம்மலார் சார்,

"பராசக்தி" பற்றி திரு.ஏவிஎம் அவர்களின் அமுதசுரபி ஆவணம் உண்மைகளின் உரைகல்லாய் திகழ்கிறது.

'வம்ச விளக்கு' பொம்மை முதல் வெளியீட்டு விளம்பரம் அசத்துகிறது.

'சபாஷ் மீனா' பத்திரிகை விளம்பரங்கள் சபாஷ் போட வைக்கின்றன..

நடிகர் திலகம் குறித்து அவரது முதல் கதாநாயகி பண்டரிபாய் தினத்தந்தியில் அளித்துள்ள பேட்டி அருமை. '

சபாஷ்மீனா' கலர் ஸ்டில் சூப்பர்.

ஸ்டைலிஷ் ரஜினிகாந்தும்,தேவர் அய்யாவும் திவ்ய தரிசனம் தருகிறார்கள். கண்களில் ஒற்றிக்கொள்ளக் கூடிய அருமையான புகைப் படங்கள்.

"கோடீஸ்வரன்" தணிக்கையான தேதி : 11.11.1955, தணிக்கை சான்றிதழ் எண் : 14004
"கள்வனின் காதலி" தணிக்கையான தேதி அதே 11.11.1955 ஆனால் தணிக்கை சான்றிதழ் எண் : 14005
எனவே, தணிக்கை சான்றிதழ் எண்களின் அடிப்படையில் 24வது காவியம் "கோடீஸ்வரன்", 25வது காவியம் "கள்வனின் காதலி"

என்று ஆதாரபூர்வமாக நிருபித்து தனியொரு மனிதராக எல்லோருடைய சந்தேகங்களைத் தீர்த்துவைக்கும் செல்லமான எங்கள் ஆவணச் செல்வமே! வியப்பால் திக்கு முக்காடிப் போகிறது எங்கள் அனைவரது உள்ளங்களும். வாழ்த்துக்களும் நன்றிகளும்.

வியப்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
24th October 2011, 11:46 AM
உலக சினிமா அரங்கின் ஒட்டுமொத்த கெளரவம் எங்கள் அன்பு நடிகர் திலகத்தின் 'கெளரவம்']

http://www.thehindu.com/multimedia/dynamic/00693/14frrs-15fr_Gowrava_693804f.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

J.Radhakrishnan
24th October 2011, 12:17 PM
தேர்தல்களில் காங்கிரஸின் தொடர் வீழ்ச்சி

என்னடா இது இந்தத் திரிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என ஐயுறலாம். இயல்பே.

ஆனால் இருக்கிறது.

நாம் ஏற்கெனவே பல முறை கூறி வந்தது போல் ஏராளமான, எண்ணற்ற சிவாஜி ரசிகர்கள், அவருடைய கட்டளைக்குத் தலைவணங்கி தேசிய இயக்கமான காங்கிரஸைத் தங்கள் மார்பிலும் தோளிலும் குழந்தையைப் போல் தூக்கி வளர்த்தார்கள். மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து நின்ற திராவிய இயக்கத்தின் மாயைத் தோற்றத்துக்கு ஈடு கொடுத்து நின்றது, சிவாஜி ரசிகர்கள் பங்கு பெற்ற காங்கிரஸ் இயக்கம் தான். நடிகர் திலகம் மட்டும் இல்லையென்றால் 67லேயே காங்கிரஸ் தற்போதைய கேவலமான நிலையை அடைந்திருக்கும். தான் உயிருடன் இருந்தவரை தேசியத்தைத் தமிழ்நாட்டில் நீர்த்துப் போகாமல் காத்தது நடிகர் திலகம் மட்டும் தான். அது காங்கிரஸானாலும் சரி, தன்னுடைய சொந்த இயக்கமானாலும் சரி, தன்னைச் சார்ந்த எந்த இயக்கமானாலும் சரி, தன்னுடைய தேசிய மனப்பான்மையினையும் கொள்கையினையும் எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார். இது ஊரறிந்த உண்மை.

ஆனால் இன்று சில பத்திரிகைகள் காங்கிரஸின் தமிழ்நாட்டுத் தோல்விகளைப் பற்றி எழுதும் போது சௌகரியமாக மறைத்து விட்டு எழுதுகின்றன. நேற்று கூட ஒரு நாளிதழில் இந்த தோல்வியைப் பற்றி எழுதும் போது ஏதேதோ காரணங்களைத் தேடிப் பிடித்து கற்பனைக் கதையைப் போல் எழுதியுள்ளது.

நாம் பல முறை கூறி வந்தது போல்

சிவாஜி ரசிகர்களின் சாபம் இருக்கும் வரை தமிழ் நாட்டில் காங்கிரஸ் தேறாது. அப்படி காங்கிரஸ் தலை தூக்க வேண்டுமென்றால், அதற்கு சிவாஜி ரசிகர்கள் மனது வைத்தால் தான் முடியும்.

சிவாஜி ரசிகர்கள் மனது வைப்பார்களா. மாட்டார்கள்.

அதற்கும் மீறி அவர்களுடைய ஆதரவு காங்கிரஸ் விரும்பினால்

அதற்கு அவர்கள் விலை தரவேண்டியதிருக்கும். சும்மா வருவதில்லை சிவாஜி ரசிகனின் ஆதரவு, அதுவும் காங்கிரஸுக்கு..

அந்த விலை என்ன

காமராஜர் அவர்களுக்குப் பிறகு நடிகர் திலகம் மட்டுமே சிறந்த தேசியத் தலைவர் என்பதை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும்-
நடிகர் திலகம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்..
அகில இந்திய சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகம் பெயரில் வழங்க வேண்டும்...
டெல்லியில் மத்திய அரசின் சார்பில் நடிகர் திலகத்திற்கு சிலை வைக்க வேண்டும்...

இது குறைந்த பட்ச விலை...

இதனடிப்படையில் நடிகர் திலகத்தின் மேல் உண்மையான பற்றுள்ள ஒவ்வொருவரும், இனிமேல் தாமாக வலிய சென்று காங்கிரஸுக்கு ஆதரவு தருவதை நிறுத்த வேண்டும். தேவைப் பட்டால் அவர்கள் வரட்டும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை, காங்கிரஸ் மீண்டும் தலை தூக்க வேண்டுமானால், அது

சிவாஜி ரசிகர்களால் மட்டுமே முடியும்..




டியர் ராகவேந்தர் சார்,

தங்கள் கருத்து 100 க்கு 100 உண்மை, நடிகர்திலகம் இருந்தவரை அவர் புகழை, உழைப்பை, அவர்தம் தொண்டர்களை நன்றாக பயன்படுத்திய காங்கிரஸ் அவருக்கு அந்தகாலத்திலேயும் சரி, இப்போதும் சரி ஒரு உண்மையான அங்கீகாரத்தை தரவில்லை என்பது கசப்பான உண்மை.

KCSHEKAR
24th October 2011, 05:08 PM
டியர் பம்மலார்,

மைக் கிடைத்தாலோ, மேடை கிடைத்தாலோ, எழுத பேனா கிடைத்தாலோ, ஆதாரமின்றி நடிகர்திலகத்தைப் பற்றி அவதூறு பரப்புபவர்களின் மூக்குடைக்க, எங்களைப்போன்ற ரசிகர்களுக்கு, ஆவணங்களை அள்ளித்தரும் உங்களுக்கு "ஆவணத் திலகம்" என்ற பட்டத்தை இத்திரியின் சார்பில் வழங்கினால் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். நன்றி.. நன்றி..

mr_karthik
24th October 2011, 06:12 PM
அன்புள்ள பம்மலார் சார்,

முதலில் சகோதரர் சந்திரசேகர் அவர்கள் சொன்னதை வழி மொழிகிறேன்.

அடுத்து, கள்வனின் காதலி, கோடீஸ்வரன் விஷ்யத்தை நீங்கள் மிகத்தெளிவாகவே சொல்லியிருக்கிறீர்கள். நான்தான் சிவாஜி ரசிகனில் கொடுக்கப்பட்ட எண்ணைப்பார்த்து குழம்பி விட்டேன்.

'சபாஷ் மீனா' விளம்பரப்பதிவுகள் மிக மிக அருமை. பழைய படத்தின் விளம்பரம் போல இல்லை. ஏதோ இன்றைக்குத்தான் பதிப்பிக்கப்பட்டது போல பளிச்சென்று, தெளிவாக இருக்கின்றன. இவைகளையெல்லாம் எங்கள் கண்களுக்கும் விருந்தாக்கிய உங்களுக்கு மிகவும் நன்றி. எப்படி இவற்றையெல்லாம் சேகரித்தீர்கள் என்பது இன்னமும் மலைப்பையும் ஆச்சரியத்தையும் தருகின்றன.

குணசித்திர நடிகை பண்டரிபாய் அவர்களின் பேட்டி நிறைவாக இருந்தது. எந்த வம்பு தும்பும் இல்லாமல் இருவரையும் அரவணைத்து பதில் சொல்லியிருக்கிறார். இறுதிக்காலத்தில் அவரது பரிதாபமான முடிவு ரொம்பவே சோகமானது. பதிப்பித்த உங்களுக்குப் பாராட்டுக்கள்


தங்களின் அயராத உழைப்பு, நடிகர்திலகத்தின் ரசிகப் பெருமக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். நன்றி.

mr_karthik
24th October 2011, 06:28 PM
விசித்திர நடிகை 'மாலினி'...

சபாஷ் மீனா விளம்பரப்பதிவுகளைப் பார்த்ததும் என் மனதில் தோன்றியது மாலினியைப்பற்றி.

இரண்டே தமிழ்ப்படங்களில்தான் நடித்தார் (என்பதாக நினைவு). இரண்டுமே நகைச்சுவைப்படங்கள். இதிலொன்றும் விசேஷமில்லை.

ஒருபடத்தில் நடிகர் திலகத்தின் ஜோடி
இன்னொரு படத்தில் மக்கள் திலகத்தின் ஜோடி

எப்பேற்பட்ட பாக்கியம். பல்லாண்டுகள் திரைப்படங்களில் நடித்த பலருக்குக் கிடைக்காத அரிய வாய்ப்பு. அதைவிட விசேஷம் அப்படங்களின் பெயர்கள்

'சபாஷ் மீனா' மற்றும் 'சபாஷ் மாப்பிளே'

சபாஷ் மாலினி... நிச்சயம் இவர் விசித்திரமானவர்தான்.

mr_karthik
24th October 2011, 06:53 PM
டியர் பம்மலார்,

மைக் கிடைத்தாலோ, மேடை கிடைத்தாலோ, எழுத பேனா கிடைத்தாலோ, ஆதாரமின்றி நடிகர்திலகத்தைப் பற்றி அவதூறு பரப்புபவர்களின் மூக்குடைக்க, எங்களைப்போன்ற ரசிகர்களுக்கு, ஆவணங்களை அள்ளித்தரும் உங்களுக்கு "ஆவணத் திலகம்" என்ற பட்டத்தை இத்திரியின் சார்பில் வழங்கினால் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். நன்றி.. நன்றி..

அன்புள்ள சந்திர சேகர் சார்,

மைக், மேடை, எழுத்து என்பது பழைய கதை. அவற்றால் ஓரளவுக்குத்தான் அவதூறு பரப்ப முடிந்தது. ஆனால் கணிணி யுகம் வந்தபிறகு, கீ-போர்டைத்தட்டி, நொடிகளில் உலகம் பூராவும் நடிகர்திலகத்தின் சாதனைகளைப்பற்றி, வலைப்பூக்களில் தரக்குறைவாக விஷத்தைப்பரப்பி வந்தனர்.

அப்படிப்பட்டவர்களை, வெறும் வாயால் புலம்பி வந்தவர்களை சாதனைச்செப்பேடுகள் எனும் ஏ.கே.47 கொண்டு பம்மலார் போட்ட போடில் அவர்கள் பதில் சொல்லத்திராணியற்று ஓடி மறைகின்றனர். பின்னே ஆதாரங்கள் கையில் இருக்கையில் பதில் பேச முடியுமா?. பதிலுக்கு உங்கள் ஆதாரங்களைத் தாருங்கள் என்றால் எங்கே போவார்கள்?.

NOV
24th October 2011, 07:13 PM
Wishing all NT fans a grand and glorious Deepavali...



http://www.youtube.com/watch?v=0lFpu5z0oPU&feature=share

vasudevan31355
24th October 2011, 08:27 PM
http://www.desicomments.com/dc1/11/150316/150316.gif

http://file1.hpage.com/000869/99/bilder/sivaji_ganesan.jpg http://www.hindu.com/thehindu/mp/2002/07/22/images/2002072200070202.jpg

http://www.desicomments.com/dc1/11/150334/150334.gif
அன்புடன்,
வாசுதேவன்.

rajeshkrv
24th October 2011, 09:06 PM
Wishing all NT fans a Happy & Safe Deepavali.



mr_karthik
விசித்திர நடிகை 'மாலினி'...

சபாஷ் மீனா விளம்பரப்பதிவுகளைப் பார்த்ததும் என் மனதில் தோன்றியது மாலினியைப்பற்றி.

இரண்டே தமிழ்ப்படங்களில்தான் நடித்தார் (என்பதாக நினைவு). இரண்டுமே நகைச்சுவைப்படங்கள். இதிலொன்றும் விசேஷமில்லை.

ஒருபடத்தில் நடிகர் திலகத்தின் ஜோடி
இன்னொரு படத்தில் மக்கள் திலகத்தின் ஜோடி

எப்பேற்பட்ட பாக்கியம். பல்லாண்டுகள் திரைப்படங்களில் நடித்த பலருக்குக் கிடைக்காத அரிய வாய்ப்பு. அதைவிட விசேஷம் அப்படங்களின் பெயர்கள்

'சபாஷ் மீனா' மற்றும் 'சபாஷ் மாப்பிளே'

சபாஷ் மாலினி... நிச்சயம் இவர் விசித்திரமானவர்தான்.


