PDA

View Full Version : Kadan Kodutha kavithaigal...



Jyothsna
21st January 2011, 07:35 PM
கல்லூரியில் படிக்கும் போது தோழிகள் சிலர் காதல்வயப்பட்டிருந்தார்கள்.. தங்கள் உணர்வுகளை யாரிடமாவது கொட்டித் தீர்க்காமல் இவர்களுக்கு தூக்கம் வராது.. அதையே 4 வரிகளில் எழுதி கையில் கொடுத்து விட்டல் ஒரு இரண்டு நாள் காகிதம் கிழியும் வரை படிப்பார்கள்.அப்படி எழுதப்பட்ட கவிதைகள் இவை..

pavalamani pragasam
21st January 2011, 07:40 PM
ம்..ம்..சீக்கிரம் பதிவு செய்யுங்கள்! :P

Jyothsna
21st January 2011, 07:44 PM
பனியில் நனைந்த
மார்கழி கோலம் போல
உன் ஈர வர்ணங்களால்
நிறைத்துவிட்டாய் என்னை.

Jyothsna
21st January 2011, 07:47 PM
மழையில் நனைந்த
கிராமத்து ரயில் நிலையம் போல
உன் நினைவுகளில் நனைந்து
இன்னும் இன்னும்
அழகாகிக்கொண்டே இருக்கிறது
என் காதல்.

Jyothsna
21st January 2011, 07:50 PM
நிசப்தமும் இசையும்
கலந்திருந்த
ஏதோ ஒரு கணத்தில்தான்
உனக்கான காதல்
தோன்றி இருக்க வேண்டும்.

Jyothsna
21st January 2011, 07:52 PM
என்னதான் நீ வேண்டாம் என்று
நினைத்தாலும்
துவண்ட மலராக
உன் மடியில்
தலை சாய்க்கவே
தவிக்கிறது என் மனம்.

Jyothsna
21st January 2011, 07:55 PM
இரவும் பனியும்
சிந்திக்கொண்டிருக்க
உன் நினைவுகளின்
வெட்ப்பம் மட்டுமே
இதம் தருகிறது எனக்கு..

Jyothsna
21st January 2011, 08:20 PM
பனியில் நனைந்த
ஒரு டிசம்பர் இரவில்
நிலவொலியை பிரித்துக்கொடுத்த
வேம்பின் கீழ்
அழுகையினூடே சின்ன புன்னகையுடன்
தன்னை அடையாளம் காட்டியது
காதல்..
வறண்ட புன்னகையை
உதட்டில் நிறுத்தி
கண்ணீரில் கரைந்த
இதயத்தை மறைத்துக்கொண்டு
உரையாடிக் களைத்தேன்..
உன் அருகிருந்த
கணங்கள் அனைத்தும்
கணல் மூடிய பனியாக
கரைந்து உருக
மெல்ல மெல்ல
கருக்கொன்டது காதல்..

Jyothsna
21st January 2011, 08:31 PM
உன் கண் பார்க்க
தயங்கிய நொடியில்
துவங்கியது என் காதல்..
தினம் தினம்
அதிகாலை சிந்தும் ஒளியில்
சிலிர்த்துப் பூப்பேன்..
அந்திவேளையில் உதிரும்
என் மயங்கிய பூக்களை
எடுக்க வரும் நீ,
வேரும் வேரடி மன்னுமாய்
என்னையே சாய்த்துவிட்டு போவாய்..
உன் மடியில் விழுவதாய் எண்ணி
மகிழ்ச்சியோடு சாய்வேன்.
நீயோ என் பூக்களைப்
பிய்த்தபடி தூரத்தில் எங்கோ..
எனினும் உனக்கென் உதிர்வது
நிற்கவே இல்லை.
நீ பார்க்காமல் மலர்வதைவிட
சருகாய் உன் கைகளில்
சிதையவே விரும்புகிறேன் நான்..

pavalamani pragasam
21st January 2011, 08:36 PM
பித்தம் தலைக்கேறிய பொழுதுகளின் பிரத்தியேக பிரகடனங்கள்! :lol:

Jyothsna
21st January 2011, 08:40 PM
உன்னை காதலிக்கும்
ஒவ்வொரு கணமும்
ஜனனமும் மரணமும்
ஒருசேர நிகழ்கிறது என்னுள்..
ஜனிக்கும் ஒவ்வொரு முறையும்
உன் காதல்
மழை மேகம் படிந்த
சிறு வானவில்லை
எனக்கு பரிசாகத் தரும்..
உபரியாக நீ தரும்
அசரடிக்கும் அன்பு,
சின்ன அனைப்பு,
சிலிர்க்கும் தீண்டல்,
சிரிக்கும் கண்கள்,
சிவக்கும் கன்னம்,
அத்தனையும் சேர்ந்து
சந்தோஷத்தில் சாகடிக்கும்..
எனினும் மீண்டும் மீண்டும்
பிறப்பேன்.. உனக்காக.

