PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7



Pages : [1] 2 3 4 5 6 7 8

saradhaa_sn
6th August 2010, 11:13 AM
நடிகர் திலகம் சிவாஜி -பாகம் 7
Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

[html:2bc7346a10]
http://www.thefaceofsouthindia.com/wp-content/uploads/2009/10/sivaji.jpg

[/html:2bc7346a10]



நடிப்புலகின் ஒரே நாயகன், தாதாசாகேப் விருது பெற்ற, ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகர் என்ற பெருமை பெற்ற ஒரே தமிழன், ஆருயிர் அண்ணன் நடிகர்திலகம், பத்மஸ்ரீ, பத்மபூஷண், செவாலியர், டாக்டர் சிவாஜி அவர்களின் திறமையையும் புகழையும், பெருமையையும், சாதனைகளையும், மனிதாபிமானத்தையும், நட்பையும் நல்லுறவையும் பேணிக்காக்கும் பெருந்தன்மையையும் பாடும் அவரது திரியின் ஏழாவது பாகத்தைத் துவக்கி வைக்கும் வாய்ப்பினை, வேண்டுகோளாக அல்ல, கட்டளையாக பிறப்பித்த அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த இனிய தருணத்தில், கடந்த 600 பக்கங்கங்களையும் அவற்றில் ஆயிரக்கணக்கான பதிவுகளையும் இட்டு, நடிகர்திலகத்தின் புகழை உலகுக்க்குப்பறைசாற்றும் அரிய பொக்கிஷங்களை அள்ளி வழங்கிய, வழங்கிக்கொண்டிருக்கின்ற, இன்னும் வழங்கவிருக்கின்ற "அத்தனை" நல் இதயங்களுக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

'நடிகர்திலகத்தின் திரைப்படங்களின் விவரங்கள் வேண்டுமா?. இந்த திரிக்கு சென்றால் கிடைக்கும்' என்கிற அளவில் இத்திரியை செவ்வனே வழிநடத்திச்செல்லும் அனைவருக்கும் நன்றி... நன்றி.. நன்றி...

இத்திரியைப்பற்றி பெருமையாக தங்கள் தனிப்பட்ட வலைப்பூக்களில் குறிப்பிட்டிருக்கும் அன்பர்களுக்கும் மேலான நன்றி...

வாருங்கள் ஏழாம் பாகத்திலும் ஆருயிர் அண்ணனின் புகழ் பாடுவோம்... அவர்தம் பெருமையை பறைசாற்றுவோம்.... நடிகர்திலகத்தின் ரசிகர்கள் / பக்தர்கள் நாங்கள் என்று பெருமைபட முழங்குவோம்.

(எழுபதாவது பாகத்தையும் நானே துவக்கி வைக்க வேண்டும் என்று இப்போதே முன்பதிவு செய்துகொள்கிறேன்)

நன்றியுடன்
உங்கள் சாரூ.....


நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -1 (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=2132&postdays=0&postorder=asc&start=0)

நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -2 (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=7685&start=0)

நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -3 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1097336&sid=50c78d03e22feeed5b0fa648a83836da#1097336)

நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -4 (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=11237&start=0)

நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -5 (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=12282&start=0&postdays=0&postorder=asc&highlight=)

நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -6 (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=13937&start=0)


முக்கிய பக்கங்களின் இணைப்புகள்**********************************

1.நடிகர் திலகம் - சிறப்பு இணையத்தளம் (http://nadigarthilagam.com/nadigarthilagam/)

2. சிவாஜியின் சாதனை சிகரங்கள்-தொடர் - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=12243)


திரைப்பட விமரிசனங்கள் / பார்வைகள்
-----------------------------------

1.அம்பிகாபதி -திரைப்படப் பார்வை -பாலாஜி (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=300)

2.என்னைப் போல் ஒருவன் -திரைப்படப் பார்வை -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=300)

3.ராஜா -திரைப்படப் பார்வை -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=330)

4.பொன்னூஞ்சல் -திரைப்படப் பார்வை -groucho070 (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=360)

5.சவாலே சமாளி -திரைப்படப் பார்வை -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=375)

6.அன்பைத் தேடி -திரைப்படப் பார்வை -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=390)

7.எங்க மாமா,மூன்று தெய்வங்கள் -திரைப்படப் பார்வை --சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=405)

8.புதிய பறவை-திரைப்படப் பார்வை -பாலாஜி (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=510)

9.அந்த நாள்-திரைப்படப் பார்வை -பாலாஜி (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=540)

10.அந்த நாள்-திரைப்படப் பார்வை -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=555)

11.கப்பலோட்டிய தமிழன் - groucho070 (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=165)

<a href="http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=105">
12.பிராப்தம்,மூன்று தெய்வங்கள்,தர்மம் எங்கே,ராஜராஜசோழன்,சிவகாமியின் செல்வன்,வாணிராணி -ஒரு பார்வை - முரளி ஸ்ரீனிவாஸ் </a>

13.தங்கச்சுரங்கம் - - சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=615)

14. ஊட்டி வரை உறவு - - rajeshkrv (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=735)

15. ஆட்டுவித்தால் யாரொருவர் - அவன் தான் மனிதன் - - சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=735)

16. பாசமலர் - - பாலாஜி (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=60)

17. நிறைகுடம் - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=435)

18. நிறைகுடம் ,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - - groucho070,முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=465&sid=07ea5b3bb6217cbab41833632380ec08)

19. இரு மலர்கள் - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=510&sid=29230a62a9c90103d6cd99c682ccf712)

20. விடிவெள்ளி - - NOV (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1186697#1186697)

21. நெஞ்சிருக்கும் வரை - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1190179#1190179)

22. மரகதம் - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1191364#1191364)

23. பாக்கியவதி - - NOV (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1194939#1194939)

24. அமர தீபம் - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1197866#1197866)

25. அன்னை இல்லம் - - NOV (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1205619#1205619)

26. உத்தம புத்திரன் - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1217235&sid=820767f50921e1ed24766d889a581b38#1217235)

27. கூண்டுக்கிளி - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1230154#1230154)

28. இளைய தலைமுறை - - சாரதா (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1235809&sid=a56b81b4d336df64c9e07b4b614cae9e#1235809)

29. பலே பாண்டியா - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1237378&sid=c2766712d2ba167268a13239d122499d#1237378)

30. படிக்காத மேதை - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1243166#1243166)

31. எங்கிருந்தோ வந்தாள் - - சாரதா (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1250952&sid=4a6196ee2c1e2d2b49e960eee39cb3bd#1250952)

32. சுமதி என் சுந்தரி - - சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1283743&sid=5a42487c4d6edaf27e3a2fa857c40c03#1283743)


33. நீதி - - சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1302568#1302568)

34. தெய்வமகன் -1 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1338163#1338163)
தெய்வமகன் -2 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1341525#1341525) தெய்வமகன் -3 - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1342549#1342549)

35. வியட்நாம் வீடு - - சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1363202#1363202)

36. அம்மம்மா - ராஜபார்ட் ரங்கத்துரை - - mr_karthik (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1417744#1417744)

37. பாசமலர் - - rangan_08 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1420033#1420033)

38. எதிரொலி - - groucho070 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1432263#1432263)

39. குங்குமம் - -NOV (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1561522#1561522)

40. சரஸ்வதி சபதம் - -groucho070 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1623459#1623459)

41. திருவருட்செல்வர் - -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1637915#1637915)

42. ஆண்டவன் கட்டளை - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1656560#1656560)

43. குலமகள் ராதை - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1662928#1662928)

44. ரத்தத்திலகம் - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1680989#1680989)

45. சித்தூர் ராணி பத்மினி - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1740574#1740574)

46. நீலவானம் - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1771066#1771066)

47. பேசும் தெய்வம் - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1788663#1788663)

48. காத்தவராயன் - -பிரபு ராம் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1826384#1826384)

49. வைர நெஞ்சம் - -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1844367#1844367)

50. மகாகவி காளிதாஸ் - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1846856#1846856)


51. கை கொடுத்த தெய்வம் - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1866453#1866453)

52. ராமன் எத்தனை ராமனடி - -சாரதா (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1880420#1880420)

53. தங்கை - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1917233#1917233)

54. பார் மகளே பார் - - Irene Hastings (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1987096#1987096)

55. என் தம்பி - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=2002727#2002727)

56. திருடன் - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=2022465#2022465)



மற்றவை
---------

1.உலக அளவில் விருதுகள்! -விகடன் கட்டுரை (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=30)

2.நடிகர் திலகத்தின் வெற்றி பரணி (1971-1975) -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=45)

3.நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் முழுப் பட்டியல் - நக்கீரன் (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=120)

4.நாட்டிய மேதையும் நடிகர் திலகமும்!-விகடன் கட்டுரை (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=180)

5.நடிகர் திலகம் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி தொகுப்பு ,நடிகர் திலகம் சினிமாவும் அரசியல் பயணமும் (1980) -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&start=270)


6.சிவாஜியும் அப்துல் ஹமீதும் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=45&sid=ea38c4b51df68c5c31f82a4323dfc67e)

7.நமது கலை மரபின் சிறந்த பிரதிநிதி -எழுத்தாளர் ஞானி (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=90)


8.இமயம் -சிபி இணையத்தளம் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=270)

9.நடிகர் திலகம் நினைவுநாள் விழா நிகழ்ச்சி தொகுப்பு -முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=10065&postdays=0&postorder=asc&start=330)

<a href="http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1187325#1187325">10. நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிகர் திலகம் -karthik_sa2
</a>

<a href="http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1194997#1194997">11. நடிகர் திலகம் பிறந்தநாள் விழா -2007 -முரளி ஸ்ரீனிவாஸ்
</a>

12. நடிகர் திலகத்தின் விருந்தோம்பல் - மோகன்லால் -முரளி ஸ்ரீனிவாஸ் (http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1211054#1211054)

13. ** பெரிய தேவர் - நடிப்புக்கலையின் உச்சம் ...ஒரு அலசல் ** - பிரபுராம்
பாகம் 1 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1324582#1324582) பாகம் 2 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1324649#1324649) பாகம் 3 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1326697#1326697) பாகம் 4 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1327030#1327030) பாகம் 5 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1328510#1328510) பாகம் 6 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1329448#1329448) பாகம் 7 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1330725#1330725) பாகம் 8 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1331691#1331691) பாகம் 9 (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1333831#1333831)

14. என்னை வென்ற நடிகர்திலகம் - - complicateur (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1558507#1558507)

15. நடிகர் திலகம் 80-வது பிறந்தநாள் விழா தொகுப்பு - - முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1559697#1559697)

16. அந்தநாள் ஞாபகம் - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1666090#1666090)

17. நடிகர்திலகம் நினைவுநாள் 2009 - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1853783#1853783)


18. நடிகர்திலகம் பிறந்த நாள் 2009 - -முரளி ஸ்ரீனிவாஸ் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=1925534#1925534)

19. அவன் தான் நடிகன் -சிவாஜி இசை விழா - -பம்மலார் (http://www.mayyam.com/hub/viewtopic.php?p=2003530#2003530)

groucho070
6th August 2010, 11:18 AM
Saradha madam, thank you :D

mr_karthik
6th August 2010, 11:46 AM
Hearty Congrats to all 'Singathamizhan NT' Fans, for successful entering in to Part 7.

I wish to take this oppertunity to submit my sincere thanks to one and all, for the successful completion of SIX Parts with valuable and wealthy informations about NT.

Expecting more information about re-release of NT movies in this new part.

RAGHAVENDRA
6th August 2010, 11:58 AM
சங்கீத ஸ்வரங்கள் ஏழு - ச வில் ஆரம்பித்து நி யில் முடிவது போல், ஏழாம் பாகத்தை ச (சாரதா) ஆரம்பிக்க வேண்டும் என்று நி (நீங்கள்) அனைவரும் இட்ட அன்புக் கட்டளையை அன்புடன் ஏற்றுத் துவக்கி வைத்திருக்கும் அன்பு சகோதரி சாரதா அவர்களுக்கு நம் அனைவரின் நன்றியும் பாராட்டுதல்களும் உரித்தாகட்டும்.

நம் அனைவரின் உயிரிலும் இரண்டறக் கலந்து விட்ட நடிகர் திலகம் எனும் மாமேதையின் உன்னத காவியமான மகாகவி காளிதாஸ் திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சற்று நேரம் பார்க்க நேர்ந்தது. உடனே நமது ஏழாம் பாகத்தை சகோதரி சாரதா அவர்கள் துவக்கி வைக்கும் பதிவைக் காண ஆவலுடன் வந்தால் ... ஆஹா... என்ன ஒரு மன ஓட்டம்.. அவர்கள் துவக்கி விட்டார்கள்.

யார் தருவார் இந்த அரியாசனம் என்று நடிகர் திலகம் கேட்குமுன்னே அவருக்கு நமது இதயத்தில் சரியாசனம் தந்து அமரவைத்து விட்டார் சாரதா அவர்கள்.

இந்த 70வது பதிவு மட்டுமல்ல, 100 வது பதிவையும் அவர்களே துவக்கி வைக்க வேண்டும் என்பது நம் ஆவல்.

அன்புடன்
ராகவேந்திரன்

NOV
6th August 2010, 01:29 PM
[html:163770629f]
http://images.paraorkut.com/img/graphics/6/congrats12.gif

[/html:163770629f]

To all fans for completing 600 pages of discussion and stepping into the 700th!

HARISH2619
6th August 2010, 02:19 PM
ஏழாம் பாகத்தில் நுழையும் இந்த திரி மென்மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.6ஆம் பாகத்தைவிட இதை விரைவாக முடிக்க இந்த திரியின் தூண்களான முரளி சார்,ராகவேந்தர் சார்,பம்மல் சார் மற்றும் சாரதா மேடம் தலைமையில் உறுதிமொழி ஏற்ப்போம்.

இந்த பாகத்தை தொடங்கி வைக்க சாரதா மேடம் மிக மிக பொருத்தமானவர்.அவர் ஆசைப்படுவது போல 70ஆம் பாகத்தையும் நடிகர்திலகத்தின் அருளாசியோடு நிச்சயம் அவர்தான் தொடங்கி வைப்பார்.

முரளி சார்,
சாய்பாபாவின் சிலை அன்னைஇல்லத்தில் பூஜிக்கப்படும் செய்தி பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.மற்ற மாநிலத்தை சேர்ந்த யாருக்காவது இந்த பெருமை கிடைத்திருந்தால் அந்த மாநிலத்தின் முன்னனி பத்திரிக்கைகளிளெல்லாம் அதுதான் தலைப்பு செய்தியாகியிருக்கும்.அது அந்த மாநில மக்களுக்கு கிடைத்த பெருமையாக கருதி எல்லோரும் அவரை கொன்டாடியிருப்பார்கள்.ஆனால் இங்கே அது கடைசிபக்க செய்தியாகவும் வரவில்லை என்பது வேதனையிலும் வேதனை.எப்போதும் சொல்லுவதைப்போல நடிகர்திலகம் தமிழகத்தில் பிறந்தது அவர் செய்த துரதிருஷ்டம்.

pammalar
6th August 2010, 02:32 PM
சகோதரி சாரதா,

உலக அதிசயங்கள் ஏழு! எட்டாவது அதிசயமாகத் திகழும் நடிப்புலக ஏஞ்சலின் அத்தியாய அதிசயங்களும் தற்பொழுது ஏழு!

ஏழு அதிசயங்களைப் போல், நமது ராகவேந்திரன் சார் கோடிட்டுக் காட்டிய ஏழு ஸ்வரங்களைப் போல், வியத்தகு பெருமைகளைக் கொண்ட எண்ணாம் ஏழு - அமையப் பெற்ற ஏழாவது அத்தியாயத்தை(பாகத்தை) தாங்கள் எழுச்சியோடு, தங்களது திருக்கரங்களால் வெள்ளிக்கிழமையான இன்று (6.8.2010) மிக மிக மங்களகரமாகத் தொடங்கி வைத்துள்ளமைக்கு பல கோடி நன்றிகள்!!

எழுபதாவது பாகம் என்ன, எழுநூறாவது பாகத்தையும் தாங்களே துவங்கி வைக்க, எல்லா வல்ல இறைவனும், இதயதெய்வமான கலையுலக இறைவனும் தங்களுக்கு என்றென்றும் துணையிருப்பார்கள்!!!

[நமது நடிகர் திலகத்தை, எட்டாவது அதிசயம் என்று இங்கே நான் எழுத்துநடைக்காகக் குறிப்பிட்டாலும், அவர் நமக்கெல்லாம் ஏழு அதிசயங்களையும் விஞ்சிய முதன்மையான ஒரே அதிசயமல்லவா!]

பாசத்துடன்,
பம்மலார்.

KCSHEKAR
6th August 2010, 02:56 PM
சகோதரி சாரதா அவர்களால் தொடங்கப்பட்ட 7-வது திரி வளர்ந்து நடிகர்திலகம் ரசிகர்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக, இனணப்புப் பாலமாகத் திகழ வாழ்த்துக்கள்

SHIV
6th August 2010, 04:23 PM
Dear Saradha madam

That was a great beginning for the 7th part. Congrats!!!.

Murali sir -- News on Shirdi Sai statue coming to the Acting God's temple ( Annai Illam) is truly divine...... Thanks for the info.

Got a news from my brother at Chennai that today's "The Hindu" had an article about the re-release of PP at Shanti. Fans, please provide more details on that article.

Regards

Shivram

Mahesh_K
6th August 2010, 05:08 PM
[tscii:9713faac0e]
Dear Saradha madam

That was a great beginning for the 7th part. Congrats!!!.

Murali sir -- News on Shirdi Sai statue coming to the Acting God's temple ( Annai Illam) is truly divine...... Thanks for the info.

Got a news from my brother at Chennai that today's "The Hindu" had an article about the re-release of PP at Shanti. Fans, please provide more details on that article.

Regards

Shivram



இதோ......... From THE HINDU 6.8.2010

-------------------------------------------------------------------------------------


The bird flies high
MALATHI RANGARAJAN

It was a revelation for the makers and the audience alike when ‘Pudhiya Paravai' was released at Chennai's Shanthi Cinemas recently.

--------------------------------------------------------------------------------
The surprise element was the youngsters who watched the film and actually enjoyed it.
--------------------------------------------------------------------------------

AHEAD OF ITS TIMES: Pudhiya Paravai

T he staying power of Sivaji Ganesan is incredible. How else do you explain the re-release of Ganesan's 1964 offering ‘Pudhiya Paravai' running to packed houses at the Shanthi Theatre, in Chennai? “Not just my dad, till this day MGR too commands that kind of a draw. They are a league apart,” laughs son Prabhu, an impressive performer in his own right.

At a time when satellites rule the roost and flicks are just a click away, a four-decade old film doing well at the cinemas is no mean feat.

Recently, when plans for a new release on Friday didn't fructify, the family decided to revive their home production, ‘Pudhiya Paravai,' a much-acclaimed fare in Eastman Colour. “We had a new print of it. As the film was much ahead of its time then and also coincided with appa's ninth anniversary, we decided to release it once again.”

But little did the family expect the overwhelming response it received. “We ran houseful shows during the weekend, and on other days the hall was filled to 60 per cent capacity – a great show even for a new film,” marvels Prabhu.

His daughter Aishwarya and daughter-in-law Ujjaini, who had been to the cinema, found it very engaging. “It's so new and works well in the present scenario,” they said. Just goes to prove the timelessness of the product created 46 years ago!

Timeless appeal


“Elders came in for the nostalgic feel, but the surprise element was the youngsters who watched the film and actually enjoyed it,” says Prabhu.

Said to have been inspired by director Michael Anderson's 1958 film, ‘Chase a Crooked Shadow,' ‘Pudhiya Paravai' is a thriller in the whodunit genre. Dada Mirasi's astute adaptation saw to it that the suspense was maintained till the very end, and the denouement neatly tied up the strands of suspense.





“Dada Mirasi, its director, was a lawyer and my uncle Shanmugham had just returned from a stint at The School of Economics, London. Mirasi's meticulous planning and Shanmugham uncle's suggestions helped and together they gave ‘PP' the sheen and finesse of a classy tale,” says Prabhu. “A lot of research went into the making of each scene,” he adds.

The costumes were tailored and brought from Singapore and England. And both the heroines (Saroja Devi and Sowcar Janaki) made an impact in roles very different from what they had generally done till then. “Casting was a highlight and so was its music,” says Prabhu. Who can forget the everlasting flavour of MSV's expertise that emanated through each and every number, beginning with ‘Unnai Ondru Kaetpaen'!

Viswanathan and Ramamurthy offered about 100 tunes before the ‘Engae Nimmadhi' song was recorded. They are great,” smiles Prabhu. “We can't forget K.S. Prasad's cinematography either.”

He remembers the inaugural puja distinctly. “The song recorded on the first day was ‘Chittukuruvi Muththam Koduthu …' I flipped for it straightway.” Prabhu also informs that an African music band which was visiting the city then was used for the ‘Paartha Gnabagam' song shot on Sowcar Janaki.

It was a disappointment for many when the movie that was raking in the moolah in its re-run was pulled out of the theatre quite suddenly. Such a fiesta ought to be served to yearning Ganesan fans on a regular basis. “We'd love to! Let's see what can be done on that score,” says the son.

[/tscii:9713faac0e]

SHIV
6th August 2010, 05:27 PM
Thanks Mr.Mahesh, It was very heartening to read the article on PP. Be it 46 years or 460 years, PP will always be fresh and new for all of us and the world. That's the greatness of NT and PP'songs.

Regards

Shivram

J.Radhakrishnan
6th August 2010, 09:45 PM
கலைக்குரிசில், நடிகர் திலகம் அவர்களின் புகழ் பாடும் 7ம் பாகத்தை துவக்கி வைத்த சகோதரி சாரதா அவர்களே ! 70ம் பாகம் என்ன?100 ம் பாகமும் நீங்களே துவக்கி வைப்பீர்கள்.



என்றென்றும் நடிகர் திலகத்தின் பக்தன்.

pammalar
6th August 2010, 09:50 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 101

கே: 'பராசக்தி' கணேசனுக்கும், 'என் தம்பி' கணேசனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? (கோ.முருகன், மதுரை - 6)

ப: முதல்வர் உதயசூரியன்! பின்னவர் உச்சிகால சூரியன்!

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1968)

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
7th August 2010, 12:13 AM
சாரதா,

எங்கள் அன்பு வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றி. இத்திரி மேன்மேலும் வளர வாழ்த்துகள். திரியின் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகள்.

சுவாமி, செந்தில் மற்றும் சிவ்ராம்,

அன்னை இல்லத்தில் சாய் பாபா பற்றிய பாராட்டுகளுக்கு நன்றி. ஆனால் அவை அனைத்தும் நடிகர் திலகத்தையே சேரும்.

NOV,

நான் எடுத்த சாய்பாபா புகைப்படத்தை எனது பதிவிலேயே அப்லோட் செய்ததற்கு நன்றி.

ராகவேந்தர் சார்,

நடிப்பு பல்கலைக்கழகத்தை பட்டதாரிகளுக்கு வழங்கும் பட்டம் போல வடிவைமைத்து நமது நடிகர் திலகம் இணைய தளத்தில் வெளியிட்டதற்கு நன்றி பாராட்டுகள் .

இந்த மகிழ்வான நேரத்தில் இந்த திரியின் முதல் பாகத்திலிருந்து உருவாக்கி, வளர்த்து, யாரும் இல்லாதிருந்த காலகட்டத்தில் தனியாக நடிகர் திலகம் புகழ் பாடிய ஜோ அவர்களுக்கும் நமது நன்றியை சொல்லவேண்டும். பாராட்டும் அதே நேரத்தில் ஜோவிற்கு ஒரு வேண்டுகோள். மனகசப்பின் காரணமாக நமது ஹப்பிலிருந்து விலகி நிற்கும் நீங்கள் மீண்டும் வரவேண்டும். நடிகர் திலகத்தின் திரியில் மட்டுமாவது [இப்போதைக்கு] பதிவிட வேண்டும்.

அன்புடன்

kumareshanprabhu
7th August 2010, 01:14 AM
congrats to Mr.Raghavendra, Mr.Murali, Pammalar, Nov madam sardha

RAGHAVENDRA
7th August 2010, 10:31 AM
டியர் குமரேஷ்,
தங்கள் பாராட்டுகள் நம் அனைவருக்கும் உரியதாகும், ஊர் கூடி இழுக்கும் தேர் அல்லவா இது. மேலும் பல பாகங்களை எளிதாக கடக்கும் என்பது திண்ணம்.

முரளி சார்,
தங்களுடைய சாய்பாபா தகவலும், படமும் மிகவும் அருமை. தெய்வங்களுக்குத் தன்னுடைய திரைப்படங்களின் மூலம் செய்த தொண்டே நடிகர் திலகத்திற்குத் தற்போது கடாட்சமாய்க் கிட்டி அவர் இல்லத்திற்கு அருள் பாலிக்கிறது. அதே போல் தன்னுடைய திரைப்படங்க்ளின் மூலமும் விளம்பரமில்லாமல் தான் செய்த நற்கொடைகள் நற்காரியங்கள் மூலமும் இந்நாட்டிற்கும் மற்றும் தேசிய இயக்கத்திற்கும் தன் நேரம், பொருள் யாவையும் அர்ப்பணித்த நற்தொண்டுகளும் அவருக்கு நிச்சயம் உரிய முறையில் ஆண்டவன் அருளால் பலனீட்டும் என்பதும் திண்ணம்.

நடிகர் திலகம் ஒரு நடிப்புப் பல்கலைக்கழகம். உண்மையிலேயே அவர் பெயரில் ஒரு நடிப்புப் பல்கலைக்கழகம் அமைத்தால் அதனுடைய இலச்சினை எப்படி வடிவம் பெறலாம் என்ற ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே இச் சித்திரம் உருவாக்கப் பெற்றது. இதன் பின்னணியில் சில தத்துவங்களும் இடம் பெற்றுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள இரு முகங்கள் உலக அளவில் நடிப்புக்கான குறியீடுகளாகக் கருதப் படுகின்றன. அந்த இரு முகங்களில் ஒன்று சோகத்தையும் மற்றது மகிழ்ச்சியையும் குறிக்கின்றன. சோகமான முகம் இருக்கும் பக்கத்தில் அதற்கான நிறமாக சாம்பல் நிறமும், சோகத்தைக் குறிக்கும் பூவாக பாரிஜாத மலரும் இடம் பெற்றுள்ளன. அதே போல் மகிழ்ச்சியைக் குறிக்கும் நிறமாக மஞ்சள் நிறமும் அதற்குரிய பூவாக ரோஜா மலரும் இடம் பெற்றுள்ளன.

வாழ்வின் இரு துருவங்களாக உணர்ச்சியில் விளங்கும் மகிழ்ச்சி, சோகம் இரண்டையும் தன்னுடைய திரைப்படங்களில் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார் நடிகர் திலகம். இடைப்பட்ட உணர்ச்சிகள் இந்த இரண்டின் கிளைகளாகவே வருகின்றன. சில உணர்வுகள் ஒரே நேரத்தில் இன்பமும் துன்பமும் ஒரு சேரக் கலந்தும் வந்துள்ளன. இந்த உணர்வையும் அவர் பல படங்களில் காட்டியுள்ளார்.

இவற்றைப் பிரதி பலிக்கும் வகையிலேயே இந்த இலச்சினை மாதிரியான படம் உருவாக்கப் பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அப்படி ஒரு நடிப்புப் பல்கலைக்கழகம் நடிகர் திலகத்தின் பெயரில் உருவாகுமானால் அதற்கு இந்த படம் பயன்படலாம்.

முரளி சாரின் பாராட்டுக்களுக்கு மீண்டும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

ராகவேந்திரன்

Mahesh_K
7th August 2010, 11:59 AM
சாரதா,

இந்த மகிழ்வான நேரத்தில் இந்த திரியின் முதல் பாகத்திலிருந்து உருவாக்கி, வளர்த்து, யாரும் இல்லாதிருந்த காலகட்டத்தில் தனியாக நடிகர் திலகம் புகழ் பாடிய ஜோ அவர்களுக்கும் நமது நன்றியை சொல்லவேண்டும். பாராட்டும் அதே நேரத்தில் ஜோவிற்கு ஒரு வேண்டுகோள். மனகசப்பின் காரணமாக நமது ஹப்பிலிருந்து விலகி நிற்கும் நீங்கள் மீண்டும் வரவேண்டும். நடிகர் திலகத்தின் திரியில் மட்டுமாவது [இப்போதைக்கு] பதிவிட வேண்டும்.

அன்புடன்

அன்பு நண்பர் ஜோ அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பதிவு சமீப காலமாக இல்லாததற்கு வேலைப் பளு காரணமாக இருக்கலாம் என்று கருதியிருந்தேன்.

வேறு காரணம் இருப்பினும், நீங்கள் முன்பு போல தொடர்ந்து active ஆக பதிய் வேண்டும் என்று அனைவர் சார்பாகவும், உங்கள் பதிவுகளை விரும்பிப் படிப்பவன் மட்டுமல்ல உங்கள் பகுதியைச் சேர்ந்தவன் என்ற special உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

saradhaa_sn
7th August 2010, 12:00 PM
டியர் ராகவேந்தர், முரளி, பம்மலார், NOV, ராகேஷ் (grouch), சந்திரசேகர், செந்தில் (Harish), சிவராம், K.மகேஷ், J.ராதாகிருஷ்ணன், குமரேஷ்..... உங்கள் அனைவரின் அன்புக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

முரளியண்ணா அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட ஐந்தாம் பாகமும், பம்மலார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட ஆறாம் பாகமும் நடிகர்திலகத்தின் திரைப்பட ஆய்வுகளையும், அவரது சாதனைகளையும், அவரைப்பற்றிய பல்வேறு அபூர்வத் தகவல்களையும், அவரது படங்களின் மறுவெளியீட்டின் சிறப்புக்களையும் தாங்கி வந்து வெகு விரைவாக நிறைவடைந்தது போல, இந்த ஏழாவது பாகமும் விரைவாக நிறைவடைந்து.....

இதன் எட்டாம் பகுதி, 'எண்ணத்தாலும் செயலாலும் அண்ணன் நடிகர்திலகத்தின் புகழ்பரப்புவதே மூச்சாகக்கொண்டு செயலாற்றிவரும்' அன்புச்சகோதரர் ராகவேந்தர் அவர்களின் பொற்கரங்களால் துவக்கிவைக்கப்படும் நாள் விரைவில் வரவேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் தொடர்ந்த பங்களிப்பு அவசியம்.

டியர் முரளியண்ணா,

நண்பர் 'ஜோ' (Joe) அவர்கள் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்தும் உண்மையிலும் உண்மை. அதைப்பற்றி நானே எழுதவேண்டும் எனறு நினைத்தபோது நீங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள். இத்திரியின் முதல் இரண்டு பாகங்களைக்கவனித்தோமானால், யாரும் பங்கேற்காத சூழ்நிலையில் கூட, தனியொருவராக இத்திரியில் பதிவிட்டு வளர்த்த பெருமை ஜோ அவர்களையே சாரும். தவிர ஒவ்வொரு பாகம் துவங்கும்போதும், அதன் முந்தைய பாகத்தின் முக்கிய இணைப்புகளை முதல் பக்கத்தில் தருவதையும் ஒரு கடமையாக வைத்திருந்தார். (இப்போது அவர் அந்த பொறுப்பில் இல்லாததால் நண்பர் NOV அவர்கள் அதை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்).

அவரது மனப்புண்ணுக்கு மருந்திட்டு ஆற்ற நாமெல்லாம் இருக்கும்போது, 'ஜோ' அவர்கள் மீண்டும் முழுமூச்சுடன் நடிகர்திலகத்தின் திரியில் பங்கேற்கவேண்டும் என்று விரும்புகிறோம்.

NOV
7th August 2010, 12:08 PM
(இப்போது அவர் அந்த பொறுப்பில் இல்லாததால் நண்பர் NOV அவர்கள் அதை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்).ungal mudhal padhivOdu inaikka pattuladhu. paarththu magizhungal :)

RAGHAVENDRA
7th August 2010, 04:17 PM
டியர் நவ் சார்,
சகோதரி சாரதா அவர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக அனைத்து இணைப்புகளையும் பதித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய உறுதுணையாலும் ஆதரவினாலும் இத்திரி மென்மேலும் பல பாகங்களைக் கடக்கும் என்பதில் ஐயமில்லை.

முரளி சார் சொன்னது போல் நண்பர் ஜோ அவர்கள் நமது திரியில் தொடர்ந்து பங்கு பெற்று தமது கருத்துக்களைப் பகிரந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

சகோதரி சாரதா அவர்களின் எழுத்துக்கள் இந்தத் திரிக்கு ஒளிவிளக்காக வெளிச்சம் தந்து கொண்டுள்ளன. பாராட்டுக்கள். ஒவ்வொரு ரசிகருக்கும் அவர் தரும் மரியாதை மிகவும் பாராட்டுக்கும் வணக்கத்துக்கும் உரியது.

மற்றொரு அவா இந்நேரத்தில் வெளிப்படுத்த விழைகிறேன். நமது ஹப்பில் நடிகர் திலகம் திரியில் பங்கு பெற்று கருத்துக்களை எழுதும் அனைத்து நண்பர்களும் அனைவருக்கும் உகந்த நாளில், இடத்தில், நேரத்தில் சந்தித்து உரையாடலாம். அதைப் பற்றி அனவைரும் தங்களுடைய கருத்துக்களைக் கூறலாம். எதிர் வரும் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை ஒட்டிவரும் ஏதேனும் ஒரு நாளில் சந்தித்து நேர் அறிமுகம் மற்றும் உரையாடல் மேற்கொள்ளலாம்.

இவ்விஷயத்தில் தங்கள் கருத்துக்களை எதிர் நோக்கும்

ராகவேந்திரன்

saradhaa_sn
7th August 2010, 07:50 PM
'பாட்டும் பரதமும்'


[html:a053ed0e67]
http://www.dhool.com/gifs/8511.jpg

[/html:a053ed0e67]

கலை, நாட்டியம் இவைபற்றிய சிந்தனையோ, அவற்றில் ஈடுபாடோ இல்லாத, சதா தன் தொழில் பற்றியே சிந்தனையும் செயலுமாக இருக்கும் ஒருவர், நாட்டியமங்கையின் மீது கொண்ட காதலின் காரணமாக அவரே ஒரு நாட்டியக்காரராக மாறி, கடைசிவரை நாட்டியத்துக்கே தன்னை அர்ப்பணித்து விடுவதாக முடியும் கதை.

தொழிலதிபர் ரவிசங்கர் (நடிகர்திலகம்) சதா தன் தொழில் நிறுவன முன்னேற்றத்திலேயே கவனமாக இருப்பவர். தன் தொழிலைத்தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்காதவர். அவருக்கு வில்லங்கம் ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மூலம் வருகிறது. தங்கள் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு தலைமைதாங்க அழைக்கிறார். அதற்கெல்லாம் தனக்கு நேரமில்லை என மறுக்கும் ரவிசங்கரை கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். காரணம், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு பாணியில் "அது அவங்க அப்பா ஆரம்பிச்சு வச்ச பள்ளிக்கூடம்". ஆகவே மறுக்க முடியவில்லை. நிகழ்ச்சியில், பரதநாட்டியத்தில் புகழ்பெற்ற ராதா (கலைச்செல்வி ஜெயலலிதா)வின் பரதநாட்டியம் நடக்கிறது. அப்போதும் அவர் மனம் நாட்டியத்தில் செல்லவில்லை. (ஆடிட்டோரியத்தில் தன் அருகே அமர்ந்திருக்கும் அத்தைமகன் விஜயகுமாரிடம், "ஏண்டா, நாமும் இதுபோல நாலு ஆடிட்டோரியம் கட்டி வாடகைக்கு விட்டா தனியாக வருமானம் வருமில்லே?" என்று கேட்க அதற்கு விஜயகுமார் 'மாமா, நாட்டியம் பார்க்க வந்த இடத்திலும் பிஸினஸ் சிந்தனையா?").

நாட்டியம் முடிந்து விழாவில் ரவிசங்கர் பேசும்போது, 'ஒரு பொண்ணு கையை காலை ஆட்டி நடனம் ஆடிச்சு. எனக்கு அதிலெல்லாம் ஒண்ணும் பெரிசா இஷ்ட்டம் இல்லை. சொல்லப்போனா இந்த நாட்டியம் என்பதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம்' என்று பேசப்போக, அடுத்துப்பேசும் ராதா, ரவிசங்கரை ரசிப்புத்தன்மையையற்ற மனிதர் என்று குத்திக்காட்ட இவருக்கு மனது சுருக்கென்றாகிறது. வற்புறுத்தி அழைத்து வந்த தலைமை ஆசிரியருக்கோ தர்ம சங்கடமாகப்போகிறது. பின்னர் மேக்கப் அறையில் தனியே சந்திக்கும் ரவி சங்கரிடம், அவரைத் தன் நாட்டியக்கலைக்கு அடிபணிய வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள் ராதா. அது அவளால் முடியாது என்று மறுக்கும் ரவி, இன்னொரு முறை ராதாவின் நாட்டியத்தைக்காணும்போது, கொஞ்சம் கொஞ்சமாக சலனமடைந்து அவள் பால் ஈர்க்கப்பட, வந்தது வினை. ராதாவின் நாட்டியம் எங்கு நடந்தாலும் ஓடிச்சென்று பார்க்கத்துவங்குகிறார். ஒருமுறை அரங்கத்தின் வாயிலில் ஹவுஸ்புல் போர்டு போடப்பட, மேடையின்மீது வந்து நின்று பார்க்கும், ராதாவின் தந்தையும் அவரது நாட்டிய குருவுமான மனோகருக்கு அதிர்ச்சி. அரங்கத்தில் ரவிசங்கரைத் தவிர வேறு யாருமில்லை. எல்லா டிக்கட்டுகளையும் அவரே வாங்கிவிட்டிருக்கிறார்.

ரவிசங்கருக்கு தன்மீதுள்ள அபிமானத்தைப்பார்த்து ராதாவின் மனமும் மெல்ல மெல்ல ரவியின் பக்கம் ஈர்க்கப்பட, ரவி மீது காதல் வயப்படுகிறார். திருமணத்துக்கு முன்பே நெருங்கிப் பழகிய்தன் விளைவாக ராதா கருவுறுகிறாள். ரவி ராதா காதல் மட்டும் ராதாவின் தந்தைக்குத் தெரியவர, அவர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்புத்தெரிவிப்பதோடு, இனிமேலும் அந்த ஊரில் இருந்தால் ஆபத்து என்று முடிவெடுத்து நாட்டியக்குழுவை வேறு ஊருக்கு கிளப்புகிறார். அவரது எதிர்ப்புக்குக் காரணம், ஏற்கெனவே அவரது தங்கை சுகுமாரியுடன் ஒரு பணக்காரர் பழக்கம் வைத்து பின்னர் ஏமாற்றியதுதான். (அந்தப்பணக்காரர் வேறு யாரும் அல்ல, ரவிசங்கரின் தந்தையாக வரும் மேஜர்தான்).

அப்போது அவரைப்பார்த்து ராதவை தனக்கு மணமுடிக்குமாறு கேட்கும் ரவிடம், தன் மகளை மணக்க விரும்புபவனும் நாட்டியக் கலைக்கு மதிப்புக்கொடுத்து நாட்டியம் ஆடத் தெரிந்தவனாகவே இருக்க வேண்டும் என்று சொல்ல, தானும் நாட்டியம் கற்றுக் கொண்டு வந்து அவளை மணப்பதாக சவால் விட்டுப்போகிறார். ஒருநாட்டியப்போட்டியில் தன் அண்ணன் மனோகரின் மகள் ராதாவை, தன்னிடம் நாட்டியம் பயிலும் ஒரு கத்துக்குட்டியைக் கொண்டு தோற்கடிப்பதாக, அவரது தங்கை சுகுமாரி சவால் விட, அந்தக்கத்துக்குட்டி வேறு யாருமல்ல, ரவிசங்கர்தான். போட்டியின்போது நடனமாடிக்கொண்டே யானையின் உருவம் வரையும் போட்டியில் ராதா வரையும் யானையின் படத்தில் கண் வைக்கத்தவறிவிட, போட்டியில் ராதா தோற்று, ரவிசங்கர் வெற்றிபெற, போட்டியின் நிபந்தனையின்படி ராதாவை ரவிசங்கருக்கு மணம் முடிக்க அவளது தந்தை சம்மதிக்கிறார்.

இதனிடையே இன்னொரு பக்கம் ரவிசங்கர் - ராதா காதல் விவகாரம் ரவியின் தந்தை மேஜருக்குத் தெரியவர, அவர் பணக்காரர்களுக்கே உரிய குறுக்குப்புத்தியில் யோசித்து அவர்களைப்பிரிக்க முடிவெடுக்கிறார். அதன்படி, ஒருபக்கம் ராதா ஓட்டலுக்கு வாடிக்கையாக வரும் பெண்ணென்றும் அதை சோதிக்க வேண்டுமானால் ஓட்டலில் ஒரு நாள் தங்கியிருக்கும்படியும் சொல்லி ரவியைத் தங்க வைக்க, இன்னொருபக்கம் ரவி அழைப்பதாக ராதாவிடம் சொல்லி வரவழைக்க, ராதா ஓட்டலுக்கு வரக்கூடிய பெண்ணல்ல என்று உறுதியாக நம்பும் ரவி, கதைத்தட்டியது யாரென்று திறந்து பார்க்க, அங்கு ராதா நிற்க...... அவ்வளவுதான், ரவிசங்கரின் நம்பிக்கை உடைந்து சிதறுகிறது. ராதா சொல்ல வரும் காரணத்தை ரவி கேட்கத் தயாராயில்லை. (அப்படி கேட்பதாக இருந்தால், முக்கால்வாசிப்படங்களுக்கு மூணாவது ரீலுக்குப்பிறகு கதையை நகர்த்தவே முடியாது).

saradhaa_sn
7th August 2010, 07:51 PM
'பாட்டும் பரதமும்' - 2

இதனிடையே ரவியின் தங்கைக்கும் விஜயகுமாருக்கும் திருமணம் நடக்கிறது. ரவியிடம் விவரத்தைச்சொல்ல, ரவியின் வீட்டுக்கு அவரைத்தேடி வரும் ராதா, அங்கு திருமண ஏற்பாடு நடப்பதையறிந்து யாருக்கு திருமணம் என்று அங்குள்ளவரிடம் விசாரிக்க, அழையா விருந்தாளியாக திருமணத்துக்கு வந்த அந்த நபர் 'ரவிக்குத்தான் திருமணம்' என்று தப்பாகச்சொல்ல மனமுடைந்து போன ராதா, தன் வயிற்றில் ரவியின் குழந்தையை சுமந்திருந்த போதும் ரவியை விட்டு நிரந்தரமாக விலகிப் போகிறாள். ரவி ராதாவைத் தேடியலைகிறான். ரவி வீட்டைவிட்டு வெளியேறியதும், அவரது தந்தை மேஜர் மரணமடைகிறார். ராதாவின் நினைவாக நாட்டியப்பள்ளி நடத்திவரும் ரவியிடம், அவரது தங்கை மகள் (விஜயகுமாரின் மகள்) மாணவியாகச்சேர்கிறாள். ராதாவைத்தேடியலையும் ஒரே பாடலில் ரவிசங்கருக்கு மளமளவென்று வயதாகிக்கொண்டு போகிறது. அந்தப்பாடலின்போதே சுகுமாரி இறக்கிறார். மனோகர் இறக்கிறார். ரவியின் மாணவியும் வளர்ந்து பெரியவராகிறாள். (அவர்தான் ஸ்ரீப்ரியா).

