PDA

View Full Version : INBAM ENGAE.?... Sudhaama Ka-Vidhai Thodar.!!!



Sudhaama
2nd October 2010, 11:08 PM
-

.

இன்பம் எங்கே.?... விவாத மேடை!!!



படைப்பாளி இறைவனுக்கும், படைப்பு மனிதனுக்கும் இடையே....

...கற்பனை உரையாடல்... கேள்வி-பதில்.!!!




சுதாமா கண்ட... அனுபவ விஞ்ஞான-ஞானம்.!!!


தற்காலத்திற்குத் தக்க "மானிட வாழ்-நெறி".!!!




...எளிய நடை கவிதைத்-தொடர்.!!!



முன் குறிப்பு: யாப்பு-இலக்கண வரம்பிற்கு உட்பட்டது அல்ல.




யான் பெற்ற இன்பம் இவ்வையம் பெறுக.!


யாதும் ஊரே யாவரும் கேளிர்.!!!



வாழ்க்கை-அனுபவம்.. வழுக்கைத்-தலையனுக்கு...

...இறைவன் வழங்கிய... தங்கச்-சீப்பு.!



தமிழ்-கூறும் நல்லுலகோரே,

வணக்கம். உலகார்ந்த பரந்த மானிட-நோக்கிலே, வாழ்க்கை-அனுபவம் என்னும் ஈடிணையற்ற முன்னோடிப்-பாடம் ஓர் சுரங்கம்.

வாழ்க்கையில் சூடுபட்டு உணர்ந்தோர், பின்னர் தம்மைத்தாமே நொந்து வருந்தி...

...ஐயோ இறைவா, அறியாமையாலோ, தடுமாற்றத்தாலோ, குழப்பத்தாலோ நான் செய்த தவறுகளால் தான், நானும் எனது குடும்பத்தோரும் வீணே கஷ்டப்பட்டோம். உயர் பண்பு, நல்லொழுக்கம் அறிவிருந்தும், தூய நோக்கம் இருந்தும் தவறான முடிவுகள் எடுத்தோம்.

இறைவா, நான் கற்ற அனுபவ வாழ்க்கைப்-பாடம், என்னோடு மடிந்துவிடக்-கூடாது.

மேலும், நான் எடுத்த நல்ல முடிவுகள் அணுகுமுறைகளால் நான் பெற்ற வெற்றி இன்பங்கள் தந்த அனுபவ பாடமும் என்னோடு மடிந்துவிடக்கூடாது என்று கருதுகிறேன்.

ஆம். "யான் பெற்ற இன்பம் இவ்வையம் பெறுக"... என்னும் அற-நெறியே தமிழ்ப்பண்பு அல்லவோ.?

எனவே தற்கால இளைஞர்களுக்கும் சிந்தனை தூண்டும் வகையிலே பயன்படட்டும் என்று கருதியே, கடந்த கால எழுபது ஆண்டு அனுபவ-ஞானத்தை உங்களுக்கு இனிய தமிழ்-விருந்தாய் படைக்கிறேன்

அன்பர்களே, உங்களுக்கு நான் புத்திமதி சொல்ல வரவில்லை. நீங்கள் நல்ல அறிவாளிகள். உங்களுக்குத் தக்க வழிமுறை நெறியை உங்களாலேயே தேர்ந்து-எடுத்து முடிவு எடுக்க முடியும் என்றே நம்புகிறேன்.

ஆகவே சிந்தியுங்கள்.!!! அது ஒன்றே எனது நோக்கம்.

உங்கள் அவரவர்க்கு ஏற்றதாய் தோற்றும் கருத்துக்களை மட்டுமே ஏற்றுப் பயன் அடைந்து ஓங்கி வாழுங்கள்.

அன்பர்களே, இது குறித்து உங்களது கருத்துக்களை வரவேற்கிறேன். கூறுங்கள் மனம் திறந்து.!...

...தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ.!

கேள்விகள் சந்தேகங்களையும் கேடகலாம். மறுமொழி விடை-விளக்கம் வழங்கவும் ஆவலாய் உள்ளேன்.

நீங்கள் யாவரும் இனிதே வெற்றி மிக வாழ்ந்து ஓங்க நல்வாழ்த்துக்கள்.!!!

உங்கள் அன்பன்
சுதாமா (ஆ-சிறியன்.!)

.

Sudhaama
2nd October 2010, 11:29 PM
[tscii]
-

.
இன்பம் எங்கே.?... விவாத மேடை!!!


படைப்பாளி இறைவனுக்கும், படைப்பு மனிதனுக்கும் இடையே....

...கற்பனை உரையாடல்... கேள்வி-பதில் கவிதைத்-தொடர்.!!!



அனுபவ விஞ்ஞான-ஞானம் "மானிட வாழ்-நெறி".!!!


ஆக்கம்: சுதாமா


யாப்பு-இலக்கண வரம்பிற்கு உட்பட்டது அல்ல.


- 1. ஏன் பிறந்தேன் மாந்தனாக.?


[html:989c05554a]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-Jun07/Monkey3.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Thiru-May07/Cat1.jpg
[/html:989c05554a]


முன் குறிப்பு:--- அரும் சொற்பொருள் அடிக்கீழே காண்க.

உயர்வே உனக்கு உத்தமப்-பிறவி மனிதனே-என என்-மேல் புவி-திணித்து,
நயம்-உறு புவி-சுவர்க்கம் வாழப் பிறந்தாய் நீயே, அரிதாய் நீ மட்டும்-என
உயர்வற உயர்நலம் உடையவன் நீ என எனை வஞ்சித்தாயோ இறைவா.?
பயன்-பிறவி, புவி-இன்பம் எங்கே.? நீ யார் உயர்வற உயர்நலம் உடையவா.?

உடையவன் உன்னை மனிதா இறைவன் நானே கண்-காணா மறையவன்
கடை இழி பிறவியர் ஓரறிவு புழுமுதல் ஐந்தறிவு குரங்கு அடுத்து உன்னை
இடைப்-பிறவி மேலோனாய் எனக்கும் புவி-வாழ் இதர தாழ்-பிறவியர்க்கும்
படைத்தவன் புவி-சுவர்க்கம் இயற்கை எத்தனை கோடி இன்பம் உனக்காக

உனக்காக புவி-வளம் பல்வகை ஊண், ஐம்பொறி இயற்கையே பணி செய்ய
மனக் கவலை-இன்றி மாந்தனே என் பிரதிநிதியாய் புவி-சுவர்க்க போகம்
இனக் குடும்பமாய் புவியோர் இலக்கணமே ஞான-விஞ்ஞான வல்லமையால்
தனக்கு-உவமை இல்லா மன்னனாய் தரணி ஆள, உன்னையே கேள் நீ யார்.?

யார் நான்-என உன்னை நீயே கேட்டு விடை-அறியா உயர்-பிறவியனே
யார் நீ என என்னையே கேள்வி கேட்டாயோ அறிவுக் கண்-மூடிக் குருடா
பார்க்க-இயலா அருவிலும், பார்வையில் அருள்-உருவுகள் பலவும் நானே
வார்க்க-அருள் அல்லா, பரம-பிதா, புத்தர், சிவன், காளி, திருமாலே பிறவும்

பிற சிந்தனை பரமன் யாராயினும், உன் விருப்பம் இறை-நெறி தோய்ந்த
அற-நெறியே வாழ்-நெறியாய் கடைப்பிடித்து ஒழுகினால் தான் திருவருள்
புறத்தவன் உன்-மேலவன் உன்னுள்ளும் உறைந்து உன்னையும் ஆள்பவன்
சிறந்த பிறவிப்-பயன் புவி-சுவர்க்கம் மோட்சம் அருளும் பிறவி-விடுதலை

பிறவி-விடுதலை நாடார் வருங்காலம் மென்மேல் நரகமாய் உணர்வார் புவி
தரம்-அற்ற இழி-பிறவியர் நரி, ஓநாய், பாம்பு அனையவை மனித உருவில்
நரகம் தனக்குத்-தானும் பிறர்க்கும் இழைக்கும் உண்மை ஞான-விஞ்ஞானம்
சிறகு வளர்ந்தவுடனே வான்-பறக்க துடிக்கும் பறவையாய் வாழ்க சிறந்தே

