PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 8



Pages : 1 2 3 [4] 5 6 7 8

mr_karthik
30th July 2011, 06:21 PM
பம்மலார் சார் மற்றும் ராகவேந்தர் சார்,

ஆரம்பமாகிவிட்டது அடுத்த அட்டகாசம். சாதாரண படங்களுக்கே விளம்பர அணிவகுப்பைத்தந்து அசத்துவீர்கள். திருவிளையாடலோ சாதனைப்படம், வெள்ளிவிழாப்படம். கேட்கணுமா?. ஒரே அதகளம்தான் போங்க.

உண்மையில் நினைக்க நினைக்க ஆச்சரியமாக வே இருக்கிறது. நமக்கு நினைவுதெரிந்த நாள் முதல், இந்த விளம்பரங்களை தினத்தாள்களில் வெளியாகும்போது பார்த்ததோடு சரி. ஆனால் அவற்றையெல்லாம் அப்போது பத்திரப்படுத்தவில்லையே என்று பலமுறை வருந்தியதுண்டு. இப்படி ஒரு கனினி யுகம் வெருமென்றோ, அதிலும் கூட கிடைத்தற்கரிய இவ்விளம்பரங்களைப் பத்திரப்படுத்தி வைத்து நீங்களெல்லாம் அவற்றை மீண்டும் காண்ச்செய்வீர்கள் என்றோ கனவிலும் நினைத்ததில்லை.

இவற்றை இங்கே பதிவேற்றம் செய்வதில் எவ்வளவு சிரமங்கள், எத்தனை ஸ்டெப்கள் இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இருந்தபோதிலும், நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் சேவைக்கு முன்னால் இந்த சிரமங்களெல்லாம் துச்சம் என்று எண்ணி செயல்படும் உங்களைப்பாராட்ட வார்த்தைகளே இல்லை. இது வெறும் சம்பிரதாயச்சொல் அல்ல.

அதிலும் 'துளி விஷம்' வெளிவந்த காலத்திலெல்லாம் இத்திரியில் ப்ங்கேற்கும் நாம் யாருமே பிறந்திருக்கவில்லை. அப்போது வெளியான பத்திரிகை விளம்பரங்களை இப்போது பார்க்கும் வாய்ப்புக் கிடைப்பது என்பது உண்மையிலேயே ஒரு த்ரில்லிங்கான அனுபவம்.

இதுவரை ஒரு சிலரிடத்தில் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வந்த இந்த ஆவணங்கள், இப்போது எண்ணற்ற நடிகர்திலகத்தின் ரசிகர்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரவர்களும் கணினி, சிடி, ப்ளாஷ் மெமோரி என பல வகையிலும் பத்திரப்படுத்தி வருகின்றனர். இந்தப்பெருமைகள் அனைத்தும் உங்களுக்கே சொந்தம்.

ஜூலை இறுதி வாரத்திலேயே நடிகர்திலகம் - ஏ.பி.நாகராஜன் கூட்டணியில் மூன்று முத்தான படங்கள் வெளிவந்திருப்பது அபாரம். தேதிவாரியாக நாம் கொண்டாடுவதால் வருட வாரியாக உல்டாவாகி விட்டது என்பது இன்னொரு சுவாரஸ்யம். முதலில் 1968, பின்னர் 1967, இப்போது 1965.

உங்கள் சேவையைப்பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் நமதி திரிக்கு விஜயம் செய்யும் நேரம் 'இன்றைக்கு நடிகர்திலகத்தின் எந்தப்படத்தின் வெளியீட்டு நாள்?' என்ற ஆவலுடன் திறக்கின்றோம். நீங்களும் எங்களை ஏமாற்றாமல் அள்ளி அள்ளி வழங்குகிறீர்கள்.

இந்தச்சேவைக்காக உலகெங்கிலும் உள்ள நடிகர்திலகத்தின் ரசிகர்கள் உங்களை வாழ்த்தியவண்ணம் இருப்பார்கள்.

RAGHAVENDRA
30th July 2011, 06:23 PM
Dear Mohan,
Thank you for the complements.


While looking at the amazing pace in which our NT thread is moving on, i felt this.....

Majority of contribution for most of the threads in this hub comes from youngsters & tech savvy's whereas in our case, majority of contribution comes from seniors, which I'm sure is the pulse of this threads success. Now, that itself is an achievement in its own order, isn't it ??

Partly true. But I personally feel, it is because of youngsters like Saradha, Karthik, Murali Sriniivas, Parthasarathy, KrishnaG, Sathish, yourself, Balakrishnan, and ABOVE ALL THE ONE AND ONLY PAMMAL SWAMINATHAN, and many others, that this thread is going great heights. That is the strength of NT. Some of the names mentioned here might be old in their age but they find place in youngsters as they are young in their heart and passion for NT.

Dear Balakrishnan,
Kindly can you try to provide the translation for the telugu text?

Raghavendran.

RAGHAVENDRA
30th July 2011, 06:36 PM
டியர் கார்த்திக
தங்களுடைய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள்.

தங்களுடைய பதிவுக்கு சற்று நீண்ட துணைப் பதிவினைத் தர விழைகின்றேன்.

அதற்கு முன்னர் நாம் அனைவரும் ஒரு சேர ஓ போட வேண்டியது ஸ்வாமிக்குத் தான். அவருடைய இத்தனை இளம் வயதில் அவர் இந்த அளவிற்கு ஆவணங்களை சேமித்து வைத்திருக்கிறார் என்றால் முதலில் அவர் தான் நடிகர் திலகத்தின் தீவிரமான ரசிகர் என்று நான் எண்ணுகிறேன், அதே போல் அவரைப் போல் ரசிகரை அடைய நடிகர் திலகம் பெரும் பேறு பெற்றுள்ளார் என்றால் அது மிகையில்லை. குறிப்பாக நடிகர் திலகத்தின் ரசிகர்களைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் தம் சொந்தப் பொருள் உடல் ஆவி அனைத்தையும் அவருக்கே அர்ப்பணித்து விட்டனர். அதற்கு முழு உதாரணம் ஸ்வாமி.

ஆவணங்களைப் பொறுத்த மட்டில் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. அதுவும் எங்களைப் போன்ற பிராயத்தினர் அந்தக் காலங்களில் மிகுந்த சிரமத்திற்கிடையில் தான் திரைப் படங்களைக் காணவே அனுமதி பெறுவோம். சினிமாவைப் பற்றிப் பேசினாலே ஏச்சும் பேச்சும் பலர் வீட்டில் கண்டிருப்பர். அப்படிப் பட்ட ஒரு கால கட்டத்தில் அதுவும் நாங்களெல்லாம் சராசரிக்கு உட்பட்ட பொருளாதார அடிப்படையில் அமைந்த வகுப்பினர். அதனால் திரைப்படம் பார்க்கவே பொருளாதாரத்தில் சிக்கல். கிடைக்கும் சில்லரைகளை சேர்த்து வைத்து அதை நடிகர் திலகம் படம் பார்க்க வைத்திருப்போம். நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ, அவர் படம் பார்க்க வேண்டும் . சில சமயம் சில்லரை மிச்சமிருந்தால் பாட்டு புத்தகம் வாங்கி விடுவோ்ம். செய்தித் தாள் பருவ இதழ் சேமிப்பு என்பது மிகுந்த சிரமம். தேவைப் படும் தாளை மட்டும் தனியே வெட்டி எடுத்து வைக்க வேண்டும். அவ்வாறு கஷ்டப் பட்டு சேர்த்தது நிறைய. ஆனால் ஒரு கால கட்டத்தில் இடப் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களினால் கணிசமான ஆவணங்களை இழந்தேன். அப்படியும் விடாப்பிடியாக சேர்த்து வைத்தவை ஓரளவு. அவை இன்று நமக்கு உதவுகின்றன. இன்னோரு விஷயம், என் பிராயத்தினர் பெரும் பாலானோர், தாங்கள் அப்படி சேர்த்து வைத்த ஆவணங்களை, யாருக்கும் தர மாட்டார்கள், நான் உட்பட. அன்றைய கால கட்டத்தில் அது வருத்தத்திற்குரிய விஷயமாக இருந்தாலும் இன்று அவை வெளியுலகத்தினைப் பார்க்க உதவுகின்றன என்பதை எண்ணும் போது இன்றைக்கு பெருமையாக உள்ளது. ஒரு வேளை நடிகர் திலகம் மறைவுக்குப் பிறகு பல மடங்கு பெரியதாக விஸ்வரூபம் எடுப்பார் என்பதற்கான சான்றாக இவை திகழ்கின்றன என்பதும் ஓர் எண்ணம்.

இன்னும் நிறைய என்னிடம் இல்லையே என்பதே என் வருத்தம்.

மற்றபடி இருக்கும் ஆவணங்களை நம் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியே.

நன்றியுடன்

mr_karthik
30th July 2011, 07:27 PM
சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்,
சங்கை அறுந்துண்டு வாழ்வோம், உம்போல் இரந்துண்டு வாழ்வதில்லை--

இந்தப் பாத்திரத்திற்கு வேறு நடிகரை அழைத்திருந்தாராம் ஏ.பி.என். அவர்கள். அந்த நடிகர் நடிகர் திலகத்தின் நாடகக் குழு உறுப்பினர். ஆனால் நடிகர் திலகம் இப்பாத்திரத்தின் கனத்தை உணர்ந்து இயக்குநரிடம் விடுத்த ஆலோசனை - ஐயா இப்பாத்திரத்தை தாங்களே ஏற்று நடிக்க வேண்டும். இயக்குநருக்கோ தயக்கம். இருந்தாலும் தயக்கத்தை உதறிவிட்டு தானே ஏற்று நடிக்க முன் வந்தார்.

கந்தன் கருணை படத்தில் நக்கீரராக நடிக்க வெண்கலக்குரலோன் சீர்காழி கோவிந்தராஜனை ஏ.பி.என். அழைத்தபோது, சீர்காழியார் தயங்கினாராம்.

"ஐயா அது திருவிளையாடல் படத்தில் நீங்கள் ஏற்று நடித்த் சிறப்புச்செய்த பாத்திரமாயிற்றே, அதில் நான் போய் எப்படி நடிக்க முடியும்?" என்று சீர்காழி கேட்டதும், ஏ.பி.என். "திருவிளையாடலில் வந்தது பேசும் நக்கீரன். அதனால் நான் நடித்தேன். கந்தன் கருணையில் வரவிருப்பது பாடும் நக்கீரன். அதனால் நீங்கள் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்" என்று சொல்லி சம்மதிக்க வைத்தாராம்.

தன் தந்தையைப்பற்றிப்பேசும்போது ஒரு முறை சீர்காழி சிவ சிதம்பரம் இத்தகவலைச் சொன்னார்.

joe
30th July 2011, 07:55 PM
‘Karnan' set to come back, digitally dazzling (http://www.thehindu.com/arts/cinema/article2306392.ece?homepage=true)

pammalar
31st July 2011, 12:29 AM
மிக்க நன்றி, சந்திரசேகரன் சார்.

புகழுரைக்கு பணிவான நன்றி, பாலா சார்.

Thanks, sankara1970.

டியர் ரங்கன் சார், பாராட்டுக்கு நன்றி, 'மயிலை ஜோதி'யில் கூடுவோம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
31st July 2011, 04:43 AM
டியர் ராகவேந்திரன் சார்,

ரசிக முதல்வராகிய தாங்கள், தொடர்ந்து அளித்து வரும் உச்சமான பாராட்டுதல்களுக்கு, எனது இதயத்தின் அடித்தளத்திலிருந்து ஆத்மார்த்தமான நன்றிகளை மிகுந்த பணிவோடு தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'கல்கி' வார இதழின் "திருவிளையாடல்" விமர்சனம் அருமை என்றால் தாங்கள் தொகுத்துள்ள ஆகஸ்ட் பட்டியல் அற்புதம்.

அதில் சில திருத்தங்கள்:

- "குங்குமம்" வெளியான தேதி : 2.8.1963.

- "மக்கள ராஜ்யா" கன்னடத் திரைக்காவியம்.

- சென்னை 'மிட்லண்ட்'டில் மட்டும் 9.8.1969 அன்று வெளியான "நிறைகுடம்", சென்னையின் மற்ற திரையரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் ஒரு நாள் முன்னர் [8.8.1969] வெளியானது. 1.5.1969 அன்று சென்னை அண்ணா சாலையில் 'மிட்லண்ட்'டில் வெளியான மக்கள் திலகத்தின் "அடிமைப் பெண்" ணிற்கு 8.8.1969 அன்று 100வது தினம். எனவே, "நிறைகுடம்" 'மிட்லண்ட்'டில் மட்டும் 9.8.1969 அன்று வெளியானது.

- "அக்னி புத்ருடு" தெலுங்குத் திரைப்படம் வெளியான தேதி : 14.8.1987.

- "விஸ்வநாத நாயக்குடு" மே மாதம் வெளியான திரைப்படம்.

- "மூன்று தெய்வங்கள்" வெளியான தினம் : 14.8.1971

- "ஒரு யாத்ரா மொழி" வெளியானது ஆகஸ்ட் மாதமா? [முரளி சார், உறுதி செய்யவும்.]

"திருவிளையாடல்" திரைக்காவியத்தின் பாடல்கள், முக்கிய காட்சிகளின் வீடியோ அணிவகுப்பு அட்டகாசம் ! ஒவ்வொன்றுக்கும் தாங்கள் அளித்துள்ள முன்னுரை மிக அருமை ! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
31st July 2011, 04:57 AM
டியர் mr_karthik,

பாராட்டுக்கு நன்றி !

'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பதே நமது தாரக மந்திரம் !

"கந்தன் கருணை" நக்கீரர் 'இசை இமயம்' சீர்காழியார் பற்றிய தகவல் அறிய வேண்டிய அரிய ஒன்று !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
31st July 2011, 05:01 AM
இன்று 30.7.2011 சனிக்கிழமை முதல் நெல்லை 'சென்ட்ரல்' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, ஸ்டைல் சக்கரவர்த்தியின் "அவன் தான் மனிதன்".

இனிக்கும் இத்தகவலை வழங்கிய அன்புள்ளங்கள் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும், திரு.சிவாஜி எஸ்.முத்துக்குமார் அவர்களுக்கும் ஸ்வீட் தேங்க்ஸ் !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
31st July 2011, 06:37 AM
டியர் பம்மலார்,
புள்ளி விவரங்களை அள்ளித் தருவது மட்டுமன்றி நெஞ்சங்களைக் கிள்ளியும் விட்டு எதிரிகளைத் தள்ளி நிற்க வைக்கும் தங்களின் பணி தலையாயதே என்பதே என் கருத்து. எனவே தாங்களே ரசிகர் திலகம் என்பது தான் உண்மை. தாங்கள் அளிக்கும் அனைத்து விவரங்களும் மிகவும் பயனுள்ளதாயுள்ளன. தாங்கள் சுட்டிக் காட்டிய தவறுகளை என்னுடைய பதிவில் சரி செய்து விட்டேன். மிக்க நன்றி. யாத்ரா மொழி திரைப்படம் பற்றி எனக்கும் ஐயம் உள்ளது. தற்போதைக்கு நாம் ஆகஸ்ட் என்றே வைத்துக் கொள்வோம். சரியான ஆதாரம் கிடைத்த உடன் சரி செய்து கொள்ளலாம். நிறைகுடம் தாங்கள் கூறியது சரியே. சென்னையில் நாங்கள் 9ம் தேதி முதல் நாள் காட்சிக்குப் போகும் போதே வெளியூர் ரசிகர்களிடமிருந்து தகவல் .. நடிகர் திலகம் செம்மை க்யூட் அண்ட் ஸ்டைல் என்று... குறிப்பாக தேவா பாடல் காட்சியில் அவர் அட்டகாசமாக தோன்றும் போது அரங்கில் ஆரவாரமும் வரவேற்பும் அளப்பரையும் விண்ணதிர வைத்தன. அப்படம் வெளியான போது மிக அதிக வரவேற்பைப் பெற்றது மதுரையில் தான். சாந்தியில் நாங்கள் கலந்துரையாடும் போது அனைத்து ஊர்களிலிருந்தும் எப்படியாவது யார் மூலமாவது தகவல்கள் கிடைத்து விடும். அப்படி வந்ததன் அடிப்படையில் மதுரையில் அப்படம் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றது என்றும் புதிய ரசிகர்களை, குறிப்பாக நிறைய கல்லூரி மாணவிகளை, நிறைகுடம் படத்திலிருந்து தான் நடிகர் திலகம் பெற்றார் என்பதும் எங்களுக்குக் கிடைத்த தகவல். பின்னாளில் 1971-72 கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் புகழ் உச்சத்தில் ஏறக் காரணமாயிருந்தது நிறைகுடம் படம். இத்தனைக்கும் அப்படம் மிகப் பெரிய அம்சங்கள் ஏதும் கொள்ளவில்லை, தேவா பாடலைத் தவிர.

நன்றி
அன்புடன்

RAGHAVENDRA
31st July 2011, 06:38 AM
ஸ்டைல் சக்கரவர்த்தியின் அவன் தான் மனிதன் படத்தைக் காண விருக்கும் நெல்லை ரசிகர்களுக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். தகவலைத் தந்த ராம ஜெயம், முத்துக் குமார், மற்றும் பம்மலாருக்கு நன்றி.
அன்புடன்

parthasarathy
31st July 2011, 10:11 AM
இந்த வரிகள் மேலே காணும் தினமணி கதிர் விமர்சனத்தில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாராட்டை அவர் பெற்றது தனது 16வது திரைப்படத்திலேயே என்பது குறிப்பிடத் தக்கது.

கற்பக மன்னர் சூரியகாந்தனாக நடிகர் திலகமும் நாக நாட்டு சேனாதிபதி சந்திரனாக கே.ஆர்.ராமசாமியும் தர்பாரில் ஆற்றும் சொற்போர், இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு வார்த்தையும் பொருத்தமாக அமைந்துள்ளது. சில வரிகள் இன்றைய சூழ்நிலையை தத்ரூபமாக பிரதிபலிக்கின்றன. இக்காட்சியினைக் காணும் போது தாங்களே அதனை உணர்வீர்கள். தங்களுக்காக அக்காட்சியின் இணைப்பு.

கற்பக நாட்டு மன்னன் - நாக நாட்டு சேனாதிபதி சொற்போர் (http://www.mediafire.com/download.php?xkfvx4ffvgpw7pl)

இக்காட்சி கோப்பாகத் தரப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

அன்புடன்

அன்புள்ள திரு ராகவேந்தர் அவர்களே,

தாங்களும், பம்மலாரும் இந்தத் திரியின் வேகத்தையும் சிறப்பையும் சிகரத்திற்கே இட்டுச் சென்று விட்டீர்கள்.

எழுபதுகளின் இறுதியில், பொம்மை இதழில், காலஞ்சென்ற a.s.a. சாமி அவர்கள் அவருடைய படங்கள் பற்றி நீண்ட கட்டுரையை தொடராக எழுதி வந்த போது, "துளி விஷம்" படம் பற்றி ஒரு அத்தியாயம் எழுதியதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம். சிவாஜி கணேசன் அவர்களின் அனல் பறக்கும் வசன நடிப்புக்குப் பெயர் போன படம். இந்தப் படத்தில், தர்பாரில், அவருக்கும் கே.ஆர். ராமசாமி அவர்களுக்கும் இடையே நடக்கும் வசனப்போர் ஒன்று இடம் பெறும். அந்தக் காட்சி அவ்வளவு அற்புதமாக இருக்கும். நடிகர் திலகம் மற்றும் ராமசாமி அவர்களும் நடத்திய வசனப்போர், மயிர்க்கூச்செரியும்படி அமைந்து, ரசிகர்கள் அந்தக் காட்சியில் தங்களை மறந்து, அதற்கு முன் நடந்த கதையை மறந்து, அதற்குப்பின் நடக்கும் கதையில், மனதை செலுத்தமுடியாமல் போனது. அதனாலேயே, அந்தப் படம் பெரிய வெற்றியை அடைய முடியாமல் போனது என்று எழுதியிருந்தார். என் தந்தையும் இந்தப் படத்தைப் பற்றிப் பெரிதாக சிலாகித்துச் சொல்லுவார். (அவர் mgr ரசிகர் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.).
நினைவு கூர வைத்ததற்கு நன்றி.

1954 - நடிகர் திலகத்தின் திரையுலக வாழ்க்கையில், மிக மிக முக்கியமான வருடம். இந்த வருடத்தில் தான் அவர் எத்தனை அற்புதமான படங்களில், வித்தியாசமான வேடங்களில் அற்புதமாக நடித்தார்! மனோகரா, இல்லற ஜோதி, அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, துளி விஷம், கூண்டுக்கிளி, தூக்குத் தூக்கி மற்றும் எதிர்பாராதது. அனைவரும் எதிர்பார்த்தது போல், அவரே அந்த வருடத்தின் சிறந்த நடிகர் விருதைத் தட்டிச் சென்றார். எல்லோரும் அவர் "மனோகரா" படத்திற்குத் தான் விருது வாங்குவார் என்று நினைத்த போது, மிகச் சரியாக, விருதுக் கமிட்டியினர், "தூக்குத் தூக்கி" படத்திற்குக் கொடுத்தனர். அதில்தான், அவருடைய நடிப்பு அனைத்து அம்சங்களிலும் அற்புதமாகப் பரிமளிக்க வழி வகுத்ததால்!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

mr_karthik
31st July 2011, 01:30 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தங்களின் மேலான விளக்கத்துக்கு நன்றி. 'யாம் பெற்ற இன்பம்' என்று தன்னடக்கத்தோடு ஒரே வரியில் நீங்கள் முடித்துக்கொண்டாலும் உங்கள் சேவை மகத்தானது.

ஒருபடம் 100 நாட்களைக்கடந்து ஓடியது என்பதற்கு செய்தித்தாள் விளமபரங்களைப்போல் ஆதாரங்கள் வேறில்லை.

முன்பு நமது முரளி சீனிவாஸ் அவர்கள் நடிகர்திலகத்தின் சாதனைகளைத் தொடராக எழுதியபோது, 'சும்மா இஷ்ட்டத்துக்கு அளக்கிறீர்களே இதற்கெல்லாம் ஆதாரம் உண்டா' என்று சிலர் கேள்வியெழுப்பினார்கள். அந்த கேலிகளை முறியடிக்கத்தான் இப்போது திகட்ட திகட்ட ஆதாரங்களை வழங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.

இம்மாதம் (ஜூலை) 3-ம் தேதி துவங்கி, இதுவரை எத்தனை படங்களின் '100-வது நாள்' விளம்பரங்கள், அவை ஓடிய தியேட்டர் பெயர்களுடன் அணிவகுத்து வந்து விட்டன....

சவாலே சமாளி
தெய்வ மகன்
சிவந்த மண்
எங்கள் தங்க ராஜா
கை கொடுத்த தெய்வம்
கௌரவம்
அந்தமான் காதலி
தில்லானா மோகனாம்பாள்
திருவிளையாடல் (வெள்ளி விழா)

இவற்றோடு கூடவே அன்பு, துளிவிஷம், குழந்தைகள் கண்ட குடியரசு, தேனும் பாலும், திருவருட்செல்வர், தர்மம் எங்கே போன்ற படங்களின் வெளியீட்டு விளம்பரங்கள். ரொம்ப ரொம்ப அற்புதம்.

mr_karthik
31st July 2011, 02:19 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

தங்களின் மேலான விளக்கத்துக்கு நன்றி.

இங்கும் அதே நிலைதான். நானும் லோயர் மிடில் கிளாஸ்லிருந்து வந்தவன்தான். அப்போதெல்லாம் தினமும் தினத்தந்தி, தினகரன் செய்தித்தாள்களை கார்ப்பரேஷன் லைப்ரரியில்தான் படிக்க முடியும். பேசும் படம், பொம்மை, பிலிமாலயா பத்திரிகைகளை உடனுக்குடன் சுடச்சுட படிக்க முடியாது. மாநகராட்சி நூலகங்களில் அவற்றை வாங்க மாட்டார்கள். யாராவது பணக்கார மாணவர்கள் கொண்டுவந்தால் ஓசியில் படிப்பதுதான். சொந்தமாக வாங்கவேண்டுமென்றால் இரண்டு மாதங்கள் கழித்து பழைய பேப்பர் கடைகளுக்கு வரும்போதுதான் வாங்கிப்படிக்க முடியும். ஒரிஜினலாக 90 பைசா விலையுள்ள 'பொம்மை' அங்கு 25 பைசாவுக்குக் கிடைக்கும்.

இதற்காக நான் தொடர்ந்து சென்னை த்ம்புச்செட்டித்தெரு, பவளக்காரத்தெரு சந்திப்பிலுள்ள பழைய பேப்பர் கடையில்தான் வாங்குவது வழக்கம். நான் தொடர்ந்து பேசும் படம், பொம்மை இதழ்களையே வாங்குவதைக்கண்ட கடைக்காரர் திரு ராமசாமி, இம்மாதிரி புத்தகங்கள் வரும்போது அவற்றை வெளியில் தொங்க விடாமல் எனக்காக தனியே எடுத்து வைத்து விடுவார்.

படம் பார்க்கச்செல்லும்போதும் அப்படித்தான். கிரௌன் தியேட்டரில் 1.25 டிக்கட் ஃபுல் ஆகிவிட்டால், அதற்கடுத்த 1.66 கட்டணத்தில் போக காசு பத்தாது. திரும்பி வந்து விட்டு, அடுத்த காட்சி அல்லது அடுத்த நாள் மீண்டும் 1.25 கியூவில் போய் நிற்பது வழக்கம். ஆனால் எப்படியேனும் நடிகர்திலகத்தின் படம் மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவது வழக்கம். நான் நன்றாகப்படித்து நல்ல மார்க்குகள் எடுத்து பாஸ் பண்ணியதற்கும் மறைமுகமாக நடிகர்திலகம் காரணம் எனலாம்.

அதாவது நான் நிறைய சினிமா பார்ப்பதை வீட்டில் பெற்றோர் கண்டிக்காமல், தடுக்காமல் இருக்க வேண்டுமானால் படிப்பில் நல்லமாதிரியாக இருக்க வேண்டும். மார்க் ஷீட்டில் நல்ல மார்க்குகளைப் பார்த்து விட்டால் மற்ற குறைகள் பெரிதாகத் தோன்றாது என்று கணக்குப்போட்டேன். அதுபோலவே நடந்தது. நன்றாகப்படித்து தொடர்ந்து முதல் ஐந்து ரேங்குகளுக்குள் வந்துகொண்டிருந்ததால், 'சினிமா பார்த்தாலும் பையன் படிப்பில் சோடை போகலை. அதான் நல்ல மார்க் எடுக்கிறான்ல அதுபோதும், மற்றபடி எப்படியும் போகட்டும்' என்று விட்டுவிட்டார்கள்.

பின்னர் கையில் ஓரளவு காசு புழங்கத் துவங்கியபிறகுதான், பஸ் ஏறி மவுண்ட் ரோடு வந்து ரசிகர்களின் தாய் வீடான 'சாந்தி ஜோதி'யில் சங்கமமாகத்துவங்கினேன். பின்னர் நடந்தவற்றை அவ்வப்போது இங்கே சொல்லியிருக்கிறேன். இனிமேலும் சொல்லிக்கொண்டிருப்பேன்.

Murali Srinivas
31st July 2011, 04:01 PM
சுவாமி/ராகவேந்தர் சார்,

ஒரு யாத்ரா மொழி 1997 ஜூலை இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியானதாக நினைவு. ஒரு யாத்ரா மொழி திரைப்படத்தை பொறுத்தவரை முதலில் வேறு கதையை படமாக்குவதாக இருந்தது. 1995-ல் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பும் நடைபெற்றது. நடிகர் திலகம் தந்தையாகவும் மோகன்லால் மகனாகவும் நடிக்க, தந்தை கதாபாத்திரம் ஒரு நோயினால் தாக்கப்பட, அது குணமாக கூடிய வாய்ப்பே இல்லாத சூழ்நிலையில் தந்தை மிகுந்த உடல் வேதனையை அனுபவிக்க, கருணை கொலை என்ற தீர்வு மகன் முன்னால் வைக்கப்பட, தந்தை மீது உயிரையே வைத்திருக்க கூடிய மகன் அனுபவிக்க கூடிய மன வேதனையை மையமாக கொண்ட படமாக உருவாக இருந்த நேரத்தில் இப்படி ஒரு ஹெவி சப்ஜெக்ட்-ஐ ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்ததன் பேரில் அந்த கதை ட்ராப் செய்யப்பட்டது.

அதற்கு பதிலாக பிரியதர்சன் எழுதிய இந்த கதை தேர்வு செய்யப்பட்டு அதை பிரதாப் போத்தன் இயக்கினார். 1996 ஜனவரியில் பொள்ளாச்சி பகுதியில் வைத்து படப்பிடிப்பு தொடங்கிய இந்த படம் தயாரிப்பாளர் வி.பி.கே.மேனன் அவர்கள் [இவர் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருப்பார். contractor ஆக வரும் நடிகர் திலகத்திடம் தனது ஆட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என தகராறு செய்து அடி வாங்கி கொண்டு போகும் யூனியன் தலைவராக வருவார்] சற்று பொருளாதார சிரம தசையில் இருந்ததால் படப்பிடிப்பு இடை இடையில் நின்று போய் மீண்டும் தொடங்கி நடைபெற்றது. உடல் நலம் ஒத்துழைக்காத அந்த காலக் கட்டத்திலும் கூட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப் போகிறோம் என்று தகவல் சொல்லியவுடன் உடனே வந்து நடிகர் திலகம் நடித்துக் கொடுத்ததை இப்போதும் மேனனும் லாலும் நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள். [மாப்பிளை, நீங்க பிஸி ஆர்டிஸ்ட். உங்களுக்கு கால்ஷீட் கிளாஷ் வந்துடக் கூடாது. நான் கரெக்டாக வந்திர்றேன் என்று லாலிடம் சொல்வாரம் நடிகர் திலகம்].

இன்னொரு குறிப்பிட்ட தக்க விஷயம் நடிகர் திலகத்தின் மிகப் பெரிய ரசிகர் நடிகர் திலகன் அவர்கள். தன்மானத்தை பெரிதாக மதிக்கும் திலகன், நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்து விட வேண்டும் என்பதற்காக ஒரே ஒரே காட்சி என்ற போதிலும் தானே வலிய சென்று தயாரிப்பாளரிடம் பேசி இந்த படத்தில் நடித்ததை இப்போதும் பெருமையுடன் சொல்வார். அது போன்றே நெடுமுடி வேணு அவர்களும் இந்த படத்தில் நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்ததை பற்றி பேட்டி கொடுத்திருந்தார்.

இனி மீண்டும் ரிலீஸ் தேதிக்கு வருவோம். [அப்போது நான் கேரளத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தேன்] அந்த வருடம் ஓணம் பண்டிகை செப்டம்பர் மாதம் வந்ததாக நினைவு. அந்த நேரத்தில் மோகன்லாலின் மற்றொரு படமான சந்திரலேகா வெளியாவதாக இருந்தது. மம்மூட்டி நடித்த களியூஞ்சால் [விளையாட்டு ஊஞ்சல் என்று தமிழில் மேலோட்டமாக சொல்லலாம்] மற்றும் ஜெயராம், சுரேஷ் கோபி போன்றவர்களின் படங்களும் வெளியாவதாக இருந்ததால் திரை அரங்குகள் கிடைப்பது கடினம் என்பதால் அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே திரையிடப்பட்டது இந்தப் படம். விளம்பரமின்றி, பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி வெளியான இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றது.

இந்தப் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதுதான் மலையாள திரைப்பட உலகம் சார்பில் நடிகர் திலகத்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டதற்கு ஒரு பெரிய பாராட்டு விழா அதே ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி [24-08-1997] அன்று திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் மைதானத்தில் நடைபெற்றது. மலையாள திரையுலகமே திரண்டு வந்து சிறப்பித்த விழா அது.[தமிழ் திரையுலகமோ அன்றைய தமிழக அரசோ செய்ய தவறியதை அவர்கள் அழகாய் செய்தார்கள்].

அன்புடன்

goldstar
31st July 2011, 07:05 PM
இன்று 30.7.2011 சனிக்கிழமை முதல் நெல்லை 'சென்ட்ரல்' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, ஸ்டைல் சக்கரவர்த்தியின் "அவன் தான் மனிதன்".

இனிக்கும் இத்தகவலை வழங்கிய அன்புள்ளங்கள் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும், திரு.சிவாஜி எஸ்.முத்துக்குமார் அவர்களுக்கும் ஸ்வீட் தேங்க்ஸ் !

அன்புடன்,
பம்மலார்.

Thanks Mr. Pammalar, is there any chance of getting Avan Than Manithan Sunday alappari photos?

Cheers,
Sathish

J.Radhakrishnan
31st July 2011, 10:14 PM
Message Deleted

pammalar
1st August 2011, 05:34 AM
டியர் ராகவேந்திரன் சார், மனமார்ந்த நன்றி !

டியர் பார்த்தசாரதி சார், பாராட்டுக்கும் பதிவிற்கும் நன்றி !

டியர் mr_karthik, நெஞ்சார்ந்த நன்றி !

டியர் முரளி சார், விளக்கமான பதிவிற்கும் அதில் பின்னிப் பிணைந்துள்ள அபூர்வ தகவல்களுக்கும் கனிவான நன்றி !

Dear goldstar Satish, Nellai Alapparai will arrive shortly in our thread.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st August 2011, 06:22 AM
சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்"

[31.7.1965 - 31.7.2011] : 47வது ஆராதனை தினம்

லீலா வினோதங்கள் விரிந்து நிறைகின்றன...

வெண்திரை : ஜூன் 1965 : அட்டைப்படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4237a.jpg
[தனது தொடக்க இதழான 'ஜூன் 1965' இதழின் அட்டையில், "திருவிளையாடல்" திரைக்காவியத்தினுடைய புகைப்படத்தை வெளியிட்டு முதல் இதழிலேயே பெருமை தேடிக் கொண்டது 'வெண்திரை' சினிமா மாத இதழ்]


இதே இதழின் உள்ளே பிரசுரமான காவியக்காட்சிகள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4241a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4242a.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4243a.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
1st August 2011, 06:44 AM
முப்பெரும் ஜோதி

திருமயிலையில் திவ்யமான 'இல்லற' ஜோதி

இன்று 31.7.2011 ஞாயிறு மாலை, சென்னை மயிலாப்பூரில் உள்ள, நான் பயின்ற பள்ளிக்கூடமான, பெண்ணத்தூர் சுப்ரமண்யம் உயர்நிலைப்பள்ளியின் [P.S. HIGHER SECONDARY SCHOOL], விவேகானந்தா ஹாலில் உள்ள மினி திரையரங்கில் [நான் படிக்கும் போது இந்த இடம் வகுப்பறைகளாக இருந்தது], "VINTAGE HERITAGE" அமைப்பின் சார்பில் திரையிடப்பட்ட கலையுலக ஜோதியின் "இல்லற ஜோதி" காவியத்தைப் பார்த்தது மெய்சிலிர்க்கும் அனுபவம். அதுவும் நமது மேன்மைமிகு திரித்திலகங்கள் ராகவேந்திரன் சார், முரளி சார், பார்த்தசாரதி சார் ஆகியோரோடு பார்த்ததில் அளவிலா மகிழ்ச்சி. இந்த வெளியீடு குறித்து பட விவரங்களுடன் ஏற்கனவே நமது திரியில் தகவல் அளித்த ராகவேந்திரன் சாருக்கு முதற்கண் நன்றி. 1990லிருந்து இருபது ஆண்டுகளாக பம்மலில் வசித்தாலும், 1980களில் மயிலாப்பூரில் இருந்ததை மறக்கவே முடியாது. அனைத்தும் திரும்பவும் பெற முடியாத பள்ளி நாட்கள் ஆயிற்றே ! பள்ளியினுள்ளே நுழைந்ததுமே ஒரு முப்பது வயது குறைந்ததாக நினைந்தேன். 1982 ஜூனிலிருந்து 1989 ஏப்ரல் வரை [ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை], பள்ளியில் பயின்ற நாட்களெல்லாம் நினைவுத் திரையில் விஸ்வருபமெடுத்தன. பள்ளிக்கு எதிர்முனையில் உள்ள ஒரு சந்துத்தெருவில் வியாழக்கிழமைதோறும் கபாலி, காமதேனு அரங்குகளில் வெள்ளி முதல் என்ன படம் என்று போஸ்டர் ஒட்டுவார்கள். அதனை ஒவ்வொரு வியாழன் மாலையும் பள்ளி முடிந்ததும் பார்த்து விட்டு அந்த வாரம் நடிகர் திலகத்தின் படம் என்றால், ஞாயிறு மேட்னி நிச்சயம், எனது மாமாவுடனோ / எனது அன்னை மற்றும் அன்னையாரின் குடும்பத்தினருடனோ பார்த்து விடுவேன். அன்று மாலைவேறு சென்னைத் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் படம் இருந்தால் எனக்கு ஜாக்பாட் அடித்தது போல் இருக்கும். அதற்கு ஏற்றாற்போல் எனது படிக்கும் அட்டவணையையும் சரி செய்து கொள்வேன். [mr_karthikகைப் போல் அடியேனும் படிப்பில் சுட்டி என்பதை தன்னடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்]. இப்படிப் பற்பல நினைவலைகளில் நீந்திக் கொண்டே இருந்தேன் "இல்லற ஜோதி" படம் தொடங்கும் வரை. இனி இக்காவியத்திற்கு வருவோம்:

"இல்லற ஜோதி", நமது நடிகர் திலகத்தின் 11வது திரைக்காவியமாக 9.4.1954 வெள்ளியன்று தமிழ்ப் புத்தாண்டையொட்டிய வெளியீடாக வெள்ளித்திரைக்கு வந்தது. நல்லதொரு வெற்றியை அடைந்த இக்காவியம் அதிகபட்சமாக மதுரையில் 'சிந்தாமணி' திரையரங்கில் 63 நாட்கள் ஓடியது. [முரளி சார் சட்டைக்காலர் தானாகவே உயர்கிறது பாருங்கள், கூடவே கோல்ட்ஸ்டாருக்கும் தான்!]. ராகப்பிரவாகம் திரு.சுந்தர் அவர்களின் தமிழ்ப்பிரவாகமான முன்னறிவிப்போடு திரைக்காவியம் பெரிய திரையில் உன்னதமாக ஓடத் தொடங்கியது. முதல் படத்திலேயே முந்நூறு படங்களில் நடித்த அனுபவத்தைக் காட்டியவர், 11வது படத்தில் ஓராயிரம் படங்களில் நடித்திருந்த நடிப்பு முதிர்ச்சியைக் காண்பித்தார் என்று குறிப்பிட்டால் அது மிகையன்று. அவரது ஒவ்வொரு திரைக்காவியமுமே ஓராயிரம் திரைப்படங்களுக்குச் சமம் என்பது வேறு விஷயம். ஒரு படைப்பாளியாக [கவிஞன்-எழுத்தாளனாக] தனது பாத்திரத்தை செவ்வனே படைத்திருந்தார். அவரது அறிமுக சீனே அமர்க்களம். அவரது வீட்டு மாடி அறையில் அவர் குரல் மட்டும் கேட்கும். தனது படைப்பை தனிமையில் லயித்து உரக்க முழங்கிக் கொண்டிருப்பார். கீழே இருக்கும் அவரது பெற்றோர் [சிகேசரஸ்வதி-கேஏதங்கவேலு], மாடியில் பிள்ளையின் குரல் ஓங்கி ஒலிக்கிறதே என்றவர்களாய் படிகளில் ஏறிச் சென்று அறைக்க்தவைத் தட்ட, திறந்து அவர்களுக்கும், நமக்கும் ஒரு திவ்ய தரிசனம் அளிப்பார் பாருங்கள், பார்த்துக் கொண்டே இருக்கலாம். என்னே ஒரு Screen Presence ! படம் முழுவதும் நம்மவரின் காஸ்ட்யூம் கலக்கல். ஒரு படைப்பாளிக்கேற்ற ஒரு Pant, Full Hand Shirt மற்றும் அதன் மேல் Sweater போல் ஒரு Half Jacket. இந்தக் காஸ்ட்யூமில் தலைவர் Smart & Cute ! [எந்தக் காஸ்ட்யூமில்தான் அவர் நன்றாக இருக்க மாட்டார். எல்லாவற்றிலுமே அவர் சிறப்பாகத் தான் இருப்பார்]. மனைவியாக ஸ்ரீரஞ்சனியும், காதலியாக பத்மினியும் அமைய இருவருக்குமே தோற்றத்தில் பொருத்தமாக - Convincingஆக - இருப்பதே அவரது ஸ்பெஷாலிட்டி. NTயின் படைப்புத்திறனால் ஈர்க்கப்பட்ட பத்மினி அவரிடம் இதயத்தை பறிகொடுக்க, மணமான மனோகரும் [NT பாத்திரப் பெயர்] மனதை 'கப்'பென்று பப்பியிடம் மாற்றுகிறார்.

அனார்க்கலி-சலீம் ஓரங்க நாடகத்தின் தொடக்கமாக வரும் 'களங்கமில்லா காதலிலே' பாடல் இசையமுதம். ராகதேவன் ராமநாதன் அவர்களின் இசையில், ராஜா-ஜிக்கி குரல்களில், சிவாஜி-பத்மினி நடிப்பில், கண்ணதாசனின் வைர வரிகள் ஜொலிஜொலிக்கின்றன. NT & NP made for each other romantic pair என்பதனை இப்பாடல் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது. படம் முழுவதற்கும் கவியரசர் வசனம், இந்த ஓரங்க நாடகத்திற்கு மட்டும் கலைஞர் வசனம். [கௌவரத் தோற்றமேற்கின்ற NT, கதாநாயகனையே தூக்கி சாப்பிட்டுவிடுவது போல், கௌரவமாக வரும் கலைஞர் இப்படத்தில் கவியரசரை வசனப்பந்தயத்தில் Photo-Finishல் மிஞ்சுகிறார் ; மகேஷ் சார் கோபித்துக் கொள்ள வேண்டாம்]. படத்தின் இன்னொரு ஹைலைட் பாடல் பத்மினிக்காக பி.லீலாவின் குரலில் ஒலிக்கும் 'கேட்பதெல்லாம் காதல் கீதங்களே'. ராமநாதன் ஸ்வரப்பிரவாகத்தில் விளையாட, லீலா அதற்கு குரல் கொடுத்து தூக்கிவிட, நாட்டியப் பேரொளியின் நடனமும், நடிகர் திலகத்தின் வாத்திய இசையும் நம்மை இருக்கையோடு கட்டிப் போடுகிறது. இப்பாடலில் பத்மினி ஆட, கற்பனையாக அவருக்கு இருபுறமும் NTக்கள் அமர்ந்து, இடதுபுற NT வீணை வாசிப்பதாகவும், வலதுபுற NT வயலினில் வெளுத்துக் வாங்குவதாகவும் காண்போருக்கு செம Treat. படத்தின் கிளைமாக்ஸில், பத்மினியுடனான தனது காதலை அங்கீகரிக்கும் தியாகச்சுடராக தனதருமை மனைவி இருப்பதை உணர்ந்த மனோகர், தன் காதலைத் துறந்து, "இல்லற ஜோதி"யான ஸ்ரீரஞ்சனியுடன் இணைகிறார் என படம் திருப்திகரமாகவே நிறைகிறது. படத்தின் ஆங்காங்கே வரும் தங்கவேலு-சரஸ்வதி சரவெடிகள் சீரியஸான படத்தில் சிரிப்புக்கும் பஞ்சம் வைக்காமல் திகழ்கிறது. ராகதேவனின் BGM பிரமாதம். ஹார்மோனியத்தையும், வயலினையும் இழையோடச் செய்கிறார். நடிகர் அசோகன் நம்மவருடன் நடித்த முதல் படம் இது. பத்மினியின் முறைமாப்பிள்ளையாக அளவான பாத்திரத்தில் அளவோடு செய்திருக்கிறார். ஸ்ரீரஞ்சனி படத்தின் Emotional touch என்றால் பத்மினி Romantic-cum-emotional brilliance. 'இரு மாதருடன் நம்மவர்' என்ற Themeல் பின்னாளில் வெளியான எத்தனையோ படங்களுக்கு இப்படம் முன்னோடி. மொத்தத்தில் சகோதரி சாரதாவிற்கு மிகவும் பிடித்த எடுப்பான, துடிப்பான, கனக்கச்சிதமான, ஸ்வீட்டான சிவாஜியின் திவ்யமான "இல்லற ஜோதி"யை, நான் பயின்ற பள்ளியில், நமது ஹப் நண்பர்கள் புடைசூழ பார்த்து மகிழ்ந்தது எனக்கு ஒரு LIFETIME RECHARGE !

