PDA

View Full Version : Jeyamohan



venkkiram
23rd August 2010, 06:03 AM
இவருக்கென ஒரு தனி இழை...

venkkiram
23rd August 2010, 06:07 AM
நகைச்சுவை உணர்வு என வரும்போது அதிலும் தனக்கென ஒரு ப்ரத்யேக இடத்தை வைத்திருக்கிறார் எழுத்துலகில் ஜெமோ.

சமீபத்தில் பதிவான கூட்டமோ கூட்டம் (http://www.jeyamohan.in/?p=7755) ஒரு சோறு பதம்.

Sanjeevi
23rd August 2010, 12:25 PM
நகைச்சுவை உணர்வு என வரும்போது அதிலும் தனக்கென ஒரு ப்ரத்யேக இடத்தை வைத்திருக்கிறார் எழுத்துலகில் ஜெமோ.

சமீபத்தில் பதிவான கூட்டமோ கூட்டம் (http://www.jeyamohan.in/?p=7755) ஒரு சோறு பதம்.

Link is not working :wink:

P_R
23rd August 2010, 02:08 PM
Hmm..I read it in the morning. It seems to have been taken down subsequently hmmm :?

venkkiram
23rd August 2010, 08:42 PM
Hmm..I read it in the morning. It seems to have been taken down subsequently hmmm :?உங்களுக்கு பிடிச்சதா?

app_engine
23rd August 2010, 08:52 PM
[tscii:72d28ef27e]

நான் ஆசுவாசம் அடைந்தேன். இந்தமட்டுக்கும் தமிழகத்தின் மீது அரசியல்கட்சியினருக்கு அக்கறை இருப்பதே பெரிய விஷயம். ஆனால் ஒரு சிறு ஐயம் ‘’இல்ல, உங்க கூட்டத்துக்கு டபுளா அவங்க கூட்டத்துக்கு ஆள் வரணுமானா என்ன செய்வாங்க?’’ என்றேன். ’’அது ஒண்ணுமில்ல சார்… கள்ள ஓட்டையும் சேத்தா கவுண்டு வந்திரும்’’ என்றார். இதுதான் கொஞ்சம் குழப்புகிறது.

:lol:
[/tscii:72d28ef27e]

லிங்க் வேலை செய்யுதுங்க :-)

Sanjeevi
23rd August 2010, 08:55 PM
ippo link work aaguthu :confused2:

Sanjeevi
23rd August 2010, 09:05 PM
:rotfl2:

remind me a Vadivel comedy (Road roller / Aeroplane)

நல்ல நையாண்டி :)

P_R
24th August 2010, 03:06 PM
Hmm..I read it in the morning. It seems to have been taken down subsequently hmmm :?உங்களுக்கு பிடிச்சதா?

பிடிச்சிது..வழக்கம்போல

அகத்தியர் அணி :lol:
அவர் உள்ளுருப்புகளுக்கு சென்றடைய கொஞ்ச நேரமாகும் :lol:

அவரோட நகைச்சுவை கட்டுரைகள் இன்னும் கொஞ்சம் கச்சிதமா எழுத வாய்ப்பு இருக்குன்னு தோணுது. உதாரணம் தமிழியர்கள் பற்றின இடுகை.



அவரோட சில சிறுகதைகள், குறுநாவல்கள் தான் படிச்சிருக்கேன். நாவல் பளு தூக்கணும் one of these days :-)

venkkiram
25th August 2010, 07:35 AM
[tscii:30ce33d46c]


Hmm..I read it in the morning. It seems to have been taken down subsequently hmmm :?உங்களுக்கு பிடிச்சதா?

பிடிச்சிது..வழக்கம்போல

அகத்தியர் அணி :lol:
அவர் உள்ளுருப்புகளுக்கு சென்றடைய கொஞ்ச நேரமாகும் :lol:

அவரோட நகைச்சுவை கட்டுரைகள் இன்னும் கொஞ்சம் கச்சிதமா எழுத வாய்ப்பு இருக்குன்னு தோணுது. உதாரணம் தமிழியர்கள் பற்றின இடுகை.

அவரோட சில சிறுகதைகள், குறுநாவல்கள் தான் படிச்சிருக்கேன். நாவல் பளு தூக்கணும் one of these days :-)

நானும் இந்த வரிகளை ரொம்ப ரசித்து சிரித்தேன்.

-----------
அன்னிக்கு அவனுக அடிச்ச மூத்திரம் காய மூணுநாளாச்சுன்னு நூஸ் வந்திருக்கு சார்…

இப்பல்லாம் ஜனங்க வீடுகளுக்கே போறதில்லீங்க…போக விடுறதில்லைன்னு வச்சுக்கிடுங்க… அப்டியே கூட்டத்திலே இருந்து கூட்டத்துக்கு போறதுதான்… நாங்க அந்தக்கூட்டத்த அப்டியே பத்திக்கிட்டு ஈரோட்டுக்கு கொண்டு போனோம். அவங்க அப்டியே தர்மபுரிக்கு கொண்டு போனாங்க…கடேசியிலே போனவாரம் நாகர்கோயிலில் கூட்டம்… அதான் அதோட பீக்கு…

சார்…தமிழ்நாடே தெக்குபக்கமா கொஞ்சம் சரிஞ்சிருக்கு சார், எடை தாங்காம’

நான் சிறுநீர் அழுத்தத்துக்கு ஆளானேன்.
-------------------


உதாரணம் தமிழியர்கள் பற்றின இடுகை.

எந்த இடுகைன்னு மறந்துப் போச்சி! link கொடுங்க.

எனக்கு ஜெயமோகன் பரிச்சயமானது விகடனில் தொடராக அவர் எழுதிய சங்கச் சித்திரங்கள் தொடர் மூலம் தான். ஒவ்வொரு வாரமும் அசத்தலா இருந்தது. நேரம் கிடைக்கும் போது அதை இன்னொரு முறை வாசிக்க விருப்பம் இருக்கிறது. [/tscii:30ce33d46c]

app_engine
25th August 2010, 09:34 PM
கூட்டமோ கூட்டம் காணாமல் போய் மீண்டும் வந்ததன் காரணம் :
http://www.jeyamohan.in/?p=7897

venkkiram
14th September 2010, 09:35 AM
[tscii:362d8bc3c1]நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை? (http://www.jeyamohan.in/?p=8156)


நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் என்ன வேறுபாடு? பழைய ஒரு நகைச்சுவை உண்டு. ஓட்டலில் சாப்பிடச்சென்றவர் கேட்கிறார் ‘தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?’ பரிமாறுபவர் பதில் சொல்கிறார், ‘கெட்டிச்சட்னி இருக்கிறது, துவையல் இருக்கிறது’

கேட்பவருக்கு கொஞ்சம் குழப்பம். ‘இரண்டுக்கும் நடுவே என்ன வேறுபாடு?’ பரிமாறுபவர் யதார்த்தமாகப் பதில் சொல்கிறார் ‘இரண்டு நாள் வேறுபாடு’

ஆம், நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு இரண்டாயிரம் வருடம்தான். நவீன இலக்கியத்தின் தலை இந்த நூற்றாண்டில் உள்ளது. வால் மரபிலக்கியத்தில் விழுந்து கிடக்கிறது. மரபிலக்கியத்தின் தலை ஈராயிரம் வருடம் முன்பு நம் வரலாற்றின் தொடக்கப்புள்ளியில் கிடக்கிறது. வால் இந்தக்காலத்தில் விழுந்து அசைந்துகொண்டிருக்கிறது. இரு பாம்புகளும் ஒன்றை ஒன்று விழுங்க முயல்கின்றன. ஒயாத ஒரு சுழல் உருவாகிறது.

வழக்கமாக நான் சந்திக்கும் ஒரு கொந்தளிப்பான குரல் ஒன்றுண்டு. ஒரு தேவதேவன் கவிதையை வாசித்துவிட்டு ஒரு பெரியவர் கேட்டார். ‘ஐயா நான் நாற்பதாண்டுக்காலமாக தமிழிலக்கியம் வாசிக்கிறேன். நற்றிணை முதல் பாரதிவரை கற்றிருக்கிறேன். எனக்கே இந்த கவிதை புரியவில்லை. அப்படியானால் இவை யாருக்காக எழுதப்படுகின்றன?’

இப்படி கேட்ட பெரியவரிடம் நான் சொன்னேன்,’ஐயா நற்றிணையோ பாரதியோ படித்தால் புரிந்துகொள்ள முடியாத, தமிழே படிக்காத இந்த இளைஞருக்கு இந்தக்கவிதை எளிதாகப் புரிகிறதே, எப்படி என்று யோசித்தீர்களா? யோசித்தால் எது நவீன இலக்கியம் என்று எளிதில் புரிந்துகொள்ள முடியும்’

ஆனால் பெரியவர் அந்தக் கேள்வியைச் சந்திக்க தயாராக இருக்கவில்லை. மீண்டும் ‘எனக்கே புரியவில்லையே’ என்ற குரலை எழுப்பினார். நான் சொன்னேன், ‘ஐயா இப்போது சிக்கல் நவீன இலக்கியத்தை புரிந்துகொள்வதல்ல, உங்களைப் புரிந்துகொள்வதுதான்’

ஜெயமோஹனை நினைத்தால் எனக்கு சட்டென ஞாபகத்திற்கு வருவது "அருவி". எழுத்தில் மட்டுமல்ல, நேரில் பார்த்தாலும் இப்படித்தான் சடசடவென, பெய்யென பெய்யும் மழையாக பேசிவார்.[/tscii:362d8bc3c1]

P_R
14th September 2010, 03:01 PM
Somehow wasn't too impressed with JeMo's sci fi collection.
Actually those were the first stories I read and I liked a couple of them like உ.நோ.ப and the controversial நம்பிக்கையாளன்
To be honest I read the first three or four stories and somehow I thot they weren't interesting enough or intense enough.To me it shows a person not very familiar with science dealing in it. Though his idea is not sci per se lack of knowledge shows. Not as factual errors but when consequences of sci are discussed Sometimes it is too simplistic Been a while since I read them.His 'nizhal veli kathaigal' on the other hand was outstanding
He wrote to prove a point that sci-fi is not abt techno dazzle

i.e. not just about new technology, innovation etc. In many stories he tied it to his strong points - mystical, historical stories, unknowns with cultural roots etc.

பித்தம் (http://www.jeyamohan.in/?p=58) for instance, is about alchemy. But it is pretty much about throwing oneself behind an idea. More than the dogged perserverence that is science (or for that matter any knowing) and the twist what impressed me was that the story was very 'general'. The poignance of letting the pursuit of a concept wreck oneself. What motivates the patron?
What if the whole life has been expended on misinterpreting a couplet. Aren't we all, in some small way, walking on thin ice when trotting through lives with certain beliefs. The youngster as an EVR follower is perhaps at the start of his own journey where unbelief is itself going to be solid dogma.

One charge that can be made quite fairly is that many stories are wordy. ஐந்தாவது மருந்து is just people talking to make a point. The characters are just talking heads. Same forஇங்கே இங்கேயே (http://www.jeyamohan.in/?p=64)

But despite some wordy parts உற்றுநோக்கும் பறவை (http://www.jeyamohan.in/?p=57) is my favorite story. It makes for a thrilling read.

In that story it looks pretty much like 'home turf' for him (if I may presume to know what that is!) than 'stepping out' to write a science fiction story. If 'Jekyll and Hyde' can be called Sci-Fi why not this :-)

And to persist with this line of thought, I particularly liked நம்பிக்கையாளன் (http://www.jeyamohan.in/?p=55), which has since become controversial. It portrays a survivor of a (nuclear) attack who perceives the reality to be perfectly tallying with the apocalypse as mentioned in his holy book. It is easy to read it as a story as the reading of a clouded mind. But who is to say which perceptions are right?

Scientific temper - for the lay man - is the quest for logic and perception based demonstration. What does one default when the perception itself shown to be shaky. Why is evolutionary conditioning an acceptable prior but not social conditioning?


There is one other story (not part of this series) about an old man trying to reconcile (or refudiate, I don't recall) Nietsche's 'Theory of Eternal Return' with his own theory and wants to present it at a univerity science conference. He is a rabid, arrogant old man out of step with the time. Each time he is rebuffed by the narrator he comes back with an absurd reconciliation by claiming he has tweaked his theory to accommodate the past contradictions.

Now on the face of it, this is 'the scientific method' but the story would portray excellently well how he is just spinning out of control making a fool of himself. The story ends on a poignant note where he has driven himself to destruction and the narrator gives him an ego massage.

That appealed to me a whole lot because one can see that all quest for truth, scientific knowledge, dedicating one's best years etc. primarily motivated not by a 'thirst for understanding' but rather by the consciousness of 'being the one with the thirst for knowledge'.

kid-glove
14th September 2010, 03:52 PM
Are these apparent in the work (if so, why Sureshs65 couldn't trace it?) or predominantly because of the connotations with which you placate these stories to be(?!), persuasive and engaging that I'm wondering why Ss65 had a different reaction to it.

P_R
14th September 2010, 04:01 PM
As I was writing the post I too am inclined to think the latter is probably the case :-)

Or perhaps I am inclined to think so as the writer has himself forgotten my fav. story . :sigh2:

அதான் லிங்கிருக்கேனே, நீங்களும் படிச்சுட்டு சொல்றது.

disk.box
17th September 2010, 05:52 PM
மதிப்பிற்குரிய வெங்கிராம் சொன்னதுபோல எனக்கும் இவர் விகடனின் சங்கச் சித்திரங்களில்தான் அறிமுகம்.
நெய்தல் நிலக் கவிதைகள் (என்று நினைக்கிறேன்). கருத்துரையை மிக அழகாக எழுதி இருப்பார்.

"கன்னி நிலம்" என்றொரு புதினம் கடைசியாகப் படித்தேன். நெஞ்சம் நிறைத்த நெகிழ்த்த புதினம். :)

venkkiram
19th September 2010, 03:45 AM
[tscii:ebfc36e7a8]பரப்பிசையை விமரிசித்தல் குறித்து… (http://www.jeyamohan.in/?p=8221)

எதிர்பார்த்தது போலவே வெண்ணைய் கத்தியுடன் வானில் சுழட்டி சுழட்டி ஆடும் வீரனாக, ஷாஜி விஷயத்தில் ஜெமோ தென்படுகிறார்.

பரப்பிசை சார்ந்த விமர்சனங்கள் வெகுஜனக்கலைஞனின் பார்வையில், அவனுக்கென்றே எழுதப்பட்டவை என்றாலே சீர்காழி கோவிந்தராஜனை ஷாஜி நிராகரித்த விமர்சனத்தை துளி கூட யோசிக்காமல் குப்பையில் போட வேண்டும். இந்த அடிப்படையான விஷயத்திலேயே இந்தக் கட்டுரை அஸ்தமனம் ஆகிவிட்டதென நினைக்கிறேன்..

அடுத்த முறையாவது ஷாஜி விஷயத்தில் கொஞ்சம் நேர்மையுடன் எழுத முயற்சி செய்யுங்கள் ஜெமோ.
[/tscii:ebfc36e7a8]

app_engine
22nd September 2010, 08:26 PM
பரப்பிலக்கியம் - நல்லதொரு கிண்டல் (http://idlyvadai.blogspot.com/2010/09/blog-post_22.html)

ஒரு திறனுள்ள எழுத்தாளர் 'நண்பேன்டா'ன்னு ஒரு அரைவேக்காட்டுக்கு ஜால்ரா அடிக்கப்போய் பரிதாபமான காமெடியன் ஆகி இருக்கிறார். துரதிருஷ்டமான நிகழ்வு.

jaiganes
22nd September 2010, 09:52 PM
[tscii:2b06637dbe]பரப்பிசையை விமரிசித்தல் குறித்து… (http://www.jeyamohan.in/?p=8221)

எதிர்பார்த்தது போலவே வெண்ணைய் கத்தியுடன் வானில் சுழட்டி சுழட்டி ஆடும் வீரனாக, ஷாஜி விஷயத்தில் ஜெமோ தென்படுகிறார்.

பரப்பிசை சார்ந்த விமர்சனங்கள் வெகுஜனக்கலைஞனின் பார்வையில், அவனுக்கென்றே எழுதப்பட்டவை என்றாலே சீர்காழி கோவிந்தராஜனை ஷாஜி நிராகரித்த விமர்சனத்தை துளி கூட யோசிக்காமல் குப்பையில் போட வேண்டும். இந்த அடிப்படையான விஷயத்திலேயே இந்தக் கட்டுரை அஸ்தமனம் ஆகிவிட்டதென நினைக்கிறேன்..

அடுத்த முறையாவது ஷாஜி விஷயத்தில் கொஞ்சம் நேர்மையுடன் எழுத முயற்சி செய்யுங்கள் ஜெமோ.
[/tscii:2b06637dbe]
we have better music critics in hub. probably that is what is required to drive out the shabby criticism articles of shaaji from thamizh music scene.

app_engine
22nd September 2010, 10:18 PM
to drive out

எனக்கு அப்படியெல்லாம் நம்பிக்கையில்லை ஜெய்.

"வம்பாரை வாழ வைப்போம்" என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் த.நா.வில் அவரது எதிர்காலம் ஒளிமயமாகவே தெரிகிறது!