சிறந்தே வாழப்-பிறந்த மாந்தனே புவி-சுவர்க்கம் உன் கையில், தகு-நெறியே
மறந்திடாதே விருந்தே மருந்தாம் குடிசையில், மருந்தே விருந்தாம் மாடியில்
இரந்து வாழ்வே, பசி இருந்தும் உணவிலா வறுமை குடிசை-வீட்டு ஏழ்மை
இறந்த-வாழ்வே உணவு இருந்தும் பசியிலா கொடுமை, மாடி-வீட்டு ஏழ்மை

ஏழ்மையற வாழத்தெரியுமா மனிதா உனக்கு.? தேவையான வல்லமைகள்
வாழ்-வளமுற சீர்-அறிவு, உடல் மனம் மேலாய் ஆத்ம- வலிமை தந்தேனே
ஆழ்-பொருள் பார் குடிசை-வீட்டு மாடி-வீட்டு ஏழை இருவகையும் ஆகா வழி
ஏழ்மை போக்க ஞான-விஞ்ஞானம் படைத்தேன் புவி சுவர்க்க-வளம் பெருக

பெருகவே ஓங்கி நீ மனிதனாய் என் மதலை-மன்னனாய் படைத்தேன் புவி
திருவருள் புரிந்து உரிய நற்பயன் பெறவே உன்னை நீயே உயர்த்திக் கொள்
சிறு-பிறவியர் தத்தம் சுய-நெறியால் தகு வாழ்-பயன் கொள்வது கண்டாவது
உறு-பயன் நீ கொள்வது எப்போது உத்தமப்-பிறவியின் பொருள் கூட்டவே

கூட்டவே இறைவன் அற-நெறியே மாந்தர் வாழ்-நெறியின் அஸ்திவாரம் புவி
காட்டக் குரங்கு, பூனைக் குட்டி பத்தர் உயர்-தகு இறை-நெறி இருவகை என்றே
நாட்டவே செயல்-முறை மாந்தர்-பங்கு, இறை பங்கு-எது, நாடகம் இருமாறு
ஊட்டவே போதும் வாழ்வு, வான்-நாட நந்தன் வைய மாந்தன் பங்கு பயிரில்

பயிர் செய்தே ஆத்ம-வித்தால் வாழ்வு-ஓங்கப் புவி-சொர்க்கம் பேறு ஒரே பிறவி
உயிர் தந்தான் உயர் மாந்தனாக இம்மை இன்பம் மிருக-தெய்வம் இடையராக
ஜெயித்து வைய விளையாட்டு போராட்டம் புரிந்து விடை-கண்டு பயன்-கொண்டு
வெயில் நிழல், ஒளியிருள் இன்ப துன்பம் புவிப்பிறவி உண்மை வினைப்-பயனே

பயன் புவியால் ஏனைய பிறவியர்க்கு இல்லை எனினும் அவை வையத்-தேவை
இயற்கைச் செயல்-நியதி வட்டப்படியே அவற்றின் நெறி வகுத்தான் வைகுந்தன்
உயர்-பிறவி மாந்தனே தன் தரணிப் பிரதிநிதியாய் வல்லமை நால்வகை அருளி
நயம் மிகு ஆத்ம-வலிமையே, அறிவு, மனம் உடல் வலிமைகளினும் தலையே

தலையாய பிறவி மாந்தனின் பணிகள் யாவிலும் இறைவனின் பங்கும் உண்டு
அலையாய வாழ்-கடல் நீந்திக்-கடக்க இரு-வகை வாய்ப்பு வகுத்தான் மாந்தர்க்கு
மலைக்காதே விடுதலை-பெற சிறை பிறந்தாய் உன்னைக் காக்கும் தந்தை நாடு
நிலை-வீடு விருப்பம் வைய-இன்பம் பின் வீடா, புவி இன்பம்-விடு வீடா சொல்

சொல்லாது வாழ்-நெறி பூனை குரங்கு தாய்-சேய் கொள்கை இரு-மாறு வகை
செல்ல வீடு இறுதி-இலக்கு மாந்தர் முயற்சி பொறுப்பு பெரும்-பங்கு எவர்க்கு?
நல்ல பண்பே பூனைத்-தாய் தம்-போக்கில் விளையாடு குட்டி நாடி பால்-ஊட்டி
மெல்லக்-கவ்வி இடம் மாறி-மாறி தாவி ஓடி கணமும் அகலா தாய்-பொறுப்பே

பொறுப்பு பெரும்-பங்கு குரங்குக் குட்டி தன்னலம் காத்துக்-கொள்வது சிசுவே
இறுக்கித் தாயைப்-பிடித்த பிடி விடாத வரை-தான் குட்டிக்கு ஆபத்து இல்லை,
தருக்-கிளை பல தாவித்-தாவி குதித்துத்-துள்ளி தாய்க் குரங்கு தன் போக்கிலே
நெருக்கம் தாயை குட்டிப்-பிடி இறுக்கம் தளர்ந்தால், வீழ்வது குட்டி தானே

குட்டி வலிந்த பொறுப்பு நந்தன் கடைப்பிடி கட்டிப்-பிடி சொர்க்கம் மந்தி-நெறி
வெட்டிக் காலம் புவி-வாழ்வு சூழல் கர்ம-வினை மென்மேல் கூடுமோ, பயமே
கிட்டிய முழு-வாய்ப்பு எட்டித்-தழுவி பிறவி- வினை தீர்க்க தானே நெருங்கி
முட்டி நாடி இறைவனைக் கெஞ்சி அழுது கருணை-அருள் விரை உயர்வழி

உயர்-வழி பெரும்-பங்கு சுய-பொறுப்பாலே தன்-பிடியே சார்ந்த மந்திக்-குட்டி
துயர் துன்பம், கேடு தாவும்-தாயால் மரத்து-இடி, அடி, குத்து, மோதல், வீழல்
இயல்பு புவி-காலம் வெறுத்து,, எதிர்காலம் குறுக்கி, விடுதலை முந்தவே
பயம்-இன்றி அகலாது சிறிதும் நழுவா குட்டி, தாயின் போக்கே கதி ஒன்றி

கதி-ஒன்றி கடவுளே அர்ப்பணம் இருவகை நெறியிலும் வேறுபாடு இன்றி
விதி-நியதி நந்தி-இயல்பு அறிந்தும் நந்தன் தந்தையை கூட பிறீடு வேட்கை
விதி-புவி நீள்-காலம் பொறுக்கா சேயின் அவசரம், நந்தியை விலகச் செய்த
நிதி-நெறி, இறை-பங்கினும் மேலாய் அடியன்-பங்கு புவி-துறவு விரை வீடே

விரைந்தே வீடு-முக்தி பேரின்ப உலகம் சேர முந்தி, மாந்தன் நந்தன் வழி
சிறை-வாழ்க்கை புவி-நரகம் காலம் கணமும் தாழ்த்தா முன்-விரை ரயிலே
இறை-பங்கு கடமை அதிகம்-கொடா, தனக்கு கூடுதல் சுய-பொறுப்பாலே
குறை-வினையால் வாடி பாவ-மன்னிப்பு சரண்-நாடு இறை-உணர்வால்

உணர்வால் தெரிய பிற-பிறவியர் இயலார் அத்தகு நிறை-வளம் இல்லார்
உணர்வால் மூவகையிலும் புரிந்து வாழ வளம் படைத்தவன் நீ மட்டுமே
உணர்வே பெரும்-பதம் தெரிந்தான் ஒரு பாமர-வேடனே, நன்னெறி உய்வே
உணர்வால் மனம், அறிவு, ஆத்மா பயில்வாய் உயரவே புண்ணியம் மனிதா

மனிதனாய் புவி-சுவர்க்கம் போகம்-உற பிறந்த ஒரே பிறவி உத்தமனே கேள்
புனிதன் நீயுமே உனது ஆத்ம-வலிமை உன்னுள் உறங்கிக்கிடப்பதை எழுப்பு
இனியனாய் புவிப்பிறவிப் பயன் பெற தன்னலம் போல பிறர்-நலமும் கருதி
தனியனாய் ஒதுங்கிக்கிடவாது ஊருடன் கூடி ஓங்க முயன்றால் எனது அருள்

