PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

Pages : 1 2 3 4 5 6 7 [8]

parthasarathy
30th April 2011, 10:21 AM
அன்பு நண்பர்களே,
நம்மில் எத்தனை பேர் கடந்த 28.04.2011 அன்று இரவு விஜய் டி.வி. நடந்தது என்ன நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என் று தெரியாது. ஆனால் அன்றைய நிகழ்ச்சியில் கமலா திரையரங்கு உரிமையாளர் திரு சிதம்பரம் அவர்கள் கூறிய தகவல் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் என்றால் மிகையில்லை. சமீபத்தில் மறைந்த ஆன்மீக குரு பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் ஒரு முறை நடிகர் திலகத்தை அழைத்திருந்தாராம். சிதம்பரம் அவர்கள் அழைத்து சென்றிருக்கிறார். அங்கே நடுநாயகமாக வீற்றிருந்த பகவான் அவர்கள் 50 அடி தூரத்திலுள்ள பாதையை விட்டு விட்டு, 150 அடி தூரத்திலுள்ள பாதை வழியாக நடிகர் திலகத்தை வரச் சொல்லியிருக்கிறார். அதே மாதிரி சென்ற நடிகர் திலகத்திடம் பாபா அவர்கள் கேட்டிருக்கிறார், கணேசு, உன்னை ஏன் 150 அடி தூரத்திலுள்ள பாதை வழியாக வரச்சொன்னேன் தெரியுமா என்று. பதில் தெரியாமல் நடிகர் திலகம் ஆவலுடன் பாபா அவர்களை நோக்க, பாபாவே பதிலளித்திருக்கிறார். உன்னுடைய நடையழகை பார்க்கவே உன்னை அப்படி வரசொன்னேன் என கூறியிருக்கிறார்.
திரு சிதம்பரம் அவர்கள் அளித்த பேட்டியின் காணொளி

http://www.youtube.com/watch?v=iRH-LBQb1rs&feature=player_embedded
அனைத்து இறையருளும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகர் திலகத்தின் மேல் தூற்று மாரி பொழிவோரைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். அவர்களை அந்த இறைவன் பார்த்துக்கொள்வார். நாம் நம்முடைய பணியைத் தொடர்வோம்.
அன்புடன்

அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

நேற்று சிங்கை அன்பர்கள் மேற்கொண்ட முயற்சியினைத் தாங்கள் பதிந்த போது அதைப் பார்த்துப் பெரு மகிழ்ச்சி அடைந்த எண்ணற்ற ரசிகர்களுள் நானும் ஒருவன். அதற்காக உங்களுக்கும் சிங்கை நண்பர்களுக்கும் கோடானுகோடி நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம். இதைப் பதிவிடுவதற்கு முன் உடனேயே, கமலா திரைஅரங்கு உரிமையாளரும், நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பருமான திரு. வி.என். சிதம்பரம் அவர்கள் நடிகர் திலகம் மறைந்த ஆன்மீக குரு சத்ய சாய் பாபா அவர்களை பார்க்கச் சென்ற செய்தியையும் பதிவிட்டு கடைசியில் ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளீர்கள். தூற்றுவோர் தூற்றட்டும்; நம் பணியை நாம் தொடர்வோம் என்று.

நீங்கள் இப்போது எழுதியதைப் படித்த போது, என் கண்கள் பனிக்க ஆரம்பித்து விட்டது. எண்ணற்ற மக்களைத் தன் ரசிகர்களாகப் பெற்றக் கலைத் தாயின் தலைமகன் நடிகர் திலகம் மறைந்த ஆன்மீக குருவையும் ஆக்கிரமித்திருக்கிறார் என்று படிக்கின்றபோது, ஆனந்தக் கண்ணீர் வருகிறது.

நாம் அனைவரும் வழக்கம் போல் நடிகர் திலகத்தைப் பற்றிய அந்த ஆனந்த நினைவுகளிலேயே மூழ்கித் திளைப்போம்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
30th April 2011, 10:46 AM
டியர் முரளி,
டியர் பார்த்தசாரதி,

பின்னி எடுத்துட்டீங்க. நீங்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு 'தங்கப்பதக்கம்' திரைக்காவியத்தை அலசித்தள்ளி விட்டீர்கள். எத்தனை முறை எவ்வளவு விவரித்தாலும் அலுக்காத சலிக்காத படம் அது. அதிலும் 'சோதனைமேல் சோதனை' பாடலின்போது நடிகர்திலகம் , டி.எம்.எஸ்., கண்ணதாசன், எம்.எஸ்.வி. பி.என்.சுந்தரம் என எல்லோரும் சேர்ந்து அட்டகாசம் செய்திருப்பார்கள். ரத்தச்சிவப்பு நிற சட்டையில் நடிகர்திலகத்தின் தோற்றமும், அவருடைய நிகரற்ற முகபாவங்களும் எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காது, சலிக்காது. அதற்கேற்றாற்போல மகேந்திரனின் வசனங்களும்.

தன் மகன் மணந்துகொண்டு அழைத்து வந்திருக்கும் பிரமீளா, மேஜரின் மகள் என்றறிந்ததும், 'மாயாண்டி, என் மகன் செஞ்ச தவறுகளிளேயே அழகான தவறு உன் மகளை கல்யாணம் செஞ்சுக்கிட்டதுதான்யா' என்று சொல்லும் வசனமும், தொடர்ந்து தன் மனைவியிடம் 'சம்பந்தி வந்திருக்கார், கவனி' என்று சொல்லிப் போகும் இடமும்.

ஒருமுறை பத்திரிகை பேட்டியின்போது மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியிடம், கேள்வி கேட்டவர், "நீங்க பார்த்த தமிழ்ப்படங்களில் உங்களை பாதிச்ச சீன் எதுன்னு சொல்லமுடியுமா?" என்று கேட்க, அதற்கு மம்முட்டி, "தங்கப்பதக்கம் படத்தில் கே.ஆர்.விஜயா இறந்து போன செய்தி கேட்டு வீட்டுக்கு வரும் சிவாஜி சார், மாடிப்படியில் ஏறும்போது தன் வலது கையால் நெஞ்சில் ஸ்லோவாக ஆனால் பலமாக குத்திக்கொண்டே ஆசுவாசப் படுத்தியவாறு செல்வார். ஏனோ தெரியலை, அந்த குத்து ஒவ்வொண்ணும் என் நெஞ்சில் விழுந்த மாதிரி இருந்தது. இதைப்பார்த்து பின்னர் நானும் ஒரு மலையாளப்படத்தில் இதை முயற்சி பண்ணினேன் ஆனால் சரியா வரவில்லை. அவர், அவர்தான்" என்று சொல்லியிருந்தார். ஒரு உண்மையான கலைஞனைப்பற்றி இன்னொரு உண்மையான கலைஞனுக்குத்தானே தெரியும்.

அதுபோலவே, தங்கள் மகனுக்கு திருமணம் செய்விப்பது தொடர்பாக நடிகர்திலகமும், புன்னகையரசியும் பேசிக்கொண்டே ஒரு அறையிலிருந்து வெளிப்பட்டு, பால்கனியில் நடந்து, மாடிப்படியில் இறங்கி, இன்னொரு மாடிப்படியி ஏறி, மற்றொரு அறைக்குள் நுழைவது வரை ஒரே ஷாட்டில் படமாக்கும்படி இயக்குனர் மாதவன் சொல்ல, அதைப்படமாக்க தானே கேமராவை கையில் தூக்கிக்கொண்டு பின்னோக்கி நடந்து, அப்படி நடக்கும்போது கேமரா அசைந்து விடக்கூடாது என்பதற்காக, கைமீது ஒரு 'வாட்டர் பாக்' வைத்து அதன்மீது கேமராவை வைத்து அலுங்காமல் பூப்போல எடுத்துக்கொண்டே பின்னோக்கியே நடந்து அக்காட்சியைப் படமாக்கிய சிறப்பை மறைந்த ஒளிப்பதிவு மேதை பி.என்.சுந்தரம் அழகாக விளக்கியிருந்தார்.

கேமராவுக்கு முன் இயங்கிய கலைஞர்களும் சரி, பின்னணியில் இயங்கிய தொழில்நுட்பக் குழுவினரும் சரி, தங்கப்பதக்கம் படத்தில் எல்லோருமே சிறப்பான பங்களிப்பைத் தந்திருந்தனர். இப்படத்துக்கு இசைத்த தீம் மியூசிக்கை, பிற்பாடு மெல்லிசை மன்னர் 'மன்மத லீலை' படத்தில் ஒரு பாடலாகவே இசைத்திருப்பார். எல்லோரும் பட்டபாட்டுக்கு நல்ல பலன் கிடைத்தது. தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வெற்றியை இப்படத்துக்கு பரிசாகத் தந்தனர். இன்றுவரை இப்படத்துக்கு இருக்கும் மவுசு குறையவில்லை. எக்காலத்திலும் குறையாது.

அன்புள்ள சாரதா மேடம் அவர்களே,

என்னுடைய தங்கப்பதக்கம் திரைக்காவியத்தைப் பற்றிய ஆய்வுக்கு தாங்கள் அளித்த மனமார்ந்த பாராட்டுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். உடனேயே, தாங்களும், தங்கப்பதக்கத்தைப் பற்றி மேலும் பல விவரங்களை அளித்து எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.

அன்புடன்,

பார்த்தசாரதி

KCSHEKAR
30th April 2011, 10:47 AM
Dear Friends,

Please click the links and read the article issued in Current Issue of Junior Vikatan.

http://4.bp.blogspot.com/-Y-Lp-9h6UsY/TbuX30OzOiI/AAAAAAAAAIA/yL1JmVB9gYc/s1600/JuniorVikatanPg1.jpg

http://1.bp.blogspot.com/-xSOGfXEPwwc/TbuYBVeymhI/AAAAAAAAAII/Md-f_18et9M/s1600/JuniorVikatanPg2.jpg

http://2.bp.blogspot.com/-An7vH46CR7E/TbuYIPIMsHI/AAAAAAAAAIQ/VfGGzyclyUk/s1600/JuniorVikatanPg3.jpg

http://2.bp.blogspot.com/-65dg7yp0UOE/TbuYOEQcRPI/AAAAAAAAAIY/WftWHhCHrHM/s1600/JuniorVikatanPg4.jpg

Thanks & regards

KCSHEKAR
30th April 2011, 11:14 AM
Thangappathakkam - Film Review SUPER. Thanks to Mr.Murali, Mr.Parthasarathy, Mrs.Saratha and others who has contributed.

With regards,

saradhaa_sn
30th April 2011, 11:38 AM
TACinema,
எம்.ஜி.ஆர். இருந்த பொழுதே அவருடைய சாதனையை சிவாஜியால் முறியடிக்க முடியவில்லை. அப்புறம் எதற்கு வசூல் சக்கரவர்த்தி?
.
ராஜாராம்,

ஜோ சொன்னது போல பதில் சொல்லாமல் விட்டுவிடலாம் என்றுதான் தோன்றியது. ஆனால் இதற்குமுன்னர் உங்களின் இதுபோன்ற பிதற்றல்களுக்கு பலமுறை பதில் சொல்லிவிட்டபோதிலும் புதிதாக இங்கே வருபவர்களுக்கு, ஏதோ நீங்கள் கேட்டு நாங்கள் பதில் சொல்ல முடியாமல் போனதுபோல தோன்றும் என்பதால் இந்த பதிவு.

வெள்ளை ரோஜா, தூங்காதே தம்பியில் ஆரம்பித்து, ஏன் எம்.ஜி.ஆர்.வரை போனீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் அடிப்படையில் எம்.ஜி.ஆர்.ரசிகர் என்பதால்தானே. சரி நீங்க என்னவாகிலும் இருந்துட்டு போங்க.

எம்.ஜி.ஆரின் எல்லா சாதனைகளும் நடிகர்திலகத்தால், எம்.ஜி.ஆர்.சினிமா உலகில் இருந்த காலத்திலேயே முறியடிக்கப்பட்டன.

'எங்க வீட்டுப்பிள்ளை' வசூல் 'திருவிளையாடலால்' முறியடிக்கப்பட்டது.

'அடிமைப்பெண்', 'ரிக்ஷாக்காரன்', 'மாட்டுக்கார வேலன்' வசூல்கள் எல்லாம் 'பட்டிக்காடா பட்டணமா', 'வசந்தமாளிகை' படங்களால் தவிடுபொடியாக்கப்பட்டது.

'உலகம் சுற்றும் வாலிபன் வசூல்' எம்.ஜி.ஆர். திரையுலகில் இருக்கும்போதே (1974), 'தங்கப்பதக்கம்' படத்தால் முறியடிக்கப்பட்டது.

ஒரே நாளில் இரண்டுபடம் வெளியிட்டு இரண்டையும் 100 நாட்களைக்கடந்த வெற்றிப்படங்களாக்கிக் காட்டிய நடிகர்திலகத்தின் சாதனையை ஒருமுறை கூடச்செய்யாதவர் எம்.ஜி.ஆர். (தைரியம் கிடையாது வேறென்ன).

'ஒரே ஆண்டில் இரண்டு வெள்ளிவிழாப்படங்கள்' என்ற சாதனையை நான்கு முறை செய்து காட்டியவர் நடிகர்திலகம் (மூன்று முறை மதுரையில்). ஒருமுறை கூட செய்ய முடியாதவர் எம்.ஜி.ஆர். என்ன பண்ணுவார் பாவம், அவரால் முடிந்தால்தானே.

எம்.ஜி.ஆரின் 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் சென்னையில் அவரது வெள்ளிவிழாப்படங்கள் மூன்றே மூன்று மட்டுமே.

தொடர்ந்து மூன்று படங்கள் 100 நாட்களுக்கு மேல் என பலமுறை செய்துகாட்டியவர் நடிகர்திலகம். ஒருமுறைகூட செய்யாதவர் உங்க ஆள்.(அவர் படங்கள் ஆறுமாத இடைவெளியில் வந்தவை மட்டுமே அவ்வப்போது ஓடியிருக்கின்றன. அடுத்தடுத்து படங்கள் வெளியான 1968, 1972 போன்ற வருடங்களில் ஒரே தோல்வி மயம்தான்).

ஓலைக்குடிசை, கைரிக்ஷா, கருப்புவெள்ளை 'பாபு'வின் ஓட்டத்துக்கு முன் பிரம்மாண்ட, இரட்டைவேட, கலர்ப்படம் 'நீரும் நெருப்பும்' மண்டியிட்டது.

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா தயாரித்த 'விஸ்வரூபம்' படத்தின் வெற்றியைப்பற்றி இவ்வார திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சியில் கிருஷ்ணாவின் மனைவியும், நடிகையுமான விஜயநிர்மலா கூட குறிப்பிட்டிருக்கிறார். அந்த தீபாவளியில் விஸ்வரூபம், வறுமையின் நிறம் சிவப்பு, பொல்லாதவன் மூன்றுமே 100 நாட்களைக்கடந்த படங்கள்தான். உங்கள் பதிலில் மற்ற இரண்டும் தோல்வியென்று சொல்லியிருக்கிறீர்கள். ரஜினியின் 'பொல்லாதவன்' சென்னையில் மூன்று அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. அதன் 100வது நால் ஷீல்டு இன்றும் வடசென்னை பாண்டியன் தியேட்டரில் இருக்கிறது. போய்ப்பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் எந்த ஒரு கூற்றுக்கும் எந்த ஒரு செய்தித்தாள் ஆதாரத்தையும் தர உங்களால் முடியவில்லை. விவாதத்தை மேலும் வளர்த்து மாடரேட்டர்களுக்கு கஷ்ட்டம் தரவேண்டாம். விடுங்கள்.

Plum
30th April 2011, 11:45 AM
Coincidentally, thangapadhakkam on jaya movies now :).

J.Radhakrishnan
30th April 2011, 12:30 PM
Quote Originally Posted by Abhinaya View Post

சாரதா மேடம்!!!

சரியான பதிலடி கொடுத்தீர்கள், ராஜாராம் போன்றவர்களை மாடரேட்டர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்?

DHANUSU
30th April 2011, 01:18 PM
A tribute to the thespian (with some information on NT's BO performance)

Tamil cinema's lodestar
S. VISWANATHAN

"VICTORY, victory," shouts Villupuram Chinniah Ganesan as he makes his first appearance in his debut film Parasakthi, released in 1952. When he acted in that opening scene, he was stepping into a career that would take him to the heights of success, winning the admiration of Tamils across the globe as the versatile actor Sivaji Ganesan.

It was, therefore, not surprising that the death of Sivaji Ganesan was mourned by the entire Tamil-speaking community. Thousands of people, including hundreds of film artists and technicians, attended his funeral held in Chennai on July 23 with state honours; thousands more watched it on television. Kannada actor Raj Kumar, Telugu actors A. Nageswara Rao and Chiranjeevi and Malayalam actor Mammooty joined their film fraternity in Tamil Nadu in paying homage to the thespian.

Sivaji Ganesan's rich and varied contribution to Tamil cinema was recalled by President K.R. Narayanan, Prime Minister Atal Behari Vajpayee, Tamil Nadu's acting Governor Dr. C. Rangarajan, Chief Minister Jayalalithaa (who co-starred with him in a number of films) and Dravida Munnetra Kazhagam (DMK) president M. Karunanidhi (who wrote the script for Parasakthi). Homage was paid to the veteran actor in the Rajya Sabha, of which he was a member for a term from 1983 to 1989.

More than 300 films in Tamil, Hindi, Telugu and Malayalam - from Parasakthi to Pooparikka Varigirom - an impressive record indeed. For every three years in his first two decades in the profession, he acted in 25 films. Even more impressive is the fact that 65 per cent of his films were hits; they ran for 100 days and more, according to film historians. More than the number of the films he acted in, it was his versatility that earned for him wide admiration.

Critics list several films as his best in terms of performance. However, according to the actor, his career best was Kappalottiya Thamizhan, which tells the life of a freedom fighter, V.O. Chidambaram.

Sivaji Ganesan's forte was dialogue delivery, and it was this aspect of his performance that attracted youth to his films, at least in the first decade of his career. Film historian and media analyst S. Krishna-swamy observes in a tribute: "Sivaji Ganesan's voice and diction not only changed the course of dialogue delivery in Tamil films and plays, but also had a deep impact on the manner in which the language is spoken by narrators on radio and television. This is perhaps the most impressive contribution of the late thespian."

Two factors contributed to this success. First, the principal actors in Tamil films of the 1940s and the 1950s were Telugus, whose talent in acting was not matched by the way they delivered dialogues in Tamil. In fact, Sivaji Ganesan himself lent his voice to Mukkammala Krishnamurthy, a Telugu actor, for a Tamil film, Niraparathi, before the making of Parasakthi, and the film was well-received by the Tamil audience. Secondly, the 1950s saw the growth of the Dravidian movement in Tamil Nadu, thanks to the forceful oratory of leaders such as C.N. Annadurai and Karunanidhi. They transferred their language skill to the film medium in the scripts they wrote, ensuring their instant acceptance.

Sivaji Ganesan with his extraordinary memory and stentorian voice could captivate his fans with long spells of dialogues in chaste Tamil. He said in an interview that Parasakthi marked a break with the past, when Tamil films used to have 15 or more songs each. "Moreover," he said, "dialogue for me is poetry. I have a passion for poetry. And so, there was no problem for me in rendering it effectively."

ONE major criticism about Sivaji Ganesan is that he "overacted" his roles. Writer and film critic Jnani does not agree with this perception. He observes: "This criticism arises only when one sees Tamil art, and Indian art in general, through the prism of European art tradition. Tamil - and Indian - art traditions basically differ from those of Western realistic art. Therukkoothu (Tamil), Yakshagana Bayalatta (Kannada) and Jatra (Bengali) fall under the category of stylisation, which the West today considers as magical realism. Just as the Puranas and Indian mythology explain real-life situations and truths through fantasies, in art acting depicts reality through stylisation. That is our tradition. Sivaji was an outstanding representative of this tradition." Krishnaswamy, who holds a similar view, says: "If your theme is melodrama, your performance has to match it. But Sivaji Ganesan's range and immense versatility did not confine him to this stylised performance. He could challenge an actor of the realistic school when the story and the character demanded it."

Cho S. Ramaswamy, the actor-turned-journalist, who acted with Sivaji Ganesan in many films, brought up the criticism of "overacting" to the notice of Sivaji Ganesan with reference to a particular scene in a film. The thespian, according to Cho, demonstrated the same role in a subdued way. Asked why he did not do so in the film, Sivaji Ganesan replied: "In that case only you and me may enjoy the film, not the common people." Sivaji himself attributed his histrionic ability to his vast stage experience that preceded his entry into cinema. He recalled that he used to do four roles in the Ramayana staged by a drama troupe of which he was a part for over 10 years.

How did he manage to have a five-decade-long innings in a highly competitive industry? Some say that it was mainly owing to his strict discipline on the sets, punctuality and willing cooperation with his co-artists and technicians, and, above all, humility. He believed that only team spirit could ensure a film's success.

Unlike his one-time associate and main competitor M.G. Ramachandran, who later became Chief Minister, Sivaji Ganesan did not appear to have had any significant influence over the people at the mass level. His encounter with active politics ended in a fiasco. An admirer of E.V. Ramasamy in his youth, he soon joined the DMK. His admiration for Congress stalwart K. Kamaraj brought him to the Congress. He left it to form his own outfit but disbanded it after burning his fingers in the 1989 elections. Ultimately he landed in the Janata Dal. Soon he realised that he was not made for politics and called it a day.

Sivaji Ganesan was perhaps the first film personality in Tamil Nadu to be loved and respected in such large measure merely for his excellence in acting. Many characters in his films have had an impact on the general psyche of the people. As expressed by several fans in their letters to newspapers paying homage to the actor, his films created many role-models in human and familial relations. His heading a large joint family of at least three generations, at a time when joint families are cracking everywhere, has also been a talking point for his admirers. What is certain, however, is that through the effective use of the medium of cinema, one can win the hearts of the people, with no motive and without any prop. And that is Sivaji Ganesan's singular success.

parthasarathy
30th April 2011, 02:52 PM
A tribute to the thespian (with some information on NT's BO performance)

Tamil cinema's lodestar
S. VISWANATHAN

"VICTORY, victory," shouts Villupuram Chinniah Ganesan as he makes his first appearance in his debut film Parasakthi, released in 1952. When he acted in that opening scene, he was stepping into a career that would take him to the heights of success, winning the admiration of Tamils across the globe as the versatile actor Sivaji Ganesan.

Sivaji Ganesan was perhaps the first film personality in Tamil Nadu to be loved and respected in such large measure merely for his excellence in acting. Many characters in his films have had an impact on the general psyche of the people. As expressed by several fans in their letters to newspapers paying homage to the actor, his films created many role-models in human and familial relations. His heading a large joint family of at least three generations, at a time when joint families are cracking everywhere, has also been a talking point for his admirers. What is certain, however, is that through the effective use of the medium of cinema, one can win the hearts of the people, with no motive and without any prop. And that is Sivaji Ganesan's singular success.

Thanks Mr. Dhanus for posting this wonderful article. The last sentence exactly summarises about Nadigar Thilagam, which was evident from the fact that the largest gathering a funeral witnessed for a human being who was not in any official power, was for Nadigar Thilagam only. This was due to the crores and crores of admirers for his extraordinary talent and qualities as an humble human being.

Thanks once again,

Regards,

R. Parthasarathy

parthasarathy
30th April 2011, 02:54 PM
Thangappathakkam - Film Review SUPER. Thanks to Mr.Murali, Mr.Parthasarathy, Mrs.Saratha and others who has contributed.

With regards,

Dear Mr. Chandrasekaran,

Thanks for your sincere appreciation.

Regards,

R. Parthasarathy

parthasarathy
30th April 2011, 02:57 PM
டியர் பார்த்தசாரதி சார்,

தங்களின் உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

நடிகர் திலகம் தமது அபார நடிப்பின் மூலம் நமக்கு அளித்தார் "தங்கப்பதக்கம்" !

தாங்கள் தங்களது அற்புத எழுத்தின் மூலம் எங்களுக்கு அளித்துள்ளீர்கள் "தங்கப்பதக்கம்" !

SPசௌத்ரியைப் பற்றி RPசாரதி எழுதுவதற்கு கேட்கவும் வேண்டுமோ !

தங்களுக்கு தங்கமான பாராட்டுக்கள் ! பொன்னான வாழ்த்துக்கள் !! கோல்டன் நன்றிகள் !!!

டியர் முரளி சார்,

"தங்கப்பதக்கம்" பதிவு சொக்கத்தங்கம் !

சகோதரி சாரதா,

பாராட்டுக்கு நன்றி ! சாதனைப் பொன்னேடுகள் தொடரும் !

"தங்கப்பதக்கம்" பதிவுக்கு Golden Thanks !

அன்புடன்,
பம்மலார்.

அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

என்னுடைய தங்கப்பதக்கம் பதிவிற்கு தங்களின் உணர்வுபூர்வமான பாராட்டுதலுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.

அன்புடன்,

பார்த்தசாரதி

mr_karthik
30th April 2011, 03:18 PM
hi DHANUSU,
It is a pleasant surprise to see you after a long time, but with a wonderful article about Nadigar Thilagam. The article announces various unknown matters about NT. Thanks a lot.

Saradha,
a fitting reply to Mr.Rajaram. But he will never realise the facts and will never change his attacks. So better we ignore him to avoid digression threads in this connections.

CHADRASEKHAR,
Thanks for your links to JV articles, which remembers the TMM inaguration day by NT. Nice to know EVKS Elangovan and Saidhai Duraisamy were with us on that day.

Mahesh_K
30th April 2011, 03:19 PM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by Abhinaya http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=679335#post679335)
வெள்ளை ரோஜா படம் தான் வெற்றி பெற்றது என்றால்,வெள்ளை ரோஜாவோடு வெளியான மற்ற படங்களின் 100வது நாள் விளம்பரத்தையும் வெளியிடலாமே?

அப்பொழுது தான் எந்த படம் வெற்றி பெற்றது என்ற உண்மை தெரியும்

ஓகோ... அப்போ அதையும் நாங்கதான் கொடுக்கணுமா?. நல்ல கதையா இருக்கே.

அப்படீன்னா 'அந்தப்பக்கம்' ஒண்ணும் இல்லை.

சரி... விடுங்க.

Athu therintha vishayam thaane! Vidunga, athaiyum nammalE koduthuviduvom.

Chennai - 3 theatres
259

4. Kovai - Thanam, 5. Tiruchi - Kaveri, 6. Madurai - Sugapriya, 7 - Salem -Santham

HARISH2619
30th April 2011, 06:34 PM
dear parthi sir,
excellent writeup on thangapadhakkam.It wouldhave definitely rekindled the memories of watching that great movie in theatres with so much alapparai.I have seen that more than 15 times in theatres and whenever it was rereleased in bangalore the theatres such as sangeeth, sri,lavanya,devi,aruna wore festive look(bala sir may know).TP and vasantha maaligai were the two NT films which had more frequent releases in bangalore than any other films(kudiyirundha koyil and USV for mgr).
murali sir and saaradha madam,
you have beautifully narrated the super scenes and punch dialogues of TP.one more dialogue which was received with thunder"CHOWDHRY WILL NEVER FAILLLLL.....MY DEAR SONNN", the voice modulation and body language...........what to say?

dear friends,
please avoid persons like rajaram

pammalar
30th April 2011, 08:30 PM
நடிகர் திலகம் பற்றிய செய்திகள் மற்றும் திரைப்படத் தகவல்கள் பலவற்றை மிகவும் சுறுசுறுப்பாக வழங்கி இந்த திரி உயிரோட்டமாக உள்ளது. அடிக்கடி இந்த திரியை வாசிப்பவனாக எனக்கு நிறைய புதிய செய்திகள் கிடைத்ததாக நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

டியர் selva7,

பாராட்டுக்கு நன்றி !

Keep watching ! Lots in store !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th April 2011, 08:34 PM
அன்பு நண்பர்களே,
நம்மில் எத்தனை பேர் கடந்த 28.04.2011 அன்று இரவு விஜய் டி.வி. நடந்தது என்ன நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள் என் று தெரியாது. ஆனால் அன்றைய நிகழ்ச்சியில் கமலா திரையரங்கு உரிமையாளர் திரு சிதம்பரம் அவர்கள் கூறிய தகவல் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் என்றால் மிகையில்லை. சமீபத்தில் மறைந்த ஆன்மீக குரு பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் ஒரு முறை நடிகர் திலகத்தை அழைத்திருந்தாராம். சிதம்பரம் அவர்கள் அழைத்து சென்றிருக்கிறார். அங்கே நடுநாயகமாக வீற்றிருந்த பகவான் அவர்கள் 50 அடி தூரத்திலுள்ள பாதையை விட்டு விட்டு, 150 அடி தூரத்திலுள்ள பாதை வழியாக நடிகர் திலகத்தை வரச் சொல்லியிருக்கிறார். அதே மாதிரி சென்ற நடிகர் திலகத்திடம் பாபா அவர்கள் கேட்டிருக்கிறார், கணேசு, உன்னை ஏன் 150 அடி தூரத்திலுள்ள பாதை வழியாக வரச்சொன்னேன் தெரியுமா என்று. பதில் தெரியாமல் நடிகர் திலகம் ஆவலுடன் பாபா அவர்களை நோக்க, பாபாவே பதிலளித்திருக்கிறார். உன்னுடைய நடையழகை பார்க்கவே உன்னை அப்படி வரசொன்னேன் என கூறியிருக்கிறார்.
திரு சிதம்பரம் அவர்கள் அளித்த பேட்டியின் காணொளி

http://www.youtube.com/watch?v=iRH-LBQb1rs&feature=player_embedded
அனைத்து இறையருளும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகர் திலகத்தின் மேல் தூற்று மாரி பொழிவோரைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். அவர்களை அந்த இறைவன் பார்த்துக்கொள்வார். நாம் நம்முடைய பணியைத் தொடர்வோம்.
அன்புடன்

My devoted & sincere thanks to you, Raghavendran Sir.

Murali Srinivas
30th April 2011, 08:36 PM
நன்றி AREGU முன்பு ஒரு முறை சாதனை சிகரங்கள் தொடரின் நடுவே திரிசூலம் சாதனைகளை நீங்கள் பாராட்டி வியந்தது நினைவிற்கு வருகிறது.

சாரதி,

நன்றி. என் எழுத்துகள் உங்களை மேலும் சிறப்பாக எழுத தூண்டுமானால், அது இந்த திரியின் சிறப்பிற்கு மேலும் வளம் சேர்க்கும்.

சதீஷ், நன்றி.

நன்றி சாரதா. நீங்கள் குறிப்பிட்டது போல் மாடிப்படிகளில் நடிகர் திலகமும் புன்னகை அரசியும் பேசிக் கொண்டு வரும் காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும். இது போன்ற டெக்னிகல் விஷயங்களை கவனித்து எழுதுவதில் வல்லவரான நீங்கள் அதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள்.

சுவாமி & சந்திரசேகர் நன்றி.

ராகவேந்தர் சார்,

நடிகர் திலகத்திற்கு சிங்கை மக்களின் அஞ்சலி உணர்ச்சி வசம் என்றால் சத்ய சாய் அவர்களின் வாழ்த்துரை சாரதி குறிப்பிட்டது போல உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் செய்தி.

செந்தில்,

நன்றி. உண்மை மறு வெளியீடுகளில் பலமுறை வெளியான படம் தங்கப்பதக்கம் . நீங்கள் குறிப்பிட்ட காட்சி உண்மையிலே மிகப் பிரமாதமான ஒன்று. நடிகர் திலகத்தின் சிரிப்புக்கு பதிலாக சிரிக்க முயற்சித்து முடியாமல் தலை குனியும் ஸ்ரீகாந்திடம் நடிகர் திலகம் சொல்லும் அந்த வசனம் தியேட்டரில் உருவாக்கும் ஆரவாரத்தை நேரில் பார்க்க வேண்டும்.

அது போல the roof was brought down என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதை முழுமையாக அனுபவிக்கலாம் வேறொரு காட்சியில். சிறைவாசம் முடிந்து தனிக் குடித்தனம் செல்லும் ஸ்ரீகாந்திடம் சென்று சமாதானம் பேசும் விஜயாவிடம் உன் புருஷனை தலை குனிய வைக்கிறேனா இல்லையா பார் என்று சவால் விட, டேய் அவர் வாழ்க்கையிலே தலை குனிஞ்சது ரெண்டு தடவை. நீ பொறந்து என் பக்கத்திலே கிடந்தப்போ உன்னை பார்க்க வந்த அவர் முதல் முறையா தலை குனிஞ்சார்.இப்படி தனக்கு இப்படி ஒரு பையன் பொறந்திருக்கானேன்னு இரண்டாவது முறையா தனக்குதானே தலை குனிஞ்சு நிக்கிறார். அதை தவிர அவரை தலை குனிய வைக்க உன்னாலே மட்டும் இல்லைடா உன்னை படைச்ச அந்த ஆண்டவனாலும் முடியாது. இந்த வசனத்திற்கு எல்லாம் அரங்கில் அதகளமாக இருக்கும்.

tac & Dhanusu மீண்டும் நல்வரவு.

மகேஷ்,சதீஷ்,tac

இந்த திரியின் இரண்டு முக்கிய நோக்கங்களே நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனை இன்றைய நாளைய தலைமுறைக்கு சரியான முறையில் அறிமுகப்படுத்துதல் மற்றும் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு கலை மற்றும் அரசியல் தளங்களில் நடந்த சதி மற்றும் சூழ்ச்சிகளின் காரணமாக மறைக்கப்பட்ட சாதனைகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வருதல் எனவையே ஆகும். இவ்விரண்டு நோக்கங்களும் இந்த திரியில் சரியான வழியில் முன்னெடுத்து செல்லப்படுகிறது. இதை தடுப்பதற்கும் திசை மாற்றுவதற்கும் நடக்கும் முயற்சிகளை புறந்தள்ளி நாம் எப்போதும் போல் முன்னேறி செல்வோம். இதை என் அன்பு வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன். யார் தலைகீழாக நின்று முயற்சித்தாலும் நடிகர் திலகத்தின் சாதனைகள் இல்லை என்றாகி விடாது. Please ignore disturbances

அன்புடன்

joe
30th April 2011, 08:52 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு செஞ்சுரி ஆர்ட்டிஸ்ட். அவருக்குப் பிறகு எனக்கு இந்த விருது கிடைத்து இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.
- கே .பாலசந்தர்

Abhinaya
30th April 2011, 10:00 PM
எம்.ஜி.ஆரின் எல்லா சாதனைகளும் நடிகர்திலகத்தால், எம்.ஜி.ஆர்.சினிமா உலகில் இருந்த காலத்திலேயே முறியடிக்கப்பட்டன.

'எங்க வீட்டுப்பிள்ளை' வசூல் 'திருவிளையாடலால்' முறியடிக்கப்பட்டது.

'உலகம் சுற்றும் வாலிபன் வசூல்' எம்.ஜி.ஆர். திரையுலகில் இருக்கும்போதே (1974), 'தங்கப்பதக்கம்' படத்தால் முறியடிக்கப்பட்டது.

சாரதா மேடம்,
ஏன் இப்படி வந்து மாட்டிக் கொள்கிறீர்கள்.

எங்க வீட்டுப் பிள்ளை 7 திரை அரங்குகளில் 175 நாட்கள் ஓடியது. நெல்லையில் நூலிழையில் வெள்ளிவிழாவை தவறவிட்டது. இல்லை என்றால் 8 திரை அரங்குகளாக மாறி இருக்கும்.

அதே போல் உலகம் சுற்றும் வாலிபன் 6 திரை அரங்குகளில் 175 நாட்கள் ஓடியது.

சிவாஜியின் திருவிளையாடல் சென்னையில் மட்டும் 175 நாட்கள் ஓடியது.
அது எப்படி 7 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய எ.வீ.பியை முறியடித்தது.

அதே போல் தங்கப்பதக்கமும் சென்னையில் மட்டும் 175 நாட்கள் ஓடியது.அது எப்படி 6 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய உ.சு.வாவை முறியடித்து.

இப்படி நினைக்க சிவாஜி ரசிகர்களல் மட்டுமே முடியும்.

உ.சு.வா பெங்களூரில் 3 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
மொத்ததில் 20க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடி தமிழ் திரை உலக வரலாற்றில் சாதனை படைத்தது.

எம்.ஜி.ஆர் திரை உலகில் இருந்த வரை சிவாஜியின் எந்த ஒரு திரைப்படமும் இந்த மாதிரி சாதனைப் படைத்ததில்லை.

எனவே தான் எம்.ஜி.ஆரை வசூல் சக்கரவர்த்தி என்று கூறுகிறார்கள்.

parthasarathy
30th April 2011, 10:42 PM
நடிகர் திலகத்தின் படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)

10. தேவர் மகன் (1992) / விராசட் (1994) - ஹிந்தி

இந்தப் படத்தில் நடிகர் திலகம் பெரிய தேவராக வாழ்ந்து காட்டியதைப் பற்றி மூன்று வருடங்களுக்கு முன்னர் திரு. பிரபுராம் அவர்கள் மிகச் சிறப்பாக ஒரு தேர்ந்த தமிழ்ப் பண்டிதருக்கேயுரிய அற்புதத் தமிழில் ஒன்பது பாகங்கள் எழுதிப் பிரமாதப் படுத்தியிருந்தார். இந்தத் திரியை நான் ஓராண்டுக்கு முன் படிக்கத் துவங்கியபோதே அந்தக் கட்டுரைகளைப் படித்து வியந்திருந்தாலும், இப்போது, தேவர் மகனைப் பற்றி எழுத விழைவதற்கு முன்னர், அந்தக் கட்டுரைகளை மீண்டும் ஒரு முறை படித்தேன். அவர் அளவிற்கு நுணுக்கமாக இனி ஒருவர் எழுத முடியுமா என்பது சந்தேகமே. என்றாலும், ஓரிரு வார்த்தைகள்.

பெரிய திரையில் நடிக்கத் துவங்கி நாற்பத்தியிரண்டு வருடங்கள், வகை வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, அவைகளுக்கு, உயிரும் உணர்வும் கொடுத்து, ஒவ்வொரு பாத்திரத்தையும், வித்தியாசமாக நடித்து வந்த நடிகர் திலகம், மீண்டும் ஒரு முறை இந்த பெரிய தேவர் பாத்திரத்திற்கு ஒரு புதிய நடிப்பைக் கொடுத்து, so called subtle ஆக்டிங் ஸ்டைலுக்கு மறுபடியும் இலக்கணம் வகுத்து, பார்க்கும் ஒவ்வொருவரையும் நெக்குருக வைக்கும் அந்த அதிசயத்தை அனாயாசமாக நிகழ்த்திக் காட்டினார். அறுபத்து நான்கு வயதிலும், கதைக் களத்தையும், கதாபாத்திரத்தையும் சிதைக்காமல், உடன் நடித்த அத்தனை கலைஞர்களையும் விஞ்சி நடித்து, அந்த பெரிய தேவர் பாத்திரத்தை மறக்க முடியாத திரைக் கதாபாத்திரமாக உலவ விட்டார்.

படத்தைப் பார்த்த ஒவ்வொருவரையும், நடிகர் திலகமும், கமலும் நிஜ தந்தை - மகன் என்றே நம்ப வைத்து விட்டிருந்தனர்.

இப்படத்தை இன்று பார்க்கும் இளைய தலைமுறையினரும் கூறும் விஷயம் – இந்தப் படம், சிவாஜி இறந்தவுடன், ஏன், ஒரேயடியாக, சுவாரஸ்யம் இழந்து, தொய்ந்து விடுகிறது என்பது தான். அதுதான், அந்த யுகக் கலைஞனின் தனிச் சிறப்பு. அந்த அளவிற்கு, அந்த பெரிய தேவர் பாத்திரமும், அதில் நடித்த நடிகர் திலகத்தின், உயிர்ப்பான நடிப்பும், பார்ப்பவர் கண்ணை விட்டகலாதிருக்கும். இப்படம், நடிகர் திலகம் இறந்தவுடன் சுவாரஸ்யம் இழந்தாலும், மறுபடியும், கடைசியில், நாசரும், கமலும் மோதிக் கொள்வதிலிருந்து சூடி பிடித்து, யதார்த்தமாக முடிவடையும்.

தேவர் மகன், ஹிந்தியில், "விராசட்" என்ற பெயரில் எடுக்கப்பட்டு, படு தோல்வி அடைந்தது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, அந்த மொழியின் மண்ணிற்கேற்ப அதை எடுக்கத் தவறியது. மற்றொன்று, நடித்த முக்கிய கலைஞர்கள், மூலப் படத்தின் அளவிற்கு நடிக்க முடியாமல் போனது. (அம்ரீஷ் பூரி மற்றும் அனில் கபூர்). அனில் கபூராவது, கமல் நடித்த பாத்திரத்தை ஓரளவிற்கு நிறைவாக செய்ய முயற்சியாவது செய்தார். ஆனால், அம்ரீஷ் பூரியாலோ (என்ன ஒரு விவஸ்தை கெட்ட தேர்வு?) நடிகர் திலகத்தின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை என்பதை விட, எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு சிதைத்து விட முயற்சி செய்து, அதில் முழு வெற்றியும் அடைந்தார் எனலாம். மூலத்தின் வெற்றிக்கு ஆதாரமான நடிகர் திலகத்தின் பாத்திரம் ஒரேயடியாக அம்ரீஷ் பூரியால் சிதைக்கப்பட்டது அந்தப் படத்தின் படுதோல்விக்கு பெரிய அளவில் காரணமாக அமைந்தது. (இதே போல், முன்னொரு முறை, நாயகன் படத்தை "தயாவன்" என்ற பெயரில், வினோத் கன்னாவும், பெரோஸ் கானும் வெற்றிகரமாக சிதைத்திருந்தனர்!?.).

இந்தக் கட்டுரை இனிதே நிறைகிறது. இருப்பினும், நடிகர் திலகம் என்ற மொழிகளுக்கும், விவரணைகளுக்கும் அப்பாற்பட்ட கலைஞனின் சாதனைகளையும், திறமைகளையும், ஆற்றலையும், ஒரு இருபது படங்களை மட்டும் வைத்து அடைத்து விட முடியாது.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

selva7
30th April 2011, 11:41 PM
http://www.youtube.com/watch?v=ul9Xvjt83eI

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்று தேவர் மகன் திரைப்படத்தின் இந்த காட்சி எனக்கு மிகவும் பிடித்த காட்சியாகும். நடிகர் திலகத்தின் subtle ஸ்டைலிலான ஆக்டிங்கும் , கமலின் தரமான நடிப்பும், இருவருக்குமிடையே நிகழும் உணர்ச்சிப் பூர்வ வசனங்களும் மற்றும் காட்சியமைப்பும் அருமையாக இருக்கும்.

RAGHAVENDRA
1st May 2011, 07:23 AM
மே-1 - இன்று மணநாள் காணும் புது மண தம்பதியருக்கு நமது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NTwKamalammaB.jpg

அன்புடன்

DHANUSU
1st May 2011, 10:55 AM
Some glimpses from the life sketch of NT

நாடகக் கம்பெனியில் பிளவு

எஸ்.கே.நாடகக் குழுவில், அப்போது எஸ்.வி.சகஸ்ரநாமமும், கே.ஆர்.ராமசாமியும் முக்கிய
நடிகர்கள். இவர்களில் யாரிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைப்பது என்று மதுரம் யோசித்தார். முடிவில் சகஸ்ரநாமத்திடம் ஒப்படைக்கத் தீர்மானித்தார். இதனால், கே.ஆர்.ராமசாமி வருத்தம் அடைந்தார். என்.எஸ்.கே.நாடக சபாவில் இருந்து விலகி, புது
நாடகக் கம்பெனி தொடங்க தீர்மானித்தார். இதைத் தொடர்ந்து, நாடகக் குழு இரண்டாக
பிளவுபட்டது. சிலர் சகஸ்ர நாமம் அணியிலும், சிலர் கே.ஆர்.ராமசாமி அணியிலும் சேர்ந்தனர். கே.ஆர்.ராமசாமியுடன் சேர்ந்தவர்களில் சிவாஜிகணேசனும் ஒருவர். பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் கே.ஆர்.ராமசாமி. அவர் அண்ணாவை
சந்திப்பதற்காக காஞ்சீபுரம் சென்றார். போகும்போது, சிவாஜிகணேசனையும், தன் ஆதரவாளர்களையும் அழைத்துச்சென்றார். அண்ணா அப்போது ``திராவிட நாடு" என்ற
பத்திரிகையை நடத்தி வந்தார். அந்த பத்திரிகை அலுவலகத்தில், சிவாஜியும், மற்றவர்களும்
தங்கினார்கள். சிவாஜிகணேசன் வாழ்க்கையில் திருப்புமுனை திராவிட கழகத்தில் இருந்து தி.மு.கழகம் பிரியாத காலக்கட்டம் அது (1946). சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு
இருந்தனர்.

அண்ணாவின் நாடகம்

மாநாட்டில் நடிப்பதற்காக ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற பெயரில் ஒரு நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார்.இந்த நாடகத்தின் கதைச்சுருக்கம் வருமாறு:
சிவாஜி பெரிய மாவீரன். சாதாரணக் குடிமகனாக இருந்து பெரிய மன்னனானவன். அந்நியர் ஆட்சியை எதிர்த்தவன்.மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியபோதிலும், அவன் மன்னனாக முடி சூட்டிக் கொள்ள பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம், அவன் கீழ் சாதி!
இதனால், காசியில் இருந்து காகப்பட்டர் என்ற பெரிய மதத் தலைவரை அழைத்து வந்து, சிவாஜியை சத்திரியனாக மாற்றுகிறார்கள். அதன்பிறகு தான் அவர் சிம்மாசனம் ஏற, இந்துக்கள் சம்மதிக்கிறார்கள். இப்படி செல்லும் இந்த நாடகத்தில், சிவாஜியாக
எம்.ஜி.ஆரும், காகப்பட்டர் வேடத்தில் அண்ணாவும், மற்றொரு முக்கிய வேடத்தில் டி.வி.நாராயணசாமியும் நடிப்பது என்று முடிவாகியது. இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். காங்கிரஸ் அனுதாபியாகவும், பக்தராகவும் இருந்தார்.என்ன காரணத்தினாலோ, எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில்
நடிக்கவில்லை. நாடகத்துக்குப் பொறுப்பாளராக இருந்த நடிகர் டி.வி.நாராயணசாமி அண்ணாவை சந்தித்து, எம்.ஜி.ஆர். தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.

வாழ்க்கையில் திருப்புமுனை

``திராவிட நாடு" அலுவலகத்தில் தங்கியிருந்த சிவாஜி கணேசன், இதற்குள் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். சிவாஜியின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார்.எனவே, சிவாஜியை அழைத்து, ``கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?" என்று கேட்டார். இதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி! தன்
காதுகளையே நம்பமுடியவில்லை. ``என்ன அண்ணா சொல்கிறீர்கள்? உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா? அதுவும் சிவாஜி வேடத்தில்! என்னால் முடியுமா?" என்றார். ``நீ முயற்சி செய்து பார், கணேசா! உன்னால் முடியும்" என்றார், அண்ணா.மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை சிவாஜியிடம் கொடுத்து, ``நான் வீட்டிற்குச் சென்று வருகிறேன். அதற்குள் இதை நீ படித்து வைத்திரு. எப்படிப் பேசுகிறாய் என்று பார்ப்போம்" என்று
கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். ``கணேசா! வசனத்தைப் படித்தாயா?" என்று கேட்டார்.சிவாஜி அவரிடம், ``அண்ணா! நீங்கள் இப்படி
உட்காருங்கள்!" என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார். அண்ணா சிவாஜியை கட்டித்தழுவி ``கணேசா! நீ
இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே! அரிய சாதனை" என்றார்.
அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.

திராவிட கழக மாநாட்டில், ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர்.

பெரியார் பாராட்டு

3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார். ``நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா" என்று பாராட்டினார்.அத்துடன், ``யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக
நடித்தானே, அவன் யார்?" என்று கேட்டார். சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, ``இந்தப் பையன்தான். பெயர் கணேசன்" என்று அறிமுகம் செய்து வைத்தனர். ``சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!" என்று பெரியார் வாழ்த்தினார். பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை ``வி.சி.கணேசன்" என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் ``சிவாஜி கணேசன்" ஆனார்.

