PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 9



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

pammalar
13th November 2011, 02:08 AM
Dear Mr.P_R,

Thanks for your compliments !

As pointed out by You & Mr.Rakesh, I also strongly feel that the Hollywood Actor mentioned by NT in the interview was James Francis Cagney and its upto Raghavendran Sir to give it a confirmation.

Whenever he found time & permission during his hectic stage(only) schedule from 1935 to 1950, NT watched a good number of Hollywood Movies and these films were a source of inspiration for his stupendous stage career & performance. This info. has been disclosed by him in many interviews.

In fact, Our NT was a frequent visitor with his family to Chennai Casino Theatre in order to view Friday Hollywood releases during late 1960s & 1970s. [At that point of time he was so busy - highly hectic schedule in filmdom, stage & politics].

நமது சிவாஜி அவர்கள் நடிப்பில் மட்டும் திலகம் அல்ல, சிறந்த ரசிப்பிலும் திலகம்தான் !

குறிப்பு:
பற்பல உலகப்பெரு நடிகர்களின் நடிப்பையும் ரசித்து விட்டு, அவர்கள் அனைவரையும் மிஞ்சும் வண்ணம் தன் நடிப்பில் செய்து காட்டுகிறார் பாருங்கள், அதுதான் நமது நடிகர் திலகத்தின் தனிச்சிறப்பு.

Warm Wishes & Regards,
Pammalar.

vasudevan31355
13th November 2011, 05:50 AM
நம் மய்யத்திற்கு மையமாய் இருந்து செயல்பட்டு பழுதுகளை நீக்கி அருஞ்சேவை புரிந்த நமது மாடரேட்டர்கள் Mr.RR, Mr.NOV மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th November 2011, 06:04 AM
டியர் selva7 சார்,
தங்கள் பாராட்டுக்கு எனது பணிவான நன்றிகள்.

அன்பு பம்மலார் சார்,

தங்களின் உயரிய பாராட்டுக்கு மனம் கனிந்த நன்றி.

நமது ஹப்பின் பழுதுகள் வெற்றிகரமாக சரிசெய்யப்பட்ட உடனேயே வழக்கம் போல தங்களது அசுரப் பதிவுகளைத் தரத் தொடங்கி விட்டீர்கள். தங்களது சுறுசுறுப்பான பணிக்கு மனமுவந்த பாராட்டுதல்கள். 'கப்பலோட்டிய தமிழன்' ஹிந்து முதல் வெளியீட்டு சாதனை விளம்பரம் அப்படம் ஒன்றும் பெரிய தோல்விப் படைப்பல்ல என்று மனதை தென்றலாய் வருடும் மயிலிறகு. அற்புத ஆவணத்திற்கு நன்றி.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th November 2011, 06:26 AM
"சிவந்த மண்" (1969) 43-ஆம் ஆண்டு சிறப்புக் கொண்டாட்டங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-27508.png?t=1320729318

பார் போற்றும் எங்கள் அருமை 'பாரத்'.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000551685.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000578112.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_000589723.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-33148.png?t=1320729444

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SivanthaMann-Uyirvanicomavi3694623045558672945part_000889923.jp g?t=1321145657

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th November 2011, 06:30 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001334153.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_1VOB_001355708.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000236282.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000633537.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000650149.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th November 2011, 06:47 AM
சரித்திர நாயகனின் சரித்திரம் படைத்த அற்புத 'போஸ்'கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000778782.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000783220.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000785722.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000789192.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_2VOB_000790761.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th November 2011, 06:51 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_004912805.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_011619852.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_040975998.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_075957384.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_3VOB_084548997.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th November 2011, 06:56 AM
காளை அடக்கும் போட்டியைக் கண்டு மகிழும் 'கண்ணியவான்'.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000177001.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000185977.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000204062.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000230121.jpg

நடிகர் திலகமும், காஞ்சனாவும் அமர்ந்திருக்கும் ஸ்டில்லில் கீழே சிவந்த மண்ணின் ஹிந்திப் பதிப்பான "தர்த்தி"யின் ஹீரோ திரு.ராஜேந்திரகுமாரும், ஹீரோயின் வஹீதா ரஹ்மானும் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th November 2011, 07:11 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_000309701.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_001282687.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_001853614.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_4VOB_002044810.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-57604.png?t=1320729141

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_5VOB_000820541.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_01_5VOB_000849962.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

sakaLAKALAKAlaa Vallavar
13th November 2011, 07:17 AM
A photo during Devar Magan shoot

http://images.orkut.com/orkut/photos/PQAAACL6LSsGds4JV-UvLyCnKedCyWkiNXzqlYxhkKpc5RVldkuQWB0sbX0CtH0q-T6b90aTOic0PGZlbZryPqd00e4Am1T1UJKKTOpreNlLrD4PAfI Y_bYNrJ2A.jpg

And thanks for that Nammavar interviewing Nadigar Thilagam. That very rare occasion brings both the state of mind of NT and also the keen interest of Nammavar, to know about an actor's life from his own words. He is very interested and uses this chance very well. That is evident from his choice of questions itself.

vasudevan31355
13th November 2011, 07:27 AM
டியர் sakaLAKALAKAlaa Vallavar,

கலைக்குரிசிலும், கலைஞானியும் நிற்கும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் சூப்பர். அளித்தமைக்கு நன்றி.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th November 2011, 07:40 AM
"சிவந்த மண்" சிறப்பு நிழற்படங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-49681-1.png?t=1321149775

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-49141.png?t=1320729608

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-56444.png?t=1320729521

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-52122-1.png?t=1321151132

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-44225-1.png?t=1321150926

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-57263-1.png?t=1321149919

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th November 2011, 08:11 AM
"சிவந்த மண்"ணின் சிருங்காரப் பாடல்கள் வீடியோவாக.

ஒரு ராஜா ராணியிடம்...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=u8V8ON2BbGY

பார்வை யுவராணி கண்ணோவியம்...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZlQTqGECxbQ

"பட்டத்து ராணி" L.R.ஈஸ்வரி அவர்களுக்கு என்றும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

http://cdn2.supergoodmovies.com/FilesTwo/playback-singer-lr-eswari-felicitated-event-5efed4c2.jpg

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lT262qfbjPk

ஒரு நாளிலே... என்னவாம்?...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BDXkcZPePMw


முத்தமிடும் நேரமெப்போ?..


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iitIRrjhK-4

சொல்லவோ... சுகமான கதை சொல்லவோ...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FnuAccOr0O4

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th November 2011, 09:47 AM
"சிவந்த மண்" ஆர்ட் வடிவில் நடிகர்திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3277674335_bb341231fa_b.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th November 2011, 10:41 AM
கள்வனின் காதலி(1955) 57- ஆம் ஆண்டு துவக்கத் திருநாள்.

http://www.hindu.com/mp/2008/11/22/images/2008112253140701.jpg

http://4.bp.blogspot.com/_2I2hYF2DQtI/TGwSukw2Y5I/AAAAAAAAB98/tjFeiCyzjZY/s1600/Kalvanin+Kathali_Pesalila_tamilhitsongs.blogspot.c om.VOB_thumbs_%5B2010.08.18_22.34.21%5D.jpg

"வெய்யிற்கேற்ற நிழலுண்டு"...கண்டசாலா மற்றும் பானுமதி ஆகியோரின் அற்புத மயக்கும் குரல்களில்...(வீடியோ வடிவில் பாடற் காட்சி.)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZofSrcpiXgU


"மனதில் உறுதி வேண்டும்"... T.M.S.மற்றும் பானுமதி ஆகியோரின் அற்புதக் குரல்களில்.(வீடியோ வடிவில் பாடற் காட்சி.)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OCv-5XuuXaM

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th November 2011, 11:16 AM
"கோடீஸ்வரன்"(13.11.1955) 57-ஆம் ஆண்டு துவக்கத் திருநாள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/KOTI02DAT_000635309.jpg?t=1321162637

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/KOTI02DAT_000568390.jpg?t=1321162752

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1avi_000759793.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/KOTI02DAT_003167386.jpg?t=1321162853


"கோடீஸ்வரன்" திரைப் படத்தில் நடிகர் திலகம் அவர்களும், நடிகர் ஸ்ரீராம் அவர்களும் பங்கு பெற்ற அற்புதக் காட்சி. (கீழ்க் கண்ட"கோடீஸ்வரன்" வீடியோக் காட்சிகளைத் தரவேற்றிய அன்பு 'ரசிகவேந்தர்' திரு.ராகவேந்திரன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cXtgQe5SGwM

நடிகர் திலகம் அவர்களும், நடிகர் தங்கவேலு அவர்களும் பங்கு பெற்ற நகைச்சுவைக் காட்சி.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KPN_XlUinVI

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th November 2011, 01:05 PM
"அன்பைத் தேடி"(1974) 38- ஆவது ஜெயந்தி.

http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/173.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000546795.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_000353344.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_001566538.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_2VOB_001711659.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_001912585.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_000957611.jpg


"சித்திர மண்டபத்தில்"....பாடல் வீடியோ வடிவில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ig46cl5coVo

"புத்தி கெட்ட பொண்ணு ஒண்ணு"....பாடல் வீடியோ வடிவில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qsmT8a4oqoU

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
13th November 2011, 01:29 PM
"பாரம்பரியம்" (1993)19-ஆம் ஆண்டு ஆரம்பம்.

http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/281.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000484590.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_000856935.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_1VOB_002074728.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_3VOB_002457486.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_02_4VOB_045981302.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

saradhaa_sn
13th November 2011, 05:03 PM
'சிவந்த மண்' நினைவுகள்.......

காவியப்படமான 'சிவந்த மண்' பற்றி நான் எற்கெனவே எழுதிய பதிவின் மீள்பதிவு இது. பலர் படித்திருக்கக்கூடும். சிலர் படிக்காதிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் மீள்பதிவு செய்திருக்கிறேன். ஏற்கெனவே பதித்ததன் 'லிங்க்' பக்கம் தெரியாததால், முழுப்பதிவையும் (சிவந்த மண் வெளியீட்டு நாளை முன்னிட்டு) இங்கு தந்துள்ளேன்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு மேற்கொண்ட நாள் முதலே, மக்கள் மத்தியில், குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் 'சிவந்த மண்' பற்றிய எதிர்பார்ப்பு வளர்ந்து வந்தது. போதாக் குறைக்கு, ஆனந்த விகடன் பத்திரிகையில் நடிகர்திலகம், தான் பங்கேற்ற வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றி 'அந்நிய மண்ணில் சிவந்த மண்' என்ற தலைப்பில் எழுதிவந்த தொடர் கட்டுரையும் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தது. தன்னுடைய ஒரு சாதாரண படத்தையே அனுபவித்துப் படமாக்கும் இயல்பு கொண்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர், சிவந்தமண்ணை அணு, அணுவாக செதுக்கிக் கொண்டிருந்தார்.

ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் "சிவந்த மண்" படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கும். அதற்கு அருமையான ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் camera angles செட் செய்த இயக்குனர் sreedhar க்கு பாராட்டுக்கள். சிவந்த மண் என்றதும் பெரும்பாலோர் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளையே சொல்வார்கள்

சொல்லப்போனால் வெளிநாட்டுக்காட்சிகளை விட உள்நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கும். லைட் எஃபெக்டுகள் எல்லாம் அற்புதமாக அமைந்திருக்கும்.

உதாரணத்துக்கு சில:

1) நாகேஷ் - சச்சு நடத்தும் மதுபானக்கடையின் (பார்) அரங்க அமைப்பும், லைட்டிங்கும் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக அமைந்திருக்கும்.

2) கிளிமாக்ஸ் காட்சியில் ராணுவ ஜீப்கள் அனிவகுத்து வேகமாகப் பறந்து செல்லும் காட்சியமைப்பில் ஒளிப்பதிவு சூப்பர்.

3) எலிகாப்டர் காட்சியிலும், ஒளிப்பதிவாளரின் பங்கு அருமை. இயக்குனரும் கூட. குறிப்பாக, புரட்சிக்காரர்கள் ஓடி வந்து திடீரென்று தரையில் படுத்துக்கொள்ள அவர்களை ஒட்டியே குண்டுகள் வந்து விழும்போது, நம் ரத்தம் உறைந்து போகும். அதுபோல சிவாஜி ஓடிவந்து பள்ளத்தில் குதிக்க, அவர் தலையை உரசுவது செல்லும் எலிகாப்டர். இவற்றில் டைமிங் அருமையாக கையாளப்பட்டிருக்கும்.

4) கப்பலில் வெடிகுண்டு வைக்க புரட்சிக்காரர்கள் செல்லும்போது, கையாளப்பட்டிருக்கும் நைட் எஃபெக்ட் லைட்டிங்கும், கயிறு வழியாக சிவாஜி ஏறுவதை, கப்பலின் மேலிருந்து காட்டும் சூப்பர் ஆங்கிளும். அதே நேரம், கப்பலின் உள்ளே நடக்கும் ராதிகாவின் நடனமும், அதற்கு மெல்லிசை மாமன்னரின் இசை வெள்ளமும்.

5) ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு வைக்க சிவாஜி போவதை, கீழேயிருந்து படம் பிடித்திருக்கும் அற்புதக்கோணம், அப்போது சிவாஜியின் கால் சற்று சறுக்கும்போது நம் இதயமே சிலிர்க்கும்.

6) ஒளிந்து வாழும் சிவாஜி, தன் அம்மாவைப்பார்க்க இரவில் வரும்போது, மாளிகையைச்சுற்றி அமைக்கப்பட்டிகும் நைட் எஃபெக்ட் லைட்டிங்.

7) நம்பியாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட சிவாஜி, ஜெயில் அதிகாரியை பிணையாக வைத்துக்கொண்டு, அத்தனை துப்பாக்கிகளையும் தன் வசப்படுத்தியதோடு, தன் கைவிலங்கை துப்பாக்கி குண்டால் உடைத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சி.

8) வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட, சுழன்று சுழன்று தண்ணீர் ஓடும் ஆறு. அதை இரவு வேளையில் காண்பிக்கும் அழகு.

9) அரண்மனை முன்னால் போராட்டம் நடத்த வந்த கூட்டத்தினரை, துப்பாக்கி ஏந்திய குதிரை வீரர்கள் விரட்டியடிக்க மக்கள் சிதறி ஓடும் காட்சி.

10) எகிப்திய நாட்டிய நாடகம நடத்தும் முன், தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தில், அந்த நாட்டியத்துக்கான மேடை அமைப்பை ஒத்திகை பார்ப்பார் பாருங்க... என்ன ஒரு யதார்த்தம். (நம்ம வி.ஐ.பி.ங்க, டி.வி.ஷோவுல இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் 'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...')

11) ஜூரிச் விமான நிலையத்தில், காஞ்சனாதான் இளவரசி என்று தெரிந்துகொள்ளும்போது காட்டும் அதிர்ச்சி.

12) விமான விபத்தில் தப்பிப்பிழைத்து, தன் வீட்டுக்குக்கூட நேராகப்போகாமல் நண்பனைச்சந்திக்கும்போது அடையும் ஆனந்தத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. (இப்படம் முத்துராமனின் கிரீடத்தில் ஒரு வைரம்).

13) செத்துப்போய்விட்டதாக நினைத்து மகனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தாய் தந்தை முன் தோன்றி, அவர்களை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தருணம். அந்த இடத்தில் நடிகர்திலகம் நடிக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா?. நிஜமாகவே உயிர் தப்பிவந்த ஒருவரைப்போல எத்தனை உணர்வுகள் கலந்த வெளிப்பாடு. அதற்கு முற்றிலும் ஈடு கொடுத்து சாந்தகுமாரி, மற்றும் ரங்காராவிடம் இருந்து வெளிப்படும் அபார நடிப்புத்திறன்.

14) போராட்டத்தில் பலியான நண்பனையும், அந்த அதிர்ச்சியில் இறந்த அவன் தாயையும் மயானத்தில் எரித்து விட்டு, ரத்தக்கறையுடன் ஆக்ரோஷமாக தன் மாளிகையில் நுழைந்து, தன் தாயுடனும் அந்நேரம் அங்கு வரும் சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியான தந்தையுடனும் பேசும்போது காட்டும் ஆக்ரோஷம், இறுதியில் அடிக்கும் அந்த அட்டகாசமான சல்யூட் (இந்தக்காட்சிக்கு பெரிய பெருமை.... மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்கூட பலமாகக் கைதட்டிவிட்டு சொன்ன வார்த்தை 'இதுக்கெல்லாம் கணேசன்தான்யா'). வீராவேசத்திடன் செல்லும் மகனைப்பார்த்து, புன்னகைத்துக்கொண்டே ரங்காராவ் சொல்லும் பதில் "உன் மகன் முட்டாள் இல்லை, புத்திசாலி".

இக்காட்சிக்குத்தேவையான அவரது பாடி லாங்குவேஜ். குறிப்பாக கீழ்க்கண்ட வசனங்களின்போது....

"....... அதற்கு உங்கள் ஆட்சி கொடுத்த பரிசு உயிர்ப்பலி, ரத்தம்" இந்த இடத்தில் அவரது கையசைவு.

"......... திவானைக் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும். அல்லது அந்தப்பதவியையும் அதற்கான உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு" (இந்த இடத்தில் அவர் கையசைவு) "திவானுக்கு எதிராக புரட்சிக்குரல் எழுப்ப வேண்டும்".

"பாராட்டு... வெறும் வார்த்தையில் இருந்தால் போதாது. செயலிலே காட்ட வேண்டும்" (இந்த இடத்தில் அவரது அந்த நாட்டிய முத்திரை).

"ஒரு தேச விரோதிக்கு உங்கள் சட்டம் பாதுகாப்பு தருகிறதென்றால், அந்தச்சட்டத்தை உடைத்தெறியவும் தயங்க மாட்டோம்" (இந்த இடத்தில் கையை உயர்த்தி இரண்டு சொடக்குப்போடுவார்)

"இல்லையம்மா... நான் இந்த சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்" (இந்தக் கட்டத்தில் அவர் கண்களில் தெரியும் தீர்க்கம்)

இறுதியாக தியேட்டரையே அதிர வைக்கும் அந்த சல்யூட்.

இன்றைக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இருக்கும் உணர்ச்சிமயமான சூழ்நிலையில், சிவந்த மண் திரையங்குகளில் திரையிடப்பட்டால், ரசிகர்களின் அலப்பறையில் மேற்சொன்ன காட்சியில் ஒரு வசனம் கூட கேட்க முடியாது என்பது திண்ணம். (அதற்கென்று தனியாக இன்னொரு நாள் பார்க்க வேண்டியிருக்கும்). அந்த அளவுக்கு இந்தக்காட்சியில் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டலும் விசிலும் பறக்கும்.

15) எலிகாப்டரை சுட்டு வீழ்த்திவிட்டு, அந்த மலையுச்சியில் நின்று நண்பர்களுக்கு எழுச்சிமிக்க 'அன்று சிந்திய ரத்தம்' பேருரை ஆற்றும்போது, முகத்தில் தோன்றும் ரௌத்ரம். (இதெல்லாம் வேறு யாராவது செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?).

16) தான் வீட்டுக்கு வந்திருப்பது திவான் நம்பியாருக்குத் தெரிந்துபோய், தன்னைக்கைது செய்யும் இக்கட்டான நிலையில் தந்தையைத் தள்ள, கணவரின் பெருமைகாக்க தன் தாயைக்கொண்டே தன்னைக்கைது செய்ய வைக்கும்போது காட்டும் கண்டிப்பு கலந்த பெருமிதம்.

17) ரயிலுக்கு குண்டுவைக்கும் முயற்சியை தன் மனைவியே செயலிக்கச் செய்துவிட்டாள் என்று தெரியும்போது முகத்தில் எழும் ஆதங்கம், அதை தன் சக புரட்சிக்காரர்களுக்குச் சொல்லும்போது முகத்தில் தோன்றும் ஏமாற்றம் கலந்த இயலாமை. (சில வினாடிகளுக்குள் எத்தனை உணர்ச்சிகள்தான் அந்த முகத்தில் தோன்றி மறையும்..!!!!).

'பாரத்'துக்கும் வசந்தி (என்கிற சித்திரலேகா) வுக்கும். எதிர்பாராவண்னம் திருமணம் நடந்துவிடும் அந்தச்சூழல் மிகவும் சுவையானது. ராணுவத்தின் துரத்தலுக்குத் தப்பி, ஒரு திருமண வீட்டில் தஞ்சம் புக, தேசப்பற்று மிக்க அம்மக்களால் நடிகர்திலகமும் காஞ்சனாவுமே திருமண தம்பதிகளாய் மாற்றப்பட,
மந்திரம் தெரியாமல் தடுமாறும் ஐயர் நாகேஷ்,
கண்ணடித்தவாறே டிரம்ப்பட் வாசிக்கும் (இயக்குனர்) விஜயன்,
ஸ்டைலாக தலையாட்டிக்கொண்டே பேண்ட் டிரம் வாசிக்கும் மாலி,
என அந்த சூழலே களை கட்டுகிறது.

('ஜெனரல் பிரதாப்' ஆக வருபவர், எம்.எஸ்.வி.யின் உதவியாளர் ஹென்றி டேனியலா...?)

இன்றைக்கு ஐந்து இயக்குனர்களை ஒரு படத்தில் நடிக்க வைத்திருப்பதாக பெருமைப்படும் முன், அன்றைக்கே மூன்று இயக்குனர்களை (ஜாவர் சீதாராமன், விஜயன், தாதாமிராஸி) தனது சிவந்த மண்ணில் நடிக்க வைத்த பெருமை ஸ்ரீதருக்கே. (இயக்குனர்கள் எல்லாம் படங்களில் தலைகாட்டாத காலம் அது).

எடுத்தவரை யில் அவ்வப்போது போட்டுப் பார்க்கும்போதெல்லாம் படம் அவருக்கு திருப்தி யளிக்கவே, படம் தயாராகும்போதே ஒரு முடிவு செய்தார். தன்னுடைய படத்தை தமிழ்நாடு முழுதும், அந்தந்த ஊர்களில் சிறந்த தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. இது விஷயமாக அவ்வப்போது விநியோகஸ்தர்களிடம் கலந்து பேச, அவர்களும் அந்தந்த ஏரியாக்களில் நல்ல தியேட்டர்களாக புக் செய்து வைக்க, படம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஏற்கெனவே புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் கைமாறிப் போய்க்கொண்டிருந்தன.

1969 மே மாதத்திலேயே வெளியிடுவதாக ஏற்பாடு செய்திருந்த படம், நினைத்த வேகத்தில் முடியாததால், பின்னர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியும் முடியவில்லை. முரளி அவர்கள் சொன்னது போல, வாகினி ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த ஆற்று வெள்ளம் செட் உடைந்து, வடபழனி கடைகளுக்கெல்லாம் தண்ணீர் புகுந்த சம்பவமும் ஒரு காரணம். (முதலில் ஏன் மே மாதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் அன்றைய ரசிகர்களுக்கு தெரியும். 'அவரது' சொந்தப்படத்தை தன் படத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணம். 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தலைப்பைச்சொன்னால் போதும். அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். புரியாதவர்கள் விட்டுவிடுங்கள்). இறுதியாக 1969 தீபாவளி வெளியீடு என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதற்கேறாற்போல தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன.

சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் 'குளோப்' தியேட்டர் என்பது கடைசி நேரத்தில் முடிவானதுதான். இப்போது இருக்கும் அதிநவீன தியேட்டர்கள் எல்லாம் அப்போது கிடையாது. தேவி காம்ப்ளக்ஸ், சத்யம் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கூட அப்போது இல்லை. இருந்தவற்றில் சிறந்தவைகளாக (சித்ராலயாவின் கோட்டையான) காஸினோ, சாந்தி, ஆனந்த், சஃபையர் காம்ப்ளெக்ஸ் இவைகள்தான். இதில் சாந்தியில் தெய்வமகன், மிடலண்ட்டில் நிறைகுடம் ஓடிக்கொண்டிருந்தன. காஸினோவில் வேறு படம் புக் ஆகிவிட்டது. ஆகவே ஸ்ரீதர் குறி வைத்தது ஆனந்த் தியேட்டரைத்தான். கடைசி நேரத்தில் அது மிஸ்ஸாகிப்போக, வேறு வழியின்றி குளோப் அரங்கை புக் செய்தனர்.

அதே சமயம், வட சென்னையில் அப்போதைக்கு மிகச்சிறந்த தியேட்டராக விளங்கிய 'அகஸ்தியா'வையும், மூன்றாவது ஏரியாவான புரசைவாக்கம் பகுதியில் அப்போதைக்கு சிறந்த தியேட்டராக இருந்த 'மேகலா'வையும் சைதாப்பேட்டையில் 'நூர்ஜகான்' தியேட்டரையும் புக் செய்தனர்.

குறிப்பாக மேகலா தியேட்டரில் படம் வெளியாகப்போகிறது என்றதும் ரசிகர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. காரணம், அந்த ஏரியாவில் 'புவனேஸ்வரி' நடிகர்திலகத்தின் கோட்டையாகத்திகழ்ந்ததுபோல, மேகலா, திரு எம்.ஜி.ஆரின் கோட்டையாகத்திகழ்ந்தது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல, அந்த தியேட்டரில் 100 நாட்களைக்கடந்த படங்களின் பட்டியலை ஒரு ப்ளாஸ்டிக் போர்டில் அழகுறப் பதித்து வைத்திருந்தனர். அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான். நடிகர்திலகத்தின் நல்ல படங்களெல்லாம் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனில் வரும்போது, புவனேஸ்வரிக்குப் போய்விட்டதால் (அல்லது அதைவிட்டால் ராக்ஸி) 'சிவந்த மண்' மூலம் எப்படியும் எதிரியின் கோட்டையில் கொடியேற்றி அந்த போர்டில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் தணியாத தாகமாக இருந்தது.

அதிலும் நடிகர்திலகத்தின் கோட்டையான புவனேஸ்வரியில் 'குடியிருந்த கோயில்' 100 நாட்கள் ஓடியதிலிருந்து, அண்ணனுக்கு ஒரு படமாவது மேகலாவில் 100 நாட்களைக் கடந்து ஓடியாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்து, சென்னையில் 100 நாட்களைக்கடந்த நான்கு அரங்குகளில் ஒன்றாக மேகலாவில் 'சிவந்த மண்' 100 நாட்களைக்கடந்து ஓடி, வெற்றிகரமாக அந்த போர்டில் இடம்பெற்றது. மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும்.

rangan_08
13th November 2011, 07:40 PM
Good interview.
I wish there was more discussion about films - the films Sivaji liked, particular roles he acted in etc. Instead there was a dispropotionate discussion about politics. I guess given the time of interview they were topical.

Sivaji mentions one ஜேம்ஸ் கலோனி? Who is this? Groucho/RAGHAVENDRA?
Is that a misprint of James Cagney?

Should be James Cagney. I remember reading somewhere about NT quoting one of his favourite scene from the film " The Public Enemy" where James smashes a grapefruit on his girl friend's face. NT said he took it as an inspiration and did a brilliant performance in "Annayin Aanai " ....the scene where Savithri rips NT's vest.

rangan_08
13th November 2011, 07:52 PM
Saw " Neela Vaanam " & " Kulama Gunama ".

The scene where NT plays the role of ticket checker in Shanthi theatre (Neela vaanam) was good fun.

pammalar
13th November 2011, 10:05 PM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

கப்பலோட்டிய தமிழன்

[7.11.1961 - 7.11.2011] : பொன்விழா நிறைவு : 51வது ஜெயந்தி

பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

காவிய விமர்சனம் : கலை : 1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4997-1.jpg


காவிய விமர்சனம் : தென்றல் : 11.11.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4998-1.jpg

வருவார்...

பக்தியுடன்,
பம்மலார்.

abhi_d
13th November 2011, 10:19 PM
Yesterday I saw Pudhiya Paravai on Jaya Movies. What a excellent performance by LEGEND. His style, mannerism, dialogue delivery, etc was superb. Even the way he smoked I liked it. Great.

pammalar
14th November 2011, 01:29 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

கப்பலோட்டிய தமிழன்

[7.11.1961 - 7.11.2011] : பொன்விழா நிறைவு : 51வது ஜெயந்தி

பொன்னுக்கு மேலான பொக்கிஷம்

'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.'யாக நடித்தது பற்றி விளக்குகிறார் நமது தேசிய திலகம்

வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஜனவரி 1975
['எனக்கு பிடித்த பாத்திரம்' என்கின்ற தலைப்பில் "கப்பலோட்டிய தமிழன்" கதாபாத்திரம் குறித்து நமது நடிகர் திலகம் அளித்த விரிவான கருத்துரை 'பேசும் படம்' மாத இதழில் ஐந்து பக்கங்களில் வெளிவந்தது]

முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4999-2.jpg


இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5000-1.jpg


மூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5001-1.jpg


நான்காம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5002-1.jpg


ஐந்தாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5003-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
14th November 2011, 01:36 AM
Yesterday I saw Pudhiya Paravai on Jaya Movies. What a excellent performance by LEGEND. His style, mannerism, dialogue delivery, etc was superb. Even the way he smoked I liked it. Great.

Nice to hear from you gentleman, Keep it up !

Warm Wishes & Regards,
Pammalar.

Sid_316
14th November 2011, 01:37 AM
Saw parasakthi the other day :bow: lovely.. I havent seen much of sivaji's films.. sad :(

pammalar
14th November 2011, 01:52 AM
Saw parasakthi the other day :bow: lovely.. I havent seen much of sivaji's films.. sad :(

Its great news from your side. Anyway, don't feel sad, DVDs of Nadigar Thilagam's films are available everywhere !

So, On your mark, Get set & Go; You can have an enchanting time of entertainment !

Warm Wishes & Regards,
Pammalar.

Sid_316
14th November 2011, 01:59 AM
Its great news from your side. Anyway, don't feel sad, DVDs of Nadigar Thilagam's films are available everywhere !

So, On your mark, Get set & Go; You can have an enchanting time of entertainment !

Warm Wishes & Regards,
Pammalar.

Some good movie names pls.. where to start?

pammalar
14th November 2011, 02:50 AM
Some good movie names pls.. where to start?

Dear Sid_316,

You can have a patriotic start with Kappaloatiya Thamizhan(1961)
and then you can march ahead with
Veera Paandia Kattabomman(1959),
Karnan(1964),
Thiruvilayaadal(1965),
Thillaanaa Mohanaambaal(1968),
Paasamalar(1961),
Padikkaadha Medhai(1960),
Uthamaputhran(1958),
Gauravam(1973),
Deivamagan(1969),
Navarathiri(1964),
Motor Sundaram Pillai(1966),
Vietnaam Veedu(1970),
Gnaana Oli(1972)
Vasantha Maaligai(1972),
Raaja(1972),
Sivandha Mann(1969),
Kai Koduththa Deivam(1964),
Deepam(1977),
Galaatta Kalyanam(1968).

I have mentioned 20 great, grand classics. There's more & more to come under this same category.

Watch this set of classics first, you will automatically become an NT Fan(addict) !

Then I will give you the next set !

A Very Very Happy & Emotional Viewing,
Pammalar.

pammalar
14th November 2011, 03:08 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

சிவந்த மண்

[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

சிறப்பு நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SM1-1.jpg

செழிக்கும்...