அருள்-இல்லார்க்கு அவ்வுலகம் என்னும் இறைவன் திருவருள் இல்லை புவி
பொருள் வாழ்-நெறி அர்த்தம் இல்லார்க்கு இவ்வுலக சமுதாயத்துணை இல்லை.
இரு வகை ஏழ்மையற உடல்-பணி வாழ்வும், புண்ணிய-ஈட்டம் உய்வும் தேவை
திருவருள் அறத்தால் வருவதே இன்பம், அறம் செய விரும்பு பொருள் அறி

அறிவாயா மனிதா சிந்தித்தாயா ஔவை மூதாட்டியின் ஆழ்பொருள் அற-நெறி.?
விரிக்காது சுருக்கி “அறம் செய விரும்பு” என்றாளே, அறம் செய் என்னாது ஏன்.?
நெறியே உணர்வு துவக்கம் நோக்கமே, அறம் செய இயன்றாலும் அன்றியும்
குறிக்கோள் எக்கணமும் அறமே நினைவாய் பிறர் நலமும் கொள் தன்னலமாய்

தன்னலமே தரணி ஓங்க புகழ் தன்-சுமை தான்-மட்டுமே பெரும் பங்கு
சுய-கடமையே பெரிதாய், தன்-வினைச் சுமை ஈசனாயினும் கடத்தவோ.?
அயலார்க்குச் சுமத்துவதோ, அருள்-மனத்தன் பொருள்-பொதிந்த பண்பன்
செயல், சொல், எண்ணம், முத்-தூய்மை ஈசன்-பாலும் பேர்-அறம் அன்பே

அன்பும் அறமும் உடைத்தாயின் பண்பும் பயனும் அதுவே வாழ்-நெறி
அன்பே பிற மாந்தர் துணை-கூட்டும் ஆதார மானிட-நெறி அஸ்திவாரம்
அன்பே மிருகத்தினும் மேல் மானிட-உணர்வுப் பண்பின் தலை-வாயில்
இன்பம் பண்பு அறமே மிருகம் துவங்கி இறைவன் வரை அன்பாலே

அன்பே வாழ்க்கைத் தொடர்பு அனைத்து உயிரினம் பாலும் கொள்ள உறு
இன்பம் ஈட்ட, துவக்கப் பண்பாம் மாந்தர், தலை-சிறந்த உயிரின மனிதா
அன்பே வாழ்-நெறி கொள்கை கொண்டோர்க்கு இல்லை எல்லை எதுவும்
ஜன்மம் வெற்றி, பிறர்-ஒத்துழைப்பு, அன்பு-வசப்பட்டவன் இறைவனுமே

இறைவனே படைத்த குட்டியைத் தாங்கி சுமந்து உறு-தகு நலம் சேர்
வரையிலா வள்ளலைக் கணமும் அகலாது இறுகிய பிடி நழுவாது ஒட்ட
சிறைப்-பிறவி விடு இறுதி-இலக்கு பிறவியற மந்தி-நெறி நந்தன் சுட்டு
நிறை-துணையே வேறு-என்ன குறை, புவி-சுவர்க்கமும் கை-விடானே

கைவிடாக் காவலன் நம்பினோர் நல்லார் தன்னைத்தானே முன்னேற்ற
தவிர்க்காது தத்தம் பொறுப்பு பங்கே பெரிதும் வலிந்து ஏற்க முன் வந்து
புவி மா-துணை தனை அகலா அடியர்க்கு யாண்டும் இடும்பை இலவே
தெவிட்டா-இன்பம் கணமும் தாயுமான பிதாவைக்-கட்டு மதலைக்குமே.


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அரும் சொற்-பொருள் :---

உயர்வற உயர்-நலம் உடையவன் நீ =

(உயர்வு+ அற) உன்னைக்-காட்டிலும் உயர்ந்தவர் வேறு எதுவும் எவரும் [பூமியில்] கிடையாது என்னும் வகையில்


நீ யார் உயர்வற உயர்-நலம் உடையவா =

[பூவுலகோர் எவரும் காணவோ அறியவோ இயலாத முறையில் மறைந்திருந்தே, என்னையும் மூவுலகையும் அடக்கி ஆளும் பரம்பொருளே, உன்னைக் காட்டிலும் தலை-சிறந்து உயர்ந்த மா-வல்லமை பொருந்தியவரோ பொருளோ சக்தியோ வேறு-ஒருவரோ வேறு ஒன்றோ, அகிலாண்ட,ம் எங்கிலும் கிடையாது என்னும் வகையிலே, மா மகா வல்லமை மிக்கவனாய், அகிலாண்ட உலகங்கள் படைப்புக்கள் அனைத்தையும் சொந்தமாக உடையவனாய் திகழும் பரமனே நீ யார்.?

இரந்து = பிச்சை எடுத்து; --- பெரும் பதம் = உத்தம நிலை (அந்தஸ்து) / Supreme Status; --- வரையிலா = எல்லையோ வரம்போ இல்லாத / அளவிட முடியாத; --- யாண்டும் = எங்குமே ; --- இடும்பை = கேடு.

உய்வு = உடல் வலிமை குன்றாதும் நோயுறாதும் இயங்க வைக்க உணவு ஊட்டி போசிப்பதே வாழ்வு என்பது போல, உயிரைப் போசிப்பதே உய்வு பாவத்தால் களங்கப்படாது, புண்ணியங்களால் உயிர் வலிமை போசிப்பது உய்வு. சுருங்கக்-கூறின் உடல்-தேவைக்காக வாழ்வு, உயிர்-தேவைக்காக உய்வு.

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


- 2. என்னை ஆளாக்கிய மண்ணோரா.!



இன்று அக்டோபர் 2, மகாத்மா காந்தி பிறந்த-நாள் நினைவு.


மதலை சிறு வித்தாய் புவி-உதித்த உன்னை மனிதன் ஆக்கியோர்
உதரம்-சுமந்து, உதிரம்-தந்து மருந்து கல்வி ஊண்-ஊட்டி, காத்து
உதவி பிரதி-நன்றி கருதாது உன்னோடு மண்-வாழ் மாண் மாந்தர்
எதற்கு-எனச் சிந்தி பொறுப்பொடு வளர்த்தனர் மேன்மையுற நீ?

மேன்மையுறு அரிமா-பிறவியேன் நான் எனினும் உன் திருவருள் சார்ந்தே
தான் புவி-வாழ இயலும் சிறியேன் வானாளும் ஈசன் உனை அறியும் முன்
நான் மனிதனாய் தகு உரு, தரத்திலும் வளர்ந்து மண்-ஆள ஆளாக்கிய
தேன்-புவி கண்-கூடு என்னோடு வாழ்வோரை மறவேனோ மதலையேன்.?

மதலை சிசு-உருவம் விதைப்பவர் தாய்-தந்தை, படைப்பவன் ஈசன் உயிர்
பத-பரமன் இறைவன் முன்வினை விளை-குணம் சிறிதுடன், பிறந்த பின்
வித-பல தலை-சீர் உயர் குணம், வல்லமை, மனிதராய் வாழ்-நெறி பண்பு
இதரரும் குடும்பத்தார் திறன் வலம் ஊட்டி வளர் முதியோர் சிசு வரமோ.?