(கூடுதல் உபயம் - மணிரத்னம் மாதிரிப்பெருசுகள்)

venkkiram
26th September 2010, 08:44 AM
ஓ.என்.வி.குறுப்புக்கு ஞானபீடம் (http://www.jeyamohan.in/?p=8328)


கேரள இலக்கிய விமர்சனம் எந்த அளவுக்கு முனைமழுங்கியுள்ளது என்று காட்டும் விருது இது.

venkkiram
19th October 2010, 09:10 AM
[tscii:542b989429]இன்னும் ஏம்ப்பா தாமதிக்கிறீங்க!

ஊர்ல இருக்கிற எல்லா விருதுகளையும் ஜெமோவிற்கு கொடுத்து பாராட்டுங்கள்!

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? (http://www.jeyamohan.in/?p=8711)

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2 (http://www.jeyamohan.in/?p=8712)


ஆக,சோழப்பேரரசைப்பற்றியும் ராஜராஜனைப்பற்றியும் நாம் கண்டிப்பாக பெருமைகொள்ளலாம். அன்றைய உலகச்சூழலில் வைத்துப்பார்த்தால் ஆக முற்போக்கான, அறம்சார்ந்த, மக்கள்நலம் நாடிய அரசுதான் அது. தன் குடிகள் மேல் விருப்பம் கொண்ட, பெருந்தன்மையும் நிதானமும் கொண்ட, கருணைமிக்க மன்னன்தான் ராஜராஜன். கலைகளிலும் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவன். பண்பாட்டை பேணியவன். ஹானிபாலைப் போல, நெப்போலியனைப்போல,அலாவுதீன் கில்ஜியைப்போல,நாதிர்ஷாவைப்போல ராஜராஜன் பெருங்கொடுமைகள் எதையும் எந்த மனிதஇனத்துக்கும் இழைத்ததில்லை.

அப்படி பெரும் மானுடக்குற்றங்களை இழைத்த அவர்களையே மாபெரும் வரலாற்றுநாயகர்களாக அம்மக்கள் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக, நம் இடதுசாரிபுரட்சியாளர்களின் சொந்தநாடாகிய சீனாவின் கம்யூனிசக்குடியரசு ஜெங்கிஸ்கானை மாபெரும் தேசியத்தலைவராக கொண்டாடுகிறது. அவர் பெயரில் விமானநிலையங்கள் உள்ளன. ரூபாய் நோட்டுகள் உள்ளன. ஜெங்கிஸ்கானை ஒரு தேசியபெருமிதமாகவே சீனா முன்வைக்கிறது. பலகோடிச்செலவில் திரைப்பட வரிசை [Mongol, Sergei Bodrov] எடுத்து உலகின்முன் வைக்கிறார்கள்.

ஜெங்கிஸ்கான் மானுடத்தின் மாபெரும் அழிவுச்சக்தியாக வரலாற்றில் பதிவானவன். நாற்பது தேசங்களிலாக எட்டுகோடி மனித உயிர்களை பலிகொண்டவன். அதைப்பற்றி நம்மவர்களுக்கு எந்த புகாரும் இல்லை. இரண்டுகோடி மக்களைக் கொன்ற மாவொ சே துங்கை தலைவராக ஏற்றவர்களுக்கு ஜெங்கிஸ்கான் மகாதலைவனாக தெரிவதில் ஆச்சரியமும் இல்லை

அவர்களுடன் ஒப்பிடுகையில் ராஜராஜன் மாபெரும் மானுடத்தலைவனே. நாம் நமது வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்தியை கொண்டாடுவதில் பிழையே இல்லை. இறந்தகாலத்தை இறந்தகாலமாக எடுத்துக்கோண்டால் அதில் நம் சாதனைகளுக்காகவும் நம் முன்னோர்களுக்காகவும் பெருமைகொள்வது உகந்ததே
[/tscii:542b989429]

Sanjeevi
19th October 2010, 12:50 PM
The article is superb for me especially the second one, and trying to be a neutral one

Jyothsna
19th October 2010, 01:44 PM
அருமையான கட்டுரை.. ஜெ.மோ எழுத்துக்களை அதிகம் படித்ததில்லை.. எனினும் சோழர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் படிக்க தூண்டியது.. நன்றி venkiram.

P_R
19th October 2010, 02:28 PM
Good as usual.
But specious reasoning in parts - particularly the claim that royal patronage of a priestly class and monks owes to their potential for as a means to prevention/peaceful resolution of internal conflicts.

That felt like he skipped his own warning against simplification in understanding history.
Perhaps I must read Kosambi to see , how that argument is backed up.

Anyway, his point about having to see history in a wider context, particularly with an understanding of times of the events under discussion, is well made.

P_R
22nd November 2010, 04:11 PM
கதை என்பது ஒரு நிகரனுபவம். உண்மையான வாழ்க்கையை வாசகன் கற்பனையில் வாழச்செய்வதென்பது அதன் அடிப்படை இலக்கு. வாசகன் பெறும் கவித்துவமும் தரிசனமும் எல்லாமே அவ்வனுபவம் மூலம் அவன் அடைபவை. . புனைவென்பதே அந்த அனுபவத்தை புனைந்துருவாக்குவதே. அவற்றை அளிக்காமல் புனைவிலக்கியம் நிகழமுடியாது. அதை உணராமல் மொழியைமட்டும் கொண்டு ஒருவகை கவித்துவத்தை உருவாக்கிவிடலாமென நினைத்து எழுதப்படும் கதைகள் சில அவ்வப்போது வருகின்றன.

Sanjeevi
25th November 2010, 12:42 PM
அலைவரிசை ஊழல் (http://www.jeyamohan.in/?p=9404)

as usual topic thandi engO selgirathu :)

app_engine
2nd December 2010, 02:06 AM
நம்ம ஹப்பர் சுரேஷ் எழுதிய கே வி மகாதேவன் பற்றிய கட்டுரைக்கு ஜெயமோகன் வலைத்தளத்தில் ஆதரவு (http://www.jeyamohan.in/?p=9573)

kid-glove
2nd December 2010, 03:02 AM
:clap: to Sureshs65

app_engine
8th December 2010, 11:26 PM
ஐஸ்வர்யா ராய் மற்றும் அருந்ததி ராய் (http://www.jeyamohan.in/?p=10189)

கட்டுரைகள் வாசிக்க நன்றாகத்தானிருக்கின்றன. ஆனால், அழகான பெண்கள் முட்டாள்கள் என்ற ஸ்டீரியோடைப்பிங் செய்வது உறுத்தல்.

நான் பார்த்த / பழகிய அளவில், அழகோ-இல்லையோ, முட்டாள் பெண்கள் ரொம்பக்குறைவு. மேலும், அறிவுக்கும் அழகுக்கும் நேர்/ எதிர் பந்தங்கள் இல்லவே இல்லை!
(பி.கு.: முட்டாள் ஆண்கள் மிக அதிகம்! இங்கும் அழகுக்கு / தோற்றத்துக்கு அறிவுடன் நேர் / எதிர் பந்தம் இல்லை!)

app_engine
17th December 2010, 01:23 AM
இடதுசாரி வன்முறை பற்றி நன்றாக எழுதப்பட்ட கட்டுரை (http://www.jeyamohan.in/?p=10751)



நான் ஏன் இந்த மார்க்ஸியத்தை நம்பவில்லை என்றால் நான் மனிதனை நம்பவில்லை. மனிதனின் நல்லியல்பை மட்டுமே நம்பி அவனிடம் முற்றதிகாரத்தை ஒப்படைக்கும் எதையும் நான் ஏற்க முடியாது. இலட்சியவாதம் மனிதாபிமானம் எல்லாவற்றுக்கும் அடியில் கிடப்பது மனிதனின் ஆதி இயல்புகளான உடைமைமோகம், அதிகார மோகம், வெறுப்பிலும் வன்முறையிலும் இன்பம் காணும் அடிப்படை தினவு ஆகியவையே. அவை புரட்சி அரசின் புரட்சி ராணுவத்தின் புரட்சி சிப்பாயிடமும் அதே அளவில் இருக்கும். அவர்களுக்கும் பிற அரசமைப்புகளில் உள்ள மனிதர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

venkkiram
19th December 2010, 10:36 PM
ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா - புகைப்படங்கள்

அரங்க மேடை ஓவியம் - ஜீவா
http://img155.imageshack.us/img155/1602/63666168741289882810428.jpg

ஜெமோ
http://img26.imageshack.us/img26/7417/16562016874199390041042.jpg

மணிரத்னம்
http://img46.imageshack.us/img46/4319/72008168741645891710428.jpg

ஆ.மாதவன்
http://img826.imageshack.us/img826/7521/63686168742317908510428.jpg

நாஞ்சில் நாடன்
http://img706.imageshack.us/img706/9104/16562016874197790001042.jpg

ஆ. மாதவன் விருது பெறுவது
http://img824.imageshack.us/img824/4058/72008168741633891410428.jpg

மணிரத்னம், ஓவியர் ஜீவாவுடன் ஜெமோ
http://img692.imageshack.us/img692/3744/16529116874544998681042.jpg

app_engine
22nd December 2010, 10:02 PM
இடதுசாரி வன்முறை பற்றி இன்னொரு நல்ல கட்டுரை (http://www.jeyamohan.in/?p=10782)

அவரது முடிவுரைக்கும் என் நம்பிக்கைகளுக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன என்றாலும், வரலாறு மற்றும் நிகழ்கால நிலை பற்றிய அட்டகாசமான அலசல் என்பதை முழுமனதோடு ஒப்புக்கொள்ளலாம் :-)

P_R
24th December 2010, 11:14 AM
[tscii:477554b0fa]A lovely piece about translationg poetry (http://www.jeyamohan.in/?p=10922)


அள்ளியதற்கும் அளித்ததற்கும் நடுவே கைரேகையிலேயே நதிநீர் வற்றி மறைந்துவிடுகிறது.
.....

ஏனென்றால் கவிதை அதன் கருத்து அல்ல என்பதே. கவிதை சொல்லும் விஷயமல்ல கவிதை....... கருத்து கண்டு கவிதையை மொழியாக்கம் செய்பவர்களுக்கு பானம் சிக்குவதில்லை பாத்திரமே எஞ்சுகிறது.

பாரதியில் இருப்பது ஓர் ஆவேசம். அது கருத்தில் இல்லை, எங்கும் சிக்கும் சீர்திருத்தக் கருத்துக்கள்தான் அவை. அந்த ஆவேசம் சொற்களில் குடிகொள்ளும் விதமே அவரது கவிதையின் அழகு

’ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா’ என்ற வரியை ’One who has bright eyes, Come! Come! Come!’ என்று மொழியாக்கம் செய்து தடிமனாக புத்தகம் போட்டிருக்கிறார்கள். வா வா வா என்ற பாரதியின் சொல்லில் உள்ள அலையை விட்டுவிட்டால் இதிலென்ன கவிதை இருக்கிறது?
[/tscii:477554b0fa]

Vivasaayi
1st January 2011, 09:42 PM
மாவோயிச வன்முறை

Excellent!!!

He puts forth his point in such a way that noone can deny it . He stands at different places and looks at the issue and sort of gives an eagles eyeview and clearly explains why he is right and the palce where he stands is the right palce to stand.

vakeela irundhirundha ella case-um jeyichuruparu..

P_R
5th January 2011, 01:05 PM
[tscii:c809477993]App, Vivs....amaidhi :lol2:

This article IMHO is aimed at having the confused, heartbleeding us find a way to lock this issue up once and for all, so it doesn't keep pestering our conscience.

It is silly to take Arundati Roy as a representative of the Westernized media and their view of India. She spends half her time proteseting against the very same media!!

Yes, there is no condoning Maoist violence, but what exactly is the மக்கள் ஒன்றுபட்டு எதிர்த்தால் that Jeyamohan is talking about??

Here is an excerpt from Arundati's excellent article: Walking with the Comrades, published earlier this year. Here is a link to the pdf doc (http://www.srai.org/attach/368_Walking-With-The-Comrades-PamphletLayout.pdf).


I feel I ought to say something at this point. About the futility of violence, about the unacceptability of summary executions. But what should I suggest they do? Go to court? Do a dharna in Jantar Mantar, New Delhi? A rally? A relay hunger strike? It sounds ridiculous.

The promoters of the New Economic Policy —who find it so easy to say “There Is No Alternative” —should be asked to suggest an alternative Resistance Policy. A specific one, to these specific people, in this specific forest. Here. Now. Which party should they vote for?

Which democratic institution in this country should they approach? Which door did the Narmada Bachao Andolan not knock on during the years and years it fought against Big Dams on the Narmada?

[/tscii:c809477993]

Vivasaayi
6th January 2011, 01:39 PM
PR,

I think Jeyamohan slightly differs with the point that nothing could be achieved democratically. Its always possible to make an impact by democratic means. On the other hand, even if the democratic means are of little use...whats has been impact of this armed resistance historically?does it worth to be opted?..apdingrar..corretuthana?

P_R
6th January 2011, 02:43 PM
In his article he keeps suggesting மக்கள் ஒன்றுபட்டு எதிர்த்தால் etc. and gives an example of நரிக்குறவர் தர்ணா (சிலிர்ப்பூட்டும் etc.) i.e. those guys have become 'enfranchised'. And JM's argument is 'that is the only reasonable way out.

அதெல்லாம் சரி தான்....

Yes arms are not the solution ? What is? Hunger fasts, taking to the streets and protesting? Is JM trying to say these have not been tried by the people there?

'What exactly are the democratic means which were not adopted by Narmada Bachao Andolan ? ' is Arundati's question.

And she does not even make a case for violence - as she is comfortably made out to be doing. She only says she does not have the guts to blatantly lie to them that they should drop arms as it is possible to get justice within the democratic framework.

When organizations like the NBA have tried everything and has only met with dismissal and failure, "எந்த முகத்தை வச்சுகிட்டு 'ஆயுதங்களை கீழே போடுங்கள், உங்களுக்கு நியாயம் கிடைக்கும்' என்று சொல்வேன்?" அப்பிடின்னு கேக்குறாங்க.

app_engine
7th January 2011, 01:55 AM
When organizations like the NBA have tried everything and has only met with dismissal and failure, "எந்த முகத்தை வச்சுகிட்டு 'ஆயுதங்களை கீழே போடுங்கள், உங்களுக்கு நியாயம் கிடைக்கும்' என்று சொல்வேன்?" அப்பிடின்னு கேக்குறாங்க.

ஜெயமோகன் அருந்ததியைக்குறைகூறும் கட்டுரைக்கு நான் முழு ஆதரவாளன் அல்ல :-)

அதே போல் மாவோயிசக்கட்டுரையிலும் பலவற்றில் கருத்து வேற்றுமைகள் உண்டு.

முழுமனதோடு உடன்படுவது ஒன்றில் தான் - வன்முறை கூடாது என்பதில். பட்டயத்தை எடுத்தவனுக்கு முடிவு பட்டயத்தில் தான் :-(

மேலும் இன்னொரு கருத்தும் சரி என்றே படுகிறது - அதாவது ஆயுதங்களுக்கான பொருள் எங்கிருந்து வருகிறது?

(பி.கு - தற்போது எனக்கு இங்கு மிக நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஒரு குடும்பத்தினர் "பி.வாலே"க்கு மிக நெருங்கிய உறவினர்கள். அவர்கள் இளமை முழுதும் பஞ்சாபில் குண்டுகளுக்கு மத்தியில் கழித்தவர்கள். அவர்கள் இப்போது (அடிக்காமல்) சொல்லுவது இதே கருத்துத்தான் : அன்புக்கு இணை ஒன்றுமில்லை!)

San_K
7th January 2011, 12:20 PM
Like Kamal said in MMA

Veerathile periyathu Ahimsai

venkkiram
2nd February 2011, 10:41 AM
ஜெயமோகன் படைத்த "அறம்" சிறுகதையை இன்று பஸ் பிரயாணத்தில் வாசித்தேன். மனதைத் தொட்டது..

http://www.jeyamohan.in/?p=11976

P_R
2nd February 2011, 12:16 PM
சுமாரான கதை.
monologue-இல் சிக்கி உள்ளிழுக்கப்பட போதுமான வசீகரம் இல்லை.
உக்கிரமான மனநிலை என்பதை நம்பவைக்க கொஞ்சம் பிரயத்தனப்பட்டிருக்கிறார். ஆனால் அது அவ்வளவு சிறப்பாக வெற்றிபெறவில்லை. உற்றுநோக்கும் பறவை சிறுகதையில் பங்கஜகாக்ஷன் நம்பி தன் நம்பிக்கையை ஆவேசமாக எடுத்துரைக்கும் ஒரு இடம் வரும். படிக்கும்பொழுது நெருடலாகவே தோன்றாது. இங்கு என்னதான் 'எங்கிருந்துதான் ஆவேசம் வந்ததோ தெரியவில்லை' என்ற ரீதியிலெல்லாம் எழுதினாலும் அந்த நம்பகத்தன்மையைக் கொண்டு வர முடியவில்லை.


வழக்கம்போல சூழல் சித்திரங்கள் அழகாகவும், lead up conversations நன்றாகவும் வந்திருந்தன. (எனக்கு அப்படி ஒண்ணும் வயசாயிடலை). பிற்பகுது fizzle ஆகி விட்டது.

venkkiram
3rd February 2011, 09:03 PM
One feedback from a reader

திரு ஜெ,

அறம் கதை எனக்கு சரியாகப் படவில்லை. அதில் மனிதர்களின் சுயம் தான் தெரிகிறது. அந்த செட்டி பெண் தன் வம்சம் பற்றின கவலையும் அவளின் மூட நம்பிக்கையையுமே சுயத்தை அதீதம் ஆக்கி விட்டு இருக்கிறது. அந்த புலவர் தப்பானவனாக இருந்தாலும் அவள் இந்த முடிவையே எடுத்து இருக்க கூடும். இங்கே எங்கே அறச்சிந்தனை தோன்றியது.