Malini did act in another movie Azhagu nila

Subramaniam Ramajayam
24th October 2011, 10:36 PM
Today my system is alright. Mr. sekakr's v iews about pammalar cent percent correct. I was also presering paper cuttings of Nadigar thilagam's movies and imprtant news articles from 64 to 77 someho i ccould not proceed further due to domestic problems. commanded job done by pammalr.
coming to mr.raghaendran's COMMENTS ABOUT CONGRESS PARTY and inolement of his fans like me who is really not interested in politics still gave support to our nadigar thilagam's voice and in my case i fratured my right leg wile attending election work. when elections are over and our nenjirukkum varai moviie relesed the then Shanti mangement looked after by one marwadi person has not allowed to put garlands with congresscolour to cutouts and matter ref to chinnaar shunmugam and settled. later on OUR MAPPILLAI TOOK OVER THE MANGEMENT, PERHAPS MOST OF the fans may not know.
Aslong as congress regrets the sin made on nadigarthilagam they cannot get up.
WISHING A ERY VERY HAPPY DIWALI TO ALL SIAJI RASIGARGALS
RAMAJAYAM
Sanfransisco

guruswamy
24th October 2011, 10:45 PM
To All My Dear Beloved N.T. Fans

Hope the festival of lights enlightens your home and heart with peace and serenity..
May the Goddess of wealth and the God of Knowledge bless you with their choicest blessings.
On this Diwali and always!

On this auspicious festival of lights,
May the glow of joy,
Prosperity and happiness
Illuminate your life and your home.

Wishing you loads of joy and happiness on Diwali!!

JAIHIND,
M. Gnanaguruswamy

kumareshanprabhu
25th October 2011, 10:06 AM
dear Guru, harish and all the friends who are in this thread from Bangalore

please give your contact numbers please

parthasarathy
25th October 2011, 02:26 PM
அனைத்து நடிகர் திலக ரசிகர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும்,

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
25th October 2011, 03:06 PM
நடிப்புலகத் தேவரின் 'தேவர் மகன்'.

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRBTV_7Y3t_nIkNOibIp6lqf_IDSC1hX NOnRgRW9nwprD10IjnNrHqiwyV-6A


http://peperonity.com/go/media/13722193%213?act=4969-6195074-1319541804_3cdb01


http://farm4.static.flickr.com/3361/3581429063_56cf87d4a7.jpg


http://s.chakpak.com/se_images/151623_-1_564_none/thevar-magan.jpg


http://illakiyaa.files.wordpress.com/2007/05/devar-magan.jpg?w=570 http://ckcs.in/laura-magan/magan-822.jpg


http://tamilvip.com/media_thumbs/1840.jpg


http://img.youtube.com/vi/j1zWNOmxtA4/0.jpg


http://ciummaa.blox.pl/resource/0.jpg http://i34.tinypic.com/ziq6tv.jpg
அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
25th October 2011, 03:26 PM
http://img831.imageshack.us/img831/7325/vlcsnap2011020818h28m53.png


http://img827.imageshack.us/img827/2483/vlcsnap2011020818h14m45.png


http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/ThevarMagan0006.jpg


http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/ThevarMagan0007.jpg


http://img35.imageshack.us/img35/576/vlcsnap2011020818h15m15.png

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
25th October 2011, 03:39 PM
நம் அருமைத் தேவரின் புகழ் பாடும் "போற்றிப் பாடடி பொண்ணே"....


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=OBPIGmRKsyQ

தேவர் மகனிலிருந்து நடிகர் திலகத்தின் அனாயாசமான நடிப்புக் காட்சி.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ul9Xvjt83eI

அன்புடன்,
வாசுதேவன்.

P_R
25th October 2011, 03:53 PM
Nice pics vasudevan.
19 years since this fantastic performance.

I recently had the misfortune of seeing the panjAyathu scene in Kannada.
Upendra & Ambarish :lol:

vasudevan31355
25th October 2011, 04:26 PM
அன்பு p_r சார்,

தங்கள் அன்புக்கு நன்றி. தேவர் மகனின் ஹிந்திப் பதிப்பான "விராசத்"தில் கூட நீங்கள் கூறியபடி எந்த சீனும் நெஞ்சில் பதியவில்லை. அது ஒருவரால் மட்டுமே சாதிக்க முடிந்த காரியம். ('விராசத்' ஹிந்திப் படத்தில் நடிகர் திலகம் ரோலுக்கு அம்ரீஷ்பூரியும், கமல் ரோலுக்கு அனில்கபூரும் நடித்திருந்தனர்.)

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
25th October 2011, 05:16 PM
http://padamhosting.com/out.php/i81644_vlcsnap2011052612h44m49s159.png

'Barrister' Rajinikanth The great.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-4.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-2011-05-26-12h43m57s146.jpg?t=1319543047


http://padamhosting.com/out.php/i81647_vlcsnap2011052612h47m34s10.png


http://padamhosting.com/out.php/i81648_vlcsnap2011052612h47m41s84.png



http://padamhosting.com/out.php/i81645_vlcsnap2011052612h46m01s109.png


http://www.hindu.com/thehindu/gallery/sg/sg003.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
25th October 2011, 05:43 PM
"மீண்டும் கெளரவம்" தொலைக்காட்சித் தொடரில் நமது அருமை நடிகர் திலகம். (உடன் திரு.மோகன் ராமன் அவர்கள்.)

http://3.bp.blogspot.com/-nw82yz-teuk/TnRcufK35sI/AAAAAAAAAu8/4OF7qo3-q8s/s1600/with%2BSivaji%2Bsets2.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

sankara1970
25th October 2011, 05:53 PM
Happy Deepawali Wishes to all NT fans!

sankara1970
25th October 2011, 05:59 PM
righty said-nam NT yin avi kooda avargalai(congress) mannikkathu-Sorry to know about your fracture on legs.

sankara1970
25th October 2011, 06:05 PM
Super get up! Wow! Enna meesai! Amazing!

Contrasting and very majestic w.o moutache!

U only can do!

Nice comparison Pammalarji!

vasudevan31355
25th October 2011, 07:22 PM
நடிகர் திலகத்தின் "கெளரவம்" மறு வெளியீட்டுத் திருவிழாவில் (நாள்: 17-07-2011 ஞாயிறு மாலைக் காட்சி,சென்னை சாந்தி தியேட்டர்) ரசிகக் கண்மணிகளின் கரைபுரண்டு ஓடும் உற்சாகத்தையும், ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டத்தையும் காணுங்கள்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=viTgCCOsBTo


அன்புடன்,
வாசுதேவன்.

joe
25th October 2011, 08:10 PM
செம குத்து! நிறைய இளைஞர்களை பார்க்க மகிழ்ச்சியா இருக்குது !

நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!!

joe
25th October 2011, 08:12 PM
I recently had the misfortune of seeing the panjAyathu scene in Kannada.
Upendra & Ambarish :lol:

அதெல்லாம் பாக்கணும் தம்பி ..அப்போ தானே நாமெல்லாம் எவ்வளவு குடுத்து வச்சவங்கண்ணு தெரியும் :lol:

guruswamy
25th October 2011, 08:15 PM
Dear Mr. Kumaresh,

My Mobile No.: 9886057942

Jaihind
M. Gnanaguruswamy

RAGHAVENDRA
25th October 2011, 10:07 PM
அனைவருக்கும் உளமார்ந்த தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்


http://www.youtube.com/watch?v=0lFpu5z0oPU

RAGHAVENDRA
25th October 2011, 10:08 PM
தீபாவளி வாழ்த்துக்கள் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.

RAGHAVENDRA
25th October 2011, 10:09 PM
கௌரவம் மீண்டும் கௌரவமாய் இங்கே கம்பீரமாய் உலா வர உழைத்த வாசுதேவன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

P_R
25th October 2011, 10:30 PM
தேவர் மகனின் ஹிந்திப் பதிப்பான "விராசத்"தில் கூட நீங்கள் கூறியபடி எந்த சீனும் நெஞ்சில் பதியவில்லை. அது ஒருவரால் மட்டுமே சாதிக்க முடிந்த காரியம். ('விராசத்' ஹிந்திப் படத்தில் நடிகர் திலகம் ரோலுக்கு அம்ரீஷ்பூரியும், கமல் ரோலுக்கு அனில்கபூரும் நடித்திருந்தனர்.)

விராசத் எவ்வளவோ தேவலாம்னு தோணும் தந்தெக்கெ தக்க மகா (தந்தைக்குக் தக்க மகன்?) பார்த்தா.
அம்ரீஷ் பூரியோட sincere முயற்சிக்கு அப்புறமும் கடக்கமுடியாத தூரம் இருந்தது. அது தவிர்க்கமுடியாதது.
அம்பரீஷ் பூரிப்போட நடிச்சதுல, அவ்வளவு சிறப்பா நடிச்சு காட்டப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கினதா ஒரு சுவடு கூட தெரியலை.

Anyway, சொல்லிட்டு தானே போயிருக்கார் 'அந்தப் பய மெதுவாத் தேன் வருவியான்...மெதுவாத் தேன் வருவியான்"

joe
25th October 2011, 10:33 PM
Anyway, சொல்லிட்டு தானே போயிருக்கார் 'அந்தப் பய மெதுவாத் தேன் வருவியான்...மெதுவாத் தேன் வருவியான்"
:lol: :thumbsup:

pammalar
25th October 2011, 10:46 PM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

கௌரவம்

[25.10.1973 - 25.10.2011] : 39வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

இன்று முதல் விளம்பரம் : முரசொலி : 25.10.1973
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3831a-1.jpg


100வது நாள் விளம்பரம் : அலை ஓசை : 1.2.1974
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3833a-1.jpg

குறிப்பு:
மூன்று மாதங்களுக்கு முன்னர், சென்னை 'சாந்தி'யில் "கௌரவம்" மறுவெளியீடு கண்ட போது, இந்த முதல் வெளியீட்டு விளம்பரங்கள் 'மலரும் நினைவுகளாக' பதிவிடப்பட்டன. இன்று ரிலீஸ் மேளாவை முன்னிட்டு, இந்த சாதனைப் பொன்னேடுகள் மீண்டும் இங்கே இடுகை கண்டுள்ளன.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th October 2011, 11:28 PM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் பாராட்டுக்கும், பட்டமளிப்புக்கும் எனது முதன்மையான நன்றிகள் ! வழிமொழிந்த mr_karthik, ராமஜெயம் சார் ஆகியோருக்கும் எனது கனிவான நன்றிகள் ! இதயதெய்வத்தின் பக்தர்களாகிய தாங்கள் அளிக்கும் கௌரவம் பல்கலைக்கழகங்கள் அளிக்கும் கௌரவங்களைக் காட்டிலும் மேலானது. தங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது பணிவான நன்றிகள் !

உணர்ச்சிப்பெருக்கில்,
பம்மலார்.

anm
26th October 2011, 12:49 AM
அன்பு நண்பர்களே!

அனைத்து சிவாஜி ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!

Anm

pammalar
26th October 2011, 01:22 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

கௌரவம்

[25.10.1973 - 25.10.2011] : 39வது உதயதினம்

வரலாற்று ஆவணம் : திரைவானம் : நவம்பர் 1973
[உதவி : நல்லிதயம் திரு.ஜி. மாணிக்கவாசகம்]

"கௌரவம்" சிறப்பு மலரின் முகப்பு
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4847-1.jpg


பாரிஸ்டர் ரஜினிகாந்த் பற்றி நடிகர் திலகம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4848-1.jpg


அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th October 2011, 01:38 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் பாராட்டுப் பதிவுக்கு எனது பணிவான நன்றிகள் !

"பராசக்தி", "கௌரவம்", "தேவர் மகன்" பதிவுகள் உண்மையிலேயே தீபாவளி விருந்து !

தாங்கள் படம்பிடித்த கௌரவக் கொண்டாட்டங்களின் ஒலி-ஒளிக் காட்சிகள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன !

பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th October 2011, 01:42 AM
டியர் mr_karthik,

தங்களைப் போன்றவர்கள் அளிக்கும் பாராட்டுதல்கள் எல்லாம் ஈடு-இணை சொல்லமுடியா வரப்பிரசாதங்கள். தங்களுக்கு எனது மகிழ்வான நன்றிகள் !

டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

Dear Mr.sankara1970,

Thank you very much !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th October 2011, 02:14 AM
அனைவருக்கும் இதயபூர்வமான தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Navarathiri1-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
26th October 2011, 06:20 AM
1980களில் நடிகர் திலகம் மிகவும் பலமான விமர்சனங்களை எதிர்கொள்ளத் துவங்கிய காலம்...ரிஷிமூலம் தந்த புகழை சில படங்கள் மேகமாய் மூடத் தொடங்கிய போது... அட்டகாசமான தீபாவளித் திரை விருந்துடன் அனைவரின் வாயையும் மூடச் செய்து தான் என்றும் சிரஞ்சீவியான திலகம் தான் என்று நிரூபித்த படம்
கீழ்வானம் சிவக்கும்

தொலைக் காட்சி வந்த புதிது, ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் தவறாது இடம் பெற்ற பாடல், மணமேடைகளைத் தவறாமல் அலங்கரித்த பாடல், திரும்பிய பக்கமெல்லாம் மெல்லிசை மன்னரின் புகழ் பரப்பிய பாடல்,
கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான்

இன்று வரை மணநாள் வாழ்த்துக்களுக்கு பயன் படும் பாடல்..

http://www.inbaminge.com/t/k/Keezhvaanam%20Sivakkum/Kadavul%20Ninaithaan.eng.html

அந்த வெற்றித் திரைக்காவியத்தின் உலாவின் போது அனைத்து சிவாஜி ரசிகர்களும் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு நின்றோம்...

அந்த நாள் மறக்க முடியாது,, இதே அக்டோபர் 26ம் நாள், 1981ம் ஆண்டு..

அந்தத் திரைக்காவியம் நெடுந்தகடாய்த் தற்போது உலா வருகிறது...நாம் நினைவூட்டி மகிழ

http://www.indiancddvdonline.com/img/Uploads/DVD/photo/big/8897_OOTY%20VARAI%20URAVU,PALUM%20PAZHAMUM%20&%20KEEZHVAANAM%20SIVAKKUM.jpg

http://www.jollywood.com/images/products/detail/KEEZHVAANAMANBAI.jpg

vasudevan31355
26th October 2011, 07:09 AM
தலைவரின் ஆசிகள் எங்கும் நிறைந்திருக்க அனைவருக்கும் பொன்னான தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3mpg_000445557.jpg http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/DVD-RIPThangapadhakamMoserbaer1974Xvid700Mbavi_0011271 25.jpg



அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th October 2011, 08:03 AM
"கீழ் வானம் சிவக்கும்" என்று தூள் கிளப்பும் நம் டாக்டர்.துவாரகநாத்.