திரையிட்ட "VINTAGE HERITAGE" அமைப்பிற்கு இதயபூர்வமான நன்றிகள் !

மகாலட்சுமியில் மகோன்னத 'மகர' ஜோதி

இன்று 31.7.2011 ஞாயிறு மாலை பெரம்பூர்-ஓட்டேரி பகுதி கிடுகிடுத்திருக்கிறது. பாரிஸ்டரின் வழக்காடு தொடங்குவதற்கு முன், 'மகாலட்சுமி' அரங்கம் இருக்கும் நெடுஞ்சாலை விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பரவசப்படுத்தும் பதாகைகள் என்ன, வாலாக்களின் விண்ணதிரும் சப்தங்கள் என்ன, மாலை அலங்காரங்கள் என்ன, மஹாதீபாராதனை என்ன என அந்த ஏரியாவே அமர்க்களப்பட்டிருக்கிறது. சில மணித்துளிகள் போக்குவரத்து ஸ்தம்பித்ததைக் கூறவும் வேண்டுமோ! பின்னர் உள்ளேயும் உச்சக்கட்டக் கொண்டாட்டம் தான் ! சற்றேறக்குறைய அரங்கம் நிறைந்திருந்ததாகவும் எமக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று தினங்களுமே [ஜுலை 29,30,31], ஒவ்வொரு காட்சியும், நல்ல கூட்டத்தோடு நடைபெறுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மகோன்னத மகர ஜோதியை மகாலட்சுமியில் தரிசித்துக் கொண்டாடிய ரசிக மன்னர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !

இத்தகவல்களை சுடச்சுட வழங்கிய அன்புள்ளங்கள் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும், திரு.பி.கணேசன் அவர்களுக்கும் கனிவான நன்றிகள் !

நெல்லைச்சீமையில் ஆட்கொள்ளும் 'அருட்'ஜோதி

'சென்ட்ரல்' அரங்கை ஒட்டிய சாலை இன்று [31.7.2011 : ஞாயிறு] மாலை, விளம்பரம் தேடா வள்ளல் ரவிக்குமாரின் திக்விஜயத்தால் திக்குமுக்காடியிருக்கிறது. அவ்வழியாக போவோர்-வருவோர் அனைவருக்கும் மற்றும் அரங்கில் இருந்தவர்களுக்கும் லட்டுகளும், பால் கோவா கேக்குகளும் அன்புள்ளங்களால் அளிக்கப்பட்டிருக்கின்றன. 2000 வாலா முழங்க, கட்-அவுட்டுக்கு மலர் மாலை அலங்காரங்கள் நிரம்பி வழிய, மஹாதீபாராதனை மகத்தான முறையில் காட்டப்பட்டிருக்கிறது. காட்சியின் போதும் அதிக அளப்பரையாம். எல்லாப் பாடல் காட்சிகளுக்கும் கூரை கிழிந்திருக்கிறது. குறிப்பாக 'ஜெலிதா வனிதா' பாடல் காட்சியில் ஆரவாரம் உச்சாணிக் கொம்பைத் தொட்டிருக்கிறது. மாலைக் காட்சிக்கு கணிசமான அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்திருக்கிறது. ரவிக்குமாரின் அருட்ஜோதியில் ஆட்கொள்ளப்பட்டு அன்புள்ளங்கள் ஆர்ப்பரித்திருக்கின்றனர் !

ஸ்வீட்டான இச்செய்திகளை வழங்கிய அன்புள்ளம் திரு.சிவாஜி எஸ்.முத்துக்குமாருக்கு நன்றி முத்தாரங்கள் !

பக்தியுடன்,
பம்மலார்.

goldstar
1st August 2011, 07:02 AM
முப்பெரும் ஜோதி


"இல்லற ஜோதி", நமது நடிகர் திலகத்தின் 11வது திரைக்காவியமாக 9.4.1954 வெள்ளியன்று தமிழ்ப் புத்தாண்டையொட்டிய வெளியீடாக வெள்ளித்திரைக்கு வந்தது. நல்லதொரு வெற்றியை அடைந்த இக்காவியம் அதிகபட்சமாக மதுரையில் 'சிந்தாமணி' திரையரங்கில் 63 நாட்கள் ஓடியது. [முரளி சார் சட்டைக்காலர் தானாகவே உயர்கிறது பாருங்கள், கூடவே கோல்ட்ஸ்டாருக்கும் தான்!].
பக்தியுடன்,
பம்மலார்.

Pammalar sir, our Madurai people got special bond with our NT and he is only REAL "Vasool Chakravarthy" in Madurai. NT movie will be houseful in any given day and any where in Madurai.

Our NT has created lots of unique records in Madurai which no actor broken till now and I don't think any thing can do it.

cheers,
Sathish

RAGHAVENDRA
1st August 2011, 09:11 AM
டியர் பம்மலார்,
நம் எல்லோரையும் திலக ஜோதியில் ஐக்கியமாக்கி விட்டீர்கள். திருவிளையாடல் படங்களென்ன, இல்லற ஜோதி பகிர்வுகளென்ன, கௌரவம் ஹாட் நியூஸ் என்ன, ரவிகுமாரின் பெருமை என்ன என்று எல்லாவற்றையும் சூப்பராக அளித்து வி்ட்டீர்கள். நன்றியும் பாராட்டுக்களும்..

அன்புடன்

RAGHAVENDRA
1st August 2011, 09:15 AM
ஆகஸ்ட் அணிவகுப்பு ஆரம்பம்....

குங்குமம்

வெளியான நாள் 02.08.1963

பேசும் படம் ஆக்ஸட் 1963 இதழில் வெளி வந்த குங்குமம் பட விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/KungumamAdPesumPadamAug63fw.jpg

மன்னவன் வந்தானடி
வெளியான நாள் 02.08.1975

திரைவானம் சிறப்பு மலர் பக்கங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/ThiraivanamMalar01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/ThiraivanamMalar02.jpg

தொடரும்

KCSHEKAR
1st August 2011, 01:23 PM
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் சிலை அமைக்க, கும்பகோணம் நகராட்சி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது. அதற்காக அந்த நகராட்சி தலைவர் மற்றும் கவுசிலர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வோம். தமிழ்நாட்டிலேயே 1980 - ஆம் ஆண்டுகளில் சிவாஜி மன்றம் சார்பில் நகராட்சி தலைவரை தேர்ந்தெடுத்த நகரம் கும்பகோணம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். நகராட்சி தலைவரிடம் (திரு. தமிழழகன், தி.மு.க) தொலைபேசியில் பேசியபோது விரைவில் தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன் சிலை அமைப்பு வேலை துவங்கப்படும் என்று கூறினார்.

mr_karthik
1st August 2011, 04:26 PM
முரளி சார்,

'ஒரு யாத்ரா மொழி' படத்தைப்பற்றிய பல அரிய தகவல்களைத்தந்துள்ளீர்கள். இவை இதுவரை நாங்கள் அறியாதது. மோகன்லால், தன் நண்பன் பாலாஜியின் சொந்த மாப்பிள்ளை என்பதால் நடிகர்திலகமும் அவரை 'மாப்பிள்ளை' என்றே அழைப்பார் என்பது மட்டும் தெரியும். திலகன் மட்டுமல்ல, மலையாளத் திரையுலகினர் அனைவருமே நடிகர்திலகத்திடம் மிகவும் அன்பு கொண்டவர்கள். தெலுங்கு, கன்னட, இந்தி திரையுலகினரும் அப்படியே. (சொந்த மானிலத்தில் மட்டும்தான் அவர் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டார். அவர்களும் அவரது மறைவுக்குப்பின் புகழ்கின்றனர்).

ராகவேந்தர் சார்,

ஆகஸ்ட் வரிசையை நெற்றியில் 'குங்குமம்' இட்டு துவக்கி விட்டீர்கள். தொடரட்டும் உங்களது அட்டகாசம்.

பம்மலார் சார்,

மயிலைக்கு வர இயலாதோரை உங்கள் எழுத்துக்களால் நிகழ்ச்சியைக் காணச்செய்து விட்டீர்கள். ஏற்கெனவே பார்த்திருந்த 'இல்லற ஜோதி'யை, தங்கள் விரிவுரையைப் படித்த பின் மீண்டும் பார்க்க மனம் விழைகிறது. தாங்கள் படித்த பள்ளியில் நுழைந்ததும் தங்கள் மன நெகிழ்வுடன் கூடிய மலரும் நினைவுகள் எங்களையும் எங்கள் பழைய நினைவுகளுக்கு இட்டுச்சென்றன. இல்லற ஜோதியின் கதைச்சுருக்கத்தையே (கிட்டத்தட்ட) தந்துவிட்டீர்கள். முன்னதாக தந்திருக்கும் 'திருவிளையாடல்' நிறைவுப்பகுதியும் வெகு ஜோர்.

மகாலட்சுமியில் பாரிஸ்டரின் வெற்றிநடைபற்றிய தகவலும் அருமை. ஞாயிறு கொண்டாட்டங்க்கள் பற்றிய விவரங்களுக்கு மிக்க நன்றி. மகாலட்சுமியில் இரு திலகங்களின் படங்கள் மாறி மாறி திரையிடப்படுவதால் ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும் என்ற ஆவலில் ஞாயிறு கொண்டாட்டங்களால், வரவர 'மகாலட்சுமி' நட்சத்திர அந்தஸ்தைப்பெற்று வருகிறது. எதிரே இருந்த சரஸ்வதிதான் நம் நெஞ்சங்களில் மட்டும் நினைவிலிருக்கிறது.

பெரம்பூரில் பாரிஸ்ட்டர் கலக்குவதற்கு சற்றும் குறையாமல், நெல்லையில் மேயர் கலக்கி வரும் செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. நெல்லைக்கொண்டாட்டங்கள் பற்றிய விரிவான தகவலுக்கும் நன்றி.

சந்திரசேகர் சார்,

நடிகர்திலகத்தின் சிலை தொடர்பாக கும்பகோணம் நகராட்சி தீர்மானம் மனதில் தேனாக இனிக்கிறது. தீர்மானம் சீக்கிரம் செயல்வடிவம் பெற்று பூர்த்தியடைய வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் மன்றத்தைச்சேர்ந்தவர் நகராட்சித் தலைவராக இருக்கிறார் என்பது புதிய செய்தி மட்டுமல்ல மகிழ்வான செய்தியும் கூட. தகவல்களுக்கு மிக்க நன்றி.

KCSHEKAR
1st August 2011, 05:10 PM
முரளி சார்,


சந்திரசேகர் சார்,

நடிகர்திலகத்தின் சிலை தொடர்பாக கும்பகோணம் நகராட்சி தீர்மானம் மனதில் தேனாக இனிக்கிறது. தீர்மானம் சீக்கிரம் செயல்வடிவம் பெற்று பூர்த்தியடைய வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் மன்றத்தைச்சேர்ந்தவர் நகராட்சித் தலைவராக இருக்கிறார் என்பது புதிய செய்தி மட்டுமல்ல மகிழ்வான செய்தியும் கூட. தகவல்களுக்கு மிக்க நன்றி.

Sorry Mr.Karthik,

நடிகர்திலகத்தின் மன்றத்தை சேர்ந்தவர் 1980 - ஆம் ஆண்டுகளில் நகர்மன்றத் தலைவராக (சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி) இருந்தார். தற்போது இருப்பவர் தி.மு.க வைச் சேர்ந்தவர்

KCSHEKAR
1st August 2011, 05:34 PM
முரளி சார் யாத்ரா மொழி திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் அருமை. திருவிளையாடலை சிறப்பாக நிறைவுசெய்து, இல்லற ஜோதியை இனிதே ரசிக்கவைத்த பம்மலாருக்கு நன்றி. ஆகஸ்ட் அணிவகுப்பை குங்குமம், மன்னவன் வந்தானடி -யோடு அட்டகாசமாகத் துவக்கியிருக்கும் திரு. ராகவேந்திரன் அவர்களுக்கு ஒரு சபாஷ்.

gkrishna
1st August 2011, 05:42 PM
கெளரவம் மகாலட்சுமி திரை அரங்கில் கண்ட காட்சியை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை .
முதலில் திரு ராகவேந்திர சார் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் மகாலட்சுமி திரை அரங்கிற்கு செல்ல வழி சொல்லியது கூகுளே மாப பிச்சை வாங்க வேண்டும் என்னிடம் கேமரா இல்லாததால் அந்த கொண்டாட்டங்களை படம் பிடிக்க முடியவில்லை
சாந்தியில் நாம் கொண்டாடுவது நம்முடைய பிறந்த வீட்டு பண்டிகை என்றல் மற்ற திரை அரங்கில் கொண்டாடுவது புகுந்த வீட்டு பண்டிகை என்று சொன்னால் அது மிகை ஆகாது . சாந்தியில் கண்ட பல முகங்களை அங்கே கண்டேன் ஆனால் அறிமுகம் செய்து கொள்ள முடியவில்லை .அதற்குள் திரை அரங்கிற்கு உள்ளே சென்று விட்டேன் . மகாலட்சுமியில் இருந்து மாம்பலம் ஸ்ரீநிவசவிற்கு அடுத்த வாரம் barrister விஜயம் என்று கேள்வி பட்டேன் சாந்தியில் மிஸ் செய்த தவறை மகாலக்ஷ்மியில் பார்த்து கிளியர் செய்து விட்டேன்
மன்னவன் வந்தானடி சிறப்பு மலர் நமது கண்மணி பம்மலர்/ராகவேந்தர் அவர்களால் பதிவேட்டேறம் செய்தது எனுடைய ஒரு சந்தேகம் தெளிந்தது. jayar மொவீஸ் சங்கரன் ஆறுமுகம் அவர்கள் தன முதலில் மஞ்சுளா அவர்களை நடிகர் திலகம் அவர்களடிம் அறிமுகம் செய்தார்கள் என்று அறிந்து கொண்டேன் . செண்பக பாண்டியனின் சந்தேகத்தை தீர்த்த தருமி (தவறான பாட்டு அல்ல) போல் என்னுடைய சந்தேகத்தை பம்மலர்/ராகவேந்தர் சார் தீர்த்து வைத்தார்கள் மிக்க நன்றி

என்றும் அன்புடன்
கிருஷ்ணா

mr_karthik
1st August 2011, 06:42 PM
கிருஷ்ணாஜி,

மஞ்சுளா நடிகர்திலகத்துடன் நடிக்க முதலில் ஒப்பந்தமானது 'மன்னவன் வந்தானடி' படத்துக்காகத்தான். ஞான ஒளி ஐம்பது நாட்களைக்கடந்தபோதே, மன்னவன் வந்தானடி துவங்கப்பட்டது. இப்படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட சில தாமதங்களால், இதன்பின்னர் ஒப்பந்தமான எங்கள் தங்க ராஜா, என் மகன், அவன்தான் மனிதன் ஆகிய படங்கள் முதலில் ரிலீஸாகி விட்டன.

pammalar
1st August 2011, 09:52 PM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்களை மிகமிக மங்களகரமாக "குங்குமம்" காவியத்துடன் துவக்கியுள்ளீர்கள். "குங்குமம்", "மன்னவன் வந்தானடி" அணிவகுப்பு மிக அருமை.

டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

குடந்தை நகரில் கலைக்குரிசிலின் சிலை நிறுவ சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி. தித்திக்கும் தகவலை வழங்கிய தங்களுக்கு இனிப்பான நன்றிகள் ! சிலை விரைவில் அமைய செழிப்பான வாழ்த்துக்கள் !

டியர் mr_karthik, தங்களின் பாராட்டுதல்களுக்கு பசுமையான நன்றிகள் !

Thanks, goldstar Satish.

டியர் கிருஷ்ணாஜி, மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd August 2011, 04:20 AM
ஒரு யாத்ரா மொழி 1997 ஜூலை இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியானதாக நினைவு. இந்தப் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் போதுதான் மலையாள திரைப்பட உலகம் சார்பில் நடிகர் திலகத்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டதற்கு ஒரு பெரிய பாராட்டு விழா அதே ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி [24-08-1997] அன்று திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் மைதானத்தில் நடைபெற்றது. மலையாள திரையுலகமே திரண்டு வந்து சிறப்பித்த விழா அது.[தமிழ் திரையுலகமோ அன்றைய தமிழக அரசோ செய்ய தவறியதை அவர்கள் அழகாய் செய்தார்கள்].
அன்புடன்

'தாதா சாஹேப் பால்கே விருது' பெற்றமைக்காக நடிகர் திலகத்துக்கு கேரளத் திரையுலகம் நடத்திய பிரம்மாண்டமான பாராட்டு விழா

24.8.1997 : ஞாயிறு : திருவனந்தபுரம்

வரலாற்று ஆவணங்கள்

24.8.1997 & 25.8.1997 தேதியிட்ட செய்தித்தாள் நிழற்படங்கள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4247a-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4250a-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4251-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4252-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd August 2011, 04:59 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

குங்குமம் : [2.8.1963 - 2.8.2011] : 49வது உதயம்

பொக்கிஷப் புதையல்

First Release Ad : The Hindu : 28.7.1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4246a-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 2.8.1963
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4245a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd August 2011, 05:41 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 206

கே: 'நடிப்புச் சக்கரவர்த்தி' என்று நடிகர் திலகத்தை கடந்த சில மாதங்களாக 'முரசொலி' தூக்கி வைத்து எழுதுகிறதே, பார்த்தீர்களா? (மு.சிவாஜி சுந்தர், திண்டுக்கல்-2)

ப: பார்த்தேன், மகிழ்ந்தேன் !

(ஆதாரம் : திரைவானம், நவம்பர் 1973, "கௌரவம்" திரைப்பட சிறப்பு மலர்)

குறிப்பு:
1963-ல் இதே 'முரசொலி' தனது கேள்வி-பதில் பகுதியில், கழகக் கண்மணி ஒருவரின் கேள்வியான "குங்குமம் படம் பார்த்தீர்களா?" என்ற கேள்விக்கு "இந்தப் படத்துடன் சிவாஜி காலி" என்று பதிலளித்திருந்தது. இத்தகவலை சில மாதங்களுக்கு முன் எழுதிய எமது பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் என்றாலும், "குங்குமம்" வெளியீட்டு தினத்தையொட்டி மீண்டும் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. 1963-ல் அப்படி, 1973-ல் இப்படி, என்ன செய்வது !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd August 2011, 06:07 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

மன்னவன் வந்தானடி : [2.8.1975 - 2.8.2011] : 37வது திக்விஜயம்

சாதனை செப்பேடுகள்

முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 2.8.1975
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4253a-1.jpg


100வது நாள் : தினத்தந்தி : 9.11.1975
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/MAGAZINE_0002a-1.jpg

மன்னவன் வருவார்.....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd August 2011, 06:22 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

"மர்ம வீரன்" 56வது ஜெயந்தி காண்கிறார்

[3.8.1956 - 3.8.2011]

நான்காவது வார விளம்பரம் : தினமணி : 24.8.1956
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4255a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
2nd August 2011, 06:50 AM
டியர் பம்மலார்,
சூப்பரோ சூப்பர், கலக்கலோ கலக்கல், அசத்தலோ அசத்தல்.... சொல்லிக் கொண்டே போகலாம். முரளி சார் சொன்னது போல் தங்களுக்கு நன்றி கூறுவதற்கென்று ஆரம்பித்தால் அதற்கே தனி திரி தேவைப்படும். கீப் இட் அப்.

1962ம் ஆண்டில் அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் அங்கு நடிகர் திலகம் விஜயம் செய்த போது எடுக்கப் பட்ட நிழற் படங்களில் சில குங்குமம் திரைக்காவியத்தின் டைட்டிலில் காண்பிக்கப் பட்டன. இது பெரும் பாலான ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படித் தெரியாத அல்லது இது வரை அத்திரைக்காவியத்தைப் பார்த்திராத புதிய தலைமுறையினருக்காக அந்த டைட்டில் கார்டில் இருந்து சில நிழற் படங்கள்-

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/kungumamcard01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/kungumamcard02.jpg

அன்புடன்

RAGHAVENDRA
2nd August 2011, 09:47 PM
திரைவானம் சிறப்பு மலர் பக்கங்கள் (தொடர்ச்சி)

மன்னவன் வந்தானடி தொடக்க விழா காட்சிகள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/ThiraivanamMalar08.jpg

இயக்குநர் மல்லியம் ராஜகோபால் அவர்களின் கருத்துரை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/ThiraivanamMalar05.jpg

நடன இயக்குநர் சலீம் அவர்களின் கருத்துரை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/ThiraivanamMalar04.jpg

வி.சி.குகநாதன் அவர்களின் கருத்துரை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/ThiraivanamMalar03.jpg

RAGHAVENDRA
2nd August 2011, 09:49 PM
நடிகர் திலகத்தை தேவன் கோயில் மணியோசை படத்திற்காக இயக்கிய இயக்குநர் பி.ஆர். சோமசுந்தரம் அவர்களின் கருத்துரை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/ThiraivanamMalar09.jpg

இயக்குநர் மல்லியம் ராஜகோபால் அவர்களின் கருத்துரை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/ThiraivanamMalar05.jpg

தொடரும்

RAGHAVENDRA
2nd August 2011, 09:51 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் கருத்துரை

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/ThiraivanamMalar07.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/ThiraivanamMalar06.jpg

அன்புடன்

J.Radhakrishnan
2nd August 2011, 09:55 PM
டியர் பம்மலார் சார்,
மலையாள திரையுலகினர் ntஅவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியது பற்றிய செய்திதொகுப்புக்கு நன்றி, மர்மவீரன் படத்தில் நடிகர்திலகம் அவர்களுக்கு கௌரவ வேடம் தானே? இதில் கதாநாயகன் யார்?

pammalar
3rd August 2011, 03:57 AM
மர்மவீரன் படத்தில் நடிகர்திலகம் அவர்களுக்கு கௌரவ வேடம் தானே? இதில் கதாநாயகன் யார்?

டியர் ஜேயார் சார்,

நமது நடிகர் திலகத்தின் கௌரவ வேட படப்பட்டியலை தொடங்கி வைத்த பெருமைக்குரிய திரைப்படம் "மர்ம வீரன்".

நடிகர் திலகத்தின் அருமை நண்பர், நடிகர் ஸ்ரீராம் இப்படத்தின் தயாரிப்பாளர் & ஹீரோ.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd August 2011, 04:26 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றி !

'திரைவானம்' "மன்னவன் வந்தானடி" [ஜூலை 1975] சிறப்பு மலர் பக்கங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷம் ! இங்கே பதிவிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
3rd August 2011, 05:07 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

மன்னவன் வந்தானடி : [2.8.1975 - 2.8.2011] : 37வது திக்விஜயம்

பொக்கிஷப் புதையல்

அட்டைப்படம் : திரைவானம் : நவம்பர் 1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4268a-1.jpg


படத்துவக்கவிழாக் காட்சிகள் : பேசும் படம் : நவம்பர் 1972
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4267a-1.jpg


படம் வெளிவரும் செய்தி : மதி ஒளி : 7.3.1975
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4265a-1.jpg


அட்டைப்பட விளம்பரம் : பேசும் படம் : ஜூலை 1975
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4266a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

goldstar
3rd August 2011, 08:42 AM
Thanks Pammalar and Ragavendran sir for every day treat... Hats off to you guys for your dedication to make us happy.

Cheers,
Sathish

kumareshanprabhu
3rd August 2011, 12:58 PM
Dear Raghavendra sir and Pammal sir

you are really great i have no words to praise you, everyday i love to see about different news on my NT, keep it up.

Raghavendra sir/ pammal sir

by any chance u have the video coverage of Ponvila, savalasamale function, Chavlier functions videos sir


kumareshan prabhu

kumareshanprabhu
3rd August 2011, 12:59 PM
hi shek

nice to hear on kumbakonam statue

RAGHAVENDRA
3rd August 2011, 01:22 PM
Dear Sathish, Kumaresh Prabhu and friends,
Thank you all for the support and encouragement, which makes us more energetic and enthusiastic to dedicate ourselves to glorify NT.
Regards,
Raghavendran

RAGHAVENDRA
3rd August 2011, 01:31 PM
http://cdn1.supergoodmovies.com/Filesone/9c379ba1f49441ed90ea4cc64b46fe20.jpg

The veteran actor of 60 years stay in theatre and 50 years in cinema MS Umesh is known for his simplicity and humbleness. He has taken a strong step to politely hand over one and half acre of land presented to him by producer of ‘Hori’ Kannada film Linge Gowda.
I am not able to maintain this piece of land in Mandya district given to me at the audio release of ‘Hori’ Kannada film. I am staying in Bangalore and leading a life of hand to mouth. How can I till the land or develop it at this stage. So I have decided to give back the land. I am not expecting anything and in case they think of alternative I welcome it said MS Umesh. Explaining further MS Umesh who is really in financial constraints said it is appropriate to get first for the work done and secondly it is right to maintain the house I have in Bangalore.

(source: http://www.supergoodmovies.com/13344/sandalwood/MS-Umesh-to-give-back-the-land-news-Details)

M.S. Umesh was introduced as the child artiste in the film Makkala Rajya (Pillalu Techina Chellani Rajya in Telugu, Kuzandaigal Kanda Kudiyarasu in Tamil), NT in Guest appearance.

Makkala Rajya was released on 05.08.1960 and enters 52nd year on 05.08.2011.

http://cdn1.supergoodmovies.com/Filesone/8fcc5835f1524755a7b39c8ec77663ad.jpg

http://www.hindu.com/fr/2010/11/12/images/2010111250870301.jpg


M.S. Umesh, who followed Puttanna to Madras to play a part in “Makkala Rajya” produced by Padmini Pictures, was directed by B.R. Pantulu. M.V. Rajamma, B.R. Pantulu, Nadigar Tailagam Sivaji Ganesan, Narasimharaju, Kala, Balakrishna, Kanchana, Dikki Madhava Rao and Lakshmidevi were also part of the film.


“Makkala Rajya”, a film in which children played the lead roles, was a huge hit in the sixties and got appreciation from all quarters.
Source:The Hindu) (http://www.hindu.com/fr/2010/11/12/stories/2010111250870300.htm)

For those who are well informed of Kannada cinema, please point out any correction or mistake. Thank you.

Raghavendran

RAGHAVENDRA
3rd August 2011, 01:42 PM
The super hit song from Makkala Rajya sung by Jikki and A.P. Komala, penned by K.P. Sastri and composed by T.G. Lingappa:

Aaduva Aasaiya (http://www.muzigle.com/album/makkala-rajya#!track/aaduva-aaseya)

gkrishna
3rd August 2011, 03:46 PM
சமீபத்தில் படித்த ஒரு செய்தி

தினமணி மற்றும் வண்ணத்திரை மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் உதவி ஆசிரியர் திரு தமிழ்மகன் அவர்கள் கூறியது

அந்திமத்தில் அணையும் விளக்குகள்

நடிகர் சிவாஜி கணேசனோடு எனக்கு நீண்ட சம்பந்தம் உண்டு. அவ்வளவு நேரடியானதாக இல்லையென்றாலும் சுற்றி வளைத்தவாக்கிலோ பக்க வாக்கிலோ இந்தத் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. 87,88 வாக்கில் சிவாஜி கணேசன் நடித்த ஒரு படத்துக்குத் தோழர் சுபவீரபாண்டியன் வசனம் எழுதினார். அது பின்னர் 'முதல்குரல்' என்ற பெயரில் வெளியானது. நான், கவிதாபாரதி, இயக்குநர் செல்வபாரதி ஆகியோர் வசனத்தில் உதவி என்ற அளவில் பணியாற்றினோம். சிவாஜி பேசிய வசனத்தில் நான் பகிர்ந்து கொண்ட வாக்கியம் ஏதேனும் இடம்பெற்றிருக்கலாம். ('பத்திரிகைகாரன் நினைச்சா எதையும் சாதிக்க முடியும்' டைப்பில்). ஏதோ அப்படிச் சம்பந்தம் இருக்கிறது.


நான் பத்திரிகை நிருபரானபோது பல திரைப்படப் படப்பிடிப்பில் அவரைச் சந்திக்க முடிந்தது. குறிப்பாக 'ஒன்ஸ்மோர்', 'என் ஆச ராசாவே', 'பூப்பறிக்க வருகிறோம்', 'மன்னவரு சின்னவரு,' 'படையப்பா' போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது படப்பிடிப்பிலேயே பார்க்கிற பேசுகிற வாய்ப்புகள் கிடைத்தன. பெரும்பாலும் 'அலை ஓசை' மணி, 'குமுதம்' செல்லப்பா, 'தேவி' மணி போன்றவர்களிடம்தான் கிண்டலாக ஏதாவது பேசுவார். நாங்கள் ஏதாவது கேட்டாலும் ஏடாகூடமாக பதில் வரும். (அந்தக் காலத்தில் நடித்த படத்துக்கும் இப்போது நடிப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்...? பதில்: "தெரிஞ்சு என்ன பண்ணப்போறே?'') கும்பலாகச் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்பவர்களைப் பார்க்கும்போது அவருக்கு எப்படி இருந்ததோ? அலுப்பாகவோ அசட்டையாகவோ பதில் சொல்லுவார். உங்களுக்குப் பிடித்த வெளிநாட்டு நடிகர் யார் என்றெல்லாம் கேட்பதில் ஏற்படும் எரிச்சலாகக்கூட இருக்கலாம். நாம் ரொம்பவும் ரசித்த பெரிய மனிதர் என்பதற்காகவே அவர் சொல்லுவதற்கெல்லாம் சிரிப்போம்.


இது தவிர அவருடைய பிறந்த நாள், திருமண நாள் சமயங்களில் அவர் வீட்டில் விருந்து வைப்பார். பத்திரிகைக்காரர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். அவருக்கு நிருபர் கூட்டத்தின் மீது கொஞ்சம் அன்பும் அலட்சியமும் இருப்பதைக் காணமுடியும். எல்லோரும் சாப்பிட்டாச்சா என்று தனித்தனியே விசாரிப்பதில் அன்பு. "சாப்பிட்டோம் சார்'' என்றால் "ஆமா. அதை முடிக்கணும் முதல்ல'' என்பதில் கிண்டல்.


ஆனால் நானும் நண்பர் இளையபெருமாளும் தினமணி தீபாவளி மலருக்காக சிவாஜிகணேசனைப் பேட்டி கண்டோம். அதில் வழக்கமான சிவாஜி இல்லை. தனிப்பட்ட முறையில் எங்களை மிகவும் விசாரித்தார். டேப் ரெகார்டரை ஆன் செய்வதற்கு முன்பும் ஆஃப் செய்த பின்னும் வெகுநேரம் பேசினார். கலைஞர், ஜெயலலிதா, பெரியார், தினமணி, பிரபு, வளர்ப்பு மகன், இதயம் பேசுகிறது மணியன் என்று பல விஷயங்கள் குறித்துப் பேசினார். அதையெல்லாம் வெளியே சொல்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை. பல உள்ளக் குமுறல்களை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு குடும்பத் தலைவராகத் தெரிந்தார். சுமார் மூன்றரை மணி நேரப் பேட்டி. சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று வற்புறுத்தினார். வேண்டாம் என்று கூறிவிடவே "நம்ம வீட்டு காபி சாப்பிட்டிருக்கீங்களா நீங்க?'' என்றார். "உங்க பிறந்த நாளுக்கு வந்தபோது சாப்பிட்டோம் சார்'' என்றேன். "அதெல்லாம் ஓட்டல்ல ஆர்டர் பண்ண காபி.'' என்றபடி கமலம் அம்மாவை அழைத்து "பசங்க நம்ம வீட்டுக் காபி சாப்பிட்டதில்லையாம்'' என்றார். சிறிது நேரம் கழித்து மற்றொரு காபிக்கு ரெடியா என்றார். நாங்கள் வேண்டாம் என்றதும் மனைவியை அழைத்து "இவங்களுக்கு உன் காபி பிடிக்கலை போல இருக்கு. ஜூஸ் ஏதாவது குடு'' என்றார். ஜுஸ் கொண்டு வந்த முருகனை "நல்லா சூடா இருக்கா?'' என்று வம்பு செய்தார்.


பேசிவிட்டு வெளியேறும்போது எங்களை எழுந்து நின்று வழியனுப்பினார். நாங்கள் வெளி வாசலைக் கடக்கும் வரை அந்த இடத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். எதற்காக நின்று கொண்டிருக்கிறார், நாங்களும் தயங்கித் தயங்கி நகர்ந்து கொண்டிருந்தோம். பிறகு நிதானமாக ஃபேன், ட்யூப் லைட் ஸ்விட்சுகளை நிறுத்திவிட்டு எல்லாம் அணைந்துவிட்டதா என்று அண்ணாந்து பார்த்துவிட்டு உள்ளே போனார். ஏனோ கண்கள் பனித்தன.

gkrishna
3rd August 2011, 04:13 PM
நம்மை போன்ற பதிவர்கள் ஏற்கனவே படித்த செய்தி ஆக இருக்கலாம் இருந்தாலும் என்னுடய ஆத்மா திருப்திகாக மீள்பதிவு செய்கிறேன்


இழக்கும் ஆச்சர்யங்கள்!

நடிகை சுவலட்சுமியின் வீட்டில் சத்யஜித் ரே புகைப்படம் இருக்கும். அவருடைய படம் ஒன்றில் நடித்திருப்பதாகப் பெருமையாகக் கூறுவார். கூர்மையான அவதானிப்பு உள்ள நடிகை அவர். "ஆசை' படத்தில் அஜீத் ஜோடியாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வசந்த்.




"என் ஆச ராசாவே' திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் சிவாஜிகணேசன் ஓய்வாக அமர்ந்திருந்தார். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த சுவலட்சுமி தூரத்தில் உட்கார்ந்தபடியே அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

"அவரை ஏன்அப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்றேன்.

அங்கே அமர்ந்திருந்த மற்ற நடிகர்களைக் காட்டினார். "வித்தியாசம் தெரிகிறதா?'' என்றார்.

அது சாப்பாட்டு இடைவேளை. எல்லோருமே உண்ட களைப்பை அனுபவிப்பது மாதிரி ஓய்வில் உட்கார்ந்திருந்தனர் . "வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை'' என்றேன்.

"அவர் மட்டும்தான் நிமிர்ந்து நேராக உட்கார்ந்திருக்கிறார். மற்றவர் எல்லோரும் சரிந்தும் சாய்ந்தும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர் தியேட்டரில் இருந்து வந்தவர். அவருக்கு இது பால பாடம். அரிதாரம் பூசிவிட்டால் இப்படியும் அப்படியும் அசைந்து அதை உடையெல்லாம் பூசிக் கொள்ளக் கூடாது. கழுத்தில் இருக்கும் அரிதாரம் காலரில் படக்கூடாது என்கிற அக்கறையோடு அவர் எப்படி அமர்ந்திருக்கிறார் பாருங்கள். காலையில் ஆறு மணிக்கு வந்ததிலிருந்து அதே விரைப்போடு நிமிர்ந்தே உட்கார்ந்திருக்கிறார்'' என்று ஆச்சர்யப்பட்டார்.

ஆச்சர்யமாகத்தான் இருந்தது. கவனித்து ஆச்சர்யப்பட வேண்டிய நிறைய விஷயங்களை நாம் நம் அலட்சியத்தால் கணம் தோறும் இழந்து கொண்டே இருக்கிறோம்.

rangan_08
3rd August 2011, 08:15 PM
Last Sunday bought " Thirudan " & " En Thambi" DVD's at AVM Sound Zone......the print was good. Thank you Murali sir for letting us know about this excellent shop.

Dear fans & hubbers, if you're looking for quality dvd's including old & rare films at affordable cost, then this is the right place for you.

The best thing about this place is, the dvd's are neatly stacked in a dedicated space which allows the customers to browse thru comfortably. They have an excellent collection of NT's films and likewise for MGR & other actors.......and believe me, there's a separate row for Vittalacharya kind of films too !!!

In addition to this you can also buy your favourite audio & books too at this store.

AVM SOUND ZONE
Saraswathi Stores
Sri Sankara Hall, 267, TTK Salai, Chennai 600 018.
Tel : 24990870 / 42109997

rangan_08
3rd August 2011, 08:21 PM
டியர் கார்த்திக
தங்களுடைய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள்.

தங்களுடைய பதிவுக்கு சற்று நீண்ட துணைப் பதிவினைத் தர விழைகின்றேன்.

அதற்கு முன்னர் நாம் அனைவரும் ஒரு சேர ஓ போட வேண்டியது ஸ்வாமிக்குத் தான். அவருடைய இத்தனை இளம் வயதில் அவர் இந்த அளவிற்கு ஆவணங்களை சேமித்து வைத்திருக்கிறார் என்றால் முதலில் அவர் தான் நடிகர் திலகத்தின் தீவிரமான ரசிகர் என்று நான் எண்ணுகிறேன், அதே போல் அவரைப் போல் ரசிகரை அடைய நடிகர் திலகம் பெரும் பேறு பெற்றுள்ளார் என்றால் அது மிகையில்லை. குறிப்பாக நடிகர் திலகத்தின் ரசிகர்களைப் பொறுத்த வரையில் ஒவ்வொருவரும் தம் சொந்தப் பொருள் உடல் ஆவி அனைத்தையும் அவருக்கே அர்ப்பணித்து விட்டனர். அதற்கு முழு உதாரணம் ஸ்வாமி.

ஆவணங்களைப் பொறுத்த மட்டில் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. அதுவும் எங்களைப் போன்ற பிராயத்தினர் அந்தக் காலங்களில் மிகுந்த சிரமத்திற்கிடையில் தான் திரைப் படங்களைக் காணவே அனுமதி பெறுவோம். சினிமாவைப் பற்றிப் பேசினாலே ஏச்சும் பேச்சும் பலர் வீட்டில் கண்டிருப்பர். அப்படிப் பட்ட ஒரு கால கட்டத்தில் அதுவும் நாங்களெல்லாம் சராசரிக்கு உட்பட்ட பொருளாதார அடிப்படையில் அமைந்த வகுப்பினர். அதனால் திரைப்படம் பார்க்கவே பொருளாதாரத்தில் சிக்கல். கிடைக்கும் சில்லரைகளை சேர்த்து வைத்து அதை நடிகர் திலகம் படம் பார்க்க வைத்திருப்போம். நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ, அவர் படம் பார்க்க வேண்டும் . சில சமயம் சில்லரை மிச்சமிருந்தால் பாட்டு புத்தகம் வாங்கி விடுவோ்ம். செய்தித் தாள் பருவ இதழ் சேமிப்பு என்பது மிகுந்த சிரமம். தேவைப் படும் தாளை மட்டும் தனியே வெட்டி எடுத்து வைக்க வேண்டும். அவ்வாறு கஷ்டப் பட்டு சேர்த்தது நிறைய. ஆனால் ஒரு கால கட்டத்தில் இடப் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களினால் கணிசமான ஆவணங்களை இழந்தேன். அப்படியும் விடாப்பிடியாக சேர்த்து வைத்தவை ஓரளவு. அவை இன்று நமக்கு உதவுகின்றன. இன்னோரு விஷயம், என் பிராயத்தினர் பெரும் பாலானோர், தாங்கள் அப்படி சேர்த்து வைத்த ஆவணங்களை, யாருக்கும் தர மாட்டார்கள், நான் உட்பட. அன்றைய கால கட்டத்தில் அது வருத்தத்திற்குரிய விஷயமாக இருந்தாலும் இன்று அவை வெளியுலகத்தினைப் பார்க்க உதவுகின்றன என்பதை எண்ணும் போது இன்றைக்கு பெருமையாக உள்ளது. ஒரு வேளை நடிகர் திலகம் மறைவுக்குப் பிறகு பல மடங்கு பெரியதாக விஸ்வரூபம் எடுப்பார் என்பதற்கான சான்றாக இவை திகழ்கின்றன என்பதும் ஓர் எண்ணம்.

இன்னும் நிறைய என்னிடம் இல்லையே என்பதே என் வருத்தம்.

மற்றபடி இருக்கும் ஆவணங்களை நம் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியே.

நன்றியுடன்

Very nice explanation, sir. What you have said is absolutely true.

rangan_08
3rd August 2011, 08:27 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

தங்களின் மேலான விளக்கத்துக்கு நன்றி.

இங்கும் அதே நிலைதான். நானும் லோயர் மிடில் கிளாஸ்லிருந்து வந்தவன்தான். அப்போதெல்லாம் தினமும் தினத்தந்தி, தினகரன் செய்தித்தாள்களை கார்ப்பரேஷன் லைப்ரரியில்தான் படிக்க முடியும். பேசும் படம், பொம்மை, பிலிமாலயா பத்திரிகைகளை உடனுக்குடன் சுடச்சுட படிக்க முடியாது. மாநகராட்சி நூலகங்களில் அவற்றை வாங்க மாட்டார்கள். யாராவது பணக்கார மாணவர்கள் கொண்டுவந்தால் ஓசியில் படிப்பதுதான். சொந்தமாக வாங்கவேண்டுமென்றால் இரண்டு மாதங்கள் கழித்து பழைய பேப்பர் கடைகளுக்கு வரும்போதுதான் வாங்கிப்படிக்க முடியும். ஒரிஜினலாக 90 பைசா விலையுள்ள 'பொம்மை' அங்கு 25 பைசாவுக்குக் கிடைக்கும்.

இதற்காக நான் தொடர்ந்து சென்னை த்ம்புச்செட்டித்தெரு, பவளக்காரத்தெரு சந்திப்பிலுள்ள பழைய பேப்பர் கடையில்தான் வாங்குவது வழக்கம். நான் தொடர்ந்து பேசும் படம், பொம்மை இதழ்களையே வாங்குவதைக்கண்ட கடைக்காரர் திரு ராமசாமி, இம்மாதிரி புத்தகங்கள் வரும்போது அவற்றை வெளியில் தொங்க விடாமல் எனக்காக தனியே எடுத்து வைத்து விடுவார்.

படம் பார்க்கச்செல்லும்போதும் அப்படித்தான். கிரௌன் தியேட்டரில் 1.25 டிக்கட் ஃபுல் ஆகிவிட்டால், அதற்கடுத்த 1.66 கட்டணத்தில் போக காசு பத்தாது. திரும்பி வந்து விட்டு, அடுத்த காட்சி அல்லது அடுத்த நாள் மீண்டும் 1.25 கியூவில் போய் நிற்பது வழக்கம். ஆனால் எப்படியேனும் நடிகர்திலகத்தின் படம் மிஸ் பண்ணாமல் பார்த்து விடுவது வழக்கம். நான் நன்றாகப்படித்து நல்ல மார்க்குகள் எடுத்து பாஸ் பண்ணியதற்கும் மறைமுகமாக நடிகர்திலகம் காரணம் எனலாம்.

அதாவது நான் நிறைய சினிமா பார்ப்பதை வீட்டில் பெற்றோர் கண்டிக்காமல், தடுக்காமல் இருக்க வேண்டுமானால் படிப்பில் நல்லமாதிரியாக இருக்க வேண்டும். மார்க் ஷீட்டில் நல்ல மார்க்குகளைப் பார்த்து விட்டால் மற்ற குறைகள் பெரிதாகத் தோன்றாது என்று கணக்குப்போட்டேன். அதுபோலவே நடந்தது. நன்றாகப்படித்து தொடர்ந்து முதல் ஐந்து ரேங்குகளுக்குள் வந்துகொண்டிருந்ததால், 'சினிமா பார்த்தாலும் பையன் படிப்பில் சோடை போகலை. அதான் நல்ல மார்க் எடுக்கிறான்ல அதுபோதும், மற்றபடி எப்படியும் போகட்டும்' என்று விட்டுவிட்டார்கள்.

பின்னர் கையில் ஓரளவு காசு புழங்கத் துவங்கியபிறகுதான், பஸ் ஏறி மவுண்ட் ரோடு வந்து ரசிகர்களின் தாய் வீடான 'சாந்தி ஜோதி'யில் சங்கமமாகத்துவங்கினேன். பின்னர் நடந்தவற்றை அவ்வப்போது இங்கே சொல்லியிருக்கிறேன். இனிமேலும் சொல்லிக்கொண்டிருப்பேன்.

Excellent nostalgia, Mr Kartik. Anecdotes like this, always charms me. Thanks.

Arvind Srinivasan
3rd August 2011, 09:15 PM
Last Sunday bought " Thirudan " & " En Thambi" DVD's at AVM Sound Zone......the print was good. Thank you Murali sir for letting us know about this excellent shop.

Dear fans & hubbers, if you're looking for quality dvd's including old & rare films at affordable cost, then this is the right place for you.

The best thing about this place is, the dvd's are neatly stacked in a dedicated space which allows the customers to browse thru comfortably. They have an excellent collection of NT's films and likewise for MGR & other actors.......and believe me, there's a separate row for Vittalacharya kind of films too !!!

