PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 8



Pages : 1 [2] 3 4 5 6 7 8

abkhlabhi
22nd June 2011, 06:21 PM
VPKB - Looking back article in South Scope Magazine

http://abkhlabhi.blogspot.com/2011_06_01_archive.html

pammalar
23rd June 2011, 03:06 AM
மன்னவன் வந்தானடி : சாந்தி : 19.6.2011 ஞாயிறு மாலை
(தொடர்ந்து நிறைகிறது)

[புகைப்படப் பதிவுகளைப் பாராட்டிய mr_karthikக்கு நன்றி !]

மன்னவனுக்கு மகிழ்ச்சிகரமான ஆராதனை
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3755.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3760.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3771.jpg


அரங்கம் நிறைந்திருந்த கண்கொள்ளாக்காட்சி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3769.jpg

அன்புடன்,
பம்மலார்.

goldstar
23rd June 2011, 06:29 AM
Dear Swamy and Ragavendran sir,

Thank you for Sunday gala photos...

Murali sir, thanks a lot for Sunday gala update.

Just a question, why there is no paper, flowers when ever NT on the screen. In our Madurai, you cannot see anything on the screen whenever NT is on the screen, there will be more flowers, papers, coins... This is missing in Chennai or it is not captured in the photos..

Also, I would like to know who would be Sunday "Allapparai" in other cities like Trichy, Salem, Coimbatore, Nellai?

Cheers,
Sathish

joe
23rd June 2011, 11:19 AM
http://i18.photobucket.com/albums/b126/cdjm/Poster.jpg

abkhlabhi
23rd June 2011, 06:30 PM
Quick Witted Response of Sivaji Ganesan

From the book - A clarion call by an IPS Officer by A.P. Mohammed Ali.

Chapter 29
Page no.96 and 97

It has been announced that MGR would be visiting a coastal village in Tuticorin district by name Punnakkayal by mid-day. A police unit for security purposes had already been despatched there under an inspector Mr.Nagalingam and SI Mr.Krishnan Nair. When we learnt that MGR had left the Guest House of Tirunelveli Talaiyuthu Cements, myself, trainee ASP s Mr.Subramanian , Mr.Radhakrishnan and Mr.Sekar left by car from Kayalpattinam to Punnakkayal. I asked the Sub-Inspector through wireless if he had attended to security work in Punnakkayal. He replied that he was there only attending to work. We reached Punnakkayal by the time MGR had reached Srivaikuntam.

What we saw there shocked us . Sivaji Ganesan, a famous cine legend had reached that place and MGR fans were surrounding his vehicle agitated. Along with Sivaji, Mr.Rajasekaran, President of sivaji Ganesan Fans’ Association was also there. I told him that they had not asked for permission to address a meeting there and that permission had been given for MGR. to address a gathering. Sivaji Ganesan‘s fans were adamant and shouted that he should speak. I requested Sivaji to proceed into the town and that there would be proper protection. Without addressing the meeting, Sivaji proceeded into the town with our protection, was there for a few minutes and left the place so that MGR could address the meeting without any obstruction or problem. Thereafter MGR ‘s vehicle had come with suitable security.

Avadi to America
23rd June 2011, 07:57 PM
i was watching suhasini's pada va duet padalai today and ended up listening the song "poovizhi vasalil yaradi vanthathu kiliey kiliey" from Deepam.... What a song....i listened the song after long time probably more than 10 or 15 years... Song is really fresh and more peppy and stand tall among the crowds....would like to see hubbers comments on this song and movie. the movie was released in 1977, it's been 34 years.....WOW....

abkhlabhi
24th June 2011, 09:48 AM
Adimai penn re-release in 5 theatres in bangalore and 1 in kgf today. A great treat for mgr as well as old films fans. Hope NT films also re-release in b'lore.

mr_karthik
24th June 2011, 11:00 AM
i was watching suhasini's pada va duet padalai today and ended up listening the song "poovizhi vasalil yaradi vanthathu kiliey kiliey" from Deepam.... What a song....i listened the song after long time probably more than 10 or 15 years... Song is really fresh and more peppy and stand tall among the crowds....would like to see hubbers comments on this song and movie. the movie was released in 1977, it's been 34 years.....WOW....

A to A,

தீபம் படத்தில், 'பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே' பாடல் நடிகர்திலகத்துக்கு அல்ல. அது விஜயகுமார் - சுஜாதா ஜோடி பாடுவதாக வரும் பாடல். நடிகர்திலகத்தின் படத்துக்கு இளையராஜா இசையமைத்த முதல் படம். இதே ஆரம்ப மெட்டை வைத்து இளையராஜா பின்னர் நல்லவனுக்கு நல்லவன் படத்தில் 'வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே' என்ற பாடலை இசையமைத்தார்.

groucho070
24th June 2011, 11:12 AM
A to A,

தீபம் படத்தில், 'பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே' பாடல் நடிகர்திலகத்துக்கு அல்ல. அது விஜயகுமார் - சுஜாதா ஜோடி பாடுவதாக வரும் பாடல். நடிகர்திலகத்தின் படத்துக்கு இளையராஜா இசையமைத்த முதல் படம். இதே ஆரம்ப மெட்டை வைத்து இளையராஜா பின்னர் நல்லவனுக்கு நல்லவன் படத்தில் 'வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே' என்ற பாடலை இசையமைத்தார்.Wow, didn't realise that. Thanks boss.

Avadi to America
24th June 2011, 06:52 PM
A to A,

தீபம் படத்தில், 'பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே' பாடல் நடிகர்திலகத்துக்கு அல்ல. அது விஜயகுமார் - சுஜாதா ஜோடி பாடுவதாக வரும் பாடல். நடிகர்திலகத்தின் படத்துக்கு இளையராஜா இசையமைத்த முதல் படம். இதே ஆரம்ப மெட்டை வைத்து இளையராஜா பின்னர் நல்லவனுக்கு நல்லவன் படத்தில் 'வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே' என்ற பாடலை இசையமைத்தார்.

Thank you karthik.....it was an amazing song by IR....i was listening the song throughout yesterday.

RAGHAVENDRA
24th June 2011, 07:00 PM
கதைக்களப் பாடல்களில் நடிகர் திலகம் – 05

விழாப் பாடல்களில் நடிகர் திலகம் பாடி நடிப்பதும் உண்டு, பார்வையாளராகவும் வருவதுண்டு. அவை சில சூழ்நிலைகளில் தன் கதையையும் சொல்லக் கூடியதாக அமைவதுண்டு. அப்படி ஓர் சூழ்நிலையில் இதற்கு முன் பட்டாக்கத்தி பைரவன் படப் பாடலைப் பார்த்தோம்.
தற்போது பார்க்க இருப்பதும் ஒரு வாழ்த்துப் பாடலே. இதில் நடிகர் திலகம் பாடி நடிப்பார். நின்று கொண்டும் அசைந்து கொண்டும் நடந்து கொண்டும் படிகளில் ஏறிக் கொண்டும் பாடும் போது அவர் சித்தரிக்கும் நளினம் -- அது அவரால் மட்டுமே முடியும். குறிப்பாக இப் பாடலில் படிக் கட்டில் இருந்து பாடிக் கொண்டே இறங்கும் போது, ஒவ்வொரு படிக் கட்டிலும் வெவ்வேறு நடன வடிவினை வெளிப் படுத்தி, அந்தத் தாளக் கட்டினை மிகச் சரியாக கடைப் பிடித்து, இறங்கும் போது மிகவும் யதார்த்தமாக இறங்கும் போது எப்போது படிக் கட்டு இடறுமோ என்ற நமக்குத் தான் பரபரப்பு உண்டாகும். மிகவும் அநாயாசமாக அந்தக் காட்சியில் நடனம் ஆடியிருப்பார். இப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்றால் அதற்கு இப்பாடலும் முக்கிய காரணம். மெல்லிசை மன்னரின் மெட்டு, என்றென்றும் ஹிட்டு....குரல் டி.எம்.எஸ்., பாடல் கண்ணதாசன்....படம் - தங்கை. பாடல் ... கேட்டவரெல்லாம் பாடலாம்...


http://www.dailymotion.com/video/xfkrxw_keettavarellan-paadalam_school

அன்புடன்

RAGHAVENDRA
24th June 2011, 07:13 PM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 19

நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் இணைந்து நடித்த படங்கள், அதுவும் குறிப்பாக 50 களில் என்றால் -- ஆஹா... பார்த்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு அற்புதமான சிருங்கார ரசத்தின் மேன்மையை இருவரும் தங்களுடைய கலையின் மூலம் சித்தரித்திருப்பார்கள். அப்படிப் பட்ட பாடல்களில் ஒன்று மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த இல்லற ஜோதி திரைப்படமாகும். கண்ணதாசன் வசனத்தில் வெளிவந்த இப்படத்தில் வரக்கூடிய அனார்கலி-சலீம் காட்சிக்கு கலைஞர் அவர்கள் வசனம் எழுதியிருப்பார். அப்படத்தில் இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களின் இசையமைப்பில் மிகச் சிறப்பாக அமைந்த பாடல், களங்கமில்லா காதலிலே காண்போம் இயற்கையெலாம் பாடலாகும். குரல் ஏ.எம்.ராஜா, ஜிக்கி. பாடலைப் பார்ப்போம்..


http://www.dailymotion.com/video/xf603r_kalangmilla-kathalile-illara-jothi_shortfilms

அன்புடன்
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்

RAGHAVENDRA
24th June 2011, 07:32 PM
http://www.muthamil.com/2011/images/kannadasan32.jpg

கவியரசருக்கு பிறந்தநாள் நினைவு - சிறப்புப் பாடல்


http://www.dailymotion.com/video/xiji4n_oho-odum-ennangale_people

ஓஹோ...ஓடும் எண்ணங்களே..

வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மூடும் பனியில் நனைவோம் இங்கே ....
--- கண்ணதாசன்

கவியரசரே
வருஷம் தோறும் உம்மைத் தேடி வருவோம் இங்கே
பாடல் வரியில் தேடும் குரலில் காண்போம் இங்கே
ஒன்று சேர்வோம் உம்மைக் காண்போம் - உள்ளமெல்லாம் பாடுவோம்
ஆடி ஆடி பாடிப் பாடி ஆயுள் முழுதும் மருகுவோம்...

அன்புடன்

RAGHAVENDRA
25th June 2011, 08:19 AM
கண்ணுக்கு குலமேது, இனமேது, மொழியேது - 01

எந்த மொழியாயினும் தன் நடிப்பால் வென்று காட்டினார் நடிகர் திலகம், விழியாலே மொழி பேசும் கலைஞனுக்கு, வார்த்தைகளை உதட்டால் பேசவும் தெரியும் விழியால் பேசவும் தெரியும். தன் கண்ணுக்கு குலமேது, இனமேது, மொழியேது என நிரூபித்தவர் நடிகர் திலகம். அப்படி அவர் நடித்த வேற்று மொழிப் படங்களிலிருந்து காட்சிகளை ஆய்வு செய்யும் முயற்சியே இது. தொடக்கமாக 1964ல் வெளிவந்த பக்த ராமதாஸு திரைப்படத்தில் நடிகர் திலகம் நடித்த காட்சி. இக் காட்சியில் தன் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார் நடிகர் திலகம். இது தெலுங்குப் படமாகும். அக்கினேனி நாகேஸ்வரராவ், நந்தமுரி தாரக ராமராவ், அஞ்சலி தேவி, கும்மடி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் ராமதாஸாக நடித்து, படத்திற்கு இசையமைத்து இயக்கமும் செய்தவர் சித்தூர் நாகையா. இப் படத்தின் மற்றொரு சிறப்பு முகமது ரபி அவர்கள் சில பாடல்களைப் பாடியுள்ளதாகும்.
ராமதாஸ் அவர்களின் இயற் பெயர் கோபண்ணா. ராமர் மேல் அதீத பக்தியுள்ளவர். தானே பாடல்களை இயற்றி, இசையமைத்து பாடுவார். பத்ராசலத்தில் உள்ள ராமர் கோயில் மிகவும் பரிதாபமான நிலையில் இருந்ததைக் கண்டு மன வருத்தமுற்று அக்கோயிலைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுகிறார். சந்தர்ப்ப வசத்தால் சுல்தானின் ஆட்சியில் கோல்கொண்டா கோட்டையில் சிறை வைக்கப் படுகிறார். கிட்டத்தட்ட 11 முதல் 12 ஆண்டுகள் சிறை வாசம். தான் வணங்கும் கடவுளை மிகவும் மன வருத்தத்துடன் வேண்டுகிறார். லட்சுமி தேவி இரக்கப் பட்டு விஷ்ணுவிடம் காரணம் கேட்க, பூர்வ ஜென்ம பாவத்தின் காரணத்தால் ராமதாஸு இந்த ஜென்மத்தில் கஷ்டப் படுவதாக மகாவிஷ்ணு கூறுகிறார். பின் அவரைக் காப்பாற்ற எண்ணி, தான் ராமராகவும் ஆதிசேஷனை லக்ஷ்மணனாகவும் உருவெடுத்து சுல்தான் முன் தோன்றி, ராமதாஸுவின் கஷ்டத்திற்கு நிவர்த்தி செய்கிறார்.
இந்தக் காட்சியில் விஷ்ணுவாக நாகேஸ்வரராவ், லக்ஷ்மியாக அஞ்சலி தேவி, ராமராக என்.டி.ராமராவ், சுல்தானாக கும்மடி தோன்ற, லட்சுமணனாக நடிகர் திலகம் பாத்திரமேற்று தன் நடிப்பால் அக்காட்சிக்கு ஜீவன் அளித்திருப்பார். இப்பாடலில் எம்.சத்யம் (மங்கையர் திலகம் படத்தில் நீ வரவில்லையெனில் ஆதரவேது பாடலில் நடிகர் திலகத்திற்காக பின்னணி பாடியவர்), கும்மடிக்காகவும், சீர்காழி கோவிந்தராஜன் நடிகர் திலகத்திற்காகவும், வி.என்.சுந்தரம் அவர்கள் என்.டி.ராமராவ் அவர்களுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார்கள். இனி பாடலைப் பாருங்கள்.


http://www.youtube.com/watch?v=Fz-AMoNAUlg

அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்

NOV
25th June 2011, 09:52 AM
கவியரசருக்கு பிறந்தநாள் நினைவு - சிறப்புப் பாடல்

குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதும் இல்லை ..
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதும் இல்லை ..
ஆசை... பாசம்... காதலில்.. விழுந்தான், அமைதியை காணவில்லை ....
அலைந்தான் தவித்தான் ... துடித்தான் மடிந்தான்... யாருக்கும் லாபமில்லை ..


http://www.youtube.com/watch?v=pn0uw9lNpOE&feature=share

parthasarathy
25th June 2011, 10:03 AM
கதைக்களப் பாடல்களில் நடிகர் திலகம் – 05

விழாப் பாடல்களில் நடிகர் திலகம் பாடி நடிப்பதும் உண்டு, பார்வையாளராகவும் வருவதுண்டு. அவை சில சூழ்நிலைகளில் தன் கதையையும் சொல்லக் கூடியதாக அமைவதுண்டு. அப்படி ஓர் சூழ்நிலையில் இதற்கு முன் பட்டாக்கத்தி பைரவன் படப் பாடலைப் பார்த்தோம்.
தற்போது பார்க்க இருப்பதும் ஒரு வாழ்த்துப் பாடலே. இதில் நடிகர் திலகம் பாடி நடிப்பார். நின்று கொண்டும் அசைந்து கொண்டும் நடந்து கொண்டும் படிகளில் ஏறிக் கொண்டும் பாடும் போது அவர் சித்தரிக்கும் நளினம் -- அது அவரால் மட்டுமே முடியும். குறிப்பாக இப் பாடலில் படிக் கட்டில் இருந்து பாடிக் கொண்டே இறங்கும் போது, ஒவ்வொரு படிக் கட்டிலும் வெவ்வேறு நடன வடிவினை வெளிப் படுத்தி, அந்தத் தாளக் கட்டினை மிகச் சரியாக கடைப் பிடித்து, இறங்கும் போது மிகவும் யதார்த்தமாக இறங்கும் போது எப்போது படிக் கட்டு இடறுமோ என்ற நமக்குத் தான் பரபரப்பு உண்டாகும். மிகவும் அநாயாசமாக அந்தக் காட்சியில் நடனம் ஆடியிருப்பார். இப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்றால் அதற்கு இப்பாடலும் முக்கிய காரணம். மெல்லிசை மன்னரின் மெட்டு, என்றென்றும் ஹிட்டு....குரல் டி.எம்.எஸ்., பாடல் கண்ணதாசன்....படம் - தங்கை. பாடல் ... கேட்டவரெல்லாம் பாடலாம்...


http://www.dailymotion.com/video/xfkrxw_keettavarellan-paadalam_school

அன்புடன்

அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நளினம் மற்றும் கௌரவமான நடிப்பால் மிகப் புகழ் பெற்ற "கேட்டவரெல்லாம் பாடலாம்" பாடலைப் பதிந்தமைக்கு நன்றிகள் பல.

இந்தப் பாடலின் பின்னணி - அநேகமாக பலருக்குத் தெரிந்திருக்கும். இந்தப் பாடலுக்குண்டான மெட்டை - வழக்கம் போல் மெல்லிசை மன்னர் அவர்கள் இயக்குனர் ஏ.சி.டிக்கும் தயாரிப்பாளர் பாலாஜிக்கும் பல மெட்டுகளைக் கொடுத்து அவைகளில் ஒன்றைத் தேர்வு செய்ய முடியாமல் அவர்களும் திணறிக்கொண்டு இருந்தார்களாம் - வழக்கம் போல் அனைத்துமே நன்றாக இருந்ததால்! அப்பொழுது அங்கு ஒரு தபால்காரர் வர, திடீரென்று பாலாஜி அவர்கள் அந்தத் தபால்காரரை அந்த பல மெட்டுகளில் ஒன்றைத் தேர்வு செய்யச் சொல்லி, அவர் தேர்வு செய்ததுதான் இந்தப் புகழ் பெற்ற பாடல்! இந்தப் பின்னணிச் செய்தியை திரு. பாலாஜி அவர்களே எழுபதுகளின் இறுதியில் வானொலியில் ஒலிபரப்பான சிறப்புத் தேன்கிண்ணத்தில் தெரிவித்தார். மேலும், அந்தத் தபால்காரரை நிரந்தரமாக சுஜாதா சினி ஆர்ட்ஸில் வேலைக்கு அமர்த்தி, இது போன்ற கிரியேட்டிவான பணிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டதாகவும் மேலும் கூறினார்!!

அன்றிலிருந்து இன்று வரை, மேடைகளில் பாடப்படும் பல புகழ் பெற்ற பாடல்களில் முன்னணியில் இடம் பெறும் பாடல் இது என்றால் அது மிகையாகாது. பாலாஜி அவர்களின் பல படங்களுக்கு - "உனக்காக நான்" வரை மெல்லிசை மன்னர் தொடர்ந்து இசையமைத்தார். பின்னர், எனக்குத் தெரிந்து "தீர்ப்பு" படத்திலிருந்து, மறுபடியும் தொடர்ந்தார் - இடையில் "நீதிபதி" கங்கை அமரன். இந்தக் கூட்டணிக்கு "தங்கை" படத்தில் அமைந்தது போல் அனைத்துப் பாடல்களுமே சிறப்பாக மற்ற படங்களில் அமையவில்லை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

இந்தப் பாடலில் ஒரு கருப்பு நிற டி-ஷர்ட் - நடிகர் திலகத்திற்கு மிகப் பொருத்தமாக, அழகாக இருக்கும். "தங்கை" - இந்தப் படத்தை பற்றி எப்போது நினைவு கூர்ந்தாலும், மனம் பழைய ஞாபகங்களை அசை போட ஆரம்பித்து விடும். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இது எப்போதுமே முன்னணியில் இருக்கும்.

நினைவுகளை அசை போட வாய்ப்பளித்த தங்களுக்கு மறுபடியும் நன்றி.

அன்புடன்,

பார்த்தசாரதி

J.Radhakrishnan
25th June 2011, 01:12 PM
கவியரசரே
வருஷம் தோறும் உம்மைத் தேடி வருவோம் இங்கே
பாடல் வரியில் தேடும் குரலில் காண்போம் இங்கே
ஒன்று சேர்வோம் உம்மைக் காண்போம் - உள்ளமெல்லாம் பாடுவோம்
ஆடி ஆடி பாடிப் பாடி ஆயுள் முழுதும் மருகுவோம்...

டியர் ராகவேந்தர் சார்,

உண்மையான வார்த்தைகள்....

mr_karthik
25th June 2011, 02:25 PM
// பாலாஜி அவர்களின் பல படங்களுக்கு - "உனக்காக நான்" வரை மெல்லிசை மன்னர் தொடர்ந்து இசையமைத்தார். பின்னர், எனக்குத் தெரிந்து "தீர்ப்பு" படத்திலிருந்து, மறுபடியும் தொடர்ந்தார் - இடையில் "நீதிபதி" கங்கை அமரன். இந்தக் கூட்டணிக்கு "தங்கை" படத்தில் அமைந்தது போல் அனைத்துப் பாடல்களுமே சிறப்பாக மற்ற படங்களில் அமையவில்லை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.//

ஸாரி பார்த்தசாரதி சார்,

உங்கள் கூற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் தம்பி, எங்கிருந்தோ வந்தாள், ராஜா, நீதி போல பல படங்களில் இந்தக்கூட்டணியின் பாடல்கள் பெருவெற்றிபெற்றுள்ளன.

பாடல்கள் சோடைபோன ஒரே படமென்றால் அது 'திருடன்' மட்டுமே. அதில் 'கோட்டை மதில்மேலே ஒரு வெள்ளைப்பூனை' பாடல் தவிர வேறெதுவும் தேறவில்லை. 'பழனியப்பன் பழனியம்மாவா' மற்றும் 'என் ஆசை என்னோடு' பாடல்கள் எல்லாம் சுமாருக்கும் கீழே.

Additional Info: முன்பு சிறப்புத்தேன்கிண்ணம் வழங்கிய நடிகை விஜயலலிதா, தான் நடிகர்திலகத்துடன் நடித்த பாடல்களைப்பற்றி பெருமையாகக்கூறிவிட்டு ஒளிபரப்பியவை மூன்று பாடல்கள்.. கோட்டை மதில் மேலே (திருடன்), உங்க நல்ல மனசுக்கொரு (எதிரொலி) மூன்றாவது?.. சந்தேகமே வேண்டாம் சொர்க்கத்தில் வரும் 'பொன்மகள் வந்தாள்' தான்.

KCSHEKAR
29th June 2011, 12:54 PM
திரைப்பட விமரிசனங்கள் / பார்வைகள்
-----------------------------------

1.அம்பிகாபதி -திரைப்படப் பார்வை -பாலாஜி

2.என்னைப் போல் ஒருவன் -திரைப்படப் பார்வை -சாரதா

3.ராஜா -திரைப்படப் பார்வை -சாரதா

4.பொன்னூஞ்சல் -திரைப்படப் பார்வை -groucho070

5.சவாலே சமாளி -திரைப்படப் பார்வை -சாரதா

6.அன்பைத் தேடி -திரைப்படப் பார்வை -சாரதா

7.எங்க மாமா,மூன்று தெய்வங்கள் -திரைப்படப் பார்வை --சாரதா

8.புதிய பறவை-திரைப்படப் பார்வை -பாலாஜி

9.அந்த நாள்-திரைப்படப் பார்வை -பாலாஜி

10.அந்த நாள்-திரைப்படப் பார்வை -சாரதா

11.கப்பலோட்டிய தமிழன் - groucho070

12.பிராப்தம்,மூன்று தெய்வங்கள்,தர்மம் எங்கே,ராஜராஜசோழன்,சிவகாமியின் செல்வன்,வாணிராணி -ஒரு பார்வை - முரளி ஸ்ரீனிவாஸ் </a>

13.தங்கச்சுரங்கம் - - சாரதா

14. ஊட்டி வரை உறவு - - rajeshkrv

15. ஆட்டுவித்தால் யாரொருவர் - அவன் தான் மனிதன் - - சாரதா

16. பாசமலர் - - பாலாஜி

17. நிறைகுடம் - - முரளி ஸ்ரீனிவாஸ்

18. நிறைகுடம் ,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - - groucho070,முரளி ஸ்ரீனிவாஸ்

19. இரு மலர்கள் - - முரளி ஸ்ரீனிவாஸ்

20. விடிவெள்ளி - - NOV

21. நெஞ்சிருக்கும் வரை - - முரளி ஸ்ரீனிவாஸ்

22. மரகதம் - - முரளி ஸ்ரீனிவாஸ்

23. பாக்கியவதி - - NOV

24. அமர தீபம் - - முரளி ஸ்ரீனிவாஸ்

25. அன்னை இல்லம் - - NOV

26. உத்தம புத்திரன் - - முரளி ஸ்ரீனிவாஸ்

27. கூண்டுக்கிளி - - முரளி ஸ்ரீனிவாஸ்

28. இளைய தலைமுறை - - சாரதா

29. பலே பாண்டியா - - முரளி ஸ்ரீனிவாஸ்

30. படிக்காத மேதை - - முரளி ஸ்ரீனிவாஸ்

31. எங்கிருந்தோ வந்தாள் - - சாரதா

32. சுமதி என் சுந்தரி - - சாரதா


33. நீதி - - சாரதா

34. தெய்வமகன் -1
தெய்வமகன் -2 தெய்வமகன் -3 - - முரளி ஸ்ரீனிவாஸ்

35. வியட்நாம் வீடு - - சாரதா

36. அம்மம்மா - ராஜபார்ட் ரங்கத்துரை - - mr_karthik

37. பாசமலர் - - rangan_08

38. எதிரொலி - - groucho070

39. குங்குமம் - -NOV

40. சரஸ்வதி சபதம் - -groucho070

41. திருவருட்செல்வர் - -சாரதா

42. ஆண்டவன் கட்டளை - -முரளி ஸ்ரீனிவாஸ்

43. குலமகள் ராதை - -முரளி ஸ்ரீனிவாஸ்

44. ரத்தத்திலகம் - -முரளி ஸ்ரீனிவாஸ்

45. சித்தூர் ராணி பத்மினி - -முரளி ஸ்ரீனிவாஸ்

46. நீலவானம் - -முரளி ஸ்ரீனிவாஸ்

47. பேசும் தெய்வம் - -முரளி ஸ்ரீனிவாஸ்

48. காத்தவராயன் - -பிரபு ராம்

49. வைர நெஞ்சம் - -சாரதா

50. மகாகவி காளிதாஸ் - -முரளி ஸ்ரீனிவாஸ்


51. கை கொடுத்த தெய்வம் - -முரளி ஸ்ரீனிவாஸ்

52. ராமன் எத்தனை ராமனடி - -சாரதா

53. தங்கை - - முரளி ஸ்ரீனிவாஸ்

54. பார் மகளே பார் - - Irene Hastings

55. என் தம்பி - - முரளி ஸ்ரீனிவாஸ்

56. திருடன் - - முரளி ஸ்ரீனிவாஸ்



மற்றவை
---------

1.உலக அளவில் விருதுகள்! -விகடன் கட்டுரை

2.நடிகர் திலகத்தின் வெற்றி பரணி (1971-1975) -முரளி ஸ்ரீனிவாஸ்

3.நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் முழுப் பட்டியல் - நக்கீரன்

4.நாட்டிய மேதையும் நடிகர் திலகமும்!-விகடன் கட்டுரை

திரு.முரளி, சாரதா மேடம்,

மேற்கண்ட பதிவுகளை படிக்க முதல் பக்கத்தில் உள்ள LINK click செய்தால் படிக்க இயலவில்லை. அதன் லிங்க்கை எனக்காக அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

RAGHAVENDRA
29th June 2011, 01:09 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/shantitheatreap520img.jpg?t=1309333612
மேற்கண்ட நிழற்படத்தில் சென்னை சாந்தி திரையரங்கு 1969ம் ஆண்டில் எப்படி தோற்றமளித்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நடிகர் திலகத்தின் பின்னால் சாந்தி திரையரங்கின் முகப்பில் தங்கசுரங்கம் திரைப்படத்தின் பேனரும், பக்கவாட்டில் பாரதியுடன் நடிகர் திலகம் பாடல் காட்சியில் தோன்றும் கட்அவுட்டினையு்ம், அதில் நடிகர் திலகத்தின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்திருப்பதையும் காணலாம். இக்காட்சி அஞ்சல் பெட்டி 520 திரைப்படத்தில் இடம் பெற்றதாகும். இப்படம் ராஜ் டிவி நிறுவனத்தால் டிவிடியாக வெளியிடப் பட்டுள்ளது.

அன்புடன்

groucho070
29th June 2011, 01:46 PM
Holy moly! He looks fantastic there, haven't watch the movie though. I suppose the filmakers couldn't do anything to the cutout. Athu vera my fav NT action film.

mr_karthik
29th June 2011, 05:39 PM
ராகவேந்தர் சார்,

மிக அபூர்வமான ஸ்டில்லை (அஞ்சல் பெட்டி 520) அளித்தமைக்கு மிக்க நன்றி. நடிகர்திலகமும் அபிநய சரஸ்வதியும் என்ன அழகு, என்ன ஒரு உடல்வாகு. சாரதாவுக்கு மிகவும் பிடித்த ஒல்லியான உடல்வாகு கொண்டிருந்த காலத்தில் வந்த படம்.

அது எங்கே எடுக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். (அந்த ஏரியாவிலேயே உருண்டு புரண்டவர் நீங்கள், நானும்கூட). தெரியாவர்களுக்காக...., இக்காட்சி சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் நிலைய மாடியில் எடுக்கப்பட்டது. அவசரப்பட்டு போஸ்ட் செய்துவிட்ட ஒரு கடிதத்தைத் திரும்பப்பெற நடக்கும் போராட்டமே கதையாதலால், அஞ்சலகக் காட்சிகள் அடிக்கடி வரும். அத்துடன் சாந்தி திரையரங்கமும் காண்பிக்கப்படும். இது ஒரு ஆங்கிள்.

இன்னொரு ஆங்கிளில் கேமரா வைக்கப்பட்டிருக்கும்போது, சாந்தி முகப்பில் தங்கச்சுரங்கம் படத்தின் முழு பேனரும், நடிகர்திலகம் 'விவகாரமான' தொப்பியணிந்து கண்ணில் கண்ணாடியுடன் இடது கையில் துப்பாக்கி பிடித்து நிற்கும் கட்-அவுட், வெகுநேரம் காட்சியில் இடம்பெறும்.

டி.என்.பாலு முதன்முதலாக இயக்குனராக அறிமுகமான படம் அஞ்சல்பெட்டி 520. தன் குருநாதர் ராமண்ணாவின் படம் தங்கச்சுரங்கம் என்பதால் அதிகக் காட்சிகளில் கவர் பண்ணினாரோ என்னவோ.

PARAMASHIVAN
29th June 2011, 05:53 PM
Hi All

Can some one pls tell me the movie which featured the following song (my words may be wrong, advance Apologies)

"Naan Kavignanum illai nalla rasiganum illai kadhal ennum .... naan ..."

Many thanks

rsubras
29th June 2011, 06:04 PM
that is from padithal mattum podhuma @ Paramu

PARAMASHIVAN
29th June 2011, 06:23 PM
Thanks Subramanian :)

groucho070
30th June 2011, 07:13 AM
that is from padithal mattum podhuma @ ParamuMore than NT's scene, this song reminds me of Savithiri in Navarathiri, her response to the Doctor NT. Fantastic performance, one moment she's funny and then when she starts talking about sufferings women has to go through....:sad: When I think of current days actresses....sari vidungga.

goldstar
30th June 2011, 09:15 AM
மேற்கண்ட நிழற்படத்தில் சென்னை சாந்தி திரையரங்கு 1969ம் ஆண்டில் எப்படி தோற்றமளித்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நடிகர் திலகத்தின் பின்னால் சாந்தி திரையரங்கின் முகப்பில் தங்கசுரங்கம் திரைப்படத்தின் பேனரும், பக்கவாட்டில் பாரதியுடன் நடிகர் திலகம் பாடல் காட்சியில் தோன்றும் கட்அவுட்டினையு்ம், அதில் நடிகர் திலகத்தின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்திருப்பதையும் காணலாம். இக்காட்சி அஞ்சல் பெட்டி 520 திரைப்படத்தில் இடம் பெற்றதாகும். இப்படம் ராஜ் டிவி நிறுவனத்தால் டிவிடியாக வெளியிடப் பட்டுள்ளது.

அன்புடன்


Wow, very cute NT.

I have seen Anjal Metti 520 in our Madurai Kalpana theatre. Very rarely this movie re-released in theatre even in 80s.

I should get a copy of this movie DVD this time when I visit Madurai.

Ragavendran sir, can we please have our NT movies released time cutouts with garlands and released date first show "Allapparai" photos?

Cheers,
Sathish

Mahesh_K
30th June 2011, 08:21 PM
more than nt's scene, this song reminds me of savithiri in navarathiri, her response to the doctor nt. Fantastic performance, one moment she's funny and then when she starts talking about sufferings women has to go through....:sad: When i think of current days actresses....sari vidungga.

அதுவும் அந்த " நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் " .... மறக்க முடியாத பெர்பார்மன்ஸ் . சும்மாவா அவரை நடிகையர் திலகம்ன்னு சொன்னாங்க.

இன்னொரு விஷயம் தான் 9 வேடத்தில் நடிக்கும் படத்தில் தனக்கு இணையாக கதாநாயகிக்கும் ஸ்கோப் இருப்பதை அனுமதித்த nt யின் பெருந்தமை ... வேறு எவருக்கு வரும்? . அசாதாரணமான தன்னம்பிக்கை அவருக்கு.

goldstar
1st July 2011, 05:51 AM
அதுவும் அந்த " நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் " .... மறக்க முடியாத பெர்பார்மன்ஸ் . சும்மாவா அவரை நடிகையர் திலகம்ன்னு சொன்னாங்க.

இன்னொரு விஷயம் தான் 9 வேடத்தில் நடிக்கும் படத்தில் தனக்கு இணையாக கதாநாயகிக்கும் ஸ்கோப் இருப்பதை அனுமதித்த nt யின் பெருந்தமை ... வேறு எவருக்கு வரும்? . அசாதாரணமான தன்னம்பிக்கை அவருக்கு.

Mahesh sir,

You are 100% correct, just think of current actors, even they won't allow to say one word against them in the movie and will prevent to do any thing more them and never ever allow to dominate on the screen. Thats shame. Any how only NT has given freedom to do individual best.

Long live NT fame.

Sathish

RAGHAVENDRA
1st July 2011, 06:41 AM
அஞ்சல் பெட்டி 520 படத்தில் இடம் பெற்ற சாந்தி திரையரங்க காட்சிகளின் மேலும் சில நிழற்படங்கள். கார்த்திக் நீங்கள் கூறிய காட்சி இதுதானே..

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/shantitheatreap520img2.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/shantitheatreap520img3.jpg

அன்புடன்

ராகவேந்திரன்

KCSHEKAR
1st July 2011, 03:36 PM
அஞ்சல் பெட்டி-520 மலரும் நினைவுகளாக புகைப்படங்களை திரியில் அஞ்சல் செய்த திரு ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி.

