PDA

View Full Version : Vadugapatti Vairamuthu



venkkiram
27th January 2011, 09:57 PM
வைரமுத்து

இத்திரியில் கவிஞர், திரையிசைப் பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் வைரமுத்துவின் கவிதைகள், பாடல்கள் மற்றும் நூல்களைப் பற்றிய உங்களது பார்வைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

venkkiram
27th January 2011, 09:57 PM
கவிஞருக்கான இணையத்தளம் : வைரமுத்து. வலை. (http://www.vairamuthu.net/)

venkkiram
27th January 2011, 09:58 PM
வைரமுத்து கவிதைகள் (http://vairamuththu-kavithai.blogspot.com/)

venkkiram
27th January 2011, 09:58 PM
வைரமுத்து:ஆளுமைச்சித்திரம் (http://www.jeyamohan.in/?p=594)
-- ஜெயமோகன்

hamid
27th January 2011, 10:18 PM
Tgood thread.
thanniir desam..all time favourite.
Kavirajan kathai is another one.
Will discuss in detail tomorrow.

venkkiram
27th January 2011, 10:37 PM
Tgood thread.
thanniir desam..all time favourite.
எனக்கும் பிடிக்கும் ஹமித். ஆரம்பமே அழகா இருக்கும். கடலைப் பற்றிய விவரணையோடு நூலை இவ்வாறு தொடங்குகிறார்.

கடல்.
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.

venkkiram
27th January 2011, 11:27 PM
தண்ணீர் தேசத்தில் பல உவமைகள் கவர்ந்தவை. அவற்றுள் சில..

நிலவைப் பெற்றெடுப்பதற்கு பிரசவ
வலியில் சிவந்து கொண்டிருக்கும் கிழக்கு.

தண்ணீரில் எடையிழக்கும் பாரம்போல்
துன்பம் எடையிழந்தது.

வாடைக் காற்றுக்கு
தூக்கத்தில் நடக்கிற வியாதி
போலும். தட்டுத் தடுமாறி
வீசிக்கொண்டிருந்தது.

பொறுமையாயிருந்தால் தண்ணீரைக் கூடச்
சல்லடையில் அள்ளலாம் - அது பனிக்
கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்.

உணவைப் போலவே
உரையாடலும் மெள்ள மெள்ள
சுருங்கிவிட்டது.

நகைச்சுவையும் அங்கங்கே..

ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு சுதியில்
சமையலறையிலுருந்து சலிம் பாடினான்.

மீன்களுக்கு மட்டும் காது கேட்குமானால்
அவன் அறுப்பதற்கு முன்பே மரித்திருக்கும்.

geno
28th January 2011, 01:36 AM
(குறிப்பு: ஏப்பிரல் - மே 2009 -வாக்கில் வைரமுத்துவால் எழுதப்பட்டது - தினத்தந்தியிலும் இக்கவிதை மே 2009 -இல் வெளிவந்தது)

இனம் தின்னும் ராஜபட்சே
---------------------------------

சொந்தநாய்களுக்குச்
சொத்தெழுதிவைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நெஞ்சிரங்க மாட்டீரா?

பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!

ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தின் வட்டத்தில்
மனித குலம் நிற்கிறதே!
மனம் அருள மாட்டீரா?

வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
ரொட்டி ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டும் விரல்கள்
கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்களவெறிக் கூத்துகளை
அறிந்தும் அறியாயோ ஐ.நாவே?

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கதறும் தாய்மார் மறந்தொழிந்தாயோ
அழத்தெரியாத ஐரோப்பாவே!

அடுக்கிவைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
பெருங்குரல் கேட்டிலையோ பிரிட்டிஷ் அரசே!

எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராட்சசபக்ஷே மீதல்ல

ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல

எம்மைக்
குறையாண்மை செய்திருக்கும்
இறையாண்மை மீதுதான்


குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்ட முடியவில்லையே

ஆனாலும்
போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல

எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்

பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனைமரத்தில்
என்றேனும் கூடுகட்டும்.

========================

சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும் - வைரமுத்து, அவருடைய "இனத் தலைவரை" - இதில் விளிக்கவேயில்லை!

"அவரை" விளிப்பது பொருத்தமில்லை / பயனில்லை என்றுதான் - அய்ரோப்பாவே, அமெரிக்காவே - என்று நன்றாகவே கூவுகிறாரோ?.

இந்தக் "கிராமத்துப் பறவையை" - சில பல கடல்கள் தாண்டி அழைத்துப் போன ஈழத்தவர்களுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்.

இவர், முதலில் தனக்கு வழங்கப்பட்ட "பத்ம சிறீ" விருதைத் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லது இதுபோல மாய்மாலக் கவிதைகள் எழுதாமல் சும்மா கிடக்கட்டும்.

இவருடைய தலைவருடன் அதிகாலைத் தொலைபேசிப் பொழுது போக்கட்டும்; தமிழர்களை மடையர்களென்று இவர் இன்னமும் நினைக்க வேண்டியதில்லை.

" தனது லட்சியங்களுக்கு எதிரான திசையில் காலில் குருதி வடிய" (அவருடைய சொல்லாடல்தான்!) ஓடிக்கொண்டிருக்கும் வைரமுத்து - தனது பேனா முனையை ஒடித்து விடுவது நல்லது.

baroque
28th January 2011, 02:00 AM
கவிராஜன் கதை.
கள்ளிக்காட்டு இதிகாசம்
சிகரங்கள் நோக்கி
தண்ணீர் தேசம்.
வில்லோடு வா நிலவே
கருவாச்சி காவியம்
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

so many wonderful literary works கவிஞர் வைரமுத்து has given us
கொஞ்சம் தேநீர் நிறைய வானம் is a wonderful collection of கவிதைகள்.
EVER SINCE I READ முதன் முதலாய் அம்மாவுக்கு....கவிதை , WHENEVER I PREPARE கொத்தமல்லிச் சட்னி .. MY HEART AUTOMATICALLY WONDER 'இன்னிக்கு வைரமுத்து சார்'S அம்மா மாதிரி செய்யலாமா OR GRIND WITH TOMATOES OR VARIATION PREPARATION'.. SIMPLY I CAN 'T AVOID THAT THOUGHT ...பழகிப்போச்சு.

பெய்யெனப் பெய்யும் மழை புத்தகத்தில் மழைக்குருவி என்ற கவிதை எனக்கு ரொம்ப பிடித்தமானது...
HIS LOVE FOR NATURE .

கொஞ்சம் தேநீர் நிறைய வானம் புத்தகத்தில் ஒரு காலத்தில் ஒரு குளம் இருந்தது.....makes me think always .

மனுசப் பயகூடி
மண்ண ஏமாத்த
மழையெல்லாம் கூடி
மனுசன ஏமாத்த ..

so true .

when I first moved to அமெரிக்கா, best thing I loved is running WATER .

I grew up in a middle class family , my mom used wake me up to carry water or wait for our turn with the clock in a ஒண்டுக்குடுத்தனம் ஏரியா.
கடிகாரம் வைச்சு ஒவ்வொரு குடித்தனமும் 5 mins பிடிப்பாங்க , குடம், வாளி வைச்சு or tube போட்டு .. you needed to be ready for your turn or you lost இட்..இல்லைன்னா பக்கத்து வீட்டுலே சொல்லணும், morning வேலை இருக்கு, நீங்க பிடிங்க நான் உங்க turn லே பிடிக்கறேன் என்று . :(

She was working too . She needed her children and hubby co -operation to carry out the household chores . Every day a working class lady had this taxing chore. Poor lady, பாவம் எங்க அம்மா.

Everyday after my walk or come inside from outside when i wash my legs in my yard water tap here , my heart automatically wishes "GOD BLESS AMERICA ".மனசு உண்மையா சொல்லிக்கும்.

தேங்க்ஸ் TO மேடம்.ஜெயலலிதா for THE WONDERFUL PROGRAM -RAIN WATER HARVESTING SCHEME TO RELIEF WATER SHORTAGE .
HOPE IT HELPS REGULAR FOLKS . Basic need - WATER .
வினதா.

venkkiram
28th January 2011, 02:24 AM
சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும் - வைரமுத்து "அவருடைய இனத் தலைவரை" - இதில் விளிக்கவேயில்லை!

"அவரை" விளித்து பயனில்லை என்றுதான் - அய்ரோப்பாவே, அமெரிக்காவே - என்று நன்றாகவே கூவுகிறாரோ?.

இந்தக் "கிராமத்துப் பறவையை" - சில பல கடல்கள் தாண்டி அழைத்துப் போன ஈழத்தவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

இவர், முதலில் தனக்கு வழங்கப்பட்ட "பத்ம சிறீ" விருதைத் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லது இதுபோல மாய்மாலக் கவிதைகள் எழுதாமல் சும்மா கிடக்கட்டும்.

இவருடைய தலைவருடன் அதிகாலை தொலைபேசி பொழுது போக்கட்டும்; தமிழர்களை மடையர்களென்று இவர் இன்னமும் நினைக்க வேண்டியதில்லை.

" தனது லட்சியங்களுக்கு எதிரான திசையில் காலில் குருதி வடிய" (அவருடைய சொல்லாடல்தான்!) ஓடிக்கொண்டிருக்கும் வைரமுத்து - தனது பேனா முனையை ஒடித்து விடுவது நல்லது.மனதில் கொஞ்சமாவது ஈரம் இருப்பதனாலேயே இப்படிப்பட்ட கவிதைகளை எழுதினார். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் தன் கோபத்தை எழுத்தில் வடித்திருக்கிறார். இந்த கவிதை மட்டுமல்ல, விடை கொடு எங்கள் நாடே! என்ற கன்னத்தில் முத்தமிட்டால் படப் பாடலும் உண்டு.

உங்கள் தார்மீக கோபத்தினை ஈழத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்த அப்துல் கலாமிடம் காட்டுங்கள். அரசியல் வாதிகளிடம் காட்டுங்கள். அதை விட்டு கலைஞர்களை, புலவர்களை "விருதுகளை திருப்பிக் கொடுங்கள்!" எனச் சொல்வதில் விவேகமே இல்லை. கமலிடம் இதுபோன்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஒரு பதில் நச்சென்று சொல்லியிருந்தார். இப்போ ஞாபகம் வரமாட்டேஙுது.

baroque
28th January 2011, 05:55 AM
couple of poetry on காதல், காதலன்-காதலி பிரிந்து பின்னாளில் வாழ்க்கையில் சந்திக்கும் போது போன்ற situations etc ..
ரொம்ப அருமையாக இருக்கும்.

இப்படி எத்தனை காதல் கதைகளோ...... பெய்யென பெய்யும் மழை புத்தகம்.
'சிதைந்தது மனது
கருவேல மரத்தில் சிக்கிய பட்டமாய்...'

இலையில் தங்கிய துளிகள்....கொஞ்சம் தேநீர் நிறைய வானம் புத்தகம்.

கவிஞரின் private works ரொம்ப அருமையாக இருக்கும்.

வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் வாங்கிவிட்டேன், அய்யா.
I need to organize myself , உக்காந்து படிப்பேன்.

There is வைரமுத்து கவிதைகள் - பெரிய தடியான 885 பக்கங்கள் உள்ள BOOK FROM EARLY 70S TO LATE 90 .. OH WHAT A FEAST.

I love it.
vinatha.

venkkiram
28th January 2011, 07:54 AM
ஊழி.

நிலையாமை ஒன்றே நிலையானது என்பது நிலைத்த உண்மை. ஆனால், இந்தக் கவிதையில் நான் நிலையாமை பேசியிருப்பது மானுடத்தை மாயாவாதத்தில் தள்ள அல்ல. இருக்கும் பூமிக்கு இன்னொரு சிறகு கட்ட; அழிவை உழுது அன்பு விதைக்க.

கடைசியாய் ஒருமுறை
கூவிக்கொள்க குயில்களே!

கடைசியாய் ஒருமுறை
வான்பாருங்கள் மலர்களே!

இப்போது வழங்கும் முத்தத்திலிருந்து
இதழ்பிரிக்காதீர் காதலரே!

மார்புகுடிக்கும் மழலைகளைத்
தள்ளிவிடாதீர் தாயர்களே!

எது நேரக்கூடாதோ
அது நேரப்போகிறது

சிறிது நேரம்தான்...
பூமி சிதறப்போகிறது

நாலரைக்கோடி ஆண்டுகளின்
அடையாளச் சின்னம்
அழியப் போகிறது

சூரியக்குயவன் செய்த
பெரிய மண்பானை
உடையப் போகிறது

* * * * *
திட்டுத்திட்டாய் பூமிக்குள்ளிருக்கும்
தட்டுக்கள் எழும்
ஒன்றன்மீதொன்று படையெடுக்க...

பூமியின் வயிற்றெரிச்சலாய்க்
காலங்காலமாய்க் கனன்றுகிடந்த
அக்கினிக்குழம்புகள் விடுதலைகேட்க...

வெறிகொண்ட மேகங்கள்
விரைவதைப்போலப்
பாறைகள் பூமிக்குள்
பயணப்பட...

தொடங்கிவிட்டது தொடங்கிவிட்டது
பூமிக்குள் ஒரு குருட்சேத்திரம்

* * * * *
பறவைகளுக்கு மூக்குவேர்த்தது
விலங்குகளுக்கு விளங்கிவிட்டது

குஞ்சுபிறக்கத் திறக்கும் முட்டைபோல்
பொத்துக்கொண்டது பூமியின் ஓடு

ஜீசஸ்! ஈஸ்வரா! அல்லா! முருகா!
காற்றில் சமாதியாயின கதறல்கள்

* * * * *
வான் நடுங்கியது
பூமியின் இடியில்

மேகம் நனைந்தது
கடல்களின் அலையில்

பூமியின் வயிற்றில்
புகுந்தன தேசங்கள்

கடல்களை எரித்தது
அக்கினிக் குழம்பு

குன்று பெயர்த்துக்
கோலி ஆடியது காற்று

* * * * *
பாளம்பாளமாய்
பூமி பிளக்க...

பூகம்ப அளவை சொல்லும்
ரிக்டர் வெடிக்க...

ஊழித்தீயின் உச்சிப்பொறிகள்
கண்டம் விட்டுக் கண்டம் குதிக்க...

அவரவர் வீடு அவரவர் கல்லறை

* * * * *

மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது
மலை பறித்த பள்ளத்தில்
கடல் அள்ளி ஊற்றியது
பூகோளம் தெரியாத பூகம்பம்!

தன் சுற்று வட்டம்
இடவலமா வல இடமா
முதன்முதலில் பூமிக்குச் சந்தேகம் வந்தது

பட்டாசு கொளுத்திய புட்டியாய்
பூமிப்பந்து பொடியாதல் கண்டு
விசும்பியது விசும்பு

எல்லா மேகங்களையும் இழுத்துத்
தன் ஒற்றைக்கண்ணை மூடிக்கொண்டது

* * * * *
பூகோளம் அறியா பூகம்பத்திற்குச்
சரித்திரம் எங்கேதெரியப்போகிறது

பிரமிடுகளைப் பிய்த்துப்பிடுங்கி
மம்மிகளை எல்லாம் வெளியேற்றியது

உள்ளே
புதிய பிணங்களைப் போட்டுப்போனது

பசிபிக்கின் கன்னத்தில்
மச்சங்களாயிருந்த ஹவாய்த் தீவுகள்
பருக்காய் உதிர்ந்தனவே!

மூவாயிரம் ஆண்டு மூத்தமரங்கள்
வேரில்லாத பென்சில்களாய்
வீழ்ந்து கழிந்தனவே!

நிமிர்ந்ததெல்லாம்
சாய்ந்து போனதில்
சாய்ந்த ஒன்று நிமிர்ந்துகொண்டது
பைசா கோபுரம்!

* * * * *
அட்லாண்டிக் தூக்கியெறிந்த
அலையன்று விழுந்ததில்
சகாப்த உறக்கம் கலைந்தது - சகாரா

விழுந்த அலை எழுவதற்குள்
சகாரா பாவம் சமுத்திரமானது

சீனப் பெருஞ்சுவர் எடுத்துப்
பாக்குப் போட்டுக்கொண்ட பூகம்பம்
தாஜ்மகாலைச் சுண்ணாம்பாய்த்
தகர்த்துக்கொண்டு
வெற்றிலைபோட ஓடியது
ஆப்பிரிக்கக் காட்டுக்கு.

இன்னொரு கிரகம் ஏகக் கருதி
ஆக்சிஜன் தாண்டிய உயரம் பறந்து
இறந்து விழுந்தன இந்தியப் புறாக்கள்

உறுப்புகள் இடம்மாறிப்போன பூமி கேட்டது :
இது இறப்பா?
இன்னொரு பிறப்பா?

* * * * *
எது நைல்? எது தேம்ஸ்?
எது கங்கை? எது அமேசான்?
எது காவிரி? எது வால்கா?
பிரித்துச் சொல்ல நதிகள் இல்லை
பெயர்கள் வைத்தவன் எவனுமில்லை

எது சீனா? எது ரஷ்யா?
எது இந்தியா? எது அமெரிக்கா?
எது ஈரான்? எது லெபனான்?
பிரித்துச் சொல்ல தேசம் இல்லை
பிரஜை என்று யாருமில்லை

சுவாசிக்க ஆள்தேடி
அலைந்தது காற்று

துள்ள ஒரு மீனில்லை
துடித்தது அலை

* * * * *
வெறுமை...வெறுமை...
தோன்றியபோது
தோன்றிய வெறுமை
மீண்டும் அமீபா...
மீண்டும் பாரமேசியம்...

மனிதா!
வருகின்ற பூகம்பம்
வரட்டும் என்றாவது

போர்களை நிறுத்து
புன்னகை உடுத்து

பூமியை நேசி
பூக்களை ரசி

மனிதரை மதி
மண்ணைத் துதி
இன்றாவது.

* * * * *

pavalamani pragasam
28th January 2011, 09:12 AM
(குறிப்பு: ஏப்பிரல் - மே 2009 -வாக்கில் வைரமுத்துவால் எழுதப்பட்டது - தினத்தந்தியிலும் இக்கவிதை மே 2009 -இல் வெளிவந்தது)

இனம் தின்னும் ராஜபட்சே
---------------------------------

சொந்தநாய்களுக்குச்
சொத்தெழுதிவைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நெஞ்சிரங்க மாட்டீரா?

பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!

ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தின் வட்டத்தில்
மனித குலம் நிற்கிறதே!
மனம் அருள மாட்டீரா?

வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
ரொட்டி ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டும் விரல்கள்
கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்களவெறிக் கூத்துகளை
அறிந்தும் அறியாயோ ஐ.நாவே?

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கதறும் தாய்மார் மறந்தொழிந்தாயோ
அழத்தெரியாத ஐரோப்பாவே!

அடுக்கிவைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
பெருங்குரல் கேட்டிலையோ பிரிட்டிஷ் அரசே!

எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராட்சசபக்ஷே மீதல்ல

ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல

எம்மைக்
குறையாண்மை செய்திருக்கும்
இறையாண்மை மீதுதான்


குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்ட முடியவில்லையே

ஆனாலும்
போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல

எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்

பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனைமரத்தில்
என்றேனும் கூடுகட்டும்.

========================

சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும் - வைரமுத்து, அவருடைய "இனத் தலைவரை" - இதில் விளிக்கவேயில்லை!

"அவரை" விளிப்பது பொருத்தமில்லை / பயனில்லை என்றுதான் - அய்ரோப்பாவே, அமெரிக்காவே - என்று நன்றாகவே கூவுகிறாரோ?.

இந்தக் "கிராமத்துப் பறவையை" - சில பல கடல்கள் தாண்டி அழைத்துப் போன ஈழத்தவர்களுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்.

இவர், முதலில் தனக்கு வழங்கப்பட்ட "பத்ம சிறீ" விருதைத் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லது இதுபோல மாய்மாலக் கவிதைகள் எழுதாமல் சும்மா கிடக்கட்டும்.

இவருடைய தலைவருடன் அதிகாலைத் தொலைபேசிப் பொழுது போக்கட்டும்; தமிழர்களை மடையர்களென்று இவர் இன்னமும் நினைக்க வேண்டியதில்லை.

" தனது லட்சியங்களுக்கு எதிரான திசையில் காலில் குருதி வடிய" (அவருடைய சொல்லாடல்தான்!) ஓடிக்கொண்டிருக்கும் வைரமுத்து - தனது பேனா முனையை ஒடித்து விடுவது நல்லது.

:clap: :clap: :clap:
பாட்டமி? பகுத்தறிவுக்கு இடிக்கிறதே!

jaiganes
28th January 2011, 09:31 AM
சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும் - வைரமுத்து "அவருடைய இனத் தலைவரை" - இதில் விளிக்கவேயில்லை!

"அவரை" விளித்து பயனில்லை என்றுதான் - அய்ரோப்பாவே, அமெரிக்காவே - என்று நன்றாகவே கூவுகிறாரோ?.

இந்தக் "கிராமத்துப் பறவையை" - சில பல கடல்கள் தாண்டி அழைத்துப் போன ஈழத்தவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

இவர், முதலில் தனக்கு வழங்கப்பட்ட "பத்ம சிறீ" விருதைத் திருப்பித் தந்துவிடட்டும்; அல்லது இதுபோல மாய்மாலக் கவிதைகள் எழுதாமல் சும்மா கிடக்கட்டும்.

இவருடைய தலைவருடன் அதிகாலை தொலைபேசி பொழுது போக்கட்டும்; தமிழர்களை மடையர்களென்று இவர் இன்னமும் நினைக்க வேண்டியதில்லை.

" தனது லட்சியங்களுக்கு எதிரான திசையில் காலில் குருதி வடிய" (அவருடைய சொல்லாடல்தான்!) ஓடிக்கொண்டிருக்கும் வைரமுத்து - தனது பேனா முனையை ஒடித்து விடுவது நல்லது.மனதில் கொஞ்சமாவது ஈரம் இருப்பதனாலேயே இப்படிப்பட்ட கவிதைகளை எழுதினார். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் தன் கோபத்தை எழுத்தில் வடித்திருக்கிறார். இந்த கவிதை மட்டுமல்ல, விடை கொடு எங்கள் நாடே! என்ற ஆயுத எழுத்து படப் பாடலும் உண்டு.

உங்கள் தார்மீக கோபத்தினை ஈழத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்த அப்துல் கலாமிடம் காட்டுங்கள். அரசியல் வாதிகளிடம் காட்டுங்கள். அதை விட்டு கலைஞர்களை, புலவர்களை "விருதுகளை திருப்பிக் கொடுங்கள்!" எனச் சொல்வதில் விவேகமே இல்லை. கமலிடம் இதுபோன்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஒரு பதில் நச்சென்று சொல்லியிருந்தார். இப்போ ஞாபகம் வரமாட்டேஙுது.விடை கொடு எங்கள் நாடே, கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கக எழுதப்பட்டது.

venkkiram
28th January 2011, 09:32 AM
நண்பா உனக்கொரு வெண்பா என்ற தலைப்பில் உயிர்க்கொல்லி நோயாம் எய்ட்ஸ் பற்றி சில வெண்பாக்களை எழுதியிருக்கிறார்.

*******
ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே - பாரடா
வையத்தில் மானுடம் வாழுமோ என்னுமோர்
அய்யத்தில் உள்ளோம் அடா!
*******
போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய பாலுறவில் - காதைக்
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
நுழையும் உயிர்க்கொல்லி நோய்!
*******
இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்
எடைகாட்டி இன்பம் இழைப்பாள் - மடையா
கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை
விலைமகள் ஆசை விடு!
*******
கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ
புண்ணுக்குள் சென்று புலன்கொல்லும் - கண்ணா
முறையோடு சேராத மோகம் பிறந்தால்
உறையோடு போர்செய்தே உய்!
*******
கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில்
உறைமீறி நோய்சேர்வ துண்டே - உறைநம்பிக்
கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல்
சும்மா இருத்தல் சுகம்!
*******
தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
கற்பனையை வீட்டுக்குள் காட்டு!
*******
கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத்
தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே
காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால்
கோவலனைக் கூசாமல் கொல்!
*******
ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
செயற்கை உறவென்ன சீ!
*******
தேன்குடிக்கப் போன திருவிடத்தில் உன்னுடைய
ஊன்குடிக்க ஒட்டும் உயிர்க்கொல்லி - ஆண்மகனே!
உல்லாச நோய்சிறிய ஓட்டையிலும் உட்புகுமே
சல்லாப வாசலைச் சாத்து!
*******
மோகக் கிறுக்கில் முறைதவறிப் போனவர்கள்
தேகம் இளைத்தபடி தேய்கின்றார் - ஆகப்
பொறுப்பற்ற வாழ்வில் புகுந்தபலர் இங்கே
உறுப்பற்றுப் போவார் உணர்!
*******
பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
கண்ணைக் கெடுக்கும் கலைகளை - இன்றே
எரியூட்ட வேண்டும் இளைய குலம்வாழ
அறிவூட்ட வேண்டும் அறி!
*******
துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
மானுடத்தை வாழ்விப்போம் வா!
*******

venkkiram
28th January 2011, 09:35 AM
விடை கொடு எங்கள் நாடே, கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கக எழுதப்பட்டது.நன்றி. பிழை திருத்தி விட்டேன்.

baroque
28th January 2011, 09:44 AM
ஒத்தையடிப் பாதையிலே
ஊர்வலமாப் போறவளே
வெட்டரிவா வச்சவளே
விந்திவிந்திப் போறதெங்கே?....

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல ...புத்த்கத்திலிருந்து
ஒரு நாட்டுப்புற கவிதை எனக்கு ரொம்ப பிடித்தமானது.

I love this collection not only for கவிஞரின் கவிதைகள், it is extra special.

முன்னுரை, கவிஞரின் மனைவி ரொம்ப அழகாக எழுதி இருக்காங்க.

அவங்களே பெரிய கவிஞர், எழுத்தாளர்.

முன்னுரை படிக்கும் போதே அவங்களுக்கு அவங்க கணவரின் மீதான காதல் , பெருமை, admiration பளிச்சுன்னு தெரியும்.

very intimate & proud thoughts from her heart .

மனதிற்கு நிறைவான முன்னுரை , எத்தனையோ தடவை நான் முன்னுரை மட்டுமே படித்து , சந்தோஷமா புத்தகத்தை
மேலேயே வைத்துக்கொண்டு தூங்கிருக்கேன்....beautiful
I just melt. :)

very happy for them .

love ,
வினதா.

hamid
28th January 2011, 10:17 AM
last book fairla enakku entha vairamuthu book irukku, ethu illennu kozappama irukkum..

Thannir desam is the best I have read.. naraiya lines supera irukkum.. like
"Thanthi vanthaal iranthu pokum uLLangkaL padaiththu vittoom"

time to recollect and enjoy them.. :)

hamid
28th January 2011, 10:20 AM
காதலிக்கும்போதும் கம்பீரம் குறையாதவன்.

hamid
28th January 2011, 10:21 AM
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது

hamid
28th January 2011, 10:23 AM
நம்ப முடியவில்லை.

உண்மைக்கு உலகம் வைத்த
புனைப்பெயர் அதுதான்

hamid
28th January 2011, 10:29 AM
சொன்தத்தில் விமானம் வாங்கலாம்..
அனுபவம் வாங்க முடியுமா?

hamid
28th January 2011, 10:34 AM
enkitta irukkira PDF-la copy paste panna mudiyala.. anybody have a better copy which can be copy pasted here too?

Sureshs65
28th January 2011, 03:24 PM
Venki,

I fully agree with you that for everytime when there is some problem asking an artist to return back his / her awards is ridiculous. This has been happening too often.

At the same time, there is some merit in what geno says about the people left out in that poem by VM. Especially when he left out some people who were / are in power and who could have made a difference. What use calling the US and UN when you can't get your own ruler to do something about the tragedy? That aspect of being close to some people compromises his poetry as is evident in that poem. I have to accept it though I personally consider him the best film lyricist around. Wish he was more independent but then not all our wishes are granted, are they?

pavalamani pragasam
28th January 2011, 04:29 PM
:clap: :clap: :clap: Suresh, you have echoed my exact opinion!I too admire his poetry, a regular fan indeed. But geno has a point, it must be conceded.

Roshan
28th January 2011, 04:43 PM
Venki, thanks for dedicating a thread for Vairamuthu :D :thumbsup:
And I like the title "Vadugapatti Vairamuthu" :)


Hamid,

Glad that you love Thanneer Dhaesam, one of my all time favourites. It's just difficult to quote one or two lines from it - the whole book is a great read in terms of poetic marvel and content. It's an experience !

Keep writing about it, it will be useful for those who have not experienced it. Naanum appappO contribute paNRaen :)

Vinatha, ஒத்தையடிப் பாதையிலே poetry is again a great one that showcases VM's mastery skills in "graamiya kavithaigaL" (he is a master with village/folk song lyrics too). I remember some lovely discussions on this particular poetry, steered mainly by geno in ulagam enbathu ethanai paer thread few years back. Will find and quote it here soon :)

baroque
28th January 2011, 10:36 PM
Great, Please do. :)

கவிஞரின் கிராமியப்பாடல்கள் - From early 80s முதல் மரியாதை to current தென்மேற்குப் பருவக்காற்று (2011 ) FANTASTIC. :musicsmile:

remember all those compositions in தமிழ் films
ஆச கேப்ப களிக்காச
ஆச கெளுத்தி மீனுக்காச

அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக.....

ஆவாரம்பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு....பாலா & ஜானு.
அச்சமில்லை அச்சமில்லை பாடல்கள்

காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே..... title song of மலையூர் மம்பட்டியான்

கண்ணான பூ மகனே......

கருத்தம்மா பாடல்கள்.
:musicsmile:
vinatha.

Roshan
28th January 2011, 10:57 PM
Hi Vinatha, I though I'd first post the poetry and then geno's post. So here we go...

விறகு


அவன்

ஒத்தையடிப் பாதையிலே
ஊர்வலமாப் போறவளே
வெட்டரிவா வச்சவளே
விந்திவிந்திப் போறதெங்கே?

கொண்டையில் பூமணக்கக்
கொசுவத்தில் நான்மணக்கத்
தண்டையில ஊர்மணக்கத்
தங்கமயில் போறதெங்கே?

தூக்குச் சட்டியில்ல
தொணைக்குவர யாருமில்ல
காலுக்குச் செருப்புமில்ல
காட்டுவழி போறதெங்கே?



அவள்

தூண்டிமுள்ளுக் கண்னழகா
தூரத்தில் பேரழகா
போறவளக் கேலிசெய்யும்
புளியவிதைப் பல்லழகா

முருக மலைமேல
முள்விறகு நானெடுக்க
பொழப்பு நடக்கணுமே
புறப்பட்டேன் கால்கடுக்க

ஒம்பொழப்பு தரையோட
எம்பொழப்பு மலையோட
நெத்திவெயில் பொழுதாச்சு
நேரமில்லை விளையாட

எட்டுமேல எட்டுவச்சு
எட்டுமைல் நான்நடந்தா
உச்சிப் பொழுதுவரும்
உள்நாக்கில் தாகம்வரும்

செத்தஎலி மிதந்தாலும்
செல்லாத்தா சுனைத்தண்ணி
உள்நாக்க நனைக்கையிலே
உசுருக்கு உசுருவரும்

கோடைவெயில் சுட்டதிலே
கொப்புளந்தான் மெத்தவரும்
கொப்புளத்தக் கற்பழிச்சுக்
குச்சிமுள்ளு குத்தவரும்

இண்டம் புதர் இழுக்கும்
எலந்தமரம் கைகிழிக்கும்
பொத்தக் கள்ளிமுள்ளு
பொடவையில நூலெடுக்கும்

பொசுக்கென்று மழைவருமோ?
போகையிலே புயல் வருமோ?
காஞ்சமரம் வெட்டையிலே
ரேஞ்சர் வருவானோ?

எங்கிருந்தோ பயம்வந்து
எச்சில் உலந்திவிடும்
மாத விலக்கானாலும்
பாதியில் நின்னுவிடும்

வேறகு வெட்டும் அரிவாளோ
வேறகவிட்டு வெரலுவெட்டும்
கத்தாழை நார்தானே
கடைசியிலே கயிறுகட்டும்

கட்டிவச்ச வேறகெடுத்து
நட்டுவச்சு நான்தூக்க
நலுங்காமத் தூக்கிவிட
நானெங்கே ஆள்பார்க்க?

இடுப்புப் புடிக்க
எங்கழுத்துக் கடுகடுக்க
மந்தைவந்து நான்சேர
மாலை மசங்கிவிடும்

மந்தையில வெறகவச்சா
மங்கையைத்தான் பாப்பாக
பச்சை விறகாச்சேன்னு
பாதிவெலை கேப்பாக

கேட்ட வெலைக்குவித்துக்
கேழ்வரகு வாங்கிக்கிட்டு
முந்தாநாள் கத்தரிக்கா
முந்தியில ஏந்திக்கிட்டுக்

குடிசைக்கு நான்போனாக்
குடிதண்ணீர் இருக்காது
என்வீட்டு அடுப்பெரிக்க
எனக்கு விறகிருக்காது

baroque
28th January 2011, 11:04 PM
Good.
I prefer not to post the entire poetry.
These books are available, I think those of us genuinely interested should buy and enjoy them.
We highlight few stanzas, that's enough.
vinatha.

Roshan
28th January 2011, 11:05 PM
This is the post of geno. This has been written as a response to a hubber who was not very much fluent in thamizh. You can check this link for the detail discussion ; http://www.mayyam.com/hub/viewtopic.php?t=97&postdays=0&postorder=asc&start=165


Bad boy!

Tell me what kinda help you need to understand how sentences are formed in thamizh! You did well there in ur previous posts!

You must have now understood that - thamizh poetry - generally by default has some nice flowery language - kinda lots of similes, allegories, folksy phrases, hyperboles et al !!!

Lemme try and describe in detail about the portion you have tried!!

Foreword :

In villages, usually the kind of work that our people do is agricultural. Or if agri work isn't available - in order to sustain themselves - they go to nearby bushes or small forests / dense growth - to get "suLLI" which may also be called "viRaku" - which is nothing but - some kinda thorny branches / dry twigs.

Those are collected by womenfolk and tied up as bunches, and they carry it back to their homes - to use them as fuel to cook, by burning them in their earthernware stoves.

Sometimes they also sell it and make a living with that meagre income they make.


ஒத்தையடிப் பாதையிலே

It's a beaten track which forms naturally - when people walk consistently over a period of time - thru a line of bushes / thru a field / forest. It's usually a small path - in which just about a single person - can walk thru at a given time.


ஊர்வலமாப் போறவளே

The beholder / her admirer - says that her walk is such full of grace and that he feels her magnificent presence so much there - that it looks as if she's on a (wedding or a celebratory kind of) procession

It can also imply that - this guy is saying this as "tongue-in-cheek" humor!! - that is, she is walking alone, and he says her walk is such full of grandeur that it looks like she's on a procession!

வெட்டரிவா வச்சவளே

வெட்டரிவா - sickle

வச்சவளே - the woman who carries (the sickle)

To cut the twigs and clear all thorny bushes - she is carrying a sickle. It also signifies - that the lover admires her "strength"! - thru this kind of description - it is implied here!


விந்திவிந்திப் போறதெங்கே?

While collecting the dry sticks, twigs - She had to walk thru thorny ground - and she has been pierced by some hard thorns in her foot, and so she walks sluggishly with pain


கொண்டையில் பூமணக்கக்

She has flowers on her hair (bun) - which are sensuously fragrant - and it makes this guy all worked up!



கொசுவத்தில் நான்மணக்கத்

Women wear sarees by some kinda folding them and wearing that "fold" near the hip.

"kosuvam" means this part of the saree!.

The loverboy gets all naughty here, and he's subtly hinting that she has his heart "wound up" in her "kosuvam"!

It also implies his "pangs" for her! and more!!!


தண்டையில ஊர்மணக்கத்

"thaNdai" - is some kind of anklet / an ornament worn in the legs, near the ankles, which has small metal balls encapsulated inside - which makes sweet sound when women walk

"oor maNakka" - this is an interesting phrase!

The poet says - or rather the loverboy describes - that since she is a hard toiler, and without any slippers/footwaer, all the dirt, mud have stuck to her feet, and also to her anklet, soiling it

"oor" if taken directly means - that place / hamlet / village / small town.

But here since the "maN" or "the earth" / soil - of that place is stuck to her anklet - it is like her anklet exudes the beautiful smell of her village!! ( how lovely?!! no?!! )
{ semma jolluppA intha lover!!! )
தங்கமயில் போறதெங்கே?

He uses the simile that she's resplendent as the Golden Peacock, and wonders where she's hastening to.


தூக்குச் சட்டியில்ல

"thookku satti" - is usually the "tiffin box" for the village folks - who carry some food in it - for lunch between their work


தொணைக்குவர யாருமில்ல

"தொணை" is a "dialect" version of more proper "துணை"!

துணை is indeed a companion. Here it may mean a co-worker, someone to accompany.


காலுக்குச் செருப்புமில்ல

------ no slippers on her feet - right!

She's the typical poor village female; works hard amongst bushes, thorns, twigs cutting branches and timber, with no footwear


காட்டுவழி போறதெங்கே?

"kAttuvazhi" - means the small-path between bushes and dense growth here, or a small forest.

"pORathengE" - is "where (she) goes"?

He wonders where indeed she may be heading to. He's concerned about this girl, whom he loves, admires and also to a certain extent beckoning!

He's asking her why she walks alone, without any food to eat for lunch, none to accompany her, just with her sickle in her hand, without even footwear, walking sluggishly becoz of thorn pricks.....this can also be taken as a subtly hinting her that - she let him accompany her - to whereevener she's headed for.

Roshan
28th January 2011, 11:07 PM
Good.
I prefer not to post the entire poetry.
These books are available, I think those of us genuinely interested should buy and enjoy them.
We highlight few stanzas, that's enough.
vinatha.

Yes, I agree with you on this. Will follow it henceforth :)

Roshan
28th January 2011, 11:15 PM
And I would like to re-produce my post (posted almost 6 years ago) on Kavinjar's kaLLikaattu ithigaasam;

ரொம்ப நாட்களாகத் தேடிய பிறகு அண்மையில்தான் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி - 2003ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பான 'கள்ளிக்காட்டு இதிகாசம்' கைய்யில் கிடைத்தது.

அதை படித்துமுடித்துவிட்டு இன்னும் அந்த பாதிப்பிலிருந்து மீளவில்லை நான். ஓர் ஏழை விவசாயின் வாழ்க்கையை இவ்வளவு யதார்தத்துடன் யாராவது வடித்திருப்பார்களா என்பது சந்தேகமே!

'பேயத்தேவர்' எனும் அந்த ஏழை விவசாயின் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை பக்கத்திலிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது படிக்கும்போது. ஒவ்வொரு கதாபாத்திரத்தத்தையும் அதன் உணர்வுகளையும் மிக யதார்த்தமாக வடித்திருக்கிறார்.

இந்த அற்புதமான படைப்பில் ஒவ்வொரு வரியையும் அருமையாக, கவி ரசனையுடன் எழுதி இருக்கிறார். இந்த -இந்த வரிகள்தான் சிறந்தவை என்று வித்தியாசப்படுத்த முடியாத இந்தப் படைப்பில் - இடையிடையே அவர் குறிப்பிடும் வாழ்வியல் தத்துவங்களை இங்கே நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்போல் இருக்கிறது எனக்கு.


* இயற்கைதான் மனிதனின் ஆசான். தன் இருப்பு அசைவு இரண்டிலும் அறிவு போதிக்கிறது அது. வானமும் பூமியும் வகுப்பறைகளாய் யுகந்தோறும் யுகந்தோறும் அது பாடம் நடத்திக்கொண்டேயிருக்கிறது. புத்தியுள்ளவன் புரிந்து கொள்கிறான்; வலியுள்ளவன் அறிந்து கொள்கிறான். மனிதனின் படைப்பென்று பூமியில் எதுவும் இலலை; மனிதன் வெறும் கண்டுபிடிப்பாளனே தவிரப் படைப்பாளன் அல்லன். அப்படிப் பார்த்தால் மொழி ஒன்றுதான் மனிதனின் படைப்பு. மொழிகூட ஒலியின் வடிவம்தான். ஒலி மனிதனின் படைப்பல்ல; கண்டுபிடிப்புதான். ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஏதோ ஒரு வலி இருந்தே தீரும். வலி சொல்லிக் கொடுக்கும்; வலி கண்டவன் அறியக்கடவன்.

* மனிதனுக்கு மனிதர்கள் மட்டுமே தேவை என்பது இரண்டு பருவத்தில்: ஒன்று வாழத்தெரியாத இளம்பருவம்; இன்னொன்று வாழ்ந்து முடிந்த முதுபருவம். இரண்டிலும் தனிமைப்படுத்தப்படுவதுதான் வாழ்வின் சாபம்.

* சிலபேர்தான் பிள்ளைகளைப் பெறுகிறார்கள்; பலபேர் பத்துமாதம் சுமந்து பிரச்சினைகளைப் பெறுகிறார்கள்.

* வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும், மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புதான். மழைத்துளியில் எறும்பு மூழ்கினாலும், கடலுக்குள் கப்பல் மூழ்கினாலும் வலி வலிதான். அதனதன் நிலையில் அவரவர் துயரம் பெரியதுதான். துன்பத்தில் 'சிறுசு-பெருசு' என்பதெல்லாம் இடம் பொருள் ஏவல் குறித்த ஒப்பீடுகளல்லாமல் வேறென்ன?

* மாறிவரும் சமூகத்தில் மணவாழ்க்கை என்பது, ஆணால் கிட்டும் சௌகரியங்களைப் பெண்ணும், பெண்ணால் கிட்டும் சௌகரியங்களை ஆணும் சட்டப்படி திருடிக்கொள்ளும் சம்பிரதாயமாக இருக்கிறது.

* தாமத்தியத்தின் தேவை தீர்ந்த பிறகுதான் ஒரு குடும்பத்தில் உண்மையான கணவனும் உண்மையான மனைவியும் பிறக்கிறார்கள். உடல் தேவை என்னும் சாம்பல் உதிர்ந்த பிறகுதான் உள்ளிருக்கும் அன்பின் கங்கு துலக்கமாகிறது.

பெற்றவர்கள் மறைந்துபோக - உடன் பிறந்தவர்கள் அவரவர் பிழைப்புத்தேடி ஒதுங்கிபோக - நல்லது கெட்டதுகளுக்கு மட்டுமே சுற்றங்கள் வந்து சூழ்ந்து விலகிபோக - பெற்று வளர்த்த பிள்ளைகள் 'கெழவன் கெழவி செத்தாச் சொல்லிவிடுங்க' என்று கண்ணுக்குத் தெரியாத தங்களின் இன்னொரு தொப்பூழ்க் கொடியையும் அறுத்து கொண்டோட, உடம்பிலுள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றாய் 'ஆளவிடு சாமி' என்று அதனதன் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும்போது மனைவியின் மடிசாய்கிறான் கணவன்; கணவனின் மடிசாய்கிறாள் மனைவி.

* பால் திரியுத் தொடங்கும் நேரம் பாத்திரத்துக்குத் தெரியாது என்பதுபோல், பிள்ளைகள் கெடத் தொடங்கும் நேரமும் பெற்றவர்களுக்குத் தெரிவதில்லை.

* மனித வாழ்க்கையில் நல்ல இடம் சுடுகாடுதான். மனசு மட்டுப்படுவது அங்கேதான். செத்துப்போனவனுக்கு நிரந்தரமான நிம்மதியும் வீடு திரும்புகிறவனுக்கு 'இத்துனூண்டு' ஞானமும் தருகிற பழைய்...ய பள்ளிக்கூடம் அதுதான்.

* பொதுவாகவே மனிதர்களுக்கு ஒரு குணமிருக்கு. அவனவன் குற்றம்குறை பூசணிக்காய் அளவு இருந்தாலும் அதைச் சுண்டக்காய் என்று சொல்லித் திரிவது. அடுத்தவர்களின் குறை சுண்டைக்காய் அளவு இருந்தாலும் அதைப் பூச்ணிக்காய் என்று புலம்பித் திரிவது. அதில் ஒரு சுகமும் பாதுகாப்பும் இருப்பதாக நாலுகால் மனசு நம்புகிறது.

சுடுகாட்டைக் கடந்து போகிறவன் தன் பயத்தை மறைக்கச் சத்தம் போட்டுக் கோண்டேபோவது மாதிரி தன் குறையை மறைக்க அடுத்தவர்களின் குறைகளையே அசைபோடுகிறது மனுசக் கூட்டம்.

இது ஊர் ஊருக்கு - ஆள் ஆளுக்கு - தேசத்துக்கு தேசம் முன்னபின்ன இருக்குமே தவிர முற்றிலும் ஒழிக்க முடியாத குரங்குக் குணம்.

* சனநாயகம் மாதிரி தெரிகிற சர்வாதிகாரம்தான் அரசாங்கம் !

* மனுச வாழ்க்கையை ருசியா வச்சிருக்கிறதே ரெண்டே ரெண்டு விசயந்தான்; ஒண்ணு இன்பம்; இன்னொண்ணு துன்பம். துன்பம் இல்லேன்னு வச்சுகுஙக... இன்பத்துக்கு என்னா மதிப்புன்னே தெரியாது மனுசப் பயலுக்கு. இருட்டுன்னு ஒண்ணு இல்லேன்னா வெளிச்சம் வெள்ளையா கருப்பான்னு யசனையே பெறந்திருக்காது.

வேணும்; மனுசனுக்கு துன்பம் வேணும். பிரச்சினையும் அப்பப்ப வந்து பிடறியைப் பிடிச்சு ஒரு உலுக்கு உலுக்கணும். பிரச்சினை இல்லாத ஆளு உலகத்துல யார்ரான்னு கேட்டா பூமிக்குக் கீழ பொணமாப் போனவன் மட்டுந்தான்.

ஒரு மனுசன் உசுரோட இருக்கான்னா பிரச்சினைன்னு ஒண்ணு இருக்கும். வேறமாதிரியும் சொல்லலாம்; பிரச்சினைன்னு ஒண்ணு இருந்தாத்தான் மனுசன் உசுரோடயே இருப்பான்.

baroque
28th January 2011, 11:17 PM
Good.
Great man has put his children through college, he may need money to buy pattam, panju mittai Ruskin bond's The room on the roof - book to WII SPORTS video games for his grandsons & jewels to his
great grandaughters... or may be second/ third honeymoon trip around the world with his loving wife. :D :bluejump: :redjump:
vinatha.

baroque
28th January 2011, 11:18 PM
Geno, wonderful job!
thanks Roshan.
vinatha.

baroque
28th January 2011, 11:39 PM
kallikattu idhikasam....is a great novel by kavingar.
all about village life.
very emotional novel.
moving feelings about love, sufferings etc..
rich in intricate varnanaigal & very elaborate.
thanks ..... I pull my copy from my bookshelf and drench myself in the impact of emotional pathos.
vinatha.

Roshan
28th January 2011, 11:48 PM
kallikattu idhikasam....is a great novel by kavingar.
all about village life.

Absolutely ! Again from my post;

கிராமிய வாழ்க்கையை ஓரளவேனும் அனுபவித்தவர்களுக்கு இந்தக் கதையின் யதார்த்தம் நன்றாகவே புரியும். பாராட்டப்பட வேண்டிய மற்றோரு அம்சம் கதைக்கு உயிர் கொடுப்பதற்காக அவர் செய்திருக்கும் ஆய்வுகள்.

கஞ்சிக்கு துவையல் அரைப்பது, கோழியை அடித்து குழம்பு வைப்பது, மாட்டுக்கு பிரசவம் பார்ப்பது, முடி வெட்டுவது, சுடுகாட்டில் பிணம் எரிப்பது, கிணறு தோண்டுவது , சாராயம் காய்ச்சுவது, அணைக்கட்டு கட்டுவது என்று ஒவ்வொன்றுக்கும் மிகத்தெளிவான செய்முறை விளக்கம் கூறியிருப்பதை படித்தபோது தெரிந்தது இந்தக் கதைக்கான கவிஞரின் உழைப்பு.

baroque
29th January 2011, 12:05 AM
oh.... his style of poetic touches, vivarangal with stunning visual imagery of the land- rural area.
He totally earned the award. Justice done.

எப்பவுமே வார்த்தைகளால் ஓவியம் வரைந்து கண் முன்னால் நிறுத்துவார் , கவிஞர். :thumbsup:


கீழ்வானம் எங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதைக்கொள்ளும் காலை காவியம் :musicsmile: in shri.Ilayaraja's sangeetham.

cinema paadalukkey ippadi ezhudhiyavar.
vinatha.

venkkiram
29th January 2011, 12:36 AM
இன்னொரு முறை மீள்வாசிப்பு தண்ணீர் தேசத்தை. ஹமித்திற்கு நன்றி. நல்லதொரு வாசிப்பு அனுபவம். பல இடங்களில் நாம் பார்த்திருந்த காட்சிகளை இவர் எழுத்து வடிவில் பார்க்கும் போது பரவசம். உதாரணமாக கடல் பயணத்தின் ஆரம்ப இடங்களில் இப்படி..

ததும்பும் தண்ணீர்
ஊஞ்சல்மேலே அழகுப்
பறவைகள் ஆடுவது பார்.

இந்த வரிகளை கடக்கும் போது, அந்தக் காட்சி அப்படியே மனதில் ஓடுகிறது. நாமும் ஒரு பார்வையாளனாக விசைப்படகில் அவர்களோடு பயணிக்கத் தொடங்குகிறோம்.

தமிழ்(கதையில் வரும் பெண்ணின் பெயர்) கடல் ஒவ்வாமையால் மயக்கம்,வாந்தி வரும் நிலை..

எனக்கிது தேவைதானா?

அவள் கன்னத்தில் வழிந்த
கண்ணீர் வாயில் விழுந்ததில்
வார்த்தை நனைந்தது.

ஒரு இடத்தில் கடல் அலை விசைப்படகில் புகுந்து தமிழை நனைத்துவிடுகிறது.

தண்ணீர் சொட்டச் சொட்ட தானே
தலைதாங்கித் தமிழ்ரோஜா அழுதாள்.
அதில் கண்ணீர் எது? தண்ணீர் எது?
கடல்மீன் அழுத கதைதான்.

இன்னொரு இடத்தில் தமிழ் வாடியிருக்கும் முகத்திற்கு இப்படி ஒரு உவமை.

வாடிய கீரையைத்
தண்ணீர் தெளித்து வைப்பது
மாதிரி
வாடிய அவள் முகத்தில்
வேர்வை தெளித்தது வெயில்.

தண்ணீர் தேசம் நாவல் முழுவதும் ஏதோ ஒரு முக்கியமான க்ரிக்கட் இறுதிபோட்டியின் Highlights-ஐ தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பது போல இருக்கிறது. வரிக்கு வரி கவிஞர் நான்கு, ஆறு என ரன்கள் அடித்துக்கொண்டே இருக்கிறார்.

AravindMano
29th January 2011, 05:51 AM
My earliest memory of his poems should be this one.

கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும்



அரபியில் சொன்னாள் அம்மா
எங்கள் டைகிரிஸ் யூப்ரடீஸ்
நதிகளிரண்டும்
வீசியடித்த அலைகளிலேதான்
முதல் நாகரிகம்
முளை கட்டிற்றாம்
உங்கள் நாட்டில்
நதிகளே இல்லையா புஷ் அங்கிள்?

உங்கள் ஆயுதம்
கூர் சோதிக்க
என் பிஞ்சு மண்டை ஓடுதான்
கிடைத்ததா?
ரொட்டி சலித்த உங்கள்
குட்டி நாய்க்கு எங்கள்
குருத்தெலும்பென்றால்
கொள்ளை ஆசையா?
கனவுகள் நனைந்து
பூமிக்கு வந்தேன்
ரோஜாக்கள் வெடிக்கும்
நுண்ணொலி கேட்கவே
இராக்கில் பிறந்தேன்
பகலில் சூரியன்

இரவில் நிலவு
இரண்டையும் வெடித்தால்
எங்ஙனம் தாங்குவேன்?
மு... மு... முட்டுதே மூச்சு
சுவாசப் பையில் என்ன நெரிசல்!
காற்றில் கலந்த சதைத்தூள்
நிறைந்து
நெரிபடுதோ என் நுரையீரல்?

அலெக்சாண்டர் வாளில்
மங்கோலிய வில்லில்
பிரிட்டிஷ் பீரங்கியில்
கருகாத எங்கள் பேரீச்சங் காடுகள்
தீத்தாரைகளில் சிவ்வென்றெரியுதே!
இன்னோரு பருவம்
பேரீச்சை பழுக்குமோ?
பேரீச்சை தின்ன
நாங்கள் இருப்பமோ?

நெருப்பு மழை
அக்கினி அலை
சூரியன் உடைந்து
பூமியில் ஒழுகினால்
எப்படித் தாங்கும்
என் மெல்லிய செந்தோல்?

மொத்தப் பிணக்குழியில்
என்னையும் இழுத்து
எறியும்பொழுது
என் பிரிய பொம்மையைப்
பிரிக்க மாட்டீரே?

எங்கு நோக்கினும்
ரத்தப் படுகை
பாலைவனத்தை
நாளை தோண்டினால்
தண்ணீரின்
நிறம் சிவப்பாயிருக்குமோ?

ஏனிந்த விஷவெறி?

ஏசுவா? அல்லாவா?
அதுவல்ல கேள்வி
டாலரா? தினார?
அதுதானே கேள்வி!
இந்தியப் புறாக்கள் வாங்கி வளர்க்க
ஏழு தினார்கள் சேர்த்திருந்தேன்
அனுப்பட்டுமா புஷ் அங்கிள்
உங்கள் வேட்டு விலாசமிட்டு?
ஒரே ஒரு பிஞ்சு நிபந்தனை :
எண்ணெய்க்காடு எரியும் நெருப்பில்

நீங்கள் மூட்டிய பூதப் புகையில்
வாழ்வு தேசம் சுவாசம் எல்லாம்
கறுத்துக் கறுத்துக் கறுத்தழிந்தது
உங்கள் வீட்டுப் பெயரில் மட்டும்
இன்னும் என்ன
'வெள்ளை மாளிகை?'

வீடோ பெயரோ
மாற்றுவீர்களா?
நான் இறந்துபோயினும்
வந்து சேரும்
ஏழு தினார்!

venkkiram
29th January 2011, 08:59 AM
kallikattu idhikasam....is a great novel by kavingar.
all about village life.

Absolutely ! Again from my post;

கிராமிய வாழ்க்கையை ஓரளவேனும் அனுபவித்தவர்களுக்கு இந்தக் கதையின் யதார்த்தம் நன்றாகவே புரியும். பாராட்டப்பட வேண்டிய மற்றோரு அம்சம் கதைக்கு உயிர் கொடுப்பதற்காக அவர் செய்திருக்கும் ஆய்வுகள்.

கஞ்சிக்கு துவையல் அரைப்பது, கோழியை அடித்து குழம்பு வைப்பது, மாட்டுக்கு பிரசவம் பார்ப்பது, முடி வெட்டுவது, சுடுகாட்டில் பிணம் எரிப்பது, கிணறு தோண்டுவது , சாராயம் காய்ச்சுவது, அணைக்கட்டு கட்டுவது என்று ஒவ்வொன்றுக்கும் மிகத்தெளிவான செய்முறை விளக்கம் கூறியிருப்பதை படித்தபோது தெரிந்தது இந்தக் கதைக்கான கவிஞரின் உழைப்பு.வலைப்பதிவில் உலாவியபோது கவிஞரின் உழைப்பைக் குறித்த ஒருவரது பின்னூட்டம்..

வைரமுத்து எனும் கவிஞனின் பேய் உழைப்பை நண்பர்கள் பலரது வாயிலாக கேட்டிருக்கிறேன். மிகச் சமீபத்தில் நாஞ்சில் நாடனுடான சந்திப்பொன்றில் 'வைரமுத்துவைக் காட்டிலும் கடுமையா உழைக்கிறேன்பா' என்று ஓப்புமைக்கு வைரமுத்துவை எடுத்துக்கொண்டார்.

baroque
29th January 2011, 09:08 AM
சம்பவம் in ஈராக் war .
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்..... அழகிய கவிதை தொகுப்பு.
************************************************** ************************************************** *********
Few of his poems ,வருணனைகளும், விவரிப்புகளும், lyrical touches , beautiful portrait of nature from the book

சிகரங்களை நோக்கி - புத்தகம்.(கதையின் நாயகன் திருஞானம் .. however he is unrealistic & forever dreamer , we all have a little bit of திருஞானம் in us ... now & then we should let that part of us come out & refresh our soul ... take a moment , slow down , enjoy the small pleasures life / nature has to offer .. then get going with our life .. otherwise life will be very boring & taxing .
கதையின் நாயகி ஓவியா :thumbsup: )

ஓயாமல் அடிக்கின்ற தென்றல் - கொஞ்சம்
ஒயிலாகச் செல்கின்ற ஆறு
சாயாமல் இருக்கின்ற புன்னை - அது
தமிழ் பேசி வரவேற்கும் என்னை

என்னோடு குயில் பாட வேண்டும் - அந்தக்
குயிலோடு நான் பாட வேண்டும்
கண்ணோடு இமை மூட வேண்டும் - நான்
காற்றோடு கதிசேர வேண்டும்
what a dreamer !

மனிதக் குடல்களைப் போல் மடிப்பு விழுந்த அந்த மலைச் சாலையில் விறகு சுமந்தேரும் கர்ப்பிணியைப் போல் மெதுவாய் ஏறியது பேருந்து.

மலையூதுக்கு போகும் பாதை பற்றி.... few

குழந்தை தானே எடுத்துக்கொண்ட கோணல் வகிடாய் ஒற்றையடிப் பாதையொன்று உள்ளே ஓடியது.

தூங்கும் குழந்தைக்கு நகம் வெட்டும் தாயாய் அதன்( தேன் குடித்த மயக்கத்தில் இருந்த வண்ணத்துப்பூச்சி) உறக்கம் கலையாமல் இறக்கை பிடித்தான்.

காதலியின் தாவணி கன்னத்தில் படுவது மாதிரி மேன்மையை உரசிப் போகும் மேகங்கள்.

முத்தத்தின் ஈரம்போல் துடைக்க விரும்பாத தூறல் .

oh .. I simply can 't reproduce the gorgeous work .
folks should get the book from library or buy a copy and enjoy
கவிஞரின் இயற்கை வருணனைக்கு ஈடு இயற்கைதான் .. அவரை மாதிரி nature lover ... ஆஹா... :clap:

I buy E-books too. Bravo on technological advancements
but
Smell of the pages of my favorite books is an awesome feeling!
I cherish it.

வினதா .

Scale
29th January 2011, 10:26 AM
படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : A.R.ரஹ்மான்
---------------------------------------------------------------
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே!
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே!
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே!
மலரே சோம்பல் முறித்து எழுகவே!
குழந்தை விழிக்கட்டுமே! தாயின் கத கதப்பில்,
உலகம் விடியட்டுமே! பிள்ளையின் சிறுமுகச் சிரிப்பில்.....
(வெள்ளை)
காற்றின் பேரிசையும், மழை பாடும் பாடல்களும்,
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ?
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்,
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ ?
(வெள்ளை)
எங்கு சிறு குழந்தை, தன் கைகள் நீட்டிடுமோ,
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே!
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ,
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே!
(வெள்ளை)

http://tamil-paadal-varigal.blogspot.com/2009/01/vellai-pookkal-lyrics-kannathil.html

venkkiram
29th January 2011, 10:39 AM
கிழக்குச் சீமையிலே படத்தின் "கத்தாளங் காட்டு வழி" பாடலில் இரண்டாவது சரணம். மணமுடித்து கணவன் வீட்டுக்கு செல்லுகையில் தங்கச்சி அண்ணனை நினைத்துப் பாடுவது.

அண்ணே போய் வரவா அழகே போய்வரவா
மண்ணே போய்வரவா மாமரமே போய்வரவா
அணில்வால் மீசை கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீசை கொண்ட புருஷனோட போய்வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம் தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம் தானே

பாடல் எழுதுவதற்கு முன்பு, படப்பிடிப்பு நடக்கவிருக்கும் களங்களுக்கு வைரமுத்து, விஜயகுமார், நெப்போலியன் ஆகியோரை பாரதிராஜா அழைத்துச் சென்றபோது, ஒரு நாள் டீக்கடையில் அமர்ந்து தேநீர் பருகையில் கவிஞர் இரு நடிகரகளிடத்திலும் சட்டென மீசைகளை கவனித்தாராம். நெப்போலியனின் மீசை அடர்த்தியாக இருக்க, விஜயகுமாரின் மீசை மென்மையாக இருந்ததாம். அதையே புலிக்கும் அணிலுக்கும் ஒப்பிட்டு பாடல் வரிகளுக்கு பயன்படுத்திக்கொண்டார்.

venkkiram
29th January 2011, 09:09 PM
டூயட் படத்தில் வரும் கவிதை.. எனக்கு பிடித்தமான ஒன்று..

கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா?
எனைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவம் நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?

இரவோடு நான் காணும் ஒளி வட்டம் நீதான்!
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்!
வார்த்தைக்குள் உள்ளாடும் உயிரோட்டம் நீதான்!
என் வாக்கியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்!
தூரத்தில் மயிலிறகாய்த் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்!
காதலுக்குக் கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்தால் கண் மூடிக்கொண்டவளும் நீதான்!

Roshan
29th January 2011, 10:40 PM
oh.... his style of poetic touches, vivarangal with stunning visual imagery of the land- rural area.
He totally earned the award. Justice done.

எப்பவுமே வார்த்தைகளால் ஓவியம் வரைந்து கண் முன்னால் நிறுத்துவார் , கவிஞர். :thumbsup:


கீழ்வானம் எங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதைக்கொள்ளும் காலை காவியம் :musicsmile: in shri.Ilayaraja's sangeetham.

In this song he would clear the boundary in the very first line itself..

வானெங்கும்
தங்க விண் மீன்கள்
விழி இமை மூட
சூரியன் வந்து
கடல் குளிதேறும் நேரம்

jaiganes
29th January 2011, 11:32 PM
படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : A.R.ரஹ்மான்
---------------------------------------------------------------
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே!
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே!
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே!
மலரே சோம்பல் முறித்து எழுகவே!
குழந்தை விழிக்கட்டுமே! தாயின் கத கதப்பில்,
உலகம் விடியட்டுமே! பிள்ளையின் சிறுமுகச் சிரிப்பில்.....
(வெள்ளை)
காற்றின் பேரிசையும், மழை பாடும் பாடல்களும்,
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ?
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்,
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ ?
(வெள்ளை)
எங்கு சிறு குழந்தை, தன் கைகள் நீட்டிடுமோ,
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே!
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ,
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே!
(வெள்ளை)

http://tamil-paadal-varigal.blogspot.com/2009/01/vellai-pookkal-lyrics-kannathil.html
divine!
one word that comes to mind.
one packet sohan papdi for mani for conceiving the situation..
2 packet mundhiri cake for Vairamuthu for those simple and touching words..
3 packet thirunelveli halwa for Rahman for those fantastic tune and instrumentals one extra compared to kavignar for singing this beauty as well..

baroque
30th January 2011, 12:12 AM
Yeah, Roshan.
Early Ilayaraja's masterpiece, Kavingar vairamuthu spoiled us (Ilayaraja fans) during 80s.
:musicsmile:

Scale
30th January 2011, 09:30 AM
:lol:

some people are born to fatness :wink: and the mango man is driving others to get there.

அசராதீர்கள்! வைரமுத்து அன்றே சொன்னார் "ஊசி போல உடம்பிருந்தா தேவையில்லை ஃபார்மஸி!"

j/k jai.

Roshan
31st January 2011, 11:55 PM
காரவீட்டுத் திண்ணையிலே
கறிக்கு மஞ்சள் அரைக்கையிலே
மஞ்சள அரைக்கு முன்னே
மனச அரைச்சவளே

கரிசக்காட்டு ஓடையில
கண்டாங்கி தொவைக்கையில
துணிய நனையவிட்டு
மனச புழிஞ்சவளே

The highlight of the song is;

நாந்தந்த மல்லிகைய
நட்டாத்தில் போட்டுவிட்டு
அரளிப்பூச்சூடி
அழுதபடி போறவளே

jaiganes
1st February 2011, 12:23 AM
:lol:

some people are born to fatness :wink: and the mango man is driving others to get there.

அசராதீர்கள்! வைரமுத்து அன்றே சொன்னார் "ஊசி போல உடம்பிருந்தா தேவையில்லை ஃபார்மஸி!"

j/k jai.
கூட இருந்து பார்த்தது போல சொல்லி இருக்கிறீர்கள்!!
நல்ல சாப்பாடு சாப்பிட்டு உடல் (உள்ளம்) பெருத்தல் நலம்.
இங்கு சிலர் ஃப்ரெஞ்சு ஃபிரைஸ் தின்றே உடல் பெருக்கிறார்கள்.
மாம்பழ மனிதரும் ஆரஞ்சு மனிதரும் நிறைய தந்திருக்கின்றார்கள் ருசிப்பதற்கு.

Scale
1st February 2011, 02:27 PM
ஜெய்,


தவறாக நினைக்கவேண்டாம். தங்கள் பட்டியலை பாக்கெட் பாக்கெட்டாக பார்த்ததில் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் (Though I understand it very clearly in musical sense) :thumbsup:
அதற்கு காரணம் இருக்கிறது. நல்ல உணவு என்பது கிடையவே கிடையாது... The 'freshness' is lost and its all 'frozen','fermented' now. நோய்களுக்கு இனையாக ஸ்பெலிஸ்ட்டுகள் (Serial Killers) பெருகியிருக்கும் இக்கால கட்டத்தில் ஓவ்வொருவரும் தங்கள் வயதிற்கும் உடல்வாகிற்க்கேற்ப தாம் உண்ணும் உணவின் "ingredients"யை அறிந்து அளவோடு உண்ணுவதே சிறப்பாகும். உணவு பழக்கவலக்கங்களை தீர ஆய்ந்து உண்ணும் அடிப்படை அறிவை நாம் கற்றுக் கொள்ளாதது மிகவும் வருந்ததக்க விஷயம்.

The first one is a quote by Les Murray quiet popular among my family circle (Genetically transplanted diseases) :fight: & I am getting down to the importance of maintaining a balanced life by vairamuthu's simple yet thought-provoking quote.

Scale
3rd February 2011, 08:58 PM
http://www.youtube.com/watch?v=vv8yNIhnwxA&playnext=1&list=PLB3EA6E6DD68DF389

:notworthy:

for lyrics
http://www.hindilyrix.com/songs/get_tamil_song_Theendai%20Mei%20Theendai_lyrics.ht ml

"Vizhiyoadum Theendal Undu Viraloadum Theendal Undu
Irandoadum Baedham Ulladhu
Vizhiththeendal Uyir Killum Viral Theendal Ullam Killum
Adhudhaanae Nee Solvadhu
Nadhiyoarap Poovinmaelae Jadhipaadum Saaral Poalae
Ennil Inbathunbam Seyguvadhoa
Oru Kannam Thandhaen Munnae Maru
Kannam Thandhaay Pennae
Aesunaadhar Kaatru Vandhu Veesiyadhoa
Uravin Uyirae Uyirae Ennaip Pennaaych Cheyga
Azhagae Azhagae Un Aasai Velga"

SoftSword
3rd February 2011, 09:56 PM
hamid... if u have the pdf.. pls forward.

hamid
3rd February 2011, 10:05 PM
hamid... if u have the pdf.. pls forward.

are you asking about Thanneer desam? I think I have it in my official laptop.. will send it today/tomorrow.. send me your emailid via pm.

venkkiram
4th February 2011, 10:48 PM
are you asking about Thanneer desam? I think I have it in my official laptop.. will send it today/tomorrow.. send me your emailid via pm.

Its available on vairamuthu's wiki page itself.

http://en.wikipedia.org/wiki/Vairamuthu#External_links

Right click the pdf image and save it to your local.

Happy reading!

Plum
8th February 2011, 12:05 PM
romba nALA oru doubt - indha varigaLuku EdhAvadhu inner meaning, uLkuththu EdhAvadhu irukkA - always seemed out of place in a hero worship song unless aimed at a specific opponent at that point - some phrases are give away but it seems odd if you infer a specific personality based on that.

...pAlu kudukkum unnAla mudiYAdhu thambi
....unakku enna varalAru, uNmai sonnA thagarARu

yArai pArththu solRAru thannOda rasigargaLaiyA? Edhukku rasigargaL varalAraiyellAm izhuththu avamAna paduththaNum. or yArO opponent/competetitor(offsreen)-ai pArthu solRadhA eduththukkaNumA?edhukku ipdi ezhudhinAru? Or chummA just line fillersA?

hamid
8th February 2011, 12:20 PM
romba nALA oru doubt - indha varigaLuku EdhAvadhu inner meaning, uLkuththu EdhAvadhu irukkA - always seemed out of place in a hero worship song unless aimed at a specific opponent at that point - some phrases are give away but it seems odd if you infer a specific personality based on that.

...pAlu kudukkum unnAla mudiYAdhu thambi
....unakku enna varalAru, uNmai sonnA thagarARu

yArai pArththu solRAru thannOda rasigargaLaiyA? Edhukku rasigargaL varalAraiyellAm izhuththu avamAna paduththaNum. or yArO opponent/competetitor(offsreen)-ai pArthu solRadhA eduththukkaNumA?edhukku ipdi ezhudhinAru? Or chummA just line fillersA?

Plum,

itz an usual song which points the goodness of the cow by comparing with genral humans.. and also side by side free advice (be useful for others)..Not pointing at anybody in specific I belive..

Dont we have any similar lyrics in many other (intro) songs of mass films?

Plum
8th February 2011, 12:48 PM
....unakku enna varalAru, uNmai sonnA thagarARu



This is an unusual line, Hamid. When it comes to mass hero songs, it is either
A) thala pOla varumA? nInga naLLA irukkOnum type pugazhchi
B) unnAl mudiyum thOzhA, nambu type advice

idhu enna rasiganai pArthE, unnala mudiyumA, un varalArai open paNNinA matter finish-nu egathALam? Generally, Rajni's hero persona is not of that type no? avaru pAttukku nAn vaNangum tamizh makkaLai maRakka mAttEn, thAyai madhikkaNum rangela positiveA dhAnE advice/proclamation paNNuvAr?

It really seems aimed at someone - perhaps to do with the political environment at that time. Or Vairamuthu simply wrote filler garbage

hamid
8th February 2011, 12:59 PM
hmm..

"nee maadu pola uzaikkaliye.. nee manushana eeichi pozaikkiriye" The whole song is like this no?

maybe it is aimed at politicians???

The first part of the movie is the confrontation with a politician.. "medaikku meda Anna, Gandhi, Kaamarajar pathi pesuringa.. pesura antha oru nimishamaavathu avanga senjatha ninaichu paarunga" loda extension thaane intha lines? if these lines can be there in his movie why not a song which says the same in a different way?

It is definitely not aimed at his rasigars in particular..

Plum
8th February 2011, 01:03 PM
ennamO oru consistency illai - vandhEndA, thambi apdinnu ellAm solRachE, it seems like addressed at his fans only. Yet, he makes a leap to advice to politicians mid-song? Looks like VM didnt write a graceful transition

Roshan
23rd February 2011, 01:51 PM
உன்னோடு நான் கொண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்

geno
23rd February 2011, 05:55 PM
காலந்தோறும் காதல்
-------------------------

..........

8. புதுக்கவிதைக் காலம் -1


ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை.

venkkiram
21st June 2011, 05:02 PM
http://img542.imageshack.us/img542/2427/24071710150312380329478.jpg

baroque
25th June 2011, 08:16 AM
nice
vinatha.

SMI
22nd July 2011, 10:16 AM
சில நாட்களுக்கு முன் ஆவரம்பூவு பாடலை இங்கே எங்கோ பார்த்ததாக ஞாபகம். எண்பதுகளின் மத்தியில் "இது வரை நான்" படித்திருக்கிறேன் - அதில் இது பற்றி ஒரு செய்தி படித்ததாக நினைவு.

கவிஞர் முதலில் எழுதியது:
"நீ பாக்கும்போது தவிப்பாச்சு
செவ்வந்தி பூவு செவப்பாச்சு"

ஒரு "ம்" சேர்த்துக் கொள்ளலாமா என்று கவிஞரிடம் பாலசந்தர் அனுமதி பெற்ற பின் பூவு, பூவும் ஆனது. அர்த்தம் மிக அழகாக மாறியது பற்றி வைரமுத்து வியந்து பாராட்டி இருப்பார்.

baroque
22nd July 2011, 10:06 PM
வில்லோடு வா நிலவே......கவிஞர் வைரமுத்து.

Came out during 90s middle.

I have read several times over the years.

சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், காக்கை பாட்டினியார் நச்செள்ளை புலவர் காதல் பற்றிய novel .

poetic writing .

aesthetic read for me always.

கவிஞரின் private books are outstanding.:thumbsup:

361

Roshan
22nd July 2011, 11:04 PM
Kavipaerarasu receiving Vijay Award.. Nice attempt by host Sivakarthikaeyan at mimicking VM

http://www.youtube.com/watch?v=pVBt8LpvSTg&feature=related

And Madhan Karky receives the award for "best find of the year"

http://www.youtube.com/watch?v=6AKvySefe5Y

baroque
24th July 2011, 09:01 AM
philosophical love song .
beautiful composition .... amazing work நம்மவர்.....late .மகேஷ்....பாலா & சுஜாதா.
உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்து விட்டோம்
வாழ்வின் தேவையை
வாழ்ந்து பார்க்கவந்தோம்....கவிஞர் வைரமுத்து. :thumbsup:

http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=15686&br=medium&id=3191&page=movies

vinatha

venkkiram
30th July 2011, 08:31 AM
A painting from Partha Chinnasamy's solo art exhibition 'Oviya Tamil' at Kasthuri Sreenivasan Art Gallery in Coimbatore

http://www.thehindu.com/multimedia/dynamic/00736/28CBMPPARTHA_CHINNA_736220f.jpg

An ode to Tamil (http://www.thehindu.com/life-and-style/metroplus/article2302225.ece)

baroque
1st August 2011, 03:36 AM
ரஹ்மான்'s வாஸந்தி can 't get rhythmic than this .

கவிஞர்'s colloquial usage குறுக்குச் சிறுத்தவளே... AWESOME.


கவிஞர்'s passion is fiery and hot in this composition.
listen to the lyrics...

burning passion க்கு பழக்கி கெடுத்து விட்டீங்க என்னைய...

http://www.youtube.com/watch?v=hkbsoS03CwE

venkkiram
1st August 2011, 09:38 AM
ஒளிவீசுக சூரியனே! யுகம் மாறுது வாலிபனே!
ஒரு தோல்வியிலாப் புது வேள்வியினால் இங்கு சோதனை தீர்ந்துவிடும்!
சில ஆயிரமாயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றிவிடும்!
அட சாமரம் வீசிய பாமர சாதிகள் சாதனை கண்டுவிடும்!

venkkiram
1st August 2011, 09:46 AM
உடல் எழுத்து!

அதிகாலை ஏழு
ஆகாயம் தொழு
இருதயம் துடிக்கவிடு
ஈரழுந்தப் பல் தேய்
உடல் வேர்வை கழி
ஊளைச்சதை ஒழி
எருது போல உழை
ஏழை போல உண்
ஐம்புலன் புதுக்கு
ஒழித்துவிடு புகைமதுவை
ஓட்டம் போல நட
ஔடதம் பசி
அஃ தாற்றின் எஃகாவாய்.

venkkiram
1st August 2011, 09:57 AM
பெற்ற இடத்தை விட முடியாமலும்
பிறிதோர் இடத்தைத் தொட முடியாமலும்

பதவி வேட்டையில் பண்பு தொலைந்து
காசு வேட்டையில் காதல் இழந்து
இலட்சியத்திற்கு எதிராக திசையில்
நுரைக்க நுரைக்க நூறுமைல் ஓடி

ரத்த அழுத்தம் சர்க்கரையோடு
நரைத்து முடிந்தது நடுத்தர வயது

venkkiram
1st August 2011, 09:59 AM
மனித உள்ளம் காலிக் கிண்ணம்
இலட்சியங்களை ஊற்றி நிரப்பு

baroque
1st August 2011, 09:06 PM
28 ஆண்டுகள் கவிஞர் வைரமுத்து படைத்த கவிதைகளின் தொகுப்பு.

380


released sometime during 2000 .
You can't put it down.
Captivating, you go through so much emotions while reading the gorgeous work.
I cherish it. :musicsmile:


மழைக்காலப் பூக்கள்

அது ஒரு
காலம் கண்ணே

கார்காலம்

நனைந்து கொண்டே
நடக்கிறோம்

ஒரு மரம்

அப்போது அது
தரைக்குத்
தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது

இருந்தும்
அந்த
ஒழுகுங் குடையின் கீழ்
ஒதுங்கினோம்

அந்த மரம்
தான் எழுதிவைத்திருந்த
பூக்கள் என்னும்
வரவேற்ப்புக் கவிதையின்
சில எழுத்துக்களை
நம்மீது வாசித்தது

இலைகள்
தண்ணீர்க் காசுகளைச்
சேமித்து வைத்து
நமக்காகச் செலவழித்தன

சில நீர்த்திவலைகள்
உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடிப் பாதையில்
ஓடிக் கொண்டிருந்தன

அந்தி மழைக்கு நன்றி

ஈரச் சுவாசம்
நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது.

ஆயினும் - நான்
என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்

நம் இருவரிடையே இருந்த
இடைவெளியில்
நாகரீகம் நாற்காலி போட்டு
அமர்ந்திருந்தது

எவ்வளவோ பேச எண்ணினோம்

ஆனால்
வார்த்தைகள்
ஊர்வலம் வரும் பாதையெங்கும்
மௌனம் பசை தடை விட்டிருந்தது

உன் முகப்பூவில்
பனித்துளியாகி விடும்
லட்சியத்தோடு
உன் நெற்றியில் நீர்த்திகள்
பட்டுத் தெறித்தன

உனக்குப்
பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை எடுத்து நீட்டினேன்

அதில்
உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்

நான் கேட்டேன்
"இந்தக் கைக்குட்டை
உலராமல் இருக்க
ஓர்
உத்தி சொல்லக் கூடாதா?"
நீ சிரித்தாய்
அப்போது
மழை
என் இருதயத்துக்குள் பெய்தது

அது ஒரு
காலம் கண்ணே

கார்காலம்

* 1982

romantic heart of நமது கவிஞர் வைரமுத்து.:musicsmile:

குளக்கரை

முப்பத்தேழாண்டுகள் முடிந்தோடின
இந்தக் குளக்கரையில் நான் நடந்து

இன்றுதான் மீண்டும்
நடைபயில்கிறேன்

காலில் பரவசம்
நெஞ்சில் வலி

அன்று கூவிய பறவைகளில்
ஒன்றையும் காணோம்

எந்த மழையில்
எந்தக் கோடையில்
மாண்டிருக்குமோ?

அன்று குடைபிடித்த மரங்களில்
ஏதுமில்லை இப்போது
கதவாய் - சாம்பலாய்
எவ்வடிவம் பூண்டனவோ?

உள்ளிருந்த அல்லிகள்
பூண்டற்று அழிந்தன
இலங்கைத் தமிழராய்
இடம்பெயர்ந்து போயினவோ?

அன்று
சேலையைக் கல்லிலும்
மார்பால் மனசையும்
துவைத்துப் பிழிந்த பெண்கள்
முத்து முதிர்ந்தாரோ
செத்தழிந்து போனாரோ?

அன்று
தத்திஎறிந்த தவளைக்கல்
தூர்வாராக் குளத்தாழத்தில்
கிடக்குமோ? கிடக்காதோ?

இப்போதென் நுரையீரல் நிறைப்பது
சேற்றுமணம் சுமந்த பழைய காற்றோ?
புழுதிசுமந்த புதிய காற்றோ?

அதோ
ஆங்கிலத்தின் கடைசி எழுத்தைப்போல்
வளைந்து நாற்றுநடும் மூதாட்டிகள்
நான் அன்றுகண்ட மங்கையரோ
இல்லை
முப்பது வயதில் முதுமைக்கு வந்தவரோ?

அன்று
குளத்தில் தொலைந்த மஞ்சள் ஓரணா
இன்று முக்குளித்தால்
கிட்டுமோ? கிட்டதோ?

பூமியின் முகத்தில்
காலத்தின் கீறல்கள்
எல்லாம் எல்லாம்
மாறித் தேய்ந்தன

ஆனாலும்
நம்பிக்கையோடு தேடுகிறேன்
குளக்கரையில் பதித்த என்
பிஞ்சுக்கால் தடங்களை

* 1997


Private works எல்லாம் பிரமாதம்.:thumbsup:

தங்க நாணயம்

ஆற்று மணற்பரப்பில் - நாம்
அன்புற்ற ஞாபகங்கள்
நேற்று நிகழ்ந்தவைபோல் - என்
நெஞ்சை அழுத்துமடி

முதிராத சிறுவயது - நமக்கு
முற்றாத இளமனது
பதின்மூன்று வயதிருக்கும் - இல்லை
பத்துநாள் குறைந்திருக்கும்

புதுமொட்டாய் இருந்தாயோ - இல்லை
பூப்பெய்திக் கிடந்தாயோ
அதுஎந்தன் நினைவிலில்லை - ஆனால்
அதுஇன்று விஷயமில்லை

இதமான வெள்ளைநிலா - வெள்ளி
இழைகளாய் ஒழுகிநிற்க
பதறாமல் நதிப்பரப்பை - அது
பால்கொண்டு மெழுகிநிற்க

கண்ணிலே கவிஊறியே - நாம்
காற்றுக்குச் சிறகாகினோம்
விண்ணிலே தலைஇடிக்க - நாம்
வெறிகொண்டு கூத்தாடினோம்

பூக்களில் பள்ளிக்கொண்ட - சிறு
பொறிவண்டின் துயில்கலைத்தோம்
தூக்கணாங் குருவிகளின் - குறுந்
தூக்கத்தைத் திருடிக் கொண்டோம்

பாவாடை நீசுருட்டி - என்
பக்கத்தில் உட்கார்ந்ததும்
மோவாயில் கையூன்றியே நான் -
முழங்காலை ரசித்திருந்தேன்

விதியிட்ட சிறுகோட்டிலே - அன்று
விளையாடித் திரிந்தவர்கள்
நதியிட்ட மணல்மேட்டிலே - தங்க
நாணயம் கண்டெடுத்தோம்

மாணிக்கக் கல்லின்விலை - மேயும்
மணிப்புறா அறிவதில்லை
ஆணிப்பொன் நாணயத்தின் - மதிப்பு
அப்போது தெரியவில்லை

நாணயம் நான்புதைப்பேன் - அதை
நலுங்காமல் நீஎடுப்பாய்
நாணத்தால் நீபுதைப்பை - அதை
நச்சென்று நானெடுப்பேன்

சூழ்நிலை மறந்துவிட்டோம் - காலம்
சொட்டுதல் மறந்துவிட்டோம்
வாழ்வதை மறந்துவிட்டோம் - பத்து
வயதை இழந்துவிட்டோம்

விளையாட்டு முடியுமுன்னே - வானில்
விடிவெள்ளி முளைத்ததடி
விளையாடித் திளைத்திருந்த - காசு
வீழ்ந்தெங்கோ தொலைந்ததடி

அழுதபடி நீதேடினாய் - கையில்
அதுவந்து சிக்கவில்லை
உழுதபடி மணல் தேடினேன் - எனக்கு
ஒருதுப்பும் கிடைக்கவில்லை

இருவரும் வீடேகினோம் - பின்னர்
இருவேறு காடாகினோம்
நறுமணல் பரப்பினிலே - தொலைந்த
நாணயம் நாம் மறந்தோம்!

நாணயம் பறிகொடுத்தோர் - இன்று
நடுத்தர வயதாகினோம்
நாணயம் நரைப்பதில்லை - அதற்கு
நம்போல் மூப்பில்லை

பொன்னூரு நாணயமோ - எங்கோ
புதைந்தாலும் புதைந்திருக்கும்
இன்னொரு ஜோடி அங்கே - அதை
எடுத்தாளப் பிறந்திருக்கும்

----கவிஞர் வைரமுத்து.
புத்தகம் - கொஞ்சம் தேநீர் நிறைய வானம்.

379



Thanks for arriving during 80s.:ty:

We are very fond of you.

Vinatha.

venkkiram
21st August 2011, 07:41 AM
யாரோ ஒருவருக்கு வரம் கிடைக்க இன்னொருவர் இருக்கும் தவம் தான் - புத்தகம்

NOV
21st August 2011, 08:39 AM
must watch....


http://www.youtube.com/watch?v=XiOmkuNfO6s&feature=related


:rotfl:

venkkiram
9th September 2011, 04:20 PM
மூன்றாம் உலகப் போர்- வைரமுத்து


http://www.youtube.com/watch?v=krCzPOYTmV0

வாழ்த்துக்கள் கவிஞரே! எடுத்துக்கொண்ட களன் சிறப்பானது. தங்களது கவிநடை எப்போதும்போல வெற்றி நடை போடட்டும்!

baroque
10th September 2011, 07:48 AM
Thanks Nov for the program Youtube . enjoyable :-D

************************************************** *****

Indeed very interesting topic.

Earlier , கவிஞர் has written a கவிதை on a different problem of the farmers .

topic is
water scarcity - no rain and /or heavy rains , followed by flooding destroys the stored seed for the planting season - Farmer's problems at the initial stage of crops

நாட்டுப்புறப் பாடல் from the book பெய்யென பெய்யும் மழை.

423



ஆடி முடிஞ்சிருச்சு
ஆவணியும் கழிஞ்சிருச்சு
சொக்கிகொளம் கோடாங்கி
சொன்னகெடு கடந்திருச்சு

காடு காஞ்சிருச்சு
கத்தாழை கருகிருச்சு
எலந்த முள்ளெல்லாம்
எலையோட உதிந்திருச்சு

வெக்க போருக்காம்
ரெக்க வெந்த குருவியெல்லாம்
வெங்காடு விட்டு
வெகுதூரம் போயிருச்சு

போட்டு மழை பெய்யலையே
புழுதி அடங்கலையே
உச்சி நனையலையே
உள்காடு உழுகலையே

வெதப்புக்கு விதியிருக்கோ
வெறகாக விதியிருக்கோ
கட்டிவெச்ச வெங்கலப்ப
கண்ணீர் வடிச்சிருச்சே

காத்துல ஈரமில்லா
கள்ளியில பாலுமில்ல
எறும்பு குளிச்சேற
இருசொட்டுத் தண்ணீ இல்லை

மேகம் எறங்கலையே
மின்னல் ஒண்ணுங் காங்கலையே
மேற்க கருக்கலையே
மேகாத்து வீசலையே

தெய்வமெல்லாம் கும்பிட்டுத்
தெசையெல்லாம் தெண்டனிட்டு
நீட்டிப் படுக்கையில்
நெத்தியில ஒத்தமழை

துட்டுள்ள ஆள் தேடித்
சொந்தமெல்லாம் வாரதுபோல்
சீமைக்குப் போயிருந்த
மேகமெல்லாம் திரும்புதய்யா

வாருமய்யா வாருமய்யா
வருண பகவானே
தீருமய்யா தீருமய்யா
தென்னாட்டுப் பஞ்சமெல்லாம்

ஒத்தஏரு நான்உழுகத்
தொத்தப்பசு வச்சிருக்கேன்
இன்னும் ஒரு மாட்டுக்கு
எவனப் போய் நான் கேட்பேன்?

ஊரெல்லாம் தேடி
ஏர்மாடு இல்லாட்டி
இருக்கவே இருக்கா
இடுப்பொடிஞ்ச பொண்டாட்டி

காசு பெருத்தவளே
காரவீட்டுக் கருப்பாயி
தண்ணிவிட்டு எண்ணேயின்னு
தாளிக்கத் தெரிஞ்சவளே

சலவைக்குப் போட்டாச்
சாயம் குலையுமின்னு
சீல தொவைக்காத
சிக்கனத்து மாதரசி

கால்மூட்ட வெதச்சோளம்
கடனாகத் தா தாயி!
கால்மூட்ட கடனுக்கு
முழுமூட்ட அளக்குறண்டி

ஊத்துதடி ஊத்துதடி
ஊசிமழை ஊத்துதடி
சாத்துதடி சாத்துதடி
சடைசடையாச் சாத்துதடி

பாழும் மழைக்குப்
பைத்தியமா புடிச்சிருச்சு?
மேகத்தைக் கிழிச்சு
மின்னல் கொண்டு தைக்குதடி

முந்தாநாள் வந்தமழை
மூச்சுமுட்டப் பெய்யுதடி
தெசைஏதும் தெரியாம
தெரபோட்டுக் கொட்டுதடி

கூர ஒழுகுதடி
குச்சுவீடு நனையுதடி
ஈரம் பரவுதடி
ஈரக்கொல நடுங்குதடி

வெள்ளம் சுத்திநின்னு
வீட்ட இழுக்குதடி
ஆஸ்தியில் சரிபாதி
அடிச்சிக்கிட்டுப் போகுதடி

குடி கெடுத்த காத்து
கூர பிரிக்குதடி
மழைத்தண்ணி ஊறி
மஞ்சுவரு கரையுதடி

நாடு நடுங்குதையா
நச்சுமழை போதுமய்யா
வெதவெதைக்க வேணும்
வெயில்கொண்டு வாருமய்யா

மழையும் வெறிக்க
மசமசன்னு வச்சிருந்த
மூட்டையைப் போய் நான் பிரிக்க

வெதச்சோளம் நனைஞ்சிருச்சே
வெட்டியாப் பூத்திருச்சே
மொளைக்காத படிக்கு
மொளைகட்டிப் போயிருச்சே

எர்புடிக்கும் சாதிக்கு
இதுவேதான் தலையெழுத்தா?
விதிமுடிஞ்ச ஆளுக்கே
வெவசாயம் எழுதிருக்கா?

காஞ்சு கெடக்குதுன்னு
கடவுளுக்கு மனுச்செஞ்சா
பேஞ்சு கெடுத்திருச்சே
பெருமாளே என்னபண்ண?

வைரமுத்து
_________________
பெய்யெனப்
பெய்யும்
மழை


424


love,

vinatha.

ajaybaskar
10th September 2011, 12:11 PM
//Kumudham Reporter reports that VM's printing company got the tenders with some rules bent during the Muka reign. And as a result, he may be arrested anytime.//

Scale
10th September 2011, 07:17 PM
Vaagai Sooda Vaa - Lyrics by Vairamuthu. Fantastic Debut by M Ghibran. Listen to these songs

http://www.youtube.com/watch?v=KeL6Wzx4ej8&feature=related

baroque
11th September 2011, 12:10 AM
good wordplay by kavingar.


Yeah... VAAGAI SOODA VAA is indeed impressive album.:thumbsup:

I loved the grand orchestral, children choir composition aana aavana.....:musicsmile: BEAUTIFUL JOB.

senga soola kaara... is wonderful too.

rustic singing of the struggles of village folks, their plead to God is expressive.

vinatha.

venkkiram
16th September 2011, 07:46 AM
கவிஞரால் எழுதப்பட்டு பாடலில் இடம் பெறாத மூன்றாவது சரணம்...

இரவும் பகலும் யோசிக்கிறேன்
எனையே தினமும் பூசிக்கிறேன்
சாலை மனிதரை வாசிக்கிறேன்
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்
பேதங்களே... வேதங்களா.. கூடாது..

பாலுவின் குரலிலேயே இந்த வரிகளை கேட்டு ரசியுங்கள்.


http://www.youtube.com/watch?v=waAj9-j5MPw&feature=related

Roshan
11th October 2011, 12:47 PM
Madhan Karky's twitter message;

@madhankarky Madhan Karky
Loved my interview to @vikatan deepavali malar on my fav 10 songs of @vairamuthu. Thanks to senior journalist Rajath for this one.

app_engine
13th October 2011, 07:27 PM
பாலு இழையில் நடந்த ஏ ஜிந்தகி பற்றிய உரையாடல்களால் உந்தப்பட்டு மூன்றாம் பிறை பாட்டுகள் உள்ள குறுந்தகடு மீண்டும் மீண்டும் ஊர்தியில்... (http://www.mayyam.com/talk/showthread.php?8541-The-Golden-Era-of-Dr.IR-and-Dr.SPB/page198)

இயற்கை அழகைப்பாடுவதில் திரைப்பாடலாசிரியர்களின் இமயம் வைரம் தான்!

கதிரவன் பள்ளியெழுச்சியை எப்படி சொல்கிறார் பாருங்கள்:

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்
வானில் ஒரு தீபாவளி, நாம் பாடலாம் கீதாஞ்சலி :-)

R.Latha
28th October 2011, 12:21 PM
airamuthu pens the lyrics for Viswaroopam
vairamuthu-kamal-haasan-27-10-11
Oct 27, 2011

Poet Vairamuthu has said that he had penned the lyrics for a song in Viswaroopam. The lyricist is one of Kamal Haasan’s favorites and their combination has churned out some of the best songs in Kollywood. With Viswaroopam, they will certainly live up to the expectations of their fans.

Shankar-Ehsaan-Loy is scoring the music for Viswaroopam which stars Kamal Haasan in the lead. The star is also wielding the megaphone for this film.
Tags : Vairamuthu ,Kamal Haasan,Viswaroopam,

baroque
29th October 2011, 01:00 AM
குட் குட் குட்.
ஹே கமல்... remember ஸ்ரீ.பாலா சுப்பிரமணியம். ஒருத்தரு எக்கசக்கமா ஹிட்ஸ் கொடுத்தாரே for you . Call the guy to sing for you, too .:)

Now

ஸ்ரீ.யேசுதாஸ் for இளையராஜா for வைரமுத்து வரிகள்.

என்ன தேசமோ என்ன தேசமோ..... உன் கண்ணில் நீர் வழிந்தால்.


http://www.youtube.com/watch?v=Qr24fadHS6E
na koi umang hai na koi tarang hai meri zindagi hai kya ik kati patang hai....:musicsmile: - R.D.பரமன் & லதா

vinatha.

venkkiram
30th November 2011, 10:23 AM
ட்வீட்டிருக்கிறார்.


மணிரத்னம் படம் தொடங்கிவிட்டது ஏ.ஆர்.ரகுமான் இசையில் உயிரைத் தாலாட்டும் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்.

-வாழ்த்துக்கள்!

venkkiram
30th May 2012, 08:39 AM
ஜுலை13 "மூன்றாம் உலகப் போர்" நூல் வெளியீட்டு விழா !!

-வாழ்த்துக்கள்!

baroque
2nd June 2012, 11:42 AM
Very good.

:)

app_engine
13th October 2012, 08:56 PM
VM in the news (http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1210/13/1121013020_1.htm)



நீர்ப்பறவை திரைப்பட பாடல் சர்ச்சை தொடர்பாக கிறிஸ்தவர்கள் கோபமடைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் வைரமுத்துவின் திருவான்மியூர் வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

app_engine
13th October 2012, 09:18 PM
"அப்படி என்ன தான் எழுதினார்"னு தேட ஆரம்பித்தபோது கண்ட ஒரு வேடிக்கையான வரி :
http://www.magicalsongs.net/2012/10/para-parasad-lyrics-neerparavai-song.html



உனது வேர்வை என் மார்புக்குள்
பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே
ஈர வேர்வைகள் தீரவும்
எனது உயிர் பசை காய்வதா


:lol:

VM's mAnE-thEnE seems to be vErvai.

app_engine
13th October 2012, 09:25 PM
I guess the "christian" org is making problem for this song:
http://www.magicalsongs.net/2012/10/meenuku-lyrics-neerparavai-song-lyrics.html



கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர வரவில்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமறை வரி நினைவில்லையா



:lol2:
இதுக்கெல்லாம் ஒரு போராட்டமா?

baroque
13th October 2012, 10:08 PM
:)

(http://www.freeimagehosting.net/c1l8o)ilayaraja's veena, flute & guitar
enchantment they define!
ilayaraja with vairamuthu & bala!
http://www.youtube.com/watch?v=gOzYPReSq1k

பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்,
புதுத் தென்றலோ
பூக்களில் வசிக்கும்!
ஆகாய மேகங்கள் நீர் ஊற்ற வேண்டும்,
அந்த மழையில்
மலர்களும் குளிக்கும்!

LOVER OF NATURE - POET VAIRAMUTHU!



From KUMUDAM - 27-10-2010!

http://www.freeimagehosting.net/im4lu


http://www.freeimagehosting.net/c1l8o

(http://www.freeimagehosting.net/c1l8o)

venkkiram
17th October 2012, 07:58 PM
வடுகப்பட்டியாரின் முகநூல் பக்கத்திலிருந்து..

இன்று கவியரசு கண்ணதாசன் நினைவுதினம்
கவியரசு கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய கவிதை

ஒரு
தேவகானம்
முடிந்து விட்டது

எங்கள்
தமிழ்ச்சங்கம்
கலைந்து விட்டது

சரஸ்வதியின்
வீணையில்
ஆனந்த நரம்பொன்று
அறுந்து விட்டது

அந்த விமானத்தில்
எங்கள் ராஜ குயிலின்
கூடுமட்டுமே
கொண்டு வரப்படுகிறது

வார்த்தைக்கு ருசிதந்த
வரகவியே

உன்னை
வரவேற்கக் காத்திருந்த
வர்ணமாலைகளை
உன்
சடலத்தின்மேல் சாத்தவா?

எழுத முடியவில்லை
என்னால்

கண்ணீரின்
கனம் தாங்காமல்
வார்த்தைகள்
நொண்டுகின்றன

காற்றுக்கு
நன்றியில்லையா?

கவிதை வரிகளால்
காற்று மண்டலத்தையே
இனிப்பாக்கினாயே

உனது சுவாசத்துக்கு
அந்தச்
சண்டாளக் காற்று ஏன்
சம்மதிக்க மறுத்தது?

அந்நிய மண் என்பதால்
மரணம் – உன் உயிரை
அடையாமல் தெரியாமல்
அள்ளிப் பருகியதா?

எத்தனை இலக்கியம்
எழுதிய விரல்
எத்தனை கவிதைகள்
முழங்கிய குரல்
எத்தனை கருத்தை
நினைத்த மனம்


மரணத்தின் கஜானாவே

நீ திருடிய பொக்கிஷத்தைத்
திருப்பிக் கொடுத்து விடு
என் தாய்க் கவிஞனே
உன்னை இனி தரிசிப்பதெப்படி?
சாவின் மாளிகைக்கு
ஜன்னல்களும் கிடையாதே

நீ காதலைப் பாடினாய்
அது
இளமையின் தேசிய கீதமானது

நீ சோகம் பாடினாய்
அது
ஆயிரங் கண்ணீருக்கு
ஆறுதல் ஆனது

நீ தத்துவம் பாடினாய்
வாழ்க்கை தனது
முகமூடியைக் கழற்றி
முகத்தைக் காட்டியது

அரசியல் – உன்னை
பொம்மையாக நினைத்தபோதும்
நீ
உண்மையாகத் தானிருந்தாய்

உன் எழுத்து
ஒரு
கால் நூற்றாண்டுக்
கலாசாரத்தில் கலந்திருக்கிறது

“மரணத்தின் பின் என்னை
விமர்சியுங்கள்” என்று
வேண்டிக் கொண்டவனே

இன்று மரணத்தையன்றி
வேறொன்றையும் எமக்கு
விமர்சிக்க வலிமையில்லை

எவரேனும் இறந்தால்
உன் இரங்கற்பாப் படித்து
இதயம் ஆறுவோம்
இன்று இரங்கற்பாவே
இறந்து விட்டதே

உன்னை சந்தித்துப் பேசும்
சர்க்கரைப் பொழுதுகளில்
உன்
கண்களில் வெளிச்சத்தைக்
காதலித்தேனே

இனி அந்த வெளிச்சம் -
உன்
இமைகளைப் பிரித்தாலும்
இருக்குமா?

முப்பது வருஷத் தென்றலே
நீ நின்றுவிட்டதால் -
மனசில் புழுக்கம்
விழிகளில் வியர்வை

உன்
பூத உடலில் விழும்
பூவிலுள்ள தேனெல்லாம்
கண்ணீராய் மாறிவிடும்
கவிஞனே ..

உன்னைச் சந்திப்பது இனிமேல்
சாத்தியமில்லையா?

உடைந்த இருதயம்
ஒட்டாதா?

சொர்க்கத்தில் சந்திக்கலாம்
என்று
சொல்லுகிறார்களே

இந்த மூட நம்பிக்கை
நிஜமாய் இருந்தால்
எனக்கு நிம்மதி கிடைக்கலாம்

venkkiram
6th November 2012, 01:39 AM
கடல் படத்தின் "நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்" பாடலை ஷக்திஸ்ரீ கோபாலன் பாடியதை கேட்டு எழுதியிருக்கேன். வைரமுத்துவின் பாடல் வடிவம் எப்படி இருக்கிறது என பொறுத்திருந்துதான் பார்க்கணும். கவிஞரின் கவிதை வரிகள் அங்கங்கே சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கிறது சந்தங்களுக்கு ஏற்ப. பாடலின் முதல் வரி "உள் நெஞ்சுக்குள்ள" என்றே இருந்திருக்கலாம். இன்னும் கவி நயம் கூடியிருக்கும்.

venkkiram
6th November 2012, 01:57 AM
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

வெல்லப் பார்வ வீசிவிட்டீர் முன்னாடி - இந்த
தாங்காத மனசு தண்ணிபட்ட கண்ணாடி

வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்

நீர்போனபின்னும் நெழல்மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக் குழியிலே வந்து விழுந்திருச்சே

அப்ப நிமிந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம் குத்திருக்குதே

நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

பச்சி ஒறங்கிருச்சு பால் தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல எலகூடத் தூங்கிருச்சு

காசநோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக அரநிமிசம் தூங்கலையே

நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
எங்கே எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

ஒருவாய் எறங்கலயே உள்நாக்கு நனையலயே
ஏழெட்டு நாளா எச்சில் உறங்கலயே

ஏழ இளஞ்சிருக்கி எதோ சொல்ல முடியலயே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே

நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
எங்கே எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

வெல்லப் பார்வ வீசிவிட்டீர் முன்னாடி - இந்த
தாங்காத மனசு தண்ணிபட்ட கண்ணாடி

வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்

நீர்போனபின்னும் நெழல்மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக் குழியிலே வந்து விழுந்திருச்சே

அப்ப நிமிந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம் குத்திருக்குதே

நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

venkkiram
18th December 2012, 08:50 AM
சித்திரை நெலா
பாடல்: விஜய் ஜேசுதாஸ்

சித்திரை நெலா
ஒரே நெலா
பரந்த வானம்
படைச்ச கடவுளு

எல்லாமே ஒத்தையில நிக்குதுடே
நீ கூட ஒத்தையில நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா
[சித்திரை நெலா...]