[html:989c05554a]
http://s129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru-%20JAN-%20%2009/gandhi-india.jpg
[/html:989c05554a]


வரமா ஆயுள் நீள்வது பொக்கை-வாய் கிழவனாய் மாந்தர், கம்பு ஊன்றி
தரமா வீண் பாரமா குடும்பம் சமுதாயத்திற்குமே பாரதத்-தந்தை காந்தியே
உரமே வழுக்கைக் கிழவனுக்கு இறைவன் தந்த தங்கச்-சீப்பு, பயன் கொள
பிறர் பிந்தையர்க்கே அனுபவ வாழ்-பாடம் முந்தையர் கொள் உன் அன்பே

உன் அன்புக்கு இணையுண்டோ உன்னுள்ளே தோன்றி உதித்தேன் வித்தாக,
உன் அரவணைப்போடு மௌன-மொழி வழி-காட்டலால் முதிர்ந்தேன் முத்தாக
உன் உதிரம் தந்த ஊணே ஊட்டப் பெற்றதால் உடல், மனம், அறிவு சத்தாக
உன் வழி வளர்ந்தேன் மானிட-நெறி மேன்மை முன்னோடி தாயே பித்தாக

பித்தாக ஒரு பாட்டி தொட்டில்-இட்டுத் தாலாட்டிப்-பாடி ஆத்ம-நாதம் புகட்டி
மத்தாக மனம் கதைகள் இன்னோர் பாட்டி நிலாச்- சோறு-ஊட்டி கால் நீட்டி
ரத்தினமாய் வாழ்வு-ஒளிர என்னை ஆளாக்கிய பாட்டிகளே என் வழிகாட்டி
சத்தியமே முதியோர் சூடு-பட்ட பசுவினர் பிந்தையர் வாழ்க்கைப் பத்திரமே

பத்திரமாய் தொடர்-துணை அன்பார் உடன் விளையாடு இணை சகோதரியாய்
பத்தினி, வாழ்வு-பங்கர் உடல்,பொருள்,ஆவி: தண்-மதி இருள்-ஒளி துணைவி,
நித்திலமாய் என்-மடி தவழ்ந்து விளையாடி மழலை-மொழியால் மகிழ்வித்த
சித்திர-மகள், கன்னியாய் என் விருப்பம்-போல் மருமகன் கொள புத்-திறனே

புத்திரனாய் என் மேல் இறைவனால் திணிக்கப்பட்ட மகனுக்கு இணையாக
புத்திரியும், நானே தேர்ந்து-எடுத்த மாட்டுப்-பெண் என் மாட்டே மருமகளும்
பத்தராய் பணி-அலுவலக மங்கைச்-செயலாளர் என்-ஆணை செயல்படுத்து
வித்தகரே பல்லுரு மாது-இனமே உனையன்றி இன்பம் வாழ்-பொருள் ஏது.?

[color=green:989c05554a][i:989c05554a][b:989c05554a]
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உதரம் = வயிறு ; --- உதிரம் = ரத்தம் ; --- மாட்டே = பக்கத்தில்
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<&lt

Sudhaama
7th October 2010, 04:55 AM
-


- 2. என்னை ஆளாக்கிய மண்ணோரா.! - தொடர்ச்சி


[அரும் சொற்-பொருள் கீழே காண்க.]


ஏதும் குறையற்ற குவலயப்-பிறவியாய் புனித மிகு மனித இனமாய் இறைவா
மாது, மாந்தர் சமுதாயத்திற்கே முன்னோடி பெரு மரியாதை பெறு உறு உரு
சாது மங்கை தீது எவர்க்கும் நினையா அன்புறு பண்பே தலை-சீலமாய் திகழும்
பேது தாய்மாரை சுய-வலிமையற்று ஆண்-இனம் சார்ந்து-வாழவே படைத்தாயோ.?

படைத்தேன் மாதரை பல்வகைப்படி ஆண் சார்ந்து வாழவே வையத்தே வாழ்-ஒளி
உடையவன் தந்தை, சகோதரன், கணவன், மகன் அடுத்து-அடுத்து ஆயுள் முழுதும்
குடையராய் ஆண் நிழல் தந்து, மென்-மலர் காக்கும் முள் காவல் துணையாய்
கொடையராய் குடும்பம் ஓங்க பதி-மரம் தழுவி ஓங்கு கொடி மாது இதய-நெறியே

இதய-நெறியே இன்பம் பொழி இன்றியமையா வாழ்-கொள்கை பொருள் அறிவாய்
வதனம் மதி தண்-நிலவு மனம் மனிதா தாயாய் வழிபற்றி இருளிலும் ஒளி தரும்
உதரம் தாங்கு வளர் புவி-மாது, இயற்கை, செல்வம் கல்வி வீரம் மாந்தர் வளமை
உதயத்-தோற்றம் இதயம் மதி மனம் துணை ஆள்-அறிவு இணை ஆண்-பெண்ணே


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

.அரும் சொற்- பொருள்:---

வித்து = விதை --- குவலயம் / வையம் / புவி = உலகம் --- உதரம் = வயிறு.;

தண் = குளிர்ந்த --- தீது = தீமை / கேடு --- உறு = தகுந்த;

மதி = அறிவு / சந்திரன் --- உடையவன் = சொந்தக்காரன் / உடைமையாய் கொண்டவன்

பேது = அப்பாவி (Innocent) / குற்றம் அறியா பேதை (Incognizant)

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<..

.

Sudhaama
10th October 2010, 10:13 PM
-


ஆண்-பெண் என ஏன் படைத்தாய், ஈசா காமப்-பேய் பிடித்து அலையவோ.?
வீண் உற்றார் உறவினர் விருந்து நாடி, உரிமை கொண்டாடி குலையவோ
காண்-யாம் முதியோன் துதி எனை தனக்குத்-தானே மகுடம் சூடு சிலையரோ
தூண்-நாம் ஒருவரொருவர் பணப்-பங்காளி நெருங்கி ஏமாற்றுக் கலையரோ

சாண் சிறியோர் புத்திரர் முளைத்து விளைந்த பின் கைவிடும் கொலையரே
மாண்-குரு கல்வி கற்ற-பின்னும் தொடர்-உறுத்து விடாப்பிடி தலையரோ.?
நாண்-பெரியோர் தற்காலம்-ஒவ்வா நீதி ஏட்டுப்-பாடம் திணி தொலையரே
பூண்-விலங்கு புவி-சுவர்க்கம் ஆள-வந்த எமக்கு நரக-நோய் விலையதோ.?


விலையதே ஆம் மதலை- என் மைந்தா நீ தருவதன் பிரதியே பெறுவாய்
அலைக்-கழிக்கும் வேதாந்தம் அல்ல இதுவே உண்மை வாழ்-நெறி எவர்க்கும்
நிலை வாழ்க்கை-நியதி விதைத்ததே முளைக்கும் தினையோ வினையோ
கலைத்து நீ வீண் தேனீ கூட்டமாய் கொட்டுதே என ஓடி தப்பிக்க முயல் சுய
வலைப்பட்ட மூடனா நீ முழு உயர் அறிவு கொண்ட உத்தம மனிதனா சொல்
தொலைக்கவே முன்-பிறவி வினை இப்பிறவியும் நீ செய்த பின்-விளைவே
அலைந்து-திரி பேய் தற்கொலைப்-போக்கில் நீயே நரகம் ஈட்டிக்-கொண்டாயே

ஈட்டிக்-கொண்டவனே கணவன் தன் மனைவி வாழ்க்கைத்-துணைவி சொத்து
வீட்டில் எனக்கு மங்கை கட்டிலுக்கும் தொட்டில் என் ஆசை குடும்பம் கூட்ட
தீட்டி திட்டம் தன் சுயநலமே இலக்காய், மாதே என் தேவையை நிறைவேற்ற
காட்டினால் மங்கை எவளும் உன்னை மணக்க முன் வருவளோ கொடுப்பரோ

போட்டி ஒரு மாது, கணவன் தேவை எனைக்-காத்து சுகம்-தந்து சோறுபோட
ஆட்ட முயன்றால் வீட்டரசி என, ஆண் எவனும் ஏற்பனோ இல்லாளாய் ஆள
காட்டுப்-பாடம் அது மிருகமாய் தன் உரிமை மட்டும் நாட்டிப் பிடுங்கிக்கொள
நாட்டு வாழ் மானிட-நெறி கடமையே வாழ்க்கை உரிமை அன்று, ஆம் தத்தம்

சூட்டு உறு நன்னெறி இணை பிறரது உரிமையே எனது கடமை, தரவே நாடி
நாட்டவே வாழ்-பொருள் மாதே உன்-தேவை என் கடனே, எதிர்-விலையாய்
கூட்டவே என் தேவை நீ நிறைவேற்ற வா நாம் இருவர் ஒருவர்க்கு ஒருவர்
பூட்டுச்-சாவியாய் உன்னால் நான் வாழ, என்னால் நீ என உறு நெறி-முறை
ஏட்டுச்சுவடிப்-பாடமோ? அனுபவ நடைமுறை உண்மை எக்காலத்தும் நிலை-
நாட்டு-மனிதராய் காட்டு நெறி அற-வாழ்வால் புவி-சுவர்க்கம் திண்ணமே.
.
..

Sudhaama
16th October 2010, 01:16 AM
-


3. இயற்கையின் அங்கமாய் செயல்பட்டாலே உயர்வு.!