RAGHAVENDRA
1st July 2011, 04:48 PM
இன்று ஜூலை 1 - நடிகர் திலகத்தின் இரு பெறும் திரைக்காவியங்கள் வெளியான 50வது ஆண்டு நிறைவு -
எல்லாம் உனக்காக - 01.07.1961
ஸ்ரீ வள்ளி - 01.07.1961

ஸ்ரீ வள்ளி

நரசு ஸ்டூடியோஸ் தயாரித்து டி.ஆர் ராமண்ணா அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த திரைச் சித்திரம். சில திட்டமிட்ட பிரச்சாரங்களால் பெரும் விமர்சனத்தை சந்ததித்தது. என்ன இருந்தாலும் டி.ஆர். மகாலிங்கம் படம் போல் இல்லை என்ற மேம்போக்கான விமர்சனம் பரவலாக பரப்பப்பட்டதால் பாதிப்பு அடைந்தது. போதாக்குறைக்கு மிகப் பெரும் வெற்றி பெற்ற பாசமலரின் ஆரவார நடைக்கு முன் ஈடு கொடுக்க முடியாமல் போனது. அது மட்டுமன்றி போட்டிக்கு நடிகர் திலகத்தின் இன்னொரு படமும் அதே நாளில் வெளியானதும் இதனுடைய வெற்றிக்கு தடை போட்டது.
ஆனால் படத்தைப் பார்த்தால் இந்த விமர்சனங்கள் சற்று நியாயக் குறைவை நோக்கி செல்வதாக நமக்கு தோன்றுவது தவிர்க்க இயலாதது. ஜி.ராமநாதனின் அருமையான பாடல்களே இதற்கு கட்டியம் கூறும். தன் பங்கிற்கு சற்றும் குறை வைக்காமல் நடிகர் திலகம் உழைத்துள்ளது நன்கு தெரிகிறது. மேம்போக்கான விமர்சனமே இப்படத்தின் வெற்றியை தடை செய்தது என்பதே என் தாழ்மையான எண்ணம்.

இப்படத்தின் விளம்பரங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/SriValliAd01forPB.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/SriValliAd02forPB.jpg

ஹிந்து நாளிதழில் வெளியான இப்படத்தைப் பற்றிய குறிப்புக் கட்டுரைக்கான இணைப்பு (http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article1493902.ece)

இப்படத்தின் ஒளிக்காட்சியாக இணையத்தில் ஒரு பாடல் மட்டுமே கிடைத்துள்ளது. அதுவும் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் கம்பீரமான குரலில் சிறந்த பாடல்


http://www.youtube.com/watch?v=_DKeeOQAoYk

இப்படத்தின் பாடல்களைக் கேட்டு மகிழ

http://www.jointscene.com/tamil-movies/sri_valli_-_1961.html

RAGHAVENDRA
1st July 2011, 04:49 PM
எல்லாம் உனக்காக

இதுவும் மிகப் பெரும் வெற்றியைக் கண்டிருக்க வேண்டிய படம். தொழிற் சங்க ஈடுபாட்டினால் சொந்த வாழ்க்கையில் சங்கடங்களை சந்திக்கும் ஒரு தொழிலாளியின் கதை. பாச மலர் திரைப் படத்தின் மாபெரும் வெற்றியினால் பாதிப்படைந்த படம். பாடல்கள் இசை நடிப்பு என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். எஸ்.வி.ரங்காராவ், சாவித்திரி இவர்களுடன் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனின் சிறந்த உழைப்பை வெளிப்படுத்திய படம். சென்டிமென்ட என்ற காரணத்தினால் திரைப்படங்கள் பாதிப்படையக் கூடும் என்ற கூற்றுக்கு உதாரணம் காட்ட வேண்டுமானால் இப்படத்தை சொல்லலாம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/EUAd01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/EUAd02.jpg

இப்படத்தின் பாடல் அல்லது காட்சி யாவும் கிடைக்க வில்லை. பாடல்களை கீழ்க்காணும் இணைய தளத்தில் கேட்கலாம்.

http://www.jointscene.com/movies/kollywood/Ellam_Unakkaga/4296

mr_karthik
1st July 2011, 05:35 PM
ராகவேந்தர் சார்,

அஞ்சல்பெட்டி 520 படத்தில் நான் குறிப்பிட்ட அந்தக்காட்சியை உடனுக்குடன் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. படங்கள் யாவும் மிக அருமையாக உள்ளன.

'எல்லாம் உனக்காக' மற்றும் 'ஸ்ரீ வள்ளி' படங்களின் பொன்விழா நாளையும் தவறாமல் நினைவுகூர்ந்துள்ளீர்கள். ஆகா ஓகோ என்று ஓடிய படங்களை மட்டுமல்லாது இப்படிப்பட்ட, நன்றாக அமைந்தும் வெற்றி வாய்ப்பினை இழந்த படங்களையும் நினைவுகூர்வதே நடிகர்திலகத்துக்கு செய்யும் சேவை.

இவற்றில் 'எல்லாம் உனக்காக' பார்த்திருக்கிறேன். 'மலரும் கொடியும் பெண்ணென்பார்' பாடல் மிகவும் பசுமையாக நினைவில் உள்ளது. டி.எம்.எஸ்.மிக அமைதியாகப்பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று.

ஸ்ரீ வள்ளி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது கலர்ப்படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் முழுநீள கலர்ப்படம் என்று நீங்கள் அளித்துள்ள விளம்பரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது என்ன வகை கலர்?. நான் இதைக்கேட்கக்காரணம், தமிழில் முதல் கேவா கலர்ப்படம் 'அலிபாபா' என்பதும், முதல் டெக்னிக் கலர் படம்' வீரபாண்டிய கட்டபொம்மன்' என்பதும் (இர்ண்டாவது டெக்னிக் கலர்ப்படம் 'கொஞ்சும் சலங்கை'), முதல் ஈஸ்ட்மென் கலர்ப்படம் 'கர்ணன்' என்பதும் நமக்குத்தெரியும். இவற்றுக்கு இடையே 1961-ல் வெளியான ஸ்ரீ வள்ளி கேவா கலரா அல்லது டெக்னிக் கலரா?. (இப்போது டி.வி.டி. வெளியாகியிருக்கிறது. வேறு மாநிலத்தில் இருப்பதால் இன்னும் பார்க்கவில்லை).

RAGHAVENDRA
3rd July 2011, 10:26 AM
http://www.hindu.com/lf/2004/12/26/images/2004122610580201.jpg

இன்று 03.07.2011 அன்று பிறந்த நாள் காணும் அன்பு சகோதரர் ராம்குமார் கணேசன் அவர்களுக்கு நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்


http://www.youtube.com/watch?v=i7rJ_HATYZE

இப்பாடலை ராம்குமார் அவர்களுக்கு அன்புப் பரிசளிப்போம்

அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
4th July 2011, 12:30 AM
சவாலே சமாளி மாணிக்கத்திற்கு 41வது ஜெயந்தி[3.7.1971 - 3.7.2011]

சாதனைப் பொன்னேடுகள்

First Release Ad : The Hindu : 3.7.1971
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3796.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 3.7.1971
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3793.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 10.10.1971
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3798a.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th July 2011, 02:58 AM
இதயதெய்வம் நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர் தளபதி ராம்குமார் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் [ஜுலை 3] நல்வாழ்த்துக்கள் !
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/S9.jpg

பாசத்துடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
4th July 2011, 03:22 AM
ஸ்ரீ வள்ளி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது கலர்ப்படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் முழுநீள கலர்ப்படம் என்று நீங்கள் அளித்துள்ள விளம்பரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது என்ன வகை கலர்?. நான் இதைக்கேட்கக்காரணம், தமிழில் முதல் கேவா கலர்ப்படம் 'அலிபாபா' என்பதும், முதல் டெக்னிக் கலர் படம்' வீரபாண்டிய கட்டபொம்மன்' என்பதும் (இர்ண்டாவது டெக்னிக் கலர்ப்படம் 'கொஞ்சும் சலங்கை'), முதல் ஈஸ்ட்மென் கலர்ப்படம் 'கர்ணன்' என்பதும் நமக்குத்தெரியும். இவற்றுக்கு இடையே 1961-ல் வெளியான ஸ்ரீ வள்ளி கேவா கலரா அல்லது டெக்னிக் கலரா?. (இப்போது டி.வி.டி. வெளியாகியிருக்கிறது. வேறு மாநிலத்தில் இருப்பதால் இன்னும் பார்க்கவில்லை).

டியர் mr_karthik,

"ஸ்ரீ வள்ளி" முழு நீள கேவா கலர் திரைப்படம்.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
4th July 2011, 06:05 AM
நான விரும்பிய காட்சி [தொடர்ச்சி]

நடாத்தூர் நரசிம்மாச்சாரி ஆச்சார அனுஷ்டானமான ஒரு அந்தணர். அவருடைய பார்யாள் வேதா என்ற வேதவல்லி. அவர்களுடைய ஒரே செல்லப் புத்திரன் வரதுக்குட்டி என்கிற வரதராஜன். மிகவும் அப்பாவியாக வளரும் வரதுக்குட்டி ஒரு தேர்வுக்கு செல்லும் போது விபத்தில் சிக்கி இறந்து விடுகிறான். இந்த செய்தி கேட்டு மூர்ச்சையான வேதா நினைவு தப்பிய நிலையிலேயே வாழ்கிறாள். நரசிம்மாச்சாரியின் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியது. ஒரு பக்கம் மகனை இழந்த துயரம், மற்றொரு புறம் மனைவியின் நிலைமை.. இந்த நேரத்தில், எதேச்சையாக அவர்கள் வீட்டுக்கு வருகிறான் ஆனந்த் என்கிற ஒரு ரௌடி. அவன் அச்சு அசலாக வரதுக்குட்டியைப் போலவே இருக்க, அவனைப் பார்த்த வேதாவிற்கு நினைவு திரும்புகிறது. ஆனால் ஆனந்தை வரதுக்குட்டி என்றே நம்பி விடுகிறாள். நரசிம்மாச்சாரி-வேதா தம்பதியினரின் அன்பிற்கும் வேண்டுகோளுக்கும் பணிந்து ஆனந்த் அவர்கள் இல்லத்திலேயே தங்குகிறான். ஆனால் அவனுடைய குடிப்பழக்கம், அசைவ உணவில் நாட்டம் போன்றவற்றை அவனால் ஒதுக்க முடியவில்லை. தனக்காக தன் இல்லத்தில் தங்க இணங்கிய ஆனந்திற்காக நரசிம்மாச்சாரி, தன்னுடைய சுதர்மத்தை விட்டு அசைவ உணவை அவனுக்காக வாங்கி வருகிறார். அவருடைய அன்பிலும் பாசத்திலும் நெக்குருகும் ஆனந்த் நெகிழ்ந்து போய், அசைவ உணவை உதறித்தள்ளி விட்டு தொடர்ந்து அவருடைய புதல்வனாகவே மாறி விடுகிறான்.
வித்யா மூவீஸ் தயாரித்து வி.ஸ்ரீனிவாசன் இயக்கி 14.11.1982ம் தேதி வெளிவந்த பரீட்சைக்கு நேரமாச்சு திரைப்படம் நடிகர் திலகத்தின் திரையுலக வரலாற்றில் மிகவும் முக்கியமான படமாகும். இப்படம் தொலைக்காட்சிகளில் அதிகம் விவாதிக்கப் படாதது வருத்தமே. இருந்தாலும் நாம் விவாதிக்க தடையில்லையே. குறிப்பாக இக்காட்சி, அசைவ உணவை ஒரு அந்தணர் வாங்கும் போது எந்த சூழ்நிலையில் இருப்பாரோ, அதனை அப்படியே தத்ரூபமாக சித்தரித்துள்ளார் நடிகர் திலகம். அது மட்டுமன்றி அதுவே படத்திற்கு ஒரு முக்கியமான திருப்பமாகவும் அமைவது சிறப்பு. இக்காட்சியின் முடிவில் தான் அசைவ உணவை வாங்கி வந்ததற்காக தலைக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்வது, அதற்கு முன் அந்தக் குடையின் மேலும் தன் மேல் துண்டின் மேலும் மறக்காமல் தண்ணீர் ப்ரோக்க்ஷணம் செய்வது, தன் தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளும் போது மறக்காமல் மந்திரம் சொல்வது....
பிறவிக் கலைஞரய்யா நடிகர் திலகம்.
இப்படத்தில் திரு ஒய்.ஜி.மகேந்திராவின் நடிப்பைக் குறிப்பிடாவிட்டால் ஒரு நல்ல கலைஞனை நாம் இருட்டடிப்பு செய்யும் பாவத்திற்கு நாம் ஆளாவோம். நீங்கள் ஏன் சார் இதையெல்லாம் வாங்கி வர்றீங்க என்று கேட்கும் போது அவருடைய குரலில் மாடுலேஷன், மாறும் முகபாவம், இவையெல்லாம் அவர் நடிகர் திலகத்தின் ரசிகர் என்பதற்கும் மேலே போய் அவருக்குள் நடிகர் திலகம் ஜீவனாய் உள்ளார் என்பதைக் காட்டுகிறது என்றால் அது உண்மை.
இநத்க் காட்சி என்றென்றும் என் நெஞ்சை விட்டு அகலாது. உங்களுக்கும் கூடத் தான்...

இதோ நீங்களும் காணுங்கள்


http://www.youtube.com/watch?v=BPsRQnqMc64

அன்புடன்
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்

RAGHAVENDRA
4th July 2011, 12:09 PM
டியர் பம்மலார்,
மாணிக்கத்தின் வெளியீட்டு விவரங்களை மாணிக்கப் பதிவுகளாய் இட்டு அசத்திவிட்ட தங்களுக்கு அனைவரின் சார்பிலும் உளமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்
ராகவேந்திரன்

mr_karthik
4th July 2011, 03:38 PM
பம்மலார் சார்,

'ஸ்ரீ வள்ளி' படம் பற்றிய விளக்கத்துக்கு நன்றி.

நடிகர்திலகத்தின் 150வது திரைக்காவியமான 'சவாலே சமாளி' மாணிக்கத்தின் 41-வது ஆண்டின் துவக்கத்தினையொட்டி, சாதனைச்செப்பேடுகளின் அணிவகுப்பு மிகப்ப்பிரமாதம். ஆங்கிலம், தமிழ், மற்றும் 100 வது நாள் விளம்பரங்கள் கண்களைக்கவர்ந்தன.

முதல் வெளியீட்டில் தமிழகத்தில் மட்டும் ஏழு அரங்குகளில் 100 நாடகளைக்கடந்து மகத்தான சாதனை புரிந்துள்ளது. அத்துடன் இலங்கையிலும் வெற்றிகரமாக ஓடியுள்ளது. விளம்பரத்தில் கோவை திரையரங்கைக் காணவில்லை. பாட்டாளியின் பெருமையை விளக்கும் இப்படம் கோவை நகரில் 100 நாட்களைக்கடக்காதது ஆச்சரியமாக உள்ளது. அதற்கு ஏதேனும் சிறப்புக்காரணம் இருக்கிறதா?.

நீங்களும் ராகவேந்தர் சாரும் அளித்துவரும் செய்தித்தாள் விளம்பர வரிசையைப் பார்க்கும்போது, பெரும்பாலான படங்களுக்கு உங்களிடம் சாதனை விளம்பரங்கள் உண்டெனத் தெரிகிறது. எனவே, 'தெய்வ மகன்' மற்றும் 'சிவந்த மண்' படங்களின் 100 வது நாள் விளம்பரங்களை இங்கே வெளியிட வேண்டுகிறேன்.

pammalar
4th July 2011, 06:44 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 203

கே: தேசிய விருதுகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? அங்காடித்தெரு, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற மிகச் சிறந்த படைப்புகளுக்கு அந்த விருதுகள் கொடுக்கப்படாதது ஏன்? (பி.வேல்முருகன், உடையாப்பட்டி)

ப: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படாதபோது, அந்த விருது பற்றி பெரும்பாலான தமிழ்க் கலைஞர்கள் கவலைப்படுவதில்லை!

(ஆதாரம் : தினத்தந்தி, 26.6.2011, "குருவியார் - சினிமா கேள்வி பதில்" பகுதி)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th July 2011, 09:18 PM
Thanks, Mr.Satish.

டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுகளுக்கு பணிவான நன்றிகள் !

பாடல் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை !

காட்சிப்[Scene] பதிவுகள் ஒவ்வொன்றும் அற்புதம் !

எல்லாம் உனக்காக, ஸ்ரீ வள்ளி பொன்விழாப் பொக்கிஷங்கள் மற்றும் அஞ்சல் பெட்டி 520ன் அழகிய நிழற்படங்கள் அனைத்தும் அட்டகாசம் !

அருமையான, அற்புதமான, அட்டகாசமான பதிவுகளை அள்ளி அளித்து வரும் தங்களின் பதிவுகள் வரும் ஒவ்வொரு நாளும் நமது திரிக்கு திருநாளே !

அன்புடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
4th July 2011, 09:27 PM
ப: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படாதபோது, அந்த விருது பற்றி பெரும்பாலான தமிழ்க் கலைஞர்கள் கவலைப்படுவதில்லை!

(ஆதாரம் : தினத்தந்தி, 26.6.2011, "குருவியார் - சினிமா கேள்வி பதில்" பகுதி)

அன்புடன்,
பம்மலார்.

உண்மை திரு பம்மலார் அவர்களே,

இன்று தனுஷ் போன்றவர்கள் சிறந்த நடிகர் என தேசிய விருது வாங்கியதை நினைக்கும் போது????????


வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை..........

வேதனையுடன்,

ராதா

pammalar
4th July 2011, 09:34 PM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 20

"காலம் மாறலாம் நம் காதல் மாறுமா"


http://www.youtube.com/watch?v=vfaaODkVxb4&feature=related

நடிப்பு : நடிகர் திலகம், நடிகை அம்பிகா

பின்னணிக் குரல்கள் : கந்தர்வக் குரலோன் எஸ்.பி.பி., இசைவாணி வாணிஜெயராம்

இசை : மேஸ்ட்ரோ இளையராஜா

படைப்பு : கவிப்பேரரசு வைரமுத்து

திரைக்காவியம் : வாழ்க்கை(1984)

அன்புடன்,
ராகவேந்திரன் &
பம்மலார்.

Murali Srinivas
4th July 2011, 11:40 PM
ராகவேந்தர் சார்,

கடந்த ஒரு வார காலமாக நீங்கள் அளித்துள்ள படக் காட்சிகள், பாடல் காட்சிகள் மற்றும் பத்திரிக்கை விளம்பரங்கள் அனைத்தும் சுவை. சுவை என்று சொன்னால் மனதிற்கு இன்பமளிக்கும் சுவை. ஸ்ரீவள்ளி பட விளம்பரத்தை இப்போதுதான் முதன் முறையாக பார்க்கிறேன். எல்லாம் உனக்காக ஒரிஜினல் பாட்டு புத்தகம் பார்த்த நினைவு இருக்கிறது.

நரசிம்மாச்சாரியை மட்டும் அந்த நாடக வாடை அடிக்கும் செட்டிலிருந்து மாற்றி ஒரு இயல்பான வீட்டின் சுற்றுசூழலில் செலவை பார்க்காமல் முக்தா ஸ்ரீனிவாசன் எடுத்திருப்பாரேயானால் மற்ற இருவர் [பிரிஸ்டிஜ்,பாரிஸ்டர்] ரேஞ்சுக்கு பேசப்பட்டிருப்பார்.

சுவாமி,

நான் நினைத்தேன், நீங்கள் சகுந்தலா கொண்ட மாணிக்கத்தோடு வருவீர்கள் என்று. என்னை நீங்கள் ஏமாற்றவில்லை. நேற்று பகல் பொழுதில் இந்த பட வெளியீட்டு நினைவுகள் என் மனதில் அலை மோதிக் கொண்டிருந்தன. இங்கே பலருக்கும் நினைவிருக்கும்.1971 ஜூலை 3 அன்று சவாலே சமாளி படத்தின் வெளியீட்டு நாள் மட்டுமல்ல, குலமா குணமா படத்தின் 100-வது நாளும் கூட. ஆம் 1971 மார்ச் 26 அன்று வெளியான குலமா குணமா ஜூலை 3-ந் தேதி தன் 100-வது நாளை நிறைவு செய்தது. எங்கள் மதுரையை பொறுத்தவரை ஒரு சின்ன சங்கடம் ஒன்றிருந்தது. குலமா குணமா வெளியான அதே ஸ்ரீதேவி திரையரங்கில்தான் சவாலே சமாளி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. 99 நாட்கள் ஓடும் படத்தை 100 நாட்கள் நிறைவு செய்யாமல் எடுக்கக் கூடாது என்று ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று குலமா குணமா, சவாலே சமாளி விநியோகஸ்தர்கள் மற்றும் ஸ்ரீதேவி அரங்க உரிமையாளர்கள் மூவரும் கலந்து பேசி குலமா குணமா 100-வது நாள் சனிக்கிழமை காலைக்காட்சியாக திரையிடப்பட்டு சவாலே சமாளி அன்று மட்டும் 1,4,7 மற்றும் 10 மணிக் காட்சிகளாக திரையிடப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 1971 பொது தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இனி நடிகர் திலகமும் சரி அவர் படங்களும் சரி அவ்வளவுதான் என ஒரு கூட்டம் கொக்கரித்து நிற்க தங்கைக்காக படம் 83 நாட்களையும், குலமா குணமா 100 நாட்களையும் சுமதி என் சுந்தரி 12 வாரங்களையும் கடந்து ஓட, இதற்கு நடுவில் இரு துருவமும் அருணோதயம் பிராப்தம் போன்ற படங்கள் 8 வாரங்களை கடந்து 9 வாரங்களை நெருங்கிய நிகழ்வுகள் இவையெல்லாம் நடிகர் திலகத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதை பறை சாற்றி கொண்டிருக்கும் போதுதான் நடிகர் திலகத்தின் 150-வது படமான சவாலே சமாளி வெளியாகிறது. மக்கள் பெரு வெள்ளமென திரண்டனர் இப்படத்திற்கு.

எங்கள் மதுரையில் என் தனிப்பட்ட அனுபவத்தை சொல்ல வேண்டுமென்றால் என்னால் படத்தை முதல் வாரத்தில் பார்க்க முடியவில்லை. இரண்டாம் வாரம் ஆரம்பம், படம் வெளியான 8-வது நாள் ஜூலை 10-ந் தேதி சனிக்கிழமை மாலைக் காட்சிக்குதான் போக முடிந்தது. 5-30 மணிக்கே வாசல் கேட் வரை வரிசை. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் வந்திருக்கின்றனர். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? இருக்கிறது.

நடிகர் திலகம் 150 படங்களில் அதுவும் அனைத்திலும் கதாநாயகனாகவே நடித்து சாதனை புரிந்ததை பாராட்டி அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தின் சார்பில் ஜூலை 10 மற்றும் 11 சனி ஞாயிற்றுக் கிழமைகளில் திருச்சி நகரில் உள்ள பிஷப் ஹீபர் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒரு மாநாடு நடந்தது. முதல் நாள் சனிக்கிழமை காலை தெப்பக்குளத்திலிருந்து ஊர்வலம், மாலை அரசியல் தலைவர்கள் உரைகள், மறுநாள் ஞாயிறன்று கலை உலகத்தினரின் பாராட்டு உரைகள் என விழா நடந்த இரண்டு நாட்கள். முதல் நாள் ஊர்வலத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

மதுரைக்கு மிக அருகாமையில் நடந்த விழாவில் பங்கேற்பதற்காக பெரும்பான்மையான ரசிகர்கள் சென்றிருந்த நிலையிலும் அதே நாளில் மதுரை திரையரங்கில் கூடிய கூட்டம் அசாத்தியமானது. இது நடிகர் திலகத்தால் மட்டுமே செய்ய முடிந்த ஒரு சாதனை.

நினைவுகளை பின்னோக்கி புரட்டி போடும் சிந்தனையோட்டத்திற்கு தூண்டிலாய் இருந்த சுவாமிக்கு நன்றி.

அன்புடன்

இந்த திருச்சி விழா படமாக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு சவாலே சமாளி படத்தின் ஒவ்வொரு காட்சியின் இடைவேளையின் போதும் காண்பிக்கப்பட்டது.

pammalar
5th July 2011, 03:34 AM
டியர் ஜேயார் சார்,

உண்மை, நம் அனைவருக்குமே இந்த வேதனை உண்டு.

டியர் முரளி சார்,

தங்களது பாங்கான பாராட்டுக்கும், பசுமை நிறைந்த நினைவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

டியர் mr_karthik,

தங்களின் அன்பு கலந்த பாராட்டுக்கு எனது பணிவு கலந்த நன்றிகள் !

"சவாலே சமாளி" கோவையில் 'ராயல்' திரையரங்கில் 90 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. இங்கே 100 நாட்களை எட்டாதது என்ன காரணத்தினால் என்று தெரியவில்லை.

தாங்கள் பதிவிட்டது போல், நமது மாணிக்கத்திற்கு இலங்கை மிகப் பெரிய மகுடம் சூட்டி மகிழ்ந்தது. கொழும்பு 'சென்ட்ரல்' திரையரங்கில் 110 நாட்களும், யாழ்ப்பாணம் 'ராணி' திரையரங்கில் 100 நாட்களும் ஓடி, "சவாலே சமாளி" சிலோனில் மெகா வெற்றி பெற்றது.

தமிழகத்தில் 7 அரங்குகளிலும், இலங்கையில் 2 அரங்குகளிலும், ஆக மொத்தம் 9 அரங்குகளில் 100 நாள் விழாக் கொண்டாடிய 150வது காவியம் ஒரு மகாமெகாஹிட் காவியம் என்பதை அடித்துக் கூற முடியும்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th July 2011, 03:41 AM
'தெய்வ மகன்' மற்றும் 'சிவந்த மண்' படங்களின் 100 வது நாள் விளம்பரங்களை இங்கே வெளியிட வேண்டுகிறேன்.

தங்கள் சித்தம் என் பாக்கியம் !

அரிய புதையல்களுக்கு அடுத்தடுத்த பதிவுகளை நோக்குங்கள் !

pammalar
5th July 2011, 03:51 AM
"சிவந்த மண்"ணின் சாதனைச் செப்பேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3804.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 16.2.1970
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3801a.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
5th July 2011, 04:06 AM
தெய்வமகன் : பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 5.9.1969
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3803.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 13.12.1969
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3802.jpg

அன்புடன்,
பம்மலார்.

goldstar
5th July 2011, 05:44 AM
தெய்வமகன் : பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
அன்புடன்,
பம்மலார்.


Thanks a lot Mr. Swamy for valuable photos of "SivanthaMan" and "Theivamahan"...

Cheers,
Sathish

goldstar
5th July 2011, 05:54 AM
இந்த திருச்சி விழா படமாக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பிறகு சவாலே சமாளி படத்தின் ஒவ்வொரு காட்சியின் இடைவேளையின் போதும் காண்பிக்கப்பட்டது.


Swamy sir,

Is there any chance to get softcopy of this Trichy function?

cheers,
Sathish

mr_karthik
5th July 2011, 11:54 AM
கேட்டதும் கொடுப்பவரே பம்மலார் ஐயா
எங்கள் திரியின் நாயகரே பம்மலார் ஐயா


இந்த எளியோன் வேண்டுகோள் விடுத்ததும், சாதனைச் சித்திரங்களான 'சிவந்த மண்', 'தெய்வ மகன்' மற்றும் கேட்பதற்கு முன்னேயே அளித்த 'சவாலே சமாளி' திரைக்காவியங்களின் சாதனைப் பொன்னேடுகளை அழகுறப் பதித்து பெரும் சேவையாற்றிருக்கும் தங்களுக்கு......

மிக்க நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி நன்றி, நன்றி, நன்றி, நன்றி.... X 1,00,000

இவை வெறும் செய்தித்தாள் விளம்பரங்கள் அல்ல, நடிகர்திலகத்தின் ரசிகப்பெருமக்கள் கைகளில் நீங்கள் அளித்திருக்கும் 'ஏ.கே.47' ஆயுதங்கள்.

இனி சாதனைகளை மறைக்க நினைப்போர் முன் ஆயுதங்கள் பேசும்.

saradhaa_sn
5th July 2011, 02:06 PM
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் திரிக்கு வந்திருப்பதால், இங்கு பதிக்கப்பட்டுள்ள பல்வேறு சிறப்பான பதிவுகள் மனதைக்கவர்வதாக அமைந்துள்ளன. பதிவேற்றிய பலருக்கும் நன்றிகள்.

டியர் ராகவேந்தர்,

தங்களின் பாடல் வரிசைப் பதிவுகள் மிக்கச்சிறப்பாக அமைந்துள்ளன. அவற்றில் பல, அடிக்கடி காணக்கிடைக்காத அபூர்வப்பாடல்கள். அவற்றோடு நாம் அடிக்கடி கண்டுகளித்த பல பாடல்களையும், பலதரப்பட்ட தலைப்புகளோடு பதித்திருப்பதற்கு மிக்க் நன்றி.

ஸ்ரீ வள்ளி, மற்றும் எல்லாம் உனக்காக திரைப்பட பொன்விழா ஆண்டை நினைவு கூர்ந்தமைக்கும், அதனை சிற்ப்பிக்கும் வண்ணம் அபூர்வ விளம்பரங்களை வெளியிட்டு சிறப்பித்தமைக்கும் மேலும் மேலும் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

Mahesh_K
5th July 2011, 03:08 PM
பம்மலார் - தமிழகத்தின் முன்னணி ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்கள் எல்லாவற்றிலிருந்தும் அறிய விளம்பரங்களைத் திரட்டி அளித்து வருகிறீர்கள் .

நடிகர் திலகத்தின் (கிட்டத்தட்ட) 50 ஆண்டு திரையுலகச் சாதனைகளை ஆதாரங்களுடன் எல்லோரும் அறியும்படி செய்யும் இந்த பெரும் பணிக்குப் பின்னாலிருக்கும் உங்களது உழைப்பு , பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு மகத்தானது. தொடரட்டும் இந்தப் பணி.

saradhaa_sn
5th July 2011, 03:08 PM
டியர் பம்மலார்,

சாதனைச்சித்திரமான சவாலே சமாளி படத்தின் நாற்பத்தோராவது உதயதினத்தை நினைவு கூர்ந்தமைக்கும், அதைச்சிறப்பிக்கும் வண்ணம் தந்துள்ள விளம்பரத் தொகுப்ப்புக்களும் மிக மிக அருமை. என்னுடைய கணினியில் இதற்கு முன்னர் இருந்த 100வது நாள் விளம்பரம் தெளிவில்லாமல், திரையரங்குகளின் பெயர்களை அடையாளம் காண முடியாமல் இருந்தது. இப்போது நீங்கள் தந்துள்ள விளம்பரம் மிகத்தெளிவாக உள்ளது. மிகுந்த நன்றி.

அத்துடன் இதுவரை காணக்கிடைக்காத தெய்வ மகன், சிவந்த மண் படங்களின் விளம்பரங்களின் தொகுப்பும் அட்டகாசம். கண்கொள்ளாக்காட்சி என்றால் அது மிகையல்ல. வெளியிட்ட தங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள். (வெளியிடும்படி கேட்டுக்கொண்ட சகோதரர் கார்த்திக்கிற்கும் நன்றி).

சாதனைத்தொகுப்புகள் தொடரட்டும் என வாழ்த்துகிறேன், தொடர வேண்டும் என்று விரும்புகிறேன், தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்.

gkrishna
5th July 2011, 04:38 PM
சிவந்தமண்" மற்றும் "தெய்வமகன்" முதல் நாள் விளம்பரம் மற்றும் 100vadhu நாள் விளம்பரம் மிக அருமை.
நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன
நெல்லை சென்ட்ரல் திரைஅரங்கில் நம்மவரும் பார்வதி திரைஅரங்கில் நம்நாடு திரைப்படமும் வெளியானது இரண்டு நாட்கள் இடைவெளியில் தினசரி இரண்டு ரசிகர்களுக்கும் குடுமிபிடி சண்டைதான் சிவந்தமண் சுமார் 12 வாரங்கள் ஓடியதாக நினவு நம்நாடு 100 தினங்கள் ஓடியதாக நினவு
அதேபோல் தெய்வமகன் நெல்லை லக்ஷ்மியில் வெளியானது சுமார் ஆறு வாரங்கள் ஓடியதாக நினவு. நெல்லை லக்ஷ்மியில் எப்போதும் MGR திரைப்படம் தான் திரையிடுவார்கள் எல்லா ஊர்களிலும் வெற்றிக்கொடி நாட்டிய தெய்வமகன் நெல்லையில் மட்டும் குறைந்த தினங்கள் ஓடின
அதேபோல் "ஞானஒளி" திரைப்படமும் நெல்லை லக்ஷ்மியில் வெளியாகி 5 வாரங்கள் மட்டுமே ஓடியதாக நினவு
இதை பற்றி தகவல்கள் ஏதும் உண்டா

endrum anbudan

Gk

saradhaa_sn
5th July 2011, 05:27 PM
டியர் முரளி,

நடிகர்திலகத்தின் 150-வது திரைக்காவியமான 'சவாலே சமாளி' வண்ணப்படம் வெளியானபோது நடந்த சுவையான தகவல்களைபகிர்ந்தமைக்கு நன்றி. திருச்சியில் நடந்த 150-வது படவிழா படச்சுருளை நானும் பார்த்திருக்கிறேன். படத்தின் மறு வெளியீடுகளின்போதும் அந்த விழாவின் ரீல் சேர்த்துக் காண்பிக்கப்பட்டதாக நினைவு.

அதற்கு முந்தைய ஆண்டு அக்டோபர் 01 அன்று சென்னையில் முதன்முதலாக நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா பெரிய அளவில் கொண்டாடப்பட்டபோது, அந்த விசேஷ படத்தொகுப்புக்கு வர்ணனை செய்திருந்த மேஜர் சுந்தர்ராஜன்தான் திருச்சி விழாத்தொகுப்புக்கும் வர்ணனை (காமென்ட்ரி) செய்திருந்தார். திருச்சி விழாவில் நடிகர்திலகத்தைப்பாராட்டி கிருபானந்த வாரியார் சுவாமிகள் பேசியிருந்த சிறப்புப்பேச்சு எல்லோராலும் மிகவும் ரசிக்கப்பட்டது. அதுபோல நடிகர்திலகத்தின் அருகில் அமர்ந்து நம்பியார் அவருக்கு இனிப்பு ஊட்டிவிடும் காட்சியும்.

அவ்விழாவின் முன்னதாக நடந்த பிரம்மாண்ட ஊர்வலத்தை நடிகர்திலகம் திருச்சி ஜூபிடர் தியேட்டர் அருகிலிருந்த கட்டிடத்தின் மாடியிலிருந்து பார்வையிட்டாராம். ஊர்வலம் முடிந்ததும் ஊர்வலம் நடந்த பாதை முழுவதும் பூக்களால் சாலையிட்டதுபோல இருந்ததாம். என் தந்தை இந்த விழாவில் கலந்துகொண்டு அந்த அனுபவங்களை நிறையச் சொல்லியிருக்கிறார்.

1970-ல் துவங்கி ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெருநகரத்தில் விழா கொண்டாடுவது என்று தலைமை மன்றம் முடிவு செய்திருந்தபடி, 150 வது படவிழா திருச்சியிலும், அடுத்த ஆண்டு பிறந்த நாள் விழா கோவையிலும் நடைபெற்றது. (கோவையில் நடந்த விழா, இன்னொரு படத்துடன் காண்பிக்கப்பட்டது). கோவையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தி நடிகர் சஞ்சீவ்குமார் கலந்துகொண்டார். அவ்விழாவில் பெருந்தலைவர் காமராஜ் மேடையில் அமர்ந்திருக்க, நடிகர்திலகம் ஏற்புரையாற்றும்போது, பெருந்தலைவரைப் பார்த்துக்கொண்டே பேசுவதும், அதற்குப்பெருந்தலைவர் சிரித்துக்கொண்டே தலைய்சைப்பதும் ரசிகர்கள்/ தொண்டர்கள் மத்தியில் பலத்த கைதட்டலை அள்ளியது.

இதன் தொடர்ச்சியாக, 175-வது படமான 'அவன்தான் மனிதன்' வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துவதென்று தீர்மானித்து ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, எமர்ஜென்ஸியில் இந்தியா முழுவதும் ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால், இந்நிலையில் விழா கொண்டாட வேண்டாமென்று பெருந்தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 1975-ல் நடக்கவிருந்த அவ்விழா கைவிடப்பட்டது. அதுமட்டும் குறிப்பிட்டபடி நடந்திருந்தால், இப்போது உங்களிடமிருந்து அவ்விழா பற்றிய மிகச்சிறந்த ஒரு நினைவுப்பதிவை நாங்கள் பெற்று ரசித்திருப்போம்.

நீங்கள் சொன்னதுபோல 1970 தீபாவளி வெளீடுகள் இரண்டும் இவ்வாண்டு துவக்கத்தில் வெற்றிவிழாக்களைக் கண்டபோதிலும், இருதுருவம் எதிர்பார்த்தபடி போகாததாலும், தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்ததாலும் நடிகர்திலகத்தின் திரையுலக வாழ்வு அவ்வளவுதான் என்று முடிவு செய்து ஏகடியம் பேசியோரின் வெற்றுச்'சவால்'களை நடிகர்திலகம் 'சமாளி'த்து வெற்றிகண்டது இப்படத்தில்தான்.

மதுரை ஸ்ரீதேவி தியேட்டருக்கு நிகழ்ந்த அதே நிலையை சேலம் ஜெயா அரங்கமும் சந்தித்தது என்று நினைக்கிறேன். அங்கும் குலமா குணமா 100வது நாளன்றுதான் சவாலே சமாளி ரிலீஸானது. அதுபற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும்.

J.Radhakrishnan
5th July 2011, 11:17 PM
டியர் பம்மலார் சார்,

சிவந்தமண் மற்றும் தெய்வமகன் 100வது நாள் விளம்பரங்கள் super,
தொடரட்டும் தங்கள் பணி.

RAGHAVENDRA
5th July 2011, 11:41 PM
அன்புச் சகோதரி சாரதா,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. எல்லாப் புகழும் திலகத்திற்கே.
நம் ஊனோடும் உயிரோடு்ம் இரண்டரக் கலந்து விட்ட நடிகர் திலகத்தின புகழ் பாடுவதேயல்லால் வேறொன்றறியேன் பராபரமே என்று தாயுமானவர் இன்றிருந்தால் பாடியிருப்பாரோ என்கின்ற அளவிற்கு நம் உள்ளத்தில் ஆழமாக குடிகொண்டவர் நடிகர் திலகம். சவாலே சமாளி படத்தைப் பற்றிய பல நினைவுகள் வலம் வருகின்றன. சென்னை சாந்தியில் நம் சகோதர மன்றத்தினர் தற்போது செதுக்கியிருக்கும் படப் பட்டியலின் மேலே மிகப் பெரிய பட்டியிட்டு அதில் 150 படங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு வண்ணம், அதில் ஒவ்வொன்றிலும் ஒரு படத்தின் பெயர், இன்னும் பசுமையாக நினைவுள்ளது. அப்போது சுவர் உயரமே இல்லை. தரையிலிருந்து சுமார் 3 அடி உயரம் சுவர், பின் அதன் மேல் சுமார் 2 அடி உயரத்திற்கு கம்பியினாலான தடுப்பு. அந்த தடுப்பிற்கு மேல் தான் அப்பட்டியல் வைக்கப் பட்டிருந்தது. முதல் நாள் மாலைக் காட்சிக்கு டிக்கெட் கிடைத்து விட்டது. ஆனால் அதற்கும் முன்னரே பார்க்க வேண்டுமே. நண்பனின் சகோதரி உதவியோடு பெண்களின் கியூ வரிசையில் நின்று பின் அங்கு நமக்கு நிற்க அனுமதியில்லை என்றனர். பின் அவரே சவாலை சமாளித்து எங்கள் இருவருக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கித் தந்தார். ஆஹா முதல் நாள் முதல் காட்சி .. கேட்க வேண்டுமா.. அட்டகாசமான ஆரவாரம். குறிப்பாக ஆனைக்கொரு காலம் வந்தா பாடல் அது வரை இசைத் தட்டில் வெளிவரவில்லை. படத்தில் தான் முதன் முதலில் கேட்கிறோம். அந்த வரிகள் அனைத்து ரசிகர்களையும் ஒரு சேர எங்கோ அழைத்து சென்று விட்டன. போதாக்குறைக்கு அப்போது தேர்தல் முடிவுகள் வந்த நேரம். எல்லா எதிர்பார்ப்புகளையும் வீணாக்கி விட்டு ஸ்தாபன காங்கிரஸ் சீட்டு எண்ணிக்கையில் தேர்தலில் தோல்வியைத் தழுவியுற்ற நேரம். அந்த நேரங்களிலெல்லாம் நடிகர் திலகத்தின் படங்களும் மன்றங்களும் மட்டுமே சுறுசுறுப்பாக செயல் பட்டு கட்சியை வளர்த்து வந்தன. அப்போது வந்த இப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றதில் வியப்பேது. படம் போனதே தெரியவில்லை. பகல் காட்சி முடிந்து மாலைக் காட்சி ஆரம்பிக்கும் அந்த கணப் பொழுதில் சாப்பிடக் கூட நேரம் இல்லை. ஒரு தேநீர் அருந்தி வி்ட்டு மீண்டும் மாலைக் காட்சி... பகலை விட மாலையில் அதிகமான அளப்பரை.. ஒரு வழியாக இரவு 10.00 மணிக்கு மேல் வீட்டுக்கு சென்ற பின் அர்ச்சனை...

மறக்க முடியுமா..

அதன் நினைவாக


http://www.raaga.com/channels/tamil/video.asp?clpId=12100

அன்புடன்

RAGHAVENDRA
5th July 2011, 11:46 PM
03.07.2011 அன்று மற்றொரு படம் 30 ஆண்டுகளைக் கடந்து 31வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல விமர்சனங்களைப் பெற்ற ஆனால் பொருளாதார ரீதியில் வெற்றி கண்ட லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படமே அது., நல்ல கதையம்சம் இருந்தும் சில தவிர்த்திருக்க வேண்டிய காட்சிகளின் காரணத்தால் சற்றே விமர்சனங்களை அதிகம் சந்தித்த படம். ஆனால் அதில் இடம் பெற்ற அண்ணன் தங்கை பாசப் பாடல் மெல்லிசை மன்னரின் புகழை காலந்தோறும் பரப்பிக் கொண்டிருக்கும். எஸ்.பி.பி. மற்றும் வாணி ஜெயராம் குரலில் என்னென்பதோ என்ற பாடல் என்றும் இனியதாகும். இதோ நம் பார்வைக்கு


http://www.youtube.com/watch?v=LXdyeWbebbg

அன்புடன்

RAGHAVENDRA
5th July 2011, 11:50 PM
04.07.2011 அன்று 53 ஆண்டுகளைக் கடந்து 54வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது அன்னையின் ஆணை வெற்றிக் காவியம். அதன் நினைவாக ஒய்யாரத்தோற்றத்தில் நடிகர் திலகம் ஸ்டைலில் தூள்கிளப்பும்


http://www.youtube.com/watch?v=e8SxEhroyHU

அன்புடன்

RAGHAVENDRA
5th July 2011, 11:57 PM
அதே போல் 04.07.2011 அன்று 14வது ஆண்டைக் கடந்து 15வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் படம் ஒன்ஸ் மோர். இதை அனைவரும் அறிந்திருப்பர். இதன் விளம்பரம் இதோ
http://www.nadigarthilagam.com/papercuttings/oncemore.jpg

இப்படத்தில் நடிகர் திலகம் தன் 70வது வயதில் தூள் கிளப்பிய சின்ன சின்ன காதல் பாடல் ...


http://www.youtube.com/watch?v=iuYELOHxT2Y

அன்புடன்

Mahesh_K
6th July 2011, 12:04 PM
நெல்லை சென்ட்ரல் திரைஅரங்கில் நம்மவரும் பார்வதி திரைஅரங்கில் நம்நாடு திரைப்படமும் வெளியானது இரண்டு நாட்கள் இடைவெளியில் தினசரி இரண்டு ரசிகர்களுக்கும் குடுமிபிடி சண்டைதான் சிவந்தமண் சுமார் 12 வாரங்கள் ஓடியதாக நினவு நம்நாடு 100 தினங்கள் ஓடியதாக நினவு



இரண்டு படங்களுமே ஒரே அளவில்தான் ( 1969 தீபாவளி முதல் 1970 பொங்கல் வரை) ஓடியிருக்கின்றன..

parthasarathy
6th July 2011, 01:23 PM
ஹும்ம்ம்ம்... எத்தனை நாளாயிற்று இந்தத் திரிக்கு வந்து? பல்வேறு - அலுவலக மற்றும் சொந்த வேலைகள் நிமித்தமாக நீண்ட ஆய்வு எதையும் பதியாமல் இருந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது! இருப்பினும், ஒரு நாள் கூட இந்தத்திரியைப் பார்க்காமல் இருக்கவில்லை. அதற்குள் தான் எத்தனை எத்தனை அற்புதமான பதிவுகள். நடிகர் திலகத்தின் படங்களின் வெளியீட்டு விளம்பரங்கள், அரிய பாடல்கள், பட விளம்பரங்கள், "பரீட்சைக்கு நேரமாச்சு" படத்தின் மிகச் சிறந்த காட்சி என்று பல அற்புதமான பதிவுகளைப் பதிந்த திரு. ராகவேந்தர், நடிகர் திலகத்தின் சாதனைச் சரித்திரங்களை, வழக்கம் போல புள்ளி விவரங்கள் மட்டுமல்லாது, அந்தந்த செய்தித்தாள் விளம்பரங்களையும் அரங்கேற்றி அத்தனை ரசிகர்களின் நெஞ்சிலும் பால் வார்த்து விட்ட திரு. பம்மலார், திரு. முரளி அவர்களின் மிகச் சிறப்பான பதிவு, திரு. ராகேஷ், திரு.நவ், திரு. ஜோ, திரு. பாலகிருஷ்ணன், திரு. கார்த்திக், சாரதா மேடம், திரு. மகேஷ், திரு. கிருஷ்ணாஜி, திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் பல நண்பர்களும் நிறைய விஷயங்களைப் பதிந்துவிட்டீர்கள். நன்றிகள் பல.

நேற்று, விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த வாரம் தெய்வீகப் பாடல்கள் சுற்று. வழக்கமான நடுவர்கள் போக, திரு. டி.எல்.மகராஜன், திரு. சீர்காழி. சிவசிதம்பரம் போன்றோரும், பிரத்தியேக நடுவர்களாக வந்திருந்தார்கள். முதல் பாடல், "தெய்வ மகன்" படத்தில் வரும் "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா..." பாடலை, சாய் பிரகாஷ் என்பவர் பாடி முடித்தவுடன், அதற்கு, திரு. டி.எல்.மகராஜன் விமர்சனம் செய்யத் துவங்கியவுடன் சொன்னது - " எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. தெய்வ மகன் 1969-இல் முதலில் வெளிவந்தபோது, முதல் மூன்று காட்சிகளையும் தொடர்ந்து சாந்தியில் பார்த்து, தந்தையிடம் திட்டு வாங்கியது (இதிலிருந்தே, இவரும் நடிகர் திலகத்தின் ரசிகர் என்று புரிந்து விடுகிறது.) (அவரது தந்தை திரு. திருச்சி லோகநாதன் அவர்கள்). இந்தப் பாடலில் சிவாஜியின் நடிப்பு இன்னும் கண்ணில் இருக்கிறது. அதிலும், குறிப்பாக கடைசியில் "எண்ணெய் இல்லாதொரு தீபம் எரிந்தது..." என்று பாடுவதற்கு முன் "கிருஷ்ணா...." என்று ஒரு நீண்ட சங்கதியுடன் துவங்கி மறுபடியும் "கிருஷ்ணா..." என்னும்போது, அவருடைய கழுத்தை ஒரு வெட்டு வெட்டி பாடுவார். அவ்வளவு நன்றாக இருக்கும். இந்தப் பாடலை நினைக்கும்போது, முதலில், சிவாஜியின் நடிப்புதான் நினைவில் வரும்" என்று கூறி நெகிழ்ந்தார். "தெய்வ மகன்" படத்தில், படம் நெடுகிலும் நடிகர் திலகம் கைத்தட்டலை வாங்கிக் கொண்டே இருப்பார். ஒவ்வொரு சிவாஜி ரசிகனுக்கும், அத்தனை இடமும் மனப்பாடம். அவைகளில், டி.எல்.மகராஜன் அவர்கள் குறிப்பிட்ட நடிப்பும் ஒன்றல்லவா?

சிறிதும் தாமதிக்காமல், "தெய்வ மகன்" dvd-ஐ போட்டு அந்தப் பாடலையும், அதில், அந்தக் குறிப்பிட்ட முக பாவனையை மறுபடியும் ரசித்து, அதை என் மகள்களுக்கும் போட்டுக்காட்டி, அவர்களையும் ரசிக்க வைத்த பின்னர் தான், அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

mr_karthik
6th July 2011, 02:58 PM
சவாலே சமாளி நினைவுகள்....

முரளி சார், பம்மலார் சார், சாரதா மேடம், ராகவேந்தர் சார்... நால்வரும் சவாலே சமாளி வெளியானபோது நடந்த சம்பவங்களை அள்ளி வழங்கி, என் நினைவலைகளை பின்னோக்கி தட்டிவிட்டுவிட்டீர்கள். அன்று நடந்தவை அனைத்தும் பசுமையாக நினைவில் இருக்கின்றன.

ஜனவரியில் 'கோட்டம்' வெளியான பின்னர் பொதுத்தேர்தலுக்குப்பின் மே 29 அன்றுதான் சைக்கிள் ரிக்ஷா ஓடத்துவங்கியது. இந்தப்பக்கம் நடிகர்திலகத்துக்கு புற்றீசல்கள் போல நான்கு மாதத்தில் ஆறுபடங்கள் வெளியாகி, நடிகர்திலகத்தின் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன. திரும்பதிரும்ப பார்ப்பதென்றாலும் எந்தப்படத்தைப் பார்ப்பதென்பதில் திணறல். அதில் சுமதி என் சுந்தரி பெயரைத்தட்டிக்கொண்டு போனது. குடும்பக்கதையை விரும்பியவர்களுக்கு கே.எஸ்.ஜி.யின் படம் புகலிடமானது. ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட சாவித்திரியின் இயக்கத்தில் வந்த படம் பின் தங்கியது. 50 நாட்கள் கடந்த நிலையில் பிராப்தம் மாற்றப்பட்டு மிட்லண்டில் 'அவளுக்கென்று ஓர் மனம்' வெளியானது.

இந்நிலையில்தான் 150 வது படமாக ஜூலை 3 அன்று 'சவாலே சமாளி' வெளியானது. அண்ணாசாலையில் சைக்கிள் ரிக்ஷா ஓடிய 'தேவி சொர்க்க'த்துக்குப்பக்கத்திலேயே சாந்தியில் ரிலீஸானது. இருபக்கமும் ரசிகர்கள் கூட்டம் எதிரும் புதிருமாக, முறைப்புடன் இருந்தனர். தேர்தலின்போது கேலிபேசிய தறுக்கர்களின் கொட்டத்தை அண்ணனின் 150வது படம் போக்க வேண்டுமென்பதில் நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு தணியாத தாகம்.

சவாலே சமாளி பட வெளியீட்டையொட்டி 'மதி ஒளி' பத்திரிக்கை சிறப்பு மலர் வெளியிட்டது. முன்பக்க அட்டையில் நடிகர்திலகம் தீப்பந்தத்தை கையில் ஏந்தி நிற்பது போன்ற தோற்றமும் (கிளைமாக்ஸ் காட்சியில் விஜயகுமாரியிடமிருந்து பறித்த தீப்பந்தம்) மறுபக்க அட்டையில் மல்லியம் ராஜகோபாலின் அடுத்த படமான 'கிழக்கும் மேற்கும்' படத்தின் இரட்டைவேட தோற்றமும் இடம்பெற்றிருந்தன. (அப்படம் தயாரிக்கப்படவில்லை).

இந்நிலையில் இன்னொரு வேடிக்கை, அந்தப்பக்கம் தலைவருக்கும் தலைவிக்கும் கொஞ்சம் லடாய். 'கோட்டம்' வரையில் தான் தொடர்ந்து ஜோடியாக நடித்திருக்க, இப்போது தலைவர் ரிக்ஷா ஓட்ட புதிதாக 'மஞ்சள்' நாயகியைப் போட்டதோடு, அப்படம் ஓட்டத்திலும் வெற்றிமுகமாக இருக்கவே, தான் நாயகியாக நடித்திருக்கும் நடிகர்திலகத்தின் 150வது படம் மாபெரும் வெற்றியடைந்து தலைவரின் முகத்தில் கரி பூச வேண்டும் என்பதும் தலைவியின் ஆசையாக இருந்ததுதான்.

அண்ணாசாலையில் மட்டுமல்ல பதட்டம். வடசென்னை தங்கசாலைப்பகுதியிலும் ஸ்ரீகிருஷ்ணாவில் ரிக்ஷா ஓட, அருகாமை தியேட்டரான கிரௌனில் சவாலே சமாளி ரிலீஸ். (புரசைவாக்கத்தில் மட்டும் சரவணாவுக்கும் புவனேஸ்வரிக்கும் சற்று தொலைவு). வடசென்னை ஏழுகிணறு பகுதி 'கர்ணன் கணேசன் கலை மன்ற'த்தினர்தான் கிரௌனில் வெளியாகும் நடிகர்திலகத்தின் படங்களுக்கு, தியேட்டர் அலங்காரம் மற்றும் மலர் வெளியீடு ஆகியவற்றை பிரதானமாக நின்று செய்வார்கள்.

இந்த நேரத்தில்தான் ஒரு பிரச்சினை தோன்றியது. அப்போது எதிர் அணியினரின் பிரதான பத்திரிகையாக இருந்த 'திரை உலகம்' பத்திரிகையின் முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாக, (திருச்சி மாநாட்டை கிண்டல் செய்து) "சவாலே சமாளி படத்துக்கு சென்னையில் சமாதி, திருச்சியில் கருமாதி" என்று செய்தி வெளியிட்டு மிகவும் கேவலமாக எழுதியிருந்தனர். இதைப்பார்த்து கொதித்தெழுந்த வடசென்னை தங்க்சாலைப்பகுதி ரசிகர்கள், குறிப்பாக 'கர்ணன் கணேசன் கலை மன்றத்தினர்' ஸ்ரீ கிருஷ்ணா தியேட்டரில், அங்கிருந்த எதிர் அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அது வன்முறையாக மாறி பெரிய கலவரத்தில் முடிந்தது. அப்பகுதி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தங்கசாலை (மிண்ட்) பேருந்து நிலையம் வெறிச்சோடிப்போக காவல் துறையினர் வந்து இரு தரப்பிலும் சிலரைக் கைது செய்து அழைத்துச்சென்றனர். (இப்போது அரசியலில் கீரியும் பாம்புமாக இருக்கும் இரு அணியினரும் அப்போது (பெருந்தலைவர் சொன்னது போல) ஒரே குட்டையில் ஊறிக்கொண்டிருந்த நேரம். நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கெதிராக காவல்துறை நடவடிக்கைகள் எப்படி இருந்திருக்கும் என்பதைச்சொல்லத் தேவையில்லை).

நினைக்க நினைக்க நினைவலைகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ராசிகர்களின் எதிர்பார்ப்பின்படி 'சவாலே சமாளி' பெரும் வெற்றியடைந்து, 1972ன் ராஜ பாட்டைக்கு வித்திட்டது.

parthasarathy
6th July 2011, 04:00 PM
சவாலே சமாளி நினைவுகள்....


நினைக்க நினைக்க நினைவலைகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ராசிகர்களின் எதிர்பார்ப்பின்படி 'சவாலே சமாளி' பெரும் வெற்றியடைந்து, 1972ன் ராஜ பாட்டைக்கு வித்திட்டது.

திரு. கார்த்திக் அவர்களே,

என்ன ஒரு வேகம் உங்களுடைய விவரணையில்! அற்புதம்!! நீங்கள் எவ்வளவு வேகத்தோடு எழுதினீர்களோ, அதை விட வேகமாகப் படித்து விட்டுதான் வேறு வேலையை பார்க்க முடிந்தது.

திரு. ராகவேந்தர், திரு. முரளி, திரு. பம்மலார், சாரதா மேடம் மற்றும் ஏனைய அன்பர்கள் எழுதுவது போல், உங்களுடைய எழுத்துகளும் ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பது மட்டுமல்லாது, அவர்களது நினைவலைகளையும் கிளறி விடுகின்றன.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

goldstar
6th July 2011, 08:11 PM
சவாலே சமாளி நினைவுகள்....


இந்நிலையில்தான் 150 வது படமாக ஜூலை 3 அன்று 'சவாலே சமாளி' வெளியானது. அண்ணாசாலையில் சைக்கிள் ரிக்ஷா ஓடிய 'தேவி சொர்க்க'த்துக்குப்பக்கத்திலேயே சாந்தியில் ரிலீஸானது. இருபக்கமும் ரசிகர்கள் கூட்டம் எதிரும் புதிருமாக, முறைப்புடன் இருந்தனர். தேர்தலின்போது கேலிபேசிய தறுக்கர்களின் கொட்டத்தை அண்ணனின் 150வது படம் போக்க வேண்டுமென்பதில் நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு தணியாத தாகம்.

நினைக்க நினைக்க நினைவலைகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ராசிகர்களின் எதிர்பார்ப்பின்படி 'சவாலே சமாளி' பெரும் வெற்றியடைந்து, 1972ன் ராஜ பாட்டைக்கு வித்திட்டது.

Karthik sir,

You have written about each and every NT's fans feelings, thanks a lot for that.

Cheers,
Sathish

Murali Srinivas
7th July 2011, 12:42 AM
சதீஷ்,

1970 அக்டோபர் 1,2 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 42-வது பிறந்த நாள் விழா, 1971 ஜூலை 10,11 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற 150-வது படவிழா நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவுகள் இப்போதும் இருக்கிறதா என்பதையும் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பதிவுகளை வெளிக் கொண்டுவரும் முயற்சி ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்கிறது என தெரிய வருகிறது. அதே நேரத்தில் தற்காலிகமாக அவ்விழாக்களைப் பற்றிய பத்திரிக்கை செய்திகளை இங்கே கொடுக்க முயல்கிறோம். ராகவேந்தர் சார் அதை உங்கள் பார்வைக்கு வைப்பார்.

சதீஷ் உங்களுக்கு மேலும் ஒரு செய்தி. வரும் 15 அல்லது 22 அன்று நமது மதுரை சென்ட்ரலுக்கு நடிகர் திலகம் விஜயம் செய்ய இருக்கிறார். இரண்டு சாய்ஸ் இருக்கின்றன எனக் கேள்விப்படுகிறோம். ஒன்று நமது நண்பர் ராகேஷ் மற்றும் சாரதா போன்றவர்களுக்கு மிகவும் பிடித்த ஆக் ஷன் அவதாரம். அல்லது எனக்கு மிகவும் பிடித்த ஒரு குடும்ப நாயகன் பாத்திரம். இவ்விரண்டில் எதுவென்று இன்னும் சில நாட்களில் தெரியவரும். தகவல் உபயம் நண்பர் சுவாமி.

பதிவை பாராட்டியதற்கு நன்றி சுவாமி & சாரதி.

சாரதா,

நன்றி. 1971 அக்டோபரில் கோவையில் நடைபெற்ற 43-வது பிறந்த நாள் விழா படமாக்கப்பட்டு பாபு திரைப்படத்தின் இடைவேளையின் போது காண்பிக்கப்பட்டது.

அவன்தான் மனிதன் விழா அவசர நிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது உண்மை. அது மதுரை ரசிகர்களை மிகுந்த ஏமாற்றதுக்குள்ளாக்கியது. அதன் காரணமாகவே பின்னாளில் சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு திரிசூலம் விழா மதுரையில் நடத்தப்பட்டது.

ராகவேந்தர் சார்,

என்னென்பதோ ஏதேன்பதோ அருமையான பாடல். மன்னர் அருமையாக போட்டிருப்பார். அதிலும் முதல் இரண்டு சரணங்களை எஸ்.பி.பி. அனுபவித்து பாட, வாணி ஜெயராம் பாடும் அந்த இறுதி சரணம் பிரமாதமாக இருக்கும். அந்தவரிகள்

என்றும் நீ எந்தன் அண்ணன் என்றால்
கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன்
நன்றி நான் சொல்ல வார்த்தையேது
நாளும் நீயின்றி வாழ்க்கையேது
அன்பில் அலைமோதும் நெஞ்சம்
அண்ணன் திருப்பாதம் தஞ்சம்

மதுரையில் படவெளியீட்டின் போது நோட்டிஸ் அடிக்கும் பழக்கும் மட்டுமே இருந்தது. அது போஸ்டர் கலாச்சாரமாக மாறியது 1982 மார்ச் ஏப்ரல் முதல்தான்.இந்த படம் வெளியான ஒரு 9,10 மாதங்களுக்கு பின்தான். அந்நேரத்தில் முதன்முதலாக அடித்த போஸ்டரில் மேற்சொன்ன வரிகளில் குருடாக என்ற வார்த்தையை மட்டும் எடுத்துவிட்டு ரசிகராக என்ற வார்த்தையை பதிலுக்கு பயன்படுத்தி ஒட்டியிருந்தது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.

அன்னையின் ஆணை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் கிளாசிக்.

ஒன்ஸ் மோர் படம் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நான் ஓபனிங் ஷோ பார்த்த கடைசி நடிகர் திலகத்தின் படம். மதுரைக்கு தற்செயலாக சென்றிருந்த நான் மதுரை சிவம் தியேட்டரில் ஜூலை 4 அன்று காலை ஓபனிங் ஷோ பார்த்தேன். அதற்கு முதல் நாள்தான் நடிகர் திலகத்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படும் அறிவிப்பு வெளியாகியிருந்ததால் படக் காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம் கரை புரண்டு ஓடியது. ஒன்ஸ் மோர் வெளியான 20 நாட்களுக்குள்ளாகவே நடிகர் திலகத்தின் மலையாள படமான ஒரு யாத்ரா மொழி வெளியானது. அதை கேரளாவில் பார்த்தேன்.

கார்த்திக்,

1971 ஜூலை மாத மோதல் நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். நான் ஒரு விஷயத்தை எப்போதும் குறிப்பீட்டு சொல்வது உண்டு. அது இப்போது சுவாமி வெளியிட்டிருக்கும் விளம்பரத்தை கவனித்தாலும் தெரியும். முரசொலி பத்திரிக்கைக்கு விளம்பரம் கொடுத்திருப்பதை எந்த தடையும் செய்யாமல் அனுமதித்திருக்கிறார். தனக்கு தீங்கு செய்தவர்களுக்கு கூட நடிகர் திலகம் நன்மையே செய்திருக்கிறார். ஒரு திருப்பதி பயணத்தை வைத்து தன்னை அரசியலிலிருந்து விலக்கி வைக்க முயற்சித்தவர்கள் புதையல் எடுக்கவும் குறவஞ்சி பாடி மகிழ்ச்சியடையவும் [இத்தனைக்கும் அவர்களின் லட்சிய குரல் குறவஞ்சி பாடியும் வாங்குவார் இல்லாமல் போனது] உதவியவர் நடிகர் திலகம். தன்னை பொறுத்தவரை நட்புக்கு இருவர் உள்ளம் என்றே உதவினார்.

1967-க்கு பிறகு அமைந்த அரசு மாற்றந்தாய் மனப்பான்மையோடு செயல்படுவதையும் தன்னுடைய படங்கள் சரியான விருதுகளுக்கு பரிசிலீக்கப்படாமல் போவதையும், ஆஸ்கார் விருதுக்கு போக இருந்த தெய்வ மகனை தடுத்து நிறுத்தியதையும், மன்ற பிள்ளைகள் போலீசாராலும் எதிர் அணியினராலும் தாக்கப்பட்டபோதும், அரசின் வெள்ள மற்றும் புயல் நிவாரண நிதிக்காக மற்றும் அரசின் மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்காக தானே முன்னின்று நாடகம் நடத்தி உதவி செய்தவர் நடிகர் திலகம். சிவாஜிக்கு அரசியல் தெரியாது என்று கேலி பேசியவர்களுக்கு, அவரது ஆட்சி இயந்திரத்திற்கு அவரது கட்சி பொருளாளர்களே பொருள் உதவி செய்யாதபோது உதவி செய்தது நடிகர் திலகத்தின் கைகளே. திருப்பி கிடைத்ததோ ?

இதைதான் மார்ச் ஏப்ரல் மாதங்களில் வேறு ஒரு திரியில் குறிப்பிட்டு உங்களிடமும் சாரதவிடமும் நீங்கள் ஆதரிக்கலாமா என்று கேட்டேன். சரி விடுங்கள் எதற்கு நமக்கு அரசியல்?

மீண்டும் பதிவை பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

அன்புடன்

சந்திரசேகர் சார்,

முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்-கள் சரியாகத்தான் வேலை செய்கிறது. மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்.

pammalar
7th July 2011, 03:53 AM
Dear Mr.Satish,

My sincere thanks for your praise. With regard to the 1971 'Savale Samali' Trichy function, as of now, there is no Softcopy / DVD copy available in the Web / Market. If this treasure is found, it will definitely attain a DVD Status. As Murali Sir said, We will keep our hopes alive & kicking.

டியர் mr_karthik,

தங்களின் உயர்ந்த பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் ! "சிவந்த மண்" மற்றும் "தெய்வமகன்" சாதனை விளம்பரங்களை அடியேன் அளிப்பதற்கு தூண்டுகோலாய் விளங்கிய தங்களுக்கு எனது ஸ்பெஷல் நன்றிகளும் உரித்தாகுக ! "சவாலே சமாளி" நினைவுகள் சூப்பர். பார்த்தசாரதி சார் கூறியது போல் தங்களது தெளிவான எழுத்துநடை பிரமிக்க வைக்கிறது. பாராட்டுக்கள் !

டியர் மகேஷ் சார்,

தங்களது மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள் !

சகோதரி சாரதா,

தங்களின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் அளித்தமைக்கு பசுமையான நன்றிகள் ! சாதனைப் பொக்கிஷங்கள் செவ்வனே தொடரும் !

டியர் கிருஷ்ணாஜி,

பாராட்டுக்கு நன்றி !

டியர் ஜேயார் சார்,

பாராட்டுக்கு நன்றி !

டியர் ராகவேந்திரன் சார்,

பாடல் பதிவுகள் ஒவ்வொன்றும் பிரமாதம். "சவாலே சமாளி" வெளியான தினத்தன்று, தங்களுக்கு சென்னை சாந்தியில் ஏற்பட்ட அனுபவங்கள் சுவையானவை மட்டுமல்ல, சுவாரஸ்யமானவையும் கூட.

டியர் பார்த்தசாரதி சார்,

தங்களது பாராட்டுக்களை வழங்கியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th July 2011, 05:34 AM
சிங்கத்தமிழனின் "சவாலே சமாளி" : 150வது படவிழா
[10.7.1971(சனி) மற்றும் 11.7.1971(ஞாயிறு)] : திருச்சிராப்பள்ளி

வரலாற்று ஆவணங்கள் : மாலை முரசு(திருச்சி-தஞ்சை) : 10.7.1971

ஊர்வலம் பற்றிய செய்தித்தொகுப்பு [முதல் பக்கத்திலிருந்து]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3805a.jpg


ஊர்வலக் காட்சிகள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3808a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3806a.jpg


விழா தொடக்க தினத்தன்று [10.7.1971] வெளியான பட விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3810a.jpg


அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
7th July 2011, 06:32 AM
இன்று ஜூலை 7 தேதியில் 49வது ஆண்டுகளைக் கடந்து 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உன்னத சித்திரம், லக்க்ஷ்மி பிக்சர்ஸ் வடிவுக்கு வளைகாப்பு. நடிகர் திலகத்தின் வித்தியாசமான தோற்றம், சிறந்த நடிப்பு, திரை இசைத் திலகத்தின் இனிய பாடல்கள், யாவும் நிறைந்த சித்திரம். படத்திற்கு வெளியிடப்பட்ட விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/VVK02AdFWjpg.jpg

இதனையொட்டி இப்படத்திலிருந்து மிகவும் சிறந்த பாடல். இக்காட்சியில் வீணையுடன் அமர்ந்து பாடியவாறே, பல்வேறு முகபாவங்களைக் காட்டும் நடிகர் திலகத்தின் நடிப்பைக் காணும் போது, இவரை வெல்ல இவ்வுலகில் யாரும் இல்லை என்பது மெய்ப்படுகிறதன்றோ.


http://www.youtube.com/watch?v=N0NH4iyPn_A

அன்புடன்

RAGHAVENDRA
7th July 2011, 06:33 AM
டியர் பம்மலார்,
சவாலே சமாளி செய்தித்தாள் நிழற்படங்களை வெளியி்ட்டு அசத்தி வருகிறீர்கள். பாராட்டுக்கள்.

அன்புடன்

groucho070
7th July 2011, 07:27 AM
Savale Samali, a film I revisit many many times (we have it in DVD here, though). Thank you all for sharing, esp Pammalar-sir for those clippings.

RAGHAVENDRA
7th July 2011, 08:24 AM
டியர் முரளி சார்,
தங்களுடைய நினைவுகள் நம் அனைவரையும் 1971ம் கால கட்டத்திற்கே இட்டுச் செல்கிறது. திருச்சியில் நடைபெற்ற விழாவின் விவரங்கள் சென்னையில் நாம் செய்தித்தாள்களில் படித்து மகிழ்வுற்றோம். இன்றும் பசுமையாக நினைவுள்ளது. கார்த்திக் சொன்னது போல் அதே கால கட்டத்தில் சென்னை கடற்கரையில் நடைபெற்ற வரலாறு காணாத அளவிற்கு மக்கள் திரண்ட கூட்டத்தில் நடிகர் திலகம் உரையாற்றியது பசுமையாக நெஞ்சில் உள்ளது. தேர்தல் பிரச்சார மேடையில் பெருந்தலைவரும் நடிகர் திலகமும் உரையாற்றினர். அந்தக் கூட்டத்தில் ஆற்றிய உரை உணர்வு பூர்வமாக அமைந்தது. நான் ஒரு பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன் என்று சூளுரைத்தாதர் நடிகர் திலகம். இன்று வரை தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் அப்படி ஒரு கூட்டத்தைக் கூட்ட முடியவில்லை என்பதிலிருந்தே நடிகர் திலகத்தின் செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம். இந்நத் கூட்டத்தின் பாதிப்பை வைத்துத்தான் அப்படத்திற்கு சவாலே சமாளி என்று பெயர் வைத்தார்கள் என்று கூட சொல்வார்கள். எங்கு பார்த்தாலும் மூவர்ணக் கொடி, எங்கு பார்த்தாலும் நடிகர் திலகத்தின் படங்கள், எங்கு பார்த்தாலும் பெருந்தலைவர் படங்கள் என தேசிய இயக்கம் முழு வீச்சில் இருந்த காலம் 1971. முடிவுகள் எப்படியிருந்த போதிலும் திராவிட இயக்கங்களுக்கு மிகப் பெரிய சவாலாக காங்கிரஸ் இருந்த காலம் நடிகர் திலகம் இருந்த வரைக்கும் தான் என்பது கண்கூடு. இனிமேல் காங்கிரஸ் இயக்கம் அல்லது தேசிய இயக்கம் தமிழகத்தில் மீண்டும் எழுச்சி பெற வேண்டுமென்றால் அது சிவாஜி ரசிகர்களால் மட்டும் தான் முடியும்.

பார்த்த சாரதி சார், நீண்ட நாட்களுக்குப் பின் தங்களுடைய பதிவு மகிழ்வளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்

goldstar
7th July 2011, 10:10 AM
சிங்கத்தமிழனின் "சவாலே சமாளி" : 150வது படவிழா
[10.7.1971(சனி) மற்றும் 11.7.1971(ஞாயிறு)] : திருச்சிராப்பள்ளி

வரலாற்று ஆவணங்கள் : மாலை முரசு(திருச்சி-தஞ்சை) : 10.7.1971

ஊர்வலம் பற்றிய செய்தித்தொகுப்பு [முதல் பக்கத்திலிருந்து]

ஊர்வலக் காட்சிகள்


விழா தொடக்க தினத்தன்று [10.7.1971] வெளியான பட விளம்பரம்


அன்புடன்,
பம்மலார்.



Thanks a lot Mr. Swamy for "Kallakkal" photos...

mr_karthik
7th July 2011, 01:13 PM
பம்மலார் சார்,

திருச்சியில் நடந்த நடிகர்திலகத்தின் 150வது படவிழாவின் நிகழ்ச்சித்தொகுப்பை, செய்தித்தாள்களின் ஒரிஜினல் வடிவில் அளித்தமைக்கு மிக்க நன்றி. தங்களின் இத்தகைய மேலான பங்களிப்புகளால் நமது திரி, நடிகர்திலகத்தின் ரசிகர்களின் ஆவணக்காப்பகமாக மாறி வருகிறது.

தன்னலம் கருதாத தங்களைப்போன்ற ரசிகத்திலகங்களின் உழைப்பால், நடிகர்திலகத்தின் புகழ் பலநூறு ஆண்டுகள் நிலைத்திருக்கும்.

அத்தகைய மாநாடுகளின் ஒளிப்பேழைகள் விரைவில் ரசிகர்களூக்கு கிடைக்கச்செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருவதாக நீங்களும், நம்ம முரளி சாரும் சொல்லியிருப்பது மனதை உவகையடையச்செய்கிறது. கூடிய விரைவில் அது கைகூட வேண்டும்.

தங்களுக்கு மேலான நன்றிகள்.

abkhlabhi
7th July 2011, 05:40 PM
http://www.youtube.com/watch?v=6ySit-EywGk&NR=1

http://www.youtube.com/watch?v=eMl17UP5uFE

abkhlabhi
7th July 2011, 05:41 PM
NADIGAR THILAGAM SUPER SONGS


http://www.youtube.com/watch?v=6ySit-EywGk&NR=1

http://www.youtube.com/watch?v=eMl17UP5uFE


http://www.youtube.com/watch?v=kRiYGykoaJw

HARISH2619
7th July 2011, 06:57 PM
திரு பம்மல் சார்,
இதுவரையில் நான் பார்த்திராத சிவந்தமண் ,தெய்வமகன் நூறு நாள் விளம்பரங்கள் மற்றும் திருச்சி மாநாடு செய்திகள் அளித்தமைக்கு நன்றிகள் பல கோடி.தங்களை போன்றவர்கள் இந்த திரியில் இருப்பது நாங்கள் செய்த பாக்கியம்.
திரு ராகவேந்தர் சார்,
மக்கள் அதிகம் அறிந்திராத நடிகர்திலகத்தின் படங்களின் விளம்பரங்கள் மற்றும் அந்த படங்களின் வீடியோ காட்சிகள் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி
திரு கார்த்திக் சார்,
இதுவரையில் நடிகர்திலகம் படங்கள் தொடர்பான தங்கள் அனுபவத்தை சுருக்கமாக சொல்லி வந்த தாங்கள் சமீபகாலமாக மடை திறந்த வெள்ளமாக மிகவும் சுவாரஸ்யமான நடையில் அதை விரிவாக சொல்லி எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி வருகிறீர்கள் .தங்களிடமிருந்து மேலும் பல சுவையான அனுபவங்களை எதிர்பார்க்கிறோம் .
திரு முரளி சார்,
நடிகர்திலகம் மதுரைக்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்கிறோம்

திரு குமரேசன் சார் அவர்களுக்கு(கர்னாடக பிரபு மன்ற தலைவர்),(தாங்கள் இந்த திரியை தொடர்ந்து படித்து வருகிறீர்கள் என்ற நம்பிக்கையில்),
அடிமைப்பெண் பெங்களூர் வெளியீடு தொடர்பான செய்திகளை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.இதேபோல நடிகர்திலகத்தை அவரது நினைவுநாளன்று பெங்களுரிலுள்ள தியேட்டர்களுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

Murali Srinivas
7th July 2011, 10:12 PM
சுவாமி,

நான் புள்ளிதான் வைத்தேன். நீங்கள் கோலம் போட்டு முடித்து விட்டீர்கள். மனங்கனிந்த நன்றிகள். இத்துடன் சித்ராலயா இதழில் வெளியான புகைப்படங்களையும் இங்கே கொடுத்தோம் என்றால் விழாவைப் பற்றிய ஒரு முழு கண்ணோட்டம் அனைவருக்கும் கிடைத்துவிடும்.

ராகவேந்தர் சார்,

தமிழ்நாட்டு கலை உலகின் திலகத்தை இங்கே பதிவேற்றிய உங்களுக்கு நன்றி. பதிவேற்றப் போகும் பத்திரிக்கை செய்திகளுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.

அன்புடன்

pammalar
8th July 2011, 02:24 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி ! பொன்விழா ஆண்டில் பீடுநடை போடும் "வடிவுக்கு வளைகாப்பு" பட விளம்பரமும், பாடலும் பிரமாதம்.

Thank You, Mr.Satish.

டியர் mr_karthik,

தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள் !

டியர் பாலா சார்,

மணிமணியான பாடல்களை வழங்கியமைக்கு நன்றி முத்தாரங்கள் !

டியர் செந்தில் சார்,

மிக்க மகிழ்ச்சி, தங்களின் பாராட்டு நான் பெற்ற பாக்கியம் !

டியர் முரளி சார், மனமார்ந்த நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th July 2011, 03:02 AM
வடிவுக்கு வளைகாப்பு : பொன்விழா ஆண்டு தொடக்கம்
[7.7.1962 - 7.7.2011]

முதல் வெளியீட்டு விளம்பரம் : மதி ஒளி : 15.7.1962
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3823a.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th July 2011, 05:17 AM
சிங்கத்தமிழனின் "சவாலே சமாளி" : 150வது படவிழா
[10.7.1971(சனி) மற்றும் 11.7.1971(ஞாயிறு)] : திருச்சிராப்பள்ளி

வரலாற்று ஆவணங்கள் : பேசும் படம் : ஆகஸ்ட் 1971

இருதின நிகழ்வுகளின் செய்தி-கட்டுரைத் தொகுப்பு [பத்து பக்கங்கள்]

முதல் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3811aaa.jpg


பக்கங்கள் 2, 3
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3813aa.jpg


பக்கங்கள் 4, 5
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3816bb.jpg


பக்கங்கள் 6, 7
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3819a-1.jpg

தொடர்ச்சி அடுத்த பதிவில்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th July 2011, 05:24 AM
சிங்கத்தமிழனின் "சவாலே சமாளி" : 150வது படவிழா
[10.7.1971(சனி) மற்றும் 11.7.1971(ஞாயிறு)] : திருச்சிராப்பள்ளி

வரலாற்று ஆவணங்கள் : பேசும் படம் : ஆகஸ்ட் 1971

இருதின நிகழ்வுகளின் செய்தி-கட்டுரைத் தொகுப்பு [பத்து பக்கங்கள்]
[தொடர்ச்சி...]

பக்கங்கள் 8, 9
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3821b.jpg


பத்தாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3822a.jpg


வரலாற்று ஆவணங்கள் : மாலை முரசு(திருச்சி-தஞ்சை) : 10.7.1971

வாழ்த்து விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3824a.jpg


பட விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3827a.jpg

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
8th July 2011, 12:54 PM
http://www.youtube.com/watch?v=BPsRQnqMc64

http://www.youtube.com/watch?v=LXdyeWbebbg

http://www.youtube.com/watch?v=N0NH4iyPn_A

RAGHAVENDRA
8th July 2011, 01:12 PM
டியர் முரளி சார்,
விரைவில் தாங்கள் கூறிய பத்திரிகை கட்டுரை இங்கே வருகிறது.

டியர் பம்மலார்,
அட்டகாசம், அருமை, அற்புதம். பேசும் படம் 10 பக்கங்களையும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அழகில் இங்கே பதித்திருக்கிறீர்கள். நன்றியும் பாராட்டுக்களும்.

டியர் பாலா,
அருமையான ஒளிக்காட்சிகளுக்கான இணைப்புகளுக்கு நன்றிகள் பல.

இதயக்கனி சினிமா ஸ்பெஷல் ஜூலை இதழ் நடிகர் திலகத்தின் பல்வேறு செய்திகளையும் புகைப்படங்களையும் தாங்கி வெளிவந்துள்ளது. திரு விஜயன் அவர்களுக்கு நமது நன்றியும் பாராட்டுக்களும்.

அதில் இடம் பெற்ற படங்களிலிருந்து இரண்டு இங்கே நம் பார்வைக்கு-

பெருந்தலைவர் காமராஜருடன் நடிகர் திலகம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/frontcoverfw.jpg

சவாலே சமாளி வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப் பட்ட புகைப்படம். கருப்புக்கண்ணாடியுடன் இருப்பவர் மல்லியம் ராஜகோபால்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/savalesamalishootfw.jpg

அன்புடன்

gkrishna
8th July 2011, 01:23 PM
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. எல்லா புகழும் அந்த சிவா (ஜி) (னு) க்கே

சிவன்(ஜி) அவன் என் சிந்தனயில் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிந்தை மகிழ
சிவா (ஜி) புராணம் தன்னை முந்தை வினை முழுதம் ஓய உரைப்போம்

என்றும் அன்புடன்

கிருஷ்ணா

abkhlabhi
8th July 2011, 01:48 PM
http://www.youtube.com/watch?v=STCBN60rIzc

http://www.youtube.com/watch?v=qDRk7ntjuhs

ttp://www.youtube.com/watch?v=7AeGzAQTOVg

http://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0

http://www.youtube.com/watch?v=XMEJZbkQCBE

http://www.youtube.com/watch?v=sJ9HKFehHYw

http://www.youtube.com/watch?v=pf0fgq9WInU

abkhlabhi
8th July 2011, 01:50 PM
ttp://www.youtube.com/watch?v=7AeGzAQTOVg

abkhlabhi
8th July 2011, 02:17 PM
http://www.youtube.com/watch?v=cXtgQe5SGwM

http://www.youtube.com/watch?v=KPN_XlUinVI

http://www.youtube.com/watch?v=7AeGzAQTOVg

http://www.youtube.com/watch?v=F2cIi1Q1CPg


http://www.youtube.com/watch?v=Ll-yDdgCHm0

http://www.youtube.com/watch?v=vIHZEFMuw3s


one of the best NT
http://www.youtube.com/watch?v=E9-Mq5Fi-XM

Pains of an inferior Soul
http://www.youtube.com/watch?v=oCxzAG45eJM

abkhlabhi
8th July 2011, 02:43 PM
http://www.dailymotion.com/video/xjivre_dhruva-tara-south-indian-film-actor-sivaji-ganesan_news

abkhlabhi
8th July 2011, 02:47 PM
http://www.dailymotion.com/video/x6fab0_sivaji-ganesan-book-release-functio_shortfilms

abkhlabhi
8th July 2011, 02:49 PM
http://www.dailymotion.com/video/xj385x_idai-kaiyirandil-aadum-vidivelli-a-m-raja_creation

abkhlabhi
8th July 2011, 02:51 PM
http://www.dailymotion.com/video/xj2rv0_manmadha-leelaiyai-mugathil_creation

abkhlabhi
8th July 2011, 03:07 PM
My all time favourite and mobile ringtone

http://www.raaga.com/channels/tamil/video.asp?clpid=12606

RAGHAVENDRA
8th July 2011, 04:56 PM
சவாலே சமாளி 150வது பட விழா விழாக் காட்சிகள் - உபயம் சித்ராலயா பத்திரிகை

பத்திரிகை விளம்பரம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Savalae%20Samaali/SS10003.jpg

விழாக் காட்சிகள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Savalae%20Samaali/SS10004.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Savalae%20Samaali/SS10005.jpg

அன்புடன்

RAGHAVENDRA
8th July 2011, 04:57 PM
சவாலே சமாளி 100வது நாள் விழா காட்சிகள் - உபயம் சித்ராலயா பத்திரிகை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Savalae%20Samaali/SS10002.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Savalae%20Samaali/SS10001.jpg

அன்புடன்

abkhlabhi
8th July 2011, 05:00 PM
http://www.metacafe.com/watch/yt-KcZwnJnkLak/kannoru_pakkam_nirai_kudam_romantic_tamil_song/

abkhlabhi
8th July 2011, 05:03 PM
http://www.metacafe.com/watch/yt-L6PAZBYOZx4/sivaji_ganesan_super_hit_song_ullangal_ondraagi/

abkhlabhi
8th July 2011, 05:10 PM
http://www.metacafe.com/watch/yt-hZnHEfpJA88/telugu_movie_song_aathma_bandhuvu_manishiko_sneham/

abkhlabhi
8th July 2011, 05:11 PM
http://www.metacafe.com/watch/yt-vVX40wjio3I/sivaji_ganeshan_parasakthi_colorclip_maha/

abkhlabhi
8th July 2011, 05:14 PM
http://www.metacafe.com/watch/yt-zbY1ARcn64Q/oru_yathramozhi_11_mohanlal_shivaji_ganeshan_2_leg ends_in_a_malayalam_movie_1997/

abkhlabhi
8th July 2011, 05:16 PM
http://www.metacafe.com/watch/yt-qVlF9bNMg6w/sivaji_ganeshan_adi_ennadi/

Murali Srinivas
9th July 2011, 01:02 AM
என் வேண்டுகோளை ஏற்று சித்ராலயா இதழின் பக்கங்களை பதிவேற்றியதற்கு நன்றி ராகவேந்தர் சார்!
.
இந்த வாரத்தை சவாலே சமாளி சிறப்பு வாரமாக மாற்றிய சுவாமிக்கு நன்றி. இன்றைக்கு இந்த திரியில் பதிவு செய்யப்படும் விஷயங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும் போது என் மனம் ஐந்து வருடங்கள் பின்னோக்கி பறக்கின்றது.

நான் இந்த திரியில் அடியெடுத்து வைக்கும்போது சிவாஜி என்ற நடிகர் திறமையானவர்,சில நல்ல படங்களில் நடித்திருக்கிறார் என்றளவிலே தான் பலரின் சிந்தனை இருந்தது. நாம் இங்கே நடிகர் திலகம் என்ற மனிதனின் பல்வேறு பரிணாமங்களை இங்கே பதிவிட பலருக்கும் அது ஒரு வியப்பூட்டும் செய்தியாக மட்டுமே இருந்தது.

நண்பர் ஜோ ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார் "சார், நீங்கள் திரியில் நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பற்றி எழுதியதை படித்த பிறகுதான் மதுரை நடிகர் திலகத்தின் கோட்டை என்பதை புரிந்துக் கொண்டேன். அதுவரை மதுரை மற்ற யாரோ ஒருவரின் கோட்டை என நினைத்துக் கொண்டிருந்தேன்" என்றார். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் புத்தகங்கள், பத்திரிக்கைகள், வலைப்பூக்கள மற்றும் இணையதளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றி எந்த ஒரு செய்தியையும் விடாமல் தேடிப் படிக்கும் ஜோ போன்றவர்களின் பார்வைக்கு கூட இந்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில்தான் திரியில் வரும் செய்திகளுக்கும் புள்ளி விவரங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்தன. நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் சாதனைகளையும் தவிர நடிகர் திலகம் கலையுலக மற்றும் அரசியலில் எப்படிப்பட்ட ஒரு ஆளுமையாக இருந்தார் என்பதனை முதலில் எழுத்துக்களில் சொன்னோம். அப்போதும் கூட இங்கே இந்த திரிக்கு தொடர்ந்து வாசகர்களாக இருக்கக்கூடியவர்கள், ரசிகர்களாக இருக்கக்கூடியவர்கள் கூட, இங்கே பதிவிடுபவர்கள் சிலர் சிவாஜியின் மீது கொண்டுள்ள அதீத அன்பின் காரணமாக சற்று மிகைப்படுத்தி சொல்வதாக ஒரு எண்ணத்தை கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தை மாற்றி நாம் நடிகர் திலகத்தைப் பற்றி பதிவிட்டவை அனைத்துமே உண்மை என்பதற்கும் இப்போது நாம் குறிப்பிட்ட அந்த ஆளுமையின் பலவாறு பரிணாமங்களை எல்லோரும் உணர்வதற்கும் இந்த பத்திரிக்கை செய்திகளும் விளம்பரங்களும் பெரிதும் பயன்பட்டிருக்கும்.

இன்னொன்று. இந்த சவாலே சமாளி படம் வெளியான போதும் சரி, விழா் நடந்த 1971 ஜூலை 10,11 தேதிகளிலும் சரி அந்தக் காலக் கட்டத்தில் இவற்றை நேரில் பார்த்த எங்களைப் போன்றோர் இந்த நிகழ்ச்சியின் நிகழ்வுகளை மட்டும் சொல்லி போக, அந்த காலக் கட்டத்தில் இந்த பூமி பந்தில் ஜனனம் கூட கண்டிராத நண்பர் சுவாமியின் மூலமாக இன்று உலகில் பல்வேறு இடங்களில் வாழும் பல்வேறு தலைமுறையினரும் அதை புகைப்பட வடிவிலும் செய்தியாகவும் கண்டு களிக்கிறார்கள் என்றால் அனைத்தும் அந்த "சுவாமியின் " கருணை.

உண்மைதானே! தந்தைக்கே உபதேசம் செய்ததால்தானே அவன் "சுவாமிநாதன்" ஆனான்!

அன்புடன்

KCSHEKAR
9th July 2011, 11:51 AM
சவாலே சமாளி பதிவுகள் மிகவும் அருமை. புள்ளி வைத்து ஆரம்பித்த திரு.முரளி, அதைக் கோலமாக்கி, இனிய நினைவுகளை நமக்களித்த திரு.பம்மலார், திரு.ராகவேந்திரன் ஆகியோருக்கு நன்றிகள்.

mr_karthik
9th July 2011, 12:01 PM
பம்மலார் சார், ராகவேந்தர் சார், முரளி சார்....... உங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி.

முரளி அவர்கள் சொன்னது போல இந்த வாரம் முழுவது 'சவாலே சமாளி' சிறப்பு மலராக நமது திரி அமைந்து அழகு சேர்த்துள்ளது. இதற்கு முழுமுதற்காரணம் நீங்கள் மூவருமே.

எனக்குத்தெரிந்து 'சவாலே சமாளி' உதய தினம் கொண்டாடப்பட்ட அளவுக்கு நமது திரியில் மற்றைய படங்கள் கொண்டாடப்படவில்லை என்று எண்ணுகிறேன். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, திருச்சி மலைக்கோட்டை மாநகரில் நடந்த 150 வது பட விழா. அவ்விழா நிகழ்ச்சிகளை எழுத்துக்களால் தொகுத்தால் முழுமையடையாது, அல்லது தகவல்கள் கூடுதல் குறைவாக ஆகிவிடுமோ என்ற எண்ணத்தில், அவ்விழா பற்றிய அன்றைய தின, வார, மாத இதழ்களின் பங்களிப்பை அப்படியே இங்கே பதிவேற்றி அட்டகாசம் செய்துவிட்டீர்கள்.

** சவாலே சமாளி வெளியீட்டு விளம்பரம் (தினமணி, முரசொலி)

** சவாலே சமாளி 100 வது நாள் விளம்பரம், தியேட்டர் பெயர்களுடன் (தினத்தந்தி)

** 150 வது படவிழா பற்றி மாலைமுரசு நாளிதழில் வெளியான செய்தி (படங்களுடன்)

** விழாவில் பங்கேற்ற பிரபலங்கள், நடிகர்திலகத்துக்கு செய்யும் மாலை மரியாதைகள், மற்றும் சிற்ப்புப்பேச்சுக்கள், நடிகர்திலகத்தின் உணர்ச்சிப்பிரவாக பேச்சு - (பேசும் படம் மாத இதழின் பத்துபக்கங்களின் பதிவேற்றம்).

** திருச்சி விழா நிகழ்ச்சிகள் பற்றிய செய்தித்தொகுப்பு, படங்களுடன் (சித்ராலயா மாதமிருமுறை இதழ்)

** பெருந்தலைவருடன் அவரது உண்மைத்தொண்டன் இணைந்து நிற்கும் சீரிய தோற்றம், மற்று சவாலே சமாளி படப்பிடிப்புக் காட்சி (இதயக்கனி மாத இதழ்) (அண்ணன் மாணிக்கமும், அண்ணி சகுந்தலாவும் வயலில் இறங்கி நிற்கும் காட்சி கொள்ளை அழகு)

** முத்தாய்ப்பாக சென்னையில் நடந்த 100-வது நாள் நிகழ்ச்சியின் படத்தொகுப்பு.

அடடா... அடடா... தேடித் தேடிக்கொண்டு வந்து குவித்து விட்டீர்கள். அவ்ற்றுக்கு கூடுதல் வலு சேர்க்க, சவாலே சமாளி வெளியீட்டின்போது நடந்த நிகழ்வுகள் பற்றி முரளி, பம்மலார், ராகவேந்தர், பார்த்தசாரதி, சாரதா உள்ளிட்டோரின் சிறப்புப் பதிவுகள் (கூடவே சிறிய அளவில் எனது நினைவுகளும்) எல்லாம் கூடி 'சவாலே சமாளி' உதய தினத்தை களைகட்டச்செய்து விட்டன.

ஒளிப்பதிவு மேதைகள் பி.என்.சுந்தரமும், தம்புவும் படமாக்கிய திருச்சி விழா நிகழ்ச்சிகளை இப்போது மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆவல் உண்டாகிறது. இப்போது அதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. இதுபோன்ற அபூர்வமான ஆவண ஒளிப்பதிவுகளை தலைமை மன்றத்திலோ அல்லது சிவாஜி பிலிம்ஸிலோ பாதுகாத்து வைத்திருக்க வேண்டாமா?. விரைவில் அவை நம் கண்களுக்கு விருந்தாகப் பிரார்த்திப்போம்.

ரசிகப்பெருமக்களால் முடிந்தது அன்றைய நாட்களில் வெளியான, செய்தித்தாள், வார, மாத இதழ்களில் வெளியானவற்றைச் சேகரித்து வைப்பதுதான். அதனை அவர்கள் செவ்வனே செய்து வருகின்றனர். அதனால்தான் அவை இப்போது நமக்கு மட்டுமல்ல, இன்றைய புதிய தலைமுறையினருக்கும் கூட விருந்தாகப் பரிமளிக்கின்றன. நமது திரி, நடிகர்திலகத்தின் ஆவணக்க்காப்பகமாக உருவெடுத்து வருகிறது என்று சொன்ன எனது வாயில் நானே சிறிது சர்க்கரையை அள்ளிப்போட்டுக்கொண்டேன். பின்னே?. இப்போது இங்கே பதிக்கப்பட்டு வரும் ஆதாரங்கள் எத்தனை நடிகர்திலகத்தின் ரசிகர்களின் (என்னையும் சேர்த்து) கணிணியில் சேமிக்கப்பட்டிருக்கும் தெரியுமா?.

பம்மலார், ராகவேந்தர், முரளியார் போன்றோரின் திருத்தொண்டு வாழ்க.

பாலா சார்,

சிரமம் பாராமல் நீங்கள் அள்ளி அளித்திருக்கும் பாடல் தொகுப்புகள் மிக மிக அருமை. அதிகமதிகம் நன்றிகள்.

goldstar
9th July 2011, 02:02 PM
Guys,

Just looked at NT's rare photos at https://www.facebook.com/photo.php?fbid=183033618422696&set=a.183033525089372.45621.100001481766300&type=1&theater

Cheers,
Sathish

joe
9th July 2011, 04:51 PM
நண்பர் ஜோ ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார் "சார், நீங்கள் திரியில் நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பற்றி எழுதியதை படித்த பிறகுதான் மதுரை நடிகர் திலகத்தின் கோட்டை என்பதை புரிந்துக் கொண்டேன். அதுவரை மதுரை மற்ற யாரோ ஒருவரின் கோட்டை என நினைத்துக் கொண்டிருந்தேன்" என்றார். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் புத்தகங்கள், பத்திரிக்கைகள், வலைப்பூக்கள மற்றும் இணையதளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றி எந்த ஒரு செய்தியையும் விடாமல் தேடிப் படிக்கும் ஜோ போன்றவர்களின் பார்வைக்கு கூட இந்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிக உண்மை முரளி சார்.

சிங்கையில் தமிழ் வலைப்பதிவுகள் மூலமாக ஏற்பட்ட ஒரு குழுமத்தில் இளைய தலைமுறையினரோடு கலந்துரையாடும் வாய்ப்புகள் நிறைய வாய்த்ததுண்டு ..அவர்களிடையே சிவாஜி என்ற பெயரை கேட்டதும் நினைவுக்கு வருபவனாக நான் அமைந்துவிட்டது எனக்கு பெருமை ..பொதுவாக அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் நடிகர் திலகம் மிகச்சிறந்த நடிகர் என்பதை ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில் நடிகர் திலகம் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்பதை அறிந்திருக்கவில்லை ..அதற்கு காரணம் எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு பிறகு வந்த தலைமுறைக்கு எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்கு பெற்ற மாபெரும் வெற்றியாளர் , சிவாஜி அரசியலில் தோல்வி கண்ட மிகச்சிறந்த கலைஞர் என்றே அறிந்திருக்கிறார்கள் .. எனவே எம்.ஜி.ஆர் என்பவர் மிகப்பெரிய மாஸ் ஹீரோ , சிவாஜி அந்தளவுக்கு ரசிகர் கூட்டம் கொண்டிருந்தவரல்ல என்றே ஒரு அனுமானம் இருக்கிறது . இதற்கு முழுக்காரணமும் எம்.ஜி.ஆரின் அரசியல் விஸ்வரூபம் தான் ..அதைத் தாண்டி , எம்.ஜி.ஆரும் .சிவாஜியும் ஒன்றாக கோலோச்சிய காலத்தில் வணிகரீதியிலும் , ரசிகர்கள் எண்ணிக்கையிலும் நடிகர்திலகம் யாருக்கும் குறைந்தவர் அல்ல என நாம் சொன்னாலும் அதை ஏற்க அவர்கள் மனம் மறுக்கிறது . இது பற்றி நண்பர் ஒருவரோடு என் தொடர்ச்சியான விவாதத்தின் இறுதியில் உங்களின் நடிகர் திலகம் சாதனைப்பட்டியலை படிக்க கொடுத்த பின்னர் தான் அவர் தன் கருத்தை மாற்றிக்கொண்டார் .

ஒரு காலத்தில் ஒன்றை ஒன்று ஒட்டி உரசி செல்லும் சாதனை நட்சத்திரங்களாக விளங்கிய இருவர் , காலப்போக்கில் அரசியல் ஓட்டத்தில் கிடைத்த ஓடங்களின் தன்மையைப் பொறுத்து ஒருவர் முக்கியத்துவம் அதிகமாக பெற்றுவிட்ட காரணத்தால் , ஏதோ ஒரு வகையில் ஒருவர் ஏற்படுத்திய அமைப்பு இன்றும் மாபெரும் சக்தியாக வலம் வரும் நிலையில் , பின்னர் வந்த தலைமுறை முந்தைய வரலாற்றை வேறு கண் கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாது .. ஆனாலும் முடிந்த வரை நமக்கு தெரிந்தவர்களிடம் உண்மையை உரக்கச்சொல்வதை எப்போதும் தொடர்வோம் .

pammalar
9th July 2011, 08:16 PM
Cometh the hour ! Cometh the Man !

King Barrister is Back With a Bang !

In Shanthi Cinemaas [Chennai] from 15th of July.

Cometh the hour ! Cometh the King !

Murali Srinivas
9th July 2011, 11:48 PM
நன்றி சந்திரசேகர் சார்.

கார்த்திக்,

உணர்வுபூர்வமான உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

ஜோ,

நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை மிக அழகாய் சொல்லி விட்டீர்கள். உண்மைகள் நமது பக்கத்திலிருந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

சதீஷ்,

அந்த புகைப்படங்கள் அதிலும் குறிப்பாக நீலவானத்தின் "ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே" பாடலின் ஸ்டைலிஷ் நடிகர் திலகத்தின் படம் பிரமாதம்.

அன்புடன்

pammalar
10th July 2011, 03:31 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

தாங்கள் பதிவிட்டுள்ள 150வது படவிழாவின் ஆவணங்களான 16.7.1971 தேதியிட்ட 'சித்ராலயா' வார இதழின் பக்கங்கள், 150வது காவியத்தின் 100வது நாள் விழாக் காட்சிகளின் ஆதாரங்களான 22.10.1971 தேதியிட்ட அதே இதழின் பக்கங்கள் மற்றும் லேட்டஸ்ட் [ஜுலை 2011] 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' முகப்பு மற்றும் உட்பக்கப்புகைப்படம் ஆகிய ஒவ்வொன்றுமே அட்டகாசம், அற்புதம், அருமை. பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

Mr.Rakesh, Thank You Very Much.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th July 2011, 03:55 AM
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. எல்லா புகழும் அந்த சிவா (ஜி) (னு) க்கே

சிவன்(ஜி) அவன் என் சிந்தனயில் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிந்தை மகிழ
சிவா (ஜி) புராணம் தன்னை முந்தை வினை முழுதம் ஓய உரைப்போம்

என்றும் அன்புடன்

கிருஷ்ணா

டியர் கிருஷ்ணாஜி,

சிவபெருமானைப் போற்றி மாணிக்கவாசகர் அருளிய திருவாசக வரிகளை, ரசிக மாணிக்கமாகிய தாங்கள் நமது மாணிக்க[சவாலே சமாளி]மாம் சிவாஜி பெருமானுக்கு [இத்]திரிவாசக வரிகளாக சூட்டியுள்ள அழகே அழகு ! நன்றி கலந்த பாராட்டுக்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th July 2011, 04:09 AM
இந்த சவாலே சமாளி படம் வெளியான போதும் சரி, விழா் நடந்த 1971 ஜூலை 10,11 தேதிகளிலும் சரி அந்தக் காலக் கட்டத்தில் இவற்றை நேரில் பார்த்த எங்களைப் போன்றோர் இந்த நிகழ்ச்சியின் நிகழ்வுகளை மட்டும் சொல்லி போக, அந்த காலக் கட்டத்தில் இந்த பூமி பந்தில் ஜனனம் கூட கண்டிராத நண்பர் சுவாமியின் மூலமாக இன்று உலகில் பல்வேறு இடங்களில் வாழும் பல்வேறு தலைமுறையினரும் அதை புகைப்பட வடிவிலும் செய்தியாகவும் கண்டு களிக்கிறார்கள் என்றால் அனைத்தும் அந்த "சுவாமியின் " கருணை.

உண்மைதானே! தந்தைக்கே உபதேசம் செய்ததால்தானே அவன் "சுவாமிநாதன்" ஆனான்!

அன்புடன்

டியர் முரளி சார்,

தங்களது உச்சமான பாராட்டு அடியேனது கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்து விட்டது.

தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் !

அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
10th July 2011, 04:29 AM
டியர் mr_karthik,

பாராட்டுக்கும், பட்டியலுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ! அப்பட்டியலில் ஒரே ஒரு சிறுதிருத்தம். "சவாலே சமாளி" முதல் வெளியீட்டு விளம்பரங்களாக பதிவிடப்பட்டுள்ளவை - 'The Hindu' நாளிதழ் விளம்பரமும், 'முரசொலி' நாளிதழ் விளம்பரமும்.

தாங்கள் கூறியது போல் இந்த வாரத்தை மாணிக்க[சவாலே சமாளி] வாரமாக மாற்றிய பெருமை நம் அனைவரையும் சாரும்.

டியர் சந்திரசேகரன் சார், மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th July 2011, 06:17 AM
கலைச் சக்கரவர்த்தியின் "கௌரவம்"

சாதனைப் பொன்னேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 25.10.1973
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3831a.jpg


100வது நாள் விளம்பரம் : அலை ஓசை : 1.2.1974
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3833a.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
10th July 2011, 06:29 AM
"திரும்பிப் பார்" பரந்தாமனுக்கு அகவை 59 [10.7.1953 - 10.7.2011]

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 10.7.1953
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3834a.jpg


Third Week Running Ad : The Hindu : 24.7.1953
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3836a.jpg

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்புகளில் நடிகர் திலகம் நடித்த இரு திரைப்படங்களில் முதல் திரைப்படம், மற்றொன்று "இல்லற ஜோதி(1954)".

தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர் வரும் "ட்ரெய்லர்" காண்பிக்கப்பட்ட முதல் திரைப்படம்.

ராகதேவன் ஜி.ராமநாதன் இசையமைத்த முதல் நடிகர் திலகத்தின் படம்.

இன்னும் இதுபோன்று எத்தனை எத்தனையோ...சொல்லிக் கொண்டே போகலாம். அவையாவும் பின்னொரு நாளில், பின்னொரு பதிவில்.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
10th July 2011, 11:48 AM
மிக உண்மை முரளி சார்.

சிங்கையில் தமிழ் வலைப்பதிவுகள் மூலமாக ஏற்பட்ட ஒரு குழுமத்தில் இளைய தலைமுறையினரோடு கலந்துரையாடும் வாய்ப்புகள் நிறைய வாய்த்ததுண்டு ..அவர்களிடையே சிவாஜி என்ற பெயரை கேட்டதும் நினைவுக்கு வருபவனாக நான் அமைந்துவிட்டது எனக்கு பெருமை ..பொதுவாக அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் நடிகர் திலகம் மிகச்சிறந்த நடிகர் என்பதை ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில் நடிகர் திலகம் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்பதை அறிந்திருக்கவில்லை ..அதற்கு காரணம் எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு பிறகு வந்த தலைமுறைக்கு எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்கு பெற்ற மாபெரும் வெற்றியாளர் , சிவாஜி அரசியலில் தோல்வி கண்ட மிகச்சிறந்த கலைஞர் என்றே அறிந்திருக்கிறார்கள் .. எனவே எம்.ஜி.ஆர் என்பவர் மிகப்பெரிய மாஸ் ஹீரோ , சிவாஜி அந்தளவுக்கு ரசிகர் கூட்டம் கொண்டிருந்தவரல்ல என்றே ஒரு அனுமானம் இருக்கிறது . இதற்கு முழுக்காரணமும் எம்.ஜி.ஆரின் அரசியல் விஸ்வரூபம் தான் ..அதைத் தாண்டி , எம்.ஜி.ஆரும் .சிவாஜியும் ஒன்றாக கோலோச்சிய காலத்தில் வணிகரீதியிலும் , ரசிகர்கள் எண்ணிக்கையிலும் நடிகர்திலகம் யாருக்கும் குறைந்தவர் அல்ல என நாம் சொன்னாலும் அதை ஏற்க அவர்கள் மனம் மறுக்கிறது . இது பற்றி நண்பர் ஒருவரோடு என் தொடர்ச்சியான விவாதத்தின் இறுதியில் உங்களின் நடிகர் திலகம் சாதனைப்பட்டியலை படிக்க கொடுத்த பின்னர் தான் அவர் தன் கருத்தை மாற்றிக்கொண்டார் .

ஒரு காலத்தில் ஒன்றை ஒன்று ஒட்டி உரசி செல்லும் சாதனை நட்சத்திரங்களாக விளங்கிய இருவர் , காலப்போக்கில் அரசியல் ஓட்டத்தில் கிடைத்த ஓடங்களின் தன்மையைப் பொறுத்து ஒருவர் முக்கியத்துவம் அதிகமாக பெற்றுவிட்ட காரணத்தால் , ஏதோ ஒரு வகையில் ஒருவர் ஏற்படுத்திய அமைப்பு இன்றும் மாபெரும் சக்தியாக வலம் வரும் நிலையில் , பின்னர் வந்த தலைமுறை முந்தைய வரலாற்றை வேறு கண் கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாது .. ஆனாலும் முடிந்த வரை நமக்கு தெரிந்தவர்களிடம் உண்மையை உரக்கச்சொல்வதை எப்போதும் தொடர்வோம் .

அன்புமிக்க ஜோ அவர்களுக்கு,
தனியொரு நபராக அந்நிய மண்ணில் தாங்கள் நடிகர் திலகத்தின் புகழ் பரப்ப ஆற்றி வரும் தொண்டுக்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகர் சார்பிலும் என் சார்பிலும் என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக தங்களுடைய பதிவின் கடைசி பாரா பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியதாகும். இதைத்தான் நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். இதற்குக் காரணம் திராவிட இயக்கங்கள் மட்டுமல்ல, நடிகர் திலகம் சார்ந்திருந்த இயக்கமும் கூட. அன்னை இந்திரா காந்தி நடிகர் திலகத்தின் செல்வாக்கை உணர்ந்திருந்த அளவிற்கு அவருக்கு முன்னர் இருந்திருந்த தேசிய தலைவர்கள் இயக்கத்தவர்கள் மற்றும் தமிழகத் தலைவர்கள் உணர்ந்திருந்தால் 1967 மாற்றத்தை விரைவில் சரி செய்திருப்பர். திராவிட இயக்கத்தினர் கலை உலகை சரியான விகிதத்தில் பயன் படுத்திக்கொண்டு தாங்களும் வளர்ந்து கலைஞர்களையும் வளர்த்ததோடு மட்டுமன்றி தேசியத்தை முற்றிலும் மறக்கடிக்கும் விதத்தில் தமிழக மக்களை பயன் படுத்திக்கொண்டனர். இருந்தாலும் நடிகர் திலகம் என்கிற தூண் தன்னந்தனியாக தாங்கி நின்றதால் தான் தேசியம் இன்றளவும் மீதமிருக்கும் மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது. அவருடைய மக்கள் செல்வாக்கு இன்னும் தமிழகத்தில் தெரியவில்லை. ஒரே ஒரு தேர்தலில் மட்டும் போட்டியிட்டு, அதுவும் மற்றவர்களுக்காக வாக்குக் கேட்டுத் தோற்றதை, அவருடைய தோல்வி என்று கூறுவது நியாயமாகாது, தர்மமாகாது. இறுதி வரை அவர் தனக்காக மக்களிடம் கையேந்த வில்லை. யாரை மக்கள் தொடர்ந்து வெற்ற பெறச் செய்தனரோ, அவருடைய மறைவிற்குப் பிறகு, அவருடைய இயக்கம் பிளவு படக் கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் தான் வாக்குக் கேட்டார். அந்த நேரத்தில் அவருடைய நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்திருக்கலாம். இதை வைத்து அவருடைய தேர்தல் தோல்வியையும் செல்வாக்கையும் எடை போடுவது நியாயமாகவும் தர்மமாகவும் இருக்காது என்பதே என் எண்ணம். அது மட்டுமல்லாமல் பின்னொரு காலத்தில் அவர் விரும்பியது போலவே அந்த இயக்கம் ஒன்று பட்டு மீண்டும் பழைய நிலையில் நிமிர்ந்து நின்றது, நடிகர் திலகம் எடுத்த நிலைப்பாடு தவறில்லை என்று மக்கள் அங்கீகரித்ததாகத் தானே இருக்க முடியும்?

சரியான நேரம் வாய்ப்பு அமைந்தால் மீண்டும் சிவாஜி ரசிகர்களால் (மட்டும்) தான் தமிழகத்தில் தேசீயத்தை மீண்டும் அரியணை ஏற்ற முடியும்.என்பதை காலம் நிரூபிக்கும்.

அன்புடன்

pammalar
10th July 2011, 07:09 PM
இன்றைய [10.7.2011 : ஞாயிறு] சென்னைப் பதிப்பு 'தினத்தந்தி'யில் வெளிவந்துள்ள விளம்பரம் :

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3837a.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th July 2011, 05:56 AM
நமக்கு தெரிந்தவர்களிடம் உண்மையை உரக்கச்சொல்வதை எப்போதும் தொடர்வோம் .

உண்மைகளை உரக்கச் சொல்வோம்

டியர் ஜோ சார்,

'உண்மையை உரக்கச் சொல்வோம்' என்று தாங்கள் கூறியுள்ளதால் இப்பதிவில் சில உண்மைகளைப் பதிவு செய்ய சித்தமாயுள்ளேன்.

நடிகர் திலகத்துக்கும், மக்கள் திலகத்துக்கும் வாய்க்கப் பெற்ற ஓடங்கள் ஒன்றுக்கொன்று மிகமிக வித்தியாசமானவை, மிகுந்த முரண்பாடானவை.

தனது ஏழாவது அகவையில் அரிதாரம் பூசத் தொடங்கிய நடிகர் திலகம் தொடர்ந்து தனது எழுபதாவது அகவையையும் தாண்டி அரிதாரம் தரித்தார் என்கின்ற சாதனை உலகறிந்ததே. இதில் 1950-ம் ஆண்டில் முதல் படமான "பராசக்தி"யில் கதாநாயகனாக அவர் நடிக்கத் தொடங்கியதிலிருந்து அவர் அரசியலிலிருந்து முழுவதுமாக விலகிய 1993-ம் ஆண்டு வரை தொடர்ந்து அவரது வாழ்க்கைப் பாதையின் வளர்ச்சிக்கு குழிப் பறிக்கும் வேலைகள் நடந்து கொண்டேதான் இருந்தன. கெடுகுடிகள் தோண்டிய அத்தனை படுகுழிகளையும் ஒவ்வொரு முறையும் தாண்டியே அவர் வளர்ந்து வெற்றி வலம் வந்தார். அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவை : அவரது அபரிமிதமான திறமை, அவருக்காக எதையும் செய்ய சித்தமாயிருந்த(இருக்கும்) தொண்டர்கள்[ரசிக-பக்தர்கள்] கூட்டம் மற்றும் அவரை வீழ்த்த எண்ணியவர்களும் கண்டு அஞ்சிய அவரது அளப்பரிய மக்கள் செல்வாக்கு. படுகுழிகள் பறித்த பாதகர்களுக்கு இவர் என்றுமே பதிலுக்கு படுகுழி பறித்து பழிவாங்கியதில்லை. அந்த எண்ணம் கூட அவருக்குத் தோன்றியதில்லை. குழந்தை உள்ளம் கொண்ட கோமான் அவர் என்பது அவருடன் நெருங்கிப் பழகிய அனைவருக்கும் தெரியும்.

திரையுலகுக்கு வருவதற்கு முன்னர், நாடக உலகில் கொடிகட்டிப் பறந்த பதினைந்து வருட காலகட்டத்தில் [1935-1950]தான் அவரைக் கவிழ்க்கும் முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. "பராசக்தி"யில் அவர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி சந்தித்த சங்கடங்களை, சோதனைகளை தனியொரு அத்தியாகமாகவே எழுதலாம். அவரை முளையிலேயே கிள்ளி எறியும் முயற்சிகளை அவரை வாழவைத்த தெய்வம் 'பெருமாள்' துணையோடு முறியடித்து "பராசக்தி" அருளால் பாராளும் சக்தி ஆனார். இறையருளும் அவருக்கு எல்லா இக்கட்டிலும் கைகொடுத்தது மறுக்கமுடியாதது.

மீண்டும் பெருமாள் அவருக்கு மாற்றத்தை உண்டாக்கினார். 1954-ம் ஆண்டு இறுதியில்/1955-ம் ஆண்டு தொடக்கத்தில் திருப்பதி சென்று ஆத்திகரான அவரை, அப்பொழுது அவர் சார்ந்திருந்த நாத்திக இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், "திருப்பதி கணேசா கோவிந்தா" என்று கழகத்திலிருந்து கழற்றி விட்டது. இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். நடிகர் திலகம் திருப்பதி சென்றது திடீர்ப்பயணம். அதற்காக திமுகழகம் அவரை நீக்கியது தருணம் பார்த்து செயலாற்றிய விதம். 1945லிருந்து 1954 வரை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் திராவிடக் கட்சிகளின் பெரும் ஆதரவாளனாக தொண்டாற்றியிருக்கிறார் நடிகர் திலகம். "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்(1945)" நாடகத்தின் மூலம் திராவிடப் பாசறையின் கொள்கைகளை ஆர்ப்பரிக்கும் அடலேறுவாக முழங்கினார் என்றால் "பராசக்தி(1952)" திரைப்படத்தின் மூலம் திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளை பாரதமெங்கும் கொண்டு சென்றார். கழகத்தின் வளர்ச்சி நிதிக்காக பல நாடகங்கள் நடித்தும், தமிழகத்தின் வீதிகளிளெல்லாம் "பராசக்தி" வசனம் பேசி அதிகதிக நிதி வசூலித்தும் அளித்திருக்கிறார். கழகத்திற்கு நன்மை மட்டுமே செய்த கணேசனுக்கு/அவரது வாழக்கைப் பயணத்துக்கு, "கோவிந்தா" போட்டு கழகம் படுபாதகமும் செய்தது மறுக்க முடியாத வரலாற்று உண்மை.

1955லிருந்து அனைத்து கட்சிகளுடனும் [திராவிடக் கட்சிகள் உட்பட], அனைத்துக் கட்சிப் பிரமுகர்களுடனும் நல்லிணக்கத்தை, நல்லுறவை பேணிய நடிகர் திலகம், அத்தகைய சிறந்த அணுகுமுறையை தனது இறுதிவரை கடைபிடித்தார். இன்றளவும் அன்னை இல்லத்துச் செல்வங்கள் இந்த அணுகுமுறையையே பின்பற்றுவது போற்றத்தக்கது.1955லிருந்து சர்வகட்சிகளுடன் இணக்கமாக இருந்த அதே நேரத்தில், காங்கிரஸ் பேரியக்கத்துடனும், கர்மவீரர் காமராஜருடனும் கூடுதல் இணக்கத்துடன் திகழ்ந்தார். பின்னர் 1965ல் காங்கிரஸில் உறுப்பினராக இணைந்து 1987 வரை தீவிரமாக தொண்டு புரிந்தார். 1955லிருந்து 1965 வரை அவர் காங்கிரஸ் விசுவாசியாக இருந்து அக்கட்சிக்காக உழைத்தபோதும் சரி, 1965லிருந்து 1987 வரை காங்கிரஸ் உறுப்பினராக அதிதீவிரமாக தொண்டாற்றியபோதும் சரி, அதுவும் ஒருதலைக்காதலாகவே இருந்தது என்பதும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் முழக்கத்தை "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படம் மூலம் 1959-ல் தேசிய திலகம் வெள்ளித்திரையில் வலம்வரச் செய்து தேசபக்தியை ஊட்டியபோது, அப்போதிருந்த காங்கிரஸ் அரசு குறைந்தபட்சம் அப்படத்தை ஊக்குவிக்க ஒரு வரிவிலக்கு [Tax-Free] சலுகை கூட வழங்கவில்லை. அதே போல் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை செந்தமிழ்நாட்டுச் செல்வங்களுக்கெல்லாம் அவர் வடித்துக் காட்டிய "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படம் 1961-ல் வெளிவந்தபோதும் அதே காங்கிரஸ் அரசு அப்படத்தை ஊக்குவிக்க வரிவிலக்கு சலுகை எதுவும் அளிக்கவில்லை. மேலும் கதர்ச்சட்டைக்காரர்களே "கப்பலோட்டிய தமிழ"னைக் காண வரவில்லை. [இதுகுறித்து சகோதரி சாரதா சமயம் வாய்க்கும் போதெல்லாம் குமுறியிருக்கிறார்].

[மறுவெளியீடுகளின் போது, 1977-ல் "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படத்திற்கும், பின்னர் 1984-ல் "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படத்திற்கும் அப்போதைய அதிமுக அரசு வரிவிலக்குச் சலுகை வழங்கியது].

1962-ல், ஜான் கென்னடி ஜனாதிபதியாகத் திகழ்ந்த அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று அமெரிக்கா மற்றும் இதர உலக நாடுகளுக்கு இந்திய நாட்டின் கலைத்தூதுவராக நடிகர் திலகம் உலகப்பயணம் மேற்கொண்டார். அவர் புறப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர், இங்கே இந்தியாவிலிருந்து அவரது மிக முக்கிய திரைப்படக் காட்சிகள் அடங்கிய படச்சுருள், ஒரு பயணிகள் விமானத்தில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது. அந்த விமானம் குறிப்பிட்டபடி அமெரிக்கா போய்ச் சேர்ந்தது. அந்தப்படச்சுருள் அமெரிக்கா போய்ச் சேரவில்லை. படச்சுருள் காணாமல் போனது மர்மமாகவே இருந்தது. நடிகர் திலகம் அமெரிக்கா செல்வதற்கு முன், அவரைப் பற்றி அமெரிக்கர்கள் அறிந்து கொள்வதற்காகவே இந்தப் படச்சுருள் அனுப்பபட்டது. ஆனால் யார் செய்த சதியோ அது சென்றடையவில்லை. 1962-ல் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியே.

பின்னர் 1965-ல் நடிகர் திலகம் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு தீவிர அரசியலில் இறங்கினார்.1967 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போதும், பின்னர் ஸ்தாபன காங்கிரஸிற்காக 1971 சட்டமன்ற தேர்தலின் போதும் பற்பல இடைத்தேர்தல்களின் போதும் தென்னகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும், மூலை முடுக்கெங்கும் சுற்றி தேர்தல் பணி ஆற்றினார். இந்தக் காலகட்டங்களில் காங்கிரஸிற்காக தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் தன்னலம் கருதாது அர்ப்பணித்து தொண்டு செய்தவர் அவர் ஒருவரே. சமயம் வாய்க்கும் போதெல்லாம் தனது திரைப்படங்களிலும் கதைக்கு பங்கம் ஏற்படாமல் காங்கிரஸ் புகழும், கர்மவீரர் புகழும் பாடினார். 1975-ல் பெருந்தலைவரின் மறைவுக்குப் பிறகு [2.10.1975], அவர் எடுத்த அரசியல் முடிவின் காரணமாக ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் வெறுப்புக்கு ஆளானார். நடிகர் திலகமும், அவரது அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றமும் மற்றும் பற்பல ஸ்தாபன காங்கிரஸ் காமராஜர்-சிவாஜி தொண்டர்களும்
இந்திரா காங்கிரஸில் இணைந்தது, இந்திராவின் தலைமையை ஏற்க முடியாத ஸ்தாபன காங்கிரஸ் பிரமுகர்களுக்கு, தொண்டர்களுக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. "காமராஜரின் கல்லறை காயுமுன்னே சில்லறைக்கு அலையும் கணேசா, உனக்கு 'பாட்டும் பரதமும்' ஒரு கேடா?" என்று "பாட்டும் பரதமும்" [6.12.1975] திரைப்படம் வெளியான இடங்களிலெல்லாம், 1955லிருந்து தீவிர காமராஜ் அனுதாபியாக வாழ்ந்து கட்சிக்காக தன் சொந்தப் பணத்தை செலவு செய்து தொண்டாற்றிய, தேசிய திலகத்தை வசைபாடி தொடர் துரோகச் செயல்களில் ஈடுபட்டனர். அந்தக் காலகட்டத்தில் திராவிடக் கட்சியினர் அவரை வசை பாடியது குறைவு. தன்னால் வளர்த்துவிடப்பட்ட ஸ்தாபன காங்கிரஸார் அவரைத் திட்டித் தீர்த்தது போல் வேறு எவரும் அவரை அவ்வளவு வசை பாடியதில்லை. பின்னர் வசை பாடியவர்கள் அனைவருமே [ஓரிருவர் தவிர] இந்திரா காங்கிரஸில் தஞ்சம் புகுந்தனர். அவரிடம் தொடர்ந்து பொய்ப் புன்னகை உதிர்த்து நாடகமாடி வந்தனர்.பின்னர் இந்திரா காங்கிரஸில் அவர் இருந்த 1988 ஜனவரி வரை அவரது பணம், புகழ், செல்வாக்கு ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டு அவரால்
உயர்ந்த பதவிகளை அடைந்த பின்னர், அவரைத் தூற்றியவர்கள் ஏராளம். நடிகர் திலகத்திடம் சிறு உதவி முதல் பெரும் உதவி வரை பெற்றுக் கொண்டு அவரது முதுகில் குத்திய, அவருக்கு துரோகம் இழைத்தவர்களின் பட்டியல் நீண்டது, நெடியது. இதில் கோமான்கள் முதல் சாமானியர்கள் வரை கட்சி வேறுபாடின்றி சகலரும் அடங்குவர். அவரைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்கு தவறிழைக்காதவர்களை விரல் கணக்கில் கொண்டு வந்து விடலாம்.

சற்றேறக்குறைய 33 ஆண்டுகள் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தன்னலம் கருதாது அபரிமிதமான தொண்டாற்றிய நடிகர் திலகத்துக்கு அக்கட்சியும், அதன் பிரமுகர்களும் செய்த நன்மைகள் மிகமிகக் குறைவு; இழைத்த துரோகங்கள் மிகமிக அதிகம். "சிவாஜி" என்ற மூன்றெழுத்துக்கு, "நன்றி" என்ற மூன்றெழுத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் தெரிந்தே தெரிவிக்கத் தவறியதால், இன்று "முடிவு" [THE END] என்ற மூன்றெழுத்தை எதிர்நோக்கியுள்ளது.

நடிகர் திலகம் தனது அரசியல் ஓட்டத்தில் பயணித்த இருபெரும் ஓடங்களின் சிற்சில ஓட்டைகளை உரைப்பதே இப்பதிவின் நோக்கம்.

மேலும், இப்பதிவு சுவாமிநாதன் என்கின்ற சிவாஜி தொண்டனின் உள்ளக்குமுறலேயன்றி வேறேதுமல்ல.

['உண்மைகளை உரக்கச் சொல்வோம்' என்கின்ற தலைப்பில் ஒரு பத்து பதிவுகள் தொடராகவே எழுதும் எண்ணம் உள்ளது. அதனாலேயே வெகு சில உண்மைகளை மட்டும் இப்பதிவில் எழுதி, பல உண்மைகளை பதிவிடாமல் தவிர்த்துள்ளேன். திறந்த மனதுடன், விசால நோக்கத்துடன், "சிவாஜி தொண்டன்" என்கின்ற ரீதியில் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் அப்பதிவுகளை எழுத நமது நல்லிதயங்கள் 'பச்சை விளக்கு' காட்டினால் தயக்கமில்லாமல் விரைவில் அவசியம் எழுதுகிறேன்].

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
11th July 2011, 06:41 AM
டியர் பம்மலார்,
தங்களது உள்ளக் குமுறல் தங்கள் ஒருவருடைய தனி மனிதருடையது அல்ல - ஒவ்வொரு உண்மையான தீவிர சிவாஜி ரசிகனின் உள்ளத்தையும் பிரதி பலித்திருக்கிறீர்கள். குறிப்பாக சிலர் திரும்ப திரும்ப ஸ்தாபன காங்கிரஸ் பற்றிய பழைய பல்லவியையே பாடி வருகின்றனர். அன்று பா.ரா. என்ற பா.ராமச்சந்திரன் பின்னால் நின்றவர்கள் அப்படியே தொடர்ந்தார்களா. இன்று ஸ்தாபன காங்கிரஸ் எங்கே. ஒரு கால கட்டத்தில் அனைவருமே இந்திராவின் தலைமையைத்தானே ஏற்றனர். நடிகர் திலகத்தை மட்டும் குறை கூறுவது எந்த அடிப்படையில் என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. அப்படி கூறியவர்கள் தேசிய இயக்கத்தை ஏன் தமிழ் நாட்டில் மீண்டும் தழைத்து விட முடிய வில்லை, அல்லது முயற்சி எடுக்கவில்லை. இப்படி பல கேள்விகளைக் கேட்கலாம். தன் உயிர் நண்பர் என்று கூறிக்கொள்பவர்கள், அந்த நண்பரை மிகவும் ஆபாசமாக 1967 கால கட்டங்களில் மேடைகளில் தூற்றிய போது எங்கே போயினர். அரசியல் நாகரீகம் அப்போது எங்கே இருந்தது. அது மட்டுமா, தங்களிடம் மற்றொரு சக்தி இருந்த தைரியத்தில், அனுதாப அடிப்படையில் வாக்குக் கேட்கலாம் என்கின்ற எண்ணத்தின் அடிப்படையில், சிவாஜி ராசியில்லாதவர், ஆமை புகுந்த வீடும் சிவாஜி புகுந்த வீடும் உருப்படாது என்றெல்லாம் பரப்பியவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இதையெல்லாம் பழைய சிவாஜி ரசிகர்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள். அது மட்டுமா, அப்படி ஆபாசமாக மேடையில் பேசிய பல கலைஞர்களை, பெருந்தன்மையுடனும் அரசியல் வேறு, கலை வேறு என்ற பகுத்தறிவாயவு மன்ப்பான்மையுடனும், அவர்களைத் தன்னுடன் தொழிலில் இணைத்து பண்பாட்டிற்கும் நாகரீகத்திற்கும் இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம். இவையெல்லாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இங்கே ஏற்கெனவே எழுதப் பட்டவைதான் என்றாலும் வருங்கால சந்ததியினர் நடிகர் திலகத்தின் செல்வாக்கையும் அவர் புகழையும் சரியான முறையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதப் படுகின்றன. அப்படி சிவாஜியின் நடிப்பிற்கு மட்டும் தான் நான் ரசிகன் என்று கூறுபவர்கள், அவரை எப்படி இழித்துப் பேசினாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா. அவரை தனிப்பட்ட முறையில் அவமானப் படுத்தும் வகையில் நடந்து கொண்டதையெல்லாம் அங்கீகரிக்கின்றார்களா, என்பதை அவரவர் மனசாட்சி தான் கூற வேண்டும்.

தங்களுடைய கருத்துக்களையும் உரக்கச் சொல்லும் உண்மைகளையும் மேலும் படிக்க ஆவலாய் உள்ளோம் பம்மலார் அவர்களே.

தொடருங்கள். நடிகர் திலகம் என்னும் மாமனிதரின் செல்வாக்கினை நாடறியச் செய்வோம்.

அன்புடன்

joe
11th July 2011, 11:12 AM
பம்மலார்,
மடை திறந்த வெள்ளமென பாய்ந்து வரும் ஆதங்க நதியை தடுப்பார் யார் உளர் இங்கே ? அனுபவப்பகிர்தலும் , அதன் மூலம் வரும் அடிப்படை தெளிதலும் , அதன் மூலம் வரும் வாய்மையின் புரிதலுமே எப்போதும் அறிவார்ந்தோர் நோக்காக இருக்க முடியும் . தொடருங்கள்.

joe
11th July 2011, 11:50 AM
//அப்படி சிவாஜியின் நடிப்பிற்கு மட்டும் தான் நான் ரசிகன் என்று கூறுபவர்கள், அவரை எப்படி இழித்துப் பேசினாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா. அவரை தனிப்பட்ட முறையில் அவமானப் படுத்தும் வகையில் நடந்து கொண்டதையெல்லாம் அங்கீகரிக்கின்றார்களா, என்பதை அவரவர் மனசாட்சி தான் கூற வேண்டும்.//

ராகவேந்திரா ஐயா,
சில விடயங்களை நேருக்கு நேர் சொல்வதே நலம் பயக்கும் என நம்புகிறேன் . ‘சிவாஜி ரசிகன்’ என்பதற்கு அவரவர் கருத்துப்படி வெவ்வேறு வரையறைகள் இருக்கலாம் .அதை இன்னொருவர் மறுக்கலாம் .ஆனால் தன் மனசாட்சி படி தன்னை ‘சிவாஜி ரசிகன்’ என ஒருவர் சொல்லிக்கொள்வாரானால் அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது ..என் வரையறை படி நீ ‘சிவாஜி ரசிகன் இல்லை’ என இன்னொருவர் சொல்வது பாதிக்காமல் இருந்தால் தான் ‘சிவாஜி ரசிகன்’ என தன்னையே சொல்லிக்கொள்பவனின் மனச்சாட்சிக்கு அழகு ..அந்த வகையில் என் மனச்சாட்சி படி நான் ‘சிவாஜி ரசிகன்’ ..சிவாஜி என்ற மாபெரும் கலைஞனின் ரசிகன் ..ஆம் .அரசியல் ரீதியாக நான் திராவிட இயக்க அபிமானம் கொண்டவன் .அதிலும் எந்த மாற்றமும் இல்லை .. இரண்டையும் நான் குழப்பிக்கொள்வதில்லை .. சிவாஜி என் ஆதர்சக் கலைஞனானதற்கு அவர் உருவாகிய திராவிட இயக்கம் எந்த விதத்திலும் காரணம் இல்லையோ அது போல சிவாஜி பின்னர் சார்ந்திருந்த இயக்கத்தில் எனக்கு பற்றில்லாமல் போனதற்கும் சிவாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .

ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக்கொள்வோமே .. நடிகர் திலகம் திராவிட இயக்கத்தின் தொண்டராக இருந்தாரே ..ஏதோ வீணர்களின் குழி பறித்தல் நடவாது இருந்து ஒரு வேளை இறுதிவரை அவர் திராவிட இயக்க அனுதாபியாகவே இருந்திருந்தால் , நீங்களும் திராவிட இயக்க அனுதாபியாக இருப்பீர்கள் (உங்கள் கருத்துப்படி) ..எனக்கு நான் அந்த நிர்பந்தத்தை வைத்துக்கொள்ளவில்லை .அது தான் வித்தியாசம் .. சிவாஜி திராவிட இயக்கத்தில் இருந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் திராவிட இயக்க அனுதாபியாகவும் , சிவாஜி என்னும் மகா கலைஞனின் ரசிகனாகவும் இருப்பேன் என்பது என் நிலைப்பாடு . திராவிட இயக்கத்திலுள்ளவர்கள் சிவாஜியை திட்டித் தீர்த்தார்களே , அவமானப்படுத்தினார்களே ..அதிலே உனக்கு உடன்பாடு உண்டா ,அங்கீகாரம் உண்டா என்றால் இல்லை .. பின்னர் ஏன் திராவிட இயக்கத்தை ஆதரிக்கிறாய் ? நான் திராவிட இயக்கத்தை ஆதரித்து வந்ததற்கு காரணங்கள் வேறு ..சிவாஜி எங்கிருக்கிறாரோ அது தான் நான் ஆதரிக்க வேண்டிய இயக்கம் என என் அரசியல் பார்வையை நான் வகுத்துக்கொள்ளவில்லை .எனவே எனக்கு அந்த நிர்பந்தம் இல்லை .. இங்கே பம்மலாரும் , நீங்களும் கூட எதிரியாக இருந்த ஒரு இயக்கம் நேரடியாக வசைபாடிய அளவுக்கு மறைமுக குழிபறிப்பும் , வசையும் சிவாஜி இருந்த இயக்கத்திலேயே இருந்தது என ஒப்புக்கொள்ளுகிறீர்கள் .. களத்திலே எதிரில் நிற்பவரை (அதுவும் நமது அரசியல் சூழலில்) அந்தந்த காலகட்டத்தில் எதிர்த்து பேச வேண்டிய நிர்பந்தம் இரு தரப்புக்கும் இருந்திருக்கும் .. பின்னர் ஒன்றாக கரம் கோர்க்கும் போது ‘என் பிறந்த வீடும் , புகுந்த வீடும் ஒன்றாக இணைவது கண்டு மகிழ்கிறேன்’ என பேச வேண்டியதும் இருக்கும் .ஆனால் முழுக்க முழுக்க உழைப்பையும் , விசுவாசத்தையும் வாங்கிக்கொண்ட சொந்த இயக்கமே சிவாஜியை எப்படி மரியாதை செய்தது என்பதை நீங்களே சொல்கிறீர்கள் .. ஆனாலும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அந்த இயக்கத்துக்கு ஆதரவாயிருக்கிறீர்கள் ..அதை நான் எள்ளளவும் குறை சொல்ல மாட்டேன் ..ஏனென்றால் சிவாஜி இருக்குமிடமே உங்கள் அரசியல் கேந்திரம் என்பது உங்கள் கொள்கை .ஆனால் எனக்கு சிவாஜி என்னும் மகத்தான கலைஞனின் ரசிகன் என்பது தவிர அரசியலில் சிவாஜி சார்ந்த நிர்பந்தம் நான் வகுத்துக்கொண்டதில்லை . அதனால் சிவாஜி என்னும் மகத்தான மனிதனை நான் அலட்சியம் செய்கிறேன் என்று அர்த்தம் அல்ல .. சிவாஜி என்னும் மகத்தான மனிதன் அரசியலிலும் நேர்மையை , பக்குவத்தை , நாணயத்தை கடைபிடித்த மனிதன் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை .. அது குறித்து எனக்கு கூடுதல் மகிழ்ச்சி உண்டு .. அத்தகைய நேர்மை , கண்ணியத்தின் பொருட்டு அம்மனிதன் கேலி செய்ப்பட்ட போதும் , வசையாடப்பட்ட போதும் அதற்கு என் அங்கீகாரம் எப்போதும் இருந்ததில்லை ..என்னளவில் அரசியலில் என்னோடு ஒத்தக்கருத்து உள்ளவரோடு கூட நான் சிவாஜி என்னும் நல்ல மனிதனை விட்டுக்கொடுத்ததில்லை ..ஆனால் இதையும் சிவாஜி என்னும் கலைஞனுக்கு ரசிகனாக இருந்ததையும் நான் சம்பந்தப்படுத்தவில்லை .. சரியாக சொல்வதாக இருந்தால் , சிவாஜி என்னும் மனிதன் ஒரு வேளை அரசியலில் நேர்மையற்றவராக , கண்ணியமற்றவராக , சந்தர்ப்பவாத அரசியல் செய்பவராக இருந்திருந்தால் கூட .. இம்மியளவும் குறைவின்றி இதே அளவு சிவாஜி ரசிகனாக இருந்திருப்பேன் ..சிவாஜி என்னும் அரசியல் நபரின் செயல்பாடுகள் சிவாஜி என்னும் கலைஞன் மேல் நான் கொண்ட அபிமானத்தில் இம்மியளவு கூட்டவோ , குறைக்கவோ முடியாது .

mr_karthik
11th July 2011, 04:51 PM
அன்புள்ள பம்மலார் சார்,

நீங்கள் எழுதியிருக்கும் 'உண்மையை உரக்கச் சொல்வோம்' என்ற கட்டுரையில் முழுக்க, முழுக்க உண்மையையே எழுதியிருக்கிறீர்கள். துளி கூட உண்மைக்குப்புறம்பான விஷயங்கள் எதுவுமில்லை. ஆகவே நீங்கள் எழுத எண்ணியுள்ள பத்து தொடர்களையும் உடனே துவங்கி, தொடருங்கள்.

(ஒரு சின்னத்திருத்தம் மட்டும். 'கப்போலோட்டிய தமிழன்' படத்துக்கும், 'அவன் ஒரு சரித்திரம்' படத்துக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டது இந்திரா காங்கிரஸின் எமர்ஜென்ஸி ஆட்சியின்போது. முன்னதற்கு நாட்டு விடுதலையை சித்தரிக்கும் படம் என்பதால் 1976-லும், பின்னதற்கு 20 அம்சத்திட்டத்தை வலியுறுத்தும் காட்சிகள் இருந்ததால் 1977 பிப்ரவரியிலும் வரிவிலக்கு அளிக்க்கப்பட்டதே தவிர, அதிமுக ஆட்சியில் அல்ல. பின்னர் மொரார்ஜி தலைமையில் ஜனதா ஆட்சி மத்தியில் வந்ததும், அவன் ஒரு சரித்திரம் படத்துக்கான வரிவிலக்கு விலக்கிக்கொள்ளப் பட்டது).

நீங்கள் மிகச்சரியாக குறிப்பிட்டது போல, நடிகர்திலகம் எதிரிகளால் பாதிக்கப்பட்டதை விட, உடனிருந்த துரோகிகளால்தான் அதிகம் பாதிக்கப்பட்டார். ஆனால் அப்படி தன்னைத் தூற்றியவர்களை பழி வாங்காமல், தன் படங்களிலேயே அவர்களுக்கு வாய்ப்பளித்து கைதூக்கி விட்டார். எஸ்.எஸ்.ராஜேந்திரனில் இருந்து (பச்சை விளக்கு, கைகொடுத்த தெய்வம், சாந்தி, பழனி, எதிரொலி) தேங்காய் சீனீவாசன் வரையில், தன்னைப்பழித்தவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கி கைதூக்கி விட்டவர். பிற்காலத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு அளித்த வாய்ப்புக்கள் எண்ணிலடங்காதவை. 1977-ல் தன் சொந்தப்படத்தில் அவருக்கு மறு வாய்ப்பு வழங்கியதில் தொடர்ந்து, தேங்காயின் சொந்தப்படமான 'கிருஷ்ணன் வந்தானு'க்கு பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தது வரை எவ்வளவு உதவிகள்?. ஆனாலும் தேங்காயின் பாசம் கடைசி வரையில் 'வேறெங்கோதான்' இருந்தது. அது நடிகர்திலகத்தின் கொடுப்பினை. என்ன செய்வது.

நடிகர்திலகத்தைப் பொறுத்தவரையில் அவர் எல்லா ஆட்சிக்காலத்திலும் பழி வாங்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியாகட்டும், கருணாநிதி தலைமையிலான ஆட்சியாகட்டும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியாகட்டும், அவர் அவமானங்களை சந்திக்காமல் இருந்ததில்லை. கருணாநிதி ஆட்சியின்போது பல வகையிலும் அவருக்கு கிடைக்க வேண்டிய விருதுகள், மரியாதைகள், தடுக்கப்பட்டன. மேடைகளிலும் கிண்டல்களுக்கும் வசைமாரிகளுக்கும் குறை வைக்கவில்லை.

