PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16 17

joe
13th May 2013, 12:56 PM
நீ செய்த ஒரே தவறு இந்த திராவிட கொள்ளை கூடமாம் தமிழ்நாட்டில் பிறந்ததுதானோ ?

அந்தளவிற்கு தமிழக மக்களிடம் ஒரு உள்ளதை உண்மையாக சிந்தித்து செயல் படும் மூளை இருந்திருந்தால்...தமிழகத்தை சின்னாபின்ன படித்தி வைத்துள்ள திராவிட கட்சிகள் என்றோ மூட்டையை கட்டிக்கொண்டு குப்பை போருக்க போயிருப்பார்கள்.

தமிழகத்தின் சீர்குலைவிற்கு காரணம் இந்த திராவிட கட்சிகள் தான் !

This is unwarranted here .

P_R
13th May 2013, 01:47 PM
காங்கிரஸ் ஊழல் சிரிப்பா சிரிக்குது, இதுல இந்த பேச்சு அவ1சியம் தானா :lol2:
அன்னை இந்திரா காந்தி அவர்கள் நல்லாசியுடன் எப்படிப்பட்ட ஒரு காங்கிரஸ் ஆட்சி வந்திருக்கக் கூடும் என்பதெல்லாம் தெரியாதது போலவே பேசுவது ஏனோ?

காங்கிரஸும் பிற தேசிய கட்சிகளும் ஆட்சி நடத்தும் அனேக மாநிலங்களைக் காட்டிலும் எல்லா விதத்திலும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குவது நன்கு தெரிந்தும், 'எல்லாம் நாசமாப் போச்சு' என்று இலம்பாடுவது ஏனோ?

மொத்த க்ரெடிட்டையும் காமராஜ் போட்ட விதை'க்கு மட்டுமே தருவேன் என்று அடம் பிடித்தாலும் (escape route நானே போட்டுத் தரேன் பாருங்க) - நாப்பத்தாறு வருஷம் அதுக்கு தண்ணி ஊத்தி தோட்டம் ஆக்கியிருக்காங்க. அதை acknowledge பண்ணாம பொத்தாம்பொதுவா திட்டக்கூடாது.

அரசியல் தரம் தாழ்வதைப் பத்தி எல்லாம் காங்கிரஸுக்கு பேச யோக்யதையே கிடையாது. சத்யமூர்த்தி பவன்'ல சட்டை கிழிப்பு, மண்டை உடைப்பு எல்லாம் வருடாந்திர சடங்கு தானே.

காமராஜ் ஒரு exception. அவர் தலைமுறைல, இந்தியால நிறைய இடத்துல சுதந்திரப் போராட்டத்துல ஈடுபட்ட, அர்ப்பணிப்போட அரசியலுக்கு வந்த idealists ஆட்சில இருந்தாங்க. அதுக்கு அடுத்து அந்த கட்சில வந்தவங்களோட கொள்ளை எல்லாம் பேர் போனது.

இந்த macro-context எல்லாம் விட்டுட்டு, என்னமோ 'கொள்ளை' என்பது திராவிடக் கட்சிகளின் கண்டுபிடிப்பு என்பது போலவும், அவர்கள் இல்லையென்றால் தேனாறும் பாலாறும் ஓடி வழுக்கி விழுந்திருப்போம் என்பது போல பிம்பத்தை எழுப்புவது ஒரு ஏமாற்றுவேலை.

எல்லாருக்கும் விமர்சனம் இருக்கும். அதை எப்படி சொல்றது'ன்னு இருக்கு.

ஒரு 50-60 பக்கம் backlog இருக்கு :-| எடுத்ததும், இதுக்கு ரியாக்ட் பண்ண வேண்டி இருக்கு.

RAGHAVENDRA
13th May 2013, 01:58 PM
இங்கே தற்போதைக்கு நடிகர் திலகத்தின் நடிப்பும் அவருடைய புகழும் மட்டுமே விவாதிக்கப் பட்டு வருகிறது. இங்கே திடீரென அரசியல் கருத்துப் பரிமாற்றம் ஏன் இடம் பெறுகிறது. புரியவில்லை.

சௌரிராஜன் இங்கே அரசியல் பதிவு எதுவும் பதிந்து விட்டு எடுத்து விட்டாரா ...

Gopal.s
13th May 2013, 02:02 PM
பிரச்சினை அது இல்லை . ஒரு மாநில கட்சி ,ஒரு தேசிய கட்சி என்று இருந்திருந்தால் balanced ஆக இருந்திருக்கும். ஒரே கட்சி இரண்டாகி, அதே ஆட்கள் இரண்டிலும் பிரித்து, மாறி மாறி ஆட்சி செய்யும் வினோதம் ,நம் மாநிலத்தில் மட்டுமே. காங்கிரஸ் வந்திருந்தால் பாலும் தேனும் ஓடியிருக்கும் என்ற நம்பிக்கை ரொம்பவே ஓவர். காமராஜ் ஆட்சி இன்றைய சூழ்நிலையில் யார் வந்தாலும் கனவுதான். என்னையே தேர்ந்தெடுத்தாலும் SherShaw அல்லது lee kwan yu ஆட்சிதான் try பண்ணுவேன்.
ஆனால் இங்கு தேசிய கட்சிகளுக்கு நாம் ஒரு hope கூட கொடுக்காததால் முல்லை பெரியார்,பாலாறு, காவேரி,ஹோகனேகல் ,இலங்கை பிரச்சினை, மீனவர் பிரச்சினை மற்றும் நிதி ஒதுக்கீடு அனைத்திலும் நம் மாநிலம் வஞ்சிக்க படுகிறது.
சரி,சரி எதையோ ஆரம்பித்து விட்டோம். நடிகர்திலகத்தை தொடர்வோம்.

Gopal.s
13th May 2013, 02:09 PM
இங்கே தற்போதைக்கு நடிகர் திலகத்தின் நடிப்பும் அவருடைய புகழும் மட்டுமே விவாதிக்கப் பட்டு வருகிறது. இங்கே திடீரென அரசியல் கருத்துப் பரிமாற்றம் ஏன் இடம் பெறுகிறது. புரியவில்லை.

சௌரிராஜன் இங்கே அரசியல் பதிவு எதுவும் பதிந்து விட்டு எடுத்து விட்டாரா ...
ஹா ! நான் யார், எங்கிருக்கிறேன்?நீங்களெல்லாம் யார்?

joe
13th May 2013, 03:42 PM
சிவாஜி ரசிகன் காங்கிரஸ் காரனாயிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
திராவிட இயக்கத்தவன் சிவாஜி ரசிகனாக இருப்பதில் எந்த குழப்பமும் இல்லை
பெரியார் நேசன் நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
எம்.ஜி.ஆர் ரசிகன் கருணாநிதியின் தமிழை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை.
காமராஜரை மதிப்பவன் சோனியாவுக்குத் தான் வாக்களிக்க வேண்டுமென்பதில்லை .

அது தான் பகுத்தறிவு .

இங்கே அரசியல் பேசுவதல்ல பிரச்சனை . இந்த பிரச்சனையில் இவர் செய்தது தவறு என குறிப்பிட்டு பேசுங்கள் ..போகிற போக்கில் ஒட்டு மொத்த திராவிட இயக்கத்தின் மீதும் சேறு வீசி விட்டுச் சென்றால் கேட்க ஆளில்லை என்கிற எண்ணம் வேண்டாம் . என்னைப் போன்றோர் பெரியாருக்கும் பேரன் தான் . அசைக்க முடியாத சிவாஜி ரசிகனும் தான் .

ScottAlise
13th May 2013, 03:54 PM
GRAHAPRAVESAM

வெகு நாட்களாக எனக்கு தமிழில் எழுத ஆசை மேலும் சில நண்பர்களும் தமிழில் எழுதுமாறு கேட்டுகொண்டனர் . அந்தன்படி ஒரு சின்ன முயற்சி . தவறு இருந்தால் மன்னிக்கவும்.

கிரஹப்பிரவேசம் இந்த படம் வெகு சிலருக்கு மட்டும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறன் .
ஆனால் 1976 ல் முதல் வெளியிட்டில் இந்த படம் 100 நாட்கள் வெற்றி நடை போட்டது .
ஏற்கனவே பொன்னூஞ்சல் பற்றிய பதிவின் பொது சொன்னதை போல இந்த படம் அதே தயாரிப்பாளர்கள்காக செய்யப்பட்ட படம் . இந்த படத்தின் டைரக்டர் திரு யோகானந்த் .

இந்த படம் பார்க்காதவர்களுக்கு இந்த படத்தின் கதை இதோ :

NT ஒரு லாரி டிரைவர் . அவர் தம்பி சிவகுமார் இன்ஜினியரிங் படித்துகொண்டு இருக்கிறார் அதற்காக NT வாயை கட்டி வயதை கட்டி சம்பாதிக்கிறார். அவரின் மனைவி வேற யார் நம்ம KR விஜயா.அவர்களுக்கு ஒரு சின்ன பையன். இந்த நேரத்தில் சிவகுமார் தன் படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையில் சேருகிறார் . அவரின் முதலாளி மேஜர். அவரின் மகள் ஜெயா . ஜெயா வுக்கும் சிவகுமார்க்கும் கல்யாணம் நடக்குறது . முதல் இரவில் அவள் ஒரு hysteria patient என்று NTக்கு தெரியவருகிறது . ஜெயா நல்ல குணம் உள்ள பெண் . அனைவரிடமும் அன்புடன் பழகிறார். சிவகுமார் பண உதவி செய்ய NT இப்போ ஒரு mechanic ஷாப் வைத்து

இங்கே ஜெயா கிர விஜயாவின் குழந்தையை தன் குழந்தையை வளர்கிறார். இதற்குள் 6 வருடம் ஓடிவிடிகிறது . இந்த நேரத்தில் இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வீடு கட்ட எண்ணுகிறார்கள், இதன் அணைத்து செலவையும் ஜெயா ஏற்று கொள்கிறார் .
இந்த நேரத்தில் நடத்துகிறார் இந்த நேரத்தில் சிவகுமார் அமெரிக்க செல்கிறார் . அவர் சென்று சில நாட்களில் NT ஒரு விபத்தில் அவர் கை செயல் இழந்து விடுகிறது .
கிரஹப்பிரவேசம் நடக்க சில நாட்கள் முன்பு குடும்பம் பிரிகிறது .
NT குடும்பத்தை காப்பாற்ற நாடகத்தில் பாட்டு பாடுகிறார். சிவகுமார் தாய் நாட்டுக்கு வந்த உடன் நடந்த அனைத்தும் அவருக்கு தெரியவருகிறது

பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்றாக இணைந்து கிரஹப்பிரவேசம் நடந்ததா ?

இந்த மாதிரி கேரக்டர் NTக்கு அல்வா சாப்பிடுவது போல . சும்மா பூந்து விளையாடுவர் மனுஷன் இந்த படம் முதல் பரமே முதல் கடைசி வரை அவரின் ராஜ்யம் தான் . தம்பிடம் உருகுவது ஆகட்டும் அதே தம்பி ஒரு பணகர பெண்ய் கல்யாணம் செய்ய சம்மந்தம் பேச சொன்ன உடன் கோவம் படுவதும் , தம்பி மேல தப்பு இல்ல என்று தெரிந்து மேஜர் ய் சந்திக்கும் பொழுது , வெள்ளந்தியை தான் ஒரு ஏழை என்று உண்மைய் சொல்லும் இடம் . பெண்ய் செக் செய்யும் பாங்கு, அதே பெண் ஒரு மன நோயாளி என்று தெரிந்ததும் மேஜர்யிடம் உங்க பொண்ணு இங்க வந்து உடல்நலம் குறித்து அறிந்துகொல்ல்வதும் மேஜர் யிடம் மீண்டும் தன் வீட்டுக்கு வந்ததால் இந்த நோய் வரவில்லை என்று தெரிந்துடன் நிம்மதி அடையும் இடம் டாப் கிளாஸ் .

ஜெயாவிடம் அதித அன்பு கலந்த பயம் காடும் NT தன் இஷ்டபடி தான் அனைத்தும் நடக்கும் என்று ஒரு மாயை உருவாகிறார் . கை உணமுற்றுடன் kr விஜயா விடம் கம்பை உன்றி கொண்டு உனக்கு ஒரு சகலத்தி வந்து இருக்கா பாரு என்று கண் கலங்கி சொலும் பொழுது பார்வையாளர்கள் கண் கலங்க செய்யகிறார்.
சண்டை வந்த உடன் மேஜர் யிடம் தன் மனைவிகாக ஆதரவாக பேசுவதும் அதே சமயம் அவளை கடித்துகொல்வதும் NT மட்டுமே சாத்தியம்.
NT அப்புறம் இந்த படத்தில் அதிக நடிக்க வாய்ப்பு உள்ள பாத்திரம் ஜெயாவுக்கு. அவரும் நன்றாக நடித்திருக்கிறார் . சிவகுமார் வழக்கம் போல பாந்தம் . kr விஜயாவுக்கு கடைசி 30 நிமிடங்கள் மட்டுமே நடிக்க வாய்ப்பு.

இந்த படத்தில் NT இமேஜ் பூஸ்டிங் காட்சிகளும் உண்டு . அவர் நாடகம் நடிக்கும் பொழுது ஒரு நடிகர் முதலாளி யிடம் தகறாரு செய்வர் . அப்போ அந்த முதலாளி சொல்வர் அவர் மாதிரி நடிக்க ஆசைபடாதே அது முடியாது

கை ஊனமுற்ற நிலையில் படும் பொழுது மக்கள் அவரை கிருஷ்ணர் வேஷம் போட சொல்வார்கள் அப்போ அவர் மீது கல் வீசப்படும் . அப்போ NT என் வளர்சிக்கு என் விரோதிகள் போடும் அஸ்திவாரம் இவை என்று எடுத்துகொள்கிறேன் என்று சொல்லும் யிடம் நம்ம கலா மாஸ்டர் ஸ்டைல் சொல்லவேண்டும் என்றால் கிழி கிழி .
இந்த படத்தின் மிக பெரிய பலம் திரைக்கதை . எப்போ இவர் பிரிவார்கள் என்று எதிர்பாத்து இருக்கும் பொழுது அவர்கள் சேர்த்தே வாழ்வதும் . நாம் எதிர்பாராத பொழுது பிரிவதும் தான் highlight .

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்

RAGHAVENDRA
13th May 2013, 04:07 PM
மேற்கோள் காட்டப் பட்ட சௌரிராஜனின் பதிவு இங்கு இடம் பெறவில்லை. அதற்கு விளக்கங்களும் தொடர் பதிவுகளும் இங்கு இடம் பெறுவதன் நோக்கம் புரியவில்லை...

IliFiSRurdy
13th May 2013, 04:10 PM
ஆனால் இங்கு தேசிய கட்சிகளுக்கு நாம் ஒரு hope கூட கொடுக்காததால் முல்லை பெரியார்,பாலாறு, காவேரி,ஹோகனேகல் மற்றும் நிதி ஒதுக்கீடு அனைத்திலும் நம் மாநிலம் வஞ்சிக்க படுகிறது.
சரி,சரி எதையோ ஆரம்பித்து விட்டோம். நடிகர்திலகத்தை தொடர்வோம்.

நண்பர் சவுரி சொன்னதில் எந்த தவறும் இல்லை.
தமிழ் நாட்டின் கலாசார சீரழிவிற்கு காரணம் திராவிட கட்சியே.
சரியான சமயத்தில் அந்த கட்சியை விட்டு வெளியே வந்ததால் தான்
நம் மாநிலத்தின் இரண்டு பிறவிமேதைகள் தப்பினர்.(நடிப்பரசர்,கவியரசர்)
அவர்களுக்கு அங்கு கிட்டிய அவமானம் நாடறிந்ததே.
அங்கு பல கலைஞர்களுக்கு இடமில்லை.ஒரே ஒருவருக்குத்தான் இடமுண்டு.

இப்பொழுதுள்ள காங்.என அழைக்கப்படும் கட்சி காங்கிரஸ் கட்சியே இல்லை.(காலி ஹார்லிக்ஸ் பாட்டிலில் போடப்பட்டுள்ள மைதா மாவு)மகாத்மா காந்திக்கும் சோனியா காந்திக்கும் உள்ள ஒற்றுமைதான் இந்திய தேசீய காங்கிரசிற்கும்,இந்திரா காங்கிரசிற்கும் உள்ள ஒற்றுமை.
அதே சமயம் 1972 இல் நம் சாத்தான் ஒரு குட்டியும் போட்டு விட்டதால்,இரண்டும் மாறி மாறி செங்கோலோச்சி வருகின்றன.நீங்கள் சரியாக சொன்னதுபோல,நாம்(தமிழ் மக்கள்) 45 ஆண்டுகளாக நேரடியாக குண்டர்களிடம் report செய்யாமல்,அவர்களின் இரு அடியாட்களிடம் report செய்வதால்,
கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு,பதவி உயர்வு அனைத்தும் பறி போய் அம்போ என்று நிற்கிறோம்.
ஒரே உதாரணம்.1990 களின் முற்பாதியில் மாநில அரசிறகு சரியான திட்டமிடுதல் இருந்திருந்தால்,இன்று பெங்களுரு,ஹைதராபாத் நகரங்கள் பெற்றுள்ள IT நிறுவனக்களில் ஒரு 80 சதவிகிதமாவது நம்மிடம் இருந்திருக்கும்.

Gopal.s
13th May 2013, 04:11 PM
மேற்கோள் காட்டப் பட்ட சௌரிராஜனின் பதிவு இங்கு இடம் பெறவில்லை. அதற்கு விளக்கங்களும் தொடர் பதிவுகளும் இங்கு இடம் பெறுவதன் நோக்கம் புரியவில்லை...
பதிவு எண் 3486.

RAGHAVENDRA
13th May 2013, 04:18 PM
கோபால் சார்... சும்மா நம்பரைப் போட்டு விட்டால் போதுமா... எல்லாருக்கும் தான் தெரியும் அதைப் போட.

மேலே மேற்கோள் காட்டப் பட்ட சௌரிராஜனின் பதிவு நம்முடைய திரியில் இடம் பெற்றுள்ளதா .. அதைக் கூறுங்கள்... அவர் வேறொரு திரியில் இதனை எழுதியிருக்கிறார். அதற்கு பதில் அங்கே தானே கூற வேண்டும். திராவிட கட்சிகளை குறை கூறும் போது கோபம் வந்தால் அந்த கோபத்தை அந்த திரியில் போட வேண்டியது தானே ... ஏன் தயக்கம் ... இது என்ன பாரத விலாஸ் வசனமா .. வியட்நாமில் அடித்தால் விருது நகரில் வலிப்பதற்கு... அரசியல் இல்லாமல் தங்களுடைய சிறந்த தொடரைத் தானே நாம் ரசித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டு வருகிறோம். தாங்களும் இதில் ஏன் தங்கள் பொன்னான நேரத்தை செலவிடுகிறீர்கள்.. நடிகர் திலகத்தைப் பற்றி விமர்சிக்கும் போது வராத கோபம், திராவிடக் கட்சிகளை சொன்னால் சிலருக்குப் பொத்துக் கொண்டு வருகிறது. இப்போது இந்த திரியில் யாரும் திராவிட கட்சிகளைப் பற்றி எதுவும் ஆரம்பிக்கவில்லையே. அது எங்கே ஆரம்பித்ததோ அங்கே போய் தொடர வேண்டியது தானே...இங்கே இப்போது யார் சிவாஜி ரசிகர் என்று யாராவது கேள்வி கேட்டார்களா...

Gopal.s
13th May 2013, 04:18 PM
சிவாஜி ரசிகன் காங்கிரஸ் காரனாயிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
திராவிட இயக்கத்தவன் சிவாஜி ரசிகனாக இருப்பதில் எந்த குழப்பமும் இல்லை
பெரியார் நேசன் நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
எம்.ஜி.ஆர் ரசிகன் கருணாநிதியின் தமிழை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை.
காமராஜரை மதிப்பவன் சோனியாவுக்குத் தான் வாக்களிக்க வேண்டுமென்பதில்லை .

அது தான் பகுத்தறிவு .

இங்கே அரசியல் பேசுவதல்ல பிரச்சனை . இந்த பிரச்சனையில் இவர் செய்தது தவறு என குறிப்பிட்டு பேசுங்கள் ..போகிற போக்கில் ஒட்டு மொத்த திராவிட இயக்கத்தின் மீதும் சேறு வீசி விட்டுச் சென்றால் கேட்க ஆளில்லை என்கிற எண்ணம் வேண்டாம் . என்னைப் போன்றோர் பெரியாருக்கும் பேரன் தான் . அசைக்க முடியாத சிவாஜி ரசிகனும் தான் .
இந்த திரியை பொறுத்த வரை மேற்குறிப்பிட்ட அனைவருமே சிவாஜி ரசிகர்கள் என்றால் எங்களுக்கு போதும்.

P_R
13th May 2013, 04:24 PM
பொருட்படுத்தத்தக்க கருத்தோ, உரையாடலுக்கான மொழியோ இல்லாத இடுகை என்ற போதிலும், ஒரே ஒரு பதில்

அம்போ என்று நிற்கிறோம். :rotfl:

'நேராக' ரிபோர்ட் செய்த ஆந்திராவை விட தமிழ்நாட்டு சமுதாய முன்னேற்றம் யாவரும் அறிந்ததே. அதற்கும் தேவுடுகாரு போன்ற 'குண்டர்கள்' குட்டையைக் குழப்பினது தான் காரணம் என்று சொல்வீர்களோ என்னவோ.

இதைப் பற்றி விரிவாக வேறு எங்காவது பேசலாம். இந்தத் திரியில் போகிற போக்கில் சௌரிராஜன் திட்டிச் சென்றதால், இங்கே பதில் சொல்ல நேர்ந்தது. சிவாஜி பற்றிய உரையாடல்கள் தொடரட்டும்.

தடங்கலுக்கு வருந்துகிறோம் :-)

Gopal.s
13th May 2013, 04:26 PM
தயவு செய்து அரசியல் விமரிசனங்களை இந்த திரியில் தவிர்த்து விடலாம். எல்லோருக்குமே ஒவ்வொரு கருத்து இருக்கும். எனக்கும் எல்லா அரசியல் தலைவர்களையும் விட பெரியார் ,மார்க்ஸ் பிடிக்கும். கூடிய வரை joe சொல்வது போல blanket attacks எனப்படும் பொத்தாம் பொதுவான comments related மோதல்களை தவிர்ப்போம்.(issue based OK)

P_R
13th May 2013, 04:26 PM
நடிகர் திலகத்தைப் பற்றி விமர்சிக்கும் போது வராத கோபம், திராவிடக் கட்சிகளை சொன்னால் சிலருக்குப் பொத்துக் கொண்டு வருகிறது. இப்போது இந்த திரியில் யாரும் திராவிட கட்சிகளைப் பற்றி எதுவும் ஆரம்பிக்கவில்லையே. அது எங்கே ஆரம்பித்ததோ அங்கே போய் தொடர வேண்டியது தானே.

ராகவேந்திரன் சார், இந்த திரில தானே அவர் போட்டிருக்காரு http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1042119&viewfull=1#post1042119

Gopal.s
13th May 2013, 04:34 PM
பொருட்படுத்தத்தக்க கருத்தோ, உரையாடலுக்கான மொழியோ இல்லாத இடுகை என்ற போதிலும், ஒரே ஒரு பதில்
:rotfl:

'நேராக' ரிபோர்ட் செய்த ஆந்திராவை விட தமிழ்நாட்டு சமுதாய முன்னேற்றம் யாவரும் அறிந்ததே. அதற்கும் தேவுடுகாரு போன்ற 'குண்டர்கள்' குட்டையைக் குழப்பினது தான் காரணம் என்று சொல்வீர்களோ என்னவோ.

இதைப் பற்றி விரிவாக வேறு எங்காவது பேசலாம். இந்தத் திரியில் போகிற போக்கில் சௌரிராஜன் திட்டிச் சென்றதால், இங்கே பதில் சொல்ல நேர்ந்தது. சிவாஜி பற்றிய உரையாடல்கள் தொடரட்டும்.

தடங்கலுக்கு வருந்துகிறோம் :-)
இது போங்கு ஆட்டம். தமிழ் நாடு, குஜராத் இவையெல்லாம் 1968 இலேயே மிக முன்னேறிய மாநிலம்.ஆந்திரா சில pockets நீங்கலாக மற்றவையெல்லாம் மிக பின் தங்கியவை.
தமிழ் நாட்டின் முன்னேற்றம் ,குஜராத் போல முன்னெடுத்து செல்ல படவில்லை என்பது உண்மை.

P_R
13th May 2013, 04:35 PM
இதை வேற எங்கயாவது பேசலாமே.

Gopal.s
13th May 2013, 04:39 PM
இதை வேற எங்கயாவது பேசலாமே.
எங்கே ,எப்போது,எப்படி சந்திக்கலாம்? தயார்.

RAGHAVENDRA
13th May 2013, 04:40 PM
சரி பிரபு சார்... இந்தத் திரியில் என்றே வைத்துக் கொள்வோம்... இன்று வேறொரு திரியில் இதே போன்ற கருத்தை அவர் வெளியிட்ட பிறகு தானே இங்கே அதனுடைய விவாதம் தொடங்கியுள்ளது..

இது ஒரு புறம் இருக்கட்டும்... தற்போது தான் கோபால் சார் என்னுடைய தொடருக்கு நடுவே deviate பண்ணுவது போன்று வேறு விவாதங்கள் அல்லது பதிவுகளைத் தவிர்க்க வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று முடிந்த வரை அதனை நாம் அனுசரித்து வருகிறோம். திராவிட இயக்கங்கள், காங்கிரஸ் போன்ற விவாதங்களுக்கு இங்கே இடம் போதாது. நானும் இதில் என் பங்கிற்கு பதிலளிக்க முடியும். இருந்தாலும் இதற்கு மேல் இதனை வளர்க்க வேண்டாமே... என்ற எண்ணத்தில் தான் கூறியுள்ளேன்.

ஒரே ஒரு கருத்தை மட்டும் கூற விரும்புகிறேன். என்னைப் பொறுத்த வரை எனக்கு நடிகர் திலகத்தைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது including Kamaraj. என்னைப் பொறுத்த மட்டில் நடிகர் திலகம் ஒரு நடிகரோடு நின்று விடுபவரல்ல, ஒரு சிறந்த தேசியவாதி, தன்னலம் கருதாத சிறந்த உதாரண புருஷர், ஒரு சிறந்த தலைவனுக்குரிய அத்தனை தகுதிகளையும் கொண்டவர்.

அதனால் இந்த விவாதங்களில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடில்லை.

RAGHAVENDRA
13th May 2013, 04:47 PM
டியர் ராகுல் ராம்
தமிழில் இவ்வளவு பிரமாதமாக எழுதுகிறீர்கள். இனிமேல் தமிழிலேயே தொடருங்கள். கிரஹப்பிரவேசம் படத்தைப் பற்றிய தங்கள் பதிவு விவாதங்களினுடே இருந்தாலும் அதை அனைவரும் கவனிக்கவே செய்வர். பாடல்களைப் பற்றியும் கூறுங்கள். குறிப்பாக மெல்லிசை மன்னரின் இசையில் உருவான எங்க வீட்டு ராணிக்கிப்போ பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் casual style அவருடைய வசீகரமான புன்னகை... இவற்றைப் பற்றியும் சொல்லலாம். அது என்னவோ யோகாநந்த் படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு இன்றைய கால கட்டத்தில் மிகச் சிறப்பாக எடுபடுகிறது. அதற்கு பல படங்களைச் சொல்லலாம். நடிகர் திலகத்தின் ரசிகர்களின் உள்ளங் கவர்ந்த திரைப்படங்களில் கிரஹப்பிரவேசமும் ஒன்று.

http://youtu.be/0oDSTRFhiew

IliFiSRurdy
13th May 2013, 05:07 PM
பொருட்படுத்தத்தக்க கருத்தோ, உரையாடலுக்கான மொழியோ இல்லாத இடுகை என்ற போதிலும், :-)

இருக்கலாம் ஆனால் ஊழல்களை விவரிக்க, அநீதியை விவரிக்க இந்த மொழி அதிகம்.இதற்காக சங்க இலக்கியங்களுக்கு போக வேண்டிய அவசியமில்லை.வகுப்பில் முதன் மாணவனாக இருந்தவன்,சீரழிந்து, பாஸ் மார்க் வாங்குவதற்கும் பாஸ் மார்க் வாங்கிகொண்டிருந்தவன் fail ஆவதற்கும் வேறுபாடுகள் உள்ளன.

KCSHEKAR
13th May 2013, 05:10 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் அரிய பொக்கிஷ புகைப்பட பதிவுகள் அருமை. முடிந்தால் புகைப்படத்தின் விபரத்தையும் (புகைப்படத்திலிருப்பவர்கள் பெயர் அல்லது நிகழ்ச்சி) இயன்றவரை அளித்தால் நன்று.

நன்றி

IliFiSRurdy
13th May 2013, 05:11 PM
எங்கே ,எப்போது,எப்படி சந்திக்கலாம்? தயார்.

ஜூலை மாதம் வந்தால் ஜோடி தேடும் வயது..:musicsmile::musicsmile:

மங்களூர் போண்டாவிற்கு நான் தயார்..அப்போ நீங்க?:yes:

KCSHEKAR
13th May 2013, 05:11 PM
டியர் ராகுல்ராம் சார்,

தங்களின் கிரஹப்பிரவேசம் பற்றிய பதிவு நன்று

ScottAlise
13th May 2013, 05:29 PM
டியர் ராகுல்ராம் சார்,

தங்களின் கிரஹப்பிரவேசம் பற்றிய பதிவு நன்று

thanks sir

This news I got from NET

அமரர் சிவாஜி நடித்த 'சரஸ்வதி சபதம்' படத்தை கேவலப்படுத்துகிறார்கள் என்று அவரது Saraswathi Sabathamரசிகர்கள் குமுறி ஓய்ந்துவிட்டார்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் சகஜம்தான் என்று இந்த விஷயத்தில் ஒதுங்கிக் கொள்ள முடியாது என்பது அவர்களது வாதம்.

அதே பெயரில் இன்னொரு படத்தை எடுக்க ஏஜிஎஸ் நிறுவனம் முனைந்ததுதான் இந்த கோபத்திற்கெல்லாம் காரணம். ஆனால் இந்த குமுறலையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு படத்தின் விளம்பரத்தையே ஆர்வத்தோடு ரசிக்க ஆரம்பித்தார்கள் மக்கள். கூகுள் சர்ச் என்ஜினில் 'ப்ளீஸ் கூகுள், கடவுள் எங்க இருக்காருன்னு எனக்கு காட்டு' என அந்த விளம்பரத்தில் ஒரு வாசகத்தையும் வெளியிட்டு ஆர்வத்தை தூண்டிய படக்குழு இப்போது ஜரூராக மற்ற வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.

படத்தின் இயக்குனர் சந்துரு மேற்பார்வையில் பிரமாண்டமான தேவலோக செட் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவலோகம் என்றாலே சிம்மாசனம், புகை, தேவ கன்னிகைகள் என்றெல்லாம்தானே கற்பனை வரும்? ஆனால் அங்குதான் ட்விஸ்ட்.

இந்த தேவலோகம் இந்த கம்ப்யூட்டர் காலத்திற்கேற்ப நவீன தொழில் நுட்பங்களை உள்ளடக்கி உருவாகிறது. கோட், சூட், டை கட்டிய கடவுள்கள். சிம்மாசனத்திற்கு பதிலாக சுழலும் நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள் என்று ஒரு மினி டைடல் பார்க்கையே தேவலோகமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்ளோ பண்றீங்க, இது பண்ண மாட்டீங்களா என்று பழைய தலைப்பையும் மாற்ற சொல்லி மறுபடியும் 'கிளம்புகிற' அதி தீவிர சிவாஜி ரசிகர்களுக்குதான் இந்த டீம் என்ன பதிலை வைத்திருக்கிறதென்று தெரியவில்லை.

Gopal.s
13th May 2013, 05:34 PM
GRAHAPRAVESAM

சண்டை வந்த உடன் மேஜர் யிடம் தன் மனைவிகாக ஆதரவாக பேசுவதும் அதே சமயம் அவளை கடித்துகொல்வதும் NT மட்டுமே சாத்தியம்.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்
I dont remember this scene in the movie. If it is there it would have been like nan kadavul Agori scene. How I missed it!!!!
Ragul ram, wecome with your first Tamil posting. Well done.

RAGHAVENDRA
13th May 2013, 05:49 PM
அபூர்வ நிழற்படம்

http://sphotos-b.ak.fbcdn.net/hphotos-ak-ash3/268049_570700469614228_2094919342_n.jpg

தலைவரின் அபூர்வ தோற்றம். உடனிருப்பதும் படத்திற்கு நன்றியும் ... நமது அன்பு முகநூல் நண்பர் எம்.எல்.கான் அவர்கள்

Gopal.s
13th May 2013, 07:39 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-28

கப்பலோட்டிய தமிழனின் நோக்கம், தேசியம், விடுதலைக்காக செய்த உன்னத தியாகங்கள்.ஒரு தனி மனிதன் தன் சொந்த பந்தங்கள் சொத்து சுகங்கள் அத்தனையும் தேசத்துக்காக அர்ப்பணித்த உன்னதம், தேச விடுதலைக்காக பொருளாதார ,வியாபார உத்தியை கையிலெடுத்த துணிச்சல் மிகுந்த enterprenership ,ஒரு முதலாளியாகவே இருந்தும், தொழிலாளர் உரிமைக்காக போராடும் நேர்மை, ஆதிக்கத்தை கண்டு அஞ்சாமை,ஆனால் கடைசியில் நம்பியவர்களால் கை விடப்பட்டதும் அல்லாமல், கண்டு கொள்ளாமலும் விட பட்ட சோகம் இவற்றை முன்னிறுத்திய super -objective கொண்ட உண்மை theme .

இதில் வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.

இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).

அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில்
exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.

இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.

மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase

-----To be continued ..

P_R
13th May 2013, 08:27 PM
எங்கே ,எப்போது,எப்படி சந்திக்கலாம்? தயார்.
http://www.mayyam.com/talk/showthread.php?8825-India-s-State-Assembly-Election-Results-amp-Analysis(Non-TN)&p=1042605&viewfull=1#post1042605

Gopal.s
13th May 2013, 08:31 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-29

படத்தின் துவக்கத்திலேயே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. எனக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போது class teacher என் அம்மாதான்.டீச்சர் என்றுதான் வகுப்பிலும், பள்ளியிலும் கூப்பிட வேண்டும், அம்மா என்று கூப்பிட கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. கூப்பிட கூடாது என்ற deliberate consciousness என்னை அடிக்கடி தவற வைக்கும். முதல் காட்சியில் தந்தைக்கெதிராக ஒரு வழக்கில் ஆஜராகும் போது வாய் தவறி அப்பா என்று ஆரம்பித்து மன்னிக்கவும் எதிர் கட்சி வக்கீல் என்பார். சிறிதானாலும் என்னால் மறக்க முடியாது.

ஒவ்வொருவருடனும் interract பண்ணும் போது அதற்குரிய ஒரு தனி சிறப்பான விசேஷம். சிவாவுடன் ஒரு மதிப்புக்குரிய ஆசிரிய தோழன் ,பாரதியுடன் விளையாட்டு கலந்த புரவல உரிமை, மாடசாமியிடம் மகனை போன்ற ஆனால் வேலையாள் என்ற நிலையும் தலை காட்டும் தோரணை, கப்பல் கம்பனி இயக்குன நிர்வாகிகளுடன் வணிக நோக்கம் கலந்த நட்பு,தொழிலாளர்களிடம் பரிவான ஒரு வாஞ்சை(பரிமாறிய சோற்றை எடுத்து உண்டு தரம் பார்க்கும் ஒரு leadership கலந்த exhibitionist good gesture ), adverse situation போது வெளிப்படும் assertive firmness (கப்பல் தர மறுக்கும் ஷா விடம்),திலக்கிடம் பேசும் போது பணிவும் ,மரியாதையும் கலந்த ஆங்கில(எவ்வளவு நல்ல உச்சரிப்பு) விண்ணப்பம்,ஆஷ் மற்றும் விஞ்ச் இவர்களுடன் விட்டு கொடுக்காத அலட்சிய பேச்சு என்று வ.உ .சி போல behave செய்து பாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

சிறையில் தனக்கு பழக்கமில்லாத உடலுழைப்பில் ஈடு படுத்த படும் போது விருப்பமில்லா கஷ்டத்தை வெளியிடும் முறை, மனத்தை உறுதியாக வைத்திருக்க பிரயத்தனம் கலந்த மெனக்கெடல், டாக்டருடன் interract செய்யும் போது அலட்சியம் காட்டினாலும் இதற்கு மேல் என்ன என்ற வகையிலேயே, சிறையிலிருந்து விடுதலை என்றதும் நாட்டுக்கா விடுதலை என்று மேலுக்கு பேசினாலும், வெளியில் வந்ததும் அடையும் சுதந்திர உணர்வை ,அந்த காற்று பட்ட உணர்வை, பறவைகளை பார்த்து அடையும் பரவசத்தை காட்டியும் விடுவார்.

ஏமாற்றத்தை உணர்ந்தாலும் (ஒருவர் கூட அழைக்க வராததில்), மேலுக்கு சமாதானம். சிவாவை பார்த்து அடையும் அதிர்ச்சி கலந்த பரவசம்,தம்பி மனநிலை பிறழ்வில் தலையில் அடித்து அடையும் தாங்கொணா துயரம், மக்களின் உதாசீனத்தை அனுபவித்து கூட்டுக்குள் முடங்கும் சுருக்கம், இழப்பில் காட்டும் ஏமாற்றம் நிறைந்த தனிமை சோகம் என்ற அளவில் method acting முறையில் மூன்று phases என்று வரும் நிலைகளிலும் பாத்திரத்தை வார்த்ததில் மூன்று முக்கிய compliments .

முதல் ஒன்று சிவாஜியிடம் இருந்து சிவாஜிக்கு---- நான் நடித்ததிலேயே மிக சிறந்த பாத்திரம் என்று. இரண்டாவது வ.உ.சி மகன் ஆறுமுகத்திடம் இருந்து தந்தையை தத்ரூபமாக கண்டேன் என்றது. மூன்றாவது வ.உ .சி மற்றும் சுப்ரமணிய சிவாவை அனைத்து நிலைகளிலும் நேரில் கண்ட என் தாத்தா வின் பரவச compliment . "வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.

இதற்கு மேலும் வார்த்தை ஏது சொல்ல?

-----To be continued .

Georgevob
13th May 2013, 09:42 PM
காங்கிரஸ் ஊழல் சிரிப்பா சிரிக்குது, இதுல இந்த பேச்சு அவ1சியம் தானா :lol2:
அன்னை இந்திரா காந்தி அவர்கள் நல்லாசியுடன் எப்படிப்பட்ட ஒரு காங்கிரஸ் ஆட்சி வந்திருக்கக் கூடும் என்பதெல்லாம் தெரியாதது போலவே பேசுவது ஏனோ?

