PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7



Pages : 1 2 3 4 5 [6] 7 8

pammalar
1st March 2011, 04:43 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 182

கே: 150 படங்களை முடித்து மேலே நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் பற்றி...? (கவிதாசன், சென்னை-21)

ப: நடிப்புத்துறையில் ஈடிணையற்றவர். செயல் வீரர். ஒரு உலக ரெக்கார்டையே ஏற்படுத்தியிருக்கும் ஒரே தமிழ் நடிகர்.

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
1st March 2011, 09:44 AM
பம்மலார் குறிப்பிட்ட திருவருட்செல்வர் போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/tvc04.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/tvc01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/tvc02.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/tvc03.jpg

அன்புடன்

RAGHAVENDRA
1st March 2011, 09:47 AM
மற்றும் பிரம்மாண்டமான அளவில் இடம் பெற்றிருக்கும் நடிகர் திலகத்தின் பேனர்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ntstandingpose.jpg

parthasarathy
1st March 2011, 10:22 AM
Parthasarathy, excellent posts. suvaarasyamAga ezhudhugiRIrgaL. One small nit pick - nata samrat in telugu actually means nadippu chakravarthy. The other facts you mentioned about trade mark dance moves of ANR are quite true.

Dear Mr. Plum (your name please),

Thanks for your appreciation and correction. You are exactly right. Nata Samrat means nadippuch chakkaravarthi in Telugu. I stand corrected.

Regards,

R. Parthasarathy

parthasarathy
1st March 2011, 12:37 PM
அன்புள்ள பார்த்தசாரதி,

நடிகர் திலகத்தின் ரீமேக் படங்களைப் பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள். சில நாள் வெளியூர் சுற்றுப்பயணம் சென்றிருந்ததால் உடனே பங்கு கொள்ள முடியவில்லை. சில குறிப்பிட்ட படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு அலசியது என்றாலும் கூட அதை செம்மையாக செய்திருந்தீர்கள். மேலும் இது போன்ற பதிவுகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நீங்கள் எழுதியவற்றில் ஒரு சில திருத்தங்கள் மட்டும்.

பாசமலர் ஒரிஜினலா என்று ஒரு கேள்விகுறி எழுப்பியிருந்தீர்கள். அது அக்மார்க் ஒரிஜினல். மூலக்கதை கொட்டாரக்கரா என்பதனால் உங்களுக்கு அந்த சந்தேகம் வந்திருக்கலாம். அவர் அந்த கதையை சொல்வதற்காக வெகுநாட்கள் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தாராம். ஆனால் வி.சி.எஸ். அவர்களை சந்திக்க முடியவில்லை. மோகன் ஆர்ட்ஸ் மோகன்தான் அவரை வி.சி.எஸ்.ஸிடம் அழைத்து சென்றார். பிறகு நடந்தது சரித்திரம். இதே கொட்டாரக்கரா மாற்று முகாமிற்கும் 1963-ல் ஒரு கதை கொடுத்தார்[பரிசு].

அது போல ஓடயில் நின்னு படத்திற்கு சத்யன் அவர்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் நமது நடிகர் திலகம் போலவே சத்யன் அவர்களுக்கும் ஒரு முறை கூட தேசிய விருது வழங்கப்பட்டதில்லை.

1971-ம் வருட தேசிய விருதிற்கு பாபு பங்கெடுக்கவில்லை. காரணம் அது ரீமேக் படம். சவாலே சமாளி படம்தான் விருதிற்கு அனுப்பப்பட்டது. அந்த "மாணிக்கத்தை" விட வேறு ஒரு நடிப்பு சிறந்தது என்று விருது கொடுத்தார்கள். 1967 முதல் தமிழகத்தில் நடந்து கொண்டிருந்ததை டெல்லியிலும் அரேங்கேற்றினார்கள்.

மற்றப்படி மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

அன்புடன்

இருவர் உள்ளம் பற்றிய செய்திகள் சுவை.

அன்புள்ள திரு முரளி அவர்களுக்கு,





மற்ற எல்லா நண்பர்களும், எனது இந்த ரீமேக் படங்கள் பற்றிய பதிவுகளுக்கு பதிலளித்து, ஊக்கப்படுத்திவிட்டாலும், உங்களிடமிருந்தும் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நன்றி.



இந்த பாகத்தைப் பொறுத்தவரை, எல்லா விதங்களிலும், சிறந்த பத்து படங்களை மட்டுமே (இந்த விஷயத்தில், சிலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.) எடுத்துக் கொண்டேன். மேலும், ஒவ்வொரு படத்தைப் பற்றியும் அநேகமாக எல்லா தகவல்கள் மற்றும் கருத்துகளையும் இங்கு ஏற்கனவே பலரும் பகிர்ந்து விட்டீர்களாதலால், ஒவ்வொரு படத்தைப் பற்றியும், சுருக்கமாகவே எழுதும்படியாகி விட்டது. இருந்தாலும், சில வித்தியாசமான எல்லோராலும் மிகவும் ரசிக்கப்பட்ட காட்சிகளை மட்டும் பகிர்ந்து கொண்டேன்.



திரு அப்கலாபி (பெயர்?) அவர்கள் எனது பதிவிற்கு பதில் கூறும்போது, நடிகர் திலகம் நடித்த படங்கள் மற்ற மொழிகளில் எடுக்கப்பட்டு அங்கு அவை வெற்றி பெற முடியாமல் போனதைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதாவது, அவை நடிகர் திலகம் அளவிற்கு மற்ற மொழி நடிகர்ளால் நடிக்க முடியாமல் போனதனால்தான் என்று. நூற்றுக்கு நூறு உண்மைதான். அதில், பாசமலர் (மூலம் மலையாளம்?) என்ற வினாவை எழுப்பியிருந்தார். இதன் மூலக் கதைதான் மலையாளமே தவிர, அந்தக் கதை படமாக எடுக்கப்பட்டது, முதலில் தமிழில்தான் என்பது தெரிந்திருந்தாலும், இதையும் சேர்த்து, நடிகர் திலகத்தின் படங்கள் வேற்று மொழிகளில் எடுக்கப்பட்டது குறித்து விரிவாக இந்தப் பதிவின் இரண்டாவது பாகத்தில் எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதை எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்.



ஓடையில் நின்னு பற்றிய திருத்தத்திற்கு நன்றி. தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருது இந்தியாவில் வழங்கப்பட ஆரம்பித்தது முதன் முறையாக 1968 -இல் தான் என்னும்போது, சத்யன் ஓடையில் நின்னுவுக்காக விருது வாங்கியிருக்க வாய்ப்பில்லை தான். ஏனென்றால், ஓடையில் நின்னு 1965-லேயே வெளிவந்து விட்டது. (முதலில், உத்தம் குமார் தான் பாரத் விருதை ஒரு வங்காளப் படத்திற்காக வாங்கியிருக்கிறார். இவரது "அமானுஷ்" ஹிந்திப் படம்தான் 1978 -இல் நடிகர் திலகத்தின் ஜனரஞ்சகமான ஆனால், ஆழமான நடிப்பில், தியாகம் -ஆனது).

இன்னொரு திருத்தத்திற்கும் நன்றி - அதாவது - பாபுவுக்காக பாரத் விருது வழங்கப் படாதது குறித்து. ஆனாலும், அந்த வருடம், நடிகர் திலகத்திற்குத்தான் அது கிடைத்திருக்க வேண்டும், கமிட்டி உறுப்பினர் ஒருவர் செய்த குளறுபடியால், அது மாற்று முகாமுக்குச் சென்று விட்டது என்று கூறுவர். (இது பற்றிய தகவலையும், முன்னொரு திரியில், படித்த ஞாபகம் இருக்கிறது.)

நடிகர் திலகத்தின் 306 படங்களில், 250-க்கும் மேற்பட்ட படங்களைப் பார்த்து (இன்புற்று) விட்டதால், அத்தனை படங்களையும் விரிவாகவே அலசி விட முடியும். அதற்கு ஒரு பிறவி போதாதே!

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
1st March 2011, 12:57 PM
டியர் ராகவேந்தர் அவர்களுக்கு,



நீங்கள் பதிவிறக்கம் செய்த திருவருட்செல்வர் பட ஸ்டில்களும் இந்தப் படம் சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தில் வரப்போகிறது என்பதையும் அறியும்போது, உடனே படம் வெளியிடப்பட்டுவிடக்கூடாதா என்ற ஏக்கம் மேலிடுகிறது.



எழுபதுகளில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருககும்போது, மாலை பள்ளி விட்டதும், சாந்தி அரங்க பஸ் நிறுத்தத்திற்கு தான் வருவேன். அங்கு வந்துதான் நான் அப்போது வசித்துக் கொண்டிருந்த விருகம்பாக்கத்திற்கு பஸ் பிடிக்க முடியும். அப்போதெல்லாம், அநேகமாக, தினந்தோறும், சாந்தி அரங்கத்தின் வெளியில் உள்ள பெரிய இடத்தில், நானும், எங்கள் குழுவும் (அவ்வளவு பேரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் தானே!) குறைந்தது, அரை மணி நேரமாவது அந்த நேரத்தில் வெளியிடப்படவிருக்கும் நடிகர் திலகத்தின் பல்வேறு படங்களைப் பற்றி பேசி விட்டுத் தான் பஸ் படித்து அவரவர் வீட்டிற்குச் செல்வோம்.



சமீபத்தில், புதிய பறவை, சாந்தியில் திரையிடப்பட்டபோது, ஞாயிற்றுக்கிழமை மாட்னி ஷோவிற்கு நானும் எனது சில நண்பர்களும் சென்று பார்த்தபோது, எங்கள் நினைவுகள் எங்கெங்கோ சென்றது.



மறுபடியும், சாந்தியில், கூடுவதற்கு ஆவலாக இருக்கிறோம்.



அன்புடன்,



பார்த்தசாரதி

parthasarathy
1st March 2011, 01:09 PM
டியர் பம்மலார் அவர்களே,

தாங்கள் அளித்த தகவல்களுக்கு மிக்க நன்றி. பல்வேறு நுணுக்கமான தகவல்களையும் தங்களிடத்தில் எப்போதும் எதிர்பார்க்கிறோம்.

இருவர் உள்ளம் படத் தகவல்கள் என் அன்னையிடமிருந்து கிடைத்தவை. நான் ஏற்கனவே குறிப்பிட்ட, ஆந்திராவிலுள்ள எனது கசின்கள் இந்தப் படம் 1961 -இல் நாகேஸ்வரராவும் கிருஷ்ணகுமாரியும் (சௌகாரின் தங்கை) நடித்து வெளிவந்த பார்யா பர்த்தலு என்ற படத்தின் தழுவல் தான் இது என்று வாதம் செய்து கொண்டிருந்தனர். இல்லை, இந்தப் படத்தின் மூலம் தமிழ் என்றும், இதை எங்கள் நடிகர் திலகம் ஏற்கனவே நாடகமாக நடித்து வெற்றி பெற்றார், எங்களிடமிருந்துதான் அது உங்களுக்குச் சென்றது என்றும், அப்போதுதான் இந்தத் தகவலை அவர்களுக்குத் தெரிவித்தேன்.

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
1st March 2011, 03:00 PM
அன்பு நண்பர் பார்த்த சாரதி,
எப்படி மதுரை நண்பர்கள் மதுரையைப்பற்றி சிலாகிக்கிறீர்களோ, அதே போன்று ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் சென்னை சாந்தி திரையரங்கினைப் பற்றித் தன் வாழ்க்கையில் நினைக்காத நாட்களே இருக்க முடியாது. கிட்டத் தட்ட நமது வீடு போன்று வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே திகழ்ந்தது, திகழ்கிறது சாந்தி திரையரங்கு. தாங்கள் தினந்தோறும் சாந்தி திரையரங்கு வருவதாக கூறியிருந்தீர்கள், அவ்வாறானால், என்னை நீங்கள் நிச்சயம் சந்தித்திருக்கலாம், அல்லது பார்த்திருக்கலாம். நேரில் பார்த்தோமானால் நினைவூட்டிக் கொள்ளலாம். சமீபத்தில் முரளி சாரிடம் பேசிக் கொண்டிருந்த போது தங்களை நான் சந்தித்திருக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகக் கூறினேன். கூடிய விரைவில் நாம் அனைவரும் சந்திக்கலாம் என நம்புவோம்.
ஏன், மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளன்று, முடிந்தால் ஒரு ஞாயிறு மாலை நம் ஹப்பில் உள்ள சிவாஜி ரசிக நண்பர்கள் சந்திக்கக் கூடாது. அனைவரும் சேர்ந்து விவாதித்து ஒரு குறிப்பிட்ட நாளைத் தெரிவு செய்து சந்தித்து மகிழலாம், பசுமை நிறைந்த நினைவுகளைப் பாடித் திரிவோம் பறவைகள் போல்...

அது வரை, சமீபத்திய சாந்தி திரையரங்கினை பட வடிவில் காணுங்கள்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/cst01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/cst02.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/cst03.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/cst04.jpg

அன்புடன்

parthasarathy
1st March 2011, 03:42 PM
அன்பு நண்பர் பார்த்த சாரதி,
எப்படி மதுரை நண்பர்கள் மதுரையைப்பற்றி சிலாகிக்கிறீர்களோ, அதே போன்று ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் சென்னை சாந்தி திரையரங்கினைப் பற்றித் தன் வாழ்க்கையில் நினைக்காத நாட்களே இருக்க முடியாது. கிட்டத் தட்ட நமது வீடு போன்று வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே திகழ்ந்தது, திகழ்கிறது சாந்தி திரையரங்கு. தாங்கள் தினந்தோறும் சாந்தி திரையரங்கு வருவதாக கூறியிருந்தீர்கள், அவ்வாறானால், என்னை நீங்கள் நிச்சயம் சந்தித்திருக்கலாம், அல்லது பார்த்திருக்கலாம். நேரில் பார்த்தோமானால் நினைவூட்டிக் கொள்ளலாம். சமீபத்தில் முரளி சாரிடம் பேசிக் கொண்டிருந்த போது தங்களை நான் சந்தித்திருக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகக் கூறினேன். கூடிய விரைவில் நாம் அனைவரும் சந்திக்கலாம் என நம்புவோம்.
ஏன், மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளன்று, முடிந்தால் ஒரு ஞாயிறு மாலை நம் ஹப்பில் உள்ள சிவாஜி ரசிக நண்பர்கள் சந்திக்கக் கூடாது. அனைவரும் சேர்ந்து விவாதித்து ஒரு குறிப்பிட்ட நாளைத் தெரிவு செய்து சந்தித்து மகிழலாம், பசுமை நிறைந்த நினைவுகளைப் பாடித் திரிவோம் பறவைகள் போல்...

அது வரை, சமீபத்திய சாந்தி திரையரங்கினை பட வடிவில் காணுங்கள்.

அன்புடன்

டியர் ராகவேந்தர் அவர்களே,

மிக்க மகிழ்ச்சி. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு நான் எழுதிய பதிலில், சாந்தி திரை அரங்கத்தில் நாம் அனைவரும் சந்தித்தால் என்ன? என்று எழுதலாம் என்றிருந்தேன். இருந்தாலும், விட்டு விட்டேன். ஆம். நாம் அனைவரும் சந்தித்தால் அது மிகவும் சுவையானதொரு சந்திப்பாகத்தான் இருக்கும்.

மற்ற நண்பர்களிடமிருந்தும் இதற்கான பதிலை எதிர்நோக்கும்,

அன்புடன்,

பார்த்தசாரதி

mr_karthik
1st March 2011, 06:48 PM
அன்பு நண்பர் பார்த்த சாரதி,
எப்படி மதுரை நண்பர்கள் மதுரையைப்பற்றி சிலாகிக்கிறீர்களோ, அதே போன்று ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் சென்னை சாந்தி திரையரங்கினைப் பற்றித் தன் வாழ்க்கையில் நினைக்காத நாட்களே இருக்க முடியாது. கிட்டத் தட்ட நமது வீடு போன்று வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே திகழ்ந்தது, திகழ்கிறது சாந்தி திரையரங்கு. தாங்கள் தினந்தோறும் சாந்தி திரையரங்கு வருவதாக கூறியிருந்தீர்கள், அவ்வாறானால், என்னை நீங்கள் நிச்சயம் சந்தித்திருக்கலாம், அல்லது பார்த்திருக்கலாம். நேரில் பார்த்தோமானால் நினைவூட்டிக் கொள்ளலாம். சமீபத்தில் முரளி சாரிடம் பேசிக் கொண்டிருந்த போது தங்களை நான் சந்தித்திருக்கக் கூடிய வாய்ப்புள்ளதாகக் கூறினேன். கூடிய விரைவில் நாம் அனைவரும் சந்திக்கலாம் என நம்புவோம்.
ஏன், மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளன்று, முடிந்தால் ஒரு ஞாயிறு மாலை நம் ஹப்பில் உள்ள சிவாஜி ரசிக நண்பர்கள் சந்திக்கக் கூடாது. அனைவரும் சேர்ந்து விவாதித்து ஒரு குறிப்பிட்ட நாளைத் தெரிவு செய்து சந்தித்து மகிழலாம், பசுமை நிறைந்த நினைவுகளைப் பாடித் திரிவோம் பறவைகள் போல்...

அது வரை, சமீபத்திய சாந்தி திரையரங்கினை பட வடிவில் காணுங்கள்.

ராகவேந்தர் சார்,

உங்களின் இந்தப்பதிவைப்படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சொன்னால் அது பொய். உண்மையில் ஏக்கமாக இருக்கிறது. நம் வாழ்வோடு ஒன்றிணைந்துவிட்ட சாந்தி திரையரங்க நிகழ்வுகளை எப்போது நினைத்துப்பார்த்தாலும் ஏற்படும் ஒன்று. சாந்தியுடனான எனது நினைவுகளை அவ்வப்போது இங்கு பகிர்ந்து வருகிறேன் என்பது நீங்கள் அறிந்த ஒன்று.

(சமீபத்தில்கூட சாந்தியின் பொன்விழா நிறைவன்று எழுபது என்பதுகளில் எனது மலரும் நினைவுகளை இந்த பதிவில் சொல்லியிருந்தேன். அதற்கு நீங்கள் பதிலும் அளித்திருந்தீர்கள். http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-7/page104 )

தற்போது உங்களுடையதும் நண்பர் திரு பார்த்தசாரதியுடையதுமான பதிவுகள் மீண்டும் மனதை கிளறி விட்டுவிட்டன. (நாம் சாந்தியில் வளையவந்த காலத்திலும் ஒரு பார்த்தசாரதி (என்கிற பட்டு), சேப்பாக்கம் சிவாஜி மன்ற தலைவராக இருந்தார். உங்களுக்கு நினைவிருக்கலாம்). இத்தகவல்களை உங்களுக்கு தனிமடலில் பதிவதே நியாயம் என்றாலும், ஒருவேளை இவர்களில் யாரேனும் ஒருவர் இப்பதிவுகளைப்படித்துவிட்டு நம்முடைய திரியில் கலந்துகொள்ளக்கூடும் என்பதாலேயே இந்த ஓப்பன் போஸ்ட். 1975 - 85 காலகட்டத்தில் கோவை சேது, தி.நகர் வீரராகவன், வடசென்னை நாதன் வாத்தியார், பாம்குரோவ் சந்திரசேகர், மாரீஸ் சந்திரசேகர், மந்தைவெளி ஸ்ரீதர் மற்றும் விஜி, பல்லவன் ட்ரான்ஸ்போர்ட் விஜி, சிவா, குருஜி, L&Tசெல்வராஜ், குடந்தை ஸ்ரீதர், புரசை 'புவனேஸ்வரி' ஆனந்த்... (இவ்ர்களோடு நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட செயல்வீரர் சீதக்காதி) உள்பட நாற்பதுக்கும் மேற்பட்டோர் தினமும் சாந்தியில் கூடி நாள்தோறும் எவ்வளவு விஷயங்களை விவாதித்திருப்போம்...!!!!. எவ்வளவு பசுமையான நாட்கள் அவை.

படவெளியீட்டன்று கட்-அவுடகளுக்குப் போடப்படும் மாலைகள் பெரும்பாலும் சாந்தி வளாகத்தில் கூடும் ரசிகர்கள் ஏற்பாடு செய்யும் மாலைகளாகத்தான் இருக்கும். அவற்றை நாம், வடசென்னை ஏழுகிணறு பகுதியில் இருக்கும் ஒருகுழுவினரிடம்தான் ஆர்டர் கொடுப்போம். நிஜமான மாலைபோலவே காகித மாலைகள் செய்வதில் எக்ஸ்பர்ட் அவர்கள். பஸ்ஸில் பிராட்வே போய், அங்கிருந்து மாலைகளை இரவோடு இரவாக ஆட்டோவில் கொண்டுவந்து, தியேட்டரில் கட்-அவுட் அமைக்கப்படும் வரை காத்திருந்து, அதன்பின்னர் மாலைபோட்டு காற்றில் பறக்காமல் செக்யூர் பண்ணிவிட்டு, நள்ளிரவில் நடந்தே ஐஸ் அவுஸ் வரை வீட்டுக்கு சென்ற நாட்கள் பசுமையாக நினைவில் உலவுகின்றன. (மொழிமாற்றப்படமான 'வாழ்க்கை அலைகள்' படத்துக்கு, பாரகன் அரங்கில் காலை வரை கட்-அவுட் வைக்கப்படாததால், அவசரத்துக்கு, வேறு படத்துக்கு (புண்ணிய பூமி..?) தயாராயிருந்த கட்-அவுட்டைக் கொண்டுவந்து அரங்க முகப்பில் கட்டி, மாலை போடப்பட, மறுநாள்தான் படத்துக்கான ஒரிஜினல் கட்-அவுட் வந்தது).

(காலச்சக்கரம் பின்னோக்கி சுழல்வதாக கதைகளில் மட்டும் எழுதுகிறார்களே அது நிஜத்திலும் நடக்கக்கூடாதா?).

இப்போது மீண்டும் சாந்தியில் சந்திக்கப்போகிறீர்கள் என்பது நிச்சயம் ஏக்கம் தரத்தக்கதாக உள்ளது. இதற்காகவே சென்னை வந்துவிடலாமா என்றுகூட தோன்றுகிறது. ஆனால், நான் சென்னை வரும் சமயங்களில் உங்கள் அனைவரையும் நிச்சயம் சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மேலோங்கியிருக்கிறது.

RAGHAVENDRA
1st March 2011, 10:27 PM
டியர் கார்த்திக்,
தங்களுடைய பதிவுகள் நம் அனைவருடைய எண்ண ஓட்டத்தையும் துல்லியமாக பிரதிபலித்துள்ளன. தாங்கள் கூறிய ஒவ்வொரு நண்பரையும் மறக்க முடியாது. பாம்குரோவ் சந்திரசேகர் தற்போது தஞ்சாவூரில் உள்ளார் என அறிகிறேன். மதுரையில் நடந்த சிலை திறப்பு விழாவின் போது அவரை சந்தித்து மிகவும் மகிழ்வுற்றேன். கோவை சேது இன்னும் மற்ற நண்பர்களுடன் தொடர்பில் உள்ளார். அதேபோல் மந்தவெளி ஸ்ரீதர், திருவான்மியூர் சங்கர், இவர்களையெல்லாம் நீண்ட நாட்களாயிற்று பார்த்து. சேப்பாக்கம் பார்த்த சாரதி அவர்களை நடுவில் அமெரிக்க தூதரகத்தில் பார்த்தேன். அதற்குப் பின் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனந்த் அவர்கள் சமீபத்தில் தன் மகனுடைய திருமணத்தை நடத்தினார். அவரால் சந்திக்க முடிந்த அனைத்து ரசிக நண்பர்களையும் அழைத்திருந்தார்.
மேலும் சில ரசிகர்கள் அவ்வப்போது சாந்தி திரையரங்கில் சந்தித்து வருகின்றனர். இது அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது என்பது மிகச் சிறப்பாகும்.
மேலும் நம்முடைய குமாரும் கணேசனும் இணைந்து இதயராஜா புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். தாங்களும் பார்த்திருக்கலாம். அவர்கள் வைத்த பேனர் இன்னும் சாந்தியில் உள்ளது.
இவை எல்லாவற்றையும் விட சிகரம் நம்முடைய பம்மலார் தான். சிறு பிராயத்திலிருந்தே வர ஆரம்பித்து அனைத்து ரசிகர்களிடமும் மிக விரைவாக பரிச்சயம் ஆனவர். சொல்லப் போனால் பம்மல் ஸ்வாமிநாதனைத் தெரியாதவர்களே சிவாஜி ரசிகர் வட்டத்தில், குறிப்பாக சாந்தி தியேட்டர் ரசிக நண்பர் வட்டாரத்தில் இருக்க முடியாது என்கிற அளவிற்கு பிரபல்யமானவர்.

இன்னும் ஏராளமான பசுமையான நினைவுகள் உள்ளன.

வெளியூரிலிருக்கும் தங்களைப் போன்ற ரசிகர் நண்பர்கள் அனைவருக்கும் சென்னை வரும் வாய்ப்பும் நேரமும் அமையும் காலத்தில் நம் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம். அப்போது இன்னும் சிறப்பாக இருக்கும்.

அன்புடன்

Plum
2nd March 2011, 03:51 PM
My wife (raised in telugu land, completely oblivious of NT's talents; kind of thinking that he is the tamil equivalent of ANR) catching pAttum nAnE today on TV: "Boy, he can act!"
Me: Oh yeah, not bad, no?

parthasarathy
3rd March 2011, 10:12 AM
அன்பு நண்பர்களே,

இன்று (3.2 .11 ) ஹிந்து நாளிதழில் (சென்னை பதிப்பு), இரண்டாவது பக்கத்தில், திரு தனஞ்செயன் என்பவர் எழுதிய தமிழ் சினிமாவைப் பற்றியும் அதில் மிகச் சிறந்த நூறு படங்களைப் பற்றியுமான ஒரு மிகப் பெரிய புத்தகத்தை தமிழ் சினிமாவின் பிரபலங்களைக் கொண்டு வெளியிட்டது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு வந்துள்ளது. திரு கமல்ஹாசன், திரு பாலு மகேந்திரா, திரு ராண்டார் கை உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால், பல்வேறு சிறந்த தமிழ்ப் படங்களின் சில காட்சிகளை அங்கு காண்பித்தபோது, நடிகர் திலகத்துக்கு தான் அரங்கத்திலிருந்து மிகப்பெரிய கைத்தட்டல் எழுந்தது - அதுவும் குறிப்பாக - வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் முதல் மரியாதை படங்களிலிருந்து சில காட்சிகளைக் காண்பிக்கும்போது, என்று குறிப்பிடப் பட்டிருந்தது. அதிலும் தனியாக "Sivaji speak" என்ற தனி பாராவில் இந்த செய்தி வந்துள்ளது.

நடிகர் திலகம் என்ற மாபெரும் சக்தியின் வீச்சு காலத்தை வென்ற ஒன்று என்பது நாமெல்லோரும் அறிந்ததுதான் என்றாலும், அவ்வப்பொழுது இதுபோன்ற செய்தித் தொகுப்புகளைப் பார்க்கும்போதெல்லாம், நம்போன்ற ரசிகர்களுக்கு ஏற்படுகின்ற அந்த உணர்வுகள் - இதை வெறும் வார்த்தைகளால் வடித்துவிட முடியுமா என்ன?

அன்புடன்,

பார்த்தசாரதி

abkhlabhi
3rd March 2011, 11:02 AM
"ஏன், மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளன்று, முடிந்தால் ஒரு ஞாயிறு மாலை நம் ஹப்பில் உள்ள சிவாஜி ரசிக நண்பர்கள் சந்திக்கக் கூடாது. அனைவரும் சேர்ந்து விவாதித்து ஒரு குறிப்பிட்ட நாளைத் தெரிவு செய்து சந்தித்து மகிழலாம், பசுமை நிறைந்த நினைவுகளைப் பாடித் திரிவோம் பறவைகள் போல்..."




அருமையான யோசனை. முன்குட்டியே தெரிவித்தால் reserve செய்ய. காரணம், பெங்களூர் - சென்னை - பெங்களூர் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. சனி , சண்டே என்றால் இரண்டு மாதம் முன்பே reseve செய்ய வேண்டும்.
ஏப்ரல் 8 , 9 ஆம் தேதி சென்னையில் இருப்பேன். 9 ஆம் தேதி மதியம் (அ) இரவு பெங்களூர் திரும்புவதாக எண்ணம்.

சிவராத்திரி முன்னிட்டு, நேற்று இரவு MAA டிவியில் , திருவருர்செல்வர் தெலுகு டப்பிங் ஒளிபதிவு செய்தது.

Mr .பார்த்தசாரதி,
என்னுடைய பெயர் அ.பாலகிருஷ்ணன், பிறந்தது திருவண்ணாமலை ; வாழ்வது பெங்களூரில். பிறக்க ஒரு இடம் , வாழ ஒரு இடம், குணசேகரன் மட்டும் அல்ல, நான் கூட விதிவிலக்கல்ல.

parthasarathy
3rd March 2011, 11:02 AM
டியர் பார்த்தசாரதி,

நீங்கள் குறிப்பிட்டது சரியே. பத்மினி 1961 மத்தியில் டாக்டர் ராமச்சந்திரனை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறியவர், மீண்டும் 1965-ல் தான் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வந்தார். முதல் படமாக 'சித்தி' 1966 பொங்கலுக்கு ரிலீஸானது.

1961-ல் 'புனர் ஜென்மம்' படத்துக்குப்பின் மீண்டும்
1967-ல் 'பேசும் தெய்வம்' படத்தில்தான்
நடிகர்திலகத்துடன் பத்மினி ஜோடி சேர்ந்தார்.

இடைப்பட்ட நாட்களில் கோலோச்சியவர்கள் சரோஜாதேவியும், தேவிகாவும்தான் என்றாலும், சரோஜாதேவி மக்கள் திலகத்துடன் அதிகமாக ஜோடி சேர்ந்ததால், நம்மவர்களால் 'நம்மவர்' என்று உரிமையோடு கொண்டாடப்பட்டவர் தேவிகாதான். (அதையும் முறியடிக்க 'ஆனந்த'மாக ஏற்றப்பட்ட 'ஜோதி', அந்த ஒரு படத்தோடு அணைந்துவிட்டது தெரிந்ததே).

அன்புள்ள சாரதா அவர்களுக்கு,

பொதுவாக, நம்போன்ற நடிகர் திலகத்தின் தீவிர ரசிக/ரசிகைகளைப் பொறுத்தவரை, நடிகர் திலகத்தின் சிறந்த ஜோடிகளின் வரிசையின், சரோஜா தேவி எப்போதும் முன்னணியில் - ஏன், முதல் ஐந்து இடங்களில் கூட இருந்ததில்லை - காரணம், எப்போதும், அவர் மாற்று அணியிலேயே இருந்ததனால் தான். ஆனால், முக்கியமாக, அதுவும், இருவர் உள்ளம் படத்தைப் பொறுத்தவரையில், அந்த சாந்தா என்ற கதாபாத்திரத்திற்கு - அன்றிருந்த காலகட்டத்தில் - சரோஜா தேவியோ, தேவிகாவோ தான் சரியாகப் பொருந்தியிருப்பார்கள் என்றாலும் - இந்தக் கதாபாத்திரத்திற்கு சரோஜா தேவி அவர்கள்தான் நூறு சதவிகிதம் சரியாகப் பொருந்தினார். ஒன்று கவனித்தோமேயானால், எல்லா நடிகைகளுக்கும், நடிகர் திலகத்துடன் நடிக்கும் போது தான் நல்ல வேடங்களும், அவர்களின் முழுத் திறமையைக் காண்பிக்கும் சந்தர்ப்பங்களும் கிடைத்திருக்கின்றன. மாற்று முகாமில் நடிக்கும் போது, அவர்கள் பெரும்பாலும் (சில படங்கள் விதி விலக்கு) வெறும் கொலு பொம்மைகளாகத் தான் இருந்தார்கள்.

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னர் நடிகர் திலகத்தின் ரசிகர்களிடம் எடுக்கப் பட்ட ஒரு சர்வேயில், அதாவது, நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடித்த பல நடிகைகளைப் பற்றிய சர்வேயில், முதலிடம் பிடித்தவர், வாணிஸ்ரீ, இரண்டாவது இடம் தேவிகா என்றும் படித்திருக்கிறேன். இதைப் பற்றிய முழு விவரங்கள் என்னிடம் இல்லை. வாணிஸ்ரீ கூட நிறைய படங்கள் மாற்று முகாமில் நடித்திருந்தாலும், தேவிகாவைப் பொறுத்தவரை, தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களில் தான் நிறைய நடித்து வந்திருக்கிறார். நடிகர் திலகத்துடன் தேவிகா நடிக்கும் போது தான், ஜோடிப் பொருத்தம் (மற்றும் கெமிஸ்ட்ரி, பயாலஜி, என்று ஏதோ சொல்கிறார்களே) அது மிகச் சரியாக இருக்கும். பத்மினி இதற்கு அடுத்தபடியாக இருந்தாலும், தேவிகா அவர்களே அவருக்கு இன்னும் அழகான ஜோடியாகப் பொருந்தினார் என்று சொல்லலாம். (இதற்கு, நிறைய மாற்றுக் கருத்துகள் கண்டிப்பாக இருக்கும்.)

நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை, அவர் இயக்குனர்களின் கலைஞன் என்று கூறுவார்கள். அது மட்டுமல்ல, எந்த முகாமிலிருந்து வந்தாலும், நடித்து விடுவார். எந்த நடிகைகளுடன் நடித்தாலும், அந்தப் பொருத்தம் கனகச்சிதமாக அமைந்து விடும். அந்தளவுக்கு, அவரும் நடித்து, கூட நடிக்கும் நடிக/நடிகைகளுக்கும், சில ஆலோசனைகளை அளித்து, படம் நெடுகிலும் எல்லோருடைய பங்கும் சரியாக அமைந்து, ஒரு முழுமையைக் கொண்டு வர பாடுபடுவார். (இது உயர்ந்த மனிதன் அசோகன் முதல், பாகப்பிரிவினை சரோஜா தேவி என்று பலருக்கும் பொருந்தும்). ஜி. சகுந்தலா (ஏ. சகுந்தலா இல்லை) என்று ஒரு நடிகை (அவருடைய அண்ணன் மகன்கள் நான் முன்பு பணிபுரிந்த அலுவலகத்தில் வேறு பணி புரிந்து கொண்டிருந்தனர்). மந்திரி குமாரி காலத்தில் இருந்தே மாற்று முகாமில் நிரந்தரமாக நடித்துக் கொண்டிருந்தவர். இவருக்கும் நடிகர் திலகத்தின் படங்களில் (உயர்ந்த மனிதன், கந்தன் கருணை உட்பட) தொடர்ந்து நல்ல வேடங்கள் அளிக்கப் பட்டது. இன்னும் சொல்லப் போனால், வியட்நாம் வீடு நாடகமாக நடிக்கப் பட்டபோது, சினிமாவில் பத்மினி ஏற்ற "சாவித்திரி" கதாபாத்திரத்தில் இவர்தான் நடித்தார்.).

அன்புடன்,

பார்த்தசாரதி

groucho070
3rd March 2011, 11:19 AM
My wife (raised in telugu land, completely oblivious of NT's talents; kind of thinking that he is the tamil equivalent of ANR) catching pAttum nAnE today on TV: "Boy, he can act!"
Me: Oh yeah, not bad, no?:lol: Would love to have seen your expression when you said that. I used to get that from early days of courting my wife. Now she quit saying that, reserving that statement to the younger bunch.

RAGHAVENDRA
3rd March 2011, 11:34 AM
டியர் பாலகிருஷ்ணன்,
தங்களுடைய கருத்துக்கு என் உளப்பூர்வமான நன்றிகள். குறிப்பாக தங்களைப் போன்ற வெளியூர் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு சேர கிடைக்கும் நாளில் நாம் அனைவரும் சந்தித்துக் கொள்ளலாம். ஏப்ரல் 8 மற்றும் 9 தேதிகளில் இங்கு தேர்தல் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் இருக்கும். அது மட்டுமன்றி வாக்களிக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டில் அவரவர் ஊர்களில் இருக்க வேண்டிய சூழ்நிலையும் இருக்கும். இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் நம் சந்திப்பினை உள மகிழ்வோடு ஏற்று கலந்துகொள்ள விழைவோரும் இருப்பர்.
எனவே சென்னை தவிர்த்த மற்ற ஊர் நண்பர்கள் அனைவரும் ஒரு சேர கூறும் தேதியில் நாம் சந்திக்கலாம். பாலகிருஷ்ணன் சார் கூறிய ஏப்ரல் 8, 9 தேதி சௌகரியப் பட்டால் மற்ற நண்பர்களும் ஒத்துக்கொள்ளலாம்.
அன்புடன்

KCSHEKAR
3rd March 2011, 03:01 PM
Dear Ragavendran,

Postings about Thiruvarutchelvar & Santhi are very good. Thanks

KCSHEKAR
3rd March 2011, 03:03 PM
Dear Friends,

Please click the links below to view the news:

http://www.sivajiperavai.com/View_Press.php?id=142

http://www.sivajiperavai.com/View_Press.php?id=143

Thanks

abkhlabhi
3rd March 2011, 03:24 PM
Typing mistake. Instead of 8th and 9th April'11 it is 9th and 10th and may leave Chennai 0n 10th afternoon.

mr_karthik
3rd March 2011, 06:41 PM
அன்புள்ள பார்த்த்சாரதி,
நீங்கள் குறிப்பிட்ட விஷயம் பற்றி, 'சிவாஜிக்கு சரியான ஜோடி' என்ற தனித்திரியில் விவாதமே நடந்தது. அதில் சாரதா உள்பட பலர் தேவிகாவுக்கே ஆதரவு தெரிவித்து பல பதிவுகள் எழுதியிருந்தனர் (அந்த திரி Tamil Films-Classics பகுதியில் இருந்தது).

அதோடு சாரதா எழுதியிருந்த வியட்நாம் வீடு திரைப்பட விமர்சனத்திலும், வியட்நாம் வீடு நாடகத்தைப்பற்றியும், அதில் நடித்திருந்த ஜி.சகுந்தலா பற்றியும் குறிப்பிட்டிருந்தார். ஒரு வேடிக்கை என்னவென்றால், அவரும் ஜி.எஸ். பற்றிக்குறிப்பிட்டபோது அடைப்புக்குறிக்குள் 'சி.ஐ.டி.சகுந்தலா அல்ல' என்று குறிப்பிட்டிருந்தார்.

mr_karthik
3rd March 2011, 06:48 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

என்னுடைய மலரும் நினைவுகள் பதிவுக்கு மதிப்பளித்து, நமது பழைய 'சாந்தி' நண்பர்களைப்பற்றி விரிவாகப் பதிந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் பதிவு பல நினைவுகளைக் கிளறிவிட்டது.

வரவிருக்கும் 'திருவருட்செல்வர்' திரைப்படத்துக்கான கண்ணைக்க்கவரும் சுவரொட்டி அணிவகுப்பும், சாந்தி திரையரங்க புகைப்படத்தொகுப்பும் மிக மிக அருமை. (என்றாலும், புதுப்பிக்கப்பட்ட சாந்தியை விட, பழைய சாந்தியின் தோற்றம்தான் நம் கண்ணில் நிறைந்திருக்கிறது).

உங்களின் சீரிய சேவை தொடர வாழ்த்துக்கள்.

J.Radhakrishnan
4th March 2011, 10:49 PM
டியர் ராகவேந்தர் சார்,
நீங்கள் குறிப்பிட்ட கருத்தை ஆமோதிக்கிறேன், விரைவில் நமது hub உறுப்பினர்கள் அனைவரும் சந்திக்கும் நிகழ்வு நடைபெறவேண்டும்

joe
5th March 2011, 11:42 AM
எல்லோரும் சிவாஜியின் முகத்தையே பார்க்க, ” எதுக்காக ரெண்டாவது தடவை முதலிலே இருந்து வசனத்தை ஆரம்பிச்சேன்னுதானே பார்க்கறீங்க? சொல்லிக்கிட்டே வரும்போது சின்ன தப்பு பண்ணனேனே? கவனிக்கலையா நீங்க? மறுபடியும் இன்னொரு டேக் எடுக்கறதுக்கு பதிலா, அதே டேக்லயே மறுபடியும் முதல்லே இருந்து வசனத்தை பேசிட்டேன்” என்று சொன்னார்

More Here http://www.tamilpaper.net/?p=2890

RAGHAVENDRA
6th March 2011, 06:57 AM
டியர் ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மற்றும் நண்பர்களுக்கு,
தங்களுடைய கருத்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. விரைவில் சந்திப்பு நிகழும் என எதிர்பார்ப்போம்.

டியர் சந்திரசேகர்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி.

ராகவேந்திரன்

groucho070
6th March 2011, 12:16 PM
More Here http://www.tamilpaper.net/?p=2890Thanks for the link, Joe. I especially loved this part:1997ல், சிவாஜிக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்பட்டபோது குமுதத்துக்காக சிவாஜியை சந்தித்தேன். மனுஷர் ரொம்ப ஜாலி மூடில் இருந்தார். இரண்டு சிறுமிகள் சிவாஜிக்கு பொக்கே கொடுத்தபோது, அவர்கள் இருவரையும் உச்சி மோந்து, முத்தமிட்டுவிட்டு, ” உங்க அப்பன் உங்களுக்கு சாப்பாடே போடறதில்லையா? இப்படி இளைச்சு போயிட்டீங்களே!” என்று ஜோக் அடித்தார் சிவாஜி. அந்த இரண்டு சிறுமிகள் ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும்தான்! அவர்களுக்கு சோறு போடாத அப்பன் வேறு யார்? சாட்ஷாத் சூப்பர் ஸ்டார்தான் :lol:

NT always had good sense of humour, many failed to see that side of him.

saradhaa_sn
7th March 2011, 11:12 AM
அண்ணன் ஒரு கோயில்

தமிழ்த்திரைப்படங்களில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழக மக்களால், குறிப்பாக தாய்மார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரிய வெற்றிகளை ஈட்டியிருக்கின்றன. இவற்றுக்கு சிகரம் வைத்தாற்போன்று நடிகர்திலகமும், நடிகையர்திலகமும் அண்ணன் தங்கையாக நடித்த... (ஸாரி) வாழ்ந்த 'பாசமலர்' திரைக்காவியம் இன்றளவும் தமிழ்ப்படங்களில் அண்ணன் தங்கை பாசப்பிணைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பாசப்பிணைப்பைக் கிண்டல் செய்யும்போது கூட, 'அடேயப்பா என்னமோ பெரிய பாசமலர் அண்ணன் தங்கை மாதிரியல்லவா உருகுறீங்க?' என்ற சொற்றொடர் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. இதேபோன்று நடிகர்திலகமும், மற்றைய கதாநாயகர்களும் நடித்த, அண்ணன் தங்கை பாசத்தை அச்சாணியாகக்கொண்ட பல படங்களும் வெற்றிக்கனியை ஈட்டியிருக்கின்றன. அந்த வரிசையில் வந்து மாபெரும் வெற்றியடைந்த படம்தான், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான 'அண்ணன் ஒரு கோயில்' வண்ணத்திரை ஓவியம்.

இப்படத்துக்கு இன்னுமோர் சிறப்பும் உண்டு. இப்படம் 1977-ம் ஆண்டின் தீபாவளி வெளியீடாக வந்தது. இதற்கு சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்னர்தான் 1952 தீபாவளியன்று, தமிழ்த்திரையுலகின் புரட்சி கீதமாய், எழுச்சிப்பேரலையாய், சமுதாயக்கருத்துக்களை உள்ளடக்கிய காவியமாய் 'பராசக்தி' வெளிவந்து தமிழ்த்திரை வரலாற்றைத் திருப்பிப்போட்டதுடன், அதுவரை நாடக மேடைகளில் கலக்கி வந்த நடிப்புலகின் நாயகனை வெள்ளித்திரையில் காண வைத்தது. எனவே சரியாக 25 ஆண்டுகளை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து வெற்றிநடைபோட்ட நடிகர்திலகத்தின் வெள்ளிவிழா காணிக்கையாக வந்த படம்தான் 'அண்ணன் ஒரு கோயில்'.



படத்தின் துவக்கத்தில், பெரிய மனிதன் போலத்தோற்றம் தரும் ஒருவர், தலையில் தொப்பியும், கண்களில் கண்ணாடியும், முழங்காலுக்கும் கீழே நீண்ட முழுக்கோட்டும் அணிந்து, போலீஸுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறார். யார் அவர்? ஏன் ஓடுகிறார்?. அவர் ஒளிந்திருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கட்டில்லா பயணியாக ஒரு பெண் ஸ்டேஷன் மாஸ்ட்டரிடம் ஒப்படைக்கப்படுகிறாள். ஸ்டேஷன் மாஸ்டரின் பேத்திக்கு உடல்நலக்குறைவு என்று செய்தி வர, அந்தப்பெண்ணையும் அழைத்துப்போகும்போது, இவரும் கூடவே செல்ல, அந்தக்குழந்தைக்கு வைத்தியம் செய்யும்போது இவர் ஒரு டாக்டரென்று தெரிகிறது. அவருடைய கையெழுத்தைப்பார்த்ததும், அந்தப்பெண்ணுக்கு இவர் யாரென்பது பற்றி சந்தேகம் எழ, சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள அவரிடமே கேட்கும்போது அவர்தான் தன்னை மணக்கவிருந்த, சூரக்கோட்டை சின்னையா மன்றாயர் மகன் டாக்டர் ரமேஷ் என்பது தெளிவாக, தான்தான் அவரை மணக்கவிருக்கும் முரளிப்பாளையம் சேதுபதியின் மகள் ஜானகி என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.. (மணக்கவிருந்தவர் என்றால் எப்படி? பெற்றோர் நிச்சயித்த திருமணமா?. அப்படியானால் இருவரும் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டது எப்படி?. காதல் திருமணம் என்றால், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதுமே தெரிந்துகொள்ளாமல் போனது எப்படி?. என்பதற்கான விவரம் இல்லை).

தான் ஏன் இப்படி போலீஸ்கண்ணில் மாட்டாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அவர் விளக்க, ப்ளாஷ்பேக் விரிகிறது....

பெற்றோரின் மறைவுக்குப்பின் தன் ஒரே தங்கை லட்சுமி (சுமித்ரா)வுக்கு தாயாக, தந்தையாக, ஏன் அவளுக்கு உலகமே தானாக வாழ்ந்துவந்தவர் டாக்டர் ரமேஷ் (நடிகர்திலகம்). அவருக்கு நல்ல நண்பனாக, மற்றும் உதவியாளராக டாக்டர் ஆனந்த் (ஜெய்கணேஷ்), மற்றும் பொல்லா நண்பனாக ரவி(மோகன்பாபு) மற்றும் அவனுக்கும் ஒரு நண்பன் (பிரேம் ஆனந்த்). அமைதியாக, அழகாக சென்று கொண்டிருந்த ரமேஷ், லட்சுமி வாழ்க்கையில் நாகம் புகுந்தது போல ரவியின் கழுகுப்பார்வை லட்சுமியின்மீது விழுகிறது.

தனது பிறந்தநாளன்று, டாக்டர் ஆனந்த் தபேலா வாசிக்க, சிதார் இசைத்தவாறு பாடும் லட்சுமியை வைத்தகண் வாங்காமல் பார்க்கும் ரவி, பாரவையாலேயே அவளை விழுங்குகிறான். பின்னொருமுறை ரவி, டாக்டர் ரமேஷைச்சந்தித்து, தான் லட்சுமியை விரும்புவதாகவும் அவளைத் தனக்கு மணமுடித்து வைக்குமாறும் கேட்க, அனைத்து தீய பழக்கங்களுக்கும் புகலிடமாக இருக்கும் அவனுக்கு தன் தங்கையை மணமுடிப்பதைவிட பாழுங்கிணற்றில் அவளைத்தள்ளுவது மேல் என்று நினைக்கும் ரமேஷ், திருமணத்துக்கு மறுக்க, வாக்குவாதம் முற்றிய நிலையில், தங்கை லட்சுமியைக்குறித்து கேவலமாக பேசும் ரவியை கன்னத்தில் அறைந்து விரட்டி விடுகிறார். அடிபட்ட பாம்பாக அலையும் ரவி, ஒரே கல்லில் இரண்டுமாங்காயாக, தான் விரும்பிய லட்சுமியை தகாத முறையில் அனுபவிக்கவும், தன்னை அவமானப்படுத்திய டாக்டர் ரமேஷைப் பழிதீர்க்கவும் சமயம் பார்த்திருக்கிறான். அந்தநாளும் வந்தது...

தன் தங்கையின் திருமணம் பற்றி, தனக்கு உறுதுணையாக இருந்து வரும் அப்பத்தாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, யாரிடமிருந்தோ ஒரு போன் வருகிறது, டாக்டர் ரமேஷின் தங்கை லட்சுமியை, ரவி தன்னுடைய கெஸ்ட் அவுஸுக்கு கடத்திச்சென்று, சீரழிக்க முயல்கிறான் என்று. (போன் செய்தவர் யாரென்பது கிளைமாக்ஸில் தெரியவருகிறது). காரில் பறந்துசெல்லும் ரமேஷ், காரோடு ரவியின் கெஸ்ட் அவுஸ் கண்ணாடிக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய, அதற்குள் லட்சுமி சீரழிக்கப்பட்டுவிடுகிறாள். கோபாவேசமாக ரமேஷ் ரவியைத்தாக்க, சண்டையின் முடிவில் ரவி துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறான்.

ஆனால், தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவத்தினால் லட்சுமியின் புத்தி பேதலித்துப்போய், அண்ணன் ரமேஷையே யார் என்று கேட்க, ரமேஷின் மனம் நொறுங்கிப்போகிறது. நடந்த விஷயங்கள் வெளியே தெரிந்தால் தன் குடும்ப மானம், தங்கையின் எதிர்காலம் எல்லாம் பாழாகிவிடுமென்று எண்ணும் ரமேஷ், தனக்கு மிக மிக நம்பிக்கையான நண்பன் டாக்டர் ஆனந்தின் பொறுப்பில் தங்கையை ஒப்படைத்துவிட்டு போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாகிறார். அப்படி போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து ஓடும்போதுதான், தனக்கு மனைவியாக வரவிருந்த ஜானகியை (சுஜாதா) சந்திக்கிறார். ப்ளாஷ்பேக் முடிகிறது....

காட்டில் சுற்றியலையும்போது, ஒரு மரத்தடி சாமியின் கழுத்தில் கிடந்த மஞ்சள்கயிற்றை எடுத்து ஜானகிக்கு ரமேஷ் தாலி கட்டிய மறுநிமிடம், போலீஸ் அவர்களை சுற்றி வளைக்கிறது. ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். கணவனை எப்படியும் விடுதலை செய்வது என்ற வைராக்கியத்துடன் வக்கீல் மேஜரிடம் போக, அவரோ இந்த வழக்குக்கான காரண காரியங்களை கோர்ட்டில் சொல்லி, ரமேஷ் கொலை செய்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று நிரூபித்தால் மட்டுமே ரமேஷை விடுவிக்க முடியும் என்று கூற, சம்பவத்துக்கு ஒரே சாட்சியான லட்சுமியை கோர்ட்டில் பேச வைப்பது ஒன்றே ரமேஷைக்காப்பாற்றும் வழியென்ற எண்ணத்துடன் டாக்டர் ஆனந்தை சந்தித்து, தான் ரமேஷின் மனைவி ஜானகியென்று அறிமுகப்படுத்திக் கொள்ள, 'என்னது, ரமேஷுக்கு திருமணம் ஆகிவிட்டதா?' என்று ஆனந்துக்கு அதிர்ச்சி.

ஆனால் தன் கழுத்தில் தாலியேறிய அடுத்த நிமிடமே, ரமேஷ் கையில் விலங்கேறிய சோகத்தை விவரித்த ஜானகி, தற்போது லட்சுமியைக் கொண்டு நடந்த அசம்பாவிதத்தைக் கோர்ட்டில் சொல்ல வைத்தால் மட்டுமே ரமேஷைக்காப்பாற்ற ஒரே வழியென்று சொல்ல, ஆனந்த் மறுத்துவிடுகிறார். காரணம், லட்சுமி தற்போது பழைய நினைவுகளை அறவே நினைவுக்கு கொண்டுவர முடியாத நிலையில் இருப்பதும், தன் உயிருக்கே ஆபத்து வந்தாலும் இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாதென்று ரமேஷ் வாங்கிய சத்தியமும்தான். ஆனால் ஜானகியோ என்னவிலை கொடுத்தாகிலும் தன் கணவனை விடுத்லை செய்வேன் என்று ஆனந்திடம் சூளுரைத்துப்போகிறாள்.

ஜானகி போன சிறிது நேரத்தில், ‘rape’ என்ற பெயரில் ஒரு ஆங்கிலத் திரைப்பட விளம்பரம் ஆனந்தின் கண்ணில் பட, லட்சுமிக்கு பழைய நினைவு திரும்ப இப்படம் உதவக்கூடும் என்ற எண்ணத்தில் லட்சுமியை அழைத்துப்போகிறார். திரையில், தன் வாழ்க்கையில் நடந்து கொடுமையான சம்பவம் நடப்பதைப்பார்க்கும் லட்சுமியின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கருப்பு சம்பவம் நினைவுக்கு வர ஒரு கட்டத்தில் கத்திக்கதறி மூர்ச்சையாகிறாள்.

மயக்கம் தெளிந்து எழுந்ததும், தன் அருகே ஆனந்த் அமர்ந்திருப்பதையும், தன் கழுத்தில் தாலி இருப்பதையும் அறிந்து திடுக்கிடுகிறாள். ஆம், அவளுக்கு பழைய நினைவு திரும்பி விட்டது. ஆனந்த் மெல்ல மெல்ல அவளுக்கு நேர்ந்த கொடுமையையும், அதைத்தொடர்ந்து நடந்த ரவியின் கொலையின் காரணமாக அவளது அண்ணன் ரமேஷ் சிறையில் இருப்பதையும், விசாரணை நடந்து வருவதையும் எடுத்துச்சொல்ல, தனக்கு எல்லாமாக இருந்த தன் அண்ணனைக் காப்பாற்ற லட்சுமி, ஆனந்துடன் கோர்ட்டுக்குக் கிளம்புகிறாள்.

குற்றவாளிக்கூன்டில் நிற்கும் ரமேஷ், லட்சுமியைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, அவளை அழைத்து வந்ததற்காக ஆனந்தைக் கடிந்துகொள்ள, அவளோ தனக்கு நேர்ந்த கொடுமைபற்றி ஆனந்தே பொருட்படுத்தாமல், தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கும்போது தனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை, அண்ணனை காப்பாற்றுவதே தன் ஒரே எண்ணம் என்று கூற, இதனிடையே ஜானகி தன் வக்கீலிடம், இதோ இந்தப்பெண்தான் ரமேஷின் தங்கை, அவரைக்காப்பாற்றக் கிடைத்த ஒரே சாட்சி என்று சொல்ல, வக்கீல் மேஜர், லட்சுமியை பிரதான சாட்சியாக கூண்டில் நிறுத்துகிறார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை கோர்ட்டில் சொல்லியழும் லட்சுமி, இந்தக்கொலை தன் அண்ணன் செய்யவில்லை என்றும் தானே செய்ததாகவும் கூறினாலும், அரசுத்தரப்பு வழக்கறிஞர், இது எதிர்த்தரப்பு வக்கீலால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று மறுக்கிறார். அப்போது கோர்ட்டுக்குள் வரும் ரவியின் நண்பன் பிரேம் ஆனந்த் (கோர்ட் காட்சியின்போது நடிகர் பிரேம் ஆனந்துக்குப் போடப்பட்டிருக்கும் மேக்-அப் மிகவும் அற்புதம். தெய்வமகன் நடிகதிலகத்தின் மேக்-அப்பை நினைவுபடுத்தும்), லட்சுமி சொல்வது முழுக்க உண்மையென்றும், லட்சுமியை தானும் ரவியும்தான் கடத்திச்சென்றதாகவும், அவளை யார் முதலில் அடைவது என்ற சர்ச்சையில், ரவி தன் தலையில் பாட்டிலால் அடித்துக்கீழே தள்ளிவிட்டு லட்சுமியின் கற்பைச்சூறையாட முயலும்போது, தானே ரமேஷுக்கு போன் செய்ததாகவும், பின்னர் ரமேஷ் வந்து ரவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, புத்தி சுவாதீனமில்லாத நிலையில் லட்சுமியே ரவியைச்சுட்டதாகவும், தங்கையின் மானத்தைக்காப்பாற்ற ரமேஷ் கொலைப்பழியை தான் ஏற்றுக்கொண்டு நிற்பதாகவும் சாட்சி சொல்ல, ரமேஷ் விடுதலை செய்யப்படுகிறார்.

தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாகச்செல்லும் இப்படத்தின் துவக்கத்தில் வரும் ரயில்நிலையக்காட்சிகள் ரொம்பவே அருமையாக சஸ்பென்ஸ் நிறைந்ததாக இருக்கும். இரவுநேரத்தில், டாக்டர் ரமேஷ் ஒரு அறையில் ஒளிந்துகொண்டிருக்க, ரயில் வரும்நேரம் ஒரு பெண் (ஸ்வர்ணா) பாடிக்கொண்டே, ரயில் நிலையத்தில் இங்குமங்குமாக ஓடி யாரையோ தேடும் காட்சிகள் அருமையான துவக்கமாக இருக்கும். அந்தப்பெண்ணும் ரவியாக வரும் மோகன் பாபுவால் ஏமாற்றப்பட்ட பெண். அவள் ஏமாந்ததன் விளைவாக உருவானதுதான் ஸ்டேஷன் மாஸ்டரின் பேத்தி.

கதையின் போக்கு ரொம்பவே சீரியஸாக அமைந்துவிட்டதால், 'காமெடி ட்ராக்' தனியாக சேர்க்கப்பட்டிருக்கும். ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக (கௌரவத்தோற்றத்தில்) தேங்காய் சீனிவாசனும், கான்ஸ்டபிளாக ஏ.கருணாநிதியும், பாயிண்ட்மேனாக சுருளியும், கொள்ளைக்காரியாக மனோரமாவும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். டாக்டர் ரமேஷைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் தரப்படும் என்ற காவல்துறை விளம்பரத்தை வைத்துக்கொண்டு சுருளி அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. அதுபோல, அப்பாவிப்பெண் போல வந்து போலியான கதைசொல்லி ஏமாற்றி கொள்ளையடித்துப்போகும் மனோரமாவும், அவளை மடக்கிப்பிடிக்கும் தேங்காயும் கூட நன்றாகவே சிரிக்கவைப்பார்கள்.

இதற்கு முன் நிறைகுடம், சிவந்தமண், எங்கமாமா, சுமதி என் சுந்தரி என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடிகர்திலகத்தின் படங்களில் நடித்து வந்த தேங்காய் சீனிவாசன், சுமதி என் சுந்தரி (14.04.1971) க்குப்பிறகு, கிட்டத்தட்ட ஆறரை ஆண்டுகள் நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடிக்கவில்லை. இதுகுறித்து தேங்காய் கூட பல்வேறு பத்திரிகைப் பேட்டிகளில் குறைசொல்லி வந்தார். இவர் மாற்றுமுகாம் அபிமானி என்பதால் நடிக்கவில்லை என்று சொல்லவும் முடியாது.

saradhaa_sn
7th March 2011, 11:24 AM
அண்ணன் ஒரு கோயில் (2)

ஏனென்றால் இவரைவிட மாற்றுமுகாம் அபிமானிகளான வில்லன் நடிகர் கே.கண்ணன், ராமதாஸ் போன்றவர்கள் நடிகர்திலகத்துடன் அதிகமான படங்களில் நடித்து வந்தனர்.

காரணம் என்னவாக இருந்தபோதிலும், மிக நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகர்திலகத்தின் 'மறப்போம், மன்னிப்போம்' கொள்கையின் காரணமாக, நடிகர்திலகத்தின் சொந்தப்படமான இப்படத்தில் நடித்தாலும் நடித்தார், இதிலிருந்து தேங்காய் இல்லாத நடிகர்திலகத்தின் படங்களே இல்லையென்று சொல்லுமளவுக்கு வரிசையாக அத்தனை படங்களிலும் இடம்பெறத் துவங்கினார். அதிலும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சொந்தப்படங்களான திரிசூலத்துக்காக காஷ்மீருக்கும், ரத்தபாசத்துக்காக ஐரோப்பிய நாடுகளுக்கும் தேங்காய் அழைத்துச்செல்லப்பட்டார். அத்துடன் பைலட் பிரேம்நாத் படத்துக்காக இலங்கைக்கும், இமயம் படத்துக்காக நேபாளத்துக்கும் சென்று வந்தார். (இவர் நடித்த "மற்றவர்கள்" படங்களில் சென்னையில் வைத்தே இவர் ரோல்களை முடித்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்).

படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்க, மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட். முதல் பாடல், ரயில் நிலையத்தில், கைவிட்டுப்போன காதலனைத் தேடியலையும் ஸ்வர்ணாவுக்காக, வாணி ஜெயராம் பாடிய 'குங்குமக்கோலங்கள் கோயில் கொண்டாள கோதை நாயகன் வருவானடி' என்ற மனதை மயக்கும் பாடல். இரவுக்காட்சிக்கேற்ற திகிலூட்டும் இசையுடன் கலந்து தந்திருப்பார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்ட கதையாயிற்றே அதனால் பாசமலரில் இடம்பெற்ற 'மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்' பாடலைப்போல அமைந்த பாடல், 'மல்லிகை முல்லை பொன்மணி கிள்ளை, அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை' என்ற மிக அருமையான பாடல். தங்கையின் வருங்கால வாழ்க்கையைப்பற்றி அண்ணன் கனவுகாண, அவனது கனவில் அவள் மதுரை மீனாட்சியாக, கோதையாக, ஆண்டாளாக, சீதையாக வடிவெடுத்து வருகிறாள். பாடல், இசை மட்டுமல்ல, இவற்றைத்தூக்கி நிறுத்தும் ஒளிப்பதிவும் அற்புதம்.

தன்னுடைய பிறந்தநாளன்று, கையில் சிதார் மீட்டியவாறு சுமித்ரா பாடும், 'அண்ணன் ஒரு கோயிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ' இசைக்குயில் பி.சுசீலாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. தங்கை அண்ணன் மீது கொண்ட பாசப்பிணைப்பை விவரிக்கும் ஒரு வரி.....
'கண்ணன் மொழி கீதையென்று கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பேர் பாசமன்றோ'

இதே பாடலை, சுயநினைவற்று இருக்கும் சுமித்ராவின் நினைவு திரும்புவதற்காக திரைக்குப்பின்னால் இருந்து ஜெய்கணேஷ் பாடுவார். அவருக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார்.

நடிகர்திலகமும் சுஜாதாவும் காட்டுக்குள் போலீஸுக்கு மறைந்து திரிந்து கொண்டிருக்கும்போது, போலீஸ் ஜீப் வந்துவிட, அவர்கள் கண்களில் படாமல் இருக்க மரக்கட்டைகள் அடுக்கப்பட்ட இடைவெளிக்குள் நுழைந்துகொள்ள, அங்கே இருவரும் காதல் வயப்படும்போது, பின்னணியில் அசரீரியாக ஒலிக்கும் பாடல் 'நாலுபக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு... காதல், இன்பக்காதல்'. எஸ்.பி.பி.யும், வாணிஜெயராமும் பாடியிருந்தனர்.

நடிகர்திலகத்தின் வீடாகக் காண்பிக்கப்படும் இடம் ஊட்டியிலுள்ள அரண்மனையின் உட்புறம். இப்படத்துக்காக அக்கட்டிடத்தின் உட்பகுதி புதுப்பிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவை பழம்பெரும் ஒளிப்பதிவு மேதை ஜி.ஆர்.நாதன் செய்திருக்க, நடிகர்திலகத்தின் வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவரான கே.விஜயன் இயக்கியிருந்தார்.

இப்படத்துக்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் 'எங்க வீட்டு தங்க லட்சுமி'. படம் உருவாகிக்கொண்டிருந்தபோது, இப்படத்தின் பெயர் 50 களில் ஏ.நாகேஸ்வரராவ் நடித்து பெரும்வெற்றிபெற்ற 'எங்கவீட்டு மகாலட்சுமி' பெயர் போல இருக்கிறது என்றும், மிகவும் பழங்கால டைட்டில் போல இருக்கிறதென்றும் பலரும் அபிப்பிராயம் சொல்ல, படத்தின் பெயரை மாற்றுவதென்று முடிவு செய்து என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் அவரை பாசத்தோடு 'அண்ணன்' என்று அழைப்பதாலும், படத்தின் கதையும் அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக்கொண்டதாலும், 'அண்ணன் ஒரு கோயில்' என்று வைக்கலாம் என்று முடிவு செய்தபோது அனைவராலும் இந்த டைட்டில் வரவேற்கப்பட்டது.

1977-ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த 'அண்ணன் ஒரு கோயில்', நடிகர்திலகத்துக்கு வெள்ளிவிழா ஆண்டின் நிறைவுப்படமாகவும் அமைந்து மாபெரும் வெற்றியை அவருக்குப் பரிசாக அளித்தது. கீழ்க்கண்ட அரங்குகளில் 100 நாட்களைக்கடந்து வெற்றிநடைபோட்டது.

சென்னை - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி
மதுரை - நியூ சினிமா
கோவை - கீதாலயா
திருச்சி - பிரபாத்
சேலம் - சாந்தி
தஞ்சை -அருள்
குடந்தை - செல்வம் (நூர்மஹால்).

வெற்றிகரமாக 100 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, இந்த ஆண்டின் வெள்ளிவிழாப்படமாக இப்படம் அமையும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். கதாநாயகன் என்றால் வில்லன் வேண்டுமல்லவா?. எனவேதான் கதாநாயகனின் சொந்தப்படத்தை தடுக்க வில்லனின் சொந்தப்படம் வந்தது. ஆம், அண்ணன் ஒரு கோயில் வெற்றிகரமாக 114 நாட்களைக்கடந்தபோது, 115 வதுநாளன்று பாலாஜியின் 'தியாகம்' படம் இதே திரையரங்குகளில் ரிலீஸாவதாக செய்தி வந்தது. (இதற்கிடையே 'அந்தமான் காதலி' வேறு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது). வெகுண்டுபோன ரசிகர்கள் பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அவரோ, தான் படத்தை விநியோகஸ்தரிடம் விற்றுவிட்டதாகவும், விநியோக விஷயத்தில் தலையிட முடியாதென்றும் கழன்றுகொண்டார்.

சாந்தி தியேட்டருக்கு வந்த சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் மேனேஜர் மோகன்தாஸை ரசிகர்கள் சுற்றிவளைத்து, சாந்தியில் மட்டுமாவது அண்ணன் ஒரு கோயில் தொடர்ந்து ஓடி வெள்ளிவிழாவைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று கேட்க, அவரும் ஏற்கெனவே புக் பண்ணியதை மாற்ற முடியாதென்றும், சாந்திக்கு பக்கத்து அரங்குகளான அண்ணா தியேட்டர் அல்லது பிளாஸாவுக்கு கண்டிப்பாக மாற்றப்படும் என்றும் சொல்லி அகன்றுபோனார். ஆனால் அவரது வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 'அண்ணன் ஒரு கோயில்' 114-ம் நாள் விழாவோடு மாற்றப்பட்டு, 'தியாகம்' திரையிடப்பட்டது.

'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிய என் கருத்துக்களைப் படித்த அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.

(Image: Nadigar Thilagam presents the 114 th day Sheild to Singer Mrs. Vani Jayaram on the Victory Day Function)

parthasarathy
7th March 2011, 04:57 PM
அண்ணன் ஒரு கோயில் (2)


'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிய என் கருத்துக்களைப் படித்த அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.

(Image: Nadigar Thilagam presents the 114 th day Sheild to Singer Mrs. Vani Jayaram on the Victory Day Function)

சாரதா மேடம் அவர்களுக்கு,

தங்களின் அண்ணன் ஒரு கோவில் ஆய்வு மிகப் பிரமாதம். குறிப்பாக, நிறைய நுணுக்கமான புள்ளி விவரங்களை வழக்கம் போல் அளித்துள்ளீர்கள்.

இந்தப் படம் வெளிவந்தபோது, என் வீட்டின் அருகே, மெடிகல்ஸ்/ஆப்டிகல்ஸ் கடை ஒன்று ஆரம்பித்தனர். அவர்களுடைய கண்ணாடிகளை விளம்பரப் படுத்துவதற்கு, நடிகர் திலகத்தின் அந்தப் பெரிய கண்ணாடியுடன் இருக்கும் pose -ஐ தான் வைத்திருந்தனர். அந்த அளவிற்கு, அந்தக் கண்ணாடியுடன் இருக்கும் அவரது pose மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்தப் படத்திற்கு, தீபாவளி அன்றே சாந்தி திரை அரங்கை முற்றுகை செய்தும், டிக்கெட் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பி, (வீட்டிற்குத் தெரியாமல் படத்திற்கு சென்றோம் வழக்கம் போல). வீட்டிற்குத் திரும்பி, சாயங்காலத்திற்கு மேல், அப்பாவிடம் மாட்டிக் கொண்டு விழித்தேன் - அடியும் கூடத்தான்!. படம் பார்க்காமல் சீக்கிரம் திரும்பி விட்டோமே, எப்படி இவருக்குத் தெரிந்தது என்று பார்த்தால், என் அத்தை பையன்கள், மற்றும், சில உறவினர்களும் அந்தப் படத்திற்கு சாந்திக்கு வந்திருக்கின்றனர் (இவர்கள் அத்தனை பேரும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள், இல்லையில்லை, பக்தர்கள். பார்த்ததோடு விடாமல், சாயங்காலம், என் அப்பா அங்கு, அவர்களது வீட்டிற்குச் சென்றபோது, தெரிவித்து விட்டனர். இது போல், மாட்டிக் கொள்வது (குறிப்பாக, நடிகர் திலகம் படங்களுக்குச் சென்று).

பார்த்தசாரதி

RAGHAVENDRA
8th March 2011, 08:08 AM
அன்புச் சகோதரி சாரதா,
அண்ணன் ஒரு கோயில் படத்தைப் பற்றிய தங்களின் பதிவுகள் மிகவும் அருமை. விருப்பு வெறுப்பின்றி தங்கள் கருத்துக்களைப் பதித்துள்ளீர்கள். இது தான் சிவாஜி ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு. சென்னை சாந்தியில் பெண்கள் டிக்கெட்டுக்கான வரிசை, அந்த கேட்டில் துவங்கி, அரங்கின் நுழைவாயில் வரையிலும் நீண்டிருந்ததை நான் பல முறை பார்த்திருக்கிறேன். தாங்களும் பார்த்திருப்பீர்கள். நிச்சயம் வெள்ளி விழா காணும் என்ற ஆவலை துவம்சம் செய்தது தியாகம் படத்தின் வெளியீடு. இது பற்றி நாம் பலமுறை விவாதித்துள்ளோம். போதாக்குறைக்கு இருமாத இடைவெளியில் அந்தமான் காதலி வெளியீடு. அதுவும் அமோகமாக பெண்கள் ஆதரவைப் பெற்று வெற்றி நடை போட்ட படம். பொதுவாக ஷிப்ட் செய்யப் படும் போது அந்த வேகம் குறைந்து விடும் என்பார்கள். ஆனால் மிட்லண்டில் சக்கைப் போடு போட்ட படம் லியோவிலும் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்றது. அப்படமும் வெள்ளி விழா கண்டிருக்கவேண்டியது.

தாங்கள் குறிப்பிட்டது போல் நடிகர் திலகத்தின் படைத்தளபதிகளில் ஒருவராகவே வலம் வந்த பிரேம் ஆனந்த் அதிகம் சோபிக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. தமிழ்நாடு முழுதும் அவரும் ஜெய்கணேஷ் அவர்களும் திறநது வைத்த சிவாஜி ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கையை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு அவர்கள் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்களாகவும் அதற்கும் மேலேயும் திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்கள் கூறுவது போல் வெறியர்களாகவும் இருந்தார்கள்.

அப்படிப்பட்ட பிரேம் ஆனந்திற்கும் ஜெய்கணேஷ் அவர்களுக்கும் இப்படம் நிச்சயம் வாழ்நாளில் குறிப்பிடத்தக்கபடமாக அமைந்து விட்டதில் வியப்பில்லை.

மற்றபடி தங்கள் பதிவுகள் அடுத்த தலைமுறையினருக்கு இப்படத்தைப் பற்றிய சரியான அறிமுகமாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.

குறிப்பு - இன்று 08.03.11 முதல் மகேந்திராவின் பார்வையிலே நிகழ்ச்சியில் வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் நடிகர் திலகத்துடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். காணத் தவறாதீர்கள்.
தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

groucho070
8th March 2011, 08:48 AM
Finished reading, Saradha mdm. Fantastic review.

One question, does it mean that the song (Annan Oru Kovil endral) was composed and shot after they decided to retitle the film?

saradhaa_sn
8th March 2011, 12:44 PM
Finished reading, Saradha mdm. Fantastic review.

One question, does it mean that the song (Annan Oru Kovil endral) was composed and shot after they decided to retitle the film?

Thank you Rakesh,

Yes, the title of the movie had been changed as 'Annan oru kOyil' in the very initial stage of production, because many cine personalities suggested that the name 'enga veetu thanga latchumi' looks like old movie, and many fans wrote to Sivaji Productions to change it to an attractive one. After the change only, kavignar wrote the song, starting with movie title.

saradhaa_sn
8th March 2011, 12:47 PM
டியர் பார்த்தசாரதி,

தங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி. அண்னன் ஒரு கோயில் படம் பார்க்கச்சென்ற தங்கள் மலரும் நினைவுகள் சுவையாக இருந்தன. (நல்லவேளை, என் பெற்றோர்கள் அடிக்கக்கூடியவர்களாக இல்லை. மாறாக அவர்களே நடிகர்திலகத்தின் படங்களூக்கு என்னை அழைத்துச் செல்லக் கூடியவர்களாக இருந்தனர்).

