PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7



Pages : 1 2 3 [4] 5 6 7 8

J.Radhakrishnan
7th November 2010, 12:19 AM
Dear Ragavendar sir, Mr.Murali sir, Pammalar sir and saaratha madam 1974இல் வந்த தாய் படம் பற்றிய திறனாய்வு செய்யும் படி வேண்டுகிறேன்.

படம் பார்த்து பல வருடம் ஆகிவிட்டது
கிட்டத்தட்ட மறந்து போன நிலைமை .
இதன் DVD கூட கிடைக்கவில்லை

J.Radhakrishnan
7th November 2010, 07:31 AM
டியர் முரளி சார்,

அன்னையின் ஆணை திறனாய்வு அருமை, இதை படிக்கும் போது Y.G.Magendiren அவர்களின் பேட்டி நினைவுக்கு வருகிறது, அவர் NTஅவர்களிடம் சாவித்திரியை துண்டால் அடிக்கும் சீன் அருமை என்று பாராட்டி இருக்கிறார் , அதற்க்கு NTஅவர்கள் எங்கோ பார்த்த ஒரு OBSERVATION தான் காரணம் என்று கூறி இருக்கிறாரர் .

THAT IS NADIGAR THILAGAM

Murali Srinivas
7th November 2010, 10:44 PM
இன்று நவம்பர் 7.

சரியாக இன்றைய தேதிக்கு 49 ஆண்டுகளுக்கு முன் [07.11.1961] அது வரை மக்கள் பத்திரிகைகளில் மட்டுமே படித்து தெரிந்து கொண்ட ஒரு சுதந்திர போராட்ட தியாகியை திரையில் தரிசித்தனர். அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல வகை போராட்டங்கள் பலரால் நடத்தப்பட்டது. வியாபாரம் செய்வதற்கு கிழங்கிந்திய கம்பெனி என்ற பெயரில் இந்தியா வந்தவர்கள் பின் இந்தியாவை தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். வியாபாரம் செய்வதற்கு வந்தவர்களை அதே வியாபாரத்தில் போட்டியிட்டு தோற்கடிக்க தமிழகத்தின் தெற்கு பகுதியில் ஒரு வீரன் தோன்றினார். அதற்காக சுதேசி கப்பல் ஒன்றையே வாங்கி அதன் மூலம் சுதந்திர போராட்டத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுக்க வைக்கப்பட்டார்.

அப்பெருமகனாரின் வாழ்க்கை கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரில் செல்லுலாயிடில் சித்திரமாக செதுக்கப்பட்டது பந்துலுவின் மூலமாக. வ.ஊ.சிதம்பரனாராக நமது நடிகர் திலகம் வாழ்ந்து காட்டினார். சிதம்பரனாரின் மகன் படத்தைப் பார்த்து விட்டு என் தந்தையை மீண்டும் பார்த்தேன் என சொல்லியதை தனக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக நடிகர் திலகம் கருதினார்.

அப்படிப்பட்ட ஒரு உன்னத படத்தின் பொன் விழா ஆண்டு இன்று தொடங்குகிறது. உண்மையும் நேர்மையும் தியாகமும் சீலமும் நிறைந்த தேசியம் கோலோச்சிய தமிழகத்தில் மீண்டும் அந்த பொற்காலம் வர வேண்டுவோம். இத்தகையான வரலாற்றுகளை நாம் என்று நினைவில் கொள்ள வழி வகுத்த நடிகர் திலகத்திற்கு நன்றி சொல்லுவோம்.

அன்புடன்

pammalar
8th November 2010, 02:52 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 155

கே: "சிவாஜி கணேசன் நடித்த படங்களில் உங்களை மிகவும் கவர்ந்த படம் எது?" என்று கேட்டால், உங்களால் பதில் கூற முடியுமா? (மு.சுகுமார், எலந்தம்பட்டு)

ப: முடிந்திருக்கிறதே, முடிகிறதே, முடியுமே! "கப்பலோட்டிய தமிழன்" படம் என்று. அன்றும் கூறினேன், இன்றும் கூறுகிறேன், என்றும் கூறுவேன்.

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1971)

இன்று 7.11.2010 தேசிய திலகத்தின் "கப்பலோட்டிய தமிழன்" திரைக்காவியத்தினுடைய பொன்விழா ஆண்டின் தொடக்கம்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th November 2010, 04:54 AM
கலைதெய்வம் பாராட்டிய கலைஞானி

"என் மடியில் குழந்தையாகத் தவழ்ந்தவன் கமல். இன்று உலகம் போற்றும் நிலைக்கு உயர்ந்திருக்கிறான். விகாரமாக முகத்தை வைத்துக் கொண்டு நடித்து, உலகைக் கவர்பவன் தான் மிகச் சிறந்த கலைஞன். அந்த வரிசையில் கமலஹாசன் முன்னிலை வகிப்பவன். கமல் அழகானவன். என் மனதிலும், என் இதயத்திலும் இருப்பவன். அப்படிப்பட்ட கமல் பல்லாண்டு வாழ்ந்து, கலையுலகுக்கு நல்ல நடிகன் என்ற பெருமையை பெற்றுத் தர வேண்டும்."

- 30.4.1997 புதனன்று சென்னையில் நடைபெற்ற "அவ்வை சண்முகி" வெற்றி விழாவில் நடிகர் திலகம்.

இன்று 7.11.2010 கலையுலக மன்மதன் கமலஹாசன் அவர்களின் 57வது பிறந்த தினம்.

HAPPY BIRTHDAY KAMAL! MANY MORE HAPPY RETURNS!

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
10th November 2010, 12:15 AM
நமது உயிரினுமினிய தேசத்தின் பெயர் பாரதம்.

வடபுலங்களில் இன்றும் நமது தேசம் அழைக்கப்படுவது பாரத் என்று.

அது போல் நமது அன்பிற்கினிய நெஞ்சில் நிறைந்த புரட்சிக்காரன் பாரத்.

வெளி நாடுகளில் வாழும்போது நமது தேசத்தையே நினைத்தவன் பாரத்.

நாட்டிற்கு வந்த போதோ எதேச்சதிகார ஆட்சியை வீழ்த்த போராடியவன் பாரத்.

மகிழ்ச்சி பீறிடும் உற்சாகத்தின் விளிம்பையும் தீமைக்கு எதிரான கோவத்தின் உச்சக்கட்டதையும் நம்மை உணர வைத்தவன் பாரத்,

ஒரு திரையரங்கின் சுற்றுப்புறங்களில் பார்க்கக் கூடிய அதிகபட்ச மக்கள் வெள்ளத்தை நான் கண்டதும் பாரத் மூலமாகத்தான்.

வாழ்நாளில் நான் என்றுமே மறக்க முடியாத அந்த 1969 நவம்பர் 9ம் தேதியையும் மதுரை சென்ட்ரல் சினிமாவையும் பற்றிய இனிய நினைவுகளையும் மீண்டும் அசை போட வாய்ப்பு கொடுத்த இன்றைக்கு 41 வயதை நிறைவு செய்யும் பாரத் மேலும் பல்லாண்டு வாழட்டும்!

வெள்ளித்திரை மூலமாக இது போல் எத்தனை முறை நம்மை வசீகரித்திருக்கும் நமது அன்புக்குரியவரைப் பற்றி பேச ஆரம்பித்தால் நம்மால் நிறுத்தவும் முடியுமா?

எப்போதும் அந்த இனிய நினைவுகளோடு!

அன்புடன்

pammalar
10th November 2010, 03:02 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 156

கே: "சிவந்த மண்" படப்பிடிப்புக்காக வெளிநாடுகள் சென்ற நடிகர் திலகம் அங்கிருந்து வாங்கி வந்தவை என்ன? (ப.பூலோகநாதன், சென்னை-1)

ப: திறமைக்குப் பாராட்டு.

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1969)

இன்று 9.11.2010, சிங்கத்தமிழனின் "சிவந்த மண்" திரைக்காவியத்தின் 42வது ஆண்டு ஆரம்ப தினம். ஆம், பார் போற்றும் 'பாரத்'துக்கு 42வது ஜெயந்தி.

HAPPY BIRTHDAY & MANY MORE HAPPY RETURNS, Mr.BHARAT!!!

அன்புடன்,
பம்மலார்.

SHIV
10th November 2010, 10:57 AM
Dear Mr.Murali Srinivas/Mr.Pammalar

Thanks for the news that Mr.Bharath is celebrating his 42nd birthday today. On the other side, its really awesome to know that 41 years have passed since this movie was released. Even today if we see the movie, its like a new movie, with our NT in all his glowing style and dress with original hair, MSV's all time great hits, splendid foreign locations and an action packed story.

Thanks once again for the same.

Shiv.

saradhaa_sn
10th November 2010, 11:35 AM
Happy (42nd) Birthday to 'Sivandha Mann' BHARATH.

Discussions about Sivandha Mann scenes here:

http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13937&postdays=0&postorder=asc&start=1425

(pages 96, 97, 98 & 99)

SHIV
10th November 2010, 11:42 AM
Dear Mr.Ragavendar

I just happened to see Nadigar Thilagam MP4 in yor website. Hats off to you for posting the same. Beginning with Mr.Prabhu playing the sax, various shots of NT's close ups & walks from his all time great movies were shown in clippings with the song from "Asal" in the background.

It really made me emotional.....

Was this done by Mr.P.Anand whose name appears at the end?

Dear NT fans

The above MP4 in www.nadigarthilagam.com is a must view for all our fans brethen. Pl view, enjoy and relieve your emotions.


Shiv.

NOV
10th November 2010, 06:42 PM
I was shocked to see this "Now Running" poster in Srivilliputtur, when I was in India a couple of weeks ago!


[html:a362695f41]
http://sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash2/hs565.ash2/148708_496841722628_720372628_7508318_3732559_n.jp g

[/html:a362695f41]

RAGHAVENDRA
11th November 2010, 06:36 AM
NOV,
that's amazing.

TODAY 11.11.2010, 8.00 P.M.
NADIGAR THILAGAM'S RATHA PASAM
SIRIPOLI CHANNEL
DON'T MISS
MELLISAI MANNAR'S CAPTIVATING SONGS

abkhlabhi
11th November 2010, 10:53 AM
Kamal Interview in Malayalam Nana film Magazine (aug'10)

Kamal Haasan in an exclusive, free and frank interview goes nostalgic. In this candid conversation, the great actor speaks about his biggest inspiration in life, awards, Rajinikanth and influence of Malayalam cinema.


"So far in your journey, who has been your biggest inspiration?"

"In my acting career the biggest inspiration was Sivaji Ganesan. He was like the sun giving me light and definitely a huge inspiration".

Murali Srinivas
12th November 2010, 12:51 AM
எப்போதுமே அக்டோபர் நவம்பர் மாதங்களில் தீபாவளி வரும் போதும் ஒவ்வொரு தீபாவளியன்றும் வெளியான நமது நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் அவை வெளி வந்து எத்தனை வருடங்கள் ஆனது என்பது பற்றியும் சொல்லுகிறோம். யோசித்துப் பார்த்தால் ஐப்பசி 1 முதல் 30 வரை அதாவது அக்டோபர் 17 முதல் நவம்பர் 15 வரை அநேகமாக எல்லா தினங்களிலுமே நடிகர் திலகத்தின் படங்கள் வெளியாகியிருக்கின்றன. காரணம் தீபாவளி தினம். இது போன்று ஒரு மாதத்தில் அனைத்து நாட்களிலும் ஒரு நடிகரின் படம் வெளியாகியிருப்பது நடிகர் திலகத்திற்கு மட்டும்தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

என் நினைவில் உள்ளவற்றை எழுதியுள்ளேன். விட்டுப் போனவற்றை சுவாமி எழுதுவார் என நம்புகிறேன்.

Oct 17 - பராசக்தி
18 - பாபு
19 - பாவை விளக்கு, பெற்ற மனம், பட்டாகத்தி
20 -
21 - எங்க ஊர் ராஜா
22 - சித்ரா பௌர்ணமி
23 - வம்ச விளக்கு
24 -
25 - கெளரவம், தேவர் மகன்
26 - கீழ் வானம் சிவக்கும்
27 - பந்த பாசம்
28 -
29 - சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள்
30 - பைலட் பிரேம்நாத்
31 - பாகப் பிரிவினை

Nov 1 ஊட்டி வரை உறவு, இரு மலர்கள்
2 - Dr சிவா, வைர நெஞ்சம்
3 - நவராத்திரி, முரடன் முத்து
4 - வெள்ளை ரோஜா
5 -
6 - விஸ்வ ரூபம்
7 - கப்பலோட்டிய தமிழன்
8 -
9 - சிவந்த மண்
10 - அண்ணன் ஒரு கோயில்
11 - செல்வம்
12 -
13 - அன்பை தேடி
14 - பரிட்சைக்கு நேரமாச்சு, ஊரும் உறவும்
15 - அன்னை இல்லம்

அன்புடன்

NOV,

Thanks for that thoughtful gesture.

RAGHAVENDRA
12th November 2010, 08:11 AM
டியர் முரளி,
தங்களுடைய அலசல் அட்டகாசம்.
How is my one line opinion?

இளமை ததும்பும் நடிகர் திலகம் கலைச் செல்வி ஜெயலலிதா தோன்றும் எங்க மாமா பாடல் காட்சி . பார்க்க பார்க்க தெவிட்டாத நடனம், கால்களை தாளம் போட வைக்கும் மெல்லிசை மன்னரின் இசை, செவிகளில் தேனூறும் டி.எம்.எஸ். சுசீலா குரல்கள் . வேறென்ன வேண்டும். இதோ அந்த பாடல்

என்னங்க சொல்லுங்க (http://www.raaga.com/channels/tamil/video.asp?clpid=12339)

abkhlabhi
12th November 2010, 02:25 PM
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விஜய் டிவி அளித்த செவாலியே சிவாஜி கணேசன் விருதினை, சிவாஜியின் இல்லத்தில் வைத்துப் பெற்றுக் கொண்டார் ரஜினி.

சிவாஜி பற்றி ரஜினியின் நெகிழ வைக்கும் பேச்சும், அதைக்கேட்டு கண்கலங்கும் கமலும்!
http://www.google.co.in/imgres?imgurl=http://3.bp.blogspot.com/_vxy0cxI6aek/TC4f4L4yq0I/AAAAAAAAAAY/gV4-EMqq-dw/s1600/rajini20090428123753_515x343.jpg&imgrefurl=http://thupparithal.blogspot.com/2010/07/blog-post_02.html&usg=__HXPOTjED9kY51KPQ0K3JrL-nxW4=&h=573&w=400&sz=68&hl=ta&start=175&zoom=1&tbnid=hj6gUIvFuJ0UNM:&tbnh=134&tbnw=94&prev=/images%3Fq%3D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%2 5AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259C%25E0%25AE%2 5BF%2B%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%258 7%25E0%25AE%259A%25E0%25AE%25A9%25E0%25AF%258D%26s tart%3D160%26um%3D1%26hl%3Dta%26sa%3DN%26rlz%3D1W1 ADBF_en%26tbs%3Disch:1&um=1&itbs=1

abkhlabhi
12th November 2010, 06:12 PM
http://cineplot.com/gallery/sivaji-ganesan-in-amar-prem-1960/


Hindi movie - don't know whether it was released or not.

abkhlabhi
12th November 2010, 06:23 PM
NT, his wife, Kamal, Rajni, Queen Elizabath

http://farm4.static.flickr.com/3630/3582240710_f38b4cc9e2.jpg

RAGHAVENDRA
13th November 2010, 08:13 AM
இசைக்குயில் சுசீலா அவர்களுக்கு நமது பிறந்த நாள் மகிழ்ச்சியையும் அவர் நீண்ட நாட்கள் தீர்ககாயுளுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்வோம்.

இந்நேரத்தில் அவருக்கு சமர்ப்பணமாக இக்காட்சியைப் பகிர்ந்து கொள்வோம்.

நிறை குடம் படத்தில் வெவ்வேறு ராகங்களில் படைக்கப் பட்ட இப்பாடலில் டி.எம்.எஸ். சுசீலா மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி மூவரும் பாடியுள்ளனர். மிகவும் அபூர்வமான பாடல்.

தேவா உன்னை அழைக்கின்றேன் தேவா (http://www.raaga.com/channels/tamil/video.asp?clpid=12310)

SHIV
13th November 2010, 10:09 AM
Many more Happy returns of the day to the "Nightingale of India" Smt.P.Suseela.


Shiv

RAGHAVENDRA
13th November 2010, 12:40 PM
Dear Shiv,
Thank you very much for your regards on our website.
Raghavendran

pammalar
14th November 2010, 12:32 AM
டியர் முரளி சார்,

ஐப்பசி மாதம் வெளியான அய்யனின் காவியப்பட்டியல் அருமையான, வித்தியாசமானதொரு தொகுப்பு. தங்களுக்கு எனது பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்! தாங்கள் குறிப்பிட்டபடியே அப்பட்டியலில் விடுபட்டுள்ளவற்றை என்னால் இயன்ற அளவுக்கு பூர்த்தி செய்து தனியொருபதிவாகவே தந்துள்ளேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th November 2010, 12:42 AM
எப்போதுமே அக்டோபர் நவம்பர் மாதங்களில் தீபாவளி வரும் போதும் ஒவ்வொரு தீபாவளியன்றும் வெளியான நமது நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் அவை வெளி வந்து எத்தனை வருடங்கள் ஆனது என்பது பற்றியும் சொல்லுகிறோம். யோசித்துப் பார்த்தால் ஐப்பசி 1 முதல் 30 வரை அதாவது அக்டோபர் 17 முதல் நவம்பர் 15 வரை அநேகமாக எல்லா தினங்களிலுமே நடிகர் திலகத்தின் படங்கள் வெளியாகியிருக்கின்றன. காரணம் தீபாவளி தினம். இது போன்று ஒரு மாதத்தில் அனைத்து நாட்களிலும் ஒரு நடிகரின் படம் வெளியாகியிருப்பது நடிகர் திலகத்திற்கு மட்டும்தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

என் நினைவில் உள்ளவற்றை எழுதியுள்ளேன். விட்டுப் போனவற்றை சுவாமி எழுதுவார் என நம்புகிறேன்.

Oct 17 - பராசக்தி
18 - பாபு
19 - பாவை விளக்கு, பெற்ற மனம், பட்டாகத்தி
20 -
21 - எங்க ஊர் ராஜா
22 - சித்ரா பௌர்ணமி
23 - வம்ச விளக்கு
24 -
25 - கெளரவம், தேவர் மகன்
26 - கீழ் வானம் சிவக்கும்
27 - பந்த பாசம்
28 -
29 - சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள்
30 - பைலட் பிரேம்நாத்
31 - பாகப் பிரிவினை

Nov 1 ஊட்டி வரை உறவு, இரு மலர்கள்
2 - Dr சிவா, வைர நெஞ்சம்
3 - நவராத்திரி, முரடன் முத்து
4 - வெள்ளை ரோஜா
5 -
6 - விஸ்வ ரூபம்
7 - கப்பலோட்டிய தமிழன்
8 -
9 - சிவந்த மண்
10 - அண்ணன் ஒரு கோயில்
11 - செல்வம்
12 -
13 - அன்பை தேடி
14 - பரிட்சைக்கு நேரமாச்சு, ஊரும் உறவும்
15 - அன்னை இல்லம்

அன்புடன்



ஐப்பசி மாதம் வெளியான அண்ணலின் திரைக்காவியங்கள்

அக்டோபர் 17 - பராசக்தி(1952)
18 - பாபு(1971)
19 - பாவை விளக்கு(1960), பெற்ற மனம்(1960), பட்டாக்கத்தி பைரவன்(1979)
20 -
21 - எங்க ஊர் ராஜா(1968)
22 - அம்பிகாபதி(1957), சித்ரா பௌர்ணமி(1976)
23 - வம்ச விளக்கு(1984)
24 -
25 - கெளரவம்(1973), தேவர் மகன்(1992)
26 - கீழ்வானம் சிவக்கும்(1981)
27 - பந்தபாசம்(1962), தச்சோளி அம்பு[மலையாளம்](1978)
28 -
29 - சொர்க்கம்(1970), எங்கிருந்தோ வந்தாள்(1970)
30 - அவள் யார்(1959), பைலட் பிரேம்நாத்(1978)
31 - பாகப்பிரிவினை(1959)

நவம்பர் 1 - ரங்கோன் ராதா(1956), ஊட்டி வரை உறவு(1967), இரு மலர்கள்(1967), லட்சுமி வந்தாச்சு(1986)
2 - டாக்டர் சிவா(1975), வைர நெஞ்சம்(1975)
3 - முரடன் முத்து(1964), நவராத்திரி(1964)
4 - வெள்ளை ரோஜா(1983)
5 - கண்கள்(1953)
6 - விஸ்வரூபம்(1980)
7 - காத்தவராயன்(1958), கப்பலோட்டிய தமிழன்(1961)
8 -
9 - சிவந்த மண்(1969)
10 - அண்ணன் ஒரு கோயில்(1977)
11 - செல்வம்(1966), படிக்காதவன்(1985)
12 -
13 - பெம்புடு கொடுகு[தெலுங்கு](1953), கோடீஸ்வரன்(1955), கள்வனின் காதலி(1955), அன்பைத் தேடி(1974), பாரம்பரியம்(1993)
14 - பரிட்சைக்கு நேரமாச்சு(1982), ஊரும் உறவும்(1982)
15 - அன்னை இல்லம்(1963), லக்ஷ்மி கல்யாணம்(1968)

குறிப்பு:
1. பராசக்தி[294 நாள்], பாகப்பிரிவினை[216 நாள்], பைலட் பிரேம்நாத்[222 நாள், ஷிஃப்டிங் முறையில் 1080 நாள்] முதலிய காவியங்கள் 200 நாட்களைக் கடந்தவை.

2. படிக்காதவன், தேவர் மகன்[180 நாள்] முதலியவை வெள்ளிவிழாக் காவியங்கள்.

3. சிவந்த மண்[145 நாள்], தச்சோளி அம்பு(மலையாளம்), பட்டாக்கத்தி பைரவன் ஆகியவை இருபது வாரக் காவியங்கள்.

4. அன்னை இல்லம், நவராத்திரி, ஊட்டி வரை உறவு, இரு மலர்கள், சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், பாபு, கௌரவம், அண்ணன் ஒரு கோயில், விஸ்வரூபம், கீழ்வானம் சிவக்கும், வெள்ளை ரோஜா ஆகியவை 100 நாட்களுக்கு மேல் ஓடியவை.

5. கள்வனின் காதலி[83 நாள்], ரங்கோன் ராதா[71 நாள்], அம்பிகாபதி[84 நாள்], காத்தவராயன்[84 நாள்], பந்தபாசம்[77 நாள்], முரடன் முத்து[79 நாள்], எங்க ஊர் ராஜா[85 நாள்], பரிட்சைக்கு நேரமாச்சு[75 நாள்] ஆகிய காவியங்கள் 10 வாரங்களைக் கடந்தவை.

6. பெம்புடு கொடுகு(தெலுங்கு), பாவை விளக்கு, கப்பலோட்டிய தமிழன், செல்வம், லக்ஷ்மி கல்யாணம், டாக்டர் சிவா, வைர நெஞ்சம், ஊரும் உறவும், வம்ச விளக்கு, லட்சுமி வந்தாச்சு முதலிய காவியங்கள் 50 நாட்களுக்கு மேல் ஓடியவை.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th November 2010, 02:04 AM
இசைவாணி பி.சுசீலா அவர்களுக்கு இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

pammalar
14th November 2010, 02:13 AM
டியர் நௌ சார்,

அரிய பொக்கிஷத்தை [ஸ்ரீவில்லிபுத்தூர் "பராசக்தி" போஸ்டர்] அனைவரின் கண்களுக்கும் விருந்தாக்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்!

டியர் ராகவேந்திரன் சார் & பாலா சார்,

அபார லிங்க்குகளுக்கு அற்புத நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
14th November 2010, 11:14 AM
டியர் முரளி & பம்மலார்...

ஐப்பசி மாத வெளியீடு பட்டியலுக்கு நன்றி, (முன்பு பம்மலார் வெளியிட்ட தீபாவளிப் பட்டியலின் புதிய வடிவம்). நம்ம ஆளுங்க எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க. :D

'குறிப்பு' பகுதியில், முதல் பிரிவில் இடம்பெற்றிருக்க வேண்டிய 'கப்பலோட்டிய தமிழன்' ஆறாம் பகுதியில் இடம் பெற்றிருப்பது ஒன்றே நம் மனதை வலிக்கச்செய்யும் ஒரு விஷயம். 1961-ல் மட்டும் அது தீபாவளி அல்ல தீபா'வலி'.

abkhlabhi
15th November 2010, 11:13 AM
Read long back -
CREDIT GOES TO MR. எம்கேஆர்சாந்தாராம.

" உயர்ந்த மனிதன் " படமும் , நடிகர் திலகத்தின் நடிப்பும் !


இந்த தலைப்பில் ஓர் இழையே போடலாம் !

அவ்வளவு எழுத வேண்டும் !

" அப்படி என்ன நடிகர் திலகத்தின் நடிப்பு இந்த படத்தில் சிறந்து

விளங்குகின்றது ? " என்று நீங்கள் கேட்பது புரிகின்றது ! படத்தைப்

பார்த்தவர்களுக்கு நான் சொல்ல வந்தது புரியும் ! முதலில்

இளமையாகத் தோன்றும் சிவாஜியைப் பாருங்கள். மலந்த முகத்துடன்,

புன் சிரிப்புடன், உற்சாகமாக நடை நடந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார் !

ஆனால் அதேசமயத்தில் தனது தந்தையார் " வறட்டுக் கெளரவத்தை "

கடைபிடிப்பது குறித்து அவர் கவலைப்பட்டு அசோகனிடம் வருந்துவதைக்

காட்டும்போது, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தகையது என்பது தெரிகின்றது !

அவரது சிரித்த முகம், மகிழ்ச்சி , எல்லாம் எது வரை ?

" வெள்ளிக்கிண்ணம் தான் " பாடல் பாடும் வரை !

அதற்கு அடுத்த காட்சியிலே, அவரது தந்தையார் ( எஸ்.வி. ராமதாஸ் ),

வாணியின் வீட்டைக் கொளுத்த வரும்போதுதான் மறைந்து விடுகின்றது !

அதன் பின்னர் வரும் காட்சிகளில் எல்லாம் சிவாஜியின் முகத்தைப்

பாருங்கள் !

சிவாஜியின் முகம் :




எதையோ பறி கொடுத்தவர் போலவும், வெறுப்புடன் இருப்பது போலவும்,

வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைத்தவர் போலவும், மகிழ்ச்சி என்றால்

என்ன என்று கேட்பவர் போலவும், உற்சாகம் இல்லாமல் இருப்பது போலவும்...........

படம் முழுக்க வருவார் ! இந்த மாதிரியான முகத்தை வைத்துக் கொண்டே

படம் முழுக்க நடிகர் திலகம் நடித்திருப்பதுதான் இந்த படத்தில் சிவாஜி

செய்த தனி சிறப்பு !


படம் முழுக்க இந்த துயரம் தோய்ந்த முகத்தில்தான் சிவாஜி நடித்திருப்பார் !

நான் படம் பார்த்த வரையில் எனக்கு கீழ்கண்டவாறு , அவரது

நடிப்பாற்றலை சான்று கூறும் காட்சிகளாக சொல்லலாம் ! அந்த காட்சிகள்

உங்களையும் கவர்ந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை !


1. வாணி இறந்த பின்பு தன் தந்தையின் எதிரில் படுக்கையில் படுத்தவாறு

பேசும் வசனம் :


" பார்வதி ! என்னை விட்டுப் போய்ட்டியே ! நீ எங்கே என்னை விட்டுப்

போனே ? நான் தான் உன்னைக் காப்பாத்த முடியாத கோழை ஆயிட்டேனே !

நான் ஒரு கோழை ! இந்த பாவத்திற்காக நான் என்னென்ன துன்பங்களை

நான் அனுபவிக்கப் போறேனோ ! கடவுளே ! "




என்று மனம் உருகும் காட்சியில் சிவாஜி " உயர்ந்து " நிற்கிறார் !


2. அசோகன் , குடித்துவிட்டு உண்மையை தாறு நாறாக சொல்லும் போது,

ஒரு இடத்தில் அசோகன் சிவாஜியைப் பார்த்து இப்படி சொல்லுவார் :


"உன்ன நம்பன பார்வதியே உன்னானே காப்பாத்த முடியலே ! " ராஜு, நீ

ஒரு கோழை ! SELFISH FELLOW , சுயநலக்காரன் ! " என்று குற்றம் சாட்டும்போது

சிவாஜி சொல்லும் வசனம் :


" கோபால் , என்னைக் கோழை என்று சொல்லு ! ஆனா சுயநலக்காரன்

என்னு மட்டும் சொல்லாதே ! அதுவும் உன் வாயாலே சொல்லாதே !

நானும் எனக்காக ஒரு கடமையையும் செய்யவில்லை ! ஆரம்பத்திலிருந்து

இன்றுவரை மற்றவர்களின் கடமைக்காக சுமையாக உழைத்துக்கிறேன் !

ஆரம்பத்திலிருந்து என் அப்பாவோட சுயநலத்திற்காக கட்டளை என்னும்

சுமையை சுமந்திருக்கின்றேன் ! கெளரவமான பரம்பரை என்கிற சுமை !

திரண்ட செல்வத்திற்கு அதிபதி என்கிற சுமை ! ஆயிரக்கணக்கான

தொழிலாளர்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை என்னும் சுமை !

இப்படி பல சுமைகளை ஆற்றிக் கொண்டு பொதி மாடு போல வாழ்ந்து

கொண்டிருக்கிறேன் ! சுருக்கமாக சொல்லப் போனால் நான் ஒரு நடமாடும்

சுமைதாங்கி ! "


இப்படி சொல்வதற்க்கு முன்பு நடிகர் திலகம் , அசோகன் கையை இழுத்து

அவரை தன் அருகே இழுத்து வந்து , அசோகன் முதுகில் ஆதங்கத்தோடு ஒரு

தட்டு தட்டிப் இப்படி பேச ஆரம்பிப்பது அற்புதமாக இருக்கும் !





2. சிவகுமார் தன் அம்மா படத்தை வி கே ராமசாமி பாழடித்தற்காக நேரே

சிவாஜியிடம் சென்று தான் வேலையில் நின்று நின்று விடப்போவதாக

சொல்வதும் , அப்போது சிவாஜி , சிவகுமாருக்கு அறிவுரை செய்ய, அப்போது

அங்கு வந்த அசோகன் , சிவாஜியிடம் " லொள்ளு " பண்ணிப் பேச , அப்போது

சிவாஜி பேசும் ஒரே வார்த்தை அற்புதமானது !


சிவாஜி : ( அசோகனிடம் ) : " டேய், நீ அவனுக்கு புத்திமதி

சொல்லுடா ! "


மேற்கண்ட ஒரே வார்த்தை யை சிவாஜி சொல்லும்போது அவரின் அந்த

வார்த்தை " டெலிவரி " மிக சிறப்பாக இருக்கும் ! எப்போதும் சோகத்துடன்

காணப்படும் சிவாஜியின் முகம் இன்னும் சோகம் கப்பியதையும் காணலாம் !


4. செளகார் ஜானகி கொடுக்கும் " பத்திய சமையல் ( ! ) " சிவாஜிக்கு அறவே

பிடிக்காது ! இதனை கவனித்த சிவகுமார் ஒரு நாள் சிவாஜியிடம் " எங்கள்

வீட்டு சமையலை சாப்பிடறீங்களா , ஐயா ? "என்று பணிவுடன் கேட்க அப்போது

சிவாஜியின் முகத்தை பார்க்க வேண்டுமே !


" சரி, கொண்டுவா ! சாப்பிடுகிறேன் ! "


என்று சொல்லும் பாணியில் சிவாஜி தலையை மெல்ல ஆட்டுவாரே !

பார்ப்பதற்க்கே ரொம்ப ரம்மியமாக இருக்கும் !


இது நம்ம கதை !


எனக்கும் , சந்தர்ப்பம் கிடைக்கும்போது கிராமத்திற்கு போகும்போது

அங்கிருக்கும் உறவினர் ஒருவர் என்னைப் பார்த்து , " கடலை

உருண்டை சாப்பிடிறீங்களா ? " என்று கேட்டால் , நான் அப்படித்தான்

தலையை ஆட்டுவேன் !


ஒரு பக்கம் சாப்பிட அசை ! மறுபக்கம் உடம்புக்கு

ஆகாது ! இன்னொரு பக்கம் யாராவது ஏதாவது சொல்வார்களா

என்று அச்சம் !


இதனை எல்லாம் சொல்லாமல் சொல்வதின் வெளிப்பாடுதான்

இந்த சிவாஜியின் " தலையாட்டல் ! " இந்த படத்தில் சிவாஜிக்கு ,

சாப்பிட ஆசை ! உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா என்பதில் அச்சம் !

அதை விட முக்கியம் , " தஞ்சாவூர் தவுறு " - அதான் எஜமானியம்மாள்

செளகார் ஜானகிக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ !

இவைகள் எல்லாம் சேர்ந்த கலவைதான் அந்த தலையாட்டல் !

இதனை நடிகர் திலகம் நன்றாக செய்திருப்பார் !


5. செளகார் ஜானகிக்கு சிவகுமார் வீட்டில் சென்று சிவாஜி சாப்பிட்டது

பிடிக்கவில்லை ! எனவே அவர் சிவாஜியைப் பார்த்து இப்படி கோபத்துடன்

கேட்கிறார் :

" ராத்தினத்திடம் சாப்பாடு கொடுத்தனுப்பின பிறகு பசி இல்லை

என்று சொல்லி , " சாப்பாடு நன்றாக இருந்தது ! " என்று சொன்னது

பொய் இல்லையா ? ஆபிஸ் ஐந்தரை மணிக்கு முடிந்த பின்னும் இப்படி

எட்டு மணிக்கு வந்து விட்டு " ஆபிஸில் வேலை அதிகம் ! " என்று

சொன்னது பொய் இல்லையா ? "என்று சொல்லி சிவாஜியைக் கேட்கும்போது

அதற்கு சிவாஜி சொல்லும் நீளமான வசனம் - அழுத்தம் திருத்தமாகவும் ,

முகபாவகளை மாற்றியும் அதே சமயத்தில் " ஸ்டைல் : ஆக நடந்து சென்றும்

சிவாஜி பேசும் " பொய் " என்கிற தலைப் பில்பேசும் வசனக்கள் - என்னை

மிகவும் கவர்ந்தது !





இதோ அந்த வசனம் :


சிவாஜி : ( செளகார் ஜானகியிடம் ) :

( சிரித்துக்கொண்டே )



" ஏய் ! நான் என்ன சத்ய மூர்த்தியா - சதா உண்மையைப் பேச !

நீ கஷ்டப்பட்டு கண்டு பிடித்தது 2 பொய்கள் ! ஆனா நம்ம வாழ்க்கையிலே

எவ்வளவு பயங்கரமான பொய்கள் மறைந்திருக்குத் தெரியுமா ?

உன் கணவன் யார் ?

மிஸ்டர் ராஜலிங்கம் - A , OWNER OF HUNDREDS OF FIFTY THOUSANDS

ACRES OF FERTILE LAND ! ! "

இதுக்கெல்லாம் என்ன ஆர்த்தம் ?

நாம ஓயாம , ஒழியாம பொய் சொல்லிக்கொண்டிறோம் என்று அர்த்தம் !


( சலிப்புடன் கைகளைத் தட்டிக்கொள்கிறார் )

நாம எழுதற கணக்கிலே பொய் ! " ரிஜிஸ்டர் ஆபீஸிலே பொய் ! "

நாம தொழிலாளர்களுக்கு கிட்டே பொய் ! நம்ம கூட்டாளிகிட்டே பொய் !

இப்படி பொய் ! பொய் ! பொய் ! பொய் !

இப்படி பொய்யே பேசிக்கிட்டு இருக்கிறதலால் ஒரு " மில் " இப்போது

ஏழு மில் ஆயிட்சு ! ஏன் !உன் கழுத்திலே மின்னுதே வைர நெக்லேஸ் !

கணக்கிலே வரும் அதன் விலை 3 லட்சம் ! ஆனால் அதன் மதிப்போ பல

லட்சம் பொய்கள் ! நாம ஏறிப் போற கார் , இந்த பங்களா, இந்த வீடு, ஆஸ்தி,

சொத்து , சுகம் அந்தஸ்து - இவை எல்லாம் என்ன ?

எங்க தாத்தா சொன்ன பொய் !

எங்க அப்பா சொன்ன பொய் !

இப்போ நான் சொல்லிக்கொண்டிருக்கிற பொய் !


மேற்கண்ட வசனங்களால் போலி வாழ்க்கையில் அவர் எவ்வாறு

அவதிப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது அல்லவா ?


6. இறுதியாக " கிளைமாக்ஸ் " காட்சியில் பாரதி தந்த பார்வதிப்

படத்தைப் பார்த்து அவர் காட்டும் உணர்ச்சிகள் - 20 வருடங்களாக

அவர் தன் உள்ளத்தில் தேக்கி வைத்த உணர்ச்சிப் பிரவாகத்தை

அந்த படத்தைப் பார்க்கும் போது அவர் காட்டும் முக பாவங்கள்............

என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது !
படத்தின் " கிளைமாகஸ் " :


கொடைகானலில் சிவகுமார் , பாரதியை திருமணம் நடத்தித் தருவதாக

உறுதிதரும் சிவாஜி, வீட்டுக்குத் திரும்பியவுடன் அங்கே கண்ட காட்சி ,

அவரை திடுக்கிட வைக்கிறது ! வைர நெக்லேஸ் காணாமல் போய்

விட்டது என்று செளகார் ஜானகி சொல்ல எல்லோருடைய உடமைகளையும்

சோதனை செய்ய முற்பட்டபோது, அதில் சிவகுமாரின் பெட்டியில் அந்த

வைர நெக்லேஸ் இருப்பதை அறிந்து அனைவரும் திடுக்கின்Tஅனர் -

வி கே ஆர் மற்றும் மனோரமாவைத்தவிர- ஏன் என்றால் சிவகுமாரை

அந்த வீட்டிலிருந்து " கல்தா "கொடுத்தால்தானே தாங்கள் முன்னேற

முடியும் என்கிற தப்புக் கணக்கில் செய்தது இந்த நெக்லேஸ் வேலை !

அனைவரும் சிவகுமார் மீது பழி போட , அந்த அவச் சொற்களைக் கேட்டு

சிவாஜி , சிவகுமார் மீது கோபம் கொள்கிறார் ! தான் , நல்லவன் என்று

முற்றிலும் நம்பிய ஒருவன் , இப்போது திருட்டுப் பட்டம் வாங்கி நிற்பது

அவருக்கு இன்னும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஒருவர் மன நிம்மதி

இல்லாமல் இருக்கும் பொழுத்கு , அந்த சமயத்தில் என்ன நடந்தது என்று

விசாரிக்கும் நினைவு கூட இல்லாத நேரத்தில் மற்றவர்கள் கூறும் பழிச்

சொற்கள் , ஒருவரின் ஆத்திரத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என்பதற்கு

சிறந்த எடுத்துக்காட்டு இந்த படத்தில் வரும் இந்த காட்சி ! சிவாஜி,

அனைவரையும் போக சொல்கிறார் !





தன் வீட்டில் பல ஆண்டுகளாகப் பணி புரிந்த நாகய்யா , ஒரு நாள்

மூப்பின் காரணமாக வேலையை விட்டு விலக நேருடும் சமயத்தில்

அவரைப் பிரிய மனம் இல்லாமல் சற்றே கண் கலங்கும் நல்ல உள்ளம்

படைத்த சிவாஜி, மற்றவர்கள் பழிச் சொல்லைக் கேட்டு மதி இழக்கிறார் !

சிவாஜி : " சத்யா, ஏன்டா இப்படி செஞ்சே ? உன்னை நான் எப்படி

நினைச்சிருந்தேன் ! என்னை ஏமாத்தியேடா பாவி ! " என்று ஆத்திரத்தில்

தன் கையில் வைத்திருந்த பிரம்பால் சிவகுமாரை விளாசு , விளாசு என

விளாசுகின்றார் ! சிவகுமார் " அம்மா " என்று அழுதுகொண்டு கீழே விழுகிறார் !

செளகார் ஜானகி தடுத்தும் அவர் கேட்காமல் மறுபடியும் அடிக்கிறார் !

பின்னர் கோபம் கொண்டு தன் காலால் சிவகுமாரை எட்டி உதைக்கிறார் !




மேற்கண்ட காட்சி ஒரே " டேக் " -ல் படமாக்கினார்கள். ஆனால் பிரம்பால்

அடிபட்ட சிவகுமாருக்கு அதனால் ஒன்றும் ஆகவில்லை !

ஆனால் :

சிவாஜி, தன் " பூட் " காலால் எட்டி உதைத்ததில் சிவகுமாரின் தோள்பட்டை

கழன்று தனியே வந்து விட்டது ! வலியால் துடித்த சிவகுமார் , தன் வலியை

மறந்து காட்சி சிறப்பாக வந்தது குறித்து மகிழ்ச்சி கொண்டார் ! பின்னர் அவர்

தன் தோள் பட்டைக்கு மருத்துவ கிசிச்சை மேற்கொண்டது தனி கதை !

அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேறும் சிவகுமார் தீப்பற்றி எரியும் ஒரு

வீட்டில் தன் அம்மாவை எண்ணியே தற்கொலை எண்ணத்துடன் நுழைகிறார் !

இங்கே , சிவாஜியிடம் பாரதி , சிவகுமாரின் அம்மா படத்தைக் காண்பிக்கும்

போதுதான் சிவாஜியின் முகம் மாறுகிறது ! " பார்வதீ " ( தீ ! ) என்று அலறிக்

கொண்டு கீழே விழுகிறார் ! செளகாரிடம் நடந்ததை சொல்கிறார் ! செளகாரும்

தன் மகன் தம் வீட்டிலே வேலைக்காரனாக இருந்தது குறித்து வேதனை

அடைகிறார் ! அப்போது தன் மகனைத் தேடி சிவாஜி வெளியே வரும்போது,

தீப்பற்றி எரியும் வீட்டில் சிவகுனார் உழைந்து விட்டார் என்பதை அறிந்து ,

தன் மகனைக் காப்பாற்ற தீபிடிக்கும் அந்த வீட்டில் நுழைந்து சிவகுமாரை

மீட்டு வெளியே வருகிறார் !

பிறகு என்ன சுபம் தான் !

விகேஆரும் , மனோரமா வும் தாங்கள் செய்த சதி வேலைக்கு மன்னிப்பு

கேட்கும்போது சிவாஜியோ , " உங்களால் தான் என் மகன் எனக்கு கிடைத்தான் !

எனெவே உங்களை மன்னித்து விட்டேன் ! " என்று சொல்லி " உயர்ந்த மனிதன் "

ஆகிவிடுகிறார் ! அதன்பின்னர் பட இறுதியில் ஏ விஎம் ந் " எம்பளம் " காட்டும்

போது தியேடரில் இருந்த மக்கள் கைகளைத் தட்டி " ஒரு நல்ல படத்தைப்

பார்த்தோம்! " என்கிற திருப்தியுடன் தியேடரை விட்டு வெளியேறுவதை நான்

பார்த்திருக்கின்றேன் !


படம் வெற்றி !


" உயர்ந்த மனிதன் " திரைப் படம் 29 / 11 / 1968 -ல் வெளியானது !

சென்னையில் வெல்லிங்க்டன், மகாராணி, ராக்ஸி ஆகிய தியேடர்களில்

ஓடியது ! இந்த படம் அதிகம் ஆராவாரம் இன்றி , ஆர்ப்பாட்டம் இன்றி

அமைதியாக ஓடியது ! ஏ வி எம் சரவணன் சொல்வது போல், அந்த

காலத்தில் பெரியவர்கள் திரை அரங்குகிற்கு சென்று படங்களைப் பார்த்து

எது நல்ல படம் என்பதைக் கண்டறிருந்து பின்னர் அந்த படங்களை தங்கள்

பிள்ளைகளும் பார்த்து ரசிக்கவேண்டும் என்று விரும்பி அனுப்புவார்கள் !

" உயர்ந்த மனிதன் " திரைப் படத்தை எனது தந்தையார் பரிந்துரையின் பெயரில் தான் நான் பார்த்தேன் !

இப்போதோ , நிலைமை வேறு !

இப்போது நம் பிள்ளைகள் முதலில் படத்தைப் பார்த்து பின்னர் தேர்வு செய்து அவைகளைப் பார்க்கும்படி பரிந்துரை செய்கிறார்கள் !



உயர்ந்த மனிதன் " படம் 125 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது !

125 நாட்கள் ஓடிய பிறகுதான் அந்த படத்தின் 100 -ம் நாள் விழா கொண்டாடப் பட்டது !

அன்றைய தமிழக முதல்வர் அண்ணாதுரை தலைமை தாங்க மத்திய அமைச்சர் ஒய். பி. சவாண் அவர்கள் விழாவுக்கு வந்திருந்து ரிசுகளை

வழங்கியது , இந்த படத்திற்கே அமைந்த தனி சிறப்பு !





காங்கிரஸ் கட்சியை சார்ந்த சிவாஜி பட விழாவுக்கு திமு க கட்சியில்

இருக்கும் நீங்கள் அதுவும் முதல்வர் பதவியில் இருக்கும் நீங்கள் , அந்த

நிகழ்ச்சிக்கு செல்லக் கூடாது அண்ணாவுக்கு யோசனை சொன்னார்கள் !

ஆனால் அண்ணா அதனைப் &

abkhlabhi
15th November 2010, 11:23 AM
CONTD. ...
" உயர்ந்த மனிதன் "

அன்றைய தமிழக முதல்வர் அண்ணாதுரை தலைமை தாங்க மத்திய

அமைச்சர் ஒய். பி. சவாண் அவர்கள் விழாவுக்கு வந்திருந்து பரிசுகளை

வழங்கியது , இந்த படத்திற்கே அமைந்த தனி சிறப்பு !





காங்கிரஸ் கட்சியை சார்ந்த சிவாஜி பட விழாவுக்கு திமு க கட்சியில்

இருக்கும் நீங்கள் அதுவும் முதல்வர் பதவியில் இருக்கும் நீங்கள் , அந்த

நிகழ்ச்சிக்கு செல்லக் கூடாது அண்ணாவுக்கு யோசனை சொன்னார்கள் !

ஆனால் அண்ணா அதனைப் பற்றி கவலைப் படாமல் விழாவில் கலந்து

கொண்டதோடு அவருடைய " பஞ்ச் " வசனத்தையும் அந்த விழாவில்

சிவாஜிக்காக பயன்படுத்தினார் !

அதுதான் :

" மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு ! "

இந்த வசனம் அண்ணா எழுதின ஒரு படத்தில் இடம் பெற்ற வசனம் !

அந்த வசனத்தை இங்கே சிவாஜியைக் குறிப்பிட்டு பேசினார் !

" கணேசன் வேறு ஒரு கட்சியில் இருந்தாலும் அவருடைய திறமையை

நான் போற்றுகின்றேன் ! கணேசன் எங்கிருந்தாலும் வாழ்க ! "

என்று அண்ணா சொன்னார் !

நடிகர் திலகமும் அண்ணாவை புகந்து பேசினார் !

abkhlabhi
15th November 2010, 11:34 AM
http://www.google.co.in/imgres?imgurl=http://www.vikatan.com/cinema/2010/sep/30sivaji1.jpg&imgrefurl=http://www.vikatan.com/cinema/2010/sep/cinema0419.asp&usg=__E9b_NJkfgxseq24-fNpKPbMsOqo=&h=356&w=250&sz=87&hl=ta&start=185&zoom=1&tbnid=cOAAnuEnWRPJSM:&tbnh=121&tbnw=85&prev=/images%3Fq%3D%25E0%25AE%25A8%25E0%25AE%259F%25E0%2 5AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%2 58D%2B%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B 2%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D%26s tart%3D180%26um%3D1%26hl%3Dta%26sa%3DN%26rlz%3D1W1 ADBF_en%26tbs%3Disch:1&um=1&itbs=1

kid-glove
15th November 2010, 01:19 PM
Rajapart rangadurai

The direction squanders a bit, especially the over-melodramatic tone with which it ends. Invariably, NT is the best thing about the film.. :notworthy:

Last Lear, Loose Liar-nu evan evano padam nadichu, empty deconstruction, subtext kandupidikaranga.

Something on lines of NT's masterclass transition from stage to film (And how he changed norms of acting in Tamil cinema since) would be the zenith. One of my fantasy films with NT, you see. For I think NT's encyclopedic modes of acting could have been fully registered in a subject like this. A film on those lines would have made it unquestionably easier to those who find it difficult to fully appreciate his unimaginable talent, and lazily describe it as 'theatrical'. How I wish something on these lines got materialized.

groucho070
15th November 2010, 01:31 PM
Gosh, you know we all share that sentiment, mate. If only....if only....

Rajapart scores because of NT, because of MSV's haunting songs, and was let down when they elected to dub NT during the Shakespeare thing. We all wouldn't have minded NT's own accent on English. Come on, avar English pesurathey oru azhagu. Ejjample: Gouvaram. Listen to him say, Not only you must stand, you must stayyyyy..... !!! I am getting goosebumps as I type this. :D Anyway, lots of sample in that film.

abkhlabhi
15th November 2010, 01:31 PM
MT, NT, NTR, GG, Rajkumar (Hindi) - rare photo. Can any one tell when it was taken ?

http://cdn.wn.com/pd/d9/da/fef6d088e230ed3f1d7a325e5cde_grande.jpg

abkhlabhi
15th November 2010, 01:55 PM
[tscii:ed328d27da]Sri Sai Narayanan is a great fan of Shivaji Ganesan. When Shivaji Ganesan received the Chevalier of the Ordre des Arts et des Lettres Award from the French Government, Sri Sai Narayanan composed a beautiful song in Tamil by a way of his tribute to the multi-faceted genius of Shivaji Ganesan as an actor. He not only composed this beautiful song but also went to the residence of Shivaji Ganesan and sang the song in person, sending that versatile actor and all the members of his family into raptures of joy and happiness.



presenting below the text of that Tamil song. The lilting and majestic sweep of this song which leaves no detail of Sivaji Ganesan’s acting career untouched puts us all in a state of thrall. giving below the text of this beautiful Tamil song.



http://4.bp.blogspot.com/_Oeuzs-1w68c/TEZm6NIHh3I/AAAAAAAABlU/7VafL8SJZBU/s1600/Shivaji+Song+by+Saidasan.jpg



Thanks to Saidsan[/tscii:ed328d27da]

kid-glove
15th November 2010, 01:58 PM
Gosh, you know we all share that sentiment, mate. If only....if only....

Rajapart scores because of NT, because of MSV's haunting songs, and was let down when they elected to dub NT during the Shakespeare thing. We all wouldn't have minded NT's own accent on English. Come on, avar English pesurathey oru azhagu. Ejjample: Gouvaram. Listen to him say, Not only you must stand, you must stayyyyy..... !!! I am getting goosebumps as I type this. :D Anyway, lots of sample in that film.
Would rival Hollywood legends for sharpshoot idiosyncratic dialogue delivery.

groucho070
15th November 2010, 02:20 PM
Exactly, somewhere here, I think, you mentioned Pacino who can indulge in that delightful temperament, Scent of a Woman reminded me of NT here.

But that was the then Pacino, these days it's more sad case of self-caricaturisation. If you know what I mean.

kid-glove
15th November 2010, 04:38 PM
Agreed Groucho. Pacino, personally I find a bit limited too..

Motor Sundaram Pillai lined up next.

Murali Srinivas
16th November 2010, 12:05 AM
வாலி அவர்களின் 80-வது பிறந்த நாள் விழாவிற்கு சென்றிருந்த போது பாடலாசிரியர் பழனி பாரதி ஒரு தகவலை சொன்னார். வாலி அவர்களுக்கு அவர் எழுதிய பாடலுக்காக ஒரு முறை தேசிய விருது கொடுக்க முடிவு செய்யப்பட்டு அவரை பற்றிய தகவல்களை அனுப்பும்படி கேட்டுக் கொண்டார்களாம். ஆனால் வாலி அனுப்பவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம் என் பாடலை பாராட்டி விருது கொடுப்பவன் என்னை பற்றி தெரிந்தவனாக இருக்க வேண்டும். இல்லையென்றால் என் பாடல் விருது பெற தகுதியானது என்று முடிவு செய்த போதே வேறு ஒன்றும் கேட்காமல் விருதை வழங்கியிருக்க வேண்டும் என்றாராம். இதை முன்பே கேள்விப்பட்டிருந்தாலும் அது எந்த பாடலுக்காக என்று தெரியாமல் இருந்தது. இந்த விழாவில்தான் பாரத விலாஸ் படத்தில் வந்த இந்திய நாடு என் வீடு பாடலுக்காக அந்த விருது பரிந்துரை செய்யப்பட்டது என்பது வெளிப்பட்டது. ஆக வாலிக்கும் கூட கிடைத்திருந்தால் அது நடிகர் திலகத்தின் படத்தின் மூலமாகவே கிடைத்திருக்கும் என்பது நமக்கெல்லாம் சந்தோஷமான விஷயம்தானே.

அன்புடன்

பாலா,

உயர்ந்த மனிதனை அப்படியே சாறு பிழிந்து கொடுத்த அந்த பதிவிற்கு நன்றி.

Thilak & Rakesh, wish you people discuss such things often here. Thilak, MSP should be a great watch for you.

Murali Srinivas
16th November 2010, 12:07 AM
ஞாயிறன்று சிவகாசியில் நடிகர் திலகத்தின் ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்ட ஓர் கூட்டம் நடைப்பெற்றது. விருதுநகர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் அவர்கள் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் சிவகாசியில் நடிகர் திலகத்தின் முழு உருவ சிலை ஒன்றை அமைத்து விரைவில் திறப்பது என முடிவு செய்யப்பட்டது. மாணிக் தாகூர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கூட்டத்திலேயே ஒருவர் ரூபாய் ஐம்பதினாயிரமும் மற்றும் இரண்டு அன்பர்கள் தலா ரூபாய் இருபத்தையாயிரம் தருவதாக சொல்லி அது வரவில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆக அச்சு தொழில் நகரத்திலும் கலைத்தாயின் மூத்த மகனின் சிலை விரைவில் உதயமாகும்.

அன்புடன்

NOV
16th November 2010, 08:05 AM
interestingly, I have never watched motor sundaram pillai. 8-)

Jeev
16th November 2010, 09:40 AM
[tscii:929b9d594e]This rare photo was taken in 1972 at a function held in Chennai to felicitate “Bharat” MGR.
[/tscii:929b9d594e]

abkhlabhi
16th November 2010, 10:06 AM
http://www.dinakaran.com/ws/vellimalardetail.aspx?id=506

abkhlabhi
16th November 2010, 10:20 AM
Thanks to எம்கேஆர்சாந்தாராம்

"உயர்ந்த மனிதன் " படத்திற்கு சிவாஜிக்கு எவ்வளவு சம்பளம் ?



அந்த காலத்தில் சிவாஜியை வைத்து படம் எடுப்பது என்றால் அது " மெகா பட்ஜட் " படமாகும் ! சிவாஜியின் " கால் ஷீட் " கிடைத்து கேட்கும் சம்பளத்தைத் தந்து விட்டால்....... ஒரு நல்ல படம் " ரெடி " ஆகிவிடும் !


ஆனால் சம்பளத்தைப் பொருத்த வரை - அது சிவாஜியின் வேலை அன்று ! நடிகர் திலகம் " நடிப்பு " ஒன்றுதான் கருமமே கண்ணாக இருப்பார் !


பின்னர் யார் சம்பளம் பேசுவார்கள் ?

எல்லாம் சிவாஜியின் தம்பி வி. சி.சண்முகம் தான் !
வி. சி. சண்முகம்தான் சிவாஜியின் சம்பளம், கால்ஷீ, விவகாரம் போன்றவைகளை நிர்வாகித்து வந்தார். எம்ஜிஆர்க்கு , அவர் அண்ணன் சக்ரபாணி மாதிரி சிவாஜிக்கு , வி.சி. சண்முகம் !

அங்கே அண்ணன் - இங்கே தம்பி !


சம்பளத்தைப் பற்றி சிவாஜியிடமே நேரிடையாகக் கேட்டார் அப்பச்சி ! அதற்கு சிவாஜி சொன்னார் :

" சம்பள விஷயம் எல்லாம் என் தம்பி ஷண்முகத்திடம் பேசிக்கொள்ளவு ! "

சண்முகம் வந்தார், அவரிடம் சம்பள விஷயத்தை பேசினார்கள்.

ஷண்முகம் என்ன சொன்னார் தெரியுமா ?

(" அது தெரிந்தால் நீங்கள் எழுதுவதைப் படிப்போமா ? " என்கிறீர்களா ! )


சண்முகம் : " நீங்க எதைக் கொடுத்தாலும் வாங்கிக்க்

கொள்ளலாம் என்று அண்ணன் சொல்லிவிட்டார் ! "





செட்டியார் அவர்களுக்கு அவர் சொன்னது பிடிக்கவில்லை !

சிவாஜியின் முதல் படமான " பராசக்தி " யில் சிவாஜியின்

சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

மாதம் ரு. 250 !

அந்த சம்பளம் கூட சிவாஜி " வேண்டாம் " என்றும் இலவசமாக

நடிக்கிறேன்" என்றும் சொன்னவர் !

அப்போது கே.ஆர். ராமசாமியத்தான் " பராசக்தி " யில் போட

வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவர் செட்டியார் !


ஆனால் " உயர்ந்த மனிதன் " படம் எடுக்கும் போது சிவாஜி

ஒரு மாபெரும் நடிகர் ! அவருக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் ?

யோசித்தார் செட்டியார் !


" பளிச் " என்று ஓர் " ஐடியா " தோன்றியது செட்டியாருக்கு !


செட்டியார் , தன் மகனான சரவணனை இப்படி கேட்டார் :

" அவர் கடைசியாக நடித்த படத்தில் சிவாஜியின் சம்பளம்

எவ்வளவு ? "

அதாவது சிவாஜி அப்போது வாங்கும் சம்பளமே கொடுப்பது

என்று முடிவு செய்யப்பட்டது !


விசாரித்ததில் , சிவாஜி அவர்கள் ஏ.பி. நாகராஜன் படமான

" திருவருச்செல்வர் " படத்தில் நடித்தார் என்றும் அப்போது

ஏ.பி. என். சிவாஜிக்கு கொடுத்த சம்பளம் : இரண்டு லட்சம் ரூபாய் !

செட்டியார் " கணக்கு " போட்டார் :


என்ன கணக்கு ?

1. ஏ.பி. என். எடுத்தது வண்ணப் படம் - நாம் எடுப்பதோ கருப்பு -

வெள்ளைப் படம் !


2. ஏ.பி. என். படத்தில் " காஸ்ட்யூம் " கள் மிக அதிகம் !

கிலோ கணக்கில் " கில்ட் " நகைகளை சுமந்து சிங்க நடை

சிவாஜி நடக்க வேண்டும் !





" உயர்ந்த மனிதனுக்கு " - " கோட் - சூட் " போதுமே !

அதுவும் நடப்பதற்கு க் கூட " வாக்கிங் ஸ்டிக் " தருகிறோமே !


3. ஏ.பி. என் . படத்தில் நடிக்க நாட்கள் அதிகம் வேண்டும் !

" உ.ம " க்கு அதிக நாட்கள் தேவை இல்லை !


4.ஏ.பி. என் . படத்தில் சிவாஜிக்குப் பல வேடங்கள் !

" திருவருட்செல்வர் " படத்தில் சிவாஜி மன்னனாக, சுந்தர

மூர்த்தி நாயனராக, அப்பராக, சலவைத் தொழிலாளியாக- பல

வேடங்கள் !

" உ . ம " - க்கு சிவாஜிக்கு ஒரே வேடம் !

இதுதான் செட்டியாரின் கணக்கு !


இந்த மாதிரியான கணக்கு எல்லாம் ஒரு திறமையான

நிர்வாகிதான் போடமுடியும் !

ஏ வி எம் அவர்கள் ஒரு திறமையான நிர்வாகி என்று அடியேன்

சொன்னாள் ....... " சூரியனுக்கே " டார்ச் லைட் " அடித்த கதைதான்! "

( நன்றி : ஆர். பார்த்திபன் ! )


எனவே 2 லட்சம் வாங்கி நடித்த ஏ பி. என் படத்தை விட , ஏ வி எம்

படத்தில் வேலை கம்மி !

" எனவே 2 லட்சத்திற்குப் பதில் ஒன்றரை லட்சம் தரலாம் "

என்று முடிவு செய்தார் செட்டியார் !

என்ன செட்டியார் போட்ட கணக்கு சரிதான் என்று என்

மனது சொல்லியது !

உங்களுக்கு ?



" சம்பளம் ஒன்றரை லட்சம் " என்று சண்முகம் தரப்பில்

சொல்லப்படது ! சண்முகம் " ஓ. கே " என்றார் !


"ஆனால் ஒரு கண்டிஷன் ! " - என்றார் சண்முகம் !

" என்ன கண்டிஷண் ஸ்வாமி ? " என்கிறீர்களா ?

சண்முகம் சொன்னார் :

" இப்போது காலணா கூட தரக்கூடாது !

படம் மொத்தமாக முடிந்தவுடன் படம் " சென்சார் "

போய் வந்தவுடன் ஒரே " செட்டில் மெண்ட் " - ல் மொத்தமாக

கொடுத்து விடவேண்டும் ! "

கசக்குதா செட்டியாருக்கு ?

" சரி " என்றார் !


இத்தான் சிவாஜிக்கு சம்பளம் நிணயத்த கதை !


இப்போது எல்லாம் என்ன கதை என்று தெரியுமா ?

சிவாஜியின் " கலை உலக வாரிசு " கமல் நடிக்கும் " லேட்டஸ்ட் "

படமான " மன்மதன் அம்பு " படத்திற்கு கமல் சம்பளம் எவ்வளவு

தெரியுமா ?

23 கோடி !

அதுவும் எப்படி ?

பாதி தொகையை " அட்வான்ஸ் " ஆக கமலுக்கு -

கமல் ஒப்புக்கொண்ட அன்றே தரப்பட்டதாம் !

இது எப்படி இருக்கு ?

அதை விட கொடுமை என்ன தெரியுமா ?

பணப் பிரச்சனையை விட அந்த படத்தில் " திரிஷாவின் அம்மா நடிக்கிறாரா இல்லையா" என்பதே என்பதே பெரிய பிரச்சனையாம் !

எப்படி இருக்கிறது கதை !


பின்பு ஒரு வழியாக " உயர்ந்த மனிதன் " படப் பிடிப்பு தொடங்கியது

abkhlabhi
16th November 2010, 11:18 AM
" உயர்ந்த மனிதன் " படத்தில் வாணிச்ரியை அசோகன் ஒரு தலையாக

காதலிப்பார் ! ஆனால் வாணியோ சிவாஜியைத்தான் காதலிப்பார் !

இருதியில் மனைவியைப் பிரிந்த சிவாஜி தன் மனைவி ஒரு குழந்தையைப்

பெற்றெடுத்தான் இறந்தாள் என்கிற உண்மை சிவாஜிக்குத் தெரியாது !

ஆனால் அசோகனுக்கு அந்த உண்மை தெரிய வரும் ! சிவாஜியின்

மகன் சிவகுமார்தான் என்கிற உண்மை சிவாஜிக்குத் தெரியாது ! ஆனால்

அசோகனுக்குத் தெரியும் ! டாக்டராக வரும் அசோகன் கதா பாத்திரம் ஓர்

இருதய நோயாளி ! அப்போது அசோனுக்கு கீழ் கண்டவைகளை தன் நடிப்பால்

செய்து பேர் வாங்கவேண்டும் !



அவைகள் :

1 .உண்மை தெரிந்த அன்று அசோகன் அதிக அளவில் குடித்து விட்டு

சிவாஜியிடம் சிவகுமார்தான் அவருடைய மகன் என்பதை சொல்ல

வேண்டும் !


2.அதே சமயத்தில் போதையில் பேச வேண்டும் !


3. சிவாஜியின் முண்ணாள் மனைவியைப் பற்றிப் பேசி அவரின்

கோபத்திற்கு ஆளாக நடிக்க வேண்டும் !


4. இறுதியில் " வலி " வந்தது போல் அவதிப் பட வேண்டும் !

5. அங்கே நின்று கொண்டிருக்கும் சிவகுமாரை போக வேண்டாம்

என்று சொல்லவேண்டும் !

6. இறுதியாக அசோகன் இறக்கும் தறுவாயில் " சத்யா..... சத்யா.... "

என்று சொல்லியபடி மடிய வேண்டும் !



இதனை வேலைகளை அசோகன் போன்ற ஒரு சாதாரண நடிகர்

செய்ய முடியுமா என்று சொல்லுங்கள் ! அதனால் அசோகனை நான்

குறைத்து எடை போடவில்லை ! அந்த படத்தின் கதா பாத்திரத்தை

அவரால் தாங்க முடியவில்லை என்று சொன்னேன் ! " இரட்டை

இயக்குனர்கள் " கிருஷ்ணன் - பஞ்ச்ய் வும் அவாறே நினைத்தனர்.

என்ன செய்வது என்று அவர்களுக்குப் புரியவில்லை ! நிலைமையைப்

புரிந்து கொண்ட நடிகர் திலகம் சுதாரித்துக் கொண்டார் ! அசோகன்

எப்படி அந்த முக்கியமான கட்டத்தில் அனைவரையும் கவரும்

வகையில் நடிக்க வேண்டும் என்பதை சிவாஜி அசோகனுக்கு சொல்லிக்

கொடுத்தார் !





( சுமாரான படம் தான் கிடைத்து !

பொறுத்துக்கொள்ளவும் ! )


அசோகனும் சிவாஜி சொல்லிக் கொடுத்த படியே நடித்தாராம் !

அந்தக் காட்சியிம் மிக சிறப்பாக வந்தது !



சிவாஜியிடம் உள்ள பல நற்பண்புகளில் ஒன்று :

" தன்னைப் போலவே மற்றவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் ! "

என்பதே !

ஒரு படத்தில் ஒரு கட்டத்தில் தான் " டம்மி " யாக இருந்தால் கூட

பரவாயில்லை, அந்த நடிகர் / நடிகை நன்றாக நடித்தார் படம் வெற்றி

அடைய வாய்ப்புக்கள் உண்டு என்று நினைப் பவர் ! இதற்கு நிறைய

எடுத்துக்காட்டுக்களை சொல்லலாம் !

இதோ சில :

1. பண்டரி பாய் , தன் கணவனாக வரும் சிவாஜியே நாட்டைக் காட்டிக்

கொடுக்கும் " துரோகி " என்று தெரிய வந்ததும் பண்டரி பாய் பேசும்

வசனங்கள் ! சிவாஜிக்கு அந்த இடத்தில் " டம்மி பீஸ் " தான் !

படம் : " அந்த நாள் "


2. தன் கணவனைப் பழித்துப் பேசும் , தன் தம்பியான எஸ் .எஸ். ஆரை

கனல் தெறிக்கும் வசனம் பேசி எஸ் எஸ் ஆரை சிவாஜி வைத்திருந்த

குடையால் விளாசும் காட்சியில் சிவாஜி " டம்மி பீஸ் " தான் !

படம் : " தெவப் பிறவி "


3. " பிரஸ்டிஜ் " பத்மனாப ஐயரை விட அவர் மனைவியாக வரும் பத்மினி

பல இடங்களில் சிவாஜியை " ஓவர் டேக் " பண்ணுவார் !

படம் : " வியட்நாம் வீடு "


4. சரோஜா தேவியின் வசனங்கள் - " இருவர் உள்ளம் " படத்தில் !


5. தன் மகள் களில் ஒருத்தி தனக்குப் பிறக்கவில்லை என்று உணர்ந்து

கொண்ட " பைலட் பிரேம் நாத் " ஐ , கடைசி கட்டத்தில் " மேஜர் "

சுந்தர்ராஜன் நீளமான வசனங்கள் பேசி உண்மையை உணர்த்தும் காட்சி !


6. " வீரபாண்டிய கட்டபொம்மன் " படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள்

உலகப் புகழ் பெற்றவை ! ஆனால் அதே படத்தில் அவருடைய மனைவியாக

வரும் எஸ். வரலட்சுமி , கட்டபொம்மனைப் போருக்கு வழி அனுப்பும் போது

பேசும் வசனங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா !

" நாமும் போருக்குப் போய்விடலாமா ! " என்று நினைக்கும் அளவுக்கு

இருக்கும் ! அப்போதும் சிவாஜி ஒரு " டம்மி பீஸ் " தான் ! இப்படி பல

படங்கள் ! சிவாஜி மற்ற நடிகர்களுக்கு வழி விட்டு அவர்களும் நன்றாக

நடிக்கட்டும் என்கிற தாராளமான மனப் பான்மை வேறு யாருக்கு வரும் ?


இதோ " உயர்ந்த மனிதன் " படத்திலும் இப்படித்தான் !

அசோகன் குடித்துக்கொண்டே பேசும் வசனங்களுக்கு நடுவே சிவாஜிக்கு

வேலை இல்லை ! எனினும் அசோகன் நடித்த அந்த இடங்கள் அனைவரும்

பாராட்டும் வகையில் அமைந்தது என்று நான் சொல்லித் தெரிய

வேண்டியதில்லை !

மேற்கண்ட படப் பிடிப்பு முடிந்தவுடன் சிவாஜி , சரவணனிடம்

இப்படி சொன்னாராம் :

" எனக்கு அவன் துரோகி !

அவனுக்கு நான் " ஆக்ஷன் " சொல்லிக் கொடுக்க வேண்டீருக்கு பார் !

படம் நல்லா வரணும்ங்கிறதற்காக அப்படி நான் சொல்லித் தர

வேண்டியுள்ளது ! " என்று முணுமுணுத்தாராம் !

நிலைமை இப்படி இருக்க ...........

அசோகன் , சரவவணன் இடம் அடித்த " கம்மெண்ட் "

என்ன தெரியுமா ?

" ஏண்ணே, இந்த ஆள் ( சிவாஜி ) நம்மளக் கவுத்திட வில்லையே ? "

இதைக் கேட்டு சரவணன் , அசோகனைக் கடிந்து கொண்டார் !

சரவணன் : ( அசோகனிடம் ):

" அடப் பாவி மனுஷா !, அவர் உனக்காக எவ்வளவு அக்கறையாகக் கற்றுக்

கொடுத்தார் ! ஏன் நீங்க அப்படி நினைக்கிறீங்க ? "



இந்த கட்டத்தில் ஒன்றை நான் சொல்லியே ஆக வேண்டும் !

அந்த காட்சியில் சிவாஜி , அசோகனுக்கு சொல்ல்க் கொடுத்தில்

ஒரு சதவிகிதம் தான் அசோகன் நடித்துக் காட்டினார் ! அசோகன்

சிவாஜி சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருந்தால் படம்

மிகப் பெரிய " இட் " ஆகிருக்கும் ! "

இதை சொன்னவர் :


அசோகனின் நெருங்கிய நண்பர் :

ஏ.வி. எம். சரவணன் !

abkhlabhi
16th November 2010, 11:20 AM
Thanks to Sivaji rasikan,

டம்மி பீஸ் " வகையில் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாமே ? இதோ எனக்கு (?) தெரிந்த சில " டம்மி பீஸ் "

திருவிளையாடல் படத்தில் தருமி (நாகேஷ்) செய்யும் விவாதம்...

பார் மகளே பார் படத்தில் வி.கே.ராமசாமி நடிகர் திலகத்தின் கௌரத்தை குலைக்கும் விதமாக பேசும் அந்த காட்சி,

ராஜ ராஜ சோழன் -ல் லட்சுமியும் நடிகர் திலகமும் வாதிடும் "என்று சொல்லுங்கள் அண்னா" காட்சி

பாசமலர் படத்தில் ஜெமினி கணேசன் நடிகர் திலகத்திடம் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக மிரட்டும் காட்சி

மேலும் , தங்க பதக்கம் படத்தில் கே.ஆர்.விஜயா பல காட்சிகளில் நடிகர் திலகத்தையும் விஞ்சி நடித்திருப்பார்.

நடிப்பால் இவரை மிஞ்சி நடித்தவர்களில் சிலர்....
தேவிகா (நீலவானம்),
சாவித்திரி கணேஷ் (பாசமலர்,நவராத்திரி),
பத்மினி (பேசும் தெய்வம், தங்கபதுமை)

Mahesh_K
16th November 2010, 12:49 PM
இன்றைய தினமணியில் லிருந்து...


திரையுலகைப் பொறுத்தவரை கதையை முழுவதும் காப்பி அடிப்பது ஒரு ரகம். ஒரு சில சம்பவங்களை மட்டுமே காப்பி அடிப்பது மற்றொரு ரகம். இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. சிவாஜி நடித்த "பாவமன்னிப்பு' படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி ஒன்றை "முதல் மரியாதை' படத்தில் அப்படியே அமைத்திருந்தார்கள்

.. எந்தக் காட்சி என்று தெரிகிறதா?

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial Articles&artid=332449&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=கதை திருட்டுக்குத் தேவை கடிவாளம்!

saradhaa_sn
16th November 2010, 12:57 PM
டியர் பாலா,

'உயர்ந்த மனிதன்' படத்தின் சிறப்புகள் பற்றிய நீண்ட கட்டுரை அபாரம். இதன்மூலமாக அப்படம் பற்றிய பல அரிய தகவல்களைத் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள், நன்றிகள்.

நடிகர்திலகமும் அசோகனும் பங்குபெறும் குறிப்பிட்ட காட்சியில் நடந்தவற்றை திரு ஏ.வி.எம் சரவணன் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியிலும் கூறியிருந்தார். 'இருமலர்கள்' படப்பிடிப்பில் நடந்த கசப்பான அனுபவத்துக்குப்பிறகு இருவரும் பேசிக்கொள்வதில்லை. இருப்பினும் இப்படத்துக்காக நடிகர்திலகம் சற்று விட்டுக்கொடுத்து நடித்தார். 'இவனெல்லாம் துரோகி, இவனுக்கெல்லாம் நடிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கு' என்று நடிகர்திலகம் சொன்னதையும், 'இந்த ஆள் என்னை அமுக்கப் பார்ர்கிறாரா?' என்று அசோகன் கேட்டதையும் சரவணன் நினைவுகூர்ந்தார்.

நடிகர்திலகத்தின் சகோதரர் வி.சி.சண்முகத்தைப்பொறுத்தவரை, அவர் பண விஷயத்தில் ரொம்ப கறார், கண்டிப்பானவர் என்றெல்லாம் அவரைப்பற்றித் தெரியாதவர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நெருங்கிப் பார்த்தவர்களுக்குத்தான் அவருடைய மென்மையான அணுகுமுறை தெரியும்.

'ராஜபார்ட் ரங்கதுரை' படத்துக்காக நடிகர்திலகத்தை புக் பண்ணிய அப்படத்தின் தயாரிப்பாளர் வி.சி.குகநாதன், அவருக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக பல இடங்களில் பணம் ஏற்பாடு பண்ணி பேங்கில் போட்டுவிட்டு, ஒருலட்ச ரூபாய் செக்குடன் வி.சி.சண்முகத்தைப்போய்ப் பார்த்து, அட்வான்ஸாக ஒரு லட்சத்துக்கான செக்கை நீட்ட, (திரையுலகில் என்னென்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை 'அப்டுடேட்'டாக விரல் நுனியில் வைத்திருக்கும் சண்முகம், இப்பணத்தை ஏற்பாடு செய்ய குகநாதன் எவ்வளவு பிரயாசைப்பட்டார் என்று தெரிந்து கொண்டு) "முதல்ல செக்கை உங்க பாக்கெட்ல வைங்க. அட்வான்ஸுக்கெல்லாம் இப்போ அவசரமில்லை. முதல்ல இந்தப்பணத்தை வச்சிக்கிட்டு ஷூட்டிங் ஆரம்பிங்க. பாதிப்படத்துக்கு மேல் முடிந்து, ஏரியாக்கள் விநியோகம் ஆனபிறகு பணம் வாங்கிக்கிறேன். அதுமட்டுமில்லே, விநியோகஸ்தர்களிடம் ஏரியா விநியோகம் பற்றி நீங்க நேரடியாக பேசாதீங்க. உங்களை ஏமாத்திடுவாங்க. என்கிட்டே அவங்களை அழைச்சிக்கிட்டு வாங்க. நல்ல ரேட்டுக்கு உங்க படத்தை நான் பிஸினஸ் பண்ணித்தர்ரேன்" என்று சொல்லியனுப்பினாராம்.

சொன்ன மாதிரியே மிக நல்ல ரேட்டுக்கு படத்தை விற்பனை செய்ய உதவினாராம். தரத்திலும், பொருளாதாரத்திலும் தன்னை வெகுவாக உயர்த்திவிட்ட படம் ராஜபார்ட் ரங்கதுரை என்று இன்றுவரை வி.சி.குகநாதன் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

பிறிதொரு சமயம் தன் தம்பி பற்றி நடிகர்திலகம் சொல்லும்போது, "சண்முகம் மட்டும் இல்லேன்னா ரொம்பப்பேர் என்னை ஏமாத்தியிருப்பாங்க" என்று சொல்லியிருந்தார்.

abkhlabhi
16th November 2010, 04:02 PM
"உயர்ந்த மனிதன்" வெற்றி விழா: அறிஞர் அண்ணா பாராட்டு


http://202.65.145.154/2010/01/29104142/sivaji.html

J.Radhakrishnan
16th November 2010, 09:25 PM
[quote="saradhaa_sn"]
நடிகர்திலகமும் அசோகனும் பங்குபெறும் குறிப்பிட்ட காட்சியில் நடந்தவற்றை திரு ஏ.வி.எம் சரவணன் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியிலும் கூறியிருந்தார். 'இருமலர்கள்' படப்பிடிப்பில் நடந்த கசப்பான அனுபவத்துக்குப்பிறகு இருவரும் பேசிக்கொள்வதில்லை. இருப்பினும் இப்படத்துக்காக நடிகர்திலகம் சற்று விட்டுக்கொடுத்து நடித்தார். 'இவனெல்லாம் துரோகி, இவனுக்கெல்லாம் நடிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கு' என்று நடிகர்திலகம் சொன்னதையும், 'இந்த ஆள் என்னை அமுக்கப் பார்ர்கிறாரா?' என்று அசோகன் கேட்டதையும் சரவணன் நினைவுகூர்ந்தார்.

சாரதா மேடம்,
கர்ணன் படத்திலேயே NT அவர்களுக்கும் அசோகனுக்கும் கருத்துவேறுபாடு வந்து அதன் பின் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என்று கேள்விபட்டிருக்கிறேன். அப்படியென்றால் இருமலர்கள் படத்தில் நடிக்க NTஅவர்கள் எப்படி ஒப்புக்கொண்டார்?

rajeshkrv
17th November 2010, 12:48 AM
that brings out for an interesting discussion
Nambiar was the only person who worked in both the camp without any problem i guess

saradhaa_sn
17th November 2010, 10:15 AM
சாரதா மேடம்,
கர்ணன் படத்திலேயே NT அவர்களுக்கும் அசோகனுக்கும் கருத்துவேறுபாடு வந்து அதன் பின் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என்று கேள்விபட்டிருக்கிறேன். அப்படியென்றால் இருமலர்கள் படத்தில் நடிக்க NTஅவர்கள் எப்படி ஒப்புக்கொண்டார்?
ஜேயார்,

கர்ணன் படத்தின்போது ஏற்பட்ட பிரச்சினை, அப்போதே பந்துலு, சித்ரா கிருஷ்ணசாமி போன்றவர்களால் தீர்த்து வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 'முரடன் முத்து' படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பிறகு மூன்று ஆண்டுகள் இருவரும் சந்திக்கொள்ளவேயில்லை. பின்னர் இருமலர்கள் படத்தில் இயக்குனர் ஏ.சி.டி., தன் ஆப்த நண்பரான அசோகனை நடிக்க வைத்தார். அசோகனிடம் Loose Talking என்ற கெட்ட பழக்கம் உண்டு. அடுத்தவர்கள் பற்றி கமெண்ட் அடித்துக்கொண்டேயிருப்பார். அப்படி பேசிய ஒரு விஷயம் நடிகர்திலகத்தின் காதுக்கு எட்ட, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிரச்சினை வர, நடிகர்திலகம் கோபம் கொண்டு ஏ.சி.டி.யிடம், 'இவன் சீன்களை எடுத்து முடிச்சிட்டு என்னைக்கூப்பிடு' என்று போய் விட்டார். அதன்பின்னர் இருவரும் வரும் சில காட்சிகள் மட்டும் தனித்தனி குளோசப்கள் எடுக்கப்பட்டு எடிட்டிங்கில் இணைக்கப்பட்டன. (தகவல்: இயக்குனர் திரு எஸ்.பி.முத்துராமன்)

இதன்பிறகும், உயர்ந்த மனிதன் படத்தில் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டது ஏ.வி.எம்.சரவணனின் நட்புக்காகவே. முதலில் நடிகர்திலகம் டாக்டர் ரோலில் மேஜரையும், டிரைவர் ரோலில் முத்துராமனையும் சிபாரிசு செய்தாராம். ஆனால் அசோகனுக்கு டாக்டர் ரோல் தருவதாக உறுதியளித்து விட்டதாக சரவணன் சொல்ல நடிகர்திலகம் தன் கருத்தை வலியுறுத்தவில்லையாம் (தகவல் திரு ஏ.வி.எம்.சரவணன்).

saradhaa_sn
17th November 2010, 10:35 AM
that brings out for an interesting discussion
Nambiar was the only person who worked in both the camp without any problem i guess
ராஜேஷ், அது யூகம் மட்டுமல்ல உண்மையும் கூட.

நடிகர்திலகம், மக்கள் திலகம் இருவருடைய படப்பட்டியலை ஒப்பிட்டால், இருவரில் நடிகர்திலகத்துடன்தான் நம்பியார் அதிகம் நடித்திருக்கிறார் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.

திரு எம்.ஜி.ஆருக்கும், திரு நம்பியாருக்கும் இடையே கூட குடியிருந்த கோயில் படம் முடியும் தருவாயில் பிரச்சினை ஏற்பட்டு, அதன்பின பல படங்களில் நடிக்காமல் மறுத்து வந்தார். அதன்பின்னர் வந்த கண்ணன் என் காதலன், கணவன், ஒளிவிளக்கு, அடிமைப்பெண், நம்நாடு, மாட்டுக்கார வேலன் என வரிசையாக, நம்பியார் இல்லாமலே எம்.ஜி.ஆர். படங்கள் வந்தன. (அந்த நேரத்தில் படப்பிடிப்பு துவங்கப்பட்ட எங்கள் தங்கம், ரிக்ஷாக்காரன் படங்களிலும் நம்பியார் இல்லை). பின்னர் பலரது முயற்சியால் பிரச்சினை தீர்க்கப்பட்டு 'என் அண்ணன்' படத்திலிருந்து மீண்டும் எம்.ஜி.ஆர். படங்களில் இடம்பெறத்துவங்கினார்.

abkhlabhi
17th November 2010, 01:25 PM
Saradhaa Madam wrote :
"அசோகனிடம் Loose Talking என்ற கெட்ட பழக்கம் உண்டு. அடுத்தவர்கள் பற்றி கமெண்ட் அடித்துக்கொண்டேயிருப்பார்"



சிவாஜி விரும்பிய " டாக்டர் " பாத்திரத்தில் அசோகன் நடிக்கிறார் என்பது சிவாஜிக்கு பிடிக்கவில்லை ! ஆனால் நடிக்க வந்து விட்டால் தன் சொந்த விருப்பு - றுப்புகளை
மறந்து நடிப்பதி சிவாஜிக்கு நிகர் சிவாஜியே ! இந்த விஷயத்தில்

எம்ஜிஆர் அப்படி அல்ல .படத்தின் வெற்றிக்காக சிவாஜி எப்போதும்

பாடுபடுவார் ! படப்பிடிப்பில் அசோகனுக்கு நடிப்பு சொல்லித்தரும்

அளவுக்கு படத்தில் " இன்வால்வ் " செய்வதில் வல்லவர் ! படப்பிடிப்பு

கொடைக்கானலில் நடந்தபோது அப்போது சிவாஜியுடன் அசோகன்,

மேஜர், சிவகுமார், பாரதி போன்றவர்கள் இருந்தனர் . ஒரு குறிப்பிட்ட

காட்சியின் போது , அந்த காட்சியில் சிவாஜியும் மற்றவர்களும் நடிக்க

வேண்டும். ஆனால் அசோகனுக்கு அங்கே வேலை இல்லை ! ஆனால்

அசோகன் அங்கே - அதாவது சிவாஜி நடித்துக்கொண்டிருக்கம் இடத்தின்

அருகே மற்ற தொழில் நுப்ட கலைஞர்கள் மத்தியில் நின்று கொண்டு

அரட்டை அடித்துக் கொண்டிருந்தார் ! இது சிவாஜிக்கு பிடிக்கவில்லை !

எனினும் தானே பிரச்சனை ஏதாவது செய்து படப்பிடிப்பை கெடுத்துக்

கொள்ளக்கூடாது என்று எண்ணி " கம் " என்று இருந்து விட்டார் !

அப்படி " கம் " என்று சிவாஜி இருந்து விட்டது கண்டு அசோகனுக்கு

நல்லதாகப் போய்விட்டது ! அசோகனின் " லொள்ளு " இன்னும்

அதிகமாகி விட்டது ! அப்போது எம்.ஆர். ராதா, எம்ஜிஆரை சுட்ட சம்பவம்

அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப் பட்டது ! எம். ஆர். ராதா எப்படி

எம்ஜிஆரை சுட்டார், அப்போது எம்ஜிஆர் என்ன ஆனார், எம்ஜிஆரின்

நிலைமை அப்போது எவ்வாறு இருந்தது என்பது பற்றி தன்னை சுற்றி

இருந்த கூட்டத்திற்கு " மோனோ ஆக்டிங்க் " செய்து காட்டிக்

கொண்டிருந்தார் ! கூட்டத்தினரும் " ஓ.சி " யில் ஓரங்க நாடகம் நடப்பதைப்

பார்க்க கசக்கவா செய்யும் ? " ஆ " என்று கூட்டம் அசோகனை வேடிக்கை

பார்த்தது ! சில சமயங்களில் கரவொலி சத்தமும் கேட்டது !


இதை எல்லாம் சகித்துக் கொண்டிருந்த சிவாஜி " இது ரொம்ப ஓவர் ! "

என்று எண்ணி சரவணனை அழைத்தார் !

சரவணனிடம் சொன்னார் :


" இதோ பார் சரவணன், அவன் ( அசோகன் ) என்னை ரொம்ப

" டிஸ்டிராக்ட் " பண்றான் ! அவனை முதலில் இங்கிருந்து அப்புறப்படுத்து !

அதன் பின்னர்தான் நான் நடிப்பேன் ! "என்று சொல்லி விட்டார் !


சிவாஜி : " ஒண்ணு அவனைப் " பேக் " பண்ணு !

இல்லேன்னா என்னைப் " பேக் " பண்ணு ! "


சரவணனுக்கு சிவாஜி சொல்வதில் உண்மை உள்ளது என்பதை

புரிந்து கொண்டார் ! உடனே அசோகனிடம் சென்று அவரை வேறு இடத்திற்கு " தள்ளிக் "கொண்டு போனார் ! அப்புறமாக சிவாஜி தன் நடிப்பைத் தொடர்ந்தார் !


Madam Delete comment on Kamal

Murali Srinivas
17th November 2010, 02:36 PM
Bala,

Again it was a nice to go through the article on Uyarndha Manidhan though I have read it earlier. One doubt, did you take this from Sivaji Rasikan issues? Do you have any copies of the same?

Regards

abkhlabhi
17th November 2010, 03:58 PM
Dear Murali,

Yes it was frm Sivaji Rasikan issues (long back I read and lost) and also from other net sources. contributions are not my own. the credit goes to other NT fans and otehr hubbers. In fact I want to contribute on my own , I hope I will , till that time, I depend on others. I am in process of collecting NT horoscope and will be back with full details.

abkhlabhi
17th November 2010, 04:37 PM
"உயர்ந்த மனிதன்" டாக்டராக வந்து ரகசியத்தைச் சொல்ல வரும் காட்சியில் மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்த நடிப்பை மறைக்காமல் இருக்க அந்தக் காட்சியில் நடிகர்திலகம் எந்த நடிப்பையும் வெளிக்காட்டாமல் இருப்பார்.
சிவாஜி தனக்கு வேண்டாத(பிடிக்காத) நடிகருக்கும், நடிக்க சொல்லிகொடுத்ததால்தான் அவர் "நடிகர் திலகம்".

pammalar
17th November 2010, 04:45 PM
டியர் பாலா சார்,

அருமையான பதிவுகளையும், சுட்டிகளையும் அளித்து அசத்தி வருகிறீர்கள். நன்றி கலந்த பாராட்டுக்கள்!

குறிப்பாக "உயர்ந்த மனிதன்" பதிவுகள் அப்படத்தைப் போலவே உயர்ந்து நிற்கிறது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th November 2010, 06:21 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 157

கே: தமிழ்ப்படவுலகம் எந்த நடிகரால் முன்னேறி வருகிறது? (கே.எல்.கன்னியப்பன், மலாயா)

ப: நடிப்புத்துறையை மட்டும் கணக்கிட்டால், நடிகர் திலகத்திற்கு அது ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறது.

(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1963)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th November 2010, 06:47 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 158

கே: சிவாஜி கணேசன் இன்னமும் காலூன்றி நிற்பதற்கு என்ன காரணம்? (என்.சந்திரசேகரன், தேனி)

ப: தன்னிடத்தே திறமை, தொழிலினிடத்தே நேர்மை இவையிரண்டும் தான் காரணம். தயாரிப்பவர்களுக்கோ, சக நடிக-நடிகைகளுக்கோ துரோகம் செய்திராதவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். செட்டுக்குள் நுழைந்தால் தவறாக ஓடுகிறதோ என்று சந்தேகப்பட்டு நாம் வாட்ச்சை திருப்பி வைத்துக் கொள்ளலாம். அவ்வளவு பங்க்சுவல். நாலு படம் கூட முடித்திராமல், 7 மணி ஷூட்டிங்கிற்கு 11 மணிக்கு மேக்கப் போட்டுக் கொள்ள ஆரம்பிக்கும் நடிகர்களையும் திரைப்படவுலகம் அன்றாடம் சந்தித்துக் கொண்டு தானே இருக்கிறது!

(ஆதாரம் : கல்கண்டு, 7.5.1981)

அன்புடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
17th November 2010, 11:04 PM
சாரதா மேடம்/பாலா சார்,
அருமையான தகவல்கள்!!! நன்றி.

pammalar
18th November 2010, 02:29 AM
காதல் மன்னன் குறித்து நடிப்புலகின் மன்னர் மன்னன்

"காதல் மன்னன் என்றால் ஜெமினி கணேசன் தான். அந்தப் பட்டம் எனக்கும் கிடையாது, கமலுக்கும் கிடையாது. கண்ணம்மா முதல் கமல் வரை அவர் காதல் செய்கிறார். அவர் என்றென்றும் காதல் மன்னனே தான்."

- 30.4.1997 புதனன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற "அவ்வை சண்முகி" வெற்றி விழாவில் பேசியதிலிருந்து.

இன்று 17.11.2010 காதல் மன்னன் அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் 91வது பிறந்த தினம்.

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
18th November 2010, 01:52 PM
"தங்க பதுமை"


நடிகர் திலகத்தின் 53வது படம். 10/01/1959 அன்று வெளியான படம். 1959 ஆம் வருடம் வெளியான 6 நடிகர் திலகத்தின் படங்களில் தங்க பதுமையும் ஒன்று. வசூலில் மிக பெரிய வெற்றி அடைந்த படம். மறு வெளியிட்டிலும் வெற்றி அடைந்த படம். நான் பிறப்பதுகு முன்பே வெளி வந்த படம்.

நடிகர் திலகம், நாட்டிய பேரொளி, M . N . ராஜம் , மற்றும் பலர் நடித்த படம். A .S .A சாமி இயக்கத்தில், ஜுபிட்டர் pictures தயாரித்த படம்.

இப்படத்தின் பின்னணயில் சுவாசிரியமான கதை உண்டு. 1942 ஆம் ஆண்டு ஜுபிட்டர் pitcutres "கண்ணகி" என்ற பெயரில் P .கண்ணம்பா, p .U .சின்னப்பா நடிக, படத்தை தயாரித்து வெளியிட்டு மிக பெரிய வெற்றி பெற்றது. கண்ணகி என்ற வேடத்தில் கண்ணம்பா தன் நடிப்பினால் சரித்த்ரம் படைத்தார்.

1950 ஆம் வருட பிற்பகுதில் நடிகர் திலகத்தை "கோவலனாக" நடிக்க வைத்து மீண்டும் "கண்ணகி" யை தயாரிப்பதாக ஜுபிட்டர் சோமு முடிவு செய்திருந்தார். 1942 வெளியான "கண்ணகி" யை தன்னுடைய நெருங்கிய நண்பரான திரு.அண்ணாதுரை அவர்களுக்கு போட்டு காட்டினார். தங்க பதுமை படத்தை இயக்கிய சுவாமி அவர்களும் கூட இருந்தார். இப்படத்தை மீண்டும் தயாரித்தல் வெற்றியடையாது என்று அண்ணா அவர்கள் கூறினார். கண்ணகி படத்தை மீண்டும் தயாரிக்கும் என்னத்தை ஜுபிட்டர் சோமு கை விட்டுவிட்டார்.

ஆனால், இயக்குனர் சுவாமி இதே போல் ஒரு கதையை உருவாக்க எண்ணம் கொண்டார். எண்ணத்தை செயலாகினார். அதுவே "தங்க பதுமை". அரு ராமநாதன் என்பவர் "காதல்" என்ற மாத பத்திரிகைக்கு அசிரியரராக இருந்தார். அவரை இப்படத்திற்கு திரைக்கதை, வசனத்தை எழுத வைத்தார்.

நடிகர் திலகத்தின் தர்ம பத்தினியாக நாட்டிய பேரொளி - -- கண்ணகியின் மறு அவதாரம் போல், பெண்களின் இலக்கணமாக அவரின் பாத்திர படைப்பு அமைந்திருந்தது. ராணி M .N. ராஜம், நடிகர் திலகத்தை காதலிப்பார். அவரை, அவருடைய தர்மபத்தினியுடன் சேர விடாமல் தடுபார். நடிகர் திலகத்தின் கண்களை குருடாக்கும் அளவிற்கு ராணி ராஜம் நடந்து கொள்வார். கடைசியில், தங்க பதுமை போன்ற , கடவுள் சிவனின் பத்தினியிடம் நாட்டிய பேரொளி நடனத்துடன் வேண்டிகொள்வர்.
நடிகர் திலகம் மீண்டும் கண்களை பெற்று, சந்தோஷம் மகா படம் முடியும்.

3 மணிநேரம் படம். படத்தின் அடி 5819 .23

நடிகர் திலகத்தின் நடிப்பு எப்பொழுதும் போல. வித்தியாசமான வேடத்தில் ராஜம் அசத்தியிருபார். (தமிழ் திரை உலகம் இவரை சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை. அற்புதமான செட். ( தென் இந்தியாவிலே அற்புதமாக செட் போடும் இயக்குனர் T .V .S .Sama -- இப்பொழுது முற்றும் மறந்து விட்டது).

நாட்டிய பேரொளியின் dedication :
இயக்குனர் சுவாமி சொன்னது :
"இப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில், உணவு இடைவேலையின் பொது சும்மா உக்காராமல், அரட்டை அடிக்காமல், அதே நேரத்தில், தனக்கு கொடுத்த வசனத்தை கையில் வைத்து கொண்டு, படித்து கொண்டே படிகளின் மேலும் கிழும் தனியாக நடந்து கொண்டே விதவிதமாக வசனங்களை உச்சரித்து பழகி கொண்டிருதார்". "தொழிலில் இப்படிபட்ட ஒரு devotion உள்ள நடிகையை நான் கண்டதில்லை"

நடிகர் திலகம், நாட்டிய பேரொளி, ராஜம் நடிப்பும் மற்றும் "கொடுத்தவனே" என்ற பாடலுக்காக பார்க்கவேண்டிய படம்.

இந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. மறு வெளியிட்டிலும் வெற்றி தான்.(Mr .முரளி / பம்மலார்/ ராகவேந்திரன்/சாரதா மேடம் - விவரங்களை கொடுப்பார்கள் ) தமிழ் திரை உலக சரித்தரத்தில் இது ஒரு தங்க பதுமை.

பின்குறிப்பு : இது விமர்சனம் அல்ல.

நன்றி : பல பேர். எல்லோருக்கும் என் வணக்கங்கள்.

SHIV
18th November 2010, 04:24 PM
Dear Sharda Madam

Thanks for the rare details on Uyarntha Manithan".

Regards

Shiv

pammalar
18th November 2010, 08:35 PM
"தங்க பதுமை"

இந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. மறு வெளியிட்டிலும் வெற்றி தான்.(Mr .முரளி / பம்மலார்/ ராகவேந்திரன்/சாரதா மேடம் - விவரங்களை கொடுப்பார்கள் ) தமிழ் திரை உலக சரித்தரத்தில் இது ஒரு தங்க பதுமை.


டியர் பாலா சார்,

மிக அருமையான பதிவு! மனமார்ந்த பாராட்டுக்கள்!

தாங்கள் குறிப்பிட்டது போலவே, தங்கத்தமிழ்ப்பெருமகனின் "தஙகப்பதுமை" திரைக்காவியம், சென்னை மற்றும் தென்னகமெங்கும், 1959 பொங்கல் வெளியீடாக 10.1.1959 அன்று, அவரது 53வது காவியமாக வெள்ளித்திரையில் வெளியானது.

சென்னையில் பாரகன், கிரௌன், சயானி முதலிய 3 திரையரங்குகளில் வெளியானது.

1. பாரகன் - 56 நாள்

2. கிரௌன் - 56 நாள்

3. சயானி - 56 நாள்

"தங்கப்பதுமை", பாரகனில் 10.1.1959 முதல் 6.3.1959 வரை 56 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. 7.3.1959 முதல் பாரகனில் நடிகர் திலகத்தின் 54வது காவியமான "நான் சொல்லும் ரகசியம்" வெளியானது. திலகத்தின் படமே திலகத்தின் படத்திற்குப் போட்டி.

அதே போல்,கிரௌனிலும், சயானியிலும் 10.1.1959 முதல் 6.3.1959 வரை ஓடி, ஒவ்வொரு அரங்கிலும் முறையே 56 வெற்றி நாட்களைக் கண்டது.

அதிகபட்சமாக, மதுரை ஸ்ரீலக்ஷ்மி திரையரங்கில், 10.1.1959 முதல் 13.4.1959 வரை 94 நாட்கள் ஓடி சிறப்பானதொரு வெற்றியைப் பெற்றது. [ஸ்ரீலக்ஷ்மி அரங்கம் 1960களின் இறுதியில் அலங்கார் எனப் பெயர் மாற்றம் கண்டது].

மற்றும் திருச்சி, சேலம், கோவை ஆகிய நகரங்களிலும் 8 வாரங்களும் அதற்கு மேலும் ஓடி நல்ல வெற்றியை அடைந்தது.

B சென்டர்களில் 5 முதல் 7 வாரங்களும், C சென்டர்களில் 3 முதல் 4 வாரங்களும் ஓடி நல்ல வெற்றிப்படம் என்ற முத்திரையைப் பதித்தது.

பின்னர் 10 வருடங்கள் கழித்து மறுவெளியீட்டில் வரலாறு படைத்தது. நடிகர் திலகத்தின் சாதனைக் காம்பினேஷன் தியேட்டர்களான சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரியில் 28.2.1969 அன்று வெளியாகி, 4 வாரங்கள் - அதாவது தங்கச்சுரங்கம் 28.3.1969 அன்று இந்த 3 தியேட்டர்களில் வெளியாகும் வரை - மிக வெற்றிகரமாக ஓடி வசூல் மழை பொழிந்து மறுவெளியீடுகளில் புதிய சாதனையை ஏற்படுத்தியது.

மறுவெளியீடுகளில், "தங்கப்பதுமை" புரியும் சாதனைகள் அன்றிலிருந்து இன்றைய காலகட்டமான 2010 வரை, தாராசுரம் சூரியகாந்தி டூரிங் வரைக்கும் தொடர்கிறது. அது தொடர்ந்து கொண்டேதானிருக்கும்.

2011-ல், மதுரை மாநகரம் "தங்கப்பதுமை"யை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th November 2010, 10:40 PM
அடியார்களை ஆட்கொண்டு அருள்பாலிக்கும் ஆதிசிவனுக்கும், அன்னதானப்பிரபுவான ஐயப்பனுக்கும், கலியுகவரதனான கந்தவேளுக்கும் உகந்த மாதமான "கார்த்திகை"யில் காட்சிக்கு வந்த கலைக்கடவுளின் காவியங்கள்

நவம்பர் 21 - தாம்பத்யம்(1987)
23 - ஆலயமணி(1962)
27 - பாதுகாப்பு(1970)
29 - உயர்ந்த மனிதன்(1968)

டிசம்பர் 4 - மனிதனும் மிருகமும்(1953)
6 - பாட்டும் பரதமும்(1975)
7 - நீதி(1972), மனிதரில் மாணிக்கம்(1973)
8 - வெற்றிக்கு ஒருவன்(1979)
9 - எதிர்பாராதது(1954)
10 - நீலவானம்(1965), நெஞ்சங்கள்(1982), புதிய வானம்(1988)
12 - மண்ணுக்குள் வைரம்(1986)

குறிப்பு:
1. சிவனுக்கு சிறப்பு சேர்ப்பது "கார்த்திகை". அச்சிவபெருமானையே நம் கண்முன் நிறுத்தியவர் நமது சிவாஜி பெருமான். ஆகவே, கார்த்திகை மாதத்தினுடைய அவரது காவியப்பட்டியலை பதிவிடுவது பொருத்தமானதே!

2. குருசாமி நம்பியார் அவர்களின் தலைமையில், பல வருடங்கள் கார்த்திகை, மார்கழியில் சிவாஜி அவர்கள் சிரத்தையுடன் விரதமிருந்து சபரிமலைக்கு புனிதயாத்திரை மேற்கொண்டு ஹரிஹரஸுதனை பக்தியுடன் தரிசித்து அருட்கடாக்ஷம் பெற்று வந்துள்ளார். சுவாமி ஐயப்பனுக்கான "கார்த்திகை"யில், சிவாஜி சாமியின் பட்டியலை பதிவிடுவது சாலப்பொருத்தமே!

3. குமரக் கடவுளுக்கும் உகந்தது "கார்த்திகை" மாதம். "ஸ்ரீவள்ளி"யில் அழகு தெய்வம் முருகப்பெருமானாகவே வேடம் பூண்டு நம்மை பரவசப்படுத்திய சிவாஜி பெருமான், "கந்தன் கருணை"யில் வீரக்கடவுளான வேலவனின் வீரத்தளபதி வீரபாகுவாக நம்மை ஆட்கொண்டார். சிங்காரத்தமிழ்வேலவனின் சிறப்பை சீரோடு செப்பும் "கார்த்திகை"யில், சிங்கத்தமிழனின் சீரிய பட்டியலை பதிவிட்டது பொன்னான ஒன்றே!

4. எதிர்பாராதது, ஆலயமணி, உயர்ந்த மனிதன், நீதி, புதிய வானம் முதலியவை 100 நாள் காவியங்கள்.

5. பாட்டும் பரதமும், மண்ணுக்குள் வைரம் ஆகியவை பத்து வாரங்கள் ஓடியவை.

6. மனிதனும் மிருகமும், நீலவானம், நெஞ்சங்கள் ஆகியவை 50 நாள் காவியங்கள்.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th November 2010, 02:53 AM
Sivaji on VOC & "Kappalottiya Thamizhan"

"I have acted for nearly 60 years, and for more than 40 years in the celluloid medium alone. I think the role of a lifetime is that of the great freedom fighter, V.O.Chidambaram Pillai. When B.R.Panthulu, the producer of the movie, asked me to enact the role of freedom fighter VOC, the first question that came to my mind was, can I do justice to the character? At the same time, I was eager to do the role, so I accepted it as a challenge.

I started to gather every minute detail about the great man, I talked to many personalities who were connected with VOC. I asked a number of questions about his dress, behaviour, talk, walk and so on. I read his speeches and writings. 'VOC is my political guru', E.V.Ramasamy Naicker (Periyar) had said, and I was potraying the role. I am the luckiest man, I said to myself.

When I first watched the film, I cried not because I was moved by my acting but because of VOC's love for the nation, his friendship, sacrifice, selfless service and his dream of freedom of the motherland. VOC's son V.O.C.Subramaniam, after seeing the film said, 'When my father died I was only 11 years old. I did not know how much he had struggled and sacrificed for the country. But when I saw the film "Kappalottiya Thamizhan" I came to know how he had suffered at the hands of the British'. His elder brother Arumugam said he saw only his father in the film. I felt these words of appreciation came from the freedom fighter VOC himself".

[Source : "The Hindu : Friday Review", 14.8.1998]

Today 18.11.2010 is KAPPALOTTIYA THAMIZHAN VOC's 74th Remembrance day.

VANDHE MATHARAM! JAI HIND!

Pammal R. Swaminathan.

abkhlabhi
19th November 2010, 12:43 PM
"தூக்கு தூக்கி"

திரை படம் வெளியான தேதி 26 /8 /1954 . நடிகர் திலகத்தின் (அப்பொழுது வி.சி.கணேசன்) 18வது படம். இதே தேதியில் இரண்டு திலகங்கள் நடித்த "கூண்டு கிளி" படமும் வெளியானது. நடிகர் திலகத்தின் 17 வது படம் கூண்டு கிளி. நடிகர் திலகத்தின் படத்திற்கு அவருடைய படமே எதிரி.

இந்த இரண்டு படங்களில், தூக்கு தூக்கியில் கதாநாயகன், கூண்டு கிளியில் அண்டி ஹீரோ (வில்லன்). ஒரே நாளில் வெளியான படம். எந்த நடிகருக்கும் இந்த துணிச்சல் இல்லை. அவருடைய 16வது படமான "துளி விழம்" மற்றும் 18வது படமான "எதிர் பாராதது" படங்களில் வில்லன். அதே வருடத்தில் மார்ச் மாதத்தில் வெளியான "மனோகரா" வில் கதாநாயகனாக சரித்தரம் படைத்தவர். இந்த துணிச்சல் எந்த நடிகருக்கும் வராது.

தெரு குத்து நாடக கதையை, 1935 வருடம், ர.பிரச்காஷ் இயக்கத்தில், மதுரை ராயல் டாகீஸ் தயாரித்து வெளி வந்த படம். இயக்குனர் பிரகாஷ்டம் உதவி ஒளிபதிவளராக, திறமையுள்ள R .M .கிருஷ்ணமுர்த்தி பணிபுரித்தார். RMK மனதில் "தூக்கு தூக்கி" கதை பலமாக பற்றிகொன்டத்தில் வியப்பிலை. அருணா பிளம்ஸ் என்ற நிறுவனத்தை 1950 ம் வருடம் தொடங்கி, ராஜாம்பாள் என்ற படத்தை இயக்கினார். தன்னுடைய அடுத்த படமாக "தூக்கு தூக்கி" யை தயாரிப்பதுடன், இயக்கி, ஒளிபதிவு செய்தார், அவருடைய துறையில் மறக்க முடியாத படமாக மிக பெரிய வெற்றி பெற்றது.

தூக்கு தூக்கி 5 பழம் பெரும் பழமொழிகளை அடிப்பையாக கொண்ட கதை. (அப்படி என்று தான் நெனைக்கிறேன்).
1) கொண்டு வந்தால் தங்கை ;
2) கொண்டு வந்தாலும் கொண்டு வராவிட்டாலும் தாய்;
3) கொலையும் செய்வாள் பத்தனி;
4) உயிர் காப்பான் தோழன்;
5) பணம் இருந்தால் தந்தை

படத்தின் காதாநாயகன், நடிகர் திலகம் ஒரு நாட்டின் ராஜா. கதாகாலஷேபதில் இந்த 5 பழமொழிகளை கேட்ட ராஜா, இந்த பழமொழிகள் எல்லாம் பொய் என்று நிருப்பிக, நாட்டை விட்டு செல்கிறார். இந்த தேடலில், பல விதமான சாகசங்களையும்; வாழ்கை பற்றியும், வாழ்கையின் அர்த்தத்தை பற்றியும் பல உண்மைகளை தெரித்து கொள்கிறார்.

நாட்டிய பேரொளி சகோதரிகள் முவரும் நடித்த படம். T . m .S . நடிகர் திலகத்திற்காக முதல் முதலில் பாடிய படம். (இதை பற்றி ஏற்கனவே முரளி சார் எழுதி இருப்பதாக நினைவு). திரை உலகில் அவர் பல படிகளையும், புகழையும், பெறுவதற்கு இந்த படம் முதல் படியாக இருந்தது.

இந்த படத்தின் மிக பெரிய வெற்றிக்கு காரணம் - G .R . அவர்களின் அற்புதமான இசையும்; மருதகாசி, உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையா தாஸ் அவர்களின் பாடலும்; நம் நடிகர் திலகம், T .S . பாலையா (வட நாட்டு செட்டாக) அற்புதமான நடிப்பும்; காலத்தால் மறக்க முடியாத T . m .S . பாடிய பாடல்களும். மேலும் படத்தின் வெற்றிக்கு உதவியவர்கள் MLV , MSR , P .லீலா, கோமளா.

தெலுகில் டப் செய்யபட்டு தமிழை போல் வெற்றி அடையவில்லை.

நன்றி : நிறைய பேர்.

Murali Srinivas
19th November 2010, 12:49 PM
பாலா, தங்கப்பதுமை பற்றிய அளவான அழகான பதிவிற்கு நன்றி.

வழக்கம் போல் படத்தின் திரையரங்க சாதனைகளை பட்டியலிட்ட சுவாமிக்கும் நன்றி. எப்போதும் போல் இப்போதும் காலரை தூக்கி விட்டுக் கொள்கிறேன். மதுரை என்றுமே நமது கோட்டை என்பதற்கு எத்தனை எத்தனை நிகழ்வுகள் சாட்சிகளாக இருக்கின்றன! இம்முறை இதை படிக்கும் போது ஒரு கூடுதல் மகிழ்ச்சி. காரணம் மதுரையிலிருந்து இதைப் படிக்கிறேன்! மதுரையில் ஒரு விநியோகஸ்தர் இந்தப் படத்தின் புதிய காப்பியை வைத்துக் கொண்டு வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வெளியாகும்.

சுவாமி, நீங்கள் எழுதியது போல ஸ்ரீலட்சுமிதான் பின்னாளில் அலங்காராக மாறியது. ஸ்ரீலட்சுமியாக இருந்த போது மகாகவி காளிதாஸ் வெளியானது. அது அலங்காராக மாறிய பிறகு வெளியான நமது படம் அஞ்சல் பெட்டி 520.

அன்புடன்

தூக்கு தூக்கி படத்தை பற்றிய விவரங்களும் நன்று!

pammalar
19th November 2010, 11:23 PM
சென்னை பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கில், இன்று 19.11.2010 வெள்ளி முதல் தினசரி 3 காட்சிகளாக, சாதனைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை".

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th November 2010, 11:27 PM
பாலா, தங்கப்பதுமை பற்றிய அளவான அழகான பதிவிற்கு நன்றி.

வழக்கம் போல் படத்தின் திரையரங்க சாதனைகளை பட்டியலிட்ட சுவாமிக்கும் நன்றி. எப்போதும் போல் இப்போதும் காலரை தூக்கி விட்டுக் கொள்கிறேன். மதுரை என்றுமே நமது கோட்டை என்பதற்கு எத்தனை எத்தனை நிகழ்வுகள் சாட்சிகளாக இருக்கின்றன! இம்முறை இதை படிக்கும் போது ஒரு கூடுதல் மகிழ்ச்சி. காரணம் மதுரையிலிருந்து இதைப் படிக்கிறேன்! மதுரையில் ஒரு விநியோகஸ்தர் இந்தப் படத்தின் புதிய காப்பியை வைத்துக் கொண்டு வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வெளியாகும்.

சுவாமி, நீங்கள் எழுதியது போல ஸ்ரீலட்சுமிதான் பின்னாளில் அலங்காராக மாறியது. ஸ்ரீலட்சுமியாக இருந்த போது மகாகவி காளிதாஸ் வெளியானது. அது அலங்காராக மாறிய பிறகு வெளியான நமது படம் அஞ்சல் பெட்டி 520.

அன்புடன்

தூக்கு தூக்கி படத்தை பற்றிய விவரங்களும் நன்று!

Thank you very much, Murali Sir.

Regards,
Pammalar.

pammalar
20th November 2010, 03:06 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 159

கே: "வசந்த மாளிகை" வெள்ளிவிழாக் கொண்டாடும் என்று எனக்கு அன்றே தெரியும், தங்களுக்கு? (கே.ஆர்.பாலகுமார், காங்கேயம்)

ப: தயாரிப்பாளர் ராமாநாயுடுவிடம் "வெள்ளிவிழாப் படத் தயாரிப்பாளரே, வாழ்க" என்று படம் பாதிகூட வளராத போதே கூறி வாழ்த்தியவன் நான்!

(ஆதாரம் : பேசும் படம், ஏப்ரல் மலர் 1973)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th November 2010, 03:16 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 160

கே: "பட்டிக்காடா பட்டணமா" படத்தில் ஹிப்பி சிவாஜி, மூக்கையன் சிவாஜி - எது சிறந்தது?(எஸ்.ஆர்.ஹரிஹரன் & நாராயணன், பம்பாய்-89)

ப: அது வெல்லப் பிள்ளையார்! எல்லாப் பக்கமும் இனித்தது!

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1972)

அன்புடன்,
பம்மலார்.

rajeshkrv
20th November 2010, 11:01 AM
Watching Thenum Paalum . what a movie and what a performance .. NT - amazing performance caught up between 2 ladies.
in the heroine department Sarojadevi slightly scores over Padmini since her character is like that.

Very nice movie with great songs

oruvanukku oruthi by PS
Manjalum thandhaal Jikki,Sjanaki

saradhaa_sn
20th November 2010, 01:08 PM
நேற்று ராஜ் டி.வி.யில் "சிவகாமியின் செல்வன்"

ஆகா... என்ன அருமையான படம். துவங்கியதும் தெரியாமல், முடிந்ததும் தெரியாமல் அவ்வளவு அழகு, ரம்மியம், உற்சாகம் அனைத்தும் நிறைந்த படம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். 'என்ன இந்தப்படத்தை அருமையான படம்னு சொல்கிறாளே' என்று நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கே புருவம் உயரலாம். என்னுடைய பதிவுகள் பலவற்றைப்படித்த நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம், நான் என்ன விதமான சிவாஜி ரசிகை என்று.

நான் எப்போதும் விரும்பும் ஒல்லியான நடிகர்திலகம். அதன்காரணமாக சிக்கென்று பொருந்தும் அனைத்து உடைகளும். கொள்ளை அழகு.

முழுக்க முழுக்க பாடல்களினாலேயே பிரபலமான 'ஆராதனா'வின் ரீமேக் என்றபோதிலும், ஒரிஜினல் மெட்டில் ஒரு பாடலைக்கூட தொடாமல், அதே சமயம் அத்தனை பாடல்களையும் அட்டகாசமாக சாதித்துக்காட்டிய மெல்லிசையின் இமயம் எம்.எஸ்.வி.யின் அற்புதப்பாடல்கள்...

'உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்னம் ஓடும் வேகம்'
'இனியவளே என்று பாடி வந்தேன்... இனி(ய்)அவள்தான் என்று ஆகிவிட்டேன்'
'மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருகவென்று'
'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது.. எப்படி மனதை தட்டிப்பறிக்குது'
'எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே'
'என் ராஜாவின் ரோஜா முகம் திங்கள் போல் சிரிக்கும்'
'ஆடிக்குப்பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு'

நடிகர்திலகம் இரட்டை வேடங்களில் கலக்கியிருப்பார். அதிலும் மகன் ஆனந்த், தன் தாய் சிவகாமி(வாணி)யை அடையாளம் கண்டுகொண்டபின் அவரிடம் காட்டும் அந்த பரிவு.

இணைந்து நடித்தது ஒரே படமென்றாலும் நடிகர்திலகத்துடன் லதாவின் கெமிஸ்ட்ரி, பயாலஜி, பிஸிக்ஸ், மேத்ஸ், நேச்சுரல் சைன்ஸ் எல்லாமே அட்டகாசம்.

நான் எப்போதுமே நடிகர்திலகத்தின் 'பதினைந்து பட வட்ட'த்துக்குள் சிக்காதவள் ஆதலால் ரொம்பவே ரசித்தேன். நடிகர்திலகத்தை அழகாகக் காண்பித்து என்னைப் போன்றவர்களின் ஆவலைப்பூர்த்திசெய்யவே அவதாரம் எடுத்த சி.வி.ராஜேந்திரன் இயக்கம். Super.

pammalar
20th November 2010, 04:59 PM
சகோதரி சாரதா,

"சிவகாமியின் செல்வன்" மினி பதிவு மெனி விஷயங்களை விளக்கியது. நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
20th November 2010, 08:20 PM
[quote="saradhaa_sn"]

நான் எப்போதும் விரும்பும் ஒல்லியான நடிகர்திலகம். அதன்காரணமாக சிக்கென்று பொருந்தும் அனைத்து உடைகளும். கொள்ளை அழகு.

me too.... madam

abkhlabhi
22nd November 2010, 01:40 PM
[tscii:b8b4df92a9]SIVAJI & PADMINI: a retrospective

Published on 12-08-2001 in Deccan Herald
By A. BHARAT remembers a screen duo whose careers took off at the same time and who shared an empathy that continued to flourish through all the films the two acted in together.


Let us begin this survey with a breezy romantic exchange between a young man called Sunder whom we discover lying in bed with a book in an obvious effort to swot up for his examination and the young girl called Sumati who happens to be the daughter of his landlord and who has just come upstairs with a cup of coffee to help him keep awake. The young man takes a sip, and looking up at her eager face, says, “Sumati, this coffee is just like you; your innocent heart resembles the milk, your qualities resemble the sugar in it, and.. and-” As he hesitates, desperately searching for the appropriate word to complete his simile she she helpfully supplies the word, “and my colour resembles the coffee powder?”.


When we were watching this witty sequence featuring Sivaji Ganesan and Padmini, back in November 1954, in Saravanabhava & Unity Films’ Classic Ethirparathathu, we had no reason to suspect that this romantic partnership which had begun hardly two years earlier in a tepid fashion in a mediocre film called Panam was to span three decades, chalk up dozens of films and become a legendary one.


Sivaji had burst into films in Parasakti (51) and in his very next film had gained Padmini as his partner. She however had been in that business for a long time. Throughout the 40s she had been appearing in dance sequences in AVM films playing second fiddle to her successful elder sister Lalita. She got an adult lead role in Manamagal the same year as Sivaji. And next year when she appeared as the other woman in Kanchana where her fragile beauty simply put the heroine in the shade.

If the Sivaji-Padmini duo did not take off in their initial pairing in Panam, they really got the show going in their second film Anbu (53). The film was actually centered around T R Rajakumari who played Sivaji’s brother’s wife, but the romantic scenes were all given to the new pair. Who can forget the scene where Sivaji climbs up the stairs to the opening bars of Padmini’s piano playing and within the span of the song “enna enna inbame” adds impromptu notes on the piano, decorates her hair with a rose and finally persuades her to accept his proposal – all without a line of dialogue?

1954 was not only a vintage year for the Tamil cinema with Anda Naal (Sivaji) Malaikallan (MGR) and
Koondukkili (MGR & Sivaji) -- it was also a bumper year for our romantic pair. Out of the seven Sivaji films four as the female lead.


In Karunanidhi’s Illara Jothi, Padmini was an heiress obsessed with a married Sivaji. As was the fashion in those days the film had a play within the film. And this time it was-Anarkali. The three pages of lamentation Sivaji pours out on Anarkali’s tomb used to boom out of thousands loudspeakers all over the south as was also the fashion then when the dialogue sets of the films used to be issued on records along with the songs.

B R Panthulu began his series of films featuring Sivaji that year with Kalyanam Panniyum Brahmachari, a rip roaring comedy in which Sivaji completely outshone the titular comedian T R Ramachandran. But Padmini put both of them in their places with a dazzling performance aptly symbolized by the romantic duet “Medhaavi pole” wherein she makes Sivaji literally slap his cheeks and beg her pardon.


Then there was Thookku Thooklu an old chestnut about five riddles which was given fresh life by a witty script, lovely music by G Ramanathan, the enchanting presence of Padmini with her sisters and an over-the-board performance by Sivaji. He also found his “voice” T M Sounderrajan in that film Sivaji being a trained dancer himself found no difficulty in keeping pace with Padmini and Ragini in the hilarious “Kurangilirundu pirandavan” dance sequence.


The fourth film that year was Ethirparathathu, which was C V Sridhar’s first film script and which was specifically tailored to fit the talents of the three principals Sivaji Padmini and Nagaiah. Starting like a romantic comedy the film abruptly turns into tragic paths midway with Sivaji reported dead in a plane crash and Padmini marrying his aged father Nagaiah. When a blind Sivaji turns to claim his romantic due he encounters a stubborn Padmini with her own ideas of marital rectitude. In a climactic sequence, in pouring rain Sivaji pours out his heart in a reprise of their earlier romantic song “Sirpi sedukkada por silaiye”. Drawn irresistibly by that haunting refrain Padmini rushes out
to him and for a few minutes allows herself to participate in his fantasy. Suddenly snapping out of the dream and suffering a terrible reaction she literally slaps poor Sivaji around savagely and leaving him hurt and sodden in the mud runs back to the house. Never before or after in their long partnership did they reach the emotional intensity of this early film.


Kaveri (55) was a lighter film remarkable only for the reprise of Sivaji’s Bharatanatyam. Towards the end, in a dance sequence, the repetition of the heroine’s name makes Sivaji regain his memory reminding us of Dilip Kumar’s Shabnam. The same year the pair chalked up a hit in Mangigyar Tilakam, which was adapted from Bhabhi ki Choodiyan. Here Padmini played the role which Rajakumari had played in Anbu a couple of years back. Their excellent performances and the melodious score makes for an extremely satisfying film with Padmini’s visual rendition of the
song “Neelavanna kanna vaada” unforgettably stamped on our mental screen.


Raja Rani (56) with a script by Karunanidhi was an absolutely entertaining Comedy package with a paper-thin coating of social comment regarding widow remarriage. In true Roman Holiday style Sivaji gives lodging to adrugged and sleepy Padmini and mistakes her to be a runaway heiress leading to various complications concerning the other comedy team of N S Krishnan -- T A Maduram. This film had two plays within it, of which the second --Socrates -- is justly famous. When the villain Rajendran tries to use this play to feed “Socrates” Sivaji with some real “hemlock”, it is the watchful Krishnan who collars him and brings about a happy ending.


Again in 1957 Karunanidhi came out with an entertaining script for our pair in Pudayal in which Sivaji played a postman. lt had the novel situation of a love-sick Chandrababu sending translations of Shakespeare’s love poems to Padmini who promptly tore them off without reading them to the ire of the Shakespeare fan Sivaji who read them aloud to her thereby starting their romance.


When the writer Sridhar began his own company called Venus Pictures his first film was Uttama Puthiran (58) based on The Man in the Iron Mask in which Sivaji played more than one role for the first time in his career. The film had a lovely Padmini, lilting music by G Ramanathan with songs like “Mullai malar mele” and picturisation of a Padmini dance in Brindavan Gardens.


Through the years Sivaji acted with other heroines like Pandari Bai, Bhanumati, Savitri and so on, and Padmini had her own series of films with Gemini Ganesan and MGR. But that did not stop the regular flow of Sivaji –Padmini films like Bhagyavati (57),Thangppadumai (58) which had an early Viswanathan-Ramamurty score featuring songs including “mugattil mugam paarkkalaam”, Maragadam (59) where Padmini feigns a “dual” role, Deivapiravi (60) with Sivaji as a contractor and Padmini as a coolie etc.


It is appropriate enough that a legendary partnership should have a classic Finale. There was a popular serial in Ananda Vikatan by Kottamangalam Subbu called Tillana Mohanambal about a Nadaswaram player and a dancer which literally called out for the talents of Sivaji and Padmini. Since neither of them were now in their early youth the emphasis was now on their acting and dancing abilities. In his usual thorough manner Sivaji spent months watching and perfecting the mannerisms of a Nadaswaram player. His performance in the film is so lifelike one is instantly reminded of the exactly similar situation of James Stewart playing the title role in the film The Glenn Miller Story. In both cases the nadaswaram and trombone playing looked genuine enough to fool even experts.


The Sivaji-Padmini partnership was remarkable in that their careers began almost simultaneously and had a parallel progress and right from their second film together they had developed an empathy which continued to flourish in all their films. lt is significant that even though Padmini did a large number of films with, say, Gemini Ganesan, nobody talks of a Gemini-Padmini duo. There is only a Sivaji-Padmini duo. And that’s it.



[/tscii:b8b4df92a9]

abkhlabhi
22nd November 2010, 02:02 PM
[tscii:8d3d5f3535]Published in “The Times of India” 11/4/1998
By S. Balakrishnan

'Indian actors are second to none’


MUMBAI: Vettathidal Chinniah Ganesan (70) aka Sivaji Ganesan is easily one of the greatest actors of Indian cinema. Though most of the 300 films in which he played the lead role were in Tamil, his talent has been recognised in other parts of the country and even the world. Ever since 1952, when his classic film Parashakti was released, he has bagged truckloads of awards, including the Dadasaheb Phalke award and the Chevalier award conferred on him by the French government. In fact, acting is in his blood. At six, he left his family and joined a drama troupe. At seven, he put on grease paint and played the role of Sita in a play.
After several years of grind in Tamil theatre, he entered the film world at the age of 22. “I received a major boost from my first movie itself and I never looked back,” the bearded Sivaji, who was in the city to receive the lifetime award instituted by the South Indian Education Society, told The Times of India.



He has made an entire generation of Tamil-speaking people cry and laugh with him and in the process become a part of their psyche. His identification with his roles were so complete that people had difficulty in separating fact from fiction. However, in sharp contrast to his roaring success as an actor, Sivaji, who was active in the Congress, was a failure in politics.
He takes this in his stride. Age has not dulled his ardour for acting as was evidenced by one of his more recent films Thevar Magan. In this 45-minute-long interview, he fielded a number of questions.

Excerpts:


Q) It is said that the camera is playing an increasingly activist role in filmmaking these days and that actors are becoming less central to a movie. Do you agree?


A) Yes. These days cameras talk, run and even sing. Camera techniques have become extremely sophisticated. The camera is playing a very crucial role so much so that even a person without true acting ability can become an actor!
I am not suggesting that those without talent can become actors. They should have talent. In fact, they should have more talent. They should understand the technical aspects of film making.


Q) What change do you see in Tamil films of your period and the present day ones?

A) Not much. But technology has improved vastly Actors like myself, MGR and A.P. Nagarajan had a strong grounding. We were products of the ‘gurukulam’ tradition of drama. I can dance better than Pad-mini. I can dance Kathak, Kathakali and Bharatanatyam and sing very well. In the film Kaveri, I did a solo classical dance.

I am not suggesting that we were some kind of super human beings. But we had received intensive training in several fields of art. That is why I was able to retain my position and act in as many as 300 films. Why do you think even senior artistes respect me? Why do you think I was given the Chevalier award? Without training, you cannot go beyond two or three films. Sophisticated equipment may help you, but not beyond a handful of films.

Q) It is observed that Tamil films are essentially extensions of the stage and that there is no subtlety in acting.

A) slightly raising his voice) What do you mean by subtlety?
For instance, in a Tamil film, a typical actor would react loudly to the news of his mother’s death.
How can anybody be subtle to the death of his mother? I just do not agree with the categorisation of acting as natural acting, method acting etc. Acting is acting. There is no question of over-acting. Acting has got to be realistic. There is no place for lies. (He actually demonstrates a scene about the death of a character’s mother). So-called subtlety need not result in good acting.


Q) You have played lead roles in about 300 films. Which are your two most memorable roles?

A) It is very difficult to reply. But Veerapandya Kattabomman and Kappalotiya Tamizhan gave me immense satisfaction.

Q)Is there any role which you wanted to act but could not?

A) No. But I am forever on the lookout for new roles. In my latest film En Asai Rasane, directed by Kasturi Raja, I am playing a village street dancer. For 15 years, I did three shifts from 7 am to 1 pm, 2pm to 9pm and 10pm to 5 am. I had no family life. I slogged day and night.


Q) WHY DDI YOU SACRIFICE YOUR FAMILY LIFE?

A: IT WAS NOT SACRIFICE. IT WAS MY SELFISHNESS. MY BURNING DESIRE FOR GREATER ACHIEVEMENTS. OFCOURSE, IT WAS ALSO FOR MONEY.

Q)How do you rate Kamal Haasan as an actor?

A) Of course, he is among one of our good actors. He tries his best. Even in a non-glamorous role, he does well.


Q) Does your son Prabhu, also an actor, measure up to your expectations?

A) :I can’t say. Ask me about myself. I was the son of a poor father, but he is the son of a rich father. But he is good. He needs greater channelisation of his abilities.


Q) Both you and MGR had a large fan following in Tamil Nadu. How come MGR was successful in politics and not you?

A) That is because MGR was more of a politician than an actor whereas I was more of an actor than a politician (laughs).


Q) Don’t you think that the tragedy of TN is that it never had honest leadership?

A) The entire nation has been unfortunate in not having selfless leaders. Kamaraj was a selfless leader and that is why I was with the Congress.

Q)Any unfulfilled dream?

A) Yes. I want Indian films to get international recognition. In terms of talent, we are second to none.
[/tscii:8d3d5f3535]

groucho070
22nd November 2010, 02:16 PM
NT: I just do not agree with the categorisation of acting as natural acting, method acting etc. Acting is acting. That's what we've been telling non-fans.

abkhlabhi
22nd November 2010, 04:47 PM
நடிகர் திலகம் தான் சினிமாவில் வில்லன் வேடங்களில் நடித்து குறித்து :


"நீஜ வாழ்கையில் நடிகர்கள் பல கெட்டப்பழக்கங்கள் கொண்டிருந்தாலும், படங்களில் நல்லவன் போல் காட்டிகொண்டு அரசியலில் நுசைந்து, மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று தத்துவம் எனக்கு அப்போது தெரியாது. என்னை பொறுத்தவரை வில்லனா, ஹீரோவா என்பது முக்கியம் அல்ல. நான் நடிகனா என்பது தான் முக்கியம்"

abkhlabhi
22nd November 2010, 05:06 PM
"நடிப்பு என்று வந்து விட்டாலே அது இயற்கைக்கு மாறுபட்டது தானே.
அகராதியை எடுத்து பாருங்கள். Acting என்ற வார்த்தைக்கு Exaggeration of Expression என்றும் ஒரு பொருள் போட்டிருப்பார்கள். An Actor is a Dramtic Performer என்றும் குறிப்பிடப்படிருகும். சரி என்னைத்தான் ஓவர் அக்டிங் செய்வதாக சொன்னார்கள். அமைதியாக, இயற்கையாக, நடிப்பதாக சொல்லப்பட்டவர்களெலாம் இன்று எங்கே? நான் மிகையாக நடித்திருந்தால் என்னை ஒதுக்கி இருப்பிர்கள்ல்லவா ? எழுபது வயதிலும் என்னை நடிக சொல்கிறார்களே , எப்படி ?" - நடிகர் திலகம்
.

rangan_08
22nd November 2010, 06:32 PM
[tscii:20edf71076]Hello everybody, it's been a while and I really miss a lot.

As usual, great posts by one and all, sharing of experiences.... this thread always rocks.

By the way, saw Dr. Siva for the first time ( Dr Zhivago has got nothing to do with it :) ).

A very simple storyline and a very normal film, except for the great songs. It looks to me that, NT is struggling throughout the film to get at least one scene where he can score in extra ordinary performance, and thank God, he gets one too !!!

Prem Navaz has done a mis-deed and refuses to take the blame. NT goes to his place and pleads to him to accept the innocent girl (Jayamalini), but he continuously refutes the charges against him and at one point he shifts the blame on NT. Unable to bear this false accusation, NT loses his temper and beats him up hardly and PN falls down on the ground.

NT now moves away from PN, tensed and feeling sorry for his act….all the while fidgeting for his pipe, lights up a smoke and takes a puff. He begins to smoke nervously and the way he gasps at regular intervals…myriad emotions just playing all over his face….my God ! just awesome. This brilliant performance and the songs makes the movie worth watching.

If Dr. Zhivago is one of David Lean’s master-piece, the above mentioned performance is our own Master’s piece (of great acting).
[/tscii:20edf71076]

rangan_08
22nd November 2010, 06:43 PM
Another thing I wanted to share is, about " Bharatha Vilas" which was recently telecasted in on of the channels.

Well, I'm not going into the "message" kind of stuff in the film, but on the other hand, it was a good entertainer and most importantly, the HUMOUR pervading constantly right from the beginning till the end... simply superb.

The scenes were NT exchange banters with his "manasatchi", "Sakka podu.." song are all great fun to watch.

"...dei, nee masaanathula irukka vendiya arichandran-da.." :lol:

In the sequence where both NT & KRV lose their job and the "Gift of the Magi" kind of episode following it are sheer fun to watch.

"...enakku vayila konjam kozhuppu jaasthi.." :lol:

Again, the characterisation of NT itself was finely crafted.... though it may not be a perfect arc, atleast, the director managed to finish it nicely.

NOV
22nd November 2010, 07:04 PM
Bharatha Vilas was the first Tamil film to be shown in color in Malaysian TV, back in 1978. :)

rajeshkrv
22nd November 2010, 09:06 PM
inspite of starstudded movie everyone had equal importance in the movie right from VKR, Rajasulochana to Jaichitra

P_R
23rd November 2010, 09:25 AM
Watched the first half of Uthamaputhiran

Vikraman's exaggerated mannerisms, the coronation scene and the contrasting performance in the role of Parthiban is something watchable several times over !

Both of them are taken by Padmini's beauty. While Parthiban's gaze is respectful and endearing, Vikraman's is lusty and crude. No lines here to differentiate. Just facial expression !

The scene where Kannamba chances upon his Vikraman's room where he is indulging in excesses, is once again well enacted. From an all powerful king, he has to alternate to feeling like a delinquent son. But then, like a spoilt brat he feels that his privacy is being intruded upon (but is not brazen enough to say it) . You see that vacillation in his performance. That is such a subtle difference.

The film must be one of Nambiar's best performances. Sure, he is much more limited actor and given more to stagey histrionics than subtler shades. But that really works in this movie: Right from the opening scene - "adhil onRu iRandhE piRandhadhu" - he makes his mark. And the epic line "senkOl avanidam, sarvAdhigaaram ennidam".

Thangavelu's long career will always amaze me. 'shabbA ! :x

Unfortunately the DVD got stopped in the confrontation scene where Nambiar deviously presents the case as if he was protecting Vikraman from the competitive aspirations of his brother.

Please avoid buying multiple movie DVDs from MoserBaer, they snip scenes and have poor video quality too.

Must catch the rest on Tv some time.

abkhlabhi
23rd November 2010, 12:12 PM
"மருமகள்"

நடிகர் திலகத்தின் 258 வது 26 / 1 /1986 தேதி வெளியான படம். ரீமேக் கிங் கே.பாலாஜி தாயரித்த படம். "மருமகள்" படம், 1977 இல் வெளியான Dulhan Wahi Jo Piya Man Bhaye என்ற ஹிந்தி படத்தின் தழுவல்.
1977 ஆம் வருடம் ஹிந்தியில் எதிர் பாராத வெற்றி பெற்றது. ஹிந்தியில் madanpuri நடித்த வேடத்தில், தமிழில் நடிகர் திலகம்.


வித்தியாசமான கதை ஒன்றும் அல்ல. படத்தின் நடிகர் திலகதிருக்கு மகனாக சுரேஷ் சுதத்திரமாக, எதற்கும் கவலை படாத, சோம்பேறியான, பெண் நண்பருடன் ஊர் திரியும், கேரக்டர். நடிகர் திலகம் உடம்பு சரியில்லாமல் படுக்கையில் படுத்துகொண்டிருபார். தன் மகனில் லீலைகளை தெரிந்து கொண்ட நடிகர் திலகம், தன் உடம்பு நிலைமை மோசமாகவதுகுள், தன் மருமகளை பார்க்க ஆசை படுகிறார். சுரேஷ், தன் கேர்ள் பிரென்ட் மெட்ராஸ்
வரமுடியாத நிலையில், ராதாவை (நடிகை ரேவதி) தன் கேர்ள் பிரென்ட் வரும் வரை காதலியாக நடிக்க அழைத்து வருகிறார். அனால், விதியின் விளையாட்டு, நடிக்க வந்த மருமகளிடம் இருத்து ஒருவிதமான பெற்றோரின் அன்பும், பாசமும் நடிகர் திலகத்திற்கு கிடைக்கிறது. என்னதான் நடிக்க வந்தாலும், நடிகர் திலகத்தின் மேல் அன்பும், பாசமும், அவரை நன்றாக கவனித்து கொள்ள, நடிகர் திலகத்தின் உடல் நிலையும், வாழ்க்கையும் நல்ல நிலைமை அடைய, தன் மகனுடைய எதிர்காலமும் நன்றாக ஆகும் என்று நினைக்கிறார். அதே போல், ராதாவும் (ரேவதி) , ஒரு தந்தையின் பாசத்தையும் , பரிவையும், நடிகர் திலகத்திடம் இருந்து கிடைக்கிறது. நாட்கள் நகர, நகர, ராதா (ரேவதி) தான் நடிக்க வந்ததை மறத்து விடுகிறார். பிறகு நடப்பவை வெள்ளி திரையில்.

இந்த படத்தை பொறுத்த வரையில், எனக்கு ஒருவிதமான அட்டச்மெண்ட். படத்தை பொறுத்த வரையில் ஹீரோ சுரேஷ் தான் என்றாலும், நடிகர் திலகம் , ரேவதி வேடங்களும், அவர்களுடைய நடிப்பும் தான் படத்தின் உயிர்.

இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட்: நடிகர் திலகம், ரேவதி வரும் காட்சி எல்லாம் செண்டிமெண்ட் மற்றும் நகைசுச்வை. இந்த படத்தை பார்த்த பொது எழந்த கேள்வி - எப்படி இவ்வளவு சுலபமாக கிழவன் வேடத்தில் infuse with charisma மற்றும் படம் முழுவதும் படுத்து கொண்டே படுக்கையை மட்டும் அல்ல , படத்தையும் ஆக்கிரமித்து கொண்டிருபார்.

ஹிந்தியில் வெற்றி பெற்ற அளவிற்கு தமிழில் வெற்றி பெறவில்லை.
காரனம்............................................ ..................? தெரிந்தால் சொல்லவும். (வட இந்தய வாசனையுடன் வந்ததால் என நெனைக்கிறேன் - செட்டிங் மற்றும் மேக்கப் எல்லாம் வட இந்தய வாசனை).

abkhlabhi
23rd November 2010, 12:14 PM
இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட்: நடிகர் திலகம், ரேவதி வரும் காட்சி எல்லாம் செண்டிமெண்ட் மற்றும் நகைசுச்வை. இந்த படத்தை பார்த்த பொது எழந்த கேள்வி - எப்படி இவ்வளவு சுலபமாக கிழவன் வேடத்தில் infuse with charisma மற்றும் படம் முழுவதும் படுத்து கொண்டே படுக்கையை மட்டும் அல்ல , படத்தையும் ஆக்கிரமித்து கொண்டிருபார் - when i think of the image obsessed actors of today.

rangan_08
23rd November 2010, 06:44 PM
Watched the first half of Uthamaputhiran

The scene where Kannamba chances upon his Vikraman's room where he is indulging in excesses, is once again well enacted.

The key word here is "indulging" :D

rangan_08
23rd November 2010, 06:50 PM
[tscii:336628badd]
Gosh, you know we all share that sentiment, mate. If only....if only....

Rajapart scores because of NT, because of MSV's haunting songs, and was let down when they elected to dub NT during the Shakespeare thing. We all wouldn't have minded NT's own accent on English. Come on, avar English pesurathey oru azhagu. Ejjample: Gouvaram. Listen to him say, Not only you must stand, you must stayyyyy..... !!! I am getting goosebumps as I type this. :D Anyway, lots of sample in that film.

Ah!…well, the diction in Gowravam is unique, phenomenal, surpassing and even unquestionable. But to do a Shakespeare…mmm... its something different, isn’t it? I mean….it would be like Lawrence Olivier reciting “ Edukkavo? Korkavo” (when I thought of an equivalent for To Be or Not To Be, only this one came closer, though different in meaning), or Kamba Ramayanam or “Kisthi, thirai vari, vatti…”. It looks odd. That that man, that that culture, that that language :D . I would rather prefer an adaptation in our own language with international standards.

In tamil cinema, if a director like Kurosawa had made a film like “Ran”, which is an adaptation of King Lear, how nice it would have been if Nadigar Thilagam had been casted in the lead. If the industry failed to produce Kurosawa’s, NT is not the person to be blamed.

Again, requesting everyone, please do not take this as a complaint because we had our own great directors here and the films NT did with those directors are all immortal master-pieces. Our only concern is that he didn’t get global recognition & appreciation for his works, just because he was born in this part of the world and that too before globalisation, liberalization…era, and because he was made a victim of dirty politics.

He was versatile enough to play a Kanji Watanabe as well as a Kanji Periyavar. He was a POWER HOUSE, but unfortunately few directors used him to light up just a zero watt or 25 watts bulb.

அவர் மட்டும் முருகப் பெருமான் மாதிரி உலகை வலம் வந்திருந்தால், பல Oscar-களையும், Golden Globe-களையும் அள்ளிக் கொண்டு வந்திருப்பார். ஆனால் என்ன செய்வது? அவர் தான் கணேசனாயிற்றே, தாய் நாடும்,தனது ரசிகர்களும் தான் உலகம் என்று இங்கேயே வலம் வந்து கொண்டிருந்தார். அதனால் தான் அவருக்கு கோடான கோடி ரசிக நெஞ்சங்களின் அன்பு என்ற மாங்கனி கிடைத்தது.
[/tscii:336628badd]

Plum
23rd November 2010, 07:08 PM
Yes, serviced in the cause of zero watts :(

Take avan dhan manidhan, a flick that i ideologically dismiss as being a symptom of Sivaji Ganesan's getting sucked into prevailing mediocre standards. When he has to urgently gather a few lakhs as his business flounders, he makes calls. The first call he makes is as a proud, succesful businessman, who is so confident of his business acumen, and believes that people will come running to finance him. He calls up someone and says "remember the 2 lakhs you said you'll invest on me - and i rejected it - last week; i need it now". There is no request, just casual demand, almost as if it's his birthright. Rejected, watch out for his next call to another acquaintance. There is uncertainty, a struggle at realisation of his business mortality, the body language reflecting the change. It is not a dramatic change from royalty to melodramatic fall. Just a subtle change.

What for all this nuance? In the very next scene or so, the director weaves in a "en kaigaL ipdi(open palm downwards) irundhu dhAnE pazhakkam; ipdi(oepn palm upwards" irukkaDhE" melodramatic exposition of the same sense of helplessnessn defeat and proud till i fall disposition.

It is grossly unjust on the part of history to make mountains out of molehils like Bachchan just because he happened to be the tallest veteran in an era of globalaisation, liberalisation etc.

pammalar
23rd November 2010, 08:55 PM
He was versatile enough to play a Kanji Watanabe as well as a Kanji Periyavar. He was a POWER HOUSE, but unfortunately few directors used him to light up just a zero watt or 25 watts bulb.

அவர் மட்டும் முருகப் பெருமான் மாதிரி உலகை வலம் வந்திருந்தால், பல Oscar-களையும், Golden Globe-களையும் அள்ளிக் கொண்டு வந்திருப்பார். ஆனால் என்ன செய்வது? அவர் தான் கணேசனாயிற்றே, தாய் நாடும்,தனது ரசிகர்களும் தான் உலகம் என்று இங்கேயே வலம் வந்து கொண்டிருந்தார். அதனால் தான் அவருக்கு கோடான கோடி ரசிக நெஞ்சங்களின் அன்பு என்ற மாங்கனி கிடைத்தது.


Dear Rangan Sir,

Simply outstanding lines !!!

Warm Wishes,
Pammalar.

rangan_08
24th November 2010, 06:48 PM
Thank you pammalar, sir.

Plum, I'm not sure whether you have noticed....Raghavendra sir quoted the same scene from Avandhan Manidhan, a few weeks ago.

Plum
24th November 2010, 07:20 PM
No, i didnt notice that Rangan. The impact on me is greater because i am biased against the 70s movies :)

OnMyWay
25th November 2010, 04:35 AM
Was just randomly reading through NT's wiki page.

Excerpt
"
Though he accumulated awards throughout the 1950s and '60s, it was in 1972 that Ganesan delivered his first all-time blockbuster Vasantha Maaligai. In 1979, he delivered his second and final all-time blockbuster Thirisoolam, adapted from the Kannada film Shankar Guru in which Dr Rajkumar had played the lead role. After this, Sivaji Ganesan began acting in supporting roles."

Would be nice if some of the more informed posters could edit it.

m_23_bayarea
25th November 2010, 04:43 AM
Was just randomly reading through NT's wiki page.

Excerpt
"
Though he accumulated awards throughout the 1950s and '60s, it was in 1972 that Ganesan delivered his first all-time blockbuster Vasantha Maaligai. In 1979, he delivered his second and final all-time blockbuster Thirisoolam, adapted from the Kannada film Shankar Guru in which Dr Rajkumar had played the lead role. After this, Sivaji Ganesan began acting in supporting roles."
Would be nice if some of the more informed posters could edit it.

This could be one of the biggest jokes of all time! It just frustrates me a lot these days to see these "ara-tickets" that have no clue about the image and stardom of superstars in the past eras, and just having such skewed vision and misunderstanding of the present generations, as if these are the chosen ones... This Wiki page should have been filled up by one such "ara-ticket" I'm sure... :banghead:

groucho070
25th November 2010, 06:45 AM
:banghead:Barrister Rajinikanth to Usha Nandini over the phone: "Poy muttkoodi!"

Nan solren, poy edit pannugga bay. Athukkuthane Wiki, the most unreliable encyclopaedia. :D

OnMyWay
25th November 2010, 07:09 AM
[tscii:6dc40f5a15]A good read:
http://www.tamilthunder.com/forum/archive/index.php/t-60702.html



“In Madras one of the most astonishing phenomena is film star Sivaji Ganesan. Among southern film stars only M.G. Ramachandran, the star associated with the Dravidian movement, has in recent years come close to him in status. For some years a leading Madras theatre has shown only films starring Sivaji Ganesan. This has not been difficult, for he stars in innumerable films. For some years it has seemed risky for any producer to produce a Tamil film not starring Sivaji Ganesan. [italics, as in the original.] He produces films himself but also appears in the production of others. He is always involved in many projects simultaneously, dolign out a morning of shooting time here, an afternoon there, while numerous producers wait nervously for his next moment of availability. It is common for films made under these circumstances to be in production one, two or three years, or even more. For some years in the Madras film industry scores of film workers – producers, directors, actors, writers, technicians – have at all times been dependent on the favorable decisions of Sivaji Ganesan. His nod secures financial backing. Because of his central importance, script, cast and choice of director are all subject to his approval. During his precious appearances at the studio he works with speed and precision, and can be so charming to co-workers that he is adored by all. Then he is off again, leaving anxiety as to when he will return once more. In appearance he does not especially conform to any hero pattern. He is, on the contrary, squat and stockily built. But his fine voice has a large range of expressiveness, and he can play such a variety of roles that almost any starring role is offered to him – comic or tragic – without regard to suitability. Such is his standing, so precious his time, that no director dares direct him, and his scenes are often completely out of key with other portions of a film. Seldom has a substantial talent been used so recklessly – or so profitably. He has amassed a fortune and carries on well-organized and well-publicized charities.”

Sivaji concurs with the profile of him provided by Barnow and Krishnaswami. Before his first invited trip to USA in 1962, he notes: “I had signed up for the film Bale Pandiya. I went into the studios on the second of the month and left the sets on the twelfth after completing the film. I probably hold the world record of completing a film in eleven days time. I had acted in three roles in the film and annan M.R. Radha in two.” In another page he had stated: “During the period of my life when I was extremely busy, the studios would assign rooms exclusively for me during the different shifts. I worked in three shifts (7am-1pm), (2pm-9pm), (10pm-5am). I used to work twenty hours a day, and on odd days return home for four hours of rest. Many a time I would run through the day’s schedule and move to the next studio to begin the following day’s work. I compensated for my sleep deprivation by napping whilst traveling in the car and during breaks.”
[/tscii:6dc40f5a15]

DHANUSU
25th November 2010, 06:39 PM
Thanks to எம்கேஆர்சாந்தாராம்

One more piece of information on UM. It was a remake of a Bengali movie "Uttam Purush" and after seeing the original NT wanted to don the role of the doctor (enacted by Asokan). But AVM stood his ground that NT should enact the role of the hero and otherwise the project will be shelved. Later with some reluctance only NT agreed to act.



"உயர்ந்த மனிதன் " படத்திற்கு சிவாஜிக்கு எவ்வளவு சம்பளம் ?



அந்த காலத்தில் சிவாஜியை வைத்து படம் எடுப்பது என்றால் அது " மெகா பட்ஜட் " படமாகும் ! சிவாஜியின் " கால் ஷீட் " கிடைத்து கேட்கும் சம்பளத்தைத் தந்து விட்டால்....... ஒரு நல்ல படம் " ரெடி " ஆகிவிடும் !


ஆனால் சம்பளத்தைப் பொருத்த வரை - அது சிவாஜியின் வேலை அன்று ! நடிகர் திலகம் " நடிப்பு " ஒன்றுதான் கருமமே கண்ணாக இருப்பார் !


பின்னர் யார் சம்பளம் பேசுவார்கள் ?

எல்லாம் சிவாஜியின் தம்பி வி. சி.சண்முகம் தான் !
வி. சி. சண்முகம்தான் சிவாஜியின் சம்பளம், கால்ஷீ, விவகாரம் போன்றவைகளை நிர்வாகித்து வந்தார். எம்ஜிஆர்க்கு , அவர் அண்ணன் சக்ரபாணி மாதிரி சிவாஜிக்கு , வி.சி. சண்முகம் !

அங்கே அண்ணன் - இங்கே தம்பி !


சம்பளத்தைப் பற்றி சிவாஜியிடமே நேரிடையாகக் கேட்டார் அப்பச்சி ! அதற்கு சிவாஜி சொன்னார் :

" சம்பள விஷயம் எல்லாம் என் தம்பி ஷண்முகத்திடம் பேசிக்கொள்ளவு ! "

சண்முகம் வந்தார், அவரிடம் சம்பள விஷயத்தை பேசினார்கள்.

ஷண்முகம் என்ன சொன்னார் தெரியுமா ?

(" அது தெரிந்தால் நீங்கள் எழுதுவதைப் படிப்போமா ? " என்கிறீர்களா ! )


சண்முகம் : " நீங்க எதைக் கொடுத்தாலும் வாங்கிக்க்

கொள்ளலாம் என்று அண்ணன் சொல்லிவிட்டார் ! "





செட்டியார் அவர்களுக்கு அவர் சொன்னது பிடிக்கவில்லை !

சிவாஜியின் முதல் படமான " பராசக்தி " யில் சிவாஜியின்

சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

மாதம் ரு. 250 !

அந்த சம்பளம் கூட சிவாஜி " வேண்டாம் " என்றும் இலவசமாக

நடிக்கிறேன்" என்றும் சொன்னவர் !

அப்போது கே.ஆர். ராமசாமியத்தான் " பராசக்தி " யில் போட

வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவர் செட்டியார் !


ஆனால் " உயர்ந்த மனிதன் " படம் எடுக்கும் போது சிவாஜி

ஒரு மாபெரும் நடிகர் ! அவருக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் ?

யோசித்தார் செட்டியார் !


" பளிச் " என்று ஓர் " ஐடியா " தோன்றியது செட்டியாருக்கு !


செட்டியார் , தன் மகனான சரவணனை இப்படி கேட்டார் :

" அவர் கடைசியாக நடித்த படத்தில் சிவாஜியின் சம்பளம்

எவ்வளவு ? "

அதாவது சிவாஜி அப்போது வாங்கும் சம்பளமே கொடுப்பது

என்று முடிவு செய்யப்பட்டது !


விசாரித்ததில் , சிவாஜி அவர்கள் ஏ.பி. நாகராஜன் படமான

" திருவருச்செல்வர் " படத்தில் நடித்தார் என்றும் அப்போது

ஏ.பி. என். சிவாஜிக்கு கொடுத்த சம்பளம் : இரண்டு லட்சம் ரூபாய் !

செட்டியார் " கணக்கு " போட்டார் :


என்ன கணக்கு ?

1. ஏ.பி. என். எடுத்தது வண்ணப் படம் - நாம் எடுப்பதோ கருப்பு -

வெள்ளைப் படம் !


2. ஏ.பி. என். படத்தில் " காஸ்ட்யூம் " கள் மிக அதிகம் !

கிலோ கணக்கில் " கில்ட் " நகைகளை சுமந்து சிங்க நடை

சிவாஜி நடக்க வேண்டும் !





" உயர்ந்த மனிதனுக்கு " - " கோட் - சூட் " போதுமே !

அதுவும் நடப்பதற்கு க் கூட " வாக்கிங் ஸ்டிக் " தருகிறோமே !


3. ஏ.பி. என் . படத்தில் நடிக்க நாட்கள் அதிகம் வேண்டும் !

" உ.ம " க்கு அதிக நாட்கள் தேவை இல்லை !


4.ஏ.பி. என் . படத்தில் சிவாஜிக்குப் பல வேடங்கள் !

" திருவருட்செல்வர் " படத்தில் சிவாஜி மன்னனாக, சுந்தர

மூர்த்தி நாயனராக, அப்பராக, சலவைத் தொழிலாளியாக- பல

வேடங்கள் !

" உ . ம " - க்கு சிவாஜிக்கு ஒரே வேடம் !

இதுதான் செட்டியாரின் கணக்கு !


இந்த மாதிரியான கணக்கு எல்லாம் ஒரு திறமையான

நிர்வாகிதான் போடமுடியும் !

ஏ வி எம் அவர்கள் ஒரு திறமையான நிர்வாகி என்று அடியேன்

சொன்னாள் ....... " சூரியனுக்கே " டார்ச் லைட் " அடித்த கதைதான்! "

( நன்றி : ஆர். பார்த்திபன் ! )


எனவே 2 லட்சம் வாங்கி நடித்த ஏ பி. என் படத்தை விட , ஏ வி எம்

படத்தில் வேலை கம்மி !

" எனவே 2 லட்சத்திற்குப் பதில் ஒன்றரை லட்சம் தரலாம் "

என்று முடிவு செய்தார் செட்டியார் !

என்ன செட்டியார் போட்ட கணக்கு சரிதான் என்று என்

மனது சொல்லியது !

உங்களுக்கு ?



" சம்பளம் ஒன்றரை லட்சம் " என்று சண்முகம் தரப்பில்

சொல்லப்படது ! சண்முகம் " ஓ. கே " என்றார் !


"ஆனால் ஒரு கண்டிஷன் ! " - என்றார் சண்முகம் !

" என்ன கண்டிஷண் ஸ்வாமி ? " என்கிறீர்களா ?

சண்முகம் சொன்னார் :

" இப்போது காலணா கூட தரக்கூடாது !

படம் மொத்தமாக முடிந்தவுடன் படம் " சென்சார் "

போய் வந்தவுடன் ஒரே " செட்டில் மெண்ட் " - ல் மொத்தமாக

கொடுத்து விடவேண்டும் ! "

கசக்குதா செட்டியாருக்கு ?

" சரி " என்றார் !


இத்தான் சிவாஜிக்கு சம்பளம் நிணயத்த கதை !


இப்போது எல்லாம் என்ன கதை என்று தெரியுமா ?

சிவாஜியின் " கலை உலக வாரிசு " கமல் நடிக்கும் " லேட்டஸ்ட் "

படமான " மன்மதன் அம்பு " படத்திற்கு கமல் சம்பளம் எவ்வளவு

தெரியுமா ?

23 கோடி !

அதுவும் எப்படி ?

பாதி தொகையை " அட்வான்ஸ் " ஆக கமலுக்கு -

கமல் ஒப்புக்கொண்ட அன்றே தரப்பட்டதாம் !

இது எப்படி இருக்கு ?

அதை விட கொடுமை என்ன தெரியுமா ?

பணப் பிரச்சனையை விட அந்த படத்தில் " திரிஷாவின் அம்மா நடிக்கிறாரா இல்லையா" என்பதே என்பதே பெரிய பிரச்சனையாம் !

எப்படி இருக்கிறது கதை !


பின்பு ஒரு வழியாக " உயர்ந்த மனிதன் " படப் பிடிப்பு தொடங்கியது

Plum
25th November 2010, 06:52 PM
[tscii:9aa77cf729]
Sivaji concurs with the profile of him provided by Barnow and Krishnaswami. Before his first invited trip to USA in 1962, he notes: “I had signed up for the film Bale Pandiya. I went into the studios on the second of the month and left the sets on the twelfth after completing the film. I probably hold the world record of completing a film in eleven days time. I had acted in three roles in the film and annan M.R. Radha in two.”

:shock:
11 days? For bale pandya? :bow:

And this:


I used to work twenty hours a day, and on odd days return home for four hours of rest. Many a time I would run through the day’s schedule and move to the next studio to begin the following day’s work. I compensated for my sleep deprivation by napping whilst traveling in the car and during breaks.”

20 hours of his days through his peak - ivvaLavu uzhaippukku IdAga padangaLai namadhu directors avarukku tharavillayE...:([/tscii:9aa77cf729]

P_R
25th November 2010, 07:39 PM
அதுவும் நடப்பதற்கு க் கூட " வாக்கிங் ஸ்டிக் " தருகிறோமே ! :rotfl2:

groucho070
26th November 2010, 07:08 AM
அதுவும் நடப்பதற்கு க் கூட " வாக்கிங் ஸ்டிக் " தருகிறோமே ! :rotfl2: :rotfl: Oh man, didn't notice first time around. :lol:

KCSHEKAR
27th November 2010, 06:23 PM
Please click the links below to view the news about Vietnam Veedu Drama function organised at Tirunelveli to mark the occasion of Nadigarthilagam's 83rd birthday.

http://www.sivajiperavai.com/View_Press.php?id=136

http://www.sivajiperavai.com/View_Press.php?id=137


Thanks

RAGHAVENDRA
28th November 2010, 06:22 PM
Dear friends,
Happy news to all.

MANOHARA TELUGU VERSION IS AVAILABLE ONLINE.

Manohara Telugu (http://www.chitranjali.info/Free-Online-Movies/TeluguChitralu/Parts/?id=Manohara-25591-Watch-FullMovie)

Raghavendran

pammalar
29th November 2010, 07:04 PM
மதுரை ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில், 26.11.2010 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, தேசிய திலகத்தின் "தியாகம்" திரையிடப்பட்டு வெற்றி நடைபோட்டு வருகின்றது.