வெளிநாட்டிலிருந்து தன் மகனுடன் (இரண்டாவது சிவாஜி) சென்னை வந்திறங்கும் ராதா (ஜெயலலிதா) ஒரு ஓட்டலில் தங்கியிருக்க, அந்த மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தும் இளைஞன் தன்னைக்கேலி செய்துவிட்டதாக, தன் குருவாகிய ரவியிடம் ஸ்ரீப்ரியா புகார் செய்ய, அதைத்தட்டிக்கேட்கச்செல்லும் இடத்தில் அந்த இளைஞன் தன்னைப்போலவே இருப்பது கண்டு ரவிசங்கர் ஆச்சரியமடைகிறார். அந்த இளைஞனோ இவர் யாரென்று தெரியாமல் போட்டி நடனத்துக்கு அழைக்க, போட்டியில் அந்த இளைஞனை வெல்ல, அப்போது வெளியில் வரும் ராதாவைக்கண்டு திகைப்பதோடு, அந்த இளைஞன் தன் மகன்தான் என்று அறிய, அனைவரும் ஒன்று சேர்வதோடு படம் நிறைவடைகின்றது.

படம் முழுவதிலும் ஒருவிதமான சோகம் இழையோடிக்கொண்டே இருப்பது இப்படத்தின் சிறப்பு. எங்கஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய கருப்பு வெள்ளைப் படங்களை எடுத்து பெரும் வெற்றி கண்ட அருண்பிரசாத் மூவீஸார் வண்ணத்தில் எடுத்த படம் இது. நடிகர்திலகத்தை வைத்து அவர்கள் தயாரித்த கடைசிப்படம். இயக்குனர் பி.மாதவன் இயக்கத்தில் நடிகர்திலகம் நடித்த கடைசிப்படமும் இதுவே. இப்படம் சரியாகப்போகததன் விளைவாக நடிகர்திலகத்தைப்பற்றி, பி.மாதவன் சில வார்த்தைகளை வெளியில் விட, அதனால் திரு வி.சி.சண்முகத்துக்கும் இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, நடிகர்திலகத்தை விட்டு நிரந்தரமாகப்பிரிந்தார். 1971-ல் படப்பிடிப்பு துவங்கி இவரது இயக்கத்தில் வளர்ந்து வந்த 'சித்ரா பௌர்ணமி' படம் கூட இறுதியில் இவரது உதவியாளர்களான தேவராஜ் - மோகன் இயக்கத்திலேயே முடிக்கப்பட்டு வெளியானது.

'பாட்டும் பரதமும்' படத்திற்கான பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பள்ளியின் ஆண்டுவிழாவின்போது ஜெயலலிதாவின் அறிமுக நடனத்துக்காக, வாணி ஜெயராம் பாடிய
'மழைக்காலம் வருகின்றது, தேன் மலர்க்கூட்டம் தெரிகின்றது'
என்ற பாடல். இப்பாடலின்போது உடலமைப்பிலும், உடையமைப்பிலும் கலைச்செல்வி சற்று குண்டாகத்தெரிவார். இந்த நடனத்துக்காக மேலையில் இடுப்பளவு பிரமாண்டமான நடராஜர் சிலை, கண்ணைக்கவரும்.

இரண்டாவது பாடல், நடிகர்திலகமும் ஜெயலலிதாவும் பாடும் டூயட் பாடல். இதுவரை படம் பிடித்திராத அழகான அவுட்டோரில் எடுக்கப்பட்டிக்கும்.
'மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்'
டி.எம்.எஸ்ஸும், பி.சுசீலாவும் பாடியிருந்தனர். (இப்படியும் கூட பாடல்கள் இருக்கின்றன என்று தொலைக்காட்சிகள் தெரிந்துகொண்டால் நல்லது. 'மயக்கம் என்ன', 'மதன மாளிகையில்' பாடல்களுக்கு நடுவே இவற்றையும் கொஞ்சம் தேடிப்பாருங்கள்).

மூன்றாவது பாடல், நடிகர்திலகமும், கலைச்செல்வியும் போட்டியிட்டு ஆடும் பாடல்....
'சிவகாமி ஆடவந்தால் நடராஜன் என்ன செய்வான்
நடமாடிப்பார்க்கட்டுமே - கண்கள் உறவாடிப் பார்க்கட்டுமே

தூக்கிய காலை கொஞ்சம் கீழே வைத்தால் இங்கு
பாக்கியை நான் ஆடுவேன் - அந்த பாக்கியம் நான் காணுவேன்'
இதுவும் டி.எம்.எஸ்ஸும், சுசீலாவும் பாடிய பாடல்தான். மனதை அள்ளிக்கொண்டு போகும்.
இதேமெட்டில் அமைந்த 'தூங்காத விழிகள் ரெண்டு' பாடலை தொலைக்காட்சிகளில் தலையில் தூக்கிவைத்து ஆடும் மைலாப்பூர் காம்பியர்களுக்கு, இப்படி ஒரு பாடல் வந்திருப்பது தெரியுமா?.

saradhaa_sn
7th August 2010, 07:52 PM
'பாட்டும் பரதமும்' - 3

நான்காவது பாடல், தன்னைவிட்டு மறைந்து போன கதாநாயகியைத்தேடி நடிகர்திலகம் பாடும் 'கற்பனைக்கு மேனி தந்து கால்சலங்கை போட்டுவிட்டேன்' என்ற தொகையறாவோடு துவங்கும்...
'தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத்தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு'
என்ற மனதை உருகவைக்கும் பாடல். டி.எம்.எஸ். தனித்துப்பாடியிருப்பார்.
இப்பாடலின் துவக்கத்தில் இளைஞராக இருக்கும் நடிகர்திலகம், பாட்டினூடே கொஞ்சம் கொஞ்சமாக வயதாகிக்கொண்டே போவார். இதனிடையே காலமாற்றங்களும் காண்பிக்கப்படும். சுகுமாரியின் மரணம், மனோகரின் மரணம் இவற்றை, அவர்களது போட்டோக்களுக்கு மாலை அணிவித்து, காண்பித்துக்கொண்டே போவார்கள்.

ஐந்தாவது பாடல், இளம்பருவ நினைவுகளோடு இரண்டு மயில்களைப்பார்க்கும்போது, காணாமல் போன காதலியின் நினைவு வாட்ட, அவரது கற்பனையில் இருவரும் மயில்களாகத்தோன்றும்..
'உலகம் நீயாடும் சோலை
உறவைத் தாலாட்டும் மாலை'
இனிய அழகான மெலோடி. பாடலின் இறுதியில் பெண்மயிலை வல்லூறு பறித்துக்கொண்டு செல்லும்போது இயலாமையில் ஆண் மயில் பரிதாபமாகப்பார்ப்பதை நடிகர்திலகம் முகத்தில் காண்பிக்கும்போது நம் விழியோரங்களில் கண்ணீர்.

(ஏனோ தெரியவில்லை. இப்படத்தில் மணி மணியான பாடல்கள் அமைந்தும் அவை வெளியில் தெரியாமலே போய்விட்டன. மெல்லிசை மன்னரும், அவர்தம் குழுவினரும் இப்படத்தில் உழைத்த உழைப்பு கண்டுகொள்ளாமலே விடப்பட்டது).
இவைபோக இரண்டாவது நடிகர்திலகத்துக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் ஓட்டலில் ஒரு பாடலும் உண்டு

நடிகர்திலகமும், கலைசெல்வியும் ஏற்றிருந்த பாத்திரங்கள் நம் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. கூடவே விஜயகுமார், ஸ்ரீப்ரியா, மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், சுகுமாரி மற்றும் நகைச்சுவை பகுதிக்கு எம்.ஆர்.ஆர்.வாசு, மனோரமா, பகோடா காதர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

படம் 1975 டிசம்பர் 6 அன்று வெளியானது. நன்றாக ஓடி பெரும் வெற்றியடைந்திருக்க வேண்டிய இப்படம், அந்நேரத்தில் நடிகர்திலகத்துக்கு அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா, வைர நெஞ்சம் போன்ற படங்களால் ஏற்பட்டிருந்த சரிவு நிலை காரணமாகவும், அதைவிட முக்கியமாக பெருந்தலைவர் காமராஜரின் மறைவுக்குப்பின் அரசியலில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பெரிய வெற்றியைப்பெற முடியாமல் போனது. ஒரு ஆண்டு முன்னர், அல்லது ஓராண்டு கழித்து வெளியாகியிருந்தால் நிச்சயம் பல இடங்களில் நூறு நாட்களைக்கடந்து ஓடி பெரிய வெற்றியடைந்திருக்கும். காரணம், ஒரு வெற்றிப்படத்துக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் இது.

'பாட்டும் பரதமும்' திரைப்படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப்படித்த அத்தனை அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.

RAGHAVENDRA
7th August 2010, 09:10 PM
அன்புச் சகோதரி சாரதா,
என் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற உன்னத திரைக்காவியமான பாட்டும் பரதமும் படத்தைப் பற்றிய தங்கள் பதிவு நெஞ்சைத் தொடுகிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய My Song is For You என்ற பாடலே நீங்கள் குறிப்பிட்ட ஸ்ரீப்ரியாவுடனான பாடலாகும். பல காட்சிகள் இப்படத்தில் மிக மிக சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக கற்பனைக்கு மேனி தந்து பாடல் அப்போதைய மெல்லிசை மேடைகளில் மிகவும் பிரசித்தம். பல டி.எம்.எஸ். ரசிகர்கள் இப்பாடலை மேடை தவறாமல் பாடியதுண்டு.

அரசியலால் பாதிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் படங்களில் இதுவும் ஒன்று. திரையரங்கில் இப்படம் பார்க்க விடாமல் பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றதுண்டு. இப்படம் வெளியான நேரத்தில் தான் ஒரு விநியோகஸ்தர் நடிகர் திலகத்தை விமர்சித்து சுவரொட்டி வெளியிட்டு பரபரப்பூட்டினார் ("கல்லறை காயும்முன்னே சில்லறை தேடிய கணேசா, உனக்கு பாட்டும் பரதமும் ஒரு கேடா") என்ற வரிகள் இன்னும் நினைவிலுள்ளன. அது மட்டுமின்றி சாந்தி திரையரங்கிலேயே ரசிகர்களிடையே புகுந்து நடிகர் திலகத்தை தாறுமாறாக விமர்சித்தவர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சிகளெல்லாம் உள்ளத்தின் அடித்தளத்தில் அப்படியே தங்கி விட்டன. அப்போதும் நான் நடிகர் திலகத்தின் பால் உள்ள பாசமும் பற்றும் மாறாமல் அவரை விட்டுக் கொடு்க்காமல் பேசுவேன். அது மட்டுமன்றி அவர்களிடம் சவாலும் விட்டிருக்கிறேன். உங்களுடைய அரசியலை நம்பி நடிகர் திலகம் இல்லை. அவருடைய படங்களை உங்கள் கட்சியினர் பார்த்துக் கூட இருக்க மாட்டார்கள். சொல்லப் போனால் இனிமேல் தான் அவர் பல சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்று கூறியிருக்கிறேன் (இவையெல்லாம் உண்மையில் நடந்தது, வெறும் வார்த்தைக்காக கூறியதில்லை.) அதே சாந்தி திரையரங்கில் இன்றும் நாம் கூடுகிறோம். அதே சாந்தியில் இன்றும் நடிகர் திலகத்தின் படம் வெற்றி நடை போட்டிருக்கிறது. ஆனால் அன்று அவரை இழித்தோரும் பழித்தோரும் காணாமல் போயினர். பாட்டும் பரதமும் படம் மட்டுமன்றி அதைத் தொடர்ந்து வந்த உனக்காக நான் படமும் பாதிக்கப் பட்டது. ஆனால் உத்தமன் படம் பெற்ற வெற்றி ஓரளவு மன சாந்தி தந்தது. 1977ல் தீபம் அடைந்த மகத்தான வெற்றி, அதைத் தொடர்ந்து அண்ணன் ஒரு கோயில் மகளிரிடம் பெற்ற அபிமானம், இவையெல்லாம் தாண்டி திரிசூலம் அடைந்த இமாலய வெற்றி என்னுடை கணிப்பை சரியானதாக்கி இன்றளவும் உள்ளத்துள் அந்த சோதனையான நாட்களை எண்ணிப் பார்க்க வைக்கின்றது.

சகோதரி சாரதா மற்றும் அனைவரும் என்னை மன்னிக்கவும். படத்தைப் பற்றி எழுதாமல் திசை மாறியதாக தவறாக எண்ண வேண்டாம். பாட்டும் பரதமும் படம் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பின் எதிரொலியே இந்த நினைவுகளின் பரிமாற்றம்.

அன்புடன்

ராகவேந்திரன்்

kumareshanprabhu
8th August 2010, 12:28 AM
can we discuss on avanthanmanithan

pammalar
8th August 2010, 01:17 AM
டியர் ஜோ சார்,

நமது நடிகர் திலகம் திரியின் முன்னோடிகளில் தாங்கள் முதன்மையானவர். எனவே, தொடர்ந்து தங்களின் மேலான பங்களிப்பையும், மேன்மையான பதிவுகளையும் அவசியம் அளிக்குமாறு மிக மிக உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th August 2010, 01:38 AM
டியர் நௌ சார்,

தாங்கள், திரு.ஜோ அவர்களைப் போலவே, முந்தைய பாகங்களின் முக்கிய இணைப்புக்கள் அனைத்தையும் முதல் பக்கத்திலேயே அளித்தமைக்கு,

முத்தாய்ப்பான நன்றிகள்!

டியர் செந்தில் சார்,

பாராட்டுக்கு நன்றி! இங்குள்ள ஒவ்வொருவருமே ஒரு தூண் தான்!

டியர் குமரேசன் பிரபு சார்,

தங்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th August 2010, 03:58 AM
டியர் ராகவேந்திரன் சார்,

நடிப்பு நுணுக்கங்கள் அனைத்தும் அறிந்த, கலைப் பல்கலைக்கழகத்தின் நிழற்படத்தை, கலை நுணுக்கங்களோடு, பல்கலைக்கழக வடிவ இலச்சினில் பாந்தமாகப் பொருத்திய தங்களுக்கு, இத்திரியின சார்பில் "டாக்டர்" பட்டமே வழங்கலாம்.

டாக்டர் ராகவேந்திரன் வாழக! வாழ்க! வளர்க அவர்தம் திருப்பணி!! வெல்க அவர் புரியும் திருத்தொண்டு!!!

இத்திரியில் பங்களிப்பு நல்கும் நாம் அனைவரும் ஆண்டுதோறும் ஒரு முறையேனும், ஏதேனும் ஒரு நாளில், ஒரு இடத்தில், ஒரு நேரத்தில் நிச்சயம் ஒன்று கூடி அளவளாவ வேண்டும். தங்களது கருத்தை முதல் ஆளாக அடியேன் வழிமொழிகிறேன்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th August 2010, 04:11 AM
சகோதரி சாரதா,

"பாட்டும் பரதமும்" பற்றிய 'திறனாய்வு' 'விமர்சனம்' எப்பொழுதும் போல் "அற்புதம்" "அபாரம்". நீண்ட இடைவெளிக்குப்பின் வந்திருக்கும் தங்களின் இத்திறனாய்வு, சச்சின் அடித்த செஞ்சுரி போல் செம கலக்கல்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th August 2010, 04:17 AM
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 7
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]

பேலஸுக்கு கோபாலுடன் திரும்பும் லதா, தனது தந்தையிடம் கோபாலுக்கு BP இருப்பதைப் பற்றிக் கூறுகிறார். உடனே ராமதுரை கோபாலிடம் காலாகாலத்திலே ஒரு கல்யாணம் செய்து கொண்டா, Happy ஏறி BP இறங்கிவிடும் என்கிறார். மூவரும் உணவருந்த ஆயத்தமாக, கோபாலை மட்டும் தொலைபேசி மணி அழைக்கிறது. திகைப்புடன் கண்களை அகல விரித்து, அதிர்ச்சியுடன் புருவங்களை மேலே உயர்த்தி, மணி அடிக்கும் ஒலியை ராகமாக வைத்துக் கொண்டு, தாளம் தப்பாமல் இரு அடி பக்கவாட்டில் எடுத்து வைத்து அவர் ரிசிவரை எடுக்கும் லாவகம் இருக்கிறதே, ஆஹா! ஒயிட்-அன்ட்-ஒயிட் ப்ரோஃபைல் போஸிலும் தான் அவர் எத்தனை அழகு. 360 டிகிரியிலும் அழகாகத் தெரியக்கூடியவர், மனித குலத்திலேயே இந்த மனிதபுனிதர் ஒருவராகத்தான் இருக்க முடியும். ப்ரோஃபைல் போஸுக்கு பிரமாதமாக கற்பூரம் காட்டப்படுகிறது! காலர் ரங்கன் காலரை பிடிக்காத குறையாக கோபாலை டார்ச்சர் செய்ய, ஃபோனை கட் செய்கிறார் கோபால். திரையில் கோபாலுக்கு அஷ்டமத்து சனி துவங்கி விட்டதென்றால், இங்கே அரங்கில் ரங்கனுக்கு அர்த்தாஷ்டம சனி துவங்கி விட்டது. ஆம், அரங்கில் ரங்கனுக்கு லட்சார்ச்சனை ஆரம்பமாகிவிட்டது.

அடுத்த காட்சி. நெருங்கிய உள்ளங்கள் உறங்காமல் நெருங்குகின்றன. ஏஞ்சலைப் போல இறங்கி வரும் சரோ, அண்ணலைப் பார்த்து, "தூங்கலையா" எனக் கண்களை மூடித்திறந்து கேட்கிறார். அதற்கு அண்ணல் சரோவை, பார்வையில் ஒரு அள அளந்து கொண்டே, ஊஹூம் என லேசாக தலையசைத்து, "தூக்கம் வராம விடியிற வரைக்கும் முழிச்சிக்கிட்டிருக்கிறதும், தூங்கும் போது பாதி ராத்திரியில முழிச்சிக்கிறதும் எனக்கு பழைய அனுபவம்" என சாலிடாக சொல்லிக் கொண்டே, "நீ தூங்கலையா?!", என வினவ,

அபிநயம் : "முயற்சி செஞ்சேன், முடியல"

அண்ணல் : "ஏன்?"

அபிநயம் : "தெரியலை"

அண்ணல் : மௌனம்

அபிநயம் : "இது எனக்கு புது அனுபவம்!"

மணிரத்ன வசனங்களுக்கு, ரத்தினம் போன்ற இம்மணியான காட்சி முன்னோடியோ!

ஹென்றி டேனியலின் ஹேட்சம் குரலோடு இணைந்து பிஜிஎம் பிரமாதப்படுத்துகிறது.

அன்பே உருவான அண்ணலின் சிகை நடிக்க, அவர் சிகரெட் புகை நடிக்க, இனிமையான இசையால் உறக்கத்தைத் தழுவும் கண்கள் நடிக்க, உறங்குவதற்காக மூடும் கண்களின் இமைகள் நடிக்க , அண்ணலின் உறக்கமே நடிக்கிறது.

தெய்வம் இருக்கையில் அனந்த சயனம்! பக்தர் கூட்டம் இருக்கை நோக்கி அமைதிப் பயணம்!

(தொடரும்...)

பக்தியுடன்,
பம்மலார்.

saradhaa_sn
8th August 2010, 01:33 PM
டியர் NOV...

** இத்திரியின் முகப்பில் நடிகர்திலகத்தின் மூன்று அற்புத போஸ்களை இணைத்ததற்கும்....

** முந்தைய பக்கங்களின் இணைப்புக்களை முதற்பக்கத்தில் அழகுற தந்ததற்கும்....

** 'பாட்டும் பரதமும்' படத்தின் ஸ்டில்லை இணைத்து, அப்பதிவுக்கு அழகு சேர்த்ததற்கும்....

மிக்க நன்றி.

இத்திரியின் வெற்றியில் தங்களின் பங்களிப்பு மகத்தானது.

saradhaa_sn
8th August 2010, 02:08 PM
டியர் பம்மலார் & ராகவேந்தர்...
'பாட்டும் பரதமும்' பதிவுக்கான பாராட்டுக்களுக்கு நன்றி.

பம்மலார்...
தங்களின் புதிய பறவை தொடர்வது கண்டு மகிழ்ச்சி. 'அவரது தூக்கமும் நடித்தது' என்ற சொல்லாட்சி மிகவும் அருமை. ரங்கனை நிந்திக்கத் துவங்கிவிட்டனர் என்ற வாசகம், நடிகவேளுக்கு கிடைத்த பாராட்டு. ஆம், கதாநாயகனுக்கு கைதட்டல் பாராட்டு என்றால், வில்லனுக்கு திட்டுக்கள்தான் பாராட்டு. யாரும் திட்டவில்லை என்றால் அவர் தன் ரோலை செவ்வனே செய்யவில்லை என பொருளாகிறது. படத்தை ஏற்கெனவே பார்த்த அனைவருக்கும் கடைசியில் நடிகவேள் யாரென்பது தெரிந்திருந்தும், 'எங்க அண்ணனை டார்ச்சர் பண்ணுவதா?' என்ற கோபம்தான் வசவுகளாக வெளிப்படும். அதுவும் நிச்சயதார்த்தத்துக்கு வந்த விருந்தினரை விரட்டியடிக்கும் காட்சி ஒன்று போதும், நடிகவேளின் நடிப்பை பறைசாற்ற.

தொடருங்கள்.... காத்திருக்கிறோம்....

saradhaa_sn
8th August 2010, 02:21 PM
டியர் முரளியண்ணா...

அன்று அவசரத்தில் படித்த உங்களின் 'விளையாட்டுப்பிள்ளை' ஆய்வுக்கட்டுரையை மீண்டும் நிதானமாகப்படித்தேன். தங்களுக்கே உரித்தான சுவையுடன் எழுதியுள்ளீர்கள். ஐம்பதுகளிலேயே காலாவதியாகிவிட்ட கதைக்களத்தை எழுபதின் துவக்கத்தில் தந்தது ஒன்றே சற்று நெருடல். மற்றபடி, நடிகர்திலகம் அதுவரை செய்திராத பல வித்தைகளை அதில் பரீட்சித்திருப்பார்.

படத்தில் இடம் பெறாத, ஆனால் வானொலிகளில் ஒலிபரப்பான பாடல் "வாழ்ந்திருந்தோம் ஒரு காலத்திலே". இப்பாடலை பி.சுசீலா பாடியிருப்பார். சோகப்பாடல் என நினைக்கிறேன்.

saradhaa_sn
8th August 2010, 03:59 PM
[tscii:7d97dcaad4]சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கு....

'பாட்டும் பரதமும்' ஆய்வுக்கட்டுரைக்கு நீங்கள் அளித்துள்ள பதிலுரையில் பல நிகழ்வுகளைச்சுட்டிக்காட்டி, பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுள்ளீர்கள். அவை என்றென்றும் ரசிகர்கள் நெஞ்சில் மாறாத நினைவுகள் என்பதைவிட ‘ஆறாத வடுக்கள்’ என்பதே பொருத்தம். குறிப்பாக இந்தப்படத்துக்கு எதிராக நடந்த சதிகள் நிறைய. டாக்டர் சிவாவும், வைர நெஞ்சமும் அவர் முடிவெடுக்கும் முன் வெளிவந்து பல நாட்களைக் கடந்து விட்டன. அதுபோல 'உனக்காக நான்' வந்தபோது சூடு சற்று ஆறிப்போய் விட்டிருந்தது. ஆனால் 'பாட்டும் பரதமும்'தான் மிகவும் சிக்கலான தருணத்தில் வெளிவந்து, தாக்குதலில் மாட்டியது. அப்போது அண்ணனுக்கு உறுதுணையாக நின்றது அவரது ரசிகர் கூட்டம்தான். ஆனால் அதிலும் கூட பிளவு ஏற்பட்டிருந்தது.

தமிழகம் முழுக்க இப்படி சிக்கல் என்றால், திருச்சி - தஞ்சாவூர் விநியோக ஏரியாவில் கூடுதலாக இன்னொரு பிரச்சினை. பிரச்சினை என்பதைவிட சதி, வியாபாரக் காழ்ப்புணர்ச்சி என்பவையே சரியான பதங்களாயிருக்கும்.

ஏ.வி.எம்.நிறுவனத்தின் பல கிளைகளில் ஒன்று, திருச்சியில் இயங்கி வரும் 'ஏ.வி.எம்.லிமிடட்' என்ற விநியோக நிறுவனம். 'பாட்டும் பரதமும்' பாதித்தயாரிப்பில் இருக்கும்போதே விநியோகஸ்தர்களுக்கான காட்சியைப்பார்த்து விட்டு, அப்படத்தை திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஏரியா உரிமையை வாங்க முயற்சித்தனர். ஆனால் அதைவிட கூடுதல் தொகைக்குக்கேட்ட வேறொரு விநியோகஸ்தருக்கு படம் வழங்கப்பட்டுவிட்டது. இதற்காகவே படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து, நடிகர்திலகத்தின் 'தில்லானா மோகனாம்பாள்' படத்திற்கு அந்த ஏரியா உரிமையை A.V.M.Ltd (Trichy) வாங்கி, சுமார் ஏழெட்டு புதிய பிரிண்ட்கள் எடுத்து 'பாட்டும் பரதமும்' படத்தைத் தோற்கடிப்பதற்காக, அதே 1975 டிசம்பர் 6 அன்று திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களில் 'நாட்டியமும் நாதசுரமும்' என்ற தலைப்பை பெரிதாகப்போட்டு அடைப்புக்குறிக்குள் சிறியதாக (தில்லானா மோகனாம்பாள்) என்ற தலைப்பிட்டு பெரிய பெரிய போஸ்ட்டர்கள் அடித்து வெளியிட்டனர். அதுமட்டுமல்லாது திருச்சி 'தினத்தந்தி' பதிப்பிலும், கடைசி பக்கத்தில் முழுப்பக்க 'பாட்டும் பரதமும்' விளம்பரம் வெளியிடப்பட, அதே இதழில் முதற்பக்கத்தில் கால் பக்க விளம்பரமாக, நடிகர்திலகம் நாதசுரம் வாசிக்க, பத்மினி நாட்டியமாடும் போஸுடன், இன்றுமுதல் 'நாட்டியமும் நாதசுரமும்' என்ற தலைப்பிட்டு விளம்பரம் செய்திருந்தனர். அதாவது, புதிய படத்தின் விநியோக உரிமை கிடைக்கவில்லை என்பதற்காக, நடிகர்திலகத்தின் கையை எடுத்தே அவர் கண்ணைக் குத்தினார்கள். அதிலும் பெரிய கொடுமை, பட்டுக்கோட்டையில் 'தில்லானா' படம் திரையிடப்பட்ட 'நீலா' திரையரங்கின் உரிமையாளர் ஒரு காங்கிரஸ்காரராம். (பாட்டும் பரதமும் 'முருகையா' என்ற தியேட்டரில் வெளியானதாம்).

அதுபோக தமிழகம் முழுவதும் இப்படம் ஓடிய அரங்கின் முன் பா.ராமச்சந்திரன் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸார் கூடி நின்று, 'படம் டப்பா, போகாதீர்கள்' என்று படம் பார்க்க வந்த பொதுமக்களை திசை திருப்பிவிட்டனர். காங்கிரஸ் இணைப்பு மாநாட்டுக்கு முன் எமர்ஜென்ஸியில் தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி கலைக்கப் பட்டிருந்ததால், அவர்களின் எதிர்ப்பும் நடிகர் திலகத்துக்கு எதிராக அமைந்தது. எதிர்வாதத்தில் ஈடுபட்ட நடிகர்திலகத்தின் ரசிகர்களை அடித்து விரட்டினர். எந்தவித சப்போர்ட்டும் இல்லாத ரசிகர்கள் அடிதாங்க முடியாமல் விரண்டோடினர். சென்னையில் மட்டுமல்ல, மதுரை சினிப்ரியா அரங்கின் முன்னும் தினமும் இதே கலாட்டா நீடித்ததாம். (முரளியண்ணா விவரிப்பார் என்று நம்புகிறேன்). ஆனால் மதுரையில் ரசிகர்படை சற்று பலமானது என்பதால் எதிர்ப்பு அவ்வளவாக எடுபடவில்லை. இருப்பினும் கலாட்டாவுக்குப் பயந்த மக்கள் இப்படம் ஓடிய தியேட்டர்களுக்கு வருவதைத் தவிர்க்கத்துவங்கினர். எதிர்ப்பாளர்களின் எண்ணம் பெருமளவு நிறைவேறியது.

அந்த நேரத்தில் இப்பட வெளியீட்டைத் தவிர்த்திருந்தால் படம் நிச்சயம் பெரிய வெற்றியடைந்திருக்கும். அதற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் உள்ளன. இப்படத்துக்காக நடன மேதை கோபிகிருஷ்ணாவிடம் நடிகர்திலகம் குறுகிய காலம் பிரத்தியேகமாக நடனம் கற்றுக்கொண்டார் என்பது கூடுதல் தகவல்.
[/tscii:7d97dcaad4]

NOV
8th August 2010, 06:10 PM
anbu sagothara-sagotharigalE, neengal enakku nandri solla thEvai illai. neengal ellOrum seyyum paniyil oru 1% kooda naan pannavillai.
ellaa pugazhum nadigar thilagaththukkE. :D

J.Radhakrishnan
8th August 2010, 09:05 PM
மற்றொரு அவா இந்நேரத்தில் வெளிப்படுத்த விழைகிறேன். நமது ஹப்பில் நடிகர் திலகம் திரியில் பங்கு பெற்று கருத்துக்களை எழுதும் அனைத்து நண்பர்களும் அனைவருக்கும் உகந்த நாளில், இடத்தில், நேரத்தில் சந்தித்து உரையாடலாம். அதைப் பற்றி அனவைரும் தங்களுடைய கருத்துக்களைக் கூறலாம். எதிர் வரும் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை ஒட்டிவரும் ஏதேனும் ஒரு நாளில் சந்தித்து நேர் அறிமுகம் மற்றும் உரையாடல் மேற்கொள்ளலாம்.

இவ்விஷயத்தில் தங்கள் கருத்துக்களை எதிர் நோக்கும்

ராகவேந்திரன்


டியர் ராகவேந்தர் சார்,

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

Murali Srinivas
9th August 2010, 12:07 AM
சாரதா,

பாட்டும் பரதமும் அலசல் அருமை என்று சொல்லவும் வேண்டுமோ! நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் பற்றிய செய்திகள் நாளை எழுதுகிறேன். அதற்கு முன் கொஞ்சம் புதிய பறவை.

இன்று மாலை பாரத் அரங்கத்தை ஏன் அந்த ஏரியாவையே ஒரு குலுக்கு குலுக்கி விட்டார்கள் ரசிகர்கள். வாண வேடிக்கை என்ன, பாண்ட் மேளங்கள் என்ன ஒலிபெருக்கியில் நடிகர் திலகத்தின் பாடல்கள் என்ன என்று ஒரே திருவிழா கோலம். இது தவிர வழக்கம் போல் ஏராளமான மாலைகள், சூட தீப ஆராதனைகள் எல்லாம் நடந்தேறியன.

டிக்கெட்கள் Rs 50 /- என்று இருந்த போதிலும் ஏராளமான கூட்டம். அரங்கத்தின் உள்ளே அமர்க்களம் மிக அதிகமாகவே இருந்தது. சாந்தியில் சூழ்நிலை நிர்பந்தம் காரணமாக சில நேரங்களில் அடக்கி வாசித்த ரசிகர்கள் இங்கே அணை மீறிய வெள்ளமாக பாய்ந்தனர்.

வடசென்னை ரசிகர்கள் வெறி அதிகமாகவே இருக்கும் என்று சுவாமி சொன்னார். அப்படியே நடந்தது.ஆனால் யாரும் எல்லை மீறவில்லை. பாரத் அரங்கம் இப்போது குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருப்பதால் உள்ளே சூடங்கள் அனுமதிக்கப்படவில்லை. அரங்க நிர்வாகத்தினரே அதை ஈடு செய்யும் பொருட்டு ஒவ்வொரு பாடல் காட்சியின் போதும் திரையை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சின்ன மின்சார விளக்குகளை எரிய விட காட்சிகள் ஜெகஜோதியாக விளங்கின. சிட்டுகுருவி முத்தம் கொடுத்து மற்றும் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல்களுக்கு நடந்த ஆரவாரத்தை பார்த்தால் இன்று முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்களே தங்களுக்கு இப்படி ரசிகர்கள் இல்லையே என்று ஏங்கி போவார்கள். எங்கே நிம்மதி பாடலுக்கு இதை விட அதிகமாக நடந்திருக்கும் என நினைக்கிறேன். நாங்கள் அதற்கு முன்பு கிளம்பி விட்டோம்.

இனி சில தகவல் துளிகள்

நடிகர் திலகத்தின் முதல் படத்தையும் கடைசி படத்தையும் வெளியிட்ட பாரத் அரங்கின் உரிமையாளருக்கு மன்றங்களின் சார்பாக சால்வை அணிவிக்கப்பட்டது.

சாந்தியில் புதிய பறவை ஒரு வார வசூல் Rs 3,40,000 /- . இது பழைய பட மறு வெளியீட்டில் புதிய சாதனை.

மறு வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் படங்களைப் பற்றி செய்திகள் அங்கே கிடைத்தன. அவை சவாலே சமாளி, வசந்த மாளிகை, கெளரவம்[அநேகமாக சாந்தியில் வெளியாகலாம்] போன்றவை. அது தவிர எந்த படங்கள் வெளியிட்டால் நன்றாக போகும் என்பது பற்றியும் விநியோகஸ்தர்கள் நமது சுவாமி, ராகவேந்தர் சார் போன்றவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொண்டனர்.

தியேட்டர் புகைப்படங்களை சுவாமி மற்றும் ராகவேந்தர் சார் உங்களுக்கு வழங்குவார்கள்

அன்புடன்

RAGHAVENDRA
9th August 2010, 12:12 AM
அன்பு சகோதரி சாரதா அவர்களுக்கு,
பாட்டும் பரதமும் பற்றிய பழைய நினைவுகளில் தாங்கள் அளித்துள்ள தகவல்கள் பல ரசிகர்களுக்கு புதியதாயிருக்கும். நடிகர் திலகம் எத்தனை இடர்பாடுகளையும் துரோகங்களையும் சந்தித்து வளர்ந்துள்ளார் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

டியர் பம்மலார்,
டாக்டர் பட்டத்திற்கு என்றே பிறந்தவர் நடிகர் திலகம். அவருடைய நினைவையும் புகழையும் போற்றும் பல கோடி பக்தர்களில் நானும் ஒருவன் அவ்வளவே. தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

டியர் பம்மலார், ராதாகிருஷ்ணன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி, என்னுடைய விருப்பத்திற்கு ஆதரவளித்தமைக்கு. அது சீக்கிரம் நடந்தேறும் என்று நம்புவோம், அதற்கான முயற்சியில் இறங்குவோம்.

இன்று 8.8.10 ஞாயிறு மாலைக் காட்சியில் பாரத் திரையரங்கையும் நம் மக்கள் விட்டு வைக்கவில்லை. சாந்தியை நாங்கள் மிஞ்சுகிறோம் பாருங்கள் என்று போட்டியில் இறங்கி விட்டார்கள். ஒரே ஒரு வித்தியாசம் சாந்தியில் பெங்களூரு ரசிகர்களால் போடப் பட்ட ராட்சத மாலைகள். இருந்தாலும் இவர்களும் விடவில்லை. பிரம்மாண்டமான எலுமிச்ச மாலை அணிவி்த்து அசத்தி விட்டனர். தொலைக்காட்சியில் மிகவும் பெரியாய் விளம்பரப்படுத்தப் பட்ட நிகழ்ச்சியையும் மீறி மக்கள் திரையரங்கில் கூடி அமர்க்களப் படுத்தி விட்டார்கள். கிட்டத்தட்ட 70 சதவீதம் அரங்கு நிறைந்தது ஒரு பெரிய விஷயமாக திரையரங்கு நிர்வாகத்தினராலேயே கருதப் படுகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியினால் சிறிது குறைந்துள்ளதாகவும் அது இல்லையென்றால் இங்கும் அரங்கு நிறைவு பலகை மாட்டப் பட்டிருக்கும் என்றும் கூறினர்.

பாரத் திரையரங்கு அளப்பரை பற்றி விரிவாக அடுத்து வரும் பதிவுகளில் அலசலாம்.

அன்புடன்
ராகவேந்திரன்

SHIV
9th August 2010, 11:22 AM
Dear Mr.Ragavendra/Mr.Murali Srinivas

Many thanks for your update on PP at Bharath. Looking forward to your detailed report.

It is all the more heartening to note that some of our Deivam's evergreen movies are ready for a re-release and take chennai by storm.

regards

Shivram

SHIV
9th August 2010, 11:35 AM
Dear Mr.Murali Srinivas

I just read your postings on NT's political journey in 1980's and how he was betrayed by certain ungratefuls.

Since I was a school student those days, the recordings & postings of such events is very interesting. It was also painful to note how our NT was back stabbed by once close associates.

I had also heard those days that NT got an appointment with Rajiv Gandhi at Delhi and as his practise, NT was present half an hour before appointment but was made to wait for more than an hour to meet Mr.Gandhi. Getting frustrated over the wait, NT had walked out and headed to Airport. Coming to know of this, Gulam Nabi Azad called up NT to pacify him and informed him that Rajiv Gandhi was not aware that NT was waiting for him!!!.

Was our TN Congress ungratefuls behind this miscommunication???.

Kindly clarify.

Regards

Shivram

saradhaa_sn
9th August 2010, 01:01 PM
டியர் ராகவேந்தர்,

நடிகர்திலகம் இணையதள முகப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள, 'நடிப்புப் பல்கலைக்கழகத்தின் இலச்சினை' (Emblom) மிக மிக அருமை. அற்புத சிந்தனை மற்றும் வடிவமைப்பு.

டியர் முரளி & ராகவேந்தர்,

வடசென்னை 'பாரத்' திரையரங்கத்தில் புதிய பறவை அலப்பறை பற்றிய ரிப்போர்ட்டுக்கு நன்றி. அதெப்படி, இவ்வளவு கோலாகலங்களைப்பார்த்தபின்னும், 'எங்கே நிம்மதி'யைப்பார்க்காமல் அந்த இடத்தை விட்டகல உங்களுக்கு மனம் வந்தது?. ஆச்சரியம்தான். மறுவெளியீடுகளின் பரிசீலனையில் 'சவாலே சமாளி'யும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

RAGHAVENDRA
9th August 2010, 01:49 PM
சகோதரி சாரதா அவர்களுக்கு,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. இந்த எண்ணம் தற்செயலாகத் தோன்றியது. நடிகர் திலகத்தை நடிப்புப் பல்க்லைக்கழகம் என்று நாம் விளம்புகிறோம். அதனை உருவகப் படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆவலின் விளைவே இந்த வடிவம். தங்களுடைய உளமாரந்த பாராட்டுக்களுக்கு மீண்டும் என் நன்றி.

நிச்சயம் எங்கே நிம்மதியைப் பார்க்காமல் போக எங்களுக்கு மட்டுமல்ல, யாருக்குமே வராது. சொல்லப் போனால் நாங்கள் ஆரவாரங்களைப் பார்த்து விட்டு வெளியேறும் எண்ணத்துடன் தான் அரங்கிற்கே வந்தோம். அங்கே போனால் எங்களால் அப்படியே சென்று விட மனம் வரவில்லை. அதனால் அரங்கினுள் சற்று நேரம் இருந்து விட்டுப் போகலாம், உள்ளே அளப்பரைகளைப் பார்க்கலாம் என்ற ஆவலுடன் உள்ளே சென்று அமர்ந்தோம். இருந்தாலும் தவிர்க்க இயலாத மற்ற காரணங்களால் நாங்கள் வெளியேற வேண்டி வந்தது.

இதிலே ஒரு சுவையான சம்பவத்தை சொல்ல வேண்டும். அரங்கினுள் ஒரு சிறுவன் தன் தந்தையுடன் வந்திருந்தான். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை சட்டை செய்யாமல் அந்த சிறுவன் வந்திருந்ததே வியப்பிற்குரியது. தந்தையும் மகனும் பொன்னேரியிலிருந்து வந்திருந்தார்கள். அந்த சிறுவனிடம் அவனது தாயார் அலைபேசியில் வீட்டுக்கு வருமாறு அழைத்திருக்கிறார். அதற்கு அந்த சிறுவன் சொன்ன பதில் - இருங்க மம்மி, எங்கே நிம்மதி பாடலைப் பார்த்து விட்டு உடனே கிளம்பி விடுகிறோம்.

அந்த சிறுவனுக்கே அந்தப் பாடலின் மீது அவ்வளவு ஆர்வம் என்றால் அரங்கிலுள்ள மற்றவர்களைக் கேட்கவேண்டுமா என்ன. அதிலும் மற்றொரு ரசிகர் சொல்கிறார், இவ்வளவு நேரம் நீங்கள் பார்த்தது ஒன்றுமில்லை, எங்கே நிம்மதி பாடலைப் பாருங்கள் என்று நம் ஆவலை மேலும் கிண்டி விட்டுப் போய் விட்டார். அவர் சொன்னதற்கப்புறம் எங்கள் உள்ளம் அந்த இடத்தைவிட்டு நகருமா என்ன. வெளியே போனதென்னவோ எங்கள் தேகம் மட்டும் தான்.

அன்புடன்
ராகவேந்திரன்

rangan_08
9th August 2010, 06:33 PM
Pardon me for the belated wishes.

Pammalar sir, congratulations for signing off NT-Part 6 in style :

Kelvi Pirandhadhu - 100th post

NT's 100th film

NT-Part 6 - 100th page

A rare feat.


All the best to you Saradha mam. As always, looking forward to many interesting informations about NT, from you.

RAGHAVENDRA
9th August 2010, 07:37 PM
நடிகர் திலகத்தின் நடிப்பு சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்தாத பிரிவே கிடையாது என்பதற்கு மற்றொரு சான்று. சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதியரசி பிரபா ஸ்ரீதேவன் அவர்கள் தம்முடைய பிரிவுபசார விழாவின் போது ஆற்றிய உரையில் வியட்நாம் வீடு படத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அப்படத்தின் கதாநாயகன் ஓய்வு பெறும் போது ஏன் சோகமாக இருக்கிறார் என்று எண்ணியதாகவும் ஆனால் தாம் ஓய்வு பெறும் போது அதனுடைய தாக்கத்தை உணர்ந்ததாகவும் தம்முடைய உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

http://www.nadigarthilagam.com/psrid.html

அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
9th August 2010, 08:14 PM
'பாரத்'தில் பூகம்பம்
[புதிய பறவை : 8.8.2010 : ஞாயிறு மாலை]

"எங்க ராஜா சிவாஜி!
எங்க ஊர் ராஜா சிவாஜி!
எங்கள் தங்க ராஜா சிவாஜி!
எங்கள் தலைவர் சிவாஜி!
எங்கள் கடவுள் சிவாஜி!
எங்கள் இறைவன் சிவாஜி!
எங்கள் தெய்வம் சிவாஜி!
எங்கள் உயிர் சிவாஜி!
...................................
..................................."