டியர் ராகவேந்தர்,

தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. தங்கள் மறுமொழியில் குறிப்பிட்ட விஷயங்கள் மீண்டும் அந்தக்கால நினைவுகளுக்கு என்னை இட்டுச்சென்றன. நடிகர் பிரேம் ஆனந்த், நடிகர்திலகத்தின் சிறந்த அபிமானியாகவும், மிகச்சிறந்த ரசிகராகவும், எந்நாளும் நடிகர்திலகத்துடன் ஒட்டியே இருந்து வந்தவர். அதனால் அன்றைய நாட்களில் நடிகர்திலகத்தின் படங்களில் அவருக்கு ஏதாவது ஒரு ரோல் கண்டிப்பாக இருக்கும். அதுவும் பைலட் பிரேம்நாத் படத்தில், கதாநாயகி ஷ்ரீதேவிக்கு ஜோடியாக, நடிகர்திலகத்தின் மாப்பிள்ளையாக பிரதான ரோல் ஒன்றில் நடித்தார்.

ஜெய்கணேஷைப்பொறுத்தவரை, எனது சிறு வயதில் அவரை நேரிலேயே சந்தித்துப் பேசியிருக்கிறேன். மிட்லண்ட் தியேட்டரில் 'எமனுக்கு எமன்' படத்தின் மேட்னிக்காட்சிக்கு வந்திருந்தவரை (அப்போதைய இளவயது ஜெய்கணேஷை இமேஜின் பண்ணிக்குங்க) இடைவேளையில் வராண்டாவில் நாங்கள் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். ரொம்ப அழகாக செயற்கைத்தனமில்லாமல் பேசினார். வெள்ளை ஜிப்பாவும் குர்தாவும் அணிந்திருந்தார். அப்போது சுற்றி நின்ற ரசிகர்கள், அவர்மீது கலர்ப்பொடிகளைத்தூவி கிண்டல் செய்ய, அங்கிருந்து தப்பிக்க மடமடவென்று மாடிக்குப்போய் ஆபரேட்டர் அறைக்குள் புகுந்துகொண்டவர், மீண்டும் காட்சி துவங்கியதும்தான் தியேட்டருக்குள் வந்தார்.

பிற்காலத்தில் நல்ல குணசித்திர நடிகராக, குறிப்பாக நகைச்சுவைக்காட்சிகளில் திறம்பட நடித்தவர் ஜெய்கணேஷ். பான்பராக் போடும் பழக்கம் காரணமாக கன்னத்தில் புற்றுநோயால் குழிபறிக்கப்பட்டு வெகுசீக்கிரமாகவே நம்மைவிட்டும் மறைந்து போனார்.

நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இதயங்களில் ஜெய்கணேஷ், பிரேம் ஆனந்த் இருவருக்கும் என்றென்றும் நிரந்தர இடம் உண்டு.

groucho070
8th March 2011, 01:02 PM
Thanks for the info, mdm
many fans wrote to Sivaji Productions to change it to an attractive one.:shock: And they did. The power of internet is overrated. Appove snail mail-la prove pannittangga namma NT fans :bow:

saradhaa_sn
8th March 2011, 05:13 PM
'அண்ணன் ஒரு கோயில்' பட விமர்சனத்தில், சொல்ல மறந்த (ஆனால் என்றும் மனதில் மறவாத) அண்ணனின் பெர்பார்மென்ஸில் சில துளிகள்....

** 'மல்லிகை முல்லை' பாடலின்போது அவர் தரும் கனிவான பார்வைப்பறிமாற்றங்கள், தங்கையின் கையைப்பிடித்துக்கொண்டு, பாடிக்கொண்டே ஸ்டைலாக நடந்துவரும் அழகு, கற்பனையில் தன்னைச்சுற்றி ஓடிவரும் மருமகப்பிள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணும்போது உண்மையான தாய்மாமனின் உணர்ச்சிப்பெருக்கு...

** தன்னைச்சுற்றிலும் போலீஸ் தேடல் இருந்தும், தான் வந்துதான் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் ஒரு பெற்றோருக்காக, வார்டுபாய் போல வேடமிட்டு ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு வந்து, ஆபரேஷன் முடிந்ததும், ஸ்ட்ரெசருக்குக் கீழே ஒளிந்துகொண்டே வெளியேறும்போது காட்டும் கடமையுணர்ச்சி...

** தங்கைக்கு நேர்ந்த சோகத்தை, தன் வருங்கால மனைவியிடம் சொல்லும்போது காட்டும் உணர்ச்சிப்பிரவாகம்....

** 'அண்ணன் ஒரு கோயிலென்றால்' பாடலின்போது, தன்னைப்பற்றிப்பாடும் தங்கையின் வார்த்தைகளால் கண்கள் கலங்க, அதை தங்கை பார்த்துவிடாமல் மறைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள்...

** நண்பன் ஆனந்தின் கஸ்டடியில் இருக்கும் தங்கையைக் காண வந்திருக்கும்போது, சுய நினைவின்றி கிடக்கும் தங்கையைப்பார்த்து ஆனந்திடம் அவளது கடந்தகால சூட்டிகையைப்பற்றிக்கூறும்போது ஏற்படும் ஆதங்கம். 'டாக்டர், இப்படி ஒரு இடத்துல படுத்துக்கிடவளா இவ?. என்ன ஆட்டம், என்ன ஓட்டம், என்ன பேச்சு, என்ன சிரிப்பு'.... பேசிக்கொண்டிருக்கும்போதே குரல் உடைந்து கதறும் பாசப்பெருக்கு....

** கோர்ட்டில் கூண்டில் நிற்கும்போது, எதார்த்தமாக சுற்றிலும் பார்க்கும்போது, அங்கே தன் தங்கை வந்து நிற்பதைப் பார்த்து முகத்தில் காட்டும் அதிர்ச்சி. அரசுத்தரப்பு வக்கீல் வேண்டுமென்றே தன்மீது கொலைக்குற்றம் சுமத்தி அதற்காக ஜோடிக்கப்பட்ட காரணத்தையும் கூறும்போது, மறுபேச்சுப்பேசாமல் அவற்றை ஒப்புகொள்ளும்போது ஏற்படும் பரிதாபம்....

** கொலைசெய்யப்பட்டவனின் நண்பன் கோர்ட்டில் வந்து, நடந்த சம்பவங்களை விளக்கும்போது, 'இவன்தான் தனக்கு போன் செய்தவனா?' என்று முகத்தில் காட்டும் ஆச்சரியம்....

இவரது உணர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுத்து நடித்ததன்மூலம் டெம்போ குறையாமல் படத்தை எடுத்துச்செல்ல பெரும் பங்காற்றிய சுமித்ரா, ஜெய்கணேஷ், சுஜாதா. அவற்றைப் பன்மடங்காகப் பெருக்க துணை நிற்கும் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை... எல்லாம் இணைந்து படத்தை எங்கோ கொண்டு சென்றன.

Murali Srinivas
9th March 2011, 01:16 AM
சாரதா,

நேற்றே படித்து விட்டேன் உங்கள் பதிவை. பதில் மட்டும் இன்று பதியலாம் என்று நினைத்து வந்த போது உங்களிடமிருந்து மீண்டும் ஒரு பதிவு படத்தைப் பற்றி. உங்கள் பதிவு எப்போது சோடை போனது? ஆனால் நேற்று படித்த போது வழக்கம் போல் விலாவரியாக இல்லாமல் சுருக்கி எழுதியது போல் தோன்றியது. அந்த குறையை நிவர்த்தி செய்வது போல படத்தின் ஹைலைட்டான சில பல துளிகளை இன்று எழுதி விட்டீர்கள்.

நம்முடைய சொந்தப் படங்களைப் பொறுத்தவரை தொடர்ந்து படங்களை எடுக்கும் வழக்கம் கிடையாது என்பதும் நீண்ட இடைவேளைக்கு பிறகே படங்களை தயாரிப்பார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. 70-ல் வியட்நாம் வீடு, பிறகு 74-ல் தங்கப்பதக்கம் அதற்கு பிறகு 77-ல் இந்த அண்ணன் ஒரு கோயில். கன்னடப்படத்தின் ரீமேக். [பின்னாளில் இந்த ஒரிஜினல் தோல்விப்படத்தை தான்தான் தன்னுடைய திரைக்கதை மூலமாக தமிழில் வெற்றிப்படமாக்கியதாக இயக்குனர் கே.விஜயன் ஒரு நகைச்சுவை பேட்டி அளித்திருந்தார்].அரசியல் காரணங்களாலும் ஒரு சில படங்களின் கதையும் திரைக்கதையும் சரியாக அமையாத காரணத்தினால் 75 -76 காலக்கட்டத்தில் ஒரு தேக்க நிலையை அடைந்த நடிகர் திலகம் அதன் பிறகு கதையமைப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். அப்படி தேர்வு செய்த படம்தான் அண்ணன் ஒரு கோயில். இது ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 1977 மே மாதம் வாக்கில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அந்தமான் காதலி படத்தில் நடிக்கும்போது செல்வி சுஜாதாவாக இருந்தவர் இந்தப் படத்தில் திருமதி சுஜாதா ஜெயகராக மாறினார்.

"மூன்று வருடங்களுக்குப் பிறகு எடுக்கும் சொந்தப்படத்திற்கு எங்க வீட்டு தங்கலட்சுமி-னு பெயராம், விளங்கிடும்" என்று எங்கள் மதுரைக்கே உரித்தான கமண்ட்கள் ரசிகர்கள் மத்தியில் உலா வந்துக் கொண்டிருக்க, வருகிறது பெயர் மாற்றம். ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சாணிக் கிளைக்கே கொண்டுப் போய்விட்டது. படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்ற செய்தி அதை அதிகப்படுத்தியது. தீபத்திற்கு பிறகு வந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வகையில் அமையாததில் சற்றே சோர்ந்த ரசிகர்கள் இந்தப் படத்தின் வெற்றியில் உறுதியாக இருந்தனர்.

தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்தான் தமிழகத்தை அச்சுறுத்திய ஒரு கடும் புயல் திசை மாறி ஆந்திராவின் ஒங்கோலை தாக்கியது. ஆனால் தமிழகமும் அந்தப் புயலின் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. தவிரவும் அதே நேரத்தில்தான், இன்னும் சரியாக சொல்லவேண்டுமென்றால் 1977 அக்டோபர் 29,30 தேதிகளில்தான் தமிழக சுற்றுப் பிரயாணம் மேற்கொண்ட அன்னை இந்திரா அவர்களின் மீது மதுரையில் கொலை வெறி தாக்குதல் நடந்தது. அதன் காரணமாக அன்றைய எதிர்க் கட்சி தலைவர் கைது செய்யப்பட தமிழகத்தின் பல நகரங்களில் வன்முறை சம்பவங்கள் அரேங்கேறின. தவிரவும் பல இடங்களில் மாணவர், தொழிலாளர் போராட்டங்கள் நடந்துக் கொண்டிருந்த நேரம். இப்படி இயற்கையாகவும் செயற்கையாகவும் எதிர்மறையான சூழல் நிலவிய நேரத்தில் படம் வெளியாகிறதே என்று ஒரு மனதுக்குள் ஒரு அச்சம் இருந்தது. அதை தவிர கிட்டத்தட்ட 6 படங்கள் வேறு போட்டியாக வெளியாகின. [ஆறு புஷ்பங்கள், சக்ரவர்த்தி, பெண்ணை சொல்லிக் குற்றமில்லை போன்றவை] ஆனால் அனைத்து சோதனைகளையும் கடந்து அண்ணன் ஒரு கோயில் மகத்தான வெற்றிப் பெற்றது.

நவம்பர் 10 அன்று தீபாவளி, ஒரு வியாழக்கிழமை நியூசினிமாவில் ரிலீஸ். ஒரு சில நண்பர்களால் ஓபனிங் ஷோவிற்கு வரமுடியாத சூழல் என்பதால் மாலைக் காட்சிக்கு சென்றோம். படத்தைப் பற்றிய ரிப்போர்ட் நன்றாக இருந்ததால் இன்னும் உற்சாகம் கூடி விட்டது. படமும் எங்களை ஏமாற்றவில்லை. நெகட்டிவில் காட்டப்பட்ட டைட்டில்கள் அமர்க்களம் என்றால் முதல் காட்சியில் அந்த ஓட்டத்தில் எங்களை கட்டிப் போட்ட நடிகர் திலகம் இறுதி வரை அப்படியே வைத்திருந்தார். வெகு நாட்களுக்கு பின் அப்படி ஒரு அலப்பறையோடு ஒரு புது படம் பார்த்தோம்.

இந்தப்படத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் சில உண்டு. நிறைய காட்சிகள் வெளிப்புறத்தில் படமாக்கப்பட்டிருக்கும். இயல்பான வசனங்கள் படத்திற்கு பிளஸ் பாயிண்ட். வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு மருமக வேணும் என்று சொல்லும் ஆயாவிடம் விளக்கேற்ற தீப்பெட்டி போதும் என்று நடிகர் திலகம் சொல்ல அய்யோ அறுவை அறுவை என்று சுமித்ரா கேலி செய்ய ஒரு அழகான காட்சி அங்கு விரியும். அது போல காட்சிகளில் லாஜிக் இருக்கும். உறவினரான isr -ஐ மணந்துக் கொள்ள வற்புறுத்தப்படும் சுஜாதா அவருடன் தியேட்டருக்கு சென்று விட்டு இடைவேளையில் தப்பிப்பது, தங்கையை தேடி காரில் புயலென வரும் நடிகர் திலகம் ஒரு இடத்தில் சட்ரென்று ரிவர்ஸ் எடுத்து அங்கேயுள்ள கடையில் அந்த வழியாக சென்ற காரைப் பற்றி விசாரிப்பது,இப்படி நிறைய சொல்லலாம்.

படத்தில் சில பல காட்சிகளில் அன்னை இல்லத்திலே படப்பிடிப்பு நடத்தியிருப்பார்கள். மல்லிகை முல்லை பாடல், கடைசி காட்சி முதலியவை. சாரதா குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் யாருக்கும் தெரியாமல் தங்கையை பார்க்க வரும் காட்சியில் பின்னியிருப்பார் நடிகர் திலகம். அதுவும் அந்த வசனம் ஹைலைட். இறுதியில் இன்ன இன்ன மருந்துகள் கொடுக்கிறேன் என்று சொல்லும் ஜெய்கணேஷிடம் "ஒரு டாக்டரா என்னால இப்போ உனக்கு அட்வைஸ் பண்ண முடியாது. உன்கிட்டே ஒப்படைசிருக்கேன், நீ பாத்து என்ன செய்யணுமோ அதை செய்" என்று அண்ணனாக சொல்லிவிட்டு வெளியேறுவது வரை அவரின் தர்பார்தான். ஆறரை வருடங்களுக்கு பிறகு இணைந்தாலும் தேங்காய்க்கு இந்தப் படத்தில் நடிகர் திலகத்துடன் காம்பினேஷன் ஷாட்ஸ் கிடையாது.

பாக்ஸ் ஆபிசில் சக்கை போடு போட்ட படம். மதுரையில் தீபாவளியன்று 5 காட்சிகளில் ஆரம்பித்த ஹவுஸ் புல் காட்சிகள் தொடர்ந்து 30 நாட்களுக்கு தொடர்ந்தது. ஆம் நியூசினிமாவில் வெளியான முதல் முப்பது நாட்களில் நடைபெற்ற 101 காட்சிகளும் ஹவுஸ்புல். இந்தப் படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு பின் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற அந்தமான் காதலியாலும் இந்தப் படம் பாதிக்கப்படாமல் 100 நாட்கள் என்னும் வெற்றிக் கோட்டை கடந்தது. மதுரையில் அண்ணன் ஒரு கோயில், அந்தமான் காதலி, தியாகம் என்று தொடர்ந்து மூன்று நூறு நாள் படங்கள் [அதிலும் தியாகம் வெள்ளி விழா படம்] அமைவதற்கு ஆரம்ப புள்ளியாகவும் அமைந்தது அண்ணன் ஒரு கோயில் என்று சொன்னால் அது மிகையில்லை.

மீண்டும் 1977-ற்கு அழைத்து சென்று அந்த இனிமையான நினைவுகளை அசை போட வாய்பளித்ததற்கு மிக்க நன்றி.

அன்புடன்

saradhaa_sn
9th March 2011, 08:06 PM
டியர் முரளி,

அண்ணன் ஒரு கோயில் பதிவைப் படித்ததும் (வழக்கம்போல) நிச்சயம் அது தொடர்பான வரலாற்றுப்பதிவோடு வருவீர்கள் என்று நினைத்தேன். அதுபோலவே வந்து அசத்திவிட்டீர்கள். வேண்டுமென்றே எனது பதிவைச்சுருக்கவில்லை. கதைச்சுருக்கமே சற்று நீண்டுவிட்டதாலும், அதுதொடர்பான மற்ற சில நிகழ்ச்சிகளை உட்படுத்த வேண்டியிருந்ததாலும், காட்சியமைப்புக்கள் பற்றிய விவரங்கள் சற்று குறைந்துவிட்டன. உங்கள் பதிவு அவற்றைப்போக்க வல்லதாக அமைந்துவிட்டது.

காட்சியமைப்புகளில் ஒளிப்பதிவு சிறப்பாகவும், துல்லியமாகவும் இருந்தது. ஒளிப்பதிவு மேதை ஜி.ஆர்.நாதன் கருப்புவெள்ளைப் படங்களிலேயே வித்தைகள் காட்டுவார். (உதாரணம்: வானம்பாடியில் இடம்பெற்ற 'ஏட்டில் எழுதிவைத்தேன்' பாடல் காட்சி, மற்றும் லட்சுமி கல்யாணத்தில் 'பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்' பாடல் காட்சி). வண்ணப்படமான இதில் சொல்லவே வேண்டாம். பின்னியெடுத்திருப்பார். குறிப்பாக ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட இரவுக்காட்சிகள். மற்றும் மல்லிகை முல்லை பாடல் காட்சி.

இயக்குனர் கே.விஜயனின் 'சிரிப்பு பேட்டி' படித்ததும் எனக்கும் சிரிப்பு வந்தது. என்.வி.ராமசாமியின் 'புது வெள்லம்', 'மதன மாளிகை' படங்களை இயக்கியிருந்தபோதிலும் அவர் பளிச்சென்று தெரிய ஆரம்பித்தது 'ரோஜாவின் ராஜா'வில் துவங்கி, 'தீபம்' படத்திலிருந்துதான். தீபம், அண்ணன் ஒரு கோயில், தியாகம், திரிசூலம் என்று வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்தவர், என்ன காரணத்தாலோ 'ரத்தபாசம்' படப்பிடிப்பின்போது திரு வி.சி.சண்முகத்துடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்தார். பிரிந்த கையோடு இதுபோன்ற சில 'அதிரடி(???)' பேட்டிகளும் கொடுத்தார். கூடவே 'தூரத்து இடி முழக்கம்' என்ற அருமையான தலைப்புடன் (நடிகர்திலகம் அல்லாத) ஒரு படத்தையும் இயக்கினார். நடிகர்திலகத்தின் எதிர்ப்பு பத்திரிகைகள் வரிந்து கட்டிக்கொண்டு, அந்தப்படத்தைப்பற்றிய செய்திகள் தந்து விளம்பரப்படுத்தின. ஆனால் பாவம், இடிமுழக்கம் வெறும் 'கேப்' சத்தம் போல ஆகிப்போனது. ஆதரவு தருவதுபோல ஏற்றிவிட்டவர்கள் எல்லாம் அவரைவிட்டு ஓடிப்போயினர்.

பாலாஜியாவது தொடர்ந்து ஆதரவு தருவார் என்று அவர் எதிர்பார்த்திருந்தபோது, யதார்த்தமாக சுஜாதா சினி ஆர்ட்ஸில் ப்ரொடக்ஷன் மேனேஜராக இருந்த ஆர்.கிருஷ்ணமூர்த்தியை இயக்குனராகப்போட்டு 'பில்லா' படத்தை தயாரிக்க, பில்லா பெரிய வெற்றியடைந்து கிருஷ்ணமூர்த்திக்கு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை வழங்கியது. செண்டிமெண்ட் பிரியரான பாலாஜி தொடர்ந்து தன் படங்களை ஆர்.கே. தலையில் கட்டினார். சில ஆண்டுகள் கழித்து, ஒருநாள் ஸ்டுடியோ செட்டில் நடிகர்திலகத்தை கே.விஜயன் வலியச்சென்று சந்தித்து நலம் விசாரிக்க, பழைய நண்பனைப்பார்த்து, 'என்ன விஜயா இப்போ என்ன பண்றே?' என்று கேட்க, விஜயன் சோர்ந்த முகத்துடன் பதிலேதும் சொல்லாமல் நிற்க, நிலைமையைப்புரிந்துகொண்ட நடிகர்திலகம், 'சரி, இனிமேல் என் படங்களை நீ டைரக்ட் பண்ணு' என்று ஆசி வழங்கி, விஜயனுக்கு மறுவாழ்வளித்தார். 'பந்தம்' படம் மூலம் அவர்களின் பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

இச்சம்பவத்தை நினைவுகூர்வது போல, 'பந்தம்' படத்தில் ஒரு காட்சி அமைத்திருப்பார் விஜயன். தன்னுடைய முன்னாள் டிரைவரை சர்ச்சில் சந்திக்கும் நடிகர் திலகம், 'என்ன டேவிட் எப்படியிருக்கே?' என்று கேட்க, வறுமையில் வாடும் டிரைவர் அழத்துவங்க, சட்டென்று கோட் பாக்கெட்டிலிருந்த கார் சாவியை அவரிடம் கொடுத்து 'வண்டியை எடு' என்பார். இந்தக்காட்சியில் நடித்து முடித்த நடிகர்திலகம், 'என்ன விஜயா, இந்த சீன் நம்ம ரெண்டு பேர் சமந்தப்பட்ட விஷய்ம் மாதிரி இருக்கே' என்றாராம் - (கே.விஜயன் முன்னொருமுறை தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த நேர்காணலில் சொன்னது).

சில மாதங்களுக்கு முன், ஜெயா டிவி 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சுமித்ரா, கண்டிப்பாக 'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிக் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன். அதுபோலவே, ஒருநாள் எபிசோட் முழுக்க இப்படத்துக்கு மட்டுமே ஒதுக்கி, ரொம்ப பெருமையாகப் பேசினார். நடிகர் திலகத்தை 'ஓகோ'வென்று புகழ்ந்தார். இன்னொரு ஆச்சரியம், நடிகர் திலகத்துடன் நடித்த 'ஜஸ்டிஸ் கோபிநாத்' படத்தைப்பற்றியும் (ஜோடி சூப்பர் ஸ்டார்) குறிப்பிட்டார். பாவம் இயக்குனர் பெயரை மறந்து விட்டு, சற்று யோசித்து 'யாரோ ரங்கநாத் என்பவர் இயக்கினார்' என்றார். (படத்தை இயக்கியவர் டி.யோகானந்த் என்ற பழம்பெரும் இயக்குனர்).

நகைச்சுவைக்காட்சிகளும், அரங்கில் சிரிப்பலையை பரவ விட்டன, சுருளியின் 'கிளி கத்துற ஊரெல்லாம் கிளியனூரா', 'எல்லோரும் பீடி மட்டும்தான்யா வாங்குவாங்க, யாரும் தீப்பெட்டி வாங்குறதில்லை. தீப்பெட்டி என்னய்யா தீப்பெட்டி. இவர் மட்டும் கிடைச்சிட்டாருன்னா ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையே வச்சிடுவேன்' போன்ற வசனங்களூம், மனோரமாவின் ஒரு மாதிரியான அழுகை மற்றும் 'எவர்சில்வர் பாத்திரத்திலேயே சமையலா? அப்போ மொத்த வியாபாரிதான்' என்று தேங்காயை கலாய்ப்பதுமான இடங்களும், காட்டில் யானை துரத்தும்போது, யானைகளைப் பிடிப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் சுருளியும் கருணாநிதியும் விழுந்து அலறுவதும், அதை மேட்டில் நின்று யானை பார்க்கும் இடமும் கலகலப்பான இடங்கள்.

ஒரு வெற்றிப்படத்துக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த இப்படம் வெற்றிபெற்றதில் வியப்பில்லை, வெற்றிவாய்ப்பை இழந்திருந்தால்தான் அது வியப்பு மற்றும் வேதனை அளித்திருக்கும். தமிழ் ரசிகர்கள் அந்த அளவுக்கு விடவில்லை.

RAGHAVENDRA
9th March 2011, 09:30 PM
சகோதரி சாரதா அவர்களின் அண்ணன் ஒரு கோயில் திரைப்படத்தினைப் பற்றிய பதிவு மற்றும் முரளி சார் அவர்களின் தொடர் பதிவுகளைக் காணும் புதிய ரசிகர்கள் உடனடியாக அப்படத்தைப் பார்க்க விழைவர் என்பது திண்ணம். அவர்களுக்காகவும் மற்ற ரசிகர் நண்பர்களுக்காகவும் அப்படத்தில் நடிகர் திலகத்தின் தோற்றத்தைக் காணும் வாய்ப்பு இதோ.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/aok01.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/aok02.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/aok03.jpg

அன்புடன்

goldstar
10th March 2011, 03:51 AM
Saradha madam, you are rocking. I have watched this movie on re-release in Madurai Meenakshi theatre and one of my favourite movie. Thanks for AOK details.


Cheers,
Sathish

RAGHAVENDRA
10th March 2011, 06:45 AM
திருச்சி மாநகரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலை வெகு விரைவில் திறக்கப் பட உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்ட சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ள ஒளிப்படத்தினை இங்கே காணலாம்.


http://www.youtube.com/watch?v=qQcs55lGjXU

அன்புடன்

KCSHEKAR
10th March 2011, 03:56 PM
Reviews about ANNAN ORU KOVIL are Very good. Thanks Ms.Saradha & Mr.Murali. Thanks Mr.Ragavendran for the Film Stills & Trichy Video Clippings link.

Once again thanks for all.

joe
10th March 2011, 09:54 PM
திருச்சி மாவட்ட அன்பர்கள் தொகுத்துள்ள இந்த ஒளிச்சித்திரம் அருமையிலும் அருமை ..பகிர்வுக்கு நன்றி ராகவேந்திரா சார்!

Murali Srinivas
11th March 2011, 12:02 AM
நன்றி சாரதா.

ராகவேந்தர் சார்,

அண்ணன் ஒரு கோயில் ஸ்டில்கள் அருமை என்றால் நமது திருச்சி பிள்ளைகள் தொகுத்துள்ள ஒளிப்பேழை அருமையிலும் அருமை. நடிகர் திலகத்தின் வித விதமான ஸ்டைல் நடைகள் மட்டும் போதும். நடிகர் திலகத்தைப் பற்றி தெரியாதவர்களுக்கு அவரை ஒரு சின்ன அளவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் இதை அவர்களுக்கு திரையிட்டால் போதும்.

அன்புடன்

HARISH2619
11th March 2011, 10:29 AM
நன்றி சாரதா.

ராகவேந்தர் சார்,

அண்ணன் ஒரு கோயில் ஸ்டில்கள் அருமை என்றால் நமது திருச்சி பிள்ளைகள் தொகுத்துள்ள ஒளிப்பேழை அருமையிலும் அருமை. நடிகர் திலகத்தின் வித விதமான ஸ்டைல் நடைகள் மட்டும் போதும். நடிகர் திலகத்தைப் பற்றி தெரியாதவர்களுக்கு அவரை ஒரு சின்ன அளவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் இதை அவர்களுக்கு திரையிட்டால் போதும்.

அன்புடன்

EXACTLY.The same thought came to my mind when I watched the clippings.Superb thiruchi fans,thanks Raghavendra sir.

RAGHAVENDRA
12th March 2011, 05:44 PM
ஒளிப்படக் காட்சிக்கும் நிழற்படங்களுக்கும் பாராட்டுக் கூறிய சந்திரசேகர், ஜோ, முரளி, மற்றும் கார்த்திக் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இந்தப் பாராட்டுக்குரியவர்கள், திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றத்தினரேயாவர். இந்தப் பாராட்டுக்கள் அனைத்தும் அவர்களுக்கே சேரும்.

புதிய வானம் திரைப்படம் ராஜ் வீடியோ விஷன் நிறுவனத்தால் நெடுந்தகடாக வெளியிடப்பட்டுள்ளது. அதனுடைய நிழற்படத்தை இங்கே காணலாம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Pudhiyavanamcovers.jpg

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
13th March 2011, 03:06 AM
Part of the text that appears in an article in the Indian Express online edition dt.13.03.2011


The message that Tamil Nadu sent out on that 1984 evening — that Sivaji Ganesan was an idol much greater than anyone in the Nehru clan; that cinema is a centrifugal part of Tamil Nadu’s mythology and iconography; that the Dravidian proudly refutes all things Northern and Sanskritised (except of course, salwar kameezes these days) — was lost to the powers in Delhi. And have stayed lost.

Read the article here (http://expressbuzz.com/opinion/columnists/decoding-the-patriarch/255830.html)

Raghavendran

pammalar
13th March 2011, 05:28 AM
டியர் கார்த்திக்,
தங்களுடைய பதிவுகள் நம் அனைவருடைய எண்ண ஓட்டத்தையும் துல்லியமாக பிரதிபலித்துள்ளன. தாங்கள் கூறிய ஒவ்வொரு நண்பரையும் மறக்க முடியாது. பாம்குரோவ் சந்திரசேகர் தற்போது தஞ்சாவூரில் உள்ளார் என அறிகிறேன். மதுரையில் நடந்த சிலை திறப்பு விழாவின் போது அவரை சந்தித்து மிகவும் மகிழ்வுற்றேன். கோவை சேது இன்னும் மற்ற நண்பர்களுடன் தொடர்பில் உள்ளார். அதேபோல் மந்தவெளி ஸ்ரீதர், திருவான்மியூர் சங்கர், இவர்களையெல்லாம் நீண்ட நாட்களாயிற்று பார்த்து. சேப்பாக்கம் பார்த்த சாரதி அவர்களை நடுவில் அமெரிக்க தூதரகத்தில் பார்த்தேன். அதற்குப் பின் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனந்த் அவர்கள் சமீபத்தில் தன் மகனுடைய திருமணத்தை நடத்தினார். அவரால் சந்திக்க முடிந்த அனைத்து ரசிக நண்பர்களையும் அழைத்திருந்தார்.
மேலும் சில ரசிகர்கள் அவ்வப்போது சாந்தி திரையரங்கில் சந்தித்து வருகின்றனர். இது அடுத்த தலைமுறைக்கும் தொடர்கிறது என்பது மிகச் சிறப்பாகும்.
மேலும் நம்முடைய குமாரும் கணேசனும் இணைந்து இதயராஜா புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். தாங்களும் பார்த்திருக்கலாம். அவர்கள் வைத்த பேனர் இன்னும் சாந்தியில் உள்ளது.
இவை எல்லாவற்றையும் விட சிகரம் நம்முடைய பம்மலார் தான். சிறு பிராயத்திலிருந்தே வர ஆரம்பித்து அனைத்து ரசிகர்களிடமும் மிக விரைவாக பரிச்சயம் ஆனவர். சொல்லப் போனால் பம்மல் ஸ்வாமிநாதனைத் தெரியாதவர்களே சிவாஜி ரசிகர் வட்டத்தில், குறிப்பாக சாந்தி தியேட்டர் ரசிக நண்பர் வட்டாரத்தில் இருக்க முடியாது என்கிற அளவிற்கு பிரபல்யமானவர்.

இன்னும் ஏராளமான பசுமையான நினைவுகள் உள்ளன.

வெளியூரிலிருக்கும் தங்களைப் போன்ற ரசிகர் நண்பர்கள் அனைவருக்கும் சென்னை வரும் வாய்ப்பும் நேரமும் அமையும் காலத்தில் நம் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம். அப்போது இன்னும் சிறப்பாக இருக்கும்.

அன்புடன்

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் உயர்வான பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!

சென்னை சாந்தி திரையரங்கில் எனது எட்டாவது வயதில் பிப்ரவரி 1980ல் முதன்முதலாக "ரிஷிமூலம்" பார்த்தது நினைவில் நிழலாடுகிறது. எனது தாயார், தாய்மாமன், சிற்றன்னை ஆகியோருடன் அடியேன் ஒரு மாலைக்காட்சியில் நடிப்பின் சிகரத்தை சிகர அரங்கில் தரிசித்தது கண்கொள்ளாக் காட்சி. அதற்குப்பின்னர் சாந்தியில் வீட்டோடு வந்து பல நடிகர் திலகத்தின் திரைப்படங்களை கண்டு களித்திருக்கிறேன். எனது தாயார், தாயாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே நடிகர் திலகத்தின் ரசிகர்கள். வெள்ளித்திரையில் சிவாஜி படங்களை மட்டுமே கண்டு களிப்பார்கள். எனது தாய்மாமன் வெறித்தனமான ரசிகர். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன், ராஜபார்ட் ரங்கதுரை, பாசமலர், பாரத விலாஸ், திரிசூலம், மோட்டார் சுந்தரம் பிள்ளை ஆகிய படங்களை எத்தனை முறை பார்த்திருக்கிறார் என்று அவருக்கே தெரியாது. என்னை பல்வேறு சிவாஜி படங்களுக்கு அழைத்துச் சென்று சிவாஜி ரசிகனாக்கியது அவர் தான். அவருக்கு இதற்காகவே நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 1980களில் எங்களது குடும்பமும் அவர்களது குடும்பமும் திருமயிலையில் பக்கத்து பக்கத்து வீடுகளில் இருந்த போது, 'கபாலி'யிலும், 'காமதேனு'விலும் கலைக்குரிசிலின் காவியங்கள் வரும்போதெல்லாம் என்னை அழைத்துக் கொண்டு போய் காண்பிப்பார். பல ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த அரங்குகளில் மேட்னி பார்த்துவிட்டு, நாங்களிருவரும் அவசர அவசரமாக நடந்தும், ஓடியும், சைக்கிள் ரிக்ஷாவிலும், ஆட்டோ பிடித்தும் எங்கள் வீட்டுக்கு வருவோம். அப்படி நாங்கள் வருவதற்கு ஒரே காரணம் அன்று மாலை சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் நடிகர் திலகத்தின் திரைக்காவியத்தை காண்பதற்காகத்தான். 1980களிலிருந்தே நான் பார்க்கும் நாளிதழ்கள், பத்திரிகைகளில் நடிகர் திலகத்தின் புகைப்படங்கள், தகவல்கள், பட விளம்பரங்கள் வந்தால் அவற்றை கத்தரித்து சேகரித்து வைத்துக் கொள்வேன். பின்னர் அதை ஆல்பங்களாக்குவேன். டீவியில் ஞாயிறு மாலை நடிகர் திலகத்தின் படம் பார்க்கும் போது அந்தப் படத்தினுடைய புகைப்படம் எனது ஆல்பத்தில் இருந்தால் அந்தப் புகைப்படம் சம்பந்தப்பட்ட காட்சி படத்தில் எப்போது வரும் என்று காத்திருப்பேன். அந்தக்காட்சி வரும்போது கையிலிருக்கும் புகைப்படத்துடன் அக்காட்சியை ஒப்பிட்டுப் பார்த்து பரவசப்படுவேன். என் மாமாவும் மருமான் கண்டுபிடித்து விட்டான் என்று சந்தோஷப்படுவார். ஞாயிறு மாலை படத்திற்கு மட்டும் எங்கள் வீட்டு ஹாலில் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சம் 15 பேராவது படம் பார்ப்போம். எங்கள் குடும்பம், எங்கள் மாமாவின் குடும்பம், அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் என எங்கள் வீட்டு ஹால் ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும். கார்த்திக் குறிப்பிட்டது போல் காலசக்கரம் பின்னோக்கி நகராதா என்ற ஏக்கமே மேலிடுகிறது.

மேலும், எனது தந்தையார் மற்றும் தந்தையாரது குடும்பத்தினருள் பெரும்பாலானோர் மக்கள் திலகத்தின் ரசிகர்கள். எனினும், நான் எனது தாயார் மற்றும் தாயார் குடும்பத்தினரின் வழியில் நடிகர் திலகத்தின் ரசிகனானதை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது. எனது தாயார் குடும்பத்திற்கும், தந்தையார் குடும்பத்திற்கும் இடையே சிவாஜி படங்கள்-எம்.ஜி.ஆர் படங்கள் குறித்த சாதாரண விவாதங்களும் சில சமயங்களில் காரசாரமான வாக்குவாதங்களும் நடைபெறுவதுண்டு. இதில் அச்சிறுவயதிலேயே நானும் கலந்து கொண்டு சிவாஜி ஸைடிற்காக (எனது தாயார் அணிக்காக) வாதிட்டிருக்கிறேன். எனது தந்தையார் குடும்பத்தில், எனது தந்தையின் இரண்டாவது அக்காள் மகன் மட்டும் தீவிர சிவாஜி ரசிகர். "ஆண்டவன் கட்டளை" திரைக்காவியத்தை 1964-ல் முதல் வெளியீட்டில் சென்னை 'சயானி'யில் அது ஓடிய 50 நாட்களிலும் மாலைக்காட்சியில் கண்டு களித்த மகா வெறியர். அவருடன் இதே காவியத்தை 1998-ல் சென்னை 'மேகலா'வில் மேட்னி காட்சி பார்த்ததை மறக்கவே முடியாது. 'கலைத்துறையில் சிவாஜியை மிஞ்ச ஆளே கிடையாது' என எல்லோரிடமும் அடித்து-இடித்துக் கூறுவார். அவரும் நானும் சந்திக்கும் போதெல்லாம் நடிகர் திலகம் குறித்துத்தான் அதிகம் பேசுவோம்.

சென்னை சாந்தியில் "சிம்ம சொப்பனம்" பார்ப்பதற்காக அந்த இளம் வயதில் நான் பிடித்த அடம், பிடிவாதம் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. "சிம்ம சொப்பனம்" [30.6.1984] வெளியான மறுவாரம் வெள்ளியன்று இரவு [6.7.1984] சென்னை தொலைக்காட்சியின் 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சியில் முதல் பாடலாக நடிகர் திலகம்-சரிதா பாடும் [பாட்டுக்குரல்கள் : டி.எம்.எஸ்-வாணி ஜெயராம்] டூயட்டான 'புடவை கட்டிக் கொண்டு பூ ஒன்று ஆடுது' பாடல் ஒளிபரப்பானது. அந்தப்பாடல் என்னை எங்கோ கொண்டு சென்று விட்டது. அந்தப்பாடலைப் பார்த்து முடித்தவுடனேயே படத்தை உடனடியாக பார்த்தாக வேண்டும் என்று மிகுந்த பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டேன். எனது உணர்வுகளை எனது பெற்றோரும், எனது மாமாவும் புரிந்து கொண்டு மறுவாரமே என்னை 'சாந்தி'யில் நடைபெறும் அக்காவியத்தின் மாலைக்காட்சிக்கு அழைத்துச் சென்றார்கள். எனது மாமாதான் மருமானுக்காக படாதபாடுபட்டு டிக்கெட்டுகளை வாங்கி வந்தார். அந்தச் சிறுவயதில் வீட்டில் அவர்களே அழைத்துப் போகும் சிவாஜியின் பழைய-புதிய படங்களை பார்த்ததோடு மட்டுமல்லாமல், இப்படி பிடிவாதம் பிடித்தும் பல கலைக்குரிசிலின் புதிய படங்களைக் கண்டு களித்திருக்கிறேன்.

பின்னாளில், 'சாந்தி' திரையரங்கிற்கு வருகை புரியும் அனைத்து பழைய ரசிகர்களுடனும் அடியேனுக்கு நட்பு ஏற்பட்டதும் அந்த நல்லுறவு இன்று வரை நல்ல முறையில் தொடர்வதும் பெருமைக்குரிய விஷயம். இதற்கெல்லாம் இதயதெய்வத்தின் ஆசிகளும், இறைவனின் அருளுமே மூலகாரணங்கள்.

பசுமை நிறைந்த நினைவுகள் எழுத எழுத வற்றாத ஜீவநதி போல வந்து கொண்டே இருக்கின்றன.

மேலும் ஃப்ளாஷ்பேக் வேறொரு நாளில் வேறொரு பதிவில்...

மகிழ்ச்சியுடன்,
பம்மலார்.

pammalar
13th March 2011, 05:39 AM
டியர் ராகவேந்திரன் சார்,

கலையுலக மகானின் "திருவருட்செல்வர்" திரைக்காவியத்தினுடைய விளம்பர சுவரொட்டிகள் பிரமிக்க வைக்கின்றன. அப்பர் முதற்கொண்ட அனைவரையும் தரிசிக்க இப்பொழுதே ஆவல் மேலிடுகிறது. போஸ்டர்களை போஸ்ட் செய்தமைக்கு பேஷான நன்றிகள்!

இன்றைய நவீன 'சாந்தி சினிமாஸ்' ஆல்பம் பிரமாதம் என்றால் அன்றைய "அண்ணன் ஒரு கோயில்" ஆல்பம் அட்டகாசம்!

திருச்சி மாவட்ட சிவாஜி மன்றத்தினர் என்ன அகத்தியரின் வழித்தோன்றல்களோ?! காவிரியைத் தன் கமண்டலத்தில் கொண்டு வந்த மாமுனி போல், கலைக்கடலை ஒரு குறுந்தகட்டில் கொண்டு வர முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்களே, பாராட்டுக்கள்! மலைக்கோட்டையினர் வடிவமைத்ததை மாநிலத்தினர் பார்த்து பரவசமுற அதனை இணையத்தில் ஏற்றிய தங்களை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th March 2011, 05:58 AM
சகோதரி சாரதா,

"அண்ணன் ஒரு கோயில்" குறித்த திறனாய்வுப் பதிவுகள் அனைத்துமே அருமை. அருமை 'அண்ண'னை சிலாகித்து அன்புச்சகோதரி எழுதுவது தானே சாலப்பொருத்தம். நடிகர் திலகம் பாடும் ஸோலோ பாடல்களில் 'மல்லிகை முல்லை' அடியேனுக்கு all-time favourite.

ஜெய்கணேஷும், பிரேம் ஆனந்தும் சிவாஜியின் பிரசார பீரங்கிகளாகத் திகழ்ந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சிவாஜியின் போர்வாள் சசிகுமாரின் மறைவுக்குப்பின் நம்மவரின் புகழ்பரப்ப வீறுகொண்டு வந்த கலைவீரர்கள் இவர்கள் என்றால் அது மிகையன்று. சிவாஜியின் இன்னொரு போர்வாளாகத் திகழ்ந்தவர் ஸ்ரீகாந்த். 1976-ல் இந்தப் போர்வாள் ஒரு போலிவாள்(அட்டைக்கத்தி) என்ற உண்மை விளங்கியது. நடிகர் திலகத்தை தாக்கிப் பேசியது போல் வேறு எந்த நடிகரையாவது ஸ்ரீகாந்த் தாக்கிப் பேசியிருந்தால் அவரது கதி அதோகதியாகியிருக்கும்.

"வளர்த்த கடா முட்ட வந்தா வச்ச செடி முள்ளானா
போன ஜென்மப் பாவமடி அம்மாளு"

என அவர் பாடியது போல் எதையும் பொருட்படுத்தாமலும், பழி வாங்கும் குணம் துளியும் இல்லாதவராகவும் திகழ்ந்தார் கலைக்குரிசில் என்பதனை நாடறியும். எல்லாக் கடல்களிலும் சுனாமி என்கிற பழியுணர்ச்சி கோரத்தாண்டவமாடும். உலகில் சுனாமி(பழியுணர்ச்சி) வராத ஒரே ஒரு கடல் உண்டென்றால் அது நமது நடிப்புக்கடலில் மட்டும்தான்!

சசிகுமாரைப் போல் நடிகர் திலகத்தை சரியாகப் புரிந்து கொண்டிருந்த ஜெய்கணேஷும், பிரேம் ஆனந்தும் தாங்கள் கூறியது போல் நமது நன்றிக்குரியவர்களே!

அப்பேர்ப்பட்ட அவர்கள் இருவரில் ஒருவரான ஜெய்கணேஷ் "அண்ணன் ஒரு கோயில்" அனுபவங்களைப் பற்றி கூறியவற்றை இங்கே பதிவிடுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். ['பேசும் படம்' அக்டோபர் 1977 இதழில், 'ஒரு கோயில் உருவாகிறது' என்கின்ற தலைப்பில் வெளியான "அண்ணன் ஒரு கோயில்" படக்கட்டுரையிலிருந்து]

"சிவாஜி சாரும் நானும் டாக்டர்களாக நடிக்கிறோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜெயிலுக்கு போய்விடும் சிவாஜி அவர்களின் தங்கையை நான் காப்பாற்றுகிறேன். அதன் பிறகு அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதும், வாழ்வு தருவதும் பிரதான அம்சங்கள். நடிகர் திலகம் நடிப்பதைப் பார்க்கும் பொழுதே நாமும் நன்றாக நடிக்க வேண்டுமென்ற ஆசை எழுகிறது. எல்லோரும் நன்றாக நடிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். என் மீது அவர் வைத்திருக்கும் அன்பை நான் என்றும் மறவேன். அவருடன் நடிக்கும் போது நடுக்கம் ஏற்படத்தான் செய்கிறது. என்றாலும் சிவாஜி அவர்களுடன் நடிப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்."

2009-ல் ஜெயா டீவியில் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் சுமித்ரா கூறியவை உணர்வுபூர்வமானது.

"நான் நடித்த திரைப்படங்களில் "அண்ணன் ஒரு கோயில்" என்னுடைய திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த படம். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'மல்லிகை முல்லை' பாடலில் நான் ஆண்டாள், மீனாக்ஷி, சீதை ஆகிய தெய்வீக கதாபாத்திரங்களில் அந்தந்த கதாபாத்திரங்களுக்கேற்ப விதவிதமான நகைகளையும், ஆடைகளையும் அணிந்து நடித்ததை என்னால் மறக்க முடியாது. இந்தப்படத்தில் நான் அணிந்த Rich Costumes போல வேறு எந்தப்படத்திலும் அணிந்ததில்லை.

'மல்லிகை முல்லை' பாடலின் வீடியோ:
http://www.dailymotion.com/video/xf7og0_malligai-mullai-ponmozhi-killai_school

நான் நடித்த படங்களுள் "அண்ணன் ஒரு கோயில்" மாபெரும் வெற்றி அடைந்த படமாகும். "பாசமலர்" திரைப்படத்திற்குப் பிறகு அண்ணன்-தங்கை பாசத்தை மிக வலுவாக வலியுறுத்திய படம் என அண்ணனின் ரசிகர்களும், பொதுமக்களும் இப்படத்தை ஏகமனதுடன் பாராட்டிய பொழுது என் மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தது. இப்படத்தில் என் நடிப்பு பாராட்டப்பட்டதென்றால் அதற்கு நடிகர் திலகம் தந்த ஒத்துழைப்பும், ஊக்கமுமே காரணம். புதுமுக நடிகை என்று அலட்சியப்படுத்தாமல் எனக்கு வசனமும், நடிப்பும் கற்றுக் கொடுத்த சிவாஜி 'அண்ணன் ஒரு கோயில்'."

அந்த சுமித்ராவுக்கு மட்டுமா, இந்த சாரதாவுக்கும் சிவாஜி 'அண்ணன் ஒரு கோயில்' தானே!

[நம் எல்லோருக்குமே நமது 'அண்ணன் ஒரு கோயில்' தான்!]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th March 2011, 06:12 AM
நாஞ்சில் நகரின் 'பயோனீர்முத்து' திரையரங்கில், கடந்த 7.3.2011 திங்கள் முதல் 10.3.2011 வியாழன் வரை - நான்கு நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக - புரட்சித்திலகத்தின் முழுமுதற்காவியமான "பராசக்தி" வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியிருக்கிறது.

நமது மாடரேட்டர் திரு.நௌ அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் வந்திருந்த போது ஸ்ரீவில்லிபுத்தூரில் "பராசக்தி" ஓடுவதை பார்த்து வியந்து அத்தகவலை 'பராசக்தி போஸ்டர்' புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். [பதிவிட்ட தேதி : 10.11.2010]. அந்த சுவரொட்டியில் 'எழுத்தின் சூப்பர் ஸ்டாரும் நடிப்பின் சூப்பர் ஸ்டாரும் இணைந்து படைத்த' போன்ற அருமையான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த வாசகங்களைக் கொண்ட அதே டிசைன் போஸ்டர்கள் தற்பொழுது நாகர்கோவிலின் பிரதான இடங்கள் எங்கும் காணப்படுகிறது.

இனிக்கும் இத்தகைய மிட்டாய் தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு ஸ்வீட் தேங்க்ஸ் !

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
13th March 2011, 10:50 AM
டியர் ராகவேந்தர்,

'அண்ணன் ஒரு கோயில்' பட ஸ்டில்கள் மிகவும் அருமை. இங்கு எல்லோரும் மிகவும் பாராட்டும், மலைக்கோட்டை மாநகராம் திருச்சி ரசிகர்களின் கைவண்ணத்தில் உருவான ஒளிப்பேழையைக்கண்டு இன்புற முடியவில்லையென்பது வருந்த வைக்கிறது. (அதற்கான பிளேயர் என் கணிணியில் வேலை செய்வதில்லை என்பதை ஏற்கெனவே சொல்லியிருந்தேன்.

நடிகர்திலகத்தின் புகழ் மணக்க தாங்கள் பல்வேறு கோணங்களிலும் செய்து வரும் முயற்சிகள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்.

saradhaa_sn
13th March 2011, 11:40 AM
டியர் பம்மலார்,

சிறிது இடைவெளிக்குப்பின் வந்து, மிக நீண்ட சுவையான பதிவுகளைத்தந்து அசத்திவிட்டீர்கள். தங்களின் மலரும் நினைவுகள் மிகவும் சுவையானவை. தங்கள் குடும்பத்துக்குள்ளேயே இருவேறு ரசிகர்மன்ற மோதல்கள் நடந்தது, மிகவும் சுவையாக இருந்தன. அதிர்ஷ்ட வசமாக எங்கள் குடும்பம் முழுதுமே அண்ணனின் ரசிகப்படையாகிப் போனதால், காரம் சாப்பிட வழியில்லை, எப்போதும் பால் பாயாசம்தான். கல்லூரி நாட்களிலும் மற்ற மாணவிகள் எல்லாம் கமல், ரஜினி ரசிகைகளாக இருந்ததாலும், அவர்களின் ஆதர்ச நாயகர்கள் நடிகர்திலகத்துக்கு அணுசரணையாக அமைந்துபோனதாலும், அங்கும் மோதலுக்கு வழியில்லை. (அதனால்தான் இணையத்தில் சண்டை போட ஆள் கிடைத்தால் ஒரு கை பார்த்துவிடுவது என்பதை வழக்கமாக வைத்திருந்தேன். ஆனால் அப்படி சண்டை போட வந்தவர்களூம் ஒரு கட்டத்தில் நண்பர்களாகி விடுகின்றனர்).

'அண்ணன் ஒரு கோயில்' பதிவுகளுக்கு தாங்கள் அளித்துள்ள பதிலும், மேலதிக விவரங்களூம் சுவையானவை, குறிப்பாக அண்ணனுடன் ஜெய்கணேஷ் இணைந்தபோது கொடுத்த முதல் பேட்டி. ஜெய்கணேஷ் மற்றும் பிரேம் ஆனந்த் பற்றி நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு எப்போதும் உயர்ந்த அபிப்பிராயமே உள்ளது. சாந்தியில் ஒரு காலை நேரத்தில் நடந்த 'விஸ்வரூபம்' பட 100-வது நாள் விழாவுக்கு, பைக்கில் வந்திறங்கிய பிரேம் ஆனந்த், தியேட்டருக்குள் செல்லாமல் நேராக ரசிகர்கள் கூடி நின்ற பகுதியில் வந்து நின்று மன்ற நடவடிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினர் கலைஞர் (அப்போது எதிர்க்கட்சித்தலைவர்) வரும் நேரம் நெருங்கியதால், இடம் பிடிப்பதற்காக, மன்ற டோக்கன்களைக்காட்டி பால்கனிக்குச் சென்றுவிட்டோம். இன்னும் சற்று நேரம் பிரேம் ஆனந்த் பேசுவதை கிட்டே நின்று கேட்க முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. (அந்த விழாவைப்பற்றி விரிவான ஒரு பதிவு தனியே இடலாம் என்ற எண்ணமுள்ளது).

சுமித்ராவின் பேட்டிபற்றி கோடிட்டுக்காட்டியிருந்தேன். தாங்கள், விரிவாக அவர் சொன்னதை அப்படியே பதித்துவிட்டீர்கள். கூடவே, அடிஷனல் போனஸாக 'மல்லிகை முல்லை' பாடல் இணைப்பையும் தந்து சுவையூட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி. (அண்ணனும், இன்றைய அரசியலில் பரபரப்பாகப்பேசப்படும் கேப்டனும் இணைந்து நடித்த 'வீரபாண்டியன்' படத்தில் அண்ணனின் ஜோடியாக நடித்து, அதிலும் நம் மனதைக் கொள்ளைகொண்டார் சுமித்ரா).

நாஞ்சில் நகரில், பராசக்தியின் மறுவெளியீடு செய்தி மகிழ்ச்சி தந்தது. இவ்வாண்டு தீபாவளியன்று, 'பராசக்தி' காவியத்துக்கு 60-ம் ஆண்டு துவக்கம். கடந்த 59 ஆண்டுகளாக, இப்படம் பெட்டிக்குள் அடங்காமல் எங்காவது திரையில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

KCSHEKAR
14th March 2011, 10:38 AM
Pammalar's Malarum Ninaivugal & Quotes about Annan Oru Kovil are good. Really our Annan (Nadigarthilagam) Oru (Kalai) Kovil-thaan.

Thanks to all for the excellent reviews about Annan Oru Kovil

parthasarathy
14th March 2011, 01:25 PM
டியர் பம்மலார்,

சிறிது இடைவெளிக்குப்பின் வந்து, மிக நீண்ட சுவையான பதிவுகளைத்தந்து அசத்திவிட்டீர்கள். தங்களின் மலரும் நினைவுகள் மிகவும் சுவையானவை. தங்கள் குடும்பத்துக்குள்ளேயே இருவேறு ரசிகர்மன்ற மோதல்கள் நடந்தது, மிகவும் சுவையாக இருந்தன. அதிர்ஷ்ட வசமாக எங்கள் குடும்பம் முழுதுமே அண்ணனின் ரசிகப்படையாகிப் போனதால், காரம் சாப்பிட வழியில்லை, எப்போதும் பால் பாயாசம்தான். கல்லூரி நாட்களிலும் மற்ற மாணவிகள் எல்லாம் கமல், ரஜினி ரசிகைகளாக இருந்ததாலும், அவர்களின் ஆதர்ச நாயகர்கள் நடிகர்திலகத்துக்கு அணுசரணையாக அமைந்துபோனதாலும், அங்கும் மோதலுக்கு வழியில்லை. (அதனால்தான் இணையத்தில் சண்டை போட ஆள் கிடைத்தால் ஒரு கை பார்த்துவிடுவது என்பதை வழக்கமாக வைத்திருந்தேன். ஆனால் அப்படி சண்டை போட வந்தவர்களூம் ஒரு கட்டத்தில் நண்பர்களாகி விடுகின்றனர்).

'அண்ணன் ஒரு கோயில்' பதிவுகளுக்கு தாங்கள் அளித்துள்ள பதிலும், மேலதிக விவரங்களூம் சுவையானவை, குறிப்பாக அண்ணனுடன் ஜெய்கணேஷ் இணைந்தபோது கொடுத்த முதல் பேட்டி. ஜெய்கணேஷ் மற்றும் பிரேம் ஆனந்த் பற்றி நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு எப்போதும் உயர்ந்த அபிப்பிராயமே உள்ளது. சாந்தியில் ஒரு காலை நேரத்தில் நடந்த 'விஸ்வரூபம்' பட 100-வது நாள் விழாவுக்கு, பைக்கில் வந்திறங்கிய பிரேம் ஆனந்த், தியேட்டருக்குள் செல்லாமல் நேராக ரசிகர்கள் கூடி நின்ற பகுதியில் வந்து நின்று மன்ற நடவடிக்கைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினர் கலைஞர் (அப்போது எதிர்க்கட்சித்தலைவர்) வரும் நேரம் நெருங்கியதால், இடம் பிடிப்பதற்காக, மன்ற டோக்கன்களைக்காட்டி பால்கனிக்குச் சென்றுவிட்டோம். இன்னும் சற்று நேரம் பிரேம் ஆனந்த் பேசுவதை கிட்டே நின்று கேட்க முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. (அந்த விழாவைப்பற்றி விரிவான ஒரு பதிவு தனியே இடலாம் என்ற எண்ணமுள்ளது).

சுமித்ராவின் பேட்டிபற்றி கோடிட்டுக்காட்டியிருந்தேன். தாங்கள், விரிவாக அவர் சொன்னதை அப்படியே பதித்துவிட்டீர்கள். கூடவே, அடிஷனல் போனஸாக 'மல்லிகை முல்லை' பாடல் இணைப்பையும் தந்து சுவையூட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி. (அண்ணனும், இன்றைய அரசியலில் பரபரப்பாகப்பேசப்படும் கேப்டனும் இணைந்து நடித்த 'வீரபாண்டியன்' படத்தில் அண்ணனின் ஜோடியாக நடித்து, அதிலும் நம் மனதைக் கொள்ளைகொண்டார் சுமித்ரா).

நாஞ்சில் நகரில், பராசக்தியின் மறுவெளியீடு செய்தி மகிழ்ச்சி தந்தது. இவ்வாண்டு தீபாவளியன்று, 'பராசக்தி' காவியத்துக்கு 60-ம் ஆண்டு துவக்கம். கடந்த 59 ஆண்டுகளாக, இப்படம் பெட்டிக்குள் அடங்காமல் எங்காவது திரையில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

நண்பர்களே - குறிப்பாக, முரளி, பம்மலார், ராகவேந்தர், kc சேகர் மற்றும் சாரதா அவர்களுக்கு,

நீங்கள் தருகின்ற புள்ளி விவரம் மற்றும் நடிகர் திலகம் தொடர்புடைய செய்திகள் மலைக்க வைக்கின்றன.

அதை விட, நீங்கள் காட்டுகின்ற முனைப்பு, தீவிரம் மற்றும் அர்ப்பணிப்பு - சரியாகச் சொல்லவேண்டுமென்றால், நடிகர் திலகத்தின் குணநலன்கள் உங்களுக்கும் இருக்கின்றது என்று சொல்லலாம். திரு k. சந்திரசேகரன் அவர்கள் இன்னும் பல படிகள் மேலே போய், நடிகர் திலகத்தின் பேரவைக்கே தலைமை வகித்துக் கொண்டிருக்கிறார்.

என்னால் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றியும் அவரது படங்களுக்குச் சென்ற அனுபவங்களைப் பற்றி மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும், அந்தக் காலத்தில் இருந்து, அவ்வப்போது பார்த்த சில புள்ளி விவரங்கள் மனதில் இருப்பதால், சில விஷயங்களை மட்டும் சொல்ல முடிகிறது. இதற்கு நான் சில காலம், குமுதம் பத்திரிகையில் வேலை பார்த்த அனுபவமும் பெரிதும் ஒத்துழைக்கிறது. ஆனாலும், உங்கள் அளவிற்கு என்னால் முடியாது.

எத்தனை பேரால், இன்றைக்கு இருக்கின்ற அவசர உலகத்தில், தனக்குப் பிடித்த ஒரு மனிதரைப் பற்றியும் அவர்தம் சாதனைகளைப் பற்றியும், அந்த மனிதர் மறைந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகும் பகிர்ந்து கொள்ள முடியும். அதாவது, அதற்கென்று நேரம் ஒதுக்க முடியும். நடிகர் திலகம் ஒருவருக்குத் தான் இத்தனை பெரிய ரசிகர் கூட்டம் - அவர் நம்மை விட்டு மறைந்து இத்தனை நாள் ஆன பிறகும் அதே அர்ப்பணிப்புடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு இந்தத் திரி வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதே சாட்சி. அது மட்டுமல்ல. திருச்சி மாவட்ட ரசிகர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் மற்றும் நாஞ்சில் நகரத்து ரசிகர்களின் முயற்சிகளும் இதற்குக் கட்டியம் கூறுகிறது. என்னாலும், திருச்சி மாவட்ட அன்பர்கள் முயற்சியினை, மற்ற நண்பர்கள் கூறுவதை வைத்துதான் அறிய முடிகிறதே தவிர பார்க்க முடியவில்லை. அதற்கேற்ற சாப்ட்வேர் என்ன என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை, ரசனையுள்ள ஒவ்வொருவருமே, அவரது ஏதோ ஒரு காலகட்டத்தில், நடிகர் திலகத்தின் ரசிகராக ஆவதைத் தவிர்க்கவே முடியாது. பல நாட்களுக்கு முன்னர், ஒரு கூட்டத்தில், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும் இதைப் பிரதிபலித்திருந்தார்.

பல ஆண்டுகளுக்கு முன், கல்கண்டு பத்திரிகை நிறுவனர் மற்றும் ஆசிரியர் திரு. தமிழ்வாணன் அவர்கள் ஒரு முறை கேள்வி பதிலில் கூறியது நினைவுக்கு வருகிறது. அவர் கூறியது, உலகத்தில் ஒரே ஒரு நடிகருக்குத்தான், அவரது திறமைக்கு, உடனடியாக, அங்கீகாரம் கிடைக்கிறது - அதாவது - மக்களிடமிருந்து திரை அரங்கத்தில். அவர் அளவிற்கு, எந்த நடிகருக்கும், இந்த அளவிற்கு, கைத்தட்டலும், ஆர்ப்பரிப்பும், அவர் நடிக்கும்போது கிடைக்கிற அளவிற்கு - கிடைப்பதை நான் இதுவரை பார்த்ததில்லை என்று கூறினார்.

நடிகர் திலகத்தைப் பற்றிய ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி குறைந்தபட்சம் ஒருவருடனாவது பகிர்ந்து கொள்ளாமல், இது வரை ஒரு நாள் கூட எனக்கு கடந்ததில்லை. இந்தத் திரி வந்தவுடன், இந்த பழக்கம் பல மடங்கு கிளைத்து விட்டது. நேற்று கூட என்னுடைய அம்மா, பெரியம்மா, தங்கை, அத்தை, அவரது மகன் என அனைவரும் ஒரு சிறிய சடங்கிற்கு ஒன்று கூட நேர்ந்தபோதும், மலரும் நினைவுகளைப் பற்றி அசை போடும் போது, கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் ஆக்கிரமித்துக் கொண்டது - அனைவரது பேச்சும் - நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றியும், அவரது படங்களைப் பற்றியும், அவைகளுக்கு நாங்கள் சென்று வந்த அனுபவங்களைப் பற்றியும் தான். நினைவுகள் தொடரும்.

அன்புடன்,

பார்த்தசாரதி

goldstar
14th March 2011, 04:22 PM
Guys,

Just looked at thalaivar rare photos at Sivaji Santhanam's face book. Photo link is http://www.facebook.com/photo.php?fbid=10150159514316810&set=a.10150159504151810.340680.690131809&ref=nf

There are more than 10 photos, very very rare photos. Days not passed by without seeing or thinking about NT. He will live for another 1000 years in fan's heart.

Cheers,
Sathish

parthasarathy
15th March 2011, 12:47 PM
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும்

இது ஒரு இரு பாகங்களை அடக்கிய தொகுப்பு. ஒன்று, நடிகர் திலகமும் அவர் நடித்த ரீமேக் படங்களும் (இது சமீபத்தில்தான் முடிந்தது.). மற்றொன்று, நடிகர் திலகத்தின் படங்கள் பிற மொழிகளில் எடுக்கப்பட்டது பற்றிய பாகம்.

நம் நடிகர் திலகம் மற்ற எல்லா நடிகர்களையும் விட எல்லா விதத்திலும் மிகச் சிறந்த நடிகர் என்று பறைசாற்றுவதற்காகத்தான் இந்தக் கட்டுரைகளை எழுதத் தீர்மானித்தேன். இதுதான் நம்மைப்போன்ற எல்லா ரசிகர்களால் மட்டுமல்ல, பெரிய பெரிய ஜாம்பவான்களுமே ஏற்றுக் கொண்ட ஒன்றாயிற்றே; எதற்கு இதைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் அனைவரும் நடிகர் திலகத்தைப் பல கோணங்களிலும் பார்த்து ரசித்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நானும் உங்களுடன் சேர்ந்து என்னுடைய பார்வையிலிருந்து எழுதுகிறேன். அவ்வளவுதான். எல்லாவற்றுக்கும் மூலம் நம் அனைவரையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் என்ற மகா மனிதன் மற்றும் கலைஞன் தான். நான் என் மனதில் முப்பது வருடங்களுக்கு முன்னரே (தேவர் மகன் படம் தவிர்த்து) வடித்து, பெரிய கட்டுரையாய் எழுதி வைத்ததன் வடிவம்தான் இவை. அந்தக் கட்டுரை எரிந்து விட்டாலும், இப்போதும், எப்போதும், தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டாலும், இவை அத்தனையையும் மனப்பாடமாக என்னால் சொல்ல முடியும் (சில நுணுக்கமான புள்ளி விவரங்களை மட்டும் சில வெப்சைட்-களில் இருந்து இப்போது எடுத்தேன்.). திரு Y.G.மகேந்திரா அவர்கள் வசந்த் டிவியில் கூறிய அந்த வெர்சடைலிடி தான் இந்த இரு பாகங்களுக்கும் அடி நாதம். (திரு சோ அவர்களும் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னர் பொம்மை இதழில் இந்த வெர்சடைலிடியைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார்.)

நடிகர் திலகம் ஒவ்வொரு மொழியிலும் வெளி வந்த வெவ்வேறு மாதிரியான பாத்திரங்களையும் அசலை விட பல மடங்கு பிரமாதமாக நடித்திருந்தார். அதே நேரம், தமிழில் அவர் செய்த மிகச் சிறந்த, கனமான, வித்தியாசமான, உணர்வுபூர்வமான ஒரு பாத்திரத்தையும், அவை வேறு மொழிகளில் எடுக்கப்பட்டபோது, அந்தந்த மொழிகளில் நடித்த பெரிய பெரிய நடிகர்களாலேயே, நடிகர் திலகம் தொட்ட உச்சத்தில், ஐம்பது சதவிகிதத்தைக் கூடத் தொட முடியவில்லை.

மற்றவர்களால்,நடிகர் திலகத்தின் அசலில் ஐம்பது சதவிகிதத்தைக் கூடத் தொட முடியாமல் போனபோது, நடிகர் திலகத்தால் மட்டும் எப்படி அசலை விட பல மடங்கு சிறப்பாக செய்ய முடிந்தது? பல காரணங்களைப் பலர் கூறலாம். எனக்குத் தெரிந்து முக்கியமான காரணம், எந்த அந்நிய மொழிக் கதை மற்றும் சூழலையும், தன்னுடைய மண்ணிற்கேற்ப மாற்றிக் கொடுத்த நடிகர் திலகத்தின் கற்பனை வளம் மற்றும் முனைப்பு தான் முக்கிய காரணமாக இருக்க முடியும். எந்த ரீமேக் படமும் வேறு மொழியில் வெற்றி பெறுவதற்கு முழு முதல் காரணம், மாற்றம் செய்யப்படும் மொழி மற்றும் அந்த சூழலுக்கேற்ப (nativity) படமெடுக்கப்படும் விதம், மற்றும் நடிகர்களின் கற்பனை வளம். இந்த விஷயத்தில், நடிகர் திலகம் மட்டுமே அனைத்து நடிகர்களை விடப் பல நூறு மடங்கு உயர்ந்து நிற்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது தொழில் பக்தி, முனைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கற்பனை வளம் ஆகியவை மற்றவர்களை விட மிகப் பெரிதாக இருந்ததே.

சமீபத்தில், திரு பாலகிருஷ்ணன் அவர்கள் கூட எனது முந்தைய பதிவிற்கான தனது பதிலில், இந்த புதிய தலைப்பையொட்டி, சில படங்களைக் கோடிட்டுக் காட்டியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்ட படங்களில், பாசமலர் மற்றும் நவராத்திரி மட்டும் எடுத்துக் கொண்டு, வேறு எட்டு படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதனால், திரு பாலகிருஷ்ணன் குறிப்பிட்ட மற்ற படங்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. அந்தப் படங்களை எனது வேறு கட்டுரைக்காக தனியாக வைத்திருக்கிறேன்.

1. பாகப்பிரிவினை (1959) - கலிசி உன்டே கதலு சுகம் (1961) தெலுங்கு / கான்தான் (1965) ஹிந்தி

இது பீம்சிங் - நடிகர் திலகம் - விஸ்வநாதன் ராமமூர்த்தி - கண்ணதாசன்/பட்டுக்கோட்டையார் (இதற்கப்புறம் பட்டுக்கோட்டையார் மறைந்து விட்டதால், படிக்காத மேதையிலிருந்து கண்ணதாசன் தொடர்ந்தார்.) கூட்டணியில் அமைந்த இரண்டாவது வெற்றிப் படம் (பதிபக்திக்குப் பிறகு). இன்னும் சொல்லப் போனால், முப்பது வாரங்களுக்கு மேல் ஓடி, தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் மிகப் பெரிய வெற்றியைக் குவித்த படம்.

பின்னாளில் வெளிவந்த அத்தனை குடும்பப் படங்களுக்கும் முன்னோடியாக அமைந்த படம். மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டத்திலும், தானும் ஒரு டீம் ப்ளேயராகவும் இருந்து, தன் தனித் தன்மையையும் நடிகர் திலகம் நிரூபித்த படம். வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வீரம் சொரிந்த கதாபாத்திரமாகவே மாறி சிம்ம கர்ஜனை செய்து விட்டு, உடனேயே, அதற்கு நேர் மாறான கன்னையன் என்ற பட்டிக்காட்டு சப்பாணி கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய படம்.

தன் இளம் வயதிலும், கனமான பாத்திரத்தை ஏற்று, பார்ப்பவர் அத்தனை பேரையும், அவரோடும், பாத்திரத்தோடும் ஒன்ற வைத்து, கலங்கடித்த படம். நடிகர் திலகம் என்றால் எத்தனையோ தனித் தன்மைகள் உண்டு. USP என்கிறார்களே. இவருக்குத்தான் எத்தனை USP-கள். அதில் மிக முக்கியமானது முழுமையான மற்றும் நிறைவான நடிப்பு. இதில், சப்பாணி கதாபாத்திரத்துக்கேற்றார்ப் போல், கடைசிக் காட்சிக்கு முன் காட்சி வரை, கேமரா கோணம் தொலைவில் இருக்கும்போது கூட, அந்த விந்தி விந்தி நடக்கும் சப்பாணி நடையை மிகச் சரியாக maintain பண்ணி நடித்தார் (தாழையாம் பூ முடிச்சு பாடலின் முடிவில் வரும் ஹம்மிங்கோடு முடியும் காட்சி ஒரு சாம்பிள்). இதே சப்பாணி பாத்திரத்தை பின்னாளில் கமல் பதினாறு வயதிலே படத்தில் ஏற்று நடித்த போது, அதற்கு, பாகப்பிரிவினை கன்னையனை மானசீகமாக நினைத்துக் கொண்டு தான் நடித்தார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நடிகர் திலகத்திற்கு செவாலியே விருது வழங்கப் பட்ட அந்த மாபெரும் விழாவிற்கு நானும் சென்றிருந்தேன். அதில் பேசிய, நடிகை சரோஜா தேவி அவர்கள், இந்தப் படத்தில், ஒரு காட்சியில், தான் பிரசவ வேதனையால் தவிக்கிறார்ப் போல் நடிக்க முடியாமல் போக, நடிகர் திலகம் அந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று நடித்துக் காட்டியதில், ஒரு சிறிய பங்கே தான் நடித்து, நல்ல பெயர் வாங்கியதாகக் குறிப்பிட்டார்.

இதில், ஒவ்வொரு முறை அவர் எம். ஆர். ராதாவாலும், சொந்தத் தம்பி எம். என். நம்பியாராலும் அவமானப் படுத்தப்படும்போதும், அவருடன் சேர்ந்து மக்களும் விம்முவர். இந்தப் படத்தைப் பற்றியும், இதில் இடம் பெறப் போகும் மற்ற எல்லா படங்களையும் பற்றி இன்னும் விரிவாக எழுத முடியும், இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல, என்பதால், இப்போதைக்கு இது போதும்.

பாகப்பிரிவினை தெலுங்கில் முதன் முறையாக 1961 -இல் எடுக்கப்பட்ட போது, கலிசி உன்டே கதலு சுகம் என்று பெயர் வைத்தனர். (மரோ சரித்ரா தெலுங்கு படத்தில், லிப்டில் ஒரு பாடல் வரும் - பல தெலுங்குப் படங்களின் பெயர்களை வார்த்தைகளாக வைத்து - அந்தப் பாடலின் முதல் வரி - அதாவது பல்வேறு படங்களின் - இது தான்.) தெலுங்கில் பிரதான பாத்திரங்களில் என்.டி. ராமாராவும் சாவித்திரியும் நடித்தனர். ரேலங்கி என்ற பண்பட்ட நகைச்சுவை நடிகர் எம்.ஆர். ராதா ஏற்ற நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரத்தை ஏற்றார். என்.டி. ராமாராவ் புராண இதிகாச (ராமர், கிருஷ்ணர் வேடங்கள்) மற்றும் மசாலா படங்கள் மட்டுமல்லாமல், பல வித்தியாசமான படங்களில், நல்ல வேடங்களிலும் மிக நன்றாக நடித்திருக்கிறார். இருப்பினும், கன்னையன் பாத்திரத்தில், நடிகர் திலகம் அளவிற்கு அவரால் நடிக்க முடியவில்லை. படமும் பெரிய வெற்றியைப் பெறவும் முடியவில்லை.