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/9035_17_keezhavanam%20sivakkum.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000813519.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000005116.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000001301.jpg?t=1319598109


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001760612.jpg?t=1319597168


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th October 2011, 08:30 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_001049797.jpg?t=1319597680


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_002020386.jpg?t=1319597765


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_002135168.jpg?t=1319597852


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_002231188.jpg?t=1319597933


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th October 2011, 08:43 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_000064262.jpg?t=1319598439


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_001212088.jpg?t=1319598526


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001194526.jpg?t=1319598662


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000289544.jpg?t=1319598751

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th October 2011, 09:54 AM
காலத்தால் அழிக்க முடியாத காவியப்பாடல்.

"கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்..."



http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Rmhx_FiOMfQ



அன்புடன்,
வாசுதேவன்.

Murali Srinivas
26th October 2011, 11:22 AM
அனைத்து நல்லிதயங்களுக்கும் இதயங்கனிந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.

அன்புடன்

mr_karthik
26th October 2011, 12:53 PM
Wish you a happy deepavali

for all friends in the hub.

vasudevan31355
26th October 2011, 10:55 PM
தங்க தவப் புதல்வரின் 'தச்சோளி அம்பு'.(27-10-1978)

http://malayalasangeetham.info/moviepics/22.jpg http://www.mylory.com/images/Thacholi-Ambu.jpg


http://padamhosting.com/out.php/i72006_Thacholi.Ambu.1978.SDvD.x264.AAC.2.0.xMS.mk vsnapshot01.11.592011.04.1305.55.33.png


http://padamhosting.com/out.php/i72005_Thacholi.Ambu.1978.SDvD.x264.AAC.2.0.xMS.mk vsnapshot01.07.542011.04.1305.47.56.png

அன்புடன்,
வாசுதேவன்

pammalar
27th October 2011, 03:04 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

கௌரவம்

[25.10.1973 - 25.10.2011] : 39வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : கிடைத்தற்கரிய 'குவைத்' வெளியீட்டு விளம்பரம்

ராணி : 1975
[6.9.1975 சனிக்கிழமை முதல், 'குவைத்' நாட்டில் வெளியான முதன்முதல் தமிழ்த் திரைப்படமாக அங்குள்ள 'சுலபிகாட்' திரையரங்கில் சாதனைச் சக்கரவர்த்தியின் "கௌரவம்" திரையிடப்பட்டபோது, அப்போதைய 'ராணி' வார இதழில் வெளிவந்த செய்தி]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4849-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th October 2011, 03:36 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

கௌரவம்

[25.10.1973 - 25.10.2011] : 39வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : வரலாற்று ஆவணம்

காவிய விமர்சனம் : கல்கி : 1973
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4850-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th October 2011, 03:42 AM
டியர் வாசுதேவன் சார்,

"தங்கப்பதக்கம்" திரைக்காவியத்தில் நமது தலைவர் பட்டாசு கொளுத்தும் படத்தைப் பதிவிட்டு இங்கே தீபாவளியை தூள் கிளப்பி விட்டீர்கள் !

"கீழ்வானம் சிவக்கும்" ஃபோட்டோ ஆல்பம் அம்சம் !

"கடவுள் நினைத்தான் மணநாள் கொடுத்தான்" பாடல் வீடியோ, நமது திரிக்கு தாங்கள் அளித்த தீபாவளிப்பரிசு !

"தச்சோளி அம்பு" நிழற்படங்கள் அருமை !

டியர் ராகவேந்திரன் சார்,

"கீழ்வானம் சிவக்கும்" பதிவு சூப்பர் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th October 2011, 05:26 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

தேவர் மகன்

[25.10.1992 - 25.10.2011] : 20வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

இன்று முதல் விளம்பரம் : தினமணி : 25.10.1992
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4851-2-1.jpg


42வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 5.12.1992
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4854-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
27th October 2011, 07:35 AM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் உயர்வான பாராட்டுதல்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

'கௌரவம்' முரசொலி இதழின் முதல் நாள் வெளியீடு விளம்பரம் ,100வது நாள் அலை ஓசை விளம்பரம் இரண்டும் அபூர்வமானவை.

திரைவானம் "கௌரவம்" சிறப்பு மலரின் முகப்பு நெஞ்சை அள்ளுகிறது.

கௌரவத்தில் தன்னுடைய பாரிஸ்டர் ரஜினிகாந்த் கேரக்டர் பற்றி திரைவானத்தில் அவர் அளித்துள்ள பேட்டி அப்படத்தின் வெற்றியை அவர் முன்னமேயே ஊர்ஜிதம் செய்துவிட்டதை அழகாய் படம்பிடித்துக் காட்டுகிறது. மிக அபூர்வமான தலைவரின் பேட்டியை பதிவிட்டமைக்கு தங்களுக்கு என்றென்றும் கெளரவம் அளிக்க நாங்கள் கடமைப் பட்டுள்ளோம்.

'தீபாவளி நல்வாழ்த்துக்கள்' வழங்கும் இதய தெய்வத்தின் கருப்பு வெள்ளை புகைப்படம் அவர் ஸ்டைல் சக்கரவர்த்தி என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறது.

கௌரவம் 'குவைத்' வெளியீட்டு விளம்பரம் வெளியிட்டு உலகஅரங்கில் நடிகர் திலகத்தின் கௌரவத்தை நிலை நாட்டி விட்டீர்கள். சிறந்த தங்களின் சோர்வடையா சேவை பிரமிக்க வைக்கிறது.

கல்கி இதழின் காவிய விமர்சனம் படித்தவுடன் மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அருமையான விமர்சனம். உளப்பூர்வமான விமர்சனம். நடுநிலையான விமர்சனம். அனேகமாக ஒரு குறையைக் கூட சுட்டிக் காட்டாமல் வந்த ஒரே ஒரு விமர்சனம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அளித்தமைக்கு அன்பு நன்றிகள்.

வாழ்க! வளர்க! தங்கள் சிறந்த தொண்டு.

தேவர்மகனின் தினத்தந்தி மற்றும் தினமணி நாளிதழ் விளம்பரங்கள் வித்தியாசமான லைனிங் ஆர்ட்டில் அசத்துகின்றன.

நடிப்புலக இறைவனார் தங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும். உடல்நலத்தையும் வழங்கி தன்னை எப்போதும் கௌரவப் படுத்திக் கொண்டிருக்கும் பம்மலார் என்ற தன் செல்லக்குழந்தையை அன்பு ஆசிகளோடு அருள்மலர்த் தூவி அகமகிழ்ந்திருப்பார் என்பது திண்ணம்.

தங்களின் ஆவணங்களும்,தங்கள் வள்ளல்தன்மைக்கும் தலையாய என் கௌரவமான நன்றிகள்.

பாசத்துடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
27th October 2011, 07:38 AM
டியர் பம்மலார்,
குவைத்தில் கௌரவம், சூப்பரோ சூப்பர்...
பாராட்டுக்கள்
தெய்வ மகனின் தேவர் மகன் விளம்பரம் அட்டகாசம்...
எத்தனை தலைமுறை விளம்பரமானால் என்ன, என்னிடம் வாருங்கள் என அறைகூவல் விடுக்கும் தங்களின் பதிவுகள் நன்றி, பாராட்டு இதற்கெல்லாம் அப்பாற்பட்டு சென்று விட்டன.

நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களில் ஒன்றான பந்த பாசம் 50வது ஆண்டு நுழைவினை ஒட்டி இதோ நம் பார்வைக்கு

விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/BandhapasamAdfw.jpg

நிழற்படம்
http://www.inbaminge.com/t/b/Bandha%20Pasam/folder.jpg

பந்தல் இருந்தால் கொடி படரும்...இனிமையான பாடல் காட்சி - மெல்லிசை மன்னர்களின் கைவண்ணத்தில், டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.ஜானகி குரலில்..மாயவநாதனின் பொருள் செறிந்த வரிகளில்... நடிகர் திலகம் தேவிகா (பல ரசிகர்களின் அபிமான ஜோடி)


http://www.youtube.com/watch?v=kRiYGykoaJw

vasudevan31355
27th October 2011, 10:22 AM
'தச்சோளி அம்பு' மிக அரிய சிறப்பு நிழற்படம்.

நவோதயாவின் மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் வண்ணக் காவியமான 'தச்சோளி அம்பு' திரைப்படத்தின் மிக அரிய நிழற்படத்தைதான் இப்போது காணுகிறீர்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Page08.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th October 2011, 11:09 AM
'தச்சோளி அம்பு' திருவிழா கோலாகல ஆரம்பம்.

நவோதயாவின் மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் வண்ணக் காவியமான 'தச்சோளி அம்பு' திரைப்படம் மலையாளப் பட உலகின் மைல்கல் ஆகும். பல சிறப்புகளையும் ,வெற்றிகளையும் தக்க வைத்துக் கொண்ட இப்படம் நம் நடிகர்திலகத்தின் கம்பீர நடிப்பால் புகழ் எவரெஸ்டில் ஏறி நின்றது. மலையாளத் திரையுலகின் முந்தைய வசூல் ரெகார்டுகளை எல்லாம் முறியடித்து சாதனை படைத்ததொரு சரித்திரக் காவியம்.

பிரேம் நசீர், உம்மர், ஜெயன், நம்பியார், பாலன் கே.நாயர், திக்குரிசி சுகுமாரன் நாயர், பாவூர் பரதன், ஜி.கே.பிள்ளை, கொச்சின் ஹனிபா, கே.ஆர்.விஜயா, உஷாகுமாரி(வேறு யாரும் இல்லை... நம் வெண்ணிற ஆடை நிர்மலா தான்), உன்னி மேரி (தீபா), அலம், ரவிக்குமார்,மற்றும் எண்ணற்ற மலையாளத் திரையுலகின் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்து பெருமைகளைத் தக்க வைத்துக் கொண்டது.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல நடிப்புலக நாயகர் நம் நடிகர் திலகம் முக்கிய வேடமொன்றை ஏற்று வழக்கம் போல இமாலய சாதனை படைத்து படத்தின் மாபெரும் வெற்றிக்கு முதுகெலும்பாய் நின்றார் என்றால் அது மிகையாகாது.

யூசுப்அலி கெச்சேரி அவர்களின் பாடல்களுக்கு அற்புதமான இசையை வழங்கியிருந்தார் கே.ராகவன் அவர்கள்.

ஜேசுதாஸ்,பி,சுசீலா, வாணிஜெயராம், எஸ்.ஜானகி ஆகியோரின் குரல்களில் மதுர கானமாய் கானங்கள் ஒலித்தன. அத்தனையும் சூப்பர்ஹிட் பாடல்கள்.

கதை,திரைக்கதை,வசனங்களை என்.கோவிந்தன்குட்டி எழுத, அப்பச்சன் மிகத் திறமையாக இப்படத்தை இயக்கியிருந்தார்.

'தச்சோளி அம்பு' (27-10-1978)சிங்கத்தமிழரின் சீர்மிகு அபூர்வ நிழற் படங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thacholiambuflv_001485560.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thacholiambuflv_001518800.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thacholiambuflv_001903880.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thacholiambuflv_001735880.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thacholiambuflv_001940880.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thacholiambuflv_004354800.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thacholiambuflv_004417920.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thacholiambuflv_004389120.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thacholiambuflv_004520520.jpg


http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/thacholiambuflv_004432240.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th October 2011, 12:09 PM
'தச்சோளி அம்பு' திரைக்காவியத்தில் இருந்து நடிகர் திலகம் அவர்கள் வாழ்ந்து காட்டும் சில அற்புத காட்சிகள் வீடியோவாக இதோ உங்கள் பார்வைக்கு.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Pru-L4q3Qjk


அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
27th October 2011, 12:50 PM
'தச்சோளி அம்பு' (மலையாள முதல் சினிமாஸ்கோப் படம்) சென்னையில் சாந்தி திரையரங்கில், தீபாவளிக்கு முந்தைய தினம் (27.10.1978) வெளியானது. சென்னையில் வெளியிட்டது கே.ஆர்.விஜயாவின் நிறுவனம் என்பதால், சாந்தியில் நடிகர்திலகத்தோடு தனக்கும் ஒரு கட்-அவுட் வைத்துக்கொண்டார் விஜயா. அந்தக்காலங்களில் எல்லாம் கட்-அவுட் என்றால் இப்போது போல பேனர்களில் அச்சிடப்பட்டு நிறுத்தப்படுபவை அல்ல, பிளைவுட்களில் வண்ணங்களால் வரையப்பட்டு அந்த உருவத்துக்கேற்றவாறு பலகை வெட்டப்பட்டு, பின்புறம் சட்டங்களால் இணைக்கப்பட்டு, பெரிய பெரிய சவுக்கு மரங்களால் சாரங்கள் கட்டப்பட்டு அதன்மீது நிறுத்தப்படுபவை. எல்லா பெரிய நடிகர்களுக்கும் இப்படித்தான். ('ப்ரியா' படத்துக்காக ஸ்ரீதேவிக்குக்க்கூட இப்படிப்பட்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டன).

அந்தத்தீபாவளியன்று சென்னை அலங்கார், மகாராணி, ஈகா ஆகிய திரையரங்குகளில் 'பைலட் பிரேம்நாத்' வெளியாகி பெரு வெற்றியடைந்தது.

1978 தீபாவளிக்கு ஒரு பெரிய பட்டாளமாக படங்கள் வெளியாயின.