திண்ணமே மனிதா உன்-கண் முன் சுவர்க்கம் இங்கே இப்புவியில் உண்டு
எண்ணமே மானிடப்-பக்குவம் கொண்டு நீ கண்டு அனுபவிக்கத் தெரியாத-
மண்ணனாய் உன் கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருள் என்றே கருதி
விண்ணளாவிய வாய்ப்பு அறிய முயலாது ஏன் முன்பின் முரண் பேச்சு?

பேச்சு பாலப்-பருவத்தில் வெகு போற்றினாய் மண்ணோரை என்னையுமே
வீச்சுச்-சொல் ஏன் இப்போது இள-வயதில் எதிர்-மாறு பிறர்-குறை சாடல்?
நீச்சே வாழ்-கடல் நீந்தத்-தெரிந்தோர்க்கு சுவர்க்கம், தெரியார்க்கு நரகமே
மூச்சே மானிட-நெறி வழுவா வாழ அறிவாயே இயற்கையின் நீ அங்கமே

அங்கமே கை கால் கண் காது வாய் மூக்கு என்பன போல உன் உடலுக்கு
பங்கு அதனதன் உரி-கடமைப் பணிகள் வெவ்வேறே எனினும் அவை யாவும்
தங்களது தத்தம் உறு பொறுப்புக்களை உனது எண்ணம் முடிவு ஆணைப்படி
பங்கம்-அற தருணம் தவறாதும், அளவு குறையாதும் தாமே செயல்-பாடு பார்

பார் இறைவனே மறு-வடிவமான இயற்கையின் அங்கமே நீ சிந்தித்து அறி
ஊர்-வெளி நடக்கையில் எவரேனும் கூவினால் செவியில் ஒலி பட்டு உனது
பேர் அழைப்புக் கேட்டவுடன் திசை-நோக்கி முகம் திரும்புகிறது, கண்கள்
பார்க்கின்றன, கால் திசை-மாற, வாய் பேச, முகம் மலர, தத்தம் தாமே ஓர்

ஓர் கணமும் தவறாது அதனதன் கடமை தாமே முன்-வந்து ஆற்றுவதைப்
பார், கால் புண்-பட்டால் கண்ணுக்கு என்ன பாதிப்பு, கை, வாய், ஏனையவும்.?
ஊர்ந்து பூச்சி கால்-கடித்தால் கண்ணீர், வாய் ஓலம் கை-அடிக்க, உடல்-குனிய
நேர்வது உடல் எப்பாகம்-எனினும் பிற-அங்கங்கள் கணமே வலிந்து பொறுப்பே

பொறுப்பு உன்-பெற்றோர், உடன்-பிறந்தார், இல்லாள் மக்கள், உற்றார் உறவு
அரும் உறு நண்பர், சமுதாயம் அரசு, ஆகியன உலகில் உன்னொடு தொடர்பு
வெறும் வெட்டிப்-பேச்சுக்கோ.? விருந்து-உண்டு பின் வீண் முகம் திருப்பவோ
உறு கடன் உன்னோடு வாழ்வோரை யாமே படைத்தோம் பரஸ்பரம் பயனே

பயனே ஒருவர்க்கு-ஒருவர் சார்பே வாழ்வு, பெரியோர் சிறியோர் யாராயினும்
உயர்ந்தே நீ ஓங்கி பெரும் செல்வந்தனாய் அந்தஸ்து கொண்டாலும், உனது
வயல்-உழுது பயிரிட விவசாயி, செருப்பு, பிற வகைப் பணி துணி காவல்
செயல்பட வியாபாரி, தொழிலாளர் பல்லோர் சமுதாயம் கீழ்-மேலோருமே.

கீழ்-மேலோர் கூட்டு சமுதாயத்தால் நீ வாழ, உன்னால் சமுதாயம் வாழ,
ஆழ்-பொருள் உணர்ந்தே மன்னனால் மக்கள், மக்களால் மன்னன், உலகில்
வாழ்-நெறி வைத்தியனுக்கு நோயாளி தேவை நோயாளிக்கும் வைத்தியன்
ஊழ்-வினையோ அல்ல ஈசன் என்னைச்-சார்ந்தே நீ, நானும் உன்னையே

உன்னையே நீயே கேட்டு உணர்ந்து வாழ்வதே மானிட-வாழ்வு எவரும்
உன்னிலும் தாழ்ந்தோர் இல்லை, உயர்ந்தோருமே ஏதேதோ வகை வேறே
மன்னனோ மா-அறிஞர் மேதையோ என்னரும் பெரும் பதவியோர் ஆயினும்
தன்னைச் சமுதாயத்தொண்டனாய் கருதுவோரே காண்பார் இன்பம் எங்கும்

எங்கும் பூவுலகில் எவரும் சிறு-துரும்பும் இழிவு அல்ல எனவும், உன்னிலும்
சங்கடம் துயர் இன்ப-துன்பம் உலகினில் மேல் கீழோர் எவர்க்கு-ஆயினும்
எங்கணும் உண்டு வாழ்க்கையில் ஏதோ ஒரு பகுதி காலம் உலக இயல்பு
பொங்கும் மங்களம் எனக்கும் பொற்-காலம் வரும் என நம்பியே முன்னேறு.
.
.

Sudhaama
17th October 2010, 09:12 PM
.

முன்னேற்றம் வாழ்க்கை வெற்றியே இலக்கு.!!!



- விஜய-தசமி தினம்



[html:6d8b5f9c55]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru - NOV- 08/Durga7.jpg
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/2008/Thiru - NOV- 08/Krishna69.jpg
[/html:6d8b5f9c55]

முன்னேற்றம் வாழ்க்கை வெற்றியே புவி-சுவர்க்கம் இலக்கு.! கேள் மைந்தா
முன்னேறி மிக-வேகம் விரைந்தால் நெரிசல்-மிகு சாலையில் உன் வாகனம்
உன்னோடு பயணிப்போர் அதே சாலையில் ஏனையோர் உனக்காக ஒதுங்கி
பின்-வாங்கி வழி-விடுவர், நீ மெதுவானால் முந்துவர் உன்னைப் பின்-தள்ளி

தள்ளிக்-காலம் கழித்தால் ஆமையும் உன்னை முந்தும் புவி இயல்பு சிந்தி
கொள்ளை-இன்பம் அறம்-வழுவா ஆசை நற்கனவு சவால்-போட்டி வெல்ல
கொள்ளவே புவி-சுவர்க்கம், உன் பின்னவரும் முன்னவரும் உன்னைப் புகழ
அள்ளவே பிறந்தாய் என் மைந்தா உன்னாலே இயலும் முயன்றாலே நீயே

நீயே முனைந்து வெல்வதே வாழ்க்கை வெற்றியே தலைமா இன்ப-வையம்
சேயே போல் பிறர் துணையால் மட்டுமே எட்ட முயன்றால் நீ என்றென்றும்
காயேயோ பிஞ்சோ? கன்னி மனைவி கைப்-பிடித்து திருமண முதலிரவு உன்
தாயே தந்தை எனினும் மணவறை வாயில் வரை மட்டுமே பிறர் துணையே


.

Miss Kavya
20th October 2010, 08:37 PM
Anaithum Arputham.

Sudhaama
2nd November 2010, 01:59 AM
.



Anaithum Arputham.


:ty:

.

Sudhaama
3rd November 2010, 05:16 AM
[tscii:46fc49fb0d]
-




மாந்தரே,

... யானை-இனம் எம்மிலும் உன்னதப்-பிறவியோ நீங்கள்.?
.


