PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 8



Pages : [1] 2 3 4 5 6 7 8

RAGHAVENDRA
22nd May 2011, 08:27 PM
அன்புச் சகோதரி சாரதா, பார்த்தசாரதி, நவ், மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் அடியேனின் உளமார்ந்த நன்றிகள். தங்கள் அனைவரின் ஆதரவுடனும் நிகழ்ச்சி சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.

மூவரும் மூன்று பாடல்களைப் பற்றிக் கூறி அசத்தி விட்டீர்கள். மூன்றுமே முத்தானவை. பாடலைப் பற்றிப் பேசும் போது அவற்றைக் காண வேண்டாமா. இதோ அந்த மூன்று பாடல்கள் உங்கள் பார்வைக்காக

நலந்தானா பாடல்


http://www.myvideo.de/watch/7475599/Thillaana_Moganaambaal_Nalam_Thaana

பட்டத்து ராணி பாடல்


http://www.youtube.com/watch?v=NvClS5Un_vU

மெழுகுவர்த்தி எரிகின்றது பாடல்


http://www.youtube.com/watch?v=zYxAxlb_M9g

J.Radhakrishnan
22nd May 2011, 10:12 PM
டியர் பார்த்தசாரதி சார், முரளி சார் மற்றும் சாரதா மேடம் தங்களின் திரைப்பட பாடல் திறனாய்வு அருமை, மேலும் பல பாடல்களின் திறனாய்வுகளை எதிர்நோக்கும் அன்பன்


ராதா

pammalar
22nd May 2011, 11:02 PM
'கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும்' என்று கூறுவார்கள். அதனை மெய்ப்பிக்கின்ற வகையில், நமது திரியின் பதிவாளர்களான பார்த்தசாரதி சார் 'நலந்தானா'வையும், முரளி சார் 'பட்டத்து ராணி'யையும், சகோதரி சாரதா 'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடலையும் ஒரு சேர அளித்து நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டார்கள். அவர்களுக்கு நமது பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

ஒன்றுக்கொன்று மிக மிக வித்தியாசப்படும் இந்த மூன்று பாத்திரங்களிலும் அவர் வெளிப்படுத்திய performance levelஐ வேறொருவர் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

'கண்ணன்', 'பாரத்' ரோல்களையெல்லாம் வேறொருவர் நினைத்துப் பார்த்தால் கூட 'சிக்கல்' தான்.

அவர் தொட்டுத் துலக்கிய எந்தவொரு பாத்திரத்தையும் வேறு எவரும் தொடக்கூட முடியாது என்பது உலகறிந்ததே !

'நலந்தானா' பாடல் வரிகளின் மூலம் கவியரசர், உடல்நலம் குன்றியிருந்த அன்றைய தமிழக முதல்வரான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களை இலைமறைவு காய்மறைவாக நலம் விசாரித்திருப்பார். திரைக்காட்சிக்கும், நிஜக்காட்சிக்கும் ஒரு சேர பொருந்தக்கூடிய உயிரோட்டமான வரிகளை எழுதுவதில் கவிஞர் கிங் ஆயிற்றே !

'பட்டத்து ராணி' பாடலில் மேடையின் மேல் சுழலும் வட்டத்தில் அந்த சுழற்சிக்கு எதிராக நடிகர் திலகம் போடும் Fast Walk ஒரு நடை பிரம்மாண்டம். ஆனால் அந்த Fast Walk அவருக்கோ Cake Walk !

'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடல் காட்சியை நாம் எப்பொழுது பார்த்தாலும் அதன் இதம் நூறு சதம் நம் மனதைத் தொடும் !

வீடியோ வேந்தரே, கலக்குங்கள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
22nd May 2011, 11:54 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 196

கே: "மன்னவரு சின்னவரு"வில் நடிகர் திலகத்தின் நடிப்பு எப்படி? (எம்.பீட்டர், சாத்தூர்)

ப: அவர் தோன்றும் எல்லாக் காட்சிகளிலுமே மற்ற எல்லா நடிக-நடிகைகளையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார், நடிப்பில் !

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 பிப்ரவரி 1999)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd May 2011, 12:13 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 197

கே: நடிகர் திலகம் ஏன் இவ்வாண்டு பிறந்தநாள் கொண்டாடவில்லை? (எம்.காத்தமுத்து, மயிலாடுதுறை)

ப: பிறந்தநாளை அமெரிக்காவில் கொண்டாடியுள்ளார் சிவாஜி.

(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 நவம்பர் 2000)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd May 2011, 01:57 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 198

கே: "ஒன்ஸ்மோ"ரில் சிவாஜியின் நடிப்பு எப்படி? (பொன்னாபுரம் பி.சிவக்குமார் பிரபு, திருப்பூர்)

ப: மேக்-அப் போடாத சுயதாடியுடன் நடித்திருக்கும் சிவாஜி 'இன்னும் தன்னிடம் உள்ள நடிப்பின் Nuance தன்னிடமே வைத்திருக்கிறார்' என்பதை நிரூபித்திருக்கிறார்.

(ஆதாரம் : நியூ பிலிமாலயா, ஆகஸ்ட் 1997)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd May 2011, 02:26 AM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 15

"மலர் கொடுத்தேன் கைகுலுங்க வளையலிட்டேன்"


http://www.youtube.com/watch?v=if75cRzhxq8&feature=related

நடிப்பு : நடிகர் திலகம், புன்னகை அரசி

பின்னணிக் குரல் : பாடகர் திலகம் டி.எம்.எஸ்.

இசை : மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி.

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

திரைக்காவியம் : திரிசூலம்(1979)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd May 2011, 02:40 AM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 16

"திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே"


http://www.youtube.com/watch?v=L4PcNDIwf_0&NR=1

நடிப்பு : நடிகர் திலகம், நடிகை ரீனா

பின்னணிக் குரல்கள் : மெலடி பிரின்ஸ் ஜேசுதாஸ், இசைவாணி வாணி ஜெயராம்

இசை : மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி.

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

திரைக்காவியம் : திரிசூலம்(1979)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd May 2011, 03:51 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 199

கே: சிவாஜிக்கு 'நடிகர் திலகம்' என்ற பட்டம் யாரால் எந்த ஆண்டில் வழங்கப்பட்டது? (என்.சக்கரபாணி, செங்கோட்டை)

ப: 'பேசும் படம்' வாசகர்களின் விருப்பப்படி, 1957-ல் சிவாஜிக்கு அப்பட்டத்தை 'பேசும் படம்' வழங்கியது. அதைத் திரையுலகம் வரவேற்றதற்கு அறிகுறியாக ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸார் தங்களது "அம்பிகாபதி(1957)" படத்தின் டைட்டிலில் 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்று போட்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து அவருக்கு அந்தப் பட்டம் நிரந்தரமாகி விட்டது.

(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1979)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd May 2011, 04:05 AM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 17

"காதல் ராணி"


http://www.youtube.com/watch?v=6mRHjFEjlaw&feature=related

நடிப்பு : நடிகர் திலகம், நடிகை ஸ்ரீப்ரியா

பின்னணிக் குரல் : கந்தர்வக் குரலோன் எஸ்.பி.பி.

இசை : மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி.

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

திரைக்காவியம் : திரிசூலம்(1979)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd May 2011, 04:19 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 200

கே: சென்னை நகரில் அதிக வசூல் பெற்ற படம் எது? (மதுரைவாலா, தாராபுரம்)

ப: சென்னை மட்டுமல்ல, எல்லா இடங்களிலுமே வசூலில் ஒரு ரிக்கார்ட் ஏற்படுத்திய படம் "திரிசூலம்".

(ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1979)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd May 2011, 04:41 AM
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 18

"ருக்குருக்குரு ருக்குருருக்குரு......./ என் ராஜாத்தி வாருங்கடி"


http://www.youtube.com/watch?v=RpKHkmwk-gA&feature=related

நடிப்பு : நடிகர் திலகம், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் பலர்

பின்னணிக் குரல் : கந்தர்வக் குரலோன் எஸ்.பி.பி.

இசை : மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி.

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

திரைக்காவியம் : திரிசூலம்(1979)

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd May 2011, 04:59 AM
"திரிசூலம்" வெள்ளிவிழா விளம்பரம்

தினத்தந்தி : 15.7.1979

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/TS175.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
23rd May 2011, 05:11 AM
காலங்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல்கள் : 8

"இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர்காலம்"


http://www.youtube.com/watch?v=C8YF5m9lURk&feature=related

நடிப்பு : நடிகர் திலகம் & நடிகர் திலகம்

பின்னணிக் குரல் : மெலடி பிரின்ஸ் ஜேசுதாஸ், கந்தர்வக்குரலோன் எஸ்.பி.பி.

இசை : மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி.

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

திரைக்காவியம் : திரிசூலம்(1979)

அன்புடன்,
ராகவேந்திரன்
மற்றும்
பம்மலார்.

RAGHAVENDRA
23rd May 2011, 07:10 AM
டியர் பம்மலார்,
200வது பக்கத்தில் 200வது காவியத்தைப் பதிவிட்டு கலக்கி விட்டீர்கள்.
பாராட்டுக்கள்
அன்புடன்

RAGHAVENDRA
23rd May 2011, 07:11 AM
நடிகர் திலகத்தின் ரசிகரும் தமிழன் எக்ஸ்பிரஸ் சினிமா எக்ஸ்பிரஸ் இதழ்களின் ஆசிரியருமான சிவக்குமார் அவர்களின் மறைவுக்கு நமது அஞ்சலி.
ராகவேந்திரன்

V_S
23rd May 2011, 08:04 AM
My favorite song during my childhood days. Thank you pammalar sir for rewinding this great song. One the best KJY-SPB duets. Beautiful tune my MSV.

groucho070
23rd May 2011, 08:33 AM
My favorite song during my childhood days. Thank you pammalar sir for rewinding this great song. One the best KJY-SPB duets. Beautiful tune my MSV.Absolutely. Male-Male duets are rare in TFI, and we'd sing this as brothers. பாட்டு சூப்பர் ஆனா படமாகுன விதம்தான்.... wish they had shot it more simply, without the unnecessary masking shots. I guess the filmaker was in experimental mood.

V_S
23rd May 2011, 09:25 AM
Male-Male duets are rare in TFI
Yes, very rare. I would even rate better than 'Kaattukuyilu' (KJY-SPB) duet from Thalabathi.

groucho070
23rd May 2011, 09:31 AM
Definitely. I like SPB's "big voice" here.

saradhaa_sn
23rd May 2011, 11:49 AM
டியர் பார்த்த சாரதி,

'நலந்தானா' பாடலை மிக நேர்த்தியாக எழுத்து வடிவில் அளித்துள்ளீர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இப்பாடலைப்பற்றி புகழ்ந்துரைக்கும் ஒவ்வொருவரும் தவறாமல் சொல்லும் இடம் அவர் கைகளால் நலம் விசாரிக்க. இவர் கண்களால் நலமெ என்றுரைக்கும் காட்சி. அப்போது நாட்டியப்பேரொளியின் முகத்தில் தோன்றும் பரிதவிப்பும் அதற்கு பதிலாக இவர் முகத்தில் இழைய விடும் புன்னகையும் என்ன ஒரு அழகு. அதை மேலும் அழகுற பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள்.

டியர் முரளி,

'பட்டத்து ராணி' பாடல் காட்சி பற்றிய திறனாய்வு மிகத்துல்லியமாக காட்சிகளை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துகிறது. நீங்கள் சொன்னது போல கண்ணாடி மீது காஞ்சனா வந்து விழ, நடிகர்திலகம் நடந்து வந்து கண்ணாடி மீது ஷூ பதித்து நிற்க, அக்காட்சியை கண்ணாடியின் மறுபக்கமிருந்து படமாக்கிய விதம் அன்றைக்கு புதிய யுக்தி. அந்த அரேபிய உடையில் அவர் நடிகர்திலகம் என்று நம்பவே முடியாது. அந்த அளவுக்கு நேர்த்தியான மேக்கப் மற்றும் அடர்த்தியான புருவம், ஒவ்வொரு முறை சாட்டையால் அடித்த பின்னும் துப்பாக்கியோடு நம்பியாரின் பக்கம் திரும்பிப்பார்க்கும் அந்த தீர்க்கமான பார்வை.

(இந்தப்பாடலில் தேவையில்லாத ஒரு காட்சி, ஒரு கட்டத்தில் மேடை செட்களின் நடுவே நாகேஷ் பதுங்கிப் பதுங்கி நடந்து வருவது. அது பாடலின் டெம்போவைச்சற்று குறைப்பது போலத்தோன்றும்).

இந்தக்காட்சியில் நம்பியாரின் முகபாவங்களும் அட்டகாசம். முதலில் அசால்ட்டாக இருக்கும் அவர், பாடல் முடிவை நெருங்க நெருங்க, முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பதட்டத்தைக்கொண்டு வருவதும், அதன் காரணமாக முகம் முழுவதும் வேர்த்துக் கொட்டுவதுமாக சிறப்பாக செய்திருப்பார்.

இன்றைக்கும் ஏதாவதொரு தொலைக்காட்சியில் தினமும் இப்பாடல் ஒளிபரப்பாகிக்கொண்டிருப்பது இப்பாடலின் தனிச்சிறப்பு.

டியர் ராகவேந்தர்,

பாடல்களின் திறனாய்வுகளைப்பார்த்ததும் உடனே அவற்றைக் காட்சி (வீடியோ) வடிவில் தந்து, பதிவைப் படித்தோரை 'ரெடி ரெபரென்ஸ்' செய்ய வைத்து மெருகூட்டி விட்டீர்கள். நிச்சயமாக இது அரிய சேவை, இது தொய்வின்றி தொடரட்டும்.

டியர் Nov,

சீனியர் டாக்டரும், ஜூனியர் டாக்டரும் இணைந்திருக்கும் வண்ணப்புகைப்படம் அருமை. இந்த அபூர்வ காட்சியை பதிவிட்ட உங்களுக்கு பாராட்டுக்கள்.

என்னுடைய 'மெழுகுவர்த்தி' பாடலின் ஆய்வைப்படித்து, பாராட்டுக்கள் தந்த அனைவரும் என் நன்றி. அன்று நடிகர்திலகம் அவ்வளவு சிறப்பாகச் செய்து வைத்திருக்கப்போய்தான், இன்று நாம் இவ்வளவு விவரமாகப் பேச முடிகிறது.

saradhaa_sn
23rd May 2011, 12:05 PM
டியர் பம்மலார்,

பாராட்டுக்கு நன்றி.

எதிர்பாராத விதமாக 200-வது பக்கத்தை 'திரிசூலம்' மேளாவாக மிளிர வைத்திருப்பது பொருத்தமாக அமைந்துள்ளது. (நான் பக்கத்துக்கு 30 பதிவுகள் என்று செட் பண்ணியிருப்பதால், எனது கணினியில் இது 67-வது பக்கம்).

திரிசூலம் படத்தின் அத்தனை பாடல்களையும் காட்சி வடிவில் தந்ததோடு அவற்றின் விவரங்களையும் கூடவே பதிந்துள்ளீர்கள். இப்போதெல்லாம் வடதுருவத்துக்கெல்லாம் போய்க்கூட படமெடுத்துவர முடிகிறது, ஆனால் நம் நாட்டில் இருக்கும் காஷ்மீருக்குப்போய் படமாக்க முடியாத அளவுக்கு சூழ்நிலை மாறிவிட்டது.

வி.எஸ். மற்றும் ராகேஷ் குறிப்பிட்டுள்லது போல கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இணைந்து வெகு சில பாடல்களே பாடியிருந்தபோதிலும் அவற்றில் முன்னணியில் இருப்பது 'இரண்டு கைகள் நான்கானால்' பாடல்தான்.

முத்தாய்ப்பாக 'திரிசூலம்' படத்தின் வெள்ளிவிழா முழுப்பக்க விளம்பரத்தையும் பதிவிட்டு சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...

parthasarathy
23rd May 2011, 04:24 PM
பட்டத்து ராணி பாடலை திரையில் பார்த்தவுடன் தோன்றிய எண்ணங்களை எழுத்திலே வடித்து இங்கே பதிந்த பிறகுதான் பார்கிறேன், சாரதி அவர்கள் நடிகர் திலகத்தின் பாடல் காட்சிகளைப் பற்றிய தன் ஆய்வின் முதல் பகுதியை பதிவு செய்திருக்கிறார். ஆகா! என்ன coincidence!

அன்புடன்

அன்புள்ள திரு. முரளி அவர்களே,

நேற்று மதியம் நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற சாகவரம் பெற்ற பாடல்களைப் பற்றிய கட்டுரையை துவங்கி, ஒரு பாடலைத் தான் முடிக்க முடிந்தது.

இன்று திரியைப் படிக்கும் போது, இன்ப அதிர்ச்சி. தாங்கள், "பட்டத்து ராணி" பாடலைப் பதிவு செய்துள்ளீர்கள். பட்டத்து ராணி பாடலை அற்புதமாக ஆய்வு செய்து எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.

இந்தப் பாடலில், நான்கு முக்கிய அம்சங்கள் - ஒன்று, நடிகர் திலகத்தின் ஒப்பனை மற்றும் தீவிரம் (intensity), இரண்டு அந்த சுழன்று கொண்டிருக்கும் அந்த வட்டத்துக்கு எதிர்புறத்தில் அனாயாசமாக நடக்கும் நடை (இந்த நிமிடம் வரை திரை அரங்குகள் அலறிக் கொண்டிருக்கிறது!); பாடல் முடிய முடிய நம்பியாரின் ரியேக்க்ஷன்; நான்கு, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய விதம். இதே பாடலை ஹிந்தியில், ஆஷா போன்ச்லேவால் சரியாகப் பாட முடியாமல், (அந்த கேவல் கலந்த விக்கலை), எல்.ஆர்.ஈஸ்வரி உதவி செய்தததாகக் கூறுவர்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
23rd May 2011, 04:45 PM
சாரதா மேடம் அவர்களே,

தங்கள் பாராட்டுக்கு நன்றி.

நடிகர் திலகத்தின் "மெழுகுவர்த்தி எரிகின்றது பாடலை" வழக்கம் போல் அற்புதமாகப் பதிந்து, அசத்தி விட்டீர்கள்.

என்னவோ தெரியவில்லை, ஏகப்பட்ட co-incidence -கள். "நலந்தானா" பாடலை விரிவாகப் பதிவு செய்தபின்னர் பார்த்தால், திரு. முரளி அவர்களின் பட்டத்து ராணி பாடல் பதிவு. உடனேயே, தங்களின், "மெழுகுவர்த்தி எரிகின்றது" பாடல் பதிவு.

இன்னொரு co-incidence. நேற்று, திரு. பம்மலாரிடம் பல பாடல்களையும் அதற்கு வெவ்வேறு இசையமைப்பாளர்களின் பங்களிப்பையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, மெல்லிசை மன்னரின் பியானோ பாடல்கள் - பாட்டொன்று கேட்டேன், உன்னை ஒன்று கேட்பேன், எல்லோரும் நலம் வாழ - போன்ற பாடல்களைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருந்தோம். மிகச்சரியாக, இந்தப் பாடல்களையும் பற்றிக் கூறி, கூடவே, மேற்கூறிய பாடலையும் பதிவிட்டிருக்கிறீர்கள்.

தாங்கள் கூறியது போல், எத்தனை எத்தனையோ, rare gems உள்ளது. இந்தப் பாடலும் அத்தகைய பாடல்களில் தனியிடம் பெறும்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
23rd May 2011, 04:49 PM
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

தங்களது உளமார்ந்த பாராட்டுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.

நடிகர் திலகத்தின் புகழ் பாடும் இந்த ஏழாவது திரியின், இருநூறாவது பக்கத்தில், அவரது இருநூறாவது படத்தைப் பதிவு செய்த டைமிங் "Hats off to you". டைமிங்கைப் பொறுத்தவரை, உங்களது தீவிரம் - உண்மையிலேயே அற்புதம்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
23rd May 2011, 05:13 PM
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

நலந்தானா பாடல் மட்டுமல்லாது, திரு முரளி அவர்கள் பதிவிட்ட "பட்டத்து ராணி" மற்றும் சாரதா மேடம் பதிவிட்ட "மெழுகுவர்த்தி எரிகின்றது" பாடல்களையும் சேர்த்து பதிவிட்டு, தாங்களும் டைமிங்காக அசத்தி விட்டீர்கள்.

திரு. பம்மலார் உங்களை வீடியோ வேந்தர் என்று கூறுவது முற்றிலும் பொருந்தும்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
23rd May 2011, 05:29 PM
டியர் பார்த்தசாரதி சார், முரளி சார் மற்றும் சாரதா மேடம் தங்களின் திரைப்பட பாடல் திறனாய்வு அருமை, மேலும் பல பாடல்களின் திறனாய்வுகளை எதிர்நோக்கும் அன்பன்


ராதா

அன்புள்ள திரு. ராதாகிருஷ்ணன் அவர்களே,

தங்களது மனமார்ந்த பாராட்டுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
23rd May 2011, 05:31 PM
நடிகர் திலகத்தின் ரசிகரும் தமிழன் எக்ஸ்பிரஸ் சினிமா எக்ஸ்பிரஸ் இதழ்களின் ஆசிரியருமான சிவக்குமார் அவர்களின் மறைவுக்கு நமது அஞ்சலி.
ராகவேந்திரன்

I've also read this news item in The Hindu today morning. Our deepest condolences to the bereaved family.

RAGHAVENDRA
24th May 2011, 05:09 AM
ருஷ்ய கலாச்சார மய்ய நிகழ்ச்சி நிரலில் சிறிய மாறுதல். புதிய நிகழ்ச்சி நிரல் முந்தைய பதிவிலும் தற்போது இங்கும் தரப் படுகிறது.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Decorated%20images/ProgMay2011FFW.jpg
அன்புடன்

groucho070
24th May 2011, 08:34 AM
To fans who have seen Pattakatti Bairavan, can you help with this question by app_engine (from IR/SPB thread). Appreciate it, thanks :
groucho, who is on screen for the 'mehboobA' portions of 'varuvAi kaNNA neerAda' in PKB?

RAGHAVENDRA
24th May 2011, 07:29 PM
Dear friends,
For those of us who have been longing to see rare other language movies of NT, here's a great chance. Bhakta Ramadasu (released on 23.12.1964 originally) is now available in DVD marketed by New Volgo Videos, Hyderabad. In Chennai, this DVD is available in the AVM Sound Zone, Sankara Hall, T.T.K. Road, Alwarpet, Chennai. In A.P. it is priced at Rs.60.00 and in other States, it is Rs.65.00. The images of the cover is given below.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/RamadasuF.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/RamadasuR.jpg

Raghavendran.

abkhlabhi
25th May 2011, 05:41 PM
http://abkhlabhi.blogspot.com/2011/05/nadigar-thilagam-at-received-end-like.html

goldstar
25th May 2011, 07:50 PM
Dear friends,
For those of us who have been longing to see rare other language movies of NT, here's a great chance. Bhakta Ramadasu (released on 23.12.1964 originally) is now available in DVD marketed by New Volgo Videos, Hyderabad. In Chennai, this DVD is available in the AVM Sound Zone, Sankara Hall, T.T.K. Road, Alwarpet, Chennai. In A.P. it is priced at Rs.60.00 and in other States, it is Rs.65.00. The images of the cover is given below.

Raghavendran.

Thanks a lot Raghavendran sir, can we get our NT's scenes in YouTube from this movie? Who has given Telugu voice to our NT? Is it original NT voice or any one else?

Cheers,
Sathish

Murali Srinivas
25th May 2011, 11:42 PM
ராகவேந்தர் சார்,

பக்த ராமதாசு டிவிடி பற்றிய செய்திக்கு நன்றி. இதைப் பார்த்தவுடன் இங்கே எழுத விட்டுப் போன வேறு ஒரு டிவிடி செய்தி நினைவுக்கு வந்தது. Ayngran நிறுவனம் English subtitles -உடன் மிக உயர்ந்த தரத்தில் திருவிளையாடல் மற்றும் சரஸ்வதி சபதம் படங்களின் டிவிடிகளை வெளியிட்டிருக்கிறது. விலை ரூபாய் 250. விலை கூடுதலாக இருந்தால் என்ன டிவிடிகள் விற்பனை வழக்கம் போல hot cakes தான்.

அன்புடன்

pammalar
26th May 2011, 01:39 AM
பாராட்டுக்கு நன்றி, ராகவேந்திரன் சார்.

Mr.V_S & Mr.Rakesh, மிக்க நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th May 2011, 01:44 AM
டியர் பம்மலார்,

பாராட்டுக்கு நன்றி.

எதிர்பாராத விதமாக 200-வது பக்கத்தை 'திரிசூலம்' மேளாவாக மிளிர வைத்திருப்பது பொருத்தமாக அமைந்துள்ளது. (நான் பக்கத்துக்கு 30 பதிவுகள் என்று செட் பண்ணியிருப்பதால், எனது கணினியில் இது 67-வது பக்கம்).

திரிசூலம் படத்தின் அத்தனை பாடல்களையும் காட்சி வடிவில் தந்ததோடு அவற்றின் விவரங்களையும் கூடவே பதிந்துள்ளீர்கள். இப்போதெல்லாம் வடதுருவத்துக்கெல்லாம் போய்க்கூட படமெடுத்துவர முடிகிறது, ஆனால் நம் நாட்டில் இருக்கும் காஷ்மீருக்குப்போய் படமாக்க முடியாத அளவுக்கு சூழ்நிலை மாறிவிட்டது.

வி.எஸ். மற்றும் ராகேஷ் குறிப்பிட்டுள்லது போல கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இணைந்து வெகு சில பாடல்களே பாடியிருந்தபோதிலும் அவற்றில் முன்னணியில் இருப்பது 'இரண்டு கைகள் நான்கானால்' பாடல்தான்.

முத்தாய்ப்பாக 'திரிசூலம்' படத்தின் வெள்ளிவிழா முழுப்பக்க விளம்பரத்தையும் பதிவிட்டு சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...

சகோதரி சாரதா,

தங்களின் சரமாரியான பாராட்டுகளுக்கு என் சிறப்பான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th May 2011, 01:55 AM
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

தங்களது உளமார்ந்த பாராட்டுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.

நடிகர் திலகத்தின் புகழ் பாடும் இந்த ஏழாவது திரியின், இருநூறாவது பக்கத்தில், அவரது இருநூறாவது படத்தைப் பதிவு செய்த டைமிங் "Hats off to you". டைமிங்கைப் பொறுத்தவரை, உங்களது தீவிரம் - உண்மையிலேயே அற்புதம்.

அன்புடன்,

பார்த்தசாரதி

டியர் பார்த்தசாரதி சார்,

தாங்கள் அளித்து வரும் தொடர்ச்சியான பாராட்டுக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !

Full & All Credit to Our Nadigar Thilagam !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th May 2011, 03:07 AM
பாசமலர் பொன்விழா : 1961 - 2011

சாதனைப் பொன்னேடுகள்

1. முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி / 27.5.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC1902.jpg


2. 100வது நாள் விளம்பரம் : தினமணி / 3.9.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC1981.jpg


3. Silver Jubilee Ad : The Hindu / 11.11.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC1922.jpg

4. வெள்ளிவிழா விளம்பரம் : தினத்தந்தி / 14.11.1961
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/PMDT25a.jpg


51வது ஆண்டில் கம்பீர நடை போடும் பாசத்திலகத்தின் பாசமலர் இந்தப் பார் உள்ளளவும் இரத்தபாசத்திற்கு இலக்கணம் !

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
26th May 2011, 03:17 AM
"பாசமலர் 51" சிறப்புப் பதிவு சில தினங்களில் !

pammalar
26th May 2011, 03:44 AM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 201

கே: நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் முயற்சியில் ஏற்கனவே பல ஏடுகள் ஈடுபட்டிருக்கும் போது 'சிவாஜி ரசிகன்' தேவைதானா? (க.மோகனராஜ், சென்னை-5)

ப: இத்தனை பேர்தான் இறைவனைத் துதிக்கலாம் என்று கட்டுப்படுத்த முடியுமா?! அதுபோல சிவாஜி புகழ் பரப்ப எத்தனை ஆயிரம் பத்திரிகைகள் தோன்றினாலும் தாங்கும்.

(ஆதாரம் : சிவாஜி ரசிகன், 15.4.1972)

அன்புடன்,
பம்மலார்.

Murali Srinivas
26th May 2011, 11:15 PM
The function held today jointly by Russian Consulate, Russian Cultural Centre and Sivaji Prabhu Charities trust to celebrate the Russian Independence and Indian Independence went off well. The Consul General Mr.Nikolai Listapadov, Mr.Ramkumar spoke touching upon the highlights of Indo- Russian Friendship and about the struggles faced by the respective nation. A short but sweet synopsis of the World War II was presented by a 2ng Year Student of Stella Maris, Ms.Archana. Mr.Thangappan of Russian cultural centre welcomed the gathering and he have us a pleasant surprise by announcing that the works of Nadigar Thilagam is going to be archived in the Russian cultural centre, the work for which would start by July on the occasion of 10th Anniversary of Nadigar Thilagam. He also expressed his desire that the function to celebrate the Golden jublies of Paava Mannippu, Paasa Malar, Paalum Pazhamum and Kappalottiya Thamizhan should be held in the Russian Cultural centre.

Ragavender Sir then spoke briefly about the topic Indian Independence projected through the films of Nadigar Thilagam and the clippings were screened. முதலில் வந்தது கட்டபொம்மன் கிளைமாக்ஸ் காட்சி. நடிகர் திலகத்தின் சிம்ம கர்ஜனையை கேட்டு புல்லரித்து நிற்க கப்பலோட்டிய தமிழனில் வெள்ளி பனி மலை மீதுலாவுவோம் பாடலின் ஒரு சிறிய பகுதியும் கப்பலை வாங்கி கொண்டு அதில் பயணம் செய்து வரும் வ.ஊ.சி வரவேற்பை ஏற்றுக் கொண்டு பேசுவது இடம் பெற்றது. அடுத்தது பகத்சிங். ராஜபார்டில் இன்குலாப் பாடல் முழுமையாக வந்தது. தொடர்ந்தார் திருப்பூர் குமரன்[ பாடலிலும் அடுத்து திருப்பூர் குமரன் காட்சியிலும் பெருந்தலைவரை குறித்த வரிகளுக்கு பலத்த வரவேற்பு].

அடுத்தது வாஞ்சிநாதன். சினிமா பைத்தியத்தில் இடம் பெற்ற அந்த காட்சிக்கு பிறகு வந்தார் நாம் பிறந்த மண் சந்தன தேவன், தூக்கில் போடப் போகும் காட்சியும் அப்போது வரும் இந்திய சுதந்திர அறிவிப்பும் சந்தன தேவன் விடுதலையாவதும் வந்தது. தொடர்ந்து வந்தது தாயே உனக்காக காட்சி. ராணுவ வீரனாக நடிகர் திலகம் போர் முனைக்கு புறப்படும் காட்சியும் [முதல் காட்சியில் சிக்கென்று வெகு இளமையாக காட்சியளிப்பார். அடுத்த காட்சியில் ராணுவ உடையில் படு கம்பீரமாக வருவார்] பிறகு போர் முனையில் காயமுற்று படுக்கையில் இருந்த படியே சிவகுமாரிடம் பேசும் காட்சி திரையிடப்பட்டது.

பிறகு நடிகர் திலகம் படங்களின் பாடல் காட்சிகளில் தேசிய சிந்தனைகள் என்ற தலைப்பில் இரத்த திலகம் படத்தில் பனி படர்ந்த மலையின் மேலே, பிறகு பாரத விலாஸ் படத்தில் இந்திய நாடு என் வீடு பாடல், இறுதியாக கை கொடுத்த தெய்வம் படத்தில் சிந்து நதியின் மிசை நிலவிலே பாடலுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

காட்சிகளை அழகாகவும் சுவைபடவும் தொகுத்திருந்த ராகவேந்தர் சாருக்கு அனைத்து பாராட்டுகளும் உரித்தாகும்.

அன்புடன்

Murali Srinivas
26th May 2011, 11:29 PM
மே 27,1961 - இந்த நாள் தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமின்றி தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு எல்லாம் ஒரு இலக்கணம் வகுக்கப்பட்ட நாள். குடும்ப உறவுகளில் அண்ணன் தங்கை உறவு என்பது எப்படிப்பட்டது எப்பேர்ப்பட்ட அன்பையும் தியாகத்தையும் உள்ளடக்கியது என்பதை அனைவர்க்கும் உணர்த்திய நாள். அன்று முதல் இன்று வரை அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு Bench Mark ஏற்படுத்தப்பட்ட தினம். நேற்றல்ல, இன்றல்ல என்றென்றும் அது தொடரும். வாடாத பாச மலராக அது மலரும்.

பொன் விழா காணும் ராஜசேகருக்கும் ராதாவிற்கும் வாழ்த்துகள். பொன் விழா நூற்றாண்டு விழாவாக வளரட்டும்.

அன்புடன்.

parthasarathy
27th May 2011, 09:44 AM
The function held today jointly by Russian Consulate, Russian Cultural Centre and Sivaji Prabhu Charities trust to celebrate the Russian Independence and Indian Independence went off well. The Consul General Mr.Nikolai Listapadov, Mr.Ramkumar spoke touching upon the highlights of Indo- Russian Friendship and about the struggles faced by the respective nation. A short but sweet synopsis of the World War II was presented by a 2ng Year Student of Stella Maris, Ms.Archana. Mr.Thangappan of Russian cultural centre welcomed the gathering and he have us a pleasant surprise by announcing that the works of Nadigar Thilagam is going to be archived in the Russian cultural centre, the work for which would start by July on the occasion of 10th Anniversary of Nadigar Thilagam. He also expressed his desire that the function to celebrate the Golden jublies of Paava Mannippu, Paasa Malar, Paalum Pazhamum and Kappalottiya Thamizhan should be held in the Russian Cultural centre.

Ragavender Sir then spoke briefly about the topic Indian Independence projected through the films of Nadigar Thilagam and the clippings were screened. முதலில் வந்தது கட்டபொம்மன் கிளைமாக்ஸ் காட்சி. நடிகர் திலகத்தின் சிம்ம கர்ஜனையை கேட்டு புல்லரித்து நிற்க கப்பலோட்டிய தமிழனில் வெள்ளி பனி மலை மீதுலாவுவோம் பாடலின் ஒரு சிறிய பகுதியும் கப்பலை வாங்கி கொண்டு அதில் பயணம் செய்து வரும் வ.ஊ.சி வரவேற்பை ஏற்றுக் கொண்டு பேசுவது இடம் பெற்றது. அடுத்தது பகத்சிங். ராஜபார்டில் இன்குலாப் பாடல் முழுமையாக வந்தது. தொடர்ந்தார் திருப்பூர் குமரன்[ பாடலிலும் அடுத்து திருப்பூர் குமரன் காட்சியிலும் பெருந்தலைவரை குறித்த வரிகளுக்கு பலத்த வரவேற்பு].

அடுத்தது வாஞ்சிநாதன். சினிமா பைத்தியத்தில் இடம் பெற்ற அந்த காட்சிக்கு பிறகு வந்தார் நாம் பிறந்த மண் சந்தன தேவன், தூக்கில் போடப் போகும் காட்சியும் அப்போது வரும் இந்திய சுதந்திர அறிவிப்பும் சந்தன தேவன் விடுதலையாவதும் வந்தது. தொடர்ந்து வந்தது தாயே உனக்காக காட்சி. ராணுவ வீரனாக நடிகர் திலகம் போர் முனைக்கு புறப்படும் காட்சியும் [முதல் காட்சியில் சிக்கென்று வெகு இளமையாக காட்சியளிப்பார். அடுத்த காட்சியில் ராணுவ உடையில் படு கம்பீரமாக வருவார்] பிறகு போர் முனையில் காயமுற்று படுக்கையில் இருந்த படியே சிவகுமாரிடம் பேசும் காட்சி திரையிடப்பட்டது.

பிறகு நடிகர் திலகம் படங்களின் பாடல் காட்சிகளில் தேசிய சிந்தனைகள் என்ற தலைப்பில் இரத்த திலகம் படத்தில் பனி படர்ந்த மலையின் மேலே, பிறகு பாரத விலாஸ் படத்தில் இந்திய நாடு என் வீடு பாடல், இறுதியாக கை கொடுத்த தெய்வம் படத்தில் சிந்து நதியின் மிசை நிலவிலே பாடலுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

காட்சிகளை அழகாகவும் சுவைபடவும் தொகுத்திருந்த ராகவேந்தர் சாருக்கு அனைத்து பாராட்டுகளும் உரித்தாகும்.

அன்புடன்

It's a great honour, pride and opportunity bestowed on Mr. Raghavendran, to present a short film, with clippings from NT's various films involving freedom struggle and nationalism. This film may be circulated and shown to various people in various countries and has a great wider reach and will showcase the seriousness with which NT took his film career; that he not only took his career for his own professional satisfaction and satisfaction of the audience but; he also utilised the media to effectively instil in the minds of the Indian citizens in highlighting the importance of nationalism and the sacrifices made by various freedom fighters in getting us independence. This, to my knowledge, has not been done by any other Artiste to date, not only in India but; in any other country in the entire world.

Mr. Raghavendran richly deserves kudos from every one for his efforts in compiling and presenting such a wonderful film covering the subject with precision. I deemed it a previlege to be part of the elite audience, along with Messrs. Murali, Pammalar and Ramajayam.

We salute you Mr. Raghavendran.

Regards,

R. Parthasarathy

parthasarathy
27th May 2011, 09:51 AM
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

பாசமலர் திரைக்காவியம் சம்பந்தப்பட்ட அன்றைய நாளிதழ்களின் விளம்பரங்களை சரியான நேரத்தில் பதிவிட்டு, டைமிங்கில் நீங்கள் ஒரு புலி என்பதை மறுபடியும் நிரூபித்து விட்டீர்கள். பாசமலர்-51 - காத்துக் கொண்டிருக்கிறோம், வழக்கம்போல் அசர!

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
27th May 2011, 10:02 AM
பாசமலர் - காலத்தை வென்ற இத்திரைக்காவியம் - அண்ணன் தங்கைப் பாசத்தை உணர்வுபூர்வமாகக் காட்டிய உயிரோவியம் - ஒவ்வோர் தமிழ்க் குடும்பத்திலும் நீக்கமற நிறைந்து விட்ட ராஜசேகரும் ராதாவும் புவி உள்ளளவும் எல்லோர் மனத்திலும் இருப்பார்கள்.

அன்புடன்,

பார்த்தசாரதி

Mahesh_K
27th May 2011, 04:45 PM
மே 27,1961 - இந்த நாள் தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமின்றி தமிழ் நாட்டில் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு எல்லாம் ஒரு இலக்கணம் வகுக்கப்பட்ட நாள். குடும்ப உறவுகளில் அண்ணன் தங்கை உறவு என்பது எப்படிப்பட்டது எப்பேர்ப்பட்ட அன்பையும் தியாகத்தையும் உள்ளடக்கியது என்பதை அனைவர்க்கும் உணர்த்திய நாள். அன்று முதல் இன்று வரை அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு Bench Mark ஏற்படுத்தப்பட்ட தினம். நேற்றல்ல, இன்றல்ல என்றென்றும் அது தொடரும். வாடாத பாச மலராக அது மலரும்.

பொன் விழா காணும் ராஜசேகருக்கும் ராதாவிற்கும் வாழ்த்துகள். பொன் விழா நூற்றாண்டு விழாவாக வளரட்டும்.

அன்புடன்.

முரளி சார்.. பாலாஜி அவர்கள் தயாரித்த படங்களின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி பெயர் எப்போதுமே ராஜ சேகர் ( ராஜா) , ராதா என்றுதான் இருக்கும். வாழ்க்கை போன்ற நமது வேறு பல படங்களிலும் இப்படித்தான்.

இவை அனைத்துக்கும் தூண்டுகோலாக அமைந்தது பாசமலர் படம் தானா? அல்லது இதற்கு முன்பே இந்தப் பெயர்கள் புகழ் பெற்றிருந்தனவா?

parthasarathy
27th May 2011, 05:14 PM
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற மிகச்சிறந்த பாடல்கள் (தொடர்ச்சி...)

2. பொன்னொன்று கண்டேன் (படித்தால் மட்டும் போதுமா, 1962) - பாடல் - கவியரசு கண்ணதாசன்; இசையமைப்பு - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி; பாடியவர்கள் - டி.எம்.சௌந்தரராஜன் / பி.பி.ஸ்ரீனிவாஸ்; இயக்கம் - பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கே.பாலாஜி

இந்தக் கட்டுரையில் எழுதப்பட்ட முதல் பாடலான "நலந்தானா" மட்டும் தான் தர வரிசையில் இனம் பிரிக்க முடிகின்ற பாடல். மற்ற ஒன்பது பாடல்களை அதே போல், இரண்டு, மூன்று என்று பிரிக்க முயல்வது குதிரைக் கொம்பு; அதனால், மற்ற ஒன்பது பாடல்களை என் போக்கில் எழுதுகிறேன்.

இந்தப் பாடல் இந்த வகையில் அமைந்த பத்து சிரஞ்சீவித்தன்மை அடைந்த பாடல்களுள் ஒன்று. இந்தப் பாடலை உடனே எழுதுவதற்குக் காரணம், ஆண் பாலர் டூயட் பாடல்களைப் பற்றிய மற்ற அன்பர்களின் கலந்துரையாடல். நிறைய பாடல்கள் இந்த வகையில் வந்து விட்டாலும், சிரஞ்சீவித் தன்மையில், என்றும் முதல் இடத்தைப் பிடிக்கும் பாடல் இந்த "பொன் ஒன்று கண்டேன்" பாடல் தான் - அதாவது, கேட்க மட்டுமின்றி, பார்த்து ரசிக்கவும், அனைத்து அம்சங்களும் தலை சிறந்து விளங்கும் விதத்தில்.

இந்த வகை ஆண் பாலர் டூயட்டுகளில் கூட, இந்த நிமிடம் வரை, நடிகர் திலகமே முந்துவதற்குக் காரணம், அவருக்கு எந்த விதமான சோதனை முயற்சியிலும் இறங்குவதற்கு அவருக்கிருந்த மனோதிடம், ஆர்வம் மற்றும் முயற்சி; அவர் மேல் அனைத்து படைப்பாளிகளுக்கும் இருந்த நம்பிக்கை; இதற்கும் மேல், அவர் எந்த வகை சோதனை முயற்சியில் இறங்கினாலும், பாராட்டுகள் மட்டுமல்லாமல், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்று விடுவார் என்று தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் அவர் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை.

இன்னொரு விஷயம் - இந்த வகை பாடல்கள் ஏன் மற்ற வெற்றிகரமான கதாநாயகர்களுக்கு - இன்றளவும் - பெரிய அளவில் கிடைக்கவில்லை? காரணம், அவர் மட்டுமே, மற்ற கதாநாயகர்களுக்கும் சம வாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கும் பாடல்கள் பாடவும், அவர்களது திறமையைக் காட்டவும் தொடர்ந்து சந்தர்ப்பம் கொடுத்தார். எத்தனை வெற்றிகரமான பாடல்கள் – ஆசைக்கிளியே கோபமா, நல்லவன் எனக்கு நானே நல்லவன், கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு, அவள் பறந்து போனாளே, வாழ்ந்து பார்க்க வேண்டும், ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் - இப்படி. எத்தனை கலைஞர்கள், உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருந்த போதும், நடிகர் திலகம் அளவுக்கு மற்றவர்களுக்கு நிறைய பாடல்கள் கொடுத்து, தான் ஒரு பாடல் கூட பாடாமல் நடித்திருக்கிறார்கள் (தில்லானா மோகனாம்பாள், மோட்டார் சுந்தரம் பிள்ளை, ...).

இந்தப் பாடலின் சூழலே வித்தியாசமான ஒன்று. இன்றைக்கும் புதியது. ஒரு மாறுதலுக்கு, அண்ணனுக்காக தம்பியும், தம்பிக்காக அண்ணனும் பெண் பார்க்கப் போய், தம்பிக்குப் பார்த்த பெண்ணை அண்ணனுக்குப் பிடித்து விட, எப்படியாவது, அந்தப் பெண்ணை தான் மணந்து கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்து, குயுக்தியாகத் திட்டம் தீட்டி, அந்தப் பெண்ணை மணம் முடித்து தம்பியின் வாழ்வை திசை திருப்பி விடுவார்.

இந்தப் பாடல், அப்படி, சகோதரர்கள் பெண் பார்த்து விட்டு வந்தவுடன், பேசிக் கலந்து கொள்வதற்கு பதிலாக பாடுவதாக அமைந்த பாடல். படம் பார்க்கின்ற மக்களுக்கு, சகோதரர்கள் இருவரும் இப்படிப் பெண் பார்த்து விட்டு வந்த அனுபவத்தையும், அந்தப் பெண்ணைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் சொல்வதை, வித்தியாசமான யுக்தியின் மூலம் வடிவமைத்த, இயக்குனர் பீம்சிங்கை பாராட்டுவதா? (எப்போதும் போல், பேசிக் கொள்வதாக அமைத்திருந்தால், மக்களுக்கு அது பெரிய அளவில் சென்று சேர்ந்திருக்காது.)

அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தை சரியாக உள்வாங்கி, அற்புதமாக கனகச்சிதமாக எழுதிக் கொடுத்த கவியரசு கண்ணதாசனைப் பாராட்டுவதா?

அது மெட்டாகவே இருந்த போதிலும் (அதுவும் இருவரும் மாறி மாறி சொல்லிக் (பாடிக்) கொண்டே போக வேண்டும்), சங்கீதத்தின் தன்மையைக் கொஞ்சம் கூடக் குறைக்காமல், மெட்டின் இலக்கணமாக ஒரு தெளிந்த நீரோடையைப் போன்ற நடையைக் கடைசி வரையிலும் maintain செய்து அந்தப் பாடலை சுவையாக இசை அமைத்த மெல்லிசை மன்னர்களைப் பாராட்டுவதா?

இயக்குனரும், பாடலாசிரியரும், இசை அமைத்தவரும் சொல்ல வந்ததை சரியாகப் புரிந்து கொண்டு, அந்தப் அந்தப் பாடலில் நடித்த நடிகர்களுக்கேற்றவாறு அற்புதமாகப் பாடிய பாடகர்கள் டி.எம்.எஸ் / பி.பி.எஸ்ஸைப் பாராட்டுவதா?

மேற்க்கூறிய கலைஞர்களின் படைப்பின் தன்மையை மிகச்சரியாக உள்வாங்கி மிக அற்புதமாக நடித்துக் கொடுத்த நடிகர் திலகம் மற்றும் பாலாஜியைப் பாராட்டுவதா?

பாடல், ஆரம்பத்தில் ஒரு நீச்சல் குளத்தில் இருவரும் பாடுவது போல் துவங்கும். நடிகர் திலகம், பாலாஜி இருவரில், பாலாஜிக்கு மட்டுமே அவர் பார்த்த பெண் (சாவித்திரி அவர்கள்) பிடித்திருந்ததால், அவர் பாடும்போது, அதாவது வர்ணிக்கும்போது, அவர் காதல் வயப்பட்டவராகக் காட்சியளித்து, நடித்திருப்பார். நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை அந்த உணர்வு எதுவும் இல்லை என்பதால், அந்தக் காதல் உணர்வை இம்மி கூடக் காட்டாமல், அவருக்கே உரிய ஸ்டைலில் குழந்தைத் தனத்துடன் கூடிய ஸ்டைலில் - நடித்திருப்பார். (அந்த பாத்திரமே ஒரு வகையான வெள்ளந்தியான முரட்டுத்தனமான பாத்திரமல்லவா?) ஆரம்பத்தில், அந்த மெட்டின் லயத்திற்கேற்ப, நடிகர் திலகம் ஒவ்வொரு கையாக தண்ணீரில் தட்டித் தட்டி ஸ்டைலாக நீந்தியபடியே துவங்க, பாலாஜி நிதானமாகத் தொடருவார்.

பல்லவி முடிந்தவுடன், இருவரும் தண்ணீருக்குள் முங்கும் போது, நடிகர் திலகம் முங்குவது, ஒரு குழந்தையின் குதூகலம் மற்றும் வெகுளித்தனத்துக்கு ஒப்பாகும்.

நீச்சல் முடிந்து வெளியில் வரும் போது, பாலாஜி கைத்துண்டால் அழகாக முதுகைத் துடைத்தவாறே பாடுவது கொள்ளை அழகு. முதல் சரணம் முடியும் தருவாயில், நடிகர் திலகம் கையை ஸ்டைலாக உயர்த்தி "விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ணல்லவோ!" எனும் போது, இன்னமும் திரை அரங்குகள் அலறிக் கொண்டிருக்கிறது!! உடனே, அனு பல்லவி துவங்கும் போது, பாலாஜி பாடப் பாட, நடிகர் திலகம் அவரை ஸ்டைலாக கவனித்து மறு மொழி கொடுப்பது அதியற்புதம்!!!

இரண்டாவது சரணம் துவங்குவதற்கு முன் வரும் அந்த இசையிலும், நடிகர் திலகம் குழந்தை போல் அந்த திண்டுகளில் மேல் தாவி ஏறி மறுபடி கீழே குதிப்பது - ஒரு குழந்தையின் குதூகலம் அதில் மறுபடியும் கொப்பளிக்கும்.

இரண்டாவது சரணத்தில் "என் விழியில் நீ இருந்தால்" எனும் போது, அவரது அகன்ற (பேசும்) விழிகளும் நடிக்குமே!

இந்தப் பாடலில், நடிகர் திலகத்துடன் சிறந்து, பாலாஜி அவர்களும் இயல்பாக நடித்து, பாடலுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்திருப்பார்.

தொடரும்,

அன்புடன்,

பார்த்தசாரதி

RAGHAVENDRA
27th May 2011, 05:50 PM
அன்பு சகோதர சகோதரியர்க்கு
அனைவருக்கும் பாசமலர் வாழ்த்துக்கள். இந்நன்னாளில் அனைவரும் தங்கள் சகோதர சகோதரியர்க்கு ராக்கி கயிறு கட்டும் தினமாக நாம் தமிழகத்தில் வரும் ஆண்டு முதல் கடைப்பிடிப்போம்.
டியர் பம்மலார்
கலக்கி விட்டீர்கள். சூப்பர்...
டியர் முரளி சார், பார்த்த சாரதி சார், பம்மலார் சார், மற்றும் ராமஜெயம், பாலதண்டபாணி உள்ளிட்ட பல நண்பர்களுக்கும்,
என் உளமார்ந்த நன்றிகள். தாங்கள் அனைவரும் வருகை தந்து நேற்றைய நிகழ்ச்சியினை சிறப்பித்து என்னை கௌரவித்தமைக்கு.
எல்லாப் புகழுக்கும் திலகத்திற்கே.

பாசமலர் நினைவாக இதோ மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்


http://www.youtube.com/watch?v=uuS5XqFVzZY

அன்புடன்

joe
27th May 2011, 10:15 PM
இன்று ராகவேந்திரா ஐயாவின் பிறந்தநாளா? எனில் , இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

pammalar
27th May 2011, 11:26 PM
ரசிக திலகத்திற்கு, ரசிக முதல்வருக்கு, வீடியோ வேந்தர் ஆகிய ராகவேந்திரன் சாருக்கு உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

தாங்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் இந்த அரும்பெரும் திருத்தொண்டினை தொடர்ந்து ஆற்றுவதற்கு எல்லாம் வல்ல இறைவனையும், நமது இதயதெய்வத்தையும் வேண்டுகிறேன் !

பாசப்பெருக்குடன்,
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.

pammalar
27th May 2011, 11:43 PM
இன்று [மே 27] பாசமலருக்கு பிறந்தநாள் !

அவரைப் போற்றும் பாசமலருக்கும் [ராகவேந்திரன் சார்] பிறந்தநாள் !

What a very rare coincidence !

Happy Birthday Raghavendran Sir !

Many Many More Happy Returns !

With Lots & Lots of Love,
Pammal R. Swaminathan.

Murali Srinivas
28th May 2011, 12:21 AM
ஜோ,

நேற்று ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய சுதந்திர போராட்ட நாயகர்களை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டிய நடிகர் திலகத்தின் படங்களின் காட்சிகள் திரையிடப்பட்டன. அதை தொகுத்து வழங்கியவர் நமது ராகவேந்தர் சார். அவரின் அந்த பணிக்கு அளித்த பாராட்டுக்குதான் அவர் நன்றி தெரிவித்தார்.

மகேஷ்,

பாலாஜியின் படங்களில் ராஜா ராதா இடம் பெற்றது ராஜா படத்திற்கு பின்தான். அதற்கு முன்பு வெளியான எங்கிருந்தோ வந்தாள் படத்தில் நாயகியின் பெயர் ராதா என்ற போதிலும் நடிகர் திலகம் ஏற்ற நாயக பாத்திரத்தின் பெயர் சேகர் என்பதாகும். பொதுவாகவே தமிழ் படங்களில் ராஜா ராதா போன்ற பெயர்கள் மக்களிடையே எளிதாக சென்ற சேரும் என்பதனாலேயே வைக்கப்பட்டது. அந்த வகையில்தான் பாசமலர் படத்தில் ராஜசேகர் ராதா என்று பெயர் சூட்டப்பட்டது.

சாரதி,

பொன்னொன்று கண்டேன் பாடலுக்கு நன்றி. அதில் உள்ள ஒரு சில நுணுக்கங்களை சரியாக சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு இந்த பாடலை பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒரு சம்பவம் நினைவு வரும். 1978-ம் ஆண்டு. மதுரையில் அமைந்துள்ள வெள்ளைக்கண்ணு தியேட்டரில் படித்தால் மட்டும் போதுமா படம் வெளியாகி இருந்தது.ஒரு மாலை காட்சிக்கு நாங்கள் சில நண்பர்கள் சேர்ந்து செல்ல முடிவு செய்தோம். ஒரு நண்பனின் அண்ணன் எங்களுடன் சேர்ந்து வருவதாக சொன்னார். இதற்கும் அவர் ஒன்றும் சிவாஜி ரசிகர் என்று சொல்ல முடியாது. அனைத்துப் படங்களையும் பார்ப்பவர். என்ன விசேஷம் என்றால் அவர் அன்றிரவு பெங்களுர் செல்கிறார். இரவு 8 மணிக்கு பஸ். அந்த காலகட்டத்தில் மதுரையிலிருந்து பெங்களூருக்கு ரயில் கிடையாது. மொத்தம் இரண்டு பஸ்கள் என்று நினைவு. அதுவும் தவிர வெள்ளைக்கண்ணு அரங்கம் நகரின் மய்ய பகுதியிலிருந்து சற்றே விலகியுள்ள அரசரடி பகுதியில் அமைந்துள்ள அரங்கம். அன்று மதுரையில் ஆட்டோக்களும் கிடையாது. இரு சக்கர வாகனங்களும் குறைவு.

மாலைக் காட்சி படத்திற்கு சென்றால் இரவு பஸ் பிடிப்பதற்கு இத்தனை இடர்பாடுகள் இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தே படத்திற்கு வந்த அவர் சரியாக இந்த பாடல் காட்சியில் அந்த விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ணல்லவோ என்ற வரிக்காக, அந்த நீச்சல் குளத்தின் படியேறி நடிகர் திலகம் விண்ணோக்கி கை தூக்கும் அந்த ஸ்டைலை ரசித்து கைதட்டிவிட்டு மிகுந்த மனநிறைவோடு முக மலர்ச்சியோடு எங்களிடம் விடை பெற்று சென்ற காட்சி இப்போதும் என் கண் முன்னே நிழலாடுகிறது. நன்றி அதை அசை போட வாய்ப்பளித்ததற்கு.

அன்புடன்

சாரதி தான் கிருஷ்ணர் என்ற போதிலும் கிருஷ்ணாவை மறக்கலாமா? ஆம் ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழாவிற்கு நமது ஹப்பர் நண்பர் கிருஷ்ணாஜியும் வந்திருந்தார்.

groucho070
28th May 2011, 08:04 AM
Happy birthday, Raghavendra-sir. It'd be more appropriate to wish you here. And thank you for all the services you have done on behalf of NT's fans all over the world.

RAGHAVENDRA
28th May 2011, 08:58 AM
வாழ்த்து சொன்ன அன்பு மிக்க ஜோ, பம்மலார், முரளி சார், ராகேஷ் மற்றும் அனைத்து நல்லிதயங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
தங்கள் அனைவருக்கும் அடியேனின் அன்பு காணிக்கை இதோ

காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 18


http://www.youtube.com/watch?v=kRiYGykoaJw

பந்த பாசம் படத்தில் தேவிகாவுடன் நடிகர் திலகம் பாடும் பந்தல் இருந்தால் பாடல். பாடல் வரிகளில் இருவருடைய மன நிலையும் புலப் பட்டிருக்கும். காதலும் உண்டு அதே சமயம் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்ற நிலைப்பாட்டில் கதாநாயகன் பாடும் சூழ்நிலையினை மாயவநாதனின் வரிகள் மிகச் சரியாக பிரதிபலிக்கும்..

அருமையான பாடல்

அன்புடன்

RAGHAVENDRA
28th May 2011, 09:51 AM
பாச மலர் படத்தின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நமது அன்பு சகோதரர் சிவாஜி சந்தானம் அவர்கள் - எம்.ஆர்.சந்தானம் அவர்களின் புதல்வர் - வெள்ளி விழா நிகழ்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது நன்றியும் பாராட்டுக்களும். ஒரு புகைப்படம் இங்கே தரப்படுகிறது. மற்றவை கீழ்க்காணும் இணைப்பில் காணுங்கள்.
http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/247551_10150258846356810_690131809_8897787_1791565 _n.jpg

http://www.facebook.com/media/set/?set=a.10150258845471810.374682.690131809

அன்புடன்

RAGHAVENDRA
28th May 2011, 09:52 AM
பாச மலர் படத்தின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நமது அன்பு சகோதரர் சிவாஜி சந்தானம் அவர்கள் - எம்.ஆர்.சந்தானம் அவர்களின் புதல்வர் - வெள்ளி விழா நிகழ்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது நன்றியும் பாராட்டுக்களும். ஒரு புகைப்படம் இங்கே தரப்படுகிறது. மற்றவை கீழ்க்காணும் இணைப்பில் காணுங்கள்.
http://a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/254839_10150258857271810_690131809_8897900_7019247 _n.jpg

http://www.facebook.com/media/set/?set=a.10150258845471810.374682.690131809

அன்புடன்

parthasarathy
28th May 2011, 01:12 PM
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பாசமலர் வெள்ளி விழாக் கொண்டாட்டங்கள் பற்றிய புகைப் படங்கள் கண்ணுக்கு விருந்து படைத்தது மட்டுமல்லாமல், இனிய நினைவுகளையும் மீட்டுத் தந்தது. மிக்க நன்றி.


அன்புள்ள திரு. முரளி அவர்களுக்கு,

"பொன்னொன்று கண்டேன்" பாடலைப் பற்றிய எனது பதிவுக்கான தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி.

ருஷ்ய கலாசார மையத்தில் கலந்து கொண்டதைப் பற்றிக் குறிப்பிடும் போது, திரு. கிருஷ்ணாஜி அவர்களின் பெயர் தற்செயலாக குறிப்பிடப்படாமல் விட்டுப் போனது குறித்து வருந்துகிறேன். இடித்துரைத்தமைக்கு நன்றி கூறுகிறேன். திரு. கிருஷ்ணாஜி அவர்கள் பிழை பொறுத்தருள வேண்டுகிறேன்.

அன்புடன்,

பார்த்தசாரதி

pammalar
29th May 2011, 03:55 AM
ராகவேந்தர் ஒரு ரசிகவேந்தர்

சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் 26.5.2011 வியாழன் மாலை 6:30 முதல் 7:45 வரை இந்திய-ரஷ்ய நல்லுறவை போற்றும் வகையில் திரைப்படத் திருவிழா இனிதே நடைபெற்றது. விழாத் துளிகள்:

- இந்த இனிய விழா இனிதே நடைபெற அங்கம் வகித்தவர்கள், Russian Centre of Science & Culture, Indo-Russian Cultural & Friendship Society, Sivaji-Prabhu Charities Trust மற்றும் ரசிகவேந்தரான நமது ராகவேந்திரன் சாரின் www.nadigarthilagam.com இணையதளம்.

- சோவியத் ரஷ்யாவின் மாபெரும் விடுதலைப் போரின் 66வது ஆண்டு வெற்றிவிழாவாகவும், இந்திய சுதந்திரத்தின் 64வது வெற்றிவிழாவாகவும் இந்தத் திரைப்படத் திருவிழா களை கட்டியது. இரண்டாம் உலகப் போரை, 'மாபெரும் விடுதலைப் போர்' என்றே சோவியத் யூனியனில் கூறுவது வழக்கம்.

- விழா மேடையை ரஷ்ய நாட்டுத் தூதுவர் மாண்புமிகு நிகோலாய் லிஸ்டாபடொவ், ரஷ்ய அறிவியல் மற்றும் கலாசார மையத்தின் இயக்குநர் திரு.விலாடிமிர் மாரி, நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர் பட அதிபர் திரு.ஜி.ராம்குமார், இந்திய-ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு அமைப்பின் தலைமைச் செயலாளர் திரு.பி.தங்கப்பன், www.nadigarthilagam.com அதிபர் திரு.வி.ராகவேந்திரன் மற்றும் திரு.ஜெயக்குமார் முதலிய பிரமுகர்கள் அலங்கரித்தனர். விழாப் பிரமுகர்கள் குத்துவிளக்கை ஏற்றி வைக்க விழா நல்ல முறையில் தொடங்கியது.

- இந்திய-ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு அமைப்பின் தலைமைச் செயலாளர் திரு.பி.தங்கப்பன் அவர்கள் வரவேற்புரை நல்கி விழா நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினார். அவரது உரையில் சில அரிய செய்திகளும் பொதிந்திருந்தன. 1997-ம் ஆண்டு இதே அரங்கில் இந்திய சுதந்திரப் பொன்விழாவைக் கொண்டாடிய போது நடிகர் திலகம் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதை உணர்ச்சிப்பெருக்குடன் நினைவுகூர்ந்தார். அன்று நடிகர் திலகம் தமிழ்மொழியில் ஆற்றிய தலைமையுரையை விரைவில் ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்த்து இங்கேயும், ரஷ்யாவிலும் ஆவணப்படுத்தப்போவதாகக் கூறினார். தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ள நடிகர் திலகத்தின் சுயசரிதையை ரஷ்ய மொழியிலும் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். பராசக்தி பொன்விழா, வீரபாண்டிய கட்டபொம்மன் பொன்விழா ஆகிய விழாக்கள் இந்த மையத்தில்தான் சிறப்புத் தபால் உறைகள் வெளியிடப்பட்டு கொண்டாடப்பட்டன என்றும், இந்த ஆண்டு(2011) பொன்விழாக் காணுகின்ற பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், கப்பலோட்டிய தமிழன் முதலிய காவியங்களின் பொன்விழா இங்கேயே நடந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் சிகர செய்தியாக, உலகப்பெரு நடிகரான சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன் அவர்களின் பெயரையும், ரஷ்யப் படவுலக ஜாம்பவானான போன்டர்ஜுக் அவர்களின் பெயரையும் இணைத்து "சிவாஜி கணேசன் போன்டர்ஜுக் ஃபிலிம் அகாடெமி" என்கின்ற பெயரில் ஒரு திரைப்பட அகாடெமி தொடங்க இருப்பதையும் கூறினார். அதற்கான ஆரம்ப விழா நடிகர் திலகத்தின் பத்தாவது ஆண்டு நினைவு தினமான 21.7.2011 அன்று அவரது நினைவைப் போற்றும் வகையில் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்த அகாடெமியின் ஆவணக் காப்பகத்தில் [Archives] நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் அனைத்தும் ஆவணங்களாக பாதுகாத்து வைக்கப்படும் என்ற முத்தான செய்தியை அனைவரின் செவிகளுக்கும் தேனாகப் பாய்ச்சினார்.

- ரஷ்ய நாட்டுத் தூதுவர் மாண்புமிகு நிகோலாய் லிஸ்டாபடொவ் அவர்கள் உரையாற்றும் போது ஆசிய-ஆப்பிரிக்க படவிழாவில் சிவாஜி கணேசன் சிறந்த நடிகர் விருது பெற்றது அவர் எப்பேர்ப்பட்ட உலகப் பெரு நடிகர் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று புகழ்ந்துரைத்தார். சிவாஜி கணேசன் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் தாய்நாட்டுப் பற்றிலும் தலைசிறந்து விளங்கியவர் என்று பாராட்டினார். இத்தகைய பெருமைகள் கொண்ட அவருடைய திரைப்படக் காட்சிகளை அரங்கிலுள்ளவர்களைப் போல தானும் காண ஆவலாக உள்ளதாகவும் கூறினார். இன்று இங்கு நடக்கும் இது போன்ற நிகழ்வுகள் இந்திய-ரஷ்ய உறவை மென்மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

- நடிகர் திலகத்தின் மூத்த புதல்வரும் திரைப்பட அதிபருமான திரு.ஜி,ராம்குமார் அவர்கள் இந்திய-ரஷ்ய நல்லுறவுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் பாலமாக இருக்கும் என்றார். இரண்டு நாள் விழாவின் முதல் நாள் [25.5.2011] முக்கிய நிகழ்ச்சியாக திரையிடப்பட்ட "LIBERATION" திரைப்படம் 1990களில் சென்னை சஃபையர் திரையரங்கில் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடியதை நினைவுகூர்ந்த திரு.ராம்குமார் தனது தந்தையாருடன் அப்படத்தை சஃபையரில் கண்டு களித்ததை மிகுந்த பூரிப்போடு எடுத்துக் கூறினார். ரஷ்ய நாட்டின் மாபெரும் விடுதலைப் போரான இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா அடைந்த வெற்றியையும், அந்த வெற்றியைப் பெற அந்நாடு செய்த போராட்டங்களையும், தியாகங்களையும் பற்றி முழுமையாக அறிய 'Anthony Beevor' எழுதிய 'Stalingrad' என்கின்ற நூலை வாசிக்குமாறு அரங்கிலிருந்தோரை அன்புடன் கேட்டுக் கொண்டார்.

- நமது ராகவேந்திரன் சார் பேசும் போது நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். புராணம், இதிகாசம், வரலாறு, தேசியம், சமூகம், குடும்பம் என எந்தப் பிரிவை எடுத்துக் கொண்டாலும் அவற்றிற்கெல்லாம் சான்றுகளை அள்ளி வழங்குவதற்கு நடிகர் திலகத்தின் திரைப்படங்களே ஆதாரசுருதிகளாக திகழ்கின்றன என்று கூறிய ராகவேந்திரன் சார், அப்பேர்ப்பட்ட அவரது படங்கள் இன்றைய தலைமுறையினருக்காகவும், வருங்கால சந்ததியினருக்காகவும் மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

- திரைத்துறையை சார்ந்த திரு.ஜெயக்குமார் நடிகர் திலகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தான் எழுதிய கவிதைகளிலிருந்து சில முக்கிய வரிகளை மட்டும் வாசித்துக் காட்டினார். முத்தான சத்தான வரிகளாக அவை இருந்தன. அவையோரின் ஆரவாரத்தையும் அவை பெற்றன.

- சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியைச் சேர்ந்த செல்வி. அர்ச்சனா சரளமான ஆங்கிலத்தில் மிக அருமையாக ரஷ்ய நாட்டின் மாபெரும் விடுதலைப் போரினுடைய வெற்றிப்பின்னணியை எடுத்துரைத்தார்.

- ரஷ்ய நாட்டுத் தூதுவருக்கு, "Autobiography of an actor"என்ற நடிகர் திலகத்தின் ஆங்கில சுயசரிதை நூல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. திரு.ராம்குமார் அவர்கள் இதனை வழங்கினார். விழாப் பிரமுகர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

- நமது ராகவேந்திரன் சார் இந்த இரு தின விழா நிகழ்வுகளுக்கும் முன்னணியிலும், பின்னணியிலும் ஒரு கல்தூணாக விளங்கினார் என்பதனை பறைசாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே யாம் எழுதிய இந்த விழாப்பதிவின் தலைப்பில் அவர் பிரதானமாக இடம்பெற்றிருக்கிறார் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். சிவனடியாரைப் போற்றினால் சிவபெருமான் அக மகிழ்வார். சிவாஜியின் அடியவரைப் புகழ்ந்துரைத்தால் நமது சிவாஜி பெருமான் உள்ளம் குளிர்வார்.

- விழாவின் சிகர நிகழ்வாக விழாவுக்கு வந்தவர்களுக்கு சிறந்த விருந்து அளித்தது போல அடுத்து வந்தது நமது ராகவேந்திரன் சார் மிகுந்த சிரத்தையுடன் தொகுத்து உருவாக்கியிருந்த தேசிய திலகத்தின் திரைப்படக் காட்சிகள் [Clippings].

தொடரும்...

அன்புடன்,
பம்மலார்.

pammalar
30th May 2011, 03:18 AM
இன்று 29.5.2011 ஞாயிறு முதல் நெல்லை 'சென்ட்ரல்' திரையரங்கில் ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா" தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தித்திக்கும் தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

goldstar
30th May 2011, 04:57 AM
Dear Ragavendran,

Wish you many more happy returns of the day.

As Pammalar said, you are "Rasikavendan".....

Cheers,
Sathish

goldstar
30th May 2011, 07:53 AM
இன்று 29.5.2011 ஞாயிறு முதல் நெல்லை 'சென்ட்ரல்' திரையரங்கில் ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா" தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தித்திக்கும் தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

Thanks Pammalar. Can we get Sunday "Allapparai" photos...

mr_karthik
30th May 2011, 12:03 PM
HAPPY BIRTHDAY TO OUR BELOVED RAGHAVENDAR SIR,

I have nor visited our thread for the past three days, due to pre-occupation of some other jobs. Today only I have returned to our 'thaayagam' and found the thread hes been filled with somany interesting matters.

Sorry Raghavendar sir for my belated Birthday wishes.

On behalf of all NT fans I wish you for a longest life, to spread the fame of our NT.

mr_karthik
30th May 2011, 12:17 PM
Pammalar sir,

Thanks a lot for the wonderful newspaper advertisements of 'PAASA MALAR' Golden Jubilee rememberance. They are very nice and clear. Producing such records in proper time is much more appreciable.

Also, thanks for your detailed review about the function held at Russian Cultural Centre. Our Raghavendar sir's role in that function is a commandable one, and no doubt it must be the centre of attaraction in that function.

Murali sir,

Thanks for breif explanation about the happenings in the function, when the clipping of NT have been screened. We can proudly say, no other actors have such kind of patriotic songs and sequences except our one and only NT.

mr_karthik
30th May 2011, 12:29 PM
Parthasarathy sir,

Wonderful analysis about 'pon onRu kandEn' song from 'PadithAl mattum pOthumA'. You have described each and every nuances of the song, with your special touches.

This is also one of the 'saagaavaram petra' songs in Tamil cinema, and is being telecasted everyday in any of the TV channels, and also one among the special songs choosen by cine VIP's when they are giving 'special thEnkinnam' etc.

You have analysed the stylish action of NT (and ofcourse Balaji too) especially for the line 'vinnOdu viLaiyAdum peN andha peNNallavO'. No doubt this song captured the first place among male duets in Tamil cinema.

Thanks again, and please continue............

Plum
30th May 2011, 01:25 PM
Caught a NT movie in Win TV in parts over the weekend - NT plays a simpleton whose athai poNNu is Devika(so obviously I was hooked into catching the movie all the more) whose mother is in cahoots with Jamindar Asokan to get Devika married off to Asokan. Meanwhile, Asokan's brother falls in love with NT's sister and it is a simple tale progressing sedately to a subam climax. Just loved NT's performance - I havent seen this movie before so it was a nice treat. Nothing much to write about the movie but just goes to show how NT can make the most ordinary of the movies extremely watchable and the channel unflippable when he is on.

groucho070
30th May 2011, 02:06 PM
Muradhan Muthu, a film which run was cut short by non other than.....Navarathiri. "Nanee enakku pagaiyaaneen...." line gnyabathukku varala?

Plum
30th May 2011, 02:12 PM
Ah! So I finally caught Muradan Muthu. Nice, endearing - but only thanks to NT's presence, else would have been a torture - movie. Oh yeah nAnE enakku pagaiyAnEn indeed!

adiram
30th May 2011, 02:22 PM
muradan muthu is a worth watch film, with Shivaji as an innocent action.

deserve for a success, but not.

parthasarathy
30th May 2011, 02:26 PM
Muradhan Muthu, a film which run was cut short by non other than.....Navarathiri. "Nanee enakku pagaiyaaneen...." line gnyabathukku varala?

In fact, Navarathiri and Muradan Muthu (MM) were released together. MM was not a great hit as compared to Navarathiri for reasons best known to all. It was a B.R.Panthulu movie (Padmini Pictures). NT and Panthulu got separated due to this movie only, as BRP wanted NT to release MM as his 100th movie, which he rightly refused. NT also rightly gave this one liner "Nanbargal pirindhanar" for this movie, which authenticated this info. NT was as usual brilliant as rustic village simpleton and as usual, his chemistry with Devika worked well - especially, "Thamaraippo kolaththilae" song. Also, unlike Panthulu's earlier movies, he took a major role himself, which proved to be the weak link.

As for Prayers for Super Star - Yes, let us all pray for his well being and speedy recovery.

Regards,

R. Parthasarathy

groucho070
30th May 2011, 02:32 PM
Ah! So I finally caught Muradan Muthu. Nice, endearing - but only thanks to NT's presence, else would have been a torture - movie. Oh yeah nAnE enakku pagaiyAnEn indeed!Actually scenes with Bandhulu would be the highlight for me. Bristling with tension, so much of love for each other but they are so different. Also, NT vs VKR :lol:

Plum
30th May 2011, 02:41 PM
NT vs VKR - yes :lol:

Actually, here he invokes comedy with a subtle sense of satire, and elegant ripostes. Not at all easy - when you talk about comedians and heros doing comedy, it is a particular aspect of comedy that they master(Kamal being the later exception ofcourse). They have their brand of comedy that they excel in - with NT, you get the whole range. You sense that the disrespectful, no-holds-barred, sarcastic, whip-tongued, remorseless prankster is a persona that NT had hidden under his real-life nice-guy persona. He brings it out with vengeance here, resulting in much hilarity and a sense of awe at a man who can, at will, bring out a whole new persona you never knew existed in him. What I mean is it is not like he is acting out muradan muthu - that impish muradan had been residing inside him for all these years, and this story was just an outlet for one of the thousand myriad multiple personalities that NT played host to in his mind.
The man is just not an actor. He is something else.

groucho070
30th May 2011, 02:54 PM
Well put, Plum.

The film itself is a remake from a Bengali film. Not sure how much NT took from there (you can see from Hanuman worship its origin), but there are lot more comic moments in this film than you expect from a NT/Bandhulu fare. From beginning when his sis-in-law catches him doing the tiger dance, to the VKR encounters, and even after the tragedy the film is not bereft of comic moments thanks to NT's performance. I seriously like this film (Devika vera, sollava veenum).

goldstar
31st May 2011, 09:10 AM
NT vs VKR - yes :lol:

Actually, here he invokes comedy with a subtle sense of satire, and elegant ripostes. Not at all easy - when you talk about comedians and heros doing comedy, it is a particular aspect of comedy that they master(Kamal being the later exception ofcourse). They have their brand of comedy that they excel in - with NT, you get the whole range. You sense that the disrespectful, no-holds-barred, sarcastic, whip-tongued, remorseless prankster is a persona that NT had hidden under his real-life nice-guy persona. He brings it out with vengeance here, resulting in much hilarity and a sense of awe at a man who can, at will, bring out a whole new persona you never knew existed in him. What I mean is it is not like he is acting out muradan muthu - that impish muradan had been residing inside him for all these years, and this story was just an outlet for one of the thousand myriad multiple personalities that NT played host to in his mind.
The man is just not an actor. He is something else.

Well said Plum, He is god of acting...

Long live NT fame.

RAGHAVENDRA
31st May 2011, 09:33 AM
Dear Sathish and Karthik,
Thank you so much for the kind greetings and well wishes.

Dear Plum
I think you asked for the person in the song "Varuvai Kanna Neerada" in the movie Pattakkathi Bairavan. It's Jai Ganesh.

Raghavendran

RAGHAVENDRA
31st May 2011, 09:35 AM
டியர் பம்மலார்,
அடுக்கு மொழியிலும் செம்மொழியிலுமாக அடியேனை நீங்கள் பாராட்டும் விதம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதைப் பேணுவது தான் மிகுந்த சிரமமாகும். முடிந்த வரை முயற்சிக்கிறேன்.
(அதற்காக அரசியல்வாதி ரீதியில் வேந்தர்... என்பதெல்லாம் டூமச் என்று மற்றவர்கள் நினைப்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது). கவலைப் படாதீர்கள். அடுத்த பட்டம் வந்து இதை ஒன்றுமில்லாமல் செய்து விடும். நானும் உங்களையெல்லாம் விடுவதாயில்லை...

மிகுந்த அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
31st May 2011, 10:09 AM
கதைக்களப் பாடல்களில் நடிகர் திலகம் - 01

காதல், சோகம், கொள்கை, தத்துவம் போன்ற நிலைகளில் மட்டுமல்லாமல் கதைக்களத்திற்கேற்ற சூழ்நிலைக்கேற்றவாறு இடம் பெற்ற பாடல்களிலும் நடிகர் திலகத்தின் தனித்துவம் காணப்படும். அப்படிப்பட்ட பாடல்களை இங்கே காண்போம். தொடக்கமாக பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இடம் பெற்ற யாரோ நீயும் நானும் யாரோ என்ற அருமையான பாடல். கதைப்படி நடிகர் திலகம் ஏற்ற பாத்திரம் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப் பட்டு வளர்க்கப்பட்டதாகும். வளர்ந்து பெரியவனாகிய பின் தாய்க்கும் மகனுக்கும் ஒருவரை ஒருவர் அடையாளம் தெரிந்து விடுகிறது என்றாலும் சூழ்நிலை இருவரையும் சேர முடியாமல் தடுக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் கதாபாத்திரம் ஒரு பிறந்த நாள் விழாவில் தாயிடம் தன் நிலைமையை உணர்த்துவதாக கதைக்களம். இப்பாடலில் இளையாராஜாவின் சிறந்த மெட்டமைப்பில் கண்ணதாசனின் வரிகள் மிகவும் உள்ளார்ந்த பொருளடக்கியவை. நடிகர் திலகம் தன் நடிப்பால் அந்த சூழ்நிலையை அப்படியே நம் கண்முன் நிறுத்தும் இப்பாடல், துரதிர்ஷ்டவசமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படுவதில்லை.

இதோ அப்பாடல்


http://www.youtube.com/watch?v=g_-lZNLOa5Q

அன்புடன்
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்

adiram
31st May 2011, 10:44 AM
திரு ராகவேந்தர் அவர்களே, நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறோம். இப்போது நெட்டிலும் காண வைத்தீர்கள். மிகவும் மகிழ்ச்சி.

pattakathi bairavan vetri padama, failure padama?.

parthasarathy
31st May 2011, 03:03 PM
நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற மிகச்சிறந்த பாடல்கள் (தொடர்ச்சி...)

இந்தக் கட்டுரையில் இடம் பெறும் பாடல்கள் - இவைகளில், பெரும்பாலும் நடிகர் திலகத்தின் நடிப்பை மட்டுமல்லாது, ஒரு பாடலின் சிறப்பிற்கு வழி வகுத்த அனைத்து அம்சங்களும் அலசப்படுகிறது. இந்த வகையிலும் பார்த்தால், நடிகர் திலகமே மற்றவர்களை முந்துகிறார் - இன்றளவும் - பல சிரஞ்சீவித்தன்மை பெற்ற படங்கள், காட்சிகள் மற்றும் பாடல்களில் நடித்த வகையில்!

3. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல (பாச மலர், 1961) - பாடல் - கவியரசு கண்ணதாசன்; இசையமைப்பு - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி; பாடியவர்கள் - டி.எம்.சௌந்தரராஜன்/பி.சுசீலா; இயக்கம் - பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகையர் திலகம் சாவித்திரி கணேசன்.

"பொன்னொன்று கண்டேன்"-ஐத் தொடர்ந்து இன்னொரு டூயட்.

ஆனால், இது காதலர்கள் சேர்ந்து பாடிய டூயட் அல்ல. அண்ணனும் அவன் அருமை, பெருமையாய் வளர்த்த அவனது ஆருயிர்த் தங்கையும் - சேர்ந்து அல்ல - தனித்தனியே அவரவர்கள் வீட்டில் - ஒருவரை மற்றவர் நினைத்து, உருகி, மருகி பாடுகின்ற டூயட்.

அத்தனை நாள் ஒன்றாய் சேர்ந்து, தங்கைக்காகவே வாழ்ந்து விட்ட அண்ணனும், அந்த அண்ணனுக்கு மேலாக வேறு ஒருவரையும் - ஏன் ஆருயிர்க் காதலரையுமே நினைத்துப் பார்க்காத அவனது தங்கையும், மணம் முடித்த பின் - அதுவும், தங்கை விரும்பியவரையே அண்ணன் தன்னுடைய முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொள்ளாமல், தங்கையின் நல்வாழ்வு ஒன்றையே நினைத்து, விட்டுக்கொடுத்து, மணம் செய்து வைத்த பின் - அந்தக் காதல் கணவனுடைய உறவினர்கள் சூழ்ச்சியால் ஒரே வீட்டில் இருவரும் திருமணம் ஆன பின் வாழ்ந்தும், பிரிய வேண்டிய சூழ்நிலை வந்து, பிரிந்து, அவர்கள் இருவருக்கும் பிள்ளைகள் பிறந்த பின், அந்த அண்ணனும் தங்கையும் பாடுவதாக வரும் பாடல். அடிப்படையில், இது ஒரு தாலாட்டுப் பாடல் - Lullaby.

கவியரசு கண்ணதாசன் உலகில் உள்ள எந்த ஒப்பற்ற கவிஞர்களுக்கும் இணையாகப் போற்றப்பட வேண்டிய கவிஞர். குறிப்பாகத் தமிழில் நாம் நன்கு அறிந்த, வள்ளுவர், கம்பர், பாரதிக்கு இணையாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒப்பற்ற கவிஞர் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். ஏனென்றால், கவிஞன் என்பவனுக்கு முக்கியமான தேவை, சுதந்திரம் - ஒரு கவிஞனுக்கு கற்பனை என்பது எப்போது, எதைப் பார்த்து, எப்படி வரும் - சிந்தனை எப்படி உதிக்கும் - என்பது அவனுக்கு, ஏன் அவனைப் படைத்த இறைவனுக்கே தெரியாது. ஓடும் நதியினைப் பார்த்தோ, நீந்தும் மீனைப் பார்த்தோ, நடக்கும் அன்னத்தைப் பார்த்தோ, ஓடும் மானைப் பார்த்தோ, களங்கமில்லா வான்மதியைப் பார்த்தோ, களங்கமற்ற குழந்தையின் சிரிப்பைப் பார்த்தோ, மங்கையின் புன்னகையைப் பார்த்தோ - எதைப் பார்த்தோ, எதை நினைத்தோ, எப்போது வேண்டுமானாலும் வரும் / உதிக்கும். அவனுக்கு அந்த சுதந்திரம் அத்தியாவசியமான தேவை. ஆனால், சினிமாவுக்குப் பாட்டெழுதும் கவிஞனுக்கோ, அது முற்றிலும் கிடையாது. அவனுக்கு, இயக்குனர்கள் ஒரு சூழல் - அதாவது படத்தின் ஒரு சூழலைக் கொடுத்து - அந்த சூழலுக்கேற்றார்ப்போல் பாட்டெழுதப் பணிக்கிறார்கள் - அதுவும் அந்தப் பாடல் உடனே வேண்டும் - சில நேரங்களில் மெட்டைப் போட்டுவிட்டு அந்த மெட்டிர்க்கேற்றார்ப்போல் பாடல் வேண்டும் என்பார்கள். அது போல் சுதந்திரம் எதுவும் இன்றி ஒரு வட்டத்துக்குள் அவனை சிக்க வைத்து - அந்த வளையத்துக்குள் - அவன் பாட்டுக்கள் பல எழுதி - பல பாடல்கள் அமரத்துவம் பெற்று விட்டதால் தான் - அதுவும் படித்தவன் முதல் பாமரன் வரை அனைத்து தரப்பினரையும் எளிதில் சென்று சேர வைத்த பாடல்கள் - அதனால் தான் இந்த ஒரே ஒரு கவிஞனை மட்டும் அந்த மாபெரும் முக்கவிஞர்களுக்கு இணையாக என்னால் காண முடிகிறது.

அப்படி அந்தக் கவிஞன் எழுதிய எத்தனை எத்தனையோ பாடல்கள் - பல சந்தர்ப்பங்களில், மெட்டுகளுக்கும் பல அற்புதமான பாடல்கள் - அந்தப் பாடல்கள் இன்றும் ஒவ்வொரு தமிழனின் நினைவிலும் நீங்கா இடம் பெற்றவை.

இந்தப் பாடலின் பல்லவி - அன்றும், இன்றும், என்றும் எண்ணற்ற ஆராய்ச்சிகளுக்கு ஆட்படுகின்ற வரிகள். எப்படி?

கவிதை என்பது என்ன? வேர்ட்ஸ்வொர்த் என்னும் ஆங்கிலக் கவி சொல்கிறான் "Spontaneous overflow of powerful feelings" என்று.

அதாவது "மடை திறந்த வெள்ளம்போல் வரும் சக்திமிக்க எண்ணங்கள்". இதில் மிக முக்கியம் - spontaneous மற்றும் powerful. அவை இப்படித்தான் வருமோ!

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே - ஒரு குழந்தையின் வளர்ச்சி;

வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே - அந்தக் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி சொல்ல நினைத்த கவிஞன் – அரைகுறை பருவமான விடிகாலை, அந்தி இரண்டில் - விடிகாலையை மட்டுமே ஒப்பாக எடுத்துக் கொண்டான் - வளர்ச்சியை சொல்வதற்கு. (இதே கவிதான் பின்னர் காதலர்கள் பாடும் டூயட் பாடலில் "மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப் போலே" என்று அந்திப் பொழுதை எடுத்துக் கொண்டான் - காதலர்களுக்கு மிகவும் பிடிக்கும் மாலைப் பொழுதை ஒப்பாக எடுத்துக் கொண்டு.

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந்தென்றலே - மறுபடியும் குழந்தையின் வளர்ச்சி;

இப்போது தான் அற்புதம் - வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே - தாய் மொழியாம் தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் வளர்ச்சியினை - ஒரே வாக்கியத்தில் எளிமையாகச் சொல்கிறான் அய்யா அந்தத் தமிழ்க் கவி!

அடிப்படையில், இது ஒரு தாலாட்டுப் பாடல் என்றாலும், அந்தப் பாடலின் மூலம், அண்ணனும் தங்கையும் தங்கள் மனதில் இருக்கும் உணர்வுகளைக் கூறி - எப்படியெல்லாம் வளர்ந்தோம், தங்களுடைய உறவு எத்தகையது, இந்த உறவு இந்த சந்ததியோடு முடிந்து விடாமல், காலா காலத்திற்கும் தழைத்தோங்க வேண்டும்! - என்று இருவரும் பாடி தங்கள் ஆதங்கத்தை ஆற்றிக் கொள்வதற்குப் பயன்படும். இன்னும் இது போல் நான்கு சரணங்கள்.

இப்பொழுது இசையமைப்பு:- பாடலின் ஆரம்பத்தில் வரும் மயிலிறகால் வருடுவது போன்ற மென்மையான இசை, குழந்தையை மட்டுமல்ல, எல்லோரையுமே அந்தச் சூழலுக்குக் கொண்டு செல்லும். தாலாட்டுப் பாடல்கள் எத்தனையோ வந்து விட்டாலும், இந்த வகைப் பாடல்களுக்கு இலக்கணம் வகுத்த பாடல் இந்தப் பாடல்தான் என்றால் அது மிகையாகாது. அந்த மென்மையான லயமும் சங்கதிகளும் பாடல் நெடுகத் தொடர்ந்து, அமைதியாக முடியும்போது, கேட்பவர்களும், பார்ப்பவர்களும், அந்தச் சூழலுக்குச் சென்று தங்களை மறந்த நிலையில் இருப்பார்கள் - இன்னமும் இருக்கிறார்கள். அப்படி ஒரு மெட்டு மற்றும் இசையமைப்பு!

அடுத்து பாடிய முறை:- அடடா! தேனினும் இனிய குரலால், பி.சுசீலா அவர்கள் பாடி, கேவி, விக்கி மெய் மறக்கச் செய்து விடுகிறார் என்றால், நடிகர் திலகம் - மன்னிக்கவும் - டி.எம்.எஸ். அவர்கள் வழக்கம் போல், எடுத்த எடுப்பில், நடிகர் திலகத்தின் உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்து, பின்னர் அந்த சூழலைத் தனதாக்கிக் கொண்டு, கேட்பவர்களையும், பார்ப்பவர்களையும் அந்த சூழலுக்குள் கொண்டு சென்று விடுகிறார்.

அடுத்து இயக்கம்:- ஒரு கப்பலின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் கேப்டனைப் போன்றவர் ஒரு படத்தின் இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்து வந்த பீம்சிங் தான் அடிப்படையில், மொத்தப் பாராட்டுகளுக்கும் சொந்தக்காரர், இந்தப் பாடலை சிருஷ்டி செய்தவர் என்கிற முறையில். ஒரு இடத்தில் கூட, பாடலின் தரமோ, அமைப்போ, சுவையோ, ஒரு மாற்றுக் கூட குறையாமல், பாடலை இயக்கி, அந்தப் பாடலை சிரஞ்சீவிப் பாடலாக்கிய மாபெரும் இயக்குனர். இன்றளவும், தமிழ்த் திரைப்பட உலகில் வெளி வந்த முதல் தர, தரமான படங்களில் முன்னணி இடம் பெற்ற படங்கள் நடிகர் திலகம்-பீம்சிங்-விஸ்வநாதன்-ராமமூர்த்தி-கவியரசு கண்ணதாசன் கூட்டணியில் இருந்துதான் வந்தவை என்கிற முறையில், இந்தக் கூட்டணியின் கேப்டனாக பீம்சிங் என்றும் எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த இயக்குனராகிறார்.

இறுதியாக நடிப்பு:- பாடல் வெறும் தாலாட்டுப் பாடலாகத் துவங்கும் போது, அந்தக் குழந்தையை அன்போடு பார்த்து, தாலாட்டுவதாக சாவித்திரி அவர்கள் துவங்கி, பாடல் அப்படியே நடிகர் திலகத்தை சென்று சேரும்போது, அவரும் அதே மனோ நிலையில் பாடத் துவங்குவார். முதல் சரணத்தில் "யானைப் படை கொண்டு சேனை பல வென்று" என்று துவங்கி "வாழப் பிறந்தாயடா!" என்று அந்த வரிகளைப் பாடி முடிக்கும் போது "வாழப் பிறந்தாயடா!" என்ற வரிகளை எப்படி டி.எம்.எஸ். சடாரென்று மாற்றி சன்னமாக பாடினாரோ, அதே போல், நடிகர் திலகமும் அப்படியே அதற்கு உதட்டை அசைத்து, முக பாவனையை அதற்கேற்றாற்போல் வெளிப்படுத்திய விதம் அற்புதம் என்றால், மறுபடியும் அதே வரிகளை உணர்வு பூர்வமாகப் பாடி மெலிதான கேவல் கலந்த அழுகையுடன் முடிக்கும் போது, கல் நெஞ்சமும் கரையும்!

"தங்கக்கடியாரம் வைர மணியாரம்" எனும் இரண்டாவது சரணத்திலும், இதே போல் சாதாரணமாகத் துவங்கி பெருத்த கேவலுடன் அந்தச் சரணம் முடியும் போது - நடிகையர் திலகத்தின் நடிப்பில் கட்டுண்டு கலங்கிப் போகாத இதயமும் உண்டோ!

"சிறகில் எனை மூடி அருமை மகள் போல" சரணத்தில் மறுபடியும் நடிகையர் திலகம் உருகி, எல்லோரையும் உருக்குகிறார் என்றால் "கண்ணில் மணி போல, மணியின் நிழல் போல" என்ற கடைசி சரணத்தில், தரையில், மல்லாந்து படுத்துக் கொண்டு, தன்னுடைய குழந்தை தன் மேல் விழுந்து விளையாடுவதைக் கூட பெரிய அளவில் கவனிக்க முடியாமல், வித்தியாசமாக தன்னுடைய உணர்வுகளைக் காட்டிய அவரல்லவோ நடிகர்களின் திலகம்!

அந்த வித்தியாசமான சிந்தனை மற்றும் முயற்சி - எதையும் வேறொரு கோணத்தில் சிந்தித்து, வித்தியாசமாக உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற விதம் - நடிகர் திலகத்துக்கு மட்டுமே அது வெற்றியடைந்த சாத்தியங்கள் உண்டு!

பாடல் மெலிதான ஹம்மிங்கில் முடியும் போது, கேட்பவரும் பார்ப்பவரும் தங்களை மறந்த நிலைக்கு சென்று, ஒவ்வொருவரையும் அவரவர்களது சகோதர சகோதரிகளையும் அவர்களது பழைய வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்க வைத்த மாத்திரத்தில் - இன்னமும் அப்படித்தான் - இந்தப் பாடல் சிரஞ்சீவிப் பாடலாகிறது.

பாச மலர் - பொன் விழா நிறைந்து விட்டாலும், இந்தப் பாடலும், படமும், நடித்த நடிகர்களின் நடிப்பும் - குறிப்பாக, நடிகர் திலகம் மற்றும் நடிகையர் திலகம் - இன்னும் பல பொன் விழாக்களைக் கண்டாலும் பார்ப்பவர்களின் மனதை விட்டகலாதிருக்கும் என்பது திண்ணம்!

தொடரும் ......

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
31st May 2011, 03:23 PM
Parthasarathy sir,

Wonderful analysis about 'pon onRu kandEn' song from 'PadithAl mattum pOthumA'. You have described each and every nuances of the song, with your special touches.

This is also one of the 'saagaavaram petra' songs in Tamil cinema, and is being telecasted everyday in any of the TV channels, and also one among the special songs choosen by cine VIP's when they are giving 'special thEnkinnam' etc.

You have analysed the stylish action of NT (and ofcourse Balaji too) especially for the line 'vinnOdu viLaiyAdum peN andha peNNallavO'. No doubt this song captured the first place among male duets in Tamil cinema.

Thanks again, and please continue............

Dear Mr. Karthik,

Thanks very much for your sincere appreciation. I have selected only such of those great songs in every genre, which would find a place in the Immortal List of Songs. When it comes to "immortal performances", Nadigar Thilagam alone scores heavily over every single Actor.

Regards,

R. Parthasarathy

pammalar
31st May 2011, 06:56 PM
நடிகர் திலகம் பற்றி புன்னகை அரசி

லேட்டஸ்ட் 'மங்கையர் மலர்' ஜூன் 2011 இதழிலிருந்து: [ஐந்து பக்க புகழாரம்]

முதல் இரண்டு பக்கங்கள்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3689a.jpg


மூன்றாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3693a.jpg


நான்காம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3694a.jpg


ஐந்தாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3690a.jpg


நடிகை கே.ஆர்.விஜயா அவர்களுக்கும், 'மங்கையர் மலர்' மாத இதழுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
31st May 2011, 07:50 PM
நான் விரும்பிய காட்சி (தொடர்ச்சி)

டியர் பார்த்தசாரதி,
ஒவ்வொரு பாடலுக்கும் தங்களுடைய ஆழமான ஆய்வுபூர்வமான அலசல், பல புதிய கோணங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பாற்றலை வெளிக்கொணர்கிறது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். இதே போல் தாங்கள் விரும்பிய காட்சிகளையும் இங்கு எதிர்பார்க்கிறோம்.

பம்மலார்,
விஜயாவின் விஸ்தாரமான பேட்டியில் நடிகர் திலகத்தைப் பற்றிய அவருடைய கூற்றுக்கள் அனுபவபூர்வமானவையாகவும் உளப்பூர்வமானவையாகவும் விளங்குகின்றன. அவருக்கும் மங்கையர் மலர் இதழுக்கும் நம் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

நாம் விரும்பும் காட்சியில் அடுத்ததாக, மிகவும் சுவாரஸ்யமான காட்சி இடம் பெறுகிறது. மூன்றே பாத்திரங்கள் - நடிகர் திலகம், ஸ்ரீராம் மற்றும் பத்மினி. நடிகர் திலகத்தின் சகோதரியை காதலிக்கிறார் ஸ்ரீராம். அதை அவரிடம் கூறும் இக்காட்சியில் அன்பு, நையாண்டி, கரிசனம், யாவையும் ஒரு சேர அந்தப் பாத்திரத்தில் பரிமளித்திருப்பார் நடிகர் திலகம். ஸ்ரீராமின் சிறந்த நடிப்பினை இக்காட்சியில் காணலாம். உரிமையோடு நண்பரிடம் பேசுவதும், பின் நண்பர் மிரட்டும் போது மிரளுவதும், மிகவும் வேடிக்கையாக இருக்கும். பின்னர் சம்பாஷணையில் சேர்ந்து கொள்ளும் பத்மினியும் தம் பங்கிற்கு ஸ்ரீராமை கலாய்ப்பது, காட்சியை மேலும் விறுவிறுப்பாக ஆக்கியிருக்கும். இப்படத்தை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என எண்ணுகிறேன். பார்த்தவர்கள் நினைத்து மகிழ்வர், பார்க்காதவர்கள் பார்த்து மகிழ்வர்.


http://www.youtube.com/watch?v=cXtgQe5SGwM

அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்

groucho070
1st June 2011, 07:12 AM
Thanks for the scan, Pammalar sir. Will be reading it later.

groucho070
1st June 2011, 07:33 AM
Dear Sathish and Karthik,
Thank you so much for the kind greetings and well wishes.

Dear Plum
I think you asked for the person in the song "Varuvai Kanna Neerada" in the movie Pattakkathi Bairavan. It's Jai Ganesh.

RaghavendranThanks sir, it was requested by app_engine. Posting it in the Raja/SPB thread. I am also forwarding the writeup/youtube of Yaaroo song there. Thanks again.

V_S
1st June 2011, 08:16 AM
கதைக்களப் பாடல்களில் நடிகர் திலகம் - 01

காதல், சோகம், கொள்கை, தத்துவம் போன்ற நிலைகளில் மட்டுமல்லாமல் கதைக்களத்திற்கேற்ற சூழ்நிலைக்கேற்றவாறு இடம் பெற்ற பாடல்களிலும் நடிகர் திலகத்தின் தனித்துவம் காணப்படும். அப்படிப்பட்ட பாடல்களை இங்கே காண்போம். தொடக்கமாக பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இடம் பெற்ற யாரோ நீயும் நானும் யாரோ என்ற அருமையான பாடல். கதைப்படி நடிகர் திலகம் ஏற்ற பாத்திரம் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப் பட்டு வளர்க்கப்பட்டதாகும். வளர்ந்து பெரியவனாகிய பின் தாய்க்கும் மகனுக்கும் ஒருவரை ஒருவர் அடையாளம் தெரிந்து விடுகிறது என்றாலும் சூழ்நிலை இருவரையும் சேர முடியாமல் தடுக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் கதாபாத்திரம் ஒரு பிறந்த நாள் விழாவில் தாயிடம் தன் நிலைமையை உணர்த்துவதாக கதைக்களம். இப்பாடலில் இளையாராஜாவின் சிறந்த மெட்டமைப்பில் கண்ணதாசனின் வரிகள் மிகவும் உள்ளார்ந்த பொருளடக்கியவை. நடிகர் திலகம் தன் நடிப்பால் அந்த சூழ்நிலையை அப்படியே நம் கண்முன் நிறுத்தும் இப்பாடல், துரதிர்ஷ்டவசமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படுவதில்லை.

இதோ அப்பாடல்

http://www.youtube.com/watch?v=g_-lZNLOa5Q

அன்புடன்
பம்மலார் மற்றும் ராகவேந்திரன்
Dear Raghavendra sir and pammalar sir,
It was very nice to read your post regarding this song. Thank you very much. One of the best of Nadigar Thilagam and SPB sir. Very emotional song. Thanks for the sharing video link also as first time I am watching this song.

mr_karthik
1st June 2011, 10:50 AM
பம்மலார் சார்,

மங்கையர் மலரில் வெளியான புன்னகையரசியின் கட்டுரையின் ஸ்கேன் வடிவத்துக்கு ரொம்ப நன்றி. கட்டுரையின் பெரும்பாலான விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயங்களாகவே காணப்படுகிறது.. படப்பிடிப்பின்போது உடன் நடிக்கும் கலைஞர்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுப்பது, வீட்டில் அவருடைய விருந்தோம்பல் பண்பு போன்றவை பல்வேறு வி.ஐ.பிக்களால் பலமுறை சொல்லப்பட்டுள்ளன. நடிகர்திலகத்துடன் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர் இன்னும் பல நுணுக்கமான விஷயங்களை, பெரும்பாலோருக்கு தெரிந்திராத விவரங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

சிரத்தையாக ஸ்கேன் செய்து அனைவரின் பார்வைக்கும் வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி.

RAGHAVENDRA
1st June 2011, 06:51 PM
சற்று முன் வந்த தகவல்

சென்னை சாந்தி திரையரங்கில் வரும் வெள்ளிக் கிழமை 03.06.2011 முதல் தினசரி 3 காட்சிகளாக வெற்றித் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம்

ராஜபார்ட் ரங்கதுரை

கொஞ்ச நஞ்சம் காமராஜரிடம் பாசம் மிச்சம் வைத்திருக்கும் கதர்ச் சட்டைக்காரர்கள் இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி தேசபக்தர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அன்புடன்

http://img174.imageshack.us/img174/4489/rajapart04fu4.jpg

J.Radhakrishnan
1st June 2011, 09:28 PM
சற்று முன் வந்த தகவல்

சென்னை சாந்தி திரையரங்கில் வரும் வெள்ளிக் கிழமை 03.06.2011 முதல் தினசரி 3 காட்சிகளாக வெற்றித் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம்

ராஜபார்ட் ரங்கதுரை

கொஞ்ச நஞ்சம் காமராஜரிடம் பாசம் மிச்சம் வைத்திருக்கும் கதர்ச் சட்டைக்காரர்கள் இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி தேசபக்தர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அன்புடன்

டியர் ராகவேந்தர் சார்,

மிக நல்ல செய்தி!!! வரும் ஞாயிறு நாம் அனைவரும் சந்திப்போம்

pammalar
1st June 2011, 10:11 PM
டியர் ராகவேந்திரன் சார்,

சாந்தியில் ராஜபார்ட் எனும் ராஜகம்பீரத் தகவலுக்கு மனமார்ந்த நன்றி !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
1st June 2011, 10:30 PM
சிங்காரச் சென்னையில் சிங்கத்தமிழனின் காவியங்கள்
[3.6.2011 வெள்ளி முதல்]

1. ராஜபார்ட் ரங்கதுரை : சாந்தி : தினசரி 4 காட்சிகள்

2. புதிய பறவை : ஸ்ரீநிவாசா [மேற்கு மாம்பலம்] : தினசரி 3 காட்சிகள்

3. பச்சை விளக்கு : பாட்சா [ மண்ணடி மினர்வா] : முற்பகல் 11:30 மணிக்காட்சி

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd June 2011, 04:06 AM
ராகவேந்தர் ஒரு ரசிகவேந்தர் [தொடர்ச்சி...]

- விழாவின் உச்சமாக ரஷ்ய கலாசார மையத்தின் பெரிய அகன்ற ஒளித்திரையில் இந்திய சுதந்திர முழக்கம் ஆரம்பமாகிறது. ஆம், தேசிய திலகத்தின் தேசிய திரைக்காவியங்களிலிருந்து காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு சுதந்திர-குடியரசு தின அணிவகுப்பு போல அட்டகாசமாக அணிவகுத்து வருகின்றன.

- உச்சத்தின் ஆரம்பமே உச்சக்கட்ட காட்சிதான். சக்தி கிருஷ்ணசாமியின் வளமான வசனங்களை சகல சக்தியையும் கொடுத்து இனி இவ்வுலகில் இவர் போல் எவரும் முழங்க முடியாது என்கின்ற ஆர்ப்பரிப்புடன் அடலேறுவாக முழங்குகிறார் கட்டபொம்மன். பேனர்மென்னின் பயமுறுத்தலுக்கு கிஞ்சித்தும் பிடி கொடுக்காமல் சிங்கமென சீறிப்பாய்கிறார் வீரபாண்டியனார். IPL எல்லாம் என்ன, VPK Climax Evergreen Edge-of-the-seat Thriller.

- முதல் முழக்கமிட்ட தேசிய தமிழ்ச் சிங்கத்துக்குப் பின் வனப்புடன் வருகிறார் கப்பலோட்டிய தமிழ்த் தங்கம் வ.உ.சி. ஊசிமுனை இடம் கூடத் தரமாட்டேன் என்று தடம் பதித்த வெள்ளயனை அவன் இடம் நோக்கி அனுப்ப வங்கக்கடலில் கப்பல் ஓட்டுகிறார் வ.உ.சி. 'வெள்ளிப்பனிமலையின் மீதுலவுவோம் அடிமேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்' என மகாகவியின் பல்லவி வெற்றிமுரசாக முழங்க, தொடர்ந்து மேலும் கப்பல்கள் வாங்கி வெள்ளையனின் வாணிபத்தை படுக்கச் செய்து அவனை அவனது நாட்டுக்கு விரைந்து அனுப்பி வைக்கப் போவதாக முழங்குகிறார் சிதம்பரனார். சிதம்பரனாராகவே வாழ்ந்து காட்டியுள்ள சிவாஜி பெருமானார் கூடு விட்டு கூடு பாயும் வரம் பெற்று வந்தாரோ !

- 'இன்கிலாப் ஜிந்தாபாத் ! ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் !' என அடுத்து வேங்கை போல் வருகிறார் ரங்கதுரை தனது ராஜபார்ட் பகத்சிங்கிற்காக. Soundக்கு ராஜன் பின்னணியில் முழங்க அதற்கு முன்னணியில் ஏக பாவங்களையும் கொடுத்து எந்த அணியும் தனதே என்கிறார் நடிப்புக்கு ராஜன். அடுத்து வெள்ளைய ஆதிக்கத்தை எதிர்த்துக் கிளம்ப திருப்பூர் குமரனாகிறார் நமது ரங்கதுரை. அவர் பெருந்தலைவர் புகழ் பாடும் போதெல்லாம் அரங்கமெங்கும் பெருத்த கரவொலி. பகத்சிங்கோ, கொடி காத்த குமரனோ, ராஜபார்ட் ரங்கதுரையை உள்ளிருந்து உருவாக்கியது ராஜபார்ட் சிவாஜிதுரையாயிற்றே !

- அடுத்து வருகிறது சினிமா பைத்தியம்; ஆனால் நமக்கோ அதில் வரும் சிவாஜி மீதே பைத்தியம். வாஞ்சியாக சிவாஜி வீறு கொண்டு வருகிறார்; ஆஷ் குளோஸ். கப்பலோட்டிய தமிழனின் வாஞ்சி பாலாஜி சினிமா பைத்தியத்தில் ஆஷ் ஆகி வாஞ்சி சிவாஜியால் குளோஸ் ஆகிறார். கட்டபொம்மனையும், கப்பலோட்டிய தமிழனையும் எத்தனை எத்தனையோ முறை காண வாய்ப்புக் கிட்டியது போல் வீரவாஞ்சியை காண வாய்ப்பு கிட்டாததால் அரங்கமே இந்தக் காட்சியின் போது Spellbound.

- நாம் பிறந்த இந்த மண்ணின் விடுதலை வேள்விக்கு வித்திட்டதற்காக மண்ணின் மைந்தர் சந்தனத்தேவன் தூக்குக் கயிற்றை முத்தமிடும் சமயத்தில் பாரதம் சுதந்திரம் அடைந்திருக்கின்ற தூக்கலான செய்தி தெரிவிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறார் அவர். அப்பொழுது அங்கிருக்கும் அதிகாரியிடம் அவர் முகம் காட்டும்/பேசும் பாவங்கள்...அப்பப்பா.....!!! பார் போற்றும் கணேசனார் பாரத மண்ணில் பிறந்தது பாரத சமுதாயம் செய்த பாக்கியம் !

- விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட மாவீரனின் காட்சியில் தொடங்கி விடுதலைப் போர் நிறைவு கண்டு சுதந்திரம் அடைவதாக காட்சியிலேயே interval கொடுத்து மிக நேர்த்தியாக தொகுத்திருந்த நமது ராகவேந்திரன் சாரின் திறனுக்கு எத்தனை சபாஷ் வேண்டுமனாலும் போடலாம். சுதந்திரம் கிடைத்துவிட்டது. பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க என்ன செய்ய வேண்டும் என்கின்ற அறிவுறுத்தல்களாக அடுத்தடுத்த காட்சிகள் மிளிர்கின்றன.

- பாரதத் 'தாயே உனக்காக' நான் என்கிறார் அண்ணல். அன்பார்ந்த அண்ணலே உனக்காக நான் என்கிறது அரங்கின் அன்பு நெஞ்சம் ஒவ்வொன்றும் ! கணவனாக கலைக்குரிசில் மனைவி பத்மினியிடம் காதல்மொழி பேசுகின்ற போதும் சரி, படிகளில் வீரனுக்கான கெட்டப்புடன் இறங்காத கம்பீரத்தோடு இறங்கி வரும்போதும் சரி, வெற்றி அல்லது வீரமரணம் என முழங்கி பாரியாளிடமிருந்து விடைபெற்று பாரதத்தைக் காக்க வீறுகொண்டு கிளம்பும்போதும் சரி, போர்க்காயமுற்று படுத்தபடியே சிவகுமாரிடம் பேசும்போதும் சரி, நடிகர் திலகம் நவரசத்திற்கும் திலகம் என்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறார்.

- நமது இரத்தத்தில் தேசியத்தைக் கலந்த திலகத்தின் நா நவில்கிறது 'பனி படர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப் போலே கனி தொடுத்த மாலை போலே கன்னி வந்தாள் கண் முன்னாலே'. பாடலின் சில முக்கிய வரிகள் மட்டும் இக்காட்சியில் வருகிறது. நேருவைக் காட்டும் போது நம்மவர் காட்டும் பூரிப்பு, பரவசம் ஆஹா..! ஆஹா..! ஆசிய ஜோதி அண்ணலை ஆக்டர் என்றுதான் அழைப்பார். சரியான கணிப்பு, இவரை விட்டால் வேறு யார் ஆக்டர் !!

- பாரதத்தின் ஒருமைப்பாட்டுக்கு விலாஸமாக விளங்கும் பாடல் காட்சி பாரத ஜோதியின் பாவத்தில். 'இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு, எல்லா மக்களும் என் உறவு, எல்லோர் மொழியும் என் பேச்சு, திசை தொழும் துருக்கர் என் தோழர், தேவன் ஏசுவும் என் கடவுள்'. திரையில் தேசியத்தை கோலூச்ச இவரை விட்டால் வேறு யார் ! பாடலின் இறுதியில் உணர்ச்சி மேலோங்க அவர் 'வந்தே மாதரம்' எனப் பாடி முழங்கும் போது அதே உணர்ச்சி நமக்கும் மேலிட 'வந்தே மாதரம்' என நாமும் முழங்குகிறோம்.

- சிறந்த விருந்தின் முடிவில் ஐஸ்கிரீம் சுவைப்பது போல், இந்த தேசியக் கலை விருந்தின் சிகரமாக வருகிறது 'சிந்துநதியின்மிசை நிலவினிலே'. மகாகவியாக மகாநடிகர், டி.எம்.எஸ்., விஸ்ராம், கேமரா வள்ளல் கர்ணன், கே.எஸ்.ஜி. என இந்தப் பாடலில் பரிமளிக்கும் ஒவ்வொருவருமே இதற்கு கை கொடுத்த தெய்வம். மராட்டியரோ, மலையாளியோ, கங்கைப்புரத்தவரோ, காவிரிமைந்தரோ, இமயம் முதல் குமரி வரை, ஆல்ப்ஸ் முதல் அண்டார்டிக் வரை, எப்பிரதேசத்து வேடத்தையும் இந்நடிப்புப் பிரதேசம் தருவித்தால் மயங்காதார் யார் கண்டு மகிழாதார் யார் !

- ரசிகவேந்தர் ராகவேந்தரின் அபரிமிதமான ஆற்றலில் ஒவ்வொரு காட்சிக்கும் தகுந்த முன்னுரைத் தகவல்களோடு அம்சமாக தொகுத்தளிக்கப்பட்ட தேசிய திலகத்தின் காவியக்காட்சிகள் நமது இரத்த அணுக்களில் நாட்டுப்பற்றை ரீசார்ஜ் செய்தது என்று கூறினால் அது மிகையன்று ! அரைமணி நேரத்துக்கும் மேலாக அன்னை பூமி குறித்தே நினைவுகளை செலுத்த வைத்த தேசிய திலகத்திற்கும் அவரது ரசிக திலகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

- முரளி சார், பார்த்தசாரதி சார், கிருஷ்ணாஜி, அடியேன் என ஹப்பர்களும், செல்வி கிரிஜா, திரு.ராமஜெயம், திரு.முரளி, திரு.கான், திரு.நவீன் என எண்ணற்ற அன்புள்ளங்களும் இன்னும் பலரும் களித்து மகிழ்ந்த இவ்விழா எளிய விழாவாக நடைபெற்ற போதிலும் இனிய விழாவாக மிகுந்த மனநிறைவைத் தந்தது என்பது மறுக்க முடியாத ஒன்று !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd June 2011, 04:44 AM
டியர் பார்த்தசாரதி சார்,

தொடர் பாராட்டுதல்களுக்கு உளமார்ந்த நன்றிகள் !

'மலர்ந்தும் மலராத பாதி மலரை, பொன்னொன்று கண்டேன்' என்று வியந்து நோக்கும் போது, அது நம்மை நோக்கி 'நலந்தானா' என்ற விசாரித்தால் எத்தகைய அதிசயமும், ஆச்சரியமும், இன்பமும், உவகையும் மேலிடுமோ அத்தகைய அனைத்தும் தங்கள் பாடல் பதிவுகளில் பரிமளிக்கின்றன.

இந்தப் பாடல்கள் எல்லாம் அன்றே பதிவாகி(Record) விட்டன. மீண்டும் இவற்றை அதன் ஒரிஜினாலிடியோடு கனக்கச்சிதமாக தாங்கள் பதிவு(Post) செய்வது என்ன அற்புதமான ரீமிக்ஸ்.

ரீமிக்ஸ் செய்பவர்கள் தங்களிடம் பாடம் படிக்க வேண்டும் !

தாங்கள் பார்த்தசாரதி மட்டுமல்ல, பாராட்டுக்கென்றே பிறந்த சாரதி !

வாழ்க தங்களின் திருத்தொண்டு !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd June 2011, 04:48 AM
டியர் ராகவேந்திரன் சார்,

"பாசமலர்" வெள்ளிவிழாப் புகைப்படங்கள் பொற்காலப் பொக்கிஷங்கள் !

இப்பொக்கிஷங்களை பொன்விழா நேரத்தில் வழங்கிய திரு.சிவாஜி சந்தானம் அவர்களுக்கும், இதன் அரிய இணைப்புகளை அளித்த தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் !

Dear mr_karthik,

My sincere thanks for your continuous appreciation.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
2nd June 2011, 04:53 AM
திரு ராகவேந்தர் அவர்களே, நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறோம். இப்போது நெட்டிலும் காண வைத்தீர்கள். மிகவும் மகிழ்ச்சி.

pattakathi bairavan vetri padama, failure padama?.

Dear adiram,

Welcome to the world of Nadigar Thilagam !

The 1979 Deepavali release of NT, "Pattaakkaththi Bhairavan" is a hit film crossing 50 days in a good number of theatres in TN. The film was a Himalayan Hit in Ceylon, running for 20 weeks [140 days] in the 'Jesima' theatre of Colombo & crossing 100 days in Jaffna 'Sridhar'.

Warm Wishes,
Pammalar.

pammalar
2nd June 2011, 05:02 AM
Dear Mr.Rakesh,

Thanks !

Each & Every Day, I am praying sincerely to the Almighty & to our NT for Super Star's Speedy Recovery, Well Being & Good Health.

Pammal R.Swaminathan.

pammalar
2nd June 2011, 05:27 AM
ரங்கோன் ராதா(1956) படப்பிடிப்பில் நடிகர் திலகத்துடன் திரை இலக்கியத்திலகம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Karunanidhi1.jpg

21.7.2006, தமிழக அரசு சார்பில் வங்கக்கடலோரம் சிங்கத்தமிழனுக்கு வெண்கலச் சிலை அமைத்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு 3.6.2011, 88வது பிறந்த தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

goldstar
2nd June 2011, 06:28 AM
ராகவேந்தர் ஒரு ரசிகவேந்தர் - ரசிகவேந்தர் ராகவேந்தரின் அபரிமிதமான ஆற்றலில் ஒவ்வொரு காட்சிக்கும் தகுந்த முன்னுரைத் தகவல்களோடு அம்சமாக தொகுத்தளிக்கப்பட்ட தேசிய திலகத்தின் காவியக்காட்சிகள் நமது இரத்த அணுக்களில் நாட்டுப்பற்றை ரீசார்ஜ் செய்தது என்று கூறினால் அது மிகையன்று ! அரைமணி நேரத்துக்கும் மேலாக அன்னை பூமி குறித்தே நினைவுகளை செலுத்த வைத்த தேசிய திலகத்திற்கும் அவரது ரசிக திலகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
![/b][/color]

அன்புடன்,
பம்மலார்.

Thanks a lot Mr. Pammalar for describing about function.

Ragavendran sir, can we get video of this function?

Thanks,
Sathish

saradhaa_sn
2nd June 2011, 11:56 AM
டியர் பார்த்தசாரதி,

தங்களின் கைவண்ணத்தில் 'பொன்னொன்று கண்டேன்' மற்றும் 'மலர்ந்தும் மலராத' பாடல்களின் திறனாய்வுகள் அருமையோ அருமை. முதல் படலை அலசியவர்கள் மிகவும் குறைவு. தற்போது அந்தக்குறை தெரியாவண்ணம் ஒவ்வொரு அசைவையும் அழகாக பதிவு செய்துள்ளீர்கள். இது எந்த அளவுக்கு சாகவரம் பெற்ற பாடல் என்பதற்கு உதாரணம், கலைஞர் தொலைக்கட்சியில் நடைபெற்றுவரும் 'பாடவா டுயட் பாடலை' என்ற போட்டி நிகழ்ச்சியில் இவ்வாரம் ஆணும் ஆணும் அதுபோல பெண்ணும் பெண்ணும் இனைந்து படும் பாடல்களை போட்டியாளர்கள் பாடினர். அதில் இரண்டு இளைஞர்கள் இப்பாடலை சிறப்பாக பாடினார்கள். அப்போது விளம்பர இடைவேளையின்போது வேறு சேனலில் என்ன நிகழ்ச்சிஎன்று பார்க்க மாற்றியபோது ஆச்சரியம், ஒரு சேனலில் (படத்தில் இடம்பெற்ற) இப்பாடல் காட்சியே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நடிகர்திலகமும் பாலாஜியும் பாடிக்கொண்டிருந்தனர். அதற்கு முன்புதான் உங்களது இந்த ஆய்வுக்கட்டுரையையும் படித்திருக்க என்ன ஒரு கோர்வையான நிகழ்வு.!!.

'மலர்ந்தும் மலராத' பாடல் ஆய்வைப்பொருத்தவரையில், வாராவாரம் வெள்ளிக்கிழமை வருவதுபோல, வருடாவருடம் தீபாவளி வருவது போல கொஞ்ச நாளைக்கு ஒரு முறை யாராவது இப்பாடலை ஆய்வு செய்துகொண்டிருப்பார்கள். ஒவ்வொரு ஆய்வின் போதும் புதுப்புது செய்திகள், நுணுக்கங்கள் நம்மை ஆச்சரியப் படுத்தும். இப்போது உங்கள் ஆய்வும் அப்படியே.

சில மாதங்களுக்கு முன் 'பாடல்கள் பலவிதம்' பகுதியில் முரளியண்ணா இப்பாடலை ஆய்வு செய்யும் முகத்தான், பாசமலர் படம் உருவான விதம் குறித்தே பல்வேறு அபூர்வ தகவல்களோடு அசத்தினார். இப்படத்தின் பூஜையில் இருந்து அல்ல, இப்படம் தயாரிக்கலாமா என்று யோசிக்கத் துவங்கியதில் இருந்து வெள்ளிவிழா கேடயம் வழங்கப்பட்டது வரையில் பெரிய சரித்திரத்தையே தந்து அசத்தியிருந்தார். இப்போது நீங்களும் பாடலை புதிய கோணத்தில் ஆராய்ந்து ஒரு அருமையான பதிவை தந்து மகிழ்வித்து விட்டீர்கள்.

பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

groucho070
2nd June 2011, 12:01 PM
Ragavendran sir, can we get video of this function?
Me too.....

RAGHAVENDRA
2nd June 2011, 01:38 PM
டியர் எழுத்து வேந்தர் பம்மலார்,
ராமருக்கு அணில் போன்று நம்முடைய நடிகர் திலகத்திற்கு முடிந்த அளவில் சிறு பங்காற்றக் கிடைத்த பெரும் பேறை எண்ணி உவகை கொள்வதற்கு முன், மேலும் மேலும் சிறப்புகளை அலசிக் கூறி, மகிழ்வை அதிகப் படுத்திவிட்டீர்கள். ஆனால் இவையெல்லாமே அந்த மஹானுக்கே அர்ப்பணம். அது மட்டுமன்றி, அந்த நிகழ்ச்சிக்கு நேரில் வராதவர்கள் அதை உணரா வண்ணம், தங்களுடைய எழுத்து நேரலை போல் கண்முன்னே காட்சியை விரிக்கிறது. பாராட்டுக்கள்.

டியர் சதீஷ் மற்றும் ராகேஷ்,
ருஷ்ய மய்யத்தில் நடைபெற்ற ஒளிக்காட்சித் தொகுப்பு இணையத்திற்கேற்றவாறு சற்று மாற்றம் செய்யப் பட வேண்டியுள்ளது. அப்பணியில் தற்சமயம் ஈடுபட்டுள்ளேன். முடிந்ததும் விரைவில் இங்கு பார்வைக்கு அளிக்கப் படும்.

அன்புச் சகோதரி சாரதா,
நடிகர் திலகத்தின் பால் உள்ள பற்றைத் தொடர்ந்து வெளிக்காட்டி. தங்கள் பாசப் பகிர்வை இங்கு அளித்து வருதற்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.

அன்புடன்
ராகவேந்திரன்

saradhaa_sn
2nd June 2011, 03:26 PM
டியர் பம்மலார்,

ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழா நிகழ்ச்சிகளையும் முத்தாய்ப்பாக 'தேசியத்தில் நம்மவர்' திரைப்பட தொகுப்பையும் உங்களுக்கே உரித்தான அழகான மற்றும் தெளிவான நடையில் மிக விவரமாக தந்து, விழாவில் பங்குபெற முடியாமல் போனவர்களுடைய ஏக்கத்தை பூர்த்தி செய்து விட்டீர்கள். மிக்க நன்றி.

விழா நிகழ்ச்சிகளை அரங்கத்தின் மைய இருக்கையில் அமர்ந்து ரசித்து மகிழ்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. சகோதரர் ராகவேந்தர் அவர்களும் விரைவில் காட்சி வடிவில் தருவதாக சொல்லியிருக்கிறார். அப்புறம் என்ன? ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

சிரத்தை எடுத்து தொகுத்து நடிகர்திலகத்தின் தேசிய உணர்வுகளை அனைவருக்கும் அறியச்செய்த சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

mr_karthik
2nd June 2011, 04:08 PM
நடிகர்திலகமும் நாட்டுப்பற்றும் இரண்டறக் கலந்தவை என்பதற்கு ராகவேந்தர் சார் தொகுத்திருக்கும் திரைப்படக் 'கிளிப்பிங்' களே சிறந்த எடுத்துக்காட்டு. அதை அழகாக தொகுத்து தந்த பம்மலார் சாருக்கு நன்றிகள்.

சாந்தி திரையரங்கில் ராஜபார்ட் ரங்கதுரை பவனிவர இருப்பது தித்திக்கும் செய்தி. ஐந்தாம் தேதியன்று விழாவை அனுபவிக்க இருக்கும் நண்பர்கள் மீது இப்போதே பொறாமை ஏற்படுகிறது.

RAGHAVENDRA
2nd June 2011, 09:12 PM
சற்று முன் வந்த தகவல்

நடிகர் திலகத்தின் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற திரைப்படமான பாலாடை, மற்றும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ராஜகணபதி பிக்சர்ஸ் தயாரித்த தராசு இரு படங்களும் நெடுந்தகடு வடிவில் வெளிவந்துள்ளன. விரைவில் அவற்றின் படங்களை இங்கு பதிவேற்ற முயல்கிறேன்.

அன்புடன்

RAGHAVENDRA
2nd June 2011, 09:13 PM
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நல்கிய சகோதரி சாரதா மற்றும் கார்த்திக் மற்றும் நண்பர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.
அன்புடன்

goldstar
3rd June 2011, 05:59 AM
டியர் எழுத்து வேந்தர் பம்மலார்,
ராமருக்கு அணில் போன்று நம்முடைய நடிகர் திலகத்திற்கு முடிந்த அளவில் சிறு பங்காற்றக் கிடைத்த பெரும் பேறை எண்ணி உவகை கொள்வதற்கு முன், மேலும் மேலும் சிறப்புகளை அலசிக் கூறி, மகிழ்வை அதிகப் படுத்திவிட்டீர்கள். ஆனால் இவையெல்லாமே அந்த மஹானுக்கே அர்ப்பணம். அது மட்டுமன்றி, அந்த நிகழ்ச்சிக்கு நேரில் வராதவர்கள் அதை உணரா வண்ணம், தங்களுடைய எழுத்து நேரலை போல் கண்முன்னே காட்சியை விரிக்கிறது. பாராட்டுக்கள்.

டியர் சதீஷ் மற்றும் ராகேஷ்,
ருஷ்ய மய்யத்தில் நடைபெற்ற ஒளிக்காட்சித் தொகுப்பு இணையத்திற்கேற்றவாறு சற்று மாற்றம் செய்யப் பட வேண்டியுள்ளது. அப்பணியில் தற்சமயம் ஈடுபட்டுள்ளேன். முடிந்ததும் விரைவில் இங்கு பார்வைக்கு அளிக்கப் படும்.

அன்புச் சகோதரி சாரதா,
நடிகர் திலகத்தின் பால் உள்ள பற்றைத் தொடர்ந்து வெளிக்காட்டி. தங்கள் பாசப் பகிர்வை இங்கு அளித்து வருதற்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.

அன்புடன்
ராகவேந்திரன்


Nantri Ragavendran sir, waiting for your vidoes....

Sathish

parthasarathy
3rd June 2011, 11:33 AM
நான் விரும்பிய காட்சி (தொடர்ச்சி)

டியர் பார்த்தசாரதி,
ஒவ்வொரு பாடலுக்கும் தங்களுடைய ஆழமான ஆய்வுபூர்வமான அலசல், பல புதிய கோணங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பாற்றலை வெளிக்கொணர்கிறது. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். இதே போல் தாங்கள் விரும்பிய காட்சிகளையும் இங்கு எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்

அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,

தங்களுடைய மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்தக் கட்டுரைகள் முடிந்தவுடன் "காட்சிகளைப்" பற்றிய பதிவினை கண்டிப்பாக எழுதுவேன்.

நான் எழுதுவது என்னுடைய ஆத்ம திருப்திக்கும் இன்றைய/நாளைய தலைமுறையினருக்கு நடிகர் திலகத்தின் சிறப்பைக் கொண்டு செல்ல ஒரு அணிலின் முயற்சிதான் என்றாலும், தங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்கள் என்னைப் போன்றவர்களை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும்.

தங்களுடைய பல்வேறு பதிவுகள், "பட்டாக்கத்தி பைரவன்" படப் பாடலையும் சேர்த்து, மிகவும் அருமை. மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
3rd June 2011, 12:01 PM
சற்று முன் வந்த தகவல்

சென்னை சாந்தி திரையரங்கில் வரும் வெள்ளிக் கிழமை 03.06.2011 முதல் தினசரி 3 காட்சிகளாக வெற்றித் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம்

ராஜபார்ட் ரங்கதுரை

கொஞ்ச நஞ்சம் காமராஜரிடம் பாசம் மிச்சம் வைத்திருக்கும் கதர்ச் சட்டைக்காரர்கள் இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி தேசபக்தர்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அன்புடன்

டியர் ராகவேந்தர் சார்,

மிக நல்ல செய்தி!!! வரும் ஞாயிறு நாம் அனைவரும் சந்திப்போம்

Dear friends,

Let us assemble again at Shanthi this Sunday evening to have dharshan of NT.

Regards,

R. Parthasarathy

parthasarathy
3rd June 2011, 12:05 PM
டியர் பார்த்தசாரதி சார்,

தொடர் பாராட்டுதல்களுக்கு உளமார்ந்த நன்றிகள் !

'மலர்ந்தும் மலராத பாதி மலரை, பொன்னொன்று கண்டேன்' என்று வியந்து நோக்கும் போது, அது நம்மை நோக்கி 'நலந்தானா' என்ற விசாரித்தால் எத்தகைய அதிசயமும், ஆச்சரியமும், இன்பமும், உவகையும் மேலிடுமோ அத்தகைய அனைத்தும் தங்கள் பாடல் பதிவுகளில் பரிமளிக்கின்றன.

இந்தப் பாடல்கள் எல்லாம் அன்றே பதிவாகி(Record) விட்டன. மீண்டும் இவற்றை அதன் ஒரிஜினாலிடியோடு கனக்கச்சிதமாக தாங்கள் பதிவு(Post) செய்வது என்ன அற்புதமான ரீமிக்ஸ்.

ரீமிக்ஸ் செய்பவர்கள் தங்களிடம் பாடம் படிக்க வேண்டும் !

தாங்கள் பார்த்தசாரதி மட்டுமல்ல, பாராட்டுக்கென்றே பிறந்த சாரதி !

வாழ்க தங்களின் திருத்தொண்டு !

அன்புடன்,
பம்மலார்.
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

தங்களுடைய உணர்வுபூர்வமான பாராட்டுகளைப் படித்தவுடன் ஒருவித நெகிழ்ச்சி கலந்த கூச்சம் வந்து விட்டது.

ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற சுதந்திரப் போராட்ட சம்பவங்கள் மற்றும் தேசியவாதத்தைப் பற்றிய குறும்படம் மற்றும் நிகழ்வுகளைப் பற்றிய தங்களுடைய நீண்ட அற்புதமான பதிவினைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது - வர்ணனையில் தாங்கள் கூத்தபிரானையும் மிஞ்சி விட்டீர்கள் என்றே தோன்றுகிறது.

அன்புடன்,

பார்த்தசாரதி

parthasarathy
3rd June 2011, 12:21 PM
டியர் பார்த்தசாரதி,

தங்களின் கைவண்ணத்தில் 'பொன்னொன்று கண்டேன்' மற்றும் 'மலர்ந்தும் மலராத' பாடல்களின் திறனாய்வுகள் அருமையோ அருமை. முதல் படலை அலசியவர்கள் மிகவும் குறைவு. தற்போது அந்தக்குறை தெரியாவண்ணம் ஒவ்வொரு அசைவையும் அழகாக பதிவு செய்துள்ளீர்கள். இது எந்த அளவுக்கு சாகவரம் பெற்ற பாடல் என்பதற்கு உதாரணம், கலைஞர் தொலைக்கட்சியில் நடைபெற்றுவரும் 'பாடவா டுயட் பாடலை' என்ற போட்டி நிகழ்ச்சியில் இவ்வாரம் ஆணும் ஆணும் அதுபோல பெண்ணும் பெண்ணும் இனைந்து படும் பாடல்களை போட்டியாளர்கள் பாடினர். அதில் இரண்டு இளைஞர்கள் இப்பாடலை சிறப்பாக பாடினார்கள். அப்போது விளம்பர இடைவேளையின்போது வேறு சேனலில் என்ன நிகழ்ச்சிஎன்று பார்க்க மாற்றியபோது ஆச்சரியம், ஒரு சேனலில் (படத்தில் இடம்பெற்ற) இப்பாடல் காட்சியே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நடிகர்திலகமும் பாலாஜியும் பாடிக்கொண்டிருந்தனர். அதற்கு முன்புதான் உங்களது இந்த ஆய்வுக்கட்டுரையையும் படித்திருக்க என்ன ஒரு கோர்வையான நிகழ்வு.!!.

'மலர்ந்தும் மலராத' பாடல் ஆய்வைப்பொருத்தவரையில், வாராவாரம் வெள்ளிக்கிழமை வருவதுபோல, வருடாவருடம் தீபாவளி வருவது போல கொஞ்ச நாளைக்கு ஒரு முறை யாராவது இப்பாடலை ஆய்வு செய்துகொண்டிருப்பார்கள். ஒவ்வொரு ஆய்வின் போதும் புதுப்புது செய்திகள், நுணுக்கங்கள் நம்மை ஆச்சரியப் படுத்தும். இப்போது உங்கள் ஆய்வும் அப்படியே.

சில மாதங்களுக்கு முன் 'பாடல்கள் பலவிதம்' பகுதியில் முரளியண்ணா இப்பாடலை ஆய்வு செய்யும் முகத்தான், பாசமலர் படம் உருவான விதம் குறித்தே பல்வேறு அபூர்வ தகவல்களோடு அசத்தினார். இப்படத்தின் பூஜையில் இருந்து அல்ல, இப்படம் தயாரிக்கலாமா என்று யோசிக்கத் துவங்கியதில் இருந்து வெள்ளிவிழா கேடயம் வழங்கப்பட்டது வரையில் பெரிய சரித்திரத்தையே தந்து அசத்தியிருந்தார். இப்போது நீங்களும் பாடலை புதிய கோணத்தில் ஆராய்ந்து ஒரு அருமையான பதிவை தந்து மகிழ்வித்து விட்டீர்கள்.

பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

அன்புள்ள சாரதா மேடம் அவர்களே,

தங்களுடைய மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

உங்களைப் போன்றவர்களுடைய பாராட்டுகள் என்னை மேலும் சிறப்பாக எழுத ஊக்குவிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அன்புடன்,

பார்த்தசாரதி

hattori_hanzo
3rd June 2011, 01:30 PM
A rare photograph of NT with MGR, Kalaignar and Jayalalitha
Courtesy: NDTV website (The Rise and Fall of Karunanidhi)

http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=308&d=1307087963

groucho070
3rd June 2011, 01:47 PM
Wow, three chief ministers and a greatest actor on screen :razz:

KCSHEKAR
3rd June 2011, 04:44 PM
ரஷ்யன் கல்சுரல் சென்டரில் நடைபெற்ற விழாவை மிஸ் பண்ணிவிட்டோமே என்ற கவலை திரு. பம்மலாரின் விழா தொகுப்பைக் கண்டவுடன் பறந்துபோனது. நன்றி - திரு. ராகவேந்திரன் தொகுத்தளித்த வீடியோ காட்சிகள் மிகவும் சிறப்பு. அவர் அதனை சிடி அல்லது டிவிடியாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

mr_karthik
3rd June 2011, 05:06 PM
ரஷ்யன் கல்சுரல் சென்டரில் நடைபெற்ற விழாவை மிஸ் பண்ணிவிட்டோமே என்ற கவலை திரு. பம்மலாரின் விழா தொகுப்பைக் கண்டவுடன் பறந்துபோனது. நன்றி - திரு. ராகவேந்திரன் தொகுத்தளித்த வீடியோ காட்சிகள் மிகவும் சிறப்பு. அவர் அதனை சிடி அல்லது டிவிடியாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
நல்ல யோசனை சந்திரசேகர் சார்,

இவ்வளவு சிரத்தை எடுத்து தொகுக்கப்பட்ட இந்த அருமையான ஆல்பம், நிச்சயம் நெடுந்தகடு வடிவில் ரசிகர்களின் இல்லங்களில் (உள்ளங்களிலும்) ஆவணக்காப்பு செய்யப்பட வேண்டும்.

ராகவேந்தர் சார் அதற்கான வெளியீட்டாளர்களை அணுகி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறோம்.

mr_karthik
3rd June 2011, 05:12 PM
அன்புள்ள hattori_hanzo,

நிஜமாகவே இது அபூர்வ புகைப்படம் மட்டுமல்ல, அருமையான புகைப்படமும் கூட. எந்த விழாவில் இந்த அபூர்வ சங்கமம் நிகழ்ந்தது என்று தெரியவில்லை.

மூன்று முதலமைச்சர்களுடன் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்.

நேர்த்தியாக படமெடுத்த புகைப்படக்காரருக்கும், அதை அருமையாக இங்கே பதித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
3rd June 2011, 06:54 PM
டியர் பார்த்தசாரதி மற்றும் நண்பர்களுக்கு,
அனைவரையும் சென்னை சாந்தி திரையரங்கில் ஞாயிறு மாலை சந்திப்போம் என நம்புகிறேன்.

அதுவரை தாங்கள் பார்த்து களிக்க

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/tharasuF.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/tharasuR.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/paalaadaiF.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/paalaadaiR.jpg

அன்புடன்

Murali Srinivas
3rd June 2011, 11:26 PM
கார்த்திக்,

H _H இங்கே பதிவேற்றிய புகைப்படம் ஒரு முறை ஆனந்த விகடன் இதழில் அட்டையில் வெளியானது. இந்தப் படத்தை பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ள விகடன் நிருபர் கலைஞரை அணுக, நினைவாற்றல் மிக்க அவர் கூட இந்த படம் எந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டது எனபதை தெளிவாக கூற தவறினார். எங்கள் தங்கம் பூஜையாக இருக்குமோ என்றெல்லாம் சில சந்தேகங்களை மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது.

உண்மையில் இந்த படம் எடுக்கப்பட்டது 1970 -ம் வருடம் ஜூன் மாதம். என் நினைவு சரியாக இருக்குமானால் ஜூன் 21ந் தேதி. அந்த காலகட்டத்தில் முதல்வராக இருந்த கலைஞர் அவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை [South Indian Film Chamber of Commerce] நடத்திய பாராட்டு விழாவில்(!) எடுக்கப்பட்ட புகைப்படம் இது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைப்பெற்றது இந்த விழா. இன்றைக்கு சரியாக 41 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம். ஒய்வு ஒழிவு இல்லாமல் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் அவற்றுக்கு நடுவே அரசியல் மாறுபாடுகளை கடந்து இந்த விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அன்புடன்

pammalar
3rd June 2011, 11:37 PM
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 202

கே: கருணாநிதியைப் பாராட்டி சிவாஜி பேசியுள்ளதை உண்மை என்று நம்பலாமா? (பி.ரெங்கராஜன், ஸ்ரீரங்கம்)

ப: அரசியலுக்கு அப்பாற்பட்ட கலைத்துறை நட்பு அவர்களுடையது. ஆகவே நிச்சயம் நம்பலாம்.

(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)

இன்று 3.6.2011 நடிகர் திலகத்தின் ஆருயிர் நண்பர், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 88வது பிறந்த தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

Murali Srinivas
3rd June 2011, 11:57 PM
முதன் முதலாக ரங்கதுரையை சாந்தியில் சந்திக்க காத்திருக்கும் அனைவருக்கும் ஞாயிறு மாலை சந்திக்கலாம் என்பதே சந்தோஷ செய்தியாக இருக்கும்.நமது நண்பர்கள் [என்ஜின் டிரைவர்] சாரதியையும் மினர்வாவில் காண வேண்டும் என நினைத்திருக்கின்றனர்.

சாரதி,

நடிகர் திலகத்தின் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் பற்றிய பதிவை தொடருங்கள். சுவையான தொகுப்பு. மேலும் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்

pammalar
4th June 2011, 03:08 AM
Thanks, Mr.Satish.

டியர் ராகவேந்திரன் சார், பாராட்டுக்கு நன்றி ! பாலாடையை மிகச் சரியாக தராசுத் தட்டில் எடை போட்டுத் தந்தமைக்கு இரட்டை நன்றிகள் !

சகோதரி சாரதா, தங்களின் சிறந்த பாராட்டுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !

மிக்க நன்றி, mr_karthik.

டியர் பார்த்தசாரதி சார், தங்களது உயர்ந்த பாராட்டுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

டியர் சந்திரசேகரன் சார், தங்களது மனம் திறந்த பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th June 2011, 03:36 AM
திருநெல்வேலி மாவட்டத்தின் 'திசையன்விளை'யில் உள்ள 'கணேஷ்' திரையரங்கில், இன்று 3.6.2011 வெள்ளி முதல், நடிப்புலக சூப்பர்ஸ்டாரும், எழுத்துலக சூப்பர்ஸ்டாரும் இணைந்து கலக்கும் "பராசக்தி" தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டு சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

பரவசமூட்டும் இத்தகவலை பாங்குற வழங்கிய சிவாஜி பக்தர் திரு.எஸ்.சிவாஜி முத்துக்குமார் அவர்களுக்கு நன்றி முத்தாரங்கள்!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
4th June 2011, 03:46 AM
ராகவேந்திரன் சார், முரளி சார், பார்த்தசாரதி சார், ஜேயார் சார், கிருஷ்ணாஜி மற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்கும்,

சாந்தியில் சந்தோஷம் பொங்க சந்திப்போம், சங்கமிப்போம் !

All Roads Lead To Shanthi Cinemas On Sunday Evening !

goldstar
4th June 2011, 09:18 AM
ராகவேந்திரன் சார், முரளி சார், பார்த்தசாரதி சார், ஜேயார் சார், கிருஷ்ணாஜி மற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்கும்,

சாந்தியில் சந்தோஷம் பொங்க சந்திப்போம், சங்கமிப்போம் !

All Roads Lead To Shanthi Cinemas On Sunday Evening !

Swamy sir,

I hope this time we will group photo?

abkhlabhi
4th June 2011, 10:32 AM
Due to hectic works I could not come this thread for the past few days. When I gone through this, I noticed that NT Three Films are re - relasing this week. In fact I am coming to Chenni Sunday Morning . but sad part , I am leaving by afternoon train itself. I booked tkt 10 days back itself. If I know this I could have postpone from afternoon to night. At this moment I don't get night train ticket also. If possible, I wil postpone and will l try to be there at Shanti on sunday.

RAGHAVENDRA
4th June 2011, 05:31 PM
நடிகர் திலகத்தின் கடைசிப் படமான பூப்பறிக்க வருகிறோம், தற்போது நெடுந்தகடாக வெளியிடப் பட்டுள்ளது.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/PPVF.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/PPVR.jpg

அன்புடன்

RAGHAVENDRA
4th June 2011, 05:39 PM
சென்னை சாந்தியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி, கட்டப்பட்டுள்ள மன்ற பேனர், மற்றும் பட பேனர்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/posterRRD01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/fcbnr01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/BnrFront.jpg

ஞாயிறு மாலை திரு ஒய்.ஜீ.மகேந்திரா தம் நண்பர்கள் புடைசூழ வருவதாக செய்தி.

அனைவரும் அன்று சந்திப்போம்

அன்புடன்

RAGHAVENDRA
4th June 2011, 06:24 PM
நம்முடைய நடிகர் திலகம் இணையதளம் சார்பாக அரங்கின் வாயிலருகே வைக்கப் பட்டுள்ள பேனரின் பிரதி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/RDbnrShantisitebnr.jpg

அன்புடன்

mr_karthik
4th June 2011, 07:23 PM
ராகவேந்தர் சார்,

நடிகர்திலகத்தின் கடைசிப்படமான 'பூப்பறிக்க வருகிறோம்' பட டிவிடி உரையையும், சாந்தி திரையரங்கத்தில் ரங்கதுரையின் கம்பீர தோற்றத்தையும், நமது இணையதளத்தின் அட்டகாசமான பேனரையும் பதித்து அசத்தி விட்டீர்கள்.

நடிகர்களின் பட்டியலில் தேசிய நடிகர் சசிகுமார் பெயரைக் காணோமே என்று பார்த்தால், கீழே அவர் படத்தையே போட்டு நிறைவாக்கி விட்டீர்கள். நடிகர்திலகத்தின் பத்து வித வித்தியாச கெட்டப் அருமை. இந்தப்படத்திலே அவர் தசாவதாரம் எடுத்து விட்டார் எனலாம்.

தங்களின் சீரிய முயற்சிகளுக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.

Murali Srinivas
5th June 2011, 11:24 PM
அரங்க வாசலில் வைக்கப்பட்டிருந்த ரங்கதுரை பானருக்கு கூடை கூடையாய் மாலைகள், தெருவெங்கும் உடைக்கப்பட்ட தேங்காய்கள், பஸ்களையெல்லாம் நகர முடியாமல் நிறுத்திய பத்தாயிரம் வாலாக்கள், மாலைக்காட்சிக்கு நடந்த அமர்க்களத்தில் மவுண்ட் ரோடே சற்று நேரம் ஸ்தம்பித்து போனது உண்மை.

அரங்கத்தின் உள்ளே வழக்கம் போல் ஆரவாரம், ஆர்ப்பரிப்பு அனைத்தும் அரேங்கேறியது. நல்ல வேளையாக இம்முறை யாரும் அரங்கத்தினுள்ளில் சூடம் ஏற்றவில்லை. மதன மாளிகையில், அம்மம்மா, இன்குலாப் மற்றும் ஜிஞ்சினுக்கான் பாடல்களுக்கு ஆர்ப்பாட்டம் கட்டுக்கு அடங்காமல் போனது. அந்த பாடல் காட்சிகளின் போது திரை அமைந்திருக்கும் மேடையில் குறைந்தபட்சம் ஒரு ஐம்பது பேராவது ஆட்டம் போட்டிருப்பார்கள். வழக்கம் போல் நமது ஹப்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். இந்த ரசிகர்களின் ஆரவார காட்சிக்கு ஒய்.ஜி.மகேந்திரா அவர் குடும்பத்தினர், மோகன்ராம் மற்றும் கவிதாலயா கிருஷ்ணன் வந்திருந்து முழுமையாக இருந்து ரசிகர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டனர்.

அன்புடன்

pammalar
6th June 2011, 02:39 AM
ராஜபார்ட் ரங்கதுரை : சாந்தி : 5.6.2011 ஞாயிறு மாலை

'ராஜபார்ட்'டின் பதாகைக்கு மலர்மாலை அணிவிக்கப்படும் காட்சி
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3703.jpg


பூரண மலர் அலங்காரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3726.jpg


167வது திரைக்காவியம் : 167 சிதறு தேங்காய்கள் உடைக்கும் வைபவம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3699-1.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3700.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th June 2011, 03:12 AM
ராஜபார்ட் ரங்கதுரை : சாந்தி : 5.6.2011 ஞாயிறு மாலை

பத்தாயிரம் வாலா பட்டாசு அமர்க்களம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3707.jpg


அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3704.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3706.jpg


மக்கள் வெள்ளம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3705.jpg

அன்புடன்,
பம்மலார்.

pammalar
6th June 2011, 03:49 AM
ராஜபார்ட் ரங்கதுரை : சாந்தி : 5.6.2011 ஞாயிறு மாலை

அகன்ற திரையில் அண்ணலுக்கு ஆராதனை
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3716.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3720.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3721.jpg


இதயராஜாவின் ரோஜாக்களும் கலைநிலாவும் இணைந்து வழங்கிய குறும்பிரசுரம்
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC3733.jpg

அன்புடன்,
பம்மலார்.

goldstar
6th June 2011, 05:10 AM
Thanks a lot Swamy and Ragavendran sir for your wonderful photos of RPR photos and Sunday gala photos.

Simply enjoying....

Cheers,
Sathish

abkhlabhi
6th June 2011, 11:09 AM
Due to unavoidable, unable to postponed. really missed

hattori_hanzo
6th June 2011, 02:51 PM
கார்த்திக்,

H _H இங்கே பதிவேற்றிய புகைப்படம்...

m_karthik & Murali Srinivas, Thank you.

KCSHEKAR
6th June 2011, 05:45 PM
ராஜபார்ட் ரங்கதுரை - சாந்தி திரையரங்க ஞாயிறு மாலை நிகழ்ச்சி தொகுப்புகள் அருமை. நன்றி திரு.முரளி ஸ்ரீநிவாஸ், திரு.பம்மலர்ர், திரு.ராகவேந்திரன்.

இந்த திரைப்படத்தை கண்டுகளித்த திரு. y g மகேந்திரா அவர்கள் தி ஹிந்து நாளிதழுக்கு அனுப்பிய கடித நகலை (ஒரு அருமையான விமர்சனம்) நமது திரி ரசிகர்கள் படிப்பதற்காக கீழே அளித்துளேன்.

A letter from YGEEM to Malathi of HINDU after seeing yesteryear classic movie RAJAPART RANGADURAI

Dear Ms Malathi

We missed u very much at "RAJAPART RANGADURAI" yesterday. This picture tho' a success in 1973 didnt leave much of an impression in those days--bcos SIVAJI was coming out with more phenomenal hits. Yesterday I realised how much we had underestimated this pcture.

The screenplay was so smooth, the atmosphere of the "Spl Nadagam" maintained so well, performances uniformly good and the highlight was the stunningly underplayed performance of SIVAJI. His body language ( a term that every Tom, Dick and Harry of an actor uses these days) was so typical of the professional drama artiste of those days- (Naturally so since he was part of that clan.himself ) While his portrayal of Rangadurai the man was so natural, as Rangadurai the actor he gave the correct melodramatic feel in the scenes where he donned a variety of special Nadagam roles. AND BELIEVE ME ANY SORT OF GETUP SUITS THIS AMAZING ACTOR. The gait, the exaggerated hand gestures, the lift of the eyebrows were all so typical.of a drama actor of yore. Forgetting the fact that I am a confirmed Sivaji Rasigan I tell u this man was God's gift to the acting fraternity in India,

Three scenes stand out as examples of classic subtle acting--

1) the scene where he just gives a pathetic but accusing look at the groom who cheats his sister-no dialogues at all !

2) his controlled,and subdued emotional outburst at the groom in front of his sister's funeral pyre and

3) the best where his brother wants him to act like a rich brother in front of his father in law---the pathos in his voice when he asks Srikanth "Yen Thambi Ennai Un Annan Mathiri Nadikkava Solre", just leaves u gasping.

This is subtelty at its best not to be confused with present day actors and directors who call non-acting as subtle acting--wooden faces with no modulation and the same monotonous sing song tone mouthing such "profound" dialogues like "Yen" "Ethukku" "Eppadi" in instalments. I do agree change is the order of the day but that will never make the Petronas Tower Bulding a better architectural creation than the TaJ Mahal. SIVAJI IS THAT TAJ MAHAL OF ACTING--A CREATION OF GOD THAT WILL BE ADMIRED FOREVER AND EVER--AN ACTOR FOR ALL SEASONS AND ALL THE RIGHT REASONS !!

And what a part the trio of MSV, KANNADASAN and TMS played to embellish the film. Melody, Lyrics and Singing at its very best!! What has this country done for these three by way of recognition ?--NOTHING..And here's the best -SIVAJI was never given the NATIONAL AWARD for acting in his lifetime. (OF course looking at the list of those who have got it in the recent past--thank God he didnt get it !!) Compromises apart this country has not honored him the way it should have and FOR THAT ALONE I AM ASHAMED TO BE AN INDIAN.

Sorry but I just felt like sharing this outburst with someone who has respect for real talent and values. IF BY CHANCE THE FRIDAY REVIEW HAS A "LETTER TO THE EDITOR" COLUMN I WOULD BE GRATIFIED IF THEY COULD PUBLISH THIS

Thank U and Regards

Y GEE MAHENDRA

RAGHAVENDRA
6th June 2011, 05:58 PM
Dear friends,
05.06.2011, Chennai Shanti, again became festive and fans restive. Those who assemble at NT's films screening at theatres, can't escape from being got emoted, which was proved once again yesterday. Rajapart Rangadurai took every one of us with him into nostalgia. For those of us who witnessed during the first release, it was a re-enactment of the festivities, in fact even better than the first release celebrations. As Pammalar has substantiated this fact with his images (hope me too share some images shortly), no body was exception including the elite such as YGM and his family, Mohan Raman Sir, Krishnan Sir and so on. In fact YGeeM has been impressed so much that he has addressed a letter under copy to me, the gist of which, I am producing below.


This picture tho' a success in 1973 didnt leave much of an impression in those days--bcos SIVAJI was coming out with more phenomenal hits. Yesterday I realised how much we had underestimated this pcture. The screenplay was so smooth, the atmosphere of the "Spl Nadagam" maintained so well, performances uniformly good and the highlight was the stunningly underplayed performance of SIVAJI. His body language ( a term that everyTom, Dick and Harry of an actor uses these days) was so typical of the professional drama artiste of those days- (Naturally so since he was part of that clan.himself ) While his portrayal of Rangadurai the man was so natural, as Rangadurai the actor he gave the correct melodramatic feel in the scenes where he donned a variety of special Nadagam roles.AND BELIEVE ME ANY SORT OF GETUP SUITS THIS AMAZING ACTOR . The gait, the exaggerated hand gestures, the lift of the eyebrows were all so typical.of a drama actor of yore. Forgetting the fact that I am a confirmed Sivaji Rasigan I tell u this man was God's gift to the acting fraternity in India, Three scenes stand out as examples of classic subtle acting--1) the scene where he just gives a pathetic but accusing look at the groom who cheats his sister-no dialogues at all ! 2) his controlled,and subdued emotional outburst at the groom in front of his sister's funeral pyre and 3) the best where his brother wants him to act like a rich brother in front of his father in law---the pathos in his voice when he asks Srikanth "Yen Thambi Ennai Un Annan Mathiri Nadikkava Solre", just leaves u gasping.

This is subtelty at its best not to be confused with present day actors and directors who call non-acting as subtle acting--wooden faces with no modulation and the same monotonous sing song tone mouthing such "profound" dialogues like "Yen" "Ethukku" "Eppadi" in instalments. I do agree change is the order of the day but that will never make the Petronas Tower Bulding a better architectural creation than the TaJ Mahal. SIVAJI IS THAT TAJ MAHAL OF ACTING--A CREATION OF GOD THAT WILL BE ADMIRED FOREVER AND EVER--AN ACTOR FOR ALL SEASONS AND ALL THE RIGHT REASONS !!

And what a part the trio of MSV, KANNADASAN and TMS played to embellish the film. Melody, Lyrics and Singing at its very best!! What has this country done for these threeby way of recognition ?--NOTHING..And here's the best -SIVAJI was never given the NATIONAL AWARD for acting in his lifetime. (OF course looking at the list of those who have got it in the recent past--thank God he didnt get it !!) Compromises apart this country has not honored him the way it should have and FOR THAT ALONE I AM ASHAMED TO BE AN INDIAN.

Thank you, YGeeM Sir,

Raghavendran

RAGHAVENDRA
6th June 2011, 09:29 PM
சென்னை சாந்தியில் 05.06.2011 ஞாயிறு மாலைக் கொண்டாட்டக் காட்சிகளின் சில படங்கள்

அலங்காரம் கலையாத மலர் மாலை இங்கே - அணிவிக்க அழைக்கின்றோம் அண்ணனை - எங்கே
என்று கூறாமல் கூறும் மாலைகள் தயாராக...

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/theatre%20festivities/minigarlands.jpg

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு என்று அண்ணன் பதிலளித்து நம்முள் வாழ்கிறார் என்று கூறாமல் கூறும் அன்பு உள்ளங்கள் மாலைகளை அணிவிக்க அணிவகுத்து நிற்கும் காட்சி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/theatre%20festivities/garlandpreparations01.jpg

மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் - உதய காலம் வரை உத்தமர் சேவைகளாம் என்று ரசிகர்கள் அரங்கினுள் ஆர்ப்பரிக்கும் காட்சிகள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/theatre%20festivities/fansgala04.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/theatre%20festivities/fansgala03.jpg

தொடரும்

RAGHAVENDRA
6th June 2011, 09:31 PM
அம்மம்மா தம்பி என்று நம்பி அவர் நம்மை வளர்த்தார். தாயென்றும் தந்தையென்றும் அவர் நம்மை வளர்த்தார். அவர் நமக்காக வாழ்கின்ற உள்ளம் அல்லவோ என்று ரசிகர்கள் உள்ளம் உருகி உணர்ச்சிப் பெருக்குடன் ஆர்ப்பரிக்கும் காட்சி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/theatre%20festivities/fansgala08.jpg

பாரதமே என்னருமை தாயகமே என்று இறுதி வரை வாழ்ந்து காட்டிய தேசிய திலகம், விடுதலை வீரர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் போது நாமும் தேசீய உணர்வுடன் அல்லவா பொங்கி எழுகிறோம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/theatre%20festivities/fansgala10.jpg

அன்புடன்

RAGHAVENDRA
7th June 2011, 02:32 AM
மேலும் சில படங்கள்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/theatre%20festivities/fansgala01.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/theatre%20festivities/fansgala02.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/theatre%20festivities/fansgala05.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/theatre%20festivities/fansgala06.jpg

தொடரும்

RAGHAVENDRA
7th June 2011, 02:34 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/theatre%20festivities/fansgala07.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/theatre%20festivities/fansgala09.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/theatre%20festivities/fansgala11.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/theatre%20festivities/postergarlanded.jpg

அன்புடன்

RAGHAVENDRA
7th June 2011, 02:45 AM
நரசு ஸ்டூடியோஸ் தயாரித்து நடிகர் திலகம் நடித்த ஸ்ரீ வள்ளி திரைப்படம் நெடுந்தகடு வடிவில் வெளியிடப் பட்டுள்ளது.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/SriValliF.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/SriValliR.jpg

அன்புடன்

goldstar
7th June 2011, 07:10 AM
Thanks a lot Mr. Ragavendra sir for RPR Sunday's gala photos.

I hope Barrister Rajinikanth will visit soon at Shanthi and make us happy.

Cheers,
Sathish

HARISH2619
7th June 2011, 01:18 PM
Dear raghavendra sir and pammal sir,
thankyou very much for gala photos.
dear murali sir,
thanks for the short and sweet note on sunday alapparai.

Hope barrister will get arousing and unforgettable welcome.

parthasarathy
7th June 2011, 02:47 PM
பல வருடங்களுக்குப் பிறகு நடிகர் திலகத்தின் படங்களை மறுபடியும் திரை அரங்கத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். அதுவும் சக ஹப் நண்பர்கள் திரு. முரளி, திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. கிருஷ்ணாஜி, திரு. ராதா அவர்களுடன் காணக் கிடைத்தது இன்னும் பெரிய கொடுப்பனை.

படம் 1973 இறுதியில் வெளிவந்த போது, நான் அன்று படித்துக் கொண்டிருந்த பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், 1974 ஏப்ரல் மாதத்தில், இந்தப் படத்தின் அற்புதப் பாடலான, "இன்குலாப் ஜிந்தாபாத்" பாடலைப் பாடியது நினைவுக்கு வருகிறது.

1974-க்குப் பிறகு, கடந்த ஞாயிறு அன்றுதான், ரங்கதுரையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்றாலும், படம் முதலில் வெளிவந்தபோது கிடைத்த வரவேற்பு - ஏன் அதை விட மேலான உணர்ச்சிமயமான வரவேற்பு - அன்று கிடைத்தது - இது, இன்றும், என்றும், நடிகர் திலகத்துக்கு மட்டுமே சாத்தியம்.

நடிகர் திலகம் ரங்கதுரை என்ற நாடக நடிகனின் கதாபாத்திரத்தை மிக அற்புதமாக, சித்தரித்திருந்தார். அவர் எந்தப் படம் நடித்தாலும், ஏதாவது ஒரு காட்சியிலாவது, அவரது பிரத்தியேக ரசிகர்களுக்கு நடித்து விடுவார் - கதாபாத்திரத்தை சிதைத்து விடாமல். இந்தப் படத்தில், அவரது ட்ரேட் மார்க் ஸ்டைல் - "மதன மாளிகை" பாடலில் மட்டுமே அவருக்கு அந்த வாய்ப்பு அமையும் - இத்தனைக்கும் - ஒரு கட்டத்தில் அவர் சாதாரணமாக நின்று கொண்டிருப்பார். அந்தக் காலத்திலேயே, கைத்தட்டல்களை அள்ளிய கட்டம் -அன்றும் அது குறையவில்லை.

ராஜபார்ட் ரங்கதுரை படத்தைப் பற்றி சுருக்கமாக அழகாகப் பதிவிட்ட திரு. முரளி அவர்களுக்கும், அங்கு நடந்த அளப்பரைகளை படத்திற்கு வராதவர்களுக்கு, அற்புதமாகக் காட்சிக்கு விருந்தாக்கிய, திரு. ராகவேந்தர் மற்றும் திரு. பம்மலார் அவர்களுக்கும் கோடி நன்றிகள். திரு. ஒய்.ஜி.எம். அவர்கள் திருமதி. மாலதி ரங்கராஜன் (ஹிந்து நாளிதழ்) அவர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தையும் சூட்டோடு சூடாகப் பதிவிறக்கம் செய்த திரு. ராகவேந்தர் அவர்களுக்கு மற்றுமோர் நன்றி.

எத்தனையோ படங்களுக்கு அவருக்கு பாரத் அவார்ட் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், கண்டிப்பாக, இந்தப் படத்திற்கும் அது அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் - ஆனால், இல்லை - என்னும் போது, திரு. ஒய்.ஜி.எம். அவர்கள் குறிப்பிட்டது போல், இந்தியனாகப் பிறந்ததற்கு உண்மையிலேயே வெட்கமாயிருக்கிறது.

அன்புடன்,

பார்த்தசாரதி

J.Radhakrishnan
7th June 2011, 11:11 PM
05.06.11 அன்று மாலை சாந்தியில் நம் ஹப் நண்பர்கள் திரு. முரளி, திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. கிருஷ்ணாஜி, திரு.பார்த்தசாரதி உடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, அரங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் ரசிகர்களின் ஆரவாரம், ஆர்ப்பரிப்பு சொல்லில் அடங்காது, குறிப்பாக மதன மாளிகையில், அம்மம்மா, இன்குலாப் மற்றும் ஜிஞ்சினுக்கான் பாடல் காட்சிகளின் போது ரசிகர்களை நிர்வாகிகள் மிகவும் கஷ்ட்டப்பட்டு கட்டுபடுத்தினார்கள், பலமுறை இந்த படத்தை பார்த்த போதும் நம் ரசிகர்களின் அளப்பரையோடு பார்க்கும் போது நம் மகிழ்ச்சிக்கு அளவேது?

ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வை படம் பிடித்து இங்கு நம் பார்வைக்கு வைத்த திரு ராகவேந்தர் மற்றும் திரு பம்மலார் அவர்களுக்கு நம் நன்றிகள்.

RAGHAVENDRA
8th June 2011, 06:51 PM
பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்த சதீஷ், கார்த்திக, ரங்கன், ராதாகிருஷ்ணன், பம்மலார், பார்த்த சாரதி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.
மேலும் இது போன்ற வாய்ப்புகள் அமையும் என்று நம்புவோம்.
அன்புடன்

RAGHAVENDRA
8th June 2011, 06:59 PM
பக்தித் திலகத்தின் தெய்வீக ராகங்கள் - 01

எந்த ஒரு சமய நிகழ்ச்சி அல்லது பண்டிகை என்றாலும் உடனே மக்கள் நினைவுக்கு வருபவர் நடிகர் திலகம். எப்படி விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்டு மக்கள் வணங்கி தங்கள் நிகழ்ச்சிகளைத் தொடங்குகிறார்களோ, அதே போன்று முழுமுதற் பாடலாக அல்லது படமாக நடிகர் திலகத்தின் படங்கள் அல்லது பாடல்களே இடம் பெறுகின்றன. குறிப்பாக திருவிளையாடல். அவ்வாறு பக்தி மணம் கமழும் பாடல்களை நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து இங்கே நாம் பகிர்ந்து கொள்வோம்.

தொடக்கமாக, மிகவும் அபூர்வமான ஒரு பக்திப் பாடல். தற்போதைய தலைமுறை ரசிகர்கள் பலர் இப்பாடலைக் கேட்டிருக்க அல்லது பார்த்திருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம், அதனால் இப்பாடலை அறிமுகப் படுத்துவது பெருமையாகவும் உள்ளது.

கிட்டத்தட்ட ராமாயணத்தைத் தழுவி எடுக்கப் பட்ட படம் நானே ராஜா. கல்பனா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு இசையமைத்திருந்தவர் டி.ஆர்.ராம்நாத். அனைத்துப் பாடல்களும் நெஞ்சை அள்ளும். இப்படத்தில் நடிகர் திலகத்திற்கு டி.எம்.எஸ். குரல் கொடுத்துப் பாடியிருக்கும் ஒரு பக்திப் பாடல் இங்கே இடம் பெறுகிறது. வேறொரு தலைப்பில் இதே படத்தில் இடம் பெற்ற மிகப் பிரபலமான பாடலான மந்த மாருதம் தவழும் பாடல் இடம் பெற உள்ளது.

இங்கே இடம் பெறும் பக்திப் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்த ஆதியந்தம் இல்லா அருள்ஜோதியே என்ற பாடலாகும். தனிப்பட்ட முறையில் இப்பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடலாகும்.

இப்படத்தில் நடிகர் திலகத்தின் தோற்றமும் ஒய்யாரமும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்.

இதோ அந்த பக்திப் பாடல்


http://www.youtube.com/watch?v=la5-yM9mPQE&amp

அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்

RAGHAVENDRA
8th June 2011, 07:16 PM
கிறங்க வைக்கும் பாடல் மயங்க வைக்கும் ராகம் - 01

காதலியிடம் சிருங்கார ரசம் கொட்டும் பாடலாகட்டும், வார்த்தைகளில் போதை கலந்து கிறங்க வைக்கும் பாடலாகட்டும், எந்த விதமான சூழ்நிலைப் பாடலாயினும் தன்னுடைய நடிப்பால் அதை சிறக்கச் செய்யும் நடிகர் திலகத்தின் பாடல்களில் இந்த வகைப் பாடல்களை இங்கே நாம் அலசலாம். முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல் நானே ராஜா படத்தில் நம்மை அள்ளிக் கொண்டு போகும் பாடலான மந்த மாருதம் பாடல் இங்கே இடம் பெறுகிறது. இந்தப் படப்பாடல்கள் கடைசியில் சிறிது முன்பாகவே முடிவது நமக்கு வருத்தமே என்றாலும் கிடைத்த வரையில் மன நிறைவு கொள்வோம் என்கிற எண்ணத்தில் இங்கே பகிர்ந்து கொள்ளப் படுகிறது.

பாடல் - மந்த மாருதம் தவழும்
குரல் - டி.எம்.சௌந்தரராஜன்
இசை - டி.ஆர்.ராம்நாத்
படம் - நானே ராஜா


http://www.youtube.com/watch?v=MfdZ03zVK1A&amp

அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்

mr_karthik
8th June 2011, 07:44 PM
ராகவேந்தர் சார் மற்றும் பம்மலார் சார்,

நடிகர்திலகத்தின் 'ராஜபார்ட் ரங்கதுரை' காவியத்தின் ஞாயிறு விழாக்காட்சிகள் அனைத்தும் அருமை. மிக அழகாக படமெடுத்து, எங்கள் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக்கி விட்டீர்கள். நிச்சயம் அவற்றைப்பார்க்கும்போது பழைய காலங்கள் நினைவுக்கு வந்து, இப்போது நாம் அங்கில்லையே என்ற ஏக்கம் ஏற்படுகின்றது.

அரங்கத்துக்கு வெளியே நிகழ்ந்த கோலாகலங்களையும், அரங்கத்தின் உள்ளே நடந்த அலப்பரைகளையும் காட்சி வடிவில் தந்து விட்டீர்கள். சாந்தி வளாகத்தினுள் ஒரு படம் கூட எடுக்கப்படவில்லை என்பது மட்டுமே குறை. அதை பாடல் காட்சிகளின் புகைப்படங்கள் ஈடு செய்து விட்டன.

சாலைகளில் செல்வோரையும், பேருந்துகளில் செல்வோரையும் கவனத்தைக் கவர சரவெடிகள் அவசியம்தான். ஆனால் 176 தேங்காய்கள் உடைப்பு என்பதுதான் சற்று நெருடுகிறது. அந்தப்பணத்தை மன்றத்தினர் இன்னும் சற்று பயனுள்ளதாக செலவழித்திருக்கலாம். உதாரணமாக, கவுண்ட்டரில் இருந்து டிக்கட் வாங்கிக்கொண்டு வெளியே வருவோருக்கு அவ்விடத்தில் மன்றத்தினர் நின்று இனிப்புகள் வழங்கலாம். நாங்கள் மன்ற செயல்பாட்டில் இருந்தபோது அப்படி செய்வது வழக்கம். பாதுகாப்புக்கருதி தீபாராதனையை ரசிகர்கள் கைவிட்டது மகிழ்ச்சியான விஷயம்.

முரளிசார், பார்த்தசாரதி சார் மற்றும் ராதா சார்,

ஞாயிறு மாலை அரங்க நிகழ்வுகள் பற்றிய உங்களின் சுருக்கமான வர்ணனைகள் மனதைக்கவர்ந்தன. நன்றி.

ஒய்.ஜி.மகேந்திரனின் கடிதத்தைப் பதிவேற்றிய சந்திரசேகர் சார் அவர்களுக்கும் நன்றி.

எல்லாம் சரி, நமது உறுப்பினர்கள் (Hubbers) அனைவரும் சேர்ந்து எடுத்து இங்கு பதிப்பதாக வாக்களித்த குரூப் போட்டோ என்னவாயிற்று..??. அதிலும் இம்முறை கிட்டத்தட்ட எல்லோரும் ஒன்றினைந்து படத்தைப்பார்த்திருக்கிறீர்கள்.

parthasarathy
9th June 2011, 09:21 AM
திரு. ஒய்.ஜி.எம். அவர்கள் திருமதி. மாலதி ரங்கராஜன் (ஹிந்து நாளிதழ்) அவர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தையும் சூட்டோடு சூடாகப் பதிவிறக்கம் செய்த திரு. ராகவேந்தர் அவர்களுக்கு மற்றுமோர் நன்றி.

அன்புடன்,

பார்த்தசாரதி

அன்புள்ள திரு. சந்திரசேகர் அவர்களுக்கு,

திரு. ஒய்.ஜி.எம். அவர்களின் கடிதத்தை சூட்டோடு சூடாகப் பதிவிட்டீர்கள். அவசரத்தில், உங்கள் பெயரைச் சொல்வதற்கு பதில், திரு. ராகவேந்தர் பெயரைக் குறிப்பிட்டு விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

திரு ஒய்.ஜி.எம். அவர்களுக்கும் ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.

நன்றியுடன்,

பார்த்தசாரதி

joe
9th June 2011, 11:19 AM
நான் இந்த ஹப்-க்கு வருவதற்கு முன்னால் சென்னையில் 5 வருடங்கள் இருந்த போது எனக்கு இது போன்ற எந்த தொடர்புகளும் கிடைக்காமல் போனதே என வருத்தமாக இருக்கிறது ..ஏனென்றால் அப்போது இண்டு இடுக்குகளில் எங்கு நடிகர் திலகம் படங்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் எதையும் பகிர்ந்து கொள்ள யாருமின்றி தனியாக சென்று உட்கார்ந்து ரசித்திருக்கிறேன் ..சாந்தி தியேட்டருக்கு பல முறை சென்று சுவரில் எழுதப்பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் பட வரிசையை வெறித்து வெறித்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன் :lol: எந்த அரங்கிலும் நடிகர் திலகம் சம்பந்தமாக எந்த நிகழ்வு நடந்தாலும் கூட வர நட்புகள் யாருமின்றி சென்று வந்து கொண்டிருந்தேன் அப்போது மன்றம் அறிமுகமாகி இந்த நட்புகள் கிடைத்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்குமே என இப்போது மனம் ஏங்குகிறது

groucho070
9th June 2011, 11:43 AM
Heh, unggalukku appadi. Here the are not even re-screening the films. Apart from latter films, I had never seen any of them on big screen :cry:

KCSHEKAR
9th June 2011, 12:07 PM
அன்புள்ள திரு. சந்திரசேகர் அவர்களுக்கு,

திரு. ஒய்.ஜி.எம். அவர்களின் கடிதத்தை சூட்டோடு சூடாகப் பதிவிட்டீர்கள். அவசரத்தில், உங்கள் பெயரைச் சொல்வதற்கு பதில், திரு. ராகவேந்தர் பெயரைக் குறிப்பிட்டு விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

திரு ஒய்.ஜி.எம். அவர்களுக்கும் ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.

நன்றியுடன்,

பார்த்தசாரதி

திரு பார்த்தசாரதி அவர்களே, நன்றி நமக்குள் யாருக்கு சொன்னாலும் ஒன்றுதான். தவறில்லை.

திரு கார்த்திக் அவர்களே நன்றி.

இத்தகைய அருமையான் ஒரு விமர்சனத்தை தி ஹிந்து நாளிதழுக்கு எழுதிய நம்மைபோன்ற ஒரு தீவிர ரசிகர் திரு y .g . மகேந்திரா அவர்களுக்குத்தான் இந்த நேரத்தில் நாம் நன்றி சொல்லவேண்டும்.

mr_karthik
9th June 2011, 01:01 PM
ஜோ சார்,

அவ்வாறு நீங்கள் வந்திருந்தபோது 'சாந்தி'யில் நின்றவரகளிடம் பேச்சுக்கொடுத்து பழக்கம் ஏற்படுத்தியிருந்தாலே, அங்குள்ள ரசிகர் வட்டத்தில் இணைந்திருப்பீர்கள். ஆரம்ப காலத்தில் நானும் அப்படித்தான். அங்கு சிறு சிறு குழுக்களாக ரவுண்ட் கட்டிப்பேசிக்கொண்டிருந்த கூட்டத்தில் தலையை விட்டு, கவனிக்க ஆரம்பித்து, பின்னர் பேச்சில் பங்குகொண்டு, படிப்படியாக தீவிர ரசிகர்களின் தொடர்பு ஏற்பட்டு, பின்னர் நானும் அங்கு முக்கியஸ்தர்களில் ஒருவனாக ஆனதும், மன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு, பட வெளியீடுகளில் முக்கிய பங்காற்றியதும் வாழ்வின் வசந்த காலங்கள்.

இங்கே கூட சில பக்கங்களுக்கு முன் ராகவேந்தர் அவர்களிடம் பழைய சாந்தி நண்பர்கள் பலரைப் பற்றி விசாரித்ததும், அதற்கு அவர் விவரமாக பதிலிறுத்ததையும் பார்த்திருப்பீர்கள். இன்றைக்கும் சென்னை செல்லும்போதெல்லாம் தவறாமல் சந்திக்கும் பிரமுகர்களில் "மாப்பிள்ளையும்" (திரு.வேணுகோபால் சார்) ஒருவர்.

சென்னையிலும் ஒரு கிளை அலுவலகத்தை ஏற்படுத்தாத என் நிறுவனத்தை இப்போது சபிக்கிறேன். அது மட்டும் நடந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

RAGHAVENDRA
9th June 2011, 05:52 PM
திரு Y.G. மகேந்திரா அவர்களின் கடிதம் நாளைய அதாவது 10.06.2011 தேதியிட்ட, ஹிந்து நாளிதழில், வெளியாக உள்ளது. அதன் இணைய இணைப்பைக் கீழே காண்க.

http://www.thehindu.com/arts/cinema/article2090497.ece

அன்புடன்

RAGHAVENDRA
10th June 2011, 09:46 AM
கதைக்களப் பாடல்களில் நடிகர் திலகம் - 02

இந்தப் பாடல் காதலை வெளிப்படுத்துவதாக அமைந்தாலும் இருவர் ஒரு பெண்ணிடம் தம் காதலை கூறுவதாக அமைக்கப் பட்டது. மிகச் சிறந்த நகைச்சுவைப்படமான மணமகன் தேவை படத்தில் இடம் பெற்றது. நடிகர் திலகத்திற்கு கண்டசாலா பாடிய பாடல்களில் ஒன்று. உடன் பாடுபவர் பி.பானுமதி. டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு குரல் கொடுத்திருப்பவர் பிதாபுரம் அவர்கள். இசை ஜி.ராமநாதன். மிகவும் அருமையான ஹிட் பாடல். சூழ்நிலையை பாடலே விளக்கும்.


http://www.youtube.com/watch?v=RovoI4VGj6k

அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்

gkrishna
10th June 2011, 04:42 PM
கடந்த ஞாயிறு அன்று அனைத்து சாலைகளும் சென்னை சாந்தி நோக்கி என்றால் மிகை ஆகாது . அந்த அளவுக்கு மக்கள் வெள்ளம் நமது வலைபதிவர்களுடன் கழித்த நேரம் சுமார் 2 மணி நேரம் மட்டுமே ஆனால் இனிமையான நேரம் 22 /12 /1973 ரங்கதுரை அவர்கள் முதன் முதலாக திரையில் தோன்றிய நேரம் நினைவுக்கு வந்தது அன்று சனி கிழமை என்று நினவு .எனக்கு அப்போது வயது 13 திருநெல்வேலி MDT ஹிந்து ஹை ஸ்கூல் 9th ஸ்டாண்டர்ட் படித்து கொண்டு இருந்தேன் பள்ளி அன்று விடுமுறை என்னுடைய கிளாஸ் டீச்சர் திரு வானமாமலை அவர்கள் ஒரு சிவாஜி ரசிகர் .வகுப்புகள் எடுக்கும் போது (45 நிமிடங்கள் ஒரு வகுப்பு ) குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் திரு சிவாஜி அவர்கள் பற்றி பேசுவார் அவர்கள் முந்தைய தினம் "நாளை நடிகர் திலகத்தின் புதிய திரை படம் வர இருப்பதால் திங்கள் கிழமை 10 நிமிடங்கள் ராஜபார்ட் ரங்கதுரை பற்றி விவாதிப்போம் " என்று கூறி விட்டு சென்று விட்டார் அதனால் எப்படியாவது திரை படம் பார்த்து விடவேண்டும் என்று பிடிவாதம்
திருநெல்வேலியில் எல்லோருமே சனி அன்று தாமிரபரணியில் எண்ணெய் குளியல் எடுப்பது வழக்கம் எங்கள் வீட்டில் எனக்கும் என் உடைய தம்பிக்கும் கையில் எண்ணெய் கிண்ணமும் சியக்காய் தூள் கொடுத்து அனுப்பினார்கள் அப்போது தாமிரபரணியில் மழை காலம் முடிந்து வெள்ளம் வடிந்து நீர் கரை ஓரம் ஓடி கொண்டு இருந்தது. அன்று ராகு காலம் 9 முதல் 10 .30 வரை. ஆகையால் திரைப்படம் 8 .55 க்கு ஆரம்பித்து விடுவார்கள் என்றும் நானும் எனது தம்பியும் இன்னொரு நண்பர் கனகராஜ் (திருநெல்வேலி அண்ணாமலை ஸ்டோர் owner ) (அவரும் சிவாஜி ரசிகர்) குளிக்காமல் நேராகவே பார்வதி திரை அரங்கு சென்று விட்டோம் . பாதி டிக்கெட் கொடுத்து கொண்டிருக்கும் போது (தரை டிக்கெட் 45 காசுகள் ) முதல் பாட்டு போட்டு விட்டார்கள் அடித்து பிடித்து உள்ளே சென்று நின்று கொண்டே பாதி படம் பார்த்தோம் இடைவேளைக்கு பிறகுதான் உட்கார இடம் கிடைத்தது கையில் எண்ணெய் கிண்ணமும் சியக்காய் தூள் வேறு யாரும் அதை தட்டிவிடாமல் பார்த்து கொண்டே படம் பார்த்தோம் பிறகு மதியம் 1 மணிக்கு சென்று டவுன் குறுக்குதுறை அருகே சென்று குளித்துவிட்டு வீட்டிற்கு சென்றோம் சுகமான மலரும் நினைவுகள் . நடிகர் திலகத்தின் tobe ஓர் நாட் to பே விசில் காதை பிளந்தது அப்போது அதை பற்றி விவாதம் குரல் நடிகர் திலகமா அல்லது வேறு யாரவது ஒருவர் உடையதா என்று . அப்போது மதி ஓளி பத்திரகையில் வேறு அது நடிகர் திலகம் குரல் தான் ரீ ரெகார்டிங் ஜ.ஜ. மாணிக்கம் ஓலிபதிவு குரலை மாற்றி உள்ளது ஆங்கில வேடத்திற்கு என்று மதி ஓளி சண்முகம் எழுது விட்டார்கள் . பசுமையான இனிமை யான நினைவுகள்

RAGHAVENDRA
10th June 2011, 06:40 PM
அன்பு கிருஷ்ணாஜீ,
தங்களுடன் அன்று படம் பார்த்தது சுகமான அனுபவம் என்றால், 73ல் தாங்கள் அனுபவித்தது அதை விட சுவாரஸ்யமானது. புராணத்தில் நாரதர் எண்ணெய்க் கிண்ணத்தை வைத்துக் கொண்டு நாராயணனை மறந்தது போல் அல்லாமல், தாங்கள் நம்முடைய ஆண்டவனையும் மறக்காமல் எண்ணெய்க் கிண்ணத்தையும் மறக்காமல் படம் பார்த்தது நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இது போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சுவையான அனுபவம் இருக்கும் என்பது திண்ணம்.
ஷேக்ஸ்பியர் நாடக வசனத்தைப் பேசியவர், பேராசிரியர் சுந்தரம். இவர் பாடகி எஸ்.ஜானகியின் கணவர்.
அன்புடன்

RAGHAVENDRA
10th June 2011, 06:46 PM
27.05.2011 அன்று மாலை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களின் உரையாற்றும் நிழற்படம்

http://www.facebook.com/photo.php?fbid=176194472436014&set=a.176194392436022.52743.164145250307603&type=1&pid=387864&id=164145250307603

http://www.facebook.com/photo.php?fbid=176194472436014&set=a.176194392436022.52743.164145250307603&type=1&pid=387864&id=164145250307603

அதிலேயே மற்ற நிழற்படங்களையும் பார்க்கலாம். FACE Book இணைய தளத்தில் உள்ளதால், அநேகமாக பயனாளர் குறியீடு தேவைப்படலாம்.

அன்புடன்

Murali Srinivas
11th June 2011, 12:00 AM
கிருஷ்ணாஜி,

வெகு நாள் கழித்து வந்தாலும் சுவையான மலரும் நினைவுகளோடு வந்ததற்கு இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் 22-12-1973 அன்று சனிக்கிழமைதான். சில வாரங்களாக விகடனில் மூங்கில் மூச்சு என்ற பெயரில் ஒரு தொடர் வெளியாகிறது. இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்த சுகா என்பவர் [இவர் காங்கிரஸ் பேச்சாளார் தமிழ் கடல் நெல்லை கண்ணனின் மகன்] தன் நெல்லை அனுபவங்களை அதிலும் குறிப்பாக தியேட்டர் அனுபவங்களை எழுதி வருகிறார். இந்த வாரம் கூட நெல்லையில் வெளியான பழைய படங்களைப் பற்றியும் அந்த ஊர் மனிதர்கள் எப்படி அந்தப் படங்களை துரத்தி துரத்தி பார்த்தார்கள் என்பதை சுவைப்பட எழுதியிருக்கிறார். அதை படித்து விட்டு இங்கே வந்தால் நீங்கள் பார்வதி தியேட்டர் ஓபனிங் ஷோ அனுபவங்களை எழுதியிருக்கிறீர்கள்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை என் அனுபவம் வேறு வகையானது. படம் வெளியான நாள் டிசம்பர் 22 அன்றுதான் பள்ளிக்கூடத்தில் அரை வருட தேர்வுகள் முடியும் நாள். எனவே ஓபனிங் ஷோ போக முடியவில்லை. மதுரையில் சென்ட்ரலில் ரிலீஸ். சாதாரணமாகவே அனைத்து நடிகர் திலகத்தின் படங்களையும் ஓபனிங் ஷோ பார்த்து விடக் கூடிய அன்று கல்லூரி மாணவனாக இருந்த என் கஸின் இந்தப் படத்தையும் ஓபனிங் ஷோ பார்த்து விட்டான். படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் [தேவி சித்ரம்] வேறு அவனது நண்பனின் உறவினர் என்பதால் வேலை எளிதானது. மீண்டும் அன்றிரவு காட்சியும் வேறு நண்பர்களுடன் போய் விட்டான். எனக்கு பார்க்க வேண்டும் என்று ஒரே ஆவல். படத்திற்கு நல்ல ரிப்போர்ட் என்பதோடு மட்டுமல்லாமல் தியேட்டர் எங்கள் வீட்டிற்கு அருகாமையிலும் என்பதால் அடிக்கடி தியேட்டர் வாசலில் போய் பார்க்க பார்க்க ஆவல் அதிகரித்துக் கொண்டே போனது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் சோதனையாக பார்க்க முடியவில்லை. திங்களன்று போகலாம் என்று வீட்டில் ஞாயிறு அன்றே அனுமதி வாங்கியாகி விட்டது.

திங்களன்று காலை அதே நினைவோடு எழுந்து மத்தியான காட்சிக்கு காலையிலே மானசீகமாக தயாராகி கொண்டிருக்கும் போது வானொலி செய்தி வருகிறது. நோய்வாய்ப்பட்டு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியார் ஈ.வெ.ரா. காலமானார் என்று [24-12-1973 ]. ஐயோ இன்று படத்திற்கு போக முடியாது போலிருக்கே என்று ஒரே கவலை, வருத்தம். தியேட்டர் பக்கம் சென்று பார்த்தால், காட்சிகள் இருக்குமா என்பதைப் பற்றிய அறிவிப்பு ஒன்றுமில்லை. காலையிலிருந்து மதியம் ஒரு மணி வரை எத்தனை முறை போய் தியேட்டர் பக்கம் போய் வந்தேன் என்பதற்கு கணக்கே இல்லை.

ஒரு மணிக்கு மேல் அம்மாவை கன்வின்ஸ் செய்து அவர்களையும் அழைத்துக் கொண்டு போனேன். படம் வெளியான முதல் ஒரு சில வாரங்களில் சென்ட்ரலில் பெண்களை பின் கேட் வழியாகவே உள்ளே அனுமதிப்பார்கள். அதன் வழியே உள்ளே சென்றால் நல்ல கூட்டம். கேட் கீப்பரிடம் ஷோ இருக்கிறதா என்று கேட்ட போது இருக்கிறது என்று பதில் வந்தாலும் மனதில் ஒரு கலக்கம் .தீடிரென்று காட்சி ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு வருமோ என்ற பயம். டிக்கெட் வாங்கி உள்ளே சென்று உட்கார்ந்த பிறகும் பயம் விலகவில்லை. படம் தொடங்கி சற்று நேரம் வரை அதே நினைப்பு. பிறகு படத்தில் லயித்து விட்டேன், இடைவேளை வருகிறது. மீண்டும் அதே உணர்வு. அம்மா வேறு முன்பு நடந்த ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் [ இப்படிதான் தேவியில படம் பார்த்துக் கொண்டிருந்தோம். நேரு போய் விட்டார் என்று நியூஸ் வந்தது. படத்தை நிறுத்திட்டான்]. இடைவேளை சீக்கிரம் முடியாதா என்று ஒரு பதைபதைப்பு. இடைவேளை முடிந்ததும் படம் ஆரம்பித்தது, தொடர்ந்தது, நிறைவடைந்தது. படத்தை ரசித்தேன் என்றாலும் இந்த டென்ஷன் படத்தை முழுமையாக ரசிக்க முடியாமல் செய்திருந்ததால் இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் நண்பர்களுடன் சென்று படத்தை பார்த்தேன் ரசித்தேன்.

உங்கள் அனுபவத்தை படித்தவுடன் என் அனுபவம் நினைவுக்கு வந்தது. மீண்டும் நன்றி.

அன்புடன்

ஜோ போன்ற பெரியாரிஸ்ட்களுக்கு sorry.

joe
11th June 2011, 12:31 AM
ஜோ போன்ற பெரியாரிஸ்ட்களுக்கு sorry.
அப்படியாவது என்னை உங்கள் நினைவில் கொண்டு வந்த அந்த கிழவனுக்கு நன்றி :)

parthasarathy
11th June 2011, 11:49 AM
அன்புள்ள திரு. கிருஷ்ணாஜி மற்றும் திரு. முரளி அவர்களுக்கு,

உங்களுடைய ராஜபார்ட் ரங்கதுரை படம் பார்த்த அனுபவம் மிகவும் சுவையாக இருந்தது. அதிலும் திரு. கிருஷ்ணாஜி அவர்கள் பல நாட்களுக்குப் பின்னர் நீண்ட பதிவை இட்டது மகிழ்ச்சியைத் தருகிறது.

என்னுடைய நினைவோடையைத் தருகிறேன். இது, திரை அரங்கு அனுபவம் அல்ல.

எனக்கு அப்போது சுமார் முப்பது வயதிருக்கும். (எதற்கு சொல்கிறேன் என்றால், நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு விஷயத்துக்கு வயது வரம்பே கிடையாது. எத்தனை வயதானாலும், அவர் என்றால் மட்டும், அந்த வீக்னெஸ்!) எனது தந்தை என்னை ஒரு வேலையாக அனுப்பியிருந்தார். குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை முடித்துத் திரும்பவும் அவரிடம் தகவலைத் தெரிவிக்க வேண்டும். இப்போது போல் அப்போதெல்லாம் மொபைல் போன் வசதியில்லை. வீட்டிலும் அப்போது தொலைபேசி இணைப்பு இல்லை - நேராகத் திரும்பவும் வீட்டிற்கு வந்துதான் வேலையை முடித்து முடிவைத் தெரியப் படுத்த வேண்டும். நானும் சொன்ன வேலையை முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில், பெரும் கூட்டமும் சிரிப்பும் கைத்தட்டலுமாக இருக்கவே, அருகில் சென்று பார்த்தேன். தொலைக் காட்சிப் பெட்டியில், நடிகர் திலகத்தின் "உத்தமபுத்திரன்" திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. விக்கிரமனும், பார்த்திபனும் முதன்முதலில் சந்தித்து மோதிக் கொள்ளும் சுவாரஸ்யமான கட்டம். (அப்போதெல்லாம், இது போல் vcp / vcr -ஐயும் கேசட்டுகளையும் வைத்து, அங்கங்கு இது போல் திரையிட்டு, வசூல் செய்வார்கள். சில நேரம், ஆடி மாதம் திருவிழாவின் கடைசி வாரத்தன்றும் இந்தத் திரையிடல்கள் நடைபெறும் - எட்டு முழ வேட்டியைக் கட்டி ப்ரொஜெக்டர் மூலம் திரையிடும் வழக்கம் ஒழிந்து, இந்த வழக்கம் துவங்கியிருந்த காலம்.) நமக்குத் தான் நடிகர் திலகம் என்றாலே, வீக்னெஸ் ஆயிற்றே! அவ்வளவுதான், வந்த வேலை மறந்து, கூட்டத்தோடு கூட்டமாய்ப் படத்தை பார்க்க ஆரம்பித்து, கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயில்தான், வந்த வேலை நினைவுக்கு வந்து, விழுந்தடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி, தகவலை அப்பாவிடம் தெரிவித்தேன். நல்ல வேளையாக, பணித்த காரியத்தை முடித்து விட்டதால், தாமதமாக தகவலைத் தெரிவித்தாலும், சின்ன வசவோடு தப்பித்தேன்.

என்னுடைய நினைவுகளையும் அசை போட வைத்த திரு. முரளி அவர்களுக்கும் திரு. கிருஷ்ணாஜி அவர்களுக்கும் நன்றி.

அன்புடன்,

பார்த்தசாரதி

mr_karthik
11th June 2011, 12:41 PM
முரளி சார், கிருஷ்ணாஜி, மற்றும் பார்த்தசாரதி சார்,

சுவையான மலரும் நினைவுகள். பகிர்வுக்கு நன்றி.

கிருஷ்ணா சார்,

நீங்கள் சொன்ன காட்சியைக் கற்பனை செய்து பார்த்தேன். 'அகத்தியர்' படத்தில் நாரதர் வேடத்தில் வரும் டி.ஆர்.மகாலிங்கம் கையில் எண்ணெய்க் கிண்ணத்தை ஏந்திக்கொண்டு அதே கவனமாக 'நாராயண' நாமத்தை உச்சரிக்க மறந்த காட்சி நினைவுக்கு வந்து சிரிப்பு மூட்டியது. ரசிகர்கள் எல்லாம் படம் பார்ப்பதில் எப்படிப்பட்ட தீவிரவாதிகளாக இருந்துள்ளார்கள் என்பது இப்படி பலருடைய மலரும் நினைவுகளில் இருந்து தெரிகிறது.

முரளி சார்,

மற்ற காரணங்களுக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளை ஒதுக்கியது போல திங்களையும் பெரியாருக்காக ஒதுக்கி மறுநாள் ரங்கதுரையைக்காணச் சென்றிருந்தீர்களானால், முதல் தடவையிலேயே முழுமையான ஈடுபாட்டுடனும் குதூகலத்துடனும், குறிப்பாக மனதில் பயமின்றியும் ரசித்திருக்க முடியும். (நீங்கள் விரும்பாவிடினும்) பெரியாருக்கும் அஞ்சலி செலுத்தியது போலிருக்கும்.

பார்த்தி சார்,

நீங்கள் சைக்கிள் தொலைத்த அனுபவத்துக்கு முன் இது சற்று சிறியதுதான். இந்த அனுபவம் பொதுவாக எல்லா சிறுவர்களுக்கும் ஏற்படுவதுதான். இப்படிப்பட்ட தருணங்களில் குறளி வித்தைக்காரர்கள், தெருக்கூத்தாடிகள் போன்றோர் நம் கவனத்தைத் திருப்பி, நம் நேரங்களைத் திருடிக்கொள்வார்கள்.

gkrishna
11th June 2011, 02:11 PM
நெட் connection disturb ஆனதால் சில வரிகள் விட்டு போய் விட்டன . 24 /12 /1973 monday முதல் வகுப்பு திரு வானமாமலை அவர்கள்
ஆங்கில வகுப்பு உள்ளே நுழைந்தவுடன் கேட்ட முதல் கேள்வி "ஏய் கிருஷ்ணா எண்ணெய் கொட்டாமல் ஆற்றிக்கு சென்று குளித்தாயா "
திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆகி விட்டது ஸ்கூல் நண்பர்கள் அனைவரும் ஒரே கேலி . நேற்று இரவு அதை பற்றி எனது இரண்டு பெண்களடிமும் சொல்லி சிரித்து வயிறு வலி . எனனடுய ஸ்கூல் நண்பர் ஒருவர் நீண்ட நாள் கழிது சமீபத்தில் சந்திதேன் அவர் பெயர் செல்லயா அவர் ஒரு mgr ரசிகர். இப்போது தண்டையார்பேட்டை corporation பள்ளியில் chemistry டீச்சர்.
அவரிடம் சாந்தியில் ராஜபார்ட் ரங்கதுரை பார்த்ததை சொன்னேன். அப்போது அவர் கூறிய வார்த்தை உண்மையான ஒன்றை சொன்னார். "சிவாஜியின் நடிப்பை மறக்க முடியுமா ? நான் கூட அப்போது சிவாஜி போஸ்டர் மீது சாணி அடித்து இருக்கிறேன் ஆனால் நடிகர் என்றால் அது சிவாஜி ஒர்வர்தான் எப்பேர்பட்ட நடிப்பு அந்த ஆண்டு MGR படம் இரண்டு தான் ஒன்று நெல்லை சென்ட்ரல் உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸ் 11 May 1973 100 நாள் வெற்றிப்படம் இரண்டாவது நெல்லை லக்ஷ்மியில் பட்டிகாட்டு பொன்னையா திரை படம் (ரிலீஸ் 10 Aug 1973 . சுமார் 63 நாட்கள் ஓடியதாக நினவு பாதி படம் MGR இல்லாமலே வெளி வந்தது திருப்பி திருப்பி இரண்டு படங்களையும் மற்றும் palace de walace திரை அரங்கு வெளியிடும் பழைய படங்கள் மட்டும் பார்த்தேன். எத்தனையோ நல்ல சிவாஜி படங்கள் வெளி வந்தன எதையும் பார்கவில்லை இப்போது dvd /டிவி யில் எல்லா சிவாஜி படங்களையும் பார்த்து கொண்டு இருக்கிறேன் " நான் அவரிடம் கூறியது "இரண்டு காரணங்களுக்குக்காக நான் உன்னை பாராட்டுகிறேன் 1 உன்னுடைய மெமரி (டீச்சர் அல்லவா) 2 உண்மை ஒப்புக்கொண்டதற்கு "
வாய்மையே வெல்லும்

Gk

goldstar
11th June 2011, 06:07 PM
Thanks guys for sharing your real attachment with our NT. I think only our NT has true fans and no other actor in the world has true fans like us.

To tell my experience , I think on 1984 of 85 when Vellai Roja released time, VJ shown at one of church festivel time at Madurai Kuyavara Palayam in a open show and I was on class 6 or 7 that time and movie started night 10 PM, I just went without informing at home and watched full movie till 1 PM and every one from my home started searching me and finally found me watching VJ.

I think countless time I have watched VJ in Madurai Central theatre.

Long live NT fame.

Cheers,
Sathish

Murali Srinivas
11th June 2011, 11:32 PM
ஜோ,

எனக்கு உங்களை நினைப்பதற்கு வேறு ஒருவரை தேட வேண்டாம். நீங்கள் இந்த திரியில் குறைவாக எழுதினால கூட மற்ற திரிகளில் உங்கள் பதிவுகளை படிக்கின்றேன். தவிரவும் நண்பர் சுவாமி அவர்களோடு உரையாடும்போது கூட உங்களை நேரில் சந்தித்த அனுபவங்களை பற்றி அடிக்கடி சொல்லுவேன்.

கார்த்திக்,

அஞ்சலி என்பதெல்லாம் பள்ளிக்கூட பையன் லெவலுக்கு அதிகமல்லவா. அப்படி சொல்லும்போது நீங்கள் சொன்ன ஒரு உண்மையையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அது இங்கே நான் பல முறை எழுதியதுதான். என்னைப் பொறுத்தவரை பெருந்தலைவரை தவிர வேறு எவரையும் தலைவர் என்று ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. அதற்கு என்னளவில் பல நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அது மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். மேலும் எழுதினால் அரசியல் சர்ச்சை ஆகிவிடும் என்பதனால் ஸ்டாப்.

சாரதி, சதீஷ் நன்றி. கிருஷ்ணாஜி தொடருங்கள்.

ராகவேந்திரன் சார்,

பழைய சித்ராலயா இதழ்கள் சிலவற்றை காணும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் திலகம் நடித்த இந்தி படமான தர்த்தி சென்னையில் வெளியாகும் இன்று முதல் விளம்பரம், மிட்லண்ட் அரங்கில், தேதி 04-06-1971, அதில் வந்திருக்கிறது. வடநாட்டில் 06-02 -1970 ல் வெளியானது என்று தெரியும். அதன் பிறகு இத்தனை நீண்ட இடைவெளிக்கு பிறகுதான் சென்னையில் வெளியானதா?

அன்புடன்

Mahesh_K
12th June 2011, 11:53 AM
என்னைப் பொறுத்தவரை பெருந்தலைவரை தவிர வேறு எவரையும் தலைவர் என்று ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. அதற்கு என்னளவில் பல நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அது மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம்.

அன்புடன்

இந்த விஷயத்தில் நானும் உங்களைப் போலத் தான்.

ஆனால் 80 களின் தொடக்கத்தில் இந்திரா காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தேன் இருந்தேன். அப்போதெல்லாம் நம்ம படங்களில் அவரைத்தானே அடிக்கடி காட்டுவார்கள்.

ஆனால் பின்னாட்களில் நான் பார்க்க நேர்ந்த நடிகர் திலகத்தின் பழைய படங்கள் காமராஜ் அவர்களையே பல முறை முன்னிலை படுத்தியதை கவனிக்க நேர்ந்தது. அதற்குப் பிறகு நெல்லை ஜெபமணி என்ற பெரியவரின் பொதுக்கூட்டங்கள், துக்ளக் பத்திரிகையில் சோ, அவர்களின் காமராஜர் மற்றும் எமர்ஜென்சி குறித்த கருத்துக்கள் எல்லாம் என்னை மாற்றி விட்டது.

RAGHAVENDRA
12th June 2011, 06:20 PM
Dear friends,
Prepare yourself for another treat.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/mannavanreleaseadJune2011-1.gif

Let's meet on 19th June 2011 Sunday again - same time same venue.

Raghavendran

goldstar
12th June 2011, 06:39 PM
What a treat for you guys again. Just missing it. Enjoy guys again on Sunday at Shanthi and believe will be more colourful than RPR.

Swamy sir, could you please give us the details of MV, 100 days theatre and collections.

Cheers,
Sathish

RAGHAVENDRA
12th June 2011, 09:29 PM
Mannavan Vandhanadi 100 days ad, courtesy, www.nadigarthilagamsivaji.com, Sivaji Girija.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/mv100.jpg

Dear Sathish,
We all miss you here. However, shall try to compensate maximum through our coverage.

This is a film for the fans, of the fans, by the fans .... and so.....
we expect more fanfare.

pammalar
13th June 2011, 03:05 AM
My sincere thanks to Mr.Satish, Mr.Senthil & mr_karthik.

டியர் சந்திரசேகரன் சார் & ராகவேந்திரன் சார்,

மிக்க நன்றி ! வெள்ளியன்று [10.6.2011] 'The Hindu' நாளிதழில் ரிலீசான ஒய்ஜி அவர்கள் எழுதிய "ராஜபார்ட் ரங்கதுரை" கடிதக்கட்டுரையை Previewஆக திங்களன்றே [6.6.2011] நமது திரியில் தந்தமைக்கு தெவிட்டாத நன்றிகள் ! Hats Off to You, Mr.Mahendra !

டியர் பார்த்தசாரதி சார் & ஜேயார் சார், மிக்க நன்றி !

டியர் கிருஷ்ணாஜி,

22.12.1973 ஸ்திர வாரத்தன்று "ராஜபார்ட் ரங்கதுரை" என்னும் நடிப்புக் கடலில் நல்முத்துக்குளித்த பின்னர் 'தாமிரபரணி' ஆற்றில் நல்லெண்ணெய்க் குளியல் முடித்த தங்களது 'ராஜபக்தி' உண்மையிலேயே ஓர் மெய் சிலிர்க்கும் அனுபவம்.

டியர் முரளி சார், பார்த்தசாரதி சார் & கோல்ட்ஸ்டார்.

தங்கள் ஒவ்வொருவரது மலரும் நினைவுகளிலும் நறுமணம் கமழ்கிறது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th June 2011, 03:21 AM
டியர் ராகவேந்திரன் சார்,

'சாந்தி'யில் "மன்னவன் வந்தானடி" : மிகுந்த மகிழ்ச்சிக்குரிய தகவல்.

ஜூன் 19 அன்று மீண்டும் ஒருமுறை ஒன்றுகூடிக் களிப்புறுவோம் !

தொடர்ந்து பைரவரும், பாரிஸ்டரும் பராக் ! பராக் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th June 2011, 04:35 AM
பக்தித் திலகத்தின் தெய்வீக ராகங்கள் - 01

எந்த ஒரு சமய நிகழ்ச்சி அல்லது பண்டிகை என்றாலும் உடனே மக்கள் நினைவுக்கு வருபவர் நடிகர் திலகம். எப்படி விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்டு மக்கள் வணங்கி தங்கள் நிகழ்ச்சிகளைத் தொடங்குகிறார்களோ, அதே போன்று முழுமுதற் பாடலாக அல்லது படமாக நடிகர் திலகத்தின் படங்கள் அல்லது பாடல்களே இடம் பெறுகின்றன. குறிப்பாக திருவிளையாடல். அவ்வாறு பக்தி மணம் கமழும் பாடல்களை நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து இங்கே நாம் பகிர்ந்து கொள்வோம்.

தொடக்கமாக, மிகவும் அபூர்வமான ஒரு பக்திப் பாடல். தற்போதைய தலைமுறை ரசிகர்கள் பலர் இப்பாடலைக் கேட்டிருக்க அல்லது பார்த்திருக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம், அதனால் இப்பாடலை அறிமுகப் படுத்துவது பெருமையாகவும் உள்ளது.

கிட்டத்தட்ட ராமாயணத்தைத் தழுவி எடுக்கப் பட்ட படம் நானே ராஜா. கல்பனா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு இசையமைத்திருந்தவர் டி.ஆர்.ராம்நாத். அனைத்துப் பாடல்களும் நெஞ்சை அள்ளும். இப்படத்தில் நடிகர் திலகத்திற்கு டி.எம்.எஸ். குரல் கொடுத்துப் பாடியிருக்கும் ஒரு பக்திப் பாடல் இங்கே இடம் பெறுகிறது. வேறொரு தலைப்பில் இதே படத்தில் இடம் பெற்ற மிகப் பிரபலமான பாடலான மந்த மாருதம் தவழும் பாடல் இடம் பெற உள்ளது.

இங்கே இடம் பெறும் பக்திப் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்த ஆதியந்தம் இல்லா அருள்ஜோதியே என்ற பாடலாகும். தனிப்பட்ட முறையில் இப்பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடலாகும்.

இப்படத்தில் நடிகர் திலகத்தின் தோற்றமும் ஒய்யாரமும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்.

இதோ அந்த பக்திப் பாடல்


http://www.youtube.com/watch?v=la5-yM9mPQE&amp

அன்புடன்
பம்மலார் & ராகவேந்திரன்

டியர் ராகவேந்திரன் சார்,

ஆதியந்தம் காணமுடியா விண்ணுலக லிங்கோத்பவரைப் போற்றி ஆதியந்தமில்லா ஈடு-இணை-எல்லையற்ற கலையுலக லிங்கோத்பவர் "நானே ராஜா"வாகப் பாடும் 'ஆதியந்தமில்லா அருட்ஜோதியே' ஓர் அரிய, அருமையான, இனிமையான பாடல்.

இசையமைப்பாளர் டி.ஆர்.ராமநாதன் என்னே ஜீவனுள்ள ஒரு அருமையான ட்யூனை அமைத்திருக்கிறார். அதனை சௌந்தரராஜ பாகவதர் உள்வாங்கி வெண்கல நாதமாக வழங்கும் போது கைவசத்தில் பூலோக சொர்க்கம் !

நடிகர் திலகத்தின் தோற்றமும், உடையலங்காரமும் கனக்கச்சிதம் ! பக்திரசம் சொட்டும் நடிப்பைப் பற்றிச் சொல்லவா வேண்டும் ! அவரது Close-Ups Simply Superb !

1993-ம் ஆண்டு ஒரு ஞாயிறு மாலைத் திரைப்படமாக இக்காவியம் சென்னை தொலைக்காட்சியின் முதல் அலைவரிசையில் ஒளிபரப்பானது. இக்காவியத்தை அன்று முதன்முதலில் பார்த்த எனக்கு மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் இருந்தது. 'வில்லாளன்' என்கிற கதாநாயக-வில்லன் பாத்திரத்தில் வீரத்திலகம் பிரமாதப்படுத்தியிருப்பார். விரைவில் இக்காவியம் நெடுந்தகடு வடிவில் வந்தால் நன்றாக இருக்கும்.

இப்பாடலை இயற்றியவர் கவிஞர் கே.பி.காமாட்சிசுந்தரன். ['மந்தமாருதம் தவழும்' பாடலை இயற்றியவரும் இவரே].

"நீதிமுறை நாட்டில் நிறைந்தோங்கவே
நீ அருளே புரிவாய் எம்மானே", எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஏற்றமிகு வரிகள் !

திரு.காமாட்சிசுந்தரன் சிறந்த கவிஞர் மட்டுமன்றி நல்ல நடிகருமாயிற்றே ! "பராசக்தி"யில் பூசாரியாகப் பின்னியிருப்பார். அதோடு அக்காவியத்தில் நான்கு அருமையான பாடல்களையும் புனைந்திருக்கிறார். 'ஓ ரசிக்கும் சீமானே', 'புதுப்பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே', 'கொஞ்சு மொழி சொல்லும் கிளியே' மற்றும் 'பொருளே இல்லார்க்கு தொல்லையா' ஆகிய பாடல்கள் அவரது படைப்புகளே !

மொத்தத்தில், 'ஆதியந்த'த்தோடு துவங்கும் "பக்தித் திலகத்தின் தெய்வீக ராகங்கள்" ஒரு இதமான, பதமான ஆரம்பம் !

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th June 2011, 04:46 AM
What a treat for you guys again. Just missing it. Enjoy guys again on Sunday at Shanthi and believe will be more colourful than RPR.

Swamy sir, could you please give us the details of MV, 100 days theatre and collections.

Cheers,
Sathish

Sure, in a day or two.

RAGHAVENDRA
13th June 2011, 07:43 AM
http://www.sivajitv.com/special/it000601/voc%20birthday1.jpg

1906ம் ஆண்டு வ.உ.சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடியிலிருந்து கொழும்பு நகருக்கு பாரத சரித்திரத்தில் முதல் முதலாக கப்பல் போக்குவரத்தைத் துவக்கி கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமையைப் பெற்றார்.

http://www.thehindu.com/multimedia/dynamic/00306/12TH_VASAN_306600e.jpg

இன்று 13.06.2011 மற்றொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் மாண்புமிகு ஜி.கே. வாசன் அவர்கள் தூத்துக்குடிக்கும் கொழும்புவிற்கும் இடையே கப்பல் போக்குவரத்தினை மீண்டும் தவக்கி வைக்கிறார். அவர் துவக்கி வைக்கும் கப்பல் ஸ்காட்டியா பிரின்ஸ், பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

http://blog.varunrayen.com/wp-content/uploads/2011/06/600-Scotia_Prince_04.jpg

கப்பலோட்டிய தமிழன் என்றதுமே சிதம்பரம் பிள்ளை மட்டுமல்ல நம்முடைய நடிகர் திலகமும் உடனே நினைவுக்கு வருமளவிற்கு அவரது பெருமையினைப் பாரறியச் செய்த நடிகர் திலகம் இன்று நம்முடன் இருந்தால் இன்றைய நாளைக் கொண்டாடியிருப்பார். அவருடைய ரசிகர்களாகிய நாம் ஜி.கே.வாசன் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.

இது வெறும் பயணப் பாலமாக அமையாமல், இலங்கையில் மீதம் உள்ள தமிழர்கள் துயர் மறைந்து அனைவரும் ஒன்று என்கிற தத்துவத்தை நிலைநிறுத்தும் உறவுப் பாலமாகவும் அமைய வேண்டும் என்றும் அதற்கு மாண்பு மிகு மத்திய அமைச்சர் நிச்சயம் தன் பங்கை அளிப்பார் என்றும் நம்புவோம்.


அன்புடன்

gkrishna
13th June 2011, 11:18 AM
மன்னவன் வந்தானடி நினைவுகள்

அந்த வானத்தை போல மனம் நிறைந்த மன்னவனை வரவேற்க உங்களை போல் நானும் காத்து இருக்கிறேன் . மன்னவன் வந்தானடி "காதல் ராஜ்யம் எனது அந்த காதல் ராஜ்யம் உனது " பாடல் மற்றும் "நான் நாட்டை திருத்த போறேன் " பாடல்
ஷூட்டிங் நெல்லை பாபநாசம் அருகில் மணிமுத்தாறு அணைக்கட்டு பகுதியில் படமாக்கப்பட்ட சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன .
அப்போது நெல்லை மாவட்ட சிவாஜி மன்ற தலைவராக திரு நவநீதன் அவர்கள் இருந்தார்கள் . அவருடைய தலைமையில் ஒரு வேன் ஏற்பாடு சென்ற நம் தலைவர் அவர்களை சந்தித்து பேசியது நினைவுக்கு வருகிறது . திருமதி மஞ்சுளா அவர்கள் நம்மவரோடு நடித்த முதல் படம் இதுவா அல்லது எங்கள் தங்க ராஜாவா என்று ஒரு சிறிய சந்தேகம் (எங்கள் தங்க ராஜா ரிலீஸ் 14.07.1973.) மன்னவன் வந்தானடி 02 August 1975 என்று நினவு. எதனால் இந்த சந்தேகம் மன்னவன் வந்தானடி நீண்ட நாள் படபிடிப்பில் இருந்ததாக கேள்வி

திரு முரளி ஸ்ரீநிவாஸ் மற்றும் நம் அன்பு நண்பர்களுக்கு

பொம்மை பேசும் படம் சித்ராலய மதிஒளி ஜெமினி சினிமா பிலிமலாயா போன்ற சில பழய மகசின் கிடைக்கும் கடைகள் அட்ரஸ் தெரிந்தால் தெரிவிக்கவும் .

என்றும் அன்புடன் கிருஷ்ணா க

gkrishna
13th June 2011, 04:01 PM
நேற்று என் நண்பர் ஒருவருடன் குன்றத்தூர் முருகன் கோயில் மற்றும் அருகில் உள்ள ராகு பரிகார கோயில் நாகநாத சுவாமி கோயிலிக்கு சென்று இருந்தோம் . குன்றத்தூர் பெரிய புராணம் எழுதிய சேக்கிழார் பிறந்த ஊர் .
அவருக்கு ஒரு மணி மண்டபம் திரு பெரியகருப்பன் முன்னாள் ஹிந்து அறநிலைய துறை அமைசர் அவர்கள் முயற்ச்சியால்
உருவாக்கப்பட்டு உள்ளது அங்கு சென்றவுடன் ஒரு சிற்பத்தில் சேக்கிழார் பெருமான் அவர்களுக்கு அநபாய குலோதங்க சோழன் அவர்கள் சாமரம் வீசுவது போல் வடிக்கப்பட்டு உள்ளது அதை கண்டவுடன் நமக்கு திருவருட்செல்வர் நம்மவரும் கோபாலகிருஷ்ணன் அவர்களும் நினைவுக்கு வந்தனர். திருச்சிற்றம்பலம்

RAGHAVENDRA
13th June 2011, 04:38 PM
கதைக்களப் பாடல்களில் நடிகர் திலகம் - 03

தொடரும் பாடல் பெண்ணின் பெருமை திரைக்காவியத்தில் நடிகர் திலகம், எம்.என்.ராஜம், கே.எஸ்.அங்கமுத்து தோன்றும் பாடல் காட்சி. கதைப்படி ஒரு பாடலை இசைத்து கருத்துப் பரிமாற்றம் செய்யும் சூழல்.


http://www.youtube.com/watch?v=_JbAAtuLGJE&feature=player_embedded

இப்பாடலின் சிறப்பம்சம், டி.எம்.எஸ். மற்றும் பி.சுசீலா இணைந்து நடிகர் திலகத்தின் படத்திற்காக பாடிய முதல் பாடல் ஆகும். இசை பெண்டியாலா நாகேஸ்வரராவ்.

பாடலுக்கு நன்றி பேராசிரியர் கந்தசாமி, நமது ஹப்பர்.

RAGHAVENDRA
13th June 2011, 05:46 PM
உரிமைக்குரல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள கோடீஸ்வரன் திரைக்காவியத்தின் நெடுந்தகடு -

முகப்பு
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Koteeswaran.jpg

பின் அட்டை
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/KoteeswaranR.jpg

Murali Srinivas
13th June 2011, 11:24 PM
எங்க ஊர் ராஜா - Part I

தயாரிப்பு: அருண் பிரசாத் மூவீஸ்
இயக்கம் : பி.மாதவன்
வெளியான நாள் : 21 -10 --1968

சிவலிங்கபுரம் என்ற ஊரில் பெறும் தனவந்தராக வாழ்ந்து வருபவர் விஜயரகுநாத சேதுபதி. ரகுபதி பவனம் என்ற மாளிகைக்கு சொந்தக்காரர். யார் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளல். தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று குடும்ப நண்பரின் அறிவுரைகளை கூட ஏற்க மறுத்து தன் வழியிலே செல்லும் தயாள மனமுடையவர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன் ஊர் ஏழைகளுக்கு தன் சொந்த செலவில் அதுவும் மார்வாடியிடம் ஒரு லட்சம் கடன் வாங்கி வீடுகள் கட்டிக் கொடுக்கும் மனமுடையவர். தன்னை நம்பி வந்தவர்களை காப்பாற்றுவது தன் கடமை என நினைப்பவர். தன் மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகளோடு நிறைவான வாழ்க்கை வாழ்பவர். அவருக்கு கல்யாண வயதில் ஒரு தங்கை கௌரி.

சிவலிங்கபுரதிற்கு ஒரு வேலையாக வரும் காளையார்கோவில் ஜமின்தார் ராஜாங்கம் கோவிலில் வைத்து அந்த ஊரில் சேதுபதிக்கு இருக்கும் மதிப்பையும், அவர் பாட்டனார், தந்தையார் அனைவருமே பரம்பரை பரம்பரையாய் அந்த ஊரில் கொடி கட்டி பறந்தவர்கள் என்பதையும், சேதுபதி பெரும் சொத்துக்கு அதிபதி என்பதையும் தெரிந்துக் கொள்கிறார்.

ரகுபதி பவனதிற்கு வரும் ராஜாங்கம் சேதுபதியிடம் தன் மகனுக்கு அவரின் தங்கையை பெண் கேட்க சேதுபதியும் சம்மதிக்கிறார். நிச்சயதார்த்தம் நடக்கும் அன்று மணமகன் வீட்டார் அதிகப்படியாக சீர்வரிசை கேட்க சேதுபதியின் ஊர்கார்கள் சேதுபதியை பேச விடாமல் அவர்களே எல்லாவற்றிக்கும் சம்மதம் சொல்ல வேறு வழியின்றி சேதுபதியும் ஒத்துக் கொள்ள நேர்கிறது. கல்யாணத்தன்று தாலி கட்டி முடிந்ததும் ராஜாங்கத்தை தனியே அழைத்து பேசும் சேதுபதி சீர்வரிசை முழுவதும் செய்து விட்டதாகவும் ஆனால் ரொக்கப் பணம் ரூபாய் ஐம்பதினாயிரம் மட்டும் புரட்ட முடியவில்லை என்றும் அதற்கு பதிலாக தற்காலிகமாக தன் வீட்டு பத்திரத்தை வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார். இதை ஏற்றுக் கொள்ளாமல் கோவப்படும் ராஜாங்கம் அவரை அனைவரின் முன்னிலும் அவமானப்படுத்தி விடுகிறார். அது மட்டுமல்ல "கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத உனக்கெல்லாம் எதுக்கையா வல்லவட்டி" [தோளில் போடும் பட்டு அங்கவஸ்திதரத்தை கிராமங்களில் இப்படி கூறுவர்] என்று கேட்டு விட நிலை குலைந்து போகிறார் சேதுபதி.

மீண்டும் சேட்டிடமே சென்று மேலும் ஐம்பதினாயிரம் ரூபாய் கடனாக வாங்கி தன் தங்கையை அவள் கணவன் வீட்டிற்கு அழைத்து சென்று பணத்தையும் கொடுத்து அவளையும் ஒப்படைக்கிறார். ஆனால் அப்போதும் ராஜாங்கம் மரியாதை குறைவாக பேசிவிட "உன்னை விட அந்தஸ்த்தில் உயர்ந்து மீண்டும் இழந்த என் செல்வத்தையெல்லாம் மீட்டு உன் முன்னால் வருவேன். அதுவரை இந்த வல்லவட்டியை போட மாட்டேன், அதையும் உன் கையாலே எனக்கு போட வைப்பேன் என்று சபதம் செய்கிறார் சேதுபதி. ஆனால் கொடுத்த ஒன்றரை லட்ச ரூபாய் கடனை கேட்டு சேட் வீட்டிற்கு வர சேதுபதி கோவப்படுகிறார். ஆனால் சேதுபதியின் மனைவி சிவகாமி வீட்டு பத்திரத்தை கொடுத்து விடுவதாக சொல்லி அனுப்புகிறாள். கணவன் மனதளவில் தளர்ந்திருப்பதை பார்த்துக் கொண்டே படி இறங்கும் சிவகாமி தலை சுற்றி விழுந்து விட மரணப் படுக்கையில் கிடக்கும் அவள் குழந்தைகளை சேதுபதியிடம் ஒப்படைத்துவிட்டு இறந்து விடுகிறாள். மனைவி இறந்து விட்டாள் என்ற செய்தியை சொல்லி தங்கையை அழைக்க செல்லும் சேதுபதியிடம் உங்கள் வீட்டிற்கு நான் வர மாட்டேன் என தங்கை சொல்லிவிட மனம் உடைந்த சேதுபதி, மனைவியின் இறுதி சடங்குகளை முடித்து விட்டு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு ரயில் ஏறி சென்னை புறப்படுகிறார். சேதுபதி் எப்போது பணத்துடன் வந்தாலும் வீட்டை அவரிடம் ஒப்படைப்பதாக சொல்லி சேட் ரகுபதி பவனத்தை பூட்டி வைக்கிறார்.

சென்னையில் ஒரு அச்சகத்தில் வேலைக்கு சேரும் சேதுபதி தன் இரண்டு மகன்களையும் வேலைக்கு அனுப்பிகிறார். மூத்த மகன் பூபதி ஒரு கட்டுமான நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்து அங்கே சூபர்வைசர் நிலைக்கு உயருகிறான். இளைய மகன் சக்ரவர்த்தி ரயில் நிலையத்தில் போர்ட்டராக சேர்ந்து Guide ஆக வேலை செய்கிறான். தங்கள் லட்சியத்தில் வெற்றி பெறும் வரை எந்த சுக போகத்திலும் ஈடுபடுவதில்லை என மூவரும் உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.

பூபதி வேலை பார்க்கும் கட்டுமான நிறுவனத்தின் முதலாளியின் மகள் கீதா. அவளுக்கும் பூபதிக்கும் ஏற்படும் ஈகோ மோதல் பின் காதலில் முடிகிறது. Guide வேலை செய்யும் சக்ரவர்த்தி ரயில் நிலையத்தில் வைத்து சந்தித்த விஜயபுரம் ராணியை லாட்ஜில் தங்க வைத்து பணிவிடை செய்கிறான். அவளிடம் தங்கள் மாளிகையை மீட்க பணம் கேட்க அவளும் தருவதாக சொல்கிறாள்.

இதற்கு நடுவே ஊரில் சேதுபதியின் தங்கையின் கணவர் இறந்து விட தன் மகனுடனும் மாமனார் ராஜங்கத்துடனும் வாழ்ந்து வரும் கௌரி தன் மகனை தன் அண்ணன் மகளுக்கு மனம் முடிக்க வேண்டும் என விரும்புகிறாள். ராஜாங்கம் அதை எதிர்த்தாலும் கூட விடாமல் சேதுபதிக்கு கடிதம் போடுகிறாள்.கடிதம் ஒவ்வொரு முறையும் பூபதி கையில் கிடைக்க தன் தாயின் சாவிற்கு வராத அத்தை மேல் ஆத்திரமாக இருக்கும் பூபதி அதை கிழித்து எறிந்து விடுகிறான். ஒரு முறை அவன் கிழிக்க முற்படும்போது சேதுபதி பார்த்து விட அதை வாங்கி படித்து பார்க்க தன் மகனுக்கு அண்ணன் மகள் விஜயாவை பெண் கேட்டு கௌரி எழுதியிருப்பதை படித்துவிட்டு சிறிது சஞ்சலம் அடைய பூபதியின் கோவம் மற்றும் வற்புறுத்தல் காரணமாக ஏற்கனவே பொருத்தம் பார்த்திருந்த பையன் வீட்டாரை வர சொல்கிறார். இந்த பெண் பார்க்கும் விஷயம் கௌரிக்கு மொட்டை கடுதாசியாக போக அதே நாளில் அவள் சென்னைக்கு கிளம்பி வருகிறாள்.

பெண் பார்க்கும் படலத்திற்கு பூபதி வீட்டிற்கு வரும் கீதா, மணப்பெண் விஜயா தன் அத்தை மகனை மணக்க விரும்புகிறாள் என்பதை தெரிந்துக் கொள்கிறாள். பையன் வீட்டார் வந்து அமர்ந்திருக்க அப்போது அங்கே வரும் கௌரி தன் மகன்தான் முறை மாப்பிளை ஆகவே அவனுக்குத்தான் கல்யாணம் செய்துக் கொடுக்க வேண்டும் என சொல்ல பையன் வீட்டார் வெளியேறுகின்றனர். இதை கண்டு கோபமடையும் பூபதி எங்க அம்மா இறப்பிற்கு வராத நீங்க இப்போ எப்படி சம்பந்தம் பேச வரலாம் என்று கேள்வி கேட்க அன்று நடந்தவற்றை கௌரி வெளியில் சொல்கிறாள். அன்று அண்ணியின் இறப்பிற்கு சென்றால் இனி திரும்பி வரவே வேண்டாம் என்று தன் மாமனார் ராஜாங்கம் மிரட்டியதை சொல்கிறாள். அதனால்தான் அன்று வர மறுத்ததாகவும் கூறுகிறாள். இதை கேட்டு சேதுபதி சமாதானம் அடைந்தாலும் பூபதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறிது அவகசாம் வேண்டும் என்றும் அதன் பிறகு இந்த கல்யாணத்தைப் பற்றி பேசலாம் என்று சேதுபதி சொல்லி விடவே கௌரி திரும்பி செல்கிறாள்.

கீதா பூபதியோடு சுற்றுவதை கண்டிக்கிறார் கீதாவின் தந்தை. அவரை எதிர்த்துக் கொண்டு கீதா வீட்டை விட்டு வெளியேறி பூபதியுடன் அவன் வீட்டிற்கு செல்கிறாள். சேதுபதி முதலில் தயங்கினாலும் பின் கீதா தங்குவதற்கு ஒப்புக் கொள்கிறார்.

இந்நிலையில் சேதுபதியின் பழைய வேலையாள் ஒருவன் சேதுபதியை தேடி வர அவனிடம் தன் மகள் என்று கீதாவை சேதுபதி அறிமுகப்படுத்த அவனோ அந்த என்ன எஜமான் உங்க தங்கச்சி மகளை உங்க மகள்னு சொல்றீங்களே என கேட்டு விட அனைவருக்கும் அதிர்ச்சி. அப்போதுதான் தெரிய வருகிறது கீதா சேதுபதியின் தங்கை கௌரி நாச்சியார் மகள் என்பதும் பூபதி வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி கீதாவின் தந்தை அல்ல, பெரிய தந்தை என்பதும் இங்கே நடக்கும் விஷயங்களை எல்லாவற்றையும் கீதா மொட்டை கடுதாசி மூலமாக தன் தாயாருக்கு தெரிவித்திருக்கிறாள் என்பதும் தெரிய வருகிறது. கீதா அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

இதற்கிடையில் விஜயபுரம் ராணி என தான் கூட்டி வந்த பெண் ராணி அல்ல என்று சக்ரவர்த்தி நம்பும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவன் அவளை ஒரு குடிசையில் தங்க வைக்க அங்கே அவளை தேடி வரும் ஒருவர் சக்ரவர்த்தி மூலமாக அவள் இருக்குமிடத்தை அடைகிறார். அவள் உண்மையிலே விஜயபுரம் ராணி என்பதையும் அவளின் சொத்துகளை வைத்து அனுபவித்துக் கொண்டிருந்த அவள் மாமனுக்கு அந்த சொத்தில் உரிமையில்லை என நீதிமன்ற தீர்ப்பு வந்து விட்டதையும் தெரிவிக்கவே வந்ததாக கூறுகிறார். ரகுபதி பவனத்தை மீட்பதற்கு தேவையான பணத்தை தான் தருவதாக கூறுகிறாள்.

இவை எல்லாம் ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்க சேதுபதியின் மனமெல்லாம் ரகுபதி பவனத்தை மீட்பதிலேயே இருக்கிறது. பழைய சேட் சேதுபதிக்கு ஒரு கடிதம் அனுப்புகிறான். தன் இத்தனை வருடங்கள் சேதுபதிக்காக காத்திருந்ததாகவும் ஆனால் பல வருடங்கள் ஆகி விட்டபடியால் அந்த மாதம் குறிப்பட்ட தேதி மற்றும் நேரத்துக்குள் பணத்தை கொண்டு காட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்புகிறான். அந்த நேரம் அவர் வேலை செய்யும் அச்சகத்தில் தனது ஊரை சேர்ந்த ஒரு இளைஞனை சந்திக்கிறார். அவன் சொத்தின் பேரில் கடன் வாங்கி தரும் தொழிலை செய்துக் கொண்டிருப்பதை அறிந்த சேதுபதி தனது வீட்டை மீட்பதற்கு அவனிடம் ரூபாய் ஐம்பதினாயிரம் வாங்கி தருமாறும் நம்பிக்கைக்கு தான் சேர்த்து வைத்திருக்கின்ற ஒருள் லட்ச ரூபாயை காண்பிப்பதாகவும் சொல்ல, அந்த நபர் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தன் முதலாளியை சந்திக்க ஒரு பங்களாவிற்கு மாலையில் வருமாறு சொல்லி விட்டு சொல்கிறான். அதன்படி அங்கே செல்லும் சேதுபதியை ஒரு முதலாளி சந்திக்கிறார். பணத்தையும் கைமாற்றாக கொடுக்கிறார்.

வீட்டிற்கு சந்தோஷத்துடன் வரும் சேதுபதி மகன்கள் இருவரிடமும் விஷயத்தை சொல்கிறார். பெட்டியை ஆவலுடன் திறந்து பார்த்தால் நோட்டுக் கற்றைகளில் மேலேயும் கிழேயும் மட்டும் பண தாள்கள், மற்றவை அனைத்தும் வெள்ளை தாள்கள். ஏமாந்து விட்டோம் என அறியும் சேதுபதியின் மனம் நொறுங்க அதற்கு மேலும் ஒரு அடியாக இத்தனை நாள் சேமித்த பணம் போய்விட்டதே என்கின்ற கோவத்தில் தந்தையை மகன்கள் இருவரும் கடிந்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

தன் மகள் மட்டும் போதும் என சொல்லும் சேதுபதி சேட் குறிப்பிட்ட தேதிக்கு முன் சிவலிங்கபுரதிற்கு சென்று சேர வேண்டுமே என்று ஓடோடி செல்கிறார். வழியில் பல தடைகளையும் கடக்கும் அவர் சேட்டிடம் பணத்தை கொடுத்து சாவியை பெற்றுக் கொண்டு ரகுபதி பவனம் செல்கிறார். அங்கே தன் பழைய மாளிகைக்குள் நுழைந்து பழைய கம்பீரத்தோடு வளைய வரும் நேரத்தில் அவரின் மனசாட்சி அவரை குத்துகிறது. நீ ஏமாந்தது போல் சேட்டையும் பணம் என்ற பெயரில் வெள்ளை தாள்களை கொடுத்து ஏமாற்றி விட்டாயே என சத்தம் போடும் மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் தடுமாற அந்த நேரத்தில் அங்கே சேட்டும் வந்து விடுகிறார். சேதுபதி சேட்டிடம் பணம் என்று சொல்லி உன்னை வெள்ளை தாள்கள் கொடுத்து ஏமாற்றி விட்டேன் என்று சொல்ல, சேட்டோ புரியாமல் இல்லையே எல்லாம் உண்மையான நோட்டுகள்தானே இருந்தது என்று பதிலளிக்க சேதுபதி அதிர்ச்சி அடைகிறார். அந்நேரம் அங்கே வரும் அவரின் மூத்த மகன் பூபதி அவரை ஏமாற்றியவனை தான் கண்டு பிடித்ததையும் உண்மையான பணத்தை திருப்பி வாங்கியதையும் அதை தன் தங்கை மூலமாக பெட்டியில் வைத்ததையும் ஆக சேதுபதி கொடுத்த பணம் அவர் பணம்தான் என்ற உண்மையை சொல்ல அது மட்டுமல்ல ஆளை அனுப்பி சேதுபதியை ஏமாற்றியது ராஜாங்கம்தான் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறான்.

அங்கே வரும் ராஜாங்கம் தன் தவறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோர, சேதுபதியிடம் தான் தோற்றதை ஒப்புக் கொண்டு தன் கையாலே வல்லவட்டியை சேதுபதியின் தோளுக்கு சூட எல்லாம் நலமாய் முடிகிறது.

அன்புடன்

Murali Srinivas
13th June 2011, 11:31 PM
எங்க ஊர் ராஜா - Part II

தமிழ் திரையுலக இயக்குனர்கள் வரிசையில் பி.மாதவனுக்கு ஒரு தனியிடம் உண்டு. இயக்குனர் T.R. ராம்நாத் அவர்களிடமும் பின்பு ஸ்ரீதரிடமும் உதவியாளாராக இருந்து மணி ஓசை மூலம் இயக்குனரானவர் மாதவன். அந்த படம் சரியாக போகவில்லை என்ற நிலையில் சற்று சோர்ந்து போயிருந்த போது அவரை அழைத்து அன்னை இல்லம் படத்தை டைரக்ட் செய்ய சொன்னார் நடிகர் திலகம். அந்த படம் 100 நாட்கள் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்த படத்திற்காக மாற்று முகாமிற்கு மாதவன் சென்றாலும் அங்கே உறவு நீடிக்கவில்லை. மீண்டும் நீலவானம் மூலமாக நடிகர் திலகம் காம்பிற்கே திரும்பி வந்தார். அதன் பிறகு ஜெய்சங்கரை வைத்து சில படங்கள் இயக்கினார்.

அந்த நேரத்தில் சொந்தமாக படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பி அவர் ஆரம்பித்த நிறுவனம்தான் அருண் பிரசாத் மூவீஸ். நடிகர் திலகத்திடம் கால் ஷீட் வாங்கி தானே தயாரிப்பளார் இயக்குனர் வேலைகளை ஏற்றுக் கொண்டு அவர் செய்த படம்தான் எங்க ஊர் ராஜா. மாதவனின் ஆஸ்தான கதை வசனகர்த்தா பாலமுருகன். நடிகர் திலகம் பி மாதவன் பாலமுருகன் கூட்டணி பல வெற்றிப்படங்களை தந்துள்ளது, அந்த கூட்டணியின் முதல் படம் எங்க ஊர் ராஜா.

நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை சேதுபதி, பூபதி என்ற இரண்டு வேடங்கள் என்றபோதிலும் சேதுபதிதான் எல்லோர் மனங்களிலும் இடம் பிடிப்பவர். இதில் சேதுபதி ரோலில் இரண்டு கெட் அப். முதலில் நடுத்தர வயதை தொட்டுக் கொண்டிருக்கும் இளமை பின் வயது வந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தை என்ற முதுமை.[படம் வெளி வருவதற்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் மூன்று கெட்-அப்களில் நடிகர் திலகத்தை சித்தரிக்கப்பட்டிருந்தார். எனவே படத்தில் நடிகர் திலகம் மூன்று வேடங்களை ஏற்கிறாரோ என்று வரை ஒரு சந்தேகம் ரசிகர்களிடையே இருந்தது].

முதல் காட்சியில் பூஜையறையில் தெய்வத்தை வழிப்படும் சேதுபதி முதல் இறுதிக்காட்சியில் தன் லட்சியத்தில் வெற்றிக் கொண்டு ஆர்ப்பரிக்கும் சேதுபதி வரை நடிகர் திலகம் பிச்சு உதறியிருப்பார். முதலில் அவருக்கே உரித்தான அந்த மிடுக்கு, ஊர் மக்களிடம் காட்டும் அன்பு, கல்யாண நிச்சயத்தின்போது தன் நிலை தெரியாமல் ஊர்காரர்கள் வரதட்சனை வாக்குறுதிகளை அள்ளி வீச அதை தடுக்க முடியாமலும் அதே நேரத்தில் தன் ஜமீனின் அந்தஸ்து மற்றவர்கள் முன்னில் குறைந்து போய் விடக்கூடாது என்ற தவிப்பும் கல்யாணத்தன்று சொன்ன ரொக்க பணம் தரவில்லையென்று தன்னை அவமானப்படுத்தும் நம்பியாரிடம் தன் நிலைமையை சொல்லும் போது கூட ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை தாழ்த்திக் கொள்ளாமல் பேசும் அந்த தோரணை, ஊர் தெருக்களில் மதிப்போடு சாரட் வண்டியில் வந்த போது தன்னை கைகுவித்து வணங்கிய மக்கள் கல்யாணத்தன்று நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதே தெருவில் தன்னை பரிகாசம் செய்யும் போது மனதுக்குள் மருகும் அந்த பார்வை, அந்த கஷ்டத்தோடு அருமை மனைவி இறந்து போகும் போது காட்டும் அந்த முகபாவம் [அதிகப்படியாக செய்வார் சிவாஜி என்பது எப்படி காலம் காலமாக பரப்பப்பட்டு வந்த அவதூறு என்பது இந்த காட்சியை பார்பவர்களுக்கு புரியும்], தன் மனைவி இறந்ததை தங்கையிடம் சொல்ல போக அவள் உங்கள் வீட்டிற்கு வர மாட்டேன் என சொல்லிவிட அந்த பதிலால் தளர்ந்து போய் திரும்புவது, சென்னைக்கு வந்து அச்சகத்தில் வேலை செய்யும் போது அந்த உடல் மொழியை அப்படியே பவ்யமாக மாற்றுவது, சம்பள பணம் மொத்ததையும் புதிய உடை வாங்குவதற்கு செலவழித்து விட்டான் மகன் என்றதும் வரும் கோபம், அப்பாவின் திட்டை கேட்டு மகன் முகம் வாடி உள்ளே போக தனக்கு தானே பேசிக் கொள்ளும் அந்த உணர்வுகள் [சின்ன பையன், நீ அவனுக்கு டிரஸ் வாங்கி தரணும் ஆன நீ செய்யலை, சரி அவனே வாங்கிகிட்டான்.அதிலே என்ன தப்பு?], தன் பிள்ளைகள் தன் 60 வது பிறந்த நாளை கொண்டாட அதில் மீசையை முறுக்கியபடி அமர்ந்திருக்கும் கம்பீரம், கிழவன் என்று மகன் சொன்னதும் பீறிட்டு வரும் கோபம், பழைய வேலைக்காரன் தன் வெள்ளிப்பூண் கைதடியை கொண்டுவர அதை ஆசையோடு தடவிப் பார்க்கும் அந்த குழந்தைத்தனம், அச்சகத்தில் தன்னை தற்செயலாக பார்க்கும் நம்பியார் தன் சவாலை குறிப்பிட்டு கேலி செய்ய பதில் சொல்லாமல் காறி உமிழும் அந்த உக்கிரம், பணம் கைக்கு வரப்போகிறது என்றதும் வரும் அந்த பரபரப்பு, பணம் தருவதாக சொல்லி தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று தெரிந்தவுடன் வரும் அந்த இயலாமை கலந்த கோபம், மகன்கள் தன்னை விட்டுப் போகிறார்கள் என்றதும் வரும் விரக்தி, பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன் கொண்டு சேர்க்க அவர் காட்டும் அந்த வேகம், சேட்டை ஏமாற்றி விட்டோம் என்ற குற்ற உணர்வு மனதை உறுத்த, சேட்டிடம் தயக்கதோடு பேசும் அந்த முகம், தான் தவறு செய்யவில்லை என்றதும் வரும் அந்த வெற்றிக் களிப்பு, இப்படி காட்சிவாரியாக சொல்லிக் கொண்டே போகலாம்! அப்படி ஒரு பவர்புல் performance படம் முழுக்க பார்க்கலாம் நடிகர் திலகத்திடம்.

படத்தின் முத்தாய்ப்பான காட்சி. மகன்கள் இருவரும் கோபித்துக் கொண்டு சென்று விட இரண்டு கை தட்டினா சத்தம்னு சொன்னேன். ஆனா இப்போ சொல்றேன் ஒரு கை தட்டினாலும் சத்தம் வரும் என்று சொல்லி விட்டு ஒரு கையால் மற்றொரு கையை தட்டுவது, தொடையை தட்டுவது, தோளை தட்டுவது என்று தன் மன உறுதியை வலிமையை வெளிக்காட்டும் அந்த காட்சி, எந்த சூழ்நிலையிலும் தன் லட்சியத்தை அடைய வேறு யார் தயவும் தேவையில்லை என்பதை பொங்கி வரும் வெள்ளமாக யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்று சீறி பாய்வாரே அது படத்திற்கே சிகரமான காட்சி.

இப்படிப்பட்ட சேதுபதி பாத்திரத்திற்கு முன்பு பூபதி எடுபடுவது கடினமான காரியம்தான். ஆனால் அதுவும் நடிகர் திலகம் ஆயிற்றே! விட்டுக் கொடுத்து விடுவாரா என்ன? இளமை ததும்பும் அந்த பாத்திரத்தை நளினமாக கையாண்டிருப்பார். இந்த பாத்திரப் படைப்பு இந்த படம் வெளி வந்த ஒரு வருடத்திற்கு பின் வெளி வந்து சரித்திரம் படைத்த தெய்வ மகன் விஜய் பாத்திரத்திற்கு ஒரு ஒத்திகை என்றே சொல்லலாம். அதிலும் சிவாஜி-ஜெயலலிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் அந்த எண்ணத்தை வலுப்படுத்தும். இந்த பாத்திரத்தில் அவர் ஸ்கோர் செய்யும் நான்கு காட்சிகளை குறிப்பிட வேண்டும். ஜெஜெ வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது உங்க அப்பா இப்போ வரமாட்டாரே இப்போ வரமாட்டாரே என்று சொல்லிக் கொண்டே நெருங்கி சென்று விட்டு காப்பி கிடைக்குமா என்று வழிவது, கோட் சூட் உடைக்காக சம்பள பணத்தை செலவு செய்ததை தந்தை கண்டித்தவுடன் உடையை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று மன்னிப்பு கேட்பது, தந்தையின் 60-வது பிறந்த நாளன்று கிராமிய பாணியில் வேட்டி கட்டிக் கொண்டு கழுத்தில் புலி நக செயினை அணிந்துக் கொண்டு ஆடுவது [அந்தக் காட்சியில் அவ்வளவு handsome -ஆக இருப்பார்], தந்தை ஏமாந்து விட்டாரே என்ற கோபத்தில் கிழவன் என்ற வார்த்தையை சொல்லுவது, இவை அந்த பாத்திரத்திற்கு வலு சேர்க்கும். அதை தவிர ராணியின் சொத்து வரப் போகிறது என்று கனவு காணும் நாகேஷிடம் டி.கே.பட்டம்மாள் பாட்டு ஒண்ணு இருக்கு தெரியுமா என்று அவருக்கே உரித்தான subtle நகைச்சுவையை வெளிப்படுத்துவது, கிளைமாக்ஸ்-ல் நம்பியாரிடம் எங்க அப்பா கிட்டே உனக்கெல்லாம் எதுக்கு வல்லவெட்டி-னு கேட்டீங்களாமே என்று சீறுவது, இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

படத்தில் ஒரு சிவாஜி இருந்தாலே மற்றவர்கள் பாடு திண்டாட்டம். இங்கே இரண்டு சிவாஜி. அனைவருமே also ran வகைதான். இதில் சற்று வித்தியாசம் காட்டுபவர் நம்பியார் மட்டுமே. சாதாரணமாக வரும் கையை பிசையும் முகத்தை உருட்டும் மானரிசங்கள் இல்லாமல் செய்திருப்பார். சவால் காட்சியில் கூட இயல்பான தன்மை இருக்கும் ["இந்த வீராப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. வாக்கு மாற மாட்டான் இந்த சேதுபதி-னு சொன்னியேயா"].

அந்தக் காலக் கட்டத்தில் ஜெயலலிதா நடித்த படங்களை பார்த்தோம் என்றால் பெரும்பாலான படங்களில் அவர் பணக்கார வீட்டு பெண்ணாக, திமிர் பிடித்தவராக ஆண்களை மட்டம் தட்டுபவராகவே சித்தரிக்கப்பட்டிருப்பார். ஆரம்பக் கட்டங்களில் இந்த படத்திலும் அப்படித்தான் என்ற போதிலும் சேதுபதியின் தங்கை மகள்தான் அவர் என்ற ட்விஸ்ட் வந்ததும் பாத்திர தன்மை மாறும். ஆனால் அதற்கு பின் படத்தில் அவருக்கு வாய்ப்பு குறைந்து விடும்.

நாகேஷ் மனோரமா காமடி படத்திற்கு எந்த வகையிலும் உதவி செய்யாதது மட்டுமல்ல சில காட்சிகள் படத்திற்கு ஒரு சின்ன தொய்வை ஏற்படுத்தி விடும். ரகுபதி பவனத்தை மீட்க பணம் கேட்கும் நாகேஷிடம் தருகிறேன் என்பதை கை அசைவிலேயே மனோரமா ஒத்துக் கொள்ள பின்னர் அவர் ராணி அல்ல என்று சூழல் வந்தவுடன் நாகேஷ் புலம்பும் ஒரு காட்சி மட்டுமே சற்று ஆறுதல் [பணம் வேணும்னு கேட்டதற்கு எப்படி கையை அசைச்சே? பெரிய சிவாஜி கணேசன்-னு நினைப்பு]. சிறப்பு தோற்றமாக இருந்தாலும் சௌகார் படம் முழுக்க வருவது போல ஒரே பீலிங். காரணம் அவரின் போட்டோ அநேகமாக அனைத்துக் காட்சிகளிலும் பிரேமில் இடம் பெறுவதால் இருக்கலாம். இரவும் பகலும் வசந்தா சேதுபதியின் தங்கை கௌரி நாச்சியாராக மெயின் ரோலில் வருகிறார்.

முதலில் சொன்னது போல் கதை வசனம் பாலமுருகன். கிராமத்து பின்னணியில் திரைக்கதை அமைப்பதில்தான் தன் பலம் அடங்கியிருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருந்த பாலமுருகன் அந்த பார்முலாவை இங்கே நன்றாக பயன்படுத்தியிருப்பார். அது போல உணர்ச்சிமிக்க கதை சந்தர்ப்பங்களை உருவாக்கி அதை கிளைமாக்ஸ்-ல் உணர்ச்சி குவியலாக முடிப்பதன் மூலமாக மக்களை கவர முடியும் என்பதனை நடிகர் திலகத்தை வைத்து இதற்கு முன்னால் எடுத்த அன்னை இல்லம், நீலவானம் படங்களின் மூலமாக தெரிந்துக் கொண்ட மாதவன் இந்தப்படத்திலும் அதையே கையாண்டிருந்தார். படத்தை நடிகர் திலகம் single handed ஆக முன்னெடுத்து செல்ல மாதவனின் வேலை எளிதானது.

அன்புடன்

(தொடரும்)

Murali Srinivas
13th June 2011, 11:43 PM
எங்க ஊர் ராஜா - Part III

கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணியில் பாடல்கள் எல்லாம் பிரபலம்.

1. அத்தைக்கு மீசை வச்சு - எல்.ஆர்.ஈஸ்வரி.

ஜெயலலிதா தன் தோழியருடன் சேர்ந்து பாடும் பாடல். இந்தப் பாடலின் முடிவில்தான் நடிகர் திலகத்துடன் ஜெஜெ மோதுவது ஆரம்பிக்கும்.

2. என்னடி பாப்பா சௌக்கியமா - டி.எம்.எஸ்.

தன்னை அவமானப்படுத்திய ஜெஜெவிற்கு ஒரு பாடம் கற்று கொடுப்பதற்காக அவரை ஆசை வார்த்தை பேசி அழைத்து நீச்சல் குளத்தில் நீந்த வைத்து அவர் அணிந்து வந்த உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு தரமாட்டேன் என பாடும் பாடல். தற்போதைய அரசியல் சூழலை எல்லாம் விட்டு விடுங்கள். அப்போதே [1968-ல்] இந்தப் பாடலில் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் வரும் நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை வென்றவர் யாரடியோ என்ற வரிக்கு தியேட்டரில் கைதட்டல் விசில் பறக்கும்.

3. பரமேஸ்வரி ராஜேஸ்வரி, ஜகதீஸ்வரி -- டி.எம்.எஸ் சுசிலா.

எம்.எஸ்.வி சில நேரங்களில் ஒரே பாடலில் slow beats மற்றும் fast tune களை பயன்படுத்தி இசையமைத்திருப்பார். அந்த வகையை சேர்ந்தது இந்தப் பாடல். சாரதா அடிக்கடி குறிப்பிடுவது போல ஒரு படத்தில் extraordinaryயாக ஒரு பாடல் அமைந்து விட்டால் அதே படத்தில் வேறு சில நல்ல பாடல்கள் கூட பெற வேண்டிய புகழை பெறாமல் போய் விடும். பரமேஸ்வரி பாடலை அந்த வகையிலும் சேர்க்கலாம். ஈஸ்வரியின் ரேஞ்சு பாடலை சுசிலா அனாயசமாக பாடியிருப்பார். பூபதி என்ற பாத்திரத்தின் குழந்தைத்தனமான காதல் தவிப்பை நடிகர் திலகம் அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். அதிலும் பீச்சிலே போய் பீச்சிலே போய் என்ற வரி பாடும் போது அது தூக்கலாய் தெரிய பதிலுக்கு சுசிலா பாச்சிலர் பாய் பாச்சிலர் பாய் என்று பதிலுக்கு பாடும் போது ரசிக்க முடியும்.

4. ஏழுகடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை - டி.எம்.எஸ் - சுசிலா

சேதுபதியின் 60-வது பிறந்த நாளன்று பாடும் பாடல். ஏற்கனவே சொன்னது போல நடிகர் திலகம் இளமையாக சிக்கென்று இருப்பார். இதிலும் சுசிலா பின்னியிருப்பார். அதிலும் ரெண்டு வெள்ளி கொலுசுகள் துள்ளி குதிக்குது பொறந்த நாளையிலே என்ற வரியில் பொறந்த நாளையிலே என்பதை ஒரு folk பாணியில் அவர் உச்சரிக்கும் இடம் பிரமாதமாக இருக்கும். பாடல் முடிவில் விழா நாயகன் சேதுபதியே எழுந்து ஆட ரசிகர்களின் உற்சாகத்திற்கு கேட்க வேண்டுமா!

5. யாரை நம்பி நான் பொறந்தேன் - டி.எம்.எஸ்.

படத்தின் உயிர் நாடியான பாடல். கவியரசர்- மெல்லிசை மன்னர் - டி.எம்.எஸ். நடிகர் திலகம் கூட்டணியில் வெளி வந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களில் ஒரு தனியிடம் இந்த பாடலுக்கும் உண்டு. நடிகர் திலகத்தின் பங்களிப்பு பற்றி ஏற்கனவே பார்த்தோம். கண்ணதாசன் அற்புதமாக எழுதியிருப்பார். அதிலும் தேவையான நேரங்களில் உறவுகள் உதவி செய்யாமல் கைவிடுவது பற்றிய சூழல் என்றால் கவியரசரின் பேனா மடை திறந்த வெள்ளம் போல் சீறி பாயும். குறிப்பாக

தென்னையை பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு

பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வெச்சா சொந்தமில்லே பந்தமில்லே

போன்ற வரிகள் சாகவரம் பெற்றவை. இந்தப்படம் இந்தியில் தில் கா ராஜா என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போது மாதவனே இந்தியிலும் இயக்கினார். பாடல் எழுத வந்த ஆனந்த் பக் ஷி தென்னையை பெத்தா இளநீரு வரிகளுக்கு எவ்வளவு முயன்றும் தமிழில் வந்த அந்த உணர்வை கொண்டு வர முடியவில்லை என்பது வரலாறு.

எளிமையான ஆனால் வலிமையான வரிகளுக்கு அதே போல் மெல்லிசை மன்னர் எளிமையாய் போட்டிருந்த ட்யுன் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தது. இந்த பாடலின் உள்ளார்ந்த அனைத்து உணர்வுகளையும் தன் வெண்கல குரலின் பாவத்தில் வெளிக் கொணர்ந்து டி.எம்.எஸ். மெருகேற்ற வழக்கம் போல் தன் நடிப்பால் அனைத்து கைதட்டல்களையும் நடிகர் திலகம் அள்ளிக் கொண்டு போனார்.

படம் 1968 அக்டோபர் மாதம் 21-ந் தேதி தீபாவளியன்று வெளியானது. அந்த நேரத்தில் நடிகர் திலகத்தின் படங்களே எப்படி போட்டியாக வந்தது என்பதைப் பற்றி லட்சுமி கல்யாணம் விமர்சனத்தில் சொல்லியிருந்தோம். அதன் சுருக்கம் மீண்டும்.1968-ம் ஆண்டு ஜூலை 27 அன்று வெளியான தில்லானா மிக வெற்றிகரமாக 86 நாட்களை கடக்கும் போது தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியானது. எங்க ஊர் ராஜா வெளிவந்து 25 நாட்களே ஆகியிருந்த நிலையில் நவம்பர் 15 அன்று லட்சுமி கல்யாணம் வெளியானது. அதற்கு அடுத்த 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியானது. ஆக ஒரே நேரத்தில் நான்கு சிவாஜி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

மதுரையில் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, ஸ்ரீதேவியில் லட்சுமி கல்யாணம் சென்ட்ரலில் உயர்ந்த மனிதன். அந்த போட்டியிலும் வெற்றிகரமாக ஓடியது எங்க ஊர் ராஜா. சென்னையில் 85 நாட்கள், மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் 72 நாட்கள் ஓடிய இப்படம் 1969 ஜனவரி 1 அன்று வெளியான நடிகர் திலகத்தின் அன்பளிப்பு படத்திற்காக பல ஊர்களிலும் மாறிக் கொடுக்க வேண்டுய சூழ்நிலை. கோவையில் 9 வாரங்களையும் கடந்தது. சென்னையிலும் மதுரையிலும் ஷிப்டிங்கில் 100 நாட்களை கடந்தது இந்தப் படம்.

படத்தில் சேதுபதி தன் குழந்தைகளை சைக்கிளில் வைத்து ஒட்டி செல்லும் போது வேறொரு சைக்கிள் அவரை முந்த முயற்சிக்க தனி ஆளாக செல்லும் அந்த நபரை குழந்தைகளோடு செல்லும் சேதுபதி முந்தி சென்று வெற்றி கொள்வதாக ஒரு காட்சி வரும். இந்த படம் வெளியான போது சேதுபதி என்ற சைக்கிளை முந்தி செல்ல சிலர் வாகனத்தில் வந்தனர். ஆனால் மக்கள் ஆதரவு என்னும் எரிபொருள் கிடைக்காததால் வாகனம் நின்று போக, மக்கள் ஆதரவு எனும் காற்று அனுகூலமாய் வீச சேதுபதியின் சைக்கிள், வெற்றி எனும் destination -ஐ அடைந்தது.

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை நடிப்புக் கலையாகட்டும், வசூல் சாதனையாகட்டும் என்றென்றும் நடிகர் திலகம்தானே எங்க ஊர் ராஜா

அன்புடன்

Tail Piece: 1996-ம் வருடம் மத்தி. இந்தியன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரம், கமலை நேரில் சந்தித்த ஒரு சின்னத்திரை பெரிய திரை நடிகர் அதைப் பற்றி பாராட்ட, படத்தைப் பற்றி பேசிய கமல், படம் நாம் பிறந்த மண் படத்தின் inspiration -ஆக இருந்தாலும் இந்தியன் தாத்தா பாத்திரம் பற்றி குறிப்பிடுகையில் அதன் inspiration எங்க ஊர் ராஜா விஜய ரகுநாத சேதுபதி என்றாராம்.

pammalar
14th June 2011, 02:42 AM
பக்தித் திலகத்தின் தெய்வீக ராகங்கள் - 02

"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் / சிந்தனை செய் மனமே / வடிவேலும் மயிலும் துணை"


http://www.youtube.com/watch?v=n6Pt-dKwvwQ

நடிப்பு : நடிகர் திலகம், பி.பானுமதி, எம்.கே.ராதா, எம்.என். நம்பியார், வி.நாகையா, கே.ஏ.தங்கவேலு, ஏ.கருணாநிதி மற்றும் பலர்

பின்னணிக் குரல் : பாடகர் திலகம் டி.எம்.எஸ்.

இசை : ராகதேவன் ராமநாதன்

படைப்பு : கவிஞர் கே.டி.சந்தானம் [சிந்தனை செய் மனமே & வடிவேலும் மயிலும் துணை]

திரைக்காவியம் : அம்பிகாபதி(1957)

அன்புடன்,
ராகவேந்திரன் &
பம்மலார்.

RAGHAVENDRA
14th June 2011, 05:56 AM
படத்தின் முத்தாய்ப்பான காட்சி. மகன்கள் இருவரும் கோபித்துக் கொண்டு சென்று விட இரண்டு கை தட்டினா சத்தம்னு சொன்னேன். ஆனா இப்போ சொல்றேன் ஒரு கை தட்டினாலும் சத்தம் வரும் என்று சொல்லி விட்டு ஒரு கையால் மற்றொரு கையை தட்டுவது, தொடையை தட்டுவது, தோளை தட்டுவது என்று தன் மன உறுதியை வலிமையை வெளிக்காட்டும் அந்த காட்சி, எந்த சூழ்நிலையிலும் தன் லட்சியத்தை அடைய வேறு யார் தயவும் தேவையில்லை என்பதை பொங்கி வரும் வெள்ளமாக யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்று சீறி பாய்வாரே அது படத்திற்கே சிகரமான காட்சி.


http://www.youtube.com/watch?v=oii8F0mTnCs

முழுப்படமும் காண

http://www.youtube.com/watch?v=hgI-7kWvnbQ

அன்புடன்

groucho070
14th June 2011, 07:59 AM
As usual, you outdid yourself, Murali-sar. Makes one wonder if the name Sethupathi was inspiration for the daddy Kamals in Apoorva Sagotharargal.

One thing though, I find myself rooting enjoying son's performance, rather than dad (likewise in Kamal's Indian). But I guess things are about to change :wink:.

Still, son NT is very entertaining and was funny enough for us to fast forward Nagesh comedy scenes. That one song alone would be the one that fans remember in the movie, those immortal lines by Kannadhasan. Absolute gem!

goldstar
14th June 2011, 08:57 AM
எங்க ஊர் ராஜா - Part III


மதுரையில் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, ஸ்ரீதேவியில் லட்சுமி கல்யாணம் சென்ட்ரலில் உயர்ந்த மனிதன். அந்த போட்டியிலும் வெற்றிகரமாக ஓடியது எங்க ஊர் ராஜா. சென்னையில் 85 நாட்கள், மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் 72 நாட்கள் ஓடிய இப்படம் 1969 ஜனவரி 1 அன்று வெளியான நடிகர் திலகத்தின் அன்பளிப்பு படத்திற்காக பல ஊர்களிலும் மாறிக் கொடுக்க வேண்டுய சூழ்நிலை. கோவையில் 9 வாரங்களையும் கடந்தது. சென்னையிலும் மதுரையிலும் ஷிப்டிங்கில் 100 நாட்களை கடந்தது இந்தப் படம்.
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை நடிப்புக் கலையாகட்டும், வசூல் சாதனையாகட்டும் என்றென்றும் நடிகர் திலகம்தானே எங்க ஊர் ராஜா

அன்புடன்


Thanks a lot Murali sir for your extraordinary writeup about Enga Oor Raja, you made me to watch this movie again, may be today itself at least for 15 minutes.

Wow four movies within short period and that all the movies big hit, only NT can do like this and truly he is "Vasool King".

Cheers,
Sathish

RAGHAVENDRA
14th June 2011, 09:29 AM
நடிகர் திலகத்தின் எங்க ஊர் ராஜா பற்றிய முரளி சாரின் திறனாய்வு, அப்படத்தை இது வரை பார்க்காதவர்களுக்கு சரியான வழிகாட்டியாகும். குறிப்பாக யாரை நம்பி பாடல் தமிழ்த்திரையுலக இசை வரலாற்றில் சாகாவரம் பெற்ற பாடலாய் அமைந்து விட்டது. அது மட்டுமல்ல, இப்பாடலின் ஒரு சிறிய பகுதியை ராமன் எத்தனை ராமனடி படத்தில் இணைத்து சாந்தியில் வெளியான அன்று அதாவது 15.08.1970, பார்த்த போது, மிகப் பெரிய கைதட்டலை இப்பாடல் பெற்றது. 1970 காலகட்டத்தில் அசைக்க முடியாத ராஜாவாக நடிகர் திலகம் உச்சியில் ஏறி விட்ட நேரம், இன்றும் பசுமையாக நினிவில் உள்ளது. அப்பாடல் எங்க ஊர் ராஜாவில் இடம் பெற்ற வரவேற்பை விட ராமன் எத்தனை ராமனடியில் அந்த ஒரு சிறிய பகுதிக்கே விண்ணைத் தொடும் ஆரவாரத்தைப் பெற்றது பிரமிக்கத் தக்கது. அன்று முதல் அந்த உச்சியைவிட்டு நடிகர் திலகம் இறங்கவே யில்லை என்பது தான் நிதர்சனம், இதற்கு சான்று தற்போது அவருடைய படங்கள் மறு வெளியீட்டில் பெற்று வரும் வரவேற்பு. 80 ரூபாய் என்ன, 800 ரூபாய் டிக்கெட் கட்டணம் வைத்தாலும் நாங்கள் நடிகர் திலகத்தின் படங்களை ஓடி வந்து பார்ப்போம் என்று ரசிகர்கள் சொல்லாமல் சொல்லி வெற்றி பெற வைப்பதே அவருடைய வசூல் சாதனைக்கு சான்றாகும். தற்போதைய கால கட்டத்தில் எங்க ஊர் ராஜா மறு வெளியீடு செய்யப் பட்டால்... ஆஹா ... நினைத்துப் பார்க்கும் போதே உவகை பொங்குகிறது.
எதிர்பார்ப்போம்.

நன்றி முரளி சார்

அன்புடன்

RAGHAVENDRA
14th June 2011, 09:31 AM
பக்திப் பெருக்கில் எந்தன் ஊர் உருக, அந்தப் பரவசத்தில் உள்ளே உயி்ர் உருக என்று கண்ணதாசன் மட்டுமல்ல நாம் அனைவருமே கூறும் வண்ணம் அம்பிகாபதி பாடலைத் தந்தமைக்கு பம்மலாரே நன்றி.

அன்புடன்

HARISH2619
14th June 2011, 01:37 PM
திரு முரளி சார்,
தங்களது எங்க ஊர் ராஜ பட ஆய்வு வழக்கம் போல் பிரமாதம்,அற்புதம் .தாங்கள் குறிப்பிட்ட அனைத்து காட்சிகளையும் மீண்டும் ஒரு முறை டிவிடி யில் பார்த்தேன்

இளைய திலகம் பிரபு டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி பெங்களூர் சிவன்செட்டி கார்டன் பகுதியில் 12 -6 -11 அன்று நடந்த நிகழ்ச்சியில் கர்னாடக மாநில பிரபு ரசிகர்மன்ற தலைவர் திரு குமரேசன் ,சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் திரு தேவா ஆகியோர் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர்
நன்றி :தினக்கரன் 13 -6 -11

saradhaa_sn
14th June 2011, 04:06 PM
டியர் முரளி,

நமது திரியில் சிறிது இடைவெளிக்குப்பிறகு மீண்டும் 'எங்க ஊர் ராஜா' என்ற ஒரு அருமையான படத்தின் அற்புதத் திறனாய்வு வழக்கம்போல கலக்கலாக அமைந்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகத் துல்லியமாகக் கவனித்து எழுதியுள்ளீர்கள். பலமுறை பார்த்த படமென்றபோதிலும், உங்களின் ஆய்வுக்கட்டுரை படித்த பின் மீண்டும் பார்க்கும்போது, மீண்டும் புதிய பரிமாணம் கிடைக்குமென்பது உண்மை.

போதிய இடைவெளி அளிக்கப்பட்டு வெளியாகியிருந்தால் நிச்சயம் பல ஊர்களில் 100 நாட்களைக்கடந்து ஓடியிருக்க வாய்ப்பான படம். நான் ஏற்கெனவே சொன்னது போல அந்த ஆண்டில் நடிகர்திகத்துக்கு திருமால் பெருமை, அரிச்சந்திரா, கலாட்டா கல்யாணம், என் தம்பி, தில்லானா மோகனாம்பாள், எக்க ஊர் ராஜா, லட்சுமி கல்யாணம், உயர்ந்த மனிதன் என எட்டு படங்கள். அந்த ஆண்டில் அதிசய வசமாக 'அந்தப்பக்கமும்' எட்டு படங்கள். வண்ணங்கள் மூன்று மட்டுமே வெற்றி பெற்றன.

முன்பு ஏற்கெனவே ஒருவர் தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தது போல (ஸாரி, அவர் பெயர் நினைவில்லை), திரு எம்.ஜி.ஆர். தனது படங்களில் 'அண்ணா' என்ற வார்த்தையை தனக்கு வசதியாகப் பயன்படுத்தியது போல, பெருந்தலைவரைக்குறிக்க நடிகர்திலகத்துக்கு கிடைத்த பெயர் 'ராஜா'. (காமராஜர் என்ற பெயரின் செல்லமான சுருக்கம்). அதை முடிந்தவரை தனது படங்களின் தலைப்புக்களில் பயன்படுத்தினார். ராஜா, எங்க ஊர் ராஜா, எங்கள் தங்க ராஜா, தர்மராஜா.... இப்படி. (இதுபோக படிக்காத மேதை, சிவகாயின் செல்வன் என்ற தலைப்புகளும்).

காட்சிவாரியாக துல்லியமாக விமர்சித்துள்ளீர்கள். அந்த ஆண்டில் நடிகர்திலகத்துடன் நம்பியார் காம்பினேஷனில் அமைந்த நான்கு படங்களுமே (திருமால் பெருமை, தில்லானா, எ.ஊ.ராஜா, லட்சுமி கல்யாணம்) நம்பியாருக்கு புகழை வாரிக்கொடுத்த படங்களே. (நீங்களே முன்பு விமர்சித்த 'சுருட்டு சுந்தரம் பிள்ளை'யை மறக்க முடியுமா). அதுபோலன் ஜெயலலிதாவுக்கும் இரண்டு படங்களிலும் (கலாட்டா மற்றும் இப்படம்) நல்ல கிளாமரஸ் ரோல்கள். நடிகர்திலகத்துடன் பொருத்தமாக அமைந்தார்.

சிலநேரங்களில் சுசீலாவும் ஈஸ்வரி டைப் பாடல்களை அநாயாசமாகப் பாடுவார் என்பதற்கு இன்னொரு உதாரணம், தெய்வமகனில் இடம்பெற்ற 'காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்' பாடல், குறிப்பாக இறுதியில் வரும் 'உல்லுல்லோய்... உல்ல்லுல்லோய்' என்ற பிட்.

எங்க ஊர் ராஜாவில் நடிகர்திலகத்தின் பாடி லாங்குவேஜுக்கு பெரிதும் துணைநின்ற அப்போதிருந்த அவரது 'சிக்'கென்ற உடல்வாகு. (இது அந்த காலகட்டத்தில் வெளிவந்த எல்லாப்படங்களுக்கும் நான் சிலாகித்துச்சொல்வது).

மொத்தத்தில் இதுவரை எங்க ஊர் ராஜாவைப் பார்க்காதிருந்தவர்களை தேடிப்பிடித்துப்பார்க்கும்படி செய்துவிட்டது உங்கள் ஆய்வுக்கட்டுரை. (தேடியலைய வேண்டாம் என்று, அதற்கான இனைப்புகளைத் தந்து விட்டார் சகோதரர் ராகவேந்தர்).

நன்றியுடன்... சாரூ...

rsubras
14th June 2011, 04:37 PM
Not sure if this was discussed earlier here.....

It has become a routine for the current crop of heroes (and affordable for the producers / directors) to do one film at a time that makes it easier for them to dedicate themselves to that role, study their character, make the appropriate changes to their physique, voice modulation etc and deliver a good performance on screen. While even this is pretty hard and takes a lot out of the particular actor...... it is really hard to imagine that NT while doing multiple films at the same time was able to do the same kind of homework and prepare himself both mentally and physically..and that too to switch between diametrically opposite roles and fit into that character (from a icy cool Madhan character in Galatta Kalyanam to a egoist talented nadhaswara expert shanmuga sundaram)....... to think of it today, it is humanely impossible but NT was able to pull it off for a very long time......... The Hardwork he had put in while commendable could also be shared for the general public to take cue from NT on what it takes to excel in each one's field.

KCSHEKAR
14th June 2011, 04:41 PM
எங்க ஊர் ராஜா - Thanks to Mr.Murali for the Excellent piece

RAGHAVENDRA
14th June 2011, 05:09 PM
Not sure if this was discussed earlier here.....

It has become a routine for the current crop of heroes (and affordable for the producers / directors) to do one film at a time that makes it easier for them to dedicate themselves to that role, study their character, make the appropriate changes to their physique, voice modulation etc and deliver a good performance on screen. While even this is pretty hard and takes a lot out of the particular actor...... it is really hard to imagine that NT while doing multiple films at the same time was able to do the same kind of homework and prepare himself both mentally and physically..and that too to switch between diametrically opposite roles and fit into that character (from a icy cool Madhan character in Galatta Kalyanam to a egoist talented nadhaswara expert shanmuga sundaram)....... to think of it today, it is humanely impossible but NT was able to pull it off for a very long time......... The Hardwork he had put in while commendable could also be shared for the general public to take cue from NT on what it takes to excel in each one's field.

Dear Subramanian,
You have come to the exact point. This is what we the fans of NT here, in this thread, have been emphasizing. Mr. Y.Gee.Mahendra, in his talk show in Vasanth TV, shared the same views. And his words can be authenticated since he is from the same profession. YGM had always maintained that the "switching" off and on various characters was possible only to NT. Imagine, NT was doing three shifts a day and all the three were contrasting. In fact, it will be extremely difficult for the crew including the Director, to come out of those characters, but not NT. As a Fan, I too had the opportunity to witness a few shootings. Until the very second he takes the camera on, he would be a common man, but once he puts on his robes and the camera roles on, you can not find the Sivaji Ganesan, the man. And the very next second the take is over, he would return to normalcy, which we can not. There lies his success and prophecy.

Raghavendran

saradhaa_sn
14th June 2011, 06:02 PM
Not sure if this was discussed earlier here.....

It has become a routine for the current crop of heroes (and affordable for the producers / directors) to do one film at a time that makes it easier for them to dedicate themselves to that role, study their character, make the appropriate changes to their physique, voice modulation etc and deliver a good performance on screen. While even this is pretty hard and takes a lot out of the particular actor...... it is really hard to imagine that NT while doing multiple films at the same time was able to do the same kind of homework and prepare himself both mentally and physically..and that too to switch between diametrically opposite roles and fit into that character (from a icy cool Madhan character in Galatta Kalyanam to a egoist talented nadhaswara expert shanmuga sundaram)....... to think of it today, it is humanely impossible but NT was able to pull it off for a very long time......... The Hardwork he had put in while commendable could also be shared for the general public to take cue from NT on what it takes to excel in each one's field.

மிகச் சரியான அப்ஸர்வேஷன் சுப்பு,

நீங்கள் குறிப்பிடும் இந்த விஷயம் ஏற்கெனவே இங்கு பேசப்பட்டிருந்த போதிலும் இப்போது நீங்கள் சொல்லும் விஷயம் கூடுதல் அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது. முரளி அவர்கள் கூட இதுபற்றிச் சொல்லும்போது, ராமன் எத்தனை ராமனடி படத்தில் 'சித்திரை மாதம்' பாடலை காலையில் ஒரே ஷெட்யூலில் முடித்து விட்டு மதியம், எங்கிருந்தோ வந்தாளுக்காக பைத்தியம் ரோலில் புகுந்துகொண்டார் என்று சொல்லியிருந்தார். அதேபோல காலையில் சாப்பாட்டு ராமனாக சிறுவர்களுடன் 'கொலை கொலையா முந்திரிக்கா' விளையாடிவிட்டு, மதியம் பிரிஸ்டிஜ் பத்மனாபனாக பிராமண பாஷை சகிதம் மாறினார்.

படத்தில் பார்க்கும்போது நமக்கு இரண்டரை மணி நேரம் தொடர்ச்சியாக ஓடும். ஆனால் அது எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள், எத்தனை இடங்களில் படமாக்கப்பட்டதோ. ஆனால் ஒவ்வொரு முறையும் மிகச்சரியாக அந்தந்த ரோல்களுக்குள் புகுந்துகொள்வதற்கு எவ்வளவு திறமை வேண்டும்?. எல்லாப்படங்களிலும் ஒரே மாதிரி நடித்துவிட்டுப்போகிறவர்களுக்கு இது சிரமம் இல்லை. ஆனால் ஒவ்வொரு ரோலுக்கும் மிக அதிக வித்தியாசம் காட்டும் இவருக்கு எப்படி இது சாத்தியமானது?.

அதேபோல ஒரு நண்பர் இங்கு குறிப்பிட்டதைப்போல, திருவிளையாடலில் 'பாட்டும் நானே' பாடல் காட்சியின்போது, ஒரு சிவாஜி பாடிக்கொண்டிருக்க, அல்லது வீணை வாசித்துக்கொண்டிருக்க, அல்லது புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருக்க, அல்லது கொன்னக்கோல் சொல்லிக்கொண்டிருக்க, அல்லது மிருதங்கம் வாசித்துக்கொண்டிருக்க..... அதற்கேற்றாற்போல மற்ற நால்வரும் தங்கள் முகபாவங்களையும் உடல் அசைவையும் காண்பித்துக்கொண்டிப்பதைப் பார்க்கும்போது அது படமாக்கப்பட்ட விதம் பிரமிப்பூட்டுகிறது.

நிச்சயமாக அதில் ஒவ்வொரு ரோலுக்கும் முழுப்பாடலையும் ஓடவிட்டுப்படமாக்க்கி பின்னர் இணைத்திருந்தால் மட்டுமே சாத்தியம். இன்றைக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸை கையில் வைத்துக்கொண்டு செப்படி வித்தை காட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் கூட இது பிரமிப்பூட்டும் சாதனையே.

பேசப்பேச வியந்துகொண்டே போகலாம். அவ்வளவு விஷயம் இருக்கு இவரிடம்.

SoftSword
14th June 2011, 06:09 PM
Dear Subramanian,
You have come to the exact point. This is what we the fans of NT here, in this thread, have been emphasizing. Mr. Y.Gee.Mahendra, in his talk show in Vasanth TV, shared the same views. And his words can be authenticated since he is from the same profession. YGM had always maintained that the "switching" off and on various characters was possible only to NT. Imagine, NT was doing three shifts a day and all the three were contrasting. In fact, it will be extremely difficult for the crew including the Director, to come out of those characters, but not NT. As a Fan, I too had the opportunity to witness a few shootings. Until the very second he takes the camera on, he would be a common man, but once he puts on his robes and the camera roles on, you can not find the Sivaji Ganesan, the man. And the very next second the take is over, he would return to normalcy, which we can not. There lies his success and prophecy.

Raghavendran

konjam contradicta irukkae.
i heard that NT used to imagine himself as kattabomman in the shooting spot during the movie shooting... even when the action is not called.
he lives as that character in kind of a halluccination i heard.

J.Radhakrishnan
14th June 2011, 10:16 PM
டியர் முரளி சார்,

எங்க ஊர் ராஜா திறனாய்வு வழக்கம் போல் அருமை, ஒரு வேண்டுகோள்!!! தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம், இது போல NT அவர்களின் பிரபல படங்களை ஆய்வு செய்யும் அதேவேளையில் அதிகம் பேசப்படாத மற்றும் dvd கிடைக்காத தங்கை, பாலாடை, அன்பளிப்பு, தங்கைகாக, அருணோதயம், தாய், சத்யம் போன்ற படங்களையும் ஆய்வு செய்யும்படி கேட்டுகொள்கிறேன். தங்கை,சத்யம் திறனாய்வு படித்தபோதும் தமிழில் படிப்பது போல் திருப்தி இல்லை.

மீண்டும் சொல்வது என்னவென்றால் இந்த வேண்டுகோள் என் கருத்தே தவிர, என்னை நீங்கள் தவறாக எண்ணிவிடவேண்டாம்.

pammalar
14th June 2011, 11:04 PM
டியர் முரளி சார்,

'எங்க திரி ராஜா'வாகிய நீங்கள் "எங்க ஊர் ராஜா"வை அமர்க்களப்படுத்திவிட்டீர்கள்.

கதை, Double நடிகர் திலகம் உள்ளிட்ட அனைவரது performance, பாடல் & பாக்ஸ்-ஆபீஸ் என ஒவ்வொரு பாகப்பதிவும் அருமை மட்டுமல்ல அசத்தல் !

எங்க ஊர் ராஜாவுக்கு முன்னும்-பின்னும் போட்டிப் படங்களாக தில்லானா, லக்ஷ்மி கல்யாணம், உயர்ந்த மனிதன், அன்பளிப்பு ஆகிய புதிய படங்களை எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில், சற்றேறக்குறைய 16 ஆண்டுகளுக்குப் பிறகு - திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடத்தை அலங்கரிக்கத் துவங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருந்த நேரம் - அக்மார்க் புத்தம் புதிய படமாக நமது நடிகர் திலகத்தின் முழுமுதற்காவியமான "பராசக்தி" சென்னை மற்றும் தென்னகமெங்கும் 15.8.1968 சுதந்திரத் திருநாள் முதல் வெளியாகி எல்லா புதிய படங்களோடும் போட்டாபோட்டி போட்டதையும் அவசியம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வெளியீட்டில் "பராசக்தி" சென்னையிலும் இதர இடங்களிலும் இணைந்த 100வது நாள் விழாவும் கொண்டாடியது. இது தவிர அந்தந்த நேரங்களில் வரும் அவரது பழைய படங்கள் வேறு போட்டியைக் கடுமையாக்கும்.

சிக்கலாருக்கு சிக்கலை ஏற்படுத்தியது வடிவாம்பாள் மாத்திரமல்ல, விஜய ரகுநாதரும் தான் ! 14 அரங்குகளில் தனது வாசிப்புக்கு (நூறு நாள்) விழாக் கொண்டாடியிருக்க வேண்டிய சண்முகசுந்தரம் 7 அரங்குகளாக இறங்கியதற்கு சேதுபதியும் கொஞ்சம் பாதகாதிபதியாக வந்ததனால் தான். சேலம், கரூர், கடலூர், பாண்டி, குடந்தை, தஞ்சாவூர், நெல்லை என இந்த எழு ஊர்தோறும் எண்ணிக்கையில் 86ஐ எட்டிய நேரத்தில் சிக்கலார் தனது சங்கீதத்தை விஜய ரகுநாதருக்காக விட்டுக் கொடுத்தார்.

நமது காவியங்களே நமது காவியங்களுக்குப் போட்டி, என்ன செய்வது !

அன்புடன்,
பம்மலார்.

rsubras
15th June 2011, 11:32 AM
நமது காவியங்களே நமது காவியங்களுக்குப் போட்டி, என்ன செய்வது !

.

Just imagine.... had there been restrictions in place like how it is today (there should be a min of 1 month gap between a particular actor's movies and if the first released movie is a success wait for some more months)..... Mudhal Mariyaadhai would have been releasing wide across tamilnadu for 2011 Diwali only :)

mr_karthik
15th June 2011, 11:32 AM
முரளி சார்,

உங்கள் எழுத்துக்களில் 'எங்க ஊர் ராஜா'வை மீண்டும் படித்தோம். முழுமையான ஆய்வு மற்றும் படம் தொடர்பான செய்திகள் அனைத்தும் அருமை. அதென்ன அந்தக்காலக்கட்டத்தில் ஒரு பெரிய நடிகரின் படங்கள் 15 நாளைக்கொரு படம், 20 நாளைக்கொரு படம் என்று வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்?. ஏ.எல்.சீனிவாசனும், ஏ.வி.எம்.செட்டியாரும் கொஞ்சம் மனது வைத்து தங்கள் படத்தை தாமத்தித்திருந்தால், எங்க ஊர் ராஜாவும் 100 என்ற வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்கும். ஒருபக்கம் அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை. அடுத்த ஆண்டு (1969) துவக்கத்திலும் புற்றீசல்கள் போல வரிசையாகப்படங்கள். அந்த ரேஸில் தங்கச்சுரங்கம், அஞ்சல்பெட்டி 520, நிறைகுடம் போன்ற நல்ல படங்கள் அடிபட்டன. (காவல் தெய்வமும், குருதட்சணையும் தனியாக வந்திருந்தாலும் அவ்வளவுதான் ஓடியிருக்கும்).

உங்கள் பதிவைத்தொடர்ந்து அப்படம் சம்பந்தமாக கூடுதல் தகவல்களைத் தந்த ராகவேந்தர் சார், சாரதா, பம்மலார் ஆகியோரின் பதிவுகளும் சுவையாக உள்ளன.

நேற்றிரவு வசந்த் தொலைக்காட்சியில் முதன்முறையாக சிவாஜி புரொடக்ஷன்ஸ் 'நீதியின் நிழல்' படம் பார்த்தேன். இளைய திலகத்தின் நடிப்பு நன்றாக இருந்தது. நடிகர்திலகம் கௌரவத்தோற்றத்தில் நடித்திருந்தார். திரு வி.சி.சண்முகம் அவர்களின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்ட கடைசிப்படம் என்று நினைக்கிறேன்

Mahesh_K
15th June 2011, 01:05 PM
இன்றைய முன்னணி நடிகர்கள் பொதுவாக ஆண்டுக்கு ஒரு படம் சராசரியாக நடிக்கிறார்கள். வித்தியாசமான கேரக்டர் என்று வரும்போது கூடுதலாக கேரக்டர் ஸ்டடி, ஹோம் ஒர்க் செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் ஓராண்டுக்கு மேல் கூட இடைவெளி வந்துவிடுகிறது

ஆனால் 250 படங்களில் கதாநாயகனாக நடிக்க nt க்கு ( 1952 முதல் 1985 வரை ) 33 ஆண்டுகள் தான் தேவைப்பட்டது. அதாவது ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் உள்ள சராசரி இடைவெளி வெறும் 48 நாட்கள் தான்.

இந்த 48 நாள் இடைவெளியில் தான் இவ்வளவு வித்யாசமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் இரட்டை வேடம், மூன்று வேடம் வேறு.

இவ்வளவு ஏன், 9 வேடங்களில் நடித்த நவராத்திரி படம் வெளிவந்த அதே நாளில் இன்னொரு படம் முரடன் முத்துவும் வருகிறது. முந்தைய படமான புதிய பறவைக்கும் இந்த இரு படங்களுக்கும் உள்ள இடைவெளி 51 நாட்கள் மட்டுமே.

51 நாட்களில் - 10 ௦ மாறுபட்ட வேடங்கள் செய்ய முடிந்திருக்கிறது. . அதனால்தான் அவரை பிறவி நடிகர் என்கிறார்கள்.

Cinemarasigan
15th June 2011, 01:25 PM
இன்றைய முன்னணி நடிகர்கள் பொதுவாக ஆண்டுக்கு ஒரு படம் சராசரியாக நடிக்கிறார்கள். வித்தியாசமான கேரக்டர் என்று வரும்போது கூடுதலாக கேரக்டர் ஸ்டடி, ஹோம் ஒர்க் செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் ஓராண்டுக்கு மேல் கூட இடைவெளி வந்துவிடுகிறது

ஆனால் 250 படங்களில் கதாநாயகனாக நடிக்க nt க்கு ( 1952 முதல் 1985 வரை ) 33 ஆண்டுகள் தான் தேவைப்பட்டது. அதாவது ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் உள்ள சராசரி இடைவெளி வெறும் 48 நாட்கள் தான்.

இந்த 48 நாள் இடைவெளியில் தான் இவ்வளவு வித்யாசமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் இரட்டை வேடம், மூன்று வேடம் வேறு.

இவ்வளவு ஏன், 9 வேடங்களில் நடித்த நவராத்திரி படம் வெளிவந்த அதே நாளில் இன்னொரு படம் முரடன் முத்துவும் வருகிறது. முந்தைய படமான புதிய பறவைக்கும் இந்த இரு படங்களுக்கும் உள்ள இடைவெளி 51 நாட்கள் மட்டுமே.

51 நாட்களில் - 10 ௦ மாறுபட்ட வேடங்கள் செய்ய முடிந்திருக்கிறது. . அதனால்தான் அவரை பிறவி நடிகர் என்கிறார்கள்.

250 movies in 33 years... Really Amazing!!

mr_karthik
15th June 2011, 02:17 PM
மகேஷ் சார்,

புதிய பறவை வெளியான பின் 51 நாட்களில் நவராத்திரி படம் துவக்கப்பட்டது போல தோற்றமளிக்கிறது உங்கள் பதிவு. உண்மையில் 1963-ல் 'குலமகள் ராதை' வெளியான கையோடு நவராத்திரி தயாரிக்கத் துவங்கப்பட்டு விட்டது.

ஒரே நேரத்தில் அன்னை இல்லம், நவராத்திரி, கர்ணன், பச்சை விளக்கு, ஆண்டவன் கட்டளை, கை கொடுத்த தெய்வம், புதிய பறவை ஆகியவை தயாரிப்பில் இருந்தன. காலையில் ஒரு படம் ஷூட்டிங் போனால், மதியம் இன்னொரு படம் ஷூட்டிங் போவார். சிலநேரங்களில் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டால் மூன்று ஷிப்ட்கள் கூட வேலை செய்திருக்கிறார். ஆனால் இங்கு மற்றவர்கள் சொன்னது போல, சரியாக அந்தந்தப் பாத்திரங்களில் நுழைந்துகொள்வார். ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று எவ்வளவு வித்தியாசமான பாத்திரங்கள். கர்ணன் வெளியாகி சிலநாட்களில் இன்னொரு வித்தியாசமான ரோலாக 'முரடன் முத்து' துவங்கப்பட்டு விட்டது.

அதுவும் அப்படங்களை இயக்கியவர்கள் எப்பேற்பட்ட இயக்குனர்கள் என்று பாருங்கள். பி.மாதவன், ஏ.பி.நாகராஜன், பி.ஆர்.பந்துலு, ஏ.பீம்சிங், கே.சங்கர், கே.எஸ்.கோபால கிருஷ்ணன் மற்றும் தாதா மிராஸி. ஒரே சமயத்தில் இத்தனை ஜாம்பவான்களோடு பணியாற்றும் இப்படிப்பட்ட வாய்ப்பு வேறு எந்த கதாநாயகனுக்கும் கிடைத்திருக்காது.

Mahesh_K
15th June 2011, 03:27 PM
ஒரே நேரத்தில் பல படங்களின் படப் பிடிப்பு நடந்து வந்தது - ஒரு படம் முடிந்த பின்பு தான் அடுத்த படம் என்ற நிலை அப்போது இல்லை என்பது சரியே.

48 நாட்களுக்கு ஒரு படம் வெளியாகும்போது Home work , கேரக்டர் ஸ்டடி , ஷூட்டிங் எல்லாவற்றிற்கும் சேர்த்து கிடைக்கும் சராசரி கால அவகாசம் மிகக் குறைவாக இருக்கும் என்பதுதான் நான் சொல்ல வந்தது.

Mahesh_K
15th June 2011, 07:24 PM
இன்று இரவு 8 மணிக்கு கே டிவி யில் தில்லான மோகனம்பாள்...

Plum
15th June 2011, 09:47 PM
Thillana Mohanambal on KTV. Edhai solvadhu? Edhai viduvadhu?
Playing thavil for manorama's nadhaswaram, that casual gait in playing, all the while smilingly tolerating Jil jil's abaswaram, and in one movement, raising his hands in mirthful resignation saying "aiyaoyo jillu enakku nayanamE maRandhudum pOlirukku". If ever I fell in love with a man, it will be this man. And that coming from a homophobe.

One of the rare - if not the only ever - occurences of Manorama ACTUALlY being endearing on screen
"Athi indha nAyanathulEyum adhE saththam dhaan varudhu" :lol:

Plum
15th June 2011, 09:51 PM
What ye movie.

Balaji(grabbing nagesh's hands passionately on hearing mohana is waiting for him): nAn romba bhAgyasAli. vaithi!
Nagesh: en kaiya En(gestures him out) :lol:

Plum
15th June 2011, 10:08 PM
The problem with Sivaji movies is - with due respect - when he is not on screen, even if the others they try their best, they are about a million light years off his standard. This makes the movie inconsistent and therefore, frustrating, in the bigger picture. Even a wholesomely delightful Thillana M is not an exception. With the exception of Nagesh, absolutely no one is capable of holding a frame together in NT's absence. Some of them manage to give a good supporting act in his presence but when he is not there, a disconcerting fall in the standards.

Padmini - pongalO pongal
Just now the minor balaji thirundhi pesum scene - ennA oru pongal

RAGHAVENDRA
16th June 2011, 02:07 AM
டியர் ப்ளம்,
தில்லானா மோகனாம்பாள் திரைக்காவியத்தைப் பார்த்துக் கொண்டே தாங்கள் பகிர்ந்து கொண்ட எண்ணங்கள் நம் அனைவரின் எண்ண ஓட்டத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது. பாராட்டுக்கள்.

சென்னை சாந்தி திரையரங்கில் நாளை 17.06.2011, வெளியாக உள்ள மன்னவன் வந்தானடி திரைக்காவியத்திற்கு, நம் நடிகர் திலகம் இணைய தளம் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ள சிறிய அளவிலான பதாகையின் பிரதி உங்கள் பார்வைக்கு -

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/mvsitebnrfw.jpg

அன்புடன்

groucho070
16th June 2011, 07:10 AM
The problem with Sivaji movies is - with due respect - when he is not on screen, even if the otherw they try their best, they are like about a million light years off his standard. This makes the movie inconsistent and therefore, frustrating, in the bigger picture. Even a wholesomely delightful Thillana M is not an exception. With the exception of Nagesh, absolutely no one is capable of holding a frame together in NT's absence. Some of them manage to give a good supporting act in his presence but when he is not there, a disconcerting fall in the standards.

Padmini - pongalO pongal
Just now the minor balqai thirundhi pesum scene - ennA oru pongalI think it applies many other films, but this. Here, you can let go of NT, and still enjoy the other minor characters, but I guess it's the script, and the characters (novel based illa?). Where's PR when you need him.

The train scene is classic!!! Mention this film, I remember the train scene. The ensemble cast, everyone in single frame!

Mahesh_K
16th June 2011, 12:59 PM
I think it applies many other films, but this. Here, you can let go of NT, and still enjoy the other minor characters, but I guess it's the script, and the characters (novel based illa?). Where's PR when you need him.

The train scene is classic!!! Mention this film, I remember the train scene. The ensemble cast, everyone in single frame!


Thillana....

APN's masterpiece..
Best among Sivaji -Padmini movies
Best ever performance by Nagesh & Manorama

rsubras
16th June 2011, 01:04 PM
The problem with Sivaji movies is - with due respect - when he is not on screen, even if the otherw they try their best, they are like about a million light years off his standard. This makes the movie inconsistent and therefore, frustrating, in the bigger picture. Even a wholesomely delightful Thillana M is not an exception. With the exception of Nagesh, absolutely no one is capable of holding a frame together in NT's absence. Some of them manage to give a good supporting act in his presence but when he is not there, a disconcerting fall in the standards.

Padmini - pongalO pongal
Just now the minor balqai thirundhi pesum scene - ennA oru pongal

true....... even in scenes involving Sivaji, sometimes the struggle of co-actors is evident....... AVM Rajan for example in Thillana Moganambal....... paarkurathukke paavama irukkum.... antha nadhaswaratha vaai la vachikittu enna panrathunnu theriyaama pentha pentha muzhippar........ in front of Sivaji's adroit handling of nadhaswaram AVM Raajan looked like (atleast for me) ezhuthatha pen ah kai la vachikittu aana teacher kitta eppadi solrathu theriyaama antha pen ah vala ezhuthara maathiri baavala kaatara Student .... :)

Plum
16th June 2011, 01:55 PM
grouch, no I dont agree. Only Nagesh holds frames together when NT is not on screen. Baliah gets a vengala kiNNam.
Padmini - pongalO pongal. In Jil Jil's nadaga kottAi, as they meet after a dispute, azhagu kAttuvadhu - look at the difference between NT's and Padmini's expressions. Ofcourse, nAttiyakAri so adhukkAga konjam exaggerate paNNi irukkalAm but still I find the performance over-cooked.

TRR, Danaal, Sarangapani and co. - passable but inconsistent.
Balaji, Nambiar and the mirasdAr - Balaji comes out top among these. Enough said
Madanpur rANi - :(. unsahikkable
Manorama- granted, her best performance ever and a lovely character.
I maintain that I can only ever watch NT scenes and Nagesh scenes without flinching.

One flaw in the movie is both Balaji and Nambiar episodes go through the same conflict resolution method. My guess is that the Madanpur episode must have been much longer and with more meat in the novel. Here, it just about serves the purpose of closing out the movie.
A classic no doubt due to the memorable characters but because of NT's excellence, performances look inconsistent to me atleast.

It is very close to my heart as it is one of my father's absolute favourites - he apparently watched it 29 times over a month and a half after it was released. That's a family record for his extended family. But I am sure there are many here who would have beaten that record.

groucho070
16th June 2011, 02:20 PM
Plum, How did we both missed talking about AVM Rajan? :lol: Rsubras correct-a pudicharu parungga. Anyway, due to the nature of this thread, we might as well don't.

vidyasakaran
16th June 2011, 02:27 PM
And that coming from a homophobe.


Homophobe?

Plum
16th June 2011, 02:59 PM
grouch, it was a refreshing change to see AVM Rajan underplay - not by choice but by compulsion being unable to figure how to play the role. It was a relief that he didnt know how to act this role - thappichOm!

Dinesh84
16th June 2011, 03:08 PM
Nagesh and Balaiah at their best :bow:
Rajan, nadippu nu panra kodumaya paarkavae mudiyala..

groucho070
16th June 2011, 03:10 PM
Especially Balaiah. After Kathalukku Neeramillai, and possibly Thiruvilayadal (you love to hate him there), his best.

saradhaa_sn
16th June 2011, 03:12 PM
true....... even in scenes involving Sivaji, sometimes the struggle of co-actors is evident....... AVM Rajan for example in Thillana Moganambal....... paarkurathukke paavama irukkum.... antha nadhaswaratha vaai la vachikittu enna panrathunnu theriyaama pentha pentha muzhippar........ in front of Sivaji's adroit handling of nadhaswaram AVM Raajan looked like (atleast for me) ezhuthatha pen ah kai la vachikittu aana teacher kitta eppadi solrathu theriyaama antha pen ah vala ezhuthara maathiri baavala kaatara Student .... :)
ஏ.வி.எம்.ராஜனின் 'தங்கரத்தினம்' கேரக்டர் இடையில் சேர்க்கப்பட்ட காரணம் குறித்து ஏற்கெனவே நம்ம முரளி சீனிவாஸ் அண்ணா விளக்கியிருந்தார்...

அதாவது கதைப்படி சிக்கல் சண்முக சுந்தரம் ஒரு பாத்திரம்தான், அவருக்கு சகோதரர் பாத்திரம் எதையும் திரு. கொத்தமங்கலம் சுப்பு படைக்கவில்லை. ஆனால் படத்தில் நாதஸ்வரம் வாசிப்பதற்காக மதுரை திரு எம்.பி.என்.சேதுராமனை அணுகி, நடிகர்திலகத்துக்காக படத்தில் வாசிக்க வேண்டும் என்று கேட்டபோது, 'நான் மட்டும் தனியாக எங்கும் வாசிப்பதில்லை. என் தம்பி பொன்னுசாமிக்கும் சேர்த்து வாய்ப்பளிப்பதாக இருந்தால் சொல்லுங்கள் இருவரும் வந்து படத்தில் வாசிக்கிறோம்' என்று கறாராகப் பேசியதால் புதிதாக இடையில் செருகப்பட்ட பாத்திரம்தான் சண்முகசுந்தரத்தின் தம்பி தங்கரத்தினம் பாத்திரம். அதில் ஏ.வி.எம்.ராஜன் நடிக்க வைக்கப்பட்டார். ஸாரி, 'நடிக்க' வைக்கப்படவில்லை. அண்ணனோடு நாதஸ்வரம் வாசித்தது போக மற்ற நேரங்களில் கூட்டத்தோடு 'நிற்க' வைக்கப்பட்டார்.

1968-ல் அவரும் ஒரு கதாநாயகனாக வலம் வந்துகொண்டிருக்கும்போது, அவருக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படாதது ஏ.பி.என் செய்த அநியாயம் என்றுதான் சொல்ல வேண்டும். நடிகர்திலகத்துடன் நடிக்கிறோம் என்ற பெருமைக்காக அவரும் பொறுத்துப்போயிருப்பார் என்று நம்புகிறேன். தங்கவேலுவுக்கும், டி.ஆர்.ராமச்சந்திரனுக்கும், ஈ.ஆர்.சகாதேவனுக்கும் வழங்கப்பட்ட வாய்ப்புக்கூட ராஜ்னுக்கு இல்லை. அவர் வாய்திறந்து பேசும் இடங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். (மனோரமா: "அடி ஆத்தி, சின்னவுகளா? நல்லா இருக்கியளா?")

saradhaa_sn
16th June 2011, 03:17 PM
Especially Balaiah. After Kathalukku Neeramillai, and possibly Thiruvilayadal (you love to hate him there), his best.

........................and 'Ooty varai uRavu'.

groucho070
16th June 2011, 03:20 PM
Oh that too....actually list-u neendikitte pogum. I even liked him in Ethiroli. I like him. Damn, I miss these kind of character actors, him, SV Suppiah, Ranggarao....gems, treasures!!

rsubras
16th June 2011, 03:40 PM
Another thing about Thillana Mohanambal.......the film is devoid of most of the accepted and beaten to death filmy cliches........ In usual films, the hero will be all over the film appearing in virtually all of the scenes...but here the protoganist is depicted not as a hero but a normal man with usual weaknesses.... When the heroine was in danger from the villain, it was a Saadhu who arranges for local men to fight against the villain's henchman and not the hero..... in general through out the film, whenever the heroine's dignity was under threat it was either the situation or some other character artists who bail her out rather than the hero...... In fact the hero, falling victim to the circumstances, even let down the heroine in the climax........ not sure if any Top heroes (in their peak form) would have agreed to take such a characterisation (there had been instances, even if the original stories had such kind of characterisation, either the director or hero would have made some alteration to suit to the hero's "image")

saradhaa_sn
16th June 2011, 03:48 PM
Another thing about Thillana Mohanambal.......the film is devoid of most of the accepted and beaten to death filmy cliches........ In usual films, the hero will be all over the film appearing in virtually all of the scenes...but here the protoganist is depicted not as a hero but a normal man with usual weaknesses.... When the heroine was in danger from the villain, it was a Saadhu who arranges for local men to fight against the villain's henchman and not the hero..... in general through out the film, whenever the heroine's dignity was under threat it was either the situation or some other character artists who bail her out rather than the hero...... In fact the hero, falling victim to the circumstances, even let down the heroine in the climax........ not sure if any Top heroes (in their peak form) would have agreed to take such a characterisation (there had been instances, even if the original stories had such kind of characterisation, either the director or hero would have made some alteration to suit to the hero's "image")
நாதஸ்வர வித்தையில் சக்கரவர்த்தியாக விளங்கினாலும், சாதாரண மனிதனாக பலவீனங்கள் நிறைந்த கதாபாத்திரமாக சண்முக சுந்தரத்தை கொத்தமங்கலம் சுப்புவும், ஏ.பி.நாகராஜனும் படைத்திருந்தது, நடிகர்திலகத்துக்கு பலமா பலவீனமா என்பது இன்றுவரை புதிராக உள்ளது.

படம் Highly Classical and Technical என்பதில் சந்தேகமில்லை, எனினும் நடிகர்திலகத்தின் தீவிர வெறியர்களுக்கு சற்று சறுக்கலாகத் தோன்றும் பலவீனங்கள்.....

** திருவிழாவில் வேட்டு சத்தத்துக்காக கோபப்பட்டு ஒப்பந்தத்தை மீறி பாதியில் எழுந்து செல்வது.

** ரயிலில் அவ்வளவு தீர்க்கமாக காதலைப் பறிமாறியபின்னரும், மோகனா வீட்டு வாசலில் மைனரைப் பார்த்ததும் மோகனா மீது சந்தேகப்பட்டு, கோயிலில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கும் மோகனாவைப் பார்த்ததும் எதுவும் கேட்காமல், முகத்தை மறைத்துக்கொண்டு குதிரை வண்டியில் செல்வது.

** ஆஸ்பத்திரியில் தனக்கு சிகிச்சையளிக்கும் நர்ஸ் எம்.பானுமதியின் பணிவிடைகளைப்பார்த்து, அவசரப்பட்டு காதல் என்று முடிவு பண்ணுவது....

** மனது திடமில்லாமல், பலவீனப்பட்டு ரமாமணி (மனோரமா) வுடன் மலேயா போக எத்தனிப்பது....

** மதன்பூருக்கு மோகனாவும் வருகிறாள் என்று சவடால் வைத்தி சொன்ன பொய்யை நம்பி, ஒப்பந்தப்பத்திரத்தைப் படித்துப்பார்க்காமல் கையெழுத்துப்போடுவது...

** 'நலந்தானா' பாடி மோகனா தன் தூய காதலைப் புரியவைத்த பின்னரும், உச்சகட்ட கொடுமையாக, மதன்பூர் மாளிகையிலிருந்து வரும் மோகனாவை சந்தேகப்படுவது.....

Plum
16th June 2011, 03:59 PM
saaradha, adhellAm dhAnE padaththin valimai? Without all that, the movie would have fizzled out especially over time.

BTW, there is one type of people who keep saying abotu certain other movies of old times "idhu dhAmpA entertainer. pAttu irukku, fight irukku, message irukku, nalla energetic hero unlike azhumoonji movies" apdinnu.

indha padaththai vida wholesome entertainer andha kAlathula veRA yArum koduthadhillai enbadhu en thimirAna abiprAyam.

saradhaa_sn
16th June 2011, 04:13 PM
saaradha, adhellAm dhAnE padaththin valimai? Without all that, the movie would have fizzled out especially over time.

BTW, there is one type of people who keep saying abotu certain other movies of old times "idhu dhAmpA entertainer. pAttu irukku, fight irukku, message irukku, nalla energetic hero unlike azhumoonji movies" apdinnu.

indha padaththai vida wholesome entertainer andha kAlathula veRA yArum koduthadhillai enbadhu en thimirAna abiprAyam.
உண்மைதான். அந்த பலவீனங்களை பலங்களாக மாற்றியதில்தான் படத்தின் வெற்றியே அடங்கியுள்ளது.

அதனால்தான் அன்றைக்கும் பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாது, இன்றைக்கும் தமிழ்க் கலாச்சாரத்தைச் சொல்லும் படங்களில் தலையாததாக இருக்கிறது. தவிர எத்தனைமுறை பார்த்துவிட்டபோதிலும் சலிப்புத்தோன்றாத வெகுசில படங்களில் தில்லானாவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

parthasarathy
16th June 2011, 05:23 PM
உண்மைதான். அந்த பலவீனங்களை பலங்களாக மாற்றியதில்தான் படத்தின் வெற்றியே அடங்கியுள்ளது.

அதனால்தான் அன்றைக்கும் பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாது, இன்றைக்கும் தமிழ்க் கலாச்சாரத்தைச் சொல்லும் படங்களில் தலையாததாக இருக்கிறது. தவிர எத்தனைமுறை பார்த்துவிட்டபோதிலும் சலிப்புத்தோன்றாத வெகுசில படங்களில் தில்லானாவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

Yes. Thillana Mohanambal has been chosen and shown in foreign countries including USA and Russia in terms of reference to Tamil Culture, which stands testimony to the dedication and team work of the whole team involved in the making.

And, as usual, NT has acted in this movie as one of the team members throughout - as Mr. Subra pointed out, as a normal human being with weaknesses, without any of usual heroics of various heroes those days.

This is the one movie of those times, which stood the test of time and is being viewed predominantly even now and will be forever. The beauty of the movie lies in the script and direction and the way the great APN handled innumerable characters. (even the veththalappotti character - M. Saroja!).

R. Parthasarathy

parthasarathy
16th June 2011, 05:31 PM
அன்புள்ள திரு. முரளி அவர்களே,

நீண்ட நாட்களுக்குப் பிறகு, தங்களின் ஆய்வுக் கட்டுரை - எனக்கு மிகவும் பிடித்த "எங்க ஊர் ராஜா" படத்தைப் பற்றி -உங்களுடைய வழக்கமான நடையுடன். அற்புதமான, ஆனால் ஆழமான அலசல். "ராமன் எத்தனை ராமனடி" போலவே, இந்தப் படத்தின் கடைசி இருபது நிமிடங்களும் மிகச் சிறப்பாக, கோர்வையாக வந்திருக்கும். (of course, due to the one man show by NT).

தங்களிடமிருந்து இன்னும் இதுபோல் மற்ற படங்களைப் பற்றியும் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,

பார்த்தசாரதி

Mahesh_K
16th June 2011, 05:47 PM
Another thing about Thillana Mohanambal.......the film is devoid of most of the accepted and beaten to death filmy cliches........ In usual films, the hero will be all over the film appearing in virtually all of the scenes...but here the protoganist is depicted not as a hero but a normal man with usual weaknesses.... When the heroine was in danger from the villain, it was a Saadhu who arranges for local men to fight against the villain's henchman and not the hero..... in general through out the film, whenever the heroine's dignity was under threat it was either the situation or some other character artists who bail her out rather than the hero...... In fact the hero, falling victim to the circumstances, even let down the heroine in the climax........ not sure if any Top heroes (in their peak form) would have agreed to take such a characterisation (there had been instances, even if the original stories had such kind of characterisation, either the director or hero would have made some alteration to suit to the hero's "image")


நாதஸ்வர வித்தையில் சக்கரவர்த்தியாக விளங்கினாலும், சாதாரண மனிதனாக பலவீனங்கள் நிறைந்த கதாபாத்திரமாக சண்முக சுந்தரத்தை கொத்தமங்கலம் சுப்புவும், ஏ.பி.நாகராஜனும் படைத்திருந்தது, நடிகர்திலகத்துக்கு பலமா பலவீனமா என்பது இன்றுவரை புதிராக உள்ளது.

படம் Highly Classical and Technical என்பதில் சந்தேகமில்லை, எனினும் நடிகர்திலகத்தின் தீவிர வெறியர்களுக்கு சற்று சறுக்கலாகத் தோன்றும் பலவீனங்கள்.....

** திருவிழாவில் வேட்டு சத்தத்துக்காக கோபப்பட்டு ஒப்பந்தத்தை மீறி பாதியில் எழுந்து செல்வது.

** ரயிலில் அவ்வளவு தீர்க்கமாக காதலைப் பறிமாறியபின்னரும், மோகனா வீட்டு வாசலில் மைனரைப் பார்த்ததும் மோகனா மீது சந்தேகப்பட்டு, கோயிலில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கும் மோகனாவைப் பார்த்ததும் எதுவும் கேட்காமல், முகத்தை மறைத்துக்கொண்டு குதிரை வண்டியில் செல்வது.

** ஆஸ்பத்திரியில் தனக்கு சிகிச்சையளிக்கும் நர்ஸ் எம்.பானுமதியின் பணிவிடைகளைப்பார்த்து, அவசரப்பட்டு காதல் என்று முடிவு பண்ணுவது....

** மனது திடமில்லாமல், பலவீனப்பட்டு ரமாமணி (மனோரமா) வுடன் மலேயா போக எத்தனிப்பது....

** மதன்பூருக்கு மோகனாவும் வருகிறாள் என்று சவடால் வைத்தி சொன்ன பொய்யை நம்பி, ஒப்பந்தப்பத்திரத்தைப் படித்துப்பார்க்காமல் கையெழுத்துப்போடுவது...

** 'நலந்தானா' பாடி மோகனா தன் தூய காதலைப் புரியவைத்த பின்னரும், உச்சகட்ட கொடுமையாக, மதன்பூர் மாளிகையிலிருந்து வரும் மோகனாவை சந்தேகப்படுவது.....

சிக்கலார் கதாபாத்திரத்துக்கு வேண்டுமானால் இவை பலவீனமாக இருக்கலாம்.

ஆனால் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க எப்போதுமே தயங்காத நடிகர் திலகம் என்ற ஒப்பற்ற கலைஞனுக்கு இந்த அர்ப்பணிப்பு உணர்வுதான் மிகப் பெரிய பலம்.

மற்ற விஷயங்களை விடுங்கள். இந்த படத்தில் மூன்று பாடல்கள். காமெடி நடிகை மனோரமவுக்குக் கூட அதில் ஒரு பாட்டு இருக்கிறது. ஆனால் கதாநாயகனுக்குப் பாட்டு இல்லை.

எத்தனை முன்னணி கதாநாயகர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்கள்?

Plum
16th June 2011, 05:56 PM
இந்த படத்தில் மூன்று பாடல்கள்.
The decision to stick to just 3 songs - given the state of tamil filmdom then, it was a brave decision - adds a lot to the movie.

mr_karthik
16th June 2011, 06:19 PM
[QUOTE=Mahesh_K;698639
மற்ற விஷயங்களை விடுங்கள். இந்த படத்தில் மூன்று பாடல்கள். காமெடி நடிகை மனோரமவுக்குக் கூட அதில் ஒரு பாட்டு இருக்கிறது. ஆனால் கதாநாயகனுக்குப் பாட்டு இல்லை.

எத்தனை முன்னணி கதாநாயகர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்கள்?[/QUOTE]

அதுதான் தன்னையே, தன் திறமையையே நம்பும் நடிகர்திலகம்.

இந்தப்படத்தில் அவருக்கு பாடல் கிடையாது.

இதே ஆண்டில் வெளிவந்த 'லட்சுமி கல்யாணம்' பட்த்தில் அவருக்கு ஜோடியே கிடையாது. இத்தனைக்கும் அவர் உச்சத்தில் இருந்த நேரம்.

Murali Srinivas
17th June 2011, 12:14 AM
Thanks Rakesh. You had already said that you like the son more than the dad. I can understand that.



Thanks Satish. Hope you saw the movie on that day.


நன்றி ராகவேந்தர் சார்.

செந்தில் நன்றி.

மிக்க நன்றி சாரதா. 1968-ம்ஆண்டு படங்கள் என்றாலே உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதை நான் அறிவேன். அதே போல் உங்கள் பதிவு அமைந்ததில் மகிழ்ச்சி.

Thanks Rsubras and what you had said about NT's roles and his ability to switch over within a matter of hours is 100% correct.

ராதா,

நான் உங்களிடம் தொலைபேசியில் சொன்னது போல் இங்கே நாம் விமர்சனக் கட்டுரைகள் எழுதக் கூடிய படங்கள் பெரும்பாலானவை மக்களிடையே இன்னும் நன்றாக சென்று சேர்ந்திருக்க வேண்டும் என்று நாம் என்னும் படங்கள் பற்றிதான். நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்களைப் பற்றிய பதிவுகளும் விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.

கார்த்திக், நன்றி.

நன்றி சந்திரசேகர்.

சுவாமி,

நன்றி. மேலதிக தகவல்களாக பராசக்தி படத்தின் மறு வெளியீட்டு பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை பதிவு செய்ததற்கு நன்றிகள் என்றால் தில்லானா படத்தின் 14 ஊர்களில் 100 நாட்கள் சாதனை எப்படி எங்க ஊர் ராஜாவினால் பாதிக்கப்பட்டது என்பது வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

நன்றி மகேஷ்.

சாரதி நன்றி.

RAGHAVENDRA
17th June 2011, 11:53 AM
வீரன் வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றதின் 100வது நினைவு நாள் - 17.06.2011
17.06.2011 இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாளாகும். 1911ல் இந்த நாளில் தான் வீரன் வாஞ்சிநாதன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராளரும் மாவட்ட நீதிபதியுமான ராபர்ட் வில்லியம் ஆஷ் துரையை சுட்டுக்கொன்று இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்டான். அன்று ஆஷ் துரையும் அவருடைய மனைவி மேரியும் கொடைக்கானலுக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தனர். ரயில் மணியாச்சி சந்திப்பை அடைந்தது. 10 நிமிடங்கள் கழித்து அங்கு வர வேண்டிய போட் மெயில் வண்டியில் இவர்களுடைய பெட்டி இணைக்கப் பட வேண்டும். நேரம் காலை 10.38 மணி. நன்கு தோற்றமளித்த இரு இளைஞர்கள் பெட்டிக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவன் தன்னிடமிருந்த பெல்ஜியத்தில் தயாரான ப்ரௌனிங் பிஸ்டலை எடுத்து ஆஷ் துரையை சுட்டதாக சி.பி.சி.ஐ.டி. இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. குறிப்பின் படி, இரு இளைஞர்களில் ஒருவன் தப்பி விட்டதாகவும், மற்றொருவன் துரத்தப் படும் போது ஒரு கழிவறையில் புகுந்து தன்னைத் தானே மாய்த்துக் கொண்டதாகவும் கூறப் பட்டுள்ளது. தப்பி ஓடிய இளைஞன் மாடசாமி, மற்றும் மரணமடைந்தவன் வாஞ்சிநாதன் எனவும் பதிவாகியுள்ளதாக அந்தக் குறிப்பில் உள்ளது. வண்டி தொடர்ந்து திருநெல்வேலியை நோக்கிச் செல்கையில் சுமார் 11.30 மணிக்கு தன் மனைவியின் மீது சாய்ந்து மரணமுற்றதாக மற்றொரு ஆய்வேடு கூறுகிறது.

இது பற்றி மேலும் விவரங்கள் 17.06.2011 தேதியிட்ட ஹிந்து நாளிதழில் வெளியாகி உள்ளது. (http://www.thehindu.com/arts/history-and-culture/article2110600.ece)

வீரன் வாஞ்சிநாதனாக நடிகர் திலகம் தேச பக்தியை பறை சாற்றும் காட்சி


http://www.youtube.com/watch?v=7AeGzAQTOVg

அன்புடன்

Plum
17th June 2011, 01:01 PM
MS, oru vArththai SikkalAr paththiyum sollalAmE.

gkrishna
17th June 2011, 06:06 PM
http://kobikashok.blogspot.com/2010/11/blog-post_5536.html

Read this article today. Just to share.

regards

Gk

Murali Srinivas
18th June 2011, 12:24 AM
Plum,

It is not often that one finds you unplugged as you were in the last 2 days. Especially when you and Rakesh interact, it is always very absorbing to read it. Even a week or 10 days back if you remember, you two were discussing about Muradan Muthu and even there I didn't interfere. Rakesh who used to come up with short and sweet reviews earlier, is not that active now. There would be nothing novel if I, Saradha or Ragavendar discuss. Like I wanted, there were so many people, [who are not regular contributors to this thread] visited this thread and discussed about TM in the last couple of days.

But coming to your point, yes like any NT fan, Sikkalar happens to be one of my favourite characters. As many pointed out it requires great guts to don this role and NT didn't even hesitate for a second. Will pen my thoughts on Sikkalar shortly.

Regards

RAGHAVENDRA
18th June 2011, 12:39 AM
டியர் கிருஷ்ணாஜி,
சந்திரபாபுவும் நடிகர் திலகமும் பற்றிய தகவல் ஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும் போது புதியதாய் தெரிகிறது. இணைப்புக்கு வாழ்த்துக்கள்.

இருநாட்களுக்கு முன்னர் ஒரு முக்கியமான படத்தின் வெளியீட்டு நாள். நாம் அனவரும் சந்திப்பதற்கு காரணமான நடிகர் திலகத்தின் சந்திப்பு வெளியான நாள் 16.06.1983. மறக்க முடியுமா அந்த நாட்களை.

சந்திப்பு படம் வெளியாவதற்கு முன்னர் நீதிபதி ஓடிக் கொண்டிருந்த நேரம். சாந்தி திரையரங்கில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது மின்னலென என் உள்ளத்தில் ஓர் எண்ணம் பளிச்சிட்டது. இந்த சுவர்களில் ஏதாவது ஒரு இடத்தை பயனுள்ளதாக ஆக்கி, அதில் சிவாஜி ரசிகர்கள் பலன் பெறும் வகையில் செய்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது, தொடர்ந்து அதற்கான திட்டமும் அடியேனின் உள்ளத்தில் உதித்தது. இந்த சுவற்றில் நடிகர் திலகத்தின் படங்களை எழுதி பட்டியலிட்டால் என்ன... நிர்வாகி அவர்களை அணுக, அடுத்த நொடியே எனக்கு அனுமதி... அனைத்து நண்பர்களும் அப்போதே செயலில் இறங்கி விட்டோம். எங்கள் குழுவில் ஒரு நண்பர் - சக்கரவர்த்தி என்று பெயர் - மிகவும் அருமையாகவும் அழகாகவும் ஓவியம் தீட்டுவார் - அவர் உடனே சொல்லி விட்டார் ... நான் தான் அந்தப் பட்டியலை எழுதுவேன் என்று. அடியேனின் பொறுப்பு அந்தப் பட்டியலைக் கொடுத்து, எழுதும் போது அதனை சரிபார்த்து வருவது. பணம் வேண்டுமே. இடம் கிடைத்து விட்டது. பொருளுக்கும் மற்ற செலவுக்கும் நாங்கள் அனைவரும் எங்களாலான செலவைப் பார்த்துக்கொண்டு மீதத்தை வெளியில் வசூல் செய்து கொள்வது. ரசிகர்கள் பலர் தாமாக முன்வந்து பொருளுதவி அளித்தது மட்டுமன்றி உடலுழைப்பையும் அளித்தனர். அப்படிப்பட்ட ரசிகர்களில் ஒருவர் - சொன்னால் நம்ப மாட்டீர்கள் - அப்போதைய வங்கி ஒன்றில் தலைமை நிர்வாகியாக இருந்தவர் - அவர் வங்கிப் பணிகளை முடித்துக் கொண்டு நேராக சாந்திக்கு வந்து, எழதுபவருக்கு வண்ணங்கள் அடங்கிய பக்கெட்டைப் பிடித்துக் கொண்டிருப்பார் - அவரை நினைக்கையில் இப்போதும் உள்ளம் நெகிழ்கிறது. சுவற்றில் சாரம் கட்டி அதில் அமர்ந்து எழுதுவது ... இந்தப் பட்டியலை எழுதி முடிக்க கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு மேல் ஆனது. அனைவரும் அவரவர் பணிகளை முடித்து விட்டு மாலையில் எழுதி இரவு வெகு நேரம் கழித்து வீடு போய் சேர்ந்து வீட்டில் அவரவர் திட்டு உதை போன்றவற்றை வாங்கியது தனிக்கதை.
இப்படி நண்பர்கள் வசூல் செய்ய அணுகியவர்களில் திரு ஒய்.ஜி.மகேந்திரா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, திரு ஜெய்கணேஷ், மறைந்த திருமதி சுஜாதா ஜெயகர் உட்பட பலரும் அடங்குவர். இதில் சி.வி. ராஜேந்திரன் அவர்கள் பொருளுதவியோடு நிறுத்தாமல் எங்கள் அனைவரையும் அவருடைய வண்டியில் ஏற்றிக் கொண்டு உட்லண்ட்ஸ் டிரைவ் இன் - தற்பொழுது செம்மொழிப் பூங்கா உள்ள இடம் - ஹோட்டலுக்கு அழைத்து சென்று சிற்றுண்டியும் வாங்கித் தந்தார். அது மட்டுமன்றி அவ்வப்போது சாந்தி திரையரங்கில் எங்களுடைய பணிகளின் போது கூட இருந்து ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்தப் பணிகளையெல்லாம் நீதிபதிக்கும் சந்திப்புக்கும் இடையேயான காலகட்டத்தில் முடித்து சந்திப்பு திரைப்பட வெளியீடு அன்று திறந்து வைக்கப் பட்டது.

(பின்னாளில் பல ஆண்டுகள் கழித்து நடிகர் திலகத்தின் நினைவினை ஒட்டி மற்றோர் சகோதர மன்றம் அதனை சலவைக்கல்லில் பதித்து நடிகர் திலகத்தின் புகழை நிரந்தரமாக்கி நம் அனைவரின் உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்றது பெரும் மன நிறைவைத் தந்துள்ளது. )

படம் வெளியீடு அன்று அரங்கில் ஆரவாரம் விண்ணைத் தொட்டது என்றால் மிகையில்லை. குறிப்பாக உன்னைத்தான் கும்பிட்டேன் பாடல் காட்சியில் அரங்கில் ஆரவாரம் உச்சக்கட்டம். அந்த வரிகள், எனையே நம்பி இருந்தாலென்ன எவருக்கும் நான் ஓர் ஏணி, என் மேல் ஏறி உதைத்தால் கூட எனக்கென்ன நான் ஓர் ஞானி, எனக்கா வாழ்கிறேன், நான் பிறர்க்கா வாழ்கிறேன் என்ற வரிகள் ... பின்னர் எதையும் சுமக்கும் மனம் ஒன்று தேவன் தந்தான், அதற்காகவே என்னை வாழ்கென்று சொன்னான் என்ற வரிகளின் போது காமராஜரை இவர் வணங்கும் காட்சியிலும் ஆரவாரம் விண்ணைப் பிளந்து பெருந்தலைவருக்குக் கேட்டிருக்கும்.

இன்னொரு நிகழ்வு... இந்தப் பாடல் காட்சியில் நடுவில் பின்னணியில் விசில் ஒலிக்க நடிகர் திலகமும் பிரபு அவர்களும் இணைந்து நடந்து வரும் காட்சியின் பின்னணியில் நிறைய பார்வையாளர்களைக் காட்டுவார்கள். அவர்களில் அடியேனும் இருக்கிறேன் என்பதையும் மகிழ்வுடன் கூற விரும்புகிறேன்.

தங்கள் அனைவருக்காவும் கதைக்களத்தில் இடம் பெறும் அப்பாடல் காட்சி இங்கே பார்வைக்காக
அன்புடன்
ராகவேந்திரன்

கதைக்களப் பாடல்களில் நடிகர் திலகம் – 04


http://www.youtube.com/watch?v=JzD1TIiwojA

பாடல் வரிகள்

எஸ்.பி.பாலா - உன்னைத்தான் கும்பிட்டேன்
உன்னையே நம்பிட்டேன்
நான் சொன்னா நீ கொஞ்சம் கேளு
என்னைப் போல் உன்னைத்தான்
ரொம்பப் பேர் நம்பித்தான்
வாழ்கின்றார் இங்கே தான் பாரு

சௌந்தர் என்னையே நம்பி இருந்தாலென்ன
எவருக்கும் நான் ஒரு ஏணி
என் மேல் ஏறி உதைத்தால் கூட
எனக்கென்ன நான் ஓர் ஞானி
எனக்கா வாழ்கிறேன் - நான்
பிறர்க்கே வாழ்கிறேன்

உன்னைத் தான் கும்பிட்டேன
உன்னையே நம்பிட்டேன்
நான் யாரு நீ சொல்லு சாமி
தும்பிக்கை அப்பனே
சண்முகன் அண்ணனே
நீ சொன்னா கேட்காது பூமி


சரணம் 1

பாலா - உன்னைப் போல தெய்வம் கூட
இருக்காது அன்போடு
உன்னை வி்ட்டு நானும் சென்றால்
சிரிக்காது நம் வீடு

சௌந்தர் - உனக்கே தெரியும்
எனக்கிந்த நாடே வீடு
உறவென்பதே நாளும்
உழ