காங்கிரஸும் பிற தேசிய கட்சிகளும் ஆட்சி நடத்தும் அனேக மாநிலங்களைக் காட்டிலும் எல்லா விதத்திலும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குவது நன்கு தெரிந்தும், 'எல்லாம் நாசமாப் போச்சு' என்று இலம்பாடுவது ஏனோ?

மொத்த க்ரெடிட்டையும் காமராஜ் போட்ட விதை'க்கு மட்டுமே தருவேன் என்று அடம் பிடித்தாலும் (escape route நானே போட்டுத் தரேன் பாருங்க) - நாப்பத்தாறு வருஷம் அதுக்கு தண்ணி ஊத்தி தோட்டம் ஆக்கியிருக்காங்க. அதை acknowledge பண்ணாம பொத்தாம்பொதுவா திட்டக்கூடாது.

அரசியல் தரம் தாழ்வதைப் பத்தி எல்லாம் காங்கிரஸுக்கு பேச யோக்யதையே கிடையாது. சத்யமூர்த்தி பவன்'ல சட்டை கிழிப்பு, மண்டை உடைப்பு எல்லாம் வருடாந்திர சடங்கு தானே.

காமராஜ் ஒரு exception. அவர் தலைமுறைல, இந்தியால நிறைய இடத்துல சுதந்திரப் போராட்டத்துல ஈடுபட்ட, அர்ப்பணிப்போட அரசியலுக்கு வந்த idealists ஆட்சில இருந்தாங்க. அதுக்கு அடுத்து அந்த கட்சில வந்தவங்களோட கொள்ளை எல்லாம் பேர் போனது.

இந்த macro-context எல்லாம் விட்டுட்டு, என்னமோ 'கொள்ளை' என்பது திராவிடக் கட்சிகளின் கண்டுபிடிப்பு என்பது போலவும், அவர்கள் இல்லையென்றால் தேனாறும் பாலாறும் ஓடி வழுக்கி விழுந்திருப்போம் என்பது போல பிம்பத்தை எழுப்புவது ஒரு ஏமாற்றுவேலை.

எல்லாருக்கும் விமர்சனம் இருக்கும். அதை எப்படி சொல்றது'ன்னு இருக்கு.

ஒரு 50-60 பக்கம் backlog இருக்கு :-| எடுத்ததும், இதுக்கு ரியாக்ட் பண்ண வேண்டி இருக்கு.

இதற்க்கு பதில் அவசியம் கூறவேண்டுமா? வேண்டுமென்றால் சொல்லுங்கள் பதிலிட நான் தயார் !

அசோகா சக்ரவர்த்தி மரம் நட்டார் என்று கூறினால்....s a அசோகன் கூட கோடம்பாக்கம் முழுவதும் தான் மரம் நட்டார் என்கிற வாதம் வாதமா இல்லை விதண்டாவாதமா ?

என்ன வாதம் செய்கிறோம் எதற்கு இவர்கள் அசோகா சக்ரவர்தியை பற்றி பேசுகிறார்கள் என்று படித்து தெரிந்துகொண்டு இட்டால் நன்று. பதில் சொல்வதற்கு நான் தயார்தான் அதை கேட்பதற்கு தயார என்பதை உரைத்தால் அதற்கேற்றாற்போல் பதில் உரைக்கமுடியும் !

P_R
13th May 2013, 09:47 PM
மேற்கொண்டு இங்கே பேசவேண்டாம்.
Current Affairs Sectionல நான் இட்ட இடுகைக்கு சுட்டி கொடுத்துள்ளேன். உள்ளீடுடன் பேச ஆர்வம் இருப்பின் அங்கு ஆஜர் ஆகலாம்.

Georgevob
13th May 2013, 09:49 PM
This is unwarranted here .

எது தேவை...எது தேவை இல்லை என்பதற்கு "There is no Rules of Quote".

நடிகர் திலகத்தை பற்றி எழுதும்போது அவரை முதுகில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குத்திய துரோகிகளை பற்றி கண்டிப்பாக எழுதவேண்டிவரும்.

அந்த துரோகிகள் அதற்க்கு தகுதயுடயவர்கள் தான் ! இதை இந்த உலகறியும்...உலகம் அப்படி அறியாவிட்டாலும் உண்மையான நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அறிவார்கள் ! நடிகர் திலகத்தை விட தனக்கு பிடித்த கட்சிதான் முக்கியம் என்று கருதுபவர்கள் என்னுடைய எழுத்தை படிக்க வேண்டாமே !

மேலும்.....தமிழா ! இன உணர்வு கொள் ! என்றுதான் கூறப்படிருகிறது. அதன் பொருள்....தமிழா ! இன உணர்வு கொள் என்பதே அல்லாமல் தமிழா....! இன உணர்வு ! கொல் ! என்பது அல்ல !

நான் எழுதியது...நேற்றே நடந்து முடிந்த கதை !

தொடங்கிய பிரச்சனை ஏதேனும் இருந்தால் நண்பர்கள் வரலாம் !

Georgevob
13th May 2013, 09:58 PM
மேற்கொண்டு இங்கே பேசவேண்டாம்.
Current Affairs Sectionல நான் இட்ட இடுகைக்கு சுட்டி கொடுத்துள்ளேன். உள்ளீடுடன் பேச ஆர்வம் இருப்பின் அங்கு ஆஜர் ஆகலாம்.

What I had mentioned was not pertaining to Current Affairs for your information !

However, I am not continuing my discussion based on what i have written already...I had mentioned it yesterday !

Had everyone had genuine interest they should have come and expressed it yesterday and not after 24 hours !

I do stand by what i had written ! and last but not the least

P_R sir : for your information , I am not holding the fort of Congress & Neither the Fort for Congress !
to get provoked when you write about congress calamity ....

Cheers !

Georgevob
13th May 2013, 10:06 PM
இங்கே அரசியல் பேசுவதல்ல பிரச்சனை . இந்த பிரச்சனையில் இவர் செய்தது தவறு என குறிப்பிட்டு பேசுங்கள் ..போகிற போக்கில் ஒட்டு மொத்த திராவிட இயக்கத்தின் மீதும் சேறு வீசி விட்டுச் சென்றால் கேட்க ஆளில்லை என்கிற எண்ணம் வேண்டாம் . என்னைப் போன்றோர் பெரியாருக்கும் பேரன் தான் . அசைக்க முடியாத சிவாஜி ரசிகனும் தான் .

நான் நடிகர் திலகதிற்கு மட்டுமே பேரன் ! மற்ற எவனுக்குமே பேரனோ அல்லது ரசிகனோ அல்ல !

நான் நிச்சயம் அரசியல் பேசவில்லை.! நடிகர் திலகத்திற்கு செய்த துரோகத்தையும் அவர்கள் குணத்தையும் தான் பேசினேன், பேசுவேன் !

என்னுடைய பாட்டனாருக்கு துரோகம் செய்தவர்களை என்னால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது ! காரணம் நான் என்னுடைய பாடனாரைபோலவே சோசியல் கமிட்மென்ட் அதிகம் உள்ளவன் !

P_R
13th May 2013, 10:20 PM
Sowrirajan, I want to refrain from posting here because it is distracting to those who want to discuss the films and there are some good discussions happening here. I want to heed to Mr.Raghavendran's request to not persist with the discussion here.

Had everyone had genuine interest they should have come and expressed it yesterday and not after 24 hours !
You're being funny now. I respond to age old posts all the time.

I am coming to this section after ages to catch up with Gopal's series (and ultimately didn't read anything today :-|). I saw the post Joe responded to and went there and saw the context - that Sivaji was given all sorts of hassles by the political opponents. I get all that, who is even denying such things??

But the phrases you used were what provoked me to respond. I find it grossly unfair to paint '67 as the borderline after which TN took some sort of a plunge into an abyss. I resist the narrative wherever I see it because it is composed substantially of animus and little else.

P_R
13th May 2013, 10:22 PM
I am done with this topic here. I believe those who read it sequentially, have enough information to draw inference about the course of events.

Sorry for the interruption once again folks.

Georgevob
13th May 2013, 10:40 PM
Sowrirajan, I want to refrain from posting here because it is distracting to those who want to discuss the films and there are some good discussions happening here. I want to heed to Mr.Raghavendran's request to not persist with the discussion here.

That's fine ! My intention was / is / will be the same too as per Mr.Raghavender's request.

You're being funny now. I respond to age old posts all the time.

I never mentioned about you ! I was referring to Mr.Joe ! I shall mention the name to whom am addressing it from my next post !

I am coming to this section after ages to catch up with Gopal's series (and ultimately didn't read anything today :-|). Sorry if that made you to spend sometime here and probably waste your energy !

I saw the post Joe responded to and went there and saw the context - that Sivaji was given all sorts of hassles by the political opponents. I get all that, who is even denying such things??

Nobody Denied because they cannot deny the truth as simple as that !

But the phrases you used were what provoked me to respond. I find it grossly unfair to paint '67 as the borderline after which TN took some sort of a plunge into an abyss. I resist the narrative wherever I see it because it is composed substantially of animus and little else.

Again, I never painted 67, I was referring to 53 incident and many that happened post 53.

Georgevob
13th May 2013, 10:40 PM
I park my conversation on the topic here too !

Regards
SRS

vasudevan31355
13th May 2013, 10:45 PM
என்னையே தேர்ந்தெடுத்தாலும் SherShaw அல்லது lee kwan yu ஆட்சிதான் try பண்ணுவேன்.

ஏதேது.... உங்கள் எண்ண ஓட்டத்திற்கு அளவே இல்லை போல் இருக்கிறது.... இந்தக் கொடுமையெல்லாம் செய்ய வேறு ஆசையா? பண்ற கொடுமை பத்தாதா?:banghead:

Gopal.s
14th May 2013, 07:13 AM
சொன்ன படி, நினைத்த படி எழுத முடியாமல் நிறைய distractions . நான் நிறைய யோசித்து அதை என் முறையில் மட்டும் சொல்லாமல், எல்லோருக்கும் reach ஆகும் படி செய்யவும் வேண்டி உள்ளது. திரு. சௌரி நான் உங்களை குறை சொல்லவில்லை. நடந்தவைகளை பேசுவதால் சரித்திரங்கள் நேராக்க படுவதில்லை. பின்னால் பிறந்தவர்களுக்கு, நடிகர்திலகத்திற்கு எதிராக (இத்தனைக்கும் பச்சை தமிழன்) செய்ய பட்ட பொய் பிரச்சாரங்கள், கட்டவிழ்த்து விட பட்ட வன்முறைகள் பற்றி தெரியாது. நம் அளவு அவர்களுக்கு உணர்வு பூர்வமாக உணரவும் முடியாது. அதனால் கொஞ்சம் அடக்கி வாசித்து, நடிகர்திலகம் என்பவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் அப்போது,இப்போது,எப்போதுமே என்ற அளவில் எடுத்து செல்ல முயற்சிகள் செய்வோம். திரும்ப திரும்ப எல்லோரையும் குறை சொல்லி, வாதுக்கு அழைத்து, விரோதிகளை அதிகமாக்கி கொள்வதில் அர்த்தமில்லை. அவரை பற்றி எல்லோரையும் உணர செய்வோம். நானே ஒரு Blog தொடங்கி நிறைய விஷயங்கள் பேச ஆசை. ஆனாலும், நம்மிடைய பிறந்த உலக மேதைக்கு கிடைக்க வேண்டிய இடம், அங்கீகாரம்,உன்னதம், எதிர்கால சந்ததிகளுக்கு சொல்ல வேண்டிய முறை என்பதை மனதில் நிறுத்தி, எனக்கிருக்கும் நேரத்தை நடிகர்திலகத்திற் காக மட்டுமே செலவிடுகிறேன்.
அதனால் கொஞ்சம் மற்றவர்களின் கவனத்தை சிதைக்காமல் செயல் படுவோம். அடுத்ததாக ஒரு Stella Adler ,ஒரு Meisner ,இன்னொரு Oscar wilde உதாரணம் கொடுத்து தலா ஒரு படம் எடுத்து ஆய்வு செய்து முடித்து விடுகிறேன். பிறகு திரி முழுதும் உங்களுடையது. என் தலையீடொ தொந்தரவோ இருக்கவே இருக்காது.நடிகர்திலகம் பட்ட பாட்டிற்கு உரிய பலன் அடையாதது போலவே, அவர் பக்தர்களும் உணர்கிறோம். விந்தை!!! அரட்டைகளுக்கு ஐநூறு response ,ஆனால் தொடர் வினை எதிர்பார்த்து பதித்தால் ஒரு சிலரிடமிருந்து சின்ன response .இதை படிப்பது எனக்கு நீங்கள் செய்யும் நன்மையல்ல. நடிகர்திலகத்தின் நடிப்பை புதிய கோணத்தில் அணுக உங்களுக்கே நீங்கள் செய்து கொள்ளும் நன்மை.
ஊதுகிற சங்கை ஊதி விட்டேன். கடமை முடிந்தது. ஆனால் இறுதி மூச்சு உள்ள வரை என் நடிப்பு தெய்வத்தின் படங்களில் இருந்து எப்போதுமே புதுமை உணர்வு,புது விஷயங்கள் கிடைத்த படியேதான் இருக்கும் என்பது திண்ணம். இனியாவது தமிழர்கள் தனி மனித image தொழும் மாயையில் இருந்து மீண்டு உண்மை தமிழனின் உன்னதம் போற்றட்டும்.

RAGHAVENDRA
14th May 2013, 07:17 AM
டியர் கோபால் சார்
கப்பலோட்டிய தமிழன் படத்தைப் பார்த்து முடித்து விட்டு எந்த உணர்வுடன் வீடு திரும்புவோமோ அதே உணர்வைத் தங்கள் பதிவுகளைப் படித்து முடித்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் என்பது திண்ணம். உங்கள் தாத்தாவின் வார்த்தைகள் ... அனுபவ பூர்வமான வை ... real testimonial to the talent ...

கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் உயிரோட்டமாக விளங்குவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் இசையமைப்பாளர் ஜி.ராமநாதனின் பணியே ஆகும். பாரதியாரின் பாடல்கள் அவருடைய இசையில் ஜீவன் பெற்று படம் முழுதும் உலா வந்தன என்பது உண்மை.

இன்னும் சொல்லப் போனால் இப்படத்தில் இடம் பெற்ற விடுதலை வீரர்களின் கதாபாத்திரங்களுக்குள்ளும் பணியாற்றிய மற்ற கலைஞர்களுக்குள்ளும் அந்த ஒரிஜினல் வீரர்களின் ஆன்மா புகுந்து கொண்டது என்பதே உண்மை. Each and every character had its own vibration and the whole film has a separate vibration which forces its impact on the viewers each and every time when one watches the film.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தப் பாடல் காட்சி

http://youtu.be/mz6bkZvpq-Q

நடிப்புப் பள்ளியாவது ஒண்ணாவது, எனக்கு அதெல்லாம் ஒண்ணும் தெரியாதப்பா, எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நான் பண்ணும் கேரக்டர் சிறப்பாக வரவேண்டும் அதற்கு கலைவாணியின் அருள் வேண்டும் என்று சிந்திப்பது போல் நடிகர் திலகத்தின் பணி ஒவ்வொரு படத்திலும் அமைவது இதில் இன்னும் சிறப்பாக தெரியும்.

PORTRAYING A REAL LIFE CHARACTER WHOSE PERSONALITY WAS KNOWN WELL AND LIVE AMONG THE SOCIETY, IS THE MOST CHALLENGING TASK FOR AN ACTOR AND ONLY A FEW HAVE ATTAINED THE DISTINCTION OF DOING THIS PERFECTLY. AND THE FIRST, FOREMOST, AND ROLE MODEL IS NADIGAR THILAGAM SIVAJI GANESAN.

கப்பலோட்டிய தமிழன் மூலம் இந்தியாவின் எட்டாவது உலக அதிசயத்தை மேலும் மெருகேற்றி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
14th May 2013, 07:21 AM
சொன்ன படி, நினைத்த படி எழுத முடியாமல் நிறைய distractions . நான் நிறைய யோசித்து அதை என் முறையில் மட்டும் சொல்லாமல், எல்லோருக்கும் reach ஆகும் படி செய்யவும் வேண்டி உள்ளது. திரு. சௌரி நான் உங்களை குறை சொல்லவில்லை. நடந்தவைகளை பேசுவதால் சரித்திரங்கள் நேராக்க படுவதில்லை. பின்னால் பிறந்தவர்களுக்கு, நடிகர்திலகத்திற்கு எதிராக (இத்தனைக்கும் பச்சை தமிழன்) செய்ய பட்ட பொய் பிரச்சாரங்கள், கட்டவிழ்த்து விட பட்ட வன்முறைகள் பற்றி தெரியாது. நம் அளவு அவர்களுக்கு உணர்வு பூர்வமாக உணரவும் முடியாது. அதனால் கொஞ்சம் அடக்கி வாசித்து, நடிகர்திலகம் என்பவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் அப்போது,இப்போது,எப்போதுமே என்ற அளவில் எடுத்து செல்ல முயற்சிகள் செய்வோம். திரும்ப திரும்ப எல்லோரையும் குறை சொல்லி, வாதுக்கு அழைத்து, விரோதிகளை அதிகமாக்கி கொள்வதில் அர்த்தமில்லை. அவரை பற்றி எல்லோரையும் உணர செய்வோம். நானே ஒரு Blog தொடங்கி நிறைய விஷயங்கள் பேச ஆசை. ஆனாலும், நம்மிடைய பிறந்த உலக மேதைக்கு கிடைக்க வேண்டிய இடம், அங்கீகாரம்,உன்னதம், எதிர்கால சந்ததிகளுக்கு சொல்ல வேண்டிய முறை என்பதை மனதில் நிறுத்தி, எனக்கிருக்கும் நேரத்தை நடிகர்திலகத்திற் காக மட்டுமே செலவிடுகிறேன்.
அதனால் கொஞ்சம் மற்றவர்களின் கவனத்தை சிதைக்காமல் செயல் படுவோம். அடுத்ததாக ஒரு Stella Adler ,ஒரு Meisner ,இன்னொரு Oscar wilde உதாரணம் கொடுத்து தலா ஒரு படம் எடுத்து ஆய்வு செய்து முடித்து விடுகிறேன். பிறகு திரி முழுதும் உங்களுடையது. என் தலையீடொ தொந்தரவோ இருக்கவே இருக்காது.நடிகர்திலகம் பட்ட பாட்டிற்கு உரிய பலன் அடையாதது போலவே, அவர் பக்தர்களும் உணர்கிறோம். விந்தை!!! அரட்டைகளுக்கு ஐநூறு response ,ஆனால் தொடர் வினை எதிர்பார்த்து பதித்தால் ஒரு சிலரிடமிருந்து சின்ன response .இதை படிப்பது எனக்கு நீங்கள் செய்யும் நன்மையல்ல. நடிகர்திலகத்தின் நடிப்பை புதிய கோணத்தில் அணுக உங்களுக்கே நீங்கள் செய்து கொள்ளும் நன்மை.
ஊதுகிற சங்கை ஊதி விட்டேன். கடமை முடிந்தது. ஆனால் இறுதி மூச்சு உள்ள வரை என் நடிப்பு தெய்வத்தின் படங்களில் இருந்து எப்போதுமே புதுமை உணர்வு,புது விஷயங்கள் கிடைத்த படியேதான் இருக்கும் என்பது திண்ணம். இனியாவது தமிழர்கள் தனி மனித image தொழும் மாயையில் இருந்து மீண்டு உண்மை தமிழனின் உன்னதம் போற்றட்டும்.

டியர் கோபால்,
தங்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. வரவேற்கப் பட வேண்டிய கருத்துக்கள். சந்தேகமே இல்லை. இதில் சௌரிராஜனை மட்டும் குறை கூறி பயனில்லை. சம்பந்தப் பட்ட அனைவருமே தான் including me. ஏனென்றால் நானும் அதற்கு பதில் பதிவிட்டிருந்தேன். So, please don't pinpoint any individual.

Thank you.

Let us continue with the India's 8th wonder of the world

RAGHAVENDRA
14th May 2013, 07:32 AM
... வ.உ .சி இளமை காலங்கள் சொல்ல படவே இல்லை. ஆரம்பமே கல்யாணமாகி ,pleader பணியில் இருக்கும் நாட்களே. பொது வாழ்வின் ஆரம்ப நாட்களில் இருந்து தொடக்கம். பிறகு அவருடைய அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சுதேசி கப்பல் கம்பெனிக்கான முனைவு, தொழிற்சங்க, அரசியல் போராட்டங்கள் என்று விரியும். பிறகு சிறை வாழ்க்கை, வெளியில் வந்ததும் ஏமாற்றம் நிறைந்த பொது வாழ்வு மற்றும் தனி வாழ்வு. என்று மூன்று கட்டங்களில் விரியும்.

YES, THERE WERE LIMITATIONS. இந்தப் படம் எடுத்த கால கட்டத்தில் நிகழ்ந்த சமுதாய சூழ்நிலையும் ஒரு காரணம். எனவே மிகவும் விரிவாக அவருடைய வாழ்க்கையை அணுகாமல் இந்திய விடுதலைக்கு வ.உ.சி.யின் பங்களிப்பு என்கிற அளவிலேயே அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப் பட்டது. இதற்கென ம.பொ.சி., சக்தி கிருஷ்ணசாமி, நடிகர் திலகம் கொண்ட ஒரு குழுவே விவாதித்து வடிவமைத்தனர்.

இதற்காக நடிகர் திலகம் செய்த home work அபாரமானது. முதலில் மொழி. தமிழில் slangs ,ஓட்டபிடாரம் பிள்ளைகளுக்கு உரிய வட்டார மொழி என்பது இருந்தாலும் அது தொட்டு கொள்ள ஊறுகாய் போல ஒரு சில குடும்ப காட்சிகளில் உபயோக படுத்த படுவதோடு சரி.மற்ற படி ஒரு வழக்கறிஞர், பொது வாழ்க்கைக்கு வந்த, இலக்கியம் ,ஆங்கிலம் அறிந்த மனிதர்களுக்கு உண்டாகும் பொது மொழி தேர்ந்தெடுப்பு மிக சரியானது.(நினைத்திருந்தால் மக்களை பெற்ற மகராசி கொங்கு தமிழ் போல பிள்ளை தமிழ் பேசியிருக்கலாம்.).

A very good observation from you Gopal. Yes, his language was determined based on the nature and personality, circumstances. This was even endorsed by V.O.C's son during those days.

அடுத்து personality . ஒரு வசதியான வீட்டு படித்த மனிதர். முதலாளி ,leadership quality உள்ள abnormal enterprener and a practising lawyer .அதற்குரிய constructive arrogance ,மிடுக்கு, அதே நேரத்தில் exhibitionist politeness , commitment to the cause ,எதிரில் இருப்பவரின் தரமறிந்து நடக்கும் பழகும் இங்கிதம்,public life outwardly courageous conviction என்பவை கொண்ட முதல் கட்ட பாத்திர குண வார்ப்பு.

YES. THIS WAS ARRIVED AT ON GATHERING INFO ON V.O.C. FROM HIS FRIENDS AT THAT TIME.

இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை. மூன்றாவது கட்டமோ , குடும்பம் சிதைந்து, அவர் உருவாக்கிய கம்பனியை வெள்ளையனுக்கே விற்று விட்ட துரோகம்,மக்களின் பாரா முகம், ஒன்றன் பின் ஒன்றாக நண்பர்களின் துயரம் மற்றும் இழப்பு, ஒரு defeatist introverted சுருங்கல், உடலும் மனமும் சோர்ந்து இலக்கிய பணியில் ஒதுங்கி மீதி நாட்களை இறப்பு வரை கடத்துவது என்கிற phase

மிகச் சிறந்த அலசல். பாத்திரத்தை நடிகர் திலகம் உள் வாங்கி நடித்தார் என்றால் அவருடைய நடிப்பை உள்வாங்கி மிகச் சிறப்பாக அலசியுள்ளீர்கள்.

joe
14th May 2013, 07:34 AM
Gopal,
உங்கள் ஆய்வுக்கட்டுரைகள் நிறைவுற்ற பின் , அவற்றை தொகுத்து ஒரு வலைப்பூ (Blog) -ல் அதற்கு தோதான படங்களோடு வெளியிடலாம் என்பது என் எண்ணம் . அதன் பொருட்டு நானும் பங்களிக்க தேவையிருப்பின் அறியத்தரவும்.

IliFiSRurdy
14th May 2013, 09:54 AM
இனியாவது தமிழர்கள் தனி மனித image தொழும் மாயையில் இருந்து மீண்டு உண்மை தமிழனின் உன்னதம் போற்றட்டும்.

இனிமேலும் உங்கள் எழுத்துக்கள் நன்றாக உள்ளன என்று சொல்வது முக்கனிகள் இனிக்கும் என்று சொல்வதற்கொப்பாகும்.நான் முன்னமே சொன்னது போல தலைவரை நீங்கள் சலவைக்கல்லில் செதுக்குகிறீர்கள்.வாழ்க.

ஒருவனுக்கு,
திருவிளையாடல் பார்த்து தெய்வ பக்தியும்,
கப்பலோட்டிய தமிழன் பார்த்து தேசபக்தியும்,
பாசமலர்,படித்தால் மட்டும் போதுமா, பார்த்து சகோதர பாசமும்,
புதிய பறவை,உயர்ந்த மனிதன் பார்த்து ஒயிலும்,
தங்கப்பதக்கம் பார்த்து கம்பீரமும்,
தில்லானா மோகனாம்பாள் பார்த்து கலை ஆர்வமும்
வரவில்லை எனில்,
அவன் இப்பிறவியில் இவைகளை மறக்க வேண்டியது தான்.

முடித்தபின் தொடர்கிறேன்.

IliFiSRurdy
14th May 2013, 10:00 AM
. விந்தை!!! அரட்டைகளுக்கு ஐநூறு response ,ஆனால் தொடர் வினை எதிர்பார்த்து பதித்தால் ஒரு சிலரிடமிருந்து சின்ன response .இதை படிப்பது எனக்கு நீங்கள் செய்யும் நன்மையல்ல.
ம்ம்ம்
பழி ஓரிடம்..பாவம் ஓரிடம்..
இந்த திரியில் கடந்த பலவாரங்களாக பதிவுடன் பங்கேற்பது,
நீங்கள்,நண்பர்கள் ராகவேந்தர்,வாசுதேவன்,ரகுராம்,சவுரி,மற்றும் நான்.
இதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.
நன்றி.

Georgevob
14th May 2013, 11:40 AM
சொன்ன படி, நினைத்த படி எழுத முடியாமல் நிறைய distractions . நான் நிறைய யோசித்து அதை என் முறையில் மட்டும் சொல்லாமல், எல்லோருக்கும் reach ஆகும் படி செய்யவும் வேண்டி உள்ளது. திரு. சௌரி நான் உங்களை குறை சொல்லவில்லை. நடந்தவைகளை பேசுவதால் சரித்திரங்கள் நேராக்க படுவதில்லை. பின்னால் பிறந்தவர்களுக்கு, நடிகர்திலகத்திற்கு எதிராக (இத்தனைக்கும் பச்சை தமிழன்) செய்ய பட்ட பொய் பிரச்சாரங்கள், கட்டவிழ்த்து விட பட்ட வன்முறைகள் பற்றி தெரியாது. நம் அளவு அவர்களுக்கு உணர்வு பூர்வமாக உணரவும் முடியாது. அதனால் கொஞ்சம் அடக்கி வாசித்து, நடிகர்திலகம் என்பவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் அப்போது,இப்போது,எப்போதுமே என்ற அளவில் எடுத்து செல்ல முயற்சிகள் செய்வோம். திரும்ப திரும்ப எல்லோரையும் குறை சொல்லி, வாதுக்கு அழைத்து, விரோதிகளை அதிகமாக்கி கொள்வதில் அர்த்தமில்லை. அவரை பற்றி எல்லோரையும் உணர செய்வோம். நானே ஒரு Blog தொடங்கி நிறைய விஷயங்கள் பேச ஆசை. ஆனாலும், நம்மிடைய பிறந்த உலக மேதைக்கு கிடைக்க வேண்டிய இடம், அங்கீகாரம்,உன்னதம், எதிர்கால சந்ததிகளுக்கு சொல்ல வேண்டிய முறை என்பதை மனதில் நிறுத்தி, எனக்கிருக்கும் நேரத்தை நடிகர்திலகத்திற் காக மட்டுமே செலவிடுகிறேன்.
அதனால் கொஞ்சம் மற்றவர்களின் கவனத்தை சிதைக்காமல் செயல் படுவோம். அடுத்ததாக ஒரு Stella Adler ,ஒரு Meisner ,இன்னொரு Oscar wilde உதாரணம் கொடுத்து தலா ஒரு படம் எடுத்து ஆய்வு செய்து முடித்து விடுகிறேன். பிறகு திரி முழுதும் உங்களுடையது. என் தலையீடொ தொந்தரவோ இருக்கவே இருக்காது.நடிகர்திலகம் பட்ட பாட்டிற்கு உரிய பலன் அடையாதது போலவே, அவர் பக்தர்களும் உணர்கிறோம். விந்தை!!! அரட்டைகளுக்கு ஐநூறு response ,ஆனால் தொடர் வினை எதிர்பார்த்து பதித்தால் ஒரு சிலரிடமிருந்து சின்ன response .இதை படிப்பது எனக்கு நீங்கள் செய்யும் நன்மையல்ல. நடிகர்திலகத்தின் நடிப்பை புதிய கோணத்தில் அணுக உங்களுக்கே நீங்கள் செய்து கொள்ளும் நன்மை.
ஊதுகிற சங்கை ஊதி விட்டேன். கடமை முடிந்தது. ஆனால் இறுதி மூச்சு உள்ள வரை என் நடிப்பு தெய்வத்தின் படங்களில் இருந்து எப்போதுமே புதுமை உணர்வு,புது விஷயங்கள் கிடைத்த படியேதான் இருக்கும் என்பது திண்ணம். இனியாவது தமிழர்கள் தனி மனித image தொழும் மாயையில் இருந்து மீண்டு உண்மை தமிழனின் உன்னதம் போற்றட்டும்.

இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கு

முதலில், உங்களுடைய Flow தடைப்பட்டதற்கு என்னுடைய வருத்தங்கள். காரணம் நான் உண்மையை எழுதபோய் அது மற்றவர்கள் படித்து அதற்க்கு பதில் எழுத நான் அதற்க்கு விளக்கம் அள்ளிக்க இடைப்பட்ட ஒரு நாள் உங்களுக்கு உதவாமல் போனது.. மன்னிக்கவும் !

நான் எழுதியதற்கு உடன்பாடு இல்லையெனில் உடன்பாடு இல்லை என்று ஒருவரியில் முடித்திருக்கலாம் மற்றவர். அதை விடுத்து அதை விரிவாக்கம் செய்யவே நானும் பதில் சொல்லும் சூழ்நிலைக்கு உந்தப்பட்டேன்.

2. புதிய தலைமுறை பலர் இந்த திரியை படித்து வருகின்றனர்...அவார்களுக்கு உண்மை என்ன என்று தெரியவேண்டும். சிவாஜி என்னமோ நடித்தார் இவர்கள் அதற்காக திரி..திரியாக எழுதுகிறார்கள் என்று ஒரு அர்த்தமற்ற புரிதல் அவர்களுக்கு உண்டாககூடாது என்பதால் தான் தாங்கள் இவ்வளவு சிரமம் கொண்டு எழுதுகிறீர்கள் அல்லாவா?

அதை போலதான் நானும் அவருடைய அரசியலை கேலியாக இன்று நினைபவர்கள் அதாவது இளையதலைமுறையினர் பலருக்கும், திராவிட மாயை பற்றியும் அவை நடிகர் திலகத்தை எப்பொழுது, என்தேந்தவகையில் எப்படியெல்லாம் பாதிபடயவைத்தனர் அவர்மீது கொண்ட தாழ்புனற்சியால் என்பதை உணர்த்தவே என் முயற்சி.

நடந்தவைகளை பேசுவதால் வரலாறு நேராக்கபடுவதில்லை என்பது மேலோட்ட உண்மையாக தெரிந்தாலும், அதை பற்றி உரையாடல் வரும்போது பேசுவது நடந்தவைகளானால், திருத்தபடுவது வரலாறுதானே ?

என்னுடைய முயற்சி, is not to tell them or justifying a false propaganda that Nadigar Thilagam was equally successful in politics BUT to make them understand that how Nadigar Thilagam was betrayed, back stabbed time and again by these Dravidian politicians who till now continues to take advantage and fool everybody. The younger generation should know and understand who are good and who possess anti-social attitudes.

Am sorry, that your flow was interrupted ! Sincerely, sorry !

goldstar
14th May 2013, 12:17 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-28
இரண்டாவது கட்ட பாத்திர வார்ப்பு ,அவர் சிறையில் தனக்கு பழக்கமில்லா கடின உடலுழைப்பு, சிறிதே physical abuse , தனிமை சிறை வாசம் என்று உடலை சோர வைத்தாலும் மனதில் உறுதி தளரா நிலைமை.
-----To be continued ..

Thank you Gopal sir. Your each and every word of NT is marvelous and wonderful and worth reading for generations to come.

வ.உ .சி. யை நமக்கு அடியாளம் காட்டி தேச தலைவர்கள் போல் வாழ்த்து, பிறரை போல் போலி விளம்பரம் செய்யாமல் வாழ்த்து காட்டிய நடிகர் திலகமே உன்னை வணக்குகிறோம்

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/VUC1_zps60da4521.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/VUC2_zps4865d453.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/VUC3_zps3fcf564b.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/VUC4_zpsf3062f9f.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/VUC5_zps66ee0e3d.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/VUC6_zps1f92a1c7.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/VUC7_zps021678d3.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/VUC8_zpsb0a3bce5.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/VUC9_zpsdaa4b70f.png

http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/VUC10_zps1734a206.png

KCSHEKAR
14th May 2013, 12:36 PM
"வேறு எவண்டா இப்படி பண்ண முடியும்? நடிக்கலைடா. அப்படியே வாழ்ந்துட்டான், நான் நேர்லயே பாத்திருக்கேண்டா அவர்களை எல்லாம். அதை வைச்சு சொல்றேன்". என்ற மனமார்ந்த பரவசம்.
இதற்கு மேலும் வார்த்தை ஏது சொல்ல?

சொன்ன படி, நினைத்த படி எழுத முடியாமல் நிறைய distractions . நடிப்பு தெய்வத்தின் படங்களில் இருந்து எப்போதுமே புதுமை உணர்வு,புது விஷயங்கள் கிடைத்த படியேதான் இருக்கும் என்பது திண்ணம். இனியாவது தமிழர்கள் தனி மனித image தொழும் மாயையில் இருந்து மீண்டு உண்மை தமிழனின் உன்னதம் போற்றட்டும்.

டியர் கோபால் சார்,

தங்களுடைய எழுத்துக்கள் மிகவும் அருமை. தாங்கள் குறிப்பிட்டதைப் போல பலரும் தங்களுடைய எழுத்துக்களை ரசிக்கவில்லை என்பது தவறு. என்னைப் பொறுத்தவரை நீண்ட நேரம் இணையதள இணைப்பில், தொடர்பிலேயே இருக்கமுடியாத நிலை. நான் நிறைய புத்தகங்கள் வாசிப்பவன். ஆனாலும் இணையதள வாசிப்பில் அதிக நேரம் செலவிட இயலவில்லை. அதுவும் தங்களின் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுத்து படிக்க இயலவில்லை. மன்னிக்கவும்.

ஆனாலும், திரு.ராகவேந்திரன் சார் புண்ணியத்தில் அவர் தொகுத்தளித்ததை Book Mark ல் வைத்துக்கொண்டு உங்களுடைய எழுத்துக்களை நேரம் கிடைக்கும்போது ஒவ்வொரு பாகமாகப் படித்து வருகிறேன். திரு.ஜோ அவர்கள் குறிப்பிட்டதைப்போல தங்களுடைய ஆய்வுப் பதிவுகளை தனி blog லோ, அல்லது என்னைப் போன்றவர்களின் வசதிக்காக புத்தக வடிவிலோ அளிக்க முயற்சி செய்யவும்.

இந்தத் திரியில் சிலர் மட்டுமே ஆவணம் மற்றும் ஆய்வுப் பதிவுகளை இடுகை செய்கிறார்கள் என்பது உண்மையே. ஆனாலும், என்னைப் போல பலரும் தொடர்ந்து திரியை படித்தும், அவ்வப்போது (அரைகுறையாகப் படித்துவிட்டுக்கூட) பாராட்டுப் பதிவுகளையும் இடுகிறோம். பலர் தினந்தோறும் திரியை வாசித்து மகிழவும் செய்கிறார்கள்.

எனவே, நடுவில் வரும் இடைஞ்சல்கள், தடங்கல்களைப் பொருட்படுத்தாமல், சீனியர் ஹப்பர்கள் அனைவரும் - போற்றுவார் போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும், நம் கடன், நடிகர்திலகம் புகழ்பாடுவதே என்று - தொடர்ந்து, தங்களது பதிவுகளை இடுகை செய்யவேண்டும் என்று இந்தத் தருணத்தில் என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன்.

Georgevob
14th May 2013, 12:45 PM
[QUOTE=goldstar;1042834]Thank you Gopal sir. Your each and every word of NT is marvelous and wonderful and worth reading for generations to come.

வ.உ .சி. யை நமக்கு அடியாளம் காட்டி தேச தலைவர்கள் போல் வாழ்த்து, பிறரை போல் போலி விளம்பரம் செய்யாமல் வாழ்த்து காட்டிய நடிகர் திலகமே உன்னை வணக்குகிறோம்

திரு.கோல்ட் ஸ்டார்

போலி விளம்பரம் என்ற வார்த்தையை படித்தவுடன் பலர் நீங்கள் மறைமுகமாக சிலரையோ / பலரையோ குறிப்பிடுவதாக நினைத்துக்கொள்ள சாத்யதை உண்டு. மற்றும் அவர்கள் மனது வருத்தப்படலாம் ! ஆகையால் அந்த Phrase நிச்சயம் தேவையா? தவிர்த்தல் நலம் என்பது என் கருத்து !