In addition to this you can also buy your favourite audio & books too at this store.

AVM SOUND ZONE
Saraswathi Stores
Sri Sankara Hall, 267, TTK Salai, Chennai 600 018.
Tel : 24990870 / 42109997

agree with you...its the best place and what more the guy in the dvd section knows exactly the film that is available...i got all of NT's movies from there. :)

J.Radhakrishnan
3rd August 2011, 10:53 PM
Quote Originally Posted by J.Radhakrishnan View Post
மர்மவீரன் படத்தில் நடிகர்திலகம் அவர்களுக்கு கௌரவ வேடம் தானே? இதில் கதாநாயகன் யார்?
டியர் ஜேயார் சார்,

நமது நடிகர் திலகத்தின் கௌரவ வேட படப்பட்டியலை தொடங்கி வைத்த பெருமைக்குரிய திரைப்படம் "மர்ம வீரன்".

நடிகர் திலகத்தின் அருமை நண்பர், நடிகர் ஸ்ரீராம் இப்படத்தின் தயாரிப்பாளர் & ஹீரோ.

அன்புடன்,
பம்மலார்.

தகவலுக்கு நன்றி திரு பம்மலார் அவர்களே !

Murali Srinivas
4th August 2011, 12:22 AM
Mohan,

As you had rightly said, the shop caters to all needs and it is a pleasure going there. Like Aravind had pointed out, the person in charge Mr.Karunakaran would have all the details about all the available/non available movies in his finger tips.

கிருஷ்ணாஜி,

உங்களது பதிவுகள் எப்போதுமே சொல்ல வந்ததை சுருக்கமாக அதே நேரத்தில் அழகாக எடுத்துரைக்கும். மகாலட்சுமியில் பார்த்த கெளரவம் படமாகட்டும், சினிமா எக்ஸ்பிரஸ் உதவி ஆசிரியர் தமிழ் மகனின் நடிகர் திலகத்தை பற்றிய நினைவலைகள் ஆகட்டும், நடிகர் திலகம் பற்றிய சுவலட்சுமியின் அவதானிப்பு, இவை அனைத்துமே நான் முதலில் குறிப்பிட்ட கருத்துக்கு வலு சேர்க்கிறது. வாழ்த்துகள், தொடருங்கள்!

சுவாமியிடம் நான் எப்போதும் வியக்கும் ஒரு விஷயம் உண்டு. அதாவது எந்த ஒரு நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட விஷயத்தையும் சேகரித்து வைத்திருந்து அதை சரியான நேரத்தில் வெளியிட்டு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் முறை. அது இப்போதும் குங்குமம் திரைப்படம் பற்றிய பதிவிலும் வெளிப்பட்டிருக்கிறது. இது போன்ற உண்மைகளை எப்போதும் வெளியிடுங்கள் சுவாமி!

அன்புடன்

Arvind Srinivasan
4th August 2011, 12:39 AM
just saw dheiva magan two days back. Just a great film and what a performance from NT right from the first scene where the elder shivaji waits for the birth of his son till the climax. It must have been the nth time i watched the movie, but NT makes sure that its an enriching experience every time. NT definitely transcends across generation. Also its very nice to see that there are people who are still propagating the legend of NT. To the persons incharge of this thread a big:clap::clap:. Surely this thread will help me explore more of NT's films as i was born in the nineties and wasn't able to watch most of his films. Let the legend of Nadigar Thilagam Shivaji Ganesan live on......

goldstar
4th August 2011, 05:08 AM
just saw dheiva magan two days back. Just a great film and what a performance from NT right from the first scene where the elder shivaji waits for the birth of his son till the climax. It must have been the nth time i watched the movie, but NT makes sure that its an enriching experience every time. NT definitely transcends across generation. Also its very nice to see that there are people who are still propagating the legend of NT. To the persons incharge of this thread a big:clap::clap:. Surely this thread will help me explore more of NT's films as i was born in the nineties and wasn't able to watch most of his films. Let the legend of Nadigar Thilagam Shivaji Ganesan live on......

Welcome Arvind and thanks to watch legend NT movies and it is not a surprise our NT makes big impact on younger generation also.

Cheers,
Sathish

goldstar
4th August 2011, 05:19 AM
Thank god, finally Dinamalar has said something about our NT, just watch a video which tells about our NT's details at http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=7352&cat=541.

Thanks Dinamalar at last for telling something about our NT

Cheers,
Sathish

RAGHAVENDRA
4th August 2011, 05:57 AM
வருக அரவிந்த் அவர்களே,

Surely this thread will help me explore more of NT's films as i was born in the nineties and wasn't able to watch most of his films. Let the legend of Nadigar Thilagam Shivaji Ganesan live on......
90களில் பிறந்த தாங்கள் அதிக பட்சம் 20வயது தாண்டியிருக்க மாட்டீர்கள். இவ்வளவு இளம் வயதினர் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதை விட அவருக்கு பெருமை பத்மஸ்ரீ, பத்மபூஷ்ன், பாரத், பாரத ரத்னா போன்ற எந்த விருதுகளும் தந்து விடாது. உள்ளத்தினை நெகிழச்செய்யும் இந்த வரிகள் அவருக்கு சமர்ப்பணம். அவருடைய நடிப்பைப் பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்டு அவரைப் புரிந்து கொள்ளாமல் மிகை நடிப்பு என்று உளறித் திரியும் அறிவிலிகளுக்கு நிச்சயம் இது ஒரு சவுக்கடி.
தங்களுக்கு அனைவரின் சார்பிலும் உளமார்ந்த வரவேற்பினை அளிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். நடிகர் திலகம் என்கிற புதையலை அள்ளி அள்ளிப் பருக இது சிறந்த இடம் என்பதில் ஐயமில்லை.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
4th August 2011, 06:00 AM
http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=7352&cat=541

டியர் சதீஷ்,
தங்களுடைய இணைப்புக்கு நன்றி. மாற்றம் தினமலர் வீடியோவில் மட்டுமா, தினமலர் அணுகுமுறையிலும் கூட என்று எதிர்பார்ப்போம். தேசீயவாதிகளின் உள்ளங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள மாற்றம் என்று அது உருவெடுத்தால் நல்லது தானே.

அன்புடன்

kumareshanprabhu
4th August 2011, 10:36 AM
Dear all

please find attached photographs of NT 10th year Death annivresary

every year we light the 7 kgs camphor at 7.25pm when our NT left us on 21st july

this programme was organised by Karnataka State Dr. Sivaji ganesan and Prabhu Organisation Cantonment area Bangalore

The campor was lighten by Mr. Ravi shankar poosalingam Social Worker and Diehard fan of our NT

Regards
kumareshan prabhu

gkrishna
4th August 2011, 12:38 PM
Dear Mr.Aravind

On behalf of all our NT thread viewrs welcome you. Very happy to know that you are in the age group of 20+ From Ragavender sir reply . Yesterday only said that NT should be 'chiranjeevi' like hanumar lives in all the four yuga.
Once again welcome

Regards

Gkrishna

abkhlabhi
4th August 2011, 12:59 PM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
எழுதியவர் :இரா .இரவி
தேதி 21/7/2011

தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீ
தமிழென அழியாப் புகழைப் பெற்றவன் நீ


பராசக்தி திரைப் படத்தில் அறிமுகமானவன் நீ
பாராத சக்திகளையும் பார்க்க வைத்தவன் நீ


நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவன் நீ
நல்ல வாசன் உச்சரிப்பைப் புகுத்தியவன் நீ


நாடகத்தில் நடித்துப் பயின்றுத் திரைப்படம் வந்தவன் நீ
திரைப்படத்தில் நடித்து வாழ்க்கையில் நடிக்காதவன் நீ


கூட்டுக்குடும்பப் பெருமையைக் கட்டிக் காத்தவன் நீ
குடும்பத்தின் ஒற்றுமையை பெரிதும் வலியுறுத்தியவன் நீ

அன்பில் பலரை வென்று அரசியலில் தோற்றவன் நீ
நடிப்பில் நிலையாக நின்றுதிரை உலகில் வென்றவன் நீ


ஒன்பதுப் பாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டியவன் நீ
ஒன்பது மணி என்றால் எட்டு முப்பதுக்கே இருந்தவன் நீ


தாமதத்தை என்றும் வெறுத்துத் தவிர்த்தவன் நீ
சமாதானத்தை என்றும் எப்பொதும் விரும்பியவன் நீ


போலிப் பிம்பங்கள் மீது நம்பிக்கை இல்லாதவன் நீ
பாத்திரங்கள் எதுவென்றாலும் ஏற்று நடித்தவன் நீ



முகபாவத்தில் நாதஸ்வர வித்துவான்களையே வென்றவன் நீ
முகம் முதல் நகம் வரை நடிப்பைக் காட்டியவன் நீ


வீரபாண்டிய கட்டபொம்மனை அறிமுகம் செய்தவன் நீ
கப்பல் ஒட்டியத் தமிழனைக் கண் முன் நிறுத்தியவன் நீ


பகுத்தறிவுப் பகலவனிடம் சிவாஜிப் பட்டம் பெற்றவன் நீ
படிக்காதப் பாமரர்களுக்கும் தமிழ்க் கற்பித்த ஆசான் நீ


உணர்ந்தோம் கள்ள வாக்கு அளிப்போரின் திறனை
உனது வாக்கையே வாக்களித்துச் சென்றனர் அன்று


இந்திய தேசத்தில் உன்னைப் போல நடிகர் இல்லை
இந்தியாவோ உனக்கு தேசியவிருதை தரவே இல்லை

செவாலியர் விருதுத் தந்து அயல் நாடுப் பாராட்டியது உன்னை
செந்தமிழனின் திறமையை உலகிற்கு பறை சாற்றியவன் நீ



Dear Raghavendran sir,

I too don't know telugu. My collegeue who knows telugu briefed about the article. From his brief transalation, i mentioned only few. i requested him to transalate the full article. I will produce here tamil transalation as soon as i received from him.

kumareshanprabhu
4th August 2011, 01:28 PM
welcome Mr. Arvind

To all my friends from bangaloreans who are there in the hub please give your contact numbers it will be esay for us to inform u about the functions, and we are planning to release Pudhiyaparavai in Bangalore Nataraja and Lavanya theaters shortly
Cheers
kumareshanprabhu

kumareshanprabhu
4th August 2011, 01:39 PM
Raghavendra sir/ pammal sir

by any chance u have the video coverage of Ponvila, savalasamale function, Chavlier functions videos sir


kumareshan prabhu

mr_karthik
4th August 2011, 02:14 PM
பம்மலார் சார்,

'கோடு போட்டால் போதும், அதில் ரோடு போட்டு விடுவார்' என்ற சொல்வழக்கு உங்களுக்குத்தான் பொருந்தும். நடிகர்திலகத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்ததற்கு, மலையாளப்பட உலகினர் பாராட்டுவிழா நடத்தியதை, முரளிசார் ஒரு செய்தியாகப் பதிப்பித்தார்.

உடனே அது சம்மந்தமாக அப்போதைய நியூஸ்பேப்பர் கட்டிங்ஸ்களை அப்படியே அள்ளித்தந்து மலைக்க வைத்ததுடன், நடிகர்திலகத்தின் ரசிகர்கள் எப்போதும் எதையும் வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று போகிற போக்கில் அள்ளி விட்டுப்போகிறவர்கள் அல்ல. எந்த ஒன்றையும் ஆதாரத்துடன் அடிப்பவர்கள் என்ற பேருண்மையை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள்.

நீங்களும் ராகவேந்தர் சாரும் அள்ளி அளித்து வரும் புதையல்களுக்கு நன்றி சொல்லியெல்லாம் மாளாது. அதுக்கெல்லாம் மேலே போய் விட்டீர்கள்.

Arvind Srinivasan
4th August 2011, 07:07 PM
thanks to all.... its a pleasure in fact for me to discuss with you all :)

RAGHAVENDRA
4th August 2011, 09:07 PM
Music collection from Panthulu films to be released today

From The Hindu, Bangalore Edition

http://www.thehindu.com/multimedia/dynamic/00741/04bgscan1_741970f.jpg (http://www.thehindu.com/news/cities/Bangalore/article2321346.ece)

A few lines quoted from the coverage about B.R. Panthulu:
His first directorial venture was Rathnagiri Rahasya, a hit. He made some spectacular period films with Sivaji Ganesan such as Veerapandiya Kattabomman, adjudged best film at the Afro-Asian Film Festival at Cairo.

RAGHAVENDRA
4th August 2011, 09:32 PM
டியர் கார்த்திக்,
தங்களுடைய அன்பான பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றி.

டியர் பாலா சார்,
தாங்கள் வழங்கிய ரவியின் கவிதை சூப்பர். குறிப்பாக சிவப்பு வண்ணத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள் உண்மையானவை. அந்த ரவி அவர்களை நம் அனைவருக்கும் அறிமுகப் படுத்த முடிந்தால் அல்லது அவரையும் நம் திரியில் பங்கேற்கச் செய்தால் மிக்க மகிழ்ச்சியாயிருக்கும்.

டியர் குமரேசன் பிரபு,
தாங்கள் வழங்கிய படங்களுக்கு நன்றி. அவற்றைக் கீழே தருகிறேன்.

1. நடிகர் திலகம் மறைந்த நேரமான இரவு 7.45 மணிக்கு 21.07 அன்று ஆண்டு தோறும் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செய்யும் பெங்களூரு ரசிகர்கள் இவ்வாண்டும் அதே போல் செய்யும் காட்சி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/NTCAMPHOR.jpg

2. அந்த மெழுகுவர்த்தி ஜொலிக்கும் காட்சி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/NT10THYEAR.jpg

அன்புடன்

Murali Srinivas
4th August 2011, 11:49 PM
To be very honest, I never ever imagined that Aravind, you would be a product of 90s.Especially when you corrected me in Kamal thread regarding the Kurathi Magan star cast by uploading the video clip. I felt that you should be in your 30s or 40s. It is amazing to hear people like you talking about Deiva Magan. I thought Gopala krishnan and Sura are the young guns who frequent this thread but I think you should be younger than them. Welcome Aravind and let your tribe grow!

இன்று காலையில் மனிதனும் தெய்வமாகலாம் திரைப்படத்தில் இடம் பெற்ற பால் பொங்கும் பருவம் பாடல் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தேன். படம் வெளிவந்த 1975 ஜனவரி காலகட்டத்தில் பார்த்த பிறகு அதாவது 36 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். இடையில் இந்த பாடலை பார்த்த நினைவு இல்லை.

பாடல் காட்சி ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் மதன மாளிகையை நினைவூட்டுகிறது. ஒரு வேலை அந்த பாடல் காட்சி பெற்ற வெற்றியை மனதில் கொண்டு பி.மாதவன் [அவர்தானே ராஜபார்ட்டையும் இயக்கினார்] அதை அடிப்படையாக கொண்டு எடுத்திருப்பாரோ என தோன்றுகிறது.

ஆனால் மெல்லிசை மன்னரின் மெட்டு சிருங்காரமான ராகமாலிகை என்றால் குன்னகுடியார் மெலடியை பொறுத்தவரை பின்தங்கி விட்டார். ஸ்வர பிரஸ்தாரங்களை டூயட் பாடலில் புகுத்துவது தவறில்லை. ஆனால் அதை செய்யக் கூடிய முறை ஒன்று இருக்கிறது. அப்படி இல்லாத பட்சத்தில் அது ஒரு காமடியாக [unintentional] மாறிப் போகும்.

ஆனால் யார் எந்தக் காட்சியில் சொதப்பினாலும் நடிகர் திலகம் மட்டும் தன் வேலையில் சோடை போக மாட்டார். இதிலும் அப்படியே. அந்த ஸ்டைல், காலை தூக்கி நிற்கும் போஸ், கையை அசைப்பது போன்ற காரியங்களை கச்சிதமாக செய்கிறார். குறிப்பாக இரண்டாவது சரணத்தின் தொடக்கத்தில் பாரத தேவியின் மடியில் இந்த பசுந்தளிர் விரிப்பது எதற்கு என்று உஷாநந்தினி பாட, காதலின் தேவியை அணைத்து நான் காவியம் பாடிட நினைத்து என்ற வரிகளுக்கு white pant shirt மற்றும் red inner jacket அணிந்து அவர் கொடுக்கும் போஸ் மறக்க முடியாதவை.

பாடல் காட்சி காண்பிக்கப்படுவதால் விரைவில் படத்தின் டிவிடியும் வெளிவரும் என நம்புவோம்.

அன்புடன்

RAGHAVENDRA
5th August 2011, 06:01 AM
டியர் முரளி,
மனிதனும் தெய்வமாகலாம் பாடல் காட்சியைப் பற்றிய தங்கள் பகிர்வு பல நினைவுகளைக் கிளறி விடுகிறது. நன்றாகப் போயிருக்க வேண்டிய படம், இசையினால் ஏமாற்றி விட்டது என்பதே உண்மை. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை இசையமைப்பாளராக வெற்றிகரமாக பயன்படுத்த ஏ.பி.என். அவர்களால் மட்டும் தான் முடிந்தது, காரணம், கதைக்களம். காதல் காட்சியில் ஸ்வரப் பிரஸ்தாரம் செய்து கச்சேரி மேடை போல் ஆக்கி விட்டு திரையரங்குகளில், சிகரெட், பீடி, தேனீர் போன்றவை நல்ல வியாபாரம் ஆவதற்கு வழி வகை செய்த நல்ல எண்ணம் மட்டுமே அந்தப் படம் கண்ட சாதனை. ஒரு ஸ்டால் உரிமையாளரிடம் ஒரு ரசிகர் பேசிக் கொண்டது இன்றும் நன்கு நினைவில் உள்ளது. இந்த மாதிரி படம் 4 வந்தால் போதும் நமக்கு பிழைப்பு நல்லா இருக்கும். அதை அவர் சொல்லி முடிப்பதற்குள் ரசிகர்கள் வந்து விட நைசாக நழுவி விட்டார். இது நகைச்சுவையாக இருந்தாலும் ஒரு பக்கம் மனசு கஷ்டமாயிருந்தது என்பதும் உண்மை. காவலுக்கு வேலுண்டு என்கிற சீர்காழி கோவிந்தராஜன் பாடல் மட்டுமே அப்படத்தில் ஆறுதல். பாடல்கள் மட்டும் மிகப் பிரபலமாக அமையும் விதத்தில் வேறு இசையமைப்பாளரிடம் கொடுத்திருந்தால் அப்படமும் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கும். அது மட்டுமின்றி, பால் பொங்கும் பருவம் பாடல் அதற்கு சில காலத்துக்கு முன் தான் வந்த ஒரு பிரபலமான பாடலை நினைவு படுத்தியதும் ஒரு காரணம்.

மேற்கூறிய வரிகளை அப்படியே ராஜ ராஜ சோழன் படத்திற்கும் பொருத்திக் கொள்ளலாம். அதுவும் குறிப்பாக அப்பேர்ப்பட்ட காவிய நாயகனின் வரலாற்றுப் புதினத்தில், எம்.ஆர்.விஜயா வின் குரலில் காபரே நடனம் போன்ற இசையும் ஆங்கில இசைக் கருவிகளும் பயன் படுத்தி இதே போல் கேன்டீன் வியாபாரத்தை லாபகரமாக்கிய பெருமை குன்னக்குடிக்கு உண்டு.

மொத்தத்தில் முழு சுமையினையும் தன் தலை மேல் தாங்கி படத்தை தூக்கி நிறுத்திய நடிகர் திலகத்தின் படங்களுள் இதுவும் ஒன்று.

பி.கு. - எந்த தொலைக் காட்சியில் இப் பாடல் ஒளிபரப்பப் பட்டது என்பதைக் கூற முடியுமா.

அன்புடன்

RAGHAVENDRA
5th August 2011, 06:18 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/00742/05fr-Nadagam_jpg_742807f.jpg (http://www.thehindu.com/arts/theatre/article2321997.ece)


Where there’s Mahendra there’s bound to be a Sivaji Ganesan angle, but how will the thespian be accommodated in ‘Nadagam’? His voice will be a special attraction of the play, is all the promo says. “That’s for you to wait and watch. Chinni Jayanth has helped us on this score,” Mahendra smiles.

We wish Y.Gee.Mahendra all success in his endeavour of propagating NT in whatever opportunity that comes across.

Raghavendran

RAGHAVENDRA
5th August 2011, 07:06 AM
மிக நீண்ட நாட்களுக்குப் பின் காணக் கிடைக்காத அபூர்வ பாடல், வணங்காமுடி திரைக்காவியத்திலிருந்து. இப்பாடல் நம் நாட்டில் வெளியிடப் பட்ட குறுந்தகடு மற்றும் நெடுந்தகடுகளில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஹெலன் நாட்டியமாட நடிகர் திலகம் பார்வையிடும் பாடல் காட்சி, இப்படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு ஒரு முக்கிய காரணங்களில் ஒன்று என்பது மிகையன்று. ஏ குமுர்தகும்மா கொய்யாப்பழம் போலே அய்யாவைப் பாரு... என்று துவங்கும் இப்பாடலைப் பாடியவர் ஜிக்கி, இசை ஜி.ராமநாதன்.


http://www.youtube.com/watch?v=L913eQFNa5I

அன்புடன்

kumareshanprabhu
5th August 2011, 09:46 AM
Thank u raghavendra sir any luck on the Video coverage

Hi murali sir thank u

parthasarathy
5th August 2011, 12:41 PM
just saw dheiva magan two days back. Just a great film and what a performance from NT right from the first scene where the elder shivaji waits for the birth of his son till the climax. It must have been the nth time i watched the movie, but NT makes sure that its an enriching experience every time. NT definitely transcends across generation. Also its very nice to see that there are people who are still propagating the legend of NT. To the persons incharge of this thread a big:clap::clap:. Surely this thread will help me explore more of NT's films as i was born in the nineties and wasn't able to watch most of his films. Let the legend of Nadigar Thilagam Shivaji Ganesan live on......

A warm welcome to Mr. Arvind Srinivasan to this glorious thread.

It's not a surprise that a youngster (in 20's) has become NT's fan because we've been continuously coming cross many youngsters becoming his fans.

Deiva Magan is the movie which is closest not only to my heart, but for most of NT's fans along with Vasantha Maaligai. In fact, my first posting in this thread is a short note on Deiva Magan only.

Most of NT's fans will be thinking alike in terms of great scenes in many films, which is unique only to NT. Still, an youngster like you may come up with something different, which we may have left out. We are eager to know more from you TOO.

Once again, we welcome you to this thread and come and rejoice us.

Regards,

R. Parthasarathy

parthasarathy
5th August 2011, 01:16 PM
டியர் முரளி,
மனிதனும் தெய்வமாகலாம் பாடல் காட்சியைப் பற்றிய தங்கள் பகிர்வு பல நினைவுகளைக் கிளறி விடுகிறது. நன்றாகப் போயிருக்க வேண்டிய படம், இசையினால் ஏமாற்றி விட்டது என்பதே உண்மை. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை இசையமைப்பாளராக வெற்றிகரமாக பயன்படுத்த ஏ.பி.என். அவர்களால் மட்டும் தான் முடிந்தது, காரணம், கதைக்களம். காதல் காட்சியில் ஸ்வரப் பிரஸ்தாரம் செய்து கச்சேரி மேடை போல் ஆக்கி விட்டு திரையரங்குகளில், சிகரெட், பீடி, தேனீர் போன்றவை நல்ல வியாபாரம் ஆவதற்கு வழி வகை செய்த நல்ல எண்ணம் மட்டுமே அந்தப் படம் கண்ட சாதனை. ஒரு ஸ்டால் உரிமையாளரிடம் ஒரு ரசிகர் பேசிக் கொண்டது இன்றும் நன்கு நினைவில் உள்ளது. இந்த மாதிரி படம் 4 வந்தால் போதும் நமக்கு பிழைப்பு நல்லா இருக்கும். அதை அவர் சொல்லி முடிப்பதற்குள் ரசிகர்கள் வந்து விட நைசாக நழுவி விட்டார். இது நகைச்சுவையாக இருந்தாலும் ஒரு பக்கம் மனசு கஷ்டமாயிருந்தது என்பதும் உண்மை. காவலுக்கு வேலுண்டு என்கிற சீர்காழி கோவிந்தராஜன் பாடல் மட்டுமே அப்படத்தில் ஆறுதல். பாடல்கள் மட்டும் மிகப் பிரபலமாக அமையும் விதத்தில் வேறு இசையமைப்பாளரிடம் கொடுத்திருந்தால் அப்படமும் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கும். அது மட்டுமின்றி, பால் பொங்கும் பருவம் பாடல் அதற்கு சில காலத்துக்கு முன் தான் வந்த ஒரு பிரபலமான பாடலை நினைவு படுத்தியதும் ஒரு காரணம்.

மேற்கூறிய வரிகளை அப்படியே ராஜ ராஜ சோழன் படத்திற்கும் பொருத்திக் கொள்ளலாம். அதுவும் குறிப்பாக அப்பேர்ப்பட்ட காவிய நாயகனின் வரலாற்றுப் புதினத்தில், எம்.ஆர்.விஜயா வின் குரலில் காபரே நடனம் போன்ற இசையும் ஆங்கில இசைக் கருவிகளும் பயன் படுத்தி இதே போல் கேன்டீன் வியாபாரத்தை லாபகரமாக்கிய பெருமை குன்னக்குடிக்கு உண்டு.

மொத்தத்தில் முழு சுமையினையும் தன் தலை மேல் தாங்கி படத்தை தூக்கி நிறுத்திய நடிகர் திலகத்தின் படங்களுள் இதுவும் ஒன்று.

பி.கு. - எந்த தொலைக் காட்சியில் இப் பாடல் ஒளிபரப்பப் பட்டது என்பதைக் கூற முடியுமா.

அன்புடன்

அன்புள்ள திரு. ராகவேந்தர் மற்றும் திரு. முரளி அவர்களுக்கு,

நான் பொதுவாக தினமும் காலை எட்டு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி விடுவேன். நேற்று, ஒரு முக்கியமான வேலை இருந்ததால், பத்து மணிக்குப் பிறகு கிளம்பினேன். எப்போதெல்லாம் காலை பத்து மணி வரை வீட்டிலிருக்க நேரிடுகிறதோ, அப்போதெல்லாம் கூடுமானவரை, எட்டு மணி முதல் மெகா, கலைஞர், ஜெயா மற்றும் வசந்த் டிவிக்களில் ஒளிபரப்பப்படும் பழைய பாடல்களைப் பார்ப்பேன். நேற்று, மனிதனும் தெய்வமாகலாம் படத்தின் "பால் பொங்கும் பருவம்" பாடலை நானும் பார்த்துப் பழைய நினைவுகளில் மூழ்கினேன்.

நீங்கள் கூறியது போல், அந்தப் பாடல், குறிப்பாக அந்த ஸ்வர சங்கதிகளால் நிறைய கேலிக்குரிய விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக, "கப கப" என்னும்போது. இருப்பினும், நடிகர் திலகம் மட்டும் விடாமல் வழக்கம் போல், அந்தப் பாடலுக்குப் பெருமை சேர்த்திருப்பார்.

நடிகர் திலகம், உலகத்தில் இதுவரை தோன்றிய எண்ணற்ற பல அற்புதக் கலைஞர்களில், "ஜீனியஸ்" என்று சொல்லக்கூடிய, மிகச்சிறிய வட்டத்துக்குள், முதல் இடம் வகிப்பவர் என்பது எல்லோரும் அறிந்ததே. இவர்கள், எப்போதும் தொடர்ந்து சோதனை முயற்சிகளில் ஈடுபடுபவர்கள். ஆதலால், இந்த வகைப்பட்ட கலைஞர்களுக்கு, தோல்விதான் அதிகம் கிடைக்கும். இருப்பினும், தொடர்ந்து சோதனை முயற்சிகளைத் தொடருவர். ஆனால், இந்த வகையிலும், நடிகர் திலகம் நிறைய வெற்றிகளைத் தான் பெற்றார். இந்தப் பாடல், அவருடைய சோதனை முயற்சிகளில் தோல்வியைத் தழுவிய சில முயற்சிகளில் ஒன்று.

இந்தப் படத்தின் மூலம் "புத்தி மந்துடு" என்னும் தெலுங்குப் படம். அறுபதுகளின் இறுதியில், அக்கினேனி நாகேஸ்வர ராவ் இரட்டை வேடத்தில் நடித்து, மிகப் பெரிய வெற்றியை அடைந்த படம். ஆந்திர தேசத்தில், சமூகப் படங்களில், எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம், இறையாம்சத்தைப் புகுத்தி வெற்றி பெறுவார்கள். ராமனையும், கிருஷ்ணனையும் சிறிய சந்தர்ப்பத்தில் கூட, நினைவு கூர்ந்து, வெற்றியை அடைவார்கள். தமிழிலோ, சொற்பமாக வெகு சில படங்கள் தான், இந்த முயற்சியில் வெற்றி அடைந்திருக்கிறது. "எம கோலா" தமிழில் "எமனுக்கு எமன்" ஆகி, தோல்வியைத் தழுவியது ஒரு சிறிய உதாரணம். (ஏற்கனவே இது பல வருடங்களுக்கு முன் வெளி வந்த "ரம்பையின் காதல்" படத்தின் தழுவல் தான் என்பது வேறு விஷயம். இதுவே பின்னர் "அதிசயப்பிறவி" ஆகி, ரஜினி நடித்தே தோல்வியைத் தான் தழுவியது.) மனிதனும் தெய்வமாகலாம் படம் தோல்வி அடைந்ததற்கு இன்னொரு முக்கிய காரணம், நீங்கள் கூறியது போல், குன்னக்குடியாரின் இசை. நடிகர் திலகத்துக்கு சீர்காழி குரல் கொடுத்து மூன்று பாடல்கள். பாடல்கள் கேட்க நன்றாயிருந்தாலும், அந்தக் குரல் நடிகர் திலகத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே, சோதனை செய்து, தோல்வியைக் கொடுத்த குரல். படத்தின் தோல்விக்கு இன்று காரணம், ஜோடிப் பொருத்தம். உஷா நந்தினி அவருக்கு முதலில் இருந்தே சரியாக அமையாத ஜோடி. (இது என் சொந்த அபிப்பிராயம்.).

நான் தெலுங்குப் படத்தை பல வருடங்களுக்கு முன்னர் பார்த்திருந்தாலும், தமிழில், இது வரை இந்தப் படத்தைப் பார்த்ததில்லை. ஏனோ சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. நீங்கள் கூறியது போல், dvd சீக்கிரம் வந்தால், உடனேயே வாங்கிப் பார்க்க வேண்டும்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

HARISH2619
5th August 2011, 01:33 PM
டியர் பம்மல் சார் மற்றும் ராகவேந்திரா சார்,
நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு தாங்கள் அளித்துவரும் சேவை மகத்தானது .எள் என்றால் எண்ணெய்யாக வந்து நிற்கிறீர்கள். இதற்க்கெல்லாம் கைமாறாக நன்றி என்ற ஒற்றை சொல்லில் எங்கள் உணர்ச்சிகளை சொல்லிவிட முடியாது .பெற்றவர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளுக்கு எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சேவை செய்வார்களோ அதேபோல் சிவாஜி ரசிகர்களுக்கு தாங்கள் சிரமம் பார்க்காமல் சேவையாற்றி வருகிறீர்கள் .கண்டிப்பாக நடிகர்திலகத்தின் ஆத்மா தங்களை வாழ்த்திகொண்டிருக்கும்.

DEAR ARAVIND,
A VERY WARM WELCOME TO YOU,PLEASE CONTINUE YOUR VIEWS ON NT.

DEAR KUMARESAN SIR,
Thankyou very much for the sweet news which every sivaji rasigan was waiting for.please make sunday evening gala the talk of the town.In my opinion instead of releasing a classic try to get the movies which has mass appeal such as vasantha maaligai,thangapadhakkam,deivamagan,engal thanga raaja etc...
please let me know the events related to NT.my no.9632227017

Plum
5th August 2011, 01:34 PM
Yet another generation. Yet another fancy dress competition. The same veera pandiya kattabomman.
Dressed up my daugther as the great freedom fighter, showed her youtube of the great scenes, taught her the lines - and she picked up really well - and paraded her only to find that 279* other parents had got the same idea. I should have known.

Anyway, daughter got stage fear and conked out at vayalukku vandhAyA, that's another story. But the baton's been passed on - and He continues to dazzle - registered in the minds of my daughter as *sivaji uncle* - uncle to a generation young enough to be great-grand daughter.

Duty done.

* exaggeration alert - prosaic licence

goldstar
5th August 2011, 02:41 PM
Yet another generation. Yet another fancy dress competition. The same veera pandiya kattabomman.
Dressed up my daugther as the great freedom fighter, showed her youtube of the great scenes, taught her the lines - and she picked up really well - and paraded her only to find that 279* other parents had got the same idea. I should have known.

Anyway, daughter got stage fear and conked out at vayalukku vandhAyA, that's another story. But the baton's been passed on - and He continues to dazzle - registered in the minds of my daughter as *sivaji uncle* - uncle to a generation young enough to be great-grand daughter.

Duty done.

* exaggeration alert - prosaic licence

Plum sir,

Wow wow, I liked your narration and enjoyed it. Thanks a lot

joe
5th August 2011, 02:44 PM
and paraded her only to find that 279* other parents had got the same idea. I should have known.
:rotfl: அதே நேரத்துல அந்த படத்துல நடிகர் திலகம் தவிர வேறு யாரு நடித்திருந்தாலும் அது பத்தோடு பதினொன்றான ஒரு பாத்திரமாவே போயிருக்கும் .

groucho070
5th August 2011, 02:54 PM
Plum :lol: Joe, exactly. Reminds me of Sathyaraj's quote about what if actual VPK sounded different.

abkhlabhi
5th August 2011, 03:53 PM
Dear Kumaresan ,

My office ph.no. is 23626417 / 23626976. I will be in office between 9.30 a.m. to 6.30 p.m.

RAGHAVENDRA
5th August 2011, 05:06 PM
http://www.extramirchi.com/wp-content/uploads/2010/01/Ilayaraja-Padmabhushan-award-3.jpg (https://snapjudge.wordpress.com/2007/07/12/ilaiya_raja_sivaji_music_kavariman/)


சிவாஜி பாட்டை பாராட்டினார் இளையராஜா

https://snapjudge.wordpress.com/2007/07/12/ilaiya_raja_sivaji_music_kavariman/


விவரங்களுக்கு படத்தைச் சொடுக்கவும்

KCSHEKAR
5th August 2011, 05:33 PM
பம்மலார் சார்,

'கோடு போட்டால் போதும், அதில் ரோடு போட்டு விடுவார்' என்ற சொல்வழக்கு உங்களுக்குத்தான் பொருந்தும். நடிகர்திலகத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்ததற்கு, மலையாளப்பட உலகினர் பாராட்டுவிழா நடத்தியதை, முரளிசார் ஒரு செய்தியாகப் பதிப்பித்தார்.

உடனே அது சம்மந்தமாக அப்போதைய நியூஸ்பேப்பர் கட்டிங்ஸ்களை அப்படியே அள்ளித்தந்து மலைக்க வைத்ததுடன், நடிகர்திலகத்தின் ரசிகர்கள் எப்போதும் எதையும் வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று போகிற போக்கில் அள்ளி விட்டுப்போகிறவர்கள் அல்ல. எந்த ஒன்றையும் ஆதாரத்துடன் அடிப்பவர்கள் என்ற பேருண்மையை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள்.

நீங்களும் ராகவேந்தர் சாரும் அள்ளி அளித்து வரும் புதையல்களுக்கு நன்றி சொல்லியெல்லாம் மாளாது. அதுக்கெல்லாம் மேலே போய் விட்டீர்கள்.

exactly said.

Arvind Srinivasan
5th August 2011, 09:51 PM
Just got to remember a film in which NT plays a sailor and the whole plot happens in a ship. Maybe one of his later roles. Never got to see the film completely though and i also forgot its name. Can someone help me with this. Might be helpful if i wish to see the movie sometime later

J.Radhakrishnan
5th August 2011, 10:30 PM
டியர் பாலா சார்,
தாங்கள் வழங்கிய நண்பர் ரவியின் கவிதை அருமை, அதில் குறிப்பாக இந்திய தேசத்தில் உன்னைப் போல நடிகர் இல்லை
இந்தியாவோ உனக்கு தேசியவிருதை தரவே இல்லை
எனும் வரிகளை படிக்கும் போது வருத்தம் வரவில்லை, ஏனென்றால் சமீபத்தில் சிறந்த நடிகர் என விருது வாங்கியவர் பட்டியலை பார்க்கும் போது
இவர் வாங்காததே மேல் என்றே தோன்றுகிறது

J.Radhakrishnan
5th August 2011, 10:53 PM
Just got to remember a film in which NT plays a sailor and the whole plot happens in a ship. Maybe one of his later roles. Never got to see the film completely though and i also forgot its name. Can someone help me with this. Might be helpful if i wish to see the movie sometime later

Welcome Mr.Arvind,

That film is "Chiranjeevee" in 1984.

pammalar
6th August 2011, 03:53 AM
Dear Mr.Arvind Srinivasan,

A warm & rousing welcome to you to our NT thread.

Thanks a lot for your kind words.

Very eager to read your forthcoming posts.

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
6th August 2011, 04:06 AM
Thanks, goldstar Satish. Dinamalar NT video clip is crisp.

Thank you, Mr.kumareshanprabhu.

Thank you very much, Rangan Sir.

டியர் ராகவேந்திரன் சார்,

பழம்பெரும் நடிகர் எம்.எஸ்.உமேஷ் அவர்களை நினைவுகூர்ந்து அளித்த மக்கள ராஜ்யா கன்னடப்படப் பதிவு அருமை.

ஜோதிமயமான பெங்களூரு நினைவாஞ்சலி நிழற்படங்களுக்கு தங்களுக்கும், திரு.குமரேசன்பிரபு அவர்களுக்கும் நன்றி !

டியர் கிருஷ்ணாஜி,

நடிகர் திலகத்தைப் பற்றிய அரிய தகவல்களை உள்ளடக்கிய தங்கள் பதிவுகள் அருமை.

டியர் முரளி சார்,

மிக்க நன்றி ! உண்மைகளை உரிய நேரத்தில் உரக்க ஒலிப்போம் !

டியர் பாலா சார்,

நடிகர் திலகத்தை ஆராதிப்பதில் கவிஞர் ரவி தேனருவி !

டியர் mr_karthik,

தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !

டியர் செந்தில் சார், பாராட்டுக்கு நன்றி !

டியர் சந்திரசேகரன் சார், மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th August 2011, 04:44 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

மக்கள ராஜ்யா(கன்னடம்)

[5.8.1960 - 5.8.2011] : 52வது உதயதினம்

அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4269a.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
6th August 2011, 11:16 AM
டியர் பம்மலார்,
மககள ராஜ்ய ஸ்டில் சூப்பரோ சூப்பர்.... எங்கிருந்து தான் பிடிக்கிறீர்களோ... கலக்கல்...மிக்க நன்றி....
அடியேன் முடிந்த வரை அதனை கணினியில் மெருகேற்றி யிருப்பதாக எண்ணி இங்கே மீண்டும் தருகிறேன்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/makkalarajyafw.jpg

சரியில்லையென்றால் மன்னித்தருள வேண்டுகிறேன்.

அன்புடன்

RAGHAVENDRA
6th August 2011, 12:12 PM
மிகப் பிரபலமான வி.ஐ.பி. ஒருவர் சமீபத்தில் நடிகர் திலகத்தை வரைந்த ஓவியம் கீழே தரப்பட்டுள்ளது. அதை வரைந்தவர் யார் என்று உடனடியாக உரைக்கும் எண்ணம் இல்லை. கண்டு பிடியுங்கள்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ntportraitab.jpg

அன்புடன்

RAGHAVENDRA
6th August 2011, 12:32 PM
06.08.2011 அன்று அரங்கேற்றம் காணவுள்ள திரு ஒய்.ஜீ.மகேந்திரா அவர்களின் நாடகம் மாபெரும் வெற்றி பெற நம் இணையதளம் சார்பில் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். இந்நாடகத்தின் சிறப்பம்சம் நடிகர் திலகம் பேசுவது போன்று ஒரு காட்சி இடம் பெறுவதாகும். இக் காட்சிக்கான நடிகர் திலகத்தின் குரலை நடிகர் சின்னி ஜெயந்த் அவர்கள் வழங்கியிருக்கிறார்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/YGEEMNAATAKAM.jpg

திரு ஒய்.ஜீ.மகேந்திரா மற்றும் அவர்தம் நாடகக் குழுவினருக்கு நமது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்

vasudevan31355
6th August 2011, 05:10 PM
Dear raghavendra sir,
I am a new member. First of all my great salute for the senior most members like Murali sir, Pammalar sir, saradha madam and the great U [Raghavendra sir]. I am very glad to join the hub.Always I need all of your blessings first.

Thanking all of U

goldstar
6th August 2011, 05:27 PM
Dear raghavendra sir,
I am a new member. First of all my great salute for the senior most members like Murali sir, Pammalar sir, saradha medam and the great U [Raghavendra sir]. I am very glad to join the hub.Always I need all of your blessings first.

Thanking all of U

Welcome Mr. Vasu to our NT thread. Please let us know your experience with NT movies?

Sathish

vasudevan31355
6th August 2011, 10:03 PM
நன்றி சதீஷ் சார் ! தங்களின் ஊக்கப் படுத்தலுக்கு . சற்றே பயத்துடன் இந்தக் கோவிலுக்குள் முதன் முதலாக நுழைகிறேன். பிழைகளை அனைவரும் பொறுத்துக் கொள்க . ஜாம்பவான்களின் கோட்டையில் எனக்கும் ஒரு சிறு இடம். இதயம் பூரிப்படைகிறது. நம் இதய தெய்வத்தை வணங்கி ராமபிரானுக்கு அணில் உதவி செய்தது போல என்னால் இயன்றதை செய்வேன் என்று மட்டும் கூறி , விரைவில் திரை உலக பீஷ்மரின் ' கருடா சௌக்கியமா ' காவியத்தைப் பற்றி உங்களுடன் முதன் முறையாக பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்ற சந்தோஷத்தில் விடை பெறுகிறேன் தற்சமயம். நன்றி! நன்றி!

RAGHAVENDRA
6th August 2011, 10:50 PM
அன்புமிக்க நண்பர் வாசுதேவன் அவர்களுக்கு,
தங்கள் வரவு இத்திரிக்கு புதிய பரிணாமத்தை அறிமுகப் படுத்தும் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை. இத்திரியில் இருக்கும் அனைவரிடமும் இருப்பதை விட நடிகர் திலகத்தின் படங்களை தாங்கள் அதிகம் வைத்திருப்பீர்கள் என்று நான் எண்ணுகிறேன். தங்கள் சார்பாக தங்களை இங்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். திரு வாசுதேவன் அவர்கள் தீவிர - அதி தீவிர - அதி அதி தீவிர -- அதற்கும் மேலே என்று ஏதாவது வார்த்தை இருந்தால் தாங்கள் நிரப்பிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் மேல் உயிரையே வைத்திருப்பவர். நம்மைப் போல் நடிகர் திலகத்தை நினைத்தாலே உணர்வுகளுக்கு ஆளாகி விடுவார். அவருடைய பெரும்பாலான படங்கள் அவருக்கு அத்துப் படி. தான் இருப்பது சற்றே உள்வாங்கிய கிராமம் போன்ற சிற்றூர் என்றாலும் உலக அளவில் அனைத்து விஷயங்களையும் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர். குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்கள். நவீன தொழில் நுட்பங்களையும் அறிந்திருப்பவர். சொல்லிக் கொண்டே போகலாம். அவருடைய வரவு, மீண்டும் சொல்கிறேன், நம் ஹப்பிற்கு புதிய பரிணாமத்தைத் தரும் என்று நாம் எதிர் பார்க்கலாம்.

வருக, வருக, வருக வாசுதேவன் அவர்களே

அன்புடன்

RAGHAVENDRA
6th August 2011, 10:56 PM
இதை எழுதும் போது 06.08.2011 இரவு மணி 10.52. சற்று முன் தான் வாசுதேவன் அவர்களைப் பற்றிய சிறு அறிமுகம் செய்து முடிக்கவில்லை. அதற்குள் மீண்டும் அவரைப் பற்றி சொல்ல ஒரு விஷயம். சில பதிவுகளுக்கு முன் தாங்கள் பார்த்திருக்கக் கூடிய வணங்காமுடி காணொளியினை வழங்கியவர் இவர்தான். அவரைப் பற்றி எண்ணிக் கொண்டே எழுதும் போது, ஹிந்து பத்திரிகையில் நாளை 07.08.2011 காலை இடம் பெறக் கூடிய ராண்டார் கய் அவர்களின் குறிப்புரையினை இணையத்தில் படிக்க நேர்ந்தது. அவர் குறிப்பிட்டுள்ள படம்

வணங்காமுடி

வாசுதேவனைப் பற்றி எழுதும் போது வணங்காமுடி வருவது என்ன பொருத்தம்...