சிவாஜி கணேச பூஜைக்கான அஷ்டோத்திரம் போல் இருக்கிறதல்லவா! ஆம், அப்படித் தான் இருந்தது, இந்த கோஷங்களைக் கேட்ட அனைவருக்கும், நேற்று மாலை பாரத்தில். அடியேன் ஐந்தே முக்கால் மணிக்கு அரங்கத்தை அடையும் போது, அரங்க நுழைவாயிலில் ஆரவாரங்களின் ஆரம்பமாக, அடியார்கள் இதயதெய்வத்தை வணங்கி தீபாவளி கொண்டாடினர். வாலாக்கள் என்ன, வாணவேடிக்கைகள் என்ன, அந்த வண்ணாரப்பேட்டை ஏரியாவே ஸ்தம்பித்து விட்டது. மேம்பாலத்தை ஒட்டிய பிரதான சாலையான தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையை ஒட்டிய தியேட்டர் பாரத். இந்த கோலாகலக் கொண்டாட்டங்களினால், அந்நெடுஞ்சாலையில், போக்குவரத்து இரு புறமும் சில நிமிடங்கள் ஸ்தம்பித்தது. பேருந்துகளில் செல்வோரும் ஏனைய வாகனங்களில் பயணிப்போரும் இந்த அலப்பறையை மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர். பாதசாரிகளும் நின்று நிதானமாக இதைப் பார்த்து விட்டு செல்லத் தவறவில்லை. கலையுலக கணேசருக்கு சரமாரியாக சிதறு தேங்காய்கள் காணிக்கையாக்கப்பட்டன. பேண்ட் வாத்தியம் முழங்க, பக்தர்கள் டான்ஸ் களை கட்டியது. பின்னர் "எங்கே நிம்மதி" பாடல் ஆடியோ ஸ்பீக்கர் செட்டில் ஒலிக்கப்பட, அடியார்கள் ஒவ்வொருவரும் அண்ணலைப் போலவே அப்பாடலுக்கு அங்க அசைவுகளைக் கொடுத்து அசத்தினர். முடிவில், மூன்றாம் தமிழின் மஹா பெரியவருக்கு மஹா தீபாராதனை திவ்யமாகக் காட்டப்பட்டது. பக்தர்கள் பக்திப் பரவசத்தில் மூழ்கினர். வெள்ளித்திரை தரிசனத்திற்கு, அலப்பறையை ஆரம்பிக்க, தியேட்டருக்குள் பிரவேசித்தனர். 'சாந்தி'யை விட இங்கே சற்று கூட்டம் குறைவு என்றாலும் ஆரவார அலப்பறைகள் 'சாந்தி'யை மிஞ்சியது. ஆம், நேற்று மாலை 'பாரத்'தில் "புதிய பறவை" நிஜமாகவே அலப்பறை பூகம்பம்!

[இரு ரசிக திலகங்கள் - ராகவேந்திரன் சாரும், முரளி சாரும் - இரு புறமும் அமர்ந்திருக்க, அவர்களுடன் அளவளாவிக் கொண்டே படம் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்]

பக்தியுடன்,
பம்மலார்.

gopalu_kirtinan
9th August 2010, 10:51 PM
முரளி அண்ணா, ராகவேந்திரா அண்ணா , பம்மலர் அண்ணா, பாரத் தியேட்டர் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
புதிய பறவை ரசிகர்களிடையே பெற்றிருக்கும் வரவேற்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.அந்த பொன்னான தருணத்தில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை என நினைக்கும் பொது மிகவும் வருத்தமாக உள்ளது.

Murali Srinivas
9th August 2010, 11:29 PM
Thanks Shiv for your comments.

Yes, regarding NT's political innings there has only been back stabbing and nothing else. NT was used and exploited to the hilt by the politicians. Could not proceed with that political episoded due to the circumstances that prevailed here.

Regarding the incident what you have mentioned, it is absolutely true. Indira Gandhi was aware of the work Sivaji undertook for Congress and what Sivaji is capable of and gave him the due respect but Rajiv was not aware of anything regarding NT. The problem was compounded by the bitterness Rajiv developed over the Rajya Sabha seat that was given to NT by Indira much against the wishes of Rajiv who wanted his classmate and close friend Amithabh to be nominated. In fact this mistrust grew and culminated in NT quitting Congress in 1988.

சாரதா,

எங்கே நிம்மதி பார்க்காமல் போவது எங்களுக்கு மட்டும் பிடித்த விஷயமா என்ன? எங்கள் மூவருக்குமே சில தவிர்க்க இயலாத காரணங்கள் இருந்ததால் அப்படி செய்ய வேண்டிய சூழ்நிலை. சவாலே சமாளி படத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட அரங்குகளில் மட்டுமே வெளியிட இயலும் என்ற நிதர்சனத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நன்றி தம்பி கோபால். நீங்கள் அடுத்த முறை இந்தியா/சென்னை வரும் போது சந்திக்கலாம். அப்போது நடிகர் திலகத்தின் படங்கள் வெளியிடப்பட்டால் பார்க்கவும் செய்யலாம்.

அன்புடன்

pammalar
10th August 2010, 12:00 AM
சகோதரி சாரதா,

தங்களது பாராட்டுக்கு நன்றி! தங்களின் கூற்று உண்மை. கதாநாயகனுக்கு கைத்தட்டல் பாராட்டு என்றால், வில்லனுக்கு, வில்லன் போல கதையின் போக்கில் சித்தரிக்கப்படுபவர்களுக்கு வசவு தான் பாராட்டு. நடிகவேளுக்கும் இந்த ரங்கன் ரோல் அவரது கேரியரிலேயே அவர் ஏற்று நடித்த ரொம்ப வித்தியாசமானதொரு குணச்சித்ர வேடம். அவரை ஸ்டீரியோடைப் நடிகர் என நையாண்டி செய்வோர் "புதிய பறவை"யையும், "இருவர் உள்ள"த்தையும் அவசியம் பார்க்க வேண்டும். "புத்திசிகாமணி பெற்ற பிள்ளை" பாடல் என் கற்பனைத்திரையில் ஓடுகிறது!

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
10th August 2010, 01:17 AM
சாரதா,

பாட்டும் பரதமும் படத்தை அழகாக எழுதியிருகிறீர்கள். அது உங்களுக்கு கை வந்த கலை. முதல் நாட்டியத்தை பார்க்க வரும் நடிகர் திலகம் அருகில் அமர்ந்திருக்கும் விஜயகுமாரிடம் சொல்லும் வசனம் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று. அண்மையில் கூட அந்த வசனத்தை ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

பாடல்கள் தேனாறு என்றால் மிகையாகாது. எங்கள் வீட்டில் இந்த படத்தின் எல்.பி. ரெகார்ட் வாங்கி போட்டுக் கேட்டுக் கொண்டே இருந்த நினைவுகள் எல்லாம் இன்றும் பசுமையாக இருக்கின்றன. மாந்தோரண வீதியில் பாடல் கவியரசு கொஞ்சம் இலக்கியமாகவே எழுதியிருப்பார். அதாவது அவரது எளிய நடையை விட்டு விட்டு,உறவு நிலையை கவிஞர் விளக்கும் இரண்டாவது சரணம் இலக்கியம் பேசும்.

ஆதித்யன் மேனியை மேகங்கள் மூட

ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட

வசந்தத்தில் பாற்குடம் ஊர்வலம் போக

வந்து விட்டேன் கண்ணா மணமகளாக

[இந்த பாடல் இப்போது தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புகிறார்கள்]

தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு பாடல் டி.எம்.எஸ் அற்புதம் காட்டியிருப்பார். அதிலும் அவர் ஹை பிட்சில் போகும்

ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு

அவள் இல்லையென்றால் நான் வெறும் கூடு

பாவைக்கு போட்டு வைத்தேன் நான் ஒரு கோடு

பாடி பறந்ததம்மா இளங்குயில் பேடு

அப்படியே சிலிர்க்க வைக்கும். கவியரசுவின் தமிழ் விளையாட்டையும் ["மாமழை மேகமொன்று கண்களில் இருப்பு"] இந்த பாடலில் தரிசிக்கலாம்.

இனி அரசியல் உள்ளே புகுந்த கதை. நீங்கள் சொன்ன நாட்டியமும் நாதஸ்வரமும் எனக்கு புதிய செய்தி. ஆக, தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களே படத்திற்கு எதிராக செயல்பட்டிருக்கின்றனர்.

பெருந்தலைவர் மறைந்து இரண்டு மாதங்களே ஆன சூழ்நிலையில் படம் வெளி வந்தது என்றாலும் கூட அந்நேரத்தில் நடிகர் திலகம் தன் அரசியல் முடிவை அறிவிக்கவில்லை. நடிகர் திலகம் இந்திரா காங்கிரஸில் சேரப் போகிறார் என்றும் இல்லையென்றும் செய்திகள் வந்து கொண்டிருந்த நேரம். [அதற்குள் சென்னையில் போஸ்டர் அடித்த செய்திகள் ஆச்சரியமளிக்கின்றன].

பெரும்பான்மையான ரசிகர்களுக்கு நடிகர் திலகம் ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே அவா. இந்த நேரத்தில் அன்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பா.ரா. மற்றும் குமரி அனந்தன், தண்டாயுதபாணி போன்றார் ஸ்தாபன காங்கிரஸ் தன் நிலையில் தொடர வேண்டும் என்று நினைத்த போது, நெடுமாறன், தஞ்சை ராமமூர்த்தி, குடந்தை ராமலிங்கம் போன்றவர்கள் இந்திரா காங்கிரஸில் சேர வேண்டும் என்று பிரசாரம் செய்துக் கொண்டிருந்தனர். தங்களுக்கு சாதகமாக இருப்பதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த மகாதேவன் பிள்ளையை தலைவர் போலக் கொண்டு வந்தனர் [இணைப்பு நடந்த பிறகு இவர் கழட்டி விடப்பட்டது வேறு விஷயம்].

இந்நிலையில் வேறு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நெடுமாறன் அந்த காலக்கட்டத்தில் தினசரி என்று ஒரு நாளிதழ் நடத்திக் கொண்டிருந்தார். ஏனோ தெரியவில்லை நெடுமாறனுக்கு நடிகர் திலகத்தின் மீதும் அவரது ரசிகர் மன்றத்தின் மீதும் கோவம். அவர்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் அது கூடாது என்றும் கட்டுரைகள் எழுதினார். இவருக்கு ஒத்து ஊதினார் தஞ்சை ராமமூர்த்தி. இது நடப்பது 1975-ம் ஆண்டு ஜனவரியில். அந்நேரம் நடிகர் திலகம் மொரிஷியஸ் தீவுகளுக்கு சென்றிருந்தார். ரசிகர்கள் கொந்தளித்து பதில் அறிக்கை கொடுக்க காங்கிரசிலும் ஒரு 1972 புரட்சி ஏற்படுமோ என்று யூகங்கள்கிடையில் நடிகர் திலகம் திரும்பி வந்தவுடன் பெருந்தலைவரை சந்திக்க சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி விழுந்தது. [இன்னும் சொல்லப் போனால் 1972 -ம் ஆண்டு அக்டோபரில் மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கூட நடிகர் திலகமும் ரசிகர்களும் ஓரம் கட்டப்பட்டது நெடுமாறனால்தான் என்ற குற்றசாட்டு கூட உண்டு].

இப்போது மீண்டும் 1975 நவம்பர், டிசம்பருக்கு வருவோம். நடிகர் திலகத்தை தாக்கி எழுதிய நெடுமாறன் தன் செய்தி தினசரியில் அவரை உயர்த்தி எழுத ஆரம்பித்தனர். பல இடங்களிலும் நடிகர் திலகத்தின் மன்றங்கள் இந்திரா காங்கிரஸில் சேருவதாக தீர்மானங்கள் நிறைவேற்றுவதாகவும் இவர்களே செய்திகள் வெளியிட ஆரம்பித்தார்கள். இதற்கும் ஒரு படி மேலே போய் கேள்வி பதில் பகுதியில் ஒரு ரசிகர் கேள்வி கேட்டதை வெளியிட்டார்கள். எப்படி என்றால்

கேள்வி: நடிகர் திலகம் இந்திரா காங்கிரஸில் சேர விரும்புகிறாரா?

பதில்: சேர விரும்புவது மட்டுமல்ல, அதுதான் நாட்டிற்கு நன்மை பயக்கும் என உளமார நம்புகிறார்.

எந்த நெடுமாறன் நடிகர் திலகத்தை வசை பாடினாரோ அந்த நெடுமாறன் பேச்சை கேட்டு நடிகர் திலகம் நடக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. நடிகர் திலகமும் வாயே திறக்கவில்லை. பேசிய ஒரு கூட்டத்தில் [அன்று அவசர நிலை அமலில் இருந்ததால் பொதுக் கூட்டங்கள் கிடையாது. ஏதோ கல்யாணம் அல்லது ஊழியர் கூட்டம் என நினைவு] ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து நீடிக்க போவது போல பேசினார்.

இந்த நேரத்தில் சபரி மலை செல்வதற்காக மாலை போட்டிருந்த அவர் கொல்லம் எக்ஸ்ப்ரஸில் மதுரை வழியாக வந்த போது வெள்ளமென ரசிகர் கூட்டம் அவரை ரயில்வே நிலையத்தில் சந்தித்து தங்கள் உள்ளக்குமுறலை சொன்ன போது உங்கள் விருப்பத்திற்கு மாறாக எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்று உறுதி கூறினார். கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடமும் இதையே சொன்னார். அந்த நேரத்தில் ரசிகர்களில் ஒரு பிரிவினர் நடிகர் திலகம் எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அவர் வழி நடப்பதாக ரத்தக் கையெழுத்து இட்டு மனுக் கொடுத்தனர்.

இவையெல்லாம் பாட்டும் பரதமும் வருவதற்கு ஒரு பத்து நாட்கள் முன்பு நடந்தது. ஆனால் சபரி மலை சென்று விட்டு வந்த பிறகு அவர் எதுவுமே சொல்லவில்லை என்பதுடன் செய்தி நாளிதழில் வெளியான செய்திகளுக்கு மறுப்பும் கொடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகுந்த கோவத்தை கொடுத்தது. அதுவே படம் வெளியான போது அதற்கு வினையாக மாறியது. படம் வெளியான 15 நாட்களில் படப்பிடிப்பில் அவருக்கு காலில் அடிப்பட்டுவிட்டது. வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அந்நேரம் [டிசம்பர் கடைசி] டெல்லியிலிருந்து இந்திராவின் சிறப்பு தூதுவராக வந்த மரகதம் சந்திரசேகர் அவர்கள் அன்னை இல்லத்திற்கு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் விஜயம் செய்து நடிகர் திலகத்தையும், வி.சி.சண்முகம் அவர்களையும் மூளை சலவை செய்து சம்மதிக்க வைத்தார். இவர் வந்ததும் பேசியதும் வெளியில் வராமல் பாதுகாக்கப்பட்டன.[எமர்ஜென்சி வேறு]. தன்னோடு நடிகர் திலகத்தையும் டெல்லி அழைத்து சென்ற மரகதம்மாள் ஜனவரி 1 அன்று இந்திராவிடம் அழைத்து செல்கிறார். அந்த சந்திப்பும் புகைப் படமும் வெளி வரும் போதுதான் அனைவருக்கும் நிலவரம் புரிகிறது. ஏற்கனவே நொண்டிக் கொண்டிருந்த பாட்டும் பரதமும் படம் ரசிகர்களால் அடியோடு கைவிடப்படுகிறது.

ஆனால் மதுரையில் தியேட்டர் முன்பு மறியல் எதுவும் நடைபெறவில்லை. சினிப்ரியா, மினிப்ரியா இரண்டு அரங்குகளிலும் அதற்கு முன்பு வெளியான மன்னவன் வந்தானடி படம் போலவே வெளியிடப்பட்டது. அக்டோபர் 31 அன்று வெளியான பல்லாண்டு வாழ்க படத்தை மாற்றி விட்டுதான் பாட்டும் பரதமும் வெளியிடப்பட்டது.[ப.வா. அலங்காரில் ஓடிக் கொண்டிருந்தது].

ஆனால் பெருந்தலைவரின் மீதும் ஸ்தாபன காங்கிரஸ் மீதும் பெறும் பற்றுக் கொண்ட ரசிகர்கள் தங்களுக்கு படத்தை விட கொள்கையே முக்கியம் என்று முடிவெடுக்க படம் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஒரு ஒன்பது வாரப் படமாக மாறிப் போனது.

அன்புடன்

pammalar
10th August 2010, 02:02 AM
சகோதரி சாரதா,

"பாட்டும் பரதமும்" படத்துக்கு போட்டியாக திருச்சி-தஞ்சை ஏனைய சுற்றுவட்டார ஏரியாக்களில் "நாட்டியமும் நாதஸ்வரமுமா?". அடியேன் இதுவரை கேட்டிராத தகவல். அறிந்திராத அரிய தகவலை அறியாதோர் அறியும் வண்ணம் அள்ளி அளித்தமைக்கு அற்புத நன்றிகள்!

[அப்படியென்றால் அதே சமயத்தில் மறுவெளியீடாக வெளிவந்த "தில்லானா மோகனாம்பாள்" எப்படிப் போனது? அந்தப் படம் பெற்ற வரவேற்பைப் பற்றி அவசியம் கூறுங்கள்]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th August 2010, 02:55 AM
டியர் ரங்கன் சார்,

தங்களது உயர்ந்த பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்! எல்லாவற்றுக்குமே மூலகாரணம் அண்ணல் நடிகர் திலகத்தின் அருளாசிகளும், (தங்களையும் சேர்த்து) இங்குள்ள அனைவரின் நல்வாழ்த்துக்களும் தான்!
[இதே நிகழ்வைக் குறிப்பிட்டுப் பாராட்டிய சந்திரசேகரன் சாருக்கும், சகோதரி சாரதா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!]

டியர் ராகவேந்திரன் சார்,

பல்கலைக்கழகமா, உயர்நீதிமன்றமா - எங்கும், எதிலும் நடிகர் திலகம்! - அங்கும், அதிலும் அவருடன்/அவரது தகவல்களுடன் ராகவேந்திரன் சார். நீதியரசி வெளியிட்ட நேர்மையான தகவலை சுட்டி, தகவல் அரசராகிய தாங்கள் வழங்கிய விதம் நெத்தியடி!

அன்புத்தம்பி கோபால்,

பாராட்டுக்கு நன்றி! வருத்தம் வேண்டாம். இனி தொடர்ந்து சிங்காரச் சென்னையில் சிங்கத்தமிழனின் காவியங்கள் அதிக அளவில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. தாங்கள் நமது புண்ணிய பூமிக்கு, குறிப்பாகச் சென்னை மாநகருக்கு வருகின்ற சமயத்திலும் கூட ஏதாவது ஒரு அரங்கில் நமது அண்ணலின் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கக் கூடும். தாங்கள் நிச்சயம் கண்டு களித்து மகிழலாம்.

டியர் முரளி சார்,

தங்களின் ஆயிரத்து நானூறாவது பதிவு அனுபவ ஆட்டம் பாம்ப் (Atom Bomb).

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th August 2010, 03:46 AM
பல ஆண்டுகள் விரும்பிக் கேட்ட ஒரு வானொலி நிகழ்ச்சியை, பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று 9.8.2010 மீண்டும் கேட்ட போது, மனித மனத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி! நான் குறிப்பிடுகின்ற அந்த நிகழ்ச்சி, சென்னை வானொலியின் முதல் அலைவரிசையில், திங்கள்தோறும் இரவு 10:00 முதல் 11:00 வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒலிபரப்பாகும் 'நேயர் விருப்பம்' பழைய பாடல்கள் நிகழச்சி! சென்னை ரேடியோவில் பழைய பாடல் ஆடியோவை கேட்பதில் தான் எத்தனை சுகம்!

அன்று போல் இன்றும் என்னைத் தேனாற்றில் நனையச் செய்த கீதங்கள்:

1. பூந்தோட்டக் காவல்காரா - குங்குமம்

2. எங்கே அவள் - குமரிக்கோட்டம்

3. ஒஹோ எந்தன் பேபி - தேன் நிலவு

4. ஹேப்பி இன்று முதல் ஹேப்பி - ஊட்டி வரை உறவு

5. பாலும் பழமும் கைகளில் ஏந்தி - பாலும் பழமும்

6. பனியில்லாத மார்கழியா - ஆனந்த ஜோதி

7. அன்றொரு நாள் இதே நிலவில் - நாடோடி

8. ஞாயிறு என்பது கண்ணாக - காக்கும் கரங்கள்

9. மூடித்திறந்த இமையிரண்டும் - தாயைக் காத்த தனயன்

10. அதோ அந்த பறவை போல - ஆயிரத்தில் ஒருவன்

11. அழகு சிரிக்கின்றது - இருவர் உள்ளம்

12. பட்டுச் சேலை காத்தாட - தாய் சொல்லைத் தட்டாதே

13. பாவாடை தாவணியில் - நிச்சய தாம்பூலம்

14. நான் என்ன சொல்லி விட்டேன் - பலே பாண்டியா

15. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா - ஆலயமணி

[நடிகர் திலகம் - 7, மக்கள் திலகம் - 6, காதல் மன்னன் - 1, இலட்சிய நடிகர் - 1] [மொத்தம் 15 பாடல்கள்]

நிகழ்ச்சி நிறைவடைந்து, இரவு 11 மணி செய்திகள் வருவதற்கு சில நொடித்துளிகள் இருக்கும் சமயத்தில், Bit Music Piece ஆக சாக்ஸோஃபோன் வாத்தியக்கருவியில் இசைக்கப்பட்ட 'பூமாலையில் ஓர் மல்லிகை' பாடலைத்தான் ஒலிபரப்பினார்கள்.

என்றும் புதுப்பொலிவோடு விளங்கும் பழைய பாடல்களை நேசிக்கும் நேயர் பெருமக்கள் அனைவரும் வாழ்க! வளர்க! வெல்க!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th August 2010, 04:19 AM
வசூல் சக்கரவர்த்தி - 1

சிங்காரச் சென்னையில், முதல் வெளியீட்டில்[6.12.1975], "பாட்டும் பரதமும்" ஈட்டிய மொத்த வசூல்:
[அரங்கம் - ஓடிய நாட்கள் - வசூல்(ரூ.-பை.)]

1. சாந்தி - 69 நாட்கள் - 4,01,751-30

2. கிரௌன் - 62 நாட்கள் - 2,17,877-55

3. புவனேஸ்வரி - 60 நாட்கள் - 1,98,722-25

மொத்தம் - 191 நாட்கள் - 8,18,351-10

அன்றைய காலகட்டங்களில், சென்னை மாநகரில், பத்து லட்சம் ரூபாய்க்கு மேல், மொத்த வசூல் பெற்றாலே, ஒரு படம் பெரிய வெற்றிப்படமாகக் கருதப்படும். எட்டே கால் லட்சம் ரூபாயை நெருங்கிய "பாட்டும் பரதமும்", சென்னையில் ஒரு சிறந்த வெற்றிப்படமே!

அன்புடன்,
பம்மலார்.

goldstar
10th August 2010, 07:41 AM
Saradha sister, Murali, Swamy,

Lots of lots of NT new news. Thanks a lot to you guys.

Gopal, you can watch PP in DVD, so that you won't miss our NT.

I do watch at least one NT movie every day. At least for 15 to 30 minutes.

I have more than 125 NT movies.

Just curious, we have one more web site www.nadigarthilamsivaji.com by sister Girija. But we don't find her in our forum. Does she know this forum?

After going through PP Sunday gala in Shanthi and Bharath, I just recall my Madurai days at theatres SriDevi, Khalpana, Alankar, Meenatchi, Dinamani, New Deluxe, Midland, Sivam and also missing these Sunday gala. But at leaset by heart feeling happy to see vidoes posted by Raghavendara. Thanks a lot for this Raghavendra.

Murali, no news of our NT movies in our Madurai area?

Cheers,
Sathish

RAGHAVENDRA
10th August 2010, 09:42 AM
டியர் சதீஷ்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. இதை என் கடமையாகக் கருதுகிறேன்.

டியர் பம்மலார்,
தகவல் திலகம் என்றால் பம்மலார் தான். தாங்கள் வழங்கும் புள்ளி விவரங்கள் தான் நடிகர் திலகத்தின் வெற்றி விவரங்களை உலகிற்கு எடுத்துக் காட்டி அவர் படங்களுக்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பை விளக்குகின்றன. இவை தான் ஒரு கலைஞனுக்கு செய்யக் கூடிய தலையாய சேவையாகும்.

வியட்நாம் வீடு படத்தைப் பற்றிய செய்தியின் மூலம் பல கூற்றுகள் நிரூபிக்கப் படுகின்றன.

நடிகர் திலகத்தின் நடிப்பை மிகை நடிப்பு என்போருக்கு இவை போன்ற தகவல்கள் சரியான பதிலடியாகும்.

யதார்த்த நடிப்பு என்பதாக ஒன்று இல்லவே இல்லை என்பது தான் நடைமுறை உண்மை. சித்தரிக்கப்படாத கலை எதுவும் படைப்பாற்றலை வெளிப்படுத்தாது. கலாச்சாரத்தின் அடிப்படையில் தயாரித்து வெளிவரும் படங்களே ஒரு நாட்டின் உண்மை நிலையையும் மக்களின் வாழ்க்கை நெறிகளையும் எடுத்துக் காட்டுவன வாகும். நடிகர் திலகத்தின் நடிப்பும் அவரது படங்களும் உலகப் பட விழாக்களில் திரையிடப்படும் போது அப்போது நமது இந்திய கலாச்சாரத்தின் குறிப்பாக தமிழ்க் கலாச்சாரத்தின் மேன்மைகளை அறிந்து கொள்ள அயல் நாட்டினருக்கு உதவி புரியும்.

அதன்றி அன்னிய கலாச்சாரத்தின் பாணியில் நடிப்பதை நாம் எப்படி அங்கீகரிக்க முடியும் அல்லது ஏற்றுக் கொள்ள முடியும்.

அன்னிய நாட்டில் ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெறுவதென்பது மிகவும் அரிது, அதுவும் அன்றி அவர்கள் கலாச்சாரத்தில் ஓய்வு பெறுவது என்பது மிகவும் சாதாரணமானது. ஆனால் நம் நாட்டில் அப்படியல்லவே. பணி ஓய்வு என்பது உணர்வுடன் ஒன்றியுள்ளதல்லவா. நம்மில் எத்தனை பேர் பணி ஓய்வை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளுகின்றனர், கூற முடியுமா.

இது ஒரு சான்று மட்டும் தான். தான் ஏற்று நடித்துள்ள ஒவ்வொரு பாத்திரத்தினுள்ளும் சமுதாயத்தில் அந்த கதாபாத்திரம் எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, எப்படிப் பட்ட குணாதிசயங்களை கொண்டுள்ளது, போன்ற பல விஷயங்களையும் கிரகித்து உள்வாங்கி அதனை திரையில் வெளிப் படுத்தியிருக்கிறார் நடிகர் திலகம். அதனை வெளிப் படுத்தும் போது சில சம்பவங்களையோ அல்லது சில குணாதிசயங்களையோ நேரடியாக வெளிப் படுத்த முடியாது, அப்போது அதற்கு சில சித்தரிப்பு தேவைப் படுகிறது. அதனைத் தான் அவர் செய்திருக்கிறார். அந்த சித்தரிப்பு கலாச்சாரத்தை சிதைக்கும் விதமாக என்றுமே அமைந்ததில்லை என்பதே அவருடைய நடிப்பின் சிறப்பு.

இதற்கு மேலும் மிகை நடிப்பு என்றும் யதார்த்த நடிப்பு என்றும் இல்லாததைப் பற்றிக் கூறுவோர்க்கு அவர்களுக்குள் உள்ள மனசாட்சியை தூக்கி எறிந்து விட்டு எழுதும் மனப்போக்கே காரணம் என்று நாம் எளிதாக தீர்மானித்து விடலாம்.

அன்புடன்
ராகவேந்திரன்

saradhaa_sn
10th August 2010, 12:05 PM
சாரதா,

பாட்டும் பரதமும் படத்தை அழகாக எழுதியிருகிறீர்கள். அது உங்களுக்கு கை வந்த கலை. முதல் நாட்டியத்தை பார்க்க வரும் நடிகர் திலகம் அருகில் அமர்ந்திருக்கும் விஜயகுமாரிடம் சொல்லும் வசனம் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று. அண்மையில் கூட அந்த வசனத்தை ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
மிக்க நன்றி முரளியண்ணா,

அந்த வசனம் எனக்கும் பிடித்த வசனம் மட்டுமல்ல, படத்தின் துவக்கத்தில் நடிகர்திலகத்தின் பாத்திரப்படைப்பைக் (செம்மொழியில்: கேரக்டரைசேஷன்) கோடிட்டுக்காட்டும் வசனமும் கூட. அதனால்தான் அதை மட்டும் மறக்காமல் குறிப்பிட்டேன்.


பாடல்கள் தேனாறு என்றால் மிகையாகாது. எங்கள் வீட்டில் இந்த படத்தின் எல்.பி. ரெகார்ட் வாங்கி போட்டுக் கேட்டுக் கொண்டே இருந்த நினைவுகள் எல்லாம் இன்றும் பசுமையாக இருக்கின்றன. மாந்தோரண வீதியில் பாடல் கவியரசு கொஞ்சம் இலக்கியமாகவே எழுதியிருப்பார். அதாவது அவரது எளிய நடையை விட்டு விட்டு,உறவு நிலையை கவிஞர் விளக்கும் இரண்டாவது சரணம் இலக்கியம் பேசும்.

ஆதித்யன் மேனியை மேகங்கள் மூட

ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட

வசந்தத்தில் பாற்குடம் ஊர்வலம் போக

வந்து விட்டேன் கண்ணா மணமகளாக

[இந்த பாடல் இப்போது தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புகிறார்கள்]

தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு பாடல் டி.எம்.எஸ் அற்புதம் காட்டியிருப்பார். அதிலும் அவர் ஹை பிட்சில் போகும்

ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு

அவள் இல்லையென்றால் நான் வெறும் கூடு

பாவைக்கு போட்டு வைத்தேன் நான் ஒரு கோடு

பாடி பறந்ததம்மா இளங்குயில் பேடு

அப்படியே சிலிர்க்க வைக்கும். கவியரசுவின் தமிழ் விளையாட்டையும் ["மாமழை மேகமொன்று கண்களில் இருப்பு"] இந்த பாடலில் தரிசிக்கலாம்.
இப்பாடலின் மூன்று சரணங்களிலும் இலக்கியம் துள்ளி விளையாடும். முதல் சரணம் (நடிகர்திலகம் பாடுவது)....

'பூவைக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம்
பூவினில் தேனி சாந்தி முகூர்த்தம்
கன்னியை நீராட்ட கங்கையின் தீர்த்தம்
காதலில் கலந்தாலே ஏனிந்த மாற்றம்'

இரண்டாவது (நீங்கள் குறிப்பிட்டது) கலைச்செல்வி பாடும் சரணம்
மூன்றாவது சரணம், இருவரும் ஆளுக்கொரு வரியாகப்பாடுவது....

'ஏவிய கணைகள் இருபுறம் தாக்க
ஏலத்துப் பூங்குழல் வானத்தைப்பார்க்க
ஆவியில் ஆவியை ஆண்டவன் சேர்க்க
ஆனந்தம் நான் கொள்ள யாரிடம் கேட்க...
மாந்தோரன வீதியில்......'

அதுபோல 'தெய்வத்தின் தேரெடுத்து' பாடலிலும் கடைசி சரணம்...

'கம்பனைக்கூப்பிடுங்கள் சீதையைக்காண்பான்
கவிகாளிதாஸன் அவள் சகுந்தலை என்பான்
நாயகியே எனது காவிய எல்லை
நாயகியே...ஏ...ஏ...ஏ... எனது (டி.எம்.எஸ்.அண்ணாவால் மட்டுமே இதுமுடியும்) காவிய எல்லை
நரைவிழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை'

இதுபோன்ற காவிய வரிகளை 'செட்டியார்' தன்னுடனேயே கொண்டுபோய்விட்டார். சமீபத்தில் கூட 'அம்மானை அழகுமிகும் பெண்மானை' பாடலில் வரும் வரிகளைக் கேட்டபோது வியந்தேன்.... 'பாலினுள் மறைந்துள்ள சுவையென விழிப்பளிங்கினுள் மறைந்தது உன் முகம்'. (இப்போது பாடல்கள் என்ற பெயரில் வரும் சத்தங்களோடு (சந்தங்களோடு அல்ல) ஒப்பிடுகையில் வயிறு எரிந்தது).

பெருந்தலைவர் மறைந்து இரண்டு மாதங்களே ஆன சூழ்நிலையில் படம் வெளி வந்தது என்றாலும் கூட..........
.................... அந்த சந்திப்பும் புகைப் படமும் வெளி வரும் போதுதான் அனைவருக்கும் நிலவரம் புரிகிறது.
தாங்கள் சொல்லும் வரலாற்று நிகழ்வுகள் அசர வைக்கின்றன. மதுரையில் நெடுமாறன் எப்போதுமே நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்குப் எதிராக செயல்பட்டவர். இந்த விஷயத்தில் மட்டும் அவர் தன் நிலையை நியாயப்படுத்திக்கொள்ள நடிகர்திலகத்தை பகடையாக உபயோகப்படுத்தியிருக்கிறார். (அதே நேரம்தான் மதுரை முத்து, தி.மு.கவில் இருந்து அ.தி.மு.க.வுக்கு மாறினார்). மதுரையில் பெரிய அளவில் கலாட்டாக்கள் நடைபெறவில்லை என்றபோதிலும் வரிசையில் நின்ற ரசிகர்கள் மத்தியிலேயே, படம் பார்க்க வந்தவர்கள் போல பேச்சை ஆரம்பித்து, நடிகர்திலகத்தின் மீது வசை பாடத்துவங்கி, அவை கலாட்டாக்களில் முடிந்துள்ளன. போதாக்குறைக்கு, ஸ்தாபன காங்கிரஸின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான நெல்லை ஜெபமணி மதுரையில் பேசும்போது, 'இன்னும் அந்தப்படம் (பாட்டும் பரதமும்) தியேட்டரில் ஓடிக்கொண்டிருப்பது ஸ்தாபன காங்கிரஸ்காரர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது" என்று பேசி வன்முறையைத் தூண்டி விட்டுள்ளார். (அதே ஸ்தாபன காங்கிரஸின் வளர்ச்சிக்காகத்தான் நடிகர்திலகம் காலமெல்லாம் பாடுபட்டார் என்ற நன்றியை மறந்தனர்)

(இதெல்லாம் இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியப்பட வேண்டாம். நானும் என் தந்தையும் பேச உட்கார்ந்துவிட்டால், அப்பா-மகள் என்ற உறவுகளைத் தூர வைத்துவிட்டு, இரண்டு தலைமுறையைச்சேர்ந்த சிவாஜி ரசிகர்களாகவே பேசிக்கொள்வோம்).

saradhaa_sn
10th August 2010, 01:31 PM
சகோதரி சாரதா,

"பாட்டும் பரதமும்" படத்துக்கு போட்டியாக திருச்சி-தஞ்சை ஏனைய சுற்றுவட்டார ஏரியாக்களில் "நாட்டியமும் நாதஸ்வரமுமா?". அடியேன் இதுவரை கேட்டிராத தகவல். அறிந்திராத அரிய தகவலை அறியாதோர் அறியும் வண்ணம் அள்ளி அளித்தமைக்கு அற்புத நன்றிகள்!

[அப்படியென்றால் அதே சமயத்தில் மறுவெளியீடாக வெளிவந்த "தில்லானா மோகனாம்பாள்" எப்படிப் போனது? அந்தப் படம் பெற்ற வரவேற்பைப் பற்றி அவசியம் கூறுங்கள்]


டியர் பம்மலார்,

மன்னவன் வந்தானடி படத்துக்குப்பின் வெளியான மூன்று திரைப்படங்கள் நடிகர்திலகத்துக்கு கொஞ்சம் சரிவை ஏற்படுத்தியிருந்த வேளையில் 'பாட்டும் பரதமும்' வெளியானதால், மக்கள் மத்தியில் கொஞ்சம் எதிர்பார்ப்பு விட்டுப்போயிருந்த நேரம். 'படம் வரட்டும், நல்லாயிருக்குன்னு ரிஸல்ட் வந்தால் பார்க்கலாம்' என்று எண்ணிக்கொண்டிருந்த சமயம்.

(இப்படி ஒரு நிலை வர காரணமாயிருந்தவர் இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தர். வைரநெஞ்சம் எப்படியாவது வெளியிட்டால் போதும் என்று ஷ்ரீதர் நினைத்ததால் அவரைக் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா ஆகிய படங்களைச் சொதப்பிய பெருமை ஏ.சி.டி.க்கு உண்டு. ஆடியோவில் மிகப்பிரபலமாயிருந்த, மெல்லிசை மன்னரின் அபார உழைப்பில் உருவாகியிருந்த 'மல்லிகை முல்லை பூப்பந்தல்'(அ.ஆ), 'மலரே குறிஞ்சி மலரே' (சிவா) பாடல்களின் படமாக்கம் (செம்மொழியில் : பிக்சரைஸேஷன்) ரசிகர்களை பெரிய அளவில் ஏமாற்றியிருந்தது).

மறுபக்கம் நான் முன் குறிப்பிட்ட ஏழு நகரங்களில் 'நாட்டியமும் நாதசுரமும்' (தில்லானா மோகனாம்பாள்) படம் 1968-க்குப்பின் ஏழு வருடங்கள் கழித்து வெளியானதாலும், பார்த்திராத பலபேர் அதைப்பார்ப்பதற்கும், பார்த்திருந்தவர்கள் மீண்டும் காணவும் ஆவல் கொண்டிருந்ததாலும் (அப்போதெல்லாம் கேபிள் டி.வி., வீடியோ கடையெல்லாம் இல்லாததால்), ஏற்கெனவே அப்படத்தின் 'நலந்தானா', 'மறைந்திருந்து பார்க்கும்' போன்ற பாடல்கள் படுசூப்பராக பாப்புலாகியிருந்ததாலும் (உபயம்: இலங்கை வானொலி), பட விநியோகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட ஏ.வி.எம். நிறுவனம், செலவைப்பார்க்காமல் தில்லானாவுக்கு விளம்பரங்களை அள்ளி விட்டதாலும்.... அப்படம் வரும் செய்தியறிந்து மக்கள் புதுப்படத்துக்குரிய ஆவலுடன் தியேட்டர் முன் கூட....

பழைய படம் புதுப்படம் போலவும், புதுப்படம் பழைய போலவும் ஆகிப்போனது. ஏ.வி.எம்.காரர்களுக்கு இரட்டை லாபம். தனக்கு கிடைக்காத படத்தை தோற்கடித்தாயிற்று, வசூலையும் அள்ளியாயிற்று.

நீங்கள் அளித்துள்ள 'பாட்டும் பரதமும்' சென்னை வசூல் உண்மையில் மலைக்க வைக்கிறது. ஆனாலும், அப்படத்தின் தரத்துக்கும் ஸ்டஃப்புக்கும், குறைந்த பட்சம் 150 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய படம்.

(நிழலில் மறைந்திருந்த 'பாட்டும் பரதமும்' படம் பற்றிய ஆய்வுக்கட்டுரை எழுதப்போக, அதுபற்றிய நிறைய தகவல்களைப் பறிமாறிக்கொள்ள முடிந்தது மிகவும் திருப்தியளிக்கிறது. 'கோபால்' பற்றிய தீவிர டிஸ்கஷன் நடந்துகொண்டிருந்த வேளையில், 'புரட்சிக்காரன் பாரத்'தையும் 'தொழிலதிபர் ரவிசங்கரையும்' இடையில் நுழைத்ததற்காக ரசிகர்கள் நிச்சயம் மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். அனைத்திலும் நம் அண்ணன்தானே).

Plum
10th August 2010, 01:37 PM
இப்படி ஒரு நிலை வர காரணமாயிருந்தவர் இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தர்

podhuvAga, NT-yOda 70's movies and career konjam ordinary Aga ivar pangu perusunnu en appA solvAr. Ofcourse, there are other bigger culprits - the Nath Series directors, LDR director etc.

KCSHEKAR
10th August 2010, 03:11 PM
திரியின் 7-ஆம் பாகம் பாட்டும் பரதமும் விமர்சனம், புதிய பறவை நேர்முக வர்ணனை, தில்லானா மோகனாம்பாள் பற்றிய மற்றும் பெருந்தலைவர் கால புதிய தகவல்களுடன் - தொடக்கமே மிகவும் விறுவிறுப்பாக சபாஷ் போடவைக்கிறது. முன்னெடுத்துச் செல்லும் மேடம் சாரதா, நண்பர்கள் திரு. பம்மலார், திரு.ராகவேந்திரன், திரு.முரளி ஸ்ரீனிவாஸ் மற்றும் பங்கேற்கும் அனைத்து ரசிக இதயங்களுக்கும் - நன்றி - இப்பணி தொடர வாழ்த்துக்கள்-

saradhaa_sn
10th August 2010, 05:01 PM
சவாலே சமாளி படத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட அரங்குகளில் மட்டுமே வெளியிட இயலும் என்ற நிதர்சனத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
டியர் முரளி,

நிஜமாகவே எதை வச்சு சொல்றீங்கன்னு எனக்கு விளங்கவில்லை. நடிகர்திலகத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் சவால் காட்சிகளும், போட்டியிட்டு தாக்கும் வசனங்களும் இருப்பதால் திரையரங்குகளில் கலாட்டா அல்லது சலசலப்பு வரும்னு சொல்றீங்களா? அல்லது வேறு ஏதேனும் (என் புத்திக்கு எட்டாத காரணங்கள் எதுவும்) இருக்கா?.

'சவாலே சமாளி' திரையிடப்பட்டால் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது என் எண்ணம்.

Murali Srinivas
10th August 2010, 11:55 PM
சுவாமி, சதீஷ், சந்திரசேகர்

நன்றி! நன்றி! நன்றி!

சாரதா,

தகவல்களுக்கு நன்றி. பாராட்டுகளுக்கு நன்றி.

உங்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. சிவாஜி பிரபு அறக்கட்டளையின் சார்பாக வருடந்தோறும் மறைந்த ஒரு கலைஞரை கௌரவிக்கும் வகையில் அவர் தம் நினைவாக சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படும் நிகழ்வு நீங்கள் அறிந்ததே. அவ்வகையில் இந்த வருடம் அறக்கட்டளையின் சார்பில் அக்டோபர் 1 அன்று சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டு கௌரவிக்கப்பட இருப்பவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்.

அன்புடன்

pammalar
11th August 2010, 12:54 AM
சகோதரி சாரதா,

பாராட்டுக்கும், தகவலுக்கும் நன்றி! நமது நடிகர் திலகத்தின் படம் தான், நமது நடிகர் திலகத்தின் படத்திற்கே போட்டியாக இருந்திருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், அப்போட்டிகளிலும் இத்தனை Dimensionகளா!