அலங்காரில் நடிகர்திலகம் அளித்த இந்திய இலங்கை கூட்டுத்தயாரிப்பான 'பைலட் பிரேம்நாத்'
தேவி பாரடைஸில் கமல்-பாரதிராஜா அணியின் 'சிகப்பு ரோஜாக்கள்'
வெலிங்டனில் ரஜினி நடித்த தேவரின் 'தாய்மீது சத்தியம்'
சித்ராவில் 'மனிதரில் இத்தனை நிறங்களா'
கெயிட்டி & சத்யம் அரங்குகளில் மக்கள் கலைஞர் ஜெய் நடிப்பில் கலைஞரின் 'வண்டிக்காரன் மகன்'
பிளாசாவில் தேங்காய் கதாநாயகனாக நடித்த ஜேப்பியாரின் 'தங்க ரங்கன்'
பாரகனில் பக்திப்படமான 'காஞ்சி காமாட்சி'
மிட்லண்டில் நாகேஷ் நடிப்பில் 'அதிர்ஷடக்காரன்'
ஓடியனில் (மெலோடி) சிவகுமார் நடித்த 'கண்ணாமூச்சி'
பைலட்டில் ரஜினி & பாலச்சந்தர் அணியின் 'தப்புத்தாளங்கள்'

அந்த தீபாவளி எவ்வளவு ஜெகஜோதியாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அலங்காரில் 'பைலட் பிரேம்நாத்' ஃபுல்லாகும் வரை அங்கே நின்று பேசிக்கொண்டிருந்து விட்டு, அங்கிருந்து சாந்திக்கு நடந்து வருவோம். நண்பர்கள் வெளியூர் ரிப்போர்ட்டுகளுடன் (அந்தப்பகுதி செய்தித்தாள்கள் மற்றும் வெளியூர் நண்பர்களின் கடிதங்கள்) அங்கங்கே சிறு சிறு குழுக்களாக நின்று பேசிக்கொண்டிருப்போம். செய்தித்தாள்கள் ஒவ்வொரு குழுவிடமிருந்தும் அடுத்த குழுவிற்கு பரிமாறிக்கொள்ளப்படும். இரவு ஒன்பது மணி வரை பேசிக்கொண்டிருந்து விட்டு வீடு நோக்கி நகர்வோம். எல்லோரும் பல இடங்களில் இருந்து வருபவர்கள். மறுநாள் மாலையும் இப்படியே. ராகவேந்தர் சார் அடிக்கடி சொல்வது போல, அதெல்லாம் பொன்னான நாட்கள்.

'தச்சோளி அம்பு' படப்பிடிப்பின்போது நடிகர்திலகத்துக்கு ஏற்பட்ட விபத்தால் அவர் பல மாதங்கள் ஓய்வெடுக்க நேர்ந்து, அதனால் அவரது சில படங்கள் வெளியீட்டில் தள்ளிப்போன விவரங்களை. ஏற்கெனவே சகோதரர் முரளி சீனிவாஸ் சார், 'பாடல்கள் பலவிதம்' பகுதியில் (எந்தன் பொன்வண்ணமே பாடல் விளக்கத்தின் போது) விவரமாகக் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

வாசுதேவன் அளித்திருக்குக் ஸ்டில்களைப் பார்த்ததும், அன்றைய நினைவுகள் உள்ளத்தில் வட்டமிடுகின்றன.

RAGHAVENDRA
27th October 2011, 07:01 PM
டியர் வாசுதேவன் சார்,
மன்மதன் அம்புவையே மறந்து விடக் கூடிய கால கட்டத்தில், தச்சோளி அம்புவை நினைவுறுத்தி, காட்சிகளோடும் நிழற்படங்களோடும் மீண்டும் 1978க்கே அழைத்துச் சென்று விட்டீர்கள் என்றால், கார்த்திக் சார் அன்று நடந்ததை நேற்று நடந்ததைப் போல் பசுமையாக நினைவூட்டி உள்ளத்தை உணர்வெனும் ஆற்றில் நீந்தச் செய்து விட்டார். தங்கள் இருவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

நீண்ட நாள் காத்திருப்பு வீண் போகாத வண்ணம், அபூர்வமான படமான உலகம் பல விதம் தற்போது நெடுந்தகடு வடிவில் வெளியிடப் பட்டுள்ளது. கூடவே தாயே உனக்காக திரைக் காவியமும். பல ரசிகர்கள் இவ்விரு படங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்க மாட்டார்கள் அல்லது பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு இது ஒரு பொக்கிஷமாகும்.

இருந்தாலும் குறிப்பிட வேண்டிய ஒன்று.. உலகம் பல விதம் திரைக்காவியம் கிட்டத் தட்ட 90 நிமிடங்கள் அளவே உள்ளது. கிடைத்த வரை லாபம் என்கின்ற அளவில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது. மிகவும் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்து அளித்திருக்கிறார்கள். அதற்காக நம்முடைய உளமார்ந்த பாராட்டுக்கள்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/TUPVCovefw.jpg

vasudevan31355
27th October 2011, 11:21 PM
'பந்தபாசம்' (27.10.1962) 50- ஆவது ஆண்டு தொடக்கத் திருநாள்.

ராசியான ஜோடி

http://isaitoday.com/Photo/Sivajhi/Photo/Bantha%20Paasam.jpg http://www.moserbaerhomevideo.com/images/titleimages/large/VTAF0210.jpg

பாசமுரைத்த பாசமலர்கள்

http://www.mahanatisavitri.com/wp-content/themes/savitri/images/photos/tamilmovies/28big.jpg


'பந்தபாசம்' திரைப்படத்தில் வரும் நடிப்புப் பெட்டகத்தின் நடிப்பில் மிளிரும் "கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு"என்ற அருமையான பாடல்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hQjCTpgfaqw

இதழ் மொட்டு விரிந்திட.... மெல்லிய, ரம்மியமான, மனதை வருடும் இசையில் மயக்கும் தேனிசைப் பாடல்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=J5y24pHyYVw


அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
27th October 2011, 11:26 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களது இதயத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் அளித்திருக்கும் பாராட்டு மழைக்கு, புகழுரைக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்! நாம் எல்லோருமே நமது கலைவள்ளலுக்குத்தான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம் ! எல்லாப்புகழும் நமது கலையுலக இறையனாருக்கே !

தாங்கள் வெளியிட்டிருக்கும் "தச்சோளி அம்பு" சிறப்பு வண்ண நிழற்படம் மிகமிக அரிய ஒன்று !

"தச்சோளி அம்பு" Facts & Stills சூப்பரோ சூப்பர் ! அந்த ஒன்பது நிமிட வீடியோவுக்கு எண்ணிலடங்கா நன்றிகள் !

"பந்தபாசம்" பாடல்கள் பதிவுக்கு Special Thanks !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
27th October 2011, 11:57 PM
'பந்தபாசம்' பட மற்றும் 'ப' வரிசை வெற்றிப்படங்களின் இயக்குனர் திரு.பீம்சிங் அவர்கள் தனது துணைவியார் திருமதி சுகுமாரி அவர்களுடன். (அரிய நிழற்படம்)

http://www.sukumari.com/Images1/Bhimsingh_web.jpg http://www.jointscene.com/ahtees/admin/movies/content/4450_17_Bandha%20Pasam.jpg



அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
28th October 2011, 12:12 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

தேவர் மகன்

[25.10.1992 - 25.10.2011] : 20வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 13.12.1992
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4855-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th October 2011, 12:46 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

தேவர் மகன்

[25.10.1992 - 25.10.2011] : 20வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 1.2.1993
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4856-1.jpg


வெள்ளிவிழா விளம்பரம் : தினத்தந்தி : 14.4.1993
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4857-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th October 2011, 03:50 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

தேவர் மகன்

[25.10.1992 - 25.10.2011] : 20வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

வரலாற்று ஆவணம் : பொம்மை : ஜூன் 1993
["தேவர் மகன்" வெள்ளிவிழா ரிப்போர்ட்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4859-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4862-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th October 2011, 04:09 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் புகழுரைக்கு நன்றி !

"பந்தபாசம்" பதிவு பட்டையைக் கிளப்பிவிட்டது !

"தாயே உனக்காக", "உலகம் பலவிதம்" நெடுந்தகடு வருகை மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது !

டியர் வாசுதேவன் சார்,

இறவாப்புகழ் கொண்ட இயக்குனர் பீம்சிங் தனது மனைவி சுகுமாரி அவர்களுடன் இருக்கும் ஸ்டில் Marvellous !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th October 2011, 04:44 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

கீழ்வானம் சிவக்கும்

[26.10.1981 - 26.10.2011] : 31வது உதயதினம்

சாதனைப் பொன்னேடுகள்

ஏழாவது வார விளம்பரம் : முரசொலி : 7.12.1981
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4861-1.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 2.2.1982
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4858-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th October 2011, 05:51 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

பந்தபாசம்

[27.10.1962 - 27.10.2011] : பொன்விழா ஆண்டு ஆரம்பம்

பொன்னான பொக்கிஷங்கள்

சிறப்பு நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/BandhaPaasam1a-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : நவம்பர் 1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4866-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th October 2011, 05:58 AM
டியர் mr_karthik,

தங்கள் பதிவு, 1978 தீபாவளியை கண்முன்னே கொண்டு வந்துவிட்டது. தங்களது 'மலரும் நினைவுகள்' மிகமிக அருமை !

தங்களை தித்திக்கும் நினைவலைகளில் மிதக்க வைத்த "தச்சோளி அம்பு" திரைக்காவிய விளம்பரம் அடுத்த பதிவில்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th October 2011, 06:01 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

தச்சோளி அம்பு(மலையாளம்)

[27.10.1978 - 27.10.2011] : 34வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4867-1.jpg

குறிப்பு:
1. "தச்சோளி அம்பு" மலையாளத்தில் முதல் சினிமாஸ்கோப் படம்.

2. கேரளாவில் இருபது வாரங்கள் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
28th October 2011, 06:13 AM
டியர் பம்மலார்,
தச்சோளி அம்பு விளம்பரம் அபூர்வம் - பாராட்டுக்கள்

RAGHAVENDRA
28th October 2011, 06:14 AM
பைலட் பிரேம்நாத்

பெங்களூரு விளம்பரம்

http://www.nadigarthilagam.com/papercuttings2/pilotbangalorerelease.jpg

vasudevan31355
28th October 2011, 06:15 AM
பைலட் பிரேம்நாத்.

நடிகர் திலகம் மாலினி பொன்சேகாவுடன்

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/7434_17_Pilot%20Premnath.jpg


http://www.malinifonsekaonline.com/movies/pilot_Premanath.JPG


http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/198.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
28th October 2011, 08:14 AM
இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பான பைலட் பிரேம்நாத் இலங்கையில் மிகப் பெரிய வெற்றி பெற்றது மட்டுமல்லாம், மீண்டும் மொழி மாற்றம் செய்யப் பட்டும் அந்த வடிவமும் பெரிய வெற்றி பெற்றது. ஹெச்.ஆர்.ஜோதிபாலா குரல் கொடுக்க, மெல்லிசை மன்னரின் இசை வடிவத்திற்கு, சிங்களத்தில் சோமபாலா இசையமைக்க, Who is the Blalck Sheep பாடலை சிங்களத்தில் கண்டு மகிழுங்கள்


http://www.youtube.com/watch?v=TNjnDh3KWy8

RAGHAVENDRA
28th October 2011, 08:19 AM
பைலட் பிரேம்நாத் திரைக்காவியத்தில் சிங்கள பாய்லா மெட்டில் மெல்லிசை மன்னர் அமைத்த சிறந்த பாடலான அழகி ஒருத்தி இளநி விக்கிறா பாடலை கொழும்பு நகரின் எழில் தோற்றத்துடன் தந்திருக்கும் அழகைப் பாருங்கள்


http://youtu.be/xeA-2AVUrjA

இந்தப் பதிவுகளில் பைலட் பிரேம்நாத் திரைப்படம் அந்நாளில் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கத்தினை எடுத்துக் காட்டவே இந்த முயற்சி.

RAGHAVENDRA
28th October 2011, 09:09 AM
பைலட் பிரேம்நாத் திரைக் காவியம் - மேலும் சில விளம்பர நிழற் படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/pillotrunningadfw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/pillotrunningad02fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/pillotrunningad03fw.jpg

10வது வார விளம்பரம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/pilot10thwkadfw.jpg

RAGHAVENDRA
28th October 2011, 09:10 AM
பைலட் பிரேம்நாத் இசைத் தட்டு விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/pillotrecordadfw.jpg

vasudevan31355
28th October 2011, 11:22 AM
'சொர்க்கம்' விரைவில். (அரிய நிழற்படம்)

http://img190.imageshack.us/img190/905/sorgamdvdripxvidsubstmg.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/i98475_sorgam1.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th October 2011, 02:59 PM
"பைலட் பிரேம்நாத்" சிறப்புப் பாடல்.

முதன் முதலாக நமது திரியில்(இணையத்திலும் கூட) நடிப்பு வேந்தரின் "பைலட் பிரேம்நாத்" காவியத்தில் வரும் 'இலங்கையின் இளங்குயில் என்னோடு இசை பாடுதோ' என்ற இறவாப் புகழ் பெற்ற பாடல் நம் எல்லோருக்கும் ஒலி-ஒளிக் காட்சி வடிவில். நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது கண்டு மகிழலாம்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LV5tT9RMZcA



அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
28th October 2011, 04:16 PM
அன்புள்ள பம்மலார் சார்,

'தேவர் மகன்' திரைக்காவியத்தின் முதல் நாள், 42-வது நாள், 50-வது நாள், 100-வது நாள் மற்றும் வெள்ளிவிழா என அனைத்து விளம்பர வரிசையையும் பதித்து எங்கள் எல்லோரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியமைக்கும்,

அப்படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியின் 'பொம்மை' இதழ் கவரேஜ் பக்கங்களை கண்ணுறச்செய்தமைக்கும்,

காணக்கிடைக்காத 'தச்சோளி அம்பு' சென்னை வெளியீட்டு விளம்பரத்தை பதித்தமைக்கும்,

அருமையான குடும்பச்சித்திரமான 'பந்த பாசம்' வெளியீட்டை முன்னிட்டு அரிய விளம்பரத்தை பதித்தமைக்கும்,

பிடியுங்கள் மூட்டை நிறைய பாராட்டுக்களையும், நன்றிகளையும்.