மனிதன் நினைத்தால் வழி பிறக்கும்
மனதிலிருந்தே ஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும்
முயற்சி கொண்டால்தான்
பூமியும்கூட தாழ் திறக்கும்
[எட்டு வை மக்கா...]

கண்களிலிருந்தே
காட்சிகள் தோன்றும்
களங்களிலிருந்தே
தேசங்கள் தோன்றும்
துயரத்திலிருந்தே
காவியம் தோன்றும்
தோல்வியிலிருந்தே
ஞானங்கள் தோன்றும்

சூரியன் மறைந்தால்
விளக்கொன்று சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால்
கிளை ஒன்று கிடைக்கும்

[சித்திரை நெலா...]

மரமொன்று விழுந்தால்
மறுபடி தழைக்கும்

மனம் இன்று விழுந்தால்
யார் சொல்லி நடக்கும்
பூமியைத் திறந்தால்
புதையலும் இருக்கும்
பூக்களைத் திறந்தால்
தேன்துளி இருக்கும்
[மனம் இன்று விழுந்தால்..]

நதிகளைத் திறந்தால்
கழனிகள் செழிக்கும்
நாளையைத் திறந்தால்
நம்பிக்கை சிரிக்கும்

[சித்திரை நெலா...]

P_R
20th December 2012, 03:20 AM
தொட்டு வை - really?

சும்மா இருக்குறதுக்கு தொட்டு வைக்கலாம்ல அப்டீன்ற மாதிரி.
வரவர இவர் ரம்பம் தாங்கலை. முன்ன மாதிரி சரியா வந்து உர்காரமாட்டேங்குது.

இவர் மகர் எழுதன பாட்டு நல்லாருக்கு: அன்பின் வாசலே. Simple and fits the song and makes it better than the sum of the parts.

venkkiram
20th December 2012, 05:37 PM
கவிஞரிடத்தில் எனக்கு இன்னமும் பிடித்தது சொற்கட்டுமானம் தான். ஒரு வரியை தொடர்ந்து அடுத்த வரியின் ஆரம்பம் அல்லது இறுதி இப்படித்தான் இருக்கும்னு நாம் நினைத்தால் அங்கு வேறு மாதிரி எழுதியிருப்பார். இந்த முரண்பாடுகள்தான் அவரின் பெரிய பலம்.

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச வானம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனி விழும் காடு
ஒத்தையடி பாதை ஒங்கூட பொடிநட

சின்னச்சின்ன வார்த்தைகள். ஆனால் நம்மில் பரப்பும் கற்பனைத் தளமோ நீளம்.

raagadevan
29th December 2012, 09:00 PM
Rewind to the Sangam era

By Malathi Rangarajan (From The Hindu - December 29, 2012)

Over the years Vairamuthu has ingeniously woven several unusual phrases, similes, metaphors and aphorisms into his lines. In an interview to Malathi Rangarajan, the veteran verse writer talks about what makes his lyric for Kochadaiyaan special

http://www.thehindu.com/arts/cinema/rewind-to-the-sangam-era/article4252621.ece?homepage=true

venkkiram
11th March 2013, 08:13 AM
‘ஆனந்த விகடன்’ வார இதழில் தொடராக எழுதி பிறகு புத்தகமாக வெளியான ‘மூன்றாம் உலகப்போர்’ புத்தகத்தின் வருமானத்தை காவிரி டெல்டா பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் நிதியுதவியாக கொடுக்க இருப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

venkkiram
5th April 2013, 09:07 AM
ஒடுக்கப்பட்ட உழைப்பாளி வர்க்கத்திற்கு எக்காலத்திற்கும் பொருந்துவது போல கவிஞர் எழுதிய திரைப்பாடல். கொந்தளிக்கும் வரிகள்!

மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்

சில ஆறுகள் மாறுதடா வரலாறுகள் மீறுதடா
பசியால் பல ஏழைகள் சாவதென்பது தேசியமானதடா
இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியாமானதடா
அடி சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா

ஒளி வீசுக சூரியனே யுகம் மாறுது வாலிபனே
ஒரு தோல்வியில்லா புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்து விடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றி விடும்
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டு விடும்

ராஜா-யேசுதாஸ் கூட்டணிப் பாடல்களில் கவிஞரின் பலப் பாடல்கள் சிறப்பு பெற்றவை. அதில் குறிப்பாக இந்தப் பாடல் இடம்பெற்ற படத்தின் தளத்திற்கு அப்பாலும் என்றென்றும் மங்காமல் ஒளி வீசக் கூடியது.

venkkiram
5th April 2013, 09:21 AM
Vairamuthu speaks

Lyrics for கிழக்குச் சீமையிலே

Manoothu Mandayile..song .. I had written lyrics like " ஆட்டுப் பால் குடிச்சி அறிவழிஞ்சி போகுமுன்னு " whereas in Film Annamalai, I had written "ஆயுள் வளர்க்குது ஆட்டுப் பால்", and both were contradictory. How come Vairamuthu turn so contradictory was the uproar at that time ?

I replied with humility and patience . A lyric writer, should never run off, from criticisms .

Explanation :- There Gandhi drank goat's milk. ( In Anna malai Film , Intro song for Rajni... வந்தேண்டா பால் காரன் song )

In கிழக்குச் சீமையிலே, the lyrics were written for a small baby. Uncle had taken milk from kaanan pasu ( a particular type of cow ). A small baby cant drink goat milk. I even went and did a research on the fat content of the milk, before writing lyrics.

Goat Milk - Fat content - 4.1% and Gandhi has power to digest the fat content

Kaanan Pasu - Fat Content - 3.1 % and this can be digested by baby.

Hence, when we write lyrics , we should do it with facts, and with proofs to explain everyone.

I thank the people for criticising me, and giving me an opportunity to explain to them..

venkkiram
18th May 2013, 09:35 AM
வேதம் புதிது திரைப்படத்தில் மிக முக்கியமான கதை நகர்வில் இடம்பெறும் பாடல் வரிகள் இவை. எனக்குப் பிடித்த இடம் "காட்டு மரங்களெல்லாம் கைநீட்டி அழைக்குது - மாட்டுச் சலங்கையெல்லாம் மகளொடு அழுகுது.." இடம் பொருளை நினைவில் நிறுத்தி காட்சியை அழகுபட வரிகளிலேயே வடிக்கும் கலை இது. ஒவ்வொரு வார்த்தையையும் மலேஷியா வாசுதேவன் பாடும் விதம் - ஜீவன் கலந்து , எற்ற இறக்கம் பாடல் முழுதும் தென்படும். ஊனையே அசைக்கும் நாதம் அது! தேவந்திரன் இசையில் சிறந்ததொரு ஆக்கம்.

மாட்டுவண்டி சாலையிலே கூட்டுவண்டி போகுதம்மா
கூட்டுவண்டி உள்ளுக்குள்ளே கூண்டுக்கிளி வாடுதம்மா
கூறப்பட்ட இடம்வேறு இவள் போகும் இடம்வேறு
காதலிச்ச வரலாறு கண்ணீரு தகராறு

ஓடிப்போய் சொல்லிவிட உயிர்கிடந்து துடிக்கிறது
ஊமைகண்ட கனவு இது உள்ளுக்குள் வலிக்கிறது
எண்ணத்தைச் சொல்லாமல் ரெண்டுமனம் தவிக்கிது
கன்னத்தில் சிந்தாமல் கண்ணீரும் உறைந்தது
காட்டு மரங்களெல்லாம் கைநீட்டி அழைக்குது
மாட்டுச் சலங்கையெல்லாம் மகளொடு அழுகுது

ஆற்றுமணல் மேடுகளே அதனருகே ஆலயமே
தென்னையிளந் தோப்புகளே தேன்கொடுத்த சோலைகளே
நதிவழி போனமகள் விதிவழி போகின்றாள்
இதயத்தில் துடிப்பில்லை இருந்தாலும் வாழுகின்றாள்
சின்னக் கிளியிரண்டும் செய்துவிட்ட பாவமென்ன
அன்பைக் கொன்றுவிட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன

http://www.youtube.com/watch?v=LQ__gIe9DnQ

venkkiram
18th May 2013, 10:44 AM
FM பண்பலை ஒன்றில் கவிஞர் அளித்த பேட்டியிலிருந்து :

வெண்ணிலவே வெண்ணிலவே ( மின்சாரக் கனவு )
----------------------------------------------------

Rajeev Menon is a very good admirer of Tamil language. He has also learnt many languages, and has read literature in a lot of other languages. After reading a song of mine, he said, " There are moon songs in all languages. But the lyrics of the song that you have written seems to be there only in Tamil. This is my opinion". I asked him which one.

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை

Everyone will think till this stage. I don't have any companion to play with. I am alone, so, Moon, pls come and play with me. This is not something new, and every lyricist and poet has been thinking on these lines before.

The next lyrics are something new, which I haven't seen in any of the languages ( said by Rajeev Menon)

"இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்"

Calling the moon, and when the dawn breaks, it gets lost, and we feel bad and search over it again and everywhere. Just as how a mother feels bad for a child, when he / she doesn't return back after school on time, similarly, the sky feels worried, when the moon doesn't return back to the sky. So, we calling the moon to play with us, and requesting it to go back to its place of the sky was a new concept, and Rajeev Menon said that it was a new idea, which was never seen anywhere else.

Usually, I don't go to the shooting spot, where my songs are picturised. There has been no time for me to go for the same. I have the yearning, but don't have the time. Among the songs , which I desired to go and see the picturisation, this song is also one of them. When the song was picturised in AVM Studio, I was also present. The lyrics that was picturised, was, " இது இருள் அல்ல அது ஒளி அல்ல இது ரெண்டோடு சேராத பொன் நேரம்".

venkkiram
10th August 2013, 11:20 PM
Selvaragan admires Vairamuthu

http://www.youtube.com/watch?v=lg36aEKD0iE

:clap:

venkkiram
27th January 2014, 12:24 PM
விருது எனக்கு இன்னும் சமூகப் பொறுப்பை கொடுக்கிறது: வைரமுத்து பேட்டி

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றது குறித்து ‘தி இந்து’ வுக்கு கவிப்பேரரசு வைரமுத்து ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி :

விருது குறித்த மகிழ்ச்சி பற்றி?

ஒரு விருது, விருதைப் பெற்றவனுக்கு கொடுக்கும் மகிழ்ச்சியைவிட அந்த விருது பெற்றவன் சார்ந்திருக்கிற சமூகம் அடைகிற மகிழ்ச்சித்தான் பெரிது. இதில் நான் அடைகிற மகிழ்ச்சி சிறிது. நான் சார்ந்திருக்கிற சமூகம் அடைகிற மகிழ்ச்சி பெரிது. அதனால் அந்த மகிழ்ச்சி அந்த விருதை பெருமை உடையதாகவும், சிறப்பு மிக்கதாகவும் மாற்றியிருக்கிறது. எனவே அந்த விருதின் பெருமை சமூகத்தின் சந்தோஷத்தைப் பொருத்து அதிகமாகிறது.

உங்களோடு சேர்ந்து விருது பெருவதில் சந்தோஷம் என்று கூறியிருக்கிறாரே, கமல்?

எனக்கும் மகிழ்ச்சிதான். பத்மஸ்ரீ விருதைப்பெற்றபோது, நான் மிகவும் நேசித்த இசைஅரசர் டி.எம்.சௌந்தர்ராஜனோடு சேர்ந்து பெற்றேன். அது எனக்கு பெருமை. பழக அருமையான நண்பர், கமல். என் நேசிப்புக்குரிய இரண்டு சாதித்த மனிதர்களோடு பெறுவதும் பெருமை. கமலும், நானும் ஒரே வயதுடையவர்கள். கலைத்துறையில் என்னை விட 20 ஆண்டுகள் மூத்தவர். நான் 80 களில் வந்தேன். அவர் 60 களில் வந்தார். என் சம வயது கொண்ட ஆனால் என்னை விட 20 வயது மூத்த கலைஞனோடு சேர்ந்து விருதைப் பெருவதில் மகிழ்ச்சி.

உங்களது அடுத்த கட்டம்?

என்னைப்பார்த்து ஏற்கனவே ஒரு கேள்வியை கேட்டார்கள். நீங்கள் படைத்த படைப்பில் உங்களுக்கு பிடித்த படைப்பு எது என்று. நாளை எழுதப்போகும் படைப்பு என்றேன். இதுவரை எழுதிய எழுத்துக்களெல்லாம் பயிற்சிகளும், முயற்சிகளும்தான். ஒரு மிகச்சிறந்த படைப்பை நோக்கி பயணப்படுவதற்கு இந்தப்படைப்புகள் எல்லாம் துணை நிற்கின்றன என்றே நினைக்கிறேன். எனவே இந்த விருது எனக்கு இன்னும் சமூக பொறுப்பை கொடுக்கிறது. இன்னும் வாழ்விலும், படைப்பிலும் செம்மை சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பை கொடுக்கிறது. எனவே என் பழைய படைப்பைவிட மேம்பட்ட படைப்பை கொடுக்க முயல்கிறேன். காலமும், அனுபவமும் அதை செய்து முடிக்கும் என்று நம்புகிறேன்.

இங்கே உயரிய விருதுகளால் இன்னும் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் யார் யார்?

ஒரே ஒரு ஏக்கம் இருக்கிறது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன். அவரது பாடலை கேட்டு வளர்ந்தவர்கள், நாங்கள். அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் எல்லாம் பொருந்தாது. பத்மவிபூஷன் வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன். எவ்வளவு பெரிய இசை கலைஞர். தமிழ்நாட்டை 25 ஆண்டுகளாக இசையால், தமிழால் தாலாட்டிய பெருமகன். இந்த விருதைப்பெறக்கூடிய மூத்த தகுதியானவர் என்று அவர்தான் ‘பளீச்’ என்று நினைவுக்கு வருகிறார். இன்னும் பலப்பேர் இருக்கலாம். அவர்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் ‘பளீச்’ சென அகப்படுபவர்.

யார்.. யாரெல்லாம் வாழ்த்துகள் தெரிவித்தார்கள்?

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், கருணாநிதி, நல்லக்கண்ணு, மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், ஜி.கே.வாசன், சி.பி.எம்.ராமக்கிருஷ்ணன், இயக்குநர் கே.பாலசந்தர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், வை.கோ, இயக்குநர்கள் லிங்குசாமி, கே.வி.ஆனந்த், சீனுராமசாமி நடிகர்கள் சூர்யா, ஜீவா, முக்கிய நீதியரசர்கள், துணைவேந்தர்கள், மருத்துவத்துறை நண்பர்கள் என்று தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

உங்களது அடுத்தப் படைப்பு?

படைப்புக்கான கருவை நெஞ்சில் வளர்த்துக்கொண்டே இருக்கிறேன். அது ஈழம் சார்ந்த படைப்பாக இருக்கும்.