முத்துகுமார்

முத்துக்குமார்,

தெரியவில்லை. நான் அந்த அளவுக்கு பகுத்தறிவுடன் சிந்திப்பதில்லை. கொஞ்சம் மூடநம்பிக்கை உண்டு. பொதுவாக இலக்கியம் வாசிக்க கொஞ்சம் மூடநம்பிக்கை தேவை. நீங்கள் செய்தித்தாள்கள் வாசிக்கலாமே

ஜெ

San_K
3rd February 2011, 11:42 PM
venkiram :lol:

ஒரு குசும்பர்யா நீர்

San_K
3rd February 2011, 11:44 PM
ஜெயமோகன் படைத்த "அறம்" சிறுகதையை இன்று பஸ் பிரயாணத்தில் வாசித்தேன். மனதைத் தொட்டது..

http://www.jeyamohan.in/?p=11976

கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன். முடித்த கொஞ்ச நேரத்திற்கு வேறு எதிலும் ஆர்வம் இல்லை

venkkiram
4th February 2011, 01:23 AM
"நான் ‘மூணுநாளிலே ஒரு புக்கா?’ என்றேன். ‘எழுதினேன். இப்ப எனக்கே ஆச்சரியமா இருக்கு. பையனுக்கு ஒரு லெட்டர் போடணும்…ஏழுநாளாச்சு. இன்லண்டிலே நாலுவரி எழுதி அப்டியே வச்சிருக்கேன்…ஆனா அப்ப சாமிவந்தவன் மாதிரி எழுதினேன். ராமுழுக்க உக்காந்து எழுதுவேன். ஒரு நாளிலே நூறுபக்கம்வரை கூட எழுதியிருக்கேன். கை சலிச்சு ஓஞ்சிரும். காலம்பறபாத்தா புறங்கை வீங்கி மெதுவடை மாதிரி இருக்கும். அப்ப நான் சொல்லி என் பொண்ணும் பையனும் எழுதுவாங்க. மூணுநாளைக்கு ஒரு புக்கு வீதம் கொண்டுவந்து கொடுப்பேன். காலையிலே பிரஸுக்கு போயி புரூஃப் பாத்துட்டு மத்தியான்னம் பிரஸ்லேயே ஒரு தூக்கம். நேரா நடந்து லைப்ரரி போயி அடுத்த புக்குக்குண்டான மூலபுத்தகத்த எடுத்துட்டு வீட்டுக்கு போனா ஒரு காபிய சாப்பிட்டுட்டு எழுத உக்காந்திருவேன். படிக்கிறதும் எழுதறதும் எல்லாம் ஒரே சமயம் நடந்திட்டிருக்கும். சிலசமயம் விடிஞ்சாத்தான் எந்திரிக்கிறது…"

"ஆனாலும் கடைசி ரெண்டுவரியும் ஞாபகத்திலே இருக்கு.’செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுகவென் றறம்’

"கடனை வாங்கி தொழில்செய்றவன்கிட்ட போயி மொத்தமா பணத்தை கேட்டது என் தப்புதானேன்னு நினைப்பு ஓடுது’"

"அன்னிக்கு படி எறங்கினவன் அதுக்கு முன்னாடி இருந்த நான் இல்ல. செத்து பொழைச்சேன். அப்ப தெரிஞ்சுது சொல்லுன்னா என்னான்னு. அது அர்ச்சுனன் வில்லு. எடுக்கிறப்ப ஒண்ணு தொடுக்கிறப்ப நூறு. படுறப்ப ஆயிரம்"

--------------

The above portions really moved me.. what a great narration Jeyamohan brings into?

venkkiram
4th February 2011, 01:33 AM
During second reading, I found a logical mistake. You people can confirm it.

At the time periyavar cursed the chettiyar wife with a harsh veNbaa, it says "நான் எழுதின முதல்செய்யுளும் அதுதான். கடைசிச் செய்யுளும் அதுதான். பாட்டு நினைவில இல்ல. அதை மறக்கணும்னுதான் இருபத்தஞ்சு வருஷமா முயற்சிசெய்றேன். ஆனாலும் கடைசி ரெண்டுவரியும் ஞாபகத்திலே இருக்கு.’செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுகவென் றறம்’ "

But at the end of the story, periyar says "தர்மம் இருக்கிறது வீட்டிலே அய்யா. தர்மபத்தினின்னு சும்மாவா சொன்னாங்க.ட்டுன்னு வெண்பா வந்துட்டுது. சடசடன்னு பேப்பரை எடுத்து எட்டு பாட்டு எழுதிட்டேன். அத ஆச்சி கையிலே குடுத்தேன். ரெண்டு கையாலே வாங்கி கண்ணுலே ஒத்திக்கிட்டா’".

So he actually wrote 2 poems in his life.

Nerd
4th February 2011, 02:46 AM
கடைசி சந்திப்பில் எட்டு வெண்பா வந்துருச்சுன்னு சொல்லிருக்கார். அப்போ மொத்தம் ஒன்பதா?

ஒரு வேளை அது எட்டு வெண்பாக்கள் அடங்கிய செய்யுளோ என்னமோ. அப்படி பார்த்தாலும் ரெண்டு செய்யுள் எழுதிட்டார்.

venkkiram
4th February 2011, 03:11 AM
நம்ம ரொம்ப பிளிற ஆரம்பித்தால் ஜெமோ உடனே "பெருசுக்கு அல்ஸைமர் வியாதி"ன்னு பிளேட்டை மாத்திடுவார்.

San_K
4th February 2011, 02:42 PM
http://www.jeyamohan.in/?p=12144

somebody please post here what A.muthulingam said about aRam?

complicateur
4th February 2011, 03:57 PM
From Muthulingam's site. The link is in the article by JeMo.

முன்பெல்லாம் கடிதங்கள் வரும். 'ஐயா ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதுவது?' என்னுடைய பதில் இப்படி இருக்கும். 'முதலில் தமிழில் வந்த 500 சிறுகதைகளையாவது படியுங்கள். பின்னர் எழுத முயற்சி செய்யுங்கள்.' இப்பொழுது கடிதம் வந்தால் இப்படி எழுதலாம் என்று இருக்கிறேன். 'ஜெயமோகனுடைய பத்து சிறுகதைகளையாவது படியுங்கள். பின்னர் எழுத முயற்சி செய்யலாம்.' அதுவும் முடியாவிட்டால் ஒரேயொரு சிறுகதையையாவது படியுங்கள். ஜெயமோகன் எழுதிய அறம் என்ற சிறுகதை. சகல அம்சங்களும் பொருந்திய சிறந்த சிறுகதை அது.

ஆதியிலிருந்து புலவர்கள் ஒரு புரவலரைச் சார்ந்து இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். ஊர் ஊராகச் சென்று புலவர்கள் மன்னர்களின் வாசல்களில் பாடல்களை வைத்துக்கொண்டு நின்றார்கள். சோற்றுக்கும், கூழுக்கும் துணிக்கும் பாடினார்கள். அச்சு யந்திரம் வந்தபிறகு எழுத்தாளருக்கு பதிப்பாளரின் தயவு வேண்டியிருந்தது. பதிப்பாளர் தரும் பணம்தான் எழுத்தாளரின் வருமானம்.

2000 வருடங்கள் கடந்தும் எழுத்தாளரின் நிலைமை மாறவேயில்லை. அதேதான்.

San_K
4th February 2011, 04:05 PM
Thanks complicateur

no wonder for JeMo's புளகாங்கிதம்.

expecting something from Charu

app_engine
4th February 2011, 09:19 PM
இது வரை இவரது கட்டுரைகள் தவிர கதையோ புதினங்களோ படித்ததில்லை.

எல்லாரும் இங்கே பேசறதால் அறம் படிச்சேன்.

படு சுமார்.

இது தான் சிறு கதைக்கு பெஞ்ச் மார்க்'னெல்லாம் சொல்லுறது ரொம்ப ஓவர்.

geno
4th February 2011, 11:38 PM
ஜெயமோகனின் 'உலோகம்' புதினத்தை - தமிழ்நதி என்னும் ஈழத்தமிழ்ப்பெண் எழுத்தாளர், இணையத்திலும் தொடர்ந்து எழுதுபவர் - கட்டவிழ்த்திருக்கிறார்.

http://tamilnathy.blogspot.com/2011/01/blog-post_27.html

இப்போது தமிழ் மீனவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் ஜெமோ -வின் எழுத்தைக் கொண்டாடுபவர்களுக்கு அவருடைய "நுண்ணரசியலைப்" புரிந்து கொள்ள மேற்சொன்ன கட்டுரையை வாசிக்கலாம்.

San_K
5th February 2011, 12:08 AM
For me, the connection between me and JeMo is 'Gandhi'. It is very strong and i will be connected to any person who loves Gandhi and his principles (and also applicable to Ilaiyaraja :))

and geno, there was an article from JeMo for Ezha tamil issue, have you read that?

San_K
5th February 2011, 12:13 AM
i will also agree to an extent that 'aRam' is sumar. first half thandurathukku konjam kastapatten but the impact it gave towards the end was something unusual and i should say that the usage of words and sentence formation was just superb.

venkkiram
5th February 2011, 03:22 AM
i will also agree to an extent that 'aRam' is sumar. first half thandurathukku konjam kastapatten but the impact it gave towards the end was something unusual and i should say that the usage of words and sentence formation was just superb.அறம் நல்லாவே வந்திருக்கு. ஒருவர் தனது கடந்த கால அனுபவத்தை இந்த அளவுக்கு சுவையா சொல்லாமுடியாது. பெரியவர் நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்லாமல் அதை பின்னாளில் அசை போட்டதையும் சொல்வது சிறப்பு. "கடனை வாங்கி தொழில்செய்றவன்கிட்ட போயி மொத்தமா பணத்தை கேட்டது என் தப்புதானேன்னு நினைப்பு ஓடுது’". இங்க தான் ஜெமோ நிற்கிறார்.

venkkiram
6th February 2011, 05:24 PM
சோற்றுக்கணக்கு (http://www.jeyamohan.in/?p=11992) : சிறுகதை

சொந்த மைதானத்தில் சதம் அடிப்பது போல.. ஆனால் இதில் ஜெமோ அடித்திருப்பது இரு சதங்கள். அறம் எட்டடி என்றால் சோற்றுக்கணக்கு பதினாறு அடி.

venkkiram
7th February 2011, 10:11 AM
"கடை திறந்ததும் உள்ளே சென்று உண்டியலில் பணத்தை போட ஆரம்பித்தேன்.........மொத்தப்பணத்தையும் போட்டபின் கைகழுவிவிட்டு வந்து அமர்ந்தேன்."

ஒரு சிறுகதையை படிக்கும் போது இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டதில்லை. என்ன வரிகள்டா இது? சிலிர்க்க வைக்கிறது! ஜெமோ உன் எழுத்துக்கு முன்பு சாஷ்டங்கமாக விழுவதைத் தவிர வேறேதும் தெரியவில்லை.

app_engine
8th February 2011, 12:47 AM
"சோற்றுக்கணக்கு" - கெத்தேல் சாகிப் பகுதிகள் அருமை (ஜெயமோகன் கட்டுரை எழுதுவதில் வல்லுநர் என்பதால் இதில் பெரும் பகுதியும் அவர் கேட்ட உண்மைச்சம்பவங்கள் ஆக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.)

மற்றபடி, அவர் எழுதி இருக்கும் கற்பனைப்பகுதிகள் மிகச்சாதாரண ரகம்.

app_engine
8th February 2011, 12:50 AM
திரையுலக உறவு அவரது கதைகளில் 'மிகைப்படுத்தல்' என்ற ஒரு குழப்பத்தை உண்டாக்கி இருப்பதாக எனக்குத்தோன்றுகிறது.

திரைப்படத்துக்கு மிகைப்படுத்தலும், சிறுகதை எழுத்துக்கு யதார்த்தமும் அவசியம்.

app_engine
8th February 2011, 12:58 AM
இன்னொன்று - இந்த ஃபிளாஷ்பேக் முறை அவருக்குப்பிடித்தமனதாக இருக்கலாம்.

ஆனால், என் கருத்துப்படி, சிறுகதை படிப்போருக்கு 50% த்ரில் / எதிர்பார்ப்பு போய் விடுகிறது.

அதனால் கொஞ்சம் ஆயாசம் / நீளம் கூடுதல் என்ற உணர்வு எல்லாம் வருகிறது.

P_R
8th February 2011, 11:27 AM
அறம் கொஞ்சம் சவசவ என்று இருந்தது. கெத்தேல் சாகிப் கதை மிகப் பிடித்திருந்தது. எந்த வகை reciprocityயும் இல்லாது (வாழ்க்கையைப் போலவே) முன்செல்வதை unnerving-காக சொல்லிச்சென்றிருப்பார்.

I liked how he pulled up a reader yesterday for 'not getting the point' but still claiming to have enjoyed the story. ஒரு எழுத்தாளன் 'விளக்கம்' சொல்ல நேர்வது அவனுக்கு கொஞ்சம் துர்பாக்கியமானது தான். ஆனால் படைத்துவைத்ததில் பூரணமாக ஆழாமல், ஆனால் ருசித்துவிட்டதாக நினைத்து, ருசிக்க அவ்வளவு இருந்தால் கூட போதும் என்று எதிர்பார்த்து (இப்போதெல்லாம் அவ்வளவு இருந்தாலே பெரிது என்பதால் அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கலாம்!) நகர்பவர்களை சட்டையைப் பிடித்து உலுக்கியதுபோல இருந்தது. 'உங்களுக்கு எப்பிடி புடிச்சாலும் எனக்கு சந்தோஷம், நான் எழுதிட்டேன் இனி உங்களுது' அப்பிடின்னெல்லாம் விட்டுற முடியாது.

கடைந்த கீரையும், தொடர் பசியின் வாய்கசப்பும், செதிலிலிருந்து எடுக்கப்பட்ட கொழுப்பு ஊற்றப்படும் விதமும் தெரியும் அளவு நுட்பமான சித்தரிப்பு. 'உனக்கும் மரியாத எனக்கும் மரியாத' என்று வெறுப்பில் கூட விட்டுவிடமுடியாத குறைந்தபட்ச, பேச்சளவு நாசூக்கு எல்லாம் சிறப்பாக வந்திருந்தன. செய்யாததைச் செய்ததாகச் சொல்பவள் மனதறிந்து பொய் சொல்லவில்ல்லை. பூரணமாக நம்புகிறாள். ஞாபகத்தில் தன்மை அப்பிடித்தான். அதற்கும் 'உண்மை'க்கும் கொஞ்சம் சிக்கலான உறவு. உடன்வாழ்வோரின் ஞாபகங்களையும், மனப்பதிவுகளும் அனுசரித்து வாழும் போது for all practical purposes அது தான் உண்மை என்றாகிறது. அதற்கு மேல் உண்மையின் தன்மை என்பது ஒரு academic point மட்டுமே.

ஊர் பொறுக்கி ஓரிரு வரிகளில் அறிமுகமாகி, அடிவாங்கி, நிலைகுலைந்து சாகிறான். சாகிப்பை கேட்க வருபவர்களை தடுக்கும் ஊர்ப்பெருசு சொல்லும் எதிர்வாதம் :lol: அவரவர்க்கு அவரவர் தர்க்கம். இவை அனைத்தும் cardboard சித்திரமாக இல்லாமல் 'நிஜம் போல' இருந்தது (அவர் சொற்களில் 'நிகரனுபவம்). இவை இல்லாமல் எழுத முனைபவர்களைப் படிக்கவே கடுப்பாகிறது.

San_K
8th February 2011, 11:37 PM
சோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம் (http://www.jeyamohan.in/?p=12190)


சிறு துளி அனுபவமும் இல்லாவிடில் இந்த கதை உள்ளிறங்காது. அது பசியின் அனுபவமாக இருப்பினும், பசித்த வயிற்றுக்கு உணவு அவமதிக்கப்பட்ட அனுபவமாக இருப்பினும், பசிக்கு உணவிட்ட அனுபவமாக இருப்பினும், .. எந்த அனுபவமாக இருப்பினும் சரி

how true.

சோற்றுக்கணக்கு அபாரம். இந்த கதையில் அறியப்படும் சில வலிகளை நான் அனுபவித்து இருக்கிறேன். சில இடங்களை மிகவும் ரசித்தேன். குறிப்பாக



தம்பானூர் ரயில் நிலையத்திற்குச் சென்று நாளெல்லாம் இரும்புச்சத்தத்தைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன்

..
அந்த நாயின் கறியை எடுத்துக்கொண்டுபோய் குடோன் பின்பக்கம் கல்லடுப்பு கூட்டி சுட்டு தின்பதைப்பற்றி கற்பனை செய்தேன்

..
ஏதோ திருட்டுத்தனம் செய்ய வந்தவனைப்போல உணர்ந்தேன்


அப்புறம்


என் கைகால்கள் பதற ஆரம்பித்தன. சோறு தொண்டையில் அடைத்தது


இதை இங்கு எத்தனை பேர் அனுபவித்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு இப்போது நினைத்தாலும் ஒரு வெறுமை மனதில் வரும்.