(தேவர் மகன் பொக்கிஷங்கள் அனைத்தையும் பதித்து, நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களுக்கு மட்டுமல்லாமல், கலைஞானி கமல் ரசிகர்களுக்கும் பேருதவி புரிந்துள்ளீர்கள்).

mr_karthik
28th October 2011, 04:26 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

'பைலட் பிரேம்நாத்' விளம்பரங்கள் அனைத்தும் மிக மிக அருமை. பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி. அவற்றைக்காணும்போது மனம் கடந்த காலத்துக்கு மிதந்து செல்கிறது. அலங்காரில் பலமுறை பார்த்தபோதும், திருவான்மியூர் தியாகராஜா அரங்கில் நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதாக அப்பகுதி நண்பர் சங்கர் சொல்ல, ஒருமுறை நண்பர்கள் கோவை சேது, மந்தைவெளி ஸ்ரீதர், 'பல்லவன்' விஜய், சங்கர், தி.நகர் வீரராகவன், வடசென்னை வாத்தியார், பார்த்தசாரதி (பட்டு) என ஒரு கூட்டம் சாந்தியிலிருந்து திருவான்மியூர் சென்று தியாகராஜாவில் (அப்போது அது புதிய தியேட்டர்) பைலட் பிரேம்நாத் பார்த்துத் திரும்பினோம். (சற்று தள்ளியிருந்த ஜெயந்தி தியேட்டரில் வண்டிக்காரன் மகன்). 'ஆகாயக்கப்பலோட்டிய தமிழ'னுக்கு ஆடியன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. பெரிய சர்ப்ரைஸ் ஆக, தியாகராஜா ரெஸ்பான்ஸைத் தெரிந்துகொள்ள நமது இதயங்கவர்ந்த நடிகர் ஜெய்கணேஷும் அங்கு வந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தோம்.

தங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி.

RAGHAVENDRA
28th October 2011, 04:28 PM
தச்சோளி அம்பு திரைப்படத்தின் வெற்றி விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் நாளிதழில் வெளியானது. அதனுடைய நிழற்படம் நம் பார்வைக்கு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/thacholiambushieldfw.jpg

RAGHAVENDRA
28th October 2011, 04:34 PM
டியர் கார்த்திக்,
தங்களுக்கு நினைவிருக்கலாம். அன்று தங்களுடன் நானும் வந்திருக்க வேண்டியது, தவிர்க்க இயலாத காரணத்தால் வர முடியவில்லை. பல தகவல்களை சங்கர் தான் வந்து சொல்வார். தற்போது திருவான்மியூர் சங்கர் எப்படியிருக்கிறார் என்று தெரியவில்லை. காலங்கள் உருண்டோடி விட்டாலும் நினைவுகள் அங்கேயே தான் நிலைத்து விட்டன. திரிசூலம் பரபரப்பிலும் கூட நன்றாகப் போனது. பைலட் பிரேம்நாத் பெயரை அடிப்படையாக வைத்து ஜஸ்டிஸ் கோபிநாத் என்று தயாரித்த போது சிற்சில ஏகடியங்கள் கிளம்பினது, தங்களுக்கும் நினைவிருக்கும். வெள்ளி விழா கண்டிருக்க வேண்டிய படம், ஆனால் அலங்கார் திரையரங்கில் தொடர்ந்து பல படங்கள் வரிசையில் காத்திருந்ததால் ஈகாவில் 100வது நாள் நிறைவுற்றது. அந்த ஈகா திரையரங்கினையும் நடிகர் திலகம் தான் திறந்து வைத்தார்.

அன்றைய நினைவுகள் பசுமையானவை.

RAGHAVENDRA
28th October 2011, 04:37 PM
29.10.2011 அன்று 42வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
சொர்க்கம்

பேசும்படம் விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/SorkkamPesumPadamadfw.jpg

பொம்மை விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/SorkkamBommaiadfw.jpg

RAGHAVENDRA
28th October 2011, 04:40 PM
எங்கிருந்தோ வந்தாள் படப்பிடிப்பு செய்தித் தொகுப்பு பொம்மை மாத இதழ்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/EVshootingnewsBommai01fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/EVshootingnewsBommai02fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/EVshootingnewsBommai03fw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/EVshootingnewsBommai04fw.jpg

RAGHAVENDRA
28th October 2011, 04:58 PM
Diwali Dhamaka
Deepavali, the victory of good over evil, when whole of India
rejoices, celebrates and relaxes besides indulging in sweets…
when the best of diets takes a wide leap into the Bay of Bengal!!

I was planning to write about the 2 films that are the talk of the town
now. That was when I gleaned some interesting trivia from our dear
Archive expert Film news Anandan sir that set me on a glee spree

How many of us know that the first Tamil talkie film Kalidas was released
on a rainy Deepavali day, October 31st 1931?!
From that day onwards this race to release a film on this auspicious day
continues, even after 8 decades!!!
It is the same frenzy and furor, where tickets get blocked in advance,
theatres are a sea of humanity and record sale of popcorns and pepsis!

What’s interesting is that Kalidas was a period film like ‘7th sense’ but the
comparison stops there! Kalidas had about 50 songs and produced at a cost of Rs 8000 grossed Rs 75000!

When the film reels of Kalidas were brought to Madras, thousands gathered at Madras central railway station and followed the reel box to Cinema Central. Crowds showered rose petals, broke coconuts and burnt incense in the procession of the reels of the film, all along Wall tax Road from the railway station.
1952 Deepavali day set a new record starring our dear legend Chevalier Dr Sivaji Ganesan with his debut film Parasakthi produced by AVM.

Years later, Engirundho Vandhal and Sorgam were released on the same day, 29.10.1970, amidst the festival of lights and laughter, both starred the ever versatile legend Dr Sivaji Ganesan!
His lead pair in the former was our present CM, DR J Jayalalitha produced by actor turned producer Balajee who introduced the remake trend to cinema.
In Sorgam his lead pair was ‘Queen of smiles’ K.R.Vijaya.
Funnily enough, though there were some misgivings from the producers’ side, both shook hands to celebrate the 100th day victory at Hotel Asoka!!!

I have to mention one of my most favorite directors and his most talked about film Nayagan (The Hero). Written, directed, and co-produced by Mani Ratnam which released on 21 October 1987 coinciding with Diwali earned Kamal Hassan (as Velu Naiker) National Award for Best Actor, National award for P C Sriram as Best Cinematographer and Thotta Tharani Best Art Director.
Sad that the then jury did not give the best director National award to Mani Ratnam, captain of the ship. Glad the present jury didn’t mete out the same treatment to director Vetri Maaran!
And on the same day as Nayagan, was released Superstar’s Manidhan, by the most successful commercial director of that time, S.P.Muthuraman

Avvai Shanmugi, a Tamil comedy film directed by K. S. Ravikumar was also released on Deepavali, Nov 10th 1996 and went on to create history, as also Sivappu rojakkal (Red roses)

I must add here that my intention is not to do differences and similarities of top stars like our chemistry and physics lessons!
I just took a trip down memory lane, I come back to ‘now’ where we have 7aum arivu and Velayudham hitting the theatres worldwide.
While 7aum arivu has the much lauded Murugadoss and Surya combo, Velayudham is director Raja’s first non-remake, and the most anticipated Raja –Vijay duo. While Hansika is compared to junior Kushbu, Genelia has created a truly reel impact in Telugu, Hindi, Kannada, Malayalam and Tamil!
Shruthi has the ‘versatile’ acting genes deeply embedded in her!

A huuuuuuuuuuuuuuuuge request to all my readers, watch both films in the theatres and give me your honest feedback. I’m very keen to know what each and every one of you thought, felt, experienced.
To me what matters is that the producers get back the money invested and there’s an embargo on piracy.
This fortnight’s rekhs’ rambling could not have been possible but for my dear E-friends bb, Saravanan, Murali and the film archivist Film news Anandhan and my constant companion Google!

Ciao and celebrate Deepavali week in style!

... from behindwoods .... (http://behindwoods.com/columns/rekhs/?p=146)

"This fortnight’s rekhs’ rambling could not have been possible but for my dear E-friends bb, Saravanan, Murali and the film archivist Film news Anandhan and my constant companion Google!"

நம்ம முரளி சாரா...

RAGHAVENDRA
28th October 2011, 10:23 PM
அக்டோபர் அளப்பரைக்கு மத்தியில் ஒரு சின்ன திருப்பம் - மனோகரா தெலுங்கு திரைக்காவியத்திலிருந்து ஒரு அட்டகாசமான பாடல் இணையத்தில் கண்பட்டது. இப்பாடலில் நடிகர் திலகத்தின் வாயசைப்பினைப் பார்க்கும் போது, இது ஒரே சமயத்தில் வெவ்வேறு மொழிகளில் படமாக்கப் பட்டதைப் போல் தோன்றுகிறது. தெலுங்குப் பாடலுக்கு நடிகர் திலகத்தின் வாயசைப்பு பிரமிப்பைத் தருகிறது. நீங்களும் பாருங்கள்


http://youtu.be/Kb524-hoW1s

pammalar
28th October 2011, 11:54 PM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

"பைலட் பிரேம்நாத்"க்கு - பெங்களூரு விளம்பரம், தமிழக விளம்பரங்கள், இசைத்தட்டு விளம்பரம், 'Who is the blacksheep' பாடல் வீடியோ சிங்களமொழியில், சிங்களபாய்லா மெட்டில் அமைக்கப்பட்ட பாடலின் வீடியோ என - வகைவகையான ஐயிட்டங்களுடன் விருந்து பரிமாறிவிட்டீர்கள்!

"தச்சோளி அம்பு" வெற்றிவிழா நிழற்படம் அரிய ஒன்று !

"மனோகரா" தெலுங்குப் பதிப்பு பாடல் அசத்தல் !

"சொர்க்கம்" முதல் வெளியீட்டு விளம்பரங்கள், "எங்கிருந்தோ வந்தாள்" படப்பிடிப்பு பற்றிய 'பொம்மை' பக்கங்கள் எல்லாம் அரிய பொக்கிஷங்களின் அணிவகுப்பு ! அளித்த தங்களுக்கு பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th October 2011, 02:28 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

நாம் பிறந்த மண்

[7.10.1977 - 7.10.2011] : 35வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

சிறப்பு நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NPM1-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி : 5.10.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4868-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
29th October 2011, 04:11 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

சொர்க்கம் & எங்கிருந்தோ வந்தாள்

[29.10.1970 - 29.10.2011] : 42வது உதயதினம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : கல்கி தீபாவளி மலர் : 1970
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4877-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 29.10.1970
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4869-1.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 5.2.1971
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4874-1.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 5.2.1971
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4873-1.jpg


அகில இந்திய சிகர மன்றம் நன்றி அறிவிப்பு : தினமலர் : 6.2.1971
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4872-1.jpg

குறிப்பு:
ஒரே தினத்தில் வெளியான ஒரு கதாநாயக நடிகரின் இரு படங்கள் - ஒவ்வொன்றும் - மெகாஹிட் ரேஞ்சில் ஓடி 100 நாள் விழாக் கொண்டாடிய சாதனையை நிகழ்த்திக் காட்டிய பெருமை நமது சிங்கத்தமிழனுக்கு மட்டுமே. இச்சாதனையை முதன்முதலில் அவர் செய்து காட்டியது "ஊட்டி வரை உறவு(1967)" & "இரு மலர்கள்(1967)" காவியங்களுக்காக. "சொர்க்கம்(1970)" & "எங்கிருந்தோ வந்தாள்(1970)" இதன் இரண்டாம் பதிப்பு.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

பெருமிதத்துடன்,
பம்மலார்.

pammalar
29th October 2011, 04:35 AM
டியர் mr_karthik,

தங்களின் பாராட்டுப் பதிவுக்கு பாசத்துடன் கூடிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th October 2011, 04:46 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

சொர்க்கம்

[29.10.1970 - 29.10.2011] : 42வது உதயதினம்

பொக்கிஷப் புதையல் : வசூல் சாதனை விளம்பரங்கள்

தினத்தந்தி : 5.11.1970
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4871-1.jpg


The Hindu : 6.11.1970
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4870-1.jpg

பெருமிதத்துடன்,
பம்மலார்.

pammalar
29th October 2011, 04:51 AM
டியர் வாசுதேவன் சார்,

"பைலட் பிரேம்நாத்" பதிவுகள் Brilliant ! குறிப்பாக 'இலங்கையின் இளங்குயில்' பாடல் தாங்கள் குறிப்பிட்டது போல் இதுவரை இணையத்தில் காணாத ஒன்று ! அதனை பதிவேற்றம் செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !

"சொர்க்கம்" தொடக்கமே பளிச் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th October 2011, 05:15 AM
அவள் யார்?

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4878-1.jpg

RAGHAVENDRA
29th October 2011, 07:07 AM
டியர் பம்மலார் சார்,
சொர்க்கம் வசூல் விளம்பரம், பொய்யும் புரட்டும் சொல்லி நடிகர் திலகத்தின் வெற்றியை இருட்டடிப்பு செய்வோரின் சொரூபத்தை வெளிக் கொணர்ந்து விட்டீர்கள்.
தேவி பேரடைஸ் திரையரங்கம் துவங்கிய பின் வெளியான முதல் தமிழ்ப்படம் சொர்க்கம். அந்த வளாகத்தில் வெளியான முதல் தமிழ் - மொழி மாற்றுத் திரைப்படம் - ஜோதிலட்சுமி கதாநாயகியாக நடித்த ஜாக்பாட் ஜாங்கோ - தேவி திரையரங்கில் வெளியானது. மெக்கென்னாஸ் கோல்ட் படத்தின் அபரிமிதமான வெற்றிக்குப் பிறகு அந்த வளாகம் மிகப் பெரிய புகழ் பெற்றது. அந்த வளாகம் உருவானதற்கான காரண காரியங்கள் தனிக் கதை.

அப்படிப் பட்ட தேவி திரையரங்கின் பிரம்மாண்டமான தோற்றம் அதன் பிரமிப்பு, அனைவருக்கும் ஆர்வம் உண்டாக்கியதில் வியப்பில்லை. அதுவும் தேவி பேரடைஸில் அந்த ரேம்ப்பில் சுற்றி சுற்றி மேலே செல்வது, அந்த விசாலமான லௌஞ்சில் நடிகர் திலகத்தின் ஸ்டில்களைப் பற்றி சிலாகித்தது, முதன் முதலாக சேனல் இசை எனப் படும் அந்த ஏற்பாடு இடைவேளையில் சொர்க்கம் பாடல்களைக் கேட்கும் போது தந்த இனிமை, அந்த பிரம்மாண்டமான அரங்கத்தில் அற்புதமான உள் தோற்றம், அநைத்தும் புதுமையான அனுபவம்.. பெயருக்கேற்றார் போல் சொர்க்கமாக விளங்கிய அந்த அரங்கத்தில், அதுவும் அத்தனை உயரத்தில் அந்த படம் திரையிடப் பட்டது மிகவும் பொருத்தமாக இருந்தது. அந்த ரூபாய் நோட்டு மரம் அந்த ரேம்ப்பின் நடுவே அப்படியே ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. அதே போல் நடிகர் திலகம் அந்த பிரம்மாண்ட செட்டில் வேஷ்டி சட்டையுடன் படுத்து வியந்து பார்க்கும் காட்சி அப்படியே ஸ்டில்ஸ் வைக்கும் இடத்தில் உருவாக்கப் பட்டிருந்தது அனைத்துமே இன்றும் அந்தப் பிரமிப்பை நெஞ்சில் அப்படியே வைத்துள்ளன.