There is no hidden agenda here ! Hope you will consider my opinion ! Anyways, it is your writeup So, decision is obviously yours !

goldstar
14th May 2013, 01:55 PM
http://www.youtube.com/watch?v=S3I_TfpzDMo

காண, கேட்க, பார்க்க சலிக்காத, செயற்கையட்ட உன்னதமான பேச்சு, நடை, பார்வை, சலிப்பு, கோபம், புன்னகை, இன்னும் விட்டு போன எல்லாவத்தையும் சில நிமிடத்தில் காட்டும் வல்லமை படைத்த திலகமே, உன்னை வணக்குகிறோம்.

vasudevan31355
14th May 2013, 03:57 PM
கோபால் சார் வருத்தத்திலும் நியாயம் இருக்கிறது. அவருடைய இந்த சீரிய, அரிய முயற்சிக்கு உறுதுணையாக ராகவேந்திரன் சார் அவர்களைத் தவிர வேறு யாரும் (நான் உட்படத்தான்) அவ்வளவு ஈடுபாட்டுடன் feed back தருகிறோமா என்றால் இல்லை என்ற பதில்தான் மிஞ்சுகிறது. கோபால் சாருடன் மணிக்கணக்கில் நான் போனில் உரையாடும்போது இதைப்பற்றி அலசுவோம். நிறைகுறைகளை அலசுவோம். அப்போது கூட அவர் பாராட்டுக்களுக்காக ஏங்கியதில்லை. தன்னுடைய கட்டுரைகளுக்கான சரியான, அதோடு தொடர்புடைய, அல்லது நேர்,எதிர்மறை விமர்சனங்களைத்தான் அவர் எதிர்பார்க்கிறார். அதை பெரும்பாலும் நாம் அளிப்பதில்லை. நாம் எல்லோருமே அவர் அலசி ஆராயும் தலைவர் படங்களை பலமுறை பார்த்திருக்கிறோம். அந்த சொந்தக் கருத்துக்களை அவருடைய கட்டுரைகளுக்கு இடையே நாம் பதிந்தால் அந்தக் கட்டுரைகளின் சுவாரஸ்யம் இன்னும் அதிகரிக்கும். அவருடைய இந்த புதிய பாணி வடிவமைப்பில் நாம் நிறையத் தெரிந்து கொண்டுள்ளோம். அதே போல் நமக்குத் தெரிந்ததை அவர் எடுத்துக் காட்டாமல் இருந்திருக்கலாம். நாம் அதை சுட்டிக் காட்டலாம். (விக்கிரமனின் குரல் ஜாலங்களை நண்பர் பார்த்தசாரதி அவர்கள் கோபால் அவர்களுக்கு எடுத்துச் சொன்னதைப் போல) அதைத்தான் கோபாலும் எதிர்பார்க்கிறார். பதில் கருத்துக்கள் சரிவர வெளிவராத பட்சத்தில் வடிவமைப்பவருக்கு சோர்வும் எரிச்சலும் சலிப்பும் வர வாய்ப்புள்ளது. அருமையாக எழுதும் நபர் சலிப்படைந்தால் நமக்குத்தானே நஷ்டம்?

அருமை நண்பர் கண்பத் அவர்கள் சொன்னது போல விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே உறுப்பினர்கள் பதிவிடுகிறோம். எம்ஜியார் அவர்கள் திரியில் புதிதாய் வரும் அங்கத்தினர்கள் அனைவரும் அவர்களால் முடிந்த பதிவுகளை ஒருவர் கூட விடாமல் அங்கு பதிவிடுகிறார்கள். அது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விஷயம்.

இங்கு உறுப்பினர்கள் அதிகம் இருந்தும் பலர் பதிவிடுவதே இல்லை என்பது நிஜமாகவே வருத்தப்படவேண்டிய விஷயம். எல்லோருக்கும் காலம் பொன் போன்றதுதான். எல்லோருக்கும் வேலைப்பளு என்பது நிஜம். அந்த வேலைப்பளு கோபாலுக்கும் உண்டு....ராகவேந்திரன் சாருக்கும் உண்டு... கண்பத் சாருக்கும் உண்டு... கோல்ட் ஸ்டாருக்கும் உண்டு... ராகுல்ராமுக்கும் உண்டு...சவுரி சாருக்கும் உண்டு... எனக்கும் உண்டு...

இங்கு பதிவிடுபவர்களும் மற்றவர்களைப் போல நேரமின்மை என்ற காரணத்தை எடுத்துக் கொண்டால் நமது திரியின் நிலைமையை சற்று நினைத்துப் பாருகள்.

காலை தூங்கி எழுந்தது முதல் நடுநிசிவரை சிலர் திரிக்காக நேரத்தை செலவிடுகிறோம். எல்லோராலும் அப்படி இருக்க முடியாது என்பது தெரியாததல்ல. தினம் ஒருமணிநேரம் செலவிட்டு திரியில் பதிவுகள் இடலாமே.! இதை நானும் ராகவேந்திரன் சாரும் பலமுறை சொல்லியாகி விட்டது. தலைவரின் நடிப்பைப் பற்றி.... அவர் படங்களில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளைப் பற்றி... பாடல்களைப் பற்றி எழுதலாமே.... தங்களிடம் கைவசம் உள்ள ஆவணங்களைப் பதியலாமே....

சில உறுப்பினர்கள் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு செல்கிறார்கள். முரளி சார், கார்த்திக் சார், சாரதா மேடம் போன்ற சீனியர்கள் திரியில் வரலாறுகள் படைத்து நமக்கு முன்னோடியாகத் திகழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் செய்துவிட்டுப் போன, செய்து கொண்டிருக்கிற சாதனைகள் என்றென்றும் நிலைத்திருக்கும். அவர்கள் இனி வந்து தினம் பதிவுகள் இட எதிர்பார்ப்பதை விட நாம் அவர்கள் வழியைப் பின்பற்றி நம்மால் முடிந்த பதிவுகளை இட்டு அவர்களை சந்தோஷப் படுத்தலாமே!

ஒருமணிநேரம் தினம் நம் தலைவருக்காக நாம் ஒதுக்கக் கூடாதா?... சற்று சிந்தித்துப் பாருங்கள்... தினம் பதிவு செய்பவர்களுக்கும் எவ்வளவு வேலைகள் இருக்கும் என்று?
சந்திரசேகரன் சார் என்னதான் வெளியில் பலர் நமது திரியை வாசிக்கிறார்கள் என்று சொன்னாலும் பதிவு செய்யும் இந்த இடத்தில் அந்த பதிவுகளுக்கான feed back வருவதையே பதிவாளர் விரும்புவார். அதுதான் அவரை உற்சாகப்படுத்தும். அதை பாராட்ட வேண்டும் என்று எவரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்வது பதிவின் நிறைகுறைகளை. நிறை என்றால் அதனுடன் சேர்ந்த கருத்துக்களை பதியலாம். குறை என்றால் தாராளமாக சுட்டிக் காட்டலாம். அதை பதிவாளர்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்.

நாம் மனதார இங்கு சிலருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னாலும் அதைக் கூட சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பது, அல்லது ஏற்றுக் கொள்ளாதது போலக் காட்டிக் கொள்வது (ஒருவேளை தன்னடக்கமோ!) எந்த நாட்டில் கற்றுக் கொண்ட நாகரீகமோ தெரியவில்லை.

நிச்சயமாக நமது திரியில் பதிவாளர்களின் வருகை மிகக் குறைவே! பதிவுகளும் குறைவே!

இந்நிலை மாற வேண்டும். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பதிவுகளை இட வேண்டும். இல்லையென்றால் கோபால் போல சலிப்படைந்து வேறு blog-களுக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் தான் இங்குள்ள பதிவாளர்களுக்கு ஏற்படும்.

ராதாகிருஷ்ணன் சார்!

உங்களை அடிக்கடி ஆன்லைனில் பார்க்க முடிகிறது...(ஆனால் திரிக்கு வருவேனா என்கிறீர்கள். திரியைப் 'படித்தால் மட்டும் போதுமா'?)

ஆனந்த் சார்,

வந்த புதிதில் தங்கள் சொந்த வடிவமைப்பில் அருமையான தலைவரின் ஸ்டில்களை கலைநயத்தோடு பதிவிட்டீர்கள். இப்போது என்ன ஆச்சு?

பார்த்தசாரதி சார்,

நீங்கள் வேலை அதிகம் என்று கூறவே கூடாது.... தங்கள் பாடல் ஆய்வுக்காக ஏங்கி ஏங்கி கண்கள் பூத்துப் போச்சு.

தம்பி செந்தில்,

உன் கதை என்ன? என்ன இந்தப் பக்கமே ஆளைக் காணோம்?

சிவாஜி செந்தில் சார்,

மாதம் இரண்டு முறை வருகிறீகள். தங்களிடம் நிறைய விஷயம் உள்ளது... இனி தினமும் பங்கு பெற வேண்டும்.

சுப்பிரமணியம் ராமஜெயம் சார்,

மிக சீனியர் நீங்கள். தங்கள் ஆசீவாதங்கள் எங்களுக்கு முக்கியம். அது போல தங்கள் அனுபவங்களும் எங்களுக்கு முக்கியம். உடல்நலனுக்குத் தகுந்தவாறு பதிவுகளை அளிக்க முயற்சி செய்யுங்கள்

அன்பு பம்மலார் சார்,

தங்களுக்காக அனைவரும் வெயிட்டிங். திரிக்கு வந்து புத்துணர்ச்சி கொடுங்கள்.

அன்பு முரளி சார்!

எங்கள் வழிகாட்டி நீங்கள். தங்கள் கைவண்ணத்தில் 'ஞானஒளி' யைக் காண ஆசை. ப்ளீஸ்! எனக்காக.

கார்த்திக் சார்!

கோடைகால மழையாய் குளிர்விக்க வந்து திடுமெனக் காணாமல் போய் விட்டீர்கள். மீண்டு(ம்) வந்து 'கார்' மழை கார்த்திக்காய் 'திக்' விஜயம் செய்யுங்கள்.

கோபால்,

நீ என்று உரிமையோடு உன்னை விளிக்க வைத்த சகலகலா நிபுணனே!
மனம் தளராதே! உன் பாதையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறாய். வழியில் உள்ள சிறு முட்களும், கற்களும் உன்னை என்ன செய்து விட முடியும்? உன்னால் ஒரு சரித்திரம் உருவாகி 'அவன் ஒரு சரித்திரம்' என்று வாழ்ந்த நம் தெய்வத்தைப் போல இந்தியாவின் ஒரே உலக அதிசயத்தைப் படைத்த சரித்திர நாயகனாய் நீ மகுடம் தரிக்கும் நாள் அதோ தெரிகிறது.

இன்னும் விட்டுப் போன அன்பர்கள் அனைவரும் நமது திரியில் பதிவுகள் இட்டு தலைவர் புகழை ஈரேழு லோகமும் அறியச் செய்வோம்.

என்னுடைய இந்தக் கருத்துக்கள் யாரையாவது வருத்தப்படச் செய்திருந்தால் அதற்காக முன்கூட்டிய என் மன்னிப்பை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்

parthasarathy
14th May 2013, 05:10 PM
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

தங்களது கப்பலோட்டிய தமிழன் ஆய்வு அற்புதமாக அமைந்துள்ளது.

முக்கியமாக, அவரது வட்டார வழக்கை எடுக்காமல் பேசிய விதம் மற்றும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு வித நடை, உடை, பாவனை முதலியவைகளை நடிகர் திலகம் எடுத்துக் கொண்டதை அழகாக எழுதியுள்ளீர்கள்.

வட்டார வழக்கு

வட்டார வழக்கு என்று வரும் போது, நடிகர் திலகத்தை மிஞ்ச ஒருவர் இல்லை என்பது "மக்களைப் பெற்ற மகராசி", "முதல் மரியாதை" மற்றும் "தேவர் மகன்" படங்களைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். இருப்பினும், அவர் கூடுமானவரை முழுவதும் வட்டார வழக்கைத் தவிர்த்தே வந்திருப்பார் - consciously! காரணம் ஒரு கலைஞன் தான் சொல்ல வந்ததை அனைவரையும் சென்றடைய பொதுவான மொழி அவசியம் என்பதை முதல் படத்திலிருந்தே உணர்ந்து, காட்டி, அதன் மூலம் முதல் படத்திலிருந்தே, நாட்டின் அனைத்து வட்டார மக்களையும் சென்று சேர்ந்தவர் அல்லவா! பாகப்பிரிவினை, பட்டிக்காடா பட்டணமா, சவாலே சமாளி போன்று எண்ணற்ற சந்தர்ப்பங்கள் அவருக்குக் கிடைத்திருந்தாலும் - அந்தப் படங்களிலும் தேவைப்படுகிற இடங்களில் அசலான வட்டார வழக்கை உபயோகப்படுத்தியிருப்பார் தேவை அறிந்து! இல்லை என்றால் அவருடைய பல படங்களில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அந்தந்த வட்டாரங்களுக்கு மட்டுமே பெரிதாய் சென்று சேர்ந்திருக்கும்; அவருடைய நடிப்பு ஒன்றை மட்டுமே வைத்து, எல்லோரையும் அவரால் சேர முடியும் என்றாலும். மொழி கலைஞனுக்கு ஒரு முக்கிய காரணி என்பதால் அவர் இந்த விஷயத்தில் துவக்கத்திலிருந்தே கவனமாக இருந்து வந்திருக்கிறார்.

பிராம்மணத் தமிழைப் பேசியிருந்தாலும், வியட்நாம் வீடு மற்றும் கெளரவம் இரண்டு படங்களும் எல்லோரையும் சென்று சேர்ந்தது அவருக்கிருந்த கவனம், தெளிவு இவைகளால் தானே! மற்ற எந்த நடிகரும் / கலைஞரும் இந்த சமூகத் தமிழ்ப் படங்களில் இவர் அளவிற்கு வெற்றி பெற முடியாமல் போனது விந்தை அல்லவே!

படங்களில் வரும் மற்ற பாத்திரங்களை அணுகும் / அவர்களுடன் பழகும் / பேசும் முறை:-

இதையும் அவர் முதல் படத்திலிருந்தே செய்து விட்டார். இதில் எனக்கு மிகவும் பிடித்தது இரண்டு - ஒன்று "வியட்நாம் வீடு" - வீட்டில் மனைவியிடம், மகனிடம் வேலைக்காரன் முருகனிடம் ஒரு வகை - அலுவலகத்தில் பணியாளிடம் ஒரு வகை; தனக்கு அடுத்த அதிகாரியிடம் ஒரு வகை. - இரண்டு "ராமன் எத்தனை ராமனடி" - படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் - நான் இந்தத்திரியில் முதலில் நுழைந்த புதிதில் எழுதியது. கடைசியில், கைதாகி, வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் விடை பெறும் போது - தனக்கு அப்போது தான் அறிமுகமான மாஜிக் காதலியின் கணவரிடம் ஒரு வகை, மாஜிக் காதலியிடம் ஒரு வகை, தான் வளர்த்த பையனிடம் ஒரு வகை, தன்னை வளர்த்த ஆயாவிடம் ஒரு வகை - கடைசியில், தான் வளர்த்த மகளிடம் வரும் போது இரண்டு கைகளையும் தூக்கி ஒரு புருவத்தை மட்டும் தூக்கி 'என்ன புறப்படட்டுமா?' என்று உடல் மொழியிலேயே காட்சியை உணர்த்தி! (மற்ற எல்லோரையும் விட அந்த மகள் மேல் தான் அவருக்கு உயிர் - அதனால் தானே கைதாகிறார்!). இதை எழுதும் போதே சப்த நாடியும் சிலிர்க்கிறது!!

நிறைய வண்டி வண்டியாக உள்ளது - நீங்கள் குறிப்பிட்டபடி, புதிது புதிதாக வந்து கொண்டே தான் இருக்கும்.

ஒரு அற்புதமான படத்திற்கு/நடிப்பிற்கு/பங்களிப்பிற்கு, அற்புதமாக ஆய்வு செய்தது மிகுந்த மன நிறைவைத் தருகிறது. அதிலும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களை மட்டுமே ஓட வைக்கும், பேசிக் கொண்டிருக்கும் நாட்டில், இது போன்ற குறிஞ்சிப்பூ படங்களை நினைத்துப் பார்க்க வைத்தது மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

IliFiSRurdy
14th May 2013, 05:40 PM
கோபால் சார் வருத்தத்திலும் நியாயம் இருக்கிறது. அவருடைய இந்த சீரிய, அரிய முயற்சிக்கு உறுதுணையாக ராகவேந்திரன் சார் அவர்களைத் தவிர வேறு யாரும் (நான் உட்படத்தான்) அவ்வளவு ஈடுபாட்டுடன் feed back தருகிறோமா என்றால் இல்லை என்ற பதில்தான் மிஞ்சுகிறது. .............

இன்னும் விட்டுப் போன அன்பர்கள் அனைவரும் நமது திரியில் பதிவுகள் இட்டு தலைவர் புகழை ஈரேழு லோகமும் அறியச் செய்வோம்.

என்னுடைய இந்தக் கருத்துக்கள் யாரையாவது வருத்தப்படச் செய்திருந்தால் அதற்காக முன்கூட்டிய என் மன்னிப்பை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்

வாசு சார்,

இதை விட ஒருவரால் தன மனதில் இருப்பதை கொட்ட முடியாது.அவ்வளவு தெளிவாக எழுதியுள்ளீர்கள்.இது உங்கள் கருத்து மட்டுமல்ல ..நம் அனைவரின் கருத்து கூட.விரைவில் ஒரு நல்ல திருப்பத்தை எதிர் நோக்குகிறேன்.

நன்றி.வணக்கம்.

vasudevan31355
14th May 2013, 06:32 PM
அருமை பார்த்தசாரதி சார்! நீங்கள் குறிப்பிட்ட 'ராமன் எத்தனை ராமனடி' காட்சி... குறிப்பாக இறுதியில் மகளிடம் விடை பெறும் போது இரண்டு கைகளையும் சற்றே உயர்த்தித் தூக்கியவாறே மகளின் அருகே வரும் அந்த வார்த்தைகளில் வர்ணிக்க இயலா ஜாலத்தை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். தாங்களும் என்னைப் போலவே அப்படியே ஆழமாக ரசித்துள்ளீர்கள். அடடா! என்ன ஒரு அசாத்திய ஒற்றுமை! நிஜமாகவே மெய் சிலிர்க்கிறது. அடுத்தமுறை நாம் நேரில் சந்திக்கும் போது இதைப் பற்றி விரிவாக பேசுவோம்.

மகளைப் பார்த்து போவதைப் பாருங்கள்!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_4VOB_000992319.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_4VOB_000992319.jpg.html)

இன்னொன்று "ஞானஒளி"

கோடீஸ்வர அருண் பேத்தியின் கல்யாணத்தை தடபுடலாக நடத்த ஆசைபட்டு மகள் மேரியிடம் அதை வெளிப்படுத்தும் காட்சி. மகள்தான் சீரழந்து விட்டாள். அவளுக்கு ஒரு கல்யாணம் காட்சி நடத்தி வைத்து கண்குளிரப் பார்க்க முடியவில்லை. (ஆண்டனியாக இருக்கையில்). ஆனால் இன்று கோட்டீஸ்வரன் அருண். மகளிடமே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பரிதாபம். லாரன்ஸிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது. மகளிடம் பாசத்தை மறைக்கவும் முடியாது. மகள் தன் மகளுக்கு திருமணம் என்று வந்து நிற்கிறாள். பேத்திக்கு கல்யாணம் என்ற சந்தோஷம். தானே தடபுடலாக நடத்தி வைக்க மனது கிடந்து தவிக்கிறது. ஆனால் மகளோ முட்டுக் கட்டை போடுகிறாள் தந்தை காவல்காரனிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று. இதுதான் சிச்சுவேஷன். பேத்தி கல்யாணம் என்றவுடன் அதை எவ்வளவு சிறப்பாக நடத்த வேண்டும் என்று பட்டியலிட்டு விட்டு மகளிடம் சொல்வார்.

"மகளுக்கு செஞ்சு பார்க்க முடியாத கல்யாணத்த பேத்திக்காவது செஞ்சு பார்க்கிறேன்"

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_2VOB_003609200.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/VTS_02_2VOB_003609200.jpg.html)

இதில் என்ன விசேஷம்? அங்குதான் நிற்கிறார் 'நான் வணங்கும் தெய்வம்'. வேறு யாராய் இருந்தாலும் ஒன்று அந்த டயலாகை அழுது கொண்டே சொல்லியிருப்பார்கள் அல்லது வருத்தமாய் சொல்லியிருப்பார்கள். அது பத்தோடு பதினொன்றாய் சாதரணமாய்ப் போய் இருக்கும். ஆனால் இந்த எமன் சொல்லும் போது...

"மகளுக்கு செஞ்சு பார்க்க முடியாத கல்யாணத்த" என்ற வ(ரி)ரையில் வார்த்தைகளின் உச்சரிப்பு சற்று வேகமாக வெளிப்படும். அதுவரையில் அழுகை வெளிப்படாது. எல்லா உணர்ச்சிகளும் வெடித்து வெளியே கிளம்பத் தயாராய் இருக்கும். ஆனால் நமக்குத் தெரியாது. எதிர்பார்க்கவும் மாட்டோம். அடுத்த வரியான

"பேத்திக்காவது செஞ்சு பார்க்கிறேன்"

எனும்போது ஒரு செகண்டின் பலபாகங்களின் ஒருபாக நேரத்தில் வெடித்து கதறுவார் பாருங்கள்! அவ்வளவு வேகமாக. ஒரு வரி வசனத்தின் பாதியை அமைதியாகக் கையாண்டு மீதியை ஆத்திரம், துக்கம் தொண்டையை அடக்க அழுதபடியே வெளிப்படுத்தி பார்ப்பவர் நெஞ்சங்களைக் கலங்கடிப்பார். என்ன திறமைடா சாமி! அந்த வசன வரியில் எட்டே எட்டு வார்த்தைகள்தான். அதுவும் சிறு சிறு வார்த்தைகள்தான். அதில் நான்கு வார்த்தைகளுக்கு ஒருவிதமான உச்சரிப்பு.... அடுத்த நான்கு வார்த்தைகளுக்கு வேறுவிதமான உச்சரிப்புடன் கூடிய எதிர்பாராத உணர்வுகளை காட்டும் உன்னத திறன். மகளுக்குத் திருமணம் செய்து பார்க்க முடியாமல் போன அங்கலாய்ப்பு... அவளால் பட்ட அவமானம்...அதை நேர் செய்வது போல இப்போது பேத்தியின் கல்யாணம்... அன்று அடைய முடியாத ஆனந்தத்தை இன்றாவது பேத்தியின் திருமணம் மூலம் அடைய வழி கிடைத்து விட்டதே என்ற சிறு திருப்தி... இன்னும் எத்தனை எத்தனை அர்த்தங்கள் அந்த ஒரு வரியில் உணர்த்தப்படும்!

நீ மனிதனே அல்ல...தெய்வம்... எங்கள் குல தெய்வம்... எங்கள் கௌரவம் காக்கும் தெய்வம்...எங்களைக் காக்கும் காவல் தெய்வம்.

அதனால் தான் 'ஞான ஒளி'

என்றுமே

எனக்கு நெம்பர் 1

இது ஒரு சிறு துளிதான். ஈரேழு ஜென்மத்திற்கும் சொல்லி சொல்லி ஆச்சர்யப்பட அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன இந்தக் காவியத்தில்.

நன்றி!

Gopal.s
14th May 2013, 07:27 PM
வினோத் சார்,
தாங்கள் குறிப்பிட்ட பட்டங்கள் சரி. வருடங்கள் தவறு. அனைத்துமே 1957 க்கு பிறகே வழங்க பட்டன. தயவு செய்து சரி பார்த்து கொள்ளவும்.

Richardsof
14th May 2013, 07:36 PM
இனிய நண்பர் திரு கோபால் சார்

நீங்கள் குறிப்பிட்ட அந்த பதிவை நான் போடவில்லை .

நண்பர் திரு மாசானம் அவர்களின் பதிவு . சரி பார்க்கிறேன்

.

IliFiSRurdy
14th May 2013, 07:39 PM
அருமை பார்த்தசாரதி சார்! நீங்கள் குறிப்பிட்ட 'ராமன் எத்தனை ராமனடி' காட்சி... குறிப்பாக இறுதியில் மகளிடம் விடை பெறும் போது இரண்டு கைகளையும் சற்றே உயர்த்தித் தூக்கியவாறே மகளின் அருகே வரும் அந்த வார்த்தைகளில் வர்ணிக்க இயலா ஜாலத்தை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். .....
இன்னொன்று "ஞானஒளி"

இது ஒரு சிறு துளிதான். ஈரேழு ஜென்மத்திற்கும் சொல்லி சொல்லி ஆச்சர்யப்பட அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன இந்தக் காவியத்தில்.

நன்றி!
பிரமீளா தன மாமனார் சவுத்திரியிடம் கேட்கிறார்:
அப்பா! ராகவேந்தரோ, கோபாலோ ஒரு உணர்ச்சிகரமான காட்சிப்பதிவு இட்டால்,நாம் வாசுவிடம் சென்று காணொளி கேட்கலாம்,,ஆனால் வாசுவே காணொளி இல்லாமல் பதிவிட்டால்???

அருமையான பதிவிற்கு மிக்க நன்றி வாசு அவர்களே!
ஞான ஒளியில் தலைவரின் கைகளின் நடிப்பு அபாரம்.மாயா ஜாலம் நிகழ்த்தியிருப்பார்.

Gopal.s
14th May 2013, 07:51 PM
புரிதலுக்கு மிக மிக நன்றி.

Joe சார் ,நிச்சயமாக தங்களை தொந்தரவு செய்யத்தான் போகிறேன். மிக்க நன்றி.

வாசு- உன்னுடைய வேண்டுகோள் நியாயமானதே.எல்லோரும் வருவார்கள். ரசிகன்டா நீ. நீ ஞான ஒளியில் எழுதிய காட்சி பதிவு நீ ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாய் ரசித்து புரிந்து கொண்டதை அடடா.... நடிகர்திலகத்தின் சிறப்பே அதுதான். முன்முடிவு இல்லாமல் நடிப்பார். ஒவ்வொரு வசனத்திலும் பல பாவங்கள். unpredictable execution .இன்னும் கூட பார்க்கும் தோறும் என்னை ஆச்சர்ய படுத்தும் உலக மேதை. இதே காட்சியில் வேண்டாம்மா எனக்கு வயசாயிடிச்சு ... சொல்லும் விதம். உன்னுடைய No 1 பற்றி நீ எழுதாமல் யார் எழுத முடியும். எழுது. ரசிக்க சுவைக்க நாங்கள் என்றுமே....

ராகவேந்தர் சார்- உங்களுடைய allround பங்களிப்பு எங்களுக்கெல்லாம் யானை பலம். மிக்க நன்றி வரிக்கு வரி படித்து உடன்வினை கொடுப்பதற்கு.

கண்பட் சார்- உங்களுடன் பேசி பழகிய அற்புதமான அனுபவங்களே எழுத்தாக வந்து கொண்டுள்ளது. அப்பாடா ...எவ்வளவு பேசியிருப்போம் 1977 முதலாக நேற்று வரை....

பார்த்தசாரதி சார், உங்கள் பாடல் பதிவுகளே critical dissection என்ற அணுகுமுறையை புகுத்தியது.மேலும் நிறைய பதிவுக்கு பேராசையோடு காத்திருக்கிறோம்.

முரளி- நீதான் எனக்கு inspiration இந்த திரிக்கு வர.(மற்றும் கார்த்திக்,பம்மலார் )சத்ரியன் விஜயகாந்த் போல உன்னை வம்புக்கிழுத்து உன்னை பதிவிப்பது என க்கு ஆனந்தமே.

சௌரி சார்- உங்கள் பதிவுகளின் aggressive mischievous authenticity என்னை கவர்ந்த ஒன்று. உங்களுடன் வம்புக்கிழுத்து தொடர் தாக்குதல் உரையாடல் நான் ரசித்த ஒன்று.

சந்திரா- உன்னுடைய பணிகளுக்கு மிக நன்றி. பயணத்தை தொடரு.

சதீஷ்- வழக்கம் போல உற்சாகமான பங்களிப்பு மற்றும் ரசித்ததற்கு நன்றி.

P_ R - உன்னுடைய யோசனையே இத்தொடர்.(நான் ஒத்து வருமா என்று தடுமாறிய போது)
உன்னுடைய feedback நான் மிக எதிர்பார்க்கும் ஒன்று.(எல்லோருமே).உன்னுடைய தேவர் மகன் பதிவு போல ஒன்றை என் வாழ்நாளில் கண்டதில்லை. பலருக்கு அனுப்பி மகிழ்ந்ததோடு, படம் பார்த்த அளவு படித்துமிருக்கிறேன்.

IliFiSRurdy
14th May 2013, 08:00 PM
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

தங்களது கப்பலோட்டிய தமிழன் ஆய்வு அற்புதமாக அமைந்துள்ளது.

முக்கியமாக, அவரது வட்டார வழக்கை எடுக்காமல் பேசிய விதம் மற்றும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு வித நடை, உடை, பாவனை முதலியவைகளை நடிகர் திலகம் எடுத்துக் கொண்டதை அழகாக எழுதியுள்ளீர்கள்.

வட்டார வழக்கு
அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

ஏதேது! இந்த மையத்திற்கு நடிகர் திலகம் பல்கலை கழகம் என பெயர் சூட்டி அவர் நடிப்புதிறமையில் முனைவர் பட்டம் பெற மாணாக்கர்களை பேராசிரியர்கள் முரளி,பார்த்தசாரதி,ராகவேந்தர்,வாசு மற்றும் கோபால் வழிகாட்டுதலில் பயில்விக்கலாம் போலிருக்கிறதே!

அசத்தறீங்க பார்த்தா சார்!
வியட்நாம் வீட்டின்,"நா முந்திண்டா நேக்கு! நீ முந்திண்டா நோக்கு!" எனும் அமர வரிகளை யாரால் மறக்க முடியும்..
தன அக்காவிடம் அதை சொல்லும்போது இரண்டாவது பகுதியில் அந்த குரல் உடையுமே!!ஆஹா..என்ன ஒரு கம்பீரமான ஆணின் சோகம்!!

Subramaniam Ramajayam
14th May 2013, 08:08 PM
கோபால் சார் வருத்தத்திலும் நியாயம் இருக்கிறது. அவருடைய இந்த சீரிய, அரிய முயற்சிக்கு உறுதுணையாக ராகவேந்திரன் சார் அவர்களைத் தவிர வேறு யாரும் (நான் உட்படத்தான்) அவ்வளவு ஈடுபாட்டுடன் feed back தருகிறோமா என்றால் இல்லை என்ற பதில்தான் மிஞ்சுகிறது. கோபால் சாருடன் மணிக்கணக்கில் நான் போனில் உரையாடும்போது இதைப்பற்றி அலசுவோம். நிறைகுறைகளை அலசுவோம். அப்போது கூட அவர் பாராட்டுக்களுக்காக ஏங்கியதில்லை. தன்னுடைய கட்டுரைகளுக்கான சரியான, அதோடு தொடர்புடைய, அல்லது நேர்,எதிர்மறை விமர்சனங்களைத்தான் அவர் எதிர்பார்க்கிறார். அதை பெரும்பாலும் நாம் அளிப்பதில்லை. நாம் எல்லோருமே அவர் அலசி ஆராயும் தலைவர் படங்களை பலமுறை பார்த்திருக்கிறோம். அந்த சொந்தக் கருத்துக்களை அவருடைய கட்டுரைகளுக்கு இடையே நாம் பதிந்தால் அந்தக் கட்டுரைகளின் சுவாரஸ்யம் இன்னும் அதிகரிக்கும். அவருடைய இந்த புதிய பாணி வடிவமைப்பில் நாம் நிறையத் தெரிந்து கொண்டுள்ளோம். அதே போல் நமக்குத் தெரிந்ததை அவர் எடுத்துக் காட்டாமல் இருந்திருக்கலாம். நாம் அதை சுட்டிக் காட்டலாம். (விக்கிரமனின் குரல் ஜாலங்களை நண்பர் பார்த்தசாரதி அவர்கள் கோபால் அவர்களுக்கு எடுத்துச் சொன்னதைப் போல) அதைத்தான் கோபாலும் எதிர்பார்க்கிறார். பதில் கருத்துக்கள் சரிவர வெளிவராத பட்சத்தில் வடிவமைப்பவருக்கு சோர்வும் எரிச்சலும் சலிப்பும் வர வாய்ப்புள்ளது. அருமையாக எழுதும் நபர் சலிப்படைந்தால் நமக்குத்தானே நஷ்டம்?

அருமை நண்பர் கண்பத் அவர்கள் சொன்னது போல விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே உறுப்பினர்கள் பதிவிடுகிறோம். எம்ஜியார் அவர்கள் திரியில் புதிதாய் வரும் அங்கத்தினர்கள் அனைவரும் அவர்களால் முடிந்த பதிவுகளை ஒருவர் கூட விடாமல் அங்கு பதிவிடுகிறார்கள். அது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விஷயம்.

இங்கு உறுப்பினர்கள் அதிகம் இருந்தும் பலர் பதிவிடுவதே இல்லை என்பது நிஜமாகவே வருத்தப்படவேண்டிய விஷயம். எல்லோருக்கும் காலம் பொன் போன்றதுதான். எல்லோருக்கும் வேலைப்பளு என்பது நிஜம். அந்த வேலைப்பளு கோபாலுக்கும் உண்டு....ராகவேந்திரன் சாருக்கும் உண்டு... கண்பத் சாருக்கும் உண்டு... கோல்ட் ஸ்டாருக்கும் உண்டு... ராகுல்ராமுக்கும் உண்டு...சவுரி சாருக்கும் உண்டு... எனக்கும் உண்டு...

இங்கு பதிவிடுபவர்களும் மற்றவர்களைப் போல நேரமின்மை என்ற காரணத்தை எடுத்துக் கொண்டால் நமது திரியின் நிலைமையை சற்று நினைத்துப் பாருகள்.

காலை தூங்கி எழுந்தது முதல் நடுநிசிவரை சிலர் திரிக்காக நேரத்தை செலவிடுகிறோம் எல்லோராலும் அப்படி இருக்க முடியாது என்பது தெரியாததல்ல. தினம் ஒருமணிநேரம் செலவிட்டு திரியில் பதிவுகள் இடலாமே.! இதை நானும் ராகவேந்திரன் சாரும் பலமுறை சொல்லியாகி விட்டது. தலைவரின் நடிப்பைப் பற்றி.... அவர் படங்களில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளைப் பற்றி... பாடல்களைப் பற்றி எழுதலாமே.... தங்களிடம் கைவசம் உள்ள ஆவணங்களைப் பதியலாமே....

சில உறுப்பினர்கள் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு செல்கிறார்கள். முரளி சார், கார்த்திக் சார், சாரதா மேடம் போன்ற சீனியர்கள் திரியில் வரலாறுகள் படைத்து நமக்கு முன்னோடியாகத் திகழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் செய்துவிட்டுப் போன, செய்து கொண்டிருக்கிற சாதனைகள் என்றென்றும் நிலைத்திருக்கும். அவர்கள் இனி வந்து தினம் பதிவுகள் இட எதிர்பார்ப்பதை விட நாம் அவர்கள் வழியைப் பின்பற்றி நம்மால் முடிந்த பதிவுகளை இட்டு அவர்களை சந்தோஷப் படுத்தலாமே!

ஒருமணிநேரம் தினம் நம் தலைவருக்காக நாம் ஒதுக்கக் கூடாதா?... சற்று சிந்தித்துப் பாருங்கள்... தினம் பதிவு செய்பவர்களுக்கும் எவ்வளவு வேலைகள் இருக்கும் என்று?
சந்திரசேகரன் சார் என்னதான் வெளியில் பலர் நமது திரியை வாசிக்கிறார்கள் என்று சொன்னாலும் பதிவு செய்யும் இந்த இடத்தில் அந்த பதிவுகளுக்கான feed back வருவதையே பதிவாளர் விரும்புவார். அதுதான் அவரை உற்சாகப்படுத்தும். அதை பாராட்ட வேண்டும் என்று எவரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்வது பதிவின் நிறைகுறைகளை. நிறை என்றால் அதனுடன் சேர்ந்த கருத்துக்களை பதியலாம். குறை என்றால் தாராளமாக சுட்டிக் காட்டலாம். அதை பதிவாளர்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்.

நாம் மனதார இங்கு சிலருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னாலும் அதைக் கூட சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பது, அல்லது ஏற்றுக் கொள்ளாதது போலக் காட்டிக் கொள்வது (ஒருவேளை தன்னடக்கமோ!) எந்த நாட்டில் கற்றுக் கொண்ட நாகரீகமோ தெரியவில்லை.

நிச்சயமாக நமது திரியில் பதிவாளர்களின் வருகை மிகக் குறைவே! பதிவுகளும் குறைவே!

இந்நிலை மாற வேண்டும். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பதிவுகளை இட வேண்டும். இல்லையென்றால் கோபால் போல சலிப்படைந்து வேறு blog-களுக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் தான் இங்குள்ள பதிவாளர்களுக்கு ஏற்படும்.

ராதாகிருஷ்ணன் சார்!

உங்களை அடிக்கடி ஆன்லைனில் பார்க்க முடிகிறது...(ஆனால் திரிக்கு வருவேனா என்கிறீர்கள். திரியைப் 'படித்தால் மட்டும் போதுமா'?)

ஆனந்த் சார்,

வந்த புதிதில் தங்கள் சொந்த வடிவமைப்பில் அருமையான தலைவரின் ஸ்டில்களை கலைநயத்தோடு பதிவிட்டீர்கள். இப்போது என்ன ஆச்சு?

பார்த்தசாரதி சார்,

நீங்கள் வேலை அதிகம் என்று கூறவே கூடாது.... தங்கள் பாடல் ஆய்வுக்காக ஏங்கி ஏங்கி கண்கள் பூத்துப் போச்சு.

தம்பி செந்தில்,

உன் கதை என்ன? என்ன இந்தப் பக்கமே ஆளைக் காணோம்?

சிவாஜி செந்தில் சார்,

மாதம் இரண்டு முறை வருகிறீகள். தங்களிடம் நிறைய விஷயம் உள்ளது... இனி தினமும் பங்கு பெற வேண்டும்.

சுப்பிரமணியம் ராமஜெயம் சார்,

மிக சீனியர் நீங்கள். தங்கள் ஆசீவாதங்கள் எங்களுக்கு முக்கியம். அது போல தங்கள் அனுபவங்களும் எங்களுக்கு முக்கியம். உடல்நலனுக்குத் தகுந்தவாறு பதிவுகளை அளிக்க முயற்சி செய்யுங்கள்

அன்பு பம்மலார் சார்,

தங்களுக்காக அனைவரும் வெயிட்டிங். திரிக்கு வந்து புத்துணர்ச்சி கொடுங்கள்.

அன்பு முரளி சார்!

எங்கள் வழிகாட்டி நீங்கள். தங்கள் கைவண்ணத்தில் 'ஞானஒளி' யைக் காண ஆசை. ப்ளீஸ்! எனக்காக.

கார்த்திக் சார்!

கோடைகால மழையாய் குளிர்விக்க வந்து திடுமெனக் காணாமல் போய் விட்டீர்கள். மீண்டு(ம்) வந்து 'கார்' மழை கார்த்திக்காய் 'திக்' விஜயம் செய்யுங்கள்.