பக்தியுடன்,
பம்மலார்.

goldstar
14th November 2011, 04:26 AM
Quote,

I dedicate "Kapplottiya Thamizhan", "Veerapandiya Kattapomman" to B.R. Badalu, deivame NT, only you can recall people on time the occasion and respecting people who deserves.

Long live NT fame.

Cheers,
Sathish

Sid_316
14th November 2011, 10:51 AM
Thanks a lot pammalar :)

KCSHEKAR
14th November 2011, 11:04 AM
டியர் பம்மலார், கப்பலோட்டிய தமிழன் பற்றிய நடிகர்திலகத்தின் நினைவுகள் பதிவு பேசும் படம் இதழ் 1961 ல் வெளிவந்த விமர்சனப் பதிவுகள் அருமை. நன்றி.

KCSHEKAR
14th November 2011, 11:04 AM
டியர் வாசுதேவன் சார், சிவந்த மண், அன்பைத் தேடி, கள்வனின் காதலி நிழற்படங்கள் மற்றும் பாடல் காட்சி இணைப்புகள் அருமை.

KCSHEKAR
14th November 2011, 11:05 AM
சாரதா மேடம், தங்களின் சிவந்த மண் நினைவுகளை ஏற்கனவே படித்திருந்தாலும் தற்போது படித்தபோதும் சுவையாகவே இருக்கிறது. நன்றி.

vasudevan31355
14th November 2011, 01:37 PM
முத்தாரம் 13-19 ஏப்ரல் 1990- இதழில் 'நடிகர்கள் அரசியலில் இறங்கி திடீர்த் தலைவர்கள் ஆவது ஆரோக்கியமனாதா?'.. என்ற வாதத்தை நமது நடிகர் திலகம் தொடங்கி வைத்து அளித்த பேட்டி. ஒளிவு மறைவு இல்லாமல் தன் மனதில் பட்ட கருத்துக்களை நடிகர் திலகம் கூறுவதைப் படியுங்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Dup01Photo-0020.jpg

பக்கம் 1

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Dup01Photo-0006-1.jpg

பக்கம் 2

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Dup01Photo-0007.jpg

பக்கம் 3

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Dup01Photo-0009.jpg

பக்கம் 4

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Dup01Photo-0011-1.jpg

பக்கம் 5

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Dup01Photo-0013-1.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

rsubras
14th November 2011, 01:43 PM
oru actor politics la irangi periya aal aaganum nu aasai varathukku MGR oda success than..avarai pathi Sivaji sir mention eh pannaliye... may be antha nerathula iruntha mananilai ya kooda irunthirukkalam... (or intha scanned copy la avara pathina mention ah naan miss pannirukkalam :D)

abhi_d
14th November 2011, 01:46 PM
Nice to hear from you gentleman, Keep it up !

Warm Wishes & Regards,
Pammalar.

Thanks Pammalar. My dad is ardent Mr.Sivaji fan. I remember he took me to the Raja movie during my childhood. Nice movie. Different variety from NT sir. I even watched it a while ago. He was handsome and his style I have no words to explain. Hats off.

rsubras
14th November 2011, 01:47 PM
apart from that, imho the title is relevant only for the current and immediate previous generation....... thideer thalaivargal aaga aasai padurathu lam current set of actors........ MGR, Sivaji generation la they were willing to and had done enough ground level work to gradually came to the top

vasudevan31355
14th November 2011, 08:20 PM
அன்பு பம்மலார் சார்,

"கப்பலோட்டிய தமிழன்" கலை இதழின் காவிய விமர்சனம் அட்டகாசம் போங்கள்!. நடிகர் திலகத்தின் புகழ் பாடும் குயில் விமர்சனம் அது.

தென்றல் விமர்சனமும் "நச்". அளித்தமைக்கு அன்பு நன்றிகள்.

'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.'யாக நடித்தது பற்றிய நடிகர் திலகத்தின் பேட்டி அந்தப் பாத்திரத்தின் மீது அவருக்கு எத்துனை ஈடுபாடு இருந்தது என்று தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. அருமையான பேட்டியை அளித்ததற்கு ஆழ்ந்த நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
15th November 2011, 12:23 AM
Dear Prabhu,
It's indeed Annaiyin Aanai. NT has narrated this scene to be inspired from James Cagney, whom he regards high. In fact I posted a message here but unfortunately it was not there due to hacking problems. You can watch NT's interview in the DVD recently released.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/snnfw.jpg

Dear Moderators,
Thank you for restoring the hub intact in a very short time. In fact one or two postings of mine were also removed in this period.

With regards
Raghavendran

Subramaniam Ramajayam
15th November 2011, 12:25 AM
சாரதா மேடம், தங்களின் சிவந்த மண் நினைவுகளை ஏற்கனவே படித்திருந்தாலும் தற்போது படித்தபோதும் சுவையாகவே இருக்கிறது. நன்றி.

SARADA madam's review 100 percent correct and true. sridhar wanted to give this movie TECHINALLY A CLASS APART From OTHER
movies and he HAS ACHIEVED IT also. somehow it has not reached comman public to the extent it was expected to. my feelings.
regarding fixing mekala theatre in purasawalkam, the theatre management wanted to screen this movie very much in their theatre and requested chitralaya specically and true it was first NT movie accepted by the theares and hence the banner NAMNADU was not accepted -screened in saravan theatres. my vague rememberence. mr raghavendran pl clrify.
I also feel i know madam's uncle wo used to visit shanthi in the evevenigs.

vasudevan31355
15th November 2011, 07:24 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்கள் உயரிய பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
15th November 2011, 07:30 AM
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,

'சிவந்த மண்' திரைக்காவியத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதோ அதேபோல் தங்களுடைய சிவந்த மண் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எத்தனை முறை படித்தாலும் சலிக்காது. மறுபதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
15th November 2011, 08:06 AM
'அன்னை இல்லம்'(15-11-1963) 49-ஆவது ஆண்டுத் துவக்கம்.

http://600024.com/store/image/cache/data/moserbaer/Annai%20Illam-500x500.jpg

http://img194.imageshack.us/img194/7388/snapshot20100201175152.jpg

'அன்னை இல்லம்' காவியத்தில் அன்னை இல்லத்தின் அன்புத் தலைவர்.

http://img194.imageshack.us/img194/2059/snapshot20100131202721.jpg

http://img194.imageshack.us/img194/562/snapshot20100131203242.jpg

http://img706.imageshack.us/img706/3271/snapshot20100131203912.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ai002.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ai003.jpg

நடையா... இது நடையா... நடிகர் திலகத்தின் சூப்பர் ஸ்டைல் நடிப்பில்.(ஒலி-ஒளிவடிவில்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=S8oJfqrfv9I

எண்ணிரண்டு பதினாறு வயது...(ஒலி-ஒளிவடிவில்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=M7Zzv0FTbO0


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
15th November 2011, 09:11 AM
'லக்ஷ்மி கல்யாணம்' (15-11-1968) 44 -ஆவது ஆண்டு ஆரம்பம்.

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/807_17_1.jpg

http://www.upperstall.com/files/film/lakshmi-kalyanam-1968-stills-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ01DAT_003312240.jpg?t=1321330698

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ01DAT_001525360-1.jpg?t=1321331464

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ01DAT_001522040-1.jpg?t=1321331365

http://3.bp.blogspot.com/_2I2hYF2DQtI/TGwkvmMe98I/AAAAAAAAB-M/uSdH1c4fiZk/s1600/Lakshmi+Kalyanam_YaarandaManithan_tamilhitsongs.bl ogspot.com.VOB_thumbs_%5B2010.08.18_23.51.24%5D.jp g

'லக்ஷ்மி கல்யாணம்' திரைப்படத்தில் வரும் சூப்பர் பாடலான "யாரடா மனிதன் இங்கே" பாடலை பதிவிறக்கம் செய்து கொள்ள லிங்க் கீழே.

http://www.megaupload.com/?d=P2KS73O2

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
15th November 2011, 10:33 AM
'பரீட்சைக்கு நேரமாச்சு' (14-11-1982)30-ஆவது ஆண்டுத் தொடக்கம்.

http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/229.jpg

மிக அரிய நிழற்படம்.(ஷூட்டிங் ஸ்பாட்)'வியட்நாம் வீடு' சுந்தரம், 'முக்தா' ஸ்ரீனிவாசன் மற்றும் 'புலியூர்' சரோஜா ஆகியோருடன் நடிகர் திலகம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/03MPMEMORIES_29136f.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

saradhaa_sn
15th November 2011, 10:47 AM
டியர் வாசுதேவன்,

மன நிறைந்த பாராட்டுக்கு நன்றி.

சிந்தையைக்கவர்ந்த 'சிவந்த மண்', அதிகம் பேசப்படாத 'அன்பைத்தேடி', நடிகர்திலகத்தின் கடைசிக்கால காவியங்களில் ஒன்றான 'பாரம்பரியம்', உள்ளம் கவர்ந்த 'கள்வனின் காதலி', உணர்ச்சிமிக்க 'லட்சுமி கல்யாணம்' படக்காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளன.

அனைவரையும் கவரும் 'அன்னை இல்லம்' படக்காட்சிகள் மிகவும் அருமை. குறிப்பாக மூன்றாவது படமாக இடம்பெற்றிருக்கும் "என்னுடைய" தேவிகாவின் குளோசப் ஷாட் சூப்பரோ சூப்பர். என்ன ஒரு போஸ். இப்படத்தில் இடம்பெற்ற 'மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்' பாடல் என்னுடைய ஆல்டைம் பேவரைட். நாள்முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தாலும் அலுக்காது. தேவிகாவுக்கு நாட்டியம் தெரியாது. டான்ஸ் மாஸ்ட்டர் அவ்வப்போது சொல்லிக்கொடுக்கும் சின்ன சின்ன அசைவுகளை வைத்து ஒப்பேற்றுபவர்தான். ஆனால் இப்பாடலில், 'சேவல் குரலே கூவாதே' என்ற வரிகளின்போது ஒரு போஸ் கொடுப்பார் பாருங்க, அற்புதம். (நம்முடைய முரளியண்ணாவுக்கும் பிடித்த போஸ் அது).

எத்தனை ஆயிரம் பேர் பத்மினி, பத்மினி என்று சொன்னாலும் என்னுடைய கணிப்பில், 'நம்முடைய' நடிகர்திலகத்துக்கு பொருத்தமான ஜோடி 'என்னுடைய' தேவிகா மட்டுமே. கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பயாலஜி, அனாடமி, சைக்காலஜி என எத்தனை உண்டோ அத்தனையும் பொருந்திய ஒரே ஜோடி.

saradhaa_sn
15th November 2011, 10:52 AM
டியர் பம்மலார்,

காலத்தால் அழியாத காவியமான 'கப்பலோட்டிய தமிழன்' படத்தின் விமர்சனங்களின் தொகுப்பும், அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர்திலகத்தின் அனுபவங்களின் தொகுப்பும் காணக்கிடைக்காத அரிய பொக்கிஷங்கள். படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்து அளித்த நினைவலைகளிலும் கூட அன்றைய சம்பவங்களை துல்லியமாக நினைவு கூர்ந்துள்ளார்.

ஒரு விமர்சனத்தில் கூறியுள்ளபடி, ஜெமினி - சாவித்திரி காதல் காட்சிகள் தேவைக்கதிகமாகவே திணிக்கப்பட்டுள்ளதால், முக்கிய பாத்திரங்களான வாஞ்சிநாதன் போன்ற பாத்திரங்கள் சுருக்கப்பட்டு விட்டன. (கட்டபொம்மனிலும் ஜெமினி - பத்மினி காட்சிகள் அளவுக்கதிகமாகவே இருக்கும்).

அரிய ஆவணங்களைத்தேடித் தந்தமைக்கு மிக்க நன்றி.

vasudevan31355
15th November 2011, 11:49 AM
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,

உங்களின் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கு நன்றிகள் பல.

"என்னுடைய" தேவிகா என்று தாங்கள் உரிமையோடு குறிப்பிட்டிருப்பதிலிருந்து தாங்கள் எந்த அளவிற்கு தேவிகா அவர்களின் ரசிகை என்று பரிபூரணமாக உணர முடிகிறது. தாங்கள் குறிப்பிட்டிருந்த "அந்த சேவல் குரலே கூவாதே" வரியில் தேவிகா அவர்களின் அற்புத போஸ் தங்களுக்காக இதோ. அதே போல தங்களது ஆல்டைம் பேவரைட் பாடலான "மடிமீது தலை வைத்து" பாடலை விரைவில் தர முயற்சிக்கிறேன். நன்றி!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5flv_000195462.jpg?t=1321337333

அன்புடன்,
வாசுதேவன்.

saradhaa_sn
15th November 2011, 11:54 AM
டியர் வாசுதேவன்,

'நடிகர்கள் திடீர் அரசியல் தலைவர்கள் ஆவது' பற்றிய விவாதத்தைத் துவக்கி வைத்து நடிகர்திலகம் அளித்த கருத்துக்கள் அடங்கிய 'முத்தாரம்' இதழின் அரிய பக்கங்களை தொகுத்தளித்தமைக்கு நன்றி.

நண்பர் சுப்புராஜ் சொன்னது போல, மக்கள் திலகம், நடிகர்திலகம், இலட்சிய நடிகர் போன்ற ஆழமான அரசியல் அடித்தளம் அமைந்த நடிகர்களுக்கு இத்தலைப்பு பொருந்தாது. எஸ்.எஸ்.ஆர். கூட பிற்காலத்தில் 'பசும்பொன் பேரவை'யோ ஏதோ ஒரு தலைப்பில் ஒரு இயக்கம் ஆரம்பித்து விட்டு பின்னர் அவரே அதை மறந்து விட்டார்.

அரிய ஆவணப்பதிவுகளை அளித்தமைக்கு நன்றி.

(பொம்மை இதழில் கூட 1976 வாக்கில், 'அரசியலில் நடிகனும் அவன் ஆற்றும் கடமையும்' என்ற தலைப்பில் நடிகர்திலகம் எழுதியிருந்தார். அக்கட்டுரையின் இடையிடையே 'நாம் பிறந்த மண்' படக்காட்சிகள் இடம்பெற்றிருந்தன).

vasudevan31355
15th November 2011, 12:41 PM
சாரதா மேடம், முரளி சார் மற்றும் நம் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட சூப்பர்ஹிட் பாடலான 'அன்னை இல்லம்' திரை ஓவியத்தின் "மடிமீது தலை வைத்து"பாடல் வீடியோவாக.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UdHkw4ZQo2E


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
15th November 2011, 01:23 PM
அன்பு நண்பர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. நாம் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்த நடிகர் திலகத்தின் 230- ஆவது காவியமான 'ஊரும் உறவும்' திரைப் படம் ராஜ் வீடியோ விஷன் மூலம் நெடுந்தகடாக வர உள்ளதற்கான வாய்ப்புகள் தெரிய ஆரம்பித்து உள்ளது.. 'ஊரும் உறவும்' நெடுந்தகட்டின் அட்டை முகபபிற்காக 'Spaark Media' நிறுவனம் வடிவமைத்துள்ள Design cover வடிவம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. நெடுந்தகட்டின் விலை ரூ 199/- எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

http://www.spaarkmedia.in/images/filmbased/CD_Designs/big/oorum_uravum.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
15th November 2011, 04:32 PM
'திரை உலகின் செல்வம்' நடிக்கும் 'செல்வம்' (11-11-1966) 46-ஆவது ஆண்டுத் தொடக்கம்.

இதய வேந்தரின் அட்டகாசப் போஸ்கள்.

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=210&height=314&image=/ahtees/admin/movies/content/5029_17_Selvam.jpg

http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/109.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_1VOB_000891656.jpg?t=1321354794

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_1VOB_002446296.jpg?t=1321355129

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_1VOB_002497656.jpg?t=1321355188

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_1VOB_002591216.jpg?t=1321355248

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_1VOB_002940056.jpg?t=1321355308

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_1VOB_003174976.jpg?t=1321355383

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_2VOB_000266216.jpg?t=1321355438

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/VTS_03_2VOB_000283976.jpg?t=1321355511


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
15th November 2011, 04:55 PM
'செல்வம்' 46-ஆவது ஆண்டு தொடக்க விழா சிறப்பு நிழற்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Selvam1-1.jpg?t=1321356088


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
15th November 2011, 05:36 PM
'நடிகர் திலகம்' திரியின் சாதனை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sg1.jpg?t=1321358655 http://www.dazzlejunction.com/greetings/thanks/thank-you-butterfly-dj.gif

நமது திரி (நடிகர் திலகம் பாகம் 7) 500-பக்கங்களைத் தாண்டி இமாலய சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமான நமது அன்பு மாடரேட்டர்களுக்கும், நமது 'ஹப்' அங்கத்தினர்களுக்கும், குறிப்பாக கடல் கடந்த நாடுகளில் இருக்கும் நமது 'ஹப்' அங்கத்தினர்கள் அனைவருக்கும், அங்கத்தினர்களாக இல்லாவிடினும் நமது திரியை நாள்தோறும் படித்து இன்புறும் அனைத்து ரசிகர்களுக்கும், திரியை சிறப்பாக நடத்த பேருதவி புரிந்து கொண்டிருக்கும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கும், மற்ற இதர அனைவருக்கும் நமது திரியின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றிகளை உளமாரத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவும், நமது இதய தெய்வத்தின் ஆசிகளும் பரிபூரணமாக இருக்கும் வரையில் நமது திரி வரலாற்று சாதனைகளைப் படைக்கப் போவது திண்ணம்.

வாழ்க நடிகர் திலகத்தின் வானளாவிய புகழ்!...


அன்புடன்,
வாசுதேவன்.

Subramaniam Ramajayam
15th November 2011, 08:58 PM
HEARTIEST CONGRATS FOR successful run of 500 pages. All credits to our GOD nadigarthilagam and sivaji fans wo are always most sincere and devoted to their GOD by birth.
ANNAI ILLAM pictures and our favorite heroine devika and NADIGARthilagam duet song well inserted in the thiri. kudo to friend vasudevan oNE OF MY VERY CLOSE FRIEND WHO IS ALSO sivaji fan and prefers devika as the best suied heroine for sivaji, has not taken food for many days when devika first and last time with mgr.
Regarding SELVAM, a movie which had made other side's mega colorful movie nowhere.
great days to remember.

Murali Srinivas
15th November 2011, 11:18 PM
இந்த திரி ஐநூறு பக்கங்களை என்ன ஐயாயிரம் பக்கங்களையும் தாண்டும். பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.

வாசு சார்,

மடி மீது பாடல் காட்சிக்கு நன்றி. முன்பொரு முறை சரியாக சொல்லவேண்டுமென்றால் 2009 ஜூன்-ல் இந்தப் பாடலை பற்றி, அந்த போஸைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதைதான் சாரதா எழுதியிருக்கிறார். அந்த சில வரிகள் மீண்டும் உங்களுக்காக.

In Annai Illam, the வீணை வாசித்துக் கொண்டே ஏழு சுரங்களை வைத்து சிலேடை செய்யும் காட்சியில் நளினம் இருக்கும். ஆனால் அடுத்த பாடல் காட்சி இருக்கிறதே அது சூப்பர்.

குறிப்பாக இரண்டாவது சரணம். ஏற்றமும் இறக்கமுமாக உள்ள மணல் திட்டுகள். ஒன்றில் இறங்கி ஒன்றில் ஏறி, தேவிகா ஒரு சைடு போஸ்-ல் காலை சற்றே சாய்த்து நின்று இடது கை ஆட்காட்டி விரலால் வானத்தைக் காட்டி

இரவே இரவே விடியாதே

இன்பத்தின் கதையை முடிக்காதே

சேவல் குரலே கூவாதே

சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே

என்று பாடியவுடன் நடிகர் திலகமும் மேலே ஏறி வந்து சேர்ந்து நின்று பின்னணி இசை இல்லாமல் சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே என்று பாடுவார். பிறகு இருவரும் மணலில் அமர்ந்து

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்

என்று முடிக்கும் போது தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த ஒரு ரொமான்ஸ் பாடல் அங்கு முழுமை பெறும்.

அன்புடன்

rajeshkrv
15th November 2011, 11:34 PM
I dont know whether someone posted this here so i'm posting this.

Nice to See Major Sundarrajan &TMS singing Andha naal gnyabakam live at Sivaji function

http://www.youtube.com/watch?v=S9rMM84Fop8

RAGHAVENDRA
16th November 2011, 05:53 AM
டியர் வாசு சார்,
லட்சுமி கல்யாணம், பரீட்சைக்கு நேரமாச்சு, சிவந்த மண், அன்னை இல்லம், செல்வம் என இந்தத் திரியை அட்டகாசமாகக் கொண்டு செல்கிறீர்கள். பம்மலாரும் நீங்களும் ஆற்றும் சேவைகளுக்கு நடிகர் திலகம் கூடவே துணை வந்து கொண்டு பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டுள்ளார். அவருடைய ஆசிகள் தங்களுக்கு பரிபூரணமாக உண்டு.

டியர் முரளி சார்,
அன்னை இல்லம் பற்றிய தங்கள் பதிவு நினைவூட்டல் மீண்டும் அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்கின்றன.

சகோதரி சாரதா,
தங்களுடைய சிவந்த மண் நினைவூட்டல் பதிவுக்கு மிக்க நன்றி. இதுவரை அதைப் படிக்காதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

டியர் வாசுதேவன் சார்,
எல்.ஐ.சி. கட்டிடத்தின் மொட்டை மாடியில் சிவப்பு விளக்கு எரியுதம்மா பாடலும் அதற்குப் பின் வீட்டில் தாயாரின் மங்களமான முகத்தையும் பார்த்து மகிழ்வதும், அதே சமயம் தந்தையின் தண்டனை நினைவுக்கு வருவதையும் பிரதிபலித்து, உண்ணும் போது பரிமாறும் தாயாரின் தாலி ஆடும் போது, அதனுடைய ஊசலாட்டத்தையும் நினைத்து மனம் நெகிழ்வதும்...

வசனமே இல்லாத இந்த ஒரு காட்சிக்கே உலகில் யாரும் ஈடு இணையில்லாத நடிகர் சிவாஜி கணேசன் என்று நாம் மார்தட்டிக் கொள்ளாம்.

வாசுதேவன் சார், முடிந்தால் அந்தக் காட்சியை பதியுங்கள். பாடல் காட்சியைத் தனியாகவும் அந்தக் காட்சியைத் தனியாகவும் தரவேற்றலாம்.

ஊரும் உறவும் தகவலுக்கு மிக்க நன்றி.

அன்புடன்

mr_karthik
16th November 2011, 01:05 PM
Thanks a lot to Moderators RR and NOV, and their support team for regaining and retaining this thread and the whole forum, after that 'Black Incident' last week.

mr_karthik
16th November 2011, 01:20 PM
வாசுதேவன் சார்,

தங்களின் கைவண்ணத்தில் அனைத்து படங்களின் (சிவந்த மண், பாரம்பரியம், அனபைத்தேடி, அன்னை இல்லம், செல்வம், லட்சுமி கல்யாணம்) புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணைப்புகள் அனைத்தும் அட்டகாசம். ரொம்ப சிரமப்பட்டு தொகுத்திருக்கிறீர்கள். நன்றி.

முத்தாரம் பத்திரிகையில் வந்த நடிகர்திலகத்தின் பேட்டியை அளித்தமைக்கு மிக்க நன்றி.

ராமஜெயம் சார் & சாரதா,

என்னை விட தீவிர தேவிகா ரசிகர்களும் இங்கே இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

mr_karthik
16th November 2011, 01:39 PM
பம்மலார் சார்,

கப்பலோட்டிய தமிழன் படத்தின் விளம்பரங்கள் மட்டுமல்லாது, வேறு பல அரிய ஆவணங்களையும் சிறப்பாக அளித்துள்ளீர்கள். தங்கள் சேவையால் இத்திரி பல உயரங்களைக்கடந்து நிற்கிறது. வெளிவந்த காலத்திலேயே கப்பலோட்டிய தமிழனுக்கு பத்திரிகைகளில் சிறப்பான விமர்சனங்கள் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக நடிகர்திலகத்தின் நடிப்பாற்றலை ரொம்பவே புகழ்ந்து எழுதியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இருந்தும் மக்கள்தான் ஏமாற்றி விட்டனர். ஆனால் இப்போது உணர்ந்து ஆதரவளிக்கின்றனர்.

முன்னொருமுறை (ஜூலை முதல் வாரத்தில்) எனது வேண்டுகோளுக்கினங்க 'சிவந்த மண்' திரைக்காவியத்தின் முதல் வெளியீட்டு விளம்பரத்தையும், 100வது நாள் விளம்பரத்தையும் தந்து அசத்தியிருந்தீர்கள்.

தற்போது 'சிவந்த மண்' வெளியீட்டு வாரமென்பதால், மேலும் பல விளம்பரப்பதிவுகளையும், படம் வெளிவந்த காலத்தில் வந்த பேசும் படம், பொம்மை இதழ்களின் அரிய ஆவணப்பதிவுகளையும் தந்து மகிழ்விப்பீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். (அப்படத்தின் ஏராளமான ஸ்டில்களையும், பாடல் இணைப்புகளையும் ஏற்கெனவே வாசுதேவன் சார் தந்து திக்குமுக்காட வைத்து விட்டார்). எனவே வழக்கம்போல தங்களிடமிருந்து அரிய ஆவணப் பொக்கிஷங்களுக்காக காத்திருக்கிறோம்.

தங்களின் அன்பான, விலைமதிப்பற்ற சேவைகளுக்காக மீண்டும் மீண்டும் நன்றிகள்.

mr_karthik
16th November 2011, 02:44 PM
ராமஜெயம் & சாரதா,

மேகலா தியேட்டரில் சிவந்த மண் வெளியானது பற்றி நீங்கள் இருவரும் தெரிவித்த கருத்துக்கள் சரியே. அந்த அரங்கில் அதுதான் நடிகர்திலகத்தின் முதல் படமாக ரிலீஸானது, பெரிய வெற்றியும் பெற்றது. சிவந்த மண்னை அங்கு வெளியிட மேகலா தியேட்டர் நிர்வாகமே விரும்பியது என்று ராமஜெயம் சார் சொல்லியிருப்பது புதிய செய்தி. சிவந்த மண் அங்கு வெளியானதால் நம்நாடு சரவணா தியேட்டருக்குப் போனதும் உண்மை.

ஆனால் அதன்பிறகு மேகலாவில் நடிகர்திலகத்தின் பல திரைப்படங்கள் வெளியானபோதும், வெற்றி வாய்ப்புள்ள படங்களை அனைத்தும் (சாரதா சொன்னது போல) புவனேஸ்வரிக்கும், அதை விட்டால் ராக்ஸிக்கும் போய்விட்டதால், நடிகர்திலகத்தின் படங்களை திரையிட மேகலா நிர்வாகம், தியேட்டர் வழங்கியும் படங்கள் வெற்றிகரமாக ஓடவில்லை.

சிவந்த மண்ணுக்குப்பின் மேகலாவில் வெளியான படங்கள் இவைதாம்....

விளையாட்டுப்பிள்ளை
இருதுருவம்
மூன்று தெய்வங்கள்
தர்மம் எங்கே
தவப்புதல்வன்
அன்பைத்தேடி
நான் வாழ வைப்பேன்

எனவேதான் மேகலாவில் தொடர்ந்து வெற்றி வாய்ப்பு அமையவில்லை (இவற்றில் தவப்புதல்வன் 'பைலட்' அரங்கிலும், நான் வாழ வைப்பேன் 'சித்ரா' அரங்கிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடின).

vasudevan31355
16th November 2011, 03:45 PM
அன்பு முரளி சார்,

தங்களுடைய அன்புக்கு என் பணிவான நன்றிகள்.

'மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்' பாடலை தாங்கள் கவித்துவமாக சிலாகித்து வர்ணித்துள்ள அழகு அருமை! என்ன ஒரு கிளாசிக் டூயட்! உங்களால் மீண்டும் நானும் அக்காவியப் பாடலை பலமுறை பார்த்து ரசித்தேன். அதற்காக உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

டியர் கார்த்திக் சார்,

தங்கள் உயரிய பாராட்டுதல்களால் என்னைத் திக்கு முக்காட வைத்து விட்டீர்கள். தங்கள் மனம் நிறைந்த பாராட்டுதல்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
16th November 2011, 06:25 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் இதயம் நிறைந்த பாராட்டுதல்கள் என்னுள் ஆனந்தக் கண்ணீரையே வரவழைத்து விட்டது. தங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் ஆசிகளும், நமது இதய தெய்வத்தின் ஆசிகளும் துணையாக என்றும் இருக்கையில் எங்களுக்கு என்ன குறை?...

தங்களுக்கு மிகவும் பிடித்த 'அன்னை இல்லம்' திரைக்காவியத்தின் "சிகப்பு விளக்கு எரியுதம்மா"...பாடலைத் தங்களுக்காகத் தருவதில் மிகுந்த மகிழ்ச்சி.

'அன்னை இல்லம்' திரைக்காவியத்தின் "சிகப்பு விளக்கு எரியுதம்மா" வீடியோ வடிவில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4n1ZQfVfD0c

முன்னொருமுறை தங்களை சென்னையில் நேரில் சந்தித்தபோது 'அன்னை இல்லம்' திரைப்படத்தில் வரும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த ரசனையான
காட்சியைப் பற்றி தாங்கள் என்னிடம் மிகவும் ரசித்துப் பேசி மகிழ்ந்தது நன்றாக நினைவில் இருக்கிறது. இப்போது நீங்கள் மறுபடியும் நடிகர்திலகத்தின் அந்த அட்டகாசமான நடிப்புக் காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் தன் தாயிடம் தன் தந்தைக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை வேதனையை வெளியேசொல்லமுடியாமல் மென்று விழுங்கி வசனமே இல்லாமல் அமைதியாக சில நிமிடங்கள் அசத்துவார் என்றால், அடுத்த காட்சியில் முன் நடித்த காட்சிக்கு எதிர்மறையாக தன் காதலி (தேவிகா) யிடம் தன் தந்தை (S.V.ரங்காராவ்) தன்னிடம் எப்படியெல்லாம் அன்பாக இருந்தார், எப்படியெல்லாம் தனக்கு பணிவிடைகள் செய்தார், எப்படியெல்லாம் தன்னை வளர்த்தார் என்று தந்தையின் அன்பை நினைத்து நினைத்து புலம்பித் தீர்த்து விடுவார்.

தன் தந்தையை தூக்கு தண்டனையில் இருந்து ஒரு மகனாகத் தன்னால் காப்பாற்ற முடிய வில்லையே என்ற இயலாமை, ஆற்றாமை,வேதனை, சோகம்,துக்கம் என்று அனைத்துவித உணர்ச்சிகளையும் ஒரு சேர மாறி மாறி பிரதிபலித்து, (குறிப்பாக தன் தந்தையின் தூக்குதண்டனை நிறுத்தத்திற்காக அளிக்கப் பட்ட கருணை மனு நிராகரிப்பை பற்றி தேவிகாவிடம் கூறும்போது," கருணை மனுவை நிராகரிச்சுட்டாங்க கீதா" என்று வேதனையோடு உரக்க சிரித்துக் கொண்டே சொல்வார்...பின் மீண்டும் ஒரு முறை சிரித்த படியே சொல்லி அப்படியே அதை அழுகையாய் அரை நொடியில் மாற்றுவார் பாருங்கள்... (அற்புதப் பிறவியே! எங்களைத் தவிக்க விட்டு விட்டு ஏன் அய்யா பிரிந்தீர்கள்)... அப்படியே அள்ளிக் கொண்டு போகும்.)