நுழைவுக் கட்டணம் ரூ 1.25, 2.00, 2.50 மற்றும் ரூ 3.00. முன்பதிவு ஒரு வாரத்திற்கு முன் தொடங்கிய போது காலை 7.10 மணிக்கு க்யூவில் நின்றேன். நின்ற இடம் பிளாசா திரையரங்கு தாண்டி பேருந்து நிறுத்தம் அருகில், தற்போது அந்த நிறுத்தம் இல்லை. அப்படியும் எனக்கு இரண்டாம் நாள் பகல் காட்சி, அதாவது 30.10.1970 ரூ. 3.00 டிக்கெட் கிடைத்தது. ரசிகர்கள் அனைவருக்கும் சொர்க்கம் படம் தான் முதலிடம். அந்த ஸ்டைல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விட்டதோடு மட்டுமின்றி, எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் மிகப் பெரிய வெற்றிக்கு வழி வகுத்து விட்டது.

இரண்டாம் நாள் தேவி பேரடைஸில் நுழையும் போது இடம் மாறி விட்டோமா என்று ஐயப் படுகிற அளவிற்கு புதுமையாக இருந்தது மறக்க முடியாது. இருந்தாலும் இவற்றையெல்லாம் தாண்டி உள்ளே நுழைந்து படம் ஆரம்பித்து அந்தக் கனவுக் காட்சி ஆரம்பிக்கும் போது அரங்கம் அதிர்ந்த அதிர்வு இருக்கிறதே, அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

உண்மையிலேயே சொர்க்கம் தான். அதுவும் தேவி பேரடைஸில் அப் படத்தை அப்போது பார்க்காதவர்கள் நிச்சயம் துரதிர்ஷ்டசாலிகள்... என்று பெருமையோடு சொல்வேன்.

RAGHAVENDRA
29th October 2011, 07:12 AM
அவள் யார் திரைப்படம் நல்ல கருத்தம்சம் நிறைந்தது. நடிகர் திலகம் நீதிபதியாக வருவார். சௌகார் ஜானகி டி.கே.ராமச்சந்திரன் ஜோடி அவர்கள் காரில் போகும் போது வரும் டூயட் பாடல் தான் பட்டுப் பூச்சிப் போலும் ராஜா, பாடியவர்கள் ஏ.எம்.ராஜா, ஜிக்கி. இசை எஸ்.ராஜேஸ்வர ராவ். இப்படத்தில் எனக்கு நினைவு தெரிந்து நடிகர் திலகத்திற்கு பாடல்கள் இல்லை. இனிமையான பாடல்கள். பாணிக்ரஹி பாடியது - கண் காணும் மின்னல் தானோ மற்றும் நான் தேடும் போது என்ற பாடல். subdued acting என்பதற்கு இப்படம் உதாரணம்.

பாடல்களைக் கேட்க

http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBOLD000403

RAGHAVENDRA
29th October 2011, 07:21 AM
நல்ல மழை, சாலையெல்லாம் வெள்ளம், குடையையும் தாண்டி நனையும் உடல்கள், சூரியன் வருமா என்று வானத்தைப் பார்க்கும் நிலை...

இன்றைய நிலவரம் போல் உள்ளதல்லவா...

41 ஆண்டுகளுக்கு முன் 29.10.1970 அன்றும் இதே நிலை தான். காலை சுமார் 9.30 மணி. தீபாவளியைக் கொண்டாடி விட்டு விடு ஓட்டம் ... வீட்டிலோ திட்டு.. அதையெல்லாம் யார் காதில் வாங்கினார்கள் ... கண் காது மூக்கு செவி என ஐம்புலன்களிலும் சிவாஜி என்ற மூன்றெழுத்து மந்திரம் அல்லவா ஆக்கிரமித்துள்ளது.. காலை விமானப் படை வீரர்களுக்கான சிறப்புக் காட்சி சாந்தி திரையரங்கில் எங்கிருந்தோ வந்தாள் திரைக் காவியம்.. எங்களுக்கு பகல் காட்சிக்கு எப்படியோ டிக்கெட் கிடைத்து விட்டது. இருந்தாலும் காலையில் பார்த்தால் நன்றாயிருக்குமே.. அரங்கத்தில் நுழைந்தால்.. எங்கே நுழைவது... இடமே யில்லை... எங்கு பார்த்தாலும் கார்கள்... மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. டிக்கெட் கிடைக்க வில்லை. நண்பர்கள் மிச்சம் மீதி இருந்த ஸ்டார்களையும் கொடிகளையும் கட்டிக் கொண்டிருந்தார்கள்.. மழையில் நனைந்து கொண்டே...நேரம் போனது தெரியவில்லை... பகல் சுமார் 1.00 மணியளவில் கதவுகள் திறக்கின்றன. படம் முடிகிறது. ஆஹா... அனைவரின் முகத்திலும் பூரிப்பு.. எங்களுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.. காரணம் அவர்கள் பொதுவானவர்கள்... அவர்களே சந்தோஷத்தோடு வரும் போது எங்களுக்குக் கேட்க வேண்டுமா... சரியாக காத்திருந்தவர்கள் போல் ரசிகர்கள் பட்டாசு வெடிக்க துவங்கி விட்டார்கள்... படம் முடிந்து மக்கள் வெளியே போக முடியாத அளவிற்கு பட்டாசு மழை... அந்த மழை ஓய்ந்து இந்த மழை.. அனைவரிடமும் விசாரித்தோம்.. ஒரே பதில்... படம் மிகவும் நன்றாக இருக்கிறது... சிவாஜி சிவாஜி தான்.

போதாதா..

எங்கள் காட்சி வந்தது...

சொல்லவும் வேண்டுமா...

அந்த நாட்கள் இனிமேல் வருமா...

Never...(கௌரவம் நினைவு படுத்திக் கொள்ளவும்)

RAGHAVENDRA
29th October 2011, 07:24 AM
ஒரே நாளில் இரு படங்கள் 100 நாட்கள் ... ஒரே படம் 200 நாட்கள் ஓடியதற்கு சமம்...அதுவும் இரு முறை...

இதை செய்ய ஒருவரால் தான் முடியும் .. முடிந்தது...

mr_karthik
29th October 2011, 12:53 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

தச்சோளி அம்பு திரைப்படத்தின் வெற்றிவிழாவில் நடிகர்திலகம் வெற்றிக்கேடயம் பெறும் காட்சியைக்கண்டு பெருமகிழ்ச்சியடைந்தேன். இவற்றை இதுபோன்ற புகைப்பட ஸ்டில்களில் பார்த்து ஆவலைத்தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஏனென்றால் நடிகர்திலகத்துக்கு 'நினைவு இல்லம்' அமையப்போவதுமில்லை. அதில், இவையெல்லாம் இடம்பெறப்போவதுமில்லை. அவற்றை நாம் பார்க்கப்போவதுமில்லை.

"தாத்தா, நீங்கள் வாழும்போது பார்க்க ஆசைப்பட்ட சிவாஜி தாத்தாவின் நினைவு இல்லம் இப்போ ஒருவழியாக உருவாகி விட்டது. அதை உங்கள் சார்பில் நான் போய்ப்பார்த்து வந்தேன்" என்று என் பேரன் என் கல்லறையின் முன் நின்று சொல்லும் காலமாவது வருமா? அல்லது அதுவும் கனவாகவே போய்விடுமா?.

KCSHEKAR
29th October 2011, 01:09 PM
I am unable to visit our hub for 2, 3 days.

What a Pokkizham - collections about Thachcholi Ambu, Pilot Premnath, Thevar Magan, Sorgam & Engiruntho Vandhal?

Thanks to Mr.Pammalar, Mr.Ragavendran & Mr.Vasudevan.

Ofcourse thanks to Mr.Karthik for sharing his memorable golden days.

Thanks again.

KCSHEKAR
29th October 2011, 01:13 PM
Dear All - I have received one mail from our NT's great fan from Vietnam. I posted the same here for our hubbers:

"Dear Mr.Chandra sekar,

I have gone thru all the 7 parts of Nadigar Thilagam in the last 3 days and commendable contribution by shardha, Pammalar, ragavendran and you.

I always thought that I was the greatest worshipper of our God but I feel diminished in my status now.

I have seen 256 Films out of which 50 movies more than 150 times each and remaining minimum twice and remember most of the release dates and victory details.

I have been living in overseas for the past 20 years and travel extensively to 60 countries.but if I dont see atleast a scene in one day of our God, That is not my day.

I am from Neyveli and Chennai woking overseas in Thailand,Indonesia and Vietnam.I am an Engineer and a management accountant by qualification.My proudest credential is that I am a hardcore devotee of acting god from the age of 6 since I saw Navaratri and Pudhiya paravai in Athoor Swarna/Sridhar in 1964 where my Grand pa was working.My entire family is God's fans only.All my friends were natural God's fans or converted God's Fans only(In my class i wont let any one else to be otherwise).

Since childhood my name was linked with God's name by my friends and relatives.

I felt that I was seperated from TamilNadu after 21st July'2001.When the god's statue was erected in chennai ,I was in U.S on business.After I was back,I paid a visit from indonesia to have a glimpse at God's statue and took blessings.

I saw the god only three times in my life,once during election campaign in Neyveli,second during Chettinad school Function and third at Chennai airport(I was fortunate to fall in his feet on that day).

I will be participating and contributing to your site.

Regards
Gopal"

mr_karthik
29th October 2011, 03:15 PM
பம்மலார் சார்,

எதிர்பார்த்தது போலவே 'சொர்க்கம்' மற்றும் 'எங்கிருந்தோ வந்தாள்' பட பொக்கிஷப்பதிவுகள் களைகட்டின. இரு படங்களுமே 100 நாட்களுக்கு மேல் ஓடிய தமிழகத்தின் அனைத்து நகரங்கள் மற்றும் திரையரங்குகளின் பெயர்களையும் விளம்பரங்களில் குறிப்பிட்ட ஸ்ரீ வினாயகா பிக்சர்ஸ் மற்றும் சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்களுக்கு மிக்க நன்றி.

(பாலும் பழமும், சரஸ்வதி சபதம் படங்களின் 100-வது நாள் விளம்பரங்களைப்பார்த்து வருத்தம் அடைந்தேன். இரு படங்களும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியிருக்கும்போது, விளம்பரத்தில் சென்னை 3 அரங்குகளை மட்டும் குறிப்பிட்டு விட்டு 'மற்றும் தென்னாடெங்கும்' என்று போட்டிருந்தனர். ஏன் எல்லா அரங்குகளின் பெயர்களையும் விளம்பரத்தில் குறிப்பிட்டால் வேலுமணியின் பாட்டன் வீட்டு சொத்தும், நாகராஜனின் முப்பாட்டன் வீட்டு சொத்தும் குறைந்து போயிருக்குமா?. ரசிகர்களின் மனநிலையறியாத இவங்களெல்லாம் எப்படி திரைத்துறையில் குப்பை கொட்டினார்கள்?)

ரசிகர்களுக்கு நீங்கள் செய்து வரும் தொண்டு அளவிடற்கரியது. பொக்கிஷப் பதிவுகளுக்கு மிக்க நன்றி.

ராகவேந்தர் சார்,

'எங்கிருந்தோ வந்தாள்' படப்பிடிப்புச்செய்திகளின் பொம்மை ஆவணங்களை அழகுற அளித்துள்ளீர்கள். பொம்மை ஒரு தலைசிறந்த சினிமா பத்திரிகை என்பதில் ஐயமில்லை. அழகான கவரேஜ். பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி.

வாசுதேவன் சார்,

பைலட் பிரேநாத் பாடல்களின் வீடியோ பதிவுகளுக்கு நன்றி. குறிப்பாக 'இலங்கையின் இளங்குயில் என்னோடு இசை பாடுதோ' பாடல் அடிக்கடி பார்க்க முடியாத ஒன்று.

pammalar
29th October 2011, 08:03 PM
டியர் ராகவேந்திரன் சார்,

சொர்க்கம்(தேவிபாரடைஸ்), எங்கிருந்தோ வந்தாள்(சாந்தி) ஃப்ளாஷ்பேக் அருமை !

டியர் mr_karthik,

தங்களின் பெரிய பாராட்டுக்கு எனது இனிய நன்றி !

My sincere thanks to Mr.Chandrasekaran & Mr.Gopal.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th October 2011, 08:19 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

தச்சோளி அம்பு திரைப்படத்தின் வெற்றிவிழாவில் நடிகர்திலகம் வெற்றிக்கேடயம் பெறும் காட்சியைக்கண்டு பெருமகிழ்ச்சியடைந்தேன். இவற்றை இதுபோன்ற புகைப்பட ஸ்டில்களில் பார்த்து ஆவலைத்தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஏனென்றால் நடிகர்திலகத்துக்கு 'நினைவு இல்லம்' அமையப்போவதுமில்லை. அதில், இவையெல்லாம் இடம்பெறப்போவதுமில்லை. அவற்றை நாம் பார்க்கப்போவதுமில்லை.

"தாத்தா, நீங்கள் வாழும்போது பார்க்க ஆசைப்பட்ட சிவாஜி தாத்தாவின் நினைவு இல்லம் இப்போ ஒருவழியாக உருவாகி விட்டது. அதை உங்கள் சார்பில் நான் போய்ப்பார்த்து வந்தேன்" என்று என் பேரன் என் கல்லறையின் முன் நின்று சொல்லும் காலமாவது வருமா? அல்லது அதுவும் கனவாகவே போய்விடுமா?.