Jyothsna
21st January 2011, 08:42 PM
பித்தம் தலைக்கேறிய பொழுதுகளின் பிரத்தியேக பிரகடனங்கள்! :lol:

அந்த சமயத்தில் அது புரியாததுதானே பிரச்சிணையே.. :P

pavalamani pragasam
21st January 2011, 08:43 PM
:yes: :exactly: :rotfl3:

Jyothsna
21st January 2011, 08:45 PM
நன்றி சொன்னால்
ஒரு புன்னகை
போதுமென்கிறாய்..
ஒவ்வொரு முறை
புன்னகைக்கும் போதும்
நன்றி சேர்ந்துவிடுமே
அப்போதென்ன செய்வாய்..

Jyothsna
21st January 2011, 08:49 PM
உன் தோளில் சாய்ந்தால்
நண்பனாகவும்..
மார்பில் சாய்ந்தால்
காதலனாகவும்..
மடியில் விழுந்தால்
தாயாகவும்..
எப்படி மாறி மாறி
தேற்ற முடிகிறது
உன்னால்..

Jyothsna
21st January 2011, 08:53 PM
நீ "ஹய்யோ" என்று
தலையில் அடித்துக்கொண்டு
சிரிப்பதை பார்ப்பதற்காகவே
சிறுபிள்ளைதனங்கள் செய்து
குழந்தையாகவே மாறிவிட்டேன்..

Jyothsna
21st January 2011, 09:06 PM
பின்பனி காலத்தின்
ஏறுவெயில் போல
இதமாய்தான் இருக்கிறது
உன் காதல்..

Jyothsna
21st January 2011, 09:11 PM
ஏதோ ஒரு ரயில்பயணத்தில் கேட்ட
இனம்காணமுடியாத
எனக்கு பிடித்த பாடலின்
இசைத்துணுக்கைபோல
என்னுள் எப்போதும்
ரீஙகரித்துக்கோண்டே இருக்கிறாய் நீ..

Jyothsna
21st January 2011, 09:16 PM
மழை பெய்தால்
மின்னலை ரசிப்பவள் நான்..
இப்போதோ
உன் மேலான
காதலைப் பற்றி
நினைத்தாலே
நடுக்கம்கொள்கிறது எனக்கு..

Jyothsna
21st January 2011, 09:21 PM
பின்னிரவு நேரங்களில்
பேசிக்கொண்டிருக்கும் போது
வார்த்தைகளற்ற
மௌனத்தில் பூக்கும்
புன்னகையில்தான்
நம் காதல்
ஒளிந்திருக்கிறது..

kavithaipen
10th February 2011, 07:30 PM
Unggel kavithaigal migavum arumei!

SoftSword
10th February 2011, 07:58 PM
oru doubt...
indha kavidhaigal ellaam aanpaalaa penpaalaa?

kaveri kannan
4th March 2013, 10:18 AM
பதின்ம வயதுகளின் பின்பாதி... உடல் மட்டும் வேகமாக முதிர்ந்துவிட , மூளை இன்னும் வளர்ந்துகொண்டே வர..

நல்ல ஒரு பென்ஸ் காரை ( உடலை), அரைகுறை ஓட்டுநர் ( மூளை) செலுத்தும் ஒரு தவிர்க்க இயலா இனிய அபாயக் காலகட்டம்..

ஒவ்வொருவரும் கடந்தே ஆகவேண்டிய ஹார்மோன் சம்மேளனச் சதுக்கம்.. ஹார்மோன் என்பதன் பொருளே : To get started!

எனவே இக்காலகட்டங்களில் நிறைய கார் ஓட்டி, நிறைய அனுபவம் சேகரித்து, அதிவேகம் கண்டு, சின்னச் சின்ன விபத்துகளில் சிராய்த்து...


ஆஹா.... Without experiments and accidents - it cannot be teenage!
அந்த விபத்துகள் இப்படி மழைக்கால புகைவண்டி நிலையம், உனக்கான சருகாய் என அழகான கவிதைகளாய் விளையும்போது...

காதலின் சுகமான பக்கவிளவுகள் கவிதைகள்..
அது '' கடன்'' வாங்கிய காதலான போதும்!

ரசிக்க வைத்த கவிதைகளுக்கு நன்றி ஜோத்சனா அவர்களே!