தாயிடம் அமைதி...

தாரமாகப் போகிறவளிடம் ஆர்ப்பாட்டப் புலம்பல்.

இரண்டையும் வேறுபடுத்திக் காட்ட அவரை விட்டால் வேறு யார்?...

அதே சீனில் இன்னொரு முத்திரை...தன் தந்தையின் அன்பைப் பற்றி தேவிகாவிடம் கூறுவார். "தாயில்லாதக் குறைய நான் உணரக் கூடாதுங்கறத்துக்காக அவர் (தன் தந்தை)எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்... என்னென்ன ஏற்பாடெல்லாம் செய்தார்" என்று புலம்பிவிட்டு 'அடாடாடாடா'....என சிலாகித்து தன் தந்தையைப் பற்றி நினைவு கூர்வார். அந்த 'அடாடாடாடா' என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் அடடா...இவரல்லவோ நடிகர் என்று நம்மக் கூக்குரலிட வைக்கும் .

இந்த குறிப்பிட்ட சீனில் அவர் செய்யும் அட்டகாசங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்....

முகத்தில் பெருமை பொங்க தேவிகாவிடம்,"கீதா! எங்க வீட்டு வேலைக்காரன் இல்லே! கண்ணன்! (இந்த இடத்தில் ஒருவேலைக்காரன் தன் முதலாளி முன் எவ்வாறு கையைக் கட்டிக் கொண்டு நிற்பானோ அப்படிக் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்) அவன் ஒரு நாளாவது எனக்கு காப்பி போட்டுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?..

ஒரு நாளாவது சாப்பாடு போட்டுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?....

ஒரு நாளாவது எனக்கு படுக்கை விரிச்சுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?"....
என்று சொல்லிவிட்டு

"இல்ல கீதா! அவ்வளவு பணிவிடையும் எனக்கு எங்க அப்பாதான் கீதா...எங்க அப்பாதான்" என்று சொல்லியவாறே தன் தந்தையை நினைத்து பொங்கிக்கொண்டு அழ ஆரம்பிப்பது அவருடைய அசுரத் திறமை!

"உங்களுக்கு ஏன்ப்பா இவ்வளவு கஷ்டம்?...நான் என்ன குழந்தையான்னு கேப்பேன். அதுக்கு எங்கப்பா என்ன சொல்லுவார் தெரியுமா? என்று சொல்லிய படியே பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு தன் தந்தை கூறுவது போல மகா தோரணையுடன் ,"ஏய்! நீ என்ன மனசுல பெரிய மனுஷன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா?... ஒனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தை உன்ன அப்பான்னு கூப்பிட்டாலும் நீ எனக்குக் குழந்தை தாண்டா..ன்னு சொல்லுவார்"....என்று நடிகர் திலகம் ரசித்து ஒரு அட்டகாசச் சிரிப்பை தந்தையின் பாச நினைவாக உதிர்த்து நினைவலைகளில் மூழ்கியபடி தலையை ஆட்டிக்கொள்வது அதியற்புதம்.

இப்படிப்பட்ட தந்தையை தனக்கு கொடுத்ததற்காக கடவுளிடம் தான் தன் ஆயுசு முழுதும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருப்பதைப் பற்றிக் கூறும் போது, "எத்தனை ஆயிரம் தடவை" (நன்றியை) என்று அந்த வீட்டின் சிறு தூணைப் பிடித்தபடி கூறி நிறுத்திவிட்டு தலையை மேல்நோக்கித் தூக்கியவாறு மறுபடியும் இரண்டாவது முறை "எத்தனை ஆயிரம் தடவைசொல்லியிருப்பேன்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுவது மெய்சிலிர்க்க வைத்துவிடும்.

ம்..... சொல்லிகொண்டே போகலாம். ஆனால் ஆயுசுதான் போதாது அவர் அசாத்தியத் திறமைகளைப் பற்றி எழுத...

அந்த மெய்சிலிர்க்க வைக்கும் அன்புத் தெய்வத்தின் அற்புத நடிப்புக் காட்சியை ராகவேந்திரன் சாருடன் நாமும் கண்டு களிக்கலாம்.

'அன்னை இல்லம்' திரைக்காவியத்தில் அதியற்புதமான நடிகர் திலகத்தின் நடிப்பில் மிளிரும் காவியக் காட்சி.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zNE0LicphLM


அன்புடன்,
வாசுதேவன்.

J.Radhakrishnan
16th November 2011, 10:12 PM
டியர் வாசுதேவன் சார்,

அன்னை இல்லம் படத்தில் நீங்கள் குறிப்பிட்ட காட்சி எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்று, அதேபோல் சிறையில் தன் தந்தையை (s.v.ரங்காராவ்) சந்திக்கும் போது அவர் நம்பியாரை பழிவாங்க போவதாக கூறும் போது ரங்கராவ் வேண்டாம் நீ உனக்காக இல்லாவிட்டாலும் உன் தாய்க்காக வாழ வேண்டும் என்று கூறி அவர் தாய் யார் என்பதை சொல்லி, நீ யார் என்பதை வெளியிடவேண்டாம் என்று சொன்னவுடன் "இது கொடுமைப்பா கொடுமை! விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து தாய் அன்பு என்னன்னு தெரியாம ஏங்கி கிடந்த எனக்கு தாய் யாருன்னு தெரிஞ்ச பிறகு அம்மா நான் தான் உங்க மகன்னு ஓடி போய் என் கண்ணீரால் அவங்க பாதத்த கழுவுற பொன்னான சந்தர்ப்பத்த
குடுக்காம என் வாய்க்கு பூட்டு போட்டுடீங்களே அப்பா? என்று கதறும் போது என் கண்ணீரை கட்டு படுத்தவே முடியாது. அதே போல் தன் தாயிடம் உங்கள் கணவர் பெயர் என்ன என்று கேட்க mvராஜம்மா சிவபெருமான் படத்தை காட்டி இவர் பெயர் தான் என் கணவர் பெயர் என்று கூற உடனே இவர் பரமசிவம், கௌரி, குமரேசன், சண்முகம் என்று சொல்லி அழுதுகொண்டே வீட்டில் இருந்து வெளியேறுவார் பாருங்கள் , என்ன அற்புதமான நடிப்பு, நீங்கள் சொல்வது போல் சொல்லிகொண்டே போகலாம். ஆனால் ஆயுசுதான் போதாது

RAGHAVENDRA
17th November 2011, 06:02 AM
டியர் வாசுதேவன் சார்,
அன்னை இல்லம் காட்சியைத் தரவேற்றியதோடு மட்டுமல்லாமல், அந்தக் காட்சியைப் பற்றி விரிவாக அலசி அசத்தி விட்டீர்கள். இந்த ஒரு காட்சிக்கே உலகில் உள்ள எல்லா நடிகர்களும் அன்னை இல்லத்தின் வாசலில் தவமிருந்து அவருடைய அருளைப் பெற்று அதற்குப் பிறகு நடிக்க வந்திருக்க வேண்டும்.

எல்.ஐ.சி. கட்டிடத்தில் மொட்டை மாடியில் படமாக்கப் பட்ட ஒரே படம் அன்னை இல்லம் திரைப்படம் என்று நினைக்கிறேன். யாராவது உறுதிப் படுத்த்லாம்.

வரும் 20.11.2011 - அன்று வின்டேஜ் ஹெரிடேஜ் அமைப்பின் சார்பில் சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலை, பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விவேகாநந்தர் கூடத்தில், மாலை 6.30 மணிக்கு நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம் ராணி லலிதாங்கி திரையிடப் படுகிறது. உறுப்பினர் அல்லாதவர்க்கு நுழைவுக் கட்டணம் உண்டு.

http://4.bp.blogspot.com/-GuZ46po9U9c/TsRRuTqb1dI/AAAAAAAAAe4/BDUOIgEfWK4/s320/rani+lalithangi+invitation.jpg

KCSHEKAR
17th November 2011, 01:10 PM
டியர் வாசுதேவன் சார், அன்னை இல்லம் நிழற்படம் மற்றும் பாடல் காட்சிகள் பிரமாதம். காட்சிகளை நீங்கள் வர்ணித்திருக்கும் விதம் அற்புதம். நன்றி.

vasudevan31355
17th November 2011, 03:13 PM
டியர் ராதாகிருஷ்ணன் சார்,

அன்னை இல்லம் படத்தில் தலைவர் சிறையில் தன் தந்தையை சந்திக்கும் காட்சியை நானும் பலமுறை கண்டு ரசித்திருக்கிறேன். அன்னை இல்லம் நடிகர்திலகத்தின் அற்புத நடிப்புக் கொண்ட அசத்தலான காவியம்.

அன்பு சந்திரசேகரன் சார்,

தங்கள் அன்பு பாராட்டுக்கு நன்றிகள்.

டியர் ராகவேந்திரன் சார்,

தங்கள் உயர்ந்த பாராட்டுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி. ராணிலலிதாங்கியின் சிவதாண்டவ நடனம் கண்முன்னே வந்து நிற்கிறது.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
17th November 2011, 03:39 PM
'அண்ணன் ஒரு கோயில்' (10-11-1977) 35-ஆவது ஆண்டுத் தொடக்கத் திருவிழா.

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSiEI2_f6z8anvtiy3x1YiT8k82VcXn2 aCTlrXhfmHEhyKRmoyfDbHLdXlhdQ

http://www.music.haihoi.com/flimAlbum/Annan%20Oru%20Kovil.jpg

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/6866_17_Annan%20Oru%20Kovil.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_000002736.jpg?t=1321526699

http://lulzimg.com/i24/d7674f.jpg

'அண்ணன் ஒரு கோயில்' திரைக் காவியத்தில் நம் அன்பு அண்ணன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_000214013.jpg?t=1321524190

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_001860425.jpg?t=1321524254

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_001927425.jpg?t=1321524302

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002167198.jpg?t=1321524373

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002255686.jpg?t=1321526876

vasudevan31355
17th November 2011, 03:52 PM
http://lulzimg.com/i24/7a65f6.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002308005.jpg?t=1321524519

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002344275.jpg?t=1321524874

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002383147.jpg?t=1321524942

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002432997.jpg?t=1321525012

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_002673270.jpg?t=1321525114

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_003104301.jpg?t=1321525191

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_007220312.jpg?t=1321526586

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_003890386.jpg?t=1321525258

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_003985681.jpg?t=1321525328

vasudevan31355
17th November 2011, 04:01 PM
http://lulzimg.com/i24/104fd3.png http://lulzimg.com/i24/980405.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_004261256.jpg?t=1321525476

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ANNANORUKOVILWWWTECHSATISHNETavi_001635967.jpg?t=1 321525752

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_004182644.jpg?t=1321525416

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_005187548.jpg?t=1321525516

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_007823849.jpg?t=1321526027

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_006089983.jpg?t=1321525583

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_007220846.jpg?t=1321525642

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AnnanOruKovil1977-Uyirvanicomavi_007898924.jpg?t=1321525693


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
17th November 2011, 04:43 PM
அண்ணன் ஒரு கோவில் முழு படத்திற்கான வீடியோ லிங்க் கீழே தரப் பட்டுள்ளது.

http://www.orutube.net/videos/193/

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
17th November 2011, 05:07 PM
'பெம்புடு கொடுகு' (11-11-1953) 59-ஆவது சாதனை ஆண்டு ஆரம்பம்.

நடிகர் திலகம்.('மோகன்' பாத்திரத்தில்)

http://www.nadigarthilagamsivaji.com/Photos/MovieStills/008.jpg

http://www.mahanatisavitri.com/wp-content/themes/savitri/images/photos//telugumovies/58big.jpg

'வாஹினி' குமாரி மற்றும் ரங்கா ராவ்.

http://1.bp.blogspot.com/_BbJAArGDIEA/R-8AOK__WAI/AAAAAAAAE4E/SxuxFmPJfVM/s1600/IMG2877A.jpg

இயக்குநர் திரு. L.V பிரசாத்.

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSEP_1qXehmjtMWuqFOr1K0O4kpPWXqO hRH3IKR0hBhbZ6eH8O6Aw

நடிகர் திலகத்தின் எட்டாவது காவியமான 'பெம்புடு கொடுகு' தெலுங்கு திரைப்படத்தில் திரு. S ராஜேஸ்வர ராவ் அவர்களின் அற்புதமான இசை அமைப்பில் உருவான ஏ.எம்.ராஜா அவர்களின் அற்புத குரலில் ஒலிக்கும் "விரோத மேலன" பாடல் மற்றும் கண்டசாலா,ஜிக்கி இவர்களின் தேனினும் இனிய குரலில் மயக்கும் "மப்புலு மப்புலு" என்ற அற்புதப் பாடலுக்குமான ஆடியோ லிங்க் கீழே.

http://www.muzigle.com/album/pempudu-koduku

அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
17th November 2011, 07:33 PM
சுவாமியே சரணம் ஐயப்பா !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Ayyappa1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5044-1.jpg

கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் அன்னதானப்பிரபு ஐயப்பனுக்கு உகந்த மாதமான 'கார்த்திகை' தொடங்குகிறது இன்று (17.11.2011).

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
17th November 2011, 07:59 PM
ஓங்குக நடிகர் திலகத்தின் வான்புகழ் !
வாழ்க நல்லிதயங்களின் நற்பணி !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Aalayamani1-1.jpg

500 பக்கங்கள் எனும் மிகப் பெரிய மைல்கல்லைக் கடந்து மிகமிக வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நமது நடிகர் திலகம் திரி, நமது முரளி சார் குறிப்பிட்டது போல் 5000 பக்கங்களையும் கடந்து அசுர சாதனை படைக்கும் !

பெருமிதத்துடன்,
பம்மலார்.

pammalar
17th November 2011, 08:18 PM
சென்ற 11.11.2011 வெள்ளி முதல், கோவை மாநகரின் 'டிலைட்' திரையரங்கில், புதுமைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை", தினசரி 4 காட்சிகளாக, வெற்றிநடைபோட்டு வருகிறது !

12.11.2011 சனிக்கிழமை முதல், நெல்லை 'சென்ட்ரல்' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளில், நறுமணம் பரப்பி வருகிறது நமது நடிகர் திலகத்தின் "இரு மலர்கள்" !

தித்திக்கும் இத்தகவல்களை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இனிப்பான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th November 2011, 08:26 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

தாங்கள் அள்ளி அளித்த "சிவந்த மண்" பதிவுகள் நமது திரியை மேலும் செழிப்படையச் செய்துவிட்டது !

'பட்டத்து ராணி', மஹாராணி போல அமர்ந்திருக்கும் அற்புத போஸை அளித்து அவருக்கு அதன்மூலம் மகுடாபிஷேகமே செய்து அசத்திவிட்டீர்கள் !

"கள்வனின் காதலி", "கோடீஸ்வரன்", "அன்பைத் தேடி", "பாரம்பரியம்" : அசுராதி அசுரப் பதிவுகள் !

'முத்தாரம்' வார இதழில் வெளியான நடிகர்திலகத்தின் சத்தான பேட்டியை அளித்தமைக்கு ஸ்பெஷல் பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

"அன்னை இல்லம்" இடுகைகள் உள்ளத்தை அள்ளுகிறது !

"லக்ஷ்மி கல்யாணம்", தங்களது பதிவுகளால் களைகட்டியது !

"பரிட்சைக்கு நேரமாச்சு" புகைப்படங்கள் அருமை !

"ஊரும் உறவும்" நெடுந்தகடு வருகை செய்தி மகிழ்ச்சியளிக்கிறது !

நாங்கள் பெற்ற செல்வம் நீங்கள் என்பதனை "செல்வம்" பதிவுகள் மீண்டும் ஒருமுறை பறைசாற்றுகின்றன !

"அண்ணன் ஒரு கோயில்" ஆல்பம் அருமை !

"பெம்புடு கொடுகு" பதிவு உண்மையிலேயே பொக்கிஷம் !

இவை எல்லாவற்றையும் விஞ்சும் சிகரப்பதிவு, "அன்னை இல்லம்" காவியக்காட்சியை தாங்கள் அலசி ஆராய்ந்திருந்தவிதம் ! தங்களின் வர்ணனை அபாரம் !

தங்களுக்கு மீண்டும் எனது பாசமான பாராட்டுக்களுடன் கூடிய நெஞ்சார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th November 2011, 08:31 PM
சகோதரி சாரதா,

தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள் !

நமது நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை. அது போலவே, தங்களின் திறனாய்வுக் கட்டுரைகளை எத்தனை முறை படித்தாலும் சலிப்பதில்லை. "சிவந்த மண்" நினைவுகள் தற்பொழுது படித்தபோதும் சொல்லொணா சந்தோஷத்தை அளித்தது. இக்காவியத்தை மீண்டும் ஒருமுறை கண்டுகளித்த திருப்தி ஏற்பட்டது என்று கூறினாலும் அது மிகையன்று. "சிவந்த மண்" ரிலீஸ் மேளா சமயத்தில் இந்த அற்புதப்பதிவை மீண்டும் இங்கே இடுகை செய்தமைக்காக தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th November 2011, 08:36 PM
டியர் mr_karthik,

தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !

"சிவந்த மண்" சம்பந்தப்பட்ட அரிய ஆவணங்களை என்னால் இயன்ற அளவு அளிக்க முயற்சிக்கிறேன் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th November 2011, 08:41 PM
டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

டியர் ராகவேந்திரன் சார்,

மிக்க நன்றி !

Dear Sakalakalakalaa Vallavar,

Thanks for the DEVAR MAGAN shooting spot still !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th November 2011, 09:08 PM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

சிவந்த மண்

[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

வரலாற்று ஆவணம் : "சிவந்த மண்" படப்பிடிப்பு கட்டுரை : மூன்று பக்கங்கள்

பொம்மை : பிப்ரவரி 1969

முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SMA1-2.jpg


இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SMA2-1.jpg


மூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SMA3-1.jpg

செழிக்கும்...

பக்தியுடன்,
பம்மலார்.

kumareshanprabhu
17th November 2011, 09:25 PM
dear pammalar sir

hats off to u sir

regards
kumareshanprabhu

pammalar
18th November 2011, 12:06 AM
Dear kumareshanprabhu Sir,

Thank You Very Much !

Regards,
Pammalar.

pammalar
18th November 2011, 12:14 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

சிவந்த மண்

[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

அரிய நிழற்படம் : பொம்மை : ஏப்ரல் 1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5041-1.jpg

செழிக்கும்...

பக்தியுடன்,
பம்மலார்.

mr_karthik
18th November 2011, 11:23 AM
அன்புள்ள பம்மலார் சார்,

இதை... இதை... இதைத்தான் சார் எதிர்பார்த்தோம். 'சிவந்த மண்' படத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான காட்சிகளில் ஒன்றான 'Helecopter' காட்சியின் படப்பிடிப்பு பற்றிய பொம்மை இதழில் வந்த கட்டுரைப் பக்கங்களை அள்ளி அளித்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்து விட்டீர்கள். படம் பார்த்த பின் படிக்கும் நமக்கே இப்படி ஒரு பரவசம் ஏற்படுகிறது என்றால், படம் வெளியாகும் முன் இக்கட்டுரையைப் படித்த அந்நாளைய ரசிகப்பெருமக்களுக்கு எவ்வளவு பரவசமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கும் என்பதை உணர முடிகிறது. (பொம்மை கட்டுரையில் கதாநாயகியை வில்லன் திவானின் மகள் என்று தவறாகக் குறிப்பிட்டு விட்டனர். படம் வெளியாகும் முன் வந்த கட்டுரையாகையால், கதை பற்றி கொஞ்சம் முன்பின் இருக்கக்கூடும்).

இவ்வளவு ரிஸ்க்கான காட்சியில் தனக்கு நேரவிருந்த ஆபத்தைப்பற்றி மற்றவர்கள் சொன்னபோதும், அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், 'காட்சி நன்றாக வந்ததா?' என்று கேட்டாரே என்ன ஒரு தொழில் பக்தி நடிகர்திலகத்துக்கு.

கட்டுரையின் மூன்று முத்தான பக்கங்களையும், அடிஷனலாக 'ஒரு நாளிலே உறவானதே' பாடல் காட்சியின் பொம்மை ஸ்டில்லையும் அள்ளித்தந்தமைக்கு மிக மிக அதிகமான நன்றிகள்.

KCSHEKAR
18th November 2011, 12:06 PM
அன்புள்ள பம்மலார் சார்,

சிவந்த மண்' படத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான காட்சிகளில் ஒன்றான 'Helecopter' காட்சியின் படப்பிடிப்பு பற்றிய பொம்மை இதழில் வந்த கட்டுரைப் பக்கங்களை அள்ளி அளித்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்து விட்டீர்கள்.

இவ்வளவு ரிஸ்க்கான காட்சியில் தனக்கு நேரவிருந்த ஆபத்தைப்பற்றி மற்றவர்கள் சொன்னபோதும், அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், 'காட்சி நன்றாக வந்ததா?' என்று கேட்டாரே என்ன ஒரு தொழில் பக்தி நடிகர்திலகத்துக்கு.

கட்டுரையின் மூன்று முத்தான பக்கங்களையும், அடிஷனலாக 'ஒரு நாளிலே உறவானதே' பாடல் காட்சியின் பொம்மை ஸ்டில்லையும் அள்ளித்தந்தமைக்கு மிக மிக அதிகமான நன்றிகள்.

Thanks to Pammalar for your continuous effort to grow this Hub to this level.

Thanks to Mr.Karthik to express these words on behalf of all Sivaji Fans.

vasudevan31355
18th November 2011, 02:58 PM
அன்பு பம்மலார் சார்,

சிவந்த மண் படப்பிடிப்புக் கட்டுரையை பதிவு செய்து எங்களையெல்லாம் ஆனந்தக் கடலில் மூழ்கடித்து விட்டீர்கள். ஹெலிகாப்டரின் முன் நிற்கும் தலைவரின் இளமை துள்ளும் அந்த போஸுக்கு நொடிக்கு மூவாயிரம் ரூபாய் தரலாம். தன் தலைக்கு வந்த ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தன் தொழிலைப் பற்றி அக்கறை எடுத்துக் கொண்ட அந்த மாபெரும் கலைமேதயைப் பற்றி என்னதான் சொல்வது?...

'ஒருநாளிலே'..ஸ்டில் சிம்ப்ளி சூபர்ப்.

இரண்டு அற்புதப் பொக்கிஷங்களுக்கும் இதயபூர்வமான நன்றிகள்.

Murali Srinivas
18th November 2011, 03:25 PM
NOV had written the following post in another thread and I reverted for the same. Here it is

Originally Posted by NOV

Paar Magale Paar

Amazing how they could take a cue from everyday life, make a knot and then untie it to make a movie about it!!
Kudos to NT for taking on an arrogant, egoistic role - a role no major star then and today would want to do! At the age of 35, he played the father of Vijayakumari & Pushpalatha (for more than 90% of the movie). Amazing man.
Muthuraman, MR Radha, VK Ramasamy and the awesome Sowcar Janaki all share equal space..

Fantastic songs by the superb duo...

Aval Paranthu Ponale, Madhura Nagaril, Vetkamai Irukkuthadi, Nalam Nalam Thirunalam, Neerodum Vaikaiyile, Paar Magale Paar

One movie had all these amazing songs?


My reply

Recently during a casual conversation was talking about this film and the person with me was quoting the Paar Magale Paar song. He said though in the movie the father asks the girl to leave the house on a misunderstanding and later repents it [the song comes at that juncture], on a closer look the lyrics also reflect the mind of parents who have only daughters and the feeling during the fag end of such persons' lives are brought out so beautifully, commented he. Yes and those lines!

தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை

தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை

ஒருவராக வாழுகின்றோம் பிரிவதற்கோ இதயமில்லை

யாருமில்லை உனக்கே என்று ஓடிவிட்டாய் என் மகளே!ஓடிவிட்டாய் என் மகளே!

Kannadasan, VR and TMS!

And the man on screen holding the photo on one hand and his other hand on a conciliatory gesture going round his wife's shoulder slowly walking back from the balcony to his bed would be etched in mind for ever!

Thanks NOV for making me recollect those classic moments.

Regards

நமது நம்பர் பார்த்தசாரதி எப்போதும் சொல்லுவார் இந்த வரிகளை பார்க்கும்போதும் கேட்கும்போதும் தன்னையறியாமல் கண்களில் நீர் நிறைந்து வழியும் என்பார். முற்றிலும் உண்மை!

vasudevan31355
18th November 2011, 03:40 PM
நம் ரத்தத்தை உறைய வைத்த 'சிவந்தமண்' ஹெலிகாப்டர் காட்சிகள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivanthamannnadigarthilagamssuperactionscenevob_00 0069273.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivanthamannnadigarthilagamssuperactionscenevob_00 0128742.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivanthamannnadigarthilagamssuperactionscenevob_00 0128842.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivanthamannnadigarthilagamssuperactionscenevob_00 0129076.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivanthamannnadigarthilagamssuperactionscenevob_00 0129042.jpg

அன்பு பம்மலார் அவர்கள் பதிவிட்ட அரிய ஆவணமான "சிவந்த மண்" படப்பிடிப்பு கட்டுரையில் இடம் பெற்ற (பொம்மை இதழ்) அற்புத நிகழ்வுகளையும்,நடிகர் திலகத்தின் அற்புத கண்கொள்ளா போஸ்களில் ஜொலிக்கும் "அன்று சிந்திய ரத்தம்"வீர வசனக் காட்சிகளையும், நடிகர் திலகத்தின் தலையை சில அங்குல இடைவெளிகளில் ஹெலிகாப்டர் உரசியவாறு செல்லும் மயிர்கூச்செறியச் செய்யும் காட்சிகளையும் இப்போது ஒலி- ஒளி வடிவில் கண்டு மெய்சிலிர்க்கலாம். (பம்மலார் அவர்களுக்கு இந்த சீன் மிக மிகப் பிடிக்கும் என்பதால் அவருக்காக இந்த ஸ்பெஷல் வீடியோக் காட்சி).


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Gew4yzciSc4


அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
18th November 2011, 03:42 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Thiruvallur%20Dt%20Function/Page-1.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Thiruvallur%20Dt%20Function/Page-2.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Thiruvallur%20Dt%20Function/Page-3.jpg

vasudevan31355
18th November 2011, 04:10 PM
டியர் சந்திரசேகரன் சார்,

திருவள்ளூர் மாவட்ட நடிகர் திலக சமூகநலப் பேரவை சார்பாக 20-11-2011 அன்று அயப்பாக்கத்தில் நடைபெறவுள்ள நிழற்குடை திறப்பு விழா இனிதே சிறப்பாக நடக்க என் உளமார்ந்த வாழ்த்துக்கள். வளர்க உங்கள் நற்பணி.

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
18th November 2011, 04:27 PM
வாசுதேவன் சார்,

இன்று காலை நமது பம்மலார் அளித்திருந்த சிவந்த மண் படப்பிடிப்பின் பொம்மை கவரேஜ் பார்த்ததும், இன்று அலுவலகத்திலிருந்து வீடு சென்றதும் முதல் வேலையாக இப்படத்தின் டிவிடி-யில் இக்காட்சியைப் பார்த்தே ஆக வேண்டும் என்று நினைத்திருக்க, நீங்களோ அக்காட்சியை உடனே திரியில் பதித்து விருந்து படைத்து விட்டீர்கள். என்ன ஒரு தீர்க்கதரிசனம் மற்றும் சுறுசுறுப்பு. உங்கள் சிறப்பான தொண்டுக்கு வாழ்த்துக்கள்.

முரளி சார்,

பார் மகளே பார் படத்தின் உணர்ச்சி மிக்க ஒரு கட்டத்தை விவரித்து அசத்தி விட்டீர்கள். மிக்க நன்றி (அந்தப்பாடலையும் வீட்டுக்குப்போனதும் பார்க்க வேண்டும்).

சந்திரசேகர் சார்,

தங்கள் தலைமையிலான நடிகர்திலகம் சமூக நலப்பேரவை, சத்தமில்லாமல், பிரதியுபகாரம் பார்க்காமல் சமூக நலப்பணிகளைத் தொடர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகிறது.

நிழற்குடை திறப்பு விழா மிகச்சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்கள்.

vasudevan31355
18th November 2011, 04:29 PM
'படிக்காதவன்' படத்தில் நம் 'படிக்காத மேதை' (11-11-1985)

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=350&height=350&image=/ahtees/admin/movies/content/3608_17_Padikathavan.jpg

http://1.bp.blogspot.com/_jo1xsRVxX7o/SzXEBq6PbRI/AAAAAAAADdo/ogU80stGCyc/s1600/Padikathavan.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Padikkathavan.jpg

http://img109.imageshack.us/img109/4525/padikathavan.jpg

http://i39.tinypic.com/snjais.jpg

http://i44.tinypic.com/24lkava.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
18th November 2011, 04:57 PM
டியர் கார்த்திக் சார்,

தங்கள் உன்னதமான பாராட்டுக்கு நன்றி.

நம் எல்லோரது மனதிலும் ஒரே எண்ணங்கள்...ஒரே சிந்தனைகள்...எல்லாம் மனம் போலவே அவருடைய ஆசிகளினால் நடக்கிறது. ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் தொலைவில் ஆங்காங்கு இருக்கிறோமே என்ற ஒரு குறையைத் தவிர மனதால் அவர் மூலம் ஒன்றுபட்டுள்ளதை நினைக்கும் போது நெஞ்சம் ஆனந்தத்தால் நிறைகிறது. நன்றிகள் சார்.

அன்புடன்,
வாசுதேவன்.

Murali Srinivas
18th November 2011, 04:58 PM
சந்திரசேகர் சார்,

மிகுந்த பாராட்டுக்குரிய உங்கள் முயற்சி முழு வெற்றி பெற எனது வாழ்த்துகள். சமூக நலம் சார்ந்த உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

டிவிடி சேகரிப்பாளர்கள் கவனத்திற்கு,

இது வரை சிடியில் மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த குங்குமம் திரைக் காவியம் இப்போது டிவிடியாக வெளி வந்துள்ளது. விறபனை அமோகம். இதை தவிர, நடிகர் திலகத்தின் சொந்தப் படங்களான ரத்த பாசம், வா கண்ணா வா மற்றும் பாலாஜியின் தயாரிப்புகளான தீர்ப்பு, பந்தம், குடும்பம் ஒரு கோவில் ஆகிய படங்கள் டிவிடி வடிவில் வெளியாகியிருக்கின்றன.

அன்புடன்

vasudevan31355
18th November 2011, 05:25 PM
அன்பு முரளி சார்,

நடிகர் திலகத்தின் படங்களின் நெடுந்தகடுகள் விற்பனைக்கு வந்துள்ள விவரங்களை அளித்ததற்கு நன்றி.

பார் மகளே பார் பாடலில் இரு வரிகளில் நடிகர் திலகத்தின் நடிப்பை அற்புதமாக சொல்லியிருந்தீர்கள். மிகவும் ரசித்தேன். நன்றி. Nov சார் ரசனைக்கும் என் பாராட்டுக்கள்.