``என்னுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது சிவாஜி என்ற பெயர்!
ஐயாவையும், அண்ணாவையும், அந்த மாநாட்டையும் நான் என்றுமே மறப்பதில்லை. அதற்குப்பிறகுதான் சாதாரண கணேசன், சிவாஜிகணேசன் ஆனேன். `சிவாஜி' என்ற பெயர், தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்டபிச்சை" என்று சிவாஜிகணேசன் தன்
வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

``பராசக்தி" வருவதற்கு முன்பே சிவாஜி கணேசன்
திருமணம் சீர்திருத்த முறையில் நடந்தது
(1-5-1952)

நடிகர் சிவாஜி கணேசன் திருமணம், ``பராசக்தி" படம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக சுவாமி மலையில் நடந்தது. கே.ஆர்.ராமசாமி குழுவில் சிவாஜி நடிகர் கே.ஆர்.ராமசாமி தன் நாடகக் குழுவை தஞ்சாவூரில் தொடங்கினார். இந்த நாடக்குழுவில்,
சிவாஜி கணேசனும் இடம் பெற்றார். ``மனோகரா" நாடகத்தில் கே.ஆர்.ராமசாமி மனோகரனாக நடித்தார். சிவாஜிகணேசன், மனோகரனின் தாயார் பத்மாவதியாக
நடித்தார். இந்த சமயத்தில்தான் கே.ஆர்.ராமசாமிக்காக ``ஓர் இரவு" என்ற நாடகத்தை அண்ணா எழுதினார். ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களைக் கொண்டு,
கதையை புதுமையாக எழுதியிருந்தார். இந்த நாடகத்தில் சிவாஜி கணேசனும் நடிப்பதாக
இருந்தது. ஆனால், நாடகக் குழுவைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், அவர் நாடகத்தில் நடிக்கவில்லை காஞ்சீபுரத்துக்கு சென்று, ``திராவிட நாடு" அலுவலகத்தில் தங்கிக் கொண்டு, அண்ணாவுக்கு உதவியாக இருந்தார். அண்ணா பொதுக்கூட்டங்களுக்குச் செல்லும்போது, சிவாஜியையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். மேடையில் பேசுவதற்கு பயிற்சி அளிப்பார்.

சக்தி நாடகசபா

இந்தக்காலக் கட்டத்தில், ``சக்தி நாடக சபா" என்ற நாடகக் குழுவினர் நாடகங்களை நடத்தி வந்தனர். தங்கவேலுபிள்ளை என்பவர் இந்த நாடகக் கம்பெனியின் உரிமையாளர். எனினும், ``சக்தி" கிருஷ்ணசாமியின் முழுப்பொறுப்பில் நாடக கம்பெனி நடந்து வந்தது.
இந்த கம்பெனியில் முக்கிய நடிகர்களாக இருந்த எம்.என். நம்பியார், எஸ்.வி.சுப்பையா ஆகியோர் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த சினிமா படங்களில் நடிப்பதற்காக கோவை சென்று விட்டனர். எனவே, சக்தி நாடக சபைக்கு அனுபவம் மிக்க நடிகர்கள் தேவைப்பட்டனர்.
சிவாஜியின் பால்ய நண்பரான கரந்தை சண்முக வடிவேலு சக்தி நாடகசபை சார்பில் காஞ்சீபுரம் வந்து, அண்ணாவை சந்தித்தார். ``சக்தி நாடக சபாவுக்கு நல்ல நடிகர்கள் தேவைப் படுகிறார்கள். நீங்கள் சிவாஜிகணேசனை அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும்" என்று கூறினார்.

அண்ணா சிறிது யோசித்தார். பிறகு சிவாஜி கணேசனை அழைத்து, ``கணேசா!நீ சக்தி நாடக சபாவுக்குப் போ. உன்னை எப்போது திரும்பக் கூப்பிட வேண்டுமோ அப்போது அழைத்துக் கொள்கிறேன்" என்றார். இதனால், அண்ணாவிடம் பிரியா விடை பெற்று சக்தி நாடக சபாவுக்கு சிவாஜி சென்றார். சக்தி நாடக சபை அப்போது திண்டுக்கல்லில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தது. அந்தக் குழுவினர் சிவாஜிக்கு நல்ல மரியாதை கொடுத்தனர். முக்கிய வேடங்கள் அவருக்குக் கிடைத்தன.

வேலூர் முகாம்

திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் சென்றுவிட்டு, வேலூர் சக்தி நாடகசபா முகாமிட்டது.
அப்போது ``நூர்ஜஹான்" என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக சிவாஜி நடித்தார். அந்த நாடகத்தில் சிவாஜிக்கு வேஷப்பொருத்தம் பிரமாதமாக இருக்கும். அசல் நூர்ஜஹான் போலவே இருப்பார்; அழகாக நடனம் ஆடுவார்.

``நேஷனல் பிக்சர்ஸ்" பி.ஏ.பெருமாள், இந்த நாடகத்தைப் பார்த்தார். சிவாஜியின் நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது. ``எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகராக சிவாஜி வருவார்" என்று நினைத்தார்.

பராசக்தி

இந்த சமயத்தில், தேவி நாடக சபையினர் ``பராசக்தி" என்ற நாடகத்தை நடத்தி வந்தனர். அந்த நாடகத்தை பெருமாள் முதலியார் பார்த்தார். அந்த நாடகத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.``பராசக்தி கதையை படமாகத் தயாரிக்க வேண்டும். அதில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும்" என்று தீர்மானித்தார்.நினைத்ததை செயலில் காட்டினார். ``ஏவி.எம்." கூட்டுறவுடன் ``பராசக்தி"யை எடுத்து, தமிழ்ப்பட உலகுக்கு நடிப்பின் இமயத்தை அறிமுகம் செய்து வைத்தார். தனக்கு வாழ்வளித்த பெருமாள் முதலியாரை, கடைசி மூச்சு உள்ள வரை தெய்வமாகவே கருதினார், சிவாஜிகணேசன்.

திருமணம்

``பராசக்தி"யில் நடித்துக் கொண்டிருந்தபோதே, சிவாஜி கணேசனுக்குத் திருமணம்நடந்து விட்டது. சொந்த அக்காள் மகள் கமலாவை அவர் மணந்தார்.பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட இத்திருமணம், சுவாமிமலையில் 1952 மே 1-ந் தேதி நடைபெற்றது.
சீர்திருத்த முறைப்படி எளிமையாக இத்திருமணம் நடந்தது. திருமணத்துக்கு மு.கருணாநிதி, எம்.ஜி. ஆர்., நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பெருமாள் முதலியார், கவிஞர் கண்ணதாசன், அரங்கண்ணல், டி.ஏ. மதுரம், எஸ்.வி. சகஸ்ரநாமம், டைரக்டர்கள் கிருஷ்ணன்-
பஞ்சு ஆகியோர் வந்திருந்தனர்.

திருச்சியில் தமிழாசிரியராக இருந்த ரத்தினம் பிள்ளை, திருக்குறளைப்படித்து திருமணத்தை நடத்தி வைத்தார். கண்ணதாசன் மாலையை எடுத்துக் கொடுக்க அதை மணமகளுக்கு அணிவித்தார், சிவாஜி. பின்னர் தாலி கட்டினார். மணமக்களை கண்ணதாசன் வாழ்த்தி
பேசினார். ஓட்டலில் இருந்து எடுத்து வந்த சாப்பாடு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
``என்னுடைய கல்யாணச் செலவு 500 ரூபாய்தான்" என்று சிவாஜி கூறியுள்ளார்.
(இப்படி தான் திருமணம் செய்து கொண்டதால் வருத்தப்பட்ட சிவாஜி தனது தம்பி சண்முகத்தின் திருமணத்திற்கு 100 புரோகிதர்களை வைத்து ஆச்சாரப்படி நடத்தினார்)
கோடம்பாக்கத்தில்

திருமணத்துக்குப் பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் வீடு பார்த்து, மனைவியுடன் குடியேறினார், சிவாஜிகணேசன். சில நாட்கள் கழித்து ராயப்பேட்டை பெசன்ட்
ரோட்டுக்கு குடிபோனார். அங்குதான் இப்போது சிவாஜி பிலிம்ஸ் அலுவலகம் இருக்கிறது.
சிவாஜி- பத்மினி ஜோடியாக நடித்த முதல் படம் ``பணம்" ``பராசக்தி"யை அடுத்து சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த படம் ``பணம்". இதில் சிவாஜி கணேசனும், பத்மினியும் முதன் முதலாக ஜோடி சேர்ந்தனர். ``பராசக்தி"யில் சிவாஜிகணேசன் நடித்துக் கொண்டிருந்த போதே வேறு சில படவாய்ப்புகள் வந்தன.
நனறி மாலை மலர்

DHANUSU
1st May 2011, 11:04 AM
http://www.maalaimalar.com/2010/01/06104549/sivaji.html

NT's wedding photo. (01/05/1952)

DHANUSU
1st May 2011, 11:26 AM
சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த படம் "தெய்வ மகன்'. சிறப்பான கதை, நடிப்பு, படமாக்கம் இருக்கிறதென்று அதை ஆஸ்கர் விருதுக்காக அனுப்பி வைத்தனர். அதை கண்டித்தார் எம்.ஜி.ஆர்., "அனுப்பிய முறை சரியில்லை' என்று விமர்சித்தார். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சினிமாவிலும், அரசியலிலும் கடுமையாக மோதிக் கொண்ட நேரம் அது. எம்.ஜி.ஆரின் கண்டனம் பற்றி சிவாஜியிடம் கருத்து கேட்ட போது, "தெய்வமகன்' படத்தைப் பற்றி எம்.ஜி.ஆர்., குறை சொல்லவில்லையே! படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியது பற்றி விமர்சித்திருக்கிறார். அது அவரது கருத்து!' என்று பதிலளித்தார். இந்தப் பிரச்னை மூலமாக இருவருக்கும் மோதல் வளரும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போயினர்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் போட்டி போட்டதைப் போல, மோதிக் கொண்டது போல வேறெங்கும் பார்த்திருக்க முடியாது அவர்களைப் போல் நட்பு கொண்டவர்களையும் காண முடியாது.

சிவாஜி உற்சாகமாக இருக்கும் போது, எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே கூறுவார். எம்.ஜி.ஆரும், "தம்பி சிவாஜி' என்றே சொல்வார். இருவரையும் நட்பு ரீதியாக இணைப்பதற்கு அவர்கள் நாடக உலகிலிருந்து வந்தவர்கள் என்ற ஒரு விஷயம் அடித்தளமாக இருந்தது. இன்னொன்று இருவரிடமும் இருந்த அளவில்லாத தாய் பாசம்.

சிவாஜிக்கு எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்திற்கு எதிரிலேயே ஒரு தோட்டம் உண்டு. அதை சிவாஜி தோட்டம் என்பர். இங்கு நிறைய திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. வயல்வெளி, தோட்டம், ஓய்வெடுக்க வசதியுள்ள வீடு என்றிருந்த இந்த இடத்தில் சிவாஜி, தன் தாயார் நினைவாக சிலை ஒன்றை எழுப்பினார். அந்த சிலையை, அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திறந்து வைக்க வேண்டுமென்று விரும்பினார்.

ஆடம்பரமில்லாத அந்த எளிய நிகழ்ச்சியில் சிவாஜி குடும்பத்தினர், எம்.ஜி.ஆர். குடும்பத்தினர் கலந்து கொண்டனர். திரையுலகிலிருந்து தயா ரிப்பாளர், நடிகர் பாலாஜி மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார். சிவாஜி காங்கிரசில் தீவிரமாக இருந்த நேரம் அது என்றாலும், தான் சார்ந்த கட்சியிலிருந்து அவர் யாரையும் அழைக்கவில்லை.

இதற்கு முன் தஞ்சாவூரில் சாந்தி, கமலா என்ற இரு திரையரங்குகளை சிவாஜி கட்டி முடித்ததும், அதைத் திறந்து வைக்க முதல்வர் எம்.ஜி. ஆரைத் தான் அழைத்தார். அப்போது முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனும் கலந்து கொண்டார். அன்றைக்கு சிவாஜி காங்கிரசில் இருந்தாலும் வேறு முக்கிய பிரமுகர்களை அழைக்கவில்லை. இரு தியேட்டர்களையும் திறந்து வைத்துப் பேசிய எம்.ஜி.ஆர்., சிவாஜியின் பெயரில் ஒரு தியேட்டர் எழுப்பப்படவேண்டும். அதையும் நானே திறந்து வைப்பேன்...' என்றார்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் சிவாஜி நடித்த 275வது படம் "புதிய வானம்' இது ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த படம். சிவாஜியுடன், சத்யராஜ் இன்னொரு நாயகன்.

படத்தில் சிவாஜி, சத்யராஜ் இருவரும் பாடுவதாக ஒரு பாடல் சொல்கிறேன். புதுப்பாடம் சொல்கிறேன்...' என்ற காட்சி உண்டு. சத்யராஜின் குழந்தைகளுக்கு சிவாஜி புத்தி கூறுவதான பாடல் அது.

அந்தப் பாடலில், "எளிமையும், மனப் பொறுமையும் புரட்சி தலைவராக்கும் உன்னை...' என்ற வரிகள் வரும்.

எம்.ஜி.ஆரைக் குறிப்பது என்பதால் நாம்தான் வாயசைத்து நடிக்கப் போகிறோம் என்று சத்யராஜ் நினைத்திருக்கிறார். ஆனால், படப்பிடிப்பிற்கு சென்றபோது தான் அந்த வரிகள் சிவாஜிக்கானது என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கூறியிருக்கிறார்.

இதை அறிந்த சிவாஜி முதலில் தயங்கினார், "நான் அண்ணனைப் பற்றிப் பாடினால் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ?' என்று. உதயகுமார் அதற்கு, "எம்.ஜி.ஆர். அமரரான பின் எல்லாருக்கும் பொதுவானவராகிவிட்டார். உங்களுக்கு எந்த சங்கடமும் வேண்டாம்...' என்று விளக்கம் கூறியிருக்கிறார். சொல்கிற விதமாகச் சொன்னால் எந்த ஒரு இயக்குனரின் சொல்லையும் சிவாஜி மீற மாட்டார். சரியென்று நடிக்கத் தயாரானார்.

சத்யராஜை அழைத்த சிவாஜி, "நீ தான் அண்ணன் (எம்.ஜி.ஆர்.) மாதிரி நிறைய பண்ணியிருக்கியே. நான் எப்படி நடிக்கணும்ன்னு நடிச்சுக் காட்டு...' என்றார்.

அதற்கு சத்யராஜ் "என்னங்கப்பா (சிவாஜியை அப்பா என்றழைப்பார்) உங்களுக்குப் போய் நடிச்சுக் காட்டச் சொல்றீங்களே?' என்று நெளிந்தார்.

சிவாஜியோ, நீ நடிச்சுக் காட்டினா தான் நான் நடிப்பேன்...' என்றார். இது சிவாஜியின் குறும்புத்தனம்.

சத்யராஜ், எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடித்துக் காட்ட, அதை ரசித்தார் சிவாஜி. ஆனால், அவர், தனது பாணியிலேயே அந்தப் பாடல் காட்சியில் வாயசைத்து நடித்து முடித்தார்.

எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவரைக் காணச் சென்றவர்களில் சிவாஜியும் ஒருவர். சிவாஜியைக் கண்டதும் கட்டிப்பிடித்து கதறி அழுதுவிட்டார் எம்.ஜி. ஆரின் நிலையைப் பார்த்ததும் சிவாஜியும் அழுது விட்டார். நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களைத் தவிர வேறு யாரும் அருகில் இல்லை. சிவாஜியிடம் ரகசியம் ஒன்றைச் சொன்ன எம்.ஜி.ஆர்., ஒரு கடிதமும் கொடுத்தார். அதை சிவாஜி கடைசி வரை யாரிடமும் கூறவில்லை. கடித விஷயங்களை வெளிப்படுத்தவுமில்லை. இரு திலகங்களுக்குள்ளும் உறைந்து போன விஷயம் அது.

இதற்குப் பின் எம்.ஜி.ஆர்., கடைசி முறையாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முன், இலங்கை தமிழர்களைக் காக்கும் பொருட்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தியமைக்காக, பிரதமர் ராஜீவ் காந்திக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட், 2,1987ல் சென்னை கடற்கரையில் பெரும் கூட்டமொன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர்., கீழே பார்வையாளர் வரிசையில் சிவாஜி அமர்ந்திருப்பதைக் கண்டார். சிவாஜி தயங்கினாலும் அவரை மேடைக்கு வரவழைத்து அமர வைத்தார். அப்போது சிவாஜிக்குத் தன் அன்பைத் தெரிவிக்கும் வகையில் அவர் கன்னத்தில் எம்.ஜி.ஆர்., முத்தமிட்டபோது, கூட்டம் முழுவதுமே ஆர்ப்பரித்தது.

டிச., 5,1987ல் அன்று எம்.ஜி. ஆர்., வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற "ஜல்லிக்கட்டு' 100வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களுக்கு கேடயம் வழங்கினார். எம்.ஜி.ஆர். கடைசியாக பங்கேற்ற திரையுலக நிகழ்ச்சி அது. சிவாஜி நடித்த படமொன்றுக்கு எம்.ஜி.ஆர். கேடயம் வழங்கி மகிழ்ந்த முதலும், கடைசியுமான நிகழ்ச்சி அது.

மலையாளத்தில் சிவாஜி நடித்த சினிமாஸ்கோப் படம் "தச்சோளி அம்பு' பிரேம் நசீர், தீபா நடித்த இதில் சிவாஜி ஜோடியாக கே.ஆர். விஜயா நடித்தார். அதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் இடுக்கி அருகே நடைபெற்றது. ஒரு சண்டைக் காட்சியின் போது சிவாஜி தவறி விழுந்து வலது கை மணிக்கட்டுக்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை நடந்த போது, முறிந்த எலும்பை இணைக்கும் வகையில் தகடு பொருத்தப்பட்டது. (அந்தத் தகடுதான் சிவாஜி உடல் எரியூட்டப்பட்டபின் கிடைத்ததாகும்.)

சிவாஜி குணமாகிய பின், "தச்சோளி அம்பு' படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார். படப்பிடிப்பு தொடங்கிய இடம் சத்யா ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோ ஜூபிடர் பிக்சர்ஸ் வசம் இருந்த போது "மனோகரா'விலிருந்து, "பாசமலர்' வரை பல சிவாஜி படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஸ்டுடியோவை எம்.ஜி.ஆர். வாங்கிய பின் சிவாஜி படங்களின் படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை. அங்கு நடந்த எம்.ஜி.ஆர்., குடும்ப திருமண நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே சிவாஜி வந்து போனார்.

பல வருடங்களுக்குப்பின், "தச்சோளி அம்பு' படப்பிடிப்பு சத்யா ஸ்டுயோவில் துவங்கிய போது எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வராக இருந்தார். சிவாஜி ஒப்பனையோடு படப்பிடிப்புக்கு வந்தார் ஸ்டுடியோ நிர்வாகி பத்மநாபன், துணை நிர்வாகி ஹரி (எம்.ஜி.ஆர்., மேக்கப்மேன் ராமதாஸின் மகன்) உட்பட ஸ்டுடியோ பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து பத்தாயிரம் ரோஜாப் பூக்களைக் கொண்ட மிகப்பெரிய மாலையொன்றை சிவாஜிக்கு அணிவித்து வரவேற்றனர். எம்.ஜி.ஆரின் உத்தரவின் பேரில், அவரது பிரத்யேக ஒப்பனை அறையை சிவாஜி பயன்படுத்திக் கொள்ளச் செய்தனர். அதற்கு முன் வேறு யாரும் எம்.ஜி. ஆரின் ஒப்பனை அறையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதில்லை.

இதற்குப் பின் சிவாஜி தன்னுடைய சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான திரிசூலம், ரத்தபாசம், சந்திப்பு, வா கண்ண வா போன்ற படங்களின் படப்பிடிப்பை சத்யாவில் வைத்துக் கொண்டார்.

அப்படி படப்பிடிப்பு நடத்திய போது ஸ்டுடியோ பணியாளர்களை எம்.ஜி.ஆர்., நடத்திய விதம், தினந்தோறும் அசைவ உணவு பரிமாறியது பற்றியெல்லாம் அறிந்த சிவாஜி, தன் படங்களில் பணியாற்றியவர்களுக்கும் தினசரி அசைவ உணவு பரிமாறச் செய்தார்.

இதிலிருந்து சத்யா ஸ்டுடியோ நிர்வாகிகள் ஹரி, சந்திரனிலிருந்து பலரும் சிவாஜி குடும்பத்திற்கு நெருக்கமாகி விட்டனர்.

Thnaks:Dinamalar...

DHANUSU
1st May 2011, 11:32 AM
`எம்.ஜி.ஆர். என்னை நேசித்தார்! நான் அவரை நேசித்தேன்!'- சிவாஜி வெளியிட்ட அபூர்வத் தகவல்கள் வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 19, 11:15 am ist
எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் இரு துருவங்களைப் போன்றவர்கள் என்று அவர்களுடைய ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால், இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். "நாங்கள் விரோதிகள் அல்ல; நண்பர்கள்" என்று இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார்கள்.

சிவாஜிகணேசன் வாழ்க்கை வரலாறு "எனது சுயசரிதை" என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

சென்னை தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தயாரிப்பாளராகப் பணிபுரிந்து, பின்னர் உலகக் குழந்தைகள் நல நிறுவனத்தில் ("ïனிசெப்") தகவல் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் டி.எஸ்.நாராயணசாமி, சிவாஜியுடன் பல ஆண்டுகள் பழகி, சிவாஜியிடம் கேள்விகள் கேட்டு, அதற்கு பதில்களைப் பெற்று இந்நூலை உருவாக்கியுள்ளார். கேள்வி_ பதில் ரூபத்தில் இந்த நூல் அமைந்துள்ளது.

சிவாஜியின் மகன்களான ராம்குமார், பிரபு, சிவாஜியின் தம்பி மகன் கிரிசண்முகம் ஆகியோரைக் கொண்ட "சிவாஜி பிரபு சாரிட்டிஸ் டிரஸ்ட்" இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் கல்விப் பணிக்கு செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆருடன் இருந்த நட்பு பற்றி சிவாஜிகணேசன் தன் சுய சரிதையில் மனம் விட்டுக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

சின்னப் பிள்ளையிலிருந்தே எம்.ஜி. ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும், என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவர் தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம். ஒரு கதை மாதிரி எங்கள் நட்பின் வரலாற்றைச் சொல்கிறேன்.

இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயம். 1943_44_ல் நான் சென்டிரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள, ஒற்றைவாடை தியேட்டர் அருகில்தான் குடியிருந்தேன்.

`லட்சுமிகாந்தன்' நாடகமெல்லாம் நடத்தினோமே அந்த நேரத்தில், எனது வீட்டுக்குப் பக்கத்தில்தான் எம்.ஜி.ஆர், அவரது தாயார், சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி ஆகியோர் குடியிருந்தனர். அப்போதுதான் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள்.

நானும் என்னுடைய நண்பர் காகா ராதாகிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அனேகமாக சாப்பாட்டு நேரத்தில் அங்கேயே இருப்போம். எம்.ஜி.ஆர். "பசிக்கிறது" என்றாலும், "இருப்பா! கணேசன் வரட்டும்" என்பார்கள், அவருடைய அம்மா. அந்த அளவுக்கு அவர்களுக்கு என்மேல் பாசம்.

எம்.ஜி.ஆர். அவர்கள் இரவு நேரத்தில் என்னையும், ராதாகிருஷ்ணனையும் டவுனுக்குப் பக்கத்திலுள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கக் கூட்டிச்செல்வார். திரும்பி வரும்போது, சப்பாத்தி, பால் போன்றவைகளைச் சாப்பிடுவோம். எல்லோருக்கும் அவர்தான் செலவு செய்வார். அதுபோல நீண்ட நாட்கள் இருந்தோம். பிறகு நான் காஞ்சீபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.

அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற நாடகத்தில் முதலில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும்போது, எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன்.

ஒரே காலக்கட்டத்தில் இருவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அதே சமயத்தில் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.

என்னை அவர் விமர்சிப்பார், அவரை நான் விமர்சிப்பேன். அது அரசியல் பற்றித்தான். பர்சனலாக ஒன்றுமில்லை. பலர் இதை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் விரோதிகள் என்று பேசிக்கொண்டார்கள். அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.

பல வருடங்கள் சென்றபின் அவர் முதல்_மந்திரியானார். அவர் பதவியிலிருந்தபோது, பல முறை நான் சந்தித்திருக்கிறேன். அவரும் பல சம்பவங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார். அவர் கையால் அவார்டுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.

எனக்கு சென்னையில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதுவும் எம்.ஜி.ஆரின் தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது. என் தாயார் மறைந்த பிறகு அவர்கள் நினைவாக என் தோட்டத்தில், என் தாயாரின் உருவச்சிலையைத் திறப்பதற்கு வரவேண்டுமென்று எம்.ஜி.ஆருக்குச் சொல்லியனுப்பினேன். உடனே ஒத்துக்கொண்டு, தன் மனைவியுடன் வந்து, எனது தாயார் சிலையைத் திறந்து வைத்தார்.

தனது தாயைப்போல் கருதிய என் அம்மாவின் உருவச்சிலையைத் திறந்து வைத்ததில், அவர் மகிழ்ச்சியடைந்தார்.

இதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. தஞ்சாவூரில் எனக்கு சாந்தி _கமலா என்றொரு தியேட்டர் இருந்தது. இப்போது இல்லை. அந்த தியேட்டர் திறப்பு விழாவின்போதும் `நானே வந்து திறக்கிறேன்' என்று சொல்லியனுப்பினார். தஞ்சாவூர் வந்து அந்தத் தியேட்டரைத் திறந்தார். எனக்கும் அவருக்கும் நட்பும், உறவும் இல்லையென்றால், இவையெல்லாம் நடந்திருக்குமா?

அதுமட்டுமில்லை ஒரு சமயம் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போன பிறகு, நான் இந்திரா காந்தியுடன் போய், எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டு வந்தேன். அதன் பிறகு, எம்.ஜி.ஆர். டெல்லியில் இருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். `நான் அமெரிக்கா செல்கிறேன். அங்கு வந்து என்னைப்பார்' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

உடனே நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு, நேராக நியூஜெர்சி சென்று இறங்கினேன். அங்கிருந்து பால்டிமோர் புறப்பட்டோம். என்னை வரவேற்க எம்.ஜி.ஆர். பால்டிமோர் ஏர்ப்போர்ட்டில், ஐம்பது பேரை நிறுத்தியிருந்தார். அதில்தான் பழனி பெரியசாமி, டாக்டர் பி.ராமமூர்த்தி ஆகியோர் இருந்தார்கள். என்னை அழைத்துக்கொண்டு சென்றார்கள். நேராக பால்டிமோர் மருத்துவமனைக்குச் சென்றோம். தொப்பி, கண்ணாடி இல்லாமல் ஒரு போர்வை மட்டும் போர்த்திக்கொண்டு படுத்திருந்தார், எம்.ஜி.ஆர்.

உள்ளே சென்றவுடன், அப்படியே படுக்கையில் இருந்து எழுந்து, கையை நீட்டினார். ராமாயணத்தில் ராமன் பரதனைச் சந்தித்தது போன்ற சம்பவம் இது. அவர் ராமச்சந்திரன், நான் பரதன். அவர் கையை நீட்டி வரவேற்றார்.

ஓடிச்சென்று இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதோம். அந்த நேரத்தில் அவரது மனைவி ஜானகி அம்மாவுக்கு "பைபாஸ் சர்ஜரி" செய்திருந்தார்கள். இருவரும் ஒரே ரூமில்தான் இருந்தார்கள்.

அவர்கள் கமலாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அழ, நான் எம்.ஜி.ஆர்ரை கட்டிப்பிடித்துக்கொண்டு அழ, கடைசியில் ஜானகி அம்மா கண்களைத் துடைத்துக்கொண்டு, "என்ன சின்னப் பிள்ளைபோல் அழுதுகொண்டு இருக்கிறீர்கள். இருப்பது கொஞ்ச நேரம்தான். சிவாஜி ஊருக்குச் செல்ல வேண்டுமல்லவா? கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருங்கள்" என்று எம்.ஜி.ஆரிடம் கூறினார்கள்.

அதன்பின் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். நாட்டையும், நாட்டு மக்கள் நலத்தைப் பற்றியும் பேசினோம். "அண்ணே! தயவு செய்து என்னிடம் மட்டும் ஒரு உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு உடல் நிலை எப்படி இருக்கிறது? டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள்?" என்று கேட்டேன். அவர் உதட்டைப் பிதுக்கி, தலையாட்டினார்.

உடல் நிலை சரியாகாதென்று முதலிலேயே அவருக்குத் தெரிந்துவிட்டது போலும். உடனே நான் `ஓ..." என்று அழுது கொண்டு, வெளியே ஓடிவந்துவிட்டேன். வெளியே வந்தவுடன், ராமமூர்த்தி போன்றவர்களெல்லாம் என்னைப் பிடித்துக் கொண்டார்கள்.

கமலாவும் அறையை விட்டு, வெளியே வருவதற்கு எழுந்த பொழுது, எம்.ஜி.ஆர். கமலாவின் கையைப் பிடித்து, பக்கத்தில் உட்கார வைத்தார். தட்டுத் தடுமாறி ஏதோ ஒரு விஷயத்தை சொல்வதற்கு முயற்சி செய்தார்.

அவரால் சரளமாக பேசமுடியவில்லை. இருந்தாலும் சில சைகைகள் காட்டி ஒரு சில வார்த்தைகளால், சொல்ல விரும்பியதை அவரால் சொல்ல முடிந்தது.

"இந்தப்பையன் என்னைப்போலவே முன்கோபக்காரன். கோபித்துக் கொள்ளும்படி விடாதே! அவன் கண்டதைச் சாப்பிடுவான். முதலில் அதிகமாக உப்புக் கொடுக்காதே. சொல்லப்போனால் அவனைப்போல ஆப்பமும், கருவாட்டுக் குழம்பும் எனக்கும் அதிகப்பிரியம். அதை அடிக்கடி கொடுக்காதே. அதை நிறையச் சாப்பிட்டுத்தான் இந்த நிலைமை எனக்கு" என்று கமலாவிடம் சொல்லியிருக்கிறார். "கணேசனுக்குப் பிறந்த நாள் வரும்போது, வாழ்த்துச்செய்தி அனுப்புகிறேன்" என்றும் கூறியிருக்கிறார்.

நானும் கமலாவும் வெளியில் வந்து நண்பர் ஒருவர் வீட்டில் சாப்பிட்டு விட்டு, விமானம் ஏறி இந்தியா வந்துவிட்டோம். அவர் கூறியபடியே பிறந்த நாள் வாழ்த்து அனுப்பினார்.

எம்.ஜி.ஆரும் ஓரளவு உடம்பு சரியாகி இந்தியா வந்துவிட்டார். இதன்பின் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது ஆர்.வெங்கட்ராமன் இந்திய ஜனாதிபதியாக இருந்தார். ஆர்.வி.யுடன் டெல்லியில் பல நாட்கள் இருந்திருக்கிறேன். சென்னையில் ஒரு விழாவுக்காக ஜனாதிபதி வந்திருந்தார். அப்போதைய நம்முடைய முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். நானும் சென்றிருந்தேன்.

கவர்னர் பக்கத்தில் எம்.ஜி.ஆர். உட்கார்ந்திருந்தார். அப்போது எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிட்டு "இங்கே வா! பக்கத்தில் உட்கார்" என்றார். நான் தயங்கினேன். உடனே என் கையைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக்கொண்டார்.

`ஜனாதிபதி இன்னும் பத்து நாட்களில் ஒரு மருத்துவமனையைத் திறக்க இங்கு வரப்போகிறார். அவர் வந்து சென்றவுடன், நீ வா. உன்னிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்கவேண்டும்' என்று மெதுவாக சைகைகள் காட்டி விளக்கிச் சொன்னார். வீட்டிற்கு சென்றதும் என் மனைவியிடம் அண்ணன் எம்.ஜி.ஆர். இப்படி கூறினாரென்று சொன்னேன்.

"இருவருமே சேர்ந்து அவரைப் பார்க்கப் போகலாம்" என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்த மருத்துவமனை திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி வருவதற்கு முன்பாகவே அண்ணன் எம்.ஜி.ஆர். அமரராகிவிட்டார். என்னிடம் பேசிய நாலைந்து நாட்களில் அவர் மறைந்து விட்டார். அதன்பின் என்ன செய்யமுடியும்? எல்லாம் இறைவன் செயல். அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்தோம்.

குடும்ப துக்கம் விசாரிக்க வேண்டுமல்லவா? அதற்காக இரண்டு நாட்கள் கழித்து அவரது தோட்டத்திற்குச் சென்றேன். ஜானகி அம்மாளைப் பார்த்து துக்கம் விசாரித்தேன். அவர்கள் "என் தம்பி கணேசன் வீட்டிற்கு வரப்போகிறான். அவனிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசப்போகிறேன். அவனுக்குப் பிடித்த ஆப்பம், கருவாட்டுக் குழம்பு செய்து வை' என்று உங்கள் அண்ணன் கூறினாரே. ஆனால் உங்களிடம் பேசாமலே சென்றுவிட்டாரே!" என்று வருத்தத்தோடு கூறி அழுதார்கள். என்ன செய்வது? எம்.ஜி.ஆர். வாழ்வாங்கு வாழ்ந்து கடவுளாகி விட்டார்.

அவரைப்பற்றி சொல்வதில் எனக்குப் பெருமை உண்டு. ஏனென்றால், அவர் என்னை உண்மையாக நேசித்தார். நானும் அவரை நேசித்தேன். அவரது வாழ்க்கை வரலாற்றில் சில கட்டங்களில் நானும் ஒரு முக்கிய பாத்திரமாக இருந்தேன். எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றும் இன்றும் என்றும் என்னுடைய மனதில் ஒரு நல்ல நண்பராக நிறைந்திருக்கிறார்."

DHANUSU
1st May 2011, 11:40 AM
சரவணா பிலிம்ஸ் அதிபர் ஜி.என்.வேலுமணி தமிழ்ப் படவுலகில் சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பெரிய நடிகர்களை வைத்து பாலும் பழமும், மாட்டுக்கார வேலனை ஒத்த பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். அதே காலகட்டத்தில் எங்கள் டைரக்டர் பாலசந்தரும் பெரும் நடிகர்கள் இல்லாமல் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார்.

வேலுமணிக்கு ஓர் எண்ணம் எழுந்தது. சிறிய நடிகர்களை வைத்தே பாலசந்தரால் சிறந்த படங்களைக் கொடுக்க முடிகிறதென்றால், ஏன் சிவாஜியையும், பாலசந்தரையும் இணைத்து ஒரு படத்தை எடுத்தால், அது எவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுக்கும் என வியாபாரக் கணக்கைப் போட்டார். அதற்கான முயற்சியை எடுத்து இருவரையும் இணைத்தார். அந்தப் படம்தான் 'எதிரொலி'. அந்தப் படத்தில் பணியாற்றக் கூடிய வாய்ப்பை நான் பெற்றதால்தான் சிவாஜிகணேசனுடன் பழகக் கூடிய, அவரைப் புரிந்து கொள்ளக் கூடிய, அறிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

சிவாஜியும், இயக்குநர் சிகரத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற தாகத்தை இப்படத்தின் வாயிலாகத் தணித்துக் கொண்டார். கதையைச் சொல்ல, நடிகர் திலகத்திடம் டைரக்டர் சென்றார். ' பாலு! முழுக்கதையையும் ஏன் சொல்றீங்க. தேவையில்லை. சும்மா அவுட் லைன் மட்டும் சொன்னா போதும். உங்களுக்குத் தெரியும் எப்படி ஒரு சிறந்த படத்தை உருவாக்க வேண்டுமென்று. அதில் நீங்கள் வெற்றியும் பெற்று வருகிறீர்கள்; நான் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறேன்' என்று சுருக்கமாகக் கதையைக் கேட்டுக் கொண்டார்.

இதில் என்ன சோகம் என்றால் எதிரொலி வணிக ரீதியாகப் பெரிய வெற்றியைத் தர வில்லை. சிவாஜி மக்கள் மனத்தில் நற்பெயருடன் நிலைகொண்ட நடிகர். கதைப்பாத்திரப்படி வழக்குரைஞர்; சந்தர்ப்பத்தால் பெட்டி கைமாறினாலும், அந்தப் பெட்டிக்குள் நிறையப் பணம் இருந்ததை உடையவரைத் தேடி ஏன் இவர் கொடுக்கவில்லை, அல்லது போலீசிடம் ஒப்படைக்கவில்லை? திருடிக்கொள்ள எண்ணி விட்டாரோ? சிவாஜிக்குத் திருடன் பட்டமா? படம் தோல்வி அடைந்து விட்டதற்கு காரணம் அப்படித்தான் சொல்லப் பட்டது.

பாலசந்தர் பெரிய டைரக்டர் என்கிற பெயர் எடுத்திருந்தாலும், திரைப்படத் திறமையும் அறிவும் நிறைந்து இருந்தாலும் அப்போது தன்னைப் பற்றிக் கொஞ்சம் குறைத்தேதான் மதிப்பிட்டுக்கொள்வார். அந்த 'காம்ப்ளெக்ஸ்' அவரிடம் இருந்தது. சிவாஜியா அவர் எவ்வளவு பெரிய நடிகர், அவரிடம் எப்படிப் போய் இந்த இடத்தில் இப்படி நடிக்க வேண்டுமென்று நான் சொல்லிக்கொடுப்பது? அவருக்குத் தெரியாதா என்று நினைத்துக் கொண்டு காட்சியை விளக்கிவிட்டு வந்துவிடுவார். ஒரு டைரக்டரும் கதாநாயகனும் எப்படியெல்லாம் உரையாடு வார்கள், உறவாடுவார்கள்? அப்படிப்பட்ட எந்த நெருக்கமும் இல்லாமலேதான் படப்பிடிப்பு நடக்கும். ஒருபுறம் துரு துருவென்று சிகரெட்டைப் பிடித்துக்கொண்டே டைரக்டர் நிற்பார்.

காட்சி தயாரானதும்,என்னை டைரக்டர் அழைப்பார்.என்னிடம்தான் அவருக்கு வேண்டிய சிகரெட் இருக்கும். அதற்காகத்தான் அழைக்கிறாரோ என்று சிகரெட்டை எடுப்பேன். இல்லை. ஷாட் ரெடி. நீ போய் சிவாஜியை அழைத்து வா என்பார். நான்தான் உதவி டைரக்டர்களிலேயே வயதிலும் அனுபவத்திலும் இளையவன். ஆகையினால் நான்தான் ஓடும்பிள்ளை. ஒப்பனை அறைக்கு ஓடிப்போய் 'அண்ணன் ஷாட் ரெடி வரலாம்' என்பேன். 'ஏண்டா லேட்?.. வா.. அந்த 'கோட்' டை எடுத்து மாட்டிவிடு' என்பார். நானும்அவ்வாறே செய்து அழைத்து வருவேன். தாமதம் என்பது ஐந்து, பத்து நிமிடம்தான்.

படப்பிடிப்பகத்துக்குள் நுழைந்தவுடன் எல்லோரும் வணக்கம் தெரிவிப்பார்கள். இவரும் பதிலுக்கு முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டே பதிலுக்குக் கனத்த குரலில் வணக்கம் சொல்வார். டைரக்டர் அருகில் வந்து, அன்று எடுக்கப் போகும் காட்சியை விவரிப்பார். உடன் இருக்கும் உதவி டைரக்டர் பாஸ்கரன் சிவாஜி பேசவேண்டிய வசனங்களைச் சொல்வார். நன்றாகக் கேட்டு, மனத்தில் இறுத்திக்கொண்டு மெதுவாகச் சொல்லிப் பார்ப்பார்.

டைரக்டர், ஸ்டார்ட் கேமிரா சொல்லி 'ஆக்ஷ்ன் ' என்று சொன்னவுடன், எங்கிருந்துதான் வருமோ, அந்த வசன உச்சரிப்பும், அதற்கேற்ற பாவங்களும்? பார்த்துக்கொண்டிருக்கும் போது நமக்குப் புல்லரிக்கும். அவர்தான் சிவாஜி.

சிவாஜியுடன் பணியாற்றிய போது அவரிடமிருந்து "நேரம் தவறாமை, செய்யும் தொழிலே தெய்வம்" என்கிற அவ்விரு தாரகமந்திரத்தை அறிந்துகொண்டேன். அதை இன்றும் கடைப்பிடித்தும் வருகிறேன். சிங்கப்பூரில் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது நான் சரியான நேரத்திற்குச் சென்று விடுவேன். குறிப்பாக நான் முன்னின்று நடத்தும் எந்த நிகழ்ச்சியானாலும், சரியான நேரத்திற்குத் தொடங்கி, சரியான நேரத்தில் முடித்திடுவேன். அதனால் இப்போது, அன்பழகன் நிகழ்ச்சி என்றால் சிறப்புப் பேச்சாளர் வருவதற்கு ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கிவிடுவார் என சிங்கப்பூர் தமிழ் மக்களே அறிந்து கொண்டனர். அத்துடன் நான் சிங்கையில் வணிகம் செய்யும் போதும் சரியாக விடியல் ஆறு மணிக்கு முன்பே நானே கடையைத் திறந்து விடுவேன். அந்த வியாபார நேரத்தில் யாரேனும் எங்கே அழைத்தாலும் செய்கிற தொழிலை விட்டு விட்டுப் போகமாட்டேன். சிவாஜியிடம் கற்றுக் கொண்ட பாடம் என்னுடைய வாழ்க்கைக்கும் பெரிதும் பயன்பட்டது.

காலை ஏழு மணி கால்ஷீட் என்றால் பொதுவாக பணியாற்றுபவர்கள் எல்லோரும் ஏறத்தாழ ஏழுமணிபோல்தான் ஸ்டுடியோவிற்கு வந்து சேர்வோம். அதன் பின் ஏற்பாடுகளைக் கவனிப்போம். கேமிராமேனிடம் காட்சியைச் சொல்லி, விளக்குகளை நடிகர்கள் நடமாடும் இடங்களில் பொருத்தச் சொல்வோம். காட்சிக்கேற்ற உடை அணிகலன்கள், ஒப்பனை ஆகியவற்றைச் சம்பந்தப் பட்டவர்களிடம் சொல்வோம். காட்சியில் வைக்க வேண்டிய பொருட்கள், காட்சிக்குத் தேவையான பொருட்களைச்சேகரிப்போம்.
'கண்டினியூட்டி' என்று சொல்லப்படும் தொடர்ச்சியான முன் காட்சியில் என்றோ ஒரு நாள் அதே நடிகர்கள் நடித்தபோது எடுக்கப்பட்ட படத்தை, தொடர் நடவடிக்கைக்காகப் பார்த்து வைத்துக் கொள்வோம். அதற்குள் டைரக்டர் வந்து விடுவார். அவர் ஒரு முறை எல்லாவற்றையும் சரி பார்ப்பார். தயாரிப்பு நிர்வாகியை அழைத்து நடிகர்கள் வந்துவிட்டார்களா? என்று கேட்பார். நடிகர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தாலும், "ஆன் தி வே சார் " என்று பவ்வியமாகப் பதில் சொல்லிவிட்டு நகர்ந்திடுவார். ஆக எப்படிப் பார்த்தாலும் படப்பிடிப்புக் கருவி இயங்கக் கிட்டத்தட்ட ஒன்பது மணியாகிவிடும். இப்படித்தான் பொதுவாக நடக்கும். இதை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு.

இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலை நேரத்தில் அலுவலகங்களில் எல்லாம் சுறுசுறுப்பாகப் பணிகள் நடந்ததுபோல், நடிகர் திலகம் அவர்களின் கால்ஷீட் என்றால் முதல்நாளே சம்பந்தப்பட்ட அனைவரும் பம்பரம்போல் சுழல ஆரம்பித்து விடுவார்கள். இன்னொரு செய்தி என்னவென்றால், மற்றவர்கள் பத்து கால்ஷீட்டுகளில் எடுப்பதை, சிவாஜி படப்பிடிப்பு என்றால் ஏழு கால்ஷீட்டுகளில் முடித்துவிடலாம். அந்த அளவிற்கு வேகமாக நடக்கும்.
கதாநாயகனான சிவாஜியே முழு ஒப்பனையுடன் ஏழு மணி கால்ஷீட் என்றால் சரியாக ஆறு ஐம்பத்தைந்து மணிக்குத் தயாராய் இருப்பார். இவ்வாறு வேலை செய்யும்போது எவ்வளவு மகிச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கும் தெரியுமா? அவருடன் பணியாற்றும் சக நடிகர்களும் கூடப் பயந்து கொண்டு சரியான நேரத்திற்குத் தயாராகி விடுவார்கள். ஆனால் எம் ஜி ஆர் படப்பிடிப்பு என்றால் பதினொரு மணிக்குத்தான் என்பார்கள்.

பட்டுக்கோட்டையார் பாடி வைத்தாரே " செய்யும் தொழிலே தெய்வம் " என்று. அது சிவாஜி அவர்களைப் பார்த்துத்தான் பாடியிருப்பாரோ என்றுகூடத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு கதையின் பாத்திரமாகவே மாறிவிடுவார். காட்சிக்கு ஏற்ற மனநிலையை வரவழைத்துக் கொள்வார். அவர் நடிப்பு மிகையானது என்று வாதிடுவரும் உளர். அது ஓரளவு உண்மையாகவும் இருக்கலாம். இயல்பாக நடிப்பது என்பது ஒன்று. எதையும் மிகைப்படுத்தியே பேசியும், எழுதியும் வரும் நம் நாட்டினர் இப்படி நடித்தால்தான் 'நடிப்பு' என்றும் ஒத்துக் கொண்டார்கள். நடிப்பைப் பார்த்து உணர்ச்சி வசப்படுபவர்கள், கண்ணீர் சிந்துபவர்களாலே படம் ஓடியது. சிறந்த நடிகர் என்கிற விருதினை உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் அவருக்கு அளித்தார்கள். நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்திய இன்னொரு நடிகர் இந்தியாவில் இல்லை. சிவாஜி நடித்த படங்களை இந்தியில் மீண்டும் எடுக்க முற்படும் போது, படத்தைப் பார்த்தபின் எத்தனையோ நடிகர்கள், சிவாஜி போல் தன்னால் செய்ய முடியாது என்று பயந்து ஓடிய வரலாறும் உண்டு.

நடிகர் திலகத்துடன், எதிரொலி படப்பிடிப்பு நேரத்தில் எனக்கு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்புக் கிட்டியது. காரணம், நான் சிறியவன், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதோடு உறவுக்காரன் என்றுகூட நாங்கள் இருவரும் சொல்லிக் கொள்வோம். உங்களைக் கெடுத்தது டைரக்டர் பீம்சிங்தான் என்பேன். ஏண்டா அப்படிச் சொல்கிறாய்? என்று கேட்பார். ஆமாம். அவர்தானே உங்களைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்று ஆஸ்திகராக்கினார். எங்கள் இயக்கத்தை விட்டு அதன்பின்தானே விலகினீர்கள். இல்லையென்றால் இன்னும் நெருக்கமாக இருப்போமல்லயா? என்று சிறுவன் என்கிற பாதுகாப்பில் பேசுவேன். சிரித்துக் கொள்வார். அப்படிக் கேட்டதிலிருந்து " நாத்திகப் பயலே " என்று செல்லமாகத் தான் என்னை அழைப்பார். அப்படி அவர் என்னை அழைத்தபோது எனக்கு அவரிடம் உள்ள நெருக்கத்தையும் அன்பையும் நினைத்து இன்றும் மகிழ்ச்சியடைகிறேன்.

கணேசன் நம்மைவிட்டு மறைந்து இருக்கலாம்; ஆனால் சிவாஜி மறைய வில்லை, என அவர் மறைந்தபோது சிங்கப்பூரில் நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில் நான் பாடியது நினைவுக்கு வருகிறது. அதை உங்களோடு இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

DHANUSU
1st May 2011, 11:43 AM
சிவாஜி - சிறு குறிப்புகள்
சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிபல்கலைக்கடிதம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்....

சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

நடிகர் திலகம் முதன்முதலில் போட்டவேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

1952 -ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த `பராசக்தி’யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது. பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

சின்சியாரிட்டி,ஒழுங்கு நேரந் தவறாமைக்கு சிவாஜி ஒர் உதாரணம், ஏழரை மணிக்கு ஷீட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக் ஷீட்டிங்குக்குச் சென்றது இல்லை!

கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு', என்றுதான் அழைப்பார்!

வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி, பகத்சிங் திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!

திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப்பெரிய கட் – அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957 ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி'!.

சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு, 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!

தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார்.சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!

சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங்கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கெளரவத் தோற்றம் 19 படங்கள்!

ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான் சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!

விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி, சிறு வெள்ளியிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!

சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்கமாட்டார்!

'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு ஒரு துப்பாக்கி!

படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிபஸ் கொடுப்பார்!

சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்!

தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியர்' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு சிவாஜியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன!

அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது கடைசி வரை அது நிறைவேறவே இல்லை!

பிரபலதவில் கலைஞர் வலையப்பட்டி. 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர்.`அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன் – என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!

கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!.

DHANUSU
1st May 2011, 11:47 AM
கலைஞர், எம்.ஜி.ஆர். தயாரிப்பில் சிவாஜி நடித்த படம்
பதிவு செய்த நாள் 12.11.2010

அண்ணாதுரையின் புகழ்பெற்ற நாவல் ‘ரங்கூன் ராதா’, படமானது. முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஏ.காசிலிங்கத்தின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம். எம்.ஜி.ஆர். தயாரிப்பில் சிவாஜி ஹீரோவாக நடித்த படம் இது. ஹீரோ என்றாலும் வில்லத்தனம் கலந்த வேடம். இது போல் தொடர்ந்து வேடங்கள் வருவதால் சிவாஜி கவலைப்படவில்லை. தனக்கென எந்த இமேஜும் இருக்கக் கூடாது என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார். வித்தியாசமான வேடங்களை ஏற்பதிலும் ஆர்வத்தோடு இருந்தார். இதில் பானுமதி ஹீரோயின்.

கதைப்படி சிவாஜியின் மனைவியாக அவர் நடித்திருப்பார். அவரது தங்கை ராஜத்தை அடைய சிவாஜி முயற்சிப்பார். அதற்காக சதி செய்வார். அண்ணாதுரையின் கதைக்கு திரைக்கதையுடன் வசனங்களை எழுதினார் கருணாநிதி. பாரதியாரின் பாடல்களுடன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், உடுமலை நாராயண கவி, ஆத்மநாதனின் பாடல்களும் இடம்பெற்றன. என்.எஸ்.கேயும் பாடல் எழுதியிருந்தார். ஜி.துரை ஒளிப்பதிவு செய்திருந்தார். சிவாஜி, பானுமதி, எம்.என்.ராஜத்துடன் எஸ்.எஸ்.ஆர்., ராஜசுலோச்சனா, என்.எஸ்.கே., மதுரம், குலதெய்வம் ராஜகோபால் நடித்தனர். படம் முடிந்ததும் அண்ணாதுரைக்கு தனியாக திரையிட்டு காண்பித்தனர்.

படம் பார்த்த அண்ணாதுரை, நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை என பானுமதியை பாராட்டினார். படம் மெகா வெற்றி. பல்வேறு சங்கங்களின் விருதுகள் சிவாஜிக்கும் பானுமதிக்கும் கிடைத்தது. விமர்சகர்களாலும் அவர்களின் நடிப்பு பாராட்டப்பெற்றது.சிவாஜி கணேசனின் திரையுலக வாழ்க்கையில் மற்றொரு மைல்கல் ‘ராஜா ராணி’. இந¢த படத்தில்தான் அந்த நீண்ட.... வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடித்து புது சாதனையை அவர் புரிந்தார். இன்று வரை அந்த சாதனையை எந்த நடிகருமே முறியடிக்கவில்லை. நியூடோன் ஸ்டுடியோ தயாரித்த படம்.

ஒளிப்பதிவாளர் டின்ஷா தயாரித்தார். கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனம் படத்தின் சிறப்பம்சம். பீம்சிங் இயக்கியிருந்தார். டி.ஆர்.பாப்பா, இசை. பாடல்களை கருணாநிதி, மருதகாசி, கே.பி.காமாட்சி, எம்.கே.ஆத்மநாதன், விவேகன், வில்லிப்புத்தன் எழுதியிருந்தனர். ஒளிப்பதிவு ஜித்தன் பானர்ஜி. சிவாஜி, பத்மினி, ராஜசுலோச்சனா, எஸ்.எஸ்.ஆர்., என்.எஸ்.கே., மதுரம் நடித்தனர்.

இந்த படத்தில் கதைப்படி மேடை நாடக காட¢சிகள் இடம்பெறும். ஒரு நாடகத்தில் சாக்ரடீஸ் வேடம் ஏற்றிருப்பார் சிவாஜி. இன்னொரு நாடகத்தில் சேரன் செங்குட்டுவன் வேடத்தில் வருவார். அந்த வேடத்த¤ல் கருணாநிதியின் தீப்பொறி வசனங்களை ஒரே ஷாட்டில் படமாக்க திட்டமிட்டார் பீம்சிங். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல பக்கங்களில் அந்த வசனங்கள் இருந்தன. ஆனாலும் சிவாஜி மீது பீம்சிங்கிற்கு நம்பிக்கை இருந்தது.

அவரிடம் சொன்னார். சிவாஜியும் ஒரே ஷாட்டில் நடிக்க சம்மதித்தார். வசனங்களை வாங்கி பார்த்த சிவாஜி, சில ந¤மிடங்களிலேயே அதை கரைத்து குடித்தார். ஷாட்டுக்கு சிவாஜி ரெடியாகிவிட்டார். பீம்சிங் உட்பட யூனிட்டில் இருந்த அனைவரும் படபடப்பாக இருந்தனர். கேமரா ஓடத் தொடங்கியது. கலைஞரின் முதல் வரியை வாசிக்க ஆரம்பித்தவர்தான், வாசித்தபடியே சென்றார். எந்த குறையும் இல்லாமல் தனது நடிப்பாற்றலையும் வெளிப்படுத்திக் கொண்டே அந்த காட்சியில் நடித்து முடித்தார். மொத்தம் 800 அடி நீள காட்சி அது. ஒரே ஷாட். டேக்கே கிடையாது.

சிவாஜி ஒருவரால்தான் முடியும். காட்சி முடிந்ததும் யூனிட்டாரின் கைதட்டல் சத்தம் நிற்க வெகு நேரமானது. வெற்றியை கொண்டாடிய படம் இது. கசப்பும் இனிப்பும் என்ற நாவலை தழுவியது வாழ்விலே ஒரு நாள். சிவாஜிக்கு ஜோடியாக ஜி.வரலட்சுமி நடித்திருந்தார். ராஜசுலோச்சனா, ஸ்ரீராம், வி.கே.ராமசாமி, எம்.ஆர்.சந்தானம் (இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் அப்பா) நடித்தனர். சி.என்.பாண்டுரங்கம், டி.ஜி.லிங்கப்பா, எஸ்.எம்.சுப்பைய நாயுடு இசையமைத்தனர். படம் வெற்றி பெறவில்லை.

சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தை சிவாஜி கணேசன் ஆரம்பிக்க காரணமாக அமைந்த படம் அமரதீபம். கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனின் அப்பா கோவிந்தராஜன், இயக்குநர் ஸ்ரீதர் (அப்போது கதாசிரியர் மட்டும்தான்) ஆகியோர் பார்ட்னர்களாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். வீனஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி இப்படத்தை தயாரித்தனர். வீனஸ் பிக்சர்ஸ் படங்களையெல்லாம் பட வினியோகஸ¢தரான ரத்னத்திடம்தான் தருவார்கள். அந்த ரத்னம் வேறு யாருமல்ல, மணிரத்னத்தின் அப்பாதான்.

பிரகாஷ் இயக்கிய இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் ஸ்ரீதர். சிவாஜி, பத்மினி, சாவித்திரி, இ.வி.சரோஜா, நம்பியார், தங்கவேலு, நாகைய்யா நடித்தனர். சலபதிராவ், ஜி.ராமநாதன், ஜி.என்.பாலசுப்ரமணியம் ஆக¤ய மூவர் இசையமைத்தனர். பாடல்களை தஞ்சை ராமைய்ய தாஸ், மருதகாசி, உடுமலை நாராயண கவி உள்ளிட்டோருடன் சேர்ந்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதியிருந்தார்.

பின்னர் வெற்றிப் பட இயக்குநராக வலம் வந்த கோபாலகிருஷ்ணனுக்கு இதுதான் திரையுலக பிரவேசம். கலை இயக்குனர் தோட்டாதரணியின் அப்பா தோட்டா, இப்படத்துக்கு கலை இயக்குனர். சென்னை நகர உரிமையை பெற்று, சிவாஜி பிலிம்ஸ் மூலம் படத்தை வெளியிட்டார் சிவாஜி. 100 நாள் கடந்து வெற்றி பெற்ற படம்.

Mahesh_K
1st May 2011, 11:52 AM
மகேஷ்,சதீஷ்,tac

இந்த திரியின் இரண்டு முக்கிய நோக்கங்களே நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனை இன்றைய நாளைய தலைமுறைக்கு சரியான முறையில் அறிமுகப்படுத்துதல் மற்றும் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு கலை மற்றும் அரசியல் தளங்களில் நடந்த சதி மற்றும் சூழ்ச்சிகளின் காரணமாக மறைக்கப்பட்ட சாதனைகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வருதல் எனவையே ஆகும். இவ்விரண்டு நோக்கங்களும் இந்த திரியில் சரியான வழியில் முன்னெடுத்து செல்லப்படுகிறது. இதை தடுப்பதற்கும் திசை மாற்றுவதற்கும் நடக்கும் முயற்சிகளை புறந்தள்ளி நாம் எப்போதும் போல் முன்னேறி செல்வோம். இதை என் அன்பு வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன். யார் தலைகீழாக நின்று முயற்சித்தாலும் நடிகர் திலகத்தின் சாதனைகள் இல்லை என்றாகி விடாது. Please ignore disturbances

அன்புடன்

Murali sir , Ungal vendukoLil uLLA niyaaythai uNarnthirukkiREn. Joe kooda ithu ponRa karuththai therivithirunthaar.

Innoru puRam, silar therivikkum thavaRaana karuthukkaLukku naam pathilaLikkavidil, athai uNmai enRu intha threadkku puthithaaka varum yaarum karuthividum aBaayamum uLLathu. I

Irandaiyum karuththaan naan aathaaranGaLai mattum koduthirukkiRen. nichayam ethir vinayai thoondum thani nabar vimarisanhaLil edupada mattEn.

DHANUSU
1st May 2011, 11:54 AM
மஞ்சுளா நவநீதன்

ஒரு சகாப்தத்தின் முடிவு - சிவாஜி கணேசன் மறைவு

சிவாஜி கணேசன் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு என்பதில் சந்தேகம் இல்லை. எந்த சகாப்தம் என்பதைப் புரிந்து கொள்ள முயலுவோம். அவர் வெறும் நடிகர் என்பதற்கு மேலாக திராவிட இயக்கத்தின் நிகழ்கலைக் குறியீடு என்று சொல்ல வேண்டும். ஜெயகாந்தனின் குறுநாவல் 'கை விலங்கு ' 'காவல் தெய்வ 'மாய்ப் படமாக்கப் பட்ட போது மரம் ஏறும் கிராமணி வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். அதைப் பற்றி எழுதிய போது ஜெய காந்தன் குறிப்பிட்டார். 'அவர் கிராமணியாய்ச் சிறப்பாக நடித்தாலும், அவ்வளவு கம்பீரத்தைக் காட்டியிருக்க வேண்டாமோ என்று எனக்குத் தோன்றியது. '. இது சிவாஜி கணேசன் பற்றிய மிக ஆழ்ந்த விமரிசனம். உண்மையில் திராவிட இயக்கம் கட்டுவித்த தமிழ்ப் பழமையைப் புதுப்பிக்கும் போக்கிற்கும், தமிழர் பெருமையைப் புதுப்பிக்கும் போக்கிற்கும் சிவாஜி கணேசனை விட வேறு யாரும் குரல் தந்திருக்க முடியாது. சிம்மக் குரலோன் என்ற பெயர் கூட அர்த்தம் பொதிந்தது தான்.

திராவிட இயக்கம் தமிழின் இயல்பான நளினத்தையும், கவித்துவத்தையும், இசை தோய்ந்த இயல்பையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வீராவேசம் சேர்ந்த மேடைப் பேச்சுத் தமிழின் பாணியில் ஒற்றைப் பரிமாணம் கொண்ட ஒரு விதத் தமிழைக் கட்டுவிக்க முயன்றது. இந்த வகைத் தமிழின் மிகச் சிறப்பான வெளியீட்டாளராக சிவாஜி கணேசன் திகழ்ந்தார்.

ஹிட்லர் தம்முடைய ஜெர்மானியச் சிறப்புப் பிரசாரத்திற்கு இசைவாய் ரிச்சர்ட் வாக்னரின் வீரதீர இசையை மேற்கொண்டதாய்ச் சொல்வார்கள். 'பராசக்தி ' தொடங்கி சிவாஜியின் குரல் திராவிட இயக்கத்தின் பெருங்குரலின் குறியீடாய் உரக்க முழங்கிக் கொண்டே இருந்தது. வறுமை வாய்ப்பட்ட ஒரு இளைஞனின் கோபம் பெருத்த குரலில் 'பராசக்தி 'யில் வெளிப்பட்டதே தவிர, இறைஞ்சுதல் வெளிப் படவில்லை. அரசியல் ரீதியாய் சிவாஜி கணேசன் திராவிட இயக்கத்தை விட்டு நகர்ந்ததாய் ஒரு தோற்றம் கிடைத்தாலும் அவர் திராவிட இயக்கத்தின் குறியீடாய்த் தான் கடைசி வரையில் இருந்தார். இயல்பாகவே கம்பீரத்தைக் கோரிய கதாபாத்திரங்களை அவர் மேற்கொண்ட போது அவருடைய நடிப்பு மிக மிக உயர் தரத்தில் இருந்தது. 'முதல் மரியாதை ', 'தேவர் மகன் ', 'தங்கப் பதக்கம் ', 'தில்லானா மோகனாம்பாள் ' போன்ற படங்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். அவருடைய இயல்பான நடிப்பு வீச்சை கம்பீரத்திற்குச் சுருக்கி விட்டது திராவிட இயக்கத்தின் பாதிப்புக்காளான தமிழ்த் திரையுலகம்.

இந்தப் போக்கை மீறியும் 'நவராத்திரி 'யில் தொழு நோயாளியாகவும், 'திருவருட் செல்வரி 'ல் அப்பூதி அடிகளாகவும் அவர் நடித்தது விதி விலக்கு. 'வசந்த மாளிகை 'யில் துயரமும் கழிவிரக்கமும் ஏன் வெளிப்படவில்லை ? 'ராஜ ராஜ சோழனி 'ல் ராஜ ராஜ சோழனின் போராட்டங்களும் தடுமாற்றங்களும் ஏன் வெளிப்படவில்லை என்று நாம் கேட்டுக் கொண்டால் இது தான் விடையாகும்.

சிவாஜி கணேசனும் , எம் ஜி ஆரும் எதிரிடையானவர்கள் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. சமூக தளத்தில் திராவிடக் கருத்தியலின் இரு முக்கியமான சரடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியதன் மூலம் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முழுமை செய்ததாகவே கொள்ள வேண்டும். தமிழ் இனத்தின் கம்பீரத்தினை, தமிழ் இனம் எட்ட வேண்டும் என்று திராவிட இயக்கங்கள் இலக்குப் படுத்தின பெருமிதத்தை சிவாஜி கணேசன் காட்டியது போல, தமிழ் இனத்தின் கதாநாயகப் பூசனைக்கு - ஆளுயர மாலை, இரண்டு மாடிக்கட்டடம் அளவிற்குக் கட்அவுட்- எம் ஜி ஆர் பாத்திரமானார். தமிழ் இனம் தம் பெருமையை சிவாஜி கணேசனாய் இனம் கண்டு கொண்டது. தம் வழிபாட்டுக்கு எம் ஜி ஆரை மேற்கொண்டது.

தமிழினத்தின் வழிபாட்டு உணர்வே இறுதியில் வென்றது என்பது பற்றி யாரும் சமூகவியல் ஆய்வு மேற்கொண்டால் நல்லது.

DHANUSU
1st May 2011, 11:57 AM
“எனது சுயசரிதை” – நடிகர்திலகம் சிவாஜி கணேசன்
ஜூன் 6 2006, 10:05 அன்று மக்குசாமி, புத்தக விமர்சனம் என்ற உட்பிரிவின் கீழ் பதிப்பித்தார்.
நமது வாழ்க்கையில் சில பேரால் மட்டுமே மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுத்த முடியும். அப்படிப்பட்ட மிக சிலரில் சிவாஜி கணேசன் என்ற மகத்தான நடிகரும் ஒருவராகும். என்னை யாரும் பாதிக்கமுடியாது என்று கர்வத்துடன் என்னை நானே பலமுறை ஏமாற்றிக்கொண்டதுண்டு. அதில் நான் கண்ட மிகப்பெரும் தோல்வி சிவாஜியிடம்தான். அவரின் மரணத்தன்றுதான் என்னுள் அவரின் பிம்பம் ஒளிந்திருப்பதை முழுமையாக உணர்ந்துகொண்டேன். அவரின் திருவாயாலேயே அவரது சுயசரிதையை சொல்லவைத்து எழுதியுள்ளனர். பொதுவாக இந்த முறையில் சுயசரிதை எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் இந்த முறையில் நூலின் நாயகன் தனது ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நியாயம் கற்பிக்க வாய்ப்புள்ளது. ஆனால் சிவாஜி போன்ற திரையில் மட்டுமே நடிக்கத்தெரிந்த, நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத மனிதருக்கு இது பொருந்தவில்லை.

Sivaji Ganesan
சிவாஜியின் பிறப்பு, குழந்தைப்பருவம், நாடக ஆசையில் தன்னை அனாதை என்று கூறிக்கொண்டது, ராஜபார்ட் ஆசை, நாடகக் கம்பெனிகளில் பட்ட கஷ்டங்கள், சக கலைஞர்களுடன் கொண்ட நட்பு, பெரியார்-அண்ணா-கலைஞர்-எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் தலைவர்களுடன் கொண்ட நட்பு மற்றும் மரியாதை, பராசக்தி என்ற திருப்புமுனை, அமெரிக்கப்பயணமும் அதன் பெருமைகளும், அரசியலில் ஏற்பட்ட அவமானங்கள், “ஒவர் ஆக்டிங்” என்ற விமர்சனம், தனது குடும்பம், பெரியாராக நடிக்க ஆசைப்படுவது (நிறைவேறாத ஆசை!) என்று திறந்த மனதுடன் தனது அனுபவங்களைக் கொட்டியுள்ளார்.

இந்த நூல் மிக எளிமையான நடையில் பாமரரும் படித்து புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. உயர்ந்த அச்சுத்தரம், முழுமையான தகவல்கள், சரியான அளவிலான புகைப்படங்கள், குறைந்த விலை மற்றும் நடிகர் திலகத்தின் கள்ளம் கபடமற்ற பேச்சு என்று புத்தகம் களை கட்டுகிறது. தொகுப்பாசிரியர் கேள்விகளைத் தொடுக்க, நடிகர் திலகம் பதில் அளிப்பதாக புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தலைப்பு: எனது சுயசரிதை
ஆசிரியர்: அமரர் சிவாஜி கணேசன்
தொகுப்பாசிரியர்: திரு. டி.எஸ்.நாராயணஸ்வாமி
பதிப்பு: சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட்
25, பெஸன்ட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600014.
தொலைபேசி: 28350126/28350127
விலை: ரூ.135.00

DHANUSU
1st May 2011, 12:02 PM
அத்தியாயம் 23

நான் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் சென்னை தி. நகர் சௌத் போக் ரோடில் வசித்து வருகிறேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது கொடுக்கப்பட்டபோது, சென்னை மாநகராட்சி எங்கள் தெருவின் பெயரை “செவாலியே சிவாஜி கணேசன் சாலை” என்று மாற்றியது. பொதுவாகவே எங்கே ஆட்டோ ஏறினாலும், தி. நகர் சௌத் போக் ரோடு என்றவுடன், சிவாஜி வீட்டு கிட்டேயா?’ என்று டிரைவர்கள் கேட்கத் தவறமாட்டார்கள். சிவாஜியின் பரம ரசிகர்களான என் வயதான உறவினர்கள் சிலர், ” சிவாஜியை அடிக்கடி பார்ப்பியா? ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரேன்; என்னை சிவாஜியைப் பார்க்க கூப்பிட்டுக்கிட்டுப் போ!” என்று கட்டளையிடுவார்கள். நான் உடனே டாபிக்கை மாற்றிவிடுவேன்.
உண்மை என்னவென்றால் நானே முதல் மரியாதை படம் ரிலீசாகும் வரை சிவாஜி வீட்டின் பெரிய கேட்டைத்தான் பார்த்திருக்கிறேன். முதல் மரியாதை வெளியாகி, பெருத்த வரவேற்பைப் பெற்றவுடன், கல்கிக்காக அவரை சந்தித்தேன். சிவாஜி என்ற சிங்கத்தைப் பார்க்கப் அவர் வீட்டுக்குள் போன என் கண்களில் முதலில் பட்டது கம்பீரமாக ஒரு கண்ணாடி ஷோ கேசின் உள்ளே நின்றுகொண்டிருந்த ஒரு நிஜ சைஸ் புலி.
சிவாஜி நடந்து அந்த வரவேற்பு அறைக்குள் வந்தபோது, எனக்குள்ளே ஒரு இனம் தெரியாத சிலிர்ப்பு. பொதுவாக சினிமா உலகம் பற்றியும்,குறிப்பாக முதல் மரியாதை பற்றியும் அப்போது பேசினார். “நீங்கள் இத்தனை படங்களில் நடித்ததற்கும், முதல் மரியாதையில் நடித்ததற்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டதும், ” முதல் மரியாதையில நான் எங்கே நடிச்சேன்? நீங்க நடிக்கவே வேணாம்; சும்மா வந்திட்டுப் போனா போதும்னு அந்த டைரக்டர் பாரதி(ராஜா) சொல்லிப்புட்டாரில்ல. அப்புறம் எங்க நான் நடிக்கறது?” என்றார்.
ஒரு முறை பாரதி ராஜாவை பேட்டி கண்டபோது, சிவாஜி சொன்னததை அவரிடம் சொன்னபோது, அவர் முதல் மரியாதையில் சிவாஜியை இயக்கிய அனுபவத்தை சொன்னார். ஆற்றங்கரையோர குடிசையில் ராதா கொடுத்த மீனை ருசித்தபடியே நீண்ட வசனம் சொல்ல வேண்டிய காட்சி. பாரதி ராஜா, ‘ஸ்டார்ட்’ சொன்னதும் சிவாஜி வசனம் பேச ஆரம்பித்தர். கேமரா ஓடிக்கொண்டிருந்தது. ஐம்பது, அறுபது வினாடிகளுக்குப் பிறகு, சிவாஜி மீண்டும் முதலிலிருந்து வசனத்தை சொல்ல ஆரம்பித்தார். பாரதிராஜாவுக்கும், மற்றவர்களுக்கும் எதற்காக மறுபடியும் வசனத்தை ஆரபித்து சொல்கிறார் என்று புரியவில்லை. ஆனாலும், அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மொத்த வசனத்தையும் பேசி முடித்தபோது, பாரதி ராஜா கட் சொன்னார்.
எல்லோரும் சிவாஜியின் முகத்தையே பார்க்க, ” எதுக்காக ரெண்டாவது தடவை முதலிலே இருந்து வசனத்தை ஆரம்பிச்சேன்னுதானே பார்க்கறீங்க? சொல்லிக்கிட்டே வரும்போது சின்ன தப்பு பண்ணனேனே? கவனிக்கலையா நீங்க? மறுபடியும் இன்னொரு டேக் எடுக்கறதுக்கு பதிலா, அதே டேக்லயே மறுபடியும் முதல்லே இருந்து வசனத்தை பேசிட்டேன்” என்று சொன்னார்.
இந்த சம்பவத்தை சொன்ன பாரதி ராஜா, வசனம் பேசிக்கிட்டே வரும்போது ஒரு கணம் தப்பு ஏற்பட்டாலும், தடுமாறாமல், அதை புத்திசாலித்தனமா சமாளிக்க ஆன் தி ஸ்பாட் முடிவு எடுத்து, மறுபடி வசனத்தை பேசின அவன்தான்யா பிறவி நடிகன். என் டைரக்ஷன்லயும் அவன் நடிச்சிருக்கான் என்பதுல எனக்குப் பெருமை! ” என்றார் பூரிப்புடன்.
குமுதத்தில் பத்திரிகையாளர் மணா ‘ நதி மூலம்’ தொடரில் சிவாஜியைப் பற்றி எழுதினபோது, அந்தக் கட்டுரையில் இடம் பெற வேண்டிய ஒரு பாக்ஸ் மேட்டரை என்னை எழுதும்படி சொன்னார்கள்.(உங்க ஏரியாதானே! சிவாஜி பத்தி ஒரு சின்ன மேட்டர். அவரைப் பார்த்திட்டு நீங்களே எழுதிடுங்களேன் என்று குமுதத்தில் சொல்லிவிட்டார்கள்) அதற்காக சிவாஜியை சந்தித்தேன். அப்போது சிவாஜி தன் ஆரம்ப நாட்களைப் பற்றி மிகவும் உருக்கமாகப் பேசினார். அதன் சுருக்கம்:
“என் அப்பா மன்றாடியார் பகத்சிங் டைப் தேசியவாதி. நெல்லிக்குப்பத்துல ரயிலுக்கு வெடிகுண்டு வைக்கிறது யாருன்னு திருவுளச்சீட்டு போட்டபோது என் அப்பா பெயர் வந்தது. பிளான்படி வெடிகுண்டு வெச்சிட்டு ஓடறப்போ, பிரிட்டிஷ்காரன் சுட்டுட்டான். கால்ல பலத்த அடி. ஓடி வந்து மண்டையில் ஒரு போடு போட்டான். கேஸ் நடந்து ஏழரை வருஷ ஜெயில் தண்டனைன்னு தீர்ப்பாச்சு.” சொல்லும்போதே சிவாஜியின் குரல் கம்மியது. “ஜெயிலுக்குப் போன நாலரை வருஷத்துக்கெல்லாம் விடுதலையாகி வந்தவரைக் காட்டி என் அம்மா எனக்கு சொன்னாங்க, ” இவருதாண்டா உன் தகப்பனார்!”
அந்த சமயத்துல நாங்க விழுப்புரத்தை விட்டுட்டு, திருச்சிக்குப் பக்கத்துல சங்கிலியாண்டபுரம் என்கிற கிராமத்துக்கு வந்திட்டோம். அந்த கிராமத்துல நான் உருண்டு விளையாடாத இடமில்லை. அங்கே வருஷா வருஷம் கட்டபொம்மன் நாடகம் நடக்கும். அதைப் பார்க்கிறப்போ, நமக்கு இஞ்செக்ஷன் போட்டாப்புல இருக்கும்.நாமளும் நடிக்கணும்னு உடம்புல ஸ்பிரிட் ஏறும். அந்த வெறிதான் என்னை நாடகக் கம்பெனியில சேர வெச்சுது. அதற்கு அப்புறமும் நான் வாழ்க்கையில சந்திச்ச கஷ்டங்கள் ஏராளம்; சோகங்களும் சொல்லிமாளாது.
நான் இன்றைக்கு யாருக்காவது நன்றிக் கடன் பட்டிருக்கேன்னா அது ரெண்டு பேருக்குத்தான். ஒண்ணு ஆண்டவனுக்கு; இன்னொண்ணு பராசக்தி படத்தை தயாரிச்ச பார்ட்னரான பெருமாளுக்கு. ரொம்ப வெளிப்படையா சொல்லணும்னா என்னோட வாழ்க்கையும், வசதியும் பெருமாள் போட்ட பிச்சை” ரொம்ப உருக்கமாகப்பேசினார் சிவாஜி.
1997ல், சிவாஜிக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்பட்டபோது குமுதத்துக்காக சிவாஜியை சந்தித்தேன். மனுஷர் ரொம்ப ஜாலி மூடில் இருந்தார். இரண்டு சிறுமிகள் சிவாஜிக்கு பொக்கே கொடுத்தபோது, அவர்கள் இருவரையும் உச்சி மோந்து, முத்தமிட்டுவிட்டு, ” உங்க அப்பன் உங்களுக்கு சாப்பாடே போடறதில்லையா? இப்படி இளைச்சு போயிட்டீங்களே!” என்று ஜோக் அடித்தார் சிவாஜி. அந்த இரண்டு சிறுமிகள் ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும்தான்! அவர்களுக்கு சோறு போடாத அப்பன் வேறு யார்? சாட்ஷாத் சூப்பர் ஸ்டார்தான்!
‘எனக்கு சுயநலம் குறைச்சல். மத்தவங்க சந்தோஷப்பட்டா, அதைப் பார்த்து சந்தோஷப்படற கலைஞன் நான். இவ்வளவு நாள் தகுதியான ஒருத்தன் இருக்கிறது தெரியாம இருந்து, இப்ப தெரிஞ்சு, தாதா சாஹேப் பால்கே விருது கொடுத்து கௌரவிச்சிருக்காங்களேன்னு நம் தமிழ் நாட்டு ஜனங்கள் எல்லாம் சந்தோஷப்படறதைப் பார்க்கிறபோது, எனக்கு ரெட்டை சந்தோஷமா இருக்கு.” என்று சிவாஜி சொன்னபோது அவர் முகத்தில் நிஜமாலுமே ரெட்டை சந்தோஷம்.
தொடர்ந்து பராசக்தி நாட்களைப் பற்றி நினைவு கூர்ந்தார் நடிகர் திலகம். ‘அது ரத்தக் கண்ணீர் வடிச்ச சோகமான காலம். சினிமா உலகம் இரும்புக்கோட்டை மாதிரி இருந்தது. புதுசா ஒருத்தன் அத்தனை சுலபமா உள்ளே நுழைஞ்சிட முடியாது. என்னை பலர் ஜீரணிச்சுக்கலை. ஒரு சவுண்டு இஞ்சினியர் நான் வசனம் பேசினதைப் பார்த்துட்டு, “மீன் மாதிரி வாயை தொறந்து, தொறந்து மூடி வசனம் பேசுறானே! இவனெல்லாம் நோ கட் பாடி”ன்னு சொன்னார். (நோ கட் பாடி என்பது ‘இவனெல்லாம் எங்கே தேறப்போறான்னு அர்த்தம் கொண்ட அந்தக் கால சினிமா உலக வார்த்தை)
‘உங்களுடைய நீண்டகால, நிலைத்த வெற்றிக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?” என்றபோது, ” நான் ஆறு வயசுல நடிக்க வந்தவன். மேடையிலதான் நான் நடிப்பை கத்துக்கிட்டேன் என்பதால, என் நடிப்புல எப்போதுமே ஸ்டேஜ் இன்ஃப்ளுயன்ஸ் உண்டு. ஆனால், காலத்தோட சேர்ந்து, நானும் என்னோட நடிப்பு பாணியை கொஞ்சம், கொஞ்சமா மாத்திக்கிட்டு வந்ததுதான் பெரிய பிளஸ் பாயிண்ட். எனக்கு கடவுள் பக்தி நிறைய உண்டு. உழைப்பின் மேல் நம்பிக்கை உண்டு. ஆரம்ப காலத்துல பலரும் என்னை அங்கீகரிக்க மறுத்தபோது, டைரக்டர் (கிருஷ்ணன்) பஞ்சு, ” நீ கவலைப்படாதே! பிற்காலத்துல எல்லாரும் உன்னத்தான் ஃபாலோ பண்ணுவாங்க!” என்று அடிக்கடி சொல்லுவார்.
இந்தியன் படத்தில் ஹாலிவுட் மேக்-அப் மேன் உதவியோடு கமல் முதியவராக நடித்தபோது, தேசிய அளவுல அங்கீகாரம் கிடைச்சது. ஆனா அவரைவிட குறைஞ்ச வயசுல அப்பர் வேஷத்துல தொண்டுக் கிழவராக நீங்க நடிச்சிருக்கீங்க. அந்தக் காலத்துலயே ஒரே படத்துல ஒண்ணுக்கொண்டு சம்மந்தமில்லாத ஒன்பது கேரக்டர்ஸ் பண்ணி இருகீங்க! அதுக்கெல்லாம் பெரிய அளவுல அங்கீகாரம் கிடைக்கலையேன்னு வருத்தப்பட்டதுண்டா?” என்று சற்றே தயக்கத்துடன் கேட்டேன். “அந்தக் காலத்துல ஏது இத்தனை வசதி? நானேதான் அப்பர்சுவாமிகளா மேக்-அப் போட்டுக்குவேன். அப்ப ஜனங்க ரசிச்சாங்க! இப்போ இருக்கறது மாதிரி நிறைய வசதிகள் இருந்தா இன்னும் என்னென்னவோ செய்திருக்கலாம்” என்று வருத்தம் கலந்த நழுவலாக பதில் வந்தது.
இந்தக் காலத்தில் சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் பற்றிய கேளவிக்கு அவர் ஒரு பஞ்ச் பதில் சொன்னார் பாருங்கள்! ” அந்தக் காலத்துல நான் (திறமையை) வெச்சிக்கிட்டு, வஞ்சனையா பண்ணினேன்? இந்தக் காலத்துல ஏகப்பட்ட பேர் வராங்க. இவங்க எல்லாம் (திறமையை) வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணறாங்க?” அப்பப்பா! அசந்து போனேன் நான். சிவாஜி மேலும் தொடர்ந்தார்: ” நடிகன்னா நிறைய திங்க் பண்ணணும். காலையில பாத் ரூம்ல நான் நிறைய யோசனை பண்ணுவேன். பகல்ல சாப்பிட்ட பிறகு, உடம்புக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தாலும், திங்க் பண்ணாம இருக்க மாட்டேன். நடிக்க வந்திட்டு, தீவட்டி மாதிரி நின்னா சீக்கிரமே வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.
‘இத்தனை வருஷ அனுபவத்துல, இப்போ எப்படி நடிக்கணும்னாலும் ஃபூன்னு ஊதிடுவீங்க இல்லை?’
டைரக்டர் சீனை சொன்னதும், நான் செஞ்சு காட்டறேன். கொஞ்சம் கூட, குறைய இருக்கும். எப்படி வேணும்னு சொல்லுங்கன்னு சொல்லிட்டு நடிச்சுக் காட்டுவேன். ஏதாவது சேஞ்ச் வேணுமென்றால் சொல்லுவார்கள். முதல் டேக்கில் அவர்களுக்கு முழு திருப்தி கிடைக்கலைன்னா, இன்னொரு டேக் போயிடுவேன். வீட்டுல இருந்தா வெட்டியா பொழுது போகும்; செட்டுல இருந்தா வசனம் பேசினா பொழுதுபோகும்; அதான் வித்தியாசம்.
“இத்தனை வருடங்களின் எத்தனையோ விதமான கேரக்டர்களில் நடித்திருந்தாலும், இன்னமும் நீங்கள் ஏற்று நடிக்க விரும்பும் கேரக்டர் ஏதாவது உண்டா?” என்று கேட்டதும், “ஓ! இருக்கே! பெரியார் வேஷத்துல நடிக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஆண்டவன் அனுகிரஹம் இருந்தா நிறைவேறும்” என்றார். பதிலைக் கேட்டு நான் லேசாக சிரித்தேன். என் சிரிப்பின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவராக, ‘ எதுக்கு சிரிக்கறே? பெரியாரா நடிக்க, ஆண்டவன் அனுகிரஹம் வேணும்னு சொன்னதுக்காகவா? பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் எனக்கு நிறைய இருக்கே?”
இப்போது அவர் சிரித்தார்.

DHANUSU
1st May 2011, 12:08 PM
‘சிவாஜியைச் சந்தித்தேன்!’ – சிலிர்க்கும் லேகா ரத்னகுமார்

அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஒரு படமாவது எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்பது இன்றைய பல நட்சத்திரங்களின், கலைஞர்களின் ஏக்கம்.

சமீபத்தில் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தை எடுத்த அருண் வைத்தியநாதனுக்குக் கூட அப்படியொரு ஏக்கம் உண்டு. ஆனால் இந்த விஷயத்தில் லேகா ரத்னகுமார் மிகவும் அதிர்ஷ்டசாலி.

இவர் எண்பதுகளிலேயே சிவாஜியைச் சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம்.

அடடா… கொடுத்து வைத்த மனிதர்தான் என்கிறீர்களா… சரி.. சிவாஜியை இவர் எப்படிச் சந்தித்தார்?

அந்த அனுபவத்தை அவரே சொல்கிறார்:

“தூர்தர்ஷனுக்காக இருட்டில் ஒரு வானம்பாடி என்று ஒரு தொடரை நான் எடுத்துக் கொண்டிருந்த நேரம் அது.

அந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தவர் பண்டரிபாய். பாராசக்தி படத்தில் சிவாஜியின் முதல் ஜோடியே இவர்தானே.. ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் சிவாஜி இறந்துவிட்டதாக வதந்திகள் பரவ, எல்லோருமே இடிந்து போனோம். அப்போது நான் பண்டரிபாயிடம் சிவாஜி மீது நான் வைத்திருந்த மரியாதை பற்றியெல்லாம் சொல்லி, அன்றைய படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டேன்.

ஆனால் பின்னர்தான் சிவாஜி இறந்ததாக வந்தது ஒரு வதந்தி என்பது தெரிந்தது. இந்த விஷயத்தை சிவாஜியிடமே பண்டரிபாய் சொல்ல, “அந்த தம்பியை அழைச்சிட்டு வாயேன்” என்று கூறியிருக்கிறார் சிவாஜி. என்னிடம் இதை பண்டரிபாய் சொன்னபோது, ஆனந்தத்தில் அதிர்ந்து போனேன்.

அவரை பார்க்கணும் என்பது என் பல நாள் கனவு. அவரே வரச் சொல்லிவிட்டதால் பயங்கர முன்னேற்பாடுகளுடன் அன்னை இல்லத்துக்கு குடும்பத்தோடு போனேன். கூடவே பண்டரிபாய் அம்மா மற்றும் போட்டோகிராபரையும் கூட்டிப் போனேன்.

மாடியில் அவருக்காகக் காத்திருந்தபோது, என்னவெல்லாம் பேசலாம் என ஒரு ஒத்திகையே பார்த்துவிட்டேன் உள்ளுக்குள்.

அப்போதுதான் அவர் வந்தார். கண்களில் அப்படியொரு தீட்சண்யம். அந்த மனிதரைப் பார்த்த மாத்திரத்தில் எல்லாவற்றையும் மறந்தே போனேன்.

கிட்டத்தட்ட அரைமணி நேரம் அவர் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவரைப் போன்ற ஸ்டைலான ஆங்கில உச்சரிப்புக்குச் சொந்தக்காரரை இதுவரை தமிழ் சினிமாவில் நான் பார்த்ததில்லை. அப்படி ஒரு அசத்தலான ஸ்டைல் போங்க.

பண்டரிபாய் அவர் காலில் விழுந்து ஆசி பெற்ற போது, ஒரு ராஜாவுக்குரிய கம்பீரத்தோடு அவர் வாழ்த்திய விதம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

நாங்கள் எல்லோரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

பின்னர் அவர் என்னிடம் இப்படிச் சொன்னார்: ‘உங்க கூட போட்டோ எடுத்துக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!’

இதை என்னவென்று சொல்வது… ஒரு இளம் கலைஞரை சந்தோஷப்படுத்த அவர் கூறிய பெருந்தன்மையான வார்த்தைகளைப் பாருங்கள். உயர்ந்த மனிதர்களின் இயல்பும் உயர்ந்ததாகத்தானே இருக்கும்!

நாங்கள் அவர் இல்லத்தை விட்டுக் கிளம்பும்போது, “ஓய்வா இருக்கும்போதெல்லாம் அவசியமா வாங்க…” என்றவர், தனக்கே உரிய ஸ்டைலில் சற்று நிறுத்தி, நிமிர்ந்து பார்த்து, “ஐ மீன் நான் ஓய்வா இருக்கும் போதெல்லாம்!” என்று சிரிக்காமல் முடித்தார்.

பிறவிக் கலைஞன் அவர்… உண்மையிலேயே இமயத்தை தரிசித்த அனுபவம் எனக்கு!” என்று சிலிர்ப்புடன் கூறி முடித்தார்.

பெருமையாகத்தான் இருந்தது!

DHANUSU
1st May 2011, 12:12 PM
எப்பவும் எனக்கு 'சிவாஜி அங்கிள்'தான்
மைதிலி தேவி

அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும் . என் தந்தையின் கைகளைப் பற்றியபடி விக்டோரியா அரங்க மேடையின் பின்புறத்தில் நடந்து வந்து கொண்டிருந்தேன் . 'அதுதான் அந்தச் சம்பவம்’ அரங்கேறிய மேடை . அங்கு கடுகடுப்பான முகத்தோடு ஒரு மனிதர் ஆழ்ந்த சிந்தனையில் நின்று கொண்டிருந்தார் . நான் 'ஆட்டோகிராப்ஃ' நோட்டை இறுகப் பற்றியவாறு அவரை நோக்கி நடந்து, அவரிடம் நோட்டை நீட்டினேன். அந்த மனிதர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!

நடிப்பில் இமயம் . சிம்மக் குரலுக்குச் சொந்தக்காரர். அவர் பேசிய வசனங்கள் திரை அரங்குகளை அதிர வைத்து, வானையும் கிழித்துச் செல்லும் கரகோஷத்தைப் பெற்றுத் தரும் . அத்தகையவர், என்னைக் கூர்ந்து பார்த்தார். ஏதோ ஒரு ஆத்திரத்தில் சில வரிகளைக் கிறுக்கிவிட்டுப் புத்தகத்தை என் கைகளில் திணித்தார்.

எட்டே வயதான எனக்கு அந்த எரிச்சல் ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. எல்லாமே பிரமிப்பாக இருந்தது. ஆனால் , மீண்டும் நடிகர்திலகத்தை சந்தித்த போது , அவர் என்னை நினைவு கூர்ந்து மன்னிப்பு கேட்டார் . “ ஸாரிம்மா, இந்த 'மேக்கப்'பால் முகத்தில் ஒரே அரிப்பு.. எரிச்சல். அதோடு மேடையில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன் . அது என்னைப் பார்க்க சரியான நேரமில்லைம்மா ,” என்று கூறிப் புன்னகைத்தார். அந்த அன்பில், புன்னகையில், நான் வாயடைத்துப் போனேன்

வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர்களில் நம்முடன் இரத்த பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வோர் யார் என்பதை இறைவன் தீர்மானிக்கிறான் . 'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' என்று சொல்வார்கள். ஆனால் மிகவும் அரிய சந்தர்ப்பங்களில் , இரத்த சம்பந்தம் இல்லா விட்டாலும் , அத்தகைய உறவுகளை விதிவசமாக நாம் சந்தித்து அன்பு காட்டும் வாய்ப்பு கிட்டும் . அவர்கள் நம் மீது காட்டும் பாசத்தையும் நேசத்தையும் காண்கையில் , நம் உறவுகள் என்று கூறிக் கொள்வோர் கூட அவமானத்தில் தலை குனிவர் .

அப்பேற்பட்ட ஓர் அன்பு உள்ளத்தைச் சந்தித்த கௌரமும் பெருமையும் எனக்கு உண்டு. ஆமாம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் அவர் . . . நடிகர் என்ற அந்நிய மனிதனாக அல்லாமல், 'சிவாஜி அங்கிள்' என்று என்னால் உரிமையோடு அழைக்கப்படுபவர். எங்களுக்குள் இருந்த பரஸ்பர அன்புக்கும் சம்பாஷணைகளுக்கும் சான்றாகப் பற்பல சந்தர்ப்பங்கள் எழுந்திருக்கின்றன. அவருடைய அன்புக்குப் பெரும் சான்றாக, என் மனம் உருகிக் கண்கலங்க வைத்த ஒரு சம்பவம் குறிப்பாக உள்ளது.
அது தமிழகத்தில் நடந்த என்னுடைய திருமணம். அதற்காக நாங்கள் சிங்கப்பூரில் இருந்து இந்தியா போயிருந்தோம். அது, என் தந்தை இல்லாத சமயம். என் குடும்பத்தில் எல்லோரும் அவர் இல்லாத வெறுமையை உணர்ந்தோம். ஆனால், சிவாஜி அங்கிள் அந்தக் குறையே தெரியாதவாறு எல்லா விசேஷங்களையும், தாலிப் படையலிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு வரை, முன்நின்று செய்தார். திருமணத்தன்று, நடிகர் திலகம் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக நாற்காலியில் அமரவில்லை. குடும்பத்தில் ஒருவராகக் கல்யாண மேடையில் நின்றிருந்தார் . எனக்குப் பேச வார்த்தைகள் இல்லை.

அதையும் விட , நான் மறக்கவே இயலாதபடி ஒன்று நடந்தது. திருமணத்துக்கு மறுநாள் காலையில், நடிகர் திலகம் எங்கள் வீடு தேடி வந்து, ஒரு தந்தையின் அக்கறையோடு என்னிடம்,” சந்தோஷமாக இருக்கிறாயாம்மா ?“ என்று நலம் விசாரித்துச் சென்றதை என்னால் ஏழேழு ஜென்மங்களுக்கும் மறக்க இயலாது .

என் சொந்த பந்தங்கள்கூடச் சிங்கப்பூர் திரும்புவதில்தான் அதிகக் கவனத்துடனும் ஆர்வமாகவும் இருந்தார்கள் . இந்த சிவாஜி என்கிற இந்த அற்புத மனிதர் பெண் மனம் புரிந்து, அவருடைய முக்கிய அலுவல்களுக்கு மத்தியில் நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்று தெரிந்து கொள்வதற்காக நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்றால், அவருடைய உயர்ந்த உள்ளத்தை என்னவென்று சொல்வது ? நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - நடிப்பில் மட்டும் சிகரமல்ல, குணத்திலும்தான்! அவர் என்றைக்குமே எனக்குச் சிவாஜி அங்கிள்தான் - அவர் மீது நான் கொண்டுள்ள நேசம் அத்தகையது .

tacinema
2nd May 2011, 07:51 AM
சாரதா மேடம்,
ஏன் இப்படி வந்து மாட்டிக் கொள்கிறீர்கள்.

எங்க வீட்டுப் பிள்ளை 7 திரை அரங்குகளில் 175 நாட்கள் ஓடியது. நெல்லையில் நூலிழையில் வெள்ளிவிழாவை தவறவிட்டது. இல்லை என்றால் 8 திரை அரங்குகளாக மாறி இருக்கும்.

அதே போல் உலகம் சுற்றும் வாலிபன் 6 திரை அரங்குகளில் 175 நாட்கள் ஓடியது.

சிவாஜியின் திருவிளையாடல் சென்னையில் மட்டும் 175 நாட்கள் ஓடியது.
அது எப்படி 7 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய எ.வீ.பியை முறியடித்தது.

அதே போல் தங்கப்பதக்கமும் சென்னையில் மட்டும் 175 நாட்கள் ஓடியது.அது எப்படி 6 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய உ.சு.வாவை முறியடித்து.

இப்படி நினைக்க சிவாஜி ரசிகர்களல் மட்டுமே முடியும்.

உ.சு.வா பெங்களூரில் 3 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
மொத்ததில் 20க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடி தமிழ் திரை உலக வரலாற்றில் சாதனை படைத்தது.

எம்.ஜி.ஆர் திரை உலகில் இருந்த வரை சிவாஜியின் எந்த ஒரு திரைப்படமும் இந்த மாதிரி சாதனைப் படைத்ததில்லை.

எனவே தான் எம்.ஜி.ஆரை வசூல் சக்கரவர்த்தி என்று கூறுகிறார்கள்.

nut case rajaram,

didn't you bring up same issue earlier? Didn't Murali come back with stats such as BO power, collection and number of days run? Again, NT's thiruvilaiyadal's 150+ days run had beaten mgr's EVP 175 run BO collection. Same with NT's thangapaththakkam: its 150 days collection beaten MGR's over hyped USV. I had same argument with MGR fans in one of his blog site: after giving Murali's facts, the MGR fans finally agreed that Thangapathakkam 150 days collection in all major cities in TN indeed beaten USV collection. GO back and read those interesting debates. Who made history with B/W BO most collected movie: It is our own idol NT with pattikkada pattanama. Moreover, as per discussion, USV in Madurai was made to run for 217 days just to beat NT's record 216 run movie Bhagapirivinai. Now, tell me where the hell the BO power was - it was with NT. Your argument is half baked just like some segments of undeserved tamil media who mistakenly often portrays that MGR was the only BO hero just because he was successful in politics. You need to apply a sting of common sense how could have NT survived with out BO power for almost 50 years in Tamil cinema.

Stop this nonsense. If you want to glorify MGR, go to his thread. if you want to Kamal, go there. Don't spend time here.

summa summa comedy ennu solli, you are becoming a senseless comedian here.

Moderator: intha kosuvai adichchi thorathunga paa!!