தன்னிடம் இன்னொரு சக்தி இருக்கிறது என்பதற்காக நடிகர்திலகத்தை கருணாநிதி துச்சமாக மதித்து எள்ளி நகையாடிய அதே நேரத்தில், அவர்களுடனிருந்த அந்த 'இன்னொரு சக்தி'யும்தானே அதற்குத் துணை போனது?. மீண்டும் நிர்ப்பந்தம் காரணமாக 1980 சட்டமன்ற தேர்தலில் ஒரே மேடையேற வேண்டி வந்தபோது, அப்போது நடிகர்திலகத்தின் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் குறித்து அந்த 'இன்னொரு சக்தி' வெளியிட்ட அறிக்கை, நடிகர்திலகத்தின் தியாகத்தையே கிண்டல் செய்வதாக அமைந்ததே. ( அந்த அறிக்கையை ஏற்கெனவே சாரதா இங்கே பதிப்பித்தார். தற்போது ரெப்ரென்ஸ் காட்ட அது எந்த பாகத்தில் இருக்கிறதென்று தெரியவில்லை)

நடிகர்திலகத்தை சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவமானப்படுத்துவதில் கருணாநிதி அளவுக்கு இல்லையென்றாலும், இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் ஒன்றும் சளைத்தவரல்ல. அவர் ஆட்சி பீடம் ஏறியபோது, நடிகர்திலகம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டபோதும், தன் பெயரில் தானே திறந்து வைத்த திரைப்பட நகர் துவக்க விழாவின்போது, நடிகர்திலகத்தை மேடையேற்றாமல் கீழேயே உட்கார வைத்து அவமானப்படுத்தியது, மிரட்டல் மூலம் ஒரு திருமண பந்தத்தை ஏற்படுத்தி நடிகர் திலகத்தின் மன உளைச்சலுக்கு காரணமாகி, பின்னர் அதே 'மகனை' கைது செய்து, அதன் பொருட்டு அவர் மறைவையே சந்திக்க்குமளவுக்கு கொண்டு சென்றது, அரசுக்குச்சொந்தமான எவ்வளவோ நல்ல இடங்கள் இருந்தும் நடிகர்திலகத்தின் நினைவு மண்டபம் கட்ட வேண்டா வெறுப்பாக பிரச்சினைக்குரிய ஒரு இடத்தை ஒதுக்கி, இன்றளவும் அந்தக்கனவு நிறைவேறாமல் செய்திருப்பது என சொல்லிக்கொண்டே போகலாம்.

அடுத்து பதவியில் அமர்ந்த கருணாநிதியும் வேறு ஒரு நல்ல இடமாக ஒதுக்கியிருக்கலாம். செய்யவில்லை. சென்னையில் ஒரு சிலை அமைத்ததே போதும் என்பதோடு நிறுத்திக்கொண்டார். அந்த சிலை அமைக்கவும் விடாமல் இடைஞ்சல் செய்தவர்கள யாரென்பதை சரித்திரம் மறந்து விடாது, மறந்துவிடக்க்கூடாது. மதுரையில் அமைக்கப்பட்ட சிலைக்கு தினமும் மாலை மரியாதை செய்யும் உரிமையை தனக்கு தர வேண்டும் என்று கருணாநிதியின் மகன் அழகிரி கேட்டுக்கொண்டதையெல்லாம் நாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.

நடிகர்திலகத்தின் தயாரிப்பாளர்கள் மாற்று முகாமுக்குச்சென்று படமெடுக்க எத்தனித்தபோது, நடிகர்திலகத்தை எப்படியெல்லாம் தாக்கி அறிக்கை விடுமாறு அத்தயாரிப்பாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதையும் உங்கள் தொடரில் சொல்வீர்கள் என்று நம்புகிறோம்.

எப்படியிருப்பினும் தங்கள் தொடர் விருப்பு வெறுப்பின்றி எத்தரப்பின் துரோகங்களையும் தோலுரித்துக்காட்டுவதாக அமைய வேண்டும் என்று விரும்புகிறோம். ஏனென்றால், நடிகர்திலகம் எப்படிப்பட்ட நெருப்பாற்றில் நீந்தி கரையேறினார் என்பதை வரும் சந்ததியினர் அறிந்துகொள்ள வேண்டும். துரோகங்களையும், வஞ்சகங்களையும், சூழ்ச்சிகளையும், நன்றி கொன்றமையையும் மட்டுமே சந்தித்து வந்தவர், இன்றளவும் நிலைபெறக் காரணம் அவருடைய அசாத்திய கலைத்திறமையும், அவருக்காக எதையும் செய்யத்தயாராயிருந்த ரசிகர் படையும்தான். அப்படையின் முழு பலனையும் முழுக்க பயன்படுத்திக்கொண்டவர்கள் காங்கிரஸார் என்பதையும், காரியம் முடிந்ததும் அதே ரசிகர் படையை உதறித் தள்ளியதும் அவர்களேதான் என்பதையும் வரலாறு அறியும்.

இன்றளவும் அந்த ரசிகர்/ தொண்டர் கூட்டம் எப்படி பாசத்தோடு இருக்கிறது என்பதற்கு தற்போதும் அவரது பட மறுவெளியீடு களின்போது நடக்கும் விழாக்கோலங்களே சான்று பகர்கின்றன.

(கௌரவம் திரைக்காவியத்தின் அரிய விளம்பரங்களை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி).

Mahesh_K
11th July 2011, 05:03 PM
அரசியலை நாம விட்டாலும் அது நம்மை விடாது போல...

பம்மலார் /ராகவேந்திரன் சார் ஒரு நிலையிலும் , ஜோ மற்றொரு நிலையிலும் இருந்துதங்கள்நிலைப்பாட்டை விளக்கி இருக்கிறார்கள்.


என்னை பொறுத்தவரை தமிழக அரசியலின் இரு பெரும் கூறுகள் திராவிட மற்றும் தேசிய இயக்கங்கள்.


பெரியஅரசியல் கட்சிகள் எல்லாமே இந்த இரண்டில் ஏதாவது ஒன்றின் அங்கங்கள்தான்.


திராவிடஇயக்கம் - கடவுள்மறுப்பு, மொழி மற்றும் இன ரீதியான பிரிவினையில் பற்று , இந்திய தேசியத்தின் மீது அல்லாமல் திராவிட ( அதாவதுதமிழ்) தேசியத்தின் மீது நம்பிக்கை, இந்தியாவின் மற்ற கலாச்சாரக் கூறுகளைவிட திராவிட ( அதாவதுதமிழ்) கலாச்சாரம் சிறந்தது என்கிற அடிப்படைகளில் அமைந்தது.


தேசிய இயக்கம் என்பது மேற்சொன்ன அனைத்தையும் புறந்தள்ளுவது . இவற்றிற்கு நேர்மாறானது.



இன்று இந்த கொள்கைகள் அனைத்துமே வெறும் பெயரளவில் மட்டுமே கட்சிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் கூட, அடிப்படையான வேறுபாடு என்பது இந்த இரு அரசியல்கூறுகளின் இடையே தமிழகத்தில் இன்னும் தொடரவேசெய்கிறது.


இவற்றில் தேசிய பாரம்பரியத்தில் பிறந்து, வளர்ந்து அந்த பாரம்பரியத்தின் ஆதரவாளராகவே (இடையில்ஒருசிலஆண்டு 'வனவாச' காலம்தவிர) இருந்து மறைந்தவர் நடிகர் திலகம் -


இந்த இரண்டில் நான் தேசிய பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை உள்ளவன் - நடிகர்திலகத்தைப்போலவே.


என்னுடைய இந்த நிலைப்பாட்டுக்கு நடிகர்திலகம் படங்களில் ஏற்ற பல கதாபாத்திரங்கள் , பாடல்கள் மூலம் அவர் சொன்ன கருத்துகள் இவையும் ஒரு காரணம்.


ஒரு சமயம் நடிகர் திலகம் மாற்று அணியில் இருந்திருந்தால் நிச்சயம் இப்போது போலவே அவரது ரசிகராகத்தான் இருப்பேன். ஆனால் அரசியல் ரீதியாக மாறுபட்டிருப்பேன்.


நான் விரும்பும் கலைஞனுக்கும் எனக்கும் ஒரே அரசியல் கருத்துக்கள் எனபதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி உண்டு.



இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் நமக்குள்ளே இருந்தாலும் நேர்மை, விசுவாசம் , காலம் தவறாமை, (இன்றைய அரசியலுக்கு கொஞ்சமும் ஒத்துவராத) வெளிப்படையான தன்மை இவற்றின் மூலம் ஒரு நல்ல நடிகராக இருந்தது போலவே , நல்ல அரசியல்வாதியாகவும் திகழ்ந்து நம்மையெல்லாம் பெருமைப்பட வைத்தவர் நடிகர் திலகம்.


இந்த ஒரு விஷயத்தில் நம்முடைய வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளையும் தாண்டி, நம் அனைவருக்குமே மகிழ்ச்சிதான்.

abkhlabhi
11th July 2011, 05:04 PM
சிவாஜி என்ற அரசியல்வாதி விட நடிகர் திலகம் என்ற நடிகனை மிகவும் பிடிக்கும். வாழ்கையே நாடகம். அந்த நாடகத்தில் நடிக தெரியாத அப்பாவி மனிதன். அரசியல் சிவாஜியை பிடிக்காது. காரணம், என்னுடைய வாழ்கையில் ஏற்பட்ட அனுபவம். என்னுடைய தந்தை இந்திரா காங்கிரஸ் சார்பாக தேர்தலில் தி. மு. க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி மட்டும் அல்ல, தான் சுய சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்த சொத்துகளை இழந்தார். காங்கிரஸ் சார்பாக வேலை செய்தவர்களே தி. மு. க வுக்கு ஒட்டு போட்டனர். இதுவும் ஒரு காரணம், இன்னொரு காரணம், தி. மு. க. பாஷையில் - "அவாளை" (இது நடந்தது காங்கிரஸ் இல் இருந்து இந்திரா காந்தி காங்கிரஸ் (இ) ஆரம்பித்த நேரம். அப்பொழுது தென்னை மர சின்னந்தில் போட்டியிட்டார்.) காங்கிரஸ் வாதியான என் தந்தை மு க வை குறை கூறியதே கிடையாது. மு. க வை ஒரு ராஜா தந்தரி என்றும், சிவாஜியை பிழைக்க தெரியாத அசாமி என்றும் சொல்வர். (என் தந்தையும் தான்).

joe
11th July 2011, 05:28 PM
பாரிஸ்டர் ரஜினிகாந்த் பிரவேசித்ததும் வாதப்பிரதிவாதங்கள் உருவெடுத்தது பொருத்தமே :)

J.Radhakrishnan
11th July 2011, 10:50 PM
மீண்டும் பெருமாள் அவருக்கு மாற்றத்தை உண்டாக்கினார். 1954-ம் ஆண்டு இறுதியில்/1955-ம் ஆண்டு தொடக்கத்தில் திருப்பதி சென்று ஆத்திகரான அவரை, அப்பொழுது அவர் சார்ந்திருந்த நாத்திக இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், "திருப்பதி கணேசா கோவிந்தா" என்று கழகத்திலிருந்து கழற்றி விட்டது.

டியர் பம்மலார் சார், ஒரு சந்தேகம் ?

நடிகர் திலகம் அவர்கள் திருப்பதி சென்றது 1957ல் தானே? Ntஅவர்களின் சுயசரிதை நூலில் இது பற்றி t.s.n அவர்கள் கேள்வி கேட்க நடிகர் திலகம் அவர்களும் பதில் சொல்லி இருக்கிறார், மேலும் மக்களை பெற்ற மகராசி,வணங்காமுடி, தங்கமலை ரகசியம்,அம்பிகாபதி,உத்தமபுத்திரன் போன்ற படங்கள் அப்போது (1957-ல் )வெளி வந்ததாக கூறியுள்ளார்.

தங்கள் பதிலை எதிர்நோக்கும்

அன்பன்

pammalar
12th July 2011, 03:06 AM
டியர் ராகவேந்திரன் சார் & ஜோ சார்,

மிக்க நன்றி !

டியர் mr_karthik,

பாராட்டுக்கும், திருத்தத்திற்கும் நன்றி ! மேலதிக உண்மைகளை பதிவிட்டமைக்கும் மனமார்ந்த நன்றி !

டியர் மகேஷ் சார்,

மிக்க நன்றி ! அற்புதமான பதிவு !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th July 2011, 05:01 AM
மீண்டும் பெருமாள் அவருக்கு மாற்றத்தை உண்டாக்கினார். 1954-ம் ஆண்டு இறுதியில்/1955-ம் ஆண்டு தொடக்கத்தில் திருப்பதி சென்று ஆத்திகரான அவரை, அப்பொழுது அவர் சார்ந்திருந்த நாத்திக இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், "திருப்பதி கணேசா கோவிந்தா" என்று கழகத்திலிருந்து கழற்றி விட்டது.

டியர் பம்மலார் சார், ஒரு சந்தேகம் ?

நடிகர் திலகம் அவர்கள் திருப்பதி சென்றது 1957ல் தானே? Ntஅவர்களின் சுயசரிதை நூலில் இது பற்றி t.s.n அவர்கள் கேள்வி கேட்க நடிகர் திலகம் அவர்களும் பதில் சொல்லி இருக்கிறார், மேலும் மக்களை பெற்ற மகராசி,வணங்காமுடி, தங்கமலை ரகசியம்,அம்பிகாபதி,உத்தமபுத்திரன் போன்ற படங்கள் அப்போது (1957-ல் )வெளி வந்ததாக கூறியுள்ளார்.

தங்கள் பதிலை எதிர்நோக்கும்

அன்பன்

டியர் ஜேயார் சார்,

திருமலை தெய்வத்தை தரிசிக்க, நடிகர் திலகம் டைரக்டர் பீம்சிங்குடன் திருப்பதி சென்றார். இந்நிகழ்வு குறித்து 'பேசும் படம்' ஜனவரி 1962 இதழில் பீம்சிங் அவர்கள் பதிவு செய்துள்ளார். அதிலிருந்து:

""காவேரி" படத்தின் சமயம், ஒரு பெரிய நிகழ்ச்சி நடைபெற்றது. "ராஜா ராணி" படமும் அப்போதுதான் நடந்து கொண்டிருந்தது. என் சகோதரர் திருப்பதியில் இருக்கிறார். நானும் திருப்பதிக்கு போக நினைத்து கணேசனிடம் சென்று "நான் திருப்பதிக்கு போகப் போகிறேன்" என்று சொன்னேன். "நானும் வருகிறேன்" என்றார் அவர். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கோவிலுக்குப் போகும் வழக்கமே இல்லாதவராயிற்றே அவர். எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் அதிர்ச்சி. ஆனால் அவர் அப்படி எதுவும் நினைத்துச் சொன்னதாக எனக்குப் படவில்லை. ஏதோ தன்னிச்சையாகவே சொல்லி வைத்தார்.

'கிருஷ்ணா பிக்சர்ஸ்' செவர்லட் வண்டியில் நான், காமிரா விட்டல், ஒலிப்பதிவாளர் லோகநாதன், கணேசன் நான்கு பேர்களும் திருப்பதிக்குக் கிளம்பினோம். என் சகோதரருக்கு நான் வருவதாக ஃபோன் செய்து விட்டேன். வழியெல்லாம் ஒரே மழை. சென்னைக்கு அடுத்த தடா ரோடு பூராவும் தண்ணீர் ஒரே வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. தண்ணீர் பாய்ந்து சென்ற வேகத்தில் கற்கள் வந்து எங்கள் காரை மோத ஆரம்பித்தன. காருக்குள் தண்ணீர் வந்து விட்டது. நானும் லோகுவும் இறங்கிக் கையிலிருந்த டார்ச் விளக்கை அடித்துக் கொண்டு காருக்கு முன்னால் நடந்தோம். அதைக் கண்டு கார் மெல்ல வந்தது. நேராகப் போவதற்கு பதிலாகப் பக்கவாட்டில் காரை இழுக்க ஆரம்பித்து விட்டது தண்ணீரின் வேகம். "திரும்பிப் போய்விடலாம்" என்று நான் சொன்னேன். "திருப்பதிக்குப் போகாமலா...கூடவே கூடாது. எப்படியும் போய்விடத்தான் வேண்டும்" என்று பிடிவாதம் பிடித்தார் கணேசன். முதல் நாள் பிற்பகல் புறப்பட்ட நாங்கள் மறுநாள் காலை நான்கு மணிக்கே போய்ச் சேர முடிந்தது. என் சகோதரரோ நேரம் ஆக ஆக வழியில் என்ன நடந்து விட்டதோ என்று பதறிப் போய் விட்டார்.

போனதும் போகாததுமாகக் குளித்துவிட்டு அப்போதே கோவிலுக்குப் போனோம். மார்கழி மாதத்தின் பனி எங்களை உறையச் செய்துவிடும் போலிருந்தது. தொட்ட இடமெல்லாம் ஒரே ஜில்லென்னும் உணர்வுதான். கோவிலின் பிரதான வாயிலில் தரிசனத்துக்காக நின்றோம். கணேசன் என் அருகில் நின்றார். கோவிலின் பிரம்மாண்டமான கண்டாமணி தன் சங்கநாதத்தை எழுப்பியது. அந்த ரீங்காரத்தில் எங்களையே நாங்கள் மறந்து ஸ்தம்பித்து நின்று விட்டோம். வெங்கடாஜலபதியின் தரிசனம் எங்களுக்குக் கிடைத்தது.

"என் வாழ்நாளிலேயே மறக்கமுடியாத காட்சி. என் சரித்திரத்தில் முக்கியமான இடம் இது. இதை மறைக்கவோ மறக்கவோ முடியாது" என்று கணேசன் என்னிடம் சொன்னார். இப்போதும் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு இதை அடிக்கடிச் சொல்வார். இயற்கையிலேயே அவருக்கு இங்கு ஒரு பற்று ஏற்பட்டுவிட்டது."

வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்களின் 'தாய்' வார இதழில், 1984-ம் ஆண்டில், நடிகர் திலகம் தனது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை தொடர்கட்டுரையாக எழுதினார். அதிலும் அவர் திருப்பதி சம்பவம் குறித்து சற்றேறக்குறைய பீம்சிங் பதிவுசெய்தவாறேதான் பதிவு செய்திருக்கிறார்.

பீம்சிங் அவர்களின் பதிவு குறித்த நமது அனுமானங்கள்/மேலதிக விவரங்கள்:

- "காவேரி" படப்பிடிப்பு 1954 முடிய நடைபெற்றது. இத்திரைப்படம் பொங்கல் வெளியீடாக 13.1.1955 அன்று வெள்ளித்திரைக்கு வந்தது.

- "ராஜா ராணி", 1954-ன் மத்தியில் தொடங்கப்பட்டு 1956-ல் வெளிவந்தது. வெளியான தேதி : 25.2.1956, இதன் டைரக்டர் பீம்சிங்.

- 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' படக்கம்பெனிதான் "காவேரி" படத்தை தயாரித்தது.

- "ராஜா ராணி"யின் ஒளிப்பதிவாளர் விட்டல், ஒலிப்பதிவாளர் லோகநாதன்.

- மார்கழி மாதம், ஆங்கில நாள்காட்டியில் டிசம்பர் 16 முதல் ஜனவரி 13/14 வரையிலான நாட்கள். மேற்குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், 16.12.1954லிருந்து 13.1.1955 வரையிலான காலகட்டம்.

இதிலிருந்து நாம், நடிகர் திலகம் திருப்பதிக்குச் சென்றது 1954-ன் இறுதி / 1955-ன் தொடக்கம் என்பதனை தெளிவாக்கிக் கொள்ளமுடியும்.

அன்புடன்,
பம்மலார்.

goldstar
12th July 2011, 05:12 AM
Pammalar sir,

I personally request you to complete all the 10 chapters to show the world that NT has to over come so much obstacles and backstabbing done by so called "OWN" friends and opposition polical parties.

As a NT fan after 1984, all the details quite new and until not heared, so I believe there are so many NT fans don't know the NT struggle and achievement with these back stabbing people.

Other day when Murali sir mentioned about "Deivamahan" prevented to be sent to Oscar by his own friend's TN govt, what a shame. Same way a Tamil leader prevented to become Indian PM, what a shame.

I wish you will complete all your 10 chapters.

Cheers,
Sathish

pammalar
12th July 2011, 05:55 AM
Dear goldstar Satish,

Thank You So Much !

Regards,
Pammalar.

pammalar
12th July 2011, 06:01 AM
Zamindhar SIVALINGAM turns 49 [12.7.1963 - 12.7.2011]

Golden Treasures

First Release Ad : The Hindu : 10.7.1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3842a.jpg


50th Day Ad : The Hindu : 30.8.1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3848aa-1.jpg

Regards,
Pammalar.

RAGHAVENDRA
12th July 2011, 08:07 AM
டியர் பம்மலார்,
ஜமீன்தார் சிவலிங்கத்தின் ஒய்யாரமான தோற்றத்தின் ஜனனத்தை நினைவூட்டியமைக்கு நன்றியும் பாராட்டுக்களும். இதோ அவரின் ஸ்டைலை ரசிக்க நீரோடும் வைகைக்கு செல்வோம்-


http://www.youtube.com/watch?v=SokOCR2n25U

அன்புடன்

RAGHAVENDRA
12th July 2011, 08:28 AM
டியர் ஜோ,
தாங்கள் மட்டுமல்ல, உலகெங்கும் பல ரசிகர்கள் தங்கள் இயக்க சார்பையும் மீறி, நடிகர் திலகத்தின் ரசிகர்களாக உள்ளனர் என்பதை அறியாதவனல்ல நான். அந்த பேதத்தினை உணராதவனல்ல நான். எப்படி தாய்வீடு என்று கூறினாரோ அதே போல் தன் சகோதரன் என்று பாரத் விருதுக்காக நடந்த பாராட்டு விழாவிலேயே அறிவித்து தான் அரசியலையும் கலையையும் கலந்து ஆதாயம் தேடிக் கொள்ளும் சராசரி மனிதனல்ல என்று தன் பெருந்தன்மையை நிலைப் படுத்திக் கொண்டவர். அதே போல் தன்னுடைய சொந்த மாச்சரியங்கள் தன்னுடைய தொழிலை பாதிப்பதையோ தன்னுடைய கொள்கையை பாதிப்பதையோ அவர் என்றுமே அனுமதித்ததில்லை. அதையெல்லாம் அறிந்து, அவருடைய உள்ளத்தில் உள்ள கள்ளங் கபடமற்ற தன்மையை உணர்ந்து, ஒரு நடிகர் என்பதையும் மீறி ஒரு மகத்தான, சிறந்த மனிதராக, சிறந்த தலைவராக, இலக்கணம் வகுத்து அவர் காட்டிய பாதையைப் பின்பற்றுவதில் நாம் பெருமை கொள்வது உளமார மகிழ்வூட்டும் விடயம் என்றால் அது உண்மை. அவர் ஒரு வினாடி தன் நேர்மையையும் மனசாட்சியையும் விட்டுக் கொடுத்திருந்தாலும் அவர் வீழ்ந்திருப்பார். எத்தனையோ திறமை வாய்ந்த நடிகர்கள் தங்களுடைய குணைதிசயத்தினாலும் நடத்தையினாலும் அடையாளம் காணாமல் போனது சரித்திரம். அவரும் அவ்வாறு இருந்திருந்தால், அப்போது ஒரு கலைஞனாகக் கூட நீண்ட நாட்கள் தாக்குப் பிடித்திருக்க முடியாது, அப்போது ரசிகர்கள் தலைமுறை தாண்டித் தொடரும் பேச்சுக்கும் இடமிருந்திருக்காது. தன்னுடைய திறமை மட்டுமன்றி, தன் குணங்களாலும் நன்நடத்தையினாலும் தான் அவர் பல தலைமுறையைத் தாண்டி இன்றும் நீடித்திருக்கிறார்.

என்னைப் பொறுத்த வரையில் அவரைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக் கொண்டதில்லை. அவர் சார்ந்திருந்த இயக்கமே எனக்கும். தற்போதைய சுழலில் அவருக்குப் பிறகு எந்த கட்சியையும் நான் சார்ந்தவன் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் பாடுபட்டு வளர்த்த இயக்கம் என்பது தேசீயம் என்ற தத்துவமாகும். அதை, அவர் தான் ஆரம்பித்த கட்சியாகட்டும், பின்னர் சார்ந்த கட்சியாகட்டும், விடாமல் கடைப் பிடித்து வந்தார். அந்த தேசியம் என்கிற Movement ஐ தான் இயக்கம் என நான் கூற விரும்புகிறேன். அவர் காங்கிரஸ் என்பதை ஒரு கட்சி என்பதை விட ஒரு தத்துவம், கொள்கை என்கிற முறையில் கடைப்பிடித்து வந்தார். காங்கிரஸில் இல்லாத காலத்திலும் கதரைத் தான் அணிந்தார்.

அவர் பாடுபட்டு வளர்த்த காங்கிரஸ் தமிழகத்தில் மீண்டும் மேன்மை பெற வேண்டுமானால் சிவாஜி என்கிற மந்திரச் சொல் மட்டும் தான் உதவும். அப்படி ஒரு சூழல் வருவதற்கு அவர் இருந்த கட்சியினர் தான் முயல வேண்டுமே தவிர, சிவாஜி ரசிகர்களல்ல.

என்னுடைய கருத்துக்கள் நடிகர் திலகம் என்கிற தேசிய வாதியின் தொண்டன் என்கிற அடிப்படையில் அமைந்தவை. அவருடைய தலைமையை யார் கொள்கை அளவில் ஏற்றாலும், அவரைத் தலைவராகக் கொண்டு யார் இயக்கம் நடத்தினாலும், அவர்களுக்கு தார்மீக ஆதரவு உண்டு என்பதே என் நிலைப்பாடு. தற்போதைய சூழலில் அப்படி ஒரு நிலைமை இல்லை. எனவே நான் எந்த இயக்கத்திற்கு சார்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று கூற விரும்புகிறேன்.

அன்புடன்

joe
12th July 2011, 09:46 AM
ராகவேந்திரா ஐயா,
உங்களுடைய நிலைப்பாட்டில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை .

groucho070
12th July 2011, 11:25 AM
Joe spoke beautifully of not only NT fans, but many fans of other stars/celebs who are politically affiliated. It's like personal life. I don't care what NT was like in real life (the ones I heard of, they are great characteristics of a great man), but I cherish what he gave us on screen. Though I do follow politics, I am not even sure what NT's stand on politics. But his stand as an actor? Give back awesomeness to the fans, and he did that generously. And brilliantly.

abkhlabhi
12th July 2011, 04:57 PM
Perunthalaivar K.Kamaraj 109th Birthday Celebration in Bangalore

http://www.dinasudar.co.in/e_paper/bangaluru/img/pg3.gif

RAGHAVENDRA
12th July 2011, 06:09 PM
மிகவும் அரிதான வாய்ப்பு இணையத்தின் உதவியால் எளிதாகக் கிட்டியுள்ளது. பத்மினி பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் நடித்த உன்னதத் திரைப்படம் குழந்தைகள் கண்ட குடியரசு. இத்திரைப்படத்தின் தெலுங்கு வடிவத்திலும் நடிகர் திலகம் நடித்துள்ளார். பில்லலு தெச்சின செல்லனி ராஜ்யமு என்கிற அந்தத் திரைப்படம் தற்போது இணையத்தில் பார்வைக்கு அளிக்கப் பட்டுள்ளது. YOUTUBE இணையதளத்திற்கு நமது நன்றி.


http://www.youtube.com/watch?v=obTsmJ7vWTA&feature=youtube_gdata

அன்புடன்

rangan_08
12th July 2011, 06:13 PM
இன்றைய [10.7.2011 : ஞாயிறு] சென்னைப் பதிப்பு 'தினத்தந்தி'யில் வெளிவந்துள்ள விளம்பரம் :

அன்புடன்,
பம்மலார்.[/color]

Dear Pammalar sir,

Today morning only Murali sir shared this great news thru mail.

Barrister pattaya kelappurar !!!

rangan_08
12th July 2011, 06:20 PM
Thirudan in youtube

http://www.youtube.com/watch?v=Y2zx__lJlXw&feature=related

rangan_08
12th July 2011, 06:31 PM
Joe spoke beautifully of not only NT fans, but many fans of other stars/celebs who are politically affiliated. It's like personal life. I don't care what NT was like in real life (the ones I heard of, they are great characteristics of a great man), but I cherish what he gave us on screen. Though I do follow politics, I am not even sure what NT's stand on politics. But his stand as an actor? Give back awesomeness to the fans, and he did that generously. And brilliantly.

I second this........

As long as an actor, for that matter, an artiste, does not use his fame & popularity to exploit or misguide the public or use them for their personal gains, lets not dig on their personal life. After all, they are human beings too......

Of course, they have moral responsibilty in this society to a greater extent than you and me, especially artiste with huge fan following...but still, as i said, unless it creates a bad influence or impact among the larger group of people, let's not fret.

J.Radhakrishnan
12th July 2011, 09:47 PM
- மார்கழி மாதம், ஆங்கில நாள்காட்டியில் டிசம்பர் 16 முதல் ஜனவரி 13/14 வரையிலான நாட்கள். மேற்குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், 16.12.1954லிருந்து 13.1.1955 வரையிலான காலகட்டம்.

இதிலிருந்து நாம், நடிகர் திலகம் திருப்பதிக்குச் சென்றது 1954-ன் இறுதி / 1955-ன் தொடக்கம் என்பதனை தெளிவாக்கிக் கொள்ளமுடியும்.

அன்புடன்,
பம்மலார்.

Dear Pammalar sir,

Thanks for your information,

Radha

RAGHAVENDRA
12th July 2011, 10:28 PM
Nadigar Thilagam Ninaivu Naal Function Invite at Malaysia

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sivaji_Invitation.jpg

abkhlabhi
13th July 2011, 04:52 PM
Hope I will be at Shanthi on 17th evening exclusively to see Barrister (subject to return tkt. confirmation)

Murali Srinivas
13th July 2011, 11:03 PM
சுவாமி,

மதுரை மன்னர் சிவலிங்கம் கம்பீரமாக தோற்றமளிக்கும் அந்த பத்திரிக்கை விளம்பரத்திற்கு நன்றி. அவர் ஒரு வகை கம்பீரம் என்றால் பைப்புடன் பாரிஸ்டர் கம்பீரம் personified.

இது போல் டாக்டர் ராஜாவையும் பைரவரையும் நாளை அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு இங்கே ஒளி வீச செய்வீர்கள் என தெரியும். அதே நேரத்தில் நாளை மறுநாள் பிறந்த நாள் காணும் புரட்சி வீரனை கண்டு களிக்க ஆவன செய்வீர்களா?

அன்புடன்

pammalar
14th July 2011, 04:25 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி ! "நீரோடும் வைகையிலே" பாடலைப் பதிவிட்டு பட்டையைக் கிளப்பி விட்டீர்கள் !

டியர் ரங்கன் சார்,

நல்வரவு ! நன்றி !

டியர் பாலா சார்,

பாரிஸ்டரைத் தரிசிக்க வருக ! வருக !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th July 2011, 04:45 AM
சுவாமி,

மதுரை மன்னர் சிவலிங்கம் கம்பீரமாக தோற்றமளிக்கும் அந்த பத்திரிக்கை விளம்பரத்திற்கு நன்றி. அவர் ஒரு வகை கம்பீரம் என்றால் பைப்புடன் பாரிஸ்டர் கம்பீரம் personified.

இது போல் டாக்டர் ராஜாவையும் பைரவரையும் நாளை அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு இங்கே ஒளி வீச செய்வீர்கள் என தெரியும். அதே நேரத்தில் நாளை மறுநாள் பிறந்த நாள் காணும் புரட்சி வீரனை கண்டு களிக்க ஆவன செய்வீர்களா?

அன்புடன்

டியர் முரளி சார்,

தங்களின் கூற்று நூறு சதம் உண்மை, மிக்க நன்றி !

டாக்டர் பைரவர் பராக் ! பராக் !

அதர்மத்தை அழித்து தர்மம் தழைக்க மாபெரும் புரட்சி செய்த மாவீரன் சேகரை மனங்குளிர தரிசித்து மகிழ முடிந்தவரை முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th July 2011, 05:13 AM
NT Blockbuster ENGAL THANGA RAJA

PATTAAKKATHI BHAIRAVAN M.B.B.S. : 39th Birthday Celebrations

[14.7.1973 - 14.7.2011]

An Album of Ads

First Release Ad
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3856a.jpg


First Release Ad : Daily Thanthi [Madurai] : 1.7.1973
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3852a.jpg


100th Day Ad : The Hindu : 21.10.1973
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3849a.jpg


100th Day Ad : Daily Thanthi [Madurai] : 21.10.1973
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3850a.jpg

Regards,
Pammalar.

RAGHAVENDRA
14th July 2011, 05:50 AM
டியர் பம்மலார்,
கலக்கல்...கலக்கல்...கலக்கல்.... வேறென்ன சொல்வது... பைரவர் தரிசனம் சூப்பர்... இதோ இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை... எங்கள் பைரவரின் புகழ் பாடுவதைத் தவிர...


http://www.youtube.com/watch?v=BU-D2Vi2d2M

அன்புடன்

RAGHAVENDRA
14th July 2011, 09:34 AM
எங்கள் தங்க ராஜா மேலும் சில படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/etradgrey.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/etr01bommaiad.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/etrbommaistill.jpg

அன்புடன்

RAGHAVENDRA
14th July 2011, 09:42 AM
நாளை 15.07.2011 அன்று 40வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாவீரன் சேகருக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/de01.jpg

....
அதுபோல 'சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்' பாடல் அவுட்டோரில் அழகான லொக்கேஷன்களில், மலர்நிறைந்த கூடையை நடிகர்திலகம் முதுகில் சுமந்துகொண்டு, புன்னகை மாறாத முகத்துடன் பாடிவரும் அழகு. (இப்பாடல் முழுக்க அவர் முகத்தில் ஒரு கம்பீரமான புன்னகை தவழும்).

இரு அருமையான பாடல்களோடு, இன்னொரு நெஞ்சையள்ளும் பாடல்...

'வீரம் என்னும் பாவைதன்னை கட்டிக்கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலைதன்னை சூடிக்கொள்ளுங்கள்
நாலுபக்கம் கூட்டமுண்டு பார்த்துக்கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தையுண்டு நம்பிக்கொள்ளுங்கள்'

நடிகர்திலகம் மாறு வேடத்தில் வந்து, சிறையிலிருந்து தன் கூட்டத்தினரை மீட்டுச்செல்லும் காட்சி இது. (கிடாருக்குள் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்து சுடும் உத்தியெல்லாம் அப்போதே பயன்படுத்தப்பட்டு விட்டது).

'தர்மம் எங்கே' படம் 1972 தொடர் வெற்றிக்கோட்டைத் தொட முடியாமல் போனாலும், தரத்தில் எந்தப்படத்துக்கும் குறைந்தது அல்ல. பட வெளியீட்டின்போது நடந்த பிரமாண்ட 'ஒப்பனிங்' திருவிழாவைப்'பொறுத்தவரை, அந்த ஆண்டின் இரண்டு வெள்ளிவிழாப்படங்களைவிட இது முன்னணியில் இருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு படத்தின் ஸ்டில்கள் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அதில் முன்னிலை வகித்தது 'மதி ஒளி' மாதமிருமுறை இதழ்.

1971 துவக்கத்தில் நடிகர்திலகத்துக்கு இருந்த சற்று தொய்வு நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, ஆளாளுக்கு நடிகர்திலகத்துக்கு சவால் விடத்துவங்கினர். (Imagine, that was Public Election time too, where NT was canvassing for Congress (O), headed by Perundhalaivar Kamaraj) தொய்வு நிலைக்குக் காரனம் அவரது படங்களின் புற்றீசல் போன்ற படையெடுப்பு. 'பாதுகாப்பு' படத்தில் துவங்கி 'பிராப்தம்' வரையில் நான்கு மாதங்களில் ஏழு படங்கள்.

'சவாலே சமாளி'யின் வெற்றி, கேலி பேசியவர்களை ஓரளவு வாயடைக்க வைத்தது எனினும் 'பாபு'வில் துவங்கி தொடர்ந்து நான்கும் வெற்றி மேல் வெற்றி பெறத்துவங்க.......

'தர்மம் எங்கே' படத்தில் கையில் வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்கைப்போட்டு, அதன் கீழே... "நாக்குத்தடுப்பேறி சவால் விட்ட தறுக்கர்கள் எங்கே?" என்ற வாசகத்தையும்...

நம்பியாருக்கு எதிராக வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்தைபோட்டு.... "சவால் விட்டவனெல்லாம் சவக்குழிக்குப் போய்விட்டான்.. நீ எம்மாத்திரம்?" என்ற வாசகத்தையும் 'மதி ஒளி' வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி, பெரிய எதிர்பார்ப்பைத்தூண்டி விட்டது.

---- சகோதரி சாரதாவின் வலைப்பதிவிலிருந்து ஒரு பகுதி

முழுதும் படிக்க (http://ennangalezuththukkal.blogspot.com/2011/01/blog-post_20.html)


அன்புடன்

joe
14th July 2011, 10:47 AM
எங்கள் தங்க ராஜா 100 நாட்கள் ஓடிய நகரங்களில் (இன்றைய தேதியில்) மாநகராட்சி அல்லாத ஒரே ஊர் எங்கள் நாஞ்சில் நகர் :thumbsup:

HARISH2619
14th July 2011, 11:23 AM
திரு பம்மல் சார்,
நம் தங்க ராஜாவின் போஸ்டர்கள் மிகவும் அருமை,கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி இருந்தது,மிகவும் நன்றி.
திரு ராகவேந்திரா சார்,
தங்கள் பங்குக்கு தாங்களும் வேறு சில ஸ்டில்கள் தந்து அசத்திவிட்டீர்கள்,நன்றி.
கெளரவம் படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் உண்டா?ஞாயிறு மாலைக்காட்சிக்கு ரசிகர்களின் திட்டம் என்ன?சென்ற வருடம் புதியபறவைக்கு ஆனதைப்போல ஞாயிறு மாலைக்காட்சி ஹவுஸ்புல் ஆகுமா?

RAGHAVENDRA
14th July 2011, 11:42 AM
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே

கேட்கக் கேட்கத் திகட்டாத மெட்டு, மெல்லிசை மன்னரின் கைவண்ணம் பட்டு

ஆம், தர்மம் எங்கே திரைக்காவியத்தில் இடம் பெற்ற மெய்மறக்கச் செய்யும் பாடல் இதோ -


http://www.dekhona.com/music-videos/iaiicqtwrp/Palli-Arugil-Dharmam-Enge-video

அன்புடன்

RAGHAVENDRA
14th July 2011, 11:46 AM
டியர் ரங்கன்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கும் ஆதரவிற்கும் உளமார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட புதிய பறவை அளவிற்கு, அல்லது அதற்கும் மேலே என்று சொல்லக் கூடிய அளவிற்கு ரசிகர்களின் பங்களிப்பு பாரிஸ்டருக்கு குவிகிறது. பிரம்மாண்டமான கட்-அவுட், பெங்களூரு ரசிகர்களின் ராட்சத மாலை, பந்தல், என அமர்க்களங்கள் ஏற்பாடாகி வருவதாக காற்றில் வந்த செய்தி தெரிவிக்கிறது. எனவே புதிய பறவையை கௌரவம் மிஞ்சக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம்.

அன்புடன்

groucho070
14th July 2011, 11:50 AM
Sir, was that written by Valee?

abkhlabhi
14th July 2011, 11:54 AM
Advance booking can be done through www.shanticinemas.com. I am planning to go to chennai on 17th (subject to return tkt confirmation)

goldstar
14th July 2011, 12:39 PM
டியர் ரங்கன்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கும் ஆதரவிற்கும் உளமார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட புதிய பறவை அளவிற்கு, அல்லது அதற்கும் மேலே என்று சொல்லக் கூடிய அளவிற்கு ரசிகர்களின் பங்களிப்பு பாரிஸ்டருக்கு குவிகிறது. பிரம்மாண்டமான கட்-அவுட், பெங்களூரு ரசிகர்களின் ராட்சத மாலை, பந்தல், என அமர்க்களங்கள் ஏற்பாடாகி வருவதாக காற்றில் வந்த செய்தி தெரிவிக்கிறது. எனவே புதிய பறவையை கௌரவம் மிஞ்சக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம்.

அன்புடன்


Ragavendran sir,

Big treat for your guys, but I will watch same time same day Sunday but sitting in Australia on my LCD big screen.

Cheers,
Sathish

mr_karthik
14th July 2011, 03:03 PM
பம்மலார் சார்,

டாக்டர் ராஜா மற்றும் பட்டாக்கத்தியாரின் (எங்கள் தங்க ராஜா) உதய தினத்தைப்போற்றும் வகையில் நீங்கள் தந்துள்ள நான்கு அருமையான விளமபரங்களும், ராகவேந்தர் சார் தந்துள்ள விளம்பரமும், ஸ்டில்களும் அருமை. பதித்தமைக்கு மிக்க நன்றி.

சமீப காலமாக, தியேட்டர் பெயர்களோடு வந்துகொண்டிருக்கும் நடிகர்திலகத்தின் திரைப்படங்களின் 100-வது நாள் விளம்பரங்களைப்பார்த்து, வலைப்பூக்களில் குறை சொல்லி வந்தோர் வாயடைத்து வருகின்றனர்.

ராகவேந்தர் சார்,

'த்ரமம் எங்கே' திரைப்படத்தின் வெளியீடு நினைவையொட்டி நீங்கள் அளித்திருக்கும் காணக்கிடைக்காத 'ஒர்க்கிங் ஸ்டில்'லும் கூடவே அப்படத்தைப்பற்றி சாரதா எழுதிய பதிவின் சில பகுதிகளையும் வெளியிட்டமைக்கு நன்றி.

அதிகம் பேசப்படாத 'தர்மம் எங்கே' படத்தின் நாளிதழ் விளம்பரத்தை வெளியிட்டு பம்மலார் மேலும் பெருமை சேர்ப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

நாளை விஜயம் செய்யவிருக்கும் பாரிஸ்டர், அண்ணாசாலையைக் கலக்கப்போவது நிச்சயம்.

mr_karthik
14th July 2011, 03:10 PM
எங்கள் தங்க ராஜா 100 நாட்கள் ஓடிய நகரங்களில் (இன்றைய தேதியில்) மாநகராட்சி அல்லாத ஒரே ஊர் எங்கள் நாஞ்சில் நகர் :thumbsup:

ஜோ சார்,

ஆனால் படம் வெளிவந்த 1973-ல் சென்னையும், மதுரையும் மட்டுமே மாநகராட்சியாக இருந்தது.

கவலைப்படாதீர்கள். அடுத்து மாநகராட்சியாக உருவாக இருக்கும் பட்டியலில் நாகர்கோவிலும், தஞ்சாவூரும் இருப்பதாக சமீபத்தில் செய்தி வந்தது.

KCSHEKAR
14th July 2011, 04:51 PM
திரு பம்மலார் மற்றும் திரு ராகவேந்திரன் ஆகியோரின் - நடிகர்திலகத்தின் திரைப்படங்களைப்பற்றிய கடந்த காலப் பதிவுகள் மிகவும் அருமை. ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியை மிஞ்சும் வகையில் பதிவுகளை அள்ளி வழங்கும் இருவருக்கும் நன்றி.

RAGHAVENDRA
14th July 2011, 05:55 PM
பாராட்டிப் பதிவிட்ட ராகேஷ், பாலா, கார்த்திக், சதீஷ், ஜோ, சந்திரசேகர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

டியர் சதீஷ்,
நாங்கள் பார்க்க திட்டமிட்டிருக்கும் அதே நேரத்தில் நீங்களும் பார்த்து எங்களோடு சேர்ந்து கொள்வதற்கு மிக்க மகிழ்ச்சி. எங்கள் உள்ளங்கள் உங்களையும் உங்கள் உள்ளம் எங்களையும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

15.07.2011 தேதியிட்டு வெளிவர இருக்கும் நாளைய ஹிந்து நாளிதழில் கௌரவம் பட வெளியீட்டினைப் பற்றி அருமையாக எழுதியிருக்கும் மாலதி ரங்கராஜன் அவர்களுக்கும் மற்றும் ஹிந்து நாளிதழுக்கும் நமது உளமார்ந்த நன்றி.
கட்டுரையைப் படிக்க படத்தை சொடுக்கவும்.

http://www.thehindu.com/multimedia/dynamic/00693/14frrs-15fr_Gowrava_693804f.jpg (http://www.thehindu.com/arts/cinema/article2226688.ece)

அன்புடன்

joe
14th July 2011, 06:37 PM
மற்றவர் சட்டையின் கைப்பட்டை கழன்றிருந்தால் ஃபெயில்
நீ சட்டையின் கைப்பட்டை கழற்றி விட்டால் அதுவும் ஒரு ஸ்டைல்.

J.Radhakrishnan
14th July 2011, 09:04 PM
டியர் ரங்கன்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கும் ஆதரவிற்கும் உளமார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட புதிய பறவை அளவிற்கு, அல்லது அதற்கும் மேலே என்று சொல்லக் கூடிய அளவிற்கு ரசிகர்களின் பங்களிப்பு பாரிஸ்டருக்கு குவிகிறது. பிரம்மாண்டமான கட்-அவுட், பெங்களூரு ரசிகர்களின் ராட்சத மாலை, பந்தல், என அமர்க்களங்கள் ஏற்பாடாகி வருவதாக காற்றில் வந்த செய்தி தெரிவிக்கிறது. எனவே புதிய பறவையை கௌரவம் மிஞ்சக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம்.

அன்புடன்

டியர் ராகவேந்தர் சார்,

17ம் தேதி மாலை ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வினை நேரில் காண மகிழ்வுடன் தயாராவோம்.

Murali Srinivas
15th July 2011, 12:16 AM
சுவாமி,

கேட்டதும் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுத்ததற்கு நன்றி.

ராகவேந்தர் சார்,

சேகரின் அந்த ஸ்டைலிஷ் பாடலுக்கு நன்றி. நடிகர் திலகத்தின் எந்த பாடலை பார்த்தாலும் அந்த பாடல் அல்லது காட்சி இடம் பெற்ற படத்தை முதன் முதலில் பார்த்தபோது நடந்தது நினைவுக்கு வரும் என்ற போதிலும் அந்த வகையில் தர்மம் எங்கே படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. தர்மம் எங்கே என்று கேட்டவுடன் உடன் நினைவுக்கு வருவது பல விஷயங்கள்.

முதலில் ஜூலை 1 அன்று வருவதாக இருந்து பின்னர் 15 -ந் தேதி மாறியது, படம் வெளியான அன்று மதுரை ஸ்ரீதேவி அரங்க வளாகமே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காட்சிகள் எல்லாம் வெகு சீக்கிரமாக தொடங்கியது, கூட்டத்தை பார்த்துவிட்டு இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை 5 காட்சிகளாக மாற்றியது, எக்ஸ்ட்ரா காட்சி திரையிட்டும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாமல் போனது, நான் சென்றிருந்த இரண்டாம் நாள் ஞாயிறு மாலைக் காட்சிக்கு அந்த அரங்கம் அமைந்திருந்த ஒர்க் ஷாப் ரோடே வாகன போக்குவரத்து போக முடியாமல் ஸ்தம்பித்து போனது, போலீசார் நடத்திய லத்தி சார்ஜ், அடிப்பட்டு காலில் ரத்தம் வழிந்து ஓடும் போதும் வரிசையில் மீண்டும் நின்று டிக்கெட் வாங்குவதற்கு முயற்சி செய்த மனிதன், தொடர் வெற்றிகளால் பூரிப்படைந்து அரங்கத்திற்கு வெளியே ஆரவாரிக்கும் ரசிகர்கள், அந்த நேரத்தில் 70 நாட்களை கடந்து புதிய வசூல் சாதனை படைத்துக் கொண்டிருந்த பட்டிக்காடா பட்டணமாவின் வசூல் விவரங்களை குறிப்பிட்டு ரசிகர்கள் அடித்திருந்த கையால் தொட்டாலே கொதிக்கும் அனல் வாசகங்கள் அடங்கிய நோட்டிஸ்கள், எப்படியோ உள்ளே நுழைந்து டிக்கெட் வாங்கியது, சுதந்திர பூமியில் பாடலின் அறிமுக காட்சி முதல் தர்மம் எங்கே என்று கேட்டவர்களுக்கு தர்மம் இங்கே என்று பதில் கொடுத்திருக்கிறார் என்று முத்துராமன் பேசும் இறுதிக் காட்சி வரை நிலவிய தியேட்டரின் internal atmosphere, இவற்றையெல்லாம் விவரிக்க வார்த்தைகளே சிக்கவில்லை என்பதுதான் உண்மை.

அன்புடன்

Rakesh,

It is Kannadasan I believe and not Vaalee.

Plum,

Earlier you were evincing keen interest to watch Barrister and his Foster son! In case if you want to come on Sunday evening please inform!

Murali Srinivas
15th July 2011, 12:24 AM
ஜூலை 15

இந்நாளில் அவதரித்த

இந்த மண்ணிற்கும் இந்த மக்களுக்கும் வேண்டி தன் உடல் பொருள் ஆவி அனைத்தும் வழங்கிய சிவகாமியின் செல்வன், கர்ம வீரர், பாரதப் பெருந்தலைவர் அவர்களை எந்நாளும் நினைவு கொள்வோம் .

பள்ளி சாலை தந்தவன் ஏழை தலைவனின் புகழ் எந்த நாளும் பாடுவோம்.

அன்புடன்

RAGHAVENDRA
15th July 2011, 12:49 AM
பன்னிரண்டாண்டில் ஒரு முறை மலரும் குறிஞ்சி மலரினைப் போலே
தன்னலமில்லா தலைவர் வருவார்
என்று நம்பிக்கையோடு பெருந்தலைவர் நினைவைப் போற்றுவோம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/wKamaraj01B.jpg

ராகவேந்திரன்

RAGHAVENDRA
15th July 2011, 01:07 AM
புரட்சி வீரன் சேகர் திரையரங்கினைக் கண்ட நாள் 15.07.1972 .. தர்மம் எங்கே இன்று தனது 40வது ஆண்டில் நுழைகிறது. இதனையொட்டி தமது திரையரங்க அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முரளி சார் அவர்களுக்கு நமது நன்றிகள். இதோ சேகரின் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்..

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/dharmamengey2.jpg

அன்புடன்

pammalar
15th July 2011, 03:37 AM
டியர் ராகவேந்திரன் சார்,

கலக்கல் பாராட்டுக்கு கனிவான நன்றி ! பைரவ டாக்டரின் கூடுதல் விளம்பரமும், 'பொம்மை' மாத இதழில் வெளியான அழகிய நிழற்படங்களும், "இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை" பாடலும் பிரமாதம் !

விடுதலை வீரன் சேகரின் சிருங்கார ஸ்டில் ['பொம்மை'யில் வெளிவந்தது] சூப்பர் என்றால், எனது மனம் கவர்ந்த பாடலான "பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே" சூப்பரோ சூப்பர் ! சேகரின் ஸோலோ ஸ்டில் சுப்ரீம் !

[சகோதரி சாரதா எழுதிய "தர்மம் எங்கே" திறனாய்விலிருந்து சில வரிகளைப் பதிவிட்டது Superb ! சகோதரியின் படைப்புகளை எப்பொழுது படித்தாலும் சச்சின் அடிக்கும் சிக்ஸரைக் காணும் மகிழ்வு ஏற்படுகிறது.]

"The Hindu" [15.7.2011] நாளிதழின் கட்டுரை மிக மிக அருமை ! "The Hindu" நாளிதழுக்கும், திருமதி. மாலதி ரங்கராஜன் அவர்களுக்கும், இக்கட்டுரையின் சுட்டியை நிழற்படத்துடன் அளித்த தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி !

பெருந்தலைவருடன் நடிகர் திலகம் அளவளாவும் புகைப்படம் அருமை மட்டுமல்ல, அரிய ஒன்றும் கூட !

டியர் செந்தில் சார்,

கண்ணான பாராட்டுக்கு பொன்னான நன்றி ! கௌரவக் கொண்டாட்டங்கள் பறவையை மிஞ்சும் !

டியர் mr_karthik,

மனம் திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !

டியர் சந்திரசேகரன் சார்,

அள்ளி வழங்கிய பாராட்டுக்கு அன்பான நன்றி !

டியர் முரளி சார்,

உயர்வான பாராட்டை அளித்தமைக்கு உளப்பூர்வமான நன்றி ! "தர்மம் எங்கே" நினைவுகள் அமர்க்களம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th July 2011, 03:58 AM
பெருந்தலைவரின் ஆசிகளைப் பெறுகிறார் கலையுலக முதல்வர்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Kamarajar6.jpg

இன்று 15.7.2011 பெருந்தலைவர், கர்மவீரர், ஏழைப்பங்காளர், கல்விக்கண் திறந்தவர், கிங்மேக்கர் காமராஜர் அவர்களின் 109வது பிறந்த தினம்.

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
15th July 2011, 04:54 AM
பெருந்தலைவர் பற்றி நடிகர் திலகத்தின் உணர்ச்சிமயமான இருபக்கக் கட்டுரை

சிவாஜி ரசிகன் : 15.7.1974

முதல் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3882a-1.jpg

இரண்டாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3883a.jpg

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
15th July 2011, 05:08 AM
கோயில் மாநகரில் கோமகனின் காவியங்கள்

14.7.2011 வியாழன் முதல் தினசரி 3 காட்சிகள் : ராம் : நான் வாழவைப்பேன்

15.7.2011 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள் : சென்ட்ரல் : இரு மலர்கள்

இனிப்பான செய்திகளை வழங்கிய அன்புள்ளங்கள் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கும், திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th July 2011, 08:48 AM
Sir, was that written by Valee?

Dear Mr.Rakesh,

All of the songs in "Dharmam Enghe" came from the pen of Kaviyarasar Kannadhasan.

Regards,
Pammalar.

groucho070
15th July 2011, 09:21 AM
Thanks Murali-sir, and Pammalar-sir for clarifying. Beautiful songs.

pammalar
15th July 2011, 09:29 AM
சாதனைச் சக்கரவர்த்தியின் "கௌரவம்" : சாந்தி : விளம்பரங்கள்

நேற்றைய [14.7.2011] தினத்தந்தி சென்னைப் பதிப்பு
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3884a.jpg


இன்றைய [15.7.2011] தினத்தந்தி சென்னைப் பதிப்பு
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3888a.jpg

அன்புடன்,
பம்மலார்.

groucho070
15th July 2011, 09:46 AM
My favourite NT film. And I cannot watch it on big screen. Paravailla, veetula DVDla parkuren :sad:

abkhlabhi
15th July 2011, 10:52 AM
http://www.youtube.com/watch?v=sl1BhkROzSQ

mr_karthik
15th July 2011, 11:04 AM
"பெருந்தலைவர் காமராஜ் நினைவைப் போற்றுவோம்"

எங்கள் நடிகர்திலகம் போற்றிய ஒரே தலைவரே...

தியாக வரலாற்றின் திருவுருவமாகத் திகழந்த மாமேதையே....

தூய்மையான அரசியலின் கடைசி அத்தியாயமே......

கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று நாடு சுட்டிக்காட்டும் ஒரே தலைவரே...

இறக்கும்போது வீட்டு அலமாரியில் 126 ரூபாயும், வங்கிக்கணக்கில் 460 ரூபாயும் வைத்திருந்த பெரும் பிச்சைக்காரரே...

உன்னால் துவங்கப்பட்ட இலவசக்கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் படிக்கும் ஓசை கேட்கும் காலம் வரை...

உன்னால் துவங்கப்பட்ட எண்ணற்ற தொழிற்சாலைகளின் எந்திரங்களிலிருந்து எழும் ஓசை காற்றில் கேட்கும் காலம் வரை...

உன் ஆட்சியில் கட்டப்பட்ட எண்ணற்ற அணைக்கட்டுகளிலிருந்து சலசலத்து ஓடும் நீரின் ஓசை கேட்டுக்கொண்டிருக்கும் காலம் வரை....

உன் புகழ் வாழும், வாழும், வாழும்.

இறுதிவரை உன் தொண்டர்களாக வாழ எங்களை நீ வாழ்த்து.

mr_karthik
15th July 2011, 11:40 AM
ராகவேந்தர் சார்,

பெருந்தலைவருடன் நடிகர்திலகம் அமர்ந்திருக்கும் படம் கண்கொள்ளாக் காட்சி. திரும்பி வரமுடியாத பொற்கால நினைவுகளை சுமந்துள்ள புகைப்படம்.

'தர்மம் எங்கே' பட ஆரம்பத்தோற்றத்தில் நடிகர்திலகம் ஸ்டில்லும் சூப்பர்.

பம்மலார் சார்,

பெருந்தலைவர் பிறந்தநாளையொட்டி, நடிகர்திலகம் வெளியிட்ட சிறப்புக்கட்டுரையை அதன் ஒரிஜினல் வடிவில் தந்துள்ளமைக்கும், பெருந்தலைவரிடம் நடிகர் திலகம் ஆசி வாங்கும் புகைப்படத்தைப் பதிப்பித்தமைக்கும் மிக்க நன்றி.

ஆவணக்களஞ்சியங்களான உங்கள் இருவரிடமிருந்தும் 'தர்மம் எங்கே' முதல் வெளியீட்டு விளம்பரத்தை ஆவலுடன் எதிர்பார்த்தேன். கிடைக்கும்போது மறவாமல் பதியுங்கள்.

RAGHAVENDRA
15th July 2011, 12:41 PM
டியர் பம்மலார்,
தங்கள் பாராட்டுக்களுக்கு அடியேனின் உளமார்ந்த நன்றி.
தலைவரிடம் நடிகர் திலகம் ஆசி வாங்கும் காட்சி.... ஆஹா.... சொல்ல வார்த்தைகளே இல்லை.. மிகுந்த நன்றிகள்...
அதே போல் சிவாஜி ரசிகனில் வெளி வந்த கட்டுரையை வழங்கி அனைவரையும் அசத்தி விட்டீர்கள்...
அடியேனின் சிறு விண்ணப்பம்.. நேரம் கிடைக்கும் போது சிவாஜி ரசிகன் இதழின் அட்டைப் படத்தை இங்கு வெளியிட்டு எங்களையெல்லாம் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

டியர் கார்த்திக்,
தலைவரின் பிறந்த நாளையொட்டிய தங்கள் பதிவு மிகுந்த உணர்ச்சிகரமாகவும் உண்மையாகவும் இருக்கிறது. நன்றியும் பாராட்டுக்களும்.

அன்புடன்

RAGHAVENDRA
15th July 2011, 12:45 PM
டியர் பம்மலார்,
மதுரை பட தகவலுக்கு நன்றி.
மதுரை அல்லாத மற்ற நண்பர்களுக்காக ...

எந்தன் பொன்வண்ணமே...


http://www.youtube.com/watch?v=aN09nwF1lag

மன்னிக்க வேண்டுகிறேன்


http://www.dailymotion.com/video/xfpu1l_mannikka-vendugiren-undhan-aasaiyai_creation

அன்புடன்

SuraTheLeader
15th July 2011, 01:08 PM
http://i54.tinypic.com/21mgu15.jpg

pammalar
15th July 2011, 03:37 PM
டியர் mr_karthik,

தாங்கள் அளித்த பாராட்டுக்கு நன்றி ! பெருந்தலைரைப் பற்றிய தங்களது பதிவில் உள்ள ஒவ்வொரு வரியையும் வாசிக்கும் போது உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது. பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி ! இரு பாடல்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th July 2011, 03:48 PM
டியர் பம்மலார்,
நேரம் கிடைக்கும் போது சிவாஜி ரசிகன் இதழின் அட்டைப் படத்தை இங்கு வெளியிட்டு எங்களையெல்லாம் அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.
அன்புடன்

தங்கள் சித்தம் என் பாக்கியம் ! அடுத்த பதிவை அன்புகூர்ந்து நோக்குங்கள் !

pammalar
15th July 2011, 03:55 PM
வரலாற்று ஆவணம்

அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தின் தலைவர் தியாகி சின்ன அண்ணாமலை அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட 'சிவாஜி ரசிகன்' மாதமிருமுறை [Fortnightly] இதழின் முதல் இதழ் [15.4.1972] அட்டைப்படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3889aa.jpg

[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]

அன்புடன்,
பம்மலார்.

abkhlabhi
15th July 2011, 04:47 PM
only 25 tkts available in net on 17th evening show. Hope to meet all of your at Shanti on 17th evening.

pammalar
15th July 2011, 06:19 PM
http://i54.tinypic.com/21mgu15.jpg

டியர் SuraTheLeader,

அரிய புகைப்படத்துக்கு அன்பான நன்றி !

சிவாஜி நாடக மன்றத்தின் "வேங்கையின் மைந்தன்(1965)" நாடகத்தில் ராஜேந்திர சோழ சக்கரவர்த்தி வேடத்தில் நடிகர் திலகம் பெருந்தலைவருடன் காட்சியளிக்கும் அற்புதப் புகைப்படம் இது.

முத்தாய்ப்பாக கர்மவீரரின் பிறந்தநாளன்று இதனைப் பதிவிட்டமைக்கு மீண்டும் நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th July 2011, 06:33 PM
only 25 tkts available in net on 17th evening show. Hope to meet all of your at Shanti on 17th evening.

டியர் பாலா சார்,

மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியை அளித்துள்ளீர்கள், மிக்க நன்றி !

பாரிஸ்டரையும், கண்ணனையும் தரிசிக்க, ஞாயிறு [17.7.2011] அன்று மாலை சென்னை சாந்தியில் நாம் அனைவரும் ஒன்றுகூடி சங்கமிப்போம் !

அன்புடன்,
பம்மலார்.

SuraTheLeader
15th July 2011, 06:36 PM
Pammalar Sir,
These r too big words for a very small contribution......
I m getting to know more and more about the LEGENDARY Sivaji Sir's from this hub through you people's gr8 work....

Both my father and mother and my uncle are very big fan of Sivaji sir and they used to share thier exp of watching the movie at thier time...,some Informations which they knew....

I m very much thrilled/interested in reding this thread
Thank you all !

goldstar
15th July 2011, 06:57 PM
டியர் பாலா சார்,

மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியை அளித்துள்ளீர்கள், மிக்க நன்றி !

பாரிஸ்டரையும், கண்ணனையும் தரிசிக்க, ஞாயிறு [17.7.2011] அன்று மாலை சென்னை சாந்தியில் நாம் அனைவரும் ஒன்றுகூடி சங்கமிப்போம் !

அன்புடன்,
பம்மலார்.

Pammalar sir,

Looking for Gowravam cutouts and posters and theater crowds photos... and you guys have a great "Allapparai" on Sunday.

Cheers,
Sathish

goldstar
15th July 2011, 07:08 PM
பம்மலர் சார்,

இப்போ தான் மதுரை அலங்கார் லே கெளரவம் படத்துக்கு பண்ணின அல்லப்பறை பத்தி யோசிக்கிறேன். பெரிய பெரிய மாலைகள் மேலும் அரங்கக்க்தில் சரியான பூ , பட்டு புஸ்தகம் , காயிதம் விட்டது , நம்ம மதுரை அல்லப்பறை எங்கேயும் வராது. சென்னை லே எப்படி அல்லப்பறை பார்க்கலாம் இது நம்ம மதுரையும் மிஞ்சும் என்று நம்முகிறேன்.

நன்றியுடன்
சதீஷ்

pammalar
15th July 2011, 07:35 PM
Dear SuraTheLeader,

Thanks for your appreciation !

டியர் கோல்ட்ஸ்டார் சதீஷ்,

நீங்கள் கேட்டவை அடுத்த பதிவில் ! ஞாயிறு [17.7.2011] மாலை கொண்டாட்டங்களை எப்பொழுதும் போல் அவசியம் பதிவு செய்கிறோம் !

மதுரை அலப்பறை எப்போதுமே தூக்கல்தான். மதுரை மட்டுமல்ல, எல்லா ஊர்களையும் தற்போது அலப்பறையில் சென்னை விஞ்சி நிற்கிறது. இங்கே நிகழும் ஆரவாரங்களை நீங்கள் ஒருமுறை நேரில் கண்டு களித்தால் தெரிய வரும் !

அன்புடன்,
பம்மலார்.

PARAMASHIVAN
15th July 2011, 07:48 PM
Wow Good photo Sura :)

NT reminds of Karnan in this get up !

PARAMASHIVAN
15th July 2011, 07:50 PM
Dear Raghavendra sir

Mannika vendukiren is from which film ?

thanks

goldstar
15th July 2011, 07:51 PM
Dear Raghavendra sir

Mannika vendukiren is from which film ?

thanks

Iru Malarkal...

PARAMASHIVAN
15th July 2011, 07:52 PM
Iru Malarkal...

நன்றி :)

PARAMASHIVAN
15th July 2011, 07:55 PM
Classic by NT :notworthy:
http://www.youtube.com/watch?v=ZTIir3BA9gY&feature=player_detailpage

PARAMASHIVAN
15th July 2011, 07:57 PM
http://www.youtube.com/watch?v=PMbieMcg0wk&feature=player_detailpage

pammalar
15th July 2011, 08:23 PM
'சாந்தி'யில் "கௌரவம்" : அட்டகாச ஆல்பம்

பல டிசைன்களில் கண்ணைக் கவரும் போஸ்டர்கள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3866.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3858.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3871.jpg

40 அடி உயர ராட்சதப் பதாகை
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3869.jpg

அன்புடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
15th July 2011, 10:09 PM
டியர் ராகவேந்தர் சார், பம்மலார் சார்,

பெருந்தலைவருடன் நம் தலைவர் படங்களை பதித்ததற்கு நன்றி

RAGHAVENDRA
15th July 2011, 10:43 PM
டியர் பம்மலார்
சென்னை சாந்தியில் வைக்கப் பட்டுள்ள கட்அவுட்டின் நிழற்படத்திற்கு மிக்க நன்றி. அடியேனால் இன்னும் திரையரங்கு பக்கம் நுழைய சந்தர்ப்பம் வரவில்லை என்றாலும், இருக்கையில் இருந்தவாறே, இரவில் அந்த கட்அவுட் எப்படி இருக்கக் கூடும் என்கிற அனுமானத்தில் தங்கள் நிழற்படத்தை மாற்றி உருவாக்க முயன்றுள்ளேன். இதோ காணுங்கள் அந்தக் கட்அவுட்டினை இரவின் வெளிச்சத்தில்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/gauravambnrshanti2011.jpg

அன்புடன்

RAGHAVENDRA
16th July 2011, 09:17 AM
http://www.haihoi.com/tamil-movies/Mp3/downloads/music/flimAlbum/Thaiku-Oru-Thalatu.jpg

16.07.1986 - நீண்ட நாட்களுக்குப் பின்னர் நாட்டியப் பேரொளியும் நடிகர் திலகமும் இணைந்து நடித்த திரைக்காவியம் தாய்க்கு ஒரு தாலாட்டு வெளியான தினம். இன்று 25 ஆண்டுகள் நிறைவுற்று 26வது ஆண்டில் நுழைகிறது. இதை நினைவூட்டும் வகையில்


http://www.youtube.com/watch?v=DgvfodlM9gw

அன்புடன்

KCSHEKAR
16th July 2011, 11:38 AM
Dear all,

Please click the links to view the Invitations:

http://sivajiperavai.blogspot.com/2011/07/nadigarthilagam-10th-death-anniversary.html

http://1.bp.blogspot.com/-gKpmTsscQs4/Th_ylKhfjeI/AAAAAAAAAIw/-21BUxUdm44/s1600/Sivaji10thAnniversaryEveFunction.jpg

RAGHAVENDRA
16th July 2011, 04:10 PM
10 ஆண்டுக் காலம் அவர் தமிழக முதலமைச்சாராகப் பணியாற்றியபோது நாட்டில் வறுமையை ஒழிக்கவும் – ஏழைகளின் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும் போராடினார்.

இப்போது தரங்கெட்ட அரசியல்வாதிகளிடமிருந்து மக்களை விடுவிக்கப் போராடுகிறார்.

தலைவருடைய அரசியல் ஆரம்பக் கட்டம் முதல் இன்று வரை நாட்டு நலனுக்காகப் போராடுகிறார்.

-- தலைவர் மட்டுமல்ல அவருடைய உண்மையான ஒரே தொண்டரும் தீர்க்க தரிசி என நடிகர் திலகத்தை நிரூபிக்கும் வார்த்தைகள்...

இப்படிப் பட்ட பொக்கிஷமான சிவாஜி ரசிகன் இதழை பத்திரப் படுத்தி தந்த பம்மலார் தானே ஒரு பொக்கிஷம் என நிரூபித்து விட்டார். அதுவும் அந்தக் காலத்தில் முதல் இதழ் கிடைக்காமல், அப்போது அண்ணா சாலை நரசிங்கபுரம் தெருவில் இருந்த அகில இந்திய ரசிகர் மன்றத்தின் தென் சென்னை மாவட்ட அலுவலகத்திற்கு சென்று அங்கும் புத்தகம் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கிடையில் ஒரு புத்தகம் கிடைக்கப் பெற்றேன். அப்போது அடைந்த மகிழ்வை, சில ஆண்டுகள் கழித்து எதிர்பாராத சூழ்நிலையில் அப்புத்தகத்தை இழந்த போது ஏற்பட்ட சோகம் மறக்கடித்து விட்டது. அந்த மகிழ்வைத் தற்போது மீண்டும் இப்படம் மூலம் எனக்குத் தந்த பம்மலார் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி. அந்தக் காலத்தில் சிவாஜி ரசிகன், மதிஒளி, திரைவானம் இதழ்களில் அடியேனுடைய கேள்விகள் அல்லது கடிதங்கள் பிரசுரமாகியிருந்தன. அவையெல்லாம் தற்போது நினைவுக்கு வருகின்றன.

பம்மலாருக்கு மீண்டும் மீண்டும் என் நன்றியும் பாராட்டுக்களும்.

அந்த நாள் நினைவுக்கு அழைத்துச் சென்ற பம்மலாருக்காக இப்பாடல்...


http://www.youtube.com/watch?v=GdonVRecq9s

அன்புடன்

goldstar
16th July 2011, 04:49 PM
டியர் பம்மலார்
சென்னை சாந்தியில் வைக்கப் பட்டுள்ள கட்அவுட்டின் நிழற்படத்திற்கு மிக்க நன்றி. அடியேனால் இன்னும் திரையரங்கு பக்கம் நுழைய சந்தர்ப்பம் வரவில்லை என்றாலும், இருக்கையில் இருந்தவாறே, இரவில் அந்த கட்அவுட் எப்படி இருக்கக் கூடும் என்கிற அனுமானத்தில் தங்கள் நிழற்படத்தை மாற்றி உருவாக்க முயன்றுள்ளேன். இதோ காணுங்கள் அந்தக் கட்அவுட்டினை இரவின் வெளிச்சத்தில்

அன்புடன்

Nantri Ragavendran and Pammalar sir.

How was the response for Friday and Saturday and collections?

Cheers,
Sathish

rangan_08
16th July 2011, 08:00 PM
டியர் ரங்கன்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கும் ஆதரவிற்கும் உளமார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட புதிய பறவை அளவிற்கு, அல்லது அதற்கும் மேலே என்று சொல்லக் கூடிய அளவிற்கு ரசிகர்களின் பங்களிப்பு பாரிஸ்டருக்கு குவிகிறது. பிரம்மாண்டமான கட்-அவுட், பெங்களூரு ரசிகர்களின் ராட்சத மாலை, பந்தல், என அமர்க்களங்கள் ஏற்பாடாகி வருவதாக காற்றில் வந்த செய்தி தெரிவிக்கிறது. எனவே புதிய பறவையை கௌரவம் மிஞ்சக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம்.

அன்புடன்

Very true, Raghavendra sir. The promos were far better this time, especially Ms. Malathi's article in THE HINDU and that too before the release, had a great reach among the public. Needless to say about our thread's wonderful service ! Smile

Thank God , I finally managed to secure my seat for Sunday evening show. When I went to buy the ticket, the gentleman behind the counter replied that SUNDAY EVENING SHOW WAS HOUSE FULL !!!. I was totally upset.....then did a little bit of talking, sort of convinced him and then got a ticket that was reserved for their office staff.

BARRISTER RULES !!!

Have seen it number of times in DVD, but to watch it on big screen after a long time and that too with great fan group is going to be a terrific experience.

rangan_08
16th July 2011, 08:09 PM
Dear Pammalar sir & Raghavendra sir,

I was simply stunned by looking at the posters you have uploaded here. One can realise the amount of dedication, sincerity and above all the love and affection for NT that is present behind this extra-ordinary effort. To preserve these nuggets over the years is a real tough task and is beyond any appreciation.

RAGHAVENDRA
16th July 2011, 08:46 PM
Dear Rangan,
Happy that you are available tomorrow to join the fanfare.
Thank you for the compliments and forwarded to the divinity of NT.
Hope we try to cover the gala to the maximum extent.

Till then ... a visual treat ... NT on the shooting spot of Praptham with Director Savithri. Images courtesy mahanati savithri website.

http://www.mahanatisavitri.com/wp-content/themes/savitri/images/photos/onthesets/1big.jpg

http://www.mahanatisavitri.com/wp-content/themes/savitri/images/photos/onthesets/1.1big.jpg

And a still from the Telugu film of NT - Pempudu Koduku (1953) - a really very very rare still, courtesy mahanati savithri website

http://www.mahanatisavitri.com/wp-content/themes/savitri/images/photos//telugumovies/58big.jpg

pammalar
16th July 2011, 09:17 PM
இரு மலர்கள் : வசூல் மழை

மதுரை மாநகரின் 'சென்ட்ரல்' திரையரங்கில் உலக மகா நாயகரின் "இரு மலர்கள்" முதல் நாளில் [15.7.2011 : வெள்ளி], நான்கு காட்சிகளில், ஒன்பதாயிரத்து இருநூற்று ஏழு [9,207/-] ரூபாய் வசூல் செய்துள்ளது. பழைய படங்களின் முதல் நாள் வசூலில் இது சிகர சாதனை. இது ஒரு வசூல் மழை என்று புளகாங்கிதப்படுகின்றனர் மதுரை அன்புள்ளங்கள் !

தித்திக்கும் இத்தகவல்களை உடனுக்குடன் வழங்கிய அன்புள்ளங்கள் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கும், திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும் இதயங்கனிந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th July 2011, 09:58 PM
டியர் ராகவேந்திரன் சார்,

நிழற்படத்தை நிஜப்படமாக மாற்றியமைக்கு மனமார்ந்த நன்றி !

Dear Mr.PARAMASHIVAN,

Thanks for the two excellent song videos.

டியர் ஜேயார் சார், மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th July 2011, 04:50 AM
தாய்க்கு ஒரு தாலாட்டு : வெள்ளிவிழா நிறைவு

[16.7.1986 - 16.7.2011] [26வது ஆண்டு உதயதினம்]

[டியர் ராகவேந்திரன் சார், "தாய்க்கு ஒரு தாலாட்டு" நிழற்படங்கள் அருமை, பாடல் உணர்ச்சிமயம். இதோ அக்காவியத்தின் விளம்பரம் :]

முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3891a.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th July 2011, 05:10 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பொக்கிஷமான தங்களிடமிருந்து பொக்கிஷப் பாராட்டைப் பெற்றமைக்கு பொன்னான நன்றிகள் !

கூடவே தங்களது இனிக்கும் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி !

அடியேன் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலை அடியேனுக்காக அளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th July 2011, 05:35 AM
டியர் சந்திரசேகரன் சார்,

நடிகர் திலகத்தின் பத்தாவது நினைவு தினத்தன்று [21.7.2011], நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில், சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் சிறப்பு அன்னதான விழா சிறக்க இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் !

அன்று மாலை வடசென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

Dear goldstar Satish,

The response for "Gouravam" on Friday [15.7.2011] & Saturday [16.7.2011] was excellent, will try to furnish further details.

Dear Rangan Sir,

Thanks for your sincere appreciation. FULL & ALL CREDIT TO NT.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th July 2011, 05:49 AM
டியர் ராகவேந்திரன் சார்,

"பிராப்தம்" ஒர்க்கிங் ஸ்டில்கள் கிடைப்பதற்கு இப்போதுதான் பிராப்தம் ஏற்பட்டிருக்கிறது. நிழற்படங்கள் மிக மிக அருமை மட்டுமல்ல, மிக மிக அரியவையும் கூட. இவற்றை வெளியிட்ட நடிகையர் திலகம் இணையதளத்திற்கும். அவற்றை சிரத்தையோடு இங்கே பதிவிட்ட நடிகர் திலகம்.காம் [ராகவேந்திரன் சார்] இணையதளத்திற்கும் double thanks !

[பெம்புடு கொடுகு தெலுங்கு பட ஸ்டில் சூப்பர்.]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
17th July 2011, 06:03 AM
Gouravam : Shanthi Cinemaas : Chennai

Sunday [17.7.2011] Evening Show

HOUSE FULL in advance booking itself !

adiram
17th July 2011, 11:50 AM
Mr. Raghavendar,

The working still of Praptham is simply super.

We feel sad all the three Shivaji, Savithiri & Chandrakala are not with us.

rangan_08
17th July 2011, 12:28 PM
Gouravam : Shanthi Cinemaas : Chennai

Sunday [17.7.2011] Evening Show

HOUSE FULL in advance booking itself !

Another R E C O R D !!!! As i said earlier, BARRISTER RULES & will continue to RULE forever !!!

And........just a few hours left for the looong and muuccchh awaited rendezvous with the Great Barrister !!

rangan_08
17th July 2011, 12:35 PM
Dear Raghavendra sir,

Amazing & rare photographs from Praptham & Pembudu Koduku !!! Thanks for uploading.

pammalar
17th July 2011, 02:27 PM
டியர் முரளி சார், mr_karthik மற்றும் அனைவருக்கும்,

"தர்மம் எங்கே" முதல் வெளியீட்டு விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் அவசியம் பதிவிடுகிறேன். எனினும், எமது அடுத்தடுத்த பதிவுகளை அன்புகூர்ந்து பாருங்கள்.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
17th July 2011, 02:39 PM
All Roads lead to Rome என்பது போல அனைத்து சாலைகளும் சாந்தியை நோக்கி.... கொண்டாட்டங்கள் பகிர்ந்து கொள்ளப் படும் வரை...

---

நாளை 18.07.2011 கை கொடுத்த தெய்வம் 48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/kkdreleaseadfw.jpg


பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை
பச்சையிளங்கிளி மொழி நீ சொல்வது உண்மை...


http://www.dailymotion.com/video/xej9ue_aayirathil-oruthi-amma-nee_creation

அன்புடன்

pammalar
17th July 2011, 02:51 PM
தர்மம் எங்கே : 40வது ஆண்டு உதயம்

[15.7.1972 - 15.7.2011]

பொக்கிஷப் புதையல்

பட விளம்பரம் : தினத்தந்தி : 19.3.1972
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3906a.jpg
[ஏப்ரல் 1972 வெளியீடாக விளம்பரம் அளிக்கப்பட்டுள்ள "தர்மம் எங்கே", பின்னர் சற்றேறக்குறைய மூன்றரை மாதங்கள் கழித்து, 15.7.1972 அன்று வெளியானது.]


ஒரிஜினல் பாட்டுப் புத்தக முகப்பு
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3895.jpg


ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தினுடைய பின் அட்டை
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3896a.jpg


சினிமா குண்டூசி : ஜூன் 1972 : அட்டைப்பட விளம்பரம்
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3892a.jpg

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

joe
17th July 2011, 02:52 PM
கை கொடுத்த தெய்வம் - நடிகர் திலகத்தின் ஆகச்சிறந்த படங்களுல் ஒன்று . என்னை மிகவும் கவர்ந்த காவியம்.

pammalar
17th July 2011, 03:09 PM
NT Headlines of this Sunday [17.7.2011]

Chennai

All Roads Lead to Shanthi Cinemaas

Madurai

All Roads Lead to Central Cinema

Murali Srinivas
17th July 2011, 04:32 PM
ராகவேந்தர் சாருக்கும் சுவாமிக்கும் நன்றி சொல்வது நமக்கு நாமே நன்றி சொல்லிக் கொள்வது போல. இருப்பினும்

பெருந்தலைவரும் நடிகர்திலகமும் இணைந்து இருக்கும் புகைப்படதிற்காகவும் [அதிலும் ராகவேந்தர் சார் பதிவேற்றியிருக்கும் படம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பெருந்தலைவர் காலமாவதற்கு ஒரு நாள் முன்பாக 1975 அக்டோபர் 1 அன்று நடிகர் திலகம் வீட்டிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்காக வந்திருந்த போது எடுத்த படம்]
சிவாஜி ரசிகன் முகப்பு அட்டைக்கும்
அதில் வந்த நடிகர் திலகத்தின் கட்டுரைக்கும்
பிராப்தம் பட ஸ்டில்-களுக்கும்
பெம்புடு கொடுகு ஸ்டில்-க்கும்
கை கொடுத்த தெய்வம் விளம்பரத்திற்கும்
தர்மம் எங்கே விளம்பரங்களுக்கும்

மிக்க நன்றி.

சாந்தியில் கெளரவம் சாதனை படைப்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் அதை விட மகிழ்ச்சியான செய்தி [என்னைப் பொறுத்தவரை] இரு மலர்கள் நிகழ்த்தும் சாதனைதான். ஒரு கருப்பு வெள்ளைப் படம் இத்தனை புதுப் படங்கள், டி வி சேனல்கள் மத்தியிலும் சாதனை படைக்கிறது என்றால் அந்த பெருமை நடிகர் திலகத்திற்கும் எங்கள் மதுரைக்கும்தான்.

அன்புடன்

goldstar
17th July 2011, 05:50 PM
ராகவேந்தர் சாருக்கும் சுவாமிக்கும் நன்றி சொல்வது நமக்கு நாமே நன்றி சொல்லிக் கொள்வது போல. இருப்பினும்

சாந்தியில் கெளரவம் சாதனை படைப்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் அதை விட மகிழ்ச்சியான செய்தி [என்னைப் பொறுத்தவரை] இரு மலர்கள் நிகழ்த்தும் சாதனைதான். ஒரு கருப்பு வெள்ளைப் படம் இத்தனை புதுப் படங்கள், டி வி சேனல்கள் மத்தியிலும் சாதனை படைக்கிறது என்றால் அந்த பெருமை நடிகர் திலகத்திற்கும் எங்கள் மதுரைக்கும்தான்.

அன்புடன்

Murali sir,

Black-white or colour movies or its raining any time our NT movies will always make collections in Madurai and he is ONLY vasool king.

Cheers,
Sathish

saradhaa_sn
17th July 2011, 07:07 PM
இன்று 'கௌரவத்திருவிழாவில்' பங்கேற்கும் வாய்ப்புக்கிடைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

சிறிய இடைவெளிக்குப்பின் இங்கே வந்து பார்த்தால், எத்தனை முத்து முத்தான பதிவுகள்...!!!, காணக்கிடைக்காத அற்புத சாதனைப் பொன்னேடுகள்...!!!.

டியர் பம்மலார் & டியர் ராகவேந்தர்,

உங்களின் பணி இந்தத்திரியில் மகத்தானது. நடிகர்திலகத்தின் ரசிகப்பெருமக்கள் கேட்டுவிட்டார்கள் என்பதற்காக எங்கெல்லாம் தேடித்தேடி கொண்டு வந்து கொட்டுகிறீர்கள். நீங்களும் ராகவேந்தரும் அளித்திருக்கும் பெருந்தலைவரும், அவரது ஒரிஜினல் உண்மைத்தொண்டனும் இணைந்திருக்கும் காட்சிகள் அனைத்தும் அருமையோ அருமை. அத்துடன் 'சிவாஜி ரசிகன்' இதழில் தலைவரைப்பற்றி நடிகர்திலகம் எழுதியிருக்கும் கட்டுரையைப் பிரசுரித்தமைக்கும் நன்றி. தலைவரைப்பற்றி அண்ணன் சொல்லியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் அருமை மட்டுமல்ல, உண்மையும் கூட.

சாதனைத் திரைப்படங்களின் முதல் வெளியீட்டு தின நினைவுகளைக் கொண்டாடி வரும் வேளையில், எனக்குப்பிடித்த படங்களில் ஒன்றான 'தர்மம் எங்கே' படம் கண்டு கொள்ளப்படாமல் போய்விடுமோ என்று எண்ணியிருந்த வேளையில், அனைவரும் மிக அற்புதமாக நினைவுகூர்ந்து அப்படம் சம்மந்தப்பட்ட விளம்பரங்களையும், ஸ்டில்களையும் அள்ளி வழங்கி, அப்படம் பற்றித்தெரியாத பலருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. முன்பெல்லாம் தர்மம் எங்கே பற்றி யாரும் இங்கே பேசாதபோதும், நானும் முரளியண்ணாவும் அப்படம் பற்றிய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டேயிருப்போம். அதன் தொடர்ச்சிதான் என் வலைப்பதிவில் இடம் பெற்ற அப்படம் பற்றிய ஆய்வுக்கட்டுரை.

அக்க்ட்டுரையின் ஒரு பகுதியை இங்கே பத்தித்ததோடு முழுக்கட்டுரையும் படிக்க இணைப்பு தந்த ராகவேந்தர் அவர்களுக்கும், அதைப்பாராட்டிய பம்மலார் அவர்களுக்கும் மிக்க நன்றி.

'தர்மம் எங்கே' பற்றிய அலசல் முடிந்துவிட்டதோ என்று எண்ணியிருக்கும் வேளையில் பம்மலார் இன்று மீண்டும் அப்படம் பற்றிய விளம்பரம், பாட்டுப்புத்தகத்தின் முகப்பு மற்றும் பின் அட்டை, மதிஒளியின் சகோதரப் பத்திரிகையான 'சினிமா குண்டூசி'யின் முகப்பு அட்டை என, எங்கெல்லாம் தர்மம் எங்கே பற்றிய ஸ்டில்கள் அகப்பட்டனவோ அவையனைத்தையும் எங்கள் பார்வைக்கு விருந்தாக்கி விட்டீர்கள். உங்கள் சேவையால், இப்போது தர்மம் எங்கே பற்றிய ஆல்பம் தயார்.

ராகவேந்தர் அளித்த ப்ராப்தம், தர்மம் எங்கே படங்களின் ஒர்க்கிங் ஸ்டில்கள் அனைத்தும் அருமை. மறக்காமல் நாளை 'கைகொடுத்த தெய்வம்' உதயதினத்தையும் நினைவுகூர்ந்துள்ளார். சமீப நாட்களில் இங்கே பறிமாறப்பட்ட விருந்துகளை முரளியண்ணா அழகாக பட்டியலிட்டுள்ளார். அதற்கு மேல் நான் எதுவும் சொல்லத்தேவையில்லை. சாந்தியில் கௌரவம் பட போஸ்ட்டர் மற்றும் பேனர்களின் அணிவகுப்பும் பரவசமூட்டுகிறது.

டியர் மோகன் (ரங்கன்),

உங்கள் (மற்றும் நன் அனைவரின்) நீண்ட நாள் கனவு இன்று சாந்தியில் நிறைவேறுகிறது. வாழ்த்துக்கள் 'பாரிஸ்டர்' மோகன்.

டியர் கார்த்திக்,

பெருந்தலைவர் பிறந்த நாளில் நீங்கள் அவரை நினைவு கூர்ந்த விதம் மிக அருமை. சின்ன கேஸ்யூலுக்குள் பெரிய அணு ஆயுதங்களை அடக்கித்தருவது போல, உங்கள் பதிவின் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வரலாறாக விரியும். அதிலும் அந்த ' பெரும் பிச்சைக்காரர்' என்ற வரி அற்புதம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அத்தனை அரசியல்வாதிகளும் வெட்கித்தலை குனிய வேண்டிய விஷயம்.

Dear 'SuRA-the-Leader'

Thanks a lot for the very rare still of Perundhalaivar with Nadigar Thilagam.

மற்றும் சிறப்பான பல பதிவுகளைத்தந்த அனைவருக்கும் நன்றி.

Murali Srinivas
17th July 2011, 11:53 PM
சாரதா குறிப்பிட்டது போல கௌரவ திருவிழா உண்மையிலே திருவிழாவையும் மிஞ்சும் வண்ணம் அரேங்கேறியது எந்த காலகட்டத்திலும் தன்னை விஞ்ச ஆளில்லை என்பதை மீண்டும் நடிகர் திலகம் அழுத்தந்திருத்தமாக பதிவு செய்த நாள் இந்த ஜூலை 17. இது போன்ற ஒரு கூட்டத்தை அண்மையில் எப்போதும் கண்டதில்லை. டிக்கெட் கிடைக்காமல் திரும்பியவர்கள் எத்தனையோ. 38 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படம், அதன் பிறகு பலமுறை மறு வெளியீடு கண்ட படம், டி.வி.களில் பல் முறை ஒளிப்பரப்பட்ட படம், டி.வி டி எளிதாக கிடைக்கும் படம் இத்தனையும் தாண்டி இன்று ப்ளாக் டிக்கெட் 200 ரூபாய்க்கு விற்கிறது என்றால் அதுதான் நடிகர் திலகம்.

வந்திருந்த மக்கள் படத்தை அப்படி ரசித்தார்கள். பாலூட்டி வளர்த்த கிளி பாடலுக்கும் நீயும் நானுமா பாடலுக்கும், வக்கீல் கௌன் கேட்டு வரும் காட்சிக்கும் அப்படி ஒரு ரசிப்பு அரங்கத்தில். சுருக்கமாக சொல்வதென்றால் படம் முடிந்து வெளியே வந்த இயக்குனர் சேரன் சொன்னதைத்தான் சொல்ல வேண்டும். "இப்படி படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு".

அன்புடன்

PS: Bala, sorry couldnt interact much with you. Will do it next time.

pammalar
18th July 2011, 03:55 AM
டியர் முரளி சார்,

பாராட்டுக்கு நன்றி !

சகோதரி சாரதா,

தங்களின் உயர்ந்த பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் ! அடுத்த பதிவிலும் "தர்மம் எங்கே" பொக்கிஷங்கள் தொடர்ந்து வெளிவந்து நிறைவு பெறுகிறது. அவற்றையும் தங்கள் ஆல்பத்தில் அணிவகுத்து கொள்ளுங்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th July 2011, 04:17 AM
தர்மம் எங்கே : 40வது ஆண்டு உதயம் [தொடர்ந்து நிறைகிறது]

[15.7.1972 - 15.7.2011]

பொக்கிஷப் புதையல் : சினிமா குண்டூசி : ஜூன் 1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]

இக்காவியம் குறித்து நடிகர் திலகம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3897a.jpg


கலைச்செல்வியின் கூற்று
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3899a.jpg


டைரக்டர் திருலோக் அவர்களின் கருத்தோவியம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3900a.jpg


அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3904a.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
18th July 2011, 04:51 AM
பக்கம் பக்கமாக கதைகளை சொல்லி புரிய வைக்க முடியாத தெரிய வைக்க முடியாத விஷயங்களை, ஒரு படம் சொல்லும் என்பார்கள். அப்படி ஒரு படம் இதோ-

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/gauravam%20gala%20170711/HFboard17711.jpg

சென்னை சாந்தி நிகழ்வுகளின் உணர்வுகளை தொடரும் பதிவுகளில் காண்க...

RAGHAVENDRA
18th July 2011, 04:57 AM
அன்பு சகோதரி சாரதா
தங்களின் பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றி. அனைத்தும் திலகத்திற்கே.
முரளி சார்,
அனைவரையும் குறிப்பிட்டு பாராட்டியமைக்கும் தகவல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இதே போல் பாராட்டுக்களைத்தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் அடியேனின் நன்றி.

டியர் பம்மலார்,
அசத்தல்-அருமை-அட்டகாசம்-- இவற்றிற்கெல்லாம் பொருள் தேட அகராதிகளை இனிமேல் தேட வேண்டாம். தங்களுடைய உழைப்பையே கூறுவது தான் பொருத்தம்.

தொடரும் பதிவுகளில் கௌரவம் நிகழ்வுகளைக் காணலாம்...

அன்புடன்

Sunil_M88
18th July 2011, 05:56 AM
wiki and other sources state that sivaji enacted bhagat singh, is this true?

groucho070
18th July 2011, 07:41 AM
Sunil, it was stage play within the movie, Rajapart Ranggathurai, where he plays a stage actor. It's a crucial scene in the movie, where....no I don't want to spoil it. Watch it and you will know.

sathya_1979
18th July 2011, 11:11 AM
RR - beautiful movie!

sathya_1979
18th July 2011, 11:12 AM
Where can I buy the original DVDs of NT? Apart from Raj Video Vision.

abkhlabhi
18th July 2011, 12:25 PM
சாந்தியில் 12 . 30 மணி காட்சிக்கு சென்ற பொது ஆச்ரியம், அதிசயம். 38 வருடங்களுக்கு முன் வந்த படம் "கெளரவம்". பலமுறை தொலை காட்சியிலும், dvd / cd ரூபத்தில் வந்த போதிலும், கிட்ட தட்ட முக்கால் வழி ரசிக பெருமக்கள் திரை அரங்கத்தில். அமைதியாக படம் பார்க்க முடிந்தது.

மீண்டும் 6 .45 மணி காட்சிக்கு சென்ற பொது, ரசிகர்களின் அலப்பறை. பாரிஸ்டர் வரும் காட்சி எல்லாம், ரசிகர்களின் அலப்பறை கேட்கவும் வேண்டுமா ? சரியாக விவரிக்க தெரியாததால் , முரளி, ராகவேந்திரா, பம்ம்ளார்யிடம் விட்டுவிடுகிறேன். நடிகர் திலகத்தின் தலை முடி முதல் கால் நகம் வரை எல்லாமே நடிக்கும் என்பார்கள். உதாரணம், முகதில் உணர்சிகளை நடிகர் திலகத்தை போல் வேறு எவரும் கொண்டுவர முடியாது. பெங்களூரில் இருந்து சென்னை வந்து, இரண்டு காட்சிகள் பார்த்து மீண்டும் பெங்களூர் திரும்பி (AC class ) ஆன செலவு, ஒரு சீன்கே நிகர் ஆகிவிட்டது. அந்த சீன் - மேஜர் இரண்டாம் முறையாக நடிகர் திலகத்தை (பாரிஸ்டர்) காலை பிடித்து காப்பாற்றுமாறு கேட்பார். அப்பொழுது , செந்தாமரை இட் இஸ் டூ லேட் சார் என்று சொல்ல, நடிகர் திலகம் வாயில் பைப்பை வைத்து கொண்டு, பாதி வாயின் முலம் புகையை வெளியேற்றி, இரண்டு கண்களின் கிழே உள்ள கண்ணங்களின் சதையை மட்டும் அசைக்கும் பொது, செலவு செய்த பணம் எல்லாம் இந்த ஒரு சீன்கே சரியாகி விட்டது.

படம் முடிந்து வெளியே வரும் பொது, சிலர் பேசியது. "இன்று ரசிகர்களுடன் பார்ப்பது ஒரு அனுபவம், மீண்டும் நாளை (18 ஆம் தேதி) வந்து படம் பார்க்க வேண்டும் - ஒவ்வொரு சீன் ரசித்து பார்க்க".

HUB நண்பர்களான , முரளி, ராகவேந்திரா, பம்மலார், ராதா, சேகர், பெங்களூரில் இருந்து வந்த ரசிகர்களையும் மற்றும் சில நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இல்லாததால், உரையாட முடியவில்லை. அடுத்த முறை இதற்காகவே நேரம் ஒதுக்க முயற்சி செய்கிறேன்.

pammalar
18th July 2011, 03:23 PM
கை கொடுத்த தெய்வம் 'ரகு'விற்கு 48வது ஜெயந்தி

[18.7.1964 - 18.7.2011]

அர்ச்சனைப் பூக்கள்

முதல் வெளியீட்டு விளம்பரங்கள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3910a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3911a.jpg


50வது நாள் : சுதேசமித்ரன் : 5.9.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3907a.jpg


100வது நாள் : தினத்தந்தி(மதுரை) : 25.10.1964
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3913a-1.jpg

[100வது நாள் சென்னைப் பதிப்பு விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் அவசியம் பதிவிடுகிறேன்.]

"கை கொடுத்த தெய்வம்" 1964-ம் ஆண்டின் வசூல் சாதனைக் காவியம்.

அன்புடன்,
பம்மலார்.

Mahesh_K
18th July 2011, 05:00 PM
ஒரு பழைய படத்துக்கு -டிக்கட் கட்டணம் ரூ. 80 என்று அதிகமாக வைக்கப்பட்டிருந்தாலும், ஞாயிறு மாலை காட்சி அரங்கம் நிறையும் என்பது முன்பே எதிர் பார்த்ததுதான்.

ஆனால் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே full ஆகி விட்டதும் பிளாக்கில் டிக்கட் 150 முதல் 200 விற்கப்பட்டதும் ஆச்சரியமே. என்ன இருந்தாலும் " ஒரு நாளைக்கு 10௦,000 ரூபாய்க்கு மேல பீஸ் வாங்கி ஊரெல்லாம் ரஜினிகாந்த் , ரஜினிகாந்துன்னு பேச வச்ச " வசூல் மன்னராச்சே நம்ம Barrister .

DVD யில் சௌகரியமாகப் பார்க்க வாய்ப்பிருந்தும் அதனை விடுத்து பல திரைக் கலைஞர்கள் நேரில் வருகை தந்திருந்தார்கள். நடிகர் திலகத்தின் தீவிர அபிமானியான ஒரு கலைஞர் தனது VIP அம்மா உட்பட ( 4 தலைமுறைகளைச் சேர்ந்த ) குடும்பத்துடன் வந்திருந்ததையும் அவர்கள் அனைவருமே படத்தை மிகவும் ரசித்துப் பார்த்ததையும் காண முடிந்தது.

டிவி , DVD இவற்றின் வீச்சையும் தாண்டி நல்ல பழைய படங்களுக்கு இன்னும் திரையரங்க மார்க்கெட் இருக்கிறது என்பதை இந்த படம் நிரூபித்துவிட்டது.

இனி வரப்போகும் தங்கப்பதக்கம் , எங்கள் தங்க ராஜா, வசந்த மாளிகை, கர்ணன் மற்றும் கட்டபொம்மன் படங்கள் இந்தக் கருத்தை உறுதி செய்து , Multiplex திரையரங்களில் பழைய படங்கள் திரையிடப்படும் காலத்தை உருவாகினால் மகிழ்ச்சியே.

படத்தை பற்றி என்ன சொல்ல ?

" அட்வகேட் ரங்கபாஷ்யம் அப்பாயின்டட் அஸ் ஹைகோர்ட் ஜட்ஜ் " என்ற செய்தி வாசிப்பை தொடர்ந்து வரும் குமுறலையா?

" என்ன போஸ்ட்மேன் வரவேண்டிய நேரத்துல பொலிஸ்மேன் வந்திருக்கேள்" என்று செந்தாமரையைப் பார்க்காமலே பேசும் மிதப்பையா?

" லுக் மைடியர் யெங் மேன்" என்று அதே காட்சியில் தோளைக் குலுக்கும் பாங்கையா?

" நான் கோர்டுக்கு போகும்போது புலி கூட குறுக்கே போகாது" என்ற வார்த்தைகளில் உள்ள கர்வத்தையா?

கோட்டைக் கேட்டு கண்ணன் வரும் காட்சியில் பைப்பை பிடித்துக்கொண்டு காலைக் குறுக்கே வைத்துக்கொண்டு மாடியின் மேல் நிற்கும் தோரணையையா?

'அது யாரால முடியும் பெரியப்பா?' என்று கேட்கும் கண்ணனிடம் ' என்னால முடியும்டா' என்று சொல்வதில் உள்ள தற்பெருமையையா?

" இன்னைக்கு ஜட்ஜ்மென்ட் டே" என்று சொல்லிவிட்டு பட்டன் போடாத முழுக்கை சட்டையின் பட்டையை விளக்கி மணிபார்க்கும் வேகத்தையா?

வெறுமனே மாடிப்படியில் அமர்ந்திருப்பது போன்ற காட்சியில் கூட கைத்தட்டல் வாங்குமளவுக்கு அமர்ந்திருக்கும் ஸ்டைலயையா?

எதைச் சொல்வது எதை விடுவது?

மொத்தத்தில் Barrister ஒரு One man army. படம் ஒரு one man show.

RAGHAVENDRA
18th July 2011, 06:10 PM
டியர் பம்மலார்,
கை கொடுத்த தெய்வம் என்று நேற்றைய அரங்கு நிறைவில் விநியோகஸ்தர் நடிகர் திலகத்தை உள்ளூர மகிழ்வுடன் நன்றி பாராட்டியிருப்பார் என்பதை உணர்த்தும் வண்ணம் பத்திரிகை விளம்பரங்களை பதிவிட்ட தங்களை எங்ஙனம் பாராட்டுவது.. சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை...

நேற்றைய நிகழ்வுகளை அழகாய் எடுத்துரைத்த பாலகிருஷ்ணன் மற்றும் மகேஷ் ஆகியோரின் பதிவுகள், நடிகர் திலகத்தின் தாக்கம் இல்லாத ரசிகர்களே இல்லை என்பதை நீரூபித்துள்ளன. பாராட்டுக்கள்...

நேற்றைய அரங்க காட்சிகள் சில இங்கே...

கொண்டாட்டங்கள் தனியாக பம்மலார் பதிவிடுவார் என எண்ணுகிறேன்.

எனக்கென தனியாக புகைப்படக் கருவி தந்துதவிய நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு இதய பூர்வமான நன்றிகள்.

இதோ படங்களின் அணி வகுப்பு. வர்ணனை தேவையில்லை என எண்ணுகிறேன்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/gauravam%20gala%20170711/banergarland.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/gauravam%20gala%20170711/introscene.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/gauravam%20gala%20170711/onstage03mezuguvathi.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/gauravam%20gala%20170711/onstage04mezuguvathi.jpg

தொடரும்

RAGHAVENDRA
18th July 2011, 06:13 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/gauravam%20gala%20170711/onstage06.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/gauravam%20gala%20170711/onstageclimax.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/gauravam%20gala%20170711/audience02.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/gauravam%20gala%20170711/audience01.jpg

தொடரும்

RAGHAVENDRA
18th July 2011, 06:19 PM
உணர்ச்சிப் பெருக்கில் பார்வையாளராக திருவாளர்கள் ஒய்.ஜி.மகேந்திரா, மற்றும் இயக்குநர் சேரன் .

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/gauravam%20gala%20170711/cheranygm.jpg

joe
18th July 2011, 07:16 PM
சேரன் :thumbsup: நீ நம்மாளுய்யா :clap:

rangan_08
18th July 2011, 08:44 PM
WoWWWW !!!!! What a great way to spend a Sunday evening !!! Just terrific......i was thrilled, excited and filled with myriad of emotions. As Saradha mam said, it was a dream come true for us.

To make it short, i would like to share Mahesh's sentiments.

The audience simply loved Barrister and almost ignored Kannan as if it was played by some other actor !!! That's the power of Nadigar Thilagam the one and only G I A N T of an actor.

Barrister says to Chella (paraphrasing) " Yaana keezha vizhundha eppadi irukkum theriyuma ? Adhaala ezhundirukkavey mudiyadhu.....adhathana inga ellarum edhirpakura....ivan eppada keezha vizhuvannuttu...Nadakkadhudee, nadakkadhu.......I can face anybody's challenge ". Well, he stood by that sentence. Now, in 2011, he took up this challenge with guts and proved that he is KING OF KINGS !!

I really feel proud to shamelessly admit that as i was watching one after another of my favourite scenes on big screen, where my beloved Barrister Roars, Laughs, Cries, Emotes.....I felt tears rolling down from my eyes.

Thanks to everyone who has made this happen. I am a very contended person now, as the CHANGE that we have been yearning for is there, right in front of us !!!!

LONG LIVE NADIGAR THILAGAM.

J.Radhakrishnan
18th July 2011, 10:38 PM
17.7.11 அன்று ஞாயிறு மாலை கெளரவம் திருவிழாவில் நம் ஹப் நண்பர்கள் திரு ராகவேந்தர், திரு முரளி, திரு பம்மலார், திரு பார்த்தசாரதி, திரு பாலா,திரு மகேஷ் திரு மோகன் (ரங்கன்) உடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது, நல்ல கூட்டம், அரங்கு நிறைந்து டிக்கெட் கிடைக்காமல் திரும்பியோர் பலர், பல வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படத்திற்கு இப்படி ஒரு வரவேற்ப்பு இருக்கிறதென்றால் அதுதான் நடிகர் திலகம்.

பாடல் காட்சிகளில் குறிப்பாக நீயும் நானுமா பாடலின் போது ரசிகர்கள் திரைக்கு வெகு அருகில் நின்று ஆட, அவர்களை கட்டு படுத்த போலீஸ் வரவேண்டி இருந்தது, வழக்கம் போல் திரு y.g மகேந்திரன் தனது குடும்பத்தோடு வந்திருந்தார், குறிப்பாக அவரின் தாயார் நடக்க இயலாத நிலையில் வீல் சேரில் வந்தது வியப்பை தந்தது,

Murali Srinivas
18th July 2011, 11:14 PM
Sathya,

Forget Raj video Vision. Their quality is not good. Visit AVM Sound Zone at TTK Road. When you come from Alwarpet, it comes after Narada Gana Sabha on your left. There you can find DVDs from all vendors. You can get a variety of NT movies with a good quality print.

Makesh and Mohan,

Great write ups.

Bala, nice attempt in Tamil. Please continue.

Regards

sathya_1979
18th July 2011, 11:28 PM
Sathya,

Forget Raj video Vision. Their quality is not good. Visit AVM Sound Zone at TTK Road. When you come from Alwarpet, it comes after Narada Gana Sabha on your left. There you can find DVDs from all vendors. You can get a variety of NT movies with a good quality print.

Makesh and Mohan,

Great write ups.

Bala, nice attempt in Tamil. Please continue.

Regards
Thanks Murali Sir, yes I had visited their store, will check it out over the weekend. Thanks again

Sunil_M88
19th July 2011, 02:55 AM
Sunil, it was stage play within the movie, Rajapart Ranggathurai, where he plays a stage actor. It's a crucial scene in the movie, where....no I don't want to spoil it. Watch it and you will know.

hehe cheers, I would love to know if there is a screen shot or something in this attire.

pammalar
19th July 2011, 03:32 AM
பக்கம் பக்கமாக கதைகளை சொல்லி புரிய வைக்க முடியாத தெரிய வைக்க முடியாத விஷயங்களை, ஒரு படம் சொல்லும் என்பார்கள். அப்படி ஒரு படம் இதோ-

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/gauravam%20gala%20170711/HFboard17711.jpg


Dear Raghavendran Sir,

Cent percent true ! A PICTURE IS WORTH MORE THAN A THOUSAND WORDS !!

AN NT PIC IS WORTH MORE THAN 'N' NUMBER OF PAGES !!!

அகமும் புறமும் உண்மை
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3963a.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th July 2011, 03:47 AM
hehe cheers, I would love to know if there is a screen shot or something in this attire.

Dear Sunil_M88,

Nadigar Thilagam as National Thilagam [Bhagat Singh] in RAJAPART RANGADURAI
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/BhagatSingh1.jpg

Warm Wishes & Regards,
Pammalar.