டியர் mr_karthik,

தங்கள் பதிவில் உள்ள உண்மை நெஞ்சை கனக்கச் செய்து விட்டது.

"எதற்கும் ஒரு காலம் உண்டு, பொறுத்திரு மகளே", சரிதான். ஆனால் எத்தனை காலம்தான் பொறுத்திருப்பது...

கனத்த இதயத்துடன்,
பம்மலார்.

pammalar
29th October 2011, 09:01 PM
(பாலும் பழமும், சரஸ்வதி சபதம் படங்களின் 100-வது நாள் விளம்பரங்களைப்பார்த்து வருத்தம் அடைந்தேன். இரு படங்களும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியிருக்கும்போது, விளம்பரத்தில் சென்னை 3 அரங்குகளை மட்டும் குறிப்பிட்டு விட்டு 'மற்றும் தென்னாடெங்கும்' என்று போட்டிருந்தனர். ஏன் எல்லா அரங்குகளின் பெயர்களையும் விளம்பரத்தில் குறிப்பிட்டால் வேலுமணியின் பாட்டன் வீட்டு சொத்தும், நாகராஜனின் முப்பாட்டன் வீட்டு சொத்தும் குறைந்து போயிருக்குமா?. ரசிகர்களின் மனநிலையறியாத இவங்களெல்லாம் எப்படி திரைத்துறையில் குப்பை கொட்டினார்கள்?)


டியர் mr_karthik,

தங்களின் ஆதங்கம் நியாயமானது.

சிவாஜி புரொடக்ஷ்ன்ஸ் "தங்கப்பதக்கம்" திரைக்காவியத்திற்குக் கூட 100வது நாள் விளம்பரத்தில் 'சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி மற்றும் இந்தியா முழுவதும்' என்றே அளித்திருப்பார்கள்.

என்னத்த சொல்ல...என்னத்த செய்ய...

வருத்தத்துடன்,
பம்மலார்.

pammalar
29th October 2011, 09:08 PM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

அவள் யார்

[30.10.1959 - 30.10.2011] : 53வது ஆரம்பதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

காவியக்காட்சிகள் : பேசும் படம் : ஏப்ரல் மலர் 1959
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4888-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4889-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4890-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4891-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4892-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4893-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
29th October 2011, 09:46 PM
டியர் காரத்திக்,
தங்களின் உள்ளம் மிகவும் புண்பட்டுள்ளது தங்களின் வார்த்தைகளில் தெரிகிறது. வாழ்க்கை என்பது நம்பிக்கையின் அடிப்படையில் ஆனது. நம்புவோம். நிச்சயம் நாம் நினைத்தது நடக்கும். நம்முடைய நேர்மையான முயற்சிகள் வீண் போகாது.

டியர் பம்மலார்,
என்னத்த சொல்ல, என்னத்த செய்ய... சமயம் பார்த்து பஞ்ச் தருகிறீர்கள், சூப்பரோ சூப்பர்.

RAGHAVENDRA
29th October 2011, 09:47 PM
டியர் பம்மலார்,
அவள் யார் படக் காட்சிகள் அருமை. படம் பார்க்காதவர்களுக்கு ஓரளவிற்கு நிறைவைத் தரும்.

RAGHAVENDRA
29th October 2011, 09:50 PM
சமீபத்தில் கேள்விப் பட்டது. எல்லாம் உனக்காக திரைக்காவியம் கொலம்பியா பிலிம்ஸ் மலேசியா நிறுவனத்தால் சில ஆண்டுகளுக்கு முன்னர் குறுந்தகடாக வெளியிடப் பட்டதாக ஒரு தகவல் கிடைத்தது. அவ்வாறாயின் அங்குள்ள நமது நண்பர்கள் முயற்சி செய்து எந்த நிலையில் உள்ளது, தற்போது மீண்டும் முயற்சித்தால் கிடைக்குமா என்கிற விவரங்களைக் கேட்டறிய முடியுமா?

pammalar
29th October 2011, 11:15 PM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

அவள் யார்

[30.10.1959 - 30.10.2011] : 53வது ஆரம்பதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷம்

வரலாற்று ஆவணம் : பேசும் படம் : செப்டம்பர் 1959
["அவள் யார்" காவியம் குறித்தும், அதில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரம் குறித்தும், அவை இரண்டும் சரிவர அமைய அதன் தயாரிப்பாளர்-இயக்குனர் கே.ஜெ.மகாதேவன் அவர்கள் எடுத்து கொண்ட பெருமுயற்சி குறித்தும் விளக்குகிறது இந்த எட்டு பக்கப் படக்கட்டுரை]

முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4894-1.jpg


இரண்டாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4895-1.jpg


மூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4896-1.jpg


நான்காம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4897-1.jpg


ஐந்தாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4898-1.jpg


ஆறாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4899-1.jpg


ஏழாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4900-1.jpg


எட்டாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4901-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
30th October 2011, 12:25 AM
கார்த்திக்,

ஒரு சின்ன இடைவெளிக்கு பின் உங்களின் உணர்வுபூர்வமான பதிவு அனைவர் மனதையும் தொட்டது போல் என் மனதையும் ஆழமாக தொட்டது. நான் பாபு படம் வெளியான அன்று பார்க்கவில்லை. அக்டோபர் 18 திங்கள் தீபாவளியன்று 5 காட்சிகள். காலையில் 9 மணி ஓபனிங் ஷோ ஸ்ரீதேவி தியேட்டருக்கு போய் டிக்கெட் கிடைக்காமல் திரும்ப வேண்டிய சூழல். அப்படியே நேரே மீனாட்சி தியேட்டருக்கு போய் அன்று வெளியான ஜானி மேரா நாம் பார்த்தோம்.[மூன்று மாதங்களுக்கு பிறகு நம்முடைய படமாக வரப் போவது எப்படி இருக்கும் என்பதை பார்க்கவே போனோம்]. என்னை கூட்டிக் கொண்ட போன என் கஸினுக்கு அவனுடைய நண்பன் ஒருவன் மூன்றாவது காட்சியான 3 மணி ஷோவிற்கு டிக்கெட் வாங்கி கொடுத்து விட நான் போக முடியாமல் போனது.

பாபு தேவியில், சென்ட்ரலில் நீரும் நெருப்பும், தங்கத்தில் ஆதி பராசக்தி சிந்தாமணியில் வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற கணக்கில் வெளியாகி இருந்தன. தீபாவளிக்கு மறு நாள் காலையும் தேவிக்கு சென்று டிக்கெட் கிடைக்காமல் சிந்தாமணி தியேட்டருக்கு போய் வீட்டுக்கு ஒரு பிள்ளை படம் பார்த்தோம். அன்றும் பாபு பார்க்க முடியவில்லை. மறு நாள் முதல் ஸ்கூல் மீண்டும் திறந்து விட்டதால் அந்த சனிக்கிழமையன்று தான் பார்க்க முடிந்தது. எப்போது பார்த்தால் என்ன? 1965 நீலவானத்திற்கு பிறகு மனதை மிக சோகமாக்கிய படம் என்றால் அது பாபு தான். வியட்நாம் வீட்டையும் இந்த இடத்தில் மறக்கவில்லை.

இந்த 1971 அக்டோபர் 18-ந் தேதியை பொறுத்தவரை அதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. தமிழ் சினிமா வரலாற்றில் நிகழ்ந்த உச்சக்கட்ட போட்டி என்று சொன்னால் அது இரண்டு திலகங்களிடையே நிகழ்ந்த போட்டியே ஆகும். அதற்கு முன்னும் அதற்கு பின்னும் அது போன்ற ஒரு போட்டியை தமிழ் சினிமா கண்டதில்லை. எத்தனையோ முறை இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றன. அந்த போட்டியில் கடைசி முறையாக ஒரே நாளில் இருவரின் படங்களும் வெளியான நாள்தான் 1971 அக்டோபர் 18. அந்த தினத்திற்கு பின் ஒரே தினத்தில் இருவரின் படங்களும் வெளியாகவில்லை. அதற்கு பிறகு மிக நெருக்கமாக வந்த படங்கள் என்றால் இதற்கு பிறகு ஒரு 5 மாதம் சென்று வெளியான ஞான ஒளி மற்றும் நல்ல நேரம் படங்கள். நல்ல நேரம் 1972 மார்ச் 10 அன்று வெளியான போது ஞான ஒளி மார்ச் 11 அன்று ரிலீசானது. அந்த வகையில் அடுத்து சொல்வதென்றால் 1975 அக்டோபர் 31 அன்று பல்லாண்டு வாழ்க வெளியானது, இரண்டு நாட்கள் கழித்து நவம்பர் 2 அன்று Dr.சிவா மற்றும் வைர நெஞ்சம் வெளியானது. ஆனால் எப்போதும் ஒரு நிகழ்வின் முக்கியத்துவம் அன்றைய நாளை விட பிறிதொரு நாளில் யோசிக்கும் போதுதான் புரியும். அது போலதான் அந்த அக்டோபர் 18 பற்றிய நினைவுகளை 40 வருடங்களுக்கு பிறகு யோசிக்கும் போது அல்லது சொல்லும்போதுதான் இது போன்ற சின்ன சின்ன குறிப்புகள் கூட சுவையாகின்றன.

இவற்றை குறிப்பிட்டு நானே முன்பு எழுதியிருக்கிறேன் என்ற போதிலும் மீண்டும் அதை அசை போடுவதில் ஒரு தனி சுகம்.

நன்றி கார்த்திக் நன்றி!

அன்புடன்

நீங்கள் பதிவு செய்த அன்றே இதை எழுத வேண்டும் என்று ஆரம்பித்து இன்றுதான் பதிய முடிந்தது.

Murali Srinivas
30th October 2011, 12:36 AM
சுவாமியை அவரின் ஆவண பங்களிப்பிற்காக பாராட்ட ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது என்பதனால்தான் நான் அதை திரியில் குறிப்பிடுவதில்லை. அது மட்டுமல்ல பல விஷயங்களை நேரில் தொலைபேசியிலும் பகிர்ந்து கொள்வதால் சுவாமியிடம் என்ன என்ன இருக்கின்றது என்பதை பற்றி ஓரளவிற்கு ஒரு அனுமானமும் எனக்கு உண்டு. ஆனால் நான் இங்கே பலமுறை குறிப்பிட்டுள்ளது போல் அதையும் மிஞ்சும் வண்ணம் இன்ப அதிர்ச்சிகளை கொடுப்பவர் சுவாமி. அவற்றில் ஒன்றுதான் யாருக்குமே அவ்வளவாக தெரியாத அவள் யார் படத்தின் கதை சுருக்கத்தையும் கதாநாயகனின் பாத்திரப்படைப்பையும் பற்றி படத்தின் இயக்குனர், பேசும் படம் இதழுக்கு கொடுத்துள்ள பேட்டி.

Thanks Swami for those sweet surprises! Keep them coming.

அன்புடன்

Murali Srinivas
30th October 2011, 01:10 AM
இன்றைய தினம் அக்டோபர் 29. இந்த தேதி வரும் போது மட்டும் மனது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். காரணம் அனைவரும் அறிந்ததே. இதை பற்றிய என் நினைவுகளை முன்பு ஒரு முறை எழுதியிருந்தேன். புதிய நண்பர்களுக்கு முதன் முறை படிக்கவும் நமது பழைய நண்பர்களுக்கு மீண்டுமொருமுறை வாசிக்கவும் இதோ அந்த பதிவு. அந்த பழைய பதிவில் ஒரு சிலவற்றை திருத்தி சிலவற்றை சேர்த்திருக்கின்றேன்.

இந்த நேரத்தில் முதன் முறையாக அந்த வருடம் அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் 42-வது பிறந்த நாளை மிக பெரிய அளவில் கொண்டாடுவது என்று அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் முடிவு செய்து, இரண்டு நாள் மாநாடாக அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் சென்னையில் நடை பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டு செய்திகள் எல்லா ரசிகர்களுக்கும் மிக பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. இதன் பின்னால் தீபாவளி திருநாள் அக்டோபர் 29 அன்று. ரசிகர்களுக்கு மேலும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்க இரண்டு படங்கள் எங்கிருந்தோ வந்தாள் மற்றும் சொர்க்கம் ரிலீஸ்.

இந்த சமயத்தில் முதன் முறையாக மதுரையில் மன்றம் மூலமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் டிக்கெட்கள் முதல் நாள் அனைத்து காட்சிகளுக்கும் வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ரிசர்வேஷன் போன்ற வசதிகள் இல்லாமல் இருந்த அன்றைய காலக்கட்டத்தில் டிக்கெட் விலையை விட ஒரு ரூபாய் மட்டுமே அதிகமாக கொடுக்க வேண்டும் என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது. மன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கும் இந்த டிக்கெட் வழங்கப்படும் என்ற செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. காரணம் நாங்கள் மன்ற உறுப்பினர்கள் இல்லை. இப்படி டிக்கெட் கிடைக்கும் என்பதால் ஓபனிங் ஷோ பார்க்கும் வாய்ப்பும் ஆசையும் அதிகரித்தது. ஆனால் தீபாவளியன்று காலையில் சினிமா போக அனுமதி கிடைக்காது. மாலைக் காட்சி மட்டுமே சாத்தியம். வெளியாகும் இரண்டு படங்களில் எதை பார்ப்பது என்ற Dilemna. கடைசியில் சொர்க்கம் போவது என்று முடிவானது. சென்ட்ரல் சினிமாவில் மாலை காட்சி டிக்கெட்டும் வாங்கியாகி விட்டது. என் கஸின் ஸ்ரீதேவியில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோவிற்கும் டிக்கெட் வாங்கி விட்டான். காலையில் ஆரப்பாளையத்தில் எங்கள் வீட்டில் தீபாவளி கொண்டாடும் போதும் மனதில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோ பற்றிய நினைவே. மாலை தாத்தா வீடு வந்து அவனை பார்த்து படம் எப்படியிருக்கிறது என்று தான் முதலில் கேட்டேன். இரண்டு படமும் டாப் [அந்த காலக்கட்டத்தில் சூப்பர் என்ற தூய தமிழ் வார்த்தை அகராதியில் இடம் பெற்றிருக்கவில்லை] என்ற மகிழ்ச்சியான செய்தியை அவன் எனக்கு சொன்னான்.