அன்புடன்,
பம்மலார்.

Plum
29th November 2010, 08:13 PM
அதுவும் நடப்பதற்கு க் கூட " வாக்கிங் ஸ்டிக் " தருகிறோமே ! :rotfl2: :rotfl: Oh man, didn't notice first time around. :lol:
idhai solli sambaLam vERa koRaichirukkAnga. AVM :evil:

jaiganes
29th November 2010, 08:33 PM
Does anyone have links to viewing Durai's "Thunai" movie? NT acted as a magistrate travelling in thambaram metre gauge. Saritha and Rajeev acted in that movie. It had one of NT's most natural performances.

Murali Srinivas
29th November 2010, 10:01 PM
Jai,

I am not sure of online, but it is available in VCD format released by Moser Baer.

Regards

rajeshkrv
29th November 2010, 10:28 PM
Jai,

i dont know whether he acted as magistrate. he acted as a factory employee or something..

Saritha being his colleague ...Radha and Suresh also acted in that movie.

Nice movie and nice performance by NT & Saritha

RAGHAVENDRA
29th November 2010, 10:50 PM
As Murali Sir said, Thunai is available as VCD.
NT's character was a Tahsildhar (Taluk Chief) in that film.

Raghavendran

goldstar
30th November 2010, 04:31 PM
Hi Swami,

Good to NT's Thiyagam released in Madurai after long time. Is there any photos/vidoes from Madurai NT fans?

What about collections? Madurai Meenakshi is a typical MGR's fort and keen to see our NT's movie collection.

Cheers,
Sathish

Nerd
1st December 2010, 12:33 AM
Does anyone have links to viewing Durai's "Thunai" movie? NT acted as a magistrate travelling in thambaram metre gauge. Saritha and Rajeev acted in that movie. It had one of NT's most natural performances.
Here is an average print. Its a TV rip from Raj Digital Plus with ads in between :-)
http://www.megavideo.com/?v=HXRLX1C2

jaiganes
1st December 2010, 12:58 AM
Does anyone have links to viewing Durai's "Thunai" movie? NT acted as a magistrate travelling in thambaram metre gauge. Saritha and Rajeev acted in that movie. It had one of NT's most natural performances.
Here is an average print. Its a TV rip from Raj Digital Plus with ads in between :-)
http://www.megavideo.com/?v=HXRLX1C2
Ah thanks!!
It is a treat to see Sivaji in a light role, playing a common man.

RAGHAVENDRA
1st December 2010, 12:08 PM
மதுரை திருப்பரங்குன்றம் லக்ஷ்மி திரையரங்கில் தற்பொழுது வெற்றிகரமாக நடைபெறுகிறது, கலைஞர் வசனத்தில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம் இருவர் உள்ளம்.

RAGHAVENDRA
1st December 2010, 10:49 PM
Yesterday, 30.11.2010, during the evening show, the theatre was allmost full to watch Iruvar Ullam. The crowd started coming in even at 5.00 p.m. The area seemed dry until few moments of start of the film. Immediately on the start of the song, Nadhi Enge Pogiradhu, particularly during the lines "Vanam Pozigindradhu, boomi nanaigindradhu", it had started pouring!

Audience were taken by surprise and the timing of the rain and the verse inside - had something to say.

As told by one of the people from Madurai.

Raghavendran

pammalar
2nd December 2010, 01:53 AM
மதுரை திருப்பரங்குன்றம் லக்ஷ்மி திரையரங்கில் தற்பொழுது வெற்றிகரமாக நடைபெறுகிறது, கலைஞர் வசனத்தில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம் இருவர் உள்ளம்.

நன்றி, ராகவேந்திரன் சார்.

திருப்பரங்குன்றம் லக்ஷ்மி திரையரங்கில், நேற்று 30.11.2010 செவ்வாய் முதல், மூன்று நாட்களுக்கு மட்டும், தினசரி 3 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் "இருவர் உள்ளம்" திரையிடப்பட்டு அமோக வரவேற்பு பெற்று வருகின்றது.

இத்தகவலை எமக்களித்த சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd December 2010, 02:13 AM
Yesterday, 30.11.2010, during the evening show, the theatre was allmost full to watch Iruvar Ullam. The crowd started coming in even at 5.00 p.m. The area seemed dry until few moments of start of the film. Immediately on the start of the song, Nadhi Enge Pogiradhu, particularly during the lines "Vanam Pozigindradhu, boomi nanaigindradhu", it had started pouring!

Audience were taken by surprise and the timing of the rain and the verse inside - had something to say.

As told by one of the people from Madurai.

Raghavendran

சாக்லெட் தகவலை அளித்த ராகவேந்திரன் சாருக்கு சிறப்பான நன்றிகள்!

தாங்கள் குறிப்பிட வந்த பாடல், "அழகு சிரிக்கின்றது! ஆசை துடிக்கின்றது!" என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
2nd December 2010, 06:25 AM
நன்றி பம்மலாரே.
தாங்கள் கூறியுள்ளது சரி. அந்த்ப் பாடல் நதி எங்கே போகிறது என்பதே.

தவறுக்கு வருந்துகிறேன்

sankara1970
2nd December 2010, 05:38 PM
very nice songs -Iruvar Ullam.

print nallatha kidaikiratha?

some scenes we could see in "Once More"

I have a version which is not clear.

NOV
3rd December 2010, 08:07 AM
[html:7711d1e97e]
http://s595.photobucket.com/albums/tt39/MinaiMinai/MOre/75years21.jpg
[/html:7711d1e97e]

groucho070
3rd December 2010, 08:37 AM
Excellent NOV. Thanks. Would love to get my hand on that issue.

NOV
3rd December 2010, 12:47 PM
Rakesh, its from "Celebration of 75 Years of Tamil Cinema" featured in Galatta Cinema magazine.

rangan_08
4th December 2010, 06:09 PM
மதுரை திருப்பரங்குன்றம் லக்ஷ்மி திரையரங்கில் தற்பொழுது வெற்றிகரமாக நடைபெறுகிறது, கலைஞர் வசனத்தில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம் இருவர் உள்ளம்.

Good news. Can we expect a Chennai release ???

And, any news about Karnan & Gowravam, sir ? When is it getting released here ???

Murali Srinivas
5th December 2010, 01:05 AM
சென்ற வாரம் ஜெயா டி.வி.யின் தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரமேஷ் கண்ணா கலந்துக் கொண்டு பாடல்களை வழங்கினார். ஒவ்வொரு ஹீரோவிற்கும் வித்தியாசமான பாடல்களை [திரும்ப திரும்ப எல்லா சிறப்பு விருந்தினர்களும் சொல்லும் பாடல்கள் இல்லாமல்] ஒளிப்பரப்பினார். நடிகர் திலகத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட பாடல் இருவர் உள்ளம் படத்திலிருந்து இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா பாடல். மேலோட்டமாக கதையை சொல்லிவிட்டு அந்த பாடலின் சூழலுக்கு வந்தார்.

நாயகனின் கடந்த கால நடவடிக்கையால் அவனை வெறுக்கும் நாயகி சூழ்நிலை காரணமாக அவனை மணக்க நேரிடுகிறது. திருந்தி விட்ட அவனை நம்பாமல் அவனிலிருந்து விலகி வாழும் நாயகி, அவளாக மனது மாறி வரட்டும் என காத்திருக்கும் நாயகன், இவை எதுவும் தெரியாத நாயகனின் பெற்றோர் மற்றும் அண்ணன், அவர்களுக்கு முன் நடிக்கும் நாயகன் நாயகி, வீட்டில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சியில் நாயகியை பாட சொல்ல அவள் தன் மனதின் உணர்வுகளை தன்னையறியாமல் பாடலின் மூலமாக வெளிப்படுத்த நாயகன் பரிதவிக்கிறான், இது புரியாமல் பாடலை ரசிக்கும் உறவினர் மற்றும் நண்பர் கூட்டம். தர்மசங்கடமான சூழலில் தவிக்கும் நாயகனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் பாலாஜி உன் மனைவி பிரமாதமாக பாடுகிறாள் என்று சைகையில் சொல்ல முகத்தில் வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையை காட்டி விட்டு உடனே இந்த பக்கம் திரும்பி மீண்டும் பரிதவிக்கும் நடிகர் திலகம், அந்த கண நேர முகபாவ மாற்றம், தவிப்பு, புன்னகை, மீண்டும் தவிப்பு என்று எப்படி மின்னல் போல் வந்து போகிறது!

ரமேஷ் கண்ணா இதை சொன்ன போது, நாம் இந்த திரியில் பல முறை நடிகர் திலகத்தின் நுணுக்கங்களை, nuances என்று சொல்லுவோமே, அதை பற்றி பேசியிருக்கிறோம், அது நினைவிற்கு வந்தது. ரமேஷ் ஒரு கோணத்தில் சொன்னார். இப்படி நடிகர் திலகத்திற்கு இருந்த, இருக்கிற லட்சக்கணக்கான ரசிகர்கள் இது போல ஒவ்வொரு நுணுக்கத்தை சொல்கிறார்கள் என்று சொன்னால் அவர் எவ்வளவு பெரிய நடிப்பு கடல், அதில் இப்படி மூழ்கினால் எத்தனை எத்தனை முத்துக்கள் எடுக்கலாம் என்ற எண்ணமே மனதில் மேலோங்கியது.

அன்புடன்

PS: ரமேஷ் கண்ணா படையப்பா படப்பிடிப்பின்போது நடந்த ஒரு நிகழ்ச்சியையும் சொன்னார். " சிவாஜி சார் ஒரு நாளைக்கு எங்க டைரக்டரை கூப்பிட்டு என்னை சுட்டிக் காட்டி அவன் பெயர் என்ன என்று கேட்டார். நான் ஏதோ அதிகபிரசங்கித்தனமாக பேசி விட்டேனோ என்று பதறிப் போன எங்க டைரக்டர் [KS ரவிகுமார்] ஏன் சார் என்று கேட்க ஒண்ணுமில்லடா! நம்ம முத்துராமன் பையனோட சேர்ந்து இவன் நடிச்ச படம் ஒண்ணு பார்த்தேன். நல்ல டைமிங் sense இருக்குடா இவனுக்கு! நல்லா பண்ணியிருந்தான் என்று சொன்னார்.

நான் சினிமாவில் வந்ததன் பயனை அன்னிக்கே அடைஞ்சுட்டேன். இனிமேல் எனக்கு என்ன வேணும்?. அந்த பாராட்டின் பெருமை என்னனா அவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான்! அவர் எத்தன பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பார்த்திருக்கிறார். என்னை போல ஒரு சின்ன ஆர்டிஸ்ட்டை பாராட்டனுமுனா அதுவும் எல்லோர் முன்னிலையிலும் பாராட்டினர்னு சொன்னா அவர் உண்மையிலே கிரேட் என்று சொல்லி முடிக்கும்போது ரமேஷ் கண்ணா சிறிது உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.

Murali Srinivas
5th December 2010, 09:22 PM
கடந்த அக்டோபர் மாதம் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு சில ரசிகர்களால் இதய ராஜா என்ற இதழ் வெளியிடப்பட்டதும், அதன் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை மண் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலனுக்கு வழங்கப்படுகிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டிருந்தோம். அந்த இதழை படித்து பார்த்த போது பளிச்சென்று கண்ணில் பட்டது ஒரு விளம்பரம். அது ஞான ஒளி படத்தின் விளம்பரம்.

[html:6bd24a9878]
http://farm6.static.flickr.com/5161/5236694360_16cc1f8d91_z.jpg

[/html:6bd24a9878]

நடிகர் திலகம்தான் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை பலமுறை பல ஆதாரங்களோடு சொல்லியிருக்கிறோம். இதோ மேலும் ஒரு சாதனை சான்று.

நடிகர் திலகத்தின் BO சாதனைகளைப் பற்றிய ஆதாரங்களைப் பற்றி பேசும் போது இப்போதும் சிலர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் அல்லது, வேறு சிலர் படங்களை விட சிவாஜி படங்கள் வசூல் சாதனை புரிந்தது என்பதை நம்ப முடியவில்லையே என்பார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் முத்தாய்ப்பான ஆதாரமாக இந்த விளம்பரம் உதவும் என நினைக்கிறேன்.

விளம்பரமே self explanatory என்றாலும் சில தகவல்கள். இந்த விளம்பரம் 1972 ஏப்ரல் மூன்றாம் வாரம் சென்னை பதிப்பில் வெளியானது. சென்னை நகரிலும் சுற்றுப்புறங்களிலுமாக நடிகர் திலகத்தின் சுமார் 20 படங்கள் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருந்த சூழலிலும் ஞான ஒளி சென்னை பிளாசா திரையரங்கில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளில் ஓடியிருக்கிறது [ஞான ஒளி மட்டுமே பிளாசா தவிர மேலும் 4 திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டிருந்தது]. இது தவிர சென்னை சபாக்கள் தங்கள் உறுப்பினர்களுக்காக மிக அதிகமாக சிறப்பு காட்சிகள் [55 காட்சிகள்] நடத்திய படமும் ஞான ஒளிதான். இவற்றையெல்லாம் தாண்டி இந்தப் படம் இப்படிப்பட்ட சாதனை புரிந்திருக்கிறது என்றால் நடிகர் திலகத்தின் BO பவருக்கு இதை விட ஆதாரம் வேண்டுமா என்ன?

வழக்கம் போல் விளம்பர பிரதியை ஸ்கேன் செய்து அனுப்பியது அன்பு சகோதரர் சுவாமிநாதன் அவர்கள்தான். அவருக்கு நமது மனமார்ந்த நன்றி.

அன்புடன்

RAGHAVENDRA
5th December 2010, 10:23 PM
டியர் முரளி சார்,
ஞான ஒளி பற்றிய தங்கள் பதிவு என்னை 1972 காலத்திற்கு அழைத்து செல்கிறது.
ஞான ஒளி நாடகத்தின் நூறாவது நாடகத்திற்கு நடிகர் திலகம் தலைமை ஏற்று நடத்தினார். அதே காலகட்டத்தில் அந்நாடகத்தை நடிகர் திலகம் திரைப்படமாக நடிக்கும் செய்தியும் வெளிவந்தது. சொல்லப் போனால் இப்படத்தின் பெயரை வைத்து திருவல்லிக்கேணியில் ஒரு சிவாஜி ரசிகர் மன்றமே இயங்கியது. அவர்கள் பல நற்காரியங்களை அந்தப் பகுதியில் செய்து வந்ததோடு சுற்றுலாக்களையும் நடத்தி வந்தார்கள்.

ஞான ஒளி படமும் வெளிவந்தது. படம் வருவதற்கு முன்னரே தேவனே பாடல் பிரபலமாகி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் படத்தின் ஸ்டில்கள் படத்திற்கு மற்றொரு விதத்தில் எதிர்பார்ப்பை அதிகப் படுத்தியிருந்தது. மொத்தத்தில் அப்படம் மிகுந்த அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதன் காரணமாக ரசிகர்களின் ஆர்வமும் அதிகரித்திருந்தது.

அந்தக் காலகட்டத்தில் ஓம் விக்னேஸ்வரா கல்சுரல் அகாடெமி புதிய படங்களை முடிந்தவரை முதல் நாள் முதல் காட்சிக்கு முன்னர் பிரத்தியேகக்காட்சியோ அல்லது படம் வெளியான வாரத்தில் வரும் முதல் ஞாயிறு அன்று காலையோ அப்படத்தைத் தன்னுடைய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்வார்கள். அவர்களைத் தொடர்ந்து வேறு சில சபாக்களும் அமைப்புகளும் அதே போல் படங்களைத் திரையிடத் தொடங்கின.

ராஜா படத்திற்கு தேவிபாரடைஸில் காலைக் காட்சி திரையிடப்பட்டது. அப்படம் வெளியாகி வசூலைக் குவித்துக் கொண்டிருந்தபோதே ஞான ஒளி வெளியீட்டு விளம்பரம் வெளிவரத் தொடங்கியது. சென்னை ஜெயராமன் பிக்சர்ஸ் ஞான ஒளி படத்தை நகரில் வெளியிட்டார்கள். இதன் ஒரு பகுதியாக, சென்னையில் அப்போது இருந்த அனைத்து சபாக்களும் இத்திரைப்படத்தை திரையிட முன்வந்தனர். கிட்டத்தட்ட 55 காட்சிகள் முதல் இருநாட்களிலும் சபாக்களில் திரையிடப்ப்ட்டன.

ராஜாவின் வெற்றி நடையின் போதே ஞான ஒளி யும் திரையிடப்பட்டு வசூல் வாரிக்குவித்தது.

அந்த நாட்கள் என்றும் பசுமையாக நினைவிருக்கும்.

---

நண்பர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப தங்கை திரைப்படம் நெடுந்தகடாக வெளிவந்துள்ளது.
அன்பு மிக்க மாடரேட்டர் அவர்களுக்கு- இந்த இடத்தில் இப்படத்தைச் செருகுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Thangai1.jpg

அன்புடன்

rajeshkrv
7th December 2010, 08:46 AM
Nt's another best movie

NAam pirandha mann

http://www.youtube.com/watch?v=ePHfKGFPm6I

it has 8 parts.
thanks to arugeirundhal for uploading

selva7
7th December 2010, 01:45 PM
ஞான ஒளி படத்தின் விளம்பரம் பல தகவல்களைத் தந்தது.

முதல் சினிமாஸ்கோப் படமான ராஜராஜசோழன் படத்தைப் பற்றி நம் தளங்களில் பேசப் பட்டதா? ராஜராஜசோழன் நடிகர் திலகத்தின் வெற்றிப் படம் தானா?

ராஜராஜசோழன் பற்றி ஏதாவது சுவாரஸ்யமான தகவல் உண்டா?

Murali Srinivas
7th December 2010, 10:58 PM
செல்வா,

ராஜ ராஜ சோழன் படத்தைப் பொறுத்தவரை மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான படம். முதல் சினிமாஸ்கோப் படம் என்பதை தவிர்த்து தமிழகத்தின் தன்னிகரற்ற வரலாற்று வீரனைப் பற்றிய படம் என்பதாலும் டி.கே.எஸ். சகோதரர்களால் நடத்தப்பட்ட நாடகத்தின் திரையாக்கம் என்பதினாலும் எதிர்பார்ப்பு கூடியது. அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் முதன் முறையாக ஆனந்த் தியேட்டர் உமாபதி தயாரிக்கிறார் என்பதும் இதற்கு வலு சேர்த்தன.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கும் சரி, பொது மக்களின் எதிர்பார்ப்பிற்கும் ஏற்றவாறு படம் அமையவில்லை என்பதே உண்மை. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை சதி வேலை மூலமாக கைப்பற்ற நினைக்கும் அயல் நாட்டு ஒற்றனின் சதி வலைகளும் அதை சாமர்த்தியமாக முறியடிக்கும் சக்ரவர்த்தியின் சாகசங்களும் ஒரு மேடை நாடகத்திற்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால் ஒரு பெரிய திரைப்படத்திற்கு அது போதாது என்பதை ஏ.பி.என். மறந்து விட்டார். அது போலவே குந்தவை விமலாதித்தன் காதலும் அதற்கு தோன்றும் எதிர்ப்பும். பின்னாளில் யோசிக்கும் போது அது அந்த காலக் கட்டத்தில் ஏ.பி.என்ற்கு இருந்த மன நிலையே காரணம் என்று தோன்றுகிறது. அதாவது தில்லானாவிற்கு பிறகு வா ராஜா வா, திருமலை தென்குமரி, கண்காட்சி என்று சின்ன பட்ஜெட் படங்களாக அவர் எடுத்தார். அந்த மனோநிலையில் மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் படம் அவரால் செய்ய முடியவில்லை என்றே தோன்றுகிறது. மேலும் நாடகத்தை அப்படியே திரைக்கதை ஆக்கியதும் ஒரு காரணம்.

படம் பாக்ஸ் ஆபீஸைப் பொறுத்தவரை பெரிய சாதனைப் படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சென்னை மதுரை திருச்சி சேலம் போன்ற ஊர்களில் நூறு நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை தொட்டது. நகரங்களிலிருந்து கீழே உள்ள ஊர்களிலும் நல்ல வசூலை கொடுத்தது. குறிப்பாக மறு வெளியீடுகளில் நல்ல விலைக்கு விநியோகஸ்தர்களால் வாங்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறு வசூலும் இருந்தது.

படத்தைப் பற்றிய விமர்சனம் இங்கே பெரிய அளவில் பேசப்படவில்லை.

அன்புடன்

RAGHAVENDRA
7th December 2010, 11:01 PM
இரு நண்பர்கள். இருவரும் முன்னாள் ராணுவ வீரர்கள். முதலாமவர் முகாமில் இருக்கும் போது ஒரு ஆதிவாசிப் பெண்ணைக் காதலிக்கிறார். மொழி தெரியாமலேயே பழகும் இருவரிடமும் காதல் மலர்ந்து அப்பெண்ணுக்குத் தன் மொழியைக் கற்றுக்கொடுக்கிறார். மற்ற நண்பர் இந்தக் காதலுக்கு உதவியாயிருக்கிறார். போரின் உச்சத்தில் குண்டு மழை பொழிய, அந்தக் காதலி இறந்து விட்டதாக நினைத்து விடுகிறார்கள் நண்பர்கள். நண்பர்களும் வெவ்வேறு முகாம் சென்று அப்படியே பிரிந்து விடுகிறார்கள்.

காலம் மாறுகிறது. அந்தக் காதலியை தற்செயலாக நண்பன் சந்திக்கிறான். போர்க்காலத்தில் ஒரு விபத்தில் அவனுடைய ஒரு கால் ஊனமாகிறது. நண்பனின் காதலியோ உயிரோடு இருக்கிறாள். அவளைத் தான் இருக்கும் தாய்நாட்டின் தலைநகருக்கு அழைத்து வருகிறான். அவளுடைய காதலனை எப்படியாவது கண்டு பிடித்து சேர்த்து விடுவதாகக் கூறுகிறான்.

வந்த ஊரில் அவனுக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. இதற்கு மத்தியில் ஒரு இளம் பெண்ணின் கார் பாதி வழியில் நின்று விட அந்தக் காரை சரி செய்ய உதவி அவளை அனுப்புகிறான்.

எதேச்சையாக நண்பனை வழியில் பார்க்கிறான். அவனிடம் காதலியைப் பற்றிக் கூற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவனை அணுக, காதலனோ தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அவனிடம் காதலியைப் பற்றிச் சொல்ல முற்படும் போது இடைஞ்சலாக நண்பனை அப்பா என்று கூறிக் கொண்டே ஒரு சிறுவன் வருகிறான். அவனுக்குப் பேரிடி... அப்போது தான் முதன் முறையாக தன் நண்பன் கல்யாணமாகி குழந்தையும் உள்ளவன் என்று தெரிந்து கொள்கிறான். நண்பனின் மனைவியின் சகோதரி வருகிறாள். அவளை காதலன் அறிமுகப் படுத்துகிறான். அவள் தான் அவன் கார் ரிப்பேர் செய்து தந்த பெண். பின்னர் மீண்டும் நண்பனின் காதலியைப் பற்றி சொல்ல எத்தனிக்கிறான். இதற்குள் நண்பனின் மனைவியும் வர அவளையும் அறிமுகப் படுத்துகிறான் காதலன். இவனுக்கு இதயம் உடைந்து விடுகிறது. மிகுந்த மன உளைச்சலடைகிறான். அப்போது காதலன் அவனை மாடிக்கு தன் அறைக்கு அழைத்து சென்று தன் பழைய நினைவுகளைப் பற்றிப் பேசுகிறான். அப்போது சலனமற்று இருக்கும் நண்பனின் முகம், காதலன் தன் காதலியைப் பற்றிப் பேச ஆரம்பிக்கும் போது மெல்ல ஆர்வத்தைக் கூட்டுகிறது. பின்னர் அவளிடம் தன்னுடைய காதலியைப் பற்றி மிக மனம் வருந்தி காதலன் பேசும் போது இவனுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி ஏற்படுகிறது, அவளை இன்னும் மறக்காமல் இருக்கிறானே என்று. அடுத்ததாக அவன், தன் காதலி இறந்து விட்டதாக சொல்ல, இவன் இல்லை இல்லை, அவள் உயிருடன் தான் இருக்கிறாள் என சொல்ல எத்தனிக்கும் போது நண்பனின் மனைவி காபியுடன் வருகிறாள்.
சொல்ல வந்ததை சொல்லாமலேயே நண்பன் கிளம்புகிறான்.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பு முழுவதும் அவருடைய முகத்தில்... எத்தனை உணர்வுகள், எத்தனை வேறுபாடுகள்.

முகம் ஒன்று உணர்வுகள் பல

நான் மிகவும் என்றென்றைக்கும் ரசிக்கும் காட்சி மட்டுமல்ல,

SUBDUED ACTING என்றால் என்ன என்று விளக்கும் காட்சியும் கூட

இந்தக் காட்சி இடம் பெற்ற படம் பார்த்தால் பசி தீரும்
காட்சியில் நடித்த மற்றொரு நடிகர், ஜெமினி கணேசன்.

அன்புடன்

selva7
8th December 2010, 11:39 AM
செல்வா,

ராஜ ராஜ சோழன் படத்தைப் பொறுத்தவரை மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான படம். முதல் சினிமாஸ்கோப் படம் என்பதை தவிர்த்து தமிழகத்தின் தன்னிகரற்ற வரலாற்று வீரனைப் பற்றிய படம் என்பதாலும் டி.கே.எஸ். சகோதரர்களால் நடத்தப்பட்ட நாடகத்தின் திரையாக்கம் என்பதினாலும் எதிர்பார்ப்பு கூடியது. அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் முதன் முறையாக ஆனந்த் தியேட்டர் உமாபதி தயாரிக்கிறார் என்பதும் இதற்கு வலு சேர்த்தன.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கும் சரி, பொது மக்களின் எதிர்பார்ப்பிற்கும் ஏற்றவாறு படம் அமையவில்லை என்பதே உண்மை. ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை சதி வேலை மூலமாக கைப்பற்ற நினைக்கும் அயல் நாட்டு ஒற்றனின் சதி வலைகளும் அதை சாமர்த்தியமாக முறியடிக்கும் சக்ரவர்த்தியின் சாகசங்களும் ஒரு மேடை நாடகத்திற்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கலாம். ஆனால் ஒரு பெரிய திரைப்படத்திற்கு அது போதாது என்பதை ஏ.பி.என். மறந்து விட்டார். அது போலவே குந்தவை விமலாதித்தன் காதலும் அதற்கு தோன்றும் எதிர்ப்பும். பின்னாளில் யோசிக்கும் போது அது அந்த காலக் கட்டத்தில் ஏ.பி.என்ற்கு இருந்த மன நிலையே காரணம் என்று தோன்றுகிறது. அதாவது தில்லானாவிற்கு பிறகு வா ராஜா வா, திருமலை தென்குமரி, கண்காட்சி என்று சின்ன பட்ஜெட் படங்களாக அவர் எடுத்தார். அந்த மனோநிலையில் மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் படம் அவரால் செய்ய முடியவில்லை என்றே தோன்றுகிறது. மேலும் நாடகத்தை அப்படியே திரைக்கதை ஆக்கியதும் ஒரு காரணம்.

படம் பாக்ஸ் ஆபீஸைப் பொறுத்தவரை பெரிய சாதனைப் படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சென்னை மதுரை திருச்சி சேலம் போன்ற ஊர்களில் நூறு நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை தொட்டது. நகரங்களிலிருந்து கீழே உள்ள ஊர்களிலும் நல்ல வசூலை கொடுத்தது. குறிப்பாக மறு வெளியீடுகளில் நல்ல விலைக்கு விநியோகஸ்தர்களால் வாங்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறு வசூலும் இருந்தது.

படத்தைப் பற்றிய விமர்சனம் இங்கே பெரிய அளவில் பேசப்படவில்லை.

அன்புடன்

ராஜராஜசோழன் பற்றி கேட்டவுடன் தகவல்களைத் தந்தமைக்கு மிகுந்த நன்றி.
ராஜ் டிவியில் ராஜராஜசோழன் ஒளிபரப்புச் செய்தபோது பார்த்ததாக நினைவு. ஆனாலும் இப்படம் எனக்குப் பிடித்திருந்தது.

SHIV
8th December 2010, 02:47 PM
With due respects to Kunnakudi Vaidyanathan,Another drawback for Raja Raja Chozhan the poor BGM score by him. Though songs became a hit, The BGM was pathetic. Had it been MSV things would have been entirely different.

Rgds

Shiv

SHIV
8th December 2010, 03:00 PM
Dear Mr.Murali sir/Ragavender sir/sharda madam

NT had never acted in Devar Films though I heard they were good friends. Any particular/interesting info on this?

MSV had also not scored music for Devar films though Devar offered him. That was because MSV did not want to ruin the chances of KVM (who had helped MSV during his days of struggle)who was the asthana MD for Devar films at that time.

Any such interesting background?

Regards

Shiv

pammalar
9th December 2010, 05:59 PM
"அடாது மழை பெய்தாலும் விடாது வித்யாபதியை வரவேற்போம்"

தற்பொழுது திண்டுக்கல் நகரின் என்.வி.ஜி.பி. திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, கலைமகளின் மானுட வடிவமான நமது நடிகர் திலகத்தின் "சரஸ்வதி சபதம்" திரையிடப்பட்டு, கடும் மழையிலும் வசூல் மழை பொழிந்து, பெரும் வெள்ளத்திலும் மக்கள் வெள்ளத்தை பெற்று ஜெயக்கொடி நாட்டி வருகிறது.

பெருமிதத்துடன்,
பம்மலார்.

Murali Srinivas
9th December 2010, 06:40 PM
நல்ல தகவலை தந்த சுவாமிக்கு நன்றி.

வித்தைகளுக்கு அதிபதியான வித்யாபதியும் நாத பிரம்மம் நாரதரும் சேர்ந்து வரும் போது எதிர் கொண்டழைப்பதுதானே நமது வழக்கம்.

Shiv,

As for as I know there is no specific reason for Devar not casting NT in his films except due to the fact that Devar belonged to the opposite camp. In spite of there being a misunderstanding between Devar and MGR during Thaikku Pin Tharam [1956] which lasted for 5 years [till Thayai kaatha Thanayan that came out in 1961], Devar did not attempt crossing over probably due to the fact that his style of film making was entirely different from that of NT films. That's why he did movies with the likes of Anandan in the interim. But as you said NT and Devar shared a very good rapport. NT attended the marriage of Devar's son Dandaayuthapani in Marudha Malai(?) and you must see that photograph. NT with the curly hair and holy ash smeared all over his forehead would be so handsome to look at.

Same manner if you notice Balajee never crossed over. He remained loyal to NT. There was a saying in film circles. Sivajiku oru Balaji, MGR-ku oru Devar.

Regards

pammalar
9th December 2010, 08:04 PM
In spite of there being a misunderstanding between Devar and MGR during Thaikku Pin Tharam [1956] which lasted for 5 years [till Thayai kaatha Thanayan that came out in 1961], Devar did not attempt crossing over probably due to the fact that his style of film making was entirely different from that of NT films.


டியர் முரளி சார்,

மாபெரும் திரைப்படத் தயாரிப்பாளரான சாண்டோ சின்னப்பா தேவரின் முதல் தயாரிப்பு, மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த "தாய்க்குப் பின் தாரம்" [வெளியீட்டுத் தேதி : 21.9.1956]. அதன் பின்னர், தாங்கள் கூறியது போல், அவர் மக்கள் திலகத்தை விட்டு 5 வருடங்கள் விலகியேயிருந்தார். அவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்தது "தாய் சொல்லைத் தட்டாதே" [தீபாவளி வெளியீடு : 7.11.1961]. "தாயைக் காத்த தனயன்", அவர்களது அடுத்த படமாக - தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக - 13.4.1962 அன்று வெளியானது.

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
10th December 2010, 10:50 AM
As for as I know there is no specific reason for Devar not casting NT in his films except due to the fact that Devar belonged to the opposite camp. In spite of there being a misunderstanding between Devar and MGR during Thaikku Pin Tharam [1956] which lasted for 5 years [till Thayai kaatha Thanayan that came out in 1961], Devar did not attempt crossing over probably due to the fact that his style of film making was entirely different from that of NT films. That's why he did movies with the likes of Anandan in the interim. But as you said NT and Devar shared a very good rapport. NT attended the marriage of Devar's son Dandaayuthapani in Marudha Malai(?) and you must see that photograph. NT with the curly hair and holy ash smeared all over his forehead would be so handsome to look at.
Devar's 'mAppiLLai' R Thiyagarajan told in Jaya TV's 'thirumbi pArkirEn' programme, during his marriage with Devar's daughter, NT, on behalf of 'mAppiLlai veedu' and MT, on behalf of 'peN veedu' exchanged the 'nichaya thAmbbolam' tray, which anyone never get an oppertunity like that.

In Devar's son Dhandayuthapani's marriage also, NT played a prominent role, by offering the daughter of N.Sundaresa Thevar, a famous congress 'periya puLLi' in Pattukkottai area and best friend of NT.


Same manner if you notice Balajee never crossed over. He remained loyal to NT. There was a saying in film circles. Sivajiku oru Balaji, MGR-ku oru Devar.

and Muktha also.

once Muktha Srinivasan told in a TV interview, 'many of the Shivaji producers jumped to MGR side (like Bandhulu, G.N.Velumani, APN) and many producers made film with both of them (like AVM, Gemini) but myself and Balaji did not go to MGR, and stayed with NT'.

mr_karthik
10th December 2010, 11:17 AM
மாபெரும் திரைப்படத் தயாரிப்பாளரான சாண்டோ சின்னப்பா தேவரின் முதல் தயாரிப்பு, மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த "தாய்க்குப் பின் தாரம்" [வெளியீட்டுத் தேதி : 21.9.1956]. அதன் பின்னர், தாங்கள் கூறியது போல், அவர் மக்கள் திலகத்தை விட்டு 5 வருடங்கள் விலகியேயிருந்தார். அவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்தது "தாய் சொல்லைத் தட்டாதே" [தீபாவளி வெளியீடு : 7.11.1961]. "தாயைக் காத்த தனயன்", அவர்களது அடுத்த படமாக - தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக - 13.4.1962 அன்று வெளியானது.


Yes Pammalar sir,

'Thaai sollai thattAthE' was the film which got released opposite to 'KapplOttiya Thamizhan' in 1961 Deepavali and ran for 156 days, a smash hit. (the result of KOT is well known, for which every Tamilan should feel ashamed).

Between 'thAikkupin thAram' and 'thAi sollai thattAthE', Devar produced movies with others, and some of them are...

Neelamalai thirudan
vAzhavaiththa dheivam
yAnaippAgan.... etc.

After he joined with MGR again, Devar made a record that he is the only producer giving two movies per year with MGR.....

1962
thAyaikAththa thanayan
kudumba thalaivan

1963
dharmam thalaikAkkum
needhikkuppin pAsam

1964
vEttaikkAran
thozhilALi

1965
kanni thAi

1966
thanipiravi
mugarAsi

1967
thAikku thalai magan
vivasAyi

1968
thEr thiruvizhA
kAdhal vAganam

(after this, Devar made films with other actors like Jaishankar, Muthuraman, A.V.M.Rajan and with his 'Murugan')

1972
nalla nEram (last one with MGR)

(sorry for giving MGR list in NT's thread)

Devar always use one sentence for his success... 'muruganum mirugamum irukkum varai enakku kavalai illai'.

groucho070
10th December 2010, 11:33 AM
Devar always use one sentence for his success... 'muruganum mirugamum irukkum varai enakku kavalai illai'. :lol2: So true.

SHIV
10th December 2010, 02:16 PM
Dear Murali sir,

Thanks for the info. the beauty of this thread is, if we ask for a info or clarifications on NT and his works, we get a plethora of the same and also some added interesting infos like MGR-Devar misunderstanding etc which may not be known to many today.

I think we should equip ourselves to ask right infos or clarifications to get a wealth of unheard infos.

Regards

Shiv

pammalar
10th December 2010, 04:18 PM
Devar always use one sentence for his success... 'muruganum mirugamum irukkum varai enakku kavalai illai'. :lol2: So true.

Please have a look at my next post (Q & A).

pammalar
10th December 2010, 04:19 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 161

கே: நடிகர் திலகத்தைப் பற்றி சின்னப்பா தேவர் என்ன சொல்கிறார்? (கே.எல்.கன்னியப்பன், மலேசியா)

ப: 'நடிப்பிலே புலி' என்கிறார். இதிலே கூட தேவர் ஒரு மிருகத்தை உபயோகப்படுத்தி விட்டார் பாருங்கள்! முருகனும், மிருகமும் தான் தேவருக்கு எப்போதும் துணைக்கு வருவது.

(ஆதாரம் : பேசும் படம், மார்ச் 1965)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th December 2010, 05:37 PM
(sorry for giving MGR list in NT's thread)


Nadigar Thilagam & Makkal Thilagam are two towering personalities of Indian Cinema, more particularly Tamil Filmdom. The information, trivia, Statistics, etc... regarding them, most probably have inter-relations & inter-connections, since they were also contemporaries. So, there is nothing wrong in providing a list of this kind in our thread.

Warm Wishes,
Pammalar.

pammalar
10th December 2010, 10:25 PM
'Thaai sollai thattAthE' was the film which got released opposite to 'KapplOttiya Thamizhan' in 1961 Deepavali and ran for 156 days, a smash hit. (the result of KOT is well known, for which every Tamilan should feel ashamed).



Dear Mr.Karthik,

Makkal Thilagam's "Thaai Sollai Thattaathey" crossed 100 days and attained a SUPERHIT BO status in its first release[7.11.1961].

But it didn't have a run of 156 days and so on.

In Chennai, it was released at Plaza, Bharat & Mahalakshmi.

Plaza - 101 days

Bharat - 101 days

Mahalakshmi - 101 days

In each of the above 3 theatres, the film ran from 7.11.1961 to 15.2.1962 i.e. for a period of 101 days giving way to another new Makkal Thilagam Film "Maadappuraa" which got released on 16.2.1962 at the same theatres plus Liberty.

Madurai, Trichy & Coimbatore are the other 3 centres in which the film crossed 100 days. Even in all these centres, "Thaai Sollai Thattaathey" gave way to "Maadappuraa". So, Statistically speaking, "Thaai Sollai Thattaathey" ran for a maximum of 101 days in 4 centres (6 theatres) and was a super duper hit. In Chennai, both the films were 'MGR Pictures' release. In most of the other centres, both the films were released by the same distributors, paving a pathway for the same theatre combination.

Coming to Nadigar Thilagam's "Kappalotiya Thamizhan" [First Release Date : 7.11.1961], NT & BRP expected a 'Kattabomman' repeat in BO but KOT was nowhere near. Their disappointment came out in words that the film didn't do well and both of them have every right to express such kind of feelings as they have toiled & moiled for the film of their lifetime. With regard to BO Status, KOT in its first run, was neither a Flop/Failure nor a Hit. It had an above average run at the BO which on any scale is not acceptable for a film of its kind and that has come through the voices of NT & BRP.

In Chennai, KOT got released at Paragon, Crown & Sayani.

Paragon - 52 days

Crown - 52 days

Sayani - 52 days

KOT crossed 50 days at Trichy, Salem & Coimbatore. It had its highest run in Madurai [68 days] at Sridevi Theatre.

In B Centres it ran for 5 to 7 weeks & in C for a period of 3 to 4 weeks.

It ran for 100 days in Sri Lanka [Colombo-Kingsley Theatre], (இதற்கான ஆதாரம் கூடிய விரைவில் கிடைக்கும் வாய்ப்புள்ளது).

The KOT team expected a 200 day 'megahit' run but they have to feel satisfied with a 50+ days 'above average' run.

On subsequent releases, wherever it got released, the film proved to be a Sensational Hit. [தேசபக்தி கூட நம்மவர்களுக்கு லேட்டாகத் தான் தோன்றும் போல் இருக்கு].

Regards,
Pammalar.

SHIV
11th December 2010, 10:02 AM
Dear Pammalar sir,

Thanks for the rate stats on KOT. You are right, even patriotism catches up with our people very late. In this aspect, fans in Srilanka have to be appreciated as KOT had a 100 day run there (though its still unofficial).

Regards

Shiv

mr_karthik
11th December 2010, 10:45 AM
Pammalar sir,

thanks for your detailed BO informations about TST and KOT.

I read in a site that, 'thAi sollai thatttAthE' ran for 156 days in one centre, but it is now clearly proved by you as wrong information. It had run for 101 days only.

thanks & regards

pammalar
11th December 2010, 08:30 PM
Dear Shiv Sir & Mr.Karthik,

Thank you very much!

Warm Wishes,
Pammalar.

Murali Srinivas
11th December 2010, 10:56 PM
Coming to Nadigar Thilagam's "Kappalotiya Thamizhan" [First Release Date : 7.11.1961], it had its highest run in Madurai [68 days] at Sridevi Theatre.



மதுரைடா!

அன்புடன்

Just as Shiv said one query leads to another and see how much info came out!

pammalar
11th December 2010, 11:35 PM
தேசியகவியாக தேசிய திலகம்

"சிந்துநதியின்மிசை நிலவினிலே"

காவியம் : கை கொடுத்த தெய்வம்(1964)

இசை : மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடியவர்கள் : பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன், கானக்குயில் எல்.ஆர்.ஈஸ்வரி, ஜே.வி.ராகவுலு, குழுவினர்

http://www.youtube.com/watch?v=vuv9illls1M

http://www.raaga.com/player4/?id=97848&mode=100&rand=0.026679016882553697

இன்று 11.12.2010 மகாகவி பாரதியாரின் 129வது பிறந்த தினம்.

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

RAGHAVENDRA
13th December 2010, 10:14 PM
Our heartfelt condolences to the bereaved family of ace Cinematographer-Director, B.S. Ranga, who was the producer, cinematographer and director of Tenali Raman and Nichaya Thambulam (banner Vikram Productions) of Nadigar Thilagam Sivaji Ganesan.
May His Soul Rest in Peace.
Raghavendran

groucho070
14th December 2010, 07:12 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 161

கே: நடிகர் திலகத்தைப் பற்றி சின்னப்பா தேவர் என்ன சொல்கிறார்? (கே.எல்.கன்னியப்பன், மலேசியா)

ப: 'நடிப்பிலே புலி' என்கிறார். இதிலே கூட தேவர் ஒரு மிருகத்தை உபயோகப்படுத்தி விட்டார் பாருங்கள்! முருகனும், மிருகமும் தான் தேவருக்கு எப்போதும் துணைக்கு வருவது.

(ஆதாரம் : பேசும் படம், மார்ச் 1965)

அன்புடன்,
பம்மலார். :lol: Thanks Pammalar sir. Film personalities those days were so colourful. Those were the days, I say.

Murali Srinivas
14th December 2010, 09:25 PM
செல்வம் - Part I

தயாரிப்பு: வி.கே.ஆர். பிக்சர்ஸ்

திரைக்கதை வசனம் இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

வெளியான நாள்: 11.11.1966

[இந்தப் படத்தைப் பற்றி NOV ஏற்கனவே ஒரு விமர்சனம் எழுதியிருப்பதால் இங்கே சுருக்கமாக கதை. NOV எழுதியதன் லிங்க் http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=675].

ஊரில் பெரிய பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசு செல்வம். தந்தை இல்லை. தாய் மட்டுமே. தாய் ஜாதகத்திலும் ஜோஸ்யத்திலும் மிகுந்த நம்பிக்கை உடையவர். ஜோஸ்யர் கிழிக்கும் கோட்டை தாண்டாதவர். வெளிநாடு சென்று படித்து விட்டு வரும் செல்வம் சொந்த ஊரில் ஒரு உர தொழிற்சாலையை நிறுவி வெளிநாட்டு நிபுணரை வரவழைத்து தொழிலாளிகளுக்கு பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்கிறான்.

செல்வத்திற்கு இரண்டு மாமன்கள். ஒருவர் செல்வம் வீட்டிலேயே இருக்கிறார். அவருக்கு ஒரு மகள். அடுத்த மாமா அதே ஊரில் தனியாக வசிக்கிறார். அவர் மகள் வள்ளி. செல்வமும் வள்ளியும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறார்கள். அது அனைவருக்கும் தெரியும். செல்வத்தின் அம்மா இவர்கள் இரண்டு பேரின் ஜாதகங்களை ஜோஸ்யரிடம் காண்பிக்க இந்த திருமணம் நடந்தால் ஒரு வருடத்தில் செல்வம் இறந்து விடுவான் என்று சொல்லி விடுகிறார். செல்வத்தின் தாய் வள்ளியிடம் சென்று தன் மகனை மறந்து விடும்படி சொல்கிறாள். செல்வம் வந்து கேட்டால் அவனை பிடிக்கவில்லை என்று சொல்ல சொல்கிறாள். அவளும் அப்படியே சொல்ல செல்வம் மிகுந்த கோபமும் வருத்தமும் அடைக்கிறான்.

ஆனால் செல்வத்தால் வள்ளியை மறக்க முடியவில்லை. ஒரு வேகத்தில் அவளையும் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு செல்ல அங்கே வள்ளி திருமணம் நடைபெறப் போகும் நேரம். முருகன் வள்ளி திருமாங்கல்யத்தை எடுத்து செல்வம் வள்ளி கழுத்தில் கட்டி விடுகிறான். முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் செல்வத்தின் தாய் அவர்களை ஏற்றுக் கொள்கிறாள். மீண்டும் ஜோஸ்யரை நாட அவர் ஒரு பரிகாரம் சொல்கிறார். அதாவது கணவன் மனைவி ஒரு வருடம் சேராமல் இருந்தால் இந்த தோஷம் நீங்கி விடும் என்று சொல்ல செல்வமும் வள்ளியும் அதை ஏற்றுக் கொள்கின்றனர். வள்ளி அவள் வீட்டிற்கு சென்று விடுகிறாள்.

ஜோஸ்யர் மேலும் ஒரு விஷயம் சொல்கிறார். செல்வத்திற்கு இரண்டாம் கல்யாணம் செய்து வைத்தால் இந்த தோஷம் நிரந்தரமாக விலகி விடும் என்று. செல்வத்தின் தாய் வீட்டோடு இருக்கும் தன் தம்பியிடம் வெளியூரிலிருக்கும் அவன் மகளை வரவழைக்க சொல்கிறாள். உடலளவில் வளர்ந்திருந்தாலும் மனதளவில் வயதிற்கேற்ற முதிர்ச்சி இல்லாத அந்த மாமன் மகளின் அருகாமை செல்வத்தை சற்றே சலனப்படுத்த அவன் அதிலிருந்து மீள்கிறான். செல்வத்தை பார்த்துக் கொள்ள ஊரிலியே ஒரு பெரிய டாக்டர் ஏற்பாடு செய்யப்படுகிறார். இளமை உணர்வுகளால் தூண்டப்படும் செல்வம் வள்ளியை காண அவள் வீட்டிற்கு செல்ல அவள் அவன் செய்துக் கொடுத்த சத்தியத்தை நினைவுபடுத்தி அவனை திருப்பி அனுப்பி விடுகிறாள்.

வீட்டில் இருக்க பிடிக்காமல் தொழிற்சாலை கெஸ்ட் ஹௌசில் டாக்டருடன் போய் தங்குகிறான் செல்வம். அங்கே டாக்டரிடம் தன் நிலைமையைப் பற்றி விவாதிக்கிறான். மூட நம்பிக்கைகள வேண்டாம் என்றும் நேர் வழியில் சென்றால் நிச்சயம் நன்மைகளே விளையும் என்கிறார் டாக்டர். அடுத்த அறையில் வெளிநாட்டு நிபுணரும் அவர் மனைவியும் நெருக்கமாக ஆடும் நடனம் செல்வத்தின் உணர்வுகளை தூண்டி விட தன் மனைவியை தேடி போகிறான். முதலில் தடுக்கும் வள்ளி பின் செல்வத்தின் நிர்பந்தத்தினால் உடன்படுகிறாள். செல்வத்தை தேடி வரும் டாக்டர் மட்டும் விஷயத்தை தெரிந்துக் கொள்கிறார். செல்வத்தின் வீட்டில் இருக்கும் பெண்மணி வள்ளி வீட்டு வாசலில் கார் நிற்பதையும் செல்வமும் டாக்டரும் வள்ளி வீட்டிலிருந்து வெளியே வந்து கார் ஏறி செல்வதை பார்த்துவிட்டு செல்வத்தின் தாயிடம் போய் சொல்கிறாள். செல்வத்தின் தாய் வள்ளியை மீண்டும் அவர்கள் வீட்டிற்கே கூட்டி செல்கிறாள்.

இதற்கிடையில் வள்ளி கர்ப்பமடைக்கிறாள். இதை செல்வத்தின் தாய்க்கு தெரியாமல் மறைக்கும் பொறுப்பு டாக்டரின் தலையில் விழுகிறது. ஜோஸ்யர் கொடுத்த ஒரு வருட கெடு முடியும் நாள் நெருங்க நெருங்க செல்வத்திற்கும் பயம் தோன்ற ஆரம்பிக்கிறது. ஜாதகத்தில் நம்பிக்கை என்பதை விட தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோமே அதன் மூலம் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று மனதளவில் குழம்ப குழம்ப, பரிகாரங்களும் பூஜைகளும் முழு வீச்சில் நடைபெற அந்த கெடுவின் கடைசி நாளும் வர அந்த இறுதி நிமிடங்கள், அந்நேரம் அரேங்கேறும் புதிய திருப்பங்கள், ஜோசியம் பலித்ததா, செல்வத்தின் நிலைமை என்ன வள்ளியின் நிலை என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.

அன்புடன்

(தொடரும்)

Murali Srinivas
14th December 2010, 09:31 PM
செல்வம் - Part II

இந்தப் படத்தைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் படங்களின் generic nature என்று சொல்வோமே அதில் ஒரு மாற்றத்தை ஆரம்பித்து வைத்த படம் என்று சொல்லலாம். அதுவரை அவர் படங்கள் என்றாலே சீரியஸ் கதைகள் அழுத்தமான காட்சியமைப்புகள் என்ற நிலையிலிருந்து ஒரு light hearted படம் என்ற மாறுதலை கொண்டு வந்த படம். இதற்கு முன்னரே அவர் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா, பலே பாண்டியா போன்ற இவ்வகைப் படங்கள் செய்திருக்கிறார் என்றால் கூட அவை அழுத்தமான படங்களுக்கு நடு நடுவே வந்தவை. அது மட்டுமல்ல இவை மூன்றும் முறையே 1954,58,62 -ம் ஆண்டுகளில் வந்தவை. அவற்றை தொடர்ந்து அது போன்ற படங்கள் வரவில்லை. ஆனால் செல்வம் வெளிவந்த பிறகு இந்த light hearted படங்கள் வரிசையில் ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், அஞ்சல் பெட்டி 520, சுமதி என் சுந்தரி என்று வரிசையாக வெளியாக ஆரம்பித்தன.

நடிகர் திலகம் இந்த செல்வம் பாத்திரத்தை ப்பூ என்று ஊதியிருப்பார். தாயை மிகவும் நேசிக்கிற தாயின் உணர்வுகள் புண்படக் கூடாது என்று நினைக்கிற மகன், அதே நேரத்தில் சின்ன வயதிலிருந்தே தான் நேசித்த கல்யாணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்ட முறைப்பெண், ஜாதக தோஷம் காரணமாக அந்த முறைப்பெண் தனக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ என்கின்ற போது என்னமாய் அதை வெளிப்படுத்துகிறார்! அவரின் அறிமுக காட்சியிலே முறை பெண்ணின் மீது உள்ள ஆசை வெளிப்பட்டு விடும். காரின் ஜன்னல் வழியாக தலையை எட்டிப் பார்த்துக் கொண்டே வரும் செல்வம், அவள் இருக்கும் இடம் வந்தவுடன் இறங்கி ஓடிவந்து பேசும் இடம், மாமா வீட்டிற்கு போகும் இவரைப் பார்த்தவுடன் கதவை திறக்காமல் விஜயா நிற்க, இவர் ஒளிந்துக் கொண்டு விஜயா கதவை திறந்தவுடன் சட்டென்று உள்ளே நுழைந்து விஜயாவிடம் வம்பு
பண்ணுவது இங்கேயெல்லாம் இளமை துள்ளும் நடிகர் திலகத்தை பார்க்கலாம். சின்ன சின்ன கிண்டல் வசனங்களை ஒரு comic sense கலந்து பேசுவதில் எப்பவுமே நடிகர் திலகம் பிரமாதப்படுத்துவார். இதிலும் அதை நிறைய பார்க்கலாம். அம்மாவின் ஜோஸ்ய மற்றும் சாஸ்திர சம்பிரதாய அதீத நம்பிக்கைகளை கிண்டல் செய்வதாகட்டும் [குளிப்பதற்கு நல்ல நேரம் போய்விடப் போகிறது என்று சொல்லும் அம்மாவிடம் இரண்டு வருஷத்திலே நிறைய improvement], கல்யாணத்தைப் பற்றி விஜயாவிடம் பேச அவர் பத்துக்குள்ளே ஒரு நம்பர் சொல்லுங்க என்று கேட்க நாசமாப் போச்சு என்று சலிப்பதாகட்டும், அந்த கிண்டல் வெளிப்படும் இடங்களை ஜாலியாக பண்ணியிருப்பார். வெளிநாட்டிலே என்ன படிச்சிட்டு வந்தே, என்ன செய்யப் போறே என்று கேட்கும் மாமனிடம் என்ன செய்யப் போறேன் என்பதை அவர் விவரிக்கும் இடம் வெகு வெகு இயல்பு.

தன் அத்தையின் சொல்படி வீடு தேடி வரும் சிவாஜியை பிடிக்கவில்லை என்று கதவை திறக்காமலே விஜயா சொல்லிவிட அதுவரை அமைதியாக இருக்கும் நடிகர் திலகத்தின் முகம் அப்படியே மாற, என்னை ஏன் வெறுக்கிறே என்று கேள்வி கேட்டு பதில் இல்லாமல் திரும்பி போக எத்தனிக்கும் போது, விஜயா கதவை திறக்க சிவாஜி கோவத்தில் காரணம் சொல்லு என்று அவள் கழுத்தைப் பிடிக்க மாமா நாகையா அவர் வேறொருவருக்கு மனைவியாக போகிறவ, அவளை தொட்டு பேசாதே என்று சொல்ல கோவத்தில் வார்த்தை வராமல் ஓஹோ! வேறொருவனுக்கு மனைவியா, பாக்கிறேன் எவன்னு பாக்கிறேன் என்று விருட்டென்று திரும்பி போவதில் ஆரம்பித்து அந்த கோவம் சற்றும் குறையாமல் வீட்டிற்கு சென்று தன் தாயிடம் அவ மனசை யாரோ கலைச்சிருங்காங்க அவங்க மட்டும் என் கையில் கிடைச்சா-னு ஆத்திரத்தை கொட்டுவது, உடனே மாமா வீட்டிலே போய் பேசணும்-னு அம்மாவை வற்புறுத்துவது, அம்மா இப்போது வேண்டாம் என்று சொன்னவுடன் சரி என்று அரைகுறை மனசுடன் மாடிப்படி ஏறுவது, திடீரென்று சடசடவென்று இறங்கி வந்து அவ எப்படிமா இப்படி சொன்னா என்று குமுறுவது மீண்டும் அம்மா சொல்படி படியேறி விட்டு ஆற்ற முடியாமல் இறங்கி வந்து குலுங்குவது - இந்த இடங்களில் ஒரு நடிப்பு சாம்ராஜ்யத்தையே நடத்தியிருப்பார். தனக்கு இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து வைப்பதற்கு ஊரிலிருந்து வரவழைக்கப்பட்ட மற்றொரு மாமன் மகளின் அருகாமை தன்னை எப்படி சலனப்படுத்துகிறது என்பதை அவர் ரங்காராவிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தயங்கி தயங்கி சொல்லும் இடம் இன்னொரு class act.

தன்னை அலைகழிக்கும் உணர்வுகளை அடக்க முடியாமல் மனைவியை தேடி போக அங்கே எங்க வந்தீங்க என்ற மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முகம் அஷ்டகோணலாக மாற, உங்களை சின்ன வயசிலிருந்து பார்த்திட்டு இருக்கேன், ஆனா இன்னிக்கு உங்க முகத்திலே இருக்கிறதை மாதிரி பார்த்ததேயில்லை என்று மனைவி சொல்ல என் மனசிலே இருக்கிறதை எப்படி சொல்லுவேன்-னு கேட்கும் அந்த இடம், கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்-ல் நெருக்கமாக இருக்கும் வெளிநாட்டு தம்பதியினரைப் பார்த்தவுடன் அவருக்குள் ஏற்படும் அந்த தவிப்பு, உடனே மீண்டும் மனைவியை நாடி செல்ல, மனைவி தடுக்க எதையுமே அனுபவிக்காம நான் போயிட்டேனா என்று சுய இரக்கம் கொள்ளும் இடம், இவை எல்லாமே எந்த கதையானாலும் தன் நடிப்பு என்றுமே சுடர் விட்டு பிரகாசிக்கும் என்பதை நடிகர் திலகம் உணர்த்தும் இடங்கள். தன் உணர்வுகளுக்கு வடிகால் கிடைத்தவுடன் உண்மை நிலை உறைக்க தாய்க்கு செய்துக் கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோமே அதன் மூலம் ஆபத்து வந்து விடுமோ என பயப்படும் இடங்கள் எல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம். கிளைமாக்ஸ் காட்சி அவர் மேல் இன்னும் அழுத்தமாக அமைக்கப்பட்டிருந்தால் அவர் நடிப்பின் சிறப்பை இன்னமும் ரசித்திருக்கலாம்.

கே.ஆர்.விஜயா நாயகி. நடிகர் திலகத்தோடு புன்னகை அரசி ஜோடியாக நடித்த முதல் படம். இதற்கு முன்பு கை கொடுத்த தெய்வம், சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும் ஜோடியாக நடிப்பது இந்தப் படத்தில்தான் ஆரம்பித்தது. பின்னாளில் நடிகர் திலகத்தோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமையை பெறுவதற்கு இந்த படமே தொடக்கமாக இருந்தது.

சில நேரங்களில் வெகு இயல்பாக இருக்கும் விஜயாவின் நடிப்பு சில நேரங்களில் melodrama-வாக இருக்கும். உன் அத்தானை நீ கல்யாணம் செய்துக் கொள்ள கூடாது என தன் அத்தை சொல்லும் போது அந்த அதிர்ச்சியை இயல்பாக வெளிப்படுத்தும் அவர், சில வசனங்கள் முடிந்த பிறகு சொல்றது நீங்கதானா, கேட்கறது நான்தானா என்று பேசும் இடம் ஒரு உதாரணம். கதைப்படி இப்படிப்பட்ட ஒரு இருதலைக் கொள்ளி காரக்டர் என்பது ஒரு சவாலான பாத்திரம் படம் வெளிவந்த காலக்கட்டத்தின் தன்மையை மனதில் கொண்டு பார்த்தால் பெரிதாக குறை சொல்ல முடியாதபடி நடித்திருப்பார்.

ஜோஸ்யத்தின் மீதும் ஜாதகத்தின் மீதும் அதீத நம்பிக்கை கொண்ட தாயாக எம்.வி.ராஜம்மா அதை நன்றாக செய்திருப்பார். கே.எஸ்.ஜி.யின் படங்களில் தவறாமல் இடம் பெறும் இருவர் இதிலும் உண்டு. ரங்காராவ் மற்றும் சகஸ்ரநாமம். இருவருமே தங்களின் இயல்பான நடிப்பிற்கு புகழ் பெற்றவர்கள். இதில் ரங்காராவிற்கு டாக்டர் வேடம், நகைச்சுவை கலந்த அந்த வேடத்தில் கலக்கியிருப்பார் SVR. எல்லாவற்றையும் விளக்கிவிட்டு ஒவ்வொரு முறையும் புரியுதா என்று கேட்டுவிட்டு வரும் பதிலில் திருப்தி இல்லாமல் என்ன புரிஞ்சுதோ என்று கேட்டு விட்டு போவது அவரின் முத்திரை. காமடியும் கை வந்த கலை என்று சொல்லாமல் சொல்கிறார்.

சகஸ்ரநாமத்திற்கு சிவாஜியின் தாய் மாமன் வேடம். அதை எப்போதும் போல் இயல்பாக செய்திருக்கிறார். அவரின் டயலாக் டெலிவரியே அவருடைய பாதி வேலையை செய்துவிடும். வீட்டில் இருந்துக் கொண்டே கூனி வேலை பார்க்கும் பெண்மணியாக சுந்தரிபாய். அவருக்கேற்ற ரோல். ரமாபிரபா நடிகர் திலகத்தின் மற்றொரு முறைப் பெண்ணாக மேகலா என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறார். ஆனால் படத்தின் surprise நாகையாதான். நாகையா என்றாலே நம் நினைவிற்கு வரும் அந்த மனம் தளர்ந்த பயம் நிறைந்த நடுங்கும் குரலில் பேசும் உருவத்திற்கு மாறாக ஒரு ரோல். கே.ஆர்.விஜயாவின் தந்தையாக தன் சகோதரியின் மூட நம்பிக்கைகளைப் பார்த்து அதற்கு எதிராக வாதிடும் அந்த கதாபாத்திரத்தை சில காட்சிகளே வந்தாலும் பளிச்சென்று செய்திருக்கிறார் நாகையா. நாகேஷ் கதாகாலட்சேபம் செய்பவராக கிளைமாக்ஸ்-ல் மட்டும் தலை காட்டுகிறார். படத்தை தயாரித்தது வி.கே.ராமசாமி என்றாலும் அவர் படத்தில் இல்லை.

பி.எஸ்.ராமையாவின் கதைக்கு திரைக்கதை வசனம் இயக்கம் கே.எஸ்.ஜி. கைகொடுத்த தெய்வம் என்ற அற்புதமான படத்திற்கு பிறகு நடிகர் திலகத்துடன் மீண்டும் இணைந்த படம். உறவு கொள்ள முடியாத கணவன் மனைவி என்ற விஷயத்தின் மேல் கேஎஸ்ஜிக்கு ஒரு அலாதி விருப்பம் இருந்ததோ என்று தோன்றுகிறது. சாரதா, கற்பகம் பிறகு செல்வம் என்ற மூன்று படங்களையும் பார்க்கும்போது அப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது. காரணங்கள்தான் ஒவ்வொன்றிலும் வேறு. ஜோஸ்யத்தின் மீது நம்பிக்கை வைப்பது சரியா தவறா என்பதே கதையின் முடிச்சு. அதை ஒரு முழு நீள திரைப்படமாக்குவது என்பது சற்று கடினமான காரியமே. அதை முடிந்தவரையில் தொய்வில்லாமல் நகர்த்தி செல்ல கே.எஸ்.ஜி. முயன்றிருப்பார். கே.எஸ்.ஜியின் படங்கள் பெண்களை குறி வைத்தே எடுக்கப்பட்டவையாய் இருக்கும். இந்த படத்திலும் அதைத்தான் செய்திருப்பார். வசனங்கள் வெகு இயல்பாக வந்து விழும். ஜோஸ்யதையும் ஜாதகத்தையும் நம்புவதுதான் சரியானது என்று சொல்லுகிறாரோ என நினைக்கும் போது கிளைமாக்ஸ்-ல் வரும் அந்த ட்விஸ்ட் முதல் முறை பார்பவர்களுக்கு ஒரு சின்ன ஷாக்.[வெளிவந்த காலகட்டத்தில் நடந்ததை சொல்கிறேன்].

அன்புடன்

(தொடரும்)

Murali Srinivas
14th December 2010, 09:40 PM
செல்வம் - Part III

அன்றைய காலக்கட்டத்தில் [60-களின் மத்தியில் மன்னர்கள் பிரிந்த பிறகு] இசையமைப்பாளரைப் பொறுத்தவரை எம்.எஸ்.வி அல்லது கே,வி.எம், பாடல்களுக்கு கண்ணதாசன் அல்லது வாலி என்று இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு ஒரு அடையாளம் வைத்துக் கொண்டிருந்தனர். அந்த ட்ரெண்டை சற்றே மாற்றியவர் கே.எஸ்.ஜி. கற்பகத்தில் பாடல்கள் அனைத்தையும் வாலிக்கு கொடுத்தவர் கை கொடுத்த தெய்வம் மற்றும் சித்தி படங்களில் கண்ணதாசனை எழுத வைத்தார். 1966 ல் சித்தி படத்திற்கு கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணி என்றால் அதே 1966 ல் வெளியான செல்வம் படத்திற்கு திரை இசை திலகத்தையும் வாலியையும் பயன்படுத்தினார். படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டும் ஆலங்குடி சோமு எழுதினார்.

இசையமைப்பாளராக மாமா வந்ததன் காரணம் தயாரிப்பாளர் வி.கே.ஆர். அவர் ஏ.பி.என்னுடன் சேர்ந்து தயாரிப்பில் பங்கு கொண்ட மக்களைப் பெற்ற மகராசி, வடிவுக்கு வளைக்காப்பு போன்ற படங்களில் மாமாதான் இசை. எனவே தனியாக சொந்த படம் எடுத்தபோது அதே அடிப்படையில் கே.வி.எம் இசை அமைத்தார்.

1. என்னடி இத்தனை வேகம் - ஆலங்குடி சோமு எழுதிய பாடல் படத்தின் ஆரம்பத்தில் நடிகர் திலகத்தின் வருகையை எதிர்பார்த்து கே.ஆர். விஜயா பாடும் பாடல். நடுவில் வந்து நடிகர் திலகம் சேர்ந்து கொள்வார். டி.எம்.எஸ்-சுசீலா பாடியிருப்பார்கள். இருவரும் சேர்ந்து இருந்தாலும் தனி தனியே பாடுவது போல் காட்சி அமைப்பு. இரண்டும் வெவ்வேறு டியூன் போல தோன்றும்.

2. அவளா சொன்னாள் இருக்காது - மிக மிக பிரபலமான பாடல். எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்று விஜயா சொல்லிவிட நடிகர் திலகம் மனம் வெறுத்து பாடுவது. வாலியின் வார்த்தைகள் வலுவாக வந்து விழும்.

உப்புக் கடல் நீரும் சக்கரையாகலாம்

முப்பது நாளும் நிலவை பார்க்கலாம்

சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்.

என்ற சரணத்தையும் மிஞ்சும் வண்ணம் அடுத்த சரணம்.

அன்னை தந்த பால் விஷமுமாகலாம்

என்னை பெற்ற தாய் என்னைக் கொல்லலாம்

என்று பாடிவிட்டு வலது கையை மேலே உயர்த்தி

நீ சொன்னது எப்படி உண்மையாகலாம் என்று வெடிக்கும் போது இங்கே தியேட்டர் அதிரும். கொள்ளிடம் ஆற்றங்கரையில் வைத்து படமாக்கப்பட்டிருக்கும்.

3. லில்லி லல்லி ஜிம்மி பப்பி - ரமாபிரபா நாய்க்குட்டிகளை வைத்துக் கொண்டு பாடும் பாடல் - ஈஸ்வரி பாடியிருப்பார்.

4. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல - விஜயாவை தேடி வரும் நடிகர் திலகம் தன் உள்ளக்கிடக்கையை பாடலாய் வெளிப்படுத்த விஜயா பாடலிலே பதில் சொல்வார். இந்துஸ்தானி ராகமான தேஷ் எனப்படும் ராகத்தில் அமைந்த பாடல் என்று சொல்வார்கள். மிக பிரபலமான பாடல் என்பதை சொல்ல வேண்டியதில்லை. டி.எம்.எஸ்ஸும் சுசீலாவும் அழகாய் மெருகு படுத்தியிருப்பார்கள். பாடலின் இறுதியில் சிவாஜியிடம் சத்தியத்தை நினைவுபடுத்தும் செயற்கையான அந்த இடத்தை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால் படமாக்கமும் நன்றாய் இருக்கும்.

5. எனக்காகவா நான் உனக்காகவா - தாராபுரம் சுந்தரராஜன் ஜமுனா ராணி பாடிய, படத்தில் montage ஆக இடம் பெறும் பாடல். முக்கியமான கட்டத்தில் இந்த பாடல் வரும். தாராபுரம் சுந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் பின்னாளில் இசையமைப்பாளராகி ராமண்ணாவின் நீச்சல் குளம் போன்ற படங்களுக்கு இசை அமைத்தாலும் கூட அவர் பேர் சொல்லும் பாடலாக இன்றும் விளங்குவது இந்தப் பாடல்தான். மெலடி என்பதன் அர்த்தத்தை இதில் தெரிந்துக் கொள்ளலாம்.

மலர் மீது பனி தூங்க

மரம் மீது கனி தூங்க

மலை மீது முகில் தூங்க

மடி மீது நீ தூங்க

நீராட நதியா இல்லை?

இளைப்பாற நிழலா இல்லை?

பசியாற உணவா இல்லை?

பகிர்ந்துண்ண துணையா இல்லை?

கதையின் சூழலுக்கு மிகப் பொருத்தமாக அமைந்த வாலியின் வரிகள்.

திரையுலகில் பல வருடம் நடிப்பிலும் தயாரிப்பிலும் அனுபவமுள்ள வி.கே.ஆர். சற்று சிரம திசையில் இருந்தபோது நடிகர் திலகத்தை அணுக அவர் உதவி செய்வதற்காக உடனே செய்த படமே செல்வம். குறைந்த பொருட்செலவில் தயாரான இந்தப் படம் 1966 நவம்பர் 11 தீபாவளியன்று வெளியானது. சென்னை சித்ரா,மதுரை சென்ட்ரல், கோவை, சேலம் போன்ற நகரங்களில் இந்தப்படம் 1967 பொங்கல் வரை ஓடியது. அதாவது 64 நாட்கள். சென்னையில் மற்ற இரண்டு அரங்குகளிலும் திருச்சி போன்ற நகரங்களிலும் 57 நாட்கள். வழக்கம் போல் நடிகர் திலகத்தின் இன்னொரு படமே போட்டியாக வரும் காட்சியும் சென்னை சித்ராவில் அரங்கேறியது. கந்தன் கருணை படத்திற்காக செல்வம் மாறிக் கொடுத்தது. இதில் குறிப்பிட தகுந்த விஷயம் என்னவென்றால் அதே தீபாவளிக்கு வெளிவந்த எந்த பிரம்மாண்ட கலர் படங்களும் செல்வம் ஓடிய நாட்களை தாண்ட முடியவில்லை.

படம் வெளிவந்த பிறகு சிரம திசையிலிருந்து மீண்டார் வி.கே.ஆர். மறு வெளியீடுகளில் மிக நன்றாக போன படங்களில் செல்வமும் உண்டு. அப்போதும் வி.கே.ஆருக்கு லாபமே.

நடிகர்திலகத்திற்காகவே பார்க்கலாம்.

அன்புடன்

P_R
14th December 2010, 10:18 PM
Lovely post as always :clap:

It's been a long long time since I saw this film. When reading I found I remember next to nothing about the film. The only thing I recall now is Rangarao in the climax :lol:

rajeshkrv
14th December 2010, 10:28 PM
selvam was a very different movie. yes KSG's aasthanam MVRajamma, SVR & Sahasranama. All were mind blowing as usual.

NT - sollave vendam .. padu jor

gopalu_kirtinan
15th December 2010, 03:34 AM
Murali Anna,

Thanks for the wonderful post. Around 10 years back i saw that movie. After reading your post, i feel like seeing it again.

pammalar
15th December 2010, 03:43 AM
கலையுலகின் நிரந்தர 'செல்வம்' ஆகிய நமது நடிப்பு 'செல்வ'த்தின் "செல்வம்" திரைக்காவியத்தினுடைய செழிப்பான திறனாய்வை, நமது திரியின் / இந்த ஹப்பின் நிரந்தர 'செல்வம்' ஆன முரளி சார் வழக்கம் போல் மிக அருமையாக வழங்கியுள்ளார்.

திறனாய்வுத் திலகத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! வளமான வாழ்த்துக்கள்! நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th December 2010, 04:14 AM
பழனி தாலுகாவில் உள்ள புதுஆயக்குடி என்கின்ற சிற்றூரில் இருக்கும் கோமதி டூரிங் டாக்கீஸில், நேற்று 13.12.2010 திங்கள் முதல், தினசரி 2 காட்சிகளாக, கலையுலக மன்னர்மன்னனின் 286வது திரைக்காவியமான "மன்னவரு சின்னவரு" திரையிடப்பட்டு மகத்தான வரவேற்பைப் பெற்று வருகிறது. பப்ளிசிடிக்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில், அர்ஜுனும், சௌந்தர்யாவும் வட்டங்களுக்குள் சிறிதாக இருக்கிறார்கள். அதே சமயம் அந்த போஸ்டர்களில் நமது நடிகர் திலகம் Full Standingல் பெரிதாக, பிரதானமாக காட்சியளிக்கிறார்.

இனிக்கும் இத்தகவலை எமக்கு வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

RC
15th December 2010, 04:29 AM
Murali-ji: Its been years since I watched selvam. With your writing I almost watched the movie again :) Excellent write up!

goldstar
15th December 2010, 05:13 AM
Thanks Murali, what a writeup, excellent and thanks a lot. I have watched this moive in Madurai Shanthi theatre nearly 23 years ago, after that I have not got chance to watch it again, you have fullfilled it. I should get this movie DVD to enjoy it again.

Our NT is young and very smart.

Cheers,
Sathish

saradhaa_sn
15th December 2010, 11:21 AM
டியர் முரளியண்ணா,

சுருக்கமாகச்சொல்கிறேன் என்று துவங்கி மிக மிக விளக்கமாக விவரித்து விட்டீர்கள். 'செல்வம்' திரைப்பட திறனாய்வு சூப்பர். உங்களது திறனாய்வு அருமை என்று சொல்வது, தேன் இனிக்கிறது என்று சொல்வதைப்போல.


நடிகர் திலகம் இந்த செல்வம் பாத்திரத்தை ப்பூ என்று ஊதியிருப்பார்.

தன் அத்தையின் சொல்படி வீடு தேடி வரும் சிவாஜியை பிடிக்கவில்லை என்று கதவை திறக்காமலே விஜயா சொல்லிவிட அதுவரை அமைதியாக இருக்கும் நடிகர் திலகத்தின் முகம் அப்படியே மாற, என்னை ஏன் வெறுக்கிறே என்று கேள்வி கேட்டு பதில் இல்லாமல் திரும்பி போக எத்தனிக்கும் போது, விஜயா கதவை திறக்க சிவாஜி கோவத்தில் காரணம் சொல்லு என்று அவள் கழுத்தைப் பிடிக்க மாமா நாகையா அவர் வேறொருவருக்கு மனைவியாக போகிறவ, அவளை தொட்டு பேசாதே என்று சொல்ல கோவத்தில் வார்த்தை வராமல் ஓஹோ! வேறொருவனுக்கு மனைவியா, பாக்கிறேன் எவன்னு பாக்கிறேன் என்று விருட்டென்று திரும்பி போவதில் ஆரம்பித்து அந்த கோவம் சற்றும் குறையாமல் வீட்டிற்கு சென்று தன் தாயிடம் அவ மனசை யாரோ கலைச்சிருங்காங்க அவங்க மட்டும் என் கையில் கிடைச்சா-னு ஆத்திரத்தை கொட்டுவது, உடனே மாமா வீட்டிலே போய் பேசணும்-னு அம்மாவை வற்புறுத்துவது, அம்மா இப்போது வேண்டாம் என்று சொன்னவுடன் சரி என்று அரைகுறை மனசுடன் மாடிப்படி ஏறுவது, திடீரென்று சடசடவென்று இறங்கி வந்து அவ எப்படிமா இப்படி சொன்னா என்று குமுறுவது மீண்டும் அம்மா சொல்படி படியேறி விட்டு ஆற்ற முடியாமல் இறங்கி வந்து குலுங்குவது - இந்த இடங்களில் ஒரு நடிப்பு சாம்ராஜ்யத்தையே நடத்தியிருப்பார். தனக்கு இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து வைப்பதற்கு ஊரிலிருந்து வரவழைக்கப்பட்ட மற்றொரு மாமன் மகளின் அருகாமை தன்னை எப்படி சலனப்படுத்துகிறது என்பதை அவர் ரங்காராவிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் தயங்கி தயங்கி சொல்லும் இடம் இன்னொரு class act.

தன்னை அலைகழிக்கும் உணர்வுகளை அடக்க முடியாமல் மனைவியை தேடி போக அங்கே எங்க வந்தீங்க என்ற மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முகம் அஷ்டகோணலாக மாற, உங்களை சின்ன வயசிலிருந்து பார்த்திட்டு இருக்கேன், ஆனா இன்னிக்கு உங்க முகத்திலே இருக்கிறதை மாதிரி பார்த்ததேயில்லை என்று மனைவி சொல்ல என் மனசிலே இருக்கிறதை எப்படி சொல்லுவேன்-னு கேட்கும் அந்த இடம், கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்-ல் நெருக்கமாக இருக்கும் வெளிநாட்டு தம்பதியினரைப் பார்த்தவுடன் அவருக்குள் ஏற்படும் அந்த தவிப்பு, உடனே மீண்டும் மனைவியை நாடி செல்ல, மனைவி தடுக்க எதையுமே அனுபவிக்காம நான் போயிட்டேனா என்று சுய இரக்கம் கொள்ளும் இடம், இவை எல்லாமே எந்த கதையானாலும் தன் நடிப்பு என்றுமே சுடர் விட்டு பிரகாசிக்கும் என்பதை நடிகர் திலகம் உணர்த்தும் இடங்கள்.

இந்தக்குறிப்பிட்ட காட்சியை நீங்கள் விவரிக்கும் விதம், திரையில் நேரில் பார்ப்பதுபோலிருக்கிறது. ஏற்கெனவே நான் பலமுறை சொன்னது போல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிகர்திலகத்தைப் பற்றி புகழ்ந்து பேசும் வி.ஐ.பி.க்கள் இதுபோன்ற காட்சிகளையெல்லாம் குறிப்பிட்டு சிலாகித்துப் பேசுவது கிடையாது. ஸ்டீரியோ டைப்பாக ஓரிரண்டு காட்சிகளையே திருப்பித்திருப்பி சொல்லி, மக்களை சலிப்படையச்செய்கின்றனர். இனி அம்மாதிரி நிகழ்ச்சிகளில் 'அதிகம் தெரியாத' வி.ஐ.பி.க்களுக்கு பதிலாக, விவரம் தெரிந்த உங்களைப்போன்ற தீவிர ரசிகர்களை அழைத்து விவரிக்கச்செய்யலாம்.

'எனக்காகவா.. நான் உனக்காகவா' முழுப்பாடலையும் காட்சியமைப்பையும், கே.எஸ்.ஜி.பிற்காலத்தில் (1973) தான் எடுத்த (முத்துராமன். பிரமீளா நடித்த) வாழையடி வாழை படத்தில் பயன்படுத்தியிருப்பார்

'என்னடி இத்தனை வேகம்' பாடலும், 'அவளா சொன்னாள்.. இருக்காது' பாடலும் தஞ்சை மாவட்டம் கல்லணையில் படமாக்கப்பட்டவை. அப்போதைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் மல்லியம் கிராமத்தைச்சேர்ந்த இயக்குனர் கே.எஸ்.ஜி., பெரும்பாலும் தன் படங்களின் வெளிப்புறக்காட்சிகளை தனது மல்லியம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலேயே வைத்துக்கொள்வார். கற்பகம் படத்தின் அவுட்டோர் காட்சிகள் அனைத்தும் அங்கேதான் எடுக்கப்பட்டன. 'பக்கத்துவீட்டு பருவமச்சான்' பாடலின் கடைசியில் சாவித்திரி ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நின்று பாடுவாரே அதுதான் மல்லியத்திலுள்ள கே.எஸ்.ஜி.யின் வீடு. 'சித்தி' படத்தில் ஜெமினி பத்மினி பாடும் 'தண்ணீர் சுடுவதென்ன' பாடல் மல்லியம் காவேரி ஆற்றில் படமானது. (இவரது உறவினரான மல்லியம் ராஜகோபாலின் 'சவாலே சமாளி' படத்தில் வி.எஸ்.ராகவனும், டி.கே.பகவதியும் நின்று பேசும் மரப்பாலமும் மல்லியம் காவேரி ஆற்றின் மீது அமைக்கப்பட்டதுதான்).

கே.எஸ்.ஜி.யின் அடுத்த படமான 'பேசும் தெய்வம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி திருச்சி விமான நிலையத்தின் உட்புறத்தில் எடுக்கப்பட்டது. முன்பெல்லாம் விமான நிலையங்களில் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடத்த நிலையத்தார் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் விமான நிலையக்காட்சிகளின் போது, அப்போதைய சென்னை விமான நிலையத்தை வெளிப்புறத்தில் தூரத்தில் காட்டிவிட்டு, பின்னர் ஓஸியானிக் ஓட்டல் அல்லது அட்லாண்டிக் ஓட்டல் ரிஸப்ஷன்களை விமான நிலையத்தின் உட்புறமென்று காட்டுவார்கள்.

ஆனால் பேசும் தெய்வத்தின் கிளைமாக்ஸ் திருச்சி விமான நிலையத்தின் உள்ளேயே படமாக்கப்பட்டது. ஏர்போர்ட்கள் மத்திய அரசின் பொறுப்பில் இருந்தபோதிலும், படப்பிடிப்புக்காக முதல்வர் பக்தவத்சலம் அவர்களை அணுகி அனுமதி பெற்றுக்கொடுத்தவர் நடிகர்திலகம்தான்.

செல்வம் ரிலீஸானபோது சரஸ்வதி சபதம் பல ஊர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அதுசரி, 'செல்வம்' படத்தோடு வெளியான மற்ற கலர்ப்படங்கள் செல்வம் அளவுக்கு ஓடவில்லையென்று குறிப்பிடுள்ளீர்களே, அது 'சர்க்கஸ் படம்'தானே. அவை ஓடிய 'நாள்' எத்தனை என்று பிறர் 'பார்க்க சொல்லலாமா?'

NOV
15th December 2010, 11:57 AM
excellent murali :clap:

if I remember correctly, unakkaagavaa naan was initially recorded for some other film (vaazhaiyadi vaazhai?) can't recall what happened .. :think:

saradhaa_sn
15th December 2010, 12:37 PM
excellent murali :clap:

if I remember correctly, unakkaagavaa naan was initially recorded for some other film (vaazhaiyadi vaazhai?) can't recall what happened .. :think:
Dear NOV,

I have mentioned it in my post.
'enakkaagavaa' song was recorded and filmed for Selvam only. later the song sequence was fully shown in 'vaazhaiyadi vaazai'.

For your reference...

Selvam - 1966
Vaazaiyadi vaazai - 1973

SHIV
15th December 2010, 12:51 PM
Dear Murali sir,

Thanks a million for recalling the light hearted NT movie "Selvam"and rekindling our memories.

As Mr. Ragavendar had rightly said you are the permanent "Selvam" of this hub.

Regards

Shiv

NOV
15th December 2010, 01:10 PM
'எனக்காகவா.. நான் உனக்காகவா' முழுப்பாடலையும் காட்சியமைப்பையும், கே.எஸ்.ஜி.பிற்காலத்தில் (1973) தான் எடுத்த (முத்துராமன். பிரமீளா நடித்த) வாழையடி வாழை படத்தில் பயன்படுத்தியிருப்பார் :ty:

KCSHEKAR
15th December 2010, 04:59 PM
Excellent Review about SELVAM

KCSHEKAR
15th December 2010, 05:00 PM
Posted: Tue Dec 14, 2010 6:13 pm Post subject:

--------------------------------------------------------------------------------

"கலையுலகின் நிரந்தர 'செல்வம்' ஆகிய நமது நடிப்பு 'செல்வ'த்தின் "செல்வம்" திரைக்காவியத்தினுடைய செழிப்பான திறனாய்வை, நமது திரியின் / இந்த ஹப்பின் நிரந்தர 'செல்வம்' ஆன முரளி சார் வழக்கம் போல் மிக அருமையாக வழங்கியுள்ளார்.

திறனாய்வுத் திலகத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! வளமான வாழ்த்துக்கள்! நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார். "


Thank You Mr.Murali

Murali Srinivas
15th December 2010, 05:40 PM
Thanks Prabhu! Yes, SVR in Yamadharmarajan's costume would be hilarious.

Thanks Rajesh!

Thanks Gopal! Good you liked it.

நன்றி சுவாமி!

Thanks RC!

Thanks Satish! It is worth watching!

Thanks Shiv! Thanks for your kind words also!

Thanks NOV!

Thanks Chandrasekar!

மிக்க நன்றி சாரதா! பாடல் காட்சிகள் கல்லணையில் படமாக்கப்பட்டதுதான். நீங்கள் சொன்னவுடன் வேறொன்றும் நினைவிற்கு வருகிறது. கே.எஸ்.ஜி. இயக்கிய தபால்காரன் தங்கை படத்தில் வரும் கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை பாடலையும் கல்லணையில்தான் படமாக்கியிருப்பார். நான் வாழையடி வாழை பார்த்ததில்லை. அதில் எனக்காகவா பாடல் இடம் பெற்றிருக்கும் என்பது எனக்கு புதிய செய்தி.

நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் எங்கள் ஊரில் 6 வாரம் என்பதே! கூடுதல் விவரங்களுக்கு சுவாமிக்கு தனி மடல் அனுப்பவும்!

I am glad that the review had found so many takers and so many people have responded! My Heartiest Thanks to everyone!

Regards

pammalar
15th December 2010, 06:57 PM
excellent murali :clap:

if I remember correctly, unakkaagavaa naan was initially recorded for some other film (vaazhaiyadi vaazhai?) can't recall what happened .. :think:
Dear NOV,

I have mentioned it in my post.
'enakkaagavaa' song was recorded and filmed for Selvam only. later the song sequence was fully shown in 'vaazhaiyadi vaazai'.

For your reference...

Selvam - 1966
Vaazaiyadi vaazai - 1973

சகோதரி சாரதா,

"வாழையடி வாழை" வெளியான தேதி : 15.8.1972

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th December 2010, 07:09 PM
Posted: Tue Dec 14, 2010 6:13 pm Post subject:
கலையுலகின் நிரந்தர 'செல்வம்' ஆகிய நமது நடிப்பு 'செல்வ'த்தின் "செல்வம்" திரைக்காவியத்தினுடைய செழிப்பான திறனாய்வை, நமது திரியின் / இந்த ஹப்பின் நிரந்தர 'செல்வம்' ஆன முரளி சார் வழக்கம் போல் மிக அருமையாக வழங்கியுள்ளார்.

திறனாய்வுத் திலகத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! வளமான வாழ்த்துக்கள்! நெஞ்சார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.
_________________
pammalar


Dear Murali sir,

Thanks a million for recalling the light hearted NT movie "Selvam"and rekindling our memories.

As Mr. Ragavendar had rightly said you are the permanent "Selvam" of this hub.

Regards

Shiv

Dear Shiv Sir,

I humbly say that 'this has been specified by YOURS TRULY'.

Regards,
Pammalar.

RAGHAVENDRA
15th December 2010, 08:46 PM
முரளி சார்,
செல்வம் படத்தைப் பற்றிய தகவல் செல்வத்தை அள்ளித் தந்து, பம்மலார் சொன்னது போல் ஹப்பின் நிரந்தர செல்வமாகத் திகழ்கின்றீர்கள். பாராட்டுக்கள்.

அந்த ஆண்டில் நடிகர் திலகத்தின் படங்கள் குறைவு ஆனால் தரத்தில் நிறைவு.

சகோதரி சாரதா அவர்கள் கூறியது போல் வாழையடி வாழை படத்தில் இந்தப் பாடல் முழுமையாக இடம் பெறும்.

செல்வம் படத்தைப் பொறுத்த மட்டில் அவளா சொன்னாள் பாடலுக்காகவே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்க வேண்டிய படம். அதே போல் ஒன்றா இரண்டா பாடலின் இறுதியில் ஒரு சில கணங்கள் சற்று தனியாக தொக்கி நிற்கும் என்பது ஒரு நெருடல். இருந்தாலும் நடிகர் திலகத்தின் நடிப்பு அனைத்துக் குறைகளையும் மறைத்து விடும்.
மீண்டும் தங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
ராகவேந்திரன்

J.Radhakrishnan
15th December 2010, 09:26 PM
முரளி சார்,

செல்வம் பட திறனாய்வு வழக்கம் போல் அருமை, VKR இந்த படம் தவிர NT அவர்களை வைத்து லட்சுமிகல்யாணம் படம் தயாரித்திருக்கிறார் அல்லவா? அது எப்படி ஓடியது?

Murali Srinivas
15th December 2010, 11:23 PM
மிக்க நன்றி ராகவேந்தர் சார். நீங்கள் சொன்னது போல் செல்வம் இன்னும் பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டிய படம்தான்.

ராதா, நன்றி. லட்சுமி கல்யாணம் வி.கே.ஆர். தயாரிப்பு இல்லை. அதை தயாரித்தவர் கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல். சீனிவாசன் அவர்கள். ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ். லட்சுமி கல்யாணம் above average வெற்றி.

அன்புடன்

pammalar
16th December 2010, 02:59 AM
"திரும்பிப் பார்"ஐ 'திரும்பிப் பார்'க்க வந்தது வாய்ப்பு

'மாடர்ன் தியேட்டர்ஸ்' திரைப்பட நிறுவனத்தின் அதிபர், டி.ஆர்.சுந்தரத்தின் தயாரிப்பு, இயக்கத்தில், கலைஞர் மு.கருணாநிதியின் கதை, உரையாடலில், கதாநாயக-வில்லனாக நமது நடிகர் திலகம் கலக்கிய "திரும்பிப் பார்", நெடுந்தகடு(DVD) வடிவில் வெளிவந்துள்ளது. பல ஆண்டுகளாக எதிர்பார்த்து கொண்டிருந்த நடிகர் திலகத்தின் ஐந்தாவது திரைக்காவியமான இதனை வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொண்டோர் 'Magnasound Home Video'.

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
16th December 2010, 09:49 AM
http://jghrdental.com/images/sivajinews.jpg

SHIV
16th December 2010, 12:20 PM
Dear Pammalar sir,

Sorry for the error. I stand to be corrected.

REgards

Shiv

HARISH2619
16th December 2010, 01:47 PM
Dear murali sir,
thankyou very much for the excellent write up on selvam which rekindled the old memories of watching that movie some 20 years ago.
Did lakshmi kalyanam have an above average run?I thought it was a hit movie which it truly deserved.I guess another NT film played villain here.
Pammal sir can u please provide the details of it's run ?

abkhlabhi
16th December 2010, 04:09 PM
NT SIGNATURE - WHEN HE WAS CAMP AT NEW JERSY, USA DURING 1996 Letter to Tararts

http://abkhlabhi.blogspot.com/2010/12/nt-signature_16.html

Murali Srinivas
17th December 2010, 12:12 AM
Thanks Senthil. Regarding Lakshmi Kalyanam it was a hit compared to it's budget. Will provide more details soon.

ஸ்ரீதர் நடத்திக் கொண்டிருந்த சித்ராலயா இதழில் சித்திரமே சொல்லடி என்று ஒரு பகுதி வரும். அதில் வாரம் ஒரு நட்சத்திரத்தை ஏதாவது படம் வரையச் செய்து அதை பார்த்து அவர்களின் குணநலன்களையும் எதிர்காலத்தையும் பற்றி சொல்லக் கூடிய கையெழுத்து நிபுணர் ஒருவர் தன் கருத்துகளை வெளியிடுவார். யார் வரைந்தார்கள் என்ற விவரம் நிபுணரிடம் தெரிவிக்கப்பட மாட்டது.

அதில் ஒரு முறை நடிகர் திலகம் அவர்களிடம் ஏதாவது படம் வரைய சொல்ல அவர் வரைந்தது ரத்தம் சொட்டும் அம்பு துளைத்திருக்கும் ஒரு இதயம். அதை பற்றிய நிபுணர் கருத்து சுருக்கமாக.

இவர் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுவார். இவர் எல்லோருக்கும் நன்மை செய்வார். ஆனால் இவர் செய்யும் காரியங்கள் இவரை சுற்றியுள்ளவர்களால் தவறாக புரிந்துக் கொள்ளப்படும். அது இவர் மனதில் வேதனையை ஏற்படுத்தும். 45 வயதுக்கு மேல் பொது வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபடுவார். பொறுப்புகளை ஏற்பார்.

இவர் காலத்தால் அழியாத புகழ் அடைவார்.

இவர் வாழ்க்கையின் பிற்காலத்தில் இதய மற்றும் ரத்த சம்மந்தமான பிரச்சினைகள் வரலாம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இது வெளியானது இன்றைக்கு சரியாக 40 ஆண்டுகளுக்கு முன், 1970-ம் ஆண்டு டிசம்பர் மாதம்.

அன்புடன்

RC
17th December 2010, 02:33 AM
[tscii:0ef3da065f]சினிமா விமர்சனம் : திருவிளையாடல்

மீனாட்சி: ஒரு நல்ல புராணப் படம் பார்த்ததிலே மனசுக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுங்களா?

சண்முகம்: ஆமாம் மீனாட்சி, கண் குளிர காட்சிகளையும், காதுகுளிர பாட்டுக்களையும் கேட்டு, நான் சில இடங்களில் மெய்சிலிர்த்துப் போனேன். அதிலும் கே.பி.சுந்தராம்பாளோட குரல்...

மீனா: 'முருகா’ என்று அந்த ஒளவைப் பாட்டி கூப்பிடறபோது நம்ப மனசெல்லாம்கூட உருகுதுங்க. அதே மாதிரி, சிவாஜி கணேசனுக்கு சிவன் வேஷம் என்ன பொருத்தமா இருக்குது!

சண்: அதிலும் ருத்ரமூர்த்தியா வரபோது, ரொம்பப் பொருத்தம்!

மீனா: பாண்டியன் சபையிலே வந்து நக்கீரனை மடக்கின காட்சி, என் கண் முன்னாலயே நிக்கு துங்க!

சண்: ருத்ர தாண்டவமும் பிரமாதமாத்தான் இருந்துது. மீனவனா வந்து ஒரு நடை நடக்கிறாரே... எப்படி?

மீனா: அழகா இருந்தது. ஆனா, கொஞ்சம் சிரிப்பும் வந்தது. அங்கே எனக்கொரு சந்தேகங்க! பிட்டுக்கு மண் சுமந்த கதையிலேதானே, ஈசன் உடம்பிலே பட்ட அடி எல்லார் உடம்பிலேயும் படறதாக வரும். இதுலே...

சண்: இதோ பார் மீனாட்சி, திருவிளையாடல் புராணம் ரொம் பப் பெரிசு! அதிலே எல்லாத்தையும் காட்டமுடியுமா? அத னால, ஒரு கதையிலே இன்னொரு சம்பவத்தைப் புகுத்தி இருக்காங்க... கதையா முக்கியம்? தத்துவம்தானே முக்கியம்! இவ்வளவு பெரிய புராணக்கதையை எடுத்துக்கிட்டு, சிறப்பா திரைக்கதை அமைச்சு, வசனம் எழுதி, டைரக்ட் செய்த ஏ.பி.நாகராஜனைக் கண்டிப்பா பாராட்டத்தான் வேணும்.

மீனா: பாலமுரளி கிருஷ்ணாவின் 'ஒரு நாள் போதுமா’ங்கற பாட்டு என் காதிலே இன்னும் ஒலிச்சுக்கிட்டிருக்குங்க!

சண்: எந்தப் பாட்டுதான் ஒலிக்கலே?! டி.ஆர்.மகாலிங்கம் பாடறாரே 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...’ அதைச் சொல்றதா, இல்லே 'பாட்டும் நானே’ங்கற டி.எம்.சௌந்தரராஜன் பாடற பாட்டைச் சொல்றதா? கே.வி.மகாதேவனுக்கு ஒரு 'சபாஷ்’ சொல்ல லாம்.

மீனா: எல்லாம் சரி... ஒரு தமிழ்ப் புலவரை வச்சுக்கிட்டு 'காமெடி’ பண்ணி இருக்க வேண்டாமோன்னு தோணிச்சு!

சண்: ஏன், நாகேஷ் ரொம்ப நல்லா பண்றாரே அதை! புரா ணப் படத்திலே ரொம்ப அழகா காமெடி கொண்டு வந்திருக்காங் கன்னுதான் எனக்குத் தோணுது!

மீனா: சமூகப் படங்கள் பெரு கிப் போய்விட்ட இந்தக் காலத் திலே, இப்படி ஒரு புராணப் படம் வந்து, அதுவும் இவ்வளவு நல்லா அமைஞ்சது ரொம்பவும் சந்தோஷப்பட வேண்டிய விஷயங்க. அடுத்த வாரம் நான் இன்னொரு தடவை இந்தப் படத்தை போய்ப் பார்க்கலாம்னு இருக்கேன்.

சண்: போகும்போது சொல்லு; நானும் வரேன்!


விகடன் விமர்சனக் குழு[/tscii:0ef3da065f]

pammalar
17th December 2010, 03:07 AM
Dear murali sir,
thankyou very much for the excellent write up on selvam which rekindled the old memories of watching that movie some 20 years ago.
Did lakshmi kalyanam have an above average run?I thought it was a hit movie which it truly deserved.I guess another NT film played villain here.
Pammal sir can u please provide the details of it's run ?

COMING SHORTLY !!!

pammalar
17th December 2010, 03:17 AM
'வைகுண்ட ஏகாதசி' ஸ்பெஷல்

"திருமால் பெருமைக்கு நிகரேது"

http://www.youtube.com/watch?v=uAfy01hifNY

http://www.raaga.com/player4/?id=72008&mode=100&rand=0.7059178429190069

திரைப்படம் : திருமால் பெருமை(1968)

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

இசை : திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்

பாடியவர் : பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன்

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

NOV
17th December 2010, 07:06 AM
Besides the above, there were several more lovely songs....

kaakai siraginile nandhalaalaa
malargalile pala niram kandEn
gOpiyar konjum ramannaa
hari hari gOkula ramanaa
vaaranam aayiram
pachai maamali pOl mEni (national anthem in my house)
maargazhi thingal

guruswamy
17th December 2010, 08:43 AM
My Dear Beloved NT Fans,

I'm sorry to have been out of the forum for few days. As I was busy with my research thesis.

Now, I'm appearing for exams. I would love to seek all our NT fans blessings, which I feel is our NT Blessings.

With hearty love for our Nadigar Thilagam and with all your showers of blessings i wish to come back with good results.

Thank you.

JAIHIND
M. GNANAGURUSWAMY

SHIV
17th December 2010, 05:23 PM
Dear Mr.Guruswamy

All the very best for your Exams. Don't worry, your success is a foregone conclusion. Its always success for NT/NT fans.

regards

Shiv

pammalar
17th December 2010, 06:10 PM
My Dear Beloved NT Fans,

I'm sorry to have been out of the forum for few days. As I was busy with my research thesis.

Now, I'm appearing for exams. I would love to seek all our NT fans blessings, which I feel is our NT Blessings.

With hearty love for our Nadigar Thilagam and with all your showers of blessings i wish to come back with good results.

Thank you.

JAIHIND
M. GNANAGURUSWAMY

Dear Mr.M.GNANAGURUSWAMY,

The Almighty's grace & Our Nadigar Thilagam's blessings are always with you.

I wish you a great, grand success in your forthcoming examinations.

My advance congrats & ALL THE BEST !!!

Warm Wishes,
Pammalar.

RAGHAVENDRA
17th December 2010, 06:25 PM
மலேசியா சிவாஜி கணேசன் கலைமன்றம் சார்பில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 82வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் திரு மருது மோகன் ஆற்றிய உரையினைக் காண கீழ்க்காணும் சுட்டிகளை சொடுக்கவும்

பகுதி 1 (http://www.youtube.com/watch?v=8F8Qj7S__rE)

பகுதி 2 (http://www.youtube.com/watch?v=zD-Whp5EPu0)

மாடரேட்டர் ஐயா அவர்களுக்கு,
இந்தக் காட்சிகளை இங்கேயே இணைக்க முடிந்தால் நலம்.

விரைவில் விழா நிகழ்ச்சியின் மற்ற காட்சிகள்
ராகவேந்திரன்

selva7
17th December 2010, 06:26 PM
[tscii:063505536b]சினிமா விமர்சனம் : திருவிளையாடல்

மீனாட்சி: ஒரு நல்ல புராணப் படம் பார்த்ததிலே மனசுக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுங்களா?

சண்முகம்: ஆமாம் மீனாட்சி, கண் குளிர காட்சிகளையும், காதுகுளிர பாட்டுக்களையும் கேட்டு, நான் சில இடங்களில் மெய்சிலிர்த்துப் போனேன். அதிலும் கே.பி.சுந்தராம்பாளோட குரல்...

மீனா: 'முருகா’ என்று அந்த ஒளவைப் பாட்டி கூப்பிடறபோது நம்ப மனசெல்லாம்கூட உருகுதுங்க. அதே மாதிரி, சிவாஜி கணேசனுக்கு சிவன் வேஷம் என்ன பொருத்தமா இருக்குது!

சண்: அதிலும் ருத்ரமூர்த்தியா வரபோது, ரொம்பப் பொருத்தம்!

மீனா: பாண்டியன் சபையிலே வந்து நக்கீரனை மடக்கின காட்சி, என் கண் முன்னாலயே நிக்கு துங்க!

சண்: ருத்ர தாண்டவமும் பிரமாதமாத்தான் இருந்துது. மீனவனா வந்து ஒரு நடை நடக்கிறாரே... எப்படி?

மீனா: அழகா இருந்தது. ஆனா, கொஞ்சம் சிரிப்பும் வந்தது. அங்கே எனக்கொரு சந்தேகங்க! பிட்டுக்கு மண் சுமந்த கதையிலேதானே, ஈசன் உடம்பிலே பட்ட அடி எல்லார் உடம்பிலேயும் படறதாக வரும். இதுலே...

சண்: இதோ பார் மீனாட்சி, திருவிளையாடல் புராணம் ரொம் பப் பெரிசு! அதிலே எல்லாத்தையும் காட்டமுடியுமா? அத னால, ஒரு கதையிலே இன்னொரு சம்பவத்தைப் புகுத்தி இருக்காங்க... கதையா முக்கியம்? தத்துவம்தானே முக்கியம்! இவ்வளவு பெரிய புராணக்கதையை எடுத்துக்கிட்டு, சிறப்பா திரைக்கதை அமைச்சு, வசனம் எழுதி, டைரக்ட் செய்த ஏ.பி.நாகராஜனைக் கண்டிப்பா பாராட்டத்தான் வேணும்.

மீனா: பாலமுரளி கிருஷ்ணாவின் 'ஒரு நாள் போதுமா’ங்கற பாட்டு என் காதிலே இன்னும் ஒலிச்சுக்கிட்டிருக்குங்க!

சண்: எந்தப் பாட்டுதான் ஒலிக்கலே?! டி.ஆர்.மகாலிங்கம் பாடறாரே 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...’ அதைச் சொல்றதா, இல்லே 'பாட்டும் நானே’ங்கற டி.எம்.சௌந்தரராஜன் பாடற பாட்டைச் சொல்றதா? கே.வி.மகாதேவனுக்கு ஒரு 'சபாஷ்’ சொல்ல லாம்.

மீனா: எல்லாம் சரி... ஒரு தமிழ்ப் புலவரை வச்சுக்கிட்டு 'காமெடி’ பண்ணி இருக்க வேண்டாமோன்னு தோணிச்சு!

சண்: ஏன், நாகேஷ் ரொம்ப நல்லா பண்றாரே அதை! புரா ணப் படத்திலே ரொம்ப அழகா காமெடி கொண்டு வந்திருக்காங் கன்னுதான் எனக்குத் தோணுது!

மீனா: சமூகப் படங்கள் பெரு கிப் போய்விட்ட இந்தக் காலத் திலே, இப்படி ஒரு புராணப் படம் வந்து, அதுவும் இவ்வளவு நல்லா அமைஞ்சது ரொம்பவும் சந்தோஷப்பட வேண்டிய விஷயங்க. அடுத்த வாரம் நான் இன்னொரு தடவை இந்தப் படத்தை போய்ப் பார்க்கலாம்னு இருக்கேன்.

சண்: போகும்போது சொல்லு; நானும் வரேன்!


விகடன் விமர்சனக் குழு[/tscii:063505536b]இன்று ஜெ முவீஸ் தொலைக்கட்சியில் காலை திருவிளையாடல் திரைப்படம் ஒளிப்பரப்பப் பட்டது. விகடனில் வந்த விமர்சனம் முற்றிலும் சரியாகவே இருந்தது.

நடிகர் திலகத்தின் நடிப்பும், வசனமும், காஸ்ட்யூமும் சிவபெருமான் வேடத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தது.

தருமி வேடத்தில் நாகேஷ் நடிப்பு தூக்கலாக இருந்தும், சிவாஜி அவர்கள் அதனைப் படத்தில் அனுமதித்து இருப்பது பெரும் சிறப்பு.

pammalar
17th December 2010, 06:35 PM
Besides the above, there were several more lovely songs....

kaakai siraginile nandhalaalaa
malargalile pala niram kandEn
gOpiyar konjum ramannaa
hari hari gOkula ramanaa
vaaranam aayiram
pachai maamali pOl mEni (national anthem in my house)
maargazhi thingal


Dear Mr. NOV,

Thanks a lot for "THIRUMAL PERUMAI" album. Each and every song in it is a divine treasure.

இவை தவிர, "கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி", "கரையேறி மீன்விளையாடும் காவிரிநாடு", "கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்" ஆகிய அருமையான பாடல்களும் உண்டு.

'வைகுண்ட ஏகாதசி' சிறப்புப் பாடலாக, "திருமால் பெருமைக்கு நிகரேது" பாடலை குறிப்பிட்டு பதிவிட்டதன் காரணம், பகவான் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களும் அப்பாடலில் அதியற்புதமாக இடம்பெறுவதனால் தான்.

"பச்சைமாமலை போல்மேனி" is one of my ALL-TIME FAVOURITES !!!

Regards,
Pammalar.

RAGHAVENDRA
17th December 2010, 06:35 PM
Dear Gnanaguruswamy,
With the blessings of Nadigar Thilagam and best wishes from our fans, you will secure high marks in your exams. It is for sure.
With warm regards,
Raghavendran

pammalar
17th December 2010, 08:04 PM
pachai maamalai pOl mEni (national anthem in my house)


தொண்டரடிப்பொடியாழ்வார் என்கிற விப்ரநாராயணர் அருளிய
திவ்ய ப்ரபந்தப் பாசுரம்

"பச்சைமா மலைபோல் மேனி"

http://www.youtube.com/watch?v=MFQvEfKgaLk

http://www.raaga.com/player4/?id=72007&mode=100&rand=0.2940310991834849

திரைப்படம் : திருமால் பெருமை(1968)

இசை : திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்

பாடியவர் : பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன்

தொண்டரடிப்பொடியாழ்வாராக நமது நடிப்புலக மகான்...

அந்த பக்தி, பரிவு, சாந்தம், கருணை, கனிவு, பொலிவு, தீட்சண்யம், தேஜஸ்...

SIVAJI Villupuram Chinnaiah GANESAN...

THE GREATEST ACTOR OF THE UNIVERSE...EVER ! EVER !! & FOREVER !!!

பக்தியுடன்,
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.

pammalar
18th December 2010, 03:30 AM
சென்னை திருவல்லிக்கேணி 'ஸ்டார்' திரையரங்கில், இன்று 17.12.2010 வெள்ளி முதல், தினசரி பகல் 11:30 மணிக் காட்சியாக, கலையுலக மகானின் "சரஸ்வதி சபதம்" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றிநடைபோட்டு வருகிறது.

இத்தகவலை எமக்களித்த ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th December 2010, 05:52 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 162

கே: கலைக்குரிசிலின் ஜோடியாக எந்த நடிகை தற்போது அதிக படங்களில் நடித்து வருகிறார்? (மா.சிவாஜி தாசன், சென்னை - 28)

ப: லேடியை நம்பி ஜோடி சேர்ப்பதில்லை இந்தக் குரிசில்!

(ஆதாரம் : பேசும் படம், மே 1969)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th December 2010, 06:20 PM
லேட்டஸ்ட் [16-31 டிசம்பர் 2010] 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் 'ஸ்டார் பதில்கள்' பகுதியில் ஒரு வாசகரின் கேள்விக்கு நடிகர் நாசரின் பதில்:

எஸ்.மன்னர் மன்னன்(வாசகர்) : "நடிப்பில் இப்படி அசத்துறீங்களே நாசர் சார்..., உங்களை அசத்திய நடிகர் யாருன்னு சொல்ல முடியுமா?"

நாசர் : "நிச்சயமாக இன்னும் நூறாண்டு காலம் சென்றாலும் நம்மை அசத்துகிறவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான் !"

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th December 2010, 08:18 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 163

கே: "திருவிளையாடல்" படம் வெள்ளிவிழாப் படமாக இருக்குமா? (குமாரிவனஜா, மதுரை)

ப: சென்னையிலும் மற்றும் வெளியிடப்பட்ட எல்லா இடங்களிலிருந்தும் வரும் தகவல்கள் உற்சாகம் தரும் வகையில் இருக்கின்றன. அநேகமாக வெள்ளிவிழாப் படமாக இது அமையும்.

(ஆதாரம் : கலைப்பொன்னி, அக்டோபர் 1965)

[31.7.1965 அன்று வெளியான "திருவிளையாடல்" 21.1.1966 அன்று 25 வாரங்களைப் பூர்த்தி செய்து வெள்ளிவிழாக் கொண்டாடியது உலகறிந்ததே! சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய 3 திரையரங்குகளில் ஒவ்வொன்றிலும் 179 நாட்கள் ஓடியது. மதுரை ஸ்ரீதேவி திரையரங்கில் [167 நாட்கள்] நூலிழையில் வெள்ளிவிழாவைத் தவறவிட்டது. இக்கேள்வி-பதில் வெளியான காலகட்டத்தில் "திருவிளையாடல்" சென்னை மற்றும் தென்னகமெங்கும் 50 நாட்களை மிக வெற்றிகரமாகக் கடந்து இமாலய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த நேரம்.]

அன்புடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
20th December 2010, 09:10 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 162

கே: கலைக்குரிசிலின் ஜோடியாக எந்த நடிகை தற்போது அதிக படங்களில் நடித்து வருகிறார்? (மா.சிவாஜி தாசன், சென்னை - 28)

ப: லேடியை நம்பி ஜோடி சேர்ப்பதில்லை இந்தக் குரிசில்!

(ஆதாரம் : பேசும் படம், மே 1969)

அன்புடன்,
பம்மலார்.

Yes Mr.Pammalar sir,

It is 100% true...

pammalar
22nd December 2010, 08:46 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 162

கே: கலைக்குரிசிலின் ஜோடியாக எந்த நடிகை தற்போது அதிக படங்களில் நடித்து வருகிறார்? (மா.சிவாஜி தாசன், சென்னை - 28)

ப: லேடியை நம்பி ஜோடி சேர்ப்பதில்லை இந்தக் குரிசில்!

(ஆதாரம் : பேசும் படம், மே 1969)

அன்புடன்,
பம்மலார்.

Yes Mr.Pammalar sir,

It is 100% true...

Thank you very much, Mr.JR Sir !

Regards,
Pammalar.

pammalar
22nd December 2010, 09:46 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 164

கே: "கலாட்டா கல்யாணம்" படத்தில் சிவாஜியின் நடிப்பு எப்படி? (வி.ஜி.மூர்த்தி-வி.சி.சேகர், வடாலா, பம்பாய்)

ப: ஒரே கலாட்டா தான் போங்கள்!

(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1968)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd December 2010, 09:58 PM
கோவை 'டிலைட்' திரையரங்கில், கடந்த வெள்ளி (17.12.2010) முதல் திங்கள் (20.12.2010) வரை,
ஸ்ரீ சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்", தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டு, நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.வெள்ளியங்கிரி அவர்களுக்கு கனிவான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd December 2010, 10:09 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 165

கே: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி...? (எஸ்.தலாயிநாதன், மன்னார்குடி)

ப: நடிப்பின் இலக்கணம் ! தமிழ்த் திரையின் திலகம் !

(ஆதாரம் : ராணி, 26.12.2010) [லேட்டஸ்ட் 'ராணி' இதழ்]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd December 2010, 11:01 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 166

கே: எனக்கு சிவாஜியை நேரில் சந்தித்துப் பாராட்ட ஆசையாக இருக்கிறது. என் எண்ணம் நிறைவேற வழி உண்டா? (பி.சாந்தகுமாரி, அண்ணாமலை நகர்)

ப: நிச்சயம் உண்டு. காலையில் எட்டு மணிக்கு முன்பு பெரும்பாலான நாட்களில் அவரை வீட்டில் சந்திக்கலாம்.

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1968)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd December 2010, 11:14 PM
மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் உள்ள 'லட்சுமி' திரையரங்கில், 17.12.2010 வெள்ளி வைகுண்ட ஏகாதசி முதல் நேற்று 22.12.2010 புதன் வரை ஆறு நாட்களுக்கு, கலையுலக சொக்கநாதரின் "திருவிளையாடல்" திரைக்காவியம் வெளியாகி வெற்றி நடை போட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு நள்ளிரவுக் காட்சியும் நடைபெற்றுள்ளது.

நாளை 24.12.2010 வெள்ளி முதல், சென்னை மண்ணடி 'பாட்சா' திரையரங்கில் (பழைய 'மினர்வா'), தினசரி பகல் 11:30 மணிக் காட்சியாக, வாழ்வியல் திலகத்தின் "எங்க மாமா" திரைக்காவியம் திரையிடப்படுகிறது.

இனிக்கும் இந்த இரு தகவல்களை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நன்றிகள் பற்பல !

அன்புடன்,
பம்மலார்.

ajithfederer
24th December 2010, 12:01 PM
http://www.youtube.com/watch?v=b3ku7VgUi30&feature=channel

:lol:

One of my favorite old songs. Remember laughing a lot when I was a kid. NT, MR Radha are a blast. Attagaasam. Chanceae illa. Arumayana expressions from both NT and MRR. Balaji is great too. Excellent Song. Have to watch this film again.

goldstar
24th December 2010, 03:06 PM
BalePandiya, ever green movie. Even I have watched more than 25 times. I don't feel bore to watch it again.

I believe this movie made in very very short time (16 days ??) but unbelievable performance by NT and MR Radha.

I request Murali sir and Swamy sir to add more interesting details. Murali sir, more details about this movie in Madurai theatre.

Cheers,
Sathish

abkhlabhi
24th December 2010, 05:09 PM
how are from Central to Minerva theatre (mannady) ?

pammalar
24th December 2010, 06:45 PM
how are from Central to Minerva theatre (mannady) ?

Dear Bala Sir,

From Central to Mannady 'Minerva' [now it is called 'Batcha'], it may be hardly two kms. If you travel by Auto, it will take a maximum travel time of 15 mins. If you go by Bus, you have to get down at "Beach Railway Station" Bus Stop. From there, it is very near. You can enquire & have a walk. This whole process will take a maximum time of 20 to 25 mins.

[Bus Nos. from Central to Beach Railway Station : 1B, 1C, 1D, 101 etc.]

Regards,
Pammalar.

pammalar
24th December 2010, 08:04 PM
Dear goldstar Satish,

One flash about 'Bale Pandiya' in Madurai is, in its first run, it got released at Central Cinema and ran for 49 victorious days. It ran from 26.5.1962 to 13.7.1962.

More to follow !

Regards,
Pammalar.

pammalar
24th December 2010, 11:00 PM
1945-ம் ஆண்டின் இறுதியில் [டிசம்பர் 1945], சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் ஏழாவது சுயமரியாதை மாநாட்டில், நாடக உலக நடிகர் வி.சி.கணேசன், பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" நாடகத்தில் வீர சத்ரபதி சிவாஜியாக வாழ்ந்து காட்டியதை கண்டு வியந்த பெரியார், அவருக்கு 'சிவாஜி கணேசன்' என்ற பெயரை சூட்டி வாழ்த்தினார். அன்று முதல் விசிஜி, "சிவாஜி" ஆனார்.

கலையுலகின் பகலவனுக்கு பட்டம் சூட்டிய பகுத்தறிவுப் பகலவன் 'வைக்கம் வீரர்' தந்தை பெரியார் அவர்களது 37வது ஆண்டு நினைவு தினம் இன்று (24.12.2010).

பம்மல் ஆர்.சுவாமிநாதன்.

pammalar
25th December 2010, 03:42 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 167

கே: சிவாஜி கணேசனைப் பற்றி எம்.ஜி.ஆர். என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறார்? (கண்ணன், மதுரை)

ப: தனது நண்பர்களில் ஒருவர் என்றும் இந்தியாவின் நிகரற்ற நடிகர் எனவும் கருதுகிறார்.

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1959)

இன்று 24.12.2010 முன்னாள் தமிழக முதல்வர் மக்கள் திலகம் அமரர் எம்.ஜி.ஆர். அவர்களின் 23வது ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர்.சுவாமிநாதன்.

saradhaa_sn
25th December 2010, 10:55 AM
நடிகர்திலகம் பரதனாகவும், தேவுடுகாரு என்.டி.ஆர். ராமனாகவும் நடித்த 'சம்பூர்ண ராமாயணம்' படத்தைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள், "படத்தைப்பாராட்டுகிறேன், குறிப்பாக நம் பரதனைப் பாராட்டுகிறேன்" என்று வாழ்த்தினார்.

இன்று, சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், சுதந்திரப்போராட்ட வீரருமான மூதறிஞர் 'ராஜாஜி' அவர்களின் 38-வது ஆண்டு நினைவு தினம் (25.12.2010).

saradhaa_sn
25th December 2010, 11:05 AM
'எப்படிப்பட்ட குறையுள்ளவர்களிடத்திலும் சில நல்ல விஷயங்கள் இருக்கும். அவர்களின் குறைகளை விடுத்து நல்லவற்றைப்பற்றி மட்டுமே பேசுங்கள்' என்று போதித்த ஏசு பிரான், தன் சீடர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒரு நாய் செத்து, துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. சீடர்கள் நாற்றம் தாங்காமல் மூக்கைப்பிடித்துக்கொள்ள, ஏசு பிரான் 'பார்த்தீர்களா, அந்த நாயின் பற்கள் எவ்வளவு வெண்மையாக இருக்கின்றன' என்று வியந்தார்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

pammalar
25th December 2010, 02:22 PM
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

MERRY MERRY CHRISTMAS !! HAPPY HAPPY CHRISTMAS !!!

pammalar
26th December 2010, 01:22 AM
"உலகமெல்லாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்... / தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே"

http://www.youtube.com/watch?v=CMfbEd5aggI

படம் : வெள்ளை ரோஜா(1983)

படைப்பு : காவியக்கவிஞர் வரகவி வாலி

இசை : இசைஞானி இளையராஜா

பாடியவர் : காந்தக் குரலோன் மலேசியா வாசுதேவன், குழுவினர்

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
27th December 2010, 12:10 PM
நன்றி Mr . Pammalar . புதிய பறவையை போல் எங்க மாமாவை மிஸ் செய்யவில்லை. சென்னையில் 1 /2 நாள் வேலையாக train டிக்கெட் செய்திருந்த பிறகு, உங்கள் தகவல் பிறகு 'எ.மா" விற்காக evening shadpdhi ட்ரெயினில் திரும்பவேண்டிய நான், cancel செய்து விட்டு, இரவு ட்ரெயினில் திரும்பினேன்.