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
18th November 2011, 06:31 PM
நடிகர் திலகம் சிவாஜி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அயப்பாக்கம் பேருந்து நிறுத்த நிழற்குடை திறப்பு விழா சிறப்புற நடைபெற உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். இதற்காக உழைத்த திரு அம்பத்தூர் வெங்கடேசன் அவர்களுக்கும் சந்திரசேகர் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

vasudevan31355
18th November 2011, 08:58 PM
சொர்க்கம்" 42வது ஆண்டு நினைவுப் பதிவுகள். (தொடர்கிறது)....

http://shotpix.com/images/22953786250411971472.jpg

http://shotpix.com/images/32844656686311221114.jpg

http://i36.tinypic.com/dzbi47.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/i98471_sorgam5.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/i98472_sorgam4.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/i98468_sorgam8.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/i98469_sorgam7.png

நிறைகிறது.

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
18th November 2011, 10:04 PM
He loved life. He watched and wrote about films, admired Sivaji Ganesan and Ingmar Bergman. He recited poetry - Bharati's as well as Iqbal's, Dickinson as well as Neruda. He sang songs: songs of passion by Kannadasan, and ones of romance by Mohammad Rafi and Talat Mehmud. He spoke several languages; he understood the proletarian as well as the plebian. Everything interested him: good food, great art and literature, Sufi music, the Great Wall of China as well as the Redwood forest, and of course, cricket.

http://www.truth-out.org/sites/default/files/111711sri.jpg

... These are about Sri Raman, Journalist, who passed away recently.

... from the page at http://www.truth-out.org/purpose-driven-life-has-ended-j-sri-ramans-purposes-drive/1321554256

... This clearly indicates the reach NT has throughout the globe...

selva7
19th November 2011, 12:43 AM
தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பு தொடர்பான வீடியோ சமீபத்தில் காணக் கிடைத்தது.


http://www.youtube.com/watch?v=qrDBrcLpQQc

vasudevan31355
19th November 2011, 06:51 AM
தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை

தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை

ஒருவராக வாழுகின்றோம் பிரிவதற்கோ இதயமில்லை

யாருமில்லை உனக்கே என்று ஓடிவிட்டாய் என் மகளே!ஓடிவிட்டாய் என் மகளே!

முரளி சாரும், NOV சாரும் அழகாக ரசித்து எழுதிய பின்னால் விட்டு விட முடியுமா?... அதனால் தான்....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dQIoI8EnmOY


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
19th November 2011, 11:01 AM
இன்று 19-11-2011 'அன்னை' இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாள்.

http://bp2.blogger.com/_flfvbxESWP4/SFU97g5JT9I/AAAAAAAAADE/mjDevTpMYh8/s320/Political+leaders+with+cine+leader+Mr.Shivaji+Gane san.gif

http://farm3.static.flickr.com/2548/3760950685_fe54774e6d.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
19th November 2011, 12:11 PM
தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈந்து எந்த இயக்கத்தினைப் பேணிக் காத்தாரோ அந்த இயக்கம் அவரை சரியாக பயன் படுத்திக் கொள்ளாமல் தமிழ் நாட்டைக் கோட்டை விட்டது. ஆனால் தாயாக இருந்து இறுதி வரை நடிகர் திலகத்தின் செல்வாக்கையும் மக்கள் ஆதரவையும் சரியாகக் கணித்து அவர் ஒரு பொன் முட்டையிடும் வாத்து என்பதைப் புரிந்து அவரைப் பேணிப் பாதுகாத்த ஒரே தலைவி அன்னை இந்திரா காந்தி மட்டும் தான். நடிகர் திலகத்திற்குப் பிறகு இன்று வரை காங்கிரஸ் தமிழ்நாட்டில் தேய் பிறையை மட்டும் தான் கண்டு வருகிறது என்பதே இதற்குச் சாட்சி. அப்படிப்பட்ட தலைவியின் பிறந்த நாளில் அவரைப் போற்றுவதில் பெருமை கொள்வோம்.

vasudevan31355
19th November 2011, 12:16 PM
டியர் செல்வா சார் ,

கிடைத்தற்கரிய தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பு தொடர்பான அரிய வீடியோகாட்சியை அளித்தமைக்கு நன்றி. தலைவர் டச்-அப் செய்து கொள்வது கொள்வது சூப்பர்.

அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
19th November 2011, 03:57 PM
டியர் சந்திரசேகரன் சார்,

திருவள்ளூர் மாவட்ட சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் நடைபெறும் நடிகர் திலகத்தின் 84வது பிறந்தநாள் நிழற்குடை திறப்பு விழா இனிதே நடைபெற இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் !

இந்நிழற்குடை அமைவதற்கு பெருமுயற்சிகளை மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட சிவாஜி பேரவைத் தலைவர் திரு.கே.வெங்கடேசன் அவர்களுக்கும், சிவாஜி பேரவையின் மாநிலத் தலைவரான தங்களுக்கும், மனமார்ந்த பாராட்டுக்களுடன் கூடிய கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
19th November 2011, 04:39 PM
திரு.வாசுதேவன், திரு.கார்த்திக், திரு.முரளி, திரு.பம்மலார், திரு.ராகவேந்திரன் சார்,

தங்களின் அன்பான பாராட்டு / வாழ்த்துக்களுக்கு என்னுடைய பணிவான நன்றிகள்.

இத்தகைய பணிகளை மேற்கொள்வதற்கு, தன்னலம் கருதாது, நடிகர்திலகத்தின் புகழ் பரப்புவதை மட்டுமே தலையாய கடமையாகக் கொண்டு என்னுடன் பணியாற்றும் ரசிக இதயங்கள் மற்றும் இப்பணிகளை ஊக்கப்படுத்தும் தங்களைப் போன்ற அன்பு நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

திரு.வாசுதேவன் அவர்கள் குறிபிட்டதைப் போல,
"நம் எல்லோரது மனதிலும் ஒரே எண்ணங்கள்...ஒரே சிந்தனைகள்...எல்லாம் மனம் போலவே அவருடைய ஆசிகளினால் நடக்கிறது. ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் தொலைவில் ஆங்காங்கு இருக்கிறோமே என்ற ஒரு குறையைத் தவிர மனதால் அவர் மூலம் ஒன்றுபட்டுள்ளதை நினைக்கும் போது நெஞ்சம் ஆனந்தத்தால் நிறைகிறது".

மீண்டும் நன்றி!

KCSHEKAR
19th November 2011, 04:45 PM
டியர் செல்வா சார் ,

தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பு அரிய வீடியோகாட்சி பதிவிட்டமைக்கு நன்றி.

pammalar
19th November 2011, 07:13 PM
டியர் mr_karthik,

தங்களின் உயர்வான பாராட்டுக்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள் !

டியர் சந்திரசேகரன் சார்,

தங்களது மனமுவந்த பாராட்டுக்களுக்கு எனது மகிழ்வான நன்றிகள் !

டியர் வாசுதேவன் சார்,

தாங்கள் வழங்கிய பாசமான பாராட்டுக்களுக்கு எனது பசுமையான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th November 2011, 07:23 PM
டியர் selva7,

"தில்லானா மோகனாம்பாள்" படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட மிகமிக அரியதொரு வீடியோவை இங்கே இடுகை செய்தமைக்கு தங்களுக்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th November 2011, 07:34 PM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

சிவந்த மண்

[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

"சிவந்த மண்" திரைக்காவியத்தின் தயாரிப்பாளர்-இயக்குனர் ஸ்ரீதர்
'பொம்மை' மாத இதழுக்கு அளித்த பொன்னான பேட்டி

வரலாற்று ஆவணம் : பொம்மை : நவம்பர் 1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5042-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5043-1.jpg

செழிக்கும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
19th November 2011, 08:08 PM
டியர் வாசுதேவன் சார்,

எனக்கு மிகவும் விருப்பமான "சிவந்த மண்" காவியத்தின் 'அன்று சிந்திய ரத்தம்' வீரவசனக் காட்சியையும், இரத்தத்தை உறைய வைக்கும் ஹெலிகாப்டர் காட்சியையும் வீடியோவாகத் தந்து வியப்பிலாழ்த்திவிட்டீர்கள் ! தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் !

"படிக்காதவன்", "சொர்க்கம்" ஆல்பங்கள் வழக்கம் போல் அருமை !

Mr.NOV மற்றும் முரளி சாரின் அற்புத எழுத்தில் மேலும் பளிச்சிட்ட 'பார் மகளே பார்' பாடலை தாங்கள் வீடியோவாக அளித்து மென்மேலும் பளபளக்கச் செய்துவிட்டீர்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th November 2011, 11:01 PM
19.11.2011
முன்னாள் பிரதமர் அமரர் இந்திரா காந்தி அவர்களின் 95வது பிறந்த தினம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/indira-gandhi.jpg

'பிரதமர் இந்திரா காந்தியின் கரங்களை வலுப்படுத்துவோம்' என முழங்கும்
"உனக்காக நான்" விளம்பரம்

வரலாற்று ஆவணம் : தினத்தந்தி : 15.2.1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5067-1.jpg

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

vasudevan31355
19th November 2011, 11:11 PM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் வாழ்த்துதல்களுக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

"சிவந்த மண்" திரைக்காவியத்தின் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் பொம்மை இதழுக்கு அளித்த பேட்டி மிகவும் அருமை. தன் தாயாரின் இறுதிச் சடங்கில் கூட கலந்துகொள்ளமுடியாத துர்பாக்கிய சூழ்நிலையிலும் கூட தன் தொழில் மீது ஸ்ரீதர் வைத்திருந்த பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. இப்படிப்பட்ட தொழில் மீது அக்கறை கொண்ட நல்ல இயக்குனர் இருந்ததால் தான் "சிவந்தமண்" இந்த மண் உள்ளவரை பேசப்படும் படமாய் அமைந்தது..

பாரதத்தின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம் என்ற 'உனக்காக நான்' பட விளம்பர கட்டிங் தலைவர் காங்கிரசின் மீது எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இப்படிப்பட்ட அரிய ஆவணங்களை அள்ளித் தரும் தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
19th November 2011, 11:44 PM
டியர் வாசுதேவன் சார்,
சிவந்த மண் ஹெலிகாப்டர் காட்சியை அளித்து நம்மையெல்லாம் சந்தோஷத்தில் ஹெலிகாப்டரில் பறக்க வைத்து விட்டீர்கள். நன்றி ...

பம்மலார்,
ஆவணத்திலகம் என்பதற்கு மேலும் ஒரு அத்தாட்சியாக உனக்காக நான் பட விளம்பரம் கட்டியம் கூறுகிறது. பாராட்டுக்கள்.

நேற்று 18.11.11 தேதியிட்ட தினமலரில் திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களின் நேர்காணல் வெளிவந்துள்ளது. இதிலும் அவர் நடிகர் திலகத்தையும் மெல்லிசை மன்னரையும் குறிப்பிடத் தவறவில்லை. அந்தப் பேட்டி தங்கள் பார்வைக்கு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/misc/ygmdinamalarwriteup181111B.jpg

RAGHAVENDRA
19th November 2011, 11:58 PM
அன்பு நண்பர்களுக்கும் மெல்லிசை மன்னர்களின் ரசிகர்களுக்கும் ..

நமது சகோதர இணைய தளமும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களுக்கான அதிகார பூர்வமான இணைய தளமான www.msvtimes.com, தனது 5வது ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ளது. இவ்விழாவில் 50 மற்றும் 60 களில் அவருடைய இசைக்குழுவில் ட்ராம்போன் வாசித்த திரு ரோஸாரியோ அவர்கள் கௌரவிக்கப் படுகிறார். இதற்கு முன் நடைபெற்ற ஆண்டு விழாவில் கிடார் இசைக் கலைஞர் திரு பிலிப்ஸ் அவர்கள் கௌரவிக்கப் பட்டார். இந்த இணைய தளத்தின் சார்பில் ஆண்டு தோறும் அவருடைய இசைக் குழுவில் பணியாற்றிய மூத்த இசைக் கலைஞர்கள் கௌரவிக்கப் பட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு எதிர் வரும் நவம்பர் 26 சனிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் சித்திரக் குளம் அருகில், சுந்தரேஸ்வரர் தெருவில் ஆர்.ஆர். சபா எதிரில் உள்ள லேடி சிவஸ்வாமி ஐயர் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஆர்.கே.ஸ்வாமி அரங்கில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் பங்கேற்கிறார். அவர் இசையமைத்த பாடல்களில் அபூர்வமான சிலவற்றை சாவித்திரி ராகமாலிகா இசைக்குழுவினர் வழங்குகின்றனர்.

அனைவரும் வருக.

அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
20th November 2011, 12:01 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களது இதயபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள் !

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th November 2011, 12:10 AM
"பார்த்தால் பசி தீரும்(1962)" : நடிகர் திலகத்துடன் காதல் மன்னன்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTKM2a-1.jpg

17.11.2011 : காதல் மன்னன் அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் 92வது பிறந்த தினம்.

அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

vasudevan31355
20th November 2011, 07:46 AM
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் 92வது பிறந்த தினம்.(மிக அரிய நிழற்படங்கள்).

'ஹாக்கி' விளையாடும் அன்பு நண்பர்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/10e3gye_2.jpg

'காதல் மன்னன்' மற்றும் சக கலைஞர்களுடன் 'நடிக மன்னர்'.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/allgreat.jpg

'உனக்காக நான்' திரைப்படத்தில் நட்புக்கு இலக்கணமான இரு கணேசர்களும்..(ராமு...ஐ லவ் யூ... ராஜா. ...ஐ லவ் யூ.)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=CFj4Tb9KEYw


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
20th November 2011, 09:24 AM
Our fellow hubber Sri Mohan Raman Sir's write up on Devar Magan, that appeared in Malligai Magal November 2011 issue and posted in the facebook.

http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/s720x720/309817_257597180956953_124832310900108_672833_2665 5606_n.jpg

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/s720x720/375645_257597430956928_124832310900108_672834_6425 7170_n.jpg

sakaLAKALAKAlaa Vallavar
20th November 2011, 09:33 AM
http://www.youtube.com/watch?v=qrDBrcLpQQc&feature=share

Film industry in Madras, 1968, from Louis Malle's documentary, Choses Vues A Madras

Already posted?!

mr_karthik
20th November 2011, 10:35 AM
அன்புள்ள பம்மலார் சார்,

சிவந்த மண்ணின் சிறப்புகள் பற்றி அதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ஸ்ரீதர் அவர்கள் 'பொம்மை' இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் பக்கங்களான, கிடைத்தற்கரிய ஆவணப்பதிவை அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். முழுவதும் மகிழ முடியாதபடி, ஸ்ரீதர் அவர்கள், பெற்ற தாயின் இறுதிச்சடங்கில் கூட கலந்துகொள்ள முடியாத நிலையில் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்திய சம்பவம் மனதை நெகிழ வைத்தது. படத்தின் தரத்தையும், அது உருவாக எல்லோரும் பட்ட சிரமங்களையும் பார்க்கும்போது, அப்படம் இன்னும் பல இடங்களில் 100 நாட்களையும், வெள்ளிவிழாவையும் கண்டிருக்க வேண்டிய படம் என்று தோன்றுகிறது.

உனக்காக நான் விளம்பரப்பதிவும் மிக அருமை. ஆவணப்பதிவுகளுக்கு மிக்க நன்றி.

அன்புள்ள ராகவேந்தர் சார்,

ஒய்.ஜி.மகேந்திரன் சார், மோகன்ராம் சார் ஆகியோரின் பேட்டியின் பக்கங்களை பதிவேற்றியமைக்கும், மெல்லிசை மன்னரின் இணையதள ஆண்டுவிழா பற்றிய தகவலுக்கும் மிக்க நன்றி.

vasudevan31355
20th November 2011, 02:05 PM
'சிவந்த மண்' சிறப்பு போனஸ் அரிய புகைப்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan119-1-2.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th November 2011, 02:16 PM
"கண்கள்' அரிய சிறப்பு புகைப்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan137-3.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
20th November 2011, 08:17 PM
21.11.2011 அன்று பிறந்தநாள் காணும் நடிகர் திலகத்தின் ரசிகமாமணி, பக்தசிரோன்மணி, நிழற்படத்திலகம், வீடியோ வித்தகர், திறனாய்வுச் செம்மல் திரு.நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

அருமைச் சகோதரர் வாசுதேவன் அவர்கள் வாழ்வில் மென்மேலும் எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று தீர்க்காயுளுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்ந்து இதயதெய்வத்திற்கு இன்று போல் என்றென்றும் திருத்தொண்டு புரிய எனது தீர்க்கமான வாழ்த்துக்கள் !

அவரது குடும்பம், அவரது தொழில், அவர் ஆற்றும் நற்பணிகள் அனைத்தும் தழைத்து செழித்தோங்க எனது சிறப்பான நல்வாழ்த்துக்கள் !

கலைக்குரிசிலின் திரைக்காவியக்களஞ்சியம் திரு.வாசுதேவன் அவர்களுக்கு எல்லாம் கைகூடிவர இறையருளும், இதயதெய்வத்தின் அருளும் இன்று போல் என்றும் துணை நிற்கும் !

முத்தான மூன்று புகைப்படங்கள் தங்களுக்காக...
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTBirthday1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTFamily1-1-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AA1-1.jpg
[முக்கனி போல் இனிக்கும் இம்மூன்று புகைப்படங்களும் தங்களுக்கு எனது பிறந்தநாள் பரிசு]

Dear Vasu Sir, Once Again,
A Very Very Happy Birthday To You ! &
Many Many More Happy Returns !

பாசப்பெருக்கில்,
உங்கள் பம்மலார்.

RAGHAVENDRA
20th November 2011, 10:19 PM
டியர் வாசுதேவன் சார்,
தங்களுக்கு பம்மலார் கொடுத்த பரிசை விட சிறப்பான பரிசு வேறு யாரால் தர முடியுமா என்பது ஐயமே.
இருந்தாலும் தங்களுக்காக இந்தப் பாடல் பிறந்த நாள் பரிசாக...


http://www.youtube.com/watch?v=dW7gHxvaibo

தாங்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

Murali Srinivas
20th November 2011, 11:09 PM
1961-ம் ஆண்டின் சிறப்புகளாய் பலவற்றையும் அந்த சிறப்புகள் பொன்விழாவை நிறைவு செய்யும் இந்த 2011-ல் நாம் கண்டோம், வாழ்த்தினோம்.

1961-ல் தொடங்கப்பட்ட சாந்தி அரங்கம் பொன்விழாவை இந்த 2011-ல் நிறைவு செய்தது. வாழ்த்தினோம்

1961-ல் வெளியான பாவ மன்னிப்பு தன் பொன்விழாவை இந்த 2011-ல் நிறைவு செய்தது. வாழ்த்தினோம்.

1961-ல் வெளியான பாசமலர் தன் பொன்விழாவை இந்த 2011-ல் நிறைவு செய்தது. வாழ்த்தினோம்.

1961-ல் வெளியான பாலும் பழமும் தன் பொன்விழாவை இந்த 2011-ல் நிறைவு செய்தது. வாழ்த்தினோம்.

1961-ல் வெளியான கப்பலோட்டிய தமிழன் தன் பொன்விழாவை இந்த 2011-ல் நிறைவு செய்தது. வாழ்த்தினோம்.

இது தவிர,

1961-ல் வெளியான புனர் ஜென்மம், எல்லாம் உனக்காக, ஸ்ரீவள்ளி மற்றும் மருத நாட்டு வீரன் போன்ற படங்கள் தங்கள் பொன்விழாவை இந்த 2011-ல் நிறைவு செய்தன. வாழ்த்தினோம்.

தங்க சுரங்கத்திற்கும் இது பொன் விழா நிறைவு ஆண்டாமே? வாழ்த்த வேண்டாமா?

உடனே எப்படி என்ற கேள்வி எழ வேண்டாம். நான் இங்கே குறிப்பிடுவது ஈ.வி.ஆர். பிக்சர்ஸ் தங்க சுரங்கம் அல்ல. நமது நடிகர் திலகம் எனும் நடிப்பு சுரங்கத்தில் மனதை பறி கொடுத்த லட்சக்கணக்கான மனிதர்களை உள்ளடக்கிய ரசிக சுரங்கத்தில் ஒரு தங்க சுரங்கம். ஆம் 1961-ல் பிறந்து இன்றைய நாளில் அகவை ஐம்பதை நிறைவு செய்து பொன்விழா காணும் வாசுதேவன்தான் அது.

நெய்வேலியின் பழுப்பு நிலக்கரி சுரங்கத்திற்கு நடுவில் ஒளி வீசும் வாசுதேவன் அவர்களே! உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! நீங்கள் வாழ்க்கையில் மேலும் பல ஏற்றங்கள் பெற வேண்டும் என மனமார வேண்டி வாழ்த்துகிறேன்.

அன்புடன்

ps: 31355 என்பது வாசுதேவன் சாரின் பிறந்த நாள் அல்ல!

Subramaniam Ramajayam
21st November 2011, 04:23 AM
Many many Happy returns of the day mr vasudevan GOD BLESS YOU good health and wealth.
ENENDRUM NT WLL GUDE US TO RGHT ATH.
RAMAJAYAM

vasudevan31355
21st November 2011, 08:27 AM
அன்பு பம்மலார் சார்,

முக்கனிகளை ஒன்றாகச் சேர்த்து ,அதை அன்பு எனும் தேனில் ஊறவைத்து ,பிறந்த நாள் நல்வாழ்த்து எனும் தெவிட்டாத தேனமுதை சகோதர பாசத்தோடு நல்விருந்தாகப் படைத்து ,ஆனந்தத்தால் கண்ணீர்ப் பெருக்கெடுக்க வைத்து, நெஞ்சமெல்லாம் நிறையச் செய்து விட்டீர்கள். நமது இதயதெய்வத்தின் அட்டகாசமான பிறந்த நாள் கேக் வெட்டும் புகைப்படத்தையும் , தன் ஆருயித் தாயாரும், அருமைத் தாரமும் அருகில் அமர்ந்திருக்க நடிகர் திலகம் ஆனந்தமாய் அவர்களோடு அளவளாவும் புகைப்படத்தையும், இளமை கொலுவிருக்கும் இளம்தென்றலாய் நடிகர் திலகம் அழகுற அம்சமாய் காட்சியளிக்கும் அற்புத வண்ணப் புகைப்படத்தையும் விலைமதிக்க முடியாத பிறந்தநாள் பரிசாக அளித்து அன்புமழை பொழிந்துவிட்டீர்கள்.

நடிகர்திலகம், அவர்தம் துணைவியார் திருமதி கமலா அம்மாள் அவர்கள், நடிகர் திலகத்தின் அன்புத் தாயார் மூவரும் நேரிலே வந்து வாழ்த்தியதாகவே உணருகிறேன். இந்த அற்புதப் பொக்கிஷங்களை இதயம் போலப் போற்றிப் பாதுகாத்துக் கொள்வேன். தங்கள் எல்லையில்லா அன்புக்கு மறுபடி மறுபடி என்னுடைய கோடானு கோடி நன்றிகளை காணிக்கை ஆக்குகிறேன். நடிக தெய்வத்தின் திருவருள் பெற்ற தங்களால் அடியேன் வாழ்த்தப் பெற்றது என்னுடய பாக்கியம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan140-1-1.jpg

வித்தைகளுக்கு அதிபதியான எங்கள் அன்பு பம்மலார் அவர்களே! நம் 'வித்யாபதி' மூலம் தங்களுக்கு என் ஆயுட்கால நன்றி!

பாசமான நன்றிகளுடன்,

இதய தெய்வத்தின் புகழ் பரப்பும் அணில்,
வாசுதேவன்.

vasudevan31355
21st November 2011, 09:07 AM
அன்பு 'ரசிகவேந்தர்' ராகவேந்திரன் சார்,

நடிகர் திலகம் உறவு எனும் வானத்திலே வட்டமிட்டு சந்தோஷமாகப் பறந்துகொண்டிருக்கும் சுதந்திரப் பறவைகளாய் நாம் அனைவரும் இருக்கிறோம். இந்த சிறு பறவையின் உள்ளத்தோட்டத்தில் வாழ்த்துமலர்களை வீடியோ தொகுப்பாகத் தூவி பிறந்த நாள் ஆசி வழங்கியதற்கு என் சிரம் தாழ்ந்த பணிவான நன்றிதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். கண்கள் என்னும் சோலையிலே தென்றலாகவும், கருணை என்னும் கோவிலில் தெய்வமாகவும் விளங்கும் நம் தெய்வமகனின் ஆசிகளாகவே தங்களின் உளமுவந்த ஆசிகளை நினைத்துக் கொள்கிறேன். தங்கள் அன்புக்கு என்றும் கடமைப்பட்டவனாவேன். நன்றி!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=MjnkmNyArNg

தங்களுக்கு மிகவும் பிடித்த 'சுமதி என் சுந்தரி' தலைவர் ஸ்டில்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/R-3.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
21st November 2011, 09:56 AM
முத்தான முரளி சார்,

'பாசமலராய்' 'பாலும் பழமும்' தந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி, 'கப்பலோட்டிய தமிழனுக்கு' அக்காவியத்தின் மூலம் கிடைத்த மன 'சாந்தி'யை இந்த பிறந்த நாளன்று கிடைக்கச் செய்து, திரையுலகிற்கு 'புனர் ஜென்மம்' அளித்த சிம்மக் குரலோனின் நினைவாகவே 'எல்லாம் உனக்காக' என்று வாழும் நம் கூட்டுக் குடும்பத்தின் அன்பு சகோதரரே! எங்கள் அன்பு முரளி அண்ணாவே! தங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளுக்கும், ஈடு இணையற்ற அன்புக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்.

தங்களுக்கு என் அன்புப் பரிசு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan125-2.jpg


அன்பு சகோதரன் ,
வாசுதேவன்.

vasudevan31355
21st November 2011, 11:12 AM
அன்பு சுப்பிரமணியம் ராமஜெயம் சார்,

தங்கள் அன்பு வாழ்த்துதல்களுக்கு என் பணிவான நன்றிகள்.தங்களை போன்ற அன்பு உள்ளங்களின் வாழ்த்துக்கள் தென்றலாய் மனதை வருடுகின்றன.

http://www.timescontent.com/tss/photos/preview/23606/Nadigar%20Thilagam%20Sivaji%20Ganesan.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
21st November 2011, 11:40 AM
அயல் நாடான வியட்நாமில் இருந்தாலும் நடிகர் திலகத்தின் மீது கொண்ட பேரன்பால் தொலைபேசியின் வழியாக பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அன்புச் சகோதரரும், நடிகர் திலகம் சமூகநலப் பேரவைத் தலைவர் திரு.சந்திர சேகர் அவர்களின் அன்பு நண்பரும், நமது திரியை இடைவிடாமல் பார்த்து ரசித்து இன்புறும் நடிகர் திலகத்தின் தீவிர பக்தருமான திரு.கோபால் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வியட்நாம் கோபால் சாருக்காக இந்த 'புதியபறவை' கோபால்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-111585.jpg?t=1321855804


அன்புடன்,
வாசுதேவன்.

kumareshanprabhu
21st November 2011, 11:41 AM
hi vasu

many more happy returns of the day

vasudevan31355
21st November 2011, 11:57 AM
அன்பு குமரேசன் சார்,

தங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கு என் கைகூப்பிய நன்றி!

தங்களுக்காக என் சிறிய அன்புப் பரிசு.

http://reviews.in.88db.com/images/Sivaji-Ganesan-83rd-Birthday/Prabhu-Sivaji-Ganesan-83rd-Birthday-Celebration-pic.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

Kadhir Vel
21st November 2011, 12:05 PM
" A world class actor who remained a regional star" ... Sivaji Ganesan. Pic. by Kadhirvell

mr_karthik
21st November 2011, 12:15 PM
இன்று பொன்விழா நிறைவைக்காணும் (தகவல் உபயம் : முரளி சார்) அன்புச்சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

1961-ல் நடிகர்திலகத்தின் பல வைர மணிகள் தோன்றியபோதுதான், அவர் புகழ்பாடும் இந்த வைடூரியமும் தோன்றியது என்ற உண்மை மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

வாழ்வில் ஐம்பதாண்டுகளை நிறைவு செய்வதென்பது சாதனையின் ஒரு அத்தியாயம். அடுத்த பெரிய அத்தியாயமான 100-வது பிறந்த நாள் நிறைவையும் அவர் கொண்டாட வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல, எல்லோருக்கும் பொதுவான அந்த இறைவன் அருள்புரிய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

vasudevan31355
21st November 2011, 12:21 PM
வருக! வருக!

http://3.bp.blogspot.com/-A8yxtheZUeo/TdaK5xlWuOI/AAAAAAAADfo/NOKsT2_cxTk/s320/Sivaji+Ganesan+%252812%2529.jpg

நமது திரியின் புதுவரவாக வந்து முதல் பதிவையே முத்தான பதிவாய் அதுவும் வித்தியாசமான பதிவாய் தந்து கலக்கியிருக்கும் திரு,கதிர்வேலு சார் அவர்களே வருக! வருக! இன்ப மழைதனில் நனைக! நனைக!

அன்புடன் வரவேற்கும்,
வாசுதேவன்.

vasudevan31355
21st November 2011, 12:40 PM
அன்பு கார்த்திக் சார்,

மணிமகுடமான தங்களது பிறந்த நாள் பாராட்டு உண்மையிலேயே நெஞ்சு நெகிழச் செய்கிறது. தங்கள் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து வரும் உணர்வுபூர்வமான வாழ்த்துதல்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. கண்களில் பெருகும் ஆனந்தக் கண்ணீர் தங்களது உன்னத வாழ்த்துக்களினால் வந்தது.

தங்களுக்காக ஒரு சிறு காணிக்கை.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/R-4.jpg

நெஞ்சு நிறைய நன்றிகளுடன்,
அன்பு வாசுதேவன்.

parthasarathy
21st November 2011, 12:41 PM
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

இன்று பொன் விழா காணும் தங்களுக்கு, எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
21st November 2011, 01:01 PM
திரு. முரளி அவர்கள் குறிப்பிட்ட "பார் மகளே பார்" பாடல் ஒரு அற்புதமான உணர்ச்சிக் குவியல்.

எல்லோருக்கும் தெரிந்தது தான்.

கலைஞன் என்பவன் சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களைத் / நிகழ்வுகளைத் தன்னுடைய படைப்பின் மூலம் எடுத்துச் சொல்பவன். அப்படிச் சொல்லும்போது, அவன் சார்ந்த சமூகம் மற்றும் அந்தப் படைப்பு யாருக்காகவோ (target audience ), அவர்களுடைய சமூகம் மற்றும் கலாசாரத்தையும் அவன் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில், ஒரு கலைஞனாக, நடிகர் திலகம் அவர்கள் உலகம் உள்ளளவும் தாய்த் தமிழ் உள்ளளவும், தமிழ்க் கலாச்சாரத்தின் முதல் பிரதிநிதியாக திரை மற்றும் நாடக இலக்கியங்களின் மூலமாக என்றென்றும் திகழ்வார் என்பதில் இரு வேறு கருத்துக்கு என்றுமே இடமில்லை. மேலும், பொதுவாக, உலகில் இது வரை வந்த எந்த மொழிப் படங்களை விடவும், சமூகச் சித்திரங்களின் மூலமாக ஒரு மனிதன், பிறந்து அடங்கும் வரை அவன் அனுபவிக்கும் அத்தனை விஷயங்களையும், தமிழில், நடிகர் திலகம் தொட்ட அளவுக்கு, வேறு ஒருவரும் தொட்டதில்லை. என்ன தான் பணத்திமிர் பிடித்தவனாக இருந்தாலும், பாசம் என்று வந்து விட்டால், எப்பேர்ப்பட்ட மமதை பிடித்தவனும், உடனே இளகி விடுவான் என்பதற்கு இந்தப்படம் ஒரு அற்புத உதாரணம். ஒரு மனிதனின் வாழ்க்கையில், கடைசி காலத்தில், அவனுக்கு ஆறுதலாய் அமைவது அவனது தாரம் தான் என்பதை நெகிழ்ச்சியுடன் காட்சிப்படுத்திய பாடல், மற்றும் படம். அது வரை மனைவி (சௌகாரை) உதாசீனம் செய்பவர், இனி எனக்கு நீயும், உனக்கு நானும் தான், என்பதை எவ்வளவு இயற்கையாக, அதே சமயம், சரளமாகக் காண்பிக்கிறார்.