Long live NT's fame

Regards

RAGHAVENDRA
2nd May 2011, 08:07 AM
புவியில் தீமையை அழித்து நன்மையைக் காக்க இறைவன் எடுத்ததே அவதாரம். ஆனால் இங்கோ ஒரு மாபெரும் கலைஞனை இழிவு படுத்தவென்றே அவதாரங்கள் எடுக்கப் படுகின்றன. இது தான் காலம் என்பதோ. அவர்களுக்காக வென்றே கண்ணதாசன் பாடல் புனைந்தாரோ...
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே...
அவர்கள் தங்கள் நிலையை சரிப்படுத்திக்கொள்ளவும் உண்மையை உணர்ந்து கொள்ளவும் இறைவனே அவதாரம் எடுக்க வேண்டும்.
அன்புடன்

mr_karthik
2nd May 2011, 11:59 AM
ராகவேந்தர் சார், நம்ம பாட்டே இருக்கே. அதைச்சொல்லுங்க (அப்புறம் இதுக்கும் 'எங்க' பாட்டுதான் கிடைச்சதான்னு சொல்வாங்க)

ஓகோ..கோ..கோ.. மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விட்டு உருப்பட வாருங்கள்

உறித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறித்திரிபவர் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது

விளக்கிருந்தாலும் எண்ணெயில்லாமல் வெளிச்சம் கிடைக்காது
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது

காற்றை கையில் பிடித்தவனில்லை
தூற்றி தூற்றி வாழ்ந்தவனில்லை.

pammalar
2nd May 2011, 06:25 PM
மே-1 - இன்று மணநாள் காணும் புது மண தம்பதியருக்கு நமது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NTwKamalammaB.jpg

அன்புடன்

டியர் ராகவேந்திரன் சார்,

விண்ணுலகில் மணநாள் விழாக் காணும் புதுமணத்தம்பதியரின் அரிய, அழகிய புகைப்படத்தை மே ஒன்று அன்று பதிவிட்டமைக்கு பாசத்தோடு கூடிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
2nd May 2011, 10:50 PM
nut case rajaram,

didn't you bring up same issue earlier? Didn't Murali come back with stats such as BO power, collection and number of days run? Again, NT's thiruvilaiyadal's 150+ days run had beaten mgr's EVP 175 run BO collection. Same with NT's thangapaththakkam: its 150 days collection beaten MGR's over hyped USV. I had same argument with MGR fans in one of his blog site: after giving Murali's facts, the MGR fans finally agreed that Thangapathakkam 150 days collection in all major cities in TN indeed beaten USV collection. GO back and read those interesting debates. Who made history with B/W BO most collected movie: It is our own idol NT with pattikkada pattanama. Moreover, as per discussion, USV in Madurai was made to run for 217 days just to beat NT's record 216 run movie Bhagapirivinai. Now, tell me where the hell the BO power was - it was with NT. Your argument is half baked just like some segments of undeserved tamil media who mistakenly often portrays that MGR was the only BO hero just because he was successful in politics. You need to apply a sting of common sense how could have NT survived with out BO power for almost 50 years in Tamil cinema.

Stop this nonsense. If you want to glorify MGR, go to his thread. if you want to Kamal, go there. Don't spend time here.

summa summa comedy ennu solli, you are becoming a senseless comedian here.

Moderator: intha kosuvai adichchi thorathunga paa!!

Long live NT's fame

Thanks Mr. taccinema ,

A small correction,

Moderator: intha loosai adichchi thorathunga paa!!

Abhinaya
3rd May 2011, 09:12 PM

சென்னை,கோவை,மதுரை,திருச்சி,சேலம் போன்ற ஊர்களில் 200 நாட்களுக்கு ஓடிய எம்.ஜி.ஆர் படங்களை 125 நாட்கள் ஓடிய சிவாஜி படங்கள் வசூலில் முறியடித்து விட்டது. என்ன ஒரு கற்பனை.

இதுக்குத்தான் உங்களை நான் காமெடி பீஸ் என்று கூறுகிறேன்.

pammalar
3rd May 2011, 09:17 PM
ஸ்டாரில் 'புதிய பறவை'

ஞாயிறு [1.5.2011] மாலை கோலாகலம்

அலங்காரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3629.jpg

கற்பூர ஆரத்தி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3660.jpg

மகாதீபாராதனை
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3666.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3667.jpg

நடிகர் திலகத்தின் ஒவ்வொரு அசைவுக்கும், ஸ்டைலுக்கும் அரங்கம் அதிர்ந்தது. அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் கரவொலி, விசிலொலி மற்றும் புகழ்பாடும் கோஷங்கள்தான். பாடல் காட்சிகள் ஒவ்வொன்றும் ஜோதிமயம் என்பதனைக் கூறவும் வேண்டுமோ !

சேப்பாக்கத்தின் IPLலையும் மீறி இப்பக்கத்தின் அல்லிக்கேணியில் கோபாலுக்கு கூடிய கூட்டத்தைக் கண்டு உயராத புருவங்களும் உயர்ந்தன.

[மாலைக் காட்சியை மட்டும் சற்றேறக்குறைய 360 பேர் கண்டு களித்தனர்]

அன்புடன்,
பம்மலார்.

Abhinaya
3rd May 2011, 10:28 PM
Athu therintha vishayam thaane! Vidunga, athaiyum nammalE koduthuviduvom.

Chennai - 3 theatres
259

4. Kovai - Thanam, 5. Tiruchi - Kaveri, 6. Madurai - Sugapriya, 7 - Salem -Santham

100 days details of Vellai Roja and TTT

Vellai Roja - 100 days

Devi - 3 shows
Abirami,udayam,bhuvaneshwari,Grown - Morning show

TTT - 100 days

satyam - 3 shows
Sakthi abirami - 4 shows
sri krishna - 3 shows

TTT ran 175 days in Sakthi Abirami.

pammalar
3rd May 2011, 11:32 PM
நடிகர் திலகத்தின் படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)

10. தேவர் மகன் (1992) / விராசட் (1994) - ஹிந்தி

இந்தப் படத்தில் நடிகர் திலகம் பெரிய தேவராக வாழ்ந்து காட்டியதைப் பற்றி மூன்று வருடங்களுக்கு முன்னர் திரு. பிரபுராம் அவர்கள் மிகச் சிறப்பாக ஒரு தேர்ந்த தமிழ்ப் பண்டிதருக்கேயுரிய அற்புதத் தமிழில் ஒன்பது பாகங்கள் எழுதிப் பிரமாதப் படுத்தியிருந்தார். இந்தத் திரியை நான் ஓராண்டுக்கு முன் படிக்கத் துவங்கியபோதே அந்தக் கட்டுரைகளைப் படித்து வியந்திருந்தாலும், இப்போது, தேவர் மகனைப் பற்றி எழுத விழைவதற்கு முன்னர், அந்தக் கட்டுரைகளை மீண்டும் ஒரு முறை படித்தேன். அவர் அளவிற்கு நுணுக்கமாக இனி ஒருவர் எழுத முடியுமா என்பது சந்தேகமே. என்றாலும், ஓரிரு வார்த்தைகள்.

பெரிய திரையில் நடிக்கத் துவங்கி நாற்பத்தியிரண்டு வருடங்கள், வகை வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, அவைகளுக்கு, உயிரும் உணர்வும் கொடுத்து, ஒவ்வொரு பாத்திரத்தையும், வித்தியாசமாக நடித்து வந்த நடிகர் திலகம், மீண்டும் ஒரு முறை இந்த பெரிய தேவர் பாத்திரத்திற்கு ஒரு புதிய நடிப்பைக் கொடுத்து, so called subtle ஆக்டிங் ஸ்டைலுக்கு மறுபடியும் இலக்கணம் வகுத்து, பார்க்கும் ஒவ்வொருவரையும் நெக்குருக வைக்கும் அந்த அதிசயத்தை அனாயாசமாக நிகழ்த்திக் காட்டினார். அறுபத்து நான்கு வயதிலும், கதைக் களத்தையும், கதாபாத்திரத்தையும் சிதைக்காமல், உடன் நடித்த அத்தனை கலைஞர்களையும் விஞ்சி நடித்து, அந்த பெரிய தேவர் பாத்திரத்தை மறக்க முடியாத திரைக் கதாபாத்திரமாக உலவ விட்டார்.

படத்தைப் பார்த்த ஒவ்வொருவரையும், நடிகர் திலகமும், கமலும் நிஜ தந்தை - மகன் என்றே நம்ப வைத்து விட்டிருந்தனர்.

இப்படத்தை இன்று பார்க்கும் இளைய தலைமுறையினரும் கூறும் விஷயம் – இந்தப் படம், சிவாஜி இறந்தவுடன், ஏன், ஒரேயடியாக, சுவாரஸ்யம் இழந்து, தொய்ந்து விடுகிறது என்பது தான். அதுதான், அந்த யுகக் கலைஞனின் தனிச் சிறப்பு. அந்த அளவிற்கு, அந்த பெரிய தேவர் பாத்திரமும், அதில் நடித்த நடிகர் திலகத்தின், உயிர்ப்பான நடிப்பும், பார்ப்பவர் கண்ணை விட்டகலாதிருக்கும். இப்படம், நடிகர் திலகம் இறந்தவுடன் சுவாரஸ்யம் இழந்தாலும், மறுபடியும், கடைசியில், நாசரும், கமலும் மோதிக் கொள்வதிலிருந்து சூடி பிடித்து, யதார்த்தமாக முடிவடையும்.

தேவர் மகன், ஹிந்தியில், "விராசட்" என்ற பெயரில் எடுக்கப்பட்டு, படு தோல்வி அடைந்தது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, அந்த மொழியின் மண்ணிற்கேற்ப அதை எடுக்கத் தவறியது. மற்றொன்று, நடித்த முக்கிய கலைஞர்கள், மூலப் படத்தின் அளவிற்கு நடிக்க முடியாமல் போனது. (அம்ரீஷ் பூரி மற்றும் அனில் கபூர்). அனில் கபூராவது, கமல் நடித்த பாத்திரத்தை ஓரளவிற்கு நிறைவாக செய்ய முயற்சியாவது செய்தார். ஆனால், அம்ரீஷ் பூரியாலோ (என்ன ஒரு விவஸ்தை கெட்ட தேர்வு?) நடிகர் திலகத்தின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை என்பதை விட, எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு சிதைத்து விட முயற்சி செய்து, அதில் முழு வெற்றியும் அடைந்தார் எனலாம். மூலத்தின் வெற்றிக்கு ஆதாரமான நடிகர் திலகத்தின் பாத்திரம் ஒரேயடியாக அம்ரீஷ் பூரியால் சிதைக்கப்பட்டது அந்தப் படத்தின் படுதோல்விக்கு பெரிய அளவில் காரணமாக அமைந்தது. (இதே போல், முன்னொரு முறை, நாயகன் படத்தை "தயாவன்" என்ற பெயரில், வினோத் கன்னாவும், பெரோஸ் கானும் வெற்றிகரமாக சிதைத்திருந்தனர்!?.).

இந்தக் கட்டுரை இனிதே நிறைகிறது. இருப்பினும், நடிகர் திலகம் என்ற மொழிகளுக்கும், விவரணைகளுக்கும் அப்பாற்பட்ட கலைஞனின் சாதனைகளையும், திறமைகளையும், ஆற்றலையும், ஒரு இருபது படங்களை மட்டும் வைத்து அடைத்து விட முடியாது.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

டியர் பார்த்தசாரதி சார்,

'பெரியத் தேவர்' பற்றி திரு.பிரபுராம்(Mr. P_R) அவர்களின் பதிவுகள் Live Telecast என்றால் உங்களது பதிவு Match Highlights ! தாங்கள் பதிவிட்டதும், சூட்டோடு சூடாக இக்காவியத்தில் நாம் அனைவரும் அதிகம் விரும்பி ரசிக்கும் காட்சியை வீடியோவாக வழங்கிய திரு.selva7 அவர்களுக்கும் நமது நன்றி !

தாங்கள் இதுவரை எழுதியுள்ள இரு தொடர் கட்டுரைகளுமே இத்திரிக்கு புதிய பரிமாணங்களை அளித்துள்ளன என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை. அடுக்கடுக்கான அடுத்தடுத்த தொடர் கட்டுரைப் பதிவுகளை தங்களிடமிருந்து மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம் !

தொய்வின்றித் தொடரட்டும் தங்களின் திருத்தொண்டு !

அன்புடன்,
பம்மலார்.

tacinema
4th May 2011, 06:47 AM
சென்னை,கோவை,மதுரை,திருச்சி,சேலம் போன்ற ஊர்களில் 200 நாட்களுக்கு ஓடிய எம்.ஜி.ஆர் படங்களை 125 நாட்கள் ஓடிய சிவாஜி படங்கள் வசூலில் முறியடித்து விட்டது. என்ன ஒரு கற்பனை.

இதுக்குத்தான் உங்களை நான் காமெடி பீஸ் என்று கூறுகிறேன்.
Rajaram,

First, I respect and admire MT MGR, though more as a successful politician than an actor.

Again, you prove that you are a timeless and worthless arguing species created on this planet. it was an argument between evp-thiruvilaiyadal and usv-thangapathakkam. All of these are 175+ day movies. We proved that evp 175 day collection was beaten by nt's thiruvilayadal when it was completing 150 days and same with other pair of movies. Were you in total control when you posted above comment? We never compared mgr's 200 day movie with nt's 125 day movie. Thiruvilaiyadal and Thangapathakkam may not have completed 175 days across all centers mainly because they were both replaced by another NT movie. All it mattered was NT movies have handsomely beaten MGR 175 day collection. This is analogous to manithan vs naayagan; though naayagan ran over 100 days, its collection was easily beaten by super star's 100 day manithan because manithan was released at central and naayagan at sugapriya (limited seating capacity). In fact, every one agrees that USV was made to run to complete 217 days at Madurai Meenakshi just to prove a point that usv could complete 1 day more than NT 10+ year prior b/w movie. Additionally, by creating trouble, then CM M.Karunanidhi indirectly brought a lot of free publicity to USV.

It was NT who gave 175+ day movies under various banners. Barring EVP and Anbe Vaa, all MGR 175+ days were from his own banner. What does this infer? You need to apply a bit common sense here. If you can't apply common sense, i am sorry that no body could help you.

It was the one and only (until today) NT who had guts to release 2 movies on the same day and make both of them successful. This shows the crowd pulling power that he had and that's why he was called vasool chakravarthy. i would again stress that due to enormous success in politics, MGR was shown as the only collection king by some undeserved tamil media. its all maaya jaalam created by tamil media. if you analyze you can see both were collection kings, with NT had an edge in urban centers. But, again urban centers make cash register ring - which shows NT was the real vasool chakravarthy.

Again, don't bring the term comedy here... prove your points with enough evidence - otherwise, you are a laughing stock on this hub.

I wish i wouldn't hear you on this thread.... don't pollute this thread, spare this. Go and contribute in MGR and kamal threads.

goldstar
4th May 2011, 06:53 AM
நடிகர் திலகத்தின் ஒவ்வொரு அசைவுக்கும், ஸ்டைலுக்கும் அரங்கம் அதிர்ந்தது. அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் கரவொலி, விசிலொலி மற்றும் புகழ்பாடும் கோஷங்கள்தான். பாடல் காட்சிகள் ஒவ்வொன்றும் ஜோதிமயம் என்பதனைக் கூறவும் வேண்டுமோ !

சேப்பாக்கத்தின் IPLலையும் மீறி இப்பக்கத்தின் அல்லிக்கேணியில் கோபாலுக்கு கூடிய கூட்டத்தைக் கண்டு உயராத புருவங்களும் உயர்ந்தன.

[மாலைக் காட்சியை மட்டும் சற்றேறக்குறைய 360 பேர் கண்டு களித்தனர்]

அன்புடன்,
பம்மலார்.[/QUOTE]

Thank you Mr. Swamy for wonderful photos of Pudiya Paravai. Even in IPL season and that too when CSK played in Chennai on that day just prove that who is REAL crowd puller.

Thanks for your incomparable effort to bring NT fame and make us happy and we felt like enjoying our NT movies on theatre. Thanks again,

Cheers,
Sathish

parthasarathy
4th May 2011, 11:01 AM
டியர் பார்த்தசாரதி சார்,

'பெரியத் தேவர்' பற்றி திரு.பிரபுராம்(Mr. P_R) அவர்களின் பதிவுகள் Live Telecast என்றால் உங்களது பதிவு Match Highlights ! தாங்கள் பதிவிட்டதும், சூட்டோடு சூடாக இக்காவியத்தில் நாம் அனைவரும் அதிகம் விரும்பி ரசிக்கும் காட்சியை வீடியோவாக வழங்கிய திரு.selva7 அவர்களுக்கும் நமது நன்றி !

தாங்கள் இதுவரை எழுதியுள்ள இரு தொடர் கட்டுரைகளுமே இத்திரிக்கு புதிய பரிமாணங்களை அளித்துள்ளன என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை. அடுக்கடுக்கான அடுத்தடுத்த தொடர் கட்டுரைப் பதிவுகளை தங்களிடமிருந்து மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம் !

தொய்வின்றித் தொடரட்டும் தங்களின் திருத்தொண்டு !

அன்புடன்,
பம்மலார்.

அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

தங்களின் உயர்வான பாராட்டுகளுக்கு என் உளமார்ந்த நன்றிகள். என்னுடைய சொந்த திருப்திக்கும், அதில் நான் அடையும் மகிழ்ச்சிக்காகவும், திரு. முரளி அவர்கள் கூறுவது போல், இப்படிப்பட்ட பதிவுகள், இன்றைய இளம் தலைமுறையினருக்கும், நாளைய தலைமுறையினருக்கும், நடிகர் திலகத்தைப் பற்றிய செய்திகளையும், விவரங்களையும், மேலும், விரிவாக எடுத்துச் செல்லும் என்பதற்காகவும், நான் எழுதுகிறேன் என்றாலும், தங்களைப் போன்றவர்களின் அங்கீகாரமும், பாராட்டுகளும், என்னை மேலும் செம்மைப் படுத்திக்கொள்ளவும், மேலும் எழுதவும் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
4th May 2011, 11:24 AM
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

தங்கள் புதிய பறவை திரைக்காவியம் சென்னை ஸ்டார் திரை அரங்கில் திரையிடப்பட்டதை ஒட்டிய காட்சிகள் அற்புதம். இன்று வெளியாகும் படங்களுக்கே, வார இறுதி சென்றவுடன், நான்காவது நாளில் இருந்தே, திரை அரங்கம் வெறுமையாக இருக்கும் சூழ்நிலையில், நடிகர் திலகத்தின் படங்களுக்கு, நாற்பது-ஐம்பது வருடங்கள் கழித்தும், கிடைக்கும் வரவேற்பு, வெறும் வாய் மெல்பவர்களின், வாய்க்குப் பூட்டாக அமையும்.

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
4th May 2011, 11:44 AM
டியர் பம்மலார்,
சென்னை ஸ்டார் திரையரங்கில் கடந்த ஞாயிறு அன்று மாலைக்காட்சி வேளையில், நடிகர் திலகத்தின் மணநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியதாக செய்தி அறிந்தேன். அன்று தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் வர இயலவில்லை. தங்களுடைய புகைப்படங்கள் அக்குறையைப் போக்கி விட்டன. அதே போல் நிகழ்ச்சிகளைப் பற்றிய விவரங்களையும் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

RAGHAVENDRA
4th May 2011, 11:49 AM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 12

தொடர்வது முரடன் முத்து திரைக்காவியத்தில் இருந்து நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் பாடல். டி.ஜி.லிங்கப்பா அவர்களின் இசையில், டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா குரலில், கண்ணதாசன் பாடல். நடிகர் திலகமும் பல ரசிகர்களின் அபிமான நாயகியுமான தேவிகா அவர்களும் இணைந்து துள்ளும் இப்பாடல் காட்சி மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். வெறும் வேஷ்டி சட்டையிலேயே நடிகர் திலகம் ஆடும் நடனம், அற்புதம்.

பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=AJ6l1oGfsw0

அன்புடன்

rsubras
4th May 2011, 12:27 PM
100 days details of Vellai Roja and TTT

Vellai Roja - 100 days

Devi - 3 shows
Abirami,udayam,bhuvaneshwari,Grown - Morning show

TTT - 100 days

satyam - 3 shows
Sakthi abirami - 4 shows
sri krishna - 3 shows

TTT ran 175 days in Sakthi Abirami.

This is one thread where quality and meaningful discussions, something of the range of literature review for a PhD thesis usually takes place by mostly matured fans / followers. Praises, though slightly exaggerated at times, are mostly restricted to glorify only Sivaji and not throwing mud at any past / present actors. Unnecessary and uncalled for box office comparisons is only going to bring it at par with some other threads. avoid pannalame :)

mr_karthik
4th May 2011, 02:07 PM

சுப்பு அவர்களே, மிகச்சரியாகச் சொன்னீர்கள். வழக்கமாக இங்கு பங்களிப்பைத்தரும் ரசிகர்களைவிட உங்களைப்போன்ற பொதுப்படையான, தரமான வாசகர்களின் பதிவுகள் சிலருக்கு சரியான பதிலாக அமையும். உங்கள் பதிவைப்படித்த பிறகாவது சிலர் தங்கள் நிலையை உணர்ந்து விலகட்டும்.

groucho070
4th May 2011, 02:09 PM
Best is to ignore, ladies and gentlemen. Please carry on with the usual post.

mr_karthik
4th May 2011, 02:18 PM
பார்த்தசாரதி சார்,

உங்கள் கட்டுரைத்தொடரை மிக நன்றாக கொண்டு சென்று, முத்தாய்ப்பாக தேவர் மகன் படத்துடன் முடித்து, அழகாக நிறைவு செய்துள்ளீர்கள்.

வேறொரு தலைப்பில் இன்னொரு தொடரை எதிர்நோக்குகிறோம். நடிகர்திலகத்தின் திறமைகளையும், சாதனைகளையும் முன்னெடுத்துச்செல்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிடுவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். இந்த ஆரோக்கியமான போட்டி தொடரட்டும். ஏனென்றால் இவற்றின் ஒரே நோக்கம் நடிகர்திலகத்தின் புகழைப் பறைசாற்றுவது மட்டுமே.

mr_karthik
4th May 2011, 02:32 PM
பம்மலார் சார்,

திருவல்லிக்கேணி ஸ்டார் திரையரங்கில் புதிய பறவையின் கொண்டாட்டங்களைக் காட்சியாக தந்தமைக்கு நன்றி. கிரிக்கெட் சூறாவளிக்கு மத்தியில் இவ்வளவு ரசிகர்கள் கண்டுகளித்தனர் என்பது மனதுக்கு இதமளிக்கும் செய்தி.

ராகவேந்தர் சார் அவர்கள் பலமுறை கேட்டுக்கொண்டதுபோல, பாதுகாப்பு கருதி திரையரங்கின் உள்ளே ரசிகர்கள் தீபாராதனைகளைத் தவிர்ப்பது நல்லது. நடிகர்திலகத்தின் படங்களைத் திரையிட அரங்குகளை தந்து சேவையாற்றும் திரையரங்க நிர்வாகத்துக்கு நாமும் நமது ஒத்துழைப்பைத் தர வேண்டும்.

ராகவேந்தர் சார்,

அடிக்கடி காணக்கிடைக்காத 'முரடன் முத்து' பாடல் காட்சியை நினைவுட்டியமைக்கு நன்றி. நமது நடிகர்திலகமும் 'நம்முடைய' தேவிகாவும் (ப்ளம், இருக்கீங்களா) அட்டகாசம் செய்திருப்பார்கள். இருவருமே அலட்டிக்கொள்ளாத இயல்பான நடிப்பு. காணத்தந்தமைக்கு நன்றி.

RAGHAVENDRA
4th May 2011, 03:13 PM
டியர் கார்த்திக்,
ஆயிரம் பதிவுகள் இட்டு சாதனை புரிந்துள்ள தங்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் அன்பான வாழ்த்துக்கள். முரடன் முத்து பாடலுக்கு பாராட்டியமைக்கு நன்றி.

தங்களின் ஆயிரம் பதிவினை இதோ ஆயிரம் கரங்கள் நீட்டி நடிகர் திலகம் வாழ்த்துகிறார்

http://vimeo.com/8473735

அன்புடன்

Mahesh_K
4th May 2011, 03:23 PM
100 days details of Vellai Roja and TTT

Vellai Roja - 100 days

Devi - 3 shows
Abirami,udayam,bhuvaneshwari,Grown - Morning show

TTT - 100 days

satyam - 3 shows
Sakthi abirami - 4 shows
sri krishna - 3 shows

TTT ran 175 days in Sakthi Abirami.

Vellai Roja (VR) was released in Devi - (regular shows ). As per to pre-release arrangement shifted to Safire (regular shows )after 4 weeks. It was also continued in Devi noon show.

Apart from Safire, VR completed 100 days ( regular shows) in Crown and Bhuvaneswari & also in Tirvuotriyur Venkateswara theatre (4 shows) - not far away from Crown.

VR completed 100 days ( noon show) in Devi, Udhayam and Abirami.

VR was released in big theatres with 1000+ seat capacity. For eg. had it been Annai /Sakthi or Bala abirami - instead of 2 big theatres Abirami (noon) + Bhuvaneswari (regular) - it would have been easily a silver jubilee hit in Purasai area.

VR' s 100 day prints were almost twice, when compared to any other Deepvali 1983 movie.

Enough proof in the form of newspaper clippings for our statements produced already in this thread.

நீங்க யோசிச்சு யோசிச்சு post கொடுக்கறதை பார்க்கும்போது, பின்னணியில் இருந்து யாரோ உங்களுக்கு installment basis ல தகவல் கொடுக்கற மாதிரி தெரியுது.

இனிமேலாவது அவரை கொஞ்சம் சரியான தகவல்களை, ஆதாரத்தோடு தரச் சொல்லி நான் சொன்னேன்னு சொல்லவும்.

parthasarathy
4th May 2011, 04:14 PM
பார்த்தசாரதி சார்,

உங்கள் கட்டுரைத்தொடரை மிக நன்றாக கொண்டு சென்று, முத்தாய்ப்பாக தேவர் மகன் படத்துடன் முடித்து, அழகாக நிறைவு செய்துள்ளீர்கள்.

வேறொரு தலைப்பில் இன்னொரு தொடரை எதிர்நோக்குகிறோம். நடிகர்திலகத்தின் திறமைகளையும், சாதனைகளையும் முன்னெடுத்துச்செல்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிடுவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். இந்த ஆரோக்கியமான போட்டி தொடரட்டும். ஏனென்றால் இவற்றின் ஒரே நோக்கம் நடிகர்திலகத்தின் புகழைப் பறைசாற்றுவது மட்டுமே.

அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

அன்புடன்,

பார்த்தசாரதி

selva7
4th May 2011, 05:18 PM
டியர் கார்த்திக்,
ஆயிரம் பதிவுகள் இட்டு சாதனை புரிந்துள்ள தங்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் அன்பான வாழ்த்துக்கள். முரடன் முத்து பாடலுக்கு பாராட்டியமைக்கு நன்றி.

தங்களின் ஆயிரம் பதிவினை இதோ ஆயிரம் கரங்கள் நீட்டி நடிகர் திலகம் வாழ்த்துகிறார்

http://vimeo.com/8473735

அன்புடன்
இந்த திரைப்பட கிளிப்பிங் கண்களில் ஒற்றிக் கொள்ளும் அளவுக்கு வண்ணக் காட்சியாக இருக்கிறது.

goldstar
5th May 2011, 10:19 AM
Guys,

Just today watched NT's Kalthun for the first time in my life, though this movie released on Madurai Chinthamani in my childhood and never got chance to watch it.

NT's hair style is quite different and NT performance is quite brilliant as usual and all of very different character.

Murali sir, could you please come with how was the first day and first show in Madurai Chinthamani and other friends please add more details about this movie.

Cheers,
Sathish

groucho070
5th May 2011, 11:22 AM
Kalthun benefits from seniors, and totally let down by the younger actors. NT as usual is the rock pillar of the movie :smile: Oh, MSV pinni pedaleduthirupparu. Just listen to Valartha Keda song, your blood will boil, your eyes will tear.

Mahesh_K
5th May 2011, 11:49 AM
I too felt that 'younger' actors of better caliber (like Vijayakumar & Sarathbabu of Theerpu) would have done more justice to the roles in Kalthun. Same is the case with Nallathoru kudumbam & Rishimoolam.

Plum
5th May 2011, 11:54 AM
Grouch, what about KRV? :-)

Rishimoolam - koodai thalaiyan Chakravarthy
kalthooN - this is the guy who then carried around the adaimozhi kalthUn for the rest of his career right? What's his name?

goldstar
5th May 2011, 12:08 PM
I too felt that 'younger' actors of better caliber (like Vijayakumar & Sarathbabu of Theerpu) would have done more justice to the roles in Kalthun. Same is the case with Nallathoru kudumbam & Rishimoolam.

Agreed Mr. Mahesh. This guy performance is very bad and his facial expression is very bad as well. I believe Vijayakumar would have done better....

Mahesh sir, how was the initial few days in Chennai on release time?

Cheers,
Sathish

HARISH2619
5th May 2011, 01:10 PM
DEAR PAMMAL SIR,
Photos of PP sunday gala are super,thankyou.
murali sir,
had you been to star on sunday?

please somebody guide me to type in tamil

parthasarathy
5th May 2011, 02:17 PM
Grouch, what about KRV? :-)

Rishimoolam - koodai thalaiyan Chakravarthy
kalthooN - this is the guy who then carried around the adaimozhi kalthUn for the rest of his career right? What's his name?

I couldn't control my laughter when I read koodai thalaiyan Chakravarthy.

The original drama by (late) Seshadri, penned by Director Mahendran, was a big hit those days and used to be aired through AIR. Most of the family members in a home, would sit and listen to most of the dramas between 9.15 p.m. and 9.30 p.m. every day, leaving aside all their jobs and plan accordingly to listen to the dramas without fail. As for "Rishimoolam", like Chithi, Kolangal TV serials, people were listening to this Amateur Drama through radio, like mad. In the Drama, the son's character was a big hit - I don't remember who played it in Drama. The central characters in the Drama were that of Mother and Son and the Father role was played by NT in the Movie. With his usual humility, NT played the role which has lesser significance and as usual, came up trumps! The spoiler is of course that Chakravarthy (again unable to control my laughter).

The name of the other gentleman is Thilak, later known to be called as Kalthoon Thilak, as if he performed excellently, to get that tag. He was one of the lead artistes in Major Sundararajan's dramas and obviously given a chance, to repeat the role he essayed in the original Stage Drama because it's Major's Drama, which was also directed by him - first directorial venture, of course. As usual, this person also spoilt the role, the major reason being - INABILITY TO ADAPT TO CHANGE IN REQUIREMENT BETWEEN DRAMA & CINEMA. And that is the chief reason for Nadigar Thilagam's enduring success - even today - that he was able to adapt himself to the change in the environment, continuously, scrupulously!

Casting is very important for a film. Rishimoolam along with Kalthoon proved that wrong casting came in the way of making them big hits. However, due to outstanding performance and shoudering the entire movie on his shoulders, NT made them successful 100 day movies, if not Silver Jubilee Hits. Many other films can also be quoted in this regard.

Regards,

R. Parthasarathy

Plum
5th May 2011, 02:29 PM
Mahesh, thanks for the tidbits. Ah yes kalthUN Thilakji(dont forget the surreptious, respectful -ji he added as a postscript to his name!)

The man gives me the creeps even when I catch him in passing in afternoon TV serials

groucho070
5th May 2011, 02:33 PM
Grouch, what about KRV? :-)Athu naama taniyaa vera threadla pesikuvoom :poke:

groucho070
5th May 2011, 02:57 PM
Mahesh, namma Ilaya Tilagam threadla update illaya?

mr_karthik
5th May 2011, 04:59 PM
ரிஷிமூலம் படத்தில் நடிகர்திலகம் அறிமுகத்தைவிட, அவர் மகன் அறிமுகத்தை பெரிய பில்டப் கொடுத்து எடுத்திருப்பார்கள். பலவருடங்களுக்குப்பிறகு மகனைக் காண ஆவலோடு கே.ஆர்.விஜயா காத்திருக்க, திடீர்னு வந்து தரிசனம் தரும் சக்கரவர்த்தியைப் பார்த்ததும் நமக்கு என்னவோ போலிருக்கும். ஏன் அந்த நேரத்தில் வேறு ஆள் கிடைக்கவில்லையா?.

அப்புறம் சக்கரவர்த்தி வேறு எந்தப்படத்திலாவது மெயின் ரோலில் நடித்திருக்கிறாரா?. உதயகீதம் படத்தில் சிறைக்கைதியாக 'இத்துனூண்டு' ரோலில் நடித்தது தெரியும். அதுபோல 6லிருந்து 60வரை படத்திலுமும் பார்த்த ஞாபகம்.

'மழை வருவது மயிலுக்கு தெரியும்' பாடலை தன் பங்குக்கு கெடுத்து வைத்திருப்பார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

mr_karthik
5th May 2011, 05:18 PM
how was the initial few days in Chennai on release time?

Cheers,
Sathish
மெல்லிசை மன்னரின் சொந்தப்படம் 'அமர காவியம்' சென்னை தேவி தியேட்டரில் வெளியான சரியாக ஏழாவது நாளில் தேவியின் பக்கத்து தியேட்டரான பிளாசாவில் மேஜர் இயக்கத்தில் 'கல்தூண்' ரிலீஸானது. அவ்வளவுதான் ரசிகர்கூட்டம் முழுக்க கல்தூண் பக்கம் திரும்ப, அமரகாவியம் அனாதையானது. இதற்கு முன் வெளியான 'சத்திய சுந்தரம்' ஏற்கெனவே சாந்தியில் ஓடிக்கொண்டிருக்கும்போது இந்தக்கூத்து. அடுத்த ஒரு மாதத்தில் ஏ.வி.எம்.ராஜனின் சொந்தப்படமான 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' ரிலீஸாக, கூடவே பின்தொடர்ந்து கலைஞரின் கதை வசனத்தில் 'மாடி வீட்டு ஏழை' மிட்லண்டில் ரிலீஸ்.

உருப்படுமா..?. ஒவ்வொன்றும் எவ்வளவு முக்கியமான படங்கள் இப்படியா கியூவில் ரிலீஸ் பண்ணுவது..?.

ஒன்று மெல்லிசை மன்னரின் சொந்தப்படம்
அடுத்தது மேஜரின் இயக்கத்தில் முதல் படம்
அதையடுத்து ஏ.வி.எம்.ராஜனின் சொந்தப்படம்
அதைத்தொடர்ந்து இருவர் உள்ளத்துக்குப்பின் கலைஞரின் வசனத்தில் வரும் படம்.

என்ன அழகாக பிளான் பண்ணி ரிலீஸ் பண்ணியிருக்கலாம். என்னதான் நல்ல படமென்றாலும் ஒரே சமயத்தில் நாலு படமென்றால் ரிபீட்டட் ஆடியன்ஸும், ரசிகர்களின் ஆதரவும் குறையத்தானே செய்யும்?.

abkhlabhi
5th May 2011, 05:21 PM
Harish,

google .com / transliterate site டில் தமிழ் மொழியை select செய்து தமிழில் பேசுவது போல் type செய்யவும். type செய்து முடித்தஉடன், copy செய்து இங்கு paste செய்யும். Save செய்ய முடியாது.

Dear Harish where are you staying in B'lore ? I think Karthik also residing in b'lore ?

RAGHAVENDRA
5th May 2011, 07:31 PM
பராக்...பராக்...பராக்...
திருவருட்செல்வர் சாந்தி திரையரங்க கொண்டாட்டங்களின் காணொளி....
பராக்...பராக்...பராக்...

pammalar
5th May 2011, 08:18 PM
Barring EVP and Anbe Vaa, all MGR 175+ days were from his own banner.

Dear tac,

"Anbe Vaa(1966)" was a Superhit film of Makkal Thilagam but it was not a Silver Jubilee film. It ran for over 100 days at 4 centres(6 theatres) in TN and its maximum run was at Chennai Casino [154 days].

There was no Silver Jubilee film for the Tamil Tinsel World in 1966.

Madurai Veeran(1956), Enga Veettu Pillai(1965), Maattukkaara Velan(1970) & Urimaikkural(1974) were the Silver Jubilee films of Makkal Thilagam which would not come under his own banner/production category.

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
5th May 2011, 09:19 PM
Thanks for your accolades, Mr.Satish.

டியர் பார்த்தசாரதி சார், பாராட்டுக்கு நன்றி !

டியர் ராகவேந்திரன் சார்,

முதற்கண் பாராட்டுக்கு நன்றி !

தவிர்க்க இயலாத காரணங்களினால், ஞாயிறு (1.5.2011) மாலையன்று ஸ்டாருக்கு என்னால் முன்னதாகச் செல்ல முடியவில்லை. அடியேன் செல்வதற்கும் திரைக்காவியம் தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. அதனால் காட்சி தொடங்குவதற்கு முன் நிகழ்ந்த ஆரவாரங்களை அடியேனால் பதிவு செய்ய இயலவில்லை. மாலைக்காட்சிக்கு முன், தாங்கள் கூறியது போல், சிவாஜி தம்பதியரின் மணநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் வாலாக்களும் வெடிக்கப்பட்டுள்ளன. தீபாராதனைகளும் வெகு விமரிசையாக நடந்தேறியிருக்கிறது. அன்புள்ளங்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களினால் ஒரு ஐந்து நிமிடம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையே ஸ்தம்பித்திருக்கிறது. பின்னர், அரங்கினுள் காட்சியின் போது ஒரே அமர்க்களம்தான் !

டியர் mr_karthik,

மனமார்ந்த நன்றி !

தாங்கள் கூறியவற்றை [அரங்கினுள் சூடம் ஏற்றுவது பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்பதை] நாங்களும் நமது நல்லிதயங்களிடம் சொல்லிக் கொண்டுதானிருக்கிறோம். அவர்களும் கட்டுப்படுத்திக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

நன்றி செந்தில் சார்.

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
6th May 2011, 12:49 AM
சதீஷ்,

கல்தூண் வெளியான நேரத்தில் நான் மதுரையில் இல்லை.ஆகவே சிந்தாமணியில் ஓபனிங் ஷோ பார்க்க முடியவில்லை. ஆனால் நண்பர்கள் மூலம் அறிந்த செய்தியின்படி படத்திற்கு பெரிய அலப்பறை இருந்தது என்று கேள்விப்பட்டேன். அந்த வருடம் [1981] ஜனவரியில் பொங்கலன்று முதல் படமான மோகனப் புன்னகைக்கு அபிராமியில் ஓபனிங் ஷோவிற்கு வரவேற்பு அமர்களமாக இருந்தது. அதன் பிறகு பிப்ரவரி 21 சென்ட்ரலில் சத்திய சுந்தரம் ரிலீஸ். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லாததால் ஓபனிங் ஷோ அலப்பறை கொஞ்சம் கம்மி. அமர காவியம் படத்திற்கும் நான் இல்லை. ஆனால் சரியான கூட்டம் என்று செய்தி வந்தது. இதற்கிடையில் ஒரு சின்ன விஷயம் நடந்தது. சத்திய சுந்தரம் படத்தின் மூலப் பதிப்பான தெலுங்கு படத்தில் சௌகார் நாயகியாக நடித்திருந்தார். தமிழில் நடிகர் திலகத்தின் குடும்ப டாக்டர் பாலகிருஷ்ணன்தான் rights வாங்கியிருந்தார். நடிகர் திலகம்,சௌகாரே தமிழில் நடிக்கட்டும் என்று சொல்லியிருந்தார். ஆனால் விநியோகஸ்தர்களோ விஜயாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யும்படி வற்புறுத்தவே தயாரிப்பாளர் ஒத்துக் கொண்டார். நடிகர் திலகமும் வியாபார விஷயம் என்பதால் தலையிடவில்லை. ஆனால் சௌகார் இதை தவறாக புரிந்துக் கொண்டு கோவம் அடைந்தார்.அந்த நேரத்தில் கல்கி இதழில் சிவாஜி சகாப்தம் முடிந்து விட்டது என்று பேட்டி கொடுத்தார். இதை பார்த்துவிட்டு ஏன் என்று தெரியாமல் வருந்திய சிவாஜி, சௌகாரை வரவழைத்து உண்மையை விளக்கினார்.

விகடனிலிருந்து வெளியே வந்து மணியன் ஆசிரியராக இருந்து நடத்திய இதழ் இதயம் பேசுகிறது. இது யார் ஆதரவு பத்திரிக்கை எனபது அனைவருக்கும் தெரியும். அவர்கள் பத்திரிக்கை தொடங்கிய 1978 முதல் நடிகர் திலகத்திற்கு எதிராகவே செய்திகளை வெளியிட்டு வந்தனர். 1981, அதாவது கல்தூண் வெளியான காலக் கட்டத்தில் அவர்கள் புதிய தமிழ் படங்கள் வெளியாகும் போது முதல் வாரத்தில் ஞாயிறன்று ஒரு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிறோம் என்று அறிவிப்பார்கள். அந்த காட்சியில் அந்த இதழ் சார்பாக ஒரு பெட்டி வைக்கப்படும். அங்கே இருக்கும் கூப்பனில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை எழுதி போடலாம். சுவையான விமர்சனங்களை பத்திரிக்கையில் வெளியிடுவார்கள். இது சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடைபெற்றது. அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்த படம் கல்தூண், மதுரை சிந்தாமணி, 03-05-1981 ஞாயிற்றுக்கிழமை மதியக் காட்சி.

நடிகர் திலகத்தையும் அவரது ரசிகர்களையும் பற்றி என்னவோ ஏதோ என்று நினைத்து வந்த மணியன் அண்ட் கோவிற்கு சரியான அடியாக அமைந்தது படத்திற்கு திரண்டிருந்த கூட்டமும் அவர்கள் அரங்கில் செய்த அலப்பறையும். அதுவரை எதிர்மறையாக எழுதிக் கொண்டிருந்த இதயம் பேசுகிறது இதழ் அந்த சிறப்புக் காட்சியை பற்றி எழுதும்போது குறிப்பிட்டிருந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. "மதுரையில் இப்போதும் சிவாஜிக்கு வலிமையான ரசிகர் மன்றங்கள் இயங்கி வருவது நிதர்சனமாக கண்ணுக்கு தெரிந்தது. அவர்கள் சிவாஜிக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கிறார்கள்."

ரசிகர் ஒருவர் எழுதியிருந்த ஸ்லோகனும் சுவையான ஒன்று. "சரித்திரங்கள் மறைவதில்லை.சகாப்தங்கள் முடிவதில்லை." அதே போல் இந்த படத்திற்கு ஆனந்த விகடன் எழுதிய விமர்சனத்தில் ஒரு வரியும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. "திரைக்கதை பாதி வேலையை பார்த்துக் கொள்ள கல்தூணாய் நின்று சிவாஜி படத்தை தாங்க,டைரக்டர் என்ற கோட் அணிந்து மேஜர் செய்திருப்பது ஒரு மைனர் ஆபேரஷன்தான்."

நன்றி சதீஷ். நினைவலைகளில் மீண்டும் நீந்த வாய்ப்பளித்த உங்களுக்கு. Tidbits வழங்கிய சாரதிக்கும் நன்றி

அன்புடன்

செந்தில், இப்போது நமது ஹப்பிலேயே பாலா சொன்னது போல நீங்கள் தமிழில் டைப் செய்யலாம்.

Plum எல்லாவரையும் பற்றி சொன்னீர்கள். அந்தமான் காதலி சந்திரமோகனை விட்டு விட்டீர்களே!

goldstar
6th May 2011, 04:59 AM
நகரங்களிலும் நடைபெற்றது. அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்த படம் கல்தூண், மதுரை சிந்தாமணி, 03-05-1981 ஞாயிற்றுக்கிழமை மதியக் காட்சி.

நடிகர் திலகத்தையும் அவரது ரசிகர்களையும் பற்றி என்னவோ ஏதோ என்று நினைத்து வந்த மணியன் அண்ட் கோவிற்கு சரியான அடியாக அமைந்தது படத்திற்கு திரண்டிருந்த கூட்டமும் அவர்கள் அரங்கில் செய்த அலப்பறையும். அதுவரை எதிர்மறையாக எழுதிக் கொண்டிருந்த இதயம் பேசுகிறது இதழ் அந்த சிறப்புக் காட்சியை பற்றி எழுதும்போது குறிப்பிட்டிருந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. "மதுரையில் இப்போதும் சிவாஜிக்கு வலிமையான ரசிகர் மன்றங்கள் இயங்கி வருவது நிதர்சனமாக கண்ணுக்கு தெரிந்தது. அவர்கள் சிவாஜிக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கிறார்கள்."

ரசிகர் ஒருவர் எழுதியிருந்த ஸ்லோகனும் சுவையான ஒன்று. "சரித்திரங்கள் மறைவதில்லை.சகாப்தங்கள் முடிவதில்லை." அதே போல் இந்த படத்திற்கு ஆனந்த விகடன் எழுதிய விமர்சனத்தில் ஒரு வரியும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. "திரைக்கதை பாதி வேலையை பார்த்துக் கொள்ள கல்தூணாய் நின்று சிவாஜி படத்தை தாங்க,டைரக்டர் என்ற கோட் அணிந்து மேஜர் செய்திருப்பது ஒரு மைனர் ஆபேரஷன்தான்."

நன்றி சதீஷ். நினைவலைகளில் மீண்டும் நீந்த வாய்ப்பளித்த உங்களுக்கு. Tidbits வழங்கிய சாரதிக்கும் நன்றி

Nantri Murali sir.

We could see most of TN news paper always biased against our NT and NT records and his box office collections.

One more thing it worries for long time, Dinamalar news paper used to have other side actor photo on their "Varamalar" quite often but never published our NT. I have written an email to them asked why, but no response. These kind of activities really hurt me a lot.

But whole world know that, our NT does not need any publicity like others.

Long live NT fame.

Cheers,
Sathish

goldstar
6th May 2011, 05:02 AM
மெல்லிசை மன்னரின் சொந்தப்படம் 'அமர காவியம்' சென்னை தேவி தியேட்டரில் வெளியான சரியாக ஏழாவது நாளில் தேவியின் பக்கத்து தியேட்டரான பிளாசாவில் மேஜர் இயக்கத்தில் 'கல்தூண்' ரிலீஸானது. அவ்வளவுதான் ரசிகர்கூட்டம் முழுக்க கல்தூண் பக்கம் திரும்ப, அமரகாவியம் அனாதையானது. இதற்கு முன் வெளியான 'சத்திய சுந்தரம்' ஏற்கெனவே சாந்தியில் ஓடிக்கொண்டிருக்கும்போது இந்தக்கூத்து. அடுத்த ஒரு மாதத்தில் ஏ.வி.எம்.ராஜனின் சொந்தப்படமான 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' ரிலீஸாக, கூடவே பின்தொடர்ந்து கலைஞரின் கதை வசனத்தில் 'மாடி வீட்டு ஏழை' மிட்லண்டில் ரிலீஸ்.

உருப்படுமா..?. ஒவ்வொன்றும் எவ்வளவு முக்கியமான படங்கள் இப்படியா கியூவில் ரிலீஸ் பண்ணுவது..?.

ஒன்று மெல்லிசை மன்னரின் சொந்தப்படம்
அடுத்தது மேஜரின் இயக்கத்தில் முதல் படம்
அதையடுத்து ஏ.வி.எம்.ராஜனின் சொந்தப்படம்
அதைத்தொடர்ந்து இருவர் உள்ளத்துக்குப்பின் கலைஞரின் வசனத்தில் வரும் படம்.

என்ன அழகாக பிளான் பண்ணி ரிலீஸ் பண்ணியிருக்கலாம். என்னதான் நல்ல படமென்றாலும் ஒரே சமயத்தில் நாலு படமென்றால் ரிபீட்டட் ஆடியன்ஸும், ரசிகர்களின் ஆதரவும் குறையத்தானே செய்யும்?.

Karthik sir,

Yes, all these movies are minimum 100 days movies and just because of so many movies on same time spoiled the records. LDR is one of my favourite movie because his hair style and way of speech is beautiful to watch.

Cheers,
Sathish

RAGHAVENDRA
6th May 2011, 07:24 AM
டியர் பம்மலார்,
ஸ்டார் திரையரங்க நிகழ்வுகளின் பதிவு அங்கு இல்லாத குறையை போக்கி விட்டது. சதீஷ் அவர்கள் கூறியது போல் இனியேனும் நடிகர் திலகத்தின் சாதனைகளையும் வெற்றிகளையும் இருட்டடிப்பு செய்வோரும் இழிப்போரும் தங்களுடைய தவறை மறந்து நடுநிலையோடு நேர்மையாக எழுத முற்படுவர் என நம்புவோம்.