எதிர் கோஷ்டி (சாரு) ஆள் மாமல்லனின் எதிர் வினை (http://www.maamallan.com/2011/02/blog-post_03.html)



சிந்திக்க வைப்பது இலக்கியம் - மூக்கு
சிந்த கைக்குட்டை எங்கே எனத் தேட வைப்பது பரப்பிசை


கிட்டத்தட்ட அப்_எஞ்சின் கருத்து போல் உள்ளது. என்னை பொறுத்த வரை 'உணர்ச்சி வசப்படுத்தல்' கண்டிப்பாக இலக்கிய வகை. அப்புறம் இந்த சிறுகதைகள் சிந்திக்க வைக்க வில்லை என்பது பொய்

அறம், சோற்றுக்கணக்கு இரண்டிலும் என்பது தான். பாலா பட போல. சோற்றுக்கணக்கு சேரன் கையில் கிடைத்தால் பிழிந்தெடுப்பார். நல்ல சினிமாவாக படைக்கலாம்.

app_engine
9th February 2011, 08:32 AM
கிட்டத்தட்ட அப்_எஞ்சின் கருத்து போல் உள்ளது. என்னை பொறுத்த வரை 'உணர்ச்சி வசப்படுத்தல்' கண்டிப்பாக இலக்கிய வகை.


அடடே, நான் 'மிகைப்படுத்தல்' பற்றி அல்லவா சொன்னேன்?

உணர்ச்சிவசப்படல் பற்றி எங்கே சொன்னேன்? இன்னும் சொல்லப்போனால் உணர்ச்சி வசப்பட வைக்கவில்லை என்பது தான் எனக்கு இந்தக்கதைகளில் உள்ள கோளாறு.

அதாவது கெத்தேல் உண்மைக்கதையை விட்டு விட்டு மிச்சம் பகுதியைப் பார்த்தால் எனக்கு ஒரு ரோமாஞ்சமும் இல்லை என்பது தான் குழப்பம் :-)

complicateur
9th February 2011, 12:03 PM
app,

மிகைப்படுத்தல் பற்றி நீங்கள் சொல்வதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.

கேத்தேல் சாகிப்பின் உண்டியலில் அத்தனை பணத்தையும் கொட்டி விடும் நிகழ்ச்சியை அந்த கதைக்கே உண்டான இயக்கத்தில் மிக முக்கியமானது. அது
மிகைப்படுத்தாலாகவும் தெரியலாம். ஆனால் கதையின் உண்மையான உச்சம் அங்கு இல்லை. கணக்கெடுக்காத ஒருவருக்கு கையிலடன்காத செல்வம் கொடுப்பதும் சுயத்துக்காகத் தான். இது மிக நன்றாகவே கதையில் வந்திருக்கிறது. ஒரு உச்சம் ஒரு முரணை இவ்வளவு நன்றாக உணர்த்துவது மிக கடினம். ஒற்றை வரியில் ராமலட்சுமியை கல்யாணம் செய்துவிடும் நிகழ்ச்சி கடந்து விடுகிறது. வாழ்க்கையிலும் சில உண்மையான உச்சங்களை உணராமலே கடந்து விடுகிறோம். அதுவும் மிக துல்லியமாக உணர முடிகிறது. இதெல்லாம் கதைக்கு (திரையாகட்டும் இலக்கியமாகட்டும்) தேவையில்லை என்றால் என்னை போன்றவர்களுக்கு உறைக்குமா என்றே சந்தேகம் தான்.

Sureshs65
9th February 2011, 11:54 PM
While P_R is quite happy with Jeyamohan explaining (?) the story to the reader, I sort of get where that reader was coming from. He is looking for a summation at the end which sort of logically ties down what happened earlier or atleast explains the writer POV or philosophy. He finds a confusion there. The ending seems to indicate that the protagonist married Ramalaxmi because of 'sotru kanakku'. The question in the readers mind must be this: "If you take help from someone and they help you but treat you like shit, do you still owe then something." I am sure this is a question many of us would ask, given that our parents may not have come from very rich background, there was no IT industry those days, and we may have been forced to take help from various people, all of whom would not have treated us kindly. The ending sort of tends to say that 'yes, you still are duty bound to them', which may have confused the reader. Contrast this to the ending of 'Aram'. It is very unambiguous. What it says is "However high be your morals, when you fight with someone whose morals are higher, you will lose." The old man has understood that and that is why he says, "Aram was with her." In short I fully appreciate what that reader wanted to say. And to be very honest the story does give rise to such an interpretation as I had outlined earlier. That is the failure of the author. Saying that the reader should read better doesn't cut ice.

Yes, both 'Aram' and 'Sotru Kanakku' have their emotionally intense moments. Yes, no one in this world can render the emotional intensity of a feeling as well as Jeyamohan can. Or atleast I haven't read anyone recently who can match Jeyamohan in this regard. Having said that, if it is only about emotional intensity and shared feelings then it is like high quality journalistic work, when dealing with real life incidents. 'Aram' rises above it to become a statement of the author. 'Sotru Kanakku', in my opinion, doesn't rise too much above that level. Having said that, you can never go wrong reading a JeMo story. And it is indeed a tribute to him that these stories have been discussed so widely. Personally I wouldn't rate these in his top ten stories.

As a contrast, if you can get hold of it, read Pa.Krishnaswamy's 'செலுத்த முடியாத கடன்' available in the first part of 'ஐம்பதாண்டு தமிழ் சிறுகதைகள்' edited by Sa.Kandaswamy. The contrast is with the short story 'Aram'. Krishnaswamy's short story talks about the same 'Aram' that JeMo talks about. The contrast is in the style of telling. In Krishnaswamy's tale, there are no emotional highs as in JeMo tale. It is told in such a way that the common-ness of it gets to you. You end up feeling this is the way 'Aram' actually works. Not with the bang of JeMo but with the whimper of Pa.Krishnamurthy.

P_R
10th February 2011, 10:50 AM
The ending seems to indicate that the protagonist married Ramalaxmi because of 'sotru kanakku'. ........... In short I fully appreciate what that reader wanted to say. And to be very honest the story does give rise to such an interpretation as I had outlined earlier. That is the failure of the author. Saying that the reader should read better doesn't cut ice.

I thought the eventual ending in sORRukkaNakku was quite clear.

Throughout the interaction with Kettle Sahib, the narrator keeps paying when he doesn't have to pay. Always calculating when he is lagging, always more than his 'means' permit. Yet the sense of indebtedness is always there. He pays those who ask him to and those whom he does not. Paying and 'awareness that one is indebted' is pretty much equated: cogniszance of a reciprocity. Where a payment 'settles' a social quid-pro-quo and brings it to a closure.

The dramatic moment in the story when he loads the money makes no impact on the Sahib. He is still what he says. Kind of Rudyard Kipling's "If" level un-realness in treating non-payers and payers alike. I guess one would have expected the story to have ended there. A man who has paid all along, but he feels a cosmic indebtedness that needs a egregiously high repayment. Yet the 'cosmos', so to speak, moves along with characteristic indifference. Its like the concept of 'being obliged to' does not come from the act to which one feels obliged to but rather from one's own self.

If the story had ended here, the maximum peak would have been man's absurd scramble for balance and tallying.

Where the story really scales its fantastic peak is the extension beyond that. I truly loved how Subbamma is 'convinced' she fed the narrator. She is not even lying. It is her truth. Memory is a servant of circumstances. She wholeheartedly believes she 'took care' of the narrator and says so herself. Tries to perpetuate in him a sense of obligation. So even if he overcompensates like he paid the Sahib, is he ever going to compensate her enough? The futility of attempting to 'fully compensate' doesn't move him away from 'losing' to Subbamma, even after becoming a man of his own means (which is what the whole growing struggle was all about).

He is bound to be misunderstood by his parents (whose reactions to his job are fantastic!) and it is unlikely that Subbamma may consider his move an act of grace (as she strongly feels he owes her big time). And it is not as if he has forever broken the shackles of - to abuse the expression - social accounting. But this is one opportune திமிறல் against it.

Without getting this, IMO, the reading experience is grossly incomplete. And I liked it that JM said that.

My problem with அறம் is the kind of monologuish style and that the periyavar was not very appealing a character (can't put a finger on it). So I was not carried into the story as well as in சோற்றுக்கணக்கு.

அதுக்குள்ள இன்னும் ரெண்டு கதை எழுதிட்டாப்ல. ஒரு ஒரு மாசம் leave விடச்சொல்லணும். அப்பொதான் catch-up பண்ண முடியின். :-)

SoftSword
10th February 2011, 06:24 PM
PR neeeenga engayoooooop' poittinga... :notworthy:

AravindMano
12th February 2011, 08:09 AM
அறத்தை விட சோற்றுக்கணக்கு ஈர்த்தது.


அம்மா நல்ல அரிசி வாங்கி மீன்குழம்பு வைத்து அவளே பரிமாறுவாள். ஆனால் எத்தனையோ காலமாக நீண்டு நின்ற வறுமை. அவளுக்கு பரிமாறத்தெரியாது. ஒரு கண் எப்போதும் பானையில் இருக்கும் சோறையும் சட்டியில் இருக்கும் குழம்பையும் கணக்குபோடுவதை தவிர்க்க தெரியாது. அகப்பையில் அவள் சோறோ குழம்போ அள்ளினால் அரைவாசி திரும்ப கொட்டிவிடுவாள். இன்னும் கொஞ்சம் குழம்பு என்றால் அவளுடைய அகப்பை சில சொட்டுகள் தான் அள்ளும். கையோ மனமோ குறுகிவிட்டது. சாளைப்புளிமுளமும் சம்பா அரிசி சோறும் அவள் அள்ளி வைக்கையில் நான் நாலாவது உருண்டைச் சோறில் வயிறு அடைத்த உணர்வை அடைவேன். அந்த சோற்றை அள்ளி வாயில் போடுவதே சலிப்பாக தெரியும். பலவீனமாக ’சாப்பிடுடா’ என்பாள் அம்மா. தலையசைத்து முகம் கழுவிக்கொள்வேன்.

:)

Roshan
12th February 2011, 08:56 PM
SoaRRu kaNakku was really good but I didnt have the patience to read "aRam" - something was lacking and I lost interests half way through and stopped reading. Let me see if I can givea another try.

venkkiram
15th February 2011, 02:32 AM
தாயார்பாதம் கதை -

என்னத்த சொல்றது .. எண்ணங்களை கொட்ட வார்த்தைகளை தேட வேண்டியிருக்கு . கதை முடியும் இடம் - கவிதையா இருக்கு . அறத்திற்கு அப்புறம் பெண் பாத்திரம் இடம் பெற்ற கதை . மனதை உலுக்கும் நிகழ்வுகள் . பல இடங்களில் மனசாட்சியிடம் பேசுகின்றன . இவ்வளவு அற்புதமா ஒரு தாத்தா பாட்டியின் குணத்தை அக்கு வேறா ஆணி வேறா எழுதிவிட முடியாது .

எனக்கு பிடித்த வரிகள்..


அவருக்குள்ள ஓடீண்டே இருக்கிற சங்கீதத்தோட எல்லாமே இணைஞ்சிரும், ஊர்த்தண்ணியெல்லாம் காவேரியா போய்சேந்துக்கற மாதிரி. சரி, காவேரிதானே ஊருக்குள்ளே தண்ணியாகவும் வந்துண்டிருக்கு…’


எடுத்து எடுத்து குடுக்கணும். அதுக்கு நல்லது பொரி வாங்கி அவ மடியிலேயெ கட்டி விட்டுடறதுன்னு பிறகு எங்கம்மா கண்டுபிடிச்சள். அதான் சாப்பாடு…


‘ஒவ்வொருத்தரும் அவஅவா வாழ்க்கைய கட்டுச்சோறு மாதரி கட்டிண்டுதாண்டா வர்ரா…ஒண்ணும் பண்ணமுடியாது. பிராப்தம்’ னு மட்டும் சொன்னார்.


அவர் சொல்லிக்குடுக்கிறப்ப உள்ளுக்குள்ள ஒரு நாக்கு மடங்கிடுது. வெளிநாக்கை பேச வைக்கிற மனசோட நாக்கு அது.


அதையெல்லாம் பிள்ளைகள்ட்ட சொல்லக்கூடாதுன்னுதான் நேக்கு இப்ப படறது.


ஆடிக்காவேரி மாதரி குப்பையும் கூளமுமா இருக்கு…அதனால இது இன்னும்கொஞ்சம் கடவுள்கிட்ட போய்டறது…தெரியலை.


தலைநெறைய பூ வச்சுண்டு அட்டிகை போட்டு பட்டுபுடவை கட்டிண்டு சதஸிலே உருகி உருகி பாடுவள்



அறம், சோற்றுக்கணக்கு, தாயார் பாதம் படித்த மூன்றில் - எதையுமே தாழ்த்தி சொல்லமுடியவில்லை . அந்தந்த களத்தில் பல திசைகளில் கதை விரிவடைந்து கொண்டே இருப்பதால் கதைகளை இன்னொரு முறை வாசிக்கணும் என்ற எண்ணம் தொக்கி நிற்கிறது .

இன்னும் வணங்கான் கதை படிக்கவில்லை . வணங்கான் படித்து முடிக்கையில் அடுத்து மூன்று சிறுகதைகளை ஜெமோ எழுதித் தள்ளாமல் இருக்கணும் . இப்படி ராட்சசன் போல எழுதித் தள்ளுவது , இதற்கு இடையில் அந்தக் கதைகளுக்கான கடிதங்கள் வேறு.. இதெல்லாம் படிக்கணும் என்ற எண்ணத்தையே சிதைக்கும் வகையில் மலைப்பாக இருக்கிறது . இந்த லட்சணத்துல மீள் வாசிப்பு எல்லாம் எங்கே! எப்போ!

venkkiram
20th February 2011, 07:56 AM
வணங்கான் மற்றும் யானை டாக்டர் இரண்டு சிறுகதைகளையும் படிச்சு முடிச்சாச்சி. நல்லதொரு மனவெழுச்சியைத் தரும் வாசிப்பு அனுபவங்கள். மனம் கனத்துப் போகிறது. சமுத்திரத்தை சிறு துளியில் அடக்கியது போல வார்த்தைகள் பிரமிப்பை பல முறை ஏற்படுத்தியது. நல்லதொரு சினிமா பார்த்தால் எப்படி இருக்குமோ அதுபோலவே ஜெமோவின் கதைகளை வாசிப்பதில் கிடைக்கிறது. யானை டாக்டர் வனத்தையும், வனம் சார்ந்த வாழ்க்கையையும் கண் முன்னே நிறுத்துகிறது. நிஜ மனிதர்களை மையமாகவோ, புறத்திலோ வைத்து புனையும் உத்தி மனத்தைக் கவர்கிறது. இந்த விஷயத்தில் ஜெமோவின் நேர்மை போற்றத் தக்கது. கிருஷ்ணமுர்த்தியையும் நேசமணியையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் பல. அறம் முதல் யானை டாக்டர் வரை நெகிழ்ச்சியான அனுபவங்களாக இருக்கிறது. சுகானுபவம். மானுடம் வெல்லும் என்பதை வணங்கானும், யானை டாக்டரும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஒரு எழுத்தாளர் வாழும் காலத்திலேயே நாமும் அவரது படைப்புக்களை வாசித்து இன்புறுவது ஒரு தனி சுகம். மரபைப் பேணும் ஜெமோவின் தன்மைக்கு வந்தனங்கள்.

வணங்கான் கதையில் ஜெமோ அங்கங்கே வைக்கும் நகைச்சுவைக் கண்ணிகளில் மாட்டிக்கொண்டு சிரிப்பதுண்டு.


நேராக வந்து ‘என்னவே இது?’ என்று காகிதத்தை ஆட்டி காட்டினார். ‘கவர்மெண்டு பேப்பராக்கும். அப்டி ஆட்டப்பிடாது’ என்றார் அப்பா.


எதிர்பாராதவகையில் படீரென்று ஒரு சல்யூட் அடித்தார்.


அப்பா சிரித்தார் ‘போலே, அறிவுகெட்ட மூதி. ஏலே எனக்க உடம்பு முழுக்க ஆனைக்க வாசனையாக்கும். ஆனைமணம் கேட்டா ஒரு நாயிநரி அருவில வருமாலே? நான் பின்ன எப்டியாக்கும்லே ஏமானுக்க முற்றத்திலே இருந்து தப்பினென்? பன்னிரண்டு நாயாக்கும் காவலுக்கு. எல்லாம் எனக்க ஆனைவாசன கேட்டு வால கவட்டைக்கெடையிலே வச்சுகிட்டுல்லா ஓடிச்செண்ணு மூலையிலே இருந்துபோட்டு”


‘லே அவன் சொன்னா என் தலய வெட்டுவியாலே?’என்றார் கணக்குப்பிள்ளை. ‘பின்ன? சார் சொன்னா வெட்டணுமின்னுல்லா சர்க்காரு சொல்லுகான். நீரு என்ன, பூஞ்ச பிள்ளவாள். சாரு சொன்னாருண்ணாக்க வந்து சமீன் தலைய வெட்டி கீழ வச்சிருவோம்லா? ஏது?’ என்றார் தேவர்.

ரோமங்கள் எல்லாம் சிலிர்த்தெழும் கணங்களும் உண்டு.