[html:46fc49fb0d]
<img src=
"http://i129.photobucket.com/albums/p213/sudhaama/HUB-2010/Elephants1.jpg" width=650>
[/html:46fc49fb0d]



[முன் குறிப்பு : அரும்-பத சொற்பொருள்… அடிக்கீழே காண்க]

1.
பிறர் துணையோடு கூடி-வாழ்வதே வாழ்க்கை சுய-நெறி ஊர் ஓர்-குடும்பம்
தரம்-குன்றா நலமுற வாழ் பிறவிப்-பயனுற முன்னேறி இன்புற-வேண்டின்
மறவாதே கண்ணால்-ஆகும் பணி வாயால்-ஆகுமா.? வேறு-அங்கத்தாலோ.?
உறவே பரஸ்பரம் துணை அவரவர் செயல்-திறன் குழு-நெறி வாழ்வு நீந்தி

2
நீந்தா-நிலையே சுயநல நோக்கர் வாழ்க்கைக் கடலில், மென்மேல் தாழ்வு
சீந்தா இழிவே தத்தளித்தே நடித்து பரிதாபம் ஊரார் மதியார் தாரார் உதவி
மாந்தவே மண்ணுலகின் மாண்-பயன் இன்பம் சுவர்க்கம் இங்கே திண்ணம்
வேந்தாய் ஆளலாம் அறிவார் இதயப்-பண்பால் வேழம் வாழ்-முறையாலே

3.
முறையே ஒற்றுமை ஓர்-இன சமுதாயம் கூடி ஒருவருக்கு-ஒருவர் உதவி
குறை குழு-எவரதும் இயலாமை, ஈடு-கட்டும் ஏனையர், யானை வாழ்-நெறி
நிறை-உள சாந்தி உடல் வலியது-எனினும் தன்-பலவீனம் தானே அறியும்
வரையுறு வரம்பே ஒருவருக்கு-ஒருவர் துணையாலே குழு- பலமே கூட்டு.

4.
கூட்டம் யானைக் குடும்பம் ஒன்றி ஓர் குழுவாக இணை-பிரியாது உலவும்
காட்டின்-வழி சூழல் பகைவர் சேற்றுக்-குழி ஆபத்து தீனி எங்கு எதுவென
நாட்டியே அனுபவக்-கல்வி அறிந்த முதியோர் தலைமை, தும்பிக்கையாலே
காட்டி முன்னோடி முகர்ந்து பாதை தொட்டுப்-பார்த்தே கூட்டிச்-செல்லும்

5.
செல்-குழு பாதுகாக்கும் களிறு-இளைஞர ஆடவர் முன்-பின் பக்கம் மதிளாய்
வல்லச் சுற்றிச்-சூழ் கோட்டை இடை நடு பெண்டிர் பிடி யானையர் குட்டிகள்
மெல்லவே அமைதி, பயமற நடந்து காலார தீனி தின்றும் குழு ஆடி குளித்தே
எல்லையில் மகிழ்ச்சி அனைவர்க்கும் பேறே பெருமிதப் பல்வகையோர் கூடி

6.
கூடிக்-களிக்கும் களிறு-பிடி ஊடி விளையாட்டு குட்டிகளோடு கோடி கொட்டம்
தேடியே எட்டா கொழுந்து கொப்பு ஒடித்து ஊட்டும் நெட்டை குட்டையர் குட்டி
வாடிட நோயோ, விபத்து எலும்பு-முறிவோ, புண்ணோ நேரினும் கவலை ஏன்.?
நாடியே பாதிப்புற்றவரை நீரில் நிறுத்தி குழுவின-பிறர் உதவிட யாவும் நலமே

7.
நலமே ஒற்றுமை கூடியே வாழ்ந்தால் கண்டே அனுபவம் சுய-நெறி யானை
பலமே ஒன்றி இனமே-கூடி மருத்துவமும் மகப்பேறு பணியாற்றல் பண்பே
விலகா பிறரும் பெண்-பிடி பிரசவம் யானைக் குட்டி ஈன்றிட காவல் சூழ
சிலர் கை-துழவி குட்டி வெளி-இழுக்க, பிறர் தாய்-தேவை நீர் தீனி மூலிகை

8.
தீனி மூலிகையினும் மேல்-பலனே சமுதாயத்தோர் துணை தொண்டு சேவை
மானிடனினும் வலிவுறு யானை கொள்கை தன்-கை உதவி தனக்கு மட்டுமோ.?,
கோனினமே பகைவரும் அண்டவொட்டா எந்நிலையிலும் இன்பம், வெற்றி
கானிடைச்-சூழல் தன் குறை-நிறை தானே நினை-வாழ் யானை சுய-நெறி

9.
நெறிபட வாழ வல்லமை அறிவு வசதி வாய்ப்புறு மனிதன் போலன்றி மிருகம்
குறிபட எதிரி எதிர்த்து எறிய குறு-வரம்பு கிட்டப்-பார்வை, திரும்பாக்=கழுத்து
அறிவாற்றல் மட்டு ஓடி-ஒளிய மாளா உடல் எனப்-பல பலவீனம்; தன்னையே
தெரிந்தே தன்-குறையால் பாதிப்பற ஈடு-கட்டு வலவன் கூட்டுறவு சேவையே

10.
சேவை-நெறியன் தன்னலம்-போல் பிறர்-நலம் கருதிடும் நற்-பண்பன் யானை
தேவை குழுவினர் அவரவர் எதுவெது தாமே முன்னுணர்ந்தே வலிந்து முன்னே
யாவையும் அன்புறு-பணியால் இன்புறு பயன்-பெறு வெறும் நான்கு-அறிவனே.!
கோவையர் மாந்தரே ஆறு-அறிவரே கூறீர் நீவிர் உயர் உன்னதப் பிறவியரோ.?

11..
பிறவியால் ஓர் இனம் மாந்தரினும் கீழ்-பிறவி யானைக்-குழுவிலும் பல்வகை
சிறந்தோர் நல்லோர் தீயோரும், பகை போட்டியும் உண்டு எனினும் நன்னெறி
மறப்பரோ இனம் நம்-அனைவர் யானைக்-குடும்பம் ஒன்றே என்றுமே என்றே
இறந்தே திரியும் நடை-பிண மாந்தனே சிந்தி தாழ்வுக்கு உன் யாரே பொறுப்பு.?

12..
யாரே பொறுப்பு-என பிறர்-குறை தேடும் முன், உன்-குறை ஆய்ந்தாயா மாந்தே
ஆர்வம் மனப்-பக்குவம் தம்மைத்-தாமே உணர்ந்தே உயர்-நிலை எட்டிட வல்ல
தேர்ச்சி மிருகம் யானைக்கு-உண்டு ஆறு-அறிவு மனிதா உனக்கே இல்லையா?
பார்-உடலுக்கு வாழ்வு, அகலாச்-செல்வம் உயிருக்கு நன்னெறி உய்வே இன்பம்


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அரும்-பத சொற்பொருள் :--


சீந்தா = அலட்சிமுற்ற / Uncared ---- அறிவார் = அறிவு-ஆர்ந்த / அறிவு-ஆற்றல் நிறைந்த ---- களிறு = ஆண்-யானை --- பிடி = பெண்-யானை ---

உய்வு :

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் இல்லை
செய்-நன்றி கொன்ற மகற்கு- திருக்குறள்.


உடலால் வாழ்வது வாழ்வு…. உயிரால் இன்புறுவதே உய்வு.

உடல் தேவையை ஈட்டுவது வாழ்வு (ஜீவனம்),
உயிரின் தேவையை ஈட்டுவதே உய்வு (உஜ்ஜீவனம்).,

வளம் இருந்தும் அனுபவிக்க இயலா பரிதாப இழிநிலையே…. உய்வு-அற்ற நிலை. அதாவது, “இருந்தும் இல்லாத ஏழ்மை”,

வாழ் வளம் இன்மையால் வறுமை கொண்டவனே குடிசை-வீட்டு ஏழை.

வாழ்-வளம் அனைத்தும் கொண்ட செல்வந்தன் அவற்றை அனுபவிக்க இயலாது கையாலாகாத கொடுமை நிலையனே மாடி-வீட்டு ஏழை.

ஆம். கைக்கு-எட்டியது வாய்க்கு எட்டா அவல நிலையனே, மாடி-வீட்டு ஏழை எனப்படுபவன். உதாரணமாக.

1. ஒருவன் ஆசைப்பட்ட விருந்து கிட்டிய பின்னும் கூட, பசியின்றி அஜீர்ண நோய்-வசப்பட்டதால் உண்ணாது கிடக்கும் விருந்தாளி நிலை.

2. இளமையும் அழகும் மிக்க பற்பல மனைவியர் கொண்ட-பின்னும் கூட…. ஆண்மையில்லா பேடியாய், கைக்குக் கிட்டிய சுக-போகத்தை அனுபவிக்க இயலாத சப்பாணிக் கணவன் நிலை.

3. புவிச் செல்வங்கள் யாவும் இருந்தும் அனுபவிக்க மாட்டாதவாறு கொடிய நோயாளிச் செல்வந்தன் நிலை.