டியர் கோல்ட்ஸ்டார், ராகவேந்திரன் சார், சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்களுக்கு நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th August 2010, 01:11 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 102

கே: குறுகிய காலத்தில், நிறைய படங்களிலும், அதே சமயம் அதிக வெற்றிப் படங்களிலும், நடித்த கதாநாயகன் யார்? (வி.ஆர்.நடராஜன், திருச்சி - 2)

ப: முதலாவது சிவாஜி. இரண்டாவது ஜெய்சங்கர்.

(ஆதாரம் : பேசும் படம், ஏப்ரல் 1971)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
11th August 2010, 03:09 AM
டியர் முரளி சார்,
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நினைவு அஞ்சல் உறை வரவிருப்பது மெத்த மகிழ்ச்சி தரும் செய்தி. அந்நாளை நோக்கி காத்திருப்போம்.

அதுவரை,
சென்னை பாரத் திரையரங்கில் புதிய பறவை ஞாயிறு மாலைக் காட்சிக் கொண்டாட்டங்களின் நிழற் படங்களைக் கண்டு மகிழுங்கள்

http://sivajimoviesinchennai2010.blogspot.com/2010/08/blog-post.html

அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
11th August 2010, 04:15 AM
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 8
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]

இனிமையான இசை, அண்ணலை உறங்கச் செய்து விட்டது என எண்ணி அபிநயம் அசைந்தெழுந்து விடைபெற நினைக்க, இசை நின்று அண்ணல் விழிக்கிறார்.

அண்ணல் : "லதா..."

அபிநயம் : "ஓ..நீங்க தூங்கிட்டீங்கன்னு நினைச்சேன்"

அண்ணல் ; "பாட்டு...நின்னு போச்சு.."

அபிநயம் : "ஓ.."

அண்ணல் : "ஆமாம்..உன் உதடுகள் அசஞ்சா மறுபடியும் என் விழிகள் மூடும்"

அபிநயம் : "நீங்க என்ன சொல்றீங்க...?!"

அண்ணல் : "அன்னிக்கி ராத்திரி கப்பல்ல..."

அபிநயம் : "ஓ.."

"உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
என்னைப் பாட சொன்னால்
என்ன பாடத் தோன்றும்"

கப்பல் கேப்டன்ஸ் நைட்டில் உற்சாகத்திற்காக ஒலித்த பாடல், இப்பொழுது கலைத்துறையின் கேப்டன் உறங்குவதற்காக மீண்டும் ஒலிக்கிறது. அதே பாடல் வரிகளை வேறொரு பாவத்தில் இசைக்குயில் பாட, காண்பவர் இதயம் பாடலோடும், காட்சியோடும் ஐக்கியமாகி விடுகிறது. விஆரின் வர்ணமெட்டு தங்கத்தட்டு. ஒரே பாடலை இரு வேறு பாவங்களில், காட்சிகளுக்கு ஏற்றாற்போல், பாடக்கூடிய வல்லமை ஆண்களில் ஆண்மைக் குரல் திலகத்திற்கு(டி.எம்.எஸ்.), பெண்களில் கானக்குயில் திலகத்திற்கு(சுசீலா). இரு வேறு பாவங்கள் என்ன, இருபது பாவங்களில் இசைக்கச் சொன்னாலும் இசைக்கக் கூடியவர்களாயிற்றே இவர்களிருவரும்! இனிமை நிறைந்த இப்பாடலை, அழகுப்பதுமையாக அபிநயசரஸ்வதி அடக்கி வாசிக்க,அமைதியே உருவாக அண்ணல் அரியாசனத்தில் அமர்த்து கொண்டே ரசிக்க, இந்நனவுக்கன்னியிடமிருந்து தற்காலிகமாக விடைபெற்று கனவுக்கன்னியைக் காண கண் மூடுகிறார் கலை முதல்வர்.

நைட்கௌனில் தான் நமது நாயகன் எத்துணை அழகு! அதுவும் இங்கே அந்த Dark Blue கலர் கௌனில் என்னமாய் இருக்கிறார். இந்த ஆடையில் இடது மார்போரம் G என்ற எழுத்து வேறு. Ganesan / Gopal இரு பெயர்களையும் குறிப்பது போல்!

இக்காட்சியில், இதயதெய்வத்தின் க்ளோசப்பிற்கு கற்பூரம் காட்டப்படுகிறது. எங்கிருந்தோ ஒரு குரல் வருகிறது. "தலைவர் தூங்குறாரு... எல்லாரும் கொஞ்சம் சைலண்ட்டா இருங்க..."

அரங்கில் ஒலித்த இந்தக்குரல், திரையிலும் விழுந்தது போலும்! உறங்கும் அண்ணலை நெருங்கும் அபிநயம், சப்தம் வராமல், அவர்தம் அன்புப்பிடியில் ஆட்பட்டிருக்கும் ஸ்டேட் எக்ஸ்பிரல் 555க்கு அஸ்தமனத்தை காட்டுகிறார். விடைபெற நினைக்கும் அவரை, தொலைபேசி மணி தொல்லை கொடுப்பதற்காகவே அழைக்கிறது. எடுக்கிறார். "வலிய வந்த சீதேவியா..." என சரோஜாதேவியை அங்கலாய்த்து வாழ்த்துகிறார் ரங்கன்! புரிந்தும் புரியாதவராக லதா தொலைபேசிக்கு விடை கொடுக்கிறார்.

அடுத்த காட்சியிலும் ரங்கன் ஃபோன் சகிதம்! [மனிதர் ஃபோனிலேயே பிறந்து ஃபோனிலேயே வளர்ந்திருப்பாரோ?! பாவம், இப்பொழுது அவர் இல்லை. இருந்தால் ப்ளூடூத் கருவியையே காதருகில் மாட்டிவிட்டு விடலாம்! (சும்மா நகைச்சுவைக்காகத்தான்)]

"சிங்கப்பூருக்கு எக்ஸ்பிரஸ் கால் புக் பண்ணி நேரமாச்சு! அது சரி, சிங்கப்பூர் கால்னா சீக்கிரம் வரக்கூடாதுன்னு சட்டமா?!"

பாந்தமான பஞ்ச்! பலத்த கைத்தட்டல்!! ராதான்னா சாதாவா...!!!

இருக்கைகளில் சற்று இளைப்பாறியவர்கள் அகன்ற திரை நோக்கி ஆண்டவனை ஆராதிக்கப் புறப்படுகின்றனர்.

(தொடரும்...)

பக்தியுடன்,
பம்மலார்.

saradhaa_sn
11th August 2010, 11:41 AM
சாரதா,
உங்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. சிவாஜி பிரபு அறக்கட்டளையின் சார்பாக வருடந்தோறும் மறைந்த ஒரு கலைஞரை கௌரவிக்கும் வகையில் அவர் தம் நினைவாக சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படும் நிகழ்வு நீங்கள் அறிந்ததே. அவ்வகையில் இந்த வருடம் அறக்கட்டளையின் சார்பில் அக்டோபர் 1 அன்று சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டு கௌரவிக்கப்பட இருப்பவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். அன்புடன்
Dear முரளி, தகவலுக்கு நன்றி.

உங்கள் பதிவை 'ஜெய்சங்கர் திரி'யிலும் QUOTE பண்ணி விட்டேன்.

SHIV
11th August 2010, 02:27 PM
Dear Ragavendra sir,

Thanks for your wonderful photos of PP celebrations at Bharath. Sitting in Pune, Im missing all these celebrations!!!.

My next visit to chennai is due in October and Im sure i will be able to meet you all and if I am lucky i can also view our NT 's classics if released at that time.

Regards

Shivram

SHIV
11th August 2010, 02:32 PM
Dear Murali sir,

Many thanks for your inputs on "Pattum Bharathamum" and its related political events.
These are wonderful pieces of info for fans like me who are totally unaware of these incidents.

Please continue to give such rare infos for the benefit of naive NT fans like me.

Regards

Shivram

Mahesh_K
11th August 2010, 03:42 PM
இப்படி ஒரு நிலை வர காரணமாயிருந்தவர் இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தர்

podhuvAga, NT-yOda 70's movies and career konjam ordinary Aga ivar pangu perusunnu en appA solvAr. Ofcourse, there are other bigger culprits - the Nath Series directors, LDR director etc.

டி.யோகானந்த், K.விஜயன் (சில ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும்..)......etc. என ஒரு பெரிய பட்டியலே உள்ளது. ஏன், ஸ்ரீதர் கூட இந்த பட்டியலில் வருகிறார். ஆனால் - 1970 என்பதை விட 1975 என்பது appropriate ஆக இருக்கும். ஏனெனில் 1970 -1975ல் வியட்னாம் வீடு, கெளரவம், தங்கபதக்கம், ராஜா, வசந்தமாளிகை, எதிரொலி, சவாலே சமாளி....என பல குறிப்பிடத்தக்க படங்கள் உள்ளன.


முரளி சார்........பெருந்தலைவர் மறைவுக்கும் பின் நிகழ்ந்தவற்றை அழகாக விளக்கி இருக்கிறீர்கள். ஆனால் எந்த ஒரு படத்தின் வெற்றிக்குமே காரணமாக இருக்கும் (தீவிர ரசிகர் அல்லாத) பொது மக்கள் அந்த ரசிகரின் அரசியல் நிலைப்பாடுகளை பொருட் படுத்துவதில்லை என்பது என் கருத்து. இதனை தெளிவு படுத்த தமிழகத்தில் பல உதாரணங்கள் உள்ளன.

எனவே குறிப்பிட்டுள்ள படங்கள் ஓடாததற்கு அந்த படங்களே தான் காரணம். இந்த படங்கள் வேறு கால கட்டங்களில் வந்திருந்தாலும் (பெரிய வேறுபாடின்றி) இதே போலத்தான் ஓடியிருக்கும்.

அதே நேரத்தில், ஓரிரு ஆண்டுகள் பிந்தி எங்கள் தங்க ராஜா, தங்கப்பதக்கமோ அல்லது ஓரிரு ஆண்டுகள் முந்தி தீபம், தியாகம் போன்ற படங்களோ (பெருந்தலைவர் மறைவை ஒட்டி- வந்திருந்தாலும்) அவை அப்போதும் பெரிதாகவே ஓடியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

kumareshanprabhu
11th August 2010, 07:08 PM
hi murali what you said about our NT and Rajiv is true,

umaramesh
11th August 2010, 09:20 PM
dear saradhaa

னோ தெரியவில்லை. இப்படத்தில் மணி மணியான பாடல்கள் அமைந்தும் அவை வெளியில் தெரியாமலே போய்விட்டன. மெல்லிசை மன்னரும், அவர்தம் குழுவினரும் இப்படத்தில் உழைத்த உழைப்பு கண்டுகொள்ளாமலே விடப்பட்டது).

Excellent writing . Mellisai Mannar SHENOY &TMS voice /KD lyrics .
Rare song& (THEIVATIN TSONG) . I dont think any one will even think of such composistion.

Thanks for your analysis.

regards
ramesh

RAGHAVENDRA
11th August 2010, 09:56 PM
கடந்த 08.08.2010 ஞாயிறு அன்று மாலை பாரத் திரையரங்கில் புதிய பறவை திரைப்படத்திற்கான பார்வையாளர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 600ஐ எட்டியது. தற்பொழுது சென்னை நகர சினிமா வட்டாரத்தில் இது ஒரு சிறப்பம்சமாக கருதப் படுகிறது. காரணம் அன்று தொலைக்காட்சியில் இடம் பெற்ற ஒரு நிகழ்ச்சியின் தாக்கம் தான். அன்றைய மாலைக்காட்சியில் நகரில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளுமே 100 அல்லது 200 பார்வையாளருக்கு மேல் ஒரு குறிப்பிட்ட அரங்கில் ஒரு குறிப்பிட்ட படத்தின் ஒரு காட்சிக்கு வரவில்லை என்பதாகக் கூறப்படுகிறது. தனித்து நிற்கும் விதமாக பாரத் திரையரங்கு மட்டுமே விழாக் கோலம் பூண்டதோடு மட்டுமல்லாமல் 550க்கும் மேல் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு சாதனையாக வியாபார நோக்கர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

இது நமக்கு நேரடி தகவல் இல்லை என்றாலும் இதனை ருசுப்படுத்துவதாகத்தான் அன்றைய பாரத் திரையரங்கில் கண்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை அமைந்துள்ளது.

ராகவேந்திரன்

app_engine
11th August 2010, 10:23 PM
சாரதாக்கா,

பாட்டும் பரதமும் பற்றிய தங்கள் பதிப்புகள் அருமை. சின்ன வயதில் பெற்றோருடன் சென்று தியேட்டரில் பார்த்த வெகு சில படங்களில் இதுவும் ஒன்று.

அருமையான பாடல்கள் - நாட்டுப்புற விழாக்கள் / திருமணங்கள் போன்றவற்றில் அக்காலங்களில் எப்போதும் ஒலித்தவை இவை.

"தூள்.காம்" சரவணனின் அழகான பதிவு இங்கே (http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=5725).

Murali Srinivas
11th August 2010, 11:30 PM
Thanks Shiv. Would continue to do as and when the opportunity comes. Hope to meet you in October.

மகேஷ்,

படங்களின் வெற்றி தோல்வியில் பெரும்பங்கு வகிக்கும் பொது மக்கள் அந்த நடிகரின் அரசியல் நிலைப்பாடுகளை வைத்து படம் பார்ப்பதில்லை என்பது உண்மை என்றாலும் கூட, எல்லா நேரங்களிலும் அது சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அன்பே ஆருயிரே, Dr .சிவா, வைர நெஞ்சம் போன்றவற்றிற்கு அது பொருந்தும். ஆனால் பாட்டும் பரதமும் மற்றும் உனக்காக நான் படங்கள் வெற்றி பெறாமல் போனதற்கு அரசியல் சூழ்நிலை ஒரு பெரிய காரணம். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்களே அந்தக் காலக்கட்டத்தில் அவர் படங்களை சரியாக ஆதரிக்கவில்லை என்பது நான் நேரில் கண்ட உண்மை. அவர்களெல்லாம் மீண்டும் திரையரங்கிற்கு வர ஆரம்பித்ததே தீபம் படத்திலிருந்துதான்.

சில நல்ல படங்கள் அரசியல் என்றல்ல வேறு காரணங்களாலும் பாதிக்கப்பட்ட வரலாறும் நமக்கு இருக்கிறது. முதலில் வெளியான போது வெற்றி வாய்ப்பை இழந்த கப்பலோட்டிய தமிழன் மறு வெளியீடுகளில் வசூலை வாரி குவித்ததை நாம் பார்த்தோம்.

ஆக படத்தின் தரம் ஒரு பக்கம் என்றால், புறக் காரணிகளும் வெற்றி தோல்வியில் பங்கு வகித்தன. இப்படிப்பட்ட எதிர்மறையான சூழலில் கூட மதுரை நடிகர் திலகத்தின் பக்கமே நின்றது. உத்தமன் படத்தை 100 நாட்கள் படமாக்கி 1952 முதல் 1987 வரை 36 ஆண்டுகளில், 100 நாட்கள் படங்கள் இல்லாத வருடமே கிடையாது என்ற பெருமையை பெற்ற ஒரு நடிகனாக இன்று வரை வைத்திருக்கிறது.


அன்புடன்

Murali Srinivas
11th August 2010, 11:43 PM
[tscii:447c6eb83d]Puthiya Paravai doesn't allow us to move away. As a part of Madras week celebrations, I had written a small piece about Puthiya Paravai and its re-release for a tabloid called Madras Musings, thanks to Mohanram Sir who initiated me to write. I should also thank Ragavendar Sir and Swami for providing me with theatre datas regarding the NT acted movies of 1964. Here it is

Last Friday the 23rd July saw the re- release of the ever green classic “Puthiya Paravai” at Shanthi theatre. The release and the huge response it had generated from the fans and public alike had made me pen this.

If Friday and Saturday saw the general public thronging the theatres, Sunday was taken over by the fans. Many families had come on the first two days and there were many elderly couples who had come to relive their memories. It was widely expected that a large contingent of die hard fans of Nadigar Thilagam would be there on Sunday but the turnout exceeded everybody’s expectations. Matinee show had recorded 90% occupancy and for the evening show the crowd had started gathering even by 3.30 pm and it started swelling as the hours passed by. By 5.30 pm the theatre campus had become a sea of humanity. Fans had come from even Kancheepuram and Kadaloor not to forget the fans from Bangalore just to be a part of the fun. The Bangalore fans had ordered special garlands and they brought the same in a container lorry. With the big garlands in their shoulders the fans took out a big rally and they went round the Mount Road throwing the entire traffic out of gear. Police had rushed in and controlled the crowd. Once the procession was over the scene shifted inside the theatre.

There were two banners of the film, one at the entrance and the other inside. It required a lot of effort to garland the banner and people started climbing up and in no time the entire banner was covered with garlands. Once the portrait was garlanded the other rituals like lighting of camphor followed by bursting of crackers were carried out. Especially the 5000 and 10000 walas were burst quite a number of times. The grand gala affair that started at 3.30 pm went on till 6.30 pm and then the action shifted to the indoor. For many old timers it was a throwback to the 60’s and 70’s when the release of every Sivaji film at Shanthi would be a festival. Yes, on that Sunday the time stood still. More heart warming for the fans and the management because all this things are happening on the golden jubilee year of Shanthi. Shanthi was thrown open to public on 11.01.1961 and come January the theatre would be completing 50 years of glorious existence.

Coming to think of it, Shanthi theatre the Mecca to Sivaji fans and Sivaji acted movies were an inseparable part and it would surprise many that Puthiya Paravai was not screened in Shanthi when it was first released in 1964. All the more surprising because the film was the first home production of Sivaji films. Let us have a brief foray into the history.

Puthiya Paravai was the first Tamil movie to be produced by Sivaji Films [they had produced some Hindi films earlier and they were confining themselves with the distribution of Tamil films] and they made it in colour. Shanthi theatre originally built by Umapathy was later bought by Sivaji Ganesan and Puthiya Paravai was slated to be released in Shanthi on 12th of September 1964. But Raj Kapoor’s Sangam which had been released in Shanthi was doing a roaring business and the theatre management had a big dilemma in front of them. They decided not to disturb Sangam and to chart Puthiya Paravai in some other theatre. The only available theatre nearer to Mount Road was Paragon. But Paragon was no match for Shanthi when it comes to seats, screen and sound effects. So Sivaji films itself took up the job of re-modeling the theatre and made it as a comfortable viewing. For this the Paragon theatre had to be shut down for more than 2 weeks and alas while it enhanced the beauty of Puthiya Paravai, another movie of Sivaji, Aandavan Kattalai which was running there and which if left undisturbed would have completed a 100 day run had to be removed after 70 days. Had it been allowed to run it would have been 6 out of 7 films of Sivaji completing 100 day run in the city in the calendar year 1964.

That takes us to another aspect of films (i.e.) Box office success in the city of Madras and Sivaji movies of 1964 had created a record which even today stands unbeaten. Sivaji had a release of 7 films in the calendar year 1964 out of which 5 movies ran for 100 days and more in 15 theatres. The record of 5 films of one hero running to 100 days in 15 theatres in Madras city remains unsurpassed in the nearly 80 year old history of Tamil cinema. Add to it “Annai Illam” the last movie of Sivaji in the calendar year 1963 that completed 100 day run in Casino theatre in 1964, you have 6 movies of Sivaji completing 100 days run in 16 theatres. Extending this logic, if you look at the table given below, 7 films of Sivaji got released in 26 theatres in the city out of which 25 prints had completed 50 days and more. A phenomenal achievement indeed.


Karnan- 14.01.1964 - Shanthi 100, Prabath-100, Sayani -100

Pachai Vilakku -03.04.1964 - Wellington -105, Maharani-105, Roxy -105, Noorjehan -70

Andavan Kattalai -12.06.1964 - Paragon -70, Sri Krishna -56, Sayani -50, Noorjehan -50.

Kai Kodutha Deivam -18.07.1964 - Midland -105, Prabath -100, Saraswathy- 100, Ram -100

Pudhiya Paravai - 12.09.1964 -Paragon-132, Sri Krishna -76, Sayani -76

Muradan Muthu - 03.11.1964 - Star -52, Prabath–52, Saraswathy -52, Liberty - 45

Navarathiri - 03.11.1964 -Midland -101, Maharani -101, Uma -101, Ram -101.

Regards[/tscii:447c6eb83d]

pammalar
12th August 2010, 03:11 AM
Dear Murali Sir,

The "Pudhiya Paravai" write-up is an awesome wrap-up of the happenings at Shanthi. The article as a whole, is an informative & brilliant piece and is worth a treasure for life.

Warm Wishes,
Pammalar.

pammalar
12th August 2010, 02:11 PM
Bharat Bonanza
[Pudhiya Paravai : Sunday Evening : 8.8.2010]

http://www.freewebs.com/pammalaar/apps/photos/album?albumid=9709345

Happy Viewing,
Pammalar.

Murali Srinivas
12th August 2010, 10:50 PM
Thanks Swami for your kind words.

பாரத் அரங்கில் நாம் பார்த்த கோலாகல காட்சிகளை இந்த உலகமே பார்க்கும் வண்ணம் புகைப்படங்களாக வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல!

அன்புடன்

Murali Srinivas
12th August 2010, 11:04 PM
[tscii:9325845365]நறும்புனல் என்ற தலைப்பில் வலைப்பூ பதிவுகள் செய்யும் வெற்றிவேல் என்ற அன்பர் நடிகர் திலகம் பற்றி எழுதியிருக்கும் பதிவு.



நடிகர் திலகம்-இன்றைய இளைஞர்களுக்காக

சிவாஜி பற்றி சில வரிகள்

எதை எழுதுவது எதை விடுவது ?
இமய மலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாகக்
காட்டும் உன்னத நடிப்பைச்சொல்வேனா ?.. கவியரசர் கண்ணதாசன்

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு வலையுலக நண்பர் நடிகர் திலகம் பற்றி இளைஞர்கள் பார்வை என்ற ஒரு கட்டுரை எழுதி இருந்தார்..சிவாஜியின் முகபாவனைகள் யதார்த்த்தை காண்பிப்பதில்லை என்று.(?) அந்த நண்பர் மீது குற்றம் சொலவதற்கோ, பதிலுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்பதோ என் நோக்கம் இல்லை.ஏனென்றால் என் மகன்களும் அதே தான் சொல்கிறார்கள்..இது அவருக்காக எழுதியது இல்லை..என் மகன்களைப் போன்று உள்ள எண்ணற்ற இளைஞர்கள் நடிகர் திலகத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் , அனைத்து இளைஞர்களுக்குமான கட்டுரை..


சிவாஜி என்பது ஒரு சரித்திரம்..அதன் சில பக்கங்களை மட்டும் புரட்டிவிட்டு விமர்சனம் செய்வது. அந்த மகா கலைஞனுக்கு நியாயம் செய்வதாக இருக்காது..


இன்றைய இளைஞர்கள் சிவாஜியை , யானையை பார்த்த குருடர்கள் கதையில் வருவது போல பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வது போல் சொல்வது எந்த வகையிலும் ஒரு உயர்ந்த மனிதனுக்கு செய்யும் மரியாதையாக இருக்க முடியாது.. அவர் யாதர்த்தமான படங்கள் அதிகம் கொடுக்கவில்லை என்றும் உங்களால் ஈடுபாட்டுடன் பார்க்க முடியாத படங்களில் அதிகம் நடித்துள்ளார் என்று சொன்னால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கலாம்.ஏனென்றால் அந்தக் காலம் வேறு..இன்று SMS காலம்..இந்தக் காலக் கண்ணோட்டத்தில் பழைய 50 வருஷங்களுக்கு முன்னர் வந்த படங்களை பார்க்காதீர்கள்..


பராசக்தியில் தொடங்குகிறது அந்த மகா கலைஞனின் திரைப்பிரவேசம். கமல் சொல்வது மாதிரி அன்றே முடிவு செய்து கொள்கிறார்..தாம் வளர வேண்டிய கலைஞன் அல்ல..நாம் செய்யவேண்டியது தனது திறமைகளை வெளிப்படுத்துவது மட்டும் தான் என்று முடிவெடுத்துக் கொண்டு தான் பல்வேறு கதாபாத்திரங்களை தெரிந்தெடுத்து 150 படங்கள் தொடர்ந்து வித்தியாசமான தோற்றத்தில் ,வித்தியாசமான உடல்மொழியில் ,திரையில் வாழந்து காட்டியுள்ளார்..


எனக்கு படத்துணுக்குகளை இணைக்கத் தெரியாது..இல்லை என்றால் அதை உங்கள் பார்வைக்கு வைத்து இருப்பேன்.. இருந்தாலும் சில படங்களில் சில காட்சிகளை இங்கு தருகிறேன்..


முதல் படம்..பராசக்தி..எல்லொருக்கும் பராசக்தி என்றால் கோர்ட் சீன் தான் ஞாபகத்திற்கு வரும்..அதே பட்த்தில் தான் “நானே ராஜா,நானே மந்திரி ‘ என்று ஒரு காட்சி பைத்தியமாக பண்ணியிருப்பார்.. மற்றொரு காட்சி..பிளாட்பாரத்தில் தூங்குபவரை எழுப்பி, ஏன் முழிக்கிறாய்? என்ற காவல்காரனின் கேள்விக்கு தூங்குபவனை எழுப்பினால் முழிக்காமல் என்ன செய்வான் என்பார்...இந்தக் காட்சியினைப் பாருங்கள்..முதல் பட நடிகனா? முந்நூறு படங்களில் நடித்தவரா என்ற கேள்வி உங்களுக்கு கண்டிப்பாய் வந்துவிடும்..


காட்சிக்கு தேவையானதை . இயக்குநர் கேட்பதை மட்டும்செய்து கொடுப்பவன் நடிகன்.. எம்.ஆர்.ராதா, சிவாஜி இருவரும் கலைஞர்கள்.. இருவரும் சின்னஞ் சிறிய நகாசு வேலைகள் செய்து அந்த ஒரு சில நொடி வரும் காட்சியினை ஆயுளுக்கும் மறக்க முடியாமல் செய்து விடுவார்கள் ..

அந்த வரிசையில்..

தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரக்கச்சேரி நடந்து கொண்டு இருக்கும். வாசித்துக்கொண்டு இருப்பார். அந்த சமயம் அழகான பெண் வந்து கூட்டத்தில் அமரவே பக்கதில் இருக்கும பாலையா அண்ணனைப் பார்த்து ஒரு கண் அடிப்பார் பாருங்கள்.. அங்கே தான் சிவாஜி என்ற கலைஞன் உயிர்போடு இருப்பான்..

இதே படத்தில் ரெயிலில் பயணம் செய்யும் போது பத்மினியும் அவரும் கண்களால் பேசிக் கொள்வது மிகை நடிப்பாகுமா என்ன?


ஆண்டவன் கட்டளையில்..ஆறுமனமே ஆறு என்ற பாடல்.. அறுபடை வீடுக்கும் சென்றுவிட்டு பாட்டு முடியும் போது ஒரு சின்ன பிட் மியுசிக் வரும்..அதுக்கு எந்த நடன இயக்குநரும் நடகர் திலகத்திற்கு தேவை இல்லை..கையில் நிலக்கடலையை வைத்து கொண்டு அதை ஊதிக் கொண்டே ஒரு ஆண்டிப்பண்டார நடை நடப்பதை பாருங்கள்.அப்ப தெரியும் அவன் ஒரு யுகக் கலைஞன் என்று..

உத்தமபுத்திரன் ..யாரடீ நீ மோகினி பாடல் பாருங்கள் இன்றைய சூப்பர் ஸ்டார் நடக்கும் side walk க்கை அன்றே நடந்திருப்பது ஆச்சர்யத்தை தரும்.


பாகப்பிரிவினை படத்தில் சரோஜாதேவி தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டவுடன், தான் ஊனமானவன், தன்னை நன்றாக பார்த்துச் சொல் என்று சொல்லிக் கொண்டு அவர் முன் வலமும் இடமுமாக காலை இழுத்துக் கொண்டு ஒரு ஊன நடையை நடந்து காட்டுவதை அவதானியுங்கள்


பாசமலர்..முதலிரவுக்காட்சி..ஆண் வெட்கப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? தங்கையின் புகைப்படத்தைப் பார்த்து வெட்கப்பட்டு, அந்தப் புகைப்படத்தை திருப்பிவைக்கும் போது அவர் முக பாவங்களை கவனியுங்கள்..


நவராத்திரி ..நவரசங்களையும் காட்டும் மாதிரி ஒன்பது வகையான பாத்திரங்கள். ஒவ்வொரு வேடத்திற்கும் வேறு வேறு உடல் மொழி..அதில் ஒன்று தான் மனநோய் மருத்துவர்.. சாவித்திரியை வார்டுக்கு அழைத்துக் கொண்டு போகச்சொல்லிவிட்டு, ஒரு நடை நடந்து கதவு வரை சென்றவர் , திரும்பி வந்து மறந்து போன ஸ்டெத் தை எடுத்து திரும்பிச் செல்வார் ..அந்தக் காட்சியைப் பாருங்கள்..


பாலும் பழமும் படத்தில் மருத்துவருக்குரிய வெள்ளை உடை அணிந்து மருத்துவமனையில் ஒரு நடை நடந்து வருவார் .அதைப் பார்த்து டாக்டராக வேண்டும் என்று டாக்டராக ஆனவர்கள் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியும்


திருவருட்செல்வரில் அப்பராக..காற்றில் பறக்கும் காவி உடையை கையில் பிடித்துக் கொண்டு அவர் எழுந்து வருவதாக ஒரு காட்சி ..பாருங்கள்..


உயர்ந்த மனிதன் பாருங்கள். அதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத உயர்ந்த மனிதனுக்குரிய வித்தியாசமான உடல் மொழி கையாண்டு இருப்பார்..


ஞானஒளி படத்தில் இடைவேளைக்கு முன்னர் மணி அடிக்கும் ஆண்டனியாகவும், பின்னால் பணக்கார்ராகவும் இரண்டு வேடங்களுக்கும் ஒட்டுமொத்த வித்தியாசம் காண்பித்து இருப்பதை கவனியுங்கள்..


பார்த்தால் பசிதிரூம் படம் பாசமலர் வந்து வெற்றி பெற்றவுடன் அதே குழுவினர் பங்கேற்று வெளிவந்த படம்.. பாசமலர் பார்த்துவிட்டு பா.பசிதீரும் பாருங்கள்.. பாசமலருக்கும் இப்படத்திற்கும் 100 விழுக்காடு வித்தியாசம் காட்டி இருப்பார்.ஒரு காலை விந்தி விந்தி அப்படம் முழுக்க ஒரு புதிய உடல் மொழி காட்டி இருப்பார். படம் பார்க்க நேரம் இல்லை என்றால்..உள்ளம் என்பது ஆமை.என்ற பாடலாவது கேட்டுப் பாருங்கள்...அந்த இமயத்தின் சில கூறுகளை அறிந்து கொள்வீர்கள்

புதியபறவை கிளைமாக்ஸ் காட்சியை தமிழ் திரைப்பட வரலாற்றில் மறைக்க முடியாத காட்சியாக மாற்றி அமைத்து அவரின் அபார நடிப்புத் திறமைதானே..


இது மாதிரி அவர் படங்கள் முழுதும் சின்னச் சின்ன மறக்க முடியாத காலத்தால் அழியா காட்சிகள் இருக்கும்..


இப்படிப் பட்ட அற்புத திறமைக்காகத் தான் அவரை பல்கலைக் கழகம் என்றார்கள்..


மிகை நடிப்பு என்று சொல்லப்பட்ட பாசமலரில் தான் ஜெமினியோடு ஒரு ஆக்ரோசமான விவாத்த்திற்குப் பிறகு வசனமே பேசாமல் ” கெட் அவுட்” என்று சொல்வார்..


எந்தவித முன்னுதாரணங்களும் இல்லாமல், தான் பார்த்த, பழகிய நபர்களின் ஆளுமைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு, திரைவடிவமாக்கியவர்..


கப்பலோட்டிய தமிழன் பாருங்கள்.. கொஞ்சம் கூட மிகை நடிப்பு இல்லாமல் பார்த்துக் கொண்டவர். வீரபாண்டிய கட்டபொம்மனின் அபார வெற்றிக்குப் பிறகு அதே நிறுவனம், அதே விடுதலைப் போராட்டம் பற்றிய திரைப்படம்..கட்டபொம்மனில் கர்ஜித்தவர் , அந்த வெற்றியைச் சுவைத்தவர், அதே மாதிரி க.தமிழனிலும் கர்ஜித்திருக்கலாம்.. செய்யவில்லை..அடக்கமான, சாந்தமான முகத்துடன் வ.உ.சியாக வாழ்ந்து காட்டி இருப்பார்.

வாழும் மனிதர்களை மட்டுமா திரையில் காண்பித்தார்?

புராண கதாபாத்திரங்களான சிவன், நக்கீரன், நாரதர்,கர்ணன், பரதன், அரிச்சந்திரா எனப் பல்வேறு பாத்திரங்கள்..


உங்கள் பார்வைக்கு என்னால் நடிகர் திலகம் நடித்த 50 படங்களாவது வரிசைப்படுத்த முடியும்
பாருங்கள்..நடிகர் திலகத்தை திறந்த கண்ணோடு பாருங்கள்.. வேண்டுமென்றால் எனக்கு மின்ன்ஞ்சல் அனுப்பவும். நல்ல படங்கள் அல்ல.. அவர் நடித்த நடிகர்களுக்கான பாடங்கள் வரிசை தருகிறேன்..

இதையும் பாருங்கள்

http://www.youtube.com/watch?v=da89d7irDO0&feature=related

அன்புடன்
அ.வெற்றிவேல் தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com

http://avetrivel.blogspot.com/2010/08/blog-post.html


அன்புடன்[/tscii:9325845365]

pammalar
13th August 2010, 02:53 AM
டியர் முரளி சார்,

"வெற்றிவேல்! வெற்றிவேல்! சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் வெற்றிவேல்! எங்கள் வெற்றிவேல்!"

நறும்புனல்,

பக்தர்க்கு பூந்தென்றல்!

எத்தர்க்கோ கடும்புயல்!

வேலும் புனலும் வாழ்க! வாழ்க!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th August 2010, 03:18 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 103

கே: பத்மனாப ஐயரின் நடிப்பு எப்படி? (ந.காசி, பெங்களூர் - 21)

ப: கொன்னுட்டார் போங்கோ!

(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th August 2010, 03:27 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 104

கே: கலைக்குரிசிலின் எந்தப் படம் அதிக நாட்கள் ஓடியது? (ஆர்.கே.கிருஷ்ணரங்கன், கருமாங்குளம்)

ப: பராசக்தி தான். இன்னும் கூட ஓடிக் கொண்டே இருக்கிறது.

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th August 2010, 04:23 AM
வசூல் சக்கரவர்த்தி - 2
[மதுரையம்பதி புள்ளி விவரம்]

[திரைக்காவியம் - வெளியான தேதி - திரையரங்கம் - ஓடிய நாட்கள் - மொத்த வசூல்(ரூ.-அணா- ந.பை.)]

1. பராசக்தி - 17.10.1952 - தங்கம் - 112 நாள் - 1,63,423-9-9

2. மனோகரா - 3.3.1954 - ஸ்ரீதேவி - 156 நாள் - 1,51,690-5-0

3. தங்கமலை ரகசியம் - 29.6.1957 - தங்கம் - 55 நாள் - 1,00,502-10-5

குறிப்பு:
1. 2593 இருக்கைகள் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கம் திரையரங்கில் வெளியான முதல் திரைக்காவியமே "பராசக்தி" தான்.

2. தங்கம் திரையரங்கில் மூன்று 100 நாள் காவியங்களை கொடுத்த ஒரே உலக நடிகர், நடிகர் திலகம் தான்.
[பராசக்தி(1952) - 112 நாள், படிக்காத மேதை(1960) - 116 நாள், கர்ணன்(1964) - 108 நாள்]

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
13th August 2010, 09:29 PM
டியர் பம்மலார்,
தமிழகத் தங்கத்தை மதுரை தங்கம் வசூல் சாதனையோடு கொண்டாடிய விவரங்கள் மிகவும் மகிழ்வூட்டுகின்றன. பாராட்டுக்கள்.

நாளை 14.08.2010 அன்று மாலை 6.00 மணியளவில் சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள பசும்பொன் தேவர் மண்டபத்தில் Pasumpon Fine Arts 40வது ஆண்டு விழாவும், நடிகர் திலகம் நினைவு போற்றலும் மற்றும் விருது வழங்கலும் நடைபெற உள்ளன. நடிகர் ராஜேஷ் பங்கேற்கிறார்.

ரசிகர்கள் திரளாகப் பங்கேற்க அழைக்கப் படுகிறார்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

Murali Srinivas
13th August 2010, 11:14 PM
The greatest ever with two of his best disciples.

http://i38.tinypic.com/2hf1e6v.jpg

Regards

pammalar
14th August 2010, 03:53 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கும், தகவலுக்கும் நன்றி!

டியர் முரளி சார்,

அபூர்வ புகைப்படத்துக்கு அற்புத நன்றி!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th August 2010, 04:04 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 105

கே: அன்றைய 'கட்டபொம்மன்', 'பாரத விலாஸ்', 'கப்பலோட்டிய தமிழன்' போன்ற தேசபக்தி படங்களுக்கும், இன்றைய 'இந்தியன்', 'ஜெய்ஹிந்த்', 'சுபாஷ்' போன்ற படங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதே? (இளம்பிறை ஃபாரூக், சென்னை - 24)

ப: அன்றைய படங்களில் உண்மையான தேசபக்தி இருந்தது. இன்றைய படங்களில் தலைப்பில் மட்டும் தான்!

(ஆதாரம் : பொம்மை, டிசம்பர் 1996)

அன்புடன்,
பம்மலார்.

gopalu_kirtinan
14th August 2010, 05:37 AM
எனது வாழ்கையின் முதல் வெளிச்சத்தை 1995 ம் வருடத்தின் ஒரு இனிய நாளொன்றில் எங்கள் ஊர் திரைஅரங்கின் இருட்டில் கண்டேன். ஆம். நான் பார்த்த முதல் சிவாஜி படம் வசந்த மாளிகை. அன்று தான் நான் நடிப்புலகின்பேரொளியை கண்டேன்.அந்த திரை படத்தின் ஒரு கட்சியில்
" வேண்டாம் என்று சொன்னால் விபச்சாரி எனினும் தொடக்கூடாது , சரி என்று சொன்னால் யாராக இருந்தாலும் விடக்கூடாது " என்றீர். நான் நம் தமிழ் பண்பாட்டின் பெருமையை கற்றுக்கொண்டேன். மயக்கம் என்ன பாடலுக்கு முன் வரும் அந்த காட்சியில் தமிழைக் கொண்டு உயிர் ஓவியம் வரைந்தீர் , நான் எனது உணவு மறந்து திரை அரங்கில் தமிழ் உண்டேன். யாருக்காக பாடலில் சோகம் பிழிந்து ஊற்றிநீர், அது திரை அரங்கின் பார்வையாளர்களின் கண்களில் குளமாக பெருகியது. முக பாவங்களில் முந்நூறு வகை காட்டினீர், அய்யா .. நான் முக்கனியின் சுவையை அற்பம் என்றேன்.இரண்டு மனம் வேண்டும் பாடலில் ஒரு காதல் தோல்வியுற்ற இளைஞனாய் வாழ்ந்து காட்டினீர், என்னருகில் இருந்து படம் பார்த்த ஒருவர் "இந்த ஒரு பாட்டிற்கே நாம் கொடுத்த டிக்கெட் கட்டணம் சரியாக போய்விட்டது, மீதமுள்ள படம் நமக்கு இலவசமாகவே காட்டப்படுகிறது" என்றார். அது எனது பசுமையான நினைவுகளில் ஆழமாக பதிந்து விட்டது.

groucho070
14th August 2010, 07:09 AM
The greatest ever with two of his best disciples.

http://i38.tinypic.com/2hf1e6v.jpg

RegardsSuperb, Murali-sar. Lal-ettan's affection and NT inspiration is well documented. How about Mammooty? Anything on record....on that scanned page?

KCSHEKAR
14th August 2010, 10:31 AM
Thanks Mr.Murali for the coverage from Narumpunal Web & for a rare photo of NT with Mammutty & Mohanlal. I don't understand the news article. If you know write in Eng or Tamil.

Mahesh_K
14th August 2010, 11:01 AM
Thanks Mr.Murali for the coverage from Narumpunal Web & for a rare photo of NT with Mammutty & Mohanlal. I don't understand the news article. If you know write in Eng or Tamil.

I can read Malayalam .Few questions were asked about Mamootty to Mohanlal and vice versa & their response has been published. The questions were not about NT .

SHIV
14th August 2010, 11:44 AM
Dear NT's Pillaigale,

In the name of Veera Pandiya Kattabomman, V.O.C, Bhagath Singh, Thirupur Kumaran, Bharath & Bharathiar I Wish you all a very HAPPY INDEPENDENCE DAY.

JAI HIND.

Shivram

KCSHEKAR
14th August 2010, 04:08 PM
Wish you all a Very Happy Independence Day - Jai Hind

rangan_08
14th August 2010, 07:11 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 103

கே: பத்மனாப ஐயரின் நடிப்பு எப்படி? (ந.காசி, பெங்களூர் - 21)

ப: கொன்னுட்டார் போங்கோ!

(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)

அன்புடன்,
பம்மலார்.

:D

Barrister Rajinikathoda predecessorolliyo !! :)

rangan_08
14th August 2010, 07:13 PM
The greatest ever with two of his best disciples.

http://i38.tinypic.com/2hf1e6v.jpg

Regards

:thumbsup:

thanks murali sir.

rangan_08
14th August 2010, 07:17 PM
Murali sir, glad to see you as a tabloid writer - guess your'e moving on in the right direction. Heart felt congratulations & wishing you success in your new avatar. We, as NT fans owe a lot to Mohanram sir.

Pudhiya Paravai article was great as usual, particularly the last 2 paragraphs and the statistics were just mind boggling.

Keep it up and all the best, sir.

pammalar
14th August 2010, 07:23 PM
அன்புத்தம்பி கோபால்,

தங்களின் அனுபவப் பதிவு உணர்ச்சிப் பிழம்பு!

தங்களது அனுபவம் மட்டுமல்ல, எழுத்தும் பேசுகிறது!!

தொடரட்டும் தங்களின் திருத்தொண்டு!!!

அன்புடன்,
பம்மலார்.

gopalu_kirtinan
14th August 2010, 11:43 PM
அன்புத்தம்பி கோபால்,

தங்களின் அனுபவப் பதிவு உணர்ச்சிப் பிழம்பு!

தங்களது அனுபவம் மட்டுமல்ல, எழுத்தும் பேசுகிறது!!

தொடரட்டும் தங்களின் திருத்தொண்டு!!!

அன்புடன்,
பம்மலார்.

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அண்ணா.

Murali Srinivas
15th August 2010, 12:28 AM
சுவாமி,

நன்றி.

கோபால் போன்ற இளைஞர்கள் நடிகர் திலகம் பற்றி பேசுவது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. அதுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 15 நிமிடங்களாவது நடிகர் திலகத்தை திரையில் பார்க்காமல் இருக்க மாட்டேன் என்று சொல்லும் கோபால் போன்றவர்களை பெருமிதத்துடன் வாழ்த்துவோம்.