நான் இப்பதான் கேறி வந்து பிடிச்சிருக்கேன். இந்தப்பிடி எனக்க பிடியில்லவே, எனக்கும் எனக்கு பின்னால வாற ஏழு தலைமுறைகளுக்கும் சேத்து உண்டான பிடியாக்கும். இப்பம் நான் இத விட்டா எட்டு தலைமுறைகளாக்கும் கீழ விழுகது, கேட்டேரா? சாவுறதுக்கு நாடாரு ரெடியாக்கும்னு போயி சொல்லும்..போவும் வே’ என்றார்


நான் செத்தா அது அப்டி தீராது வே . குளவிக்கூட்டிலயாக்கும் நீரு கைய வைக்குதீரு. கெளம்பி வருவோம் வே. அலையலையா பெத்து பெறந்து வந்துகிட்டே இருப்போம். எம்பிடு பேர நீரு சுடுவீருண்ணு பாக்குதோம்’ என்று அப்பா சொன்னார்.


ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது.

ஆ- வென வாய் பிளந்து நிற்கும் இடங்களும் உண்டு.


எனக்கு என் பிறப்பிலேயே நான் மீறமுடியாத ஆணை ஒன்றை அளித்தார்.

geno
20th February 2011, 10:45 AM
ஜெயமொகன் எழுதிய "கட்டு"ரையான -


ஐஸ்வரியா ராயும் அருந்ததிராயும் (http://www.jeyamohan.in/?p=10189)


http://www.jeyamohan.in/?p=10189



அதிலிருந்து சில பத்திகள் :


".....அருந்ததி ராயின் நிலைப்பாடுகளில் எப்போதும் மாறாமல் இருக்கும் இரு அம்சங்கள் உண்டு. இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அவரது ஆதரவு உண்டு. ஏன்? இந்திய ஒருமைப்பாட்டை முதல் எதிரியாகக் கொள்ளும் இரு சக்திகள் ஒன்று சீனா, இன்னொன்று கிறித்தவ மதமாற்ற அமைப்புகள். அருந்ததி எந்நிலையிலும் சீனாவுக்கோ மிஷனரிகளுக்கோ எதிரான எதையும் சொல்வதில்லை. இவ்விரு சக்திகளும் வடகிழக்கில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்று இந்த ஒத்துழைப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பரவி இடதுசாரி தீவிரவாதமாக மாறியிருக்கிறது. அருந்ததி இந்த இரு சக்திகளின் ஊடகமுகம்.

ஆம், அருந்ததியை முதலில் ‘உலகப்புகழ்’ பெறச்செய்து, பின் நம் மீது சுமத்தி, நம் சிந்தனையை ஊடுருவியிருப்பது இந்தியாவை சிதிலப்படுத்த விரும்பும் மேலநாட்டுச் சக்திகளே என்று பொதுப்பார்வையில் உணர முடியும். அருந்ததி போராளி அல்ல.வெறும் ஊடகப்பிரமை மட்டுமே. அவர் இந்திய சமூகத்தின் மாற்றத்துக்காகவோ இந்திய மக்களின் முன்னேற்றத்துக்காகவோ போராடுபவர் அல்ல. அவரது நோக்கம் இந்தியாவின் அழிவு, இச்சமூகத்தின் சிதைவு. அதன் மூலம் உருவாகும் மாபெரும் அராஜகத்தில் இருந்து லாபம்பெற காத்திருக்கும் அதிகார சக்திகளின் ஐந்தாம்படை அவர்.."


இதற்கான காத்திரமான எதிர்வினை :


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13008&Itemid=263


"... அருந்ததி ராயின் பழங்குடியின மக்கள் ஆதரவு எனும் அரசியலை மறுக்கவும், வைக்கம் போராட்டத்தில் பெரியாரது பங்களிப்பை மறுக்கவும் எவ்வாறு வக்கிரமாக அவர் வாதிடுகிறார் என்பது அவரது அரசியல் அதிகாரம் நோக்கிய செயல்பாட்டுக்கான சான்றுகள் என நாம் கருத வேண்டியிருக்கிறது. சமூகத்தின் பிற அதிகாரப் படிநிலைகளுக்குச் சவாலாகவும் சுயாதீனமாகவும், நேரடியிலான உறவு காணப்பட முடியாமல் நழுவிச் செல்லும் பண்புகொண்ட இலக்கியம், ஜெயமோகனிடம் அதனது அனைத்து பாசாங்குகளையும் உதறிவிட்டு பிரச்சாரமாக ஆகிவிடுவதை அவரது அரசியல் மற்றும் கருத்தியல் சார்ந்த கட்டுரைகளில் பார்க்கிறோம்.

இளையராஜா இலக்கியவிருது மாதிரியானதோ அல்லது விளக்கு அல்லது இயல் விருது மாதிரியிலானதோ அல்ல விஷ்ணுபுரம்இலக்கிய வட்டத்தின்செயல்பாடுகள். அதற்குப் பின்னால் ஜெயமோகனின் ஒரு உருவக சமூகம் இருக்கிறது. அந்த உருவக சமூகம் தமிழகத்தின் திராவிட மற்றும் இடதுசாரி மரபின் எல்லாவிதமான ஆக்கக்கூறுகளையும் கேவலமாக மதிப்பிடுபவை, அவமானப்படுத்துபவை, விகாரமாக வக்கிரத்துடன் எள்ளி நகையாடுபவை. இந்தக் காரணங்களாலேயே ஜெயமோகனது அரசியல்-கருத்தியல் செயல்பாடென்பது நுட்பமாக எதிர்கொள்ளப்படவேண்டும் என நாம் கருதுகிறோம். "


கோல்வால்க்கரினது வாசிப்பனுபவமும், மனுவின் நிகரனுபவமும் ஒருங்கே அமையப்பெற்ற சிலாக்கியத்தை ஏற்படுத்தும் ஜெமோ மற்றும் அவரது அடியார்களினது மானுட நேசம், கருணை மற்றும் இதமான பண்பு - நந்தனாரை கொளுத்திவிட்டு - அவர் சோதியில் கலந்துவிட்டதாக அருளாசி வழங்கினவர்களது - கருணையைச் சார்ந்ததாக இருப்பது ஒரு பொருட்டில்லை(தெற்குவாசல் திறந்தாச்சா?) .

எல்லையில்லா இவர்களது பெருங்கருணையை நம்மீது இன்னும் எத்தனை காலம் பொழிவார்களோவென அச்சத்தில் இருக்க வாய்த்ததும், கருணை வேண்டாமெனச் சொன்னாலும் விடாமல் வலிந்து பொழிவதும் தான் நமக்கு வாய்த்த வீடுபேறு போலும்.

venkkiram
20th February 2011, 11:58 AM
அந்த உருவக சமூகம் தமிழகத்தின் திராவிட மற்றும் இடதுசாரி மரபின் எல்லாவிதமான ஆக்கக்கூறுகளையும் கேவலமாக மதிப்பிடுபவை, அவமானப்படுத்துபவை, விகாரமாக வக்கிரத்துடன் எள்ளி நகையாடுபவை. இந்தக் காரணங்களாலேயே ஜெயமோகனது அரசியல்-கருத்தியல் செயல்பாடென்பது நுட்பமாக எதிர்கொள்ளப்படவேண்டும் என நாம் கருதுகிறோம். மத்தளம் இதுவரை ஒரு புறத்திலிருந்தே அடிக்கப்பட்டது. இப்போ தான் எதிர்ப்புறத்திலிருந்தும் சத்தம் வர ஆரம்பித்திருக்கிறது. திடமற்ற கருத்தியக்கயங்கள் வரப் போகும் காலங்களில் சுவடு தெரியா வண்ணம் அழிந்தே போகும். எத்தனை நாட்கள்தான் மக்களிடம் நல்லிணக்கத்தை குலைக்கும் வண்ணம் கவர்ச்சி வார்த்தைகளால் ஏமாற்ற முடியும்? இனி வரும் காலங்கள் போலிகளை தோலுரித்து காட்டி விடும் வெகுஜன மக்களுக்கு.

venkkiram
21st February 2011, 09:15 AM
தேடுதல் நேரத்தை குறைத்துக்கொள்வதில் அன்பர்களுக்கு உபயோகமாக இருக்கும் என..

அறம்
http://www.jeyamohan.in/?p=11976
சோற்றுக்கணக்கு
http://www.jeyamohan.in/?p=11992
தாயார்பாதம்
http://www.jeyamohan.in/?p=12269
வணங்கான்
http://www.jeyamohan.in/?p=12218
http://www.jeyamohan.in/?p=12220
யானைடாக்டர்
http://www.jeyamohan.in/?p=12433
http://www.jeyamohan.in/?p=12435
http://www.jeyamohan.in/?p=12439

P_R
21st February 2011, 11:45 AM
தொடர்ந்து படித்தால் கொஞ்சம் சுமார் தான்.
ஒரு ideaவுக்காக வலிந்து உருவாக்கும் கதை, நிகழ்வுகள், உரையாடல்கள் என்கிற format சலிப்பு தட்டுகிறது.
கதை சொல்ல வருவது 'இது தான்' என்று reduce செய்ய முடியும் ஒரு coreஐ வைத்துக்கொண்டு பின்னப்படுவதே அவ்வளவு சிறப்பாக இல்லை.

தாயார் பாதம், வணங்கான் வரை தான் இதுவரை வந்திருக்கிறேன். தா.பா இவ்வகையில் reduce செய்யப்படக்கூடிய, அதற்குத் தோதாய் புனையப்பட்டது நன்றாகத் தெரிகிறது. ஒற்றைப்பரிமாண பாத்திர வார்ப்புகள். 'நிகரனுபவம்' எல்லாம் வாய்க்கவே இல்லை.


வணங்கான் சுவாரஸ்யமான கதை. எந்த level இல் pitch செய்வது என்று அங்கும் ஒரு குழப்பம் இருந்திருக்கிறது. வணங்கானின் அப்பாவை எவ்வயதிலிருந்து intellectualize செய்வது என்று தடுமாறியதாகத் தெரிகிறது. இல்லை 'சாதாரணமாக'ச் சொல்லப்பட்டதை வணங்கான் இன்று சொல்கிறபோது அவ்வாறு தெரிகிறதா என்ற குழப்பம் நீடிக்கிறது. வணங்கானின் அப்பா/தாத்தா வேலை செய்த பண்ணையில் ஜாதி அடுக்குகள், ஒடுக்குமுறை பற்றி விவரிக்கும் அந்த matter-of-factness நன்றாக வந்திருந்தது. அதே சமயம் 'பார்த்தாயா ஒரு எளிமையான மேல்Xகீழ் இருமை அல்ல, ஒரு வகை sequential ஒடுக்குமுறையாக்கும்' என்ற undertone ஒரு வித intellectualizationஐத் தருகிறது. திடீரென்று ஒரு ரெண்டு வரிகள் கதை நின்று, கட்டுரை படிப்பது போல இருந்தது :-) பண்ணையார் தேவரை கோமாளியாகக் காட்ட வேண்டும், சரி. அதற்கு: கபர்தாரா!!!?? என்ன காமெடி இது?

அவருடைய 'மாடன் மோட்சம்', 'மடம்' போன்ற கதைகள் கூட 'ஒரு கருத்தை' சொல்பவை தான். ஆனால் அதில் கட்டுரையின் 'துல்லியம்' கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கும். அதனால் அவை ஈர்த்தன என்று நினைக்கத் தோன்றுகிறது.

இவற்றில் சோற்றுக்கணக்கு அளவுக்கு எதுவும் நினைவில் நிற்பவையாக இல்லை.

San_K
21st February 2011, 10:43 PM
http://thoughtsintamil.blogspot.com/2011/02/blog-post_9293.html

hayyo jeyamohan veguja ezhuthaalar agittaar

app_engine
22nd February 2011, 03:46 AM
http://thoughtsintamil.blogspot.com/2011/02/blog-post_9293.html

hayyo jeyamohan veguja ezhuthaalar agittaar

Typical marketing thingy...see the internal contradiction :



மிகக் குறைந்த பிரதிகளே (600) அச்சிட்டிருந்தோம். அதன் விலை ரூ. 100 என்று இருந்தது. அனைத்தும் புத்தகக் கண்காட்சியிலேயே விற்றுவிட்டன. கடைகளுக்குப் போகவே இல்லை.

இதன் விற்பனை வேகத்தைப் பார்த்து, இந்தப் புத்தகத்தை 5,000 பிரதிகள் அச்சிட்டுள்ளோம். விலையையும் ரூ. 50 என்று குறைத்துள்ளோம். அதே தாள், அதே தரம். விலை மட்டும்தான் பாதிக்குப் பாதி!


Will any businessman do that? :lol:

venkkiram
23rd February 2011, 09:03 AM
P_R,
உங்களது எதிர்பார்ப்பை மயில்கழுத்து பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன். Let us see.

Sureshs65
23rd February 2011, 09:48 PM
A brief review of 'உலோகம்'

First, pardon me for writing this in English. I do write in Tamil but it takes a much longer time for me. Hence this review in English.

The blurb says that JeMo is trying a novel in the thriller genre, based on some real incidents. The novel is indeed in the thriller genre but we should probably call it an intelligent thriller. Something along the lines of a Le Carre novel.

SPOILER ALERT: The following paragraphs will contain some of the plot elements.

The novel is told in first person. This is a person who just wants to make a clean breast of things. He is not looking forward to your understanding or sympathy. The whole novel can be said to be a monologue. The protagonist talks continuously. There is no let up. He keeps speaking and speaking and speaking. A constant flow of words come tumbling down. Given that it is JeMo who is writing, you can imagine the quality of thoughts and the quality of the language.

JeMo's novel is about multiple emotions. Love, self preservation, betrayal, double crossings and a general sense of helplessness. It is about characters caught in situations not of their own making and their inability to get out of those situations. Not unexpectedly for a JeMo novel, the whole novel is driven by characters than by the plot. It is probably one of the first novels in the thriller genre in Tamil which depends so much on characterisation and less on the actual events.

JeMo builds the plot well. He slowly sets up the climax. There is no hurry to get there. The story unfolds with lot of details and slowly proceed to the climax. It is nice to see such detailing in plot. As usual JeMo's language is brilliant as are his descriptions. JeMo is known for his symbolism and here too the symbolism of the metal inside the man converting him into a metal exists.

For all this, I had a sense of dissatisfaction. And I can think of a few reasons why I had that feeling. First, this is not a lived experience of JeMo and it shows. If you take something like 'mattagam' or even the short story 'aram', the place and the people easily spring up in your mind's eye. That is the strength of JeMo's writing. He can make a place and its people come alive very easily. Unfortunately, neither SriLanka nor its people come alive in this novel. When the protagonist recalls his past, the streets of Sri Lanka don't come alive nor do the people of that place come alive. It is just some recall by a third party and it doesn't touch us.

The second failing to me is even more surprising. The whole novel hinges on three people and you somehow don't feel for any of them!!! I can understand the consistency in us not feeling for the protagonist since he doesn't want us to feel for him. But while you appreciate the situation in which the man who will be eventually murdered is caught in, you somehow don't develop any sympathy or feeling for him. Nor do you really feel for his daughter. I say this is surprising because of two reasons. One, JeMo is a master at getting you connected with the character. His recent short stories serve as excellent examples. Two, the whole novel will be satisfactory only if the connect happens with these characters. Somehow that doesn't happen or atleast it didn't happen to me and hence the novel doesn't fulfil its promise.

For those wondering if they should read this novel, it is definitely worth far more than the Rs.50/- for which 'kizhakku' is going to sell it. Do buy it and read it. You will not regret it.

P_R
24th February 2011, 01:58 PM
Nice post Suresh.


First, this is not a lived experience of JeMo and it shows. If you take something like 'mattagam' or even the short story 'aram', the place and the people easily spring up in your mind's eye.

Yeah I feel that in many of his stories set outside his comfort zone. Not just in terms of locale but even in terms of content. When the story does not lend itself naturally to 'things he wants to say' you can almost see how he is bending things to suit what he says. And he has an outsider's perspective of a locale that manifests in the way he writes about the locale, conversations etc.

For instance there were too damn many mentions of East thanjai in the one half of Mayil kazuthtu I read. Even granting for possible excessive municipal patriotism and the tom-tomming to outsider characters, it struck me as very out of place. As if JeMo can't rid himself of thinking he is writing about a foreign culture. You see the old man wedded to music mentioned one too many times in thayar paadham. Yes musical legacy of the area, people steeped into it etc. is fine but it still felt like he was trying real hard to make it 'appropriate' and it wasn't turning out to be (I am not saying this too well)


In many ways I am glad he is uncomfortable. A writer should feel he is out of place and has to make efforts to be adequate. Many just write with minimal cognizance about such things. You have to be hyper aware you are aware of comfort zone but also not let it show, that is all.

But this 'one large monologue' is what makes me hesitant. Not too sure how much I'd be able to enjoy that. Short story-yE moochu muttum. Full novel konjam risk :lol2:

PS: Do keep writing in Tamil!

Sureshs65
24th February 2011, 09:21 PM
PR,

I understand what you say. Felt the same in one short story where a singer is unable to distinguish properly between Arabhi and Devagandhari. Somehow that didn't ring true.

Another example of a character that does not work is the foreign return girl, I think she was called Susheela, in 'anal katru'. As someone commented in JeMo's site (comments were enable during that time), it looked like the girl's character was written by Sujatha :) Ofcourse, I could pardon that since the other characters were wonderfully etched and the central conflict was emotionally draining.

Yes, it is nice to see JeMo working beyond his comfort zone. Otherwise given the speed at which he writes, he will exhaust his locales very fast.

Sureshs65
3rd March 2011, 11:29 PM
A brief review of 'இரவு'.