முரளி சார்,
கல்தூண் நினைவுகள் நம் எல்லோருக்கும் அந்த நாட்களுக்கு அழைத்து செல்கின்றன. இங்கு சென்னையில் தேவியில் அமர காவியம், சாந்தியில் சத்ய சுந்தரம் என நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிக் கொண்டிருந்த போதே கல்தூண் வெளி வந்தது. சங்கராபரணம் படத்தை மேஜர் அவர்கள் எஸ்.எஸ்.கம்பைன்ஸ் என்கிற பெயரில் விநியோக நிறுவனத்தைத் தொடங்கி அப்பெயரில் தமிழகத்தில் வெளியிட்டு அப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் பெரும் புகழ் அடைந்தார். அதே நிறுவனத்தின் பெயரில் கல்தூண் படத்தையும் சென்னையில் விநியோகம் செய்து அதிலும் அவர் வெற்றி பெற்றார். ஆனால் எங்களுக்கெல்லாம் கல்தூண் வெளிவந்து அமர காவியத்தின் வெற்றியைப் பாதித்தது தான் மிகப் பெரிய சோகம். மெல்லிசை மன்னரின் சொந்தத் தயாரிப்பு, செல்வமே, தன் வானத்தை, போன்ற இனிமையான பாடல்கள் இருந்தும் மூலப் படத்தை ஒப்பிட்டு தவறாக பிரச்சாரம் செய்து அப்படத்தை குறைத்து மதிப்பிட்டது சோகம். வழக்கம்போல் மெல்லிசை மன்னர் பாடல்களை தன் சொந்த மெட்டிலேயே அமைத்திருந்தார். அமரகாவியம் படத்திற்கு கிரிஜா அவர்களும் அடியேனும் செய்திருந்த அட்டைப் பதாகைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவையெல்லாம் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளன.
வாய்ப்புக்கு நன்றி
அன்புடன்

parthasarathy
6th May 2011, 09:44 AM
dear parthi sir,
excellent writeup on thangapadhakkam.It wouldhave definitely rekindled the memories of watching that great movie in theatres with so much alapparai.I have seen that more than 15 times in theatres and whenever it was rereleased in bangalore the theatres such as sangeeth, sri,lavanya,devi,aruna wore festive look(bala sir may know).TP and vasantha maaligai were the two NT films which had more frequent releases in bangalore than any other films(kudiyirundha koyil and USV for mgr).

Dear Mr. Harish,

Thanks for your appreciation and regret for my delayed acknowledgement. It's really slipped my attention, which normally, wouldn't. I also remember watching Thangapadhakkam on the first day. I couldn't get ticket for the opening show in spite of making it very early to Shanthi but managed to see it the next show. What a performance and what a jubilation!

Thanks once again & Regards,

R. Parthasarathy

goldstar
6th May 2011, 10:04 AM
அமரகாவியம் படத்திற்கு கிரிஜா அவர்களும் அடியேனும் செய்திருந்த அட்டைப் பதாகைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

Ragavendra sir,

Do you still have these posters? If so can we see it? I believe Girija madam may have it as she got so much of NT collections.

Cheers,
Sathish

parthasarathy
6th May 2011, 10:23 AM
சதீஷ்,

நடிகர் திலகத்தையும் அவரது ரசிகர்களையும் பற்றி என்னவோ ஏதோ என்று நினைத்து வந்த மணியன் அண்ட் கோவிற்கு சரியான அடியாக அமைந்தது படத்திற்கு திரண்டிருந்த கூட்டமும் அவர்கள் அரங்கில் செய்த அலப்பறையும். அதுவரை எதிர்மறையாக எழுதிக் கொண்டிருந்த இதயம் பேசுகிறது இதழ் அந்த சிறப்புக் காட்சியை பற்றி எழுதும்போது குறிப்பிட்டிருந்தது இன்றும் நினைவில் நிற்கிறது. "மதுரையில் இப்போதும் சிவாஜிக்கு வலிமையான ரசிகர் மன்றங்கள் இயங்கி வருவது நிதர்சனமாக கண்ணுக்கு தெரிந்தது. அவர்கள் சிவாஜிக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கிறார்கள்."

ரசிகர் ஒருவர் எழுதியிருந்த ஸ்லோகனும் சுவையான ஒன்று. "சரித்திரங்கள் மறைவதில்லை.சகாப்தங்கள் முடிவதில்லை." அதே போல் இந்த படத்திற்கு ஆனந்த விகடன் எழுதிய விமர்சனத்தில் ஒரு வரியும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. "திரைக்கதை பாதி வேலையை பார்த்துக் கொள்ள கல்தூணாய் நின்று சிவாஜி படத்தை தாங்க,டைரக்டர் என்ற கோட் அணிந்து மேஜர் செய்திருப்பது ஒரு மைனர் ஆபேரஷன்தான்."

நன்றி சதீஷ். நினைவலைகளில் மீண்டும் நீந்த வாய்ப்பளித்த உங்களுக்கு. Tidbits வழங்கிய சாரதிக்கும் நன்றி

அன்புடன்

அன்புள்ள திரு. முரளி அவர்களே,

கல்தூண் திரை அரங்குகளில் வெளியாகி சரியாக ஓரிரண்டு வருடங்கள் முடிந்தவுடன் என்று நினைவு. சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பினார்கள். வீட்டில் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது "வளத்த கடா முட்ட வந்தா" பாடல் துவங்கப் போகிறது... எனது தந்தை திடீரென்று என்னைக் கூப்பிட்டு "சைக்கிளை எடுத்து வெளியில் வை நான் கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டும்" என்று கூறினார். நான் வேண்டா வெறுப்புடன் முணுமுணுத்துக் கொண்டே (முக்கியமான காட்சியல்லவா!) சைக்கிளை எடுத்து வெளியில் வைத்து ஸ்டாண்ட் போட்டு, ஞாபகமில்லாமல், சைக்கிளைப் பூட்டாமல் வீட்டினுள் ஓடி வந்து விட்டேன். அற்புதமான பாடலையும், காட்சியையும் தவற விடக்கூடாதே என்று! என் வீட்டிலுள்ள அனைவரும் - என் தந்தையையும் சேர்த்து - அந்தக் காட்சியில் ஐக்கியமாய் விட்டுக் கடைசியில் பாடல் முடிந்தவுடன் திடீரென்று நினைவு வந்தவனாய் வெளியில் ஓடினால், வாசலில் சைக்கிளைக் காணவில்லை! அது என் நீண்ட நாள் கனவு சைக்கிள் - BSA Deluxe - ரொம்ப ஆசையாய் வைத்திருந்த சைக்கிள். அதற்கப்புறம் கிடைக்கவேயில்லை.

அன்புடன்,

பார்த்தசாரதி

goldstar
6th May 2011, 10:35 AM

Sarathy sir,

Its funny, but can understand your pain and feeling.

Sathish

RAGHAVENDRA
6th May 2011, 11:16 AM
goldstar;
Ragavendra sir,
Do you still have these posters? If so can we see it? I believe Girija madam may have it as she got so much of NT collections.
Cheers,
Sathish
Dear Sathish,
Unfortunately, not. It was one of the most charts that came to my satisfaction in full, which took nearly 15 days for me to prepare. It was an AO size (I usually prepare charts in AO drawing boards). An outline of Taj Mahal was drawn with the structures like windows, door, etc. There were around 24 windows I put each pasted with a small color image of NT (sold in match box size cardboards those days). With the centre door portion pasted with a standing pose of NT. The reason for designing Taj Mahal being to match the title of the film "Amara Kaviyam" and to my surprise the house of Sripriya looked somewhat like my design. It was placed in the gallery of Devi Theatre on 23rd April 2011 and the Manager of the Theatre very much acclaimed it and gave special attention to see that it is displayed in a prominent place. The reason being I had pasted some jaris and chumkeys along side the borders of the windows and door and it gave a glittering view from a distance.
Unfortunately the banner had attracted too much fans and somebody had been very fortunate and eager to take it away to give me happiness as well as disappointment.
Hope it is with somebody now.
Thank you for the opportunity to recollect the days.

Raghavendran

HARISH2619
6th May 2011, 12:05 PM
DEAR BALA SIR and MURALI SIR,
Thankyou for your guidance.

I reside in RTnagar

mr_karthik
6th May 2011, 12:28 PM
ராகவேந்தர் சார்,

தங்களின் பதிவு 1981 ஆண்டின் துவக்க மாதங்களுக்கு இட்டுச்சென்றன. அமரகாவியம் திரைப்படத்துக்கு சென்னை தேவி தியேட்டரில் நீங்கள் அமைத்திருந்த 'தாஜ்மகால்' டிசைன் அட்டைப்பதாகை இன்றும் என் நினைவில் இருக்கிறது.

முரளி சார்,

உங்கள் மலரும் நினைவுகள் எனது நினைவலைகளையும் தூண்டி விட்டன. சத்திய சுந்தரம் படத்தில் நடிக்க முடியாமல் போனதால் அப்படி ஒரு பேட்டியளித்த சௌகார்ஜானகி, பின்னர் அப்படம் வெளிவர இருந்த நேரத்தில் நடைபெற்ற விஸ்வரூபம் 100-வது நாள் விழாவில் கலந்துகொண்டு, கலைஞர்களுக்கு வெற்றிக்கேடயங்களை வழங்கினார். (சாந்தியில் விஸ்வரூபம் படத்துக்கு அடுத்த படமாக சத்திய சுந்தரம் வெளியானது). பின்னர் நடிகர்திலகம் 1988-ல் 'தமிழக முன்னேற்ற முன்னணி' துவங்கியபோது, அக்கட்சியில் சேர்ந்து ஆதரவளித்தார்.

'இதயம் பேசுகிறது' பத்திரிகையின் நடவடிக்கை பற்றிச் சொன்னீர்கள். அப்போதைய பத்திரிகைகளில் பெரும்பாலானவை நடிகர்திலகத்தின் எதிர்ப்புப் பத்திரிகையாகவே விளங்கின. குமுதம், இதயம் பேசுகிறது, தினத்தந்தி, மாலைமுரசு, ராணி, பிலிமாலயா போன்ற பல பத்திரிகைகள் அவரைக் குறைசொல்லியே செய்திகளை வெளியிட்டு வந்தன. விகடன், கல்கி, பொம்மை, பேசும் படம், தினகரன் போன்றவை மட்டுமே நடுநிலையோடு எழுதி வந்தன. அதிலும் இதயம் பத்திரிகை மிகவும் மோசம்.

1978 இறுதியில், பைலட் பிரேம்நாத் வெளியாகி ஓடிக்கொண்டிருந்தபோது 'இதயம்' பத்திரிகையில், "இனியும் சிவாஜி நடிக்கத்தான் வேண்டுமா?" என்ற தலைப்பில் மிகவும் மோசமாக அவரை விமர்சித்து கட்டுரை எழுதியதோடு, நடிகர்திலகத்தின் முகத்தை கோரமாக ஒரு கேலிச்சித்திரம் ஒன்றையும் அக்கட்டுரையின் மத்தியில் பிரசுரித்திருந்தது. இதைப்பார்த்து வெகுண்டெழுந்த கல்லூரி மாணவர்களாகிய நாங்களும், சாந்தி வளாக சிவாஜி ரசிகர்களும் சுமார் 150 பேர் கூடி, சென்னை அண்ணாசாலை பல்லவன் போக்குவரத்து அலுவலகத்தின் எதிரே, பெருந்தலைவர் காமராஜர் சிலையருகே, இதயம் பேசுகிறது வார இதழ் பிரதிகளை குவித்துப்போட்டு தீ வைத்துக் கொளுத்தினோம். அதோடு மணியனின் கொடும்பாவி எனப்படும் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. உடனே போலீஸார் வந்து தடியடி நடத்தி எங்களை விரட்டியடித்தனர்.

பின்னர், 1981-ல் அமரகாவியம் படம் வெளியாக பத்து நாட்களுக்கு முன்னர், அப்போது தமிழக அமைச்சராக இருந்த கா.காளிமுத்து, பிரதமர் இந்திராகாந்தியை "வில்லி" என்று விமர்சித்திருந்ததை எதிர்த்து, சாந்தி வளாக ரசிகர்களும், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை ரசிகர்களும் காமராஜர் சிலையருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதிகேட்டோம். போலீஸ் அனுமதி மறுத்தது. இருப்பினும் போலீஸ் தடையை மீறி மறுநாள் காலை எட்டு மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கினோம். சிறிது நேரத்தில் போலீஸ் எங்களைக் கைது செய்து வேனில் ஏற்றி எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலக காம்பண்டுக்குள் உட்காரவைத்து, சுற்றிலும் போலீஸார் காவலுக்கு நின்றனர்.

ரசிகர்கள் கைதான விஷயம் நடிகர்திலகத்துக்கு எட்டியதும், அவரும், அகில இந்திய ரசிகர்மன்ற தலைவர் தளபது சண்முகம், செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன் ஆகியோரும் கமிஷனர் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். வரும் முன்பே நடிகர்திலகம் போன் மூலம் ஸ்பென்ஸர் கம்பெனிக்கு குளிர்பானத்துக்கு ஆர்டர் கொடுத்து விட்டு வந்தார். வந்ததும் ரசிகர்கள் கைது செய்யப்பட்டு மண்ணில் உட்கார வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அதற்குள் குளிர்பானமும் வந்துவிடவே, அவர் எங்களைப்பார்த்து 'இந்த மாதிரி விஷயங்களை மேல்மட்டத்தில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். போலீஸ் அனுமதி மறுத்திருக்கும்போது உண்ணாவிரதம் இருந்திருக்கக்கூடாது. எனக்காகவும் காங்கிரஸுக்காகவும் நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது' என்று சொல்லி அவர் கையாலேயே எல்லோருக்கும் குளிர்பானம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

பின்னர் உள்ளே சென்று கமிஷனரிடம் பேசி, சில தஸ்தாவேஜுகளில் நடிகர்திலகம் கையெழுத்திட்ட்பின், பிற்பகலில் நாங்கள் விடுவிக்கப்பட்டோம். இப்போது அவற்றையெல்லாம் அசைபோட வாய்ப்பளித்த முரளி சார், மற்றும் ராகவேந்தர் சார் ஆகியோருக்கும் நன்றி.

joe
6th May 2011, 12:42 PM

வாவ் . உங்களைப் போன்றவர்கள் பழைய நிகழ்வுகளை புத்தகங்களாக வெளியிடும் அளவுக்கு நேரடி பங்களிப்பும் அனுபவமும் உள்ளவர்களாக இருக்கிறீர்கள் ..உங்களைப் போன்றவர்கள் எங்களை போன்றோரோடு ஒன்றாக ஒரே மன்றத்தில் சக உறுப்பினராக இருப்பதும் , பரஸ்பரம் விவாதிப்பதும் உண்மையிலேயே என் போன்றோருக்கு பெருமை .

groucho070
6th May 2011, 01:36 PM
வாவ் . உங்களைப் போன்றவர்கள் பழைய நிகழ்வுகளை புத்தகங்களாக வெளியிடும் அளவுக்கு நேரடி பங்களிப்பும் அனுபவமும் உள்ளவர்களாக இருக்கிறீர்கள் ..உங்களைப் போன்றவர்கள் எங்களை போன்றோரோடு ஒன்றாக ஒரே மன்றத்தில் சக உறுப்பினராக இருப்பதும் , பரஸ்பரம் விவாதிப்பதும் உண்மையிலேயே என் போன்றோருக்கு பெருமை .+1. Precious memories. The sacrifices fans make :bow:

parthasarathy
6th May 2011, 02:41 PM
Sarathy sir,

Its funny, but can understand your pain and feeling.

Sathish

Dear Mr. Sathish,

These things are only fond memories. Yes, the pain was there due to the loss of my pet property but; it got vanished quickly when my Father got me one more new cycle. However, before NT, these things are simple.

Regards,

R. Parthasarathy

Plum
6th May 2011, 03:44 PM
+2.
I was in Madurai when kalthUN was released...dont wait for earth shattering revealations...I just happened to be there and I remember because of my father lamenting that the very responsibility that I was to him becoming a constraint in him going for the FDFS and associated festivities and amaLi thumaLis. One of the reasons I so love this thread is a lot of you remind me of my (late) father in devotion to NT and anecdotes of fandom.

Murali, Reg this

Plum எல்லாவரையும் பற்றி சொன்னீர்கள். அந்தமான் காதலி சந்திரமோகனை விட்டு விட்டீர்களே!

The answer is here:

ரிஷிமூலம் படத்தில் நடிகர்திலகம் அறிமுகத்தைவிட, அவர் மகன் அறிமுகத்தை பெரிய பில்டப் கொடுத்து எடுத்திருப்பார்கள். பலவருடங்களுக்குப்பிறகு மகனைக் காண ஆவலோடு கே.ஆர்.விஜயா காத்திருக்க, திடீர்னு வந்து தரிசனம் தரும் சக்கரவர்த்தியைப் பார்த்ததும் நமக்கு என்னவோ போலிருக்கும். ஏன் அந்த நேரத்தில் வேறு ஆள் கிடைக்கவில்லையா?.

Deep Impact Chakravarthy had. I mean, as mr_k said, what ye build-up for the son...and then..when that culminates in Mr Basket-Head in all his glorious mediocrity being introduced, the trauma caused is a life-long memory. Chandramohan is relatively benign and ignorable. Similarly, kalthUN Thilakji gets additional ridicule for daring to use that movie name as a moniker and reminding me of ghastly moments he induced in the movie every time I utter his name.

Mahesh_K
6th May 2011, 03:50 PM
Agreed Mr. Mahesh. This guy performance is very bad and his facial expression is very bad as well. I believe Vijayakumar would have done better....

Mahesh sir, how was the initial few days in Chennai on release time?

Cheers,
Sathish

சதீஷ், நான் அப்போது சென்னையில் இல்லை. திருநெல்வேலியில் படம் வெளியாகி 2 - 3 வாரம் கழித்துதான் -(6 ம் வகுப்பு கோடை விடுமுறையில்) பார்த்தேன். படம் Central திரையரங்கில் 5 வாரம் ஓடியது மட்டும் நினைவு இருக்கிறது.

Mahesh_K
6th May 2011, 03:54 PM
Mahesh, namma Ilaya Tilagam threadla update illaya?

கூடிய விரைவில் ....

parthasarathy
6th May 2011, 05:36 PM
டியர் திரு. ராகவேந்தர், திரு. கார்த்திக், திரு. பம்மலார்,

நானெல்லாம் நடிகர் திலகத்தின் பரம வெறியன், பரம ரசிகன் என்று மட்டும்தான் சொல்லிக்கொள்ள முடியும். நீங்கள் எழுதிய பதிவுகளைப் படித்ததும், நானெல்லாம் ஒன்றுமேயில்லை என்றுதான் தோன்றுகிறது. உங்களைப் போன்ற பல லட்சக்கணக்கான ரசிகர்கள்தான் அவருடைய மிகப் பெரிய பலம். நானும் எங்கள் ஊரிலிருந்த மன்ற உறுப்பினர்களிடையே மிக நெருங்கிப் பழகியிருக்கிறேன்; சில காலம் உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன். உங்களைப் போன்ற பல ரசிகர்களின் அர்ப்பணிப்பையும் பார்த்திருக்கிறேன்; இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்களைப் போன்றோர் இருக்கும் இந்த ஹப்பில் நானும் ஒரு அங்கத்தினன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

அன்புடன்,

பார்த்தசாரதி

saradhaa_sn
6th May 2011, 06:32 PM
டியர் பார்த்தசாரதி,

அருமையான கட்டுரைத்தொடரை சீராகக்கொண்டு சென்று சிறப்பாக முடித்துள்ளீர்கள். நடிகர்திலகத்தின் படங்கள் பிற மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டபோது நேர்ந்த சுவையான செய்திகள் அருமை. சிரமப்பட்டு தொகுத்து அளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

இதுபோன்ற தங்களின் பணி மென்மேலும் தொடரட்டும்.

அத்துடன், நடிகர்திலகத்தின் பாடல் காட்சியைக்கண்டு களிப்பதற்காக நீங்கள் பிரியமாக வைத்திருந்த சைக்கிளையே தியாகம் செய்திருக்கிறீர்கள். அந்த வகையில் உங்களது தியாகமும் ஒன்றும் குறைவானதல்ல.

saradhaa_sn
6th May 2011, 06:39 PM
ரிஷிமூலம், சத்திய சுந்தரம், அமர காவியம், கல்தூண் மற்றும் அப்போதைக்கு வெளியான படங்களைப்பற்றிய நினைவூட்டல் பதிவுகளில் நம் கள நண்பர்கள் அனைவரின் பங்களிப்பும் மிகவும் அருமை. ஒவ்வொருவரும் இப்படங்களைப்பற்றி அழகாக தங்கள் கண்ணோட்டத்தில் பதிப்பித்துள்ளனர். சீரான இடைவெளி இல்லாமல், வழக்கம்போல அடுத்தடுத்து வெளியிட்டதால் வெற்றிவாய்ப்புக்கள் குறைந்தன. இவற்றில் தேறியது கல்தூண் மட்டுமே. அமர காவியம் போதிய அளவு வெற்றியை ஈட்டாமல் போனது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

நடிகர்திலகத்துடன் ரிஷிமூலம், கல்தூண் படங்களில் நடித்த சக நடிகர்களின் சோடையான தேர்வு பற்றிய விவரங்களும் ஒப்புக்கொள்ளக்கூடியதே.

saradhaa_sn
6th May 2011, 06:41 PM
டியர் முரளி,

வழக்கம்போல மதுரை நிகழ்வுகளை சுவைபடத்தந்துள்ளீர்கள். மணியன் குழுவினருக்கு கல்தூண் மூலம் மதுரையில் கிடைத்த மூக்குடைப்பு தேவையான ஒன்று, மகிழ்ச்சிக்குரியதும்கூட.

சிறந்த சிந்தனையாளரான டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியும் கூட மணியனோடு சேர்ந்துகொண்டு ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு ஜால்ரா தட்டியது வேதனையான விஷயம். ஆனால் நடிகர்திலகம் அத்தனை சதிகளையும் வென்றெடுத்தார்.

அவருக்கு ஒரே உறுதுணையாக இருந்தது, அவருக்காக எதையும் செய்யும் ரசிகர்கள் படை மட்டுமே.

saradhaa_sn
6th May 2011, 06:43 PM
டியர் ராகவேந்தர்,

அமரகாவியம் பட நினைவலைகள் மனதுக்கு இதமளிக்கின்றன. ஆனால் அதன் வெற்றிவாய்ப்பு இதமளிப்பதாக இல்லை. நல்ல படம். இப்படத்தை நினைக்கும்போதெல்லாம் 'ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்' என்ற பாடல் மனதுக்குள் ரீங்காரமிடும்.

இரண்டு படங்களும் ஒரு வார இடைவெளியில் ரிலீஸானபோது, பாரதவிலாஸ், ராஜராஜ சோழன் வெளியீடுகளை நினைவுபடுத்தின. எல்லோரும் ரா.ரா.சோழனை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும்போது சந்தடியில்லாமல் பாரதவிலாஸ் வெற்றிக்கனியைத் தட்டிச்சென்ரது போல, எல்லோரும் கல்தூணை எதிர்பார்த்திருக்கும்போது, அமர காவியம் சந்தடி சாக்கில் சிறந்த வெற்றியைப்பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கல்தூணே வெற்றிபெற்றது.

அமர காவியம் படத்துக்கு தாங்கள் டிசைன் செய்ததாக நீங்கள் இங்கு குறிப்பிட்ட பதாகை எப்படி இருந்திருக்குமோ என்று ஆவல் மேலிடுகிறது. என்ன செய்வது?. இப்போது போல இப்படியெல்லாம் ஆவணக்காப்பு செய்யும் வசதிகள் அப்போது இல்லை (உதாரணம்: செல்போன் கேமரா).

நீங்களே மிகவும் சிலாகித்துச் சொல்லும்போது நிச்சயம் அது மிகச்சிறந்த பேனராகத்தான் இருந்திருக்க வேண்டும். சகோதரி கிரிஜா அப்போதே ஆக்டிவாக களத்தில் இருந்தாரா?. ஆச்சரியமாக இருக்கிறது. தவிர உங்கள் பதிவில் நீங்கள் ஸ்ரீபிரியா வீடு என்று குறிப்பிடுவது மாதவியின் வீட்டைதானே?.

மொத்தத்தில் மலரும் நினைவுகள் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகின்றன.

RAGHAVENDRA
6th May 2011, 06:44 PM
அன்புச் சகோதரி சாரதா அவர்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

ஸ்ரீப்ரியாவுடன் தன்வானத்தை பாடலில் நடிகர் திலகம் நடிக்கும் காட்சியில் காணும் அழகூட்டப் பட்டதூண்கள் போன்று வரையப் பட்டிருந்தது. நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.
திருவருட் செல்வர் சென்னை சாந்தியில் அண்மையில் திரையிடப் பட்டபொழுது ஞாயிறு 17.04.2011 அன்று மாலைக் காட்சியில் அரங்கில் நடைபெற்ற கோலாகலங்களின் ஒளிக்காட்சி தங்கள் பார்வைக்கு...

http://www.youtube.com/watch?v=K4PCubQk3tM

அன்புடன்

saradhaa_sn
6th May 2011, 06:46 PM
டியர் கார்த்திக்,

உங்களது மலரும் நினைவுகள் கண்களைப் பனிக்க வைத்தன. இவை யாவும் இதுவரை நீங்கள் சொல்லாதவை. இதயம்பேசுகிறது பத்திரிகை எரிப்புப்போராட்டம், உண்ணாவிரதப்போராட்டம், கைது, நடிகர்திலகத்தின் கைகளால் உண்ணாவிரதத்தை முடித்தது யாவும் ஆச்சரியப்பட வைத்தன. நடிகர்திலகத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவருக்குப்பின்னும் இதுபோன்ற உணர்வுமிக்க சம்பவங்கள் ஒளிந்திருக்கும்.

(என் தந்தையாரும் ஒரு முறை ராணி பத்திரிகையில் வ்ந்த "சிவாஜி கணேசன் - கறுப்பு ஆடு" என்ற கட்டுரைக்காக அந்தப்பத்திரிகையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, மறுநாள் விடுதலையானார். அதுபோல ஒருமுறை விலைவாசி உயர்வை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில், சைக்கிள் ரிக்ஷாவில் தோசை சுட்டு விற்கும் வித்தியாசமான போராட்டத்தை செய்தார்).

இதுபோல அன்றைய சிவாஜி ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தலைவனுக்காக சிறியதோ, பெரியதோ தியாகம் செய்து இயக்கத்தை வளர்த்தனர். சிவாஜி படை என்பது வெறுமனே விசிலடித்து வளர்ந்த கூட்டம் அல்ல. அந்த வகையில் உங்கள் தியாகத்தைப்போற்றுகிறேன்.

RAGHAVENDRA
6th May 2011, 06:54 PM
சத்யபாமா பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெற இருக்கும் இளைய திலகம் பிரபு அவர்களுக்கு நமது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
http://www.metromatinee.com/gallery/a1699/large/Prabhu%20Ganesan7189.jpg

அன்புடன்

RAGHAVENDRA
6th May 2011, 06:57 PM
டியர் கார்த்திக்,
தங்களது போராட்ட பங்களிப்பு முற்றிலும் புதிய தகவலாகும். சகோதரி சாரதா அவர்கள் கூறியது போல் ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் தத்தம் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்கள் என்பதற்கு தங்கள் பதிவு ஒரு சான்றாகும். அதே போல் திரு பார்த்தசாரதி அவர்கள் தங்கள் பிரியமான வாகனத்தைத் தொலைத்ததை பெரிது படுத்தாமல் நடிகர் திலகத்தின் பாடலே முக்கியம் என்று இருந்தது எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளத்தில் ஆழமாக நடிகர்திலகம் ஆக்கிரமித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
அன்புடன்
ராகவேந்திரன்

joe
6th May 2011, 11:46 PM
ராகவேந்திரா ஐயா,
திருவருட்செல்வர் கொண்டாட்ட ஒளிப்பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி .

Murali Srinivas
7th May 2011, 11:14 PM
கார்த்திக்,

இத்தனை நாள் இந்த விஷயங்களைப் பற்றி ஒன்றுமே சொன்னதில்லையே! களப்பணி ஆற்றிய மன்ற மறவர் என்பது தெரியாமல் போய் விட்டதே! வாழ்த்துகள். ஆனாலும் ஒன்று! காங்கிரஸ் செயல் வீரர் கார்த்திக் இன்று கழக அனுதாபியாக மாறிப் போனதை என்னவென்று சொல்வது?

சதீஷ்,

சென்னை வரும்போது சாரதியை சந்தித்து பேசுங்கள். சைக்கிள் தொலைந்து போனது கூட தெரியாமல் சிவாஜி படம் பார்த்துக் கொண்டு இருந்ததைப் போன்ற பல சுவையான தகவல்களை அவரிடமிருந்து நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

கல்தூண் படத்தை பற்றி பதிவிட்டவர்களுக்கும் பதிவை பாராட்டியவர்களுக்கும் நன்றி.

அன்புடன்

mr_karthik
8th May 2011, 11:10 AM
கார்த்திக்,

இத்தனை நாள் இந்த விஷயங்களைப் பற்றி ஒன்றுமே சொன்னதில்லையே! களப்பணி ஆற்றிய மன்ற மறவர் என்பது தெரியாமல் போய் விட்டதே! வாழ்த்துகள். ஆனாலும் ஒன்று! காங்கிரஸ் செயல் வீரர் கார்த்திக் இன்று கழக அனுதாபியாக மாறிப் போனதை என்னவென்று சொல்வது?

அன்புள்ள முரளிசார்,

பாராட்டுக்கு நன்றி. குறிப்பிட்ட இந்த சம்பவங்கள் பற்றி இதுவரை சொல்லவில்லையே தவிர, பல ஆண்டுகளாக நடிகர்திலகத்தின் ரசிகர்மன்ற உறுப்பினராகப் பணியாற்றியதையும், சாந்தி வளாக ரசிக நண்பர்களுடன் பத்தாண்டுகளுக்கும் மேலாக நேரடியாக செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததையும், அத்தகைய காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் திரைப்பட வெளியீடுகளின்போது நடந்த சம்பவங்களையும் எல்லோருடனும், குறிப்பாக ராகவேந்தர் சார் அவர்களுடன் பலமுறை இத்திரியில் வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டிருக்கிறேன். குறிப்பாக அவருடன் பகிர்ந்துகொள்ளக் காரணம், அவரும் அப்போது அங்கு நடந்தவைகளுக்கு சாட்சியாக இருக்கிறார் என்பதுடன், எனக்குத்தெரிந்த பல சாந்தி வளாக நண்பர்களை அவருக்கும் தெரியும். இதுபற்றி இதே பாகத்தில் சில பக்கங்களுக்கு முன் நாங்கள் பேசியிருப்பதை பார்த்திருப்பீர்கள்.

அடுத்து கழக அனுதாபி என்று நீங்கள் சொல்லியிருப்பதற்கான விளக்கம். நான் எப்போதும், இப்போதும் காங்கிரஸ் அனுதாபிதான், இடையில் தமிழக முன்னேற்ற முன்னணி தொண்டனாக இருந்த காலம் நீங்கலாக, எப்போதும் காங்கிரஸ்காரன்தான். இப்போது நான் பதிப்பவை தி.மு.கழக ஆதரவுப் பதிவுகள் அல்ல. ஜெயலலிதா எதிர்ப்புப்பதிவுகள். ஜெயலலிதா எதிர்ப்புப்பதிவு எனும்போது, அது தானாகவே தி.மு.க. ஆதரவு பதிவுகளாகத் தோற்றம் தரத்துவங்கி விடும், தமிழக அரசியலில் இருப்பது இரண்டே சாய்ஸ் என்பதனால். தவிர, கருணாநிதி பற்றி எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், திரு மு.க.ஸ்டாலின் மீதுள்ள தனிப்பட்ட அபிமானம். (இவற்றையெல்லாம் பறிமாறிக்கொள்ள இந்த திரி சரியான இடமில்லையாதலால் வேறு இடத்தில் தொடருவோம்).

தவிர நான் இப்போது பணி நிமித்தம் வெளி மாநிலத்தில் இருப்பதால் (கர்னாடகாவிலுள்ள ரெய்ச்சூர்) என்னுடைய ஆதரவாலோ, எதிர்ப்பாலோ ஒரு ஓட்டுக்கூட எந்தக்கட்சிக்கும் கூடவோ, குறையவோ போவதில்லை. நான் சென்னை வரும்போது உங்கள் அனைவரையும் அவசியம் சந்திக்க வேண்டும்.

என் முந்தைய பதிவைப்பாராட்டிய ஜோ, ராகேஷ், பார்த்தசாரதி, சாரதா, ராகவேந்தர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

goldstar
9th May 2011, 06:59 AM
Good morning guys,

Some time ago Seablues requested of NT's thatuva padalgal, I have just come up with 10 songs, I believe our friends will add more and more.

1. Yaarai enge vaipathu entru (http://www.youtube.com/watch?v=fQST_j-SFNY&playnext=1&list=PLC1D0E878F7945FE5)
2. Neelgal aathanai perum uthaman (http://www.youtube.com/watch?v=jwf_1q05DI0&playnext=1&list=PLB22F9ED913A4A263)
3. Nallavan ennakku nane nallavan (http://www.youtube.com/watch?v=LeugMwVQFBA)
4. Thangakale naalai thalaivargale
5. Ullathai solven solvathai seiven (http://www.youtube.com/watch?v=oI-7IdKpceQ&feature=related)
6. valthu parka vendum
7. Nallavarkellam kallangal Ontru (http://www.youtube.com/watch?v=TdsDLTtpkBo&feature=related)
8. Ellorum Kondadum Allaven Perai solli (http://www.youtube.com/watch?v=_vLauEx6oqM&feature=related)
9. Thaiyenum Deivangal (http://www.youtube.com/watch?v=9e2Y90G55ys&feature=related)
10. Yaarada manithen enge (http://www.youtube.com/watch?v=6Ed6Emarpho&NR=1&feature=fvwp)

Cheers,
Sathish

Mahesh_K
9th May 2011, 05:21 PM
அன்புள்ள முரளிசார்,

பாராட்டுக்கு நன்றி. குறிப்பிட்ட இந்த சம்பவங்கள் பற்றி இதுவரை சொல்லவில்லையே தவிர, பல ஆண்டுகளாக நடிகர்திலகத்தின் ரசிகர்மன்ற உறுப்பினராகப் பணியாற்றியதையும், சாந்தி வளாக ரசிக நண்பர்களுடன் பத்தாண்டுகளுக்கும் மேலாக நேரடியாக செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததையும், அத்தகைய காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் திரைப்பட வெளியீடுகளின்போது நடந்த சம்பவங்களையும் எல்லோருடனும், குறிப்பாக ராகவேந்தர் சார் அவர்களுடன் பலமுறை இத்திரியில் வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டிருக்கிறேன். குறிப்பாக அவருடன் பகிர்ந்துகொள்ளக் காரணம், அவரும் அப்போது அங்கு நடந்தவைகளுக்கு சாட்சியாக இருக்கிறார் என்பதுடன், எனக்குத்தெரிந்த பல சாந்தி வளாக நண்பர்களை அவருக்கும் தெரியும். இதுபற்றி இதே பாகத்தில் சில பக்கங்களுக்கு முன் நாங்கள் பேசியிருப்பதை பார்த்திருப்பீர்கள்.

அடுத்து கழக அனுதாபி என்று நீங்கள் சொல்லியிருப்பதற்கான விளக்கம். நான் எப்போதும், இப்போதும் காங்கிரஸ் அனுதாபிதான், இடையில் தமிழக முன்னேற்ற முன்னணி தொண்டனாக இருந்த காலம் நீங்கலாக, எப்போதும் காங்கிரஸ்காரன்தான். இப்போது நான் பதிப்பவை தி.மு.கழக ஆதரவுப் பதிவுகள் அல்ல. ஜெயலலிதா எதிர்ப்புப்பதிவுகள். ஜெயலலிதா எதிர்ப்புப்பதிவு எனும்போது, அது தானாகவே தி.மு.க. ஆதரவு பதிவுகளாகத் தோற்றம் தரத்துவங்கி விடும், தமிழக அரசியலில் இருப்பது இரண்டே சாய்ஸ் என்பதனால். தவிர, கருணாநிதி பற்றி எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், திரு மு.க.ஸ்டாலின் மீதுள்ள தனிப்பட்ட அபிமானம். (இவற்றையெல்லாம் பறிமாறிக்கொள்ள இந்த திரி சரியான இடமில்லையாதலால் வேறு இடத்தில் தொடருவோம்).

தவிர நான் இப்போது பணி நிமித்தம் வெளி மாநிலத்தில் இருப்பதால் (கர்னாடகாவிலுள்ள ரெய்ச்சூர்) என்னுடைய ஆதரவாலோ, எதிர்ப்பாலோ ஒரு ஓட்டுக்கூட எந்தக்கட்சிக்கும் கூடவோ, குறையவோ போவதில்லை. நான் சென்னை வரும்போது உங்கள் அனைவரையும் அவசியம் சந்திக்க வேண்டும்.

என் முந்தைய பதிவைப்பாராட்டிய ஜோ, ராகேஷ், பார்த்தசாரதி, சாரதா, ராகவேந்தர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

Mr. கார்த்திக் , முரளி சார் மனதில் எழுந்த சந்தேகம் எனக்கும் இருந்தது. நீங்கள் தேசிய பாரம்பரியத்தில் நம்பிக்கையுள்ளவர் என்பதை அறிந்ததும் மகிழ்ச்சி.

Abhinaya
9th May 2011, 07:43 PM
This is one thread where quality and meaningful discussions, something of the range of literature review for a PhD thesis usually takes place by mostly matured fans / followers. Praises, though slightly exaggerated at times, are mostly restricted to glorify only Sivaji and not throwing mud at any past / present actors. Unnecessary and uncalled for box office comparisons is only going to bring it at par with some other threads. avoid pannalame :)

சில பக்கம் முன்னால் போய்ப் பாருங்கள். இதை யார் ஆரம்பித்தார்கள் என்று அப்பொழுது உங்களுக்கு புரியும்.

Abhinaya
9th May 2011, 08:04 PM
nut case rajaram,

didn't you bring up same issue earlier? Didn't Murali come back with stats such as BO power, collection and number of days run? Again, NT's thiruvilaiyadal's 150+ days run had beaten mgr's EVP 175 run BO collection. Same with NT's thangapaththakkam: its 150 days collection beaten MGR's over hyped USV. I had same argument with MGR fans in one of his blog site: after giving Murali's facts, the MGR fans finally agreed that Thangapathakkam 150 days collection in all major cities in TN indeed beaten USV collection. GO back and read those interesting debates. Who made history with B/W BO most collected movie: It is our own idol NT with pattikkada pattanama. Moreover, as per discussion, USV in Madurai was made to run for 217 days just to beat NT's record 216 run movie Bhagapirivinai. Now, tell me where the hell the BO power was - it was with NT. Your argument is half baked just like some segments of undeserved tamil media who mistakenly often portrays that MGR was the only BO hero just because he was successful in politics. You need to apply a sting of common sense how could have NT survived with out BO power for almost 50 years in Tamil cinema.

Stop this nonsense. If you want to glorify MGR, go to his thread. if you want to Kamal, go there. Don't spend time here.

summa summa comedy ennu solli, you are becoming a senseless comedian here.

Moderator: intha kosuvai adichchi thorathunga paa!!

Long live NT's fame

Regards
மறுபடியும் நீங்கள் யார் என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

உ.சு.வா ஓடிய மீனாட்சி திரைஅரங்கம் ஏறக்குறைய 1300 இருக்கைகள் உள்ள திரை அரங்கு. த.ப ஓடிய சென்ட்ரல் திரை அரங்கமும் ஏறக்குறைய அதே அளவுதான்.

அது எப்படி 134 நாட்கள் ஓடிய த.ப 217 நாட்கள் ஓடிய உ.சு.வாவை தோற்கடித்தது?
விளக்கமாகச் சொன்னால் நன்றாக இருக்கும்.

அப்பொழுது சென்ட்ரல் திரை அரங்கில் டிக்கெட் விலையை ஏற்றி விட்டார்களா?
அல்லது தினமும் 5 காட்சிகள் ஓடியதா?

தயவு செய்து உங்களுக்கு தெரிந்த உண்மையை சொல்லவும்.

Murali Srinivas
11th May 2011, 12:19 AM
வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த நடிகர் திலகத்தின் பாக்கியவதி படத்தின் நெடுந்தகடு [டிவிடி] வெளியாகி இருக்கிறது. எப்போதும் இது போன்ற தகவல்களை முந்திக் கொண்டு தரும் ராகவேந்தர் சார் ஒரு சில அலுவல்கள் காரணமாக பிசியாக இருப்பதால அவரை முந்தி நான் இதை இங்கே பதிகிறேன்.

டிவிடி என்றதும் வேறு ஒரு விஷயம். கர்ணன் டிவிடி முன்பு 69 ரூபாயாக இருந்து பின்பு 109 ரூபாயாக அதிகரித்து இப்போது 199 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 30 ரூபாய்க்கு டிவிடி கிடைக்கும் காலத்தில் 199 ரூபாய்க்கு விற்கப்பட்டும் கூட கர்ணன் படத்தின் நெடுந்தகடுகள் hot cakes போல் காலியாகிறது. சனியன்று மாலை ஒரு மணி நேரத்தில் 10 டிவிடிகள் விற்றுப் போயின. மேலும் இருவர் வந்து கர்ணன் இருக்கிறதா என்று கேட்டு இல்லை என்றவுடன் ஏமாற்றத்துடன் திரும்பி போனதை நேரிடை சாட்சியாக பார்த்தேன். அடுத்த வருடம் கர்ணன் தியேட்டரில் வெளியாகும் போது வரவேற்பு எப்படியிருக்கும் என்பதை அப்போதே என்னால் கற்பனை செய்ய முடிந்தது.

அன்புடன்

goldstar
11th May 2011, 05:24 AM

Murali sir, thanks for Bhagyavathi movie details, could you please add more details about this movie, as first time I am hearing this moive name.

டிவிடி என்றதும் வேறு ஒரு விஷயம். கர்ணன் டிவிடி முன்பு 69 ரூபாயாக இருந்து பின்பு 109 ரூபாயாக அதிகரித்து இப்போது 199 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 30 ரூபாய்க்கு டிவிடி கிடைக்கும் காலத்தில் 199 ரூபாய்க்கு விற்கப்பட்டும் கூட கர்ணன் படத்தின் நெடுந்தகடுகள் hot cakes போல் காலியாகிறது. சனியன்று மாலை ஒரு மணி நேரத்தில் 10 டிவிடிகள் விற்றுப் போயின. மேலும் இருவர் வந்து கர்ணன் இருக்கிறதா என்று கேட்டு இல்லை என்றவுடன் ஏமாற்றத்துடன் திரும்பி போனதை நேரிடை சாட்சியாக பார்த்தேன். அடுத்த வருடம் கர்ணன் தியேட்டரில் வெளியாகும் போது வரவேற்பு எப்படியிருக்கும் என்பதை அப்போதே என்னால் கற்பனை செய்ய முடிந்தது.

அன்புடன்

Rs. 199 and still Karnan movie DVDs in demand proves again and again who is closed to people heart. Other actor movies are just worth to watch once.

Long live NT fame.

Cheers,
Sathish

mr_karthik
11th May 2011, 10:59 AM
சதீஷ் சார்,

இத்திரியின் முதல் பக்கத்தில் இருக்கும் அட்டவணையில், nov அவர்கள் எழுதிய 'பாக்கியவதி' திரைப்பட விமர்சனத்தின் இணைப்பு கிடைக்கும்.

அதில் 'கிளிக்'கி, அப்படத்தைப்பற்றி உங்களுக்கு வேண்டிய விவரங்களை அள்ளிக்கொள்ளுங்கள்.

மேற்கொண்டு, நீங்கள் கேட்டதுபோல முரளி சார் விவரித்தால் அதுவும் கூடுதல் இன்பமே.

groucho070
11th May 2011, 11:12 AM
'கிளிக்'கி.:lol: Language hybrid-u?

mr_karthik
11th May 2011, 11:17 AM
முரளி சார்,

இன்றைய சூழலில் மற்ற படங்களெல்லாம் டிவிடி 30 ரூபாய்க்கு விலை போவதற்கே திணறிக்கொண்டிருக்கும்போது, 'கர்ணன்' திரைக்காவியத்தின் நெடுந்தகடு 199 ரூபாய்க்கு சுடச்சுட விற்பனையாகிக்கொண்டிருப்பது, அப்படத்துக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் மவுசைக்காட்டுகிறது.

தொலைக்காட்சிகளில் அப்படத்தின் பாடல் காட்சிகளும், உணர்ச்சி மிகுந்த காட்சிகளும் அவ்வப்போது கான்பிக்கப்பட, அப்படத்தின்மீது மக்களுக்கு ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, இப்படம் நம்வீடுகளில் நிரந்தரமாக இருக்க வேண்டிய படம் என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கி வருவதையே இது காட்டுகிறது. இது, போன தலைமுறையைச்சேர்ந்த நம் அப்பன்மார்கள் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் என்று கூடச்சொல்லலாம்.

அவர்கள் மட்டும் இதுபோன்ற எழுச்சிமிகு வரவேற்பை அன்றைக்கு தந்திருந்தால், அன்றைக்கு கர்ணனும் பல இடங்களில் வெள்ளிவிழாவைக் கொண்டாடியிருக்கும்.

(ஆனால், மதுரை 'தங்கம்' திரையரங்கில் கர்ணன் 108 நாட்கள் ஓடியது, சென்ட்ரல் போன்ற அரங்கில் வெள்ளிவிழா கொண்டாடியதற்கும், சுகப்பிரியா அரங்கில் பொன்விழாவைக் கொண்டாடியதற்கும் சமம் என்பது வேறு விஷயம்).

goldstar
11th May 2011, 11:28 AM
சதீஷ் சார்,

இத்திரியின் முதல் பக்கத்தில் இருக்கும் அட்டவணையில், nov அவர்கள் எழுதிய 'பாக்கியவதி' திரைப்பட விமர்சனத்தின் இணைப்பு கிடைக்கும்.

அதில் 'கிளிக்'கி, அப்படத்தைப்பற்றி உங்களுக்கு வேண்டிய விவரங்களை அள்ளிக்கொள்ளுங்கள்.

மேற்கொண்டு, நீங்கள் கேட்டதுபோல முரளி சார் விவரித்தால் அதுவும் கூடுதல் இன்பமே.

Thanks Mahesh sir,

Here is the link http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=254610#post254610.

Regards,
Sathish

HARISH2619
11th May 2011, 01:46 PM
டியர் ராகவேந்திரா சார்,
திருவருட்செல்வர் கொண்டாட்டங்கள் வீடியோ மிகவும் அருமை .இந்த ஆதாரம் ஒன்று போதும் ,நடிகர்திலகத்தின் ஸ்டார் பவரை நிரூபிக்க .
திரு முரளி சார்,
கர்ணன் படத்தின் டிவிடி பற்றிய தகவலுக்கு நன்றி .
திரு ராஜாராம்,
தயவு செய்து இந்த திரிக்கு வராதீர்கள் .ஏனென்றால் நீங்கள் சொல்வதை கேட்க நமது ஹப்பர்கள் ஆகட்டும் அல்லது இதை ரெகுலராக படிப்பவர்களாகட்டும் யாருமே தயாராக இல்லை

parthasarathy
11th May 2011, 04:21 PM
டியர் பார்த்தசாரதி,

அருமையான கட்டுரைத்தொடரை சீராகக்கொண்டு சென்று சிறப்பாக முடித்துள்ளீர்கள். நடிகர்திலகத்தின் படங்கள் பிற மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டபோது நேர்ந்த சுவையான செய்திகள் அருமை. சிரமப்பட்டு தொகுத்து அளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

இதுபோன்ற தங்களின் பணி மென்மேலும் தொடரட்டும்.

அத்துடன், நடிகர்திலகத்தின் பாடல் காட்சியைக்கண்டு களிப்பதற்காக நீங்கள் பிரியமாக வைத்திருந்த சைக்கிளையே தியாகம் செய்திருக்கிறீர்கள். அந்த வகையில் உங்களது தியாகமும் ஒன்றும் குறைவானதல்ல.

அன்புள்ள சாரதா அவர்களே,

தங்களது உளமார்ந்த பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நான் சைக்கிள் தொலைத்தது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அது ஒரு நினைவு; அவ்வளவே.

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
11th May 2011, 04:29 PM
டியர் முரளி சார்,
தாங்கள் கூறியது போல் வேறு சில அலுவல்கள் நிமித்தமாக இருந்ததால் உடனே பதிவு செய்ய முடியவில்லை. பாக்கியவதி டிவிடி மற்றும் கர்ணன் டிவிடி விற்பனை பற்றிய தங்கள் செய்திகள் நடிகர் திலகத்தின் தாக்கம் தமிழர்கள் மத்தியில் எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு சான்றாகும். அனைத்து நண்பர்களின் பார்வைக்காக இதோ பாக்யவதி பட நெடுந்தகட்டு படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/BhagyavathiF.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/BhagyavathiR.jpg

அன்புடன்

parthasarathy
11th May 2011, 04:56 PM
வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த நடிகர் திலகத்தின் பாக்கியவதி படத்தின் நெடுந்தகடு [டிவிடி] வெளியாகி இருக்கிறது. எப்போதும் இது போன்ற தகவல்களை முந்திக் கொண்டு தரும் ராகவேந்தர் சார் ஒரு சில அலுவல்கள் காரணமாக பிசியாக இருப்பதால அவரை முந்தி நான் இதை இங்கே பதிகிறேன்.