ஆறு வருடங்களுக்குப் பிறகு பாகப்பிரிவினை ஹிந்தியில் எடுக்கப் பட்டபோது (காந்தான்), அதை மறுபடியும், பீம்சிங் தான் இயக்கினார். பிரதான பாத்திரங்களில், சுனில் தத், நூதன் மற்றும் பிரான் முதலானோர் நடித்தனர். ஏன் ஆறு வருடங்களுக்குப் பிறகு? பாகப்பிரிவினை வெளிவந்தவுடனேயே, இதை ஹிந்தியில் எடுக்க விரும்பி, வட நாட்டின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான, திலீப் குமாரை அணுகிக் கேட்டபோது, அவர், என்னால் விஷப் பரீட்சையெல்லாம் செய்ய முடியாது என்று கூறி நாசூக்காக ஒதுங்கிக் கொண்டாராம்.

சுனில் தத் காங்கிரஸ்காரர் மட்டுமல்லாது, நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரும் ஆவார் (அவர்தம் மனைவி நடிகை நர்கீசும் நடிகர் திலகத்தின் நண்பர்தான்). நடிகர் திலகத்தின் படங்கள் ஹிந்தியில் எடுக்கப் பட்டபோது, பெரும்பாலும், சுனில் தத்தும், பின்னாளில், சஞ்சீவ் குமாருமே, அவைகளில், நடித்தனர். இந்தப் படம் சுனில் தத்துக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்து, ஓரளவிற்கு நன்றாகப் போனது என்றாலும், தமிழின் சாதனையை நெருங்கக் கூட முடியவில்லை. அதற்குக் காரணம், நடிகர் திலகத்தின் உயிர்ப்பான நடிப்பில், ஓரளவுதான் சுனில் தத்தால் செய்ய முடிந்தது. மற்ற நடிகர்களும், அசல் அளவிற்கு, செய்ய முடியவில்லை.


தொடரும்,


அன்புடன்,


பார்த்தசாரதி

groucho070
15th March 2011, 01:05 PM
Guys,

Just looked at thalaivar rare photos at Sivaji Santhanam's face book. Photo link is http://www.facebook.com/photo.php?fbid=10150159514316810&set=a.10150159504151810.340680.690131809&ref=nf

There are more than 10 photos, very very rare photos. Days not passed by without seeing or thinking about NT. He will live for another 1000 years in fan's heart.

Cheers,
SathishFantastic pictures. Is Vee Yaar our Raghavendra-sir

Plum
15th March 2011, 01:11 PM
கலிசி உன்டே கதலு சுகம்

Partha, good to read your posts covering other languages and the comparisons.
The above movie should read kalisi uNtE kaladha sukamu. It means koodi vAzhndhAl kOdi nanmai.

In passing, may I mention that deiva magan was remade in Telugu - and to keep with the gentlemanly traditions of this thread, I will merely state that the "Actor" attempting it in Telugu was Krishna. No further comments.

groucho070
15th March 2011, 01:19 PM
:lol: Okay, we got it.

parthasarathy
15th March 2011, 04:26 PM
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)


2. படிக்காத மேதை (1960) - மெஹர்பான் (1967) - ஹிந்தியில்


மறுபடியும் பீம்சிங் - நடிகர் திலகம் - கண்ணதாசன் கூட்டணி (இசையமைப்பு மட்டும் இந்த முறை மாறியது. "மாமா" கே.வி. மகாதேவன் அவர்கள் இசையமைத்திருந்தார்). மிகப் பெரிய வெற்றியடைந்த படம். குறிப்பாக, மதுரை தங்கம் திரையரங்கத்திலேயே (ஆசியாவிலேயே பெரிய திரையரங்கம்) நூறு நாட்களைக் கடந்து ஓடியது.

இது ஒரு வங்க மொழிப் படத்தின் தழுவல் என்றாலும், இந்தப் படம் பிற மொழிகளில், குறிப்பாக, ஹிந்தியில் எடுக்கப்பட்டபோது, தமிழ்ப் படத்தை ஒட்டியே எடுத்ததால், இறுமாப்பாக, படிக்காத மேதை படத்தை இந்த பாகத்தில், சேர்த்துக்கொள்வதில், பெருமை கொள்கிறேன்.

இந்தப் படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். பாகப் பிரிவினை படத்திற்குப் பிறகு, மறுபடியும், ஒரு அப்பாவி/வெகுளி கதாபாத்திரம். பாகப்பிரிவினை கன்னையனை ஒரேயடியாக அப்பாவி/வெகுளி என்று கூற முடியாது. அது ஒரு விதமான கிராமத்து இளைஞன் வேடம் - சப்பாணி என்பதால் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதாக நடித்திருப்பார். அந்த வித்தியாசமான கெட்டப்பே - சிகை அலங்காரம், காது கடுக்கன், மீசை (பெரிதாக ட்ரிம் செய்யப்படாமல் எளிமையாக இருக்கும்.), இத்யாதி பிளஸ் சப்பாணி என்பதால் வரும் அந்த இரக்க உணர்வு அந்தக் கதாபாத்திரத்துடன் படம் பார்க்கின்ற ஒவ்வொருவரையும் ஐக்கியப்படுத்தி விடும். ஆனால், கடைசியில், அவரது கை, கால் சரியாகி விட்டபின்பு - அவருடைய ஒரிஜினல் சுருள் முடி வேறு சேர்ந்து விடும்! ஒரு மாதிரி சர்- என்று கன்னையன் பாத்திரத்தின் அந்த வெள்ளந்தியான தன்மை குறைகிறார்ப் போல் இருந்து மறுபடியும், நடிகர் திலகத்தின் ஒப்பற்ற உடல் மொழியால் மறுபடியும் அந்தப் பாத்திரம் உயிர் பெறும். (அவருக்கு மற்றவர் சொல்லித்தான் தெரிய வரும் தனக்கும் மற்றவர்போல் கை கால் சரியாகி விட்டதென்று - ஒரு மாதிரி கையையும் காலையும் ஆட்டி குதிப்பார் - உடனேயே, எல்லோரையும் அந்த கன்னையன் கதாபாத்திரத்திற்குக் கூட்டிச் சென்று விடுவார்.) கெட்டப் மாற்றம் என்பதற்கு நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே எந்த அளவிற்கு நடிகர் திலகம் முக்கியத்துவம் கொடுப்பார் என்பதற்கு இந்த இரு கதாபாத்திரங்களுமே சாட்சி.

படிக்காத மேதை "ரங்கன்" கதாபாத்திரத்திற்கு அவர் எந்த புதிய கெட்டப்பும் கொடுக்காமல் விட்டிருப்பார். அதாவது, பாகப்பிரிவினையில், கன்னையனுக்கு கை கால் சரியாகி விட்டபின் வரும் அந்த நார்மல் கெட்டப். இந்தப் படம் முழுவதும், ஒரு முண்டா பனியனும் வேட்டியுமே அவரது உடை. ரங்கன் ஒரு வேலைக்காரன் தானே. ஆனாலும், தன ஒப்புயர்வற்ற உடல் மொழி, வசன உச்சரிப்பால் மட்டுமே, இந்த அப்பாவி ரங்கன் பாத்திரத்தை, காலத்தால் அழிக்க முடியாத, ஒரு திரைக் கதாபாத்திரமாக மாற்றினார். ஆம். அவர் நடித்த எத்தனையோ சமூகச் சித்திரங்களில் ஏற்ற கதாபாத்திரங்களில், முதல் பத்து இடங்களில், முன்னணியில் அமைந்திருக்கும் பாத்திரம் பலருக்கும், இந்த "ரங்கன்" தான். (இதற்கும் வழக்கம் போல் கடும் போட்டி - பாரிஸ்டர், prestige -காரர், போன்றவர்களிடமிருந்து. அதைத் தனியாக வைத்துக் கொள்ளலாம்.)

இந்தப் படத்தைப் பற்றி யார் எப்போது எழுதினாலும், இரண்டு பெயர்கள் தவிர்க்க முடியாதவை. ஒன்று, நடிகர் திலகம் என்றால், மற்றொன்று, எஸ். வி. ரங்காராவ். என்ன ஒரு நடிப்பு. (அதிலும், குறிப்பாக, "எங்கிருந்தோ வந்தான்" பாடலில், பிறகு, கடைசியாக சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்து விடும் காட்சி, போன்றவை).

எத்தனையோ காட்சிகள் - குறிப்பாக - நடிகர் திலகமும் சௌகாரும் வீட்டை விட்டுக் கிளம்பி வாசலில் ரிக்க்ஷாவில் ஏறப் போகும் போது, அங்கு வரும் எஸ்.வி.ரங்கா ராவ், சௌகாரிடம், அவனுக்கு உலகம் தெரியாது - நீதான் பார்த்துக்கணும் என்று சொல்லி விட்டு - நடிகர் திலகம் நோக்கித் திரும்புவார். நடிகர் திலகம் அது வரை முகத்தைத் திருப்பிக்கொண்டிருப்பார் - ரங்காராவ் தான் அவரை என் முகத்தில் விழிக்காதே என்று சொல்லி விட்டாரே! ரங்கா ராவ் நடிகர் திலகத்திடம் பேச ஆரம்பித்து அவரது தோளைத் தொடுவார் - அதாவது - அவர் தன்னிடம் கோபத்தில் இருக்கிறார் என்று நினைத்து - ஆனால் நடிகர் திலகமோ ஊமையாய் அழுது கொண்டிருப்பார். அவரைத் திருப்பியவுடனே நடிகர் திலகம் வெடிப்பார் பாருங்கள். இந்தக் காட்சியை நினைத்துக் கொண்டு எழுதும்போதே, கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறதே, பார்த்தால்! இந்தக் காட்சியை திரை அரங்கத்தில் பார்க்கும் போது - இன்னும் நினைவில் நிழலாடுகிறது - அரங்கமே அழுது கொண்டிருந்தது. அந்த அளவிற்கு, படம் பார்க்கும் அனைவரையும் தன் வசம் கட்டிப் போட்டிருப்பார்.

பொதுவாக, நடிகர் திலகம் சில காட்சிகளுக்கு அரங்கம் அதிர கை தட்டல் வாங்குவார் - சில காட்சிகளிலோ - அனைவரையுமே கட்டிப் போட்டு விடுவார் - சில காட்சிகளிலோ - அனைவரையுமே, குறிப்பாக, அவருடைய பிரத்தியேக ரசிகர்களாகிய நம்மை ஆர்ப்பரிக்க வைத்து விடுவார். அவர் சிரிக்கும்போது சிரித்து, அழும்போது அழுது, கோபத்தில் வெடிக்கும்போது வெடித்து - இப்படியாக அவருடனேயே எல்லோரையும் பயணிக்க வைத்து விடுவார்.

அடுத்தபடியாக, ரங்கா ராவ் இறந்தவுடன், அவர் வீட்டிற்குச் சென்று கண்ணாம்பாவுடன் சேர்ந்து வெடித்து அழும் காட்சி. இந்தப் படம், எண்பதுகளில், தூர்தர்ஷனில், ஒளிபரப்பப்பட்டபோது, எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் (என் நண்பர்களும் சேர்ந்து தான்) பார்த்து அழுதது இன்னும் நினைவில் உள்ளது. அது மட்டுமல்ல, உடனே வந்த ஒரு வார இதழில் (குமுதம் என்று நினைவு), நடிகை சுகாசினி மணிரத்னம் அளித்த பேட்டியில், இந்தக் காட்சியைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர், கமல் முதல் வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் அடக்க முடியாமால் அழுதோம் என்று கூறி இருந்தார். இன்று வரை, இந்தப் படம் பார்க்கின்ற அனைவரையும் ஆட்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. அதாவது, ரங்கன் இன்னமும், அனைவரையும், இன்று பிறந்த குழந்தை வரை, தன் வசம் கட்டிப்போட்டுக்கொண்டுதானிருக்கிறான்.

இந்தப் படம் ஹிந்தியில், மெஹர்பான் என்ற பெயரில் எடுக்கப் பட்டபோது, மறுபடியும், பீம்சிங் தான் இயக்கினார். மறுபடியும், சுனில்தத் - நூதன் நடித்தனர். நடிகர் திலகம் தொட்ட உச்சத்தில் பாதி கூட சுனில் தத்தால் தொட முடிய வில்லை - படமும் தமிழ் அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை.

parthasarathy
15th March 2011, 04:32 PM
கலிசி உன்டே கதலு சுகம்

Partha, good to read your posts covering other languages and the comparisons.
The above movie should read kalisi uNtE kaladha sukamu. It means koodi vAzhndhAl kOdi nanmai.


In passing, may I mention that deiva magan was remade in Telugu - and to keep with the gentlemanly traditions of this thread, I will merely state that the "Actor" attempting it in Telugu was Krishna. No further comments.

Dear Plum,

Thanks for your immediate response and for correction. It's as usual, typing mistake. It's not only Deiva Magan, even Thirisoolam (both triple roles) was remade in Telugu by Mr. Krishna only. In fact, as you know, Mr. Krishna was a very close friend and well wisher of our NT and he also produced a few movies with NT in the lead. He also acted with him in some original Telugu movies, including Nivuru Kappina Nippu. I got these details as some of my cousins are born and brought up in Andhra only and I also used to visit Nellore/Hyderabad during my school days for summer holidays.

As I have reserved Deiva Magan for my ultimate presentation, for strategic reasons, have not included the same in this article.

Thanks once again,

Parthasarathy

Plum
15th March 2011, 05:18 PM
" In fact, as you know, Mr. Krishna was a very close friend and well wisher of our NT and he also produced a few movies with NT in the lead"
Yes, yes, that is why I refrained from making comments on Krishna's remakes. The mention of Deiva Magan was also not to pre-empt you but just to add a snippet I happen to know.

parthasarathy
15th March 2011, 06:10 PM
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)


3. பாசமலர் (1961) - ரக்த சம்பந்தம் (1963) தெலுங்கு / ராக்கி (1965 ) ஹிந்தி


மறுபடியும் பீம்சிங் - நடிகர் திலகம் - கண்ணதாசன் - விஸ்வநாதன் ராமமூர்த்தி - கூட்டணி (மறுபடியும் மெல்லிசை மன்னர்கள் இந்தக் கூட்டணியில் இணைந்தனர் - இதற்கு முன் வந்த பாவ மன்னிப்பு படத்திலேயே இவர்கள் இணைந்து விட்டனர். பாவமன்னிப்பு படத்தைப் பற்றியும் அந்தப் படத்தின் இசை பற்றியும் தனியாக எழுதும் எண்ணம் உள்ளது. உண்மையில், பாவ மன்னிப்பு படப்பாடல்கள் தான் இன்று உள்ள அனைத்து பாடல்களுக்கும் அதாவது தமிழ் சினிமா சங்கீதத்திற்கு முன்னோடி. சங்கீதத்தைப் பற்றிய அதற்குள்ள ஹப்பில் தனியாக எழுத வேண்டும்.)

பாசமலர் காலத்தை வென்ற காவியம். இன்றளவும், அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டப் படும் உயிரோவியம். 1961 -ஆம் ஆண்டில், நடிகர் திலகத்தின் இரண்டாவது வெள்ளிவிழாப் படம். கே.பி. கொட்டாரக்கரா என்ற கேரளக் கதாசிரியர் மற்றும் பட அதிபரின் கற்பனையில் உருவான கதையை தமிழில், ராஜாமணி பிக்சர்ஸ் பேனரில் எடுத்தனர். ஒரு வகையில், நடிகர் திலகத்தின் சொந்தப் படம் என்றும் கூறலாம்.

இந்த நிமிடம் வரையில், இன்னும் எத்தனை வருடங்கள் சென்றாலும், படம் பார்க்கும் ஒவ்வொருவரையும், பார்த்தவுடன், அவரவர்களது அண்ணன் தங்கையை நினைவுகூர வைக்கும் படம்.

இந்தப் படத்தின் டைட்டில் ஓடத் துவங்கியவுடன் ஒரு பாடல் பின்னணியில் துவங்கும் - "அன்பு மலர், ஆசை மலர்..." என்று. இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னரின் ஆரம்ப கால நண்பர் மற்றும் உதவியாளருமான திரு ஜி.கே. வெங்கடேஷ் அவர்களது வித்தியாசமான குரலில். (ஏற்கனவே, பாவ மன்னிப்பு படத்தில் " நடிகர் திலகம் சிறையிலிருக்கும் போது பின்னணியில் வரும் "இன்பமும் காதலும் இயற்கையின் நீதி..." என்று பாடியிருந்தார்.) இந்தப் பாடல் டைட்டிலில் ஓடிக்கொண்டிருக்கும்போதே, ஒரு சற்றே வயதுக்கு வந்த ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் வருவார்கள் (அந்த சிறுமி நடிகை குட்டி பத்மினி, சிறுவன் தெரியவில்லை.) அந்த சிறுவன் அந்தச் சிறுமியைப் பாடசாலையிலிருந்து ஆதரவுடன் (ஒரு பசுவையும் கன்றையும் வேறு காட்டுவார்கள் உதாரணத்திற்காக)
வீட்டிற்குக் கூட்டிச் செல்லுவதும், அவளுக்குத் தலை சீவி விடுவதும், தூங்க வைப்பதும்... அடடா! முதல் காட்சியிலேயே, நம் அனைவரையும், அந்தப் படத்தின் களத்திற்குக் கூட்டிச் சென்று விடுவார்கள். அதாவது, இயக்குனர், நடிகர்கள், பாடுபவர், பாட்டு எழுதியவர், மெட்டுப் போட்டவர் என்று அனைவரும் - இதுவன்றோ கூட்டு முயற்சி! அப்போது துவங்கி, கடைசிக் காட்சி வரை, எத்தனை எத்தனையோ காட்சிகளையும், நடிப்பையும், எத்தனையோ பேர் வடித்து விட்டாலும், இன்னுமொரு காட்சி.

நடிகர் திலகம் முதலில் சாவித்திரியை ஜெமினிக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்தபின், ஜெமினி அவர் வீட்டுக் கொல்லைப் புறத்தில் வந்து சாவித்திரியை சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பார். அப்போது, சாவித்திரி, எதிர்காலத்தில், கணவராக வரப்போகும் ஜெமினியிடம், அவரது காதலரை விட, தனக்கு, அண்ணனாக, தாயாக, தந்தையாக, எல்லாமுமாக இருக்கும் தன் அண்ணன் (நடிகர் திலகம்) தான் எனக்கு எல்லா விதத்திலும் உயர்ந்தவர். உங்களுக்காக, நான் அவரைப் பகைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லும்போது, ஜெமினி தன் வீட்டிற்கு வந்து கொல்லைப் புறத்தில் தங்கை சாவித்திரியிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று, அவரது வேலைக்காரர் (திரு எஸ். ஏ. கண்ணன் அவர்கள்) மூலம் தெரிந்து, கொலை வெறியுடன் துப்பாக்கியுடன் வந்து, சாவித்திரி பேசும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, கண்களில் உருண்டோடும் கண்ணீரை அந்தத் துப்பாக்கியாலேயே துடைத்துக் கொண்டு சென்று விடுவார். இது பற்றி எல்லோரும் பேசியாகி விட்டது.

இதற்கடுத்து, நடிகர் திலகம் சாவித்திரியிடம், உனக்கு கல்யாணம் செய்யலாமென்று இருக்கிறேன். மாப்பிள்ளையை அழைத்து வந்திருக்கிறேன் வந்து பார்த்து பிடித்திருக்கிறதா என்று சொல்லம்மா என்று சொல்வார். இதற்கு சாவித்திரி, நீங்கள் பார்த்து என்ன சொன்னாலும் சரி அண்ணா என்று சொல்வார். உடனே, நடிகர் திலகம் ஜெமினியை - ஆம், படம் பார்க்கும் நாமோ, சாவித்திரியோ எதிர்பார்க்காத - ஜெமினியை அழைத்து, சாவித்திரியிடம் கூட்டிச் சென்று, சாவித்திரியிடம், மாப்பிள்ளையைப் பாரம்மா என்பார். அது வரை சோகமாக (ஆம் அவர் வேண்டா வெறுப்பாகத்தான் சம்மதித்திருப்பார். அவரைப் பொறுத்தவரை, அண்ணன் தான் முக்கியம் என்று நினைத்ததால். இருந்தாலும், காதலால் சிக்குண்டு தவித்துக் கொண்டிருப்பார்.) அதுவரை சோகமாகத் தலை குனிந்து கொண்டிருந்தவர் இலேசாகத் தலையைத் தூக்கிப் பார்க்க, நேரில், தன் ஆருயிர்க் காதலர்..... ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும், ஆனந்தக் கண்ணீரிலும் நெகிழ்ந்து திக்குமுக்காடிப் போய், "அண்ணா" என்று நடிகர் திலகம் காலில் விழ, அவரைத் தூக்கி, ஆதரவோடும், கனிவோடும் நடிகர் திலகம் கூறும் அந்த வார்த்தைகள்....

"ஒரு பெண் தன் வாழ்க்கையில் யாரை வேணுன்னாலும் விட்டுக்கொடுக்கலாம். ஆனால், தன் வாழ்க்கையின் ஆதாரமான, தன் காதலரையே, தன் அண்ணனுக்காக விட்டுக் கொடுக்கும்போது, அந்தத் தங்கைக்காக, ஒரு அண்ணன் எது வேணுன்னாலும் செய்யாலாம்மா" என்று சொல்லி, சாவித்திரியையும், ஜெமினியையும் அழைத்து ஆசீர்வாதம் செய்வார். இந்த வாக்கியத்தில், அவர் "எது வேணுன்னாலும்" என்று சொல்லும்போது மட்டும், எல்லோரும் கூர்ந்து கவனியுங்கள். அந்த மொத்த வாக்கியத்தில், இந்த வரிகள் தான் மிக மிக முக்கியமானவை. அதனை உன்னிப்பாக உள்வாங்கி, மிகச் சரியாக, இந்த வார்த்தைகளுக்கு மட்டும் ஒரு விதமான அழுத்தத்தைத் தனக்கேயுரிய பாணியில் பேசி, நடித்து, அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்ததனால்தான், அவர் நடிகர் திலகமாகிறார்.

இதற்கு முந்தைய காட்சியில், தன் கண்ணிலிருந்து பெருகும் கண்ணீரை துப்பாக்கியால் துடைக்கும்போது, தான் அழுது மக்களை அழ வைத்தவர், இந்தக் காட்சியில், தான் அழாமல், தமிழகத்தையே அழ வைத்தார். இதோ இந்தக் காட்சியையும், என் கண்களில் இருந்து பெருகும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இது போல் எத்தனை எத்தனையோ உணர்ச்சிமயமான கட்டங்களும், நடிப்பும், பார்க்கும் அனைவரையும் நெக்குருக வைத்தது - இன்றும் வைக்கிறது - என்றும் வைக்கும்.

இந்தப் படம் முதலில் தெலுங்கில் 1963 -இல் ரக்த சம்பந்தம் என்ற பெயரில் எடுக்கப் பட்டது. என்.டி. ராமாராவ் நடிகர் திலகம் நடித்த பாத்திரத்தையும், சாவித்திரி மறுபடியும் அதே தங்கை வேடத்திலும், ஜெமினி வேடத்தில், ஜக்கையாவும் நடித்தனர். என்.டி. ராமாராவ் மறுபடியும், ஒரு கனமான வேடத்தை ஏற்று நடித்து, தான் ஒரு versatile நடிகர் என்று பெயர் வாங்கினார். சாவித்திரி பற்றிக் கூறவே வேண்டாம். ஜக்கையாவும் நன்றாகத் தான் நடித்திருந்தார் - படமும் நன்றாகத் தான் போனது. ஆனாலும், தமிழ் பாசமலர் அடைந்த அந்த காவிய அந்தஸ்தை அடைய முடியவில்லை. காரணம், நடிகர் திலகத்தின் நடிப்பை, என்.டி.ராமாராவாலும், இதனாலேயே, சாவித்திரியாலும் திரும்பவும் அந்த நடிப்பைக் கொடுக்க முடியாமல் போனதாலும் தான்.

பாசமலர் ஹிந்தியில், 1965 -இல் ராக்கி என்ற பெயரில், சிவாஜி பிலிம்சால் பீம்சிங் இயக்கத்தில் எடுக்கப்பட்டபோது, வட இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான அசோக் குமார் நடிகர் திலகத்தின் வேடத்திலும், வஹீதா ரஹ்மான் சாவித்திரி வேடத்திலும், பிரதீப் குமார் ஜெமினி வேடத்திலும் நடித்திருந்தனர். எத்தனையோ பேருக்குத் தெரிந்திருக்கும். இந்தப் படத்தின் உயிர் நாடியான கடைசிக் காட்சியில் (கை வீசம்மா... கை வீசு...), அசோக் குமாரால் சரியாக நடிக்க முடியாமல் போக, அவரும் தயங்காமல், நடிகர் திலகத்தை அணுகி, அவருடைய ஆலோசனையின் பேரில், அசோக் குமார் என்ற ஜாம்பவான் நடிகர் திலகம் சொல்லிக்கொடுத்தபடி நடித்தார் என்ற செய்தி, இன்று வரலாறு. இந்தப் படமும் ஹிந்தியில் ஓரளவு நன்றாகவே ஓடியது என்றாலும், நடிகர் திலகத்தின் நடிப்புச் சாதனையில், ஐம்பது சதம் தான் அசோக் குமார் செய்தார் எனலாம். (ஆனால், இவரது க்ரிஹஸ்தி என்ற ஹிந்திப் படம் தமிழில், மோட்டார் சுந்தரம் பிள்ளை ஆன போது, நடிகர் திலகம் அசோக் குமாரை விட பல மடங்கு உயர்வாக நடித்திருந்தாரே! இந்தப் படத்தை என் முந்தைய ரீமேக் கட்டுரையில் தவிர்த்து விட்டேன், அது வேறொரு ஆய்வில் பங்கு கொள்ளவிருப்பதால்.)

பாசமலர் மேற்கூறிய இந்த இரண்டு மொழிகளிலும் நன்றாகவே ஓடினாலும், தமிழின் காவிய அந்தஸ்தை பெற முடியாமல் போனதற்குக் காரணம் - நடிகர் திலகத்தின் நடிப்பு மற்றும் நடிகர் திலகத்திற்கும் சாவித்திரிக்கும் அமைந்த அந்த அண்ணன் தங்கை பொருத்தம். அந்த அளவுக்கு அண்ணன் தங்கையாகவே அவர்கள் மாறி வாழ்ந்ததால், தமிழகமே இவர்களிருவரையும் நிஜ அண்ணன் தங்கையாகவே பார்க்க ஆரம்பித்து விட்டது. இதனால் தான், இந்தப் படம் வெளியான சில மாதங்களிலேயே வெளிவந்த "எல்லாம் உனக்காக" படம், மிக நன்றாக அமைந்தும், தோல்வி அடைந்தது. அந்தப் படத்தில், நடிகர் திலகமும் சாவித்திரியும் ஜோடியாக நடித்ததை மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

தொடரும்,

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
15th March 2011, 08:38 PM
டியர் பம்மலார்,
சென்னை சாந்தி திரையரங்க மலரும் நினைவுகளாக தாங்கள் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் தங்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் உள்ளத்தில் உற்சாக வெள்ளமும் மகிழ்வும் நினைக்கும் போதெல்லாம் உண்டாகும் என்பது திண்ணம். மேலும் தங்களுடைய நினைவுகளை அறிய ஆவல்.

நிழற்படங்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

டியர் ராகேஷ்,
vee yaar என்ற பெயரில் FACEBOOK ல் படங்களைத் தரவேற்றியது அடியேன். மற்றபடி இதர படங்களும் அத்திரியும் எம்.ஆர்.சந்தானம் அவர்களின் புதல்வர் சிவாஜி அவர்களுடையதாக இருக்கும் என்று யூகிக்கிறேன்.

டியர் பார்த்த சாரதி,
நடிகர் திலகத்தின் படங்கள் வேற்று மொழிகளில் வெளிவந்த தகவல்களும் அவற்றின் ஆய்வும் பல புதிய தகவல்களையும் புதிய கோணங்களையும் தருகின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். தாங்கள் கூறியது போல் வசந்த் தொலைக்காட்சியில் ஒய்.ஜி. மகேந்திராவின் பார்வையிலே, நிகழ்ச்சியில் தற்போது வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் தன் கருத்துக்களை பகிரந்து கொண்டு வருகிறார். பல புதிய தகவல்கள். நடிகர் திலகம் மிகச் சிறந்த நீச்சல் வீரர், குதிரையேற்றத்தில் வல்லவர், வாட்சண்டையில் வல்லவர் என கூறினார். இன்னும் பல தகவல்கள். முடிந்த வரை அனைத்து ரசிகர்களும் இந்நிகழ்ச்சியினைத் தவறாமல் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்.

பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை திரு மகேந்திர அவர்களுடன் பகிரந்து கொள்ளலாம். அவருடைய மின்னஞ்சல் - ygeems@gmail.com

சகோதரி சாரதா, பார்த்த சாரதி போன்று பலர் யூட்யூப் ஒளிக் காட்சியினைக் காண இயலவில்லை எனக் கூறியிருந்தீர்கள். தாங்கள் MOZILLA FIREFOX அல்லது GOOGLE CHROME உலாவியைப் பயன்படுத்திப் பாருங்கள். எந்த சிக்கலும் இருக்காது.

Firefox உலாவியினைக் கீழ்க்காணும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
http://www.mozilla.com/en-US/products/download.html?product=firefox-3.6.15&os=win&lang=en-US

Google Chrome உலாவியினைக் கீழ்க்காணும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
http://www.google.com/chrome/thankyou.html

இவற்றில் அனைத்து ஒளிக்காட்சிகளும் காணும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளன.

அன்புடன்
ராகவேந்திரன்

Murali Srinivas
15th March 2011, 11:51 PM
அன்பு சாரதி,

நமது திரியில் பங்கு பெறும் பலரின் பெயரையும் குறிப்பிட்டு இவர்கள் அளவிற்கு என்னால் எழுத முடியாது என்று நீங்கள் சொன்னது பொய்தானே? இப்போது நீங்கள் எழுதும் இந்த பதிவு, இது வரை யாரும் முயற்சிக்காத ஒன்று. சுவையாக இருக்கிறது. அது மட்டுமல்ல ஒரு சிலப் படங்களைப் பற்றி குறிப்பிட்டு அது பற்றிய வேறு சில பதிவுகளும் வர இருக்கின்றன என்ற தகவல் மற்றோர் சுவையான விருந்தும் காத்திருக்கின்றது என்று சொல்லாமல் சொல்கிறது. தொடருங்கள்.

எல்லோரும் கொண்டாடுவோம்

அல்லாவின் பெயரை சொல்லி

நல்லோர்கள் வாழ்வை எண்ணி

எல்லோரும் கொண்டாடுவோம்

என்று பாடியபடியே மக்களுக்கு தன் முகத்தை காண்பித்த ரஹீமை மறக்க முடியுமா? எப்படி ரங்கனை மறக்க முடியாதோ அது போல் இன்று [16-03-2011] அகவை 51-ல் அடியெடுத்து வைக்கும் ரஹீமையும் மறக்கவே முடியாது. அமைதியின் மறு உருவமாக, கருணையின் இருப்பிடமாக, கண்ணியமான காதலின் உறைவிடமாக திரையில் வாழ்ந்து காட்டிய ரஹீம்! அதனால்தானே மக்கள் இதயங்களில் நீங்கா புகலிடம் கொடுத்தனர். நம்மைப் போன்றவர்களும் அதன் காரணமாகத்தானே

வந்த நாள் முதல்

இந்த நாள் வரை

யார் மாறினாலும், எவை மாறினாலும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்ற நிலையிலிருந்து மாறாமல் நிற்கிறோம்!

அவரே பாடியது போல அவரையும் அவர் கதாபாத்திரங்களையும் திரையில் காணும் போது சிரித்துக் கொண்டே அழுகிறோம்! அழுது கொண்டே சிரிக்கிறோம்!

பாவமன்னிப்பு ரஹீம் பொன் விழா மட்டுமல்ல நூற்றாண்டும் கடந்தது வாழ்வார். அன்றும் இது போல அவர் புகழ் யாராவது பாடிக் கொண்டேயிருப்பார்கள்!

அன்புடன்

RAGHAVENDRA
16th March 2011, 12:39 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/PM01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/PM02.jpg

முரளி சார் சொன்னது போல எல்லோரும் கொண்டாடுவோம், இந்நாளை. 50 ஆண்டுகள் மட்டுமல்ல இன்னும் 500 ஆண்டுகள் ஆனபின்பும் எல்லோரும் கொண்டாடுவோம், இந்தப் படத்தையும், நடிகர் திலகத்தையும்.

நம்முடைய இணையதளத்தில் பாவ மன்னிப்பு 50 ஆண்டு நிறைவினையொட்டி சிறப்பு முகப்பு..
இதோ (http://www.nadigarthilagam.com/newmain7D.htm)

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
16th March 2011, 12:40 AM
எல்லோரும் கொண்டாடுவோம் பாடல் காட்சி

http://www.youtube.com/watch?v=_vLauEx6oqM
அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
16th March 2011, 02:17 AM
சகோதரி சாரதா,

தங்களின் பாராட்டுதல்களுக்கும், கூடுதல் தகவல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! "விஸ்வரூபம்" 100வது நாள் விழா பற்றிய பதிவினை ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன்!

டியர் சந்திரசேகரன் சார்,

தங்களது பாராட்டுக்கு நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th March 2011, 02:26 AM
டியர் பார்த்தசாரதி சார்,

தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றி! நமது நடிகர் திலகம் நம் அனைவரது உள்ளங்களிலுமே நீக்கமற நிறைந்திருக்கிறார். தாங்கள் கூறியது போல் அவரது வான்புகழை தொடர்ந்து நாம் அனைவரும் பாடிக் கொண்டே இருப்போம்.

தங்களின் 'நடிகர் திலகமும் அவரது படங்கள் பிறமொழிகளிலும்' தொடர் கட்டுரை அருமை, அற்புதம், அபாரம்.

1959 தீபாவளி வெளியீடாக வெள்ளித்திரைக்கு வந்த "பாகப்பிரிவினை", அதிகபட்சமாக மதுரை சிந்தாமணி திரையரங்கில் 31 வாரங்கள் [216 நாள்] ஓடி இமாலய வெற்றி கண்டது. "பாகப்பிரிவினை" ஏற்படுத்திய பாக்ஸ்-ஆபீஸ் பிரளயத்தை அடியேன் ஏற்கனவே இத்திரியின் ஐந்தாவது பாகத்தில் பதிவு செய்துள்ளேன். அதற்கான சுட்டி இதோ:

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page116

1959-ம் ஆண்டு, தமிழ்த் திரையுலகில், மூன்று திரைப்படங்கள் இமாலய வெற்றியை அடைந்தன. நமது நடிகர் திலகத்தின் "வீரபாண்டிய கட்டபொம்மன்", "பாகப்பிரிவினை" மற்றும் காதல் மன்னனின் "கல்யாண பரிசு" ஆகியவையே இந்த மூன்று படங்கள். இம்மூன்றுமே வெள்ளிவிழாக் காவியங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"பாகப்பிரிவினை"யை ஹிந்தியில் தயாரிக்கும் முயற்சிகள் தொடங்கிய போது, அதில் கதாநாயகனாக நடிக்க, தாங்கள் குறிப்பிட்டது போல், திலீப்குமாரைத் தான் முதலில் அணுகினார்கள். ஒரிஜினலைப் பார்க்க விரும்பிய அவருக்கு திரையிட்டும் காட்டினார்கள். படம் முழுவதையும் பார்த்த திலீப்குமார், "என்னால் சிவாஜி மாதிரி நடிக்கவே முடியாது. நான் அழகான கதாநாயகனாக, மென்மையான ரொமான்டிக் ஹீரோவாகவே அதிகம் நடிக்க விரும்புகிறேன். அவர் மாதிரி யாராலுமே செய்ய முடியாது. அழகான ஹீரோவாகவும் நடிக்கிறார், அவலட்சணமான ஹீரோவாகவும் பிய்த்து உதறுகிறார். இப்படத்தின் பெரும்பகுதி அவர் அங்கஹீனம் உள்ளவராகவே நடிக்கிறார். ஒரு கையும், ஒரு காலும் செயலிழந்த வேடம் அவருக்கு. விந்தி விந்தி அவர் நடக்கும் போது கவனித்தேன். ஒரு இடத்தில் கூட error வரவில்லை. அதே போல், செயலிழந்த இடது கையை ஒரு மாதிரி உடம்போடு இறுக்கி வைத்துக் கொண்டு வருகிறார். அப்படி அவர் செய்வதில் கூட ஒரு காட்சியிலும் தவறு கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை மாதிரி நடிக்க அவரால் மட்டுமே முடியும். நான் இது மாதிரி வேடங்களெல்லாம் செய்வது எனக்கு விஷப்பரீட்சை, எனவே வேண்டாம்" என்று நடிகர் திலகத்தின் நடிப்பினை மனமாரப் பாராட்டி "பாகப்பிரிவினை"யின் ஹிந்திப் பதிப்பில் நடிப்பதிலிருந்து விலகிக் கொண்டார். பின்னர் சுனில்தத் நடித்தார்.

தமிழ் சினிமா வரலாற்றில், "படிக்காத மேதை", 1960-ம் ஆண்டின் No.1 வசூல் சாதனைக் காவியம். அதிகபட்சமாக சென்னை 'சித்ரா'வில் 153 நாட்கள் ஓடி மெகாஹிட்.

"பாசமலர்" காவியத்தின் ஹிந்திப் பதிப்பான "ராக்கி" 1962-ம் ஆண்டு வெளிவந்தது. "ராக்கி"யை நடிகர் திலகம் தனது சொந்த தயாரிப்பாக 'பிரபுராம் பிக்சர்ஸ்' பேனரில் தயாரித்தார்.

தங்களது தொடர் கட்டுரையின் அடுத்தடுத்த பதிவுகளைக் காண ஆவல் மேலிடுகிறது.

அன்பு கலந்த எதிர்பார்ப்புடன்,
பம்மலார்.

pammalar
16th March 2011, 03:23 AM
பாவமன்னிப்பு 51

1. கதாநாயகனாக நடிகர் திலகம், கதையின் நாயகனாக நடிகவேள், அருமையான குணச்சித்திரங்களில் காதல் மன்னன், நடிகையர் திலகம், நடிகர் திலகத்தின் நாயகியாக தேவிகா மற்றும் வி.நாகையா,டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, கலைமணி கொத்தமங்கலம் சுப்பு, எம்.வி.ராஜம்மா மற்றும் பலர் நடித்த புத்தா பிக்சர்ஸ் "பாவமன்னிப்பு", ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் நிறைந்த திரைக்காவியம்.

2. இக்காவியத்தின் கதையினை புத்தா பிக்சர்ஸ் குழுவினர் உருவாக்க அதற்கு வசனத்தை எம்.எஸ்.சோலைமலை எழுதினார். அதற்கு திரைக்கதை அமைத்து இயக்கியவர் ஏ.பீம்சிங். தனது ஸ்டூடியோவை படப்பிடிப்புக்கு அளித்ததோடு, படத்திற்கு ஃபைனான்ஸும் செய்த ஏவிஎம் நிறுவனத்துடன் கூட்டாக இக்காவியத்தை தயாரித்தார்கள் புத்தா பிக்சர்ஸ்.

3. "பாவமன்னிப்பு" கதையின் மூலக்கதாசிரியர் யார் தெரியுமா? நகைச்சுவை நடிகர் சந்திரபாபு தான். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! எனினும் அதுதான் உண்மை. 1959-ம் வருடம் ஒரு நாள் பீம்சிங்கிடம் பேசிக் கொண்டிருந்த போது சந்திரபாபு, "அப்துல்லா" என்கின்ற தலைப்பில் தன் மனதில், ஏட்டில் புதைத்து, பதித்து வைத்திருந்த கதையை பீம்சிங்கிடம் கூறினார். ஒருவன் ஹிந்துவாகப் பிறந்து, ஒரு முஸ்லீமால் வளர்க்கப்பட்டு, ஒரு கிறிஸ்துவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது போன்ற கதை அது. ஹீரோ "அப்துல்லா"வாக தான் நடித்து பீம்சிங் அப்படத்தை 'புத்தா பிக்சர்ஸ்' பேனரில் தயாரித்து, இயக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் சந்திரபாபு. பீம்சிங்கும் ஒப்புக் கொண்டார்.

4. "அப்துல்லா" படம் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கியது. 2000 அடிகள் வரை படம் வளர்ந்திருந்த நிலையில், பீம்சிங் தனது நெருங்கிய நண்பரான ஏவிஎம். சரவணனிடம் எடுத்தவரை திரையிட்டுக் காட்டினார். 2000 அடி படத்தைப் பார்த்து முடித்த சரவணனிடம் பீம்சிங், "எடுத்தவரை எனக்கு திருப்தியில்லை. எவ்வளவு பண்ணியும் சரியா எதுவும் அமையவில்லை. பாபுவுக்கு இந்த ரோல் டூ மச். இந்தப் படத்தை தொடர்ந்து எடுப்பதாக இருந்தால் முதலிலிருந்து ரீஷுட் பண்ணனும். இல்லையேல் படத்தைக் கைவிட வேண்டியது தான்" என்று விரக்தியுடன் கூறினார். அதற்கு சரவணன், "இந்தக் கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் அப்பச்சி(ஏவிஎம்)யிடம் இது குறித்து பேசுகிறேன். நாம இந்த Projectஐ கூட்டாக சேர்ந்து செய்வோம்" என்றார். அப்பச்சியும் சம்மதம் தெரிவிக்க முதல் மாற்றமாக "அப்துல்லா", "பாவமன்னிப்பு" எனப் பெயர் மாறியது. இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி (Production Executive) பொறுப்பினை ஏற்றார் ஏவிஎம். சரவணன்.

5. புத்தா பிக்சர்ஸ்-ஏவிஎம் கூட்டுத் தயாரிப்பு என்பதால் அடுத்த அதிரடி மாற்றமாக ஹீரோ மாற்றம் நிகழ்ந்தது. சந்திரபாபுவுக்கு இந்த ஹீரோ ரோல் குருவி தலையில் பனங்காய் என்பதால் அவருக்கு பதிலாக நடிகர் திலகம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [அப்பேர்ப்பட்ட பாத்திரங்களிலெல்லாம் நமது திலகத்தை தவிர வேறு யார் நடிக்க முடியும்]. பின்னர் ஏனைய கதாபாத்திரங்களுக்கும் நடிக-நடிகையர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

6. "பாவமன்னிப்பு" திரைப்படத்தினுடைய பூஜை, 20.1.1960 புதனன்று போடப்பட்டு, படப்பிடிப்பும் நல்ல முறையில் தொடங்கியது. படத்திற்கான மொத்த பட்ஜெட் ரூ.11,00,000/- என கணக்கிடப்பட்டு, அந்தத் தொகையை ஏவிஎம் தருவதாகவும், வருகின்ற லாபத்தில் புத்தா பிக்சர்ஸுக்கும், ஏவிஎம்முக்கும் சரிபாதி என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

7. "பாவமன்னிப்பு" திரைக்காவியத்தில், கதாநாயகன் 'ரஹீம்' என்கின்ற இஸ்லாமிய இளைஞனின் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறோம் என்று முடிவான உடனேயே சிவாஜி அவர்கள், பல முஸ்லீம் பெரியவர்களிடமும், அறிஞர்களிடமும், இளைஞர்களிடமும் இஸ்லாமிய மக்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் ஆகியவை குறித்து கேட்டு விசாரித்து ஒரு முதல் கட்ட Preparationஐ ஆரம்பித்து விட்டார்.

8. பீம்சிங் இக்கதையை சிவாஜியிடம் கூறும்போதே ரஹீம் பாத்திரம் நடிகர் திலகத்தை கட்டிப்போட்டு விட்டது. ரஹீம் கதாபாத்திரத்தின் தன்மைகளை கிட்டத்தட்ட 40 பக்கங்களில் முதலிலேயே சிவாஜிக்கு பீம்சிங் எழுதிக் கொடுத்துவிட்டார். ரஹீம் பாத்திரத்தை மிகுந்த சிரத்தையோடு செய்ய திட்டமிட்டார் சிவாஜி. ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கு வரும் போதும் Fully Prepared ஆக வருவார். செவ்வனே செய்வார். அவர் நடிப்பதற்கு கேட்கவா வேண்டும். அன்றைய படப்பிடிப்பு இரவு எந்நேரத்தில் முடிந்தாலும், மறுநாள் படப்பிடிப்பில் எப்படி நடிக்க வேண்டும் என்பதனை பீம்சிங்குடன் கலந்து ஆலோசிதத பின்னரே வீட்டிற்குச் செல்வார். மறுநாள், எப்பொழுதும் போல் Prepared ஆக மேக்கப்புடன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகி விடுவார்.

9. இஸ்லாமிய சமூகத்தினர் இறைவனை வேண்டித் தரையில் மண்டியிட்டுத் தொழும் போது, அவர்களது நெற்றிமுனை தரையில் தட்டித்தட்டி அந்த இடம் கருப்பாகி விடும், அதாவது நெற்றிமுனையில் ஒரு கருப்புத் தழும்பு காணப்படும். இதையறிந்த நடிகர் திலகம் தனது நெற்றிமுனைக்கு மட்டும் சற்று கருப்பாக ஒப்பனை செய்து கொண்டார்.

10. "பாவமன்னிப்பு" திரைக்காவியத்தின் மிக முக்கிய காட்சி, நடிகவேள் நடிகர் திலகத்தின் மீது திராவகத்தை வீசும் காட்சி. இந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முந்தைய நாள் எப்பொழுதும் போல் அன்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் பீம்சிங்கிடம் அடுத்தநாள் படப்பிடிப்பு பற்றி ஆலோசித்து விட்டு வீட்டிற்குச் சென்றார் நடிகர் திலகம். அன்று இரவு முழுவதும் அவருக்கு தூக்கம் பிடிக்கவில்லை. அடுத்தநாள் எடுக்கப் போகும் திராவக வீச்சு காட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பீம்சிங்கிற்கும் அவரது இல்லத்தில் உறக்கம் வரவில்லை. அடுத்த நாள் இயக்கப் போகும் காட்சி குறித்தே யோசித்துக் கொண்டிருந்தார். என்ன தோன்றியதோ தெரியவில்லை, நள்ளிரவில் சிவாஜிக்கு ஃபோன் செய்தார் பீம்சிங். கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு அடுத்த நாள் காட்சியைக் குறித்தே ஆராய்ந்து கொண்டிருந்த நடிகர் திலகத்துடன் ஃபோனில் நீண்ட நேரம் உரையாடினார் பீம்சிங்.

11. மறுநாள் திராவகம் வீசும் காட்சியின் படப்பிடிப்பும் தொடங்கியது. சிவாஜியின் முகத்தில் எதிர்பாராத விதமாக திராவகம் வீசப்பட்டு அவர் துடிதுடித்து தரையில் இங்குமங்கும் உருண்டு புரளும் காட்சி ஒரே ஷாட்டாக ஒரே டேக்கில் படமாக்கப்பட்டது. ஷாட் பிரித்தோ, இரண்டாவது டேக் போனாலோ மிக முக்கிய காட்சியின் அழுத்தம் குறைந்து விடும் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்ததாலேயே ஒரே ஷாட்டில் ஒரே டேக்கில் அக்காட்சியை படமாக்கினர் சிவாஜியும், பீம்சிங்கும். இதற்காகவே இரவெல்லாம் யோசித்து, தங்களுக்குள் விவாதித்திருக்கின்றனர்.

pammalar
16th March 2011, 03:44 AM
பாவமன்னிப்பு 51

12. "பாவமன்னிப்பு" படப்பாடல்கள் காலத்தை வென்றவை. இப்பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். அருமையான, ஆழமான கருத்துக்கள் கொண்ட பாடல் வரிகளுக்கு அற்புதமான, இனிமையான மெல்லிசை மெட்டுகள் என ஒரு புதிய திரை இசை அலையையே உருவாக்கினார்கள் மெல்லிசை மாமன்ன்ர்கள். பாடல்களின் ஒலிப்பதிவை மட்டும் ஒலிப்பதிவு மாமேதை முகுல்போஸ் செய்து கொடுத்தார்.

13. "எல்லோரும் கொண்டாடுவோம்" பாடலை நடிகர் திலகம் குழுவினருடன் பாடி நடிக்க சிவாஜிக்கு பின்னணி பாடியிருப்பார் டி.எம்.எஸ். குழுவினரில் ஒருவருக்கு நாகூர் ஹனீஃபா குரல் கொடுத்திருப்பார். இன்றளவும் இஸ்லாமிய பண்டிகை தினங்களில் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தவறாமல் இடம்பெறும் பாடல் இது. நாகூர் ஹனீஃபா தனது பக்தி இசைக் கச்சேரிகளிலும் இப்பாடலை மறவாமல் பாடுவதுண்டு. நடிகர் திலகம் இப்பாடலுக்கு 'டேப்'பை வாசித்துக் கொண்டே பாடுவது இப்பாடலின் சிறப்பம்சம்.

14. "காலங்களில் அவள் வசந்தம்" பாடல் இன்றளவும் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்த பாடல். பிபிஸ்ரீனிவாஸ் அவர்கள் எத்தனையோ மெலடிகளை பாடியிருக்கிறார். எனினும் அவரது சிகர மெலடி இது. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்னர் பல படங்களில் பல நல்ல மெலடிகளை அவர் இசைத்திருக்கிறார். இருப்பினும், இந்தப் படத்தின் இந்தப்பாடல்தான் அவரை Limelightற்கு கொண்டு வந்தது. ஜெமினிக்கு பிபிஎஸ் என்ற மியூசிகல் ஃபார்முலாவும் உருவாகக் காரணமாயிற்று. [காதல் மன்னனுக்கு ஹிட்ஸாங்ஸுகளுக்கு எப்பொழுதுமே குறைவிருந்ததில்லை. 1950களில் ஏஎம்ராஜா, கண்டசாலா குரல்களிலும், 1960களில் பிபிஎஸ்ஸின் வாய்ஸிலும், 1970களில் எஸ்பிபியின் குரல்ஜாலத்திலும் அவருக்கு பற்பல சிறந்த
பாடல்கள் அமைந்திருக்கின்றன. டி.எம்.எஸ். குரலிலும் அவருக்கு சில சிகர பாடல்கள் இருக்கின்றன.]

15. "சாயவேட்டி தலையில கட்டி" பாடல் Lesshit பாடல் தான் என்றாலும் படத்தோடு பார்க்கும் போது நம்மையும் அறியாமல் நமது கால்களை தாளம் போட வைக்கும். இப்பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி, டி.எம்.எஸ் மற்றும் குழுவினர் பாடியிருந்தனர்.

16. 'இந்த அளவுக்கு இனிமையாக என்னால் பாடவே முடியாது' என்று ஒரு இசைக்குயில் இன்னொரு இசைக்குயிலைப் பாராட்டியது. ஆம், "அத்தான் என் அத்தான்" பாடலைக் கேட்டு விட்டுத்தான் இத்தகைய மனமார்ந்த பாராட்டை பி.சுசீலாவுக்கு அளித்தார் லதா மங்கேஷ்கர். சாவித்திரியும், தேவிகாவும் போட்டி போட்டுக் கொண்டு perform பண்ணும் இந்தப் பாடல் காட்சியில் நடிகர் திலகம் ஒரு மலர்ந்த புன்னகை விரித்து சீனை தூக்கிக் கொண்டு போய் விடுவார். [இன்றளவும், எனது அத்தை மகன் அத்தானைப் பார்க்கும் போதெல்லாம் அவரை நோக்கி அடியேன் இந்தப் பாடலைப் பாடுவது வழக்கம்.]

17. "வந்தநாள் முதல் இந்தநாள் வரை" பாடலின் டியூன் படத்தில் டைட்டில் மியூசிக்காக தொடக்கத்திலேயே வந்து நமது ஆன்மாவைத் தொடும். பின்னர் பாடல் காட்சியாக வரும் போது கண்ணதாசன், விஸ்ராம், டி.எம்.எஸ் ஆகியோரை சைக்கிளில் செல்லும் சிவாஜி தன் performanceஸால் ஓவர்டேக் செய்து விடுவார். இப்பாடலில் விட்டல்ராவும் ஒளிப்பதிவில் தன் பங்குக்கு தூள் கிளப்பியிருப்பார். 'ரஹீம்' குற்றவாளியாக்கப்படும் காட்சியின் போதும் இப்பாடலின் சரணம் பின்னணியாக ஒலிக்கும். அதற்கு பின்னணி குரல் கொடுத்திருப்பார் உதவி இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்.

18. 'வந்தநாள் முதல் இந்தநாள் வரை' பாடல் காட்சியில், சிவாஜி அவர்கள் சைக்கிளில் வரும் போது, சைக்கிளின் கேரியரில் ஒரு குழந்தையை வைத்து அழைத்து வருவார். அந்தக்குழந்தை பின்னாளில் சிவாஜி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான, "சின்ன தம்பி", "மிஸ்டர் மெட்ராஸ்" போன்ற திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ரவீந்தர்.

19. மேலும், "வந்தநாள் முதல் இந்தநாள் வரை" டியூனையும் படத்தின் டைட்டில் மியூசிக்கிற்காக சேர்த்து ஒலிப்பதிவு செய்த போதுதான், தமிழ்த் திரை இசை வரலாற்றில், முதன்முதலாக, ஒரு படத்தின் ஆரம்ப இசைக்கு மிக அதிகப்படியான இசைக்கருவிகள் பின்னணியில் இசைக்கப்பட்டது. இத்தொடக்க இசைக்காக 60 வயலின், 8 வயோலா, 3 செல்லோ, 1 பாஸ், 4 டிரம்பட், 2 ஸாக்ஸ், 2 டிரம்ப், 2 ஃப்ளூட், 2 தபேலா, 2 டோலக், 2 டிரம் செட் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. "பாவமன்னிப்பு" திரைக்காவியம் ஒரு திரை இசை பிரம்மாண்டம்.

20. "கவியரசரின் பாட்டிருக்கும், இசையரசர்களின் மெட்டிருக்கும், இசையரசியின் குரலிருக்கும், நடிப்பரசரின் நடிப்பிருக்கும்". இவையனைத்தும் இணையும் கீதம் "பாலிருக்கும் பழமிருக்கும்". "பாலும் பழமும்" மட்டுமா சுவை, இந்தப் "பாவமன்னிப்பு" பாடலும் தானே! சுசீலாவின் இனிமைக்குரலுக்கு ஏற்றாற் போல் தேவிகாவும் இப்பாடலில் இங்கிதமாக நடித்திருப்பார். சிவாஜியின் ஹம்மிங் எம்.எஸ்.வியின் சிங்கிங்.

21. ரஹீமின் அழகு முகம், திராவக வீச்சுக்குப் பின், சிதையும் போது அவரது காதலி மேரி(தேவிகா) வந்து பார்த்துவிட்டு தாங்கொணாத் துயரத்துடன் திரும்பிச் செல்கிறாள். அப்போது திலகத்தின் உயிர்ப்பில் டி.எம்.எஸ். குரல் ஒலிக்கும்:
"ஓவியம் கலைந்ததென்று ஓவியர்கள் வெறுப்பதில்லை
உருக்குலைந்த கோட்டையினை சரித்திரம் மறப்பதில்லை
மறையாத காதலிலே மனங்கனிந்து வந்தாளோ
மறந்துவிட நினைப்பாளோ மறுபடியும் வருவாளோ"
ஆஹா...தமிழிருக்கும் வரை தமிழ்ப்பெரும் கவிஞன் கண்ணதாசனும் இருப்பார்.

22. "காலம் பல கடந்து" எனத் தொகையறாவில் தொடங்கி "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்" எனப் பாட்டாகும் போது நம் ஐம்புலன்களும் பார்க்கின்ற திரையோடு ஐக்கியமாகி விடும். "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்" சரிதான். ஆனால் இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் சிரித்துக் கொண்டே அழுவதற்கும், அழுது கொண்டே சிரிப்பதற்கும் ஒருவர் தானே இருக்கிறார். பாடல் முழுமையுமே நடிகர் திலகம் தனது performanceஸால் பார்ப்போரை புரட்டிப் போட்டு விடுவார். இந்தப் பாடலையெல்லாம் பாடகர் திலகம் டி.எம்.எஸ்ஸைத் தவிர இவ்வுலகில் வேறு எவரால் பாட முடியும். அன்றும், இன்றும், என்றும் பல கோடி உலக மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும், விளங்கப் போகும் வரிகளை கவியரசர் எத்தனை தீர்க்கதரிசனத்தோடு எழுதியிருக்கிறார் பாருங்கள்:

"காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும்!
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்! வந்ததை எண்ணி அழுகின்றேன்!"

சிவாஜி, சௌந்தரராஜன், விஸ்வநாதன், கண்ணதாசன் - பொற்காலப் படைப்பாளிகள். இவர்களின் பங்களிப்புக்கு ஒவ்வொருவருக்கும் எடைக்கு எடை தங்கம் கொடுக்கலாம்.

23. 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்' பாடல் காட்சியில், ஒரே ஃப்ரேமில் மூன்று சிவாஜிகள் தெரிவார்கள். ஒருவர் சிரிப்பார், ஒருவர் அழுவார், ஒருவர் சிரித்து-அழுது பாடிக் கொண்டே வருவார். இப்படி இந்தப் பாடல் காட்சியை எடுக்கச் சொல்லி பீம்சிங்கிற்கு ஐடியா கொடுத்ததே அய்யன் சிவாஜி தான்.

24. "பாவமன்னிப்பு" படத்தில் பல இடங்களில் பல காட்சிகளில் விட்டல் ராவின் கேமரா விளையாடியிருக்கும். ஆர்ட் டைரக்ஷனை ஹெச்.சாந்தாராம் செய்து கொடுக்க, எடிட்டிங் மேற்பார்வையை கவனித்தார் பீம்சிங்.

25. நடிகர் திலகத்தின் தாயாக இதில் நடித்திருப்பவர் எம்.வி.ராஜம்மா. முதலில் அந்தப் பாத்திரத்தில் நடித்தவர் பி.கண்ணாம்பா. அவர் நடித்து 6000 அடிகளுக்கான காட்சிகள் படமாகியிருந்த நிலையில் திடீரென்று அவர் நோய்வாய்ப்பட்டு உடல்நலம் குன்றினார். எனவே, மீண்டும் முதலிலிருந்து கண்ணாம்பா நடித்த காட்சிகளையெல்லாம் எம்.வி.ராஜம்மாவைக் கொண்டு படமாக்கப்பட்டது.

pammalar
16th March 2011, 03:59 AM
பாவமன்னிப்பு 51

26. "பாவமன்னிப்பு", நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியமாக, 66வது கருப்பு-வெள்ளைக்காவியமாக. 16.3.1961 வியாழனன்று சென்னையில் சாந்தி, ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி முதலிய 3 திரையரங்குகளிலும் மற்றும் இந்தியாவெங்கும் வெளியானது. [பொன்விழா நிறைவு பெற்று 51வது ஆண்டு ஆரம்பிக்கும் 16.3.2011, பொன்னுக்கும் மேலான புதன்கிழமை].

27. சென்னை சாந்தி திரையரங்கில் வெளியான முதல் சிவாஜி படம் என்கின்ற பெருமையைப் பெரும் இக்காவியம் இங்கே வெள்ளிவிழாக் கொண்டாடியது. தவிர, சென்னை மற்றும் தென்னகமெங்கும் 14 திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்தது. முதல் வெளியீட்டில் சற்றேறக்குறைய 40 பிரிண்டுகள் போடப்பட்ட இக்காவியத்தின் கிட்டத்தட்ட அனைத்து பிரிண்டுகளும் 50 நாட்களைக் கடந்தது. அயல்நாடான இலங்கையிலும் 100 நாள் விழாக் கொண்டாடியது.

28. "பாவமன்னிப்பு" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:
1. சென்னை - சாந்தி - 177 நாட்கள்
2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா - 127 நாட்கள்
3. சென்னை - ராக்ஸி - 107 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் - 141 நாட்கள்
5. சேலம் - ஓரியண்டல் - 127 நாட்கள்
6. திருச்சி - ராஜா - 120 நாட்கள்
7. கோவை - கர்னாடிக் - 100 நாட்கள்
8. காஞ்சிபுரம் - கண்ணன் - 100 நாட்கள்
9. வேலூர் - ராஜா - 100 நாட்கள்
10. நெல்லை - ராயல் - 101 நாட்கள்
11. நாகர்கோவில் - பயோனீர்லக்ஷ்மி - 101 நாட்கள்
12. ராமனாதபுரம் - சிவாஜிடூரிங் - 100 நாட்கள்
13. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 133 நாட்கள்
14. பெங்களூர் - ஆபெரா - 133 நாட்கள்
15.திருவனந்தபுரம் - பத்மனாபா - 100 நாட்கள்
16. கொழும்பு - கிங்ஸ்லி - 115 நாட்கள்

29. உலக சினிமா வரலாற்றில், ஒரு டூரிங் டாக்கீஸில் 100 நாட்கள் ஓடிய ஒரே திரைப்படம் "பாவமன்னிப்பு" [ராமனாதபுரம் - சிவாஜி டூரிங்].

30. தமிழ்த் திரைப்பட வரலாற்றில், ஒரு ஏர்கண்டீஷண்ட்(ஏசி) டீலக்ஸ் திரையரங்கில், வெள்ளிவிழாக் கொண்டாடிய முதல் திரைப்படம் "பாவமன்னிப்பு". [அரங்கம் : சென்னை - சாந்தி]

31. சிங்காரச் சென்னை மாநகரின் வரலாற்றில், முதன்முதலில், ஒரு தமிழ்த் திரைப்படம், அதன் முதல் வெளியீட்டில், மொத்த வசூலாக ரூ.10,00,000/- ஈட்டியது இந்தப்படத்தில் தான். சாந்தி(177), ஸ்ரீகிருஷ்ணா(127), ராக்ஸி(107) என வெளியான மூன்று திரையரங்குகளிலும் மொத்தம் ஓடிய 411 நாட்களில் இக்காவியம் அள்ளி அளித்த மொத்த வசூல் ரூ.10,51,697-10பை. [இன்றைய பொருளாதார நிலையில் இத்தொகை பற்பல கோடிகளுக்குச் சமம்.]

32. 1961-ம் ஆண்டின் தலைசிறந்த, ஈடு இணையற்ற வசூல் சாதனைப் படமாக - Box-Office Himalayan Record படமாக - ஒரு புதிய வசூல் புரட்சியை ஏற்படுத்திய படம் "பாவமன்னிப்பு".

33. நடிகர் திலகத்தின் திரைப்பட பாக்ஸ்-ஆபீஸ் சாதனைகள் வரலாற்றில், சென்னை மாநகரில் மட்டும் அவருக்கு மொத்தம் 10 படங்கள் வெள்ளிவிழாக் கொண்டாடியுள்ளன. அவரது சென்னை மாநகர வெள்ளிவிழாப் பட்டியலுக்கு பிள்ளையார்சுழி போட்ட படம் "பாவமன்னிப்பு".

34. ஏவிஎம் நிறுவனத்தினர் தங்களது திரைப்படங்களுக்கு வித்தியாசமாக விளம்பரங்கள் செய்வதில் வல்லவர்கள். அவர்கள், "பாவமன்னிப்பு" திரைப்படத்திற்கு, மிக மிக வித்தியாசமான - அதுவரை யாரும் செய்திராத - நூதன விளம்பரயுக்தியாக, ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு ராட்சத பலூனில், "AVM" என்று ஆங்கில எழுத்துக்களில் பெரிதாக எழுதி, பலூன் வாலில் "பாவமன்னிப்பு" என்ற எழுத்துக்களை ஒன்றன்கீழ் ஒன்றாக தமிழில் அமைத்து, சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தின் மேல் வானில் பறக்க விட்டனர். ரசிகர்களும், பொதுமக்களும் இந்த பலூனை அதிசயத்துடன் அண்ணாந்து பார்த்து வியந்தனர். இந்த ராட்சத பலூன் சிறந்த காட்சிப்பொருளாகவும், படத்திற்கு நல்ல விளம்பரமாகவும் அமைந்தது.

35. "பாவமன்னிப்பு" பாடல்கள் அனைத்தும் ஒலிப்பதிவு ஆன உடனேயே, ஏவிஎம் நிறுவனத்தார் அதனை இலங்கை வானொலிக்கு அனுப்பி வைத்தனர். இலங்கை வானொலி இப்பாடல்களை அனுதினமும் ஒலிபரப்பியது. படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்.

36. இப்படத்தின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகளை 'கொலம்பியா' நிறுவனம் வெளியிட்டது. இசைத்தட்டுகள் விற்பனை வரலாற்றில், "பாவமன்னிப்பு" படப்பாடல்களின் இசைத்தட்டுகள் இமாலய சாதனையை ஏற்படுத்தின.

37. "பாவமன்னிப்பு" வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது. படம் மட்டுமன்றி பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஏற்கனவே பிரபலமாகியிருந்தன. இதனை அறிந்த ஏவிஎம் நிறுவனத்தினர் - இன்னொரு நூதன விளம்பர யுக்தியாக - "பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி"யை படம் வெளியான நான்காவது வாரத்தில் [7.4.1961] அறிவித்தனர்.

38. ஏவிஎம் அறிவித்த "ரசிகப் பெருமக்களுக்கு பரிசு - பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி" அறிவிப்பு இதுதான்:
"இப்படத்திலுள்ள பாட்டுகள் அனைத்துமே சிறப்பாக இருப்பதாய் ஏகோபித்த பாராட்டுதல்கள் வருகின்றன. இப்பாட்டுகளை அதனதன் தராதரத்தின்படி, வரிசைப்படுத்தும்போது பாட்டின் இசை, பாட்டின் கருத்து மற்றும் ஒவ்வொரு பாட்டும் எவ்விதம் அந்தந்த காட்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு படத்திலுள்ள எட்டு பாட்டுகளையும் வரிசைப்படுத்தி எழுதி பரிசு பெறுங்கள்...

முற்றிலும் சரியான விடைக்கு முதல் பரிசு ரூ.4000/-

ஒரு தவறுள்ள விடைக்கு இரண்டாவது பரிசு ரூ.2000/-

இரண்டு தவறுள்ள விடைக்கு மூன்றாவது பரிசு ரூ.1000/-

திருவாளர்கள் டாக்டர் மு.வரதராசனார், சங்கீத கலாநிதி முசிறி சுப்ரமண்ய ஐயர், ஔவை டி.கே.ஷண்முகம், தொழிலாளர் தலைவர் பட்டாபிராமன் எம்.பி. ஆக நால்வரும் தேர்வு குழுவிலிருக்க இசைந்துள்ளார்கள். அவர்களின் தீர்ப்பே முடிவானது. தீர்ப்பின் முடிவுப்படி பரிசு பெற்றவர்களுக்கு 'பாவமன்னிப்பு' 100வது நாள் விழாவன்று பரிசளிக்கப்படும். உங்கள் விடைகளை 10.6.1961 தேதிக்குள், 'பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி', ஏவிஎம் ஸ்டூடியோ, சென்னை - 26 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். முடிவு தேதிக்குப் பின் வரும் விடைகள் கவனிக்கப்படமாட்டாது."

39. ரசிகப்பெருமக்கள் பெருமளவில் இப்போட்டியில் கலந்து கொண்டனர். ஏவிஎம் நிறுவன அலுவலகத்தின் ஒரு பெரிய அறை முழுவதும் விடைகள் வந்து குவிந்தன. அதன் பின்னர் தேர்வுக் குழுவினரும் முடிவு செய்து தங்களது தீர்ப்பினை வெளியிட்டனர். அத்தீர்ப்பின்படி வரிசைப்படுத்தப்பட்ட படத்தினுடைய எட்டு பாடல்கள்:

"1. காலம் பல கடந்து / சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்

2. அத்தான் என் அத்தான்

3. வந்தநாள் முதல் இந்தநாள் வரை

4. காலங்களில் அவள் வசந்தம்

5. பாலிருக்கும் பழமிருக்கும்

6. ஓவியம் கலைந்ததென்று

7. எல்லோரும் கொண்டாடுவோம்

8. சாயவேட்டி தலையில கட்டி"

சரியான விடைகளை எழுதி வெற்றி பெற்ற ரசிகப் பெருமக்களுக்கு, "பாவமன்னிப்பு" 100வது நாளன்று பரிசுகளும் வழங்கப்பட்டன.

40. "பாவமன்னிப்பு" திரைப்படம்தான், தமிழ் சினிமா வரலாற்றில், முதன்முதலில், ஒரு படத்தினுடைய பாடல்களையும், ரசிகர்களைவும் சம்பந்தப்படுத்தி ஒரு போட்டி நடத்தப்பட்ட முதல் படம்.

pammalar
16th March 2011, 04:13 AM
பாவமன்னிப்பு 51

41. 1961-ல் பம்பாய் மாநகரில் இக்காவியம் வெளியான போது, இசைச் சகோதரிகள் லதா மங்கேஷ்கரும், ஆஷா போன்ஸ்லேவும் காணச் சென்றனர். படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு அப்படியே அவர்களை உருக்கி விட்டது. பல காட்சிகளின் போது அவர்கள் இருவரின் கண்களிலும் தாரைதாரையாகக் கண்ணீர். படம் முடிந்தவுடன் வீட்டிற்குச் சென்றவர்கள் என்ன நினைத்தார்களோ மறுநாள் அதிகாலையே சென்னைக்கு விமானம் ஏறி அன்னை இல்லம் வந்தனர். நடிகர் திலகத்தை சந்தித்தனர். இசையரசிகளின் கண்களில் ஆனந்தக்கண்ணீர். நடிப்பரசரை அவர்கள் மனதாரப் பாராட்டி வாயார வாழ்த்திச் சென்றனர்.

42. 1961-ம் ஆண்டிலேயே இக்காவியம் "பாபபரிகாரம்" என்கின்ற தலைப்பில் தெலுங்கில் மொழிமாற்றம்(டப்பிங்) செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியிடப்பட்டது.

43. "பாவமன்னிப்பு" திரைக்காவியம் குறித்து பீம்சிங்:
"மனிதனுக்கு மனிதன் உண்டாகும் பிரச்னைகளை, கோபதாபங்களை ஒருவருக்கொருவர் அன்பு வழியில் தீர்த்துக் கொண்டால், உலகத்தில் எத்தனை மதங்களும், மார்க்கங்களும் இருந்தாலும் 'எல்லோரும் மனிதர் தானே' என்கிற பொது எண்ணம் உண்டாகி, அனைவரும் மண்மாதாவின் குழந்தைகள் போல ஒற்றுமையாக வாழ முடியும் என்பது என் நம்பிக்கை, ஆசை. அந்த ஆசையின் படப்பிடிப்புதான் நீங்கள் காணும் 'பாவமன்னிப்பு'. உலகமெலாம் அன்பு வழி நடந்து எல்லோரும் சகோதரர்களாகப் பழகி வாழ என் முயற்சி கடுகளவாவது துணை புரியுமானால், அதை என் வாழ்நாளில் கிடைத்த பெருமையாகக் கருதுவேன்."

44. "முஸ்லீம் வாலிபர்கள் இந்தப் பாத்திரத்தைப் போலல்லவா வாழ வேண்டும் என்று எண்ணும்படி அதிக சிரமமெடுத்து நடித்த படம்" என இக்காவியம் குறித்து நடிகர் திலகம் கருத்து கூறியுள்ளார்.

45. "பாவமன்னிப்பு" காவியத்தில் நடித்தது குறித்து தேவிகா:
"ஆசியாவின் சிறந்த நடிகரான சிவாஜி அண்ணாவுடன் நான் 'பாவமன்னிப்பு' படத்தில் நடிக்கும் போது ஒவ்வொரு முறையும் அவர் 'நீ சிறப்பாக நடிக்க வேண்டும்' என்று ஊக்கம் ஊட்டும் போது நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன். சில வேளைகளில் கஷ்டமான பாவங்களை சித்தரித்து காட்டுவது எப்படி என்று அவரே நடித்துக் காட்டியிருக்கிறார். 'பாலிருக்கும் பழமிருக்கும்' பாடல் காட்சியில் நடிக்கும்பொழுது சிவாஜி அண்ணா அவர்கள், 'இந்தக் காட்சியில் கிறிஸ்தவப் பெண்ணுக்குள்ள அமைதி, பண்பு ஆகிய குணநலன்களுடன் இயற்கையாகக் காட்சி அமைய நீ நடிக்க வேண்டும். இந்தக் காதல் காட்சியில் நடிக்கும்பொழுது நெளிந்து நெளிந்து நடிக்காமல் அமைதியாகவும், அடக்க ஒடுக்கமாகவும் நீ நடிக்க வேண்டும்' என்று எனக்குக் கூறி ஊக்கம் அளித்து காட்சியின் தன்மையை விளக்கிக் காட்டினார். அதன்பின் அவர் அளித்த ஊக்கத்தினால்தான் அக்காட்சியில் சிறப்பாக நடித்தேன். படம் வெளியான பிறகு இந்தப் பாடல் காட்சியும் மக்கள் மனதில் நீங்காமல் இடம்பெற்றுவிட்டது. சிவாஜி அண்ணா அவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்றும் சொல்லுவேன். 'பாவமன்னிப்பு' வெளிவருவதற்கு முன்பே அவர் என்னைப் பார்த்து 'இந்தப்படம் வெளிவந்ததும் உனக்கு நல்ல பெயர், புகழ் வரும்' என்றார். எனக்கென்னவோ தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் முடிவில் அவர்தான் வெற்றி பெற்றார். 'பாவமன்னிப்பு' படம் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுவிட்டது. பொது நன்மைக்காக எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் கைகொடுத்து உதவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நீடூழி வாழப் பிரார்த்திப்போமாக."