In the wake of success of 'Ulogam' in the book fare and later the sensation created by his short stories, this particular novel doesn't seem to have garnered as much attention. Here is my brief review of this novel. I am not going into the philosophical aspects which need a much larger writeup. I will talk more on the subject and the structural aspects of the novel. Not many spoilers.

This novel is more closer to the subjects which have been the main concern of JeMo in many of his novels. Love, Betrayal, Women, Religion etc. There is a good deal of emotional intensity in this novel. You can see this novel as a more matured and slightly less intense version of 'Anal Katru' in the sense of the central theme of love and betrayal. Jeyamohan is able to take up an interesting premise and draw up a novel based on this premise. Unlike 'Ulogam' where I did not connect with many of the characters, here even the minor characters leap out of the pages. The novel is placed in Kerala and Jeyamohan's very close association with this land clearly shines through, in his description of geography, people and the language. Characters are nicely etched, the novel moves very naturally towards its climax and unlike 'Anal Katru' wherein you could sense that it was written for a movie and hence everything has to be neatly tied up. Here he has more freedom and so he ends it naturally. As I said earlier, I am not going to debate the philosophical implications here.

Another thing which was very good is the cover design. Very well thought out and executed.

A couple of thoughts which passed through my mind as I was reading this novel. One, I personally feel the need for an editor who is as personality should be equal to Jeyamohan. As I have always maintained, there are very few equals to Jeyamohan in bringing a scene to life, a scenery to life, the inner conflict of a character to life. No one describes these better than Jeyamohan. But sometimes this becomes too much. Suppose a scene is being described, you are first hit with a wonderful imagery. Before you can savour it, one more metaphor comes along and immediately one more and one more. Suddenly you have so much description that you one, forget a lot of it or two just move forward. Same happens sometimes when the characters inner workings are detailed. Sometimes it becomes too much of description and hinders the flow. (I am afraid to say this loudly lest JeMo comes back and says we expect 'விறுவிறுப்பு', 'சுறுசுறுப்பு' because we are addicted to movies :) ) I personally thought that this novel can actually be a more focussed 'kurunovel' and it would have worked admirably.

Another minor issue which I have felt in more than one of his novels is this: Our own P_R, in his latest lec-dem :) (http://dagalti.blogspot.com/) quotes a saying, "A man who is reading a classic will find a way to work it into a conversation". It seems to be the same with JeMo. Not about the classic but almost all the views he expresses in his articles/essays find their way into the novel through one character or the other. I feel that the later generations may not have this problem when reading JeMo but since we follow his essays closely we will have this problem. The problem is that these opinions of his come out via various characters and suddenly you feel that the character is Jeyamohan :) Sometimes it is worked into the conversation very well and sometimes you feel it is a bit forced. And as in 'Ulogam', here too Jeyamohan is in uncertain territory as far as the work aspect of the protagonist is concerned but that doesn't have too much of a bearing on the story.

All in all, inspite of the mild irritations I listed above, this is a novel I enjoyed a lot. I would definitely recommend that you read it. It is a serious novel and a well written one.

San_K
5th March 2011, 05:26 PM
http://www.jeyamohan.in/?p=13076 - quite interesting :)

http://www.jeyamohan.in/?p=13188 - again Kooja for Shaji

venkkiram
7th March 2011, 09:43 AM
யானை டாக்டர் – ஆங்கில மொழிபெயர்ப்பு (http://www.mayyam.com/hub/viewforum.php?f=18)

venkkiram
10th March 2011, 09:29 AM
நூறுநாற்காலிகள் - மொத்தம் நான்கு பாகங்கள்.. வாசித்து முடித்தேன். ஆன்மாவையே யாரோ பிடித்து உலுக்கியதாக ஒரு உணர்வு. சாதிய வேர்களின் ஆழம் வரை சென்று, ஒரு அம்மா - மகனுக்குமான பிணைப்பை அருமையாக எடுத்துரைக்கிறது இப்புதினம். எல்லாமே கற்பனையாக இருந்துவிடாமல், நடந்தவைகளை இப்படி நெய்வது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல். எழுத்துலகில் அச்சேற்றிய ஜெமோவிற்கு மனமார்ந்த நன்றி. அவரால் ஒரு ஆற்றின் கரையோரத்தில் சாதகம் செய்யும் பாடகரின் வாழ்க்கையினையும் எழுத முடிகிறது, அதே ஆற்றில் பிணமாக அடித்து செல்லப்படுகிற அவலநிலை மக்களின் விளிம்பு நிலையினையும் எழுத முடிகிறது. வணங்கான் போல இதில் மானுட தரிசனம் - காப்பான். அவரின் மனநிலையில் வந்து போகும் பிறழ்வுகளை அழகுபட வடித்திருக்கிறார் ஜெமோ. எது நிகழ்காலம், எது எண்ண ஓட்டம் என்பதை வாசிப்பவர்களுக்கே விட்டுவிடும் பாணி பிடித்திருக்கிறது.

P_R
11th March 2011, 12:30 PM
Jeyamohan explains (http://www.jeyamohan.in/?p=13302) his stand on 'dramatic monologue' format which some folks (like yours truly) have a problem with.


இலக்கியம் தொன்றுதொட்டு மனதை, மன எழுச்சிகளை பதிவு செய்ய பல உத்திகளை
கையாண்டுள்ளது. நெடுங்காலம் அது டிரமாட்டிக் மோனோலோக் எனப்படும்
உணர்ச்சிகர தன்னுரைதான். அப்படி ஒருவர் பேசிக்கொள்வாரா என்ற கேள்விக்கு
இடமில்லை. அதன் வழியாக அவர் மனம் வெளிப்படும் முறையே அங்கே இலக்கு.

A well written essay again. என்ன அங்க இங்க, வரவர வழக்காமிகிட்டு வர்ற superior toneல திட்டிருக்காப்ல.

இருந்தாலும் 'யதார்த்த' முருங்கை மரத்தை விட்டு இப்போதைக்கு இறங்குவேன்னு தோணலை. இழப்பு எனக்குத்தான் etc etc.

Sureshs65
18th March 2011, 10:03 PM
P_R,

Jeyamohan writes too fast. Much faster than I can read. So I generally end up waiting for his books to be released.

Well, I have not read his article about dramatic monolouge yet. And we don't need to worry about realism all the time. One long monologue I remember appears in the ending chapter of Joyce's "Ulysses" In the western world, that is probably the most celebrated monologues. I guess monologues appear is Shakespeare as well but I haven't read them.

venkkiram
11th April 2011, 09:32 AM
விதிசமைப்பவர்கள் (http://www.jeyamohan.in/?p=14305)

இதுவரை படித்த இணையத்தளக் கட்டுரைகளில் உச்சங்களில் வரும் ஒன்றாக இதை வைக்கிறேன். ஜெமோ! உங்களால் மட்டுமே முடியும்! இந்த ஞானம் , ஆளுமைதான் உங்களையும் மற்றவர்களையும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. சேமித்து வைக்கப்படவேண்டிய எழுத்துக்கள் இவை.

P_R
11th April 2011, 12:28 PM
An impressive follow-up to his earlier article.
Even more polemical and he's going about branding those who disagree with his PoV as 'seekers of mediocrity'. He uses these kind of tactics often.

Anyway I had a few exchanges with rajasaranam on twitter about the first essay.
I hope they'd be okay with my quoting it here.


Impressive piece by JM http://www.jeyamohan.in/?p=13982 I predict heavy #outrage though. ஏதோ நம்மால முடிஞ்சது ரீட்வீட்டுறது தான்.


மோட்டார் மெக்கானிக் இப்பொ மரஏற்றுமதி செய்வதால் ’impressive piece’ ஆகி விட்டதோ?!!


மரஏற்றுமதி?


முன்பு ஜெமோ இலக்கிய உனர்வு இல்லை என்றால் மோட்டார் மெக்கானிக் ஆகலாம் என்றதை ஏற்காத உங்கள் மனம் இப்பொழுது வாசிப்பு பழக முடியாத. ஒருவர் மரஏற்றுமதி செய்வதால் அதற்கு மட்டுமே லாயக்கு என்று (நித்யா) சொன்னதை எப்படி ஏற்றுகொள்கிறீர்கள் என கேட்டேன்!


oh even back then I wasn't disagreeing with his PoV only making fun of his choice of expression. IIRC I said: மோட்டார் மெக்கானிசமும் தெரியாத என் போன்றவர்கள் என்னதான் செய்வது

I reduce the point of this article to: don't beat yourself over the inability to appreciate certain fine things despite prolonged.efforts to cultivate (eg. me and music). Oftentimes the inability is a fact in itself that cannot be questioned.Particularly liked the point about unlearning the homily 'everyone has something'. Even 7G ravikrishna knew motor mechanical !

As Tyler Durden said: u r not a unique snowflake. JM seems to say the same: 'face it most of u add nothing to the gene pool'


wats wrong with 'Everyone has something'? Well u dont music but write aint it?!! 'Nothin to GenePool' - ithu dawkinskku theriyuma?

yeah but it's only our 'ego' that is inflating what we think is special about us. Truly it's not that significantly different.that specialness we like to say is cultivable,hardwork etc. Good to 'motivate' to keep civil society running etc. Not wholly true. I tend to take 'everyone is special in their own way' as sales for kids.


Got your point! but I'd say that everyone is a special selection to do their own work and contribute to the progress of mankind.but that is completely missing in JemO's!. He gives importance to few attributes of mankind as special and others nothing


equa said JM overestimates the influence that the 'nuanced' have had in human civilization. I guess that's your point too


'If the common multitude had no purpose their existence is questionable' Only from this point a Nietzsche/Hitler/Nazi arrives from!


that's why i predicted outrage :-) the possible conclusions are perhap why such opinions are not expressed.


the contribution of each & every person on this planet earth is immense towards advancement of our civilization and human species.


Respect for individual will and choice does not need to proceed from assessment of his 'worth'


Exactly! To regard a human trait as higher than others is absolute nonsense.He is a fool who doesnt understand a carpenters work making his writing desk possible and thinks himself a special creature!


that's possible only with a 'thou shalt not judge' frame of mind.

I'd say 'thou shall judge' and know there is no specialty in any living being ;)


i wish i could be that reassured. The anxiety of going with knowing/experiencing everything will not go away easy
...
Say I write uber neat code. Proud about quality of my work etc. But i'd be kidding myself thinking that me-shakespeare #sameguy


yeah #sameguy


:D suttham. Every human action is an act of differentiation 'nnu oru pet theory.


I guess his follow-up clarified much about the 'politics' of this PoV. It is unabashedly elitist and condescending of course. Just no denying that (heck that's exactly what's attractive about it). But

But, at the risk of blowing my own trumpet, much of what he said is what I meant by


Respect for individual will and choice does not need to proceed from assessment of his 'worth'

It is only when these two are necessarily coupled that one is 'forced' to think of absolute equality in every conceivable way. The concept of 'deserving' is so strongly ingrained that it is difficult to get out of it

Ironically some parts of JM's article talks about how the 'society doesn't give the special one's their due' :lol: I found that a bit of a self goal.

The specialness (உணர்கொம்பு) begins and ends with the fact that it is a natural gift. It is difficult to come to terms with the fact that that is all it is - and it will not naturally extend to other 'social awe' related stuff (you can sense a Charuvian ஏக்கம் in this article!). His emphasis seems to lean towards the 'denial of awe' by the 'mediocre multitude' rather than the 'pure' tragedy of the realization of the multitudinousness of mediocrity (the outside library scene in the previous essay).

While the former is a பரிவட்டம் denial personal whining of an intellectual the latter condescension is more poetic.

venkkiram
14th April 2011, 06:20 AM
பள்ளிப் பாடப் பிரிவில் வைக்கப்படவேண்டிய கட்டுரை. வழக்கம் போல, கருத்துச் செறிவுள்ள கட்டுரை ஜெமோவிடமிருந்து.

நமக்குள் இருக்கும் பேய் (http://www.jeyamohan.in/?p=14390)

Sureshs65
18th April 2011, 05:05 PM
P_R,

Was not around when you had that interesting discussion with RS. Nice viewpoints. My view is very similar to yours.

venkkiram
24th April 2011, 06:57 PM
தாய்மொழி , செம்மொழி.. (http://www.jeyamohan.in/?p=14360)


இன்று ஒரு செவ்வியல் படைப்பை செம்மொழியையே தாய்மொழியாகக் கொண்டு வாசிக்க தமிழில் மட்டுமே முடியும்.

பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

venkkiram
1st May 2011, 11:44 AM
கல்வி இருகடிதங்கள் (http://www.jeyamohan.in/?p=14660)

அமெரிக்க கல்வித் திட்டங்களை பற்றி உரையாடும்போது..


கல்வியில் இருவகை உண்டு. தெரிந்துகொள்வதற்கான கல்வி , சிந்திப்பதற்கான கல்வி. இந்தியாவில் உள்ளது முதல்வகை கல்வி. நீங்கள் சொல்வது இரண்டாம் வகைக் கல்வி. அதை அங்கே உருவாக்கியிருப்பதை கண்டு நான் வியந்திருக்கிறேன். அங்கே சிறு குழந்தைகள் கூட நூல்களை வாசிக்கவும் சொந்தமாக புரிந்துகொண்டு கருத்துக்களை உருவாக்கவும் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் அமெரிக்கா என்னை கொஞ்சமும் கவராத நாடு. அமெரிக்க பயணத்திற்குப்பின் ஒரு பயணக்கட்டுரை எழுத ஆரம்பித்தேன். அந்த நிலம் என்னை இன்றும் பெரும் கனவாக நிறைத்திருக்கிறது. அங்கே சந்தித்த நண்பர்கள் இப்போதும் என் சுற்றமாக இருக்கிறார்கள். ஆனால் அங்கே இருக்கும் முதலாளித்துவ அமைப்பு மிக அசிங்கமானது. சொல்லப்போனால் நான் அமெரிக்கா செல்வது வரை முதலாளித்துவம் மேல் கொண்டிருந்த மதிப்பு சென்றதுமே இல்லாமலாகியது

அதே அமெரிக்காவில் என் நண்பர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களாக இருக்கிறார்கள். மிகமிகக் குறைந்த ஊதியம் . பள்ளியிலேயே தங்கி சுயமாக சமைத்து உண்டு வெளியே எங்குமே செல்லாமல் இருந்தால் பணத்தை இந்தியா அனுப்பலாம். தொகை நாணயமதிப்பில் பெரிது. உள்ளூர்க்காரர்கள் அந்த சம்பளத்தில் வேலைக்கு வரமாட்டார்கள் என்பதனால் இவர்களுக்கு வாய்ப்பு

அந்தப்பள்ளியில் ஒன்றுமுதல் எட்டாம் வகுப்பு வரையிலான எல்லா பிள்ளைகளையும் ஒரே வகுப்பாக அமரச்செய்து ஒரே ஒரு ஆசிரியர் அவருக்கு தெரிந்ததைச் சொல்லி கொடுக்கிறார்- அதாவது அமைதியாக கொஞ்ச நேரம் அமரச்செய்கிறார். மதியம் சாப்பாடு போட்டு அனுப்பிவிடுகிறார்கள். பத்தாம் வகுப்புவரை படித்தாலும் சொந்தமாம நான்குவரி எழுதவோ எழுத்துக்கூட்டிப் படிக்கவோ முடியாது. கறுப்பர்களும் ஸ்பானிஷ்காரர்களும் பயிலும் பள்ளிகள் அவை. சாப்பாட்டுக்காக மட்டுமே பிள்ளைகள் பள்ளிக்கு வருகின்றன. ஆரம்பப் பள்ளியிலேயே வன்முறை , பாலுறவு, போதைப்பழக்கம்.

அதையும் சேர்த்தே நான் அமெரிக்க பள்ளிகள் என்று சொல்வேன்

:clap: :clap:

venkkiram
30th November 2011, 10:00 AM
அறம் சிறுகதைகளைத் தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு வந்து விட்டார் ஜெமோ. கடைசி முகம் http://www.jeyamohan.in/?p=22514 வாசித்தேன். நடை, நகர்தல் எல்லாமே அழகா வந்திருக்கு. செறிவான கதை. பல தளங்களில் மனதை இயக்குகிறது. சுவாரஸ்யத்தை கொடுத்ததோடு நில்லாமல் புதிரையும் முன்வைக்கிறது கதை. புதினங்கள் வாசிப்பதில் என்னே ஒரு சுகானுபவம்!

venkkiram
30th November 2011, 10:18 AM
அறம் - சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஈரோட்டுக் கூட்டத்தில் சிலரது கருத்துக்கள்
--------------------------------------------------------------------------------------

எஸ்.கெ.பி. கருணா கதைகளுடன் அறம்பாடுதல் பற்றிய ஆழமான நம்பிக்கை எப்படி அவரது தந்தையின் மனதில் ஊறியிருந்தது என்பதை விவரித்து தன் சொந்தவாழ்க்கை அனுபவங்கள் மூலம் எப்படி தொடர்புகொள்ளமுடிந்தது என்று சொன்னார். இக்கதைகள் எல்லாமே அற்புதமான திரைக்கதைத்தன்மைகொண்டிருப்பதை சுட்டிக்காட்டி வணங்கான் கதையின் கச்சிதமான தொடக்கம் மற்றும் உத்வேகமான உச்சம் ஆகியவை காட்சிகளாகவே இருப்பதை விளக்கினார்.