4. பெரும் நாட்டுக்கு தலைவன் அரசனாய் இருந்தும் அதிகாரம் இல்லாது, பிறர்க்கு அடிமையாய் அடங்கி, கட்டுப்பட்டுக் கிடக்கும் ஓர் மன்னனின் கையறு நிலை.

பணம் வாழ்வுக்குத் தேவை என்பது போல… புண்ணியமே உய்வுக்கு தேவை.

வாழ்வு முறையால் பணம் சொத்து, மனைவி, மக்கள் போன்ற செல்வங்கள் ஈட்டப்படுவது போல.

உய்வு முறையால் ஈட்டப்படும் அருளே, பணத்தைக்காட்டிலும் மேம்பட்ட மாபெரு செல்வம்

பிறரால் திருடப்படவொண்ணா பொக்கிஷம். புவியில் ஒப்புயர்வற்ற செல்வ ஈட்டம் அவரவரது புண்ணியமே.

சுருங்கக்கூறின் …. பூவுலகிலும் சுக-போகம் குன்றாது இன்பம் யாவும் அனுபவித்து, இறந்த-பின்னும் கையோடு கொண்டு-செல்லவல்ல முன்-சேமிப்பாய், என்றென்றும் நீங்கா செல்வ-ஈட்டமாய் முன்வினை பாவம் போக்கி...

...இறைவனின் திருவருளால் எங்கும் இன்பம் ஈட்டும் நற்பணி நெறிமுறையே உய்வு.


<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<[/b][/i].

================================================== ===================

.[/tscii:46fc49fb0d]

Sudhaama
12th November 2010, 01:21 AM
.
.

மாந்தரே,

... மந்தி-இனம் எம்மிலும் உயர்-பிறவியோ நீங்கள்.? - 1


[html:f5756dd686]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Sangeetha-Jan08/Monkey5.jpg [/html:f5756dd686]


1.
இன்பம்-ஓங்க வாழ்பவர் யார்.? ஐந்தறிவர் நாங்களா.? மாந்தரே எம்மிலும்
உன்னதப் பிறவியர் எனப் பெரும் பெயர் கொண்ட ஆறு-அறிவர் நீங்களா.?
துன்பம் துயர், கேடு, இயற்கைச்-சீற்றம் ஆகிய இன்னல் நரக-நிலையிலும்
இன்பமாய் வாழத்-தெரிந்தோர் நாங்கள் குரங்கினமே.! காடு-வாழ்க்கை பார்

2.
பார் சுவர்க்கம் ஆக்கி வாழ வல்லமை பகுத்தறிவு ஞான விஞ்ஞான வளம்
சீர் வசதி வாய்ப்புக்கள் மாக்கள் காட்டு மிருகம் எமக்கு உளதா.? மாந்தரே
போர்-நிலையே இங்கு காட்டுச்சூழல் எப்போதும் போராட்டமே வாழ்க்கை
நேர் வாழ்-நெறி அறியா சுயநல வெறியர் இடையும் சுவர்க்கம் எம்-கையில்

3.
கையில் கிட்டியதே மூல-வித்தாக மாந்தர்க்கு மென்மேல் வளர் கருவி பல
வெயில் தாக்கா நிழலும் தண்மை, விசிறி, தகவல்-பரிமாற்றம், புவி-ஆட்சி
பையில் பணமும் பார்-எங்கும் பயணிக்க வாகனங்களும் பொழுது-போக்கு
ஒயில் கேளிக்கை கலை பல்வகை வளமுறு வாழ்க்கை இன்பம் கிட்டியதா.?

4.
கிட்டிய வசதி, வாய்ப்பு காட்டுச்-சூழல் எதுவெதுவோ எவ்வளவோ அம்மட்டில்
மட்டுமே திருப்தியொடு, கையில் உள்ளனவற்றை வைத்தே பெரு வாழ்க்கை
கொட்டும் மழை, கொடும் வெயில், புயல் வெள்ளம் இயற்கைச்சீற்றம் தாங்கி
நட்டமோ லாபமோ ஏற்று எக்கணமும் இன்புற ஓங்கி வாழ்கிறோம் மந்தியரே

5.
மந்தியர் நாங்கள் வாழத்தெரிந்தோம் மாந்தரே உம்மிலும் தாழ்-பிறவியோமே
சிந்திப்பீரா சீர் மிகு அறிவாற்றல் மிக்கோரே உன்னதப்-பிறவியரே வாழ்க்கை.?
முந்திக்கொண்டீர் இயற்கையோடு செயற்கை வளங்களும் கூட்டியே பின்னும்
பிந்தியே உம்-வாழ்க்கை நிம்மதி இல்லாப்-போராட்டம் இன்பம் எங்கே எங்கே.?

6.
எங்கும் இன்பம் வெளியே தேடாதீர் மாந்தரே உம்மிலும் தாழ்-பிறவி என எம்
பொங்கு வாழ்வு தரும் சொல்லை ஒதுக்காதீர், அன்பரே இன்பம் வெளியே
எங்கும் இல்லை உமது உள்ளேயே உளது, மனப்பக்குவத்தால் வாழ்-நெறியால்
மங்கா உறுதி முறைபட நாங்கள் வாழ்கிறோம் எனவே நல்விளைவே காட்டு

7.
காட்டு-வாழ்க்கை கொடிய சூழல் விடுத்து எம்முடன் வாழ வருக என எம்மை
நாட்டுள் வாழ அழைத்தால் நாங்கள் வருவோமோ விழைவோமோ உம் வசதி
மாட்டோம் வேண்டோம் நும் போலி-வாழ்க்கை எம்முடன் வாழ்ந்து பாருங்கள்
வாட்டும் சூழல் காட்டிலா நாட்டிலா, புரிபடும் அன்பர்காள் யார் மிருகங்கள்.?

8.
மிருகங்கள் எனக் கூட்டில் அடைத்து காசு-கொடுத்து வேடிக்கை பார்க்கும்
பெருமான்களே உங்களை நாங்கள்-தான் வேடிக்கை பார்க்கிறோம் உமது
சிறுமை-கண்டு சிரிக்கிறோம் உயர்-பிறவியே எனினும் அறிவுக் கண்-மூடிக்
குருடர்களே, குடிசை-வீட்டு சீமான்கள் நாங்கள் மாடி-வீட்டு ஏழை மனிதரே

9.
மனித-இனம் நாங்கள் மதிக்கிறோம் ஒரு-புறம் காரணம் எங்களால் இயலா
இனிய வாழ்க்கை முன்னேற்றங்களும் எம்மிலும் குறு உடல் வலத்தோரே
எனினும் எம்மையே அடக்கி ஆளும் அரும் பெரு வல்லமை கொண்டோரே
புனிதத்தால் புவியில் இறை-அருள் ஞான-விஞ்ஞானப் பகுத்து-அறிவோரே

10.
அறிவு நிலை-நாட்டு மனிதரே மெய்-வாழ்க்கை உம் நாட்டிலா.? பார் காட்டு
நரி, சிங்கம், புலி அனைய ஒவ்வொரு மிருகம், பறவை, பூச்சி அடையாளம்
தெரிந்து நாம் அததற்கு ஏற்ப முறை தூரம் நெருங்கியோ, ஒதுங்கியோ பழக
அறிவோம். ஆனால் உம் நாட்டு மனித-உரு மிருகங்களோடு வாழகில்லோம்.


-- தொடரும்.


.

Sudhaama
16th November 2010, 06:31 PM
.Shifted.

bis_mala
17th November 2010, 04:46 AM
எல்லாம் நன்று.

தெரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன்.

இந்தத் திரியின் தலைப்பில் - "ka-Vidhai" என்று பிரிக்கப் பட்டிருக்கிறதே, இப்படிப் பிரித்து எதை உணர்த்துகிறீர்கள்?


அன்புடன்

Sudhaama
17th November 2010, 06:58 PM
[tscii:5315797c61]
.


எல்லாம் நன்று.

தெரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன்.

இந்தத் திரியின் தலைப்பில் - "ka-Vidhai" என்று பிரிக்கப் பட்டிருக்கிறதே, இப்படிப் பிரித்து எதை உணர்த்துகிறீர்கள்?


அன்புடன்




மிக்க நன்றி சிவமாலா அன்பரே,


வெகு ஆவலுடன் நான் எதிர்பார்த்திருந்த கேள்வி இது.