டிவிடி என்றதும் வேறு ஒரு விஷயம். கர்ணன் டிவிடி முன்பு 69 ரூபாயாக இருந்து பின்பு 109 ரூபாயாக அதிகரித்து இப்போது 199 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 30 ரூபாய்க்கு டிவிடி கிடைக்கும் காலத்தில் 199 ரூபாய்க்கு விற்கப்பட்டும் கூட கர்ணன் படத்தின் நெடுந்தகடுகள் hot cakes போல் காலியாகிறது. சனியன்று மாலை ஒரு மணி நேரத்தில் 10 டிவிடிகள் விற்றுப் போயின. மேலும் இருவர் வந்து கர்ணன் இருக்கிறதா என்று கேட்டு இல்லை என்றவுடன் ஏமாற்றத்துடன் திரும்பி போனதை நேரிடை சாட்சியாக பார்த்தேன். அடுத்த வருடம் கர்ணன் தியேட்டரில் வெளியாகும் போது வரவேற்பு எப்படியிருக்கும் என்பதை அப்போதே என்னால் கற்பனை செய்ய முடிந்தது.

அன்புடன்

அன்புள்ள திரு. முரளி அவர்களே,

பாக்கியவதி DVD -ஆக வெளிவந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. மறைந்த இயக்குனர் மேதை எல்.வி.பிரசாத் அவர்களின் இயக்கத்தில் உருவான படம் இது. நடிகர் திலகம் அவர்களே முன்னொரு நாள் அளித்த ஒரு பத்திரிகைப் பேட்டியில், "நாடக நடிப்புக்கும், சினிமா நடிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை, பெரியவர் எல்.வி.பிரசாத் அவர்கள்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார்" என்று கூறியிருந்தார். நடிகர் திலகம் பிறவி நடிகர் என்றாலும், இது போன்ற நுணுக்கமான விஷயங்களை நடிகர் திலகம் பலரிடமிருந்து கற்றுக்கொண்டார் - அப்படிச் சொல்வதை விட - அதற்கு முனைப்பு காட்டினார் - பொதுவாக, சரளமாக அவர் முதல் படத்திலிருந்தே நடிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக தன் சிறகை விண் முட்டும் அளவிற்கு விரித்ததற்கு, அவரது அந்த attitude-தான் அடிப்படைக் காரணம்.

கர்ணன் - நான் இருக்கும் ஏரியாவில் உள்ள DVD-க்கள் விற்பனை செய்யும் ஒரு கடையிலும், இதையே தான், அதன் உரிமையாளர் கூறினார். இந்த நிமிடம் வரையில், அவரது கடையிலும், நடிகர் திலகத்தின் படங்கள் தான் பெருமளவிற்கு விற்பனையாகிறது மற்றும் மேலும் மேலும், ஆர்டர் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது என்று கூறினார். உண்மையைச் சொல்லப் போனால், புதிதாக நடிகர் திலகத்தின் படங்கள் எதுவும் முதன் முறை VCD/DVD-ஆக வந்திருக்கிறது என்றால், குறைந்தது ஒரு பத்து எடுத்து தனியே வைத்து விடுவார். என்னைப் போன்றவர்களுக்காக. மேலும், நான் அவரது கடைக்குள் நுழையும் போதே, தயாராக அந்த புதிய DVD -க்களை உடனே கொடுத்து விடுவார்.

இந்த ஒரு விஷயம்தான் - இதைப் போல் பல இருக்கிறது என்றாலும், - இந்த ஒரு விஷயம் தான் - அதாவது loyal fan base - அவரது அந்த அளவில்லாத் திறமைக்காக ஏற்பட்ட எந்த நிலையிலும் மாறாத ரசிகர் கூட்டம் - இது தான், அவரை உலகில் உள்ள மற்ற அத்தனை கலைஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

தங்கள் பதிவின் மூலம், எனது இந்தப் பதிவிற்கு ஊக்குவித்த தங்களுக்கு நன்றி.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
11th May 2011, 05:01 PM
டியர் முரளி சார்,
தாங்கள் கூறியது போல் வேறு சில அலுவல்கள் நிமித்தமாக இருந்ததால் உடனே பதிவு செய்ய முடியவில்லை. பாக்கியவதி டிவிடி மற்றும் கர்ணன் டிவிடி விற்பனை பற்றிய தங்கள் செய்திகள் நடிகர் திலகத்தின் தாக்கம் தமிழர்கள் மத்தியில் எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு சான்றாகும். அனைத்து நண்பர்களின் பார்வைக்காக இதோ பாக்யவதி பட நெடுந்தகட்டு படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/BhagyavathiF.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/BhagyavathiR.jpg

அன்புடன்

அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

பாக்கியவதி பற்றிய திரு. முரளி அவர்களின் பதிவிற்கு என்னுடைய பதிவினைப் பதிந்து விட்டுப் பார்த்தால், இன்ப அதிர்ச்சி! கொள்ளை அழகுடன் நடிகர் திலகம் காட்சி தரும் குறுந்தகட்டின் அட்டைப்படத்தைப் பதிவிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள்.

நான் சொன்ன அந்தக் கடைக்குச் சென்று இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. இதோ, முடிந்தால், இன்று இரவே அடிக்கிறேன் விசிட்!

அன்புடன்,

பார்த்தசாரதி

pammalar
11th May 2011, 10:39 PM
மெல்லிசை மன்னரின் சொந்தப்படம் 'அமர காவியம்' சென்னை தேவி தியேட்டரில் வெளியான சரியாக ஏழாவது நாளில் தேவியின் பக்கத்து தியேட்டரான பிளாசாவில் மேஜர் இயக்கத்தில் 'கல்தூண்' ரிலீஸானது. அவ்வளவுதான் ரசிகர்கூட்டம் முழுக்க கல்தூண் பக்கம் திரும்ப, அமரகாவியம் அனாதையானது. இதற்கு முன் வெளியான 'சத்திய சுந்தரம்' ஏற்கெனவே சாந்தியில் ஓடிக்கொண்டிருக்கும்போது இந்தக்கூத்து. அடுத்த ஒரு மாதத்தில் ஏ.வி.எம்.ராஜனின் சொந்தப்படமான 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' ரிலீஸாக, கூடவே பின்தொடர்ந்து கலைஞரின் கதை வசனத்தில் 'மாடி வீட்டு ஏழை' மிட்லண்டில் ரிலீஸ்.

உருப்படுமா..?. ஒவ்வொன்றும் எவ்வளவு முக்கியமான படங்கள் இப்படியா கியூவில் ரிலீஸ் பண்ணுவது..?.

ஒன்று மெல்லிசை மன்னரின் சொந்தப்படம்
அடுத்தது மேஜரின் இயக்கத்தில் முதல் படம்
அதையடுத்து ஏ.வி.எம்.ராஜனின் சொந்தப்படம்
அதைத்தொடர்ந்து இருவர் உள்ளத்துக்குப்பின் கலைஞரின் வசனத்தில் வரும் படம்.

என்ன அழகாக பிளான் பண்ணி ரிலீஸ் பண்ணியிருக்கலாம். என்னதான் நல்ல படமென்றாலும் ஒரே சமயத்தில் நாலு படமென்றால் ரிபீட்டட் ஆடியன்ஸும், ரசிகர்களின் ஆதரவும் குறையத்தானே செய்யும்?.

டியர் mr_karthik,

இருப்பினும் 'தேவி'யில் "அமரகாவியம்" [வெளியான தேதி : 24.4.1981], 6 வாரங்கள் வரை நன்றாகவே ஓடியது. அப்படி ஓடியதால் தான் அடுத்த 2 வாரங்கள் பகல் காட்சியாகவும் திரையிடப்பட்டு ஆக மொத்தம் 'தேவி' திரையரங்கில் 56 வெற்றி நாட்களைக் கண்டது.

"கல்தூண்" காவியத்திற்கும், "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு"விற்கும் இரு மாதங்கள் இடைவெளி.

"கல்தூண்" வெளியான தேதி : 1.5.1981 / "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு" வெளியான தேதி : 3.7.1981

[நமது நடிகர் திலகத்தின் திருமண நாளன்று வெளியான காவியம் "கல்தூண்". இதே தேதியில் [மே ஒன்று] வெளியான இன்னொரு கலைக்குரிசிலின் காவியம் "காவல் தெய்வம்(1969)". நமது நடிகர் திலகத்தின் பிறந்த நாளான அக்டோபர் ஒன்று அன்று வெளியான ஒரே திரைக்காவியம் "துணை(1982)".]

['இமயம்' சாய்ந்த அன்று 'இமயம்' எழுந்தது. எப்படி?! கலையுலகின் இமயமான நமது கலைக்குரிசில் மண்ணுலகை விட்டு மறைந்த தேதியில் (ஜூலை 21/2001), திரைக்காவியமான "இமயம்(ஜூலை 21/1979)" வெள்ளித்திரையில் வெளியானது. தேதிரீதியாகக் கூட என்ன ஒரு தெய்வாதீனமான ஒற்றுமை பாருங்கள்.]

தங்களது பதிவில் உள்ள ஆதங்கம் நியாயமானது.

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
11th May 2011, 11:37 PM
பாக்கியவதி மற்றும் கர்ணன் படத்தின் டிவிடி செய்திகள் பற்றிய எனது பதிவை பாராட்டிய அனைவருக்கும் நன்றி. பாக்கியவதி படத்தின் நெடுந்தகடு அட்டைப் படங்களுக்கு ராகவேந்தர் சாருக்கு நன்றி. இதைப் பற்றி மேலும் ஒன்று சொல்ல வேண்டும். நடிகர் திலகம் படங்களின் டிவிடி விற்பனையை பார்த்து விட்டு டிவிடி தயாரிப்பில் ஈடு்பட்டிருக்கும் பல நிறுவனங்களும் நடிகர் திலகத்தின் பல படங்களையும் டிவிடிகளாக வெளியிட்டு லாபம் அடைகின்றனர். அதாவது நடிகர் திலகத்தின் ஒரே படத்திற்கு இரண்டு மூன்று நிறுவனங்கள் டிவிடி வெளியிட்டிருக்கின்றன. உதாரணமாக திருவிளையாடல்,தில்லானா, புதிய பறவை, தெய்வ மகன், தங்கப்பதக்கம், பாசமலர், ஆண்டவன் கட்டளை, இரு மலர்கள், ஊட்டி வரை உறவு போன்ற படங்கள் மூன்று நிறுவனங்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன. அநேகமாக நடிகர் திலகத்தின் அனைத்துப் படங்களும் குறைந்தது இரண்டு நிறுவனங்களின் டிவிடியில் கிடைக்கிறது. வேறு எவருக்கும் இப்படி இருப்பது போல் தெரியவில்லை.

டிவிடி பற்றி எழுதும்போது மேலும் ஒரு செய்தி, நேற்று எழுத விட்டுப் போனது. டிவிடி விற்பனையில் மேலும் ஒரு சாதனை படைக்கும் படமாக கடையில் விற்பனையாளர் குறிப்பிட்டது வியட்நாம் வீடு படத்தைப் பற்றி, குறிப்பாக Moser Baer வெளியிட்ட ஒரு மூன்று பட தொகுப்பு. அதில் இடம் பெற்ற படங்கள் வியட்நாம் வீடு, கெளரவம் மற்றும் தங்கப்பதக்கம். இந்த டிவிடி விற்பனையை இதுவரை வேறு எந்த டிவிடியும் விஞ்சியதில்லை என சொன்னார்.

அன்புடன்

ராகவேந்தர் சார்/சாரதி,

இந்த பதிவை இங்கே இடு்கையில் ஜெயா தொலைக்காட்சி தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் நம் அனைவருக்கும் பிடித்த சிவகாமியின் செல்வன் படத்தின் மேள தாளம் கேட்கும் காலம் பாடல் காட்சி ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. இறுதி சரணத்திற்கு முன்னர் வரும் இடை இசையில் சுற்றிலும் மாபெரும் மரங்கள் சூழ்ந்திருக்க நடுவில் சரிவான பாதையில் நடிகர் திலகம் அந்த இசையின் தாள லயத்திற்கேற்ப மான் போல துள்ளி வருவார்.எப்போதும் ரசித்துப் பார்க்கும் அந்த காட்சியை இன்றும் ரசித்துப் பார்த்தேன்.

pammalar
12th May 2011, 12:44 AM
'இதயம் பேசுகிறது' பத்திரிகையின் நடவடிக்கை பற்றிச் சொன்னீர்கள். அப்போதைய பத்திரிகைகளில் பெரும்பாலானவை நடிகர்திலகத்தின் எதிர்ப்புப் பத்திரிகையாகவே விளங்கின. குமுதம், இதயம் பேசுகிறது, தினத்தந்தி, மாலைமுரசு, ராணி, பிலிமாலயா போன்ற பல பத்திரிகைகள் அவரைக் குறைசொல்லியே செய்திகளை வெளியிட்டு வந்தன. விகடன், கல்கி, பொம்மை, பேசும் படம், தினகரன் போன்றவை மட்டுமே நடுநிலையோடு எழுதி வந்தன. அதிலும் இதயம் பத்திரிகை மிகவும் மோசம்.

1978 இறுதியில், பைலட் பிரேம்நாத் வெளியாகி ஓடிக்கொண்டிருந்தபோது 'இதயம்' பத்திரிகையில், "இனியும் சிவாஜி நடிக்கத்தான் வேண்டுமா?" என்ற தலைப்பில் மிகவும் மோசமாக அவரை விமர்சித்து கட்டுரை எழுதியதோடு, நடிகர்திலகத்தின் முகத்தை கோரமாக ஒரு கேலிச்சித்திரம் ஒன்றையும் அக்கட்டுரையின் மத்தியில் பிரசுரித்திருந்தது. இதைப்பார்த்து வெகுண்டெழுந்த கல்லூரி மாணவர்களாகிய நாங்களும், சாந்தி வளாக சிவாஜி ரசிகர்களும் சுமார் 150 பேர் கூடி, சென்னை அண்ணாசாலை பல்லவன் போக்குவரத்து அலுவலகத்தின் எதிரே, பெருந்தலைவர் காமராஜர் சிலையருகே, இதயம் பேசுகிறது வார இதழ் பிரதிகளை குவித்துப்போட்டு தீ வைத்துக் கொளுத்தினோம். அதோடு மணியனின் கொடும்பாவி எனப்படும் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. உடனே போலீஸார் வந்து தடியடி நடத்தி எங்களை விரட்டியடித்தனர்.

பின்னர், 1981-ல் அமரகாவியம் படம் வெளியாக பத்து நாட்களுக்கு முன்னர், அப்போது தமிழக அமைச்சராக இருந்த கா.காளிமுத்து, பிரதமர் இந்திராகாந்தியை "வில்லி" என்று விமர்சித்திருந்ததை எதிர்த்து, சாந்தி வளாக ரசிகர்களும், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை ரசிகர்களும் காமராஜர் சிலையருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதிகேட்டோம். போலீஸ் அனுமதி மறுத்தது. இருப்பினும் போலீஸ் தடையை மீறி மறுநாள் காலை எட்டு மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கினோம். சிறிது நேரத்தில் போலீஸ் எங்களைக் கைது செய்து வேனில் ஏற்றி எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலக காம்பண்டுக்குள் உட்காரவைத்து, சுற்றிலும் போலீஸார் காவலுக்கு நின்றனர்.

ரசிகர்கள் கைதான விஷயம் நடிகர்திலகத்துக்கு எட்டியதும், அவரும், அகில இந்திய ரசிகர்மன்ற தலைவர் தளபது சண்முகம், செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன் ஆகியோரும் கமிஷனர் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். வரும் முன்பே நடிகர்திலகம் போன் மூலம் ஸ்பென்ஸர் கம்பெனிக்கு குளிர்பானத்துக்கு ஆர்டர் கொடுத்து விட்டு வந்தார். வந்ததும் ரசிகர்கள் கைது செய்யப்பட்டு மண்ணில் உட்கார வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அதற்குள் குளிர்பானமும் வந்துவிடவே, அவர் எங்களைப்பார்த்து 'இந்த மாதிரி விஷயங்களை மேல்மட்டத்தில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். போலீஸ் அனுமதி மறுத்திருக்கும்போது உண்ணாவிரதம் இருந்திருக்கக்கூடாது. எனக்காகவும் காங்கிரஸுக்காகவும் நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது' என்று சொல்லி அவர் கையாலேயே எல்லோருக்கும் குளிர்பானம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

பின்னர் உள்ளே சென்று கமிஷனரிடம் பேசி, சில தஸ்தாவேஜுகளில் நடிகர்திலகம் கையெழுத்திட்ட்பின், பிற்பகலில் நாங்கள் விடுவிக்கப்பட்டோம். இப்போது அவற்றையெல்லாம் அசைபோட வாய்ப்பளித்த முரளி சார், மற்றும் ராகவேந்தர் சார் ஆகியோருக்கும் நன்றி.

டியர் mr_karthik,

தங்களது இந்தப் பதிவைப் படித்தவுடன் அப்படியே மெய்சிலிர்த்து விட்டது. தாங்கள் நமது தேசிய திலகத்தின் ஒரு உண்மையான செயல்வீரர்.

அது மட்டுமல்ல, தேசியமும், திராவிடமும் இணைந்த ஒரு அற்புதக் கலவை தாங்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th May 2011, 01:13 AM
திருவருட் செல்வர் சென்னை சாந்தியில் அண்மையில் திரையிடப் பட்டபொழுது ஞாயிறு 17.04.2011 அன்று மாலைக் காட்சியில் அரங்கில் நடைபெற்ற கோலாகலங்களின் ஒளிக்காட்சி தங்கள் பார்வைக்கு...

http://www.youtube.com/watch?v=K4PCubQk3tM

அன்புடன்

வீடியோ வேந்தர் சார்,

உங்களுக்கும், நெய்வேலி திரு.வாசுதேவன் அவர்களுககும் கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th May 2011, 01:48 AM
நமது ராகவேந்திரன் சாரும், முரளி சாரும் அளித்த பதிவுகளின்படி "பாக்கியவதி(1957)" டிவிடியாக வெளிவந்துள்ள நிலையில், 1950களில் வெளியான நமது நடிகர் திலகத்தின் 52 தமிழ்த் திரைக்காவியங்களில் கீழ்க்காணும் 9 தமிழ்த் திரைக்காவியங்கள் மட்டும் தற்பொழுது விசிடி/டிவிடி வடிவில் நமது நல்லிதயங்களால் [அடியேனையும் சேர்த்து] எதிர்பார்க்கப்படுகின்றன. [1950களின் மற்ற 43 தமிழ்த் திரைக்காவியங்களும் கம்பெனி விசிடி/டிவிடிக்களாகவே வெளிவந்துவிட்டன. விற்பனையிலும் சக்கைபோடு போடுகின்றன.]

1. பூங்கோதை(1953)

2. கண்கள்(1953)

3. மனிதனும் மிருகமும்(1953)

4. இல்லற ஜோதி(1954)

5. உலகம் பல விதம்(1955)

6. கோடீஸ்வரன்(1955)

7. நல்ல வீடு(1956)

8. நானே ராஜா(1956)

9. அவள் யார்(1959)

இவையனைத்தும் கூடிய விரைவில் நமது அன்புக்கரங்களை அலங்கரிக்கும் என்கின்ற நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்புடன்,
பம்மலார்.

pammalar
12th May 2011, 02:19 AM
கும்பகோணத்துக்கு அருகே உள்ள 'நகரசம்பேட்டை' பகுதியில் இருக்கும் 'கமலா' டூரிங்கில், இன்று 11.5.2011 புதன் முதல் தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], தங்கத்தமிழ்ப்பெருமகனின் "தங்கப்பதுமை" திரைக்காவியம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தித்திக்கும் இத்தகவலைத் தந்த குடந்தை அன்புள்ளம் திரு.ராமலிங்கம் அவர்களுக்கு குஷியான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th May 2011, 02:46 AM
டிவிடி விற்பனையில் மேலும் ஒரு சாதனை படைக்கும் படமாக கடையில் விற்பனையாளர் குறிப்பிட்டது வியட்நாம் வீடு படத்தைப் பற்றி, குறிப்பாக moser baer வெளியிட்ட ஒரு மூன்று பட தொகுப்பு. அதில் இடம் பெற்ற படங்கள் வியட்நாம் வீடு, கெளரவம் மற்றும் தங்கப்பதக்கம். இந்த டிவிடி விற்பனையை இதுவரை வேறு எந்த டிவிடியும் விஞ்சியதில்லை என சொன்னார்.

டியர் முரளி சார்,

சற்றேறக்குறைய 15 வருடங்களுக்கு முன்னர், h.m.v. நிறுவனம் இந்த மூன்று காவியங்களின் பாடல்களையும் ஒரே ஒலிநாடாவில் [கேஸட்] பதிவு செய்து வெளியிட்டது. அப்பொழுது அதன் விலை 40 ரூபாய். இந்த கேஸட் மிகக் குறுகிய காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது.

ஆடியோவோ, வீடியோவோ மூம்மூர்த்திகளான பத்மநாப ஐயரும், ரஜினிகாந்தும், சௌத்ரியும் என்றென்றும் ஆராதனைக்குரியவர்களே !

இந்த அளவுகோல் நமது நடிகர் திலகத்தின் பெரும்பாலான காவியப் படைப்புகளுக்கு பொருந்தும் !

பெருமிதத்துடன்,
பம்மலார்.

parthasarathy
12th May 2011, 10:04 AM

அன்புள்ள திரு. முரளி மற்றும் திரு. பம்மலார் அவர்களே,

வியட்நாம் வீடு, கெளரவம் மற்றும் தங்கப்பதக்கம் படங்கள் ஒரே குறுந்தகட்டில் வெளியாவதற்கு முன்னமே, இந்தப் படங்களைத் தனித்தனி குறுந்தகடுகளாக வாங்கி வைத்து விட்டதால், இந்தப் படங்கள் ஒரே குறுந்தகட்டில் வெளியானபோது, வாங்காமல் இருந்து விட்டேன்.

இவை மூன்றும், அதாவது ப்ரெஸ்டிஜ் பத்மநாப அய்யர், பாரிஸ்டர் ரஜினிகாந்த் மற்றும் எஸ்.பி.சௌத்ரி - திரு. பம்மலார் அவர்கள் குறிப்பிட்டபடி மும்மூர்த்திகள் மட்டுமல்லாது - முக்கனி - மா, பலா, வாழை - மேலும், தேனும், ஊனும், உயிரும் கலந்தவை என்றும் கூறலாம்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
12th May 2011, 10:27 AM
நமது ராகவேந்திரன் சாரும், முரளி சாரும் அளித்த பதிவுகளின்படி "பாக்கியவதி(1957)" டிவிடியாக வெளிவந்துள்ள நிலையில், 1950களில் வெளியான நமது நடிகர் திலகத்தின் 52 தமிழ்த் திரைக்காவியங்களில் கீழ்க்காணும் 9 தமிழ்த் திரைக்காவியங்கள் மட்டும் தற்பொழுது விசிடி/டிவிடி வடிவில் நமது நல்லிதயங்களால் [அடியேனையும் சேர்த்து] எதிர்பார்க்கப்படுகின்றன. [1950களின் மற்ற 43 தமிழ்த் திரைக்காவியங்களும் கம்பெனி விசிடி/டிவிடிக்களாகவே வெளிவந்துவிட்டன. விற்பனையிலும் சக்கைபோடு போடுகின்றன.]

1. பூங்கோதை(1953)

2. கண்கள்(1953)

3. மனிதனும் மிருகமும்(1953)

4. இல்லற ஜோதி(1954)

5. உலகம் பல விதம்(1955)

6. கோடீஸ்வரன்(1955)

7. நல்ல வீடு(1956)

8. நானே ராஜா(1956)

9. அவள் யார்(1959)

இவையனைத்தும் கூடிய விரைவில் நமது அன்புக்கரங்களை அலங்கரிக்கும் என்கின்ற நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்புடன்,
பம்மலார்.

அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

தாங்கள் குறிப்பிட்ட படங்களில், "இல்லற ஜோதி" படத்தை ரொம்ப நாட்களாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல பத்திரிகைகள், மற்றும், என் உறவினர்கள் மூலமாக, இந்தப் படத்தைப் பற்றியும், குறிப்பாக, அதில் வரும் "அனார்கலி" ஓரங்க நாடகத்தைப் பற்றியும், அதில் நடிகர் திலகத்தின் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத நடிப்பு மற்றும் வசனக் காட்சிகளையும் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். பார்க்க சந்தர்ப்பம் கிடைக்க ஏங்கிக்கொண்டிருக்கிறேன் (றோம்).

என் தந்தை "நானே ராஜா" படத்தைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கூறுவார் (அவர் MGR ரசிகர் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன்.). அந்தப் படத்தில், அவர் வில்லன் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் நடிக்க ஆரம்பித்த புதிதில் வெளிவந்த படம். ஆரம்ப காலங்களில், அவர் எந்த வேடத்தில் வந்தாலும், அவர் scene stealer -aaga இருந்ததால், (எப்போதுமே அப்படித்தான் என்றாலும்), நிறைய படங்களில், அவருக்காக முக்கியமான பாத்திரத்தைப் படைத்து, (இடைச்செருகல் என்று சொல்லலாம்) மற்றவருடைய படங்களில், அவரை நுழைத்து, (வியாபார ரீதியாக படத்தை ஓட வைக்க), அந்தப் படங்களையும் சேர்த்து, ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். தயாரிப்பாளர்கள், லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். இந்த வகையில், அந்தக் காலத்தில், மிக முக்கியமான படம், பி.ஆர். பந்துலுவின் தயாரிப்பு, மற்றும் இயக்கத்தில் வந்த "ஸ்கூல் மாஸ்டர்" படத்தில் வரும் அந்த போலீஸ்காரர் பாத்திரம். முதலில், அந்தப் படம் கன்னடத்தில் வெளிவந்து, ஒட்டு மொத்த கர்நாடகாவையே அவரது நடிப்பு புரட்டிப்போட்டு, அந்தப் படத்தில், நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்க்க மட்டுமே மக்கள் குவிந்து, ஏராளமான லாபத்தை, பந்துலுவுக்கு கொடுத்தது எனலாம். அந்த அளவிற்கு, நடிகர் திலகத்தின் நடிப்பு அந்தப் படத்தில் இருக்கும். (பல வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன்.) அதனால், அந்தப் படத்தை, பந்துலு மலையாளத்திலும், பின்னர் ஹிந்தியிலும், எடுக்கும்போது, நடிகர் திலகத்தையே மீண்டும் மீண்டும் அந்த போலீஸ்காரர் பாத்திரத்தில் நடிக்க வைத்து மேலும் மேலும், லாபம் சம்பாதித்தார். இதைப் பற்றி மேலும், விரிவாக எழுதவிருப்பதால், இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,

பார்த்தசாரதி

mr_karthik
12th May 2011, 10:55 AM
//இந்த பதிவை இங்கே இடு்கையில் ஜெயா தொலைக்காட்சி தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் நம் அனைவருக்கும் பிடித்த சிவகாமியின் செல்வன் படத்தின் மேள தாளம் கேட்கும் காலம் பாடல் காட்சி ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. இறுதி சரணத்திற்கு முன்னர் வரும் இடை இசையில் சுற்றிலும் மாபெரும் மரங்கள் சூழ்ந்திருக்க நடுவில் சரிவான பாதையில் நடிகர் திலகம் அந்த இசையின் தாள லயத்திற்கேற்ப மான் போல துள்ளி வருவார்.எப்போதும் ரசித்துப் பார்க்கும் அந்த காட்சியை இன்றும் ரசித்துப் பார்த்தேன்.//

முரளி சார்,

அந்தப்பாடல் ஒளிபரப்பானபோது நானும் ஆர்வத்துடன் கண்டுகளித்தேன். ஏனென்றால் அடிக்கடி ஒளிபரப்பாகாத பாடல் மட்டுமல்ல, மிகவும் அருமையான பாடலும்கூட. அப்படத்தின் பாடல்களை வரிசைப்படுத்தினால், முதலிடம் பெறும் பாடலும் இதுதான்.

அழகிய ரோஸ் கலந்த சிவப்பு வண்ண கோட் சூட்டில் நடிகர் திலகம், உள்ளே பூப்போட்ட டிசைனில் சட்டை, அழகான நேர்த்தியான மேக்கப், சிறந்த ஜோடிகளில் ஒருவரான வாணிஸ்ரீ, அழகான வண்ண ஒளிப்பதிவு, அழகான லொக்கேஷன், குளோஸ்-அப், மிட்லாங் ஷாட், லாங்ஷாட் என்று வகை வகையாக அசத்தும் சி.வி.ஆர். எல்லாமே இப்பாடலின் சிறப்பு.

சிவாஜி வாணிஸ்ரீ ஜோடிப்பாடல் என்றாலே உடனே எல்லோரும் 'மயக்கமென்ன, இந்த மௌனமென்ன' பாடலையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்காமல், இதுபோன்ற ரம்மியமான பாடல்களையும் சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும்.

சில நாட்களுக்கு முன் இதே சகோதரி t.m. ஸ்ரீதேவிதான், இதே ஜோடியின் இன்னொரு அருமையான பாடலான 'அலங்காரம் கலையாத சிலையொன்று கண்டேன்' (ரோஜாவின் ராஜா) பாடலையும் ஒளிபரப்பினார்.

RAGHAVENDRA
12th May 2011, 03:35 PM
Prabhu Sir, now Dr. Prabhu Ganesan.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Prabhu%20Ganesan/DrPrabhuatConvocationforPB.jpg

More photos and info to be added shortly at www.ilaiyathilagamprabhu.com.

Raghavendran

NOV
12th May 2011, 08:49 PM
http://a8.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/223393_10150280198679478_613614477_9460273_6099489 _n.jpg

pammalar
12th May 2011, 11:58 PM
டியர் பார்த்தசாரதி சார்,

தங்களது பதில் பதிவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
14th May 2011, 06:12 AM
http://www.nadigarthilagam.com/images12/Sivaji%20Ganesan.jpg

உள்ளன்போடும் உள்ளுணர்வோடும் நடிகர் திலகத்திற்கு மரியாதை செய்தவர்கள் என்றைக்கும் மேன்மை அடைவார்கள் என்ற கூற்றுக்கு உதாரணமாகத் திகழ்ந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள அன்புச் சகோதரி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கும், புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி அவர்களுக்கும் நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.

http://www.nadigarthilagam.com/images12/J%20Jayalalithaa.jpg
நடிகர் திலகத்தின் மறைவின் போது அரசு மரியாதை செலுத்தியது், அவர் நினைவாக சிவாஜி கணேசன் விருது நிறுவியது, மற்றும் மணிமண்டபத்திற்கு அரசு நிலம் வழங்கியது - இவற்றையெல்லாம் எந்த வித பிரதி பலனும் எதிர்பார்க்காமல் செய்தது இவற்றால் உயர்ந்து நிற்கும் சகோதரி ஜெயலலிதா அவர்கள்

http://www.nadigarthilagam.com/images12/NRPondy.jpeg

பெருந்தலைவர் காமராஜரையும் நடிகர் திலகத்தையும் தன் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட தோடு மட்டுமன்றி, நாட்டிலேயே முதன் முதலாக நடிகர் திலகத்திற்கு சிலை வைத்து மேன்மை பெற்ற அன்பு சகோதரர் ரங்கசாமி அவர்கள்

RAGHAVENDRA
14th May 2011, 06:26 AM
http://www.youtube.com/watch?v=3Fu0546rs1g

"பாத்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா ஞானத் தங்கமே,
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா...

சரணம்...
பொன்னும் பொருளும் மூட்டை கட்டி
போட்டு வெச்சாரு - இவரு
போன வருஷம் மழையை நம்பி
வெத வெதச்சாரு
ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி
எழுதி வெச்சாரு - ஈசன்
போட்ட கணக்கை மாத்தவில்லே
போய் விழுந்தாரு..."

- திருவிளையாடல் படத்தில் கவியரசர் கண்ணதாசன்

pammalar
14th May 2011, 08:54 AM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 13

"நீ வர வேண்டும் என்று எதிர்பார்த்தேன்"

http://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8

நடிப்பு : நடிகர் திலகம், கலைச்செல்வி

பின்னணிக் குரல்கள் : பாடகியர் திலகம் பி.சுசீலா, பாடகர் திலகம் டி.எம்.எஸ்.

இசை : மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி.

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

திரைக்காவியம் : ராஜா(1972)

அன்புடன்,
பம்மலார்.

masanam
14th May 2011, 11:08 AM
நிறம் மாறும் பூக்கள்

Mahesh_K
14th May 2011, 12:35 PM
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் புதுவையில் சிலை அமைக்க காரணமாக இருந்த ரங்கசாமி புதுவை முதல்வராகப் போவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல மற்றொரு அபிமானியான இசக்கி சுப்பையா , அம்பை தொகுதியில் சபாநாயகர் ஆவுடையப்பனை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளார்.

அதே நேரம் நிச்சயம் வெல்வார்கள் என்று கருதப்பட்ட சிவாஜி மன்ற முன்னாள் பொதுச் செயலாளரும், சென்ற தேர்தலில் சுயேச்சையாகவே நின்று 30 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்ற சிவகங்கை ராஜசேகரனின் தோல்வியும் , வசந்த் & கோ வசந்த குமார் அவர்களின் தோல்வியும் கொஞ்சம் ஏமாற்றம் தான்.

mr_karthik
14th May 2011, 02:00 PM
Message deleted as per fellow Hubbers' Requests.

saradhaa_sn
15th May 2011, 07:52 PM
Message deleted as per fellow Hubbers' Requests.

மற்றவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் அளவுக்கு அப்படி என்ன இங்கே போஸ்ட் செய்தீர்கள்?.

if you dont mind, send PM please.

RAGHAVENDRA
15th May 2011, 08:37 PM
அன்பு கார்த்திக,
காலையில் தங்களுடைய பதிவினைப் படித்து விட்டு சென்று, பின் தற்போது பார்த்தால் தங்கள் பதிவினைக் காணவில்லை. கருத்து வேறுபாடுகள் இல்லாதவர்களே இருக்க முடியாது. தங்களுடைய பதிவில் ஆட்சேபிக்கத் தக்கவை ஏதும் இல்லையே. கலைஞருக்கு நன்றி கூறுவதில் யாரும் மாறுபட்ட கருத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே தங்களுடைய கருத்தினை இங்கே மீண்டும் பதியுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
ராகவேந்திரன்

sathya_1979
15th May 2011, 09:20 PM
uruppadiyA irundhadhu indha oru thiridhAn idhuvum ippO gaaliyA :sigh2:

venkkiram
15th May 2011, 09:32 PM
சம நிலை என்றால் எதுவென்று வெளங்க மாட்டீங்குது. ஊமைக் கோட்டான் போல எப்போதும் அமைதியாய் இருப்பதா? இல்லை.... பொதுவாக மக்களிடத்தில் நிலவுகிற ஒரு கருத்தை சொல்ல விழைவதா? அரசியலைப் பொறுத்தவரை கட்சி ஓட்டுக்கள் எல்லாப் பக்கத்திலும் உண்டு. ஆனால் அவர்களின் ஒட்டு சட்டசபை, மத்திய ஆட்சியை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெறுவது கிடையா. இது இரண்டுக்கும் இடையில் ஒரு சாரார் உண்டு. அவர்கள் தான் ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆட்சியை நிர்ணயிக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், இந்த முறை அதிமுகவிற்கு சார்பாக பேசிய, வாக்களித்த மக்கள் அனைவரையும் ஒரு பக்க சார்பு என அடைக்க முடியாது. அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டவர்கள் அனைவரும் சமநிலை இல்லை என முத்திரைக் குத்துவது வேடிக்கை.

RAGHAVENDRA
15th May 2011, 09:45 PM
டியர் ஜோ,
தங்களுடைய பதிவில் என் மேல் உள்ள கோபத்தை என்னால் உணர முடிகிறது. என்னை ஒரு சார்பானவர் என்கிறீர்கள். ஆம் அதில் ஓரளவு உண்மை உள்ளது, என்னுடைய ஒரே சார்பு, நடிகர் திலகம் மட்டும் தான். அவருக்கு மரியாதை செய்யும் போது நன்றி பாராட்டு்ம் போதும் அவருடைய மேன்மையைக் குறைத்துப் பேசும் போது எதிர்ப்பை தெரிவிக்கும் போதும் நான் என் கடமையை செய்வதாக உணர்கிறேன். அது யார் என்பது அப்போது என் கண்ணுக்கு தெரியாது. அதனால் தான் என்னைப் போன்ற சிவாஜி ரசிகர்களால் யாரையும் பாராட்டவும் முடிகிறது, எதிர்ப்பை தெரிவிக்கவும் முடிகிறது. சிவாஜி ரசிகர்களுக்கு இருக்கும் ஆதங்கம் உங்களுக்கு தெரியாததல்ல. ஏனென்றால் ஒவ்வொரு சிவாஜி ரசிகரின் மன ஓட்டமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். நடிகர் திலகத்திற்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்க வில்லை என்கிற மன வருத்தம் இருக்கும் போது அவருடைய மேன்மையை அங்கீகரித்து யாராவது ஒரு சிறிய அளவில் ஏதாவது செய்தாலும் கூட அதனை மிகவும் மகிழ்ச்சியோடும் அளவிலா ஆனந்தத்தோடும் வரவேற்பவர்கள் நாம் அனைவரும். அதே நேரத்தில் அரசியல் என்பதும் தேர்தல் என்பதும் அவரவருடைய தனிப்பட்ட கருத்தை உள்ளடக்கியதாகும். நான் ஒருவன் சொல்வதால் இங்கு யாரும் தங்கள் கருத்தை மாற்றி ஓட்டளிக்கப் போவதில்லை. அப்படிப் பட்ட செல்வாக்கு எனக்கு இருப்பதாக நான் நினைத்தால் என்னைவிட அறிவீனமானவர் இன்னொருவர் இருக்க முடியாது. ஒரு சிவாஜிரசிகனாக அந்தக் காலத்திலிருந்து நாம் சந்தித்த அல்லது கேள்விப் பட்ட விஷயங்களை மற்ற ஒத்த கருத்துடைய ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது அனைவருக்கும் புதுப்புது செய்திகள் அறிய வாய்ப்பு ஏற்படுகிறது.
என்னைப் பொறுத்த வரையில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களுக்குப் பிறகு நடிகர் திலகம் ஒருவரைத் தவிர வேறுயாரையும் தலைவராய் ஏற்கும் மனது இல்லை. சிவாஜி ரசிகர்களைப் பொறுத்த வரையில் நடிகர் திலகம் மட்டும் தான் என்றும் ஒரே தலைவர்.
மற்றபடி தேர்தல் என்பதும் வாக்களிப்பு என்பதும் நமக்கு ஒரு சம்பிரதாயம் அவ்வளவே. யார் நடிகர் திலகத்திற்கு மேன்மை செய்தாலும் நன்றி பாராட்டுதலைக் கடமையாகக் கொண்டுள்ளேன். இதில் இவர் அவர் என்கிற பேதமில்லை.
என்னுடைய அபிப்ராயத்தில் தாங்கள் நிச்சயம் மாறுபடலாம். அது தங்களுடைய உரிமை. மற்றபடி தாங்களும் தங்களைப் போல் ஒத்த கருத்துடையோர் யாராயிருந்தாலும் அனைவரும் என் சகோதர சகோதரியராவார். அனைவரும் சிவாஜி ரசிகர்கள். அனைவரும் ஒரு குடு்ம்பத்தினர்.
அன்புடன்

pammalar
16th May 2011, 12:11 AM
நிறம் மாறும் பூக்கள்

"நிறம் மாறும் பூக்கள்" என்கின்ற அரும்பு, மணம் வீசும் மலராக மலர்க !

pammalar
16th May 2011, 12:41 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 192

கே: ஜெயலலிதா நடிப்பில் கைதேர்ந்ததில் யாருக்குப் பங்குண்டு? (பெ.சுப்பண்ணன், தி.ராமநாதபுரம்)

ப: "நடிப்பில் எனது குரு சிவாஜி தான்" என்று அவரே கூறியிருக்கிறாரே !

(ஆதாரம் : பேசும் படம், மார்ச் 1971)

மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள தங்கத்தாரகை கலைச்செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !

பம்மல் ஆர்.சுவாமிநாதன்.

pammalar
16th May 2011, 02:56 AM
நடிகர் திலகம் பற்றி திரு.என்.ரங்கசாமி

[புதுவையில் 11.2.2006 சனிக்கிழமையன்று புதுவை அரசு சார்பில் நடந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வெண்கலத் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி அவர்களின் பெருமுயற்சியின் பலனாக அவரது அரசு நிர்மாணித்த சிலையினை திறந்து வைத்து முதல்வர் ஆற்றிய சிறப்புரையிலிருந்து சில வரிகள்]

"பெருந்தலைவர் காமராஜர் மீது அதிக பற்றுக் கொண்டவர் சிவாஜி கணேசன். பெருந்தலைவர், சிவாஜியைத் தவிர வேறு யார் பிறந்தநாளுக்கும் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது கிடையாது. பெருந்தலைவரோடு சிவாஜி இணைந்து அரசியல் மற்றும் தேர்தல் பணியாற்றியதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். நான் பதவியேற்ற முதல் நாளிலேயே சிவாஜி மன்றத்திலிருந்து வந்தவன் நான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தேன். கலைத்தாயின் தலைமகன் சிவாஜி. ஒரு தாய்க்கு எத்தனையோ குழந்தைகள் இருந்தாலும் முதல் குழந்தைக்குத்தான் அவள் பெரிதும் மகிழ்வாள். அதனால் தான் சிவாஜியை கலைத்தாயின் தலைமகன் என்கிறோம். நடிகர் திலகம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர். இந்திய நாட்டின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் அவர். நாட்டிற்குப் பெருமை தேடித் தந்தவருக்கு சிலை அமைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு சிலை வைப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை."

மூன்றாவது முறையாக புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்க இருக்கும் நடிகர் திலகத்தின் நல்லிதயம் திரு.என்.ரங்கசாமி அவர்களுக்கு உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள் !

பம்மல் ஆர்.சுவாமிநாதன்.

NOV
16th May 2011, 10:25 AM
Vietnam Veedu to be staged in Malaysia

Pleased to inform you that the popular Tamil stage Drama VIETNAM VEEDU which was staged by the late legend Sivaji Ganesan will now be restaged here. Most of you would be aware that this drama was later made into a movie under the same title acted by Sivaji Ganesan and Padmini.

This drama would now be restaged and acted by Kalai Mamani Y.G. Mahendaran a well known movie star. The drama would be staged on July 31st at the Civic Auditorium, Petaling Jaya.

Organized by the Sivaji Ganesan Cultural Society, Malaysia in conjunction with the 10th Memorial Anniversary of the legendary star Chevalier Nadigar Thilagam Dr Sivaji Ganesan.

Sponsors, Donors and Advertisers who wish to support this event may call us.

Thanks

Yours Sincerely,

EASHVARA LINGAM
Founder and Member of Board of Management
SIVAJI GANESAN CULTURAL SOCIETY, MALAYSIA

*tel: 016-6880455*

groucho070
16th May 2011, 10:49 AM
Oh

http://images2.wikia.nocookie.net/__cb20090211192406/halo/images/c/c9/Darth_vader_nooo.jpg

goldstar
16th May 2011, 11:22 AM
Guys from SG or ML (Joe and Rakesh and other friends) please give the details of how fans in these countries used to do allapparais on NT's movies day?

I am more interested whether it will be like TN or better than that? How about cut-outs, posters and garlands? It would be nice if we get details of previously released movies.

Cheers,
Sathish

groucho070
16th May 2011, 11:29 AM
Sathish, Joe is not a Singaporean, but he might have some stories from his friends and colleagues there.

As for me, it's zillch. My Dad and his side of family are hardcore MGR fans, so only MGR films for us then. Otherwise, my childhood big screen experience limited to lots of Kamal films and a smattering of Rajini films.

Inviting NOV to the stage now..

goldstar
16th May 2011, 11:49 AM

Thanks Rakesh, hope Nov and Joe will come with more details. I have started this topic just to stop other un-necessary topics to this thread and I wish people talk about only our NT and NT and NT.... no one else....

Cheers,
Sathish

groucho070
16th May 2011, 12:01 PM
One thing, I can assure you that the responses are lot more subdued than in TN, that's for sure. But athe MGR fans vs NT fans sanda ellam nadanthirukku (info courtesy of HC whistling MGR fan = my dad), so I trust there would have been whistles and shouts during NT film screening.

Sad that I missed out (I'm looking at you, acchan), so I really hope that they start rereleasing his films here.

Mahesh_K
16th May 2011, 01:43 PM
மற்றவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் அளவுக்கு அப்படி என்ன இங்கே போஸ்ட் செய்தீர்கள்?.

if you dont mind, send PM please.

கார்த்திக் சார் பதிவை அவர் அழிக்கும் முன்பு நானும் படித்தேன். . ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவர் நடிகர் திலகத்துக்கு செய்த நன்மைகளை குறிப்பிடிருந்தார். நிச்சயம் தவறாக எதுவும் எழுதப்படவில்லை.

அந்த பதிவிற்கு பதிலாக அதே தலைவர் நடிகர் திலகத்தின் மீது செய்த தேவையற்ற விமர்சனங்கள் , கொடுத்த இடைஞ்சல்களைக் குறிப்பிட்டு வரக்கூடிய பின்னூட்டங்களை தவிர்க்கும் நோக்கத்திலும் பதிவை எடுத்து விட்டார் என்று நினைக்கிறேன். அது சரியான முடிவே.

NOV
16th May 2011, 01:58 PM
Cut-outs, paalabishegams, garlanding, etc are all unheard of in Malaysia. Like Rakesh mentioned, at most you would have whistling when favourite stars appeared on screen.
Sivaji fans then were from the middle-class and upwards and had always appeared dignified. The rivalry was more through verbal arguments than physical demonstrations, if you get what I mean. :)

groucho070
16th May 2011, 02:06 PM
NOV, back in my hometown, they actually got physical it seems. Once. But looking around, I'd say MGR fans are more than NTs, considering most of us were in plantations and MGR's escapism appeals more. Even Minnal on average play more MGR songs than NTs during the old song slot (they are awesome as well, no questions). And then, there are folks like me who embraced NT when got older. Most of my cousins who were MGR fans when we were kids, now would look at NT with lots of reverence.

NOV
16th May 2011, 02:25 PM
I have already acknowledged that Rakesh.
Your view/experiences would be rural, having grown and lived in the plantations.
Mine would be urban, being born and bred in the city. My family and neighbours prefered Sivaji, but there was no hatred for the rival. My father took us at the most for two movies a year, and inevitably it will be a Sivaji movie. Having said that, we also watched EVP.

aside: My elder brothers were bitter rivals, and just for the heck of it took on both heroes to champion their cause. My father put a stop to it when my 2nd younger brother took a chalk and left a message on the door - annan ennadaa thambi ennada avasaramaana ulagaththilE :rotfl:

and at his deathbed, my eldest brother - a purpoted rival fan - requested for.... vaazha ninaiththaal vaazhalaam.... :sigh2:

groucho070
16th May 2011, 02:29 PM
My father put a stop to it when my 2nd younger brother took a chalk and left a message on the door - annan ennadaa thambi ennada avasaramaana ulagaththilE :rotfl::lol: And then there was sidelined minority fans like my mother who stuck to Jai Shankar and Muthuraman :smile:

Plum
16th May 2011, 02:41 PM
ada ippO kooda Rajini Kamal Ajith Vijay Surya fansku nadula Maddy fans irukkaRadhillayA? andha mAdhiri irundhirukkum grouch(minority fans) ;-)

groucho070
16th May 2011, 02:46 PM
Sad but true, I totally relate to mommy now.

pammalar
17th May 2011, 07:34 PM
நடிகர் திலகம் குறித்த ஒரு புதிய புத்தகம்

நூல் முகப்பு
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Sivaji0001.jpg

பின் அட்டை
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Sivaji0002.jpg

நூல் பதிப்பாளர் : என்.நாராயணன் / நூல் தொகுப்பாசிரியர் : கா.வந்தியத்தேவன்

நூல் தொகுப்பு மற்றும் அச்சு உதவி : சிவாஜி KAY விஜயன்

நூல் வெளியீடு : இதயவேந்தன் வாசகர் வட்டம்

புத்தகப் பிரதிகளைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
இதயவேந்தன் வாசகர் வட்டம்
G.சில்க் இளங்கோ
257, பவுடர் மில்ஸ் ரோடு,
காந்திஜி நகர்,
புளியந்தோப்பு,
சென்னை - 600 012.