கோபால்,

நீ என்று உரிமையோடு உன்னை விளிக்க வைத்த சகலகலா நிபுணனே!
மனம் தளராதே! உன் பாதையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறாய். வழியில் உள்ள சிறு முட்களும், கற்களும் உன்னை என்ன செய்து விட முடியும்? உன்னால் ஒரு சரித்திரம் உருவாகி 'அவன் ஒரு சரித்திரம்' என்று வாழ்ந்த நம் தெய்வத்தைப் போல இந்தியாவின் ஒரே உலக அதிசயத்தைப் படைத்த சரித்திர நாயகனாய் நீ மகுடம் தரிக்கும் நாள் அதோ தெரிகிறது.

இன்னும் விட்டுப் போன அன்பர்கள் அனைவரும் நமது திரியில் பதிவுகள் இட்டு தலைவர் புகழை ஈரேழு லோகமும் அறியச் செய்வோம்.

என்னுடைய இந்தக் கருத்துக்கள் யாரையாவது வருத்தப்படச் செய்திருந்தால் அதற்காக முன்கூட்டிய என் மன்னிப்பை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்

Vasudevan sir your views are totally correct and true.
As for as myself concerned right from 6am after spending some time with devotional programmes in tv I sitbefore nett and totally listening to the day to day activities and my first and foremost job is that following NT THIRI and my day starts with pleasnt memories of ysteryears. my drawback is that I can not type tamil and my flow in english is also very slow. no other reason for my absence. Iwill definitely improve my speed and share lot of pleasnt memories of NT
since kattabomman days to trisulam. after that I was away from madras on tranfers and domestic setbacks. inspite of all these things
today I am keeping good health and well placed in life.
let us try to organise a get together in a common place and share our thoughts and feelings about our GOD NT.
thank you very much for kind enquries. ALL THE BEST AND GOOD LUCK. i AM SORRY THAT I HAVE NOT MENTIONED ABOUT GOPAL SIR'S BRIEF ESSAYS ABOUT NT. Dfinitely he is taking lot of pains and worth preserving materials.

vasudevan31355
14th May 2013, 08:14 PM
!ஆஹா..என்ன ஒரு கம்பீரமான ஆணின் சோகம்!!

ஆஹா! என்ன ஒரு கம்பீரமான வரி! மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி கண்பத் சார்!

'ஞான ஒளி' பட போஸ்டரில் கம்பீரமான நடிகர் திலகத்தின் பல்வேறு ஆயுதங்கள் ஏந்திய உருவங்களோடு

'விதவிதமான ஆயுதங்கள் ஏந்தி விநோதங்கள் காட்டுகின்றார் நடிகர் திலகம்'

என்ற வாக்கியங்கள் ஜொலிக்கும்.

Gopal.s
14th May 2013, 08:17 PM
Vasudevan sir your views are totally correct and true.
As for as myself concerned right from 6am after spending some time with devotional programmes in tv I sitbefore nett and totally listening to the day to day activities and my first and foremost job is that following NT THIRI and my day starts with pleasnt memories of ysteryears. my drawback is that I can not type tamil and my flow in english is also very slow. no other reason for my absence. Iwill definitely improve my speed and share lot of pleasnt memories of NT
since kattabomman days to trisulam. after that I was away from madras on tranfers and domestic setbacks. inspite of all these things
today I am keeping good health and well placed in life.
let us try to organise a get together in a common place and share our thoughts and feelings about our GOD NT.
thank you very much for kind enquries. ALL THE BEST AND GOOD LUCK. i AM SORRY THAT I HAVE NOT MENTIONED ABOUT GOPAL SIR'S BRIEF ESSAYS ABOUT NT. Dfinitely he is taking lot of pains and worth preserving materials.
Glad to know about you a little.Pl.Keep that get-together after July 12th but before july 24th as I have possibility to be present and listened to you .

vasudevan31355
14th May 2013, 09:13 PM
Totally mood out. 'ஞான ஒளி' நினைப்பு உணர்வுகளை வாட்டி வதைக்க, 'ராமன் எத்தனை ராமனடி'யை பார்த்தா சார் நினைவுபடுத்தி உசுப்பிவிட, கோபால் 'கப்பலோட்டிய தமிழரை' கனிவோடு ஞாபகப்படுத்த, கண்பத் சாரோ பிரஸ்டீஜ் பத்மநாப ஐயரின் பிரதாபங்களை சொல்லி பிழிந்தெடுக்க இன்று இரவு தூங்கிய மாதிரிதான்.

Georgevob
14th May 2013, 09:23 PM
புரிதலுக்கு மிக மிக நன்றி.

சௌரி சார்- உங்கள் பதிவுகளின் aggressive mischievous authenticity என்னை கவர்ந்த ஒன்று. உங்களுடன் வம்புக்கிழுத்து தொடர் தாக்குதல் உரையாடல் நான் ரசித்த ஒன்று.

உயர்திரு கோபால் அவர்களுக்கு,

என்ன உயர்திரு என்று பார்கிரீர்களா. நீங்கள் சார் போட்டதால் நான் உயர்திரு என்று எழுதினேன். உங்களுடைய மேற்கூறிய வரிகள். வம்புக்கிழுத்து தொடர் தாக்குதல் உரையாடல் - மற்றும் ஒரு வம்புக்கிழுத்து தொடர் தாக்குதல் ஆரம்பிப்பதற்கு அச்சாரமா? - I mean, on the lighter side Gopal sir..I mean...உயர்திரு கோபால் அவர்களே. !

ஆரம்பத்தில் சிறிது உந்தப்பட்டலும் போக போக உண்மையறிந்து நானும் அதை ரசித்தேன் அதற்க்கு தக்கவாறு பதில் அளித்தேன். Nothing பர்சனல், obviously !

உங்களுடைய மொத்த பதிப்பும் கிட்டத்தட்ட 94 பக்கங்கள் ... I have already taken the printout and stapled it to read during my train journey..! நல்ல ஒரு தொகுப்பினை எந்த தொந்தரவும் இல்லாமல் படிப்பதற்கு தக்க தருணம் Train Journey.

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்....ம்ம்ம்ம்ம்ம் ! தேரில் வந்த ராஜ ராஜன் என்பக்கம் பாடல் போல !

Georgevob
14th May 2013, 09:32 PM
Totally mood out. 'ஞான ஒளி' நினைப்பு உணர்வுகளை வாட்டி வதைக்க, 'ராமன் எத்தனை ராமனடி'யை பார்த்தா சார் நினைவுபடுத்தி உசுப்பிவிட, கோபால் 'கப்பலோட்டிய தமிழரை' கனிவோடு ஞாபகப்படுத்த, கண்பத் சாரோ பிரஸ்டீஜ் பத்மநாப ஐயரின் பிரதாபங்களை சொல்லி பிழிந்தெடுக்க இன்று இரவு தூங்கிய மாதிரிதான்.

வாசுதேவன் சார்

நீங்கள் தூங்கமாடீர்களா ! ஓஹ் ! ஓஹ் !

பாவம் சார் நீங்கள்...! நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது...

சரி..எப்படியும் தூங்குவது கடினம் என்று கூறிவிடீர்கள்...

இந்த பாட்டை பார்த்து ........துணையில் தலைவர் பாணியில்.....ஆவோ...இதர் ஆவோ..அங்கிள்கோ...DashFilm தேக்ன சாஹியே..ஆப்பு லேகா?

http://www.youtube.com/watch?v=1gIggrA0NW4

vasudevan31355
14th May 2013, 10:00 PM
துணையில் தலைவர் பாணியில்.....ஆவோ...இதர் ஆவோ..அங்கிள்கோ...DashFilm தேக்ன சாஹியே..ஆப்பு லேகா?

யப்பா... நான் வரல சாமி இந்த ஆட்டத்திற்கு.... நான் தூங்கி ரொம்ப நேரமாச்சு...

vasudevan31355
14th May 2013, 10:04 PM
http://i1.ytimg.com/vi/0oDSTRFhiew/hqdefault.jpg

ராகுல்ராம்,

தமிழில் 'கிரஹப் பிரவேசம்' பற்றி எழுதி ஆச்சரியப்படுத்தி விட்டீர்கள். அவ்வளவுதான். வெரி சிம்பிள். நன்றாக இருந்தது. தொடருங்கள் தமிழிலேயே.

vasudevan31355
14th May 2013, 10:07 PM
ராகுல்ராம்,

'கிரஹப்பிரவேசம்' படத்தில் எனக்கு மிக மிக பிடித்த பாடல். தலைவர் லாரி ஒட்டிக் கொண்டே பாடும் பாடல். அவ்வளவு அம்சமாக இருப்பார். வாயசைப்பு வெகு பிரமாதம். உன் பதிவுக்கு என் அன்புப் பரிசு

உலகம் பெரிது...

சாலைகள் சிறிது...

ஒலி கொடுத்தால்...

வழி கிடைக்கும்...

http://www.youtube.com/watch?v=TF3pfAEJAQQ&feature=player_detailpage

Georgevob
14th May 2013, 10:13 PM
நடிகர் திலகம் தன்னுடைய தோள் பிடித்ததை நினைவுகூர்ந்து அவர் பெயரில்உள்ள இந்த விருதை பெறுவதற்கு பெருமைபடுகிறேன் என்று உரைத்த வடநாட்டு உச்ச நட்சத்திரம் திரு. ஷஹ்ரூக் கான் அவர்கள் !

நடிகர் திலகத்தின் பெருமை நம் தமிழ்நாடு கலைஞர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ ஏனைய உலக கலைஞர்களுக்கு கௌரவத்தை கொடுகிறது , பெருமையையும் கொடுக்கிறது நம் நடிகர் திலகத்தின் பெயரில் அமைந்த விருது..!
தமிழ்நாட்டை தவிர அனைவரும் நடிகர் திலகத்தை போற்றி பாராட்டி அவர் திறமையை மதித்து மரியாதை செய்து வருவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது !

2385

Georgevob
14th May 2013, 10:15 PM
யப்பா... நான் வரல சாமி இந்த ஆட்டத்திற்கு.... நான் தூங்கி ரொம்ப நேரமாச்சு...

Ha..Ha..Ha...Vasudevan Sir,

Can you please upload that Kalaasara Scene for me ....Superb comedy sir !

Georgevob
14th May 2013, 10:39 PM
தமிழர்களுக்கு நடிகர் திலகத்தால் நினைவு படுத்தப்பட்ட பெரியவர்கள் என்ற தலைப்பில் இன்றுமுதல் தினம் ஒரு தகவலை இடுகை செய்து புதிய மற்றும் இளைய தலைமுறயினர்களுக்கு தமிழர்களுக்கு நடிகர் திலகம் ஆற்றிய தொண்டினை புரிந்துகொள்வதற்கு ஒரு அஸ்திவாரமாய் விளங்கும் என்று நினைகிறேன் :

1952, திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரை உலகில் முதன்முதலில் காலடி எடுத்து வைக்கும்போதே தமிழை, தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தனது முதல் படத்திலயே அனைவருக்கும் அருமையானதொரு பாடம் நடத்திய ஆசான் !

உரைநடை தமிழாகட்டும், இலக்கிய தமிழாகட்டும், சங்கத்தமிழாகட்டும், கொங்குதமிழாகட்டும் ...எந்த தமிழாக இருந்தாலும் அந்த தமிழை தமிழாக அழகாக உச்சரித்த ஓர் உன்னத கலைஞன் நம் நடிகர் திலகம் என்றால் அது மிகையாகாது....

இந்த கால தலைமுறையினர் நடிகர் திலகம் வருவதற்கு முன் பழக்கத்தில் புழுகத்தில் இருந்த நடிப்பையும் தமிழை முதலில் அறிதல் வேண்டும் ..அப்போதுதான் தமிழை பிறர் பேசிய விதம் புரியும்....நடிப்பும் வசனமும் தாமரை இல்லை மேல் தண்ணீர் போல இருந்ததை உணரமுடியும்

நடிகர் திலகம் தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்பிருந்த தமிழ் சம்பாஷனைகள் சில துளிகள்

http://www.youtube.com/watch?v=4IdkG7hnwC0

http://www.youtube.com/watch?v=ovlbJ_FM3v4

http://www.youtube.com/watch?v=76MtBfrCFvM

Georgevob
14th May 2013, 11:27 PM
தொடர்கிறது....

ஒரு திரைபடத்தின் உயிர்நாடி என்றால் அது கதைக்களம்..
உயிர்நாடி கதைக்களம் என்றால் உயிர்மூச்சு உரையாடல்கள் அதாவது வசனம் .
மூச்சும் நாடியும் எதில் வேலை செய்யும் என்றால் உடலில் அந்த உடல் தான் நடிகன்
ஆக, நடிகன் என்ற உடலில் உயிர்நாடியும் மூச்சும் ஒன்றோடொன்று சரிவர கலந்தால்தான் துடிப்பு என்ற நடிப்பு உருவாகும் !
இதில் ஒன்று கூடி ஒன்று குறைந்தாலும் நடிப்பு என்ற கலை குறையுடன்தான் இருக்கும்..!

தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் !

அதன் வலிமை, வல்லமை அப்படி...!

உதாரணமாக : ஆஹா...என்ற இந்த ஒரு வார்த்தை சந்தோஷம், அதிர்ச்சி, வேதனை, கிண்டல், கோபம், தாபம் மற்றும் பல உணர்சிகளுக்கு பயன்படுத்தி நாம் பார்திரிகிறோம்..! ஒன்றிற்கு வேறொன்றை பேசினால் விஷயமே மாறிவிடும்...அதுதான் தமிழின் வலிமை...!

1952 நடிகர் திலகத்தின் முதல் படம் பராசக்தி.

அப்படி என்ன நடிகர் திலகம் பேசிவிட்டார் என்று பலர் நினைக்கலாம்...
அப்படி நினைபவர்களுக்கு : முதல் திரைப்படம் ஒரு நடிகனின் வாழ்வில், தடங்கலுடன் தொடங்கிய படம் ...8 மாதம் படபிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகரை மாற்றவேண்டும் என்று ஜாம்பவான் ஏவிஎம் செட்டியார் அடம்பிடித்த நேரம். PA பெருமாள் என்ற பங்குதாரர் எழுத்து மூலம் கொடுத்த உத்தரவாதம் என்ன தெரியுமா..செட்டியாருக்கு ? இந்த படம் கணேசன் நடித்து வெளிவந்து நஷ்டம் ஏற்பட்டால் அதை முழுவதும் தான் ஏற்கிறேன் என்ற உத்தரவாதம் தான்.

என்ன ஒரு நம்பிக்கை நடிகர் திலகத்தின் மேல் !

இதில் தோல்வி அடைந்தால் ஏவிஎம் செட்டியார் அவர்கள் கூறியது சரிதான் என்ற ஏளன பேச்சு உறுதியாகிவிடும்...முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி உண்மையாகிவிடும். ஒரு நடிகனின் மனோபாவம் அந்த தருணத்தில் எப்படி இருக்கும் என்பதை நினைத்து சற்று பார்க்கவேண்டும்..! இந்த சூழலில் படம் முடிந்து தீபாவளி அன்று திரைக்கு வருகிறது...

அந்த கணேசன் என்ற சிவாஜி கணேசன் தன திறமையால் தமிழ் தாயை தமிழாக ,அழகாக பேசி தமிழ் தாயின் ஆசியோடு தன் முதல் படத்திலேயே , ஒரே இரவில் உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்று பல சாதனைகளை படைக்கும் கலை தாகத்தோடு செல்கிறார்.

முதல் படத்தில் நவரச நடிப்பை இப்படி ஏதேனும் நடிகர் செய்திருப்பாரா என்று இதை பார்ப்பவர் சொல்லவேண்டும் !

முதல் படத்தில் நடிகர் திலகத்தின் ஹாஸ்ய நடிப்பு

http://www.youtube.com/watch?v=KsqfDbJv33U

கோபம் ரோஷம் ஆதங்கம் ஆக்ரோஷமாக மாறும் விந்தையுடன் கூடிய மிரட்டலான நடிப்பு

http://www.youtube.com/watch?v=B2ai_eNPkCs

தொடரும் ......

vasudevan31355
15th May 2013, 04:54 AM
தமிழர்களுக்கு நடிகர் திலகத்தால் நினைவு படுத்தப்பட்ட பெரியவர்கள்

வரவேற்கப் படவேண்டிய விஷயம் சவுரி சார். நிச்சயம் இளையதலைமுறையினர் பயன்பெறும் வகையினில் விளங்கக் கூடிய விஷயமாய் இருக்கும். அதே போல ந.மு, ந.பி என்று பிரித்து தமிழ் சம்பாஷனைகள் வித்தியாசத்தை விஷூவல் காட்சிகளின் மூலம் விளக்கியதும் அருமை!

தங்களைப் போல ஒவ்வொருவரும் வித்தியாசமாக இப்படி முயற்சி செய்யவேண்டும், நடிகர் திலகத்தின் புகழை மென்மேலும் உலகமறியச் செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள். அவா.

தங்கள் தொடருக்கு முதல் வாழ்த்து சொன்னவன் என்ற பெருமையில்

உங்கள்
வாசுதேவன்.

vasudevan31355
15th May 2013, 04:56 AM
உதாரணமாக : ஆஹா...என்ற இந்த ஒரு வார்த்தை சந்தோஷம், அதிர்ச்சி, வேதனை, கிண்டல், கோபம், தாபம் மற்றும் பல உணர்சிகளுக்கு பயன்படுத்தி நாம் பார்திரிகிறோம்..! ஒன்றிற்கு வேறொன்றை பேசினால் விஷயமே மாறிவிடும்...அதுதான் தமிழின் வலிமை...!

super.

vasudevan31355
15th May 2013, 05:05 AM
ஓவ்வொரு முறையும் முறுக்குக்கும், வடைக்கும் விற்பவன் காசு கேட்கும் போது சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வாய் திறக்காமல் சிரிக்கும் அந்த கேலியும் கிண்டலுமான நமட்டுச் சிரிப்பு....

முதல் படத்திலேயே மூவாயிரம் படங்களில் நடித்த அனுபவத்தைக் காட்டியிருப்பார்.
கோபால் உரைத்தது போல என்றும் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும் ஆண்டவனின் அதிசயப் படைப்பு.

goldstar
15th May 2013, 06:23 AM
I am listening this song after long long time, I hope our friends like to listen this song again. This song takes me back to School days when watched this movie in Madurai Chinthamani with so much fun with fans.

https://www.youtube.com/watch?v=180y-77Q1Gk

goldstar
15th May 2013, 06:26 AM
This video is for the people to talk about acting. So many actors performance done by an actor within 7 minutes. Genius NT.

https://www.youtube.com/watch?v=Sy76CYBBZWk

Gopal.s
15th May 2013, 07:02 AM
உயர்திரு கோபால் அவர்களுக்கு,

என்ன உயர்திரு என்று பார்கிரீர்களா. நீங்கள் சார் போட்டதால் நான் உயர்திரு என்று எழுதினேன். உங்களுடைய மேற்கூறிய வரிகள். வம்புக்கிழுத்து தொடர் தாக்குதல் உரையாடல் - மற்றும் ஒரு வம்புக்கிழுத்து தொடர் தாக்குதல் ஆரம்பிப்பதற்கு அச்சாரமா? - I mean, on the lighter side Gopal sir..I mean...உயர்திரு கோபால் அவர்களே. !

ஆரம்பத்தில் சிறிது உந்தப்பட்டலும் போக போக உண்மையறிந்து நானும் அதை ரசித்தேன் அதற்க்கு தக்கவாறு பதில் அளித்தேன். Nothing பர்சனல், obviously !

உங்களுடைய மொத்த பதிப்பும் கிட்டத்தட்ட 94 பக்கங்கள் ... I have already taken the printout and stapled it to read during my train journey..! நல்ல ஒரு தொகுப்பினை எந்த தொந்தரவும் இல்லாமல் படிப்பதற்கு தக்க தருணம் Train Journey.

சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்....ம்ம்ம்ம்ம்ம் ! தேரில் வந்த ராஜ ராஜன் என்பக்கம் பாடல் போல !
அடப்பாவி,
படிக்காமலேதான் Dysentery ,Diarrhea என்றெல்லாம் திட்டி கொண்டிருந்தாயா?Authenticity என்ற வார்த்தையை திரும்ப பெற்று கொள்கிறேன்.
உன்னுடைய(நீதான் சார் வேண்டாமென்று சர் பட்டத்தை திருப்பி விட்டாயே?) பேச்சு வழக்கு அழகான ஆரம்பம் தொடரு. உன் style of nerration ரொம்ப unique . ரஹ்மான் இசையில் செய்ததை போல அழகாக meter break பண்ணுகிறாய்.

Gopal.s
15th May 2013, 07:31 AM
தொடர்கிறது....

தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் !

அதன் வலிமை, வல்லமை அப்படி...!

உதாரணமாக : ஆஹா...என்ற இந்த ஒரு வார்த்தை சந்தோஷம், அதிர்ச்சி, வேதனை, கிண்டல், கோபம், தாபம் மற்றும் பல உணர்சிகளுக்கு பயன்படுத்தி நாம் பார்திரிகிறோம்..! ஒன்றிற்கு வேறொன்றை பேசினால் விஷயமே மாறிவிடும்...அதுதான் தமிழின் வலிமை...!

சீ போ என்பதை வெறுப்பு, உதாசீனம்,இயலாமை, மிரட்டல், செல்லமான காதல், அகந்தை, இத்தனைக்கும் புதிய பறவை, ராஜபார்ட் ரங்கதுரை, தீபம்,அவன் ஒரு சரித்திரம் ,தீர்ப்பு படங்களில் காட்டியவர் அவர்தானே? உச்சரித்து உடல் மொழி காட்டுவதில் ஒற்றை சொல்லுக்கு ஓராயிரம் பொருள்கள்.

IliFiSRurdy
15th May 2013, 09:20 AM

தலைவர் சொல்லி காட்டிய ச்சீக்கள் சில! சொல்லாமல் சொன்னவை சில!!..

வெறுப்பும் கோபமும் கலந்த ..வீரபாண்டிய கட்டபொம்மனின் ச்சீ
கோபமும் இயலாமையும் கலந்த ..எதிரொலி கதாநாயகனின் ச்சீ
விரக்தியும் வெறுப்பும் கலந்த நெஞ்சிருக்கும்வரை கதாநாயகனின் ச்சீ
அலட்சியமும் கோபமும் கலந்த பாசமலர் கதாநாயகனின் ச்சீ
விரக்தியும் மனமுதிர்ச்சியும் கலந்த முதல்மரியாதை கதாநாயகனின் ச்சீ
சுயமரியாதையும்,இனப்பற்றும் கலந்த தேவர்மகன் மூத்த தேவரின் ச்சீ

அப்புறம் செல்லமான காதலுக்கு ச்சீ என்பது பெண்களுக்கே உரித்தானது.
மேலும் அது சீ போ இல்லை (மன்னிக்கவும் நெய்வேலி syllabus எனக்குத்தெரியாது)
ச்சீ யும் இல்லை!! அது...... ச்சீய்!!

eehaiupehazij
15th May 2013, 09:37 AM
dear vasudeven sir. I remain spellbound as this thread has been gaining momentum and overwhelming responses with amazing documentations from Gopal Sir, Ganpat Sir, Ragavendran Sir, Sowrirajan Sir..... I try to contribute in their shadows with the single most objective of establishing our NT's image in the minds of present generation as the one and only thespian of acting across the globe.

IliFiSRurdy
15th May 2013, 10:13 AM
தமிழ் பட நகைச்சுவை காட்சிகளில் மகுடம் போன்றது பராசக்தி முறுக்கு வடை காட்சி.
அதை நினைவு கூர்ந்த நண்பர் சவுரிக்கு நன்றி.

நாம் நினைவில் கொள்ள வேண்டியவை இரண்டு..
இது அறுபது ஆண்டுகள் பழமையானது.
இந்த கதாநாயகனுக்கு இது முதல் படம்.

இப்போ அந்த காட்சிக்கு வருவோம்.
பொதுப்படையாக அந்த நாயகன் செய்வது ஒரு ஏமாற்று வேலை.
ஆனால் frame by frame பாருங்கள் எதிலாவது அவர் ஏமாற்றுவது போல தெரிகிறதா?
அதை ஒரு விளையாட்டு போல ஆக்கியிருப்பார்..
நான் செய்வது தவறுதான் ஆனால் அதற்கு காரணம் பசி என்பதை நடிப்பால் உணர்த்தியிருப்பார்.
முறுக்கு விற்பவனின் பாடலை ரசித்துக்கொண்டே சாப்பிடுவது.
அவனை ஒரு மனநோயாளி போல நடித்து ஒட வைப்பது.
பிறகு அவைகளை ஒரு செல்வந்தரிடம் விற்கும்போது முன்ஜாக்கிரதையாக பணம் கேட்கும் சாமர்த்தியம்.
ஒரு ரூபாய்க்கு சில்லறை இருக்கா எனஅவர் கேட்கும் போது இவர் முகத்தில் தோன்றும் ஒளி மற்றும் கள்ளச்சிரிப்பு.
முடிவாக அந்த காட்சியை இயக்குனர் முடித்து வைக்கும் விதம்.

இந்த ஒரு சரளத்தை நான் இதுவரை எந்த ஒரு திரைப்படகாட்சியிலும் கண்டதில்லை.

வாருங்கள் நண்பர்களே,
அந்த இனிஷியலற்ற பெருமாளுக்கும்,
P.A.பெருமாளுக்கும்,
நம் நெஞ்சார்ந்த வணக்கத்தை
நன்றியுடன் சொல்லுவோம்.

RAGHAVENDRA
15th May 2013, 02:35 PM
எதைப் பாராட்டுவது எனத் தெரியவில்லை...
சரியான சமயத்தில் நம் அனைவரின் உள்ளத்தையும் பிரதிபலித்த வாசுதேவன் சாரின் வேண்டுகோளைப் பாராட்டுவதா
அல்லது ...
திரைத்தமிழ் ... நடிகர் திலகத்திற்கு முன் ... நடிகர் திலகத்திற்குப் பின் ...
என்ற புதிய கோணத்தில் புதிய தொடரைத் துவக்கியுள்ள சௌரிராஜனைப் பாராட்டுவதா ....
சீ...
என்ற ஓரெழுத்தில் ஓராயிரம் பொருள் விளக்கும் மேதையின் சிறப்பைச் சொன்ன சௌரி.. அதற்கு தொடர் வளக்கம் தந்த கண்பத் ...
அருமையான திருப்பம் பாடலைத் தந்த சதீஷைப் பாராட்டுவதா ..

குழப்பமே இல்லை ..

இவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு புலமையைப் புகுத்தியுள்ள அந்த மகா கலைஞனைத் தான்

பாராட்ட வேண்டும்...

ஈடு இணையில்லா ஒப்பற்ற கலைஞனே..

தமிழ்த்தாயின் பெருமையை தரணியெங்கும் உரைத்த

தவப் புதல்வனே...

உங்களைத் தான் பாராட்ட வேண்டும்...

RAGHAVENDRA
15th May 2013, 02:37 PM
அபூர்வ நிழற்படங்கள்

தங்கை திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் நடிகர் திலகத்தின் ஓவியங்கள் இடம் பெற்றன.. அவற்றிலிருந்து

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/THANGAINTSKETCH01_zpsbe4f906d.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/THANGAINTSKETCH01_zpsbe4f906d.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/THANGAINTSKETCH02_zps443e84b1.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/THANGAINTSKETCH02_zps443e84b1.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/THANGAINTSKETCH05_zps2b564f7d.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/THANGAINTSKETCH05_zps2b564f7d.jpg.html)

Gopal.s
15th May 2013, 03:52 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-30

ஸ்டெல்லா ஆட்லர் , stanilavsky மற்றும் ஸ்ட்ராஸ்பெர்க் என்ற தன் ஆசிரியர்களோடு கருத்து முரண் பட்டு வெளியேறும் போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். 1927 இல் தமிழகத்தில் ஒரு உலக நடிப்பு மேதை பிறந்து தனக்கும் சிஷ்யனாக இருந்து, தன் குருக்களுக்கும் சிஷ்யனாக அபார திறமையால் இணைப்பு பாலம் போட போகிறார் என்று.

ஸ்டெல்லா வெளியேறும் போது , ஒரு நடிகனின் நினைவுகளில் இருந்துதான் (sense memory)உணர்ச்சியை காட்ட வேண்டுமென்றால் அந்த மாதிரி நடிப்பே தனக்கு வேண்டாம் என்று declare செய்தார். வேறு வேறு கலாசாரம், வேறு வேறு மதிப்பீடுகள்(values ),வேறு வேறு காலநிலைகள், கொண்ட பாத்திரங்களில் நடிக்கும் போது ஒரு நடிகரின் தனிப்பட்ட பிரத்யேக பண்பாடு ,அனுபவித்த உணர்வு நிலைகள்,அனுபவங்கள் என்பவற்றை கொண்டு மட்டும் மேடையேறுவது, அந்த நடிகரை மேடையிலேயே நிர்வாணமாக்கி விடுவது போன்றது என்றும் ஸ்டெல்லா கருதினார்.அதனால் ஆய்வு செய்து வேறு வேறு நிலைகளினாலான நடிப்புக்கு faking the emotions (போலி செய்த உணர்வுகள்) என்பது அவசியமானால் செய்யத்தான் வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டார்.

உடற்பயிற்சி, குரல் பயிற்சி இவற்றுக்கு முக்கியத்துவம் தந்ததுடன்,ஒரு நடிகன் மேடையை ஆக்ரமிக்க வேண்டும் என்றும்,உடல் மொழியில் பண்பட்டு, குரலால் தெளிவாகவும்,பாவத்துடனும் ,தன்னை மீறிய ஆகிருதியுடன் (Size )மேடையை கௌரவிக்கும் வகையில் (Stage Presence ) இருக்க வேண்டும் என்றும் larger than life presentation அவசியம் என்றும் கருதினார்.

போரடிக்காமல்,ஒரு நடிகன் தன் திறமையால் தன் நடிப்பின் அத்தனை அம்சங்களையும்,விருப்பங்களையும் நிறைவேற்றி கொண்டு ஒரு காட்சிக்கு வேண்டிய அபார character interpretation /manupulation செய்து அந்த காட்சியையே ஆக்ரமிக்க வலியுறுத்தினார்.

அவரின் சில Quotes உங்கள் பார்வைக்கு ஆங்கிலத்திலேயே......

In your choices lies your talents.

Dont use your conscious past.Use your creative imagination to creat a past that belongs to your character.
I dont want you to be stuck with your life.Its too little.

You cant be boring.life is boring.weather is boring.Actors must not be boring.

Life beats down and crushes the soul and art reminds you that you have one.

-----To be Continued.

JamesFague
15th May 2013, 04:14 PM
NT's Golden movies:

1. Nallathoru Kudumbam - today at 7.30 pm in Murasu TV

2. Iruvar Ullam on Sunday at 3.30 in Kalaignar TV

Dont miss it

KCSHEKAR
15th May 2013, 04:28 PM
Today's Times of India on International Family Day

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TimesOfIndia006_zps10c689ff.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TimesOfIndia006_zps10c689ff.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TimesOfIndia006_zps71fe6b9f.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/TimesOfIndia006_zps71fe6b9f.jpg.html)

KCSHEKAR
15th May 2013, 04:34 PM
டியர் செளரி சார்

தமிழர்களுக்கு நடிகர் திலகத்தால் நினைவு படுத்தப்பட்ட பெரியவர்கள் - நல்ல தலைப்பு, நல்ல தொடக்கம். தொடருங்கள், நன்றி

KCSHEKAR
15th May 2013, 04:36 PM
டியர் வாசுதேவன் சார்,

தங்களுடைய ஆதங்கம் ஏற்கக்கூடியதே. என்மீது தவறு இருப்பின் பொறுத்தருளவும்.

vidyasakaran
15th May 2013, 04:42 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-30

ஸ்டெல்லா ஆட்லர் , stanilavsky மற்றும் ஸ்ட்ராஸ்பெர்க் என்ற தன் ஆசிரியர்களோடு கருத்து முரண் பட்டு வெளியேறும் போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். 1927 இல் தமிழகத்தில் ஒரு உலக நடிப்பு மேதை பிறந்து தனக்கும் சிஷ்யனாக இருந்து, தன் குருக்களுக்கும் சிஷ்யனாக அபார திறமையால் இணைப்பு பாலம் போட போகிறார் என்று.

ஸ்டெல்லா வெளியேறும் போது , ஒரு நடிகனின் நினைவுகளில் இருந்துதான் (sense memory)உணர்ச்சியை காட்ட வேண்டுமென்றால் அந்த மாதிரி நடிப்பே தனக்கு வேண்டாம் என்று declare செய்தார். வேறு வேறு கலாசாரம், வேறு வேறு மதிப்பீடுகள்(values ),வேறு வேறு காலநிலைகள், கொண்ட பாத்திரங்களில் நடிக்கும் போது ஒரு நடிகரின் தனிப்பட்ட பிரத்யேக பண்பாடு ,அனுபவித்த உணர்வு நிலைகள்,அனுபவங்கள் என்பவற்றை கொண்டு மட்டும் மேடையேறுவது, அந்த நடிகரை மேடையிலேயே நிர்வாணமாக்கி விடுவது போன்றது என்றும் ஸ்டெல்லா கருதினார்.அதனால் ஆய்வு செய்து வேறு வேறு நிலைகளினாலான நடிப்புக்கு faking the emotions (போலி செய்த உணர்வுகள்) என்பது அவசியமானால் செய்யத்தான் வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டார்.

உடற்பயிற்சி, குரல் பயிற்சி இவற்றுக்கு முக்கியத்துவம் தந்ததுடன்,ஒரு நடிகன் மேடையை ஆக்ரமிக்க வேண்டும் என்றும்,உடல் மொழியில் பண்பட்டு, குரலால் தெளிவாகவும்,பாவத்துடனும் ,தன்னை மீறிய ஆகிருதியுடன் (Size )மேடையை கௌரவிக்கும் வகையில் (Stage Presence ) இருக்க வேண்டும் என்றும் larger than life presentation அவசியம் என்றும் கருதினார்.

போரடிக்காமல்,ஒரு நடிகன் தன் திறமையால் தன் நடிப்பின் அத்தனை அம்சங்களையும்,விருப்பங்களையும் நிறைவேற்றி கொண்டு ஒரு காட்சிக்கு வேண்டிய அபார character interpretation /manupulation செய்து அந்த காட்சியையே ஆக்ரமிக்க வலியுறுத்தினார்.

அவரின் சில Quotes உங்கள் பார்வைக்கு ஆங்கிலத்திலேயே......

In your choices lies your talents.

Dont use your conscious past.Use your creative imagination to creat a past that belongs to your character.
I dont want you to be stuck with your life.Its too little.

You cant be boring.life is boring.weather is boring.Actors must not be boring.

Life beats down and crushes the soul and art reminds you that you have one.

-----To be Continued.

கோபால் அவர்களுக்கு, நன்றிகள் பல. தொடர்ந்து இத்தொடரை விரும்பி வாசித்து வருகிறேன்.
உற்சாகத்துடன் தொடருங்கள். தொடர்கிறோம்.

abkhlabhi
15th May 2013, 04:48 PM
http://anuradhawarrier.blogspot.in/2011/11/muthal-mariyathai.html

abkhlabhi
15th May 2013, 05:10 PM
Reality of many in Reel . NT at his best

http://www.youtube.com/watch?v=NWnTa0rDF94

RAGHAVENDRA
15th May 2013, 05:14 PM
வித்யா சாகரன் சார் ,
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் பார்வைக்கும் உளமார்ந்த நன்றி. வருக வருக தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தருக.

abkhlabhi
15th May 2013, 05:33 PM
http://www.accesskollywood.com/news-id-sa-chandrasekar-never-forgets-to-do-this-sivaji-ganesan-15-05-135129.htm

abkhlabhi
15th May 2013, 05:48 PM
Samrat Ashoka

http://www.youtube.com/watch?v=iHwXc6G-kew

Socratis

http://www.youtube.com/watch?v=me7dsSD0rp8

http://www.youtube.com/watch?v=EsvmVuH_23Y

abkhlabhi
15th May 2013, 05:53 PM
by Group of KARNAN

http://www.youtube.com/watch?v=sTxuqQu0Hfw

Fans aravaram inside Anna theatre for Sorgam 'ponmagal vandhal" song (don't know already uploaded here or not?)

http://www.youtube.com/watch?v=oLyfvlRRZew

RAGHAVENDRA
15th May 2013, 07:18 PM
இந்த நிழற்படத்தில் சிவந்த மண் திரைப்படத்தின் விளம்பரம் உள்ளது. அநேகமாக 7வது வாரம் விளம்பரம் என யூகிக்கிறேன். தெலுங்கில் உள்ளதால் புரியவில்லை. நண்பர் பார்த்தசாரதி அவர்கள் இதைப் பற்றிக் கூற முடியும் என எண்ணுகிறேன். சாரதி சார், can you try?

http://i1358.photobucket.com/albums/q767/sbdbvintage/akhandudu-nede-1.jpg

RAGHAVENDRA
15th May 2013, 07:26 PM
BANGARU BABU 100TH DAY AD?

http://i50.tinypic.com/15oxna1.jpg

RAGHAVENDRA
15th May 2013, 07:42 PM
நடிகர் திலகத்தைப் பற்றி தெலுங்குப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்துள்ள கட்டுரையின் பக்கம் நிழற்படமாக.

http://i437.photobucket.com/albums/qq97/Soggadu75/shivajiNSBKRR1.jpg

http://i437.photobucket.com/albums/qq97/Soggadu75/shivajiNSBKRR2.jpg

இதனைத் தரவேற்றிய நண்பருக்கும் இணைய தளத்திற்கும் நன்றி

தெலுங்கில் உள்ள இதனை நம் நண்பர்கள் யாராவது தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மொழி பெயர்த்து அளித்தால் நலமாக இருக்கும். அது மட்டுமின்றி கீழே உள்ள இணைப்பில் நடிகர் திலகத்தைப் பற்றிய விவாதமும் தெலுங்கு வார்த்தைகள் ஆங்கிலத்தில் உள்ளன. இதுவும் நமக்கு மொழி பெயர்க்கப் பட்டால் நலம். முன்கூட்டியே நம் நண்பருக்கு நமது நன்றியினையும் இதற்காக தெரிவித்துக் கொள்கிறோம்.

http://www.sbdbforums.com/post/Rare-Photos-articles-pomplets-etc.-2966563

Gopal.s
15th May 2013, 08:10 PM
கோபால் அவர்களுக்கு, நன்றிகள் பல. தொடர்ந்து இத்தொடரை விரும்பி வாசித்து வருகிறேன்.
உற்சாகத்துடன் தொடருங்கள். தொடர்கிறோம்.
Many Thanks for your encouragement Mr.Vidyasakaran. It gives me verve and Energy.