46. பாக்ஸ்-ஆபீஸ் மெகாஹிட் காவியமான "பாவமன்னிப்பு", இந்திய அரசின் விருதினையும் வென்றது. 1961-ம் ஆண்டில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்ற மிகச் சிறந்த திரைப்படம் என்று இப்படத்திற்கு "வெள்ளிப்பதக்கம்" விருதும், அகில இந்திய நற்சான்றிதழும் இந்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

47. "பாவமன்னிப்பு", "சப் கா சாத்தி" என்கின்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஹிந்திப் பதிப்பாகவும் வெளிவந்தது. 1972-ல் வெளியான இந்த ஹிந்திப்படத்தில் சஞ்சய்கான் கதாநாயகனாக நடித்திருந்தார். ஜெமினி, சாவித்திரி ரோல்களில் வினோத்கன்னாவும், பாரதியும் நடித்திருந்தனர். இப்படத்தை பீம்சிங்கே இயக்கினார்.

48. நடிகர் திலகத்தின் 'ரஹீம்' கதாபாத்திரம், கவிப்பேரரசு வைரமுத்துவின் மனம் கவர்ந்த பாத்திரமாகும். அவர் கலந்து கொள்ளும் சிவாஜி விழாக்களில் இப்பாத்திரம் குறித்து அவர் சிலாகித்துச் சொல்லாத மேடைகளே இல்லை. 'சிரித்துக் கொண்டே அழவதையும், அழுது கொண்டே சிரிப்பதையும் உலகில் சிவாஜியால் மட்டுமே சித்தரித்துக் காட்ட முடியும்' என்று வைரமுத்து சிவாஜி விழாதோறும் நடிகர் திலகத்துக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.

49. வெள்ளித்திரை மறுவெளியீடுகளிலும், சின்னத்திரைச் சேனல்களிலும் "பாவமன்னிப்பு"க்கு கிடைக்கும் அமோக வரவேற்பே தனிதான். Vcd, dvd வடிவத்திலும் இக்காவியத்திற்கு ஏக கிராக்கி.

50. "பாவமன்னிப்பு", மதங்கள் மனங்களை பிரிக்கக்கூடாது, அவை இதயங்களை இணைக்கும் பாலங்களாக இருக்க வேண்டும் என்கின்ற உயர்ந்த தத்துவத்தை உறுதியோடு வலியுறுத்திய காவியம். 'அனைத்து ஆயுதங்களையும் விட அன்பே சிறந்த ஆயுதம்' எனும் மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையை போதித்த உன்னத சித்திரம். மதஒற்றுமையை, ஒருமைப்பாட்டை வலியுறுத்தி அதற்கு என்றென்றும் தலைசிறந்த எடுத்துக்காட்டாக திகழும் திரைஓவியம்.

51. 16.3.2011 புதன்கிழமையன்று "பாவமன்னிப்பு" திரைக்காவியம் தனது பொன்விழா ஆண்டினை நிறைவு செய்து 51வது ஆண்டில் மிக மிக வெற்றிகரமாக பீடு நடை போடுகின்றது. எக்காலத்தையும் வெல்கின்ற, எந்தத் தலைமுறையையும் ஈர்க்கின்ற தலைசிறந்த காவியமாக மென்மேலும் பற்பல விழாக்களை இக்காவியம் காணப் போவது திண்ணம்.

பெருமிதத்துடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
16th March 2011, 09:35 AM
டியர் பம்மலார்,
தங்களுடைய 51 குறிப்புகள் ஒவ்வொன்றும் குறைந்தது ஒரு லட்சம் கோடி என்றால் கூட குறைந்தது 51 லட்சம் கோடிக்கு நீங்கள் தற்போது அதிபதி. அதில் 0.001 எனக்கு கிடைத்தால் கூட அதுவே போதும் மிச்சமுள்ள வாழ்நாளை ஓட்டிவிடலாம். விரைந்து ஏற்பாடு செய்யுங்கள். இதற்கு சி.பி.ஐ. போன்றவர்கள் வரமாட்டார்கள். வந்தால் அவர்களும் கூட பங்கு கேட்பார்கள். ஏனென்றால் நடிகர் திலகத்தைப் பற்றி தெரியாவர்களே இல்லை இப்புவியில்.

நகைச்சுவை தான்... தவறாக எண்ணாதீர்கள் (எண்ணுவது என்பது மனஓட்டம், கணித எண்ணிக்கையல்ல)... ஹி...ஹி...ஹி... தேர்தல் நேரமல்லவா ... அதுவே நெஞ்சில் தாக்கமடைந்து விட்டது.

பாவமன்னிப்பு படத்தைப் பற்றிய தங்கள் குறிப்புகள் மிக்க பயனுள்ளவை. பல புதிய தகவல்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்கின்றன. என் உளப் பூர்வமான பாராட்டுக்கள்.

அடியேனுடைய சிறு பங்காக சில விளம்பரங்களின் நிழற்படங்கள்

பாவமன்னிப்பு வெளியீட்டு விளம்பரம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/PavamannippuReleasead.jpg

பாவமன்னிப்பு வெற்றிகரமான காட்சிகளின் விளம்பரம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/PavamannippuRunningad.jpg

பாவமன்னிப்பு பாடல் போட்டிக்கான விளம்பரம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/PavamannippuPrizead.jpg

அன்புடன்
ராகவேந்திரன்

parthasarathy
16th March 2011, 10:13 AM
டியர் ராகவேந்திரன் சார் அவர்களுக்கு,

தங்களின் உளமார்ந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள். கூடியமட்டும் நடிகர்திலகம் புகழ் பாடும் எந்த செய்தி, மற்றும் கட்டுரையையும் தவறவிடுவதில்லை, எப்போது பார்த்தாலும், ஆழ் மனதில் நடிகர் திலகம் நீக்கமற நிறைந்திருப்பதால்.

தாங்கள் கொடுத்த விவரங்கள் மூலம் திருச்சி மாவட்ட அன்பர்கள் செய்த முயற்சியினைப் பார்க்கிறேன். நன்றி.

டியர் முரளி சார் மற்றும் பம்மலார் அவர்களுக்கு,

தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. பாவ மன்னிப்பு பற்றி நினைத்தவுடனேயே என்றென்றும் நினைவுக்கு வருவது, நடிகர் திலகத்தின் அறிமுகக் காட்சி - அதாவது, எல்லோரும் கொண்டாடுவோம் பாடல் காட்சி. அந்த அழகும், அமைதியும், கனிவும் பொங்கும் அந்த முகம், பாடலில் அவரது பாவனைகள், உச்சரிப்பு மற்றும் இலேசான அவரது trademark தலையசைப்பு மற்றும் தோலக்கில் அவரது விரல்கள் விளையாடும் லாகவம். இதுபோல் எத்தனை எத்தனையோ. இருப்பினும், பம்மலார் இந்தப் படத்துடன் சம்பந்தப் பட்டவர்களுக்குக் கூடத் தெரியாத (ஒரு யூகம் தான். ஏனென்றால், அத்தனை விவரங்கள்!) விவரங்களைக் கொட்டி, என்னை மேலும் தூண்டி விட்டு விட்டார். அதியற்புதம்!

மூன்று படங்கள் தான் முடித்திருக்கிறேன்; மற்ற ஏழு படங்களையும் சீக்கிரமே பதிவிடத் துடிக்கிறேன்.

அன்புடன்,

பார்த்தசாரதி

HARISH2619
16th March 2011, 12:18 PM
DEAR PARTHASARATHY SIR,
Your postings on NT films remade in other languages are super.one small information,paasamalar was remade in kannada as ANNA-THANGI with Rajkumar in the lead and failed miserably as rajkumar couldnot even touch the shadow of NT's acting.
pammal sir,
thanks for more interesting and less known facts of paavamannippu

saradhaa_sn
16th March 2011, 12:27 PM
டியர் பார்த்தசாரதி,

நடிகர்திலகத்தின் காவியப்படங்கள் பலவும், வேற்று மொழிகளில் எடுக்கப்பட்ட விதம் பற்றியும், அப்போது நடந்த நிகழ்வுகள் பற்றியுமான தங்களின் விரிவான பதிவு அருமை. பலருக்கும் இதுவரை தெரிந்திராத பல புதிய விஷயங்கள்.

எனவே முரளியண்ணா சொன்னது போல, இங்கு சிலர் பெயரைக்குறிப்பிட்டு, அவர்கள் போல எழுத முடியாது என்று சொல்லியிருக்கும் உங்களின் கூற்றை வன்மையாக மறுக்கிறேன். உங்களின் பதிவுகளும் விவரங்களும் யாருடைய பங்களிப்புக்கும் குறைந்ததல்ல. இங்கு பதிவிடும் எல்லோருமே சிறந்த பங்களிப்பாளர்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

நடிகர்திலகத்தின் படங்கள் வேற்று மொழியில் எடுக்கப்படும்போது, அவற்றில் அவருடைய பாத்திரங்களை ஏற்கும் கதாநாயகர்கள் முதலில் சொல்லும் ஒரே விஷயம், 'என்னுடைய லெவலுக்கு நான் பண்றேன். தயவு செஞ்சு அவருடைய பெர்பார்மென்ஸோடு ஒப்பிடாதீர்கள். அப்படி ஒப்பிட்டால் நான் காணாமல் போயிடுவேன்' என்பதுதான். அந்த அளவுக்கு மற்ற மொழி நடிகர்களிடம் பெரும் மரியாதையைப்பெற்றிருந்தார் நடிகர்திலகம்.

ஒரு உதாரணம், கார்கில் போர் நிதிக்காக சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் நடந்தபோது அதில் பல இந்தி நடிகர்களும் கலந்துகொண்டனர். ஆட்டம் முடிந்ததும், அங்கே சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த முதல்வர் கலைஞர், அப்போதைய சென்னை மேயர் ஸ்டாலின், நமது நடிகர்திலகம் ஆகியோர் மேடையில் இருக்க, ஒவ்வொருவராக மேடைக்கு வந்து சிறப்பு விருந்தினர்களின் பாராட்டைப்பெற்றனர். அப்போது மேடைக்கு வந்த இந்தி நடிகர் 'அனுபம் கெர்' முதலில் மேயரிடம் கைகுலுக்கினார், அடுத்து நின்ற முதல்வரிடமும் கைகுலுக்கியவர் அவரையடுத்து நின்ற நடிகதிலகத்திடம் வந்ததும் சட்டென்று காலில் விழுந்து எழுந்தார். தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த நமக்கெல்லாம் மெய்சிலிர்த்துப்போனது.

அந்த அளவுக்கு மற்ற மொழி கலைஞர்களிடமும் பெரும் மதிப்பைப் பெற்றிருப்பவர் நமது அண்ணன். உங்கள் ஆய்ப்புப்பணி தொய்வின்றி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

saradhaa_sn
16th March 2011, 12:58 PM
டியர் பம்மலார்,

பொன்விழா ஆண்டைப்பூர்த்தி செய்து, இன்றளவும் புதுமை மாறாமல் பொலிவுடன் திகழும் பொற்காவியமாம் 'பாவ மன்னிப்பு' திரைக்காவியம் பற்றிய முத்தான, சத்தான, அத்தனை தகவல்களையும் 51 கேப்ஸ்யூல்களில் அடைத்து வழங்கியிருக்கிறீர்கள்.

தகவல்களை திரட்டிய, தொகுத்த, அழகுதமிழில் வழங்கிய உங்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள். அடேயப்பா, பாவமன்னிப்பு பற்றி எத்தனையெத்தனை தகவல்கள்...!!!!!. எதையும் விட்டுவிடாமல் சிறப்பாக தொகுத்திருக்கிறீர்கள். அப்படம் பற்றிய எந்த செய்திக்கும் உங்களுடைய இப்பதிவை அணுகினால் போதும் என்கிற அளவில் முழுமையாக அமைந்திருக்கிறது.

டியர் முரளி,

பாவமன்னிப்பு திரைக்காவியம் பற்றிய உங்கள் பதிவு, பம்மலாரின் நீண்ட பதிவுக்கான முன்னுரை போல சிறப்பாக அமைந்திருக்கிறது. இவ்வளவு சிறப்புக்களைத் தாங்கி வந்த அப்படத்தை, தமிழக மக்கள் மாபெரும் வெற்றிப்படமாகவும் ஆக்கி மேலும் சிறப்பு சேர்த்தனர். ஒரே ஆண்டில் பாவமன்னிப்பு, பாசமலர் என்ற வெள்ளிவிழாக்காவியங்களையும், பாலும் பழமும் என்ற 20 வாரங்கள் படத்தையும் ஆதரித்த தமிழ் ரசிகப்பெருமக்கள், அந்த ஆண்டு தீபாவளிக்கு எங்கே போனார்கள்?. (1061 தீபாவளியை நான் மறக்க விரும்புகிறேன்).

டியர் ராகவேந்தர்,

முரளியார், பம்மலார் ஆகியோரின் சிறந்த பதிவுகளுக்கு மேலும் சிறப்புச்சேர்க்கும் வகையில் நீங்கள் வழங்கியுள்ள 'பாவமன்னிப்பு' செய்தித்தாள் விளம்பரங்களுக்கும், பாடல் காட்சிக்கும் மிக்க நன்றி.

'எல்லோரும் கொண்டாடுவோம்' பாடல் காட்சியிலேயே, படத்தின் முக்கிய பாத்திரங்களையும் அவர்களின் பின்னணியையும் குழப்பமில்லாமல் நமக்கு அறிமுகப்படுத்தும் பீம்சிங் போல இன்னொரு பீம்சிங் வருவது சாத்தியமேயில்லை.

குடிசைகளை காலிசெய்துகொண்டு அனைவரும் வெளியேறும்போது, தன் கைத்தடி ராமாராவிடம், "பெருமாளு, நீ அந்தப்பக்கம் போய்ப்பாரு. எவனாவது மண்ணை வெட்டி அள்ளிக்கிட்டு போயிடப்போறான்" என்று சொல்லும் நடிகவேள் போல மட்டும் இன்னொருவர் வந்துவிடுவாரா என்ன.

KCSHEKAR
16th March 2011, 01:56 PM
Thanks to Pammalar for 51 Excellent informations about PAAVA MANNIPU. You done a wonderful job.

Thanks again

parthasarathy
16th March 2011, 02:56 PM
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)


4. பாலும் பழமும் (1961) / சாத்தி (1968) ஹிந்தி


மறுபடியும் நடிகர் திலகம் – பீம்சிங் – விஸ்வநாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன் கூட்டணியில் வெளி வந்த மாபெரும் வெற்றிப்படம். 1961 -ஆம் ஆண்டின் மூன்றாவது வெள்ளி விழாப் படமாகியிருக்க வேண்டிய படம். ரொம்ப காலத்திற்கு, இந்தப் படம் வெள்ளி விழாப் படம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். எழுபதுகளின் இறுதியில், முதன் முறையாக, நடிகர் திலகத்தின் அத்தனை படங்களைப் பற்றியும், சாந்தியில் எழுதப்பட்டதைக் கண்டவுடன்தான், பாலும் பழமும் வெள்ளி விழாப் படம் இல்லை என்று தெரிந்து கொண்டேன். அங்கிருந்த நண்பர்கள் மூலமாக, பாலும் பழமும் வெள்ளி விழா வாய்ப்பை சில வாரங்களில் இழந்தது என்றும் அறிந்து கொண்டேன். மேலும், இந்தத் திரியின் மூலம் இந்தப் படத்தைப் பற்றிய ஏராளமான செய்திகளையும் திரு முரளி சார், பம்மலார், ராகவேந்தர் சார் போன்ற விற்பன்னர்கள் மூலம் அறிந்து கொண்டேன். பாலும் பழமும் மட்டும் வெள்ளி விழாப்படமாகியிருந்தால், ஒரே வருடத்தில் (1961), மூன்று வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்த நடிகராகியிருப்பார் நடிகர் திலகம். இருப்பினும், ஒரே வருடத்தில், இரண்டு வெள்ளி விழாப் படங்களை ஏழு முறைகளுக்கு மேல் கொடுத்தவர் நடிகர் திலகம் ஒருவர் தான் என்று ஒவ்வொரு தமிழனும் இறுமாந்து கொள்ளலாம். (1959, 1961, 1972, 1978, 1982, 1983 & 1985). சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளைக் கூட ஒருவர் முறியடித்துவிட முடியும்; ஆனால், நம் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை எந்த நடிகராலும் முறியடிக்க முடியாது. அவர்தான் திரும்பவும் பிறந்து வரவேண்டும். (அது சரி, அவர் எங்கு மறைந்தார் திரும்பவும் பிறப்பதற்கு - அவர்தான் எப்போதும் நம்மோடு கலந்திருக்கிறாரே.)

இந்தப் படம் இந்த மாபெரும் கூட்டணியிலிருந்து வெளி வந்த படங்களில் முதன் முறையாக, நிறைய ஜனரஞ்சக அம்சங்கள் – நகைச்சுவை மற்றும் பாடல்கள் – இவர்களது முந்தைய படங்களை விட – சிறப்பாக அமைந்த படம் என்று கூறலாம் (விவாதத்துக்குரிய கூற்றாகவும் இருக்கலாம்). குறிப்பாக, பாடல்கள். பல வகைப்பட்ட பாடல்களும், அற்புதமாக அமைந்த படம். ஆனாலும், கலைத் தன்மையைக் கொஞ்சம் கூட இழக்காத படம்.

இந்தப் படத்தில்தான் நடிகர் திலகம் முதன் முறையாக முழு நீள டாக்டர் வேடம் ஏற்று நடித்தார் எனலாம். (அறுதியிட்டுக் கூற முடியவில்லை. நண்பர்களே, பிழை இருந்தால், திருத்துங்கள்).

இந்தப் படத்திற்காகத் தான் முதன் முறையாக முழு நீள டாக்டர் வேடம் ஏற்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன், சென்னை பொது மருத்துவமனைக்குச் சென்று அங்கு டாக்டர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், அவர்கள் எப்படி நோயாளிகளை அணுகுகிறார்கள், எப்படி கேஸ் ஷீட்டைப் பார்க்கிறார்கள், நர்ஸ்களிடம் எப்படி வினவுகிறார்கள், எப்படி டாக்டர் கோட்டைப் போடுகிறார்கள் என்று சகல விஷயங்களையும் பார்த்து நன்றாக அலசி விட்டு, பின்னர் அந்த வேடத்திற்காக, வித்தியாசமான சிகை அலங்காரத்தை தேர்வு செய்து, பின்னர் தான் நடிக்க ஆரம்பித்தார்.

என்னுடைய நீண்ட கால நலம் விரும்பி மற்றும் நண்பர் (என்னை விட ஒரு இருபது வயது மூத்தவர் மற்றும் எனது குரு), இந்தப் படத்தைப் பற்றி சொல்லும் போது, அந்தக் காலத்தில், தமிழகத்தில் இருந்த அநேகமாக அத்தனை டாக்டர்களையும், பெரிய அளவில், நேர்மறையாக இந்தப் படம் (அதாவது நடிகர் திலகத்தின் நடிப்பு) பாதித்தது என்று சொல்லுவார். அதாவது, நடிகர் திலகத்தின் உடல் மொழி, நடை, உடை மற்றும் பாவனை அனைத்தும் மிகப் பெரிய அளவில் அத்தனை டாக்டர்களையும் ஒருசேர பாதித்தது. இன்னும் சொல்லப் போனால், தமிழகத்தில் இருந்த அநேகமாக, எல்லா டாக்டர்களும், அந்தந்த மருத்துவமனைகளில், நடிகர் திலகம் மாதிரியே, நடந்து கொண்டிருந்தார்களாம். படத்தில், மருத்துவமனையில், நோயாளிகளை மற்ற உதவி டாக்டர்களுடனும் நர்சுகளுடனும் பார்க்கும்போது, ஒருமாதிரி இலேசாக தலையை சாய்த்து ஸ்டைலாக graceful-ஆக நடப்பார் – அதே நடையை அத்தனை டாக்டர்களும் நடந்துகொண்டு இருந்தார்களாம்.

இந்தக் காலகட்டத்தில் தான், நடிகர் திலகத்தின் முழுத் திறமையும் காண்பிப்பதற்கு அவருக்கு பல்வேறு வகையான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது, அதற்கேற்ற காட்சியமைப்புகள், மற்றும் பாடல்களும் அவருக்குக் கிடைத்தது என்று சொல்லலாம். ஒரே நேரத்தில், பி.ஆர்.பந்துலு அவர்களின் இயக்கத்தில், தேசிய மற்றும் புராண கதாபாத்திரங்கள் (ஏற்கனவே வாழ்ந்து பெரிய புகழ் அடைந்தவர்களின் கதாபாத்திரங்கள், மற்றும் புராண இதிகாச, சரித்திரக் கதாபாத்திரங்கள்), பீம்சிங்கின் இயக்கத்தில், சமூகச் சித்திரங்கள் (அனைத்து “ப, பா” வரிசைப் படங்கள்) (ஒரு மனிதனின் பல்வேறு காலகட்டங்களில், அவன் சந்திக்கும் பல பிரச்சினைகள், அதில் அவனது மன நிலைகள், இத்யாதி) மற்றும் பொதுவான பொழுதுபோக்குச் சித்திரங்கள் (பலே பாண்டியா, இருவர் உள்ளம், போன்றவை) ஆகிய படங்களில் நடித்தார்.

முக்கியமாக, பாடல்களின் மூலம், அவரது பல்வேறு வகைத் திறமைகளையும் வெளிக் கொணர முடிந்தது.

படத்தின் முதல் பாடலான “ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்” (இன்று வரை அநேகமாக எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் இந்தப் பாடல் தான் முதல் பாடலாகப் பாடப்படுகிறது.) பாடலில், நடிகர் திலகம் ஒரே ஒரு இடத்தில்தான் – மின்னல் போல – அதாவது உறங்கிக் கொண்டிருப்பார். அந்த ஒரு மின்னல் காட்சிக்காக, அந்தக் காலத்தில், தூர்தர்ஷனில் ஒலியும ஒளியும் நிகழ்ச்சியில் அந்தப் பாடல் ஒளிபரப்பப்படும்போது, காத்துக்கொண்டிருப்போம். அடுத்த பாடலில் துவங்கி, ஒவ்வொரு பாடலிலும், நடிகர் திலகத்தின் நடிப்பு வித்தியாசமாகவும், அழகுடனும், பிரமிப்பாகவும், இருக்கும். “நான் பேச நினைப்பதெல்லாம் ” பாடலில் , அவர் ஹம் செய்யும் அழகு; “பாலும் பழமும் ..... ” பாடலில், அவரது அளவான சோகம் ததும்பும் நடிப்பு (குறிப்பாக கடைசி சரணத்தில் “ஈன்ற தாயை நான் கண்டதில்லை" எனும்போது, கலங்காத கண்களும் உண்டோ?) இந்தப் பாடலில் அவர் தன் மனைவியாக வரும் சரோஜா தேவியை கவனித்துக் கொள்ளும் அழகும், கனிவும், பாங்கும் - அப்பப்பா!; “போனால் போகட்டும் போடா” பாடலில், விரக்தியான சோக நடிப்பு மற்றும் அந்த வேகமான நடை; “காதல் சிறகைக் காற்றினில் விரித்து” பாடலில் ஒரு விதமான அமைதி தவழும் பாவனை (குறிப்பாக, கடைசியில், சேரில் அமர்ந்து கொண்டே அசைந்தாற்போல் தூங்குவார் – தூங்குவதைக் கூட அழகாகச் செய்து மக்களின் ரசனையை உயர்த்திய ஒரே நடிகன்!); “என்னை யாரென்று எண்ணி எண்ணி” பாடலில் காட்டும் அந்த உணர்ச்சிமயமான நடிப்பு (பாடல் துவங்குவதற்கு முன் வேகமாக பெருத்த சோகத்துடன் நடந்து, விழப் பொய், சரோஜா தேவி அவரைத் தாங்கிப் பிடித்தபின் பாடலைத் துவங்கும் விதம் அற்புதமாக இருக்கும்; அரங்கமும் அதிரும்); “நான் பேச நினைப்பதெல்லாம்” சோக வடிவத்தில், வெளிப்படுத்தும் அந்த மெல்லிய சோக உணர்வுகள்.

பாடல்களுக்காகவும், அவைகளில் நடிகர் திலகத்தின் நடிப்பிற்காகவும், பாடல்களை எடுத்த விதத்திற்காகவுமே, பலரை, பல முறை பார்க்க வைத்த படம். “பாவ மன்னிப்பு” தான், இன்று வரை எல்லா விதமான, சினிமா பாடல்களுக்கும் முன்னோடி எனலாம். மெல்லிசை மன்னர்கள் (குறிப்பாக MSV அவர்கள்) தான், இன்று எல்லா இசையமைப்பாளர்களும் கையாளும், சினிமா சங்கீதத்தை முதன் முதலில், பாவ மன்னிப்பு படத்தில் புகுத்தினார்கள் – மிக மிக வெற்றிகரமாக. இந்த சங்கீதம் அதற்கு முந்தைய காலத்தில் உள்ளது போல் இல்லாமல் – சாஸ்திரிய சங்கீதமும் இல்லை – ஒரேயடியாக கிராமத்து சங்கீதமும் இல்லை; மேல்நாட்டு சங்கீதமாகவும் இல்லை – மெல்லிய ஒரு மெட்டையும், சாஸ்திரிய சங்கீதத்தையும் இலேசான மேல்நாட்டு சங்கீதத்திற்குத் தேவைப்படும் இசைக் கருவிகளையும் கொண்டு, அபாரமான கற்பனை வளத்துடன் அமைக்கப்பட்டது.

ஆனாலும், பாவ மன்னிப்பை விட, பாலும் பழமும் படத்தில்தான், மெல்லிசை மன்னர்களின் முழுத் திறமையும் வெளிப்பட்டது எனலாம் (மறுபடியும் விவாதத்துக்குரிய கூற்றோ?). MSV அவர்களின் உரை மூலமாகவே சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படம் ஹிந்தியில் எடுக்கப்பட்ட போது, அவரே தனது மானசீக குருவாக மதிக்கும் திரு நௌஷாத் அவர்கள் சொன்னாராம், “விசு, நீ மெய்சிலிர்க்கும் இசையைக் கொடுத்திருக்கிறாய். மற்ற எல்லா பாடலுக்கும் நான் ஓரளவிற்கு இசை அமைத்தேன். ஆனாலும், நான் பேச நினைப்பதெல்லாம் பாடலை மட்டும் என்னால் replace பண்ண முடியவில்லை; உன்னோட நிழலில் இருந்து தான் நான் இசையமைத்தேன்." என்று கூறினாராம். இந்தப் படத்தில் இடம் பெறாத ஆனால், இசைத்தட்டில் இன்றும் இருக்கின்ற “தென்றல் வரும் சேதி வரும்” என்ற பாடல் கூட மிகப் பெரிய ஹிட்டானது (அந்த அளவிற்கு அத்தனை முத்தான பாடல்கள். படத்தின் நீளம் கருதி, இந்தப் பாடலை சேர்க்காமல் விட்டு விட்டார்கள்). இந்தப் படத்திற்குப் பின்னர்தான் பி.சுசீலா அம்மா அவர்கள் சரோஜா தேவிக்குத் தொடர்ந்து பாட ஆரம்பித்து, பெரிய பெரிய ஹிட் பாடல்களை இந்த ஜோடி கொடுக்க ஆரம்பித்தது.


இந்தப் படம் முழுவதும், நடிகர் திலகத்தின் நடிப்பு மிக மிக எளிமையாகவும், அதே சமயத்தில் graceful -ஆகவும் இருக்கும். ஆரம்பத்தில், அவர் எஸ்.வி.சுப்பையாவுடன் பேச ஆரம்பிப்பதில் இருந்து, சரோஜா தேவியைப் பார்த்தபின், அவரது மாமன் (திரு எஸ். ஏ. கண்ணன் அவர்கள்) உடல் நிலையைப் பரிசோதிக்கப் போகும்போது ("இனிமேல் இப்படி எல்லாம் குடிக்கக் கூடாது தெரியுமா!" என்று அவரிடம் கூறும்போது அவருடைய குரலின் தொனி ஒரு அளவோடும், சன்னமாகவும் ஆனால் கண்டிப்புடனும் இருக்கும்). படம் நெடுகிலும் இந்த அளவை maintain பண்ணி இருப்பார். இது போல் இன்னும் பலப்பல காட்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம் – நடிகர் திலகத்தைப் பற்றி மட்டுமே வைத்துக் கொண்டு.

பாசமலரைப் பார்த்தபின் தமிழகத்தின் ஒவ்வொரு தங்கையும் இதுபோல் ஒரு அண்ணன் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள் என்றால், பாலும் பழமும் பார்த்தபின், ஒவ்வொரு மங்கையும், இதுபோல் ஒரு கணவன் வைக்க வேண்டும் என்று விரும்பினர்.

இந்தப் படம், ஹிந்தியில், 1968-இல், ஸ்ரீதரின் இயக்கத்தில், “சாத்தி” என்ற பெயரில், வீனஸ் பிக்சர்சால் தயாரிக்கப் பட்டது. ராஜேந்திர குமாரும் (இவர் தான், சிவந்த மண்ணின் ஹிந்தி வடிவத்திலும் (“தர்த்தி”) நடித்தார்)) வைஜெயந்தி மாலாவும் நடித்தனர். இந்தப் படம், ஹிந்தியில் பெரிய அளவில் ஒடவில்லை ஆனாலும், ஓரளவுக்கு நல்ல பெயரை, குறிப்பாக, நவ்ஷாதின் பாடல்கள் பிரபலமாயின. இந்தப் படத்தில் வரும் ஒரு பாடல் (தமிழ் நான் பேச நினைப்பதெல்லாம் பாடலின் ஹிந்தி வடிவம்) – “மேரா பியார் ….”, என்று போகும். இந்தப் பாடலில் வரும் ஒரே ஒரு மெட்டை மட்டும் MSV எடுத்துக் கொண்டு (அவருடைய மானசீக குரு நவ்ஷாதின் மெட்டல்லவா!) தமிழில், பின்னர் வெளிவந்த மீனவ நண்பன் படத்தில் வரும் “தங்கத்தில் முகமெடுத்து” பாடலில் பயன்படுத்தினார். இரண்டு படங்களையுமே ஸ்ரீதர் தான் இயக்கினார் (சாத்தி – ஹிந்தி & மீனவ நண்பன் – தமிழ்).

பாலும் பழமும் - தமிழில் இருந்த அந்த உயிரோட்டமான திரைக்கதையும், நடிக நடிகையரின் உயிரோட்டமான நடிப்பும், குறிப்பாக நடிகர் திலகத்தின் நடிப்பு - ஹிந்தியில் இல்லாமல் போனதால், ஹிந்தியில் இந்தப் படம் பெரிய வெற்றியை ஈட்ட முடியவில்லை.

பாலும் பழமும் தெலுங்கில் நாகேஸ்வரராவும் சாவித்திரியும் நடித்து வெளிவந்ததாகத் தகவல். ஊர்ஜிதம் செய்ய முடியாததால், எழுத முடியவில்லை.

தொடரும்,

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
16th March 2011, 03:08 PM
டியர் பார்த்தசாரதி,

நடிகர்திலகத்தின் காவியப்படங்கள் பலவும், வேற்று மொழிகளில் எடுக்கப்பட்ட விதம் பற்றியும், அப்போது நடந்த நிகழ்வுகள் பற்றியுமான தங்களின் விரிவான பதிவு அருமை. பலருக்கும் இதுவரை தெரிந்திராத பல புதிய விஷயங்கள்.

எனவே முரளியண்ணா சொன்னது போல, இங்கு சிலர் பெயரைக்குறிப்பிட்டு, அவர்கள் போல எழுத முடியாது என்று சொல்லியிருக்கும் உங்களின் கூற்றை வன்மையாக மறுக்கிறேன். உங்களின் பதிவுகளும் விவரங்களும் யாருடைய பங்களிப்புக்கும் குறைந்ததல்ல. இங்கு பதிவிடும் எல்லோருமே சிறந்த பங்களிப்பாளர்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

நடிகர்திலகத்தின் படங்கள் வேற்று மொழியில் எடுக்கப்படும்போது, அவற்றில் அவருடைய பாத்திரங்களை ஏற்கும் கதாநாயகர்கள் முதலில் சொல்லும் ஒரே விஷயம், 'என்னுடைய லெவலுக்கு நான் பண்றேன். தயவு செஞ்சு அவருடைய பெர்பார்மென்ஸோடு ஒப்பிடாதீர்கள். அப்படி ஒப்பிட்டால் நான் காணாமல் போயிடுவேன்' என்பதுதான். அந்த அளவுக்கு மற்ற மொழி நடிகர்களிடம் பெரும் மரியாதையைப்பெற்றிருந்தார் நடிகர்திலகம்.

ஒரு உதாரணம், கார்கில் போர் நிதிக்காக சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் நடந்தபோது அதில் பல இந்தி நடிகர்களும் கலந்துகொண்டனர். ஆட்டம் முடிந்ததும், அங்கே சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த முதல்வர் கலைஞர், அப்போதைய சென்னை மேயர் ஸ்டாலின், நமது நடிகர்திலகம் ஆகியோர் மேடையில் இருக்க, ஒவ்வொருவராக மேடைக்கு வந்து சிறப்பு விருந்தினர்களின் பாராட்டைப்பெற்றனர். அப்போது மேடைக்கு வந்த இந்தி நடிகர் 'அனுபம் கெர்' முதலில் மேயரிடம் கைகுலுக்கினார், அடுத்து நின்ற முதல்வரிடமும் கைகுலுக்கியவர் அவரையடுத்து நின்ற நடிகதிலகத்திடம் வந்ததும் சட்டென்று காலில் விழுந்து எழுந்தார். தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த நமக்கெல்லாம் மெய்சிலிர்த்துப்போனது.

அந்த அளவுக்கு மற்ற மொழி கலைஞர்களிடமும் பெரும் மதிப்பைப் பெற்றிருப்பவர் நமது அண்ணன். உங்கள் ஆய்ப்புப்பணி தொய்வின்றி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

நன்றி சாரதா மேடம் அவர்களே. என்னுடைய ரசிப்புத்தன்மையும் வர்ணனையும் வேண்டுமானால் குறைத்து மதிப்பிடாதபடி இருக்கலாம். ஆனால், புள்ளி விவரங்களை அளிப்பதிலும் அதற்கு முனைப்பு காட்டுவதிலும், நீங்கள் எங்கோ இருக்கிறீர்கள். உங்களைத் தொட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இதற்குப் பெரிதும் உதவுவது, எனது நினைவுகள், சேகரித்த (பெரும்பாலும் மனதில்) தகவல்கள், என்னுடைய நண்பர்கள், எனது உறவினர்கள் (என்னுடைய நெருங்கிய உறவினர்கள் ஏவிஎம் ஸ்டூடியோவில் பணி புரிந்து கொண்டிருந்தனர். நானும் சில காலம் குமுதத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன் என ஏற்கனவே கூறியிருக்கிறேன்.) இதற்கும் மேல், திரு ராகவேந்தர் சாரின் இணைய தளம் மற்றும் இந்தத் திரியில் பொதிந்து கிடக்கும் திரு பம்மலார், முரளி சார் மற்றும் நீங்கள் அளித்துள்ள விவரங்கள்.

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
16th March 2011, 03:56 PM
டியர் பார்த்த சாரதி,
இனிமையான சாத்தி பாடலை நினைவூட்டியமைக்கு என் உளமார்ந்த நன்றி. ஹிந்தி திரையுலகில் இன்று வரை முகேஷின் பெயர் சொல்லும் பாடல்களில் இதுவும் ஒன்று. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சலிக்காது, அலுக்காது. இந்தப் பாடலை கேட்டிராத, பார்த்திராத ரசிகர்களுக்காக இதோ அந்தப் பாடல். இரண்டாம் முறை இதே பாடல் சோகமாக ஒலிக்கும். நான் பேச நினைப்பதெல்லாம் இரண்டாம் முறை வருவதை நினைவூட்டும்.

இதோ இரண்டு வடிவங்கள்


http://www.youtube.com/watch?v=P19QE9BuWts


http://www.youtube.com/watch?v=Eae3f4KvBng

அன்புடன்

parthasarathy
16th March 2011, 06:04 PM
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)


5. படித்தால் மட்டும் போதுமா (1962) / தேவர் (1966) - ஹிந்தி


நடிகர் திலகம் – பீம்சிங் – விஸ்வநாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன் கூட்டணியின் மற்றுமொரு வெற்றிப்படைப்பு.



மீண்டுமொரு வெள்ளந்தியான கதாபாத்திரம். ஆனால், முந்தைய படங்களை விட வித்தியாசமானது. ஒரு விதமான முரட்டுத்தனமான, அப்பாவி வேடம். உலக விஷயங்கள் அறிந்த மனிதராக இருந்தாலும், படிப்பின் மூலம் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்களைப் பற்றி அறிந்திராத அப்பாவி வேடம்.

நடிகர் திலகம், காமா சோமா படங்களில் நடிக்கவே மாட்டார். ஒவ்வொரு படத்திலும், ஒரு பிரச்சினை, ஒரு முடிச்சு இருக்கும் – அதாவது – சமூகப் படங்கள் – அந்தப் பிரச்சினையிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் – அல்லது அந்தப் பிரச்சினையால் அவரது வாழ்க்கை எப்படி தடம் புரண்டு போகிறது – இப்படித் தான் இருக்கும். (adventure டைப் படங்களில் கூட அவரது சிரத்தை பிரமிப்பாக இருக்கும் (சிவந்த மண் போன்ற படங்கள்)


இந்தப் படமும் அப்படித்தான். கதை உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பாலாஜி நடித்த அந்த அண்ணன் கதாபாத்திரத்தில் முதலில், ஜெமினி தான் நடித்திருக்க வேண்டியது. அது ஒரு விதமான எதிர்மறையான வில்லன் போன்ற கதாபாத்திரம் என்பதால், ஜெமினி நாசூக்காகக் கழன்று கொண்டார். பின்னர் அந்த வாய்ப்பு பாலாஜிக்குச் சென்றது. பாலாஜியும் நன்றாகவே செய்திருந்தார் – இந்தப் படம் பாலாஜிக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்து, அதன் பின் தொடர்ச்சியாக நிறைய படங்களில் நடிக்கவும் வழி வகுத்தது. பல இடங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பு அற்புதமாக இருக்கும்.

இந்தப் படத்திலும் நடிகர் திலகத்திற்கு மிக நல்ல பாடல்கள் அமைந்து அத்தனையிலும், வித்தியாசமான நடிப்பை வழங்கி எல்லோரையும் திக்குமுக்காட வைத்தார். டைட்டில் ("ஓஹோஹோ மனிதர்களே") பாடலிலேயே அவரது ஆட்சி (ஸ்டைல் தான்!) ஆரம்பித்து விடும். அவர் குதிரை ஓட்டுவதில் பிரமாதமான தேர்ச்சி பெற்றவர் என்பதால், குதிரை ஒட்டிக் கொண்டே பாடும் ஸ்டைல் - அனாயாசமாக அமைந்திருக்கும். அடுத்து, "பொன்னொன்று கண்டேன்" - இது ஒரு காவிய அந்தஸ்து பெற்ற பாடல் என்றால் அது மிகையாகாது. இதில் "விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ணல்லவோ" என்று சொல்லி ஒரு கையை தூக்கி செய்யும் அந்த ஸ்டைலுக்கு அரங்கமே அதிரும். அடுத்து, "நல்லவன் எனக்கு நானே நல்லவன்", பாடலில் அவரது ஸ்டைலும், எனர்ஜியும் அபாரமாக இருக்கும். இந்தப் பாடலில் தான், நடிகர் திலகம் அதிகபட்ச கைத்தட்டலையும் ஆர்ப்பரிப்பையும் திரையரங்கத்தில் பெறுவார் எனலாம்.

அடுத்து, "நான் கவிஞனும் இல்லை" பாடலில் – இரண்டாவது சரணம் முடிந்தவுடன் – ஒரு மாதிரி தொகையறா போல் சில வரிகள் வரும் – “நான் அழுதால் சிரிக்கிறாள் – சிரித்தால் அழுகிறாள்" …. இப்படிப் போகும் – கடைசியில், “அழுவதா, சிரிப்பதா, தாயே … தாயே …” என்று முடித்து விட்டு – ஒரு மாதிரி கண் கலங்குவார். உடனேயே, ஒரு மாதிரி சமாளித்து விட்டு, இலேசாக ஒரு புன்னகையுடன், “நான் கவிஞனும் இல்லை” (நான் என்பதை ஒரு மாதிரி இழுத்து) என்று, மறுபடியும், அவருக்கேயுரிய தலையசைப்புடன் மறுபடியும் பாடி முடிப்பார். அரங்கமே மறுபடியும் அதிரும். இந்தப் பாடல் முடிந்தவுடன், ராஜ சுலோச்சனா நடிகர் திலகத்தை மோசமாக அவமானப் படுத்தி விடுவார். அவமானத்தால் கூனிக் குறுகி வெளியேறி, வீட்டிலுள்ள, குதிரை ஒட்டுபவரிடமிருந்து (திரு S.A. கண்ணன் அவர்கள்), மது பாட்டிலைப் பிடுங்கித் தானும் மதுவருந்தி விட்டு வீட்டிற்குத் திரும்பி வந்து, கோப வெறியில், ராஜ சுலோச்சனாவை சவுக்கால் வெளு வெளு வென்று வெளுத்து வாங்கி விடுவார்.

பல ஆண்டுகளுக்கு முன்னால், தூர்தர்ஷனில், எப்போதோ ஒரு முறை தொகுத்து அளிக்கப் படும் மலரும் நினைவுகள் என்ற ஒரு நிகழ்ச்சியில், ராஜ சுலோச்சனா அவர்கள் ஒரு முறை அவரது மலரும் நினைவுகளை வழங்கும் போது, இந்தப் படத்தைப் பற்றிக் கூறினார். அப்போது, "இந்தக் காட்சியினை முதலில் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு, காட்சி முடிந்தவுடன், அவரை பேட்டி கண்டு கொண்டிருந்தவரைப் பார்த்து, "இந்தக் காட்சி எப்படி" என்று கேட்டதற்கு, அவரோ "இவ்வளவு உக்கிரமாக நடிகர் திலகம் நடித்திருக்கிறாரே உங்களுக்கு எவ்வளவு அடி பட்டது?" என்று கேட்டார். அதற்கு ராஜ சுலோச்சனாவோ, "இந்தக் காட்சியில், ஒவ்வொரு முறையும், சவுக்கு என் மேல் வேகமாக உக்கிரமாகப் படுகிற மாதிரி தான் இருக்கும் . ஆனால், ஒவ்வொரு முறையும், சொல்லி வைத்ததுபோல், சவுக்கின் நுனி மட்டும் என் உடலில், மயிலிறகால் தடவுவது போல், மெதுவாக, என் உடலை வருடிவிட்டுத்தான் அந்த சவுக்கின் நுனி சென்றதே தவிர, ஒரு முறை கூட ஒரு அடியும் என் மேல் விழவில்லை; ஆனால், பார்ப்பவர் அனைவரையும் மிரள வைத்து அவர் மேல் ஒரு மாதிரி கோபத்தையும் வரவழைத்து விடும் நடிகர் திலகத்தின் ஆவேசமும் அந்தக் கைவீச்சும்" என்றாரே பார்க்கலாம். பேட்டி எடுத்தவரும் பார்த்த அனைவரும் சேர்ந்து மிரண்டு போனார்கள்.

இந்தக் காட்சி முடிந்தவுடன், ராஜ சுலோச்சனா கோபித்துக்கொண்டு அவரது வீட்டிற்குச் சென்று விடுவார். நடிகர் திலகத்தின் மீது, ஒவ்வொருவரும், சாவித்திரி முதற்கொண்டு, அவரது அப்பா எஸ். வி. சஹஸ்ரநாமம் வரை (இவர் கடைசிக் காட்சியில் தான் நடிகர் திலகத்திடம் கனிவைக் காட்டுவார். அதுவரை வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருப்பார்), அவரைக் கோபித்துக்கொள்ளுவார்கள். சாவித்திரியும் அவரை நீங்கள் போய் உங்களது மனைவியைக் கூட்டிக்கொண்டு வந்தால் தான் உங்களோடு நான் பேசுவேன், இல்லையென்றால், என்னை நீங்கள் பார்க்கவே வரவேண்டாம் என்று கூறி விடுவார். அண்ணி சாவித்திரியை தன் சொந்த அன்னைக்கும் மேலாக பாவிக்கும் சாவித்திரியிடமிருந்து வந்த வார்த்தைகள் நடிகர் திலகத்தை நிலைகுலைய வைத்து விடும். இருப்பினும், அவரது கட்டளைக்கிணங்க, ராஜ சுலோச்சனா வீட்டிற்குச் சென்று அவரிடம் அவருடன் வீட்டுக்கு வரும்படி கெஞ்சுவார். சிறிது நேரத்தில் அங்கு வரும் ராஜ சுலோச்சனாவின் தந்தை எஸ். வி. ரங்காராவ் (அவர் ஏற்கனவே நடிகர் திலகம் மீது கோபமாக இருப்பார்), நடிகர் திலகம் ராஜ சுலோச்சனாவிடம் கோபமாக பேசுவதைப் பார்த்து விட்டு (நடிகர் திலகம் ராஜ சுலோச்சனாவை ஒரு மாதிரி அடித்தே விடுவார்), தன் கையில் இருக்கும் கழியால் நடிகர் திலகத்தை நன்றாக அடித்து விடுவார். (ஒவ்வொரு நடிகர் திலகம் ரசிகனுக்கும் ரங்கா ராவிடம் அப்போது வரும் கோபம் சொல்லி முடியாது.) உடனே, நடிகர் திலகம் ஒரு மாதிரியான முரட்டு வேகத்துடன் (ஸ்டைலாகவும்தான்) எழுந்து, திருப்பி ரங்கா ராவை அடைப்பது போல் எழுந்து, அமைதியாக அவமானத்தோடு சென்று விடுவார். அவர் அடி வாங்கி எழுந்து கொள்ளும் போது காட்டுகிற வேகமும் அந்த ferocity -யும், அவ்வளவு உக்கிரமாகவும் graceful -ஆகவும் இருக்கும். ரங்கா ராவை அடி அடி என்று அடித்திருந்தால் கூட, அந்த effect கிடைத்திருக்காது. அது தான் நடிகர் திலகம். பக்கம் பக்கமாக வசனம் பேசி (அந்தந்த வார்த்தைகளுக்கேற்ற பாவத்தோடும்தான் (அழுத்தத்தோடு)) - அத்தனை உணர்வுகளையும் வெறும் பார்வையாலும், உடல் மொழியாலும் சிறு வார்த்தைகளாலும் உடல் அசைவுகளாலும் மட்டுமே கூடக் காட்டி விடுவார்.

அதே கோபத்துடன் வெளியேறி அவரது வீட்டிற்குச் சென்று, இத்தனை குழப்பத்திற்கும் காரணம் அண்ணன் பாலாஜிதான் என்று தெரிந்தவுடன், துப்பாக்கியுடன் சென்று காட்டில் கோபத்தை வெளிப்படுத்தும் விதம், பாலாஜியுடன் நடக்கும் வாக்குவாதம், சாவித்திரி வந்து சேர்ந்து கொள்ளும்போது ஏற்படும் குழப்பம், பாலாஜிக்கு நேரும் அசம்பாவிதமான மரணம் இவை யாவும், அற்புதமாக கோர்வையாக எடுக்கப் பட்டிருக்கும். இந்தக் காட்சிகளில் ஆரம்பித்து, பாலாஜிக்கு மரணம் நேர்ந்து கடைசியில், பிரமை பிடித்த நிலையில் சாவித்திரி (அற்புதமான நடிப்பு) கோர்ட்டுக்கு வந்து, கூண்டில் ஏறி, நடிகர் திலகத்தை விடுவித்து, அவரும், முத்துராமனும் (மிக அழகாக செய்திருப்பார்) அவர்தம் குடும்பத்தாரும் காரில் விடைபெற, நடிகர் திலகம், ராஜ சுலோச்சனா, ரங்கா ராவ், சஹஸ்ரநாமம், கண்ணாம்பா, எம்.வி. ராஜம்மா, எம். ஆர். ராதா (இவரைப் பற்றி தனியாக நிறைய எழுத வேண்டும்), ஏ. கருணாநிதி, போன்றவர்கள் அவர்களை வழியனுப்பும் வரை, எந்தத் திரையரங்கிலாவது , ஒரே ஒரு மனிதரையாவது, பேச, ஏன், அசைய வைத்திருப்பார்களா?

கூட்டு முயற்சி பற்றி வேண்டியமட்டும் உலகத்தில் எல்லோரும் பேசித் தீர்த்தாகி விட்டது. சினிமாவைப் பொறுத்தவரை, அதுவும், குறிப்பாக, தமிழ் சினிமாவில், நடிகர் திலகம் – பீம்சிங் – விஸ்வநாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன் – TMS – பி. சுசீலா - கூட்டணி தமிழ் மக்களுக்கு அருளிய செல்வங்களில் இருந்தவை தானே கூட்டு முயற்சிக்கான இலக்கணங்கள்!.

இந்தப் படங்களில் மட்டுமல்லாமல், நடிகர் திலகம் பங்கு பெற்ற அனைத்து படங்களிலும், எங்காவது, தான் சிவாஜி என்று நினைத்துக் கொண்டு நடித்திருப்பாரா?. அந்தந்தப் படங்களின் கதாபாத்திரங்களில் தன்னை இணைத்துக் கொண்டு தானே வாழ்ந்தார். படித்தால் மட்டும் போதுமாவும், அப்படிப்பட்ட படங்களில், மகத்தான படம்.

இந்தப் படம் ஹிந்தியில் “தேவர்” (மச்சினன்) என்ற பெயரில் 1966 -இல் வெளிவந்தது. தர்மேந்திரா நடிகர் திலகம் நடித்த பாத்திரத்தையும், தேவன் வர்மா என்ற நடிகர் பாலாஜியின் பாத்திரத்தையும் ஏற்று நடித்தனர். ஹிந்தியிலும், ஓரளவு நன்றாகவே ஓடியது என்றாலும், நடிகர் திலகத்தின் வீச்சின் நிழலைக்கூட தர்மேந்திராவால் தொட முடியவில்லை.

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
16th March 2011, 06:10 PM
சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நேற்று முன்தினம் 14-ந்தேதி நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் பேசிய நடிகர் சத்யராஜும். கமலா தியேட்டர் அதிபர் வி.என். சிதம்பரமும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி தவறான தகவலைக் கூறியுள்ளனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் விஷயம் குறித்து கருத்துத் தெரிவித்த போது அரசியலில் சிவாஜி தோற்றவர், எனவே அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வரக் கூடாது என்று நடிகர் திலகம் சிவாஜி பற்றி அவதூறாகப் பேசியுள்ளனர்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மேடையில் உள்ளவர்களைப் புகழ வேண்டும் என்று நினைத்தால் எது வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளட்டும். ஆனால், மறைந்த நடிகர் திலகம் போன்றோரை வீணாக வம்புக்கு இழுத்தால் லட்சோபசட்சம் சிவாஜி ரசிகர்கள் கொதித்தெழுவார்கள்.

பெரியார், அண்ணா, காமராஜர் காலத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டு பலரை ஆளாக்கியவர், உருவாக்கியவர் சிவாஜி. அவர் ஒரு தேர்தலில் தான் தோல் வியடைந்தாரே தவிர அரசியலில் தோற்கவில்லை. அப்படி அவர் அரசியல் தோற்றவராக இருந்தால், தேர்தல் தோல்விக்குப் பிறகு, இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க மாட்டார்.

திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, இவரால் பயனடைந்தவர்கள் பலர். யாரையும் அழிப்பது, கவிழ்ப்பது போன்ற சூது? வாது தெரியாதவர் சிவாஜி. திரையில் நடிகர் திலகமாக ஜொலித்த சிவாஜிக்கு அரசியல் மேடையில் நடிக்கத் தெரியாது. தான் சம்பாதித்த பணத்தில் கட்சி நடத்தியவர்.

அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வந்தாலே அரசியல் ஒரு சாக்கடை என்ற அவப் பெயர் நீங்கும். ஆனால், வெற்று விளம்பரங்களையும், வாய்ச் சவடால் பேச்சுக்களையும் நம்பும் சத்யராஜ், போன்றவர்களுக்கு வேண்டுமானால் இது தவறாகத் தோன்றலாம்.

ஆனால், எங்களைப் போன்ற லட்சோபலட்சம் சிவாஜி ரசிகர்களுக்கும், அரசியலைக் கூர்ந்து நோக்கும் நடுநிலையாளர்களுக்கும் இந்த உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

மேடையில் வீராவேசமாகப் பேசிவிட்டு, வீட்டுக்குள் பதுங்கிக் கொள்ளும் நடிகர் சத்யராஜ் போன்றோருக்கு, உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது என்று திரையில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டி மறைந்த எங்கள் நடிகர் திலகம் பற்றி குறை கூறுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

இனியும் அவ்வாறு தெரியாமல் அவதூறாகப் பேசினால், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை அவர்களக்கு எதிராக போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாலை மலர் இன்றைய இதழில் வெளிவந்துள்ள சந்திர சேகரின் மறுப்பறிக்கை பாராட்டத் தக்கது. இது தொடர்பாக அங்கே இடப்பட்டுள்ள என்னுடைய பதில் பதிவு


நண்பர் சந்திரசேகர் கூறியது முற்றிலும் சரி. நடிகர் திலகம் தோற்றது தேர்தலில் தானே தவிர, அரசியலில் அல்ல. ஆழமாக இறங்கி கருத்துக்களைக் கூறினால் பலரது மனம் புண்படும். நடிகர் திலகம் தனக்காக வாக்குக் கேட்க வில்லை. சத்யராஜின் தலைவரும் மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆர். மறைந்த போது அவரது கட்சி சிதறக் கூடாது என்கிற எண்ணத்தில் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையாருக்கு உதவிக் கரம் நீட்டினார். அது மட்டுமல்லாமல் அதற்காக தான் காலம் காலமாய் உழைத்த காங்கிரஸ் பேரியக்கத்தை விட்டே விலகினார். தமிழக அரசியல் வரலாற்றில் கொள்கை அடிப்படையில் இன்னொரு இயக்கத்திற்காக தன் இயக்கத்தை விட்டு விலகி, ஆதரவுக்கரம் நீட்டிய ஒரே மனிதர் நடிகர் திலகம். அன்றைய கால கட்டத்தில் அலைஅலையாக நடிகர் திலகத்தை சந்தித்து தம்முடைய நன்றியை உணர்ச்சிப் பெருக்கால் கொட்டிய ஏராளமான எம்.ஜி.ஆர் ரசிகர்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்களது மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள். சத்யராஜாகட்டும் யாராகட்டும், தமிழக அரசியல் வரலாற்றினை முழுதும் தெரிந்து கொண்டு அதன் பிறகு நடிகர் திலகத்தின் அரசியலைப் பற்றிப் பேச வாருங்கள். அப்படி வரும் போது உங்களையறியாமலேயே உங்கள் உதடுகள் அந்த உயர்ந்த மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசும்.

அன்புடன்
ராகவேந்திரன்

saradhaa_sn
16th March 2011, 07:23 PM
நன்றி சந்திரசேகர் மற்றும் ராகவேந்தர்,

தவறான செய்தி வெளியானதும் சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளீர்கள்.

ஒருமுறை கல்கண்டு பத்திரிகையில் கேள்வி பதில் பகுதியில் திரு. தமிழ்வாணன் அளித்த பதிலை இங்கு சத்யராஜுக்கு சொல்வது பொருந்தும்...

கேள்வி: "கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும், காங்கிரஸுக்காக சிவாஜி பிரச்சாரம் செய்வதற்கும் என்ன வித்தியாசம்..?"

தமிழ்வாணன் பதில்: "கருணாநிதி, எம்.ஜி.ஆர். இருவரின் பிரச்சாரம் சுயநலம் சார்ந்தது. அதாவது அவர்கள் கட்சி வெற்றியடைந்தால் அவர்கள்தான் முதலமைச்சராக ஆவார்கள். (இது இன்றைய ஜெயலலிதாவுக்கும் பொருந்தும்). ஆனால் சிவாஜியின் பிரச்சாரம் பொதுநலம் சார்ந்தது. அவர் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ் கட்சி அத்தனை தொகுதிகளிலும் வெற்றியடைந்தாலும், அவருக்கு எந்த பதவியும் கிடைக்காது. அவர் பாட்டுக்கு தன் நடிப்புத் தொழிலைப் பார்க்கப் போய்விடுவார்".

joe
16th March 2011, 09:58 PM
சத்யராஜ் போன்றவர்கள் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் பேசுவது அழகல்ல ..அண்ணா , காமராஜர் , ஜெயலலிதா கூட தேர்தலில் தோற்றவர்கள் தான் ..நடிகர் திலகம் ஒரு தேர்தலில் தோற்றதினாலும் , ராதாரவி , ராமராஜன் ,ஜே.கே.ரித்தீஷ் போன்றோர் வெற்றி பெற்றதாலும் ராமராஜன் , ராதாரவி , ரித்தீஷுக்கெல்லாம் நடிகர் திலகத்தை விட மக்கள் செல்வாக்கு அதிகம் என சத்தியராஜ் நினைத்தால் அவரைப்போல முட்டாள் வேறு யாருமில்லை.

jaiganes
16th March 2011, 10:09 PM
சத்யராஜ் போன்றவர்கள் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் பேசுவது அழகல்ல ..அண்ணா , காமராஜர் , ஜெயலலிதா கூட தேர்தலில் தோற்றவர்கள் தான் ..நடிகர் திலகம் ஒரு தேர்தலில் தோற்றதினாலும் , ராதாரவி , ராமராஜன் ,ஜே.கே.ரித்தீஷ் போன்றோர் வெற்றி பெற்றதாலும் ராமராஜன் , ராதாரவி , ரித்தீஷுக்கெல்லாம் நடிகர் திலகத்தை விட மக்கள் செல்வாக்கு அதிகம் என சத்தியராஜ் நினைத்தால் அவரைப்போல முட்டாள் வேறு யாருமில்லை.
Sathyaraj must have been under water to have made such an idiotic statement.

Murali Srinivas
17th March 2011, 12:21 AM
அன்பு சாரதி,

நேற்றே ஒன்றைக் குறிப்பிட நினைத்தேன். ஆனால் ரஹீம் எனை தடுத்தாட்கொண்டதால் எழுத விட்டுப் போய்விட்டது. பாகப்பிரிவினை மலையாளத்திலும் எடுக்கப்பட்டது. 1976 -77 காலக்கட்டத்தில் பீம்சிங் அவர்கள் இயக்கத்திலே கமல்-ஸ்ரீதேவி நடிக்க நிறகுடம் என்ற பெயரில் வெளிவந்தது. படம் ஒரு சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது என்று கேள்வி. கமலைப் பொறுத்தவரை 16 வயதினிலே சப்பாணி பாத்திரத்தை செய்வதற்கு இந்தப் படம் [நிறகுடம்] ஒரு பயிற்சி களமாக அமைந்தது என்று சொல்லலாம்.

பாலும் பழமும், படித்தால் மட்டும் போதுமா பற்றிய பதிவுகள் வெகு சுவாரஸ்யம். தொடருங்கள்.




டியர் முரளி,

பாவமன்னிப்பு திரைக்காவியம் பற்றிய உங்கள் பதிவு, பம்மலாரின் நீண்ட பதிவுக்கான முன்னுரை போல சிறப்பாக அமைந்திருக்கிறது. இவ்வளவு சிறப்புக்களைத் தாங்கி வந்த அப்படத்தை, தமிழக மக்கள் மாபெரும் வெற்றிப்படமாகவும் ஆக்கி மேலும் சிறப்பு சேர்த்தனர். ஒரே ஆண்டில் பாவமன்னிப்பு, பாசமலர் என்ற வெள்ளிவிழாக்காவியங்களையும், பாலும் பழமும் என்ற 20 வாரங்கள் படத்தையும் ஆதரித்த தமிழ் ரசிகப்பெருமக்கள், அந்த ஆண்டு தீபாவளிக்கு எங்கே போனார்கள்?. (1061 தீபாவளியை நான் மறக்க விரும்புகிறேன்).



சாரதா,

நீங்கள் குறிப்பிட்டது உண்மைதான். நான் ஒரு முன்னுரையாகத்தான் எழுதினேன். சுவாமி, பாவமன்னிப்பு 51 என்பதை இங்கே பதிவிட்ட பிறகு நீங்கள் எல்லோரும் படித்தீர்கள். ஆனால் அது உருவாகும் போதே அதன் மணம் என் நாசியை தாக்க, விருந்து தயாராகும் போதே சமையலறையில் சென்று ருசி பார்ப்பது போல இந்த பதிவின் பதத்தை சோதித்து பார்த்தவன் நான். ஆகவேதான் என் முன்னுரை மூலமாக அதை கோடிட்டு காண்பித்தேன்.

சுவாமி,

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் நீங்கள் எனக்களித்த சாம்பிள்களே இதன் தரத்தை பறை சாற்றி விட்டன. ஆனாலும் கூட மொத்த தகவல்களையும் முழுமையாக படித்த போது உண்மையிலே பிரமாதமான விருந்து என்றே சொல்ல வேண்டும்.

ரஹீம் 51 வழங்கி விட்டீர்கள். இனி ராஜசேகர் 51-ம்,Dr. ரவி 51-ம் உங்களிடமிருந்து எதிர்பார்பார்கள். அதனை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்

jaiganes
17th March 2011, 12:30 AM
http://www.youtube.com/watch?v=LeugMwVQFBA&feature=related
one of my favourite Sivaji songs from padithaal mattum podhumaa.

pammalar
17th March 2011, 05:13 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களது லக்ஷ்மிகரமான பாராட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! 0.001 சதவீதம் என்ன, அனைத்தையுமே தாங்களே வைத்துக் கொள்ளுங்கள்! "பாவமன்னிப்பு" முதல் வெளியீட்டு விளம்பரங்களை வழங்கியமைக்கு கூடுதல் நன்றிகள்!

டியர் பார்த்தசாரதி சார், தங்களின் பாராட்டுக்கு நன்றி!

டியர் செந்தில் சார், பாராட்டுக்கு நன்றி!

சகோதரி சாரதா,

எப்பொழுதும் போல் தாங்கள் அளித்த உச்சமான பாராட்டுக்களுக்கு எனது உயர்வான நன்றிகள்! தங்களைப் போன்று இங்குள்ள அனைவரும் வழங்கும் பாராட்டுக்களே அடியேனுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து இது போன்ற பதிவுகளை இடுவதற்கு ஆதாரசுருதிகளாகத் திகழ்கின்றன.

டியர் சந்திரசேகரன் சார், பாராட்டுக்கு நன்றி!

டியர் முரளி சார்,

பாராட்டுக்கு நன்றி! கப்பலோட்டிய தமிழன் 51ஐயும் சேர்த்துக் கொள்ளுங்கள். இனி Ready, Steady, Go தான். [Go என்றால் இத்திரிக்கு வந்து பதிவிடுவது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.]
இப்பதிவுகளை நல்ல முறையில் இடுவதற்கு இறையருளும், இதயதெய்வத்தின் ஆசிகளும், இங்குள்ள அனைவரது நல்வாழ்த்துக்களும் நிச்சயம் துணை நிற்கும்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th March 2011, 05:27 AM
டியர் பார்த்தசாரதி சார்,

பாலும், பழமும் உண்ட மகிழ்ச்சியை "பாலும் பழமும்" பதிவு ஏற்படுத்தியது. முதல் வெளியீட்டிலும் சரி, மறுவெளியீடுகளிலும் சரி, இக்காவியத்திற்கு அலைகடலென வந்த பெண்கள் கூட்டம் போல, வேறொரு நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு மட்டுமல்ல, வேறொரு தமிழ்த் திரைப்படத்திற்கும் வந்திருக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு தாய்க்குலத்தின் தன்னிகரற்ற ஆதரவை முழுமையாக பெற்ற காவியம் "பாலும் பழமும்". நமது நடிகர் திலகத்திற்கு அதிக பெண் ரசிகைகள் வாய்க்க ஆரம்பித்தது இப்படத்திலிருந்து தான். பல ஊர்களின் பல அரங்குகளில் - பெண்கள், தாய்மார்களுக்கு மட்டும் - மகளிர் சிறப்புக் காட்சியாக (Ladies Special Show) அதிக அளவில் காட்டப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.

இன்னொன்று, நமது நடிகர் திலகம், ஒரே வருடத்தில், இரண்டு வெள்ளிவிழாப் படங்களை சரியாக ஆறு முறை கொடுத்திருக்கிறார்.

1959 : வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை

1961 : பாவமன்னிப்பு, பாசமலர்

1972 : பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை

1978 : தியாகம், பைலட் பிரேம்நாத்

1983 : நீதிபதி, சந்திப்பு

1985 : முதல் மரியாதை, படிக்காதவன்

1982-ல் Just Miss. "தீர்ப்பு" வெள்ளிவிழா, "நீவுருகப்பின நீப்பு" தெலுங்குப்படம் 20 வாரங்கள். இதே போல், 1979லும் "திரிசூலம்" பிரம்மாண்ட வெள்ளிவிழா, "பட்டாக்கத்தி பைரவன்" இலங்கையில் 20 வாரங்கள்.1960லும் நூலிழையில் இரு வெள்ளிவிழாப் படங்கள் [இரும்புத்திரை(22 வாரங்கள்), படிக்காத மேதை(22 வாரங்கள்)] தவறிப் போயின.

"படித்தால் மட்டும் போதுமா" பதிவை படித்தால் மட்டும் போதுமா. பாராட்டி பதில் பதிவும் இட வேண்டுமே. அக்காவியத்தை அப்படியே கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.இக்காவியத்திலிருந்து ஜெமினி விலகிக் கொண்டதன் காரணம், நிஜ வாழ்வில் அவரது மனைவியான சாவித்திரியை, இப்படத்தில் அவர் மணமுடிக்க, தவறான அணுகுமுறையை (மொட்டைக் கடுதாசி எல்லாம் எழுதி) கையாள்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று எண்ணியதால்தான்.

தாங்கள் குறிப்பிட்ட அனைத்து பாடல்களுமே நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பிற்கு கட்டியம் கூறும் பாடல்கள். ஆனால் 'அண்ணன் காட்டிய வழியம்மா' பாடலில், அப்பாடலின் உணர்ச்சிமயமான தன்மைக்கேற்ப, ஸ்டைலேதும் கலக்காமல், கனக்கச்சிதமாக 'சிக்'கென்று solidஆக செய்திருப்பார்கள் பாருங்கள், HATS OFF TO NT. பாத்திரம், அதன் தன்மை, பாடல், அதன் தன்மை, காட்சி, அதன் தன்மை இவையனைத்தையும் பரிபூரணமாக உணர்ந்து உள்வாங்கி நடிக்கக் கூடிய நடிகர் எவ்வுலகிலும் இவர் ஒருவரே.

['அண்ணன் காட்டிய வழியம்மா' பாடல் அண்ணா வழியிலிருந்து விலகி வந்த பின்னர் கவியரசர் எழுதிய பாடல், ஐயா கண்ணதாசரே, படத்தின் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற் போலவும் அதே சமயம் உங்களின் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற் போலவும் பாட்டுக்களை எழுத உங்களால் மட்டுமே முடியும்.]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th March 2011, 05:53 AM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்களது காட்டமான பதிலடி, ஒவ்வொரு சிவாஜி ரசிகரின் உள்ளக்கிடக்கையையும் பிரதிபலிக்கின்றது. பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்!

தாங்கள் எடுத்துவரும் ஒவ்வொரு முயற்சிக்கும், இறையருளும், இதயதெய்வத்தின் அருளும் என்றென்றும் துணை நிற்கும்!

தங்களது பதிலறிக்கையையும், அதற்கு அவரது(ராகவேந்திரன்) மேன்மையான கருத்தினையும் இங்கே பதிவிட்ட ராகவேந்திரன் சாருக்கு நமது நன்றிகள்!

எனக்கு சிதம்பரம் அவர்களை நோக்கி ஒன்றே ஒன்று கேட்கத் தோன்றுகிறது,

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய குடும்ப நண்பராக, திகழ்ந்த-திகழும் திருவாளர் சிதம்பரம் அவர்களே, "இது நல்ல பேச்சா???????????"

சத்யராஜ் அவர்களே, "யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்................"

கொதிப்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
17th March 2011, 11:38 AM
டியர் பார்த்தசாரதி,

'பாலும் பழமும்' மற்றும் 'படித்தால் பட்டும் போதுமா' படங்களைப்பற்றியும் அவற்றில் நடிகர்திலகத்தின் அற்புத பெர்பார்மென்ஸைப்பற்றியும் தங்களின் ஆய்வுக்கட்டுரைகள் மிகப்பிரமாதம். குறிப்பாக 'பா' வரிசைப்படங்கள் பற்றி பேசும்போது, பெரும்பாலோர் அதிகம் தொடாத படம் 'படித்தால் மட்டும் போதுமா'. நீங்கள் குறிப்பிட்ட சாட்டையடி விஷயம் பற்றி சமீபத்தில் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கூட சொல்லியிருந்தார் ராஜ சுலோச்சனா. )'ஒரு அடி கூட என் மீது விழவில்லை. ஆனால் பார்ப்பவர்களுக்கு அவர் சாட்டையால் என்னை புரட்டியெடுப்பது போலத்தோன்றும்').

பாலும் பழமும் படத்தில் இடம்பெறாத 'தென்றல் வரும் சேதி வரும்' பாடலைப்பற்றிக்கூட சொன்னீர்கள். ஆனால் அப்படத்தின் கிளைமாக்ஸ் பாடலான 'இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா' பாடல் பற்றிச்சொல்லவில்லை. அந்தப்படத்தின் எல்லாப்பாடல்களைப்போல இதுவும் எனக்குப்பிடித்த பாடல். முதற்பாதி அவுட்டோரிலும், மீதிப்பாதி (கோயில் காட்சி) ஸ்டுடியோவிலும் எடுக்கப்பட்டிருக்கும்.

'காதல் சிறகை காற்றினில் விரித்து பாடலின்போது, அதில் இடம்பெற்ற மூவரின் மீதும் நமக்கு பரிதாபமே ஏற்படும். அவசரப்பட்டு கணவரைப்பிரிந்து வந்துவிட்டோமே என்ற ஏக்கத்தில் அங்கே அவர் பாடிக்கொண்டிருக்க, இரண்டாவது மனைவி கட்டிலிலும், முதல் மனைவி நெஞ்சினிலும் இருக்க, இனம் புரியாத தவிப்புடன் இவர் உலவிக்கொண்டிருக்க, நெஞ்சில் கனவுகளையும் கண்களில் கண்ணீரையும் சுமந்துகொண்டு இரண்டாவது மனைவி சௌகார் கட்டிலில் காத்திருக்க.......
'பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாயிருந்தால்
பேச மறந்து சிலையாயிருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி'
(இவ்வரிகளைக் கேட்கும்போதெல்லாம், படுபாவி கண்ணதாசனை உதைத்தால் என்ன என்றுகூடத் தோன்றும்). எத்தனை குத்துப்பாடல் கலாச்சாரங்கள் வந்தாலும் துடைத்தெறிய முடியாத, நம் பண்பாட்டின் ஆணிவேர். பாடல் முடியும்போது, சுழல்நாற்காலியில் அமர்ந்தவாறே கண்ணை மூடியிருக்கும் நடிகர்திலகம், காத்திருந்து பார்த்துவிட்டு கண்ணுறங்கிவிடும் சௌகார், கேமரா நகர்ந்துபோய், ஒன்றையொன்று பார்க்காமல் திரும்பிக்கொண்டிருக்கும் பொம்மையில் போய் நிற்கும் 'டைரக்டோரியல் டச்'.

abkhlabhi
17th March 2011, 01:34 PM
சொன்னவர் ராதாரவி

ஒருமுறை நான் நடிகர் திலகம் நடித்த படித்தால் மட்டும் போதுமா படத்தை ரீமேக் செய்யலாமா என எண்ணினேன். சிவாஜி ரோலுக்கு பிரபுவையும், எனது தந்தை எம்.ஆர்.ராதா ரோலில் நானும் நடிக்க முடிவாயிற்று.

எல்லாம் முடிவான பின்னர் எங்கள் முன்பு ஒரு கேள்வி விஸ்வரூபம் எடுத்து நின்றது. ஒரிஜினல் படித்தால் மட்டும் போதுமா படத்தில் ராஜசுலோச்சனா நடித்த கேர்கடரில் யாரை நடிக்க வைப்பது என்பதுதான் அந்தக் கேள்வி. அவர் அளவுக்கு அட்டகாசமாக நடிக்கும் நடிகை யார் என்ற கேள்வி எழுந்தது.

அந்தக் கேள்விக்கு எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. உடனேயே ரீமேக் ஐடியாவை அப்படியே கிடப்பில் போட்டு விட்டோம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தையோ அல்லது சிவாஜி நடித்த தெய்வமகனையோ யாராவது ரீமேக் செய்ய முடியுமா, அப்படியே எடுத்தாலும் அவர்களது கேரக்டர்களில் நடிக்க யார் இருக்கிறார்கள்

KCSHEKAR
17th March 2011, 04:17 PM
Thank you very much Mr.Ragavedran to publish my Statement.

Thanks Mr.Pammalar, Mrs.Saradha, Mr.Joe, Mr.Jaiganes & other friends to appreciate my action.

Please click the link to view the news published in Maalai Malar on 17-03-2011

http://www.sivajiperavai.com/View_Press.php?id=144


Thanks again

pammalar
18th March 2011, 01:06 AM
சொன்னவர் ராதாரவி

ஒருமுறை நான் நடிகர் திலகம் நடித்த படித்தால் மட்டும் போதுமா படத்தை ரீமேக் செய்யலாமா என எண்ணினேன். சிவாஜி ரோலுக்கு பிரபுவையும், எனது தந்தை எம்.ஆர்.ராதா ரோலில் நானும் நடிக்க முடிவாயிற்று.