ஒரு பிரதியின் விலை நூறு ரூபாய்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th May 2011, 08:58 PM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 14

"நல்ல இடம் நீ வந்த இடம்"

http://www.youtube.com/watch?v=9H4R8bAY6Q8

நடிப்பு : நடிகர் திலகம், கலைச்செல்வி

பின்னணிக் குரல்கள் : பாடகர் திலகம் டி.எம்.எஸ்., பாடகியர் திலகம் பி.சுசீலா

இசை : மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி.

படைப்பு : காவியக்கவிஞர் வரகவி வாலி

திரைக்காவியம் : கலாட்டா கல்யாணம்(1968)

அன்புடன்,
பம்மலார்.

rajeshkrv
18th May 2011, 12:59 AM
வாலியின் குறும்பு . இது தான் ஜெயாவின் முதல் படம் நடிகர் திலகத்துடன். அதை குறிக்கும் வகையில் நல்ல இடம் நீ வந்த இடம் என குறிப்பிடுகிறார்

goldstar
18th May 2011, 05:44 AM
நடிகர் திலகம் குறித்த ஒரு புதிய புத்தகம்

நூல் முகப்பு
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Sivaji0001.jpg

பின் அட்டை
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Sivaji0002.jpg

நூல் பதிப்பாளர் : என்.நாராயணன் / நூல் தொகுப்பாசிரியர் : கா.வந்தியத்தேவன்

நூல் தொகுப்பு மற்றும் அச்சு உதவி : சிவாஜி KAY விஜயன்

நூல் வெளியீடு : இதயவேந்தன் வாசகர் வட்டம்

புத்தகப் பிரதிகளைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
இதயவேந்தன் வாசகர் வட்டம்
G.சில்க் இளங்கோ
257, பவுடர் மில்ஸ் ரோடு,
காந்திஜி நகர்,
புளியந்தோப்பு,
சென்னை - 600 012.

ஒரு பிரதியின் விலை நூறு ரூபாய்.

அன்புடன்,
பம்மலார்.

Thanks a lot Mr. Pammalar, can we get soft copy of this book? People won't mind to pay if we get soft copy.

Cheers,
Sathish

DHANUSU
18th May 2011, 08:14 AM
அடடா ..நீங்கள் செய்த நன்றியைத் தான் பார்த்தோமே .
தேர்தல் நேரத்தில் சமநிலை காக்காமல் உங்கள் தனிப்பட்ட ஒரு பக்க சார்பு கருத்தை நடிகர் திலகம் ரசிகர்களின் பொதுக்கருத்தாக்கி திமுக-வுக்கு ஓட்டுப்போடாதீர்கள் எனவும் அதிமுக-வுக்கு ஓட்டுப்போடுமாறும் (நான் நேரடியாக அப்படி சொல்லவில்லை என நீங்கள் சொல்லக்கூடும் ..ஆனால் உங்கள் மனச்சாட்சிக்கு தெரியும்) பிரச்சார பீடமாக இந்த திரியை உபயோகப்படுத்தியதற்கு என் வன்மையான கண்டனங்கள் .

Dear All,

I have been an ardent fan of this thread, dedicated to NT, the Great!

Of late the discussions that are taking place in this thread are painful.

People settling scores over political issues and charges and counter charges; with all these I feel the thread is deviating from the intended purpose. Politics has occupied the center stage.

Another thing that I have observed over the past few months is that, the postings by a select few are appreciated like anything, showering encomiums on the persons-sometimes the persons are praised more than NT himself-and the postings and comments of 'others' are just ignored.

There are a group of persons who praise each other on rotation basis and others are not even acknowledged.

I feel if the individuals do deep introspection, they will find some iota of truth in my comments.

With these few lines I take leave of you all.

Thank you all very much for all the cooperation and to the select few who acknowledged my postings and a very few who encouraged me.

However, I will remain an ardent fan of NT forever.

NT (Nadigar Thilagam) = TN (Tamil Nadu)

groucho070
18th May 2011, 08:54 AM
Pammalar sir, the second pix, Avanthan Manithan?

Dear Dhanusu,

I agree 100% with you, this thread is just for NT and NT, we don't need to discuss anything else.

Dhanusu, please add more details about your experience with NT movies.

Cheers,
Sathish

goldstar
18th May 2011, 08:55 AM
Pammalar sir, the second pix, Avanthan Manithan?

Yes, this still is definitely from Avan Than Manithan...

groucho070
18th May 2011, 09:11 AM
Ah, thanks Sathish. Distinctive looking suit.

parthasarathy
18th May 2011, 10:28 AM
Dear All,

I have been an ardent fan of this thread, dedicated to NT, the Great!

Of late the discussions that are taking place in this thread are painful.

People settling scores over political issues and charges and counter charges; with all these I feel the thread is deviating from the intended purpose. Politics has occupied the center stage.

Another thing that I have observed over the past few months is that, the postings by a select few are appreciated like anything, showering encomiums on the persons-sometimes the persons are praised more than NT himself-and the postings and comments of 'others' are just ignored.

There are a group of persons who praise each other on rotation basis and others are not even acknowledged.

I feel if the individuals do deep introspection, they will find some iota of truth in my comments.

With these few lines I take leave of you all.

Thank you all very much for all the cooperation and to the select few who acknowledged my postings and a very few who encouraged me.

However, I will remain an ardent fan of NT forever.

NT (Nadigar Thilagam) = TN (Tamil Nadu)

Dear Mr. Dhanusu,

I share your concern and pain on both the issues.

No.1:- That this thread has started deviating from the original purpose. First some people started throwing mudslings on NT's commercial prowess, which was proved wrong immediately by senior NT hubbers and fans. Experts and seniors like Mr. Raghavendran, Mr. Murali, Mr. Pammalar, Mr. Joe and other senior hubbers have repeatedly indicated to continue our journey in glorifying NT's deeds and performances, without worrying too much on such misrepresentations. Still, some of us continue to retaliate whenever NT's prowess in terms of acting and commercial performance are relegated, as we are not able to tolerate such misrepresentations and with a view to set things right, we continue to do the same.

No.2:- That only a few are getting acknowledged and showered praises when postings are made. All of us - NT fans - are sharing and posting either our own thoughts or postings on NT, WITHOUT EXPECTING ANYTHING IN RETURN BY APPRECIATION BECAUSE WHATEVER WE DO GIVE US PERSONAL SATISFACTION. However, when we do so, if our efforts are recognized and appreciated by others, it encourages one to do more. In fact, when I did my exhaustive postings recently, most of the seniors appreciated but; some of them are yet to acknowledge the same, which has not deterred my further postings. In fact, I have not covered anything new from whatever covered by our seniors and some stalwarts in their various books. Certain narrative language may only be my own. It doesn't mean that I have copied the same. It was my own writing. Still, the reproduction means ALL NT FANS THINK ALIKE. Mr. Joe (I am yet to correspond with him directly) for example is the senior most NT hubber, who has relentlessly pursued for years in this thread almost lonely and started getting accolades only late. But, still, he is continuing to give his postings here.

If you remember right, when you started your postings after a long gap, most of the Seniors acknowledged your re-entry.

All of us are sharing our thoughts and performances of NT and get immense satisfaction in doing so. I therefore humbly request you to continue your postings and make every one enjoy your postings thereby enjoying yourself too.

May I request you to continue your postings,

Regards,

R. Parthasarathy

mr_karthik
18th May 2011, 01:37 PM
-- Removed --

RAGHAVENDRA
18th May 2011, 04:00 PM
அன்பு நண்பர்களுக்கு,
எந்த வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் வெறும் வாழ்த்து செய்தி பதிவிட்டதற்கு இந்த அளவிற்கு பெரிய பிரச்சினை ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் பல முறை சொல்லிய படி எனக்கென்று தனிப்பட்ட சார்பு எதுவும் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய ஒரே சார்பு நடிகர் திலகம் மட்டும் தான். என்னுடைய ஒரே தலைவர் நடிகர் திலகம் மட்டும் தான். நடிகர் திலகத்தைப் பற்றிய திரியில் அவர் வாழ்வில் ரசிகர் என்ற முறையில் நாம் சந்தித்த அல்லது கேள்விப் பட்ட தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்வதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவருடைய இயக்கமே அவருடைய முதுகில் குத்திய போது அவருடைய ரசிகர்கள் உள்ளம் நோகாமல் இருந்திருக்க முடியாது. அதே போல் அவருடைய வாழ்வில் பல விதமான ஏளனங்கள், ஏச்சுக்கள், கேலிகள் அத்தனையும் தாண்டி எதிர் கொண்டு தான் அவர் வளர்ந்திருக்கிறார். அரசியலில் தூய்மையான வராக நடந்து நிரூபித்திருக்கிறார். அவர் சந்தித்த பிரச்சினைகளை இங்கு சொல்லாமல் வேறு எங்கு சொல்வது. நடிகர் திலகமும் அரசியலும் பிரிக்க முடியாதவை. அவர் ஒரு தேச பக்தராக நடித்தது மட்டுமன்றி வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். இளைஞர்களையும் மக்களையும் நல்வழியில் திருப்ப உழைத்திருக்கிறார். இவையெல்லாம் தவறா. அல்லது இவற்றைப் பற்றிப் பேசக் கூடாதா. அவரை பல இயக்கத்தினரும் தான் ஏசியிருக்கிறார்கள். கலை உலகில் பலர் அவரை ஏசியிருக்கிறார்கள். பின்னர் அவருடன் பணியாற்றியிருக்கிறார்கள். சினிமாவை வெறும் பணத்திற்கான இயந்திரமாக அவர் பயன் படுத்த வில்லை. இந்த நாட்டின் தேச பக்தி, விடுதலைப் போராட்டம் போன்ற பல நல் விஷயங்களைப் பற்றிப் போதித்திருக்கிறார். அப்படி தன்னுடைய அரசியலை இந்த நாட்டிற்காக பயன் படுத்திய அந்த மகானின் நாட்டுப் பற்றையும் மேன்மையையும் அவர் சந்தித்த பிரச்சினைகளையும் விவாதிக்கக் கூடாதென்றால்,
வருத்தத்துடன் நானும் இந்தத் திரியிலிருந்து விடைபெற வேண்டிய மன நிலைக்குத் தான் ஆளாக வேண்டியிருக்கும்.
இவர் அவர் என்று பாராமல் நடிகர் திலகத்திற்கு மேன்மை செய்யும் யாராயிருந்தாலும் பாராட்டுவதும் அவருடைய புகழுக்கு மாசு கற்பிக்கும் நிலை வரும் போது எதிர்புக்குரல் கொடுப்பதும் என்னுடைய கடமையாக நான் எண்ணுகிறேன்.
மீண்டும் சொல்கிறேன். நடிகர் திலகம் மட்டும் தான் என்னுடைய ஒரே தலைவர்.

அன்புடன்

saradhaa_sn
18th May 2011, 05:24 PM
இங்கே என்ன நடந்துக்கிட்டு இருக்கு இப்போ?.

என்னமோ டி.வி.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதிரி ஆளாளுக்கு நன்றி சொல்லி விடைபெற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்?.

முதலில் அவங்கவங்க சர்ச்சைக்குரிய போஸ்ட்களை வாபஸ் வாங்குங்க, எல்லாம் சரியாயிடும்.

abkhlabhi
18th May 2011, 06:12 PM
Dear Raghavendra sir, Dhanus, Karthik, Joe and all NT Fans,

யாருடைய கண் திருழ்டி பட்டதோ ? நடிகர் திலகம் அரசியலக்கு பதவிக்காக / பணத்துக்காக வரவில்லை. பராசக்தி காலத்திருந்தே அரசியலில் இருந்தவர். அவரை பற்றி பேசும் பொது, நடிப்பை பற்றி மட்டும் அல்ல, அரசியலும் கூடவே வரும். தவிர்க்க முடியாதது.

நாம் என்ன கூட்டணியா வைத்துகொண்டு இருக்கிறோம். குறை கூறினால் விலகி செல்ல ? நாம் அவருடைய ரசிகர்கள். ராகவேந்திர சார் , கார்த்திக், எழுதியது எல்லாம் அவர்ளுடைய தனி பட்ட கருத்துகள்.

I too have my opinion, JJ is one of the reason for NT deatlh. I STILL STAND ON THIS AND BELIEVE.

இதை பெரிது படுத்த வேண்டாம். இந்த திரியில் இருந்து விலகி செல்லவும் வேண்டாம்.

மீண்டும் உங்களுடைய பணி தொடருட்டும் .

Mr.Raghavendra sir, I met you and spoke only few minitues at Shanti last month. I hope you will not leave and should not . Your valuable service is needed not only NT Website but here also.

Mr.Dhanus, you have done a wonderful job in this thread.

Hope you reconsider your decision and back and YOU SHOULD

I HOPE AND WISH NO ONE SHOULD LEAVE FROM THIS THREAD AT ANY COST.

abkhlabhi

joe
18th May 2011, 06:18 PM
முதலில் அவங்கவங்க சர்ச்சைக்குரிய போஸ்ட்களை வாபஸ் வாங்குங்க,
என் பங்குக்கு நான் முதலில் செய்கிறேன்.

mr_karthik
18th May 2011, 07:38 PM
என் பங்குக்கு நான் முதலில் செய்கிறேன்.

நானும் நீக்கிவிட்டேன்.

RAGHAVENDRA
19th May 2011, 03:04 AM
அன்பு நண்பர்களே,
என் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்புக்கு என் உளமார்ந்த நன்றிகள். இங்கே நடந்தவை கருத்துப் பரிமாற்றம் தான். கார்த்திக் அவர்கள் தன்னுடைய பதிவினை நீக்கிய போதே நான் அவரிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தேன். வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கும் பதிவுகளை நீக்குவதில் எனக்கு உடன் பாடில்லை. என்னுடைய பதிவில் நான் யாரையும் குற்றம் சொன்னதாகவோ அல்லது சார்பாக பாராட்டியதாகவோ நான் எண்ணவில்லை. அவற்றில் எந்த சர்ச்சையும் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாக நான் கருதவில்லை. அப்படி மாடரேட்டர்கள் கருதினால் அவர்கள் தாராளமாக என் பதிவினை நீக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.
இதற்கு மேலும் என் நன்றி கூறும் பதிவினை நீக்கும் வகையில் எந்தத் தவறும் செய்ததாக எனக்கு தோன்றவில்லை.
அதே போல் இனியும் இத்திரியில் தொடரும் மனம் எனக்கு வரும் என எனக்குத் தோன்றவில்லை.
முடிக்கும் முன் ஒரு சில செய்திகளை மட்டும் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
இது எப்போதோ நடந்த நிகழ்ச்சியல்ல. தற்போதைய சூழ்நிலையில் நடந்தது. என் காது பட சமீபத்தில் தோல்வியுற்ற ஒரு இயக்கத்தினைச் சார்ந்த சிலர் ஒரு பேருந்தில் பேசிக் கொண்டது. அவர்களுடைய இக்கருத்து பரவலாக அவர்கள் இயக்கத்தில் உள்ள அனைவரும் கருதுவதாக அவர்களே பேசிக் கொணடது.

தலைவர் சிவாஜி சிலை எப்போது திறந்து வைத்தாரோ, பிரச்சினை மேல் பிரச்சினை ஆரம்பிச்சுடுச்சப்பா. அந்த ஆளு தான் ராசியில்லாதவராச்சே, இவர் ஏன் அவரைக் கட்டிக் கொண்டு அழுகிறார். இனிமேலும் தலைவர் சிவாஜி பத்தி பேசினா அவ்வளவுதான்
இது ஒருவரின் கூற்று. இதற்கு மற்றவர் கூறியது அதைவிட மனம் நோகச் செய்வதாகும்.

ஆமாம்பா, இன்னொரு தடவை இவரு சிவாஜி பத்தி பேசினா, நான் கட்சியிலேயே இருக்கமாட்டேன். அந்தாளுடைய ராசி நம் எல்லோருக்கும் பிரச்சினையை உண்டாக்கி விடும். இதை நான மட்டும் சொல்ல வில்லை என்னிடம் பேசிய மத்த மாவட்டக் காரர்களும் இதையே தான் சொன்னார்கள்.

நான் மேலே குறிப்பிட்டவை நாகரீகமான வார்த்தைகள். அவர்கள் பயன் படுத்திய வார்த்தைகளை இங்கே குறிப்பிட முடியாது. இந்தப் பகுத்தறிவாளர்கள் தான் நம் நடிகர் திலகத்தை ராசியில்லாதவர் என்று அந்தக் காலத்திலிருந்து இன்று வரை சொல்லிக் கொண்டிருப்பவர்கள். இவற்றையெல்லாம் இங்கே சொல்ல வேண்டும் என நான் விரும்பியதில்லை. ஆனால் என்னை ஒரு சார்பானவன்,பிரச்சாரம் செய்பவன் என்று கூறுபவர்களுக்கு நடைமுறையை சொல்ல ஆசைப்பட்டேன்.

எனவே நண்பர்களே, நடிகர் திலகத்தின் தேர்தல் வெற்றி தோல்வி எப்படி யிருந்தாலும் அப்பழுக்கற்ற மனிதராக அவர் கடைசி வரை வாழ்ந்தார். அவர் இறந்தாலும் அவரை மட்டுமே நான் தலைவராக ஏற்றுக் கொண்டு இறக்கும் வரை நான் அவருடைய தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கம் எனக்கும் இல்லை. எனவே நான் இங்கே அவருடைய அரசியலைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. அதைப் பற்றி விவாதித்தால் பலருக்கு கோபம் வருகிறது.
இந்த சூழ்நிலையில் இதற்கு மேலும் தொடர என் உள்மனம் அனுமதிக்க மறுக்கிறது.
தங்கள் அனைவருடைய அன்பிற்கும் என் உளமார்ந்த நன்றி.
ராகவேந்திரன்

mr_karthik
19th May 2011, 11:41 AM
ராகவேந்தர் சார்,

நீங்கள் மீண்டும் மீண்டும் விலகிச்செல்லும் முடிவில் பிடிவாதமாக இருப்பது வருத்தமளிக்கிறது. இந்த திரியில் இவ்வளவு ஒற்றுமையாக விவாதித்து வரும் இவர்களுக்கிடையே எப்போது பிரச்சினை வரும், அதைப்பார்த்து கைகொட்டி சிரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருப்போருக்கு உங்கள் முடிவு கொண்டாட்டமளிப்பதாக அமைந்து விடும்.

நடிகர்திலகத்தின் அரசியல் ஈடுபாட்டையும், அதில் அவருக்கு நேர்ந்த தொல்லைகளையும் பற்றி விவாதிக்க யாருக்கும் இங்கு கருத்து வேறுபாடு இல்லை. ஏற்கெனவே விவாதித்துக் கொண்டுதானிருக்கிறோம். குறிப்பாக அதில் முரளி சார் அவர்களுடைய பங்களிப்பு அபாரமானது. அது இங்கே தொடருவதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த திரியில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மூலமாகத்தான், நடிகர்திலகத்தைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டிருந்த சிலரின் மனதில் தெளிவு ஏற்பட்டிருக்கிறது. அப்படியிருக்க அதை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.

தற்போது மேடம் ஜெயலலிதா அவர்கள் முதல்வரானதற்கு தாங்கள் வாழ்த்துச்சொல்லியதிலும் எந்த தவறும் இல்லை.

ஆனால் நடிகர்திலகத்தைக் குறை சொல்வதில், அவர் ஓடி ஓடி உழைத்த காங்கிரஸ் கட்சி உள்பட, எந்த இயக்கத்தினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை. 1996-ல் சட்டமன்ற தேர்தலில், தன் தோழி குடும்ப அடாவடியால் ஒரு கட்சி படுதோல்வி அடைந்து 4 இடங்களை மட்டுமே பெற்றபோது, வளர்ப்பு மகன், மகாமகம் என்று எவ்வளவோ காரணங்கள் இருக்க, அக்கட்சியினர் அப்பாவியான நடிகர்திலகத்தைக் குறிப்பிட்டு, 'போயும் போயும் அந்த ஆள் கூட அம்மா சம்பந்தம் வச்சுக்கிட்டாங்க. அவருடைய தரித்திரம் அம்மாவையும் பிடித்து ஆட்டுது' என்று பேசினார்கள். இது அப்போது ஆனந்த விகடனிலும் வந்தது.

மேடம் ஜெயலலிதாவுக்கு தாங்கள் வாழ்த்துச்சொன்னது போல, நடிகர்திலகத்துக்கு சென்னை கடற்கரையில், பல இடற்பாடுகளைக் கடந்து சிலையெடுத்த கலைஞருக்கு, அவர் பதவியை விட்டு நீங்கிச்செல்லும் நேரத்தில் நன்றி சொல்வது தவறில்லை என்று என் நன்றிக்கடிதத்தைப் பதிந்தேன். அதன்பின்னர்தான் சில நண்பர்கள் எனக்கு தனிமடல் அனுப்பி, 'கருணாநிதியைப் பற்றி நடிகர்திலகத்தின் திரியில் குறிப்பிட்டால், இதுதான் சாக்கு என்று கருணாநிதியைக்குறை சொல்வதற்கென்றே அலையும் ஒரு கூட்டம் இங்கும் படையெடுத்து அவரைப்பற்றி பதிவுகள் இட்டு திரியைக் களங்கப்படுத்தக்கூடும். அவர்களுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல, கருணாநிதியையும் திட்டியது போல் ஆச்சு, நடிகர்திலகத்தையும் வம்புக்கிழுத்து அவர் திரியையும் களங்கப்படுத்தியது போல் ஆச்சு என்று மகிழ்ச்சியடைவார்கள். அவர்களுக்கு இடம் கொடுக்காதவண்ணம் உங்கள் பதிவை நீக்கிவிடுங்கள்' என்று தனி மடலில் சொன்னதற்கிணங்க என் பதிவை நீக்கி விட்டேன். நீக்கிய வரையில், பெரிய திசை மாற்றத்திலிருந்து திரியைக் காப்பாற்றி விட்டோம் என்ற நிம்மதியாக இருந்தது.

ஆகவேதான், நீங்கள் மீண்டும் அதை பதிவிடச்சொன்னபோதும் நான் பதியவில்லை. அதன் பின்னர் இங்கு நடந்த எந்த விவாதங்களுக்கும் நான் பொறுப்பல்ல என்பது திரியில் ப்ங்கேற்கும் அனைவருக்கும் தெரியும்.

தனுஷ் அவர்கள் மனக்குறை பட்டு எழுதிய பதிவுக்கு நான் எழுதிய பதில் கூட உங்களால் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டதை அறிந்து, அதையும் சாரதா அவர்களின் வேண்டுகோளை ஏற்று நீக்கி விட்டேன். சாரதா அவர்களின் சொல்லை ஏற்று 'ஜோ' அவர்களும் தன்னுடைய சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கி விட்டார். அதன்பின்னரும் நீங்கள் இந்த திரியை விட்டு நீங்கும் முடிவில் பிடிவாதமாக இருந்தால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...

தாங்கள் (ராகவேந்தர் சார்) மற்றும் திருவாளர்கள் பம்மலார், முரளி சீனிவாஸ், ஜோ, சாரதா, பார்த்தசாரதி, தனுஷ், ராகேஷ், பாலா, சதீஷ், செந்தில், மகேஷ் போன்றோர் இத்திரியை முன்னெடுத்த்ச்செல்லும் ஜாம்பவான்கள். நான் எப்போதாவது வந்து எட்டிப்பார்ப்பவன். என் பொருட்டு இங்கு ஒரு பிரளயம் ஏற்பட்டு, அதன் காரணமாக திரியின் முக்கிய பங்களிப்பாளர்கள் விலகிச்செல்ல முடிவெடுப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

ஆகவே தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்து, இத்திரியில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது விலகல் அதற்கு வகை செய்யுமானால் இங்கிருந்து விலகிக்கொள்ளுகிறேன்.

rsubras
19th May 2011, 12:15 PM
a small suggestion..... Why cant this thread be devoted one and only to the film / acting related aspects of NT and political and general discussions on NT be moved to a seperate new thread? that way this thread will continue to live upto the high standards that it has set for itself by the honourable contributors to this thread

parthasarathy
19th May 2011, 01:23 PM
அன்புள்ள திரு. ராகவேந்தர் மற்றும் திரு. கார்த்திக் அவர்களுக்கு,

நான் இந்த அற்புதமான திரியில் நுழைந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. மிகவும் நன்றாகப் போய்க் கொண்டிருந்த இந்தத் திரியில் ஒரு சிறிய தடுமாற்றம்.

நம் எல்லோரின் அன்புக்குரிய நடிகர் திலகமே சண்டை சச்சரவுகளை விரும்பாதவர் என்பது எல்லோருக்கும் தெரியும். கூடுமானவரை சுமுகமாகவே எல்லோருடனும் இருக்க வேண்டும் என்று விரும்பியவர். இருந்தாலும், அவர் மீது இன்னும் சிலர் புழுதி வாரித் தூற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்தத் திரி மட்டும் தான் கருத்துள்ள பல ஆரோக்கியமான விஷயங்களை சிறப்பாகத் தாங்கி வெற்றிகரமாக ஏழு திரி வரை போய்க் கொண்டிருக்கிறது. அதுவும், திரி துவங்கி கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நிறைந்து. அதற்கு காரணம் நடிகர் திலகத்தைப் பற்றி - அதாவது - அவரது நடிப்பாற்றலை, அவரது பல்வேறுபட்ட திறமைகளை - அவைகளைத் தாங்கி வெளிவந்த படங்களைப் பற்றி - மட்டும்தான் இந்த அளவுக்கு - ஏன் வரும் வருடங்களுக்கும் - வருடக்கணக்காகப் பேசி விவாதிக்க முடியும். அந்த அளவுக்கு அற்புதமான கலைஞர் அவர் என்பதால். அது மட்டுமல்ல - அவருக்கு வாய்த்த ரசிகர்கள் கூட்டம் மட்டும் தான் எத்தனை வருடங்கள் ஆனாலும் - யார் வந்தாலும் போனாலும் - அவர் ஒருவரையே கடைசி வரை தனக்குப் பிடித்த கலைஞராக ஏற்றுக்கொண்டது. அதனால் நாம் அனைவரும், ஏன் வரும் வருடங்களில் மேலும் பலரும் இதில் நுழைந்து கருத்துப் பரிமாற்றம் செய்ய முடியும் - செய்வார்கள்.

இப்படியிருக்க, உங்களைப் போன்ற சீனியர்களும் அனுபவஸ்தர்களும், இந்தத் திரியில் இருந்து விலகுவதாக சொல்வது தகாது. நம் அனைவருடைய நோக்கமும் ஒன்றே தான் - அதாவது நடிகர் திலகத்தைப் பற்றி போற்றி அந்த இனிய நினைவுகளில் மூழ்குவது - அதன் மூலமாக, அவரைப் பற்றியும் அவரது ஒப்புயர்வற்ற சாதனைகளைப் பற்றியும் இன்றைய மற்றும் நாளைய தலைமுறையினருக்கு சரியாக எடுத்துச் செல்வது.

அனைத்து நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக நானும் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தயை கூர்ந்து இந்தத் திரியில் இருந்து விலகாதீர்கள். உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பைப் பார்த்துவிட்டுத் தான் என்னைப்போன்றவர்கள் புதிதாக இந்த அற்புதமான திரியில் நுழைந்து கொண்டே இருக்கிறார்கள். நாம் அனைவரும் நம்முடைய வேலையை - நடிகர் திலகத்தைப் பற்றி சிலாகித்து இன்புறும் அந்தப் புனிதப்பணியை - தொடர்ந்து செய்வோம். இனியும், யாரும் சண்டையிடாமல், தொடர்ந்து நம்முடைய பங்களிப்பைத் தொடர்வோம். இது போன்ற திரியில் இருந்து விலகுகிறேன் போன்ற வார்த்தைகளைப் பேசாமல் இருப்போம்.

இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அவரது சொந்தக் கருத்தை தைரியமாகக் கூறலாம் என்றாலும், சில விஷயங்கள் சுமுகமாக நடைபெறுவதற்கு சர்ச்சைக்குரிய விஷயங்கள் வாதிடப்படாமல் இருப்பதே நல்லது. நானும் என்னுடைய பல கட்டுரைகளை எழுதும் போதும், இது போன்ற சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் தற்செயலாக இடம் பெறும் போது, கவனமாக அதை நீக்கி விட்டுத் தான் தொடர்கிறேன். சுவாரஸ்யத்தை விட சுமுகமான சூழ்நிலை தான் முக்கியம் என்பதற்காக. ஒரு வேளை நானும் கவனக்குறைவாக எழுதினால், தயை கூர்ந்து எல்லோரும் அதை பெரிது படுத்த வேண்டாம். மாறாக இடித்துரைத்து, என்னை சரி செய்யுங்கள். சரி செய்யப் படுவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறேன்.

கண்டிப்பாக என்னுடைய வேண்டுகோளை ஏற்று இன்றே நடிகர் திலகத்தைப் பற்றிய ஏதோ ஒரு நல்ல செய்தியையோ, கருத்தையோ எழுதி மீண்டும் தொடர்வீர்கள் என்ற மிகுந்த நம்பிக்கையுடன்,

திரு. தனுசு அவர்களுக்கு, நான் ஏற்கனவே உங்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்று, உங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்து பதிந்து, எல்லோரையும் இன்புறச் செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,

பார்த்தசாரதி

HARISH2619
19th May 2011, 02:35 PM
திரு தனுசு அவர்களே
தயவு செய்து தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டி கேட்டுகொள்கிறேன் .நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பெருமைப்படும்படியும் மற்றவர்கள் பொறாமை படும்படியும் அபாரமாக போய்கொண்டிருந்த இந்த திரி சில மனச்தாபத்தால் ஒரு பின்னடைவை சந்திப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா?
திரு ராகவேந்தர் சார்,
என்ன ஆயிற்று சார் உங்களுக்கு ?இந்த திரியின் தூணை போன்ற நீங்களா விலகி செல்வது ?பாசமலர் ராஜூ பாணியில் சொல்வதானால் "இந்த திரியில் உள்ள அத்தனை ஹப்பர்களும் விலகிவிட்டாலும் ஒருவர் மட்டும் ஓயாமல் இந்த திரியின் முன்னேற்றத்துக்காக உழைத்து கொண்டிருப்பார்,அவர்தான் நடிகர்திலகத்தின் ரசிகர்திலகம் ராகவேந்தர்" ,
என்று நாங்கள் நம்பிகொண்டிருக்கும் நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்கலாமா?
தயவு செய்து முடிவை கைவிடுங்கள்.

Mahesh_K
19th May 2011, 02:48 PM
ராகவேந்திரன் சார் ...நீங்கள் நடிகர் திலகம் என்ற கண்ணாடி ஒன்றை வைத்து, அதன் முலமே அரசியல் உலகைக் காண்பவர் என்பதைத் தவிர வேறு அரசியல் சார்பற்றவர் என்பது இந்த திரியைத் தொடர்ந்து படித்துவரும் எனக்குத தெரியும்.

இதற்க்கு சான்றாக சிலை திறப்பு விழா நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு மு.க. மீது செய்யப்பட்ட விமரிசனங்களைக் கண்டித்தும், அவரை ஆதரித்தும் நீங்கள்
இந்தத் திரியில் எழுதிய பல பதிவுகளே உள்ளன. ( அப்போதெல்லாம் நான் உங்களை தி.மு.க என்று நினைத்திருந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்) .

நடிகர் திலகத்தின் புகழ் பாட ஒரு வெப் சைட் நடத்திவரும் உங்களுக்கு நன்றி சொல்ல ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் கடமைப் பட்டுள்ளான். உங்களுடைய அனுபவம், எழுத்தாற்றல் போன்றவை நிச்சயம் இந்த திரிக்குத் தேவை. எங்களில் யாரும் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டி திருத்த வேண்டிய அளவுக்கு அனுபவம் உடைய நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்கக் கூடது.

உங்கள் மனம் புண்பட்டதற்கு எல்லோரின் சார்பாகவும் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தயவு செய்து தொடரவும்.

நமது நண்பர்களில் ஒரு சிலருக்கு சிறு வேண்டுகோள் . கருத்துக்களை பதில் கருத்துக்களால் எதிர் கொள்வதோடு நிறுத்தாமல், எழுதியவர் மீது தனி நபர் விமர்சனம் செய்வதை தயவு செய்து இந்தத் திரியில் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

gkrishna
19th May 2011, 04:02 PM
Dear ragavendra sir,

hope u remember me during thiruvarutselvar evening show sunday at shanti. Pls. continue your valuable contribution for our NT thread. since in our organisation firewall protection I am not able to contribute anything for the past 6 months. now I got permission from our system administrator to post this. while reading some of the articles felt very bad and wrote this. request all our fans to not to involve in any of political gains/loss

with lov

G.krishna

abkhlabhi
19th May 2011, 05:58 PM
Joke of the Day :
One more Tamil actor got national award. It seems all actors are better than NT He was unlucky not only for politicians and also for for Govt. Awards.

SHAME ON AWARDS.

The political parties don't believe in Gods or some other shakthis, and against Gods how can they believe this Lucky and unlucky. All these politicians and those who said , NT was / is an unlucky are hypocrites.

Long live NT Fame

SoftSword
19th May 2011, 06:03 PM
Joke of the Day :
One more Tamil actor got national award. It seems all actors are better than NT

Shame on Awards.

now only way the awards can wipe the shame out is by immediately announcing awards for all NT's past performances, or they should stop giving awards to anybody henceforth.
or every year they give awards u would call it a shame?

everyone knows that NT was not given his due of awards and it was a big mistake.
it has happened now and we need to move on.
as per NT's standards, its a shame to compare other actors here.

abkhlabhi
19th May 2011, 06:09 PM
I am not comparing. For his standard this is too too ........................................much . Yesterday wooden face got award. Today this actor and tomorrow who knows ? I may get an award.

SoftSword
19th May 2011, 06:20 PM
I am not comparing. For his standard this is too too ........................................much . Yesterday wooden face got award. Today this actor and tomorrow who knows ? I may get an award.

adhukku enna pannanumnu edhi paakkureenga.

abkhlabhi
19th May 2011, 06:26 PM
awards, rewards, recognition, etc should be given to deserved person. But we should not expect all these things in India. Don't ask me to suggest deserved person / actor. Since I stopped seeing movies long back. My limit is from MGR, NT, KH, RK, to Vijay .(in tamil) . After this very difficult for me to accept any one as an actor.

SoftSword
19th May 2011, 06:33 PM
oh ok. i agree, in India awards are not consitently given to the right persons.
but aadukalam is worth a watch. i suggest u to take a look if u find time... its not a regular run of the mill movies coming out nowadays.

J.Radhakrishnan
19th May 2011, 10:06 PM
திரு ராகவேந்தர் சார்,
உங்களை போல சீனியர்களின் பங்களிப்பு இந்த திரிக்கு அவசியம் தேவை!!! எனவே உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டு கொள்கிறேன்.

Murali Srinivas
20th May 2011, 01:03 AM
நடிகர் திலகத்தின் அன்பு பிள்ளைகளுக்குள் கருத்து வேற்றுமை வேண்டாமே! இந்த பரந்துப்பட்ட இணையத்தில் நடிகர் திலகத்தின் இந்த திரியைப் போன்ற ஒன்று, வேறு எந்த ஒரு நடிகருக்கும் இந்த அளவிற்கு சிறப்பாக, சுவையாய் இத்தனை தகவல்கள் அடங்கியதாய் இல்லை என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. இந்த திரியில் பங்களிப்பு செய்யாவிட்டாலும் கூட நமது ஹப்பில் பலரும் இந்த திரியின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதும் நாம் அறிவோம்.
ஆகவே அதை மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை.

ராகவேந்தர் சார் பற்றி நான் நன்கு அறிவேன். அது போல் கார்த்திக், ஜோ போன்றவர்களின் மனோ நிலையையும் நான் அறிவேன். ராகவேந்தர் சாரிடம் பேசினேன். அவர் மீண்டும் இங்கே தன் பதிவுகளை தொடர்வார். அது போல ஜோ, கார்த்திக் போன்றவர்களும் என் பேச்சுக்கு செவி மடுப்பார்கள் என நம்புகிறேன். அவர்களும் தங்கள் பங்களிப்பை தொடர்வார்கள் என அவர்கள் சார்பில் நான் சொல்லலாம் என நினைக்கிறேன்.

மீண்டும் அதே உத்வேகத்துடன் திரியை முன்னெடுத்து செல்ல அனைவரின் ஆதரவையும் வேண்டும்

அன்புடன்

joe
20th May 2011, 06:41 AM
ராகவேந்தர் சாரிடம் பேசினேன். அவர் மீண்டும் இங்கே தன் பதிவுகளை தொடர்வார்.

மிக்க மகிழ்ச்சி ..நன்றி சார் .

அது போல ஜோ, கார்த்திக் போன்றவர்களும் என் பேச்சுக்கு செவி மடுப்பார்கள் என நம்புகிறேன். அவர்களும் தங்கள் பங்களிப்பை தொடர்வார்கள் என அவர்கள் சார்பில் நான் சொல்லலாம் என நினைக்கிறேன்.

நிச்சயமாக . மிக்க நன்றி சார்.

rajeshkrv
20th May 2011, 07:31 AM
ok come on folks.. Let's get back to the discussions and topic..

goldstar
20th May 2011, 09:14 AM
Guys,

I wish to know what are forgien countries NT has visited. To my knowledge US, Europe, Asia Pacific (SG, ML, JP). I would like to know how was his experience in these trip and are there any interesting news we can know?

Cheers,
Sathish

parthasarathy
20th May 2011, 09:23 AM
நடிகர் திலகத்தின் அன்பு பிள்ளைகளுக்குள் கருத்து வேற்றுமை வேண்டாமே! இந்த பரந்துப்பட்ட இணையத்தில் நடிகர் திலகத்தின் இந்த திரியைப் போன்ற ஒன்று, வேறு எந்த ஒரு நடிகருக்கும் இந்த அளவிற்கு சிறப்பாக, சுவையாய் இத்தனை தகவல்கள் அடங்கியதாய் இல்லை என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. இந்த திரியில் பங்களிப்பு செய்யாவிட்டாலும் கூட நமது ஹப்பில் பலரும் இந்த திரியின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதும் நாம் அறிவோம்.
ஆகவே அதை மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை.

ராகவேந்தர் சார் பற்றி நான் நன்கு அறிவேன். அது போல் கார்த்திக், ஜோ போன்றவர்களின் மனோ நிலையையும் நான் அறிவேன். ராகவேந்தர் சாரிடம் பேசினேன். அவர் மீண்டும் இங்கே தன் பதிவுகளை தொடர்வார். அது போல ஜோ, கார்த்திக் போன்றவர்களும் என் பேச்சுக்கு செவி மடுப்பார்கள் என நம்புகிறேன். அவர்களும் தங்கள் பங்களிப்பை தொடர்வார்கள் என அவர்கள் சார்பில் நான் சொல்லலாம் என நினைக்கிறேன்.

மீண்டும் அதே உத்வேகத்துடன் திரியை முன்னெடுத்து செல்ல அனைவரின் ஆதரவையும் வேண்டும்

அன்புடன்

அன்புள்ள திரு. முரளி அவர்களே,

உங்களது பதிவினையும், அதற்கு திரு. ஜோ அவர்களின் மறு மொழியையும் பார்த்தபின் அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன்.

நெஞ்சார்ந்த நன்றி.

அன்புடன்,

பார்த்தசாரதி

mr_karthik
20th May 2011, 11:06 AM
அன்புள்ள முரளி சார்,
மிக்க நன்றி. ராகவேந்தர் சார் அவர்கள் இங்கிருந்து விலகிச்செல்ல நான் காரணமாக இருந்தால் (நிச்சயம் நான் காரணமல்ல, இருப்பினும் அப்படி அவர் எண்ணினால்) நான் விலகிக்கொள்கிறேன் என்றும், அவரைப்போன்ற திறமையாளர்களின் பங்களிப்பு இங்கே அவசியம் தொடர வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன்.

இப்போது ராகவேந்தர் சார் அவர்கள் இங்கே தொடர்ந்து தனது மேலான பங்களிப்பைத் தர இருக்கிறார் என்ற உங்கள் வாக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

நானும் இங்கே தொடருவேன் என்பதோடு முடிந்தவரையில் சர்ச்சைக்குரிய பதிவுகளைத் தவிர்க்க முயற்சிக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன்.

பாலா, பார்த்தசாரதி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

joe
20th May 2011, 11:57 AM
http://i52.tinypic.com/10e3gye.jpg

நன்றி : விகடன்

HARISH2619
20th May 2011, 12:27 PM
முரளி சார்,
பல கோடி நன்றிகள்

ஜோ சார்,கார்த்திக் சார்,
மிக்க மகிழ்ச்சி

தனுசு அவர்களே,
உங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

HARISH2619
20th May 2011, 01:25 PM
அன்பு நண்பர்களே,
என் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்புக்கு என் உளமார்ந்த நன்றிகள். இங்கே நடந்தவை கருத்துப் பரிமாற்றம் தான். கார்த்திக் அவர்கள் தன்னுடைய பதிவினை நீக்கிய போதே நான் அவரிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தேன். வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கும் பதிவுகளை நீக்குவதில் எனக்கு உடன் பாடில்லை. என்னுடைய பதிவில் நான் யாரையும் குற்றம் சொன்னதாகவோ அல்லது சார்பாக பாராட்டியதாகவோ நான் எண்ணவில்லை. அவற்றில் எந்த சர்ச்சையும் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளதாக நான் கருதவில்லை. அப்படி மாடரேட்டர்கள் கருதினால் அவர்கள் தாராளமாக என் பதிவினை நீக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.
இதற்கு மேலும் என் நன்றி கூறும் பதிவினை நீக்கும் வகையில் எந்தத் தவறும் செய்ததாக எனக்கு தோன்றவில்லை.
அதே போல் இனியும் இத்திரியில் தொடரும் மனம் எனக்கு வரும் என எனக்குத் தோன்றவில்லை.
முடிக்கும் முன் ஒரு சில செய்திகளை மட்டும் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
இது எப்போதோ நடந்த நிகழ்ச்சியல்ல. தற்போதைய சூழ்நிலையில் நடந்தது. என் காது பட சமீபத்தில் தோல்வியுற்ற ஒரு இயக்கத்தினைச் சார்ந்த சிலர் ஒரு பேருந்தில் பேசிக் கொண்டது. அவர்களுடைய இக்கருத்து பரவலாக அவர்கள் இயக்கத்தில் உள்ள அனைவரும் கருதுவதாக அவர்களே பேசிக் கொணடது.

இது ஒருவரின் கூற்று. இதற்கு மற்றவர் கூறியது அதைவிட மனம் நோகச் செய்வதாகும்.

நான் மேலே குறிப்பிட்டவை நாகரீகமான வார்த்தைகள். அவர்கள் பயன் படுத்திய வார்த்தைகளை இங்கே குறிப்பிட முடியாது. இந்தப் பகுத்தறிவாளர்கள் தான் நம் நடிகர் திலகத்தை ராசியில்லாதவர் என்று அந்தக் காலத்திலிருந்து இன்று வரை சொல்லிக் கொண்டிருப்பவர்கள். இவற்றையெல்லாம் இங்கே சொல்ல வேண்டும் என நான் விரும்பியதில்லை. ஆனால் என்னை ஒரு சார்பானவன்,பிரச்சாரம் செய்பவன் என்று கூறுபவர்களுக்கு நடைமுறையை சொல்ல ஆசைப்பட்டேன்.

எனவே நண்பர்களே, நடிகர் திலகத்தின் தேர்தல் வெற்றி தோல்வி எப்படி யிருந்தாலும் அப்பழுக்கற்ற மனிதராக அவர் கடைசி வரை வாழ்ந்தார். அவர் இறந்தாலும் அவரை மட்டுமே நான் தலைவராக ஏற்றுக் கொண்டு இறக்கும் வரை நான் அவருடைய தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கம் எனக்கும் இல்லை. எனவே நான் இங்கே அவருடைய அரசியலைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. அதைப் பற்றி விவாதித்தால் பலருக்கு கோபம் வருகிறது.
இந்த சூழ்நிலையில் இதற்கு மேலும் தொடர என் உள்மனம் அனுமதிக்க மறுக்கிறது.
தங்கள் அனைவருடைய அன்பிற்கும் என் உளமார்ந்த நன்றி.
ராகவேந்திரன்
திரு ராகவேந்தர் சார்,
யாரோ சிலர் பேருந்தில் நடிகர்திலகத்தை பற்றி பேசியதற்காக தாங்கள் எதற்கு வேதனைப்படவேண்டும்? அப்படி பார்த்தால் வான்புகழ் கொண்ட வள்ளுவருக்கு வான் உயர சிலையை 2000 ம் ஆண்டு கன்னியாகுமரியில் கலைஞர் அமைத்தார்.ஆனால் 2001 ல் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார் அதற்காக வள்ளுவரை ராசி இல்லாதவர் என்றா சொல்ல முடியும் ?

groucho070
20th May 2011, 01:57 PM
Nice pix, Joe, thanks. Can imagine NT thinking, "mirugatta tedi tuppakiyila suttukittiruntha naan, Ippo kaila oru kuchiya koduttu oru sinna panthu pinnala ooda sollurangalam!"

Plum
20th May 2011, 02:46 PM
ada yennappA ALALukku nAn kayaNdukkaREn nAn kayaNdukkaREnnuttu.
Each of you has a role to play in this thread. adhai correctA paNNUnga.
Mr Karthik - indha threadla Devika Rasigar mandram representative nInga dhAn enbadhai ninaivil koNdu resignation vApas vAngai oLungu mariyAdhaiyA namadhu thalaiviyin siRappugaLai(obviously in NT Movies) thodarndhu eduthuaikkumARu, agila ulaga Devika rasigar mandram sArbAga kEttu koLLavillai - kattaLai idugiROm :)

groucho070
20th May 2011, 03:17 PM
ada yennappA ALALukku nAn kayaNdukkaREn nAn kayaNdukkaREnnuttu.
Each of you has a role to play in this thread. adhai correctA paNNUnga.
Mr Karthik - indha threadla Devika Rasigar mandram representative nInga dhAn enbadhai ninaivil koNdu resignation vApas vAngai oLungu mariyAdhaiyA namadhu thalaiviyin siRappugaLai(obviously in NT Movies) thodarndhu eduthuaikkumARu, agila ulaga Devika rasigar mandram sArbAga kEttu koLLavillai - kattaLai idugiROm :)+1 I yam youth time ambi chechi fan only.

Mahesh_K
20th May 2011, 05:09 PM
+1 I yam youth time ambi chechi fan only.

Yaarunga athu?

KCSHEKAR
20th May 2011, 05:38 PM
நடிகர் திலகத்தின் அன்பு பிள்ளைகளுக்குள் கருத்து வேற்றுமை வேண்டாமே! இந்த பரந்துப்பட்ட இணையத்தில் நடிகர் திலகத்தின் இந்த திரியைப் போன்ற ஒன்று, வேறு எந்த ஒரு நடிகருக்கும் இந்த அளவிற்கு சிறப்பாக, சுவையாய் இத்தனை தகவல்கள் அடங்கியதாய் இல்லை என்பது அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. இந்த திரியில் பங்களிப்பு செய்யாவிட்டாலும் கூட நமது ஹப்பில் பலரும் இந்த திரியின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதும் நாம் அறிவோம்.
ஆகவே அதை மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை.

ராகவேந்தர் சார் பற்றி நான் நன்கு அறிவேன். அது போல் கார்த்திக், ஜோ போன்றவர்களின் மனோ நிலையையும் நான் அறிவேன். ராகவேந்தர் சாரிடம் பேசினேன். அவர் மீண்டும் இங்கே தன் பதிவுகளை தொடர்வார். அது போல ஜோ, கார்த்திக் போன்றவர்களும் என் பேச்சுக்கு செவி மடுப்பார்கள் என நம்புகிறேன். அவர்களும் தங்கள் பங்களிப்பை தொடர்வார்கள் என அவர்கள் சார்பில் நான் சொல்லலாம் என நினைக்கிறேன்.

மீண்டும் அதே உத்வேகத்துடன் திரியை முன்னெடுத்து செல்ல அனைவரின் ஆதரவையும் வேண்டும்

அன்புடன்

Thank you Mr.Murali for your effort. I also agree with your words on that. All NT fans are expecting more and discussions on Nadigarthilagam films in this thread.

pammalar
20th May 2011, 05:45 PM
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் : 7

"ஒண்ணா இருக்க கத்துக்கணும்"

http://www.youtube.com/watch?v=mwWvFMzpimU

நடிப்பு : நடிகர் திலகம், தேவிகா, பாலாஜி, மணிமாலா, நாகேஷ், மனோரமா மற்றும் பலர்

பின்னணிக் குரல் : பாடகர் திலகம் டி.எம்.எஸ்.

இசை : இசை மன்னர் ஆர்.சுதர்சனம்

படைப்பு : காவியக்கவிஞர் வரகவி வாலி

திரைக்காவியம் : அன்புக்கரங்கள்(1965)

பாடல் வரிகள்:

ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தைப் பாருங்க
அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க (ஒண்ணா)

வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்
அந்த நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா
அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா (ஒண்ணா)

தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதைப் புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை (ஒண்ணா)

கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம்
வானில் கூடிவரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்றுவரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நாம் நேர்வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம் (ஒண்ணா)

அன்புடன்,
ராகவேந்திரன்
மற்றும்
பம்மலார்.

KCSHEKAR
20th May 2011, 05:50 PM
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் : 7

"ஒண்ணா இருக்க கத்துக்கணும்"

Good - timely posted, Thanks to Pammalar

Avadi to America
20th May 2011, 07:30 PM
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் : 7

"ஒண்ணா இருக்க கத்துக்கணும்"

http://www.youtube.com/watch?v=mwWvFMzpimU

நடிப்பு : நடிகர் திலகம், தேவிகா, பாலாஜி, மணிமாலா, நாகேஷ், மனோரமா மற்றும் பலர்

பின்னணிக் குரல் : பாடகர் திலகம் டி.எம்.எஸ்.

இசை : இசை மன்னர் ஆர்.சுதர்சனம்

படைப்பு : காவியக்கவிஞர் வரகவி வாலி

திரைக்காவியம் : அன்புக்கரங்கள்(1965)

பாடல் வரிகள்:

ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தைப் பாருங்க
அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க (ஒண்ணா)

வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்
அந்த நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா
அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா (ஒண்ணா)

தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதைப் புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை (ஒண்ணா)

கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம்
வானில் கூடிவரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்றுவரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நாம் நேர்வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம் (ஒண்ணா)

அன்புடன்,
ராகவேந்திரன்
மற்றும்
பம்மலார்.

My mom used to sing this song all the time when we were kid... probably she used as lullaby...

Murali Srinivas
20th May 2011, 11:01 PM
எனக்கு நன்றி சொன்ன அனைவருக்கும்,

உண்மையில் நன்றிக்கு உரியவர்கள் என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ராகவேந்தர் சாரும் நேரில் பேசாவிட்டாலும் இந்த திரியின் மூலமாக நான் வைத்த வேண்டுகோளை ஏற்ற ஜோவும் கார்த்திக்கும்தான்.

ஜோ,

இந்த வார விகடனில் பாசமலரின் பொன் விழாவைப் பற்றிய செய்தியும் படமும் வெளியாகி இருக்கிறது. அது போல மதன் பதில்களில் நடிகர் திலகத்தின் ராஜா பட ஸ்டில்லும் வந்திருக்கிறது. அதையும் இங்கே பதிவேற்றுங்கள்.

அன்புடன்

joe
20th May 2011, 11:47 PM
ஸ்டைல் சக்கரவர்த்தி

http://i52.tinypic.com/2vxribt.jpg

நன்றி :விகடன்

joe
20th May 2011, 11:54 PM
முரளிசார்,
பாசமலர் பற்றிய செய்தி எந்த பகுதியில் வந்திருக்கிறது ?

RC
21st May 2011, 02:09 AM
289
'பாசமலர்’ படத்துக்கு இது பொன் விழா ஆண்டு. 1961-ன் மே மாத இறுதியில் வெளியான இப்படம் ஆறு மாதங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலில் சாதனை புரிந்தது. படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் மலரும் நினைவுகளை நண்பர்களுடன் பரிமாறி ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டு இருக்கிறார். வாடாத மலர்!

நன்றி :விகடன்

RAGHAVENDRA
21st May 2011, 04:16 AM
அனைத்து நண்பர்களுக்கும் அன்பு வணக்கங்கள் - ஜோ, கார்த்திக் உள்பட.
சதீஷ் சார், பார்த்த சாரதி சார், முரளி சார், பம்மலார், மற்றும் இத்திரியின் வாயிலாக வேண்டுகோள் விடுத்த நண்பர்களுக்கும் அவர்களுடைய உளமார்ந்த அன்புக்கும் நன்றி. ஹப்பாடா தொலைந்தான் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவர்களுக்கு திரும்பவும் தொல்லை ஆரம்பித்து விட்டது என்றும் கூறிக்கொள்கிறேன் ...ஹ...ஹ...ஹா...

தவிர்க்க முடியாத விஷயத்தைக் கூற விழைகிறேன்.

இங்கே எப்படி கடும் எதிர்ப்பை மீறியும் அவற்றை எதிர்கொண்டும் நடிகர் திலகத்தின் சிலையை கலைஞர் நிறுவினாரோ அதே போல் புதுவையில் ரங்கசாமி அவர்களும் கடும் எதிர்ப்பை சந்தித்து தான் நடிகர் திலகத்தின் சிலையை அமைத்துள்ளார். அங்கிருந்த காங்கிரஸ் பிரமுகர்கள் வழக்கு தொடரவில்லை. அது ஒன்று தான் வித்தியாசம். அப்படி சிலையை நிறுவிவிட்டு ஒரு சந்தர்ப்பத்தில் சென்னை வந்து அன்னை இல்லத்தில் நடிகர் திலகத்தின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். அப்போது நடிகர் திலகம் எப்போதும் அமர்ந்து உணவருந்தும் இருக்கை அவருக்கு அளிக்கப் பட்டுள்ளது. அதற்கு அவர் மிகவும் மனம் நெகிழ்ந்து, முதலில் தான் ஒரு தீவிர சிவாஜி ரசிகர் மட்டுமல்ல, அவரைத் தலைவனாக ஏற்றவன், என் தலைவருடைய இருக்கையை எனக்களித்து என்னை பெருமிதப் படுத்திவிட்டீர்கள் என்று கூறி உணர்வுடன் நன்றி கூறியிருக்கிறார்.
அப்படிப்பட்டவரைத்தான் பாராட்டியும் வாழ்தது தெரிவித்தும் பதிவிடப்பட்டது.
சகோதரி ஜெயலலிதா அவர்களைப் பொறுத்த வரையில் இனிமேல் நல்லபடியாக ஆட்சி புரியட்டும் என்கிற நல்லெண்ணத்தில் தான் நாம் வாழ்த்தினோம். அது வரை திரையுலகில் வெறும் அழகு பொம்மையாக சித்தரிக்கப் பட்டிருந்த தாம் நடிகர் திலகத்துடன் நடிக்கத் தொடங்கிய பின்னர் தான் தாம் ஒரு நடிகை என்பதை உணரத் தொடங்கினேன் என்ற தன் எண்ணத்தை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அப்படிப் பட்டவர் மீண்டும் நல்ல நிலைக்கு வரும் போது வாழ்த்துவதில் தவறேது.
அது மட்டுமன்றி நடிகர் திலகம் தன் குடும்ப வாழ்க்கையில் சந்தித்த பிரச்னைகளுக்கு அவர் மட்டுமே முழு காரணமாக கூற முடியாது என்றாலும் அவரும் ஒரு காரணாக இருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. என்னுடைய சிற்றறிவிற்கு எட்டியவரை தன்னுடைய வாழ்நாளில் இது வரை நடிகர் திலகத்தை அவர் விமர்சித்ததில்லை என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் தான் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டது. அது மட்டுமல்ல, நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பலர் இன்று சட்ட மன்றத்திற்கு தேர்வாகியுள்ளனர் என்று ஒரு தகவலும் பரவலாக பேசப் படுகிறது. அது உண்மையாயின் அதுவும் நமக்கு மிகுந்த மகிழ்வூட்டும்.
மற்ற படி எந்த ஆட்சியாளரானாலும் மக்களின் விருப்பம் உள்ள வரைதான் தொடர முடியும் என்பதை மற்ற மாநிலங்களை விட தமிழக மக்கள் பல முறை நிரூபித்திருக்கிறார்கள். இன்றைக்கு தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி நாளைக்கே ஜெயலலிதா அவர்களுக்கு ஏற்படாது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை. அவருடைய ஆட்சி முறையைப் பொறுத்தே அவருடைய வெற்றி தோல்வி அமையும். இதற்கு 1996 ஒரு உதாரணம்.

நம்மைப் பொறுத்த வரை நாம் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இனிமேல் அவர் நல்லாட்சி புரியட்டும் என்கிற எதிர்பார்ப்போடு வாழ்த்தியுள்ளோம்.

இதுவும் நமக்கு நடிகர் திலகத்தின் பாடல் கொடுத்த எண்ண ஓட்டம் தான். அது என்ன. நீங்களே பாருங்கள், கேளுங்கள்..

http://www.youtube.com/watch?v=9YiNDzAL3P4

அனைவருக்கும் அடியேனின் உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
தொடர்ந்து தங்கள் அன்பையும் வன்மையான கண்டனங்களையும் எதிர்நோக்கும்,
ராகவேந்திரன்

joe
21st May 2011, 08:24 AM
ராகவேந்திரா ஐயா,
பெருந்தன்மையோடு மீண்டும் வந்து எங்களை பெருமைப்படுத்தியமைக்கு நன்றி.

நானும் ஒரே ஒரு விடயத்தை தெளிவு படுத்த விளைகிறேன் . என்னைப்பொறுத்தவரை நீங்கள் புதிய முதல்வரை வாழ்த்தியது பற்றி எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது . யாராயிருந்தாலும் வாழ்த்துவது நமது மரபு .. புதிய முதல்வராயிருக்கும் ஜெயலலிதா அம்மையாரை வாழ்த்துவது அவசியமானதும் கூட ..நான் உங்களோடு கருத்து மாறுபட்டது தேர்தலுக்கு முன் நடந்த வேறு விடயத்துக்காக மட்டுமே என தெளிவுபடுத்த விரும்புகிறேன் . நீங்கள் நடிகர் திலகத்தின் ரசிகர் மட்டுமல்ல , தொண்டரும் கூட ..நானோ சாதாரண ரசிகன் மட்டுமே ..அம்மட்டில் இனிமேல் நடிகர் திலகத்தின் ரசிகனாக மட்டுமே இங்கு என் கருத்துக்கள் பதியப்படும் என்ற உறுதிப்பாட்டை அளிக்கிறேன் . மீண்டும் நீங்கள் பெருந்தன்மையோடு திரும்பி வந்தமைக்கு நன்றி.

abkhlabhi
21st May 2011, 09:06 AM
Well come back ragahvendra sir, joe, karthik,

உங்கள் சேவை இங்கு அவசியம் தேவை.

RAGHAVENDRA
21st May 2011, 02:28 PM
வரவேற்று பதிவிட்ட ஜோ அவர்களுக்கும் பாலகிருட்டிணன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

சென்னையில் உள்ள ருஷ்ய தூதரகம் ஏற்பாடு செய்துள்ள ஓர் நிகழ்ச்சியில் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 66வது ஆண்டு மற்றும் இந்திய விடுதலையின் 64வது ஆண்டு விழாக்கள் கொண்டாடப் பட உள்ளன. விழாவில் ருஷ்ய மற்றும் இந்திய திரைப்பட விழா நிகழ உள்ளது. 25 மற்றும் 26 மே, 2011 தேதிகளில் சென்னையில் உள்ள ருஷ்ய கலாச்சார மய்யத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முதல் நாள் நிகழ்ச்சியில் ருஷ்ய தூதரக அதிகாரி அவர்களும் அன்புச் சகோதரர் திரு ராம்குமார் கணேசன் அவர்களும் பங்கேற்க உள்ளனர். லிபரேஷன் என்ற ருஷ்யப் படம் அன்று திரையிடப் படுகிறது. மறுநாள் 26.05.2011 மாலையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் சினிமாவின் பங்கு, நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் வாயிலாக என்ற தலைப்பில் நமது நடிகர் திலகம் இணையதளம் சார்பில் அவருடைய படங்களிலிருந்து காட்சிகள் இடம் பெறுகின்றன. விழாவின் அழைப்பிதழ் ஆங்கிலத்தில் கீழே தரப்படுகிறது. ஆர்வமுள்ள அனைத்து ரசிகர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Decorated%20images/ProgMay2011FFW.jpg

அன்புடன்

mr_karthik
21st May 2011, 07:18 PM
ராகவேந்தர் சார்,

சென்னை ருஷ்ய கலாச்சார கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள விழாவில் தங்கள் பங்களிப்பும் சிறப்பாக இடம்பெறுவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

சென்னையில் இருந்த காலத்தில் இதுபோன்ற விழாக்கள் எதையும் தவற விட்டதில்லை. ஆனால் இப்போது சென்னையை மட்டுமல்ல, அங்கு நடைபெறும், நடிகர் திலகத்தின் புகழ் பாடும் இதுபோன்ற விழாக்களையும் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.

விழா சிறக்க வாழ்த்துக்கள்.

pammalar
21st May 2011, 08:10 PM
உலக நடிகர் திலகத்துடன் பாரதப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Rajiv1a.jpg

இன்று 21.5.2011 முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 20வது ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
21st May 2011, 08:25 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தொடர்ந்து தூள் கிளப்புங்கள் !

தங்களின் சிறந்த ஒத்துழைப்போடும், பெரும் பங்களிப்போடும், சென்னை ருஷ்ய கலாசார மையத்தில் இனிதே நடைபெற உள்ள இரு தின [மே 25 மற்றும் 26] நிகழ்ச்சிகளுக்கும் நமது நடிகர் திலகம் திரியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !

அழைப்பிதழ் வடிவம் அருமையிலும் அருமை ! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st May 2011, 10:13 PM
Thanks a lot Mr. Pammalar, can we get soft copy of this book? People won't mind to pay if we get soft copy.

Cheers,
Sathish

As of now, there is no soft copy available Mr.Satish.

Regards,
Pammalar.

pammalar
21st May 2011, 10:21 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 193

கே: "வியட்நாம் வீடு" படத்தில் சிவாஜி நடித்திராவிட்டால்...? (வி.குமார், கொரடாச்சேரி)

ப: பத்மனாபனின் முழு உருவை நாம் கண்டிருக்க முடியாது.

(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd May 2011, 01:59 AM
Pammalar sir, the second pix, Avanthan Manithan?

Dear Mr.Rakesh,

Mr.Satish is cent percent right. It is Mr.Ravikumar, the great !

Regards,
Pammalar.

pammalar
22nd May 2011, 02:15 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 194

கே: நிறைந்த நாடக அனுபவமும், பதினெட்டு ஆண்டு திரை அனுபவமும் கொண்ட நடிகர் திலகம், எப்போது டைரக்ட் செய்வார்? அவருக்கு சிவாஜி என்று நாடகத்தில் பட்டம் கிடைத்ததே, அந்த வேடத்தை எப்போது மேடையிலோ, திரையிலோ ஏற்பார்? (ஆர்.ரங்கராஜன், சென்னை - 33)

ப: ஓய்வு ஒழிவின்றி படங்களில் நடித்து வருவதால், டைரக்ட் செய்வது பற்றி முடிவு செய்யவில்லை. சிவாஜி வேடமேற்று நடிக்கப் போவதாக அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறாரே !

(ஆதாரம் : பேசும் படம், மே 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd May 2011, 02:38 AM
"ஒண்ணா இருக்க கத்துக்கணும்" பாடல் பதிவுக்கு, பதில் பதிவுகளை வழங்கிய சந்திரசேகரன் சாருக்கும், Avadi to Americaவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

"இதயவேந்தன் சிவாஜியின் வரலாற்றுச்சுவடுகள்" புத்தகம், சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தில் உள்ள 'சாந்தி புக்ஸ்' புத்தகக் கடையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd May 2011, 03:24 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 195

கே: நடிகர் திலகத்தால் டி.எம்.எஸ். புகழ் பெற்றாரா? டி.எம்.எஸ்.ஆல் நடிகர் திலகம் புகழ் பெற்றாரா? (எஸ்.சிவாஜி காளிமுத்து, திருவாரூர்)

ப: இருவராலும் தமிழ்த் திரை புகழ் பெற்றது !

(ஆதாரம் : பொம்மை, ஜனவரி 1997)

அன்புடன்,
பம்மலார்.

parthasarathy
22nd May 2011, 02:40 PM
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

எங்கள் எல்லோருடைய வேண்டுகோளையும் ஏற்று மறுபடியும், நடிகர் திலகத்தின் இந்த ஒப்பற்ற திரிக்குள் நுழைந்ததற்கு, உங்களுக்கு நன்றிகள்.

அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

மீண்டும் உங்கள் பதிவைப் பார்த்தவுடன் பெரு மகிழ்ச்சி. வழக்கம் போல் தொடருங்கள்.

அன்புள்ள திரு. முரளி அவர்களே,

தங்களுடைய பங்கு இந்த விஷயத்தில் மகத்தானது. உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

திரு. பம்மலார் மற்றும் அனைத்து ஹப்பர்களுக்கும் மிக்க நன்றி.

நாம் எல்லோரும் வழக்கம் போல், நடிகர் திலகத்தின் புகழைப் பாடிக்கொண்டே இருப்போம்!

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
22nd May 2011, 02:48 PM
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

ருஷ்ய தூதரகத்தின் விழா ஒன்றில் விடுதலைப் போராட்டத்தில் தமிழ் சினிமாவின் பங்கு - நடிகர் திலகத்தின் படங்களின் மூலமாக - என்ற தலைப்பில் ஒரு படம் ஒளிபரப்பப்பட இருப்பது ஒவ்வொரு தமிழனுக்கும், அவன் இந்தியன் என்ற வகையில் பெருமை - அதாவது இந்த மாபெரும் கலைஞனை ஈன்ற தமிழ் நாட்டில் நாமும் பிறந்தது என்றால் - இன்னொரு பெருமை, அதனை இயம்புவதற்கு உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு. உங்களுடைய பங்களிப்புக்கு முன்கூட்டியே வாழ்த்துகளைத் தெரிவிப்பதில், அனைத்து நடிகர் திலக ரசிகர்களும் பெருமை கொள்கிறோம்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
22nd May 2011, 05:00 PM
நடிகர் திலகத்தின் படங்களில் மிகச் சிறந்த பாடல்கள்

இது நடிகர் திலகத்தை வேறொரு கோணத்தில் ரசிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சி. அவரது வெவ்வேறு படங்களில் ஒரு பத்து பத்து படங்களாகப் பிரித்து ஆராய தலைப்பட்டதில், இப்போது தான் ஒரு இருபது படங்களை முடித்தேன். இது போல் இன்னும் பல பத்து படங்களைப் பதிவதற்கு முன்னர், வேறொரு தலைப்பில் அவரது பங்களிப்பினைப் பற்றிய ஆய்வு. இதுவும், ஒரு இரு பாகங்களை அடக்கிய கட்டுரைதான்.

தலைப்பு ஒன்று - நடிகர் திலகமும் அவர் படத்தில் இடம் பெற்ற சாகாவரம் பெற்ற பாடல்களும்.

ஒருவர் எந்தத் துறையில் இருந்தாலும், அவர் வெற்றிகரமாக செயல்படுவதற்கு முக்கியமான தேவை, அறிவு மற்றும் ஆற்றல். ஆனால், அந்த பயணம் நீண்ட நாட்களுக்கு வெற்றிகரமாக செல்ல, இவைகளை விட முக்கியமான தேவை - தன்னுடைய தனித்தன்மையை இழந்து விடாமல் (core activity என்கிறார்களே), தொடர்ந்து தன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து, காலத்திற்கேற்பவும், மாறி வரும் ரசனை மற்றும் தொழில் நுட்பத் தேவைகளுக்கும் ஏற்றவாறும் தன்னை மாற்றிக் கொள்ளும் முனைப்பு மற்றும் இடையறாத முயற்சி.

நண்பர் திரு. தனுசு அவர்கள் பதிந்திருந்த, நடிகர் திலகம் மற்றவர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், இதுதான் தன்னுடைய நிலைத்த, நீண்ட கால வெற்றிக்கு முக்கியமான காரணமாயிருக்கக்கூடும் என்று நடிகர் திலகம் கூறியிருந்தார்.

நாடக உலகம் அடிப்படையில் பெரிய visual இலக்கணங்களுக்கு உட்படாமல், பெரிதும், அந்த நாடகத்தில் நடிக்கும் நடிகர்களின் பெர்பார்மன்சையே சார்ந்திருந்தது. அதற்கு, அந்த நடிகர்கள் பெரிய உடல் மொழியின்றி, நின்ற இடத்திலிருந்து, மேடையில் இருந்து, கடைசி இருக்கையில் அமர்ந்திருப்பவர் வரை கேட்கும் படியாக உரக்கப் பேசி நடித்தால் போதும் என்ற நிலை இருந்ததால், நாடக நடிகர்களும் சத்தம் போட்டு நடித்து, உடல் மொழியைப் பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. இருப்பினும், நாடக உலகம் தான் உண்மையில் ஒரு கலைஞன் - நடிகனுக்கு - பெரிய சோதனைக் களம் மற்றும் வலுவான அடித்தளத்தை அளிக்க வல்லது. ஏனென்றால், நாடகத்தில் நடிப்பவருக்கு சரளமாக தடுமாறாமல் நடிக்க பெரிய பயிற்சி தேவைப் படுகிறது. அவருக்கு மறு டேக் எல்லாம் கிடையாது. மேடையில் தோன்றிய கணத்தில் இருந்து, தங்கு தடையின்றி பேசி, நடித்தாக வேண்டும்; கொஞ்சம் தடுமாறினாலும், மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பும் கூச்சலும், ஏன் கல்லடி கூட கிடைத்து விடும்; நேரடியாக (live) மக்களுக்கு நடிக்க வேண்டி வருவதால். ஆனால், சினிமா உலகிலோ, ஆயிரம் முறை ரீஷூட் செய்து பட்டை தீட்டிக் கொண்டே போகலாம். ஒரு நடிகனுக்கு நாடக உலகம்தான் மிகுந்த சுய நம்பிக்கையைத் தரும். சினிமா உலகம் முற்றிலும் ஒளி ஊடகமாக இருப்பதால், கதையை visual -ஆக சுவாரஸ்யம் குன்றாமல் சொல்ல வேண்டி உள்ளது. இதில் நடிப்பதற்கு, வசன உச்சரிப்பும் தேவை என்றாலும், பெரும்பாலும், உடல் மொழிதான் அடிப்படைத் தேவையாகிறது.

அந்தக் காலத்தில், நாடகம் மற்றும் அதன் முன்னோடியான கூத்து என்று சொல்லப் படும் கலையில், கதை பாடல்கள் மற்றும் நீண்ட வசனங்கள் மூலமாகவும் தான் சொல்லப் பட்டது. சினிமா என்ற visual ஊடகத்தில், கதை யதார்த்தமாக சொல்லப் படுவதற்கு, அடிப்படையில், இசையும், பாடல்களும் தேவையில்லை என்பதை விட முரண் என்றுதான் சொல்ல முடியும். யதார்த்த உலகில், நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் போது யார் இசையமைக்கிறார்கள்? இல்லை, நாம்தான் பாடிக்கொண்டே இருக்கிறோமா? இருப்பினும், இசை என்பது, இந்தியக் கலாச்சாரத்துடன் ஒன்றிப் பிணைந்து விட்ட ஒன்று என்பதாலும், இசை மற்றும் பாடல்கள் மூலம் சொல்ல வந்த விஷயத்தை இன்னும் அழுத்தமாகவும், சுவையாகவும் சொல்லி, அந்த விஷயத்தை மக்களுக்குச் சுலபமாக எடுத்துச் செல்ல முடியும் என்பதாலும், சங்கீதம் என்பது சினிமாவின் - அதாவது இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சமாகி விட்டது. மேலும், சினிமா என்பதே பொழுது போக்கு சாதனம் என்னும்போது, சங்கீதம் தவிர்க்க முடியாதவை என்று சொல்லுவதை விட, மிக முக்கியமான அம்சம் என்று சொல்வது தான் பொருத்தம்.

இப்பொழுது, எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு வருவோம். இசையின் மூலம், பாடல்களின் மூலம், கதைப்போக்கையும், காட்சியையும் சொல்லி, அவை மக்களுக்குப் பூரணமாக சென்றடைந்தது என்கிற வகையில், தமிழில், பல பாடல்களைச் சொல்லலாம். இந்தப் பாடல்கள், அந்தப் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் வெளிவந்த காலகட்டங்கள் மட்டுமின்றி, இன்றளவும், மக்களை பாதித்துக்கொண்டிருக்கிற சாகாவரம் பெற்ற பாடல்கள்.

இந்தக் கட்டுரையில், நான் எடுத்துக் கொள்வது அந்தப் பாடல்களின் இசையமைப்பு, பாடல் வரிகள், பாடியவரின் பங்கு மட்டுமல்லாது, அந்தப் பாடல்களில் நடித்தவர்களின் நடிப்பாலும், இயக்கிய விதத்தாலும், பார்ப்பவர்களையும் பெரிய அளவில் பாதித்த பாடல்களை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறேன். அதனால், இங்கு நம்மைப் போன்ற நடிகர் திலகத்தின் பிரத்தியேக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்கள் குறிப்பிடப் படாமல் போகலாம். கட்டுரையின் நோக்கம், பெரும்பாலான மக்களைக் கவர்ந்த/பாதித்த, இன்றளவும், பார்த்து ரசிக்கப் படுகிற/சிலாகிக்கப் படுகிற காலத்தை வென்ற பாடல்களைப் பற்றி சொல்வதுதான்.

இந்தப் பாடல்களின் வெற்றி ஒரு அற்புதக் கூட்டு முயற்சி. நடிகர் திலகத்தின் நடிப்பு இவைகளில், போனஸ்.

1. நலந்தானா? (தில்லானா மோகனாம்பாள், 1968) பாடல் - கவியரசு கண்ணதாசன்; இசை - திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்; பாடியவர் - பி.சுசீலா; நாதஸ்வரம் - மதுரை எம்.பி.என்.சேதுராமன் மற்றும் மதுரை எம்.பி.என்.பொன்னுசாமி - இயக்கம் - ஏ.பி.நாகராஜன் - நடிப்பு - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நாட்டியப்பேரொளி பத்மினி.

இந்தப் பாடலின் முதல் வரியான நலந்தானா? - என்ற பல்லவி பாடப் படுவதற்கு முன்பாக, நாயகி பத்மினி மேடையில் நுழைந்து, முக பாவனையாலேயே, நாயகன் நடிகர் திலகத்தைப் பார்த்து, "நலந்தானா?" என்று கேட்க, நடிகர் திலகமும் "நலமே!" என்று முக பாவனையாலேயே விடை பகரும் போதே, இந்தப் பாடல் முழு வெற்றி பெற்று, பார்க்கும் ஒட்டு மொத்த மக்களையும் நூறு சதவிகிதம் சென்று சேர்ந்து விடுவதால், இன்றளவும், தமிழில் வெளி வந்த சாகாவரம் பெற்ற திரைப் பாடல்கள் வரிசையில் - கேட்க மட்டும் அல்ல - பார்க்கவும் - இந்தப் பாடலே முதல் பாடல் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். இதற்கப்புறம் வரும் ஒட்டு மொத்த பாடலும், அதில் நடித்த நடிகர் திலகம் மற்றும் பத்மினியின் நடிப்பு - முக்கியமாக நடிகர் திலகம் - ஒரு போனசாகவே அமைந்து விடுகிற விதத்தில் - பார்ப்பவர்கள் வாடிக்கையாளர்கள் என்கிற வகையில், வாடிக்கையாளர் திருப்தியைத் தாண்டி, அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்திய பாடல். It’s not customer satisfaction, it’s customer delight!

இந்தப் பாடலைப் பொறுத்தவரை, நாயகி, நாயகனை அவன் கத்திக்குத்துப் பட்டு, அவன் பரிபூரண நலம் பெற்றதற்க்கப்புறம், அப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறார். பார்த்தவுடன், அவருக்கு, நாயகன் எப்படியிருக்கிறார், அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போது, தன் மனம் என்ன பாடுபட்டது, பார்க்க முடியாவிட்டாலும், தன் மனம் அவர் நலமடைய வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தது போன்ற உணர்வுகளை, பாடி அவருக்கு உணர்த்துவதற்கு பயன்படுகிறது. அதனால், இந்தப் பாடலில், நடிகர் திலகத்தை விட பத்மினிக்குத் தான் தன் மொத்த நடிப்பாற்றலையும் காட்ட சந்தர்ப்பம் கிடைத்தது. இருப்பினும், வழக்கம் போல், நடிகர் திலகம், பாடாத போதும், உட்கார்ந்த இடத்திலிருந்தே, ஒட்டு மொத்த உணர்வுகளையும் காட்டி நடித்து, ஒருபோதும், அதிகமாக நடிக்காமல், பாடலின் சுவை மாறாமல், அது ஒரு கூட்டு முயற்சி என்னும் அடிப்படையில், முழு ஒத்துழைப்பையும், அளித்து, பாடல் சாகா வரம் பெற உதவுகிறார்.

பாடல் துவங்குவதற்கு முன், நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் கையிலிருந்து வரும் குருதியைக் கண்டு, அனைவரும் அடையும் அதிர்ச்சி; உடனே சமாளித்து மறுபடியும் நாதஸ்வரம் இசைக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு; மெய் சிலிர்க்கும்.

"நலம் பெற வேண்டும் நீ என்று நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு" எனும் போது பத்மினியின் நடிப்பு அதற்கு; நடிகர் திலகத்தின் மறு மொழி (விழிகளாலேயே); டி.எஸ். பாலையாவின் மறு மொழி;

அடுத்த சரணம்; "கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நான் அறியேன்" - பத்மினியின் நடிப்பு அற்புதம் என்றால், அதற்கு நடிகர் திலகம் விழிகளில் பெருகும் கண்ணீரைத் தேக்கி அவை கீழே விழாமல், பார்ப்பவர்களைக் கலங்கடித்த விதம்; அதியற்புதம்!

கடைசியில், "நடந்ததெல்லாம் மறந்திருப்போம்; நடப்பதையே நினைத்திருப்போம்" எனும்போது, பத்மினியின் நடிப்பு அதற்கு நடிகர் திலகம் உற்சாகத்துடன் விழிகள் மற்றும் முக பாவனையிலேயே பகரும் மறு பொழி; அவ்வப்போது காட்டும் குறும்பு, முதலில், ஒரு கண்ணை இமைத்து (அதாவது குறும்புடன் கண்ணடித்து), பின்னர் இரண்டு கண்களையும் இமைத்து நடிப்பது - இன்றும் ரசிகர்களின் நெஞ்சில் நிலை பெற்றுவிட்டது.

நாடக உலகில் இருந்து வந்த ஒரு கலைஞர், சினிமாவெனும் ஒளி ஊடகத்தின் தேவைக்கேற்ப, நாதஸ்வரத்தை இசைப்பது போல் தத்ரூபமாக நடித்தது மட்டுமின்றி, அந்தக் காட்சியில் பொதிந்து கிடக்கும் உணர்ச்சிகளின் சங்கமத்தை, வெறும் விழிகளாலும், முக பாவனையாலும் மட்டுமே, உட்கார்ந்த இடத்தில் இருந்தே நடித்து, என்றென்றும், தான் ஒருவனே நடிகர் திலகம் என்பதை பரிபூரணமாக நிரூபிக்கிறார்.

மற்ற பாடல்கள் பிறிதொரு பதிவில்,

தொடரும்,

பார்த்தசாரதி

parthasarathy
22nd May 2011, 05:05 PM
நலந்தானா - இந்தப்பாடலை எழுதிய கவியரசு கண்ணதாசனின் வரிகள், பாடல் இசையமைக்கப்பட்ட விதம், (கே.வி.மகாதேவன்), பாடிய பி.சுசீலா, இயக்கிய ஏ.பி.நாகராஜன், பாடலில் நடித்த நடிகர் திலகம் மற்றும் பத்மினி அனைவரது பங்களிப்பை விஞ்சுகிற ஒரு பெர்பார்மன்ஸ் இன்றளவும் இல்லை.

மற்ற பாடல்கள் பிறிதொரு பதிவில்,

தொடரும்,

பார்த்தசாரதி

NOV
22nd May 2011, 05:41 PM
http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/228009_10150185602478596_599668595_7034933_2260520 _n.jpg

Murali Srinivas
22nd May 2011, 06:48 PM
சிவந்த மண் படத்தில் பட்டத்து ராணி பாடல் டி.வியில் ஓடிக் கொண்டிருந்தது. 42 வருடங்களுக்கு முன்பு அந்த பாடல் காட்சி ஏற்படுத்திய பிரமிப்பு இன்றும் சற்றும் குறையாமல் இருப்பது ஆச்சரியமான விஷயம்.

பாடல் ஆரம்பிப்பதற்கு முன் வரும் காட்சியே பரபரப்பை அதிகப்படுத்திவிடும். படத்தில் முதன் முதலில் திவானை சந்திக்கும் பாரத்திடம் இவ்வளவு பெரிய விபத்தில் உங்களுக்கு ஒரு சின்ன காயம் கூட படாமல் தப்பித்தது ஆச்சரியம்தான் என திவான் சொல்ல தன் வலது மணிக்கட்டின் அடிப்பாகத்தில் ஏற்பட்ட காயத்தை பாரத் காட்டும்போது சாதாரணமாக தோன்றும் அந்த நிகழ்வு [அந்த காட்சியில்தான் நடிகர் திலகம் எவ்வளவு அழகாக இருப்பார்! இதற்கும் முகத்திற்கு மேக்கப் ரொம்ப லைட்டாக இருக்கும்], நடன நிகழ்ச்சியில் திவானின் கையை குலுக்கும் போது அரேபிய உடையில் மாறு வேடத்தில் இருக்கும் பாரத்தை அடையாளம் காட்டி விடுகிறது. அந்த இடத்தில் இருந்து பாடல் முடிந்து விளக்குகள் அணைந்து துப்பாக்கி சத்தம் கேட்கும் வரை நம்பியாரின் உடல் மொழியை கவனித்தால் அந்த படப்படப்பு, தவிப்பு, பயம் அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.

நடிகர் திலகமோ எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும், வெற்றி மட்டுமே பெற வேண்டும் என்ற உறுதி, தீவிரத்தன்மை, அழுத்தம் மற்றும் intensity ஆகியவற்றை வெளிப்படுத்தியிருப்பார்.

எகிப்திய பிரமிட் பாணியில் அமைக்கப்பட்ட அரங்கில் பாடல் காட்சி. [சிவந்த மண் படத்தில் இடம் பெற்ற அரங்கங்கள் அதில் படமாக்கப்பட்ட ஒளிப்பதிவின் சிறப்புகள் பற்றி சாரதா இரண்டு மூன்று முறை விரிவாக இந்த திரியில் எழுதியிருக்கிறார்]. ஆகவே அந்த பாடல் காட்சியில் வேறு சில சிறப்புகளை பார்ப்போம். முதலில் சொன்னது போல் நடிகர் திலகம் வெளிப்படுத்தும் intensity அதை பார்க்கும் மக்களால் உணர முடியும்.

அரங்கத்தின் நடுவே மேடையில் அமைந்திருக்கும் இரண்டு வட்டங்கள். ஒன்று சிறிதாகவும் மற்றொன்று பெரிதாகவும் இருக்க அதில் சின்ன வட்டம் சுழன்று கொண்டே இருக்க பெரிய வட்டம் நிலையாக இருக்கும். இந்த இரண்டு வட்டங்களில் இரண்டு விதமாக நடிகர் திலகம் நடப்பார்.

நடிகர் திலகத்தின் பல சிறப்புகள் பற்றி பேசும் போது காமிராவிற்கு முதுகை காட்டி நடிக்கும் போது கூட பார்வையாளனுக்கு தன் உடல் மொழி மூலமாக கதாபாத்திரத்தின் உணர்வுகளை கொண்டு சேர்ப்பதில் அவரின் அசாத்திய திறமையை பேசியிருக்கிறோம். யார் அந்த நிலவு, படைத்தானே, ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ பாடல் காட்சிகள், நெஞ்சிருக்கும் வரை, தங்கப்பதக்கம் வசன காட்சிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் பட்டத்து ராணி பாடலும் இடம் பெறும்.

முதல் சரணத்தின் இடை இசையின் போது காமிராவிற்கு முதுகை காண்பித்துக் கொண்டு இடது கையில் துப்பாக்கி,வலது கையில் சவுக்கை பிடித்துக் கொண்டே வேக நடை போடும் நடிகர் திலகம். சுழலும் வட்டத்தில் சுழற்சிக்கு எதிராக நடக்கும் நடை மிட் லாங் ஷாட்டாக திரையில் தோன்றினாலும் பாரத்தின் இலட்சியத்தை முடிக்கும் மன உறுதியை நடிகர் திலகம் எத்தனை நேர்த்தியாய் கொண்டு வருகிறார். அது போல் சுழலாத வட்டத்தில் அவர் நிற்க சுழலும் வட்டத்தில் காஞ்சனா ஆடும் நடனம், மேடையில் நடுநாயகமாய் நிற்கும் பிரமிடின் மேலிருந்து எடுக்கப்பட்ட கிரேன் ஷாட், அதில் மொத்த அரங்கத்தையும், நடனத்தை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களையும் ஒரு சேர திரையில் கொண்டு வரும் என். பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, அடுத்த ஷாட்டில் பாடல் வரிகள் இல்லாமல் காஞ்சனாவின் நடனம், முன்னரே தீர்மானித்தபடி அடுத்த அடி எப்போது என்பதை அந்த டைமிங்படியே மனதுக்குள்ளே பாரத் கணக்கிடுவதை சவுக்கை உயர்த்தி பிடித்திருக்கும் வலதுகை மணிக்கட்டின் அசைவின் மூலமாகவே உணர்த்தும் நடிகர் திலகம், அதையும் காமிராவிற்கு முதுகை காண்பித்துக் கொண்டே செய்யும் திறன், அடுத்த ஷாட்டில் அடி வாங்கியவுடன் கிழே விழும் காஞ்சனா, தரையில் கண்ணாடி வைத்து அதன் மேல் விழுந்து கிடக்கும் காஞ்சனா, அந்த கண்ணாடி தரையில் வலது காலை தூக்கி வைத்து நிற்கும் நடிகர் திலகம் [அன்றைய நாளில் அது போன்ற காமிரா கோணங்கள் அரிதானவை], முகமெங்கும் வியர்த்து தன் கைத்துப்பாக்கியின் குதிரையை தயார் நிலையில் வைக்கும் நம்பியார், மீண்டும் பாடல் வரிகள் இல்லாமல் வேகமான பின்னணி இசை, பதினைந்தாவது அடி எப்போது விழும், அப்போது என்ன நடக்கும் என்ற உச்சக்கட்ட பரபரப்பில் சீட்டின் நுனிக்கே பார்வையாளனை கொண்டு வந்து விடும் காட்சியின் வேகம் இவை அனைத்துமே நான் ஆரம்பத்தில் சொன்னது போல் 42 வருடங்களுக்கு பிறகும் இன்றைக்கும் அதே சுவை குறையாமல் அமைந்திருப்பதுதான் இந்த பாடலின் வெற்றி.

அன்புடன்

Murali Srinivas
22nd May 2011, 06:52 PM
பட்டத்து ராணி பாடலை திரையில் பார்த்தவுடன் தோன்றிய எண்ணங்களை எழுத்திலே வடித்து இங்கே பதிந்த பிறகுதான் பார்கிறேன், சாரதி அவர்கள் நடிகர் திலகத்தின் பாடல் காட்சிகளைப் பற்றிய தன் ஆய்வின் முதல் பகுதியை பதிவு செய்திருக்கிறார். ஆகா! என்ன coincidence!

அன்புடன்

NOV
22nd May 2011, 06:55 PM
சிவந்த மண் படத்தில் பட்டத்து ராணி பாடல் டி.வியில் ஓடிக் கொண்டிருந்தது. enna oru coincidence.
naan inga "paattu paadava" engira nigazhchi paarththu kondirukkEn. indraikku LRE special. ippathaan oru ammaa pattaththu raani paatta paadi mudichaanga !

saradhaa_sn
22nd May 2011, 07:30 PM
நாலைந்து நாட்களாக இந்தப்பக்கம் வர முடியவில்லை. ஒரு சிறிய சுனாமியே அடித்து ஓய்ந்திருக்கிறது. நல்லவேளை சேதாரம் எதுவுமில்லை. மாறாக ஒற்றுமை பலப்பட்டிருக்கிறது.

முரளியண்ணாவின் முயற்சிக்கு மிக்க நன்றி. அவரது வார்த்தைகளை செவியேற்று களத்துக்கு திரும்பிய ராகவேந்தர், ஜோ, கார்த்திக் ஆகியோருக்கு நன்றி. ('என்ன இருந்தாலும் கோடீஸ்வரன் வார்த்தைன்னா தனி மரியாதைதான்' காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையா).

டியர் தனுஷ்,

உங்களுடைய பதிவுகளுக்கு எப்போதுமே நமது திரியிலும், நமது இதயங்களிலும் தனி மதிப்பு உண்டு. உங்களது பங்களிப்புகள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.

டியர் பம்மலார்,

சரியான நேரத்தில் நீங்க போஸ்ட் செய்த 'ஒண்ணாயிருக்க கத்துக்கனும்' பாடல் அருமையான டைம்லி ஆக்ஷன். சூப்பர்ப். கேள்வி பதில் பதிவுகளும் அருமை.

டியர் ராகவேந்தர்,

ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற இருக்கும் உங்கள் நிகழ்ச்சி முழு வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களது பங்களிப்பு எப்போதுமே சிறப்பானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. (இனி ஒரு தரம் 'போறே'ன்னு சொல்லிப்பாருங்க, அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது)

டியர் பார்த்த்சாரதி,

அற்புதமான ஆய்வுக்கட்டுரைகள். 'நலந்தானா' பாடல் ஆய்வு பற்றி படித்து முடித்து விட்டுப் பார்த்தால் உடனே 'பட்டத்து ராணி' பாடல் பற்றிய ஆய்வு. என்ன ஒரு வேகம். என்ன ஒரு தெளிவு. ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் விடாமல் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அருமை, அட்டகாசம்.

டியர் ஜோ & கார்த்திக்,

உங்கள் பதிவுகளை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. மறுபடியும் முழு வீச்சில் இறங்குங்கள்.

மற்றவர்களின் பதிவுகளுக்கும் பங்களிப்புகளுக்கும் மிக்க நன்றி.

saradhaa_sn
22nd May 2011, 07:39 PM
'மெழுகு வர்த்தி எரிகின்றது' (கௌரவம்)

ஒரு திரைப்படத்தில் சில பாடல்கள் ஓகோவென்று உச்சத்திற்குப் போகும்போது, மற்ற பாடல்கள் பின்தங்கி, அவற்றுள் சில நல்ல பாடல்கள் நிழலுக்குள் தள்ளப்படுவதுண்டு. நடிப்புச்சக்கரவர்த்தியின் கௌரவம் படத்தில் அப்படி, மற்றவர்களால் போதிய அளவு சிலாகிக்கப்படாத ஒரு பாடல்தான் 'மெழுகு வர்த்தி எரிகின்றது' பாடல்.

பெரியவரின் இரண்டு பாடல்களான 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடலும், 'நீயும் நானுமா கண்ணா' பாடலும் ரசிகர்களின் மனதில் டாப்பில் போய் அமர்ந்துகொண்டன. இப்படத்தின் பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுவோர் யாவரும் இவ்விரண்டு பாடல்களையே குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம். அதையடுத்து சின்னவரான கண்ணனின் பாடல்களில் கூட சட்டென்று யாவரும் நினைவில் கொண்டுவருவது, அவருக்கும் ராதாவுக்கும் (உஷா நந்தினி) ஒரே டூயட் பாடலான 'யமுனா நதியிங்கே ராதை முகமிங்கே' பாடல்தான். அதற்கு அடுத்த இடத்தைப்பிடிப்பது கூட, மெல்லிசை மன்னர் தன் இசையால் டாமினேஷன் செய்த 'அதிசய உலகம் ரகசிய இதயம்' பாடல்தான். ஐந்தாவது இடம் போனால் போகிறதென்று 'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடலுக்கு.

ஆனால் பெரியவரின் இரண்டு ஆக்ரோஷமான பாடலுக்கும், சின்னவரின் நளினமான டூயட் பாடலுக்கும், ஈஸ்வரியின் துள்ளல் பாடலுக்கும் இடையே... மனதை வருடும் அமைதியான பாடலாக அமைந்தது மெழுகுவர்த்தி பாடல்தான்.

இதற்கு முன் எத்தனையோ பாடல்களில் பியானோ வாசிப்பவராக நடித்திருக்கிறார் நடிகர்திலகம். பாசமலர், புதிய பறவை, எங்க மாமா இப்படி நிறைய. ஆனால் அவைகளிலெல்லாம் முடிந்த வரையில் தன் உடல் மொழியால் ஸ்டைல் காட்டுவார். ஆனால் இப்பாடலில் அப்படி எந்த ஸ்டைலும் உற்சாகத்துள்ளலும் இல்லாமல் மிக அமைதியாக வாசித்திருப்பார். காரணம் கதைப்படி தொழிலில் கருத்து வேறுபாடால் தன் உயிருக்குயிரான பெரியபாவையும் பெரியம்மாவையும் பிரிந்து ஓட்டலில் தங்கியிருக்கிறார். இருப்பினும் காதலியின் பிறந்தநாளின்போது பாட வேண்டிய சூழல். அப்படிப்பட்ட நிலையில் ஸ்டைல் காட்டினால் அது அபத்தமாக அல்லவா ஆகிவிடும். அதை உணர்ந்தே காதலிக்கு வெளிக்காட்டாமல் மனதில் சோகத்தை அடக்கிக்கொண்டு ரொம்பவே இயல்பான பெர்பார்மென்ஸை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார்.

ஒருபக்கம் காதலி கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடும்போது, இவர் லேசாக திரும்பிப் பார்த்தபடி, கருமமே கண்ணாக பாடிக்கொண்டிருப்பதும், தனக்கு கேக் ஊட்ட வரும் காதலியின் கையைப்பிடித்து அவளுக்கே ஊட்டி விடுவதும், அந்த நேரத்தில் கூட அளவுக்கதிகமாக சிரித்து விடாமல் அடக்கி வாசித்திருப்பதுமாக நம மனதை அப்படியே உருக வைப்பார்.

மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது
புதுவேகம் எழுகின்றது பூஞ்சோலை அசைகின்றது

கவியரசரின் என்ன அழகான வரிகள், மெல்லிசை மன்னரின் எவ்வளவு இனிமையாக மனதை வருடும் மென்மையான இசை, இவரா பெரியவருக்கு அவ்வளவு ஆக்ரோஷமாகப்பாடினார் என்று வியக்க வைக்கும் வண்ணம் டி.எம்.எஸ்ஸின் அமைதியான குரல், அமைதி தோய்ந்த முகத்தோடு பாடிக்கொண்டிருக்கும் நடிகர்திலகம், அவர் பாடுவதை முகத்தில் ஆவலும் கனிவும் பொங்க பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் உஷா நந்தினி, இந்தக்கூட்டத்தின் நடுவே கேக் தின்னுவதும், பரிசுப்பொருளைத் திருடுவதுமாக சேட்டை செய்துகொண்டிருக்கும் நாகேஷ், இப்படி பலதரப்பட்ட விஷயங்களுடன் பாடல் தொடர்ந்து கொண்டிருக்கும்....

அன்பு என்னும் கோயில்தன்னிலே
பாசம் என்னும் தீபம் தன்னிலே
உள்ளம் ஒன்று மயங்குகின்றது
தன்னை எண்ணி கலங்குகின்றது
தன்னை எண்ணி கலங்குகின்றது

இது ஒன்றும் வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட பாடல் அல்ல, ஒரு வீட்டின் நடுக்கூடத்தில் படமாக்கப்பட்டதுதான். ஆனாலும் கூட தன்னுடைய கேமராவை லாவகமாக அங்குமிங்கும் சுழற்றி அந்த இடத்தை அங்குலம் அங்குலமாக கவர் செய்திருக்கும் ஒளிப்பதிவு இயக்குனர் வின்சென்ட், பியானோ பாடல்கள் என்றாலே சிறப்பு கவனம் செலுத்தும் மெல்லிசை மன்னர், இவர்களை ஒருங்கிணைத்து பாடலை அழகுற பாடமாக்கியிருக்கும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம், இப்படி எல்லோரது கூட்டு முயற்சியில் பாடல் வெகு சூப்பராக அமைந்து விட்டது.

வழக்கமாக கூடத்தின் நடுவே இருக்கும் பெரிய பியானோ, அதனைத் திறந்து வைத்து ஒரு கோலால் முட்டுக்கொடுக்கப்பட்டிருக்கும் டாப் என்றில்லாமல் சுவரோடு ஒட்டிய அடக்கமான பியானோ, அதன் முன்னே எந்த பந்தாவான உடையும் இல்லாமல் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேண்ட், வெளிர் ரோஸ் நிற அரைக்கை சட்டையணிந்து சிம்பிளாகக் காட்சி தரும் நடிகர்திலகம் என எல்லாம் ஒருங்கிணைந்து நம் மனதைக் கவர்ந்த பாடலாக இப்பாடல் காட்சி அமைந்து விட்டது.

என் மனதைக்கவர்ந்த 'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடல் காட்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.