Thanks Mr.Chandrasekar. As Mahesh clarified, it has nothing to do with NT. Malayala Manorama as a special Onam edition had brought out this feature, where a set of questions have been asked to both Ms and it contains some rare photos and this is one among them.

Rakesh,

Mammootty is also a great fan of NT and that's the reason he came for Chevaliare award function, came in person when NT passed away and also attended the condolence meeting organised by Nadigar Sangam. Though there are interviews where he had talked about NT, don't have anything right now. Would post it here when I get hold of it.

Mohan,

Thanks. In fact as you rightly pointed out we must thank Mohanram Sir. As for as the statistics are concerned, I have just reproduced and the data was given by Raghavender Sir and Swami [as already mentioned] and of course all these were possible only because of one man and that is our beloved NT.

இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு.

சுதந்திரத்தின் பெருமையையும் தேசியத்தின் மேன்மையையும் தன் திரைப்படங்கள் மூலமாக நாட்டிற்கு எடுத்து சொன்ன நடிகர் திலகத்தின் வழியொற்றி நாமும் சுதந்திரத்தின் மாண்பை போற்றுவோம்.

ஜெய்ஹிந்த்!

அன்புடன்

pammalar
15th August 2010, 03:16 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 106

கே: அன்றும் இன்றும் என்றும் உங்கள் மனதை விட்டு நீங்காத படம் எது? (கே.விஸ்வநாத், பெங்களூர் - 38)

ப: 'கப்பலோட்டிய தமிழன்'. என்னதான் சொல்லுங்கள், ஆணுக்குக் கல்நெஞ்சம் என்று! இந்தப் படத்தில் நடிகர் திலகம் நம் கண்ணுக்குள் ஓர் ஊற்றை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் உண்டாக்குவார்.

(ஆதாரம் : பொம்மை, மே 1994)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th August 2010, 03:39 AM
வசூல் சக்கரவர்த்தி - 3
[மதுரையம்பதி புள்ளி விவரம்]

[திரைக்காவியம் - வெளியான தேதி - திரையரங்கம் - ஓடிய நாட்கள் - மொத்த வசூல்(ரூ.- பை.)]

1. வீரபாண்டிய கட்டபொம்மன் - 16.5.1959 - நியூசினிமா - 181 நாள் - 2,77,365-71

2. கப்பலோட்டிய தமிழன் - 7.11.1961 - ஸ்ரீதேவி - 68 நாள் - 98,371-38

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th August 2010, 03:51 AM
"சுதந்திர பூமியின் பல வகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்!
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ஜனங்களின் ஆயிரம் குணங்கள்!"

நாளை 15.8.2010, நமது பாரத புண்ணிய பூமியின் 64வது சுதந்திர தினம்!

அனைவருக்கும் ஆத்மார்த்தமான சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!

பக்தியுடன்,
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.

RAGHAVENDRA
15th August 2010, 09:29 AM
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்

என்றொரு காலம் ஏங்கியதுண்டு (15.08.1947)
அன்று கிடைத்தது பதிலொன்று

இன்று எவரும் போற்றிப் புகழும்
விடுதலை நாள் வந்ததென்று

...

பெற்ற விடுதலையைப் பேணிக் காக்க
நம்முடைய தாரக மந்திரமாவது

முரளி சார் சொன்னது போல்

இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு

அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
ராகவேந்திரன்

kid-glove
15th August 2010, 03:02 PM
Veerapandiya Kattabomman on Raj TV - Kids who preen about intensity of Pacino need to watch what Sivaji does here. This Lion can't be tamed

Sivaji = Dictionary/Encyclopedia of Acting styles

kid-glove
15th August 2010, 03:03 PM
Legendary control of language and diction.

pammalar
16th August 2010, 02:52 AM
சுதந்திரத் திருநாளன்று/திருநாளையொட்டி வெளியான தேசிய திலகத்தின் திரைக்காவியங்கள்

1. சாரங்கதரா - 15.8.1958

2. ராமன் எத்தனை ராமனடி - 15.8.1970

3. மூன்று தெய்வங்கள் - 14.8.1971

4. எழுதாத சட்டங்கள் - 15.8.1984

5. முதல் மரியாதை - 15.8.1985

6. அக்னி புத்ருடு(தெலுங்கு) - 14.8.1987

7. முதல் குரல் - 14.8.1992

குறிப்பு:

1. முதல் மரியாதை வெள்ளிவிழாக் காவியம்.

2. ராமன் எத்தனை ராமனடி மற்றும் அக்னி புத்ருடு(தெலுங்கு) ஆகியவை 100 நாள் பெரு வெற்றிக்காவியங்கள்.

3. மூன்று தெய்வங்கள் ஷிஃப்டிங் முறையில் 100 நாள் ஓடிய சிறந்த வெற்றிக்காவியம்.

சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th August 2010, 03:03 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 107

கே: "சிவந்த மண்" படத்தில் நீங்கள் அதிகம் ரசித்த காட்சி எது? (வாழவல்லான் ஜெயா, திருச்சி - 1)

ப: நண்பர்களின் சோதனைக்கு இலக்காகி, கதாநாயகன் பாரத், தன் காதலியையே சுடப்போகிறானே அந்தக் காட்சி. விடுதலை வீரனின் பெருமையை அந்தக் காட்சி விளக்குகிறது.

(ஆதாரம் : பேசும் படம், ஏப்ரல் 1970)

அன்புடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
17th August 2010, 11:10 PM
மகேஷ்,

படங்களின் வெற்றி தோல்வியில் பெரும்பங்கு வகிக்கும் பொது மக்கள் அந்த நடிகரின் அரசியல் நிலைப்பாடுகளை வைத்து படம் பார்ப்பதில்லை என்பது உண்மை என்றாலும் கூட, எல்லா நேரங்களிலும் அது சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அன்பே ஆருயிரே, Dr .சிவா, வைர நெஞ்சம் போன்றவற்றிற்கு அது பொருந்தும். ஆனால் பாட்டும் பரதமும் மற்றும் உனக்காக நான் படங்கள் வெற்றி பெறாமல் போனதற்கு அரசியல் சூழ்நிலை ஒரு பெரிய காரணம். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்களே அந்தக் காலக்கட்டத்தில் அவர் படங்களை சரியாக ஆதரிக்கவில்லை என்பது நான் நேரில் கண்ட உண்மை. அவர்களெல்லாம் மீண்டும் திரையரங்கிற்கு வர ஆரம்பித்ததே தீபம் படத்திலிருந்துதான்.


சுவாமி சார்,

உங்கள் கருத்தில் மாறுபடுகிறேன்! தீபம் படத்திற்கு முன் வந்த கிரகப்ரவேசம், சத்யம் 100 நாட்கள் ஓடியதே? எல்லாவற்றிக்கும் மேலாக உத்தமன் படம் சில்வர் ஜூப்ளி படமாக ஓடியதற்கும் ரசிகர்கள் தானே காரணம்?

நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்

Murali Srinivas
17th August 2010, 11:23 PM
Legendary control of language and diction.

Thilak,

Good point. This assumes greater importance in the context of NT's modus operandi with regard to dialogue delivery. As everyone knows NT would never read the dialogues from the paper. He would ask the assistant director to read out the dialogue once and would ask him to repeat it for the second time and then would go for the take and there you have the perfect presentation. Right from his early days till the last movie this was the practice. Imagine an actor dishing out the fire spitting dialogues backed by a cracker of a performance such as VPK by just listening to the dialogues!It was genius at his best.

Regards

Murali Srinivas
17th August 2010, 11:37 PM
மகேஷ்,

படங்களின் வெற்றி தோல்வியில் பெரும்பங்கு வகிக்கும் பொது மக்கள் அந்த நடிகரின் அரசியல் நிலைப்பாடுகளை வைத்து படம் பார்ப்பதில்லை என்பது உண்மை என்றாலும் கூட, எல்லா நேரங்களிலும் அது சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அன்பே ஆருயிரே, Dr .சிவா, வைர நெஞ்சம் போன்றவற்றிற்கு அது பொருந்தும். ஆனால் பாட்டும் பரதமும் மற்றும் உனக்காக நான் படங்கள் வெற்றி பெறாமல் போனதற்கு அரசியல் சூழ்நிலை ஒரு பெரிய காரணம். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்களே அந்தக் காலக்கட்டத்தில் அவர் படங்களை சரியாக ஆதரிக்கவில்லை என்பது நான் நேரில் கண்ட உண்மை. அவர்களெல்லாம் மீண்டும் திரையரங்கிற்கு வர ஆரம்பித்ததே தீபம் படத்திலிருந்துதான்.


சுவாமி சார்,

உங்கள் கருத்தில் மாறுபடுகிறேன்! தீபம் படத்திற்கு முன் வந்த கிரகப்ரவேசம், சத்யம் 100 நாட்கள் ஓடியதே? எல்லாவற்றிக்கும் மேலாக உத்தமன் படம் சில்வர் ஜூப்ளி படமாக ஓடியதற்கும் ரசிகர்கள் தானே காரணம்?

நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்

ராதா,

அதை எழுதியது நான்தான். சுவாமி அல்ல. நீங்கள் கூறுவது போல கிரகப்பிரவேசம் மற்றும் சத்யம் 100 நாட்கள் ஓடியது இலங்கையில்தான். அது போலவே உத்தமன் சில்வர் கொண்டாடியதும் அங்குதான். ஆகவேதான் ரசிகர்கள் அப்படி நடந்துக் கொண்டார்கள் என்று எழுதினேன். அதே நேரத்தில் வேறொன்றும் எழுதியிருக்கிறேன். இப்படிப்பட்ட எதிர்மறையான சூழ்நிலையிலும் மதுரை மட்டுமே நடிகர் திலகத்திற்கு கை கொடுத்தது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன். அதனால்தான் கிரகப்பிரவேசம் மற்றும் உத்தமன் பெரிய வெற்றியை அடைய முடிந்தது.

அன்புடன்

Mahesh_K
18th August 2010, 10:37 AM
Legendary control of language and diction.

fire spitting dialogues backed by a cracker of a performance such as VPK



'ஏ எட்டப்பா ஈனமொழி பேசாதே...வாழ விரும்பினாய், வல்லவனை அழித்தாய்,இனி நீ வாழ்ந்து கொள்' ..........

எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் மெய் சிலிர்க்க வைக்கும் வசனங்கள்... 3 நாட்கள் முன்பு ராஜ் TV யில், பார்தபோது கூட......

SHIV
18th August 2010, 11:33 AM
Dear Pammalar sir,

Your collections on Questions & answers on NT are superb. How did you collect those!!!!!. It is an himalayan achievement and i thoroughly enjoy reading the same.

Thanks a lot.


Regards

Shivram

kumareshanprabhu
18th August 2010, 06:56 PM
dear pammalar sir

please let discuss on avanthan manithan please

kumareshanprabhu
18th August 2010, 06:57 PM
dear pammalar sir

please let discuss on avanthan manithan please

Mahesh_K
18th August 2010, 07:36 PM
Read this blog, which also talks about the article from behindwoods.com on NT.

http://shantosh.blogspot.com/2010/01/sivaji-ganesan-did-he-overact.html

J.Radhakrishnan
18th August 2010, 09:25 PM
ராதா,

அதை எழுதியது நான்தான். சுவாமி அல்ல. நீங்கள் கூறுவது போல கிரகப்பிரவேசம் மற்றும் சத்யம் 100 நாட்கள் ஓடியது இலங்கையில்தான். அது போலவே உத்தமன் சில்வர் கொண்டாடியதும் அங்குதான். ஆகவேதான் ரசிகர்கள் அப்படி நடந்துக் கொண்டார்கள் என்று எழுதினேன். அதே நேரத்தில் வேறொன்றும் எழுதியிருக்கிறேன். இப்படிப்பட்ட எதிர்மறையான சூழ்நிலையிலும் மதுரை மட்டுமே நடிகர் திலகத்திற்கு கை கொடுத்தது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன். அதனால்தான் கிரகப்பிரவேசம் மற்றும் உத்தமன் பெரிய வெற்றியை அடைய முடிந்தது.

உங்கள் தகவலுக்கு நன்றி திரு முரளி சார், தவறுதலாக சுவாமி சார் பெயரை குறிப்பிட்டுவிட்டேன்.

அப்படியென்றால் இந்த மூன்று படங்களும் தமிழகத்தில் எவ்வளவு நாட்கள்தான் ஓடியது ?

RAGHAVENDRA
18th August 2010, 09:36 PM
சாம்ராட் அசோகன்,கர்ணன்,செக்கிழுத்தசெம்மல் வ.உசி, புரட்சிக்கவிஞர் பாரதி,வீரபாண்டியகட்டபொம்மன், காத்தவராயன்,அரிச்சந்திரன்,பரதன், மகாகவிகாளிதாசன்,அம்பிகாபதி,சலீம்,சாஜஹான்,அப்பர்,தி ருமங்கையாள்வார்,குலசேகராழ்வார்,சிவாஜி போன்றகாவியநாயகர்களும், பத்மனாதன்,செள்த்ரி, பரிஸ்டர்ரஜினிகாந்த்போன்றசமூக நாயகர்களும் ஒரே இரவில் வி.சி.கணேசனுடன் சென்றுவிட்டர்கள்.

நெஞ்சைத் தொடும் கட்டுரை

http://sivaasenthuran.blogspot.com/2009/08/blog-post_31.html

அன்புடன்
ராகவேந்திரன்

Murali Srinivas
18th August 2010, 11:29 PM
[color=blue]

அப்படியென்றால் இந்த மூன்று படங்களும் தமிழகத்தில் எவ்வளவு நாட்கள்தான் ஓடியது ?

ராதா,

மதுரை தகவல்கள் இதோ.

கிரகபிரவேசம் மதுரை- சிந்தாமணியில் -70 நாட்கள்.

உத்தமன் - நியூசினிமாவில் -100 நாட்கள்.

சத்யம் - அலங்கார் - நாட்கள் சரியாக நினைவில்லை.

மற்ற ஊர்களுக்கு சுவாமியிடம் கேட்டால் தெரியும்.

அன்புடன்

Murali Srinivas
18th August 2010, 11:34 PM
Rakesh, this is for you!

நண்பர் சுவாமியிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு சுவையான விஷயத்தை பகிர்ந்துக் கொண்டார். சுவாமி அவருக்கு தொழில் முறையில் நன்கு தெரிந்த ஒரு ஆடிட்டரிடம் [சென்னையில் மிக பிரபலமான ஆடிட்டர்] பேசிக் கொண்டிருக்கும் போது பணத்தின் மதிப்பைப் பற்றி பேச்சு வந்திருக்கிறது. அவரிடம் சுவாமி, 1965-ம் ஆண்டு ஒரு விஷயத்தின் மதிப்பு Rs 13,82,௦௦௦/- என்றால் இன்றைய தேதியில் என்ன மதிப்பு வரும் என்று கேட்க அதற்கு ஆடிட்டர் ஏன் குறிப்பாக அந்த வருடம் அதுவும் இப்படி ஒரு தொகை என்று கேட்டிருக்கிறார்.[அதாவது சாதாரணமாக ஒரு லட்சம் அல்லது ஓராயிரம் என்றுதானே கேட்பார்கள், ஏன் இந்த தொகை என்று கேட்டிருக்கிறார்]. சுவாமி வலியுறுத்திக் கேட்க அதற்கான சில கணக்குகளைப் போட்டு இன்றைய மதிப்பு சுமார் 65 கோடி எனச் சொல்லியிருக்கிறார் ஆடிட்டர். அதன் பிறகே அது 1965-ம் ஆண்டு வெளியான திருவிளையாடல் படத்தின் சென்னை மாநகரத்தில் கிடைத்த வசூல் [1965 -ம் ஆண்டின் அதிக பட்ச வசூல்] என சுவாமி வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழகம் எங்கும் சேர்த்தால் கூட இன்றைய படங்கள் இந்த அளவிற்கு வசூலிக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அன்று சென்னையில் மட்டுமே இந்த மதிப்பீட்டிற்கு வசூல் வந்திருக்கிறது என்று சொன்னால் அதுவல்லவோ சாதனை!

மதிப்பீட்டை கேட்டதும் சுவாமி அசந்து போனார் என்றால் திருவிளையாடல் படம் சென்னையில் செய்த வசூல் என்று தெரிந்ததும் ஆடிட்டர் அசந்து போனது தனி சுவாரஸ்யம்

அன்புடன்

tamizharasan
19th August 2010, 12:20 AM
Rakesh, this is for you!

நண்பர் சுவாமியிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு சுவையான விஷயத்தை பகிர்ந்துக் கொண்டார். சுவாமி அவருக்கு தொழில் முறையில் நன்கு தெரிந்த ஒரு ஆடிட்டரிடம் [சென்னையில் மிக பிரபலமான ஆடிட்டர்] பேசிக் கொண்டிருக்கும் போது பணத்தின் மதிப்பைப் பற்றி பேச்சு வந்திருக்கிறது. அவரிடம் சுவாமி, 1965-ம் ஆண்டு ஒரு விஷயத்தின் மதிப்பு Rs 13,82,௦௦௦/- என்றால் இன்றைய தேதியில் என்ன மதிப்பு வரும் என்று கேட்க அதற்கு ஆடிட்டர் ஏன் குறிப்பாக அந்த வருடம் அதுவும் இப்படி ஒரு தொகை என்று கேட்டிருக்கிறார்.[அதாவது சாதாரணமாக ஒரு லட்சம் அல்லது ஓராயிரம் என்றுதானே கேட்பார்கள், ஏன் இந்த தொகை என்று கேட்டிருக்கிறார்]. சுவாமி வலியுறுத்திக் கேட்க அதற்கான சில கணக்குகளைப் போட்டு இன்றைய மதிப்பு சுமார் 65 கோடி எனச் சொல்லியிருக்கிறார் ஆடிட்டர். அதன் பிறகே அது 1965-ம் ஆண்டு வெளியான திருவிளையாடல் படத்தின் சென்னை மாநகரத்தில் கிடைத்த வசூல் [1965 -ம் ஆண்டின் அதிக பட்ச வசூல்] என சுவாமி வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழகம் எங்கும் சேர்த்தால் கூட இன்றைய படங்கள் இந்த அளவிற்கு வசூலிக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அன்று சென்னையில் மட்டுமே இந்த மதிப்பீட்டிற்கு வசூல் வந்திருக்கிறது என்று சொன்னால் அதுவல்லவோ சாதனை!

மதிப்பீட்டை கேட்டதும் சுவாமி அசந்து போனார் என்றால் திருவிளையாடல் படம் சென்னையில் செய்த வசூல் என்று தெரிந்ததும் ஆடிட்டர் அசந்து போனது தனி சுவாரஸ்யம்

அன்புடன்
Can you please tell me average admission price during 1965 in chennai for movie?

groucho070
19th August 2010, 07:21 AM
Murali-sar, thank you. That's a real, real eye opener for all of us.

Also, thanks to Pammalar sar for asking that. Gosh, that's an awesome sum!

If there is inflation adjustment to money, there should be a similar calculator to screen acting performance too....that will show the younger generation how brilliant an actor NT is. But then, you don't really have to, ellarukkum terinja vishayam thane.... :D

RAGHAVENDRA
19th August 2010, 07:36 AM
ஒருவர் படம் மட்டுமே வெற்றி, மற்றவர்கள் படமெல்லாம் தோல்வி, அந்த தயாரிப்பாளர்களெல்லாம் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு தெருத்தெருவாக பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் நிலையை உருவாக்கும் அளவிற்குத் தான் சென்னையில் அன்றைய திரையரங்க கட்டணங்கள் இருந்திருக்குமோ?

goldstar
19th August 2010, 11:21 AM
Thanks Murali.

I never knew about these details.

For me Vaina Nenjam, Grahapravesham definitely a 100 days movies.

I like VN, because NT is very smart.

Is there any NT movies in Chennai or Madurai?

Cheers,
Sathish

Mahesh_K
19th August 2010, 12:50 PM
............அவரிடம் சுவாமி, 1965-ம் ஆண்டு ஒரு விஷயத்தின் மதிப்பு Rs 13,82,௦௦௦/- என்றால்.............


Murali Sir , do you mean Rs. 13.82 lakhs?

Irene Hastings
19th August 2010, 02:46 PM
சுவாமி,

திருவிளையாடல் படத்தின் வசூல் இன்றைய ரூபாய் மதிப்பீட்டின்படி 65 கோடி என்றால் ஏறக்குறைய 14.30% சதவிகிதம் ஆண்டிற்கு ரூபாயின் மதிப்பு மாறுவது போல உள்ளது. இது தான் உண்மையான மதிப்பீடா !
நம்புவதற்கு ஏற்பதாக இல்லை.
இதையே 10% என்று வைத்துக்கொண்டால் இன்றைய மதிப்பின்படி ருபாய் 11 கோடி என்று சொல்லலாம். 65கோடி என்பது மிகைபடுத்தபட்ட மதிப்பீடு. :oops:

அந்த ஆடிட்டரின் விலாசத்தை கொடுங்கள். அவர் நம் காதில் பூகுடலையையே வைப்பார் போல :shock:

Irene Hastings
19th August 2010, 03:31 PM
http://www.youtube.com/watch?v=Ku1Ek0yaex0&feature=related

Thalaivarin romance at his best :D

Ange malai mayakkam yarukkaga . White and white is just class apart :)

tamizharasan
19th August 2010, 08:46 PM
சுவாமி,

திருவிளையாடல் படத்தின் வசூல் இன்றைய ரூபாய் மதிப்பீட்டின்படி 65 கோடி என்றால் ஏறக்குறைய 14.30% சதவிகிதம் ஆண்டிற்கு ரூபாயின் மதிப்பு மாறுவது போல உள்ளது. இது தான் உண்மையான மதிப்பீடா !
நம்புவதற்கு ஏற்பதாக இல்லை.
இதையே 10% என்று வைத்துக்கொண்டால் இன்றைய மதிப்பின்படி ருபாய் 11 கோடி என்று சொல்லலாம். 65கோடி என்பது மிகைபடுத்தபட்ட மதிப்பீடு. :oops:

அந்த ஆடிட்டரின் விலாசத்தை கொடுங்கள். அவர் நம் காதில் பூகுடலையையே வைப்பார் போல :shock:
We can't ignore this as lie unless we know the average admission ticket price in chennai during those times.
This is the way the hollywood adjust the collection for the current price. Total collection/average admission price during that year will give you total no. of admissions. If you multiply the current average price with total no. of admissions, then you get current price adjusted to inflation. This in my opinion most authentic way of calculating the collection with adjusted to inflation.

Murali Srinivas
19th August 2010, 10:46 PM
TA,

No idea about the ticket rates during 1965 as I am not from Madras!

Rakesh,

The entire set people are getting to see real eye openers like this.

Mahesh,

Yes, I meant 13.82 Lakhs.

Satish,

As of now, none. You would see an update as and when it happens.

Regards

Avadi to America
19th August 2010, 11:00 PM
சுவாமி,

திருவிளையாடல் படத்தின் வசூல் இன்றைய ரூபாய் மதிப்பீட்டின்படி 65 கோடி என்றால் ஏறக்குறைய 14.30% சதவிகிதம் ஆண்டிற்கு ரூபாயின் மதிப்பு மாறுவது போல உள்ளது. இது தான் உண்மையான மதிப்பீடா !
நம்புவதற்கு ஏற்பதாக இல்லை.
இதையே 10% என்று வைத்துக்கொண்டால் இன்றைய மதிப்பின்படி ருபாய் 11 கோடி என்று சொல்லலாம். 65கோடி என்பது மிகைபடுத்தபட்ட மதிப்பீடு. :oops:

அந்த ஆடிட்டரின் விலாசத்தை கொடுங்கள். அவர் நம் காதில் பூகுடலையையே வைப்பார் போல :shock:
We can't ignore this as lie unless we know the average admission ticket price in chennai during those times.
This is the way the hollywood adjust the collection for the current price. Total collection/average admission price during that year will give you total no. of admissions. If you multiply the current average price with total no. of admissions, then you get current price adjusted to inflation. This in my opinion most authentic way of calculating the collection with adjusted to inflation.

how to incorporate the impact of increased population....

tamizharasan
19th August 2010, 11:05 PM
சுவாமி,

திருவிளையாடல் படத்தின் வசூல் இன்றைய ரூபாய் மதிப்பீட்டின்படி 65 கோடி என்றால் ஏறக்குறைய 14.30% சதவிகிதம் ஆண்டிற்கு ரூபாயின் மதிப்பு மாறுவது போல உள்ளது. இது தான் உண்மையான மதிப்பீடா !
நம்புவதற்கு ஏற்பதாக இல்லை.
இதையே 10% என்று வைத்துக்கொண்டால் இன்றைய மதிப்பின்படி ருபாய் 11 கோடி என்று சொல்லலாம். 65கோடி என்பது மிகைபடுத்தபட்ட மதிப்பீடு. :oops:

அந்த ஆடிட்டரின் விலாசத்தை கொடுங்கள். அவர் நம் காதில் பூகுடலையையே வைப்பார் போல :shock:
We can't ignore this as lie unless we know the average admission ticket price in chennai during those times.
This is the way the hollywood adjust the collection for the current price. Total collection/average admission price during that year will give you total no. of admissions. If you multiply the current average price with total no. of admissions, then you get current price adjusted to inflation. This in my opinion most authentic way of calculating the collection with adjusted to inflation.

how to incorporate the impact of increased population....

I don't think they are doing for any other factors. If this is the case there are several factors involved in it. The population has increased but at the same time because of Television theatre attendance has been reduced. We don't know whether one cancel the impact of others or not. The variables are too many and too confusing to deal with, so they are just using this standard formula.

Jawahar
20th August 2010, 01:22 AM
Thalaivarin Anbu Thondargalukku,

My name is Jawahar S Savarimuthu, aged 39, working as Senior Executive Manager in Banque Saudi Fransi bank in Saudi Arabia. Hailing from a village Sooaiudaiyanpatti, in Pudukkottai district.

I am very glad to be part of this Hub. I am browsing this Hub for years. I posted some comments in the wesites hosted by Mr. Pammalar related to our thalaivar's statue unveiling function held at Madurai recently.

I am an adrent and hard-core fan of our thalaivar. I was a member in Vasantha Maligai Shivaji Narpani mandran. And I was a member in Thamilaga Munnetra Munnani. I participated in the election work for Mr. D. Srinivasan, who contested on TMM ticket in Trichy-1 Assembly seat. I had a close association with Maaveran Rajasekaran and Mr. Kandavel, who was the Vice President of All India Shivaji Fans Association.

I am really happy to see the contibution of Mr. Ragavendran Sir, Saratha Madam, Pammalar and many other people who are contributing in this hub.

I will also contribute from myside also.

Kaalangal Maaralaam
Kaatchigal Maaralam
thalaiva, naangal mattum unni vittu maara maattom.

Irene Hastings
20th August 2010, 09:28 AM
சுவாமி,

திருவிளையாடல் படத்தின் வசூல் இன்றைய ரூபாய் மதிப்பீட்டின்படி 65 கோடி என்றால் ஏறக்குறைய 14.30% சதவிகிதம் ஆண்டிற்கு ரூபாயின் மதிப்பு மாறுவது போல உள்ளது. இது தான் உண்மையான மதிப்பீடா !
நம்புவதற்கு ஏற்பதாக இல்லை.
இதையே 10% என்று வைத்துக்கொண்டால் இன்றைய மதிப்பின்படி ருபாய் 11 கோடி என்று சொல்லலாம். 65கோடி என்பது மிகைபடுத்தபட்ட மதிப்பீடு. :oops:

அந்த ஆடிட்டரின் விலாசத்தை கொடுங்கள். அவர் நம் காதில் பூகுடலையையே வைப்பார் போல :shock:
We can't ignore this as lie unless we know the average admission ticket price in chennai during those times.
This is the way the hollywood adjust the collection for the current price. Total collection/average admission price during that year will give you total no. of admissions. If you multiply the current average price with total no. of admissions, then you get current price adjusted to inflation. This in my opinion most authentic way of calculating the collection with adjusted to inflation.

how to incorporate the impact of increased population....

I don't think they are doing for any other factors. If this is the case there are several factors involved in it. The population has increased but at the same time because of Television theatre attendance has been reduced. We don't know whether one cancel the impact of others or not. The variables are too many and too confusing to deal with, so they are just using this standard formula.

The Auditor's calculation is based on Present value analysis or annuity method , I think. Not on the noof admissions. PV @ 14.30% is unreasonable assumption :shock:

goldstar
20th August 2010, 09:42 AM
Jawahar,

Welcome to NT forum, looking for more NT news from your side.

Particularly your Pudukottai experience of NT movies on Sundays and TMM activities.

Cheers,
Sathish

SHIV
20th August 2010, 10:06 AM
Dear Mr.Jawahar

Welcome to the Hub. Very glad to see more people in my age group (35-40 years) joining this hub. Please delight us with your experiences about our NT movies .

Regards

Shivram

SHIV
20th August 2010, 10:11 AM
Dear Messrs Ragavendra/Murali Srinivas/Pammalar/Sharada madam,

I had heard in my school days that Thalaivar's Tirisoolam broke all previous records in tamil cinema collections and this made the then CM MGR nervous about NT's popularity. On account of this he introduced Entertainment tax for tamil movies to scale down Tirisoolam's collections.

Can senior and experienced fans like you enlighten us more on this subject?

Regards

Shivram

RAGHAVENDRA
20th August 2010, 01:22 PM
டியர் ஜவஹர்,
மிகுந்த மகிழ்ச்சி, நல்வரவு. தமிழக மக்களின் முன்னேற்றத் திட்டங்களை வகுத்து, அதற்கு காகித வடிவம் கொடுத்து, உண்மையான நேர்மையான நிர்வாகத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் தான் தன்னுடைய கட்சிக்கு தமிழக முன்னேற்ற முன்னணி என பெயர் வைத்தார் நடிகர் திலகம். தான் கட்சி நடத்திய போது அதை செயல் படுத்தியும் காட்டினார். தாங்கள் த.மு.மு. யில் ஈடுபட்டிருந்ததால் அவற்றையெல்லாம் அறிந்திருப்பீர்கள். தேர்தலில் தோல்வியுற்றாலும் நம் அனைவரையும் தலை நிமிர்ந்து நடந்து செல்லும் அளவில் காமராஜரின் ஒரே வாரிசு என்று தன் கட்சியின் மூலம் நிரூபித்துக் காட்டினார். ஏற்கெனவே இத்திரியின் பல்வேறு பாகங்களில் த.மு.மு. பற்றிய பல விவாதங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றையெல்லாம் நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கவும்.

மேலும் தங்களின் நேரடி அனுபவங்களையும் பகிரந்து கொள்ளவும்.

நேர்மையான தலைவனின் பாதையில் நாம் எல்லோரும் தொடர்ந்து நடைபோடுவோம்.

தங்களுடைய வருகை எனக்கு மிகவும் மகிழ்வினைத் தருகிறது. தங்களை மிகவும் அன்புடன் வரவேற்கிறேன்.

ராகவேந்திரன்

Irene Hastings
20th August 2010, 01:29 PM
திரு ஜவஹர் ,

தங்கள் வரவு நல்வரவாகுக. த.மு.மு. பற்றி மேலும் தாங்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ளவும்.

நடிகர் திலகத்துடன் சேர்ந்த தளபதி வி.கே.ராமசாமி மற்றும் தளபதி மேஜர் சுந்தர்ராஜன் பிறகு விலகிவிட்டதாக கேள்விபடுகிறேன். உண்மையா ? ஏன் ?

RAGHAVENDRA
20th August 2010, 01:39 PM
டியர் சிவராம்,

திரிசூலம் வசூல் தமிழ்த் திரையுலகில் புதிய சாதனை புரிந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி, அதை ஒப்புக்கொள்ள மறுக்கும் உள்ளங்களைத் தவிர.

உண்மையில் தாங்கள் கேள்விப்பட்டதில் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.

கேளிக்கை வரி என்பது முன்பே இருந்த ஒன்று. ஆனால் திரையரங்குகளில் இலவச அனுமதி சீட்டுக்களுக்கு அது வரை கேளிக்கை வரி என்பது கிடையாது. அந்த அனுமதிகள் முற்றிலும் இலவசமாக இருந்து வந்தன. ஆனால் திரிசூலத்தின் வெற்றி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புதிய திட்டத்தை உருவாக்க வழி வகுத்த்து. ஆம், அதுதான் இலவச அனுமதிச் சீட்டிலும் கேளிக்கை வரி என்பது. இதன் மூலம் படத்தைப் பார்வையிடும் ஒவ்வொரு நபர் மூலமும் அரசுக்கு கேளிக்கை வரி வசூலாகும். இதைத் தான் எம்.ஜி.ஆர். அவர்கள் அறிமுகப் படுத்தினார்.

இன்னும் சொல்லப் போனால் திரிசூலத்தின் வெற்றியை எம்.ஜி.ஆர். அவர்கள் சொல்லித் தான் நடிகர் திலகத்திற்கே தெரியும். ஒரு முறை நடிகர் திலகத்திடம் எம்.ஜி.ஆர். கேட்டது, உங்கள் படம் நல்ல வசூலாகின்றதே உங்களுக்கு தெரியுமா என்று கேட்டதற்கு, நடிகர் திலகம், அதெல்லாம் என் தம்பி பார்த்துக் கொள்வார் என்று கூறியிருக்கிறார். உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னுடைய அலுவலகத்திலிருந்து ஒரு கோப்பை வரவழைத்து திரிசூலம் அதுவரையில் செய்திருந்த வசூலை பைசா உள்ளட்ட புள்ளி விவரங்களோடு எடுததுக் கூறியதோடு மட்டுமல்லாமல், வரி வகையில் அரசுக்கு வசூலான தொகையை வைத்து பல அரசு திட்டங்களை சமாளிக்க உதவியாயிருப்பதாக் கூறிப் பாராட்டியுள்ளார். குறிப்பாக 1977 முதல் நடிகர் திலகம்-எம்.ஜி.ஆர். இருவரிடையே உறவு முறை மிகவும் சிறப்பாக இருந்தது.

(கொள்கையளவில் இலவச அனுமதிச் சீட்டுகளுக்கும் கேளிக்கை வரி வசூலிக்கத் தொடங்கியதிலிருந்து நான் இலவசமாக நடிகர் திலகத்தின் படங்களுக்குப் போவதில்லை என உறுதி கொண்டு கடைப் பிடித்தேன் நடிகர் திலகம் மறையும் வரை. காரணம்,நாம் கொடுக்கும் காசு தயாரிப்பாளருக்குப் போனால், திரையரங்கிற்குப் போனால், விநியோகஸ்தருக்குப் போனால் அவர்கள் நடிகர் திலகத்த்தையோ அல்லது மற்ற நடிகர் நடிகையரையோ வைத்துப் படம் எடுக்க உதவியாயிருக்குமே, யாருக்கும் இல்லாமல் எதற்காக அரசாங்கத்துக்குத் தரவேண்டும் என்ற எண்ணம் தான்)

அன்புடன்
ராகவேந்திரன்

SHIV
20th August 2010, 02:10 PM
Dear Mr.Ragavendra

Thanks for the info and clarifications on Thalaivar's Tirisoolam. But were there free entry tickets to cinemas those days?. This is news to me.

Regards

Shivram

Jawahar
20th August 2010, 04:52 PM
Thalaivarin Anbu Thondargalukku,

Vanakkam.

Intha thiriyil pangu peruvathu perithum magilvai tharukindrathu.

Ragavendran sir, Our thalaivar formed TMM for the welfare of Tamil Nadu. It is very much true. Only one simple example - in 1989 election all parties released their manifestos. The much needed Sethu Samuththiram project was mentioned only in our TMM manifesto. He had a big vision. Due to the back stabing of TN Congress politician's he was lost and hence, TN lost a true leader with out power.

In my honest opinion, he was only straight forward politician in Tamil Nadu. He lived for his pillaigal. Thalaivar 'piilaigal' endru alaikkum bothu oru feeling varum. Athu romba unmai. Naan avarai muthan muthalaaga santhithtathu, 1980-s Pudukkottai-kku Annai Indira Gandhi pirachchaaram seiyya vanthu irunthaar. Iravu pothukkoottam. Thalaivar and Annai Indira Gandhi irandu paeraiyum maedaikku arukil irunthu paarththa tharunam. Appothu en vathu 10 irukkum. My grand father was Thasilthar in Pudukkottai. So maedaikku miga arukil irunthu paarkkum vaippu. En vazhvil athu oru ponnaal. En kangal muluthum thalavaraiyae suttri irunthathu. Avarudaiya amarum style, maeidayil irunthu kondu uthaviyaalargalai alaiththu instruction kodukkum style ellaam super.

In my future postings I will explain my associations with TMM and my experiences in watching our NT Movies.

Jawahar
20th August 2010, 04:54 PM
Thalaivarin Anbu Thondargalukku,

Vanakkam.

Intha thiriyil pangu peruvathu perithum magilvai tharukindrathu.

Ragavendran sir, Our thalaivar formed TMM for the welfare of Tamil Nadu. It is very much true. Only one simple example - in 1989 election all parties released their manifestos. The much needed Sethu Samuththiram project was mentioned only in our TMM manifesto. He had a big vision. Due to the back stabing of TN Congress politician's he was lost and hence, TN lost a true leader with out power.

In my honest opinion, he was only straight forward politician in Tamil Nadu. He lived for his pillaigal. Thalaivar 'piilaigal' endru alaikkum bothu oru feeling varum. Athu romba unmai. Naan avarai muthan muthalaaga santhithtathu, 1980-s Pudukkottai-kku Annai Indira Gandhi pirachchaaram seiyya vanthu irunthaar. Iravu pothukkoottam. Thalaivar and Annai Indira Gandhi irandu paeraiyum maedaikku arukil irunthu paarththa tharunam. Appothu en vathu 10 irukkum. My grand father was Thasilthar in Pudukkottai. So maedaikku miga arukil irunthu paarkkum vaippu. En vazhvil athu oru ponnaal. En kangal muluthum thalavaraiyae suttri irunthathu. Avarudaiya amarum style, maeidayil irunthu kondu uthaviyaalargalai alaiththu instruction kodukkum style ellaam super.

In my future postings I will explain my associations with TMM and my experiences in watching our NT Movies.

Jawahar
20th August 2010, 05:07 PM
திரு ஜவஹர் ,

தங்கள் வரவு நல்வரவாகுக. த.மு.மு. பற்றி மேலும் தாங்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ளவும்.

நடிகர் திலகத்துடன் சேர்ந்த தளபதி வி.கே.ராமசாமி மற்றும் தளபதி மேஜர் சுந்தர்ராஜன் பிறகு விலகிவிட்டதாக கேள்விபடுகிறேன். உண்மையா ? ஏன் ?

Yes it is True. When thalaivar started TMM, from Cine Field, the open support was extended by V.K.Ramasamy ( who was a Congress Man) and Major. Sunderrajan. Infact Major Sunderrajan was honoured by givien post at the state level in the party. Many big stars at that time, didn't give any open support. After the 1989 elections was over, there was a difference of opinion arised between our thalaivar and Major sunderrajan. Then he left. Many reasons were told for the seperation. In our circle, it was discussed that Major had created some financial issues in the Party. Real reason only thalaivar knew. But in cine field thier frienship is a great one.

Jawahar
20th August 2010, 05:38 PM
டியர் ஜவஹர்,
மிகுந்த மகிழ்ச்சி, நல்வரவு. தமிழக மக்களின் முன்னேற்றத் திட்டங்களை வகுத்து, அதற்கு காகித வடிவம் கொடுத்து, உண்மையான நேர்மையான நிர்வாகத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் தான் தன்னுடைய கட்சிக்கு தமிழக முன்னேற்ற முன்னணி என பெயர் வைத்தார் நடிகர் திலகம். தான் கட்சி நடத்திய போது அதை செயல் படுத்தியும் காட்டினார். தாங்கள் த.மு.மு. யில் ஈடுபட்டிருந்ததால் அவற்றையெல்லாம் அறிந்திருப்பீர்கள். தேர்தலில் தோல்வியுற்றாலும் நம் அனைவரையும் தலை நிமிர்ந்து நடந்து செல்லும் அளவில் காமராஜரின் ஒரே வாரிசு என்று தன் கட்சியின் மூலம் நிரூபித்துக் காட்டினார். ஏற்கெனவே இத்திரியின் பல்வேறு பாகங்களில் த.மு.மு. பற்றிய பல விவாதங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றையெல்லாம் நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கவும்.

மேலும் தங்களின் நேரடி அனுபவங்களையும் பகிரந்து கொள்ளவும்.

நேர்மையான தலைவனின் பாதையில் நாம் எல்லோரும் தொடர்ந்து நடைபோடுவோம்.

தங்களுடைய வருகை எனக்கு மிகவும் மகிழ்வினைத் தருகிறது. தங்களை மிகவும் அன்புடன் வரவேற்கிறேன்.

ராகவேந்திரன்

Nadiral Ragavendran sir.

Andrum Indrum Endrum, en ore arasiyal thalaivar nam thalaivar nadigar thilagam thaan.

The reason is very simple:

A leader should live as an Example. He should fight and benefit for people and he should protect the welfare of his followers. Thannai nambi vanthavargalai thooki vittathil, nam thalaivari minja aal illai. Pucntuality is must for every one. Then only, the world Progress can come into picture. In India, no politician maintains the punctuality, except our thalaivar. If MGR or MK or JJ declares a meeting will be held at 7.00PM, the meeting will only start around 9 or 10PM. They don't maintain the pucntuality. Our thalaivar was never like that.

One example what I have seen . After TMM merged with Janata Dal, there was a meeting proposed in Marakkadai area in Trichy. V.P.Singh was the chief guest for the meeting. It was announced that the meeting will start at 6.30PM. Out thalaivar was present in the meeting exactly at 6.25 PM. As per the politician's mentalily the crowd was gathering started at 6.00PM. Not much crowd was there at 6.25 when our thalaivar entered the dias. VP Singh came around 8.45PM and when he heard our thalaivar came earlier, he asked apology to our thalaivar. Around 7.30PM the area was fully crowded and thousands of people attended the meeting. If you don't keep the time for your committements, then how you can fulfil the commitments made to the people. Nam thalaivarin palam athu thaan. Intha tamil nattilae atharkku mukkiyaththuvam illai. Ithuvum nam thalaivarin arasiyal tholvikku oru kaaranam.

Porai Ilanthom! Kalaththai Ilakka villai!

Meedum nam kaalam varum. Athu varai kaaththu iruppom...

Engalukkum Kaalam Varum! Kaalam Varum bothu anaivaraiyum vazha vaippom!

RAGHAVENDRA
20th August 2010, 07:11 PM
டியர் ஜவஹர்,
நம்முடைய திரியில் உங்களுடைய பங்களிப்பும் பதிவுகளும் பல புதிய கோணங்களில் நடிகர் திலகத்தின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்தியம்பும் என்பதற்கு தங்களின் சமீபத்திய பதிலே சாட்சி. காலந்தவறாமையைக் கடைப் பிடித்த ஒரே தலைவர் நடிகர் திலகம். 7.00 மணி கூட்டத்துக்கு இரவு 2.00 மணிக்கு வருபவர்களையெல்லாம் தலைவர் என்று தூக்கிக்கொண்டாடும் சமுதாயத்திலே நேரந் தவறாமையைப் பற்றி நாம் தான் எடுத்துக் கூறுகிறோம். இவ்வளவு நேரம் கழித்து வந்து அனைவரின் நேரத்தையும் வீணாக்கும் தலைவர்களைக் கண்டிக்க யாருக்கும் மனமில்லை.