மாலை தியேட்டருக்கு போகிறோம். சென்ட்ரல் சினிமா வாசலில் திருவிழா கூட்டம். மன்ற டோக்கன் வைத்திருப்பவர்கள் பின் பக்க வாசல் வழியாக வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அங்கே சென்றால் அதை விட கூட்டம். பெண்கள் செல்லும் வழி வேறு. அந்த சின்ன சந்தில் குவிந்த ரசிகர்களை உள்ளே அனுமதிக்க ஒரு சரியான ஏற்பாடு செய்யப்படாததால், ஒரு குழப்பமான சூழ்நிலை. நேரம் ஆக ஆக கூட்டம் பொறுமையை இழக்க, போலீஸ் ரசிகர்களை கட்டுப்படுத்த லாட்டி வீச, ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்தார்கள். அதற்கு காரணம் இருந்தது. சென்னை மாநாடு வெற்றிகரமாய் நடந்து முடிந்த பிறகு, சென்னையில் சாந்தி தியேட்டரின் மீது தாக்குதல் நடந்தது. அந்த நேரத்தில் போலீஸ் அதை கண்டும் காணாமல் நடந்து கொண்டது.[இதை பற்றி ஏற்கனவே நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தில் எழுதியிருக்கிறேன்]. கொந்தளித்த ரசிகர்களை நடிகர் திலகம் அமைதிப்படுத்தியிருந்தார். எனவே போலீஸ் லாட்டி வீச ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் ஒன்று திரண்டு போலீசை சுற்றி வளைத்து "உங்களுக்கு கணேசன் ரசிகர்கள்னா இளிச்சவாயங்களா தெரியுதா?" என்று தகராறு செய்ய ஆரம்பிக்க நிலைமை ரசாபாசம் ஆவதற்குள் உள்ளே அனுமதித்து விட்டார்கள்.

படம் ஆரம்பிக்கும் முன் எங்கிருந்தோ வந்தாள் படத்தை பற்றிய செய்திகளை [அங்கே வந்திருந்த பெரும்பாலோர் பார்த்து விட்டவர்கள். காரணம் ஷோக்கள் நடந்த விதம் அப்படி. சொர்க்கம் 4 காட்சிகள். எங்கிருந்தோ வந்தாள் 5 காட்சிகள்.காலை 9 மணி அல்லது பகல் 12 மணி காட்சி EV பார்த்து விட்டு மாலை இங்கே வந்து விட்டார்கள்] அவர்கள் சொல்ல சொல்ல எதிர்பார்ப்பு எகிறியது. இங்கே படம் ஆரம்பிக்க டைட்டிலுக்கு முன்பே முதல் காட்சி. அதில் நடிகர் திலகம் தோன்ற தியேட்டரில் ரணகளம். பொன்மகள் வந்தாள் பாட்டு ஸினெல்லாம் பார்க்கவே முடியவில்லை. சீட் மேல் ஏறிக்கொண்டு டான்ஸ். ஒவ்வொரு ஸ்டைலுக்கும் அலப்பறை. ஒரு முத்தாரத்தில் பாடலில் வரும் நடைக்கும், "நீலவானம் மெல்ல மெல்ல சிவந்து போனதேன்" வரிகளில் கண்கள் சிவந்த நடிகர் திலகத்தின் க்ளோஸ் அப் ஷாட்க்கும் செம கிளாப்ஸ். நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் இடம் பெற்ற மிக சிறந்த சண்டை காட்சிகளில் ஒன்று சொர்க்கம் படத்தில் வந்த ஓடும் ரயிலில் நடக்கும் சண்டை. அந்த நேரத்தில் தியேட்டரே இரண்டு பட்டது. [சில பல உணர்ச்சிவசமான முழக்கங்கள்].ஜூலியஸ் சீஸர் காட்சிக்கு பெரிய அலப்பறை. குறிப்பாக கத்திகுத்து வாங்கி இறக்கும் சீன். சொல்லாதே யாரும் கேட்டால் பாடல் காட்சிக்கு [அதிலும் சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும் என்ற வரிகளுக்கு] அது போல குடித்து விட்டு வந்து மாடிப்படியில் உட்கார்ந்து கே.ஆர்.விஜயாவிடம் போதையில் பேசும் காட்சியும் பயங்கர கைதட்டலை பெற்ற காட்சிகளாகும்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். படம் முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக வெளியே வந்தோம்.

அடுத்த மூன்று நாட்களில் ஞாயிறன்று மாட்னி எங்கிருந்தோ வந்தாள் பார்த்தேன். எங்கிருந்தோ வந்தாள் படத்தைப் பற்றி சொல்லும்போது மதுரையில் நடிகர் திலகம் நிகழ்த்திய ஒரு unique சாதனையின் ஆரம்ப புள்ளி எங்கிருந்தோ வந்தாள். மதுரை ஸ்ரீதேவியில் தொடர்ந்து 443 நாட்கள் நடிகர் திலகத்தின் படங்கள் மட்டுமே திரையிடப்பட சாதனையை பற்றி பேசியிருக்கிறோம். அது ஆரம்பித்த நாள் 1970 அக்டோபர் 29 அன்று. அன்று தொடங்கிய வெற்றி பயணம் தங்கைக்காக குலமா குணமா சவாலே சமாளி பாபு என்று தொடர்ந்து 1972 ஜனவரி 14 அன்று நிறைவு பெற்றது.

அன்புடன்

pammalar
30th October 2011, 02:15 AM
டியர் முரளி சார்,

தங்களின் பாராட்டுப்பதிவுக்கு மனமார்ந்த நன்றி ! "பாபு" அனுபவப்பதிவு தேன் !

டியர் ராகவேந்திரன் சார்,

மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th October 2011, 02:26 AM
டியர் முரளி சார்,

"சொர்க்கம்", "எங்கிருந்தோ வந்தாள்" நினைவலைகள் அக்காவியங்களைப் போலவே டாப் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th October 2011, 02:41 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

அவள் யார்

[30.10.1959 - 30.10.2011] : 53வது ஆரம்பதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷம்

காவியத்தின் கதைச் சுருக்கம் : ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்திலிருந்து
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4902.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4903.jpg

[என்னிடம் உள்ள இக்காவியத்தின் ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தினுடைய பிரதியில் அட்டைமுகப்பும், அதன் உட்புறமும் விடுபட்டிருப்பதால் அவற்றை இங்கே பதிவிட இயலவில்லை. அவை கிடைத்தவுடன் அவசியம் பதிவு செய்கிறேன்.]

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th October 2011, 02:47 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

அவள் யார்

[30.10.1959 - 30.10.2011] : 53வது ஆரம்பதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

அட்டைப்படம் : பேசும் படம் : அக்டோபர் 1959
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4885-1.jpg


சிறப்பு நிழற்படம் : பேசும் படம் : அக்டோபர் 1959
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4886-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th October 2011, 03:17 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

அவள் யார்

[30.10.1959 - 30.10.2011] : 53வது ஆரம்பதினம்

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தென்னகம் : 6.11.1959
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4879-1.jpg


விமர்சனம் : ஆனந்த விகடன் : 22.11.1959
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4880-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4881-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th October 2011, 03:37 AM
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

பைலட் பிரேம்நாத்

[30.10.1978 - 30.10.2011] : 34வது ஜெயந்தி

பொக்கிஷப் புதையல்

காவிய விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4904-1.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

sankara1970
30th October 2011, 11:01 AM
Mr Gopal
u are lucky(in meeting our God) and we feel proud of u.
Yes u r right, me too a fan of NT after watching Paasamalar at the age of 6 with my uncle, a hardcore NT fan, in Tirunelveli
But in front of Murali, Pammalar, Saratha madam,Vasudevan, Ragavendra, I am too small.
Their memory and recordkeeping are excellent.

mr_karthik
30th October 2011, 01:01 PM
அன்புள்ள முரளி சார்,

தங்களின் 'பாபு', 'சொர்க்கம்', 'எங்கிருந்தோ வந்தாள்' திரையரங்க அனுபவங்கள் முக்கனியாய் இனித்தன. இந்த இனிமையான அனுபவங்களை நாங்கள் அனுபவிக்கவே முன்போல அடிக்கடி நீங்கள் வர விரும்புகிறோம். இருப்பினும் தற்போதைய கூடுதல் வேலைப்பளுவுக்கிடையில் தங்களின் அனுபவங்களைப்பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சி.

பாபு திரைப்பட (சென்னை கிரௌன்) அனுபவங்களை எழுதும்போதே, தாங்கள் அது சம்மந்தமான மதுரை நிகழ்வுகளோடு வருவீர்கள் என்று எதிர்பார்த்தோம். தாமதமாக வந்தாலும் தாராளமாக அள்ளித்தந்து விட்டீர்கள். மதுரை ஸ்ரீ தேவி தியேட்டர் தொடர் சாதனை பற்றி, 'நடிகர்திலகத்தின் சாதனைச்சிகரங்கள்' தொடரில் நீங்கள் எழுதியிருந்தது பசுமையாக பதிந்திருக்கிறது. அது தனித்திரியாக இருப்பதால், இப்போதும் அங்கே அடிக்கடி சென்று தரிசித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

அங்கே நீங்கள் எழுதியிருக்கும் சாதனைகளின் ஆதார வடிவம்தான் இங்கே நமது பம்மலார் அவர்கள் பதிப்பித்துக்கொண்டிருக்கும் ஆவணக்களஞ்சியங்கள் எனும் ஆதாரத்தொகுப்புகள். வம்பும் வல்லடியும் பேசிக்கொண்டிருந்தவர்களை இப்போது காணோம். நடிகர்திலகத்தின் ரசிகர்கள் சும்மாவே வெறும் கையாலேயே சாத்துவார்கள். போதாக்குறைக்கு இப்போது ஆதாரச்செப்பேடுகள் என்னும் உருட்டுக்கட்டைகளை வேறு பம்மலார் கொடுத்து விட்டார். அப்புறம் என்ன?.

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள நடிகர்திலக ரசிகர்கள் ஒன்றாதல் கண்டே.

mr_karthik
30th October 2011, 02:42 PM
அன்புள்ள பம்மலார் சார்,

உண்மையில் நான் நினைத்தது வேறு, இங்கு நடந்துகொண்டிருப்பது வேறு. அக்டோபரில் நமது நடிகர்திலகத்தின் ஏராளமான படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் பல வெற்றிப்படங்கள் உள்ளன. அவைகளுக்கு மத்தியில், 'அவள் யார்' போன்ற அவ்வளவு பிரபலமாகாத படங்கள் அவ்வளவாக கண்டுகொள்ளப்படாமல் விடுபடப்போகின்றன, மிஞ்சிப்போனால் ஏதாவது ஒன்றிரண்டு ஆவணங்கள் இடம்பெறலாம் என்று நினைத்திருந்தால்....

'எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளைத் தந்து திக்குமுக்காடச் செய்பவர்தான் பம்மலார் ஆகிய நான், என்னை உங்களால் எல்லாம் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது' என்று கூறும் வண்ணம், 'அவள் யார்' படத்தின் ஆவணங்களை அள்ளித்தந்து அதிசயிக்க வைத்து விட்டீர்கள். அது மட்டுமல்ல, 'என்னைப்பொறுத்தவரை நடிகர்திலகத்தின் படங்கள் என்றால், அவை வெற்றிப்படமாக இருந்தாலும், சுமாரான படமாக இருந்தாலும் ஒரே நிலையில் வைத்தே எண்ணுவேன். சொல்லப்போனால் வெற்றிப்படங்களைவிட ஒரு படி மேலே போய் ஆவணங்களை அள்ளி வீசுவேன்' என்று நிரூபிக்கும் வண்ணம்....

அவள் யார் படத்தின் விளம்பரம் என்ன.....
பாட்டுப்புத்தகத்தில் வந்த கதைச்சுருக்கம் என்ன.....
பேசும் படம் அட்டைப்படம் என்ன......
அவ்விதழில் வந்த காவியக்காட்சிகளின் ஏராளமான பக்கங்கள் என்ன.....
அப்படத்தின் உருவாக்கம் பற்றி அதன் இயக்குனர் கே.ஜே.மகாதேவன் அவர்களின் அனுபவங்கள், கூடவே இடம்பெற்ற ஸ்டில்கள் என்ன....
அவள் யார் படத்துக்கான ஆனந்த விகடன் விமர்சனம் என்ன....

ஸ்..ஸ்..ஸ்ஸபா, பட்டியல் போடவே மூச்சு வாங்குகிறதே, இவற்றைச்சேகரிக்கவும் அவற்றை இங்கே பதிக்கவும் எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள். நினைக்கும்போதே மலைப்பு ஏற்படுகிறதே. ஏனென்றால் இவையனைத்து 53 ஆண்டுகளுக்கு முந்தைய ரெக்கார்டுகள். பேசும் படம் அலுவலகத்தில் இருப்பதே சந்தேகம்.

'பம்மலார் அளிக்கும் ஆதாரங்களுக்கு அவரைப்பாராட்டுவதென்றால், பாராட்டும் வேலையொன்றையே பார்க்க முடியும். அதற்கே நேரம் போதாது' என்று முரளி சார் சொல்லியிருந்தார். உண்மைதான். என்றாலும், சாதாரண சாப்பாடு போடுபவர்களுக்கே நன்றி தெரிவிக்கும் நமக்கு, பதினாறு வகை உணவு படைத்தவருக்கு, படைத்துக்கொண்டிருப்பவருக்கு நன்றியும் பாராட்டும் சொல்லாமல் இருக்க முடியுமா?.

'அவள் யார்' என்ற படம் பாகப்பிரிவினைக்கு முதல்நாள் வெளியான நடிகர்திலகத்தின் படம் என்ற அளவில் மட்டுமே தெரிந்து வைத்திருந்த பலருக்கு, அப்படம் இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்தது என்பதை உணர்த்தி, பாகப்பிரிவினை எனும் சுனாமியில் சிக்காமல் தனித்து வந்திருந்தால் நல்லதொரு வெற்றியைப்பெற்றிருக்க வேண்டிய தகுதியுடைய படம் என்பதை உலகுக்கு உணர்த்திய உங்களுக்கு அளப்பரிய பாராட்டுக்களும் நன்றிகளும்.