Gopal.s
15th May 2013, 08:12 PM
நாகேஸ்வரராவ் படத்தை போட்டு ஏனைய்யா mood out செய்கிறீர்கள்?constipation வந்து நிறைய பேர் அவதி பட போகிறார்கள்.

vasudevan31355
15th May 2013, 08:38 PM
நாகேஸ்வரராவ் படத்தை போட்டு ஏனைய்யா mood out செய்கிறீர்கள்?constipation வந்து நிறைய பேர் அவதி பட போகிறார்கள்.

மொக்கை! அதில் தலைவர் guest role பண்ணவில்லையா?... அது 100 நாள் ஓடினால் நமக்குத்தானே பெருமை!

இந்த வாய்தான் உன்னைக் கெடுக்குது....

நீங்க மட்டும் அந்த விஸ்கி.. இந்த பிராந்தி என்ற பெயர்களில் பிராந்தலாமா?...

சரியான ஆளுய்யா...தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் அரிய ஆவணங்களை ரசி... குறை கூறாதே! :banghead:

vasudevan31355
15th May 2013, 08:41 PM
ஓஹோ.. இப்பதான் புரியுது... நாகேஸ்வரராவுக்கு ஜோடி வாணிஸ்ரீயா! அதான் பிள்ளையால் தாங்க முடியல. பாப்பா... பால் குடிச்சுட்டு சமத்தா படுத்துக்கோ...இந்தா லாலி பாப்.

http://i1.ytimg.com/vi/D6BJBfU-adY/maxresdefault.jpg

RAGHAVENDRA
15th May 2013, 08:57 PM
வாசு சார், சூப்பர்...

இதைப் பார்த்து விட்டு அதற்கப்புறம் தங்களுடைய பதிவில் உள்ள பாட்டைப் பார்க்கட்டுமே... for a change ...

http://youtu.be/yykiNsffHUs

அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன... தெலுங்கில் பாடிப் பாருங்கள் ... அல்லது இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தைக் கற்பனை செய்யுங்கள்..

vasudevan31355
15th May 2013, 09:17 PM
http://1.bp.blogspot.com/-PM2iHwLq3No/TkpNkBmCHmI/AAAAAAAAANY/Tp_Gzd2-llw/s1600/bb.JPG

இந்த இமேஜ் நம்ம பாலா சார் blog கிலிருந்து எடுத்தது. இது எந்த படத்தின் function என்று நண்பர்கள் கூற முடியுமா?... ராகவேந்திரன் சார், கோபால் அமைதி காக்க.

vasudevan31355
15th May 2013, 09:21 PM
நாளை முதல் ஒருவாரம் வரை தலைவரின் மிக அரிய 'புகைப்படங்கள் வாரம்'.

தினம் ஒரு அரிய புகைப்படம். ஏழு நாட்களுக்கு. ரசிக்கத் தயாராகுங்கள்.

RAGHAVENDRA
15th May 2013, 09:52 PM
வாசு சார்,
வாரத்தை மாதமாக்குங்கள்... மாதத்தை வருடமாக்குங்கள்....வருடத்தை யுகமாக்குங்கள்....
நாங்கள் அந்தத் திருமுகத்தைப் பார்த்துக்கொண்டே................இருக்க வேண்டும்............

Georgevob
15th May 2013, 11:13 PM
http://1.bp.blogspot.com/-PM2iHwLq3No/TkpNkBmCHmI/AAAAAAAAANY/Tp_Gzd2-llw/s1600/bb.JPG

இந்த இமேஜ் நம்ம பாலா சார் blog கிலிருந்து எடுத்தது. இது எந்த படத்தின் function என்று நண்பர்கள் கூற முடியுமா?... ராகவேந்திரன் சார், கோபால் அமைதி காக்க.

ஏவிட்டி வாசுதேவன் காரு...

E -function ஏவிட்டி function நீக்கு தெலியது? இதி சாணக்ய சந்திரகுப்தா Silver Jubiliee functionlu, நடிகர் திலகமுலு, "நூவன்ட்டே நாக்கு சால இஷ்டம் " செப்துன்ன NTR காரு, எவரிகொசம்...இதி எவரிகொசம் பாட்டா ANR காரு உன்னரே....நீக்கு அர்தம் ஆயிந்தகத ?

Georgevob
15th May 2013, 11:26 PM
ஊக்கம் அளித்து பாராட்டிய நடிகர் திலகத்தின் பிள்ளைகளுக்கு அதாவது என் அண்ணன் மற்றும் தம்பிமார்களுக்கு மிக்க நன்றியை உரிதாக்கி இன்றைய பகுதியை நேற்றைய பகுதியிலிருந்து தொடர்கிறேன்...!

நடிகர் திலகத்தை பொறுத்த வரை இந்த பராசக்தி ஒரு மிகபெரிய கலைசக்தியாக மாறியது. பலரும் நடிகர் திலகத்திடம் இருந்து எதிர்பார்க்காத பல சாதனைகளை சொடுக்கு போடும் நேரத்தில் நடத்தி காட்டி பல சாதனைகளுக்கு, பல திறமைகளுக்கு முன்னோடியாக விளங்கி இருக்கிறார். அவரால் தமிழ் திரைஉலகம் பல நல்ல வழிகளில் வளமையும் பெருமையும் பெற்றது !

Georgevob
15th May 2013, 11:46 PM
அடுத்தது பாடல் வரிகேற்ப வாய் அசைத்தல் - முதல் படம்- அதில் திராவிட கருத்துக்களை சொல்லும் பாடல் - காட்சிபடி இதை பாடுவது ஒரு பயித்தியம் போல வேஷமிட்ட நாயகன்..கதைப்படி மற்றவர்களை பொருத்தவரை ஒரு பயித்தியம்...நடிகர் திலகத்தின் குரல் இயற்கையாக 9 டு 10 கட்டை கொண்ட சிம்ஹகுரல்...அனால்..பாடியிருப்பவர்...திரு.C S ஜெயராமன் அவர்கள்.

திறமை என்பது நடிப்பில் மட்டும் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் - திரு.ஜெயராமன் அவர்களுடைய குரல் மெல்லிய மென்மையான குரல். வழுக்கிக்கொண்டு செல்லும் குரல்...நடிகர் திலகத்தின் இயற்க்கை குரலோ சிம்ஹகுரல்.
இதை எவ்வளவு திறமை அவருள் இருந்தால் இப்படி வாயசைத்திருப்பர் என்று பாருங்கள். நடிகர் திலகம் திரு.ஜெயராமன் அவர்கள் பாடும்போது, தன்னுடைய பாவத்தை, முகவாயகட்டையை சிறிது குவித்து வைத்து...அதாவது வாயில் சிறிது வெற்றிலையோ அல்லது தண்ணீரோ வைத்துகொண்டு பேசினால் என்னகுரல் வருமோ அதுபோல வாயசைத்திருப்பர் .

பின்பு நடனம் - ஒருவித தான்தோன்றித்தனமான நடனம் இதில் பார்க்கலாம்...நடன ஆசிரியர் சொல்லிகொடுத்த ஸ்டெப்ஸ் மட்டுமே இங்கே நாம் பார்க்க முடியும். காட்சிக்கு என்ன தேவையோ அதை லாவகமாக செய்திருப்பார் நம்முடைய சித்தர் ! அந்த Movements அனைத்தும் பின்னணி இசையோடு கலந்து இருக்கும் நாம் சற்று கண்ணமூடி பாடலை கேடோமேயானால்...!
அபிநயம் இந்த பாடலில் அவரது தனி முத்திரை ! பாடல் வரிகேற்ற அபிநயம். இதை எந்த டைரக்டர் சொல்லி கொடுத்திருப்பார் அவருக்கு..! உதாரணம் : நல்லவரானாலும் (காசு/பணம்) இல்லாதவரை நாடுமதிக்காது குதம்பாய் என்ற வரி...இந்த வரி வரும்போது காசு / பணம் என்ற வார்த்தை பாடலில் இடம் பெற்றிருக்காது. ஆனால் நடிகர் திலகம் தனுடைய விரலை சுண்டி காண்பித்து காசு / பணம் என்று புரியவைப்பார். !

உங்களுடைய பார்வைக்கு அதன் ஓலி ஓளி வடிவம் !
http://www.youtube.com/watch?v=eCVQAzG8_14

Georgevob
16th May 2013, 12:21 AM
நடிகர் திலகத்தின் நடிப்பின் உச்சம் அந்த நீதிமன்றம் காட்சி.....அவருக்கு பிறகு வந்த மூன்று முதல் நான்கு தலைமுறைகள், நடிகர் திலகத்தின் இந்த காட்சியை தங்களுக்குள்ள சினிமா ஆர்வம் தூண்டி ஒரு Directorayo அல்லது Producerayo காணும்போது பேசிகான்பிபது திரை உலகின் ஒரு வழக்கமாகவே இருந்தது என்றால் பாருங்கள்.

நமது அன்னை தமிழின் உயிர் அதன் நாடி எங்கெங்கு உள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுண்டி விட்டு படம் பார்க்கும் நம்மையும் அவருக்கு மனதளவில் சப்போர்ட் செய்யவைக்கும் திறம்,

கலைத்தாய், தமிழ்த்தாய் நடிகர் திலகம் வரும்வரை எவ்வளவு தாகத்துடன் தமிழ் திரை உலகம் என்ற பாலைவனத்தில் இருந்திருப்பார்கள் என்று என்னிபார்தல் வேண்டும்..!

இந்த செந்தமிழை, உரைநடை தமிழை எவ்வளவு லாவகமுடன்......ல..ள..ர..ற...ழ ....அக்ஷர சுத்தியுடன் உரைத்திருக்கிறார் அதுவும் முதல் படத்தில்....இந்த காட்சியில்...கேமரா ஒரு இடத்தில் நிருத்திவைக்கபட்டதோடு சரி. எவ்வளவு நீண்ட ஒரு வசனம்..ஒரு Takeல் எவ்வளவு நீளமான காட்சி எடுக்கப்பட்டது என்று பார்க்கும் போது...நாம் கற்று இன்று பேசும் தமிழ் ஏதோ கொஞ்சம் சுமாராக இருக்கிறதென்றால் அதற்க்கு முதல் காரணம் நம் சித்தர் படங்களை பார்த்து இதைபோல நாமும் பேசவேண்டும் அக்ஷரம் பிசகாமல் என்பது தான் !

அந்த அனல் பறக்கும் நீதிமன்ற காட்சி - !

http://www.youtube.com/watch?v=SdnOlP94x2g

வசன வார்தைகளுக்கேற்ற அவருடைய முகபாவம், வார்தைகேற்றவாறு கேசம்கூட ஆடவைக்கும் அந்த தலை அசைப்பு , ஆணித்தரமாக வாதிடும்போது தானாக வரும் அந்த வலதுகை, தங்கைபற்றி, குடும்பத்தைப்பற்றி பேசும்போது முதல்படதிலயே கண்ணீரை தேக்கி எப்போது வெளியே விடவேண்டுமோ அப்போது விடவைக்கும் திறன் ...அடேயப்பா..!

தமிழ்த்தாய் தன்னுடைய மகன் இவன் ஒருவன்தான் என்றல்லவா தன்னுடைய ஆசிகளை பராசக்தியின் மாபெரும் வெற்றியையும், ஒரே இரவில் தமிழ் திரைஉலகின் நிரந்தர உச்ச நட்சத்திரம் என்ற அழியா நிலையையும் வழங்கினாள் !

இதை எழுதும்போது என்னுடைய மெய்சிலிர்கிறது..ஏனெனில் ...

என் பூர்விகம் கேரளா ...தாய்மொழி மலையாளம் !

என்னை இந்த நிலையிலாவது தமிழை சுமாராக பேசவும் எழுதவும் படிக்கவும் உந்துதலாகியது நடிகர் திலகமும் அவருடைய நடிப்பின் வீச்சும் என்பதை உணர்ந்துகொண்டதன் காரணம் !

அனைவரிலும் பெரியவராக தமிழ்த்தாய் விளங்குவதால் முதல் பெரியவர் வணக்கத்திற்கு உரிய தமிழ் தாய் பற்றிய கட்டுரை நிறைவு......

அடுத்து : நினைவுபடுத்தப்பட்ட இரெண்டாவது பெரியவர் - தொடரும் .....

Georgevob
16th May 2013, 12:33 AM
மொக்கை! அதில் தலைவர் guest role பண்ணவில்லையா?... அது 100 நாள் ஓடினால் நமக்குத்தானே பெருமை!

இந்த வாய்தான் உன்னைக் கெடுக்குது....

நீங்க மட்டும் அந்த விஸ்கி.. இந்த பிராந்தி என்ற பெயர்களில் பிராந்தலாமா?...

சரியான ஆளுய்யா...தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் அரிய ஆவணங்களை ரசி... குறை கூறாதே! :banghead:

திருவிளையாடலில் தருமி நக்கீரனிடம் சொல்வார் பாருங்கள்....
பாட்டெழுதி பேர்வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள் ...........,

பேசும் தெய்வத்தில் வரும் பாடலில் ஒரு வரி ...."இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல !"

( எங்கே கோபாலை காணவில்லையே...ஹல்லோ....ஹல்லோ...என்னது...என்னை அடிக்க கம்பெடுத்துவர போயிருக்காரா? விடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் )

Gopal.s
16th May 2013, 06:36 AM

ஓஹோஹோ!!!தாய் மொழி பற்று தேவைதான். ஆனால் இந்த அளவிற்கா?:fatigue:

Gopal.s
16th May 2013, 06:43 AM
திருவிளையாடலில் தருமி நக்கீரனிடம் சொல்வார் பாருங்கள்....
பாட்டெழுதி பேர்வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள் ...........,

பேசும் தெய்வத்தில் வரும் பாடலில் ஒரு வரி ...."இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல !"

( எங்கே கோபாலை காணவில்லையே...ஹல்லோ....ஹல்லோ...என்னது...என்னை அடிக்க கம்பெடுத்துவர போயிருக்காரா? விடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் )
பாவிகளா! print out எடுத்து ரயிலில் படித்துமா whisky brandy புரியவில்லை? நான் தலைவரின் அரிய ஆவணங்களை எங்கே குறை சொன்னேன்?
ஆனாலும் மனம் திறந்த பாராட்டு. Whisky Diarrhea வினால் அவதி படும் அன்பர்களுக்கு,constipation நன்மைதானே?

சீரியல் ஆரம்பிச்சிட்டாரே? Diarrhea தொத்து வியாதிதான். அகில உலக medical conference இல் இதை ஆதார பூர்வமாக நிரூபித்து நோபெல் பரிசுக்கு முயல்வேன்.

Gopal.s
16th May 2013, 06:54 AM
வாசு சார், சூப்பர்...

இதைப் பார்த்து விட்டு அதற்கப்புறம் தங்களுடைய பதிவில் உள்ள பாட்டைப் பார்க்கட்டுமே... for a change ...

அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன... தெலுங்கில் பாடிப் பாருங்கள் ... அல்லது இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தைக் கற்பனை செய்யுங்கள்..
ஆஹா!!ஜாலி !!பார்த்தா சார் இதை பார்த்தா பறந்தோடி வருவார். remake specialist .

vasudevan31355
16th May 2013, 07:05 AM
ஓஹோஹோ!!!தாய் மொழி பற்று தேவைதான். ஆனால் இந்த அளவிற்கா?:fatigue:

http://img593.imageshack.us/img593/6651/vlcsnap2010110809h22m58.png

புரிந்து கொண்டாயே என் ஷெல்வமே! புத்திசாலிடா செல்லம். சமத்தோன்னோ!

Gopal.s
16th May 2013, 07:12 AM
[QUOTE=

புரிந்து கொண்டாயே என் ஷெல்வமே! புத்திசாலிடா செல்லம். சமத்தோன்னோ![/QUOTE]
typing Error .புத்திசாலிடா ஷெல்லம். ஷமத்தோன்னோ ?என்பதே சரியானது.

vasudevan31355
16th May 2013, 07:12 AM
பாவிகளா! print out எடுத்து ரயிலில் படித்துமா whisky brandy புரியவில்லை? நான் தலைவரின் அரிய ஆவணங்களை எங்கே குறை சொன்னேன்?
ஆனாலும் மனம் திறந்த பாராட்டு. Whisky Diarrhea வினால் அவதி படும் அன்பர்களுக்கு,constipation நன்மைதானே?

சீரியல் ஆரம்பிச்சிட்டாரே? Diarrhea தொத்து வியாதிதான். அகில உலக medical conference இல் இதை ஆதார பூர்வமாக நிரூபித்து நோபெல் பரிசுக்கு முயல்வேன்.

தம்பி! உனக்கு முன்னாடியே இங்கே பல பேர் சீரியல் ஆரம்பிச்சாச்சு. கம்முன்னு கெட.

vasudevan31355
16th May 2013, 07:14 AM
typing Error .புத்திசாலிடா ஷெல்லம். ஷமத்தோன்னோ ?என்பதே சரியானது.

ஓஹோஹோ!!!தாய் மொழி பற்று தேவைதான். ஆனால் இந்த அளவிற்கா?

Gopal.s
16th May 2013, 07:15 AM
ஓஹோஹோ!!!தாய் மொழி பற்று தேவைதான். ஆனால் இந்த அளவிற்கா?
அய்யோயோ?என்னவாயிற்று எனக்கு?நேற்று கடையில் Girl friend க்கு சவுரி(ஜவுரி?) முடி வாங்கியதில் இருந்து எச பாட்டாகவே தொடருகிறது?

Gopal.s
16th May 2013, 07:22 AM
தம்பி! உனக்கு முன்னாடியே இங்கே பல பேர் சீரியல் ஆரம்பிச்சாச்சு. கம்முன்னு கெட.
diarrhea என்றுதானே பொதுவாக சொன்னேன்?என் diarrhea உன் diarrhea என்று பேதமா பார்த்தேன்?ஏனைய்யா புரிந்து கொள்வதே இல்லை? ஆனால் விதை யார் போட்டாலும் நோபெல் பரிசு என்னுது. இதெல்லாம் பெருமையா?கடமை.

vasudevan31355
16th May 2013, 07:24 AM
அய்யோயோ?என்னவாயிற்று எனக்கு?நேற்று கடையில் Girl friend க்கு சவுரி முடி வாங்கியதில் இருந்து எச பாட்டாகவே தொடருகிறது?

சவுரிமுடி வாங்கியதில் இருந்தா?

சவுரி முடி வாங்கியதில் இருந்தா?

உனக்கு train இலிருந்து இருக்கு கண்ணு ஆப்பு !

RAGHAVENDRA
16th May 2013, 07:59 AM
இந்தியாவின் எட்டாவது உலக அதிசயம் – பாகம் 21-30க்கான இணைப்புகள்

பாகம் - 21 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1039963&viewfull=1#post1039963)

பாகம் – 22 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1040919&viewfull=1#post1040919)

பாகம் – 23 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1041116&viewfull=1#post1041116)

பாகம் – 24 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1041252&viewfull=1#post1041252)

பாகம் – 25 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1041398&viewfull=1#post1041398)

பாகம் – 26 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1041429&viewfull=1#post1041429)

பாகம் – 27 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1042293&viewfull=1#post1042293)

பாகம் – 28 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1042595&viewfull=1#post1042595)

பாகம் – 29 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1042607&viewfull=1#post1042607)

பாகம் - 30 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1043334&viewfull=1#post1043334)

vasudevan31355
16th May 2013, 08:04 AM
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.

இன்றைய புகைப்படம்(1)

நடிகர் திலகம் கையெழுத்திட்ட புகைப்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-37.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-37.jpg.html)

Gopal.s
16th May 2013, 08:10 AM
typing Error .புத்திசாலிடா ஷெல்லம். ஷமத்தோன்னோ ?என்பதே சரியானது.
தாய் மொழி டச் விட்டு போச்சுப்பா. புத்தி ஷாலிடா என்று வர வேண்டும். மீண்டும் typing error .

Gopal.s
16th May 2013, 08:11 AM
இந்தியாவின் எட்டாவது உலக அதிசயம் – பாகம் 21-30க்கான இணைப்புகள்

பாகம் - 21 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1039963&viewfull=1#post1039963)

பாகம் – 22 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1040919&viewfull=1#post1040919)

பாகம் – 23 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1041116&viewfull=1#post1041116)

பாகம் – 24 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1041252&viewfull=1#post1041252)

பாகம் – 25 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1041398&viewfull=1#post1041398)

பாகம் – 26 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1041429&viewfull=1#post1041429)

பாகம் – 27 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1042293&viewfull=1#post1042293)

பாகம் – 28 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1042595&viewfull=1#post1042595)

பாகம் – 29 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1042607&viewfull=1#post1042607)

பாகம் - 30 (http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10&p=1043334&viewfull=1#post1043334)
clinical precision means our vendhar. Many many thanks sir.

Gopal.s
16th May 2013, 08:13 AM
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.

இன்றைய புகைப்படம்(1)

நடிகர் திலகம் கையெழுத்திட்ட புகைப்படம்.

கையெழுத்து எங்கே?இதிலுமா water mark ?

RAGHAVENDRA
16th May 2013, 08:24 AM
கையெழுத்து எங்கே... இதிலுமா தண்ணீர் மதிப்பெண் ...

என்று கேட்க வேண்டியது தானே...

vasudevan31355
16th May 2013, 08:24 AM
கையெழுத்து எங்கே?இதிலுமா water mark ?

நல்லா பாரு! வலது மார்புபுறம் ஷர்ட் பகுதியில் புளூ இங்கால் கையெழுத்திட்டிருப்பார். blue font உனக்கு ரொம்பப் பிடிக்குமே! அப்புறம் இன்னொன்னு... நல்ல கண் டாக்ட்டரா பாரு. காசு நான் தாரேன்.

RAGHAVENDRA
16th May 2013, 08:26 AM
எச்சரிக்கை...

கோபால் சாரின் இந்தியாவின் எட்டாவது உலக அதிசயம் தொடருக்கு annexure ஆக ... மீண்டும் தொடர விருக்கிறது ...

நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும் ..

vasudevan31355
16th May 2013, 08:27 AM
கையெழுத்து எங்கே... இதிலுமா தண்ணீர் மதிப்பெண் ...

என்று கேட்க வேண்டியது தானே...

சார்! புள்ள பாவம். தண்ணீர் மதிப்பெண் என்று சொல்லி பிள்ளையை கண்ணீர் விட வைக்காதீர்கள்.

vasudevan31355
16th May 2013, 08:47 AM
typing Error .புத்திசாலிடா ஷெல்லம். ஷமத்தோன்னோ ?என்பதே சரியானது.

எல்லாம் தப்பு. புத்திஷாலிடா ஷெல்லம். ஷமத்தோன்னோ ?என்பதே ஷரியானது.

vasudevan31355
16th May 2013, 08:52 AM
எச்சரிக்கை...

கோபால் சாரின் இந்தியாவின் எட்டாவது உலக அதிசயம் தொடருக்கு annexure ஆக ... மீண்டும் தொடர விருக்கிறது ...

நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும் ..

சார்! annexure ஆ? torture ஆ?

RAGHAVENDRA
16th May 2013, 08:54 AM
திரைப்படப் பட்டியலில் அடுத்து இடம் பெற உள்ளது

http://www.shotpix.com/images/73052087189379451564.png

ஷம்பூர்ண ராமாயணம் ...

ஷாரி ...

சாரி...

சம்பூர்ண ராமாயணம்....

RAGHAVENDRA
16th May 2013, 08:57 AM
கோபாலோட சேருதில்லே... அது எப்படியோ அப்படித் தான் இதுவும் இருக்கும் ...

Gopal.s
16th May 2013, 10:34 AM
அப்பாடா !இப்போதைக்கு கண்ணன் ,ராமதாஸ் போன்ற குட்டி வில்லன்களுடந்தான் மோதல். Main வில்லன்(நம்பியார்), புகை வண்டியில் இருந்து இறங்கியவுடன்?

vasudevan31355
16th May 2013, 11:58 AM
என் கிராமம்... என் மக்கள்.

ராமாபுரம் என்ற ஊரில்தான் அப்பா ஆசிரியராக இருந்தார். அந்த ஊரின் சிறப்பம்சமே அது தலைவரது கோட்டைஎன்பதுதான். சிறிய ஊர்தான். ஒரு இருநூறு வீடுகள் இருக்கும். நான் எனது தாத்தா வீட்டில் தங்கி கடலூர் துறைமுகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். வாராவாரம் லீவுக்கு அம்மாவைப் பார்க்க வந்து விடுவேன். அப்புறம் தலைவர் படங்களின் ரிலீசின் போது ஊருக்கு வந்து விடுவேன். அப்பா கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் அந்த ஊரில் பணி புரிந்தார். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள elementary school. பின் எட்டாவது வரை விரிவு படுத்தப்பட்டு அப்போதைய கல்வி மந்திரி கக்கனை அழைத்து வந்து அப்பா அந்த ஸ்கூலை திறந்தார்கள். அம்மாவோ தீவிர வெறி கொண்ட சிவாஜி ரசிகை. தலைவர் என்றால் உயிர். நான் சொல்வது அறுபத்தைந்துகளின் கால கட்டத்தில். ராமாபுரம் ஒரு குக்கிராமம். மலைப்பாங்கான பகுதி. ஆனால் மண்வளம் நீர்வளம் அதிகம். புன்செய் சாகுபடிதான். கடலை என்னும் மணிலாக் கொட்டை, வாழை, கரும்பு, கம்பு பயிர்களை எங்கும் காணலாம். மலைப்பகுதி ஆதலால் சிலு சிலுவென்று இயற்கைக் காற்று நம்மைத் தீண்டியபடியே தவழும். ஒரே ஒரு டீக்கடை. அங்கே கம்பீரமான நம் 'வீர பாண்டியக் கட்டபொம்மன்' காலண்டரில் காட்சி தருவார்.

அம்மா மேல் அனைவருக்கும் ரொம்ப பிரியம். 'வாத்தியார் வீட்டு அம்மா' என்றுதான் அம்மாவை அனைவரும் அன்போடு அழைப்பார்கள். ஊரில் எந்தக் கல்யாணம் காட்சி நடந்தாலும் அம்மாதான் தாலி எடுத்துக் கொடுப்பார்கள். அவ்வளவு மரியாதை செய்வார்கள். அந்தந்த பயிர்களின் அறுவடைகளின் போது ஒருவர் விடாமல் அனைவரும் தங்களால் முடிந்த தானியங்களை, காய்கறிகளை, முந்திரிகளை அம்மாவிடம் கொடுத்து விட்டு போவார்கள்.அம்மா ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகளுக்கு இலவசமாக டியூஷன் எடுப்பார்கள். அதனால் அத்தனை பிள்ளைகளும் எங்கள் வீட்டிலேயேதான் கிடப்பார்கள். அனைத்து உதவிகளையும் செய்வார்கள். வீடு என்றால் கான்கிரீட் வீடு அல்ல. பனை ஓலைகளால் வேயப்பட்ட செம்மண் சுவர் கொண்ட குடிசைதான். தண்ணீர் எடுக்க மோட்டார் கொட்டகைக்குதான் போகவேண்டும். அங்கேயே குளித்துவிட்டு, துணிமணியெல்லாம் துவைத்துவிட்டு மண்பானையில் தண்ணீர் கொண்டு வருவோம். மோட்டார் கொட்டகையில் மோட்டார் இறைக்க வில்லை என்றால் தரைக் கிணறுதான். ராட்டினமெல்லாம் நீர் இறைக்கக் கிடையாது. தரையிலிருந்து நானூறு அடிகளுக்கு கீழேதான் தண்ணீர் இருக்கும். தண்ணீரே கண்ணுக்குத் தெரியாது. அப்படியே செப்புக் குடங்களின் கழுத்தில் கயிற்றின் சுருக்கை மாட்டி அப்படியே கைகளால் கீழே இறக்க வேண்டியதுதான். செப்புக் குடம் தண்ணீரைத் தொடுவதை உணர்வுகளால் புரிந்து கொண்டு அப்படி இப்படி அலசி தண்ணீரை மொள்ள வேண்டியதுதான். பல தடைகளைத் தாண்டி குடம் மேலே வரும் போது கால்வாசிக் குடத்தை மட்டுமே தண்ணீர் ஆக்கிரமித்து இருக்கும்.

அப்போதெல்லாம் மோட்டார் கொட்டகையில் மோட்டாரை ஸ்டார்ட் செய்ய தண்ணீரில் சாணத்தைக் கரைத்து மோட்டார் பைப்பின் வாயின் வழியே ஊற்றி பின் மோட்டாரை ஸ்டார்ட் செய்வார்கள். பின் தண்ணீர் வந்து அந்த அழுக்கெல்லாம் கிளியர் ஆனவுடன் ஒரே குதியும் கும்மாளமும்தான். முந்திரி விளைச்சலும் நிறைய. வாரம் ஒருமுறை சீசனின் போது கட்டுசாதம் கட்டிக்கொண்டு (புளியோதரையும், தளதள தயிர் சாதமும் மாவடுவும், நார்த்தங்காய் ஊறுகாயும்... கேக்கணுமா!) மோட்டார் கொட்டகை சென்று குளித்துவிட்டு அப்பா, அம்மா, நான் மற்றும் ஸ்கூல் பிள்ளைகள் ஸ்கூல் பிள்ளைகள் என்றால் சாதரணமாக எண்ணிவிட வேண்டாம். எட்டாவது படிக்கும் பிள்ளைகள் நல்ல ஆஜானுபாகுவாக, கிராமத்துக்கே உரிய வாட்டசாட்டமாக இருப்பார்கள். அனைவரும் கீழே ஜமுக்காளம் விரித்து நடிகர் திலகத்தைப் பற்றி பேச ஆரம்பித்தால்.... அதற்குள் சில மாணவர்கள் தங்கள் தோப்பில் இருந்து பச்சை முந்தரிகொட்டை பறித்து வந்து தரையில் போட்டு காய்ந்த பனைமட்டை ஒலைகளை கொளுத்தியபடி கையில் வைத்துக் கொண்டு அந்த முந்திரிக்கொட்டைகளை மேலும் கீழும் பிரட்டி சுட்டு எடுத்து, கொட்டைகளை உடைத்து முந்திரிப்பருப்புகளை சாப்பிடத் தருவார்கள் டேஸ்ட் என்றால் அப்படி ஒரு டேஸ்ட் . சில வானரங்கள் பரந்து வளர்ந்து கிடக்கும் பனை மரங்களின் மேல் ஏறி நுங்குகளை நூற்றுக்கணக்கில் வெட்டிப் போடும். சில நண்பர்கள் லாவகமாக நுங்குகளின் தலைகளை சீவி முக்கண்ணன் முகம் போல அவ்வளவு அழகாகத் தருவார்கள். மூன்று கண்களிலும் ஆட்காட்டி விரலை மட்டும் நுழைத்து நோண்டி நோண்டி உர்ர்... உர்ர்...என நுங்கை உறிஞ்சி சுவைத்துச் சாப்பிட தவம் இருந்திருக்க வேண்டும். வேறு சில மாணவர்கள் ஈச்ச மரத்திலிருந்து கன்னங்கரேன்ற ஈச்சம் பழங்களை பனை ஓலைககளை பொட்டலம் போல மடித்து அதில் fresh ஆகக் கொண்டுவருவார்கள். அதன் சுவை இன்னும் அலாதி. இளநீர்கள் அவ்வளவு இனிப்பாக இருக்கும். கடலை செடிகளை அப்படியே வேருடன் பிடுங்கி வந்து அதை வேறு சுட்டுத் தின்னுவோம். காலை பத்து மணிக்கு உட்கார்ந்ததும் தீனி வேட்டைதான்.

மோட்டார் கொட்டகைக்கு அருகிலேயே அத்திமரம் ஒன்று உண்டு. கிளி மூக்கு போல சிவந்த அத்திப்பழங்கள் அடுக்கடுக்காய் தொங்கும். அவற்றையும் பறித்துப் பதம் பார்ப்போம். (ஆனால் புழு அதிகம் இருக்க வாய்ப்புண்டு. ஜாக்கிரதையாக சாப்பிட வேண்டும்)

மணி இரண்டிற்கு சோற்றுக் கட்டை பிரித்து விலாசுவோம். சாப்பாடு எங்களுடையது. மாணவர்கள் பிடிவைத்த பித்தளைக் குவளையில் அருமையான கேப்பங்கூழையும், (கேப்பங்க்கூழ் உடலுக்குக் குளிர்ச்சி) கம்பங்கூழையும் (கம்பங்கூழ் சூடு) கொண்டு வருவார்கள். கடிச்சிக்க பச்சை மிளகாய் அல்லது ஊறுகாய் மிளகாய். சிலர் கத்தரிக்காய் போட்டு முதல்நாள் வைத்த கருவாட்டுக் குழம்பைக் கொண்டு வருவார்கள். அந்தக் குழம்பை கெட்டியான கேப்பங்கூழில் பிசைந்து சாப்பிட்டால்... ஆஹாஹா... சொர்க்கம் எங்கடா இருக்குமன்னு ஒருத்தன் கேட்டானாம் ..கருவாட்டுக் குழம்பில் என்று இன்னொருவன் சொன்னானாம்.

பேச்சு எதைப் பற்றியும் இருக்காது. தலைவரின் படங்களைப் பற்றிதான் பேச்சு. அப்பா டவுன் சென்றால் பொம்மை, பேசும்படம் இதழ்களை கட்டாயம் அம்மாவிற்கு வாங்கி வர வேண்டும். அம்மா அதைப் படித்து எல்லோருக்கும் தலைவரைப் பற்றி சொல்வார்கள். தலைவர் பற்றிய விவர ஆவணங்களை தனியே பிரித்து வைத்து விடுவார்கள். (அதில் அழிந்தது போக மீதி உள்ளதைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்) தலைவரைப் பற்றிய அனைத்து விஷயங்களும் அம்மாவுக்கு அத்துப்படி. அடுத்த படம் என்ன... எப்போது ரிலீஸ் என்று அனைத்து மாணவர்களும் பிய்த்துப் பிடுங்கி விடுவார்கள்.

ராமாபுரத்தில் ஒவ்வொரு குடிசையிலின் நுழைவாயிலிலும் தலைவர் படங்கள் பிரேம் போட்டு மாட்டியிருக்கும். முக்கியமாக பாடம் செய்யப்பட்ட புலியுடன் தலைவர் படு இளமையாய், இயற்கையான அழகுடன், கனகச்சித பேண்ட் ஷர்ட்டுடன் நிற்கும் அந்த உலகப் புகழ் பெற்ற ஸ்டில்லை அதிகமாகக் காணலாம். இன்றும் கூடக் காணலாம். அதற்குக் கீழேயே மண்பாண்டத்தில் கூழ் வைத்திருப்பார்கள். வெறி என்றால் இந்த வெறி அந்த வெறி கிடையாது... கண்மூடித்தனமான பக்தி. அத்தனை பேருக்கும் நான் செல்லக் குழந்தை. என் கால் தரையிலேயே படாது. நான் சிறுவன் என்பதால் யாராவது ஒருவர் தூக்கி வைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். 'குட்டி சிவாஜி' என்று செல்லப் பெயர் வேறு.

ராமமூர்த்தி அண்ணன் வீட்டில் அவருக்கு தனிரூம். president இன் பிள்ளை. பெரிய கை. ஊரிலேயே பெரிய ஓட்டு வீடு. அந்த ரூமில் பார்த்தால் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சுவரின் ஒரு இன்ச் கூட தெரியாத அளவிற்கு நூற்றுக் கணக்கில் தலைவரின் காலண்டர்கள் தொங்கும். வித விதமான காலண்டர்கள். ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், பாதுகாப்பு, இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா, பிராப்தம், சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி, தேனும் பாலும், மூன்று தெய்வங்கள் என்று வித வித போஸ்களில் தலைவர் ஜொலித்தது இன்னும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது.

நான் முன்னமே குறிப்பிட்டது போல கடலூரில் நடந்த 'பாதுகாப்பு' பட ஷூட்டிங்கில் தலைவரை நேரிடையாக ஒட்டுமொத்த கிராமத்து மக்களும் கண்டு களிக்க, எரியும் நெருப்பில் பெட் ரோலை ஊற்றியது போல 'பாதுகாப்பு' ஷூட்டிங் ராமாபுரத்து மனிதர்களை மேலும் தலைவர் வெறியர்கள் ஆக்கியது. 'பாதுகாப்பு' எங்கள் கிராமத்தையே புரட்டிப் போட்டு விட்டது.

தங்கவேலு, ராசு, சுந்தர மூர்த்தி, பழனிவேலு, சின்னத்தம்பி, முனியன், கோவிந்தராசு, வீரப்பன், கோதண்டபாணி, சர்க்கரை, திருநாவுக்கரசு, ராமமூர்த்தி என்று பக்தர்கள் பட்டியல் அதுபாட்டுக்கு நீண்டு கொண்டே போகும்.

எங்கள் குடிசைக்குப் பின்னால் ஒரு பெட்டிக்கடை கம் ரிக்கார்டுகள் போடும் கடை. ஊரில் கல்யாணம், சுப நிகழ்சிகள் அனைத்திற்கும் அந்தக் கடையிலிருந்துதான் இசைத்தட்டுகள், ஆம்பிளிபயர்கள், புனல் ஒலிபெருக்கிகள் போகும். கடைக்காரர் எங்களுக்கு ரொம்ப தோஸ்த். தலைவர் தான் அவருக்கு தெய்வம். கடலூர் சென்று புதுப்படங்களின் ரிக்கார்டுகளை வாங்கி வருவார். அதைப் பார்க்க நீ... நான் என்று போட்டி. ஏனென்றால் இசைத்தட்டுகளின் கவர்களை அலங்கரிக்கும் நடிகர் திலகத்தின் மதிவதன முகத்தைக் கண்டு ரசிப்பதற்காக. கடைக்காரர் ரிக்கார்டுகள் வாங்கி வந்த உடனேயே ஒலிபெருக்கி வாயிலாக ஒலிக்கச் செய்து விடுவார். அவருக்கு அதில் நிரம்பப் பெருமை. ரெண்டாவது ஊர் முழுக்க அந்தப் பாடலைக் கேட்டு விடலாம். சின்ன ஊர்தானே! சவுண்டை வேறு அதிகமாக வைத்து விடுவார். அப்படிக் கேட்டது முதன் முதலாக நான் "ஒரு ராஜா ராணியிடம்". அவர் நாள் முழுக்க தலைவர் பாடல்களைப் போட்டு எல்லோருக்கும் மனப்பாடமே ஆக்கி விடுவார். 'பிராப்தம்' படம் வருவதற்கு முன்பாகவே "நேத்துப் பறிச்ச ரோஜாவை" எங்கள் ஊரில்முழுதும் பாடாத ஆளே இல்லை.