எல்லாம் முடிவான பின்னர் எங்கள் முன்பு ஒரு கேள்வி விஸ்வரூபம் எடுத்து நின்றது. ஒரிஜினல் படித்தால் மட்டும் போதுமா படத்தில் ராஜசுலோச்சனா நடித்த கேர்கடரில் யாரை நடிக்க வைப்பது என்பதுதான் அந்தக் கேள்வி. அவர் அளவுக்கு அட்டகாசமாக நடிக்கும் நடிகை யார் என்ற கேள்வி எழுந்தது.

அந்தக் கேள்விக்கு எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. உடனேயே ரீமேக் ஐடியாவை அப்படியே கிடப்பில் போட்டு விட்டோம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தையோ அல்லது சிவாஜி நடித்த தெய்வமகனையோ யாராவது ரீமேக் செய்ய முடியுமா, அப்படியே எடுத்தாலும் அவர்களது கேரக்டர்களில் நடிக்க யார் இருக்கிறார்கள்

டியர் பாலா சார்,

'"படித்தால் மட்டும் போதுமா"வை ரீமேக் செய்ய முயற்சித்து, அதில் ராஜசுலோசனா செய்த ரோலை செய்ய ஆள் இல்லாததால் அம்முயற்சியை கைவிட்டோம்' என ராதாரவி கூறியிருந்ததை பதிவு செய்துள்ளீர்கள். நன்றி!

ராஜசுலோசனா ரோல் மட்டுமா, நடிகர் திலகத்தின் கதாபாத்திரமும், நடிகவேள் செய்த பாத்திரமும் கூட மிகக் கடினமான கதாபாத்திரங்கள் ஆயிற்றே! அந்த இரு பாத்திரங்களும் கூட இளையதிலகத்திற்கும், இளையவேளுக்கும் டூ மச், த்ரீ மச் மட்டுமல்ல அதைவிட அதிகம். இக்கருத்தின் மூலம் இந்த இரு திறமைசாலிகளையும் நான் குறைத்து மதிப்பிடுவதாகக் கருத வேண்டாம். With respect to their potential, they are extremely talented artistes in their own right. But according to me, NT & MRR and the roles they have lived (rather than acted) stay incomparable.

"படித்தால் மட்டும் போதுமா"வில் திருமணத் தரகராக வரும் ராதா, அந்த ரோலில் கணிசமான அளவுக்கு காமெடியையும் கலந்து வெளுத்து வாங்கியிருப்பார். தரகர் வேலையாக பெண்-பிள்ளை வீட்டார் இல்லங்களுக்கு செல்லும் போதெல்லாம், 'ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணணும்' என ஒரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு முணுமுணுப்புடன் பாடிக் கொண்டே நுழைவார். அதே போன்று அவர், ரங்காராவை 'ராவ் பகதூர்' என்று விளிக்கின்ற இடத்திலெல்லாம் அந்த நாமகரணத்தை 'RAAAV BAHADHUUUUUUUUR' என இரு இழு இழுத்துக் கூறுவார். இன்னும் இது போன்று அந்த ரோலைத் தூக்கி நிறுத்த அவர் செய்தவற்றை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவையனைத்தும் நடிகவேளுக்கு மட்டுமே கைவந்த கலை. அதனால் தானே ஈரேழு பதினான்கு லோகங்களிலும் சிறந்த நடிகரான நமது நடிகர் திலகம் நடிகவேளை தன் மனம் கவர்ந்த நடிகர் எனக் கூறியுள்ளார். 'ராதா அண்ணனையும், பாலையா அண்ணனையும் Replace செய்யவே முடியாது' எனத் தன் சுயசரிதை நூலிலும் கருத்து
தெரிவித்துள்ளார். பாலாஜி, சாவித்திரி முதற்கொண்ட அதில் நடித்த வேறு யாருடைய ரோல்களையுமே இன்றிருக்கும் யாருமே நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே. "படித்தால் மட்டும் போதுமா"வை ரீமேக் செய்யமுடியாமல் போனதே நல்லது.

மக்கள் திலகம் இரு வேடங்களில் கலக்கிய மெகாஹிட் காவியமான "எங்க வீட்டுப் பிள்ளை(1965)"யைப் பற்றி தாங்கள் குறிப்பிட்டது உங்களது பரந்த மனோபாவத்தைக் காட்டுகிறது. நல்ல விஷயங்களை எங்கு பார்த்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், திறந்த விசாலமான மனம் (Open & Broad Mind), உண்மையான சிவாஜி ரசிகர்களுக்கு எப்பொழுதுமே உண்டு என்பதனை ஊர்ஜிதப்படுத்தியுள்ளீர்கள். "எங்க வீட்டுப் பிள்ளை", "ராம் ஔர் ஷியாம் (Ram avur Shyam)" என்கின்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு 1967-ல் வெளிவந்தது. மக்கள் திலகம் ஏற்று நடித்த இரு வேடங்களையும் ஹிந்தியில் தீலிப்குமார் ஏற்று நடித்தார். [தீலிப்குமார் முதன்முதலில் இரு வேடங்களில் நடித்ததே இந்தப்படத்தில்தான்]. எம்.ஜி.ஆர் அவர்களின் அப்பாவித்தனமான-துடிப்பான நடிப்பு, அவரது வேகம், வீச்சு, லாவகம் இவற்றிலெல்லாம் கால்வாசியளவுக்குக் கூட தீலிப்குமாரால் செய்து காட்ட முடியவில்லை. மக்கள் திலகம் என்றதுமே என் நினைவுக்கு வரும் முதல் விஷுவல் "அன்பே வா"வில் இடம்பெறும் 'புதிய வானம் புதிய பூமி' பாடல். சிம்லாவின் இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாங்கில், Rich Costumeல், இடது கையில் அசத்தலாக ஒரு பெட்டியுடன், 'புதிய வானம்...புதிய வானம்...', 'புதிய பூமி...புதிய பூமி...' எனத் துடிப்புடன் பாடலின் இந்த தொடக்க வரிகளைப் பாடிக் கொண்டே ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பாரே, அப்பப்பா......Simply Superb!

நடிகர் திலகமும், மக்கள் திலகமும் தமிழ்த்திரையுலகின் இரு கண்கள் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

இதயதெய்வத்தின் "தெய்வமக"னுக்கு போய்விட்டீர்களே [ராதாரவியைத் தான் குறிப்பிடுகிறேன்]. இக்காவியத்தையும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ இதயதெய்வத்தின் காவியங்களையும் அவரே திரும்ப வந்தால் மட்டும் தானே செய்ய முடியும். நமது நடிகர் திலகத்தின் 288வது திரைக்காவியமான "பூப்பறிக்க வருகிறோம்(1999)" காவியத்தில், அவர் செய்த முதியவர் ரோலை, இன்றிருக்கும் யாரையாவது அதே உணர்ச்சிப்பெருக்குடன் செய்து காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம், அப்படி யாராவது செய்து விட்டால், இந்த ஹப்பில் அவரது புகழும் பாட நான் அவருக்குத் தனித்திரியே தொடங்குகிறேன்.

கலைக்குரிசில் போல் அவ்வாறு யாரும் செய்யவும் முடியாது, நான் அவர்களுக்காக தனித்திரி தொடங்கும் நிலையும் ஏற்படாது.

அன்புடன்,
பம்மலார்.

rajeshkrv
18th March 2011, 06:08 AM
Harish,

When we talk about Remade films our mind set will always be ready to compare with the originals.
I feel Rajkumar is a wonderful actor by himself and NT -Rajkumar had a wonderful relationship/friendship and each praised the other's acting. I humbly request you to refrain from posting hurting comments like Rajkumar was not equal to NT etc.. Dimension and Scaling are very different and NT is far from comparison and at the same time Raajkumar is a wonderful actor himself. I'm a Tamilian and i loved Him, NTR, ANR, PRem NAzir ,Madhu. NT is always in our heart and these gentlemen too were great actors . Anna-Thangi may be a flop for various reasons and not for Rajkumar's acting. Bedara Kannappa which was a original kannada movie ran for 100 days in tamilnadu only because of RAJKUMAR & PBS

parthasarathy
18th March 2011, 09:44 AM
Thank you very much Mr.Ragavedran to publish my Statement.

Thanks Mr.Pammalar, Mrs.Saradha, Mr.Joe, Mr.Jaiganes & other friends to appreciate my action.

Please click the link to view the news published in Maalai Malar on 17-03-2011

http://www.sivajiperavai.com/View_Press.php?id=144


Thanks again

Dear KC Shekar Sir,

When I first read the news, like all true NT Fans, I also felt very bad about it and got angry, specifically with Mr. Sathyaraj. People like Sathyaraj, who used certain celebrities to gain popularity rather than believing in himself does not even deserve to be retaliated. However, on behalf of every true NT fans, you took the initiative to retaliate in a big way and got the same published in a leading newspaper daily. We salute you, Mr. K.C. Shekar Sir.

Thank you very much,

Regards,

R. Parthasarathy

parthasarathy
18th March 2011, 10:37 AM
டியர் பார்த்த சாரதி,
இனிமையான சாத்தி பாடலை நினைவூட்டியமைக்கு என் உளமார்ந்த நன்றி. ஹிந்தி திரையுலகில் இன்று வரை முகேஷின் பெயர் சொல்லும் பாடல்களில் இதுவும் ஒன்று. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சலிக்காது, அலுக்காது. இந்தப் பாடலை கேட்டிராத, பார்த்திராத ரசிகர்களுக்காக இதோ அந்தப் பாடல். இரண்டாம் முறை இதே பாடல் சோகமாக ஒலிக்கும். நான் பேச நினைப்பதெல்லாம் இரண்டாம் முறை வருவதை நினைவூட்டும்.

இதோ இரண்டு வடிவங்கள்


http://www.youtube.com/watch?v=P19QE9BuWts


http://www.youtube.com/watch?v=Eae3f4KvBng

அன்புடன்
டியர் ராகவேந்திரன் அவர்களே,

நன்றிகள். மேலும், தாங்கள் பதிவிட்ட இரண்டு ஹிந்தி பாடல்களுக்கும் சேர்த்து நன்றிகள் பல.

மறைந்த இந்திப் பாடகர் முகேஷ் பாடிய இந்த அற்புதமான பாடல் காலத்தை வென்ற அவரது பாடல்களில் ஒன்று. (முகேஷ் பாடிய பல பாடல்களில் sanjog படத்தில் வரும் "Bhoolihuyi yaadhon " என்ற பாடல் கரையாத நெஞ்சத்தையும் கரைத்து விடும். திரு நௌஷாத் அவர்கள் பெரும்பாலும் முகமது ரபியைத்தான் பாட வைப்பார். நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளின் ஆரம்பத்திலும்தான் அவர் முகேஷையும் இன்னொரு பிரபல பாடகரான தலத் மெஹமூதையும் பாட வைத்துக்கொண்டிருந்தார். Baiju Baawraa படத்தில் நௌஷாத் திரு முகமது ரபிக்கு பெரிய ப்ரேக் வாங்கித்தந்ததுடன் நிற்காமல் தொடர்ந்து அவரையே தன்னுடைய படங்களுக்குப் பாட வைத்துக் கொண்டிருந்தார். அதிலும், குறிப்பாக, திலீப் குமாருக்கு முகமது ரபியையே தொடர்ந்து பாட வைத்து பெரிய ஹிட் பாடல்களையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தார். ஹிந்திப் பாடல் உலகில் முகமது ரபி, கிஷோர் குமார் வரிசையில், முகேஷுக்கு எப்போதும் மிக மிக முக்கியமான நிரந்தர இடம் உண்டு. முக்கியமாக, நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரும் Showman என்று சொல்லப்படுபவருமான ராஜ் கபூருக்கு அவர் பாடிய பாடல்கள் காலத்தை வென்றவை.

நடிகர் திலகம் - கபூர் சகோதரர்கள் மிக மிக நெருங்கிய நண்பர்கள் என்று எழுதும்போது, முப்பது வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்தது நினைவுக்கு வருகிறது. (இது எல்லாம் குமுதத்தில் வேலை செய்தபோது திரட்டியவை.) ஒரு முறை நடிகர் திலகம் அவர்கள் ஜஹாங்கீர் நாடகத்தை பம்பாயில் நடத்தும்போது, முன் வரிசையில் வட நாட்டின் பிரபல கலைஞர்கள் அனைவரும் (கபூர் சகோதரர்கள் உட்பட) முன் வரிசையில் உட்கார்ந்து நாடகத்தையும், நடிகர் திலகத்தையும் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது, சலீமாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் அந்தக் காட்சிக்கு (அந்தக் கட்டத்தில் அந்தக் கதாபாத்திரம் பெரும் கோபத்தில் இருப்பதாக வரும்) ஏற்றார்ப் போல், திரை போடப்படுவதற்கு முன், MGM (ஹாலிவுட் பட நிறுவனம்) எம்ப்ளத்தில் கர்ஜிக்கும் சிங்கம் போல் ("கர்ணன்" படத்தில் கூட அப்படித்தான் கர்ஜித்திருப்பார்.) கர்ஜிப்பாராம். ஒட்டுமொத்த அரங்கமே எழுந்து நின்று கைத்தட்ட, திக்குமுக்காடிப்போன கபூர் சகோதரர்கள் நேராக மேடைக்குப் போய் நடிகர் திலகத்தைத் தூக்கி கொண்டாடிவிட்டனராம்!

நினைவுகள் தொடரும்,

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
18th March 2011, 10:44 AM
டியர் முரளி அவர்களே,

தங்களின் பாராட்டுக்கும் பாகப் பிரிவினை பட மலையாள ரீமேக் செய்திகளுக்கும் நன்றிகள் பல.

டியர் பம்மலார், சாரதா மேடம் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்,

தங்களைப் போன்றவர்களின் உயர்வான பாராட்டுகள் என்னை மேன்மேலும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கூடிய விரைவில், நாமெல்லோரும் சந்தித்துக்கொண்டால், அதை என் வாழ்நாளின் பெரிய பேறாக எண்ணுவேன்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
18th March 2011, 11:17 AM
டியர் பார்த்தசாரதி சார்,

பாலும், பழமும் உண்ட மகிழ்ச்சியை "பாலும் பழமும்" பதிவு ஏற்படுத்தியது. முதல் வெளியீட்டிலும் சரி, மறுவெளியீடுகளிலும் சரி, இக்காவியத்திற்கு அலைகடலென வந்த பெண்கள் கூட்டம் போல, வேறொரு நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு மட்டுமல்ல, வேறொரு தமிழ்த் திரைப்படத்திற்கும் வந்திருக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு தாய்க்குலத்தின் தன்னிகரற்ற ஆதரவை முழுமையாக பெற்ற காவியம் "பாலும் பழமும்". நமது நடிகர் திலகத்திற்கு அதிக பெண் ரசிகைகள் வாய்க்க ஆரம்பித்தது இப்படத்திலிருந்து தான். பல ஊர்களின் பல அரங்குகளில் - பெண்கள், தாய்மார்களுக்கு மட்டும் - மகளிர் சிறப்புக் காட்சியாக (Ladies Special Show) அதிக அளவில் காட்டப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.

இன்னொன்று, நமது நடிகர் திலகம், ஒரே வருடத்தில், இரண்டு வெள்ளிவிழாப் படங்களை சரியாக ஆறு முறை கொடுத்திருக்கிறார்.

1959 : வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை

1961 : பாவமன்னிப்பு, பாசமலர்

1972 : பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை

1978 : தியாகம், பைலட் பிரேம்நாத்

1983 : நீதிபதி, சந்திப்பு

1985 : முதல் மரியாதை, படிக்காதவன்

1982-ல் Just Miss. "தீர்ப்பு" வெள்ளிவிழா, "நீவுருகப்பின நீப்பு" தெலுங்குப்படம் 20 வாரங்கள். இதே போல், 1979லும் "திரிசூலம்" பிரம்மாண்ட வெள்ளிவிழா, "பட்டாக்கத்தி பைரவன்" இலங்கையில் 20 வாரங்கள்.1960லும் நூலிழையில் இரு வெள்ளிவிழாப் படங்கள் [இரும்புத்திரை(22 வாரங்கள்), படிக்காத மேதை(22 வாரங்கள்)] தவறிப் போயின.

"படித்தால் மட்டும் போதுமா" பதிவை படித்தால் மட்டும் போதுமா. பாராட்டி பதில் பதிவும் இட வேண்டுமே. அக்காவியத்தை அப்படியே கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.இக்காவியத்திலிருந்து ஜெமினி விலகிக் கொண்டதன் காரணம், நிஜ வாழ்வில் அவரது மனைவியான சாவித்திரியை, இப்படத்தில் அவர் மணமுடிக்க, தவறான அணுகுமுறையை (மொட்டைக் கடுதாசி எல்லாம் எழுதி) கையாள்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று எண்ணியதால்தான்.

தாங்கள் குறிப்பிட்ட அனைத்து பாடல்களுமே நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பிற்கு கட்டியம் கூறும் பாடல்கள். ஆனால் 'அண்ணன் காட்டிய வழியம்மா' பாடலில், அப்பாடலின் உணர்ச்சிமயமான தன்மைக்கேற்ப, ஸ்டைலேதும் கலக்காமல், கனக்கச்சிதமாக 'சிக்'கென்று solidஆக செய்திருப்பார்கள் பாருங்கள், HATS OFF TO NT. பாத்திரம், அதன் தன்மை, பாடல், அதன் தன்மை, காட்சி, அதன் தன்மை இவையனைத்தையும் பரிபூரணமாக உணர்ந்து உள்வாங்கி நடிக்கக் கூடிய நடிகர் எவ்வுலகிலும் இவர் ஒருவரே.

['அண்ணன் காட்டிய வழியம்மா' பாடல் அண்ணா வழியிலிருந்து விலகி வந்த பின்னர் கவியரசர் எழுதிய பாடல், ஐயா கண்ணதாசரே, படத்தின் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற் போலவும் அதே சமயம் உங்களின் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற் போலவும் பாட்டுக்களை எழுத உங்களால் மட்டுமே முடியும்.]

அன்புடன்,
பம்மலார்.

டியர் பம்மலார் மற்றும் சாரதா மேடம் அவர்களுக்கு,

"பாலும் பழமும்", "படித்தால் மட்டும் போதுமா" படங்களின் பதிவுகளில், பாடல்களைப் பற்றிக் கூறும்போது, நீங்கள் குறிப்பிட்டிருந்த பாடல்கள் முறையே - "இந்த நாடகம் அந்த மேடையில்" மற்றும் "அண்ணன் காட்டிய வழியம்மா" பாடல்களைப் பற்றியும் சிறிது எழுதித்தான் வைத்திருந்தேன். ஒரு பதிவிற்கு பத்தாயிரம் சொற்களுக்கு மேல் அனுமதியில்லை என்ற காரணத்தால் வேறு வழியின்றி நீக்கி விட வேண்டியதாகி விட்டது. வேறு எந்த செய்தி மற்றும் கருத்தையும், இந்தப் படங்களின் ஆய்விலிருந்து என்னால் நீக்க முடியவில்லை. ஏனென்றால், ஒரு விஷயம்கூட சோடை போகாத விஷயம். எதை எடுத்தாலும், கட்டுரையின் வீச்சும் சுவையும் குறைந்து விடும்.

இது எப்படி என்றால், ஐம்பதுகளின் இறுதியில், வட நாட்டின் பிரபல எடிட்டர் மற்றும் இயக்குனர் திரு பிமல் ராய் அவர்கள் "மதுமதி" என்ற காவியத்தை எடுத்து முடித்தவுடன், (இந்தப் படம்தான் 1963 -இல், ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு inspiration ஆனது.), படம் பல்லாயிரக்கணக்கான அடிகள் நீண்டு விட்டதை உணர்ந்தார். அவருக்கு படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்தால் தேவலை என்று தோன்றி என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தார். அவரே எடிட்டராயும் இருந்தும், எதை வெட்டுவது என்று தெரியவில்லையாம். அந்த அளவிற்கு, ஒவ்வொரு காட்சியும் ஒன்றோடொன்று மிகச்சரியான தொடர்புடையதாயிருந்து சிறப்பாகவும் இருந்ததாம். அந்தப் படத்தின் கதாநாயகன் திலீப் குமார் பிமல் ராயிடம், இதற்கு சரியான தீர்வு, நாம் அனைவரும் தென்னிந்தியாவின் பிரபல பட அதிபரும், இயக்குனரும், எடிட்டருமான திரு எஸ்.எஸ். வாசன் அவர்களை அணுகுவதுதான் என்று கூறி, (அவரும் எஸ்.எஸ். வாசனும் மிக நெருங்கிய நண்பர்கள். அவரது இயக்கத்தில், "இன்சானியத்" மற்றும் "பைகாம்" (தமிழில் இரும்புத்திரை ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டவை.) படங்களில் திலீப் குமார் நடித்துள்ளார்.), எல்லோரும் சென்னை வந்து, திரு எஸ்.எஸ். வாசனை அணுக, அவரும் ஒப்புக் கொண்டு, சில ஆயிரம் அடிகளைக் குறைத்து கொடுத்தார் என்பது வரலாறு. அந்த அளவிற்கு, எடிட்டிங்கில், திரு வாசன் அவர்கள் புலி என்பார்கள்.

ஒரு பேச்சிற்காகத் தான் இதை நினவு கூர்ந்தேன். இதற்காக நான் பிமல் ராயல்ல. மேலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் தான், நிறைய, தொடர்புள்ள செய்திகளைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

திரு பம்மலார் அவர்களே, இரும்புத் திரையைப் பொறுத்தவரை, அது கோவையில் வெள்ளி விழாக் கொண்டாடியது என்று தான் எல்லா விவரங்களிலும் உள்ளது. மேலும், தெலுங்கில் வெளி வந்த "நிவுரு கப்பின நிப்பு" படமும், வெள்ளி விழா என்று தான் பல பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். தயை கூர்ந்து திரும்பவும் பார்த்து சொல்லுங்கள்.

அன்புடன்,

பார்த்தசாரதி

abkhlabhi
18th March 2011, 12:02 PM
நடிகர் திலகம் எப்பொழுதும் கட்சியில் ஒரு தொண்டனாக மட்டுமே இருந்தார்.
1 ) mt யை போல ஆரம்பத்தில் இருந்தே திட்டம் போட; தனக்கு சாதகமாக சுழ்நிலை ஏற்படுத்தி கொள்ள தெரியாத அப்பாவி.

2) தன் நண்பர் கலைஞரை போல் பதவிக்காக மக்களிடம் கெஞ்ச தெரியாத சுயநலம் இல்லாத மனிதர்.

3) செல்வியை போல் நான் ஒரு தொகுதியில் நின்றால் 234 தொகுதிக்கு சமம் என்று தலை கனத்துடன் பேச தெரியாத மனிதர்.

4 ) பதவிக்காக மற்ற கட்சியுடன் விபச்சாரம் செய்ய தெரியாத ஆசாமி.

தலைமைக்கு (டெல்லி தர்பார்) கட்டு பட்டு, ஒரு தொண்டனாக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பேசியவர்.
பெங்களூரில் ஒரு பொது கூட்டத்தில் (85 / 86 என்று நினைக்கிறன்) (மல்லேஸ்வரம் விளையாட்டு மைதானம்) குண்டு ராவ்க்காக ஆதரவாக பேசும் பொது 2 விரல் 5 இல் அட்டகம் என்று பேசியவர். (1/2 மணி நேரம் என்ன ஒரு தமிழ் - திரையில் மட்டும்மே அவருடைய தமிழை கேட்டதுண்டு. முதன் முறையாக நேரில் பார்த்த , கேட்ட சந்தர்ப்பம் அன்று கிடைத்தது. )

ஒரே தலைவர், ஒரே கட்சி என்று வாழ்ந்த சுயநலம் இல்லாத மாமனிதர் நம் நடிகர் திலகம்.
நோட் : நடிகர் திலகத்தில் போல் மக்கள் திலகத்தை நான் என்றும் மறப்பதில்லை. காரணம், ம. தி. என்னுடைய சிறு வயது ஹீரோ.

கன்னட நடிகர் ராஜ்குமார் - கர்நாடகத்தில் அவர் தான் mgr , சிவாஜி. அவரை பற்றி குறை கூறினால், உயிருடன் இருக்க முடியாது. ஆனால், தமிழ் நாட்டில் யாரை வேண்டுமானாலும் குறை குறலாம், திட்டலாம். ஒன்றும் ஆகாது. இது தான் வித்தியாசம்.

கன்னடத்தில் வந்த கஸ்துரி நிவாசவை பாருங்கள். தமிழ் வந்த அவன் தான் மனிதனை பாருங்கள். ஷங்கர் குரு கன்னடத்தை பாருங்கள். திரிசூலத்தை பாருங்கள். சிவாஜி ஏன் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுகிறார் என்று புரியம்.

HARISH2619
18th March 2011, 12:22 PM
RAJESH,
When we are talking about NT films remade in other languages comparision is inevitable.Here our hubbers have compared NT's acting with all the giants like dilipkumar,devanand,sunildutt,dharmendra,NTR,ANR,m adhu and said that they have not even done 25% of what NT did in the original.In the same way I have compared rajkumar with NT( I have watched both paasamalar and anna thangi) and told that he was not on par with NT.Even I like all the actors you have mentioned along with rajkumar.Infact I have watched more than 25 of his famous films either in their rereleases or in TV as I had born and brought up in bangalore.
In cricket there can be many talented players all around the world but only one SACHIN TENDULKAR . NADIGARTHILAGAM is the sachin of indian cinema

HARISH2619
18th March 2011, 12:28 PM
கன்னடத்தில் வந்த கஸ்துரி நிவாசவை பாருங்கள். தமிழ் வந்த அவன் தான் மனிதனை பாருங்கள். ஷங்கர் குரு கன்னடத்தை பாருங்கள். திரிசூலத்தை பாருங்கள். சிவாஜி ஏன் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுகிறார் என்று புரியம். [/quote]

chancey illa

parthasarathy
18th March 2011, 12:43 PM
நடிகர் திலகம் எப்பொழுதும் கட்சியில் ஒரு தொண்டனாக மட்டுமே இருந்தார்.
1 ) mt யை போல ஆரம்பத்தில் இருந்தே திட்டம் போட; தனக்கு சாதகமாக சுழ்நிலை ஏற்படுத்தி கொள்ள தெரியாத அப்பாவி.

2) தன் நண்பர் கலைஞரை போல் பதவிக்காக மக்களிடம் கெஞ்ச தெரியாத சுயநலம் இல்லாத மனிதர்.

3) செல்வியை போல் நான் ஒரு தொகுதியில் நின்றால் 234 தொகுதிக்கு சமம் என்று தலை கனத்துடன் பேச தெரியாத மனிதர்.

4 ) பதவிக்காக மற்ற கட்சியுடன் விபச்சாரம் செய்ய தெரியாத ஆசாமி.

தலைமைக்கு (டெல்லி தர்பார்) கட்டு பட்டு, ஒரு தொண்டனாக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பேசியவர்.
பெங்களூரில் ஒரு பொது கூட்டத்தில் (85 / 86 என்று நினைக்கிறன்) (மல்லேஸ்வரம் விளையாட்டு மைதானம்) குண்டு ராவ்க்காக ஆதரவாக பேசும் பொது 2 விரல் 5 இல் அட்டகம் என்று பேசியவர். (1/2 மணி நேரம் என்ன ஒரு தமிழ் - திரையில் மட்டும்மே அவருடைய தமிழை கேட்டதுண்டு. முதன் முறையாக நேரில் பார்த்த , கேட்ட சந்தர்ப்பம் அன்று கிடைத்தது. )

ஒரே தலைவர், ஒரே கட்சி என்று வாழ்ந்த சுயநலம் இல்லாத மாமனிதர் நம் நடிகர் திலகம்.
நோட் : நடிகர் திலகத்தில் போல் மக்கள் திலகத்தை நான் என்றும் மறப்பதில்லை. காரணம், ம. தி. என்னுடைய சிறு வயது ஹீரோ.

கன்னட நடிகர் ராஜ்குமார் - கர்நாடகத்தில் அவர் தான் mgr , சிவாஜி. அவரை பற்றி குறை கூறினால், உயிருடன் இருக்க முடியாது. ஆனால், தமிழ் நாட்டில் யாரை வேண்டுமானாலும் குறை குறலாம், திட்டலாம். ஒன்றும் ஆகாது. இது தான் வித்தியாசம்.

கன்னடத்தில் வந்த கஸ்துரி நிவாசவை பாருங்கள். தமிழ் வந்த அவன் தான் மனிதனை பாருங்கள். ஷங்கர் குரு கன்னடத்தை பாருங்கள். திரிசூலத்தை பாருங்கள். சிவாஜி ஏன் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுகிறார் என்று புரியம்.

Dear Friends,

It is very very important and pertinent for me to make a point or two to every one i.e., our friends here as well as those at this juncture, who are reading / who may read my articles in future, on "NT's performance in comparison with other Artistes in other languages". Even though nobody has indicted me, still, I thought that I should clarify certain things straightaway so that there is no misunderstanding now and in future.

From the moment I joined this great thread, I have been refraining myself in commenting other artistes on a bad note (except recently when I saw that Mr. Sathyaraj commented about him badly, I said certain things even though I didn't relegate him completely.).

I am only comparing NT with other Artistes on the overall competency and the effect that he brought out on the screen which made the audience spellbound. On such comparison alone, NT stands TALL than every single Artiste, whose films I have also seen, which has been vouched by the Artistes themselves, who stood compared. This does not mean that we are degrading other giants. Whether it is Ashok Kumar, Dilip Kumar, Uttam Kumar, NTR, ANR, Dr. Raj Kumar, Sathyan, Prem Nazir or Madhu, they are all giants and thespians in their own right. However, on a comparison of acting prowess, imagination, internalisation and the overall effect that they could bring on screen to a role, NT stands tall and has gone miles ahead of others. On the ability to perform roles, which would stand the test of time i.e, TIMELESS CLASSICS which would move anybody regardless of age also, NT is the BEST.

That is why NT is regarded by everybody across the GLOBE as the GREATEST ACTORS OF ALL TIME. While all other Artistes took up Acting as their profession, NT is one of those rarest of gems/geniuses, who is a BORN ACTOR. Still, there are a few born actors; but, NT is the Greatest of them all is my humble submission.

Regards,

R. Parthasarathy

parthasarathy
18th March 2011, 12:58 PM
RAJESH,
In cricket there can be many talented players all around the world but only one SACHIN TENDULKAR . NADIGARTHILAGAM is the sachin of indian cinema

Dear Mr. Harish,

On a comparison of arguably, the greatest batsmen of all time, Sachin Tendulkar also, I have indicated that somebody may in future, break some of the records set by Sachin (may be centuries of centuries - which he is going to hit on Sunday may be - very difficult to break); but, nobody will be able to break best of the best records set by our NT in future like - 2 films crossing 100 days released on a same day twice - 2 silver jubilee hits in a year for more than 6 times - a movie celebrating 100 continuous days in a touring talkies! - performing 9 different roles by performing the roles distinctively different, most importantly by being a Star and an Actor concurrently for more than 4 decades, etc., etc., etc.

Regards,

R. Parthasarathy

KCSHEKAR
18th March 2011, 02:02 PM
Dear KC Shekar Sir,

When I first read the news, like all true NT Fans, I also felt very bad about it and got angry, specifically with Mr. Sathyaraj. People like Sathyaraj, who used certain celebrities to gain popularity rather than believing in himself does not even deserve to be retaliated. However, on behalf of every true NT fans, you took the initiative to retaliate in a big way and got the same published in a leading newspaper daily. We salute you, Mr. K.C. Shekar Sir.

Thank you very much,

Regards,

R. Parthasarathy


Thanks for your delightful appreciation.

abkhlabhi
18th March 2011, 02:04 PM
ராஜ்குமாரின் அபூர்வ சங்கமா கன்னடத்தை நடிகர் திலகத்தின் ராஜாவை பாருங்கள். ராஜா ராஜா தான். எல்லாம் சங்கமிக்கும் இடம் ராஜா (ந. தி. தான்).

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனபார்கள். உதாரணம் இதோ :
(கன்னடத்தில் இல்லை)
1 திரிசூலத்தில் குருவாக vkr விடிற்க்கு வரும் பொது ஒரு நடை (msv பிண்ணனி இசையுடன்)
2 ராஜாவில் தன் தாயை அடிக்கும் பொது முகத்தில் காட்டும் உணர்ச்சி

கன்னடம் மட்டும் அல்ல, பிற மொழி படங்களை எடுத்து கொண்டாலும், இதை போல் எராளமாக சொல்லிகொண்டே போகலாம்.

parthasarathy
18th March 2011, 03:31 PM
ராஜ்குமாரின் அபூர்வ சங்கமா கன்னடத்தை நடிகர் திலகத்தின் ராஜாவை பாருங்கள். ராஜா ராஜா தான். எல்லாம் சங்கமிக்கும் இடம் ராஜா (ந. தி. தான்).

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனபார்கள். உதாரணம் இதோ :
(கன்னடத்தில் இல்லை)
1 திரிசூலத்தில் குருவாக vkr விடிற்க்கு வரும் பொது ஒரு நடை (msv பிண்ணனி இசையுடன்)
2 ராஜாவில் தன் தாயை அடிக்கும் பொது முகத்தில் காட்டும் உணர்ச்சி

கன்னடம் மட்டும் அல்ல, பிற மொழி படங்களை எடுத்து கொண்டாலும், இதை போல் எராளமாக சொல்லிகொண்டே போகலாம்.

டியர் பாலகிருஷ்ணன் அவர்களே,

நான் "திரிசூலம்" படத்தை முதன் முதலில் நூறு நாட்களுக்குப் பிறகுதான் சென்னை கிரௌன் திரை அரங்கத்தில் என் கசினுடன் பார்த்தேன் - எப்படி? Rs.1.55 டிக்கெட்டை பத்து ருபாய் கொடுத்து ப்ளாக்கில். நூறு நாட்கள் ஓட்டத்துக்குப் பிறகு - இத்தனைக்கும் அன்று லீவு இல்லை; மேலும் அது மாட்னி காட்சி வேறு. இதைச் சொல்லும்போது, ஒரு முக்கியமான விஷயம். எனக்குத் தெரிந்து, திரிசூலம் தமிழகத்தில் ஏற்படுத்திய அலை இன்று வரை எந்தப் படமும் இதுவரை ஏற்படுத்தவில்லை. (சமீபத்தில் வெளி வந்த ரஜினியின் ரோபோ கிட்டத்தட்ட ஐம்பது சதம் வேண்டுமானால் நெருங்கியிருக்கலாம். தெரியவில்லை. ஆனாலும், இது சன் நெட்வொர்க்கின் மிகப்பெரிய மார்கெட்டிங் சாகசத்தாலும்தான் சாத்தியமானது எனலாம்.). அதுவும், படம் வெளிவந்து, நூறு நாட்கள் முடிந்தபின்னும். அப்போதெல்லாம், சென்னையில், புற நகரில், இப்போது போல், பத்து திரை அரங்குகளில் எல்லாம் படம் வெளியிட மாட்டார்கள். வட சென்னையில், ஓடியன்மணி, தென் சென்னையில், தாம்பரம் வித்யா இல்லை பல்லாவரம் நேஷனல் இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வரும். புறநகரில் இருப்பவர்கள் பார்க்க வேண்டுமென்றால், சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி அரங்குகளுக்குச் சென்று தான் பார்க்க வேண்டும். இல்லை என்றால், பெட்டி மாறி, புற நகர் வருகின்ற வரை பொறுக்க வேண்டும். "திரிசூலம்" தமிழகத்தின் வேறு ஏதோவொரு திரை அரங்கத்தில் இருந்து, பெட்டி மாறி - அதாவது அங்கு நூறு நாற்கால் பேய் ஓட்டம் ஓடிய பிறகு - ஏவிஎம் ஸ்டூடியோ அருகில் அப்போது ராஜேந்திரா என்ற பெயரில் இருந்த (இப்போது SSR பங்கஜம் - இலட்சிய நடிகரின் சொந்தத் திரை அரங்கம்) திரை அரங்கத்திற்கு வந்தது. அதாவது, கிட்டத்தட்ட ஆகஸ்டு மாத இறுதியில். உங்களால் நம்ப முடியுமா, இந்தப் படம் ஆகஸ்டு இறுதியில் அங்கு வந்தது - கிட்டத்தட்ட தீபாவளி வரை ஓடிய ஓட்டம் இருக்கிறதே - அப்பப்பா! பத்து வாரங்கள். அதுவும் புறநகரில் உள்ள ஒரு டூரிங் டாக்கீஸில்! தீபாவளிக்கு முன், ஒரு நாள் கொட்டும் மழையில், க்யூவில் நின்று (காட்சி துவங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே போய் நின்று!) படத்தை மறுபடியும், எங்கள் வீட்டிலுள்ள எல்லோரும் சேர்ந்து பார்த்த அனுபவம் - அதுவும் எப்படி, அரங்கத்தில் இடம் இல்லாமல், முக்கால்வாசி படம் நின்று கொண்டே!. படம் நெடுகிலும், எத்தனையோ காட்சிகளுக்கு மிக பலத்த வரவேற்பு, ஆரவாரம்.

நீங்கள் சொன்ன அந்தக் காட்சி - நடிகர் திலகம் முதலில் வராமல், வேலைக்காரர்கள் ஒவ்வொருவராய் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். எப்போது நடிகர் திலகம் வருவார் என்று எல்லோரையும் எதிர்பார்க்க வைத்து, கடைசியில், நடிகர் திலகம் வருவார். அப்போது அந்த நடை, கேமரா கோணம் - திரை அரங்கமே திக்குமுக்காடிப்போனது எனலாம். மெல்லிசை மன்னரின் பின்னணி இசையெல்லாம் யார் காதில் விழுந்தது அப்பேர்ப்பட்ட ஆரவாரத்தில். கன்னட அசலிலும் இப்படியேதான் வரும். தமிழில், எனக்குத் தெரிந்து, 99 சதவிகிதம் எந்தக் காட்சியையும் மாற்றாமல் அப்படியேதான் எடுத்தார்கள். பெரிய அளவில் வித்தியாசப் படுத்தியது நடிகர் திலகத்தின் நடிப்புதான். திரிசூலம் பெற்ற வெற்றிக்கு முக்கியமான காரணங்கள் - அசலில் இருந்த - தமிழில் மாற்றப் படாத அந்த சரளமான தொய்வில்லாத திரைக்கதை மற்றும், நடிகர் திலகத்தின் வித்தியாசமான, அசாதாரணமான, முதிர்ச்சி, துடிப்பு மற்றும் எனர்ஜியுடன் கூடிய நடிப்பு. Dr. ராஜ்குமார் அவர்கள் ஒரு வகை பாணியில் நடித்து பிரமாதப் படுத்தினார் என்றால், நடிகர் திலகம் அவருக்கேயுரிய பாணியில், வித்தியாசப்படுத்தியிருந்தார்.

இந்தக் காட்சியைப் பொறுத்தவரை, இரண்டு முக்கியமான விஷயங்கள். ஒன்று, அந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடை - அதாவது ஒரு விதமான ஆர்ப்பாட்டமான, ஸ்டைலான நடை - மற்றும் டாப் ஆங்கிள் கேமரா கோணம் (எப்போதும், கேமரா கோணங்களை நடிகர் திலகம்தான் தீர்மானிப்பார். அதில் அவர் ஒரு விற்பன்னர்!). இந்தக் காட்சியில், நடிகர் திலகம் வருகிற கட்டம் - ஒரு மாதிரி எல்லோரையும் சிரிக்க மற்றும் ரசிக்கத் தயார் செய்து வைத்து விடுவார்கள் (ஏனென்றால், அவர் ஸ்ரீப்ரியாவிற்கு கணவராக நடிக்கப் போகிறார் - காட்சி, மற்றும் நடிகர்கள் எல்லோரும் (முக்கியமாக விகேயார்) மக்களை சிரிக்க வைக்கத் தயார் செய்து வைத்து விடுவார்கள். நடிகர் திலகம் அந்தக் காட்சியில், இவர்கள் எல்லோரையும் விட நன்றாக நடித்து, எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும். மிகச் சரியாக இதைப் புரிந்து கொண்டு, அந்த அறிமுகக் காட்சியிலேயே அந்த நடை மூலம் (இது எப்படி என்றால், ஒரு நாள் கிரிக்கெட் மேட்சில் கடைசி ஓவர் கிட்டத்தட்ட 15 ரன்கள் எடுத்தாக வேண்டும். முதல் பந்திலேயே சிக்சர் அடித்து விட்டால் அந்த மொமெண்டத்தை வைத்தே, கிடு கிடுவென்று பௌண்டரிகள் அடித்து, போட்டியில் வென்று விடுவார்கள். ஆனால், அந்த momentum அந்த முதல் பந்திலேயே அடித்த சிக்சரால்தான் கிடைத்திருக்கும். அதைப்போல), கிட்டத்தட்ட நூறு பங்கு எல்லோரையும் அந்தக் களத்திற்குக் கொண்டு சென்று சிரிக்கவும், ரசிக்கவும் வைத்து விடுவார். அதிலும், உள்ளே நுழைந்து, அந்த வாக்கிங் ஸ்டிக்கை ஒரு மாதிரி அலாதியான ஸ்டைலில் சுழற்றி பின்னுக்குக் கொண்டு போய் வீகேயாருக்கு குனிந்து வணக்கம் சொல்வார். மறுபடியும், அரங்கம் அதிரும். (பாலகிருஷ்ணன் சார், ஏன் சார் திரும்பத் திரும்ப அந்த இனிய மலரும் நினைவுகளுக்கு எல்லோரையும் அழைத்துச் சென்று வேறு வேலையே பார்க்க முடியாமல் வைத்து விடுகிறீர்கள்? இருந்தாலும், மிக்க நன்றி. சும்மா ஒரு விளையாட்டுக்க்காகத்தான்!).

மதிப்புக்குரிய Dr . ராஜ்குமார் அவர்கள் ஒரு பல்கலை வித்தகர். அவரே நடித்து சொந்தக் குரலில் அநாயாசமாகவும், அழகுபடவும் - சாஸ்திரிய சங்கீதத்தில் அமைந்த பாடல்களையும் - மிக நன்றாக பாடவும் கூடியவர். நடிகர் திலகத்தின் பரம விசிறி மற்றும் மிக நெருங்கிய நண்பர். நான் முன்னரே கூறியபடி, என்னுடைய கசின் ஏவிஎம் ஸ்டூடியோவில், Dr . ராஜ்குமார் அவர்களின் சொந்தப் படக் கம்பெனியில், வேலை செய்து கொண்டிருந்தபோது, அவன் சொல்லி ஏராளமான விவரங்கள் Dr ராஜ்குமாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர், ஒரே நேரத்தில், NT மற்றும் MT நடிக்கும் வகைப் படங்களையும் மிக நன்றாக நடித்தவர். அவருடைய நடிப்பு ரொம்பவே இயல்பாக இருக்கும். அவருடைய நடை - கர்நாடகத்தில் மிகவும் பிரசித்தம் - ஒரு மாதிரி நேர்க் கோடு போட்டார்ப் போல், அலாதியான ஸ்டைலில் நடப்பார்.

எனினும், வேறு நிறைய விஷயங்கள் (ஏற்கனவே கொட்டித் தீர்த்தாகி விட்டது) , நடிகர் திலகத்திடம் வித்தியாசமாகப் பொதிந்திருந்ததால், மற்றவர்களை விட, அவரால் சிறப்பாக செய்து, எல்லோருடைய மதிப்பையும், மரியாதையையும், முக்கியமாக அளவிடமுடியாத பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் - அந்தந்த படங்களின் அசலில் நடித்தவர்களிடமிருந்தே - பெற முடிந்தது.

"ராஜா" படத்தின், அந்த மிகவும் பிரபலமான அந்தச் சிரிப்பு பற்றி வருடக் கணக்கில் பேசிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு, அந்தக் காட்சிக்கு உயிர் கொடுத்திருப்பார். ஹிந்தியிலும், அதே காட்சிதான் அதே களம்தான். வித்தியாசம் நடிகர் திலகத்தால் தான். அசலில் நடித்த தேவ் ஆனந்திற்குக்கூடத் தோன்றாத அந்தக் கற்பனை, கற்பனையில் தோன்றியதை, எள்ளளவும் குறைக்காமல், திரையில் வடித்த சாகசம் - அது நடிகர் திலகத்துக்கு மட்டுமே கை வந்த கலை.

அன்புடன்,

பார்த்தசாரதி

abkhlabhi
18th March 2011, 04:07 PM
அந்த காட்சி இல்லை என்று சொல்லவில்லை . நம் மகாசிகரத்தின் முத்திரை கன்னடத்தில் மிஸ்ஸிங். ராஜ்குமாரும் நடந்து வருவார். ஆனால் சாதரணமாக தான் இருக்கும். கன்னட படத்தை 5 முறை பார்த்தேன். சமிபத்தில் கூட கன்னட டிவிஇல் ஷங்கர் குருவை பார்த்தேன். ராஜ்குமார் நடிப்பை குற்றம் குறவில்லை. 80 முதல் 85 வரை , அவருடைய கன்னட படங்களை மிஸ் செய்யாமல் பார்த்தவன். ஆனால் திரிசூலத்தை ஒரே ஒரு தடவை தான் பார்த்தேன்.

டைட்டில் முடிந்த உடன் ராஜசேகர், வேலைகாரனிடம் சாட்டையால் அடி வாங்கிய பிறகு, தான் வளர்ப்பு மகள் கேள்வி கேட்க, நடிகர் திலகம் பதில் சொல்லாமல் , மார்பை கையால் தட்டுவார். கன்னடத்திலும் உண்டு. ஆனால் நம் நடிகர் திலகத்தை போல் அல்ல. இன்று நகைச்சுவை நடிகர்ளால் காமெடி செய்ய பட்டு வரும் அந்த தொலைபேசி காட்சி, மீண்டும் நடிகர் திலகம் பிறந்து வரவேண்டும். கன்னடத்திலும், தெலுகிலும் , ஹிந்திலும் , தமிழில் ஏற்படுத்திய பாதிப்பு இல்லை.

இப்படி சொல்லி கொண்டே போகலாம்

RAGHAVENDRA
18th March 2011, 04:21 PM
One more website about Sathyaraj speech (http://accesskollywood.com/kollywood-news/5329-sathyaraj-in-trouble)

parthasarathy
18th March 2011, 06:06 PM
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)


6. ஆலய மணி (1962) / குடி கண்டலு – தெலுங்கு (1965) / ஆத்மி – ஹிந்தி (1968)


நடிகர் திலகத்தின் அசாதாரணமான நடிப்பில் வெளி வந்த ஒரு மகத்தான வெற்றிப் படம்.

நடிகர் பி.எஸ். வீரப்பா அவர்கள் PSV பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தைத் துவங்கியவுடன், எடுத்த முதல் படம். இந்தப் படத்தின் emblem "ஆலய மணியை" கடைசி வரையிலும் வைத்திருந்தார். அந்த அளவிற்கு இந்த பேனருக்குப் புகழ் வாங்கிக் கொடுத்த படம். கடைசி வரையிலும் , இந்த பேனரின் முதல் படம் தான் - இந்த ஆலய மணி தான் - மிகப்பெரிய வெற்றிப் படமுமாகும். சென்னை மாநகரத்தில் ஐந்து திரை அரங்குகளுக்கு மேல் வெளி வந்து அத்தனை அரங்குகளிலும் நூறு காட்களைக் கடந்த மாபெரும் வெற்றிப் படம்.

ஜாவர் சீதாராமன் என்ற மிகச் சிறந்த கதை வசனகர்த்தா மற்றும் நடிகரின் கதை வசனத்தில் வெளி வந்த படம். இறையருள் இயக்குனர் திரு. கே. சங்கர் அவர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த முதல் படம். ஒரு மொத்த பாடலையும் சேரில் (சற்கர நாற்காலியில்) உட்கார்ந்து கொண்டே நடித்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்த படம் (பொன்னை விரும்பும் பூமியிலே - உண்மையில், கவியரசர் இந்தப் பாடலை, மெல்லிசை மன்னரை மனதில் வைத்து எழுதினாராம்! கவியரசர் கண்ணதாசனைப் பற்றியும் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி வைத்து அதுவும் நடிகர் திலகத்தின் ஆய்வுக்கட்டுரையும் சேர்ந்து தான் எரிந்து விட்டது. அவரைப் பற்றியும், ஏராளமாய் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால், இது நடிகர் திலகத்தின் திரி என்பதால், கொஞ்சமாகத்தான் எழுத வேண்டும்.). இடைவேளைக்கு முன்னர் நடிகர் திலகத்திற்கு ஒரு பாடலும் இல்லை. மானாட்டம் தங்க மயிலாட்டம் பாடலில் ஜீப்பை ஸ்டைலாக ஒட்டிக் கொண்டே (back projection technique தெரியாதவாறு நடிகர் திலகம் பிரமாதமாக நடித்து அந்தக் குறையை போக்கி விடுவார்.) பொதுவாக, நடிகர் திலகம் ஒருவர் தான், திரையில், அவர் பாடாமல் கூட நடிக்கும் நடிகை பாடும்போதும், ஒட்டுமொத்த மக்களின் கவனத்தைத் தன்பக்கம் வைத்துக் கொண்டவர். இந்த வகையில் வந்த நிறைய பாடல்களை ஏற்கனவே பலர் இந்தத்திரியில் - பம்மலார் மற்றும் சாராத மேடம் அவர்கள் என்று நினைக்கிறேன். அவருக்குப் பிறகு, ரஜினியை ஓரளவிற்கு சொல்லலாம்.) இடைவேளைக்குப் பிறகு, மூன்று சோலோ பாடல்கள் - மூன்றும் முத்தான பாடல்கள். மூன்று விதமான பாடல்கள். மூன்று விதமான நடிப்பு. "கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா" பாடலின் இரண்டாவது சரணத்தில் (கம்பன் கண்ட சீதை உந்தன் தாய் அல்லவா...), முழுவதும் க்ளோசப்பில், அற்புதமாக நடித்த படம். "சட்டி சுட்டதடா" பாடலில், விரக்தியின் எல்லையில் இருப்பவனை வடித்துக்காட்டிய படம்.

ஆலய மணி என்றால் உடனே நினைவுக்கு காட்சி - "உங்க எஜமான் நடையழகப் பாத்தியாடா?" என்று, நடிகர் திலகம் கால் ஊனமாகி, வீட்டிற்கு வெளியே வந்து, திரு எஸ்.ஏ. கண்ணன் அவர்களைப் பார்த்து கேட்டு உடையும் கட்டம்.

இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரமான தியாகு என்கிற கதாபாத்திரம் ஒரு கத்தி முனையில் நடப்பது போன்ற கதாபாத்திரம். இது போல் எத்தனையோ பாத்திரங்களை இதற்கு முன்னரும், பின்னரும் நடிகர் திலகம் அனாயாசமாக ஊதித் தள்ளியிருப்பார். இத்தனைக்கும் , இந்தப் படம் வருவதற்கு முன்னர் (1960-இல் வெளி வந்த தெய்வப்பிறவி படத்திற்குப் பிறகு), அவர் நடித்த அத்தனை படங்களிலும் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் நேர்மறையான மற்றும் மக்களின் ஒட்டுமொத்த அபிமானம் மற்றும் அனுதாபத்தையும் பெற்ற கதாபாத்திரங்கள் – படிக்காத மேதை, பாவ மன்னிப்பு , பாசமலர் , பாலும் பழமும் , கப்பலோட்டிய தமிழன் , படித்தால் மட்டும போதுமா , பார்த்தால் பசி தீரும் போன்றவை - நடுவில் வந்த நிச்சய தாம்பூலம் மட்டும் கொஞ்சம் - கொஞ்சம்தான் எதிர்மறையாக இருக்கும் அதாவது மனைவியை சந்தேகப் பட்டு குடிகாரனாவது போன்று. – ஆனால், ஆலயமணியின் “தியாகு” கதாபாத்திரமோ முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம் .

கடைசி வரையிலும் இமேஜ் பார்க்காத நடிகர் நம் நடிகர் திலகம் மட்டுமே என்பது எல்லோருக்கும் தெரியும். அது இந்தப் படத்திலும் பெரிதாக நிரூபணம் ஆகி இருக்கும்.

ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் உள்ள இரண்டு குணங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக கதாசிரியர் அலசியிருப்பார். அந்த அலசலுக்கு அற்புதமாக முழு வடிவம் கொடுத்திருப்பார் நடிகர் திலகம் . குறிப்பாக, எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு இரத்தம் கொடுத்துவிட்டு அதற்குப் பின் , அவரைக் கத்தியால் குத்த வந்த வீரப்பாவை மன்னித்தபின் அவருடைய பிரத்தியேக அறைக்குச் சென்று, போட்டோ ஆல்பத்தையும் , மீனா பொம்மையையும் வைத்துக் கொண்டு பேசும் காட்சி. தனக்குள்ளே பேசிக் கொள்ளுவார் – "நண்பனுக்கு இரத்தம் கொடுத்தாய் , உன்னைக் கொல்ல வந்த பக்கிரியை மன்னித்தாய், ஒருவன் நல்லது நினைக்க நினைக்க, நல்லது செய்ய செய்ய, அவனிடத்தில் உள்ள மிருகப் பண்பு குறைந்து , மனிதப் பண்பு வளர்கிறது" என்று பேசிக் கொண்டே அவரை சுய சமாதானம் செய்து கொண்டே போய், திடீரென்று அந்த போட்டோ ஆல்பத்திலிருக்கும் பாபு என்ற சிறுவன் சிரிக்க ஆரம்பித்தவுடன், அவர் மனத்திரையில் ஓடும் காட்சிகள் … அப்படியே “பாபு!” என்று பெரும் கூச்சலுடன் அலறிக் கொண்டே கீழே விழும் அந்தக் காட்சி மெய் சிலிர்க்கும். உடனேயே, யாரோ அறைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டவுடன், கண் விழித்து, சுற்றி ஒரு முறை பார்த்து விட்டு பின் நாற்காலியில் உட்காரும் விதம் - அவ்வளவு நேரம் வேறு மாதிரி இருந்து விட்டு, இயல்பு நிலைக்கு வந்து, மீண்டும் அந்த தோரணையுடன் உட்கார்ந்து கொள்ளுவார். ஆஹா! திரு எஸ். ஏ. கண்ணன், பயத்துடனும் தயக்கத்துடனும், அவரிடம் வந்து எஸ்.எஸ்.ஆரின் அன்னை எம்.வி. ராஜம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்து, உடனேயே , தெளிந்த மன நிலைக்கு வந்து அவரது வீட்டிற்குச் சென்று, அவருக்கு ஒத்தடம் கொடுக்கும் கட்டம். பின், அவரை “அம்மா” என்று அழைத்து “எம்.வி. ராஜம்மாவையும் "மகனே" என்று கூறுங்கள் என்று சொல்லி விட்டு "அம்மா... அம்மா..." என்று மெதுவாக சன்னமாக உணர்ந்து கூறி கண் கலங்கும் கட்டம்.

சில காட்சிகளுக்குப் பின்னர் – அதுவும் குறிப்பாக – அடுத்தடுத்து வரும் சில காட்சிகள் – முதலில் சரோஜா தேவி பட்டுப்புடவையும் அலங்காரமுமாக வரும்போது, எஸ்.எஸ்.ஆர் அவரையுமறியாமல் சரோஜா தேவியின் அழகை எல்லோர் முன்னிலையிலும் ரசிப்பதைப் பார்த்து – கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய முக பாவம் மாறும் – அதாவது மாற்றானுக்கு மனைவியாய் வரப் போகிறவரை இன்னொருவன் இப்படிக் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் பார்க்கிறானே என்று – ஒருவிதமான , அருவருப்பு தெறிக்கும் ஒரு பார்வை – இதை அவருடைய அந்த இரண்டு பெரிய கண்களும் – அவருடைய வாயும் – சற்றே இலேசாக நாசியைத் தூக்கி – அதை வெளிப்படுத்தும் அந்த அழகு – கடைசியில் – "சேகர்ர்ர்ரர்ர்ர்!" – என்று வெடிக்கும் அந்தக் கோபம். (இந்தக் காட்சியை ஏற்கனவே முரளி சார் விரிவாக விவரித்திருந்தாராயினும், என் பங்குக்கு நானும் நான் ரசித்த அந்த சிறிய முக பாவனை/உணர்வை நடிகர் திலகம் வெளிப்படுத்திய விதத்தை இங்கு கூறினேன்). உடனேயே, தொடரும் இன்னொரு காட்சி. பெருந்தன்மையோடு , SSR-ஐயும் சரோஜா தேவியையும் , ஒரு விசேஷத்துக்கு அனுப்பி வைத்து விட்டு, அவர்கள் ரொம்பவே கால தாமதமாகி வீட்டுக்கு ஒரு மாதிரியான - நெருக்கம் என்று சொல்ல முடியாது - ஆனாலும், ஒரு விதமான் அன்னியோன்னியம் இலேசாகத் தெரியும் - ஏற்கனவே காதலர்கள் அல்லவா! வந்தவுடன் , அவர்கள் வந்தவுடன் நடிகர் திலகம் காட்டும் அந்த மௌனமான அந்தக் கோபம் (அதற்கு முன் எத்தனை சிகரெட்டுகள், சும்மா ஊதித்தள்ளியிருப்பார், ஊதி, - நடிப்பையும் சேர்த்துதான்!). தான் கை வண்டியைத் தள்ளுகிறேன் என்று SSR முனைவார். கடைசியில், மெளனமாக, ஒரு விதமான, அச்சம் கலந்த குற்ற உணர்ச்சியுடன், சரோஜா தேவி அந்த வண்டியைத் தள்ளிக்க் கொண்டு போவார். இந்த இரண்டு கட்டங்களுக்குப் பிறகு, நடிகர் திலகம் தன் மனசாட்சியுடன் பேசும் அந்தக் காட்சி , கடைசியில் , தற்கொலைப் பாறைக்கு எல்லோரையும் நயவஞ்சகமாக வரவழைத்து விட்டு , SSR-ஐப் பிடித்து தள்ளுகிறவரை தொடரும் அந்த வில்லத் தனம் சொரிந்த அந்த நடிப்பு (பாபு அன்று நீ! இன்று? என்று கொலை வெறியுடன் சொல்லும் கட்டம். நிஜ வில்லன் தோற்றான்! அதிலும், முக்கியமாக, அந்த வசன உச்சரிப்பு மற்றும் மாடுலேஷன், முக பாவம்). அதற்கப்புறம், உண்மை தெரிந்து, கதறும் அந்த வெடிப்பும் வலியும், காப்பாற்றப் பட்ட பின், தெளிந்த மனோபாவத்துக்கு வந்தவுடன் , காட்டும் அந்த மாற்றம் (சதை படர்ந்த அந்த முகத்தில், அவர் வரவழைக்கும் அந்த கனிவு பொங்கும் நிர்மலமான, தெளிந்த நீரோடை போன்ற அந்த முகபாவம் – அது எப்படி , இவரால் மட்டும், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், ஒவ்வொரு, காட்சியிலும், கூடு விட்டு கூடு பாய முடிந்தது?). திருமண வீட்டில், திருமணம் சரோஜா தேவிக்கு இல்லை என்று தெரிந்தபின், சரோஜா தேவி நடிகர் திலகத்தின் போட்டோவுக்கு முன் நின்று, நடிகர் திலகத்தைப் பற்றி உயர்வாக சொல்லிப் பேசும்போது , நடிகர் திலகம் , ஒரு குழந்தையைப் போல் , காட்டும் அந்த உணர்வு (அந்தக் கண்களை ஆர்வத்துடன் உருட்டும் விதம் ! ஒ!), கடைசியில், நொண்டிக் கொண்டே சரோஜா தேவியை நோக்கி ஓடும் காட்சி . நான் முதலில் சொன்ன காட்சிகளில் , மொத்த அரங்கத்தையே மௌனத்தில் ஆழ்த்திக் கட்டிப்போட்டுவிடுவார் என்றால், கடைசி காட்சிகளில், அதுவும், அந்த நொண்டி நடையின் மூலம், அரங்கத்தையே கைத் தட்டலால், ஆர்ப்பரிக்க வைத்து விடுவார் (இந்தப் படத்தில், இந்தக் காட்சியில்தான் திரை அரங்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் பெரிதாக ஆர்ப்பரிப்பார்கள்).

இந்தப் படம் "குடி கண்டலு" என்ற பெயரில், தெலுங்கில், மீண்டும் என்.டி.ராமாராவ் நடிப்பில் வெளி வந்தது. அவருடன், கிருஷ்ண குமாரியும் (சௌகாரின் தங்கை) மற்றும் ஜக்கையாவும் நடித்தனர். தெலுங்கிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் ஹிந்தியில், பீம்சிங்கின் இயக்கத்தில், "ஆத்மி" என்ற பெயரில், முதன் முறையாக, திலீப் குமார் அவர்கள் துணிந்து எதிர்மறையான பாத்திரத்தை ஏற்று நடிக்க வைத்தது. அவருடன், வஹீதா ரஹ்மானும், மனோஜ் குமாரும் நடித்தனர். ஹிந்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த இரண்டு மொழிகளிலும், ஆலய மணி நல்ல வரவேற்பைப் பெற்றாலும், நடிகர் திலகத்தின் அந்த, எதிர்மறையான வில்லத்தனமான நடிப்பை மட்டும், என்.டி.ராமாராவாலும், திலீப் குமாராலும், நெருங்க முடியவில்லை என்றே சொல்லலாம். இதற்கு முக்கியமான காரணம், தெலுங்கைப் பொறுத்தவரை, என்.டி. ஆரின் இமேஜ் மற்றும் அவருடைய limitation. ஹிந்தியைப் பொறுத்தவரையும் அதுதான் என்றாலும், திலீப் குமார் பொதுவாகவே பெரிய அளவிற்கு ஆரவாரமாகவும், முரட்டுத்தனமாகவும் நடித்திராதவர். "Tragedy கிங்" என்று தான் அங்கு அவரை அழைப்பார்கள் - தேவதாஸ் போன்ற படங்களிலேயே நடித்ததால்.

இந்தப் படத்துக்கான நடிகர் திலகம் விமர்சனம் "இதே கதைக்கு வட நாட்டிலும் நல்ல வரவேற்பு இருந்ததே!" என்பது தான்.

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
18th March 2011, 07:35 PM
Motor Sundaram Pillai
Motor Sundaram Pillai had earlier been released as DVD by Raj Video Vision. Now an even more economic version has been released. This is available in all major outlets. For your reference the image of the covers reproduced below.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/MSPcovers.jpg

pammalar
19th March 2011, 10:19 AM
டியர் பார்த்தசாரதி சார்,

தியேட்டருக்கு போகாமலும், டீவி முன் உட்காராமலும், VCD-DVD உதவி இல்லாமலும் நாங்கள் இங்கே உங்கள் மூலம் கலைக்குரிசிலின் காவியங்களை மீண்டும் கண்டு களித்து வருகிறோம். அப்படி நாங்கள் உங்கள் எழுத்தின் மூலம் நேற்று பார்த்த நடிகர் திலகத்தின் திரைக்காவியம் "ஆலயமணி".

"ஆலயமணி" குறித்த சுவாரஸ்யங்கள் சில:

- சிங்காரச் சென்னையில், முதன்முதலில், வெளியான 4 திரையரங்குகளிலும் [பாரகன்(105), ஸ்ரீகிருஷ்ணா(105), உமா(105), நூர்ஜஹான்(105)], 100 நாள் விழாக் கொண்டாடிய கலைத்திலகத்தின் காவியம். சென்னை மாநகரில், முதன்முதலில், வெளியான 4 திரையரங்குகளிலும் [சித்ரா(119), பிரபாத்(112), சரஸ்வதி(112), காமதேனு(105)], 100 நாள் ஓடிய தமிழ்த் திரைப்படம் மக்கள் திலகத்தின் "மதுரை வீரன்(1956)".

- எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிகவும் பிடித்த, அவரது மனம் கவர்ந்த சிவாஜி படம்.

- இக்காவியம் வெளியான 23.11.1962 வெள்ளியன்று இரவு, இப்படத்தைப் பற்றிய First Day Reportஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு, டைரக்டர் சங்கருக்கு வழங்கிய முதல் நபர் யார் தெரியுமா? மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்! 'என்ன சங்கர், தம்பி நடித்து நீங்கள் டைரக்ட் செய்து இன்று வெளியாகியுள்ள "ஆலயமணி" Box-Officeல் பிச்சு உதறுகிறதாமே, வாழ்த்துக்கள்!' என சங்கருக்கு முதல் பாராட்டு-வாழ்த்து தெரிவித்தவர் எம்.ஜி.ஆர். "ஆலயமணி"யின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்த போதும், படம் வெளியான சமயத்திலும், சங்கரின் இயக்கத்தில் "பணத்தோட்டம் [வெளியான தேதி : 11.1.1963]" படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ["பணத்தோட்டம்" தயாரிப்பு : சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி].

- தமிழ் சினிமா சரித்திரத்தில், 1962-ம் ஆண்டின் Box-Office Record படம் "ஆலயமணி". அந்த ஆண்டின் ஒரே மெகாஹிட் படம்.

- ஹிந்தி "ஆத்மி"க்கு விமர்சனம் எழுதிய ஒரு பிரபல தமிழ் வார இதழ், 'இங்கே ஸ்டிக்கும் நடித்தது! அங்கே...?' என விமர்சித்திருந்தது.

எழுதுங்கள், எழுதுங்கள், எழுதிக் கொண்டே இருங்கள்...படித்துப் பாதுகாக்கக் காத்திருக்கிறோம்!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
20th March 2011, 01:54 AM
அன்பு நண்பர்களுக்கு ஒரு நல்ல தகவல். மிக நீண்ட நாட்களாக பார்க்க முடியாமல் ஏங்கிக் கிடந்த செந்தாமரை படம் குறைந்த பட்சம் ஒளித்தட்டு வடிவிலாவது வெளியாகும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. ஏ.எல்.எஸ். தயாரிப்பில் பீம்சிங் அவர்கள் இயக்கத்தில் நடிகர் திலகம், பத்மினி, கே.ஆர்.ராமசாமி, சந்திரபாபு உட்பட பல முன்னணி கலைஞர்கள் நடித்த படம். மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பில் பூவிருக்கு வண்டிருக்கு என்கிற டூயட் பாடல் - சௌந்தரராஜன், சுசீலா குரலில், வாரணமாயிரம் என்கிற ஆண்டாள் பாசுரம் பி.லீலா குரலில், தாங்காதம்மா தாங்காது என்கிற பாடல் சந்திர பாபுவின் குரலில், பாட மாட்டேன் நான் பாடமாட்டேன் என்று பாடி தன்னுடைய பாடும் சகாப்தத்தை முடித்துக் கொண்ட கே.ஆர்.ராமசாமி பாடிய பாடல், மற்றும் ஜி.கே. வெங்கடேஷ் குரலில் கனவே காதல் வாழ்வே என்கிற பாடல் உட்பட பல அருமையான பாடல்களைக் கொண்ட இப்படம், வருமா என்று ஐயமிருந்து கொண்டிருந்தது. இந்த ஐயத்தைப் போக்கும் வகையில் யூட்யூப் இணைய தளத்தில் இப்படத்தின் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. லீலா அவர்களின் குரலில் வாரணமாயிரம் பாசுரம் பத்மினி அவர்களின் ஆண்டாள் தோற்றத்தில் அருமையாக படமாக்கப் பட்ட பாடல் இதோ நம் பார்வைக்கு. ஒளிப் பிரதி நன்றாக இருப்பதாக தெரிகிறது. எனவே இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்போம்.
காரணம் நானும் இப்படத்தை இன்னும் பார்க்கவில்லை.

http://www.youtube.com/watch?v=t-BlQubHy_4

Murali Srinivas
20th March 2011, 10:05 PM
சாரதி/பாலா/செந்தில்,

சங்கர் குரு கன்னடப் படத்தில் ராஜ்குமார் சங்கர், குரு என்ற அந்த இரண்டு மகன்கள் வேடங்களை மட்டும்தானே செய்தார்? இல்லை தந்தை ராஜசேகர் ரோலையும் செய்தாரா?

அன்புடன்

ராகவேந்தர் சார்,

செந்தாமரை பாடல் காட்சி அருமையான பிரிண்ட். படமும் இப்படிப்பட்ட பிரிண்டாக வெளிவருமானால் நன்றாக இருக்கும்.

pammalar
21st March 2011, 04:37 AM
டியர் ராகவேந்திரன் சார்,

1955லேயே தொடங்கப்பட்ட "செந்தாமரை", தவிர்க்க முடியாத பல காரணங்களினால் மிகுந்த தாமதமாகி, 7 வருடங்கள் கழித்து, 14.9.1962 அன்று வெளிவந்தது. முதல் வெளியீடே பெரிய தாமதத்துக்குப் பின் நிகழ்ந்த இவ்வரிய காவியத்தின் வீடியோ பிரதி கிடைக்குமா என ஏங்கியிருந்த என்னைப் போன்ற எண்ணற்றோருக்கு, "செந்தாமரை"யின் பாடல் காட்சி ஒளிப்பேழையை பதிவிட்டு, வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள். "செந்தாமரை" VCD-DVD வடிவம் பெறும் என்ற நற்செய்திக்கும், அக்காவியத்தின் "வாரணமாயிரம்" பாசுரப்பாடலைப் பதிவிட்டமைக்கும் தங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்!

1962-ல் வெளியான "செந்தாமரை" பற்றி, 1965-ல் "வெண்ணிற ஆடை" மூலம் தமிழ்த் திரைப்படவுலகுக்கு அறிமுகமான கலைச்செல்வி ஜெயலலிதா, 1974-ல் வெளிவந்த தனது 100வது படமான "திருமாங்கல்யம்" திரைப்படத்தின் போது குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா...! ஆம், ஜெயலலிதா 100 படங்கள் நடித்து முடித்திருந்த சமயத்தில், 'பொம்மை' சினிமா மாத இதழில், தான் நடித்த 100 படங்களைப் பற்றியும் கருத்து கூறியிருந்தார். அதில் தனது 90வது திரைப்படமான "அன்னமிட்டகை" பற்றிச் சொல்லும் போது, "லலிதா, பத்மினி சகோதரிகளுக்கு 'செந்தாமரை' படம் போல இது எனக்கு அமைந்து விடுமோ என்று பயந்தேன். நல்ல வேளை! எனக்கு திருமணமாவதற்கு முன்பாகவே வந்து விட்டது" என்று கருத்து தெரிவித்திருந்தார். "அன்னமிட்டகை", 1966-ல் ஆரம்பிக்கப்பட்டு 15.9.1972 அன்று வெளியானது.

LPR என சுருக்கமாக அழைக்கப்பட்ட Lalitha, Padmini, Raghini சகோதரிகள் மூவரும் இணைந்து நடித்த மூன்றாவது சிவாஜி படம் "செந்தாமரை". [முதல் இரண்டு படங்கள் : தூக்கு தூக்கி(1954), காவேரி(1955)].

---------------------------------------------------

'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்' எனத் தொடங்கி 'வாரணமாயிரம் சூழ வலம் செய்து' எனத் தொடரும் ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாடலின் இந்த ஒளிப்பிரதியில் கண்ட சில விஷயங்கள்:

- ஆண்டாளாக நாட்டியப் பேரொளியின் வேடப்பொருத்தமும், நடனமும், நடிப்பும் கனக்கச்சிதம்.

- தெய்வத்தமிழ் இலக்கியப்பாடலுக்கு சாஸ்திரீய சங்கீதமும் கலந்த ஒரு ஜனரஞ்சகமான மெட்டை செவ்வனே வழங்கியிருக்கிறார்கள் மெல்லிசை மாமன்னர்கள்.

- பி.லீலா இப்பாடலை தனது கம்பீரம் கலந்த கமகக் குரலில் அம்சமாக இசைத்திருக்கிறார்.

- "வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் - என்னெதிற்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்" என்ற இந்த நான்கு வரிகளில், முதல் இரண்டு வரிகளை பத்மினிக்கு பி.லீலா பாட, அடுத்த இரண்டு வரிகளை அதே பத்மினிக்கு எல்.ஆர்.ஈஸ்வரி பாடுகிறார். நன்றாகக் கவனித்துப் பார்த்தால் இது தெரியும். ஒரு நடிகைக்கு ஒரே பாடலில் இரு பின்னணிப் பாடும் குரல்கள், அபூர்வம். இந்த இரண்டு வரிகளைத் தவிர, 'தோழி நான்' என வரும் இடங்களைத் தவிர, ஏனைய எல்லா வரிகளையும் பி.லீலா தான் பாடியிருக்கிறார்.

- 'தோழி நான்' என்ற இடங்களிலும், குழுவினரிடத்திலும் எல்.ஆர்.அஞ்சலியின் குரல் தொனிக்கிறது.

- பாடலின் பிரிண்ட் பிரமாதமாக இருப்பது, படமாக வந்தாலும் அவ்வாறே இருக்கும் என்ற நம்பிக்கைக்கு வித்திடுகிறது.

-----------------------------------------------------

இக்காவியத்தில் இடம்பெற்ற, தாங்கள் குறிப்பிட்டுள்ள, 'பூவிருக்கு வண்டிருக்கு' பாடலையும், 'கனவே காதல் வாழ்வே' பாடலையும் இயற்றியவர் கவிஞர் கே.டி.சந்தானம். ஆண்டாள் பாசுரம் தவிர, மற்ற பாடல்களெல்லாம் கவியரசருடையது.

அன்புடன்,
பம்மலார்.

parthasarathy
21st March 2011, 09:37 AM
சாரதி/பாலா/செந்தில்,

சங்கர் குரு கன்னடப் படத்தில் ராஜ்குமார் சங்கர், குரு என்ற அந்த இரண்டு மகன்கள் வேடங்களை மட்டும்தானே செய்தார்? இல்லை தந்தை ராஜசேகர் ரோலையும் செய்தாரா?