டாக்டர் ஜீவா தனிப்பட்ட முறையில் டாக்டர் கேயுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். டாக்டர் கே பற்றிய கதை உண்மையில் அவரைப்பற்றி மட்டும் பேசுவதல்ல என்றார். அவர் நிலைகொள்ளும் மதிப்பீடுகளைப்பற்றியே அது பேசுகிறது. அத்தகைய பல மனிதர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டுகொள்ள, அவர்களின் மரபை ஏற்றுக்கொள்ள இக்கதை வழிகாட்டுகிறது என்றார். ஈரோடைச்சுற்றி மலைப்பகுதிகளில் மக்களிடையே சேவை செய்யும் பல மருத்துவர்கள், களப்பணியாளர்கள் பற்றி உணர்ச்சிகரமாக பேசினார்.

மிஷ்கின் இந்த தொகுதியின் பெரும்பாலான கதைகளை அவை வெளிவந்த காலகட்டத்தில் பவா செல்லத்துரை வாயாலேயே முதலில் கேட்டதாகவும் அதன்பின்னரே வாசித்ததாகவும் சொன்னார். அறம் கதையின் தனித்தனியான வரிகள் எப்படியெல்லாம் தன்னை பாதித்தன என்று குறிப்பிட்டார். அறம் கதை முழுக்க அந்த எழுத்தாளர் கெஞ்சியபடி பணத்துக்காக காத்து நிற்கிறார். சட்டென்று கதைநேர்மாறாக மாறி அந்த ஆச்சி பணத்தை கொடுப்பதற்காக காத்து அமர்கிறாள். அந்த திருப்பத்தின் ஆச்சரியமே அந்தக்கதையின் உச்சம் என்று சொன்னார்.

பவாசெல்லத்துரை சோற்றுக்கணக்கு கதையின் பசி என்ற அம்சத்தை தொட்டுப்பேசினார். ஷோபாசக்தி, உதய ஷங்கர் போன்றவர்களின் கதைகள் வழியாக பசி என்பது அரசியலை, சமூகவியலை தாண்டி ஒரு முக்கியமான பேசுபொருளாக இருப்பதை, எவ்வளவு எழுதியும் கரைக்கமுடியாத ஒன்றாக இருப்பதை குறிப்பிட்டார். அந்த பசியை அன்பினால் கெத்தேல்சாகிப் எதிர்கொள்வதைப்பற்றிச் சொன்னார்

நாஞ்சில்நாடன் உணர்ச்சிகரமாகப் பேசினார். மத்துறு தயிர், தாயார்பாதம் என்ற கதைகளின் மொழியின் நுட்பத்தைச் சுட்டிக்காட்டினார். தாயார் பாதம் கதையில் இரு பிராமணர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஒருவர் தஞ்சைபிராமணர் இன்னொருவர் குமரிபிராமணர். இருவர் பேசுவதும் பிராமண வழக்கு. ஆனால் ஒன்று குமரிவட்டார பிராமண வழக்காகவும் இன்னொன்று தஞ்சைவட்டார பிராமண வழக்காகவும் இருக்கிறது. இருவரையும் யாரென தெரியுமென்பதனால் அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்பதுபோலவே இருக்கிறது என்றார்.

அதேபோல மத்துறு தயிர் கதையில் பேராசிரியர், ராஜம், குமார் மூன்று கதைமாந்தர்களும் குமரிமாவட்டத்தின் மூன்று வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பேசும் குமரித்தமிழில் மூவருடைய மொழியும் தனித்தன்மையுடன் மாறுபட்டிருக்கிறது. அதை குமரிமாவட்டத்தினர் உணரமுடியும். இத்தகைய நுட்பங்களை எவர் உணரமுடியும்? உணர முடிந்தாலும் இல்லாவிட்டாலும் அது கலையின் இயல்பு என்றே சொல்லமுடியும் என்றார்

தாயார் பாதம், மத்துறுதயிர் இரண்டுமே நுண்மையான மரபிலக்கிய சுட்டிகள் கொண்ட கதைகள், மரபிலிருந்து வாசித்தெடுக்கவேண்டிய பல உள்ளடுக்குக்ள் கொண்டவை என்ற நாஞ்சில்நாடன் அவற்றைச் சுட்டிக்காட்டி பேசினார். தமிழ் மொழியின் இலக்கியச் சாதனைகளில் ஒன்று இந்த தொகுதி என்று கூறினார்

கல்பற்றா நாராயணன் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட அறம் கதையைப்பற்றி மட்டும் பேசினார். பாஷாபோஷினியில் வெளியான அறம் கதை சமீபத்தில் மலையாள இலக்கிய வாசகர்களை அதிரச்செய்த, மிகவிரிவான விவாதத்தை உருவாக்கிய கதை என்றார். மலையாளிக்கு அக்கதையில் இருந்து கிடைப்பது மொழிக்கு அப்பாற்பட்ட மானுட அம்சம். ஒட்டுமொத்தக் கதையை முதலில் வாசிக்கிறோம். ஒவ்வொரு வரியிலும் வெளியாகும் கவித்துவத்தை மீண்டும் வாசிக்கவேண்டும். ‘இருளின் பிரார்த்தனை அல்லவா ஒளி’ என்ற வரியைப்போல ‘புலி காலெடுத்து வைப்பது போன்ற பேச்சு’ போன்ற வரியைப்போல கவிதையால் நிறைந்த கதை அது.

இந்த கதையின் தரத்தில்தான் பிற பன்னிரு கதைகளும் உள்ளன என்றால் உலகமொழிகளில் வெளியான மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதிகளில் ஒன்று என அதைச் சொல்லிவிட முடியும் என்றார் கல்பற்றார்.புத்தர் ஒருமுறை வெயிலில் நடந்து சென்றார். அதைக்கண்டு முப்பத்தாறு தேவதைகள் முப்பத்தாறு குடைகளை அவருக்கு அனுப்பினர். எவரையும் மனம் வருந்தசெய்ய விரும்பாத புத்தர் முப்பத்தாறு தோற்றம் எடுத்து அக்குடைகளை ஏற்றுக்கொண்டார். அதைப்போன்றதே இந்த பன்னிரு கதைகளும். பன்னிரு கதைநாயகர்களாக உருவம் கொள்வது ஆசிரியனின் அறவுணர்ச்சியே என்றார்

------------------------------

:notworthy: ஜெமோ!

அறம் - சிறுகதைகள் வரிசையாக வெளிவந்தபோதே தீர்மானித்துவிட்டேன். புத்தகமாக வந்தால் திருமணப் பரிசாக, அன்பளிப்பாக கொடுத்துவிடவேண்டியதுதான் என.புத்தகம் அச்சடிக்கப்பட்டு விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது. அவ்வப்போது ஐந்து, பத்து என வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ளணும்! அறம், சோற்றுக் கணக்கு, மத்துருதயிர், தாயார்பாதம், யானை டாக்டர், வணங்கான் - 250 ரூபாய் - ஐந்தே டாலரில் அத்தனையுமா? வாழ்நாள் முழுதும் இக்கதை மாந்தர்கள் மனதில் வலம் வந்து கொண்டே இருப்பார்கள்! மனசாட்சியை உளியால் செதுக்கிக்கொண்டே செல்வார்கள்.

lord_labakudoss
5th December 2011, 08:43 AM
பள்ளிப் பாடப் பிரிவில் வைக்கப்படவேண்டிய கட்டுரை. வழக்கம் போல, கருத்துச் செறிவுள்ள கட்டுரை ஜெமோவிடமிருந்து.

நமக்குள் இருக்கும் பேய் (http://www.jeyamohan.in/?p=14390)
Read this wonderful essay after seeing this post...

Was reminded of this again while seeing "Mayakkam Enna"...
--LL

venkkiram
24th December 2011, 05:48 AM
தமிழ் பாரம்பர்ய கச்சேரி 2011 விழாவின் ஒரு பகுதியாக குறுந்தொகை - தமிழ்க் கவிமரபின் நுழைவாயில் என்ற தலைப்பில் ஜெமோ ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு!

பத்ரிக்கு நன்றிகள்! இணையத்திற்கு நன்றிகள். கலந்துகொள்ளாமலே கேட்டு ரசிக்கமுடிகிறது.

http://www.badriseshadri.in/2011/12/2011_23.html

Venki
2nd January 2012, 06:34 AM
தமிழ் பாரம்பர்ய கச்சேரி 2011 விழாவின் ஒரு பகுதியாக குறுந்தொகை - தமிழ்க் கவிமரபின் நுழைவாயில் என்ற தலைப்பில் ஜெமோ ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு!

பத்ரிக்கு நன்றிகள்! இணையத்திற்கு நன்றிகள். கலந்துகொள்ளாமலே கேட்டு ரசிக்கமுடிகிறது.

http://www.badriseshadri.in/2011/12/2011_23.html

Here is the video of the above on youtube.


http://www.youtube.com/watch?v=0S-GyhYoA6Q

P_R
14th March 2012, 11:21 AM
Gaya, Dharmasthala and Hindutva

Interesting post by Jeyamohan http://www.jeyamohan.in/?p=25827

One can't help but think of Babri Masjid. Hindutva folks keep harping that Muslims failed to be generous about something of sentimental importance to Hindus. But check out the story of story Gaya. There is a striking resemblance in some aspects.

Furthermore look at the history of Dharmasthala - apparently a Saivite shrine built by Jains - but today, due to a superficial understanding of history, people are trying to project the Jain leadership of the temple as itself a symbol of Hindu generosity :lol2:

P_R
23rd March 2012, 12:20 PM
One interesting writer I say:



எல்லா மதங்களிலும் அடிப்படைவாதத்துக்கு எதிரான பெரும் சக்தியாக நிலைகொள்வது பழைமைவாதமே என்ற் அப்பட்டமான உண்மை நம் முன் உள்ளது. அதைப்புரிந்துகொள்ளாமல் நம்மால் இந்தியச்சூழலை மதிப்பிடவே முடியாது. அடிப்படைவாதிகளுக்கும் பழைமைவாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை வகுத்துக்கொள்ளாமல் இருவரையும் ஒரேதரப்பாக எண்ணிக்கொள்வதன் மூலம் நாம் அடிப்படைவாதத்தின் எதிர்த்தரப்பாக மட்டுமே செயல்பட்டாகவேண்டிய பழைமைவாதத்தை அடிப்படைவாதம் நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறோம்.

அடிப்படைவாதம் என்பது என்ன? அதை எப்படி வரையறை செய்திருக்கிறோம்? போகிற போக்கில் எல்லாவகையான முத்திரைகளையும் அதன்மேல் குத்தி அதை ஒருவகை பேய்பிசாசாக உருவகம் செய்து கொள்வதற்குப் பதிலாக அதன் வரலாற்றையும் அதன் அடிப்படை இயல்பையும் நாம் விளக்கிக் கொண்டிருக்கிறோமா?

மரபான ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் மாறாமல் அப்படியே பிடித்துக்கொண்டிருப்பது பழைமைவாதம். ஆனால் பழைமைவாதத்துக்கு முக்கியமான சில எல்லைகள் உண்டு. முதன்மையாகச் சொல்லப்படண்டியது அது நெடுங்காலமாக நீடித்துவரக்கூடிய ஒன்று என்பதுதான். ஆகவே அது நடைமுறைச் சமரசத்துக்கு உள்ளாகியே தீரவேண்டும். ஏனென்றால் மக்கள்திரளை பொறுத்தவரை எந்த கொள்கையை விடவும் பெரியது உயிர்வாழ்தல்தான். ஆகவே ஓடைக்கரை பாறை போல காலத்தால் அரித்து மென்மையாக ஆக்கப்பட்ட நம்பிக்கைகளும் ஆசாரங்களுமே பழைமைவாதத்தில் நீடிக்கமுடியும். அங்கே எந்த கொள்கையும் நடைமுறை சமரசத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும்.


More here: http://www.gandhitoday.in/2012/03/5.html



பழைமைவாதத்தின் இயல்பு இதுவே. அது இயந்திரத்தனமான ஒரு நீட்சியாகவே சமூகத்தில் உள்ளது. நடைமுறைத்தேவை அழுத்தும்போது மாறுகிறது.

ஆனால் அடிப்படைவாதம் அப்படி அல்ல. அது ஒருவர் தனக்கென வரித்துக்கொண்ட கருத்தியல் தரப்பு. அவர் அதற்கான எல்லா தர்க்கங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிற்றார். எந்த நடைமுறைக் கட்டாயத்துக்காகவும் அவர் தன்னுடைய கொள்கையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.



உலகின் மிகப்பெரிய அடிப்படைவாதிகள் எவருமே ஆழமான மத நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. முகமது அலி ஜின்னாவாக இருந்தாலும் சரி பின் லேடனாக இருந்தாலும் சரி. சாவர்க்கராக இருந்தாலும் சரி லால் கிருஷ்ண அத்வானியாக இருந்தாலும் சரி.


Very seductive writing, so needs to be read with care before taking his conclusions too seriously. Prone to leaps of logic, generalizations and all other tactics.
For instance the point about the modern European identity carrying the seeds of cultural-nationalism, seems a bit farfetched to me. And why can't historicism, cultural-nationalism be necessarily 'imported' into the Orient. Why can't that too be a natural development?

He later clarifies he doesn't think there was an intentional divisiveness that the West seeded into the East. But it was more like something that was absorbed by exposure. I am not sure I have heard him say this, this explicitly ever :lol2:

While he seems to have a point when talking about the overlap in attitude between the fundamentalist and the reformist - so much so that he even uses the terms synonymously! - he is severely underrating the pace at which the old-world-types were forced to introspect and adapt due to the social pressure - for which a good chunk of credit is due to reform movements.

But one thing for sure is, he presents certain new perspectives, terms of grappling with issues that are novel - or atleast I haven't read them elsewhere.

P_R
23rd March 2012, 12:22 PM
One interesting writer I say:



எல்லா மதங்களிலும் அடிப்படைவாதத்துக்கு எதிரான பெரும் சக்தியாக நிலைகொள்வது பழைமைவாதமே என்ற் அப்பட்டமான உண்மை நம் முன் உள்ளது. அதைப்புரிந்துகொள்ளாமல் நம்மால் இந்தியச்சூழலை மதிப்பிடவே முடியாது. அடிப்படைவாதிகளுக்கும் பழைமைவாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை வகுத்துக்கொள்ளாமல் இருவரையும் ஒரேதரப்பாக எண்ணிக்கொள்வதன் மூலம் நாம் அடிப்படைவாதத்தின் எதிர்த்தரப்பாக மட்டுமே செயல்பட்டாகவேண்டிய பழைமைவாதத்தை அடிப்படைவாதம் நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறோம்.

அடிப்படைவாதம் என்பது என்ன? அதை எப்படி வரையறை செய்திருக்கிறோம்? போகிற போக்கில் எல்லாவகையான முத்திரைகளையும் அதன்மேல் குத்தி அதை ஒருவகை பேய்பிசாசாக உருவகம் செய்து கொள்வதற்குப் பதிலாக அதன் வரலாற்றையும் அதன் அடிப்படை இயல்பையும் நாம் விளக்கிக் கொண்டிருக்கிறோமா?

மரபான ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் மாறாமல் அப்படியே பிடித்துக்கொண்டிருப்பது பழைமைவாதம். ஆனால் பழைமைவாதத்துக்கு முக்கியமான சில எல்லைகள் உண்டு. முதன்மையாகச் சொல்லப்படண்டியது அது நெடுங்காலமாக நீடித்துவரக்கூடிய ஒன்று என்பதுதான். ஆகவே அது நடைமுறைச் சமரசத்துக்கு உள்ளாகியே தீரவேண்டும். ஏனென்றால் மக்கள்திரளை பொறுத்தவரை எந்த கொள்கையை விடவும் பெரியது உயிர்வாழ்தல்தான். ஆகவே ஓடைக்கரை பாறை போல காலத்தால் அரித்து மென்மையாக ஆக்கப்பட்ட நம்பிக்கைகளும் ஆசாரங்களுமே பழைமைவாதத்தில் நீடிக்கமுடியும். அங்கே எந்த கொள்கையும் நடைமுறை சமரசத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும்.


More here: http://www.gandhitoday.in/2012/03/5.html



பழைமைவாதத்தின் இயல்பு இதுவே. அது இயந்திரத்தனமான ஒரு நீட்சியாகவே சமூகத்தில் உள்ளது. நடைமுறைத்தேவை அழுத்தும்போது மாறுகிறது.

ஆனால் அடிப்படைவாதம் அப்படி அல்ல. அது ஒருவர் தனக்கென வரித்துக்கொண்ட கருத்தியல் தரப்பு. அவர் அதற்கான எல்லா தர்க்கங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிற்றார். எந்த நடைமுறைக் கட்டாயத்துக்காகவும் அவர் தன்னுடைய கொள்கையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.



உலகின் மிகப்பெரிய அடிப்படைவாதிகள் எவருமே ஆழமான மத நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. முகமது அலி ஜின்னாவாக இருந்தாலும் சரி பின் லேடனாக இருந்தாலும் சரி. சாவர்க்கராக இருந்தாலும் சரி லால் கிருஷ்ண அத்வானியாக இருந்தாலும் சரி.


Very seductive writing, so needs to be read with care before taking his conclusions too seriously. Prone to leaps of logic, generalizations and all other tactics.
For instance the point about the modern European identity carrying the seeds of cultural-nationalism, seems a bit farfetched to me. And why can't historicism, cultural-nationalism be necessarily 'imported' into the Orient. Why can't that too be a natural development?