ஆச்சு... தலைவர் படம் கடலூரில் ரிலீஸ் என்றால் முதல் நாளே கிளம்பத் தயார் வேலைகள் நடக்கும். ராமாபுரத்திலிருந்து கடலூருக்கு அப்போதெல்லாம் பஸ் வசதிகள் கிடையாது. சாத்தங்குப்பம், கேப்பர்குவாரி மலை, TB ஆஸ்பத்திரி, அண்ணா கிராமம் வழியாக நடந்துதான் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர்கள் வரும். மேட்னிக்கு கிளம்ப வேண்டும். அம்மா முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்பதில் மாறியதே இல்லை. அப்பாவுக்கும் தலைவரை பிடிக்கும். கிராமத்து ஸ்கூல்தானே! அப்போதெல்லாம் யாரும் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள். ஸ்கூல் லீவாக இருந்தாலும் சரி... லீவு விடாவிட்டாலும் சரி. தொண்டர் படை சூழ அம்மா... நான்... அப்பா பொடி நடையாக நடக்க ஆரம்பித்து விடுவோம். வழக்கம் போல கட்டு சாதம் உண்டு. ரசிகர் குழாம் அம்மாவுக்கு பாதுகாப்பாக பெரிய கம்பு, கழிகளை எடுத்துக் கொண்டு முன்னே இருபது பேர், பின்னே இருபது பேர் என்று பாதுகாப்பு கொடுத்துக் கொண்டு வருவார்கள். வழி நெடுகிலும் 'சிவாசி (அப்படிதான் அன்புடன் அழைப்பார்கள்) வாழ்க'... என்ற கோஷங்கள்தான். வழி நெடுக முந்திரிக்காடுகள். பயமாக இருக்கும். வழியில் ஒன்றிரண்டு கிராமங்கள்தாம். செம்மண் சாலைகள்தான். வழியில் ஒரு ஈ காக்கா கூட இருக்காது. காலை ஒன்பது மணிக்கு கிளம்பினால் பன்னிரண்டு மணிக்கெல்லாம் கடலூர் சென்று விடுவோம். உடனே கியூவில் நிற்க ஆரம்பித்து விடுவோம். கடலூர் ரசிகர்கள் செய்யும் அமர்க்களங்களை ஆசைதீரப் பார்த்துக் கொண்டிருப்போம். மூன்று மணிநேரம் ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு டிக்கெட் எடுக்கத் தயாராக இருப்பார்கள். நான் சிறுவன் என்பதால் அம்மாவுடன் பெண்கள் கவுண்ட்டரில் நின்று விடுவேன்.

டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்ததும் எங்கள் ஊர்க்காரார்கள் எல்லாம் ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வோம். பெஞ்ச் டிக்கெட்தான். சாய்ந்து கொள்ளவல்லாம் முடியாது. முதுகு வலிக்கும். படம் ஆரம்பிக்குமுன் கம்பெனியின் ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தை பையன்கள் எடுத்துக் கொண்டு வந்து விற்க ஆரம்பிப்பார்கள். விலை எழுபத்தைந்து காசு அல்லது ஒரு ரூபாய் இருக்கும். 'வியட்நாம் வீடு' என்றால் வீடு போன்ற வடிவிலே கட்டிங் செய்து பாட்டுப் புத்தகங்கள் அழகாக வரும். அம்மா அனைத்தையும் வாங்கி விடுவார்கள். பின் படம் முடிந்ததும் ஊர் நோக்கி மறுபடி நடைபயணம். இரவு நேரம் பாதுகாப்பு அதிகாரிகள் இன்னும் அதிகமாக பாதுகாப்பு கொடுத்தபடி எங்களை அழைத்துச் செல்வார்கள். மணி ஒன்பதுக்கெல்லாம் ஊர் போய் சேர்ந்து விடுவோம்.

தீபாவளி போன்ற விஷேச நாட்களில் காலையிலேயே பயணித்து விடுவோம். சொர்க்கத்தை பாடலியில் பார்த்துவிட்டு எங்கிருந்தோ வந்தாளை நியூசினிமாவில் முடித்துவிட்டு ஊருக்கு செல்வோம். வழி நெடுகிலும் படத்தில் நடிகர் திலகம் நடித்த காட்சிகளை பேசி சிலாகித்துக் கொண்டே அசைபோட்டபடி வருவார்கள். அவரைப் போலவே நடந்து காட்டி நடிக்க முயன்று அதை நகைச்சுவையாக்கி.. ஏக ரகளை.

'தங்கப்பதக்கம்' முதல் ஷோ ரமேஷ் தியேட்டரில் முடித்துவிட்டு திரும்பும் போது அம்மா "என்னால் வரமுடியாது... அடுத்த காட்சியும் பார்த்து விட்டுதான் வருவேன்" என்று அடம் பிடித்து விட்டார்கள். அவர்களுக்கு இன்று வரை 'தங்கப்பதக்கம்' தான் உயிர். லேடீஸ் என்பதால் அவர்களுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டது. ஆனால் எங்களுக்குக் கிடைக்கவில்லை. கிட... தியட்டேருக்கு வெளியிலேயே கிட... பேனர்களை பார்த்துக் கொண்டு, தலைவருக்கு போடப்பட்ட மாலைகளை பார்த்துக் கொண்டு... குவியல் குவியலாய் வரும் ஜனங்களைப் பார்த்துக் கொண்டு... பொழுது போவதே தெரியாது. அன்றே இரண்டு முறை பார்த்தும் அம்மாவுக்கு திருப்தி இல்லை. விட்டால் செகண்ட் ஷோவும் பார்ப்பார்கள் போல் இருக்கிறது. ஒருவழியாக சமாதானம் சொல்லி அழைத்து வந்தோம் நானும் அப்பாவும்.

எப்படிப்பட்ட வாழ்க்கை! கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத சொர்க்க போக வாழ்க்கை! மனமகிழ்ச்சியான வாழ்க்கை! சாப்பிட்டது கூழ், கஞ்சி என்றாலும் எங்கள் கிராமத்தவர் சிறியவர் முதல் பெரியவர் வரை பருகியது நடிகர் திலகம் என்ற அமிர்தத்தையல்லவோ!

என் கிராமம்... என் மக்கள்... என் தலைவன் புகழ் பாடிய கிராமம்... என் தெய்வத்தைக் கொண்டாடிய மக்கள்.

மறக்கத்தான் முடியுமா அந்த மாணிக்க நாட்களை!

கண்களில் நீர்த் துளிக்கிறது.

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

abkhlabhi
16th May 2013, 12:01 PM
இந்த நிழற்படத்தில் சிவந்த மண் திரைப்படத்தின் விளம்பரம் உள்ளது. அநேகமாக 7வது வாரம் விளம்பரம் என யூகிக்கிறேன். தெலுங்கில் உள்ளதால் புரியவில்லை. நண்பர் பார்த்தசாரதி அவர்கள் இதைப் பற்றிக் கூற முடியும் என எண்ணுகிறேன். சாரதி சார், can you try?

http://i1358.photobucket.com/albums/q767/sbdbvintage/akhandudu-nede-1.jpg

7th week Advt.of Viplavam Vardhillali (Revolution success--- sivandha Mann telugu dubbing movie) --- andhra pathrika dt. July 24, 1970

abkhlabhi
16th May 2013, 12:06 PM
நடிகர் திலகத்தைப் பற்றி தெலுங்குப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்துள்ள கட்டுரையின் பக்கம் நிழற்படமாக.

http://i437.photobucket.com/albums/qq97/Soggadu75/shivajiNSBKRR1.jpg

http://i437.photobucket.com/albums/qq97/Soggadu75/shivajiNSBKRR2.jpg

இதனைத் தரவேற்றிய நண்பருக்கும் இணைய தளத்திற்கும் நன்றி

தெலுங்கில் உள்ள இதனை நம் நண்பர்கள் யாராவது தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மொழி பெயர்த்து அளித்தால் நலமாக இருக்கும். அது மட்டுமின்றி கீழே உள்ள இணைப்பில் நடிகர் திலகத்தைப் பற்றிய விவாதமும் தெலுங்கு வார்த்தைகள் ஆங்கிலத்தில் உள்ளன. இதுவும் நமக்கு மொழி பெயர்க்கப் பட்டால் நலம். முன்கூட்டியே நம் நண்பருக்கு நமது நன்றியினையும் இதற்காக தெரிவித்துக் கொள்கிறோம்.

http://www.sbdbforums.com/post/Rare-Photos-articles-pomplets-etc.-2966563

Title : "Nee directionlo vesham cheiyaliniundira Ragavendra Rao - sivaji"
Want to act in your Direction Ragavendra Rao - sivaji

NT acted in one Tamil movie produced by NTR and Directed by Raghavendra Rao

Gopal.s
16th May 2013, 12:30 PM
வாசு,
நானும் உன்னுடன் அங்கு வாழ்ந்து விட்டேன். தலைவரை பற்றி பேசி, நீ சாப்பிட்ட அனைத்தையும்(கருவாடு தவிர்த்து) சாப்பிட்டு உங்களோடு இருந்தது போல உணர்வு.
நான் இதற்கு மேல் இந்த பதிவை பற்றி என்ன சொல்ல? உன் நடையில் தெரியும் genuine innocence நான் மிக ரசிக்கும் ஒன்று.
எனக்கு நெய்வேலியில் வாழ்ந்ததால் இந்த nostalgic கொடுப்பினை இல்லை. என் வாழ்க்கை நெய்வேலி,சென்னை,பாங்காக்,ஜகார்த்தா,ஹோசிமின் என்றே கழிந்தது.சிறு ஆசுவாசம், நான் விடுமுறை கொண்டாடிய திருவிடை மருதூர்.
தென்னாற்காடு மாவட்டம் எப்போதுமே தலைவர் கோட்டை.(ராமதாஸ் கூட தலைவர் ரசிகரே)

RAGHAVENDRA
16th May 2013, 12:54 PM
வாசு சார்,
இதை இதை இதைத் தான் எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நடிகர் திலகம் படம் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதே ஒரு தனி அனுபவம். நம் ஒவ்வொருவருக்கும் அவருடைய படம் பார்ப்பது ஒரு சம்பவம் அல்ல ... சரித்திரம் ... இதைத் தான் நான் ஒவ்வொருவரிடமும் வேண்டுகிறேன். தங்கள் அனுபவங்களை எழுதுங்கள். அடுத்த தலைமுறைக்கு சிவாஜி ரசிகர்களின் அனுபவங்கள் மிகவும் சுவையாகவும் இருக்கும் அவருடைய தாக்கம் ரசிகர்களுக்குள் எந்த அளவிற்கு ஆழ ஊடுருவியுள்ளது என்பதை எடுத்துரைக்கும்.

தங்களுடைய பால்ய அனுபவங்கள் கண்களில் நீரை வரவழைத்து விட்டது. உணர்வு பூர்வமான வாழ்க்கையையும் அனுபவங்களையும் சிவாஜி ரசிகர்கள் வாழ்க்கையில் ஏராளமாக சந்தித்திருப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

RAGHAVENDRA
16th May 2013, 12:58 PM
டியர் பாலகிருஷ்ணன் சார்
தங்களுடைய தெலுங்கு மொழிபெயர்ப்பிற்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர்களிடம் எந்த அளவிற்கு மரியாதை வைத்திருந்தார் நடிகர் திலகம் என்பதற்கு உதாரணம் இந்த நிழற்படம்.
அதே போல் பங்காரு பாபு 100 நாட்கள் ஓடிய திரையரங்குகளின் பெயர்களையும் மொழி பெயர்க்க முடியுமா

Georgevob
16th May 2013, 01:33 PM
பாவிகளா! print out எடுத்து ரயிலில் படித்துமா whisky brandy புரியவில்லை? நான் தலைவரின் அரிய ஆவணங்களை எங்கே குறை சொன்னேன்?
ஆனாலும் மனம் திறந்த பாராட்டு. Whisky Diarrhea வினால் அவதி படும் அன்பர்களுக்கு,constipation நன்மைதானே?

சீரியல் ஆரம்பிச்சிட்டாரே? Diarrhea தொத்து வியாதிதான். அகில உலக medical conference இல் இதை ஆதார பூர்வமாக நிரூபித்து நோபெல் பரிசுக்கு முயல்வேன்.

அருமையான ஒரு ஹாஸ்ய ரங்கம் - தெனாலிராமன் என்ற காவியத்திலிருந்து குறிப்பாக அந்த புலவரின் introduction scene - எழுத்தாணி பிடித்தால் நிறுத்தாமல் எழுதுவார் ! விருதுகள் எங்கே? ...விருதுகள் எங்கே.?....

வருகிறது அங்கே ....அதற்க்கு முன் திரும்பிப்பாருங்கள் இங்கே !

http://www.youtube.com/watch?v=5CvSf6--tJ4 (http://www.youtube.com/watch?v=5CvSf6--tJ4)

Gopal.s
16th May 2013, 01:45 PM
மனுஷன் சண்டைல மட்டும் ஒரு மீட்டரையும் break பண்ணுவதில்லை.
வந்துட்டார்யா, வந்துட்டாரு. அவ்வ்வ்

Georgevob
16th May 2013, 02:02 PM
மனுஷன் சண்டைல மட்டும் ஒரு மீட்டரையும் break பண்ணுவதில்லை.
வந்துட்டார்யா, வந்துட்டாரு. அவ்வ்வ்

Sir.....

Summa oru vilayaatukku dhaan sir....Should i remove it..?

Fight ellam illa sir...am a Character Artist Not even a hero like Puthiya Paravai Gopal !

:-)

Gopal.s
16th May 2013, 02:04 PM
Sir.....

Summa oru vilayaatukku dhaan sir....Should i remove it..?

Fight ellam illa sir...am a Character Artist Not even a hero like Puthiya Paravai Gopal !

:-)
யோவ், நமக்கும் ரொம்ப நாளா சண்டை போடலைன்னா தூக்கமே வர மாட்டேங்குது.

Georgevob
16th May 2013, 02:44 PM
நண்பர்களுக்கு ஓர் செய்தி.... !

இயக்குனர் திரு.கே.s ரவிக்குமார், பிற திரைப்பட கதைகளிலிருந்து கருவின் ஒரு பகுதி, மற்றும் கருத்தின் ஒரு பகுதியையும் கவர்ந்து திரைப்படம் எடுப்பதில் வல்லவர்...

அப்படி அவர் கவர்ந்து ஒரு பகுதியை வைத்து ஒரு முழு திரைப்படம் தான் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த படையப்பா.

என்னடா....படைப்பவை எடுத்ததை எதற்கு நடிகர் திலகம் திரியில் எழுதுகிறான் என்று பார்கிறீர்கள.

விஷயம் இருக்கிறது.... நடிகர் திலகம் நடித்த தெனாலிராமன் திரைபடத்தில் பானுமதி கதாபாத்திரத்தின் தன்மையையும்..அவர் தனக்கு தானே கத்தியால் குத்திக்கொண்டு உயிர் துறக்கும் தருவாயில், அவருடைய கதாபாத்திரத்தின் தன்மையை கூறுவார்...அதை கவனத்து பாருங்கள்...நீங்கள் அனைவரும் ரம்யக்ரிஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரத்தை உணர்வீர்கள்....இந்த ஒரு கதாபாத்திரத்தின் கருவை, தெனலிராமனிலிருந்து கவர்ந்து ( வசனம் உட்பட) அதனுடன்...மற்ற கற்பனை கதாபாத்திரமும் உருவாக்கி....படைப்பவை தந்தார் !

http://www.youtube.com/watch?v=7H4acey6-qo

KCSHEKAR
16th May 2013, 03:00 PM
டியர் வாசுதேவன் சார்,

என் கிராமம்... என் மக்கள். - அருமை - கடலூர் செல்லும்போது அவசியம் ராமாபுரத்திற்கு சென்று வரவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்கள். நன்றி.

abkhlabhi
16th May 2013, 03:13 PM
BANGARU BABU 100TH DAY AD?

http://i50.tinypic.com/15oxna1.jpg

Vijayawada – Sri Vijaya Talkies
Guntur - Sri Vijaya Talkies
Nellore - Rangamahal
Tenali - Venus Picutre Palace
Vizag - Jyothi Theatre
Kakinada - Crown Talkies
Rajamundry - Krishna Picture Palace
Karnool - Navarang Talkies
Proddatur - Balaji Talkies
Kadapa - Rahamathiya Picutre Palace
Hyderabad - ?

Thank to Mr.Prasad , my colleague

abkhlabhi
16th May 2013, 03:38 PM
தமிழ் தாயின் தவபுதல்வன், தமிழ் திரைஉலகின் முதல் குடிமகன், பல பட்டங்களை , வெற்றிகளை , வசூலில் சாதனை புரிந்து , கோடிகணக்கான ரசிகர்களுக்கு கடவுள், கை திரியல் நெய்யப்பட்ட கட்டிலில், அதுவும் , தன்னை இயக்கிய / இயக்கம் இயக்குனர்
திரு. பந்துலு மடியில் தலை வைத்து படுத்து, கையில் கிளாஸ், கூலிங் கிளாஸ் அணிந்து, மெண்மையான புண்சிரிப்புடன் போஸ் கொடுக்கும் இந்த புகை படத்தை பற்றி (நடிகர் திலகத்தை) பற்றி பல பக்கங்கள் எழுதலாம் .

யாராவது எழுத்துகளே ? ராகவேந்திர / வாசு சார் ப்ளீஸ்

RAGHAVENDRA
16th May 2013, 03:41 PM
டியர் பாலகிருஷ்ணன் சார்
பங்காரு பாபு திரைப்படத்தின் விளம்பரத் தகவல்களை மொழி மாற்றம் செய்து தந்த தங்கள் நண்பர் பிரசாத் அவர்களுக்கும் தங்களுக்கும் நம் அனைவர் சார்பிலும் உளமார்ந்த நன்றி சார்.

abkhlabhi
16th May 2013, 03:43 PM
புகை படத்தை எப்படி பெரியதாக போடுவது ?

RAGHAVENDRA
16th May 2013, 03:44 PM
பிராப்தம் படத்தின் ஒரிஜினலான மூக மனசுலு திரைப்படத்தின் ஒரு பாடலை [தமிழில் சந்தனத்தில் ஒரு வாசம் எடுத்து], ஓரிரு நிமிடங்களுக்கான காட்சியை வண்ணத்தில் மாற்றியுள்ளார்கள். இதற்கான காணொளி கீழே.

http://youtu.be/A9QSlUAihmA

மிக அருமையாக உள்ளது. கலர் டோன் மிகவும் யதார்த்தமாக உள்ளது.

RAGHAVENDRA
16th May 2013, 03:46 PM
இந்த நிழற்படம் அட்டாச்மெண்டாக உள்ளதால், சிறிய அளவை க்ளிக் செய்தால் ஒரிஜினல் வடிவம் கிடைக்கும்.

Gopal.s
16th May 2013, 03:57 PM
బాలకృష్ణగారు,
బంగారు బాబు తన్స్లతిఒను థాంక్సు .

abkhlabhi
16th May 2013, 04:07 PM
NTR - NT - ANR together for Bangaru Babu 100 days funtion not Chanakya chandragupta Silver Jubliee function

http://akkineni2akkineni.blogspot.in/2010/09/blog-post_06.html

abkhlabhi
16th May 2013, 04:12 PM
బాలకృష్ణగారు,
బంగారు బాబు తన్స్లతిఒను థాంక్సు .

தெலுங்கு தெரியாது . ( தமிழே அரைகுறை எனக்கு )

vasudevan31355
16th May 2013, 07:26 PM
Cinema Express 16-30 April 2013

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1x1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1x1.jpg.html)

Richardsof
16th May 2013, 07:38 PM
இனிய நண்பர் வாசுதேவன் சார்

உங்களின் கிராமத்து நினைவலைகள் தொகுப்பு கடந்த காலத்துக்கே அழைத்து சென்றுவிட்டது .
மிகவும் ரசித்தேன் . பசுமையான கிராமத்து சூழ்நிலை - மரியாதை மிக்க மக்கள் - பாசத்துக்கு கரம் நீட்டும் மக்கள் .
அனுபவித்து நீங்கள் பதிவிட்ட கிராமத்து அனுபவம்
அசத்துங்கள் ...

Georgevob
16th May 2013, 08:36 PM
Cinema Express 16-30 April 2013

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1x1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1x1.jpg.html)

அட கடவுளே !

இதை எழுதும் அந்த மாமேதைக்கு இதிலுமா ஓர வஞ்சனை. ?

மற்ற சில படங்களின் விமர்சனத்துடன், திரை அரங்குகளில் ஓடிய விதம் ஆகியவற்றை சில குறிப்புகள் தப்பும் தவறுமாக இருந்தாலும் அதை எழுதுகிறான் இந்த சினிமா எக்ஸ்பிரஸ் அதி மேதாவி !

வசந்த மாளிகையை பற்றி எழுதும்போது மட்டும் ஏன் இந்த ஒர வஞ்சனை? 1972 என்கின்ற வருடம் நடிகர் திலகத்தின் இரண்டு வெள்ளிவிழா படங்கள், 4 நூறு நாள் படங்கள் ஒரு சுமார் ரக படம் வந்த வருடம். வசந்தமாளிகயோ அந்த வருடம் தமிழ் படங்களில் வசூலில் புதிய மாபெரும் சாதனையை ஏற்படுத்திய படம்.

ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து சென்டர்களிலும் 50 நாட்களை நடிகர் திலகத்தின் வசந்த்தமாளிகை ரிலீஸ் ஆவதற்கு முன்னர் ரிலீஸ் செய்யப்பட்ட படம் ஓடிகொண்டிருந்த போதிலும், சர்வ சாதாரணமாக கடந்து ஓடிய படம்.

10 சென்டர்களில் 100 days அதற்க்கு மேலும், 2 சென்டர்களில் 175 days அதற்க்கு மேலும்( பாரத விலாசிர்க்காக வழிவிட்டு) , தமிழகத்தில் 100% கடுமையான மின் வெட்டு இருந்தால் Generator வைத்து திரைஅரங்குகள் படம் ஒட்டவேண்டிய சூழ்நிலையிலும் மாபெரும் வெற்றிபெட்ட்று, Madurayil 200 days ஓடி முடிந்து ஷிப்டிங் முறையில் மேலும் 50 நாள் ஓடி மொத்தம் 250 நாளும் ,

வெளிநாடுகளில் குறிப்பாக இலங்கையில் நான்கு திரை அரங்குகளில் ஒன்றில் (லிடோ) 100 நாட்களும், மீதம் மூன்று திரை அரங்குகளில் (வெல்லிங்டன், Plaza , காபிடல் ) முறையே 250, 176, 287 நாட்களும் ஓடி இன்று வரை ஒரு இமாலய சாதனைய உள்ளது !

ஒரு பத்திரிகை என்றபொழுது தங்களுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பால், எந்த ஓர வஞ்சனையும் இல்லாமல் நடுநிலையாக எழுதாத பட்சத்தில் இவர்கள் எழுதுவது மற்ற செய்திகளை பொருத்தவரை அப்படியே உண்மை என்று எப்படி எடுத்துகொள்வது ?

நான் சென்னைக்கு வந்த பிற்கு இப்படி எழுதும் அந்த சினிமா எக்ஸ்பிரஸ் மேதாவியை சந்திக்கிறேன்.!

விட்டேனா பார் அந்த ஓரவஞ்சனைகாரனை ! ஒன்று இதுபோல அவன் எல்லா திரைபடதிர்க்கும் எழுதவேண்டும் இல்லையேல் ஓடிய விதம், தியேட்டர் பற்றி குறிப்பிடவே கூடாது !

Georgevob
16th May 2013, 08:39 PM
NTR - NT - ANR together for Bangaru Babu 100 days funtion not Chanakya chandragupta Silver Jubliee function

http://akkineni2akkineni.blogspot.in/2010/09/blog-post_06.html

Oh...Sorry about that !

All the three did Chanakya Chandragupta and similar Function was conducted. I mistook that for this..!

thanks for the information and my sincere regrets on quoting it wrong by mistake.

Georgevob
16th May 2013, 08:45 PM
இனிய நண்பர் வாசுதேவன் சார்

உங்களின் கிராமத்து நினைவலைகள் தொகுப்பு கடந்த காலத்துக்கே அழைத்து சென்றுவிட்டது .
மிகவும் ரசித்தேன் . பசுமையான கிராமத்து சூழ்நிலை - மரியாதை மிக்க மக்கள் - பாசத்துக்கு கரம் நீட்டும் மக்கள் .
அனுபவித்து நீங்கள் பதிவிட்ட கிராமத்து அனுபவம்
அசத்துங்கள் ...

எஸ்வி சார்,

அப்படியே....பசுமை நிறைந்த நினைவுகளே...பாடி திரிந்த பறவைகளே ...பழகி களித்த தோழர்களே என்ற பாடலை பாடவேண்டியதுதானே சார் !
நல்ல விஷயங்களை மனதார பாராட்டும் உங்களுடைய இந்த ஒருகுணம் ஒன்று போதும் சார், எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடு இணை இல்லாதது !
Actually, So nice of you !

Thanking on behalf of "Ghee Fence" Vasudevan Sir !

ScottAlise
16th May 2013, 09:12 PM
பாபு

என்னடா இவன் எபோதும் NT தின் late 80's படங்கள் பத்தியே எழுதுகிறான் என்று தோணலாம் ஏன் எனக்கே அப்படி தான் ஒரு எண்ணம் தோன்றியது . அதனால் இந்த கருப்பு வெள்ளை படம் பாபு

1971 ல் தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் வெற்றி பெற்ற ஒரே படம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நட் கணக்கில் எங்க பட்ட வெற்றி படங்கள் .
இந்த படம் மலையாளம் படத்தின் தழுவல் தான் ஆனால் அந்த nativity problem என்று சொல்வார்களே அட அதாங்க cultural differences அந்த மாதிரி எதுவும் ஏற்படவில்லை . காரணம் இந்த படத்தின் இயக்குனர் திரு AC திருலோகச்சந்தர் அவர்களின் சாமர்த்தியமான இயக்கம் .

இந்த படத்தில் NT தின் கேரக்டர் பல பரிணாம வளர்சிகளை இயக்குனர் அழகாக செதுக்கி இருப்பர் .
இந்த படம் லைட் ஹார்ட் படம் இல்லை கதை கொஞ்சம் கணம். NT நடிப்பு சும்மா பிச்சு உதறுவார் மனிதர் . இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை வாழ்ந்தார்.
கதை என்று பார்த்தல் ஒரு கை ரிக்க்ஷாகரன் தான் ஒரு வேலை சாப்பிட சாப்பாடுகாக, எப்பிடிஒரு குடும்பத்தை காப்பாற்ற முயல்கிறார் என்பதே கதை .
பாபு ஒரு மில்லில் வேலை பார்க்கிறார் அங்கே முதலாளியிடம் ஒரு தொழிலளிகாக சண்டை போட்டு தன் வேலையை இழைகிறார்.

தற்செயலாக கை ரிக்க்ஷா இழுக்கும் வேலை கிடைக்க அதன் மூலம் அவர் வாழ்கை எப்படி மாறுகிறது என்பதே இந்த படம் .

சில பேர் ரொம்ப புத்திசாலிகள் மாதிரி பேசுவதாக நினைத்து நான் உதவி செய்தால் எனக்கு என்ன லாபம் என்று பேசுவார்கள் அப்படி பட்டவர்கள் இந்த படத்தில் பாலாஜி பாத்திரம் பாபு க்கு செய்யும் ஒரு சிறிய உதவி எப்படி தங்கள் குடும்பத்தை காப்பாற்றியது என்பதே சாட்சியாகும்.
NT தன் சட்டை கிழிந்ததை , தன் வறுமையை நகைச்சுவையாக ,வெகு அலட்சியமாக தன் சட்டை கிழிந்ததை குறிபிடுவது அவர் வாழ்கையை எப்படி ஜாலியாக எடுத்து கொள்கிறார் என்பதுக்கு சாட்சி

NT யிடம் அவர் குடும்பம் காட்டும் பரிவும் அதற்கு NT தின் நெகிழ்ச்சியும் காண கண் கோடி வேண்டும் . ஒரு ரிக்க்ஷாகரன் உடல் மொழி எப்படி இருக்குமோ அப்படியே . இது வரைக்கும் யாரும் தன்னை எப்படி நடத்தியது இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிடிகிறது NT தின் விழிகள் .

சாப்பிட சொல்லும் பொழுது ஒரு குச்சம் வேலைக்காரன் வெளியே போய் சாப்பிட சொல்லும் பொழுது முதலில் அங்கே போவது இங்கேயே சாப்பிட சொல்லும் பொழுது முதலில் மறுப்பதும் பிறகு அன்புக்கு கட்டுபடவும் அதுவும் அந்த சின்ன குழந்தை தன் தட்டில் எடுத்து சாப்பிட்ட உடன் பதற்வதும் அதற்கு பாலாஜி சொல்லும் பதிலும் கவிதை .
அதே NT ஸ்ரீதேவி ஐ இரண்டு வருடம் கழித்து சந்திக்கும் பொழுது அவர் விழிகள் எழுப்பும் கேள்விகள் , துடிப்புக்கு 1000 சபாஷ் . அதே NT பாலாஜியின் மனைவி சௌகார்யிடம் தான் ஒரு நாய் என்றும் கடமை பட்டவன் என்றும் கதர்வதும் , சத்தியமா ஹில்ட்டர் கூட கண் கலங்குவான்
அதே சிவாஜி வளர்ந்த ஸ்ரீதேவி தன்னை ரிக்க்ஷகரன் என்று அவமானம் செய்ததும் ஒரு நிமிடம் திகைத்து சௌகார் தன் பெண்ணை அடித்ததும் அதை தடுத்து கொஞ்ச நேரம் வெளியே செல்வதும் எதார்த்தத்தின் உச்சம் . ஏனென்றால் நம்ம வீடுகளில் செல்லமாக வளர்த்த குழந்தை ஐ அடித்ததும் அப்பா வெளியே செல்வது மிகவும் வாடிக்கை. எங்கள் வீட்டில் இப்படி நடந்து உள்ளது .

அதே அம்மு வளர்ந்து குமரி அனா உடன் சிவகுமாரை காதல் செய்தும் அதை கண்டு பொங்கும் இடம் , பிறகு அம்மு (இப்போ நிர்மலா) தன் தவறை உன்னர்து செயல்பட்டதும் சமாதனம் ஆகும் இடம் ஒரு தந்தை போல காட்சி அளிக்கிறார்

இதற்கு இடையே தன் உடல் நலிவுற்று நோய் வந்ததை கூட கருத்தில் கொள்ளாமல் நிர்மலாவின் வளர்ச்சிக்க பாடு படும் பொழுது கடமை வீரனாக காட்சி அளிக்கிறார்.
தன் பெண்ணை ஒரு பணக்காரன் பெண் கேட்டு வந்ததும் NT காட்டும் கெடுபடி அந்த பணக்காரன் NT ன் தவறை சுட்டிகடியதும் திருத்தி கொள்வதும் மற்றும் தன் நிலை உணர்த்து கல்யாணத்துக்கு செல்லாமல் தவிர்ப்பதும் மனசு கேளாமல் அங்கே செல்வதும் போன பின் மாட்டி கொண்டதும் NT தான் நிர்மலாவின் மாமா இல்லை என்று மறுப்பதும் , ஆசிர்வாதம் பண்ணும் பொழுதே உயிர் பிரிவதும், உயிர் பிரியும் நொடியை அற்புதமாக கண் முலம் பார்வையாளர்களுக்கு உணர்த்துவது NT மட்டும் சாத்தியம் . அந்த நொடி அவர் கண்ணில் தெரிந்த ஒரு ஒலி அது உணர்த்தும் அர்த்தங்கள் 1000. தான் எடுத்து கொண்ட லட்சியம் நிறைவேறியதின் பூரிப்பு.

இந்த படத்தின் மிக பெரிய பலம் பாத்திர படைப்பு . எல்லாமே positive characters .

பாலாஜி - ஒரு சமத்துவவாதி. அவர் பத்திரம் ஒரு author backed ரோல். சிவாஜி இடம் அவர் காட்டும் இறக்கம் நம் அனைவர்க்கும் ஒரு படம் எப்படி மற்றவர்களை நம் எப்படி அவர்களின் வறுமைய் சுட்டிகட்டமல் அணுக வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு .

சௌகார் - வழக்கம் போலே அழும் பத்திரம் தான் அனாலும் அவ்வளவு உதவிகள் செய்யும் சிவாஜிய் தன் மகள் ரிக்க்ஷா கரன் என்று ஏசும் பொழுது அறைவதும் அதே பெண் சிவாஜிக்கு நோய் வந்த உடன் அலத்சிய படுத்தும் பொழுது கடித்து கொளும் இடத்தில ஸ்கோர் செய்து விடுகிறார்

VKR : சிவாஜின் well wisher அக வந்து வாழ்து இருக்கிறார் . தன் நண்பர்காக கை ரிக்சா வாங்கி அவர் இடம் கொடுப்பதும் . சிவாஜியிடம் உள்ள தான் என்ற குறைய் சுட்டி காட்டும் இடம் நல்ல நண்பர்களுக்கு ஒரு எடுத்துகாட்டு .

மேஜர்: ஒரு பணக்காரன் எப்பிடி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் . முதலில் பெண் கேட்ட யோசிப்பதும் பிறகு சிவாஜியிடம் பேசுவதும், தன் தகுதிக்கு குறைவான இடம் என்று தெரிந்தும் நாகேஷ் இடம்அவர்களுடன் சரிசமாக உரையாடுவதும் , சிவாஜிக்காக காத்திருந்து சௌகார்யிடம் அனுமதி கேட்கும் பாங்கு ஒரு நல்ல மனிதற்கு எடுத்துகாட்டு .

நாகேஷ் காமெடி , வாசு காமெடி ஊறுகாய் போல .

படத்தில் heroine இல்லை அனா அந்த குறை தெரியவில்லை . இப்படி ஒரு கதைல் நடிபதற்கு ஒரு தில் வேணும் அது சிவாஜிக்கு மட்டும் சத்தியம்.
பாடல்கள் இதோ எந்தன் தெய்வம் மற்றும் வருதப்பா வருதப்பா பாடல் இன்று அளவும் பிரபலம் .

இதன் தாக்கம் அரசாங்கம் வரைக்கும் சென்றது . இந்த படம் வந்த பிறகு தான் கலைஞர் கை ரிக்க்ஷா வை ஒழிக உத்தரவிட்டார் .
இதுவே இந்த படத்தின் வெற்றிக்கு சாட்சி .

ScottAlise
16th May 2013, 09:13 PM
Vasu sir,

Thanks for your feedback and for uploading rare photos

RAGHAVENDRA
16th May 2013, 09:28 PM
டியர் ராகுல் ராம்
பாபு படத்தைப் பற்றிய அருமையான ஆய்வேடு பதித்து விட்டீர்கள். பாராட்டுக்கள். தாங்கள் கூறியது போல் எல்லா பாத்திரப் படைப்புகளுமே பாஸிடிவ் என்பது படத்துக்கு ப்ளஸ் பாயிண்ட். பாராட்டுக்கள்.

1971 தீபாவளியில் பாபுவுடன் வெளியான ஆதி பராசக்தி மிகப் பெரிய வெற்றிப் படம். பல ஊர்களில் நல்ல வசூலைத் தந்த படம். இது குறிப்பிடத் தக்கது.

RAGHAVENDRA
16th May 2013, 09:54 PM
நமது ntfans அமைப்பின் அடுத்த நிகழ்ச்சி, வரும் 19.05.2013 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சென்னை ருஷ்யன் கலாச்சார மய்ய அரங்கில் நடைபெற உள்ளது. ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த உன்னதத் திரைக்காவியம் ராமன் எத்தனை ராமனடி திரையிடப் பட உள்ளது.

J.Radhakrishnan
16th May 2013, 10:51 PM
வாசு சார்,

தங்களின் என் கிராமம்... என் மக்கள் பதிவை கண்டவுடன் தங்களுடனே இருந்து அந்த கொண்டட்டாடங்களில் பங்கு பெற்றதை போல் உணர்ந்தேன். அது எப்படி சார் உங்கள் எழுத்து நடையின் மூலம் எங்களை சென்னையில் இருந்து ராமாபுரம் கிராமத்துக்கு பைசா செலவில்லாமல் அழைத்து சென்று விட்டீர்கள்?

vasudevan31355
17th May 2013, 06:39 AM
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.

இன்றைய புகைப்படம்(2)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/lunapic_13687522178628_71.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/lunapic_13687522178628_71.jpg.html)

Gopal.s
17th May 2013, 06:40 AM
எஸ்வி சார்,

அப்படியே....பசுமை நிறைந்த நினைவுகளே...பாடி திரிந்த பறவைகளே ...பழகி களித்த தோழர்களே என்ற பாடலை பாடவேண்டியதுதானே சார் !
நல்ல விஷயங்களை மனதார பாராட்டும் உங்களுடைய இந்த ஒருகுணம் ஒன்று போதும் சார், எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடு இணை இல்லாதது !
Actually, So nice of you !

Thanking on behalf of "Ghee Fence" Vasudevan Sir !
நிச்சயம் நல்ல விஷயங்களை பாராட்டும் மனம் கொண்டவர்தான். ஆனால் கொஞ்சம் தடுமாற்றம் சமீப காலமாக. நல்லவர்கள் தன் மனதை ,மனசாட்சியை ரொம்ப காலம் ஒளித்து வாழ விரும்ப மாட்டார்கள்.
எஸ்வி சார் நீங்கள் நல்லவர்(இயற்கையாகவே!!) என்ற நம்பிக்கை எங்களுக்கு இன்னும் உண்டு.

RAGHAVENDRA
17th May 2013, 06:58 AM
அபூர்வ நிழற்படம்

http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-prn2/971245_643495972334677_406100210_n.jpg

நன்றி நமது நண்பர் எம்.எல்.கான் அவர்கள். முகநூல் பக்கம்.

vasudevan31355
17th May 2013, 07:23 AM
ஆஹா! கடவுளைக் கண்டேன்.

IliFiSRurdy
17th May 2013, 08:19 AM
என் கிராமம்... என் மக்கள்.

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்[/COLOR][/SIZE][/B]

நண்பர் வாசு அவர்களுக்கு,

தமிழில் நான் படித்தவைகளில்,மிகசிறந்த ஒன்று மேற்கண்ட உங்கள் எழுத்தோவியம்..
அப்படியே அசந்து விட்டேன்.என்ன ஒரு நேர்மை,சத்தியம் மற்றும் நேசம் கலந்த எழுத்துக்கள்!!!
உங்கள் கிராமத்தில் நான் வாழ்ந்தாற்போன்ற ஒரு உணர்வு எனக்கு கிட்டியது.சுமார் நாற்பது ஆண்டுகள் பழமையான ஒரு நிகழ்வை ஏதோ நேற்று நடந்தாற்போல விவரித்துள்ளீர்கள்.
சென்னை திநகரிலிருந்து 11A எண் பேருந்தில் சாந்தி திரையரங்கம் பயணித்து,தங்கபதக்கம் பார்த்த என் போன்ற ரசிகர்களின் ஒரு வரி அனுபவத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது உங்கள் நாற்பது கிலோமீட்டர்நடை பயணம்.Superb.
உங்கள் பெற்றோர்களுக்கு என் வணக்கம்.
முரளி,கோபால்,பார்த்தசாரதி, வாசு ஆகிய அனைத்துப்பெயர்களும் கிருஷ்ணபரமாத்வாவின் பல பெயர்கள்.அதற்கேற்ப நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாணியில் அவ்வப்பொழுது விஸ்வரூபம் எடுத்து எங்களைப்போன்ற பக்தர்களுக்கு அருள் புரிகிறீர்கள்.
நன்றி.வணக்கம்.