உலகின் தன்னிகரற்றக் கலைஞன் வாழ்ந்த (இன்னும் வாழும்) நாட்டில், நாமும் பிறந்தோம் என்பதை நினைத்தாலே, மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
21st November 2011, 01:03 PM
அன்பு பார்த்தசாரதி சார்,

பண்போடும்,அன்போடும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறும் தங்களுக்கு என் பணிவான மகிழ்ச்சி நிறைந்த நன்றிகள்.

தங்கள் அன்பு உள்ளத்திற்கு அடியேனின் அன்புப் பரிசு.

http://www.freewebs.com/pammalar/Raja1.jpg



அன்புடன்,
வாசுதேவன்.

sankara1970
21st November 2011, 03:30 PM
Thiru Vasudevan avarkalukku,

Iniya Piranthanal Vazthukkal

Nadigar Thilagam pugaz padum ungal payanam thodara vendum endru vazthukirom.

u have taken our thread to new heights.

KCSHEKAR
21st November 2011, 03:42 PM
திரு.வாசுதேவன் சார், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த பொன்விழாவில், முரளி சார் குறிப்பிட்டுள்ளதோடு - 1961-ஆம் ஆண்டின் இன்னொரு சிறப்பான தாங்கள், வாழ்வும் பொன் போல ஜொலிக்க கலை தெய்வம் நடிகர்திலகத்தின் ஆசி தங்களுக்கு என்றும் உண்டு.

KCSHEKAR
21st November 2011, 04:02 PM
20-11-2011 அன்று திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் இனிதே நடைபெற்ற விழாவின் சில புகைப்படங்கள்:

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Thiruvallur%20District%20Function/BusShelterKalvettu-1.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Thiruvallur%20District%20Function/PeravaiKalvettuwithNTPhoto.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Thiruvallur%20District%20Function/BusShelterOpening1.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Thiruvallur%20District%20Function/GroupPhoto1withBusShelter.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Thiruvallur%20District%20Function/ShawltoVenkatesan.jpg

sankara1970
21st November 2011, 04:03 PM
rarest of rare photos, Thank u Pammalar Sir

kumareshanprabhu
21st November 2011, 04:25 PM
Dear ALL

LET ME INTRODUCE Mr. Kadirvel to this hub he is diehard fan of our NT

REGARDS
KUMARESHAN PRABHU

KCSHEKAR
21st November 2011, 04:49 PM
திரு. பம்மலார் அவர்களே, சிவந்தமண் - பொம்மை இதழ் பொக்கிஷப் பேட்டி அருமை. உனக்காக நான் - விளம்பரம் சரியான நேரத்தில் பதிவிட்டு அசத்தியுள்ளீர்கள் - ந்ன்றி.

goldstar
21st November 2011, 05:43 PM
Dear Vasudevan,

Wish you many more happy days...

Cheers,
Sathish

vasudevan31355
21st November 2011, 05:46 PM
அன்பு sankara1970 சார்,

உங்கள் இதயம் கனிந்த இமாலய வாழ்த்துக்கு நன்றி. நடிகர் திலகத்தின் பல லட்சக் கணக்கான புகழ் பாடும் குயில்களில் தங்களைப் போல நானும் ஒருவன் என்பதில் பெருமையும் உவகையும் கொள்கிறேன். உங்கள் அன்பு உள்ளத்திற்கு பணிவன்போடு தலை வணங்குகிறேன். நன்றி! சங்கரரின் பெயர் கொண்ட உங்களுக்கு நம் சங்கரரின் அருளாசி எப்போதும் உண்டு.

http://www.freewebs.com/pammalar/Sivan1.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
21st November 2011, 06:19 PM
Dear Kathirvelu,
Welcome to the biggest family of NT Fans...
Share your nostalgia with us...

Please also let us know about you like your place of residence, how u became NT fan ... if can, your age...

Welcome once again

vasudevan31355
21st November 2011, 06:28 PM
அன்பு சந்திரசேகரன் சார்,

எங்கள் வாழ்வு பொன் போல ஜொலிக்க வாழ்த்தும் தாங்கள் சந்தடி இல்லாத நற்பணி நாயகராக என்றென்றும் வைரம் போல ஜொலிக்கிறீர்கள். தங்கள் உன்னதமான வாழ்த்துக்கு உயரிய நன்றிகள். தங்கள் உயர்ந்த நற்பணி சேவைகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

உங்கள் நற்பணிகளுக்காக உங்கள் பெயரை செல்லமாக அழைத்து நடிகர் திலகம் உங்களை வாழ்த்துவதைப் பாருங்கள்...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=OD9Noko8b8I


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
21st November 2011, 07:11 PM
டியர் சதீஷ் சார்,

தங்கள் அன்பு வாழ்த்துக்கு இதயம் கனிந்த நன்றிகள். எங்கள் 'கோல்ட் ஸ்டாரு'க்காக இதோ நம் 'யுனிவர்செல் ஸ்டார்'.

http://img143.imageshack.us/img143/9788/tpathak0001.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
21st November 2011, 08:32 PM
'ராமன் எத்தனை ராமனடி' திரைக்காவியத்தைப் பற்றியும், அதில் நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பைப் பற்றியும் 'இதயக்கனி 'சினிமா ஸ்பெஷல் 2010 ஜூலை இதழில் ஆசிரியர் திரு.சு.விஜயன் அவர்கள் எழுதிய அற்புத ஆய்வுக் கட்டுரை. (அபூர்வ புகைப்படங்களுடன்).

http://www.shakthi.fm/album-covers/ta/7c36f095/cover_m.jpg

பக்கம் 1

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan090.jpg

பக்கம் 2

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan091.jpg

பக்கம் 3

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan092.jpg

பக்கம் 4

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/RVasudevan093.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

guruswamy
21st November 2011, 09:54 PM
Dear Mr. Raghavendran

Kindly advice me as were will i get this DVD, I tried in Hosur & Krishnagiri on my travel but could not get it. Kindly help me to get this DVD please.

Jai Hind
M. Gnanaguruswamy



Dear Prabhu,
It's indeed Annaiyin Aanai. NT has narrated this scene to be inspired from James Cagney, whom he regards high. In fact I posted a message here but unfortunately it was not there due to hacking problems. You can watch NT's interview in the DVD recently released.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/snnfw.jpg

Dear Moderators,
Thank you for restoring the hub intact in a very short time. In fact one or two postings of mine were also removed in this period.

With regards
Raghavendran

J.Radhakrishnan
21st November 2011, 10:40 PM
நடிகர்திலகத்தின் புகழ் பாடும் வாசுதேவன் அவர்களே,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், பொன்விழாவை நிறைவு செய்யும் நீங்கள் நூற்றாண்டு விழா கொண்டாட நம் இதய தெய்வத்தை வேண்டுகிறேன்.

abkhlabhi
22nd November 2011, 10:16 AM
Dear Mr.Vasu,

My heartiest belated Birthday wishes to you. I pray almighty God and NT to give you a healthy, wealthy, peaceful and happy life. His blessings always with you.

a.balakrishnan

vasudevan31355
22nd November 2011, 10:17 AM
டியர் ராதா கிருஷ்ணன் சார்,

தங்கள் வளமான வாழ்த்துகளுக்கு என் உளமார்ந்த நன்றி. தாங்கள் ரசிக்க இதோ ஒரு அற்புத ஸ்டில்.

http://tamilnation.co/images/hundredtamils/sivaji/Thirumaalperumai.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
22nd November 2011, 10:59 AM
Dear Mr.A.Balakrishnan sir,

Thanks so much for your wishes. Always our god will bless us. Thank you once again.

http://www.tamilstar.org/photo-galleries/shivaji-ganesan/images/shivaji-ganesan19.jpg

I Hope you enjoy this still.


with regards
vasudevan.

HARISH2619
22nd November 2011, 11:27 AM
நமது நடிகர்திலகம் திரியின் முக்கிய தூண்களில் ஒருவராக வாசம் வீசும் திரு வாசுதேவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

vasudevan31355
22nd November 2011, 02:51 PM
அன்பு ஹரீஷ் சார்,

தங்களது பாசமான வாழ்த்துக்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள். உங்கள் அன்பு வாழ்த்து என் உள்ளத்தில் வாசமான மலராய் மணம் பரப்புகிறது. தங்கள் அன்பு உள்ளத்துக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்! தங்கள் மனம் மகிழ உங்களுக்காக....

http://www.thehindu.com/multimedia/dynamic/00795/30FR-SIVAJI_795385e.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
22nd November 2011, 03:09 PM
திரு.வாசுதேவன் அவர்களே, நான் தெரிவித்த வாழ்த்துக்கு, அவன்தான் மனிதன் வீடியோ பதிவை வெளியிட்டு அசத்திய தங்களுக்கு நன்றி.

வாழ்த்து தெரிவிப்பவர்களுக்கு நடிகர்திலகத்தின் அருமையான், பொருத்தமான புகைப்படங்கள் மூலம் நன்றியை தெரிவித்திருக்கும் தங்களின் ரசனை அருமை, பாராட்டுக்கள்.

mr_karthik
22nd November 2011, 04:46 PM
அன்புள்ள சந்திரசேகர் சார்,

தங்கள் பதிவிட்டுள்ள அய்யப்பாக்கம் நிழற்குடை திறப்பு விழா நிழற்படங்கள் அனைத்தும் அருமை. விழா சிறப்பாக நடந்தது அறிந்து மிகவும் மகிழ்ச்சி.

நடிகர்திலகத்தின் புகழைப்பரப்புவதில், அவரது நினைவுகளை உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதில் பல வழிகள் உண்டு. அவற்றில் ஒரு சிறந்த வழியாக அவரது பெயரில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை, சமுதாயத்துக்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளைச் செயலாற்றுவதன் மூலம், தங்கள் தலைமையில் இயங்கும் நடிகர்திலகம் சமூகநலப்பேரவை சீரிய தொண்டாற்றி வருகிறது. அதில் ஒரு ஏடுதான் தற்போது பேரவையால் திறந்து வைக்கப்பட்டுள்ள 'நடிகர்திலகம் நினைவு நிழற்குடை'.

அந்நிழற்குடையின் கீழ் மக்கள் இளைப்பாறுந்தோறும் நடிகர்திலகத்தையும், தங்கள் சமூக நலப்பேரவையையும் வாயாற, மனதார வாழ்த்துவார்கள் என்பது திண்ணம். ஒருபக்கம் நடிகர்திலகத்தின் பெருமையைப் பறைசாற்றவும், மறுபக்கம் மக்களின் தேவைகள் பூர்த்தியாகவுமான பல்நோக்கு சிந்தனையுடன் செயல்படும் 'நடிகர்திலகம் சமூக நலப்பேரவை' இன்னும் இதுபோன்ற பலநூறு சமுதாய நலப்பணிகளை மேற்கொண்டு சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

pammalar
22nd November 2011, 06:49 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு எனது மகிழ்வான நன்றிகள் !

பொன்விழா நாயகரான தாங்கள், பிறந்தநாள் பொன்விழாப்பரிசாக, நாங்கள் எல்லோரும் என்றென்றும் பாதுகாத்து வைத்துக்கொள்ளும் வண்ணம் அரிய நிழற்படங்களையும், அருமையான வீடியோக்களையும் ஒவ்வொருவருக்கும் அளித்து, தங்களின் பிறந்ததின பொன்விழாவை என்றென்றும் நினைவில் கொள்ளும் வண்ணம் பிரமாதப்படுத்திவிட்டீர்கள் !

தங்களுக்கு எனது பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றிகள் !

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
22nd November 2011, 06:55 PM
டியர் mr_karthik,

தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் உயர்வான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

Dear sankara1970,

Thanks for your compliments !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd November 2011, 06:58 PM
Dear Mr.Kadhir Vel,

A Warm Welcome to the World of the GREATEST ACTOR OF THE UNIVERSE !

Regards,
Pammalar.

sankara1970
22nd November 2011, 07:06 PM
hearty congrats to Mr Chandrasekar on the occassion of opening travellers waiting room in Ayapakkam, in the name of our GOD

Great work!

pammalar
22nd November 2011, 07:09 PM
டியர் சந்திரசேகரன் சார்,

தாங்கள் வழங்கிய முத்தான பாராட்டுக்களுக்கு எனது முதன்மையான நன்றிகள் !

திருவள்ளுர் மாவட்ட சிவாஜி பேரவை சார்பில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 84வது பிறந்தநாள் நிழற்குடைத் திறப்புவிழாப் புகைப்படங்கள் அருமை ! விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளதை இந்நிழற்படங்கள் எடுத்தியம்புகின்றன. பெயருக்கு ஏற்றாற்போல் சமூகத்துக்கு நலம் பயக்கும் நற்பணிகளை சிவாஜி பேரவை ஆற்றிவருவது மிகுந்த பாராட்டுக்குரியது. அதற்காகவே பேரவைக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் !

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பது போல், சமுதாயத் தொண்டை சிவாஜிக்கு செய்யும் தொண்டாக, மக்கள் நலப்பணிகளை பொதுநலத்தோடு ஆற்றிவரும் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவைக்கு அனைத்து தரப்பினரும் தங்களது அன்பான பாராட்டுக்களையும், மனமார்ந்த நன்றிகளையும் தெரிவிக்கவேண்டியது ஒரு முக்கிய கடமை !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd November 2011, 07:35 PM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

கலைக்கடவுளின் "ஆலயமணி"

[23.11.1962 - 23.11.2011] : பொன்விழா ஆண்டு ஆரம்பம்

சாதனைப் பொன்னேடுகள்

'விரைவில் வருகிறது' விளம்பரம் : சுதேசமித்ரன் : 27.6.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5076-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 18.11.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5077-1.jpg


'இன்று முதல்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 23.11.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5083-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 30.11.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5078-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 6.12.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5079-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : அறப்போர் : 7.12.1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5080-1.jpg


First Release Ad : The Hindu : 1962
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5084-1.jpg


50வது நாள் விளம்பரம் : சுதேசமித்ரன் : 11.1.1963
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5081-1.jpg


100th Day Ad : The Hindu : 2.3.1963
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5082-1.jpg


100வது நாள் விளம்பரம் : மாலை முரசு : 3.3.1963
[101வது நாளான 3.3.1963 ஞாயிறன்று கொடுக்கப்பட்டது]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5075-1.jpg

குறிப்பு:
1. 3.3.1963 தேதியிட்ட 'மாலை முரசு' 100வது நாள் விளம்பரம், 101வது நாளில் கொடுக்கப்பட்டதால், மதுரையில் மட்டும், 101வது நாள் முதல் ஷிஃப்ட் செய்யப்பட்ட திரையரங்கமான 'பரமேஸ்வரி' இடம்பெற்றுள்ளது. "ஆலயமணி", மதுரை 'சென்ட்ரல் சினிமா'வில் 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி கண்டது. ஏனைய ஏழு அரங்குகளிலும், 105 நாட்கள் ஓடி, 1962-ம் ஆண்டின் 'இமாலய வெற்றிக்காவியம்' என்கின்ற அந்தஸ்தை அடைந்தது.

2. அயல்நாடான இலங்கையிலும் "ஆலயமணி" அபார வெற்றி ஒலிகளை எழுப்பியது. 'கிங்ஸ்லி' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது.

3. மெகாஹிட் காவியமான "ஆலயமணி", 1962-ம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த Box-Office Record காவியம்.

4. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் திரைப்படம் "ஆலயமணி".

பக்தியுடன்,
பம்மலார்.

mr_karthik
22nd November 2011, 08:02 PM
அன்பு வாசுதேவன் சார்,

ராமன் எத்தனை ராமனடி பற்றிய ஆய்வுக்கட்டுரையை இங்கு பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி. அபூர்வ புகைப்படங்கள் பலவற்றை உள்ளடக்கிய அவ்வரிய கட்டுரையை பதிப்பித்த திரு எஸ்.விஜயன் அவர்களுக்கும், இங்கு மறு பதிவு செய்த தங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லிய ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அன்புப்பரிசாக நடிகர்திலகத்தின் அரிய புகைப்படங்களையும், வீடியோக்களையும் அளித்த பாணி மிகவும் புதுமையாக இருந்தது. எனக்கு அளித்த புகைப்படம் மிக மிக அருமை. மிக்க நன்றி.

அன்புள்ள பம்மலார் சார்,

தங்களின் பொக்கிஷப்பதிவுகளை கப்பலோட்டிய தமிழன் மற்றும் சிவந்த மண்ணோடு நிறுத்தி வைத்துள்ளீர்கள். 'அண்ணன் ஒரு கோயில்' விளம்பரப்பொக்கிஷங்களை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.

நாளை 'ஆலயமணி' திரைக்காவியத்தின் பொன்விழா ஆண்டு துவக்கம். அந்தப்பொக்கிஷங்களையும் தந்து எங்களை மகிழ்விப்பீர்கள் என்று நம்புகிறோம்.

RAGHAVENDRA
22nd November 2011, 08:15 PM
ஆலயமணியின் ஆத்ம கீதங்கள்

சட்டி சுட்டதடா


http://youtu.be/c3S5RtB3uTU

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா


http://youtu.be/RzSTszcoqm0

பொன்னை விரும்பும் பூமியிலே


http://youtu.be/sc4pV709YMk

மானாட்டம் தங்க மயிலாட்டம்


http://youtu.be/dUTn9N0OgfQ

pammalar
22nd November 2011, 08:17 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்களின் பொக்கிஷப்பதிவுகளை கப்பலோட்டிய தமிழன் மற்றும் சிவந்த மண்ணோடு நிறுத்தி வைத்துள்ளீர்கள். 'அண்ணன் ஒரு கோயில்' விளம்பரப்பொக்கிஷங்களை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.

நாளை 'ஆலயமணி' திரைக்காவியத்தின் பொன்விழா ஆண்டு துவக்கம். அந்தப்பொக்கிஷங்களையும் தந்து எங்களை மகிழ்விப்பீர்கள் என்று நம்புகிறோம்.

டியர் mr_karthik,

"சிவந்த மண்"ணுக்கு பின் உள்ள, நடிகர் திலகத்தின் நவம்பர் மாத திரைமலர்கள் ஒவ்வொன்றுக்கும், பொக்கிஷப் பதிவுகள் ஒரிரு தினங்களில் நமது திரியில் இடுகை செய்யப்படும்.

"ஆலயமணி" ஆவணங்களை (பொக்கிஷங்களை), சில நிமிடங்களுக்கு முன்தான் இடுகை செய்தேன். பார்த்து மகிழ்ந்து அவசியம் கருத்து கூறுங்கள்.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
22nd November 2011, 08:17 PM
ஆலயமணியின் ஆத்ம கீதங்கள் தொடர்ச்சி...

கண்ணான கண்ணனுக்கு அவசரமா


http://youtu.be/eegBPdAhg7U

தூங்காத கண்களையும் தூங்க வைக்கும் தாலாட்டு


http://youtu.be/D-_VfDf2NTk

RAGHAVENDRA
22nd November 2011, 08:19 PM
பம்மலாரின் பதிவுகள், நம் நெஞ்சத் துடிப்பின் பிரதிகள்..

நெஞ்சமெல்லாம் நிறையும் நேசமிகு பொக்கிஷங்கள்...

பொக்கிஷப் புதையலைப் போற்றிப் பாடுவோம்

போற்றிப் பம்மலாரை மேலும் போற்றுவோம்

pammalar
22nd November 2011, 08:50 PM
டியர் ராகவேந்திரன் சார்,

இதயத்தின் அடித்தளத்திலிருந்து தாங்கள் வழங்கிய நெஞ்சார்ந்த பாராட்டுக்களுக்கு எனது இருகரம் கூப்பிய சிரம் தாழ்த்திய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
22nd November 2011, 08:57 PM
அன்பு பம்மலார் சார்,

http://1.bp.blogspot.com/_AxL6mgtWktc/R3ELWA1tAVI/AAAAAAAAAn8/FcZ0LCf2wow/s320/bell.jpg http://www.shotpix.com/images/17242180255583880653.jpg

'ஆலயமணி' யை ஒலிக்கச் செய்து திக்கெட்டும் நம் இறைவனாரின் புகழை பரவச் செய்து பரவசப் படுத்தி விட்டீர்கள். அடேங்கப்பா...எத்தனை விளம்பரங்கள்! சுதேசமித்ரன்,அறப்போர் (இப்போது தான் தங்கள் புண்ணியத்தில் கேள்விப்படுகிறேன்), தி ஹிந்து, மாலை முரசு என ஆலயமணி வெளியீடு விளம்பரம் மற்றும் ஐம்பதாவது, நூறாவது நாள் சாதனை விளம்பரங்கள் என அற்புதப் புதையலை அள்ளித்தந்து ஆனந்தக் கடலில் மூழ்கடித்து விட்டீர்கள்.

"கதையிலே, நடிப்பிலே,இசையிலே மிகச் சிறந்ததென்று எல்லோரும் பாராட்டும் புதுமுறைச் சித்திரம்" என்ற சுதேசமித்திரனில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர வாசகம் எவ்வளவு நிதர்சனமான உண்மை! உண்மைகள் என்றும் பொய்த்துப் போகாதே! ஆலயமணியின் இமாலய வெற்றியே அதற்குச் சான்று.

ஆலயமணியின் வெற்றி ஓசையைப் பற்றிய விளக்கமான தகவல்களுக்கும் பஞ்சமில்லை.

பொன்னை விரும்பும் பூமியிலே பொன்னான ஆவணப் பொக்கிஷங்களை மட்டுமே பொன்னுக்கும் மேலாக மதித்து. அதை வாரிக் கொடுக்கும் வள்ளலாயும் வாழ்ந்து கொண்டிருக்கிற எங்கள் வாழும் பொக்கிஷமே! உங்கள் அயராத அரும்பணிக்கும், சிறப்பான சேவைக்கும் ஈடு இணை ஏதும் உண்டோ?

வியப்புடன்,
வாசுதேவன்.

J.Radhakrishnan
22nd November 2011, 09:24 PM
டியர் பம்மலார் சார்,

ஆலயமணி ஆவணங்களை (பொக்கிஷங்களை) அழகுற இங்கு பதிவேற்றியமைக்கு மிக்க நன்றி!

Subramaniam Ramajayam
23rd November 2011, 12:02 AM
டியர் பம்மலார் சார்,

ஆலயமணி ஆவணங்களை (பொக்கிஷங்களை) அழகுற இங்கு பதிவேற்றியமைக்கு மிக்க நன்றி!

Aalaya mani MATERALS really marvellous and 100th day cutting good p roof of the ran more than100 days n four theatres n madras which
was a unque record CREATED BY OUR NT FRST TME N THE CITY. There were some doubts about the trangular love story hero marrying a girl already loed hs own rend and so the movie was alsorejected by sivaji flms for distrbuton and subbu made the release and made woderful collections and fooled every one. But NT was very cofident about the success of the film before screenng.
remembrance of school days.

ramajayam

vasudevan31355
23rd November 2011, 08:20 AM
ஆண்டவரின் 'ஆலயமணி' பொன்விழா ஆண்டு ஆர்ப்பாட்ட ஆரம்பம்.(மெகா ஆல்பம்)

ஒலிக்க ஆரம்பித்தது 23.11.1962 அன்று.

ஒலித்துக் கொண்டிருப்பது 23.11.2011 இன்று.

ஒலித்துக் கொண்டிருக்கப் போவது என்றும்.

தியாக உள்ளம் கொண்ட 'தியாகு'வின் திருவிழாக் கோலங்கள்.

http://www.shotpix.com/images/70901467449671611696.jpg

http://www.shotpix.com/images/17242180255583880653.jpg

http://www.shotpix.com/images/40257777523379038845.jpg

http://www.shotpix.com/images/63762441739179038308.jpg

http://www.shotpix.com/images/49023670418823717707.jpg

http://www.shotpix.com/images/57979227101791102777.jpg

http://www.shotpix.com/images/82210334343671824455.jpg

http://www.shotpix.com/images/77224712706991417078.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
23rd November 2011, 08:56 AM
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?...

கலையெல்லாம் எங்கள் நடிகர்திலகத்தின் கலையாகுமா?...

http://shotpix.com/images/72396250262522376336.jpg

http://shotpix.com/images/58262506552976612130.jpg

http://shotpix.com/images/45095748249037591939.jpg

http://shotpix.com/images/03849584636722818743.jpg

http://shotpix.com/images/43182412301649836198.jpg

http://www.shotpix.com/images/50200498535656663599.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/aalayamani.jpg?t=1322021497

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AL_1.jpg?t=1322022218

http://desibbrg.org/images/08174979770361089868.png

http://desibbrg.org/images/67526711274648407187.png


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
23rd November 2011, 10:11 AM
புதையல் தேடி அலையும் உலகில்
நடிப்புப் புதையலை அள்ளிக் கொடுத்த எங்கள் தங்கச் சுரங்கமே!
தியாகத்தின் திரு உருவே!
உங்கள் புகழை ஒலிக்கச் செய்யும் ஆலயமணியாய் ஆயுள் உள்ளவரை ஒலிப்போம்.

http://www.shotpix.com/images/77366447761162964254.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/dvd.jpg?t=1322023153

http://www.indiancddvdonline.com/img/Uploads/DVD/photo/big/8827_AALAYAMANI.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/jjjj.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
23rd November 2011, 10:54 AM
'ஆலயமணி' சிறப்பு புகைப்படங்கள்.

http://www.thehindu.com/multimedia/dynamic/00820/29MP_LCC_AALAYA_MAN_820395f.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/05siv1.jpg?t=1322026947


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
23rd November 2011, 11:22 AM
'ஆலய மணி' பாடல் காட்சிகளின் நிழற்படங்கள்.

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா...

http://1.bp.blogspot.com/_2I2hYF2DQtI/TGbAM2eh_CI/AAAAAAAAB7Y/UTEyK9ibhh4/s1600/Aalayamani+_Kalellam+manickam_tamilhitsongs.blogsp ot.com.VOB_thumbs_%5B2010.08.14_21.39.52%5D.jpg

பொன்னை விரும்பும் பூமியிலே...

http://2.bp.blogspot.com/_2I2hYF2DQtI/TGbABjQPjkI/AAAAAAAAB7I/yjy0UPTaTTM/s1600/Aalayamani_Ponnai+Virumbum_tamilhitsongs.blogspot. com.VOB_thumbs_%5B2010.08.14_21.40.10%5D.jpg

சட்டி சுட்டதடா...கை விட்டதடா...

http://3.bp.blogspot.com/_2I2hYF2DQtI/TGbAIHyeR6I/AAAAAAAAB7Q/oCmjqrZbKUU/s1600/Aalayamani_sati+suttathada_tamilhitsongs.blogspot. com.VOB_thumbs_%5B2010.08.14_21.40.25%5D.jpg

(நிறைவு பெற்றது)

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
23rd November 2011, 11:46 AM
அன்பு ராகவேந்திரன் சார்,

http://vodimages.bigflicks.com/images/vod/movies/160X100/sumathiensundari_mov_3.jpg

ஆலயமணியின் ஆத்ம கீதங்கள் ஆறு...
அனைத்தையும் தங்கள் மூலம் பெற்றது எங்கள் பெரும் பேறு...
ஆவணச் செம்மலுக்கு தாங்கள் அளித்த மதிப்பெண்கள் நூற்றுக்கு நூறு...
எங்கள் ரசிக வேந்தரே! நீங்கள் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் வாழும் வரலாறு.

(தங்களின் 'ஆலயமணி' பதிவுகளுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி!)


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
23rd November 2011, 01:02 PM
அன்பு பம்மலார் சார் ,
தங்கள் அன்பான பாராட்டுதல்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி!

அன்பு சந்திரசேகரன் சார்,
தங்கள் உயரிய பண்புக்கு நன்றி!

அன்பு கார்த்திக் சார்,
தங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

HARISH2619
23rd November 2011, 01:33 PM
திரு பம்மல் சார்,
அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமாக மாறி தாங்கள் அளித்து வரும் ஆவணங்களை ஆனந்தகண்ணீர் வழிந்தோடும் விழிகளால் பார்த்து பரவசப்பட்டு எதுவுமே செய்ய தோன்றாமல் திக்பிரம்மை பிடித்த நிலையில் இருந்ததால் தங்களை பாராட்டக்கூட முடியவில்லை,மன்னிக்கவும்.தாங்கள் அளித்து வரும் ஆவணங்களால் ஒவ்வொரு நடிகர்திலகத்தின் ரசிகரையும் தலைநிமிர செய்துவிட்டீர்கள்,நிச்சயமாக நாங்கள் எல்லோரும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.

திரு சந்திரசேகர் சார்,
திரு ராம்குமார் மற்றும் திரு பிரபு ஆகியோர் நடிகர்திலகத்தின் புகழை பரப்புவதில் காட்டும் ஆர்வத்துக்கு நிகராக அல்லது அதற்க்கும் மேலே தங்களுக்கு உள்ள ஆர்வத்தை பறைசாற்றுகிறது தங்களின் சீரிய முயற்சியால் திறந்து வைக்கப்பட்ட நிழற்குடை பற்றிய செய்தி ,நன்றிகள் பல கோடி.

திரு முரளி சார்,
தாங்கள் முன்னைப்போல் அடிக்கடி இங்கு வந்து தங்கள் கருத்தை பதியுமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன் .

திரு குமரேசன் சார்,
அடிக்கடி கேட்டு தொந்திரவு செய்வதற்கு மன்னிக்கவும்,என்னால் ஆவலை கட்டுபடுத்த முடியவில்லை ,வசந்தமாளிகை பற்றிய லேட்டஸ்ட் தகவல் என்ன என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்

mr_karthik
23rd November 2011, 02:17 PM
அன்புள்ள பம்மலார் சார்,

ஆலயமணி ஆவணப்பொக்கிஷங்கள் பத்து.
அனைத்தும் கண்ணைக்கவரும் நல் முத்து.

என்னுடைய வேண்டுகோளைப்பதிவிட்ட பிறகுதான் பார்க்கிறேன். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக நீங்கள் அனைத்து ஆவணங்களையும் அழகுற பதித்திருக்கிறீர்கள். பார்த்தவுடன் என்னுடைய பதிவை எடிட் செய்ய முயன்றேன். முடியவில்லை. கணிணி முரண்டு பிடித்தது. சரி, நமது பம்மலார் நிலைமையைப் புரிந்துகொள்வார் என்று விட்டுவிட்டேன்.

ஆவணப்பொக்கிஷங்கள் அனைத்து கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து படைத்தன. 50 ஆண்டுகால விளம்பரப்பதிவுகளை ஏதோ நேற்று வந்தது போல புதுமை மங்காமல் தருவதற்கு தங்களால் மட்டுமே முடியும். அனைத்தும் கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள் அல்லவா.

சென்னையில் முதன்முதலாக நான்கு திரையரங்குகளில் 100 நாட்களைக் க்டந்த படம் ஆலயமணியே என்ற வரலாற்றுப் பதிவும் விளம்பரத்தில் தரப்பட்டுள்ளது. இதன்பிறகு 1964-ம் ஆண்டு சென்னையில் நான்கு திரையரங்குகளில் 100 நாட்களைக்கடந்த சாதனையை இரண்டு படங்களில் (கைகொடுத்த தெய்வம், நவராத்திரி) நிகழ்த்திக்காட்டினார் நடிகர்திலகம். இதற்கு முன் நாம் கொண்டாடி மகிழ்ந்த 'சிவந்த மண்' திரைக்காவியமும் சென்னையில் நான்கு தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த சித்திரமே

ஆவணப்பதிவுகள் அனைத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். தங்கள் தூய தொண்டு தொடர வாழ்த்துக்கள்.

KCSHEKAR
23rd November 2011, 02:47 PM
திரு. கார்த்திக் சார், தங்களின் உயர்வான பாராட்டுக்கும், இனி வருங்காலத்தில் மேலும் துடிப்போடு செயல்படும் விதத்தில் அளித்துள்ள ஊக்கத்திற்கும் நன்றி.

KCSHEKAR
23rd November 2011, 02:49 PM
Dear Mr.sankara - Thanks for your appreciation.

KCSHEKAR
23rd November 2011, 02:50 PM
திரு. ஹரீஷ் சார், தங்களின் பாராட்டுக்கு நன்றி.

KCSHEKAR
23rd November 2011, 02:54 PM
திரு. பம்மலார் சார், தங்களின் சிறந்த பாராட்டுக்கு நன்றி.

தாங்கள் பதிவிட்டுள்ள ஆலயமணி பொக்கிஷப் பதிவுகளும், தகவல்களும் உண்மையிலேயே மணியோசையை உலகெங்கும் ஓங்கி ஒலிக்கச் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.

pammalar
24th November 2011, 07:22 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் உச்சமான-உயர்வான-உணர்வுபூர்வமான பாராட்டுப்பதிவுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் !

ஆனந்தக்கண்ணீர்ப்பெருக்கில்,
பம்மலார்.

vasudevan31355
24th November 2011, 07:34 PM
"இந்திரா காங்கிரசிலிருந்து சிவாஜி மன்றம் வெளியேறுகிறது"? என்ற தலைப்பில் 29-5-1985 அன்று ஜூனியர் விகடனில் வெளிவந்த கட்டுரை. இந்திரா காங்கிரசில் அப்போதைய சூழ்நிலையில் சிவாஜி மன்றங்கள் புறக்கணிக்கப் பட்டதையும், நடிகர் திலகம் தனிக்கட்சி தொடங்க வேண்டிய சூழ்நிலைகள் உருவான விதங்களையும், இந்திரா காங்கிரசில் சிவாஜி மன்றங்கள் தூண்களாக விளங்கி அரும்பாடு பட்டதையும், காங்கிரசால் அலட்சியப் படுத்தப் பட்டதனால் மன்றத்தினருக்கு ஏற்பட்ட மனக் குமுறல்களையும், சிவாஜி ரசிகர் மன்றச் செயலாளர் திரு. ராஜசேகரனை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து பழி வாங்கியதையும், இன்னும் பிற விஷயங்களையும் விவரமாக விளக்குகிறது இந்தக் கட்டுரை.

பக்கம் 1

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_2.jpg

பக்கம் 2

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0001.jpg

பக்கம் 3

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0002.jpg

பக்கம் 4

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/IMG_0003.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
24th November 2011, 07:35 PM
டியர் ஜேயார் சார்,

தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றி !

Dear Ramajayam Sir,

Double thanks to you, one for the compliments and the other for the additional info.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th November 2011, 08:14 PM
டியர் வாசுதேவன் சார்,

கலையுலக ஆண்டவரின் காவியமான "ஆலயமணி" மெகா ஆல்பம் மகா அருமை !

டியர் ராகவேந்திரன் சார்,

அமுதும் தேனும் எதற்கு ! ஆலயமணியின் ஆத்ம கீதங்கள் இருக்கையிலே நமக்கு !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th November 2011, 11:49 PM
டியர் செந்தில் சார்,

தங்களின் உணர்ச்சிமயமான பாராட்டுக்கள் என் கண்களில் ஆனந்தக்கண்ணீரையே வரவழைத்துவிட்டது. தங்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

நாம் எல்லோரும் நமது நடிகர் திலகத்துக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் !

பாசப்பெருக்கில்,
பம்மலார்.

pammalar
24th November 2011, 11:57 PM
டியர் mr_karthik,

தாங்கள் அளித்த பாராட்டுப்பதிவுக்கு, தங்களுக்கு எனது பாசமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th November 2011, 12:13 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் மணியான பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்ம்லார்.

pammalar
25th November 2011, 01:26 AM
டியர் வாசுதேவன் சார்,

சிங்கத்தமிழனும் அவர்தம் ரசிகர் படையும், காங்கிரஸ் கட்சிக்கு ஆற்றிய அரும்பெரும்தொண்டை, சந்தித்த இன்னல்களை, தாங்கள் பதிவிட்ட 'ஜூனியர் விகடன்' கட்டுரை, போர்முரசென ஒலித்து உண்மைகளை உரக்க உரைத்துவிட்டது. உன்னதமான கட்டுரையை வழங்கிய உங்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th November 2011, 01:56 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

சிவந்த மண்

[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

'பேசும் படம்' ஜூலை 1969 இதழிலிருந்து அபூர்வ நிழற்படங்கள்

வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தச் சென்ற
"சிவந்த மண்" படக்குழுவினருக்கு வழியனுப்பு விழா
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5045-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5046-1.jpg


வெளிநாடுகளில் "சிவந்த மண்" படக்குழுவினர்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5048-1.jpg

செழிக்கும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
25th November 2011, 02:42 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

சிவந்த மண்

[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

"சிவந்த மண்" காவியத்திற்காக வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகள் பற்றி
அக்காவியத்தின் கதாநாயகனான நடிகர் திலகம் சிவாஜினோ தரும் ஐந்து பக்க பயண-படப்பிடிப்பு கட்டுரை

வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஆகஸ்ட் 1969

முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SMNTWrite-Up1-1.jpg


இரண்டாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SMNTWrite-Up2-1.jpg


மூன்றாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SMNTWrite-Up3-1.jpg


நான்காம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SMNTWrite-Up4-1.jpg


ஐந்தாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/SMNTWrite-Up5-1.jpg

செழிக்கும்...

பக்தியுடன்,
பம்மலாரனோ !

vasudevan31355
25th November 2011, 06:48 AM
அன்பு பம்மலார் சார்,

http://i284.photobucket.com/albums/ll10/mn2forever1/great%20work/th_greatwork1.gif

சிவந்தமண்ணின் அடுத்த ஏவுகணையை ஏவி விட்டு இன்பத் தாக்குதல் நடத்தியுள்ளீர்கள். அபாரம்.

வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தச் சென்ற"சிவந்த மண்" படக்குழுவினருக்கு வழியனுப்பு விழா 'பேசும் படம்' அபூர்வ நிழற்படங்கள் அசத்துகின்றன. நம்ம தலைவர் படு ஸ்டைலாக காட்சியளிக்கிறார்.

"சிவந்த மண்" காவியத்திற்காக வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகள் பற்றி நடிகர் திலகம் தந்திருக்கும் ஐந்து பக்க பேசும்படம் இதழில் வந்த பயண-படப்பிடிப்புக் கட்டுரையை இடுகை செய்து நடிகர்திலகத்துடன் நேரிடையாக நாங்கள் அளவளாவியது போல மனம் மகிழச் செய்து விட்டீர்கள். படு கேஷூவலான பேட்டி.

சுமைதாங்கி படத்தில் திரு.ஜெமினி அவர்கள் சுமைதாங்கியாய் தாங்கிய கதாபாத்திரத்தை நினைவில் வைத்து சமயம் பார்த்து தலைவர் கோபுவை விமரிசித்தது அருமை.

இவ்வளவு பிரம்மாண்டமான படம் எடுத்தவர்கள் கையில் காசில்லாமல் தவித்திருக்கிறார்கள். அதையும் நடிகர்திலகம் நகைச்சுவை உணர்வுகளுடன் கூறியிருப்பது சூப்பர்.

சிகரெட் கேட்ட கோபுவுக்கு மனமே இல்லாமல் தான் வைத்திருந்த 'ஸ்டாக்'கிலிருந்து கர்ணனாய் சிகரெட் அளித்தது வயிறு குலுங்க வைத்தது.

மிளகாய் பொடியும் ஊறுகாயும் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு இருகண்கள் என்பது சிவந்தமண் படப்பிடிப்பு குழுவினருக்கும் மட்டுமென்ன விதிவிலக்கா? அரிசிச் சோறு பற்றியும் அவர் ஒரு குழந்தையைப் போல சிலாகித்திருந்தது ரசிக்கும்படியாக இருந்தது.

மொத்தத்தில் அற்புதமான கட்டுரையை இடுகை செய்தமைக்கு அளவில்லா நன்றிகள்.

இது போன்ற ஏவுகணைத் தாக்குதல்களை நாங்கள் தினமும் ஏற்றுக் கொள்ளத் தயார். தங்கள் இன்பத் தாக்குதல்களுக்கு தேங்க்ஸ்.

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
25th November 2011, 01:27 PM
அன்புள்ள பம்மலார்,

'சிவந்த மண்' மேளா முடிந்து விட்டதோ என்று எண்ணியிருந்த வேளையில், இன்னும் இன்னும் அதிகமான அன்றைய ஏடுகளை அள்ளித்தந்து பரவசத்தில் ஆழ்த்தி வருகிறீர்கள். இன்றைக்கு நூற்றுக்கணக்கான படங்கள் வெளிநாடுகளில் சரவசாதாரணமாக படமாக்கப்பட்டு வரும் வேளையில், முதல் தமிழ்ப்படத்தை ஐரோப்பிய நாடுகளில் படமாக்க சித்ராலயா யூனிட்டார் எவ்வளவு கஷ்ட்டப்பட்டுள்ளனர் என்பதை நடிகர்திலகம் மிக சுவையாக எடுத்துரைத்துள்ளார். கட்டுரை முழுவதிலும் அவரது குறும்பு பளிச்சிடுகிறது. முரளிசார் முன்பு மணியன் பற்றிய பதிவில் சொன்னதைப்போல, மிகக்குறைவான அந்நியச்செலாவணி மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த காலம். ஏனென்றால் அப்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியும் குறைவு, என்.ஆர்.ஐ. வருமானங்களும் சுத்தமாகக்கிடையாது. (வளைகுடா நாடுகளிலும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் துவங்கியிராத நேரம்).

இப்போது படத்தைப்பார்க்கும்போது, ஸ்ரீதர் இன்னும் வேறுவிதமாக வெளிநாட்டுக்காட்சிகளைப் படமாக்கியிருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது. தமிழ் மக்கள் வெளிநாட்டுக்காட்சிகள் என்றால் வானளாவிய நவீனக்கட்டிடங்கள், மற்றும் நவீனக்காட்சிகளையும் காண விரும்புவர். ஆனால் ஸ்ரீதர் பெரும்பாலும் அந்நாடுகளிலுள்ள புராதனச்சின்னங்களையே அதிகம் கவர் பண்ணியிருப்பார். ஏரியில் 'பெடல்-போட்' ஓட்டும் காட்சி பெரும் நேரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் பனிமலைக்காட்சிகள் அருமையாக இருக்கும்.

சிவந்த மண் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரானதாக நடிகர்திலகம் சொல்லியிருக்கிறார். அப்படீன்னா தெலுங்கில் நடித்தது யார் யார்?. இந்தியில் நடித்த ராஜேந்திரகுமார், வகீதா ரெகமான் ஆகியோர் இப்போது இருக்கிறார்களா?.

அதிகமதிகம் சிவந்த மண் ஆவணப்பதிவுகளைத்தேடித் தேடியெடுத்து வந்து பறிமாறும் உங்கள் ஆர்வத்துக்கு மனமார்ந்த நன்றிகள். சிவந்த மண் குழுவினரை வழியனுப்பும் காட்சிகளின் தொகுப்பும் காணக்கிடைக்காத அரிய பொக்கிஷம். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

J.Radhakrishnan
25th November 2011, 01:32 PM
டியர் பம்மலார் சார்,

"சிவந்த மண்" திரைப்படத்திற்காக வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகள் பற்றி ntஅவர்களின் நேரடியான பயணக்கட்டுரையை பதிவேற்றி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். மிக்க நன்றி!!!

mr_karthik
25th November 2011, 01:49 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

காங்கிரஸ் கட்சியில் நடிகர்திலகத்தின் ரசிகர்மன்றங்களின் பெரும் பங்களிப்பு பற்றி ஜூனியர் விகடன் இதழில் வந்த செய்தித்தொகுப்பு பக்கங்களை பதிவிட்டதற்கு மிக்க நன்றி.

காங்கிரஸில் நடிகர்திலகத்தின் ரசிகர்படையினரின் உழைப்பு எப்படி காங்கிரஸாரால் நாளாவட்டத்திலும் உதாசீனப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை ப்லமுறை பல பாகங்களில் ராகவேந்தர் சார், முரளி சார், சாரதா, சந்திரசேகர் மற்றும் பல நண்பர்களால் அலசப்பட்டு வந்துள்ளது. நானும் சிலமுறை சொல்லியிருக்கிறேன். இவற்றையெல்லாம் ஊர்ஜிதப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்த ஜூனியர் விகடன் கட்டுரை.

ராகவேந்தர் சார் எப்போதும் சொல்லி வருவது போல, நடிகர்திலகத்தையும் அவரது ரசிகர் படையையும் புறக்கணித்ததால் காங்கிரஸ் தற்போது தமிழ்நாட்டில் முகவரியை தொலைத்து விட்டு, தேர்தல் பிரச்சாரம் செய்யவும், கூட்டத்துக்கு கொடி கட்டவும், அவ்வப்போது கூட்டணி சேரும் திராவிடக் கட்சித்தொண்டர்களின் தயவை நம்பியிருக்கிறது.

மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸை உயிர்ப்பிக்க நடிகர்திலகத்தின் ரசிகர்களால் மட்டுமே முடியும். அதற்கு கட்சி அவர்கள் கையில் வரவேண்டும். இல்லையேல் வெறும் தலைவர்கள் எத்தனை பேர் வந்தாலும் தொண்டர் படையின்றி, உதிரிக்கட்சிகளில் ஒன்றாகவே காங்கிரஸும் தமிழகத்தில் மதிக்கப்படும்.

சரியான நேரத்தில் சரியான பதிவையிட்ட தங்களுக்கு நன்றிகள்.

mr_karthik
25th November 2011, 02:04 PM
அன்புள்ள பம்மலார் சார்,

வெற்றிகரமாக இரண்டாயிரமாவது பதிவை நெருங்கும் தங்களுக்கு எங்கள் அனைவரது வாழ்த்துக்கள். இந்த இரண்டாயிரம் பதிவுகள், எத்தனை ஆயிரம் அரிய விஷயங்களைத்தாங்கி வந்துள்ளன என்ற உண்மை பிரமிக்க வைக்கிறது. அவற்றில் நீங்கள் அளித்த பல்வேறு புள்ளிவிவரப்பதிவுகள், நடிகர்திலகத்தின் சாதனைகளைப்பறைசாற்றும் சாட்சிகளாய் நிற்கும் ஆவணங்கள், கிடைத்தற்கரிய தகவல் களஞ்சியங்கள், இதுவரை பார்த்திராத ஏடுகளின் தொகுப்புக்கள் என அனைத்துமே தங்கச் சுரங்கத்திலிருந்து வெளிவந்த தங்கக்கட்டிகள்.

இந்த இரண்டாயிரம் இன்னும் பல ஆயிரமாக பல்கிப்பெருகி, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இளைப்பாறும் ஆலமரமாய் விரிந்து பரந்து புகழ் பரப்ப வேண்டும் என்று இதயம் நிறைய வாழ்த்துகிறோம்.

parthasarathy
25th November 2011, 03:34 PM
அன்பு நண்பர்களே,

மறுபடியும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்களை இந்தத்திரியின் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

நம் அன்பு நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பங்களிப்பை நாள்தோறும் விடாமல் செய்து வருகிறார்கள். திரு. பம்மலார் (இவர் தான் நமது திரியின் சூப்பர் ஸ்டார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை), திரு. ராகவேந்தர் மற்றும் திரு. வாசுதேவன் அவர்கள் எங்கெங்கோ உள்ள ஆவணங்களையும், கட்டுரைகளையும், பாடல் காட்சிகளையும், புகைப்படங்களையும் இடுகை செய்து எல்லோரையும் பரவசப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

திரு. முரளி அவர்களின் சில கட்டுரைகள் அவருடைய வழக்கமான சரளமான நடையில் சுவைபட இருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் சாரதா மேடத்தின் இடுகைகள் பரவசப் படுத்துகின்றன.

திரு. சந்திரசேகர் சமூக முக்கியத்துவம் வாய்ந்த பல நல்ல காரியங்களை, தொடர்ந்து செய்து ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் இறுமாந்து கொள்ள வைக்கின்றார்.

திரு. கார்த்திக் அவர்களும் அவருடைய பங்களிப்பைத் தொடர்ந்து நல்கி வருகின்றார்.

மேலும், நமது மற்ற நண்பர்களும் தொடர்ந்து ஏதோ ஒரு சிறிய விஷயத்தையாவது எழுதுகிறார்கள்.

திரு. பம்மலார் அவர்கள் பதிவிட்ட "ஆலய மணி" படச் சாதனை விளம்பரங்கள் ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் மகிழ்ச்சியின் எல்லைக்கே அழைத்துச் சென்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. என் இதயத்திற்கு மிக நெருக்கமான முதல் பத்து படங்களில், "ஆலய மணி" தியாகு எப்போதும், ஒரு முக்கியமான இடத்தில் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்னும் போது, எனக்கு வார்த்தைகளில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே, ஆய்வுக்கட்டுரை வேறு எழுதி இருந்தேன். அந்த அளவிற்கு என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட கதா பாத்திரம் "தியாகு". நன்றி திரு. பம்மலார் அவர்களே. சிவந்த மண் பட சம்மந்தப் பட்ட ஆவணக் கட்டுரைகளும் நடிகர் திலகத்தின் பேட்டியும், வெளி நாடு செல்வதற்கு முன்னர், படக்குழுவினர் மற்றும் பிற கலைஞர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் மிக அருமை மற்றும் காணக்கிடைக்காத ஒன்று. இரண்டாயிரமாவது பதிவை நெருங்கிக் கொண்டிருக்கும் தங்களுக்கு முன் கூட்டியே வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

திரு. வாசுதேவன் அவர்களின் ஜூனியர் விகடன் இதழில் வெளி வந்த கட்டுரையும் மிக அருமை.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
25th November 2011, 03:53 PM
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)

8. "அந்த நாள் ஞாபகம்"; படம்:- உயர்ந்த மனிதன் (1968); பாடல்:- வாலி; பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் மேஜர் சுந்தரராஜன் (வசன நடை); இசை:- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்; இயக்கம்:- கிருஷ்ணன்/பஞ்சு; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மேஜர் சுந்தரராஜன்.

இந்தப் பாடலை இயற்றியது வாலியா அல்லது கவியரசா என்றொரு குழப்பம் இருந்தது. அதைத் தீர்த்த டிக்ஷனரி திரு. முரளி அவர்களுக்கு முதற் கண் நன்றி தெரிவிக்கிறேன். இதற்கு முன் பதிவிட்ட "மாமா மாப்ளே" (பலே பாண்டியா படம்) பாடலில் நடிக வேளுக்குக் குரல் கொடுத்தது எம்.எஸ். ராஜு என்று கூறிய திரு. ராகவேந்தர் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

இன்னும் எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும், ஒவ்வொரு தமிழனும், தன்னுடைய வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கும் போதும், கடந்த கால நினைவுகளை அசை போடுவது எந்த ஒரு ஊடகத்தில் விவாதிக்கப் பட்டாலும், மேற்கோள் காட்டப்பட்டாலும், மேற்கூறிய வரிகள் "அந்த நாள் ஞாபகம்" - உடனேயே ஒவ்வொருவராலும் எடுத்துரைக்கப்படும். ஒருவராலும் தப்பிக்க முடியாது. அந்த அளவுக்கு, காலத்தால் அழிக்க முடியாத வரிகள்.

இரு நண்பர்கள் - சமூகத்தில், அவர்கள் வேறு அந்தஸ்தில் இருந்தாலும், அடிப்படையில் நண்பர்கள். இதில், ஏழை டிரைவர் அந்த அளவுக்கு வாழ்க்கையில் அடிபடா விட்டாலும், பணக்காரன் மட்டும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அனுபவித்து விடுகிறான். அந்தப் பணக்காரன் பல வருடங்களுக்குப் பிறகு சிறு வயதில், அவனும் அவனது காதலியும் பழகிய ஊட்டிக்குச் செல்ல நேரும்போது (அந்தக் காதலியை ஒரு கோர தீ விபத்தில் இழந்து விடுகிறான் - அவனது பணக்காரத்தந்தை திட்டம் போட்டுச் செய்த கொலை - காரணம் ஏழை என்கிற அந்தஸ்து பேதம்!), தன்னை அறியாமல் அவனது கடந்த கால ஞாபகங்கள் அலை மோதுகிறது. அப்போது, அவன் அந்த நினைவுகளைக் கூறும்படியாக அமைகின்ற பாடல்.

இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொருவரையும் சென்று சேரும் வரிகள். "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே; இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே; அது ஏன்? ஏன்? நண்பனே!" அவனது இந்த நாள் அனுபவங்கள் கசப்பாக உள்ளன என்பதை உடனே எடுத்துரைக்கும் வரிகள்!

முதல் சரணத்தில், பள்ளி வாழ்க்கையை இலேசான நகைச்சுவையுடன் எடுத்துரைக்கும் வரிகள் "உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்" அன்று போல் இன்று இந்த சமூகத்தில் பழக முடியவில்லையே எனும் ஏக்கம். அந்த மனிதனின் உண்மையான குணாதிசயத்தை இயம்பும் வரிகள்.

இரண்டாவது சரணம் இலேசான சோகம் - பள்ளிப்பருவம் முடிந்த பின்னர் நடந்த நிகழ்வுகள். கடமையும் வந்தது; கவலையும் வந்தது - என்ன ஒரு அனுபவபூர்வமான வரிகள். எல்லா வசதிகளும் எல்லா சொந்தங்களும் வந்த பின்பும் அமைதி மட்டும் இல்லை என்னும் கூற்று நிறைய பேருக்குப் பொருந்தும்.

மூன்றாவது சரணம் - பல நாட்கள் வானொலியில் வராமல் இருந்தது. இப்போதெல்லாம் வருகிறது. அந்த மனிதனின் கடந்த கால சோகம் தெறித்து விழும் வரிகள். "தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான் அழுகிறான்." தன் காதலியைக் காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்து நினைத்துத் துடிக்கும் அந்த மனிதனின் குமுறல்கள் வெடிக்கும் வரிகள். வாலி அவர்கள் எழுதிய அத்தனை பாடல்களிலும் இன்றளவும் அவர் பேர் சொல்லும் முதல் இரண்டு பாடல்களில் இது ஒன்று எனலாம்.

இப்போது பாடியவர். முதலில் நடிகர் திலகம் ஓட்டப் பந்தயம் வைத்து, ஓடி முடித்து, நின்று, மூச்சு வாங்கிக் கொண்டே பாடத் துவங்குவதாக ஆரம்பிக்கும் போது, அந்த மூச்சிரைப்பைக் கண் முன் நிறுத்த ஆரம்பிப்பவர், அந்தப் பாடலில் தெறிக்கும், அத்தனை உணர்வுகளையும், அற்புதமாக வடித்திருந்தார். மறுபடியும், நடிகர் திலகம் தான் பாடினார் என்கிற அளவுக்குப் பாடிய திரு. டி.எம்.எஸ்ஸைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

அடுத்தது இசை. கொஞ்சம் அசந்தாலும், வெறும் வசனமாகி விடக்கூடிய பாடல். இந்தப் பாடலின் தன்மையை அழகாகப் புரிந்து கொண்டு, நகைச்சுவை வரும்போது ஒரு இசை, சோகம் வரும்போது ஒரு இசை, மிடுக்கு வரும்போது ஒரு கம்பீர இசை என்று மிக லாகவமாக இசை அமைத்து, இடையிடையே, மேஜர் அவர்கள் பேசுவதைக் கொஞ்சம் கூட அந்த இசை பிசகா வண்ணம் அமைத்து, அவரையும் மிகச் சரியாக குரல் கொடுக்க வைத்து, இந்தப் பாடல் முழு வெற்றியடைய வைத்து விடுகிறார்.

அடுத்து இயக்கம். நண்பர்கள் ஊட்டிக்குச் செல்லுவதாகக் கதையமைத்து, உடனேயே, ஒரு பாடலையும் அமைத்து, பழைய நினைவுகளை அசை போடுவதாக வைத்து, அந்தப் படத்தின் சுவாரஸ்யம் மேலும் மெருகேற வழி வகுத்து, முழு வெற்றி அடைகிறார்கள் இயக்குனர் இரட்டையர்கள் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள். அப்போதெல்லாம், ஒரு படத்தின் இடைவேளைக்குப் பின் வரும் பாடல்கள் படத்தின் வேகத்தையும் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கச் செய்தன. ஆனால், இப்போதோ?

இப்போது நடிப்பு. இந்தப் பாடலைப் பொறுத்தவரையில் இயக்கமும் சற்றேறக்குறைய நடிகர் திலகம் தான் செய்தார் எனலாம் (இன்னும் இது போல் பட படங்கள்; காட்சிகள்; பாடல்கள் உண்டு என்றாலும்!). பல வருடங்களுக்கு முன்னர் ஒரு இதழில் வெளி வந்த கட்டுரையில் படித்தது. முதலில், இந்தப் பாடலை நடிகர் திலகமும் மற்றவர்களும் காரில் போய்க் கொண்டே பாடுவதாகத் தான் வைத்தார்களாம். நடிகர் திலகம் தான், "வேண்டாம் இந்தப் பாடல் சிறு வயது நினைவுகளை அசை போடுவதாக வருகிறது. சிறு வயது என்பதால், ஏதோ ஒரு விளையாட்டை விளையாடுவதாக வைத்தால் பொருத்தமாக இருக்கும். என்னைக் கேட்டால், ஓட்டப் பந்தயம் வைத்து, கடைசியில், மூச்சு வாங்கிக் கொண்டே பாடுவதாய் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்" என்று செட்டியாரிடம் சொல்ல, அவரும் தயங்காமல் ஒப்புக்கொண்டாராம்.

தனக்கேயுரிய ஸ்டைலில் ஓடத் துவங்கி, மூச்சு வாங்கிக் கையிலுள்ள தடியை ஒரு வித சுழற்று சுழற்றி அதை மேஜரின் மார்பில் வைத்து எடுக்கும் விதம் அற்புதம் என்றால்; முதல் சரணத்தில், புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே, பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே என்று சொல்லி சிரிக்கும் விதம் அதியற்புதம். நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் என்று சொல்லி வேகமாய் நடந்து அந்தப் பாடலின் டெம்போவை எகிறச்செய்யும் விதம்; உயர்ந்தவன் என்று சொல்லி தடியை வானுக்கு உயர்த்துபவர்; ஒரு வித ஸ்டைலுடன் தாழ்ந்தவன் என்னும் போது சிலிர்க்கும்!! (இந்த ஒரு விதத்தைப் பார்த்தால் தான் புரியும்!)

இரண்டாவது சரணம் - பாசமென்றும் - ஒரு வித ஸ்டைல்; நேசமென்றும் - வேறொன்று; வீடு என்றும் - இன்னும் ஓர் ஸ்டைல்; மனைவி என்றும் - பிய்த்து உதறுவார்; நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதி எங்கே என்று இலேசாக துயரத்தை வெளிப்படுத்துவார். உடனேயே, சமாளித்துக் கொண்டு வேகமாக அந்த நாள் ஞாபகம் என்று நடை போடத்துவங்கும் சரளம் பிரமாதமாக இருக்கும்.

மூன்றாவது சரணம் - பெரியவன், சின்னவன், நல்லவன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான பாவம், கடைசியில், கெட்டவன் என்னும்போது கையை ஒரு மாதிரி அசைப்பார் - மற்றொரு இலக்கணம். எண்ணமே சுமைகளாய் (வலது புருவத்தை தனக்கேயுரிய பாணியில் உயர்த்துவார்), இதயமே பாரமாய் - ஒரு மாதிரி. மறுபடியும், சோகம் - தவறுகள் செய்தவன் எவனுமே தவிக்கிறான், அழுகிறான் எனும்போது எப்படி அவர் முகத்தை சோகம் கவ்வுகிறது! மறுபடியும், சமாளித்து, பல்லவி, அந்த நாள் ஞாபகம் என்று கடைசியில், கைத்தடியை லாகவமாக சுழற்றியபடியே செல்லும்போது, மேஜர், சிவகுமார், பாரதி மட்டுமல்லாமல், பார்க்கும் அனைவரும் அல்லவா வியந்து மெய் மறக்கிறார்கள்!!

இந்தப் பாடலில், மேஜர் அவர்களும், நடிகர் திலகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து, இந்தப் பாடலுக்குப் பெருமை சேர்த்திருப்பார் என்பதை மறக்க முடியாது. எனக்குத் தெரிந்து, இப்படத்திற்குப் பின்னர் தான், இவர்களின் காம்பினேஷன் தொடர்ந்து வரத் துவங்கியது.

இந்தப் பாடலும், ஒரு சிறப்பான பாடலுக்குரிய அனைத்து அம்சங்களிலும் முதல் இடத்தைப் பிடித்து, பாடல் வெளி வந்த நாள் முதல், இன்று வரை, அனைவராலும் ஒரே மாதிரி ரசிக்கப் படுவதால், இந்தக் கட்டுரையில், அதாவது நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்களில் இடம் பெறுகிறது.

தொடரும்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
25th November 2011, 06:55 PM
டியர் பார்த்தசாரதி சார்,

தாங்கள் பதிவிட்டுள்ள 'நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்' வரிசையில் இடம் பெற்றுள்ள "அந்த நாள் ஞாபகம்" பாடல் பற்றிய பதிவு பட்டையைக் கிளப்புகிறது. அருமையான சரளமான நடை. என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

பொதுவாகவே ஒரு புகழ் பெற்ற பாடலைப் பற்றி ஆய்வு செய்து எழுதும் போது அப்பாடலில் நடித்தவர் பெயரை ஒரு மரியதைக்காகக் குறிப்பிட்டு வைத்து அப்பாடலைப் பற்றி முழுமையாக அலசுவார்கள். ஆனால் நம் நடிகர் திலகம் விஷயத்தில் அவர் நடிப்பை முழுமையாக ஆய்வு செய்தால் தான் பாடலையே ஆய்வு செய்து ரசித்து எழுத முடியும்.அதை மிகப் பிரமாதமாக நீங்கள் கையாண்டுள்ள விதம் அருமை. மிகச் சிறப்பாக அவருடைய அசைவுகளை வர்ணித்துள்ளீர்கள். (பாடல் வரிகளையும் தான்) படிக்க மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றி!

அன்பு பம்மலார் அவர்களை இத்திரியின் 'சூப்பர் ஸ்டார்' என்று புகழ்ந்துரைத்திருப்பது நூற்றுக்கு இருநூறு சதவீதம் உண்மை. அதற்காக தங்களுக்கு என் அன்பு நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
25th November 2011, 07:21 PM
2000 தங்கப் பதிவுகள் என்ற அசுர சாதனைக்கு சொந்தமாகப் போகும் திரியின் பொக்கிஷப் பெட்டகமே! அன்புப் பம்மலார் அவர்களே! தங்கள் அற்புத சேவைகளுக்கு அடியேனின் மனம் நிரம்பிய வாழ்த்துக்கள்.

http://www.louisville.com/files/u4027/Treasure%20Chest%20animated.gif http://teacherweb.com/CT/JFK_Milford/MrsCraig/hands_clapping.gif

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
25th November 2011, 08:47 PM
அன்பு கார்த்திக் சார்,
தங்கள் அன்பு பாராட்டுக்கு மனமுவந்த நன்றிகள்.

தாங்கள் காங்கிரஸை உயிர்ப்பிக்க நடிகர்திலகத்தின் ரசிகர்களால் மட்டுமே முடியும் என்று கூறியிருப்பது நம் அனைவரது எண்ணங்களின் பிரதிபலிப்பாகும். நாமும் ஊதுகிற சங்கை பல காலமாக ஊதிக் கொண்டுதான் இருக்கிறோம். எல்லாம் ......காதில் ஊதிய சங்காகத்தான் ஆகிக் கொண்டிருக்கிறது.. அப்பட்டமான இந்த உண்மைகள் காங்கிரசுக்குத் தெரிந்தும் அதனை அலட்சியப் படுத்தி அதல பாதாளத்தில் விழத் துடிக்கிறதே! அதன் தலைஎழுத்தை இனி யாராலும் மாற்ற முடியாது... நம்மவர் பாவங்களை மூட்டை மூட்டையாய் சுமந்து கொண்ட பெருமைக்குரிய காங்கிரஸ் இனி இங்கு காலாவதிதான்.

http://jamactors.com/jamactors/jamactorsimg/rajendrakumar.jpg

தாங்கள் கேட்டிருந்த ராஜேந்திரகுமார் புற்று நோயால் பாதிக்கப் பட்டு July 29, 1999 அன்று மும்பையில் காலமாகி விட்டார். 1957-இல் வெளிவந்த அற்புதக் காவியப் படமான "மதர் இந்தியா" ஹிந்திப் படத்தில்(தமிழில் நம்மவரின்" புண்ணிய பூமி") நர்கீஸின் மூத்த மகனாக நடித்து மிகவும் புகழ் பெற்றார். ராஜ்கபூரின் 'சங்கம்' அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.1969-இல் 'பத்மஸ்ரீ' அவார்டும் வாங்கியுள்ளார். 1981- இல் வெளிவந்த 'லவ்ஸ்டோரி' என்ற தன் சொந்தப் படத்தையும் இயக்கியிருந்தார்.

http://www.surfindia.com/celebrities/bollywood/images/waheeda-rehman.jpg

வஹீதா ரஹ்மான் நல்லபடியாக இருக்கிறார். 1965-இல் வெளிவந்த தேவ்ஆனந்த் அவர்களின் காலத்தால் அழிக்க முடியாத காவியமான 'கைடு' திரைப்படம் மூலம் மிகுந்த புகழ் பெற்றவர். இவரும் 'பத்மஸ்ரீ' க்கு சொந்தக்காரர். 2009-இல் கூட 'டெல்லி 6' என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார்.

அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
26th November 2011, 01:24 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

சிவந்த மண்

[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

அட்டைப்படம் : பேசும் படம் : அக்டோபர் 1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5054-1.jpg

செழிக்கும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
26th November 2011, 01:56 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

சிவந்த மண்

[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

"சிவந்த மண்" காவியத்தை உருவாக்க ஏற்பட்ட செலவு (approx.)

வரலாற்று ஆவணம் : மதி ஒளி ("சிவந்த மண்" சிறப்பு மலர்) : 1.11.1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5090-1.jpg

செழிக்கும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
26th November 2011, 02:49 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

சிவந்த மண்

[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

சாதனைப் பொன்னேடுகள் : முதல் வெளியீட்டு விளம்பரங்கள்

முரசொலி : 31.10.1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5091-1.jpg


முரசொலி : 8.11.1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC3804-1.jpg


அமுதசுரபி : தீபாவளி மலர் இணைப்பிதழ் : 1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5092-1.jpg

செழிக்கும்...

பக்தியுடன்,
பம்மலார்.

anm
26th November 2011, 02:55 AM
பார்த்தசாரதி சார்,

உங்களின் ஆய்வுக்கட்டுரையான "அந்த நாள் ஞாபகம்" மிகவும் அருமையானதொரு ஆழமான சிந்தனைக் கட்டுரை.அதில் ஒவ்வொரு வரிக்கும் ஒரு முகபாவத்தைக் கையாண்டிருப்பார் நடிகர் திலகம் அவர்கள்!!!!

மிக நன்று.

Anm

anm
26th November 2011, 02:58 AM
Dear Vasudevan sir,

A very very Belated Happy Birthday!!!!!! As I was busy with my work and was in Chennai in last week could not view our thread and that is the reason for the delay.

Saluting for all the continued good work.

ANM

pammalar
26th November 2011, 03:17 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

சிவந்த மண்

[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

ஆவணப் பொக்கிஷம் : சாதனைப் பொன்னேடு

50வது நாள் விளம்பரம் [நாகாஸ்திரம்] : தினத்தந்தி : 28.12.1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5093-1.jpg

எனது இரண்டாயிரமாவது பதிவான இந்தப்பதிவை மிகமிக அரியதொரு ஆவணப்பொக்கிஷமான "சிவந்த மண்" திரைக்காவியத்தின் 50வது நாள் விளம்பரத்தை இடுகை செய்யும் பதிவாக பதிவிட்டது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் !

செழிக்கும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
26th November 2011, 03:47 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

சிவந்த மண்

[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

ஆவணப் பொக்கிஷம் : சாதனைப் பொன்னேடு

100வது நாள் விளம்பரம் [பிரம்மாஸ்திரம்] : தினத்தந்தி : 16.2.1970
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5094-1.jpg

குறிப்பு:
நமது தாய்த்திருநாட்டில் வசூல் சாதனைகளை உருவாக்கி இமாலய வெற்றி பெற்ற "சிவந்த மண்", வெளிநாடான இலங்கையிலும், 'கெப்பிடல்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி பெரும் வெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது.

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
26th November 2011, 03:51 AM
டியர் mr_karthik,

தங்களின் பாராட்டுக்கு நன்றி !

நடிகர் திலகம் எழுதியுள்ள "சிவந்த மண்" வெளிநாட்டுப் படப்பிடிப்புக் கட்டுரையில், அக்கட்டுரை முழுவதுமே, அவரது குறும்பு பளிச்சிடுவதாக எழுதியிருந்தீர்கள், நூறு சதம் உண்மை. அவர் மிகுந்த Sense of Humour கொண்டவர் என்பதனை இக்கட்டுரை மூலம் மீண்டும் ஆணித்தரமாக நிருபித்துள்ளார்.

தாங்கள் கேட்டவுடன், ராஜேந்திரகுமார் மற்றும் வஹீதா ரஹ்மான் குறித்த அரிய தகவல்களை அள்ளி வழங்கிய ரசிகமாமணிக்கு நமது நன்றிகள் ! நடிகை வஹீதா ரஹ்மான அவர்களுக்கு இந்த ஆண்டான 2011, பிறந்தநாள் பவளவிழா ஆண்டாகும். அவருக்கு நமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !

தெலுங்கு "சிவந்த மண்" பற்றி கூடிய விரைவில் அறிந்து பதில் தருகிறேன்.

2000 பதிவுகளை இந்த எளியேன் நெருங்கியதற்காக பாராட்டுத் தெரிவித்து தாங்கள் வெளியிட்டிருந்த பதிவு என்னை உணர்ச்சிபிழம்பாக்கிவிட்டது. தங்களைப் போன்றவர்கள் அளிக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் எப்பொழுதும் இருக்கும்போது எனக்கு என்ன குறை இருக்கப் போகிறது ! தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் !

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
26th November 2011, 03:59 AM
டியர் வாசுதேவன் சார்,

"சிவந்த மண்" வெளிநாடுகளில் படமாக்கப்பட்டதை, மிகவும் அனுபவித்து ரசித்து, சிறிதும் சுவை குன்றாமல், கட்டுரையாக வழங்கியிருந்தார் நமது நடிகர் திலகம். அதனைத் தாங்களும் மிகமிக ரசித்து வாசித்திருக்கிறீர்கள் என்பது தங்களது பதில் பதிவிலிருந்து புலனாகிறது. தங்களது பாராட்டுக்கு எனது பாசமான நன்றி !

2000 பதிவுகளை அடியேன் அளித்துள்ளதை பாராட்டும் விதமாக, தாங்கள் பதிவிட்டுள்ள, வாழ்த்துக்களுடன் கூடிய ஜொலிஜொலிக்கும் பாராட்டுப்பதிவைப் பார்க்கும் போதெல்லாம் எனது கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தங்களுக்கு எனது உணர்வுபூர்வமான, உயிர்ப்பான நன்றிகள் !

பாசப்பெருக்கில்,
பம்மலார்.

pammalar
26th November 2011, 04:05 AM
டியர் ஜேயார் சார்,

தங்கள் மகிழ்ச்சி என் பாக்கியம் ! பாராட்டுக்கு நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th November 2011, 04:36 AM
டியர் பார்த்தசாரதி சார்,

திறனாய்வு சூப்பர் ஸ்டாரான தங்களின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றது எனது பேறு. தங்களுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !

தங்களின் 'நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்' கலக்கல் நெடுந்தொடரில், லேட்டஸ்ட் பதிவாக வெளிவந்துள்ள "உயர்ந்த மனிதன்" காவியப்பாடலான 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடலின் அலசல் அசத்தலோ அசத்தல் ! நடிகர் திலகத்தின் மறைவுக்குப்பின் நடந்த ஒரு அஞ்சலிக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த திரு.குமரி அனந்தன் பேசும் போது இந்தப்பாடல்காட்சியைக் குறிப்பிட்டு ஒரு வாசகம் சொன்னார். அது ஒரு வாசகமானாலும் திருவாசகம் போல் என் மனதில் நிலை பெற்றுவிட்டது. அப்படி அவர் என்னதான் சொன்னார் என்றுதானே கேட்கிறீர்கள்?, 'அந்த நாள் ஞாபகம்' பாடலைக் குறிப்பிட்டு. "இப்பாடலில் நடிகர்திலகத்தின் உடம்பில் ஓடுகின்ற நரம்பும் நடிக்கும், அவர் கையில் ஆடுகின்ற பிரம்பும் நடிக்கும்" என்றாரே பார்க்கலாம், அரங்கமே அதிர்ந்து ஆர்ப்பரித்தது.

மணியான பாடலைப் பற்றி மணிமணியாக தகவல்களை வழங்கி ஆய்வு செய்தமைக்காக தங்களுக்கு எனது பொன்னான பாராட்டுக்களுடன் கூடிய கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
26th November 2011, 07:10 AM
congrats http://img528.imageshack.us/img528/8743/9601322274523temp.gif

vasudevan31355
26th November 2011, 07:12 AM
பார்த்தசாரதி சார் அருமையாக ஆய்வு செய்து இடுகை செய்த உயர்ந்தமனிதனின் 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் இப்போது நம் எல்லோருடைய நெஞ்சிலும் ஞாபகமாக நிழலாடிக் கொண்டிருப்பதால் சில அற்புதமான காட்சிகளோடு அந்தக் காவியப் பாடலில் நடிகர் திலகத்தை கண்டு பூரிக்கலாம்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WrivDNF8CoA

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th November 2011, 07:24 AM
அன்பு ஆனந்த் அவர்களே!

தங்களுடைய அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றிகள். உங்களின் உளப்பூர்வமான பாராட்டுக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகள் வரவில்லை. மீண்டும் என்னுடைய அன்பான நன்றிகள். தங்கள் அன்பு உள்ளத்திற்காக இதோ ஓர் அன்புப் பரிசு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/05.jpg?t=1322276572

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th November 2011, 07:43 AM
பதிவு 2000 பம்மலார் சார்,

என்னுடைய பாசமான பாராட்டுக்கள். 2000 20000 ஆக உயரவும்,தாங்கள் மென்மேலும் உயர்ந்து மேன்மை அடையவும் சிவாஜினோ துணையிருப்பாராக.

'சிவந்த மண்' பேசும் படம் அட்டைப்படம் விழிகள் சிவக்க சிவக்க பார்க்க வைக்கிறது.

'சிவந்த மண்' காவியத்தை உருவாக்க ஏற்பட்ட செலவு பற்றிய மதி ஒளி செய்தி ஒரு புதுமையான வரலாறு.

'சிவந்த மண்' சாதனைப் பொன்னேடுகள் சரித்திரப் பதிவுகள்.

'சிவந்த மண்' 50வது நாள் விளம்பரம் (தங்களது 2000-மாவது மைல்கல் நாகாஸ்திர பொற்பதிவு) 'நச்'. அந்த விளம்பரத்தில் எங்கள் கடலூர் 'ரமேஷ்' திரையரங்கு இடம் பெற்றிருப்பது காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளச் செய்கிறது.

'சிவந்த மண்' 100வது நாள் விளம்பரம் [பிரம்மாஸ்திரம்] பிரம்மாண்டம்.

நம் 'சிவந்த மண்' இலங்கை மண்ணிலும் கலந்து அந்த மண்ணையும் செழிப்படையச் செய்தது பெருமிதம்.

அரிய ஆவணங்கள் இவை எல்லாவற்றையும் அள்ளித் தந்த தங்கள் பணி தன்னிகரில்லாதது.

அனைத்திற்கும் ஆயிரமாயிரம் நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

Subramaniam Ramajayam
26th November 2011, 09:34 AM
Hearty congrats pammalar sir for the landmark achieved. We expect more pammalars to keep our nt fame and glory alive. Really you are great.

kumareshanprabhu
26th November 2011, 11:00 AM
Congrats pammalar sir

mr_karthik
26th November 2011, 11:28 AM
அன்புள்ள பார்த்தசாரதி சார்,

சிறிது இடைவெளிக்குப்பின் உங்கள் 'காவியப்பாடல்கள்' சீரியலில் நீங்கள் ஆய்வு செய்திருக்கும் 'அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் விவரிப்பு மிக மிக அருமை. என்ன ஒரு முழுமையான ஆய்வு. (அதை உடனே ரெஃபர் செய்துகொள்ளும் வண்ணம் பாடல் காட்சியைப்பதிப்பித்த வாசுதேவருக்கு நன்றி).

நிச்சயம் இரு ஒரு சாகாவரம் பெற்ற பாடல்தான். ஏனென்றால் இப்பாடலில் பங்கேற்ற பலரே இப்பாடலைப்பற்றி விரிவாகப்பேசியிருக்கிறார்கள்.

மெல்லிசை மன்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்பாடல் உருவான விதம் பற்றியும் அது நடிகர்திலகத்தின் சீரிய நடிப்பால் சிறப்பாக அமைந்தது பற்றியும் சொல்லியிருக்கிறார்.

அதுபோல கவிஞர் வாலியும், நடிகர்திலகத்துக்கு தான் எழுதிய பாடல்களைப்பற்றிப்பேசும்போது, மறக்காமல் இப்பாடலைப் பற்றிச்சொல்வார். சமீபத்தில் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வாலிப வாலி' நிகழ்ச்சியில்கூட இப்பாடலைப்பற்றி மிகவும் விரிவாக சொன்னார்.

அதுபோல டி.எஸ்.சௌந்தர்ராஜன் அவர்களும், தான் பாடிய மிகவும் சிறந்த பாடல்களைப்பற்றிச்சொல்லும்போது 'அந்தநாள்' பாடலை மறக்காமல் சொல்வார். மூச்சிரைக்கப்பாடுவது தத்ரூபமாக இருக்க வேண்டுமென்பதற்காக பாடல் துவங்குமுன் ரெக்கார்டிங் தியேட்டரைச்சுற்றி நான்கு ரவுண்ட் ஓடி வந்து, மெல்லிசை மன்னரிடம் பாடலைத்துவங்கும்படி சைகை செய்தாராம்.

சிறப்பு தேன்கிண்ணம் வழங்கும் விருந்தினர்களும் சரி, பாடல்களைத் தொகுத்து வழங்கும் காம்பியர்களும் சரி, இப்பாடலை குறிப்பாக நடிகர்திலகத்தின் அபார பெர்ஃபாமன்ஸை ரொம்பவே விரிவாக, உயர்வாக சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அதை இன்னும் ஒரு படி உயர்த்தும் வண்ணம் நீங்களும் மிக அருமையாக ஆய்வு செய்துள்ளீர்கள்.

நிச்சயம் இது காலங்களைக் கடந்த சாதனைப் பாடல்தான். அருமையாக திறனாய்வு செய்த தங்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.

mr_karthik
26th November 2011, 11:42 AM
அன்புள்ள வாசுதேவன் அவர்களே,

ராஜேந்திர குமார் பற்றியும், வகீதா ரகுமான் பற்றியும் நான் கேட்டதும் விரிவாக (அவர்களின் புகைப்படத்துடன்) விடையளித்தமைக்கு மிக்க நன்றி. ராஜேந்திர குமார் அவர்கள், நடிகர்திலகத்துக்கு முன்பே இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி இப்போதுதான் தெரிகிறது. வகீதா நலமுடன் இருக்கிறார் என்ற விவரம் ஆறுதல் அளிக்கிறது. (அவருக்கு இது பவள விழா ஆண்டு என்று நினைவூட்டிய பம்மலாருக்கு நன்றி. இறைவன் நீண்ட ஆயுளைக்கொடுக்கட்டும்).

(அவ்விருவரையும் பற்றி நீங்களும் பம்மலாரும் அளித்திருக்கும் விவரங்கள், நடிகர்திலகத்தின் ரசிகர்கள், நடிகர்திலகத்தின் படங்களைப்பற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலக வரலாற்றையே கைக்குள் வைத்திருப்பவர்கள் என்று நிரூபிக்கிறது).

'அந்தநாள் ஞாபகம்' வீடியோ இணைப்புக்கும் மிக்க நன்றி.

mr_karthik
26th November 2011, 12:26 PM
அன்புள்ள பம்மலார் சார்,

அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக வந்துகொண்டிருக்கும் 'சிவந்த மண்' ஆவணப்பதிவுகளுக்கு மிக்க நன்றி.

50-வது நாள் விளம்பரம் என்ற நாகாஸ்திரத்தையும், 100-வது நாள் விளம்பரப்பதிவு என்ற பிரம்மாஸ்திரத்தையும் பார்த்ததும் முதல் வேலையாக, இந்தச் சாதனைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் பற்றி குறை சொல்லியிருந்த இரண்டு வலைப்பூக்களைத் தேடிப்பிடித்து அவற்றின் பின்னூட்டத்தில், நமது திரியின் இந்தப்பக்கத்துக்கான இணைப்பைக்கொடுத்து விட்டுத்தான் மறுவேலை பார்த்தேன். இன்னும் எங்கெங்கே எந்தெந்த பிரகஸ்பதிகள் உளறி வைத்திருக்கிறார்கள் என்று தேட வேண்டும்.

இரண்டு விளம்பரங்களிலும் அனைத்துத் திரையரங்கங்களின் பெயர்களையும் இடம்பெறச்செய்த 'சித்ராலயா' நிறுவனத்துக்கு முதல் நன்றி.

சென்னையில் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி திரையரங்குகளில் திரையிடாததன்மூலம் மேலும் சில வாய்களுக்கு ஆப்பு வைத்த, சித்ராலயா மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இரண்டாவது நன்றி.

தங்களின் மகத்தான ஆதரவின் மூலம், இக்காவியத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய தமிழக மக்களுக்கு ஏராளமான நன்றிகள்.

அவற்றை இங்கே பதிப்பித்து நடிகர்திலகத்தின் ரசிகர்கள் கைகளில் ஏ.கே.47 களைக்கொடுத்த தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

அக்டோபர் 1969 'பேசும்படம்' அட்டைப்படம் சூப்பரோ சூப்பர். இந்த இதழ் என்னிடம் வெகுநாட்கள் இருந்தது. இதில் ஒரு விசேஷம். முதல் நான்கு பக்கங்களையும் புரட்டப்புரட்ட நடிகர்திலகத்தின் பட விளம்பரங்கலாகவே வரும். அட்டைப்படத்தில் சிவந்த மண். அட்டையைப்புரட்டியதும் முதல் பக்கத்தில் 'இப்பொழுது நடைபெறுகிறது நிறைகுடம்' விளம்பரம், அதைப்புரட்டியதும் அடுத்த தாளில் 'இப்பொழுது நடைபெறுகிறது தெய்வ மகன்' விளம்பரம், அடுத்த பக்கத்தில் வெற்றிநடைபோடுகிறது 'திருடன்' விளம்பரம். எந்தக்கதாநாயகனுக்கும் இந்த தைரியம் இருக்காதுங்க.

அடுத்த மாதம் (நவம்பர் 1969) பேசும் படம் அட்டைப்படமும் 'சிவந்த மண்' தான் இடம்பெற்றிருந்தது. பின் அட்டையில் இன்னொரு தீபாவளி வெளியீடான 'செல்லப்பெண்' இடம்பெற்றிருக்க, 'போட்டிப்படம்' உள்பக்கத்தில் கருப்புவெள்ளை விளம்பரமாக இடம்பெற்றிருந்தது.

தாங்கள் இப்போது வெளியிட்டுள்ள 'ரிசர்வ் செய்யப்படுகிறது' விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கும் சிம்மாசனத்தில் பம்மலார் என்று பொறிக்கப்பட்டிருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மாமன்னர் நீங்கள் என்பதை பொருத்தமாகச் சொல்கிறது. (அதுபோல முன்பு நீங்கள் தந்த சிவந்த மண் Helecopter படப்பிடிப்பு பற்றிய பொம்மை கவரேஜில், நடிகர்திலகத்தின் இதயப்பகுதியில் 'பம்மலார்' என்று பொறித்திருந்தீர்கள். நடிகர்திலகத்தின் இதயத்தில் இடம்பெறப் பொருத்தமானவர் நீங்கள் என்பதை சொல்லாமல் சொல்லியது மிகவும் சந்தோஷமாக இருந்தது).

மதிஒளியில் வெளியான 'சிவந்த மண்' செலவினம் பற்றிய ஏட்டில் ஒரு அதிசயம் பார்த்தீர்களா?. 1972-க்குப்பின் 'சிலருக்கு' சூட்டப்பட்ட பட்டத்தை 1969-லேயே மதிஒளி, நமது நடிகர்திலகத்துக்கு சூட்டிவிட்டது. நடிகர்திலகம் மறைந்திருக்கும் இடம் பற்றிய செட்டைப்பற்றிக் குறிப்பிடும் வரி "புரட்சித்தலைவன் வீடு".

KCSHEKAR
26th November 2011, 02:24 PM
Congrats Pammalar sir.

pammalar
26th November 2011, 08:42 PM
ரசிகவேந்தர் ராகவேந்திரன் சார்,

தங்களது வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுப்பதிவுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th November 2011, 08:51 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது செழுமையான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th November 2011, 01:35 AM
டியர் ராமஜெயம் சார்,

தங்களின் புகழுரைக்கு எனது பணிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th November 2011, 01:38 AM
Dear kumareshanprabhu Sir,

Thank You So Much !

Regards,
Pammalar.

pammalar
27th November 2011, 01:52 AM
Dear Chandrashekaran Sir,

Thanks a lot !

Regards,
Pammalar.

pammalar
27th November 2011, 03:01 AM
டியர் mr_karthik,

தங்களின் தூய உள்ளத்திலிருந்து தாங்கள் அளிக்கும் தொடர்ச்சியான பாராட்டுக்களுக்கு எனது தூய்மையான நன்றிகள் !

நடிகர் திலகத்தின் பாக்ஸ்-ஆபீஸ் சாதனைகளை இருட்டடிப்பு செய்யும் நபர்களின் வலைப்பூக்களையெல்லாம் தேடிப் பிடித்து, அங்கே நமது ஆவணப் பொக்கிஷங்களை அளித்து, அவர்கள் அனைவரையும் உண்மையை உணர்ந்து கொள்ளச் செய்யும், தங்களது அளப்பரிய சேவை மிகுந்த பாராட்டுக்குரிய ஒன்று. தங்களுக்கு நமது திரியின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் !

தாங்கள் குறிப்பிட்டு எழுதிய 'பேசும் படம்' நவம்பர் 1969 இதழின் "சிவந்த மண்" அட்டைப்பட விளம்பரம் ஆவணப்பொக்கிஷமாக அடுத்த பதிவில் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th November 2011, 03:04 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

சிவந்த மண்

[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

அட்டைப்படம் : பேசும் படம் : நவம்பர் 1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5108-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
27th November 2011, 03:21 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

சிவந்த மண்

[9.11.1969 - 9.11.2011] : 43வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

காவிய விமர்சனம் : தென்னகம் : 1969
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5099-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
27th November 2011, 04:28 AM
SARADA madam's review about SIVANDHA MANN is 100 percent correct and true. sridhar wanted to give this movie TECHINALLY A CLASS APART From OTHER movies and he HAS ACHIEVED IT also. regarding fixing mekala theatre in purasawalkam, the theatre management wanted to screen this movie very much in their theatre and requested chitralaya specically and true it was first NT movie accepted by the theares and hence the banner NAMNADU was not accepted -screened in saravan theatres. my vague rememberence.

Dear Ramajayam Sir,

You are cent percent right ! Makkal Thilagam's NAM NAADU got released at 'Saravana' theatre in Purasawaalkam Area. Here is the historical evidence for it from the November 1969 issue of "Pesum Padam':

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/105NamNaadu-1.jpg

SIVANDHA MANN ran for a total of 468 days, celebrating 100 days in all the four theatres [New Globe(145), Agasthya(117), Mekala(103), Noorjehan(103)] it got released at Chennai.

On the other hand, NAM NAADU ran for a total 392 days, celebrating 100 days in 3 out of the 4 theatres [Chitra(105), Sri Krishna(105), Saravana(105), Srinivasa(77)] it got released at Chennai.

What a graceful competition between the two contemporaries !

Nadigar Thilagam & Makkal Thilagam : Distributor's Delight !

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
27th November 2011, 04:44 AM
Dear Pammalar,

பாகப்பிரிவினை இலங்கையில் ஓடிய விபரம் தரமுடியுமா?

நன்றி

Jeev

டியர் ஜீவ் சார்,

கலைக்குரிசிலின் "பாகப்பிரிவினை", இலங்கையில் உள்ள கொழும்பு 'கிங்ஸ்லி' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th November 2011, 05:03 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

அண்ணன் ஒரு கோயில்

[10.11.1977 - 10.11.2011] : 35வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

சிறப்புப் புகைப்படம்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnanOruKoil1-1.jpg

தொடரும்....

பக்தியுடன்,
பம்மலார்.

Jeev
27th November 2011, 06:18 AM
Dear Pammalar,

Thanks for the information.

கொழும்பு KINGSLEY திரையில் 100 நாட்களுக்கு ஓடிய இன்னொரு சிவாஜி படம் ஜெனரல் சக்கரவர்த்தி (104). GC யாழ்ப்பாணம் ராஜாவில் 115 நாட்கள் ஓடியது.

Jeev

vasudevan31355
27th November 2011, 08:24 AM
'பாதுகாப்பு' 42-ஆவது குதூகல ஆண்டுத் துவக்கம்.

'பாதுகாப்பு' வெளியான நாள் : 27-11-1970

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_001810560.jpg

இந்தப் படத்தைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் என் மனம் ஆகாயத்தில் பறக்கும். ஏன் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்படி ஒன்றும் விசேஷமான படம் கூட இல்லையே என்றும் கூட பலர் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் மறக்கமுடியாத விசேஷப் படம் அது. சரி...ரொம்பப் பீடிகை வேண்டாம்... விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.

எங்கள் ஊரான கடலூரில்தான் 'பாதுகாப்பு' படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு நடைபெற்றது என்பதுதான் அந்த விசேஷம். இப்போது சொல்லுங்கள்.. இந்தப்படம் எனக்கு, ஏன் கடலூரையும், அதன் சுற்று வட்டாரங்களைச் சார்ந்தவர்களுக்கும் மிக நெருக்கமான படம்தானே!

கடலூர் ஓல்ட் டவுன் அதாவது CUDDALORE O.T என்று குறிப்பிடுவார்கள். (கடலூர் துறைமுகம் என்றும் கூறுவார்கள்) கடல், ஆறுகள் சூழ்ந்த பகுதிகள் அதிகம். மீனவர்கள் அதிகம் வசிக்கும் இடம். மீன்பிடித் தொழிலை நம்பித்தான் இன்றளவும் பல குடும்பங்கள் வாழ்கின்றன. உப்பனாறு, கடிலம்,பெண்ணையாறு போன்ற ஆறுகள் இங்கு கடலுடன் சங்கமிக்கும் காட்சிகளைக் காணக் கண் கோடி வேண்டும். இந்த ஆற்றுப் பகுதிகளில்தான் பாதுகாப்பு ஷூட்டிங் நடைபெற்றது.

கடலூர் துறைமுக உப்பனாற்றுப் பகுதி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_000274160.jpg

'பாதுகாப்பு' படத்தின் பெரும்பான்மையான சீன்கள் படகில் நடப்பது போல் வருவதினால் படப்பிடிப்பு கடலூர் துறைமுகம் பகுதிகளில் நடத்தப் பட்டது. அப்போது அங்கு நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

1970-ன் ஆரம்பத்தில் ஷூட்டிங் நடந்ததாக நினைவு. என் தாயார் தினமும் ஷூட்டிங் பார்க்க என்னை அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள். என் தாயார் நடிகர் திலகத்தின் தீவிர பக்தை. எனவே சந்தோஷத்திற்குக் கேட்கணுமா?...

அப்போதெல்லாம் ஷூட்டிங் பார்ப்பது என்றால் சொர்க்கத்தையே நேரில் காண்பது போல...கடல் அலைகளை விட மக்கள் தலைகள் அதிகம். அதுவும் 'நடிப்புலகச் சக்கரவர்த்தி' ஷூட்டிங் என்றால்?... சொல்லணுமா..நடிகர் திலகத்தை காணும் போதெல்லாம் ரசிகர்கள் கூட்டம் கடல் அலையென ஆர்ப்பரிக்கும்.

தெய்வத்தை தரிசிப்பது போல நடிகர்திலகத்தைப் பார்த்து மயங்கியது கூட்டம். நடிகர் திலகம் படு ஸ்லிம்மாக படப்பிடிப்பில் கலந்து கொண்டது என் பிஞ்சு நெஞ்சில் ஆழமான ஆணிவேராக வேரூன்றிப் பதிந்துவிட்டது. அவர்மேல் பாசமான வெறி வர என்னுள் முதல் தளம் அமைத்துக் கொடுத்தது 'பாதுகாப்பு' பட ஷூட்டிங் தான்.

நடிகர் திலகம் படகோட்டுபவராக ( படகை விட சற்றுப் பெரிதான தோணி) நடித்ததால் பெரும்பாலும் படகுகளில் ஷூட்டிங் இருக்கும். உப்பனாற்றில்தான் நிறைய ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங் சமயங்களைத் தவிர பிற சமயங்களில் கைலியையே கட்டிக் கொண்டு கொஞ்சமும் பந்தா இல்லாமல் படகில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார் நடிகர் திலகம். தனியாக அவருக்கென்று ஒரு படகு. ஒரு படகோட்டி...(வண்ண ஓடக்காரன் அல்ல. கார்த்திக் சாருக்கு நன்றி!)...சாதாரண ஒரு படகோட்டி. (கொடுத்து வைத்த படகோட்டி.) படகில் சரியான வசதிகள் கூடக் கிடையாது. தன்னுடைய ஷூட்டிங் நடைபெறாத சமயங்களில் நடிகர் திலகம் படகிலேயே கண்ணயர்ந்து உறங்கி ஓய்வெடுக்க, படகு ஆற்றில் சுற்றிக்கொண்டே இருக்கும். ரசிகர்களின் அன்புத் தொல்லையை சமாளிக்க இப்படி ஒரு வழியை படகோட்டிதான் கூறினாராம். இருகரை மருகிலும் ஜனத்திரள் நடிகர் திலகத்தின் முகத்தை அருகில் பார்த்துவிடத் துடிக்கும். நடிகர் திலகமும் அவ்வப்போது படகோட்டியிடம் கரை ஓரமாக படகை ஓட்டச் சொல்லி கரை ஓரமாகவே படகில் நின்று (படகு மெதுவாக ஓடியபடியே இருக்கும்) அன்பு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் கையை அன்புடன் அவருடய ஸ்டைலில் அசைத்து சைகை செய்தபடியே வலம் வருவார்.

நடிகர் திலகம் படப்பிடிப்பில் ஒட்டுவதாக வரும் CU 221 எண் தோணி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002272080.jpg

CU 221 எண் தோணியை செலுத்துகிறார் நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002567760.jpg

தோணியின் பாய்மரத்தை ஏற்றுகின்றார் நடிகர் திலகம்.(உடன் மேஜர் மற்றும் நம்பியார்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002267000.jpg

உடன் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், நம்பியார் அவர்கள்,மேஜர் சுந்தரராஜன் அவர்கள், இயக்குனர் பீம்சிங் அவர்கள் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்கள். மேஜர் அவர்களின் கையில் எப்போதும் நீள் சுருட்டு ஒன்று புகைந்து கொண்டே இருக்கும்.

மீனவர்கள் அன்புடன் தரும் மீன் வகை உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிட்டார் நடிகர் திலகம். இறால் என்றால்அவருக்கு மிகவும் உயிர் என்பதால் மீனவர் தலைவர் திரு குப்புராஜ் அவர்கள் இறாலை பதமாக வறுத்து ஒரு டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்துவிடுவாராம். நடிகர் திலகம் அதை ருசித்து சுவைத்து சாபிடுவாராம். (பின்னாட்களில் 'பாதுகாப்பு' எண்ண அலைகளில் மூழ்கும் போது திரு.குப்புராஜ் அவர்கள் பாதுகாப்பு பற்றிய பழைய நினைவுகள் பலவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்வார்).

'ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்' என்ற அற்புதமான பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு பூண்டியாங்குப்பம் என்ற இயற்கை சூழல் நிறைந்த ஊரில் நடந்தது. ஒரு கைலி, மற்றும் ஒரு வெள்ளை பனியனுடன் நடிகர் திலகம் ஷாட்டுக்கு ரெடி. தன்னுடைய தோணியில் இருந்தவாறே அருகில் ஒரு சிறு படகில் புது திருமணத் தம்பதிகள் வரும்போது அவர்களைப் பார்த்து ஜெயலலிதாவை நினைத்து கனவு காணுவதாக சீன். அந்த புதுமணத் தம்பதிகளாக தன்னையும் ஜெயலலிதா அவர்களையும் கற்பனை செய்து அதே படகில் வருவதாக அந்தக் கனவுக் காட்சி. (அந்தக் குறிப்பிட்ட சீனைக் கூட நிழற்படமாகப் பதிவிட்டுள்ளேன்). இந்தக் காட்சியை ஆற்றின் அக்கரையில் எடுக்கப் படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

புதுமணத் தம்பதிகளாக நடித்த எக்ஸ்ட்ரா நடிகர்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002275240.jpg?t=1322361298

கனவுக் காட்சியில் நடிகர்திலகமும், ஜெயலலிதாவும்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002476960-1.jpg


இக்கரையில் படகில் நடிகர் திலகமும்,ஜெயலிதாவும் ஏறி அமர படகு அக்கரைக்கு செல்ல ஆரம்பித்தது. இக்கரையில் இருந்த மக்கள் ஷூட்டிங் இங்குதான் நடக்கும் என்று மனக்கோட்டை கட்டியிருக்க, திடீரென்று படகு அக்கரை செல்ல, ஏமாற்றமடைந்த இளைஞர் பலர் (நீச்சல் தெரிந்தவர் நீச்சல் தெரியாதவர் என்ற பாகுபாடெல்லாம் இல்லை..) 'சொடேல் சொடேல்' என ஆற்றில் குதித்து அக்கரைக்கு நீந்த ஆரம்பிக்க ஒரே ஆனந்தக் களேபரம் தான்.

என்னுடைய தந்தை ஊர்க்காவல் படையில் இருந்ததனால் எனக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. ஊர்க்காவலர் படை யூனிபார்ம் அப்படியே போலீஸ் உடை போலவே இருக்கும் . போலீசுக்குக் கிடைக்கும் மரியாதை அவர்களுக்கும் உண்டு. அந்த வசதியால் என் தந்தையுடன் வெகு ஈஸியாக நடிகர் திலகம் அமர்ந்திருந்த படகின் அருகில் சென்று நின்று கொள்ள முடிந்தது. நான் சிறுவனானதால் சடாலென எதிர்பாராத விதமாக என்னையும் நடிகர் திலகம் அமர்ந்திருந்த படகில் தூக்கி ஏற்றிவிட்டு, தானும் அப்படகில் ஏறிக்கொண்டார் என் தந்தை. (போலீஸ் பந்தோபஸ்து என்ற சாக்கில்.) படகில் படப்பிடிப்புக் குழுவினர் சிலரும், ஜெயலலிதா அவர்களும், சில காவல்துறையினர் மட்டும் இருக்க நடிகர் திலகத்தின் அருகில் நான். முதன் முதலாக நடிகர் திலகத்தை மிக அருகில் பார்க்கிறேன். ஒரு நாற்காலியில் கைலியோடு படு காஷுவலாக அமர்ந்திருந்தார் நடிகர் திலகம். அவ்வளவாக அறியாத சிறு வயது எனக்கு. பின்னாளில் என் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறார் என்பது அறியாமல் அவரை விழுங்கி விடுவது போலப் பேந்தப் பேந்தப் பார்க்கிறேன் நான். நடிகர் திலகமும் என்னை உற்று நோக்கி ஒரு சிறு புன்னகை புரிகிறார்.(என்ன ஒரு கொடுப்பினை). என் தந்தை வாழ்நாட்களில் எனக்குச் செய்த பேருதவி இதுதான் என்று சொல்லுவேன்.( பின்னர் பல நாட்களில் வாரம் ஒருமுறை என 'அன்னை இல்லம்' சென்று அவரை தரிசித்து 'ஷொட்டும்' வாங்கியிருக்கிறேன். திட்டும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.(அவரிடம் திட்டு வாங்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!) நினைத்தாலே கண்ணீர்ப் பிரவாகமெடுக்கிறது.

ஷூட்டிங் நடைபெற்ற பூண்டியாங்குப்பம் ஆற்றுப் பகுதி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_001859400.jpg

அக்கரையில் சில காட்சிகள் எடுத்து முடிக்க அன்று மதியம் இரண்டு மணி ஆகி விட்டது. ஒரு மணிக்கெல்லாம் ஜெயலலிதா அவர்களின் சம்பந்தப் பட்ட காட்சிகள் முடிந்தவுடன் அவர் தனியாக ஒரு படகில் இக்கரை வந்து சேர்ந்து மதியம் லஞ்ச்சுக்காக காரில் பாண்டிச்சேரி புறப்பட்டுப் போய் விட்டார். நடிகர் திலகம் நடித்த காட்சிகள் முடிந்து அவர் தனியாக ஒரு படகில் இக்கரை திரும்புகையில் பலத்த காற்று வீச ஆரம்பித்தது. அக்கரையில் இருந்து இக்கரை வந்து சேர ஒரு பதினைந்து நிமிடங்கள் ஆகும். காற்று அச்சமயம் பலமாக வீச, நடிகர் திலகம் வந்த சிறு படகின் பாய்மரம் கிழிந்து விட்டது. படகோட்டி சாதுரியமாக படகை ஓட்டி வந்தார். கிழிந்து போன அந்த பாய்மரம் செப்பனிட தேவையான செலவுக்கான தொகையை நடிகர் திலகமே படகோட்டியிடம் கொடுத்து உதவியது பசுமையாக நெஞ்சில் நிற்கிறது.

படகில் நின்று ஷூட்டிங் பார்க்க வந்த மக்களைப் பார்த்தவாறே நடிகர் திலகம் தன் வயிற்றைத் தடவி 'பசி' என்று சைகையால் அப்பாவித்தனமாகக் காண்பிக்க ,ஒரு ரசிகர் தன் கையில் வைத்திருந்த கலர் சோடாவுடன் ஆற்றுக்குள் குதித்து நீந்திச் சென்று நடிகர் திலகத்திடம் கொடுக்க அவரும் அதை தேவாமிர்தம் போல வாங்கிக் குடிக்க, அந்த ரசிகரின் முகத்தில் தோன்றிய பெருமிதத்தைக் காண வேண்டுமே! ..... செம ஜாலியாய் இருந்தது.

நடிகர் திலகம் தனது ஆத்ம நண்பரான காங்கிரஸ் முன்னாள் கடலூர் எம்.பி. திரு.முத்துக் குமரன் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அங்கிருந்து ஷூட்டிங் நடந்த பூண்டியாங்குப்பம் என்ற கிராமம் சற்றேறக்குறைய கடலூரிலிருந்து இருபது கிலோமீட்டர்களுக்கு மேல் இருக்கும். ஷூட்டிங் முடித்து மாலையில் திரும்பும் போது ரோடின் ஓரத்தில் ஒரு ஆயா மசால் வடை சுட்டுக் கொண்டு வியாபாரம் செய்தார்களாம். காரில் வரும்போது அந்த மசால் வடை வாசத்தில் மயங்கி காரை நிறுத்தச் சொல்லி காரில் அமர்ந்தபடியே மசால் வடையை வாங்கி வரச் சொல்லுவாராம் நடிகர் திலகம். வங்கியில் பணி புரிந்து ஒய்வு பெற்ற நடிகர் திலகத்தின் அன்புக்குப் பாத்திரமான கடலூர் 'பேங்க் மோகன்' என்ற இனிய நண்பர்தான் வடையை வாங்கி வந்து கொடுப்பாராம். நடிகர் திலகமும் காரிலேயே தினமும் வடையை மிகவும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டே வருவாராம். ('பேங்க்' மோகன் அடிக்கடி இன்று பார்த்தாலும் கூட "நான் நடிகர் திலகத்திற்கு மசால் வடை வாங்கிக் கொடுத்தவனாக்கும்"...என்று பெருமையுடன் ஜம்பம் அடித்துக் கொண்டு நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார்).

ஷூட்டிங்கின் கடைசி நாளன்று நடிகர்திலகமே காரை விட்டு இறங்கி நேராகவே அந்த ஆயாவிடம் சென்று மசால் வடை கட்டி கொடுக்கச் சொன்னாராம். அந்த ஆயாவும் சரியாகக் கண் தெரியாததால் தன்னிடம் வடை வாங்குவது உலகப் புகழ் பெற்ற நடிகர் என்று தெரியாமல் வடையைக் கட்டிக் கொடுத்தார்களாம். பின் நடிகர் திலகம் அந்தப் பாட்டியிடம் "பாட்டி! என்ன யாருன்னு உனக்குத் தெரியலையா?" என்று கேட்க, பாட்டி "சரியாகத் தெரியலயேயப்பா" என்று கூற, அதற்கு நம் நடிகர் திலகம் நம் கார்த்திக் அவர்கள் கூறுவது போல குறும்பாக,"பாட்டி என்ன நல்லாப் பாரு! என்ன நல்லாப் பாரு!" என்று திருவிளையாடல் பாணியிலேயே சொல்ல பாட்டி சற்று யோசித்துவிட்டு உடனே புரிந்து கொண்டு, "தம்பி! நீ சிவாசிகணேசன் தானே! என்று கூறி நடிகர் திலகத்தை அடையாளம் கண்டுபிடித்து விட்டார்களாம். பின் மசால் வடைருசியைப் பற்றி அந்தப் பாட்டியிடம் பாராட்டிவிட்டு மீதம் இருந்த அத்தனை மசால்வடைகளையும் பார்சல் செய்யச் சொல்லி வாங்கிக் கொண்டு அந்தப் பாட்டிக்கு ஒரு கணிசமான தொகையைத் தந்து மனமகிழ்ந்தாராம் நடிகர் திலகம்.

அதனால் தான் 'பாதுகாப்பு' படம் எங்களுக்கெல்லாம் மறக்க முடியாத ஒன்றாயிற்று. இன்னும் சொல்லப் போனால் கடலூரும், அதன் சுற்றுவட்டாரங்களும் அப்படத்தின் ஷூட்டிங்கால் தலைவரின் கோட்டையாயின என்று கூடச் சொல்லலாம். குறிப்பாக ஷூட்டிங் பார்க்க வந்த கிராமங்களின் மக்கள் நடிகர் திலகத்தைப் பற்றி சிலாகித்துப் பேசி மகிழ்ந்தனர்.

குறிப்பாக ராமாபுரம் என்ற ஒரு கிராமமே தலைவர் புகழ் பாடும் கிராமமாயிற்று. அந்த கிராமத்தில் தான் என் தந்தையார் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்தார்). ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நடிகர் திலகம் தான் வேட்டை ஆடி பாடம் செய்த புலியுடன் நின்று ஸ்லிம்மாக காட்சி தரும் அந்த அற்புத புகைப்படம் கண்டிப்பாக மாட்டப் பட்டிருக்கும் இன்றளவிலும் கூட.

இன்று 'பாதுகாப்பு' வெளியாகி 41 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஆனால் இப்போதுதான் அப்படத்தின் ஷூட்டிங் பார்த்தது போல அவ்வளவு பசுமையான நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. நடிகர் திலகத்தின் தீவிர பக்தனாக என்னைப் பெருமையுடன் உலா வர வைத்த பாதுகாப்பை வாழ்நாளில் மறக்கவே முடியாது. அந்த அனுபவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. 'பாதுகாப்பு' என்னைப் பொறுத்தவரயில் மிகச் சிறந்தபடம் என்றுதான் கூறுவேன். மிகவும் வித்தியாசமான முறையில் சிறந்த கதைக் கருவோடு எடுக்கப் பட்ட அற்புதமான இந்தப் படம் வழக்கம் போல வெகுஜன ரசனைக் குறைவால் சராசரிக்கும் கீழே தள்ளப் பட்டது வேதனைக்குரியது. மேலும் எங்கள் ஊரில் எடுக்கப் பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் இடம்பெறாமல் போனாலும், ஒரு சராசரி அளவிற்குக் கூட வெற்றி அடையவில்லையே என்ற வருத்தமும் ஆதங்கமும் எப்போதும் எங்கள் ஊர் மக்களின் அடிமனதில் இருந்து வலித்துக் கொண்டே தான் இருக்கும்.


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th November 2011, 08:56 AM
'பாதுகாப்பு' பட ஆல்பம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ03DAT_004381160.jpg?t=1322283378

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002540440.jpg?t=1322283235

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002497080.jpg?t=1322283144

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002431080.jpg?t=1322283048

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002392120.jpg?t=1322282958

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_002322360.jpg?t=1322282913

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_001603640.jpg?t=1322282872

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ02DAT_000441800.jpg?t=1322282817

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/AVSEQ03DAT_002075560.jpg?t=1322283284

('பாதுகாப்பு' பட குறுந்தகட்டின் தரம் சுமார் ரகம்தான். நல்ல நெடுந்தகடு கிடைத்தவுடன் மறுமுறை தெளிவாகப் பதிவிடுகிறேன்.சிரமத்திற்குப் பொறுத்தருளவும்).

அன்புடன்,
வாசுதேவன்.

Murali Srinivas
27th November 2011, 01:49 PM
வாசுதேவன் சார்,

இதுவரை பல பல அற்புத பதிவுகளை தந்திருக்கிறீர்கள். ஆனால் பாதுகாப்பு படப்பிடிப்பு 41 வருடங்களுக்கு முன்பு நடைப்பெற்றதை ஏதோ இப்போது நடைப்பெற்றுக்கொண்டிருப்பது போல் இன்னும் சொல்லப்போனால் ஒரு நேரலை ஒளிப்பரப்பு போல் தாங்கள் எழுதியிருக்கும் விதம் அருமை. இந்த பதிவு தங்கள் பதிவுகளிலே மிக சிறப்பான பதிவாக இடம் பெறுகிறது. இது போன்ற இன்னும் பல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்

mr_karthik
27th November 2011, 02:51 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

பாதுகாப்பு வெளியீட்டு தினத்தை முன்னிட்டு தாங்கள் அளித்துள்ள 'பாதுகாப்பு' திரைப்படத்தின் ஷூட்டிங் பற்றிய நினைவலைகள் மிக மிக அருமை. நீங்கள் சொல்லியிருக்கும் விதத்தில், நாங்களே அங்கு நேரில் இருந்து கண்முன்னே கண்டு களித்தது போல இருந்தது.

முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு அருமையான கடற்கரை மற்றும் உப்பங்கழிகளின் காட்சிகள் நமது தமிழ்நாட்டில், அதுவும் கடலூருக்கருகில் படமாக்கப்பட்டிருக்கும்போது, படம் பார்த்தபோது அவை பெரும்பாலும் கேரளத்தில் எடுக்கப்பட்டவையோ என்று நினைத்து விட்டேன். தவறு என்மீது அல்ல. பலமுறை காணக்கிடைக்காததால் வந்த குளறுபடி. (கடலூர் ஓ.டி.யின் சரியான பெயர் 'திருப்பாதிரிப்புலியூர்' என்று நினைக்கிறேன். சரியா?. விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதையாக மாற்றப்பட வெகு நாட்கள் எடுத்துக்கொண்டதால், சில ஆண்டுகள் இப்பாதையில் தொடர் வண்டி ஓட்டமில்லாமல் இப்போதுதான் ஓடத்துவங்கியுள்ளது).

படம் ரொம்ப பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. பல ஆண்டுகளுக்குப்பின் இயக்குனர் பீம்சிங்கும் நடிகர்திலகமும் இணைந்து உருவாக்கும் படம் என்பதும், ஏராளமான நட்சத்திரக்கூட்டம் நிறைந்திருந்ததும் அதற்குக்காரணமாக இருந்திருக்கலாம். நடிகர்திலகம், ஜெயலலிதா, மேஜர், நம்பியார், நாகேஷ், சந்திரபாபு, பாலையா, ஏ.கருணாநிதி, காந்திமதி உள்பட இன்னும் ஏராளமான பேர். ரொம்பவே எதிர்பார்த்து ஏமாற வைத்தது 'பீம்சிங் - நடிகர்திலகம்' என்ற கூட்டணிதான். இவ்விருவரும் மீண்டும் இணைந்து விட்டார்கள் என்றதும் ரசிகர்களின் மனம் அறுபதுகளின் துவக்கத்தில் வந்த படங்களை எண்ணி சஞ்சரிக்கத்துவங்கி விட்டது. ஆனால் கதையோ வேறு.

முழுக்க முழுக்க ஜெயலலிதா படமாகிப்போய், நடிகர்திலகத்தின் ரோல் ஒரு கெஸ்ட் ரோல் போல ஆகிப்போனது. படகில் ஏற வந்த ஜெயலலிதாவிடம் 'ஏம்மா, காப்பாத்துங்க... காப்பாத்துங்கன்னு ஓடி வந்தியே அப்படி என்னம்மா கஷ்ட்டம் உனக்கு?' என்று கேட்கும் மேஜர், நம்பியார் ஆகியோரிடம் ஆளுக்கொரு கதை சொல்வது போல, நடிகர்திலகத்திடமும் ஒரு கதை சொல்கிறார். அவ்வளவுதான். ஒவ்வொரு கதையிலும் ஒரு கற்பழிப்புக்காட்சி, தவிர ஒரு கதையில் கொலையும் கூட நடக்கிறது. பீம்சிங்கின் தரத்துக்கேற்ற கதையாக அமையவில்லை. கடைசியில் கோர்ட்டில் நிஜக்கதையை சொல்லும்போது அதிலும் ஒரு கற்பழிப்பு மற்றும் கொலை. நமக்கே ஆத்திரம் ஏற்படுகிறது. இதற்கிடையே நடிகர்திலகம் ஜெயலலிதா காதல் கனவு காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டவையாக தெரிந்தன.

நம்பியார்தான் நிஜமான வில்லனோ என்று நினைத்தால், அவரையும் டம்மியாக்கி விட்டு, மேஜர சுந்தர்ராஜன்தான் பிரதான வில்லன் என்று காட்டினர். கதை ரொம்பச்சின்னது. தன் அக்காவைக் கற்பழித்து அவள் சாவுக்குக் காரணமாக இருந்த மேஜரை ஜெயலலிதா பழிவாங்கும் கதை. அவ்வளவுதான்.

பாதுகாப்பு படத்தில் மனதில் நிலைத்து நின்றது அதன் சூப்பரான ஒளிப்பதிவுதான். கடற்கரைப்பகுதி வெளிப்புறக் காட்சிகளின் அழகோடு. படகு வீட்டின் உள்ளேயும் அருமையாக கேமராவை விளையாட விட்டிருந்தனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் படகுக்குள் இறங்கும்போது நாமும் இறங்குகிறோம். படகில் இருக்கும் அப்பா மேஜரும், மகன்கள் நம்பியார் மற்றும் நடிகர்திலகமும் தங்களுக்குள் முறைவைத்து சமையல் அறையில் சமையல் செய்யும் காட்சிகள் அருமை. நடிகர்திலகம் சோறு வடிப்பதும், அவர் போனபின் நம்பியார் வந்து அம்மியில் மசாலா அரைத்து மீன் பொறிப்பதும் சுவாரஸ்யமாக இருந்தன. அப்படி ஒவ்வொருவரும் தனித்தனியாக சமைக்க வரும்போதுதான் ஆளுக்கொரு பொய்க்கதையை அவிழ்த்து விடுவார் ஜெயலலிதா.

ஏற்கெனவே 28 நாட்களுக்கு முன் எங்கிருந்தோ வந்தாள் (3 தியேட்டர்), சொர்க்கம் (4 தியேட்டர்) படங்கள் வந்து சென்னையில் ஏழு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தபோது 'பாதுகாப்பு' படமும் நான்கு தியேட்டர்களில் (வெலிங்டன், ஸ்ரீ கிருஷ்ணா, மகாலட்சுமி, கிருஷ்ணவேணி) ரிலீஸானது. நான் ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் பார்த்தேன். நடிகர்திலகம் எப்பவாவது மட்டுமே வந்து போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இரண்டாவது கதையில் வரும் சந்திரபாபுவின் 'தூக்குத்தூக்கி' நாடகம் ரொம்ப நீளமாக அமைந்து ரசிகர்களை சோதித்தது. பொங்கலன்று 'இரு துருவம்' வருவதற்குள்ளாகவே பல தியேட்டர்களில் இப்படம் எடுக்கப்பட்டு விட்டது.

பிற்பாடு இப்படம் மறு வெளியீடுகளுக்கு அவ்வளவாக வரவில்லையென்று நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கும் முன் ஜெயா டிவியில் இப்படம் ஒளிபரப்பியபோது ஆவலுடன் பார்க்க உட்கார்ந்தேன். ஆனால் பிரிண்ட் அறுதப்பழசு. ஏகப்பட்ட வெட்டுக்கள். போதாக்குறைக்கு கலர் ரொம்பவே வெளுத்துப்போய் ஒரே சிவப்பாக கேவா கலர்ப்படம் போல தோற்றமளித்தது. அதனால் பார்க்க மனமின்றி சேனலை மாற்றினேன். (ஒரிஜினலாக படம் அருமையான ஈஸ்ட்மென் கலர். இப்படத்தின் சிறப்பம்சமே ஒளிப்பதிவுதான்).

மெல்லிசை மன்னரும் தன் பங்குக்கு ஏமாற்றினார். 'முத்து மணி நாகம்மா', 'நம்பள்-கி-பியாரீ மஜா பண்ணலாமா', 'ஒருநாள் நினைத்த காரியம் நடக்கும்' போன்ற பாடல்கள் மட்டுமே நினைவில் உள்ளன. ஆனால் மக்கள் மத்தியில் சென்றடையவில்லை.

தீபாவளி வெளியீடுகள் இரண்டும் பந்தயக்குதிரைகள் போல ஓடிக்கொண்டிருக்க, அவற்றுக்குப்பின் வெளியாகி அவற்றுக்கு முன் சுருண்டுகொண்டு விட்டது பாதுகாப்பு. கதையும் ஒரு நல்ல கதையாக இருந்து, நடிகர்திலகத்தின் பாத்திரமும் சற்று ஸ்ட்ராங்கானதாக அமைந்திருந்தால், பட்ட பாட்டுக்கு பலன் கிடைத்திருக்கும்.

இருப்பினும் நீங்கள் அளித்துள்ள ஷூட்டிங் விவரங்களைப்படிக்கும்போது ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. உங்கள் இளமைக்கால நினைவலைகளில் நாங்களும் மூழ்கினோம். நாம் நேரில் ஷூட்டிங் பார்த்த படம் சரியாக ஓடவில்லையே என்று உங்கள் மனம் வருத்தப்பட்டபோதும், படம் பார்த்தபின் படத்தின் ரிஸல்ட்டில் சமாதானமாகியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் சுவாரஸ்யக்கட்டுரையின் இடையிடையே இணைத்திருந்த நிழற்ப்படங்கள் அருமை. அதுபோலவே படத்தின் ஸ்டில்களும் நன்றாக உள்ளன. சுவையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதற்கு தங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

RAGHAVENDRA
27th November 2011, 03:27 PM
டியர் வாசுதேவன் சார்,
நான் கடலூரில் பிறக்க வில்லையே என்ற ஏக்கத்தை உண்டாக்கி விட்டது உங்கள் பதிவு. அதிலும் என் அபிமான படமான பாதுகாப்பு தங்கள் உள்ளத்திலும் அதே அளவு இடம் பெற்றது பெரு மகிழ்வு. நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பு கதைக்குத் தேவையான அளவு அமைக்கப் பட்டது. பீம்சிங் அவர்கள் நடிகர் திலகத்திடம் மூலக்கதையைப் பற்றிக் கூறிவிட்டு அதில் சில மாற்றங்கள் செய்து நடிகர் திலகத்தின் பாத்திரம் படம் முழுவதும் வரும்படி திரைக்கதை அமைக்கப் போவதாகக் கூறினாராம். ஆனால் நடிகர் திலகமோ, கதையில் எந்த மாற்றம் செய்தாலும் அதன் ஒரிஜினாலிட்டி பாதிக்கும். எதையும் மாற்ற வேண்டாம் என்று கூறி விட்டாராம். அப்படியும் ரசிகர்களுக்காக ஒரு நாள் பாடல் உருவாக்கப் பட்டது. நான் முன்பொரு முறை கூறியது போல் நடிகர் திலகத்தின் திரை வாழ்க்கையில் மூன்று விதமாகப் பிரிக்கலாம். முதல் பாகம் கலை, இரண்டாம் பாகம் தலை, மூன்றாம் பாகம் விலை .. (வாழ்நாள் முழுதும் கலைக்காகவே வாழ்ந்தார் என்பது மறுக்க முடியாது உண்மை). இரண்டாம் பாகம் தலை என்பது ரசிகர்களுக்காக, மூன்றாம் பாகம் விலை என்பது அவருடைய வாழ்க்கைக்காக.. என்று ஒரு வகையில் அனுமானிக்கலாம். இந்த மூன்றாம் பாகத்தில் தான் அவர் தனக்காகவும் தன் குடும்பத்துக்காவும் கவனம் செலுத்தத் துவங்கினார் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

அப்படி அந்த இரண்டாம் கட்டத்தில் வெளிவந்த படங்கள் தான் இன்றளவும் அவருடைய மாபெரும் சேனை உருவாகக் காரணமாயிருந்தன. அப்படிப் பட்ட பட வரிசையில் இடம் பெறும் நோக்கத்தில் தான் அந்த பாடல் காட்சி புனையப் பட்டது. மிக ஸ்டைலாக அந்தப் பாடலில் வருவார் நடிகர் திலகம். சந்திரபாபுவுக்கும் பாடல் உண்டு. மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அதிகமாக ஹிட்டாகாவிட்டாலும் ஒரு நாள் பாடல் அழியாப் புகழ் பெற்றது. அதே போல் வரச் சொல்லடி பாடலும் மிகப் பிரபலமானது.

இருந்தாலும் சீர்காழியின் குரலில் ஒலித்த ஆத்துக்குப் பக்கம் ஒரு தென்னம் பிள்ளை பாடல் மிக மிகச் சிறந்த பாடலாகும். பாடலைக் கேட்கும் போது அந்த நதியோர சூழ்நிலையைக் கண்முன்னே கொண்டு வந்து விடும். குறிப்பாக ஹம்மிங்.. சீர்காழியின் மென்மையான ஹம்மிங் மிகவும் அபூர்வமான ஒன்று. அது இந்தப் படத்தின் சிறப்பம்சம்.

பாடல்களை விட பின்னணி இசையில் இப்படத்தில் மெல்லிசைமன்னர் அட்டகாசமாக வெளுத்து வாங்கியிருப்பார். ஜெயலலிதா ஒவ்வொருவரிடம் கதை சொல்லும் போதும் அந்த சூழ்நிலைக்கேற்ற இசையைத் தந்திருப்பார்.

தோல்விப் படமாக இருந்தாலும் தரத்தில் சற்றும் குறையாத படமாகும் பாதுகாப்பு. பல ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த நாள் பாதிப்பு இப்படத்தில் இருக்கும். இரண்டும் ஜப்பானிய படமான ரோஷமானின் பாதிப்பில் வந்தவை என்பதும் குறிப்பிடத் தக்கது.

இப்படத்தை வெலிங்கடனில் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தேன். மெல்லிசை மன்னரின் பின்னணி இசையும் ஒரு நாள் பாடலும் மீண்டும் மீண்டும் இப்படத்தைப் பார்க்கத் தூண்டின. குறைந்தது ஆறு அல்லது ஏழு முறை பார்த்திருப்பேன்.

அன்புடன்