He later clarifies he doesn't think there was an intentional divisiveness that the West seeded into the East. But it was more like something that was absorbed by exposure. I am not sure I have heard him say this, this explicitly ever :lol2:

While he seems to have a point when talking about the overlap in attitude between the fundamentalist and the reformist - so much so that he even uses the terms synonymously! - he is severely underrating the pace at which the old-world-types were forced to introspect and adapt due to the social pressure - for which a good chunk of credit is due to reform movements.

But one thing for sure is, he presents certain new perspectives, terms of grappling with issues that are novel - or atleast I haven't read them elsewhere.

venkkiram
5th April 2012, 09:15 PM
வயதடைதல் (http://www.jeyamohan.in/?p=26080) - சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலையில் ஆற்றிய உரை


ரெண்டு துறவறமும் லெச்சணமாய் இல்லறமும்
பண்டு சொன்னவிதம் பாங்காக முடிச்சானே

:notworthy: :notworthy:

venkkiram
8th April 2012, 12:00 PM
மின்னஞ்சல் அனுப்புவிட்டேன். பதிலளிக்கிறாரா என பொறுத்திருந்து பார்ப்போம்!
-------------------------------------------------------------------
திரு ஜெமோ,

தூக்க நேர்ச்சை கட்டுரையில் கொடுக்கப்பட்ட காணொளியை கண்டேன். பச்சிளம் குழந்தைகள் கதற கதற உயரே கொண்டு செல்வது மூடத்தனத்தின் உச்சம்! "தன்னை வருத்திக்கொண்டு கடவுளின் கோபத்தைக் குறைக்கும் சடங்குகள் இல்லாத மதங்களே உலகில் இல்லை." என்ற சப்பைக்கட்டு வேறு. எந்த மதம் என்றாலும் மூடத்தனம் மூடத்தனம்தானே! ஒன்றுமே அறியாத சிசுக்களை வாட்டுவது அரக்கத்தனம் அல்லவா! சீற்றம் இதுபோன்றவைகளை காணும்போது எழாதா? ஒரு புறத்தில் அறம், ஆன்மீகத்திற்கு பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் கை, இதையெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்யாமல் போறப்போக்கில் பதிவு செய்துவிட்டு நகர்வதேன்?

வாசகன்
வெங்கிராம்.
-------------------------------------------------------------------

P_R
8th April 2012, 05:24 PM
வெங்கி, cool down cool down cool down :-)
மதம்/சடங்கு 'னாலே கொஞ்சம் மூடத்தனம் இருக்கத்தான் செய்யும்.
குழந்தைகளுக்கு பயம்காட்ட அப்பா-அம்மாவுக்கு என்ன உரிமை இருக்கு'ன்ற மாதிரி சொன்னீங்க, என்கிட்ட பதில் இல்லை தான். ஆனா எனக்கு இந்த குழந்தைகள் உரிமை'ல எல்லாம் அவ்வளோ நம்பிக்கை இல்லை.

போதுமான அளவு precaution எடுத்துகிட்டா, இதுக்கும் காதுகுத்துக்கும் வித்தியாசம் கம்மி தான், இல்லையா.
உங்க பிரச்சனை precaution பத்தி இல்லைன்னு நினைக்கிறேன். இந்த சடங்கையே ஒழிக்கணும்னு நினைக்கிறீங்க. ரைட்?

காதுகுத்தும்போது கூட தான் குழந்தைக்கு வலிக்கும், அது அலறும். அதைச் செய்ய அப்பா-அம்மா'க்கு என்ன உரிமை இருக்கு? என்ன மூடத்தனம் இது. மொட்டை அடிச்சு குழந்தையின் அழகை எப்படி கெடுக்கலாம். அந்தக் காலத்துல தெய்வகுத்தம் ஆயிரும்னு காட்டிமிராண்டித்தனமா செஞ்சாங்கன்னா, இன்னைக்கு நாம செய்யலாமா. நான்சென்ஸ். படிச்சவன் செய்ற செயலா etc etc.

அறிவுபூர்வமான வாழ்க்கைல ஏதோ ஒண்ணு குறையுதுன்றதுனால தான் மதம்/சடங்கு'ன்னு எல்லாம் ஒண்ணு கண்டுபிடிக்கிறாங்க. அப்புறம் அது அறிவுபூர்வமா இல்லைன்னு சொன்னா எப்படி?

jaiganes
8th April 2012, 06:26 PM
i was reminded of an articly by osho on why man needs myths..
romba paguththarinja vengaayam kooda minjaadhunnen

venkkiram
8th April 2012, 06:47 PM
அறிவுபூர்வமான வாழ்க்கைல ஏதோ ஒண்ணு குறையுதுன்றதுனால தான் மதம்/சடங்கு'ன்னு எல்லாம் ஒண்ணு கண்டுபிடிக்கிறாங்க.- என்ன இப்படி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு கேஸ முடிக்கிறிங்க! அறிவு இருக்குதோ இல்லையோ, மதம்/சடங்கு மட்டும் வாழ்வாங்கு வாழுது இங்க!

நான் குறை சொல்வது முன்கூட்டிய எச்சரிக்கையின்மையையும் கூட. தேர் இழுப்பதும் மதச் சடங்குதான். ஆனால் இதுவரை எத்தனை உயிரழப்புக்கள்.

venkkiram
8th April 2012, 06:50 PM
i was reminded of an articly by osho on why man needs myths..
romba paguththarinja vengaayam kooda minjaadhunnen ரொம்பவா? ஜெய்! பகுத்தறிவு என்ற வார்த்தைக்கு பதிலா வேறு என்ன சொல்வது? பகுத்தறிவு எனச் சொன்னாலே எதோ வேற்று கிரக வாசிகள் போல ஒரு பிம்பம் விழுந்து விடுகிறது.

P_R
8th April 2012, 07:42 PM
Religion is the opiate fed to the proletariat to deaden their sensibilities towards subjugation - Marx அன்றே சொன்னார்
antidepressants are a means of modifying an individual's internal state in such a way as to enable him to tolerate social conditions that he would otherwise find intolerable - Unabomber நேற்றே சொன்னார்

இந்த சடங்கை அறிவுபூர்வமா விளக்கும் முயற்சிகள்லாம் எனக்கு கொஞ்சம் clumsyஆ தோணும். என்னமோ அறிவுபூர்வமா எதையாவது சொல்லி அதுமூலமா தான் அதுக்கு ஒரு legitimacy கிடைக்கவைக்கணும்ன்றது மாதிரி. அதெல்லாம் எதுக்கு?

கற்றது தமிழ்ல ஒரு வசனம் வரும்: பலநூறு வருஷம் முன்னாடி ஒரு சாமியார் ஒரு மரத்துக்கு கீழ உக்கார்ந்து தவம் பண்ணார்னு அந்த மரத்தை எல்லாரும் தொட்டு கும்பிடுவாங்க. அப்படி செய்யுறது மூலமா அந்த சாமியாரையே தொடுறதா நினைக்கிறாங்க போல... அப்படின்னு.

சாதாரண (தேடிச் சோறு நிதம் தின்று) வாழ்க்கைல கொஞ்சம் fantasy தேவைப்படுது.

Harness tightA வைக்கணும்னு சொல்லுங்க. ஒத்துக்கறேன்.
Shirdi, Haj எல்லாம் stampede ஆகாம இருக்கறதுக்கு வழிவகை செய்யணும்னு சொல்லுங்க ஒத்துக்குறேன்.
அதுக்காக, அறவுணர்ச்சி உள்ளவன் இதையெல்லாம் வன்மையா கண்டிச்சே ஆகணும் 'ன்ற மாதிரி எல்லாம் ஏன் எதிர்பார்க்குறீங்க.

venkkiram
8th April 2012, 11:09 PM
சாதாரண (தேடிச் சோறு நிதம் தின்று) வாழ்க்கைல கொஞ்சம் fantasy தேவைப்படுது.வேணாங்கில! ஆனால் மற்றவர்களுக்கு இம்சை தராமலும், பார்ப்பவர்கள் முகம் சுளிக்காமலும் அமைத்துக் கொள்ளலாமே! இங்கேயுள்ள ஒரு கோயிலுக்கு கடந்த கோடையில் சென்றிருந்தேன். கூட்டமில்லாததால் பாலாபிஷேகத்தை அமர்ந்து பார்க்கக் கூடிய வாய்ப்பு. Gallon Gallon-னாக பால்..1..2..3....10(!)......20.....25.. என நீண்டு கொண்டே இருந்தது. பொறுக்க முடியல. கிளம்பி வந்துட்டேன். மனம் கட்டுப்பாடில்லாமல் இருக்கும்போது எப்படி சாமி கும்பிடுவது? எல்லாத்துக்கும் ஒரு வரையறை இருக்கிறது. தானம் செய்றதுக்கு ஆளுங்க இருக்காங்க என்றால் இப்படியா விரயம் செய்வது? மதச்சடங்குகள் படிச்சவன், படிக்காதவன் என எல்லோரையும் மறைகயண்டு போக வைக்கிறது.

P_R
8th April 2012, 11:28 PM
உங்களுக்கு பிடிக்கலை, எந்திரிச்சு போயிட்டீங்க. இன்னொருத்தருக்கு பிடிக்கிது, அவர் உக்காந்து பாக்குறார்.

அவ்வளொதானே.

venkkiram
8th April 2012, 11:45 PM
உங்களுக்கு பிடிக்கலை, எந்திரிச்சு போயிட்டீங்க. இன்னொருத்தருக்கு பிடிக்கிது, அவர் உக்காந்து பாக்குறார்.

அவ்வளொதானே.உலகமே இப்படி இயங்க ஆரம்பிச்சா சுபிட்சம் உண்டாகும்! தீர்வுக்கு நன்றி!

San_K
11th April 2012, 01:06 AM
அருமை அருமை

மனம் சோர்வுரும்போதெல்லாம் காந்தியை படிப்பது ஒரு அருமருந்து. அதிலும் ஜெயமோகன் போல் வார்த்தை வித்தகர் எழுதினால் கேட்கவும் வேண்டுமா



காந்தியின் திமிர் (http://www.jeyamohan.in/?p=26467)



One of the best ever articles :notworthy:

venkkiram
12th April 2012, 04:07 PM
அருமை அருமை

மனம் சோர்வுரும்போதெல்லாம் காந்தியை படிப்பது ஒரு அருமருந்து. அதிலும் ஜெயமோகன் போல் வார்த்தை வித்தகர் எழுதினால் கேட்கவும் வேண்டுமா

காந்தியின் திமிர் (http://www.jeyamohan.in/?p=26467)

One of the best ever articles :notworthy:

செறிவான பேச்சு. ஆனால் காந்தியை கொந்தர்களோடு இணைத்துப் பார்ப்பது கொஞ்சம் அதீதமா படுது. (என் லேப்டாப்புகளை பழுதடையச் செய்யும் கொந்தர்கள் யாரேனும் என் கையில் கிடைத்தால் செத்தானுங்க! )


அசல்சிந்தனையாளர்கள் நம்மை எப்போதுமே உடைத்துக் கலைக்கிறார்கள். நம்மை குழப்பமும் கலக்கமும் அடையச்செய்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் எரிச்சலடையச் செய்கிறார்கள். நாம் நம்பி இருப்பவற்றை அவர்கள் உலுக்குவதனால் உருவாகும் மனக்குலைவு அது.

இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நம் இளமைப்பருவத்தில் அதிரடியான கருத்துக்கள் மூலம் நம்மைக் கலங்கடிக்கும் பேச்சாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் பலர் உண்டு. அவர்கள் அசல்சிந்தனையாளர்கள் அல்ல. காரணம் அவர்கள் அதுவரையிலான மானுட சிந்தனையை எதிர்கொள்ளவில்லை. நமக்கு மானுடசிந்தனையுடன் பெரிய அறிமுகம் இல்லாத காரணத்தால் சில கருத்துக்கள் மூலம் நம்மை அவர்கள் பாதிக்கிறார்கள், அவ்வளவுதான்.

அந்தக்கருத்துக்களை அவர்கள் ஏற்கனவே இருந்த மானுட சிந்தனையின் பெருக்கில் இருந்து எடுத்துக்கொண்டிருப்பார்கள். நமக்கு அது தெரிந்திருக்காது, அவ்வளவுதான். அது மனித சிந்தனையின் ஒரு துளி, விவாதத்தில் ஒருபக்கம். அதை மிகைப்படுத்தி ஆணியறைந்து சொன்னால் இளமையில் நாம் நிலைகுலைவோம். நான் சொல்வது அதை அல்ல.

உதாரணமாக, நமக்குச் சின்ன வயதில் கடவுள் பக்தி இருக்கும்போது ஒரு நாத்திகர் கடவுள் மறுப்பு பேசி நம்மைக் குலைக்கலாம். அது ஒருவேளை நமக்கு முக்கியமானதாகவும் இருக்கலாம். ஆனால் அது அசல்சிந்தனையே அல்ல. ஏனென்றால் நாத்திகம் என்றும் இருந்துகொண்டிருக்கும் சிந்தனை. புதியதல்ல.

பார்த்தீங்களா! எவனாவது எதிர்கேள்வி கேட்டுரப்போறான்னு ரொம்ப எச்சரிக்கையா பெரியார் கூட்டத்தை விமர்சிக்கிறார் பாருங்க! காந்தி கொந்தார் என்றால் பெரியாரும் கொந்தர்தான்.

venkkiram
15th April 2012, 05:08 PM
மின்னஞ்சல் அனுப்புவிட்டேன். பதிலளிக்கிறாரா என பொறுத்திருந்து பார்ப்போம்!
-------------------------------------------------------------------
திரு ஜெமோ,

தூக்க நேர்ச்சை கட்டுரையில் கொடுக்கப்பட்ட காணொளியை கண்டேன். பச்சிளம் குழந்தைகள் கதற கதற உயரே கொண்டு செல்வது மூடத்தனத்தின் உச்சம்! "தன்னை வருத்திக்கொண்டு கடவுளின் கோபத்தைக் குறைக்கும் சடங்குகள் இல்லாத மதங்களே உலகில் இல்லை." என்ற சப்பைக்கட்டு வேறு. எந்த மதம் என்றாலும் மூடத்தனம் மூடத்தனம்தானே! ஒன்றுமே அறியாத சிசுக்களை வாட்டுவது அரக்கத்தனம் அல்லவா! சீற்றம் இதுபோன்றவைகளை காணும்போது எழாதா? ஒரு புறத்தில் அறம், ஆன்மீகத்திற்கு பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் கை, இதையெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்யாமல் போறப்போக்கில் பதிவு செய்துவிட்டு நகர்வதேன்?

வாசகன்
வெங்கிராம்.
-------------------------------------------------------------------

தூக்கம் – கடிதம் (http://www.jeyamohan.in/?p=26465)

ஆத்தா நான் பாஸாயிட்டேன்!


புரிந்துகொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

P_R! :)

jaiganes
18th April 2012, 09:32 PM
தூக்கம் – கடிதம் (http://www.jeyamohan.in/?p=26465)

ஆத்தா நான் பாஸாயிட்டேன்!



P_R! :)
nemba nallaave "ivar dhaan maaplai aanal poatrukkara sattai ennudhilla" ngra maadhiri sollittaar.

P_R
19th April 2012, 01:44 AM
Each to his own ..ங்க்ற ஜனநாயக கொள்கையோட logical extreme 'each to his own standards' தானே.

I say this very seriously. Don't we have different standards for/expectations from different people.

venkkiram
24th July 2012, 01:31 AM
இலக்கிய இடக்கரடக்கல்கள்!

http://www.jeyamohan.in/?p=483

சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணியே வந்துடிச்சி! ரொம்ப நாளாச்சி இதுபோல உடம்பு குலுங்க சிரித்து!

venkkiram
24th July 2012, 01:36 AM
8. விமரிசனங்களைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் படைப்பாளி அவர் [பொருமுவதோடு சரி]

:rotfl: :rotfl:

கட்டுரையை நகலெடுத்து தோள்பையில் இப்போதே வைத்துவிட்டேன். பஸ் பிரயாணத்தில் நிதானமா இன்னொரு வாசிப்பு விடனும்.

app_engine
19th September 2012, 12:58 AM
vinavu pakadi on JeMo - For some non-serious reading (http://www.vinavu.com/2012/09/18/anuska-jemo)



இந்தியாவில் இலட்சியவாதத்தின் மறைவு குறித்து அடிக்கடி துக்கப்படுபவர் ஜெயமோகன். இலட்சியவாதம் என்றால் என்ன என்று ஜெயமோகன் அளவுக்கு அறிவில்லை என்றாலும் வாசகருக்காக ஒரு இலக்கணம் தர முயற்சி செய்கிறோம். அதாவது கறாரான விழுமியங்களுடன், புற உலகு பேதமிட்டு பிரிந்தாலும், அர்ப்பணிப்புடன் வாழும் இலட்சியவாதிகளின் அரசியல், சமூக, ஆன்மீக நடைமுறைகள்தான் இலட்சியவாதம். இந்த இலட்சியவாதிகள் அநேகமான எல்லா நிறுவனங்களோடும் முரண்பட்டாலும் தமது இ.வாதத்தை விடமாட்டார்கள்.

venkkiram
5th January 2013, 09:52 AM
டெல்லி சம்பவம்- சில பதில்கள்

http://www.jeyamohan.in/?p=33459

Russellvqq
21st September 2014, 11:28 PM
Sir i m native of nagercoil.I need jeymohans address.I know parvathipuram very well.I live in blore.when I visit my hometown I want to go and meet jeymohan.