Gopal.s
17th May 2013, 08:33 AM
அண்ணன் கணேசனோ, அந்த நடிப்பு கடவுள் கணேசனின் லீலைகளை பரண் மேல் ஏறாமலே நகைச்சுவை தெளித்து மகிழ்விக்கிறார். தம்பி ஸ்வாமினாதனோ அந்த உ .வே .சா போலவே தேடி தேடி ஓலை சுவடிகள் கொணர்ந்து எங்கள் திரிக்கே வாழ்வளித்தார்.

ScottAlise
17th May 2013, 08:59 AM
Dear Ragavenderan sir,

Thanks for your feedback . Yes Adiparasakthi was a blockbuster forgot to mention that in flow of writing thanksfor pointing it out.

Dear vasu sir ,

என் கிராமம்... என் மக்கள். - அருமை but Iam waiting for your article like Santhipu

Dear Gopal sir,
Your series NT oru Ulaga adisayam is top class

Dear Sowri sir,
Your posts give a different dimension and varied themes boldly about NT

vidyasakaran
17th May 2013, 09:08 AM
நேற்றிரவு முரசு தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் பாடல்கள் தொடர்ந்து ஒளிபரப்பினார்கள். நானும், என் மனைவியும் அவரது சிறப்புகளைப் பேசி வியந்துகொண்டே கண்டுகளித்தோம். அவரது க்ளோஸ்-அப் காட்சிகளுக்காகக் காத்திருந்து நான் பார்த்ததை ஏதோ காதலியைப் பார்ப்பதைப் போல் பார்க்கிறோமோ என்று நானே எண்ணிக்கொண்டேன். உண்மை. வேறு யாரையும் இவ்வளவு ஈடுபாட்டுடன் ரசிக்கத் தோன்றாது.
நன்றி! - அவரது நடிப்பின் நுட்பம், சிறப்புகளைத் தெளிவாக விளக்கும் ஹப் பெரியவர்களுக்கும்; தன் விளையாட்டிலும், சில சமயம் காட்சிகளிலும் மனம் லயித்து என்னைப் புறமிழுக்காத இரண்டு வயது மகனுக்கும்.

Richardsof
17th May 2013, 09:14 AM
நிச்சயம் நல்ல விஷயங்களை பாராட்டும் மனம் கொண்டவர்தான். ஆனால் கொஞ்சம் தடுமாற்றம் சமீப காலமாக. நல்லவர்கள் தன் மனதை ,மனசாட்சியை ரொம்ப காலம் ஒளித்து வாழ விரும்ப மாட்டார்கள்.
எஸ்வி சார் நீங்கள் நல்லவர்(இயற்கையாகவே!!) என்ற நம்பிக்கை எங்களுக்கு இன்னும் உண்டு.

இனிய நண்பர் கோபால் சார்

உங்களின் பாராட்டுக்கு நன்றி . நீங்கள் நினைப்பது போல்

எந்தவித மாற்றமோ - தடுமாற்றமோ - என்றைக்குமே எனக்கு இல்லை .

திறமை - எங்கிருந்தாலும் பாராட்டப்பட வேண்டும் .

உங்களின் திறமை எனக்கு நன்கு தெரியும் .அந்த திறமைக்கு

எனது வாழ்த்துக்கள் .

மக்கள் திலகத்தின் பாடல்கள் சில நடிப்பு காட்சிகள் உங்களை மிகவும் கவர்ந்துள்ளது என்பதும் எனக்கு தெரியும் .

என்றும் நட்புடன்
வினோத்

Gopal.s
17th May 2013, 09:48 AM
நேற்றிரவு முரசு தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் பாடல்கள் தொடர்ந்து ஒளிபரப்பினார்கள். நானும், என் மனைவியும் அவரது சிறப்புகளைப் பேசி வியந்துகொண்டே கண்டுகளித்தோம். அவரது க்ளோஸ்-அப் காட்சிகளுக்காகக் காத்திருந்து நான் பார்த்ததை ஏதோ காதலியைப் பார்ப்பதைப் போல் பார்க்கிறோமோ என்று நானே எண்ணிக்கொண்டேன். உண்மை. வேறு யாரையும் இவ்வளவு ஈடுபாட்டுடன் ரசிக்கத் தோன்றாது.
நன்றி! - அவரது நடிப்பின் நுட்பம், சிறப்புகளைத் தெளிவாக விளக்கும் ஹப் பெரியவர்களுக்கும்; தன் விளையாட்டிலும், சில சமயம் காட்சிகளிலும் மனம் லயித்து என்னைப் புறமிழுக்காத இரண்டு வயது மகனுக்கும்.
தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள் vidyasakaran சார். உங்கள் அனுபவங்களை , ரசித்தவற்றை பற்றி எழுதுங்கள்.

Gopal.s
17th May 2013, 12:00 PM
இனிய நண்பர் கோபால் சார்

உங்களின் பாராட்டுக்கு நன்றி .
திறமை - எங்கிருந்தாலும் பாராட்டப்பட வேண்டும் .
உங்களின் திறமை எனக்கு நன்கு தெரியும் .அந்த திறமைக்கு

எனது வாழ்த்துக்கள் .
என்றும் நட்புடன்
வினோத்
எஸ்வி சார்,
எங்கள் திறமையெல்லாம் எம்மாத்திரம் சார்? ஏதோ பார்த்ததை அப்படியே எழுதி தள்ளுகிறோம். ஆனால் உங்கள் கற்பனைத்திறனை நான் மெச்சாத நாளேயில்லை.

Georgevob
17th May 2013, 01:06 PM
நிச்சயம் நல்ல விஷயங்களை பாராட்டும் மனம் கொண்டவர்தான். ஆனால் கொஞ்சம் தடுமாற்றம் சமீப காலமாக. நல்லவர்கள் தன் மனதை ,மனசாட்சியை ரொம்ப காலம் ஒளித்து வாழ விரும்ப மாட்டார்கள்.
எஸ்வி சார் நீங்கள் நல்லவர்(இயற்கையாகவே!!) என்ற நம்பிக்கை எங்களுக்கு இன்னும் உண்டு.

திரு.VK ராமசாமி கூறுவதை போல கூறவேண்டும் என்றால்,

அதுல பாருங்க Mr .Gopal .....உலகத்துக்காக நாம வாழ முடியாது..! நாம மொதல்ல நமக்காக வாழ்ந்தாதான் இந்த உலகத்துக்கு ஏதாவது செய்யமுடியும்...என்ன நான் சொல்றது !

அட....இந்த பாட்டு கூட பாருங்க ...அத தான் சொல்லுது...பெரியவங்க இல்லையா அதுதான் ரொம்ப அனுபவிச்சு எழுதீருகாங்க...மிகபெரியவங்க..ரொம்ப அனுபவிச்சு நடிச்சுருக்காங்க..நம்ம கிட்ட அந்த கருத்த கொண்டு சேக்கறதுக்கு..!

நீங்க பல நாட்டு தண்ணி குடிச்சவரு உங்களுக்கு தெரியாதது இல்ல ! என்ன நான் சொல்றது !

http://www.youtube.com/watch?v=VqA0Rqe60YA

Georgevob
17th May 2013, 01:09 PM
Dear Ragulram sir,

Thanks for your kind appreciation. Such appreciations help us in getting motivated and write about our "Sidhdhar" Nadigar Thilagam

Richardsof
17th May 2013, 01:09 PM
இனிய நண்பர் திரு கோபால் சார்

இன்று இந்த அளவிற்கு நாம் நட்புடன் இருக்க காரணம்

உங்களின் கற்பனையான கவிதையின் கருவே என்பது

அறிவீர்கள் .

கற்பனை கவிதை மூலம் உண்டான ஒரு தாக்கம்

உலக ளவில் ஒரு சாதனை புரியும் அளவிற்கு

எங்களை அழைத்து சென்ற உங்களுக்கு

கற்பனை சார்பாக நன்றி .

Gopal.s
17th May 2013, 01:25 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-31

Artaud acting techniques.

Artaud's thinking placed heavy emphasis on invoking deep routed feelings through acting. He believed the theatre was about action and the element of surprise. His theatre of cruelty approach, of which he is better associated with, takes acting to the subconscious level. Using painful memories and strong feelings to invoke strong emotion. Antonin Artaud thought less of words and more of profound impact. Where as Brecht wanted the audience to go out and change society Artaud wanted them shaken to their soul and to look within and make Changes within themselves.

இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.

நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.

எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.

பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .

அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .

ராகவேந்தர் சார்,வாசு சார் காட்சியை தரவேற்றுங்கள். இதை என் எழுத்தால் வடிப்பது இயலாது.

------To be Continued .

Georgevob
17th May 2013, 01:40 PM

அன்புள்ள கோபால் சார்

அருமையான கட்டுரை ....!

இபோழுது நான் நீங்கள் குறிப்பிட்ட அந்த "Chekov " என்கிற நண்பர் யார் என்று பார்த்துகொண்டிருகிரேன்.

எனக்கு Chekov " "Kikkov " இவர்களெல்லாம் தெரியாது. எனக்கு தெரிந்தது நம்முடைய திரை உலக சித்தர், கலை தாயின் புதல்வன் கணேச மூர்த்தியைத்தான் .

தங்களுடைய ஆய்வு அருமை .

இதற்க்கு நடிகர் திலகம் உங்கள் எண்ணங்களுக்கு பதில் கூறும் பாடல் பரிசு...!

http://www.youtube.com/watch?v=LBh-R_0cFBQ

Georgevob
17th May 2013, 01:44 PM
ஆஹா! கடவுளைக் கண்டேன்.

இந்த பாடலையும் சேர்த்து பாடுங்கள் சார்... ! அப்போதுதானே ஒரு கெத்து !

http://www.youtube.com/watch?v=trsW6cL9a9o

Georgevob
17th May 2013, 01:53 PM
நடிகர் திலகத்தால் நினைவுபடுத்தப்பட்ட பெரியவர்கள் வரிசையில் அடுத்து இடம்பெறபோவது :

மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழ நாட்டின் பெருமையை இவ்வையகம் உள்ளவரை நிலைத்திருக்க செய்த

ஏடு தந்தானடி தில்லையிலே....

http://www.youtube.com/watch?v=7aDsRLCqxsA

IliFiSRurdy
17th May 2013, 02:55 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-31

Simply brilliant narration, Gopal! நாளுக்கு நாள் இந்த வரிசையில் மெருகு ஏறிக்கொண்டே போகிறது.
உங்கள் எழுத்தின் வீச்சு விரைவில் எங்கும் பரவி பெரும் புகழ் அடையபோவது திண்ணம்.

மேலும் இந்த climax காட்சியில் இந்திய திரைப்பட உலகமே அதுவரை கண்டிராத blowing the nose பகுதி.
பார்வையாளர்களை ஒரு நொடியில் யதார்த்த நிலைக்கு கொண்டு வரும் உத்தி..இதன் அருமையை புரிந்து கொண்டு, அதை "தேவர் மகனில்" கெளதமி பாத்திரத்திற்கு கமல் சாமர்த்தியமாக பயன்படுத்திக்கொண்டார்.

தொடருங்கள்..காத்துள்ளோம்

vidyasakaran
17th May 2013, 02:56 PM
...
நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.
...

இது பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Georgevob
17th May 2013, 03:17 PM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-31

Simply brilliant narration, Gopal! நாளுக்கு நாள் இந்த வரிசையில் மெருகு ஏறிக்கொண்டே போகிறது.
உங்கள் எழுத்தின் வீச்சு விரைவில் எங்கும் பரவி பெரும் புகழ் அடையபோவது திண்ணம்.

மேலும் இந்த climax காட்சியில் இந்திய திரைப்பட உலகமே அதுவரை கண்டிராத blowing the nose பகுதி.
பார்வையாளர்களை ஒரு நொடியில் யதார்த்த நிலைக்கு கொண்டு வரும் உத்தி..இதன் அருமையை புரிந்து கொண்டு, அதை "தேவர் மகனில்" கெளதமி பாத்திரத்திற்கு கமல் சாமர்த்தியமாக பயன்படுத்திக்கொண்டார்.

தொடருங்கள்..காத்துள்ளோம்

ஓரிரு விஷயம் மட்டும் அல்ல....நடிகர் திலகத்தின் பல படங்களிலிருந்து அவருடைய mannerism , method of reaction to an action மற்றும் exclusive காட்சிகள் மற்றும் முக்கல் வாசி கதை என்று பல விஷயங்களை கமல் பயன்படுத்தி உள்ளார் என்பது அனைவரும் அறியாத பலர் அறிந்த விஷயம்.

Gopal.s
17th May 2013, 03:30 PM

இதில் தவறு காண ஒன்றுமேயில்லை. கமலே அதை ஒப்பு கொண்டுள்ளார் பல முறை.
மகாநதியில் nose clear பண்ணுவது.
உன்னை போல் ஒருவன் படத்தில் துப்பாக்கியால் கண்ணை துடைப்பது.
உன்னை போல் ஒருவனில் சோம்பல் முறிப்பது.
என்று பல.

Georgevob
17th May 2013, 04:13 PM
யார் தவறு கண்டார்கள் தவறு இல்லை என்று கூறுவதற்கு....!

யாருமே தவறு என்று சொல்லவில்லையே கோபால் சார்

பின்பு...அவரே ஒத்துகொண்டார் என்பது பெருந்தன்மை என்ற குணத்தை உணர்த்துவது அல்ல !

அவர் ஒத்துக்கொள்ளவிட்டலும் மற்றவர்கள் அதை பற்றி எப்படியும் கண்டுபிடித்து பேச தான் போகிறார்கள் என்பது தெரிந்து அதனால் கூட இருக்கலாம் அல்லவா?

நடிகர் திலகத்தின் என்னை போல் ஒருவனில் அந்த Flashback kaatichiyin REverse shot ..முழுக்க முழுக்க reverse Shot ஆக படம்பிடிக்கப்பட்ட பாடலாக மன்மதன் அம்புவில் கொண்டுவந்தது ,

இளைய தலைமுறை திரைப்படத்தின் நடிகர் திலகம் வார்டனாக உத்தியோகம் கிடைத்து அங்கு செல்வதிலிருந்து வணக்கம் போடும் வரை அத்தனை காட்சிகளும், நம்மவர் என்ற திரைப்படமாக எடுத்தது ....இப்படி சொல்லிகொண்டே போகலாம் !

Gopal.s
17th May 2013, 04:20 PM
சௌரி ,
நாம் கமல்,ரஜினி மற்றும் இளம் நடிகர்களின் ரசிகர்களை அணைத்து சென்று நடிகர்திலகம் என்ற மேதையை அவர்களுக்கு சரியான முறையில் புரிய வைத்து பதிய வைக்க வேண்டும் .
நாம் எடுத்ததெற்கெல்லாம் குறை சொல்லி அவர்களை irritate செய்வதோ,ஓட வைப்பதோ தேவையில்லை.(சிலரின் ரசிகர்கள் விதிவிலக்கு.அவர்களை மாற்றுதல் கடினம்.
even ilaya thalaimurai is based on To sir with love.

RAGHAVENDRA
17th May 2013, 04:32 PM
அபூர்வ நிழற்படங்கள் ...

வாசு சாருக்காக ...

இணையத்தில் முதன் முதலாக ...

வம்ச விளக்கு திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் வித்தியாசமான தோற்றம் ...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/VVILAKKU01_zps2af6c4ca.jpg

Georgevob
17th May 2013, 04:33 PM
சௌரி ,
நாம் கமல்,ரஜினி மற்றும் இளம் நடிகர்களின் ரசிகர்களை அணைத்து சென்று நடிகர்திலகம் என்ற மேதையை அவர்களுக்கு சரியான முறையில் புரிய வைத்து பதிய வைக்க வேண்டும் .
நாம் எடுத்ததெற்கெல்லாம் குறை சொல்லி அவர்களை irritate செய்வதோ,ஓட வைப்பதோ தேவையில்லை.(சிலரின் ரசிகர்கள் விதிவிலக்கு.அவர்களை மாற்றுதல் கடினம்.
even ilaya thalaimurai is based on To sir with love.

சார்

இது தேவையில்லாமல் ஒரு பிரச்சனையை. நான் ஒன்றும் குறை கூறவில்லை. நான் சொல்வது எல்லாமே குறை கூறுவது போல நீங்க ஏன் நினைக்கறீங்க...!

உண்மையா எழுதின குறை கூறுகிறேன் என்ற பொருளா என்ன ?

தகவலை தகவலாக பார்க்காமல் தகராறாக பார்த்தால் தகராறு தானே வரும் சார் ?

நீங்கள் மேற்கூறிய ஆங்கில திரைப்படம் நான் பார்த்ததில்லை. பார்த்திருந்தால் அதையும் எழுதியிருப்பேன்...உத்தமபுத்திரன், புதிய பறவை போல ....

Georgevob
17th May 2013, 04:40 PM
அபூர்வ நிழற்படங்கள் ...

வாசு சாருக்காக ...

இணையத்தில் முதன் முதலாக ...

வம்ச விளக்கு திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் வித்தியாசமான தோற்றம் ...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/VVILAKKU01_zps2af6c4ca.jpg

Vamsa Vilakku - NT double role?

omeuforivo
17th May 2013, 05:17 PM
ஓரிரு விஷயம் மட்டும் அல்ல....நடிகர் திலகத்தின் பல படங்களிலிருந்து அவருடைய mannerism , method of reaction to an action மற்றும் exclusive காட்சிகள் மற்றும் முக்கல் வாசி கதை என்று பல விஷயங்களை கமல் பயன்படுத்தி உள்ளார் என்பது அனைவரும் அறியாத பலர் அறிந்த விஷயம்.

Sir, I disagree with you. If so, please give reference and evidence.

omeuforivo
17th May 2013, 05:23 PM
Even though Kamal admits openly that he is an ardent fan of Nadigar Thilagam, he never replicates NT's action style in his movies.
Specifically, style of crying in Nayagan is an example.

RAGHAVENDRA
17th May 2013, 05:38 PM
அபூர்வ நிழற்படங்கள் ... தொடர்ச்சி ...

வாசு சார், நம்முடைய விருப்பமான வம்ச விளக்கு திரைப்படத்திலிருந்து மற்றொரு நிழற்படம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/VAMSAVILAKKU02_zps80787e72.jpg

Georgevob
17th May 2013, 07:57 PM
Sir, I disagree with you. If so, please give reference and evidence.

Sir,
Request you to refer Mr.Gopal's reply to me and My reply to Mr.gopal for references. You may view them to check if they are evidences..

I never mentioned anything about the Nayagan cry..for your information.

Georgevob
17th May 2013, 08:01 PM
Even though Kamal admits openly that he is an ardent fan of Nadigar Thilagam, he never replicates NT's action style in his movies.
Specifically, style of crying in Nayagan is an example.

I never said he replicates...Did i ? No actor will replicate anybody's style. If they replicate, it would be like the scene of Mr.Vivek doing the parasakthi, Gowravam, Puthiyaparavai SarojaDevi ..Why would kamal do that ?

He has his own talent !

Gopal.s
17th May 2013, 08:05 PM
Even though Kamal admits openly that he is an ardent fan of Nadigar Thilagam, he never replicates NT's action style in his movies.
Specifically, style of crying in Nayagan is an example.
Dear Mr.Ganse,
I watched all the movies of Shivaji and all the movies of Kamal. I can quote more than 200 scenes and kamal told in the interview that "I was influenced by his acting and discerning viewers can easily make out where I copied him".You can refer Screen Magazine of 1990.
But There is nothing wrong in disciple following his master .
You are most welcome to participate in this thread.I am a kamal fan too.

Georgevob
17th May 2013, 08:08 PM
அபூர்வ நிழற்படங்கள் ... தொடர்ச்சி ...

வாசு சார், நம்முடைய விருப்பமான வம்ச விளக்கு திரைப்படத்திலிருந்து மற்றொரு நிழற்படம்

ராகவேந்திரன் சார்,

அது என்ன "நம்முடைய விருப்பமான " ? எங்களுக்கு எல்லாம் விருப்பம் இல்லையா ?
முகத்தை கவனியுங்கள் சார்...அந்த வயதில் அதற்க்கு அடுத்த பதினைந்து அதிக வயது Get-up .

மேற்தோலை உரித்த கப்பை கிழங்கு போல சும்மா கிண் என்ற வாளிப்பான அந்த முகம் !

Tie எப்படி கட்டுவதென்று கூட தெரியாத நடிகர்கள் இருக்கின்ற நிலையில் அந்த Knot கவனியுங்கள் perfect மவுண்ட் ரோடு இரானி கடை சமோசா வடிவில் .

அவர் போடும் சூட் Blazer அந்த Hanger ஐ விட perfect அக இவரது தோளில் தான் அமர்ந்துள்ளது...T வடிவில் , அன்றும்...என்றும் !

eehaiupehazij
17th May 2013, 08:08 PM
We respect all actors for their individuality and contributions to the satisfaction of film fans. However, when we go by chronology, NT remains the original for whom no body was there to get inspirations when he entered the movies. By his hard work and devotion to polish his acting dimensions, he could become the bench mark of acting for other actors. Kamal could reach his originality after a long term of hard work during which time one could observe the shades of NT, MT and GG in his acting sequences. Rajini also could not go away from the shades of NT over a significant period till he established his originality. Any actor in Tamil Nadu could not resist the influence of NT till they become seasoned with their acting skills.

omeuforivo
17th May 2013, 08:19 PM
Sowrirajan Sir, Gopal Sir & Sivaji Senthil Sir

Thank you very much for all your reply.
I have great affection towards Nadigar Thilagam.
I am of the view that Kamal has got inspiration from Nadigar Thilagam and developed his own skill.

Georgevob
17th May 2013, 08:32 PM

Dear Ganse,

Absolutely ! And you are most welcome to participate in this thread too and share your views and observations on similarity of talents between both of them..!

There is nothing wrong as Mr.Gopal said in adapting any technique unless and until one is sure that it would work out for him / her.

Mr.Kamalhassan was smart enough to choose the path of Nadigar Thilagam from the year of Apoorva Sahodharargal release rather than being one more masala film hero. That was the biggest risk he choose to take..!

Being a smart person and a good thinker, he knew that no other actor will try to experiment in the midway of their career in changing platform and if he wins, he also knew the recognitions and laurels in store for him as the media was also booming in all directions.

He took the risk and therefore deserved that WIN !

What did Microsoft do ? MS-Excel / MS-Word is not Microsoft's own ...Bill Gates adapted Lotus 123 & Word Star to bring their own Excel and Word..!

It does exist in every industry !

Georgevob
17th May 2013, 09:23 PM
ராஜ ராஜ சோழனை பற்றி அறிவதற்கு முன்னர் சோழர் பரம்பரையை பற்றி அறிதல் நலம் - உங்கள் அனைவர்காகவும் -

சோழர் பரம்பரையின் ஆட்சி மன்னன் விசயாலயன் 846 முதல் 871 வரையிலும்
அவருக்கு பிறகு அவரது மகன் ஆதித்யன் 871 முதல் 907 வரையிலும்,
பிறகு இவர் மகன் பராந்தகன் 907 முதல் 955 வரையிலும்,
பராந்தகனின் மூன்று மகன்கள் ராஜாதித்யன், கண்டராதித்த்யன், அரிஞ்சயன் மூவருமாக பின்பு
கண்டராதித்த்யன் மகன் மதுராந்தக உத்தம சோழன் , அரிஞ்சயன் மகன் சுந்தர சோழனும் 985 வரை ஆண்டனர்.
அதற்க்கு பிறகு சுந்தர சோழனின் இரு மகன்களான கரிகாலனும், பின்னர் ராஜ ராஜ சோழனும் (985-1016) ஆண்டார்கள்,
பின்னர் அவருடைய மகன் ராஜேந்திரன் 1012-1044 ராஜேந்திரன் 1 இக்கு பிறகு,
அவர் மகன்கள் ராஜாதிராஜன், ராஜேந்திரன் 2 , வீர ராஜேந்திரன் இவர்களில்,
ராஜேந்திரன் 2 மன்னராக ஆண்டார். அவர்க்கு ஆண் வாரிசு கிடையாது . மதுராந்தகி என்ற பெண் குழந்தை மட்டுமே...
ஆகையால் வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் ஆண்டான்.
இவர்களில் கரிகாலன் சோழ மரபினர் என்றும் மற்றவர் இடைகால சோழர்கள் என்றும் அழைக்க பட்டனர்.

ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை சாளுக்ய வம்சாவழி விமலாதித்யனை மணந்து அதன் மூலம் ராஜராஜன் நரேந்திரன் என்ற குழந்தையை ஈன்றெடுத்தாள்.
இவனும் சாளுக்ய வம்சவழியே. ராஜராஜன் நரேந்திரன் ராஜேந்திர சோழன்-1 மகள் அம்மன்கதேவியை மனமுடித்ததில் குலோத்துங்கன் -1 ஜனனம் .
குலோத்துங்கன் 1 வளர்ந்து ராஜேந்திரன் 2 மகள் மதுராந்தகியை மணமுடித்து அவர்களுக்கு நான்கு மகன்கள் பிறகின்றனர்.
அவர்கள் சாளுக்ய சோழர் என்று அழைக்கபடுகின்றனர்.

மேற்கூறியவை சுருக்கமாக சொன்ன சோழர் வழி, சாளுக்ய வழி, சோழ மரபு வம்சத்தின் தகவல்களாகும்.

Georgevob
17th May 2013, 09:48 PM
பழங்கால ஏடுகளில் ராஜராஜசோழனை பற்றியுள்ள குறிப்புகள் :

ராஜராஜன் யானை மீது அமர்ந்து வரும்போது எதிரே கூட்டமாக கேசரி (சிங்கம்) வந்தாலும் ஒருகணம் திகைத்து சிதறி நாலு பக்கம் தலை தெறிக்க ஓடும் என்று கூறுகிறது..!

அரசவையில் ராஜ ராஜன் வருகையில் நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, வலக்கரம் சென்கோலிலும் இடக்கரம் சிம்ஹாசனபிடியிலும் வைத்து கோரிக்கையை கேட்டு, தீர்ப்பு சொல்லும்பாங்கு இவை மாநிலத்து மக்களெல்லாம் இமைகொட்டமால் இறைவனை பக்தியுடன் காண்கின்ற பாங்கினை அரசவையில் தோற்றுவித்தன..!

பெரும் குற்றும் செய்தவன் கூட கொற்றவனின் பார்வை ஒருமுறை பார்க்கும் பாந்தத்தில் பனி போல நெஞ்சுருகி மனிப்பு கோருவான் ..

போர்க்களத்தில் ராஜராஜன் வாள் சுழலும் வேகம் சக்ராயுதம் போல பல திசையிலும் தலைகளை கொய்யும் பூஜ வலிமை கொண்டது என்றும் அகன்ற மார்பில் அந்த கவசம் அமர என்னபாக்கியம் செய்ததோ..என்றும் குறிபிட்டுள்ளது

Georgevob
17th May 2013, 09:57 PM
ராஜ ராஜ சோழன் திரு உருவம்

2392

2393

2394

Georgevob
17th May 2013, 10:34 PM
இனி நமது நிலைக்கு வருவோம் -

நமக்கு பல விஷயங்களில் முன்னோடியாக வாழும் முறையை கற்றுகொடுத்த பெரியவர்களை அவர்களின் அரும்பணிகளை நாம் மறக்காமல் நம்மால் முடிந்தவரை அவர்கள் புகழை குறைந்தது நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு உரைத்திடல் வேண்டும். இல்லையேல், காலபோக்கில் அவர்களை பற்றிய உண்மைகளும், அவர்களுடைய தொண்டும், புகழும், ஆற்றிய அரும்பணிகள் யாரும் அறியாவண்ணம் இருக்கும்.

வெறும் ஒரு சிலையை, கல்வெட்டை பார்ப்பது போல தான் பார்பார்கள்.

அந்த பெரியவர்களின் மகத்துவங்களை, திரை மூலமாக அடித்தட்டு மக்கள் மீண்டும் நினைத்துபார்க்கும் வண்ணம் அவர்களிடத்தில் கொண்டு சென்ற பெருமை, அந்த திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்த தயாரிப்பாளரையும் சாரும்.

அந்த தயாரிப்பாளர், தன மனதில் இது போல ஆசை வளர்ந்தால் அதை திரைப்படமாகும் முயற்சியில் எப்போது ஈடுபடுவார்?

அந்த கதாபாத்திரதுக்கான, அந்த கதாபாத்திரத்தை மிக சிறந்த முறையில் கையாளக்கூடிய கை தேர்ந்த நடிகர் இருந்தால் மட்டுமே அந்த தயாரிப்பாளரின் கனவு நனவாகும்.

அதுமட்டும் அல்ல ! இவர் எந்த நடிகர் அதை செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைகிறாரோ..இவர் மட்டும் அல்ல, அந்த திரைப்படத்தை வாங்கி திரையிடும் விநியோகஸ்தர்கள், திரை அரங்கு முதலாளிகள் இவர்கள் அனைவரும் அந்த நடிகர் செய்தால் மிக சிறப்பாக இருக்கும் என்றும் ஒருமித்த கருத்து அவர் மூவருக்கும் இருக்கவேண்டும்...

அதைவிட முக்கியம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க, அதை சிறப்பாக கையாண்டு மக்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அந்த கதாநாயகனுக்கு தைரியமும், தன் திறமை மீதும் அபார நம்பிக்கை வேண்டும் !

அப்படி உள்ள ஒரு நடிகனால் மட்டுமே இதிகாச, சரித்திர, தெய்வாம்சம்கொண்ட கதாபாத்திரங்களை கையாள முடியும்....இதில் ஒன்று குறைந்தாலும், பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அந்த கதாபாதிரதுக்கே பங்கம் ஏற்படும் !

அப்படி இந்த ராஜ ராஜ சோழன் வரலாற்றில் ஒரு சில விஷயங்களை திரைப்படமாக திரு. உமாபதி ஆனந்த் Pictures முடிவெடுத்தபோது அதுவும் அகன்ற திரையில் ஒரு மாபெரும் சோழ மன்னனை காண்பிக்க வேண்டும் என்று முடிவுசெய்தபோது ....தமிழ் திரை உலகில் பல திறமையாளர்கள் இருந்தாலும் , அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கி வருகின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சோழனாக சித்தரிக்கபட்டால், அது மிக சிறப்பாக அமையும் என்று ஏகோபித்த ஒப்புதலை விநியோகஸ்தர்கள், திரையிடும் திரை அரங்கு உரிமையாளர்கள் கொடுத்ததால் நடிகர் திலகம் ராஜ ராஜ சோழனாகவும், திரு.சிவகுமார் ராஜராஜன் மகன் ராஜேந்திர சோழனாகவும், திருமதி. லக்ஷ்மி அவர்கள் ராஜராஜன் மகள் குந்தவயாகவும், திரு.முத்துராமன் அவர்கள் சாளுக்ய விமலாதித்யனாகவும் நடிக்க வைக்க முடிவெடுத்து தமிழின் முதல் Cinemascope வண்ணப்படமாக ராஜ ராஜ சோழன் 1973இல் வெளிவந்தது.

ராஜராஜ சோழன் வரலாற்றில் நடிக்க ஏன் நடிகர் திலகம் ஒத்துகொண்டார் ? அதற்க்கு அவர் கூறும் காரணம் என்ன ?

ராஜராஜ சோழனாக நடிகர் திலகம் நடிப்பதற்கு என்னென்ன சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது, அந்த சவால்களையும் மீறி அவர் ராஜராஜ சோழனாக பரிமளிதாரா அப்படி பரிமளித்தார் என்றால் எப்படி ?

இதை நாம் அடுத்த தொடரில் அறிந்துகொள்ளலாம் !

RAGHAVENDRA
18th May 2013, 06:51 AM
டியர் ராஜ ராஜ சௌரி, மன்னிக்கவும். சௌரி ராஜன் சார்,
தங்களின் ராஜ ராஜ சோழன் தொடருக்கு தாங்கள் அளித்திருக்கும் முஸ்தீபு அபாரம். Preparation செய்து கொண்டு வழங்கும் தங்கள் முயற்சி பாராட்டத் தக்கது.
தொடருங்கள். படிக்கக் காத்திருக்கிறோம்.

RAGHAVENDRA
18th May 2013, 06:56 AM
Artaud Technique ....

Who is Artaud ...

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/f/f5/Artaud_manray.jpg/250px-Artaud_manray.jpg

Antoine Marie Joseph Artaud, better known as Antonin Artaud (4 September 1896 – 4 March 1948), was a French playwright, poet, actor and theatre director. Antonin is a diminutive form of Antoine "little Anthony", and was among a list of names which Artaud used throughout his writing career.

From wikipedia at http://en.wikipedia.org/wiki/Antonin_Artaud

Artaud believed that theatre should represent reality and, therefore, affect the audience as much as possible, therefore he used a mixture of strange and disturbing forms of lighting, sound, and other performance elements. from wiki.

RAGHAVENDRA
18th May 2013, 07:10 AM
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-31
.....
இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.
....

Perfect statement

நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.

பல்வேறு சமயங்களில் பல்வேறு மருத்துவர்கள் இதை கூறியுள்ளனர். அவருடைய குடும்ப டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் ரங்க பாஷ்யம், போன்ற உலகப் புகழ் பெற்ற டாக்டர்கள் இதை கூறியுள்ளனர். அந்தந்த கால கட்டத்தில் நடிகர் திலகத்தைப் பற்றிய இவர்களுடைய அபிப்ராயம் கோரப் பட்ட போது கிடைத்தவை இந்தத் தகவல்கள்.

எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.

பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .

ரேகையைப் பற்றி சொல்லும் போதே இது ஆரம்பித்து விடும்.

அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .

மனக்கண்ணால் காட்சியை உருவகப் படுத்தி அதற்கு REACTION கொடுப்பதும் தனிக் கலை. இந்த வகை நடிப்பு வெளிநாட்டுத் திரைப்படங்களில் அதிகம் காண முடியாது. நம் நாட்டிலும் இதனை சித்தரிக்க வளையம் வளையமாய் ஒரு fillerஐப் போட்டு விட்டு flash back காட்சிக்குள் போய் விடுவார்கள். ஆனால் நடிகர் திலகம் மட்டுமே அந்த காட்சியின் தொடர்பை தன் நடிப்பில் கொண்டு வந்து அதனை முழுமையாய் முடித்து வைப்பார். This is possible only to NT.

That is why I strongly pronounce that Nadigar Thilagam Acting is a School in itself. There is a Separate School of Acting of NT and we can proudly proclaim it as Sivaji Ganesan School of Acting which would serve as an encylopaedia for actors throughout the globe.

எனவே நடிகர் திலகம் நடிப்பிலக்கணம் என்பது தனி பாடம். அவருக்கு முன் இருந்த பாடங்களில் குறிப்பிடப் படாத பல்வேறு வகையான நடிப்பு முறைகளை அவருடைய நடிப்பில் காணலாம். அவருக்குப் பின்னர் அதன் தாக்கம் இல்லாதவர்களே கிடையாது என்ற அடிப்படையில் பார்த்தோமானால் சிவாஜி கணேசன் நடிப்பிலக்கணம் - Sivaji Ganesan School of Acting is the BEST, FIRST AND ROLE MODEL FOR ACTING FOR THE ACTORS THROUGHOUT THE WORLD, IRRESPECTIVE OF THE NATIVITY, ORIGIN, CULTURE.

vasudevan31355
18th May 2013, 07:35 AM
It's not a school. UNIVERSITY.

Gopal.s
18th May 2013, 07:50 AM
சௌரி ,
நாம் இன்னொரு விஷயத்தில் ஒன்று படுகிறோம்(சிவாஜி தவிர ) அது சரித்திரம் . என்னுடைய 3000+ புத்தக சேமிப்பில், 10% சரித்திர சம்பத்த பட்டவை. சோழர்களை பற்றிய குறிப்பு அருமை.
நடிகர்திலகம் ராஜ ராஜ சோழன் ஆக படு படு படு handsome &majestic ஆக வலம் வருவார். நல்ல மார்க்கெட்டிங். cinemascope .
ஆனால்.........
சரித்திரம்தான் மிஸ்ஸிங் .

Gopal.s
18th May 2013, 07:53 AM
It's not a school. UNIVERSITY.
தலைவரே,
வெளிநாட்டில் university என்பதையும் school என்றே குறிப்பிடுவார்கள் .

Gopal.s
18th May 2013, 08:04 AM
That is why I strongly pronounce that Nadigar Thilagam Acting is a School in itself. There is a Separate School of Acting of NT and we can proudly proclaim it as Sivaji Ganesan School of Acting which would serve as an encylopaedia for actors throughout the globe.

எனவே நடிகர் திலகம் நடிப்பிலக்கணம் என்பது தனி பாடம். அவருக்கு முன் இருந்த பாடங்களில் குறிப்பிடப் படாத பல்வேறு வகையான நடிப்பு முறைகளை அவருடைய நடிப்பில் காணலாம். அவருக்குப் பின்னர் அதன் தாக்கம் இல்லாதவர்களே கிடையாது என்ற அடிப்படையில் பார்த்தோமானால் சிவாஜி கணேசன் நடிப்பிலக்கணம் - Sivaji Ganesan School of Acting is the BEST, FIRST AND ROLE MODEL FOR ACTING FOR THE ACTORS THROUGHOUT THE WORLD, IRRESPECTIVE OF THE NATIVITY, ORIGIN, CULTURE.

Good. I am awaiting eagerly for your serial. I prefer to read others articles like murali,karthik, Vasu ,sarathy, Ragavendar, Ganpat and now Sowri.
No doubt Sivaji is the best school in the world but we have not globalised the brand adequately. Even if you want borewell to give out water,you have to pour some water as a starter. If we have to take him to the world ,you have to establish with globally accepted names and schools.What I am trying to establish is that he is the only one in the world who adapted all known schools in the world without any limitations, and I have taken only him as the subject putting all else in the back burner. Like Cho says ,we should not shout from our roof "Gopal Vaazhga".Proper presentation is the need of the hour. It is not enough if we talk among ourselves. That is the main purpose behind my effort .

vasudevan31355
18th May 2013, 08:45 AM
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.