உங்களது ஆர்வம் பாராட்டத்-தக்கது.

ஆனால் உங்களது கேள்விக்கு நான் மட்டும் விடை அளித்து-விட்டால் அதில் என்ன பெரும் சுவை.? சுவாரசியம்.?

ஏனைய அன்பர்களின் சிந்தனை கண்ணோட்ட விருந்துகளையும் நாம் கூடி அனுபவிப்பது அன்றோ இந்த பொது-அரங்க மேடையின் நோக்கம்.! அரும் சுவை.!!

எனவே உங்களது அறிவார்ந்த நல்வினாவுக்கு பிற அன்பர்களின் மறுமொழி-விடைகளை ஆவலுடன் எதிர்பார்த்து மேலும் சில நாட்கள் பொறுத்திருக்கிறேன்.

பின்னர் இறுதியாக விடை கூறுகிறேன்.



ஏனைய அன்பர்களே, தமிழ்-கூறும் நல் உலகோரே,

அன்பர் சிவமாலாவின் உரிய கேள்விக்கு விடையாக உங்களுக்குத் தோன்றுவது என்ன.?

….உங்களது சிந்தனைக்-குதிரைகளையும் ஓட விட்டு, அவரவர் நோக்கிலே….

…. எங்களுக்கு பல்சுவை கருத்து-விருந்து வழங்க ஆவலுடன் அழைக்கிறேன். வருக.

அன்புடன் – சுதாமா.

================================================== =====================



தாழ்-பிறவி மந்தியரே நாங்கள்.!!...


…கேவலம் வாயில்லாப்-பிராணி மிருகமே.!



உயர்-பிறவி மாந்தரே,


....உம்மிலும் சிறப்பாக வாழ்கிறோமே.! எப்படி.?



[html:5315797c61]
http://i129.photobucket.com/albums/p213/sudhaama/Sangeetha-Jan08/Monkey5.jpg [/html:5315797c61]



1.
வாழப்-பிறந்தோம் வையத்து மந்தியாக காட்டு-வாழ்க்கையே நம்-உலகம் இதுவே
சூழல் இவ்வாறே சுற்றுப்புறம் இன்னதே இப்படித்-தான் என எம் ஆதி-முன்னோர்
தோழர் பகை எவர்-எவர் பிற-மிருகம் ஏனையவையும் வலிந்து கவனித்துத் தாமே
ஆழக்-கற்ற அனுபவக்-கல்வியே எங்கள் வாழ்க்கைப்-பாடம் சந்ததி வழி-வழியே.!

2.
வழி-வழி வந்த அனுபவக்-கல்வி, முன்னோடியர் தந்த எழுத்தில்லா சாத்திர-விதி
கொழி-சுவர்க்கம், சுய-நெறியால் பிறர்-சாரா வாழத்-தெரிந்தோரே புவி வாழ-வலர்
பழி பிறர்-மீது சுமத்தா தன்-நெறி தானே வகுத்து முன்னெச்சரிக்கை ஜாக்கிரதை,
மொழி மா-அறிவரே தெரிந்தீர் செயல்-படுத்துகிறீரா.? கவனப்-பிசகு ஆபத்து வாழ

3.
வாழ நன்முறை விழைவோர் எப்போதும் மறவாது கொள்ள வேண்டிய நியதியாம்
வேழமே எனினும் கேவலம் ஓர் சிறு எறும்பும் கூட, மறைந்து தாக்கி மாய்க்குமே
தோழனே ஆயினும் முன்னெச்சரிக்கை முற்றிலும் சுயச்-சார்போடு கவனம் தேவை
சூழலைக் கணமும் நினைந்து உற்றுக்-கவனிப்பதே எமது சுபாவம் வாழ-விழித்தே.

4.
விழித்தே கூர்ந்து-கவனித்தால் தீ, மழை, புயல், பூகம்பம் முன்-அறிவிக்கும் சூழலே
சுழித்து-ஓடு நதி-அழகில் மயங்கிக்-குதித்தால் அதோ-கதி, மலைப்-பாம்பு மரக்-கொடி
குழி-சேறு மூடி புல்-தரை பூ-விரிப்போ புதைக்கும்; குளிர்-போக்கி சமை தீப்பொறியே
அழிக்கும் தீ, மயங்காதே பொழில்-எனினும் தழுவவோ மாயம் காட்டு இயற்கையே

5.
இயற்கையே நம் அன்னை நமக்கு ஊண் நீர் மூச்சு வாழ்-நிலம், தீ, வான் கூரையும்
மயக்கம்-உறு மாயா-ஜால உலகு ஆட்டிச் சுற்றி சுழற்றி இரவு-பகல் பருவ-மாற்றம்
வயல்-பயிர் தாவரம் பற்பல கனி, நதி அருவி கடல், தேன், மலர் மணம் பொழிலே
அயரா உழைத்தே நம்மைக்-காக்கும் தாயை நன்கு புரிந்து புரிகிறோம் பிரதி-கடமை

6.
பிரதி-கடமை உணர்வே உயர்-மாந்தரே வியந்து மந்தி-எம்மையே மதிக்க மன்னராய்
நரக-புவியிலும் சுவர்க்கம் காண்-பிறவி, பிற மிருகங்களினின்றும் உயரியரோம் தூய
தரம் மிகு மாண்-தகையராய் தலை-நிமிர்ந்து வாழ வகை செய்வனவே எம் சுய-நெறி,
பிறர்-நிலையில் நம்மை கற்பனை நினைந்து, வலிந்து அவரவர்க்குப் பணி நம் கடன்.

7.
கடனே வாழ்க்கை, இயற்கை ஓயாது ஒழியாது பணியாற்றி நம்மை வாழ-வைக்கும்
உடன் வாழ் தாய் நம்மைக் கேட்கவில்லை நாடவில்லை நமது பிரதி கடன் கடமை
ஜடம், மிருகம் பூச்சி அனைய தாழ்-படைப்புக்களோ வீண்.? புவி உயர்-பிறவியர் நாம்
அடர்-பொன் அறிவு-அலர் அருள்-உளம் வித்தியாசம் இலையோ பண்புறு சுய-நெறி?

8.
நெறி-பட வாழ்ந்து-பார் மாந்தே மந்தி நாங்கள் கண்ட அனுபவ-இலக்கணம் பிறரது
உரிமை நீரே வலிந்து முன்வந்து தந்தால், நற்பயன் உம்மைத் தாமே நாடித் தேடி
மரியாதை பெருமை அன்பு துணை உதவி சமுதாயம் தாமே தரும் பண்பு ஆதரவு
பெரிதும் பிறர் போற்ற தலை-நிமிர் மன்னர் ஆக்கும் இல்லையேல் போராட்டமே.

9.
போராட்ட வாழ்க்கை தாழ்-பிறவி பேதைமை மிருக-நெறி நாம் பின்பற்றத்-தக்கதோ
கோராத பிறர் உரிமை-என்றே, நாம் பட்ட பிரதி-கடனை வலிந்து வழங்காவிட்டால்
மாறாவார் பிறர் எதிரி-ஆகி தம்-உரிமை பிடுங்கிக்-கொள்வர், பேராசை, பொறாமை
ஏராளம் வாய்ப்பு புவி-சுவர்க்கம் தாழ்த்தவோ தீரா-நரகம் தாமே ஆக்கவோ மாந்தர்

10.
மாந்தரே வாழ்க்கை ஓர் உரிமையா கடமையா எனும் கேள்விக்கு விடை கடமை
ஆந்தனையும் பிறர்-நலமும் தன்னலம்-போல், நேர்மை வழுவா பந்தக்-கடன் நாடி
பாந்தம் அன்பு பந்தம் ஓர்-குடும்ப உணர்வு பண்பு ஒற்றுமை கூடி-ஓங்கு நோக்கம்
வேந்தராய் புவி சுவர்க்கம் வாழ-வைக்கும் உண்மை மந்தி எம்மைப் பார் புரிவீரா.?



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அரும் சொற்-பொருள்:

[பாந்தம் = நெருக்கம்; ---- ஆந்தனையும் = இயன்ற-அளவு; ---- பந்தக்-கடன் = Commitment; --- பந்தம் = Binding.]

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

-- தொடரும்

.[/tscii:5315797c61]