PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7



Pages : 1 2 3 4 [5] 6 7 8

pammalar
1st January 2011, 09:29 PM
அனைவருக்கும் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எல்லோர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி வழியட்டும்.

தீவிரவாதம் இல்லாத உலகம், ஊழலில்லாத இந்தியா, வறுமையில்லாத தமிழகம் மலர இவ்வாண்டு துவக்கமாக அமையட்டும்.

நேற்று வடித்ததே, இலங்கைத்தமிழர்கள் வடித்த கடைசி கண்ணீர்த்துளிகளாய் இருக்கட்டும்.

கைப்பையில் பணம் எடுத்துச்சென்று, சட்டைப்பையில் பொருள் வாங்கிவரும் நிலை மாறி, சட்டைப்பையில் பணம் எடுத்துச்சென்று கோணிப்பைகளில் பொருள் வாங்கிவரும் நிலை பெருகட்டும்.

இலவசங்கள் வேண்டாம். ஆனால் அவற்றை காசுகொடுத்து வாங்கும் அளவுக்கு மக்கள் வாழ்க்கைத்தரம் உயரட்டும்.

இத்தனை பவுனுக்கு மேல் நகையணிந்தால் சிறைத்தண்டனை என்ற சட்டம் இயற்றப்படட்டும்.

'வற்றாத ஜீவநதி என்ற பெயரை மீண்டும் காவிரியன்னை பெற்றாள்' என்ற நிலைவரட்டும். பாலாறு என்ற பெயரே நிலைக்கட்டும், அது 'பாழாறு' என்ற பெயர் பெறவேண்டாம்.

நதிகள் தண்ணீர் ஓடுவதற்கே தவிர மணல் அள்ளுவதற்கல்ல என்ற நற்சிந்தனை வளரட்டும்.

'இந்தியாவில் கோயில்களை இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்துவர்களும், தேவாலயங்களை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களும், மசூதிகளை இந்துக்கள் மற்றும் கிருத்துவர்களும் பத்திரமாகப் பாதுகாக்கிறார்களாம்' என்று உலகம் சொல்லி வியக்கும் நிலை இவ்வாண்டு மலரட்டும்.

'எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்' என்ற வாசகம் பாட்டில் மட்டும் ஒலிக்காமல், ஒவ்வொருவர் வீட்டிலும் ஒலிக்கட்டும்.

வாழ்க வளத்துடன்.

அன்புடன்..... சாரூ...

Oh ! What a post !! Simply Outstanding !!!

pammalar
1st January 2011, 11:01 PM
சகோதரி சாரதா,

மனித வாழ்க்கையின் அஸ்திவாரமே 'நல்லெண்ணம்' என்ற ஒரு சொல்லில் தான் அடங்கியுள்ளது. நல்ல எண்ணம் உதயமாகும் போது நல்ல சொற்கள் வெளிப்படும். நல்ல சொற்கள் நல்ல செயல்பாடுகளை மட்டுமே தரும். நல்லெண்ணம், நற்சொல், நற்செயல் இவை மூன்றும் ஒன்று சேரும் போது நல்லொழுக்கம் உருவாகும். இத்தகைய நல்லொழுக்கத்தின் உருவாக என்றென்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர் நமது இதயதெய்வம் நடிகர் திலகம் அவர்கள். தூய்மையான எண்ணம், கள்ளம்-கபடமற்ற வெளிப்படையான பேச்சு, 'எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்' என்கின்ற ஒளிவு-மறைவற்ற சிறந்த செயல்பாடுகள் என எந்தத் தலைமுறைக்குமே, எந்தத் துறையாளருக்குமே அவர் ஒரு No. 1 Role Model.

"உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன் வேறொன்றும் தெரியாது !
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது !"

என அவர் பாடிய வைர வரிகள் அவருக்கு 100 / 100 சதவீதம் மட்டுமல்ல N% / N % பொருந்தும்.

தங்களது புத்தாண்டுப் பதிவு, தங்களைப் போன்ற ஒவ்வொரு தூய இந்தியனின் உள்ளத்து வேட்கையை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனிடமும் அவ்வப்போது தலைகாட்டும் நல்லொழுக்கம், நிரந்தரமாக அவனுள் அரியாசனமிட்டு அமரும் போது, தங்களது ஆசைக்கனவுகள் நிச்சயம் பேரின்ப நனவுகளாகும். அந்த நன்னாளை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், நாம் தொடர்ந்து தொய்வின்றி பயணிக்க, நமது இதயதெய்வம் முதற்கொண்ட எல்லா தெய்வங்களும் நமக்கு காட்டுகிறார்கள் "பச்சை விளக்கு".

ஆசைக்கனவுகள் நிறைவேற இன்று நாம் ஆனந்தப்பண் பாடுகிறோம்:

"ஒளிமயமான எதிர்காலம் நம் உள்ளத்தில் தெரிகிறது !
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது !" என்று.

விரைவில் நனவாகப் போகும் நாளிலிருந்து நமது பேரின்ப நாதம்,

"கேள்வி பிறந்தது அன்று ! நல்ல பதில் கிடைத்தது இன்று !
ஆசை பிறந்தது அன்று ! யாவும் நடந்தது இன்று !"

என எந்நாளும் ஆன்மாவுக்குள் உள்ளுணர்வாக ஒலித்துக் கொண்டே இருக்கும் !

வாழ்க தமிழகம் ! வாழ்க பாரதம் ! வாழ்க இவ்வையகம் !

ஜெய்ஹிந்த் !

அன்புடன்,
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.

Murali Srinivas
2nd January 2011, 12:26 AM
ராகவேந்தர் சார்! காலண்டர் பிரமாதம்

சாரதா, உங்கள் பதிவு பிரமாதமோ பிரமாதம்.

சுவாமி, சூப்பர் பதிவு!

அன்புடன்

Murali Srinivas
2nd January 2011, 12:41 AM
லட்சுமி கல்யாணம்- Part I

கதை வசனம் பாடல்கள் - கண்ணதாசன்

தயாரிப்பு - AL.S புரொடக்சன்ஸ்

இயக்கம் - ஜி.ஆர்.நாதன்

வெளியான நாள் - 15-11-1968

அழகனூர் ஒரு அழகான கிராமம். அங்கே பத்திரிக்கை நிருபராகவும் Agent - ஆகவும் இருப்பவன் கதிர்வேல். அவனின் தந்தை ஏகாம்பரம். கதிர்க்கு தாய்.இல்லை. திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே ஊரில் வசிக்கும் தாய் - பார்வதி மகள்- லட்சுமி. லட்சுமியின் தந்தை அவர்களுடன் இல்லை, அவர் ஒரு அரசியல் கைதி என நமக்கு சொல்லபப்டுகிறது. எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. ஆனால் அவர் எங்கேயோ உயிருடன் இருக்கிறார் என்று லட்சுமியின் தாய் நம்புகிறாள். அவள் சுமங்கலி கோலத்தில் வலம் வருவதை ஊரார் கேலி செய்தாலும் அவள் அதிப் பொருட்படுத்துவதில்லை. லட்சுமிக்கு அதே ஊரில் உறவு முறையில் ஒரு மாமன்-அத்தை இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே மகன் கண்ணன், ஆனால் அவன் சற்று அறிவு வளர்ச்சி குன்றியவனாக ஊரில் கருதப்படுகிறான். ஊர் முன்ஸிப் சுந்தரம் பிள்ளை. எப்போதும் சுருட்டும் கையுமாக அலைவதால் சுருட்டு சுந்தரம் பிள்ளை. யார் நன்றாக வாழ்ந்தாலும் பொறுத்துக்க கொள்ள முடியாத மனம் உடையவர். கல்யாணம் செய்துக் கொள்ளாத சுந்தரம், லட்சுமியை பெண் கேட்டு செல்ல, லட்சுமியின் தாய் மறுத்து விடுகிறாள். தனக்கு பெண் கொடுக்க மறுத்ததனால் லட்சுமியின் கல்யாணம் எப்படி நடக்கிறது பார்ப்போம் என்று சவால் விடுகிறார் சுந்தரம்.

கதிர்வேலுவும் அவனது தந்தையும் அந்தக் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பும் ஈடுபாடும் காட்டுகிறார்கள். லட்சுமிக்கு கல்யாணம் செய்து வைக்க கதிர்வேலு மிகுந்த முயற்சி எடுக்கிறான். அந்நேரத்தில் கண்ணனின் பிறந்த நாள் வர அதில் கலந்து கொள்ள ஏகாம்பரத்தின் நண்பர் ராஜாங்கம் தன் மகன் ராமுவுடன் வருகிறார்.

கதிர்வேலுவின் நண்பன் ராமு. பிறந்தநாள் விழா நடக்கிறது. பிறந்தநாள் விழாவில் அந்த ஊருக்கு புதியதாக வந்த சித்த மருத்துவர் விழாவிற்கு வர அவரை பார்க்கும் பார்வதியும், பார்வதியை பார்க்கும் அவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

பிறந்த நாள் விழாவில் லட்சுமியை பார்க்கும் ராமு அவளை விரும்புகிறான். இதை தெரிந்துக் கொண்ட கதிர் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சி எடுக்க இரு வீட்டார்களுக்கும் இதில் சம்மதம் தெரிவிக்கிறார்கள். அன்றிரவு யாருக்கும் தெரியாமல் மருத்துவரை சென்று சந்திக்கிறாள் லட்சுமியின் தாய். அப்போதுதான் தெரிகிறது அந்த சித்த மருத்துவராக இருப்பவர் அவளின் கணவன் ரகுநாதன் என்பது. அவள் யாருக்கும் தெரியாமல் போனாலும் சுருட்டு சுந்தரம் பிள்ளை இதை பார்த்து விடுகிறார். அவர் மனதில் ஒரு திட்டம் உருவாகிறது.

கல்யாணத்தன்று மணமேடையில் ராமு தயாராக இருக்க மணமகள் லட்சுமி மணமகளாக மேடைக்கு வர, ராமுவின் தந்தையார் ராஜாங்கத்தை லட்சுமியின் அத்தை [அவர் மகனை லட்சுமி கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்ற கோவத்தில்] தனியே அழைத்து செல்ல அங்கே யார் கண்ணிலும் படாமல் மறைந்திருக்கும் சுந்தரம் பிள்ளை லட்சுமியின் குடும்பத்தைப் பற்றிய அவதூறுகளை சொல்கிறார். முதலில் நம்ப மறுக்கும் ராஜாங்கம் அவர்களின் தொடர்ச்சியான போதனையினால் மனம் மாறி தாலி கட்டும் நேரம் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார். கதிர்வேலுவும் மற்றவர்களும் எத்தனை எடுத்துச் சொல்லியும் மகனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் விடுகிறார். லட்சுமியும் அவள் தாயாரும் நில குலைந்து போகின்றனர்.

அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் கதிர்வேலு லட்சுமிக்கு ஒரு நல்ல மாப்பிளையை தானே தேடிக் கொண்டு வருவதாக சொல்லிவிட்டு சென்னைக்கு போகிறான்.

சென்னையில் திருமண தரகர் ஒருவரின் அலுவலகத்திற்கு செல்லும் கதிர்வேலு அங்கே இருக்கும் புகைப்படங்களை பார்க்க ஒரு வாலிபனின் படத்தை பார்த்து விவரங்கள் கேட்க தரகர் அந்த பையனின் வீட்டிற்கு கூட்டி செல்கிறார். பையனின் தாயார் மிகுந்த நல்ல முறையில் பழகுகிறார். ஆனால் பையன் ராஜதுரை பெரிய குடிகாரன். இந்த விஷயத்தை எப்படியேனும் மறைத்து திருமணம் செய்து வைக்க தரகரிடம் சொல்ல அவரும் அதை கதிர்வேலுவிடமிருந்து மறைத்து விடுகிறார். பேச்சு வாக்கில் பையன் சுந்தரம் பிள்ளைக்கு உறவு என்பதை தெரிந்துக் கொள்ளும் கதிர் கல்யாணத்தின் போது தன் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறான்.

அழகனூர் வரும் ராஜதுரையையும் தாயாரையும் தனியாக சந்திக்க சுந்தரம் பிள்ளை செய்யும் முயற்சியை எல்லாம் கதிரும் அவனது தந்தையும் தடுத்து விடுகின்றனர்.
விடிந்தால் கல்யாணம். அதற்கான வேலைகளில் கதிர் ஈடுபட்டிருக்க மணமகன் தங்கியிருக்கும் வீட்டிற்கு அவனது தந்தை காவல் இருக்கிறார். விடிந்தவுடன் அவர்கள் வீட்டிற்கு செல்லும் கதிர் வீட்டை திறந்து பார்க்க அவர்கள் இல்லை. ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர்கள் கிளம்பி போக அவர்களை தேடித் போகும் கதிரை பார்த்து பரிகாசம் செய்கிறார் சுந்தரம் பிள்ளை.

மனம் உடைந்து போகும் தாய் தன் மகளின் மேல் கோவத்தைக் காட்ட மனம் வெறுத்து போகும் மகள் விபரீதமான முடிவு எடுக்க போகும் நேரம் தாய் தடுத்து விடுகிறாள். நடந்தையெல்லாம் அறிந்த அவள் கணவன் ரகுநாதன் உண்மையை சொல்லி விடுகிறேன் என்று சொல்ல தாய் தடுக்கிறாள். உண்மையை சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கி கொள்கிறாள். தாய் நடு இரவில் வீட்டை விட்டு வெளியே போவதை பார்க்கும் மகள் ஒரு நாள் இரவில் அவளை நிறுத்தி கேள்வி கேட்க தாய் அவமானத்தால் கூனி குறுகுகிறாள்.ஆனாலும் உண்மையை சொல்ல மறுக்கிறாள். உண்மை தெரிந்தால் கொலைக் குற்றவாளி என முத்திரை குத்தப்பட்டு போலீசார் தேடிக் கொண்டிருக்கும் தன் கணவனை எங்கே பிடித்து சென்று விடுவார்களோ என்ற பயம்.

இந்நிலையில் சித்தா மருத்துவமனைக்கு கண்ணில் ஒரு பிரச்சனை என்று வந்து மருந்து ஊற்றிக் கொண்டு போகும் ஒருவர் மீது ரகுநாதனுக்கு சந்தேகம் தோன்றுகிறது. அவர் சந்தேகப்பட்டபடியே வந்தவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். தாங்கள் தேடிக் கொண்டிருக்கும் நபர் இவர்தான் என்று தெரிந்ததும் அவரை கைது செய்ய வரும் போலீஸ் அவரை காணாமல் தேடுகிறது. துரத்துகின்ற போலீசின் கையில் இருந்த தப்பிக்க தன் மனைவி வாழும் வீட்டிற்கே ரகு வர, லட்சுமியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனைவிக்கும் மகளுக்கும் ஏற்படும் மோதலை காண சகிக்காமல் ரகுநாதன் வெளியேறுகிறார்.

இதற்கிடையில் மனம் ஒடிந்து மீண்டும் சென்னைக்கு செல்லும் கதிர்வேலு அங்கே தன் பழைய நண்பன் பாலுவை சந்திக்கிறான். ஒரு வங்கியில் வேலை செய்யும் அவன் வீட்டிற்கு சென்று தாயை பார்க்கிறான். அவனது ஒரே தங்கை தாரா நோய்வாய்ப்பட்டு இப்போது நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருப்பதை பார்க்கும் கதிர் அதிர்ச்சிக்கு உள்ளாகிறான். பாலுவிடம் லட்சுமியை கல்யாணம் செய்துக் கொள்ள கதிர் வேண்டுகோள் விடுக்க தன் தங்கையின் நிலையை சுட்டிக் காட்டும் போதே கதிர் தானே அவன் தங்கைக்கு வாழ்வு கொடுப்பதாக வாக்களிக்கிறான். உடனே கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படுகிறது.

அனைத்து உண்மைகளும் சொல்லப்பட்டு விட்டதால் சுந்தரம் பிள்ளையின் சூழ்ச்சி பலிக்காமல் போகிறது. இப்போது பிரச்னை வேறு ரூபத்தில் வருகிறது. கல்யாணம் நடக்கப் போகும் நேரத்தில் போலீசார் வீட்டில் நுழைந்து வங்கியில் பணத்தை கையாடல் செய்தற்காக கைது செய்ய வந்திருப்பதாக கூற, கதிர்வேலு நிலை குலைந்து போகிறான். தான் திருடியது உண்மைதான் என்று ஒப்புக் கொள்ளும் பாலு அதை தங்கையின் திருமனதிற்காக செய்ததாக சொல்கிறான். நண்பனிடம் கதிர் நீ சொன்ன வாக்கை உன்னால் காப்பாற்ற முடியாமல் போனாலும் கூட நான் உனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன் என உறுதி கூறுகிறான்.

லட்சுமியின் கல்யாணத்திற்கு இத்தனை தடங்கல்கள் ஏற்பட்டதற்கு காரணம் தன் நண்பன் ராமுவும் அவன் தந்தை ராஜாங்கமும்தான் என கோவம் கொள்ளும் கதிர், அவனை இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு போகிறான். மகளின் கல்யாணம் நடக்கப் போவதை அறிந்து அதைக் காண மாறுவேடத்தில் வரும் ரகுநாதன் கல்யாணம் நின்று போனவுடன் அவரும் ராமுவின் வீட்டிற்கு செல்கிறார்.

இங்கே தொடர்ச்சியாக நடந்த தடங்கல்களினால் மனம் வெறுத்து தன் அத்தை மகனையே திருமணம் செய்துக் கொள்ள லட்சுமி முடிவெடுக்கிறாள். மாமா மற்றும் உறவினர்கள் வேண்டாம் இந்த முடிவு என்று சொல்லியும் அவள் தன் நிலையில் உறுதியாக இருக்கிறாள். திருமண வேலைகள் இங்கே நடந்துக் கொண்டிருக்கின்றன.

ராமுவை தேடி செல்லும் கதிர் அவனை தாக்க முயற்சிக்க, தான் இப்போதும் லட்சுமியை மணம் செய்துக் கொள்ள தயார் என்று ராமு சொல்ல அவனையும் கூட்டிக் கொண்டு கதிர் கிளம்ப ராமுவின் தந்தை ராஜாங்கம் தடுக்கிறார். அந்நேரம் அங்கே வரும் ரகுநாதன் தான் ராஜாங்கம் மற்றும் ஏகாம்பரம் இருவரின் பழைய நண்பன் என்பதையும் ராஜாங்கத்தின் தம்பியை கொன்ற ஆங்கிலேய சப் கலக்டரை தான் சுட்ட போது ஏற்பட்ட சப் கலக்டர்- ன் மரணம் காரணமாகதான் போலீஸ் தன்னை தேடுகிறது என்று தன்னிலை விளக்கம் கொடுக்க உண்மையை உணரும் ராஜாங்கம் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார். நால்வரும் அழகனூர் கிளம்ப ரகுநாதனை கைது செய்ய போலீஸ் இவர்களை சுற்றி வளைக்க ராமுவையும் ராஜாங்கத்தையும் முன்னால் அனுப்பி வைத்துவிட்டு கதிர்வேலுவும் ரகுநாதனும் பின்பக்க வழியாக வெளியேறும் நேரத்தில் போலீசார் சுடும் குண்டு ரகுநாதனின் காலில் படுகிறது. அவரை தூக்கி போட்டுக் கொண்டு கதிர்வேலு ஊருக்கு திரும்ப போலீஸ் துரத்துகிறது.

அதே நேரத்தில் அங்கே லட்சுமியின் கல்யாண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. ஊரில் வந்து ரகுநாதனோடு இறங்குகிறான் கதிர். துரத்தி வரும் போலீசார் மீண்டும் சுட மீண்டும் ரகுநாதனின் உடலில் குண்டு பாய்கிறது. ரகுநாதனை எப்படியேனும் மகளின் கல்யாணத்தை பார்க்க வைக்க வேண்டும் என்று துடிப்பில் கதிர்வேலு ஒரு பக்கம், அத்தை மகனோடு லட்சுமிக்கு கல்யாணம் நடத்தும் ஏற்பாடுகள் ஒரு பக்கம், ராமு மணமகனாக தன்னை தயாரித்துக் கொண்டு திருமண ஏற்பாடுகளில் மூழ்குவது ஒரு பக்கம், மகளின் கல்யாணத்தை பார்ப்பதற்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டே வரும் ரகுநாதன், அவர் எப்படியும் கல்யாணத்திற்கு வருவார் என்று கைது செய்ய காத்திருக்கும் போலீஸ் - இந்த சூழலில் என்ன நடந்தது, லட்சுமி கல்யாணம் நடந்ததா என்பதற்கு வெள்ளித்திரையில் விடை காண்க.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
2nd January 2011, 12:55 AM
லட்சுமி கல்யாணம் - Part II

கவியரசர் கண்ணதாசனின் அண்ணனும் தயாரிப்பாளருமான AL. ஸ்ரீனிவாசன் தயாரித்த படம்.

நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது? சாதாரணமான கதாபாத்திரங்கள் கூட அவர் கை பட்டால் மின்னும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பாசத்தையும் மனித நேயத்தையும் அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்ட அவரது எந்த ரோலும் சோடை போனதில்லை. இந்த கதிர்வேலுவும் அப்படித்தான். கதிர்வேலு என்ற பெயரே ஒரு புதுமை. இதற்கு முன்போ அல்லது இதற்கு பின்போ இது போன்ற ஒரு பெயர் தாங்கிய காரக்டர் அவர் செய்ததாக நினைவில்லை.

அந்த காலக்கட்டத்தில் [60 -70 களில்] பொது விழாக்களில் எப்படி தோன்றுவாரோ அது போன்ற ஜிப்பா குர்தா உடையில் சில காட்சிகளில் வருவார். மற்றப்படி அணியும் உடை சாதாரண பாண்ட்-ஷர்ட், லைட் மேக்கப். ஒரிஜினல் சுருண்ட முடி. ஜோடி கிடையாது.

அவரின் அறிமுக காட்சியிலே லட்சுமியை எப்படி ஒரு தங்கையாக பாவிக்கிறார் என்பதை உணர்த்தி விடுவார். நகைச்சுவையாக நக்கல் பண்ணுவதில் நடிகர் திலகத்தை மிஞ்ச ஆளே கிடையாது. கிராம முனுஸிப் பதவியை பயன்படுத்திக் கொண்டு சிரித்த முகம் காட்டும் நரி குணமுள்ள நம்பியாரை அவர் கிண்டலாக வெறுப்பேற்றுவது எல்லாமே டைமிங்காக இருக்கும். தன்னை பற்றி ஊர் பெண்கள் எல்லாம் புகழ்ந்து பேசுகிறார்கள் என்று நம்பியார் சொல்லும் போது அங்கே ஒரு பெண்மணி விளக்குமாறு வாங்கிக் கொண்டு வர உங்களுக்காக இல்லேங்க, அவங்க வீட்டிற்கு வாங்கிட்டு போறாங்க என்பது, பிறந்த நாள் விழாவில் இவர்தான் கிராமத்திற்கே பெரிய ஆள் என்பது போல் இவர் ஒருத்தர் போதும் என்பது, சொந்தக்கார மாப்பிள்ளையிடம் எப்படியாவது லட்சுமியைப் பற்றி அவதூறு சொல்ல வேண்டும் என்று சுத்தி சுத்தி வரும் நம்பியாரை அவர் டீல் செய்யும் அழகே அழகு.

இது இப்படியென்றால் ஒவ்வொரு முறை கல்யாணம் நடத்த முயற்சிக்கும் போது ஏற்படும் தடைகள், அப்போது அவரின் உணர்வுகள்!

நம்பியாரின் பேச்சை கேட்டு கல்யாணத்தை நிறுத்தும் வி.எஸ். ராகவனிடம் அவர் பேசம் தொனி மாறிக் கொண்டே வரும். முதலில் சாதாரணமாக நியாயத்தை எடுத்துக் கூறும் அவர் ராகவனின் பிடிவாதத்தை பார்த்துவிட்டு கெஞ்சலும் கோபமுமாக பேசுவதை சொல்வதா, அதையும் மீறி ராகவன் வெளியே சென்று விட நீ பேசினதால்தான் அவர்கள் கிளம்பி போகிறார்கள் என்று சௌகார் சொன்னதும் ஓடிப் போய் அவர்களை கெஞ்சி காலில் விழ முயற்சிப்பதை சொல்வதா, ஒரேடியாக மறுத்துவிட்டு அவர்கள் காரில் ஏறி சென்றவுடன் உச்சக்கட்ட ஆத்திரத்தில் அவர்களை சபிப்பதும் மண்ணை வாரி தூற்றுவதையும் சொல்வதா, பின்னியிருப்பார் பின்னி.

இதற்கு நேர்மாறாக இரண்டாவது முறை எஸ்.வி. ராமதாஸ் தன் தாயோடு கல்யாணத்தன்று காலையில் லெட்டர் எழுதி வைத்துவிட்டு கிளம்பி போய் விட, லட்சுமி வீட்டிற்கு விஷயம் சொல்ல வரும் அந்தக் காட்சி! இவர் மாப்பிளையுடன் வரப்போகிறார் என மகிழ்ச்சியாய் காத்திருக்கும் சௌகார், தலை தாழ்ந்து கலங்கிய முகத்துடன் வரும் நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன் என்ன விஷயம் என்று பார்வையாலே கேள்வி கேட்க வசனமே இல்லாமல் கண்ணீர் நிறைந்திருக்கும் கண்களையும் துடிக்கும் உதடுகளையும் முகபாவத்தையும் மட்டுமே வைத்து நடந்ததை வெளிப்படுத்தும் நடிகர் திலகம், உள்ளிருந்து வரும் லட்சுமி, அவளைப் பார்த்ததும் அவள் அருகில் நெருங்கி அவளிடமும் வசனமே பேசாமல் கண் அசைவிலேயே விவரம் சொல்லும் நடிகர் திலகம், பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்த தவிக்கும் லட்சுமி, இனி என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அங்கிருந்து விலகி அப்போதும் அந்த கண்கள் மட்டுமே தன் இயலாமையை வெளிப்படுத்த வீட்டை விட்டு வெளியேறும் காட்சி, நடிகர் திலகத்தின் நடிப்பு வரலாற்றில் குறிப்பிட வேண்டிய ஒன்று. வசனமே இல்லாமல் இதற்கு முன்பும் நவராத்திரி கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்தாலும் கூட இது சிறப்பு வாய்ந்த ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

அவரின் இயல்பான நடிப்பிற்கு உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். நண்பனின் வீதியில் வைத்து அவன் தங்கையை பற்றியும் அவளின் வெட்கத்துடன் கூடிய நடையைப் பற்றியும் விசாரிக்க உள் அறையிலிருந்து சக்கர நாற்காலியில் வெளியே வரும் அந்தப் பெண்ணை பார்த்தவுடன் அவர் வெளிப்படுத்தும் உடல் மொழி! நண்பனும் தாயும் சினிமா பாணியில் முகம் திருப்பி அழ, அங்கேயும் எந்த வசனமும் இல்லாமல் நண்பனின் தாயிடம் என்ன இது என்பது போல் கையை மட்டும் நீட்டி கேட்கும் இடம் இருக்கிறதே, சூப்பர்!

முதல் இரண்டு திருமண முயற்சிகளிலும் இரண்டு வெவ்வேறு உணர்வுகளை காட்டிய நடிகர் திலகம், வி.கோபாலகிருஷ்ணனை போலீஸ் கைது செய்து அழைத்து செல்லும் போது எனக்கு கொடுத்த வாக்கை நீ காப்பாத்தலேனாலும் நான் உனக்கு கொடுத்த வாக்கை காப்பாத்துவேன் என்று அனுப்பி வைக்கும் காட்சியில் இன்னொரு முகம் தெரியும்.

கதாபாத்திரமாக அவர் கோவப்படும்போது எப்போதுமே அது பார்வையாளனுக்கு பளிச்சென்று மனதில் பதியும்! இதிலும் அப்படியே! கல்யாணத்தை நடத்த விடாமல் தடை போடும் நம்பியாரை கொல்ல அரிவாளுடன் கிளம்பும் ஆவேசம், நம்பியாரின் ஆட்களுடன் சிலம்பு சண்டை போடுவது, அனைத்து மனிதர்கள் மீதும் கோவப்பட்டு மனிதனே இங்கே இல்லையே என்று யாரடா மனிதன் இங்கே என்று பாட்டாய் வெடிப்பது, எத்தனை முயற்சி எடுத்தும் பலன் இல்லையே எனும்போது விரக்தியில் கோயில் சன்னதியில் ஆத்திரப்படுவது இவைகளின் மூலம் ரௌத்திர பாவத்தை தரிசிக்கலாம் என்றால் ஜாலியான சிவாஜியை போட்டாளே பாடலிலும் தங்கத் தேரோடும் வீதியிலே பாடலிலும் பார்க்கலாம்.

படத்தில் மிகுந்த இளமையாக இருப்பார் நடிகர் திலகம். மேக்கப் இல்லாமலே வசீகரிப்பார்.போலீஸ் குண்டடிப்பட்டு மயங்கி கிடக்கும் வெயிட்டான மேஜரை தன் தோள் மேல் தூக்கி போட்டுக் கொண்டு அண்டர் கிரௌண்ட் tunnel-இல் நடப்பது அவரது உடல் வலிமையை பறைசாற்றும்.

நடிகர் திலகத்திற்கு அடுத்தபடியாக முக்கியமான பாத்திரம் சௌகார். பொதுவாகவே சௌகார் பற்றி அழுது வடிந்து சோகத்தை பிழிவார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இந்தப் படத்தில் அப்படிபட்ட சோகத்திற்கு ஸ்கோப் இருந்தும் அந்த trap-ல் சிக்கி விடாமல், கணவன் இல்லாமல் பலபேர் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியும் கூட தைரியத்தை கைவிடாத ஒரு பெண்மணியின் குணாதிசயத்தை நன்றாக வெளிக் கொணர்ந்திருப்பார். அழுகை தவிர்த்து அவர் காட்டும் அந்த தைரியம் அதிலும் மகளே தன்னை சந்தேகப்படும் போது அதை சமாளிக்கும் திறன் எல்லாமே சௌகார் எவ்வளவு தேர்ந்த நடிகை என்பதை காட்டும்.

வெண்ணிற ஆடை நிர்மலா, கதையின் நாயகியாக வருவார். குறைவின்றி செய்திருப்பார். சுருட்டு சுந்தரம் பிள்ளையாக நம்பியார். இதில் வித்தியாச வில்லன். வழக்கம் போல் கண்ணை உருட்டி உள்ளங்கையை பிசையும் வில்லத்தனம் இல்லாமல் வீண் பொல்லாப்பு மற்றும் வம்பு பேச்சின் மூலமாக வில்லத்தனம் செய்யும் ரோல். அதிலும் குறிப்பாக ஒரு காட்சி சொல்லவேண்டும். வரும் மாப்பிள்ளைகள் எல்லாம் இவர் பேச்சை கேட்டு திரும்பி போய் விட நடிகர் திலகத்தின் நண்பன் பாலுவாக வரும் வி.கோபாலகிருஷ்ணன் இவரை போய்யா என்று சொல்லிவிட இடிந்து போய் உட்கார்ந்திருப்பார். கல்யாணத்தன்று அவரை கைது செய்து விட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் அவர் துள்ளிக் குதிக்கும் காட்சியில் நம்பியார் சிறப்பாக செய்திருப்பார்.

முதலில் வந்து பெண் பார்க்கும் மாப்பிள்ளையாகவும் பிறகு இறுதியில் லட்சுமியை திருமணம் செய்துக் கொள்பவராக பாலாஜி, அவரின் தந்தையாக வி.எஸ்.ராகவன், சிவாஜியின் தந்தையாக வி.கே.ஆர். அவரவர் பாணி நடிப்பை வழங்கியிருப்பார்கள். இந்த அவரவர் பாணி என்று சொல்லும்போது லட்சுமியின் அத்தையாக வரும் சி.கே சரஸ்வதியையும் அவர் கணவனாக வரும் ஏ.கருணாநிதியையும் சேர்த்துக் கொள்ளலாம். லட்சுமியின் முறைப் பையனாக சோ. அவர் துக்ளக் ஆரம்பிப்பதற்கு முன் வந்த படம் என்பதால் அரசியல் வசனங்கள் இல்லை. கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாக வரும் லட்சுமியின் தந்தை ரகுநாதனாக மேஜர்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
2nd January 2011, 01:14 AM
லட்சுமி கல்யாணம் - Part III

ஏ.எல்.ஸ்ரீனிவாசனை பொறுத்தவரை படத்தயாரிப்பாளர் என்ற பெயர் மட்டுமே. ஒரு படத்தை எப்படி திட்டமிட்டு தயாரிப்பது, அதை குறிப்பிட்ட காலத்தில் எப்படி வெளியிடுவது போன்றவை அவருக்கு கை வராத கலை. ஜெமினி, சிவகுமார் ஆகியோரை வைத்து ஏ.பி.என் இயக்கத்தில் கந்த லீலா என்ற பெயரில் படம் தயாரித்தார். அது இடையில் வைத்து நின்று போனது. அந்நேரம் வெளியான திருவிளையாடல் படத்தின் இமாலய வெற்றியை பார்த்த விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தை இந்தப் படத்தில் கொண்டு வர வேண்டும் என்று பிரஷர் கொடுத்தனர். ஏ.எல்.எஸ் மற்றும் ஏ.பி.என். இருவரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் வீரபாகு ரோலை ஏற்றதும் படம் கந்தன் கருணை என்று பெயர் மாற்றப்பட்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதும் நமக்கு தெரிந்ததே. அது 1967 ஜனவரியில் வெளியானது. அப்போதே ஆரம்பிக்கப்பட்ட படம்தான் லட்சுமி கல்யாணம். பிசியான ஆர்டிஸ்ட்களை வைத்து படம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அவர்களின் கால்ஷீட் கிளாஷ் ஆக வழக்கம் போல் வெளியிட தாமதமானது.

கதை வசனம் பாடல்கள் கண்ணதாசன். சிவாஜி வி.கோபாலகிருஷ்ணனிடம் அவர் தங்கையை திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று சொல்லும் இடத்திலும், நம்பியாரை வெட்டுவதற்காக அரிவாளுடன் கிளம்பும் சிவாஜியை நிர்மலா தடுக்கும் காட்சியிலும் மட்டும் இடம் பெறும் தூய தமிழ் வசன பாணியை தவிர்த்து விட்டால் வசனங்கள் இயல்பான தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும். கிழவங்கதானே இப்போதெல்லாம் லவ் பண்றாங்க போன்ற சில கிண்டல் வசனங்களும் உண்டு.

ஒளிப்பதிவு இயக்கம் GOr நாதன். ஒளிப்பதிவு ஓகே. ஆனால இயக்குனர் பொறுப்பை அவரிடம் ஏன் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. படத்தில் குறை என்று சொன்னால் படத்தின் மையப் பகுதியான மேஜர் எதற்காக தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார் ஏன் அவரை போலீஸ் தேடுகிறது, அவர் யாரை எதற்காக கொலை செய்தார் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக அனைவருக்கும் புரியும்படியாக சொல்லியிருக்கலாம். திரைக்கதையில் ஏற்பட்ட பிழையா இல்லை கால்ஷீட் பிரச்சனைகளினால் எடுக்க முடியாமல் போய் விட்டதா என்று தெரியவில்லை. அது போல நம்பியாரின் ஆட்களுடன் நடிகர் திலகம் போடும் சிலம்பு சண்டை காட்சியையும் இன்னும் சற்று நன்றாக எடுத்திருக்கலாம்.

கவியரசரின் சொந்தப் படம் எனும் போது மெல்லிசை மன்னர் விட்டு விடுவாரா?

1. போட்டாளே! போட்டாளே! உன்னையும் ஒருத்தி பெற்று போட்டாளே! - சோவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வரும் பாடல். சிவாஜி, சோ மற்றும் நிர்மலாவிற்கு முறையே டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன் மற்றும் ஈஸ்வரி பாடியிருப்பார்கள். கேரக்டரின் தன்மையை நடிகர் திலகம் எந்த அளவிற்கு உள்வாங்குவார் என்பதற்கு இந்தப் பாடலில் வரும் ஒரு ஷாட் உதாரணம். நிர்மலாவை பார்த்ததும் பாலாஜிக்கு பிடித்து விடுகிறது. இதை நடிகர் திலகமும் உணர்ந்து விடுவார். அவருக்கு சந்தோஷம். அதே நேரத்தில் இந்தப் பாடலின் ஒரு சரணத்தின் இடையில் நிர்மலா அந்த ஹாலில் தனியாக ஒரு இடத்தில் போய் ஆட, ஆசையுடன் பாலாஜி அங்கே சென்று நிர்மலாவின் கைப்பற்ற முயற்சி செய்ய, இதை கவனித்து விடும் நடிகர் திலகம் இயல்பாக இருவருக்கு இடையில் நுழைந்து ஒரு அண்ணனின் நிலையிலிருந்து நிர்மலாவின் கையை தான் பற்றி பாலாஜியை ஒரு லுக் விட்டுக் கொண்டே ஸ்டெப் போட்டு போவார். இதை எந்த இயக்குனரும் அவருக்கு சொல்லித் தராத நுணுக்கம். இதே பாடலின் இன்னொரு சரணத்தில் முட்டாளின் மூளையிலே முந்நூறு பூ மலரும் என்ற வரியை கவனித்து கேளுங்கள், சிவாஜிதானே பாடியிருப்பார். டி.எம்.எஸ். என்று தவறுதலாக போட்டு விட்டார்களோ! படம் வெளி வருவதற்கு முன் இறுதி சரணத்தில் வரும்

கண்ணா உன் ஆட்சியிலே

கல்யாண சீசன் வரும்

என்ற வரியை பற்றி அது கண்ணாவா இல்லை அண்ணாவா என்று ரசிகர்கள் இடையில் ஒரு விவாதம் இருந்தது. காரணம் படம் வெளியாகும் போது அண்ணாவின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த நேரம்.

2. ராமன் எத்தனை ராமனடி - படத்தின் மிகப் பிரபலமான பாடல்- சுசீலாவின் தேன் குரலில்.

பாலாஜி பெண் பார்க்க வரும்போது நிர்மலா சிதார் வாசித்துக் கொண்டே பாடுவதாக அமைந்திருக்கும் கண்ணதாசன் ராமன்களை வைத்து விளையாடியிருப்பார். பாடலின் நடுவில் திரையில் ஒரு பகுதியில் [வேறு சில நடிகர்களை வைத்து எடுத்த] ராமாயணக் காட்சிகள் இடம் பெறும். நிர்மலாவின் நடனமும் உண்டு. பாடல் முடிந்தது கூட தெரியாமல் அனைவரும் மெய்மறந்து இருப்பார்கள். அது பாடல் கேட்பவர்களுக்கும் பொருந்தும் என சொல்லலாம்.

3. யாரடா மனிதன் இங்கே - நடிகர் திலகத்தின் signature பாடல். டி.எம்.எஸ் உணர்வு பூர்வமாய் பாடியிருப்பார். ஒரு ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே என்ற தார்மீக கோவம் கொப்பளிக்கும் பாடல். வரிகள் சாட்டையடியாய் விழும்.

நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே

பாயும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா

எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா!
[மகாத்மா நடந்தது வரும் காட்சி இடம் பெறும்]

இந்தப் பாடலைதான் தன் படத்தில் வரும் பாடலைப் போல் இருப்பதாக கேள்விப்பட்டு அதை தனக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்று மெல்லிசை மன்னர் நிர்பந்தம் செய்யப்பட்டார். அதற்கு கண்ணதாசன் மறுக்க, எம்.எஸ்,வி அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் போட்டு காண்பித்தார் என்று சொல்லுவார்கள்.

4. பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் - மீண்டும் சுசீலாவின் தேன் குரல்.

இரண்டாவது முறையும் திருமணம் தடைபட, சௌகார் கையாகலாத கோவத்தில் நிர்மலாவை ராசியற்றவள் என்ற அர்த்தத்தில் திட்டி விட, கண்ணனிடம் சென்று நிர்மலா நியாயம் கேட்கும் பாடல். கண்ணதாசனின் பேனாவிற்கு சரியான தீனி.

5. வெட்டவெளி பொட்டலிலே பட்ட மரம் ஒன்று - டி.எம்.எஸ்.

நடிகர் திலகம் விரக்தியில் பாடும் பாடல். இங்கேயும் சமுதாய சாடல்கள் இருக்கும். கோவிலின் முன்னால் நின்று நடிகர் திலகம் பாடுவதாக வரும் வரிகள் பளீரென்று இருக்கும்.

தெய்வம் ஆளவில்லையென்றால்

பேய்கள் ஆட்சி செய்யும்ம்மா!

என்ற வரிகளின் போது 42 வருடங்களுக்கு முன்பு கேட்ட கைதட்டல் இன்றும் காதில் ஒலிக்கிறது.[ஆனால் தமிழகத்தின் நிலைதான் மாறவில்லை]

6. தங்க தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா- டி.எம்.எஸ்-சீர்காழியார்.

கல்யாண மாப்பிள்ளையாக வி. கோபாலகிருஷ்ணனை வைத்து ஊர்வலம் வரும்போது நம்பியாரையும், சி.கே.சரஸ்வதியையும் கிண்டல் செய்து பாடும் பாடல். நடிகர் திலகமும் வி.கே.ஆரும் மிகுந்த உற்சாகத்துடன் ஆடிப் பாட அது நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

இப்போது பட ரிலீசிற்கு வருவோம். முதலில் சொன்னது போல படம் எப்போதெல்லாம் combination கால்ஷீட் கிடைத்ததோ அப்போதெல்லாம் எடுத்த படம். ஆகவே இன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்று சொல்ல முடியாத சூழல் [ஒழுங்காய் எடுத்த படம் மட்டும் பார்த்து ரிலீஸ் பண்ணினார்களா என்ற கேள்வி எழுவது காதில் விழுகிறது]. 1968 தீபாவளிக்கு [அக்டோபர் 21] வெளியிட முயற்சி செய்தனர். ஆனால் எங்க ஊர் ராஜா ஏற்கனவே தீபாவளிக்கு கமிட் ஆகியிருந்தது. ஏ.விஎம் வேறு உயர்ந்த மனிதன் நவம்பர் 29 ரிலீஸ் என்று அறிவித்து விட்டார்கள்.இனியும் காத்திருந்தால் பொங்கல் ஆகி விடும். அப்போதும் படங்கள் ரிலீசிற்கு இருக்கின்றன. சரி பரவாயில்லை என்று துணிந்து நவம்பர் 15 அன்று ரிலீஸ் செய்து விட்டார்கள். இங்கேதான் கவனிக்க வேண்டும்.

1968 ஜூலை 27 அன்று வெளியான தில்லானா அப்போதும் பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 1968 அக்டோபர் 21 தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியாகி வெற்றிக் கொடி கட்டுகிறது. அந்த படம் வெளியான 24 நாட்களில் லட்சுமி கல்யாணம் நவம்பர் 15 அன்று வெளியாகிறது. அது வெளியான 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியாகிறது, ஒரே நேரத்தில் நான்கு நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் மதுரையை எடுத்துக் கொண்டால் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, தேவியில் லட்சுமி கல்யாணம், சென்ட்ரலில் உயர்ந்த மனிதன் என ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை சாந்தியில் தில்லானா, சித்ராவில் எங்க ஊர் ராஜா[சித்ரா தவிரவும் இரண்டு அரங்குகள்], கிரௌன், புவனேஸ்வரியில் லட்சுமி கல்யாணம் (மற்ற இரண்டு தியேட்டர்கள் கிருஷ்ணவேணி காமதேனு? மவுண்ட் ரோடு தியேட்டர் இல்லை என்று நினைவு], வெலிங்டன்-ல் உயர்ந்த மனிதன் [வெலிங்டன் தவிரவும் இரண்டு அரங்குகள்] ஓடிக் கொண்டிருக்கின்றன. மெயின் தியட்டர்களிலிருந்து தில்லானா மாறினாலும் கூட ஷிப்டிங் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. மதுரையில் சிந்தாமணியில் வெற்றிகரமாக 132 நாட்கள் ஓடிய பிறகு வெள்ளைக்கண்ணு அரங்கத்திற்கு மாற்றப்பட்டு சக்கைப் போடு போட்டது. இவை எல்லாம் போதாதென்று உயர்ந்த மனிதன் ஒரு மாதத்தை நிறைவு செய்யும் போது அடுத்த வெளியீடாக 1969 ஜனவரி 1 அன்று அன்பளிப்பு வெளியாகிறது.

லட்சுமி கல்யாணம் கமர்ஷியல் படம் இல்லை. பொழுது போக்கு படம் இல்லை. கலர் இல்லை. கருப்பு வெள்ளை படம். டூயட் இல்லை. ஏன், ஜோடியே இல்லை. சராசரி ரசிகனை தியேட்டருக்கு வரவழைக்கும் எந்த அம்சங்களும் இல்லை. இத்தனை இல்லைகளையும் தாண்டி, போட்டிக்கு நின்ற நடிகர் திலகத்தின் படங்களையும் சமாளித்து இந்த படம் பெற்ற வெற்றி இருக்கிறதே, அது சாதனை. அதுதான் சாதனை.

தில்லானா -132 நாட்கள்

எங்க ஊர் ராஜா - 85 நாட்கள்

உயர்ந்த மனிதன் - 105 நாட்கள்

லட்சுமி கல்யாணம் - 60 நாட்கள்.

ஆம் மதுரை ஸ்ரீதேவியிலும், கோவையிலும் 60 நாட்கள். இந்தப்படமே எதிர்பாராமல் வெளியானதால் பல ஊர்களிலும் தியேட்டர்கள் பொங்கலுக்கு புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தன. ஆகவே மதுரையில் பொங்கலுக்கு வேறு படத்திற்கு மாறிக் கொடுக்க வேண்டிய சூழல்.

ஆறு மாதங்களுக்கு ஒரு படம் வெளியிட்டு ஒட்டப்பட்டவை அல்ல சிவாஜி படங்கள். இது போன்ற எதிர்மறையான சூழலிலும் தனது படங்களே தனது படங்களுக்கு போட்டியாக வரும் நேரத்திலும் வெற்றிகளை அடைந்தவர் நடிகர் திலகம்.

சிவாஜி ரசிகர்கள் எப்போதும் தலை நிமிர்த்தி நெஞ்சுயர்த்தி சொல்வோம். 80 வருட தமிழ் சினிமா சரித்திரத்தில் நடிப்புக் கலையிலும் சரி, பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளிலும் சரி வரலாறு படைத்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் ஒருவரே.

இந்தப்படத்தைப் பற்றி நடிகர் திலகமே தனது ஒரு வரி விமர்சனத்தில் "இவ்வளவு பெரிய ரசிப்பை நானே எதிர்பார்க்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார் என்றால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை நாம் புரிந்துக் கொள்ளலாம்.

அன்புடன்

This is a film close to Raakesh and this is being written to make him visit here often rather than the occasional peep ins. Thanks to Radhakrishnan and Senthil also for bringing this movie for discussion. And Thanks to Swami for providing accurate data.

saradhaa_sn
2nd January 2011, 03:12 PM
டியர் முரளி,

'லட்சுமி கல்யாணம்' திரைக்காவியத்தில் திறனாய்வு மிக மிக அருமை. படித்துக் கொண்டிருக்கும்போதே, படிப்பவர்களை அப்படியே பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய், திரையரங்கின் நடு இருக்கையில் உட்காரவைத்துவிடும் திறன் உங்களுக்கு கைவந்த கலை. இந்த ஆய்வும் அப்படியே.

எல்லா ரோல்களுக்கும் பிரபலமான ஆட்களையே போட்டதால் ஏகப்பட்ட தாமதங்கள். யாருடைய கால்ஷீட் எப்போது கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படப்பிடிப்பை வைத்துக்கொள்வார்களாம். நீங்கள் சொன்னதுபோல தயாரிப்பாளர், இயக்குனர் இருவருமே படப்பிடிப்பு நுணுக்கங்களில் சற்று குறைவானவர்கள். அதனால் படம் ரொம்பவே சீரியஸான படமாகத்தோற்றமளிக்கும்.

தான் நடித்த பல்வேறு படங்களைப்பற்றியும் ஒரு தொலைக்காட்சியின் தொடர்நிகழ்ச்சியில் சொல்லிவந்த வெண்ணிற ஆடை நிர்மலா, 'லட்சுமி கல்யாணம்' பற்றியும் சொல்லியிருந்தார். (நடிகர்திலகத்துடன் நடித்த எங்கமாமா, பாபு, தங்கைக்காக படங்கள் பற்றியும் விவரமாகச் சொல்லியவர், மக்கள் திலகத்துடனும் மற்றவர்களுடன் நடித்த படங்கள் பற்றியும் சொன்னார். அவற்றில் ஜெய் படம் அதிகம் இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. 'சிவகாமியின் செல்வன்' படத்தில் தான் நடிக்கவிருந்த ரோலில்தான் பின்னர் லதா நடித்திருந்தார் என்ற புதிய செய்தியையும் சொன்னார்).

லட்சுமி கல்யாணம் பற்றிச்சொன்னபோது, அப்படம் வெகு நாட்கள் தயாரிப்பில் இருந்தது என்றும், எப்போது ஷூட்டிங் போனாலும் தன்னைப்பெண் பார்க்கும் காட்சியே எடுத்தார்கள் என்பதால் எப்போதும் கல்யாணப்பெண் கெட்டப்பிலேயே இருந்த தன்னை, மற்ற பட ஷூட்டிங் களுக்கு வரும் கே.ஆர்.விஜயா போன்றவர்கள் 'நீ என்ன நித்திய கல்யாணியா?' என்று கிண்டல் செய்வார்கள் என்று சொன்னார். ஏ.எல்.எஸ்ஸின் சொந்த ஸ்டுடியோவான 'சாரதா' வில் படப்பிடிப்பு நடந்ததால், தாமதம் பற்றிக் கவலைப்படாமல் மெல்ல எடுத்தார்கள் என்றும், இயக்குனர் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளராதலால் கேமரா விஷயங்களில்தான் அதிக கவனம் செலுத்தினார் என்றும் சொன்னார். (நீங்களும் அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்).

மேஜரும் சௌகாரும் சந்திக்கும் இடங்களில் கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் எனப்து உண்மையே. அதுபோல 'போட்டாளே' பாடலுக்கு பதிலாக இன்னும் சற்று நல்ல பாடலை கவியரசரும் மெல்லிசை மன்னரும் போட்டிருக்கலாம்.

'பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்' பாடல் மனதை அள்ளக்கூடிய மெட்டு மற்றும் வார்த்தைகள். அதில் வரும் 'கங்கையின் வெள்ளம் தண்ணீரோ, இல்லை கன்னியர் விடும் கண்ணீரோ' போன்ற வரிகள் கண்னதாசனின் முத்திரை.

அந்த ஆண்டில் நடிகர்திலகத்தின் எட்டு படங்கள் வெளியாயின. திருமால் பெருமை, அரிச்சந்திரா, கலாட்டா கல்யாணம், என் தம்பி, தில்லானா, எங்க ஊர் ராஜா, லட்சுமி கல்யாணம், உயர்ந்த மனிதன் ஆகியன (ஒருநாள் முந்தியிருந்தால் அன்பளிப்புடன் ஒன்பதாகியிருக்கும். முந்தைய ஆண்டில் ஏற்பட்ட 'அசம்பாவிதத்தில்' சிக்கி தாமதித்ததால் இந்த ஆண்டில் மட்டும் அதிசயமாக 'அந்தப்பக்கமும்' எட்டு படங்கள். இடைவெளியின்றி வெளியிட்டால் வெற்றி வாய்ப்புக்கள் என்ன ஆகும் என்பதை இருபக்கமும் புரிய வைத்த ஆண்டு இது. புரிந்துகொண்ட அந்தப்பக்கம் சுதாரித்துக் கொண்டது. புரியாத இந்தப்பக்கம் வழக்கம்போல புற்றீசல்களாகப் படங்கள். என்னதான் நல்ல படங்கள் என்றபோதிலும், தொடர்ந்து 'ஒரே சமயத்தில் நான்கு புதுப்படங்கள்' ஓட்டத்தில் இருந்தால் எவ்வளவு பாதிக்கும் என்பதை கடைசி வரை புரிந்துகொள்ளவேயில்லை நம்மவர்கள்).

அதிகம் பேசப்படாத 'லட்சுமி கல்யாணம்' படத்தைத் தெரிவு செய்து, அலசி ஆரய்ந்து, நுண்ணிய பல விஷயங்களை துல்லியமாகத் தெரிவித்தமைக்கு நன்றி. குறிப்பாக, ராமதாஸ் ஓடிவிட்ட விஷயத்தை வார்த்தைகளினால் தெரிவிக்க முடியாமல், மௌன மொழியிலேயே உணர்த்தும் இடம்.

வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்.... நன்றிகள்.....

saradhaa_sn
2nd January 2011, 03:32 PM
3. யாரடா மனிதன் இங்கே - நடிகர் திலகத்தின் signature பாடல். டி.எம்.எஸ் உணர்வு பூர்வமாய் பாடியிருப்பார். ஒரு ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே என்ற தார்மீக கோவம் கொப்பளிக்கும் பாடல். வரிகள் சாட்டையடியாய் விழும்.

நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே

பாயும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா

எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா!
[மகாத்மா நடந்தது வரும் காட்சி இடம் பெறும்]

இந்தப் பாடலைதான் தன் படத்தில் வரும் பாடலைப் போல் இருப்பதாக கேள்விப்பட்டு அதை தனக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்று மெல்லிசை மன்னர் நிர்பந்தம் செய்யப்பட்டார். அதற்கு கண்ணதாசன் மறுக்க, எம்.எஸ்,வி அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் போட்டு காண்பித்தார் என்று சொல்லுவார்கள்.
'மனிதன்' என்ற வார்த்தை வருவதால் இரண்டு பாடலும் ஒன்றாகி விடுமா?. இரண்டு பாடல்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையென்று, மெல்லிசை மன்னர் 'தைரியமாகசொல்'ல வேண்டியதுதானே.


1968 ஜூலை 27 அன்று வெளியான தில்லானா அப்போதும் பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 1968 அக்டோபர் 21 தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியாகி வெற்றிக் கொடி கட்டுகிறது. அந்த படம் வெளியான 24 நாட்களில் லட்சுமி கல்யாணம் நவம்பர் 15 அன்று வெளியாகிறது. அது வெளியான 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியாகிறது, ஒரே நேரத்தில் நான்கு நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் மதுரையை எடுத்துக் கொண்டால் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, தேவியில் லட்சுமி கல்யாணம், சென்ட்ரலில் உயர்ந்த மனிதன் என ஓடிக் கொண்டிருக்கிறது. [b]சென்னையைப் பொறுத்தவரை சாந்தியில் தில்லானா, சித்ராவில் எங்க ஊர் ராஜா[சித்ரா தவிரவும் இரண்டு அரங்குகள்], கிரௌன், புவனேஸ்வரியில் லட்சுமி கல்யாணம் (மற்ற இரண்டு தியேட்டர்கள் கிருஷ்ணவேணி காமதேனு? மவுண்ட் ரோடு தியேட்டர் இல்லை என்று நினைவு], வெலிங்டன்-ல் உயர்ந்த மனிதன் [வெலிங்டன் தவிரவும் இரண்டு அரங்குகள்] ஓடிக் கொண்டிருக்கின்றன. மெயின் தியட்டர்களிலிருந்து தில்லானா மாறினாலும் கூட ஷிப்டிங் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
சென்னையில் அப்போது ஓடிக்கொண்டிருந்த அரங்குகள்.....

தில்லானா மோகனாம்பாள் - சாந்தி (கிரௌன், புவனேஸ்வரியில் 100 நாட்களைக்கடந்தபின் எடுக்கப்பட்ட பின்னும் சாந்தியில் ஓடிக்கொன்டிருந்தது)

எங்க ஊர் ராஜா - சித்ரா, மகாராணி, சயானி, லிபர்ட்டி.

லட்சுமி கல்யாணம் - காமதேனு, கிரௌன், புவனேஸ்வரி, கிருஷ்ணவேனி

உய்ர்ந்த மனிதன் - வெலிங்டன், பிரபாத், ராக்ஸி, ராம்.

guruswamy
2nd January 2011, 08:17 PM
MY DEAR BELOVED NT FANS

HAPPY NEW YEAR TO OUR NADIGAR THILGAM AND BELOVED FANS

Happiness deep down within.
Serenity with each sunrise.
Success in each facet of your life.
Family beside you.
Close and caring friends.
Health, inside you.
Love that never ends.
Special memories of all the yesterdays.
A bright today with much to be thankful for.
A path that leads to beautiful tomorrows.
Dreams that do their best to come true.
Appreciation of all the wonderful things about you.

JAI HIND!!
M.Gnanaguruswamy

J.Radhakrishnan
2nd January 2011, 10:02 PM
முரளி சார்,

லட்சுமி கல்யாணம் திறனாய்வு அருமை, நேரில் பார்த்தது போல் இருந்தது, இதேபோல் அன்பளிப்பு படம் பற்றியும் திறனாய்வு செய்ய வேண்டுகிறேன்.

Plum
3rd January 2011, 11:48 AM
'மனிதன்' என்ற வார்த்தை வருவதால் இரண்டு பாடலும் ஒன்றாகி விடுமா?. இரண்டு பாடல்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையென்று, மெல்லிசை மன்னர் 'தைரியமாகசொல்'ல வேண்டியதுதானே
Yes.
From attitude, posture, intent, philosophy, in every which way the two are different songs. One common word, and a similar opening line dont plagiarism, make

groucho070
3rd January 2011, 01:38 PM
Murali-sar, you won me over again with the superb review(s). I have a soft spot for this film, and had always wanted to review it and promote to others. Unfortunately the VCD copy I have is in poor condition, making it a difficult viewing experience. I would lump this and Ponunjal as those small films that has strong NT performance.

I especially love NT's banter with VKR, especially when confronting MNN, hillarious! Both NT and VKR really has special chemistry here. It is really a beautiful film and too bad, it didn't do as well as it should.

Thanks again, Murali-sar. I need to hunt for a better copy of this film and show it to the newest addition in my circle of NT fans: my wife. :D

HARISH2619
3rd January 2011, 01:49 PM
முரளி சார்,
படத்தை பற்றிய தங்களின் திறனாய்வு சூப்பரோ சூப்பர்.இதை படிக்கும் அனைவருக்கும் படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கும் ஆவல் கண்டிப்பாக எழும்.
1985-86ம் ஆண்டுவாக்கில் பெங்களூர் கினோ தியேட்டரில் ஒரு மறுவெளியீட்டில் பார்த்தது.எனக்கு 10 வயதிருக்கும்.ஒரே ஆரவாரம்,சில்லரை காசு வீச்சு.என் தந்தைக்கு தெரியாமல் காலுக்கு கீழே கிடந்த சில்லரைகளை பொறுக்கி அரைக்கால் சட்டை பாக்கெட்டில் போட்டு கொன்டதும்,வீட்டுக்கு வந்தவுடன் உப்பியிருந்த பாக்கெட்டை பார்த்து அது என்ன என்று அவர் கேட்டதும்,பயந்து கொன்டே நான் விஷயத்தை சொன்னதும்,அவர் என்னை கடிந்துகொன்டு இனி எப்போதும் இதுபோல் செய்யகூடாது என சொல்லி அந்த காசையெல்லாம் எங்கள் வீட்டு பக்கத்தில் இருந்த கோவில் உண்டியலில் போட வைத்ததையும் ஒரு மலரும் நினைவாக எண்ணிப்பார்க்கவைத்த முரளிசாருக்கு நன்றி

Plum
3rd January 2011, 02:50 PM
Murali-sar, you won me over again with the superb review(s). I have a soft spot for this film, and had always wanted to review it and promote to others. Unfortunately the VCD copy I have is in poor condition, making it a difficult viewing experience. I would lump this and Ponunjal as those small films that has strong NT performance.

I especially love NT's banter with VKR, especially when confronting MNN, hillarious! Both NT and VKR really has special chemistry here. It is really a beautiful film and too bad, it didn't do as well as it should.

Thanks again, Murali-sar. I need to hunt for a better copy of this film and show it to the newest addition in my circle of NT fans: my wife. :D

Seen it just once in DD but still one of my favourite NT movies, in terms of his acting. Still to read MS's review - will read it at leisure.

Plum
3rd January 2011, 02:53 PM
Chinni Jayanth in Jackpot yesterday - a program I never watch but did yesterday because I just found CJ talking about NT as I was channel-hopping - talked about how he spent the 10-15 years of NT with him - was quite surprising as have never heard of his association with NT.

Apparently, NT used to call CJ often on weekends to amuse him with his antics(mimicry etc).
CJ even performed a mutiliation mono-act of the Dharumi sequence(which he had performed for NT when a Mumbai delegation was visiting NT's house) - it was meh but his words on NT and his place in TF history were quite moving and one could see the pride he felt in having been associated thus with the legend

groucho070
3rd January 2011, 02:59 PM
Seen it just once in DD but still one of my favourite NT movies, in terms of his acting. Still to read MS's review - will read it at leisure. :thumbsup: That kind of energy reminded me of Rajini's in films like Mullum Malarum or Tappu Talanggal.

Murali Srinivas
3rd January 2011, 11:58 PM
சாரதா,

நன்றி. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று லட்சுமி கல்யாணம். நீங்கள் குறிப்பிட்ட சில கருத்துகள் மிக மிக சரி. நமது தரப்பு எப்போதும் படங்கள் வெளியீட்டில் அசிரத்தையாகவே இருந்து வந்திருக்கிறது. நாம் 1968-நவம்பரில் நடந்ததை வைத்து பேசுகிறோம். இதே கருத்தை 1970 நவம்பரிலும் இயக்குனர் ஸ்ரீதர் நடிகர் திலகத்திடமே சொல்ல அதை நடிகர் திலகமும் ஆம் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். என்ன செய்வது? தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களை ஒருபோதும் திருப்பி அனுப்பாதவர் அல்லவா?

நன்றி ராதா. அன்பளிப்பு பார்த்து வெகு நாட்களாகி விட்டன. பார்க்க கிடைத்தால் முயற்சிக்கிறேன்.

செந்தில், நன்றி. உங்களின் சின்ன வயது அனுபவம் பற்றி படிக்கும் போது உங்களின் அன்றைய மனநிலையைத்தான் நான் யோசித்துப் பார்த்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு நிகழ்வின் மூலமாக மனதில் சில நல்ல எண்ணங்கள் உருக் கொள்ளும். உங்களுக்கு லட்சுமி கல்யாணம் மூலமாக அது நடந்திருக்கிறது.

Rakesh,

Thanks. I know you love this movie very much and you have also told me. Not only you, there are quite a number of people who love this movie. Though I was expecting you for Selvam itself, glad that you did it for Lakshmi Kalyanam.

Plum,

Something was telling me that you would respond for this movie and you didn't disappoint me. Good to hear that you like this movie and would wait to hear from you regarding the review.

Good to hear that Chinni talked about NT in glowing terms as it is very rare for anybody from the artist side talking about NT. I think Chinni acted with NT in Chinna Marumagal and the association must have started there. I have also read that Chinni wielded the megaphone for a movie called வாய் ஜாலம் produced by Sivaji Productions but never sure, whether that movie got released.

Regards

jaiganes
4th January 2011, 12:09 AM
Chinni Jayanth in Jackpot yesterday - a program I never watch but did yesterday because I just found CJ talking about NT as I was channel-hopping - talked about how he spent the 10-15 years of NT with him - was quite surprising as have never heard of his association with NT.

Apparently, NT used to call CJ often on weekends to amuse him with his antics(mimicry etc).
CJ even performed a mutiliation mono-act of the Dharumi sequence(which he had performed for NT when a Mumbai delegation was visiting NT's house) - it was meh but his words on NT and his place in TF history were quite moving and one could see the pride he felt in having been associated thus with the legend
CJ and Prabhhu are very close friends. One reason why Prabhu went as far as to produce a movie supposedly directed by CJ ( there was one movie early on with Revathi that bombed heavily). I forgot the movie name, but it was heavily advertised in one of the India - Australia test matches in chepauk...

pammalar
4th January 2011, 04:01 AM
நமது நடிகர் திலகம் திரியின் பல பார்வையாளர்களில் ஒருவரான 'கணபதி', முரளி சார் எழுதிய "லட்சுமி கல்யாணம்" திரைக்காவியத் திறனாய்வை படித்து முடித்த பின், தனது நெருங்கிய நண்பரான 'ஸ்ரீதர்' என்பவரைக் சந்திக்கச் செல்கிறார். ஸ்ரீதரும் நமது திரியின் ஒரு பார்வையாளர். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்கள் இருவரும், ஒரு பூங்காவில் சந்தித்து உரையாடுவது வழக்கம். அன்று 2.1.2011 ஞாயிறாதலால் வழக்கம் போல் சந்திக்கின்றனர். ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து, ஸ்ரீதர் இன்னும் திரிக்குச் செல்லவில்லை. இப்படியிருக்க இருவரும் மாலை நேரம் பூங்காவில் சந்தித்து அளவளாவுகிறார்கள். (ஒரு கற்பனை தான் !):

கணபதி : "Happy New Year Sridhar !"

ஸ்ரீதர் : "Same to you Ganapathy"

கணபதி : "மார்கழி மாசத்துல கல்யாணம் நடந்திருக்கு பாத்தியா ?!"

ஸ்ரீதர் : "எங்கப்பா ? யாருக்கு?"

கணபதி : "நமது நடிகர் திலகம் திரியில தான், முரளி சார் கைங்கர்யத்துல - அதாவது கைவண்ணத்துல - "லட்சுமி கல்யாணம்" நடந்துருக்கு"

ஸ்ரீதர் : "அப்படியா...இப்ப புரியுது. நம்ப முரளி சார் "லட்சுமி கல்யாணம்" படத்தோட திறனாய்வ எழுதியிருக்கார். என்ன கரெக்டா...?"

கணபதி : "ஆமா...என்னப்பா நீ படிக்கல அத..."

ஸ்ரீதர் : "இல்ல கணபதி, நான் இன்னும் படிக்கல. நான் திரிக்கு போயி இரண்டு நாளாச்சு. 30ஆம் தேதி(30.12.2010), பம்மலார் பதிவிட்ட சிவாஜி-பந்துலு சம்பந்தப்பட்ட கேள்வி-பதில் வரைக்கும் பாத்தேன். அப்ப திரி 66ஆம் பக்கத்தில் இருந்தது. அதுக்கப்புறம் நான் திரிக்குப் போகல."

கணபதி : "67ஆம் பக்கம்லாம் முடிஞ்சு இன்னிக்கி 68ஆம் பக்கம் வந்தாச்சு !"

ஸ்ரீதர் : "ஆஹா...! அப்ப 68ஆம் வருஷப் படம் 68வது பக்கத்துல... என்ன ஒரு coincidence !"

கணபதி : "ஆமாம் ஸ்ரீதர், கரெக்ட் தான், 68வது பக்கத்துல அதனுடைய தொடர்ச்சி வந்திருக்கு"

ஸ்ரீதர் : "இதுக்கு முன்னாடி 49வது பக்கத்துல 49வது படமான "அன்னையின் ஆணை"யோட ஆரம்பப் பதிவு வந்துது. ஞாபகமிருக்கா... இப்ப 68ல வந்த படம் 68ஆம் பக்கத்துல தொடர்ந்திருக்கு... கரெக்டா?"

கணபதி : "Yes, Your Honour"

ஸ்ரீதர் : "சரிப்பா..."லட்சுமி கல்யாணம்" எப்படியிருக்கு"

கணபதி : "சூப்பரோ சூப்பர்"

ஸ்ரீதர் : "அது சரி, முரளி சார் எழுதுறதுக்கு கேக்கணுமா? முரளி சார், சாரதா மேடம் - இவங்க ஒரு படத்த பத்தி எழுதினாங்கன்னா, அந்தப் படத்தோட, படம் சம்பந்தப்ப்பட்ட எல்லா விஷயங்களுமே தெரிய வரும். சரி தானே...!"

கணபதி : "ரொம்ப சரி! என்ன பொறுத்த வரைக்கும் இவங்க இரண்டு பேரோட writing style எப்படின்னா, முரளி சார் Software மாதிரி! சாரதா மேடம் Hardware மாதிரி!"

ஸ்ரீதர் : "ரொம்ப கரெக்ட் கணபதி, அதாவது முரளி சார் கவாஸ்கர், டிராவிட் மாதிரி, மேடம் வந்து ஸ்ரீகாந்த், சேவாக் மாதிரி"

கணபதி : "Yes, அப்படியும் சொல்லலாம்"

ஸ்ரீதர் : "சரி, அப்புறம்"

கணபதி : "வழக்கம் போல மூன்று பதிவுகள்ள ரொம்ப அழகா குடுத்திருக்காரு. முதல் பதிவுல படத்தோட கதை வருது. என்ன பொறுத்த வரைக்கும் "லட்சுமி கல்யாணம்" கதை கொஞ்சம் கொழப்பமான கதை தான். ஆனா அதையும் நம்ப முரளி சார் தெளிவா எழுதியிருக்காரு."

ஸ்ரீதர் : "அப்ப முரளி சார்ங்குற எழுத்தாளர்குள்ள ஒரு கதாசிரியரும் இருக்கார்னு சொல்லு"

கணபதி : "நிச்சயமா...அப்புறம் இரண்டாவது பதிவுல எல்லாரோட நடிப்ப பத்தியும் நடுநிலையோட எழுதியிருக்காரு. நடிகர் திலகத்தோட நடிப்ப பத்தி காட்சிக்கு காட்சி, கட்டத்துக்கு கட்டம் எழுதியிருக்காரு பாரு, அத திருப்பி திருப்பி ஸ்லோகம் மாதிரி படிச்சுகிட்டே இருக்கலாம் போலருக்கு. மூன்றாவது பதிவுல Songsஅ பத்தியும், படத்தோட சாதனைகள் பத்தியும் புட்டு புட்டு வச்சுருக்காரு. அதுல பொடி வெச்சு கொஞ்சம் கார நெடியும் அடிக்க வைச்சிருக்காரு. அதாவது உன் பாஷையில கவாஸ்கர் ஸ்ரீகாந்தா ஆடிருக்காரு"

ஸ்ரீதர் : "இதுக்கு response இதுவரைக்கும் வந்திருக்கா"

கணபதி : "சாரதா மேடம் அபாரமா response குடுத்துருக்காங்க...அதப் பத்தியும் சொல்றேன்"

ஸ்ரீதர் : "வேண்டாம் வேண்டாம், சஸ்பென்ஸ் போயிடும்... நான் கிளம்பறேன்"

கணபதி : "என்னப்பா அதுக்குள்ள"

ஸ்ரீதர் : "நீ என் ஆவல தூண்டி விட்டுட்ட, அப்புறம்...நான் வீட்டுக்கு கிளம்புறேன், போயிட்டு கம்ப்யூட்டர ஆன் பண்ணி நம்ப திரிய பாத்து "லட்சுமி கல்யாணம்" படத்தோட பதிவுகள, responseகள படிச்சுட்டு தான் மறு ஜோலி! வரேன்பா, Bye !"

கணபதி : "Okayபா Bye! அடுத்த வாரம் பாக்கலாம், நடுவுல முடிஞ்கா phone பண்றேன்"

ஸ்ரீதர் : "Bye ! Bye !"

இருவரும் விடைபெறுகிறார்கள்.

அன்புடன்,
பம்மலார்.

rajeshkrv
4th January 2011, 04:19 AM
Murali sir,

what a review about Lakshmi kalyanam.FANTABULOUS

NT,Sowkar, Major all performed exceptionally well.
Special mention about Nirmala who played that character very nicely between these stalwarts

SHIV
4th January 2011, 11:59 AM
Dear Friends

Wishing you all a "VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR 2011".

"NALLORGAL VAZHVAI KAKHA,NAMAKKAGA NAMMAI KAKHA, HAPPY NEW YEAR"

I was away on official tour for some time and hence could not access our forum.

Bala sir, your astrological analysis on NT is superb, hats off to you.

Murali sir-- What can I say about your movie analysis on Lakshmi Kalyanam...... Its like appreciating each and every ton of Sachin and there is no end to it. Each one of your postings is a gem.

Regards

Shiv

RAGHAVENDRA
4th January 2011, 02:29 PM
ஸ்ரீதர் கணபதி சந்திப்பு தொடர்கிறது

ஸ்ரீதர் - என்ன கணபதி, திரியைப் படிச்சியா
கணபதி - ஆமாம், ஸ்ரீதர்.
ஸ்ரீதர் - என்ன விசேஷம், கவனிச்சியா
கணபதி - ஆஹா, பேஷா, நம்ம பம்மலார் நம்ம பேசற ஸ்டைல்ல பிச்சி உதறிட்டார்.
ஸ்ரீதர் - ஆமாம், முரளி சார், software, சாரதா, Hardware, அப்படின்னா, நம்ம பம்மலார் Firmware - எதையும் ஆணித்தரமா உறுதியா சொல்வார்.
கணபதி - ஆமாம்.
ஸ்ரீதர் - நீ என்ன நான் என்ன சொன்னாலும் ஆமாங்கிறே,
கணபதி - எதாவது மறுத்துப் பேசற மாதிரி நீ சொன்னாத் தானே

KCSHEKAR
4th January 2011, 05:05 PM
அனைவருக்கும் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !


Wish you all a happy & prosperous New Year -2011

RAGHAVENDRA
4th January 2011, 07:23 PM
முரளிசார்,
லட்சுமி கல்யாணம் படத்தைப் பற்றிய தங்கள் விரிவான பதிவு, அதைத் தொடர்ந்து சகோதரி சாரதா அவர்களின் தொடர் கருத்துக்கள் அனைத்தும் வரும் தலைமுறைக்கு 1968 ஆண்டின் வரலாறைக் கூறுபவையாக அமைந்துள்ளன. பாராட்டுக்கள்.
என்ன சொல்வது. கிட்டத்ததட்ட பள்ளியிறுதி நாட்கள். காலையில் பள்ளி முடிந்து மதியம் திருவல்லிக்கேணியிலிருந்து 12ம் எண் பேருந்து அல்லது 45ம் எண் பேருந்தைப் பிடித்து காமதேனு திரையரங்கை அடைந்து லட்சுமி கல்யாணம் பார்த்து விட்டு ரசிகர் நண்பர்களோடு திரும்பிய மனநிறைவு, எத்தனை ஆண்டுகளானாலும் எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது. இது எனக்கு மட்டுமல்ல ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சிவாஜி ரசிகனுக்கும் பொருந்தும். 1969-70ம் ஆண்டு அறிவிக்கப் பட்ட 1968ம் ஆண்டுக்கான சிறந்த பின்னணி பாடகியாக சுசீலா அவர்கள் தேர்ந்தெடுக்கப் படக் காரணமாக இருந்தது, ராமன் எத்தனை ராமனடி பாடலாகும். இந்தப் பாடல் அனைவரையும் விட நடிகர் திலகத்தை மிகவும் பாதித்து, பின்னர் வந்த படத்திற்கு அந்தப் பெயரை அவரும் கண்ணதாசனும் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் புரிந்து கொள்ளலாம்.

நடிகர் திலகம் சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த தொழில் நுட்பத் திறன் அறிந்தவரும் ஆவார். ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். யாரடா மனிதர் இங்கே பாடலில் இடம் பெற்ற தேசிய தலைவர்கள் காட்சிகளெல்லாம் அவருடைய சிந்தனையில் உதித்ததாக சொல்வார்கள்.

சாரதா சொன்னது போல் ஒரு நாள் தப்பியிருந்தால் 9 படங்கள் ஆகியிருக்கும் 1968ல். என்றாலும் அனைத்துமே முத்துக்கள் என்றால் மிகையில்லை.

முரளி அவர்கள் மேலும் மேலும் எழுத வேண்டும் என்று அனைவரைப் போல் நானும் விரும்புகிறேன்.

காலண்டரைப் பாராட்டியதற்கு நன்றி முரளி சார்.

அன்புடன்

Murali Srinivas
4th January 2011, 11:36 PM
சுவாமி,

RS சிவாஜி பாணியில் சொல்வதென்றால் நீங்க எங்கேயோ போய்டீங்க. பழைய ஆனந்த விகடனின் சினிமா விமர்சகர்களான சேகர் சந்தர் நினைவுதான் வந்தது. மனங்கனிந்த நன்றி.

அதையே இன்னும் சில வரிகளை சேர்த்து அழகாய் மெருகேற்றிய ராகவேந்தர் சார் அவர்களே, உங்களுக்கும் நன்றி

Thanks Rajesh. Yes, Nirmala definitely deserves mention and that's what I have written.

Shiv,

Thanks for the kind words but no way I could be compared to Sachin. No body can enter his league.

Thanks to Gopal who had sent a seperate message.

Again like Selvam, Lakshmi Kalyanam has also evoked big positive response and I am definitely happy for it.

Again thanks to one and all.

Regards

pammalar
5th January 2011, 03:01 AM
டியர் ராகவேந்திரன் சார் & முரளி சார்,

தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th January 2011, 03:10 AM
தற்பொழுது, திண்டுக்கல் 'என்விஜிபி' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் "இருவர் உள்ளம்" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இத்தகவலை எமக்கு வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
5th January 2011, 11:29 AM
டியர் முரளி. பம்மலார், ராகவேந்தர்....

1968 நிகழ்வுகளை சூசகமாகச்சொன்ன போதிலும் புரிந்துகொண்டமைக்கு நன்றி. (சிவாஜி ரசிகர்களா கொக்கா?).


1969-70ம் ஆண்டு அறிவிக்கப் பட்ட 1968ம் ஆண்டுக்கான சிறந்த பின்னணி பாடகியாக சுசீலா அவர்கள் தேர்ந்தெடுக்கப் படக் காரணமாக இருந்தது, ராமன் எத்தனை ராமனடி பாடலாகும். இந்தப் பாடல் அனைவரையும் விட நடிகர் திலகத்தை மிகவும் பாதித்து, பின்னர் வந்த படத்திற்கு அந்தப் பெயரை அவரும் கண்ணதாசனும் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் புரிந்து கொள்ளலாம்.

இப்பாடலோடு, உயர்ந்த மனிதன் படப்பாடலான 'நாளை இந்த வேளை பார்த்து' பாடலுக்கும் சேர்த்து பி.சுசீலா அவர்களுக்கு 1968-க்கான தேசியவிருது கிடைத்தது.

பொதுவாக ஒரு படத்தின் பாடல் வரியாக வந்தது, பின்னர் இன்னொரு படத்தில் தலைப்பாக வைக்கப்படுவது வாடிக்கையாக நிகழ்வதுதான். (இந்த வகையில் சிறந்த வெற்றி வார்த்தைகளாக 'பட்டிக்காடா பட்டணமா' என்ற வரியைச்சொல்வேன். இப்பாடல் இடம்பெற்ற மக்கள்திலகத்தின் படமும் வெள்ளிவிழா, இந்த தலைப்பில் வெளியான நடிகர்திலகத்தின் படமும் வெள்ளிவிழா).

ஆனால் 'ராமன் எத்தனை ராமனடி' பாடலுக்கு ஒரு சிறப்பு, இது ஒரு சங்கிலித்தொடராக நீண்டதுதான்.....

'லட்சுமி கல்யாணம்' படத்தில் இடம் பெற்ற பாடல் 'ராமன் எத்தனை ராமனடி'

'ராமன் எத்தனை ராமனடி' படத்தில் இடம் பெற்ற பாடல் 'பொண்ணுக்கு தங்க மனசு'

'பொண்ணுக்கு தங்க மனசு' படத்தில் இடம் பெற்ற பாடல் 'தேன் சிந்துதே வானம்'

'தேன் சிந்துதே வானம்' படத்தில் இடம் பெற்ற பாடல் 'உன்னிடம் மயங்குகிறேன்'

இறுதியாக 'உன்னிடம் மயங்குகிறேன்' என்ற பெயரிலும் ஒரு படம் வந்தது.

வேறெந்த பாடல் வரிகளும் இப்படி சங்கிலித்தொடராக நீண்டதில்லை என்பதுதான் இதன் சிறப்பு.

groucho070
5th January 2011, 02:13 PM
ஆனால் 'ராமன் எத்தனை ராமனடி' பாடலுக்கு ஒரு சிறப்பு, இது ஒரு சங்கிலித்தொடராக நீண்டதுதான்.....

'லட்சுமி கல்யாணம்' படத்தில் இடம் பெற்ற பாடல் 'ராமன் எத்தனை ராமனடி'

'ராமன் எத்தனை ராமனடி' படத்தில் இடம் பெற்ற பாடல் 'பொண்ணுக்கு தங்க மனசு'

'பொண்ணுக்கு தங்க மனசு' படத்தில் இடம் பெற்ற பாடல் 'தேன் சிந்துதே வானம்'

'தேன் சிந்துதே வானம்' படத்தில் இடம் பெற்ற பாடல் 'உன்னிடம் மயங்குகிறேன்'

இறுதியாக 'உன்னிடம் மயங்குகிறேன்' என்ற பெயரிலும் ஒரு படம் வந்தது.

வேறெந்த பாடல் வரிகளும் இப்படி சங்கிலித்தொடராக நீண்டதில்லை என்பதுதான் இதன் சிறப்பு.I am memorising this. Of course, RER song vantha udane ungga gnabagamthan varum madam. Thanks to your article on the film, in fact, not the song. Weird.

pammalar
7th January 2011, 03:32 PM
மதுரை ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில், நமது இதயதெய்வத்தின் "அவன் தான் மனிதன்", இன்று 7.1.2011 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக திரையிடப்படுகின்றது.

தித்திக்கும் இத்தகவலை வழங்கிய மதுரை நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கு நன்றிகள் பற்பல !

அன்புடன்,
பம்மலார்.

goldstar
8th January 2011, 04:03 PM
Thanks Swamy. Just recalling Avan Than Manithan released in same the theatre Madurai Meenakshi (1989) nearly 21 years ago. We watched this movie with so much "allapparai" on Friday/Sunday shows. This movie run for 2 weeks continuous and made huge collections and broken any re-release movies collections. Again and again proved NT is real box office king...

Cheers,
Sathish

RAGHAVENDRA
10th January 2011, 09:08 AM
பொங்கல் திருநாள் தொடங்கி வசந்த் தொலைக்காட்சியில் திரு ஒய்.ஜீ. மகேந்திரா அவர்கள் பங்கேற்கும் என் பார்வையில் என்ற புதிய நிகழ்ச்சி வர இருக்கிறது. இதில் திரையுலகில் தான் சந்தித்த, தன்னை மிகவும் பாதித்த, தான விரும்பிய, பல்வேறு கலைஞர்களையும் நிகழ்ச்சிகளையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். நடிகர் திலகம், ஜெமினி கணேசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி., இயக்குநர்கள் ஸ்ரீதர், ஜெய்சங்கர், நாகேஷ், கே.பாலச்சந்தர் உட்பட பல்வேறு கலைஞர்களைப் பற்றி அவர் உரையாட இருக்கிறார்.

அனைவரும் நிகழ்ச்சிகளைக் கண்டு தங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ராகவேந்திரன்

RAGHAVENDRA
10th January 2011, 08:20 PM
MAGNA SOUND has released following films of Nadigar Thilagam in DVD format:

PENNIN PERUMAI

VIDIVELLI

Moserbaer in its three-in-one DVD has released Thirumbi Paar.

Raghavendran

kumareshanprabhu
11th January 2011, 01:17 AM
hi everybody, Hai Raghavendra Sir, HI Murali hi shek how r u

kumareshanprabhu
11th January 2011, 01:20 AM
Ilyathilagam Sir first Kannada movie called Boss is releasing in Karnataka on 14th Jan

sivank
12th January 2011, 01:32 PM
[tscii:0c3149297b]Hi Folks,
it has been a long time since I peeped in this section. Lot of new informations has been provoded by our brothers and sister. It was mind blowiong what sharadha wished for New year. simply great. Very good narrations by Murali which were as usual accurate.

I recently happened to visit Paris and met a friend at his home. As we were talking I could hear the film Naan Petra Selvam was running as a video. My friend´s mother a great NT fan was watching the movie. As I heard the film my mind went back to the time as I watched this movie as I was a school kid. Infact the famous Dharumi scene in Thiruvilaiyadal would be played in this movie as a stage play. NT played the role of Nakkerar and Siva. The dialogues were the same which was not a problem since APN wrote the dialogues for this film as well. He just made it bigger for the later Thiruvilaiyadal. Anyway it was great watching NT playing Nakkerar and the way how he was against the Lord himself.

Another thing about this film which I liked most is Ka. Mu. Sheriff´s songs. Naan petra selvam and vaazhndhaalum yesum thaanzhndhaalum yesum. [/tscii:0c3149297b]

mr_karthik
12th January 2011, 02:28 PM
Murali sir,

Thanks for your nice review about the movie' Lakshmi KalyAnam' and as usual the related incidents and additonal informations. Your review tempted me to watch it again, and I will do it very soon.

No doubt 'Lakshmi KlayAnam' is a nice family story, in which NT had no pair and duet songs, but fully a serious roll.

Thanks again for selecting this movie for analysis.

Raghavendar sir,

Your calender is very nice and an useful one. Thanks.

pammalar
12th January 2011, 03:03 PM
2011 சென்னை புத்தகக் காட்சி களை கட்டியுள்ளது. கலைஞன் பதிப்பகத்தின் கிளைப் பிரசுரமான "அநுராகம்", தமிழ்த் திரையுலக பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே புத்தகம் வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில், நமது நடிகர் திலகத்திற்கும், "நடிகர் திலகம் சிவாஜி கணேசன்" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் விலை 12 ரூபாய். இந்தத் திரையுலக பிரபலங்கள் வரிசையில் எந்தப் புத்தகத்தை வாங்கினாலும் விலை 12 ரூபாய் தான்.

கிடைக்குமிடம் : சென்னை புத்தகக் காட்சி, "அநுராகம்" ஸ்டால் [ஸ்டால் எண் : 128-129] (புத்தகக் காட்சி 17.1.2011 திங்கள் வரை உண்டு)

புத்தகக் காட்சி முகவரி : புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பன் கல்லூரி எதிரில், சென்னை - 600030.

பதிப்பக முகவரி : "அநுராகம்", 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 600017.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th January 2011, 03:14 PM
பொன்விழா ஆண்டின் நிறைவில் சீரோடும் சிறப்போடும் பீடு நடை போடும் சென்னை "சாந்தி" திரையரங்கம் மென்மேலும் பற்பல விழாக்களைக் காண மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

mr_karthik
12th January 2011, 05:22 PM
'சாந்தியின் பொன்விழா நிறைவு'

12.01.1961-ம் ஆண்டு தமிழ்நாடு முதமைச்சர் பெருந்தலைவர் காமராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட சென்னை சாந்தி திரையரங்கம், நேற்றுடன் தனது 50 ஆண்டுகளை வெற்றிகரமாகப்பூர்த்தி செய்து, இன்று 51-வது வெற்றி ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

சென்னை அண்ணாசாலையின் ஒரு அடையாளச்சின்னமாகத் திகழ்ந்துகொண்டிருக்கும், அத்திரையரங்குடன் நம்முடைய நினைவுகள்தான் எத்தனை பசுமையானவை..!. எத்தனை திரைப்படங்களை அங்கு கண்டு களித்திருப்போம். எத்தனை நண்பர்களுடன் அளவளாவியிருப்போம். சாந்தி திரையரங்க வளாகம் என்பது, நடிகர்திலகத்தின் ரசிகர்களுடைய 'சங்கமக்கூடம்'. தமிழ்நாட்டின் எந்தத்திரையரங்கில் நடிகர்திலகத்தின் படம் ஓடிக்கொண்டிருந்தாலும் அங்கு விவாதிக்கப்படும். தகவல்கள் பறிமாறிக்கொள்ளப்படும்.

கால ஓட்டத்தின் காரணமாக ஆளுக்கொரு திக்கில் ஓடிப்போனோம். ஆனாலும் நினைவுகள் மட்டும் பசுமையாக நெஞ்சில் உறைந்து நிற்கின்றன. முன்னொருமுறை நண்பர் ராகவேந்தர் அவர்கள், கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களின் மகன் சீதக்காதி பற்றிக் குறிப்பிட்டபோது என்னுடைய எண்ணமும் பின்னோக்கிப்பாய்ந்தது. காரணம் எனக்கும் அவர் நண்பர். எங்களூக்கு மட்டுமல்ல, அந்த காலகட்டத்தில் அந்த வளாகத்தில் கூடி நின்ற அனைவருக்கும் நண்பர். நடிகர்திலகத்தைக் குறை சொல்வோரை 'உண்டு, இல்லை'யென்றாக்கி விடும் தீவிர ரசிகர் அவர்.

1975 - 85 பத்தாண்டுகள், நாங்கள் சாந்தி வளாகத்துக்கு செல்லாத மாலை நேரங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். "கோவை கீதாலயாவில் அண்ணன் ஒரு கோயில் முந்தாநாள் ஈவ்னிங் ஷோவோடு கண்டினியூ புல் முடிஞ்சு போச்சாம். முந்தாநாள் நைட்ஷோ புல் ஆகலையாம்" என்பன போன்ற தகவலகளை சூட்டோடு சூடாக பறிமாறிகொண்ட இனிய காலங்கள் இனி வரப்போவதில்லை. அலங்காரில் பைலட் பிரேம்நாத் புல் ஆகும்வரை நின்று பார்த்துவிட்டு, பேசிக்கொண்டே நடந்து, தாய்வீடான சாந்திக்குத் திரும்பிய அந்த நாட்கள் இனி கிடைக்கப்போவதில்லை. மிட்லண்டில் கவரிமான் சரியாகப்போகவில்லை என்று கவலைதோய்ந்த முகத்தோடு பேசிக்கொண்ட நாட்கள் இனி வரப்போவதில்லை. ரிஷிமூலத்தையும், பில்லாவையும் ஒப்பிட்டுப்பேசிய ஒரு மாற்று ரசிக நண்பரோடு விவாதத்தில் ஈடுபட்ட நாட்கள் இனி திரும்பி வரப்போவதில்லை.

ஆனால் அந்த பசுமையான நினைவுகள் எங்கள் நெஞ்சங்களில் உறைந்திருக்கின்றன. இறுதிக்காலம் வரை அது அழியாது, மறையாது.

RAGHAVENDRA
12th January 2011, 09:49 PM
டியர் கார்த்திக், பம்மலார் மற்றும் நண்பர்களுக்கு,
தங்கள் நினைவுகள் என்னை நெகிழச் செய்து விட்டன. இன்று மாலை இந்திய நேரப்படி சுமார் 5.50 முதல் 7.30 வரை சென்னை சாந்தியில் சில நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். பிற்பகல் 50வது ஆண்டை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பொது மக்களுடன் உணவு உபசரித்து நிர்வாகி அவர்கள் கொண்டாடிய செய்தியை என்னிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். இருட்டிய பிறகு சுமார் 7.00 மணியளவில் அங்கு காட்சியை காமிராவில் பதிந்து கொண்டு வீட்டுக்கு சென்று உடனடியாக இன்றே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் பஸ்சில் பயணித்த போது என் நினைவுக்கு வந்தவர் சீதக்காதி அவர்கள், ஆம். கா.மு.ஷெரிப் அவர்களின் புதல்வர். பின்னர் வீட்டுக்கு வந்து கணினியில் இப்படங்களை ஏற்றி விட்டு இங்கு வந்து பார்த்தால் கார்த்திக் அவர்கள் அதே சீதக்காதி பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதைத் தான் ஒரே எண்ண ஓட்டம் என்பதோ.
சென்னை சாந்தி திரையரங்கின் 51வது ஆண்டு நுழைவை முன்னிட்டு இன்று எடுத்த புகைப்படம் இதோ தங்களின் பார்வைக்கு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/snap03.jpg

அன்புடன்
ராகவேந்திரன்

Murali Srinivas
12th January 2011, 11:59 PM
நேற்று பொன் விழாவை நிறைவு செய்து இன்று முதல் வைர விழாவை நோக்கி வெற்றி நடை போட துவங்கி இருக்கும் எங்கள் சாந்தி நூற்றாண்டு விழாவும் காண மனங்கனிந்த வாழ்த்துகள். மிக விரைவில் "மன்னவன் வந்தானடி" என்ற ஒலி இங்கே கேட்கப் போகிறது என்ற இனிய செய்தி வந்திருக்கிறது. அது விரைவில் நடைபெறும் என எதிர்பார்ப்புடன் காத்திருப்போம்.

Sivan,

Welcome back and thanks for your kind words.

Karthik,

Emotional trip down memory lane! Good!

Regards

SHIV
13th January 2011, 02:27 PM
Im overjoyed to learn about "Shanti''s Golden Jubilee. Its like a second temple to us ( 1st is of course, Annai Illam, where our God lived and continues to live).

It would have been even more memorable had one of NT's film was screened this week in Shanti for this occasion. Being a "Pongal & holiday week" in TN, it would have been a gala celebrations by fans.

Regards

Shiv

RAGHAVENDRA
14th January 2011, 09:24 AM
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான நடிகர் சிலோன் சின்னையா அவர்கள் லண்டனில் இயற்கை ஏய்தினார். நடிகர் திலகத்துடன் பைலட் பிரம்நாத் படத்திலும், மற்றும் பொண்ணு ஊருக்கு புதுசு ,அகல் விளக்கு, ஆணிவேர், நீயின்றி நானில்லை, புதிய காற்று உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அவருடைய மறைவுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நடிகர் சிலோன் சின்னையா நடிகர் திலகத்துடன் (http://www.kollytalk.com/wp-content/gallery/actor-ceylon-sinnaya-dead-stills/actor-ceylon-sinnaya-dead-4.jpg)

complicateur
14th January 2011, 11:41 AM
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இள மானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே (http://www.youtube.com/watch?v=Eezd4TKyAyk&feature=channel)
இந்த பாடலின் இரண்டொரு நிமிடங்களிலே நடிகர் திலகத்தின் அபார திறமை வெளிப்படுகிறது. அம்பிகாபதி எனக்கு மிகவும் பிடித்தமான கதைகளில் ஒன்று. திரைப்படத்தில் பானுமதியின் நடிப்பு தான் என்னை முதல் பார்வையில் கவர்ந்தது. சற்று நாட்களுக்கு முன்பு இந்த படலை யூடியுபில் பார்க்க நேர்ந்த பொழுது தான் கணேசனின் நடிப்பில் எவ்வளவு நுணுக்கம் பதுங்கி உள்ளது என்று உணர்ந்தேன்.

காதலியை பிரிந்த காதலன் கப்பல் பயணத்தில் பாடும் பாடல். சோகத்தின் சின்னமாகவே அவன் தோற்றமளிக்கிறான். கவின்ஞன் என்பதால் அவனை அறியாமலே செய்யுள் நாவில்நின்று புறப்படுகிறது. அந்த பாடலில் பிரிந்த காதலியின் உருவம் ஒளிர்கிறது. அனால் மெல்ல மெல்ல அமராவத்யிடம் கொண்ட காதல் அவன் இசை மீது கொண்ட காதலுக்கு வழி வகுக்கிறது. பாட்டின் வீரியம் பெருகப் பெருக இரண்டும் இணைகின்றன. ஒன்றின் மூலம் மற்றொன்று கண் முன்னே நிற்கின்றது. வாடி நின்ற முகம் மெல்ல புண் முறுவல் சூடி நிற்கின்றது. ஒன்றரை நிமிடங்களில் சிவாஜி இசையின் பயனையே தனது நடிப்பின் மூலம் உணர்த்தி விடுகிறார். மகத்தான கலைஞனின் அறிகுறி.

RAGHAVENDRA
14th January 2011, 12:01 PM
Wish you all a happy pongal

KCSHEKAR
14th January 2011, 03:09 PM
Wish you all a Happy Pongal

Murali Srinivas
14th January 2011, 11:44 PM
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

தீபக்,

நன்றி. இப்படி எப்போதோ ஒரு முறை வராமல் அடிக்கடி இந்த திரிக்கு இது போன்ற பதிவுகளுடன் வரலாமே!


அன்புடன்

mr_karthik
15th January 2011, 10:55 AM
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் எங்கும் நம்ம தேரோடும்

போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

அனைவருக்கும் உழவர் திருநாள், தமிழர் திருநாள், தைத்திங்கள் நல்வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
15th January 2011, 02:19 PM
திரு மகேந்திராவின் நிகழ்ச்சி என் பார்வையில், முதல் பகுதி வசந்த் தொலைக்காட்சியில் வரும் 17.01.11 திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பல்வேறு கலைஞர்களைப் பற்றித் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். முதலில் நடிகர் திலகம்.

காணத் தவறாதீர்கள்

pammalar
15th January 2011, 03:13 PM
அனைவருக்கும் உளங்கனிந்த உழவர் திருநாளாம் தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

saradhaa_sn
15th January 2011, 05:18 PM
நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே
சோத்துப்பானை கொதிக்குதடி நேரத்திலே - நேரத்திலே

போட்டது முளைச்சுதடி கண்ணம்மா
கேட்டது கிடைச்சுதடி சின்னம்மா - கைநிறைய
கேட்டது கிடைச்சுதடி சின்னம்மா

அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

pammalar
19th January 2011, 11:40 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 169

கே: இன்றைய திரைப்பட நடிகர்களில் சினிமாவில் வரும் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடிக்கும் நடிகர் யார்? (பி.ஆர்.மணி, சென்னை - 52)

ப: நடிகர் திலகம்... அவருக்கு அடுத்தவர்... ஒரு சிலரே இருக்கிறார்கள்... அவரது நடிப்பாற்றலில் கால்பங்கு கூட இவர்களிடம் இருக்காதே!

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 15.1.1994)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th January 2011, 01:41 AM
சாதனைச் சக்கரவர்த்தியின் 'சாந்தி' சாதனைகளின் சுட்டிகளுக்கான அணிவகுப்பு:

http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=12282&postdays=0&postorder=asc&start=1305

http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=12282&postdays=0&postorder=asc&start=1335

http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13937&postdays=0&postorder=asc&start=45

http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13937&postdays=0&postorder=asc&start=135

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th January 2011, 01:51 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 170

கே: சிவாஜி கணேசன் திரையுலகை விட்டு விலகி விடுவாரா? (சு.ராஜேந்திரன், திருவாடானை)

ப: கவலைப்படாதீர்கள்! அவ்வளவு சுலபத்தில் நடக்கக்கூடிய காரியமல்ல இது.

(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1958)

அன்புடன்,
பம்மலார்.

Plum
20th January 2011, 11:40 AM
Interesting, why would anyone get the doubt in 1958 that he'll quit? What is the background behind this? Any political upheavals?
Murali gaaru, meerE cheppAli!

saradhaa_sn
20th January 2011, 03:12 PM
Interesting, why would anyone get the doubt in 1958 that he'll quit? What is the background behind this? Any political upheavals?
Murali gaaru, meerE cheppAli!

அந்த ஆண்டில், அதுவரை அவர் சார்ந்திருந்த ஒரு இயக்கத்தை விட்டு, மனம் வெதும்பி வெளியேறிய நேரமும், காத்திருந்தது போல இன்னொருவர் உள்ளே நுழைந்ததும், இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட காரணமாக இருந்திருக்கக்கூடும். அதுவரை அவர் நடித்த வெற்றிப்படங்களில் பல, அவர் சார்ந்திருந்த இயக்கத்தின் பாற்பட்டதே என்பதால், அரசியல் இயக்கத்தை துறந்ததோடு, திரையுலகை விட்டும் விலகி விடுவாரோ என்ற நப்பாசை சிந்தனையில் எழுப்பப்பட்ட வினா.

ஆனால் அடுத்த ஆண்டே, பாஞ்சாலக்குறிச்சிக்காரன் சிம்மமாய் கர்ஜித்து, திரையுலகில் என் சாதனைகளே இனிதான் நிகழப்போகின்றன என அறிவுறுத்த, (இக்கால கவிஞர்கள் பாணியில் சொன்னால்) 'விஷமிகள் கற்பனை தவிடுபொடி'.

Plum
20th January 2011, 03:18 PM
Interesting, why would anyone get the doubt in 1958 that he'll quit? What is the background behind this? Any political upheavals?
Murali gaaru, meerE cheppAli!

அந்த ஆண்டில், அதுவரை அவர் சார்ந்திருந்த ஒரு இயக்கத்தை விட்டு, மனம் வெதும்பி வெளியேறிய நேரமும், காத்திருந்தது போல இன்னொருவர் உள்ளே நுழைந்ததும், இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட காரணமாக இருந்திருக்கக்கூடும். அதுவரை அவர் நடித்த வெற்றிப்படங்களில் பல, அவர் சார்ந்திருந்த இயக்கத்தின் பாற்பட்டதே என்பதால், அரசியல் இயக்கத்தை துறந்ததோடு, திரையுலகை விட்டும் விலகி விடுவாரோ என்ற நப்பாசை சிந்தனையில் எழுப்பப்பட்ட வினா.

ஆனால் அடுத்த ஆண்டே, பாஞ்சாலக்குறிச்சிக்காரன் சிம்மமாய் கர்ஜித்து, திரையுலகில் என் சாதனைகளே இனிதான் நிகழப்போகின்றன என அறிவுறுத்த, (இக்கால கவிஞர்கள் பாணியில் சொன்னால்) 'விஷமிகள் கற்பனை தவிடுபொடி'.

Yeah, I thought politics might have something to do with it. Thanks saaradha_sn!

Murali Srinivas
20th January 2011, 11:31 PM
Interesting, why would anyone get the doubt in 1958 that he'll quit? What is the background behind this? Any political upheavals?
Murali gaaru, meerE cheppAli!

Plum,

There were few persons who badly wanted NT to be removed from their way because they could not march ahead and they orchestrated many things and I strongly believe that this question itself is an act by a vested interest and definitely not by a fan and I don't say this just for argument's sake.

1958 was the year in which for the first time, the first three films[in the chrnological order of release] of any hero released in a calender year celebrated 100 days.

Uthama Puthiran

PAthi Bakthi

Sampoorna Ramayanam

and again before the year could end, there was one more 100 days movie in the form of Sabash Meena. And not to forget films like Annaiyin AAnai and Kathavarayan which tasted critical accalaim and BO success [both of them ran for 12 weeks].

Political issues, yes they were there. But the estrangement from the DMK had happened in 1955-56 itself, when the Thirupathi Yatra was made fun off by the likes of MuKa and his ilk [திருப்பதி கணேசா,திரும்பி பார்!].But these people never had any qualms in approaching NT again for acting in their movies. If MuKa had made him act in Puthaiyal and Kuravanji, his nephew Murasoli Maran wrote the dialogues for Annaiyin Aanai.

Looking from this background and if you care to check the month and year in which this question has been raised and if you could bring it to your memory the significance or shall we say coincidence, we can very well understand the motive behind the question.

But as Saradha rightly said, it was destined that the roar of the Lion would never stop and would continue to enthrall the audience for decades together.

Regards

Murali Srinivas
20th January 2011, 11:34 PM
ராஜா படத்தைப் பற்றி இங்கே பலமுறை பேசும் போது, அந்த படம் 1972 ஜனவரி 26 அன்று வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். மதுரையில் சென்ட்ரலில் வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். 39 வருடங்களுக்கு பிறகு அதே ஜனவரி 26, அதே சென்ட்ரலில் விழா கொண்டாட நடிகர் திலகம் வருகை புரிகிறார். ஆம், நாளை முதல் மதுரை சென்ட்ரலில் ராஜா வெளியிடப்படுகிறது. அரங்கம் மீண்டும் விழாக்கோலம் காண விழைவோம்.

அன்புடன்

pammalar
21st January 2011, 03:56 AM
டியர் முரளி சார், சகோதரி சாரதா & நண்பர் Plum,

1963-ம் ஆண்டு "குங்குமம்" திரைப்படம் வெளியான சமயத்தில் ["குங்குமம்" வெளியான தேதி : 2.8.1963], திராவிட முன்னேற்றக் கழக இதழ் ஒன்றின் கேள்வி-பதில் பகுதியில், கழகக் கண்மணி ஒருவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்வி:

"குங்குமம்" படம் பார்த்தீர்களா?

கேள்விக்கு பதிலளித்தவர் அப்படத்தைப் பற்றி தனது மனதில் பட்ட கருத்தையோ அல்லது நடிகர் திலகத்தின் நடிப்பை விமர்சிததோ அல்லது அப்படத்தில் இடம்பெற்ற மற்ற கலைஞர்களின் பங்களிப்பு பற்றியோ எழுதியிருக்கலாம். அது ஜனநாயக முறை. ஆனால் அவர் என்ன பதில் கொடுத்தார் தெரியுமா?! அதை அறிந்தால் அனைவருக்குமே அதிர்ச்சியாயிருக்கும் ! ஆம், அவர் இந்தக் கேள்விக்கு அளித்த பதில்:

"இந்தப் படத்துடன் சிவாஜி காலி" என்பது தான்.

நமது நடிகர் திலகம் இன்றும் வாழ்கிறார். என்றென்றும் வாழ்வார். பதிலளித்தவர் தான் காலியாகியிருப்பார்.

அவருடைய காலத்தில், அவர் வாழ வேண்டும் என அவரை நேசித்த ஒரு பெரிய கூட்டமும், அவர் வீழ வேண்டும் என அவரைக் கண்டு அஞ்சிய ஒரு கூட்டமும் முழக்கமிட்டு கொண்டிருந்ததது மறுக்க முடியாத உண்மை. அவரைப் பிடிக்காத கூட்டததையும் இரு வகையாகப் பிரிக்கலாம்.

ஒன்று - அவரது சினிமாக் கூட்டத்தை, செல்வாக்கைக் கண்டு ஒரு முகாமுக்கு அச்சம்

மற்றொன்று - அவரது அரசியல் கூட்டத்தை, செல்வாக்கைக் கண்டு இன்னொரு முகாமுக்கு பயம்.

இவை தவிர, கூட இருந்தே குழிப்பறிக்கும் துரோகிகளும் இருந்தனர். எண்ணிலடங்கா எதிர்ப்புகளையும், துரோகங்களையும் சமாளித்து ஜெயக்கொடி நாட்ட அவர் போட்ட எதிர்நீச்சல் இருக்கிறதே, அப்பப்பா.....அது அவரால் மட்டுமே முடியும். ஆரம்பமுதற்கொண்டே கலையுலகிலும் சரி, அரசியலிலும்
சரி, நடிகர் திலகம் எதிர்நீச்சல் போட்டேதான் சாதித்துக் காட்டினார். எந்த நிலையிலும், எந்த சமயத்திலும், எந்தவொரு காலகட்டத்திலும் அவர் தன்னை எதிர்த்தவர்களையோ, துரோகம் செய்தவர்களையோ பழி வாங்கியதில்லை. பழிவாங்கும் எண்ணம் கூட அவருக்கு கிடையாது. அப்பேர்ப்பட்ட ஒரு தெய்வப்பிறவி அவர்.

நமது நடிகர் திலகம் தி.மு.க.வை விட்டு வெளியே வந்தது மார்கழி 1954 [அதாவது 16.12.1954 - 13.1.1955] காலகட்டம். "பராசக்தி" [17.10.1952] வெளியான பிறகு சிவாஜி அவர்கள் சற்றேறக்குறைய இரண்டே கால் வருடங்களே கழகத்தில் இருந்திருக்கிறார். "பராசக்தி" முதல் "தூக்கு தூக்கி" [26.8.1954] வரை அவரது எல்லா பட விளம்பரங்களும், செய்திகளும் கழக ஆதரவு ஏடுகளில் வந்திருக்கிறது. அதன் பின்னர் அத்திபூத்தாற் போலத்தான் அவரது செய்திகளும், பட விளம்பரங்களும். கழகத்தை விட்டு அவர் கிளம்புவதற்கு முன்பு வெளியான படம் "எதிர்பாராதது" [9.12.1954]. எதிர்பாராத விதமாக அவர் திருமலை திருப்பதிக்கு திடீரென புனிதயாத்திரை செல்ல அதன் பின்னர் எதிர்பார்த்தது, அந்தப் பெருமாள் நினைத்தது நல்லபடியே நடந்தது. மொத்தத்தில் திரையுலகிற்கு அவர் வரக் காரணமும் பெருமாள், திரையுலகில் அவருக்கு சிறந்ததொரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததும் பெருமாள். கழகத்துக்குள்ளே குடத்துக்குள் நீராய் இருந்து வந்த அவர், புதுவெள்ளமாய்ப் பொங்கி "காவேரி"யாய்ப் பெருக்கெடுத்தார். ஆம், கழகத்தை விட்டு வெளிவந்த பின், வெளிவந்த படம் "காவேரி" [13.1.1955]. "காவேரி" 100 நாள் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. முந்தைய படமான "எதிர்பாராதது"வும் 100 நாள் வெற்றிப்படம். மேலும், 1955-ல் "மங்கையர் திலக"மும்[100 நாள்], "கள்வனின் காதலி"யும் சிறந்த வெற்றிப்படங்களாக வலம் வந்தன. "முதல் தேதி", "உலகம் பல விதம்", "கோடீஸ்வரன்" ஆகியவை Average ரகத்தில் ஓடியவை.

1956-ல், "அமரதீபம்", "பெண்ணின் பெருமை" இரண்டும் 100 நாள் பெருவெற்றிப்படங்கள். "நான் பெற்ற செல்வம்" நேரடியாக 100 நாள் ஓடவில்லை என்றாலும் வசூலில் சக்கை போடு போட்டது. பல ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது. பகைமை பாராட்டாமல், ஏற்கனவே கழகத்தில் இருந்த போதே, ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்த படங்களான "ராஜா ராணி", "ரங்கோன் ராதா" ஆகிய படங்களை பிரச்னை ஏதுமின்றி முடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம். "ரங்கோன் ராதா" வெற்றி பெற்றது. தி.மு.கழக முக்கியப் பிரமுகரான ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் கதை-வசனத்தில் "வாழ்விலே ஒரு நாள்" படத்தில் நடித்தார்.

1957-ல், "வணங்காமுடி" 100 நாள் பெருவெற்றிக்காவியம். அதற்கு அடுத்த நிலையில், "மக்களைப் பெற்ற மகராசி", "தங்கமலை ரகசியம்", "பாக்கியவதி" ஆகியவை அமோக வெற்றியைப் பெற்றன. "புதையல்" நல்லதொரு வெற்றிப்படம். "அம்பிகாபதி" ஓட்டத்தில் OK.

1958-ம் ஆண்டு குறித்து முரளி சாரும், 1959 பற்றி சகோதரி சாரதாவும் கூறி விட்டார்கள். அதற்கு பின்னர் அவர் சாதித்த விண்ணளந்த சாதனைகள் அனைவரும் அறிந்ததே.

அவர் மண்ணை விட்டு மறைந்து பத்து ஆண்டுகள் ஆகப் போகிற நிலையிலும் என்றென்றும் வான்புகழ் கொண்டு,

அவர் வாழ்கிறார் ! வாழ்கிறார் !! வாழ்ந்து கொண்டேயிருக்கிறார் !!!

அன்புடன்,
பம்மலார்.

goldstar
21st January 2011, 05:01 AM
Murali sir,

Looking for Madurai Central - Raja release details. Saradha madam also written review of Raja in her blog.

Sathish

RAGHAVENDRA
21st January 2011, 08:47 AM
டியர் பம்மலார், முரளி மற்றும் நண்பர்கள்,
முரளி சாரும் பம்மலாரும் எழுதியதற்குப் பிறகும் நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பற்றி யாராவது ஐயம் கொண்டிருந்தால் அதற்கு இருக்கக் கூடிய ஒரே காரணம், முன்னதாகவே நடிகர் திலகத்தைப் பற்றிய மாற்றுக் கருத்தோடு மட்டும் அணுகுபவராகத் தான் இருக்க முடியும்.
சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி என்று அவர் படத்தில் தான் பாடினாரே தவிர, நிஜ வாழ்வில் அனைத்து சோதனைகளையும் தாங்கியும் தாண்டியும் தான் வெற்றி பெற்றிருக்கிறார்.
யாருடைய நிழலிலும் தன் வளர்ச்சியை அவர் உருவாக்கிக் கொள்ள வில்லை. அவர் சார்ந்த அரசியல் இயக்கங்கள் எந்த விதத்திலும் அவருடைய வளர்ச்சியில் பங்கு பெற்றதில்லை. அவருடைய வளர்ச்சியும் வெற்றியும் முழுக்க முழுக்க அவருடையதே.

ஆனால் இன்றும் அவரிடம் நன்றி மறக்காமல் பாராட்டும் பலர் உள்ளனர் என்பது உண்மையிலேயே மனசாட்சி உள்ளவர்கள் இருப்பதால் தான் இந்நாட்டில் மழை பெய்கிறது என்று காட்டுகிறது. இதற்கு சான்று, தற்பொழுது ஜெயா டி.வி. திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் எம்.பானுமதி அவர்கள். நடிகர் திலகத்தைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு கணமும் அவரால் மிகுந்த சிரமப்பட்டுத் தான் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. நடிகர் திலகத்தைத் தன் தெய்வம் என்றே நிகழ்ச்சியில் குறிப்பிட்டு வருகிறார் அவர். குறிப்பாக பல புதிய தகவல்கள் அவர் தருகிறார். நடிகர் திலகத்தின் நாடக நாட்களைப் பற்றிக் கூறிவரும் அவர், ஜஹாங்கீர் நாடகத்தில் தான் ஒரு காட்சியையே மிஸ் பண்ணி விட்டதாகவும் அதை நடிகர் திலகம் கவனித்து கேட்டதையும் மறக்காமல் இருக்கிறார். தேன் கூடு நாடகத்தில் இரு பாத்திரங்களில் விவசாயியாகவும் மற்றும் கோட்சூட்டுடன் பணக்காரராகவும் நடித்ததையும் நினைவு கூர்ந்தார். மேலும் வேங்கையின் மைந்தன் நாடகத்தில் அவருடைய தோற்றமும் நடையும் பார்வையாளர்களிடையே மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றதையும் கூறுகிறார். இவையெல்லாவற்றையும் விட களங்கண்ட கவிஞன் நாடகத்தைப் பற்றிக் கூறும் போது, முழுக்க முழுக்க கவிதை வடிவில் அரங்கேற்றி மிகப் பெரிய வெற்றி பெற்றதையும் நினைவு கூர்ந்தார். [இந்த நாடகத்தை வானொலியில் நானும் கேட்டிருக்கிறேன். நடிகர் திலகத்தின் கம்பீரமான குரலில் அற்புதமான நாடகம். இந்நாடகத்தில் தான் அங்கவை, குந்தவை பாத்திரங்கள் முக்கியத்துவம் பெற்றன. இந்தக் இலக்கிய கதாபாத்திரங்களைத் தான் சமீபத்தில் ஒரு படத்தில் நகைச்சுவையாக சித்தரித்திருந்தனர்].

எம்.பானுமதியின் நினைவுகள் இன்றும் தொடரும்.

அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

அன்புடன்

pammalar
21st January 2011, 01:16 PM
மதுரை கீரைத்துறை 'நியூடீலக்ஸ்' திரையரங்கில், கடந்த புதன்(12.1.2011) மற்றும் வியாழன்(13.1.2011) ஆகிய இரு தினங்கள் மட்டும், வாழ்வியல் திலகத்தின் "விளையாட்டுப் பிள்ளை" திரைக்காவியம் தினசரி 3 காட்சிகளாக வெளியாகி நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

திரையரங்கில் இக்காவியத்தைக் கண்டு களித்து முடித்து விட்டு வெளியே வந்த ஒருவர், "இப்பெல்லாம் நூறு ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படம் பாத்தாக் கூட இந்த மாதிரி நல்ல படங்கள பாக்க முடியலையே" என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இத்தகவல்களை அளித்த மதுரை அன்புள்ளம் திரு.வேலாயுதம் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st January 2011, 01:41 PM
ராஜா படத்தைப் பற்றி இங்கே பலமுறை பேசும் போது, அந்த படம் 1972 ஜனவரி 26 அன்று வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். மதுரையில் சென்ட்ரலில் வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். 39 வருடங்களுக்கு பிறகு அதே ஜனவரி 26, அதே சென்ட்ரலில் விழா கொண்டாட நடிகர் திலகம் வருகை புரிகிறார். ஆம், நாளை முதல் மதுரை சென்ட்ரலில் ராஜா வெளியிடப்படுகிறது. அரங்கம் மீண்டும் விழாக்கோலம் காண விழைவோம்.

அன்புடன்

இன்று 21.1.2011 வெள்ளி முதல், மதுரை சென்ட்ரல் சினிமாவில் தினசரி 4 காட்சிகளாக, ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா".

அன்புடன்,
பம்மலார்.

Plum
21st January 2011, 01:45 PM
MS, Pammalar and Raghavendra, thanks for the updates. Murali avargaL ezhudhiyadhai pOnRa puttu puttu vaikkum background info-kAga dhAn andha kELvi kEttEn.

saradhaa_sn
21st January 2011, 02:45 PM
டியர் ராகவேந்தர்,

திருமதி எம்.பானுமதியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியை நானும் கடந்த இரண்டு நாட்களாகப் பார்த்து வருகிறேன். அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளும், சத்தியத்தை நினைவூட்டும், நன்றி மறவாத வார்த்தைகளாக வந்து விழுகின்றன. முதல்நாள் தன் குடும்பத்தைப் பற்றிச்சொன்னவர், (பிறந்த ஊர் அன்றைய ஒன்றுபட்டிருந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் குமபகோணத்துக்கும் மயிலாடுதுறைக்கும் இடையிலுள்ள குத்தாலம்), முத்தாய்ப்பாக, தனது நாட்டிய அரங்கேற்றத்துக்கு நடிகர்திலகம் தலைமை தாங்கி சிறப்பித்ததைச் சொல்லி நிறைவு செய்திருந்தார்.

ஒரே அரங்கில், மூன்று நாட்கள் மூவருடைய நடன அரங்கேற்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் இரண்டாவது நாள் தன்னுடைய அரங்கேற்றம் நடைபெற இருந்ததைச் சொன்னவர், முதல்நாள் வேறொருவரின் அரங்கேற்றத்துக்கு மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கவும், மூன்றாவது நாளன்று ஆந்திர சகோதரிகள் அரங்கேற்றத்துக்கு தெலுங்கிலிருந்து ஒரு பெரிய நடிகர் தலைமை தாங்கவும் இருப்பதை அறிந்து, தனது நிகழ்ச்சிக்கு அதுவரை யாரை அழைப்பது என்று முடிவாகாமல் இருந்த நிலையில், தனது நடன அரங்கேற்றம் நடிகர்திலகம் அவர்கள் தலைமையில்தான் நடைபெற வேண்டுமென்று ரொம்ப ஆசைப்பட்டதையும் சொன்னார்.

முன்கூட்டியே ஏற்பாடு செய்யாமல் அவ்வளவு பெரிய கலைஞர் எங்கே வரப்போகிறார், அதுவும் அவருக்கு தோதான தேதியில் நிகழ்ச்சியை வைக்காமல், ஏற்கெனவே தேதியெல்லாம் முடிவுசெய்து விட்டு அழைத்தால் வருவாரா, வருகிறேன் என்று சும்மா சொல்வார், ஆனால் வர வாய்ப்பில்லை என்று பலரும் ஆரூடம் சொல்லியிருக்க, சொன்ன தேதியில் சொன்ன நேரத்துக்கு நடிகர்திலகம் 'டாண்' என்று அட்டெண்ட் பண்ணியதோடு, தன்னுடைய நடனத்தை வெகுவாகப்பாராட்டிப் பேசியதையும் நன்றிப்பெருக்கோடு குறிப்பிட்டு, அந்த கலைமேதைக்கும் தனக்கும் ஏற்பட்ட மிக நீண்ட கலைப்பயணத்தின் அச்சாரமாக அமைந்த அந்த நாளை நினைவு கூர்ந்தார்.

நேற்றைய நிகழ்ச்சி முழுதும், சிவாஜி நாடகமன்றத்தில் தனக்கு ஏற்பட்ட அற்புதமான நிகழ்வுகளை அருமையாக நினைவு கூர்ந்ததை நீங்கள் விவரமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

பம்பாய்க்கு நாடகம் நடத்த தொடர்வண்டியில் சென்றபோது, நடன அமைப்பாளர் வரவில்லையென்றறிந்த நடிகர்திலகம், அந்நாடகத்தில் இடம்பெற்ற நாட்டியத்துக்கு தன்னையே நடன இயக்குனராகப் பணியாற்றப்பணித்ததையும் உணர்ச்சியுடன் நினைவு கூர்ந்த பானுமதி, தன்னுடைய வாழ்வு அந்த தெய்வம் இட்ட பிச்சை என்று சொல்லி நெகிழ்ந்துபோனார். (அவர் சொல்வது உண்மையே. 60-களின் மத்தியில் துவங்கி 70-களிலும் 80 துவக்கத்திலும், எம்.பானுமதி இல்லாத நடிகர்திலகத்தின் படங்களைக் காண்பது அபூர்வம். அவ்வளவு நிறைய வாய்ப்புக்கள் கொடுத்தார்).

எம்.பானுமதி அவர்களை ஒருமுறை நான் நேரில் சந்தித்துப்பேசியிருக்கிறேன். அப்போதும் மூச்சுக்கு மூச்சு நடிகர்திலகத்தைப் பற்றியே பேசினார். அதேபோல, முன்னொருமுறை தூர்தர்ஷன் பொதிகைத் தொலைக்காட்சியில் 'அலோ உங்களுடன்' நிகழ்ச்சியில் பங்கேற்றபோதும், நடிகர்திலகத்தை நிகழ்ச்சி முழுக்க நினைவு கூர்ந்தார்.

tacinema
21st January 2011, 09:21 PM
ராஜா படத்தைப் பற்றி இங்கே பலமுறை பேசும் போது, அந்த படம் 1972 ஜனவரி 26 அன்று வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். மதுரையில் சென்ட்ரலில் வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். 39 வருடங்களுக்கு பிறகு அதே ஜனவரி 26, அதே சென்ட்ரலில் விழா கொண்டாட நடிகர் திலகம் வருகை புரிகிறார். ஆம், நாளை முதல் மதுரை சென்ட்ரலில் ராஜா வெளியிடப்படுகிறது. அரங்கம் மீண்டும் விழாக்கோலம் காண விழைவோம்.

அன்புடன்

இன்று 21.1.2011 வெள்ளி முதல், மதுரை சென்ட்ரல் சினிமாவில் தினசரி 4 காட்சிகளாக, ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா".

அன்புடன்,
பம்மலார்.

Murali / Pammalar,

What a great News. NT's Raja never fails to enthrall audience, not just his fans.

Wish you a good luck. Any chances of getting Kalai Chakravarthyin Madurai Kottai Central Cinema Sunday evening show photos / pics?

Regards

rajeshkrv
22nd January 2011, 05:08 AM
M.Banumathi talks about Nadigar thilagam..

She says NT peformed Kalam kanda kavingan Drama and only he can perform.

http://www.youtube.com/watch?v=2K2_SwQsRGY

pammalar
23rd January 2011, 12:36 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 171

கே: விருதுகளால் அதை வாங்கும் கலைஞர்களுக்குப் பெருமையா அல்லது சிறந்த கலைஞர்களால் விருதுகளுக்குப் பெருமையா? (எல்.எம்.மங்கை, மதுரை-16)

ப: விருதுகளால் கலைஞர்கள் பெருமை அடைகிறார்கள். சில நேரங்களில் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படுவதால் அந்த விருதுகள் பெருமை பெறுகின்றன! உதாரணம் - நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு வழங்கப்படுவதால் 'செவாலியே' விருதுக்கே பெருமை சேர்கிறது!

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1.5.1995)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
23rd January 2011, 06:34 PM
நடிகர் திலகத்தின் கேள்வி பதில் பகுதிக்காகவே பம்மலாருக்கு தங்கப் பதக்கம் விருது வழங்க வேண்டும். மற்றவை எல்லாம் போனஸ். பாராட்டுக்கள், பம்மலாரே..

ஒய்.ஜி.மகேந்திராவின் பார்வையில் கலைஞர்கள் நிகழ்ச்சி, வரும் செவ்வாய்க்கிழமை, 25.01.2011 அன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகவுள்ளது. எதிர்பாராத காரணத்தால் அறிவித்த படி பொங்கல் வாரத்தில் ஒளிபரப்பாகவில்லை.

தன்னுடைய தெய்வமாய் கருதும் நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவுகளுடன் நிகழ்ச்சியைத் தொடங்க உள்ளார் மகேந்திரன்.

அனைவரும் அவசியம் காண வேண்டிய நிகழ்ச்சி.

நடிகர் திலகத்தைத் தொடர்ந்து மற்ற கலைஞர்களைப் பற்றியும் தன் நினைவுகளைப் பகிரந்து கொள்கிறார்.

அன்புடன்

pammalar
23rd January 2011, 08:47 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் தங்கமான பாராட்டுக்கு எனது பணிவு கலந்த பொன்னான நன்றிகள் ! தாங்கள், முரளி சார், சகோதரி சாரதா மற்றும் இத்திரியில் பங்களிப்புகளை அள்ளி அளித்து வரும் அனைவருமே கடந்த பல ஆண்டுகளாக தொய்வின்றி, அளப்பரிய சேவையினை ஆற்றி வருகிறீர்கள். இதில் அடியேனும் சிறிதளவு பங்கு பெறுவது என் பாக்கியம் !! நமது மாடரேட்டர்களுக்கு நமது நன்றிகள் என்றென்றும் !!!

பணிவுடன்,
பம்மலார்.

pammalar
23rd January 2011, 09:05 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 172

கே: ஞான ஒளி, பாபு, அருண்பிரசாத் மூவீஸ் படம், சாந்தி பிலிம்ஸ் படம், ராஜா, மூன்று தெய்வங்கள், தேனும் பாலும்,.......பட்டியலைப் பார்த்தால், நடிகர் திலகம் இன்னும் ஓராண்டில் 175வது படத்தை எட்டி விடுவார் போலிருக்கிறதே? (சுமன், பம்பாய்-71)

ப: ரொம்பவும் பேராசை உங்களுக்கு !

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
23rd January 2011, 09:36 PM
ராஜா படத்தைப் பற்றி இங்கே பலமுறை பேசும் போது, அந்த படம் 1972 ஜனவரி 26 அன்று வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். மதுரையில் சென்ட்ரலில் வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். 39 வருடங்களுக்கு பிறகு அதே ஜனவரி 26, அதே சென்ட்ரலில் விழா கொண்டாட நடிகர் திலகம் வருகை புரிகிறார். ஆம், நாளை முதல் மதுரை சென்ட்ரலில் ராஜா வெளியிடப்படுகிறது. அரங்கம் மீண்டும் விழாக்கோலம் காண விழைவோம்.

அன்புடன்

நீ வர வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்காக வெள்ளியன்று வெள்ளித்திரையில் வருகை புரிந்த ஸ்டைல் சக்கரவர்த்தி ராஜா-வை வெள்ளியன்றே வரவேற்ற மதுரை சென்ட்ரல்!

வெள்ளியன்று காலையிலே இந்த வரவேற்பு என்றால் இன்று ஞாயிறு மாலை எப்படியிருந்திருக்கும்!

அன்புடன்

19thmay
23rd January 2011, 09:43 PM
Watched Needhi yesterday. NT was just brilliant :notworthy:

His body language and dialogue delivery were quite fantastic. He has to underplay and he did that beautifully! Really loved this movie. :)

pammalar
24th January 2011, 12:34 AM
ராஜா படத்தைப் பற்றி இங்கே பலமுறை பேசும் போது, அந்த படம் 1972 ஜனவரி 26 அன்று வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். மதுரையில் சென்ட்ரலில் வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். 39 வருடங்களுக்கு பிறகு அதே ஜனவரி 26, அதே சென்ட்ரலில் விழா கொண்டாட நடிகர் திலகம் வருகை புரிகிறார். ஆம், நாளை முதல் மதுரை சென்ட்ரலில் ராஜா வெளியிடப்படுகிறது. அரங்கம் மீண்டும் விழாக்கோலம் காண விழைவோம்.

அன்புடன்

நீ வர வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்காக வெள்ளியன்று வெள்ளித்திரையில் வருகை புரிந்த ஸ்டைல் சக்கரவர்த்தி ராஜா-வை வெள்ளியன்றே வரவேற்ற மதுரை சென்ட்ரல்!

வெள்ளியன்று காலையிலே இந்த வரவேற்பு என்றால் இன்று ஞாயிறு மாலை எப்படியிருந்திருக்கும்!

அன்புடன்


HOT FLASH : "ராஜா ராஜா தான்"

"ராஜா"வின் ரசிக ரோஜாக்கள் இன்று 23.1.2011 ஞாயிறு மாலைக் காட்சியில் கோயில் மாநகரின் சென்ட்ரல் சினிமாவில் திருவிழாக் கொண்டாடி தூள் கிளப்பி விட்டார்கள். படம் தொடங்குவதற்கு முன்பு அரங்க வாயில் முகப்பில் உள்ள போஸ்டர் கட்-அவுட்டுக்கு மாலை அலங்காரங்களும், கற்பூர ஆராதனைகளும் விமரிசையாக நடந்தேறின. பின்னர் படம் தொடங்கியதும், திலகத்தின் ஒவ்வொரு அசைவுக்கும், ஸ்டைலுக்கும், பாட்டுக்கும், Fightக்கும் அரங்கம் அதிர்ந்திருக்கிறது.

"வித்தை ஒன்றை கற்றுக் கொள்ள வாத்தியாரம்மா... நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால் வேறு யாரம்மா" பாடல் வரிகள் லேசாகத் தான் காதில் விழுந்ததாம். அந்த அளவுக்கு விசில் ஒலிகள் அந்த வரிகளுக்கு விண்ணைப் பிளந்திருக்கிறது.

"கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா" பாடல் அளப்பரையின் உச்சம். அரங்கத்தின் கூரைக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால்
"தப்பித்தேன்...பிழைத்தேன்..." என்று கூறுமாம்.

மொத்தத்தில், மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, சென்ட்ரல் சினிமா அரங்கத்தையே ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள் நம்மவர்கள்.

Gross Collection Report (approx.)

முதல் நாள் வெள்ளிக்கிழமை(21.1.2011) : ரூ.11,600/- [ரூபாய் பதினொன்றாயிரத்து அறுநூறு]

இரண்டாம் நாள் சனிக்கிழமை(22.1.2011) : ரூ.10,900/- [ரூபாய் பத்தாயிரத்து தொள்ளாயிரம்]

இன்று மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை(23.1.2011) : ரூ.11,500/- [ரூபாய் பதினொன்றாயிரத்து ஐநூறு] (மாலைக் காட்சி வரை)

ஞாயிறு மாலைக் காட்சி வரை, மூன்று நாள் மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.34,000/- என்பது விண்ணை அளக்கும் சாதனை.

நமது நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, ஸ்டைல் சக்கரவர்த்தி, சாதனைச் சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி !!!

சுவையான இத்தகவல்களை சுடச்சுட வழங்கிய அன்புள்ளம், மதுரை அரசமரம் செவாலியே டாக்டர் சிவாஜி குரூப்ஸ் நிர்வாகி திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள் !

பெருமிதத்துடன்,
பம்மலார்.

goldstar
24th January 2011, 08:07 AM
Thanks a lot Mr. Swamy for provided our NT's Raja re-release details. Rs. 30, 000 + within 3 days prove that only NT's movie can bring money to the distributor and proved that NT is ONLY box office king.

If we could get a chance to view Sunday gala's videos or pictures will make us 100% happy.

Cheers,
Sathish

RAGHAVENDRA
24th January 2011, 09:48 AM
ஆட்டுவித்தார் ஆரொருவர் ஆடாதாரே கண்ணா - இந்த பாடலுக்கு ஷாரூக் கான் நடித்தால் எப்படி இருக்கும்.
ரீமிக்ஸ் செய்யப் பட்டுள்ள இந்தப் பாடலை காண
ஆட்டுவித்தார் ஆரொருவர் (http://www.youtube.com/watch?v=v76yIjbtRfg)

saradhaa_sn
24th January 2011, 10:57 AM
டியர் பம்மலார்,

மதுரை சென்ட்ரலில் 'ராஜா'வின் வெற்றிமுழக்கம் பற்றிய தகவல்களுக்கு நன்றி. 38 ஆண்டுகளுக்கு முன் அதே சென்ட்ரலில், முந்தைய தலைமுறையால் இதேபோன்ற வரவேற்பில் 100 நாட்களைக்கடந்த 'ராஜா' இந்தத்தலைமுறையாலும் அதே உற்சாகத்துடன் கொண்டாடப்படுவதிலிருந்து, எந்தத் தலைமுறையினருக்கும் 'ராஜா' நம்மவரே எனப்து தெளிவாகிறது.

வசூல் சாதனை விவரங்களுக்கு மிக்க நன்றி...

Thirumaran
24th January 2011, 10:37 PM
[html:237dce2265]
http://img23.imageshack.us/img23/4717/21012011040.jpg
[/html:237dce2265]


[html:237dce2265]
http://img810.imageshack.us/img810/8413/21012011039.jpg
[/html:237dce2265]


[html:237dce2265]
http://img52.imageshack.us/img52/6573/21012011041.jpg
[/html:237dce2265]


[html:237dce2265]
http://img413.imageshack.us/img413/2548/21012011042z.jpg
[/html:237dce2265]

Murali Srinivas
24th January 2011, 11:03 PM
நான் அனுப்பிய புகைப்படங்களை அப்லோட் செய்ததற்கு திருமாறனுக்கு மிக்க நன்றி.

மதுரைக்கு சென்றிருந்த போது படம் வெளியாகும் தகவலையும் இப்புகைப்படங்களையும் எடுத்து அனுப்பி வைத்த நண்பனுக்கு நன்றி.

படம் மதுரை சென்ட்ரலில் பெறும் வரவேற்பையும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அபிரிமிதமான ஆதரவையும் இங்கே பதிவிட்டதற்கு சுவாமிக்கு நன்றி.

தினசரி வசூல் பற்றிய விவரங்களை அளித்த திரு.குப்புசுவாமிக்கு நன்றி.

அன்றும் இன்றும் என்றும் மதுரை நடிகர் திலகத்தின் கோட்டை என்பதை நிரூபித்த ரசிகர்களுக்கு நன்றி.

பராசக்தி முதல் இன்று வரை இந்த அறுபது வருட காலத்தில் V.C. கணேசன் என்றால் Vasool Chakravarthi கணேசன் என்பதை என்றென்றும் நிரூபித்துக் கொண்டிருக்கும் மதுரை மக்களுக்கு மனமார்ந்த நன்றி!

அன்புடன்

நான் நேற்று எனது பதிவில் குறிப்பிட்டது போல் இந்த படங்கள் 21.01.2011 வெள்ளி காலை அன்று எடுக்கப்பட்டவை.

pammalar
24th January 2011, 11:54 PM
டியர் முரளி சார்,

கலக்கல் ஸ்டில்ஸ் ! நெஞ்சார்ந்த நன்றிகள் !

VCG = Vasool Chakravarthi Ganesan : A New, Novel and an Outstanding abbreviation. My special kudos to you.

அன்புடன்,
பம்மலார்.

HARISH2619
25th January 2011, 01:31 PM
Dear murali sir,
thankyou very much for uploading the super stills of engal thanga RAJA.please try to upload the posters of sunday evening show alapparai.

dear pammal sir,
thankyou very much for the evening show report and collection details.

HARISH2619
25th January 2011, 01:40 PM
currency note garland for NT cutout


http://s872.photobucket.com/albums/ab289/ragasuda/?action=view&current=srirangamcutoutC.jpg#!oZZ1QQcurrentZZhttp% 3A%2F%2Fs872.photobucket.com%2Falbums%2Fab289%2Fra gasuda%2F%3Faction%3Dview%26current%3Dsrirangamcut outC.jpg

RAGHAVENDRA
26th January 2011, 06:03 AM
வி.சி. என்ற ஆங்கில எழுத்திற்கு புதிய பரிமாணத்தைத் தந்த முரளி சாருக்கும் ராஜா பற்றிய முரளி மற்றும் பம்மலாரின் தகவல் பதிவுகளுக்கும் பாராட்டுக்கள்.

அடுத்த தலைமுறையையும் தாண்டி நடிகர் திலகம் எப்படி தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதற்கு ஒரு சான்று இந்த இணைப்பில் உள்ள பதிவு

My favorite actor is Sivaji Ganesan, even though I have seen his films only in DVDs. I do not think there is any equal for him. He was so versatile. (http://qna.rediff.com/questions-and-answers/for-every-one-there-is-a-favorite-actor.-name-your-favorite-/17564884/answers/17575281)

saradhaa_sn
26th January 2011, 11:36 AM
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முதல்நாள் அறிவிக்கப்படும், குடியரசுத்தலைவரின் 'பத்ம' விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

விருது பெறுவோர் பட்டியலில் தகுதியான பலர் இடம்பெற்றிருந்தபோதிலும், மிகத்தகுதியான ஒருவர் "வழக்கம்போல" விடுபட்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான்.

எஸ்.பி.பி.க்கு பத்மபூஷண் அளிக்கப்பட்டிருப்பது சந்தோஷமானதுதான். மற்றபடி (பலருக்கு யாரென்றே தெரியாத இரண்டு பரதநாட்டியக்கலைஞர்கள் இருவர் உட்பட) பத்மஸ்ரீ பெற்றவர்களைப்பற்றியும் நாம் குறை சொல்வதற்கில்லை.

நம் கேள்வி, 'அவர்களுக்கு ஏன் கொடுத்தாய்?' என்பது அல்ல, 'இவருக்கு ஏன் தடுக்கிறாய்?' என்பதுதான். சென்ற ஆண்டு காங்கிரஸ் தலைவர் திரு தங்கபாலு பங்குபெற்ற ஒரு விழா மேடையில் அவரிடமே இதுபற்றி கோரிக்கைவைத்தார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

அவர் உச்சத்தில் இருந்தபோதே கொடுத்திருக்க வேண்டியது, இன்னும் அவருக்கு எட்டாமலே இருக்கிறது. ஏற்கெனவே அவர் தனது 83-வது வயதில் பயணித்துக்கொண்டு இருக்கிறார். இனிமேலா அவரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்?.

மறைந்த முதல்வர், முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் என எல்லா முதல்வர்களுடனும் தொடர்பிருந்தும் ஒரு மாபெரும் கலைஞர் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்.

ஒருவேளை, ஒரே ஒரு முறை எம்.எஸ்.வி.க்கு பத்மபூஷணோ அல்லது பத்மஸ்ரீயோ வழங்கி அப்படியே விட்டுவிடுவதைவிட, வருஷாவருஷம் அவருக்கு 'பத்ம-நாமம்' வழங்கிக்கொண்டே இருக்கலாம் என்று முடிவெடுத்து விட்டதோ இந்திய அரசு?.

pammalar
26th January 2011, 08:47 PM
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள் !

pammalar
27th January 2011, 02:07 AM
நன்றி செந்தில் சார் ! நம் பெருமானின் திருவரங்கத்து அடியார்கள் அவருக்கு அணிவித்துள்ள கரென்ஸி மாலை ஸ்டில் அசத்தல். பதிவிட்ட உங்களுக்கும், மாலையிட்ட அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் !

பாராட்டுக்கு நன்றி ராகவேந்திரன் சார் ! மேலும், இளையதலைமுறையைச் சேர்ந்த நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை "லாவண்யா", என்றென்றும் வளமுடன் வாழ்க ! லிங்க்கை அளித்த உங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th January 2011, 02:43 AM
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முதல்நாள் அறிவிக்கப்படும், குடியரசுத்தலைவரின் 'பத்ம' விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

விருது பெறுவோர் பட்டியலில் தகுதியான பலர் இடம்பெற்றிருந்தபோதிலும், மிகத்தகுதியான ஒருவர் "வழக்கம்போல" விடுபட்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான்.

எஸ்.பி.பி.க்கு பத்மபூஷண் அளிக்கப்பட்டிருப்பது சந்தோஷமானதுதான். மற்றபடி (பலருக்கு யாரென்றே தெரியாத இரண்டு பரதநாட்டியக்கலைஞர்கள் இருவர் உட்பட) பத்மஸ்ரீ பெற்றவர்களைப்பற்றியும் நாம் குறை சொல்வதற்கில்லை.

நம் கேள்வி, 'அவர்களுக்கு ஏன் கொடுத்தாய்?' என்பது அல்ல, 'இவருக்கு ஏன் தடுக்கிறாய்?' என்பதுதான். சென்ற ஆண்டு காங்கிரஸ் தலைவர் திரு தங்கபாலு பங்குபெற்ற ஒரு விழா மேடையில் அவரிடமே இதுபற்றி கோரிக்கைவைத்தார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

அவர் உச்சத்தில் இருந்தபோதே கொடுத்திருக்க வேண்டியது, இன்னும் அவருக்கு எட்டாமலே இருக்கிறது. ஏற்கெனவே அவர் தனது 83-வது வயதில் பயணித்துக்கொண்டு இருக்கிறார். இனிமேலா அவரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்?.

மறைந்த முதல்வர், முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் என எல்லா முதல்வர்களுடனும் தொடர்பிருந்தும் ஒரு மாபெரும் கலைஞர் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்.

ஒருவேளை, ஒரே ஒரு முறை எம்.எஸ்.வி.க்கு பத்மபூஷணோ அல்லது பத்மஸ்ரீயோ வழங்கி அப்படியே விட்டுவிடுவதைவிட, வருஷாவருஷம் அவருக்கு 'பத்ம-நாமம்' வழங்கிக்கொண்டே இருக்கலாம் என்று முடிவெடுத்து விட்டதோ இந்திய அரசு?.


சகோதரி சாரதா,

நடிப்புலகில் நமது நடிகர் திலகம் புரிந்திருக்கும் ஈடு இணையற்ற சாதனைகளைப் போல் இசையுலகில் நமது மெல்லிசை மாமன்னர் புரிந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. ஈரேழு பதினான்கு லோகங்களிலும் சிறந்த நடிகரான சிவாஜிக்கு இந்திய அரசின் சிறந்த நடிகர் விருது இறுதி வரை வழங்கப்படவே இல்லை. ஆறுதலாக பத்மஸ்ரீ(1966), பத்மபூஷன்(1984) விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர் வருமா வருமா என்று ஒவ்வொரு வருடமும் எதிர்பார்த்து இனி வரவே வராது என்று நாம் விரக்தியடைந்திருந்த நிலையில் 1997-ல் (1996-ம் ஆண்டுக்கான) "தாதா சாகேப் பால்கே விருது" நமது நடிகர் திலகத்திற்கு வழங்கப்பட்டது. இருப்பினும், சிறந்த நடிகர் விருது கடைசி வரை அவருக்கு வழங்கப்படாமலே போனது அவரை நேசிக்கும் நம்மைப் போன்ற நல்லிதயங்கள் அனைவருக்கும் அழிக்க முடியாத பெருங்குறைதான். சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவை ஆண்டவர்கள் கணிசமான தவறுகளையும் இழைத்திருக்கிறார்கள் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அந்தத் தவறுகள் பட்டியலில் முக்கிய இடம் பெற்றிருப்பது சிவாஜி அவர்களுக்கு சிறந்த நடிகர் விருது வழங்காததும் தான். பாரதத்திலே பிறந்து, பாரதத்திற்காக உண்மையான தொண்டாற்றியவருக்கு - தனது அபரிமிதமான கலைத்திறனால் பாரதத்தின் பெருமையை பாரெங்கும் பறைசாற்றியவருக்கு - "பாரத்"தும் கிடைக்கவில்லை, "பாரத ரத்னா"வும் இல்லை. உண்மையான தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைகுனிவை ஏற்படுத்துகிற விஷயம் இது.

[ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைக்காவியத்திற்காக ஆசிய-ஆப்பிரிக்க கண்டங்களின் சிறந்த நடிகர் விருது(1960), அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள நயாகரா நகரின் ஒரு நாள் கௌரவ மேயர்(1962), மாவீரன் நெப்போலியன் உருவாக்கிய விருதான பிரான்ஸ் நாட்டின் மிக மிக உயர்ந்த செவாலியே விருது(1995) முதலிய உலகப்பெரும் விருதுகளை பெற்றவர் நமது நடிகர் திலகம் என்பது உலகறிந்த விஷயம்].

நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ், இந்திய அரசின் எந்தவொரு அங்கீகாரமும் பெறாமல் 2009-ல் அமரரானார். இந்தியன் மேலும் ஒரு முறை தலைகுனிந்தான். தற்பொழுது 2011 தொடக்கத்திலும், மெல்லிசைச் சக்கரவர்த்திக்கு 'பத்ம' விருது வரும் என எதிர்பார்த்து வழக்கம் போல் [தாங்கள் மிகச் சரியாக எழுதியது போல்] 'பத்ம' நாமம் பெற்றிருக்கும் நிலையில், இந்தியன் மீண்டும் கூனித் தலை குனிகிறான். ஒன்றே ஒன்று மட்டும் புரியாத புதிராக உள்ளது. இசையுலக பிரம்மனாக அவர் இசையமைத்த படைப்புகளையெல்லாம் பாடிய பெரும்பாலானோருக்கு பெரும்விருதுகள் வழங்கப்பட்டு விட்டன. படைப்பாளிக்கு மட்டும் ஏன் இன்னும் ஒரு விருது கூட வழங்கப்படவில்லை. இந்த ஆண்டிலேயே "தாதா சாகேப் பால்கே விருது" வழங்கியாவது பாரத மணித்திருநாடு, இசையுலக மாமணிக்கு இழைத்த கொடுந்தவறுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளட்டும்.

வருத்தத்துடன்,
பம்மலார்.

pammalar
27th January 2011, 03:57 AM
HAPPY 40th BIRTHDAY TO THE RAJA OF BOX-OFFICE Mr. RAJA : [26.1.1972 - 26.1.2011]

MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY !!!

[26.1.1972 : புதன்கிழமை, இன்று 26.1.2011 : புதன்கிழமை, என்னே ஒரு மகத்தான கிழமை ஒற்றுமை !]

இன்று 26.1.2011 குடியரசுத் திருநாளன்று, தனது 40வது பிறந்த நாளை மதுரை சென்ட்ரல் சினிமாவில் ரசிக ரோஜாக்கள் புடைசூழ மங்களகரமாகக் கொண்டாடினார் ராஜா ! இன்றைய வசூல் விவரங்கள் சில தினங்களில் !

ஞாயிறு (23.1.2011) மாலைக்காட்சி வரை மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.34,000/-. ஞாயிறு இரவுக்காட்சி அளித்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ,2,000/-. ஆக, ஞாயிறு (23.1.2011) வரை "ராஜா" ஈட்டிய மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.36,000/-.

நேற்று(25.1.2011) மற்றும் முந்தைய நாள்(24.1.2011) மொத்த வசூல் விவரங்கள்: (சற்றேறக்குறைய)

24.1.2011 : திங்கள் : ரூ.7,200/- [ரூபாய் ஏழாயிரத்து இருநூறு]

25.1.2011 : செவ்வாய் : ரூ.7,000/- [ரூபாய் ஏழாயிரம்]

ஆக மொத்தம், முதல் ஐந்து நாட்களில் மட்டும் "ராஜா" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.50,200/-.

பழைய பட வசூல் வரலாற்றில், இது ஒரு அசுர சாதனை.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

விவரங்களை வழங்கிய மதுரை நல்லிதயம் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கு வளமான நன்றிகள் !

பெருமிதத்துடன்,
பம்மலார்.

abkhlabhi
27th January 2011, 11:01 AM
[tscii:e5140a6288]PADMA AWARDS

Padma awards and National awards are become jokes nowadays. Whoever support the Central / State Govts. got these Padma awards. Of course some exception. Not only MSV, the Comedy Legend Nagesh not got any Padma awards, Like him, Kannada Actor, K.S.Aswath and others who really deserve not yet recognized. Those who are Money and political influence got these awards – they not at all really deserved. THERE ARE SO MANY UNSUNG PEOPLES IN INDIA NOT AT ALL RECOGNISED BY THE GOVT.

Few years back, Vivek got Padma awards. On what basis he got this award? Bharathi Raja got because of his support to Cauvery problem. Mere supporting he got award. When Deva Gowda was PM, Rajkumar got Dada Sahab Palke Award. ANR got this year Padma Vibhushan award because his son Nagarjuna supported Congress in AP during last year election. Saif got best film actor award because of her mother. Why step motherly treatment for those really deserved for awards ? Nadigar Thilagam was always at the receiving end in regard to awards.

One of the Social worker from Karnataka (B’lore) got Padma Award this year. I personally know her. She got this award purely not because of her Social work and because of her money and political connection. She is the DIL of 1st CM of Karnataka and good contect with political leaders. Mr.Dinakaran, who wrote Veerapan – The Prize Money, mentioned about her way of social work. She is not doing social work not from her own pocket but from other funds received from foreign and SO CALLED SOCIAL CLUBS. (Rotary/Lions, etc.,). We can meet President/PM but not her. She never allowed anyone to stand in front of her house. Her security guard stopped peoples and will not allow any one inside her house also. She preaches one and follows just opposite. I myself witness this. This is one of the example how influence people got awards from Govt.
[/tscii:e5140a6288]

SHIV
27th January 2011, 03:15 PM
Dear Shardha madam

I totally agree with you on the injustice done to Mellisai Mamannar MSV.Shame on TN & Central Govt.

Hence forth he should reject these cheap awards.

Shiv

KCSHEKAR
28th January 2011, 11:26 AM
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முதல்நாள் அறிவிக்கப்படும், குடியரசுத்தலைவரின் 'பத்ம' விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

விருது பெறுவோர் பட்டியலில் தகுதியான பலர் இடம்பெற்றிருந்தபோதிலும், மிகத்தகுதியான ஒருவர் "வழக்கம்போல" விடுபட்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான்.

எஸ்.பி.பி.க்கு பத்மபூஷண் அளிக்கப்பட்டிருப்பது சந்தோஷமானதுதான். மற்றபடி (பலருக்கு யாரென்றே தெரியாத இரண்டு பரதநாட்டியக்கலைஞர்கள் இருவர் உட்பட) பத்மஸ்ரீ பெற்றவர்களைப்பற்றியும் நாம் குறை சொல்வதற்கில்லை.

நம் கேள்வி, 'அவர்களுக்கு ஏன் கொடுத்தாய்?' என்பது அல்ல, 'இவருக்கு ஏன் தடுக்கிறாய்?' என்பதுதான். சென்ற ஆண்டு காங்கிரஸ் தலைவர் திரு தங்கபாலு பங்குபெற்ற ஒரு விழா மேடையில் அவரிடமே இதுபற்றி கோரிக்கைவைத்தார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

அவர் உச்சத்தில் இருந்தபோதே கொடுத்திருக்க வேண்டியது, இன்னும் அவருக்கு எட்டாமலே இருக்கிறது. ஏற்கெனவே அவர் தனது 83-வது வயதில் பயணித்துக்கொண்டு இருக்கிறார். இனிமேலா அவரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்?.

மறைந்த முதல்வர், முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் என எல்லா முதல்வர்களுடனும் தொடர்பிருந்தும் ஒரு மாபெரும் கலைஞர் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்.

ஒருவேளை, ஒரே ஒரு முறை எம்.எஸ்.வி.க்கு பத்மபூஷணோ அல்லது பத்மஸ்ரீயோ வழங்கி அப்படியே விட்டுவிடுவதைவிட, வருஷாவருஷம் அவருக்கு 'பத்ம-நாமம்' வழங்கிக்கொண்டே இருக்கலாம் என்று முடிவெடுத்து விட்டதோ இந்திய அரசு?.


சகோதரி சாரதா,

நடிப்புலகில் நமது நடிகர் திலகம் புரிந்திருக்கும் ஈடு இணையற்ற சாதனைகளைப் போல் இசையுலகில் நமது மெல்லிசை மாமன்னர் புரிந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. ஈரேழு பதினான்கு லோகங்களிலும் சிறந்த நடிகரான சிவாஜிக்கு இந்திய அரசின் சிறந்த நடிகர் விருது இறுதி வரை வழங்கப்படவே இல்லை. ஆறுதலாக பத்மஸ்ரீ(1966), பத்மபூஷன்(1984) விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர் வருமா வருமா என்று ஒவ்வொரு வருடமும் எதிர்பார்த்து இனி வரவே வராது என்று நாம் விரக்தியடைந்திருந்த நிலையில் 1997-ல் (1996-ம் ஆண்டுக்கான) "தாதா சாகேப் பால்கே விருது" நமது நடிகர் திலகத்திற்கு வழங்கப்பட்டது. இருப்பினும், சிறந்த நடிகர் விருது கடைசி வரை அவருக்கு வழங்கப்படாமலே போனது அவரை நேசிக்கும் நம்மைப் போன்ற நல்லிதயங்கள் அனைவருக்கும் அழிக்க முடியாத பெருங்குறைதான். சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவை ஆண்டவர்கள் கணிசமான தவறுகளையும் இழைத்திருக்கிறார்கள் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அந்தத் தவறுகள் பட்டியலில் முக்கிய இடம் பெற்றிருப்பது சிவாஜி அவர்களுக்கு சிறந்த நடிகர் விருது வழங்காததும் தான். பாரதத்திலே பிறந்து, பாரதத்திற்காக உண்மையான தொண்டாற்றியவருக்கு - தனது அபரிமிதமான கலைத்திறனால் பாரதத்தின் பெருமையை பாரெங்கும் பறைசாற்றியவருக்கு - "பாரத்"தும் கிடைக்கவில்லை, "பாரத ரத்னா"வும் இல்லை. உண்மையான தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைகுனிவை ஏற்படுத்துகிற விஷயம் இது.

[ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைக்காவியத்திற்காக ஆசிய-ஆப்பிரிக்க கண்டங்களின் சிறந்த நடிகர் விருது(1960), அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள நயாகரா நகரின் ஒரு நாள் கௌரவ மேயர்(1962), மாவீரன் நெப்போலியன் உருவாக்கிய விருதான பிரான்ஸ் நாட்டின் மிக மிக உயர்ந்த செவாலியே விருது(1995) முதலிய உலகப்பெரும் விருதுகளை பெற்றவர் நமது நடிகர் திலகம் என்பது உலகறிந்த விஷயம்].

நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ், இந்திய அரசின் எந்தவொரு அங்கீகாரமும் பெறாமல் 2009-ல் அமரரானார். இந்தியன் மேலும் ஒரு முறை தலைகுனிந்தான். தற்பொழுது 2011 தொடக்கத்திலும், மெல்லிசைச் சக்கரவர்த்திக்கு 'பத்ம' விருது வரும் என எதிர்பார்த்து வழக்கம் போல் [தாங்கள் மிகச் சரியாக எழுதியது போல்] 'பத்ம' நாமம் பெற்றிருக்கும் நிலையில், இந்தியன் மீண்டும் கூனித் தலை குனிகிறான். ஒன்றே ஒன்று மட்டும் புரியாத புதிராக உள்ளது. இசையுலக பிரம்மனாக அவர் இசையமைத்த படைப்புகளையெல்லாம் பாடிய பெரும்பாலானோருக்கு பெரும்விருதுகள் வழங்கப்பட்டு விட்டன. படைப்பாளிக்கு மட்டும் ஏன் இன்னும் ஒரு விருது கூட வழங்கப்படவில்லை. இந்த ஆண்டிலேயே "தாதா சாகேப் பால்கே விருது" வழங்கியாவது பாரத மணித்திருநாடு, இசையுலக மாமணிக்கு இழைத்த கொடுந்தவறுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளட்டும்.

வருத்தத்துடன்,
பம்மலார்.


Exactly Right

pammalar
29th January 2011, 04:40 PM
மிக்க நன்றி சந்திரசேகரன் சார் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th January 2011, 08:39 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 173

கே: இந்தியாவின் சிறந்த நடிகர் என்ற ஜனாதிபதியின் பட்டம் சிவாஜி கணேசனுக்கு எப்போது கிடைக்கும்? (கே.பி.என்.அப்தாலிப், பினாங், மலேசியா)

ப: முதல் வருடமே அவருக்கு இது தரப்பட்டிருக்க வேண்டும்.

(ஆதாரம் : பொம்மை, ஜூன் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th January 2011, 08:56 PM
புதுமைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை" திரைக்காவியம், கடந்த வெள்ளி(21.1.2011), சனி(22.1.2011), ஞாயிறு(23.1.2011) ஆகிய 3 நாட்களுக்கு மட்டும் மாம்பழத்து மாநகரின் 'அலங்கார்' திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இத்தகவலை அளித்த ரசிக அன்பு நெஞ்சம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நயமிகு நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th January 2011, 11:20 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 174

கே: செவாலியே சிவாஜிக்கு விருது வழங்கும் தகுதி இந்தியாவுக்கு உண்டா...? (ஏ.ராமசுவாமி, கர்நாடகா)

ப: நல்லாவே கேட்டீங்கய்யா...ஒரு கேள்வி !

(ஆதாரம் : பொம்மை, அக்டோபர் 1996)

(1996-ம் ஆண்டும் வழக்கம் போல் "பால்கே" விருது கை நழுவிப் போன நிலையில் ஒரு வாசக-ரசிகரின் குமுறல் இது. அந்த ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்களுக்கு "பால்கே" விருது வழங்கப்பட்டது. ஆயினும் இந்தக் கேள்வி அவரது மாநிலத்திலிருந்தே வந்திருப்பதை கவனிக்கவும். பின்னர் 1997-ல் "பால்கே" நடிகர் திலகத்தை வந்தடைந்தது.)

[சகோதரி சாரதா, மெல்லிசைச் சக்கரவர்த்திக்கு இதுவரை எந்தவொரு பெரிய விருதும் வழங்காத இந்தியாவைக் குறித்தும் எனக்கு இதே போலத்தான் கேள்வி கேட்கத் தோன்றுகிறது.]

வருத்தத்துடன்,
பம்மலார்.

pammalar
30th January 2011, 09:00 PM
Real Vasool "RAJA"

ஆரவாரம் ! மகிழ்ச்சி !! சந்தோஷம் !!! ஆம்,

மதுரை சென்ட்ரல் சினிமாவில், 21.1.2011 வெள்ளி முதல் 27.1.2011 வியாழன் வரையிலான ஒரு வார காலகட்டத்தில், தினசரி 4 காட்சிகளில், வசூல் சக்கரவர்த்தியின் "ராஜா" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.64,200/- [ரூபாய் அறுபத்து நான்காயிரத்து இருநூறு].

பழைய பட வரலாற்றில், பண்டிகை-விடுமுறை வாரம் என சிறப்பான காரணம் எதுவும் இல்லாமல், ஒரு சாதாரண வாரத்தில், இத்தனை வசூல் என்பது விண்ணை முட்டும் சாதனை. இக்காவியத்தை வெளியிட்டவர் ரூ.50,000/- வந்தாலே பரம திருப்தி என்றாராம். இப்பொழுது அவருக்கு பரிபூரண திருப்தி.

புதன்(26.1.2011) மற்றும் வியாழன்(27.1.2011) வசூல் விவரங்கள்: (சற்றேறக்குறைய)

26.1.2011 : புதன் : ரூ.7,500/- (ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு)

27.1.2011 : வியாழன் : ரூ.6,500/- (ரூபாய் ஆறாயிரத்து ஐநூறு)

ஒரு வார (21.1.2011 - 27.1.2011) மொத்த வசூல் (சற்றேறக்குறைய) : ரூ.64,200/- [ரூபாய் அறுபத்து நான்காயிரத்து இருநூறு]

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

வசூல் விவரங்களை வழங்கிய மதுரை நல்லிதயம் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கு கனிவான நன்றிகள் !

பெருமிதத்துடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
1st February 2011, 06:04 PM
Dear Pammalar
Thank you for bringing the info on the collection particulars of Raja, courtesy A.N. Kuppusamy. Considering such a low rates of admission, it definitely is a great going for NT, after 9+ years of his demise. It shows his impact on the Fans.

Dear Murali Sir,
Belated but sincere Birth Day wishes to you.

Raghavendran

saradhaa_sn
1st February 2011, 06:30 PM
Dear Murali Sir,
Belated but sincere Birth Day wishes to you.

Raghavendran

அன்புள்ள முரளியண்ணாவுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தங்கள் சீரிய சேவையில் நடிகர்திலகத்தின் புகழும் பெருமையும் சாதனைகளும் உலகமெலாம் பரவிட, உங்களுக்கு நீண்ட ஆயுளைத்தர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

RAGHAVENDRA
1st February 2011, 10:02 PM
Dear friends,
This new look and design is very attractive and captivating. Our sincere appreciations to the hub moderators and organisers. In the new design there is provision for groups. I have started the group of Sivaji Fans. You are most welcome to join.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ThirumbiParwithKrishnaKumari.jpg
Can you name the actress pairing with Nadigar Thilagam in this image?
Sivaji Ganesan Fans Group (http://www.mayyam.com/talk/group.php?groupid=1)

Raghavendran

pammalar
1st February 2011, 10:27 PM
டியர் முரளி சார்,

தங்களுக்கு உளங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ! நமது இதயதெய்வத்திற்கு தாங்கள் ஆற்றி வரும் அரும்பெருந்தொண்டு இன்று போல் என்றும் சிறப்புடன் தொடரட்டும் ! தங்களது இல்லறத்தில் மென்மேலும் இன்பங்களும், தொழிலில் மென்மேலும் வெற்றிகளும் குவியட்டும் !

விண்ணுலக முதல்வர் கணேசரின் அருட்பொலிவும், கலையுலக முதல்வர் கணேசரின் அருளாசிகளும் தங்களுக்கு என்றென்றும் துணை நிற்கும் !

வாழ்க ! வளர்க !! வெல்க !!!

Once again, HAPPY BIRTHDAY !!! MANY MANY MORE HAPPY RETURNS !!!

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
1st February 2011, 10:46 PM
Thank You So much Raghavendrar sir!

பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை வழங்கிய சகோதரி சாரதாவிற்கும் அன்பிற்குரிய சுவாமிக்கும் மனங்கனிந்த நன்றி!

நடிகர் திலகத்தின் பெருமைகளை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வண்ணம் நமது பணி தொடரும்!

அன்புடன்

pammalar
2nd February 2011, 12:10 AM
My golden handshake to all the Moderators & Organisers for bringing out such a new, wonderful & outstanding design & shape to our HUB Forum.

Congrats ! All the best !! Wish you all success !!!

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
2nd February 2011, 12:26 AM
Dear friends,
This new look and design is very attractive and captivating. Our sincere appreciations to the hub moderators and organisers. In the new design there is provision for groups. I have started the group of Sivaji Fans. You are most welcome to join.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ThirumbiParwithKrishnaKumari.jpg
Can you name the actress pairing with Nadigar Thilagam in this image?
Sivaji Ganesan Fans Group (http://www.mayyam.com/talk/group.php?groupid=1)

Raghavendran

Dear Raghavendran Sir,

This image is from our NT Classic "THIRUMBIPPAAR(1953)".

The actress paired with our NT in this still is KRISHNAKUMARI.

Regards,
Pammalar.

RAGHAVENDRA
2nd February 2011, 05:50 AM
Dear Pammalar,
Congrats. You'd made it with correct answer. As many of you know, Krishna Kumari is the sister of Sowcar Janaki. This is meant to show that NT had paired with sisters and to name a few, Lalitha, Padmini, Ragini. Ragini and NT had paired in a film which did not see the light of the day. Then comes Pandari Bai and Mynavathy. He paired with Mynavathy in Kuravanchi. And Sowcar Janaki and Krishna Kumari. Similarly he acted with Ambika and Radha. Ambika in Vazhkkai and Radha in Mudhal Mariyadhai.
The list is simply amazing.

Let us continue our quizzes in the Sivaji Fans Group. Come and join.

Raghavendran

KCSHEKAR
2nd February 2011, 11:04 AM
Happy birthday to Murali Sir.

Kindly accept my Belated Birthday wishes

KCSHEKAR
2nd February 2011, 11:10 AM
The new look Hub is good & nice. Congrats to all moderators and Senior/Junior Hubbers

KCSHEKAR
2nd February 2011, 11:11 AM
Dear Freinds,

I want to share with you all a fantastic Kavithai about MSV written by a veteran writter Thiru.Vaamanan

வரிந்துகட்டிக்கொண்டு தமிழ்மொழிக்கு நாளெல்லாம்


வரிசைகள் செய்தவனே வசீகரம் சேர்த்தவனே


அறிந்தும் அறியாததுபோல் இருக்கின்றார் உன்புகழை


தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கின்றார் என்றஞ்சாதே


காசுக்காய் வாழ்வோரும் பதவியெனும் பெரும்புழுதி


தூசுக்காய் வாழ்வோரும் அறியார்கள் உன்பெருமை


வாலாட்டும் நாய்களைப்போல் வந்துநிற்கும் பேடிகளைத்


தாலாட்டிப் பரிசளித்து மகிழ்கின்றார் நாள்தோறும்




உண்மைக்கலைஞனின் உள்ளம்தனைக்காணும்


தன்மைகொண்டோரா ஆட்சியில் இருக்கின்றார்?


மோகனராகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்ததனை


வாகனம் ஏற்றியவா வசீகரம் கூட்டியவா


தாவிவரும் தமிழ்மொழிக்கு அமுதென்றே பேரென்று


பாவேந்தர் பாட்டுக்கு புதுப் பொலிவு ஊட்டியவா




மெல்லிசையின் முடிமன்னா நீவாழும் கடற்கரையின்


வெள்ளலைகள் எழுந்துனக்கு வாழ்த்துக்கள் பாட்டிசைக்கும்


நடிகர்திலகத்தின் நானூறு முகபாவங்கள்


படியெங்கும் சென்றுனது மகிமைகளை எடுத்தியம்பும்




சித்தாரில் பொங்கிவரும் சுகமான சங்கதிகள்


வித்தார குழலுடனே வந்தனங்கள் சொல்லிவிடும்


இன்னிசை பியானோவும் டிரம்பெட்டும் இன்தமிழின்


பண்களுடன் எழுந்துனது சந்நிதியில் சங்கமிக்கும்




காலமெல்லாம் போனாலும் யுகமுடிவே ஆனாலும்


கண்ணதாசன் கவிதைக்கு காலவரை இல்லையன்றோ


அன்னவனின் கவிதைகளின் அங்கமெல்லாம் பொங்கிநிற்கும்


உந்தனது மெல்லிசையின் புன்னகையும் பூவிதழும்




சந்திரனும் சூரியனும் மந்திரங்கள் சொல்லிவரும்


விண்மீனும் வந்துனது வாழ்த்துக்கள் பாடட்டும்



சுரங்களுக்கு வரங்கள்தந்த வித்தகனே -- பலகோடி


நிறங்களுக்கு ஊற்றுக்கண் ஒளி ஒன்றே --- அதைக்கொண்டு


திசையெல்லாம் உன்புகழின் திருக்கோலம் இடுகின்றேன்


இசையாலே நீயமைத்த எல்லைகளைத் தொடுகின்றேன்

KCSHEKAR
2nd February 2011, 11:19 AM
Very nice information did by Mr.Ragavendran, Thanks.

Expecting more quizzes & answers in this hub.

Murali Srinivas
2nd February 2011, 10:45 PM
Thanks Chandrasekar!

Thanks Bala!

Thanks Sathish for the call!

Thanks Senthil [Harish] for the sms!

Regards

joe
3rd February 2011, 09:13 AM
நடிகர் திலகம் எனும் சிங்கம்!


http://www.youtube.com/watch?v=EcqXs94XVe8

Plum
3rd February 2011, 11:05 AM
Welcome back, joe!

kid-glove
3rd February 2011, 11:14 AM
Belated B'day wishes MS!

Plum
3rd February 2011, 11:49 AM
pammalar should be banned from answering quizzes on NT :) - appuram nAngaLLAm oru quiz kUda attempt paNNa mudiYAdhu

RAGHAVENDRA
3rd February 2011, 08:33 PM
Dear Plum,
Instead of banning from answering, let him place questions, since he is the M.S.G (master on Sivaji Ganesan).

Dear friends,
According to unconfirmed news, Vikram Prabhu, S/o Prabhu Sir, is likely to enter acting, to be directed by Vijay and this film is supposed to be titled "Dheiva Magan".
I repeat, this is unconfirmed information.
Raghavendran

J.Radhakrishnan
3rd February 2011, 09:27 PM
Happy birthday to you Mr.Murali sir,

After 4days now only I had enter in our thread

Murali Srinivas
3rd February 2011, 11:14 PM
Welcome Back Joe! We are delighted to have you back amongst us.

Thanks Thilak!

Thanks Radha!

Regards

Murali Srinivas
3rd February 2011, 11:47 PM
MAGNA SOUND has released following films of Nadigar Thilagam in DVD format:

PENNIN PERUMAI

VIDIVELLI

Moserbaer in its three-in-one DVD has released Thirumbi Paar.

Raghavendran

பெண்ணின் பெருமை படம் DVD-யில் வெளியாகியிருக்கும் விவரம் விளம்பரப்படுத்தப்படவோ இல்லை ஒளிநாடாக்கள் கிடைக்கும் கடைகளில் இதை பற்றிய ஸ்டிக்கர்கள் போஸ்டர்கள் போன்றவைகள் வைக்கப்படவோ இல்லை. ஆனாலும் இரண்டு முறை dvd பிரதிகள் வந்த போதிலும் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. சென்னையின் பெரிய கடைகளில் அனைத்திலும் இதே நிலை. இதற்கும் இந்த படம் 60-களில்,70-களில் வெளிவந்த படம் இல்லை.1956-ல் வந்த படம். நடிகர் திலகம் வில்லனாக வந்த படம்.

அதே போல்தான் திரும்பிப்பார் படத்திற்கும் பெரிய வரவேற்பு. ஹாட் கேக் என்று சொல்வது போல் விற்பனை. விடிவெள்ளி படமும் தானும் ஒன்றும் சளைத்ததில்லை என்பது போல விற்பனை நடந்துக் கொண்டே இருக்கிறது.

தியேட்டரோ, சின்ன திரையோ, ஒளிநாடவோ இல்லை கணினியில் பதிவிறக்கமோ எல்லா தளங்களிலும் வெற்றி பெறுபவர் நடிகர் திலகம் மட்டுமே.

ராதா,

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தங்கை, என் தம்பி மற்றும் திருடன் dvd -கள் வெளி வந்துவிட்டன. ஆனால் இவை வேறு சில படங்களுடன் சேர்ந்து கிடைக்கிறது.

அன்புடன்

pammalar
4th February 2011, 12:23 AM
டியர் ஜோ சார்,

Welcome back. சிகப்பு கம்பளம் விரித்து தங்களை வரவேற்கிறோம் !

'To be or Not to be' Hamlet Video Still ஸஹிதம் Elegantஆக பிரவேசித்துள்ளீர்கள் ! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

You have TO BE with us in this thread, in this forum, forever !

அன்புடன்,
பம்மலார்.

gopalu_kirtinan
4th February 2011, 12:54 AM
Hey Joe Anna..

welcome back :) . we have been waiting for you :)

pammalar
4th February 2011, 01:48 AM
pammalar should be banned from answering quizzes on NT :) - appuram nAngaLLAm oru quiz kUda attempt paNNa mudiYAdhu

Dear Plum,

I will abstain from answering !

Regards,
Pammalar.

pammalar
4th February 2011, 01:59 AM
Dear Plum,
Instead of banning from answering, let him place questions, since he is the M.S.G (master on Sivaji Ganesan).
Raghavendran

Dear HEADMASTER (Raghavendran) Sir,

Accepted. My sincere thanks for your special appreciation.

Regards,
Pammalar.

ajithfederer
4th February 2011, 03:03 AM
Nice to see you back here Joe :thumbsup:

RAGHAVENDRA
4th February 2011, 06:40 AM
Dear Joe,
We are delighted on seeing your post. So 2011 has commenced to us with a bang.
Thank you, keep going (on posting, not from forum).

Dear Murali Sir,
In whichever shop I enquire, I get the reply sold out, for these films. As you said, ராஜான்னா ராஜாதான்.

பம்மலாரே,
கேள்விகளை நான் கேட்கட்டுமா அல்லது நீங்கள் கேட்கிறீர்களா என்று நடிகர் திலகம் கேட்க, அதற்கு நாகேஷ், எனக்கு கேட்க மட்டும் தான் தெரியும் என்று சொல்வது போல் அல்ல இது.
நீங்கள் மாஸ்டர், நான் தலையாட்டுகிற (Head) மாஸ்டர்.

விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாக, அமீர் அவர்கள் இயக்கும் படம் தெய்வமகன். வேறொரு திரியில் விஜய் என எழுதியிருந்தேன்.

அன்புடன்

saradhaa_sn
4th February 2011, 12:07 PM
டியர் 'ஜோ'...

எங்கள் இதயச்சிறையில் நிரந்தரக் கைதியாக இருக்கும் உங்கள் வருகை, அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது.

நடிகர்திலகத்தின் இந்த திரி இவ்வளவு சீரும் சிறப்புமாக நடைபோட பலமான அஸ்திவாரம் அமைத்த நீங்கள், தொடர்ந்து பங்களிப்பை வழங்கி எங்களை உவகையில் ஆழ்த்திட வேண்டும்.

Murali Srinivas
5th February 2011, 12:55 AM
Plum,

While it may take some more time for Barrister and his foster son to visit Shanthi, there is a tentative plan by some Naayanmars to visit Shanthi on or around Sivarathiri time. In case you wish to watch in big screen the majestic strides of மன்னவன், you can make it.

Regards

RAGHAVENDRA
5th February 2011, 07:37 AM
Dear friends,
As many of you might have noticed, Murali Sir has been presented with a great gift for his Birth Day.
MODERATOR
CONGRATULATIONS MURALI SIR

Raghavendran

RAGHAVENDRA
5th February 2011, 07:39 AM
Dear friends,
As many of you might have noticed, Murali Sir has been presented with a great gift for his Birth Day.
MODERATOR
CONGRATULATIONS MURALI SIR

Raghavendran

joe
5th February 2011, 08:04 AM
Raghavendra sir,
Murali sir has been Moderator for 'Paadalgal palavitham' section for quite few months, I think.

என்னை வரவேற்று நல்வார்த்தைகள் சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!

joe
5th February 2011, 08:10 AM
தேவர் குறித்து கிழக்குப்பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறேன் ..நடிகர் திலகத்தை வைத்து ஒரு படம் கூட எடுக்காத ,மக்கள் திலகத்தை வைத்து ஏராளமான படங்களை தயாரித்த தேவர் அடிப்படையில் ஒரு நடிகர் திலகம் ரசிகர் என்பது சுவாரஸ்யமான செய்தி . சினிமாவில் நடிகர் திலகத்தோடு அவர் இணையவில்லையெனினும் இருவருக்குமிடையே தனிப்பட்ட , குடும்ப உறவுகள் குறித்த செய்திகள் இருந்திருக்கிறது.

KCSHEKAR
5th February 2011, 10:54 AM
Dear friends,

I reposted my earlier post for your review.

Thanks


Dear Freinds,

I want to share with you all a fantastic Kavithai about MSV written by a veteran writter Thiru.Vaamanan

வரிந்துகட்டிக்கொண்டு தமிழ்மொழிக்கு நாளெல்லாம்


வரிசைகள் செய்தவனே வசீகரம் சேர்த்தவனே


அறிந்தும் அறியாததுபோல் இருக்கின்றார் உன்புகழை


தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கின்றார் என்றஞ்சாதே


காசுக்காய் வாழ்வோரும் பதவியெனும் பெரும்புழுதி


தூசுக்காய் வாழ்வோரும் அறியார்கள் உன்பெருமை


வாலாட்டும் நாய்களைப்போல் வந்துநிற்கும் பேடிகளைத்


தாலாட்டிப் பரிசளித்து மகிழ்கின்றார் நாள்தோறும்




உண்மைக்கலைஞனின் உள்ளம்தனைக்காணும்


தன்மைகொண்டோரா ஆட்சியில் இருக்கின்றார்?


மோகனராகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்ததனை


வாகனம் ஏற்றியவா வசீகரம் கூட்டியவா


தாவிவரும் தமிழ்மொழிக்கு அமுதென்றே பேரென்று


பாவேந்தர் பாட்டுக்கு புதுப் பொலிவு ஊட்டியவா




மெல்லிசையின் முடிமன்னா நீவாழும் கடற்கரையின்


வெள்ளலைகள் எழுந்துனக்கு வாழ்த்துக்கள் பாட்டிசைக்கும்


நடிகர்திலகத்தின் நானூறு முகபாவங்கள்


படியெங்கும் சென்றுனது மகிமைகளை எடுத்தியம்பும்




சித்தாரில் பொங்கிவரும் சுகமான சங்கதிகள்


வித்தார குழலுடனே வந்தனங்கள் சொல்லிவிடும்


இன்னிசை பியானோவும் டிரம்பெட்டும் இன்தமிழின்


பண்களுடன் எழுந்துனது சந்நிதியில் சங்கமிக்கும்




காலமெல்லாம் போனாலும் யுகமுடிவே ஆனாலும்


கண்ணதாசன் கவிதைக்கு காலவரை இல்லையன்றோ


அன்னவனின் கவிதைகளின் அங்கமெல்லாம் பொங்கிநிற்கும்


உந்தனது மெல்லிசையின் புன்னகையும் பூவிதழும்




சந்திரனும் சூரியனும் மந்திரங்கள் சொல்லிவரும்


விண்மீனும் வந்துனது வாழ்த்துக்கள் பாடட்டும்



சுரங்களுக்கு வரங்கள்தந்த வித்தகனே -- பலகோடி


நிறங்களுக்கு ஊற்றுக்கண் ஒளி ஒன்றே --- அதைக்கொண்டு


திசையெல்லாம் உன்புகழின் திருக்கோலம் இடுகின்றேன்


இசையாலே நீயமைத்த எல்லைகளைத் தொடுகின்றேன்

HARISH2619
5th February 2011, 01:18 PM
A warm welcome to you joe sir.

Raghavendra sir,thankyou very much for the news of vikram prabhu's film entry

goldstar
5th February 2011, 04:49 PM
Dear Murali,

Belated happy birthday, actually I was browsing old links again and again got file not found message. I don't know about new layout and link.

Mr. Swamy, why no Sunday Raja movies photos or videos? I am eagerly waiting for that.

Cheers,
Sathish

pammalar
5th February 2011, 06:07 PM
Mr. Swamy, why no Sunday Raja movies photos or videos? I am eagerly waiting for that.


Two photos COMING SHORTLY.

pammalar
5th February 2011, 06:16 PM
கும்பகோணத்துக்கு அருகே திருவிடைமருதூரில் உள்ள 'கமலா' டூரிங்கில், தங்கத்தமிழ்த்திருமகனின் "தங்கப்பதுமை" திரைக்காவியம் 2.2.2011 புதன் முதல் திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

இத்தகவலை வழங்கிய குடந்தை அன்புள்ளம் திரு.ராமலிங்கம் அவர்களுக்கு குதூகலமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
6th February 2011, 07:59 AM
முதன் முதலா ஏ.ஆர்.எஸ். கூட நடிக்கிறேன் இல்லையா, அதனால் மிஸ்டேக் ஆயிடுத்து, ஸ்ரீதர், இன்னொரு டேக் எடுத்துடலாம்

இதைச் சொன்னவர் யாராக இருக்கும். இந்த அளவிற்கு பெருந்தன்மை யாரிடம் இருக்கும்.

சொன்னவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இடம் மோகன புன்னகை படப்பிடிப்பு தளம்.

இந்த தகவலையும் இது போன்று நடிகர் திலகத்தைப் பற்றிய பல தகவல்களையும் திரு ஏ.ஆர்.எஸ். என்கிற ஏ.ஆர். சீனிவாசன் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் காட்சி

Part 1 (http://www.youtube.com/watch?v=Mk7M9t1MCoE)

Part 2 (http://www.youtube.com/watch?v=nMjjA1bSqqE)

Avadi to America
8th February 2011, 07:41 PM
Offlate... I watched upteen time one particular song from NT.... "Yaar antha nilavu...." camera focused only on NT most of the time.... No dance movements... The way he walks and smokes cigeratte........the way he smokes during first time of pallavi and when pallavi repeats he completely changes the way he used smoke.... wow i enjoyed very well.....I can watch "N" number of time this song....

joe
8th February 2011, 09:26 PM
ஏ.ஆர்.எஸ் அவர்கள் குறிப்பிட்ட அந்த பாடல் (4.40 -லிருந்து பார்க்கவும்)
http://www.youtube.com/watch?v=z4eDVs5M2qk&feature=related

joe
8th February 2011, 09:27 PM
ஏ.ஆர்.எஸ் அவர்கள் குறிப்பிட்ட அந்த பாடல் (4.40 -லிருந்து பார்க்கவும்)
http://www.youtube.com/watch?v=z4eDVs5M2qk&feature=related


http://www.youtube.com/watch?v=z4eDV...eature=related

NOV
9th February 2011, 07:43 AM
Joe, you can post the videos directly, by using the "insert video" icon. :)

joe
9th February 2011, 08:29 AM
Joe, you can post the videos directly, by using the "insert video" icon. :)
Yes NOV , I am aware of that ,but when i tried yesterday night ,it was not working due to some error.

groucho070
9th February 2011, 09:08 AM
Thanks for the link, Joe. That inspired me to do an addendum to my earlier Sivaji & The Sadist article. The first para here, the rest you can also click my signature:

There something about Avanthan Manithan, as an entity, that clearly hates Sivaji’s character, Ravikumar. It starts showing a very human Ravikumar, having fun, romance, singing duet and all the stuff a regular lead character in a Tamizh film would do, and it goes ahead to promptly kill his love interest. The joys in the film dies with her, and the zombie-like Sivaji goes on ravaging his own life...(more here) (http://grouchydays.blogspot.com/2011/02/sivaji-sadists-avanthan-manithan.html)

KCSHEKAR
15th February 2011, 02:15 PM
Please click the links below to see Invitation:

http://www.sivajiperavai.com/View_Press.php?id=138

http://www.sivajiperavai.com/View_Press.php?id=139

http://www.sivajiperavai.com/View_Press.php?id=140

Thanks

With best regards,

tfmlover
16th February 2011, 01:03 PM
http://i871.photobucket.com/albums/ab272/1tfml/1967/kandhankarunaiTFMLover.gif

Regards

parthasarathy
16th February 2011, 03:57 PM
Hi,

I am R. Parthasarathy, a proud fan of NT right from my school days. In fact, my Mother often says that I became NT's fan right from Saraswathi Sabatham, at which time I was hardly 4 years old.Almost all my family members, except of course, my Father (an MGR fan), all of us are proud fans of the one and only NT. I have been going through this hub for more than one year and continuously trying to join the hub, which I could do only now. In fact yesterday only I was watching the one and only Deiva Magan, especially that rollicking character Vijay. I will be proud to send my postings too in future to this forum.

Regards,

Partha

Murali Srinivas
16th February 2011, 04:55 PM
Welcome Parthasarathy! Great to know you and still great to read that all your family members are fans of NT. Post your thoughts,share your experience of watching NT films and enjoy your stay here.

நல்ல இடம் நீங்கள் வந்த இடம்.

Regards

parthasarathy
16th February 2011, 05:17 PM
Dear Mr. Murali,

Thanks very much for your immediate response. My job knew no bounds when I received a response, especially from an ardent fan like you and it matches with the joy of watching NT performs.

For the past - almost 30 years, no single day has passed without recalling/discussing/referring about NT in some forum/discussions. Such is the impact this artiste has created in me.

I wish to recall one incident. 15 years ago, some guests came to our residence to meet my father and at that time me and my mother were watching "Gnana Oli", which was being telecast in Sun TV. It was a scene where the Father (played beautifully by Mr. Gokulnath) wanted to meet Murattuppayal (our beloved NT) and NT would come to the Father's residence along with Major. After getting permission from Major (of course with a warning gesture that his pistol would take care if NT mischiefs!), NT goes to meet the ageing Father. The way he goes and sits on the floor keeping his face on the lap of the Father and weeps - silently) - I started weeping unconsciously, unaware of the guests who were at our residence. For any NT fan, I am sure, when he grows up, his preference for NT's films and scenes also keep changing - the way NT changes his expressions. When I was yound, I used to enjoy the second half of Gnana Oli and after seeing it on the above day and from then on, I have been enjoying the first half. Because, NT (also) played to his fans in the second half whereas in the first half, he purely treads the story.

He is the only Actor on earth, who always played for his fans, which gave him joy which in turn also brought to his innumerable fans. Long ago, I read a Question/Ans. session in Bhommai where he answered to a question on what is that he thinks is the ultimate achievement for which, he humbly replied by saying that he was to yet to achieve any big think but; said further that "once a person becomes my fan, then, he/she will not switch over to any other artiste."

Ulagam ullalavum endha nadiganaalum indha saadhanayai muriyadikka mudiyaadhu.

Regards,

Partha

parthasarathy
16th February 2011, 05:56 PM
During early 80s, me and my close friend (his native was Vellore and was living with his sister by working in Chennai) used to go to lot of NT movies. (I covered 90% of his films during the period 1977 to 1985).

As most of the NT fans would agree, there are different types of NT fans belonging to various generations and my friend was a typical NT fan who watched films from 1967 (Thangai of course - as Mr. Murali Sir rightly indicated many a time, that it was late K. Balajee, who actually was responsible for taking NT to all types of audience.).

One day we went to Muralikrishna Theatre in Aminjikarai to watch Navarathri. After becoming an Adult, for the first time both of us were watching Navarathri (In fact we were saying to each other "Sivaji fan-nu sollikkiradhu avamaanam if we have not watched Navarathri as yet). We were getting restless initially as for more than 10 minutes, NT was not appearing on the screen. However, theatre was quiet calm, which was evident from the fact that most of the audience were watching atleast for the second time and knew when NT would appear! On the scene where a old well was shown, theatre went into raptures and we immediately knew that NT is going to appear. Wow! what a style man. Style-kkum ilakkanam ezhudhiya Nadigan.

During the second characterization, immediately upon NT falling at the feet of Savithri after the song, my friend abruptly started going out of theatre, saying, "Ganesan Savithri kaalila vizhardha paakkarthukkudhaan enna koottittu vandhiyaa?". While I belong to a category where I enjoy NT acting in any type of movie - from Parasakthi (benchmark performance right from the first movie, which I watched for over 10 times between 1977 and 1983 - see how many screening in Chennai alone in various theatres) to Padayappa, my friend is used to watch movies where Style / Majestic looks are predominant.

In fact, he also wanted to walk out when seeing NT in a wheel chair in Aalayamani. Only later, he started enjoying all types of NT movies.

Shall share some more thought about NT's acting from my view soon.

Regards,

Partha

RAGHAVENDRA
16th February 2011, 08:20 PM
Dear Sri Parthasarathy,
Welcome to the world of Sivaji Fans. My heartiest regards to you. Please share your joyous moments and nostalgia of your experiences as NT fan.

We are delighted that the span of NT fans keeps widening day by day.

Regards,

Raghavendran
www.nadigarthilagam.com

pammalar
16th February 2011, 08:43 PM
திரு.ஜோ அவர்களுக்கு உளங்கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!

Happy Birthday Mr. JOE ! Many Many More Happy Returns !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th February 2011, 09:38 PM
"பச்சை விளக்கு" சாரதியை நினைவுகூரும் வண்ணம், இப்பூவுலகை செலுத்துகின்ற விண்ணுலக சாரதியான பெருமாளின் புனித நாமகரணத்தை திருப்பெயராகக் கொண்டுள்ள நடிப்புலக சாரதியின் நல்லிதயம் திருவாளர் பார்த்தசாரதி அவர்களே,

சிகப்பு கம்பளம் விரித்து தங்களை பாசத்தோடு வரவேற்பதில் எங்களுக்கெல்லாம் பெருமகிழ்ச்சி !

வுருக ! வருக! வருக !

தங்களது பசுமை நிறைந்த நினைவுகளையும், அரிய அபூர்வ தகவல்களையும் நமது திரியில்

தருக ! தருக ! தருக !

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
16th February 2011, 10:17 PM
Thanks Parthasarathy for the share! சிறு வயதில் நாம் அனைவரும் நடிகர் திலகத்தின் படங்களைப் பார்க்கும் போது எப்படி உணர்ந்தோமோ அதை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கும் இது போன்ற அனுபவங்கள் பல முறை நேர்ந்திருக்கின்றன. இரு மலர்கள் பார்க்கும் போது இடைவேளைக்கு பிறகு பத்மினியை நடிகர் திலகம் சந்தித்தவுடன் எங்கே இவர் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு விடுவாரோ என்று தோன்றியிருக்கிறது. குறிப்பாக ரோஜா ரமணியை காரில் இருக்கும் சிகரெட் பெட்டியை எடுக்க அனுப்பி விட்டு பத்மினியுடன் பேசும் காட்சி. அந்த பெண் வருவதற்குள் இவர் பேசி முடிக்க வேண்டுமே என்று தவிப்பாய் உணர்ந்திருக்கிறேன். பேசிக் கொண்டேயிருப்பவர்கள் ரோஜா ரமணி படிகளின் மேல் நின்று தங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் ஒரு சின்ன அதிர்ச்சியுடன் பேச்சை நிறுத்தி விட்டு நடிகர் திலகம் படியேறி வெளியே செல்வார். 1967-ல் பார்த்தபோது அப்படி தோன்றியது. பிற்காலங்களில் இது போன்ற காட்சிகள் வராதா என்று ஏங்கியிருக்கிறேன். காரணம் இது போன்ற கதை சந்தர்ப்பங்களின் போதுதான் அவரின் நடிப்பு திறனின் பல்வேறு பரிணாமங்களை காணும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்பதனால்தான்.

இது போன்ற இனிமையான நினைவுகளை அதிலும் குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றான இரு மலர்கள் படத்தின் காட்சியை அசை போட வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி.

அன்புடன்

RAGHAVENDRA
16th February 2011, 11:06 PM
Dear Joe,
Many happy returns of the day.
Raghavendran

groucho070
17th February 2011, 07:10 AM
It was a scene where the Father (played beautifully by Mr. Gokulnath) I was wondering who played that role. Loved that performance. Also, thanks for sharing yoru experience and welcome :smile:

goldstar
17th February 2011, 09:07 AM
Welcome Partha and thanks a lot for sharing about your experience of NT movies. We are waiting for more details of your experience of NT movies.

Cheers,
Sathish

abkhlabhi
17th February 2011, 10:39 AM
Mr.Joe,

Belated Happy birthday wishes.

parthasarathy
17th February 2011, 11:09 AM
Dear Friends,

Thank you very much for your warm welcome. I would like to send my postings in Tamil. Can you please help me.

Few thoughts about NT:-

I was doing a thesis on NT during my college days (1981 to be precise) and the topic was "Sivajiyum and avarin pala Avadharangalum". I was just detailing the various changes he made his acting style according to the periods/changes, the movie making was undergoing at various points of time. Somehow, the whole document got destroyed due to a small fire. It didn't materialise after that at all.

These days - or may be forever, Creators always talk about changing taste of people and whenever, their films bungle, they blame it on the taste of people. But, here is a Man, who always tried to create taste among people. Even though, he adapted to the changing demands, he only, was an Artiste, who tried to create a taste among audience - that people should appreciate different styles of performances of an artiste.

I was going through the first series of this thread recently and in one of the posts, Murali Sir listed out the no. of films NT acted in 1969 - it's 9! What is even intesting is the no. of Directors of the movies -almost 6 out of 9 and some of them were new to NT's camp. This is the greatness and unique feature of NT - adatability to work with any one.

What is even fascinating is the way he was getting new fans with every new film even after 16 years of his career. Every one of us know very well that his fan base grow multifold from 1967, when NT started doing different roles of different genres. Even after his death, his fan base is growing is the testimony to his talent.

Two quick mind blowing performances (others will follow):-

Kavarimaan:- All of us remember one scene - when NT sees his own wife with another. The moment he sees, the way he reacts - various emotions - shock, surprise, shame and finalling uncontrollable anger - all these feelings conveyed through his face in quick succession effortlessly but very effectively. All our friends numbering 10 - all NT Fans were seeing the film on the first day evening show at Liberty. Those days, Liberty lost its sheen and was almost screening movies after it's initial run in main theatres. Those days, main theatres will be big theatres in the centre of the city like Shanti, Crown & Bhuvaneswari. Udayam, AVM Rajeswari came only later (AVM Rajeswari in 1980 and Udayam complex in 1982). However, Liberty was jam packed. Originally, most of us were expecting Kavarimaan as NT's 200th Film - again, the Director was new doing films for younger generation - Rajini & Kamal.

As soon as this particular scene started and on the reaction of NT, the crowd went into raptures - entire crowd. Such is the spontaneity of NT's performance. No actor on earth, has or will be able to derive instant recognition for his performance, the way, NT used to derive from the crowd. Whistling, dancing and all is not spontaneous - it's created out of love and madness. But, applause - yes applause is spontaneus and it comes from various sections of an audience - fans, general public and even ladies regardles of status - rich or poor. For all other Actors (with due regards to every one, of course), it requires good screeplay, storyline, songs, photography, direction, technical effects and so on to get a very good response to make a good product. But, for NT, he can single handedly take even a non-film, to run for effectively.

Vanangamudi:- When Nambiar slaps K.A. Thangavelu that he only was the poet/singer when instantaneously NT reacts by showing his anger, shock, shame quickly by simultaneously starting the alapana and then settles for the song "Aaaaaaaaaaaaaaaa..... Paattum bharadhamum panbulla naadagamum naattukku nalla palan tharumaaaaaaaaaa......". All of us would have seen this moment. But, still, see it again and enjoy.

More to follow.......

Anbudan,

Partha

HARISH2619
17th February 2011, 01:20 PM
DEAR JOE SIR,
BELATED HAPPY BIRTHDAY WISHES TO YOU.

DEAR PARTHI SIR,
A WARM WELCOME TO THE MOST LOVABLE THREAD OF THE HUB.please share your experiences of watching NT movies in theatres

DEAR CHANDRASHEKAR SIR,
THANKS FOR THE INFORMATION.Is there any specific reason for conducting the meeting in thiruvarur?

DEAR PAMMAL SIR,
Eagerly waiting for "MADURAI RAJA" photos

parthasarathy
17th February 2011, 01:23 PM
Dear Friends,

When I said in the my previous posting that I was attempting on a thesis doesn't mean that I know more things on NT. It just struck me at that time because I was also a Literature student slowly, getting exposed to various kinds of Literature. I was only trying to give some thoughts on NT from what I've seen.

I sincerely feel that I am no way comparable to the various stalwarts here. Still, I want to get into the forum to share my views on NT and NT alone.

In fact, it's really amazing to know that almost all the Fans, who joined this Forum in 2005 continue to do their postings. What a fan following!

Let me also join this great Forum.

Regards,

Partha

KCSHEKAR
17th February 2011, 03:07 PM
My heartiest birthday wishes to Mr.Joe.

Welcome to Mr.Parthasarathy.

Thanks

saradhaa_sn
17th February 2011, 04:47 PM
Dear TFMLover

Thanks for your glittering 'Kadhan Karunai' ad. It is so nice to watch.
Once you promissed that you will post ad for Pesum Dheivam too, we are expecting.

Mr. Parthasarathy,

Welcome to the Fans world of the great NT. Your first two posts itself are excellent.
Happy to know you are NT fan from your childhood.
Please post your sweet and interesting memories about NT's movies

parthasarathy
17th February 2011, 05:21 PM
Dear Friends,

Haa.. it happened again. Just how I lost my precious thesis document on NT, I lost a long posting on NT just a while ago. I don’t know certain rules of this website. I just logged in and started writing my posting. It took almost 45 minutes and when I gave command for posting, it bounced back saying, you have not logged in. I think there is some time out rules.

Anyway, I write it again:-

God has given me two golden opportunities to seek NT very closely during the making of a film.

In 1982, I first saw NT during the making of Thyaagi – a remake of an Ambareesh Super Hit Kannada Movie. The movie almost ran for 100 days but still, not accepted by Fans due to a particular scene in which, NT would be given mind blowing torture – in fact, Censor authorities too cut some scenes.

My Periyappa was a Chief Storekeeper in AVM Studios who knows my craze for NT (in fact, his second son who is 2 years older than me is also an NT Fan! His eldest son is a fan of Jai Shanker). NT was having torn dresses with blood stains all over the body and I didn’t know the concept of that scene being shot. He was sitting on a sofa casually talking to Major “Majaraa……..” with a puff of 555. He at once comes to the grip of shot immediately when Director CVR called “TAKE”. In fact, it was the climax of the movie in which, NT would appear in front of the court – saptha naadiyum odungiya nilayil. He has to stand and SHOULD NOT STAND! Wow! The way he did that shot.. immediately after that shot the entire crew including Director CVR, Major, co-Artistes, Cinamatographer and the general visitors (normally, few people would be allowed to watch the shooting) rushed to him with so much of emotions – some hugged him..some fell at his feet..some cried (including me of course). I wept at that time and now after death, am continuing to weep whenever I happen to see great performances – only due to the thinking that Oh! What an Actor!!.

In 1987, when Jallikkattu was in the making, again I went to AVM Studios – this time with my younger brother (who too is an ardent NT fan). My brother was studying in an Engg. College at Erode and just arrived at our home in Chennai. It was about 6.45 a.m. on a Saturday on which, I was on a weekly off. My Periyappa also arrived at the same time and asked me and my brother to come to AVM Studies saying that Jallikkattu was being shot with NT in the lead role. We were thrilled and my brother just had a Kaakka Kuliyal and we arrived at AVM Studios sharp at 7.15 a.m. We were residing at Virugambakkam at that time and hence, we just took 10 minutes to reach AVM. NT was majestically sitting at the Judge’s cabin with a Court Set erected. He was sitting alone as usual observing everybody/everything around him. He got a heart attack sometime during late 1986 and in some of the movies, he was rather thin like a patient that no NT fan was able to take it. It was in this movie, that one started seeing a much fresh NT slowly getting back to normal looks but with a slim look of course. My Periyappa then took us to NT and NT started talking to us exactly like my Periyappa in his own slang. He asked me kindly as to where I was working. When I told the Co. in which I was working, he immediately gave certain key info about the Co. and its Promoters (he was having all details in his finger tips!) and I got stunned. I couldn’t speak anything as I got the opportunity to converse with my Idol. Then he turned to my brother and the moment he told NT that he is studying in Erode and has come on vacation, he asked my brother “enna avasarama kaakka kuliyal pottuttu odi vandhutteengalaa!”

Regards,

Partha

parthasarathy
17th February 2011, 05:27 PM
Dear Murali Sir,

Nalla idam neengal vandha idam. In fact, this song was sung by NT inviting JJ in Galatta Kalyaanam. It was the first movie in which NT was pairing JJ and Vaalee (I think so I am not sure), wrote it appropriately. Oh the roar and applause in theatres those days, when he says these lines to JJ.

Thank you.

Regards,

Partha

joe
17th February 2011, 06:49 PM
அடியேனை வாழ்த்திய அனைத்து நடிகர் திலகத்தின் ரசிக உள்ளங்களுக்கும் உளம் கனிந்த நன்றி!

joe
17th February 2011, 08:18 PM
பாசமலர் ,அன்னை இல்லம் போன்ற படங்களின் தயாரிப்பாளரும் நடிகருமான திரு. சந்தானத்தின் புதல்வர் திரு .சிவாஜி சந்தானம் தன்னுடைய facebook பக்கத்தில் நடிகர் திலகத்தின் அரிய புகைப்படங்களை வலையேற்றி வருகிறார்.. உதாரணமாக ..

கட்டபொம்மன் நாடகத்தில்
http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash1/20740_259327051809_690131809_4380861_7655874_n.jpg

கட்டபொம்மன் திரைப்படத்தில் கர்ஜிக்கும் நடிகர் திலகம்
http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc3/20740_259327071809_690131809_4380863_4007507_n.jpg

parthasarathy
17th February 2011, 08:28 PM
My heartiest birthday wishes to Mr.Joe.

Welcome to Mr.Parthasarathy.

Thanks

Dear Sir,

Thank you. It really requires monumental and dedicated efforts to do so many activities to remember NT, which you have been doing. I cannot imagine such dedication from my side. I can only enjoy / recollect / share various performances/moments.

Regards,

Partha

parthasarathy
17th February 2011, 08:30 PM
அடியேனை வாழ்த்திய அனைத்து நடிகர் திலகத்தின் ரசிக உள்ளங்களுக்கும் உளம் கனிந்த நன்றி!

Many happy returns of the day Mr. Joe.

Regards,

Partha

parthasarathy
17th February 2011, 08:35 PM
பாசமலர் ,அன்னை இல்லம் போன்ற படங்களின் தயாரிப்பாளரும் நடிகருமான திரு. சந்தானத்தின் புதல்வர் திரு .சிவாஜி சந்தானம் தன்னுடைய facebook பக்கத்தில் நடிகர் திலகத்தின் அரிய புகைப்படங்களை வலையேற்றி வருகிறார்.. உதாரணமாக ..

கட்டபொம்மன் நாடகத்தில்
http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash1/20740_259327051809_690131809_4380861_7655874_n.jpg

கட்டபொம்மன் திரைப்படத்தில் கர்ஜிக்கும் நடிகர் திலகம்
http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc3/20740_259327071809_690131809_4380863_4007507_n.jpg

M.R. Santhanam acted in various movies like Adutha Veettu Penn. As for NT, he acted in Vide Velli (Father in law to T.R. Ramachandran. In Bale Pandiyaa, as father of Vasanthi. An effortless and a casual performer, who was a great friend of NT while his sons are Director-cum-Actor Santhana Bharathy and R.S. Sivaji (who acted as side kick to Janagaraj in Aboorva Sahodharargal (anne.....neenga engiyo poiteenga). Both are constants in most of Prabhu's films.

Regards,

Partha

RAGHAVENDRA
17th February 2011, 09:36 PM
அட்டகாசமாய்க் கலக்கி வரும் பார்த்த சாரதி அவர்களுக்கு,
தங்களுடைய பதிவுகள் என்னைப் போன்ற பழைய ரசிகர்களை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பாராட்டுக்கள். குறிப்பாக ஜல்லிக்கட்டு, தியாகி படப்பிடிப்பு சம்பவங்கள் தங்களுக்கு என்றென்றும் பசுமரத்தாணி போல் நினைவிருக்கும். குறிப்பாக அந்தக் காக்கா குளியல் ....

தங்களுடைய பதிவுகளை ஹப்பில் இடுமுன் வேர்டு தொகுப்பில் ஒரு கோப்பில் தட்டச்சு செய்து வைத்துக் கொண்டு அதன்பின் ஹப்பில் நுழைந்து பதியவும். அப்படியில்லை என்றால் ஹப்பில் தட்டச்சு செய்த உடனே பிழை செய்தி வந்தால் முன் பக்கத்திற்கான அம்புக்குறியின் மூலம் தாங்கள் தட்டச்சு செய்த பக்கத்தை மீண்டும் வரவழைத்து அதில் தாங்கள் ஏற்றிய பதிவினை கண்ட்ரோல் சி மூலம் காப்பி செய்து வைத்துக் கொண்டு அதன் பின் பதியலாம்.

மேலும் பல தகவல்களை தங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

நேரம் கிடைக்கும் போது நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தையும் மற்றும் சகோதரி சாரதா அவர்களின் வலைப் பதிவுகளையும் சகோதரி கிரிஜா அவர்களின் இணைய தளத்தினையும் மற்றும் பம்மலார் அவர்களின் வலைப்பதிவுகளையும் பார்வையிடவும்.
www.nadigarthilagam.com
http://ennangalezuththukkal.blogspot.com/
www.nadigarthilagamsivaji.com
www.pammalar.webs.com


அன்புடன்
ராகவேந்திரன்

Murali Srinivas
18th February 2011, 12:32 AM
Dear Parthsarathy,

Superb posts! Your posts have an attractive flow and the language is lucid. Infact, I was telling the same things to Swami yesterday, while we were talking. No wonder, being a literature student [combined with your passion for NT],it brings out your true feelings in style. Keep them coming!

Regarding typing in Tamil, either you can use any soft ware or use the google transliteration window. The URL is http://www.google.com/transliterate/Tamil. You will get the window, where you have to type the Tamil words with English spelling. For example if you type Anbulla and press space bar you will get அன்புள்ள. You have to type the words with phonetic spelling. If you want மாளிகை, the spelling should be Maaligai. Once you are done you can cut paste the Tamil post into the thread and submit. Once you get used to it, things will be more easier.

Regards

parthasarathy
18th February 2011, 09:17 AM
அன்புள்ள திரு ராகவேந்தர் மற்றும் திரு முரளி அவர்களுக்கு,

உங்களது மறுமொழி என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. திரு முரளி அவர்களின் பதிலும் திரு பம்மலரின் கனிவான வரவேற்பும் மற்றும் திருமதி சாரதா, திரு Goldstar (தங்களது பெயர்?) திரு ஹரிஷ் திரு Grouch070 (தங்களது பெயர்?) மற்றும் (பெயர் விட்டுபோய் இருந்தால் மன்னிக்கவும்) அனைவரது வாழ்த்துகளும் இனிமையான ஊக்கமும் என்னை மேலும் எழுத வைக்கும்.

அன்புடன்,

பார்த்தசாரதி

goldstar
18th February 2011, 10:09 AM
திரு பம்மலரின் கனிவான வரவேற்பும் மற்றும் திருமதி சாரதா, <b>திரு Goldstar (தங்களது பெயர்?) </b>திரு ஹரிஷ் திரு Grouch070 (தங்களது பெயர்?) மற்றும் (பெயர் விட்டுபோய் இருந்தால்

Dear Partha,

My name is Sathish, native of Madurai. Goldstar is our NT student wing name. We had Goldstar NT student wing on my school time (1986 to 1993) and Goldstar is very popular among Madurai NT fans group, because we used to carry out big big posters on NT re-release movies.

Cheers,
Sathish

parthasarathy
18th February 2011, 10:46 AM
திரு பம்மலரின் கனிவான வரவேற்பும் மற்றும் திருமதி சாரதா, <b>திரு Goldstar (தங்களது பெயர்?) </b>திரு ஹரிஷ் திரு Grouch070 (தங்களது பெயர்?) மற்றும் (பெயர் விட்டுபோய் இருந்தால்

Dear Partha,

My name is Sathish, native of Madurai. Goldstar is our NT student wing name. We had Goldstar NT student wing on my school time (1986 to 1993) and Goldstar is very popular among Madurai NT fans group, because we used to carry out big big posters on NT re-release movies.

Cheers,
Sathish

Dear Sathish,

Thank you. I am born and brought up in Chennai but; my native is near Chingleput.

Even though I have never been part of a Rasigar Manram, we (about 10) from our area (Virugambakkam in Chennai) were (are too!) ardent fans of NT.

Cheers to you too,

Partha

parthasarathy
18th February 2011, 10:57 AM
நடிகர் திலகம் - சில எண்ணங்கள்

என்னுடைய முதல் ஏழு இடுகைகள் என்னுடைய நினைவுகளை அசை போடுவதாக அமைந்தது. இது மேலும் தொடரும். அந்த அளவிற்கு நடிகர் திலகம் எனது வாழ்வில் ஊனும் உணர்வுமாக (எனது வாழ்வில் மட்டும்தானா?) கலந்து விட்டிருக்கிறார். என் தாயார் நான் அவரின் ரசிகராக சரஸ்வதி சபதம் படத்தில் இருந்தே ஆகி விட்டதாகக் கூறினாலும், எனக்கு நினைவு தெரிந்தபிறகு, அதாவது, ஓரளவு புத்தி தெரிந்த பிறகு சினிமா பார்க்க ஆரம்பித்த பிறகு, நான் அவருடைய ரசிகனானது, முதலில், ராஜா. அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். அவரது ரசிகர்கர் கூட்டம் - படை என்று கூட சொல்லலாம் - ஏராளமாகப் பெருகிக் கொண்டிருந்த காலம் அது. முக்கியமாக, சுமதி என் சுந்தரி அவருக்கு நிறைய காலேஜ் Students ரசிகர்களாக வழி வகுத்தது என சொல்லுவர்.

அவருடைய பல அற்புத நடிப்பில் உருவான கணங்களைப் பற்றி அனேக அன்பர்கள் ஏராளமான இடுகைகளை பதிவிறக்கம் செய்து விட்டீர்கள். ஒரு ஒற்றுமை அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களுக்கும் என்னவென்றால் (நீங்கள் அனைவரும் அறிந்ததுதான்) எல்லோரும் ஒரே மாதிரியாகத் தான் சிந்திப்போம். அவருடைய ஒவ்வொரு படத்திலும் சிறந்த பல/சில காட்சிகள் ஒரே மாதிரியாக அனைவரும் நினைவு கூர்வதுதான். அதனால்தான், ஒவ்வொரு படமும் திரை அரங்கில் பார்க்கப் படும் பொழுதும், குறிப்பிட்ட சில கட்சிகளில் ஆரவாரம் மொத்த அரங்கில் இருந்தும் இந்த நிமிடம் (இனி எப்பொழுதும் கூடத்தான்) வரை இருக்கிறது. இனி வரும் இடுகைகளில், நான் ரசித்த பல தருணங்களைப் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.

இது வரை ஆறு திரிகள் முடிந்து ஏழாவது திரியின் நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இரண்டாவது திரியின் ஆரம்பத்தில் இருந்து நடிகர் திலகத்தின் சிறந்த பத்து படங்களைப் பற்றி பெரிய கருத்துக் கணிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடிகர் திலகத்தின் சிறந்த பத்து படங்கள் என்று அடக்குவதைக் காட்டிலும் இந்த முறை சரியாக இருக்குமா என்று பாருங்களேன்.

முதலில், நடிகர் திலகத்தின் பங்களிப்பை ஒரு பத்து படங்களில் அடக்குவது என்பது மிகச் சிரமம் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இருப்பினும், இந்த முறை சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பில் உருவான பத்து படங்கள்

நடிகர் திலகம் நடித்த படங்களில் பத்து அற்புதமான படங்கள்

உதாரணத்திற்கு, முதல் வகையில், தெய்வ மகன் (எனது கணிப்பில்) முதல் இடத்தையும் முறையே, gauravam, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கலாம்.

இரண்டாவது வகையில், தில்லானா மோகனாம்பாள் (எனது கணிப்பில்) முதல் இடத்தையும் முறையே, கை கொடுத்த தெய்வம் (நாங்கள் இந்த படத்தை போர்வை படம் என்று சொல்லுவோம் - ஏனென்றால் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை மயிர் கூச்செறியும் அளவிற்கு நடிப்பும் காட்சி அமைப்புகளும் ஒருங்கே அமைந்த மிகச் சிறந்த படம் - இன்று எத்தனையோ பேர் காமெடி track இல்லாத படம் என்று ஏதோ கூருகிகார்கள், இந்த படத்தில் தனி காமெடி track இல்லை. In fact அவருடைய ஏராளமான படங்கள் தனி காமெடி track இல்லாமல் வெற்றியும் அடைந்திருக்கிறது.), பாச மலர், படிக்காத மேதை, அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கலாம்.

மூன்றாவது வகை ஒன்று உண்டு. அது, நடிகர் திலகத்தின் பிரத்யேக ரசிகர்ளின் நினைவில் நீங்காத படங்கள் - அதாவது அவருடைய ஸ்டைல் தூக்கலாக அமைந்து - அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தந்த படங்கள்.

இந்த மூன்றாவது வகையில் முதல் இடம் எப்போதும் வசந்த மாளிகை (இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது?), ராஜா, என் தம்பி போன்ற படங்கள் வரலாம்.

நடிகர் திலகம் என்ற அந்த அற்புதக் கலைஞனை இப்படி வரிசைப் படுத்தி ஒன்று இரண்டு கூண்டுகளுக்குள் அடைத்து விட முயல்வது முடிகிற காரியம் இல்லை. அப்படி முயன்றால், அது என்னைப் பொறுத்த வரையில் தவறாகக் கூட இருக்கலாம்.

இப்படி முயலும் பொழுதே, அவருடைய சிறந்த படங்கள் குறைந்தபட்சம் ஐம்பதைத் தாண்டும் என்றால் இது மலைக்க வைக்கும் விஷயம்.

அன்புடன்,

பார்த்தசாரதி

saradhaa_sn
18th February 2011, 12:05 PM
டியர் பார்த்தசாரதி,

தங்களின் முதல் ஆராய்ச்சிக்கட்டுரையே அட்டகாசமாக அமைந்துள்ளது. இதுவரை அவரது சிறந்த பது படங்கள் / 25 படங்கள் என்ற அளவிலேதான் அலசப்பட்டு வந்திருக்கிறது. முதன்முறையாக அவற்றை பலவகைப்படுத்தி, வகைக்கு பத்து படங்களாக அல்லது 20 படங்களாக அலசும் முறை சற்றே புதுமையானது மட்டுமல்ல, சிறப்புக்குரியதும் கூட.

அந்த வகையில் என்னைப்பொறுத்தவரை முதலிரண்டு பிரிவுப்படங்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் மூன்றாவது வகைப்படங்களுக்கும் உண்டு என்பது எனது பதிவுகளைப்படித்த அனைவருக்கும் தெரியும். காரணம் நடிகர்திலகத்தின் பொழுதுபோக்குப் படங்கள் மற்ற எந்தப்படங்களுக்கும் குறைவில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.

உங்கள் பதிவுகளின் துவக்கமே, இனிவரும் அற்புத ஆய்வுகளின் அச்சாரமாக விளங்குகிறது. உங்கள் பதிவுகள் எங்களை அசத்தப்போவது நிச்சயம்.

அசரக் காத்திருக்கிறோம்.

டியர் ஜோ,

கட்டபொம்மன் நாடக / மற்றும் திரைப்படத்தின் புகைப்படங்கள் அருமை. அதிலும் நாடகக் காட்சி கிடைத்தற்கரியது. நன்றி.

KCSHEKAR
18th February 2011, 01:08 PM
Dear Sir,

Thank you. It really requires monumental and dedicated efforts to do so many activities to remember NT, which you have been doing. I cannot imagine such dedication from my side. I can only enjoy / recollect / share various performances/moments.

Regards,

Partha


Thanks for your appreciation.

parthasarathy
18th February 2011, 02:49 PM
திருமதி சாரதா மேடம் அவர்களுக்கு,

நன்றிகள் பல. நடிகர் திலகத்தின் படங்களை பலவகைப்படுத்தி ஏற்கனவே திரு முரளி அவர்கள் கட்டுரை எழுதியதாக நினைவு. இருப்பினும், இது சற்றே வித்தியாசமான முயற்சி.

இதற்க்கு தீவிர சிந்தனை அவசியமில்லை. ஏனெனில், நடிகர் திலகத்தைப் பற்றி நினைத்தவுடன் எண்ணங்கள் அவைகளாக வந்து விழும். நேரம் மற்றும் தமிழ் தட்டச்சு தான் தேவைப்படுகிறது. எனக்கு பொதுவாக ஏதோ ஒரு பாட்டின் முணுமுணுப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அது போல எப்போதும் நடிகர் திலகத்தின் ஏதோ ஒரு படம் அல்லது காட்சி எப்போதும் என் சிந்தனையில் இருந்து கொண்டே இருக்கும். நான் என் துறை நிமித்தமாக திடீர் திடீர் என்று ஏதோ ஒரு டீம்-க்கு எதாவது ஒரு சுப்ஜெக்ட்-ஐ பெற்றி பேச வேண்டி உள்ளது. அதற்கு எப்போதும் நடிகர் திலகத்தின் வெவ்வேறு திறமையான காட்சிகளையும் கவியரசு (ஒருவன்தான்) கண்ணதாசன் பாடல்களையும் பயன்படுத்துவது வழக்கம். அதனால், சுலபமாக என்னால் எழுத முடியும் என்றே தோன்றுகிறது. ஏழு திரிகளில் எக்கச்சக்கமாக எழுதிவிட்டதால் சிறிது மலைப்பாக இருந்தாலும், நடிகர் திலகத்தின் படங்களைப் போருதுவரையில், ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் புதிய புதிய பல எண்ணங்களும் மலைப்பும் மேலோங்கிக்கொண்டே போவதால், சுலபமாக எழுதி விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நன்றி,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
18th February 2011, 04:09 PM
டியர் பார்த்த சாரதி,
அருமையான அலசல்கள். சகோதரி சாரதா அவர்கள் கூறியது போல் இந்த மூன்றாவது வகை தான் முதல் இரண்டு வகைகளிடம் நம்மை ஈர்த்தது என்றால் மிகையில்லை. இதில் ஒரு சிறப்பென்ன வென்றால், இந்த மூன்றையுமே அவர் தன் முதல் படத்திலேயே சித்தரித்து விட்டார் என்பது தான். மற்ற 304 படங்களும் நமக்கு போனஸ்.

இப்படி 304 படங்களை ரசிகர்களுக்கு போனஸாகத் தந்து அதிலும் சாதனை படைத்துள்ளார். எப்படிப் பட்ட தொய்வான படமாயிருந்தாலும் அவருடைய நடிப்பு நம்மை அமர வைத்து விடும். அப்படிப் பட்ட படங்களை ஒரு வகைப் படுத்தினால் நான்காக ஒரு வகை உருவாகும்.

சமீபத்தில் வசந்த் தொலைக்காட்சியில் மகேந்திரா அவர்கள் கூறியிருப்பது எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் நடிகர் திலகத்தைப் பற்றி மிகவும் சிலாகித்து அவர் கூறியது. எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும், அல்லது எவ்வளவு சுமாரான படமாயிருந்தாலும் ஏற்றுக் கொண்ட தொழிலில் பாகுபாடு காட்டாது ஒரே மாதிரி தன் உழைப்பை கொடுத்தவர் என்று கூறினார். சிலர் கூறலாம் அவர் இப்படிப்பட்ட படங்களில் நடித்திருக்கக் கூடாதோ என்று, ஆனால் எனக்குத் தெரிந்த வரை, அதிலும் தன்னுடைய உழைப்பை 100 சதவீதம் சிரத்தையுடன் தந்தவர் என்று மகேந்திரா அவர்கள் கூறினார்.

தாங்கள் கூறிய மூன்றாவது வகையை மட்டுமே அவர் அதிகம் செய்திருந்தால், பலர் இந்தத் தொழிலில் மிகப் பெரிய விளம்பரத்தையும் பெயரையும் அடைந்திருக்க முடியாது. வர்த்தக நோக்கிலான கதைகளை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து சமுதாய பிரச்சினைகளை அலசும் படங்களை அதிகம் தந்ததனால் தான் அவருடைய படங்கள் காலங்கடந்து நிற்கின்றன.

தங்களுடைய தொடர்ந்த பதிவுகளுக்காக காத்திருக்கும்

ராகவேந்திரன்

parthasarathy
18th February 2011, 05:48 PM
டியர் திரு ராகவேந்தர்,

நன்றி. உங்கள் அனைவரது ஆதரவான பதில்கள் என்னை மென்மேலும் எழுதத் தூண்டுகிறது. உண்மையில், நேற்று முன்தினம்தான் நான் பராசக்தி படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் என்னுடைய சக NT ரசிக நண்பர்களுக்கும் எப்போதும் நடக்கும் விவாதம் - நான் எப்போதும் சொல்வது அவர் முதல் படத்திலேயே முழுவதும் திறமையை காண்பித்து விட்டார் மற்ற எல்லா படங்களும் கொசுறு என்று. அந்த மறக்க முடியாத கோர்ட் சீன் வசனக் காட்சியில் - வெறுமனே வசனம் பேசுவதோடு மட்டுமில்லாமல் - அவர் கைகளை அந்த பிடிகளில் வைத்துக் கொண்டு பேசும் அந்த casual way அந்த கோர்ட் சிப்பந்தி (?) அவர்தான் பின்னாளில் அவருடைய பல படங்களிலும் மற்றும் நாடகங்களிலும் கூட நடித்தவர் - மற்றும் பல நாடகங்களின் இயக்குனர் - ஏன்- சத்யம் திரைப்பட இயக்குனரும் கூட - திரு S A கண்ணன் அவர்கள். (இது உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக தெரியும்) - அவர் நடுவில் குறுக்கிடும் பொழுது - கிண்டலாக narration - ஐ தொடரும் லாகவம். ஒவ்வொரு வசனத்திற்கும் அதற்கேற்றார்போன்ற முக பாவனை மாற்றங்கள். எந்த நடிகனால் இது முதல் படத்திலேயே சாத்தியம். அவர் ஒரு வற்றாத நீரூற்று மற்றும் எப்போதும் தன் கலையையும் அதன் மூலம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்களும் அடையும் மகிழ்ச்சி இது ஒன்றே தன் வாழ்க்கையாக நினைத்து கடைசி நிமிடம் வரையிலும் இருந்த அந்த அர்ப்பணிப்பு. நீங்கள் சொன்னதுபோல் எந்த படத்திலேயும் - regardless of his importance in the movie - அவரின் பங்களிப்பு இம்மி கூட குறைந்ததில்லை. மேம்போக்காக அவர் எந்த படத்தையும் எடுத்துக் கொண்டதில்லை தான்.

நன்றி,

Parthasarathy

PARAMASHIVAN
18th February 2011, 06:03 PM
Hi All

Was muthal Mariyathai Shivaji Sir's last movie as a 'hero' ?

parthasarathy
18th February 2011, 06:46 PM
ராமன் எத்தனை ராமனடி - கடைசி இருபது நிமிடங்கள்

இந்தப் படம் எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தது. குறைந்தது முப்பது தடவையாவது (தியேட்டரில் மட்டும் இருபது!) பார்த்திருப்பேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. படத்தின் டைட்டில் காட்சி (அது மட்டும் தான்) எங்களது ஊரில் எடுத்தார்கள். இன்னொரு காரணம் - அவர் நடிகனான பின்னர் - முக்கியமாக - அவர் நம்பியார் வீட்டில் - செந்தாமரை (அவர் முதலில் நடிகர் திலகத்தின் கழுத்தில் பூட்ஸ் காலை வைத்து அழுதும் போது - நாங்கள் அலறிய அலறல்! - மற்றும் இன்னும் இரு நடிகர்கள் (அதில் ஒருவர் எப்போதும் எதிர் அணி படங்களில் வருவார் - மற்றவர் நடிகர் திலகத்தின் பல படங்களில் நடிப்பார் - திரு Joe அவர்கள் பதிவிறக்கம் செய்த வீர பாண்டிய கட்டபொம்மன் - நாடக ஸ்டில் - ஐ கவனித்தால் அவரது வலது பக்கம் ஓரமாக நிற்பவர் - அவர் தான் அவர்). நம்பியார் வீட்டில் அவர் செய்யும் ஸ்டைல் - கள் - அப்பப்பா. The way he takes on them with his inimitable style - சவுக்கை ஓங்குவார் - ஆனால் நம்பியாரை அடிக்க மாட்டார் - அவர் கோபம் மற்றும் லாகவத்துடன் - செய்யும் அந்த பாவனை - நூறு அடி அடித்ததற்கு சமம் - மற்ற கலைஞர்கள் பத்து நிமிடம் எடுத்துக் கொண்டு காண்பிக்கும் கோபம் மற்றும் ஆத்திரத்தை - வெறும் முக பாவனைகளால் காண்பிப்பவராயிற்றே!.

இப்பொழுது ராமன் எத்தனை ராமனடி படத்தின் கடைசி இருபது நிமிடங்களுக்கு வருவோம்.

இந்த கடைசி இருபது நிமிடங்கள் ஒரு அற்புதமான கோர்வையுடன் ஓடும். அதாவது காட்சி அமைப்புகள் அந்த படத்தின் முடிவை அழகாக ஆனால் சரளமாக இழுத்து செல்லும். அவரது வளர்ப்புப் பெண் dinner பார்ட்டி ஒன்றில் எக்குத் தப்பாக ஒருவனிடம் மாடிக் கொண்டு கடைசி நேரத்தில் - நடிகர் திலகம் வந்து விடுவார். அப்போது ஆரம்பமாகும் இந்த கோர்வையான காட்சி அமைப்பு. நடிகர் திலகம் கோபத்துடன் அந்த வெறியனை அடித்து ஒரு நேரத்தில் காகா வலிப்பு வந்த பிறகு தன்னை அறியாமல் அவனை ஆணியில் அறைந்து - அவனைத் தொடுவார். தொட்டவுடன் அவன் பிணமாக விழுவான் - உடனே அவர் காட்டும் முக பாவம் - அதன் பின்னர் - அவர் காரில் வந்து அமர்ந்து சிறிது நேரம் வரையில் - ப்ரமை பிடிதார்ப் போல் இருப்பார். இங்கு ஒரு விஷயம் - எல்லோரும் வியக்கும் விஷயம் - அதாவது நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் இலக்கணம் வகுத்தவர் என்று எல்லோரும் கூறுகிறோமே - அது. ஒருவர் திடீரென்று ப்ரமை பிடித்து விட்டால் எப்படி ஆவானோ - மிகச் சரியாக அந்த பாவனையை - காண்பிப்பார். சிறிது நேரம் காரில் பயணம் செய்தவுடன் - கார் டிரைவர் - முத்துராமன் - அவரை "சார், நான் யார் என்று தெரிகிறதா?" மிக மிக லேசாக கண்ணை திறந்து பார்த்து "ம். " என்று சொல்லுவார். ஆனால் அவருக்கு தெரியும் முத்துராமன் தான் KR விஜயா - வின் கணவர் என்று. அவர் வீடு வரும். உள்ளே வந்து ஒரு முடிவுக்கு வந்து விடுவார். இது தான் சரியான தருணம் - அனைவரும் (அவரைத் தவிர!) ஒன்று சேர்வதற்கு என்று. உடனே யாருக்கும் தெரியாமல் போலீஸ் - க்கு போன் செய்து வரச் சொல்லிவிட்டு ஹால் - க்கு வந்து. பேச ஆரம்பிப்பார். திடீரென்று நினைவுக்கு வந்து முத்துராமன்- ஐ அழைப்பார். அப்போது அவரது குரலில் இருக்கும் ஒரு வகையான ஒரு இறுக்கம் நிறைந்த ஒரு குரல். உள்ளே வந்தவுடன் அவர் முத்துராமன்-ஐ எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் பாங்கு மற்றும் அந்த கம்பீரம் நிறைந்த லாகவம். உடனே போலீஸ் வந்து விடும் - இப்போழோது ஒவ்வொருவரிடமும் விடை பெறும் கட்டம். முதலில், கோபி (ஒரு மலையாள நடிகர்) அவரிடம் ஒரு வகையான நடிப்பு, அடுத்து முத்துராமன் - இப்பொழுது ஒரு கடமை உணர்வுடன் - அடுத்து ஆயா (ஆப்பக்கார ஆயா!........), அடுத்து KR விஜயா - "தேவகி ...." அவர் தேவகி என்ற பெயரை உச்சரிக்கும் விதம் - உணர்ந்து பாருங்கள்! ஆஹா! இப்பொழுது - மகள். இப்பொழுது இரண்டு கைகளை ஒரு மாதிரி தூக்கி - மெல்ல நெருங்கி - மகள் அழுவார் - இவர் - சைடு pose - இல் நமக்கு வலது பக்க முகம் தெரியும். அந்த வலது புருவத்தை - அவரது characteristic /inimitable ஸ்டைல்-இல். இந்த ஸ்டைல் அந்த இடத்துக்கு மெருகை மேலும் ஊட்டுமே தவிர சிதைக்காது. புருவத்தை உயற்றி - "போகட்டுமா" என்று கேட்பார். இப்பொழுது தந்தை மகளிடம் எப்படி பேசுவானோ - அதுவும் மிகவும் செல்லம் கொடுத்தபிறகு எப்படி பேசுவானோ - அப்படி - அதாவது ஒவ்வொரு கேரக்டர்-இடம் விடை பெறும் பொழுதும் அந்தந்த உறவுக்கு ஏற்றார்ப் போல் - நடிப்பு - பிரியாவிடைக்காக. கடைசியில் - யாரும் அழைக்க கூடாது - No cry - என்று அப்பொழுதும் தவறாக - ஆங்கில உச்சரிப்பு - அந்த characterisation - அந்த கடைசி காட்சியில் கூட - அதையும் maintain செய்து. ஒத். Don 't cry என்று சிரித்துக் கொண்டே அழுது நம் எல்லோரையும் - அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து - அவர் வாயில் இருந்து - வணக்கம் என்று வரும்.

இந்தக் கடைசி இருபது நிமிடங்கள் நடிகர் திலகத்தின் பாத்திரத்தையும் மற்ற அனைத்து முக்கியப் பாத்திரங்களையும் சுற்றி நிகழும். ஒரு முடிவை நோக்கி இழுத்துச் செல்லும். ஆனால், அந்த முடிவை நோக்கி நடிகர் திலகம் தான் இழுத்துச் செல்வார். அதுவும் எப்படி - சரளமாக மற்றும் ரொம்ப casual - ஆக ஆனால் மிக மிக அழகாக மற்றும் ஆழமாக.

இப்போதெல்லாம், இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது மறக்காமல் அந்த இருபது நிமிட கிளைமாக்ஸ் - ஐ பார்த்து விட்டுத் தான் மறு வேலை பார்க்கிறேன்.

நன்றி,

Parthasarathy

Murali Srinivas
19th February 2011, 12:53 AM
கலக்கறீங்க சாரதி! நடிகர் திலகத்தின் படங்களை இப்படி இனம் பிரித்து ரசிப்பது சுவாரஸ்யமாகவே இருக்கிறது. தொடருங்கள். ராமன் எத்தனை ராமனடி கிளைமாக்ஸ் பற்றிய அலசல் நன்றாக வந்திருக்கிறது. அண்மையில் நானும் அதைப் பற்றி எழுதியிருந்ததால் வெகுவாக ரசிக்க முடிந்தது.

இரண்டு நாட்களுக்கு முன் channel surfing செய்துக் கொண்டிருந்த போது ஒரு இந்தி சானலில் சட்டென்று நிறுத்தினேன்.காரணம் அப்போது அங்கே oh o meri raja பாட்டு ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது. ஜானி மேரா நாம் திரைப்பட பாடல் காட்சி.நமது ராஜாவின் மூலப்படம். தேவ் ஆனந்த் மற்றும் ஹேமா. அதைப் பார்த்த போது நமது நடிகர் திலகம் எவ்வளவு ஸ்டைலாக செய்திருப்பார் என்ற ஏக்கமே விஞ்சியது. பாடல் காட்சியை கிட்டத்தட்ட அதே போல் எடுத்திருப்பார் சி.வி.ஆர். இந்தி பாடலில் மூன்றாவது சரணத்தில் கேபிள் காரில் [ரோப் கார்?] போவதாக எடுத்திருப்பார்கள். அது ஹிமாச்சல் பிரதேஷ் என்று நினைக்கிறேன். அப்போது தமிழகம்/கேரளத்தில் கேபிள் கார் இல்லாததால் அதை தமிழில் கொண்டு வரவில்லை. அது போல் தன் தந்தையை தேடி ரங்காராவ் மாளிகைக்கு போகும் நாயகி சித்தாள் வேடத்தில் உள்ளே நுழைவதாக வரும். இந்தியில் பாடல் உண்டு. அது தமிழில் இல்லை. இரண்டில் ஒன்று பாடல் முடிந்தவுடன் உடனே வரும் காட்சி என்பதாலும் படத்தின் நீளம் கருதியும் அந்த பாடலை தவிர்த்து விட்டார்கள்.

டி.வியில் பாடலை பார்த்துக் கொண்டிருந்தபோது என் நினைவுகள் பின்னோக்கி போனது. நான் ஜானி மேரா நாம் பார்த்த நினைவுகள். 1971 அக்டோபர் 18 தீபாவளி தினம். பாபு வெளியான நாள். மதுரையில் ஸ்ரீதேவியில் படம் வெளியாகி இருக்கிறது. தியேட்டருக்கு காலையில் நானும் என் கசினும் அவன் நண்பர்கள் சிலரும் செல்கிறோம். கூட்டம் அலை மோதுகிறது. மன்ற டிக்கெட், இல்லை வேறு ஏதாவது டிக்கெட் கிடைக்காதா என்று எவ்வளவோ முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. அன்று 5 காட்சிகள். சரி மாலையில் பார்த்துக் கொள்வோம் என திரும்பி வருகிறோம். தியேட்டரிலிருந்து எங்கள் வீட்டிற்கு மேல மாசி வீதி வழியாக வரும் போது ஜானி மேரா நாம் மீனாட்சியில் வெளியாகி இருக்கிறது என்ற பேச்சு வருகிறது. அதைதான் பாலாஜி தமிழில் ராஜா என்ற பெயரில் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியும் என்பதால் நேராக மீனாட்சி டாக்கிஸ் செல்கிறோம்.

அங்கும் ஓரளவிற்கு நல்ல கூட்டம். டிக்கெட் கிடைத்து உள்ளே செல்லும் போது கஸினின் நண்பர் ஒருவரை உள்ளே பார்க்கிறோம். என்ன உங்க படத்திற்கு போகவில்லையா என்று என் கஸின் கேட்க நண்பர் நான் ரசிகன்தான் வெறியன் இல்லை என்று பதில் சொன்னார். அதே கேள்வியை நானும் உங்களை கேட்கிறேன் என்று நண்பர் சொல்ல அதே பதிலை நானும் சொல்கிறேன் என்று என் கஸின் சொல்ல ஒரே சிரிப்பு. சந்தித்த நண்பர் எம்.ஜி.ஆர். ரசிகர். அன்று எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பும் வெளியாகி இருக்கிறது. முன்பே இங்கே சொன்னது போல் அந்த தீபாவளி நாள்தான் சிவாஜி படமும் எம்.ஜி.ஆர். படமும் கடைசி முறையாக ஒரே நாளில் வெளியானது. அதன் பிறகு இரண்டு பேரின் படங்களும் ஒரே நாள் ரிலீஸ் நடக்கவில்லை.

ஜானி மேரா நாம் படம் பிடித்திருந்தது. தமிழில் படம் நன்றாக போகும் என்று தோன்றியது. படம் முடிந்து வீட்டிற்கு வருகிறோம். கஸினின் நண்பன் ஒருவன் காத்திருக்கிறான். 3 மணி காட்சிக்கு டிக்கெட் வாங்கியிருந்ததாகவும் அதில் ஒருவர் வராததால் என் கசினை கூட்டி போக வந்ததாக சொல்லி அவனை மட்டும் கூட்டிக் கொண்டு போனார். நான் அன்று பார்க்க முடியவில்லை. சில நாட்கள் கழித்தே பார்க்க முடிந்து. இந்த நினைவுகளெல்லாம் அந்த பாடல காட்சி முடிவதற்குள் மனதில் மின்னலாக ஓட அதை இங்கே பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது!

அன்புடன்

abkhlabhi
19th February 2011, 11:29 AM
திரு. பார்த்தசாரதி,
பல புதிய கோணங்களில் நம் நடிகர் திலகத்தின் பெருமையை மேலும் மேலும் பரவ உங்களுடைய பங்களிப்பும் பதிவுகளுமே சாட்சி. தொடரட்டும் உங்களுடைய சேவை.

saradhaa_sn
19th February 2011, 12:00 PM
டியர் முரளி,

உள்ள உணர்வுகளின் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி. எப்போது யார் 'ராஜா'வைப்பற்றிப் பேசினாலும் அதில் உடனே நானும் கலந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை எழும். அந்த அளவுக்கு என் மனதுக்கு மிக நெருங்கிய படங்களில் ஒன்று. (பார்த்தசாரதி சார், நான் சொன்னேனே 'கேட்டகரி நம்பர்: 3' படங்கள் எனக்கு நெருக்கமானவை என்று. அவற்றில் ராஜா, தங்கச்சுரங்கம், என்னைப்போல் ஒருவன், சுமதி என் சுந்தரி... இப்படி நிறைய).

முரளி, சுமார் ஆறு மாதங்களுக்கு முன் உங்களைப்போலவே ரிமோட்டால் சேனல்களை கிண்டிக்கொண்டிருந்தபோது ஒரு இந்தி சேனலில், பள்ளியில் சிறுவர்களின் பாக்ஸிங் போட்டி நடந்துகொண்டிருந்தது. அடடே இது ஜானி மேராநாம் படத்துவக்கம்போலிருக்கிறதே என்று கூர்ந்து பார்க்க, அடுத்த காட்சியிலேயே அது உறுதியானது. தாய் பூஜை செய்துகொண்டிருக்க, பையன்கள் பள்ளியில் வாங்கிய 'கப்'புக்காக சண்டையிட்டுக்கொள்ள, காட்சி மாறி இரண்டு போலீஸ் அதிகாரிகளும் பேசிக்கொண்டே மாடிப்படியில் இறங்கி வரும் காட்சி. ரிமோட்டை எடுத்து சோபாவின் கீழே வைத்துவிட்டேன். (எதிர்பார்த்தபடியே சிறிது நேரத்தில் என் பையன் வந்து, 'ரிமோட்டைக் கொடும்மா, இன்னைக்கு முக்கியமான கிரிக்கெட் மேட்ச் பார்க்கனும்' என்று கேட்க, 'போய் அப்பா ரூம்ல சின்ன டிவில பாரு' என்று அனுப்பிவிட்டேன்).

படம் ஓட ஓடத்தான், தமிழில் 'ராஜா'வை சி.வி.ஆர். எவ்வளவு சுவாரஸ்யப் படுத்தியிருந்தார் என்பது தெரிந்தது. தேவ் ஆனந்தின் அறிமுகக்காட்சி, ஆரஞ்சுகலர் முடி வைத்த கடத்தல் கையாளுடன் அவர் போனில் பேசும் காட்சி எல்லாம் சப்பென்றிருந்தது. டென்னிஸ் ராக்கெட் டீப்பாயின் மீது கிடக்க ஜஸ்ட் ஒரு சோபாவில் உட்கார்ந்துகொண்டு, டீப்பாயின் மேல் கால்களைநீட்டி வைத்துக்கொண்டு 'மேராநாம் ஜானி' என்று பேசும்போது நம் நினைவுக்கு வருவது, கையில் டென்னிஸ் ராக்கெட்டுட்ன் சுழல்நாற்காலியில் அமர்ந்து 'என் பெயர ராஜா' என்று ஆரம்பித்து, ஒவ்வொரு பதிலுக்கும் ஒவ்வொரு மாதிரி சுழன்று சுழன்று ஸ்டைல் காட்டும் நடிகர்திலகமும், அவ்வாறு செய்ய வைத்த சி.வி.ஆரும்.

அதே போலத்தான் 'ஓ..மேரி ராஜா' பாடல் காட்சியும். மலைப்பிரதேசத்தில் படமாக்கப்பட்டதால் நீங்கள் சொன்னதுபோல தேவ்ஜியும் Hema-வும் ரோப்காரில் போக, போலீஸ் ஆபீஸர் இன்னொரு ரோப்காரில் துரத்தும் காட்சி. 'ராஜா'வில் இப்பாடல் கேரளாவில் எடுக்கப்பட்டதால், கடலோர பாறைப்பகுதிகளில் போலீஸாரால் பின்தொடரப்பட, நடிகர்திலகத்தின் சேட்டைகளால் எரிச்சலுறும் ஜெயலலிதா, அவர் கையைத்தட்டிவிட, 'சுற்றிலும் போலீஸ் பார்த்துக்கொண்டிருக்கிறது' என்று இவர் ஜாடை காட்ட, உடனே அவர் தட்டிவிட்ட கையைக் கன்னத்தில் தேய்த்துக்கொள்ள, இவர் அந்தக்கைக்கு முத்தம் கொடுக்க, அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் 'சாந்திகுமார்' பொறாமையில் உதட்டைக்கடிக்க.... எவ்வளவு ரம்மியமான காட்சி. அத்ற்கேற்றாற்போல காஸ்ட்யூம். மெரூன்கலர் சாரி, மெரூன்கலர் புல்ஸ்லீவ் ஜாக்கெட்டில் கலைச்செல்வி கொள்ளை அழகென்றால், அத்ற்கு ஈடு கொடுத்து, வெள்ளை பேண்ட், கிரீம்கலர் ஷர்ட், ஒருமாதியான மஞ்சளும் பிரௌனும் கலந்த கோட், வெளிர் நீல நிற ஸ்கார்ப் என்று நடிகர்திலகமும் அசத்துவார். கொச்சின் ஏர்போர்ட்டில், 'வைரங்கள் எங்கே' என்று கேட்கும் செல்விடம் 'கோட்டில் இருக்கு' என்று கோட்டைக்கழற்றி அவருக்குப் போர்த்திவிடும் இடத்தில் பேண்ட், 'டக்-இன்' செய்யப்பட்ட ஷட்டில் படு ஸ்மார்ட் எங்க அண்ணன்.

அதுபோலவே, தன்னை ஏமாற்றி விட்டு பணத்துடன் தப்பியோடப்பார்க்கும் ரந்தாவாவைப்பிடிக்க காரில் தேவ்ஜியும், பிரானும் போகும் கட்டமும் ரொம்பவே படுசுமார். அதையே தமிழில் கற்பனை செய்து பாருங்கள்.
'பாபு, நான் கொண்டுவந்த பெட்டியை இன்னைக்கு ஒருத்தர் கையில பார்த்தேன்'
'யெஸ், குமார் எடுத்திட்டுப்போயிருக்கான். உரிய இடத்துல சேர்த்துடுவான்'
'உங்களுக்கு நம்பிக்கை அதிகம்'
'அவன்கிட்டே நாணயம் அதிகம்'
'அந்த நாணயத்துக்கு குறுக்கே ஒரு பொண்ணு வந்தா...?'
'ராஜா, என்ன சொல்றே? குமாருக்கு...'
'காதலிக்க வேண்டிய வயசுதானே..?'
'யெஸ், அவன் அடிக்கடி ஒரு டான்ஸ் பொண்ணைப்பார்க்கப்போவான்'.
'மை டியர் சார், எனக்குத்தெரிஞ்சவரைக்கும் அள்ளிக்கொடுக்கும் முதலாளியைவிட அள்ளி அணைக்கும் காதலியின் பேச்சுக்குத்தான் மதிப்பு அதிகம்'
'ராஜா, உனக்கு கார் ஓட்டத்தெரியுமா?'
'எக்ஸ்பர்ட்'
பாலாஜி கார் சாவியைத்தூக்கிப்போட (அதுக்கும் ஒரு சவுண்ட் கொடுப்பார் MSV), சாவி நடிகர்திலகம் கையில் கிடைத்த அடுத்த வினாடி, நீலநிறக்கார் போய்க்கொண்டிருக்கும் (அதுதான் சி.வி.ஆர்). மஸ்தானின் அற்புத ஒளிப்பதிவில், கார் குறுகலான சந்தில் போகும் காட்சி டாப் ஆங்கிளில் காட்டப்பட, மெல்லிசை மன்னர் சும்மாயிருப்பாரா?. தனது அதிரடி சவுண்டோடு Vocal Humming ஐயும் கலந்து அசத்துவார்.............

(சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளத்தில் துவங்கி, கிருஷ்ணன் தலையில் கிரீடம் சூட்டப்படும் கடைசிக்காட்சி வரை, அணு அணுவாக இப்படத்தை பிரிச்சு மேயணும்போல இருக்கு. என்ன செய்வது? பத்து பக்கம் ஆகுமே)

saradhaa_sn
19th February 2011, 12:24 PM
டியர் பார்த்தசாரதி,

'ராமன் எத்தனை ராமனடி' கிளைமாக்ஸ் காட்சியின் அலசல் வெகு அருமை. சீன் பை சீன் மிக அற்புதமாக அலசியிருக்கிறீர்கள். ஒரே காட்சி ஒவ்வொருவர் கோணத்திலும் எப்படி பரிணமிக்கிறது என்பதற்கு உங்கள் ஆய்வு சிறந்த உதாரணம். ஒவ்வொருவரும் காட்சிகளை பார்க்கும்போது, ஒவ்வொரு உத்தி மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கும்... அதுதான் நடிகர்திலகதின் தனிப்பெருமை.

உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்... இன்னும்.... இன்னும்...

parthasarathy
19th February 2011, 01:33 PM
டியர் முரளி,

உள்ள உணர்வுகளின் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி. எப்போது யார் 'ராஜா'வைப்பற்றிப் பேசினாலும் அதில் உடனே நானும் கலந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை எழும். அந்த அளவுக்கு என் மனதுக்கு மிக நெருங்கிய படங்களில் ஒன்று. (பார்த்தசாரதி சார், நான் சொன்னேனே 'கேட்டகரி நம்பர்: 3' படங்கள் எனக்கு நெருக்கமானவை என்று. அவற்றில் ராஜா, தங்கச்சுரங்கம், என்னைப்போல் ஒருவன், சுமதி என் சுந்தரி... இப்படி நிறைய).

முரளி, சுமார் ஆறு மாதங்களுக்கு முன் உங்களைப்போலவே ரிமோட்டால் சேனல்களை கிண்டிக்கொண்டிருந்தபோது ஒரு இந்தி சேனலில், பள்ளியில் சிறுவர்களின் பாக்ஸிங் போட்டி நடந்துகொண்டிருந்தது. அடடே இது ஜானி மேராநாம் படத்துவக்கம்போலிருக்கிறதே என்று கூர்ந்து பார்க்க, அடுத்த காட்சியிலேயே அது உறுதியானது. தாய் பூஜை செய்துகொண்டிருக்க, பையன்கள் பள்ளியில் வாங்கிய 'கப்'புக்காக சண்டையிட்டுக்கொள்ள, காட்சி மாறி இரண்டு போலீஸ் அதிகாரிகளும் பேசிக்கொண்டே மாடிப்படியில் இறங்கி வரும் காட்சி. ரிமோட்டை எடுத்து சோபாவின் கீழே வைத்துவிட்டேன். (எதிர்பார்த்தபடியே சிறிது நேரத்தில் என் பையன் வந்து, 'ரிமோட்டைக் கொடும்மா, இன்னைக்கு முக்கியமான கிரிக்கெட் மேட்ச் பார்க்கனும்' என்று கேட்க, 'போய் அப்பா ரூம்ல சின்ன டிவில பாரு' என்று அனுப்பிவிட்டேன்).

படம் ஓட ஓடத்தான், தமிழில் 'ராஜா'வை சி.வி.ஆர். எவ்வளவு சுவாரஸ்யப் படுத்தியிருந்தார் என்பது தெரிந்தது. தேவ் ஆனந்தின் அறிமுகக்காட்சி, ஆரஞ்சுகலர் முடி வைத்த கடத்தல் கையாளுடன் அவர் போனில் பேசும் காட்சி எல்லாம் சப்பென்றிருந்தது. டென்னிஸ் ராக்கெட் டீப்பாயின் மீது கிடக்க ஜஸ்ட் ஒரு சோபாவில் உட்கார்ந்துகொண்டு, டீப்பாயின் மேல் கால்களைநீட்டி வைத்துக்கொண்டு 'மேராநாம் ஜானி' என்று பேசும்போது நம் நினைவுக்கு வருவது, கையில் டென்னிஸ் ராக்கெட்டுட்ன் சுழல்நாற்காலியில் அமர்ந்து 'என் பெயர ராஜா' என்று ஆரம்பித்து, ஒவ்வொரு பதிலுக்கும் ஒவ்வொரு மாதிரி சுழன்று சுழன்று ஸ்டைல் காட்டும் நடிகர்திலகமும், அவ்வாறு செய்ய வைத்த சி.வி.ஆரும்.

அதே போலத்தான் 'ஓ..மேரி ராஜா' பாடல் காட்சியும். மலைப்பிரதேசத்தில் படமாக்கப்பட்டதால் நீங்கள் சொன்னதுபோல தேவ்ஜியும் Hema-வும் ரோப்காரில் போக, போலீஸ் ஆபீஸர் இன்னொரு ரோப்காரில் துரத்தும் காட்சி. 'ராஜா'வில் இப்பாடல் கேரளாவில் எடுக்கப்பட்டதால், கடலோர பாறைப்பகுதிகளில் போலீஸாரால் பின்தொடரப்பட, நடிகர்திலகத்தின் சேட்டைகளால் எரிச்சலுறும் ஜெயலலிதா, அவர் கையைத்தட்டிவிட, 'சுற்றிலும் போலீஸ் பார்த்துக்கொண்டிருக்கிறது' என்று இவர் ஜாடை காட்ட, உடனே அவர் தட்டிவிட்ட கையைக் கன்னத்தில் தேய்த்துக்கொள்ள, இவர் அந்தக்கைக்கு முத்தம் கொடுக்க, அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் 'சாந்திகுமார்' பொறாமையில் உதட்டைக்கடிக்க.... எவ்வளவு ரம்மியமான காட்சி. அத்ற்கேற்றாற்போல காஸ்ட்யூம். மெரூன்கலர் சாரி, மெரூன்கலர் புல்ஸ்லீவ் ஜாக்கெட்டில் கலைச்செல்வி கொள்ளை அழகென்றால், அத்ற்கு ஈடு கொடுத்து, வெள்ளை பேண்ட், கிரீம்கலர் ஷர்ட், ஒருமாதியான மஞ்சளும் பிரௌனும் கலந்த கோட், வெளிர் நீல நிற ஸ்கார்ப் என்று நடிகர்திலகமும் அசத்துவார். கொச்சின் ஏர்போர்ட்டில், 'வைரங்கள் எங்கே' என்று கேட்கும் செல்விடம் 'கோட்டில் இருக்கு' என்று கோட்டைக்கழற்றி அவருக்குப் போர்த்திவிடும் இடத்தில் பேண்ட், 'டக்-இன்' செய்யப்பட்ட ஷட்டில் படு ஸ்மார்ட் எங்க அண்ணன்.

அதுபோலவே, தன்னை ஏமாற்றி விட்டு பணத்துடன் தப்பியோடப்பார்க்கும் ரந்தாவாவைப்பிடிக்க காரில் தேவ்ஜியும், பிரானும் போகும் கட்டமும் ரொம்பவே படுசுமார். அதையே தமிழில் கற்பனை செய்து பாருங்கள்.
'பாபு, நான் கொண்டுவந்த பெட்டியை இன்னைக்கு ஒருத்தர் கையில பார்த்தேன்'
'யெஸ், குமார் எடுத்திட்டுப்போயிருக்கான். உரிய இடத்துல சேர்த்துடுவான்'
'உங்களுக்கு நம்பிக்கை அதிகம்'
'அவன்கிட்டே நாணயம் அதிகம்'
'அந்த நாணயத்துக்கு குறுக்கே ஒரு பொண்ணு வந்தா...?'
'ராஜா, என்ன சொல்றே? குமாருக்கு...'
'காதலிக்க வேண்டிய வயசுதானே..?'
'யெஸ், அவன் அடிக்கடி ஒரு டான்ஸ் பொண்ணைப்பார்க்கப்போவான்'.
'மை டியர் சார், எனக்குத்தெரிஞ்சவரைக்கும் அள்ளிக்கொடுக்கும் முதலாளியைவிட அள்ளி அணைக்கும் காதலியின் பேச்சுக்குத்தான் மதிப்பு அதிகம்'
'ராஜா, உனக்கு கார் ஓட்டத்தெரியுமா?'
'எக்ஸ்பர்ட்'
பாலாஜி கார் சாவியைத்தூக்கிப்போட (அதுக்கும் ஒரு சவுண்ட் கொடுப்பார் MSV), சாவி நடிகர்திலகம் கையில் கிடைத்த அடுத்த வினாடி, நீலநிறக்கார் போய்க்கொண்டிருக்கும் (அதுதான் சி.வி.ஆர்). மஸ்தானின் அற்புத ஒளிப்பதிவில், கார் குறுகலான சந்தில் போகும் காட்சி டாப் ஆங்கிளில் காட்டப்பட, மெல்லிசை மன்னர் சும்மாயிருப்பாரா?. தனது அதிரடி சவுண்டோடு Vocal Humming ஐயும் கலந்து அசத்துவார்.............

(சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளத்தில் துவங்கி, கிருஷ்ணன் தலையில் கிரீடம் சூட்டப்படும் கடைசிக்காட்சி வரை, அணு அணுவாக இப்படத்தை பிரிச்சு மேயணும்போல இருக்கு. என்ன செய்வது? பத்து பக்கம் ஆகுமே)

திருமதி சாரதா அவர்களுக்கு,

நன்றி. நாம் மட்டுமல்ல கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நடிகர் திலகம் ரசிகர்கள் மூன்றாவது வகைப் படங்களின் மூலம்தான் அவரது ரசிகர்களாயினர் என்று கூறினால் அது மிகையாகாது. அறுபதுகளுக்குப் பின்னர் பிறந்தவர்கள் அவர்களுக்கு புத்தி தெரியும்போது பார்க்க ஆரம்பித்த படங்கள் தங்கை-யில் இருந்துதான் தொடங்கும். முன்னர் ராகவேந்திரன் சார் அவர்கள் குறிப்பிட்டது போல் இந்தப் படங்கள் தான் நம் அனைவரையும் அவரது முந்தைய படங்களுக்கு ஈர்த்தது.
ராஜா படத்தைப் பொறுத்தவரை, ஒரிஜினல்-ஐ விட நூறு பங்கு அமர்க்களமாகவும் சுவாரஸ்யமாகவும் CVR - NT - பாலாஜி கூட்டணி செய்திருப்பார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் நடிகர் திலகம் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

நீ வரவேண்டும் பாடலில் முதலில் JJ ஒ ராஜா ... என்றவுடன் படிகளின் மேல் நின்று கொண்டு நடிகர் திலகம் அந்த கோட் டை பறக்க "ராஜா" என்று அவருக்கே உரித்தான ஸ்டைல்- இல் சொல்லுவார். உன்னிப்பாக ஒரிஜினல் ஜானி மேரா நாம் - ஐயும் ராஜா-வையும் கவனித்தால், ராஜா-வில் ஒவ்வொரு இடத்திலும் - ஒரு இடம் விடாமல் நடிகர் திலகம் வேறு விதமான ஸ்டைல்-இல் உணர்வு பூர்வமாகவும் (ஆம். அந்த கடைசி காட்சியிலும் தான் - ஒரு மாதிரி சிரிப்பாரே - பண்டரிபாய் -ஐ மனோகர் சவுக்கால் அடிக்கும் போது. எத்தனை சில்லறை எறிந்திருப்போம் அந்தக் காட்சிக்கு மட்டும்!) கலக்கி இருப்பார். இதற்கு முக்கியமான காரணம் அநேகமாக நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். ரீமேக் படங்கள் மற்றவர்கள் நடிக்கும்போது அநேகமாக ஒரிஜினல் படத்தைப் பார்க்க தயங்குவார்கள் காரணம் ஒரிஜினல்- in சாயல் வந்துவிடக்கூடாதே என்று. ஆஅனால் நடிகர் திலகமோ ஒரிஜினல்-ஐ குறைந்தது பத்து முறையாவது பார்ப்பாராம். அப்படிதான் மேஜர்-in ஞான ஒளி நாடகத்தை பத்து முறை வந்து பார்த்தாராம். மேஜர் கேட்டதற்கு நடிகர் திலகம் சொன்ன பதில் "ஒரிஜினல்-in சாயல் கொஞ்சம் கூட வராமல் பார்க்கத்தான் குறைந்தது பத்து முறை பார்க்கிறேன்" என்று.

நடிகர் திலகம் & ரீமேக் படங்கள் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் பதிய முயற்சிக்கிறேன்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
20th February 2011, 11:53 AM
திரு. பார்த்தசாரதி,
பல புதிய கோணங்களில் நம் நடிகர் திலகத்தின் பெருமையை மேலும் மேலும் பரவ உங்களுடைய பங்களிப்பும் பதிவுகளுமே சாட்சி. தொடரட்டும் உங்களுடைய சேவை.

டியர் Abkhlabhi (தங்களின் பெயர்?),

நன்றி. நடிகர் திலகத்தை இன்னும் பல நூற்றாண்டுகள் மேலும் பல ஆயிரம் பேர் வித்தியாசமான கோணங்களில் அலசிக்கொண்டே போகலாம். அவரது வீச்சு அந்த அளவிற்கு காலம் கடந்து நிற்கிறது. இல்லையென்றால், எனது காலேஜ் படிக்கும் மகள்களும் அவரது மோட்டார் சுந்தரம் பிள்ளை-ஐயும், வியட்நாம் வீடையும், தில்லானா மோகனாம்பாளையும், ஏன், உத்தம புத்திரனையும் ரசிப்பார்களா. இந்த நான்கு படங்களின் வித்தியாசம் மட்டும் போதும், நடிகர் திலகம் யாரென்று சொல்ல, (நாங்கள் சொல்லுவோம் நடிப்புலக மன்னர் மன்னன் என்று - செல்லமாக - கணேசா என்றும் கூட)

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
20th February 2011, 12:06 PM
டியர் முரளி சார்,

நன்றி. ஜானி மேரா நாம் படத்தை நானும் சில முறை பார்த்திருக்கிறேன். அண்மையில் கூட ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன். வட இந்தியாவில் அவரை ஸ்டைல் மன்னன் என்று கூறுவர் - மற்றும் எவர்க்ரீன் ஹீரோ என்றும் debonair என்றும் கூட. ஆனால், நம் நடிகர் திலகம் அவரை விட வித்தியாசமாக ஆனால் அழகாக மற்றும் ஆழமாக ராஜா படத்தில் நடித்திருப்பார். எங்களது குரூப் ராஜா படத்தை முதல் நாள் ஓபனிங் ஷோ தேவி பாரடைஸ் திரை அரங்கத்தில் பார்த்தோம். இரண்டு விதங்களில் நாங்கள் (நாங்கள் மட்டுமா) அரங்கத்தில் அமர்க்களம் செய்து கொண்டிருந்தோம். ஒன்றும் நடிகர் திலகம் மறுபடியும் james bond type படத்தில் நடிக்கிறார் என்று. இன்னொன்று, அவர் சண்டை காட்சிகளில் காட்டிய ஸ்டைல் கலந்த வேகம். முதலில் தாரா சிங்க் (தானே?) ஆனால், எங்களின் அலப்பறை விண்ணை முட்டியது அவர் கே. கண்ணனுடன் மூடும் போது (எல்லோருக்கம் தெரியும் ஏன் என்று). மூன்றாவது, நடிகர் திலகத்தின் படம் மறுபடியும் தேவி பாரடைஸ்-இல் ரிலீஸ் ஆகிறது என்று. தேவி பாரடைஸ் அரங்கில் முதலில் ரிலீஸ் ஆன படம் சொர்க்கம். நடுவில், ரிக்ஷாக்காரன் மறுபடியும். இப்போது ராஜா. என்ன ஆகும் எங்கள் கலாட்டா.

அன்புடன்,

பார்த்தசாரதி

saradhaa_sn
20th February 2011, 07:04 PM
சாரதி,

பயில்வான் தாரா சிங் அல்ல, அவரது தம்பி 'ரந்தாவா' (என் முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன்).

கதையை மட்டுமல்ல, ரந்தாவா மற்றும் பத்மா கன்னா இருவரையும் கூட ஜானி மேரா நாம் படத்திலிருந்து இறக்குமதி செய்திருந்தார் பாலாஜி.

இன்னொரு விஷயம், தேவி பாரடஸில் நாலாவது தமிழ்ப்படம் ராஜா. ஏற்கெனவே சொர்க்கம், ரிக்ஷாக்காரன் மட்டுமல்லாது 71 தீபாவளிக்கு 'நீரும் நெருப்பும்' படமும் அங்குதான் ரிலீஸானது.

pammalar
20th February 2011, 09:00 PM
டியர் பார்த்தசாரதி சார்,

தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் கற்கண்டாய் இனிக்கின்றன. நடிப்புலக களஞ்சியம் குறித்த ஆய்வுக்களஞ்சியங்கள் இவை என்றால் அது மிகையன்று. தாங்கள் தங்களது நினைவுகளை அசைபோடும் விதம் அற்புதம். மேலும் மேலும் தங்களின் நினைவு நதிகள், இத்திரி என்னும் கடலில் சங்கமிக்கட்டும். ஒரு படத்தின் ஒரு காட்சியில் நடிப்புச் சக்கரவர்த்தி எப்படியெல்லாம் நடித்திருப்பாரோ, அதனைக் கனக்கச்சிதமாக அப்படியே ஆராய்ந்து அலசி அள்ளி அளிக்கும் விதம் அதியற்புதம். 'ஆய்வரசர்' எனும் பட்டத்தையே தங்களுக்கு வழங்கலாம்.

"ஞான ஒளி"க் காட்சியை தொலைக்காட்சியில் கண்டு கண்கள் குளங்கள் ஆன பதிவு என்ன,

கறை படியாத கரங்களைக் கொண்ட, கலையுலகினில் கரை கண்ட நவரசத்திலகத்தின் "நவராத்திரி"யை அமைந்தகரை 'முரளிகிருஷ்ணா'வில், அந்த முரளிகிருஷ்ணணின் இன்னொரு நாமகரணத்தையே திருப்பெயாராகக் கொண்டுள்ள 'பார்த்தசாரதி'யாகிய தாங்கள், சுயமரியாதைச் சிங்கமான சிங்கத்தமிழனின் அன்புள்ளத்தோடு பார்த்து ரசித்த அனுபவப்பதிவு என்ன,

'கவரிமான்', 'வணங்காமுடி' காட்சிகள் குறித்த 'நறுக் சுருக்' அலசல்கள் என்ன,

'தியாகி', 'ஜல்லிக்கட்டு' பற்றிய ஷூட்டிங் ஸ்பாட் செய்திகள் என்ன,

நடிப்புலக மகானின் திரைக்காவியங்களை மூன்று வகைகளில் பிரித்து வகுக்க - ஒவ்வொரு வகையிலும் விஷயங்களைத் தொகுக்க - கலைப்பிளளையாரின் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட பதிவு என்ன,

"ராமன் எத்தனை ராமனடி" கிளைமாக்ஸை Sony Maxல் பார்க்கும் கிரிக்கெட் மாட்ச்சைப் போல் லைவ் ஆக கொடுத்த லாவகம் என்ன,

"ராஜா" பதிவுகள் என்ன,

எதைச் சொல்வது எதை சொல்லாமலிருப்பது,

தீபாவளியன்று கொடுக்கப்படும் விதவிதமான ஸ்வீட்டுகள் போலல்லலவா இனிக்கின்றன இவையாவும்.

தங்களின் பதிவு/பதிவுகள் வெளியாகும் ஒவ்வொரு நாளும் இத்திரிக்கு தீபாவளித் திருநாள் தான் !

தங்களின் திருத்தொண்டு தொய்வின்றித் தொடரட்டும் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st February 2011, 12:09 AM
டியர் முரளி சார் & சகோதரி சாரதா,

26.1.1972லிருந்து தங்களது 'பஞ்ச்' பதிவுகள் வெளியான இன்றைய காலகட்டம் வரை "ராஜா ராஜா தான்". என்றென்றும் RAJA RULES SUPREME என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை.

For a short & smart comparison :

'O Mere Raja' Song from Johny Mera Naam(1970)

(Dev Anand-Hema Malini / Kishore-Asha / Kalyanji-Anandji / Rajinder Krishnan)

http://www.youtube.com/watch?v=o8mXtLk-LOY

'O Raja' Number from Raja(1972)

(NT-JJ / TMS-PS / MSV / Kannadhasan)

http://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8

IMHO, NT is incomparable, HM & JJ - equally good, TMS-PS edge over Kishore-Asha, MSV Miles ahead.

"ராஜா"வை இன்றளவிலும் ஹிந்தி ரீமேக் அல்ல, தமிழில் வெளிவந்த ஒரு ஒரிஜினல் படம் என்கின்ற ரீதியில் பார்ப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?! அதற்கு ஒரே காரணம் நமது நடிகர் திலகம் தான் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st February 2011, 02:57 AM
It's RAJA all the way

கும்பகோணத்துக்கு அருகாமையில் தாராசுரத்தில் உள்ள 'சூரியகாந்தி' டூரிங்கில், 18.2.2011 வெள்ளி முதல் இன்று 20.2.2011 ஞாயிறு வரை, தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா" திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடியிருக்கிறது. இன்றைய[20.2.2011] மாலைக் காட்சியில் மட்டும் சற்றேறக்குறைய 200 பேர் இக்காவியத்தைக் கண்டு களித்திருக்கின்றனர். ஒரு டிக்கெட்டின் விலை பத்து ரூபாய். மாலைக் காட்சி வசூல் மட்டும் சற்றேறக்குறைய ரூ.2,000/-. இன்றைய காலகட்டத்தில், டூரிங் டாக்கீஸுகளை பொறுத்தமட்டில், இது சிகர சாதனை.

தித்திக்கும் இத்தகவல்களை வழங்கிய குடந்தை அன்புள்ளம் திரு. ராமலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st February 2011, 03:41 AM
'மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ'

'தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே'

'யாவும் நீயப்பா உன் சரணம் ஐயப்பா'

'பூங்காற்று திரும்புமா'

'சந்தன நிலவொளி'

'சின்னஞ்சிறு அன்னம் ஒன்று'

இன்னும் இது போன்ற சிறந்த பாடல்களையெல்லாம் நமது நடிகர் திலகத்துக்கு பின்னணியில் பாடிய கள்ளத்தொண்டை கலக்காத கம்பீரக் குரலோன் அமரர் மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு நமது ஆத்மார்த்தமான அஞ்சலி. நடிகர் திலகம் முதற்கொண்ட முன்னணி ஹீரோக்களுக்கும், ஏனைய நடிகர்களுக்கும் அவர் பாடிய பல பாடல்கள் சாகாவரம் பெற்றவை. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கலையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
21st February 2011, 04:11 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 175

கே: நடிகர் திலகத்தின் "அவன் தான் மனிதன்" வெள்ளிவிழாக் கொண்டாடுமா? (பத்மா ராதாகிருஷ்ணன், விம்கோ நகர்)

ப: கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறீர்கள், அப்படித்தானே?! நானும் அதையே விரும்புகிறேன்.

(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1975)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st February 2011, 04:30 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 176

கே: 'சிக்கல் தம்பி'யின் வாசிப்பு நீண்ட நாட்களுக்கு ஒலிக்கும் போலிருக்கிறதே? (டி.எஸ்.சுப்பிரமணியன், மாயூரம்)

ப: நிச்சயமாக. சிக்கல் தம்பியும் அவர் வாசிப்பும் லக்ஷக்கணக்கானவர்களை திரும்பத் திரும்ப இழுக்கக் கூடியவையாயிற்றே !

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1968)

அன்புடன்,
பம்மலார்.

parthasarathy
21st February 2011, 10:29 AM
டியர் பார்த்தசாரதி சார்,

தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் கற்கண்டாய் இனிக்கின்றன. நடிப்புலக களஞ்சியம் குறித்த ஆய்வுக்களஞ்சியங்கள் இவை என்றால் அது மிகையன்று. தாங்கள் தங்களது நினைவுகளை அசைபோடும் விதம் அற்புதம். மேலும் மேலும் தங்களின் நினைவு நதிகள், இத்திரி என்னும் கடலில் சங்கமிக்கட்டும். ஒரு படத்தின் ஒரு காட்சியில் நடிப்புச் சக்கரவர்த்தி எப்படியெல்லாம் நடித்திருப்பாரோ, அதனைக் கனக்கச்சிதமாக அப்படியே ஆராய்ந்து அலசி அள்ளி அளிக்கும் விதம் அதியற்புதம். 'ஆய்வரசர்' எனும் பட்டத்தையே தங்களுக்கு வழங்கலாம்.

"ஞான ஒளி"க் காட்சியை தொலைக்காட்சியில் கண்டு கண்கள் குளங்கள் ஆன பதிவு என்ன,

கறை படியாத கரங்களைக் கொண்ட, கலையுலகினில் கரை கண்ட நவரசத்திலகத்தின் "நவராத்திரி"யை அமைந்தகரை 'முரளிகிருஷ்ணா'வில், அந்த முரளிகிருஷ்ணணின் இன்னொரு நாமகரணத்தையே திருப்பெயாராகக் கொண்டுள்ள 'பார்த்தசாரதி'யாகிய தாங்கள், சுயமரியாதைச் சிங்கமான சிங்கத்தமிழனின் அன்புள்ளத்தோடு பார்த்து ரசித்த அனுபவப்பதிவு என்ன,

'கவரிமான்', 'வணங்காமுடி' காட்சிகள் குறித்த 'நறுக் சுருக்' அலசல்கள் என்ன,

'தியாகி', 'ஜல்லிக்கட்டு' பற்றிய ஷூட்டிங் ஸ்பாட் செய்திகள் என்ன,

நடிப்புலக மகானின் திரைக்காவியங்களை மூன்று வகைகளில் பிரித்து வகுக்க - ஒவ்வொரு வகையிலும் விஷயங்களைத் தொகுக்க - கலைப்பிளளையாரின் படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட பதிவு என்ன,

"ராமன் எத்தனை ராமனடி" கிளைமாக்ஸை Sony Maxல் பார்க்கும் கிரிக்கெட் மாட்ச்சைப் போல் லைவ் ஆக கொடுத்த லாவகம் என்ன,

"ராஜா" பதிவுகள் என்ன,

எதைச் சொல்வது எதை சொல்லாமலிருப்பது,

தீபாவளியன்று கொடுக்கப்படும் விதவிதமான ஸ்வீட்டுகள் போலல்லலவா இனிக்கின்றன இவையாவும்.

தங்களின் பதிவு/பதிவுகள் வெளியாகும் ஒவ்வொரு நாளும் இத்திரிக்கு தீபாவளித் திருநாள் தான் !

தங்களின் திருத்தொண்டு தொய்வின்றித் தொடரட்டும் !

அன்புடன்,
பம்மலார்.

டியர் பம்மலார் சார்,

தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. உங்களின், மற்றும், திரு முரளி, திரு ராகவேந்தர், திருமதி சாரதா போன்றோரின் பங்களிப்புக்கு முன் என்னுடையது மிகச் சிறியதுதான். உங்கள் அனைவரது ஆய்வும் அலசலும் பெரிய அளவில் நடந்தேறியாகி விட்ட பின்னமும், நானும் முயற்சி செய்கிறேன் என்றால், அதற்கு மிக முக்கிய காரணம் நமது நடிகர் திலகம் தான். அவரது, கற்பனைக்கடங்காத, அவரது கற்பனை வளமும் திறமையும் தான் அவரது பங்களிப்பை என்னைப் போன்ற இன்னும் எத்தனையோ லட்சக்கணக்கான ரசிகர்களை இன்னமும் பேச வைத்துக் கொண்டிருக்கிறது.

நன்றி கலந்த அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
21st February 2011, 10:44 AM
சாரதி,

பயில்வான் தாரா சிங் அல்ல, அவரது தம்பி 'ரந்தாவா' (என் முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன்).

கதையை மட்டுமல்ல, ரந்தாவா மற்றும் பத்மா கன்னா இருவரையும் கூட ஜானி மேரா நாம் படத்திலிருந்து இறக்குமதி செய்திருந்தார் பாலாஜி.

இன்னொரு விஷயம், தேவி பாரடஸில் நாலாவது தமிழ்ப்படம் ராஜா. ஏற்கெனவே சொர்க்கம், ரிக்ஷாக்காரன் மட்டுமல்லாது 71 தீபாவளிக்கு 'நீரும் நெருப்பும்' படமும் அங்குதான் ரிலீஸானது.

டியர் சாரதா மேடம் அவர்களுக்கு,

பிழை திருத்தியதற்கு நன்றி. பத்மா கன்னா இரண்டு மொழிகளிலும் நடித்திருந்தார் என்பது தெரியும். ஆனால், குழப்பம் அந்த பயில்வான் கதாபாத்திரத்தில் தான். மேலும், நீரும் நெருப்பும் பற்றிய தகவலுக்கும் நன்றி.

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
21st February 2011, 04:28 PM
டெல்லி டூ மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் மெல்லிசை மாமணி வி.குமார் அவர்களால் அறிமுகப் படுத்தப் பட்டு கிட்டத் தட்ட 40 ஆண்டுகள் தன் குரலால் தமிழ் மக்களை வசீகரித்த வாசுதேவன் அவர்களின் மறப்பு பின்னணிப் பாடகர் சரித்திரத்தில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. நடிகர் திலகத்திற்கு அவர் பாடியுள்ள பாடல்கள் என்றும் இனிமை, குறிப்பாக பூங்காற்று திரும்புமா பாடல்.
அவர் மறைவுக்கு நம் அஞ்சலி.
அவருடைய முதல் பாடல்.
பாலு விக்கிற பத்துமா (- http://www.esnips.com/doc/19ec3ca0-2d70-4d83-836a-fc656c536833/Paluvikkura-MVKSwarna-DellitoMadras-VKumar)
இசை - வி.குமார்
குரல்கள் - வாசுதேவ், ஸ்வர்ணா
பாடல் - மாயவநாதன்

மலேசியா வாசுதேவனின் முதல் படம் மாயவநாதனின் கடைசிப் படமாய் அமைந்தது.

pammalar
21st February 2011, 05:14 PM
பழனியில் உள்ள 'சந்தானகிருஷ்ணா' திரையரங்கில், கடந்த 28.1.2011 வெள்ளி முதல் 31.1.2011 திங்கள் வரை நான்கு நாட்களுக்கு, தினசரி 4 காட்சிகளாக, தங்கத்திருமகனின் தன்னிரகற்ற திரைக்காவியமான "திரிசூலம்" திரையிடப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இச்செய்தியை வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

parthasarathy
21st February 2011, 06:13 PM
நடிகர் திலகமும் ரீமேக் படங்களும்



இதுவரையில் பலரும் நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களைப்பற்றி அலசி வந்துள்ளதால், என்னால் உங்கள் அளவிற்குப் பெரிதாக அலச முடியுமா என்று தெரியவில்லை.

இருந்தாலும், எனது எண்ணங்களை இங்கு பதிகிறேன்.



பொதுவாக, 1967-இல் இருந்துதான், நடிகர் திலகம் சில ரீமேக் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. 1952-இல் துவங்கி, 1967-வரை, அநேகமாக, எல்லா கதாசிரியர்களும் / இயக்குனர்களும், அவரை கிட்டத்தட்ட எழுபது சதவிகிதம் முழுவதுமாக அவருடைய நடிப்பாற்றலுக்கு தீனி போடும் வேடங்களைக் கொடுத்து, இனி மேல் அவர் நடிப்பதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை மெதுவாக வந்திருக்கலாம். மெதுவாக, சிறந்த கதாபாத்திரங்களில் அவர் நடித்தது போக அவருக்கென்று கதை எழுத ஆரம்பித்து, கற்பனைப் பஞ்சம் மெதுவாக தலை காட்டவும் ஆரம்பிதிருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னொன்று, எப்போதும் அவரது ரசிகர்கள் ஏங்குவது, அவர் வயுதுக்கேற்றார்ப் போல் (அப்போதைய வயது! 38 தானே!) அல்லாமல், எப்போதும் முதிர்ந்த அல்லது, கனமான கதாபாத்திரங்களையே ஏற்று நடிக்கிறாரே என்று. அதற்கேற்றார்ப் போல், 1966-இல் typhoid காய்ச்சல் வந்து அவர் ரொம்ப மேளிந்துவிடவும், மறுபடியும் (உத்தமபுத்திரனுக்குப் பிறகு), அவர் இளமையாக, முன்னைவிடவும், வசீகரமாக மறுபடியும் தோற்றமளிக்க ஆரம்பித்து விட்டார். உன்னிப்பாகப் பார்த்தோமேயானால், செல்வம் படத்தில் இருந்துதான் அவரது மேலும் இளமையான மற்றும் பொலிவான தோற்றம் ஆரம்பித்திருக்கும்.



I. நடிகர் திலகம் நடித்த ரீமேக் படங்கள்



நான் இங்கு எல்லா படங்களையும் தொடப் போவதில்லை. ஒரு பத்து படங்கள் மட்டும். எல்லோரும் பத்து பத்து என்கிறோமே. இதுவே பத்து என்றால், இது போல், இன்னும் எத்தனை பத்து? சொல்லப் போனால், அவரது அதனை படங்களையும் நாம் இனம் பிரிதி ஆய்வு செய்திட முடியும்.



தங்கை:- இது தேவ் ஆனந்த் நடித்து 1951-இல் வந்து வெற்றி பெற்ற Baazi-என்ற படத்தின் தழுவல். எல்லோரும் அறிந்தார்ப் போல், நடிகர் திலகம் இன்னொரு புதிய பாட்டை / பாதையில் (ஒரிஜினல் பாதையை அவர் விடவே இல்லை அது வேறு விஷயம்) பயணம் செல்ல வித்திட்ட படம். Dev Aanand-ஐ விடவும், style-ஆக, ஆனால், ஒரு இடத்தில கூட, அவரைப் போல் அல்லாமல், முற்றிலும் வேறுவிதமாக நடித்தார். அதிலும், குறிப்பாக, அந்த முதல் சண்டை (ஒரு மாதிரி இரண்டு கைகளையும் தட்டுவது போல் சேர்த்து பின் ஸ்டைல்-ஆக தாக்க ஆரம்பிக்கும் அந்த தெனாவட்டான ஸ்டைல்), கேட்டவரெல்லாம் பாடலாம் பாடலில் காட்டும் அந்த முக பாவங்கள் மற்றும் ஸ்டைல் அதை விடவும் இனியது இனியது பாடல் (ஒவ்வொரு முறை இந்த பாடலை திரை அரங்கத்தில் பார்க்கும் பொழுதும் முதல் சரணத்தில் வரும் ஒரு வரி "ரசிகன் என்னும் நினைவோடு...." உடனே, நாங்கள் எல்லோரும் கோரசாக "நாங்க என்னிக்கும் சிவாஜி ரசிகர்கள்டா! என்று அலறுவோம்). ஒரு டிபிகல் மசாலா மற்றும் gangster படத்தை நடிகர் திலகம் முற்றிலும் வேறு விதமாக ஆனால், பொழுதுபோக்கு அம்சம் கொஞ்சமும் குறையாத வண்ணம் அணுகிய விதம், அன்று முளைக்க ஆரம்பித்த இளம் action நடிகர்களான ஜெய் ஷங்கர் மற்றும் ரவிச்சந்திரன் போன்றோரையே திகைக்க வைத்தது எனலாம்.



என் தம்பி:- இது, A. நாகேஸ்வர ராவும் (ANR), ஜக்கையா-வும் நடித்து VB ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் 1967-இல் வெளி வந்து வெற்றி பெற்ற “ஆஸ்தி பருவுலு” என்ற தெலுங்கு படம். (ஒன்று தெரியுமா, இந்த ஜக்கைய்யா தான், நடிகர் திலகம் நடித்து தெலுங்கில் மொழி மாற்றம் seyyap பட்ட பெரும்பான்மையான படங்களுக்கு, டப்பிங் குரல் தெலுங்கில் கொடுத்தவர் – ஏனென்றால், அவரது குரலும் கெட்டியாக, நம் நடிகர் திலகம் அளவுக்கு இல்லை என்றாலும், ஓரளவிற்கு, சிம்ம கர்ஜனை போலிருக்கும். அவர் All India Radio-விலும் அறிவிப்பாளராக வேறு பணியாற்றி வந்தவர்). இந்தப் படத்தின் original-ஐயும் நான் பார்த்தேன். ANR-உம் முதல் பாதியில், அந்த அமைதியான பாத்திரத்தில் நன்றாகத் தான் செய்திருந்தார். இண்டர்வலுக்கு அப்புறம்தான், அவரை, பல லட்சம் படிகள் பெட்டராக நடிகர் திலகம் புகுந்து விளையாடியிருப்பார். அதிலும், “தட்டட்டும் … கை தழுவட்டும்” பாடலில் ஆரம்பித்து, கத்தி சண்டை முடியும் வரை (அதிலும், சண்டை தொடங்குவதற்கு முன் அந்தக் கதியை ஸ்டைல்-ஆக வளைத்து நிற்கும் விதம் ... ஆஹா!”), அரங்கம் திருவிழாக் கோலத்தில் இருக்கும். நூல் முனை கிடைத்தால் நூல் கண்டே பண்ணி விடுபவர் ஆயிற்றே!



திருடன் – ஒரிஜினல் படத்தை நான் பார்க்கவில்லை. அதனால் பெரிதாக எழுதவில்லை. இருந்தாலும், இதிலும், எப்படியும், நூறு சதவிகிதம் வேறு மாதிரி தான் செய்திருப்பார். இந்தப் படத்தில், எங்கள் குழுவிற்கு மிகவும் பிடித்தது, ஓபனிங் ஷாட் கருப்பு சட்டையும் கருப்பு பான்ட்-உம் போட்டுக்கொண்டு ஜெயில்-இல் கம்பிகளுக்கு மேல் நடந்து வரும் காட்சி, அவர் train-இல் முதலில் போடும் சண்டை, அப்புறம், ஒவ்வொரு முறை பாலாஜி-யை சந்திக்கும் போதும், சிகரெட்டை அவர் வாயில் இருந்து எடுத்து, பாலாஜி ஏதோ கேட்டவுடன் “டன்” என்று சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே சொல்லும் அந்த அழகு மற்றும் ஸ்டைல். அதிலும், அந்த, வெள்ளை கலர் சட்டை, முழங்கை வரைதான் இருக்கும். அது ஒரு வகையான ஸ்டைல். அவருக்கு மட்டும் அவ்வளவு அழகாக செட்டாகும். அந்த கெட்டப்புடன் ரிவால்வரை கையில் வைத்து ஒவ்வொரு இலக்கையும் சுடும் அந்த ஸ்டைல். இதுவும் அந்தக் கால இளம் நடிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது எனலாம். இந்தப் படத்துக்கு நடிகர் திலகத்தின் விமர்சனம் "இந்த திருடன் ஏராளமான பணத்தைத் திருடி திரு பாலாஜி அவர்களுக்குக் கொடுத்து விட்டான்." அந்த அளவிற்கு வசூல் செய்த படம். என் தந்தை சொன்னார் - இந்த படம் வந்தவுடன் அன்றிருந்த அத்தனை action நடிகர்கள் பயப்பட ஆரம்பித்தனர் என்று.



எங்க மாமா:- இது எல்லோரும் அறிந்தது தான். ஷம்மி கபூரும் ராஜஸ்ரீ (ஹிந்தி நடிகை) மற்றும் ப்ரானும் நடித்து 1967-இல் வெளிவந்து வெற்றி அடைந்த பிரம்மச்சாரி படம். என்னவென்று சொல்வது, எனக்குத் தெரிந்து, இந்தப் படத்தில் தான், அவர் ரொம்ப ரொம்ப அழகாகவும், ஸ்டைல்-ஆகவும், இளமையாகவும் இருப்பார். அதாவது, ரொம்ப. அவருடைய உடை அலங்காரமும் இந்தப் படத்தில் பிரமாதமாக இருக்கும் (கலர் படம் வேறு!). ஒரிஜினல்-இல் இரண்டு மிகப் பெரிய பாப்புலர் பாடல்கள் “Aaj kal their meri pyaari …..” தமிழில், “சொர்க்கம் பக்கத்தில்” மற்றும் “Dhil ke jaroke mein…” தமிழில், “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்”. முதல் பாடலின் போது, அவரது தோற்றம், டான்ஸ் மூவ்மெண்டுகள் மற்றும் ஸ்டைல் அரங்கை அதிர வைத்தது (இப்போதும் தான்) என்றால், இரண்டாவது பாடல், அரங்கத்தில் இருந்த ஒவ்வொருவரையும், மௌனமான ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் – அதாவது – பின் டிராப் சைலன்ஸ் என்பார்களே. அரங்கில் உள்ள அனைவரையும் வழக்கம்போல் கட்டிப்போட்டு விடுவார். மறுபடியும், முற்றிலும் வேறு விதமான நடிப்பு.



எங்கிருந்தோ வந்தாள்:- சஞ்சீவ் குமார் நடித்து வெற்றி பெற்ற “கிலோனா”. இதுவும் 1970-இல் தான் வந்தது. சூட்டோடு சூடாக, பாலாஜி அவர்கள் ரீமேக் செய்தார். இந்தப் படத்திலும், ஒரிஜினலை விட அற்புதமாக வித்தியாசமாக செய்திருப்பார். "ஏற்றி வாய்த்த தீபம் ஒன்று என்னிடத்தில் வந்ததென்று பார்த்து மகிழ்ந்ததென்னவோ பின் பாராமல் போனதென்னவோ") நிறைய பேர் இந்தப் படத்தைப் பற்றி அலசியதால், நான் சொல்வது “ஒரே பாடல்” பாடலைப் பற்றி. இந்தப் பாடலை அவர் சோகமாக இருக்கும்பொழுது (ஆம் அவரது காதலியின் மணவிழாப் பாடல் (காதலி மற்றொருவருக்கு மனைவியானால், பின் எப்படி சோகம் இல்லாமல்?) பாடச் சொல்லி வற்புறுத்துவார்கள். முதலில் முடியாது என்பவர், கடைசியில், வேறு வழியில்லாமல் ஆரம்பிப்பார். எப்படி?, ... ஆ ஆ. . என்று ஆலாபனை செய்து கொண்டே – சரி சரி பாடுகிறேன் என்று – அந்த ஆலாபனையும் அவர் சரி சரி என்பதும் அவ்வளவு அழகாக இழைந்து வரும். அதுவும் அந்த இரண்டாவது சரணம் தான் ரொம்பவே எல்லோரையும் உருக்கி விடும். இந்தப் பாடலைப் பாடித் தான் நான் 1992-இல் எனது அலுவலகத்தில் முதல் பரிசைத் தட்டிச் சென்றேன் என்பதை பெருமையோடு நினைவு கூர்கிறேன்.



வசந்த மாளிகை:- A. நாகேஸ்வர ராவ் (ANR) நடித்து தெலுங்கில் 1971-இல் வந்து பெரும் வெற்றி பெற்ற “பிரேம நகர்” ஆம் தெலுங்கில் ப்ரேம என்றுதான் உச்சரிக்க வேண்டும். நம் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டு முழுமையாக ஆக்கிரமித்த படம். இதன் ஒரிஜினலையும் நான் பார்த்தேன். ஒன்று, நடிகர் திலகம் ஒவ்வொரு காட்சியையும் வேறு விதமாக செய்தது. மற்றொன்று அவர் காட்டிய அந்த grace மற்றும் ஸ்டைல். படம் முழுவதும் ஒரு விதமாக சன்னமான தொனியில்தான் பேசியிருப்பார் (பெண்களின் மனது எப்போதும் ஆண்களின் பலத்தை எடை போட்டபடிதான் இருக்குமா அதன் பெயர்தான் பெண்மையா? போன்ற பல வசனங்களை அவர் உச்சரிக்கும் விதம்! – வசந்த மாளிகைக்கு அழைத்துச் சென்று அவர் பேசும் அந்த மெய் சிலிர்க்க வாய்த்த வசனங்களையும் சேர்த்து. ஒரிஜினலில் ஒரு மாதிரியான டப்பாங்குத்துப் பாட்டு வரும். தமிழில், பாடலை பதிந்து மட்டும் விட்டிருந்தனர் “அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன?” என்று துவங்கும். தெலுங்கில், கதாநாயகன் அவரது பண்ணைக்குப் போயிருக்கும் போது, அங்குள்ள, பெண்கள் நாற்று நட்டுக்கொண்டும் தலையில் சுமையை சுமந்துகொண்டும் போவதைப் பார்த்து, கதாநாயகனுக்கு கனவில் இந்தப் பாடல் வருவதாக வரும். தெலுங்கில், ANR நடித்தால், ஒரு பாட்டாவது, அவரது பிரத்யேக டான்ஸ் மூவ்மெண்டுகளுடன் கண்டிப்பாக இருந்தாக வேண்டுமாம். அங்கு அவரது செல்லப் பெயர் “நட சாம்ராட்” அங்கு நட என்றால் நடனம், நடை அல்ல. தமிழில், நடிகர் திலகம் இந்தப் பாடலை வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த கதாபாத்திரம், முதலில் இருந்தே ஒரு விதமான graceful நடை, உடை, பாவனையுடன் விளங்கும். (ஏன் ஏன் பாடல் உட்பட..). இது கிராமத்து மெட்டில் அமைந்த … ஒரு மாதிரியான டப்பாங்குத்துப் பாடல் வேறு… இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிதைத்து விடும் என்பதால்தான் இந்தப் பாடல் படத்தில் இடம் பெறாது போயிருக்கும். அதற்கு பதிலாகத்தான், அந்த நாடோடிக் கூட்டத்தினருடன் அவரும் வாணிஸ்ரீ -யும் சேர்ந்து ஆடுவதுடன் வரும் அந்த கட்டம் வரும் (இதற்கு ஹிந்தியில் பாடலும், இதற்குப் பின் வரும் அந்த குடிசையில் வரும் காட்சி தெலுங்கில் பாடலாகவும் வரும். இதிலும், தமிழில் வித்தியாசமாகதான் செய்திருப்பார் நம் நடிகர் திலகம். இதில், ஒரு நடை piece ஒன்று – NT- ரசிகர்களுக்காகவே இருக்கும். அதிலும், அந்த grace-ஐ maintain பண்ணியிருப்பார். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும், குறிப்பாக, அவரது டிரெஸ்ஸிங் சென்ஸ்-ஐ பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.

மீதி மற்றுமொரு பதிவில்,



அன்புடன்,



பார்த்தசாரதி

RAGHAVENDRA
21st February 2011, 10:37 PM
டியர் பார்த்தசாரதி,
ரீமேக் படங்களைப் பற்றிய துவக்கப் பதிவிலேயே தங்கள் ஆளுமை தெரிகிறது. எந்த அளவிற்கு நடிகர் திலகம் தங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது புலனாகிறது. அதே அளவிற்கு அவர் ஒவ்வொருவருள்ளும் பாதித்திருக்கிறார் என்பதும் தங்களுடைய பதிவுகளுக்குக் கிடைக்கும் உணர்வுபூர்வமான வரவேற்பின் மூலம் உறுதியாகிறது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

திருடன், வசந்த மாளிகை, ராஜா என்று நீங்கள் துவங்கியிருக்கும் பட்டியலே அவருடைய சிறப்பிற்கு கட்டியம் கூறுகிறது.

இன்னும் சொல்லப் போனால் துவங்கப் பட்டு பாதியில் அல்லது துவக்க கால கட்டத்தில் கைவிடப்பட்ட அல்லது எதிர்பாராமல் நின்று போன, அல்லது வேறு நடிகர் நடிகர்களுக்கு சென்ற சில ரீமேக் படங்கள், நம்மிடையே அப்படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின்னர் நம்மிடையே சில படங்கள் ஏமாற்றங்களையும் அல்லது நல்ல வேளை, இதை நடிகர் திலகம் செய்ய வில்லை என்ற திருப்தியையும் ஏற்படுத்தின என்பதும் உண்மை.

ஆனால் நடிகர் திலகம் இப்படத்தை செய்திருந்தால் நமக்கு நிச்சயம் ஒரு சிறந்த படைப்பு கிட்டியிருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய படங்களில் ஒரு சிலவற்றை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

Koshish
மௌனம் எனது தாய்மொழி என்ற பெயரில் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் நடிக்க சில காட்சிகள் கூட படமெடுக்கப் பட்டன. வாணிஸ்ரீக்கு முன்னர் இப்பாத்திரத்திற்கு அணுகப் பட்டவர் ஹேம மாலினி. அவர் நடிக்க ஆவலுடன் ஒப்புக்கொண்டாலும் அவருடைய கால்ஷீட்டும் நடிகர் திலகத்தின் கால்ஷீட்டும் ஒத்து வரமுடியாமல் போனது உள்ளிட்ட காரணங்களாலும் மேலும் சில எதிர்பாராத காரணங்களாலும் இப்படம் தொடர முடியவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

Sacha jhuta
இப்படத்தின் உரிமையை பாலாஜி அவர்கள் வாங்கி நடிகர் திலகத்திற்கென வைத்திருந்தார். இதுவும் எதிர்பாராத காரணத்தால் நமக்கு அமையவில்லை. இப்படம் நிச்சயம் நடிகர் திலகத்தின் நடிப்பில் வந்திருந்தால் ரசிகர்களுக்கு மிகச் சிறந்த விருந்து படைத்திருக்கும்.

Shaukeen
வயசு அப்படி என்கிற பெயரில் நடிகர் திலகம், வி.கே. ராமசாமி மற்றும் மற்றொரு நடிகர் - நினைவுக்கு வரவில்லை - மூவர் நடிக்க தயாராக இருந்த படம். ஹிந்தியில் உத்பத் தத், அஷோக் குமார், மற்றும் பிரேம்நாத், ரதி அக்னிஹோத்ரி நடித்திருந்தனர். அப்படியே தழுவாமல் தமிழுக்கென்று சில மாற்றங்கள் செய்து எடுத்து வெளிவந்திருந்தால் மிகச் சிறந்த படமாக வந்திருக்கும்.

இது போன்று பல படங்கள் உள்ளன. இவற்றையும் பின்னர் பார்ப்போம்.

தங்களுடைய மற்ற படங்களைப் பற்றிய பதிவுகளைப் படிக்க ஆவல் மேற்படுகிறது.

அன்புடன்

NAGARAJAN RAMAKRISHNAN
21st February 2011, 11:10 PM
மலேசிய வாசுதேவன் தமிழில் பாடிய முதல் பாடல், குன்னக்குடி வைத்யநாதன் இசையில், குமாஸ்தாவின் மகள் திரைப்படத்தில்.
பூவை செங்குட்டுவன் பாடலை எழுதியிருந்தார். படம் வெளியான ஆண்டு 1974 . (திரு சரவணன் dhool .com இல் எழுதியிருந்தார்).

pammalar
22nd February 2011, 12:27 AM
டெல்லி டூ மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் மெல்லிசை மாமணி வி.குமார் அவர்களால் அறிமுகப் படுத்தப் பட்டு கிட்டத் தட்ட 40 ஆண்டுகள் தன் குரலால் தமிழ் மக்களை வசீகரித்த வாசுதேவன் அவர்களின் மறப்பு பின்னணிப் பாடகர் சரித்திரத்தில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. நடிகர் திலகத்திற்கு அவர் பாடியுள்ள பாடல்கள் என்றும் இனிமை, குறிப்பாக பூங்காற்று திரும்புமா பாடல்.
அவர் மறைவுக்கு நம் அஞ்சலி.
அவருடைய முதல் பாடல்.
பாலு விக்கிற பத்துமா (- http://www.esnips.com/doc/19ec3ca0-2d70-4d83-836a-fc656c536833/Paluvikkura-MVKSwarna-DellitoMadras-VKumar)
இசை - வி.குமார்
குரல்கள் - வாசுதேவ், ஸ்வர்ணா
பாடல் - மாயவநாதன்

மலேசியா வாசுதேவனின் முதல் படம் மாயவநாதனின் கடைசிப் படமாய் அமைந்தது.

Dear Raghavendran Sir,

Thank you very much for providing the link of one of the rarest songs of the immortal singer Malaysia Vasudevan. The versatality of his voice showers in his first song itself. The modulation & control of his tremendous voice & the natural flow of gimmicks makes this number a treasure. The co-singer Swarna in this song is none other than Music Director V.Kumar's wife.

Once again, thanks a lot !

Warm Wishes,
Pammalar.

saradhaa_sn
22nd February 2011, 10:37 AM
டியர் ராகவேந்தர்,

ரீமேக் செய்ய இருந்து முடியாமல் போன மேலும் ஒரு இந்திப்படம் 'ஷோர்'. இப்படத்தின் உரிமையும் பாலாஜியால் வாங்கப்பட்டு, நடிகர்திலகத்தின் நடிப்பில் உருவாக இருந்தது. ஆனால் இப்படம் பின்னர் மோகன், நளினி, பேபி ஷாலினி நடிப்பில் "ஓசை" என்ற பெயரில் உருவாகி, வெற்றி பெற முடியாமல் போனது. இந்திப்படத்தில், தன் மகளின் அறுவை சிகிச்சை செலவுக்காக தொடர்ந்து 72 மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதாகக் காட்சியிருக்கும். ஆனால் இந்த சைக்கிள் ஓட்டும் காட்சி நடிகர்திலகம் நடித்த பாலாஜியின் 'தியாகம்' படத்தில் இடம்பெற்றுவிட்டதால், ஓசை படத்தில் மோகன் 72 மணிநேரம் பாம்புகள் நிறைந்த கூண்டுக்குள் இருப்பதாக எடுத்திருந்தனர்.

இதேபோல, நடிகர்திலகத்தை வைத்து எடுப்பதற்காக பாலாஜி வாங்கவிருந்த 'விக்டோரியா 203' படத்தின் ரீமேக் உரிமை, மயிரிழையில் தப்பி ராமண்ணாவிடம் போக, அவர் 'வைரம்' என்ற படமாக எடுத்தார்.

டியர் பார்த்தசாரதி,

உங்களின் ரீமேக் படங்களின் அலசல் அருமையாக உள்ளது. (இவற்றில் எங்க மாமா, எங்கிருந்தோ வந்தாள் (மற்றும் நீதி) படங்களுக்கு நான் எழுதிய விரிவான ஆய்வுக்கட்டுரைகளின் இணைப்பு இத்திரியின் முதல் பக்கத்தில் பார்த்திருப்பீர்கள். அதுபோல தங்கை, என் தம்பி, திருடன் பட ஆய்வுகளும் முரளியண்ணா மற்றும் நண்பர்களால் விரிவாக அலசப்பட்டுள்ளது).

எங்கிருந்தோ வந்தாள் - வசந்த மாளிகை படங்களுக்கிடையில் 1971-ல் 'கங்கா ஜமுனா' (இருதுருவம்), 'மிலன்' (பிராப்தம்) படங்களும் ரீமேக் செய்யப்பட்டன. பத்து படங்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்ததால் இவற்றை தவிர்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தங்கள் பதிவுகள் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கியிருக்கின்றன. மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்.

saradhaa_sn
22nd February 2011, 10:52 AM
டியர் பம்மலார்,

சிறிது இடைவெளிவிட்டு வந்தபோதும், அதிரடியாக பல பதிவுகளைத்தந்து அசத்தி விட்டீர்கள். நடிகர்திலகத்தின் பட மறுவெளியீட்டு தகவல், கேள்வி பிறந்தது - நல்ல பதில் கிடைத்தது போன்ற வழக்கமான அம்சங்களோடு.....

ஒப்பீடு செய்துபார்க்கும் வண்ணம் இந்தி 'ஓ மேரி ராஜா' பாடலையும், தமிழ் 'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடலையும் ஒளிவடிவில் ஒரே பதிவில் தந்திருப்பது அருமை அல்ல அட்டகாசம். பலருக்கு பல உண்மைகளை உணர்த்தியிருக்கும் (எனது கணினியில் எப்போதுமே 'youtube' வேலை செய்யாது என்ற போதிலும். இதனால் பல நல்ல ஒளிப்பேழைகளை தவற விட்டிருக்கிறேன்).

பதிவுகளுக்கு மிக்க நன்றி...

P_R
22nd February 2011, 12:03 PM
காட்சிப்பிழை திரை என்றொரு இதழ் தொடங்கப்பட்டிருக்கிறது. ஜனவரி இதழில் எஸ்.ஏ.கண்ணன் அவர்களின் நேர்காணல் (முதற்பகுதி) பிரசுரம் ஆகியிருக்கிறது. சக்தி நாடக சபாவில் பணியாற்றியது பற்றியும் பின்னர் சிவாஜி நாடக மன்றத்தில் பணியாற்றியது பற்றியும் சொல்லியிருந்தார். ஒரு பாய்ஸ் கம்பெனியின் தினப்படி நடவடிக்கைகள், செழிப்பும், வறுமையின் என மாறிமாறி அலைக்கழிப்பதைப் பற்றிச் சரளமாகச் சொல்லியிருந்தார்.

சிவாஜியைப் பற்றி ஓரிரு சுவாரஸ்யமான தவகல்கள் சொல்லியிருந்தார்.
பராசக்தி மேக்கப் டெஸ்டுக்கு அவரமாக அழைக்கப்பட்டிருந்தாராம். அவர்கள் குழுவில் நாடகம் திருச்சியில் தொடர்ந்து வந்ததால் சென்னை சென்று வர காலையில் விமானத்தில் செல்வது தான். சென்று திரும்பி வருவதற்கு திருச்சி வரை கார் கொடுத்தார்களாம். முதல் பட மேக்கப் டெஸ்டுக்கு விமானத்தில் சென்ற ஒரே நடிகன் சிவாஜி தான் என்கிறார்.

அன்று சிவாஜியும் (அவரோடு உடன் சென்ற நம்பிராஜன் என்ற அக்குழு நடிகரும்) திரும்ப திருச்சி வர நேரமாகிவிட்டதாம். அரங்கில் சீட்டு விற்பனை ஆகி மக்கள் கூடிவிட்டதால் நிலைமையை விளக்கி வேறொரு நாடகம் அன்று நடத்துவதாக அறிவித்தார்கள். ரசிகர்களோ சிவாஜி வரும் வரை காத்திருந்து நாடகத்தைப் பார்க்கத் தயார் என்று சொல்லிவிட்டனராம். தாமதமாக வந்த சிவாஜியை ஆரவாரத்துடன் வரவேற்றபின் தான் நாடகம் தொடங்கியதாம்! திரைத்துறைக்குள் வரும் முன்னரே நாடக உலகில் சிவாஜிக்கு இத்தனை பலத்த வரவேற்பு இருந்திருக்கிறது.

அப்பேட்டியில் ஒரு சில தேதிகள், தகவல்கள் chronologically முரணாக இருப்பதாக (எனக்கே) தோன்றியது. இருந்தாலும் அக்கால நாடக உலகம், மக்களைக் கவரும் உத்திகள், சினிமா மூலமாக நாடக உள்ளடக்கத்துக்கு ஏற்பட்ட மாற்றங்கள் அமெரிக்கப் படங்களின் நடிப்பு ஏற்படுத்திய ஈர்ப்பு...என்று பல விஷயங்களைப் பற்றி சுவையாகப் பேசியிருந்தார்.

அடுத்த இதழில் சிவாஜி நாடக மன்ற அனுபவங்களைப் பற்றியும் தகவல்கள் எதிர்பார்க்கலாம்.

Plum
22nd February 2011, 12:15 PM
Parthasarathy, excellent posts. suvaarasyamAga ezhudhugiRIrgaL. One small nit pick - nata samrat in telugu actually means nadippu chakravarthy. The other facts you mentioned about trade mark dance moves of ANR are quite true.

pammalar
22nd February 2011, 05:55 PM
மலேசிய வாசுதேவன் தமிழில் பாடிய முதல் பாடல், குன்னக்குடி வைத்யநாதன் இசையில், குமாஸ்தாவின் மகள் திரைப்படத்தில்.
பூவை செங்குட்டுவன் பாடலை எழுதியிருந்தார். படம் வெளியான ஆண்டு 1974 . (திரு சரவணன் dhool .com இல் எழுதியிருந்தார்).

டியர் நாகராஜன் ராமகிருஷ்ணன் சார்,

வருக ! வருக ! தங்களுக்கு நல்வரவு !

தாங்கள் குறிப்பிட்டுள்ள "குமாஸ்தாவின் மகள்" திரைப்படம் வெளியான தேதி : 27.4.1974

நமது ராகவேந்திரன் சார் பதிவிட்டுள்ள "டெல்லி டு மெட்ராஸ்" வெளியான தேதி : 4.8.1972

இதற்கிடையில், நமது தேசிய திலகத்தின் "பாரத விலாஸ்" [வெளியான தேதி : 24.3.1973] திரைக்ககாவியத்தில், 'இந்திய நாடு என் வீடு' பாடலில், பஞ்சாபி மேஜருக்காக,
'சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப்வாலா கீத் சுனோ பஞ்சாப்வாலா கீத் சுனோ
தங்கக்கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேகோ தேகோ"
என வெளுத்து வாங்கியிருப்பார் வாசு.

"குமாஸ்தாவின் மகள்" திரைப்படத்தில், குன்னக்குடியின் இசையில் மலேசியா பாடிய 'காலம் செய்யும் விளையாட்டு' பாடலை அவரது ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்றாகக் கொள்ளலாம்.

அன்புடன்,
பம்மலார்.

NOV
22nd February 2011, 06:20 PM
தாங்கள் குறிப்பிட்டுள்ள "குமாஸ்தாவின் மகள்" திரைப்படம் வெளியான தேதி : 27.4.1974

நமது ராகவேந்திரன் சார் பதிவிட்டுள்ள "டெல்லி டு மெட்ராஸ்" வெளியான தேதி : 4.8.1972

இதற்கிடையில், நமது தேசிய திலகத்தின் "பாரத விலாஸ்" [வெளியான தேதி : 24.3.1973] idharkkidaiyil (1973) veliyaana innoru thiraipadam Thalai Prasavam. adhil thaan mudhal mudhalil MSV isaiyil Malaysia Vasudevan paadinaar.
paadal: maalyittu poomudiththa manamagalaaga, vidhi mounamaaga pOgudhammaa oorvalamaaga.

pammalar
22nd February 2011, 07:16 PM
idharkkidaiyil (1973) veliyaana innoru thiraipadam Thalai Prasavam. adhil thaan mudhal mudhalil MSV isaiyil Malaysia Vasudevan paadinaar.
paadal: maalyittu poomudiththa manamagalaaga, vidhi mounamaaga pOgudhammaa oorvalamaaga.

டியர் நௌ சார்,

தகவலுக்கு நன்றி!

ஒரு மேடைக் கச்சேரியில், மலேசியாவின் பாட்டுக்குரலை கேட்டு அசந்த மெல்லிசை மாமன்னர், அவருக்கு அளித்த முதல் வாய்ப்பு "பாரத விலாஸ்". அதற்குப் பின்னர் "தலைப்பிரசவம்". முத்துராமன்-லக்ஷ்மி-பிரமீளா பிரதான பாத்திரங்களில் நடித்த இப்படம் 1973-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. தாங்கள் குறிப்பிட்ட 'மாலையிட்டு பூ முடித்த மணமகளாக.....' பாடலை, கவிஞர் அவினாசி மணி இயற்றித் தர, எம்.எஸ்.வியின் இசையில், ஸோலோவாகப் பாடினார் மலேசியா வாசுதேவன்.

வாசுவுக்கு "தலைப்பிரசவ"த்தில் தனியாக தலைப்பாடல்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd February 2011, 11:18 PM
இன்று 22.2.2011 இரவு 7:30 மணி முதல் 8:00 மணி வரை 'வசந்த்' டீவியில் ஒளிபரப்பான 'ஒய்.ஜி. மகேந்திராவின் பார்வையில்' நிகழ்ச்சியில் ஒய்ஜி கூறியதிலிருந்து: [செவ்வாய்தோறும் (இரவு 7:30 முதல் 8:00 வரை) இந்நிகழ்ச்சி 'வசந்த்'தில் ஒளிபரப்பாகிறது, இந்நிகழ்ச்சியின் Research & Script : நமது ராகவேந்திரன் சார்]

"சிவாஜி சார் செய்த Variety - அதாவது விதவிதமான கதாபாத்திரங்கள் - இந்திய அளவில் வேறு யாருமே செய்தது கிடையாது. இது என்னுடைய தாழ்மையான கருத்து. எனது இந்த கருத்து-கணிப்பு தவறாகக் கூட இருக்கலாம்." என்று கூறினார்.

தவறே அல்ல, You are 'n' percent right YG. இந்திய அளவிலென்ன, உலக அளவிலேயே அவர் செய்த அளவுக்கு, எல்லாவிதமான ரோல்களையும் எந்த ஒரு நடிகரும் செய்ததில்லை என்பது ஆணித்தரமான உண்மை. இதை, எனக்குத் தெரிந்த வரை, திரு.ஏ.வி.மெய்யப்பன் அவர்களும், திரு.சோ ராமசாமி அவர்களும் பல தருணங்களில் கூறியுள்ளார்கள்.

ஈரேழு பதினான்கு லோகங்களிலும் நமது நடிகர் திலகத்தை மிஞ்சிய நடிகர் இல்லை என்பதே எனது தாரக மந்திரம், ஆணித்தரமான அபிப்பிராயம்.

Sivaji V.C. Ganesan : THE GREATEST ACTOR OF THE UNIVERSE

அது மட்டுமா, திரைப்படங்களின் வெற்றி சதவீதத்திலும், Box-Office சாதனைகளிலும் கூட, எமது அறிவுக்கு எட்டிய வரை, உலக அளவில் அவரை நெருங்குபவர் இல்லை.

47 ஆண்டுகளில் (1952-1999), 306 திரைப்படங்களில் [கௌரவ வேட படங்களையும் சேர்த்து], 120 நூறு நாள் படங்களை [இவற்றில் 22 வெள்ளிவிழாப் படங்கள்], மிகப் பெரிய திரையரங்குகளில் ரெகுலர் காட்சிகளில் [தீப்பெட்டி சைஸ் திரையரங்குகளில் நடைபெறவே நடைபெறாத பகல் காட்சி-காலைக்காட்சிகளில் அல்ல], அளித்த ஒரே கதாநாயக நடிகர்-ஹீரோ சிங்கத்தமிழன் சிவாஜி மட்டுமே!

[100 நாள் படங்கள் என்றால் 100 நாட்களும் அதற்கு மேலும் வெற்றிகரமாக ஓடியவை என்று கொள்ள வேண்டும்]

[வெள்ளிவிழாப் படங்கள் என்றால் 175 நாட்களும் அதற்கு மேலும் வெற்றிகரமாக ஓடியவை என்று கொள்ள வேண்டும்]

Nadigar Thilagam is always the incomparable, undisputed & uncrowned KING & EMPEROR OF BOX-OFFICE.

இந்திய நடிகர்களில், உலக அளவில் விருதுகளை-கௌரவங்களை அதிகம் பெற்றவரும் நமது நடிகர் திலகமே!

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

சிவாஜி ரசிகன் என்று சொல்லடா! சிங்கநடை போட்டுச் செல்லடா!

பெருமிதத்துடன்,
பம்மலார்.

pammalar
23rd February 2011, 03:01 AM
சகோதரி சாரதா,

மனமார்ந்த பாராட்டுக்கும், அபூர்வ தகவல்களுக்கும் அன்பான நன்றிகள் !



ஒப்பீடு செய்துபார்க்கும் வண்ணம் இந்தி 'ஓ மேரி ராஜா' பாடலையும், தமிழ் 'நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்' பாடலையும் ஒளிவடிவில் ஒரே பதிவில் தந்திருப்பது அருமை அல்ல அட்டகாசம். பலருக்கு பல உண்மைகளை உணர்த்தியிருக்கும்.


True! True! True! Extremely True!

அன்புடன்,
பம்மலார்.

parthasarathy
23rd February 2011, 10:13 AM
டியர் ராகவேந்தர் சார்,

நன்றிகள் பல. நடிகர் திலகம் என்ற அட்சய பாத்திரத்தை வெவ்வேறு கோணங்களில் பார்க்கத் தலைப்படுகின்ற முயற்சிதான் இந்த பதிவு. நீங்கள் சொன்னது போல் பல ரீமேக் படங்களை எடுத்துக் கொண்டு அலசலாம். இருந்தாலும்,சிறந்த பத்து படங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மேலும், நீங்கள் சொன்ன கோஷிஷ், சச்சா ஜூடா, Shaukeen போன்ற படங்களில் நடிகர் திலகம் நடித்திருந்தால் அவைகளின் தலையெழுத்தே இன்னும் பிரமாதமாக மாறியிருக்கும். இதில், Shaukeen படம் ஷூட்டிங் கூட ஆரம்பித்து விட்டிருந்தார்கள். ஹிந்தியில் மிதுன் சக்கரவர்த்தி நடித்த பாத்திரத்தில்தான் யார் என்பது நினைவில்லை.

இந்த ஆய்வின் இன்னொரும் கோணமும் மீதம் இருக்கிறது. அதற்குப் பின்னர், தங்களுடைய மேலான கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,

Parthasarathy

abkhlabhi
23rd February 2011, 11:53 AM
Basu Chattarjee இயக்கத்தில் வெளியான ஹிந்தி Shaukeen தமிழில் நடிகர் திலகம் , vkr , பூர்ணம் விஸ்வநாதன், சுரேஷ், ராதா நடிக்க, கலாகேந்திர நிறுவனத்தால் எடுக்கப்பட்டது. குமுதத்தில், நடிகர் திலகம் , vkr , பூர்ணம் விஸ்வநாதன் முவரும் சேர்ந்து நின்ற புகைப்படம் வெளியானது. ஹிந்தியில் வெற்றி அடைத்த படம். என்ன காரணம் என்று தெரியவில்லை. படம் பாதியிலே நிறுத்தப்பட்டது.

abkhlabhi
23rd February 2011, 02:54 PM
திரு. பார்த்தசாரதி,
உங்களுடைய நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களை பற்றி ஆய்வு அருமை. பிறமொழிகளில் வந்த படங்களை நடிகர் திலகம் தமிழில் நடித்த படங்கள் ஏராளம். ஒரு சில படங்களை தவிர , எல்லாமே வெற்றி படங்களே. உதாரணம் பாலாஜி தயாரித்த படங்கள். உனக்காக நான் தவிர மற்ற படங்கள் வெற்றியே. பாலாஜியை தவிர மற்ற தயாரிப்பாளர்கள் எடுத்த படங்களில் நடிகர் திலகம் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி தான். உதாரணம் , வசந்த மளிகை, திரிசூலம், அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோவில்.

பிற மொழிகளில் வெளி வந்து தோல்வி அடைந்த படங்களை யாரும் முன் வந்து தயாரிப்பதில்லை. ஆனால் நம் நடிகர் திலகம் மட்டுமே பிற மொழி தோல்வி படத்தையும் தமிழில் வெற்றி அடைய செய்தார். உதாரணம், அண்ணன் ஒரு கோவில், அவன் தான் மனிதன். கன்னடத்தில் சுமாராக ஓடிய கஸ்தூரி நிவஸா என்ற படத்தை , தமிழில் அவன் தான் மனிதனாக வந்து வெற்றி பெற்றது . ( ATM நடிகர் திலகத்தின் 175 படம் , அதனால் ஓடியது என்று சிலர் சொல்லல்லாம்).

ஆனால் கன்னடத்தில் பெரிய தோல்வி அடைந்த படமான தேவர கண்ணு என்ற படத்தை தமிழில், அண்ணன் ஒரு கோவில் படத்தை தன் சொந்த தயாரிப்பு கம்பெனி முலம் தயாரித்து வெற்றி அடைந்தார். ஆனால் 250 படமும் கன்னடம் முலம். தோல்வி அடைந்தது. காரணம், நடிகர் திலகத்தின் 250 படம், பெரிய எதிர்பார்ப்பு (200 படத்தை போல - இதுவும் கன்னடம் முலம்) பிரபுவிற்கு முக்கியத்தும் , வலுவான கதை இல்லை.

நடிகர் திலகம் நடித்து தமிழில் வெளி வந்த படங்கள், பிற மொழிகளில் தயாரித்து வெளியான படங்கள் தமிழை போல் வெற்றி பெறவில்லை. (பல படங்கள் தோல்வி அடைந்தன).
தமிழில் - பிற மொழிகளில் வந்து தோல்வி
vietnam veedu , கெளரவம், - கன்னடம்
சவாலே சமாளி - கன்னடம், தெலுங்கு, ஹிந்தி
தெய்வ மகன் - (முலம் ஹிந்தி ?) - கன்னடம், தெலுங்கு
பட்டிகாட பட்டணமா - தெலுங்கு ( கன்னடத்தில் வெற்றி)
நவராத்திரி - தெலுங்கு, ஹிந்தி
பாசமலர் (முலம் மலையாளம் ?) - தெலுங்கு, ஹிந்தி
ராஜா (முலம் ஹிந்தி) - கன்னடம் (கல்லடி படும் என்று பயந்து 100 நாள் ஒட்டினார்கள்)
தியாகம் - தமிழில் சில்வர் ஜூப்ளி (தெலுகில் சுமார் வெற்றி)
எங்க ஊர் ராஜா - தெலுங்கு

parthasarathy
23rd February 2011, 03:35 PM
திரு. பார்த்தசாரதி,
உங்களுடைய நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களை பற்றி ஆய்வு அருமை. பிறமொழிகளில் வந்த படங்களை நடிகர் திலகம் தமிழில் நடித்த படங்கள் ஏராளம். ஒரு சில படங்களை தவிர , எல்லாமே வெற்றி படங்களே. உதாரணம் பாலாஜி தயாரித்த படங்கள். உனக்காக நான் தவிர மற்ற படங்கள் வெற்றியே. பாலாஜியை தவிர மற்ற தயாரிப்பாளர்கள் எடுத்த படங்களில் நடிகர் திலகம் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி தான். உதாரணம் , வசந்த மளிகை, திரிசூலம், அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோவில்.

பிற மொழிகளில் வெளி வந்து தோல்வி அடைந்த படங்களை யாரும் முன் வந்து தயாரிப்பதில்லை. ஆனால் நம் நடிகர் திலகம் மட்டுமே பிற மொழி தோல்வி படத்தையும் தமிழில் வெற்றி அடைய செய்தார். உதாரணம், அண்ணன் ஒரு கோவில், அவன் தான் மனிதன். கன்னடத்தில் சுமாராக ஓடிய கஸ்தூரி நிவஸா என்ற படத்தை , தமிழில் அவன் தான் மனிதனாக வந்து வெற்றி பெற்றது . ( ATM நடிகர் திலகத்தின் 175 படம் , அதனால் ஓடியது என்று சிலர் சொல்லல்லாம்).

ஆனால் கன்னடத்தில் பெரிய தோல்வி அடைந்த படமான தேவர கண்ணு என்ற படத்தை தமிழில், அண்ணன் ஒரு கோவில் படத்தை தன் சொந்த தயாரிப்பு கம்பெனி முலம் தயாரித்து வெற்றி அடைந்தார். ஆனால் 250 படமும் கன்னடம் முலம். தோல்வி அடைந்தது. காரணம், நடிகர் திலகத்தின் 250 படம், பெரிய எதிர்பார்ப்பு (200 படத்தை போல - இதுவும் கன்னடம் முலம்) பிரபுவிற்கு முக்கியத்தும் , வலுவான கதை இல்லை.

நடிகர் திலகம் நடித்து தமிழில் வெளி வந்த படங்கள், பிற மொழிகளில் தயாரித்து வெளியான படங்கள் தமிழை போல் வெற்றி பெறவில்லை. (பல படங்கள் தோல்வி அடைந்தன).
தமிழில் - பிற மொழிகளில் வந்து தோல்வி
vietnam veedu , கெளரவம், - கன்னடம்
சவாலே சமாளி - கன்னடம், தெலுங்கு, ஹிந்தி
தெய்வ மகன் - (முலம் ஹிந்தி ?) - கன்னடம், தெலுங்கு
பட்டிகாட பட்டணமா - தெலுங்கு ( கன்னடத்தில் வெற்றி)
நவராத்திரி - தெலுங்கு, ஹிந்தி
பாசமலர் (முலம் மலையாளம் ?) - தெலுங்கு, ஹிந்தி
ராஜா (முலம் ஹிந்தி) - கன்னடம் (கல்லடி படும் என்று பயந்து 100 நாள் ஒட்டினார்கள்)
தியாகம் - தமிழில் சில்வர் ஜூப்ளி (தெலுகில் சுமார் வெற்றி)
எங்க ஊர் ராஜா - தெலுங்கு

நன்றி. நீங்கள் சொன்ன தகவல்கள் ஏறக்குறைய எல்லாமே உண்மைதான். என் ஆய்வு இன்னும் முடியவில்லை. சிறிது பொறுத்தருளுமாறு வேண்டுகிறேன்.



அன்புடன்,



பார்த்தசாரதி

parthasarathy
23rd February 2011, 04:58 PM
நடிகர் திலகமும் ரீமேக் படங்களும் (தொடர்ச்சி):-

நீதி:- இது ராஜேஷ் கன்னா நடித்து வெற்றியடைந்த துஷ்மன் என்ற இந்தி படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. முதலில் இருந்து கடைசி வரையிலும் (ஒரு சில காட்சிகளைத் தவிர) ஒரே உடையை (ஒரு மாதிரியான மிலிடரி கிரீன் கலர்) அணிந்து கொண்டு ஒரு நிஜ லாரி டிரைவராய் வாழ்ந்து காட்டிய படம். இந்தப் படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்பொழுதும், ஒவ்வொரு முறையும், அவரை மற்றவர்கள் (சௌகார் வீட்டில் இருப்பவர்கள்) ஒதுக்கும்போதும், எப்போது தான் அவரை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களோ என்று மனம் கிடந்து எங்கும். குறிப்பாக, சௌகார் அவரை கடைசி காட்சிக்கு முன் வரை, அவரை அந்த அளவிற்கு வெறுப்பார் (என்ன இருந்தாலும், அவரது கணவரையல்லவா நடிகர் திலகம் தவறுதலாக லாரியால் கொன்றிருப்பார்). கடைசியில், மனோகரை அடித்து நொறுக்கியவுடன், சௌகார் அவரை தம்பி! என்று அழைத்தவுடன், நடிகர் திலத்தின் reaction அனைவரையும் அழ வைத்து விடும். மேலும், "எங்களது பூமி காக்க வந்த சாமி" பாடலில், கடைசியில், கோவை சௌந்தரராஜன் குரலில், " பல்லாண்டு பாடுகின்ற ..." என்று ஆரம்பித்து பாடும் போது அவர் காட்டுகின்ற subtle முக பாவங்கள், ஜெய கௌசல்யா திருமணம் முடிந்து அவரை வழியனுப்பும்போது கூடவே குழந்தை போல் ஓடிக்கொண்டே பாசத்துடன் அவரிடம் பேசும் பேச்சுக்கள்.... இந்தப் படத்திற்கும், நீலவானம் மற்றும் பாபு படங்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்த மூன்று படங்களிலும், அவரது கதாபாத்திரம் இடையில் ஒரு சந்தர்ப்பத்தில் தான் வந்து இணைந்து கொள்ளும். ஆனால், போகப்போக, அந்த கதாபாத்திரம் அந்த வீட்டின் சூழலோடு இணைந்து / இழைந்து கொண்டு கடைசியில், அந்த கதாபாத்திரம், அந்த வீட்டிலே ஒருவராக தன்னை ஐக்கியப்படுதிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அந்த வீட்டில் உள்ள இன்றியமையாத உறுப்பினராகவே மாறிவிடும். ஆம். இந்த மூன்று படங்களிலும் (இவைகளில் மட்டும் தானா?), அவர் அந்த கதாபாத்திரமாகவே மிக மிக இயல்பாக மாறி விட்டிருப்பார். இவைதானே இயல்பான நடிப்பு!



எங்கள் தங்க ராஜா:- இது VB ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் தெலுங்கில் சோபன் பாபு இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி அடைந்த “மானவுடு தானவுடு" என்ற படம். சோபன் பாபு பெரும்பாலும், அமைதியான கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். இந்தப் படமும் சோக்காடு என்ற மற்றொரு படமும் அவரை வித்தியாசமான நிறைய வேடங்களை ஏற்க வழி வகுத்தது என்று என் கசின் (பெரியம்மா மகன் - அவர்களது குடும்பம் நெல்லூரில் இருக்கிறது) சொல்லுவான். இந்தப் படத்திலும், நடிகர் திலகம் வித்தியாசமான இரண்டு கெட்-அப் மற்றும் கதாபாத்திரங்களில் கலக்கினார். அநேகமாக அனைவரும் இந்தப் படத்தைப் பற்றி அலசோ அலசு என்று அலசிவிட்டதால், என்னால் முடிந்த சிறு துளிகள். "இரவுக்கும் பகலுக்கும்" பாடலில், நடிகர் திலகத்தின் graceful டான்ஸ் மூவ்மெண்டுகளும் சின்ன சின்ன நடை piece -களும், அரங்கை அதிரவைத்தது. இந்த டாக்டர் கதாபாத்திரத்தில், அவருக்கு பெரிதாக ஸ்டைலாக நடிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லாது போனாலும், இந்தப் பாடலை முழுவதுமாக பயன்படுத்தி, கதாபாத்திரத்தின் தன்மையை சிதைக்காமல், மெலிதான ஒரு ஸ்டைலையும் graceful டான்ஸ் மூவ்மெண்டுகளும் கொடுத்திருப்பார்.



அவன் தான் மனிதன்:- இது Dr. ராஜ்குமார் நடித்து கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற கஸ்தூரி நிவாசா என்ற படம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ராஜ்குமார் ஒரு மிகச் சிறந்த நடிகர் மற்றும் பாடகரும் கூட. எனக்குத் தெரிந்து, 1975/76-க்கு பிறகு, அவரது படங்களில் வரும் பாடல்களுக்கு, அவரே குரல் கொடுக்க ஆரம்பித்தார். அதற்கு முன்பு வரை, திரு P B ஸ்ரீனிவாஸ் அவர்கள்தான் அவருக்கு பாடி வந்தார். எனது இன்னொரு கசின், ராஜ்குமார் அவர்களின் சொந்த production கம்பெனி-இல் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பட நிறுவனம், ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரு ரூமை வாடகைக்கு எடுத்து ராஜ்குமார் படங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தது. என்னுடைய இந்தக் கசினும் நடிகர் திலகம் ரசிகன்தான். இந்தப் படத்தின் ஒரிஜினல்-இல் ராஜ்குமார் மிக அற்புதமாக செய்திருந்தார். மேலும், இந்தப் படம் கன்னடத்தில் பெரும் வெற்றியடைந்த படம் என்பதால், (எனது நண்பர் (எதிர் வீடு வேறு) கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரும், இவரது இரு அண்ணன்களும் - மூவரும் நடிகர் திலகம் ரசிகர்கள். இவருக்கு ராஜ்குமாரையும் மிகவும் பிடிக்கும். அவர் கூறிய தகவலையும் வைத்து இந்த கன்னடப் பட தகவலை சொல்கிறேன்). இந்த கன்னட படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். நடிகர் திலகத்திற்கு இந்த படம் ஒரு சவாலாகவே அமைந்தது. (உயர்ந்த மனிதன் மற்றும் தெய்வ மகன் ஆகிய படங்களும் ரீமேக் செய்யப்பட படங்கள் மற்றும் அந்த படங்களும் நடிகர் திலகத்துக்கு சவாலாக அமைந்தவைதான் எனினும் அந்தப் படங்களின் ஒரிஜினல் அந்த அளவிற்கு நாடு முழுவதும் புகழ் அடைந்தவை என்று கூற இயலாது. அதனால் இந்த படங்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, இந்த பத்து படங்களும் ஓரளவிற்கு எல்லா விதமான மக்களும் பார்த்து விட்ட படங்கள் ஆதலால், ரீமேக் செய்யப்படும்போது ஒரிஜினலை நிறைய பேர் compare செய்து பார்ப்பார்கள் அதனால், நடிகர் திலகம் எப்படியும் ஒரிஜினலை விட நன்றாக செய்ய வேண்டும் என்று முனைவார். எல்லா படங்களுக்கும் அவருடைய முனைப்பு இருக்கும் என்றாலும், இந்த மாதிரி ஆரோக்கியமான போட்டி அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.) இருந்தாலும், இந்த சவாலையும் ஏற்று, நடிகர் திலகம் தன் தனித்தன்மையை நிரூபித்தார் - அதுவும், அந்த சோக உணர்வை விழிகளாலேயே காண்பித்து அனைவரையும் நெக்குருக வைத்தார். சோகத்தை எந்த விதமான அதிகபட்ச சிரத்தையும் எடுத்துக் கொள்ளாமல், இரு விழிகளாலேயே வெளிப்படுத்தும் கலை அவருக்கு மட்டுமே சாத்தியம். (மேஜர் ஒரு பேட்டியில், நடிகர் திலகத்தைப் பற்றி கூறும் போது "சிவாஜி ஒருவர்தான் கண்களில் பெருகும் கண்ணீரை கண்களுக்குள்ளேயே, தேக்கி வைத்து கேமராவை நோக்கி பார்த்து, கண்ணீர் கீழே சிந்தி விடாமல், அந்த கண்ணீரை மக்களுக்கு காண்பித்து நடிப்பவர்" என்றார்). உடலை பெரிதாக வருத்திக் கொள்வாரே தவிர பட்டினி கிடந்து தோற்றத்தை மாற்றிக் கொள்ள மாட்டார். நடிப்பினாலேயே அத்தனை உணர்வுகளையும் காட்டத்தான் தலைப்படுவார். (அப்பர் ஒரு சிறந்த உதாரணம்). இந்தப் படத்தின் flashback காட்சிகள்தான், நம் அனைவரையும் நிறைய கவர்ந்தது. குறிப்பாக, ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி பாடல் (முரளி சார் கூறிய அந்த கடைசி சரணத்தில் நடிகர் திலகம் அந்த புல்மேட்டின் மேலிருந்து கீழே இருக்கும் மஞ்சுளாவைப் பார்த்து, ஒரு மாதிரி நடை நடந்து பின் மறுபடியும் பாடும் அந்த ஸ்டைல் அரங்கத்தை எப்போதும் அதிர வைக்கும்). அன்பு நடமாடும் பாடலும், மிகச் சிறப்பாக இருக்கும். மெல்லிசை மன்னரின் மெட்டுக்கு கேட்கவே வேண்டாம். இந்தப் படத்தில் நடிகர் திலகம் வைத்திருந்த ஹேர் ஸ்டைலைதான் நான் சிறிது காலம் வரை வைத்திருந்தேன். இப்போது இல்லை. முடி சிறிது கொட்டி விட்டது. அந்த அளவிற்கு என்னை முழுமையாக ஆக்கிரமித்த படம். Grouch-070 இந்தப் படத்தை விரிவாக மிக அற்புதமாக அலசி இருந்தார்.



பாபு:- ஆஹா! இந்தப் படத்தைப் பற்றி பேச, பகிர்ந்து கொள்ள இந்த ஒரு ஜென்மம் போதுமா - தெரியவில்லை. ஓடையில் நின்னு - சத்யன் என்கிற அற்புதமான நடிகர் நடித்த மிகச் சிறந்த மலையாளத் திரைப்படம் ஆயிற்றே இது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சத்யனும், இதே படத்தின் ஹிந்திப் பதிப்பான “Aashirvaad” படத்திற்கு அசோக் குமாரும் அடுத்தடுத்த வருடங்களில் பாரத் அவார்ட் வாங்கினர். தமிழிலும், நடிகர் திலகத்திற்கு கிடைத்திருக்க வேண்டியது - கை நழுவிப் போன கதை ஏற்கனவே அலசப் பட்டு விட்டது. இந்தப் படத்தில், எப்போதும் எல்லோர் மனதிலும் நிழலாடும் காட்சி - அவர் பாலாஜி வீட்டில் உணவு உண்ணும் காட்சி. பாலாஜியும், அவரது மனைவி சௌகாரும், குழந்தை ஸ்ரீதேவியும் அவர்களது கார் வழியில் நின்றுவிடுவதால், சாலையில் நின்று கொண்டிருக்கும்போது, வழியில் போகும் நடிகர் திலகம் அவர்களை தனது கை ரிக்க்ஷா மூலம் அவர்களது வீட்டிற்குக் கொண்டு விடுவார். பாலாஜி, நடிகர் திலகத்திற்கு பணம் கொடுப்பதோடு நின்று விடாமல், மழையில் நனைந்து விட்ட அவருக்கு, துண்டைக் கொடுத்து மேலும், ஒரு சட்டையும் கொடுப்பார். இது போதாதென்று, அவரை வீட்டிற்குள் அழைத்து, சாப்பாடும் போடுவார். பாலாஜியும், சௌகாரும் ஸ்ரீதேவியும் அவரை பந்தா இல்லாமல் கனிவோடும், அன்போடும் நடத்தும் விதம் மெய் சிலிர்க்க வைக்கும். நடிகர் திலகம் கீழே உட்கார்ந்து இருப்பார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஸ்ரீதேவி கீழே போய் அவர் அருகே உட்கார்வதோடு மட்டுமின்றி, அவரது இலையில் இருந்து ஒரு கத்தரிக்காய் துண்டையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளப் போவார். நடிகர் திலகம் பதறிப் போய், ஸ்ரீதேவி கையைப் பிடித்து, சௌகாரையும் பாலாஜியையும் பார்த்து, "குழந்தையை ஒன்றும் சொல்லாதீர்கள். தெரியாமல், என் இலையில் இருந்து எடுத்து விடடாள்" என சொல்வார். ஆனால், அதற்கு மாறாக, பாலாஜியோ சௌகாரை பார்த்து "பரவாயில்லையே. இவள் கத்தரிக்காய் சாப்பிடுகிறாள். குட்" என்று சொல்லவும், சௌகார் அதையே ஆமோதிப்பார். உடனே, நடிகர் திலகம் காட்டும் மின்னலென வெட்டிச் செல்லும் அந்த உணர்வுகள் - ஆம் - ஒன்றல்ல - ஆச்சரியம், ஆனந்தம், மகிழ்ச்சி கலந்த அந்த கண்ணீர் மற்றும் நன்றிப்பெருக்கு - அப்பப்பா - எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கும் அனைவரையும் ஒருசேர கலங்கவைத்து விடும். Of course, பாலாஜி, சௌகார் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்தக் காட்சி அற்புதமாக அமைந்திருக்கும். இதுபோல், இன்னும் எத்தனையோ காட்சிகள். இந்தப் படத்தின் ஒரிஜினலில், சத்யன் அவர்கள் கதாபாத்திரம் ஒரு மாதிரியான முரட்டுத்தன்மை உடையதாக சித்தரிக்கப்பட்டிருக்கும். தமிழில், அதனை இலேசாக, மாற்றி, படம் முழுவதும், கனிவு, நன்றிப் பெருக்கு மற்றும் எளிமை மூலம் மிக மிக வேறுமாதிரியான கதாபாத்திரமாக மாற்றி இருந்தார் நமது நடிகர் திலகம்.


அது எப்படி, நடிகர் திலகம் மட்டும், எப்போதும் ஒரிஜினலை விட நன்றாக செய்கிறார். அதே சமயம், அவரது படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப் படும் போது இவர் நடித்த அளவுக்கு மற்றவர்களால் நடிக்க முடிவதில்லை - அந்த கதாபாதிரங்களுக்கு உயிர் ஊட்ட முடிவதில்லை? (இந்த ஆய்வு - அதாவது நடிகர் திலகத்தின் படங்கள் மற்ற மொழியில் - இந்த ஆய்வு முடிந்த பிறகு துவங்குகிறது). ஏற்கனவே கூறியது போல் - அதாவது – நடிகர் திலகம் மேஜர் அவர்களிடம் கூறியது போல் - ஒவ்வொரு ஒரிஜினலையும், குறைந்தது பத்து தடவையாவது பார்த்து ஆழமாக study செய்து முழுக்க முழுக்க வேறு மாதிரி - சிறிதளவு சாயல் கூட ஒரிஜினலில் இருந்து வந்து விடக் கூடாது - என்று நடிகர் திலகம் எடுக்கும் அந்த கர்ம சிரத்தை - மற்றும் அந்த தணியாத தாகம் மற்றும் வெறி.



நான் மேற்கூறிய படங்கள் அல்லாமல், இன்னும் பல நல்ல பத்து படங்கள் ரீமேக் வரிசையில் உண்டு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, உயர்ந்த மனிதன், தெய்வ மகன், (ஏன் இதில் சேர்க்க வில்லை என மேலே கூறியிருக்கிறேன்), தியாகம், அண்ணன் ஒரு கோவில் உள்பட



நிலைமை இப்படி இருக்க, எப்படி நடிகர் திலகத்தின் சாதனைகளை ஒரு பத்து படங்களுக்குள் அடக்கி விட முடியும்?



அன்புடன்,



பார்த்தசாரதி

parthasarathy
23rd February 2011, 05:09 PM
டியர் Abhkhlaabhi (தங்களது பெயர்?),



நடிகர் திலகத்தின் படங்கள் - மற்ற மொழிகளில் என்றொரு பதிவை இந்த வாரக் கடைசியில் இடலாம் என்று இருக்கிறேன்.



அன்புடன்,



பார்த்தசாரதி

pammalar
24th February 2011, 04:43 AM
டியர் பார்த்தசாரதி சார்,

தங்களின் கைவண்ணத்தில் வந்துள்ள 'நடிகர் திலகமும் ரீமேக் படங்களும்' கட்டுரையின் இரு பகுதிகளுமே அருமையிலும் அருமை.

பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்!

குறிப்பாக பெருவாரியான அவரது ரீமேக்குகள் தாங்கள் வகுத்துள்ள மூன்றாவது வகையில் ரசிகர் படங்களாக வந்தாலும், அதிலும் அவர் முதல் இரண்டு வகை படங்களை விரும்பும் நபர்களை கண்டு கொள்ளாமல் விட்டதில்லை. "தங்கை"யில் 'தண்ணீரிலே தாமரைப்பூ' உருக்கத்தின் உச்சம். "என் தம்பி"யில் 'முத்து நகையே' பாடலில் 'காலழகு பார்த்தால்...' என டி.எம்.எஸ். நிறுத்த, அந்த நிறுத்தத்தில் நம்மோடு நமது இதயமும் ஒரு நொடி துடிப்பதை நிறுத்தி, அண்ணலின் அன்புமுகம் இன்பத்திலிருந்து துன்பத்திற்கு சென்று துடிப்பதை கண்டு கனக்க, ஒரு நான்கு நிமிடப் பாடலில், ஒரு நொடிப் பொழுதில் ஊனையும், உயிரையும் உருக்கி விடுவார் நமது ஆருயிர் அண்ணன். ஒரிஜினல்களைப் போலவே தங்கை(1967)யும், என் தம்பி(1968)யும் சிறந்த வெற்றிப்படங்கள். "தங்கை" 11 வாரங்களும், "என் தம்பி" 12 வாரங்களும் வெற்றிகரமாக ஓடியது. ஷிஃப்டிங் முறையில் இரு படங்களுமே 100 நாட்களைக் கண்டது.

ரசிகர்களின் மனதைத் திருடிய "திருடன்(1969)", நாகேஸ்வரராவ்-ஜெயலலிதா நடித்த "அதிருஷ்டவந்துலு(1968)" தெலுங்கு படத்தின் தமிழ்ப்பதிப்பு. இப்படம் முழுமையுமே ஸ்டைல்களும், ஆங்காங்கே உருக்கமான கட்டங்களும்[குறிப்பாக காலண்டரில் காட்சி தரும் முருகனிடம் உருகும் காட்சி] நிரம்பி வழியும். 'தென்னகம்' என்ற மாற்றுமுகாம் ஏடு, இப்படத்திற்கு எழுதிய விமர்சனத்தின் சில வரிகள் பசுமையாக நினைவுக்கு வருகிறது. "இந்தப் படத்தின் கதை என்னவோ 'டப்பா' கதை தான். ஆனால் அதையும் சிவாஜி தன் அருமையான நடிப்பால் பொன்னாக மின்னச் செய்திருக்கிறார்." என்று எழுதியிருந்தது. திருடன் தமிழ்நாட்டில் நல்ல வெற்றியையும், அயல்நாட்டில்(இலங்கையில் 100 நாள்) அமோக வெற்றியையும் பெற்றான்.

நடிகர் திலகம் மிக மிக அழகாக காட்சியளித்த பத்து படங்களைத் தேர்ந்தெடுத்தால் அதில் "எங்க மாமா(1970)"வுக்கு முதலிடமும் கிடைக்கும். அவர் நடித்த எல்லா படங்களிலுமே அவர் கொள்ளை அழகு தான் என்பது வேறு விஷயம். "எங்க மாமா"வில் அத்துணை Smartஆக, Cuteஆக, Crispஆக 'சிக்'கென்று இருப்பார் நமது பேரழகன். ஆர்ப்பாட்டமான ரோல்களை அதிகம் செய்யும் ஷம்மி கபூரே "பிரம்மச்சாரி(1968)"யில் அம்சமாக அடக்கி வாசித்த போது, நம்மவரைப் பற்றி சொல்லவும் வேண்டுமா - ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு ஃப்ரேமிலும் அசத்தியிருப்பார். என்னைப் பொறுத்தவரை, "எங்க மாமா"வை நான் தங்களது முதல் வகைப்படங்களில் தான் சேர்ப்பேன். நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த படங்களில் "எங்க மாமா"வும் ஒன்று என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை. அதிமேதாவிகளாகத் தங்களை நினைத்து கொள்ளும் சில அறிவிலிகள், "மக்கள் திலகத்தின் "மாட்டுக்கார வேலன்(1970)", "எங்க மாமா"வுடன் தான் வந்தது. மாட்டுக்கார வேலன் பெற்ற அபார வெற்றியை எங்க மாமா பெறவில்லையே, படம் சரியாகப் போகவில்லையே" என "எங்க மாமா"வை ஒரு தோல்விப்பட ரேஞ்சுக்கு பேசுவர். எங்க மாமாவும், மாட்டுக்கார வேலனும் ஒரே பொங்கல் தினத்தில் [14.1.1970] தான் வெளியானது. வெள்ளிவிழாப்படமான "மாட்டுக்கார வேலன்" பெற்ற இமாலய வெற்றியை "எங்க மாமா" பெறவில்லை என்பது உண்மை. எனினும், "எங்க மாமா" நல்லதொரு வெற்றியைக் குவித்த படமே.

"எங்க மாமா" சென்னையில் வெளியான 4 திரையரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்து சிறந்த வெற்றியைப் பெற்றது. [வெலிங்டன்(58), மஹாராணி(58), ராக்ஸி(58), லிபர்ட்டி(51)]. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரை தங்கத்தில் [2593 இருக்கைகள்] 51 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. திருச்சி சென்ட்ரலில் 58 வெற்றி நாட்கள். சேலத்தில் ஓரே சமயத்தில் 2 திரையரங்குகளில் வெளியாகி ஓரியண்டலில் 79 நாட்களும், SRV அரங்கில் 16 நாட்களும், ஆக மொத்தம் 95 நாட்களும் ஓடி சூப்பர்ஹிட். சேலத்தில் ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. கோவை கர்னாடிக்கில் 51 வெற்றி நாட்கள், நெல்லை ரத்னாவில் அமோக ஆதரவுடன் 50 நாட்கள், இலங்கையில் 77 நாட்கள் என ஓடி நல்ல வெற்றி பெற்றது. "எங்க மாமா" சிறிய ஊர்களிலும் 4 வாரங்கள் முதல் 6 வாரங்கள் வரை ஓடி வெற்றிப்படமாகவே திகழ்ந்தது. மறுவெளியீடுகளிலும் பெரிய வெற்றியைக் குவித்துள்ளது. "எங்க மாமா" வெளியான போது 1969 தீபாவளி வெளியீடான "சிவந்த மண்" இமாலய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. "எங்க மாமா" வெளியான அடுத்த மாதத்திலேயே "விளையாட்டுப் பிள்ளை" வெளியானது. அப்போதும் "சிவந்த மண்" இமாலய வெற்றியை அடைந்து தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்தச் சூழலில் 1970 தமிழ்ப் புத்தாண்டையொட்டி நமது நடிகர் திலகத்தின் சொந்தத் தயாரிப்பான "வியட்நாம் வீடு" வெளியானது. இப்பேர்ப்பட்ட - நடிகர் திலகத்தின் படங்களே நடிகர் தில்கத்தின் படங்களுக்கு வில்லனாக வரும் - போட்டியில், "எங்க மாமா" நல்ல வெற்றிப்படமாக திகழ்ந்ததே சிறந்த விஷயம். அதே சமயம், மக்கள் திலகத்தின் "மாட்டுக்கார வேலன்" இமாலய வெற்றி கண்டு வெள்ளிவிழா ஓடியதற்கு ஒரு சிறந்த காரணமும் உண்டு. 1969 தீபாவளி வெளியீடான "நம் நாடு" சூப்பர்ஹிட் ரேஞ்சில் ஓடிக் கொண்டிருந்த நிலையில் "மாட்டுக்கார வேலன்" வந்தது. "மாட்டுக்கார வேல"னுக்குப் பின் 4 மாதங்கள் கழித்து தான் மக்கள் திலகத்தின் அடுத்த படமான "என் அண்ணன்" [வெளியான தேதி : 21.5.1970] வெளிவந்தது. எனவே, "மாட்டுக்கார வேலன்" தொய்வின்றி தொடர்ந்து வெற்றிகரமாக ஓடியது. மக்கள் திலகத்தையோ அவரது சாதனைகளையோ குறைத்துக் கூறுவதாகக் கருத வேண்டாம். தமிழ்த் திரையுலகில் நடிகர் திலகமும், மக்கள் திலகமும் நிகழ்த்தியிருக்கும் அபரிமிதமான சாதனைகளை வேறு எவரும் நிகழ்த்தியதில்லை, நிகழ்த்தப்போவதுமில்லை. நடிகர் திலகமும், மக்கள் திலகமும் தமிழ்த் திரையுலகின் இரு கண்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

நடிகர் திலகத்தின் எல்லையில்லா நடிப்பின் சிறப்புகளுக்கு கட்டியம் கூறும் இன்னொரு படம் "எங்கிருந்தோ வந்தாள்(1970)". நடிகர் திலகமும், கலைச்செல்வியும் போட்டி போட்டுக் கொண்டு வெளுத்து கட்டியிருப்பார்கள். ஜெயலலிதா அவர்கள் எப்பொழுதும் எந்த ஒரு நேர்காணலிலும்
திரையுலகில் தான் பணியாற்றிய படங்களில் மிகச் சிறந்த படமாக இந்தப் படத்தைப் பற்றித் தான் கூறுவார். அவர் சிறந்த நடிகையாக 'பிலிம்ஃபேர்' விருதெல்லாம் வாங்கிய படமாயிற்றே. தாங்கள் வகுத்துள்ள இரண்டாவது வகையில் இப்படத்தினை சேர்க்க வேண்டும் என்பது எனது எண்ணம். மூன்றாவது வகையில் சேர்ப்பதற்கு இதன் கூடவே வெளியான "சொர்க்கம்" ரெடியாக இருக்கிறது. 1970 தீபாவளி வெளியீடுகளாக வந்த [ஓரே தினத்தில் (29.10.1970) வெளியான] இந்த இரு படங்களும் 100 நாள் சூப்பர்ஹிட் படங்கள். ஒரே தினத்தில் இரண்டு படங்களை வெளியிட்டு, அந்த இரு படங்களையும் சூப்பர்ஹிட்டாக்கி, 100 நாள் விழாக் கொண்டாட வைக்கும் சாதனையை நமது சாதனைச் சக்கரவர்த்தியைத் தவிர இவ்வுலகில் வேறு எவரால் செய்ய முடியும். 1970-ல் "எங்கிருந்தோ வந்தாள்", "சொர்க்கம்" திரைப்படங்களின் மூலம் இதனை இரண்டாவது முறையாக செய்து காட்டினார் நமது சாதனைத் திலகம். ஏற்கனவே, இச்சாதனையை முதல் முறையாக 1967-ல் தீபாவளி வெளியீடுகளாக ஒரே தினத்தில் [1.11.1967], "ஊட்டி வரை உறவு" , "இரு மலர்கள்" திரைப்படங்களை வெளியிட்டு நிகழ்த்திக் காட்டினார். இந்த இரு படங்களுமே சூப்பர்ஹிட் ரேஞ்சில் ஓடி 100 நாள் விழாக் கொண்டாடியவை.

"எங்கிருந்தோ வந்தாள்" குறித்து இன்னொரு அபூர்வ தகவலையும் இங்கே பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன். கடந்த வருடம்(2010) ஜனவரி மாத இறுதியில் ஒரு இனிய மாலை வேளையில் சென்னை சாந்தி திரையரங்கிற்கு சென்றிருந்த போது, எதேச்சையாக சாந்தி திரையரங்க நிர்வாகி-மேலாளர் மாப்பிள்ளை திரு.வேணுகோபால் அவர்களை சந்திக்க நேர்ந்தது. எப்பொழுதும் நன்றாகப் பேசும் அவர், அன்றும் அதே போல் நன்றாக உரையாடி சில அரிய தகவல்களைக் கூறினார். அதில் ஒன்று "எங்கிருந்தோ வந்தாள்" படம் பற்றியது. அதை அவர் கூறியவாறே தருகிறேன்:

"இங்கே 'சாந்தி'யில் "எங்கிருந்தோ வந்தாள்" ஓடிக் கொண்டிருந்த சமயம், ஹிந்தி நடிகர் சஞ்சீவ் குமார் சென்னை வந்திருந்தார். சஞ்சீவ் குமார் சிவாஜியின் மிகப் பெரிய ரசிகர். அது மட்டுமல்ல, சிவாஜியை தனது குருநாதராக வரித்துக் கொண்டவர். ஹிந்தி ஒரிஜினலான "கிலோனா(1970)"வின் ஹீரோ. அவர் சென்னை வந்த அன்று, 'சாந்தி'யில் "கிலோனா"வின் தமிழ்ப்பதிப்பான "எங்கிருந்தோ வந்தாள்" வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை அறிந்து, மாலைக் காட்சி இங்கே படம் பார்க்க வந்தார். அவருடன் இன்னும் சிலரும் வந்திருந்தனர். அவரையும், அவருடன் வந்தவர்களையும் வரவேற்று அதன் பின்னர் இருக்கைகளுக்கு அழைத்து சென்று அமர வைத்தேன். நானும் அவர்களுடன் அமர்ந்து இன்னொரு முறை படம் பார்த்தேன். படம் ஆரம்பிக்கும் வரை நன்றாகப் பேசிக் கொண்டிருந்த சஞ்சீவ் குமார், படம் தொடங்கியதும் யாருடனும் எதுவும் பேசாமல், மிகுந்த ஆர்வத்துடன் கவனமாக படத்தைப் பார்த்து அதனூடே ஐக்கியமாகிக் கொண்டிருந்தார். இடைவேளை வந்தது. சஞ்சீவ் குமார் யாருடனும் எதுவும் பேசவில்லை. இறுக்கமாகக் காணப்பட்டார். இருக்கையை விட்டு வெளியே எழுந்து செல்லவும் இல்லை. இடைவேளை முடிந்து படம் தொடர்ந்தது. சில மணித்துளிகள் தான் ஆகியிருக்கும். சஞ்சீவ் குமார் இருக்கையை விட்டு எழுந்து என்னையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். அவருடன் வந்தவர்கள் மட்டும் இன்னும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். என் கையைப் பற்றிக் கொண்ட சஞ்சீவ் குமார் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார். படம் தொடங்கியதிலிருந்து அது வரை எதுவும் பேசாமலிருந்த அவர், என்னிடம் தனது மௌனத்தைக் கலைத்து ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். 'Saab, I feel very much guilty. Whatever Shivaji saab has done in this film, in that, I have not done even 10 percent. I did the original & I am the hero in it. But after watching this film, I certainly feel Shivaji saab is the real hero and this film is the original. Once again I feel really guilty & Sorry Sir, I am leaving' எனக் கூறி திரையரங்கை விட்டு புறப்பட்டுச் சென்று விட்டார்."

இது திரு.வேணுகோபால் அவர்களின் வாக்குமூலம். மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே!

தொடர்ச்சி அடுத்த பதிவில்...

pammalar
24th February 2011, 05:01 AM
முந்தைய பதிவின் தொடர்ச்சி...

சகோதரி சாரதாவுக்கு "ராஜா"வைப் பற்றி எழுத 10 பக்கம் வேண்டும் என்றால், அடியேனுக்கு "வசந்த மாளிகை" குறித்து எழுத ஒரு தனித்திரியே தேவை. அடியேன் பூமிக்கு வந்த எட்டாவது நாளில்(29.9.1972) வெளிவந்த காவியம். அடியேன் நடத்திய (நடத்தப் போகிற) - முழுக்க முழுக்க வாழ்வியல் திலகத்தின் புகழ் பாடுகின்ற - பத்திரிகைக்கும் (வசந்த மாளிகை) பெயராக அமைந்தது. 'Hai Handsome!' என்று யாரைக் கூப்பிட முடியும் "வசந்த மாளிகை" ஆனந்தைத் தவிர. படம் முழுமையுமே - இன்பத்தில் மிதந்தாலும் சரி, துன்பத்தில் திளைத்தாலும் சரி - the most handsome heroவாகக் காட்சியளிப்பார். படத்தின் நடுவில் வரும் ஒரு காட்சியில், அவரது அறையில் நாற்காலியில் அமர்ந்தபடியே எதிரில் இருக்கும் மேஜையின் மேல் இருக்கும் வசந்த மாளிகையின் வரைபடத்தை வனப்புடன் பார்த்து, பின் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே சற்று அண்ணாந்து "வசந்த மாளிகை" என்பாரே, கோடி கொடுக்கலாம் அந்த ஒரு சீனுக்கு. மழை சோவென்று ஜோராகக் கொட்டிக் கொண்டிருக்க, ஒரு குடிசையில் சொட்ட சொட்ட ஜோடியாக நுழைவர் ஆனந்தும், லதாவும். நனைந்த முந்தானையை லதா ஒட்டப் பிழிய, ஆனந்தின் பற்கள் plumsஐ சாறு பிழியும். காதலி லதாவின் இளமையை, அழகை ஆனந்தின் காந்தக்கண்கள் சுவைத்து ரசிக்க, கண்களுக்கு போட்டியாக அவரது வாய் plumsஐ சுவைத்து மகிழும். பின்னர் அங்கு 'எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக் கொள்ளி?!' (Sorry Joe) என எடுத்து அந்தக் கொள்ளிக்கட்டையால் சிகரெட்டைப் பற்ற வைக்கும் ஸ்டைல் இருக்கிறதே, அப்பப்பா... கொள்ளிக்கட்டையால் சிகரெட்டை ஸடைலாக பற்ற வைத்தவர் உலகிலேயே நமது ஸ்டைல் சக்கரவர்த்தி ஒருவராகத்தான் இருக்க முடியும்.

தெலுங்கில் "பிரேம நகர்(1971)" இமாலய வெற்றி என்றால், தமிழில் "வசந்த மாளிகை(1972)" விண்ணைத் தொடும் வெற்றி! இந்தியாவில் 200 நாட்களும், வெளிநாடான இலங்கையில் 287 நாட்களும் ஓடி மெகாமகாஹிட். இப்படி நம் நாட்டிலும், அயல் நாட்டிலும் 200 நாட்களைக் கடந்த இரண்டாவது படம் "வசந்த மாளிகை". முதல் படம், நடிகர் திலகத்தின் முதல் படம் "பராசக்தி(1952)". இந்தியாவில் 245 நாட்களும், இலங்கையில் 294 நாட்களும் ஓடியது. "வசந்த மாளிகை"யின் விண்ணை வீழ்த்திய வெற்றி, தெலுங்கு படத் தயாரிப்பாளர்களையெல்லாம் தமிழ்ப்படவுலகின் பக்கம் திருப்பியது. அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து படம் தயாரிக்கலானார்கள். 1931- ம் ஆண்டு தொடங்கிய தமிழ் சினிமாவிற்கு தற்பொழுது முத்துவிழா ஆண்டு [80வது ஆண்டு]. இந்த 80 ஆண்டுகளில், மறுவெளியீடுகளில், தென்னகமெங்கும் பட்டிதொட்டியெல்லாம் "வசந்த மாளிகை" ஓடியிருப்பதைப் போல் வேறு எந்தப்படமும் ஓடியதில்லை என அடித்துக் கூற முடியும். வெள்ளித்திரையில் மட்டுமா, சின்னத்திரையிலும் சரி, VCD-DVD விற்பனையிலும் சரி, மாளிகைக்கு நிகர் மாளிகையே. சிவாஜி அவர்களை நேரில் பார்க்காத கண்கள் இருக்கலாம். ஆனால் "வசந்த மாளிகை" திரைக்காவியத்தை திரையில் காணாத கண்கள் இருக்க முடியாது, இருக்கவே முடியாது.

ஆடல்-பாடல் இல்லாத படத்தில் நடிப்பார், காலில் செருப்பு அணியாமல் படம் முழுமையும் நடிப்பார், ஜோடியை நாடுவோரிடையே ஜோடியில்லாமல் நடிப்பார், படத்தில் பாட்டிருக்க தான் மட்டும் பாடாமல் நடிப்பார், வெறும் வேட்டி-சட்டையில் மட்டுமே மைல்கல்லை(150)த் தாண்டுவார்,

ஓரே பேண்ட்-ஷர்டிலும் படம் முழுவதும் வலம் வருவார், "நீதி(1972)"யை வாழ வைப்பதற்காக. நீதியைப் பொறுத்தவரை அதில் பங்கு கொண்ட எல்லோருமே நன்றாகச் செய்திருப்பார்கள். நடிகர் திலகத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ! சிறந்த கலைஞரான சந்திரபாபு போன்றோரெல்லாம் சிதிலமடைந்துவிடக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் அவருக்கு தொடர்ந்து நல்ல ரோல் கொடுக்கச் செய்திருப்பார். "நீதி" - 100 நாள் பெருவெற்றிப்படம்.

அமைதியையும், அதிரடியையும் ஓரே படத்தில் காண வேண்டுமா?! பாருங்கள் "எங்கள் தங்க ராஜா(1973)". பட்டாக்கத்தி பைரவன் அதிரடியின் உச்சம்! டாக்டர் ராஜா அமைதியின் உச்சம்! ஒரே நபர் இரு வேடங்களில் உச்சங்களைத் தொடும் போது மற்றவர்க்கு ஏது மிச்சம்?! "எங்கள் தங்க ராஜா" - 100 நாள் இமாலய வெற்றிப்படம். பாரிஸ்டர் மட்டும் சற்று தாமதித்திருந்தால், பைரவன் தனது பட்டாக்கத்தியை வெள்ளிவிழா வரை வீசியிருப்பார். ("பாரிஸ்டர் தாமதமாக வரணுமா, சொல்வது யார் பம்மலாரா, யோவ் பம்மலாரே, உடம்பு எப்படி இருக்கு?!" என பாரிஸ்டரின் மெய்க்காப்பளர் மோகனரங்கன் முணுமுணுப்பது காதில் விழுகிறது).

அகம் அழும், புறம் சிரிக்கும் : "அவன் தான் மனிதன்(1975)" ரவிகுமார். படம் முழுமையும் அவரது முகத்தில் கம்பீரமும், மிடுக்கும் சிலிர்த்தோடும். அதனூடே ஒரு மெல்லிய சோகமும் இழைந்தோடும். நூலின் மேல் நடப்பது போன்ற கடினமான கதாபாத்திரம். 'ஃப்பூ' என அதை ஊதித் தள்ளியிருப்பார் நடிகர் திலகம். இப்படம் தங்களின் மூன்றாவது பிரிவில் தான் சேர வேண்டும். ஏனெனில், இன்றளவும் பற்பல ரசிகர்கள் அவரது 288 திரைப்படங்களில் மிகவும் பிடித்த படமாக மட்டுமல்ல, தங்களுக்கு பித்து பிடித்த படமாகவும் கூறுவது இந்தப்படத்தைத்தான். 100 நாள் சூப்பர்ஹிட் காவியம் என்பதில் மாற்றுக் கருத்தும் உண்டோ!

'நன்றி' என்ற மூன்றெழுத்தின் உதாரண புருஷன் இரண்டெழுத்து "பாபு(1971)". இறைத்தன்மை கொண்ட ஒரு மனிதனின் பாத்திரத்தை, அந்த இரு தன்மைகளையும் ஒருங்கே கொண்ட அண்ணலைத் தவிர வேறு யாரால் தத்ரூபமாக சித்தரித்து காட்ட முடியும். BABU is purely a ONE-MAN SHOW. உடன் வந்த வண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கிய 100 நாள் சுப்ரீம்ஹிட்.

இந்த எளியேனுக்கு தெரிந்த ஏதோ சில தகவல்களையும் சேர்த்து, தங்களது கட்டுரைக்கு பதில் பதிவாக பதிவிட, தங்களது கட்டுரையின் மூலம் ஒரு வாய்ப்பை நல்கியமைக்கு மனமார்ந்த நன்றி!

தங்களின் அடுத்த கட்டுரையை ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன்!

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
24th February 2011, 12:08 PM
டியர் பாரத்தசாரதி,

நடிகர்திலகத்தின் ரீமேக் படங்களைப்பற்றிய ஆய்வு மிகப்பிரமாதம். வெகு நேர்த்தியாக அச்லையும் நகலையும் ஒப்பிட்டிருக்கிறீர்கள். அதாவது, பம்மலார் சொன்னது போல, நடிகர்திலகம் ஒரு ரீமேக் படத்தில் நடித்துவிட்டாரென்றால், இவர் நடித்தது அசல் என்றாகி, ஒரிஜினல் படம் நகலென்றாகி விடும். அந்த அளவுக்கு மெருகேற்றி விடுவார்.

கூடவே தெலுங்கு, இந்தி, கன்னபடங்களின் மூலப்படம் பற்றிய அரிய தகவல்களும் சுவையாக உள்ளன. இத்தகவல்கள் நாங்கள் அறிந்திராதவை. அவன்தான் மனிதன் படத்தில், ஊஞ்சலுக்குப்பூச்சூட்டி பாடலின்போது, கால் சரியானதும், கையில் குடையைப்பிடித்துக்கொண்டு சிறுகுழந்தயைப்போல துள்ளி ஓடும் குதூகலம், மெரூன் கலர் டிரஸ்ஸில் (பம்மலாரிடம் நீங்கள் மேற்கோள் காட்டியிருந்த) மேட்டின் மீது ஒருமாதிரி கையை வீசிக்கொண்டு நடக்கும் அழகு இவற்றை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது, சலிக்காது. அதுபோல ஜெயலலிதாவை சந்திக்க இருக்கும் கட்டத்தில் கருப்பு கோட்டை செலக்ட் செய்து அணிந்துகொண்டு, கண்ணாடியைப்பார்த்து நெற்றியிலிருக்கும் ஒரே ஒரு நரைத்த முடியை பிடுங்கும் லாவகம், மற்றும் 'மனிதன் நினைப்பதுண்டு' பாடலில் கடற்கரையில் நடக்கும்போது தோளில் அமர்ந்திருக்கும் புறா விழுந்துவிடாமல் கவனமாக அதே சமயம் பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல முகபாவம் காட்டுவது எல்லாமே ஏக அமர்க்களம்.(படத்தில் மேஜர்தான் சற்று லிமிட் தாண்டிவிட்டாரோ என்று எண்ணத்தூண்டும்).

பாபு படத்துக்கு 'விகடன்' எழுதியிருந்த விமர்சனத்தில், 'என்னதான் படத்தின் இளமைக்கும் காதல் காட்சிகளுக்கும் சிவகுமாரும் நிர்மலாவும் பொறுப்பேற்றிருந்தாலும், நம்மை மிகவும் கவர்வது படத்தின் துவக்கத்தில் சட்டென்று மின்னல் போல தோன்றி மறைந்த சிவாஜி விஜயஷ்ரீ காதல்தான்' என்று குறிப்பிட்டிருந்தனர்.

தொடர்ந்து உங்கள் ஆய்வுக்கட்டுரைகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

saradhaa_sn
24th February 2011, 01:05 PM
டியர் பம்மலார்,

சாரதியின் கட்டுரைக்கு பதில் சொல்லும் முகமாக, நீங்களும் அற்புதமான ஆய்வுக்கட்டுரை எழுதிவிட்டீர்கள். குறிப்பாக 'வசந்த மாளிகை' பற்றிய ஆய்வு. (என்ன இருந்தாலும், பல ஆண்டுகள் 'வசந்த மாளிகை'யில் குடியிருந்தவர் அல்லவா தாங்கள்).

கூடவே, நமக்கு எப்போதும் இனிக்கும் கற்கண்டாகத்திகழும், சாதனை விவரங்கள். எந்த எந்தப்படங்களுக்கு எந்தப்படங்கள் இடைஞ்சலாக வந்தன. அவை எப்படி ஒன்றையொன்று முந்தி சாதனைச் சுவடுகளைப்பதித்தன என்ற விவரங்கள்.

1970 படங்களைப் பற்றிச்சொல்லும்போது 'வியட்நாம் வீடு' வரை வந்தீர்கள். அதற்கடுத்துதான் நம் மனதில் தீராத வலியாக, நீங்காத வடுவாக அமைந்த ஒரு விஷயம்.... சிகரங்கள் சங்கமித்து, மிக அற்புதமான படமாக அமைந்தும் மக்களால் கொண்டாடப்படாத "எதிரொலி". சமீபத்தில்கூட அப்படத்தை ஒரு சேனலில் ஒளிபரப்பினர். என்ன அருமையான படம், என்ன அழகான கதைமுடிச்சு, எப்படிப்பட்ட நேர்த்தியான இயக்கம், நடிகர்திலகத்தின் இமாலய பெர்பார்மென்ஸ், அதற்கு ஈடு கொடுத்து ஒவ்வொருவரும்... சும்மா சொல்லவில்லை... ஒவ்வொருவரும் நடித்திருந்த விதம், எவ்வளவு நட்சத்திரங்கள்.... நடிகர்திலகம், புன்னகை அரசி, இலட்சிய நடிகர், மேஜர் (வில்லன்), டி.எஸ்.பாலையா, சிவகுமார், லட்சுமி, நாகேஷ், ஓ.ஏ.கே.தேவர், வி.எஸ்.ராகவன், ரோஜாரமணி.. இவர்களோடு, தங்கள் வழக்கமான கவர்ச்சி நடிப்பை மூட்டைகட்டி வைத்துவிட்டு, குணசித்திர நடிப்பில் அசத்திய விஜயலலிதா, ஜோதிலட்சுமி... இவர்களோடு இப்படமெனும் கப்பலை மிக சிறப்பாக செலுத்திய இயக்குனர் சிகரம் கே.பி....

தமிழக மக்கள் எதை எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள்.....????????????????????????.

//'நன்றி' என்ற மூன்றெழுத்தின் உதாரண புருஷன் இரண்டெழுத்து "பாபு(1971)". இறைத்தன்மை கொண்ட ஒரு மனிதனின் பாத்திரத்தை, அந்த இரு தன்மைகளையும் ஒருங்கே கொண்ட அண்ணலைத் தவிர வேறு யாரால் தத்ரூபமாக சித்தரித்து காட்ட முடியும். BABU is purely a ONE-MAN SHOW. உடன் வந்த வண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கிய 100 நாள் சுப்ரீம்ஹிட்.//

மிகச்சரியாகச்சொன்னீர்கள். முன்பெல்லாம் 1965 பொங்கல், 1970 பொங்கல் இவற்றோடு போரிட வரும் மாற்று முகாமினரைத்தாக்க, நான் கைக்கொள்ளும் பிரம்மாஸ்திரம் 1971 தீபாவளிதான். இந்தப்பக்கம் கருப்புவெள்ளை, ஓட்டைக்குடிசை, கைரிக்ஷா.. அந்தப்பக்கமோ வண்ணம், பிரம்மாண்டம், இரட்டை வேடங்கள். (இப்போது எதிர்ப்புக்கள் நீர்த்துப்போய் விட்டதால் நானும் பேசுவதில்லை).

நீங்கள் சொன்னதுபோல 'பாரிஸ்ட்டர்' தாமத்திக்க வேண்டியது கூட அவசியமில்லை. வேறு கோர்ட்டுக்கு (அரங்குக்கு) போயிருந்தால் கூட, டாக்டரும் பைரவனும் வெள்ளிவிழாவைக் கண்டிருப்பார்கள். ஆனால் உயர்நீதி மன்றத்துக்குத்தான் வருவேன் என்று வந்ததாலேயே 119 நாட்களில், மக்கள் ஆதரவு இருந்தும் வெளியேற வேண்டியதாகிவிட்டது. இப்படி தவறவிட்டவை நிறைய.

வழக்கம்போல அசத்துகிறீர்கள். மேலும் மேலும் அசத்திக்கொண்டேயிருங்கள்.

parthasarathy
24th February 2011, 01:55 PM
டியர் பம்மலார் சார்,

தங்களின் பாராட்டுதல்களுக்கு நன்றி. உங்களைப் போன்ற தொடர்ந்து அரிய தொண்டாற்றி வருபவர்களா தங்களை "எளியேன்" என்று சொல்வது. இது உங்கள் அவை அடக்கத்தைக் காட்டுகிறது. பல புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் தங்கள் முன் நான் முன் எம்மாத்திரம்? இருப்பினும், இந்தக் கட்டுரை உங்களை மேலும் விரிவாக நடிகர் திலகத்தின் சாதனைகளையும் அவரது அற்புத நடிப்பினையும் எழுத தூண்டியதற்கு நான் கடவுளுக்கும் கலைக்கடவுள் நடிகர் திலகத்துக்கும் நன்றி கூறுகிறேன்.

இந்தக் கட்டுரைகளை இன்னமும் விரிவாக பதிய முயற்சி செய்தேன். நேரமின்மை காரணாமாக முடியவில்லை. முக்கியமாக, எங்கள் தங்க ராஜாவில் வரும் அந்த பட்டாக் கத்தி பைரவன் கதாபாத்திரத்தையும் அதில் அவர் காட்டிய அந்த energy -யையும். இன்னும் வசந்த மாளிகையைப் பற்றிக் குறிப்பிடும் போது, பல இடங்கள். கடைசி நேரத்தில் இந்தக் கட்டுரையை upload செய்யும்போது, பத்தாயிரம் வார்த்தைகளுக்கு மேல் பதிவு செய்யக் கூடாது (இது இந்தக் கட்டுரையின் இரண்டாவது பாகத்திற்கு மட்டும்) என்று ஒரு டயலாக் பாக்ஸ் வந்தது. அதனால், சில கருத்துகளை நீக்கி பதிய வேண்டியதாகி விட்டது.

இனி வரும் கட்டுரைகளில், இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து விடலாம் என்று யோசித்தால், அது முடியாத காரியமல்லவே. ஏனென்றால், எவ்வளவு முறை எழுதினாலும், எத்தனை பேர் எழுதினாலும், புதியதாக ஒரு சிந்தனையும், அலசலும், ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகரும் பதிந்து கொண்டேதான் இருப்பார். இருந்தாலும், விடாது முயற்சி செய்வோம்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
24th February 2011, 02:01 PM
சாரதா மேடம்,

தங்களின் பாராட்டுதல்களுக்கு நன்றி. இந்தக் கட்டுரை உங்களையும், பம்மலார் சாரையும் மேலும் விரிவாக நடிகர் திலகத்தின் சாதனைகளையும் அவரது அற்புத நடிப்பினையும் எழுத தூண்டியதற்கு நான் கடவுளுக்கும், கலைக்கடவுள் நடிகர் திலகத்துக்கும் நன்றி கூறுகிறேன்.

ஒரு சிறிய திருத்தும். நடிகர் திலகம் "அன்பு நடமாடும்" பாடலின்போது தன் கடைசி சரணத்தில், ஊன்றுகோலாய் எரிந்து விட்டு ஒருமாதிரி ஸ்டைலாக குடையைப் பிடித்தபடி ஓடி வந்து பாடத் துவங்குவார்.

அன்புடன்,

பார்த்தசாரதி

pammalar
24th February 2011, 08:21 PM
விரைவில் வருகிறது

சென்னை 'சாந்தி சினிமாஸ்'ஸில்

கலையுலக மகானின் "திருவருட்செல்வர்"

அரங்க வளாகத்தில் இக்காவியம் வெளிவரப்போவதைக் குறிக்கும் வண்ணம் மூன்று டிசைன்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

பொதுமக்களும், ரசிகர்களும் மலைப்புடன் பார்த்து செல்கின்றனர்.

சிவபெருமானின் நாயன்மார்களை வரவேற்க சிவாஜி பெருமானின் நாயன்மார்கள் காத்திருக்கின்றனர்.

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
25th February 2011, 03:35 AM
சகோதரி சாரதா,

தங்களின் வசந்தமான பாராட்டுக்கு எனது வளமான நன்றிகள் !

50 நாள் படமான "எதிரொலி", மிகப் பெரிய அளவில் ஒலிக்காதது வலிக்கத் தான் செய்கிறது.

தாங்கள் குறிப்பிட்டது போல் பாரிஸ்டர் 25.10.1973 அன்று உயர்நீதிமன்றத்துக்கு(சென்னை 'சாந்தி')த் தான் வந்தார். 15.7.1973 முதல் இங்கே தனது பட்டாக்கத்தியை பறக்க விட்ட பைரவர், பாரிஸ்டருக்காக வழிவிடும் போது 102 வெற்றி நாட்களை பூர்த்தி செய்திருந்தார். தாங்கள் குறிப்பிட்ட 119 நாட்கள் என்பது, பைரவர் அவர்கள், கடல் கடந்த இலங்கையில் ஜெயக்கொடி நாட்டிய நாட்கள்.

ராஜ பைரவர் (Raja-Bhairavar), சென்னை(3 அரங்குகள்), மதுரை, திருச்சி, சேலம், கோவை, நெல்லை, நாஞ்சில், கொழும்பு, யாழ்ப்பாணம் என இந்தியாவிலும், இலங்கையிலும் மொத்தம் 9 ஊர்களில் (11 அரங்குகளில்) 100 நாட்களைக் கடந்தார்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th February 2011, 03:40 AM
டியர் பார்த்தசாரதி சார்,

தங்களின் உயர்வான பாராட்டுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் ! நம் எல்லோரையுமே, நமது இதயதெய்வமான நடிகர் தில்கம் தான், நம்முள்ளிருந்து இயக்கி நம்மை எழுத வைக்கிறார். எல்லாப்புகழும் இதயதெய்வத்திற்கே! நாம் அனைவரும் அவரது திருத்தொண்டர்கள். தாங்கள் குறிப்பிட்டது போல் விடாது முயற்சி செய்து அவர் புகழ் பாடுவோம்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th February 2011, 04:17 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 177

கே: ஜெயலலிதாவை மேடையில் முதலில் பாராட்டிய நடிகர் யார்? (கே.எல்.சிவாஜி கன்னியப்பன், மலேசியா)

ப: சிவாஜி கணேசன். ஜெயலலிதாவின் நடன அரங்கேற்றத்திற்குத் தலைமை வகித்துப் பாராட்டிய அவர், "தங்கச்சிலை" என்று ஜெயலலிதாவையும் குறிப்பிட்டிருக்கிறார்.

(ஆதாரம் : பொம்மை, ஜூன் 1969)

இன்று 24.2.2011 முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் திலகத்துடன் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர், கலைச்செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 63வது பிறந்த தினம்.

அன்புடன்,
பம்மலார்.

parthasarathy
25th February 2011, 01:30 PM
எனக்கு, 1981 -இல் இருந்து ஒரு புதிய நண்பன் அறிமுகம் ஆனான். அவன் என்னை விட 5 வயது மூத்தவனாயிருந்தாலும், ரொம்பவே நெருக்கம் என்பதால், உரிமையோடு ஏக வசனத்தில் அழைக்கிறேன். அவனும் நடிகர் திலகத்தின் பக்தன் தான். நாங்கள் சேர்ந்து பார்த்த முதல் படம் "இருவர் உள்ளம்". அதற்கு முன், அந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. நடிகர் திலகம் நடித்த 1967 -க்கு முன் வந்த படங்களை 1978 - க்கு மேல் தான் ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தேன். அது ஒரு working week. மேலும், காலைக் காட்சி, ஆனால், திரை அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இருவர் உள்ளம் அப்போது (1982 -83 என்று நினைவு) சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்டு நூறு நாட்களை ஷிப்டிங் முறையில் கடந்து சென்னையையே உலுக்கி விட்டது. இத்தனைக்கும், ரஜினி, கமல் மற்றும் இளைய தலைமுறை நடிகர்கள் அநேகமாக தங்களை establish செய்து விட்டிருந்தனர்.

பலரும், படம் ஆரம்பித்து விட்டதா என வினவிக் கொண்டே அவசர அவசரமாக அரங்கத்தினுள் நுழைந்து கொண்டிருந்தனர். படம் தொடங்குவதற்கு முன்னர், அநேகமாக ஒருவர் கூட விடாமல், அனைவரும் அரங்கத்தினுள் நுழைந்து விட்டனர். எனக்கு புரியவில்லை. என் நண்பன் சொன்னான் "இந்தப் படம் மற்றும் வசந்த மாளிகை-ஐயும் பார்த்து தான் நான் நடிகர் திலகத்தின் பக்தனானேன் என்று கூறி, இந்த இரண்டு படத்திலும், முக்கியமாக, இருவர் உள்ளம் படத்தில், டைட்டில் காட்சியிலிருந்தே, நடிகர் திலகத்தின் ஆட்சி ஆரம்பமாகி விடும். பார்த்து ரசி என்றான். (இரண்டு படங்களும் அநேகமாக ஒரே ஸ்டோரி லைன் தான்). டைட்டில் ஓட ஆரம்பித்தவுடன், காரில் அமர்ந்து கொண்டே, நடிகர் திலகம் படா ஸ்டைலாக, தன் தலையிலிருந்து தொப்பியை எடுத்து, அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து "ஹலோ" என்று அறிமுகப் படுத்திக் கொள்வது போல் ஆரம்பித்த உடனே எழுந்த ஆரவாரம், பாடல் முடிவடையும் வரை அடங்காமல் அதிகரித்துக் கொண்டே போனது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அதுவும் அந்தப் பாடலின் கடைசி சரணத்தில், "இரவு பகல் என்று எதுவுமில்லை இங்கு.." என்று ஆரம்பிக்கும்போது, தனது தொப்பியைப் பிடித்துக் கொண்டே அவர் ஒரு நடை நடப்பார். எனக்குத் தெரிந்து, ஆபரேடர் கூட படத்தை ஓட்ட மறந்து, கை தட்டி ஆர்ப்பரித்திருப்பார். அதற்குப் பின், இருவர் உள்ளம் படத்தை குறைந்தது இருபது முறை பார்த்திருப்பேன். இந்தப் படத்தில் உள்ளது போன்ற ஒரு flow -வை அதற்கு முன்னரும் பின்னரும், இது வரையிலும், தில்லானா மோகனாம்பாள் தவிர்த்து வேறெந்தப் படத்திலும் கண்டதில்லை. இந்தப் படத்தின் DVD சற்று முன்னர்தான் வெளியிடப் பட்டது.

அன்புடன்,

பார்த்தசாரதி

joe
25th February 2011, 01:37 PM
இருவர் உள்ளம் அப்போது (1982 -83 என்று நினைவு) சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்டு நூறு நாட்களை ஷிப்டிங் முறையில் கடந்து சென்னையையே உலுக்கி விட்டது.

1992 -ல் நான் திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது யாரும் எதிர் பாராத வகையில் புதிய படங்கள் வெளியாகும் ஸ்டார் திரையரங்கில் இருவர் உள்ளம் திரையிடப்பட்டது ..நடிகர் திலகத்தின் படங்களை பார்க்க திருச்சியின் இண்டு இடுக்குகளில் உள்ள பழைய திரையரங்குகளிலேயே ஆஜராகும் நான் இந்த வாய்ப்பை விடுவேனா ? சுமாரான கூட்டத்தை எதிர்பார்த்து சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது . புதிய படத்துக்கு நிகரான கூட்டம் , அரங்கு நிறைந்தது ..ஆரவாரத்துக்கும் குறைவில்லை.

pammalar
25th February 2011, 06:00 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 178

கே: நடிகர் திலகம் சிவாஜி நடிக்க வேண்டிய படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த விசித்திரம் உண்டா? (த.சத்யநாராயணன், அயன்புரம்)

ப: "சிவாஜிக்கான கதையில் எம்.ஜி.ஆர். நடித்ததில்லை. ஆனால் எம்.ஜி.ஆருக்கான கதையில் சிவாஜி நடித்ததுண்டு. காத்தவராயன், ராணி லலிதாங்கி, எங்க மாமா போன்ற படங்களில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்து சில காட்சிகள் கூட படமாக்கப்பட்டு பிறகு எம்.ஜி.ஆர் அந்தப் படத்திலிருந்து விலகி அதில் சிவாஜி நடித்துக் கொடுத்தார். எந்த ஈகோவும் பார்க்காமல் சிவாஜி நடித்துக் கொடுத்தது உயர்ந்த கலைஞனுக்கான அடையாளம்" என்கிறார் 'இதயக்கனி' விஜயன்.

(ஆதாரம் : குமுதம், 2.3.2011, "லைட்ஸ் ஆன் சுனிலிடம் கேளுங்கள்" பகுதி) [லேட்டஸ்ட் குமுதம் இதழ்]

அன்புடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
25th February 2011, 11:06 PM
டியர் பார்த்தசாரதி சார்
நமது threadல் நடுவில் சற்று கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது போல் இருந்தது. தங்கள் வரவால் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளீர்கள்.

மேலும் தங்களின் கருத்துக்களை எதிர்நோக்கும்
அன்பன்,
ராதா.

guruswamy
25th February 2011, 11:16 PM
My Dear NT Fans,

Hope all are doing well. Kindly allow me few days time to get back to our legend forum. I extend my sincere thanks to all our beloved fans for all the good wishes for my exams.

Jai Hind
M. Gnanaguruswamy

J.Radhakrishnan
25th February 2011, 11:18 PM
பம்மலார் சார்,
தங்களின் வசந்தமாளிகை ஆய்வு என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றுவிட்டது.
இந்த படம் காண என் தாய் மாமாவுடன் சைக்கிளில் 16km சென்ற நினைவு வருகிறது.

Radha

pammalar
26th February 2011, 12:28 AM
டியர் பார்த்தசாரதி சார் & ஜோ சார்,

"இருவர் உள்ள"த்தை கொள்ளை கொள்ளாத உள்ளமும் உண்டோ !

டியர் ஜேயார் சார்,

பாராட்டுக்கு நன்றி ! என்ன இருந்தாலும் அவையெல்லாம் பசுமை நிறைந்த நினைவுகளல்லவா !

அன்புடன்,
பம்மலார்.

parthasarathy
26th February 2011, 12:25 PM
டியர் Joe மற்றும் பம்மலார் அவர்களுக்கு,

நடிகர் திலகத்தின் ஏராளமான படங்கள் ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றாலும், குறிப்பாக குறைந்தது, ஐம்பது படங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். அதாவது, ஒட்டு மொத்தமாக ஒவ்வொருவர் மனத்திலும் ஐம்பது. மேலும் பல படங்கள் ரசிகர் வட்டத்தைத் தாண்டி ஒரு சமூகத்தையே கட்டிப் போட்டு விடும். இருவர் உள்ளம் வந்த புதிதிலும் தொடர்ந்து மறு வெளியீடுகளிலும், பல இடங்களில் ஏற்படுத்திய அலை மலைக்க வைப்பதாகும். இது பெண் மனம் என்ற பெரிய வாசகர் கூட்டத்தைக் கொண்ட "லக்ஷ்மி என்ற புனைப்பெயரைக் கொண்டு கதைகள் எழுதி வந்த "திரிபுரசுந்தரி" அவர்களது நாவலாகும். இது நாடகமாகவும், நடிகர் திலகம் மற்றும் பத்மினி அவர்களால் நடிக்கப் பட்டதாகக் கூறுவார். இது படமாக எடுக்கப்படும்போது, பத்மினி திருமணம் புரிந்துகொண்டு அமெரிக்கா சென்று விட்டதால், ஒரு வேளை அவர்களால் திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் போயிருக்கலாம். இந்த விவரங்கள், பம்மலார் மற்றும் முரளி அவர்களால் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும். ஆனால், என்னைப் போருதுஅவரை, இந்தக் கதாபாத்திரத்தில், சரோஜா தேவி தவிர்த்து (தேவிகா அவர்களும் ஒரு தொண்ணூறு சதவிகிதம்) வேறு எந்த நடிகையாலும் அந்த அளவிற்கு பொருந்தி செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. இது ஒரு லவ் சப்ஜெக்ட் என்பதால், அந்த நேரத்தில் நடித்துக் கொண்டிருந்த சரோஜா தேவி மற்றும் தேவிகா மட்டும் தான் இதற்கு பொருந்தி இருப்பார்கள். ஏனென்றால், அந்த நேரத்தில் சாவித்திரியும் பத்மினியும் ஓரளவு முதிர்ந்த நடிகையாகி விட்டிருந்தனர்.

நடிகர் திலகம் ஒரு இயக்குனரின் கலைஞன் என்பதற்கு இந்த ஒரு படம் போதும் கட்டியம் கூற. எந்த ஒரு பாத்திரத்திலும், அவர் அளவிற்கு இலகுவாக பொருந்தக் கூடிய கலைஞன் இல்லை. அதனால் தான் அவருடைய versatility -ஐப் பற்றி இன்னமும் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோம் (YGM சோ உட்பட). இது போல் இன்னும் எத்தனையோ படங்களைப் பற்றி விரிவாக அலச வேண்டியுள்ளதால், இப்போதைக்கு சுருக்கமாக முடித்துக் கொள்ளலாம்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
26th February 2011, 02:21 PM
டியர் பார்த்தசாரதி சார்
நமது threadல் நடுவில் சற்று கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது போல் இருந்தது. தங்கள் வரவால் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளீர்கள்.

மேலும் தங்களின் கருத்துக்களை எதிர்நோக்கும்
அன்பன்,
ராதா.

டியர் jr அவர்களே,

நன்றி. இந்தத் திரிக்கு தோய்வேதும் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை. புதியதாய் ஒரு உறுப்பினர் அதுவும், நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவரே உள்ளே நுழையும்போது, புதிது புதியதாய் கருத்துகளும் பகிர்தலும் நேர்வதால், விறுவிறுப்பு கண்டிப்பாகக் கூடும். எனக்குத் தெரிந்து, நடிகர் திலகத்தின் திரி மட்டும் தான் இதனை திரிகளுடன் மேலும் மேலும் வலுவடைந்து கொண்டே போகின்றது. (யாராவது திருஷ்டி சுற்றிப் போடுங்களேன்.).

அன்புடன்,

பார்த்தசாரதி

joe
26th February 2011, 02:25 PM
புதியதாய் ஒரு உறுப்பினர் அதுவும், நடிகர் திலகத்தின் ரசிகர் ஒருவரே உள்ளே நுழையும்போது, புதிது புதியதாய் கருத்துகளும் பகிர்தலும் நேர்வதால், விறுவிறுப்பு கண்டிப்பாகக் கூடும்.
புதிதாக உறுப்பினர்கள் நுழைவது பெரிதல்ல ..ஆனால் நுழைபர்கள் பார்த்தசாரதி போல ஏற்கனவே இருப்பவர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஆர்வமும் புதிய தகவல்களும் கொண்டிருப்பது தான் இந்த திரியின் சிறப்பு.

parthasarathy
26th February 2011, 04:21 PM
புதிதாக உறுப்பினர்கள் நுழைவது பெரிதல்ல ..ஆனால் நுழைபர்கள் பார்த்தசாரதி போல ஏற்கனவே இருப்பவர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஆர்வமும் புதிய தகவல்களும் கொண்டிருப்பது தான் இந்த திரியின் சிறப்பு.

டியர் Joe ,

ஆஹா! (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்).

இன்னும் நிறைய பேர் வந்து கொண்டேதான் இருக்கப் போகிறார்கள்.

அன்புடன்,

பார்த்தசாரதி

saradhaa_sn
26th February 2011, 07:39 PM
டியர் பார்த்தசாரதி,

நீங்கள் குறிப்பிட்டது சரியே. பத்மினி 1961 மத்தியில் டாக்டர் ராமச்சந்திரனை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறியவர், மீண்டும் 1965-ல் தான் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வந்தார். முதல் படமாக 'சித்தி' 1966 பொங்கலுக்கு ரிலீஸானது.

1961-ல் 'புனர் ஜென்மம்' படத்துக்குப்பின் மீண்டும்
1967-ல் 'பேசும் தெய்வம்' படத்தில்தான்
நடிகர்திலகத்துடன் பத்மினி ஜோடி சேர்ந்தார்.

இடைப்பட்ட நாட்களில் கோலோச்சியவர்கள் சரோஜாதேவியும், தேவிகாவும்தான் என்றாலும், சரோஜாதேவி மக்கள் திலகத்துடன் அதிகமாக ஜோடி சேர்ந்ததால், நம்மவர்களால் 'நம்மவர்' என்று உரிமையோடு கொண்டாடப்பட்டவர் தேவிகாதான். (அதையும் முறியடிக்க 'ஆனந்த'மாக ஏற்றப்பட்ட 'ஜோதி', அந்த ஒரு படத்தோடு அணைந்துவிட்டது தெரிந்ததே).

pammalar
27th February 2011, 03:58 AM
இருவர் உள்ளம் வந்த புதிதிலும் தொடர்ந்து மறு வெளியீடுகளிலும், பல இடங்களில் ஏற்படுத்திய அலை மலைக்க வைப்பதாகும். இது பெண் மனம் என்ற பெரிய வாசகர் கூட்டத்தைக் கொண்ட "லக்ஷ்மி என்ற புனைப்பெயரைக் கொண்டு கதைகள் எழுதி வந்த "திரிபுரசுந்தரி" அவர்களது நாவலாகும். இது நாடகமாகவும், நடிகர் திலகம் மற்றும் பத்மினி அவர்களால் நடிக்கப் பட்டதாகக் கூறுவார். இது படமாக எடுக்கப்படும்போது, பத்மினி திருமணம் புரிந்துகொண்டு அமெரிக்கா சென்று விட்டதால், ஒரு வேளை அவர்களால் திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் போயிருக்கலாம். இந்த விவரங்கள், பம்மலார் மற்றும் முரளி அவர்களால் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும்.


டியர் பார்த்தசாரதி சார்,

'லக்ஷ்மி'யின் "பெண் மனம்", 2.6.1946 தேதியிட்ட 'ஆனந்த விகடன்' வார இதழில் தொடங்கி, தொடர்கதையாக வாராவாரம் பல்லாயிரணக்கான வாசகர்களை ஈர்த்த கதை(நாவல்). பின்னர் சென்னை திருமயிலையிலுள்ள 'பூங்கொடி பதிப்பக'த்தாரால் இதே பெயரில் புத்தக வடிவிலும் கொண்டு வரப்பட்டது. "பெண் மனம்" நாவல் விகடனில் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில், நமது சிவாஜி அவர்கள் சக்தி நாடக சபாவில் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார். கலைக்குரிசில் அவர்கள் 10.8.1946 அன்று சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். அதன் பின், 1950-ம் ஆண்டின் மத்திய பகுதி வரை - அதாவது 'பராசக்தி'யின் கதாநாயகனாக நடிக்கச் செல்லும் வரை - சக்தி நாடக சபாவில் ராஜபார்ட், ஸ்திரிபார்ட், கள்ளபார்ட் எனப் பல வேடங்களில் பற்பல நாடகங்களில் நடித்து அசத்தினார். ஆனால் அந்நாடகங்களில், "பெண் மனம்" என்ற பெயரிலோ அல்லது "இருவர் உள்ளம்" என்ற பெயரிலோ அவர் நடித்தாரா என்றால் எனக்குத் தெரிந்த வரை இல்லை. எனினும், ஜனவரி 1969 'பொம்மை' மாத இதழின் கேள்வி-பதில் பகுதியில், 'சிவாஜி அவர்கள் "பெண் மனம்" போன்ற பல ரேடியோ நாடகங்களில் நடித்திருக்கிறார்' என ஒரு அபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. (உங்களுக்காக அதையே 'கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது!' நெடுந்தொடர் தொகுப்பில் அடுத்த கேள்வி-பதிலாக - அடுத்த பதிவாக - பதிவிடுகிறேன்). வானொலி நாடகங்களில் அவர் நடித்திருக்கிறாரென்றால் அது சக்தி நாடக சபாவில் இருந்த காலகட்டத்தில்(1946-1950) தான் இருக்கும். அப்படியானால், விகடனில் வெளிவந்த லக்ஷ்மியின் "பெண் மனம்" நாவலும், இந்தப் "பெண் மனம்" ரேடியோ நாடகமும் ஒன்றாக (அதே கதையாக) இருக்க வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அதே காலகட்டத்தில் நடனமாமணிகளாக திகழ்ந்து வந்த லலிதா-பத்மினி-ராகினியில் நடுவரான பத்மினி இதில் நடித்தாரா என்று தெரியவில்லை. 1952-ல், திரையுலகில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்த காலத்தில், தனது நாடக உலக நண்பர்களை வாழ வைப்பதற்காக, 'சிவாஜி நாடக மன்றம்' தொடங்கினார் நமது செம்மல். இந்நாடக மன்றம் முழுமூச்சில் நடைபெற்று வந்த - 1952-ம் ஆண்டு முதற்கொண்ட 1974-ம் ஆண்டு வரையிலான - காலகட்டத்தில், இந்நாடக மன்றத்தின் சார்பில், "பெண் மனம்" என்ற பெயரிலோ அல்லது "இருவர் உள்ளம்" என்ற பெயரிலோ நாடகம் நடைபெறவில்லை. இது குறித்து மேலும் தகவல்களைத் திரட்டி அவசியம் பகிர்ந்து கொள்கிறேன்.

"பெண் மனம்", எல்.வி.பிரசாத் அவர்களின் தயாரிப்பு-இயக்கத்தில், நடிகர் திலகம்-அபிநய சரஸ்வதி இணையில், "இருவர் உள்ளம்" திரைக்காவியமாக 29.3.1963 அன்று வெளியானது. முதல் வெளியீட்டில் இக்காவியம் 100 நாள் பெருவெற்றி என்றால் மறுவெளியீடுகளில் இக்கருப்பு-வெள்ளைக் காவியம் வரலாறு காணாத வெற்றி.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th February 2011, 04:09 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 179

கே: சிவாஜி கணேசன் ரேடியோ நாடகங்களில் நடித்திருக்கிறாரா? (அ.செல்வகுமாரவேல், குப்பநத்தம்)

ப: "பெண் மனம்" போன்ற பல நாடகங்களில் நடித்திருக்கிறார்.

(ஆதாரம் : பொம்மை, ஜனவரி 1969)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th February 2011, 04:57 AM
1961-ல் 'புனர் ஜென்மம்' படத்துக்குப்பின் மீண்டும்
1967-ல் 'பேசும் தெய்வம்' படத்தில்தான்
நடிகர்திலகத்துடன் பத்மினி ஜோடி சேர்ந்தார்.


சகோதரி சாரதா,

1961-ம் ஆண்டில் "புனர்ஜென்மம்" திரைப்படத்திற்குப் பின் வெளிவந்த "ஸ்ரீ வள்ளி(1961)", "செந்தாமரை(1962)", "நான் வணங்கும் தெய்வம்(1963)" ஆகிய திரைப்படங்களிலும் நடிகர் திலகத்துக்கு ஜோடி நாட்டியப் பேரொளியே. இம்மூன்று திரைப்படங்களுமே நீண்டகால தயாரிப்புகள். இதற்குப் பின் அவரது இரண்டாவது இன்னிங்ஸில் சிங்கத்தமிழனின் படத்தில் அவர் பங்கு பெற்ற முதல் படம் சிவாஜி அவர்கள் கௌரவ வேடத்தில் நடித்த "தாயே உனக்காக" திரைப்படம். இதில் பத்மினியும் கௌரவ வேடத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து "சரஸ்வதி சபத"த்தில் 'பார்வதி'யானார் பத்மினி. பின்னர் 1967-ல் கலைதெய்வத்துடன் "பேசும் தெய்வ"த்தில் ஜோடியாக நடிக்க ஆரம்பித்த பத்மினி "பாலாடை", "திருவருட்செல்வர்", முரளி சாரின் மனம் கவர்ந்த "இரு மலர்கள்" [முரளி சாருக்கு மட்டுமா, நம் எல்லோர் மனத்தையும் கூட ஒட்டு மொத்தமாக கொள்ளையடித்த காவியமாயிற்றே!], "திருமால் பெருமை", "தில்லானா மோகனாம்பாள்".................................எனப் பல படங்களில் இணைந்து மீண்டும் சாதனை புரிந்தார்.

[வெளியான தேதி : புனர்ஜென்மம் - 21.4.1961, ஸ்ரீ வள்ளி - 1.7.1961, செந்தாமரை - 14.9.1962, நான் வணங்கும் தெய்வம் - 12.4.1963 (சென்னையில் மட்டும் 27.4.1963), தாயே உனக்காக - 26.8.1966, சரஸ்வதி சபதம் - 3.9.1966, பேசும் தெய்வம் - 14.4.1967]

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
27th February 2011, 11:32 AM
டியர் பம்மலார்,

விரிவான விளக்கத்துக்கு மிகவும் நன்றி. நீங்கள் குறிப்பிட்ட செந்தாமரை, நான் வணங்கும் தெய்வம் இரண்டும் லேட் ரிலீஸ் ஆக இருக்கலாம். (அப்போது அப்படி பல படங்கள் தாமதித்து வந்தன சித்தூர் ராணி பத்மினி, வளர்பிறை ஆகியனவும் தாமத வெளியீடுகள் என நினைக்கிறேன்). ஆனால் பத்மினி 1961-ல் திருமணம் செய்துகொண்டு போனபின், 65 வரை திரைப்படங்களில் நடிக்கவில்லை.

அவரது திருமணம் முடிந்த மறுநாள் தினத்தந்தியில், முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாக, குருவாயூரில் நடந்த அவரது திருமண நிகழ்ச்சி பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. (அப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் இல்லாததாலும், வானொலிச்செய்திகளில் இப்படிப்பட்ட செய்திகள் இடம்பெறும் வழக்கமில்லையாதலாலும், செய்தித்தாள்களே மக்களின் ஒரே மீடியா).

அந்தச்செய்தி இடம்பெற்றிருந்த 'தினத்தந்தி' நாளிதழின் அதே முதல் பக்கத்தில் கீழே இடப்பக்க மூலையில் 'பாவமன்னிப்பு 11-வது வாரம்' விளம்பரமும், வலது பக்க மூலையில் 'ரிசர்வ் செய்யப்படுகிறது பாசமலர்' விளம்பரமும் இடம் பெற்றிருந்தன.

(அந்த தினத்தந்தி முதல் பக்கம் எனது கணிணியில் உள்ளது. ஆனால் இங்கு எப்படி அப்லோட் செய்வது என்பது தெரியவில்லை. Insert image பகுதியில் முயற்சித்தேன். முடியவில்லை). But, it has been published in my Blog.

'தாயே உன்க்காக' படத்தில் நடிகர்திலகத்துக்கு கௌரவத்தோற்றம் என்பதால் என் நினைவுக்கு வரவில்லை. சரஸ்வதி சபதத்தில் 'பத்மினியும் இருந்தார்', ஆனால் ஜோடி சேரவில்லை. மீண்டும் பழையபடி முழுவீச்சில் ஜோடி சேர்ந்தது 'பேசும் தெய்வத்'தில்தான்.

சரஸ்வதி சபதம் ஒரு வித்தியாசமான படம். நடிகர்திலகமும் இருந்தார், ஜெமினி கணேசனும் இருந்தார். இவர்கள் இருவருக்கும் அதிகப்படங்களில் ஜோடியாக நடித்த சாவித்திரி, பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா ஆகியோரும் இருந்தனர். ஆனால் அவர்களில் யாருமே இவர்களுக்கு ஜோடியாக அமையாமல் இருவருமே தனியே நின்றனர். இன்னொரு வேடிக்கை. அதில் வந்த கடவுளர்களுக்கு மட்டுமே ஜோடி உண்டு. மானிடப்பாத்திரங்களாக வந்த வித்யாபதி, செல்வாம்பிகை, வீரமல்லன் யாருக்குமே ஜோடி கிடையாது.

பத்மினியின் திருமணத்துக்கு முதல்நாள் நடந்த ஒரு சம்பவம் மனதை நெகிழ வைக்கக்கூடியது. அப்போது அவர், மேடைகளில் தன் தங்கை ராகினியுடன் சேர்ந்து 'ஸ்ரீ ராமச்சந்திரா கல்யாணம்' என்ற நாட்டிய நாடகம் நடத்தி வந்தார். ராகினி ராமனாகவும், பத்மினி சீதையாகவும் நடித்தனர். நாளை மறுநாள் விடிகாலை குருவாயூரில் பத்மினியின் திருமணம் என்ற நிலையில், இரவு பத்து மணிக்கு கடைசி நாட்டிய நாடகம் முடிந்தது. (மறுநாள் காலை அனைவரும் கேரளா செல்லவிருக்கின்றனர்). கடைசி நாட்டிய நாடகம் முடிந்து அரங்கத்தின் உட்புறம் ஒப்பனையைக் கலைத்துக்கொண்டிருந்தபோது, ராமச்ச்ந்திரனாக நடித்த ராகினி, தன் அக்காவிடம், "சேச்சி, எல்லாம் முடிஞ்சிடுச்சு. உனக்குன்னு ஒரு ராமச்சந்திரன் வரப்போறார். இனி இந்த ராமச்சந்தினுடைய தயவு உனக்குத் தேவையில்லை" என்று எதார்த்தமாகச்சொல்ல, சட்டென்று திரும்பி தங்கையைப்பார்த்த பத்மினியின் கண்களில் எப்படித்தான் திடீரென அவ்வளவு கண்ணீர் பெருகியதோ தெரியவில்லை. அக்காவின் கண்களில் கண்ணீரைப்பார்த்த ராகினியும் உணர்ச்சி வசப்பட, ஓடிவந்த பத்மினி தங்கையைக் கட்டிக்கொண்டு அழுதாரென்றல் அப்படி ஒரு அழுகை, உடனிருந்தவர்கள் நெகிழ்ந்துபோய் அவர்களிருவரையும் தனியே விட்டு விட்டு வெளியேறிவிட்டனர். (ராகினி மறைந்தபோது 'ஆனந்த விகடன்' வார இதழிலில் வெளியான, 'என்னுள் கலந்துவிட்ட ராகினி' கட்டுரையில் பத்மினி).

pammalar
27th February 2011, 07:37 PM
அவரது(பத்மினி) திருமணம் முடிந்த மறுநாள் தினத்தந்தியில், முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாக, குருவாயூரில் நடந்த அவரது திருமண நிகழ்ச்சி பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. (அப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் இல்லாததாலும், வானொலிச்செய்திகளில் இப்படிப்பட்ட செய்திகள் இடம்பெறும் வழக்கமில்லையாதலாலும், செய்தித்தாள்களே மக்களின் ஒரே மீடியா).

அந்தச்செய்தி இடம்பெற்றிருந்த 'தினத்தந்தி' நாளிதழின் அதே முதல் பக்கத்தில் கீழே இடப்பக்க மூலையில் 'பாவமன்னிப்பு 11-வது வாரம்' விளம்பரமும், வலது பக்க மூலையில் 'ரிசர்வ் செய்யப்படுகிறது பாசமலர்' விளம்பரமும் இடம் பெற்றிருந்தன.

(அந்த தினத்தந்தி முதல் பக்கம் எனது கணிணியில் உள்ளது. ஆனால் இங்கு எப்படி அப்லோட் செய்வது என்பது தெரியவில்லை. Insert image பகுதியில் முயற்சித்தேன். முடியவில்லை). But, it has been published in my Blog.


சகோதரி சாரதா,

தங்களின் அசத்தல் தகவல்களுக்கும், (தங்களது வலைப்பூவில் உள்ள) அபூர்வமான 'தினத்தந்தி'யின் முதல் பக்க பொக்கிஷத்திற்கும் எனது பொன்னான நன்றிகள் !

தாங்கள் வெளியிட்டுள்ள 'தினத்தந்தி', 25.5.1961 தேதியிட்ட நாளிதழாக இருக்க வேண்டும். ஏனெனில், 16.3.1961 வெளியான "பாவமன்னிப்பு" 11வது வாரமாக ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில், 27.5.1961 "பாசமலர்" ரிலீஸ்.

இந்த கிடைத்தற்கரிய 'தினத்தந்தி' நாளிதழின் முதல் பக்கத்தை காண்பதே கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

மீண்டும் நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
27th February 2011, 08:15 PM
நடிப்புக்கோட்டை கட்டிய நடிப்புலக சக்கரவர்த்திக்கு, மலைக்கோட்டை மாநகரான திருச்சியில், விரைவில் சிலை திறப்பு விழா !

உச்சி பிள்ளையார் ஊரில் கலைப்பிள்ளையார் புகழ் பாடும் பதாகைகள் காட்சியளிக்கத் தொடங்கி விட்டன !

பெருமிதத்துடன்,
பம்மலார்.

pammalar
27th February 2011, 11:08 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 180

கே: தமிழ்நாட்டில் துப்பறியும் படங்கள் அதிகம் தயாரிக்கப்படுவதில்லையே, ஏன்? (என்.ஆர்.பாலசுப்ரமணியன், திருப்பூர்)

ப: "அந்த நாள்" தான் - அது இன்னும் வரவில்லை என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள்.

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1961)

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
28th February 2011, 11:28 PM
அன்புள்ள பார்த்தசாரதி,

நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களைப் பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள். சில நாள் வெளியூர் சுற்றுப்பயணம் சென்றிருந்ததால் உடனே பங்கு கொள்ள முடியவில்லை. சில குறிப்பிட்ட படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு அலசியது என்றாலும் கூட அதை செம்மையாக செய்திருந்தீர்கள். மேலும் இது போன்ற பதிவுகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நீங்கள் எழுதியவற்றில் ஒரு சில திருத்தங்கள் மட்டும்.

பாசமலர் ஒரிஜினலா என்று ஒரு கேள்விகுறி எழுப்பியிருந்தீர்கள். அது அக்மார்க் ஒரிஜினல். மூலக்கதை கொட்டாரக்கரா என்பதனால் உங்களுக்கு அந்த சந்தேகம் வந்திருக்கலாம். அவர் அந்த கதையை சொல்வதற்காக வெகுநாட்கள் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தாராம். ஆனால் வி.சி.எஸ். அவர்களை சந்திக்க முடியவில்லை. மோகன் ஆர்ட்ஸ் மோகன்தான் அவரை வி.சி.எஸ்.ஸிடம் அழைத்து சென்றார். பிறகு நடந்தது சரித்திரம். இதே கொட்டாரக்கரா மாற்று முகாமிற்கும் 1963-ல் ஒரு கதை கொடுத்தார்[பரிசு].

அது போல ஓடயில் நின்னு படத்திற்கு சத்யன் அவர்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் நமது நடிகர் திலகம் போலவே சத்யன் அவர்களுக்கும் ஒரு முறை கூட தேசிய விருது வழங்கப்பட்டதில்லை.

1971-ம் வருட தேசிய விருதிற்கு பாபு பங்கெடுக்கவில்லை. காரணம் அது ரீமேக் படம். சவாலே சமாளி படம்தான் விருதிற்கு அனுப்பப்பட்டது. அந்த "மாணிக்கத்தை" விட வேறு ஒரு நடிப்பு சிறந்தது என்று விருது கொடுத்தார்கள். 1967 முதல் தமிழகத்தில் நடந்து கொண்டிருந்ததை டெல்லியிலும் அரேங்கேற்றினார்கள்.

மற்றப்படி மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

அன்புடன்

இருவர் உள்ளம் பற்றிய செய்திகள் சுவை.

pammalar
1st March 2011, 04:21 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 181

கே: பெரியார் கொள்கைகளை கடைபிடித்து வரும் சத்யராஜ், பெரியார் வேடத்தில் நடிப்பதே சரியாகும். ஆன்மீகவாதியான சிவாஜி அந்த வேடத்தில் நடித்திருந்தால் சரியாக இருந்திருக்குமா? (ஈ.சிதம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர்)

ப: 'நாடகமோ, சினிமாவோ...அங்கே ரசிக்கப்பட வேண்டியது ஒரு கலைஞனின் நடிப்புத் திறமை தானே தவிர அந்தரங்க வாழ்க்கையல்ல...' என்று சென்ற இதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார்களே, நீங்கள் அதைப் படிக்கவில்லையா?!

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 அக்டோபர் 2006)

அன்புடன்,
பம்மலார்.