இதோ வணங்காமுடி திரைப்படத்தினைப் பற்றிய குறிப்புரையினை இப் படத்தைச் சொடுக்கிப் பாருங்கள், படியுங்கள்

http://www.thehindu.com/multimedia/dynamic/00745/07cptb_vanagamudi_j_745977e.jpg (http://www.thehindu.com/arts/cinema/article2330545.ece)

அன்புடன்

Murali Srinivas
6th August 2011, 11:00 PM
அன்புள்ள நெய்வேலி வாசுதேவன் அவர்களே,

இந்த திரிக்கு புதிதாய் வரும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நடிகர் திலகத்தின் பாடல் வரிகளையே வரவேற்புரையாக வாசிப்பது வழக்கம். உங்களுக்கும் அதே முத்தான வரிகள்

நல்ல இடம் நீங்கள் வந்த இடம்!

உங்கள் அனுபவ பதிப்புகளை படிக்க ஆர்வம் ஏற்படுகிறது. காரணம் இரண்டு. ஒரோருவரின் ரசிப்பு தன்மையை ஒட்டி வெளிப்படும் எண்ணங்கள் வித்தியாசப்படும் என்பது முதல் காரணம் என்றால் இங்கே யாரும் அவ்வளவாக தங்கள கருத்துகளை பதிவுசெய்யாத கருடா சௌக்கியமா படத்தைப் பற்றி பதிவிடப் போகிறேன் என்று நீங்கள் சொல்லியிருப்பது இரண்டாவது காரணம். அது மட்டுமல்ல முதலில் எடுத்தவுடன் 80-களில் வெளியான ஒரு படத்தை பற்றிய பதிவு என்பதும் மேலும் ஒரு காரணம்.

அண்மைக் காலத்தில் எப்படி சாந்தியில் வெளியான படங்களுக்கு வெளியில் நடைபெற்ற கொண்டாட்டங்களை அழகான ஒளி ஓவியமாக்கினீர்களோ அதே போல் இந்த மன்றத்தில் உங்கள் பங்களிப்பும் இனிதாக அமைய வாழ்த்துகள்!

அன்புடன்

Arvind Srinivasan
6th August 2011, 11:14 PM
After his phenomenally successful debut in Parasakthi (1952), Sivaji Ganesan who had struggled long for recognition, surprisingly did not have producers and filmmakers making a beeline for his door with scripts. There was a lull after Parasakthi and he donned anti-hero roles in movies such as Rangoon Radha and Andha Naal. One such film where he excelled in his role was Thirumbi Paar.

(Years later, he told this writer that his performance in this film was one of his career best.) A Modern Theatres production, Thirumbi Paar, directed by T. R. Sundaram, was an interesting film in which Sivaji Ganesan played a role with negative shades. The character dabbles in avenues such as journalism and politics.

Written by Mu. Karunanidhi, it drew inspiration from the folk myth of Saint Arunagirinathar and his sister, and the Ahalya episode. Karunanidhi’s dialogue was brilliant, filled with innuendoes and political satire.

During that period as the DMK was beginning to make its presence felt, the Movement was condemned by Pandit Jawaharlal Nehru, the then Prime Minister, as “Nonsense!” In a brilliant satirical stroke, Karunanidhi had Sivaji Ganesan utter these words several times, wearing dark glasses (a la Pandit Nehru!).

A sequence, inspired by the Ahalya episode, was shot for the film. According to the Hindu epic, Lord Indra is attracted to Ahalya, a sage’s wife. He transforms himself into a rooster and crows well before dawn to lure the sage away from his hermitage to the riverside to begin his early morning prayers. He then visits Ahalya in the guise of the sage and seduces her.

The sage at the riverside through gnana drishti (mind’s eye) realises what had happened and curses Indra inflicting his body with one thousand orifices and turns Ahalya into a stone…

In the film, T. P. Muthulakshmi plays the dumb wife of an elderly husband (K. A. Thangavelu) who goes to work early. Sivaji Ganesan, a seducer, who sneaks into the dumb woman’s house, alters the clock to send the husband away well before the usual time. This sequence was mercilessly scissored by the censors and what was left lost its touch of satire and innuendo!

Sivaji Ganesan was brilliant playing the fraud to the hilt. Pandari Bai was his sister who in the climax offers herself to him.

Others included Krishnakumari (Sowcar Janaki’s sister), seduced and abandoned by the anti-hero, P. V. Narasimha Bharathi, Girija, Thangavelu, and T. S. Dorairaj as Sivaji Ganesan’s sidekick. Thirumbi Paar was racily narrated on screen in characteristic Modern Theatres style by T. R. Sundaram. There were also melodious songs and one particular song, a satire on society, “Kalappadam… kalapadam…engum edhilum kalapadam…” (music by G. Ramanathan and sung by S. C. Krishnan) was a hit.

Thirumbi Paar fared well at the box office and acquired the status of a mini cult film because it had political innuendoes.

Remembered for Sivaji Ganesan’s brilliant performance, Karunanidhi’s whiplash political satire and pleasing music

Got this from the hindu

RAGHAVENDRA
7th August 2011, 12:01 AM
After his phenomenally successful debut in Parasakthi (1952), Sivaji Ganesan who had struggled long for recognition, surprisingly did not have producers and filmmakers making a beeline for his door with scripts. There was a lull after Parasakthi and he donned anti-hero roles in movies such as Rangoon Radha and Andha Naal.

Dear Sri Aravind Srinivasan,
These lines were absolutely irrelevant in the write-up by Randor Guy and not true. I expressed my strong sentiments to The Hindu for such kind of irrelevant remarks immediately. Even when Paraasakthi was under progress, NT was working under various banners for different projects and during the period between 17.10.1952 [release date of Paraasakthi] and 09.12.1954 (2 years, 2 months, i.e. 26 months approx.), he has given 19 films, i.e. his 19th film Edhirpaaraadadhu, released on 09.12.1954). 19 films in 26 months - does that mean that there was no body to buy him? These kind of ill-perceptions were what we in our hub have been clarifying and rectifying and Mr. Murali Srinivas, Saaradha, Karthik and friends have put forth valid and undisputable arguments here. I would advise you to go through all the previous 6 parts of this thread and I am sure you would get the real dimension of the holy soul called Nadigar Thilagam.

I am extremely happy to read your posts and eager to see more from you,

Beloved,
Raghavendran

pammalar
7th August 2011, 02:36 AM
டியர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

எதற்கு பெரியபெரிய வார்த்தைகளெல்லாம்?!

நிழற்படத்தை ஒரிஜினல் ஸ்டில் போல் ஆக்கியதற்கு அடியேன் தங்களுக்கு பணிவான நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th August 2011, 02:59 AM
டியர் நெய்வேலி வாசுதேவன் சார்,

நடிகர் திலகத்தின் ரசிக ரத்னமான தங்களை ரத்ன கம்பளம் விரித்து "வருக! வருக!" என அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். நடிகர் திலகத்தின் கிட்டத்தட்ட அனைத்து திரைக்காவியங்களினுடைய வீடியோ பிரதிகளையும் சேகரித்து வைத்திருக்கும் காவியக்களஞ்சியமான தாங்கள், தங்களது சிறப்புப்பதிவுகளை "கருடா சௌக்கியமா" காவியக் கண்ணோட்டத்துடன் ஆரம்பிக்கப்போவது குறித்து அளவிலா மகிழ்ச்சி !

தொடரட்டும் தங்களின் திருத்தொண்டு !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th August 2011, 04:11 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

நடிகர் திலகம் ஒரு "நிறைகுடம்"

[8.8.1969 - 8.8.2011] : 43வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : செப்டம்பர் 1969
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4270a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
7th August 2011, 07:57 AM
டியர் ஸ்வாமி,
நிறைகுடம் விளம்பரம் வெளியிட்டு அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

இத்திரைப்படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள குறுந்தகடுகளின் முகப்புகள் இதோ

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/niraikudamvcdcovers.jpg

அன்புடன்

RAGHAVENDRA
7th August 2011, 08:12 AM
நிறைகுடம் திரைக்காவியத்தின் பாடல்கள்-

பொருள் நிறைந்த பாடல், வெவ்வேறு சூழ்நிலைகளில் காதலை விளக்கும் பாடல், தேவா தேவா... அழைக்கின்றேன் தேவா... டி.எம்.எஸ்., பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில்... கல்லூரி விழாவில் நாயகனும் நாயகியும் கலைநிகழ்ச்சி நடத்துவதாக சூழ்நிலையில் இடம் பெற்ற பாடல்.


http://www.youtube.com/watch?v=iI-QHaUzgSY

சூழ்நிலையை விளக்கும் பாடல். கதாநாயகி எதிர்பாராத சம்பவத்தில் பார்வை இழந்து விடுகிறாள். அவளுடைய துன்பங்களுக்கு காரணமானவன் அசந்தர்ப்பமாக அவளுடைய காதலனே என்று அறியாமல் அவனை வெறுக்கிறாள். காதலன் தன் மீது சுமத்தப் படும் பழியைப் பொருட்படுத்தாமல் அவளுக்குக் கண்பார்வை கிடைக்க ஏற்பாடு செய்கிறான். அவளுக்குப் பார்வை திரும்பும் சூழ்நிலையில் இப்பாடல் இடம் பெறுகிறது.


http://www.youtube.com/watch?v=yTq4QV6mHhA

இந்த நிலைகளெல்லாம் ஏற்படுவதற்கு முன் இருவரும் காதலித்து மகிழ்ச்சியாய் இருந்த நேரத்தில் இடம் பெறுவதாக அமைந்த பாடல். மெல்லிசை மாமணி குமார் அவர்களின் இசையில் காலத்தால் அழியாக மிகச் சிறந்த பாடல். நடிகர் திலகத்தின் படங்களில் குமார் இசையமைத்த ஒரே படம்.


http://www.youtube.com/watch?v=KcZwnJnkLak

01.05.1969 அன்று சென்னை மிட்லண்ட் திரையரங்கில் வெளியான அடிமைப் பெண் திரைப்படம் 08.08.1969 அன்று 100வது நாளை எட்டியதால் நடிகர் திலகத்தின் வேண்டுகோளை ஏற்று தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் சென்னையில் மட்டும் ஒரு நாள் தள்ளி 09.08.1969 அன்று வெளியிட்டனர். மற்ற அனைத்து ஊர்களிலும் நிறைகுடம் 08.08.1969 அன்று வெளியானது.

அன்புடன்

RAGHAVENDRA
7th August 2011, 09:43 AM
சற்று முன் வந்த தகவல்

http://img257.imageshack.us/img257/18/etraja.jpg

நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த வெற்றிப் படமான எங்கள் தங்க ராஜா தற்போது நெடுந்தகடு வடிவில் வெளியிடப் பட்டுள்ளது. நம்முடைய ஏவி.எம். SOUNDZONE விற்பனைக் கூடத்தில் வாங்கிக் கொள்ளலாம். மற்றும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்பனைக்கு உள்ளது.

அன்புடன்

vasudevan31355
7th August 2011, 10:51 AM
ரசிக முதல்வர் திரு.ராகவேந்திரன் சார், பண்பாளர் பம்மலார் சார், முத்தான முரளி சார், மற்றும் திரு.சதீஷ் சார்,
தங்கள் அனைவருக்கும் என் ஆனந்தக் கண்ணீரை நன்றியாய் காணிக்கை ஆக்குகிறேன்.
நன்றி! நன்றி!
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்.

pammalar
7th August 2011, 08:53 PM
வீடியோவேந்தர் ராகவேந்திரன் சார்,

பாராட்டுக்கு நன்றி !

"நிறைகுடம்" பாடல்களின் வீடியோக்களுக்கும், "எங்கள் தங்க ராஜா" dvd வருகை அறிவிப்புக்கும் மனமார்ந்த நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
7th August 2011, 10:01 PM
கலையின் தாக்கம்
[தொடர்கிறது...]

[ஆக்கம் : வெ.சீனிவாசன்]

(அறிவுபூர்வமாக அல்லாமல் இதயத்தின் வழியாக உணர்வுபூர்வமாக இக்கவிதையை அணுக வேண்டுகிறேன். ஏனெனில் அதீதமான கற்பனையின் அடிப்படையில் பிறந்தது இக்கவிதை.)

நடிகர் திலகமும் ரசிகர்களும்

நடிகர் திலகமே ! திரைப்படங்களில்

- நீ 'பழநி'யாக ஏர்பிடித்து உழுதபொழுது நாங்கள் நிலத்தில் இடுவதற்கு விதைநெல் தேடினோம் !

- நீ 'ரஹீ'மாகத் தொழுதபொழுது எங்கள் நெற்றியில் தழும்பு ஏறியது !

- நீ கிறித்துவப் பாதிரியாராகி உபதேசித்தபொழுது பிறருக்காகப் பிரார்த்தனை செய்ய எங்கள் உள்ளம் விழைந்தது !

- நீ உயர்ந்த மனிதனாக நடந்த போது எங்கள் கால்களுக்கு மிடுக்கு வந்தது !

- நீ டாக்டராக நடித்த போதெல்லாம் எங்கள் கைகளில் ஸ்டெதாஸ்கோப் இருந்தது !

- நீ 'ஆனந்த்'தாக இருமியபோது எங்கள் வாயில் ரத்தம் கசிந்தது !

- நீ சாப்பாட்டு ராமனாய் பிரம்படிபட்டபோது வலிதாங்காமல் 'அய்யோ' என நாங்கள் அலறித் துடித்தோம் !

- நீ 'தியாகு'வாக கால்கள் முடமானபோது செயலிழந்த நாங்கள் சக்கர நாற்காலிகளைத் தேடினோம் !

- நீ 'சுப்பையா பிள்ளை'யாய் விரல்கள் தேய மிருதங்கம் வாசித்தபோது எங்கள் கரங்களில் குருதி கசிந்தது !

- நீ 'கோபால்'ஆக கிளைமாக்ஸில் கைதான போது, எங்கள் கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டன !

- நிறைகுடமான நீ கண்மருத்துவராக அறுவை சிகிச்சை செய்தபோது 'சினிமா தியேட்டர்' 'ஆபரேஷன் தியேட்டர்' ஆனது !

- நீ 'பாலு'வாக குண்டடிபட்டு விந்திவிந்தி நடக்கும் நடை எங்களின் ஏகோபித்த ஸ்டைல் நடையானது !

- நீ 'மாணிக்க'மாக சவால்களை சமாளித்து தேர்தலில் வென்றபோது எங்கள் கழுத்தில் வெற்றிமாலைகள் குவிந்தன !

- 'யாரை நம்பி நான் பொறந்தேன்' என நீ 'விஜயரகுநாத சேதுபதி'யாய் முழங்கியபோது சொந்தக்காலில் நின்று ஜெயிக்க வேண்டும் என்ற வெறி எங்களை ஆட்கொண்டது !

- 'உப்பிட்டவரை உள்ளளவும் போற்ற வேண்டும்' என 'பாபு'வைப் பார்த்து செய்நன்றியின் மகத்துவம் அறிந்தோம் !

தொடரும்...

pammalar
8th August 2011, 12:08 AM
by any chance u have the video coverage of Ponvila, savalasamale function, Chavlier functions videos sir


Dear Mr. kumareshanprabhu,

Here is the print media coverage of our NT's PONVIZHA celebrated in 1986.

For the clips please see my next post.

Regards,
Pammalar.

pammalar
8th August 2011, 12:20 AM
பொன்விழா நாயகன்

கலைக்குரிசிலின் 50 ஆண்டு கலைச்சேவையை பாராட்டும் விழா
மற்றும் அவரது 59வது பிறந்தநாள் விழா

1.10.1986 : புதன் : சென்னை

[விழா நிகழ்வுகளின் அபூர்வ தொகுப்பு]

வரலாற்று ஆவணங்கள் : "மருதாணி" இதழ் சிறப்பு மலர் : 10.10.1986
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4271a-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4272a-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4273a-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4274a-1.jpg

விழா களைகட்டும்.....

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
8th August 2011, 08:14 AM
அன்பு பம்மலார் சார்,

'கலை வித்தகரின்' 59 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 50

ஆண்டு கலைச் சேவை பாராட்டு விழா தொகுப்புகள் அருமையோ அருமை!

கோடானு கோடி நன்றிகள் .

பாசத்துடன்,

நெய்வேலி வாசுதேவன்.

RAGHAVENDRA
8th August 2011, 10:15 AM
டியர் பம்மலார்,
கலையின் தாக்கம், நிறைகுடம் விளம்பரம், பொன் விழா மலர் பக்கங்கள் என ஆவணக் காப்பகத்தினையே நிறுவி விட்டீர்கள். பாராட்டுக்கள்..

அன்புடன்

RAGHAVENDRA
8th August 2011, 10:18 AM
ஹிந்து நாளிதழில் திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சமீபத்தில் வெளியிட்டுள்ள நெடுந்தகட்டினைப் பற்றிய செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது. நெடுந்தகட்டினை அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டார்.

கீழ்க்காணும் நிழற்படத்தினை சொடுக்கி ஹிந்து நாளிதழின் பக்கத்தினை இணையத்தில் காண்க.


http://www.thehindu.com/multimedia/dynamic/00746/05aug_tysms06_sivaj_746631e.jpg (http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2332583.ece)

அன்புடன்

Subramaniam Ramajayam
8th August 2011, 11:04 AM
Dear friends.
I am ramajayam retd bank manger today got entry to the hub. thanks to raghavendran and friends for giving this oppurtunity on the wonderful day known as FRIENDSHIP DAY
All along i have been enjoying the writings of our fellow rasigargal and it is really very great to hear speak about NADIGARTHILAGAM LIKE WATCHING THE GIANT'S PERFORMANCES.
CONGRATS TO TRICHY SIVAJI RASIKAR MANDRAM who has released the latest dvd
good luck

vasudevan31355
8th August 2011, 11:42 AM
டியர் ராகவேந்திரன் சார்,

திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சமீபத்தில் வெளியிட்டுள்ள நெடுந்தகட்டினைப் பற்றிய செய்தி தந்தமைக்கு உளம் கனிந்த நன்றி. நெடுந்தகடு

வாங்கி விட்டீர்களா?

உங்கள் அன்பன்
Neyveli vasudevan.

KCSHEKAR
8th August 2011, 01:14 PM
வருக நெய்வேலி வாசுதேவன் அவர்களே, வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சித் தொகுப்புகள் அருமை - நன்றி பம்மலார் அவர்களே! Welcome to Mr.Ramajayam Sir to the hub.

RAGHAVENDRA
8th August 2011, 02:33 PM
Dear friends.
I am ramajayam retd bank manger today got entry to the hub. thanks to raghavendran and friends for giving this oppurtunity on the wonderful day known as FRIENDSHIP DAY
All along i have been enjoying the writings of our fellow rasigargal and it is really very great to hear speak about NADIGARTHILAGAM LIKE WATCHING THE GIANT'S PERFORMANCES.
CONGRATS TO TRICHY SIVAJI RASIKAR MANDRAM who has released the latest dvd
good luck

Dear Sir,
A very happy warm welcome to the world of NT. Your presence would make a great asset to all of us here. And your vast experience as a NT fan would enlighten the new generation fans on the glory of NT.
And it is our set of moderators to whom our sincere thanks are to be submitted. I personally thank the moderators for encouraging newcomers to the HUB and giving them opportunity to share their expertise in different subjects.
THANK YOU MODERATORS
Raghavendran.

RAGHAVENDRA
8th August 2011, 02:35 PM
டியர் வாசுதேவன்,
திருச்சி மாவட்ட மன்றத்தினர் தயாரித்துள்ள நெடுந்தகடு சென்னையில் இன்னும் விற்பனைக்கு வந்ததாகத் தெரியவில்லை. வந்தவுடன் நிச்சயம் தெரிவிக்கிறேன். நானும் அதற்காகத் தான் காத்திருக்கிறேன்.

அன்புடன்

parthasarathy
8th August 2011, 03:43 PM
Dear raghavendra sir,
I am a new member. First of all my great salute for the senior most members like Murali sir, Pammalar sir, saradha medam and the great U [Raghavendra sir]. I am very glad to join the hub.Always I need all of your blessings first.

Thanking all of U

Dear Shri. Vasudevan,

We extend to you a very warm welcome. Even though I joined the glorious world of NT since Saraswathi Sabatham days, I got the opportunity to enter into this glorious hub only in February 2011. It's really heartening to note that this hub is getting strengthened every day by new members and with the entry of seasoned Fans like you, it will go from strength to strength in the future.

It's even more heartening to note that your first review/posting will be on his later but; very good movie "Garuda Sowkyama".

Anxiously awaiting your posts and experiences about NT,

Regards,

R. Parthasarathy

parthasarathy
8th August 2011, 03:48 PM
Dear friends.
I am ramajayam retd bank manger today got entry to the hub. thanks to raghavendran and friends for giving this oppurtunity on the wonderful day known as FRIENDSHIP DAY
All along i have been enjoying the writings of our fellow rasigargal and it is really very great to hear speak about NADIGARTHILAGAM LIKE WATCHING THE GIANT'S PERFORMANCES.
CONGRATS TO TRICHY SIVAJI RASIKAR MANDRAM who has released the latest dvd
good luck

Dear Shri. Ramajayam,

Even though we 've been hearing from you a lot whenever we meet you in some NT screenings, the actual pleasure will be in the form of seeing your writings only, which can be saved and treasured.

We welcome you, sir to this glorious thread. As indicated to Mr. Neyveli Vasudevan, this hub is surely, going places with the addition of veterans like you and Mr. Vasudevan. With experts like M/s. Raghavendran, Murali, Pammalar, Saradha Madam and other senior hubbers, this hub is going to be a treat and will serve as a treasure in the years to come.

Eagerly awaiting to enjoy your postings/reviews on NT,

Regards,

R. Parthasarathy

RAGHAVENDRA
8th August 2011, 03:49 PM
உரிமைக்குரல் மாத இதழ் வெளியிட்டுள்ள, நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றிச் சித்திரமான எங்கள் தங்க ராஜா திரைக்காவியத்தின் நெடுந்தகட்டின் நிழற்படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/etrfrfw.jpg

நடிகர் திலகத்தின் பல திரைப்படங்களை பேதம் பாராது வெளியிட்டு வரும் உரிமைக்குரல் மாத இதழ் நிறுவனத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நமது உளமார்ந்த பாராட்டுக்கள். எதிர்காலத்தில் மேலும் பல நல்ல திரைப்படங்களை வெளியிட்டு வெற்றி பெற நமது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

ஒரு வேண்டுகோள்

எங்கள் தங்க ராஜா திரைக்காவியத்தில் நடிகர் திலகம் ஏற்ற ராஜா கதாபாத்திரம் மறைந்து விடுவதாக வரும் சுழலில் இடம் பெற்ற கோடியில் ஒருவன் என்ற பாடல் நெடுந்தகட்டில் இடம் பெறவில்லை. தொழில் நுட்பம் காரணமாக இருக்கலாம் என எண்ணுகிறோம். இப்பாடல் நடிகர் திலகத்தை மட்டுமல்ல, பெருந்தலைவர் காமராஜையும் பாராட்டுவதாக வரிகள் அமைந்துள்ள முக்கியமான பாடலாகும். முடிந்தால் இப்பாடலையும் அடுத்த பதிப்பில் வெளியிடுமாறு சிவாஜி ரசிகர்கள் சார்பாக நமது பணிவான வேண்டுகோள்.

நன்றியுடன்
ராகவேந்திரன்

mr_karthik
8th August 2011, 05:22 PM
அரவிந்த் சீனிவாஸ் அவர்களே...

நெய்வேலி வாசுதேவன் அவர்களே....

சுப்ரமணியம் ராமஜெயம் அவர்களே.....

உங்கள் அனைவரையும் வருக வருகவென இருகைநீட்டி அழைக்கிறோம்.

நீங்கள் மூவரும் இந்த திரிக்குப்புதியவர்களாயினும், நடிகர்திலகத்தின் பழம்பெரும் ரசிகத்திலகங்கள் என்பது உங்களின் முதற்பதிவுகளிலேயே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. எனவே உங்கள் பங்களிப்புகளால் இத்தளம் மென்மேலும் பொலிவடையப்போகிறது என்பது திண்ணம்.

நமது நடிகர்திலகத்தின் திரியைப்பொறுத்தவரை இது அனைத்து ரசிகர்களாலும் விரும்பிப்படிக்கப்படுவது. மக்கள் திலகம், சூப்பர் ஸ்டார், உலக நாயகன், புரட்சிக்கலைஞர், புரட்சித்தமிழன், இளைய திலகம், நவரசநாயகன், இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆகிய அனைத்து கலைஞர்களின் ரசிகப் பெருமக்களும் தவறாமல் படிக்கும் சிறந்த திரி. பல இளம் தலைமுறையினர் இந்த திரியின் வாயிலாகவே நடிகர்திலகத்தின் பன்முகச்சிறப்பைப் பற்றி அறிந்து வியக்கிறார்கள்.

அதற்கேற்றாற்போல நமது திரியின் தூண்களான பம்மலார், ராகவேந்திரர், முரளியார் போன்றோர் அள்ளி அள்ளி வழங்கும் பல்வேறு தகவல்கள், அவரது நடிப்பைப்பற்றிய நுண்ணிய ஆய்வுகள், அதற்கு வலு சேர்க்கும் பல்வேறு ஆவணங்கள், சான்றுகள் இவற்றை அள்ளியளித்து நம்மை ஆனந்தக்கடலில் ஆழ்த்தி வருகின்றனர். நண்பர் 'ஜோ' அவர்களால் ஆழமான அஸ்திவாரமிடப்பட்டு துவக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இத்திரி இன்று நெடிய ஆலமரமாய் விரிந்து நிற்கிறது.

இதில் புதிய பல அத்தியாயங்களைப் படைக்க புயலாக நுழைந்திருக்கும் உங்கள் அனைவராலும் இத்திரி மேலும் சிறப்படையப்போவது உறுதி.

வருக.... வருக.....

mr_karthik
8th August 2011, 05:44 PM
With experts like M/s. Raghavendran, Murali, Pammalar, Saradha Madam and other senior hubbers, this hub is going to be a treat and will serve as a treasure in the years to come.

பார்த்தசாரதி சார்,

உண்மையைத்தான் சொன்னீர்கள். இருந்தாலும் இவர்களோடு சேர்த்து, உங்களின் பங்களிப்புகளூம் ஒன்றும் குறைந்தவையல்ல. மிக அபாரமான பல பதிவுகளைத் தந்துள்ளீர்கள்.

இந்த நூற்றுக்கால் மண்டபத்தில் நீங்களும் ஒரு முக்கியமான தூண் என்பதை மறந்துவிட வேண்டாம்.

mr_karthik
8th August 2011, 06:12 PM
பம்மலார் சார்,

நடிகர்திலகத்தின் 'கலைச்சேவைப் பொன்விழா' காட்சிகள் மிக அருமை. பழைய நினைவுகளைக்கிளறி விட்டன.

அந்த விழாவை நேரடியாகவே கண்டுகளித்து இன்புற்றவன் நான் என்ற வகையில் இப்பதிவுகள் மலரும் நினைவுகளாக மனதில் தோன்றுகின்றன. அலங்கார தேரில் நடிகர்திலகம் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, அன்றைய பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் அந்த அலங்கார வண்டியில் நின்று கொண்டு வந்த காட்சி இன்னும் கண்ணில் நிற்கிறது. அப்போது எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் அவர்களின் பேச்சு விழாவுக்கே சிறப்புச் சேர்த்தது.

அறியாதவர்கள் அறியும் வண்ணம் அக்காட்சிகளைக் கண்களுக்கு விருந்தாக்கிய உங்களுக்கு நன்றிகள் பல்லாயிரம். ('நிறைகுடம்' திரைப்படத்தின் 50-வது நாள் விளம்பரம் கிடைத்தால் வெளியிடுங்கள்)

ராகவேந்தர் சார்,

நடிகர்திலகத்தைப்பற்றி எந்த நிறுவனம், எந்த படத்தின் நெடுந்தகடு வெளியிடுகிறது என்று தேடித்தேடி கொணர்ந்து குவிக்கிறீர்கள். நீங்கள் ஒரு சுறுசுறுப்புத்தேனீ. உங்கள் சுறுசுறுப்பைப் பார்த்தால் யாருமே உங்களை ஓய்வுபெற்ற அதிகாரி என்று சொல்ல மாட்டார்கள்.

pammalar
8th August 2011, 07:15 PM
டியர் நெய்வேலி வாசுதேவன் சார்,

தங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களது உயர்ந்த பாராட்டுக்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள் !

நடிகர் திலகத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சாதனைகளை உள்ளடக்கிய உன்னதமான நெடுந்தகட்டினை வெளியிட்டுள்ள திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றத்தினருக்கு பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் ! அவர்களது தொண்டு மென்மேலும் சிறக்க இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் ! தித்திக்கும் இத்தகவலையும் அதன் ஹிந்து நாளிதழின் சுட்டியையும் வழங்கிய தங்களுக்கு வளமான நன்றிகள் !

டியர் mr_karthik, மிக்க நன்றி !

டியர் சந்திரசேகரன் சார், நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th August 2011, 07:51 PM
டியர் சுப்ரமணியம் ராமஜெயம் சார்,

நமது நடிகர் திலகத்தின் திரிக்கு "வருக! வருக!" எனத் தங்களைப் பாசத்துடன் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம் !

தங்களது அனுபவப்பதிவுகள் ஒவ்வொன்றும் நமது திரிக்கு தகவல் களஞ்சியமாகத் திகழப் போவது திண்ணம் !!

வெற்றியுடன் தொடரட்டும் தங்களின் திருப்பணியான திலகத்தின் திரிப்பணி !!!

அன்புடன்,
பம்ம்லார்.

pammalar
8th August 2011, 08:12 PM
டியர் mr_karthik,

தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் உயர்ந்த பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

தங்களைப் போன்ற ரசிக சிகரங்களின் பாராட்டுக்களையெல்லாம் பெறுவது என் வாழ்வின் பேறு !

"நிறைகுடம்" 50வது நாள் விளம்பரம் கிடைக்கப் பெற்றவுடன் நிச்சயம் பதிவிடுகிறேன் !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
8th August 2011, 10:01 PM
ராமஜெயம் அவர்களின் திரிப்பணியை திருப்பணியாக்கிய பம்மலார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.


நான் நேரில் ஒண்ணு, மேடைல ஒண்ணுன்னு பேசுறதில்லைப்பா. நமக்கு அப்படி இருக்க முடியலை


நமக்கு ஒரு வேலை இருக்கிற மாதிரி கூட்டத்தில் வந்திருக்கிறவன் ஒவ்வொருத்தனுக்கும் ஏதோ ஒரு வேலை இருக்கும்லே... நாம கூட்டம் முடிஞ்சு நம்ம வேலையைப் பார்க்கிற மாதிரி ஆளுக்காள் பார்ப்பாங்க இல்லே, எதுக்கு அவங்களை வீணா காக்க வைக்கணும்...?

இவற்றையெல்லாம் சொன்னவர் யாரென்று சொல்லவும் வேண்டுமா..

ஆனால் இவற்றை மேற்கோள் காட்டி உயிர்மை மாத இதழின் ஆகஸ்டு பதிப்பில் மணா என்ற நிருபர் ஆறு பக்கங்களுக்கு, பக். 26-31, எழுதியிருக்கிறார்.

என்றும் அழியா பிம்பம் என்கிற தலைப்பில் உள்ள இக்கட்டுரை, சிவாஜி என்கிற சிறந்த மனிதரைத் தற்போதைய தலைமுறைக்கு அடையாளம் காட்டுவது மட்டுமின்றி, அவருடைய நேர்மையான கொள்கையும் பண்பும் என்றிருந்தாலும் மக்களிடம் சென்றே தீரும் என்பதற்கான முதற்படியாக அமைந்துள்ளது என்றால் அது உண்மை. நிருபர் மணா அவர்களுக்கு நம் அனைவர் சார்பிலும் உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.

அனைத்து சிவாஜி ரசிகர்களும் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டிய உயிர்மை மாத இதழின் முகப்பு இதோ

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/wriite-ups%20on%20NT/uyirmaiaug11coverfw.jpg

அன்புடன்

joe
8th August 2011, 10:16 PM
ராகவேந்திரா ஐயா,
தகவலுக்கு நன்றி. உயிர்மை இதழ் இணையத்தில் ஆகஸ்டு மாத இதழ் இன்னும் வலையேற்றம் பெறவில்லை
[http://www.uyirmmai.com/VeiwMonthlyArchives.aspx
எனினும் நடிகர் திலகத்தின் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது என்பதற்காகவே ஆகஸ்டு இதழை வாங்கிப் படிக்க வேண்டும்

pammalar
8th August 2011, 11:06 PM
டியர் ராகவேந்திரன் சார்,

"உயிர்மை" பதிவுக்கு உளமார்ந்த நன்றி !

டியர் ஜோ சார்,

"உயிர்மை" சுட்டிக்கு கனிவான நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
8th August 2011, 11:44 PM
பொன்விழா நாயகன்

கலைக்குரிசிலின் 50 ஆண்டு கலைச்சேவையை பாராட்டும் விழா
மற்றும் அவரது 59வது பிறந்தநாள் விழா
தொடர்ந்து களைகட்டுகின்றன.....

1.10.1986 : புதன் : சென்னை

[விழா நிகழ்வுகளின் அபூர்வ தொகுப்பு]

வரலாற்று ஆவணங்கள் : "மருதாணி" இதழ் சிறப்பு மலர் : 10.10.1986
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4278-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4279-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4280-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4281-1.jpg

விழா களைகட்டும்.....

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
8th August 2011, 11:49 PM
We extend a warm welcome to you Mr.Ramajayam and hope your stay here turns out to be fine, pleasant and enjoyable. And this is for people like Rakesh who are bonded to Hollywood, Mr.Ramajayam visits Hollywood once in every year [in view of his daughter being there] and he had not let go the opportunity bestowed on him. He meticulously fills up the visitor's diary with anecdotes and descriptions of NT and his films and he makes sure that people over there read it. Great work Sir!

Rakesh, another thing that me think about you is just watched the song முத்துசரம் சூடி வரும் வள்ளிப் பெண்ணிற்கு from your favourite பொன்னுஞ்சல், the song being nicely done by MSV/TMS with sweet humming from Vasantha but unfortunately drowned in the midst of ஆகாய பந்தலிலே and நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும். A youthful, cheerful NT and of course your ---- Usha Nandini.

Rakesh, it is not over. Watch out the next, it's for you and Plum.

Regards

Murali Srinivas
8th August 2011, 11:56 PM
பெண்ணின் பெருமை - Part I

தயாரிப்பு - ராகினி பிலிம்ஸ்
இயக்கம் - புல்லையா
வெளியான நாள் - 17-02-1956

நகரத்திலே வாழும் ஜமீந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள். முதல் மனைவியின் மகன் ரகுராமன். முதல் மனைவி இறந்து விடவே இரண்டாவது மனைவியை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார் ஜமீந்தார். இரண்டாவது மனைவியின் மகன் நாகேந்திரன், ரகுராமன் படிப்பு வாசம் இல்லாத கோழை. நாகுவோ எதற்கும் துணிந்த முரடன். பணத்தை கணடபடி செலவு செய்பவன். ரகுவை திட்டுவது, அடிப்பது மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நாகுவை ஜமீந்தார் நேரடியாக கண்டித்தும் அவன் திருந்துவதாக இல்லை.

ரகுராமனின் மேல் பரிவும் நாகுவின் குணத்தின் மீது கோபம் கொண்டிருக்கிறார் ஜமிந்தார். ஆனால் அவரது இரண்டாவது மனைவியோ தன் மகன் நாகுவிற்கு ஆதரவாக இருக்கிறாள். இப்படி கேட்டது எல்லாம் கிடைக்கும் செல்லபிள்ளை நாகு ஒரு நாட்டியகாரியை விரும்பி அவள் வீட்டிற்கு சென்று வருகிறான்.

நகரத்திற்கு அருகில் இருக்கும் சத்யபுரம் என்ற கிராமத்தில் ஜமிந்தாரின் குடும்பத்திற்கு சொந்தமான நிலங்கள் இருக்கின்றன. அதை அந்த கிராமத்து ஏழைகள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கின்றனர். இந்த வருடம் குத்தகை பணம் வரவில்லையென்று தெரிந்தவுடன் கிராமத்திற்கு சென்று மிரட்டுகிறான் நாகு. விவசாய தொழில் சரியாக நடக்கவில்லை என்றும் அதனால் குத்தகை பணம் கொடுப்பதற்கு சிறிது கால அவகாசம் கேட்கும் விவசாயிகளை நாகு விரட்டுகிறான். தான் கூட்டிவந்த ஆட்களை விவசாயம் செய்ய சொல்ல கிராமத்துவாசிகள் எதிர்க்கிறார்கள். தடுக்க வரும் ஊர் பெரியவரை நோக்கி நாகு கை ஓங்க அந்த பெரியவரின் மகள் பத்மாவதி அங்கே வந்து யார் வயலில் இறங்குகிறார்கள் பார்ப்போம் என சவால் விட பெண் என்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் நாகு கோபத்துடன் ஊர் திரும்புகிறான்.

இதை கேள்விப்படும் ஜமீந்தார் தானே அந்த கிராமத்திற்கு செல்கிறார். நாகுவை எதிர்த்து பேசிய பெண் யார் என்று கேட்டு தெரிந்துக் கொண்டு அவள் வீட்டிற்கு செல்கிறாள். முதலில் கடிந்து பேசுவது போல் பேசிவிட்டு தன் மகனை கல்யாணம் செய்துக் கொள்ள சம்மதம் கேட்க பெரியவர்களின் அறிவுரைப்படி ஒப்புக் கொள்கிறாள். மகிழ்ச்சியாக ஊர் திரும்பி தன் மனைவியிடம் விஷயத்தை சொல்ல அவள் ஒப்புக் கொள்ள மறுக்கிறாள். ஒரு குடியானவப் பெண் தன் மகனுக்கு பணத்திலும் அந்தஸ்திலும் தகுதியானவள் இல்லை என்று மறுத்து விடுகிறாள். நான் வாக்கு கொடுத்து விட்டேனே என்று சொல்லும் ஜமின்தாரிடம் அப்படி உங்கள் வாக்கு முக்கியம் என்றால் உங்கள மூத்த மகனுக்கு கல்யாணம் செய்து வையுங்கள் என்று கூறி விடவே வேறு வழியின்றி ஜமிந்தாரும் அந்த முடிவுக்கே வருகிறார்.

பெண்ணின் வீட்டில் வைத்து கல்யாணம் நடக்கிறது. மணமேடையில் வைத்து தனக்கு தானே தாலி கட்டிக் கொள்ள போகும் ரகுவைப் பார்த்ததும் பத்மா மாப்பிள்ளையின் உண்மையான குணத்தை கண்டு அதிர்ந்து போகிறாள். படிப்பறிவில்லாத ஒருவனுக்கு வாழ்க்கை படப் போகிறோம் என்ற அதிர்ச்சி அவளை தாக்கினாலும் மனதை தேற்றிக் கொண்டு ரகுவிற்கு மாலை சூட்டுகிறாள். தன் கணவனின் மனநிலை பாதிப்பை மாற்ற உறுதி எடுத்துக் கொள்கிறாள்.

திருமணத்திற்கு பிறகும் நாகு ரகுவை மரியாதை குறைவாக பேச பத்மா அவனிடம் கடுமையாக பேசிவிட அவன் கோவப்பட்டு வெளியேறுகிறான்.கணவனின் சிறு வயது முதல் அவனை வளர்த்த ஆயாவை வைத்து ரகுவை டாக்டரிடம் அழைத்து செல்ல செய்கிறாள்.

அங்கே வைத்து சிறு வயதிலே தாயை இழந்த ரகுவிற்கு புட்டி பாலில் அபினை கலந்து தூங்க வைத்த விஷயம் வெளிவருகிறது. அதன் காரணமாகவே அவன் மன வளர்ச்சி அடையாதவனாக இருக்கிறான் என்று தெரிய வர அதற்கு மாற்று மருந்து கொடுக்க டாக்டர் முயலும் போது இதை கேள்வி்பட்டு அங்கே வரும் நாகு பணம் கொடுத்ததும் மிரட்டியும் அவரை மருந்து கொடுக்க விடாமல் செய்து விடுகிறான்.

இதை கேள்விப்படும் பத்மா தன் கணவனுக்கு படிப்பு பண்பு முதலியவற்றை சொல்லி கொடுத்து ஒரு மனிதனாக்குகிறாள். இந்த மாற்றத்தை கண்டு மகிழும் ஜமீந்தார் அவனிடம் அலுவலுக பொறுப்பை ஒப்படைக்கிறார். இதை ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் கூட வேறு வழியின்றி நாகு ஏற்றுக் கொள்கிறான். இதற்கிடையில் நாகுவின் நாட்டியக்காரி தோழி நீலா தன்னை கல்யாணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்துகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் தொந்தரவு பொறுக்க முடியாமல் சரி என்று சொல்லும் நாகு அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்கிறான்.

கல்யாண செலவிற்காக அலுவலகத்தில் வந்து பணம் கேட்கும் நாகுவிடம் தர முடியாது என்று ரகு சொல்ல சொன்னதாக மானேஜர் சொல்ல, மிகுந்த கோவத்துடன் ரகுவிடம் சென்று நாகு ஆத்திரமாக பேச அப்போதும் ரகு முடியாது என்ற சொல்ல கோவத்தில் நாகு போட என்று சொல்லிக் கொண்டே ரகுவை கன்னத்தில் அறைந்து விடுகிறான். இதை பார்த்துக் கொண்டே வரும் பத்மா நாகுவை கையில் உள்ள பிரம்பால் அடித்து விடுகிறாள். இதை கண்ட நாகுவின் தாய் ராஜேஸ்வரி பத்மாவதியை சத்தம் போட, ஜமிந்தாரும் வருகிறார். நான் இனிமேல் இந்த வீட்டிலே இருக்க மாட்டேன் என்று நாகு வெளியேற அதை பார்த்துக் கொண்டே உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டே படி இறங்கும் ஜமீந்தார் கால் தவறி கிழே விழுந்து விடுகிறார். உடலளவிலும் மனதளவிலும் தளர்ந்து போய் விடும் ஜமீந்தார் நாகுவை பார்க்க வேண்டுமென்று சொல்லி அனுப்புகிறார். ஆனால் நீலாவின் வீட்டில் தங்கியிருக்கும் நாகுவோ வர முடியாது என மறுத்து விடுகிறான். இதனால் சொத்துக்களை பத்திரமாக பாதுகாக்கவும், பரமாரிக்கவும் உயிலை ரகு பெயருக்கு எழுதி வைத்து விட்டு இறந்து போய் விடுகிறார்.

தன் மகனை பார்க்காமல் தாய் தவிப்பதை கண்டு ரகு தானே நீலாவின் வீட்டிற்கு சென்று நாகுவை அழைக்கிறான். அப்போதும் வர மறுக்கும் நாகு ஒரு நிபந்தனை விதிக்கிறான். ஒன்று நான் அந்த வீட்டில் இருக்க வேண்டும் இல்லையென்றால் உன் மனைவி இருக்க வேண்டும் . இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் மனதை தேற்றிக் கொண்டு உயிலை தன் சிற்றன்னையிடம் ஒப்படைத்துவிட்டு ரகுவும் பத்மாவும் சத்யபுரம் கிராமத்திற்கு சென்று பத்மாவின் வீட்டில் தங்குகிறார்கள்.

சொத்து முழுவதும் தன் கைக்கு வந்த குஷியில் நாகு பணத்தை கண்டபடி செலவு செய்கிறான். நீலாவை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து தாயிடம் அறிமுகம் செய்கிறான், ஆனால் அவள் குடும்பத்தினரை பார்த்துவிட்டு நிலைமையை புரிந்துக் கொள்ளும் அவன் தாய் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றுகிறாள். அலுவலக பணம் மொத்தம் காலியாகிறது. அம்மாவை மிரட்டி பணம் வாங்க ஆரம்பிக்கிறான் நாகு. அவனின் தவறான நடவடிக்கையினால் அவன் தாய் கொஞ்சமாக அவனை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் கையில் பணமே இல்லை என்றவுடன் சத்யபுரத்திற்கு ஆள் அனுப்பி வரி வசூலிக்க சொல்கிறான். ஆனால் அங்கே குடியானவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வரிப்பணத்தை ரகுவிடம் கொடுத்து விடுகிறார்கள். இதை கேள்விப்பட்டு ஆத்திரத்துடன் நாகு சத்யபுரம் செல்கிறான். அதே நேரத்தில் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு ரகு தன் பழைய வீட்டிற்கு செல்கிறான். தன் சிற்றன்னையை சந்தித்து பணம் கொண்டு வந்திருப்பதாக சொல்ல உண்மையான நிலைமையை புரிந்து கொள்ளும் அவள் நாகு சத்யபுரம் சென்றிருக்கும் விஷயத்தை கூற அதை கேட்டவுடன் சித்தியையும் அழைத்துக் கொண்டு மீண்டும் ரகு சத்யபுரம் செல்கிறான்.

அங்கே கிராமத்தில் ரகுவை தேடி அவன் வீட்டிற்கு செல்லும் நாகுவிற்கும் ரகு மனைவி பத்மாவிற்கும் வாக்குவாதம் முற்றுகிறது. கிராமத்தினர் பலர் தடுக்க முயன்றும் துப்பாக்கியுடன் போராடும் நாகுவை அவர்களால் அடக்க முடியவில்லை. அந்நேரம் அங்கே வரும் ரகுவை தாக்க முயற்சிக்க அவன் தாய் தடுக்கிறாள். அவளையும் கோபத்தில் நாகு தாக்க ரத்தக் காயத்துடன் அவள் மயங்கி விழ, அதுவரை அமைதியாக இருந்த ரகு கோபம் கொண்டு நாகுவை அடிக்கிறான். அவனை கண்டபடி திட்டுகிறான். தாயின் தலையில் வழியும் ரத்தத்தையும் அண்ணனின் சொற்களில் உள்ள நியாயமும் நாகு மனதை பாதிக்க வாழ்க்கையில் முதன் முறையாக தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறான். தன் அண்ணனிடமும் அண்ணியிடமும் மன்னிப்பு கேட்கும் அவனை அவர்கள் மன்னித்து ஏற்றுக் கொள்ள படம் இனிதே முடிகிறது.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
9th August 2011, 12:09 AM
பெண்ணின் பெருமை - Part II

இதுவரை நாம் விவாதித்த நடிகர் திலகத்தின் படங்களிருந்து முற்றிலும் மாறு்பட்டது இந்த பெண்ணின் பெருமை திரைப்படம். இதுவரை நாம் அலசிய படங்களில் சில நேரங்களில் படத்தின் கதைக்கேற்ப ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப நடிகர் திலகம் சில நெகடிவ் ஷேட் உள்ள காட்சிகளில் நடித்திருந்ததை பார்த்திருக்கிறோம். ஆனால் முழுக்க முழுக்க ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை நடிகர் திலகம் வில்லன் ரோல் செய்த படம் என்று சொன்னால் அது பெண்ணின் பெருமைதான். அந்த நாள் திரைப்படத்தை மறக்கவில்லை. அதை தவிர்த்து பார்க்கும் போது என்று வைத்துக் கொள்ளலாம்.

முதல் காட்சியில் ஜெமினியை அடிப்பது முதல் இறுதிக் காட்சியில் தாயை தாக்குவது வரை வில்லன் வேடத்தில் நடிகர் திலகம் புகுந்து விளையாடியிருப்பார். அந்த முதல் காட்சியிலே பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துவார். அதாவது பைத்தியமாக உலா வரும் அண்ணன் மேல் வரும் கோவம், மாற்றான் தாயின் மகன் என்பதனால் ஒட்டாமல் விலகும் தன்மை, தான் அவனை விட உயர்ந்தவன் என்ற ஆணவம், அவனுக்கு பரிந்து தன்னை கண்டிக்கிறாரே தந்தை என்ற ஆத்திரம் இது எல்லாமே அந்த உடல் மொழியில் வெளிப்பட்டு விடும்.

சத்யபுரம் கிராமத்து மக்களுக்காக பரிந்து பேசும் மானேஜரை கிண்டலாக நக்கல் அடிப்பது, கிராமத்தில் விவசாயிகளோடு முரடாக பேசுவது, தன்னை எதிர்த்து பேசுவது பெண் என்பதால் தன் கோவத்தை வெளிக்காட்ட முடியாமல் தவிப்பது, அந்த பெண்ணின் பேச்சை கேட்டு அனைவரும் வயலில் வேலை செய்யாமல் போய் விட அந்த ஆத்திரத்துடன் வரும் இயலாமை இதையெல்லாம் அந்த கண்களிலே நாம் காணலாம்.

பணமும் பணக்கார அந்தஸ்தும் கொடுக்கும் தோரணையை அவர் நாட்டியக்காரி நீலா வீட்டில் அழகாய் காட்டுவார். நீலாவின் தாய், அவள் தாய் மாமன், அவளின் சித்தப்பா போன்றவர்களை அவர் நடத்தும் விதமே அலாதி. அவர்களை கிள்ளுக்கீரையாய் பேசும் பேச்சு ஒன்றே போதும். அதே நேரத்தில் நீலாவுடன் அவர் கொஞ்சலும் குழைவும் ஏய் நீலு, நீலு என்று அவர் கூப்பிடும் அழகே தனி.

அண்ணனின் திருமணத்திற்கு பின் அண்ணியுடன் மோதும் கட்டங்கள் எல்லாமே டாப். முதலில் கிராமத்து பெண் ஒன்றும் தெரியாது என நினைத்து விரட்டுவது, அண்ணி தனக்கு சரியாக வாதிக்கும் போது அடே இந்த பெண்ணுக்கு இவ்வளவு பேசத் தெரியுமா என முகத்தில் வியப்பை தேக்கி கேட்பது, அடுத்த நிமிடத்தில் அண்ணி தன்னை காளைமாடு என்று சொல்லிவிட்டு கதவை மூடிக் கொண்டு போய் விட கோவத்தில் முகம் சிவக்க அதே நேரத்தில் அவளை ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பது, தன் தந்தை கொடுக்கும் இடம்தான் இதற்கு காரணம் என்று தாயிடம் புலம்புவது, அடுத்த நொடியில் அப்படியே முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு கெஞ்சலாக அம்மா, empty purse என்று தாயிடம் சொல்லி பணம் கேட்பது, பணம் கையில் வந்தவுடன் அப்படியே மாறுவது என பலவற்றை குறிப்பிட வேண்டும்.

தன் கல்யாணத்திற்கு பணம் கேட்டு மானேஜர் இல்லை என்று சொல்லிவிட நேரே அண்ணனிடம் வந்து வாக்குவாதம் செய்து அண்ணன் காரணம் கேட்க அப்போது வரும் கோபத்தில் அவனை அடித்து விட, அதை பார்த்துவிட்டு அண்ணனின் மனைவி இவரை பிரம்பால் அடித்துவிட அதை சற்றும் எதிர்பாராமல் அவர் முகத்தில் காட்டும் அதிர்ச்சியை பார்க்க வேண்டும்.

அண்ணனை கம்பெனி பதவியில் அமர்த்திவிட்டு தன்னை டம்மியாக்கும் தந்தையின் மேல் சினமுற்று அந்த ஏமாற்றத்தை மறக்க நீலா வீட்டிற்கு செல்ல அங்கேயும் அவளின் உறவினர்கள் கேள்வி கேட்க ஒவ்வொன்றுக்கும் அதனால என்ன என திருப்பி மிரட்டுவார். அந்த நேரம் அவர் தன் உடல் மொழியின் மூலமாக ஒரு பரம்பரை பணக்காரன் எப்படி அந்த பணத்திமிரை வெளிப்படுத்துவான், அதுவும் தன்னிடம் காசு வாங்கிக் கொண்டு தன்னை அண்டிப் பிழைக்கும் ஒரு கூட்டம் கேள்வி கேட்டால் அவனின் ரியாக் ஷன் எப்படி அமையும் என்பதை அவர் வெளிப்படுத்தும் விதம் கோடி பெறும்.

தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தந்தையின் மறைவிற்கு கூட போகாமல் நாட்டியக்காரி வீட்டிலே தங்கிவிட அவரை மீண்டும் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போவதற்காக வரும் ஜெமினியிடம் காட்டும் ஆத்திரம், ஜெமினியின் பேச்சு நியாயமாக இருந்தும் கூட அதை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் அந்த வீட்டிலே ஒண்ணு நான் இருக்கணும் இல்லே உன் மனைவி இருக்கணும் என்று அழுத்தந்திருத்தமாய் தன் பிடிவாதத்தை நிலைநாட்டும் காட்சியையும் குறிப்பிட வேண்டும்.

இரவில் போதையில் படுக்கையில் படுத்துக் கொண்டே வேலைக்காரனிடமும் தன் தாயிடமும் அவர் நக்கலாக பேசும் பாணி கிளாஸ். பணம் என்னும் பொருள் அவரை எப்படி ஆட்டி வைக்கிறது என்பதை இரண்டு மூன்று முறை அவர் வெளிப்படுத்தும் முறை சிறப்பாக இருக்கும். மானேஜரிடம் முதலில் 5000 ரூபாய் வேண்டும் என்று சொல்லிவிட்டு அதை 6000,7000 என்று கூட்டி கேட்டுவிட்டு மொத்தப் பணத்தையும் அள்ளிக் கொண்டு போவது அதிகார தோரணையில் என்றால் அதே போல் தன் தாயிடம் அன்பாக பேசுவது போல் பேசி மொத்த பணத்தையும் வாங்கி கொண்டு போவது வேறு ஒரு பாணி. கடைசியில் இனி நல்லவன் போல் வேடம் போட முடியாது என்று தெரிந்தவுடன் அம்மாவிடம் பணம் கேட்கும் போது அவர் பேச்சின் தொனியே மாறுவதை கவனிக்கலாம்.என்னை கொன்று விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு போ என்று சொல்லும் தாயிடம் அம்மா! இப்ப அதுகெல்லாம் நேரமில்லேமா! நீ முதலிலே பணத்தை கொடு என்று இரும்பு பெட்டி சாவியை பிடுங்குவது. சில படங்களில் சில நடிகர்களின் பாத்திரதன்மையைப் பார்த்துவிட்டு இயல்பான வில்லத்தனம் பின்னாளில் வந்தது என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்தாலும் இதை பார்க்கும் போது நடிப்பில் எதையும் அவர் யாருக்கும் விட்டு வைக்கவில்லை என்பது தெளிவாகவே புரிகிறது.

நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்கும் ரோல் என்று சொல்ல முடியாவிட்டாலும் நடிகையர் திலகம் தன் முத்திரையை பதிக்க தவறவில்லை. தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காத கிராமத்து சுட்டிபெண்ணாக வரும்போதும், பின்னர் ஒரு மனவளர்ச்சி குன்றிய ஒருவருக்கு மனைவியாகி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்ணாக மாறும்போதும் அந்த பாத்திரத்தின் தன்மையை புரிந்துக் கொண்டு செய்திருக்கிறார். கோழையான கணவன் முரடனான தம்பியை கண்டு பயந்து ஒளிந்துக் கொள்ள மைத்துனனிடம் அமைதியாக தன் தரப்பு வாதத்தை எடுத்து வைக்கும்போது சரி, அதே மைத்துனன் தன் கணவனை அடித்து விட்டான் என்று தெரிந்தவுடன் அவனையே பிரம்பால் விளாசும் போதும் சரி சாவித்திரியின் முகபாவங்கள் அருமையாக இருக்கும். இந்த கதாபாத்திரத்தின் பாசிடிவ் அம்சம் என்னவென்றால் எந்த சூழலிலும் அழுது கண்ணீர் வடிக்காமல் பிரச்சனைகளை நேரிடுவது. அதை நடிகையர் திலகம் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

ஜெமினியை பொறுத்தவரை முதலில் அனுதாபத்தை தேடிக் கொள்ளும் பாத்திரம். பிறகு மனைவியின் முயற்சியினால் நார்மலாக மாறும் வேடம். தம்பியிடம் பயப்படுவது, தம்பி அந்த இடத்தை விட்டு போன பிறகு தம்பிக்கு பைத்தியம் என்று எல்லோரிடமும் சொல்வது போன்ற இடங்களில் ஓகே. நார்மலான பிறகு பெரிதாக perform பண்ண ஸ்கோப் இல்லை.

மற்ற பாத்திரங்களில் குறிப்பட வேண்டியவர்கள் தந்தை ரோலில் வரும் நாகையா, நாட்டியக்காரி நீலாவாக வரும் எம்.என்.ராஜம். இருவருக்குமே அவர்களுக்கு பழகி போன பாத்திரம் என்பதால் எளிதாக செய்திருக்கிறார்கள். ஆனால் surprise பாத்திரம் என்றால் அது சித்தி வேடத்தில் வரும் சாந்தகுமாரி. இதுவரை அவரை ஒரு சாப்டான அம்மா வேடத்திலேயே பார்த்த நமக்கு அவரின் வில்லி ரோல் ஒரு ஆச்சரியம் என்றால் அதை அவர் கையாண்ட விதம் நன்றாகவே இருக்கிறது.

எம்.என்.ராஜம் வீட்டில் அவரது அம்மாவாக வரும் ஞானம் [பாசமலர் அத்தை], எஸ்.எம்.துரைராஜ், சட்டாம்பிள்ளை வெங்கடராமன் இவர்களையும் குறிப்பிட வேண்டும்.

வசனம் பாடல்கள் தஞ்சை ராமையா தாஸ். மூலக்கதை மராத்தி என்று தோன்றுகிறது. நான் எப்போதும் சொல்வது போல் 50-களில் வெளியான படம் என்றாலே நமக்கு முதலில் வரும் ஒரு தயக்கம் வசனங்கள் தூய தமிழில் இருக்கும் என்பது. இதில் அப்படியே நேர் எதிர். பேச்சு மொழி வசனங்கள்தான் படம் முழுக்க. கிண்டலும் நக்கலும் கேலியும் கலந்த இயல்பான வசனங்கள்.

பாடல்கள்தான் அதிகம். அதிலும் தமிழ் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத தெலுங்கு இசையமைப்பாளர்கள் இருவர் இசையமைத்த படம். பெண்டியால நாகேஸ்வரராவ் மற்றும் அட்டபள்ளி ராமாராவ். அனைத்துப் பாடல்களும் நல்ல பிரபலம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு சில நல்ல பாடல்களும் உண்டு.

சாவித்திரியும் தோழியரும் பாடும் முகூர்த்த நாளும் முடிவாச்சா பாடல், சாவித்திரி முதல் இரவில் பாடும் இதய வானில், எம்.என். ராஜம் நடனம் ஆடிக் கொண்டே பாடும் முடியுமா என்ற பாடல்களை சொல்லலாம். மொத்தம் உள்ள 11 பாடல்களில் நடிகர் திலகத்திற்கு ஒரே பாடல்தான்.

அன்றைய பிரபல இயக்குனர் புல்லையா இயக்கிய படம். நடிகர் திலகம், நடிகையர் திலகம் போன்ற கலைஞர்களும் குடும்பங்களை கவரும் கதையும் கைவசம் இருக்கும் போது இயக்குனரின் வேலை எளிதாகி விடுகிறது. பெண்ணின் பெருமை திரைப்படமும் அந்த வரிசையில் இடம் பெற்றதால் வெற்றிக் கோட்டை எளிதாக தொட முடிந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி திருந்தி விடுவது என்ற அந்த தமிழ் சினிமாவின் கிளிஷேவை விலக்கி வைத்துவிட்டு பார்த்தால் [அது கூட படம் வெளிவந்தது, இன்றைக்கு 55 ஆண்டுகளுக்கு முன்பு என்பதை நினைவில் கொண்டால் பெரிய குறையாக தோன்றாது] இயக்குனர் தன் வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

சென்னையில் காஸினோ, பிராட்வே மற்றும் சேலம் நியூசினிமாவில் 105 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. சென்னையின் மூன்றாவது அரங்கமான மகாலட்சுமியில் 70 நாட்களையும் கடந்தது. எங்கள் மதுரையில் ஆசியாவின் மிகப் பெரிய அரங்கமான தங்கத்தில் 77 நாட்கள் ஓடியது என்று சொன்னால் சாதாரண அரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக பொருள் கொள்ளலாம். திருச்சி ஜுபிடர் அரங்கிலும் 100 நாட்களை நிறைவு செய்ததாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல் ஒன்றும் உள்ளது.

இதற்கும் இந்தப் படம் வெளிவந்த காலக்கட்டத்தில் ஒரே நேரத்தில் நடிகர் திலகத்தின் 6 படங்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஜனவரி 14 வெளியான நான் பெற்ற செல்வம், நல்ல வீடு, ஜனவரி 25 அன்று வெளியான நானே ராஜா, பிப்ரவரி 3 அன்று வெளியான தெனாலி ராமன், இந்த சூழலில் பிப்ரவரி 17 அன்று பெண்ணின் பெருமை வெளியானது என்றால் அதற்கடுத்த வாரத்திலேயே அதாவது பிப்ரவரி 25 அன்று ராஜா ராணி திரைப்படமும் வெளியானது. எந்த சூழலாக இருந்தபோதினும் நெகடிவ் பாத்திரமாக இருந்த போதினும் நடிகர் திலகத்திற்கு என்றுமே உள்ள மக்கள் ஆதரவு மூலம் இந்தப் படம் பெரிய வெற்றியை அடைந்தது.
இன்றைக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பாற்றலுக்காக குறிப்பிட வேண்டிய படம் பெண்ணின் பெருமை.

அன்புடன்.

நண்பர் கார்த்திக் போன்றவர்களுக்கு பிடிக்காத நடிகர் திலகத்தின் கதாபாத்திரம், but Rakesh and Plum, you people will like this. Go for it if you get a chance.

pammalar
9th August 2011, 04:00 AM
நடிகர் திலகத்தின் வில்லத்தனமான நடிப்புப் பெருமை

நடிகையர் திலகத்தின் குடும்பப்பாங்கான பாத்திரப் பெருமை

காதல் மன்னனின் குணச்சித்திர வேடப் பெருமை

இவற்றோடு

முரளி சாரின் தீர்க்கமான திறனாய்வுப் பெருமையையும்

இனி சேர்த்தால்தான்

"பெண்ணின் பெருமை" முழுமை பெறும் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th August 2011, 05:10 AM
பெண்ணின் பெருமை

பொக்கிஷப் புதையல்

நடிகர் திலகத்தின் அதிரடித் தோற்றம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/PP1-1.jpg


பட விளம்பரம் : The Hindu : 14.1.1956
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4285-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 17.2.1956
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4289-1.jpg


100வது நாள் விளம்பரம் : தினமணி : 27.5.1956
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4288-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
9th August 2011, 07:57 AM
நண்பர் 'ஜோ' அவர்களால் ஆழமான அஸ்திவாரமிடப்பட்டு துவக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இத்திரி இன்று நெடிய ஆலமரமாய் விரிந்து நிற்கிறது.

http://1.bp.blogspot.com/-oD-pnALi39s/Tb5kdISWnyI/AAAAAAAAF9Q/BphknmYrzFw/s1600/banyan-tree.jpg

ஆழமான உண்மை... அழுத்தமான உண்மை... நம் அனைவருடைய நன்றிகளும் பாராட்டுக்களும் தன் திருக்கரங்களால் நடிகர் திலகத்தைப் பற்றிய விவாதத்தினை ஹப்பில் முதன்முதலாக துவக்கி வைத்த திரு ஜோ அவர்களையே சாரும். அந்த ஆலமரம் இன்று பெரிதாய் வளர்ந்து அருகு போல் தழைத்து வளர்ந்து நிற்கிறது. இதில் அனைவருக்கும் பாராட்டுக்கள்..

RAGHAVENDRA
9th August 2011, 08:04 AM
முரளி சார்,
பெண்ணின் பெருமை என்கிற அற்புதத் திரைக்காவியத்தினைப் பற்றி மிக அற்புதமாக விவரித்துள்ளீர்கள். பல்வேறு திரைப்படங்களில் நெகடிவ் எனப்படும் முரணாபாடான பாத்திரங்களில் நடித்திருந்தாலும் நடிகர் திலகத்தின் தனிப் பெருமை இப் பெண்ணின் பெருமையில் வெளிப்படும். பிற்காலத்தில் வெளிவந்த படங்களில் வில்லன் வேடம் ஏற்று நடித்த நடிகர்களுக்கு முன்னுதாரணமாய் அமைந்தது இப் படம்.

இப் படத்திற்கு மிகப் பெரிய மற்றொரு பெருமை உண்டு.

தமிழ்த்திரையுலகில் மிகப் பெரிய பின்னணிக்குரலிணையாக விளங்கும் டி.எம்.எஸ். மற்றும் பி.சுசீலா இருவரும் முதன் முதலில் இணைந்து டூயட் பாடியது இத்திரைப்படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.அதுவும் நடிகர் திலகத்திற்காக என்பது மற்றொரு சிறப்பு. அழுவதா இல்லை சிரிப்பதா என்கிற அப்பாடலில் நடிகர் திலகத்திற்கு டி.எம்.எஸ். அவர்களும் எம்.என்.ராஜம் அவர்களுக்கு சுசீலா அவர்களும் பின்னணி பாடியுள்ளனர்.

B]அப்பாடலின் காணொளியினைப் பதிவிறக்கம் செய்ய.[/B] (http://www.mediafire.com/?906p6wnj34se11n)

இப்பாடலுக்கு நமது ஹப் அங்கத்தினர், பேராசிரியர் சேக்கரகுடி கந்தசாமி அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.

அன்புடன்

RAGHAVENDRA
9th August 2011, 08:07 AM
டியர் பம்மலார்,
வழக்கம் போல் விளம்பரம், ஸ்டில், என்று அசத்தி விட்டீர்கள்.

தங்களது ஒவ்வொரு பதிவும் பொக்கிஷம். அதைப் பாதுகாப்பதற்கென்று தனிக் கணினி வேண்டும். நன்றிகள்....பலப்பல...

அன்புடன்

Subramaniam Ramajayam
9th August 2011, 08:22 AM
PENNIN PERUMAI. very well discussed by pammalar and murali. to my remembrance In 60s chennai theatres screens morning shows on sundays and next to uttamaputiran of nadigarthilagam this movie takes second spot. incidentaly both negative charctors of NT had a glorious response. i would have seen UTTAMA PUTRIRAN more number of times on these morning shows during school days maharani of northmadras i remember very well.

Subramaniam Ramajayam
9th August 2011, 08:33 AM
Like this alamaram nadigar thilagam's fame and glory will live for many decades and sivaji rasigargal of yesterday and today are welcoming the presentday younsters also to join this thread as NADIGARTHILAGAM has attracted many younsters through dvds of his films. that is nadigar thilagam more than a oscar.

kumareshanprabhu
9th August 2011, 09:32 AM
dear Murali , PAMMALAR SIR

GREAT NOTE ON PENNIN PERUMAI HATS OFF TO U

abkhlabhi
9th August 2011, 10:26 AM
WARM WELCOME TO MR.VASUDEVAN AND S.RAMAJAYAM

http://i431.photobucket.com/albums/qq35/abkhlabhi/NT/th_sg.jpg

parthasarathy
9th August 2011, 11:43 AM
அன்புள்ள திரு. முரளி அவர்களுக்கு,

நடிகர் திலகத்தின் பெருமையை பறை சாற்றும் "பெண்ணின் பெருமை" திரைப்படத்தைப் பற்றிய உங்கள் ஆய்வு வழக்கம் போல் எளிமையாக, நேர்த்தியாக, சுவாரஸ்யமாக இருந்தது.

இந்தப் படத்தின் மூலக்கதை மராத்தியா என்று தெரியவில்லை. ஆயினும், இது "அர்த்தாங்கி" என்ற தெலுங்குப் படத்தின் தழுவல். ஒரு வேளை, ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படமாகவும் இருக்கலாம். ஏனென்றால், 1960௦ வரை, இதே முறையில், பல படங்கள் (விஜயா புரொடக்ஷன்ஸ் படங்கள் - பாதாள பைரவி, கல்யாணம் பண்ணிப்பார், மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்றவை மற்றும் மலைக்கள்ளன், எங்கள் வீட்டு மகாலட்சுமி, மஞ்சள் மகிமை என்று பல வெற்றிப்படங்கள்) வெளி வந்தது. காரணம், ஆந்திர மாநிலத்தின் பெரும் பகுதி சென்னை மாநிலத்துக்குட்பட்டிருந்ததால், இரண்டு மொழிப்படங்களுக்கும் இந்த பெரிய எல்லைக்குள் நல்ல வியாபாரம் இருந்தது.

தெலுங்கு மூலப்படத்தில், நாகேஸ்வர ராவ் செய்திருந்த அந்தக் கோழை கதாபாத்திரத்தை தமிழில் ஜெமினி ஏற்றிருந்தார். அதாவது, அந்தக் காலத்தில், தெலுங்கில், என்.டி.ராமா ராவுக்கு இணையான புகழில் இருந்தவர் ஏற்ற கதாநாயகன் பாத்திரம். தெலுங்கில் வில்லன் பாத்திரத்தை அப்போது தான் பிரபலமாக ஆரம்பித்திருந்த ஜக்கையா ஏற்றார். (நான் ஏற்கனவே கூறியிருந்தேன் இவர் தான் நடிகர் திலகத்தின் பல படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டபோது, நடிகர் திலகத்துக்கு குரல் கொடுத்தவர் என்று. காரணம், இவருக்கும் நடிகர் திலகத்தைப் போன்று கனமான குரல் வளம் - குரல் வளம் மட்டுமே!.) ஜக்கையா தெலுங்கில் பல படங்களில் வில்லன் மற்றும் துணை பாத்திரங்களில் தான் பெரும்பாலும் நடித்தார். சில படங்களில், இரண்டு கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்திருக்கிறார். இரண்டு மொழிகளிலும், சாவித்திரி, நாகையா, சாந்த குமாரி போன்றவர்கள் அதே பாத்திரத்தை ஏற்றார்கள் (அடிப்படையில், இவர்கள் தெலுங்கு நடிகர்(கை)கள்.) தெலுங்கில், அந்த அளவிற்கு புகழ் தராத அந்தப் பாத்திரத்தை, தமிழில், துணிந்து (வழக்கம் போல) நடிகர் திலகம் ஏற்று, நாயகனின் பாத்திரத்தை அனாயாசமாக ஓவர் டேக் செய்தார். அந்தப் பாத்திரம் வேறு எந்த நடிகர் ஏற்றிருந்தாலும், மக்களின் பெரிய கவனத்திற்குச் சென்றிருக்காது. உதாரணம், தெலுங்கின் மூலம் மட்டுமல்ல. பல வருடங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தை "ஜோதி" என்ற பெயரில், ஹிந்தியில், எடுத்தபோது, நாயகன் பாத்திரத்தை, ஜிதேந்திராவும், நாயகியின் பாத்திரத்தை, ஹேமா மாலினியும் ஏற்றார்கள். வில்லன் பாத்திரம் அந்த அளவுக்குப் பிரபலம் ஆகாத நடிகருக்குத் தான் தரப்பட்டது. உண்மையைச் சொல்லப்போனால், ஹிந்தியில், நாயகியின் பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு (அதாவது, முற்பாதியில், அவரை ஒரு தைரியம் மிகுந்த பாத்திரமாகக் காட்டியிருந்தார்கள் - அப்போதைய ஹேமமாலினியின் இமேஜுக்கு ஏற்றவாறு.).

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

KCSHEKAR
9th August 2011, 12:01 PM
பெண்ணின் பெருமையின் அருமை முரளி சார் அவர்களின் ஆய்வைப் படித்தபின் மேலும் கூடுகிறது. இந்த ஆய்விற்கு மெருகூட்டும் வகையில் விளம்பரங்களை பதிவிட்ட பம்மலாருக்கு நன்றி.

kumareshanprabhu
9th August 2011, 02:28 PM
Thank u pammal sir and mura;i sir

great note

vasudevan31355
9th August 2011, 03:58 PM
அன்பு முரளி சார்,

வணக்கம். தங்களது பெண்ணின் பெருமை பற்றிய ஆய்வுக் கட்டுரை அருமை.சுவாரஸ்யமான அலசல். நன்றி!

இந்தப் படம் வெளிவந்த போது சில விமர்சனங்கள் வெளியாயின என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நடிப்பில் நடிகர்திலகத்தை திருவாளர் ஜெமினி கணேசன் விஞ்சி விட்டார் என்பதே அது.

பொதுவாகவே ஒரு கதாநாயகன் பாத்திரம் அப்பாவியாகவோ அல்லது மனவளர்ச்சி குன்றிய குழந்தை போன்றோ அமைந்து விட்டால், வெகு சுலபமாக மக்கள் மனதில்[ நடிப்புத் திறமை ஓரளவு இருந்தால் கூட போதும் ]
நுழைந்து விட முடியும். அது அந்தக் கேரக்டரின் தன்மை. அதற்கு எதிர் மறையாக அந்த அப்பாவி கதாநாயகனை கொடுமைப் படுத்தும் வில்லன் ரோலில் ஒரு நடிகர் மக்கள் மனதில் கோலோச்சுவது மிக மிகக் கடினம். அதை இந்தப் படத்தின் மூலம் செய்து காட்டியவர் நடிகர் திலகம் அவர்கள்.

நடிகர் திலகத்தின் அசுர வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் செய்த பிரச்சாரம் தான் அது. தன் முதல் காவியமான பராசக்தியிலேயே நடிப்பின் சிகரங்களைத் தொட்டவர் அவர். ' இமேஜ் ' என்ற வளையத்துக்குள் சிக்காமல், முதல் படத்திலேயே ஹீரோ, உடனே 5- ஆவது படத்திலேயே முழு வில்லன் என்று ஆரம்ப கால கட்டங்களிலேயே அதை உடைத்தெறிந்தவர். சூரியனை ஒரு கை கொண்டு மறைக்க முடியுமா?

பின்னாட்களில் திரு.ஜெமினிகணேசன் அவர்கள் மாடர்ன் தியேட்டேர்ஸ் தயாரிப்பில்' வல்லவனுக்கு வல்லவன்' என்ற திரைப் படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

நன்றி!

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

RAGHAVENDRA
9th August 2011, 04:07 PM
டியர் பார்த்தசாரதி,
தாங்கள் கூறியது முற்றிலும் சரி. பெண்ணின் பெருமை திரைக்காவியத்தைப் பொறுத்த வரையில் முற்றிலும் அனுதாபம் கிட்டக் கூடிய பாத்திரத்தை ஏற்று நடிப்பவர்களுக்குக் கிடைக்கக் கூடிய வரவேற்பை மிஞ்சி கொடுமை நிறைந்த வில்லன் பாத்திரத்தை ஏற்று நடித்து அதை வெற்றிகரமாக தன்ககு சாதகமாக பயன் படுத்திக் கொண்ட நடிகர் நடிகர் திலகம் மட்டுமே. மேற்கத்திய திரைப்படங்களில் இவ்வாறு கதாநாயகனை மிஞ்சி வில்லன் வேடம் தரித்து புகழ் வாங்கிய நடிகர்களில் குறிப்பிடத் தக்கவர்களில் ஓமர் ஷெரீப் மற்றும் மால்கம் மெக்டொவெல் போன்றோர் உண்டு. ஆனால் அவர்களால் கதாநாயகனாகவோ அல்லது மற்ற பாத்திரங்களிலோ அந்த அளவிற்கு புகழ் பெற முடியவில்லை என்று அந்தக் காலத்தில் கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் எந்தப் பாத்திரமானால் என்ன, ஊதித்தள்ளிவிடுவதில் சூரர் நடிகர் திலகம். இதே அடிப்படையில் தான் வாசுதேவன் அவர்களும் தன் கருத்தை கூறியிருக்கிறார்.

அன்புடன்

RAGHAVENDRA
9th August 2011, 04:11 PM
திருச்சி சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் வெளியிடப் பட்டுள்ள நெடுந்தகட்டின் முகப்பு மற்றும் வெளியீட்டு நிழற்படங்கள். இவற்றை அனுப்பி வைத்த அன்புச் சகோதரர் பொன்மலை திரு ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றி.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/TrichyFansDVD02.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/TrichyFansDVD01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/TrichyFansDVD04.jpg

அன்புச் சகோதரர் திரு கிரி ஷண்முகம் மற்றும் துஷ்யந்த் ராம்குமார் அவர்களிடம் திருச்சி சிவாஜி மன்றத்தினர் நெடுந்தகட்டினை வழங்கும் காட்சி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/TrichyFansDVD03.jpg

திருச்சி திரு ஸ்ரீநிவாசன் அவர்களின் கைப்பேசி எண் - 9865265992.
மின்னஞ்சல் - srini_60@yahoo.co.in

அன்புடன்

abkhlabhi
9th August 2011, 05:51 PM
నటవిశ్వరూపం శివాజీగణేశన్
NATAVISWARUPAM SIVAJI GANESAN

written by కుసుమకుమారి Published in Visahala Andhra.


తమిళనాడులో నటులు పూనకం పట్టినట్టుగా నటిస్తారని ఉత్తరాది సినీపరిశ్రమ చెప్పుకునేది.వారు అతి చిన్నరోల్*కూడా అతి పెద్దగానే ఏక్ట్*చేస్తారు. అందుకు కారణం 1950నుంచి 1980 వరకు 30ఏళ్లపాటు ఆటైపు నటీనటులే వచ్చారు. ఎవరిని చూసినా శృతిమించిన నటనతో రెచ్చిపోతుండేవారు. వారిలో అగ్రగణ్యుడు నడిగర తిలకగమ్* శివాజీగణేశన్*. ఆయనతో సిన్మాతీస్తే కథలేకపోయినా చిత్రంలో సరైన పాటలు మాటలు ఏవి లేకపోయినా ఆయనుంటేచాలు తమిళ ప్రేక్షకులు చూసితీరుతారనే నమ్మకం ఆయనతో తీసే నిర్మాతలకు ఉండేది. 80 దర్శకులు ఆయనతో చేసారు. వారిలో భీమ్*సింగ్*, ఏసి.త్రిలోక్*చందర్*, డి.యోగానంద్*, సేతు మాధవన్*, కె.విజయన్*, క్రిష్ణన్*పంజు వంటి వారు ఒక్కొక్కరు 20చిత్రాలు శివాజీతో చేసారు.

Tollywood film industry had the opinion and said that Tamil Nadu Actors are thinking like as they are created by GOD. Even in small roles they show their acting skill more than what required. The reason for this - from 1950 to 1980, these type of actors came into existence. Everyone were acting beyond their capacity. The foremost person is Nadagar Thilakam Sivaji Ganesan. (I don’t agree). The belief of producers is that without any story, songs and dialogues but only the his (NT) presence makes Tamil audience to see his films. More than 80 Directors made films with him. In that Bhimsingh, A.C.Thrilokchander, D.Yoganand, Sethumadhavan, K.Vijayan, Krishnan Punju made more or less 20 films each.




నటన అంటేప్రాణం. ఈతరహానటుడు ఏభాషలో లేరు. శివాజీ సిన్మా షఉటింగ్* జరుగుతున్నప్పుడు ఏకొంత విరామం లభించినా ఆయన ఆ పాత్రతోనే అవే హావభావాలతో తిరుగాడేవారు. పాలేరువేషమైతే లంచ్*లో నేలమీద కూర్చుని ఇంటి నుంచి వచ్చినకేరియర్* విప్పి పనివాడిలా గోడకు చేరగిలబడి ఆబగాతింటుంటే తోటినటులు ఆశ్చర్యపోయేవారు. తను ఈరోజు నటించే సీన్లకు ఇది ఉప యోగపడుతుంది అని చెప్పేవారు. కర్ణుడుగా చేస్తున్నప్పుడు ప్రశాంతగా, గంభీరంగా స్టూడియో లాన్స్*లో బిగదీసుకుని నడుస్తుండే వారు. దర్శకనిర్మాత బి.ఆర్*.పంతులు ఆశ్చర్యపోయేవారు. అది శివాజీకి వున్న నటపిచ్చి. దాంతో కెమెరా ముందు చెలరేగేవారు.
For Sivaji Ganesan Acting is life. This type of actor is not present in any other language. During breaks in shooting shootings he used to practicing acting. For acting as servant he used to sit on the floor leaning the wall and eating food brought from his house which made co-stars surprised. He used to tell to his co-stars that practicing like that will help in excel in scenes. In the Movie, Karna as a role of Karna, he was walking stiffly in lawns of studios with patience and proud till the shooting of the film over. Director cum Producer B.R.Punthulu was surprised. Sivaji was uncontrollable in front of the camera while acting.


శ్రీశ్రీ వంటి మహాకవి చెప్పకనే చెప్పారు అయ్యా మీకునచ్చిననటుడు ఎవరు అని అడిగితే ప్రపంచ మహానటుడు శివాజీయే అని కుండబద్దలు కొట్టేవారు. తమిళనాడులో నేటికి శివాజీకి ఫస్ట్*మార్కు వస్తుంది. కుముదం అనే తమిళ వారపత్రిక ఒకసర్వేలో శివాజీకి 35శాతం, ఎమ్*జిఆర్* 30, రజనీ20, కమల్*15 శాతంగా ఫలితాలు వెలువడ్డాయి. అంటే శివాజీ నటనకు తమిళప్రజలు ఎంతగా ఆరాదిస్తున్నారో అర్దమ వుతుంది. అక్కడ నేటికి శివాజీని నటనపరంగా మెచ్చనివారులేరు.

When asked great poet like Srisri who is the best actor, he categorically said Sivaji is the world famous great actor. Even today Shivaji gets first mark in Tamil nadu. Tamil weekly magazine Kumudam conducted survey in which Shivaji got 35%, MGR 30%, Rajani 20% and Kamal 15%. This means Tamil audience likes Sivaji’s acting. No one dislikes his acting in Tamil nadu even today.


శివాజీగణేశన్* విళ్లుపురంలో చిన్నయమండ్రాయర్*, రాజ మణి అమ్మయార్*లకు 1-10-1928లో జన్మిం చారు. అప్పటికే తండ్రి స్వాతంత్రపోరులో ఉన్నం దున జైలుకు తరలింపబడ్డారు. పదేళ్లప్రాయంలో శివాజీకి నటనపిచ్చి అంకురించింది. ఎక్కడ నాటకాలు వేసినా చూసి ఆడైలాగులు చెప్పడంతో తల్లి బాలగానసభ అనే నాటక కంపెనీలో చేర్పించింది. దాని నిర్వాహకుడు పొన్నుస్వామిపిళ్లే శివాజీలో నటన పటిమచూసి ఆశ్చర్యపోవడమే కాకుండా నాటకరంగాన్ని ఏలుతావు అని భుజంతట్టేవారు. అప్పటికి వీరపాండ్యకట్టబొమ్మన నాటకం వేయడానికి ఆంగ్లప్రభువులు అప్రకటిత నిషేధాన్ని విధించారు. దాన్ని కంబళా త్తాన్* కూత్తుపేరిట ప్రదర్శిస్తుండేవారు. దాన్ని ఎవరువేసినా చూసేవాడు. అలా శివాజీలో పూనకంతోకూడిన నటన చిరుత ప్రాయం నుంచే అలవడింది.

Sivaji Ganesan was born in Villupuram on 1-10-1928 for Chinnayyamandrayar and Rajamani Ammayar. At that time his father was freedom fighter and went to jail. At the age of 10 years he was mad about acting. After seeing dramas he was repeating the dialogues and this made his mother joined him in Balagana Sabha drama company. After seeing his acting owner of the company Ponnusamy Pillai was surprised and encouraged him and wished him that he will rule the film industry. Veerapaandya Kattabomman drama was banned by Britishers. That drama was exhibited as Kambalathankuthu. Whoever acts in that drama he was seeing it and from that young age he was very serious about acting.


1952లో శివాజీ తమిళతెరమీద కన్పించాలనే తహ తహలోఉన్నప్పుడు తెలుగు నిర్మాత ఆదినారాయణరావు అంజలి తాము తీసిన పరదేశి చిత్రంలో ఒకవేషమిచ్చారు. అందుకే ఆయన ఆదంప తులకు ఎనలేని గౌరవమిచ్చేవారు.తర్వాత భక్తతుకారాం తీసినపుడు శివాజీ వేషం వేయమని అప్పటికే ఆయన స్టార్*డమ్*లో ఉన్నందున వేషం చిన్నదే ఎంత ఇవ్వాలో చెబితే ఇస్తామని నిర్మాతలు అడిగారు. నాకు తొలిచిత్ర అవకాశం కల్పించిన మీకు ఈచిత్రం ఉచితంగా చేస్తామని చేసారు. సెట్*లో అంజలి, ఆదినారాయణరావులవద్ద మంచి నీళ్లుకూడా తీసుకోకుండా నటించారు.

In 1952 Sivaji was very much interested to appear on the screen. At that time Telugu producer Adhinarayana Rao and Anjali Devi produced a film “Paradesi” and given first time acting chance for Sivaji. But Paraskati released first. For giving this opportunity he never forget was grateful to them. They produced a film “Bhaktha Thukaram” and told Sivaji to act a small role - when Sivaji was in stardom in Tamil and told him they will pay whatever he wants. But Sivaji refused to take any remuneration and said “since you have given me chance for first time acting in film I will act without taking any money”. Without taking even a glass of water he acted in that movie for them.


చిన్న తనంలో ఎక్కువగా శివాజీవేషం వేసినందునే ఆయ నకా పేరు వచ్చింది. చిన్నయ్యపిళ్ళై గణేశన్* జన్మనామం.ఇక ఆయన తొలితమిళచిత్రం పరాశక్తి 25 వారాలు నడిచింది. దానికి కరుణానిధి రచయిత ఈ ఇద్దరు కలిసి పలుచిత్రాలుచేసారు. ఇక ఆయన నటించే చిత్రాలలో 100చిత్రాలవరకు 25 వారాలు నడిచి లాభాలు తెచ్చినవిగా శివాజీ చిత్రమాలికలో నమోద య్యాయి. ఆయన తో సిన్మాఅంటే దర్శకనిర్మాతలకు,చిత్రం చూసే జనాలకు పండుగ కర్ణచిత్రంలో ఎన్*టిఆర్* సయి తం శివాజీని చూసి ముచ్చటపడ్డారు. రక్తసంబం దం,కలిసిఉంటేకలదుసుఖం,ఆత్మబందువు కొండవీటి సింహం చిత్రాలు ఎన్*టిఆర్*కు మంచి పేరు తెచ్చినవే అయినా అవి అంతకుముందు శివాజీతో నిర్మితం కావడంవలన నటనకు పరాకాష్ట కావడంతో ఎన్*టిఆర్*కు నటనపరంగా పేరురాలేదు. ఈసమస్య అక్కినేనికూడా ఎదుర్కొన్నారు. ధర్మదాత, నవరాత్రి చిత్రాలు అక్కినేనికి శివాజీకి మించిపోయి పేరురాలేదు. ఇలా శివాజీ నటనకు సరితూగడం కష్టమే అన్నంతగా ఆయన ఉండేవారు. ఎన్*టిఆర్* కొన్నిచిత్రాల్లో శివాజీని తలపింపచేస్తారు. మేజర్* చంద్రకాంత్*లో ఎన్టీఆర్* వీరపాండ్యకట్టబొమ్మన ఉరితీసే సన్నివేశంలో కన్పిస్తారు. అక్కడ శివాజీ అనుకరణతోనే సాగుతుంది. అంటే ఎన్*టిఆర్*కు శివాజీ నటన మీద అంతగురి ఉండేది. తాను స్వంతంగాతీసే చంఢశాసనుడు తమిళ్*లో శివాజీతో తీసారు. రెండుభాషల్లో చిత్రం ఫెయిల్* అయ్యింది. తెలుగు కంటే తమిళ్*లో ఒకింత మెరుగయ్యింది.
In his younger days he was acting as Sivaji hence he got that name but his name was Chinnayya Pillai Ganeshan. His first film Parasakthi ran for 25 weeks. Karunanidhi was writer for that film. Both jointly worked for many films. For about 100 films in which he acted ran for 25 weeks and earned profit was recorded in Sivaji Chitramalika. For Producers and Directors making film with him and public viewing his film is a festival. After seeing Sivaji’s acting in Karna film NTR was very happy. In acting Rakthasambandham, Kalisivunte Kaladusukam, Athmabandhuvu, Kondaveeti Simham films NTR got good name but before this Sivaji acted in tamil in these films very effectively and hence NTR has not got name in acting as much as Sivaji. Even Akkineni (ANR) also faced the same problem. In acting in Dharmadatha, Navarathri films Akkineni did not get more name than Sivaji. Akkineni thought that to be acting like or equal with Sivaji is very difficult. In some films like Major Chandrakanth NTR acting was great. In hanging seen (in MC movie) he copied acting of Sivaji from Veerapandiya Kattaboman. This means and clearly shows that NTR has got good opinion on Sivaji. In NTR own production Sivaji acted in tamil version of Chandasasanudu, this film failed in two languages but it is better in tamil. (I don’t know which Movie)

శివాజీ తమిళతెరపై నెంబర్* ఒన్* అయినా ఆయననటనలో పర్వతాకారంలో ఉన్నా ఆయన ఎందుకో రాజకీయంలో రాణించలేక పోయారు.ఎమ్*జిఆర్*తో తెరమీద పోటీ దీర్ఘకాలం సాగింది. అక్కడ కూడా ఎమ్*జిఆర్* ఫస్*్తప్లేస్*లో వుండేవారు. పైగా ఆయనవన్నీ మాస్* చిత్రాలే.ఇకరాజకీయాల్లో శివాజీ ఏమీసాధించలేకపోయారు. నటిస్తునే మరణించాలనే కోరికతో ఆయన చివరివరకు నటించారు. 1960లో కైరోలో బెస్ట్* యాక్టర్* అవార్డు తీసుకున్నారు. ఇక అవార్డులకు కొదవేలేదు. పద్మశ్రీ, పద్మభూషన్* వంటి వాటితో ప్రభుత్వం ఆయన్ని సత్కరించింది.
Shivaji was No.1 on screen. In acting he was top most - but failed in politics. For very long time MGR was competing with Sivaji. Even there MGR was in plus position. More over all his films were mass films. In politics Sivaji could not gain anything. His ambition was to act till his last breath and want to die while acting and he ready to die for acting. In 1960 he got best actor award in Cairo. No limit for awards. Government of India respected him with Padmashree and Padmabushan.

ఆమహానటుడు చెన్నరు అపోలోలో తన 73ఏట 21జూలై 2001లో చికిత్స పొందుతూ తుదిశ్వాస విడిచారు.
This great actor died at the age of 73 years on 21st July 2001 while undergoing treatment at Apollo Hospital in Chennai.


thank to Mr.C.Rajendra Prasad (my collegue) who transalte this article. Any error or grammer mistake will be exeused

NT with Chandra babu and C.Rangarajan
http://i431.photobucket.com/albums/qq35/abkhlabhi/th_ntcbcr.jpg

abkhlabhi
9th August 2011, 06:00 PM
NT WITH PT

http://i431.photobucket.com/albums/qq35/abkhlabhi/th_ptnt.jpg

pammalar
9th August 2011, 09:10 PM
டியர் ராகவேந்திரன் சார், ராமஜெயம் சார், குமரேசன்பிரபு சார், சந்திரசேகரன் சார் மற்றும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !

டியர் பாலா சார், ஆங்கில மொழிபெயர்ப்புக்கும், அபூர்வ நிழற்படங்களுக்கும் கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
9th August 2011, 11:14 PM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

நான் வாழவைப்பேன்

[10.8.1979 - 10.8.2011] : 33வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

படக்காட்சி : பொம்மை : செப்டம்பர் 1978
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4290aa-1.jpg


பட விளம்பரம் : தினத்தந்தி : 10.3.1979
[10.3.1979 சனிக்கிழமையன்று மதுரையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிரம்மாண்டமான 200வது படவிழா("திரிசூலம்" விழா)வினை வாழ்த்தி வழங்கப்பட்ட விளம்பரம்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4286a-1.jpg


முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 10.8.1979
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4282-1-1.jpg


100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 17.11.1979
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4284-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
9th August 2011, 11:24 PM
In 1952 Sivaji was very much interested to appear on the screen. At that time Telugu producer Adhinarayana Rao and Anjali Devi produced a film “Paradesi” and given first time acting chance for Sivaji. But Paraskati released first. For giving this opportunity he never forget was grateful to them. They produced a film “Bhaktha Thukaram” and told Sivaji to act a small role - when Sivaji was in stardom in Tamil and told him they will pay whatever he wants. But Sivaji refused to take any remuneration and said “since you have given me chance for first time acting in film I will act without taking any money”. Without taking even a glass of water he acted in that movie for them.


டியர் பாலா சார்,

தாங்கள் அளித்துள்ள தகவல் சற்று புதிதாக உள்ளது, இதுவரை நாம் அறிந்தவரை பராசக்தி படத்தில் தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் பிறகு தான் மற்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார் என்று கேள்விபட்டிருக்கிறோம்.
இதற்க்கு சான்றாக நடிகர் திலகம் அவர்களே பராசக்தி படம் பற்றி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

டியர் பம்மலார் சார்,

இதற்க்கு (பரதேசி படம் )ஆதாரமாக அந்த காலகட்டத்தில் வந்த பத்திரிக்கை செய்தி ஏதேனும் இருந்தால் இங்கு பதிவேற்றம் செய்யும் படி வேண்டுகிறேன்.

RC
9th August 2011, 11:57 PM
I have watched Naan vaazhavaippEn in bits and pieces a long time ago. I dont remember seeing Jai Ganesh in the movie.
Did Super Star replace Jai Ganesh?

goldstar
10th August 2011, 05:38 AM
I have watched Naan vaazhavaippEn in bits and pieces a long time ago. I dont remember seeing Jai Ganesh in the movie.
Did Super Star replace Jai Ganesh?

Hello RC,

Jai Ganesh has played as KR. Vijaya's brother in this movie, so he is in this movie.

Sathish

RC
10th August 2011, 05:40 AM
Thanks, Satish!

goldstar
10th August 2011, 05:55 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

நான் வாழவைப்பேன்

[10.8.1979 - 10.8.2011] : 33வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

[size=4]படக்காட்சி : பொம்மை : செப்டம்&#2986


Ragavendran and Murali sir,

How was first day and first show of "Naan Vazha Vaippen", Was there any issues between NT and SS fans?

When this movie re-released around 1990/91 at Madurai Sivam theatre we had lots of clashes inside the theatre and also clash with posters.

Murali sir, how was first show in Madurai, did you watch first show? Also I think this movie released in Madurai Central or Cine Priya, not sure.

Pammalar sir, could you please give us Madurai and other cities records of this movie?

Cheers,
Sathish

RAGHAVENDRA
10th August 2011, 05:57 AM
நான் வாழ வைப்பேன், மிகவும் அருமையான சித்திரம். சில குறைகளை மீறி [குறிப்பாக ஜீரணிக்க முடியாத காஸ்ட்யூம்களில் கே.ஆர்.விஜயா! ], நல்ல வெற்றியைத் தந்த படம். அதிலும் ரஜனிகாந்த் அவர்களுக்கு முழு சுதந்திரம் தந்து பெயர் தட்டிக்கொண்டு போக வைத்த படம். இளைய ராஜா அவர்களின் பங்கு இப்படத்தின் வெற்றியில் முக்கியமானது. என்னோடு பாடுங்கள் பாடல் முதலில் டி.எம்.சௌநதர்ராஜன் அவர்கள் பாடி பதிவு செய்யப் பட்டு பின்னர் என்ன காரணத்தாலோ அதனை பயன் படுத்தாமல், மீண்டும் எஸ.பி.பாலாவை பாட வைத்து அப் பாடல் பதிவு செய்யப் பட்டது. டி.எம்.எஸ் குரலில் ஒலித்த பாடலைத் தர முயல்கிறேன்.

தற்போது என்னோடு பாடுங்கள் எஸ்.பி.பாலாவின் குரலில் திரையில்,ஜெய்கணேஷ் பற்றிய சந்தேகம் இப்பாடலின் மூலம் நீக்கப் படும்.


http://www.youtube.com/watch?v=-puyMT1lb94

அன்புடன்

goldstar
10th August 2011, 06:00 AM
Murali sir, thanks a lot for "Pennin Perumai" review, it was excellent you made me to watch it again. But I don't have this movie DVD and will buy when I visit Madurai this time.

77 days in Madurai Thangam, you could say its equal to 200 days in other theatres, particularly Madurai Mini Priya, Suga Priya...

Pammalar sir, after you started giving our NT records every one understood that who is ONLY and REAL collections king of Tamil movies... Thanks again to wakeup many people.

Cheers,
Sathish

goldstar
10th August 2011, 06:04 AM
நான் வாழ வைப்பேன், மிகவும் அருமையான சித்திரம். சில குறைகளை மீறி [குறிப்பாக ஜீரணிக்க முடியாத காஸ்ட்யூம்களில் கே.ஆர்.விஜயா! ], நல்ல வெற்றியைத் தந்த படம். அதிலும் ரஜனிகாந்த் அவர்களுக்கு முழு சுதந்திரம் தந்து பெயர் தட்டிக்கொண்டு போக வைத்த படம். இளைய ராஜா அவர்களின் பங்கு இப்படத்தின் வெற்றியில் முக்கியமானது. என்னோடு பாடுங்கள் பாடல் முதலில் டி.எம்.சௌநதர்ராஜன் அவர்கள் பாடி பதிவு செய்யப் பட்டு பின்னர் என்ன காரணத்தாலோ அதனை பயன் படுத்தாமல், மீண்டும் எஸ.பி.பாலாவை பாட வைத்து அப் பாடல் பதிவு செய்யப் பட்டது. டி.எம்.எஸ் குரலில் ஒலித்த பாடலைத் தர முயல்கிறேன்.

தற்போது என்னோடு பாடுங்கள் எஸ்.பி.பாலாவின் குரலில் திரையில்,ஜெய்கணேஷ் பற்றிய சந்தேகம் இப்பாடலின் மூலம் நீக்கப் படும்.

அன்புடன்


Oops, we missed wonderfull TMS voice. Eventhough SPB voice is not that bad, definitely TMS voice would have given more hit to this song, this is my personal opinion.

Cheers,
Sathish

RAGHAVENDRA
10th August 2011, 08:10 AM
சென்னை சித்ரா திரையரங்கு நடிகர் திலகத்தின் ஏராளமான திரைப்படங்களை முதல் வெளியீடாகவும் மறு வெளியீடாகவும் திரையி்ட்டுள்ளது. அத் திரையரங்க ஊழியர்கள் மிகவும் பெருமையுடன் சிலாகித்த காலமும் உண்டு. நான் வாழ வைப்பேன் 100 வது நாள் விழாவில் கலந்து கொண்ட ஓர் ஊழியர் இதனை மிகவும் பெருமையுடன் கூறினார். கீழே காணும் நிழற்படத்தில் சித்ரா திரையரங்கம் சார்பாக 100வது நாள் விழாக் கேடயத்தை நடிகர் திலகம் அவர்களிடமிருந்து திரையரங்க நிர்வாகி பெறும் காட்சி.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/bommaimar80nvp100thdayfw01A.jpg

அன்புடன்

RAGHAVENDRA
10th August 2011, 09:20 AM
எங்கே இருந்தாலும் உன்னை மறவாத உள்ளம் இதுவல்லவோ -

இந்த வரிகள் ஒரு தங்கை அண்ணனிடம் சொல்வதாக இருந்தாலும் நம் அனைவருக்கும் பொருந்துகின்றதல்லவோ.


உனைத் தேடி வரும் எதிர்காலம் அதைத் தெரிவிப்பதே இந்த நேரம், புது வாழ்வு சுகமாக மனம் தானே காரணம்

1971ம் ஆண்டில் தேர்தலுக்கு சில காலம் முன் வெளிவந்த படம் தங்கைக்காக. அத்தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருந்த நேரத்தில் கவியரசர் கண்ணதாசன் காமராஜரை மனதில் வைத்து எழுதிய வரிகள் இந்த டூயட் பாடலில் இடம் பெற்றன. பாடலின் துவக்கமே நம்பிக்கையூட்டுவதாக அமைந்து பெரும் வரவேற்பினைப் பெற்றது. படம் வெளியான மறுநாள் கிரௌன் திரையரங்கில் தங்கைக்காக படத்தைப் பார்த்த போது, இந்த வரிகளுக்கு அரங்கமே அதிர்ந்தது. இந்த டூயட் பாடலைப் பாடியவர் டி.எம்.எஸ். மற்றும் எஸ்.ஜானகி. இதில் ஒரு சிறப்பம்சம் நடிகர் திலகத்துடன் வெண்ணிற ஆடை நிர்மலா டூயட் பாடிய ஒரே படம், ஒரே பாடல் இதுதான்.

இந்த தங்கைக்காக திரைக்காவியம் வெகு நீண்ட நாட்களாக மறு வெளியீடும் காணவில்லை, இன்னும் ஒளித்தகடுகளும் வெளியிடப் படவில்லை. அதனால் புதிய தலைமுறையினர் இப்படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நமக்கெல்லாம் மகிழ்வூட்டும் விதமாக தற்போது அத்திரைப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது.

தங்கைக்காக


http://www.dailymotion.com/video/xkfgh1_thangai-1_shortfilms#from=embed

இதுவரை இப்படத்தைப் பார்க்காதவர்கள், பார்த்து தங்கள் கருத்துக்களைப் பகிரந்து கொள்ளுங்கள்.

அன்புடன்

abkhlabhi
10th August 2011, 10:32 AM
http://i431.photobucket.com/albums/qq35/abkhlabhi/th_ntrk.jpg

vasudevan31355
10th August 2011, 12:35 PM
அன்பு ராகவேந்திரன் சார்,

தங்களின் ' தங்கைக்காக ' அன்பளிப்பு ஆயிரக்கணக்கான கலைக்குரிசில் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்

என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

HARISH2619
10th August 2011, 01:40 PM
திரு வாசுதேவன் சார் மற்றும் திரு ராமஜெயம் சார்,
இந்த திரிக்கு தங்கள் இருவரையும் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.தங்களின் வரவு இத்திரிக்கு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் என்பது உறுதி.

திரு முரளி சார்,
பெண்ணின் பெருமை படத்தை இதுவரை பார்த்திராத என்னை போன்றவர்களை தங்களின் பட ஆய்வு மூலமாக பார்க்க வைத்ததற்கு நன்றி.
திரு ராகவேந்திரா சார்,
திருச்சி ரசிகர் மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டிவிடி முகப்பு அருமை.அதை பதிவேற்றிய தங்களுக்கு நன்றி.
திரு குமரேசன் சார்,
புதிய பறவை ரிலீஸ் ஆகிறது என்று சொன்னாலும் சொன்னீர்கள் ,அன்று முதல் தினமும் என் கனவில் ஞாயிறு மாலை அமர்க்களங்களை தியேட்டர் முன்பு நின்று பார்ப்பது போலவும்,படத்தை தியேட்டரின் உள்ளே ஆரவாரத்துடன் பார்ப்பது போலவும் காட்சிகள் தவறாமல் வருகிறது .தயவு செய்து ரிலீஸ் தேதியை தெரிவிக்கவும் .
பெங்களூரில் நடிகர்திலகத்தின் தரமான டிவிடிக்கள் எங்கு கிடைக்கும் ?
திரு பம்மல் சார்,
பொன்விழா கொண்டாட்ட பொக்கிஷம் மிகவும் அருமை,நடிகர்திலகத்தின் ரசிகர்களின் பொக்கிஷம் நீங்கள்,நன்றி.

abkhlabhi
10th August 2011, 02:02 PM
Dear Harish,

You can good quality CD/DVD in Planet M showrooms. One I preferred is near Malleswaram circle (below RR Gold palace).

mr_karthik
10th August 2011, 02:13 PM
அன்புள்ள பம்மலார் சார் மற்றும் ராகவேந்தர் சார்,

வழக்கம்போல, 'நான் வாழ வைப்பேன்' வண்ணப்பட வெளியீட்டு நினைவுகளும், விளம்பர, மற்றும் புகைப்பட வரிசையும் அருமை.

சென்ற ஆண்டு 'பாடல்கள் பலவிதம்' என்ற திரியில், 'எந்தன் பொன்வண்ணமே' பாடலை அலசிய நமது முரளி சீனிவாஸ் அவர்கள், பாடலை மட்டுமல்லாது 'நான் வாழ வைப்பேன்' படம் உருவான முழு வரலாற்றையும் அலசோ அலசென்று அலசியிருந்தார். மிக மிக நுண்ணிய விஷயங்களைக்கூட அருமையாக விவரித்திருந்தார். (ஏதோ காரணத்தால் அந்த திரியிலிருந்த அத்தனை பொக்கிஷப்பதிவுகளும் மறைந்து விட்டன. காரணம் கடவுளுக்கே வெளிச்சம்).

அந்த பாடல் அலசலுக்கு நான் அளித்திருந்த பதில் (என் கணிணியின் ட்ராஃப்ட் பகுதியில் இருந்தது). இங்கே தருவது பொருத்தம் என நினைக்கிறேன். இதோ அந்த பதில்....

Comment by Karthik…

Dear Muarli sir,

Wonderful cover-up about ‘Endhan pon vaNNamE’ from Naan Vaazha VaipEn’.

Your detailed writing has took me to the past, and I am still there, even after finished reading of your article / analysis / history.

Because, for the previous songs you have covered earlier, all the incidents which you have described are heard (from various sources) and read (from various books and magazines).

But for these incidents what you have described in this song analysis, I am the living witness for all those happenings. Yes from Thangai film to 100th Day function of Naan Vaazha VaippEn, I am the witness, and was watching all those happenings in those period, especially initial period of NT – IR relationship. Wow, what a golden memory they are. I already told here and there in out NT thread about the happenings at Chennai during Thiyaagam, Kavariman, Andhaman Kaadhali releases.

I have attended the 100th day function of ‘Naan Vaazha VaippEn’ which was held on 102nd day at Chennai Chitra Theatre, during the interval of its evening show. It was not arranged in any star hotel, but celebrated in the theatre itself. (I strongly hope, Mr. Raghavendhar might be there. He already told he was in 100th days function of Viswaroopam at Shanthi).

NT, K.R.Vijaya, Rajinikanth, D.Yoganand, Jaiganesh, Thengai Srinivasan, and other artists and technical crews were participated and awarded 100th day shields. When the show was started, all of us waiting for the interval (we already saw the movie in several number of times, but this time mainly for the function). After interval, the function started and nearly one and half hour the speeches and award function took place. They were the happiest moments in life, watching our idols in real.

Let me live for some more moments there. Even though there were many films for Deepavali 1978, the main competition was between Pilot Premnath (Alankar) and Sigappu RojaakkaL (Devi Paradise). Other movies are Thaai Meedhu Sathiyam (Wellington) , Vandikaran Magan (Gaiety), Thanga Rangan (Plaza), Kannamoochi (Midland) and Thappu ThaalangaL (Pilot)… wow what a golden period it was.

Thanks a lot Murali sir.
Your service always Priceless.

parthasarathy
10th August 2011, 03:19 PM
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)

5. "மன்னவன் வந்தானடி" படம்: திருவருட்செல்வர்; பாடல்: கவியரசு கண்ணதாசன்; பாடியவர்: பி.சுசீலா; இசையமைப்பு:- திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்; இயக்கம் - ஏ.பி.நாகராஜன்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நாட்டியப்பேரொளி பத்மினி.

திரைப்படங்களில், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு வந்த பாடல்களில், இன்றளவும், கே.வி.மகாதேவன் தான் முதலிடத்தில் இருக்கிறார். "அமுதும் தேனும் எதற்கு" முதல் சங்கராபரணம் படப்பாடல்கள் வரை இந்த அடிப்படையில் அவர் இசையமைத்த பாடல்கள் அத்தனையும் அற்புதம் என்றால் அதற்கு மாற்றுக் கருத்து கூற எவருமே முன் வர மாட்டார்கள். நாட்டுப்புற இசையமைப்பிலும் (folk based songs ) அவர் தனித்துவத்தைக் கையாண்டார்.

இந்தக் கட்டுரையில் இதற்கு முன்னர் இடம் பெற்ற நான்கு பாடல்கள் ஒவ்வொன்றுமே ஒரு ரகம். இந்தப் பாடல் "பிரம்மாண்டம்" என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்த பாடல். இந்தப் பாடலின் சிறப்புக்கு பல காரணங்கள் உண்டு. எதை எழுதுவது, எதை விடுவது என்று திக்குமுக்காட வேண்டியிருக்கிறது.

முதலில், வரிகள். இந்தப் பாடல் முதலில், சம்பிரதாயமாக, தொகையறா,சரணம், பல்லவி, அனுபல்லவி என்று போனாலும், கடைசியில், ஸ்வரப் பிரஸ்தாரத்துக்குள் நுழையும் போது, கவியரசரின் ஆளுமை, அதியற்புதம் என்று சொன்னால், குறைத்துச் சொல்லுவதாக ஆகும். ச ரி க ம ப த நி என்று சொல்லி, விரைவினில் நீ நீ, மனமலர் தா, தா, திருமார்பா பா, தாமதமா மா, மயிலெனை தா, தா, என்று கூறி, ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவும் "நி த ம ப கா" என்று எழுதிய கற்பனைக்கு, ஒவ்வொரு தமிழனும், தன் உயிரையே அந்த இறவாக் கவிக்கு கொடுக்கலாம். ஒரு கவிஞன், கொடுக்கப் பட்ட சூழலுக்குப் பாட்டு எழுதுவதே கடினம் எனும் போது, இவ்வளவு கற்பனையா!

இப்பொழுது பாடியவர். எனக்குத் தெரிந்து, பி. சுசீலா அவர்களின் எத்தனையோ அற்புதப் பாடல்களில், இந்தப் பாடல் தான், முதல் இடம் பெறுகிறது என்பேன். இந்தப் பாடலுக்குத் தேவைப்படுகிற ஆளுமையுடன் கூடிய கம்பீரக் குரல், ஆனாலும், பிசிறில்லாத தன்மை; இலேசான தாபம் கலந்த ஒரு பாவம் ஆனாலும், ஒரு இடத்திலும் தரம் வழுவாத தன்மை; மடை திறந்த வெள்ளமென வரும் ஸ்வரப் பிரவாகம்; சாஸ்திரீய சங்கீதத்தின் அற்புதத்தை ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்காத தன்மை - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எழுதும் போதே, மயிர்க்கூச்செரிகிறதே, பார்த்தால்? இந்தப் பாடல் நெடுகிலும் வரும், ஸ்வரப் பிரஸ்தாரம் செய்பவரையும், மறக்க முடியாது.

இசை. மேலே கூறியபடி, இந்தப் பாடலை, சாஸ்திரீய சங்கீதத்தின் அடிப்படையில், அதே சமயம், சினிமா என்கிற ஊடகத்திர்க்கேற்றார் போல் அமைத்து, படித்தவன் முதல் பாமரன் வரை அதை இன்றளவும் ரசித்து இன்புற வைத்த, திரை இசைத்திலகத்தை எப்படிப் பாராட்டுவது? வாழ்த்த வயதில்லை ஆதலால், வணங்குகிறேன்.

இயக்கம். ஏ.பி. நாகராஜன் அவர்கள் பிரம்மாண்டத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்ட படங்களில், என்றுமே மிகச் சிறந்த இடத்தைப் பிடிப்பவர். ஆங்கிலத்தில், "Perfectionist" என்று சொல்வார்கள். எதை செய்தாலும், ஒரு முழுமை இருக்க வேண்டும் என்று விரும்புபவர். நடிகர் திலகமும் அப்படித்தான். அதனால் தான், இவர்கள் கூட்டணியில் வெளி வந்த படங்கள் சாகா வரம் பெற்றவையாக இருக்கிறது. இந்தப் பாடலை இயக்கிய இவரை எப்படிப் போற்றுவது? இந்தப் பாடலை பிரம்மாண்டமாக அமைத்த விதத்தையா? அதை, எல்லோரும் விரும்பி ரசிக்கும்படி எடுத்த விதத்தையா? பத்மினியின் நாட்டியத்திறமையை முழுமையாக வெளிக்கொணர்ந்த முயற்சியையா? (நடிகர் திலகத்தைப் பற்றி? - இனி மேல் தான்)இந்தப் பாடலை அமைத்த, நடன இயக்குனரையும், வடிவமைத்த கலை இயக்குனரையும் விட்டு விடக் கூடாது. இந்தக் காலத்தில், இது சாத்தியமா?

கடைசியாக நடிப்பு. நாட்டியப் பேரொளியின் நடனத்தை சொல்வதா?, அவரது ரசமான அபிநயங்களை சொல்வதா? கடைசியில், அங்கிருக்கும், ஒவ்வொரு சிலையின் பாவத்திற்கு ஏற்றாற்போல் இவரும் அபிநயித்து, நிற்கும் அழகைச் சொல்வதா! கம்பீரத்தைச் சொல்வதா?

இப்போது நடிகர் திலகம். இந்தப் படத்தை சமீபத்தில், நம் ஹப் நண்பர்கள் புடை சூழப் பார்க்கச் சென்ற போது, அங்கிருந்த மற்றவர்களும், தவறாமல், படம் துவங்குவதற்கு முன் சென்று விடத் துடித்துக் கொண்டிருந்தனர். எல்லோருக்கும் தெரிந்தது தான். படம் துவங்கியவுடன், இந்தப் பாடல் துவங்கி விடும். பாடலின் துவக்கத்தில் தொகையறா முடிந்தவுடன்,அவர் வந்து கம்பீரமாக நின்றவுடன், வரும் ஒரு துள்ளலான இசைக்கு அவர் போடும் நடை. அதை தவற விடக்கூடாது என்பதற்காக, அங்கிருந்த அனைவருமே மும்முரமாக ஓடோடிச் சென்று இருக்கைகளில் அமர்ந்து ஆர்ப்பரித்தோம்! அந்த நடைக்குப் பின்னர் சென்று, அவர் அமர்ந்திருக்கும் விதம்!! அதற்குப் பின்னர், அவர் வெறுமனே, கம்பீரமாக அமர்ந்து, பத்மினியை, ஒரு மாதிரி (ஆனால் கண்ணியம் கொஞ்சமும் குறையாமல்) பார்த்தபடி மட்டுமே அமர்ந்திருப்பார். அவருக்கு வாயசைத்துப் பாட சந்தர்ப்பமில்லை. இருப்பினும், இந்தப் பாடல் முழுவதிலும், பத்மினி கடுமையாகப் பயிற்சி செய்து, பாடல் நெடுகிலும், ஆடி, வாயசைத்து, செய்து சாதித்ததை, நடிகர் திலகம் வெறுமனே ஒரு நடை நடந்து, பின் வெறுமனே அமர்ந்து, சமன் செய்து, ஏன் பத்மினியை விடுத்து, வழக்கம் போல், இவரை மட்டுமே மக்கள் கவனிக்கும்படி செய்திருப்பார்.

இந்தப் பாடலிலும், யாருடைய பணி உச்சம் என்று இனம் பிரிக்க முடியாத படி, அனைவருமே நூறு சதவிகிதம் சிறப்பாகச் செய்து, இன்றளவும் இந்தப் பாடலை சிரஞ்சீவித்துவம் உள்ளதாக ஆக்கியிருப்பார்கள்.

தொடரும்,

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
10th August 2011, 03:44 PM
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)

6. "பார்த்த ஞாபகம் இல்லையோ" படம்: புதிய பறவை; பாடல்: கவியரசு கண்ணதாசன்; பாடியவர்: பி.சுசீலா; இசையமைப்பு:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்/ராமமூர்த்தி; இயக்கம் - தாதா மிராசி; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் குழுவினர்.

தமிழ்த் திரைப்படங்களில், பாடல்கள் என்ற தலைப்பை எடுத்துக் கொண்டு யார் எப்போது பேசினாலும், எழுதினாலும், மேற்கோள் காட்டினாலும், உலகம் உள்ளளவும், "புதிய பறவை" பாடல்களைத் தொடாமல் இருக்க முடியாது. இதுவே இந்தப் படத்தின் பல சிறப்புகளில் தனிச்சிறப்பு. இந்தப் படத்தில் அமைந்த அனைத்துப் பாடல்களும், வழக்கம் போல், மெல்லிசை மன்னர்கள் இசையில், மெகா ஹிட்டான பாடல்கள். அதிலும், அத்தனை பாடல்களும், மேற்கத்திய இசை பாணியில் அமைந்திருந்தாலும், சாமானியனையும், சென்று சேர்ந்த பாடல்கள்.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் அற்புதம் என்றாலும், பார்க்கும் அனைவரையும் கவர்ந்த பாடல் இதுவும், "உன்னை ஒன்று கேட்பேன்" என்றும் சொல்லலாம். இருப்பினும், உன்னை ஒன்று கேட்பேன் பாடலை, இந்தப் பாடல் முந்துகிறது என்றால் அதற்குப் பல காரணங்கள். இந்தப் பாடல் படத்தில் இரு முறை இடம் பெற்றாலும், இங்கு முதல் முறை பாடப்படும் பாடலை எடுத்துக்கொள்கிறேன்.

முதலில், பாடல் வரிகள். இது ஒரு பொதுவான, எந்த அடிப்படை உள்நோக்கமும் இல்லாத பாடலாகத்தான், முதல் முறையாகப் பாடப்படும்போது வரும். இருப்பினும், ஒவ்வொருவரையும், அவர்களது கடந்த கால வாழ்க்கையைப் பின்னோக்கிச் சென்று அசை போட வைக்கும். ஏதோ, பாடுபவர், பார்ப்பவரைப் பார்த்து, பல காலம் பழகி, இப்போது என்னை மறந்து விட்டாயே என்று முறையீடு செய்து, இலேசாகப் புலம்புவது போல் இருக்கும். (இதே பாடல், இடைவேளைக்குப் பிறகு, இறந்து போனதாக எல்லோரும் (நடிகர் திலகம் உள்பட) நம்பிக்கொண்டிருக்கும் சௌகார், நடிகர் திலகத்தின் வாழ்க்கையில் மறுபடியும் குறுக்கிட்டு, பாடும்போது, இந்தப் பாடலின் மொத்த வரிகளும், அப்போதைய சூழலுக்கு அபாரமாகப் பொருந்தும்.) முதல் முறை பாடப்படும்போது, பொதுவாக ஒரு பாடகரோ பாடகியோ பாடுவது போல் இந்தப் பாடல் அமைந்திருக்கும். முக்கியமாக இரண்டாவது சரணம். "இந்த இரவைக் கேள் அது சொல்லும்; அந்த நிலவைக் கேள் அது சொல்லும், உந்தன் மனதைக் கேள் அது சொல்லும்; நான் மறுபடி பிறந்ததை சொல்லும்" எப்பேர்பட்ட கவிஞன்!

இப்போது பாடியவர். இந்தப் பாடலில் அமைந்த வரிகள் - அதாவது, ஒரு காதலியின் முறையீடு. அதை இதை விடச் சரியாக யாராலும் செய்ய முடியாது. அந்தக் குரலில் தெரியும் ஏக்கம், அதே சமயத்தில், சுய கௌரவத்தை கொஞ்சமும் இழக்காத தன்மை. ஏனென்றால், அது பொதுவாகத் தான், ஒரு பாடலாகப் பாடப்படுகிறது. முழுவதும் மேற்கத்திய பாணிப் பாடலாகி விட்டதால், ஒரு இடத்தில் கூட, சாஸ்திரீய சங்கீதத்தை நினைவு படுத்தாமல், ஒரு சுத்தமான சினிமா பாணிப்பாடலாகப் பாடலாகப் பாடியிருப்பார். இதற்கு முன் எழுதிய மன்னவன் வந்தானடி பாடலில் முழுவதுமாக, சாஸ்திரீய சங்கீதத்தில் பாடியவர், இந்தப் பாடலில் அந்த சாயல் கொஞ்சமும் வராமல் பார்த்துக் கொண்டிருப்பார். ஏனென்றால், பாடலின் ஆரம்பத்தில் வரும், அந்த ஹம்மிங்கில் கொஞ்சம் அசந்தாலும், சாஸ்திரீய சங்கீதம் வந்து விடும். இந்த வித்தியாசத்தை மிகச் சரியாக உணர்ந்து பாடுவது மிகக் கடினம். ஆனால், அதை அனாயாசமாக செய்திருப்பார் திருமதி. சுசீலா அவர்கள்.

அடுத்து, இசை. மெல்லிசை மன்னர்கள் எத்தனையோ படங்களுக்கு சேர்ந்து இசை அமைத்திருக்கிறார்கள். பின்னர், மெல்லிசை மன்னர் தனியாகப் பல படங்கள் செய்திருக்கிறார். இருப்பினும், புதிய பறவை மட்டும், அவர்களது (அவரது) இசைப் பயணத்தின் சிகரம் எனலாம். ஏனென்றால், இந்தப் படத்தின் களம் ஒரு வித்தியாசமான களம். நாற்பத்தியேழு வருடங்களுக்கு முன்னரே, அனைத்து அம்சங்களிலும் அத்தனை ரிச்னெஸ் ததும்பி வழிந்த படம். பாடல், ஆரம்பிக்கும்போதே, பாங்கோஸ் தாளம் ஒவ்வொருவரையும் கவரும் என்றால், படம் நெடுகிலும் வரும் வயலினும், கிடாரும், பியானோவும் பார்க்கும் / கேட்கும் ஒவ்வொருவரையும், மயங்கிக் கிறங்க வைக்கும்.

இப்போது, இயக்கம். இதில், கூடுதல் பங்கு, நடனம் அமைத்தவருக்கு. மேலும், அந்த மேடை, நடனமாடும் நங்கைகள், கேமிரா ஆங்கிள், பார்வையாளர்கள் இருக்கும் இடம், என்று ஒவ்வொரு அம்சத்தையும், பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கும் விதம். அந்த மெனக்கெடல், சிரத்தை பார்ப்பவரை மலைக்க வைக்கும். (ஆங்கிலத்தில், eye for detail என்பார்கள். Perfectionist என்றும் சொல்லலாம்.)

இப்போது, நடிப்பு. ஒரு தேர்ந்த பாடகியின் உடல் மொழி சௌகாரிடம் மிளிரும். அந்த கௌரவமான உடல் மொழி, கையசைப்பு, மைக்கைப் பிடித்துக்கொண்டிருக்கும் விதம், பாடும் விதம், நளினமான வாயசைப்பு என்று, சௌகார் அபாரமாக செய்திருப்பார். இந்தப் பாடலும், இதற்கு முன்னர் எழுதிய மன்னவன் வந்தானடி பாடல் போலவே, பெண் பாடுவதாக வருகின்ற பாடல். பாடலில், வரும் நாயகன் நடிகர் திலகம், வெறுமனே உட்கார்ந்து கொண்டுதான் இருப்பார். அந்தப் பாடலில், ஒரு துள்ளல் நடை போட்டு, அதற்கப்புறம், வைத்த கண் வாங்காமல் கம்பீரமாக அவருக்கேயுரிய தோரணையுடன் பார்த்துக் கொண்டிருப்பார் என்றால், இந்தப் பாடல் வேறு விதம். பாடல் ஆரம்பிக்கும் போதே, வாயில் சிகரெட்டை வைத்து லைட் செய்ய ஆரம்பிப்பார். அப்போது, துவங்கும் ஸ்டைல் சாம்ராஜ்ஜியம், பாடல் முழுவதும் தொடரும். பார்க்கும் ஒவ்வொருவரையும், வழக்கம் போல், ஆக்கிரமிக்க ஆரம்பிப்பார். அவர் ஒவ்வொரு முறை சிகரெட்டை புகைக்கும் போதும், ஒவ்வொரு விதமாக, அந்தப் புகையை இழுத்து விடுவார். முகத்தில், ஒரு விதமான அமைதியான, ஆனால், பாடுபவரையும் அந்தப் பாடலையும் ரசிக்கும் உணர்வு (ஸ்டைலாக வேறு) இருக்கும். குறிப்பாக, ஒரு முறை சிகரெட்டை வாயில் வைத்து, புகையை இழுக்காமல் பார்ப்பதும், இன்னொரு முறை சிகரெட் புகையை இழுத்து, அவருடைய உதடை இலேசாக ஸ்டைலாக துடைக்கும்போதும், இன்னமும் தியேட்டர்கள் அலறிக்கொண்டிருக்கின்றன. கடைசியில், பாடல் முடிந்தவுடன், தன்னை மறந்து ஒரு விதமான போதையுடன், கை தட்டும் இடம் இன்னும் கண் முன்னே நிற்கிறது. இந்தப் பாடல், ஒரு லாஜிக் சறுக்கல் - அன்னையை இழந்த மகன் - சோகத்துடன் ஒவ்வொரு நைட் கிளப்பிலும் தன்னுடைய நேரத்தை வீணே செலவழிப்பவன், எவ்வாறு அவ்வளவு அழகான மேக்கப் செய்யப்பட்ட (நன்றாக ஷேவ் செய்யப்பட்ட) முகத்துடன் காட்சியளிப்பான்? சமூகத்தில், உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்கள், வெளியில் செல்லும் போது, அவர்களுடைய அந்தஸ்த்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று சொல்லிக்கொள்ளலாம். இருந்தாலும், இந்தக் குறையை, அவருடைய வசீகரம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுகிறது. நடிகர் திலகம் நடித்த படங்களில் வரும் நடிகைகள் மட்டுமே பாடும் பல பாடல் காட்சிகளில், நடிகர் திலகம் அந்தக் குறிப்பிட்ட நடிகைகளை ஓவர் டேக் ஒவ்வொரு முறையும் செய்திருப்பார். அந்தப் பாடல்களின் வரிசை ஏற்கனவே இந்தத் திரியில் குறிப்பிடப்பட்டு விட்டது. அந்த வரிசையில், முதல் இடம் பெறும் பாடல் இது என்றால் அது மிகையாகாது.

இந்தப் பாடலுக்கு இணையாக, இதன் சோக வடிவம் - இடைவேளைக்குப் பின்னர் வரும் - அமைந்திருக்கும். அந்தப் பாடலில், நடிகர் திலகம் காட்டும் உணர்வுகள் - ஆச்சரியம், நம்ப முடியாத மன நிலை, கோபம், ஆத்திரம், இயலாமை - அத்தனை உணர்வுகளையும், பியானோ வாசித்துக் கொண்டே, அந்த உணர்வுகளை, அந்த இசைக்கருவியிலும் காட்டிய விதம் - வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எப்படித் தான் இந்தப் பாடல்களை எல்லாம் எடுத்தார்களோ? ஏனென்றால், அவரது நடிப்பை ரசிக்க ஆரம்பித்தால், வேறெந்த வேலையும் ஓடாது. பின், எப்படி அத்தனை கலைஞர்களும், கடமையே கண்ணாக இருந்து, இந்தப் பாடல்களையும், காட்சிகளையும் எடுத்தார்கள்?

இந்தப் பாடலும் இந்தக் கட்டுரையில் இடம் பெறும் மற்ற பாடல்களைப் போல் படம் வெளி வந்த 1964-ம் வருடத்திலிருந்து இன்று வரை, அனைத்து தரப்பினராலும், ரசிக்கப் படுகிறது. அதனால் தான், சிரஞ்சீவித்துவம் பெற்று விட்ட பாடல் வரிசையில் இந்தப் பாடலும் இடம் பெறுகிறது.

தொடரும்,

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Arvind Srinivasan
10th August 2011, 04:23 PM
Had a chance to watch thavaputhalvan yesterday. Typical NT . Again a performance that carries the film through completely. Cho's comedy track served as a minor irritant in some places though. Nevertheless a good movie that you could spend time just for NT. Special mention for the " kingini kingini' song.

parthasarathy
10th August 2011, 04:33 PM
Had a chance to watch thavaputhalvan yesterday. Typical NT . Again a performance that carries the film through completely. Cho's comedy track served as a minor irritant in some places though. Nevertheless a good movie that you could spend time just for NT. Special mention for the " kingini kingini' song.

Dear Mr. Arvind,

Our senior hubber Mr. Murali had written a lot about Thavappudhalvan, especially, about it's 100-day run despite his other 2 big movies concurrently running (Pattikkadaa Pattanama & Vasantha Maaligai) and other movie Dharmam Engaey (had a great opening but; failed to sustain). The success is due to the sincere efforts of NT, in a totally different character. (Efforts never fail!) Kingini kingini song is special due to NT's great acting for a typical context.

Thanks,

R. Parthasarathy

Arvind Srinivasan
10th August 2011, 04:44 PM
Dear Mr. Arvind,

Our senior hubber Mr. Murali had written a lot about Thavappudhalvan, especially, about it's 100-day run despite his other 2 big movies concurrently running (Pattikkadaa Pattanama & Vasantha Maaligai) and other movie Dharmam Engaey (had a great opening but; failed to sustain). The success is due to the sincere efforts of NT, in a totally different character. (Efforts never fail!) Kingini kingini song is special due to NT's great acting for a typical context.

Thanks,

R. Parthasarathy

Thanks for the info. Will definitely check Mr Murali's previous posts for more details on the movie

parthasarathy
10th August 2011, 05:24 PM
டியர் பார்த்தசாரதி,
தாங்கள் கூறியது முற்றிலும் சரி. பெண்ணின் பெருமை திரைக்காவியத்தைப் பொறுத்த வரையில் முற்றிலும் அனுதாபம் கிட்டக் கூடிய பாத்திரத்தை ஏற்று நடிப்பவர்களுக்குக் கிடைக்கக் கூடிய வரவேற்பை மிஞ்சி கொடுமை நிறைந்த வில்லன் பாத்திரத்தை ஏற்று நடித்து அதை வெற்றிகரமாக தன்ககு சாதகமாக பயன் படுத்திக் கொண்ட நடிகர் நடிகர் திலகம் மட்டுமே. மேற்கத்திய திரைப்படங்களில் இவ்வாறு கதாநாயகனை மிஞ்சி வில்லன் வேடம் தரித்து புகழ் வாங்கிய நடிகர்களில் குறிப்பிடத் தக்கவர்களில் ஓமர் ஷெரீப் மற்றும் மால்கம் மெக்டொவெல் போன்றோர் உண்டு. ஆனால் அவர்களால் கதாநாயகனாகவோ அல்லது மற்ற பாத்திரங்களிலோ அந்த அளவிற்கு புகழ் பெற முடியவில்லை என்று அந்தக் காலத்தில் கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் எந்தப் பாத்திரமானால் என்ன, ஊதித்தள்ளிவிடுவதில் சூரர் நடிகர் திலகம். இதே அடிப்படையில் தான் வாசுதேவன் அவர்களும் தன் கருத்தை கூறியிருக்கிறார்.

அன்புடன்

அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

நன்றி. எந்த வேடம் ஏற்றாலும், அந்த வேடத்திற்கு முழு அர்ப்பணிப்பையும் தருவதில் , நடிகர் திலகத்திற்கு ஈடு இணை ஒருவர் உண்டோ? சில நாட்களுக்கு முன்னர், டிவியில், படையப்பா படம் பார்க்க நேர்ந்தபோது, நடிகர் திலகம் அந்தப் படத்தில் இறக்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது, இந்த எண்ணம் மறுபடியும் எழுந்தது. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு, மறுபடியும் ஒரு குழந்தை போல் ஓடோடிச் சென்று, அந்த தூணைப் பிடித்து ஆசையாய் தடவியபடியே உயிர் விடும் கட்டம்! சொல்லிக் கொண்டே போகலாம்!!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

rsubras
10th August 2011, 06:29 PM
Dear Mr. Arvind,

Our senior hubber Mr. Murali had written a lot about Thavappudhalvan, especially, about it's 100-day run despite his other 2 big movies concurrently running (Pattikkadaa Pattanama & Vasantha Maaligai) and other movie Dharmam Engaey (had a great opening but; failed to sustain). The success is due to the sincere efforts of NT, in a totally different character. (Efforts never fail!) Kingini kingini song is special due to NT's great acting for a typical context.

Thanks,

R. Parthasarathy

Rajapart Rangadurai la varum Sirikkiraen sirikkiraen sirippu varalai had a lots of similarities to the kingini kingini song...... esp the situation, the beautiful portrayal of the dilemma and of course the performance.......i think in both the songs shivaji middle of the song la thadukki vizhunthuduvar, evoking laughter from the audience while he carries the grief.....

mr_karthik
10th August 2011, 06:39 PM
//தங்கைக்காக படத்தைப் பார்த்த போது, இந்த வரிகளுக்கு அரங்கமே அதிர்ந்தது. இந்த டூயட் பாடலைப் பாடியவர் டி.எம்.எஸ். மற்றும் எஸ்.ஜானகி. இதில் ஒரு சிறப்பம்சம் நடிகர் திலகத்துடன் வெண்ணிற ஆடை நிர்மலா டூயட் பாடிய ஒரே படம், ஒரே பாடல் இதுதான்.//

ராகவேந்தர் சார்,

'எங்க மாமா' படத்தில் வரும் 'சொர்க்கம் பக்கத்தில்' பாடலும் டூயட் பாடல்தானே. (இருவரும் ஜோடியாக இல்லாதபோதும்).

குறிப்பாக, 'இன்றுமுதல் ஆணும் பெண்ணும் நம்மைப்பார்த்து காதல் செய்யட்டும், ஒன்றுநான் ஒன்று நீ ஒன்றிலே ஒன்று நாம்' போன்ற வரிகள்.

RAGHAVENDRA
10th August 2011, 07:05 PM
டியர் பார்த்த சாரதி சார்,
தாங்கள் கூறிய படையப்பா காட்சியே போதும் இன்றைய கலைஞர்களுக்கு... வேறெதுவும் நாம் சொல்லத் தேவையில்லை.. அருமையான சான்று...

டியர் கார்த்திக,
தாங்கள் கூறியது சரி என்றாலும், அது படத்தில் காட்சிக்காக கற்பனையில் புனையப் பட்டது. இதே போல் தங்க சுரங்கம் திரைப்படத்திலும் நிர்மலா ஜோடியாக வருவது போல் நடித்து உளவாளியாக வருவார். ஆனால் தங்கைக்காக படத்தில் மட்டுமே அவர் வாழ்வில் பங்கு பெறும் உண்மையான காதலியாக நடித்திருக்கிறார். எனவே இப்படத்தில் தான் இருவரும் நிஜமான காதல் டூயட் பாடும் நாயக நாயகியராக நடித்துள்ளனர் என்பதைக் குறிக்கும் விதமாக எழுதினேன்.

டியர் வாசுதேவன்,
நிச்சயம் தங்கைக்காக திரைக்காவியம் மற்றொரு பாசமலர் என்று சொல்லலாம். அண்ணன் தங்கை உறவு முறை இந்த அளவிற்கு யதார்த்தமாக அதற்கு முன் வந்ததில்லை எனலாம். அதற்குக் காரணம் லக்ஷ்மியின் குடும்பத் தனமான தோற்றமும் நடிப்பும். ஆனால் இதே காட்சிகளை மீண்டும் அருணோதயம் படத்தில் பார்த்த போது சற்று சலிப்பும் அலுப்பும் ஏற்பட்டதும் உண்மை. தங்கைக்காக படத்தை 71ல் பார்த்ததிலிருந்து மிகவும் ஆழமாக நம் நெஞ்சில் அப்படம் ஊறி விட்டது. அந்த அளவிற்கு பதிந்து விட்டது. பிறிதொரு சமயத்தில் இப்படத்தைப் பற்றி விரிவாக எழுதலாம்.

தாங்கள் குறிப்பிட்ட படங்கள் இங்கே மீண்டும்

ஜெய்ப்பூரில் கட்டபொமமன் படப்பிடிப்பின் போது
http://chennai365.com/tamil/zp-core/i.php?a=actors%2FActor-Shivaji-Ganesan&i=Actor-Shivaji-Ganesan-002.jpg&s=940&cw=&ch=&q=85

ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் பங்கேற்க கெய்ரோ சென்றிருந்த போது, பிரமிடுகள் நடுவில்
http://chennai365.com/tamil/zp-core/i.php?a=actors%2FActor-Shivaji-Ganesan&i=Actor-Shivaji-Ganesan-003.jpg&s=940&cw=&ch=&q=85

அங்கே, ஸ்பிங்க்ஸ் நடுவில்
http://chennai365.com/tamil/zp-core/i.php?a=actors%2FActor-Shivaji-Ganesan&i=Actor-Shivaji-Ganesan-004.jpg&s=940&cw=&ch=&q=85

அன்புடன்

Murali Srinivas
10th August 2011, 11:44 PM
பெண்ணின் பெருமை திரைப்பட ஆய்வை பாராட்டிய சுவாமி, ராகவேந்தர் சார், ராமஜெயம் சார், குமரேசன், சந்திரசேகர், வாசுதேவன் சார், சாரதி, சதீஷ், செந்தில் ஆகிய அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி.

படத்தின் ஸ்டில் மற்றும் விளம்பரங்களை வெளியிட்ட சுவாமிக்கு சிறப்பு நன்றி.

சாரதி,

மன்னவன் வந்தானடி மற்றும் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற இரண்டு extreme ஆனால் extraordinary பாடல்களை எடுத்துக் கொண்டு நீங்கள் அலசிய விதம் பிரமாதம். பாடல் வரிகள், இசை, அரங்க அமைப்பு, பாடியவர், இயக்கியவர் மற்றும் நடித்தவர்கள் என்று பிரித்து பிரித்து நீங்கள் அலசியது சூப்பர்!

Sathish,

Yes, I had gone to the opening show of Naan Vaazha Vaippen on 10th August,1979. It was released in Sridevi. The opening show was a matinée because they didn't conduct any special morning show. There was not much of a problem except for a slight skirmish during Aagayam Mele song and it was immediately brought under control. It is quite natural to have such face offs given the history of Tamil Cinema backdrop. Better sense prevailed and now looking back, it was all childish.

மற்றபடி ஓபனிங் ஷோவில் அலப்பறைக்கு குறைவொன்றுமில்லை. அது வழக்கம் போல் அரங்கு அதிர அதிர நடந்தது.

அன்புடன்

pammalar
11th August 2011, 01:24 AM
In 1952 Sivaji was very much interested to appear on the screen. At that time Telugu producer Adhinarayana Rao and Anjali Devi produced a film “Paradesi” and given first time acting chance for Sivaji. But Paraskati released first. For giving this opportunity he never forget was grateful to them. They produced a film “Bhaktha Thukaram” and told Sivaji to act a small role - when Sivaji was in stardom in Tamil and told him they will pay whatever he wants. But Sivaji refused to take any remuneration and said “since you have given me chance for first time acting in film I will act without taking any money”. Without taking even a glass of water he acted in that movie for them.


டியர் பாலா சார்,

தாங்கள் அளித்துள்ள தகவல் சற்று புதிதாக உள்ளது, இதுவரை நாம் அறிந்தவரை பராசக்தி படத்தில் தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் பிறகு தான் மற்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார் என்று கேள்விபட்டிருக்கிறோம்.
இதற்க்கு சான்றாக நடிகர் திலகம் அவர்களே பராசக்தி படம் பற்றி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

டியர் பம்மலார் சார்,

இதற்க்கு (பரதேசி படம் )ஆதாரமாக அந்த காலகட்டத்தில் வந்த பத்திரிக்கை செய்தி ஏதேனும் இருந்தால் இங்கு பதிவேற்றம் செய்யும் படி வேண்டுகிறேன்.

டியர் ஜேயார் சார்,

நமது நடிகர் திலகம் முதன்முதலில் நடிக்க ஒப்பந்தமானது, நடிகை அஞ்சலிதேவியின் அஞ்சலி பிக்சர்ஸ் தயாரிப்புக்களான "பூங்கோதை(தமிழ்) / பரதேசி(தெலுங்கு)" திரைப்படங்களில்தான். எனினும் இதற்கு அடுத்து ஒப்பந்தமான "பராசக்தி" முதலில் வெளிவந்தது. எல்லாம் நன்மைக்கே !

இதற்கு ஆதாரமான பத்திரிகைத் தகவல் பத்திரமாக உள்ளது. விரைவில் வெளியிடுகிறேன்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
11th August 2011, 02:13 AM
Dear goldstar satish,

Thanks for your whole-hearted appreciation.

I will furnish NAAN VAAZHAVAIPPAEN BO data shortly.

டியர் செந்தில் சார்,

உயர்ந்த பாராட்டை அளித்த உங்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றி !

டியர் mr_karthik,

பாராட்டுக்கும், மேலதிக விவரங்களுக்கும் மேலான நன்றி !

டியர் ராகவேந்திரன் சார் & நெய்வேலி வாசுதேவன் சார்,

அரிய பொக்கிஷங்களை அளித்துள்ள தங்களுக்கு அற்புத நன்றிகள் !

டியர் முரளி சார்,

மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
11th August 2011, 06:02 AM
அழைப்பின் பேரில் முதன் முதலாக அஞ்சலி பிக்சர்ஸ் அலுவலகத்தில் நுழைகிறார் அந்த இளைஞர். அங்கே அமர்ந்திருக்கிறார் ஒரு சீனியர் இயக்குநர். இயக்குநர் அந்த இளைஞரைக் காண்கிறார். அஞ்சலி தேவியிடம் சொல்கிறார்.

இந்த இளைஞனின் கண்களைப் பார். அந்த ஒளி மிக சக்தி வாய்ந்தது. இவனை மிஸ் பண்ணிடாதே. அவன் மிகப்பெரிய அளவில் வருவான்

அந்த இயக்குநர் மறைந்த மாமேதை எல்.வி.பிரசாத். தீர்க்க தரிசியாக நல்லெண்ணத்துடன் வாழ்த்தி வரவேற்ற அந்த இளைஞன் யாரென்று கூறவும் வேண்டுமோ

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

இது தான் முதன் முதல் நடிகர் திலகம் திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப் பட்ட அனுபவம். அந்தப் படம் ஓர் தெலுங்குப் படம். நாகேஸ்வர ராவ் அஞ்சலிதேவி நடித்த பரதேசி. சற்று நாளிலேலேய அதனை தமிழிலும் தயாரிக்கத் துவங்கினர்.

இதன் படி பார்த்தால் நடிகர் திலகம் முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஓர் தெலுங்குப் படத்தில் தான் என்பது குறிப்பிடத் தக்கது.

அன்புடன்

RAGHAVENDRA
11th August 2011, 09:00 AM
அந்தக் காலத்தில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நடிகர் திலகத்தின் கையொப்பமிட்ட புகைப்படங்கள் அஞ்சலில் அனுப்பப் படுவதுண்டு. இன்றும் பழைய ரசிகர்களிடம் அது நிச்சயம் பொக்கிஷமாக இருக்கும். பிந்தைய தலைமுறையினர் அந்தப் புகைப்படத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி எனக்குக் கிடைத்த அந்தப் படத்தை நம் அனைவருடனும் பகிரந்து கொள்வதில் பெரு மகிழ்வுறுகிறேன். இதனைத் தங்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். மிகவும் பழைய படமாதலால் முடிந்த வரையில் சரி செய்ய முயன்றுள்ளேன். ஏதேனும் சரியில்லையென்றால் பொறுத்தருள்வும்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/ntautograph01fw.jpg

அன்புடன்

joe
11th August 2011, 09:38 AM
சிங்கப்பூர் சிற்பிகள் மன்றம் நடத்திய 'சிவாஜி - நினைவலைகள்' (http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=430)

http://www.thangameen.com/Images/ContentImages/admin/0DSC_0391%20copy.jpg

kumareshanprabhu
11th August 2011, 10:12 AM
Harish

please let me know what all DVDS you want , u can contact me at 9845491583

Dear Joe Sir

any chance of Video clippings of the progarmme

parthasarathy
11th August 2011, 12:15 PM
பார்த்தசாரதி சார்,

உண்மையைத்தான் சொன்னீர்கள். இருந்தாலும் இவர்களோடு சேர்த்து, உங்களின் பங்களிப்புகளூம் ஒன்றும் குறைந்தவையல்ல. மிக அபாரமான பல பதிவுகளைத் தந்துள்ளீர்கள்.

இந்த நூற்றுக்கால் மண்டபத்தில் நீங்களும் ஒரு முக்கியமான தூண் என்பதை மறந்துவிட வேண்டாம்.

அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

தங்களின் பாராட்டுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகள். இருப்பினும், மேற்கூறிய ஜாம்பவான்களுடன் என்னை ஒப்பிட முடியாது. என்னால் முடிந்தவரை என்னுடைய நினைவுகளையும், ஆய்வுகளையும் என்னுடைய பார்வையிலிருந்து தருகிறேன்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
11th August 2011, 12:37 PM
Rajapart Rangadurai la varum Sirikkiraen sirikkiraen sirippu varalai had a lots of similarities to the kingini kingini song...... esp the situation, the beautiful portrayal of the dilemma and of course the performance.......i think in both the songs shivaji middle of the song la thadukki vizhunthuduvar, evoking laughter from the audience while he carries the grief.....

Dear Mr. Subramanian,

This is the unique characteristic of this great thespian. Situations in both the songs are similar to a great extent where in he had to perform the role of an entertainer (bafoon / christmas thatha) and make the children enjoy the same, yet hide/control his emotions. He still was able to strike it differently and still able to draw applause/appreciation/tears from the audience. We can quote innumerable examples like this - only for NT the Greatest!

Regards,

R. Parthasarathy

parthasarathy
11th August 2011, 01:45 PM
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

நன்றி. படிக்காதவன் படத்திலும், அவருடைய பங்கு அற்புதமாக இருக்கும். (இதே போல் கதாநாயகனாக இல்லாமல் வேறொரு முக்கிய பாத்திரத்தில் நடித்ததன் அடிப்படையில்.). குறிப்பாக, விஜய் பாபு திருமணத்திற்கு வந்து வெறுமனே உட்கார்ந்திருப்பார். அந்த தோரணை, படத்தில் நடித்த ரஜினியிலிருந்து, படம் பார்க்கும் அனைவரையும் மதிப்பும், மலைப்பும், மரியாதையும் கலந்த ஆச்சரியத்தில் கண்ணுற வைக்கும்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
11th August 2011, 04:36 PM
25-02-1982 அன்று வெளியான நடிக மாமன்னனின் 222-ஆவது படைப்பான ரேவதி கம்பைன்ஸ் 'கருடா சௌக்கியமா' என்ற வண்ண ஓவியமான இக் காவியத்தைப் பற்றி ஆய்வு செய்து ஹப் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

' பத்தோடு பதினொன்று' என்று ஒதுக்கி விடக் கூடிய படமில்லை இது. இப்படம் ஓர் அற்புதக் காவியம். இயக்குனர் திரு டி. எஸ்.பிரகாஷ்ராவ் அவர்களின் பழுத்த அனுபவமிக்க இயக்கத்தாலும்,'வியட்நாம் வீடு' சுந்தரம் என்ற வளமான வசனகர்த்தாவின் உயிரோட்டமான வசனங்களினாலும், திரு.என்.கே.விஸ்வாதன் அவர்களின் அற்புத ஒளிப்பதிவினாலும், மெல்லிசை மாமன்னரின் தேனூறும் இசை அமைப்பினாலும், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று' நடிப்புலகச் சக்கரவர்த்தி',' நடிக மாமேதை',நடிகர்திலகம்' அவர்களின் அற்புதமான, வித்தியாசமான நடிப்பசைவுகளாலும் உருவான உயிரோவியமே' கருடா சௌக்கியமா' என்னும் காவியமாகும்.

சரி! கதைக்கு வருவோம்.

அனாதைக்குழந்தை' தீனா' 'மேரி' என்னும் கன்னிகாஸ்திரீயால்
வளர்க்கப்படுகிறான். சிறுவயதிலேயே அவள் கணவனால் தீனா விரட்டியடிக்கப்படுகிறான். யாருமில்லாத அனாதையாக தனியாக வளர்ந்து பெரியவனாகிறான். தீனாவைப் பயன்படுத்தி, அவனை வைத்து குற்றங்கள் புரிந்து பணம் சம்பாதிக்கின்றனர் சில கயவர்கள். தீனா அதைப் புரிந்து கொண்டு உஷாராகிறான். அவர்கள் தனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களை அவர்களுக்கே கற்றுக் கொடுக்கிறான்.

முத்துக்கிருஷ்ணன் எனும் அனாதைச் சிறுவன் தீனாவின் திறமைகளைக் கண்டு வலிய வந்து தீனாவிடம் அட்டை போல் ஒட்டிக் கொள்கிறான். தீனாவுக்கு வலது கையாகிறான்.

தன் தாய்மாமனால் துன்புறுத்தப்படும் 'லஷ்மி' என்ற பெண்ணை அவனிடமிருந்து காப்பாற்றி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான் தீனா. அவளுடைய தாய்மாமனையும் தன்னுடைய அடியாளாக்கிக் கொள்கிறான்.

தீனாவுக்கு வயதாகிறது. தீனா இப்போது' தீனதயாளு' என்று மக்களால் போற்றப்படும் ஆபத்பாந்தவர். அநாதை ரட்சகர். ஏழை எளிய மக்களுக்கு தீனதயாளு ஒரு காட்பாதர். தீனதயாளு ஏழை எளியவர்களுக்கு இன்னல்கள் கொடுக்கும் பணக்கார முதலைகளின் கொட்டங்களை தன் செல்வாக்கால் ஒடுக்கி அவர்களை நிலை குலைய வைக்கிறார். ஆனால் தீனதயாளு எப்போதுமே கெட்டவழியில் செல்வது இல்லை. மொத்தத்தில் அவர் ஒரு நல்ல' தாதா'.

ஆனால் குடும்பத்தைப் பொறுத்த வரையில் அவர் ஒரு அப்பாவி. அவர் மனைவி லஷ்மிக்கு தன் கணவர் ஒரு பெரிய 'தாதா' என்பது தெரியாது. அப்படி அவள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் தீனதயாளு உறுதியாக இருக்கிறார். அவ்வளவு பெரிய தாதாவாக இருந்தும் தான் நேர்மையாக நடத்தி வரும் அச்சக ஆபீஸ் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் தீனதயாளு தன் குடும்பத்தை நடத்துவார்.

தீனதயாளுவுடன் சிறுவயது முதற்கொண்டே வளர்ந்து வரும் முத்துக்கிருஷ்ணன் இப்போது இளைஞன். தீனதயாளு என்ற சிவனின் கழுத்தில் சுற்றிய பாம்பாய் யாரை வேண்டுமானாலும் கருடா சௌக்கியமா என்று கேட்பவன்.தீனதயாளுவுக்கு எல்லாமே அவன்தான். இதற்கிடையில் தீனதயாளு தன் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை அடிக்கடி சந்தித்து ஆறுதலடைகிறார். தீனதயாளுவுக்கு ராதா என்ற செல்ல மகள், ராதா மோகனை விரும்புகிறாள். திருமணம் செய்ய ஆசைப் படுகிறாள். ஆனால் தீனதயாளுவுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் தன் மனைவி லஷ்மியின் விருப்பத்துக்காக அரைமனதுடன் சம்மதித்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

ராதாவின் கணவன் மோகன் குடிகாரனாகி ராதாவை தீனதயாளுவின் வீட்டிற்கே அனுப்பி வைத்து விடுகிறான். சந்தோஷம் குடியிருந்த வீட்டில் சோகம் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.

தீனதயாளுவை சில பணக்காரத் தீயவர்கள் சந்தித்து போதை மருந்து கடத்தலில் ஈடுபடவைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் தீனதயாளு அதை அடியோடு மறுத்துவிட்டு, அவர்களும் அதில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி விடுகிறார். இது முத்துகிருஷ்ணனுக்கு பிடிக்காமல் தீனதயாளுவை எப்படியாவது கடத்தலில் தான் ஈடுபட சம்மதிக்க வைப்பதாக அவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொள்கிறான்.

சத்தியநாதன் என்ற தொழிலதிபர் தீனதயாளுவின் வளர்ப்புத்தாய் மேரியம்மாவை குடிபோதையில் காரை ஏற்றிக் குற்றுயிரும்
கொலையுயிருமாக விட்டு விட்டு கண்டு கொள்ளாமல் சென்றுவிடுகிறான். இது தீனதயாளுவுக்குத் தெரியவர துடிதுடித்து மேரியாம்மாவை பார்க்க ஓடிவர, அவர் கண் முன்னமே மேரியம்மாவின் உயிர் பிரிகிறது. தன் வளர்ப்புத்தாயைக் கொன்றவனை பழிவாங்கத் தயாராகிறார் தீனதயாளு.

இது புரியாமல் சத்தியநாதன் மேரியம்மாவின் மரணத்துக்காக தரும் சொற்ப பணத்தை வாங்கிவந்து முத்துகிருஷ்ணன் தீனதயாளுவிடம் தர, தீனதயாளு மிகுந்த கோபமடைந்து அந்தப் பணத்தை வாங்கி வந்ததற்கு முத்துக்கிருஷ்ணனைக் கடிந்து கொள்கிறார். இருவருக்கும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுகிறது.

தன் தாயைக் கொன்ற சத்தியநாதனைப் பழிவாங்க நேரிடையாக தலையிட ஆரம்பிக்கிறார் தீனதயாளு. சத்தியநாதனுக்கு பலவகையிலும் தொல்லைகள் கொடுத்து அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறார்.

இப்போது சத்தியநாதன், மருமகன் மோகன், முத்துக்கிருஷ்ணன், மற்றும் தீனதயாளுவின் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீனதயாளுவைப் பழிவாங்க பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். கள்ளநோட்டுகளை அச்சடித்து அவற்றை தீனதயாளுவின் அச்சாபீஸில் போட்டு தீனாவை போலீசில் சிக்க வைத்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது தீனதயாளுவின் மற்றொரு முகமான' தாதா' முகத்தை அவர் மனைவி லஷ்மிக்கு தெரியப்படுத்தி விடுகின்றனர். லஷ்மி தன் கணவர் தீனதயாளு ஒரு கெட்டவர் என்று எண்ணி அதிர்ச்சி அடைந்து உயிரை விட முயற்சிக்கிறாள். தீனதயாளு அவளைக் காப்பாற்றி தான் நியாயமானவன் என்று அவளை சமாதானப் படுத்துகிறார்.

எதிரிகளின் சூழ்ச்சி ஒருபுறம்.

குற்றவாளிக் கூண்டில் ஏற்றத் துடிக்கும் சட்டம் ஒருபுறம்.

மருமகனும், வளர்த்த முத்துக்கிருஷ்ணனும் எதிர்ப்புறம்.

தன்னைக் கெட்டவன் என்று நினைத்து துயருறும் மனைவி மறுபுறம்.

இவ்வளவு பிரச்னைகளையும் சர்வசாதரணமாக எதிர்கொண்டு, கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் தீனதயாளு.

வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே தனக்கு வக்கீலாகி, தன் வாதத் திறமையாலும், சமயோசித புத்தியாலும், மனதைரியத்தாலும் தான் குற்றவாளி அல்ல என்று வாதாடி, தீயவர்களின் சூழ்ச்சிகளை வீடியோப்படக் காட்சிகள் மூலம் நிருபித்து நிரபராதியாய் வெளியில் வருகிறார் தீனதயாளு.

பிரிந்த குடும்பம் ஒன்று சேர முடிவில் சுபம்.



இத்திரைப்படத்தில் 'தீனதயாளு' என்ற அற்புதமான கதாபாத்திரத்தில் நடிகர்திலகமும், அவர் மனைவி லஷ்மியாக மறைந்த குணச்சித்திர நடிகை சுஜாதாவும், முத்துக்கிருஷ்ணனாக தியாகராஜன் அவர்களும்,மகள் ராதாவாக அம்பிகாவும், மருமகனாக மோகனும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் நிச்சயமாக ஒரு 'ஒன் மேன் ஷோ' மூவி என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு நடிகர் திலகத்தின் ஆதிக்கம் தான் படம் நெடுகிலும்.

மேக்-அப், கெட்-அப், நடை, உடை, பாவனை அனைத்திலும் மிக மிக வித்தியாசமாக காட்சியளிப்பார் நடிகர்திலகம் அவர்கள்.

தாதாவாக உலா வரும்போது.....

வெளியே அணிந்திருக்கும் மிக மெல்லிய ஜிப்பா என்ன!
உள்ளே பளிச்' சென்று தெரியும் கட்-பனியன் என்ன!
வேட்டியின் மேல் அணிந்திருக்கும் பச்சை நிற பெல்ட் என்ன!
வலது கையில் மின்னும் மோதிரம் என்ன!
கையில் ஜிப்பாவுக்கு மேல் கட்டப் பட்ட வாட்ச் என்ன!
கையில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் என்ன!

அப்பப்பா.... தீனதயாளுவாக அல்லோல கல்லோலப் படுத்துகிறார் நடிக மன்னன்.

அதே சமயம் குடும்பத்தலைவனாகக் காட்சியளிக்கும் போது...
நீண்ட அங்கவஸ்திரம் அணிந்து கையில் சிகரெட் இல்லாமல் முகத்தை அப்பாவியாக வைத்திருப்பார்.

'காட்பாதர்' தீனதயாளுவாக வரும்போது உதடுகளைக் குவித்து சிகரெட்டை கை விரல்களுக்கிடையில் வைத்துக் கொண்டு, கண்கள் சிவக்க, ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து ஒரு சொடுக்கு போடுவார் பாருங்கள். தியேட்டர் கூரை ரசிகர்களின் கைத்தட்டலில் பிய்த்துக் கொண்டு போகும்.

மீண்டும் 2-ஆம் பாகத்தில் சந்திப்போம்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

RAGHAVENDRA
11th August 2011, 09:29 PM
கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே - எங்கள்
நடிகர் திலகம் பெருமை சொல்ல (வாசுதேவன் என்னும்)
கண்ணன் வந்தான் forumhub-லே

வாசுதேவன் சார், கருடா சௌக்கியமா திரைக்காவியத்தினைப் பற்றி சூப்பராக துவக்கியுள்ளீர்கள். 80க்குப் பிறகு நடிகர் திலகத்தின் நடிப்பை குறை சொல்லும் அறிவிலிகளுக்கு சாட்டையடி தரும் விதமாக தாங்கள் தேர்ந்தெடுத்த படம் உள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் அட்டகாசமாக பிய்த்து உதறியிருப்பார். குறிப்பாக பண்டரிபாய் இறக்கும் காட்சியில் தன் இரு கைகளையும் மேலே தூக்கி முதுகிற்குப் பின்னால் கொண்டு வந்து மடக்கும் உடல்மொழியாத்தான் பல பிரபல நடிகர்கள் பின்னாளில் தங்கள் நடிப்பில் புகுத்தினர் என்பது மறுக்க முடியாத உண்மை. தங்களுடைய மற்ற பதிவுகளையும் ஆவலுடன் எதிர் நோக்குகிறோம். அது வரை நம் பார்வைக்கு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/garuda01.jpg

அன்புடன்

pammalar
12th August 2011, 02:45 AM
நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை

மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி

மன்னவன் வந்தானடி தோழி

பார்த்த ஞாபகம் இல்லையோ

................................................. இன்னும் எத்தனையோ அடுத்தடுத்து வருவதற்கு தயார் நிலையில் உள்ளன,

கீதோபதேசம் செய்தார் அந்த பார்த்தசாரதி !

சிவாஜியின் கீதங்களை உபதேசங்களாகத் தருகிறார் இந்த பார்த்தசாரதி !

Great Going Sir ! Keep it up !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th August 2011, 03:17 AM
டியர் நெய்வேலி வாசுதேவன் சார்,

கலைச் சக்கரவர்த்தியின் "கருடா சௌக்கியமா" குறித்த தங்களின் ஆய்வுக்கட்டுரையினுடைய ஆரம்ப பாகத்தை யாரேனும் பிரபலமான திரைப்பட விநியோகஸ்தர் வாசித்தார் என்றால், இக்காவியத்தின் வெள்ளித்திரைப்பிரதி தற்பொழுது எங்கிருக்கிறது என்று கண்டறிந்து தேடிப்பிடித்து 'சாந்தி'யில் திரையிட்டு விடுவார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் தங்களின் ஆய்வில் அத்தகைய ஈர்ப்பு காணப்படுகிறது.

தொடருங்கள்...காத்திருக்கிறோம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th August 2011, 03:29 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தாங்கள் ராகவேந்தர் மட்டுமா,

ரசிகவேந்தர்

வீடியோவேந்தர்

ஃபோட்டோவேந்தர்,

வாசு சாரின் வர்ணனைக்கேற்ப தாங்கள் வழங்கிய "கருடா சௌக்கியமா" புகைப்படங்களுக்கு நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th August 2011, 04:26 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

சுமங்கலி

[12.8.1983 - 12.8.2011] : 29வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம்
[உதவி : நல்லிதயம் எஸ்.கே.விஜயன்]
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4291a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
12th August 2011, 07:42 AM
டியர் பம்மலார்,
சுமங்கலி விளம்பரத்தை வரலட்சுமி விரதம் அன்று மறு வெளியீடு செய்து லட்சுமிகரமான நாளைக் கொண்டாடி விட்டீர்கள். பாராட்டுக்கள். இந்த வைபவத்தை ரசிகர்கள் கொண்டாட வேண்டாமா, அந்தப் பாடலை நாமும் கேட்க வேண்டாமா, கூட கை தட்ட வேண்டாமா, பாராட்ட வேண்டாமா, இதோ நடிகர் திலகம் கூறுகிறார், நாம் கடைப் பிடிப்போம்.


http://www.youtube.com/watch?v=pgU8WnbcQEI

அன்புடன்

vasudevan31355
12th August 2011, 08:16 AM
டியர் ராகவேந்திரன் சார் ,

தங்கள் ஊக்கப்படுத்தலுக்கு மிக மிக நன்றி. அருமையான நடிப்புலக மாமேதையின் 'கருடா சௌக்கியமா' ஸ்டில்ஸ் சூப்பர். தங்களின் அயராத உழைப்பும் ,புதியவர்களை வரவேற்று அவர்களை உற்சாகப்படுத்தும் பாங்கும், நடிகர்த்திலகத்தைப் பற்றிய எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அதற்கேற்றவாறு புகைப்படங்களை வெளியிடும் சுறுசுறுப்பும் எங்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல உடல் நலத்தையும் அளிக்க உளமார வேண்டுகிறேன். நடிகர் திலகத்தின் ஆசியுடன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களுக்கெல்லாம் 'தீனதயாளு'வாக துணை நின்று வழி காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்பு பம்மல் சார் ,

தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி. நடிகர்திலகத்தின் காவியங்களுள் மிகச் சிறந்த பத்து படங்களை மட்டும் என்னை பட்டியலிடச் சொன்னால் அதில் கண்டிப்பாக' கருடா சௌக்கியமா ' இடம் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு என்னை ஆட்டிப் படைத்த காவியம் அது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த காவியத்தைப் பற்றி ஆய்வு செய்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

நன்றியுடன்,

நெய்வேலி வாசுதேவன்.

goldstar
12th August 2011, 09:38 AM
டியர் ராகவேந்திரன் சார் ,

தங்கள் ஊக்கப்படுத்தலுக்கு மிக மிக நன்றி. அருமையான நடிப்புலக மாமேதையின் 'கருடா சௌக்கியமா' ஸ்டில்ஸ் சூப்பர். தங்களின் அயராத உழைப்பும் ,புதியவர்களை வரவேற்று அவர்களை உற்சாகப்படுத்தும் பாங்கும், நடிகர்த்திலகத்தைப் பற்றிய எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அதற்கேற்றவாறு புகைப்படங்களை வெளியிடும் சுறுசுறுப்பும் எங்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல உடல் நலத்தையும் அளிக்க உளமார வேண்டுகிறேன். நடிகர் திலகத்தின் ஆசியுடன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களுக்கெல்லாம் 'தீனதயாளு'வாக துணை நின்று வழி காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்பு பம்மல் சார் ,

தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி. நடிகர்திலகத்தின் காவியங்களுள் மிகச் சிறந்த பத்து படங்களை மட்டும் என்னை பட்டியலிடச் சொன்னால் அதில் கண்டிப்பாக' கருடா சௌக்கியமா ' இடம் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு என்னை ஆட்டிப் படைத்த காவியம் அது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்த காவியத்தைப் பற்றி ஆய்வு செய்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

நன்றியுடன்,

நெய்வேலி வாசுதேவன்.


Vasu sir,

Thanks a lot for Garuda Soukiyama? I have not seen this movie yet. I will definitely buy this movie DVD and watch it soon.

Your narration and each scene explanation is excellent and could judge you have enjoyed each and every scene of NT. That is the speciality of our NT movies. When ever I watch our NT movies I used to enjoy every second he is on the screen. I don't think any ohter actor got this attractions.

Even after watching 100 times when you watch 101 time, you could find new facial expression and new dimension to charactor he lived on. Only our NT can do this.

Pammalar sir, thanks a lot for Sumangali release paper cut. This movie is very much closer to my heart, because this is the first NT movie I have watched first show at Madurai Shah theatre when I was in class 7 that too alone. After this I have watched so many NT movies on Friday and Sunday evening show by alone and used to watch without slippers (even though I had so many slippers at home) some what I liked walking without Slippers. I used to walk nearly 45 mins. to 1 hour to reach theatre like Sri Devi, Kalpana in Madurai just to watch and enjoy seeing our NT.

Cheers,
Sathish

parthasarathy
12th August 2011, 12:17 PM
நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை

மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி

மன்னவன் வந்தானடி தோழி

பார்த்த ஞாபகம் இல்லையோ

................................................. இன்னும் எத்தனையோ அடுத்தடுத்து வருவதற்கு தயார் நிலையில் உள்ளன,

கீதோபதேசம் செய்தார் அந்த பார்த்தசாரதி !

சிவாஜியின் கீதங்களை உபதேசங்களாகத் தருகிறார் இந்த பார்த்தசாரதி !

Great Going Sir ! Keep it up !

அன்புடன்,
பம்மலார்.

அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

உங்களுடைய அங்கீகாரமும் கனிவான பாராட்டுதல்களும் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கின்றன.

உங்களைப்போல் திரை கடலோடியும் நடிகர் திலக திரவியங்களை தேடி வந்து அனைவரின் முன் சமர்ப்பிப்பது மிகக் கடினம் என்பதால், நேரம் கிடைக்கும் போதெல்லாம், கட்டுரைகள் மூலமாக, நடிகர் திலகத்தை நினைவு கூர முயல்கிறேன். இது போன்ற தேடல்களில், தாங்களும், திரு. ராகவேந்தர் போன்ற பலரும் ராமர் என்றால், நான் அணிலாக சிலவற்றை செய்ய முயல்கிறேன்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
12th August 2011, 12:26 PM
அன்புள்ள திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்களே,

தங்களுடைய "கருடா சௌக்கியமா" படத்தின் ஆய்வுக் கட்டுரை அற்புதமாக இருந்தது. திரு. பம்மலார் அவர்களின் கூற்றை நான் வழி மொழிகிறேன். உங்களுடைய கட்டுரையைப் படித்தவுடன், உடனே, இந்தப் படத்தை, வெள்ளித்திரையில் மீண்டும் கொண்டு வர பலரும் முயல்வர். ஆளாளுக்கு casual ஆக்டிங் பற்றி எழுதிகிறார்களே, இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். அவ்வளவு அருமையாக, அனாயாசமாக, இயல்பாக நடித்திருப்பார். அதிலும், முத்துக்கிருஷ்ணா! என்று அவர் தியாகராஜனைக் கூப்பிடும் விதம் அலாதியாக இருக்கும்!

என் நினைவுக்கெட்டியவரையில், 82-இல், நடிகர் திலகத்திற்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி கிடைத்த பிறகு, வந்த முதல் படம் இது என்று நினைக்கிறேன். போஸ்டர்களில், சிவாஜி எம்.பி. என்று குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது என்று நினைக்கிறேன்.

அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

கருடா சௌக்கியமா திறனாய்வின் முதல் பகுதி முடிந்த மறு கணமே, தாங்கள் படத்தின் நிழற்படங்களைப் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள்.

நன்றி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி



அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

sathya_1979
12th August 2011, 12:31 PM
One request / suggestion: many fans here have enormous knowledge, writing skills, analytical skills and descriptive skills about NT, the artist and his movies. But, when I look in popular online portals like wikipedia, the information about his movies are very limited. I used to frequently visit this thread to gather knowledge.
To take the reach of NT's greatness to next level or world stage, it would be of great help if people from here can contribute and maintain such pages which many outsiders frequently visit for information or knowledge update.

mr_karthik
12th August 2011, 01:36 PM
நிழலில் வைக்கப்பட்ட இயக்குனர்

நான் வாழவைப்பேன், சுமங்கலி ஆகிய படங்களின் விளம்பரங்களைப் பார்த்தபோது என் மனதில் ஒரு எண்ணம் / சந்தேகம் / ஐயம் தோன்றியது. அதாவது இயக்குனர் திரு டி.யோகானந்த் நடிகர்திலகத்தின் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். அவை

காவேரி
வளர்பிறை
தங்கைக்காக
தாய்
கிரகப்பிரவேசம்
ஜெனரல் சக்கரவர்த்தி
ஜஸ்டிஸ் கோபிநாத்
நான் வாழ வைப்பேன்
எமனுக்கு எமன்
ஊருக்கு ஒரு பிள்ளை
வா கண்ணா வா
சுமங்கலி
சரித்திர நாயகன்.... உள்பட பல படங்கள்

இவற்றில் ஜெனரல் சக்ரவர்த்தி, நான் வாழவைப்பேன், வா கண்ணா வா உள்பட பல படங்கள் 100 நாட்களைக்க்டந்து ஓடியுள்ளன.

இதுபோக ஆரம்ப காலங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் சிலவற்றையும் இயக்கியுள்ளார்.

இருந்தாலும் இவர் ஒரு கே.எஸ்.ஜி., ஒரு ஸ்ரீதர், ஒரு ஏ.பி.என். ஒரு கே.விஜயன், ஒரு ஏ.சி.டி., ஒரு சி.வி.ஆர். போன்று பிரபலமாகப் பேசப்படவில்லையே என்ன காரணம்?.

இவரது பெயரைக்குறிப்பிட்டு எந்த ஒரு செய்தியையும் எந்தப்பத்திரிகையும் எழுதியதில்லை. எந்த ஒரு விழாவிலும், எந்த ஒரு விருதும் கொடுத்து கௌரவிக்கப்படவில்லையே அது ஏன்". கடைசி வரையில் நிழலுக்குள்ளேயே வைக்கப்பட்டு விட்டாரே என்ன காரணம்?.

அனுபவசாலிகளான ராகவேந்தர் சார், முரளி சார் போன்றோர் விளக்க முடியுமா?.

mr_karthik
12th August 2011, 02:00 PM
வாசுதேவன் சார்,

'கருடா சௌக்கியமா' படத்தின் திறனாய்வு முதற்பகுதி அருமை. போதிய இடைவெளி அளிக்கப்பட்டிருந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய படம். என்ன செய்வது நம்ம ஆட்களுக்குத்தான் பொறுக்காதே.

முந்தைய ஆண்டு தீபாவளிக்கு வந்த 'கீழ்வானம் சிவக்கும்' ஓடிக்கொண்டிருக்கும்போதே, அந்த ஆண்டில் (1982)-ல் மட்டும் ஒரே ஆண்டில் 12 படங்கள்.....!!!!. (உலக அளவில்கூட எந்த கதாநாயகனும் செய்திராத சாதனை). அவை

இட்லர் உமாநாத்
ஊருக்கு ஒரு பிள்ளை
வா கண்ணா வா
கருடா சௌக்கியமா
சங்கிலி
வசந்தத்தில் ஓர் நாள்
தீர்ப்பு
தியாகி
துணை
பரீட்சைக்கு நேரமாச்சு
ஊரும் உறவும்
நெஞ்சங்கள்

ஜனவரி 26-ல் துவங்கி டிசம்பர் 10 வரையில் பதினொன்னறை மாதங்களில் 12 படங்கள். இது அல்லாமல் ஒரு தெலுங்குப்படம் வேறு)
உருப்படவா?.

RAGHAVENDRA
12th August 2011, 02:06 PM
டியர் கார்த்திக,
தங்களுடைய நியாயமான கேள்விக்கு விடை .. அந்த மீடியாக்கள் தான் தர வேண்டும்.
ஆனால் அவர் நிழலுக்குள் இருந்து விட்டார் என்று கூற முடியாது. மக்களும் சில குறிப்பிட்ட இயக்குன்ர்கள், இதர கலைஞர்களைத் தவிர மற்றவர்களைப் பற்றி அறிய ஆர்வம் காட்டாமல் இருப்பதும் ஒரு காரணம்.
தாங்கள் மேலே கூறியுள்ள பட்டியலைப் பார்த்தாலே தெரியும். சரித்திர நாயகன் திரைப்படத்தைத் தவிர மற்றவை அனைத்தும் சராசரி அல்லது அதற்கு மேல் வெற்றியைப் பெற்றுள்ளன. இதுவே அவரது திறமைக்கு சான்றாகும். சரித்திர நாயகன் மற்றும் ஜஸ்டிஸ் கோபிநாத் திரைப்படங்களைப் பொருத்த வரையில் ஓவர்-ஆக்டிங் என்கிற ஒரு வார்த்தை இருக்குமானால் அதற்கு நிஜமான உதாரணமாக அந்தந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர்களைக் கூறலாம். இன்று வரை தன்னிகரில்லாத புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவின் சிறந்த திறமையினை சரியாக பயன் படுத்தாமல் ஜஸ்டிஸ் கோபிநாத் திரைப்படத்தில் அவரது நடிப்பை கேலிக் கூத்தாக்கியதும், அதே ஊர்வசி பட்டத்தை மூன்று முறை வென்று இந்தியத் திரையுலகில் முடிசூடா ராணியாக நடிகையருள் விளங்கிய சாரதா அவர்களின் நடிப்பை கேலிக் கூத்தாக்கியதுமே இந்த இரு படங்களின் தோல்விக்கு முக்கியமான காரணங்களாகும்.

மற்ற படி யோகாநந்த் இயக்கிய படங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்தால் இன்று பெரும்பாலும் கூறப்படுகிற Method Acting, Subdued Acting, போன்ற வகை நடிப்பையெல்லாம் அவர் படத்தில் காணலாம். மிகச் சிறந்த உதாரணம், வளர் பிறை. வாய் பேச முடியாமல் சரோஜா தேவியுடன் அவர் உணர்வு பூர்வமாக உரையாடும் காட்சிகள், நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும் பாடல் காட்சியில் அவருடைய அப்பாவித் தனமான தோற்றம், தன் ஊனம் தனக்கு பல சமயங்களில் கஷ்டங்களைத் தருகிறதே என்கிற மனப்பான்மையும் அதற்கு பாடலில் கிடைக்கும் ஆறுதலைக் கொண்டு உளமாறுவதும், மிகச் சிறந்த நடிப்புக்கு உதாரணங்கள். அதே போல் அதே படத்தில் மௌனம் மௌனம் மௌனத்தினாலே வணங்குகிறேனய்யா, பாடலில் சரோஜா தேவியின் நடிப்பு மிகச் சிறந்திருக்கும். நடிகர் திலகத்தின் முதல் 10 இடங்களில் இடம் பெற வேண்டிய படம் வளர் பிறை.

தங்கைக்காக - ஒவ்வொரு காட்சியிலும் மிகச் சிறப்பான அடக்கமான அதே சமயம் ஆழமாகவும் தன் நடிப்பினைத் தந்திருப்பார் நடிகர் திலகம். குறிப்பாக தங்கையின் கணவரிடம் அடி வாங்கிக் கொண்டு பதிலுக்கு தன் கோபத்தைக் காட்டாமல் அடக்கிக் கொண்டு நடிக்கும் காட்சியில் பிய்த்து உதறியிருப்பார்.

காவேரி திரைப்படம் நடிகர் திலகத்திற்குள் இருக்கும் சிறந்த நாட்டியக் கலைஞரை உலகிற்கு எடுத்துக் கூறிய படம். காலைத் தூக்கி நின்றாடும் பாடலில் அமர்ந்த வாறே தன் கழுத்தைப் பலவாறாக அசைத்தும் முக பாவங்களைக் காட்டியும் பின் எழுந்து நின்று பரத நாட்டியம் ஆடும் போதும் மிகச் சிறந்த கலைஞர் என்று தன்னை நிலைநிறுத்திக் கொண்ட படம்.

கிரகப் பிரவேசம் படம் - கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு காட்சியிலும் தன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஊருக்கு ஒரு பிள்ளை திரைப்படத்திலும் சரி, சுமங்கலி படத்திலும் சரி, இதே போல் அவர் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த ஒவ்வொரு படமும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படங்கள். எமனுக்கு எமன் படமும் பெரும் வெற்றியைப் பெற்ற படம்.

வா கண்ணா வா தன் வயதான காலத்தில் பேரக் குழந்தையை இழந்து வாடும் பாடும் பாடல் காட்சியில் சிம்ப்ளி சூப்பர்ப்.. ஒரு காலத்திலே என்னைக் கட்டிப் போட ஒரு ராஜ்ஜியம் இருந்தது என்கிற வரிகள் அந்தப் பாத்திரத்தை அப்படியே பிரதிபலித்தன.

ஜெனரல் சக்கரவர்த்தி - ஆஹா... பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. டான்சேனியா மாநாட்டில் ராணுவ மிடுக்கோடு அதிகாரியாக பங்கேற்கும் காட்சியில் இவரல்லவோ ராணுவ அதிகாரி என்று மற்றவர்களை நினைக்கத் தூண்டும் கம்பீரம்.... மகளுடைய நிலைமையை மனைவி மறைத்து விட்டதைக் கண்டு பிடித்து மிகவும் சாமர்த்தியமாக அவர்களிடம் உண்மையை வரவழைப்பது... இந்தக் காட்சிகளெல்லாம் சிறந்த நடிப்புக்கு உதாரணங்கள்...

தாய்.... அப்பாவி கிராமத்து இளைஞனாகத் தோன்றி நாட்டுக்கு நல்லது செய்ய எண்ணும் இளைஞனைப் பற்றிய கதை.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இயக்குநரை நடிகர் திலகம் எந்த அளவிற்கு மதித்திருந்தால் இப்படிப் பட்ட உன்னத படைப்புகள் நமக்கு கிடைத்திருக்கும் என்பது இதிலேயே தெரியும்.

யோகாநந்த் - நடிகர் திலகம் நட்பு மிகவும் ஆழமானது.

சமீபத்தில் வசந்த் தொலைக்காட்சியில் மகேந்திராவின் பார்வையில் நிகழ்ச்சியில் வியட்நாம் வீடு சுந்தரம் பகிர்ந்து கொண்ட ஒரு தகவல்

ஜெனரல் சக்கரவர்த்தி திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெறுகிறது. இயக்குநருக்கு தகவல் வருகிறது. அவருடைய முகம் இருள்கிறது. சாலை விபத்தில் அவருடைய மகன் உயிர் துறக்கிறார். உடனே நடிகர் திலகம் அவரைப் போகச் சொல்கிறார். அவர் பாசத்தோடும் துக்கத்தோடும் பாய்ந்தோடும் காட்சி அனைவர் உள்ளத்தையும் பிழிகிறது. அந்த சம்பவம் நடிகர் திலகத்தின் உள்ளத்தில் ஆழமாகப் பதிகிறது.

பரீட்சைக்கு நேரமாச்சு திரைப்படத்தின் கிளைமாக்ஸ், கடற்கரை சாலையில் ஓடும் பேருந்தில் ஆனந்த் ஏறுகிறான். ஆனால் தவறி விழுந்து விடுகிறான். உடனே பதைபதைத்து ஓடி வரும் பெற்றோர் அவனை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லக் கூட முடியாத அளவிற்கு பலத்த அடிபட்டு உயிர் துறக்கிறான்.

இந்தக் காட்சியில் நிஜ வாழ்க்கையில் யோகானந்த் அவர்கள் பட்ட துன்பத்தை, தன் தந்தை பாத்திரத்தில் கொண்டு வந்து உயிர் துறக்கும் காட்சிக்கு உயிரூட்டினார் நடிகர் திலகம்.

யோகாநந்த் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர்.

parthasarathy
12th August 2011, 03:59 PM
சாரதி,

மன்னவன் வந்தானடி மற்றும் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற இரண்டு extreme ஆனால் extraordinary பாடல்களை எடுத்துக் கொண்டு நீங்கள் அலசிய விதம் பிரமாதம். பாடல் வரிகள், இசை, அரங்க அமைப்பு, பாடியவர், இயக்கியவர் மற்றும் நடித்தவர்கள் என்று பிரித்து பிரித்து நீங்கள் அலசியது சூப்பர்!

அன்புடன்

அன்புள்ள திரு. முரளி அவர்களே,

பாராட்டுக்கு நன்றி. தங்களது பாராட்டு என்னை மேலும் ஊக்குவிக்கிறது.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

mr_karthik
12th August 2011, 04:25 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

இயக்குனர் திரு டி.யோகானந்த பற்றிய எனது ஐயங்களுக்கு விளக்கமாக விடையளித்ததற்கு மிக்க நன்றி. டி.யோகானந்த், சிறந்த இயக்குனர்கள் வரிசையில் வைத்துப்போற்றப்பட வேண்டியவர் என்பதில் ஐயமில்லை.

நானும் 'வளர்பிறை' படத்தைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டதுபோல மிகவும் நல்ல படம். 'சலசலக்குத்து காத்து... சிலுசிலுக்குது கீத்து', 'பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டுகொண்டு' போன்ற பாடல்கள் அப்போது மிகவும் பிரபலம். அப்படத்தைத் திரையரங்குகளில் பார்க்க முயன்று கிடைக்காமல் போய், இறுதியில் 70களில், பொருட்காட்சியில் திரையிட்டபோதுதான் பார்த்தேன்.

அதேபோல அவரது இயக்கத்தில் 'தாய்' படமும் மிகவும் பிடித்த படம்.

அன்புள்ள சத்யா,

நடிகர்திலகத்தின் புகழ் இன்னும் பெரிய அளவில் மக்களைச் சென்றடையவேண்டும் என்ற உங்கள் ஆர்வம் மதிக்கப்பட வேண்டிய ஒன்று. விரைவில் செயல்வடிவம் பெறுமென நம்புவோம்.

sathya_1979
12th August 2011, 04:28 PM
Thanks Karthik Sir! ulagin sirandha kalaignanin pugazh ulagam muzhuvadhum senRadaya vENdum enbadhu en aasai!

joe
12th August 2011, 05:25 PM
Dear Joe Sir
any chance of Video clippings of the progarmme
I will try my best.Thanks.

RAGHAVENDRA
12th August 2011, 06:39 PM
விஸ்வரூபம் நெடுந்தகடு கிடைக்கப் பெறாதவர்களுக்கும் வாய்ப்பற்றவர்களுக்கும் வசதியாக இணையத்தில் கீழ்க்காணும் இணைய தளத்தில் இப்படம் தரவேற்றப் பட்டுள்ளது. கண்டு மகிழ்க.


http://www.youtube.com/watch?v=hgg4MYzfCt8&feature=player_embedded&list=PL97F11A567D659ECA

அன்புடன்

RAGHAVENDRA
12th August 2011, 06:59 PM
சென்னை சாந்தி திரையரங்கில் எங்கிருந்தோ வந்தாள் திரைப்படத்திற்காக வைக்கப் பட்ட பேனரின் தோற்றம், தங்கைக்காக திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/EVbnrThangaikkaaga.jpg

அன்புடன்

pammalar
12th August 2011, 11:41 PM
டியர் ராகவேந்திரன் சார்,

லக்ஷ்மிகரமான பாராட்டுக்கும், "சுமங்கலி" படப்பாடலுக்கும் வளமான நன்றிகள் !

டியர் நெய்வேலி வாசுதேவன் சார், மிக்க நன்றி !

Mr. goldstar Satish, Thanks, Your NT devotion is second to none.

டியர் பார்த்தசாரதி சார்,

மடை திறந்த வெள்ளமென தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் வளமான பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
12th August 2011, 11:56 PM
One request / suggestion: many fans here have enormous knowledge, writing skills, analytical skills and descriptive skills about NT, the artist and his movies. But, when I look in popular online portals like wikipedia, the information about his movies are very limited. I used to frequently visit this thread to gather knowledge.
To take the reach of NT's greatness to next level or world stage, it would be of great help if people from here can contribute and maintain such pages which many outsiders frequently visit for information or knowledge update.

Definitely, We will do the needful !

pammalar
13th August 2011, 03:05 AM
படவுலக ஜாம்பவானும் நடிப்புலக ஜாம்பவானும்

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/AVMNT-1.jpg


நடிகர் திலகம் பற்றி திரு.ஏவிஎம்
["எனது வாழ்க்கை அனுபவங்கள் - ஏவிஎம்" என்ற நூலிலிருந்து]

"நம் நாட்டில் - ஏன், நாட்டைவிட இன்னும் ஒருபடி அதிகமாக, உண்மையாக என் மனத்தில் உள்ளதைச் சொல்ல வேண்டுமானால், 'உலகத்திலேயே சிறந்த நடிகர் சிவாஜி கணேசன்' என்பதுதான் என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். இதில் சிலருக்கு கருத்து வேற்றுமைகள் கூட இருக்கலாம். என் வரையில் 'நம் தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி கணேசன் தமிழ்நாட்டில் பிறந்திருக்கிறார். அவருடைய துரதிருஷ்டம் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை'. வெளிநாட்டிலிருந்து கலையுலக நண்பர்கள் வரும்போது சிவாஜியை நான் இப்படித்தான் அறிமுகப்படுத்துவது வழக்கம்."

இன்று 12.8.2011 அமரர் ஏ.வி.மெய்யப்பன் அவர்களின் 32வது ஆண்டு நினைவு தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
13th August 2011, 03:38 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

ஜீவன தீராலு(தெலுங்கு) [கௌரவத் தோற்றம்]

[12.8.1977 - 12.8.2011] : 35வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

"ஜீவன தீராலு" தெலுங்குத் திரைப்படம், "வாழக்கை அலைகள்" என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம்(Dub) செய்யப்பட்டு 14.4.1978 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சென்னை மற்றும் தமிழகமெங்கும் வெளியாகி தொடர்ந்து வெற்றிநடைபோட்டபோது அளிக்கப்பட்ட வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4295aa-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th August 2011, 03:47 AM
இன்று 12.8.2011 வெள்ளி முதல் சென்னை மண்ணடி 'பாட்சா' [பழைய 'மினர்வா'] திரையரங்கில், தினசரி முற்பகல் 11:15 மணிக் காட்சியாக, கலைமகளின் மானுட வடிவமான கலையுலக மகானின் "சரஸ்வதி சபதம்" திரைக்காவியம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அற்புதத் தகவலை அளித்த அன்புள்ளங்கள் அம்பத்தூர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கும், திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும் கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
13th August 2011, 05:42 AM
டியர் பம்மலார்,
ஏவி.எம். நினைவு நாள் செய்தி, ஏவி.எம்.முடன் நடிகர் திலகத்தின் படம், வாழ்க்கை அலைகள் விளம்பரம், சரஸ்வதி சபதம் தகவல் என்று தூள் கிளப்பி விட்டீரக்ள். பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
13th August 2011, 05:45 AM
இன்று 13.08.2011 திருமதி வைஜயந்தி மாலா பாலி அவர்களின் பிறந்த நாள்.

http://im.in.com/connect/images/profile/b_profile5/Vyjayanthimala_300.jpg

13.08.1936 அன்று பிறந்து இன்று தனது 76வது பிராயத்தில் அடியெடுத்து வைக்கும் திருமதி வைஜயந்திமாலா பாலி அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து ஆரோக்கியத்துடன் திகழ வேண்டும் என இறைவனை வேண்டுவோம்.

அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக ராஜ பக்தி திரைக்காவியத்திலிருந்து ஒரு அருமையான பாடல்.


http://www.youtube.com/watch?v=YCbo6Ewmo6U

அன்புடன்

Plum
13th August 2011, 07:53 AM
நம் நாட்டில் - ஏன், நாட்டைவிட இன்னும் ஒருபடி அதிகமாக, உண்மையாக என் மனத்தில் உள்ளதைச் சொல்ல வேண்டுமானால், 'உலகத்திலேயே சிறந்த நடிகர் சிவாஜி கணேசன்' என்பதுதான் என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். இதில் சிலருக்கு கருத்து வேற்றுமைகள் கூட இருக்கலாம். என் வரையில் 'நம் தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி கணேசன் தமிழ்நாட்டில் பிறந்திருக்கிறார். அவருடைய துரதிருஷ்டம் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை'. வெளிநாட்டிலிருந்து கலையுலக நண்பர்கள் வரும்போது சிவாஜியை நான் இப்படித்தான் அறிமுகப்படுத்துவது வழக்கம்."

இன்று 12.8.2011 அமரர் ஏ.வி.மெய்யப்பன் அவர்களின் 32வது ஆண்டு நினைவு தினம்.
Sorry - absolutely no respect for a man who recommended KR Ramasamy instead of NT when the latter was a nobody, still shining out, and needed an opportunity.
It is easy to hop on to the bandwagon AFTER someone has climbed the ladder, isnt it?

It is our duty to disrespect such money bags with a feudal atitude

RAGHAVENDRA
13th August 2011, 08:17 AM
Sorry - absolutely no respect for a man who recommended KR Ramasamy instead of NT when the latter was a nobody, still shining out, and needed an opportunity.
It is easy to hop on to the bandwagon AFTER someone has climbed the ladder, isnt it?
It is our duty to disrespect such money bags with a feudal atitude

இந்த விஷயத்தில் ப்ளம் அவர்களுடைய கருத்தில் நானும் சற்று உடன் படுகிறேன். நடிகர் திலகம் பெருந்தன்மையுடன் நடித்துக் கொடுத்து அவர் படங்கள் வெற்றி பெற்று வசூலைக் கொடுத்தாலும் விளம்பரத்தில் அவருடைய பெயரை முன்னிலைப் படுத்த வில்லை இந் நிறுவனம். இன்று சரவணன் அவர்கள் நடிகர் திலகத்திற்கு அளிக்கும் மகத்துவம் அன்று தரப்படவில்லை என்பதே என் போன்ற பழைய சிவாஜி ரசிகர்களின் ஏக்கம். இத்தனைக்கும் தன்னுடைய எதிரி முகாம் நடிகர்களை வேண்டுமென்றே அழைத்து நடிக்க வைத்ததையெல்லாம் எப்படி மன்னி்க்க முடியும். அப்படி மன்னித்தாலும் மறக்க முடியுமா. அதே மாற்று முகாமில் படமெடுத்த போது விளம்பரத்தில் முக்கியத்துவம் யாருக்கு அளிக்கப் பட்டது. பராசக்தியில் குதிரை முகம் என்று வர்ணித்த அதே நிறுவனம் பின்னர் அவருடைய கால்ஷீட்டை நாடி வரவில்லையா. அந்த நாள் போன்ற ஒரு படத்தை ஏன் வேறு யாரையாவது வைத்து எடுத்திருக்கக் கூடாது.

இப்படி எண்ணற்ற கேள்விகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. இவையெல்லாம் நம்மால் மறக்க முடியவில்லை.

என்றாலும் நம்மைப் பொறுத்த வரையில் நாம் நடிகர் திலகம் வழி நடப்பவர்கள் என்ற காரணத்தால், பம்மலார் கூறிய வாழ்த்துக்களோடு பெருந்தன்மையோடு நாமும் சேர்ந்து கொள்வோம்.

அன்புடன்

Plum
13th August 2011, 08:26 AM
nInga ellAm moderate faction. nAn extremist. ennAla innum maRappOm mannippOm ellAm mudiyala. Respecting the man's perundhanmai, I desist from posting further on this

Subramaniam Ramajayam
13th August 2011, 10:41 AM
dear friends
To my knowledge and follower of NADIGAR THILAGAM ever since PALUMPAZAMUM days I fully agree that the respect and publicity by avm saravanan for NT FOR AVM BANNERS NOT THERE in earlier days.
2. politics had no impact on NT MOVIES success or failure like like the otherheros mgr always ssr to some extent and their political connections played tal role. for example when mgr resigned MELSABAI MEMBER enkadamai had a big disaster. many a things can be shwn examples. for NT only continous release of movies in 70 80s had the impact'

rangan_08
13th August 2011, 11:28 AM
I agree with Plum & Raghavendra sir. Most of us are aware about the fact that how the production of NT's 125th film "Uyarndha Manidhan" got delayed....this was discussed here in details, month's back. It was NT's dedication, greatness, tolerance and sincerity that ultimately paved way for the release of the film, which obviously turned out to be a huge success.

rangan_08
13th August 2011, 11:44 AM
Apart form Gowravam, I frequently visit Enga OOr Raja climax and Raman ethanai Ramanadi.

Particularly the scene from RER where NT enters Nambiar's house and innocently asks about his marriage with KR Vijaya. From the moment he comes in and till he leaves the house (again, a brilliant scene without any dialogues...just gestures !!!)...the entire episode just leaves me dumbfounded !!!!!

விருது, பொடலங்கா மன்னாங்கட்டிக்கெல்லாம் அப்பாற்பட்ட நடிப்பு அது !!! The moist that gathers in every rasigan's eyes after watching this scene is the highest form of honour, I would say.

சத்தியமா, ங்கொப்புறான சொல்றேன், in spite of having watched this scene quite a number of time, it gives me goosebumps every time i watch it.

Can someone upload this brilliant piece of art, please...PLEASE.

parthasarathy
13th August 2011, 02:28 PM
Apart form Gowravam, I frequently visit Enga OOr Raja climax and Raman ethanai Ramanadi.

Particularly the scene from RER where NT enters Nambiar's house and innocently asks about his marriage with KR Vijaya. From the moment he comes in and till he leaves the house (again, a brilliant scene without any dialogues...just gestures !!!)...the entire episode just leaves me dumbfounded !!!!!

விருது, பொடலங்கா மன்னாங்கட்டிக்கெல்லாம் அப்பாற்பட்ட நடிப்பு அது !!! The moist that gathers in every rasigan's eyes after watching this scene is the highest form of honour, I would say.

சத்தியமா, ங்கொப்புறான சொல்றேன், in spite of having watched this scene quite a number of time, it gives me goosebumps every time i watch it.

Can someone upload this brilliant piece of art, please...PLEASE.

Dear Mr. Mohan Rangan,

Exactly. As for Enga Oor Raja, the scene from where younger Sivaji and Nagesh leave the elder Sivaji upto the climax, it's racy and one man show. I still the remember the impact this last episode created in the minds of audience when I watched in Srinivasa Theatre, Mambalam. The way he arrests the audience with his performance is unparalleled in the world of Cinema i.e., world cinema.

As for Raman Ethanai Ramanadi also, it's the same and in fact, I wrote the "the last 20 minutes of Raman Ethanai Ramanadi" as soon as I entered this great hub because of the impact it created in me for years. Apart from this 20 minute episode, the scene where he enters his own village after becoming an Actor till he leaves Nambiar's house is the ultimate. The way he reacts when Nambiar told him that his lover has already got married is "simply superb" and words fail me in narrating his greatness.

Thanks for rekindling memories.

Regards,

R. Parthasarathy

pammalar
13th August 2011, 05:49 PM
டியர் ராகவேந்திரன் சார்,

முதற்கண் பாராட்டுக்கு நன்றி !

"NT & AVM" குறித்து Mr.Plum, தாங்கள், ராமஜெயம் சார், Mr.Rangan உள்ளிட்டோர் பதிவிட்ட நியாயமான, உண்மையான உள்ளக்குமுறலுடன் கூடிய மேலான கருத்துக்களுக்கும் நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
13th August 2011, 06:01 PM
அன்பு ராகவேந்திரன் சார்,

இயக்குநர் யோகானந்த் அவர்களைப் பற்றி நீங்கள் அளித்துள்ள விவரங்கள் அருமை. நன்றி!.ரத்தினச் சுருக்கமான அழகான விளக்கங்கள்.

நீங்கள் குறிப்பிட்டது போல யோகானந்த் ஒரு மிகச் சிறந்த இயக்குநர். யோகானந்த் நடிகர்திலகத்தை வைத்து இயக்கிய படங்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம்" தாய் ". இந்தப் படத்தின் வீடியோ குறுந்தகடுஎங்கு தேடியும் கிடைக்க வில்லை. இந்தப் படத்தின் பாடல் காட்சிகளைக் கூட டிவி சேனல்களில் ஒளிபரப்பி நான் பார்த்ததில்லை. நடிகர் திலகத்தின் அற்புத கலைப் பொக்கிஷங்கள் சில நமக்குக் கிடைப்பதே அரிதாக இருக்கிறது." தாய் "திரைப்படத்தின் வீடியோ குறுந்தகடு விரைவில் கிடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

நடிகர்திலகம் நடித்த கடைசி கருப்பு-வெள்ளைப் படம் இது. நடிக மன்னரின் 169-ஆவது படம் இது.

"முரடன் முத்து" திரைப்படத்தில் வெளுத்து வாங்குவது போல, "தாய்" திரைப்படத்திலும் முரட்டு இளைஞனாக நடிப்புச் சக்கரவர்த்தி பின்னிப் பெடலெடுப்பார்.{வழக்கம் போல இரண்டு முரட்டு கேரக்டர்களுக்கும் கடலளவு வித்தியாசம் காட்டியிருப்பார்]

நடிகர்திலகத்தின்,

தாயாக S.வரலஷ்மி ,
தந்தையாக மேஜர்,
தங்கையாக குமாரி பத்மினி,
ஜோடியாக ஜெயலலிதா,
வில்லனாக நம்பியார்

நடித்திருப்பார்கள். படம் நெடுகிலும் பெரும்பாலும் வேட்டி-சட்டையில் உலா வருவார் நடிகர் திலகம்.

எம்.எஸ். வியின் அற்புதமான இசையில் தேன் சொட்டும் பாடல்கள்.

ஜெயலலிதா அவர்களுக்காக பி.சுசீலா அவர்கள் பாடிய
'எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்'கேட்க கேட்க திகட்டாத பாடல்.

நடிகர்திலகம் கிராமத்தில் இருந்து மெட்ராஸ்[சென்னை] வந்து அவருக்கு அங்கு எற்படும் அனுபவங்களை ஜெயலலிதா அவர்களிடம் பாடுவதாக அமைந்த, டி.எம்.எஸ் அவர்களின் வெண்கலக் குரலில் ஒலிக்கும்,

'நான் பாத்தாலும் பாத்தேன்டி மதராசு பட்டினத்த, பத்து கண்ணு போதாதம்மா பட்டிக்காட்டம்மா'
என்ற ஜனரஞ்சகப் பாடல் ரகளை. [இந்தப் பாடல் திரு.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய "அனுபவி ராஜா அனுபவி" படத்தில் நாகேஷ் அவர்கள் பாடுவதாக அமைந்த' மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்ற பாடலை ஒத்திருக்கும்] இந்தப் பாடலில் வரும் சரணங்களைப் பாருங்கள்....

கூவத்திலே காசை அள்ளி போட்டிருக்காங்க ....
கூட ஒரு முதலையையும் விட்டிருக்காங்க....
துண்டு போட்ட மனுஷங்க எல்லாம் சுத்திக்கிறாங்கம்மா....
இந்த நாட்டை கூட துண்டு போடஎண்ணிக்கிறாங்கம்மா....
அம்மம்மா...அம்மம்மா...ஆமாம்மா...

அப்போதிருந்த அரசியல் சூழ்நிலைகளை கிண்டல் செய்யும் நையாண்டி வரிகள்.

மேலும் அடுத்த சரணத்தில்,

நான் ஒரு பெரிய விருந்துக்குப் போனேன்....
அங்கு ஒரு பொண்ணு வந்தா...
பக்கத்துல போனதுக்கப்புறம்தான் பொண்ணுன்னு தெரிஞ்சுது...
அவ நடந்தா... என்ன நட! வாத்து நட..
அவளுக்கு உதடே இல்ல போலிருக்கு.. கையிலேயே வச்சுருந்தா...
புருவமும் இல்ல போலிருக்கு.. அதையும் கையிலேயே வச்சுருந்தா...
ஆறடிக்கூந்தல் .அரையடிதான் ஒரிஜினல்...

என்று நாகரீக யுவதிகள் புருவ மையையும், லிப்ஸ்டிக்கையும் கை[பை]யிலேயே வைத்திருப்பதைக் கிண்டலடிப்பார் கலைக்குரிசில்.

'மங்கலம் காப்பாள் சிவசக்தி.. என் மாங்கல்யம் காப்பாள் சிவசக்தி' .... என்று எஸ்.வரலஷ்மி அவர்கள் தன் சொந்தக் குரலில் பாடும் லேடீஸ் சென்டிமென்ட் பாடலும் கேட்க நன்றாகவே இருக்கும்.

எல்லாப் பாடல்களுக்கும் மேலாக, பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றி நடிகர்திலகமும் ஜெயலலிதா அவர்களும் கோஷ்டியோடு சேர்ந்து பாடும்

'நாடாள வந்தாரு... நாடாரா நின்னாரு.'. என்ற பாடல் படத்தில் ஹை-லைட்.

பெருந்தலைவரின் சிறப்புகளை இத்திரைப்பாடல் பறைசாற்றியது போல வேறு எந்தத் திரைப் பாடலும் பறை சாற்றியது கிடையாது...

குடும்ப சென்டிமென்ட் நிறைந்த, ஜனரஞ்சகமான பொழுதுபோக்குப் படம் "தாய்".

இந்தப் படத்தைப் பற்றிய நினைவலைகளைத் தட்டி எழுப்பியதற்காக ராகவேந்திரன் சார், உங்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். நன்றி! நன்றி!

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பார்த்தசாரதி சார்,

தாங்கள்' கருடா சௌக்கியமா' ஆய்வை பாராட்டியமைக்கு நன்றி! தாங்கள் கூறியிருந்தது போல் நடிகர் திலகத்திற்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்த பிறகு வந்த முதல் படம் இது. ஆனால் சங்கிலி படத்தின் டைட்டிலின் போது
'நடிகர்திலகம் சிவாஜி கணேசன் m.p.' என்று போடுவார்கள்.

அன்பு கார்த்திக் சார்,

நன்றிகள் பல. கருடா சௌக்கியமா படம் சரியாகப் போக வில்லை என்ற தங்களின் ஆதங்கம் நியாயமானது. என் மனதின் எண்ணங்களை அப்படியே
கண்ணாடி போல் பிரதிபலித்து விட்டீர்கள். ஹப் நண்பர்கள் எழுதுவது போல நம் படங்களே நமக்கு எதிரி. என்ன செய்வது?. இந்தப் படத்துக்கு மட்டுமல்ல. பல படங்களுக்கும் இதே நிகழ்வுகள் தான்.. " தியாகி" கூட அற்புதமான படம்.
அதுவும் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

pammalar
13th August 2011, 06:15 PM
நிழலில் வைக்கப்பட்ட இயக்குனர்

நான் வாழவைப்பேன், சுமங்கலி ஆகிய படங்களின் விளம்பரங்களைப் பார்த்தபோது என் மனதில் ஒரு எண்ணம் / சந்தேகம் / ஐயம் தோன்றியது. அதாவது இயக்குனர் திரு டி.யோகானந்த் நடிகர்திலகத்தின் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். அவை

காவேரி
வளர்பிறை
தங்கைக்காக
தாய்
கிரகப்பிரவேசம்
ஜெனரல் சக்கரவர்த்தி
ஜஸ்டிஸ் கோபிநாத்
நான் வாழ வைப்பேன்
எமனுக்கு எமன்
ஊருக்கு ஒரு பிள்ளை
வா கண்ணா வா
சுமங்கலி
சரித்திர நாயகன்.... உள்பட பல படங்கள்

இவற்றில் ஜெனரல் சக்ரவர்த்தி, நான் வாழவைப்பேன், வா கண்ணா வா உள்பட பல படங்கள் 100 நாட்களைக்க்டந்து ஓடியுள்ளன.

இதுபோக ஆரம்ப காலங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் சிலவற்றையும் இயக்கியுள்ளார்.

இருந்தாலும் இவர் ஒரு கே.எஸ்.ஜி., ஒரு ஸ்ரீதர், ஒரு ஏ.பி.என். ஒரு கே.விஜயன், ஒரு ஏ.சி.டி., ஒரு சி.வி.ஆர். போன்று பிரபலமாகப் பேசப்படவில்லையே என்ன காரணம்?.

இவரது பெயரைக்குறிப்பிட்டு எந்த ஒரு செய்தியையும் எந்தப்பத்திரிகையும் எழுதியதில்லை. எந்த ஒரு விழாவிலும், எந்த ஒரு விருதும் கொடுத்து கௌரவிக்கப்படவில்லையே அது ஏன்". கடைசி வரையில் நிழலுக்குள்ளேயே வைக்கப்பட்டு விட்டாரே என்ன காரணம்?.

அனுபவசாலிகளான ராகவேந்தர் சார், முரளி சார் போன்றோர் விளக்க முடியுமா?.

டியர் mr_karthik,

டைரக்டர் திரு.டி.யோகானந்த் அவர்களைப் பற்றிய தங்களது பதிவிற்கு நமது ராகவேந்திரன் சார் ஒரு விளக்கப் பதிவு அளித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, நமது நடிகர் திலகம் குறித்தும், அவரைத் தான் இயக்கியது பற்றியும், டைரக்டர் திரு.டி.யோகானந்த் அவர்களே 'பிலிமாலயா' இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதை தங்களது பதிவுக்கு இன்னொரு பதிலாக - சிறப்புப் பதிவாக [அந்த இதழின் பக்கங்களையே] - நான் இங்கே வழங்குகிறேன். தங்களது பதிவில் காணப்படும் சில கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அவரது இந்த நேர்காணலும் நல்லதொரு விளக்கமாக அமையும் என்று நம்புகிறேன். ஓவர் டூ,

பிலிமாலயா தீபாவளி மலர் : 30.10.1992
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4296a-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4297a-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4298a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
13th August 2011, 06:25 PM
அன்பு ரங்கன் சார்,

உங்களின் துணிச்சலான" விருது, பொடலங்கா மன்னாங்கட்டிக்கெல்லாம் அப்பாற்பட்ட நடிப்பு அது !" என்ற 'தில்'லான வரிகளுக்காகவே ஆயிரம் விருதுகளை உங்களுக்கு அள்ளித் தரலாம். சத்தியமான வரிகள். விரைவில் உங்கள் ஆசை நிறைவேற்றப் படும் [ ராகவேந்திரர் அருளால்] என நம்புகிறேன்.

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

mr_karthik
13th August 2011, 07:59 PM
பம்மலார் சார்,

சரியா போச்சா?. 'கோடு போட்டால் போதும் நீங்கள் ரோடே போடுபவர்' என்று எல்லோரும் சொன்னது சரியா போச்சா?.

பாருங்கள், இயக்குனர் திரு டி யோகானந்த் பற்றி நான் ஒரு பதிவு எழுதப்போக, அதற்கு ராகவேந்தர் சார் அருமையாக விளக்கம் தரப்போக, அதன் தொடர்ச்சியாக நெய்வேலி வாசுதேவன் சார் நடிகர்திலகம் - யோகானந்த் காம்பினேஷனில் வந்த 'தாய்' என்ற அற்புதப்படத்தைப்பற்றிய ஆய்வு எழுத, முத்தாய்ப்பாக நீங்கள், திரு டி யோகானந்த் அவர்களின் 'பிலிமாலயா'வில் வந்த அருமையான பேட்டியை அளித்து சூப்பராக நிறைவு செய்துவிட்டீர்கள். இப்போது டி.யோகானந்த பற்றி பலரும் அறிய நல் வாய்ப்பாக அமைந்து விட்டது.

இதற்காக ராகவேந்தர் சார், வாசுதேவன் சார் ஆகியோருடன் உங்களுக்கு மிகப்பெரிய நன்றியை சமர்ப்பிக்கிறேன். நாளுக்கு நாள் உங்கள் சேவை மலைக்க வைக்கிறது.

டி.யோகானந்த் அவர்களைப்பற்றி அறிய, தீக்குச்சியை கொளுத்திப்போட்டவன் என்ற வகையில் நானும் பெருமை அடைகிறேன்.

Subramaniam Ramajayam
13th August 2011, 09:13 PM
Dear friends
Further to my earlier mails we have to bow our head for the excellent remarks made by late avm chettiar comparing NT with world class actors. true statement when I visited OSCAR theatre in LOS ANGELES in 2006 i stood for a while there and wept myself for our great actor of all times for not being awarded oscar. had the movie deivamagan had final entry iam sure he would have won the oscar. even now I am daily dreaming why not heget the oscar honors posthumously as a specialcase

vasudevan31355
13th August 2011, 10:11 PM
அன்பு நண்பர்களே!

சமீபத்தில் N.T.அவர்களின்" தெனாலிராமன்" படத்தை பார்த்தபோது அற்புத காட்சி ஒன்று காண நேர்ந்தது. விஜயநகர பேரரசை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற தெனாலி ராமனாக வரும் N.T அவர்களும், மந்திரி அப்பாஜியாக வரும் திரு. V.நாகைய்யா அவர்களும் ஆலோசனை செய்து கொண்டிருப்பார்கள். அப்போது N.T எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க 'ஒரு நாடகம் நடத்த வேண்டும்," என்பார். அதற்கு நாகைய்யா அவர்கள்," நடிப்பது யார்?" என்று கேட்க, அதற்கு N.T அவர்கள் ,"நான்தான் இருக்கிறேனே எல்லாவற்றிலும் நடிக்க," என்பார். {எவ்வளவு நிதர்சனமான உண்மை!} பின் தொடர்ந்து நாகைய்யாவிடம்," ஆனால் எனக்கு ஒரு சிஷ்யன் மட்டும் தேவை," என்பார். அதற்கு நாகைய்யா அவர்கள் சற்று யோசித்து விட்டு N.T.அவர்களிடம் தன் இரு கைகளையும் நீட்டி,"குருதேவரின் அருள் இருந்தால் அந்த சிஷ்யனாகும் பாக்கியம் எனக்கே கிடைக்கலாமே!," என்பார். அதற்கு N.T.அவர்கள் சற்று அதிர்ந்து ,"என்ன இது ? தாங்களா!,"என்று கேட்பார்.
{அடடா !நடிப்பில் N.T.அவர்களை விட பல வருடங்கள் சீனியரான நாகைய்யா அவர்கள் N.T அவர்களிடம் தன்னை சிஷ்யனாக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்வது நடிகர்திலகத்தின் நடிப்புத் திறமைக்குக் கிடைத்த கௌரவமல்லவா!} அதற்கு நாகைய்யா அவர்கள் நடிகர் திலகத்திடம் ,"ஏன்? எனக்கென்ன நடிக்கத் தெரியாதா?", என்று சற்று பரிதாபமாக கேட்பார்.[இது நடிகர்திலகத்தின் நடிப்புக்கு முன்னால் அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர் இரண்டாம் பட்சம் தான் என்பதைப் போல இருக்கும்] அதற்கு நடிகர்திலகம் தன்னடக்கத்துடன் ,"ஐயோ! அப்படிச் சொல்லவில்லை," என்பார். என்ன ஒரு அருமையான சீன்! நடிகர்திலகத்தை மனதில் வைத்துக்கொண்டே அமைக்கப்பட்ட அற்புதமான காட்சி. இத்தனைக்கும் இந்தப் படம் நடிகர்திலகத்தின் 29-ஆவது படம். அப்போதே அவர் திறமைகளைக் கண்டு எழுதப்பட்ட வசனங்கள். அந்தக் காட்சி இதோ உங்களுக்காக.



http://www.youtube.com/watch?v=R9fCCBf2eWM&feature=player_detailpage

அன்புடன்,

நெய்வேலி வாசுதேவன்.

pammalar
13th August 2011, 11:19 PM
டியர் mr_karthik,

பாராட்டுக்கு நன்றி !

தாங்கள் கூறியது முற்றிலும் சரி !

டைரக்டர் திரு.டி.யோகானந்த் அவர்களைப் பற்றி தாங்கள் முதலில் வினாக்களை வினவிப் பதிவிட, அதற்கு விளக்கமான ஒரு பதில் பதிவை ராகவேந்திரன் சார் வழங்க, அதன் தொடர்ச்சியாக நெய்வேலி வாசுதேவன் சார் அருமையான "தாய்" ஆய்வு அளிக்க, அடியேனும் என் பங்குக்கு யோகானந்த் அவர்களின் அரிய 'பிலிமாலயா' பேட்டியை நிழற்படங்களாக இங்கே இடுகை செய்ய, ஆக மொத்தம் யோகானந்த் அவர்கள் நமது நடிகர் திலகம் கிருபையில் ஒரு round வந்து விட்டார். அவர் குறித்த கணிசமான தகவல்களும் கிடைத்துவிட்டன என்றும் சொல்லலாம்.

இவையனைத்துக்கும் காரணகர்த்தாவாகிய தங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

joe
14th August 2011, 12:18 AM
Dear friends
Further to my earlier mails we have to bow our head for the excellent remarks made by late avm chettiar comparing NT with world class actors. true statement when I visited OSCAR theatre in LOS ANGELES in 2006 i stood for a while there and wept myself for our great actor of all times for not being awarded oscar. had the movie deivamagan had final entry iam sure he would have won the oscar. even now I am daily dreaming why not heget the oscar honors posthumously as a specialcase
In my understanding , Oscar award is for hollywood movies , except one category "Best foreign film" .. So how can we expect oscar for NT ? Oscar is not an International award , but Hollywood award ..IMO , Asian - Africa Best actor award and Chevalie award are more international compare to Oscar .

pammalar
14th August 2011, 03:50 AM
பொன்விழா நாயகன்

கலைக்குரிசிலின் 50 ஆண்டு கலைச்சேவையை பாராட்டும் விழா
மற்றும் அவரது 59வது பிறந்தநாள் விழா
தொடர்ந்து களைகட்டுகின்றன.....

1.10.1986 : புதன் : சென்னை

[விழா நிகழ்வுகளின் அபூர்வ தொகுப்பு]

வரலாற்று ஆவணங்கள் : "மருதாணி" இதழ் சிறப்பு மலர் : 10.10.1986
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4303a-2.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4299a-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4300a-1.jpg


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4302a-1-1.jpg

விழா களைகட்டும்.....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
14th August 2011, 04:22 AM
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்

மூன்று தெய்வங்கள்

[14.8.1971 - 14.8.2011] : 41வது உதயதினம்

பொக்கிஷப் புதையல்

முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4312a-1.jpg

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
14th August 2011, 06:39 AM
டியர் பம்மலார்,
பொன்விழா மருதாணி இதழ் மலர் பக்கங்களுக்கும் மூன்று தெய்வங்கள் விளம்பர நிழற்படத்திற்கும் நன்றியும் பாராட்டுக்களும். சூப்பர்...

அன்புடன்

RAGHAVENDRA
14th August 2011, 06:44 AM
சித்ராலயா இதழில் வெளிவந்த வெளியீட்டு விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/3dChitralayaAdfw.jpg

இத்திரைப்படத்திற்காக வெளியிடப் பட்டுள்ள ஒளித்தகட்டின் நிழற்படம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/3dmbdvdcoverfw.jpg

இத்திரைப்படத்தினைப் பற்றி துக்ளக் இதழில் வெளிவந்த விமர்சனம் மற்றும் இயக்குநரின் பதில்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/3dthuqlaqreviewfw.jpg

நடப்பது சுகமென நடத்து, வரும் நாளை உனதென நினைத்து... இப்பாடலை ஏற்கெனவே நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல் பகுதியில் இத்திரியில் விவாதிக்கப் பட்டுள்ளது. தற்போது இப்பாடல் காட்சி மீண்டும் நமக்காக...


http://www.youtube.com/watch?v=9YiNDzAL3P4

அன்புடன்

mr_karthik
14th August 2011, 11:17 AM
பம்மலார் சார்,

பொன்விழாப்பதிவுகள் அருமை மட்டுமல்ல, இன்றைய தலைமுறைக்கு காணக்கிடைத்திராத பொக்கிஷப்புதையலும் கூட. அவற்றைப் படிக்க, படிக்க நெஞ்சத்தில் மலரும் நினைவுகள் வெள்ளமாகப்பெருகி வருகிறது. தங்களின் சேவையை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. இன்னும் எப்படியெல்லாம் அசத்தப்போகிறீர்கள் என்று எண்ணி வியக்கிறேன்.

'மூன்று தெய்வங்கள்' வெளியான தினத்தை முன்னிட்டு பதித்த விளம்பரத்துக்கும் நன்றி. அப்படத்தின் 50-வது நாள், 75-வது நாள் விளம்பரங்களையும் (கிடைத்ததும்) பதிவிடுவீர்கள் என்று நம்புகிறோம்.

ராகவேந்தர் சார்,

'மூன்று தெய்வங்கள்' பட விளம்பரம், டி.வி.டி. உறை, துக்ளக் விமர்சனம் மற்றும் பாடலின் வீடியோ இணைப்பு அனைத்துக்கும் நன்றி. மிகவும் சிக்கனமாக எடுக்கப்பட்ட படமாதலால் நன்றாக ஓடி தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரிய லாபத்தை சம்பாதித்துக்கொடுத்த படம் மூன்று தெய்வங்கள். சிவந்த மண்ணில் துவங்கி நிறைய படங்கள் சென்னை மேகலாவில் வெளியாயின. அவற்றில் மூன்று தெய்வங்களும் ஒன்று.

sankara1970
14th August 2011, 02:37 PM
Many of the films done by NT were worth a lot than Oscar.
They are timeless classics and education for younger generation.

sankara1970
14th August 2011, 02:38 PM
great effort Pammalar sir.
Pon Vizhavai neril partha mathiri irukirathu

RAGHAVENDRA
14th August 2011, 02:58 PM
நாளை 15.08.2011, இந்திய விடுதலை நாள். இந்த விடுதலைக்காகப் போராடியவர்களை நாம் அறியக் காரணமாய் இருந்த நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் இந் நாளில் வெளியாகி உள்ளன. அவை

சாரங்கதரா
ராமன் எத்தனை ராமனடி
எழுதாத சட்டங்கள்
முதல் மரியாதை
ஒரு யாத்ரா மொழி - மலையாளம்.

சாரங்கதரா

மினர்வா பிக்சர்ஸ் சாரங்கதரா, நடிகர் திலகத்தின் 50வது திரைக்காவியம்.

இத்திரைக்காவியத்தைக் காண


http://youtu.be/ZlCbY1er4jY

வருகிறது என்கிற வெளியீட்டு விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/SarangadaraprereleaseAdfw.jpg

வெளியீட்டு விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/SarangadarareleaseAdfw.jpg

ஆனந்த விகடன் விமர்சனம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/SarangadaraVikaanreviewfw.jpg

தொடரும்

RAGHAVENDRA
14th August 2011, 03:02 PM
ராமன் எத்தனை ராமனடி

துக்ளக் விமர்சனம், இயக்குநரின் பதிலுடன்

பக்கம் 1
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/RERTuglaqreviewp01fw.jpg

பக்கம் 2
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Magazine%20Pages/RERTuglaqreviewp02fw.jpg

இத்திரைக்காவியத்தினைக் காண

பாகம் 1


http://www.youtube.com/watch?v=Jtbhd9hW9nc

பாகம் 2


http://www.youtube.com/watch?v=GL6Zpcs6qC8

தொடரும்

RAGHAVENDRA
14th August 2011, 03:06 PM
ராமன் எத்தனை ராமனடி

இத்திரைக்காவியத்தின் நெடுந்தகடுகள் சிலவற்றின் உறைகளின் பக்கங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/RERDVDFfw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/RERDVDRfw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/RERDVDModernFfw.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/RERDVDModernRfw.jpg

தொடரும்

RAGHAVENDRA
14th August 2011, 03:09 PM
ராமன் எத்தனை ராமனடி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/RERKumudamAdfw.jpg

தொடரும்

sankara1970
14th August 2011, 03:16 PM
Great effort by Trichy fans association

RAGHAVENDRA
14th August 2011, 03:19 PM
ஒரு யாத்ராமொழி

நடிகர்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மோகன்லால், ரஞ்சிதா, நெடுமுடி வேணு, சோமன், பிரகாஷ் ராஜ், மற்றும் பலர்

தயாரிப்பு
வி.பி.கே. மேனன்

கதை
ப்ரியதர்ஷன்

இயக்கம்
பிரதாப் போத்தன்

இசை
இளையராஜா

இத்திரைப்படத்தைப் பற்றிய சுருக்கமான கதை, விக்கிபீடியா இணையதளத்தில் ஆங்கிலத்தில் உள்ளது. இங்கே நம் பார்வைக்கு.
நன்றி விக்கிபீடியா இணையதளம் (http://en.wikipedia.org/wiki/Oru_Yathramozhi)

It is a story about a father and a son which is filled with sentiments or sorrow. Govindankutty (Mohanlal) is on a look out for his unknown father seeking to take revenge by killing him for leavng him and his mother. Then enters Anantha Subramaniam (Sivaji Ganeshan) a rich trader, who comes to Govindankutty's home-town and likes him instantly for his loyalty and honesty. Both of them become very close to each other. The story takes a turn when Govindankutty's mother recognizes the rich trader as her long-lost husband and later on Govindankutty gets to know the rich trader is his father. The story then comes into climax as Govindankutty tries to make the tough decision to kill his father or not?

இத்திரைப்படத்தின் நெடுந்தகடு இணையத்தில் கிடைக்கிறது. கீழே உள்ள படத்தில் அந்த இணையதளத்தின் இணைப்புத் தரப்பட்டுள்ளது

http://www.webmallindia.com/img/film/mal/oru_yathramozhi.jpg (http://www.webmallindia.com/buy_dvd_online-movie-Oru+Yathramozhi-p-22772.html)

இத்திரைக்காவியத்தில் நடிகர் திலகம் பங்கேற்ற காக்கள கண்ணம்மா என்ற பாடல் காட்சி நம் பார்வைக்கு


http://www.youtube.com/watch?v=ct3IqjxJqeg

அன்புடன்

sankara1970
14th August 2011, 04:18 PM
Aha ithu Kalai thiruvizha ayitre-nanum siru vayathu mudal intha vaibavathai patri kelvi pattirukiren-
pathirikai kalil padithiruiren

RAGHAVENDRA
14th August 2011, 04:39 PM
இன்று 14.08.2011, தனது 20வது ஆண்டில் நுழைகிறது, விக்டரி மூவீஸ் தயாரித்து குகநாதன் வழங்கிய, முதல் குரல். இத்திரைப்படத்தைக் காண


http://www.youtube.com/watch?v=3Nq5M-3coRY&feature=player_embedded

அன்புடன்