மேலும் பல தகவல்களைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கும்

ராகவேந்திரன்

Murali Srinivas
21st August 2010, 01:08 AM
Welcome Mr.Jawahar. Sporting Chacha's name, no wonder that you are a fan of Nadigar Thilagam. Wishing you an enjoyable stay.

உங்களது பதிவில் நீங்கள் எழுதிய அந்த வார்த்தைகள், எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் அனைவரையும் வாழ வைப்போம் என்று. உண்மையிலே உணர்ச்சிவசப்பட வைத்த வார்த்தைகள். காலம் வருவது என்ன இப்போதே மீண்டும் சிவாஜி படை உணர்வுபூர்வமாய் எழுச்சி கொள்ள ஆரம்பித்து விட்டது. சென்ற சில ஆண்டுகளாய் கவனித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு இந்த ஒரு வருடமாக அது நன்றாகவே தெரிகிறது. இந்த உணர்வுகள் மேலும் ஏற்றம் பெறட்டும்.

அன்புடன்

pammalar
21st August 2010, 02:31 AM
வசூல் சக்கரவர்த்தி - 4

சிங்காரச் சென்னையில், முதல் வெளியீட்டில் (31.7.1965), சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்குகளில் ,ஸ்ரீ சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்" அள்ளி அளித்த மொத்த வசூல்:

அ) 100 நாள் வசூல்

3 அரங்குகளில் மொத்தம் 300 நாட்களில் 9,86,995 ரூபாய் 83 பைசா.

[இது அன்றைய புதிய சாதனை. 14.1.1965 பொங்கலன்று காஸினோ, பிராட்வே, மேகலா ஆகிய மூன்று திரையரங்குகளில் வெளியாகி மூன்றிலும் வெள்ளிவிழா கண்ட மக்கள் திலகத்தின் "எங்க வீட்டுப் பிள்ளை" திரைப்படத்தின் 100 நாள் வசூல் - 3 அரங்குகளில் மொத்தம் 300 நாட்களில் 9,23,519 ரூபாய் 40 பைசா. சென்னை மாநகரின் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து "எங்க வீட்டுப் பிள்ளை" ஏற்படுத்திய புதிய சாதனையை "திருவிளையாடல்" முறியடித்து புதிய சாதனையை உருவாக்கியது.]

ஆ) 179 நாள் வசூல்

3 அரங்குகளில் மொத்தம் 537 நாட்களில் 13,82,002 ரூபாய் 91 பைசா.

[மக்கள் திலகத்தின் "எங்க வீட்டுப் பிள்ளை", காஸினோ(211 நாள்), பிராட்வே(176 நாள்), மேகலா(176 நாள்), ஆக மொத்தம், 3 அரங்குகளில் 563 நாட்களில் மொத்த வசூல் 13,23,689 ரூபாய் 22 பைசா.]

நடிகர் திலகமும், மக்கள் திலகமும் திரையுலகின் இரு கண்கள் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st August 2010, 02:57 AM
டியர் ஜவஹர் சார்,

இத்திரியின் பார்வையாளராக இருந்த தாங்கள் பங்களிப்பாளராகவும் ஆகி இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தங்களை "வருக! வருக!" என அன்புடன் வரவேற்கிறேன். நமது நடிகர் திலகம் இணையதள வலைப்பூக்களில் (மதுரை சிவாஜி சிலை வலைப்பூ), தாங்கள் வெளியிட்டு வரும் கற்கண்டு கருத்துக்களுக்கு எனது கனிவான நன்றிகள்!

இத்திரியில் தாங்கள் இதுவரை அளித்துள்ள பதிவுகள் ஒவ்வொன்றும் அற்புதம். தொடர்ந்து அசத்துங்கள்! தங்களது அடுத்தடுத்த பதிவுகளைப் படிக்க இங்குள்ள அனைவரையும் போல் அடியேனும் ஆவலுடன் காத்திருக்கிறேன்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
21st August 2010, 03:57 AM
டியர் ஷிவ்ராம் சார்,

தங்களின் மனப்பூர்வமான பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

டியர் குமரேசன்பிரபு சார்,

கோபாலுக்குப் பின் ரவிகுமாருக்கு வருகிறேன்.

டியர் ஜேயார் சார் & முரளி சார்,

"சத்யம்" மதுரை அலங்காரில் 44 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. "சத்யம்", "கிரஹப்பிரவேசம்", "உத்தமன்" புள்ளி விவரங்களை விரைவில் தருகிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

Jawahar
21st August 2010, 04:37 AM
டியர் ஜவஹர் சார்,

இத்திரியின் பார்வையாளராக இருந்த தாங்கள் பங்களிப்பாளராகவும் ஆகி இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தங்களை "வருக! வருக!" என அன்புடன் வரவேற்கிறேன். நமது நடிகர் திலகம் இணையதள வலைப்பூக்களில் (மதுரை சிவாஜி சிலை வலைப்பூ), தாங்கள் வெளியிட்டு வரும் கற்கண்டு கருத்துக்களுக்கு எனது கனிவான நன்றிகள்!

இத்திரியில் தாங்கள் இதுவரை அளித்துள்ள பதிவுகள் ஒவ்வொன்றும் அற்புதம். தொடர்ந்து அசத்துங்கள்! தங்களது அடுத்தடுத்த பதிவுகளைப் படிக்க இங்குள்ள அனைவரையும் போல் அடியேனும் ஆவலுடன் காத்திருக்கிறேன்!

அன்புடன்,
பம்மலார்.

Anbulla Pammalaarukku,

Naan kadantha 14 varudangala Saudi Arabiyavil vasiththu varukindraen. Every year 2 to 3 times vacation periodil nam naatirkku varukindraen. Ennai pol veli naatil vasikkum nam thalaivarin anbu pillaigalukku, ungalai pondrorin seithigal romba thaevaiyaana ondru. Nam thalaivar avargal nadiththa padangalin DVD collection ennidam irkkindrathu. Athu thaan enathu ookka sakthi.

Thaangal intha thiriyil tharum thagavalgal ellam ennai birammikka vaikkirathu. NT-yin thagaval pettagam neengal.

Jawahar
21st August 2010, 04:49 AM
Welcome Mr.Jawahar. Sporting Chacha's name, no wonder that you are a fan of Nadigar Thilagam. Wishing you an enjoyable stay.

உங்களது பதிவில் நீங்கள் எழுதிய அந்த வார்த்தைகள், எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் அனைவரையும் வாழ வைப்போம் என்று. உண்மையிலே உணர்ச்சிவசப்பட வைத்த வார்த்தைகள். காலம் வருவது என்ன இப்போதே மீண்டும் சிவாஜி படை உணர்வுபூர்வமாய் எழுச்சி கொள்ள ஆரம்பித்து விட்டது. சென்ற சில ஆண்டுகளாய் கவனித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு இந்த ஒரு வருடமாக அது நன்றாகவே தெரிகிறது. இந்த உணர்வுகள் மேலும் ஏற்றம் பெறட்டும்.

அன்புடன்

Dear Murali Sir,

Thanks for your worlds.

Thalaivarin Padai endrumae migavum sakthi vaainthathu. Nam thalaivarai pagadai kaayaga vaiththu kabada naadagam aadiya arasiyalvaathigalaal, nam padaiyin seetram kurainthu iruppathu pol irukkindrathu. Athu neeru pootha neruppu. Endrum anaiyaathu.

Nam thalaivaraal yaetri vidappattavargal innamum arasiyal kalaththil irukkindraargal. Avargalai orunginaiththu nam padaiyin sakthi ulagam ariya, Ungalai pondror muyarchchikka vaendum. Atharkku nam padai eppothum readyaagath thaan irukkum. Nam padaiththalapathigal innamum arasiyal kalaththil aarvamudan thaan irukkindraargal.

The Prominent Congress leader , EVKS Elangovan is a ex-TMM member. Maaveeran Rajasekaran, 2006-il Sivagangai thoguthiyil independent candidate aaga potti ittu, sorpa vaaku viththiyaasaththil, vetri vaaippai ilanthaar. Muthal 5 sutru mudivil avar leadinglil irunthaar. Avarukku election velai seithathu nam padai thaanae. Thalaivarin Palaya thalapathigal innamum kalaththil thaan irukkindraargal.

As your rightly mentioned, last couple of years, the outcome from our thalaivar's fans are highly visible and forceful.

Our day is not so far away. We need a leader to lead our thalaivar's sena.

SHIV
21st August 2010, 10:52 AM
Dear Mr.Jawahar

Your experiences with Thalaivar and TMM are really interesting and contains lot of infos.

Im sure you would have participated in TMM's rally in chennai in the year 1989 to coincide with his 60 th birthday. I was fortunate enough to take part in the rally boarding a van which had Trichy NT fans.

What a grand rally it was!!!!. I think the crowd was a massive one which would have easily touched about 2lacs. It began from periamet and passed via mount road, RK salai and ended in marina beach. NT along with family and party functioneries witnessed the rally at a specially erected dias near Musci Academy. The rally took 7 hours to reach the final venue at Marina beach. ( It began around 2.00pm and ended at 9.00 pm)

Then there was a massive public meeting which was inagurated by Shri.Krupanandha variar. The meeting was also attended by AIADMK (Janaki faction) leaders.

This rally shook the whole of TN and Chennai in particular and all the major political parties were surprised at Thalaivar's mass base and the capacity to organise such a massive rally within months of starting a political party.

In fact I came to know from an interview of Major sunderrajan that DMK was willing to give TMM around 20seats and undertake all election expenses. But our Thalaivar had politely rejected the offer saying that he came out of Congress for thier betrayal to MGR's wife Janaki's Government and it is only logical and dharma to have alliance with Janaki faction. It is also a well known fact that he spent from his pocket for running the party and for election related expenses.

How many poltical leaders will this courage and conscious to do this???

As rightly indicated by Mr.Murali Srinivas, Thalaivar's fans are out in the open now with more vigour and enthu and i pray God that we get a good leader to lead Thalaivar's padai.

Regards

Shivram

SHIV
21st August 2010, 12:13 PM
In continuation of my TMM's experience, a one day fast was also organised all over tamil nadu in 1989 in support of Tamils in Sri Lanka. Ourthalaivar led the fast in Chennai near Kannagi statue where we around 15 nos of college students who were TMM members from Presidency college took part with full enthusiasm.

later, around 12 noon, around 500 students from our college joined us in the fast. Our Thalaivar was present from 8 am in the morning till the end at 5pm. Lots of poltical leaders visited thalaivar in the pandal and offered thier wishes and support.

It was a much talked about event in Tamil nadu those days.

Regards

Shivram

HARISH2619
21st August 2010, 01:31 PM
நடிகர்திலகத்தின் புகழ் பாடும் கூட்டத்திற்க்கு திரு ஜவஹர் அவர்களை அன்புடன் வரவேற்க்கிறேன்.1990ஆம் ஆண்டு வாக்கில் வெளியான நடிகர்திலகத்தை பற்றிய ஒரு புத்தகம்(எங்க மாமா பட ஸ்டில் அட்டைபடத்தோடு) என்னிடம் உள்ளது.அதன் ஆசிரியர் பெயர் திரு ஜவஹர் என்று இருக்கிறது,அது தாங்கள்தானா என்பதை தெரியபடுத்தவும்.1989 தேர்தல் தோல்வியால் துவன்டுபோயிருந்த நடிக்ர்திலகத்தின் பிள்ளைகளை உற்சாகபடுத்தும் விதமாக அதில் நாஞ்சில் இன்பா அவ்ர்களின் ஒரு கட்டுரை மிகவும் அருமையாக எழுதப்பட்டிருந்தது.அதை இங்கே மறுபிரசுரம் செய்ய முயற்சிக்கிறேன்.
திரு ஷிவ் அவர்களே,
நடிகர்திலகத்தின் தமுமு நடந்து சென்ற பாதையை இங்கே பதிவு செய்ததற்க்கு மிக்க நன்றி,தொடரட்டும் தங்கள் திருப்பனி.
திரு பம்மல் சார்,
பாதியில் நிற்க்கும் புதியபறவை தியேட்டர் நிகழ்வுகள் கட்டுரையை விரைவில் தொடங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

RAGHAVENDRA
21st August 2010, 04:03 PM
தமிழ்நாட்டைத் தாண்டினால் இந்தியாவில் எங்கும் நடிகர் திலகம் தான். புதிய பறவையின் தாக்கம் பாரதம் முழுதும் பரவியிருப்பதற்கான சான்று. மராட்டிய மாநிலம் மும்பை தலைநகரில் அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோள் வலியுறுத்தலாக மாறும் அளவிற்கு நடிகர் திலகத்தின் திரைப்படங்களை அங்கு திரையிட கோரிக்கைகள் எழுந்துள்ளன. அடுத்த சில கால கட்டங்களில் மும்பை அரோரா வில் நடிகர் திலகத்தின் படங்களைத் திரையிட கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அது சாத்தியமாவதும் உறுதியாகலாம். அரங்கு நிர்வாகம் தேதி கொடுக்க வேண்டும், மற்றபடி படங்களின் விநியோக உரிமை, மற்றும் கட்டண நிர்ணயங்கள் உள்ளிட்ட காரணங்கள் சரிப்பட்டால் மிக விரைவில் நம் படங்களை மும்பை அரோராவில் பார்க்கலாம்.

மும்பை அரோரா திரையரங்கில் நடிகர் திலகத்தின் ஆளுயர படம் இருப்பதை அங்குள்ள நண்பர்கள் அறிவர். அதை புகைப்படம் எடுத்து இங்கு பதிந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

காத்திருப்போம், ஆவலோடு

அன்புடன்

ராகவேந்திரன்

Jawahar
21st August 2010, 08:10 PM
In continuation of my TMM's experience, a one day fast was also organised all over tamil nadu in 1989 in support of Tamils in Sri Lanka. Ourthalaivar led the fast in Chennai near Kannagi statue where we around 15 nos of college students who were TMM members from Presidency college took part with full enthusiasm.

later, around 12 noon, around 500 students from our college joined us in the fast. Our Thalaivar was present from 8 am in the morning till the end at 5pm. Lots of poltical leaders visited thalaivar in the pandal and offered thier wishes and support.

It was a much talked about event in Tamil nadu those days.

Regards

Shivram

Dear Shivaram,

Due to some personal reasons, I was not able to attend the rally and as well as the fasting. But, I was in touch with the functionaries. The main person who made the arrangements for the fasting was Mr. Kondal dasan, who later contested from Chepak constituency in TMM ticket. He was the main communication point for us during that time.

In fact, when Thalaivar started the party, many youngsters who was not having any proper guidance or who are neglected by the existing parties, participated in major events. I heard from our fans that during the mega rally, most of the fans from Tutucorin and Nagercoil participated with full enthu.

TMM was offered 20 seats initially by DMK and then it went upto 30. But our thalaivar was very clear in mind to have an alliance with Janaki faction. We got 50 seats in the alliance. In chennai we contested, in Chepak (Mr. Kondal Dasan), Purasaiwakkam ( Mr. Purasai Kumaran, still active in Congress), RK Nagar ( Maaveeran Rajasekaran), Triplicane ( Mr. Gajanathan). Among them, Maaveeran Rajasekaran got considerable amount of votes in RK Nagar, where he was an MLA previously.

The media at that time wrote badly about the defeat of TMM. But in reality , in around 10 seats, our candidates faired well. Mr. Radhakrishnan in Nagercoil, Mr. Thirumalaisamy in Aaththur(Dindigul), Mr. Sornalingam ( Thiruvadaanai), Mr. EVKS Elangovan ( Sathiyamangalam), Mr. Venkatramanan ( Sengottai), Mr. Pal Pandian (Kovilpatti), Mr. Kumarasamy ( Kumbakonam), Maaveran Rajasekaran ( RK Nagar) - all these people contested in TMM and lost the elections with less than 5000 votes. Mr. D.Srinivasan(Trichy-1), in Viluppram ( I forgot the name of the candidate), Mr.Kondal Dasan (Chepauk), Mr. Shivaji ( Vellore) got considerable amount of votes. Thalapathi Sanmugam, didn't contest in the election and he was taking care of the election work in Thiruvaiyaaru, where our thalaivar contested. Our thalaivar lost the election by 10,000 votes. Still, some people wrote that our thalaivar lost the deposits. It is not true. Our thalaivar was defeated since it was wrong selection of consituency. We all expected that our thalaivar will contest from Nagercoil. But some wrong advisers misguided him. if it Nagercoil, it is a sure win. At that time, all the new papers including JV, wrote that our thalaivar's victory was a certain. Excpet one magazaine, Nakkeeran, where they indicated that DMK candidiate was ahead than our thalaivar due to the intense canvasing.


Since we didn't win even a single seat, the media were describing this defeat as a major setback and it reached the common people also. Yes, we got defeated, but not badly as described.

Among the names, I have listed in this posting, most of the people are still active in politics.

Immediately after the results, a group consisting of Mr. EVKS Elangovan, Mr. Pal Pandian , Mr. Kondal Dasan went and joined with Congress. Actually, Mr. Pal Pandian, was the one, who wanted strongly to have alliance with DMK.

After our thalaivar left the politics, the remaining thalapathis also found themselves attached to a party to continue their political interests. Maaveeran Rajasekaran and group joined with Late. Vazhapadi Ramamoorthy and thus in Congress. Some people went back with Mr. EVKS Elangovan. But majority of them, keeping away from politics.

Even one or two current MLAs are from our fan base.

Anyway, whatever happened is happened. Our thalaivar's sena is in need of a leader to lead them. This is the reality.

Jawahar
21st August 2010, 08:14 PM
நடிகர்திலகத்தின் புகழ் பாடும் கூட்டத்திற்க்கு திரு ஜவஹர் அவர்களை அன்புடன் வரவேற்க்கிறேன்.1990ஆம் ஆண்டு வாக்கில் வெளியான நடிகர்திலகத்தை பற்றிய ஒரு புத்தகம்(எங்க மாமா பட ஸ்டில் அட்டைபடத்தோடு) என்னிடம் உள்ளது.அதன் ஆசிரியர் பெயர் திரு ஜவஹர் என்று இருக்கிறது,அது தாங்கள்தானா என்பதை தெரியபடுத்தவும்.1989 தேர்தல் தோல்வியால் துவன்டுபோயிருந்த நடிக்ர்திலகத்தின் பிள்ளைகளை உற்சாகபடுத்தும் விதமாக அதில் நாஞ்சில் இன்பா அவ்ர்களின் ஒரு கட்டுரை மிகவும் அருமையாக எழுதப்பட்டிருந்தது.அதை இங்கே மறுபிரசுரம் செய்ய முயற்சிக்கிறேன்.
திரு ஷிவ் அவர்களே,
நடிகர்திலகத்தின் தமுமு நடந்து சென்ற பாதையை இங்கே பதிவு செய்ததற்க்கு மிக்க நன்றி,தொடரட்டும் தங்கள் திருப்பனி.
திரு பம்மல் சார்,
பாதியில் நிற்க்கும் புதியபறவை தியேட்டர் நிகழ்வுகள் கட்டுரையை விரைவில் தொடங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Sir,

Thanks for your courtesy extended to me for my participation.

I am not the Jawahar you mentioned in your posting.

Murali Srinivas
21st August 2010, 09:47 PM
ஜவகர்,

உங்கள் விருப்பமே இங்கேயும் வெளியேயும் உள்ளவர்களின் விருப்பமாகும். விரைவில் நல்லது நடக்க வேண்டுவோம்.

ஷிவ்,

நடிகர் திலகத்தின் 61-வது பிறந்த நாள் விழா ஊர்வலம் மெரீனா பொதுக்கூட்டம் பற்றிய நினைவுகூறல்கள் பழைய ஞாபகங்களை கிளறி விட்டு விட்டது. நீங்கள் குறிப்பிட்ட இந்த ஊர்வலத்தை போலவே சென்னையை பொறுத்தவரை நமது ரசிகர்களால் நடத்தப்பட்ட இரண்டு ஊர்வலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஒன்று 1984-ல் அன்றைய துணை ஜனாதிபதியாக இருந்த ஆர்.வி. அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கு பெற்ற இன்றைய எம்.ஆர்.சி. நகரில் சென்று நிறைவடைந்த பேரணி.

இதை விடவும் சிறப்பு வாய்ந்தது 1970 அக்டோபர் 1 அன்று அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சார்பில் முதன் முறையாக கொண்டாடப்பட்ட நடிகர் திலகத்தின் 42-வது பிறந்த நாள் விழா. சொல்லின் செல்வர் சம்பத் அவர்கள் துவக்கி வைக்க பெருந்தலைவர் கலந்து கொண்ட அந்த பேரணி. அன்று வரை ஒரு நட்சத்திரத்திற்கும் திரளாத கூட்டத்தின் காரணமாக சென்னையே குலுங்கி போன நிகழ்வு. அந்த பேரணியும் பின் நடந்த விழாவும் படமாக்கப்பட்டு அந்த வருடம் தீபாவளிக்கு வெளியான எங்கிருந்தோ வந்தாள் படத்தின் இடைவேளையில் திரையிடப்பட்டது. [படம் வெளியாகி 2 மாதங்களுக்கு பிறகு].

இவற்றையெல்லாம் மீண்டும் நினைவுப்படுத்தியதற்கு நன்றி.

அன்புடன்

pammalar
21st August 2010, 10:35 PM
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 9
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]

விகேஆர்-நாகேஷ்-மனோரமா கலக்கல் காமெடிக் காட்சியை, நாகேஷ், "எங்கிருந்தாலும் வாழ்க!" என அழுகையுடன் ஆரம்பித்து "அர்ஜுனா...! அழிந்தாயடா...!" என்கின்ற முழக்கத்துடன் முடித்து வைக்க, அடுத்த காட்சியாக கோபாலும், லதாவும் மலைவாசிகளை சந்திக்கின்றனர். பக்தர்களும் இங்கே அடுத்தடுத்து வரப் போகும் பாடல் காட்சிகளுக்காக திரைக்கு அருகே Steadyஆகவும், Readyஆகவும் இருக்கின்றனர். இசையரசர்களின் பின்னணி இசை இக்காட்சியின் பிரமிப்பு. மலைவாசிகள், தங்களது இனத்தை சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் வகையில், தங்களின் பாணியில் பாடி ஆடி களிப்புறுகின்றனர். இங்கே இத்திரையரங்கிலோ தங்களது இதயதெய்வத்தின் புகழைப் போற்றும் வகையில் ஈடு இணை சொல்ல முடியா பக்தர்கள் ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.

ஆளுக்கொரு வெண்புரவியில், அழகான சிவப்பு ஸ்வெட்டர்களை அணிந்தவண்ணம், பரந்து விரிந்த நிலப்பரப்பை பார்வையிட்டவாறே வலம் வருகின்றனர் லதா, கோபால். மலைவாசிகளுக்கு அருகாமையில் வந்தவுடன், புரவியிலிருந்து புவியில் இறங்குகின்றனர்.

லதா : "என்ன அது...?!"

கோபால் : "மலைவாசிகள் கல்யாணம்!"

லதா : "பாத்தீங்களா... அவங்க ஆட்டம் எவ்வளவு அழகா இருக்கு!"

கோபால் : "ஆமா லதா, அவங்க இயற்கையோட ரொம்ப ஒட்டி வாழறவங்க! வாழணுமேங்குற அவசியத்துக்காக வாழாம வாழ்க்கய தங்கள் வசப்படுத்திக்கிட்டவங்க! அவங்க நடமுறைகள் எல்லாமே ரொம்ப அழகாத்தான் இருக்கும்...!"

திருவாரூர்தாஸின் தீர்க்கமான வசனமும், திருவாளர் கோபாலின் திருநா உற்சாகப்பெருக்கோடு அதனை உசசரிக்கும் விதமும், ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு, நம்மை சுகபோகங்களில் சுகிக்கச் செய்கின்றன. கலைஞர் தொடங்கி கடைசி பட வசனகர்த்தா வரை, எத்தனை பேர் பேனாக்களுக்கு, நடிப்பு பேரறிஞர் திருநாவின் உமிழ்நீர் மையாக இருந்திருக்கிறது.

இந்த இளஞ்ஜோடிகளைக் கண்ட மலைவாசி ஒருவர் இவர்களை வரவேற்று, புதுமணத்தம்பதியரை இவர்கள் அருகே வருமாறு அழைக்க, மணமான ஜோடி மணம் பெறப் போகும் ஜோடியிடம் ஆசி கலந்த வாழ்த்துக்களைப் பெறுகின்றனர். தாங்கள் அணிந்திருந்த கீரிடங்களை இந்த இரு சாதனையாளர்களுக்கும் சூட்டுகின்றனர். இல்லறத்தின் இன்பங்களுக்கு விடை காண, திருமணத்தம்பதியர் அங்கிருந்து விடை பெற, இடதுபுறத்தில் இருக்கும் மரத்தைக் காட்டி 'இது என்ன?' என்கிறார் லதா. 'இது ஆசை மரம், Tree of desire' என பதிலளிக்கிறார் கோபால். தொடர்ந்து அவர் நிறைவேற வேண்டிய ஆசையை மனதில் நினைத்துக் கொண்டு இம்மரத்தில் ஒரு கல்லை துணியில் முடிந்து கட்டினால், காயான ஆசை கனிந்து பழமாகும், அதாவது எண்ணிய ஆசை ஈடேறும் என்று கூறுகிறார். உடனே லதா, தனது உள்ளத்தின் ஆழத்திலிருக்கும் ஆசையெனும் பாரத்தை கல்லிலே இறக்கி மரத்திலே ஏற்றுகிறார். ஆசைமரத்திலே கல்லைக் கட்டுகின்ற லதாவிடம் கோபால் நெருங்கி உன் ஆசை என்ன என வினவுகிறார். 'நான் சொல்லமாட்டேன்' என்கிறார் லதா. தொடர்ந்து கோபால் பொலிவோடு கேட்க, லேடி லதா விலகிச் செல்ல, கனவாய் இருக்கும் ஆசை, மரத்தால் நனவாகும் என்ற நம்பிக்கையுடன் அழகிய அகன்ற நிலப்பரப்பை நோக்கி சிட்டுக்குருவியாய் பறக்கிறார் லதா. இசை இனிமை காதுகளில் தேன் பாய்ச்சுகிறது.

"சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே!
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே!"

குருவிகளின் முத்தத்திற்கும், கடல்-வான் கலப்பிற்கும் தனது இசை ஒலியால் இடையூறு நேர்ந்து விடுமோ என எண்ணி இசைக்குயில் மெல்லிய குரலில் வரிகளை விருத்தம் போல விளம்ப, இந்த ஆதர்சன கீதத்தின் ஆரம்ப இசை ஆன்மாவை அள்ளுகிறது. இந்த இரு ஆரமப இசைகளுக்கே ஒரு ஆஸ்கார் நிச்சயம் கொடுக்கலாம் விஸ்ராமுக்கு.

நடிகர் திலகம் நளின நடையழகால் நெஞ்சை அள்ளி வெள்ளித்திரையை வியாபிக்க,

அவர்களுக்கு மட்டும் தானா? ரசிகர்களுக்கு ஆஸ்கார் பரிசு என்று வைத்தால் எங்களுக்கு தானே முதலில் தர வேண்டும் என்கின்ற ரீதியில் அடியார்கள் சூடங்களை தங்கள் அன்புக்கரங்களில் ஏற்றி அண்ணலின் அற்புத சரீரத்திற்கு ஆரத்தியாக்க, சுசீலாவின் சாரீரம் சுந்தரமாய் ஒலிக்கத் தொடங்குகிறது.

(தொடரும்...)

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
21st August 2010, 11:07 PM
திருவாரூர்தாஸின் தீர்க்கமான வசனமும், திருவாளர் கோபாலின் திருநா உற்சாகப்பெருக்கோடு அதனை உசசரிக்கும் விதமும், ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு, நம்மை சுகபோகங்களில் சுகிக்கச் செய்கின்றன. கலைஞர் தொடங்கி கடைசி பட வசனகர்த்தா வரை, எத்தனை பேர் பேனாக்களுக்கு, நடிப்பு பேரறிஞர் திருநாவின் உமிழ்நீர் மையாக இருந்திருக்கிறது.

டியர் பம்மலார்,
நடிகர் திலகம் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் தங்கள் பேனாவும் அவருடைய திருநாவில் உயிர் பெற்றிருக்கும். தங்கள் நடை, திரையில் நடிகர் திலகத்தின் நடையை எழத்து வடிவில் தருகிறது. பாராட்டுக்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
21st August 2010, 11:19 PM
டியர் ஷிவராம், ஜவஹர் மற்றும் நண்பர்களுக்கு,
நடிகர் திலகத்தின் பால் தங்களுடைய அன்பும் ஆதரவும் நம் அனைவரையும் மிகுந்த நெகிழ்வுறச் செய்கிறது. பாராட்டுக்கள்.

இத்தருணத்தில் என்னுடைய சில கருத்துக்களைக் கூற விழைகிறேன். தற்போதைய அரசியல் சூழலில் இனிமேல் நமக்கு வேலையில்லை என்பதே உண்மை. நடிகர் திலகத்திற்கு துரோகம் செய்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். சென்னையில் அவருடைய சிலை வைப்பதற்கு மிகவும் இடையூறாக இருந்தவர்கள் தேசிய இயக்கத்தினர். சென்னை சத்யமூர்த்தி பவனில் அவருடைய படம் வைப்பதையே என்னவோ பெரிய சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தேசிய இயக்கத்தில் ஒருவருக்குக் கூட நடிகர் திலகத்தின் பெயரைச் சொல்லக் கூட அருகதை இல்லை என்பதே உண்மை. அது மட்டுமல்ல, நடிகர் திலகம் அரசியல் இயக்கங்களைத் தாண்டி ஒரு இறைவன் போல் தற்போது இருக்கிறார். தற்பொழுது இருக்கும், தேசியவாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒருவருக்கும் அவர் பெயரைச் சொல்லக் கூட தகுதியில்லை என்கிற பொழுது இவர்கள் யார் நம்மை வழி நடத்த. இனிமேல் சிவாஜி ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத் தர வேண்டியதில்லை, அரசியல் தேவையுமில்லை, வழிகாட்டவும் தேவையில்லை. முதலில் அவர்கள் மனதில் நடிகர் திலகத்திற்கு உரிய இடம் தரட்டும். நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு வழிகாட்டும் அளவுக்கு தகுதி படைத்த் தலைவர் யாரும் தமிழ்நாட்டில் இல்லை என்பதே உண்மை. கலைஞர் அவர்கள் தனி மனிதனாக போராடி கடற்கரையில் நடிகர் திலகத்திற்கு சிலை வைத்த போது, இவர்கள் எங்கே போயிருந்தார்கள். இனிமேலும் நடிகர் திலகத்தின் ரசிகர்களை வழி நடத்த யாரும் தேவையில்லை. அப்படி தேவைப் பட்டாலும் கூட அவருடைய நகமும் சதையுமாய் உதிரத்திலும் ஊறி இருக்கும் அவருடைய குடும்பத்தினருக்குத்தான், குறிப்பாக அவருடைய மகன்களுக்குத் தான் அந்த தகுதி யிருக்கிறது.

எனவே இனிமேலும் எந்த தலைவரையும் எதிர்பாராமல் நாம் நம் மனசாட்சி வழி நடப்போம். நடிகர் திலகத்தை உண்மையாக தலைவராக பாவிக்கும் வேட்பாளர் யாராவது நம் தொகுதியில் நின்றால் அவருக்கு வாக்களிப்போம், அவர் எந்தக் கட்சியின் சார்பாக நின்றாலும் கூட. இதுவே நம் அனைவருடைய எண்ண ஓட்டமுமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்பதையும் வலியுறுத்த விருமபுகிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
22nd August 2010, 01:53 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் பாராட்டு என் கண்களில் ஆனந்தக்கண்ணீரை பெருக்கெடுக்கச் செய்து விட்டது.

தங்களது உச்சமான பாராட்டுக்களுக்கு எனது உயர்வான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

Jawahar
22nd August 2010, 04:52 PM
டியர் ஷிவராம், ஜவஹர் மற்றும் நண்பர்களுக்கு,
நடிகர் திலகத்தின் பால் தங்களுடைய அன்பும் ஆதரவும் நம் அனைவரையும் மிகுந்த நெகிழ்வுறச் செய்கிறது. பாராட்டுக்கள்.

இத்தருணத்தில் என்னுடைய சில கருத்துக்களைக் கூற விழைகிறேன். தற்போதைய அரசியல் சூழலில் இனிமேல் நமக்கு வேலையில்லை என்பதே உண்மை. நடிகர் திலகத்திற்கு துரோகம் செய்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். சென்னையில் அவருடைய சிலை வைப்பதற்கு மிகவும் இடையூறாக இருந்தவர்கள் தேசிய இயக்கத்தினர். சென்னை சத்யமூர்த்தி பவனில் அவருடைய படம் வைப்பதையே என்னவோ பெரிய சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தேசிய இயக்கத்தில் ஒருவருக்குக் கூட நடிகர் திலகத்தின் பெயரைச் சொல்லக் கூட அருகதை இல்லை என்பதே உண்மை. அது மட்டுமல்ல, நடிகர் திலகம் அரசியல் இயக்கங்களைத் தாண்டி ஒரு இறைவன் போல் தற்போது இருக்கிறார். தற்பொழுது இருக்கும், தேசியவாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒருவருக்கும் அவர் பெயரைச் சொல்லக் கூட தகுதியில்லை என்கிற பொழுது இவர்கள் யார் நம்மை வழி நடத்த. இனிமேல் சிவாஜி ரசிகர்களுக்கு யாரும் அரசியல் கற்றுத் தர வேண்டியதில்லை, அரசியல் தேவையுமில்லை, வழிகாட்டவும் தேவையில்லை. முதலில் அவர்கள் மனதில் நடிகர் திலகத்திற்கு உரிய இடம் தரட்டும். நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு வழிகாட்டும் அளவுக்கு தகுதி படைத்த் தலைவர் யாரும் தமிழ்நாட்டில் இல்லை என்பதே உண்மை. கலைஞர் அவர்கள் தனி மனிதனாக போராடி கடற்கரையில் நடிகர் திலகத்திற்கு சிலை வைத்த போது, இவர்கள் எங்கே போயிருந்தார்கள். இனிமேலும் நடிகர் திலகத்தின் ரசிகர்களை வழி நடத்த யாரும் தேவையில்லை. அப்படி தேவைப் பட்டாலும் கூட அவருடைய நகமும் சதையுமாய் உதிரத்திலும் ஊறி இருக்கும் அவருடைய குடும்பத்தினருக்குத்தான், குறிப்பாக அவருடைய மகன்களுக்குத் தான் அந்த தகுதி யிருக்கிறது.

எனவே இனிமேலும் எந்த தலைவரையும் எதிர்பாராமல் நாம் நம் மனசாட்சி வழி நடப்போம். நடிகர் திலகத்தை உண்மையாக தலைவராக பாவிக்கும் வேட்பாளர் யாராவது நம் தொகுதியில் நின்றால் அவருக்கு வாக்களிப்போம், அவர் எந்தக் கட்சியின் சார்பாக நின்றாலும் கூட. இதுவே நம் அனைவருடைய எண்ண ஓட்டமுமாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்பதையும் வலியுறுத்த விருமபுகிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

Dear Ragavendran Sir,

Neengal solvathu romba unmai. Ippothu ulla entha Desiya Arasiyalvaathikkum, nam thalaivarin paer solla thaguthi illai enbathai migavum sariyaga solli ulleergal. Thalaivar paerai solli valanthavargal thaanae avargal. Thalaivarin senai thunai kondu vendra nandi kettavargal thaanae avargal.

Nammai valinadaththa thalaivarin magangalukku antha thaguthi undu enbathai migavum sariyaaga solli ulleegal.

Inraiya soolnilaiyil, namakku velai illai enbathu unmai. Aanaalum,
En pondrorin aathangam ennavendraal, nam thalaivar padai arasiyalil thorkkum padai illai enbathai intha ulagirkku urakka solla vaendum. Nam thalaivar vaguththuk koduththa paathaiyil naam nadai poduvom.

Nam thalaivarin puthalvargal, palamurai arasiyal kalaththil iranguvathaaga seithigal varum. Pin meendum maraiyum. I think, they are waiting for the proper situation to get into Politics. Thalapathi Ramkumar avargalo allathu Ilaiya Thilagam Prabhu avargalo emmai vali nadaththa vaendum. Appadi oru naalukka naangal kaaththu irukkindrom. Ithu thaan engal aasai.

Arasiyalukku, naam oru puthu mugavari thara vaendum.

Jawahar
22nd August 2010, 04:59 PM
Anbulla Pammalaar,

Ungal thamil nadai migavum arputham. Puthiya paravai padaththai 15 murai theatril kandu irukkindraen. Kadaisiyaaga, 1995-il, chennai natraj thiryarangil kandaen. Ungal varnanaigalai, padikkum pothu, 15 murai kanda pothum kidaikkatha oru puthu unarvai perukindraen.

Thodarattum ugam tamil nadi, nam thalaivarin kaalaththaal aliyaatha kaaviyangal vaayilaga!!!

J.Radhakrishnan
22nd August 2010, 09:38 PM
messege deleted

pammalar
23rd August 2010, 01:16 AM
டியர் ஜவஹர் சார்,

தங்களின் பசுமையான பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd August 2010, 02:11 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 108

கே: நடிகர் திலகம் எந்த மாதிரி வேஷத்தில் நடிப்பதைத் தாங்கள் விரும்புகிறீர்கள்? (கே.எல்.மல்லிகா கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)

ப: எந்த வேடத்தில் அவர் நடித்தாலும், 'இப்படித்தான் நாம் விரும்பினோம்' என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தி விடுகிறார்.

(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1971)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd August 2010, 02:22 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 109

கே: "எங்க மாமா" வெற்றிப்படமா? (என்.சுந்தர் குமார், நாகர்கோவில்)

ப: ஆமாம். தயாரிப்பாளருக்கு வெற்றியைக் கொடுத்த படம் தான்.

(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd August 2010, 03:26 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 110

கே: இன்றைய தலைமுறை நடிகர்களில் யாரை திரையுலகின் தூண் என்பீர்கள்? (டி.ஜெய்சிங், கோவை)

ப: 'கல்தூண்' என நின்றவரின் திறமைகளைத் தெரிந்தோ, தெரியாமலோஅடியொற்றி நடக்கின்ற அத்தனைக் கலைஞர்களுமே திரையுலகின் தூண்கள்தாம்.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 16-30 ஜூன் 2006)

அன்புடன்,
பம்மலார்.

SHIV
23rd August 2010, 11:45 AM
Dear Mr.Murali Srinivas,

Thanks for your appreciation. Its a very very small or next to nothing contribution from me towards spreading of NT'S glory and fame.
we will be pleased to know more about 1970 &1984 rally from you.

Dear Mr.Ragavendra

Thanks for your appreciation. After your posting and clarifications i also concur with you that if at all any one is there to lead us it should either be Thalapathi Ramkumar or Annan Prabhu.

Mr.Harish-- Thanks for your appreciation.

Regards

Shiv.

SHIV
23rd August 2010, 11:49 AM
Dear NT fans,

I also heard from my friend in Chennai that EVKS Elagovan had spoke in a public meeting asking the DMK government about the long pending "Manimandapam" for our Thalaivar.(it was published in Saturday's Dinamalar).

Can some one throw more light on this speech?

Atleast there is one congressman (ex-TMM secretary) who is still loyal to our NT!!!.

Regards

Shiv

RAGHAVENDRA
23rd August 2010, 01:18 PM
டியர் ஜவஹர், ஷிவராம் மற்றும் நண்பர்களுக்கு,
தங்களுடைய பதில்களும் பெருந்தன்மையும் எனக்கு உவகை அளித்துள்ளது. தற்போது இருக்கும் தலைவர்களுக்கோ அல்லது மறைந்த அவரது கால, அவரது முற்காலத்திய தலைவர்களுக்கோ எந்த விதத்திலும் நடிகர் திலகம் குறைந்தவரல்ல. சொல்லப் போனால் எல்லோரையும் விட ஒரு படி மேலே தான் உள்ளார். அந்த அடிப்படையில் தான் எனனுடைய கருத்து அமைகிறது. சிவாஜி ரசிகர்களின் வாக்குகள் கடைச் சரக்கல்ல என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். வெறும் ஒரு சில கோரிக்கைகளின் அடிப்படையில் நம் வாக்குகளை சிலர் பெற்று விட முயல்வதை நாம் அநுமதிக்காமல் சில குறைந்த பட்ச அங்கீகாரத்தை நடிகர் திலகத்தின் அரும்பணிகளுக்கு அவர்கள் தருவாரேயானால் அப்போது நாம் அதைப் பற்றி சிந்திக்கலாம்-

என்னுடைய தனிப்பட்ட எண்ணங்கள்.

1. இந்திய அளவில் சிறந்த தலைவராக திகழும் நடிகர் திலகத்தை அந்த அடிப்படையில் யார் தலைவராக ஏற்றுக் கொள்கிறாரோ, எந்த இயக்கம் ஏற்றுக் கொள்ளுகிறதோ, அவர்களுக்கு நம் வாக்கை அளிப்பதைப் பற்றி நாம் சிந்திக்கலாம்.

2. ஒவ்வாத காரணங்களை சொல்லிக் கொண்டிருக்காமல், அவருக்கு பாரத் ரத்னா விருது பெற்றுத் தருபவருக்கே அல்லது அந்த இயக்கத்தினைப் பற்றி நாம் சிந்திக்கலாம்.

3. திரையுலகில் இந்தியாவின் மிகப் பெரிய விருதாக சிறந்த நடிகருக்கு வழங்கப் படும் விருதை நடிகர் திலகம் சிவாஜி பெயரில் வழங்க வேண்டும்.

4. இந்த மணிமண்டபம் என்பது சில பல கோடிகளில் நடந்து விடக் கூடியது, அது ஒன்றும் பெரிய காரியம் அல்ல, அதுவும் அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு கடமைக்கு செய்யாமல் அதை உரிய முறையில் செய்ய வேண்டும். அது நிச்சயம் நடக்கும். அது வெறுமனே ஒரு அரசியல் தலைவருக்கு கட்டப்படுவது போல் செய்வதில் எனக்கு உடன் பாடில்லை. அது உலக அளவில் போற்றப் படவேண்டும், உலக அளவில் பயன் பெற வேண்டும், சும்மா வந்து அஞ்சலி செலுத்தி விட்டு போகும் வகையில் இருக்கக் கூடாது. அது மிகப் பெரிய அளவில் உலக வல்லுநர்களை வரவழைத்து ஒரு அருங்காட்சியகம் போல் அமைக்கப் பட வேண்டும். திரைப்படத்துறை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் போன்ற பல தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் நிதானமாக யோசித்து செய்ய வேண்டிய காரியம்.

எனவே இந்த மணிமண்டபம் விவகாரத்தில் அரசியல் வாதிகளின் தலையீடு இல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது.