அன்புடன்

ராகவேந்தர் சார்,

செந்தாமரை பாடல் காட்சி அருமையான பிரிண்ட். படமும் இப்படிப்பட்ட பிரிண்டாக வெளிவருமானால் நன்றாக இருக்கும்.

டியர் முரளி அவர்களே,

சங்கர் குரு மூலப் படத்தில், மூன்று பாத்திரங்களையும் (முறையே, ராஜசேகர், சங்கர் மற்றும் குரு) Dr. ராஜ்குமார் அவர்கள்தான் ஏற்று நடித்திருந்தார்.

வித்தியாசம் நடிகர் திலகத்தின் பிரத்தியேக உடல் மொழி மற்றும் கற்பனை வளம். மூலப் படத்தில் இருந்த, நான் ஏற்கனவே குறிப்பிட்ட அந்தக் காட்சி - நடிகர் திலகம் வெள்ளை கூட் சூட்டோடு வீகேயார் வீட்டிற்கு வந்து அதகளப்படுத்தும் காட்சி மற்றும் அந்த தொலைபேசி உரையாடல், இன்னும் பல காட்சிகள். குறிப்பாகச் சொன்னால், சென்னையில் திரிசூலத்தின் நூறாவது நாள் போஸ்டரில் - அதாவது 900 அரங்கு நிறைந்த காட்சிகள்! (சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி) - பெரிதாக நடிகர் திலகத்தின் இந்த உடையில் வாக்கிங் ஸ்டிக்குடன் ஸ்டைலாக ஒரு மாதிரி சாய்த்து நிற்கும் விதத்துடன் இருப்பது போல் - சென்னை மாநகரத்தின் பட்டி தொட்டியில் எல்லாம் ஒட்டப்பட்டு - அன்று பெரிதாக வளர்ந்து கொண்டிருந்த - கமல், ரஜினி போன்ற இளம் நடிகர்களின் வயிற்றில் புளியை வண்டி வண்டியாகக் கரைத்தது! கடைசியில், திரிசூலம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டபோது, பெரும்பாலும் தமிழை ஒட்டியே, அதாவது, நடிப்பைப் பொறுத்தவரை, எடுத்தார்கள் என்பதுதான் நடிகர் திலகத்தின் தனிச்சிறப்பு. (தெலுங்கில், நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் மற்றும் பத்மாலயா பட அதிபர் கிருஷ்ணா / ஹிந்தியில், அமிதாப்பச்சன் (மகான் என்ற பெயரில்)).


டியர் ராகவேந்தர் அவர்களே,

தாங்கள் பதிவிறக்கம் செய்த செந்தாமரை படப் பாடல் வெகுப் பிரமாதம். VCD /DVD எப்போது வரும் என்ற ஆவலைக் கிளறி விட்டுவிட்டது.

டியர் பம்மலார் அவர்களே,

அந்த வாரணமாயிரம் - ஆண்டாள் பாசுரம், தாங்கள் சொன்ன "தூக்குத் தூக்கி" படத்திலும், இடம் பெற்றதுதான் ஒரு சுவாரஸ்யமான co-incidence.
அதாவது, சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனின் தந்தை, (இவர் நடிகர் திலகத்தின் நாடக ஆசான் என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் மேலும் சொல்லலாம்) முத்தமிழுக்கு எடுத்துக்காட்டாக, பத்மினி, ராகினி மற்றும் அவரது மகனாக நடித்திருந்த வெங்கட்ராமனையும் வடித்துக் காட்டச் சொல்ல, அதற்கு, ராகினி பாட, பத்மினி ஆட, அதற்கான பொழிப்புரையை, சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், சொல்லுவதாக முடியும்.

அன்புடன்,

பார்த்தசாரதி

HARISH2619
21st March 2011, 09:38 AM
DEAR MURALI SIR,
Even Father's role was done by rajkumar in shankar guru.

Sir,how to post in tamil in this new format?

parthasarathy
21st March 2011, 09:51 AM
டியர் பார்த்தசாரதி சார்,

தியேட்டருக்கு போகாமலும், டீவி முன் உட்காராமலும், VCD-DVD உதவி இல்லாமலும் நாங்கள் இங்கே உங்கள் மூலம் கலைக்குரிசிலின் காவியங்களை மீண்டும் கண்டு களித்து வருகிறோம். அப்படி நாங்கள் உங்கள் எழுத்தின் மூலம் நேற்று பார்த்த நடிகர் திலகத்தின் திரைக்காவியம் "ஆலயமணி".

"ஆலயமணி" குறித்த சுவாரஸ்யங்கள் சில:

- சிங்காரச் சென்னையில், முதன்முதலில், வெளியான 4 திரையரங்குகளிலும் [பாரகன்(105), ஸ்ரீகிருஷ்ணா(105), உமா(105), நூர்ஜஹான்(105)], 100 நாள் விழாக் கொண்டாடிய கலைத்திலகத்தின் காவியம். சென்னை மாநகரில், முதன்முதலில், வெளியான 4 திரையரங்குகளிலும் [சித்ரா(119), பிரபாத்(112), சரஸ்வதி(112), காமதேனு(105)], 100 நாள் ஓடிய தமிழ்த் திரைப்படம் மக்கள் திலகத்தின் "மதுரை வீரன்(1956)".

- எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிகவும் பிடித்த, அவரது மனம் கவர்ந்த சிவாஜி படம்.

- இக்காவியம் வெளியான 23.11.1962 வெள்ளியன்று இரவு, இப்படத்தைப் பற்றிய First Day Reportஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு, டைரக்டர் சங்கருக்கு வழங்கிய முதல் நபர் யார் தெரியுமா? மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்! 'என்ன சங்கர், தம்பி நடித்து நீங்கள் டைரக்ட் செய்து இன்று வெளியாகியுள்ள "ஆலயமணி" Box-Officeல் பிச்சு உதறுகிறதாமே, வாழ்த்துக்கள்!' என சங்கருக்கு முதல் பாராட்டு-வாழ்த்து தெரிவித்தவர் எம்.ஜி.ஆர். "ஆலயமணி"யின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்த போதும், படம் வெளியான சமயத்திலும், சங்கரின் இயக்கத்தில் "பணத்தோட்டம் [வெளியான தேதி : 11.1.1963]" படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ["பணத்தோட்டம்" தயாரிப்பு : சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி].

- தமிழ் சினிமா சரித்திரத்தில், 1962-ம் ஆண்டின் Box-Office Record படம் "ஆலயமணி". அந்த ஆண்டின் ஒரே மெகாஹிட் படம்.

- ஹிந்தி "ஆத்மி"க்கு விமர்சனம் எழுதிய ஒரு பிரபல தமிழ் வார இதழ், 'இங்கே ஸ்டிக்கும் நடித்தது! அங்கே...?' என விமர்சித்திருந்தது.

எழுதுங்கள், எழுதுங்கள், எழுதிக் கொண்டே இருங்கள்...படித்துப் பாதுகாக்கக் காத்திருக்கிறோம்!

அன்புடன்,
பம்மலார்.

டியர் பம்மலார் அவர்களே,

தங்களின் மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு, என் மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போன்றவர்கள் ஊக்கப் படுத்த, ஊக்கப் படுத்த, எனக்கு, தாங்கள் பணித்தது போல், எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம், அது தான் பிரதான வேலையும் ஆகிப்போகிறது.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
21st March 2011, 05:14 PM
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் - (தொடர்ச்சி)


7. நவராத்திரி (1964) / நவராத்திரி (1966) – தெலுங்கு / நயா தின் நயி ராத் (1975) - ஹிந்தி


நடிகர் திலகமே “நடிப்புக்கும் நடிகனுக்கும் போட்டி” என்று இந்தப் படத்தைப் பற்றி சொல்லிவிட்டபிறகு, நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இல்லையில்லை, வண்டி வண்டியாக இருக்கிறது.

இந்தப் படம், நடிகர் திலகத்தின் கற்பனை வளத்திற்கும், அர்ப்பணிப்புக்கும், முனைப்புக்கும் எடுத்துக்காட்டாய் அமைந்த படங்களில் முக்கியமான படம். இன்று ஒப்பனைக் கலையில், வியத்தகு தொழில் நுட்பமும், தொழில் நுட்பக் கலைஞர்களும், வந்து விட்ட நிலையில், மீடியாவும், சம்பந்தப்பட்ட நடிகர்களுமே கூட, இந்த கெட்டப் விஷயங்களைப் பற்றிப் பெரிதாக சொல்லிக் கொள்ளுகிறார்கள். மீடியாக்களும், வட இந்தியாவின் ஆமிர் கான், ஷாருக்கான் முதல், நமது கமல், விக்ரம், சூர்யா வரை, பெரிதாக எழுதுகிறார்கள் - ஒரு படத்திற்காக, உடலைப் பெரிதாக வளர்த்துக் கொள்ளுகிறார்கள், உடனே, அடுத்த படத்துக்காக, குறைத்துக் கொள்ளுகிறார்கள் என்று. நடிகர் திலகமோ, உடல் மொழியையும், கற்பனை வளத்தையும், அசாத்திய தன்னம்பிக்கையையும் மட்டுமே வைத்துக் கொண்டு, சுயமாகவே பாதி ஒப்பனையையும் செய்து, இவர்கள் செய்ததை விட பல நூறு மடங்கு பிரமாதமாக செய்து விட்டாரே. அதற்காக, இந்தக் கலைஞர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களுடைய சிரத்தையும், முனைப்பும், திறமையும் பாராட்டுக்குரியதுதான். என்னுடைய ஆதங்கமெல்லாம் (நம் எல்லோரோடையதும் தான்!) இன்றைய மீடியாக்கள், இவர்களைப் பற்றிப் பெரிதாகப் பாராட்டும்போது, இவர்கள் எல்லோருக்கும் முன்னோடியும், இவர்கள் மட்டுமல்ல இன்னும் இது போன்ற எத்தனையோ கலைஞர்களை விடவும், பல நூறு மடங்கு, பல வருடங்களுக்கு முன்னரே, நடிகர் திலகம் சாதித்து விட்டதை, விரிவாக எடுத்துச் சொல்லாமல், ஏன் இன்னமும் இருட்டடிப்பு செய்கிறார்கள்? இவர்களைப் பொறுத்தவரை, திரும்பத் திரும்ப ஒருவரது (பெயர் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?) புகழ் பாடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாது. இன்றைய தலைமுறையினருக்கும், உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பில்லை.

ஒரு நடிகன் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் (மாறு வேடங்களில் அல்ல) நடிக்கும் போது, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அந்த ஒப்பனையில் இருப்பது ஒரே நடிகன்தான் என்பதைத் தெரியவைத்து, இருப்பினும், அதே மக்களை ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும், தன் கற்பனை வளத்தால், நடிப்பால், நடை உடை பாவனையால், குரல் மாற்றத்தினால், உடல் மொழியால், மக்களை அந்தந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்றச் செய்து விட முடியுமானால், அவனே, மிகச் சிறந்த நடிகனாகிறான்.

இதைத் தான், நடிகர் திலகம், நவராத்திரியில் செய்தார். அத்தனை வேடத்தில் இருப்பவரையும், மக்கள் எளிதாக (அந்த குஷ்ட ரோகி பாத்திரம் தவிர - அதையும், ஓரளவு கண்டு பிடித்து விடலாம்) அது நடிகர் திலகம்தான் என்று பார்த்தவுடன் சொல்ல வைத்து விட்டு, சிறிது நேரத்திலேயே, அந்தந்தக் கதாபாத்திரத்துடன், மக்களை ஒன்றைச் செய்து விட்டார். மக்களும் கடைசி வரையிலும், ஒவ்வொரு பாத்திரத்தையும், அந்தப் பாத்திரங்களாகவே பார்த்து மகிழ்ந்து, அதிசயித்துப் போனார்கள்.

மனிதனின் ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு பாத்திரத்தை அளித்து, அதற்க்கேற்றார்போல் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை அமைத்து, அதில், முழு வெற்றியையும் அடைந்த, கதாசிரியர்-இயக்குனர் திரு. ஏ.பி. நாகராஜன் அவர்கள் மற்றும் நடிகர் திலகத்தின் பங்கு இமாலயச் சாதனை என்றால் அது மிகையாகாது.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இவை தவிர,

1) நடிகையர் திலகம் சாவித்திரியின் பங்களிப்பு – நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுத்து நடித்தது – இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம்.

2) அது இல்லாமல், படத்தில் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களும், மிகச் சிறிய பாத்திரத்தில் வருபவர் கூட - அனைவரையும் கவரும் படி நடித்தது; (அந்த நாடகக் கலைஞர் எபிசோடில் குள்ளமாக ஒரு நடிகர் - இவர் ஏபிஎன்னின் அத்தனை படங்களிலும் ஆஜராகியிருப்பார் - அந்தத் தண்ணீர் கூஜாவை மணிக்கணக்கில் திறந்து கொண்டே இருப்பது மற்றும் நடிகர் திலகத்திற்கு விசிறி வீசும்போது, அடிக்கடி அவரை அடித்துக் கொண்டே இருப்பது; (ஏ.பி.என்னின் தனித் திறமைகளில் ஒன்று, அவர் படங்களில் இடம் பெறும் அனைவரையும் நன்றாக நடிக்க வைத்து விடுவது - சிறு பாத்திரமாய் இருந்தாலும் - காரணம், அந்தச்சிறு பாத்திரமும் முக்கியப் பங்கு வகித்து, நடிப்பவர்களை ஊக்கப் படுத்தி விடும். முடிந்தவரை, தேவையில்லாமல், ஒரு சிறு கதாபாத்திரத்தைக் கூட அனாவசியமாக நுழைக்க மாட்டார்.);

3) மற்றும் "மாமா" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் திரு. கே.வி. மகாதேவன் அவர்களின் பங்கு;

என்று ஒவ்வொரு அம்சமும் மிக நன்றாக அமைந்தது.

ஒன்பது பாத்திரங்களிலும், நடிகர் திலகத்தின் பங்களிப்பு அற்புதமாக அமைந்தது என்றாலும், முதல் நான்கு பாத்திரங்களும், (முறையே, அற்புதராஜ்; குடிகாரன்; டாக்டர் மற்றும் கோபக்காரனாக வந்து இறந்து போகும் பாத்திரம்), நாடகக் கலைஞர் மற்றும் காவல்துறை அதிகாரி பாத்திரமும், மக்களை வெகுவாகக் கவர்ந்த பாத்திரங்கள் எனலாம்.

முதல் பாத்திரத்தில், ஸ்டைலாகத் தோளைக் குலுக்குவது, சொந்தக் கதையை சாவித்திரியிடம் சொல்லும்போது, சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பேசும் ஸ்டைல்; மற்றும், அந்த நடை;

இரண்டாவது பாத்திரத்தைப் பற்றிச் சொன்னால், சொந்தக் கதையை வர்ணிப்பது(அய்யய்யோ! அய்யய்யோ! என்று சொல்லும்போது எழும் கைத்தட்டல்!), மற்றும் "இரவினில் ஆட்டம்" பாடலில், நடக்கும் அந்த சாய்ந்த ஸ்டைலான நடை;

டாக்டர் பாத்திரம் என்றால், ஸ்டெதாஸ்கோப்பை வைத்துக் கொண்டு நடக்கும் - ஒரு முறை ஸ்டெத்தை மறந்து வைத்து விட்டு நடந்து, பின், திரும்பவும் வந்து, அதே நடையை maintain செய்து திரும்பவும் நடந்து செல்லுவார்; (மக்களைக் குறிப்பாக அந்தக் கதாபாத்திரத்துடன் ஒன்ற வைப்பதற்கு அவர் கையாளும் வித்தை மற்றும் சிரத்தை); சாவித்திரியிடம் பேசும் காட்சிகள் மற்றும்; கடைசியில், சாவித்திரி திடீரென்று காணாமல் போனவுடன், ஒரு மாதிரி, ஸ்டைலாக, அவரது வேலையாளைக் கூப்பிட்டுக்கொண்டே போகும் ஸ்டைல்; (சாவித்திரி தன் கதையை டாக்டரிடம், அதாவது, நடிகர் திலகத்திடம் விவரித்து இலேசாக கண் கலங்குவது (பிரமாதம்!); அதை நடிகர் திலகம் உன்னிப்பாக கவனித்துவிடுவார்; அதிலேயே, அவருக்குத் தெரிந்து விடும், சாவித்திரி நிஜப் பைத்தியம் அல்லவென்று; சாவித்திரியும் மற்றவர்களும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடிக்கும் லூட்டி பிரமாதமாக இருக்கும்; அரங்கமே களை கட்டிவிடும்);

கோபக்காரன் பாத்திரத்தில் காட்டிய அந்தக் கோபம் மற்றும் வேகம்; குறிப்பாக, இறப்பதற்கு முன், சாவித்திரியிடம் சைகையாலேயே, "நான் வந்த காரியத்தை முடித்துவிட்டேன், நீ போய்விடு" என்று சொல்லி விட்டு, கீழே விழுந்து துடிதுடித்துக் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும் கட்டம்;

"நவராத்திரி" - தொடரும்,

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
21st March 2011, 06:25 PM
7. "நவராத்திரி" - தொடர்ச்சி

அப்பாவி கிராமத்து விவசாயி பாத்திரத்தில், "போட்டது மொளச்சுதடி" பாடலில் காட்டும் அந்த இயல்பான உடல்மொழி; ரயில் முன் விழப் போகும் சாவித்திரியைத் தடுத்து நிறுத்த தலை தெறிக்க ஓடுவது; முகம் முழுவதும் வெள்ளை நிறப் பொடியை முகத்தில் கொட்டிக்கொண்டு வாயை வேறு மூடிக் கொள்ளும் காட்சி.

குஷ்ட ரோகி பாத்திரத்தில், வி. கோபாலகிருஷ்ணன் வீட்டில், தன் படத்தையே யாரென்று தெரியாமல் பார்த்து, பின்னர், அது தன் படம் தான் என்று தெரிந்த பிறகு மீண்டும் மீண்டும் பார்க்க முயற்சி செய்வது;

அடுத்து நாடகக் கலைஞர் பாத்திரம். வெகு இயல்பாக செய்திருப்பார். இந்தப் பாத்திரத்திற்கு முன்பு வரும் எபிசோடில் படம் இலேசான ஒரு தொய்வு நிலைக்கு வர ஆரம்பித்திருக்கும். சட்டென்று, இந்தக் கதாபாத்திரமும் அதனோடு வரும் காட்சிகளும், படத்தை மறுபடியும் தூக்கி நிறுத்த பெரிதும் உதவி செய்யும். ரொம்ப கலகலப்பாக அந்தக் காட்சிகளனைத்தும் அமைக்கப்பட்டிருக்கும் – முத்தாய்ப்பாக, அந்தத் தெருக் கூத்துப் பாடல் ("நான் காண்பதென்ன கனவா அல்லது நினைவா!" என்று பேசும் அந்த விதம். ஒ!). இந்தப் பாடல் முழுவதும், நடிகர் திலகத்தின் முகத்தைக் கூர்ந்து கவனித்தோமேயானால், முகத்தில் எந்த சலனமும் காட்டாமல், வசன உச்சரிப்புக்கும், நடன அசைவுகளுக்கும் மட்டும் நடிகர் திலகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரியும். ஒரு தேர்ந்த தெருக் கூத்துக் கலைஞரைக் கண் முன் நிறுத்தியிருப்பார். ஒரு தெருக் கூத்துக் கலைஞர் பெரிதாக முக பாவனையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அவரைப் பொறுத்தவரை, மேடையில் என்ன காட்சி நடைபெறுகிறது என்பது கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவருக்கும் கேட்க வேண்டும். கடைசி வரிசையில் இருப்பவர்களுக்கு மேடையில் நடிப்பவர் என்ன பேசுகிறார் என்பது கேட்டால் போதும் – அவர் முகம் எப்படி உணர்ச்சிகளைக் காட்டுகிறது என்பது தெரிய வாய்ப்பில்லை என்பதால், ஒவ்வொரு தெருக் கூத்துக் கலைஞரும், வசன உச்சரிப்பு, குரல் ஏற்ற இறக்கம், உடல் மொழி, இவைகளில் தான் பெரிதாக கவனம் செலுத்துவர். ஆனால், இந்தக் கலைஞர்களின் பங்களிப்புதான் மகத்தானது. திரையில் நடிப்பவர்கள், எத்தனை டேக் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய பங்களிப்பை மேலும் மேலும் மெருகேற்றிக்கொண்டே போக முடியும். ஆனால், நாடக/மற்றும் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு, ரீடேக்கெல்லாம் கிடையாது. மேடையில் நின்ற பின், அவர்கள், அடுத்து என்ன பேசுவது என்பதை மறந்து, விழித்தார்களானால், கூச்சலில் ஆரம்பித்து கல்லடியில் தான் முடியும். அந்தக் கலைஞன், இழந்த பெயரை மீண்டும் நிலை நிறுத்த பிரம்ம பிரயத்தனம் செய்து, போராடி, படாதபாடு படவேண்டியிருக்கும்.

இந்தக் தெருக்கூத்துப் பாடலில், நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள், நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுத்து பிரமாதமாக செய்திருப்பார். இத்தனைக்கும், சாவித்திரி அவர்களுக்கு, நாடக்கலையில், முன் அனுபவம் கிடையாது. நடிகர் திலகமும், இயக்குனர் ஏபிஎன்னும் சொல்லிக்கொடுத்ததை நன்கு உள்வாங்கி, அற்புதமாக நடித்துக் கொடுத்தார்.

அந்தக் காவல் துறை அதிகாரி பாத்திரத்தில், காட்டும் வேகம் மற்றும் மிடுக்கு (அந்த உடை கொஞ்சம் கூட கசங்காமல், இருக்கும், அந்த சிகை அலங்காரம் நிஜக் காவல்துறை அதிகாரியைக் கண் முன் நிறுத்தும்; இத்தனைக்கும், ஒரு பத்து நிமிடம் தான் வந்து போகும் பாத்திரம்; கடைசியில், ஆனந்தின் திருமணத்திற்கு அவர் அந்தக் கூடத்துக்குள் நுழையும் போதும் அதே வேகம்; மிடுக்கு) அதிலும், குறிப்பாக, சாவித்திரி யார் என்று தெரிந்து அவரை அனுப்பி வைத்து விட்டு, மக்களை – நம்மை நோக்கி – "lucky couple, eh!" என்று சொல்லி, சிங்கம் போல் கர்ஜித்து சிரித்து விட்டு – அதிலும் – மறுபடியும், ஹ்ம்ம்! என்று சொல்லி, சிகரெட்டை இழுத்து மறுபடியும், சிரிக்கும் ஸ்டைல் – கோடி கொடுக்கலாம் கொட்டி!. இதுவும், கர்ணனில் வரும் சிம்ம கர்ஜனையும் கிட்டத்தட்ட ஒன்று தான் என்றாலும், சிறு வித்தியாசம், அதில், கோபம் மற்றும் அவமானம்; இதில், ஒரு விதமான வெற்றி பெற்ற மனோபாவம் மற்றும் மன நிறைவு அடைந்தவுடன் வரும் அந்த அப்பாடா! என்ற மன நிலை.

அந்தக் கடைசி பாத்திரம், ஆனந்த் பாத்திரத்தில், பேசாமலயே காட்டிய அந்த உணர்வுகள்; மற்றும், திருமணக் கோலத்தில், மேடையில் அமர்ந்திருக்கும் போது, சாவித்திரி ஒரு மாதிரி அவரைக் கிள்ளும்போது நெளியும் அந்த நெளியல்;

பாச மலருக்குப் பின், மூன்று வருடங்கள் கழித்து, நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் படம் நெடுகிலும், சேர்ந்து ஜோடியாக நடித்து பெரிய வெற்றியை ஈட்டிய படம். இதற்கு முன்னர் இருவரும் ஜோடியாக நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை – ஏற்கனவே குறிப்பிட்ட காரணத்தால் – பாச மலருக்குப் பின்னர் இருவரையும் தமிழக மக்கள் அனைவரும் இவர்களை நிஜ அண்ணன் தங்கையாகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர். நவராத்திரிக்கு சற்று முன் வந்த “கை கொடுத்த தெய்வம்” படமும் பெரிய வெற்றி பெற்றது. ஆனால், இந்தப் படத்தில் இருவரும் படம் நெடுகிலும் ஜோடியாக நடிக்கவில்லை – கதையும் நட்பையும், கதாநாயகியின் வெகுளித்தனத்தால் ஏற்படும் விளைவுகளை ஒட்டியே இருக்கும்.

இந்தப் படம் வெளிவந்த காலத்திலேயே, ஹாலிவுட் நிறுவனமான, MGM -இன் நிறுவனர்கள், இந்தப் படத்தைப் பார்த்து விட்டு, கடைசி வரையில், இதில் நடித்தது, ஒரே நடிகர்தான் என்பதை நம்ப மறுத்து விட்டதாகவும், பின் அவர் ஒருவர்தான் என்று தெரிந்ததும், இதைப் போன்ற ஒரு நடிகர் எங்கள் ஊரில் இருந்தால், நாங்கள் தங்கச் சுரங்கத்தையே வாங்கி விடுவோம் என்று கூறிச் சென்றதாகக் கூறுவர். பின்னாளில், இந்தப் படத்தைப் பிரதானமாக வைத்து தான், நடிகர் திலகத்திற்கு, செவாலியே விருதை, பிரான்சு அரசும் வழங்கி நடிகர் திலகத்தை கௌரவித்துத் தானும் கௌரவப் (கர்வப்!) பட்டுக்கொண்டது.

நவராத்திரி, முதலில் தெலுங்கில் 1966-இல், ஏ. நாகேஸ்வரராவும், சாவித்திரியும் நடித்து, அதே பெயரில் வெளியானது. தெலுங்கில், இந்தப் படம் ஓரளவிற்கு, நல்ல வெற்றியைப் பெற்றாலும், தமிழ் அளவிற்கு சரியாகப் போகவில்லை; அதற்குக் காரணம், மறுபடியும், நடிகர் திலகத்தின் நடிப்பில் ஐம்பது சதவிகிதத்தைக் கூட நாகேஸ்வரராவால் தொட முடியாமல் போனது தான். பல வருடங்களுக்கு முன்பு, ஒரு மேடையில், நடிகர் திலகத்திற்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில், (எந்த விழா என்று நினைவில் இல்லை, தெரிந்தவர்கள், கூறினால் உபயோகமாக இருக்கும்), நாகேஸ்வர ராவே இது பற்றிக் கூறும்போது, இந்தியாவின் தலைசிறந்த நடிகர் சிவாஜிதான் என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை; எத்தனயோ நடிகர்கள் அந்தந்த மொழிகளில் நடித்த படங்களை தமிழில் அசலை விட சிறப்பாக நடிக்கிறார்; ஆனால், அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் எடுக்கப் படும்போது, அசலில், சிவாஜி நடித்த அளவுக்கு மற்ற மொழி நடிகர்களால் நடிக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு, அவருடைய நவராத்திரி, தெலுங்கில் எடுக்கப்பட்டபோது, ஒன்பது வேடங்களிலும் , என்னால் அவர் அளவிற்கு நடிக்க முடியவில்லை . ஆறு அல்லது ஏழு வேடங்களில் தான் , அவருடைய நடிப்புக்கு ஓரளவிற்கு நிகராக என்னால் நடிக்க முடிந்தது என்று சொன்னார்.

நவராத்திரி, பிறகு, 1975-இல், ஹிந்தியில், “நயா தின் நயி ராத்” என்ற பெயரில், வட இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான சஞ்சீவ் குமார் மற்றும் ஜெயா பாதுரி நடிப்பில் வெளி வந்தது. இவர்கள் இருவரும், அப்போது தான், கோஷிஷ் என்றொரு மகத்தான படத்தில் நடித்திருந்தனர். (சஞ்சீவ் குமார், கோஷிஷ் படத்திற்காக, பாரத் விருது வேறு வாங்கியிருந்தார் – தமிழில் இந்தப் படம், நடிகர் திலகம் நடிப்பதாக இருந்து, பின்னர், கமல் - சுஜாதா நடிப்பில், “உயர்ந்தவர்கள்” படமானது). இந்தப் படமும் ஹிந்தியில், நன்றாக ஓடினாலும், எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாமல் போனதற்குக் காரணம், நடிகர் திலகம் அளவிற்கு சஞ்சீவ் குமாரால் நடிக்க முடியாமல் போனது தான்.

தொடரும்,

அன்புடன்,

பார்த்தசாரதி

pammalar
22nd March 2011, 02:41 AM
டியர் பார்த்தசாரதி சார்,

வழக்கம் போல், "நவராத்திரி" திரைக்காவிய அலசலும் அற்புதம்!

"நவராத்திரி"யில் நடிகர் திலகத்திற்கு ஒன்பது பாத்திரங்கள்; ஆயினும், நாடக நடிகர் கதாபாத்திரத்தில் அவர் ஏற்கும் 'சத்தியவான்' வேடத்தைச் சேர்த்தால் அவருக்கு மொத்தம் பத்து வேடங்கள்.

நமது நடிகர் திலகத்தின் 100வது திரைக்காவியமான "நவராத்திரி", 100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்.

ஒரு நடிகரின் 100வது படம், சென்னை மாநகரில் வெளியான 4 பெரிய திரையரங்குகளிலும் [மிட்லண்ட்(101), மஹாராணி(101), உமா(101), ராம்(101)], ரெகுலர் காட்சிகளில், 100 நாட்கள் ஓடியது நமது நடிகர் திலகம் ஒருவருக்கே.

மற்றும் மிகப் பெரிய திரையரங்குகளான மதுரை-ஸ்ரீதேவி(108), திருச்சி-சென்ட்ரல்(100) அரங்குகளிலும் 100 நாட்கள் ஓடியது.

100வது படம் கருப்பு-வெள்ளைப் படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அது அபார வெற்றி கண்டு 100 நாட்களுக்கு மேல் ஓடியதும், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நமது நடிகர் திலகம் ஒருவருக்குத்தான்.

தனது 100வது திரைக்காவியம் வெளியான அதே தீபாவளித் திருநாளில் [3.11.1964], தனது இன்னொரு திரைக்காவியத்தையும் [99வது காவியமான "முரடன் முத்து"] வெளியிட்ட சிகர சாதனை, அசாத்திய துணிச்சல், அசுர தைரியம் உலக சினிமாவில் நமது நடிகர் திலகம் ஒருவருக்கே உண்டு.

"நவராத்திரி" 100 நாள் மாபெரும் வெற்றிக்காவியம் என்றால் "முரடன் முத்து", சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல சென்டர்களின் பல அரங்குகளில் 50 நாட்களைக் கடந்த சிறந்த வெற்றிக்காவியம். அதிகபட்சமாக, கோவை மாநகரின் 'இருதயா' திரையரங்கில் 79 நாட்கள் ஓடியது.

நமது சிவாஜி அவர்கள் நடிகர் திலகம் மட்டுமல்ல, பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளின் 'ராஜ திலகம்'.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd March 2011, 03:04 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 183

கே: எங்க மாமாவின் இளமை ரகசியம் என்ன? (தெய்வமகன் ரசிகர்கள், பம்பாய்-22)

ப: எதையும் கட்டுப்படுத்தக்கூடியவர் நம்ம தாத்தா! (சாந்தியின் மகளுக்கு)

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd March 2011, 03:29 AM
அன்பு சாரதி,
பாகப்பிரிவினை மலையாளத்திலும் எடுக்கப்பட்டது. 1976 -77 காலக்கட்டத்தில் பீம்சிங் அவர்கள் இயக்கத்திலே கமல்-ஸ்ரீதேவி நடிக்க நிறகுடம் என்ற பெயரில் வெளிவந்தது. படம் ஒரு சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது என்று கேள்வி. கமலைப் பொறுத்தவரை 16 வயதினிலே சப்பாணி பாத்திரத்தை செய்வதற்கு இந்தப் படம் [நிறகுடம்] ஒரு பயிற்சி களமாக அமைந்தது என்று சொல்லலாம்.


கமலஹாசன் அவர்களின் 56வது திரைப்படமாக, "நிறகுடம்" மலையாளத் திரைப்படம், 29.7.1977 அன்று வெளியானது. கேரளத்தில் இப்படம் 100 நாட்களைக் கடந்ததாகக் கூறப்படுகிறது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd March 2011, 04:12 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 184

கே: பெண் சிவாஜியாக ஏன் சௌகார் ஜானகியை சொல்லக்கூடாது என்று பொருமுகிறாளே எனது பெண் சிநேகிதி? (எஸ்.ஆர்.ஹரிஹரன், சென்னை)

ப: சிலர், பத்மினியை மறந்து விட்டீர்களா என்கிறார்கள். சிலர், சாவித்திரிக்காக கஜ்ஜை கட்டிக் கொண்டு சண்டைக்கு வருகிறார்கள், தவிர, பானுமதியின் விசிறிகள் பலர். எல்லோரையும் மடக்க, சிவாஜியை இப்படி வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும். சிவாஜி, ஓர் ஆண் சௌகார். சிவாஜி, ஓர் ஆண் பத்மினி. சிவாஜி, ஓர் ஆண் சாவித்திரி, ஆண் பானுமதி. நீங்களே சொல்லுங்கள், பொருத்தமாக இருக்கிறதா?!

(ஆதாரம் : குமுதம், 13.3.1980)

அன்புடன்,
பம்மலார்.

goldstar
22nd March 2011, 06:10 AM
Thanks a lot Mr. Parthasarathy and Mr. Swamy for keep providing more and more details of NT. I am simplying enjoying each post. Thanks a again. In front you guys I am very much tiny NT fan.

Cheers,
Sathish

saradhaa_sn
22nd March 2011, 05:33 PM
டியர் பார்த்தசாரதி,

ஆலயமணி ஆய்வுக்கட்டுரையைப்படித்து பதில் எழுதுவதற்குள், இன்னும் சிறப்பாக 'நவராத்திரி' சிறப்புக்கட்டுரை. ஒவ்வொரு ரோலைப்பற்றியும் உங்கள் விவரிப்பு மிகவும் அற்புதம். நுணுக்கமாக ஆராய்ந்து செதுக்குகிறீர்கள். அட்டகாசம்.

நவராத்திரியை நேரில் பார்த்ததுபோல, ஒவ்வொரு காட்சியாக அசைபோட வைத்தது. டாக்டர் கருணாகரன், கான்ஸ்டபிள் கரிக்கோல் ராஜுவிடம் 'உங்க உலகத்துக்கும் எங்க உலகத்தும் ரொம்ப தூரம்' என்று சொல்லும் இடத்தில் அவர் முகத்தில் பொங்கும் கருணை. சூப்பர். இன்றைக்கும் கூட பல விஐபிக்கள், விரும்பிக்கேட்டவை நிகழ்ச்சியில் 'இரவில் ஆட்டம்' பாடலையோ அல்லது 'தெருக்கூத்து' காட்சியையோ ஒளிபரப்பாமல் இருப்பதில்லை. சமீபத்தில் மறைந்த மலேசிய வாசுதேவனின் மகன் யுகேந்திரன் சிலமாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில், இந்த தெருக்கூத்து காட்சியைப்பற்றி அணுஅணுவாக விவரித்து மகிழ்ந்தார்.

உங்களுடைய ஒவ்வொரு படத்தைப்பற்றிய பதிவும், அதைத்தொடர்ந்து அதன் சாதனை விவரங்களை பம்மலார் விவரிப்பதும், இத்திரிக்கு விறுவிறுப்பை ஊட்டி வருகின்றன.

தொடரட்டும் உங்கள் அதிரடிப்பயணம்.

RAGHAVENDRA
22nd March 2011, 07:03 PM
அன்பு நண்பர் பார்த்த சாரதி அவர்களின் பட அலசல்கள் அற்புதமாக அமைந்துள்ளன. குறிப்பாக மற்ற மொழிகளில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய ஆய்வு சிறப்பானது. நவராத்திரி திரைப்படத்தினைப் பொறுத்த வரையில் ஹி்ந்தியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாததற்கு பல காரணங்களைக் கூற முடிந்தாலும் முழு முதற் காரணம் நடிகர் திலகத்தின் நடிப்புக்கு முன் மற்றவை மிகவும் சாதாரணமாக தோற்றம் அளித்ததாகவும் கூறலாம். இருந்தாலும் நவராத்திரியை அவர்கள் முடிந்த அளவிற்கு சிறப்பாக எடுத்திருந்தனர் என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக லட்சுமிகாந்த் பியாரிலால் இசையில் பாடல்கள் பிரபலமடைந்தன. நம்முடைய மொழி பாடல்களுக்கும் அவர்களின் பாடல்களுக்கும் நிச்சயம் ஒப்பீடு செய்ய முடியாது.
அப்படி நயா தின் நயா ராத் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை இங்கே நாம் காணலாம். இது இரவினில் ஆட்டம் பாடலின் ஹிந்தி வடிவம். தமிழில் இடம் பெற்ற பாடலை மறந்து விட்டு இப்பாடலைப் பார்ப்பது நன்று. ஏனென்றால் அவர்கள் ஹிந்தி திரையுலகிற்கு ஏற்றவாறு பாடல் காட்சியைப் படமாக்கியிருந்தார்கள். பாடலைப் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=WGVWuj-55KU

அன்புடன்

pammalar
22nd March 2011, 11:26 PM
டியர் கோல்ட்ஸ்டார் சதீஷ்,

நாம் எல்லோரும் சிவாஜி குலம், சிவாஜி இனம். நாம் அனைவருமே அவர் புகழ் பாடும் குயில்கள்தான். தங்களது உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் பாராட்டுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!

சகோதரி சாரதா, பாராட்டுக்கு நன்றி!

வீடியோ வேந்தர் ராகவேந்தர் சார், 'மே வஹி வஹி பாத்' பாடலுக்கு நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd March 2011, 12:32 AM
நடிகர் திலகம் பற்றி காதல் மன்னன்

"சிவாஜி கணேசன் என்னை 'மாப்ளே...மாப்ளே'ன்னு தான் கூப்பிடுவார். சாவித்திரியை 'தங்கை'ன்னு தான் அழைப்பார். அதனால மாப்பிள்ளை முறை என்பார். 'பராசக்தி' படத்துலேயே அவர் நன்றாக நடிச்சிருந்தார். ஒரு நல்ல நடிகர் கிடைச்சிருக்கார்னு நான் சந்தோஷப்பட்டேன். சிவாஜியும், நானும் இணைஞ்சு நடிச்ச முதல் படம் 'பெண்ணின் பெருமை'. முதல் படத்திலேயே எங்களுக்கு வித்தியாசமான அனுபவம். ஒரு ஷாட்டுல நான் அவரோட கன்னத்துல ஓங்கி அறையற மாதிரி சீன். உடனே சிவாஜி என்கிட்ட 'மாப்ளே, உண்மையிலேயே என் கன்னத்துல அடிச்சிடு. இல்லைன்னா வேறு எங்காவது படாத இடத்துல பட்டுடப்போவுது'ன்னு சொன்னார். நானும் 'சரி'ன்னு சொல்லிட்டேன். ஆனால் ஷாட்டின் போது அவரை எப்படி அடிக்கிறதுன்னு தயக்கம். அதனால அடிக்கிற மாதிரி ஆக்ஷன் தான் பண்ணினேன். அதுதான் வினையாக மாறிடுச்சு. என் கை அவரோட உதட்டுல பட்டு இரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு. 'மாப்ளே...என்ன இப்படி பண்ணிட்டியே? நீ உண்மையிலேயே அடிச்சிருந்தா வலியோடு போயிருக்குமே'ன்னு சொன்னார். இரத்தத்தைப் பார்த்ததும் எனக்கு மனசு ரொம்ப சங்கடமாப் போச்சு. இதற்குப் பிறகு 1958-ல 'கல்யாண பரிசு' படத்துல நடிச்சிட்டு இருந்தேன். அதே நேரத்துல தான் ஜெய்ப்பூரில் 'கட்டபொம்மன்' படத்தோட ஷூட்டிங். அதுல நடிக்கிறதா இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஏதோ காரணத்துனால நடிக்க முடியாமல் போயிடுச்சு. அந்த வெள்ளையத் தேவன் கேரக்டரைத்தான் நான் பண்ணினேன். அப்போதும், அதற்குப் பிறகும் கூட நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பல படங்களில் நடிச்சோம். சிவாஜி, நான், சாவித்திரி மூணு பேரும் பீம்சிங் இயக்கத்துல தொடர்ச்சியாக நடிச்சோம். பதிபக்தி, பாவமன்னிப்பு, பாசமலர், பார்த்தால் பசி தீரும், பந்தபாசம்-ன்னு எல்லாப் படங்களும் ரொம்ப நல்ல படங்களா அமைஞ்சுது. எல்லாப் படங்களும் மக்களிடையேயும் அமோகமாக வரவேற்பு பெற்று நன்றாக ஓடின. அந்த நாட்கள் எல்லாம் எப்பொழுதுமே என்னால் மறக்க முடியாதவை." [28.7.2003 தேதியிட்ட 'குமுதம்' இதழிலிருந்து]

இன்று 22.3.2011 அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம். நமது நடிகர் திலகத்துடன் 13 திரைப்படங்களில் இணைந்து நடித்த காதல் மன்னனுக்கு நமது ஆத்மார்த்தமான அஞ்சலி.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
23rd March 2011, 12:50 AM
சென்னை பெரம்பூரில் உள்ள 'மஹாலக்ஷ்மி' திரையரங்கில், கடந்த 18.3.2011 வெள்ளி முதல், முற்பகல் 11:30 மணிக் காட்சியாக, கலையுலக ஆண்டவரின் "ஆண்டவன் கட்டளை" வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகின்றது.

இத்தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd March 2011, 03:12 AM
நடிகர் திலகமும் அவரது படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)

3. பாசமலர் (1961)

இந்தப் படத்தின் டைட்டில் ஓடத் துவங்கியவுடன் ஒரு பாடல் பின்னணியில் துவங்கும் - "அன்பு மலர், ஆசை மலர்..." என்று. இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னரின் ஆரம்ப கால நண்பர் மற்றும் உதவியாளருமான திரு ஜி.கே. வெங்கடேஷ் அவர்களது வித்தியாசமான குரலில்.


டியர் பார்த்தசாரதி சார்,

நமது பாசத்திலகத்தின் "பாசமலர்" காவியத்தினுடைய Title Songஆன 'அன்புமலர் ஆசைமலர்...' பாடலைப் பாடியவர் நமது மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன்.

நடிகர் திலகமும், காதல் மன்னனும் பார்வையால் பேசிக் கொள்ளும் கடற்கரைக் காட்சியில்,
'முன்புறமாய் கால் நடக்கும்
பின்புறமாய் மனம் நடக்கும்
பேசினால் தீர்ந்துவிடும்
சேர்ந்துவிடும் உறவு
யார் முதலில் பேசுவது
அங்கே தான் பிரிவு'
எனப் பின்னணியில் ஒலிக்கும் வரிகளை இசைத்தவர் இசை மேதை ஜி.கே.வெங்கடேஷ்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd March 2011, 04:15 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 185

கே: "தங்கை" படத்தில் சிவாஜி கணேசன் சண்டை போடும் காட்சிகள் எப்படி? (அன்புதாசன், கோயமுத்தூர்)

ப: வெளுத்து வாங்கி விட்டார்.

(ஆதாரம் : பேசும் படம் வெள்ளிவிழா மலர், ஆகஸ்ட் 1967)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd March 2011, 04:27 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 186

கே: நடிகர் திலகத்திடம் உள்ள தனிச்சிறப்பு என்ன? (ஈ.முத்துக்குமார், அம்பலகாரன்பட்டி)

ப: அவரைப் போல் தொழிலில் பக்தியுள்ளவர்களைக் காண்பது அரிது!

(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1978)

அன்புடன்,
பம்மலார்.

parthasarathy
23rd March 2011, 09:30 AM
டியர் பார்த்தசாரதி சார்,

வழக்கம் போல், "நவராத்திரி" திரைக்காவிய அலசலும் அற்புதம்!

"நவராத்திரி"யில் நடிகர் திலகத்திற்கு ஒன்பது பாத்திரங்கள்; ஆயினும், நாடக நடிகர் கதாபாத்திரத்தில் அவர் ஏற்கும் 'சத்தியவான்' வேடத்தைச் சேர்த்தால் அவருக்கு மொத்தம் பத்து வேடங்கள்.

நமது நடிகர் திலகத்தின் 100வது திரைக்காவியமான "நவராத்திரி", 100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்.

ஒரு நடிகரின் 100வது படம், சென்னை மாநகரில் வெளியான 4 பெரிய திரையரங்குகளிலும் [மிட்லண்ட்(101), மஹாராணி(101), உமா(101), ராம்(101)], ரெகுலர் காட்சிகளில், 100 நாட்கள் ஓடியது நமது நடிகர் திலகம் ஒருவருக்கே.

மற்றும் மிகப் பெரிய திரையரங்குகளான மதுரை-ஸ்ரீதேவி(108), திருச்சி-சென்ட்ரல்(100) அரங்குகளிலும் 100 நாட்கள் ஓடியது.

100வது படம் கருப்பு-வெள்ளைப் படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அது அபார வெற்றி கண்டு 100 நாட்களுக்கு மேல் ஓடியதும், தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நமது நடிகர் திலகம் ஒருவருக்குத்தான்.

தனது 100வது திரைக்காவியம் வெளியான அதே தீபாவளித் திருநாளில் [3.11.1964], தனது இன்னொரு திரைக்காவியத்தையும் [99வது காவியமான "முரடன் முத்து"] வெளியிட்ட சிகர சாதனை, அசாத்திய துணிச்சல், அசுர தைரியம் உலக சினிமாவில் நமது நடிகர் திலகம் ஒருவருக்கே உண்டு.

"நவராத்திரி" 100 நாள் மாபெரும் வெற்றிக்காவியம் என்றால் "முரடன் முத்து", சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல சென்டர்களின் பல அரங்குகளில் 50 நாட்களைக் கடந்த சிறந்த வெற்றிக்காவியம். அதிகபட்சமாக, கோவை மாநகரின் 'இருதயா' திரையரங்கில் 79 நாட்கள் ஓடியது.

நமது சிவாஜி அவர்கள் நடிகர் திலகம் மட்டுமல்ல, பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளின் 'ராஜ திலகம்'.

அன்புடன்,
பம்மலார்.

அன்புள்ள பம்மலார் அவர்களே,

தங்களுடைய பாராட்டு என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் பதிவு செய்யும் ஒவ்வொரு படத்திற்கும் விடாமல் உடனேயே அதற்கு பதில் பாராட்டு செய்து, அந்தப் படத்தைப் பற்றிய மேலும் சிறப்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி என்னை உற்சாகப்படுத்துவதோடு நிற்காமல், இந்தத் திரிக்கு மேலும் சுவையையும் சுவாரஸ்யத்தையும் கூட்டி விடுகிறீர்கள்.

நன்றியுடன்,

பார்த்தசாரதி

parthasarathy
23rd March 2011, 09:32 AM
Thanks a lot Mr. Parthasarathy and Mr. Swamy for keep providing more and more details of NT. I am simplying enjoying each post. Thanks a again. In front you guys I am very much tiny NT fan.

Cheers,
Sathish

Dear Sathish,

Thanks for your sincere appreciation. In front of NT, every human being is tiny. We all get immense pleasure and satisfaction whenever we think, talk, discuss, write, share and see NT and his performances.

Thanks once again,

Regards,

R. Parthasarathy

parthasarathy
23rd March 2011, 09:35 AM
டியர் பார்த்தசாரதி,

ஆலயமணி ஆய்வுக்கட்டுரையைப்படித்து பதில் எழுதுவதற்குள், இன்னும் சிறப்பாக 'நவராத்திரி' சிறப்புக்கட்டுரை. ஒவ்வொரு ரோலைப்பற்றியும் உங்கள் விவரிப்பு மிகவும் அற்புதம். நுணுக்கமாக ஆராய்ந்து செதுக்குகிறீர்கள். அட்டகாசம்.

நவராத்திரியை நேரில் பார்த்ததுபோல, ஒவ்வொரு காட்சியாக அசைபோட வைத்தது. டாக்டர் கருணாகரன், கான்ஸ்டபிள் கரிக்கோல் ராஜுவிடம் 'உங்க உலகத்துக்கும் எங்க உலகத்தும் ரொம்ப தூரம்' என்று சொல்லும் இடத்தில் அவர் முகத்தில் பொங்கும் கருணை. சூப்பர். இன்றைக்கும் கூட பல விஐபிக்கள், விரும்பிக்கேட்டவை நிகழ்ச்சியில் 'இரவில் ஆட்டம்' பாடலையோ அல்லது 'தெருக்கூத்து' காட்சியையோ ஒளிபரப்பாமல் இருப்பதில்லை. சமீபத்தில் மறைந்த மலேசிய வாசுதேவனின் மகன் யுகேந்திரன் சிலமாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில், இந்த தெருக்கூத்து காட்சியைப்பற்றி அணுஅணுவாக விவரித்து மகிழ்ந்தார்.

உங்களுடைய ஒவ்வொரு படத்தைப்பற்றிய பதிவும், அதைத்தொடர்ந்து அதன் சாதனை விவரங்களை பம்மலார் விவரிப்பதும், இத்திரிக்கு விறுவிறுப்பை ஊட்டி வருகின்றன.

தொடரட்டும் உங்கள் அதிரடிப்பயணம்.

டியர் சாரதா மேடம் அவர்களே,

தங்களுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகள். உங்களைப் போன்றோரின் பாராட்டுக்கள் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

நன்றியுடன்,

பார்த்தசாரதி

parthasarathy
23rd March 2011, 09:42 AM
அன்பு நண்பர் பார்த்த சாரதி அவர்களின் பட அலசல்கள் அற்புதமாக அமைந்துள்ளன. குறிப்பாக மற்ற மொழிகளில் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய ஆய்வு சிறப்பானது. நவராத்திரி திரைப்படத்தினைப் பொறுத்த வரையில் ஹி்ந்தியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாததற்கு பல காரணங்களைக் கூற முடிந்தாலும் முழு முதற் காரணம் நடிகர் திலகத்தின் நடிப்புக்கு முன் மற்றவை மிகவும் சாதாரணமாக தோற்றம் அளித்ததாகவும் கூறலாம். இருந்தாலும் நவராத்திரியை அவர்கள் முடிந்த அளவிற்கு சிறப்பாக எடுத்திருந்தனர் என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக லட்சுமிகாந்த் பியாரிலால் இசையில் பாடல்கள் பிரபலமடைந்தன. நம்முடைய மொழி பாடல்களுக்கும் அவர்களின் பாடல்களுக்கும் நிச்சயம் ஒப்பீடு செய்ய முடியாது.
அப்படி நயா தின் நயா ராத் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை இங்கே நாம் காணலாம். இது இரவினில் ஆட்டம் பாடலின் ஹிந்தி வடிவம். தமிழில் இடம் பெற்ற பாடலை மறந்து விட்டு இப்பாடலைப் பார்ப்பது நன்று. ஏனென்றால் அவர்கள் ஹிந்தி திரையுலகிற்கு ஏற்றவாறு பாடல் காட்சியைப் படமாக்கியிருந்தார்கள். பாடலைப் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=WGVWuj-55KU

அன்புடன்

டியர் ராகவேந்தர் அவர்களே,

தங்களுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகள். உங்களைப் போன்றோரின் பாராட்டுக்கள் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் ஒவ்வொரு முறை ஒரு நடிகர் திலகத்தைப் பற்றிய படத்தைப் பற்றிப் பதிவிட்ட உடனேயே, நீங்கள் அனைவரும் (நீங்கள், முரளி சார், பம்மலார், சாரதா மேடம், பாலா, மற்றும் பலர்) பதில் பாராட்டு அளிப்பதோடு நிற்காமல், அந்தப் படங்களைப் பற்றி மேலும் பல நுணுக்கமான விவரங்களை உடனுக்குடன் அளித்து, மேலும் மேலும், இந்தத் திரிக்கும், நடிகர் திலகத்துக்கும் வான் புகழை அளித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

நன்றியுடன்,

பார்த்தசாரதி

KCSHEKAR
23rd March 2011, 01:06 PM
Thanks Mr.Parthasarathy for Very good Review about NAVARATHIRI.

Thanks Mr.Pammalar for your Value added services to every review.

SoftSword
23rd March 2011, 06:39 PM
last three days three films, karnan, andha naal, paraasakthi... :notworthy:
kattabomman, dwlded, scheduled for tonite.
any other recommendations? like a must watch? any movies in which NT shows subtle acting skils too??

pammalar
23rd March 2011, 08:30 PM
Dear SoftSword,

An apple a day keeps the doctor away!

An NT film a day keeps all hassles away!

It is very thrilling & nice to know that you are watching NT movies for the past three days. Thanks a lot for sharing this info.

According to me, every movie of NT comes under the MUST WATCH category.

Anyway, My strong recommendations for your query are the following films:

1. Kappalottiya Thamizhan

2. Paasamalar

3. Navarathiri

4. Deivamagan

5. Uthamaputhran

6. Motor Sundaram Pillai

7. Thiruvilayadal

8. Thillana Mohanambal

9. Sivandha Mann

10. Deepam

More to come...

A Very Very Happy Viewing & Sweet Sivaji Dreams,
Pammalar.

pammalar
23rd March 2011, 09:19 PM
Dear SoftSword,

My strong recommendations continues:

11. Vietnam Veedu

12. Gauravam

13. Paavamannippu

14. Rajapart Rangadurai

15. Thiruvarutchelvar

16. Gnana Oli

17. Kai Kodutha Deivam

18. Pudhiya Paravai

19. Galatta Kalyanam

20. Raja

More to come...

Happy Viewing & Sweet Sivaji Dreams,
Pammalar.

parthasarathy
23rd March 2011, 09:21 PM
Thanks Mr.Parthasarathy for Very good Review about NAVARATHIRI.

Thanks Mr.Pammalar for your Value added services to every review.

Dear Shri. K.C. Shekar,

Thanks very much for your sincere appreciation.

Regards,

R. Parthasarathy

parthasarathy
23rd March 2011, 09:26 PM
last three days three films, karnan, andha naal, paraasakthi... :notworthy:
kattabomman, dwlded, scheduled for tonite.
any other recommendations? like a must watch? any movies in which NT shows subtle acting skils too??

Dear Mr. SoftSword,

Very happy to note that you too are a fan of the great Sachin. However, my happiness got doubled when I further note that you have been fortunate to watch 3 great NT movies in the last 3 days, continuously.

In fact, I would recommend a minimum of 150 movies for you to watch and enjoy NT and the max. is 305 (total no. of movies NT acted); but, it would be fitting that a veteran like Mr. Pammalar started indicating the list and hence, that will be ultimate. Please follow what Mr. Pammalar advises.

Regards,

R. Parthasarathy

SoftSword
23rd March 2011, 09:32 PM
thanks Pammalar and Parthasarathy...
too many movies to see.. and thats the main reason i cant decide to watch any movie all these days...
onnae onnu kudunga... patthuttu vandhu thirumba kekkaren...
NT'ya pudikkadha, avar nadippa pudikkadhu'nu solravangalukku neenga oru padam recommend panna endha padam pannuveenga? adha sollunga...

parthasarathy
23rd March 2011, 09:41 PM
thanks Pammalar and Parthasarathy...
too many movies to see.. and thats the main reason i cant decide to watch any movie all these days...
onnae onnu kudunga... patthuttu vandhu thirumba kekkaren...
NT'ya pudikkadha, avar nadippa pudikkadhu'nu solravangalukku neenga oru padam recommend panna endha padam pannuveenga? adha sollunga...

Dear Mr. SoftSword,

This will be most difficult question, even God may not be able to answer, as I, not only as a sincere NT fan, but, also as a person who happened to watch most of the brilliant performance of all the thespians in the film world (Tamil, Telugu, Malayalam, Kannada, Bengali, Hindi & English) feel that NT cannot be compared with anybody. Most of the veterans of veterans across the globe have already declared NT is the only Artiste who performed a variety of roles with equal ease, passion and composure than anybody. This is what makes him the most special and gifted Artiste.

Instead, let us continue to watch and enjoy NT perform.

Regards,

R. Parthasarathy

arthi2780
23rd March 2011, 09:42 PM
My all time favorite movie is "Karna" =>
1. Encounter with Indhiran
2. Diplomacy scene in the King's court
3. Refusal of a "post" in the War
4. (not for NT but for NTR => Assurance to Arjuna)

(My another Favorite movie is MayaBaazar )

Nice List, have watched them all. As I had posted somewhere in HuB that we got to urge the govt. or an assosiation to Re-Master these classics and screen it to the world audience. (Not talking about VHS to VCD or VCD to DVD but a quality sound and image mastering but not to be colored. The B&W tone is the best to watch anyone perform notably NT) .

SS, you can start with these (in any order you wish) "Thiruvilayadal", "Navarathiri", "Gnana Oli" & "Pudhiya Paravai".

SoftSword
23rd March 2011, 09:44 PM
Sir, naan NT'ku edhira edhum sollaliyae...
orae oru padam nach'nu sollunga'nu dhane keaten.
maybe enakku inga sariya pesa therilanu nenakkiren :)

SoftSword
23rd March 2011, 09:47 PM
thanks arthi...
the thing is, i have seen all the movies u suggested and the other suggested here, its not like i have never watched NT movies, but only before a long time.
My mom and her younger bro are great NT fans, rendu perum onnaa ukkandhu 'malarndhu malaraadha' pattellaam paadunvaanga enga munnaadi.

pammalar
23rd March 2011, 10:18 PM
thanks Pammalar and Parthasarathy...
too many movies to see.. and thats the main reason i cant decide to watch any movie all these days...
onnae onnu kudunga... patthuttu vandhu thirumba kekkaren...
NT'ya pudikkadha, avar nadippa pudikkadhu'nu solravangalukku neenga oru padam recommend panna endha padam pannuveenga? adha sollunga...

டியர் SoftSword,

அப்படி ஒரு படத்தைத் தனித்துக் கூறுவது என்னைப் பொறுத்தவரை மிக மிகக் கடினம். பெருமதிப்பிற்குரிய நமது நண்பர் திரு.பார்த்தசாரதி அவர்கள் குறிப்பிட்டது போல், நடிகர் திலகம் நடித்த 306 திரைப்படங்களில், குறைந்தபட்சம் சற்றேறக்குறைய 150 படங்கள் அவசியம் பார்க்க வேண்டியவை.

நடிகர் திலகம் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும், 'என் உயிரும், உள்ளமும், உணர்வும் இந்தப் படத்தில் தானே' என்று தான் நடித்த ஒரு படத்தைப் பற்றி கருத்து கூறியிருக்கிறார். அந்தப் பெரும் பெருமைக்குரிய பொற்காவியம் "கப்பலோட்டிய தமிழன்".

இன்று இரவு "வீரபாண்டிய கட்டபொம்ம"னை தரிசிக்கப் போகும் தாங்கள் நாளை இரவு "கப்பலோட்டிய தமிழ"னை தரிசியுங்கள்.

ஈரேழு பதினான்கு லோகங்களிலும் நடிகர் திலகமே தலைசிறந்த நடிகர் என்பது எந்தவித சந்தேகமுமின்றிப் புரிய வரும்!

தங்களுக்கு தற்பொழுது இருக்கும் தேசபக்தி இன்னும் பற்பல மடங்கு உயர்ந்துவிடும்.

'ஒரு' நடிகர் திலகத்தின் படம் என்று நீங்கள் கேட்டதால், நான் உங்களுக்கு அன்புடன் பரிந்துரைப்பது "கப்பலோட்டிய தமிழன்".

அன்புடன்,
பம்மலார்.

SoftSword
23rd March 2011, 10:25 PM
Pammalaar, thats what i wanted. now kappalottiya thamizhan first preference over kattabomman.
nanri.

pammalar
24th March 2011, 02:12 AM
Pammalaar, thats what i wanted. now kappalottiya thamizhan first preference over kattabomman.
nanri.

டியர் SoftSword,

வாய்ப்புக்கு நன்றி!

நடிகர் திலகம் தனது உயிரும், உள்ளமும், உணர்வும் "கப்பலோட்டிய தமிழன்" காவியத்தில்தான் எனக் கூறியிருந்ததை பதிவிட்டிருந்தேன்.

அதைப் போல் நடிகர் திலகத்தின் ரசிகர்களாகிய எங்களுக்கு (உங்களையும் சேர்த்து நமக்கு), 'நமது உயிரும், உள்ளமும், உணர்வும் இந்தப் படத்தில் தானே' எனப் பெருமை பொங்கக் கூறவும் ஒரு பொற்காவியம் இருக்கிறது. அதுதான் காலத்தை வென்ற காதல் காவியமான "வசந்த மாளிகை". நான் "வசந்த மாளிகை" பற்றி சில வாரங்களுக்கு முன் நமது திரியின் ஒரு பதிவில் எழுதியதையே உங்களுக்காக மீண்டும் குறிப்பிடுகிறேன். 'சிவாஜி அவர்களை நேரில் பார்க்காத கண்கள் இருக்கலாம். ஆனால், "வசந்த மாளிகை"யை திரையில் காணாத கண்கள் இருக்க முடியாது, இருக்கவே முடியாது.'

தங்களது மாற்றியமைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலின் படி இன்று இரவு "கப்பலோட்டிய தமிழ"னை தரிசிக்கும் தாங்கள், நாளை இரவு "வீரபாண்டிய கட்டபொம்ம"னை தரிசியுங்கள். நாளைய மறுநாள் "வசந்த மாளிகை"க்கு விஜயம் செய்யுங்கள்!

நடிகர் திலகத்தின் Range, Creativity, Variety, Versatality, Adaptability எல்லாம் தெரிய வரும்!

குறிப்பு:
1. நடிகர் திலகத்தின் 'கட்டாயம் பார்க்க வேண்டிய படங்கள்' பட்டியலை உங்களுக்காக நான் பதிவிட்ட போது, அதில் ஏற்கனவே நீங்கள் பார்த்திருந்த படங்களான "கர்ணன்", "அந்த நாள்", "பராசக்தி" மற்றும் பார்க்கப் போகும் படமான "வீரபாண்டிய கட்டபொம்மன்" ஆகிய படங்களை நான் குறிப்பிடாததற்குக் காரணம் நீங்கள் ஏற்கனவே அப்படங்களைப் பற்றி குறிப்பிட்டதனால்தான். இந்த நான்கு காவியங்களுமே அப்பட்டியலில் அவசியம் இடம்பெற வேண்டியவை.

2. பட்டியலில் உள்ள ஒவ்வொரு படத்தினுடைய வரிசை எண்ணும் அந்தப் படத்திற்கான Rank அல்ல என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படமும் தலைசிறந்ததே!

3. அடுத்தடுத்த பதிவுகளில் இப்பட்டியலைத் தொடர்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th March 2011, 02:24 AM
Dear Mr. SoftSword,

Very happy to note that you too are a fan of the great Sachin. However, my happiness got doubled when I further note that you have been fortunate to watch 3 great NT movies in the last 3 days, continuously.

In fact, I would recommend a minimum of 150 movies for you to watch and enjoy NT and the max. is 305 (total no. of movies NT acted); but, it would be fitting that a veteran like Mr. Pammalar started indicating the list and hence, that will be ultimate. Please follow what Mr. Pammalar advises.

Regards,

R. Parthasarathy

டியர் பார்த்தசாரதி சார்,

மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே என்பதனை தங்களின் பதிவு பறைசாற்றுகிறது. தங்களது உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது உயர்வான உளப்பூர்வமான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th March 2011, 02:48 AM
My all time favorite movie is "Karna" =>
1. Encounter with Indhiran
2. Diplomacy scene in the King's court
3. Refusal of a "post" in the War
4. (not for NT but for NTR => Assurance to Arjuna)

(My another Favorite movie is MayaBaazar )

Nice List, have watched them all. As I had posted somewhere in HuB that we got to urge the govt. or an assosiation to Re-Master these classics and screen it to the world audience. (Not talking about VHS to VCD or VCD to DVD but a quality sound and image mastering but not to be colored. The B&W tone is the best to watch anyone perform notably NT) .

SS, you can start with these (in any order you wish) "Thiruvilayadal", "Navarathiri", "Gnana Oli" & "Pudhiya Paravai".

arthi,

My sincere thanks to you for praising the list. FULL & ALL CREDIT TO NT.

Your suggestion to secure the immortal classics is really a grand & wise one. Let's pray & hope it materializes soon!

Warm Wishes,
Pammalar.

pammalar
24th March 2011, 03:13 AM
அன்புள்ள பம்மலார் அவர்களே,

தங்களுடைய பாராட்டு என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் பதிவு செய்யும் ஒவ்வொரு படத்திற்கும் விடாமல் உடனேயே அதற்கு பதில் பாராட்டு செய்து, அந்தப் படத்தைப் பற்றிய மேலும் சிறப்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி என்னை உற்சாகப்படுத்துவதோடு நிற்காமல், இந்தத் திரிக்கு மேலும் சுவையையும் சுவாரஸ்யத்தையும் கூட்டி விடுகிறீர்கள்.

நன்றியுடன்,

பார்த்தசாரதி

டியர் பார்த்தசாரதி சார்,

தங்களது பாராட்டுக்கு நன்றி! தங்களது மேன்மையான ஆழமான ஆய்வுப்பதிவுகள் - குறிப்பாக தாங்கள் எழுதிய 'நடிகர் திலகமும் ரீமேக் படங்களும்' தொடர் கட்டுரையும் மற்றும் தற்பொழுது எழுதி வரும் 'நடிகர் திலகமும் அவரது படங்கள் பிறமொழிகளிலும்' தொடர் கட்டுரையும் - நடிகர் திலகம் குறித்த பற்பல புதிய தகவல் பரிமாணங்களை அள்ளி அளிக்கின்றன. அதற்காகவே தங்களுக்கு வண்டிவண்டியாக நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்!

அன்புடன் கலந்த நன்றிப்பெருக்குடன்,
பம்மலார்.

pammalar
24th March 2011, 03:26 AM
Thanks Mr.Parthasarathy for Very good Review about NAVARATHIRI.

Thanks Mr.Pammalar for your Value added services to every review.

Dear Chandrashekaran Sir,

Thanks for your invaluable appreciation!

Warm Wishes,
Pammalar.

jaiganes
24th March 2011, 03:30 AM
திரு. பார்த்தசாரதி அவர்களின் தொடர் மிகவும் அருமை.
சஞ்சீவ் குமார் அவர்களைப்பற்றி நாம் இங்கு நிச்சயமாக நினைவு கூற வேண்டும்.
நவராத்திரியைப்போலவே, "ஞான ஒளி" படத்தையும் அவர் மிகவும் ஈடுபாட்டுடன் ஹிந்தியில் மீள் ஆக்கம்
செய்தார். அவருக்கே உரிய பாணியில் நடிகர் திலகம் நடித்த பாத்திரத்தை அவர் செய்தது எனக்கு மிகவும் பிடிக்கும்.
பல பேட்டிகளில் அவர் நடிகர் திலகத்தைப்பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். பாரத விலாஸ் படத்தின் மிகப்பிரபலமான "இந்திய நாடு" பாடலிலும்
தோன்றி தன் அபிமானத்தை வெளிப்படுத்தினார். வடக்கில் மிகவும் அநாயசமான நடிப்பை வெளிப்படுத்திய சில நடிகர்களில் அவர் ஒருவர்.
ஞான ஒளி படத்தையும் அதன் பிற மொழி ஆக்கங்களைப்பற்றியும் பார்த்தசாரதி அவர்கள் மேலும் எழுதுவார் என்று நான் நம்புகிறேன்.
ஆவலுடன் எதிர்பார்க்கவும் செய்கிறேன்.

pammalar
24th March 2011, 03:47 AM
Dear SoftSword,

NT's 'must watch' list continues:

21. Bhaagappirivinai

22. Padikkaadha Maedhai

23. Paalum Pazhamum

24. Thangappathakkam

25. Enga Mama

26. Irumbu Thirai

27. Sabash Meena

28. Ennai Pol Oruvan

29. Thanghai

30. Annayin Aanai

more to come...

Happy Viewing,
Pammalar.

pammalar
24th March 2011, 03:54 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 187

கே: "தேவர் மக"னுக்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு மூலகாரணம் நடிகர் திலகமா? கமலா? பரதனா? (இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி)

ப: இப்படி ஒரு கேள்வி கேட்கும் அளவுக்கு அவர்கள் செய்த கூட்டு வேள்விதான் காரணம்!

(ஆதாரம் : பொம்மை, டிசம்பர் 1992)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th March 2011, 04:06 AM
Dear SoftSword,

Continuation of NT's 'must watch' list:

31. Uyarndha Manidhan

32. Aalayamani

33. Babu

34. Bale Pandia

35. Avan Dhaan Manidhan

36. Paarthal Pasi Theerum

37. Ooty Varai Uravu

38. Saraswathi Sabatham

39. Amara Deepam

40. Savaale Samaali

more to come...

Happy Viewing,
Pammalar.

pammalar
24th March 2011, 04:22 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 188

கே: இதுவரை வெளிவந்த சிவாஜியின் 138 படங்களில் "வியட்நாம் வீடு" முதலிடம் பெறுகிறது என்பது என் கருத்து. நீங்கள்...? (ஆ.பழனி, பள்ளிகொண்டா)

ப: அவரது "கப்பலோட்டிய தமிழன்" படத்திற்கு அடுத்து எதை எப்படி வேண்டுமானாலும் வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள்.

(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th March 2011, 04:43 AM
Dear SoftSword,

NT's 'must watch' list continues:

41. Sumathi En Sundari

42. Kandhan Karunai

43. Deivappiravi

44. Raman Ethanai Ramanadi

45. Raja Raja Chozhan

46. Padithal Mattum Podhuma

47. Aandavan Kattalai

48. Enghal Thanga Raja

49. Sorgam

50. Manohara

more to come...

Happy Viewing,
Pammalar.

pammalar
24th March 2011, 05:09 AM
Dear SoftSword,

List of NT's 'must watch' movies continues:

51. Pachchai Vilakku

52. Thirumbip Paar

53. Nenjirukkum Varai

54. Bharatha Vilas

55. Pathibakthi

56. Pattikkaadaa Pattanamaa

57. Thirudan

58. Moondru Deivanghal

59. Punarjenmam

60. Paar Magale Paar

more to come...

Happy Viewing,
Pammalar.

pammalar
24th March 2011, 05:13 AM
Dear SoftSword,

List of NT's 'must watch' movies continues:

61. Kalyanam Panniyum Brahmachari

62. Vidivelli

63. Enghirundho Vandhaal

64. Iruvar Ullam

65. Thangappathumai

66. Lakshmi Kalyanam

67. Kaathavaraayan

68. Enga Oor Raja

69. Sampoorna Ramayanam

70. Ethiroli

71. Annai Illam

72. Mahakavi Kalidas

73. En Thambi

74. Mannavan Vandhaanadi

75. Kulamagal Raadhai

more to come...

Happy Viewing,
Pammalar.

pammalar
24th March 2011, 05:31 AM
Dear SoftSword,

Continuation of NT's 'must watch' list:

76. Pesum Deivam

77. Needhi

78. Kuravanji

79. Pazhani

80. Thirisoolam

81. Selvam

82. Iru Malargal

83. Kaaval Deivam

84. Thookku Thookki

85. Sivakaamiyin Selvan

86. Makkalai Petra Maharasi

87. Nichaya Thaamboolam

88. Arivaali

89. Thirumal Perumai

90. Raththath Thilagam

more to come...

Happy Viewing,
Pammalar.

pammalar
24th March 2011, 05:49 AM
Dear SoftSword,

NT's 'must watch' list continues:

91. Kungumam

92. Thangachurangam

93. Muradan Muthu

94. Muthal Thedhi

95. Vanangaamudi

96. Andhamaan Kaadhali

97. Koondukkili

98. Annan Oru Koil

99. Ethirpaaraadhadhu

100. Thyaagam

more to come... [INTERVAL]

Happy Viewing,
Pammalar.

parthasarathy
24th March 2011, 10:02 AM
Sir, naan NT'ku edhira edhum sollaliyae...
orae oru padam nach'nu sollunga'nu dhane keaten.
maybe enakku inga sariya pesa therilanu nenakkiren :)

டியர் Mr. SoftSword ,

நானும் கூட தப்பாக எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை, நான் என் கருத்தை வெளிப்படுத்தியவிதம் அப்படி இருந்திருக்கலாம்.

நீங்கள் கேட்ட விதம் ஒரு வேளை என்னை அப்படி பதிலளிக்க வைத்திருக்கலாம். மற்றபடி, உங்களை நான் தப்பாக நினைக்கவில்லை.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னர், பொம்மை மாத இதழில், நடிகர் திலகம் தொடர்ந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தபோது, அவரிடம் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, அதாவது, நீங்கள் இதுகாறும் நடித்த படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த, மற்றும் மன நிறைவைத் தந்த படம் எது? என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில்:
"என் நினைவில் என்றும் கப்பலோட்டிக்கொண்டிருக்கிறானய்யா அந்தத் தமிழன்!" என்பது தான். இது பற்றி மேலும் சிறப்பாக திரு பம்மலார் அவர்களே கூறிவிட்டார். அதாவது, திரு வ.உ.சி. அவர்களின் மகனே, இந்தப் படத்தைப் பார்த்து விட்டு, நடிகர் திலகத்திடம், நான் என் தந்தையையே மறுபடியும் பார்த்தது போல் உணர்ந்தேன்! என்று கூறியது ஒன்று போதும்.

நடிகர் திலகத்தின் பற்பல திறமைகள் மற்றும் சாதனைகளைப் பட்டியலிடுவது மிக மிகக் கடினம் என்றாலும், இப்படிக் கூறுவது ஓரளவிற்கு சரியாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது, கற்பனை வளமும் கதாசிரியனின் எண்ணத்தை திரையில் வடிக்கத் தேவைப் படும் சாமர்த்தியமும், முனைப்பும் தான். அந்த வகையில், கீழ்க்கண்ட படங்களை எடுத்துக் கொள்ளலாம்:-

1 . படம் எடுக்கப் படும் காலகட்டத்தில், மக்களோ, நடித்த கலைஞனோ பார்க்காத ஒரு வரலாற்றுக் கதாபாத்திரத்துக்கு உருவகம் கொடுத்து அவன் இப்படித் தான் இருந்திருப்பான் என்று எல்லோரையும் நம்ப வைத்ததால்:-

வீரபாண்டியக் கட்டபொம்மன் (இந்தியாவில், நடிகர் திலகம் தான் முதன் முதலில், சர்வ தேசத் திரைப்பட விருது - அதாவது, மிகச் சிறந்த நடிகராக - வாங்கியது இந்தப் படத்தின் மூலம்தான்)

கப்பலோட்டிய தமிழன் (மேலே பார்க்கவும்.)

கர்ணன் (இதிகாசத்தில், எதிர்மறையான இந்தக் கதாபாத்திரத்தை, தன் ஒப்பற்ற கற்பனை மற்றும் நடிப்பால், நேர்மறையான கதாபாத்திரமாக மாற்றியமைத்து, ஒட்டுமொத்த மக்களின் அபிமானத்தையும் பெற்று, கர்ணனை, கதாநாயகனாக்கிக் காட்டியதால்!)

பரதன் (சம்பூர்ண ராமாயணம் படத்தில் - இந்தப் படத்தைப் பார்த்த திரு. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்கள் "பரதனைக் கண்டேன்" என்று கூறியது ஒன்று போதாதா?)
ராஜ ராஜ சோழன் (பல வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாடு அரசு பாட நூல் நிறுவனம், தமிழ் வரலாறு பற்றிய புத்தகத்தில் - அதாவது - பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியருக்கான புத்தகத்தில் - ராஜ ராஜ சோழனைப் பற்றி குறிப்பிட்ட போது, நடிகர் திலகம் ராஜ ராஜ சோழனில் இருக்கும் ஒரு ஸ்டில் போட்டோவைத் தான் அச்சேற்றியது). இதை விட வேறு என்ன பெருமை வேண்டும், நடிகர் திலகத்திற்கு?

2. கதாசிரியனின் கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த விதத்தில் (அதாவது, சமூகச் சித்திரங்கள்):-

சிக்கல் சண்முக சுந்தரம் (தில்லானா மோகனாம்பாள்) (ஒரு நிஜ நாதஸ்வரக் கலைஞன் - மற்றும் - சுய கெளரவம் மிக்க கலைஞனைக் கண் முன் நிறுத்திய படம்)

ப்ரெஸ்டிஜ் பத்மநாபன் (வியட்நாம் வீடு) (நடிகர் திலகமே இந்தப் படத்தைப் பற்றிக் கூறியது "மீண்டும் இது போன்ற ஒரு பாத்திரப் படைப்பு எப்போது எனக்கு வரும்?")

எஸ்.பி. சௌத்ரி (தங்கப் பதக்கம்) (தமிழ் நாட்டின் தலைமைக் காவல் அதிகாரியே, அவருடைய அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் இன்ச்பெகடர்களை, இந்தப் படத்தைப் பார்க்கும்படிப் பரிந்துரைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!)

தந்தை, இரண்டு மகன்கள் என்று மூன்று வித்தியாசமான வேடத்தில் வாழ்ந்ததால் (தெய்வ மகன் - இந்தியாவில், இது தான் முதலில் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம்! ஒரு வேளை இரண்டாவது படமோ! இதற்கு முன்னர், சத்யஜித் ரேயின் படமொன்று பரிந்துரைக்கப்பட்டதாக நினைவு. இருந்தாலும், இந்தத்திரியின் விற்பன்னர்கள்,
திரு ராகவேந்தர், திரு முரளி, திரு பம்மலார் மற்றும் சாராத மேடம் போன்றவர்கள் இது பற்றி விரிவாக சொல்லக்கூடும்.)

அப்பாவி வேலைக்காரன் ரங்கன் (படிக்காத மேதை - கரையாத கல் நெஞ்சங்களையும் கரைய வைத்ததால்!)

பாசமிகு அண்ணன் (பாசமலர் - என்றும், இன்றும், என்றும் சகோதார பாசத்துக்கு அளவுகோலாகவிருப்பதால்!)

பாரிஸ்டர் ரஜினிகாந்த் (கெளரவம் - ஒரு மேல்தட்டு உலகத்தின், வக்கீலைக் கண் முன் நிறுத்தியதால் - அதுவும் இரு வெவ்வேறு வேடங்களில் நடித்தது.)

இதுபோல் இன்னும் எத்தனை எத்தனையோ படங்களைச் சொல்லலாம். இருந்தாலும், நான் நடிகர் திலகத்தின் பல்வேறு வகையான படங்களையும், அதில் அவரது நடிப்பையும் பற்றி விரிவான வகையில், வேறு வேறு தலைப்புகளில், எழுத ஆரம்பித்து, அது இப்போது தான், ஒரு ஐந்து சதவிகிதம் முடிந்திருப்பதால், மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.

அன்புடன்,

பார்த்தசாரதி

groucho070
24th March 2011, 02:32 PM
SS, my take on the recommended films by Pammalar-sir after the title. Sir, where is the first 20?
Dear SoftSword,

NT's 'must watch' list continues:

21. Bhaagappirivinai - pre16 Vayathinile performance, moving, funny and superb wits by MR Radha.

22. Padikkaadha Maedhai - preDharmadurai performance, fast paced, moving and funny, superb support by Ranggarao

23. Paalum Pazhamum - Grounded couple drama, NT very restrained.

24. Thangappathakkam - everyone knows this, needless to say psychologically disturbing film. Freud will have field day analysing this.

25. Enga Mama - Fun, again a very restrained NT, and very stylish too. Good support from JJ.

26. Irumbu Thirai - TMS get to do a Tyagarajar Bagavathar song. The gorgeous Vyjanthimala supports.

27. Sabash Meena - Funny, funny, funny. Early hero/comedian tage, pre-Boss enkira Baskaran.

28. Ennai Pol Oruvan- Haven't seen this.

29. Thanghai - :oops: same as above, but was told first full action film for NT

30. Annayin Aanai - Eerie. NT's dark side.

more to come...

Happy Viewing,
Pammalar.

groucho070
24th March 2011, 02:37 PM
Got it sir, SS my continuation riding on Pammalar-sir's list

1. Kappalottiya Thamizhan - Brilliant historical depiction. Sad truth towards the end.

2. Paasamalar - Soolanuma, intha title partale enakku kannula tanni varuthu :sad:

3. Navarathiri - 9 roles, to me not all worked, maybe seven, but fantastic exercise in stretching oneself as a talent. Textbook for acting.

4. Deivamagan - I am not qualified to talk about this gigantic monster of a movie. Performance-wise untouchable. I liked the final shoot-out, very noir-ish.

5. Uthamaputhran - Fun, wicked, brilliant. NT laid the template for Rajini's style here.

6. Motor Sundaram Pillai - Grounded family drama, long time haven't seen it.

7. Thiruvilayadal - Fun, great supporting stars as usual with A.P. Nagarajan. NT really having fun here.

8. Thillana Mohanambal - Same as above. NT is just one of the many colourful characters. P_R will tell you more.

9. Sivandha Mann - Action flick with patriotic background. The historical part will baffle you, but I advise you to just relax enjoy the fun and Kanchana. Features one of my fav cabaret scene, Pattattuu raaane paaarkum paaarvaiiiii.....

10. Deepam - Very restrained, wronged man role.

groucho070
24th March 2011, 02:44 PM
Pammalar sir, sorry for hijacking your list, can't resist my temptation
Dear SoftSword,

My strong recommendations continues:

11. Vietnam Veedu - Powerful, scorching, many many edge of the seat moment. If NT doesn't move you, you are made of granite.

12. Gauravam - Same as above, my favourite of NTs, a lot need to be written about this film. It's all about attitude, attitude & attitude.

13. Paavamannippu - Plum will explain.

14. Rajapart Rangadurai - Moving at the same time exciting, get to see NT do stage show on film, including Hamlet!!

15. Thiruvarutchelvar - Not one of my fav amongst APN/NT devotional films, but they are fun nevertheless.

16. Gnana Oli - Brilliant show of transformation of a character from humble carpenter to a powerful businessman. Allusions plenty to Christianity. Arun = second coming? :wink:

17. Kai Kodutha Deivam - Was a bit slow for me. Any film with SSR in it will slow things down for me. Watch for NT and Padhmini's superb chemistry.

18. Pudhiya Paravai - Ah, what a thriller. What a performance. What a beauty (Sowcar, yes!). The ending-ke Oscar kudukkalam.

19. Galatta Kalyanam - Funny, another hero/comedian tag team. NT get beaten up pathetically, you would never have seen this in any other heros film.

20. Raja - Action. Saradha mdm have written extensively on this.

More to come...

Happy Viewing & Sweet Sivaji Dreams,
Pammalar.

groucho070
24th March 2011, 02:53 PM
More apologies sir,
Dear SoftSword,

Continuation of NT's 'must watch' list:

31. Uyarndha Manidhan - Interesting history about this film, where Asokan purportedly stole the show in one scene, only I learn later that he did a very small percentage of what NT taught him. NT showing what subtlety is. Sowcar's fantastic here.

32. Aalayamani - Meena bommai. Mystery. Murder. NT shows his dark side. Sati suttathadaaa....

33. Babu - Amazing performance. How we take small things for granted. Babu = gratitude in film form.

34. Bale Pandia - pre-MMKR screwball comedy.

35. Avan Dhaan Manidhan - I wrote about it recently here (http://grouchydays.blogspot.com/2011/02/sivaji-sadists-avanthan-manithan.html).

36. Paarthal Pasi Theerum - Kamal's first double role, and action sequence. Go figure.

37. Ooty Varai Uravu - There's drama on the otherwise light hearted flick. Highlight: Pottu Vaitha Mugamo = mom's favourite NT song sequence.

38. Saraswathi Sabatham - My faaaaavoourite APN/NT movie. Wrote extensively, I think there must be a link on the first page.

40. Savaale Samaali - Pre-Patikada Pattanama NT/JJ clash. Emphasis on socialism, workers vs employers issue. more to come...

Happy Viewing,
Pammalar.

groucho070
24th March 2011, 02:58 PM
more apology follows to Pammalar-sir
Dear SoftSword,

NT's 'must watch' list continues:

41. Sumathi En Sundari - Wait, I got this mixed up with Ooti Varai Uravu. Can you switch it back, thanks. Athey combination, the song I mentioned is here.

42. Kandhan Karunai - Again, not my favourite because NT's role is small, though the impact was as huge as the giant he becomes in one scene...oops...theriyama solliten.

44. Raman Ethanai Ramanadi - Saradha mdm wrote extensively on this. Moving tale, opening scenes performance pramatham!

45. Raja Raja Chozhan - Despite what you think its a smaller character drama. More related to the kids rather than the king himself. NT merely lent his presence.

46. Padithal Mattum Podhuma - Nan parta pennai nee parkavillai. Confusion, padikkatha thambi, paditta annan, lots of brotherly love, lots of mixups.

47. Aandavan Kattalai - Devika. Devika. Devika. Devika. Devika. Devika. Sigh.

48. Enghal Thanga Raja - Lots of angle here. When you are young, you will side younger NT, but if you are older, daddy NT. Go figure.

49. Sorgam - Stylish NT, Ponmagal Vanthal. Not exactly a smart man he plays.

50. Manohara - Our own Hamlet. Smashing performance. One of the most imitated performances.

more to come...

Happy Viewing,
Pammalar.

groucho070
24th March 2011, 03:04 PM
Pammalar sir is getting assaulted by my apologies for conveniently stealing his list.
Dear SoftSword,

List of NT's 'must watch' movies continues:

51. Pachchai Vilakku - Women need education. That's the point, but there's murder in between.

52. Thirumbip Paar - anti-hero NT. Or should I say, anti-NT :wink:

53. Nenjirukkum Varai = Sridhar's pre-varumayin niram sigappu unemployed youth. No makeup. Emphasis more on romance (triangle) than the social situation. V.S. Gopalakrishan in a very moving role. Peeeterr.....

56. Pattikkaadaa Pattanamaa = Fun, fun movie. NT and JJ's clash = awesome! A bit old-fashioned value but fun nevertheless.

57. Thirudan = Action...can't quite remember the film.

58. Moondru Deivanghal = Fun, NT is merely one of the three main roles. Sivakumar in tight pants and show stealer VK Ramasay is at it again.

60. Paar Magale Paar = Vijayakumari would ruin it for you, but watch it nevertheless. Got one of the best TMS/PBS song.

more to come...

Happy Viewing,
Pammalar.

groucho070
24th March 2011, 03:09 PM
Pammalar sir is coming with uruttukattai
Dear SoftSword,

List of NT's 'must watch' movies continues:

62. Vidivelli = Early Sridhar. In fact, first with NT methings. All about timing and situation and getting out of a sticky one.

63. Enghirundho Vandhaal = Oh boy, year by year this film just getting more and more attention from me. NT the mad poet? Watch.

66. Lakshmi Kalyanam = One of my fav. Quiet little film. Simple plot, get her married. NT and VKR makes a brilliant father and son team.

68. Enga Oor Raja = There I go again, confusing it with Enggal Tangga Raja. Sorry about it. Refer to the other comment please.

69. Sampoorna Ramayanam = NT as Barathan. Not even main role. Eats everyone up and burps.

70. Ethiroli = Brilliant psychological thriller. Only KB/NT movie. Wrote extensively before.

more to come...

Happy Viewing,
Pammalar.

groucho070
24th March 2011, 03:15 PM
I am hiding from Pammalar sir, kaatikodutidathengga
Dear SoftSword,

Continuation of NT's 'must watch' list:

77. Needhi = Nalai muthal kudikka matten, this song will stick on your mind for days. Excellent performance of a caged beast.

79. Pazhani = Elder brother, too obsessed with the agricultural life. Aarodum mannil enggum neerodum...

80. Thirisoolam = Three NT. Not my favourite, but apparently his biggest bo success.

84. Thookku Thookki = If adventure has a name, and this before Indiana Jones, its this film.

85. Sivakaamiyin Selvan = More known for songs than the film itself. Not as good as the Hindi original but NT makes it tick.

86. Makkalai Petra Maharasi = Remember "Manapaara maadu katti, a-janggu-janngu-cha" remix? Original here. Manvasanai.

87. Nichaya Thaamboolam = I remember hating this movie as a kid. But I was not a fan then, haven't seen it since.

89. Thirumal Perumai = APN/NT = magic continues.

90. Raththath Thilagam = See Kannadhasan singing his own song with TMS song about much misunderstood apparently stood for his wine and women thing, which is not.

more to come...

Happy Viewing,
Pammalar.

Plum
24th March 2011, 05:35 PM
Paavamannippu - Plum will explain.
NT-Devika. Must see. See Also:Andavan Kattalai.

goldstar
24th March 2011, 06:39 PM
More apologies sir,

Grucho,

Poddu Vaitho Muhamo is not from Ooty Varai Ooravu, its from Sumathi En Sundari.... First SPB song for NT.

Cheers,
Sathish

pammalar
24th March 2011, 11:32 PM
Dear Rakesh Sir,

As a whole, we all belong to NT fraternity. There is no need for sorries & apologies. Like all of us here, You have every right, will & wish to go through the list and post your esteemed comments in the same.

I am not an MLA or an MP to hold a uruttukattai or a mike in my hands.(நகைச்சுவைக்காக)

I am extremely happy that the list now sports a wonderful & informative look by way of your one-liners. Your one-liners, Wah! What to say, they are simply outstanding. They give the reader a good glimpse about the movie in a nutshell. My special kudos to you for implementing this innovative idea. Please continue this great effort in the forthcoming lists too.

There are some corrections in a few one-liners, which will be done through my subsequent posts.

Thanks a lot!

FULL & ALL CREDIT TO OUR BELOVED NT!

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
25th March 2011, 02:34 AM
Dear Rakesh Sir,

3. Navarathiri - 9 roles, to me not all worked, maybe seven, but fantastic exercise in stretching oneself as a talent. Textbook for acting.

Excellent comment!

12. Gauravam - Same as above, my favourite of NTs, a lot need to be written about this film. It's all about attitude, attitude & attitude.

இந்தப் படத்தப் பத்தி நம்ம ரங்கன் சார் பின்னி எடுத்துடுவாரே!

17. Kai Kodutha Deivam - Was a bit slow for me. Any film with SSR in it will slow things down for me. Watch for NT and Padhmini's superb chemistry.

It's NT with Savithri. NT & Padmini rock in Pesum Deivam. (I think you got a bit jinxed with the 'Deivam' suffixes).

18. Pudhiya Paravai - Ah, what a thriller. What a performance. What a beauty (Sowcar, yes!). The ending-ke Oscar kudukkalam.

சௌகார் மட்டுமா! சரோவும் தானே! ரங்கன் சாரை கேட்டுப் பாருங்கள்!

20. Raja - Action. Saradha mdm have written extensively on this.

அவங்க எழுதுறதுக்கு கேக்கணுமா!

28. Ennai Pol Oruvan- Haven't seen this.

நீங்க இந்த படத்த பாக்கலைன்னு சகோதரி சாரதாகிட்ட சொல்லமாட்டேன்!

33. Babu - Amazing performance. How we take small things for granted. Babu = gratitude in film form.

Superb remark!

37. Ooty Varai Uravu - There's drama on the otherwise light hearted flick. Highlight: Pottu Vaitha Mugamo = mom's favourite NT song sequence.

41. Sumathi En Sundari - Wait, I got this mixed up with Ooti Varai Uravu. Can you switch it back, thanks. Athey combination, the song I mentioned is here.

You got it right by yourself & also thanks to goldstar for pointing out this subsequently.

அதே combo வராதே! ஊட்டியில் NT, விஜயா. சுமதியில் NT,JJ. பாட்டும் அங்கே TMS,PS. சுமதியிலோ SPB, வசந்தா(ஹம்மிங்) இந்தப் பாட்டிற்கு மட்டும்!

47. Aandavan Kattalai - Devika. Devika. Devika. Devika. Devika. Devika. Sigh.

ஆலயக்கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இஙகேஏஏ!

48. Enghal Thanga Raja - Lots of angle here. When you are young, you will side younger NT, but if you are older, daddy NT. Go figure.

68. Enga Oor Raja = There I go again, confusing it with Enggal Tangga Raja. Sorry about it. Refer to the other comment please.

ராகேஷுக்கு ஏன் "ராஜ" குழப்பம்?!

69. Sampoorna Ramayanam = NT as Barathan. Not even main role. Eats everyone up and burps

நடிப்பு பகாசுரன் ஆயிற்றே!

மீண்டும் நன்றிகள் திரு.ராகேஷ்!

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
25th March 2011, 02:59 AM
டியர் SoftSword,

நடிகர் திலகத்தின் 'கட்டாயம் காண வேண்டிய படங்கள்' பட்டியலில் 100 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு விட்டன, மேலும், "கர்ணன்", "அந்த நாள்", "பராசக்தி", "வீரபாண்டிய கட்டபொம்மன்" படங்களை தாங்கள், நான் இந்தப்பட்டியலைத் தொகுப்பததற்கு முன்பே குறிப்பிட்டிருந்தீர்கள். "வசந்த மாளிகை"யை நான் தனியொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆக, இந்த ஐந்து படங்களையும் ஒரு சிறப்புப் பட்டியலில் தொகுப்போம்!

NT's 'MUST MUST WATCH' movies continues:

A) Veera Pandiya Kattabomman

B) Karnan

C) Parasakthi

D) Andha Naal

E) Vasantha Maaligai

Warm Wishes,
Pammalar.

pammalar
25th March 2011, 03:43 AM
Dear SoftSword,

NT's 'must watch' list continues: [after the first interval]

101. Santhi

102. Kulamaa Gunamaa

103. Tenali Raman

104. Neelavaanam

105. Paavai Vilakku

106. Kalvanin Kaadhali

107. Kavarimann

108. Uthaman

109. Grahappravesam

110. Ambikapathi

111. Naan Petra Selvam

112. Rangoon Radha

113. Avan Oru Sarithiram

114. Pennin Perumai

115. Vilayaattu Pillai

116. Raja Rani

117. Marutha Naattu Veeran

118. Pudhayal

119. Harichandra

120. Thavappudhalvan

121. Thangamalai Rahasiyam

122. Maragadham

123. Imayam

124. Chittoor Rani Padmini

125. En Magan

more to come... [INTERVAL]

Happy Viewing,
Pammalar.

goldstar
25th March 2011, 09:45 AM
Dear Raghavendra,

In the previous part (5 or 6) found the news that you and Mr. Murali Srinivas attended "Rasigan" program in Kalaigar TV for NT. Do you have that video or link, if so please send it.

Parthasarathy sir, please send your mobile , will give a call and share NT news.

Cheers,
Sathish

RAGHAVENDRA
25th March 2011, 02:26 PM
Dear Sathish,
Yes, Murali Sir and I attended as participants. I shall try to find out if I am having a copy and if so, the way how we can share it.

RAGHAVENDRA
25th March 2011, 02:44 PM
பல நண்பர்கள் கமலா பிக்சர்ஸ் பாலாடை படத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன். அப்படம் இன்னும் ஒளித்தகடு வடிவில் இந்தியாவில் வெளியிடப் பட்டதாகத் தெரியவில்லை. எனினும் இணையத்தில் அப்படம் பார்வைக்கு பதிவேற்றப்பட்டிருப்பதை அறிந்தேன். பீம்சிங்-நடிகர் திலகம் - கே.வி.மகாதேவன் கூட்டணியில் வெளிவந்த இருபடங்களில் ஒன்று பாலாடை, மற்றது படிக்காத மேதை. பத்மினி, கே.ஆர். விஜயா இருவரும் இணைந்து நடித்த படம். இதே போன்ற கதையமைப்பில் உள்ள மற்றொரு படமும் அப்போது பரபரப்பாக பேசப் பட்டதால் பாலாடை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் நடிகர் திலகத்தை இப்படத்தில் பார்ப்பவர் நிச்சயம் வியந்து போவார். Subdued and Shuttle performance தந்திருப்பார். குறிப்பாக உச்சக் கட்ட காட்சியில் அவருடைய நடிப்பு நம்மை மெய்மறக்க செய்யும். இப்படம் 9 பாகங்களாக பிரித்து பதிவேற்றப் பட்டுள்ளது. இதோ டி.எம்.எஸ். சுசீலா குரலில் எங்கே எங்கே என்கிற பாடல்.


http://www.youtube.com/watch?v=dPyhDW0hoeg

பாலாடை படத்தைக் காண

பாகம் 1

http://www.youtube.com/watch?v=pLF22aBeWK4
பாகம் 2

http://www.youtube.com/watch?v=J3cBR-0BVUM
பாகம் 3

http://www.youtube.com/watch?v=Zgtp89JU8yc

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
25th March 2011, 02:45 PM
பாலாடை தொடர்கிறது
பாகம் 4

http://www.youtube.com/watch?v=4jwp8h9PnFM
பாகம் 5

http://www.youtube.com/watch?v=1L0KenAUz7E
பாகம் 6

http://www.youtube.com/watch?v=JALWmySfQsQ
பாகம் 7

http://www.youtube.com/watch?v=qWcB1FUnjk4

RAGHAVENDRA
25th March 2011, 02:46 PM
பாகம் 8

http://www.youtube.com/watch?v=2MkTTdwey6Q
பாகம் 9

http://www.youtube.com/watch?v=3Y-85t9P6-g

குறிப்பாக பாகம் 9ன் துவக்கத்தில் மருத்துவ மனைக் காட்சியில் நடிகர் திலகத்தின் விழிகள் பேசும் மொழிகளைக் கேளுங்கள்.

KCSHEKAR
26th March 2011, 10:33 AM
Dear Mr.Ragavendran,

PAALADAI movie links are very good. PAALADAI - Aaha - Arumai. Thanks

saradhaa_sn
27th March 2011, 04:22 PM
Dear Rakesh Sir,

17. Kai Kodutha Deivam - Was a bit slow for me. Any film with SSR in it will slow things down for me. Watch for NT and Padhmini's superb chemistry.

It's NT with Savithri. NT & Padmini rock in Pesum Deivam. (I think you got a bit jinxed with the 'Deivam' suffixes).


பம்மலார்,

ராகேஷ், எஸ்.எஸ்.ஆர். பெயரையும் குறிப்பிட்டிருப்பதைப்பார்த்தால், அவர் "தெய்வப்பிறவி"யைக் குறிப்பிடுகிறார்னு நினைக்கிறேன். அதிலும் கூட பத்மினி பின்னியிருப்பாரே.

சரியான 'தெய்வ'க்குழப்பம்.

Murali Srinivas
27th March 2011, 11:29 PM
Dear Rakesh,

Nice one liners. Reminds me of NT's own one liners about his movies. As Saradhaa had rightly pointed out you had confused Deivappiravi with Kai Kodutha Deivam. So much so that even Swami has been caught napping [a very rare occasion].

ராகவேந்தர் சார்,

பாலாடை படப் பாடலுக்கு நன்றி. விரைவில் டிவிடி ஆகவும் வெளிவரும் என நம்புவோம்.

டிவிடி என்று சொன்னதும் நினைவிற்கு வருகிறது. இரண்டு நாட்கள் முன்பு ஏவிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான Sound Zone என்ற கடைக்கு சென்றிருந்தேன் [TTK சாலை]. ஒரு சில படங்களின் டிவிடி கிடைக்குமா என்று கேட்பதற்காக. நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் மும்முரமாக டிவிடிகளை எடுத்துக் கொண்டிருந்தார். சில படங்களின் பெயரை சொல்லி அவை இருக்கிறதா என்று கேட்டு கேட்டு எடுத்தார். இறுதியில் 25-க்கும் மேற்பட்ட டிவிடிகளை வாங்கியிருந்தார். பில் போடும்போது கவனித்தேன். அனைத்து டிவிடிகளுமே நடிகர் திலகம் நடித்த படங்கள். மருந்துக்கு கூட வேறு படங்கள் இல்லை.

அந்த தளத்தின் மேற்பார்வையாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்ன செய்திகள். இப்போதெல்லாம் இது போன்ற டிவிடி கடைகள் ஓடிக் கொண்டிருப்பதே பழைய படங்கள் மூலம்தான். புதிய படங்களின் டிவிடிகள் விற்பனை மிக குறைவு. அதே நேரத்தில் பழைய படங்களின் டிவிடிகள் அமோகமாக விற்பனையாகிறது. குறிப்பாக அதில் முன்னணியில் நிற்பது நடிகர் திலகத்தின் படங்களே. அநேகமாக அவரின் அனைத்து படங்களுமே விற்று விடுகின்றன. நடிகர் திலகத்தின் படங்களின் டிவிடிகள் சில நல்ல பிரிண்டில் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் கூட அந்த டிவிடிகளின் விற்பனையில் தேக்கம் இல்லை. அவர்களின் கடையைப் பொறுத்தவரை [ஏவிஎம் என்பதால்] டிவிடி பிரிண்ட் சரியில்லை என்றால் அதை வாங்கும் வாடிக்கையாளரிடம் முன்பே சொல்லி விடுவார்களாம். அப்படியிருந்தும் என்ன கொஞ்சம் கட் கொஞ்சம் ஜம்ப் இருக்கும் அவ்வளவுதானே பரவாயில்லை என்று சொல்லி வாங்கி போகிறார்களாம்.

பலரும் வந்து அவர்களுக்கு வேண்டிய நடிகர் திலகத்தின் படங்களை லிஸ்ட் கொடுத்து விட்டு போகிறார்கள் என்று சொன்னவர் ஒரு குறிப்பிட்ட ரசிகர், நடிகர் திலகத்தின் படங்களில் இதுவரை வெளிவராத டிவிடிகளை ஒரு நோட் புக்கில் எழுதிக் கொடுத்துவிட்டு போயிருப்பதை எடுத்துக் காட்டினார். அதில் இதுவரை டிவிடியாக வெளியாகாத நடிகர் திலகத்தின் ஆரம்பகாலப் படமான கண்கள் முதல் பூ பறிக்க வருகிறோம் வரை வரிசைகிரமமாக வருடவாரியாக வெளியான படங்கள் எழுதப்பட்டிருந்தன. நடிகர் திலகம் சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்களைகூட விடாமல் எழுதியிருந்தார். அந்த ரசிகரை பற்றி விசாரித்த போது மறைந்துவிட்ட ஒரு பிரபல தமிழக அரசியல்வாதியின் சகோதரர் என்பது தெரிந்தது. இந்தப் படங்களின் டிவிடி கிடைத்தால் என்ன விலை கொடுத்தும் வாங்க தயார் என்று சொல்லியிருக்கிறாராம். கடையை விட்டு கிளம்புவதற்கு முன் அவர் சொன்ன இரண்டு விஷயங்கள்.

டிசம்பர் இறுதியில் பெண்ணின் பெருமை மற்றும் விடிவெள்ளி டிவிடிகள் வெளியாகின. இந்த மூன்று மாதத்தில் மட்டும் அவர் இந்தப் படங்களின் 1000 டிவிடிகள் விற்றிருக்கிறார். [எண்ணிக்கையை மீண்டும் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டேன்].

இரண்டாவது விஷயம் அப்படியே அவரின் வார்த்தைகளிலேயே "சார், கணேசன் இருக்கும் போது அவரின் பெருமைகள் பலருக்கும் தெரியவில்லை. இப்போது உணர்கிறார்கள். இனியும் உணர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்". இத்தனை விஷயங்களையும் பகிர்ந்துக் கொண்ட அவர் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டது தான் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர் என்று.

அன்புடன்

pammalar
28th March 2011, 01:56 AM
பம்மலார்,

ராகேஷ், எஸ்.எஸ்.ஆர். பெயரையும் குறிப்பிட்டிருப்பதைப்பார்த்தால், அவர் "தெய்வப்பிறவி"யைக் குறிப்பிடுகிறார்னு நினைக்கிறேன். அதிலும் கூட பத்மினி பின்னியிருப்பாரே.

சரியான 'தெய்வ'க்குழப்பம்.

சகோதரி சாரதா,

தாங்கள் குறிப்பிட்டது போல், திரு.ராகேஷ் அவர்கள், "கை கொடுத்த தெய்வ"த்திற்கு, "தெய்வப்பிறவி"யை மனதில் வைத்துக் கொண்டுதான் அப்படி எழுதியிருக்கிறார். நானும் சற்று குழம்பி விட்டேன். நன்றி!

தங்களால் 'தெய்வ'க் குழப்பம் அகன்றது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
28th March 2011, 02:20 AM
Dear Rakesh,

Nice one liners. Reminds me of NT's own one liners about his movies. As Saradhaa had rightly pointed out you had confused Deivappiravi with Kai Kodutha Deivam. So much so that even Swami has been caught napping [a very rare occasion].

ராகவேந்தர் சார்,

பாலாடை படப் பாடலுக்கு நன்றி. விரைவில் டிவிடி ஆகவும் வெளிவரும் என நம்புவோம்.

டிவிடி என்று சொன்னதும் நினைவிற்கு வருகிறது. இரண்டு நாட்கள் முன்பு ஏவிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான Sound Zone என்ற கடைக்கு சென்றிருந்தேன் [TTK சாலை]. ஒரு சில படங்களின் டிவிடி கிடைக்குமா என்று கேட்பதற்காக. நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் மும்முரமாக டிவிடிகளை எடுத்துக் கொண்டிருந்தார். சில படங்களின் பெயரை சொல்லி அவை இருக்கிறதா என்று கேட்டு கேட்டு எடுத்தார். இறுதியில் 25-க்கும் மேற்பட்ட டிவிடிகளை வாங்கியிருந்தார். பில் போடும்போது கவனித்தேன். அனைத்து டிவிடிகளுமே நடிகர் திலகம் நடித்த படங்கள். மருந்துக்கு கூட வேறு படங்கள் இல்லை.

அந்த தளத்தின் மேற்பார்வையாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்ன செய்திகள். இப்போதெல்லாம் இது போன்ற டிவிடி கடைகள் ஓடிக் கொண்டிருப்பதே பழைய படங்கள் மூலம்தான். புதிய படங்களின் டிவிடிகள் விற்பனை மிக குறைவு. அதே நேரத்தில் பழைய படங்களின் டிவிடிகள் அமோகமாக விற்பனையாகிறது. குறிப்பாக அதில் முன்னணியில் நிற்பது நடிகர் திலகத்தின் படங்களே. அநேகமாக அவரின் அனைத்து படங்களுமே விற்று விடுகின்றன. நடிகர் திலகத்தின் படங்களின் டிவிடிகள் சில நல்ல பிரிண்டில் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் கூட அந்த டிவிடிகளின் விற்பனையில் தேக்கம் இல்லை. அவர்களின் கடையைப் பொறுத்தவரை [ஏவிஎம் என்பதால்] டிவிடி பிரிண்ட் சரியில்லை என்றால் அதை வாங்கும் வாடிக்கையாளரிடம் முன்பே சொல்லி விடுவார்களாம். அப்படியிருந்தும் என்ன கொஞ்சம் கட் கொஞ்சம் ஜம்ப் இருக்கும் அவ்வளவுதானே பரவாயில்லை என்று சொல்லி வாங்கி போகிறார்களாம்.

பலரும் வந்து அவர்களுக்கு வேண்டிய நடிகர் திலகத்தின் படங்களை லிஸ்ட் கொடுத்து விட்டு போகிறார்கள் என்று சொன்னவர் ஒரு குறிப்பிட்ட ரசிகர், நடிகர் திலகத்தின் படங்களில் இதுவரை வெளிவராத டிவிடிகளை ஒரு நோட் புக்கில் எழுதிக் கொடுத்துவிட்டு போயிருப்பதை எடுத்துக் காட்டினார். அதில் இதுவரை டிவிடியாக வெளியாகாத நடிகர் திலகத்தின் ஆரம்பகாலப் படமான கண்கள் முதல் பூ பறிக்க வருகிறோம் வரை வரிசைகிரமமாக வருடவாரியாக வெளியான படங்கள் எழுதப்பட்டிருந்தன. நடிகர் திலகம் சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்களைகூட விடாமல் எழுதியிருந்தார். அந்த ரசிகரை பற்றி விசாரித்த போது மறைந்துவிட்ட ஒரு பிரபல தமிழக அரசியல்வாதியின் சகோதரர் என்பது தெரிந்தது. இந்தப் படங்களின் டிவிடி கிடைத்தால் என்ன விலை கொடுத்தும் வாங்க தயார் என்று சொல்லியிருக்கிறாராம். கடையை விட்டு கிளம்புவதற்கு முன் அவர் சொன்ன இரண்டு விஷயங்கள்.

டிசம்பர் இறுதியில் பெண்ணின் பெருமை மற்றும் விடிவெள்ளி டிவிடிகள் வெளியாகின. இந்த மூன்று மாதத்தில் மட்டும் அவர் இந்தப் படங்களின் 1000 டிவிடிகள் விற்றிருக்கிறார். [எண்ணிக்கையை மீண்டும் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டேன்].

இரண்டாவது விஷயம் அப்படியே அவரின் வார்த்தைகளிலேயே "சார், கணேசன் இருக்கும் போது அவரின் பெருமைகள் பலருக்கும் தெரியவில்லை. இப்போது உணர்கிறார்கள். இனியும் உணர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்". இத்தனை விஷயங்களையும் பகிர்ந்துக் கொண்ட அவர் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டது தான் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர் என்று.

அன்புடன்

டியர் முரளி சார்,

நன்றி! நானும் மனிதன் தானே!

நமது நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களுடைய நெடுந்தகடுகள் விற்பனை பற்றி தாங்கள் என்னுடன் கைபேசியில் பகிர்ந்து கொண்ட தகவல்களை தங்களது கைவண்ணத்தில் பதிவாகப் படித்தபோதும் சுவாரஸ்யமே!

அன்புடன்,
பம்மலார்.

groucho070
28th March 2011, 07:03 AM
:lol: What a confusion, got our beloved fans in a tangle. Pammalar-sir, thank you for taking my jest in good humour. I'd love to continue writing comments on your list. I shall leave out ones I have doubt about. I seriously have issue with the "deivam" and "Raja" films, not to mention "En" films, ie En Magan, En Thambi. It's good to have mistakes made and correction given, innum alert-a iruppomla.

Goldstar, Saradha mdm and Murali-sar thanks for the corrections.

groucho070
28th March 2011, 07:37 AM
Dear Rakesh,

Nice one liners. Reminds me of NT's own one liners about his movies. Except NT will not talk about his performance, and might even shrug it off, being typically modest.

parthasarathy
28th March 2011, 09:35 AM
Except NT will not talk about his performance, and might even shrug it off, being typically modest.

Dear Mr. Rakesh,

In fact, I also wanted to post my reply to your great one liners about NT. What is really amazing is that the moment one person wanted a list of NT movies to get into the grand world of NT, the way you and Mr. Pammalar got into the act and stormed this thread with list of movies. While Mr. Pammalar initially gave a detail of more than 125 movies, you immediately jumped by adding your one liners, which will give an apt introduction of NT's movies to people who wish to watch various NT's movies for the first time.

However, I would like to give detailed view of NT's movies ONLY by segregating them into various genres, which will take my entire life's time, which I am proud of.

Great going indeed.

Please continue to delight us.

Regards,

R. Parthasarathy

parthasarathy
28th March 2011, 09:44 AM
டியர் திரு. பம்மலார் அவர்களே,

திரு Softsword அவர்கள் முதலில் நடிகர் திலகத்தின் ஒரு படத்தைப் பற்றி சொல்லச் சொன்னபோது, நீங்கள் நூறு படங்களுக்கு மேல் கொடுத்து, அவரை மட்டுமல்ல, எல்லோரையும் திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். திரு ராகேஷ் அவர்களும் அவர் பங்கிற்கு அத்தனை படங்களுக்கும், திருக்குறள் போல ஒரு வாக்கியத்தில் முன்னுரை அளித்து மேலும் வளமூட்ட முனைந்து, இந்தத் திரி இன்னும் பல பாட்டைகள் முன்னேறி வெளுத்துக் கட்டிக்கொண்டிருக்கிறது. நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி ஒருவர் கேட்க ஆரம்பித்த மறுகணமே, இத்தனை பேர் வரிந்து கட்டிக் கொண்டு எழுத முனைவது நடிகர் திலகத்தின் நினைவுகளிலேயே எத்தனை எத்தனையோ பேர் மூழ்கித் திளைத்துக்கொண்டிருப்பதைத்தான் காட்டுகிறது.

நாம் எல்லோரும் இந்த மகிழ்ச்சிக் கடலில் தொடர்ந்து முங்கி முத்தெடுப்போம்!

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
28th March 2011, 10:34 AM
டியர் திரு. முரளி அவர்களே,

ரொம்ப நாட்களுக்குப் பின்னர் தங்கள் பதிவு.

தாங்கள் குறிப்பிட்ட அந்த ஏவிஎம் Sound Zone கடைக்கு நான் கடந்த பத்து வருடங்களாக வாடிக்கையாளன். முதலில், அங்கு ஏவிஎம்மின் சரஸ்வதி ஸ்டோர்ஸ் கடை, முகப்பில் இயங்கிக் கொண்டிருந்தது. அந்த வளாகத்தில் அமைந்துள்ள பெரிய ஹால் - சங்கரா ஹால் - இங்கு கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு வருடமும், டிசம்பர் இறுதியில், மார்கழி மாதம் சென்னையில் நடக்கும் இசை விழா வைபவத்தையொட்டி, கேசட்டுகள் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை வெறும் கேசட்டுகள் மட்டுமே அந்த சமயம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல, கேசட்டுகள் காலாவதியாக, குறுந்தகடுகள் கேசட்டுகளின் உலகத்தைப் பிடித்துக்கொண்டு, முக்கியமாக கடந்த ஐந்து வருடங்களாக, சங்கரா ஹாலில், VCD /DVD-க்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தவுடன், இப்போதெல்லாம் ஆடியோ தள்ளுபடி விற்பனையை (டிசம்பர் சீசனில் மட்டும்), Sound Zone -இல் வைத்துக் கொள்ளுகிறார்கள்.

என்ன ஒரு co -incidence பாருங்கள்! நேற்று காலை தான் நான் இந்த ஏவிஎம் Sound Zone கடைக்குச் சென்றிருந்தேன். அங்கு, நேற்றுதான், நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை (இது இவ்வளவு நாளாக ரூபாய் 250/- என்ற அளவில் விற்பனை செய்யப் பட்டுக்கொண்டிருந்தது. இப்போது, சிம்போனி நிறுவனத்தாரால் Rs.50/- முதல் Rs.65/- (இரண்டு வகை) என்று இப்போது தான் விற்பனைக்கு வந்துள்ளது), அவன்தான் மனிதன், என்று ஒரு பத்து நடிகர் திலகத்தின் படங்களை வாங்கினேன். அப்போது, அங்கு பிரபல சினிமா விமர்சகர் திரு ராண்டார் கை அவர்களும் பழைய படங்களைப் பார்த்து எடுத்துக் கொண்டிருந்தார்.

அன்புடன்,

பார்த்தசாரதி

saradhaa_sn
28th March 2011, 10:50 AM
டியர் முரளி,

தங்களின் டிவிடி கடை அனுபவம் மிகவும் அருமை. அந்தக்ககடைக்காரர் சொன்னது போல, நடிகர்திலகத்தின் பல அபூர்வ படங்கள் இப்போதுதான் ரசிகர்களின் / பொதுமக்களின் பார்வைக்குக் கிடைப்பதால் இப்போது அவரது பெருமை நன்றாகவே உணரப்படுகிறது.

அதுபோல சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்க வரும் வி.ஐ.பி.க்கள் பலரும் (குறிப்பாக 'திரும்பிப்பார்க்கிறேன்') நடிகர்திலகத்துடனான தங்கள் அனுபவங்களையும் அவரது பெருந்தன்மையான நடவடிக்கைகளையும் உணர்வுபூர்வமாகச் சொல்லும்போது நமக்கு ஏற்படும் மிகப்பெரிய ஆதங்கம், 'அந்த மனிதர் இன்னும் கொஞ்சகாலம் நம்முடன் இருந்திருக்கலாமே' என்பதுதான்.

groucho070
28th March 2011, 11:13 AM
Saradha mdm, very true. I am trying to catch the Tirumbi Parkiren, and you keep hearing the greatness of NT coming from these varied artist.

Parthasarathy sir, thanks for the encouragement. I've been in and out of action here, I need to participate more, considering this thread was the reason I joined hub in the first place. Coming .....

groucho070
28th March 2011, 11:28 AM
With pammalar-sir's endorsement.
Dear SoftSword,

NT's 'must watch' list continues:

91. Kungumam - Mystery, NT wrongly acussed for a crime, on the run and meets beautiful Saradha, "Mayakkam enathu thayagam..." is a song many of us can relate to.

92. Thangachurangam - My favourite NT action film, response to spy-mania that hit worldwide no thanks to James Bond films. NT playing bond-like character is like watching Lord Laurence Olivier playing Bond = awesomeness! Check out the only song sequence in the history of films shot entirely inside a well.

93. Muradan Muthu - Watching NT and Bandhulu lashing it out is heartbreaking, you can't take sides of these two brothers who love each other very much. Heartbreaking, yes, but also tremendous amount of humour helps.

94. Muthal Thedhi = A very young NT playing an elderly wage earning father and husband who has to keep at it every month. Template for Visu and later V.C. Sekhar movies, NSK provides the lighthearted moments.

96. Andhamaan Kaadhali = Exotic locale, moving romance, broke-up by circumstances, older NT and Sujatha is reunited in not so endearing circumstances. Breezy film with beautiful songs.

97. Koondukkili = MGR and NT. Only film. Bristling with different acting style, with NT given bigger burdern as MT stays away for awhile. Template for Rajini's dark-side.

99. Ethirpaaraadhadhu = Calling your lover mother? Oh yeah, template for many K.B films.

100. Thyaagam = Cynical alcoholic who deep inside is a decent man and nobody wants to know that. Nallavarkellam satchigal rendu, ondru manasatchi - beautiful song again the decent folks among us who's often misunderstood can relate to this character.


more to come... [INTERVAL]

Happy Viewing,
Pammalar.

parthasarathy
28th March 2011, 12:37 PM
அவன்தான் மனிதன் (நடிகன்).

நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் கட்டுரையில், இன்னும் மூன்று படங்கள் பாக்கி இருக்கும் நிலையில், இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சிறு பதிவு.

நடிகர் திலகத்தின் அசாதாரணமான நடிப்பில் உருவான இந்தப் படத்தை கிட்டத்தட்ட 36 வருடங்கள் கழித்து நேற்றுதான் பார்த்தேன். ஆம். படம் முதன்முதலில் 1975-இல் வெளிவந்தபோது பார்த்தபின், அதற்கப்புறம் நேற்றுதான் பார்த்தேன். இதற்கு முக்கிய தூண்டுதல், திரு ராகேஷ் அவர்களின் பதிவினைப் பார்த்தது. மேலும், நேற்று, ஏவிஎம்-இன் Sound Zone கடையில், வழக்கம் போல், நடிகர் திலகத்தின் புதிய படங்கள் ஏதாவது வெளி வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த போது, இந்தப் படத்தின் குறுந்தகடு கண்ணில் பட, உடனேயே அதை வாங்கினேன். நடிகர் திலகத்தின் எத்தனையோ படங்களை மீண்டும் மீண்டும் தியேட்டர்களிலோ அல்லது டிவியிலோ பார்த்துக் கொண்டே வந்திருந்தாலும், அதென்னமோ தெரியவில்லை இந்தப் படத்தை மட்டும், நான் டிவியிலோ தியேட்டரிலோ, 1975-க்கப்புறம் பார்க்கும் சந்தர்ப்பத்தை, கடவுள் ஏனோ எனக்கு நேற்று தான் அளித்தார். எனக்குத் தெரிந்து, இந்தப் படம் பெரிய அளவில், சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்டதில்லை. அதுவும், ஒரு காரணமாயிருக்கலாம்.

இத்தனைக்கும், இந்தப் படம் வெளி வந்த காலத்திலேயே, இந்தப் படத்தில் அவர் காட்டியிருந்த ஸ்டைல், majesty, சோகத்தை வித்தியாசமாகக் காட்டியிருந்த விதம் என்னை மட்டுமல்லாமல், அத்தனை நடிகர் திலகத்தின் ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்த ஒன்று. குறிப்பாக, அவரது சிகை அலங்காரம். ரொம்ப காலத்திற்கு, இந்த சிகை அலங்காரத்தைத்தான் நானும் வைத்துக் கொண்டிருந்தேன்.

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்கிற சொலவடைக்கு நடிகர் திலகம் அற்புதமான உருவகம் கொடுத்திருந்த அந்த ரவிகுமார் கதாபாத்திரம் என்னை அப்படியே ஆட்டிப் படைத்து விட்டது. இரவு தூங்கச் செல்லுகிறவரையிலும், ஏன், தூக்கத்திலும் கூட ரவிகுமார் தான் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தார்.

சிறிய வயதில், இந்தப் படத்தைப் பார்த்தபோதே, ஒரு விதமான தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தி இருந்தாலும் (அந்த வயதில், நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் ஒரு மாதிரியான கம்பீரமான உடல் மொழி தான் பெரிதும் உடனே ஈர்க்கும்!), வாழ்க்கையில் சில அனுபவங்கள் கிடைத்து, ஒரு விதமான பக்குவம் வந்த பிறகு, இந்தப் படத்தை இப்போது பார்த்தபோது, ..................... வார்த்தைகளைத் தேடுகின்றேன்.

தெய்வ மகன், வசந்த மாளிகை வரிசையில் இந்தப் படத்திலும், ஒரு காட்சியைக் கூட விடாமல், அவரும் ரசித்து நடித்து, நம்மையும் ரசிக்க/அழ வைத்து விட்டிருக்கிறார். அத்தனை படங்களையும் அவர் ரசித்து ரசித்துதான் செய்திருக்கிறார் என்றாலும், பல படங்கள் ரொம்பவே சிலாகித்து செய்திருப்பார். அதில், அவன் தான் மனிதனும் முக்கிய இடம் பெறும். இந்தப் படம் என்னதான் நடிகர் திலகம் அற்புதமாக செய்திருந்தாலும், அளவு கடந்த சோகம் இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் செய்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நெஞ்சிருக்கும் வரை படமும் கிட்டத்தட்ட இந்த அளவு சோகத்தோடு இருந்தாலும், அந்தப் படத்தில் இடை வேளைக்குப் பின்னர் ரொம்பவே சொதப்பியிருந்ததால், படம் தோல்வியைத் தான் தழுவியது. அவன்தான் மனிதனில் வரும் சோகம் இயல்பாக இருந்ததால், படம் பல சென்டர்களில் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. தெய்வ மகனும் அவன்தான் மனிதனும் நிச்சயமாக வெள்ளி விழாப் படங்களாக அமைந்திருக்க வேண்டியவைதான். இது போல் எத்தனை எத்தனை படங்கள் வெள்ளி விழா இலக்கைத் தொட முடியாமல் போயிருக்கின்றன - கிட்டத்தட்ட இருபது வாரங்களைத் தொட்ட பிறகு - பாலும் பழமும், தில்லானா மோகனாம்பாள், மனோகரா, பதிபக்தி, சிவந்த மண், ராஜா, ஞான ஒளி, உட்பட! இதற்குரிய விவரங்கள், ஏற்கனவே, திரு முரளி மற்றும் திரு பம்மலார் அவர்களால், விரிவாக இந்தத் திரியில் எழுதப் பட்டு விட்டது.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
28th March 2011, 12:43 PM
Parthasarathy sir, thanks for the encouragement. I've been in and out of action here, I need to participate more, considering this thread was the reason I joined hub in the first place. Coming .....

Dear Mr. Rakesh,

It's only mutual. Let us continue to enjoy what we have been doing... enjoying, sharing, discussing NT the Greatest.

Regards,

R. Parthasarathy

groucho070
28th March 2011, 02:48 PM
More with Pammalar sir and everyone else's encouragement.
Dear SoftSword,

NT's 'must watch' list continues: [after the first interval]

101. Santhi - Popular for Yaar antha nilavu song where even NT's cigarette did acting. A lot more going for "identity" issue movie.

102. Kulamaa Gunamaa - Co-stars Jai Shanker in his peak, a lot more scope on Jai so if you are a Jai fan, it's double the treat.

107. Kavarimann - Like the title says, it's about NT and Pride.

108. Uthaman - Not ultraman, look carefully. One of my least favourite, a remake of Aa Gale Lag Jaa

111. Naan Petra Selvam = Tearjerker, beautiful song of the same title.

115. Vilayaattu Pillai - No, it's not that vilayattu pillai. Couple relationship film, with Padhmini.

116. Raja Rani - Known for the long shot monologue written by Kalaignar. I forgot what else it was about :oops:

120. Thavappudhalvan - One of my fav mid 70s flick. Goundamani made fun of the mAlAkannu in Chinna Thambi, but here it's treated seriously, the consequence and how people take advantage of your disadvantage. Let me do the kingini again, Kinginikingginikini, kini, kini, kini ena varum maathaa kovil maniosai....[did I get it right, fellow NT fans?)

121. Thangamalai Rahasiyam = Adventure, a bit of Tarzan involved I believe.

125. En Magan = Double role, but not related, though the unrelated NT is made as son of NT senior. Confused? Watch it.

more to come... [INTERVAL]

Happy Viewing,
Pammalar.

groucho070
28th March 2011, 02:53 PM
Parthasarathi-sir, thanks for reading my post on Avanthan Manithan, am so glad that it inspired you to pick up the disc. Your words about NT's performance in it, 100%.

parthasarathy
28th March 2011, 04:14 PM
திரு. பார்த்தசாரதி அவர்களின் தொடர் மிகவும் அருமை.
சஞ்சீவ் குமார் அவர்களைப்பற்றி நாம் இங்கு நிச்சயமாக நினைவு கூற வேண்டும்.
நவராத்திரியைப்போலவே, "ஞான ஒளி" படத்தையும் அவர் மிகவும் ஈடுபாட்டுடன் ஹிந்தியில் மீள் ஆக்கம்
செய்தார். அவருக்கே உரிய பாணியில் நடிகர் திலகம் நடித்த பாத்திரத்தை அவர் செய்தது எனக்கு மிகவும் பிடிக்கும்.
பல பேட்டிகளில் அவர் நடிகர் திலகத்தைப்பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். பாரத விலாஸ் படத்தின் மிகப்பிரபலமான "இந்திய நாடு" பாடலிலும்
தோன்றி தன் அபிமானத்தை வெளிப்படுத்தினார். வடக்கில் மிகவும் அநாயசமான நடிப்பை வெளிப்படுத்திய சில நடிகர்களில் அவர் ஒருவர்.
ஞான ஒளி படத்தையும் அதன் பிற மொழி ஆக்கங்களைப்பற்றியும் பார்த்தசாரதி அவர்கள் மேலும் எழுதுவார் என்று நான் நம்புகிறேன்.
ஆவலுடன் எதிர்பார்க்கவும் செய்கிறேன்.

டியர் திரு ஜெய் கணேஷ் அவர்களே,

தங்களது மனப்பூர்வமான பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தாங்கள் குறிப்பிட்டது போல், திரு சஞ்சீவ் குமார் அவர்கள் வட இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவர். நடிகர் திலகத்தின் படங்கள் ஹிந்தியில் எடுக்கப்பட்டபோது, மற்றவர்களை விட சஞ்சீவ் குமார் அவர்கள் தான் நடிகர் திலகத்தின் நடிப்பில், ஓரளவு நெருங்கினார். நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவர். சிறு வயதிலேயே, இயற்கை எய்தி விட்டார். கமல் ஹிந்தியில் படங்கள் செய்ய ஆரம்பித்த காலத்தில், சஞ்சீவ் குமாருடன் சேர்ந்து நடித்த படம் (யாத்கார் என்று நினைக்கிறேன்.), கமல் இந்தப் படத்தில் இறந்து விடுவார் என்று நினைக்கிறேன். அப்போது, சஞ்சீவ் குமாரின் நடிப்புக்கு உதயம் தியேட்டரில் உச்சபட்ச கைத்தட்டல் - ஒரு ஹிந்தி நடிகருக்கு. பெரிய விஷயம். அற்புதமான நடிகர்.

ஞான ஒளி படம் பற்றிய பதிவு தயார் செய்து கொண்டிருக்கிறேன். என் மனதுக்கு ரொம்ப நெருக்கமான நடிகர் திலகத்தின் படங்களுள் ஒன்றல்லவா. அதனால் தான் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவிட்டு விட்டு மகிழ்வேன்(விப்பேன்).

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
28th March 2011, 04:17 PM
Parthasarathi-sir, thanks for reading my post on Avanthan Manithan, am so glad that it inspired you to pick up the disc. Your words about NT's performance in it, 100%.

Dear Mr. Rakesh,

Thanks. Even now Avan Dhaan Manidhan hang over persists. What a performance! Benchmark for stylised, yet, subdued performance (in a nutshell).

Regards,

R. Parthasarathy

Plum
28th March 2011, 04:24 PM
Can people give a pre-alert when NT movies are telecast on Television over weekends?

joe
28th March 2011, 08:08 PM
இரண்டாவது விஷயம் அப்படியே அவரின் வார்த்தைகளிலேயே "சார், கணேசன் இருக்கும் போது அவரின் பெருமைகள் பலருக்கும் தெரியவில்லை. இப்போது உணர்கிறார்கள். இனியும் உணர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்". இத்தனை விஷயங்களையும் பகிர்ந்துக் கொண்ட அவர் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டது தான் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர் என்று.

அன்புடன்

:thumbsup:
இது போல எம்.ஜி.ஆர் ரசிகர்களான என் நண்பர்கள் பலர் நடிகர் திலகத்துக்கு தனி இடம் கொடுத்து பேசுவதை கவனித்திருக்கிறேன். நண்பர் ஒருவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் வளைகுடா நாட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது தொலைக்காட்சியில் நடிகர் திலகம் நடித்த காட்சிகள் ஓடிக்கொண்டிருந்ததாம் ..அப்போது அங்கே வந்த பங்களாதேஷை சேர்ந்த சக நண்பர் ஒருவர் சிறிது நேரம் பார்க்க ஆரம்பித்தவர் அப்படியே உட்கார்ந்து விட்டாராம் ..மொழி தெரியா விட்டாலும் நடிகர் திலகத்தின் அங்க அசைவுகளையும் ,முகபாவனைகளையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த அவர் நம் நண்பரிடம் “யார் இவர் ? உங்க ஊரிலுள்ள பெரிய நடிகரா?” என கேட்க நம்ம எம்.ஜி.ஆர் பக்தர் சொன்ன பதில் “ எங்க ஊர் , உங்க ஊர் , ஏன் இந்த உலகத்துக்கே இவனை மிஞ்ச நடிகன் கிடையாது “

jaiganes
28th March 2011, 09:01 PM
Revisiting Padithaal mattum podhumaa on bigflix. Absolute winner!!
NT simply connects with his expressions, pauses, and his eyes - Savithiri - what a perfect embodiment of acting and grace...
MR. Radha - another consummate performer. Altogether wonderful combination.
Loved "nallavan song" and the use of shehnai for a tribal tune - very salilish in composition and rocks the socks and shoes..
Still 1 hour left. need to complete it today...

RAGHAVENDRA
28th March 2011, 09:26 PM
டியர் பார்த்த சாரதி,
அவன் தான் மனிதன் - இந்தப் படத்தைப் பற்றி நினைக்கும் போதே எங்கள் உடலுக்குள் பல கோடி வாட்ஸ் மின்சாரம் பாய்ச்சியது போல் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. 175 என்ற எண்ணுக்கும் உயிர் கொடுத்த கலைஞன் நடிகர் திலகம். அணு அணுவாக ரசிக்க வேண்டிய படம். உள்ளம் நெகிழ வைக்கும் நடிப்பு. முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைத் தொட்டது என்றால் அதற்கு முழு நியாயமும் இப்படத்தில் உண்டு. குறிப்பாக எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது பாடலில் அவருடைய எழிலான நடையும் நளினமான தோற்றமும் குழந்தையுடன் உற்சாகமான துள்ளலும் என்றால் அதே ரவிகுமார் குழந்தையுடன் சோகம் கலந்த குரலில் ஆட்டுவித்தார் பாடலின் போது புன்னகைக்கும் விதமும் உலகத்தில் இவரைப் போல் இனி யாரும் இல்லை என்பதை கட்டியம் கூறும். அனைவரும் நினைத்து மயங்க இதோ ஒரு காட்சி.

http://www.youtube.com/watch?v=HGpG1kZV1cE
அன்புடன்

Murali Srinivas
28th March 2011, 11:45 PM
அன்புள்ள சாரதி,

நீண்ட நாட்களுக்கு பின் நான் இந்த திரியில் ஒரு நீண்ட பதிவை எழுதியது உண்மைதான். காரணம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய பதிவுகளை ஒரு தொடராக எழுதிக் கொண்டிருக்கும் போது அது எந்த இடையூறும் இன்றி வாசகர்களை சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில்தான். மற்றொரு காரணம் கடந்த பல நாட்கள் நமது ஹப்பின் அரசியல் திரியில் பங்கு கொண்டு அருமை சகோதரர் ஜோ அவர்களுடனும், அருமை சகோதரி சாரதா அவர்களுடனும் வாதப் பிரதிவாதம் செய்துக் கொண்டிருந்தேன் [அங்கேயும் நமது நடிகர் திலகம் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தேன்]. ஆகவே நமது திரியில் அவ்வளவாக பங்கு கொள்ள முடியவில்லை.

அவன்தான் மனிதன் பற்றி நீங்கள் சொன்னதும் மிக சரியாக ஐந்து வருடங்களுக்கு முன் நான் இந்த ஹப்பில் நுழைந்த போது நடிகர் திலகம் திரியில் முதன் முதலில் தெய்வ மகன் மூன்று சிவாஜிகள் சந்திக்கும் இடம் பற்றி எழுதினேன். பிறகு சக்தி பிரபா அவர்களுக்காக தங்கப்பதக்கம் படத்தின் இடைவேளைக்கு பிறகு வரும் காட்சி பற்றி எழுதினேன் [ஒரு நாள் சாப்பிடலைனா உயிரா போயிடும்?]. அப்போது ஜோ வந்து முதல் நாள் அவன்தான் மனிதன் பார்த்தேன் என்று சொன்னார். அப்போது எனக்கு மிகவும் பிடித்த காட்சி பற்றி சொன்னேன். "லலிதா, நீ படிச்சவ பண்பு நிறைஞ்சவ உன்னை மனைவியா அடையற அளவிற்கு -- ' என்று சொல்லி நடிகர் திலகம் ஒரு சின்ன இடைவெளி விட அதற்கு ஜெஜெ "சந்துரு தகுதியில்லாதவர்னு நினைக்கிறீங்களா" என்று பதில் சொன்னவுடன் நடிகர் திலகம் முகபாவம் மாறும் பாருங்கள்! பின்னியிருப்பார். உள்ளே நுழையும் மேஜர் ஏதாவது உளறி விடப் போகிறாரே என்று ஜெஜெவை அனுப்பி விட்டு [அது ஒரு காலாவதியான பத்திரம்] என்று சொல்லி விட்டு கடிதத்தை கிழித்துக் கொண்டே படியேற "எஜமான் எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா" என்று கேட்க " ஆகா" என்று திரும்புவாரே! மறக்கவே முடியாத காட்சி!

படம் வெளியான முதல் நான்கு வாரங்களில் மட்டும் மதுரை சென்ட்ரலில் 5 முறை பார்த்தேன். பிறகு படம் மறு வெளியிடுகளில் வந்த போதும் பார்த்தேன். இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது நான் தியேட்டரில் பார்த்த கடைசி படம். 2001 பிப்ரவரி மாதம் மதுரை ஸ்ரீதேவியில் வெளியான போது ஞாயிறு மாலைக் காட்சி பார்த்தேன். முதல் வெளியிட்டில் மதுரையில் தொடர்ந்து 130 காட்சிகள் ஹவுஸ்புல். முதல் 39 நாட்களில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் அரங்கு நிறைந்தது. பொள்ளாச்சி போன்ற இடைநிலை நகரங்களில் கூட தொடர்ந்து 100 காட்சிகள் ஹவுஸ்புல். தமிழகத்தின் அனைத்து பெரிய நகரங்களிலும் 100 நாட்களை கடந்த இந்த படம் மதுரையில் 105 நாட்களில் சுமார் 4 ,22 ,000/- ரூபாய் வசூல் செய்தது. [அதே சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமாவும், தங்கப்பதக்கமும் 100 நாட்களில் பெற்ற வசூலை கிட்டத்தட்ட நெருங்கியது]. அது போல மதுரையில் மறு வெளியீடுகளிலும் வசூலில் சக்கை போடு போட்ட படம். 2005 காலக் கட்டத்தில் அதே சென்ட்ரலில் வெளியான போது ஒரே வாரத்தில் 60000/- ருபாய் வசூல் செய்தது.

அன்புடன்

பதிந்த பிறகு பார்க்கிறேன். ராகவேந்தர் சார் அதே காட்சியை இங்கே கொடுத்திருக்கிறார்,

Murali Srinivas
28th March 2011, 11:57 PM
ஒரு விஷயம் சொல்ல வேண்டும். பழைய ஹப்பில் 100 பக்கங்கள் வந்தவுடன் அடுத்த பாகத்தை தொடங்குவோம். புதிய முறையில் எவ்வளவு பக்கங்கள் வேண்டுமானாலும் போகும் என்ற போதிலும் 150 பக்கங்களை நிறைவு செய்யும்போது பாகம் 8 தொடங்கலாம் என்பது என் கருத்து. 150 என்று குறிப்பிட காரணம் இப்போது பழைய பாகங்களை பார்த்தோம் என்றால் பழைய 100 பக்கங்கள் இப்போது 150 பக்கங்களாக காட்சியளிக்கிறது. எனவே இதையும் 150 பக்கங்களில் நிறைவு செய்து நடிகர் திலகம்- Part 8 தொடங்கலாம். நாம் முன்பே சொன்னபடி ராகவேந்தர் சார் அவர்களை Part 8 தொடங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் இக்கருத்து ஏற்புடையதாய் இருக்கும் என நம்புகிறேன்.

அன்புடன்

pammalar
29th March 2011, 12:41 AM
ஒரு விஷயம் சொல்ல வேண்டும். பழைய ஹப்பில் 100 பக்கங்கள் வந்தவுடன் அடுத்த பாகத்தை தொடங்குவோம். புதிய முறையில் எவ்வளவு பக்கங்கள் வேண்டுமானாலும் போகும் என்ற போதிலும் 150 பக்கங்களை நிறைவு செய்யும்போது பாகம் 8 தொடங்கலாம் என்பது என் கருத்து. 150 என்று குறிப்பிட காரணம் இப்போது பழைய பாகங்களை பார்த்தோம் என்றால் பழைய 100 பக்கங்கள் இப்போது 150 பக்கங்களாக காட்சியளிக்கிறது. எனவே இதையும் 150 பக்கங்களில் நிறைவு செய்து நடிகர் திலகம்- Part 8 தொடங்கலாம். நாம் முன்பே சொன்னபடி ராகவேந்தர் சார் அவர்களை Part 8 தொடங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் இக்கருத்து ஏற்புடையதாய் இருக்கும் என நம்புகிறேன்.
அன்புடன்

நமது முரளி சார் முன்மொழிந்ததை முதல் ஆளாக வழிமொழிகிறேன்!

pammalar
29th March 2011, 01:08 AM
அன்புள்ள சாரதி,
அவன்தான் மனிதன் 2005 காலக் கட்டத்தில் அதே சென்ட்ரலில் வெளியான போது ஒரே வாரத்தில் 60000/- ருபாய் வசூல் செய்தது.

டியர் முரளி சார்,

வாழ்வியல் திலகத்தின் "அவன் தான் மனிதன்", மதுரை சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 2004-ல் மறுவெளியீடாக வெளியான போதுதான் தாங்கள் குறிப்பிட்ட மெகா வசூலை ஈட்டியது. 12.3.2004 வெள்ளி முதல் 18.3.2004 வியாழன் வரையிலான ஒரு வார காலகட்டத்தில் "அவன் தான் மனிதன்" சென்ட்ரலில் அள்ளி அளித்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.60,000/-த்திற்கும் மேல்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th March 2011, 01:18 AM
பதிந்த பிறகு பார்க்கிறேன். ராகவேந்தர் சார் அதே காட்சியை இங்கே கொடுத்திருக்கிறார்,

Great People Think Alike !!!

pammalar
29th March 2011, 02:38 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 189

கே: நடிகர் திலகம் சிவாஜியின் மணிமண்டபம்? (ப.சிவகுமார் பிரபு, பொன்னாபுரம்)

ப: 'மகா' மண்டபமாக உருவாக வேண்டியது வெறும் 'மன' மண்டபமாக நிற்கிறது.

(ஆதாரம் : ராணி, 27.3.2011)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th March 2011, 03:47 AM
வீடியோவேந்தர் ராகவேந்தர் சார்,

"பாலாடை" வீடியோக்களை பதிவிட்டு பின்னியெடுத்து விட்டீர்கள்! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்!

"பாலாடை", நமது நடிகர் திலகத்தின் 114வது திரைக்காவியமாக - 107வது கருப்பு-வெள்ளைக் காவியமாக - 16.6.1967 அன்று வெளிவந்தது. "பதிபக்தி" முதற்கொண்ட சிவாஜி-பீம்சிங் "ப-பா" வரிசையில் 13வது காவியம் "பாலாடை". உலக சினிமாவின் தலைசிறந்த கூட்டணிகளில் ஒன்றான சிவாஜி-பீம்சிங் கூட்டணியின், அதற்கு முந்தைய மெகாஹிட், சூப்பர்ஹிட் காவியங்களின் ரேஞ்சில் இக்காவியம் ஓடாவிட்டாலும் தோல்விப்படமாக அமையவில்லை. முதல் வெளியீட்டில், "பாலாடை", 8 வாரங்கள் ஓடிய ஒரு சராசரி வெற்றிக் காவியமாகவே திகழ்ந்தது.

சந்துரு பேசும் தெய்வத்தின் அருளுடன் ஜெயக்கொடி நாட்டிக் கொண்டிருந்த சமயத்தில், மதன் தன் தங்கைக்காக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த வேளையில், சேகர் பாலாடையை அளிக்க மக்கள் விரும்பி உண்டனர். சேகர் வெற்றி உலா வந்து கொண்டிருந்த நேரத்தில், அப்பரும், சுந்தரரும், திருக்குறிப்புத் தொண்டரும், சேக்கிழாரும், வில்லவ மன்னனும் திக்விஜயம் செய்ய திருவருட்செல்வர்களை தரிசிக்க மக்கள் அலைகடலெனத் திரண்டனர். எனினும், பாலாடை சேகர் 8 வாரம் பவனி வந்தார். பின்னாளில், பல அரங்குகளில், 11:30 மணிக் காட்சியில் பின்னி எடுத்தார் சேகர் என்பது வேறு விஷயம்.

அன்புடன்,
பம்மலார்.

goldstar
29th March 2011, 04:23 AM
Ragavendra sir, Thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks.

I would say infinite thanks for wonderful video of NT, wow simply superb. Even after watching 100 times. it makes me to watch is again, for our NT, even this movie is enough to prove anyone to raise the question about his calibre. There will be no other actor can touch his shoe even.

NT face expression excellent as described by Murali sir. Just to add my 2 cents. this movie re-released on 1990 at Madurai Meenakshi theatre and our Goldstar Sivaji Student Wing has had 4 bits posters (We are only one started 4 bits concept in Madurai) and that time 4 bits were talk of the city and this movie run 2 weeks continuously in Madurai Meenakshi theatre. Madurai Meenakshi theatre is MGR strong hold threate, running any movies other than MGR that to continuously for 2 weeks is big vicotor for our NT that too when Kamal and Rajini were in very much peak. Only NT can pull the crowd and he is ONE and ONLY Box Office King.

Cheers,
Sathish

parthasarathy
29th March 2011, 09:21 AM
டியர் பார்த்த சாரதி,
அவன் தான் மனிதன் - இந்தப் படத்தைப் பற்றி நினைக்கும் போதே எங்கள் உடலுக்குள் பல கோடி வாட்ஸ் மின்சாரம் பாய்ச்சியது போல் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. 175 என்ற எண்ணுக்கும் உயிர் கொடுத்த கலைஞன் நடிகர் திலகம். அணு அணுவாக ரசிக்க வேண்டிய படம். உள்ளம் நெகிழ வைக்கும் நடிப்பு. முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைத் தொட்டது என்றால் அதற்கு முழு நியாயமும் இப்படத்தில் உண்டு. குறிப்பாக எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது பாடலில் அவருடைய எழிலான நடையும் நளினமான தோற்றமும் குழந்தையுடன் உற்சாகமான துள்ளலும் என்றால் அதே ரவிகுமார் குழந்தையுடன் சோகம் கலந்த குரலில் ஆட்டுவித்தார் பாடலின் போது புன்னகைக்கும் விதமும் உலகத்தில் இவரைப் போல் இனி யாரும் இல்லை என்பதை கட்டியம் கூறும். அனைவரும் நினைத்து மயங்க இதோ ஒரு காட்சி.

http://www.youtube.com/watch?v=HGpG1kZV1cE
அன்புடன்

டியர் ராகவேந்தர் அவர்களே,

அவன் தான் மனிதன் படத்தைப் பற்றிய நினைவுகள் எல்லோருக்கும் இருந்து கொண்டே தான் இருக்கும் எனினும், நான் எழுதி அந்த இனிய நினைவுகள் மேலும் எல்லோருக்கும் கிளர்ந்து எழ என்னால் முடிந்ததைப் பதிந்தேன். பதிந்து முடித்தவுடன், தாங்கள் அந்தப் படத்தைப் பற்றிய நினைவுகளை மேலும் மெருகூட்ட, அந்தப் படத்தின் மிகச் சிறந்த காட்சிகளுள் ஒன்றை உடனே பதிவிட்டு, எல்லோரையும் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்.

Subtle ஆக்டிங் ஸ்டைல் - இந்த வகை நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த படம் அவன் தான் மனிதன் என்பதற்கு யாரிடமிருந்தும் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்காது என்றே நம்புகிறேன். அதிலும், நடிகர் திலகத்தின் பிரத்தியேக ஸ்டைல் நடிப்பையும் சேர்த்தே அளித்து, ரவிகுமார் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அந்த மாமேதையை நினைக்க நினைக்க .... மேற்கொண்டு எழுத முடியாமல் தவிக்கிறேன்.

நன்றி கலந்த அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
29th March 2011, 09:35 AM
டியர் முரளி அவர்களே,

நான் இன்று வந்துதானே சேர்ந்து கொண்டேன். என்னதான் இருந்தாலும், அவ்வப்போது, நீங்களும், திரு ராகவேந்தர், திரு பம்மலார், சாரதா மேடம், ராகேஷ், ஜோ, ப்ளம், போன்ற சீனியர்கள் எழுதிக் கொண்டே இருந்தால் தான் இந்தத் திரிக்கு ஒரு பூரணத்துவம் கிடைத்து மேலும் மேலும் சுவை கூடிக்கொண்டே போகிறது.

திரு ராகவேந்தர் அவர்களுக்கு கூறியதை மறுபடியும் உங்களுக்கும் பகர்கிறேன். அவன் தான் மனிதன் படத்தைப் பற்றிய நினைவுகள் எல்லோருக்கும் இருந்து கொண்டே தான் இருக்கும் எனினும், நான் எழுதி அந்த இனிய நினைவுகள் மேலும் எல்லோருக்கும் கிளர்ந்து எழ என்னால் முடிந்ததைப் பதிந்தேன். பதிந்து முடித்தவுடன், தாங்கள் அந்தப் படத்தைப் பற்றிய நினைவுகளை மேலும் மெருகூட்ட, அந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளைப் பற்றி உடனே பதிவிட்டு, எல்லோரையும் மகிழ்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.

Subtle ஆக்டிங் ஸ்டைல் - இந்த வகை நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த படம் அவன் தான் மனிதன் என்பதற்கு யாரிடமிருந்தும் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்காது என்றே நம்புகிறேன். அதிலும், நடிகர் திலகத்தின் பிரத்தியேக ஸ்டைல் நடிப்பையும் சேர்த்தே அளித்து, ரவிகுமார் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அந்த மாமேதையை நினைக்க நினைக்க ..... நினைவுகள் எங்கோ சிறகடிக்க ஆரம்பிக்கிறது. (சாந்தி தியேட்டரில் மெய் மறந்த நாட்கள்........)

நன்றி கலந்த அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
29th March 2011, 09:43 AM
நமது முரளி சார் முன்மொழிந்ததை முதல் ஆளாக வழிமொழிகிறேன்!
நாங்களும் வழி மொழிகிறோம்.

நன்றி கலந்த அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
29th March 2011, 09:45 AM
டியர் முரளி சார்,

வாழ்வியல் திலகத்தின் "அவன் தான் மனிதன்", மதுரை சென்ட்ரல் சினிமா திரையரங்கில், 2004-ல் மறுவெளியீடாக வெளியான போதுதான் தாங்கள் குறிப்பிட்ட மெகா வசூலை ஈட்டியது. 12.3.2004 வெள்ளி முதல் 18.3.2004 வியாழன் வரையிலான ஒரு வார காலகட்டத்தில் "அவன் தான் மனிதன்" சென்ட்ரலில் அள்ளி அளித்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.60,000/-த்திற்கும் மேல்.

அன்புடன்,
பம்மலார்.

டியர் பம்மலார் அவர்களே,

அவன்தான் மனிதன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளைப் பற்றிய புதிய தகவல்களை மேலும் அளித்ததற்கு நன்றிகள் பல.

நன்றி கலந்த அன்புடன்,

பார்த்தசாரதி

saradhaa_sn
29th March 2011, 10:51 AM
எண்னத்தாலும் செயலாலும் அண்ணன் நடிகர்திலகத்தின் புகழொன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழும், அன்புச்சகோதரர் திரு ராகவேந்தர் அவர்கள், எட்டாத (யாராலும் எட்ட முடியாத) புகழடைந்த நடிகர்திலகத்தின் திரியின் எட்டாவது பகுதியைத் துவக்கி வைத்து, மெருகூட்டவேண்டும் என்று அனைத்து நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களின் சார்பில் கேட்டுக்கொண்டு, அவர் சார்பில் இந்த வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறேன்.

groucho070
29th March 2011, 11:02 AM
எண்னத்தாலும் செயலாலும் அண்ணன் நடிகர்திலகத்தின் புகழொன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழும், அன்புச்சகோதரர் திரு ராகவேந்தர் அவர்கள், எட்டாத (யாராலும் எட்ட முடியாத) புகழடைந்த நடிகர்திலகத்தின் திரியின் எட்டாவது பகுதியைத் துவக்கி வைத்து, மெருகூட்டவேண்டும் என்று அனைத்து நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களின் சார்பில் கேட்டுக்கொண்டு, அவர் சார்பில் இந்த வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறேன்.Agreed. +123456789 (10 characters-ungga)

saradhaa_sn
29th March 2011, 11:18 AM
டியர் ராகவேந்தர், பார்த்தசாரதி, பம்மலார், முரளி....

அவன்தான் மனிதன் பற்றிய பதிவுகள் அனைத்தும் அருமை. எல்லோரும் சொன்னதுபோல படம் முழுக்க அருமையான ஸ்டைலை பிரதிபலித்திருப்பார். முன்பு நான் குறிப்பிட்டது போல, ஜெயலலிதாவுக்காக தன்னை அலங்கரித்துக்கொள்ளும்போது, கண்ணாடியைப்பார்த்து, நெற்றியிலிருக்கும் ஒரு நரைமுடியைப் பிடுங்கும் அழகு, முரளி சொன்னதுபோல அந்த 'ஆகா' சொல்லும் ஸ்டைல் எல்லாமே கைதட்டலை அள்ளிக்கொண்டு போகும்.

சாரதி சொன்னது போல இப்படம் அவ்வளவாக அல்ல, சென்னையில் அறவே மறு வெளியீட்டுக்கு வரவில்லை. பல ரசிகர்கள் வீடியோ கேஸட்டிலும், குறுந்தகட்டிலுமே பார்த்துள்ளனர். சாரதி குறிப்பிட்டது போல, படம் ஓவர் சோகமானதுக்குக் காரணம் மேஜரின் ரோல். இயக்குனர் ஏ.சி.டி. அதைச்சற்று கண்ட்ரோல் பண்ணியிருக்க வேண்டும். குமுதம் பத்திரிகையின் விமர்சனத்தில், "சிவாஜி எட்டு கிலோவுக்கு துக்கப்பட்டால் மேஜர் பதினாறு கிலோவுக்கு அழுது தீர்க்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இப்படத்தில் எனக்குப்பிடித்த இன்னொரு விஷயம், படத்தின் துவக்கத்தில் பளிச்சென்று வந்து போகும் நடிகர்திலகம் - மஞ்சுளா ஜோடியின் நெஞ்சையள்ளும் காதல் காட்சிகள்.

நினைவலைகளை உசுப்பி விட்ட அனைவருக்கும் நன்றி.

KCSHEKAR
29th March 2011, 11:29 AM
எண்னத்தாலும் செயலாலும் அண்ணன் நடிகர்திலகத்தின் புகழொன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழும், அன்புச்சகோதரர் திரு ராகவேந்தர் அவர்கள், எட்டாத (யாராலும் எட்ட முடியாத) புகழடைந்த நடிகர்திலகத்தின் திரியின் எட்டாவது பகுதியைத் துவக்கி வைத்து, மெருகூட்டவேண்டும் என்று அனைத்து நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களின் சார்பில் கேட்டுக்கொண்டு, அவர் சார்பில் இந்த வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறேன்.


வழி மொழிகிறேன்.

Plum
29th March 2011, 12:40 PM
டியர் முரளி அவர்களே,

நான் இன்று வந்துதானே சேர்ந்து கொண்டேன். என்னதான் இருந்தாலும், அவ்வப்போது, நீங்களும், திரு ராகவேந்தர், திரு பம்மலார், சாரதா மேடம், ராகேஷ், ஜோ, ப்ளம், போன்ற சீனியர்கள் எழுதிக் கொண்டே இருந்தால் தான் இந்தத் திரிக்கு ஒரு பூரணத்துவம் கிடைத்து மேலும் மேலும் சுவை கூடிக்கொண்டே போகிறது.

Partha, empErai eduththudunga. It doesn't deserve to be there among the others in this thread. The only thing I bring to this thread is unbridled enthusiasm to know more about NT and his films, and appreciating what people write here.

Plum
29th March 2011, 12:42 PM
I log off Avan dhAn Manidhan precisely at the moment where Muthuraman pushes the child in anger, and the child gets unconscious knocking a pillar. That is exactly the point where the movie crosses from sentiment and melodrama into overdose. For some reason, in the last few weeks, this is the only NT movie I have run into when flipping channels.

parthasarathy
29th March 2011, 02:36 PM
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)


8. ஞான ஒளி (1972) / தேவதா (1980) - ஹிந்தி


இந்தப் படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான (எனக்கு மட்டுமா?) நடிகர் திலகத்தின் பத்து படங்களுள் ஒன்று.


வியட்நாம் வீடு சுந்தரத்தின் நாடகம், மேஜரால் நடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, இந்த நாடகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஒரு நாள் நடிகர் திலகம் அதைப் பார்க்க விரும்பி, பார்த்த மாத்திரத்திலேயே, இதை படமாக எடுக்க வேண்டும் என்றும் மேஜர் நடித்த பாத்திரத்தைத் தான் ஏற்க விரும்புவதாகவும் மேஜரிடம் கூறியிருக்கிறார். இதற்குப் பிறகு, அந்த “அந்தோணி” கதாபாத்திரத்தை இன்னும் மெருகேற்றவும், ஒரு இடத்தில் கூட மேஜரின் சாயல் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், திரும்பத் திரும்ப, தொடர்ந்து அந்த நாடகத்தைப் பார்க்கச் சென்றாராம். மேஜர் ரொம்பவே தர்மசங்கடத்துக்குள்ளாகி விட்டாராம். இது படமாக்கப் பட்டபோது, மேஜர் நடித்த அந்தோணி பாத்திரத்தை நடிகர் திலகமும், அவரது மாமா திரு. வீரராகவன் நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் பாத்திரத்தில், மேஜரும் ஏற்று நடித்தார்கள்.


எனக்குத் தெரிந்து, நடிகர் திலகம் முதன் முதலில் படம் நெடுகிலும் ஒரு கிறித்தவராக நடித்த படம் இது தான். கிறித்தவர்கள் கடவுளை நோக்கி ஜெபம் செய்யும் முறையிலிருந்து அவர்கள் “ஆண்டவரே!” என்று அழைக்கும் முறை வரையிலும் அணு அணுவாக ஆராய்ந்து, அதற்குப் பின் தான் அந்த அந்தோணி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கத் துவங்கினார். எப்போதுமே, அவர் புதிதாக ஏற்கும் எந்தக் கதாபாத்திரத்தையும், அந்த முதல் முயற்சியிலேயே, முழு வெற்றியடைய வைத்து விடுவார் - மிகுந்த ஆராய்ச்சி செய்து, முனைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கற்பனை வளத்துடன் ஒரு தேர்ந்த சிற்பி போல் செதுக்குவதால் -

முஸ்லீம் அன்பராய் ஏற்ற ரஹீம் பாத்திரம் (பாவ மன்னிப்பு)

கிறித்தவ அன்பராய் ஏற்ற அந்தோணி பாத்திரம் (ஞான ஒளி)

பிராம்மண சமூகத்து ப்ரெஸ்டிஜ் பத்மநாபன் பாத்திரம் (வியட்நாம் வீடு)

கடமை தவறாத காவல் துறை அதிகாரி எஸ்.பி. சௌத்ரி பாத்திரம் (தங்கப்பதக்கம்)

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் இதை சொல்லக் காரணம் - இதையே ஒரு சப்ஜெக்ட் ஆக வைத்து ஒரு புதிய கட்டுரையை ஏனைய அன்பர்களோ, ஏன் நானோ, எழுதத் துவங்கலாம்.

இந்தப் படம் திரு. பி. மாதவன் அவர்களின் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த திரைக்கதையால், கொஞ்சம்கூட தொய்வில்லாமல் செல்லும். இத்தனைக்கும் இந்தப் படம், பொழுதுபோக்கு அம்சங்கள் சொற்பமே நிறைந்த ஒரு கலைப்படம் போல் தான் இருக்கும். (படத்தின் ஆரம்பத்தில் வரும் நடிகர் திலகம் - விஜயநிர்மலா சம்பந்தப் பட்ட காதல் காட்சிகள் கலகலப்பாக இருக்கும். பிற்பாதியில் வரும் MRR வாசு / ISR போன்றோரின் மிகச்சில காட்சிகள் - கொஞ்சம் கேலிக் கூத்து தான்). பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தனியான காமெடி ட்ராக் இல்லாமல், உணர்ச்சி மிகுந்த சம்பவங்களையும் அதில் நடித்த நடிகர்களையும் மட்டுமே நம்பி, ஆனால் மிக வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் செல்லும். முக்கியமாக, நடிகர் திலகத்தின் அனாயாசமான, உணர்வுபூர்வமான, மற்றும் அலாதியான ஸ்டைலான நடிப்பாலும், அதற்கு ஈடு கொடுத்துச் சிறப்பாக செய்த மேஜரின் நடிப்பாலும், பி. மாதவனின் சாதுர்யமான இயக்கம் மற்றும் திரைக்கதையாலும், சாரதா, விகேயார் போன்ற கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பாலும், மெல்லிசை மாமன்னரின் அற்புதமான பின்னணி இசை (படத்தின் இரு வகையான தீம் ம்யூசிக் இடம் பெற்றிருக்கும். ஒன்று நடிகர் திலகத்தை ஒவ்வொரு முறையும் சோகம் கவ்வும்போது; மற்றொன்று, பின் பாதியில், அவரும் மேஜரும் சந்திக்கும்போதேல்லாம் வருவது; மற்றும் சிறந்த பாடல்களாலும் (குறிப்பாக, தேவனே என்னைப் பாருங்கள்) வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

பொதுவாக, பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லாத படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவதில்லை. அதை பெரிய அளவில் முறியடித்து, தொடர்ந்து, நல்ல கருத்துச் செறிவுள்ள படங்களையும் கொடுத்து, அவைகளை வியாபார ரீதியாக பெரிய வெற்றிப்படங்களாக்கியதும் நடிகர் திலகம் மட்டும் தான். இதைத்தான் ஒருமுறை திரு. கமல் அவர்கள் இப்படிச் சொன்னார்.

நடிகர் திலகம் மட்டும் தான் ஒரே நேரத்தில் நடிகராகவும், மக்களைப் பெரிதும் கவர்ந்த நட்சத்திரமாகவும் மிக, மிக வெற்றிகரமாக இருந்தார். அந்தப் பாதையைத் தான் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுத்து அதில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் (எனக்குத் தெரிந்து நாயகன் படத்திலிருந்து) என்று கூறினார்.

ஞான ஒளியைப் பொறுத்தவரை, ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களையும், அதில் நடிகர் திலகத்தின் நிலைமைகளையும் மிகவும் உணர்வுபூர்வாக எடுத்துரைத்த படம். படத்தின் கால ஓட்டங்களுக்கேற்ப அவரது வித்தியாசமான நடிப்பைப் படம் நெடுகிலும் கண்டு ரசிக்கலாம்.

முதலில் வரும் சில காட்சிகளில், வெறும் அரைக்கால் சட்டையை அணிந்து நடித்தாலும், படம் பார்க்கும் ஒருவரைக் கூட, அவர் நகைக்க விட்டதில்லை. அவரது உடல் மொழி, அந்த அளவிற்கு, அந்தக் கதாபாத்திரத்தோடு இழைந்து, இணைந்திருக்கும்.

இந்தப் படத்தில், அவரது கதாபாத்திரம் இடது கைப் பழக்கம் உள்ளவராக அமைக்கப் பட்டிருக்கும். இயற்கையாகவே ஒருவருக்கு இடது கைப் பழக்கம் இருந்தால் அவர் அந்தக் கையை எப்படிக் கையாளுவாரோ, அதை அப்படியே அச்சு அசலாக, ஆனால், மிக மிக இயல்பாக கண்முன் நிறுத்தியிருப்பார். இந்தப் படத்திற்கான எம்ப்ளமே, அவர் இடது கையால், மெழுகுவர்த்தி ஹோல்டரை ஓங்குவது போல் வரும் ஸ்டில் தானே. படத்தின் முற்பாதியில், இடது கைப் பழக்கம் உள்ள அந்தோணியாகவும், பின் பாதியில், கோடீஸ்வர அருணாக வரும்போது, வலது கைப் பழக்கம் உள்ளவராகவும் – அனாயாசமாக அந்த வித்தியாசத்தைக் காட்டியிருப்பார்.

ஆங்கிலத்தில் “intense performance” என்று சொல்லுவார்கள். When it comes to performing a role with intensity, none in the entire world can even stand near the shadow of NT.

இதில் முதல் பாதி, எல்லோருக்காகவும், இரண்டாம் பாதி, எல்லோருக்காகவும் பிளஸ் அவரது பிரத்தியேக ரசிகர்களுக்காகவும் பண்ணியிருப்பார் (பின்னியிருப்பார்). ஆனாலும், அவரது நடிப்பு வழக்கம் போல அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிறிதளவு கூட சிதைக்காது.

முதலில், விஜய நிர்மலாவை மடக்கும் கட்டங்களில் சாமர்த்தியமான, ஜனரஞ்சகமான நடிப்பு;

ஆனாலும், அதே விஜய நிர்மலாவுடன் பாதிரியாரின் முன் நிற்கும் நிலை வரும்போது, அந்தப் பணிவு கலந்த நகைச்சுவையான நடிப்பு;

மனைவி விஜய நிர்மலா மறைந்தது தெரிந்ததும், யாருக்கோ செய்த சவப்பெட்டி தன் மனைவிக்கே பயன்படப்போவதை நினைத்துக் காட்டும் பாவங்கள் (ஆளாளுக்கு subtle நடிப்பு subtle நடிப்பு என்று இந்தக் காலத்தில் கூறிக் கொண்டே இருக்கிறார்களே – இதுதானே subtle நடிப்பு!)

தன் பெண் பெரியவளாகி படிப்பிற்கிடையே, லீவில் வரும் போது, அவருடன் உரையாடும் காட்சிகள்; பெண் சாரதா இரயிலில் பயணம் செய்யும்போது, தவறுதலாக ஸ்ரீகாந்த்துடைய பெட்டி கை மாறி, இவர் கைக்கு வந்து விட, அந்தப் பெட்டியை, நடிகர் திலகம் பார்த்து, வெள்ளந்தியாக, அதில் இருக்கும் ஆண் உடைகள் தனக்குத்தான் தன் பெண் சாரதா வாங்கி வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு அந்த உடைகளைப் போட்டுக் கொண்டு (முக்கால் பான்ட்) வந்து வெகுளியாக நிற்பது;

தன் பால்ய நண்பன் லாரன்ஸைத் (மேஜர் சுந்தரராஜன் அவர்கள்) திரும்பப் பார்த்தபின் அவர் கை கொடுக்கும்போது, இவர் தனது இடது கையை ஒருமாதிரி அவரது சட்டையில் துடைத்துக் கொண்டே கொடுக்கும் அந்த அப்பாவித் தனம்;

வயல் வரப்போரம் நடிகர் திலகமும் மேஜரும் பேசிக்கொண்டே வரும்போது, தன் பெண் பெரிய டாக்டராக வேண்டும் அதன் மூலம் அவரது வாழ்க்கையில் படிந்திருக்கும் கரையைத் துடைக்க வேண்டும் (கொலைகாரன் பெற்ற பிள்ளை!) என்று தன் கனவை வெளிப்படுத்திக் கொண்டே வந்து; வீட்டில், தன் கண்ணெதிரே, தன்னுடைய பெண் வேறொரு வாலிபனுடன் (ஸ்ரீகாந்த்) இருப்பதைப் பார்த்து பேரதிர்ச்சியடைந்து, கொந்தளித்துக் குமுறும் அந்தக் கட்டம் – முதலில், பெண்ணை இன்னொருவனுடன் பார்த்த மாத்திரத்தில் காட்டும் அதிர்ச்சி, இடது கண் துடிக்கும் – ஆஹா, இதற்காகத்தான் நான் உன்னை இவ்வளவு நாள் வளர்த்தேனா நான் பெத்த மகளே! என்று கதறிக் கொண்டிருக்கும்போது, ஓசைப்படாமல், ஸ்ரீகாந்த் அங்கிருந்து மெல்ல நழுவுவதைப் பார்த்து, ஒரே தாவலில் (என்ன ஒரு வேகம்), அவரைப் பிடித்து, அரிவாளும் கையுமாய் ஒங்க, அவரை மேஜர் பிடித்து இழுக்க – ஒரு action படத்தில் கூட இப்படி விறுவிறுப்பான ஒரு action பார்ப்பது கடினம் – இங்கு ஒரே நேரத்தில், நடிகர் திலகம், அதிர்ச்சி, அவமானம், கோபம், வேகம், வன்மம், கண்மூடித்தனமான ஆத்திரம் – அனைத்தையும் – அற்புதமாக உணர்ச்சிகரமாக சித்தரித்திருப்பார். திரை அரங்கிலிருக்கும் ஒட்டு மொத்த மக்களையும் கட்டிப்போட்ட அற்புதமான, உணர்ச்சிக்கொந்தளிப்பான கட்டம்.

உடனே, மேஜரின் வற்புறுத்தலின்பேரில், அவருடைய மகளுக்கும் அந்த ஊர் பேர் தெரியாத வாலிபனுக்கும் கிறித்தவ முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட, இப்படியா என் பெண் கல்யாணம் நடக்கணும், இதுக்காவா அவளை அரும்பாடுபட்டுப் படிக்க வச்சேன் என்று பொருமி, புலம்பி, அரிவாளை எடுத்துக் கொண்டே அத்தனை கோபத்தையும் வெறியையும், வாழைத் தோப்பின் மேல் காட்டி, அத்தனை வாழைக் குலைகளையும் சீவு சீவென்று சீவித் தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதம்! (நடிக்க ஆரம்பித்து இருபது வருடங்களுக்குப் பிறகும், ஒரு புது மாதிரியான நடிப்பு - இயலாமையை, கோபத்தை வேறு ஒரு புது மாதிரியாக வெளிப்படுத்திய விதம்!!).

இருந்தாலும், தன் பெண்ணுக்கு முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட வேண்டும் என்று ஒரு தந்தையின் மன நிலையோடு போய் ஸ்ரீகாந்த்தை அணுக, அவர் ஒரு ஸ்திரீலோலன் என்று தெரிந்து, எவ்வளவோ பொறுமையாகக் கெஞ்சியும், அவர் வர மறுத்ததோடு நிற்காமல், அவரின் பெண்ணையே கேவலமாகப் பேசியதைத் தாங்கிக்கொள்ள முடியாமால், ஒரே அடியில் அவரை அடித்துப் பிண்டமாக்கித் தோளில் போட்டுக் கொண்டு வந்து மாதா கோவிலுக்கு வந்து போட்டு விட்டு, அப்புறம் தான் ஸ்ரீகாந்த் இறந்தே போயிருக்கிறார், தான் செய்தது ஒரு கொலை என்றறிந்து, குழந்தையைப் போல் நான் கொலை செய்யவில்லை என்று கதறுவது; தன் பெண்ணின் வாழ்க்கைக்குத் தானே எமனாகி விட்டதை நினைத்து வெடித்துக் குமுறுவது (அவரே ஒரு கொலைகாரன் பெற்ற பிள்ளை, இப்போது அவரும் ஒரு கொலை செய்து விடுவார் - ஆனால் வேண்டுமென்றே இல்லை!);


"ஞான ஒளி" தொடரும்,

அன்புடன்,

பார்த்தசாரதி

goldstar
29th March 2011, 03:25 PM
[QUOTE=parthasarathy;663196]நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)
என்று கதறிக் கொண்டிருக்கும்போது, ஓசைப்படாமல், ஸ்ரீகாந்த் அங்கிருந்து மெல்ல நழுவுவதைப் பார்த்து, ஒரே தாவலில் (என்ன ஒரு வேகம்), அவரைப் பிடித்து, அரிவாளும் கையுமாய் ஒங்க, அவரை மேஜர் பிடித்து இழுக்க – ஒரு action படத்தில் கூட இப்படி


Parthasarathy sir,

You have missed an important scene, when NT comes to know Saradha relation with Sri Kanth, he shows anger on banana trees by using knife to cut banana tree, just look at his expression and hand movement, even regular left hand people cannot do that, he cuts each banana tree in such anger each one falls down so forcefully, wonderful performance. As you rightly said no one can touch even NT shadow. Long live his fame.

Cheers,
Sathish

parthasarathy
29th March 2011, 05:46 PM
[QUOTE=parthasarathy;663196]நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)
என்று கதறிக் கொண்டிருக்கும்போது, ஓசைப்படாமல், ஸ்ரீகாந்த் அங்கிருந்து மெல்ல நழுவுவதைப் பார்த்து, ஒரே தாவலில் (என்ன ஒரு வேகம்), அவரைப் பிடித்து, அரிவாளும் கையுமாய் ஒங்க, அவரை மேஜர் பிடித்து இழுக்க – ஒரு action படத்தில் கூட இப்படி


Parthasarathy sir,

You have missed an important scene, when NT comes to know Saradha relation with Sri Kanth, he shows anger on banana trees by using knife to cut banana tree, just look at his expression and hand movement, even regular left hand people cannot do that, he cuts each banana tree in such anger each one falls down so forcefully, wonderful performance. As you rightly said no one can touch even NT shadow. Long live his fame.

Cheers,
Sathish

Dear Mr. Sathish,

Thanks very much for your immediate response. However, please read my article fully (though only 40% of Gnana Oli is finished and the balance will get completed shortly) wherein I have clearly mentioned a) the deft and dexterity with which NT uses his left hand so effortlessly as though he himself is a leftie & b) the way he shows his anger by cutting down the banana trees - a new way of emoting and expressing anger - a new acting dimension even after 20 years of his acting career.

Anyway, thanks for your response, which makes me more responsible to fine tune my articles continuously.

Regards,

R. Parthasarathy

RAGHAVENDRA
29th March 2011, 06:23 PM
அன்பு நண்பர்கள், சகோதர சகோதரியர் - முரளி ஸ்ரீநிவாஸ், பார்த்தசாரதி, சாரதா, பம்மலார், ப்ளம், சதீஷ், சந்திரசேகர், உள்ளிட்ட அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள், என் மீது தாங்கள் வைத்திருக்கும் ஆழ்ந்த அன்பிற்காக. உண்மையில் சொல்லப் போனால் நம்முடைய இந்த வட்டாரத்திலேயே இளையவரான பம்மலார் அவர்கள் இத்திரியின் எட்டாம் பாகத்தைத் துவக்குவதே சிறந்ததென நான் எண்ணுகிறேன். இளைய தலைமுறையின் மீதான நடிகர் திலகத்தின் தாக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக, அவருடைய புகழைப் பரப்புவதில் சிறந்த பணியாற்றும் பம்மலார் அவர்கள் துவக்கி வைத்தால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
தங்கள் அனைவரின் அன்பும் என்றும் வேண்டும்,
ராகவேந்திரன்.

NOV
29th March 2011, 07:39 PM
Different facets if NT in one song.... must watch!


http://www.youtube.com/watch?v=JXlj_BCj7jo&feature=player_embedded

pammalar
29th March 2011, 10:08 PM
அன்பு நண்பர்கள், சகோதர சகோதரியர் - முரளி ஸ்ரீநிவாஸ், பார்த்தசாரதி, சாரதா, பம்மலார், ப்ளம், சதீஷ், சந்திரசேகர், உள்ளிட்ட அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள், என் மீது தாங்கள் வைத்திருக்கும் ஆழ்ந்த அன்பிற்காக. உண்மையில் சொல்லப் போனால் நம்முடைய இந்த வட்டாரத்திலேயே இளையவரான பம்மலார் அவர்கள் இத்திரியின் எட்டாம் பாகத்தைத் துவக்குவதே சிறந்ததென நான் எண்ணுகிறேன். இளைய தலைமுறையின் மீதான நடிகர் திலகத்தின் தாக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக, அவருடைய புகழைப் பரப்புவதில் சிறந்த பணியாற்றும் பம்மலார் அவர்கள் துவக்கி வைத்தால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.
தங்கள் அனைவரின் அன்பும் என்றும் வேண்டும்,
ராகவேந்திரன்.

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் உயர்ந்த உள்ளத்திற்கும், ஈடற்ற பெருந்தன்மைக்கும், எல்லையில்லா அன்பிற்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்!

அடியேன் ஏற்கனவே நமது திரியின் ஆறாவது பாகத்தை தொடங்குகின்ற பாக்கியத்தை பெற்றேன் என்பதனை இவ்வேளையில் மிகுந்த தன்னடக்கத்துடன் கூறிக் கொள்கிறேன்.

நமது நடிகர் திலகம் திரியின் எட்டாவது பாகத்தை தயைகூர்ந்து அவசியம் தாங்களே தொடங்கி வைக்க வேண்டும் என்று மிக மிக வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

பணிவுடன்,
பம்மலார்.

pammalar
29th March 2011, 10:29 PM
அவன்தான் மனிதன் (நடிகன்).
நடிகர் திலகத்தின் எத்தனையோ படங்களை மீண்டும் மீண்டும் தியேட்டர்களிலோ அல்லது டிவியிலோ பார்த்துக் கொண்டே வந்திருந்தாலும், அதென்னமோ தெரியவில்லை இந்தப் படத்தை மட்டும், நான் டிவியிலோ தியேட்டரிலோ, 1975-க்கப்புறம் பார்க்கும் சந்தர்ப்பத்தை, கடவுள் ஏனோ எனக்கு நேற்று தான் அளித்தார். எனக்குத் தெரிந்து, இந்தப் படம் பெரிய அளவில், சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்டதில்லை. அதுவும், ஒரு காரணமாயிருக்கலாம்.

இந்தப் படம் என்னதான் நடிகர் திலகம் அற்புதமாக செய்திருந்தாலும், அளவு கடந்த சோகம் இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் செய்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவன்தான் மனிதனில் வரும் சோகம் இயல்பாக இருந்ததால், படம் பல சென்டர்களில் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது.


டியர் பார்த்தசாரதி சார்,

"அவன் தான் மனிதன்" பதிவு அருமை.

"வசந்த மாளிகை"க்கு அடுத்த நிலையில் நமது நல்லிதயங்களின் உயிருடனும், உள்ளத்துடனும், உணர்வுடனும் கலந்திருக்கும் ஒப்பற்ற காவியம் "அவன் தான் மனிதன்".

"அவன் தான் மனிதன்" வெள்ளிவிழாக்காவியமோ / மெகாஹிட் காவியமோ இல்லை என்றாலும், ஒரு மாபெரும் வெற்றிப்படம் என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை. நமது நடிகர் திலகத்தின் 175வது திரைக்காவியம் என்கின்ற பெரும் பெருமையுடன், 1975 தமிழ்ப் புத்தாண்டையொட்டி [11.4.1975], வெள்ளித்திரைக்கு வந்த இத்திரைக்காவியம், 100 நாட்களைக் கடந்த சூப்பர்ஹிட் படம்.

"அவன் தான் மனிதன்" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:

1. சென்னை - சாந்தி

2. சென்னை - கிரௌன்

3. சென்னை - புவனேஸ்வரி

4. மதுரை - சென்ட்ரல்

5. சேலம் - நியூசினிமா

6. திருச்சி - ராஜா

7. யாழ்ப்பாணம் - லிடோ

மேலும், சேலம் மாநகர திரைப்பட வரலாற்றில், ஒரே சமயத்தில் இரு அரங்குகளில் வெளியான படங்களில், ஒன்றில் 107 நாட்களும் [நியூசினிமா], மற்றொன்றில் 35 நாட்களும் [பேலஸ்] ஓடிய முதல் திரைப்படம் "அவன் தான் மனிதன்".

கோவை 'கீதாலயா'வில் 85 நாட்கள் ஓடி வசூல் மழை பொழிந்தது. மேலும் பற்பல ஊர்களிலும் 50 நாட்களைக் கடந்து பெருவெற்றி பெற்றது.

அயல்நாடான இலங்கையில், கொழும்பு 'கிங்ஸ்லி' திரையரங்கில் 82 நாட்களும், யாழ்ப்பாணம் 'லிடோ' திரையரங்கில் 122 நாட்களும் ஓடி இமாலய வெற்றி அடைந்தது.

சென்னை மாநகரின் சாந்தி(100), கிரௌன்(100), புவனேஸ்வரி(100) ஆகிய மூன்று திரையரங்குகளின், 300 நாள் மொத்த வசூல் ரூ.13,29,727-37பை.

1970களில் ஒரு படம், முதல் வெளியீட்டில், மொத்த வசூலாக அரை கோடியை [ரூ.50,00,000/-] ஈட்டினாலே 'சூப்பர்ஹிட்' அந்தஸ்தைப் பெற்று விடும். "அவன் தான் மனிதன்" முதல் வெளியீட்டில் மொத்த வசூலாக ரூ.55,00,000/-த்தை [ரூபாய் ஐம்பத்து ஐந்து லட்சங்களை] அளித்தது. அன்றைய சில லட்சங்கள் இன்றைக்கு பல கோடிகளுக்குச் சமம்.

"அவன் தான் மனிதன்" முதல் வெளியீட்டில் உண்டாக்கிய பாக்ஸ்-ஆபீஸ் பிரளயத்தின் முழு விவரத்தை, நமது திரியின் 8வது பாகத்தில் தனியொரு சிறப்புப் பதிவாகவே தருகிறேன்.

மேலும், மறுவெளியீடுகளாகவும், சிங்காரச் சென்னையில் "அவன் தான் மனிதன்" கணிசமான அளவுக்கு திரையிடப்பட்டுள்ளது. 1988-ல் சென்னையின் பல அரங்குகளை ரெகுலர் காட்சிகளில் அலங்கரித்த காவியம் "அவன் தான் மனிதன்". 1989 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குப் பின் மீண்டும் சென்னையில் வெளியான இக்காவியம் பல அரங்குகளில் House-Full காட்சிகளாக அமோக வரவேற்பு பெற்றது. 'எவ்வளவு தான் உடைஞ்சாலும் ராஜா ராஜா தான்' டயலாக்கிற்கெல்லாம் அரங்குகளின் கூரைகள் பிய்த்துக் கொள்ளும். பின்னர் 1993-ம் ஆண்டிலும், 1997-ம் ஆண்டிலும் கூட சென்னையில் ரவிகுமார் வெற்றி உலா வந்திருக்கிறார். மதுரை ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் படம் இதுதான். மதுரையில் பல முறை மறுவெளியீடுகளில் சக்கை போடு போட்டிருக்கிறது. ஏனைய ஊர்களிலும் ரவிகுமார் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஹீரோ தான்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th March 2011, 12:06 AM
டியர் ராகவேந்தர், பார்த்தசாரதி, பம்மலார், முரளி....

அவன்தான் மனிதன் பற்றிய பதிவுகள் அனைத்தும் அருமை.

சாரதி சொன்னது போல இப்படம் அவ்வளவாக அல்ல, சென்னையில் அறவே மறு வெளியீட்டுக்கு வரவில்லை.



சகோதரி சாரதா,

எனது முந்தைய பதிவில் இதற்கான தகவலை அளித்திருக்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th March 2011, 01:22 AM
நெஞ்சிருக்கும் வரை படமும் கிட்டத்தட்ட இந்த அளவு சோகத்தோடு இருந்தாலும், அந்தப் படத்தில் இடை வேளைக்குப் பின்னர் ரொம்பவே சொதப்பியிருந்ததால், படம் தோல்வியைத் தான் தழுவியது.


டியர் பார்த்தசாரதி சார்,

2.3.1967 அன்று நடிகர் திலகத்தின் 111வது திரைக்காவியமாக வெளியான "நெஞ்சிருக்கும் வரை" அதிகபட்சமாக 10 வாரங்கள் ஓடிய ஒரு சராசரி வெற்றிப்படமே.

சென்னை 'சாந்தி'யில் 71 நாட்களும், 'கிரௌன்' திரையரங்கில் 67 நாட்களும், 'புவனேஸ்வரி'யில் 43 நாட்களும் ஓடி நல்ல வெற்றியைப் பெற்றது.

திருச்சி, சேலம் மற்றும் கோவையில் ஒவ்வொரு மாநகரிலும் 50 நாட்கள் ஓடி வெற்றிப்படமாகவே திகழ்ந்தது. மதுரை[43 நாள்], நெல்லை[43 நாள்] இன்னும் இது போன்ற பல ஊர்களிலும் மற்றும் சிற்றூர்களிலும் 4 முதல் 6 வாரங்கள் வரை ஓடி ஒரு சராசரி வெற்றிப்படம் என்கின்ற அந்தஸ்தை எட்டியது.

எனினும் மிகப் பெரிய வெற்றியை எதிர்பார்த்த இத்திரைப்படக் குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் அது கிடைக்காமல் போனது உண்மையே. அதற்கான காரணத்தையும் தாங்கள் சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

1960களில், வெற்றிக்கனியை தட்டிப் பறிக்காத நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்:

1. ராஜபக்தி(1960)

2. பெற்ற மனம்(1960)

3. வளர்பிறை(1962)

4. செந்தாமரை(1962)

5. சித்தூர் ராணி பத்மினி(1963)

6. நான் வணங்கும் தெய்வம்(1963)

7. அன்பளிப்பு(1969)

8. குரு தட்சணை(1969)

9. அஞ்சல் பெட்டி 520(1969)

இக்காவியங்கள் ஒவ்வொன்றும் நடிப்பிலும், தரத்திலும் உயர்ந்ததே.

1960களில், "இரும்புத்திரை(1960)" தொடங்கி "சிவந்த மண்(1969)" வரையிலான 76 திரைக்காவியங்களில், இந்த 9 காவியங்கள் மட்டுமே வெற்றியை தவற விட்டவை.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th March 2011, 03:41 AM
சக்ரவர்த்திகளின் சங்கமம்


http://www.youtube.com/watch?v=Y-CHrEpLJsk

டியர் பார்த்தசாரதி சார்,

நடிகப் பேரொளியின் "ஞான ஒளி"யை ஜோதிமயமாக்கி விட்டீர்கள். தங்களின் பதிவில் அத்தனை பிரகாசம். அந்தோணி ரோலுக்கு தாங்கள் கொடுத்திருக்கும் Build-Up அசத்தல். தொடருங்கள்....அசத்துங்கள்....

'தேவனே என்னைப் பாருங்கள்' பாடல் எனது All Time Favourite Number. நடிப்புச் சக்ரவர்த்தி(NT), திரை இசைச் சக்ரவர்த்தி(MSV), பாட்டுச் சக்ரவர்த்தி(TMS), திரைக் கவிதைச் சக்ரவர்த்தி(கண்ணதாசன்), ஒளிப்பதிவுச் சக்ரவர்த்தி(பி.என்.சுந்தரம்) போன்ற சக்ரவர்த்திகள் சங்கமிக்கும் போது சாகாவரம் பெறுகின்ற பாடல் அமைவது சத்தியம்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th March 2011, 04:08 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 190

கே: நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நடிப்பில் யாரோடு ஒப்பிடலாம்? (கே.ஆர்.பாலகுமார், காங்கேயம்)

ப: விழுப்புரம் சின்னையா மகன் கணேசனோடு !

(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th March 2011, 04:16 AM
ஏழு பாகங்களை மிக மிக வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து எட்டாவது பாகத்தில் இதே எழுச்சியுடன் இன்னும் வெற்றிகரமாகத் தொடரப் போகும் நமது நடிகர் திலகம் திரி, கலைக்களஞ்சியம் சிவாஜி அவர்களைப் பற்றிய தகவல் களஞ்சியம் !!!

Over to Rasika Thilagam Raghavendran Sir !!!

அன்பு கலந்த வாழ்த்துக்களுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
30th March 2011, 10:01 AM
அன்பு சகோதரி சாரதா மற்றும் பம்மலார், பார்த்த சாரதி, உட்பட அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. தங்களின் வேண்டுகோளை என்னால் தட்ட முடியவில்லை. எனவே உடனே எட்டாம் பாகத்தினை துவக்கி வைக்கும் பேறுடன் என்னுடைய முன்னறிவிப்போடு பதிவிட்டுள்ளேன். நடிகர் திலகத்தின் ரசிகர் பட்டாளம் உலகிலேயே உன்னதமான பட்டாளம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பார்த்த சாரதி அவர்களின் ஆய்வுகள் அமைந்து வருகின்றன. அவருடைய ஆய்வுகளுக்காக மட்டுமே தனி புத்தகம் வெளியிடலாம். அதே போல் தங்களுடைய எண்ணங்கள் எழுத்துக்கள் வலைப்பூவின் மூலம் தங்களுடைய அரிய பணியை சிறப்புற செய்து வருகிறீர்கள். பம்மலாரும் தம்முடைய பங்கிற்கு இணைய தளம் மூலம் பல்வேறு பணிகளின் மூலம் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பி வருகிறார். இதே போல் திரு முரளி சார் தன் பங்கிற்கு தான் செல்லுமிடத்தில் எல்லாம் நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளாமலில்லை. இதே போல் இந்த ஹப்பிலுள்ள அனைத்து ரசிக நண்பர்களும் அவரவர் தம் பங்கிற்கு ஆற்றி வருகிறீர்கள். நம் அனைவருக்கும் பின்னணியில் நடிகர் திலகம் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது திண்ணம்.
நம் அனைவருடைய ஒருங்கிணைந்த மனவோட்டமே இத்திரி இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.
அனைவருக்கும் அன்பும் நன்றியும்,
ராகவேந்திரன்

saradhaa_sn
30th March 2011, 11:03 AM
-- reserved --

(அன்புச்சகோதரர் ராகவேந்தர் அவர்கள் எப்போது தனது துவக்கப்பதிவை இட்டாலும், அதற்கு முதல் வாழ்த்துச்சொல்பவள் நானாக இருக்க வேண்டும் என்பதற்காக).

saradhaa_sn
30th March 2011, 11:30 AM
அன்புள்ள பார்த்தசாரதி,

தங்கள் திரைப்பட ஆய்வுகள் ஒவ்வொன்றும், நடிகர்திலகத்தின் ரசிகர்களால் போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டியவை என்று சொல்லுமளவுக்கு நாளுக்கு நாள், படத்துக்குப்படம், காட்சிக்குக்காட்சி மெருகேறி வருகிறது. 'ஞான ஒளி'க்காவியத்தில், எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் ஒவ்வொரு காட்சியிலும் கையாளப்பட்டிருக்கின்றன என்பது உண்மையிலேயே மலைப்பைத் தருகிறது. ஸ்ரீகாந்தும் சாரதாவும் தனித்திருக்கும் வேளையில் சாரதா பாடும் 'மணமேடை மலர்களுடன் தீபம்' பாடலின் இடையிசையின்போது, மழையில் நனைந்துகொண்டே நடிகர்திலகமும் மேஜரும் ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருக்க, ஓரிடத்தில் நடிகர்திலகம் கால் வழுக்கி விழப்போகும் சமயம், மேஜர் கைகொடுத்துத் தூக்கிவிடும் காட்சி, பிற்பாடு வரப்போகும் ஒரு உணர்ச்சிமயமான காட்சிக்கான அச்சாரம் என்பது படத்தை இரண்டாம் முறை பார்க்கும்போதுதான் தெரியும்.

(மெல்லிசை மன்னர் தந்த 'மணமேடை' பாடலை முறியடிக்க அதுபோன்ற இன்னொரு பாடல் இன்னும் வரவில்லை. காரணம், அப்பாடலின் மெட்டு கிறிஸ்துவ தேவாலயங்களில் இசைக்கப்படும் ஒரு வித வித்தியாசமான மெட்டைத் தழுவியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபற்றி நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் வித்தியாசமான மெட்டு என்பதில் சந்தேகமில்லை).

அதுபோல, நடிகர்திலகம் மற்றும் விஜயநிர்மலா டூயட்டான 'அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ' பாடலில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பையாலஜி என எல்லாமே கச்சிதம். வீட்டுக்கூரையின் மேல், வைக்கோல் குவியலில், ஏணியில், பிரம்புக்கூடையில் என்று எல்லா இடத்திலும் அருமையோ அருமை. நான் பலமுறை சொன்ன விஷயத்தை மீண்டும் சொல்கிறேன்... இந்த ஜோடி இன்னும் பல படங்களில் தொடர்ந்திருக்க வேண்டும்.

டியர் மம்மலார்,

நீங்கள் குறிப்பிட்ட சக்கரவர்த்திகளின் வரிசையில், நண்டு வளைக்குள் ஓடி ஒளிவது, பின்னர் மீண்டும் கிளைமாக்ஸில் நண்டு மீண்டும் வெளியே வருவது போன்ற இடங்களில் இயக்குனர் மாதவனும் தன் முத்திரைகளைப் பதித்திருந்தார்.

(அவன்தான் மனிதன் மறு வெளியீடு பற்றிய தகவலுக்கு நன்றி)

saradhaa_sn
30th March 2011, 11:44 AM
டியர் ராகவேந்தர்,

நடிகர்திலகத்தின் புகழ்பாடும் இந்த திரித்தொடரின் முதல் நான்கு பாகங்களை சகோதரர் ஜோ அவர்களும், ஐந்தாம் பகுதியை சகோதரர் முரளி சீனிவாஸ் அவர்களும், ஆறாவது பகுதியை அன்புத்தம்பி பம்மலார் அவர்களும், ஏழாவது பகுதியை (உங்கள் அனைவரின் கட்டளைகளை ஏற்று) நானும் துவக்கி வைக்க...... எட்டாவது பகுதியை நீங்கள்தான் துவக்க வேண்டுமென்பது எப்போதோ முடிவு செய்யப்பட்ட விஷயம். அதை இந்த ஏழாம் பகுதியின் முதற்பக்கத்திலேயே நான் சொல்லியிருந்தேன்.

தற்போது எங்கள் அனைவரின் அன்பு வேண்டுகோளையேற்று, எட்டாவது பகுதியை துவக்கி வைத்துள்ளீர்கள். அனைவரின் சார்பிலும் மிக்க நன்றிகள்.

வெற்றிகரமாக நடைபோட்ட இந்த ஏழாவது பகுதியை அரிய தகவல் களஞ்சியமாய் எடுத்துச்சென்ற 'அத்தனை' அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்.

abkhlabhi
30th March 2011, 12:42 PM
Hearty Congrats to all NT Fans for successful entering in to Part 8.

Kamal in an recent interview :

"I don't copy anybody whether it is acting or marketing. I have my own individualistic style. If I have doubts, I think of my guru and Dronacharya Sivaji Ganesan"

parthasarathy
30th March 2011, 12:54 PM
டியர் ராகவேந்தர்,

நடிகர்திலகத்தின் புகழ்பாடும் இந்த திரித்தொடரின் முதல் நான்கு பாகங்களை சகோதரர் ஜோ அவர்களும், ஐந்தாம் பகுதியை சகோதரர் முரளி சீனிவாஸ் அவர்களும், ஆறாவது பகுதியை அன்புத்தம்பி பம்மலார் அவர்களும், ஏழாவது பகுதியை (உங்கள் அனைவரின் கட்டளைகளை ஏற்று) நானும் துவக்கி வைக்க...... எட்டாவது பகுதியை நீங்கள்தான் துவக்க வேண்டுமென்பது எப்போதோ முடிவு செய்யப்பட்ட விஷயம். அதை இந்த ஏழாம் பகுதியின் முதற்பக்கத்திலேயே நான் சொல்லியிருந்தேன்.

தற்போது எங்கள் அனைவரின் அன்பு வேண்டுகோளையேற்று, எட்டாவது பகுதியை துவக்கி வைத்துள்ளீர்கள். அனைவரின் சார்பிலும் மிக்க நன்றிகள்.

வெற்றிகரமாக நடைபோட்ட இந்த ஏழாவது பகுதியை அரிய தகவல் களஞ்சியமாய் எடுத்துச்சென்ற 'அத்தனை' அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்.

டியர் ராகவேந்தர் அவர்களே,

நடிகர் திலகத்திற்கென தனியான வலைத்தளத்தையே உருவாக்கி அவரின் புகழை மிகச் சிறப்பாக எல்லையில்லாத அர்ப்பணிப்பு உணர்வுடன் பரப்பி வரும் உங்களை, அவரது புகழை மேலும் சிறப்பாகப் பாடப் போகும் எட்டாவது திரியினை உடனே துவக்குமாறு வேண்டுகிறோம்.

இந்தப் பொது நலத்தில் ஒரு சுய நலமும் கலந்திருக்கிறது. ஏனென்றால், நான் நேற்று துவக்கிய "ஞான ஒளி" படத்தைப் பற்றிய பதிவு பாதி கூட இன்னும் முடியவில்லை. மீதியைத் தொடர சந்தர்ப்பம் தருமாறு வேண்டுகிறேன். கூடவே, எப்படி இந்தப் புதுத் திரியில், நுழைந்து பதிவிட வேண்டும் என்பதையும் சொல்ல வேண்டுகிறேன்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
30th March 2011, 01:02 PM
அன்புள்ள பார்த்தசாரதி,

தங்கள் திரைப்பட ஆய்வுகள் ஒவ்வொன்றும், நடிகர்திலகத்தின் ரசிகர்களால் போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டியவை என்று சொல்லுமளவுக்கு நாளுக்கு நாள், படத்துக்குப்படம், காட்சிக்குக்காட்சி மெருகேறி வருகிறது. 'ஞான ஒளி'க்காவியத்தில், எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் ஒவ்வொரு காட்சியிலும் கையாளப்பட்டிருக்கின்றன என்பது உண்மையிலேயே மலைப்பைத் தருகிறது. ஸ்ரீகாந்தும் சாரதாவும் தனித்திருக்கும் வேளையில் சாரதா பாடும் 'மணமேடை மலர்களுடன் தீபம்' பாடலின் இடையிசையின்போது, மழையில் நனைந்துகொண்டே நடிகர்திலகமும் மேஜரும் ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருக்க, ஓரிடத்தில் நடிகர்திலகம் கால் வழுக்கி விழப்போகும் சமயம், மேஜர் கைகொடுத்துத் தூக்கிவிடும் காட்சி, பிற்பாடு வரப்போகும் ஒரு உணர்ச்சிமயமான காட்சிக்கான அச்சாரம் என்பது படத்தை இரண்டாம் முறை பார்க்கும்போதுதான் தெரியும்.

(மெல்லிசை மன்னர் தந்த 'மணமேடை' பாடலை முறியடிக்க அதுபோன்ற இன்னொரு பாடல் இன்னும் வரவில்லை. காரணம், அப்பாடலின் மெட்டு கிறிஸ்துவ தேவாலயங்களில் இசைக்கப்படும் ஒரு வித வித்தியாசமான மெட்டைத் தழுவியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபற்றி நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் வித்தியாசமான மெட்டு என்பதில் சந்தேகமில்லை).

அதுபோல, நடிகர்திலகம் மற்றும் விஜயநிர்மலா டூயட்டான 'அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ' பாடலில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பையாலஜி என எல்லாமே கச்சிதம். வீட்டுக்கூரையின் மேல், வைக்கோல் குவியலில், ஏணியில், பிரம்புக்கூடையில் என்று எல்லா இடத்திலும் அருமையோ அருமை. நான் பலமுறை சொன்ன விஷயத்தை மீண்டும் சொல்கிறேன்... இந்த ஜோடி இன்னும் பல படங்களில் தொடர்ந்திருக்க வேண்டும்.

டியர் மம்மலார்,

நீங்கள் குறிப்பிட்ட சக்கரவர்த்திகளின் வரிசையில், நண்டு வளைக்குள் ஓடி ஒளிவது, பின்னர் மீண்டும் கிளைமாக்ஸில் நண்டு மீண்டும் வெளியே வருவது போன்ற இடங்களில் இயக்குனர் மாதவனும் தன் முத்திரைகளைப் பதித்திருந்தார்.

(அவன்தான் மனிதன் மறு வெளியீடு பற்றிய தகவலுக்கு நன்றி)
சாரதா மேடம் அவர்களுக்கு,

என் பதிவிற்கு தாங்கள் அளித்த பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். ஞான ஒளி பாதிதான் முடிந்திருக்கிறது. மீதியை, நடிப்புலக மன்னர் மன்னனின் (ஒரு மாதிரி ரொம்ப புளகாங்கித மூடில் இருந்தால், நாங்கள் அவரை அப்படித் தான் அழைப்போம்!) எட்டாவது திரியில்தான் தொடர வேண்டும்.

பொதுவாக, நான் நடிகர் திலகத்தைப் பற்றி மட்டும் பெரிய அளவில் எழுதத் தலைப்படுவதால், மற்ற விஷயங்களைப் பற்றி வேண்டுமென்றே அடக்கி வாசிக்க வேண்டியதாகி விடுகிறது. எதைப் பற்றி முக்கியமாக எழுதுகிறோமோ, அதன் வீரியம் குறைந்து விடும் என்பதால். (அதாவது, நடிகர் திலகத்தின் சொந்த வரிகளில் சொல்வதென்றால் "பாரிஸ்டர் ரஜினிகாந்த் பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகத்தான் நான் வேண்டுமென்றே கண்ணன் பாத்திரத்தையும் ஏற்றேன். அதற்கு வேறொரு நடிகரைப் போட்டிருந்தால், அவரும் என்னுடன் போட்டி போட்டு நடிக்கத் தலைப்படுவார். அதனால், சொல்ல வந்த விஷயம் வீணாகி விடும். அதனால்தான் கண்ணன் பாத்திரத்தையும் நானே ஏற்று நடித்து, கொஞ்சம் அடக்கி வாசித்து, அந்த பாரிஸ்டர் பாத்திரத்தை நிற்க வைக்க வேண்டி வந்தது." என்று.

இருந்தாலும், ஞான ஒளியைப் பொறுத்தவரை, நான் மெல்லிசை மாமன்னரின் அற்புதமான பின்னணி இசையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் (அதாவது அந்த காலத்திலேயே, தீம் ம்யூசிக் என்கிற சமாசாரத்தை அற்புதமாக இரு விதமாகப் பண்ணியிருந்ததைப் பற்றி. "மண மேடை மலர்களுடன் தீபம்" பாடல், மேற்கத்திய இசைக்கருவியான பியானோவைப் பெரும்பாலும் பயன்படுத்தி (பல்லவி அனுபல்லவிக்கு நடுவில், புல்லாங்குழலும் விளையாடுவது வேறு விஷயம்!) அத்தனை வாத்தியக் கருவிகளையும் சரியாகக் கையாண்டு பி. சுசீலா அவர்களால் அதியற்புதமாக உணர்வுபூர்வமாக பாடப்பட்ட, அற்புதமான பாடல். மெல்லிசை மாமன்னர் ஒருவர்தான் சூழலுக்கேற்றாற்போல் மற்ற இசையமைப்பாளர்களை விட மிக மிகத் திறமையாகவும் வெரைட்டியாகவும் இசையமைத்தவர். இந்த ஒரு சப்ஜெக்ட்டுக்கே நாம் பல பாடல்களை ஒதுக்க வேண்டி வரும். அதற்குண்டான திரியில் போய் அதில் என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
30th March 2011, 01:12 PM
அன்பு சகோதரி சாரதா மற்றும் பம்மலார், பார்த்த சாரதி, உட்பட அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. தங்களின் வேண்டுகோளை என்னால் தட்ட முடியவில்லை. எனவே உடனே எட்டாம் பாகத்தினை துவக்கி வைக்கும் பேறுடன் என்னுடைய முன்னறிவிப்போடு பதிவிட்டுள்ளேன். நடிகர் திலகத்தின் ரசிகர் பட்டாளம் உலகிலேயே உன்னதமான பட்டாளம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பார்த்த சாரதி அவர்களின் ஆய்வுகள் அமைந்து வருகின்றன. அவருடைய ஆய்வுகளுக்காக மட்டுமே தனி புத்தகம் வெளியிடலாம். அதே போல் தங்களுடைய எண்ணங்கள் எழுத்துக்கள் வலைப்பூவின் மூலம் தங்களுடைய அரிய பணியை சிறப்புற செய்து வருகிறீர்கள். பம்மலாரும் தம்முடைய பங்கிற்கு இணைய தளம் மூலம் பல்வேறு பணிகளின் மூலம் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பி வருகிறார். இதே போல் திரு முரளி சார் தன் பங்கிற்கு தான் செல்லுமிடத்தில் எல்லாம் நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளாமலில்லை. இதே போல் இந்த ஹப்பிலுள்ள அனைத்து ரசிக நண்பர்களும் அவரவர் தம் பங்கிற்கு ஆற்றி வருகிறீர்கள். நம் அனைவருக்கும் பின்னணியில் நடிகர் திலகம் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது திண்ணம்.
நம் அனைவருடைய ஒருங்கிணைந்த மனவோட்டமே இத்திரி இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.
அனைவருக்கும் அன்பும் நன்றியும்,
ராகவேந்திரன்

parthasarathy
30th March 2011, 02:41 PM
அன்பு சகோதரி சாரதா மற்றும் பம்மலார், பார்த்த சாரதி, உட்பட அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. தங்களின் வேண்டுகோளை என்னால் தட்ட முடியவில்லை. எனவே உடனே எட்டாம் பாகத்தினை துவக்கி வைக்கும் பேறுடன் என்னுடைய முன்னறிவிப்போடு பதிவிட்டுள்ளேன். நடிகர் திலகத்தின் ரசிகர் பட்டாளம் உலகிலேயே உன்னதமான பட்டாளம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பார்த்த சாரதி அவர்களின் ஆய்வுகள் அமைந்து வருகின்றன. அவருடைய ஆய்வுகளுக்காக மட்டுமே தனி புத்தகம் வெளியிடலாம். அதே போல் தங்களுடைய எண்ணங்கள் எழுத்துக்கள் வலைப்பூவின் மூலம் தங்களுடைய அரிய பணியை சிறப்புற செய்து வருகிறீர்கள். பம்மலாரும் தம்முடைய பங்கிற்கு இணைய தளம் மூலம் பல்வேறு பணிகளின் மூலம் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பி வருகிறார். இதே போல் திரு முரளி சார் தன் பங்கிற்கு தான் செல்லுமிடத்தில் எல்லாம் நடிகர் திலகத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளாமலில்லை. இதே போல் இந்த ஹப்பிலுள்ள அனைத்து ரசிக நண்பர்களும் அவரவர் தம் பங்கிற்கு ஆற்றி வருகிறீர்கள். நம் அனைவருக்கும் பின்னணியில் நடிகர் திலகம் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பது திண்ணம்.
நம் அனைவருடைய ஒருங்கிணைந்த மனவோட்டமே இத்திரி இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.
அனைவருக்கும் அன்பும் நன்றியும்,
ராகவேந்திரன்

அன்புச் சகோதரர் திரு ராகவேந்தர் அவர்களே,

நடிகர் திலகத்தின் புகழ் ஜெகமெங்கும் மேலும் மேலும் ஓங்கி ஒலித்துப் பரவ வகை செய்ய உங்களை இருகரம் கூப்பி வருக வருக என வரவேற்கிறோம்.

உங்களுடைய அனைவரது அர்ப்பணிப்பு, தீவிரம், மற்றும் அரிய தகவல்கள் அளிக்கும் பாங்கு, மற்றும் ரசிப்புத்தன்மை அளப்பரியது. இருப்பினும், நடிகர் திலகம் பற்றிய நினைவுகளையும், ஆய்வுகளையும் தொடர்ந்து என்னுடைய பார்வையில் பதிவிட முயல்கிறேன்.

அன்புடன்,

பார்த்தசாரதி

DHANUSU
30th March 2011, 08:45 PM
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)


8. ஞான ஒளி (1972) / தேவதா (1980) - ஹிந்தி


இந்தப் படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான (எனக்கு மட்டுமா?) நடிகர் திலகத்தின் பத்து படங்களுள் ஒன்று.


வியட்நாம் வீடு சுந்தரத்தின் நாடகம், மேஜரால் நடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, இந்த நாடகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, ஒரு நாள் நடிகர் திலகம் அதைப் பார்க்க விரும்பி, பார்த்த மாத்திரத்திலேயே, இதை படமாக எடுக்க வேண்டும் என்றும் மேஜர் நடித்த பாத்திரத்தைத் தான் ஏற்க விரும்புவதாகவும் மேஜரிடம் கூறியிருக்கிறார். இதற்குப் பிறகு, அந்த “அந்தோணி” கதாபாத்திரத்தை இன்னும் மெருகேற்றவும், ஒரு இடத்தில் கூட மேஜரின் சாயல் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், திரும்பத் திரும்ப, தொடர்ந்து அந்த நாடகத்தைப் பார்க்கச் சென்றாராம். மேஜர் ரொம்பவே தர்மசங்கடத்துக்குள்ளாகி விட்டாராம். இது படமாக்கப் பட்டபோது, மேஜர் நடித்த அந்தோணி பாத்திரத்தை நடிகர் திலகமும், அவரது மாமா திரு. வீரராகவன் நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் பாத்திரத்தில், மேஜரும் ஏற்று நடித்தார்கள்.


எனக்குத் தெரிந்து, நடிகர் திலகம் முதன் முதலில் படம் நெடுகிலும் ஒரு கிறித்தவராக நடித்த படம் இது தான். கிறித்தவர்கள் கடவுளை நோக்கி ஜெபம் செய்யும் முறையிலிருந்து அவர்கள் “ஆண்டவரே!” என்று அழைக்கும் முறை வரையிலும் அணு அணுவாக ஆராய்ந்து, அதற்குப் பின் தான் அந்த அந்தோணி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கத் துவங்கினார். எப்போதுமே, அவர் புதிதாக ஏற்கும் எந்தக் கதாபாத்திரத்தையும், அந்த முதல் முயற்சியிலேயே, முழு வெற்றியடைய வைத்து விடுவார் - மிகுந்த ஆராய்ச்சி செய்து, முனைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கற்பனை வளத்துடன் ஒரு தேர்ந்த சிற்பி போல் செதுக்குவதால் -

முஸ்லீம் அன்பராய் ஏற்ற ரஹீம் பாத்திரம் (பாவ மன்னிப்பு)

கிறித்தவ அன்பராய் ஏற்ற அந்தோணி பாத்திரம் (ஞான ஒளி)

பிராம்மண சமூகத்து ப்ரெஸ்டிஜ் பத்மநாபன் பாத்திரம் (வியட்நாம் வீடு)

கடமை தவறாத காவல் துறை அதிகாரி எஸ்.பி. சௌத்ரி பாத்திரம் (தங்கப்பதக்கம்)

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் இதை சொல்லக் காரணம் - இதையே ஒரு சப்ஜெக்ட் ஆக வைத்து ஒரு புதிய கட்டுரையை ஏனைய அன்பர்களோ, ஏன் நானோ, எழுதத் துவங்கலாம்.

இந்தப் படம் திரு. பி. மாதவன் அவர்களின் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த திரைக்கதையால், கொஞ்சம்கூட தொய்வில்லாமல் செல்லும். இத்தனைக்கும் இந்தப் படம், பொழுதுபோக்கு அம்சங்கள் சொற்பமே நிறைந்த ஒரு கலைப்படம் போல் தான் இருக்கும். (படத்தின் ஆரம்பத்தில் வரும் நடிகர் திலகம் - விஜயநிர்மலா சம்பந்தப் பட்ட காதல் காட்சிகள் கலகலப்பாக இருக்கும். பிற்பாதியில் வரும் MRR வாசு / ISR போன்றோரின் மிகச்சில காட்சிகள் - கொஞ்சம் கேலிக் கூத்து தான்). பெரிய பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் தனியான காமெடி ட்ராக் இல்லாமல், உணர்ச்சி மிகுந்த சம்பவங்களையும் அதில் நடித்த நடிகர்களையும் மட்டுமே நம்பி, ஆனால் மிக வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் செல்லும். முக்கியமாக, நடிகர் திலகத்தின் அனாயாசமான, உணர்வுபூர்வமான, மற்றும் அலாதியான ஸ்டைலான நடிப்பாலும், அதற்கு ஈடு கொடுத்துச் சிறப்பாக செய்த மேஜரின் நடிப்பாலும், பி. மாதவனின் சாதுர்யமான இயக்கம் மற்றும் திரைக்கதையாலும், சாரதா, விகேயார் போன்ற கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பாலும், மெல்லிசை மாமன்னரின் அற்புதமான பின்னணி இசை (படத்தின் இரு வகையான தீம் ம்யூசிக் இடம் பெற்றிருக்கும். ஒன்று நடிகர் திலகத்தை ஒவ்வொரு முறையும் சோகம் கவ்வும்போது; மற்றொன்று, பின் பாதியில், அவரும் மேஜரும் சந்திக்கும்போதேல்லாம் வருவது; மற்றும் சிறந்த பாடல்களாலும் (குறிப்பாக, தேவனே என்னைப் பாருங்கள்) வசூல் சாதனை செய்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

பொதுவாக, பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லாத படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவதில்லை. அதை பெரிய அளவில் முறியடித்து, தொடர்ந்து, நல்ல கருத்துச் செறிவுள்ள படங்களையும் கொடுத்து, அவைகளை வியாபார ரீதியாக பெரிய வெற்றிப்படங்களாக்கியதும் நடிகர் திலகம் மட்டும் தான். இதைத்தான் ஒருமுறை திரு. கமல் அவர்கள் இப்படிச் சொன்னார்.

நடிகர் திலகம் மட்டும் தான் ஒரே நேரத்தில் நடிகராகவும், மக்களைப் பெரிதும் கவர்ந்த நட்சத்திரமாகவும் மிக, மிக வெற்றிகரமாக இருந்தார். அந்தப் பாதையைத் தான் ரொம்ப வருடங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுத்து அதில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் (எனக்குத் தெரிந்து நாயகன் படத்திலிருந்து) என்று கூறினார்.

ஞான ஒளியைப் பொறுத்தவரை, ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களையும், அதில் நடிகர் திலகத்தின் நிலைமைகளையும் மிகவும் உணர்வுபூர்வாக எடுத்துரைத்த படம். படத்தின் கால ஓட்டங்களுக்கேற்ப அவரது வித்தியாசமான நடிப்பைப் படம் நெடுகிலும் கண்டு ரசிக்கலாம்.

முதலில் வரும் சில காட்சிகளில், வெறும் அரைக்கால் சட்டையை அணிந்து நடித்தாலும், படம் பார்க்கும் ஒருவரைக் கூட, அவர் நகைக்க விட்டதில்லை. அவரது உடல் மொழி, அந்த அளவிற்கு, அந்தக் கதாபாத்திரத்தோடு இழைந்து, இணைந்திருக்கும்.

இந்தப் படத்தில், அவரது கதாபாத்திரம் இடது கைப் பழக்கம் உள்ளவராக அமைக்கப் பட்டிருக்கும். இயற்கையாகவே ஒருவருக்கு இடது கைப் பழக்கம் இருந்தால் அவர் அந்தக் கையை எப்படிக் கையாளுவாரோ, அதை அப்படியே அச்சு அசலாக, ஆனால், மிக மிக இயல்பாக கண்முன் நிறுத்தியிருப்பார். இந்தப் படத்திற்கான எம்ப்ளமே, அவர் இடது கையால், மெழுகுவர்த்தி ஹோல்டரை ஓங்குவது போல் வரும் ஸ்டில் தானே. படத்தின் முற்பாதியில், இடது கைப் பழக்கம் உள்ள அந்தோணியாகவும், பின் பாதியில், கோடீஸ்வர அருணாக வரும்போது, வலது கைப் பழக்கம் உள்ளவராகவும் – அனாயாசமாக அந்த வித்தியாசத்தைக் காட்டியிருப்பார்.

ஆங்கிலத்தில் “intense performance” என்று சொல்லுவார்கள். When it comes to performing a role with intensity, none in the entire world can even stand near the shadow of NT.

இதில் முதல் பாதி, எல்லோருக்காகவும், இரண்டாம் பாதி, எல்லோருக்காகவும் பிளஸ் அவரது பிரத்தியேக ரசிகர்களுக்காகவும் பண்ணியிருப்பார் (பின்னியிருப்பார்). ஆனாலும், அவரது நடிப்பு வழக்கம் போல அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிறிதளவு கூட சிதைக்காது.

முதலில், விஜய நிர்மலாவை மடக்கும் கட்டங்களில் சாமர்த்தியமான, ஜனரஞ்சகமான நடிப்பு;

ஆனாலும், அதே விஜய நிர்மலாவுடன் பாதிரியாரின் முன் நிற்கும் நிலை வரும்போது, அந்தப் பணிவு கலந்த நகைச்சுவையான நடிப்பு;

மனைவி விஜய நிர்மலா மறைந்தது தெரிந்ததும், யாருக்கோ செய்த சவப்பெட்டி தன் மனைவிக்கே பயன்படப்போவதை நினைத்துக் காட்டும் பாவங்கள் (ஆளாளுக்கு subtle நடிப்பு subtle நடிப்பு என்று இந்தக் காலத்தில் கூறிக் கொண்டே இருக்கிறார்களே – இதுதானே subtle நடிப்பு!)

தன் பெண் பெரியவளாகி படிப்பிற்கிடையே, லீவில் வரும் போது, அவருடன் உரையாடும் காட்சிகள்; பெண் சாரதா இரயிலில் பயணம் செய்யும்போது, தவறுதலாக ஸ்ரீகாந்த்துடைய பெட்டி கை மாறி, இவர் கைக்கு வந்து விட, அந்தப் பெட்டியை, நடிகர் திலகம் பார்த்து, வெள்ளந்தியாக, அதில் இருக்கும் ஆண் உடைகள் தனக்குத்தான் தன் பெண் சாரதா வாங்கி வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு அந்த உடைகளைப் போட்டுக் கொண்டு (முக்கால் பான்ட்) வந்து வெகுளியாக நிற்பது;

தன் பால்ய நண்பன் லாரன்ஸைத் (மேஜர் சுந்தரராஜன் அவர்கள்) திரும்பப் பார்த்தபின் அவர் கை கொடுக்கும்போது, இவர் தனது இடது கையை ஒருமாதிரி அவரது சட்டையில் துடைத்துக் கொண்டே கொடுக்கும் அந்த அப்பாவித் தனம்;

வயல் வரப்போரம் நடிகர் திலகமும் மேஜரும் பேசிக்கொண்டே வரும்போது, தன் பெண் பெரிய டாக்டராக வேண்டும் அதன் மூலம் அவரது வாழ்க்கையில் படிந்திருக்கும் கரையைத் துடைக்க வேண்டும் (கொலைகாரன் பெற்ற பிள்ளை!) என்று தன் கனவை வெளிப்படுத்திக் கொண்டே வந்து; வீட்டில், தன் கண்ணெதிரே, தன்னுடைய பெண் வேறொரு வாலிபனுடன் (ஸ்ரீகாந்த்) இருப்பதைப் பார்த்து பேரதிர்ச்சியடைந்து, கொந்தளித்துக் குமுறும் அந்தக் கட்டம் – முதலில், பெண்ணை இன்னொருவனுடன் பார்த்த மாத்திரத்தில் காட்டும் அதிர்ச்சி, இடது கண் துடிக்கும் – ஆஹா, இதற்காகத்தான் நான் உன்னை இவ்வளவு நாள் வளர்த்தேனா நான் பெத்த மகளே! என்று கதறிக் கொண்டிருக்கும்போது, ஓசைப்படாமல், ஸ்ரீகாந்த் அங்கிருந்து மெல்ல நழுவுவதைப் பார்த்து, ஒரே தாவலில் (என்ன ஒரு வேகம்), அவரைப் பிடித்து, அரிவாளும் கையுமாய் ஒங்க, அவரை மேஜர் பிடித்து இழுக்க – ஒரு action படத்தில் கூட இப்படி விறுவிறுப்பான ஒரு action பார்ப்பது கடினம் – இங்கு ஒரே நேரத்தில், நடிகர் திலகம், அதிர்ச்சி, அவமானம், கோபம், வேகம், வன்மம், கண்மூடித்தனமான ஆத்திரம் – அனைத்தையும் – அற்புதமாக உணர்ச்சிகரமாக சித்தரித்திருப்பார். திரை அரங்கிலிருக்கும் ஒட்டு மொத்த மக்களையும் கட்டிப்போட்ட அற்புதமான, உணர்ச்சிக்கொந்தளிப்பான கட்டம்.

உடனே, மேஜரின் வற்புறுத்தலின்பேரில், அவருடைய மகளுக்கும் அந்த ஊர் பேர் தெரியாத வாலிபனுக்கும் கிறித்தவ முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட, இப்படியா என் பெண் கல்யாணம் நடக்கணும், இதுக்காவா அவளை அரும்பாடுபட்டுப் படிக்க வச்சேன் என்று பொருமி, புலம்பி, அரிவாளை எடுத்துக் கொண்டே அத்தனை கோபத்தையும் வெறியையும், வாழைத் தோப்பின் மேல் காட்டி, அத்தனை வாழைக் குலைகளையும் சீவு சீவென்று சீவித் தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதம்! (நடிக்க ஆரம்பித்து இருபது வருடங்களுக்குப் பிறகும், ஒரு புது மாதிரியான நடிப்பு - இயலாமையை, கோபத்தை வேறு ஒரு புது மாதிரியாக வெளிப்படுத்திய விதம்!!).

இருந்தாலும், தன் பெண்ணுக்கு முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட வேண்டும் என்று ஒரு தந்தையின் மன நிலையோடு போய் ஸ்ரீகாந்த்தை அணுக, அவர் ஒரு ஸ்திரீலோலன் என்று தெரிந்து, எவ்வளவோ பொறுமையாகக் கெஞ்சியும், அவர் வர மறுத்ததோடு நிற்காமல், அவரின் பெண்ணையே கேவலமாகப் பேசியதைத் தாங்கிக்கொள்ள முடியாமால், ஒரே அடியில் அவரை அடித்துப் பிண்டமாக்கித் தோளில் போட்டுக் கொண்டு வந்து மாதா கோவிலுக்கு வந்து போட்டு விட்டு, அப்புறம் தான் ஸ்ரீகாந்த் இறந்தே போயிருக்கிறார், தான் செய்தது ஒரு கொலை என்றறிந்து, குழந்தையைப் போல் நான் கொலை செய்யவில்லை என்று கதறுவது; தன் பெண்ணின் வாழ்க்கைக்குத் தானே எமனாகி விட்டதை நினைத்து வெடித்துக் குமுறுவது (அவரே ஒரு கொலைகாரன் பெற்ற பிள்ளை, இப்போது அவரும் ஒரு கொலை செய்து விடுவார் - ஆனால் வேண்டுமென்றே இல்லை!);


"ஞான ஒளி" தொடரும்,

அன்புடன்,

பார்த்தசாரதி

Dear Mr. Parthasarathy,

I welcome you to the NT thread. I am one of those countless devotees of NT, who contributed to this thread in a very miniscule manner way back. I am indeed happy that the thread is still going strong and best wishes for you all.

You have listed many scenes from the magnum opus "Gnana Oli". One particular scene where NT simply excels in his performance is the "I mean that silver tumbler". The style with which he would remove the gloves from his hands is simply awesome. I am sure you will mention this scene also in your continuation of the review.