26 ஆம் தேதி, சண்டே , காலை 11 மணி அளவில் சென்னை இறங்கி (Shadapthi), ஆட்டோவில் Batcha theatrekku சென்றேன். முதல் வெளியிட்டில் வெற்றி அடைந்த படம். பல முறை மறு வெளியிட பட்ட படம். ஒரே காட்சி மற்றும் போதிய விளம்பரம் இல்லாததால், 10 அல்லது 20 பேர் தான் வருவார்கள் என்று நினைத்தேன். அதே போல் 10 க்கும் கம்மியாக தான் Theatre வெளியில். ஒரு விதமான ஏமாற்றம். மீக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் திலகத்தின் படத்தை திரையில் காணும் வாய்ப்பை நழுவ விருப்பம் இல்லை. 28 /02 /1991 அன்று என் நண்பனுடம் "மனோகரா" படத்தை சூப்பர் (b 'lore ) திரைஅரங்கில் பார்த்தது. பிறகு நடிகர் திலகத்தின் படத்தை திரைஅரங்கில் பார்த்ததில்லை. 19 வருடங்களுக்கு பிறகு ENGA MAMA வை திரையில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

யாரும் வரவில்லை என்றாலும், நான் ஒருவனே பார்க்க முடிவு செய்தேன், டிக்கெட் வாங்கி கொண்டு திரை அரங்கில் நுழைத்தேன். ஒருவர் பின் ஒருவராக மக்கள் வந்தனர். ஆச்சரியம். படம் ஆரம்பிக்கு முன் 10 20 ஆனது. 20 30 ஆனது. 30 70 ஆனது. 70 க்கு பேர் மேல் இருக்கலாம். கம்மி மட்டும் இல்லை.
சராசரி (average ) collections : 20 பேர் * 15 = 300 (20 பேர் மேல் இருப்பார்கள்)
50 பேர் * 12 = 600 (50 பேர் மேல் இருப்பார்கள்)
கிட்ட தட்ட ` 1000 collections .

mulitplex திரை அரங்கதுடன் compare செய்தால் , இந்த திரை அரங்கம் மிகவும் மோசம். sound நன்றாக இருந்தது. திரை பட ப்ரிண்டும் பார்க்கும் படி இருத்தது. நடிகர் திலகத்தின் நடிப்பு சொல்லவே வேண்டாம். மிக பெரிய ஆச்சரியம் , கதாநாயகியுடன் ஒரு டூயட் பாடல், கனவு பாடல் , எதுவும் இல்லை. நிர்மலாவுடம் பாடல். JJ வுடன் பாடல் எதுவும் இல்லை. (ஒரு டூயட் பாடல் இருத்ததாக நினைவு). படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை , முடித்ததும் தெரியவில்லை. இன்றைக்கு வரும் படங்களை பார்க்கும் போது, அப்பப்ப டைம் பார்த்து கொண்டு இருப்பேன், படம் எப்பொழுது முடியும் என்று.

மீண்டும் நன்றி Mr .Pammalar

pammalar
27th December 2010, 10:01 PM
புதிய பறவையை போல் எங்க மாமாவை மிஸ் செய்யவில்லை. சென்னையில் 1 /2 நாள் வேலையாக train டிக்கெட் செய்திருந்த பிறகு, உங்கள் தகவல் பிறகு 'எ.மா" விற்காக evening shadpdhi ட்ரெயினில் திரும்பவேண்டிய நான், cancel செய்து விட்டு, இரவு ட்ரெயினில் திரும்பினேன்.


தங்களின் 'சிவாஜி கணேச' பக்தியை கண்டு அடியேனுக்கு மெய் சிலிர்க்கிறது !

தாங்கள் என்றென்றும் வாழ்க ! வளர்க ! வெல்க !

pammalar
27th December 2010, 10:29 PM
டியர் பாலா சார்,

தங்களின் பதிவிற்கு நன்றி ! எனது நெருங்கிய நண்பரும், சிவாஜி பக்தருமான திரு.எஸ்.ராமஜெயம் அவர்களும் தங்களைப் போல் நேற்று 26.12.2010 ஞாயிறு அன்று 'பாட்சா'விற்கு "எங்க மாமா"வைப் பார்க்க சென்றிருந்தார். கிட்டத்தட்ட தாங்கள் பதிவிட்ட தகவல்களையே அவரும் நேற்றிரவு எனக்குக் கூறினார். அதாவது, 75 நபர்களுக்கு மேல் படம் பார்க்க வந்திருந்தனர். படத்தின் பிரிண்ட் பரவாயில்லை. நடிகர் திலகம், கலைச்செல்வி தோன்றும் சூப்பர் டூயட் பாடலான "என்னங்க ! சொல்லுங்க !" பாடல் படப்பிரதியில் இல்லை. இவை அனைத்தையும் தெரிவித்தார்.

19 வருடங்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் நமது நடிகர் திலகத்தின் திரைக்காவியத்தை தாங்கள் கண்டு களித்ததை தாங்கள் கூறக் கேட்கும் போது எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது, அப்படியிருக்க தங்களின் மகிழ்ச்சியை அளவிடவே முடியாது.

தங்களின் சென்னை விஜயத்தின் போது, பல அலுவல்களுக்கிடையே, முதல் முக்கிய அலுவலாக, "எங்க மாமா"வை தரிசித்ததற்கும், தரிசித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th December 2010, 03:09 AM
சேலம் 'ஸ்ரீசரஸ்வதி' திரையரங்கில், 25.12.2010 சனிக்கிழமை முதல், தினசரி 4 காட்சிகளாக, கலைக்கடவுளின் "ஆலயமணி" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றி நடைபோட்டு வருகின்றது. இன்று 27.12.2010 திங்கட்கிழமையும் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது.

இத்தகவலை எமக்கு வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
28th December 2010, 11:43 AM
டியர் பாலா,

தங்களின் 'எங்க மாமா' பட திரையரங்க அனுபவங்களை அழகு தமிழில் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

முன்பெல்லாம் அரங்குகளுக்குச் சென்றுதான் படம்பார்க்க முடியும் என்ற நிலை மாறி, 'படம் பார்க்க பலவழிகள்' தோன்றிவிட்ட இக்காலத்தில் பழைய படங்களுக்கு அதிக கூட்டம், அரங்கு நிறைவு என்பதெல்லாம் எதிர்பார்க்க முடியாத ஒன்றே. அது போக கிட்டத்தட்ட அந்த ஏரியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் பலமுறை திரையிடப்பட்டுவிட்ட படம் அது.

தவிர, 'மினர்வா' (பாட்சா) திரையரங்கின் மொத்த இருக்கைகளே 300 தான். (சென்னை நகரின் முதல் மினி தியேட்டர்). அதில் 75 இருக்கைகள் நிறைந்தன என்பது ஒன்றும் மோசமானதல்ல. எழுபதுகளில் சென்னையில் இருந்த குறைவான எண்ணிக்கையுள்ள ஏர் கண்டிஷன் அரங்குகளில் அதுவும் ஒன்று. பெரும்பாலும் இந்திப்படங்களே திரையிடப்படும் அங்கு பலர் அதன் குளிர்சாதன வசத்திக்காகவே செல்வார்கள். அப்போதைக்கு அதிகபட்ச கட்டணமே 3 ரூபாய்தான். கடும் கோடைக்காலங்களில் மண்ணடி மற்றும் கொத்தவால் சாவடி ஏரியாவாசிகள் 'வாய்யா, மினர்வாவில் கொஞ்ச நேரம் ஏ.சி.யில் தூங்கிட்டு வருவோம்' என்று போவாரக்ளாம். என் கணவர் அவரது மாணவப்பருவத்தில் 'சேத்னா', 'தஸ்தக்' போன்ற 'ஒருமாதிரியான' படங்களை அங்கே பார்த்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

கொஞ்சம் வித்தியாசமான அரங்குதான். கீழே சிமெண்ட் குடோன். மாடியில் தியேட்டர். குஷன் அல்லாது பிரம்பு சேர்கள் (இப்போது எப்படீன்னு தெரியவில்லை).

இருந்தபோதிலும், அந்த அரங்கில் நடிகர்திலகத்தின் பழைய திரைப்படமொன்றைப் பார்ப்பதற்காக பெங்களூருவில் இருந்து ஒரு ரசிகர் ரயிலில் பயணித்து வந்திருக்கிறீர்கள் எனும்போது, நீங்கள் ஒரு ரசிகர் பார்த்ததே 100 ரசிகர் பார்த்ததற்குச் சமம். (பாட்சா அரங்கில் படம் பார்த்தவருக்காக 'பாட்சா' டயலாக்).

வீடியோக்கள், சிடிக்கள், டிவிடிக்கள், டிவி சேனல்கள் இவற்றின் படையெடுப்பால், அரங்குகளில் படம் பார்க்கும் பரவசத்தை எப்படி இழந்தோம் என்பதை, எனது ப்ளாகில் 'தொலைந்துபோன திரில்' என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்:

http://ennangalezuththukkal.blogspot.com/2010/12/blog-post_24.html

abkhlabhi
28th December 2010, 03:38 PM
டியர் பம்மலார் சார்,
அன்று திரை அரங்கில் இரண்டு பேர் என்னையே பார்த்து கொண்டிருதார்கள். உங்கள் நண்பராக இருக்கலாம். காரணம், சென்னையில் மதிய வேளையில், வெயிலில் குளிருக்காக சட்டைக்கு மேலே அணியும் மேலங்கி (Sweater ) அணிந்திருதேன். திரையில் நடிகர் திலகத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரே குறிகோளுடன், மற்ற வேலைகளை தள்ளி போட்டு கொண்டேன்.

பெங்களூரில் பழைய படங்கள் (NT அண்ட் MT ) பார்ப்பது வெறும் கனவாகிவிட்டது. இனி வரும் நாட்களில் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியானால், சென்னைக்கு வர முயற்சிக்கிறேன்.

Sharada மேடம்,
'தொலைந்துபோன திரில்' அருமையான பதிவு.

நான் உங்களை போலவோ , முரளி, ராகவேந்திரன், பம்மலார், கிரிஜா மேடம், மற்றும் லட்சகணக்கான ரசிகர்களை போல் அல்ல.
நான் ரசிகர்களின் ரசிகன். நீங்கள் எல்லோரும் நடிப்பு கடவுளின் பூசாரிகள். நான் உங்கள் முலம் , உங்களில் நடிப்பு கடவுளை காண துடிக்கும் பக்தன்.

RAGHAVENDRA
28th December 2010, 05:58 PM
அன்புமிக்க பாலகிருஷ்ணன்,
தங்களுடைய சென்னை விஜயத்தில் தங்களைக் காணும் வாய்ப்பு கிட்டாதது எனக்கு வருத்தமே. என்றாலும் தங்கள் பதிவுகள் அக்குறையை நீக்குகின்றன. நாம் அனைவருமே நடிகர் திலகத்திற்கு நம்மாலான பங்கை அளிக்கும் தொண்டர்கள் தான். இதில் எவ்வித வேறுபாடும் இல்லை.
எங்க மாமா படத்தில் என்னங்க பாடல் அரங்கில் இடம் பெறாதது மிக வருத்தமே. அப்பாடலில் மெல்லிசை மன்னரின் மாறுபட்ட இசையும் ரிதமும் பிற்பகுதியில் தாளத்தை மாற்றி துள்ளல் இசை இடம் பெறுவதும் உள்ளத்தைக் கொள்ளும். அந்த இசைக் கேற்ப கலைச்செல்வியும் நடிகர் திலகமும் ஆடும் நடனம் அரங்கை அதிர வைக்கும். படம் வெளியாவதற்கு முன் மற்ற பாடல்களால் படம் பிரபலமாயின என்றால், வெளியான பின் இநதப் பாடலுக்காகவே வெலிங்டன் திரையரங்கில் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் வந்தார்கள், நான் உட்பட. சொர்க்கம் பக்கத்தில் பாடலில் ஒரு விதம் என்றால் என்னங்க பாட்டு மற்றொரு விதம். படமாக்கப் பட்ட விதம், நடிகர் திலகத்தின் இளமை துள்ளும் தோற்றம், கலைச்செல்வியும் நடிகர் திலகமும் இணைந்த முதல் வண்ணப் படம் என்கிற பெருமை அனைத்தும் சேர்ந்து ரசிகர்களின் நெஞ்சில் எங்க மாமா நீஹ்கா இடம் பெற்றதென்றால் அது உண்மை.

சகோதரி சாரதா,
தங்களுடைய பதிவுகள் ஒவ்வொரு ரசிகருடைய உள்ளக் கிடக்கையினையும் பிரதி பலிக்கின்றன. மிக்க நன்றி.

அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
28th December 2010, 10:24 PM
டியர் பாலா,
இருந்தபோதிலும், அந்த அரங்கில் நடிகர்திலகத்தின் பழைய திரைப்படமொன்றைப் பார்ப்பதற்காக பெங்களூருவில் இருந்து ஒரு ரசிகர் ரயிலில் பயணித்து வந்திருக்கிறீர்கள் எனும்போது, நீங்கள் ஒரு ரசிகர் பார்த்ததே 100 ரசிகர் பார்த்ததற்குச் சமம். (பாட்சா அரங்கில் படம் பார்த்தவருக்காக 'பாட்சா' டயலாக்).


பிரமாதம் !!!

pammalar
29th December 2010, 02:47 AM
சகோதரி சாரதா,

'பாட்சா' திரையரங்க மலரும் நினைவுகள் அருமை !

டியர் பாலா சார்,

சென்னையில் நடிகர் திலகத்தின் காவியங்கள் வெள்ளித்திரையில் வெளியிடப்படும் போது அவசியம் வாருங்கள் ! தங்களைச் சந்திக்க ஆவலாக உள்ளோம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th December 2010, 02:52 AM
மதுரை கீரைத்துறை பகுதியில் உள்ள 'நியூடீலக்ஸ்' திரையரங்கில், சனி(25.12.2010), ஞாயிறு(26.12.2010) இரண்டு நாட்கள் மட்டும், தினசரி 3 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின்
"இருவர் உள்ளம்" திரைக்காவியம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இத்தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
29th December 2010, 12:52 PM
Published in Vartha telugu magazine on 5/8/2001.

http://abkhlabhi.blogspot.com/2010_12_01_archive.html

abkhlabhi
29th December 2010, 12:54 PM
Published in Vartha Telugu Magazine on 5th Aug 2001 issue.

Titled NATANAKE BHASYAM CHPPINA NADIGAR THILAGAM[/b]
(means Nadippuke Ilakanam vagutha Nadigar thilagam)

http://abkhlabhi.blogspot.com/2010_12_01_archive.html

Don't know telugu. Can any one translate.

abkhlabhi
29th December 2010, 01:01 PM
From The Astrological Magazine - Aug 2004 issue - Page No.670/10

True King Maker

Para 4................................................. ....In 1964, when Nehru died and in 1966 when Lal Bahadur Sastri died, the Prime Minister's post was handed on a platter to the Tamil Nadu Leader K.KAMARAJ. Almost all Congressmen on those TWO OCCASIONS BEGGED HIM TO BE PRIME MINISTER. . K.KAMARAJ made the SUPREME SACRIFICE when he refused and arrived at a consensus in favour of Sastri in 1964 and Indira Gandhi in 1966, THUS BECOMING A KINGMAKER.

goldstar
29th December 2010, 03:53 PM
Thanks abkhlabhi for sharing wonderful leader. Just look at current leaders, each and every one got wealth for 100 generations. Kamaraj please come back and save us...

saradhaa_sn
29th December 2010, 05:05 PM
Thanks abkhlabhi for sharing wonderful leader. Just look at current leaders, each and every one got wealth for 100 generations. Kamaraj please come back and save us...
அதுமட்டுமல்ல... பெருந்தலைவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு முதலில் மூன்று ஆண்டுகளும், பின்னர் மீண்டும் ஐந்து ஆண்டுகளும் (மொத்தம் எட்டு ஆண்டுகள்) சிறையில் இருந்தார். இதுவரை இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. காரணம் அவர் விளம்பரப் படுத்திக்கொள்ளவில்லை. இரண்டு மாதங்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்ததை இரண்டு தலைமுறைகளாக மேடைதோறும் முழங்கி வரும் தலைவர்களையே மக்களுக்குத் தெரியும்.

goldstar
29th December 2010, 05:57 PM
Thanks Saradha madam for sharing unknown news about Kamaraj. I knew to whom you refer. Like me every one waiting for dawn...

Cheers,
Sathish

abkhlabhi
30th December 2010, 11:36 AM
டிசம்பர் 31 அன்று பிறந்தநாள் காணும்

தமிழ் திரையுலகின் இளைய திலகத்திற்கு

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

abkhlabhi
30th December 2010, 05:55 PM
[tscii:4800afb806]Nadigr Thilagam Sivaji Ganesan was born on 1st October 1928. Date of Birth 1 represent the Planet Sun. Sun provides the dominant power. His Basic Number 01 (0+1) added together gives Number 1. The Month October , the month of born is the period number of 3 in Numerology represents the planet Jupiter.

NT was influenced by Number 1 and 3 and
if total 1 and 3 it comes to 4 and
last Number 9

In numerology number 1 stands for the planet Sun. Number 1 represents all that is creative, individual and positive. A person born under the birth number 1 is creative in his or her work, inventive, strongly individual, definite in his views. Number 1 people are ambitious, they dislike restraint, they always rise in whatever their profession or occupation may be. They desire to become the heads of whatever their businesses are. NADIGAR THILAGAM WAS NO EXCEPTION TO ALL THESE QUALITITES.
The period Number 3
The period number of NT is 3 (October). In numerology the number 3 stands For the planet Jupiter. Number 3 people, like the number 1 individuals, are decidedly ambitious; they are never satisfied by being in their subordinate positions; their aim is to rise in the world, to have control and authority over others. They are excellent in execution of the commands; they love order and discipline in all things; they readily obey orders themselves, but they also insist on having their order obeyed.

Number 3 people often rise to the very highest positions in any business, profession or any sphere in which they may be found. They often excel in positions of authority, in government and in life generally; and especially in all posts of trust and responsibility, as they are extremely conscientious in carrying out their duties.
Their faults are that they are inclined to be dictatorial, to ' lay down the law ' and to insist on carrying out their own ideas. For these reasons, although they are not quarrelsome, they succeed in making many enemies.

These Basic and Period Numbers 1 and 3 influenced the important incidents and events in NT's personal, Film career. Thorough numerological analysis of the incidents and events in his personal life and career, bear testimony to this influence of number 3 in her life.
1) Year in which turning Point in Drama - 1945 =( 1+9+4+5 = 19) when reduced to single digit gives number 1

2) Name of the Drama - Sivaji Kanda Hindu Rajyam = Total comes to 57 when reduced to single digit gives number is 3

3) First Film Name -Parasakthi = Total comes to 28 when reduced to single digit number gives 1

4) 50th Film released on -15/08/1958 = Total comes to 37 when reduced to single number gives 1

5) 125th Film released on 29/11/1968 = Total comes to 37 when reduced to single number gives 1

6) 150th Film released on 03/07/1971 = Total comes to 28 when reduced to single number gives 1

7) 175th Film released on 11/4/1975 = Total comes to 28 when reduced to single number gives 1

8) 225th Film released on 21/05/1982 = Total comes to 28 when reduced to single number gives 1

9) NT last Film, Pooparika Varigirom = Total comes to 64 when reduced to single number gives 1

HIS FIRST AND LAST FILM - NUMBER COMES TO 1

10) Year in which he got SIVAJI PATTAM = 1945 - when total 1945, reduced to single digit gives 1
11) Silver Jubliee Films are = 19 - when reduced to single digit gives 1
12) Year of Mother’s death = 1971 when reduced to single digit gives 1
13) Year of Father’s Death = 1981 when reduced to single digit gives 1
12) Age at the time of Death = 73 , when reduced to single digiti gives 1
13) 275th Film released on 10/12/1988 = total comes to 30 when reduced to single digit gives 3
14) Shanti Theatre opened on 12/01/1961 = total comes to 21 when reduced to single digit gives 3
15) Year of NT Stamp released = 2001 = when reduced single digit gives 3
16) TOTAL OF NADIGAR THILAGAM COMES TO 39, when reduced to single digit gives 3

His Life Path Number is 4,ie (1+10+1+9+2+8) = 4. Number 4 considered to be releated to Sun, Planet for Number 1 written as 4-1 so influence of number 4 is also seen his life.
1) His Original Name is V.C.Ganesa Murthy , when total it comes to 49 , when reduced to single digit gives 4

2) His Date of birth , Month and Year = 01/10/1928 = when total it comes to 22, when reduced to single digit gives 4


3) Place of Birth = Villupuram, when total this comes to 40 reduced to single digit gives 4

4) His birth Star and Rasi , Ashwini and Mesha total 22 each and reduced to single digit gives 4

5) Drama Experience 40 years , when reduced to single digit gives 4

6) Year of Padma Shree Award 1966 - when reduced to single digit it comes to 4


7) Year of Padma Bhushan Award 1984 – when reduced to single digit it comes to 4

8) Films runs 100 days and more - 85 films , when total reduced to single digit is comes to 4





Film Name :
1) Sivaji Ganesan , total comes to 36, when reduced to single digit comes to 9

2) Father’s Name Chinnaiay Mandrayar total comes to 45 when reduced to single digit comes to 9

3) Year of Drama entry - 1935 when reduced to single digit comes to 9

4) First appearance as Sita – when total Sita comes to 9

5) Total Film acted 288 – when reduced to single digit comes to 9

6) His 200th Film released on 27/1/1979 ,when reduced to single digit comes to 9

7) Last film released on 17/9/1999 , when reduced to single digit comes to 9

8) Time of Death was 8.10 (p.m.) when reduced to single digit comes to 9

9) His own theatre Shanti , when total reduced to single digit comes to 9
[/tscii:4800afb806]

pammalar
30th December 2010, 08:40 PM
டியர் பாலா சார்,

நமது நடிகர் திலகத்தின் திரியில் எத்தனையோ பதிவுகள் வெளிவந்துள்ளன. தங்களது சமீபத்திய மேற்காணும் பதிவு மிக மிக வித்தியாசமான ஒன்று. நடிகர் திலகத்தின் வாழ்க்கையை எண்கணித சாஸ்திரப்படி மிகுந்த சிரத்தையுடன், மிக நேர்த்தியாக அலசி, ஆராய்ந்து, கணித்து பதிவு செய்துள்ளீர்கள். தங்களுக்கு அடியேனது பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

[ I strongly feel that you are an expert in Numerology & Astrology, right ?! ]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th December 2010, 10:10 PM
கலைமணி கொத்தமங்கலம் சுப்புவின் கைவண்ணத்தில் கலைக்குரிசில்
[1969-ம் ஆண்டு 'சினிமா ஸ்டார்' இதழிலிருந்து]

"நவரசம் ஓடிடும் நாடியிலே ! - ஒரு
நளினம் இருந்திடும் 'பாடி'யிலே !
நடிப்பில் அவனுக்கு ஜோடியில்லே ! - ஒற்றை
நடிகன் ஐம்பது கோடியிலே !
ஆடும் கூத்தன் அருளாலே - நம்
அருமைத் தம்பி வாழியவே !
நடன சபேசன் அருளாலே - நம்
நடிகர் திலகம் வாழியவே !"

[இந்த ஆண்டு(2010) கலைமணி அவர்களின் நூற்றாண்டு]

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
31st December 2010, 12:44 AM
Bala,

Good writing about Enga Maama. I had planned initially but due to unavoidable circumstances, couldn't make it. The review was short but crisp.

Your take on NT's horoscope basis his DOB is interesting. One Doubt - I am given to understand that his Star is uthirathaadhi and not Aswini. please check. Also check the statistics, there is some error.

Satish,

BaLE Pandiyaa's review is there in the first page. Regarding it's Box office it was a Super Duper hit in it's re-releases. BR Panthulu made big money during re-releases.

சாரதா,

வருக! வருக! உங்கள் வலைப்பூ நன்றாக இருக்கிறது. மேலும் சிறப்பாக செய்வீர்கள் என நம்புகிறேன்.

பாளையங்கோட்டை சிறையை பற்றி சொல்லியிருந்தீர்கள்! அது பற்றி பேசினால் நிறைய பேச வேண்டி வரும். ஆகவே விட்டுவிடலாம்

அன்புடன்

pammalar
31st December 2010, 01:22 AM
டியர் பாலா சார்,

நமது முரளி சார் கூறியது போல், தங்களது 'நடிகர் திலகம் குறித்த எண்கணித' ஆராய்ச்சிப் பதிவில் சில புள்ளிவிவரத் தவறுகள் உள்ளன. தங்களை அடியேன் பாராட்டிய பதிவிலேயே இதனைச் சுட்டிக்காட்ட விரும்பாததால், தற்பொழுது தனியொரு பதிவாகத் தருகிறேன்.

சாதனைச் சக்கரவர்த்தியின் வெள்ளிவிழாக் காவியங்கள் : 22

அன்னை ராஜாமணி அம்மையார் அமரத்துவம் அடைந்த நாள் : 24.8.1972

சாதனைத் திலகத்தின் 100 நாள் காவியங்கள் (வெள்ளிவிழாக் காவியங்களையும் சேர்த்து) : 116

இதில், 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய காவியங்கள் (வெள்ளிவிழாக் காவியங்களை சேர்க்காமல்) : 94

அன்புடன்,
பம்மலார்.

pammalar
31st December 2010, 02:22 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 168

கே: மறைந்த டைரக்டர் பி.ஆர்.பந்துலுவிடம் மறக்க முடியாதது எது? (பி.ஆர்.ரதி, வள்ளியூர்)

ப: "வீரபாண்டிய கட்டபொம்மன்", "கப்பலோட்டிய தமிழன்" ஆகிய இரு படங்களைத் தயாரித்த பந்துலு, தமிழ்த் திரைப்பட சரித்திரத்தில் முக்கியமான இடம் பெற்றவர்.

(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1977)

[இந்த வரிசையில் "கர்ணன்" காவியமும் அவசியம் இடம் பெற வேண்டும்.]

2010-ம் ஆண்டு மாபெரும் தயாரிப்பாளர், இயக்குனர் பி.ஆர். பந்துலு அவர்களின் நூற்றாண்டு ஆகும்.

அன்புடன்,
பம்மலார்.

gopalu_kirtinan
31st December 2010, 02:33 AM
சென்ற வாரம் திருவிளையாடல் படம் பார்த்தேன். நடிகர் திலகத்தின் நடிப்பு வழக்கம் போல் அருமை. கடற்கரை மணலில் அவர் நடந்த நடையும், தன்னுடைய அனுமதி இல்லாமல் யாகத்திற்கு சென்று திரும்பி வரும் சாவித்திரியிடம் வாக்கு வாதம் செய்யும் காட்சியும், நாகேஷுடன் வரும் கேள்வி பதில் கட்சியும், எனக்கு மிகவும் பிடித்தவை.புலவர், விறகு விற்பவர் , மீனவன் என் அவர் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வேறுபாடு காட்டி இருப்பார். புலவனாக வரும் கட்சியில் முற்றும் கற்ற ஒருவரை போலவும், விறகு விற்கும் காட்சியில் படிப்பறிவு இல்லாத வெகுளியாகவும், மீனவனாக வரும் காட்சியில் ஒரு பலமிக்க வாலிபனுக்கு உரிய கம்பீரத்துடனும் நடித்து இருப்பார்.

இந்த படம் பார்த்த எனக்கு மறக்க முடியாத பல சம்பவங்கள் நினைவிற்கு வருகின்றன . அனைத்தும் நான் சிறுவனாக இருந்தபோது நடந்தவை. எங்கள் ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த ஒரு மலைக்கிராமம். எங்கள் ஊரில் கிட்டத்தட்ட அனைவரும் சிவாஜி ரசிகர்கள் தான். ஒவ்வொரு கோவில் திருவிழாவின் போதும் ஏதாவது ஒரு சிவாஜி படம் திரையிட்டு காட்டப்படும்.இரவு 8 மணிக்கு மேல் தெருக்களின் குறுக்கில் திரையிட்டு கட்டுவார்கள்.சிவாஜியின் ஒவ்வொரு அசைவிற்கும் கைதட்டல்களும் விசில் ஒலிகளும் காதுகளைக் கிழிக்கும்.எனக்கு அப்போது விசில் அடிக்க தெரியாது. அதானால் திருவிழாவில் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் விசில் ஒன்றை வாங்கி வைத்து நானும் விசில் அடித்த நியாபகம் இன்னும் நினைக்க நினைக்க இனிக்கிறது.

இப்படி பல திரைப்படங்களை திரையிட்டு காட்டும் பொழுது கிராமத்தின் அனைத்து மக்களும் ஒன்று கூடுவதால் , அவர்கள் சேர்ந்து சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது . பொது பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு தீர்க்கப்பட்டன,மேலும் அனைவருக்குள்ளும் நல்ல ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி இருந்தது . தொலைக்காட்சிகள் பெருகி விட்ட இன்று, மக்களிடையே அன்று இருந்த ஒற்றுமை சற்று குறைந்து தான் பொய் விட்டன. பொது பிரச்சனைகளில் யாரும் தலையிடுவது இல்லை.
இதை எல்லாம் நினைக்கும் பொழுது மனதிற்கு கவலையாக இருக்கிறது. சிங்க தமிழனின் நடிப்பை பார்த்து வளர்ந்த எனக்கு , இன்று நடிப்பு என்ற பெயரால் சிலர் அரங்கேற்றும் கொடூரங்கள் வெறுப்பையே அளிக்கின்றன. இனி நான் ஊருக்கு போகும் போதெல்லாம், என் மக்களுக்கு நடிகர் திலகத்தின் திரைக்கவியங்களை திரையிட்டு காட்ட வேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கிறேன். அன்று இருந்த ஒரு ஒற்றுமையை மீண்டும் கொண்டுவரவும் , நடிப்பு என்றால் என்ன என்று இன்றைய தலைமுறைகளுக்கு சொல்லவும் இது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும் என நம்புகிறேன் .

gopalu_kirtinan
31st December 2010, 02:43 AM
Thanks abkhlabhi for sharing wonderful leader. Just look at current leaders, each and every one got wealth for 100 generations. Kamaraj please come back and save us...
அதுமட்டுமல்ல... பெருந்தலைவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு முதலில் மூன்று ஆண்டுகளும், பின்னர் மீண்டும் ஐந்து ஆண்டுகளும் (மொத்தம் எட்டு ஆண்டுகள்) சிறையில் இருந்தார். இதுவரை இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. காரணம் அவர் விளம்பரப் படுத்திக்கொள்ளவில்லை. இரண்டு மாதங்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்ததை இரண்டு தலைமுறைகளாக மேடைதோறும் முழங்கி வரும் தலைவர்களையே மக்களுக்குத் தெரியும்.

சாரதா அக்கா, நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அதனால் தான் கண்ணதாசன் காமராஜரை கீழ் கண்ட வாறு புகழ்ந்து எழுதி இருக்கிறார் .

சொத்து சுகம் நாடார் , சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார் , பொருள் நாடார், தான்பிறந்த
அன்னையையும் நாடார் , ஆசைதனை நாடார் ,
நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்.

pammalar
31st December 2010, 02:55 AM
டியர் கோபால்,

"திருவிளையாடல்" திரைக்காவியம் பற்றிய அலசலும், கடந்த கால நினைவுகளும் அருமையிலும் அருமை !

தங்களின் பதிவில் தாங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களைக் காணும் போது தங்களது சமுதாய ஈடுபாடும், அக்கறையும், தொலைநோக்கும் அப்படியே மெய்சிலிர்க்க வைக்கின்றது !!

தங்களது முயற்சி மாபெரும் வெற்றியடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !!!

அன்புடன்,
பம்மலார்.

gopalu_kirtinan
31st December 2010, 03:26 AM
வாழ்த்துக்கு மிக்க நன்றி பம்மலர் அண்ணா!

எனது நண்பர்கள் மேலும் எங்கள் ஊர் பெரியோர்களின் (சிவாஜி ரசிகர்கள்) ஒத்துழைப்புடன் நான் இதை செய்து முடிப்பேன் என நம்புகிறேன்

goldstar
31st December 2010, 05:07 AM
I totally agree with Kopal. 15 years back in any religious celberation movies arranged in the night and people gathered together and discussed the current issue and mostly solved on the spot instead of dragging into court or hating each other. This way most of issues solved and we had peaceful life with neighbours. After TV people stopped talking each other, even don't know who is neighbour, this is not only in metro cities even in smaller cities started happening which is a real concern.

Regarding Thiruvilaiyadal, you have missed one song "Pattum Nane Pavavum Nane", our NT has shown how to play all the instruments with reality and made 5 NTs in one picture. Unbelieable editor, director touch. Above all our NT face reaction simply superb. Every day I watch this song in Youtube.

Regarding current actors, very pathetic to see them on the screen.
Thats main reason whenever our NT movies released there are huge crowd to watch it in the theatre. Our NT will live for another 1000 years.

Cheers,
Sathish

abkhlabhi
31st December 2010, 10:08 AM
Dear Murali and Paamalar,

As per DOB ,ie, 1/10/;1928 , NT star is Ashwini - 4th Padam only. Not uthirathaadhi.

The information and statisitcs are collected from books and internet sources. Thanks for correct information. I see to it the mistakes or wrong informations will not happen in future. as per Star I am Sure it is Ashwini.

I am not expert in Numberology and Astrology.

I am in the process of collecting more information of NT horoscope and back soon.

abkhlabhi
31st December 2010, 10:14 AM
WISH YOU EVERYONE A HAPPY, PROSPEROUS, HEALTHY AND WEALTHY NEW YEAR 2011.

pammalar
31st December 2010, 08:38 PM
இளைய திலகம் பற்றி நடிகர் திலகம்
[4.4.1999 தேதியிட்ட 'தினமலர் வாரமலர்' இதழிலிருந்து]

"பிரபு எனது இளைய மகன். 1956-ம் ஆண்டின் இறுதியில் பிறந்தான். அவன் பிறந்த போது நான் கோவையில் படப்பிடிப்பில் இருந்தேன். சில நாட்கள் கழித்துத்தான் அவனைப் பார்க்க முடிந்தது. நான் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருந்தேன். பிரபுவைப் பற்றி சொல்ல வேண்டுமானால், "He is a nice boy !". எல்லோரிடமும் அன்பாகப் பழகுவான். என்னிடம் அவனுக்கு பயம் அதிகம். சிறு வயதிலிருந்தே அவன் என்னிடம் வளரவில்லை. என் மைத்துனர் தான் அவனை வளர்த்து வந்தார். என் எதிரில் கூட வரமாட்டான். நான் கூப்பிட்டனுப்பினால் தான் வந்து பேசுவான்."

இன்று 31.12.2010 இளைய திலகம் பிரபு அவர்களின் 55வது பிறந்த நாள்.

HAPPY BIRTHDAY Mr. PRABHU ! MANY MANY MORE HAPPY RETURNS !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
31st December 2010, 10:47 PM
Dear friends,
Wish you all a happy and prosperous new year. As Saradha m'm said, we shall hope for the best.

Pls find below the link for our website calendar

for print as well as desktop wallpaper
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ntcal2011WP.jpg

for bigger printable version pm me with your email id.

Raghavendran

Murali Srinivas
31st December 2010, 11:44 PM
அனைத்து நல் இதயங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த வருடம் நம்மைப் பொறுத்தவரை முக்கியமான வருடம்.

நமது ரசிகர்களின் மெக்கா என அறியப்படும் சாந்தி திரையரங்கு தன் பொன் விழா ஆண்டை நிறைவு செய்கிறது.

பாவ மன்னிப்பு

பாச மலர்

பாலும் பழமும்

என்ற பா வரிசைப்படங்களின் பொன்விழா நிறைவு இந்த வருடம் அரங்கேறப் போகிறது.

அது மட்டுமா,

நடிகர் திலகத்தின் உயிரோடும் உள்ளத்தோடும் கலந்து விட்ட கப்பலோட்டிய தமிழனுக்கும் பொன் விழா நிறைவு ஆண்டல்லவா இது!

இந்த பொற்கால தமிழ் திரையுலகை தாண்டி தற்கால தமிழகத்திற்கு வந்தோமென்றால் நம்முடைய அல்லது நம்மை போன்ற லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பமான மீண்டும் தமிழகத்தில் பெருந்தலைவர் ஆட்சி மலர இந்த புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும். தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணையட்டும். அப்படிப்பட்ட ஒரு தேசிய பாரம்பரிய ஆட்சியில் நமது நடிகர் திலகத்தின் மணி மண்டபம் சீரோடும் சிறப்போடும் அமைக்கப் பெறட்டும்.

அனைவருக்கும் மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள்.

ஜெய்ஹிந்த்!

அன்புடன்

pammalar
1st January 2011, 03:04 AM
அனைவருக்கும் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

saradhaa_sn
1st January 2011, 11:32 AM
அனைவருக்கும் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எல்லோர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி வழியட்டும்.

தீவிரவாதம் இல்லாத உலகம், ஊழலில்லாத இந்தியா, வறுமையில்லாத தமிழகம் மலர இவ்வாண்டு துவக்கமாக அமையட்டும்.

நேற்று வடித்ததே, இலங்கைத்தமிழர்கள் வடித்த கடைசி கண்ணீர்த்துளிகளாய் இருக்கட்டும்.

கைப்பையில் பணம் எடுத்துச்சென்று, சட்டைப்பையில் பொருள் வாங்கிவரும் நிலை மாறி, சட்டைப்பையில் பணம் எடுத்துச்சென்று கோணிப்பைகளில் பொருள் வாங்கிவரும் நிலை பெருகட்டும்.

இலவசங்கள் வேண்டாம். ஆனால் அவற்றை காசுகொடுத்து வாங்கும் அளவுக்கு மக்கள் வாழ்க்கைத்தரம் உயரட்டும்.

இத்தனை பவுனுக்கு மேல் நகையணிந்தால் சிறைத்தண்டனை என்ற சட்டம் இயற்றப்படட்டும்.

'வற்றாத ஜீவநதி என்ற பெயரை மீண்டும் காவிரியன்னை பெற்றாள்' என்ற நிலைவரட்டும். பாலாறு என்ற பெயரே நிலைக்கட்டும், அது 'பாழாறு' என்ற பெயர் பெறவேண்டாம்.

நதிகள் தண்ணீர் ஓடுவதற்கே தவிர மணல் அள்ளுவதற்கல்ல என்ற நற்சிந்தனை வளரட்டும்.

'இந்தியாவில் கோயில்களை இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்துவர்களும், தேவாலயங்களை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களும், மசூதிகளை இந்துக்கள் மற்றும் கிருத்துவர்களும் பத்திரமாகப் பாதுகாக்கிறார்களாம்' என்று உலகம் சொல்லி வியக்கும் நிலை இவ்வாண்டு மலரட்டும்.

'எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்' என்ற வாசகம் பாட்டில் மட்டும் ஒலிக்காமல், ஒவ்வொருவர் வீட்டிலும் ஒலிக்கட்டும்.

வாழ்க வளத்துடன்.

அன்புடன்..... சாரூ...

HARISH2619
1st January 2011, 01:15 PM
இளையதிலகம் பிரபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நடிகர்திலகத்தின் அன்புநெஞ்சங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தான்டு வாழ்த்துக்கள்.ஆண்டவனின் ஆசீர்வாதங்களுடனும் நடிப்பால் நம்மை ஆண்டவனின் ஆசிகளுடனும் அனைவரின் வாழ்விலும் இவ்வாண்டு முழுக்க மகிழ்ச்சி பொங்கட்டும் என வாழ்த்துகிறேன்.

முரளி சார் மற்றும் சாரதா மேடம் இருவரின் ஆசையும் இந்த ஆண்டு நிறைவேர ஆண்டவனை பிரார்திக்கிறேன்.

பம்மல் சார்,
இளையதிலகம் பிறந்த ஆண்டு 1959 என்றுதான் நினைத்திருந்தேன்,1956 என்பது புது தகவல்

pammalar
1st January 2011, 09:25 PM
WISH YOU ALL A HAPPY, HEALTHY & A WEALTHY NEW YEAR !!!