இவையெல்லாம் என் தனிப்பட்ட விருப்பங்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

KCSHEKAR
23rd August 2010, 04:39 PM
திரு. ஜவஹர் அவர்களே வருக!. சில நாட்களுக்குப் பின்னர் தற்போதுதான் பதிவுகளைப் பார்க்க முடிந்தது. த.மு.மு அலுவலகத்திலும் பின்னர் நடிகர்திலகம் தலைவராக இருந்தவரை, ஜனதாதள அலுவலகத்திலும் பொறுப்பாளராக இருந்தவன் என்ற முறையில் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1. தமிழகம் மட்டுமல்ல, உலகிலேயே என் பெயரை சொல்லியோ, கட்சிப் பெயர் சொல்லியோ நன்கொடை வசூல் செய்யக் கூடாது என்று கண்டிஷன் போட்டு கட்சி நடத்திய ஒரே தலைவர் நடிகர்திலகம் மட்டும்தான்.

2. கட்சி ஆரம்பித்துவிட்டதற்காக தன்னுடைய அடிப்படைக் கொள்கை எதையும் விட்டுக் கொடுக்காதவர் - உதாரணம்:

அ) நேரம் தவறாமை
ஆ) வெளிப்படையான பேச்சு
இ) சுய மரியாதை

இதுபோன்ற பல உண்டு

3. எல்லாவற்றுக்கும் மேலாக, கொடுத்த வாக்கு தவறக்கூடாது என்பதால், ஜானகி அணியோடு கூட்டணி இருந்தார் என்பதுதான் உண்மை.

4. திரையுலகில் ஜாம்பவானாக, பல நண்பர்களைப் பெற்றிருந்தும் யாரையும் கட்சிக்கு வர அழைக்கவில்லை

5. மேஜர் சுந்தர்ராஜனைப் பொறுத்தவரை, பணத்துக்காக - நட்பைக் கைவிட்டார் அவர். அதுதான் பிரிவுக்குக் காரணம். (த.மு.மு வில் செயலாளராக இருந்த அவருக்கு கொடியேற்றக் கூட தொண்டர்கள் பணம் கொடுத்தனர்). நடிகர்திலகம் என்றுமே நட்புக்கு மரியாதை கொடுப்பவர். இது அவர் அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தெரியும்.

தன்னுடைய சுய மரியாதை பாதிக்கப்பட்டால், சிறிதும் சமரசம் செய்துகொள்ளாதவர் நடிகர்திலகம். காங்கிரசிலிருந்து வெளியேறியதற்கும் சரி, ஜனதாதளத்திலிருந்து வெளியேறியதற்கும் சரி அதுதான் முக்கிய காரணமாக இருந்தது.

த.மு.மு கட்சி தோல்வியடைந்தவுடன் இதயம் பேசுகிறது மணியன் அவர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டியை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.

RAGHAVENDRA
23rd August 2010, 11:18 PM
அன்பு நண்பர்களுக்கு,
நடிகர் திலகத்தின் ரசிகர்களின் செல்வாக்கு என்பதை நிரூபிக்க வாய்ப்பு வரும்போது அதனை எப்படி உணர்த்துவது என்பதற்கு சில வழிமுறைகளாக என் உள்மனதில் தோன்றியவற்றைத் தான் இங்கே என் கருத்துக்களாகப் பகிரந்து கொண்டுள்ளேன் என்பதையும் அரசியல் விவாதத்தை இங்கே தொடர்வதில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கென தேவைப்பட்டால் தனித் திரியொன்றை துவங்கி அதில் நாம் அதைப் பற்றி அலசலாம் என்பதே என் எண்ணம்.

அன்புடன்
ராகவேந்திரன்

Murali Srinivas
24th August 2010, 12:27 AM
ஷிவ்,

1970 மற்றும் 1984 பேரணிகள் இரண்டுமே அரசியல் தொடர்புடையவை என்பதால் சிறிது நாட்களுக்கு பிறகு அதை பற்றி பேசுவோம்.

சற்று அரசியலை மறந்து நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி பேசுவோம்.

இரண்டு விஷயங்கள். இரண்டுமே ஜெமினி நிறுவனம் சம்பந்தப்பட்டவை. முதலில் இரும்புத் திரை. இது இந்தியிலும் தயாரிக்கப்பட்டது. [paigam என்று நினைவு]. இந்தியில் திலீப் குமார். மதுரைக்கு அருகில் உள்ள ஒரு ஆலையில் படமாக்கப்பட்டதாம். முதல் நாள் திலீப் சம்மந்தப்பட்ட காட்சி எடுக்கப்பட்டது. தமிழ் பதிப்பின் ஷாட் ரெடி என்றதும் நடிகர் திலகம் தான் அணிந்திருந்த யூனிபார்மில் சிறிது கீரிஸை தெளித்து கையிலும் சிறிது தேய்த்துக் கொண்டாராம். ஒரு தொழிலாளி ஆலையில் வேலை பார்க்கும் போது எப்படி இருப்பானோ அப்படி இருக்கிறேன் என்று சொன்னவுடன் ஜெமினி வாசன் நெகிழ்ந்து போக, யூசுப் பாய் அப்படியே நடிகர் திலகத்தை தழுவிக் கொண்டாராம். இதை நேரில் பார்த்த ஒருவர் சொன்ன தகவல்.

இது வாசனுக்கு நேர்ந்த அனுபவம் என்றால் அவர் மகன் பாலனுக்கு வேறொரு அனுபவம். விளையாட்டுப் பிள்ளை படப்பிடிப்பு. மைசூருக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் ரேக்ளா போட்டி படமாக்கப்பட்டது. அந்த ஷெட்யுலில் இறுதி நாள் படப்பிடிப்பு. படப்பிடிப்பு முடிந்து விட்டால் நடிகர் திலகம் கிளம்புகிறார். காட்சிப்படி போட்டியில் வெல்லும் நடிகர் திலகம் தன்னை பாராட்டும் சிறு வயது இளவரசியிடம் பேசி கை குலுக்கி விட்டு மேடைக்கு சென்று பரிசை வாங்கிக் கொண்டு கிழே இறங்கி வந்து பத்மினியை பார்த்துக் கொண்டே போய் நின்று முகத்தில் ரியாக்ஷன் கொடுக்க வேண்டும். பத்மினியின் முகத்தை நோக்கி திரும்பும் காமிரா அங்கிருந்து மீண்டும் நடிகர் திலகத்தின் முகத்திற்கு பயணிக்கும்.

இப்போது பிரச்சனை என்னவென்றால் காமிராவில் 450 அடி பிலிம் தான் இருக்கிறது. கலர் பிலிம். பிலிம் வாங்க வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தாண்டியுள்ள மைசூருக்கு தான் செல்ல வேண்டும். படப்பிடிப்பு நடப்பது ஞாயிற்றுக்கிழமை வேறு. கடை திறந்திருக்குமா என்று தெரியாது. நடிகர் திலகம் அன்றே கிளம்ப வேண்டும். மாலை நேரமாகிக் கொண்டிருக்கிறது. மீண்டும் அனைவரின் கால் ஷீட்டும் ஒரு சேர கிடைத்து இந்த ஒருக் காட்சிக்காக வர வேண்டும். பாலன் மற்றும் ஏ.பி.என். முகத்தைப் பார்த்துவிட்டு ஏதோ ப்ராப்ளம் என்று புரிந்துக் கொண்ட நடிகர் திலகம் விஷயம் என்னவென்று கேட்க, அவரிடம் உண்மையை சொல்லியிருக்கின்றனர். சரி, இன்றே முடித்து விடலாம் என்று சொன்னவர் ஒரு ரிகர்சல் பார்த்து விட்டு இயக்குனர் ஏ.பி.என். எப்படி காட்சியமைப்பை வடிவமைத்திருந்தாரோ அதில் சற்றும் மாற்றம் இல்லாமல் நடித்து முடிக்க, அந்த காட்சி 450 அடிக்குள்ளாகவே படமாக்கப்பட்டு விட்டது. பார்த்துக் கொண்டே நின்ற பாலனின் கண்களில் பிரமிப்பு மற்றும் கண்ணீர். எப்போது நடிகர் திலகத்தை பற்றி பேசினாலும் இதை சொல்லி ஆச்சரியப்படுவாராம் எஸ்.எஸ்.பாலன்.

அன்புடன்

Plum,

If destiny wills, you would get an apportunity to view Puthiya Paravai at Mumbai - Arora.

pammalar
24th August 2010, 01:25 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 111

கே: சிவாஜி கணேசன் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? (எஸ்.மனோகரன், கண்டி)

ப: அவரது 'அம்மா'வின் கட்சியை! அம்மா சொல்வதை தட்டுவதே கிடையாது சிவாஜி.

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1958) ['அம்மா' - அன்னை ராஜாமணி அம்மையார்]

நாளை 24.8.2010 இதயதெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம் அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 38வது ஆண்டு நினைவு தினம். அவரது நினைவைப் போற்றுவோம்!

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

SHIV
24th August 2010, 09:52 AM
Dear Mr.Ragevendra/Mr.Murali Srinivas

Agreed with your views of not continiung with discussions on political path of NT. I was only trying to express my enjoyment & fulifllment in participating in those events and nothing more than that.

Regarding NT films, I do not have the required presentation skills to express them in this forum though our Thalaivar's movies have been the sole motivation for me in my life and Ienjoy it day in and day out. Hence for the time being I shall be a silent observer enjoying the write ups of yours/Mr.Murli srinivas/Pammalar & Ms.Sharada.I can whole heartedly say that you all are a treasure house of info and details on our beloved thalaivar.

Regards

Shivram

Plum
24th August 2010, 11:59 AM
MS, one interesting fact about NT in the various stories and anecdotes that emerge is how he made up for the inadequacies of others, difficult circumstances and unfortunate constraints.

If only he had better folks to work with, who could supplement his efforts rather than sit back and benefit from it...

Murali Srinivas
24th August 2010, 05:49 PM
Dear Shiv,

I think you have misunderstood what we had said about discussing political things. This is a sensitive topic and discussion on these lines may throw up some unpleasant and unwarranted repurcusions. Moreover this is basically a movie section where films and related matters are discussed. Not that politics should not be discussed but is being allowed if it is appropriate to the topic discussed. When we go beyond this, the Hub rules also come in to play and we may be asked to stop discussing politics here. As for as possible we are exercising self restraint here in this thread.

Now just because politics is not discussed that doesn't mean you should be silent here. As you yourself had mentioned there are 100s of NT movies which have been of inspirational as well as entertainement value. We don't have any special writing skills and it doesn't require any to write about your favourite movies or scenes or theatre happenings. Rest would automatically follow.

If everybody starts writing like Saradha, Swami or Raghavender Sir, then would it not be boring? So, please write whatever you know or have seen.

Hope this clears the air and hope to see you here often.

Regards

Plum, agree with you 100%

Jawahar
24th August 2010, 06:39 PM
Dear Ragavendran Sir,

I agree with your points that Political matters need not be discussed in this thread. With this, I will restraint myself not writing any political activities in this thread.

Writing about thalaivar's movies, I will try to do share my experiences. Our thalaivar was un-conqurred king in the cine field. Until now, no body is near to his calibers. In politics, when his name is used for defeats, it is not digestable for the fans like me. That is why we prefer to give more importance to politics. Hope you undertand our feelings.

Being an adrent fan and keeping our NT as Thalaivar for me and involved in the political process of our thalaivar, politics will come automatically into picutre. This is the reason, I wrote more about political things in this thread. Hereafter, as per your advise, I will restraint in posting political matters here.

Dear Chandrasekaran Sir,

We are really proud of your contribitions and your associations with our thalaivar. You are doing lot of social work under Samuga Nala Paeravi. Thodarattum, ungal pani. If any sort of help can be required from me, please let me know. I will do my best. All the best for all your activities.

Let us pray that, the Ninaivu Mandapam for our thalaivar will happen soon in our country.

Thalaivarin aasirvaathangal endrum ungalukku irukkum.

RAGHAVENDRA
24th August 2010, 09:45 PM
Dear Ragavendran Sir,

I agree with your points that Political matters need not be discussed in this thread. With this, I will restraint myself not writing any political activities in this thread.

Writing about thalaivar's movies, I will try to do share my experiences. Our thalaivar was un-conqurred king in the cine field. Until now, no body is near to his calibers. In politics, when his name is used for defeats, it is not digestable for the fans like me. That is why we prefer to give more importance to politics. Hope you undertand our feelings.

Being an adrent fan and keeping our NT as Thalaivar for me and involved in the political process of our thalaivar, politics will come automatically into picutre. This is the reason, I wrote more about political things in this thread. Hereafter, as per your advise, I will restraint in posting political matters here.


டியர் ஜவஹர்,
தங்களுடைய த.மு.மு. அநுபவங்களைக் கேட்கக் கேட்க பல புது விஷயங்கள் அறிய முடிகிறது. அவற்றையெல்லாம் அறிய அனைவரையும் போல நானும் ஆவலாய் உள்ளேன். சொல்லப் போனால் த.மு.மு. இயக்கம் பற்றி தனியாக ஒரு திரி தொடங்கினால் அதில் சுவையான பல தகவல்களைத் தெரிந்து கொள்ள ஏதுவாயிருக்கும்.

இதையே ஹப் நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். தயவு செய்து தமிழக முன்னேற்ற முன்னணியைப் பற்றி விவாதிக்க நமது ஹப்பில் தனி திரி தொடங்க வழி வகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம் நமது நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் இயக்தத்தைப் பற்றிய பல புதுப்புது விஷயங்கள் கிடைக்கலாம்.

இது ஒரு புறம் இருக்கட்டும். முரளி சார் சொன்னதை வரிக்கு வரி நானும் வழிமொழிகிறேன். இத்திரியில் நீங்கள் நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய தங்களுடைய சுவையான அனுபவங்களைக் கூற வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
ராகவேந்திரன்

groucho070
25th August 2010, 07:36 AM
சற்று அரசியலை மறந்து நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி பேசுவோம்.I second this.

NT's fame, influence has spread it's wings beyond the TN shore, in fact, Malaysia's beloved actor, the late Tan Sri P. Ramlee himself have cited NT has one of his influences and if you had seen his performances you can easily spot the NTism.

I think as fans, our duty is to educate non-NT fans, younger generations who have missed out on seeing this magnificent actor strutting his stuff on films and (I missed out on this) on stage. He has generously poured out his heart on his craft, and was never stingy in giving his all in front of the camera.

I am one in the opinion that the screen performances in not only Tamizh films, but world all over has deteriorated in quality. Yes, Hollywood too. This is where films of Nadigar Thilagam can come in, and used as useful tool in teaching the younger generation of actors who are mostly deluded by "non-acting is best acting" mission statement.

These actors are cheered on by fans who has very little idea on gigantic impact created by NT on the first place during his time, and his influence on the current seniors of Tamizh film industry. These fans need to be educated about what acting is. How tough the job is. How it takes one to forgo the image issue and contribute tirelessly to the script, whether the writing is bad or not. How to work as a great team member, and if the responsibility lands on one's shoulder, a leader for that production team. These and much more qualities are inherent in the works produced by NT in his lifetime, a lifetime dedicated to the artistry called screen and stage performances.

I think I have slacked of late, in not discussing on his acting alone in this thread, I shall make ammend. But this is my call, also on behalf of Joe, of all of us to talk NT, his cinema, and how it has and should influence many lives, actors and fans alike. Our humble request, and sorry if I have offended anyone.

gopalu_kirtinan
25th August 2010, 10:32 AM
நீண்ட நாட்களுக்கு பின் இன்று கர்ணன் படம் பார்த்தேன், என்ன ஒரு நடிப்பு. எங்கு கற்றார் அந்த கலையை .... கர்ணன் என்ற கதா பாத்திரத்திற்கு ஏற்ப அவர் காட்டிய கம்பீர தொற்றமும் சிங்க நடையும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. அவர் பேசுகின்ற தமிழின் தரத்தில் எனக்கு தமிழ் மேலான பற்று மேலும் அதிகரிக்கிறது.அவர் நாவில் துள்ளி விளையாடுகிற பொது தமிழ் மேலும் அழகாகிறது. குறைந்தது நூறு முறையாவது அந்த படத்தை பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறை பார்க்கையிலும் திகட்டாத தேனமுதாகவே இருக்கிறது.
முக பாவத்தில் முன்னூறு வகையும் நடையில் நானூறு வகையும் காட்டிய அவரது திறமையை சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை .

RAGHAVENDRA
25th August 2010, 10:38 AM
Dear Rakesh,
Your words speak volumes of affection you have on NT. Politics is one field where NT could not meet the demand. I just want to put it very straight. NT fans need not be disappointed by his electorical failure. He was a straight forward and honest politician and one day his qualities would definitely speak of him. So let's not dwelve into them. As Rakesh said, it is our duty to show both the artists and fans of the current generation, what is acting and how NT defined it.

THE ONLY DEFINITION FOR ACTING IS SIVAJI GANESAN.

Our hubbers have contributed immensely in all the parts of Nadigar Thilagam thread, to bring out the glories of NT and his acting prowess. The analyses of Prabhu Ram, Murali Srinivas, Saradha, and other moderators-hubbers of various films of Nadigar Thilagam are ample proofs. We have lot more to come. This is the real contribution a fan of NT can make in his glory and our salutations to each one of them.

Let us continue our march towards the goal ... glorify NT.

நடிகர் திலகத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறி நடிப்பின் முழு பரிணாமத்தையும் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துக் கூறுவதே நம் தலையாய கடமையாய்க் கொண்டு தொடர்வோம்.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
25th August 2010, 10:40 AM
இன்று பிறந்த நாள் காணும் நவ் அவர்களுக்கு நமது அனைவரின் சார்பிலும் உளமார்ந்த வாழ்த்துக்கள்

ராகவேந்திரன்

KCSHEKAR
25th August 2010, 02:32 PM
Thanks Mr.Jawahar for your appreciation. We all work together to spread the name and fame of Nadigarthilagam to the entire world.

pammalar
26th August 2010, 03:16 AM
Wish You A Very Very Happy Birthday, Mr. Nov!

Many More Happy Returns!

Warm Wishes,
Pammalar.

RAGHAVENDRA
26th August 2010, 07:10 AM
இன்று பிறந்த நாள் காணும் சந்திரசேகர் அவர்களுக்கு நமது அனைவரின் சார்பிலும் உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
ராகவேந்திரன்

groucho070
26th August 2010, 07:47 AM
Happy Birthday Chandrasekaran sar :D

Thirumaran
26th August 2010, 10:33 AM
பிறந்த நாள் வாழ்த்துக்கள், சந்திரசேகரன் Sir :D

abkhlabhi
26th August 2010, 05:09 PM
பிறந்த நாள் காணும் MR. சந்திரசேகரன் MR.NOV அவர்களுக்கு வாழ்த்துக்கள்

KCSHEKAR
26th August 2010, 06:25 PM
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

நாம் அனைவரும், நடிகர்திலகம் எனும் பள்ளியில், கல்லூரியில், பல்கலைக் கழகத்தில் படிக்காவிட்டாலும், படியை மிதித்திருக்கிறோம். இந்த வாய்ப்பை நமக்களித்த கலைக்கடவுளுக்கு நன்றி.

இந்த நட்பு வட்டம் வளர்ந்து, நடிகர்திலகத்தின் புகழ்குரலை உலகெங்கும் ஒலிக்கச் செய்வோம்.

மீண்டும் நன்றி!.

Jawahar
26th August 2010, 07:07 PM
Piranth naal vazhthukkal Nanbare!

Murali Srinivas
26th August 2010, 11:47 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சந்திரசேகர்.

இரு திலகங்களும் சேர்ந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி வெளியான நாள் இது [26.08.1954]. இந்த நாளுக்கு வேறு ஒரு விசேஷமும் இருக்கிறது. அதே நாளில்தான் சிவாஜியின் குரலாகவே மாறிப் போன டி.எம்.எஸ். முதன் முறையாக சிவாஜிக்காக பாடிய தூக்கு தூக்கியும் ரிலீஸ் ஆனது.

ஒரு படம் - பிற்காலத்தில் எப்போதும் சேரவே முடியாத இருவர் சேர்ந்த முதல் படம்.

அடுத்த படம் - எப்போதும் பிரிக்கவே முடியாத இருவர் இணைந்த முதல் படம்.

அது மட்டுமா, இதே நாளில்தான் [1972-ல்] தவப்புதல்வன் ரிலீஸ்.

தவப்புதல்வனுக்கு உள்ள சிறப்பு என்னவென்றால் நடிகர் திலகம் நடித்து 100 நாட்கள் ஓடிய கடைசி கருப்பு வெள்ளை படம்.

இதற்கு பின் இரண்டே இரண்டு கருப்பு வெள்ளைப் படங்கள் மட்டுமே அவர் நடித்தார் [பொன்னுஞ்சல், தாய். அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை].

தவப்புதல்வனின் வெற்றியைப் பற்றி சுட்டிக் காட்ட வேண்டிய சிறப்பு - அப்போது தூள் பரத்திக் கொண்டிருந்த பட்டிக்காடா பட்டணமாவின் வீச்சை தாண்டி, தர்மம் எங்கேயின் பிரம்மாண்டத்தை மீறி, பின்னால் வெளி வந்த உச்சமான வசந்த மாளிகைக்கும் ஈடு கொடுத்து அன்று தமிழகத்திலே நிலவிய அசாதாரண அரசியல் சூழலையும் சமாளித்து, தொடர்ந்து வந்த தீபாவளிக்கும் சரி தீபாவளி படங்களுக்கும் சரி அசந்து விடாமல் 100 நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை அதுவும் சென்னை பைலட் தியேட்டரில் இந்த இலக்கை எட்டும் முதல் தமிழ் படம்(?) என்ற பெருமையையும் அடைந்தது என்று சொன்னால் நிச்சயமாக முக்தா காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

அன்புடன்

pammalar
27th August 2010, 03:02 AM
நண்பர் திரு.சந்திரசேகரன் அவர்களுக்கு இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,
பம்மலார்.

KCSHEKAR
27th August 2010, 09:53 AM
என் பிறந்த நாளில் - இப்படி ஒரு சிறப்பா? தகவலை வழங்கிய திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

NOV
27th August 2010, 03:14 PM
vaazhththu sonna anaivarukkum nandri :ty:
chandrasekarukkum en iniya pirandha naal vaazhththukkal. :D

gkrishna
27th August 2010, 05:20 PM
சகோதரி சாரதா அவர்கள் கூறிப்பிட்ட சிவந்தமன் திரைப்படம் பற்றிய ஒரு சிறு நினவு. நம் நாடு மற்றும் சிவந்த மண் (1969௦) இரண்டும் தீவாளி ரிலீஸ் 7 nov மற்றும் 9 nov என்று நினவு நெல்லையில் பார்வதி திரை அரங்கில் நம் நாடு திரை படமும் சென்ட்ரல் திரை அரங்கில் சிவந்த மண் வெளியாயின MGR ரசிகர்கள் மற்றும் நம் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு. ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை இட்டுகொண்டனர் இரண்டு படங்களும் வெற்றி பெற்றன என்று நினேகிறேன்

J.Radhakrishnan
28th August 2010, 12:53 PM
[color=blue]தவப்புதல்வனின் வெற்றியைப் பற்றி சுட்டிக் காட்ட வேண்டிய சிறப்பு - அப்போது தூள் பரத்திக் கொண்டிருந்த பட்டிக்காடா பட்டணமாவின் வீச்சை தாண்டி, தர்மம் எங்கேயின் பிரம்மாண்டத்தை மீறி, பின்னால் வெளி வந்த உச்சமான வசந்த மாளிகைக்கும் ஈடு கொடுத்து அன்று தமிழகத்திலே நிலவிய அசாதாரண அரசியல் சூழலையும் சமாளித்து, தொடர்ந்து வந்த தீபாவளிக்கும் சரி தீபாவளி படங்களுக்கும் சரி அசந்து விடாமல் 100 நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை அதுவும் சென்னை பைலட் தியேட்டரில் இந்த இலக்கை எட்டும் முதல் தமிழ் படம்(?) என்ற பெருமையையும் அடைந்தது என்று சொன்னால் நிச்சயமாக முக்தா காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
[/color

Dear Murali sir,

தர்மம் எங்கே பிரமாண்டம் பற்றி குறிப்பிட்டீர்கள், நானும் படம் பார்த்திருக்கிறேன். அந்த படம் NTஅவர்களின் 100 நாள் பட வரிசையில் இல்லையே ?

RAGHAVENDRA
28th August 2010, 01:10 PM
[color=blue]தவப்புதல்வனின் வெற்றியைப் பற்றி சுட்டிக் காட்ட வேண்டிய சிறப்பு - அப்போது தூள் பரத்திக் கொண்டிருந்த பட்டிக்காடா பட்டணமாவின் வீச்சை தாண்டி, தர்மம் எங்கேயின் பிரம்மாண்டத்தை மீறி, பின்னால் வெளி வந்த உச்சமான வசந்த மாளிகைக்கும் ஈடு கொடுத்து அன்று தமிழகத்திலே நிலவிய அசாதாரண அரசியல் சூழலையும் சமாளித்து, தொடர்ந்து வந்த தீபாவளிக்கும் சரி தீபாவளி படங்களுக்கும் சரி அசந்து விடாமல் 100 நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை அதுவும் சென்னை பைலட் தியேட்டரில் இந்த இலக்கை எட்டும் முதல் தமிழ் படம்(?) என்ற பெருமையையும் அடைந்தது என்று சொன்னால் நிச்சயமாக முக்தா காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
[/color

Dear Murali sir,

தர்மம் எங்கே பிரமாண்டம் பற்றி குறிப்பிட்டீர்கள், நானும் படம் பார்த்திருக்கிறேன். அந்த படம் NTஅவர்களின் 100 நாள் பட வரிசையில் இல்லையே ?

நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றிலேயே ரசிகர்களிடத்திம் மிகவும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம் தர்மம் எங்கே என்றால் அது மிகையாகாது. குறிப்பாக பொம்மை மாத இதழில் அப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் மிகுந்த ஆவலை ஏற்படுத்தின. பொம்மை இதழில் இரு பக்கங்கள் எதிரெதிரே பார்த்தவாறு அமைந்த பக்கங்களில் நடிகர் திலகத்தின் வித்தியாசமான தோற்றம் அப்போது ரசிகர்களிடையே ஆவலை மிக அதிகமாக தூண்டி விட்டது. குதிரைப் போர், துப்பாக்கிப் போர் என காட்சிகளும் ஒரு பிரம்மாண்டமான படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தின. தெய்வ மகன் படத்தைத் தொடர்ந்து சாந்தி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் என்றவுடன் அதுவும் பரபரப்புக்கு தன் பங்கை சேர்த்துக் கொண்டது. சொல்லப் போனால் வசந்த மாளிகை படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் திரையிடப் பட்டபின்னர் தான் அது பெருத்த வரவேற்பையும் ஆவலையும் ஏற்படுத்தியது. ஆனால் தர்மம் எங்கே முதலிலிருந்தே பிரம்மாண்டம் என்கிற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உண்டாக்கியது. சாந்தி திரையரங்கில் பட்டிக்காடா பட்டணமா படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் அரங்கு கிடைக்காமல் முதன் முதலில் ஓடியன் திரையரங்கம் புக் செய்யப் பட்டது. நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் நடிகர் திலகத்தின் படங்களிலேயே அட்வான்ஸ் புக்கிங் துவங்கிய நாளிலேயே கிட்ட்த்தட்ட ஒரு மாதத்திற்கு மாலைக் காட்சிக்கான டிக்கெட்டுகளும், வெளியாகும் நாளிலிருந்த தொடர்ந்து அதாவது 13 நாட்களுக்கு 3 காட்சிகள் வீதம் டிக்கெட்டுகளும் விற்று விட்டன. அட்வான்ஸ் புக்கிங்க் போர்டில் இடம் இல்லாமல் இன்னொரு போர்டு கொண்டு வந்து வைக்க வேண்டியிருந்தது. இந்தப் படம் வெளி வந்து ஓடிக் கொண்டிருக்கும் போதே பக்கத்திலேயே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கூட இல்லாத பைலட் தியேட்டரில் தவப் புதல்வன் ரிலீஸ் என்று விளம்பரம் வந்து விட்டது. பைலட்டில் தவப் புதல்வன் ஓடிக் கொண்டிருக்கும் போது சாந்தியில் வசந்த மாளிகை, சித்ராவில் பட்டிக்காடா பட்டணமா, மற்றும் பிளாசாவில் பழைய படங்கள் என்று சுற்றிலும் நடிகர் திலகத்தின் படங்களே. மவுண்ட் ரோடில் இவ்வளவு படங்களையும் தாண்டி பைலட்டில் தவப்புதல்வன் பெற்ற வெற்றி மகத்தானது. இதைத் தான் முரளி சார் குறிப்பிட்டுள்ளார். எங்களுக்கு ஞாயிற்றுக் கிழமையானால் ஒரு ரவுண்டு எல்லா தியேட்டரையும் வலம் வருவோம். சித்ராவில் துவங்கி சாந்தி, பின்னர் பிளாசாவில் பழைய படம் போட்டால் அங்குள்ள நிலவரம், பின் பிளாசா வாசலில் இருந்த பஸ் ஸ்டாப்பில் 21 ஏறி பைலட்டில் இறங்கி தவப் புதல்வன் நிலவரம் பார்த்து விட்டு அங்கிருந்து பொடி நடையாக நண்பர்களுடன் திருவல்லிக்கேணி செல்வோம்.

பழைய நினைவுகளை அசைபோட வாய்ப்பளித்தமைக்கு நன்றி,

அன்புடன்
ராகவேந்திரன்

tacinema
29th August 2010, 05:20 AM
Looks like NT thread is going strong.

One of the best "method" actors Dilip Kumar mentions NT as one of his favorite actors in India. In fact, NT is the only actor from South India mentioned by Dilip Kumar. You can find his complete interview given to The Hindu here: http://www.thehindu.com/arts/magazine/article597902.ece?homepage=true

This is what he said about NT:

Your favourite actors and directors?

From Hollywood, with deep respect, I would like to mention Sir Charles Laughton, Paul Muni, Marlon Brando and Richard Burton. Greta Garbo, Ingrid Bergman and Katherine Hepburn are my all-time favourites.

From India, I consider Ashok Kumar, Motilal, Balraj Sahni, Chabi Biswas and Pahari Sanyal as icons of natural performances. Uttam Kumar and Shivaji Ganesan were very powerful actors and I must mention the polished performances of Sabitri Chatterjee and Arundhati Sinha. From the past four decades, Amitabh Bachhan, Aamir Khan and Tabu are gifted performers. Among the directors, Amiya Chakrabarty, Nitin Bose, Bimal Ray, Zia Sarhadi and K. Asif and Mehboob Khan were unforgettable.

Great Respect to our NT from one of the best in Bollywood!!

pammalar
29th August 2010, 01:56 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 112

கே: நடிகர் திலகத்தின் நடிப்புத்துறையை எடை போட்டால், இந்தியாவுக்கு சிவாஜியாகவும், தமிழகத்துக்கு கட்டபொம்மனாகவும், ஆசியாவுக்கு செங்கிஸ்கானாகவும் விளங்குகிறார் என்கிறேன். சரி தானா? (மிஸ்.வர்னிஸ்ரீலோப்ஸ், சிங்கப்பூர்)

ப: சிவாஜியின் நடிப்பை மிகவும் ரசித்திருக்கிறீர்கள்.

(ஆதாரம் : பேசும் படம், மார்ச் 1970)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
29th August 2010, 02:15 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 113

கே: சிவாஜிக்கு ராசியான கரங்கள் என்கிறேன். (ஜெயலலிதாவையும், லக்ஷ்மியையும் நடன அரங்கேற்றத்தின் போது வாழ்த்தினார். இன்று நட்சத்திர நடிகைகளாக ஒளி வீசுகிறார்கள்). ஒப்புக் கொள்கிறீர்களா? (ப.பூலோகநாதன், சென்னை - 1)

ப: கையும் களவுமாகப் பிடித்து விட்டீர்களே?! வம்பு தான். இனி அரங்கேறுபவர்கள் சிவாஜியை தலைமை வகிக்க வற்புறுத்தப் போகிறார்கள்.

(ஆதாரம் : பேசும் படம், பிப்ரவரி 1970)

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
29th August 2010, 02:38 PM
நடிகர் திலகத்தின் ராசியான கரங்களைப் பற்றிய மற்றொரு சுவையான செய்தி.

ஜூலை 1, 1961ல் வெளிவந்து 50 ஆண்டுகளில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் திலகத்தின் ஸ்ரீவள்ளி திரைப்படத்தின் ஆயுளே நடிகர் விஜயகுமாரின் திரையுலக ஆயுள் ஆகும். அப்படத்தில் அவர் பாலமுருகனாக நடித்து திரையுலகில் நுழைந்தார். அதன்பின் கதாநாயகனாக அறிமுகமாகி பின்னர் பல்வேறு பாத்திரங்களில் தன் திறமையை நிரூபித்து இன்று வெற்றிகரமாக தனது 50வது ஆண்டில் நுழைந்திருக்கிறார்.

அவருக்கு நமது பாராட்டுக்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

SHIV
31st August 2010, 05:08 PM
Dear friends

Watched the DVD of Ooty Varai Uravu again yesterday. wow, what a light hearted movie enacted to perfection by NT. I along with my family enjoyed the movie to the full.The dress, walking style and dialogue delivery by NT were all ahead of times and it is a lesson for today's actors.

The cigarette smoking style in standing posture in the song "Thedinen vanthathu" is simply out of the world and no words to describe the same.

All songs in this movie are gems and i would rather say that another hero of this movie behind the screen is Mellisai Mamannar MSV. Wonder will we ever get a such a combination of actor and MD anywhere else in the world!!!

There was an interesting piece of info shared by Chitralayaa Gopu recently in an interview about this movie.Though Christened as "Ooty varai Uravu" all the ooty scenes in this movie was shot entirely in Yercaud as there was a heavy fog for continous 10 days and shooting could not be done. Because of this delay NT's other shooting commitments were on the verge of getting delayed. So Sridhar suggested to NT about Yercaud and NT readily agreed to the same and even gave fresh dates to carry out the shooting inspite of his hectic schedule.

Thanks for the opportunity.

Regards

Shiv

abkhlabhi
1st September 2010, 10:16 AM
நடிகர் திலகத்தின் புகழ் பாட, செப்டம்பர் மாதத்தில் மலர்ந்த குறுஞ்சி மலரே, தகவல் திலகத்திற்கு இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! உங்களின் தொண்டு பல் சிறப்பு பெற்று விளங்க மனமார்ந்த வாழ்த்துகள். வயதில் சிறியவன் என்பதால் உங்கள் திறமைக்கு வணக்கங்கள்.


அன்புடன்


பாலகிருஷ்ணன்
(abkhlabhi)

Murali Srinivas
2nd September 2010, 12:31 AM
tac,

Good to see you back but I am afraid that you would again make me write this after some 3 months when your next sabbatical ends. [JK]

Shiv,

Good to see you back with a short and sweet note on Ooty Varai Uravu. A rollicking entertainer on any day and MSV was on a song.

On a side note whenever OVU is mentioned my mind would race to Iru Malargal, the film that got released on the same Deepavali day of Nov 1st, 1967. It would require great guts to release a movie along with OVU and when the second movie also has the same hero, add to it an emotional story as the film's backdrop, you are walking on knife edge. But ACT showed that rare courage and congrats to him for that and kudos to our fans and the general public for making both the films run for 100 days.

பாலா,

தகவல் திலகம் சுவாமி அவர்களின் பிறந்த நாள் வருவதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. வரும் போது நான் சொல்கிறேன் அப்போது வாழ்த்துங்கள்.

சுவாமி அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் சில நாட்களுக்கு இங்கே பதிவிட முடியாத சூழலில் உள்ளார். விரைவில் அவர் மீண்டும் வந்து தன் சேவையை தொடருவார். கொஞ்சம் பொறுத்திருப்போம்

அன்புடன்

goldstar
2nd September 2010, 07:16 AM
Thanks Murali.

You have said interesting point about OVU and Iru Malargal. Interesting point is OVU is a colour film and IM is a black and white. How was response for colour and B/W films? I believe fans and common audience should have be preferred to watch OVU because of colour film?

I think OVU released in Central or Chinthamani and IM in Devi in Madurai?

Cheers,
Sathish

RAGHAVENDRA
2nd September 2010, 09:55 PM
From 03.09.2010, at Saravana Theatre, Otteri, Chennai, Nadigar Thilagam's evergreen superhit movie UTHAMA PUTHIRAN, 4 shows daily. Show timings: 11.30 a.m., 2.30 p.m., 6.30 p.m. & 10.00 p.m. Don't miss.

03.09.2010 முதல் சென்னை ஓட்டேரி சரவணா திரையரங்கில் நடிகர் திலகத்தின் உன்னத திரைக்காவியம், வீனஸ் பிக்சர்ஸ் உத்தம புத்திரன், தினசரி 4 காட்சிகளாக திரையிடப் படுகிறது. காணத் தவறாதீரகள்.

ராகவேந்திரன்

SHIV
3rd September 2010, 05:20 PM
Great News, Ragavendran sir....., I think NT fans in chennai are having thier time of thier lives after a long time, as one super hit after another of our Thalaivar is being released continously for the pas 3 or 4 months.

As usual looking forward to your report and photos of Sunday I show....

Enna seivadhu, Enna mathiri outstation fans ellam ithai parthu ananthapada vendiyathuthan!!. Ellathukkum oru kudipinnai vendum. That is why we are troubling you.

Regards

Shiv

SHIV
3rd September 2010, 05:26 PM
Dear Murali sir/Ragavender sir,

I heard that NT's "Sarithira Nayagan" was produced by NTR. Is that true?. Kindly give more details, if possible.It had a melodious number of Mellisai Mannar sung by Yesudoss.

Regards

Shiv

Murali Srinivas
3rd September 2010, 08:15 PM
Thanks Satish. Both the films OVU and IM were received well. IM had the full support of the families and Ladies simply thronged the theatres. OVU as I said earlier was a rollicking entertainer. The re-releases of OVU were like festivals. In 1981 January at Chinthamani, there was a gap of 5 weeks between Polladhavan and Ram Lakshman. Sethu films was the distributor for both and they used this interim for OVU which ran for 2 weeks and Raja that ran for 3 weeks. Still remember the crowd and response. IM compared to OVU had not had that much of re-releases but whenever it was screened, it did well.

During the first release in 1967, OVU was released in Central and IM was in New Cinema.

Shiv,

Yes, Sarithra Nayagan was produced by Ramakrishna Studios of NTR and it was a remake of one NTR movie. Don't remember the song though. May be Raghavender sir will help.

Regards

saradhaa_sn
4th September 2010, 06:46 PM
தளத்தின் நெறியாளரும், நடிகர்திலகத்தின் தீவிர ரசிகருமான நண்பர் NOV அவர்களுக்கும்....

சிவாஜி சமூக நலப்பேரவையின் மூலம் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பி வரும் அருமை நண்பர் சந்திரசேகரன் அவர்களுக்கும்....

தாமதித்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வின் எல்லா நலன் களையும், வளங்களையும் பெற்று இன்புற இந்த சகோதரியின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
-----------------------------------

தளத்துக்கு புதிய வரவாக மட்டுமல்ல, தகவல் பெட்டகமாகவும் வருகை தந்திருக்கும் "ஜவகர்" அவர்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
---------------------------------

ஜவகர் & ஷிவராம்....

நடிகர்திலகத்தின் கனவு இயக்கமாக மலர்ந்த 'தமிழக முன்னேற்ற முன்னணி' பற்றிய அரிய பல தகவல்களை மிக நேர்த்தியாக பதிந்துள்ளீர்கள். மிக்க நன்றி. நடிகர்திலகத்தின் அரசியல் சக்தியை அறியாத பலரது விழிகளைத்திறக்கும் விதமாக சுவையான விவரங்களைத் தந்துள்ளீர்கள். படித்துக்கொண்டிருக்கும்போதே, அது(TMM)பற்றி நான் அறிந்திருந்த விவரங்களையும் விலாவரியாகப் பதிக்கலாம் என்றெண்ணிப் படித்துக்கொண்டிருக்கும்போது, அடுத்த சில பதிவுகளில் 'இங்கே அரசியல் வேண்டாம். வேறு தனியான திரியில் வைத்துக்கொள்ளலாம்' என்ற முரளியண்ணாவின் வேண்டுகோள் சரியாகப்படவே, அதற்கென தனியாக ஒரு திரி துவங்கப்படும் என்று ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

சகோதரர் ராகவேந்தர் சொல்வது முழுக்க முழுக்க சரியானதே. வேறு யாரையும் உயர்த்திவிடும் ஏணியாக இன்னமும் நடிகர்திலகத்தின் ரசிகர்படையின் சக்தி வீணடிக்கப்பட வேண்டியதில்லை. நம்மை அரசியலில் வழிநடத்த ஒரு தலைமை உண்டென்றால் அது நம் 'இளைய திலகம் பிரபு'வாக மட்டுமே இருக்க வேண்டும். காரணம் அது நம்மை விட்டு என்றென்றும் நீங்காத தலைமை. அந்நாள் மிக விரைவில் வர பிரார்த்திப்போம்.

saradhaa_sn
4th September 2010, 07:06 PM
டியர் முரளி,

இத்தளத்தில் ஒவ்வொருமுறையும், 'ஊட்டி வரை உறவு' படம் பற்றிய விவாதம் வரும்போதெல்லாம் தவறாமல் 'இரு மலர்கள்' படம் பற்றியும் நினைவு கூர்வீர்கள். இம்முறையும் தவறவில்லை. நன்றி. ஒரே நாளில் வெளியாகி ஒரே நாளில் 100 நாட்களைக்கண்ட பட வரிசையை முதலில் துவக்கி வைத்த படங்கள் அவை. நீங்கள் சொன்னது போல ஊட்டிவரை உறவு மறு வெளியீடுகளில் கலக்கிய அளவுக்கு, இருமலர்கள் அவ்வளவாகத் திரையிடப்படவில்லை. தவிர, முதல் வெளியீட்டில் தொன்னூறு சதவீதம் பெண்களின் ஆதரவுடன் வெற்றியடைந்த படம் அது. இரண்டுக்குமே மெல்லிசை மன்னரின் பங்கு மகத்தானது.

kumareshanprabhu
4th September 2010, 07:19 PM
hi every body

Murali please write on Avanthanmanithan

Murali Srinivas
4th September 2010, 09:29 PM
சாரதா,

மறுபடியும் இடைவெளி விட்டு விட்டீர்கள். சரி, இனி தொடருங்கள். நீங்கள் குறிப்பிட்டது மிகவும் சரியே. ஊட்டி வரை உறவு பற்றி பேசும் போதெல்லாம் நான் இரு மலர்கள் பற்றி குறிப்பிடுவது வழக்கம்தான். காரணம் ஊ.வ. உறவு பற்றி பேசுவதற்கு நிறைய பேர் முன் வருவார்கள். ஆனால் இரு மலர்கள் பற்றி பேசும் ஆட்கள் குறைவு. ஆகவேதான் அந்த படத்தின் பெருமைகளைப் பற்றி எப்போதும் குறிப்பிடுவது வழக்கம். மேலும் ஏ.சி.டி. அன்று வெளிப்படுத்திய தைரியம், அது பாராட்டத்தக்கது. அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது இதை அவரிடமே சொல்லி பாராட்டினேன்.

ராகவேந்தர் சார் தனிப்பட்ட முறையில் கோவை சென்றிருக்கிறார். ஆகவே அவராலும் பதிவுகள் செய்ய இயலவில்லை. அங்கிருந்து ஒரு சிவாஜி செய்தி அனுப்பியிருக்கிறார். கோவை டிலைட் திரையரங்கில்
காவிய நாயகனின் கலைக் காவியம் வசந்த மாளிகை ரெகுலர் காட்சிகளாய் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிக்கும் செய்திதான் அது.

குமார்,

அவன்தான் மனிதன் பற்றி நிச்சயமாக எழுதுவோம். [அதுவும் ஏ.சி.டி. படம்தான்].

அன்புடன்

pammalar
5th September 2010, 04:04 PM
டியர் முரளி சார்,

தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

டியர் பாலா சார்,

அட்வான்ஸ் வாழ்த்துக்களை அள்ளி வழங்கிய உங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th September 2010, 04:19 PM
ராகவேந்தர் சார் தனிப்பட்ட முறையில் கோவை சென்றிருக்கிறார். ஆகவே அவராலும் பதிவுகள் செய்ய இயலவில்லை. அங்கிருந்து ஒரு சிவாஜி செய்தி அனுப்பியிருக்கிறார். கோவை டிலைட் திரையரங்கில் காவிய நாயகனின் கலைக் காவியம் வசந்த மாளிகை ரெகுலர் காட்சிகளாய் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிக்கும் செய்திதான் அது.

அன்புடன்

ராகவேந்திரன் சார் தெரிவித்ததாக முரளி சார் வெளியிட்ட தகவலுக்கு நன்றி! கோவை டிலைட் திரையரங்கில், நேற்று 4.9.2010 சனிக்கிழமை முதல், தினசரி 3 காட்சிகளாக, வான்புகழ் கொண்ட "வசந்த மாளிகை" காதல் காவியம் திரையிடப்பட்டு வெற்றி முழக்கமிட்டு வருகின்றது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th September 2010, 06:38 PM
கோவை டிலைட் திரையரங்கில், 4.9.2010 சனிக்கிழமை முதல், தினசரி 3 காட்சிகளாக, வாழ்வியல் திலகத்தின் காலத்தை வென்ற காவியமான "வசந்த மாளிகை" வெளியாகி வெற்றி வாகை சூடி வருகின்றது. அரங்கில், கலையுலக சக்கரவர்த்திக்கு பேனர்கள் வைக்கப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று 5.9.2010 ஞாயிறு மாலைக் காட்சிக்கு, நமது நல்லிதயங்களின் ஆரவாரங்களினால், அந்தப் பகுதியே களை கட்ட உள்ளது.

இதே டிலைட் திரையரங்கில், இதயதெய்வத்தின் 83வது ஜெயந்தியை முன்னிட்டு, வருகின்ற 1.10.2010 வெள்ளி முதல், புதுமை வேந்தரின் "புதிய பறவை" வெளியாக உள்ளது.

இந்த இனிக்கும் தகவல்களை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.வெள்ளியங்கிரி அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th September 2010, 06:57 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 114

கே: நடிகர் திலகத்திற்கு ஏற்ற ஜோடி என்று யாரைக் குறிப்பிடலாம்? (எம்.ஏ.சாம்சன், விஜயவாடா)

ப: பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பார்கள். சிவாஜி தான் பூ. அதிகப் படங்களிலும், வெற்றிப் படங்களிலும் ஈடு கொடுத்திருப்பவர்கள் பத்மினி, சாவித்திரி.

(ஆதாரம் : பேசும் படம், ஜனவரி 1970)

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
5th September 2010, 10:52 PM
வெகு நாட்களுக்குப் பிறகு உத்தமப் புத்திரன் பெரிய திரையில். என்னால் போக முடியாத சூழல். ஆனால் ராகவேந்தர் சார் ஊரில் இல்லை. சுவாமியாலும் வர முடியாது என்ற நிலையில் நான் மட்டும் தனியே போனேன்.

அந்த பகுதியில் மாலை 5.45 வரை மழையாம். அது நின்றவுடன் சர சரவென்று மக்கள் குழும, போஸ்டருக்கு மாலை மரியாதைகள் செய்யப்பட, அகல் விளக்குகள் சுவரின் மேல் வைக்கப்பட, இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட, 1000 வாலா சரம் பட படவென்று வெடித்து சிதற, சூட தீபாராதனைகள் காட்டப்பட தேங்காய் உடைக்கப்பட அனைத்து சடங்குகளும் குறைவின்றி நடந்தேறியது.

திரையரங்கினில் இரண்டு நேர்மறையான அனுபவங்கள். இந்த ஆறு மாதக் காலத்தில் நான் தியேட்டரில் பார்த்த நடிகர் திலகத்தின் படங்களெல்லாம் மிகுந்த ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டன. கண்களை குளமாக்கும் பாசமலர் உட்பட அனைத்துப் படங்களும் அப்படியே அமைந்தன. ஆனால் இன்று பாடல்களுக்கு மட்டுமே ஆரவாரம். அது வழக்கம் போல லிமிட்டை தாண்டியே இருந்தது. அதற்கு நேர்மாறாக மற்ற அனைத்துக் காட்சிகளும் [கைதட்டல்கள் ஆரவாரங்கள் இருந்தும் கூட] பார்வையாளர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் ரசிக்கப்பட்டது.

ஆளப் பிறந்த என் கண்மணியே பாடலில் வரும் ஏழையாக வாழ்ந்தாலும் கவலையில்லை ஒரு கோழையாக மட்டும் வாழாதே என்ற வரிகளுக்கு பலத்த கைதட்டலை வெளிப்படுத்தி, உள்ளோம் அய்யா என்று ரசிகர்கள் தங்கள் வருகையை பதிவு செய்தனர்.

பார்த்திபன் அறிமுக காட்சிக்கு கைதட்டல்கள் என்றால் விக்கிரமனை கண்டவுடன் பூமாரி பொழிய ஆரத்தி. யாரடி நீ மோகினி பாடலில் அந்த நடை, டான்ஸ், அந்த ஸ்டைல், ஹ என்று சொல்லும் விதம், ஒரே ரகளை. பாட்டு முடியும் போது வரும் கைதட்டலோடு கூடிய டான்ஸ், இங்கே கைதட்டிக் கொண்டு ஆடிவிட்டார்கள்.

அடுத்து அதிகம் ரசிக்கப்பட்ட காட்சி விக்கிரமனுக்கு முடிசூட்டு விழா! அதில் அரசவைக்கு நடந்து வரும் ஸ்டைல் அங்கே பேசும் ஸ்டைல், தான் சொல்வதை கேட்டுவிட்டு பேசாமல் நிற்கும் அரசவை பிரதானிகளைப் பார்த்து சரிதானே என்று உறுமுவது போன்றவைக்கு நல்ல வரவேற்பு.

பாடல்களிலேயே அமைதியாக ரசிக்கப்பட்டது மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை பாடல் மட்டும்தான். பிறகு வந்த முல்லை மலர் மேலே பாடலுக்கு அதுவும் குறிப்பாக நடிகர் திலகத்தின் க்ளோஸ்-அப் காட்சிகளுக்கு செம ஆரவாரம் [திரையுலக பிரபல ஒளிப்பதிவாளர்கள் எல்லோரும் குறிப்பிடும் " காமிராவின் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அழகாக தெரியக் கூடிய ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டுமே" என்ற வரிகள்தான் நினைவிற்கு வந்தன].

அடுத்து விக்கிரமன் பத்மினியை சந்திக்கும் காட்சி. அதற்கும், அடுத்த சில நிமிடங்களில் வரும் காத்திருப்பான் கமலக் கண்ணன் பாடலுக்கும் பெரிய வரவேற்பு. அதிலும் அந்த பாட்டில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் போஸ் - அலப்பறை. அதே பாடலில் பார்த்திபன் அமர்ந்திருக்கும் விதம், இப்படி வித்தியாசம் காட்ட நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார் இருகிறார்கள். [அந்த பாடலில் குழலூதும் கிருஷ்ணனாக ராகினியும், கோபிகையாக பத்மினியும் அவ்வளவு அழகு]

எப்படி மாமா இவ்வளவு அரிய யோசனைகள் உங்கள் மூளையில் தோன்றுகிறது என்று விக்கிரமன் கேட்க அனுபவம் என்று நம்பியார் சொல்ல திரையை பார்த்து கண்ணடித்தபடியே இருக்கும் இருக்கும் என்று சொல்லும் விக்கிரமன் - பெரிதும் ரசிக்கப்பட்ட காட்சிகளில் ஒன்று.

அதே போல் வரவேற்பைப் பெற்ற காட்சி, அந்தப்புரத்தில் அமுதவல்லியை சந்தித்துவிட்டு மாட்டிக் கொள்ளும் பார்த்திபனை, விக்கிரமன் என நினைத்து உரையாடும் கண்ணாம்பா, அப்போது அங்கே வரும் விக்கிரமன், அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் பார்த்திபனை சுற்றி வரும் விக்கிரமன், இருவருக்கும் இடையே நடக்கும் சண்டை, என்ற இந்தக் காட்சியை கூறலாம்.

இங்கும் சரி, தறி கெட்டு ஓடும் ரதத்தை பிடித்து நிறுத்துவதற்காக குதிரையில் பாய்ந்து வரும் பார்த்திபன் இங்கெல்லாம் வின்சென்ட் மாஸ்டரின் காமிரா எத்துனை அழகாக அதை படம் பிடித்திருக்கிறது.

இடைவேளை விட, வழக்கம் போல் கிளம்ப வேண்டிய சூழல். கிளம்ப மனமில்லாமல் கிளம்பி வந்தேன். பார்த்தவரை பரம திருப்தி.

அன்புடன்

தியேட்டரில் கிடைத்த போனஸ் செய்தி - செவ்வாய் முதல் வியாழன் வரை [செப் 7 முதல் 9 வரை] சென்னை- ஸ்டார் திரையரங்கில் நமது அபிமான படங்களில் ஒன்றான ஆண்டவன் கட்டளை தினசரி 3 காட்சிகளாக திரையிடப்படுகிறது. நேற்று சனிக்கிழமையன்று இப்போது ஓடிக் கொண்டிருக்கும் அங்காடித் தெரு படத்தின் இடைவேளையின் போது ஆறு மனமே ஆறு பாடல் திரையிடப்பட பெரிய ஆரவாரத்துடன் வரவேற்பாம்.

தெய்வ மகன் வெளியான நாளான இன்று [05.09.1969] உத்தமப் புத்திரனையும் ஆண்டவன் கட்டளையையும் காணவும் நினைக்கவும் கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி.

pammalar
5th September 2010, 11:17 PM
டியர் முரளி சார்,

தங்களின் திரையரங்க நிகழ்வுகள் பதிவு, உத்தமபுத்திரனை நேரில் பார்த்து ரசித்த உணர்வை ஏற்படுத்தியது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th September 2010, 11:25 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 115

கே: 'பாசமலர்' - 'பாசக்கிளிகள்' இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? (இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி)

ப: இன்று வரை உங்களால் பாசமலரை மறக்க முடியாமலிருப்பது முதல் வித்தியாசம்.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 16-28 பிப்ரவரி 2006)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th September 2010, 01:01 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 116

கே: 'தெய்வமகன்' படத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? (மா.சிவாஜிதாசன், சென்னை - 28)

ப: நடிப்பின் சிறப்புக்கு ஒரு உரைகல். சிவாஜி கணேசனுக்கு ஒரு பெரிய வெற்றி.

(ஆதாரம் : பொம்மை, ஜனவரி 1970)

இன்று 5.9.2010 "தெய்வமகனு"க்கு 42வது ஜெயந்தி.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
6th September 2010, 08:52 AM
எதிர்பாராத அசாதாரண காரணத்தால் சென்னையில் சில தினங்களாக இல்லை. கோவை சென்றிருந்த நேரத்திலும் அங்கு ஒட்டப் பட்டிருந்த வசந்த மாளிகை சுவரொட்டிகள் மன நிறைவைத் தந்தன. இருப்பினும் சந்தர்ப்பம் அரங்கிற்கு செல்ல முடியவில்லை. நேற்று கிட்டத்தட்ட நள்ளிரவில் சென்னை திரும்பி நமது நண்பர்களின் பதிவுகளைப் பார்க்க நேரிட்டது. மிக்க மகிழ்ச்சி.
சாரதா அவர்களே, தங்களின் பதிவுகள் எங்களுக்கெல்லாம் ஒரு மகிழ்வையும் ஊக்கமும் அளிக்கின்றன. அடிக்கடி தாங்கள் வரவேண்டும்.
சில பல காரணங்களால் விவாதங்கள் திசை மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருந்ததால்தான் அரசியல் விவாதம் இங்கு வேண்டாம் என எண்ணினேன். மற்ற படி நடிகர் திலகத்தின் தமிழக முன்னேற்ற முன்னணி பற்றி பல தகவல்களை அறிய நம் அனைவரையும் போன்று நானும் ஆவலாய் உள்ளேன். எதிர் காலத்தில் சந்தர்ப்பம் அமையும் என எதிர் பார்ப்போம்.
பம்மலார் சார்,
தங்களின் உற்சாகமூட்டும் கேள்வி பதில் பகுதி பல தகவல்களை புதிதாய்த் தருகின்றது .மேலும் மேலும் தங்களுடைய பதிவுகளை எதிர்நோக்குகின்றோம்.
முரளி சார்,
இலவசமாய் சரவணா திரையரங்கிற்கு நம் அனைவரையும் அழைத்துச் சென்று அங்குள்ள காட்சிகளை விவரித்து மகிழ்வுற செய்துள்ளீர்கள். நன்றி.
ஸ்டார் திரையரங்கில் ஆண்டவன் கட்டளை திரையிடப்படுவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. பார்ப்போம்.
முரளி சார் கொடுத்த புகைப்படங்களை இந்த இணைப்பில் காணலாம்
http://sivajimoviesinchennai2010.blogspot.com/

மேலும் தொடர்வோம்
அன்புடன்
ராகவேந்திரன்

jaiganes
6th September 2010, 09:51 AM
http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/soundarya-rajinikanth-ashwin-wedding/soundarya-rajinikanth-ashwin-wedding-102.html

YGM has a dollar in his neck - no prizes for guessing who is on it!!! :-)

SHIV
6th September 2010, 12:48 PM
Dear Mr.Murali Srinivas

thanks a lot for the wonderful report on "Utthama Puthiran". Hope someone gives II half report.

Also, would request fans in c'tore to give report on sunday I show of Vasantha Maligai.
Definitely it would have been a gala time there.

Mr.Ragavendra - Nice to see yuo back after some time.

Regards

Shiv

HARISH2619
6th September 2010, 01:16 PM
நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்திருக்கும் சாரதா மேடத்தையும்,சிறு இடைவேளைக்கு பிறகு வந்துள்ள பம்மல் சாரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்க்கிறேன்.பம்மல் சார்,தொடரட்டும் தங்கள் புதியபறவை அனுபவம்.

முரளி சார்,
உத்தம புத்திரன் தியேட்டர் நிகழ்வு வர்னனை வழக்கம்போல் அருமை.பின்பாதி விட்டுபோனதில் சற்று ஏமாற்றம்.

ராகவேந்தர் சார்,
கோவை தியேட்டர் புகைப்படங்கள் கிடைக்க தயவு செய்து முயற்ச்சிக்கவும்.

HARISH2619
6th September 2010, 01:39 PM
பெங்களூர் பிரகாஷ்நகரில் வ.உ.சிதம்பரனார் 138வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.டாக்டர்.சிவாஜிகணேசன் நினைவு அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற இவ்விழாவிற்க்கு அதன் தலைவர் திரு மா.நடராஜ் தலைமை வகித்தார்.பிரகாஷ்நகர் கவுன்சிலர் திரு ரவீந்திரா முன்னிலை வகித்தார்.தமிழ்சங்க செயற்குழு உறுப்பினர் மாதவகிருஷ்னன்,தொழிலதிபர் கோவிந்தராஜ்,டாக்டர்.மதுசூதனபாபு ஆகியோர் தியாகஜோதி ஏற்றினர்.அறக்கட்டளை நிர்வாகிகள்,பள்ளி மாணவ மாணவியர் மலர்தூவி வணக்கம் செலுத்தினர்

SHIV
6th September 2010, 03:23 PM
Dear Sharadha Madam

Very happy to see yuo back after a gap & many thanks for your appreciation. Looking forward to more & more interesting contributions from you.

Regards

Shivram

NOV
6th September 2010, 06:54 PM
வெகு நாட்களுக்குப் பிறகு உத்தமப் புத்திரன் பெரிய திரையில். என்னால் போக முடியாத சூழல். ஆனால் ராகவேந்தர் சார் ஊரில் இல்லை. சுவாமியாலும் வர முடியாது என்ற நிலையில் நான் மட்டும் தனியே போனேன்.

அந்த பகுதியில் மாலை 5.45 வரை மழையாம். அது நின்றவுடன் சர சரவென்று மக்கள் குழும, போஸ்டருக்கு மாலை மரியாதைகள் செய்யப்பட, அகல் விளக்குகள் சுவரின் மேல் வைக்கப்பட, இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட, 1000 வாலா சரம் பட படவென்று வெடித்து சிதற, சூட தீபாராதனைகள் காட்டப்பட தேங்காய் உடைக்கப்பட அனைத்து சடங்குகளும் குறைவின்றி நடந்தேறியது.

திரையரங்கினில் இரண்டு நேர்மறையான அனுபவங்கள். இந்த ஆறு மாதக் காலத்தில் நான் தியேட்டரில் பார்த்த நடிகர் திலகத்தின் படங்களெல்லாம் மிகுந்த ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டன. கண்களை குளமாக்கும் பாசமலர் உட்பட அனைத்துப் படங்களும் அப்படியே அமைந்தன. ஆனால் இன்று பாடல்களுக்கு மட்டுமே ஆரவாரம். அது வழக்கம் போல லிமிட்டை தாண்டியே இருந்தது. அதற்கு நேர்மாறாக மற்ற அனைத்துக் காட்சிகளும் [கைதட்டல்கள் ஆரவாரங்கள் இருந்தும் கூட] பார்வையாளர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் ரசிக்கப்பட்டது.

ஆளப் பிறந்த என் கண்மணியே பாடலில் வரும் ஏழையாக வாழ்ந்தாலும் கவலையில்லை ஒரு கோழையாக மட்டும் வாழாதே என்ற வரிகளுக்கு பலத்த கைதட்டலை வெளிப்படுத்தி, உள்ளோம் அய்யா என்று ரசிகர்கள் தங்கள் வருகையை பதிவு செய்தனர்.

பார்த்திபன் அறிமுக காட்சிக்கு கைதட்டல்கள் என்றால் விக்கிரமனை கண்டவுடன் பூமாரி பொழிய ஆரத்தி. யாரடி நீ மோகினி பாடலில் அந்த நடை, டான்ஸ், அந்த ஸ்டைல், ஹ என்று சொல்லும் விதம், ஒரே ரகளை. பாட்டு முடியும் போது வரும் கைதட்டலோடு கூடிய டான்ஸ், இங்கே கைதட்டிக் கொண்டு ஆடிவிட்டார்கள்.

அடுத்து அதிகம் ரசிக்கப்பட்ட காட்சி விக்கிரமனுக்கு முடிசூட்டு விழா! அதில் அரசவைக்கு நடந்து வரும் ஸ்டைல் அங்கே பேசும் ஸ்டைல், தான் சொல்வதை கேட்டுவிட்டு பேசாமல் நிற்கும் அரசவை பிரதானிகளைப் பார்த்து சரிதானே என்று உறுமுவது போன்றவைக்கு நல்ல வரவேற்பு.

பாடல்களிலேயே அமைதியாக ரசிக்கப்பட்டது மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை பாடல் மட்டும்தான். பிறகு வந்த முல்லை மலர் மேலே பாடலுக்கு அதுவும் குறிப்பாக நடிகர் திலகத்தின் க்ளோஸ்-அப் காட்சிகளுக்கு செம ஆரவாரம் [திரையுலக பிரபல ஒளிப்பதிவாளர்கள் எல்லோரும் குறிப்பிடும் " காமிராவின் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அழகாக தெரியக் கூடிய ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டுமே" என்ற வரிகள்தான் நினைவிற்கு வந்தன].

அடுத்து விக்கிரமன் பத்மினியை சந்திக்கும் காட்சி. அதற்கும், அடுத்த சில நிமிடங்களில் வரும் காத்திருப்பான் கமலக் கண்ணன் பாடலுக்கும் பெரிய வரவேற்பு. அதிலும் அந்த பாட்டில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் போஸ் - அலப்பறை. அதே பாடலில் பார்த்திபன் அமர்ந்திருக்கும் விதம், இப்படி வித்தியாசம் காட்ட நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார் இருகிறார்கள். [அந்த பாடலில் குழலூதும் கிருஷ்ணனாக ராகினியும், கோபிகையாக பத்மினியும் அவ்வளவு அழகு]

எப்படி மாமா இவ்வளவு அரிய யோசனைகள் உங்கள் மூளையில் தோன்றுகிறது என்று விக்கிரமன் கேட்க அனுபவம் என்று நம்பியார் சொல்ல திரையை பார்த்து கண்ணடித்தபடியே இருக்கும் இருக்கும் என்று சொல்லும் விக்கிரமன் - பெரிதும் ரசிக்கப்பட்ட காட்சிகளில் ஒன்று.

அதே போல் வரவேற்பைப் பெற்ற காட்சி, அந்தப்புரத்தில் அமுதவல்லியை சந்தித்துவிட்டு மாட்டிக் கொள்ளும் பார்த்திபனை, விக்கிரமன் என நினைத்து உரையாடும் கண்ணாம்பா, அப்போது அங்கே வரும் விக்கிரமன், அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் பார்த்திபனை சுற்றி வரும் விக்கிரமன், இருவருக்கும் இடையே நடக்கும் சண்டை, என்ற இந்தக் காட்சியை கூறலாம்.

இங்கும் சரி, தறி கெட்டு ஓடும் ரதத்தை பிடித்து நிறுத்துவதற்காக குதிரையில் பாய்ந்து வரும் பார்த்திபன் இங்கெல்லாம் வின்சென்ட் மாஸ்டரின் காமிரா எத்துனை அழகாக அதை படம் பிடித்திருக்கிறது.

இடைவேளை விட, வழக்கம் போல் கிளம்ப வேண்டிய சூழல். கிளம்ப மனமில்லாமல் கிளம்பி வந்தேன். பார்த்தவரை பரம திருப்தி.

அன்புடன்

தியேட்டரில் கிடைத்த போனஸ் செய்தி - செவ்வாய் முதல் வியாழன் வரை [செப் 7 முதல் 9 வரை] சென்னை- ஸ்டார் திரையரங்கில் நமது அபிமான படங்களில் ஒன்றான ஆண்டவன் கட்டளை தினசரி 3 காட்சிகளாக திரையிடப்படுகிறது. நேற்று சனிக்கிழமையன்று இப்போது ஓடிக் கொண்டிருக்கும் அங்காடித் தெரு படத்தின் இடைவேளையின் போது ஆறு மனமே ஆறு பாடல் திரையிடப்பட பெரிய ஆரவாரத்துடன் வரவேற்பாம்.

தெய்வ மகன் வெளியான நாளான இன்று [05.09.1969] உத்தமப் புத்திரனையும் ஆண்டவன் கட்டளையையும் காணவும் நினைக்கவும் கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி.

[html:f40fb13677]
http://farm5.static.flickr.com/4126/4963845476_b785d7cb00_z.jpg

[/html:f40fb13677]



[html:f40fb13677]
http://farm5.static.flickr.com/4121/4963246691_de91920d51_z.jpg

[/html:f40fb13677]

Murali Srinivas
6th September 2010, 08:47 PM
Thanks NOV for uploading my snaps at the theatre.

சுவாமி, நன்றி.

அனைத்து புகைப்படங்களையும் இங்கே பார்வைக்கு வைத்ததற்கு நன்றி ராகவேந்தர் சார்.

செந்தில், நன்றி. அதே நேரத்தில் இடைவேளைக்கு பிறகு இருக்க முடியாததற்கு எனக்கும் மிகவும் வருத்தமே. சூழல் அப்படி.

Shiv,

Thanks. But I don't think there was anybody in the theatre who could cover the second half for us. Let us wait for the movie to get released in a city theatre.

Regards

RAGHAVENDRA
6th September 2010, 09:43 PM
நவ் சார்,
புகைப்படங்களை இங்கே பதிவேற்றமைக்கு மிக்க நன்றி.
முரளி சார்,
தாங்கள் நம் அனைவர் சார்பாகவும் சென்று அரங்க நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும் புகைப்படங்களுக்கும் மிக்க நன்றி. தாங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளா விட்டால் நமக்கு அந்த வாய்ப்பு கிட்டியிருக்காது. எனவே தங்களுக்குத் தான் நம் அனைவரின் நன்றியும்.
ஷிவராம் சார்,
கோவை நண்பர்கள் புகைப்படம் அனுப்பினால் நாம் இங்கே நிச்சயம் பகிர்ந்து கொள்ளலாம்.

07.09.2010 முதல் சென்னை ஸ்டார் திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக 3 நாட்களுக்கு மட்டும் ஆண்டவன் கட்டளை திரையிடப் படுகிறது. மூன்று நாட்களும் வேலை நாட்களாக இருந்தாலும் எப்படியாவது அதிக அளவில் மக்கள் இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம்.

அன்புடன்
ராகவேந்திரன்

KCSHEKAR
7th September 2010, 12:46 PM
Thanks Sharada Madam for your wishes and expect your continuous posts in this Hub. Thanks Mr.Murali for Uthama Puthiran Coverage.

gkrishna
7th September 2010, 12:58 PM
Dear all

happy to view the uthamaputhiran news. because of non availability of internet facilities not able to contribute much . sorry for the same. but still whenever net is available able to read the news. my sincere thanks to one and all. as everybody said whenever uvu comes, always IM also be remembered like engirundo vandal and sorgam both released on same day (ie diwali) any actor is having like this record. this month raj tv NT's movies are screened continuously. seen portion of karnan/annan oru kovil

saradhaa_sn
7th September 2010, 02:28 PM
டியர் முரளி,

சரவணா திரையரங்கில் 'உத்தமபுத்திரன்' படத்தின் கொண்டாட்டங்களை உங்கள் சீரிய எழுத்துக்கள் வாயிலாக (கூடவே புகைப்படங்களுடன்) அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

குறிப்பாக சரவணா அரங்கில் நடிகர்திலகத்தின் படங்கள் தொடர்ந்து வெளியாவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. (காரணம் ஏற்கெனவே ராகவேந்தர் சொல்லியிருக்கிறார்). சமீபத்தில் உயர்ந்த மனிதன், ராஜபார்ட் ரங்கதுரை படங்களைத் தொடர்ந்து இது மூன்றாவது. இந்நிலை தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

இடைவேளை வரையில் மட்டுமே ஆனாலும் உங்கள் கமெண்ட்ரி பிரமாதம். எல்லோரும் சொன்னது போல, அரங்கின் நடு இருக்கையில் எங்களை அமரவைத்துவிட்டீர்கள். பாதியில் எழுந்து சென்றபோது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.

Dear ராகவேந்தர் & பம்மலார்....

கோவையில் நடிகர்திலகத்தின் திரைப்பட மறு வெளியீடுகள் பற்றிய தகவல்களுக்கு நன்றி. என்.டி.ராமராவ் நடித்த தெலுங்கு 'பாதாள பைரவி' ஆந்திராவில் எங்காவது ஒரு டூரிங் டாக்கீஸிலாவது எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்குமாம். நம் 'வசந்தமாளிகை'க்கும் அப்படி ஒரு சிறப்பு உண்டு என்பது, ஆங்காங்கே இருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் தெரிகிறது.

SHIV
7th September 2010, 02:39 PM
Dear Friends

Saw the movie "Rattha Pasam" y'day. Our thalaivar dons 3 roles in his home productions. I think this movie came close on the heels of the Mega block buster "Thrisoolam". Though the story line was very thin, NT had single handedly lifted this movie by his acting with the able support of Mellisai Mannar.

The foreign locations of the movie was shot in London. It had some memorable songs like En Ullam Engindra Vanathile, Mankutti ippodhu En kaiyele, Poo manakkum poonguzhali, Ottam kanda& Asai thera pesavendum.

The different styles of walk by NT in the songs Mankuti ippodhu and En ullam engindre is just superb and beyond description.

The scene where he comes to know that Jayachitra is his sister, his joy knew no bounds and immediately when he happens to take a call from India he comes to know the death of his brother ( police officer role donned by NT)the expression changes in his face as he is unable to convey the matter to his just reunited sister. He just coughs his way to his private room and talks to his mother's potrait about the reunion and the death of his brother.

What an acting in that scene!!. Tears just rolled in my eyes and I thanked god that i was born in the era of our NT to have enjoyed such a lesson in acting. Not that he had not done this is any other movie, but every time you see NT drying or laugh we also feel like doing the same with him. Such is the emotional bond we have devoloped with NT. I can challenge that no actor in the world had developed such a rapport with fans.

This movie was directed parly by NT though K.Vijayan was to have directed the whole film. That is why in title cards, after Producers name, our NT's images will be shown.

Friends please forgive me for any error in my presentation of NT movies as this is the first time im participating in such hubs. As time goes by im confident that i will be able to give much better presentations to spread the glory of NT.

Can Murali sir or Ragavendra sir throw more light on why K.Vijayan was pulled out midway of the film?

Thanks

Shivram

saradhaa_sn
7th September 2010, 03:17 PM
Friends please forgive me for any error in my presentation of NT movies as this is the first time im participating in such hubs.
டியர் ஷிவராம்....

முதலில் இந்த வரிகளை பதிவிலிருந்து நீக்குங்கள்.

அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.

'ரத்தபாசம்' படத்தைப்பற்றிய அருமையான பதிவைத்தந்து எங்களை 1980-க்கு பயணிக்க வைத்துவிட்டீர்கள். இப்படம் திரிசூலம் வெளியான அடுத்த ஆண்டில் வெளியானது. கதை : G.ராம்குமார் (நடிகர்திலகத்தின் மூத்த புதல்வர்).

நம்பியார், மனோகர், மோகன்பாபு என மூன்று வில்லன்கள். கதை வெளிநாட்டுக்குப்பயணிக்கும் முன் படத்தின் துவக்கத்தில் கிட்டத்தட்ட அரைமணிநேரம் படம் டெர்ரிஃபிக்.

லண்டன் தெருக்களில், 'ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை' பாடல், தவில், நாதஸ்வரத்துடன் நடிகர்திலகம், தேங்காய், மனோரமா, ஷ்ரீபிரியா ஆகியோர் பாடி வர அருமையாகப்படமாக்கப்பட்டிருக்கும்.

சிவந்த மண் படத்துக்குப்பின் மீண்டும் இப்படத்தில், 'ஸ்பெயின் மாட்டுச்சண்டை' விளையாட்டு இடம்பெற்றது. (இரண்டு படத்திலுமே இக்காட்சியை நான் பார்க்கமாட்டேன். ஒரு வாயில்லா ஜீவனை வதை செய்து சாகடிப்பதை எப்படித்தான் அந்நாட்டு மக்கள் ரசித்துப்பார்க்கிறார்களோ).

நம்பியார், தேங்காய் போன்றவர்கள் ஏற்கெனவே "சில" வெளிநாட்டுப்படங்களில் நடித்திருந்தபோதிலும், நிஜமாகவே அவர்கள் முதன்முதல் வெளிநாடு சென்றது ரத்தபாசம் படத்துக்காகத்தான். இவர்களோடு ஜெயசித்ரா, பிரமீளா, ஜெய்கணேஷ் என ஒரு கூட்டமே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது.

இண்டோர் காட்சிகள் பெருமளவில், ராஜஸ்தானிலுள்ள ஜோத்பூர் அரண்மனையில் படமாக்கப்பட்டன. வெளிநாட்டு மங்கைக்குப்பிறந்த சிவாஜி வசிப்பது அங்கேதான். ('மான்குட்டி இப்போது என்கையிலே' பாடல் அங்கேதான் படமாக்கப்பட்டது). ஆனால் அவர் தன் அம்மாவின் படத்தைப் பார்த்துக்கொண்டு 'மோனோ ஆக்டிங்' செய்யும் அற்புதக் காட்சி மட்டும் பாலாஜியின் 'பில்லா' பட செட்டில் படமாக்கப்பட்டது. 'சாந்தி' படத்தில் இடம்பெற்று அனைவரையும் கவர்ந்த 'மோனோ ஆக்டிங்' காட்சிக்குப்பின்னர், அனைவரையும் கவர்ந்த காட்சி இது. நீங்கள் சொன்னது போல கண்களில் நீரை வரவழைக்கும்.

1980-ல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அளித்த பேட்டியில் "சமீபத்தில் நீங்கள் பாடிய பாடல்களில் உங்கள் மனதைக் கவர்ந்த பாடல் எது?" என்ற கேள்விக்கு, "பல பாடல்கள் கவர்ந்தவை. ஆனால் இதமாக மனதை வருடியது 'ரத்தபாசம்' படத்தில் நான் பாடிய 'பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ' என்ற பாடல்தான். அதை எனக்குத்தந்த எம்.எஸ்.வி.அண்ணாவுக்கு நன்றி" என்று பதிலளித்திருந்தார்.

நல்லதொரு படத்தை நினைவுகூர்ந்த உங்களுக்கு நன்றி.

groucho070
7th September 2010, 03:27 PM
1980-ல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அளித்த பேட்டியில் "சமீபத்தில் நீங்கள் பாடிய பாடல்களில் உங்கள் மனதைக் கவர்ந்த பாடல் எது?" என்ற கேள்விக்கு, "பல பாடல்கள் கவர்ந்தவை. ஆனால் இதமாக மனதை வருடியது 'ரத்தபாசம்' படத்தில் நான் பாடிய 'பூ மனக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ' என்ற பாடல்தான். அதை எனக்குத்தந்த எம்.எஸ்.வி.ஆண்ணாவுக்கு நன்றி" என்று பதிலளித்திருந்தார்.YESSS!!! This is fast becoming the song I listen to a lot. Beautiful melody.

pammalar
7th September 2010, 04:22 PM
சரவணா "உத்தமபுத்திரன்" ஆரவாரங்களை நம் கண்களுக்கு விருந்தாக்கிய முரளி சாருக்கு நயமிகு நன்றிகள்! அதனை இத்திரியில் பதிவிட்ட நௌ சாருக்கும், வலைப்பூவில் வெளியிட்ட ராகவேந்திரன் சாருக்கும் நமது நன்றிகள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th September 2010, 05:41 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 117

கே: சென்ற நூற்றாண்டின் திரைப்படங்களில் இன்றும் உங்கள் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படம் எது? [எந்த மொழியாகவும் இருக்கலாம்!] (வை.வைகுண்டம், சென்னை-61)

ப: சேரனுடைய 'ஆட்டோகிராஃப்' ஸ்டைலில், பள்ளிப் பருவத்தில் பார்த்த திரைப்படங்கள் தான் மனதில் பசுமையாகத் தங்கும்! சிவாஜி நடித்த 'உத்தமபுத்திரன்' (ஆறு முறை!) பார்த்து விட்டு சிவாஜி ரசிகனானேன். கூர்ந்து கவனித்தால், இப்போது ரஜினி பண்ணும் ஸ்டைலை அப்போதே சிவாஜி விக்ரமன் ரோலில் செய்திருப்பார்!

(ஆதாரம் : ஆனந்த விகடன், 11.4.2004, "ஹாய் மதன்" கேள்வி-பதில் பகுதி)

[திரு.மதன் அவர்கள், இதே பதிலில், 'மதுமதி'(ஹிந்தி) படம் பற்றியும், 'வெண்ணிற ஆடை' படம் பற்றியும் குறிப்பிட்டிருப்பார்.]

அன்புடன்,
பம்மலார்.

Karthikka810
7th September 2010, 06:00 PM
I am a great fan of NT....and I joined this forum to discuss about him and legends. Unfortunately I cannot read most of the posts as they are in Tamil. I am a foreigner of Tamil descent and I am really disappointed. :((

RAGHAVENDRA
7th September 2010, 06:51 PM
Dear Karthikka,
From your user name I guess 2 things primarily:
1. You are very young around 30.
2. You must be a male
(though male or female does not matter, it is useful to address you with respect).

Many of the hubbers do write in English and they are well versed, you can refer the postings of seniors like Murali Sir, Pammalar Sir, Saradha Madam (she is very well versed in English but prefers Tamil, I presume). It all depends on the context which demands the usage of vocabulary. Any way we shall try to present in both English and Tamiz.

Welcome to the hub and we are extremely delighted to see more and more youngsters becoming fan of Nadigar Thilagam, which clearly indicates his prowess and capacity to attract all the future generations.

Pls express what you want to in your own style and language.

Welcome once again

Regards,

Raghavendran

Murali Srinivas
8th September 2010, 12:29 AM
Welcome Karthikka. Have a great stay here. We understand that there are people like you who have problems to read if we write it in Tamil. But as Raghavender Sir pointed out, there are certain things like reviwing a movie or explaining an event that happened, Tamil language adds liveliness to the write up. Whenever it is required we use English. In fact if you check the first 4 parts of NT thread, most of it was in English.

Shiv,

Great post about Ratha Pasam. This was one film that was widely expected by the fans. As Saradha pointed out, the first 20-30 mins before the titles would be so racy and it increased our expectations. In fact we people watching the opening show on 14th June of 1980 at Madurai Sivam felt that it is going to turn out into another Thirisoolam as for as the BO is concerned. But from there on the script began to wander and after some time it lost direction.

This was precisely the reason for the fall out that happened between Vijayan and NT or let's say Vijayan and VC Shanmugam. The differences started when the film was being shot abroad and the rift became wider when shooting resumed in India. Vijayan landed himself in more trouble when news came to Annai Illam that Vijayan was boasting that he was the architect of Thirisoolam's success and that sealed the matter. It was NT who launched Vijayan as a director in Kaaval Deivam and again it was NT who gave him a prominent role as an actor in Sivandha Man. Years later, when Vijayan was still languishing in the field, it was NT who asked Balajee to fix him up for Deepam as well as asking him to wield the megaphone for Annan Oru Kovil. Vijayan after Ratha Paasam tried many tricks but could not succeed. He realised his mistake and repented for the same. NT the ever magnanimous soul he is, accepted and made Vijayan the director of Ananda Kanneer, a Sivaji Productions venture.

Krishna,

Expecting more of your posts in the lines of what you have posted when you came into the thread, recollecting the glorious yesteryears of NT saadhanaigal in Tirunelveli.

Thanks Chandrasekar.

சாரதா,

ரத்த பாசம் படத்தைப் பற்றிய மினி விமர்சனம் அருமை. மெல்லிசை மன்னர் அருமையான பாடல்களை கொடுத்த படம் இது. 80-களில் டி.எம்.எஸ். சுசீலா படிய மிக சிறந்த பாடலே என் உள்ளம் என்கின்ற வானத்திலே பாடல்தான்.

Regards

வெகு பல நாட்களுக்கு பின் இருவர் உள்ளம் படத்திலிருந்து இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா பாடல் காட்சி இன்று ஜெயா தொலைக்காட்சியில் காண வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் மட்டும் இப்போது அரங்குகளில் திரையிடப்பட்டால்? ஆஹா!

pammalar
8th September 2010, 02:21 AM
http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/soundarya-rajinikanth-ashwin-wedding/soundarya-rajinikanth-ashwin-wedding-102.html

YGM has a dollar in his neck - no prizes for guessing who is on it!!! :-)

YGM wears a chain that has Sivaji dollar in it. This was presented to him by Prabhu in a Sivaji function after NT's demise. Actually NT's wife Late Kamala Ammal played a big part in this presentation. On the day of the function, she gave Prabhu a chain with NT dollar and asked him to present it to her son YGM. Prabhu fulfilled his mother's desire. Even recently in a TV chat (Jaya TV 'Thirumbippaarkiraen'), YGM emotionally recalled this happening.

Warm Wishes,
Pammalar.

pammalar
8th September 2010, 02:30 AM
Dear Karthikka,

A warm & rousing red carpet welcome to you to our NT thread. Eagerly looking forward to your prestigious posts.

Warm Wishes,
Pammalar.

pammalar
8th September 2010, 02:50 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி!

டியர் செந்தில் சார்,

மிக்க நன்றி! "புதிய பறவை" பதிவுகள் தொடர்ந்து வரும். கப்பலோட்டிய தமிழனின் அவதாரத் திருநாளைக் கொண்டாடிய கப்பலோட்டிய தமிழனின் தேசபக்தர்களுக்கு வீர வணக்கங்கள்! இத்தகவலைப் பதிவிட்ட தங்களுக்கு பற்பல நன்றிகள்!

டியர் ஷிவ்ராம், சகோதரி சாரதா, முரளி சார்,

"ரத்தபாசம்" பதிவுகள் அருமை, அற்புதம், அபாரம்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th September 2010, 03:03 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 118

கே: கவர்ச்சிக் கண்ணன் கணேசன் இதுவரை ஏற்று நடிக்காத வேடமென்ன? (ப.இராசேந்திரன், திண்டுக்கல்)

ப: எல்லா வேடங்களிலும் நடித்து விட்டார் என்கிறீர்கள். அப்படித் தானே!

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th September 2010, 03:28 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 119

கே: சிவாஜியின் நடிப்பை அவருக்குப் பிறகு வந்த எந்தத் தலைமுறையாலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் இருக்கே... என்ன காரணம்? (பி.சிவக்குமார் பிரபு, திருப்பூர் - 6)

ப: எந்தப் பாத்திரத்தை ஏற்றாலும் பொருந்தக் கூடிய உடல்வாகு, கம்பீரம்...சட்டென்று நவரசத்தின் எந்தப் பிரிவுக்கும் ஊஞ்சல் ஆடக்கூடிய கண்கள், குரல்... இந்த இறை 'கொடை'களுடன் நாடக மேடை அனுபவம், தொழில் பக்தி, பங்க்சுவாலிட்டி ஆகியவை!

(ஆதாரம் : பொம்மை, மே 1993)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th September 2010, 03:43 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 120

கே: பராசக்தியின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் உயர்ந்த மனிதரை வாழ்விலே ஒரு நாள் பார்த்தால் (என்) பசி தீரும். ஏழைபால் அன்புக்கரங்களை நீட்டும் நான் வணங்கும் தெய்வத்தை காணும் அந்த நாள் விரைவில் வருமா? (எஸ்.சந்தானம், டேராடூன்)

ப: ஆண்டவன் கட்டளை அதுவானால் நீர் நினைப்பது நடக்குமே. அப்போது பாலும் பழமும் உண்ட மகிழ்ச்சி உமக்கு ஏற்படும் இல்லையோ?!

(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1969)

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
8th September 2010, 06:10 PM
Dear Karthikka...

Hearty welcome to our beloved 'annan NT' thread. Happy to know you are a serious fan of NT.

Sorry to know that you are not able to read many of our posts, which are posted in Tamil. As Murali pointed out, if we write in Tamil, we can able to show our full enthu and feelings, and can correctly point out what we want to mention. Thatswhy we prefer Tamil posts.

But for the desire of many fans like you, we will try to present more posts in English in future.

We all will be more happy for your continous participation in our thread. Thanks again.