இன்றைய புகைப்படம்(3)

கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஸ்ரீ அகஸ்தியா ஆசிரமத்தில் நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/lunapic_136884685713695_8.gif (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/lunapic_136884685713695_8.gif.html)

vasudevan31355
18th May 2013, 08:48 AM
தலைவரே,
வெளிநாட்டில் university என்பதையும் school என்றே குறிப்பிடுவார்கள் .

வெளிநாட்டைப் பற்றி நான் என்றுமே கவலைப்பட்டதில்லை. அதிலும் தலைவரே எனது வழிகாட்டி. தலைவர் சொன்னது போல் 'தேவையில்லை'.

vasudevan31355
18th May 2013, 09:00 AM
'என் கிராமம்... என் மக்கள்' பதிவைப் பாராட்டிய கோபால் சார், ராகவேந்திரன் சார், சந்திரசேகரன் சார், கைபேசியின் மூலம் வாழ்த்து தெரிவித்த பதிவின் மூலமும் வினோத் சார், கண்பத் சார், ராதாகிருஷ்ணன் சார், தம்பி ராகுல்ராம், சவுரி சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

vasudevan31355
18th May 2013, 09:05 AM
ராகவேந்திரன் சார்,

நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த 'வம்சவிளக்கு' படத்தின் அற்புதமான தலைவர் ஸ்டில்களை இணையத்தில் முதன் முதலாகப் பதித்து அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்து விட்டீர்கள்.அதுவும் அதை எனக்காக ஸ்பெஷலாகத் தந்ததற்கு மிக்க நன்றி! அற்புதமான ஸ்டில்ஸ்.

vasudevan31355
18th May 2013, 09:07 AM
சவுரி ராஜன் ராஜராஜனைப் பற்றி எழுதுவதுதான் பொருத்தம். சரித்திர குறிப்புகளுக்கு நன்றி. சவுரியின் சரித்திரம் தொடரட்டும்...

Gopal.s
18th May 2013, 09:08 AM
வெளிநாட்டைப் பற்றி நான் என்றுமே கவலைப்பட்டதில்லை. அதிலும் தலைவரே எனது வழிகாட்டி. தலைவர் சொன்னது போல் 'தேவையில்லை'.
தலைவர்களே ,
உங்கள் கூட்டுக்குள்ளே சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு தமிழ் நாட்டிலிருக்கும் எண்ணற்ற கதாநாயகர்களில் ஒருவராக அவரையும் பேசி கொண்டிருங்கள்.ரொம்ப சந்தோசம். உருப்படியாக ஏதாவது செய்ய முயன்றால் இதில் என்ன இருக்கிறது ,எங்களுக்குத்தான் அவர் உலகத்திலேயே சிறந்தவர் என்று தெரியுமே ,நீ என்ன யார் யார் பெயரையோ சொல்லி ,அவரை establish பண்ணுவது என்ற ரீதியிலேயே பேசி கொண்டிருந்தால் ....
தவறான இடத்தில் உட்கார்ந்து சரியான விஷயம் பேசுவதும்,பேசியதும் தவறுதான்.மன்னித்து விடுங்கள்.இந்த சீரியல் முடிக்க படவி ல்லை.அதனால் அதை தொங்கலில் விட்டு விட்டு விலக முடிவு செய்து விட்டேன்.
ஆரம்பத்திலிருந்தே இந்த திரியில் நான் புரிந்து கொள்ள படவில்லை.இனியும் அப்படியே தொடரட்டும்.

vasudevan31355
18th May 2013, 09:16 AM

அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ராஜா? புரியவில்லை...எந்தக் கடுப்பையோ இங்கே காட்டுகிறீர்கள். கரெக்ட்?

vasudevan31355
18th May 2013, 09:21 AM
பலநாடுகள் சுற்றிய பன்திறமை கொண்டவருக்கு அனுபவமும், பொறுமையும் மிகத் தேவை. உணர்ச்சிவசப்படலாகாது. அடுத்தவருக்கும் இதைப்போல்தானே இருக்கும்? தனக்கு மட்டும் என்றால் தலைவலியோ?....

Gopal.s
18th May 2013, 09:35 AM
இதுவரை எழுதியதற்கு காரணங்களாவது சொல்ல வேண்டுமே? சொல்லி விடுகிறேன்.
1)நமது உலகத்திலேயே unique &Best product சரியாக marketing செய்ய படவில்லை.
2)அவருடைய வெவ்வேறு பாணியிலான,.நடிப்பு மற்றவர்களால் புரிந்து கொள்ள படாமல் ,பல குற்ற சாட்டுகள் சுமத்தி கொண்டிருந்தனர். அதை இந்த மாதிரி வெவ்வேறு school of Acting உலகம் தழுவிய அளவில் உள்ளது என்று சொல்லி, அவரை ,அவரது நடிப்பின் அளவற்ற எல்லைகளை கோட்பாடுகளின் படி விஞ்ஞான விளக்கம் கொடுத்தே ஆக வேண்டிய அவசியம்.Einstein கோட்பாட்டை அனைவரும் புரிந்து கொள்ள முடியாதே?
3)மற்ற நடிகர்களை ,sampling முறையில் ஒரே படத்தில் திறமையை அளந்து விடலாம்.ஆனால் நடிகர்திலகத்தை தொடருபவ ர்கள் மட்டுமே அவரை புரிந்து கொள்ள முடியும் .
4)அவ்வாறு தொடர நினைப்பவர்களுக்கு நமது shoddy way of movie making ஒரு தடை.அவருக்காக மட்டுமே படம் பார்க்கும் பொறுமை நமக்கு மட்டுமே இருக்கும்.
5)அவருடைய ஆற்றலுக்கு ஈடு கொடுக்கும் இயக்குனர்களோ,கதாசிரியர்களோ நம்மிடையே இல்லை.(தில்லானா தவிர) அவருடைய மிக சிறந்தவை பெங்காலி,கேரளா ,hollywood இலிருந்து வந்தவையே.
6)தெய்வ மகனை எடுத்தால் அவர் அந்த(kannan) பாத்திரத்தை execute செய்ததற்கும்,ஆரூர்தாஸ் வசனம் எழுதிய விதத்துக்கும் mis match இருக்கும். அதனாலேயே பாகம் இரண்டில் ,எல்லாவற்றையும் ஒதுக்கி அவர் நடிப்பு மட்டுமே ஆராய படும் என்று என்று மற்றவற்றை உறைநிலையில் வைத்தேன்.
7)இது ஒரு வித்யாசமான ஆய்வு கட்டுரை.முழுதும் எல்லோரும் புரிந்து கொள்ளல் கடினம் என்று எனக்கு தெரியும். ஆனால் தொடர்ந்து தாக்குதல் வந்தால் ....
நானும் மனிதன்தான்.புகழ வேண்டாம் தொடர்ந்து தாக்கி கொண்டே இருந்தால்.....
8)ஆனால் இந்த திரி எப்போதும் என் இதயம் சம்பத்த பட்டது.அருகானது.எனக்கு ஒரு அருமையான நட்பு வட்டத்தை ,ஒத்த கொண்ட companions கொடுத்துள்ளது.அதனால் பாடு பொருளுக்கு தகுந்த media என்று இதனை தேர்ந்தெடுத்தேன்.
9)நிறைய பேர் படிக்க கூட விரும்பாத போது ,நானே dilute பண்ணி எழுதும் போதும் புரியவில்லை என்று குற்றசாட்டு,இப்போது இதில் purpose இல்லை என்று நண்பர்கள் declare செய்தாயிற்று. அதனால்தான் என் முடிவை நான் எடுத்தேன்.
இது வரை எனக்கு உதவிய,உடன்வினை,எதிர்வினை புரிந்தோருக்கு நன்றி.

Gopal.s
18th May 2013, 09:40 AM
கைபேசி வாழ்த்திலும் என் பெயர் missing ????
வம்சம் விளங்க வாழ்த்துக்கள்.

vasudevan31355
18th May 2013, 09:42 AM
ஆனால் தொடர்ந்து தாக்குதல் வந்தால் .... தொடர்ந்து தாக்கி கொண்டே இருந்தால்.....

இதுவரை யார் அப்படித் தாக்கியது?... கூற முடியமா?... தங்களைப் போல விளையாட்டிற்கு ஒரு ஜாலிக்காக சீண்டிப் பார்த்திருக்கலாம். இது ஏன் புரியவில்லை? எப்போதுமே உங்களுக்கு ஒரு நியாயம்?... மற்றவர்களுக்கு ஒரு நியாமா?... இதுவரை வந்த உங்களின் சீரியலின் தொகுப்பை கிட்டத்தட்ட 50 பிரிண்ட்டுகள் எடுத்து நண்பர்களிடம் விநியோகித்திருக்கிறேன் தெரியுமா?... சொல்லக் கூடாது... சொல்ல வைக்கிறீர்கள்.

vasudevan31355
18th May 2013, 09:47 AM
கைபேசி வாழ்த்திலும் என் பெயர் missing ????

நானே எனக்கு எதற்கு நன்றி சொல்லிக் கொ(ல்)ள்வது?

Gopal.s
18th May 2013, 09:51 AM
தலைவரே,
சீண்டலுக்கும், பொருமலுக்கும் ,அலட்சியத்துக்கும்,under -current என்று சொல்ல படும் உள்ளரசியலுக்கும் ஆன வித்யாசம் உணராமலா வட இ ந்தியர்கள் நிறைநத multi -national நிறுவனத்தில் ஒரு வார்த்தை ஹிந்தி பேசாமல், CEO ஆக குப்பை கொட்டினேன்?ஆனால் நீங்கள் சொன்னது ஒன்று சரி.காலையிலிருந்தே ஒரு அலுவலக பிரச்சினையும் மண்டை காய வைக்கிறது.நண்பன் என்ற விதத்தில் அதை உணர்ந்த உன் நட்பை வழங்கிய திரிக்கு எப்போதுமே கடன் பட்டவன்.

vasudevan31355
18th May 2013, 10:29 AM
ஓகே!ஓகே! ரிலாக்ஸ்! நடிப்பைப் பற்றி நம் கடவுளுக்குத் தெரியாதா?
உன்னைப் பற்றி எனக்குத் தெ(புரியாதா)...

நான்கைந்து தடவை நன்றாக மூச்சை இழுத்து விடு. தொடரின் அடுத்த பகுதி உனக்கு வேலைப்பளுவில்லையென்றால் இன்றே இங்கு வரவேண்டும். இது என் கட்டளை. ('அன்பு' அல்ல) உன் வேலையைக் கெடுக்க விரும்பவில்லை. ஈவ்னிங் பேசலாம்.

vasudevan31355
18th May 2013, 12:07 PM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

(தொடர்-12)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (12) 'மாலினி '

மாலினியின் அழகிய தோற்றம்.

http://ttsnapshot.com/out.php/i40600_vlcsnap-2012-11-18-19h07m55s24.png

http://i2.ytimg.com/vi/9JxGg9EJKBI/hqdefault.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/m3.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/m3.jpg.html)

'சபாஷ் மீனா' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் மாலினி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/vlcsnap-2012-11-18-10h39m25s11.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/vlcsnap-2012-11-18-10h39m25s11.jpg.html)

தலைவர் போட்டோவை வைத்து அழகுபார்த்து ரசிக்கும் மாலினி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/m1-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/m1-1.jpg.html)

தலைவர், மற்றும் 'குலதெய்வம்' ராஜகோபாலுடன் மாலினி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/m2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/m2.jpg.html)

நடிகர் திலகத்தின் இன்னொரு ஜோடி. அபூர்வமான நடிகை. சில படங்களே தமிழில் நடித்துள்ளார் ஆனால் அதிர்ஷ்டசாலி நடிகை. எடுத்த எடுப்பிலேயே முன்னணிக் கதாநாயகர்களான நடிகர் திலகம், மக்கள் திலகம், ஆகியோருடன் நடிக்க வாய்ப்பு பெற்ற நடிகை. நடிகர் திலகத்துடன் 'சபாஷ் மீனா' நகைச்சுவைப் படத்தில் தலைவரின் ஜோடியாக நடித்துப் புகழ் பெற்றவர். நடிகர் திலகத்திற்கும் மாலினிக்குமான "காணா இன்பம் கனிந்ததேனோ" டூயட் பாடல் மிகவும் பிரசித்தம். அனைவரையும் மிகவும் கவர்ந்த காதல் பாடல். நடிகர் திலகத்தின் 'அவள் யார்' படத்திலும் மாலினி வருவார். கல்யாண்குமார் அவர்களுடன் 'அழகு நிலா' படத்தில் நாயகியாக நடித்திருப்பார்.

இவர் சற்று வாட்டசாட்டமான ஆணின் உடலமைப்பு போன்ற உடல்வாகு பெற்றவர். நடிப்பிலும் நிறைய செயற்கைத்தனங்கள் தெரியும். ஒன்றிரண்டு படங்களில் நடித்தாலும் கவர்ச்சிப் பதுமைதான். "காணா இன்பம் கனிந்ததேனோ" டூயட் பாடலும், தலைவர் மாலினியை நினைத்து உருகுவதாக வரும் 'சித்திரம் பேசுதடி' பாடலும் இவரை நடிகர் திலகம் ரசிகர்கள் மத்தியில் நிலையாய் இடம் பெறச் செய்துவிட்டது. பிடிக்காதது போலத் தோன்றினாலும் சில நடிகைகளைப் பிடித்துப் போகும் அல்லவா! இவர் அந்த ரகத்தை சேர்ந்தவர். எது எப்படியோ?! நடிகர் திலகத்தின் ஜோடியாக நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். மாலினி கொடுத்து வைத்தவர்தானே!

'காணா இன்பம் கனிந்ததேனோ' காணொளி இதோ...

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=MewOsMqwg3Y

Gopal.s
18th May 2013, 12:09 PM
ஓகே!ஓகே! ரிலாக்ஸ்! நடிப்பைப் பற்றி நம் கடவுளுக்குத் தெரியாதா?
உன்னைப் பற்றி எனக்குத் தெ(புரியாதா)...

நான்கைந்து தடவை நன்றாக மூச்சை இழுத்து விடு. தொடரின் அடுத்த பகுதி உனக்கு வேலைப்பளுவில்லையென்றால் இன்றே இங்கு வரவேண்டும். இது என் கட்டளை. ('அன்பு' அல்ல) உன் வேலையைக் கெடுக்க விரும்பவில்லை. ஈவ்னிங் பேசலாம்.
நண்பரே ,
நான் எழுத இருந்தது, ஸ்டெல்லா ஆட்லர் சம்பத்த பட்ட larger than life பாத்திரம்.ஆனால் நான் விரும்பியோ விரும்பாமலோ ராஜ ராஜ சோழன் புகுந்தாயிற்று. நான் விரும்புவது எல்லோராலும் விரும்ப பட்ட படங்கள் ,ஆய்வுக்கு பிறகு வித்யாசமான பார்வையில் பார்க்க படுவதை. நிராகரிக்க பட்ட விஷயங்களையும் merit அடிப்படையில் மறு ஆய்வு செய்யலாம்.ஆனால் ராஜ ராஜ சோழனும்,வம்ச விளக்கும் கோலோச்சும் போது ஒதுங்கி நின்று ரசிப்பதே எனக்கு மரியாதை.பொறுமையின் பெருமை.ஷண்முக சுந்தரம் வாசிப்பிற்கு வேட்டு மரியாதை கிடைத்தாயிற்று.
வாழ்த்துக்கள்.

Gopal.s
18th May 2013, 12:15 PM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

one movie wonder ரகம்.ஜோடி நல்லாயிருக்கும். கானா இன்பம் கனிநததேனோ என் favourite .
Filmo graphy இல் இதை பற்றி பேசலாம்.நன்றி வாசு சார்.இதை தொடருங்கள்.எனக்கு மிக மிக பிடித்த ஒன்று.

Gopal.s
18th May 2013, 12:23 PM
இருவர் உள்ளம்- 1963 -பகுதி-1

நடிகர்திலகத்தின் மீண்டும் அவருடைய தெய்வ பிறவி,இரும்புத்திரை பாணி,இயல்பு method acting நடிப்பில் அடக்கி வாசித்த படம் இருவர் உள்ளம். சிவாஜியின் குரு எல்.வீ.பிரசாத் இயக்கி தயாரித்து, கருணாநிதி மீண்டும் நடிகர்திலகத்துடன் இணைந்தார் குறவஞ்சிக்கு பிறகு மூன்று வருட இடை வெளியில். எழுத்தாளர் லட்சுமியின் புகழ் பெற்ற பெண் மனம் (ஆனந்த விகடனில் வெளியான தொடர்) என்ற நெடுங்கதையை தழுவி ,கருணாநிதி அவர்களால் திரைக்கதை அமைக்க பெற்றது.மூல கதையில் இருந்த பிராமண குடும்ப கதையை(ஜகன்னாதன்-சந்திரா) பிராமணம் அல்லாததாக (செல்வம்-சாந்தா) செய்து, அருமையாய் திரைக்கதை அமைத்திருந்தார்.
சிவாஜி ,எப்பவுமே, கதாநாயகியை மையமாய் கொண்ட கதா பாத்திரங்களிலும் நடிக்க தயங்காதவர்.(ஆனாலும் முதல் பரிசை தட்டி சென்று விடுவார்)
மங்கையர் திலகம்,பெண்ணின் பெருமை ,கை கொடுத்த தெய்வம், நீல வானம்,சிவகாமியின் செல்வன்,வாணி-ராணி உதாரணங்கள். இந்த வரிசையில் நாயகியை மைய படுத்தினாலும்,கதையின் நாயகனுக்கும் நிறைய scope கொடுத்த மிக சிறந்த படம் இருவர் உள்ளம்.

இருவர் உள்ளத்தின் கதை-

மிக பெரிய செல்வந்தர் வீட்டு இளைய மகன் செல்வம் டாக்டருக்கு படிக்கிறேன் என்ற பெயரில் பெண்களுடனும்,தவறான நண்பர்களுடனும் சீரழிந்து கொண்டிருப்பவன். செல்வத்தின் தந்தை பெரிய வக்கீல். மூத்த அண்ணன் ,வக்கீலுக்கு படித்திருந்தாலும்,தொழிலில் திறமையின்றி ,நிறைய பிள்ளை குட்டிகளோடு, கூட்டு குடும்ப நிழலில் வாழ்பவன்.செல்வத்திற்கு ஒரு தங்கை.செல்வத்தின் நடவடிக்கை பிடிக்காமல் ,படிப்பை பாதியில் நிறுத்தி ஊருக்கே வர வழித்து விடுகிறார் தந்தை. செல்வம் ஊரில் வந்தும் திருந்தாமல்,இஷ்டப்படி வாழ்கிறான்.

ஒரு நாள், காரில் தன பெண் நண்பி ஒருத்தியுடன் திமிராக சென்று, சாந்தா என்ற ஏழை டீச்சர் பெண்ணை, இடிப்பது போல் நிறுத்தி tease செய்கிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ,அவள் மேல் காதலில் விழுந்து அவளை பின் தொடர்கிறான். சாந்தா காதலுக்கு பச்சை கொடி காட்ட மறுக்கிறாள்.அவளை அடையும் ஆசையில் செல்வம் ஒரு முறை, அவளை யாருமில்லா நேரம் ,தன வீட்டுக்கு தந்திரமாக வர வழைத்து அவள் காதலை வேண்டுகிறான். ஆனால் சாந்தா மறுத்து விட்டு செல்லும் போது,தவறுதலாய் பார்த்தவர்கள் ,ஊரில் தவறாக பேச,ஏழை சாந்தா விருப்பமின்றி ,செல்வத்தை மணமுடிக்கிறாள்.

மணமுடித்த நாளில் இருந்து, செல்வத்தை வெறுக்கும் சாந்தா தாம்பத்ய உறவில் விருப்பமின்றி இனங்குவதால்,செல்வம் , அவள் தன்னை விரும்பி ஏற்கும் வரை,கணவன் என்ற உரிமையை எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறான். குடும்பத்தினர் அனைவருமே,செல்வம் திருந்தி வாழ நினைப்பதை அறியாமல், செல்வத்தையே குற்றம் சொல்கின்றனர். ஒரு சமயம் ,நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில்,செல்வத்தில் பழைய பெண் நண்பியின் குறுக்கீட்டால் திரும்ப பிளவு அதிகமாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்ய,செல்வம் ,சாந்தா நெருங்கவே முடியாமல் இருக்கும் தருணம்,சாந்தா செல்வம் திருந்தி விட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை ஒப்படைக்க முயலும் தருணத்தில், செல்வத்தின் பழைய நண்பியை கொன்ற பழி(செய்தது அவளின் புது நண்பன்) விழ, தந்தை செல்வத்திற்கு எதிராகவும்,அண்ணன் செல்வத்திற்காகவும் வாதாடி, செல்வம் விடுதலையாகி ,சாந்தாவுடன் சேர்கிறான்.

(தொடரும்)

vasudevan31355
18th May 2013, 12:26 PM
நண்பரே ,
நான் எழுத இருந்தது, ஸ்டெல்லா ஆட்லர் சம்பத்த பட்ட larger than life பாத்திரம்.ஆனால் நான் விரும்பியோ விரும்பாமலோ ராஜ ராஜ சோழன் புகுந்தாயிற்று. நான் விரும்புவது எல்லோராலும் விரும்ப பட்ட படங்கள் ,ஆய்வுக்கு பிறகு வித்யாசமான பார்வையில் பார்க்க படுவதை. நிராகரிக்க பட்ட விஷயங்களையும் merit அடிப்படையில் மறு ஆய்வு செய்யலாம்.ஆனால் ராஜ ராஜ சோழனும்,வம்ச விளக்கும் கோலோச்சும் போது ஒதுங்கி நின்று ரசிப்பதே எனக்கு மரியாதை.பொறுமையின் பெருமை.ஷண்முக சுந்தரம் வாசிப்பிற்கு வேட்டு மரியாதை கிடைத்தாயிற்று.
வாழ்த்துக்கள்.

'வம்ச விளக்கு' எங்கே கோலோச்சியது? வம்ச விளக்கைப் பற்றிப் பதிவுகள் ஏதேனும் உங்கள் கண்களுக்கு ஸ்பெஷலாகத் தெரிகிறதா? ஒன்றிரண்டு ஸ்டில்களைத் தவிர. 'வம்ச விளக்கு' படத்தைப் பற்றிய எந்தவொரு விவரமும் இதுவரை இணையத்தில் இல்லை. அப்படத்தின் சம்பந்தமான dvd,cd க்கள் இல்லை. அது சம்பந்தமான தகவல்கள் வந்தாலென்ன? இலையில் வெறும் பாயாசம் மட்டுமே போட வேண்டும்... கறிகாய் கூடாது.... ஊறுகாய் கூடாது.... ரசம் கூடாது... மோர் கூடாது.... என்றால் எப்படி? உங்களுக்காக, உங்கள் தவத்திற்காக நாங்கள் அனைவரும் ஒத்துழைக்கவில்லை என்று நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.

ஏன் இப்படி அடிக்கடி முருங்கை மரம் ஏறுகிறீர்கள்?

சரி! வெயில் ஜாஸ்தி என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

Gopal.s
18th May 2013, 12:27 PM
இருவர் உள்ளம்-1963 - பகுதி-2

முதல் காட்சியிலேயே களை கட்டி விடும் இருவர் உள்ளம். நடிகர் திலகம் அழகென்றால் அவ்வளவு அழகாக ,ஸ்டைல் ஆக தொப்பியுடன் ,காரில் பறவைகள் பலவிதம் பாட ஆரம்பிப்பார். பல பெண்களுடன் ,நடிகர்திலகத்தின் அத்தனை பாடல்,நடன காட்சிகளும் பிரமாதமாய் வந்திருக்கும்.(யாரடி நீ மோகினி,பறவைகள் பலவிதம்,காதல் மலர் கூட்டம் ஒன்று,ஏன் ஏன் ஏன்,ராஜா யுவ ராஜா,கண்ணா லீலாவிநோதம்,என் ராஜாத்தி வாருங்கடி).கே.வீ.எம்.மாமாவின் பாடலுடன் ,மன்மதனின் ஆடல் (ஜெயந்தி முதல் பத்மினி பிரியதர்ஷினி வரை இந்த பாட்டில்) கேட்க வேண்டுமா குதூகலத்தை?

அடுத்தடுத்த காட்சிகளில் காமெடியில் தூள் பரத்துவார். பல பெண்கள் ஒன்றாக வந்து விட ஒருத்திக்கு தெரியாமல் இன்னொருத்தியை சமாளிக்கும் அழகு. தன்னை நோட்டம் பார்க்க வந்த மாமாவிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டு முழிப்பது,மாட்டுவது, முதல் காட்சியிலேயே சரோஜா தேவியை டீஸ் பண்ணி விட்டு பிறகு இம்ப்ரெஸ் ஆவது, பிறகு தங்கைக்காக சாந்தா டீச்சரை சிபாரிசு செய்து மாட்ட பார்ப்பது,டீச்சர் தங்கைக்கு டியூஷன் எடுக்கும் போது வழிவது, கீசகன் கதையை சொல்லும் சாக்கில் தன்னை கன்னா பின்னாவென்று திட்டும் சரோஜாதேவியுடன் இனிமே எதுவும் சொல்ல தேவையில்லை அவன் போறான் என்று வாபஸ் வாங்குவது, திருட்டு தனமாக டிரைவர் வேடத்தில் சரோஜா தேவியை வீட்டுக்கு வர வழைத்து விளையாட்டாய் முதலில் பேசி பிறகு தன் காதலை வெளியிட்டு கெஞ்சுவது, தன்னை புரிந்து கொள்ளாத மனைவியிடம் முதலிரவில் விட்டு கொடுப்பது, இதய வீணை பாட்டில் சரோஜா தேவி தன் துயரத்தை அப்படியே வெளியிட,நண்பர்களின் கேலி கண்டு, கூனி குறுகி, நாணி குமுறுவது,குடும்பத்தினரும் தன்னை புரிந்து கொள்ளாதது கண்டு மௌனமாய் உருகுவது , ஒவ்வொரு முறையும் மனைவியுடன் நெருங்கும் சந்தர்ப்பத்திலும் பழைய நண்பர்களாலும்,நண்பிகளாலும் கெடும் போது பதைத்து, பதறுவது, மனைவியிடம் தன் நிலையை சொல்லி வருந்துவது என்று நடிகர்திலகம் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாத படுத்துவார்.

சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பே நடிகர்திலகத்துடன் இணையும் போதுதான்.(பாக பிரிவினை,பாலும் பழமும்,புதிய பறவை,தேனும் பாலும்)என்னும் போது தோதாக இப்படி ஒரு பாத்திரம். விடுவாரா? ஆரம்ப காட்சியில் தன்னை சீண்டிய பெரிய இடத்து வாலிபனிடம் வெறுப்பை உமிழ்வதில் துவங்கி,அவனின் காதலை சொல்லும் அனைத்து முயற்சிகளையும் முறித்து போடுவது, அவமான படுத்த பட்டு கல்யாணத்திற்கு கட்டாய படுத்த படுவது, கணவனுடன் ஒட்டாத வாழ்க்கை,நெருங்க விரும்பும் நேரத்தில் கணவனின் பழைய வாழ்க்கையின் நிழல் துரத்தி அவமான பட நேரும் தருணங்கள்,பிறகு அவனின் நல்ல மனத்தை அறிந்து சேர வரும் போது,மிக பெரிய பிரச்சினையை எதிர் கொள்ள நேருவது என்ற தருணங்களில் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுப்பார்.

ரங்கா ராவ், எம்.ஆர்.ராதா,சந்தியா, ராமா ராவ்,கருணாநிதி,முத்து லட்சுமி,பத்மினி பிரிய தர்சினி,ராமச்சந்திரன் அனைவருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருப்பார்.

(தொடரும்)

இருவர் உள்ளம்-1963 -பகுதி-3

சிவாஜி-கருணாநிதி இணைவில் வந்த அத்தனை சமூக படங்களுமே magic தான். பராசக்தி,திரும்பிப்பார்,ராஜாராணி,புதையல்,இருவ ர் உள்ளம் எல்லாமே அருமை. (மனோஹரா ஒரு சரித்திர பட சாதனை அதிசயம்) திரைக்கதை அமைப்பில் மு.க ஒரு மேதை. மூலக்கதை சிதையாமல்,பாத்திர வார்ப்பு கெடாமல், படிக்கும் கதை வேறு பார்க்கும் படம் வேறு என்பதை தெளிந்து திரைக்கதை அமைத்த இரண்டே மேதைகள் மு.கவும்,ஏ.பீ.என். மட்டுமே. மு.க தன திரைக்கதையால் படத்தை மிக மிக சுவாரஸ்யமாக்கி பாத்திரங்களுடன் ஒன்ற வைப்பார்.வசனங்களும் அவ்வளவு அருமையாய்,காலத்தை ஒட்டியதாய் அமைத்து படத்தை மெருகேற்றும். காமெடி, பஞ்ச் வசனங்கள் என்று கலக்கியிருப்பார்.(குடுக்கும் போது வாட்ச் பண்றதாலேதான் வாட்ச்னு பெயர் வச்சாங்களா)

பிரசாத் என்ற அற்புதமான இயக்குனர் ,தயாரிப்பாளராகவும் அமைந்து விட்டால்? கேட்கவா வேண்டும்? எல்லா technical அம்சங்களும் நன்கு கவனிப்பு பெற்றிருக்கும்.(கேமரா,எடிட்டிங்) சிவாஜியும் இவரை தன் குருவாக மதித்ததால் ,இவர் சொன்னதை உள்வாங்கி மிதமாய் நடித்ததை சிவாஜியே குறிப்பிட்டுள்ளார்.அற்புதமான இயக்கம்.

கே.வீ.மகாதேவன் ,சிவாஜியுடன் இணைந்ததில் மறக்க முடியாத சமூக படங்களில் ஒன்று.(மற்றவை- பாவை விளக்கு,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,செல்வம்,பேசும் தெய்வம்,வியட்நாம் வீடு,வசந்த மாளிகை).பறவைகள் பலவிதம், புத்தி சிகாமணி, கண்ணெதிரே தோன்றினால், இதய வீணை தூங்கும் போது, நதி எங்கே போகிறது, ஏனழுதாய், கண்ணே கண்ணே உறங்காதே, அழகு சிரிக்கிறது போன்ற படத்தோடு ஒட்டிய சூப்பர்-ஹிட் பாடல்கள் கே.வீ.எம்-கண்ணதாசன் இணைப்பில். இந்த படத்தின் மிக மிக சிறப்பான அம்சங்களில் ஒன்று ரி-ரெகார்டிங் எனப்படும் பின்னணி இசை சேர்ப்பு. பின்னாளில் பெரிதாக பேச பட்ட கேரக்டர் based மூட் மியூசிக் ,எனக்கு தெரிந்து இந்த படத்தில்தான் அறிமுகமானது.(சிவாஜி,சரோஜாதேவியை பின் தொடரும் இடங்கள்).இதைதான் இளைய ராஜா தன் பதினாறு வயதினிலே,முள்ளும் மலரும் போன்ற படங்களில் தொடர்ந்து பெயரெடுத்தார்.

பெண்ணின் மனதை விலை கொடுத்து வாங்க முடியாது, அப்படி வாங்கினாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது, மனதை அடையும் ஒரே வழி தூய நல்லிதயத்தின் அன்பு ஒன்றுதான் என்ற கான்செப்ட் ,அனைவரின் கூட்டு முயற்சியால் ,பிரம்மாண்ட வெற்றி படமாகி, இன்றளவும் ரசிகர்களை மட்டற்ற குதூகலத்தில் ஆழ்த்தும் அற்புத படமாகவே,காலத்தை கடந்து ஒளி வீசி கொண்டிருக்கிறது.

(முற்றும்)

vasudevan31355
18th May 2013, 12:28 PM
என் கட்டளைக்கு அடி பணிந்ததற்கு நன்றி! அற்புதமான இருவர் உள்ளத்தின் துவக்கத்திற்கும் நன்றி!

Gopal.s
18th May 2013, 12:38 PM
இருவர் உள்ளத்தின் அற்புதமான print .நாளை பார்த்து சுவைக்க அனைத்து நடிகர்திலகம் பக்தர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.இதை கோயம்புத்தூர் திரையரங்கு ஒன்றில் கல்யாணமான புதிதி ல் 1985 இல் 15 அவது முறை பார்த்த பிறகு படமோ,வீடியோ,VCD ,DVD கிடைக்காமல் 1996 இல் இருந்து ஏங்கி , 2005 வாக்கில் சிங்கப்பூர் சிரங்கூன் தெருவின் ஒரு தெரிந்த கடையில் காத்திருந்து (1 மணிநேரம்) சுமாரான VCD அவர் வீடியோ டே ப்பில் இருந்து பண்ணி கொடுத்தார்.இருபது copy எடுத்து உறவினர் ,நண்பர் எல்லோருக்கும் வழங்கினேன்.2008 இல் பாரத் கலாச்சார் நிகழ்ச்சியில்,award வாங்கிய சரோஜா தேவி சம்பத்த
பட்ட காட்சியை போட இயலாமல் VCD கிடைப்பதேயில்லை என்று வருந்திய போது எழுந்து நின்று volunteer பண்ணி ,வியட்நாம் வீடு நாடகம் சம்பத்த பட்ட நிகழ்ச்சியில் பார்த்து VCD கொடுத்த நிகழ்ச்சி பசுமை.

Gopal.s
18th May 2013, 12:48 PM
என் கட்டளைக்கு அடி பணிந்ததற்கு நன்றி! அற்புதமான இருவர் உள்ளத்தின் துவக்கத்திற்கும் நன்றி!
இது தொடரின் தொடரல்ல.என்னுடைய பழைய விமரிசனம்.நாளை இப்படம் கலைஞர் TV யில் ஒளி பரப்ப படுவதால் இனிய prelude .

vasudevan31355
18th May 2013, 01:12 PM
நாளை கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 3.30 மணிக்கு

http://www.shotpix.com/images/19326821186634969626.png

நம் அனைவர் உள்ளமும் இருவர் உள்ளத்தின் மேல்.

vasudevan31355
18th May 2013, 01:14 PM
http://98.130.244.197/songsnew/Songs/SivajiHits/Iruvar%20Ullam/KannEthire.GIF

vasudevan31355
18th May 2013, 01:14 PM
http://98.130.244.197/songsnew/Songs/SivajiHits/Iruvar%20Ullam/YeanAzhuthaai.GIF

vasudevan31355
18th May 2013, 01:15 PM
http://98.130.244.197/songsnew/Songs/SivajiHits/Iruvar%20Ullam/IdhayaVeenai.GIF

vasudevan31355
18th May 2013, 01:16 PM
http://i3.ytimg.com/vi/ZF7FKLbVOpY/hqdefault.jpg

http://98.130.244.197/songsnew/Songs/SivajiHits/Iruvar%20Ullam/ParavaigalPalavitham.GIF

vasudevan31355
18th May 2013, 01:20 PM
http://98.130.244.197/songsnew/Songs/SivajiHits/Iruvar%20Ullam/KanneKanne.GIF

vasudevan31355
18th May 2013, 01:23 PM
நினைவூட்டல்

http://www.shotpix.com/images/00684594141768185289.png

http://www.shotpix.com/images/73333282801394867662.png

vasudevan31355
18th May 2013, 01:36 PM
இருவர் உள்ளம்

http://www.shotpix.com/images/10610196246115955682.pnghttp://i2.ytimg.com/vi/IEtQ7YSXHAA/hqdefault.jpg

தேன் மதுர கானங்கள் எட்டு!!

1.பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்...

2.புத்திசிகாணி பெற்றபிள்ளை இது புன்னகை செய்யுது சின்னப்பிள்ளை...

3.கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்
நேர்வழியில் மாற்றினாள்
நேற்றுவரை ஏமாற்றினாள்...

4.இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா???...

5.நதியெங்கே போகிறது?-கடலைத்தேடி
நாள் எங்கே போகிறது?-இரவைத்தேடி....

6.ஏன் அழுதாய் ஏன் அழுதாய் என்னுயிரே ஏன் அழுதாய்/...

7.கண்ணே கண்ணே உறங்காதே!!
காதலர் வருவார் கலங்காதே!!
பெண்ணே பெண்ணே மயங்காதே!!
பெண்மையை வணங்கத் தயங்காதே!!...

8.அழகு சிரிக்கின்றது!!
ஆசை துடிக்கின்றது!!
பழக நினைக்கின்றது!!
பக்கம் வருகின்றது!!...

நடிக+நடிகைகள்:-"நடிகர்திலகம்" சிவாஜிகணேசன், "அபிநயசரஸ்வதி" சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், டி.ஆர்.ராமச்சந்திரன், எஸ்.ராமாராவ், ஏ.கருணாநிதி, டி.பி.முத்துலட்சுமி, சந்தியா, பத்மினி பிரியதரிசினி, லட்சுமி ராஜம், கே.பாலாஜி (கெளரவநடிகர்), ராதாபாய், கே.நடராஜன், ஜெயந்தி, ஆர்.பாலசுப்பிரமணியம், வி.எஸ்.ராகவன், மற்றும் பலர்.

இசையமைப்பு:-"திரை இசைத்திலகம்" கே.வி.மகாதேவன் அவர்கள்.

பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன் அவர்கள்.

தயாரிப்பு:-ஆனந்த் அவர்கள்.

இயக்கம்:-எல். வி. பிரசாத் அவர்கள்.

RAGHAVENDRA
18th May 2013, 02:42 PM
டியர் கோபால் சார்,
தங்களுடை தொடரின் மூலம் உலகின் பல்வேறு வகையான நடிப்புப் பள்ளிகளைப் பற்றி கூறி வருகிறீர்கள். பாராட்டுக்கள். இதனை நம் மக்கள் புரிந்து கொண்ட பிறகு தான் நாம் நடிகர் திலகத்தின் நடிப்புக் கோட்பாடுகளைப் பற்றி இன்னும் விரிவாக அலச முடியும். இது வரை வந்ததை வைத்து ஓரளவு preliminary யாக மட்டுமே எழுத முடியும். தங்களுடைய விரிவான அலசல்களைப் பின் தொடர்ந்து தான் என்னுடைய தொடர் இருக்கும், இருக்க முடியும். தாங்கள் பாதியில் தொங்கலில் விட்டால் நான் துவங்கவே முடியாது.

ஸோ, ப்ளீஸ் கேரி ஆன்...

RAGHAVENDRA
18th May 2013, 02:45 PM
மாலினி பொன்சேகாவும் ஒரு படம் மாலினியும் ஒரு படம் ... அதென்னவோ தெரியவில்லை. அல்லது பேர் ராசியா புரியவில்லை.... ஒன்றானாலும் நன்று என்பது போல் சபாஷ் மீனா கதாநாயகியைப் பற்றிய மிகச் சிறந்த அறிமுகப் பதிவைத் தந்து அசத்திவிட்டீர்கள் வாசு சார்.
தொடருங்கள்.
வம்ச விளக்கு நிழற்படத்தின் பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி.