PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 10Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16] 17

RAGHAVENDRA
18th May 2013, 02:46 PM
டியர் கோபால் சார்
தாங்கள் எழுதும் தொடரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வம்ச விளக்கு பாடலின் பல்லவியைத் தான் கூற வேண்டும்...

புனிதன் கதை இது.. அந்த விதிதான் எழுதிய எழுத்தை தன் மதியால் மாற்றியவன். அந்த வானத்துச் சூரியன் போலே வம்ச விளக்கை ஏற்றியவன்.

அவருடைய நடிப்பின் கதையை எழுதுங்கள்... எழுதுங்கள்... நாங்கள் படித்துக் கொண்டே இருக்கிறோம்...

vasudevan31355
18th May 2013, 03:59 PM
ராகவேந்திரன் சார்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி!

vasudevan31355
18th May 2013, 04:12 PM
முதன்முறையாக இணையத்தில்

நீண்ட நாட்களாக நாம் எதிர்பார்த்த 'வம்ச விளக்கு' திரைப்படத்தில் வரும்

"மனிதன் கதை இது...
இதை மாற்றும் விதி எது?"...

என்ற அருமையான பாடல். ரிலீசில் மிகவும் பேசப்பட்ட பாடல்.

காரணம் நடிகர் திலகத்தின் அற்புத நடன மூவ்மெண்ட்ஸ், Dress sense. White and White இல் அவர் வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் நம்மை ஆச்சர்யத்தின் விளிம்புக்கே அழைத்துச் செல்கின்றன.

நிஜமாகவே கடினமான மூவ்மெண்ட்ஸ். சர்வசாதாரணமாக ஆடுகிறார் அதுவும் படு ஸ்டைலாக.

இப்போது பாருங்கள்.

மூன்று முறையாவது தொடர்ந்து பார்த்து விடுவீர்கள்.

இந்த நடனத்தைப் பற்றிய உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.

முதன்முறையாக இணையத்தில் தரவேற்றப்பட்டு உங்களுக்காகவே இதோ!


http://www.youtube.com/watch?v=tHNUKOpzC1M&feature=player_detailpage

அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

vasudevan31355
18th May 2013, 04:22 PM
இப்பாடலின் முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி தொடங்கியவுடன் "புகழ், பொருள், பெயர் நிலைத்திருக்கும்" ... என்ற வரிகளின் போது கலைத்தெய்வம் காலெடுத்து வைக்கும் ஸ்டெப்களை கவனியுங்கள். (2.34 to 2.37)

Georgevob
18th May 2013, 04:32 PM
Vasudevan sir,

Could you also upload the Paper Advt of Iruvar Ullam Release and 100 days advt. Couple of the friends has doubt in that.

Regards
Subbu

Georgevob
18th May 2013, 04:34 PM
நண்பரே ,
நான் எழுத இருந்தது, ஸ்டெல்லா ஆட்லர் சம்பத்த பட்ட larger than life பாத்திரம்.ஆனால் நான் விரும்பியோ விரும்பாமலோ ராஜ ராஜ சோழன் புகுந்தாயிற்று. ஆனால் ராஜ ராஜ சோழனும்,வம்ச விளக்கும் கோலோச்சும் போது ஒதுங்கி நின்று ரசிப்பதே எனக்கு மரியாதை.பொறுமையின் பெருமை.ஷண்முக சுந்தரம் வாசிப்பிற்கு வேட்டு மரியாதை கிடைத்தாயிற்று. வாழ்த்துக்கள்.

Dear Gopal Sir,
If you want me to put a full stop to what am doing....I will do it ...if that is what you want ! I can wait till you complete absolutely no issues

SRS

RAGHAVENDRA
18th May 2013, 04:48 PM
டியர் வாசு சார்,
தவறான அல்லது இட்டுக் கட்டுப்பட்ட பிரச்சாரங்களினால் ஒரு மனிதன் எப்படி பாதிக்கப் படக் கூடும் என்பதற்கு உதாரணம் நடிகர் திலகம். 80களில் அவரது சிறந்த உழைப்பும், அருமையான நடிப்பும் பல படங்களில் இடம் பெற்றாலும் ஒரு சில படங்களைத் தவிர மற்றவற்றை புறம் தள்ளி அவரை சரியாக ரசிக்க முடியாமல் ரசிகர்களை மன வருத்தப் பட வைத்த நாட்கள் பல. அந்த கால படங்களில் இப்படி பட்ட விமர்சனங்களால் பாதிக்கப் பட்ட படங்களில் வம்ச விளக்கும் ஒன்று. அவருடைய உழைப்பு இறுதி வரையிலும் முழுமையாகவும் அவருடைய திறமை இறுதி வரை உச்சத்திலும் இருந்ததற்கும் இப்பாடல் காட்சி உதாரணம். இப்பாடலுக்காகவே குறைந்தது 15 முறையாவது பார்த்திருப்பேன். மீண்டும் காண முடியுமா என ஏங்கிக் கிடந்த நேரத்தில் தற்போது அந்த வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது தங்களுடைய பதிவு வாயிலாக. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

ஸ்டைலுக்கு தன்னை மிஞ்சி இப்புவியில் யாருமில்லை என ஆணித்தரமாக நிரூபித்த மற்றொரு படம் வம்ச விளக்கு.

Gopal.s
18th May 2013, 04:59 PM
Vasudevan sir,

Could you also upload the Paper Advt of Iruvar Ullam Release and 100 days advt. Couple of the friends has doubt in that.

Regards
Subbu
சென்னை,மதுரை ,கொழும்பு முதலிய இடங்களில் நூறு நாள் கொண்டாடிய வெற்றி படம்.பம்மலார் part 9 இல் கொடுத்திருந்த ஞாபகம்.

Gopal.s
18th May 2013, 05:02 PM
Dear Gopal Sir,
If you want me to put a full stop to what am doing....I will do it ...if that is what you want ! I can wait till you complete absolutely no issues

SRS
அதெல்லாம் வேண்டாம் சார். ராஜ ராஜ சோழன் சரித்திர படம். நான் stella Adler பள்ளியில் எழுத நினைத்ததும் சரித்திர படமே. அதனால் சொன்னேன்.தங்கள் எழுத்துகளை ரசிப்பவன் நான்.

JamesFague
18th May 2013, 05:31 PM
Mr Vasudevan Sir,

Iurvar Ullam Stillls and songs lines are simply superb.

Mr Raghavendra Sir,

You could have postposed the screen of Raman Ethanai Ramanadi as it will clash with
the telecast of Iruvar Ullam. Anyway best wishes for the screening of Mr Vijayakumar.

vasudevan31355
19th May 2013, 07:15 AM
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.

இன்றைய புகைப்படம்(4)

'சம்பூர்ண ராமாயணம்' படப்பிடிப்பில் டைரக்டர் K.சோமு, வி.கே.ராமசாமி மற்றும் ஏ.பி.நாகராஜன் அவர்களுடன் 'பரதன்'

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/sr.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/sr.jpg.html)

vasudevan31355
19th May 2013, 07:21 AM
சாப்பாட்டு ராமனையும், 'நடிகர் திலகம்' விஜயகுமாரையும் தரிசிக்கப் போகும் அன்பு நெஞ்சங்களுக்கு எனது பொறாமையுடன் கூடிய வாழ்த்துக்கள்.

http://www.shotpix.com/images/02312842086170597606.jpghttp://www.shotpix.com/images/08536754696266829192.jpg

vasudevan31355
19th May 2013, 07:32 AM
The one and only style king in the world

இந்த ஒரு போஸிற்கு ஈடுஇணை உண்டா?!

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-38.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-38.jpg.html)

vasudevan31355
19th May 2013, 07:35 AM
சாதனை புரிந்த ராமன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-37.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-37.jpg.html)

vasudevan31355
19th May 2013, 08:39 AM
http://sim.in.com/db285f1d0db577dd0378a43edb49da55_ls_lt.jpg

"மிஸ்டர் மைனர்...ரொம்ப நாழியா நீங்க நிக்கிறீங்களே... உக்காருங்க"... என்று பழிவாங்கும் படலத்தை பக்காவாகத் தொடங்குமிடம்.....

அதே போல நாற்காலியைத் தள்ளி மைனரின் தன்மானத்தைத் தவிடுபொடியாக்குமிடம்....

"மிஸ்டர் மைனர்... என்னைத் தெரியுதா?" (கூலிங் கிளாசை கழற்றிவிட்டு) "தெரியல?" என்றபடி நொடிப்பொழுதில் கோட்டைக் கழற்றி, பின் ஷர்ட்டையும் கழற்றி, முதுகைத் திருப்பி முன் அடிபட்ட தழும்புகளைக் காட்டும் ஆவேசம்....

"தெரியல...தெரியல"...என்று கேட்டபடியே ஷர்ட்டை சடுதி நேரத்தில் போட்டு பட்டன்களைப் போடாமல் அப்படியே பேன்ட்டுக்குள் செருகும் செம ஸ்டைல்...

"சாப்பாட்டு ராமன்" என்றபடி கைகளை தடதடவெனக் கொட்டி "கதவை இழுத்துப் பூட்டு" என்று கட்டளையிட்டு கர்ஜிக்குமிடம்...

"யாராவது இங்கிருந்து அசைஞ்சா சுட்டுப் பொசுக்கிடுவேன்" என்றபடி சென்று பிரம்பை எடுத்து (காமெராவின் லோ ஆங்கிளில்... நம்பியார் கீழே விழுந்தபடி பார்த்தால் எந்த ஆங்கிளில் தெரிவாரோ அந்த ஆங்கிளில்) வளைத்து, நம்பியாரை நோக்கி நான்கு ஸ்டெப்கள் படு ஸ்டைலாக நடந்து வந்து வந்து எட்டி உதைத்து விட்டு,

"அன்னைக்கு சொன்னேனே ஞாபகம் இருக்கா?... ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்"....என்று சவுக்கை ஓங்கும் வேகம்...ஒரு குட்டி பிளாஷ்பேக்கிற்கு பிறகு ஓங்கின பிரம்பை மெதுவாகக் கீழே இறக்கி சடேலேன உதறும் மின்னல் வேகம்....(அடாடடடா! என்ன ஒரு காட்சி! என்ன ஒரு வேகம்! என்ன ஒரு ஸ்டைல்!) அத்தனை மனக்குமுறல்களையும், கோபங்களையும், ஆத்திரங்களையும் அந்த ஒரு உதறலில் தீர்த்துக் கொள்வார்!

"கூப்பிடு உன் தங்கையை" என்று சொல்லி பதிலுக்குக் காத்திராமல் "தேவகி" என்றபடி மாடிப்படிக்கட்டுகளில் ஏறும் அசுர வேகம்... "தேவகி" என்று கூப்பிட்டபடியே தேவகியின் ரூமுக்குள் அவசர ஆனால் ஆழமான
தேடல்.(தேவகியின் பெட் அருகில் ஓடிப் போய் நிற்கும் போது ஸ்பீடைக் குறைக்க கால்களால் ஒரு அழகான பேலன்ஸ் பண்ணுவார்) பின் எதிர் ரூமிலும் தேடிவிட்டு 'சரசர'வென படிக்கட்டுகளில் படுவேகமாக இறங்கிவரும் ஆர்ப்பாட்டம்...(அது என்ன ஸ்பீடா?... ஸ்பீடான்னு கேட்கிறேன். மனுஷன் கண்மூடி கண் திறப்பதகுள் கீழே இறங்கி வந்து விடுவார்)

இன்னும் எப்படித்தான் எழுதுவது? எப்படித்தான் புகழ்வது? ஒன்றுமே தெரியவில்லை. புரியவில்லை. யானைத் தீனிக்கு சோளப்பொறிதான் போட முடிகிறது. தோண்டத் தோண்ட அதுபாட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? படைத்த பிரம்மன் என் கடவுளைப் பற்றி எழுத இன்னும் பத்து கைகள் படைத்திருக்கக் கூடாதா?


நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

இன்று மாலை இந்த அதியற்புதக் காட்சியைக் நீங்கள் கண்டு களிக்கையில் கண்டிப்பாக அந்த நேரம் என்னை மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதே அது.

நன்றி!

Gopal.s
19th May 2013, 12:30 PM
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே .
வாசு தேவனை நினைத்தே படம் பார்க்க போவோருக்கு வாழ்த்துக்கள் .
ஆனால் இவ்வளவு சிரம பட்டு விஜயகுமார் தேடும் பெண் குண்டு புஷ்கி விஜயா !!!!!!?????

kalnayak
19th May 2013, 12:32 PM
வாசுதேவன் சார்,
உங்கள் ஊரிலிருந்து ஊர்வலமாக வந்து கடலூரில் நடிகர் திலகத்தின் படத்தை வந்து பார்த்த அனுபவம், தெய்வத்தை காண பாத யாத்திரை போவதற்க்கு இணை. அற்புதமாக கொடுத்திருக்கிறீர்கள்.

வம்ச விளக்கு பட பாடல் காட்சி அபாரமானது. 80-களில் ஒரு தீபாவளி-க்கு கடலூர் வேல்முருகன் திரை அரங்கில் தீபாவளி அன்றே காலை காட்சியில் ரசிகர்கள் கொண்டாட்டங்களுடன் பார்த்து ரசித்தது நினைவிற்க்கு வருகிறது. இந்த பாடலுக்கு தியேட்டரே அதகளமானதுவும் மறக்கமுடியாமல் நெஞ்சில் இருக்கிறது. அற்புதமான இந்த பாடல் காட்சிக்கும், அதன் மூலம் என் இளமை காலத்தை நினைவில் கொண்டுவந்ததற்கும் நன்றி!!!

"ராமன் எத்தனை ராமணடீ" திரைப்பட காட்சிகளும், அதற்கான உங்கள் விவரிப்பும் பெருமையாக இருக்கிறது!!! இந்த காவியத்தையும் வேல்முருகன் திரை அரங்கில்தான் கண்டு களித்திருக்கிறேன்.

vasudevan31355
19th May 2013, 02:33 PM
இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தையே கட்டிப் போட வைக்கும் 'இருவர் உள்ளம்'

கலைஞர் தொலைக்காட்சியின் டிரெய்லர் இதோ காணொளியாக.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SvQtzPiaoTE

vasudevan31355
19th May 2013, 04:02 PM
டியர் கல்நாயக் சார்,

தங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றி!

ஒரு சந்தோஷமான விஷயம். நீங்களும், நானும் ஒரே நாளில் ஒன்றாக கடலூர் வேல்முருகன் தியேட்டரில் 23-10-1984 தீபாவளியன்று காலை 9.30 மணி காட்சி (ரசிகர் ஷோ) பார்த்திருக்கிறோம். உள்ளே நடந்த ரகளைகளையெல்லாம் கவனித்திருப்பீர்கள்.

ஆனால் அந்த தீபாவளிக்கு முன்தினமே நாங்கள் 'வம்சவிளக்கு' படத்தை நாங்கள் பார்த்து விட்டோம். எப்படி என்கிறீர்களா? தீபாவளிக்கு முதல்நாள் இரவே (இரவு 10.30 மணி ஆட்சி) விழுப்புரம் ரசிகர்களின் அன்புத்தொல்லை தாளாமல் சீத்தாராம் தியேட்டரில் முன்னமே போட்டு விட்டார்கள். முன்கூட்டியே விழுப்புர நண்பர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்துவிட நாங்கள் தீபாவளி முன்தினம் ஆறுமணிக்கெல்லாம் கடலூரிலிருந்து புறப்பட்டு எட்டுமணிக்கெல்லாம் விழுப்புரம் சென்று செம ரகளையோடு இரவு அந்த ரசிகர் காட்சியைப் பார்த்து விட்டு பின் ஒரு வேனைப் பிடித்து மூன்று மணிக்கெல்லாம் கடலூர் வந்து பெயருக்கு வீட்டில் குளித்துவிட்டு தீபாவளியன்று வேல்முருகன் தியேட்டருக்கு காலையில் ஏழு மணிக்கெல்லாம் ஆஜர். நீங்கள் சொன்னது போல 'மனிதன் கதை இது' பாடலில் உச்சகட்டமாக தியேட்டர் அல்லோலகல்லோலப் பட்டது. அன்று நடந்தவைகளும் தங்களுக்குத் தெரியுமே!

'ராமன் எத்தனை ராமனடி' யும் வேல்முருகனில் பின்னிப் பெடல் எடுத்தது. ஒவ்வொரு காட்சியும் ஹவுஸ்புல் தான். ஒவ்வொரு காட்சிக்கும் திருவிழாக் கொண்டாட்டம்தான். நீங்களும் என்னுடைய பழைய நினைவுகளை அசை போட வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி. அடிக்கடி எழுதுங்கள்.

Gopal.s
19th May 2013, 07:09 PM
நண்பர்களே,
பரவசத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு என் நடிப்பு தெய்வம் எனக்கு வழங்கிய சொர்க்கானுபவத்தை ,கலைஞர் TV யில் 3.30-7.00 அனுபவித்தேன்
நான் முதல் முறை கிருஷ்ணவேணி திரையரங்கில்,1975 இல் பார்த்ததை விட கண்ணாடி மாதிரி சிறு கீறல் கூட இல்லாத print .என்ன அழகு அசல் முடியில் என் திலகம் !!!!
அப்பாடா, ஒரு திரைக் கதை,வசன வித்தகர்,ஒரு தேர்ந்த இயக்குனர்,ஒரு கேமரா வித்தகர்,ஒரு திரை இசை திலகம்,கவியரசு எல்லாம் சேர்ந்து .......
என்னை படைத்து இதை பார்க்க வைத்த கடவுளுக்கு கோடி நன்றிகள்.
என் ego ஐ தூக்கி எரிந்து விட்டு,இந்த நடிப்பு கடவுளின் தொடரை தொடருவேன்.

vasudevan31355
19th May 2013, 07:18 PM
என் ego ஐ தூக்கி எரிந்து விட்டு,இந்த நடிப்பு கடவுளின் தொடரை தொடருவேன்.
அது....

இது முறை...

இப்ப நீ துரை ...

புலி வாலைப் பிடித்து விட்டு........

eehaiupehazij
19th May 2013, 07:43 PM
just enjoyed Iruvar Ullam. After Motor Sundaram Pillai this movie remains a monument for NT's subtle acting prowess, the reply to the so called over acting accusations. NT's magnetic charm remains throughout the movie whether he speaks or just stands in the court without uttering a single word, but watching SVR, MRR..... talking.

RAGHAVENDRA
19th May 2013, 10:36 PM
இருவர் உள்ளம் தொலைக்காட்சியில் பார்த்தவர், ராமன் எத்தனை ராமனடி நம்முடைன் பார்த்தவர் - இருவர் உள்ளமும் இன்று ஒரே நிலையில் தான் இருக்கும் - அந்த hangover தான் நம்மை இணைக்கும் பாலம் - அது தான் நடிகர் திலகம் என்கிற வைப்ரேஷன் - அதுவும் குறிப்பாக இன்று ரா.எ.ரா. பார்த்த அனைத்து நண்பர்களும் தங்களுடைய உணர்ச்சி வசப்பட்ட நிலையிலிருந்து மீள முடியாமல் தான் திரும்பிச் சென்றனர். தொலைக்காட்சியில் நடிகர் திலகம் நம்மையெல்லாம் கட்டிப் போடும் நிலையிலும் கணிசமான அளவில் ரசிகர்கள் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தது, அந்த ஒப்பற்ற தெய்வம் எந்த அளவிற்கு இந்த சாப்பாட்டு ராமன் ரூபத்தில் நம்மையெல்லாம் ஈர்த்துள்ளார் என்பதற்கு சான்று. ஆகஸ்ட் 15, 1970 முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் எந்தெந்த காட்சிகளில் கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தனரோ அதே காட்சிகளில் இன்றும் நடைபெற்றது .. ஒரு விஷயத்தை உறுதிப் படுத்தியது ... அது ... காலமும் தலைமுறைகளும் நடிகர் திலகத்திற்கு ஒரு பொருட்டல்ல ... அனைத்தையும் கடந்த கலைத் தெய்வம் என்பதை நிரூபித்தது.

படம் முடிந்து வணக்கம் எழுத்துகள் வரும் நிலையில் சிரிப்பிலிருந்து அழுகைக்கு மாறும் அந்த ஒரு வினாடி போதுமே .... வணக்கம் போடும் போது கூட அவர் நம்மை விடவில்லையே..

இன்னும் எவ்வளவோ எழுத ஆசை... ஒவ்வொரு நொடியிலும் நம் வாசுதேவன் சாரின் நினைவு படுத்திக் கொண்டே தான் பார்த்தேன். குறிப்பாக அந்த மாடிப்படியிலிருந்து வேகமாக இறங்கும் காட்சியைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் ..

ONE WILL BE SPELL BOUND ON THE SPEED HE CLIMBS DOWN ... AT THE AGE OF 43 ...

நடிகர் என்றால் நீங்கள் மட்டும் தான் ... நீங்கள் என்றால் அந்நியமாய் உள்ளது...

நீ தானய்யா நடிகன் ....

ஒய்.ஜி.எம். சொல்வது போல்

அவன் தான் நடிகன் ....

RAGHAVENDRA
19th May 2013, 10:37 PM
இருவர் உள்ளம் திரைப்படத்தில் தலைவரின் சூப்பர் ஸ்டைல் போஸ் ..

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/NTIU01_zps97c23ab6.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/NTIU01_zps97c23ab6.jpg.html)

Gopal.s
20th May 2013, 05:04 AM
← 1953-இல் தமிழ் சினிமா
திரும்பிப் பார் →
திரும்பி பார் சிவாஜி பற்றி எம்ஜிஆர்

மார்ச் 21, 2009 by RV


1962ல், நடிகர் திலகம் கலைத் தூதராக அழைக்கப்பட்டு அமெரிக்க அரசால் கௌரவப்படுத்தப்பட்டார். இதற்காக, சிவாஜி அமெரிக்கா சென்று திரும்பிய போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலே எம்.ஜி.ஆர். சிவாஜி பற்றிச் சொன்னது அவ் விழாவில்தான். அப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.ஆர்.தான். அவ்விழாவில் எம்.ஜி.ஆர். சிவாஜி பற்றிச் சொன்னது

நல்ல குணங்களுள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறலாம். பாத்திரம் மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரும் இடம் பெறுவது இயற்கை. ஆனால் மக்களால் வெறுக்கப்படும் பாத்திரங்களைத் தாங்கி, மக்கள் மனதில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். திரும்பிப் பார் என்ற படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார் சிவாஜி. பல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்குமளவுக்கு, ஆங்கில பாணி என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ் பெற்றார் அவர். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்த பாத்திரங்களைப் போலவே அவர் நடிக்கிறார் என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (திரும்பிப் பார் படம் எடுத்த போது) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புத மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும் தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்!

vasudevan31355
20th May 2013, 07:01 AM
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.

இன்றைய புகைப்படம்(5)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/R-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/R-1.jpg.html)

vasudevan31355
20th May 2013, 07:04 AM
நன்றி ராகவேந்திரன் சார்!

'ராமன் எத்தனை ராமனடி' விழா நிகழ்சிகள் பற்றிய தங்களின் பதிவைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். கலந்து கொள்ள முடியாமல் போனாலும் இருவர் உள்ளத்தின் மூலம் ஈடு செய்து கொண்டேன். மொத்தத்தில் நேற்று நம் ரசிகர்களுக்கு தடபுடல் விருந்து.

vasudevan31355
20th May 2013, 07:22 AM
கோபால் சார்,

நேற்று இருவர் உள்ளத்தை கண்டுவிட்டு உடனே அந்த மகிழ்வை என்னுடன் பகிர்ந்து கொண்டீர்கள் கை பேசியின் வாயிலாக. தங்களின் எல்லையில்லா ஆனந்தத்தை என்னால் உணர முடிந்தது. அப்பா! எப்படி ஒரு சந்தோஷம். உங்கள் உள்ளம் அதையே சுற்றி வந்தால் என் உள்ளம் ராமனையே நினைத்து நினைத்து சுற்றி வந்தது. இன்றுதான் இருவர் உள்ளம் பார்க்கப் போகிறேன் செல்போனை அணைத்துவிட்டு.

vasudevan31355
20th May 2013, 07:30 AM
தம்பிக்கு அண்ணனின் பாராட்டு.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/mgr-1.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/mgr-1.jpg.html)

Gopal.s
20th May 2013, 10:02 AM
உண்மை தமிழர்களுக்கு, சில தமிழர்களே எதிரியாக நின்றதால்தான்,தமிழினமே தலை குனிந்து நிற்கிறது. நமக்கு உரிய மரியாதையை ,இந்திய அளவிலோ,உலக அரங்கிலோ பெற முடியவில்லை.
ஒரு தாகூர் ,சத்யஜித் ரே வங்காள மாநிலத்தில் கொண்டாட படுவது போல உலக மேதைகள் பாரதியும்,சிவாஜியும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி கொண்டாட பட்டிருந்தால் ,நாம் உலக அரங்கில் கவனிக்க பட்டிருப்போம்.
இனியாவது உலக தமிழர்களே, ஒன்று படுங்கள்.

Richardsof
20th May 2013, 02:02 PM
திரு கண்பட் அவர்களுக்கு


இந்த பாடல் உங்களுக்காக ...

..http://youtu.be/uLRBhxn0iFk

vasudevan31355
20th May 2013, 02:04 PM
நன்றி அன்பு பம்மலார் சார்.

[நாகாஸ்திரம்]

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5093-1.jpg

[பிரம்மாஸ்திரம்]

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5094-1.jpg

வெளிநாடான இலங்கையிலும், 'கெப்பிடல்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி பெரும் வெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது.

RAGHAVENDRA
20th May 2013, 07:06 PM
Nadigar Thilagam Films in TV Channels this week

http://www.inbaminge.com/t/p/Pattum%20Bharathamum/folder.jpg

Tonight J Movies Channel 9.00 pm PAATTUM BHARATHAMUM

Zee Tamil
22.05.2013 – 2.00 PM – PESUM DEIVAM
Vasanth TV
21.05.2013 – 2.00 pm – KAL THOON
Raj TV
24.05.2013 – 10.00 pm – SAADHANAI
26.05.2013 – 10.30 pm – VIDUDHALAI
Raj Digital Plus
21.05.2013 – 10.00 am – ARUNODHAYAM
24.05.2013 – 8.00 pm – RAJA RAJA SOZHAN
Polimer TV
21.05.2013 – 2.00 pm – SATHIYA SUNDARAM
Murasu TV
21.05.2013 – 7.30 pm – BANDHAM
25.05.2013 – 7.30 pm – ANDHA NAAL
Mega TV
22.05.2013 – 12.00 noon – SANDHIPPU
Jeya TV
22.05.2013 – 10.00 am – DHAVANI KANAVUGAL
24.05.2013 – 10.00 am - BHAGA PIRIVINAI
J MOVIES
20.05.2013 – 9.00 pm – PAATTUM BARATHAMUM

RAGHAVENDRA
20th May 2013, 10:01 PM
தற்பொழுது ஜே மூவீஸ் தொலைக் காட்சியில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக் காவியம்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/songdance01_zpsbd01a2d8.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/songdance01_zpsbd01a2d8.jpg.html)

பாட்டும் பரதமும்

vasudevan31355
21st May 2013, 06:23 AM
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.

இன்றைய புகைப்படம்(6)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/lunapic_136909682688538_3.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/lunapic_136909682688538_3.png.html)

RAGHAVENDRA
21st May 2013, 06:58 AM
50 ஆண்டுகளுக்கு முன்னர் டிஸ்னிலேண்டில் நடிகர் திலகம் வருகை புரிந்த போது எடுக்கப் பட்ட புகைப்படம், அதுவும் வண்ணப் படம் .... இப்போது நம் பார்வைக்கு மிக அபூர்வமான படமாகத் தந்த வாசு சாருக்கும் நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த நன்றி. அன்பர்களே, இந்த மாதிரி காணக் கிடைக்காத காட்சிகளை நாம் இங்கே பார்க்க மிகவும் தவம் செய்திருக்க வேண்டும். உலகத்தமிழர்களுக்கெல்லாம் புகழ் சேர்த்து தலை நிமிர்ந்து நடை போட வைத்த நடிகர் திலகத்தின் புகழைப் பாடுவதே யன்றி வேறொன்றறியேன் பராபரமே என உழைக்கும் வாசு சாருக்கும் கோபால் சாருக்கும் மற்றும் இது போல் அயராது உழைக்கும் அனைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் பாராட்டுத் தெரிவிப்பது நம் கடமை. பாராட்டுக்கள் வாசு சார்.

தொடருங்கள் வாரத்தை மாதமாக்குங்கள். மேலும் பல பொக்கிஷங்களை காண ஆவலாயுள்ளோம்.

RAGHAVENDRA
21st May 2013, 07:02 AM
காலமெல்லாம் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் மற்றோர் உன்னதத் திரைக்காவியம் பாட்டும் பரதமும். இப்படத்தைப் பற்றி விரிவாக எழுத வேண்டியுள்ளது. ஏராளமான நுணுக்கமான விஷயங்கள் உள்ளன. நெஞ்சை நெகிழ வைக்கும் இத்திரைப்படத்திலிருந்து சில நிழற்படங்கள் இப்போது நம் பார்வைக்காக

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/songdance08_zps90a7f058.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/songdance08_zps90a7f058.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/songdance07_zps57c23a16.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/songdance07_zps57c23a16.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/songdance06_zps4cf3f6ee.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/songdance06_zps4cf3f6ee.jpg.html)

விழியில் மொழி பேசும் வித்தகரைப் பாருங்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/songdance05_zps507ab761.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/songdance05_zps507ab761.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/songdance04_zps7f84bda4.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/songdance04_zps7f84bda4.jpg.html)

கற்பனைக்கு மேனி தந்து

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/songdance03_zps391a5c0b.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/songdance03_zps391a5c0b.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/songdance02_zps9c3ba703.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/songdance02_zps9c3ba703.jpg.html)

Gopal.s
21st May 2013, 07:25 AM
வாசு,
சினம் தணிந்தேன். இனி எந்த - - வந்து எந்த பதிவுகள் இட்டாலும் பதில் சொல்லி நேரத்தை
வீணாக்க மாட்டேன். தொடரை தொடர்வேன். தங்கள் அபூர்வ புகை படங்கள் அபூர்வமே.
நாயகியர்,சண்டை காட்சி, உங்கள் ஊர் போன்ற தொடர்கள், ராகவேந்தர் சாரின் நல்லாசிகள்,மற்றும் P_R ,Joe ,கண்பட் ,சாரதி, முரளி போன்றோர் நமக்கு அறிவாளிகள் சபை என்ற நற்பெயரை தந்துள்ளனர். இனி எந்த provocation வந்தாலும் கவலை பட போவதில்லை.

பம்மலார் ஒரு புத்தகம் கொண்டு வரும் முயற்சியில் ஈடு பட்டுள்ளார். அனைத்து நடிகர்திலக நல்லிதயங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து அவர் முயற்சியை சீரியதாக்கும் பணியில் தோள் கொடுக்க வேண்டுகிறேன்.

RAGHAVENDRA
21st May 2013, 07:59 AM
டியர் கோபால் சார்
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷம் விலை மதிப்பற்ற ஒன்று என்றால், அதனை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட பெருந்தன்மை கடலினும் மிகப் பெரிது. அவையெல்லாம் தமிழ்த் திரையுலகின் நூற்றாண்டின் சரித்திரத்தை எடுத்தியம்பும் பல்வேறு சாதனங்களில் ஒன்றாக எதிர்காலத்தில் மிளிரப் போவது திண்ணம். அதன் துவக்கமாகவே எம்.ஜி.ஆருக்கு அவர் தொகுத்துள்ள தனிப்படத் தொகுப்பாகும். நடிகர் திலகத்தின் தொகுப்பு தயாரிப்பில் உள்ளது. அதற்குத் தேவைப் படும் காலமும் அவகாசமும் சற்றே அதிகம். என்றாலும் விரைவில் அதுவும் வெளியாகும் என நம்புவோம். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பற்றிய பருவ இதழ் ஒன்றும் வர உள்ளதாக நம் வினோத் அவர்கள் கூறியுள்ளார். இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, மற்ற கலைஞர்களைப் பற்றியும் தொகுப்பு நூல்கள் பம்மலார் அவர்களிடமிருந்து வரும் என எதிர்பார்க்கலாம். ஜெமினி கணேசன், ஜெய லலிதா உள்பட தமிழ்த்திரை வித்தகர்கள் அனைவரைப் பற்றியும் அவர் தொகுப்பு நூல்கள் வெளியிட வேண்டும்.

வெகு விரைவில் நடிகர் திலகத்தின் நூல் ஒன்றும் வெளி வர வேண்டும் எனத் தங்களைப் போல் நாம் அனைவருமே ஆவலாயுள்ளோம்.

Gopal.s
21st May 2013, 08:14 AM
டியர் கோபால் சார்
வெகு விரைவில் நடிகர் திலகத்தின் நூல் ஒன்றும் வெளி வர வேண்டும் எனத் தங்களைப் போல் நாம் அனைவருமே ஆவலாயுள்ளோம்.

ஆவல் மட்டுமே போதாது. அவலும் வேண்டும். வெறும் வாயை மென்று கொண்டிருந்தால் எப்படி?

vasudevan31355
21st May 2013, 08:48 AM
மிகத் தெளிவான பாட்டும் பரதமும் வண்ணப்படங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ராகவேந்திரன் சார். தங்கள் சிரத்தையும் உழைப்பும் அபாரம். நேற்று ஜெயா மூவிஸில் முழுவதும் கண்டு களித்தேன். நம் கற்பனைகளுக்கு மேனி தந்த அந்த மாமேதையைப் போற்றுவதே அவருக்கு நாம் செய்யும் கடமை ஆகும்.

தேங்க்ஸ் கோபால் சார். அடுத்த தலைமுறை போற்றக்கூடிய தங்கள் அற்புதக் கைவண்ணத்தில் உருவாகும் அதிசயத்தை அருந்தி மகிழ ஆவலாய் உள்ளோம்.

என்னடா முடியும் உன்னால் என்று எதிரி கொக்கரித்தால்
இதுவும் முடியும் இன்னமும் முடியும் என்று எழுதுங்கள்.

அடிமை ரசிகன்.

kalnayak
21st May 2013, 09:16 AM
தயவுசெய்து திருத்திகொள்ளுங்கள் ! நான் முடிச்சுபோட வில்லை !

ஆணித்தரமாக எழுதியுள்ளேன் !

வழக்கமான நான் அவனில்லை பதிவு. ....

அவருக்கு இவர் எழுதியுள்ளார்...
இன்று இவருக்கு அவர் எழுதுவார் ....
நாளை இன்னொருவர் இவர்கள் இருவருக்கும் எழுதுவர்....
பின்பு இவர்கள் அனைவரும் நாங்கள் அவனில்லை என்று கூறுவார்...இதுதானே காலம் காலமாக நடக்கிறது ! பழைய மொந்தையில் எப்பொழுதும் போல பழைய கள் !.

ஒன்று இரேண்டாக தெரிந்தால் நீங்களும் ஜெயித்ததுபோல்தான் நானும் ஜெயித்ததுபோல்தான்

திரியில் வந்து எழுதவேண்டும் என்றால் அதை செய்ய வேண்டியாது தானே...எல்லோர் கவனத்தையும் ஒரு வகையில் திசை திருப்பி..அதன்மூலம் இங்கு வரவேண்டிய அவசியம் தேவையற்றது..! அது அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை ஒரு காலத்தில்...இப்போது மக்களுக்கு தெரியும்.... சந்த்ரலேக்ஹா திரைபடத்தில் திரு ரஞ்சன் கூறுவதை போல " இத அடிச்சா...அவா வருவா..! என்று..!

நாட்டாமை, நான் எங்கே 'நான் அவனில்லை' என்று சொன்னேன்? எல்லாமே, எல்லாருமே நான்தான் என்றுதானே சொல்கிறேன். இவா அடி்ச்சா அவா வருவா - மட்டுமில்லை. இவா அடிக்காமலும் நானாகவும்தான் வந்து போய்கொண்டிருக்கிறேன். இனிமேலும் நீங்கள் இப்போது என்னை அழைத்தது போல் அழைத்தால் வருவேன். பதில் தருவேன். இல்லையென்றால் sowrirajann sri என்ற பெயரில் பதிவுகள் இடுவே்ன். நான் பாட்டிற்கு திரியில் படித்து பதியாமல் செல்வதை 'கல்நாயக் வந்துவிட்டான்' என்று களேபரம் செய்து என்னை பதிய வைக்கிறீர். ஆம் சொல்ல மறந்துவிட்டேன். ஆதிராமுக்கு தகவல் தந்து விட்டேன்.

முடிச்சு போடாமல் ஆணித்தரமாக எழுதியதற்க்கு மீண்டும் என் வாழ்த்துக்களை வழங்குகிறேன். பதிலுக்கு என்னால் நிச்சயமாக கோடாரித்தனமாக எழுத முடியாது. இதுக்கு மேலே நான் இங்கே இருந்தால் சிக்கலார் கோபித்துக்கொள்வார்.

vasudevan31355
21st May 2013, 10:25 AM
Don't Miss It

நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள் (வீடியோ தொடர்) 9.

படம்: நேர்மை

வெளிவந்த ஆண்டு: 1985

தயாரிப்பு: KRG பிலிம் சர்க்யூட்

சண்டைப்பயிற்சி : 'ஜூடோ K.K.ரத்னம்

நடிகர் திலகம் மோதும் வில்லன்கள் : அடியாட்கள் க்ரூப்

இயக்கம்: 'பில்லா' கிருஷ்ணமூர்த்தி

1985-லும் புலி போல தன்னால் பாய முடியும் என்று தலைவர் நிரூபித்த படம். வீட்டில் அடியாட்கள் திமிர்த்தனத்துடன் அமர்ந்திருக்க, ஒவ்வொருத்தராக நோட்டம் விட்டபடி வருவார். அவமரியாதை செய்யும்போது சகித்துக் கொள்வார். பின்னர் 'கும்கும்'தான். புயல் வேகம், மின்னல் வேகம் என்பார்களே அதைவிடவும் வேகம் காட்டுவார். இரண்டு இடங்களைத் தவிர டூப்பே இல்லாமல் அந்த வயதில் அருமையாக சண்டையிட்டுருப்பார். மிக மிக ஆச்சர்யமாக இருக்கும். ஒரு அடியாளை தொடர்ந்து இடது கையால் தாக்கிக் கொண்டே செல்வது அதகளம். நான்கு அடியாட்கள் தங்கள் கைகளால் இவர் கழுத்தைக் கவையாய் பின்னும்போது அவர்களை வெறித்து நோக்கும் பார்வை சண்டமாருதம். பின் அந்த நால்வரையும் ஒரே வீச்சில் சிதறடிப்பார். 'ஜூடோ' ரத்னம் அவர்களின் அருமையான பயிற்சியை உள்வாங்கி இளவயது அடியாட்களுடன் அவர்களைவிட இளவயது வாலிபன் ரேஞ்சுக்கு சுறுசுறுப்பு காட்டுவார். வயது அவருக்கு ஒரு பொருட்டா?... என்னால் எந்த நேரத்திலும், எதுவும் செய்ய முடியும் என்று கர்ஜித்து அதை செய்து காட்டிய வீரத் திலகமல்லவா!

பலர் இந்த சண்டைக் காட்சியை மறந்து விட்டிருக்கக் கூடும். இப்போது அனுபவித்துப் பாருங்கள். இன்னும் அவர் அருமை, பெருமைகள் நமக்குத் தெரியும்.


முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக


http://www.youtube.com/watch?v=AiqtZ1EJlzc&feature=player_detailpage

அன்புடன்,
வாசுதேவன்.

Georgevob
21st May 2013, 10:36 AM
Don't Miss It

நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள் (வீடியோ தொடர்) 9.

படம்: நேர்மை

வெளிவந்த ஆண்டு: 1985

தயாரிப்பு: KRG பிலிம் சர்க்யூட்

சண்டைப்பயிற்சி : 'ஜூடோ K.K.ரத்னம்

நடிகர் திலகம் மோதும் வில்லன்கள் : அடியாட்கள் க்ரூப்

இயக்கம்: 'பில்லா' கிருஷ்ணமூர்த்தி

1985-லும் புலி போல தன்னால் பாய முடியும் என்று தலைவர் நிரூபித்த படம். வீட்டில் அடியாட்கள் திமிர்த்தனத்துடன் அமர்ந்திருக்க, ஒவ்வொருத்தராக நோட்டம் விட்டபடி வருவார். அவமரியாதை செய்யும்போது சகித்துக் கொள்வார். பின்னர் 'கும்கும்'தான். புயல் வேகம், மின்னல் வேகம் என்பார்களே அதைவிடவும் வேகம் காட்டுவார். இரண்டு இடங்களைத் தவிர டூப்பே இல்லாமல் அந்த வயதில் அருமையாக சண்டையிட்டுருப்பார். மிக மிக ஆச்சர்யமாக இருக்கும். ஒரு அடியாளை தொடர்ந்து இடது கையால் தாக்கிக் கொண்டே செல்வது, நான்கு அடியாட்கள் தங்கள் கைகளால் இவர் கழுத்தைக் கவையாய் பின்னும்போது அவர்களை வெறித்து நோக்கும் பார்வை சண்டமாருதம். பின் அந்த நால்வரையும் ஒரே வீச்சில் சிதறடிப்பார். 'ஜூடோ' ரத்னம் அவர்களின் அருமையான பயிற்சியை உள்வாங்கி இளவயது அடியாட்களுடன் அவர்களைவிட இளவயது வாலிபன் ரேஞ்சுக்கு சுறுசுறுப்பு காட்டுவார். வயது அவருக்கு ஒரு பொருட்டா?... என்னால் எந்த நேரத்திலும், எதுவும் செய்ய முடியும் என்று கர்ஜித்து அதை செய்து காட்டிய வீரத் திலகமல்லவா!

பலர் இந்த சண்டைக் காட்சியை மறந்து விட்டிருக்கக் கூடும். இப்போது அனுபவித்துப் பாருங்கள். இன்னும் அவர் அருமை, பெருமைகள் நமக்குத் தெரியும்.


முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக


http://www.youtube.com/watch?v=AiqtZ1EJlzc&feature=player_detailpage

அன்புடன்,
வாசுதேவன்.

திரு வாசுதேவன் அவர்களுக்கு

அருமையான சண்டை காட்சி...! அந்த பஞ்ச் விடும்போது அந்த பவர் காட்டும் விதம் பிரமாதம்...!

அதே போல தாங்கள் ராஜா திரைப்படத்தில் கவர்ச்சி வில்லன் கண்ணனுடன் மோதும் அந்த அனல் பறக்கும் சண்டை காட்சி இங்கு இடுகை செய்யுங்கள் சார்..!

சண்டை காட்சியில் நடிகர் திலகத்தால் சோபிக்க முடியாது என்ற ஒரு கருத்தை மனதில் கொண்டுள்ள அனைவரும் தங்களுடைய என்னத்தை நேர்மையாளனாக இருந்தால் மாற்றிகொள்வர்.

நேர்மையற்றவர் பற்றி நமக்கு கவலை இல்லை !

kalnayak
21st May 2013, 10:40 AM
வாசுதேவன் சார், நான் ஸ்டில் கேட்டால் வீடியோ பதிவே தந்து விட்டீர்கள். மிக அற்புதமாக புலியின் பாய்ச்சலில் சண்டையிடும் திறன் நடிகர் திலகத்திற்கு நன்றாகவே அமைந்திருக்கிறது. அருமையான பதிவு. பாராட்டுக்கள். அவ்வப்போது இப்படி தாங்கள் தரும் சண்டைக்காட்சிகள், கதாநாயகியர் தொடர்கள் திரிக்கு அழகூட்டி நடிகர் திலகத்தின் இந்த திரியை பெருமை படுத்துகின்றன.

vasudevan31355
21st May 2013, 10:48 AM
மிக்க நன்றி சவுரி சார், கல்நாயக் சார்.

பக்கத்து பக்கத்தில் உங்கள் பெயர்களைக் குறிப்பிடக் கூட பயமாய் இருக்கிறது பக்கத்துக்கு பக்கம் சண்டை (செல்ல)வந்து விடுமோ என்று... ஹி...ஹி.. ஹி.. தமாசு....

Georgevob
21st May 2013, 10:50 AM
Don't Miss It

நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள் (வீடியோ தொடர்) 9.

படம்: நேர்மை

வெளிவந்த ஆண்டு: 1985

தயாரிப்பு: KRG பிலிம் சர்க்யூட்

சண்டைப்பயிற்சி : 'ஜூடோ K.K.ரத்னம்

நடிகர் திலகம் மோதும் வில்லன்கள் : அடியாட்கள் க்ரூப்

இயக்கம்: 'பில்லா' கிருஷ்ணமூர்த்தி

1985-லும் புலி போல தன்னால் பாய முடியும் என்று தலைவர் நிரூபித்த படம். வீட்டில் அடியாட்கள் திமிர்த்தனத்துடன் அமர்ந்திருக்க, ஒவ்வொருத்தராக நோட்டம் விட்டபடி வருவார். அவமரியாதை செய்யும்போது சகித்துக் கொள்வார். பின்னர் 'கும்கும்'தான். புயல் வேகம், மின்னல் வேகம் என்பார்களே அதைவிடவும் வேகம் காட்டுவார். இரண்டு இடங்களைத் தவிர டூப்பே இல்லாமல் அந்த வயதில் அருமையாக சண்டையிட்டுருப்பார். மிக மிக ஆச்சர்யமாக இருக்கும். ஒரு அடியாளை தொடர்ந்து இடது கையால் தாக்கிக் கொண்டே செல்வது அதகளம். நான்கு அடியாட்கள் தங்கள் கைகளால் இவர் கழுத்தைக் கவையாய் பின்னும்போது அவர்களை வெறித்து நோக்கும் பார்வை சண்டமாருதம். பின் அந்த நால்வரையும் ஒரே வீச்சில் சிதறடிப்பார். 'ஜூடோ' ரத்னம் அவர்களின் அருமையான பயிற்சியை உள்வாங்கி இளவயது அடியாட்களுடன் அவர்களைவிட இளவயது வாலிபன் ரேஞ்சுக்கு சுறுசுறுப்பு காட்டுவார். வயது அவருக்கு ஒரு பொருட்டா?... என்னால் எந்த நேரத்திலும், எதுவும் செய்ய முடியும் என்று கர்ஜித்து அதை செய்து காட்டிய வீரத் திலகமல்லவா!

பலர் இந்த சண்டைக் காட்சியை மறந்து விட்டிருக்கக் கூடும். இப்போது அனுபவித்துப் பாருங்கள். இன்னும் அவர் அருமை, பெருமைகள் நமக்குத் தெரியும்.


முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக


அன்புடன்,
வாசுதேவன்.

ஒரு திரைப்படத்தில் வில்லன் என்பவன் கதாநாயகனுக்கு இணையான சக்தியும் புத்தியும் உள்ளவனாக இருப்பது தான் ஞாயம்..

கதாநாயகன் மட்டும் வில்லனை அடித்துக்கொண்டு இருந்து..வில்லன் மட்டும் தொம்மயாக அடிவாங்கிகொண்டிருந்தால் அந்த சுவாரஸ்யம் போய்விடும்.
நாம் ஆங்கிலப்படம் பார்த்தல் நமக்கு நன்றாக புரியும்..சொல்லபோனால் கதாநாயகனை விட வில்லன் பலசாலியாக இருப்பான் எல்லாவிதத்திலும்..
நம் அன்றைய, இன்றைய தமிழ் சினிமாவில் மட்டும் அது ஒரு 75% விதி விலக்கு. ..

கதாநாயகனை விட வில்லன் ஆஜானுபாகுவாக இருந்தாலும் பாவம் கதாநாயகனிடம் கூம்..கூம் என்று அடிமட்டுமே வாங்கிவந்தது...வாங்கிவருவது ......அஏய் என்ன அடிச்சுட்டல...உன்ன அப்றமா கவனிச்சுகறேன் என்று முகவாஇகட்டயை தேய்த்துக்கொண்டு சென்றுவிடுவது வழக்கம் ! அவர்கள் தலையெழுத்தை காட்டுகிறது...

ஆனால் நடிகர் திலகம் அவர்களுடைய திரைபடங்கள் மட்டும் அதற்க்கு விதி விலக்கு.

அவர்படங்களில் வில்லன்கள் நாயகனுக்கு சமமாக பலசாலிகளாக இருப்பார்கள்...நடிகர் திலகத்துடைய பட சண்டை காட்சியை பார்த்தல் நம்மக்கு அழகாக தெரியும்...சண்டை காட்சி ஒருதலை பட்சமாக என்றுமே இருக்காது...!

Gopal.s
21st May 2013, 11:16 AM
.

ஆனால் நடிகர் திலகம் அவர்களுடைய திரைபடங்கள் மட்டும் அதற்க்கு விதி விலக்கு.

அவர்படங்களில் வில்லன்கள் நாயகனுக்கு சமமாக பலசாலிகளாக இருப்பார்கள்...நடிகர் திலகத்துடைய பட சண்டை காட்சியை பார்த்தல் நம்மக்கு அந்த இயற்கை தன்மை அழகாக தெரியும்...சண்டை காட்சி ஒருதலை பட்சமாக என்றுமே இருக்காது...!
ஆஹா, "இயற்கையான" சண்டை காட்சிகள் என்பதை எல்லா சண்டை காட்சியிலும் பதிக்கவும். ஏதோ ,நம்மிடமிருந்து கற்ற "நண்பர்களிடம்" இருந்து நாமும் ஏதாவது கற்க வேண்டாமா?

Georgevob
21st May 2013, 11:18 AM
Dear Sowriraajan.
ungalukku ellaam theriyum enru sollave illai. அப்பாடி. இந்த ...மண்டைக்கு இப்பவாவது எறிச்சே!!!-என்று சொல்ல இருந்தேன். மற்றபடி என் மனதை திரும்ப திரும்ப பாராட்டி என்னை கூனி குனிய வைக்கிறீர். இப்ப உங்களுக்கு நான் மெசேஜ் கொடுத்து விட்டேன். இப்போதாவது நாம் ஒருவர் என்றும் உணர்ந்து கொள்ளுங்கள்.

Bye.

நாயகரே ! உங்களுடைய இன்பாக்ஸ் தகவலுக்கு

vasudevan31355
21st May 2013, 11:19 AM
கோ,

எங்கே பாராட்டு? நீ கெஞ்சிக் கூத்தாடிதானே அதைப் போட்டேன். இப்ப ஒண்ணும் தெரியாத மாதிரி இருக்க? படவா...

Gopal.s
21st May 2013, 11:24 AM
nice ஆக போன் அணைத்து விட்டு எங்கே பாராட்டு எங்கே பாராட்டு என்று சாம்ராட் அசோகன் போல கேட்டால், என் கண்கள் பனிக்கிறது. இதயம் கனக்கிறது.

Gopal.s
21st May 2013, 11:27 AM
நேர்மையாக சொன்னால் நேர்மையில் நான் நேர்மையாக ரசித்தது இந்த நேர்மையான சண்டையைத்தான். அதை நேர்மையாக பதிவிட்டு பாராட்டையும் நேர்மையாகவே கேட்டு கொண்டுள்ளாய். நானும் நேர்மையாய் பாராட்டி விடுகிறேன்.

Georgevob
21st May 2013, 11:31 AM
நேர்மையாக சொன்னால் நேர்மையில் நான் நேர்மையாக ரசித்தது இந்த நேர்மையான சண்டையைத்தான். அதை நேர்மையாக பதிவிட்டு பாராட்டையும் நேர்மையாகவே கேட்டு கொண்டுள்ளாய். நானும் நேர்மையாய் பாராட்டி விடுகிறேன்.

ungal naermaikku alavae naermayaaga sollaponaal illai

vasudevan31355
21st May 2013, 11:38 AM
பதிவு போடும்போது disturb இருக்கக் கூடாது கண்ணு. தவம் மாதிரி செஞ்சுகிட்டு இருக்கேன். (எங்கேயோ கேட்ட குரல்) அதான் switch off.

vasudevan31355
21st May 2013, 11:42 AM
நேர்மையாக சொன்னால் நேர்மையில் நான் நேர்மையாக ரசித்தது இந்த நேர்மையான சண்டையைத்தான். அதை நேர்மையாக பதிவிட்டு பாராட்டையும் நேர்மையாகவே கேட்டு கொண்டுள்ளாய். நானும் நேர்மையாய் பாராட்டி விடுகிறேன்.

நேர்மையைப் பற்றி கூர்மையாய் சொன்ன உன்(வாய்)மையைப் பற்றி என்ன சொல்வது?

vasudevan31355
21st May 2013, 11:47 AM
nice ஆக போன் அணைத்து விட்டு எங்கே பாராட்டு எங்கே பாராட்டு என்று சாம்ராட் அசோகன் போல கேட்டால், என் கண்கள் பனிக்கிறது. இதயம் கனக்கிறது.

http://farm3.staticflickr.com/2481/3660501321_536be1471e.jpg

Gopal.s
21st May 2013, 11:49 AM
கண்கள் இங்கே ,நெஞ்சம்(இதயம்) எங்கே?

vasudevan31355
21st May 2013, 11:51 AM
கண்கள் இங்கே ,நெஞ்சம்(இதயம்) எங்கே?

இவரிடத்தில்

http://tattoosonmybrain.files.wordpress.com/2007/07/sivaji-ganesan-in-parasakthi.jpg

vasudevan31355
21st May 2013, 11:56 AM
நேர்மையாக சொன்னால் நேர்மையில் நான் நேர்மையாக ரசித்தது இந்த நேர்மையான சண்டையைத்தான். அதை நேர்மையாக பதிவிட்டு பாராட்டையும் நேர்மையாகவே கேட்டு கொண்டுள்ளாய். நானும் நேர்மையாய் பாராட்டி விடுகிறேன்.

பாராட்டுக்கு நன்றியாக இந்தா... அனுபவி.

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQL0ECY0t5hWXBw1HaZfID3C6uMtzIy4 QTKvxJ63yLfUP2UNrNm1w

Gopal.s
21st May 2013, 12:21 PM
பாராட்டுக்கு நன்றியாக இந்தா... அனுபவி.


இனிமேல் பதிவாவது மண்ணாவது? கைரேகையை பார்க்க முடியாமல் செய்து விட்டாயே?

Gopal.s
21st May 2013, 12:27 PM
தீயோர் தரும் ஆல்பம் மட்டும் வேண்டுமாக்கும்!!!!????

vasudevan31355
21st May 2013, 12:29 PM
Photo bucket site is now locked. நாளை எப்படி அரிய புகைப்படம் கொடுப்பது? அதற்குள் maintenance முடிந்து விடுமா?

m1
21st May 2013, 02:28 PM
Talking of fight sequences, sivaji was awesome in "Tirisoolam", specially the climax fight.

The one handed fight sequence in vaazhkai was also well choreographed.

Georgevob
21st May 2013, 03:56 PM
திரி நண்பர்களுக்கு

இந்த பாடல் நம் அனைவருக்காகவும் -

http://www.youtube.com/watch?v=AEMyErQBQT0

ScottAlise
21st May 2013, 10:49 PM
Dear Vasu sir,

your fight series clip of NT's fight in Nermai was too good.

ScottAlise
21st May 2013, 10:50 PM
MOHANA PUNNAGAIஇந்த படம் 1981 ல் வந்தது . இந்த படம் தான் ஸ்ரீதர் மற்றும் நடிகர் திலகம் combination ல் வந்த கடைசி படம். இந்த படம் உருவானது பற்றி ஏற்கனவே இந்த திரி ல் படித்து இருக்கேன் . இந்த படத்தை போன வருடம் சென்னை வந்த பொழுது வாங்கி சென்றேன் . இப்போ தான் அதை பாக்கும் சந்தர்பம் கிடைத்தது .


இந்த படத்தின் producer திரு stills சாரதி . ஒரு சாமானியன் பட முதலாளி ஆகலாம் என்று NT மறுபடியும் நிருபித்து உள்ளார் .

வைரநெஞ்சம் படத்தை அடுத்து NT & ஸ்ரீதர் combination என்றதும் எதிர்பார்ப்பு கூடியது . அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா என்றால் நிச்சியம் ஆம் என்பேன் நான் .
இந்த படத்தின் கதை typical ஸ்ரீதர் படத்தின் முக்கோணம் (Triangular ) லவ் ஸ்டோரி .ஆனால் அதை கை அண்ட விதம் இயக்குனர் சபாஷ் போட வைத்து உள்ளார் .

இந்த படத்தை பார்க்கதவர்களுக்கு இந்த படத்தின் outline :

ராஜா (நட்) ஒரு மிக பெரிய businessman . அவர் காரியதரிசி ஜெயபாரதி. ஒரு நாள் காலை அவர் இல்லத்துக்கு அவர் மாமா வேற யாரு நம்ம மேஜர் தான் . அவரும் அவர் மகள் பத்மப்ரியாவும் வருகிறார்கள் . பத்மப்ரியா சிவாஜியை காதலிக்கிறார். ஆனால் சிவாஜி அவர் வியாபாரதில் கவனம் செலுத்துகிறார் .

வியாபார விஷயமாக NT இலங்கை செல்கிறார் . அங்கே அவர் கௌரி (கீதா) வை படம்பிடிக்கிறார் . அவர் இடம் NT தான் குமுதம் பத்தரிகை போடோக்ராபர் என்று பொய் சொல்கிறார் . அத்துடன் அவரை காதலிக்கிறார் . கௌரி க்கு சென்னை ல் ஒரு வேலை வாங்கி தருகிறார் .
NT மீண்டும் சென்னை வந்த உடன் தான் திருமணம் செய்யும் என்னத்தை வெளிப்படுத்துகிறார். இந்த செய்தி கேட்டு பத்மப்ரியா சினம் கொள்கிறார் .
இதற்கு இடையில் கௌரி சென்னை வருகிறார் . அவர் இடம் ஒரு கடிதத்தை கொடுத்து தன் கம்பெனி ல் clerk அக வேளைக்கு வைத்துக்கொள்ளகிறார்.

அங்கே சிவாஜி யை பார்க்கும் கௌரி confuse ஆகிறார் . காலை முதலாளியாவும் மாலை ராகவன் என்று காதலன் அவும் கௌரி உடன் நேரத்தை செலவழிக்ககிறார் .

ஒரு நாள் ஒரு பார்ட்டி ல் தன் திருமணம் பற்றி கூறி கௌரி தான் மணப்பெண் என்பதையும் வெளிப்படுத்கிறார்.
இந்த ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாத பத்மப்ரியா கல்யாண நாள் அன்று விஷம் குடித்து , சாகும் தருவாயில் துப்பாக்கியால்
கௌரி யை சுட்டு கொள்கிறார்
இந்த காரணத்தால் நட் மனம் உடைந்து ஒரு தேவதாஸ் ஆகிவிடுகிறார் .ஜெயபாரதியின் கோரிக்கைக்கு இணங்க NT மறுபடியும் ஒரு normal மனிதர் ஆகிறார் . NT , ஜெயபாரதி , அனுராதா , அனுராதா வின் அப்பா அனைவரும் ஒரு மலை பிரதேசதுக்கு செல்கிறார்கள் . சென்ற இடத்தில அனுராதா வின் அப்பா இறக்கிறார் .
ஊருக்கு வந்த உடன் ஜெயபாரதி தன் நெடு நாள் காதலன் ஐ கரம் பிடிக்கிறார் . இதனால் சிவாஜின் வாழ்கை மீண்டும் வெறுமை ஆகிறது.
அதனால் தன் வீடு தோட்டக்காரர் வின் மகள் அனுராதா வை படிக்க வைக்கிறார் .
சில வருடங்கள் கழித்து அனுராதாவுக்கு திருமணம் செய்ய எண்ணி மாப்பிளை தேடுகிறார். அப்போ அனுராதா தான் சிவாஜியை காதலிப்பதாக கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சி ஆகும் NT இதற்கு மறுக்கிறார் . அனுராதா தன் அழகை காட்டி மயக்கிறார். NT அவருக்கு அறிவுரை கூறி திருமணம் செய்து வைகிறார். அனுராதா தன் கணவன் உடன் கடல் மார்க்கம் அக செல்கிறார் .

NT பீச்சில் உக்கர்த்து இருக்கும் பொழுது அனுராதா வின் பிணம் மிதந்து வருகிறது . மனம் உடைத்து போகும் அவர் அனுராதா உடன் தானும் கடல் க்கு சென்று தற்கொலை செய்து கொள்கிறார்

மிகவும் வித்யாசம் அனா இந்த படம் தோல்வியை தழுவியது ஆச்சிரியம் தான் . காரணம் யோசிக்கும் பொழுது கிடைக்கும் விடை திரிசூலம் .
அந்த படத்தின் வெற்றி மற்றும் அந்த காலத்தில் வந்த ரஜினி , கமல் போன்ற நடிகர்களின் commercial , மசாலா படங்களின் தன்மை . இதற்கு இடையில் இது போன்ற கிளாஸ் படம் எடுபடவில்லை என்றே தோனுகிறது .

vasudevan31355
21st May 2013, 10:56 PM
சவுரி சார்,

திரிக்கு சம்பந்தமில்லா விட்டாலும் இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். 'ராஜா' க்கள் திமிரை கூஜாவாக்கும் பாடல். பொய் முகமூடி போட்டு ஏமாற்றும் வேஷதாரிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் பாட்டு.

பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு....
படைத்தவன் இருப்பான் பார்த்துக் கொள்வான் பயணத்தைத் தொடர்ந்து விடு....


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0vjDMlvWm9Q

eehaiupehazij
21st May 2013, 11:07 PM
just now enjoying Murasu TV song sequences of the Parasakthi Phenomenon NT. Whoever opts to mud sling on this acting cyclone will be lost in the eye of the cyclone. See the variety of his performances. Indelible performances by an immortal actor. If the acting domain is an ocean NT is the ocean and others are just drops in the ocean. Awaiting Parasakthi on coming Sunday.

vasudevan31355
22nd May 2013, 08:22 AM
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.

இன்றைய புகைப்படம்(7)

'பாவை விளக்கு' படத்தின் அரிய புகைப்படம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/gal_2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/gal_2.jpg.html)

Richardsof
22nd May 2013, 08:47 AM
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.

இன்றைய புகைப்படம்(7)

'பாவை விளக்கு' படத்தின் அரிய புகைப்படம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/gal_2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/gal_2.jpg.html)


vasu sir

very rare pic with super view of the location .

Excellent pic.
Congratulations

sivaa
22nd May 2013, 02:15 PM
http://www.mayyam.com/talk/images/misc/sticky.gif Sticky: Sivajiyin Sadhanai Sigarangal by Murali Srinivas (http://www.mayyam.com/talk/showthread.php?7186-Sivajiyin-Sadhanai-Sigarangal-by-Murali-Srinivas)Started by Murali Srinivas (http://www.mayyam.com/talk/member.php?10632-Murali-Srinivas), 15th September 2008 01:25 PM 5 Pages •1 (http://www.mayyam.com/talk/showthread.php?7186-Sivajiyin-Sadhanai-Sigarangal-by-Murali-Srinivas)2 (http://www.mayyam.com/talk/showthread.php?7186-Sivajiyin-Sadhanai-Sigarangal-by-Murali-Srinivas/page2)3 (http://www.mayyam.com/talk/showthread.php?7186-Sivajiyin-Sadhanai-Sigarangal-by-Murali-Srinivas/page3)...5 (http://www.mayyam.com/talk/showthread.php?7186-Sivajiyin-Sadhanai-Sigarangal-by-Murali-Srinivas/page5)

littlemaster1982
22nd May 2013, 03:26 PM
Thread cleaned. Pls don't respond to trolls. Report the offensive posts instead.

Murali Srinivas
23rd May 2013, 12:27 AM
இந்த திரியில் பங்கு பெறும் அனைத்து நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.இப்போது நடைபெற்ற குழப்பங்கள் இந்த திரிக்கு புதியவை அல்ல. கடந்த 7 வருடங்களாக பல முறை இது போன்று நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக இந்த திரியின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் இது போன்று பல பெயர்களில் உள்ளே நுழைந்து இங்கே பங்களிப்பு செய்பவர்களை provoke செய்து ஆத்திரமூட்டும் வார்த்தைகளை பிரயோகம் செய்ய வைத்து அதன் மூலம் இந்த திரியின் focus-ஐ திசை திருப்பவும், திரியின் வளர்ச்சியை முடக்கவும் காலங்காலமாக சில vested interests நடத்தி வரும் சூழ்ச்சிக்கு நம்மவர்கள் பலியாவதும் அவர்கள் விரிக்கும் வலையில் நாமே போய் சிக்கிக் கொள்வதும் மிகுந்த வேதனையளிக்க கூடியவை.

இது போன்ற திசை திருப்பும் பதிவுகள், நம்மை provoke செய்யும் பதிவுகள் எத்தனை வந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி தள்ளி நம்முடைய goal என்னவோ அதை மட்டுமே கருத்தில் கொண்டு பங்களிப்பு செய்வோம் என உறுதி கொள்வோம்.

சற்றே அதீதமாய் உணர்ச்சிவசப்படும் நமது ஒரு சில நண்பர்களுக்கு ஒரு extra வேண்டுகோள். இது போன்ற ஒரு சிலர் வந்து நடிகர் திலகம் greatest actor இல்லை என்று சொல்வதால் அவர் அப்படி ஆகிவிடப் போவதில்லை. அதே போன்று நடிகர் திலகத்தின் படங்கள் Box office-ல் சாதனை புரியவில்லை என்று சொன்னால் அது உண்மையாகி விடாது. இப்படி ஒரு பதிவு வந்தால் உடனே நமது ரசிகர்களும் அதற்கு பதில் சொல்கிறேன் என்று பதிய வேண்டிய அவசியமில்லை. காரணம் நமது பதிலை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அவர்களது நோக்கம் கோவத்தை மூட்டுவதும் குழப்பம் விளைவிப்பதுமே. ஆகவே நமது பதில்களில் கண்ணியம் வேண்டும்.

ஆகவே கோவம் தவிர்த்து தேவையில்லாத விவாதங்களை புறம் தள்ளி நடிகர் திலகத்தின் அருமை பெருமைகளை பேசி அவர் புகழ் பட்டொளி வீசி பறக்க அனைவரும் கை கோர்ப்போம்.

அன்புடன்

RAGHAVENDRA
23rd May 2013, 06:34 AM
Thank you Moderators for the timely intervention and action. As you said, the appropriate method is to report trolls to the moderators instead of responding.

RAGHAVENDRA
23rd May 2013, 06:35 AM
முரளி சார் சொன்னது போல் எதிர்காலத்தில் இது போன்ற பதிவுகளுக்கு நாம் பதிலளிக்காமல், மாடரேட்டர்களிடம் இவற்றை விட்டு விடுவதே சாலச் சிறந்தது.

RAGHAVENDRA
23rd May 2013, 06:38 AM
இது போன்ற இடையூறுகளால் பாதிக்க்ப் படுவது கோபால் சாரின் ஆய்வேடு தான். இனி வரும் காலங்களிலும் இது போன்று பாதிக்கப் படாமல் இருக்க கோபால் சாரின் ஆய்வுக் கட்டுரை மற்றும் நடிகர் திலகத்தின் நடிப்பிலக்கண ஆய்வுகளுக்கென தனித் திரி துவங்கப் பட்டுள்ளது.

http://www.mayyam.com/talk/showthread.php?10377-Sivaji-Ganesan-School-of-Acting

இத்தலைப்பினை யொட்டிய விவாதங்களை மட்டும் நாம் இனி அங்கே தொடர்வோம். அனைத்து நண்பர்களும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

கோபால் சார் இனி நீங்கள் இடையூறில்லாமல் தங்கள் ஆய்வேட்டினை அங்கே தொடருங்கள். வாழ்த்துக்கள். நானும் சேர்ந்து கொள்கிறேன். இது தொடர்பான கருத்துப் பரிமாற்றத்தில் நம் மற்ற நண்பர்களும் கலந்து கொள்வர்

tacinema
23rd May 2013, 07:44 AM
முரளி சார் சொன்னது போல் எதிர்காலத்தில் இது போன்ற பதிவுகளுக்கு நாம் பதிலளிக்காமல், மாடரேட்டர்களிடம் இவற்றை விட்டு விடுவதே சாலச் சிறந்தது.

with due respect to Murali and Raghavendra, why should we leave these NT repect-offenders? Of course, we should report to Moderator, but I sincerely believe that we must give back to these back-stabbers.

நல்லவனுக்கு நல்லவனாகவும், கெட்டவனுக்கு கெட்டவனாகவும் இருப்போம்.

This is my opinion.

Regards,
NT fan

RAGHAVENDRA
23rd May 2013, 07:52 AM
Dear TAC
தங்களின் உணர்வுகளிலும் கருத்துக்களிலும் நூற்றுக்கு 1000 சதவீதம் நியாயம் உள்ளது. முரளி சார் சொன்னது போல் இவர்கள் ஏதாவது ஒரு ஐடியில் மாற்றி மாற்றி வந்து எழுதிக் கொண்டு தான் இருப்பார்கள். மாற்று முகாம் எனப்படும் நண்பர்கள் நிச்சயம் இந்த மாதிரி தாக்கி எழுதும் போக்கினைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். இருவருக்கும் இடையில் தூண்டி விட்டு குளிர் காய நினைக்கும் ஒரு சில பதிவாளர்களால் தான் இந்த மாதிரி இடையூறுகள் தோன்றுகின்றன. இவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் இவ்வாறானவர்களைப் பற்றி உரியவர்களிடம் சொல்வதொன்றே சிறந்த வழியாக எனக்குத் தோன்றுகிறது. பதிலுக்கு பதில் என்றால் அதனால் பாதிக்கப் படுவது நம் திரியும் அதன் பங்களிப்பும் தான். எனவே தான் நானும் முரளி சாரும் இந்த அணுகுமுறையில் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

அதற்காக நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதில்லை. கருத்திற்கு கருத்து நாம் அளித்துத் தான் வருகிறோம். இவர்கள் திரும்பத் திரும்ப ஒரே விதமாக கூறுவதிலிருந்தே இவர்களின் நோக்கம் புரிந்து விடுகிறதன்றோ.

இதுவே என் கருத்து.

ScottAlise
23rd May 2013, 08:49 AM
Hi,

Let peace prevail lets Continue our journey along with NT

JamesFague
23rd May 2013, 11:54 AM
Let us move forward in propagating the glory of the greatest
actor.

RAGHAVENDRA
23rd May 2013, 01:41 PM
டியர் ராகுல் ராம்,


மோகன புன்னகை

http://i4.ytimg.com/vi/GQJw_CQm8WY/maxresdefault.jpg

கிண்டல் கேலி செய்வோரை ஒதுக்கி விட்டு தற்போது இப்படத்தைப் பற்றிப் பார்ப்போம். நீண்ட நாட்களுக்குப் பின் நடிகர் திலகம் ஸ்ரீதர் இணையில் வெளிவந்த படம். அருமையான படம் என்றாலும் என்ன காரணத்தாலோ பெற வேண்டிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் நெஞ்சை நெகிழ வைக்கும் சிறந்த நடிப்பில் நடிகர் திலகம் மீண்டும் தன் கொடியை நாட்டியிருப்பார். குறிப்பாக கல்யாணமாம் கச்சேரியாம் பாடல் ரசிகர்களின் நெஞ்சில் ஆழமாய் பதிந்து விட்ட பாடல். இமேஜ் என்கிற வளையத்தில் இறுதி வரை சிக்காமல் தன்னுடைய திறமையை வைத்தே என்றும் தன் முதலிடத்தை நிலை நிறுத்திய படங்களில் மோகனப் புன்னகையும் ஒன்று.

மெல்லிசை மன்னரின் இசையில் தென்னிலங்கை மங்கை பாடல் என்றென்றும் இனிமையாய் ஒலிக்கும் பாடல். அதே போல் தலைவன் தலைவி பாடலில் பின்னணியில் தவிலை ஒலிக்கச் செய்து பாடலின் சூழலை அருமையாய் சித்தரித்திருப்பார் எம்.எஸ்.வி.

ரசிகர்களால் மறக்க முடியாத படம் மோகனப் புன்னகை.

நம் அனைவருக்காகவும் தலைவன் தலைவி பாடல் காணொளியாக

http://youtu.be/GQJw_CQm8WY

RAGHAVENDRA
23rd May 2013, 01:56 PM
மோகனப் புன்னகை திரைப்படத்தில் மற்றோர் மறக்க முடியாத பாடல், குடிக்க விடு என்னைக் குடிக்க விடு. எந்த கதாநாயகனும் தான் குடிகாரனாக நடிப்பதற்கே ஈகோ பார்க்கும் காலத்தில் குடிக்க அனுமதி கேட்பதாக வரும் பாடல் காட்சியில் நடிக்கக் கூடிய தைரியம் எங்கள் கலைக் கடவுளுக்கு மட்டுமே சொந்தம். மெல்லிசை மன்னரின் மிகச் சிறந்த மெட்டில் பாடகர் திலகம் டி.எம்.எஸ். குரலில் வாலியின் பொருள் பொதிந்த வரிகள் ... பாடலின் இறுதியில், குடிப்பதில்லை இனிமேல் குடிப்பதில்லை, நான் அழுதால் அழுவதற்கும், நான் சிரித்தால் சிரிப்பதற்கும் ஒரு மனது கிடைத்ததம்மா, இது தான் எனக்கு அமைதி வரிகளில்ல டி.எம்.எஸ்.ஸின் குரலில் உள்ள voice modulation பிரமிப்பை ஊட்டுகிறது என்றால் அதற்கு உயிர் கொடுத்து அழுகை சிரிப்பு இரண்டையும் கலந்து தன் முகத்தில் காட்டி நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுகிறார் நடிகர் திலகம்.

பாடல் காட்சியைப் பாருங்கள்.

http://youtu.be/Cd6TZlcT04E

JamesFague
23rd May 2013, 02:46 PM
Mr Raghavendra Sir,

You cannot hear the song Kalyanamam Katcheriyam in the theatre as fans celebrate
like anything due to the song as well as performance of our acting GOD. I have seen
during my college days at Chrompet Vetri and it could not met the expected result
may be due to delay in making of the film.

JamesFague
23rd May 2013, 02:48 PM
Warm Welcome Mr Kannan for this wondful thread of Acting GOD.

vasudevan31355
23rd May 2013, 04:30 PM
'பாவை விளக்கு' புகைப்படத்தை பாரட்டிய வினோத் சாருக்கு நன்றி!

என் கிராமம் என் மக்கள் பதிவிற்கு தொலைபேசி வாயிலாகப் பாராட்டிய கோல்ட் ஸ்டாருக்கு என் மனமார்ந்த நன்றி!

vasudevan31355
23rd May 2013, 04:32 PM
கண்ணன் சார்,

வருக! வருக! நடிகர் திலகம் என்ற சாகரத்தில் மூழ்கி முத்தை எடுங்கள். நல்வாழ்த்துக்கள்.

adiram
23rd May 2013, 07:07 PM
நமது பம்மலார் அவர்கள் 'நடிகர்திலகம் திரி' பாகம் ஒன்பதில் ஜூலை 2011 முதல் தனது ஆவணப்பதிவுகளைத் தரத்துவங்கி ஏராளமான செய்தித்தாள் விளம்பர ஆவணங்களை அள்ளி அள்ளி வழங்கினார்கள். கூடவே நமது ராகவேந்தர் அவர்களும், நெய்வேலி வாசுதேவன் அவர்களும் பல்வேறு ஆவணங்களை அள்ளி வழங்கினார்கள், வழங்கி வருகிறார்கள். அவையனைத்தும் நமது ரசிகர்கள் பெரும்பாலோர் பார்த்திராத அரிய விளம்பரங்கள் என்பதோடு நமது நடிகர்திலகத்தின் சாதனைகளை அறியாதோருக்கு ஆணித்தரமாக பறைசாற்றும் செப்பேடுகளாக திகழ்கின்றன.

பாகம் ஒன்பதில் மட்டுமல்லாது, பம்மலார் அவர்கள் 'கிளாஸிக்' பகுதியில் துவங்கிய (தற்போது பூட்டப்பட்டுள்ள) திரியிலும் அவை தொடர்ந்தன.

கடந்த சிலநாட்களாக அவற்றை மீண்டும் பார்வையிட்டு வந்தபோது நடிகர்திலகத்தின் கீழ்க்கண்ட பல மிக முக்கிய திரைக்காவியங்களின் விளம்பரம் ஒன்றுகூட இடம்பெறவில்லை என்பது தெரிந்தது. அவற்றில் பல வெள்ளிவிழாப்படங்களும் அடக்கம்.

ஒரு விளம்பர ஆவணங்கள் கூட இடம்பெறாத திரைப்படங்களில் சில...

தீபம்
தியாகம்
தங்கப்பதக்கம்
தங்க சுரங்கம்
உத்தமன்
தங்கைக்காக
அருணோதயம்
இருதுருவம்
எங்க மாமா
விளையாட்டுப் பிள்ளை
கந்தன் கருணை
பார்த்தால் பசிதீரும்
நிச்சய தாம்பூலம்
இருவர் உள்ளம்
அன்புக்கரங்கள்
திருமால் பெருமை
நிறைகுடம்
ராஜ ராஜ சோழன்
பொன்னூஞ்சல்
தாய்
மனிதனும் தெய்வமாகலாம்
புண்ணிய பூமி
ரிஷிமூலம்
தர்மராஜா
யமனுக்கு யமன்
ரத்தபாசம்

திரிசூலம் (இதன் வெள்ளிவிழா விளம்பரம் மட்டும் உள்ளது. மற்ற சாதனை விளம்பரங்கள் பதிவிடப்படவில்லை) .

இப்படங்களின் விளம்பர ஆவணங்கள் இருக்குமானால் நமது திரியில் பதிவிடலாமே. ராகவேந்தர் சார் அவர்கள் சொல்வதுபோல இப்படிப்பட்ட அரிய விளம்பரங்கள் வைத்திருப்போர் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தயங்குவார்கள் என்பது உண்மையானாலும், அவர்கள் இவற்றைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பதே நடிகர்திலகத்தின் சாதனைகளை உலகெங்கும் பறைசாற்றத்தானே. அந்த உயர்ந்த நோக்கத்திற்கு இத்திரியைப்போன்ற பொருத்தமான இடம் வேறெது?.

சிவந்த மண் திரைப்படம் 38 இடங்களில் 50 நாட்களையும், 10 இடங்களில் 100 நாட்களையும் கடந்த சாதனை விளம்பரத்தை நமது பம்மலார் அவர்கள் இங்கே பதித்ததால்தானே அப்படத்தைக் குறை சொல்வோருக்கு இப்போதும் காண்பிக்க முடிகிறது. சமீபத்தில்கூட வாசுதேவன் சார் மறுபதிப்பு செய்திருந்தாரே.

அதுமட்டுமல்ல இப்போது அவற்றை இங்கே பதித்தால், பிற்பாடு அந்தந்த படங்கள் 'பிலிமோகிராபி' இடம்பெறும்போது இவ்விளம்பரங்களை அங்கே மாற்றிக்கொள்ளலாம்.

எனவே விடுபட்ட படங்களின் விளம்பரப்பதிவுகளை மீண்டும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

(....and last, thanks to my office collegue Mr. Dhanapalan, working here in Jeddah, an expert in Tamil typing for making this post in Tamil.
Very soon I will make Tamil posts individually).

ScottAlise
23rd May 2013, 09:35 PM
Hearty Welcome கண்ணன் சார்

ScottAlise
23rd May 2013, 09:35 PM
நான் ஏற்கனவே கூறியது போல் நான் ஒரு நடிகர் திலகத்தின் ரசிகர் . ஆனால் என்னால் நடிகர் திலகத்தின் மெலோட்ராம படங்கள் குறிப்பாக பா வரிசை படங்களை பார்க்க நான் விரும்பியதில்லை. இதனால் என்னக்கும் என் அப்பாவுக்கும் அடிகடி வாக்குவாதாம் வரும் என் என்றால் அவர் நடிகர் திலகத்தின் விசிறி ,அதுவும் அவரின் golden period என்று சொல்ல படும் 1954-1980 ன் வெறித்தனமான ரசிகர் .

அவர் நடிகர் திலகத்தின் later movies யை அவ்வளவுவாக பார்க்க வில்லை . அந்த சமயத்தில் அவர் வேலைக்கு சென்றதும் ஒரு காரணம்.
ஒரு நாள் நடிகர் திலகத்தின் படங்களின் DVD கள் யை தேடும் பொழுது நான் பார்க்காத சில நடிகர் திலகத்தின் பா series படங்கள் கிடைத்தது .
ஒரு சின்ன சபலம் பா series படங்களை பார்க்க ஆசைப்பட்டேன் .

இதுக்கு இந்த திரி யில் உள்ள திரு கோபால், திரு நெய்வேலி வாசு , திரு ராகவேந்திரன், திரு ஆதிராம் , திரு சிவாஜி செந்தில் , திரு முரளி ஸ்ரீநிவாஸ் , திருமதி சாரதா , திரு joe , திரு சௌரிராஜன் மற்றும் பேர் விட்டு போன சில hubbers எழுத்துகள் ஒரு காரணம்

அதனால் இந்த பா series write ups யை என்னை இந்த படங்களை பார்க்க தூண்டிய இந்த hubbers களுக்கு சமர்பிக்கிறேன்

இந்த பா series படங்களின் மிக பெரிய பலம் casting , இப்போ மிக பிரபலமாக சொல்ல படும் multi starrer படம் என்று சொல்ல படும் படங்களை நம்ம ஆளு அப்போவே செய்து விட்டார் .
ரெண்டாவது பலம் பாடல்கள் . MSV & TRR மற்றும் கவிஞர் கண்ணதாசன் கூட்டணி பாடல்கள் இன்று அளவும் பிரபலம் .
மூன்றாவது வலுவான கதை. மிக இயல்பான , நம்ம பக்கத்து வீட்டு கதை போல இருப்பது.
நடிகர்கள் இமேஜ் என்றும் வலைக்குள் சிக்காமல் இந்த கதைக்குள் பொருந்தியது .
கடைசியாக இந்த படத்தின் இயக்குனர் A. Bhim Singh இந்த பெரிய நடிகர் பட்டாளத்தை மிக சரியாக வேலை வாங்கி இருக்கிறார் .
இந்த படத்தின் தாக்கம் அது வரையில் வெறும் ராஜா ராணி படங்கள் மட்டுமே வந்து கொண்டு இருக்கையில் இந்த பா series வெற்றிகள் நிறைய சமுக படங்கள் வர துவங்கியது .
இந்த படங்களினால் குறைந்தபட்சம் 10 நபர்கள் மனம் மாரி இருப்பார்கள் .

ScottAlise
23rd May 2013, 09:36 PM
பாகப்பிரிவினை

ஒரு குடும்பத்தின் மூத்த மகன் ஆன நடிகர் திலகம் தன 7 அவது வயதில் கரண்ட் ஷாக் அடித்தால் ஒரு கை மற்றும் கால் ஊனம் ஆகிறது .நடிகர் திலகம் தன பெரியப்பா (TS. Balaiah ) , பெரியம்மா (C. K. சரஸ்வதி), தன் அப்பா (S. V. Subbaiah ) , அம்மா (M. V. ராஜம்மா ) உடன் ஒரு கிராமத்தில் வாழ்கிறார் . நடிகர் திலகத்தின் தம்பி நம்பியார் ஒரு பட்டதாரி . CK சரஸ்வதி யின் தம்பி MR ராதா சிங்கப்பூர் ல் இருந்து தன் தங்கை உடன் வருகிறார் . அவர் ஒரு பாம்பு போல . அவர் வந்த உடன் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது இதனால் சொத்து பாகப்பிரிவினை செய்யபடுகிறது . நம்பியார் MR ராதா வின் தங்கையை கல்யாணம் பண்ணிக்கிறார் . சிவாஜி அவர் வீட்டில் வேலை செய்யும் சரோஜா தேவி யை கல்யாணம் செய்து கொள்கிறார் . இவர்களுக்கும் ஆன் குழந்தை பிறக்கிறது .

நம்பியாரும் , MR ராதாவும் சென்னை செல்கிறார்கள் . அங்கே MR ராதா ஒரு ஷோ நடத்தி காசு செலவு செய்கிறார் . அவர் பேச்சை நம்பி MN நம்பியார் தன் ஆபீசில் இருந்து 75000/- திருடி MR ராதா விடம் கொடுக்கிறார்.

சிவாஜி யும் சரோஜாவும் சென்னைக்கு சிவாஜியின் மெடிக்கல் treatment காக வருகிறார்கள் . வந்த இடத்தில MR ராதா சிவாஜியின் குழந்தை யை கடத்தி தன் ஷாவுக்கு பயன்படுத்தி கொள்கிறார் . இதை தடுக்கும் முயற்சில் சிவாஜிக்கு கரண்ட் ஷாக் அடித்து உடம்பு சரியாகிறது . குடும்பம் மீண்டும் ஒன்று சேர்கிறது.

ஒரு குடும்பம் அதுவும் கூட்டு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் அதுவும் இந்த மாதிரி பெரிய குடும்பத்தில் இருப்பவர்கள் , அதுவும் இந்த மாதிரி குடும்பத்தை வழி நடத்துவார்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகவும் நன்றாக வாழ்ந்து காட்டி இருப்பர் பாலையா .தன் தம்பி மகன் சிவாஜியிடம் அவர் காட்டும் கரிசனம் , sv சுப்பையா தன் மகனுக்கு சில நாட்கள் மருந்து சாப்ட்ட வைத்தியர் சொன்ன மாத்திரைகளை வங்கி வரும் சொன்ன பொழுது அதுக்கு பாலையா அலட்டிகொள்ளாமல் சொல்லும் வார்த்தை என் உடம்பு குணமாக வரைக்கும் சாப்பிடட்டுமே .

பாகப்பிரிவினை அனா உடன் அதை வாங்க மறுத்தும் , அழுதும் தன்னால் தன் இது நடந்தது என்று கண்டு மறுகவதும் , அதே பாலையா தன் மனைவி சரோஜா தேவிக்கு மாம்பழம் கிடைக்காமல் செய்ததும் , டக் என்று இரண்டு மாம்பழத்தை எடுத்து சிவாஜியிடம் குடுத்து தன் மனைவியிடம் குடுக்க சொல்லும் இடம் மிகவும் எதார்த்தம் .

MN நம்பியார் நல்லவர் ஆனால் எடுப்பர் கைபிள்ளை அதனால்
MR ராதா விடம் ஏமாற்றபட்டு தன் தவறை உணர்கிறார் .அதே நம்பியார் MR ராதா வின் பேச்சை கேட்டு தன் தந்தை உடம்பு சரி இல்லாத பொழுது கல்யாணம் செய்து கொள்வதும் , சிவாஜியை அவமானம் படுத்தும் பொழுதும் , அதே சிவாஜியை சென்னையில் சந்திக்கும் பொழுது குற்ற உணர்வால் புழுங்கும் பொழுது நடிப்பில் ஸ்கோர் செய்து விடுகிறார் .

C. K. சரஸ்வதி எப்படி ஒரு பெண் இருக்க கூடாது என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு . இவ்வளவு கல் நெஞ்சம் படைத்த பெண்கள் இருபர்களா என்று ஆச்சர்யம் , கலந்த அதிர்ச்சி .

சரோஜா தேவி நம்ம நடிகர் திலகத்துடன் நடிக்கும் பொழுது அவருக்கு நல்ல நடிக்க வரும் என்பதை நிலை நாட்டி விதிக்கிறார் மிச்ச படங்களை போல் இல்லாமல் இதில் மிக நன்றாக நடித்து உள்ளார் .
நடிகர் திலகம் கல்யாணம் வேண்டாம் என்று மறுக்கும் பொழுது அதுக்கு அவர் கூறும் சில வார்த்தைகள் மிக இயல்பு .

அடுத்தது நம்ம சிங்கப்பூர் சிங்காரம்
எனக்கு பிடித்த MR ராதா .
அவர் நடிக்கும் நிறைய படங்களில் ஹீரோவை dominate செய்து ஸ்கோர் செய்து விடுவர் . இந்த படத்தில் சும்மா பிச்சு உதறி இருப்பர் .
முதலில் நடிகர் திலகம் உடன் சண்டை இடுவதும், வீட்டுக்கு வந்த உடன் பாலையா வின் முடியை பார்த்து இது என்ன குடுமி , எங்க அக்காவை சிங்கப்பூரில் கல்யாணம் செய்து குடுத்து இருக்கலாம் என்று சொல்லும் இடம் டாப் . MN நம்பியார் புட்டு சாப்பிட போகும் பொழுது வெளி நாட்டில் நீர் ஆவி யில் ராக்கெட் விடுறன் , நீங்க அதுல புட்டு சப்ப்டுகிரிங்க .தன் தங்கை சிங் சங் ஜாம் சபிடிவதும் , அது எதுல தயாரிக்க பட்டுஇருக்கு என்று கேட்கும் பொழுது கேட்காதே, அதை போட்டுகிட்ட தால மூஞ்சி யில் சுருக்கம் இல்லை .
அதே MR ராதா நம்பியார் பணம் கேட்கும் பொழுது என்ன கொள்ள செஞ்சுட்ட ஜெயில்க்கு போற சும்மா ஒரு 6 மாசம் நா வேணும் நா எ கிளாஸ் வாங்கி தரேன் . artists background யை பத்தி கேட்காதே

இப்படி சொல்லி கொண்டே போகலாம்

ஒரு கூட்டு குடும்பத்தில் மூத்த பயன் அக பிறகும் ஒரு பையன் எப்படி இருக்க வேண்டும் , எவ்வளவு விட்டு தர முடியுமோ அவ்வளவு விட்டு தர வேண்டும் அப்போ தன் அந்த குடும்பம் நல்ல இருக்கும் .இது தன் இந்த படத்தில் நடிகர் திலகத்தின் பத்திரத்தின் அடித்தளம் . basically நடிகர் திலகம் கூட்டு குடும்பத்தில் இருந்து வந்ததால் அவருக்கு இது ஒரு cakewalk . ஓவர் அக்டிங் என்ற பேச்சுகே இடம் இல்லாமல் தன் ஒரு complete டைரக்டர்'s ஆர்டிஸ்ட் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிருபது உள்ளார் . இது புரியாமல் சில பேர் பேசும் பொழுது கோவம் வரவில்லை மாறாக சிரிப்பு தன் வருகிறது . எங்க எப்போ எப்படி நடிக்க வேண்டுமோ அதுக்கு அனுசரித்து நடித்து கொடுக்க குடியவர் இவர்
ஒரு படத்தில் ஒரு அழகான ஹீரோவை படம் பூராவும் இப்படி உடல் ஊனமுற்றோர் அக காட்டி இருப்பர்கள, அதுவும் ஒரு வில்லன் படம் பூராவும் அந்த ஹீரோவை நொண்டி என்று சொல்வதற்கு இடம் அளிக்கிறார் என்றால் நடிகர் திலகத்துக்கு நடிப்பு அவர் காட்டும் பக்தி , கேரக்டர் மீதும், அந்த கதை மீதும் இருக்கும் அசைக்க முடியாத
நம்பிக்கை யை காட்டுகிறது .
பொதுவாக ஒரு ஹீரோ ஒரு பாடல் காட்சியிலோ, ஒரு fight சீன் ல் , அறிமுகம் ஆவார் இதில் தன் வீட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்து , தன்னை காப்பாத்த சொல்லி கூப்பிடும் பொழுது அறிமுகம் ஆகிறார் .
ஒரு கிராமத்து படிப்பு வாசனை இல்லாத , தன் குறையை பெருசாக எடுத்த கொல்லாத , ஒரு மனிதர் , தன் அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை என்ற பொழுது முருகனிடம் வேண்டி கொள்வதும், வெள்ளந்தியாக MR ராதாவை சிங்கப்பூர் an என்று சொல்லி சண்டை போடுவதும் , தன் தம்பி தன்னை புரிந்து கொள்ளாமல் சென்றவுடன் உருகுவதும் , அதே தம்பியிடம் MR ராதா வின் தங்கையை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கெஞ்சுவதும், அதே தம்ப்பி தன் தவறை உணர்த்து தன் அண்ணனை தன் வீட்டுக்கு அழைத்ததும் , நாசுக்க மறுக்கும் இடம் இயற்கை நடிப்புக்கு ஒரு எடுத்துகாட்டு .

தன் தம்பியின் மனைவிக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் இருப்பதை தெரிந்து கொண்டு தானாகவே ஒரு பெண் மருத்துவரை அழைத்து வருவது ஆபத்து காலத்தில் உதவுதுக்கு ஒரு உதாரணம் .
தன்னுடைய குழந்தையை பார்க்கும் பொழுது அதன் கை, கால் யை தடவி பாத்து அது normal aka இருப்பதை உறுதி படுத்தி கொள்வது என்ன வென்று சொல்வது இவர் நடிப்பை பற்றி .

பாடல்கள் அனைத்தும் குறிப்பாக
என் பிறந்தாய் மகனே என்ற பாடல் varigalum அதை compliment செய்யும் விதத்தில் இசை இருப்பதும், அதில் நடிகர் திலகம் ஒத்த கை உடன் தன் குழந்தையை தலாட்டும் தோரணை , rocking .
மொத்தத்தில் இந்த படத்தில் அனைவரும் கலக்கி இருகிறார்கள் .

RAGHAVENDRA
23rd May 2013, 10:10 PM
NEXT IN THE FILMOGRAPHY THREAD

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/AAnaicollage01_zps210cd854.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/AAnaicollage01_zps210cd854.jpg.html)

eehaiupehazij
23rd May 2013, 10:46 PM
dear kannan. welcome to this thread. As a senior member I would like to give you some 'tips' for your safe documentation in future. You love NT and admire.... keep it by heart. If any other culprits write or comment bad about our NT don't get emotion and react enthusiastically but just remain a silent spectator! The moderator of this thread will erase your defensive writings too under the disguise of cleaning the thread! Just enjoy the fun and frolic in this thread, keeping a distance from comments since none of the members except a very few sensitive fans of NT will come to your help, when NT is mud-slung!

Murali Srinivas
24th May 2013, 12:58 AM
வாசு சார் அவர்களுக்கு,

உங்களின் பல பதிவுகளைப் பற்றி இந்த ஒரே பதிவில் பேச வந்துள்ளேன்.முதலில் உங்களின் என் கிராமம் என் மக்கள் பதிவு பற்றி. பலரும் சொல்லிவிட்டார்கள் நான் புதிதாக என்ன சொல்லி விட முடியும்? சினிமா அவ்வளவாக கலக்காத ஒரு தனி கிராமிய மனம் கமழும் பதிவை யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பதிந்து அனைவரையும் ஒரு கிராமீய சுற்றுலா கூட்டிச் சென்ற உங்களுக்கு வாழ்த்துகள். அந்த பதிவின் மேன்மையே அதில் தொனித்த ஜீவன். எப்படி பாதுகாப்பு படப்பிடிப்பு பதிவில் ஒரு ஜீவன் இருந்ததோ, எப்படி சந்திப்பு ஓபனிங் ஷோ அனுபவ பதிப்பில் ஒரு ஜீவன் இருந்ததோ அதே உயிர் துடிப்பு இந்த பதிவிலும் எதிரொலித்தது. ராமாபுரத்திலும் நமது ரசிகர்கள் ராஜ்ஜியம்தான் என்பதை அழகாய் எடுத்துக் காட்டியிருந்தீர்கள்.

அடுத்து நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வரிசை.அனைத்து படங்களுமே அருமை என்ற போதிலும் அந்த பாவை விளக்கு படப்பிடிப்பு நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மனதை அள்ளிக் கொண்டு போகிறது.

நாயகியர் வரிசையில் மாலினி நல்ல தேர்வு. உங்களுக்கே உரித்தான பாணியில் அவரைப் பற்றிய கமன்ட் கூட ரசிக்க வைத்தது [ஆண் பிள்ளைத்தனமான உடல்வாகு].அது உண்மை என்ற போதிலும் அவரிடம் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்தது.

சண்டைக் காட்சிகளைப் பற்றிய உங்கள் தொடர் சொல்லவே வேண்டாம். எந்தெந்த சண்டைக் காட்சியை எப்போது எடுத்துப் போட வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு சொல்லித் தர வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் அந்த 57 வயதில் சண்டைக் காட்சியை ரசிக்க முடிந்தது.

இனி உங்களின் ஆதங்கப் பதிவிற்கு வருகிறேன். நானெல்லாம் நிறைய எழுதி விட்டதால் இப்போது என்னை தொந்தரவு செய்வது முறையாக இருக்காது என சொல்லியிருந்தீர்கள். நிறைய எழுதி விட்டதால் வர வேண்டாம் என்ற எண்ணம் எனக்கு என்றைக்குமே தோன்றியதில்லை. சொல்லப் போனால் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் இடையில் இருக்க கூடிய தடை என்பது நேரக் குறைவுதான். இது அனைவருக்குமே பொதுவானது என்ற போதிலும் என் விஷயத்தில் அதிகமாகவே இருக்கிறது. பகலில் நமது மையம் இணைய தளத்தையோ நமது திரியையோ பார்க்கும் வாய்ப்பு கூட எனக்கு இல்லை.இரவில் வீட்டில் வைத்து மற்றுமே இவற்றை படிக்கவும் பங்கு பெறவும் முடியக் கூடிய சூழல். அந்த குறுகிய காலயளவில் தினந்தோறும் பங்களிப்பது பதிவிடுவது என்பது சற்று சிரமமான வேலை. ஆகையால்தான் பதிவுகள் குறைகிறதே தவிர மற்றப்படி வேறு எந்த காரணமுமில்லை. இதை முன்னரே பலமுறை இங்கே சொல்லியிருக்கிறேன். இந்த பதிலை நான் பதிவிட்டிருக்கும் நேரத்தை பார்த்தாலே அது புரியும். எனினும் அடிக்கடி பதிவிட நிச்சயம் முயற்சிக்கிறேன். இங்கே மட்டுமல்ல, நீங்கள் அடிக்கடி வேண்டுகோள் விடுக்கும் filmography திரியிலும் பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறேன்.

இது தவிர சில தவிர்க்க முடியாத வெளியூர் பயணங்களும் சில நேரங்களில் இது போன்ற சூழல் உருவாவதற்கு காரணமாகி விடுகிறது. அந்தக் காரணத்தினால் சென்ற ஞாயிறன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட இருவர் உள்ளம் திரைப்படத்தையும் நமது NT FAnS அமைப்பின் சார்பில் திரையிடப்பட்ட ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்தையும் மிஸ் செய்ய நேர்ந்தது.

இறுதியாக உங்கள் வேண்டுகோள் பதிவு. Antony-ஐயும் Arun-ஐயும் என் கைவண்ணத்தில் படிக்க ஆசை என்று எழுதியிருந்தீர்கள். எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் இருவரும் உங்கள் ஊனோடும் உயிரோடும் ஒன்றாய் கலந்தவர்கள். நானும் அவர்களை மிகவும் ரசித்திருக்கிறேன், ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் உங்கள் அளவிற்கு அவர்களைப் பற்றி என்னால் எழுத முடியுமா என்பது சந்தேகமே. இதை சொல்லும்போது வேறு ஒன்று நினைவிற்கு வருகிறது. சிறிது கால அவகாசம் கொடுங்கள். முயற்சி செய்கிறேன்.

அனைத்திற்கும் மீண்டும் நன்றி.

அன்புடன்

Gopal.s
24th May 2013, 07:53 AM
டாய் ,
அது என்ன முரளியை கூப்பிட்டு ஞான ஒளி யை ஒப்படைக்கிறாய்? chekhov பாணியும் oscar Wilde இணைவில் வந்த இந்த அதிசயத்தை நான் எழுதாமல் உனக்காக உன் படமாயிற்றே என்று விட்டு வைத்தால் ,நீ என்ன இன்னொருத்தன் கையிலே குடுக்கிறது? மரியாதையாய் நீயே எழுது.

Gopal.s
24th May 2013, 08:02 AM
நிறைய எழுதி விட்டதால் வர வேண்டாம் என்ற எண்ணம் எனக்கு என்றைக்குமே தோன்றியதில்லை. சொல்லப் போனால் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால் இடையில் இருக்க கூடிய தடை என்பது நேரக் குறைவுதான். இது அனைவருக்குமே பொதுவானது என்ற போதிலும் என் விஷயத்தில் அதிகமாகவே இருக்கிறது. பகலில் நமது மையம் இணைய தளத்தையோ நமது திரியையோ பார்க்கும் வாய்ப்பு கூட எனக்கு இல்லை.இரவில் வீட்டில் வைத்து மற்றுமே இவற்றை படிக்கவும் பங்கு பெறவும் முடியக் கூடிய சூழல். அந்த குறுகிய காலயளவில் தினந்தோறும் பங்களிப்பது பதிவிடுவது என்பது சற்று சிரமமான வேலை. ஆகையால்தான் பதிவுகள் குறைகிறதே தவிர மற்றப்படி வேறு எந்த காரணமுமில்லை. இதை முன்னரே பலமுறை இங்கே சொல்லியிருக்கிறேன். இந்த பதிலை நான் பதிவிட்டிருக்கும் நேரத்தை பார்த்தாலே அது புரியும். எனினும் அடிக்கடி பதிவிட நிச்சயம் முயற்சிக்கிறேன். இங்கே மட்டுமல்ல, நீங்கள் அடிக்கடி வேண்டுகோள் விடுக்கும் filmography திரியிலும் பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறேன்.
அனைத்திற்கும் மீண்டும் நன்றி.

அன்புடன்
கோபாலா கோபாலா செட்டியார் மாதிரி அலாரம் வைத்து எழுந்து பதிவிடுவதாக ,நம்ப தகுந்த ஒற்றர் வட்டாரத்தில் இருந்து தகவல்.

vasudevan31355
24th May 2013, 08:16 AM
உனக்குத்தான் தனியே ஒரு திரியை ஒதுக்கி தனிக்குடித்தனம் வைத்தாயிற்றே! ஒழுங்கா குடித்தனம் பண்ணு. மாமியா வூட்டுக்கு அடிக்கடி வந்து தொல்லை கொடுக்காதே! நீ அங்கு என் தெய்வம் ஆண்டனியைப் பற்றி பிட்டு பிட்டு வை. விருந்தாளியாய் நானும் சில நாட்கள் வந்து உன்னுடனேயே தங்கி இருக்கிறேன்.

முரளி சார் எனக்கு (எல்லார்க்கும்) புரியும்படி அற்புதமாக box office உடன் எழுதுவார். எனக்கும் dictionary தேவையிருக்காது. உன் தூண்டில்ல அந்த மீன் மாட்டாது நைனா. (நைனான்னவுடனே தெலுங்குக்காரன் என்று பிரம்பெடுத்து வராதே) வெவ்வவ்வெவ்வே... வீடு பார்த்துக் கொடுத்தால் போக மாட்டேன் என்றால் உன்னை என்ன செய்வது? ம்ம்ம்ம்....சரி... சவுரி சார் தான் உன்னைக் கட்டி மேய்க்க சரியான ஆ(வா)ளு.

vidyasakaran
24th May 2013, 08:33 AM
நன்றி ராகுல்ராம் அவர்களே. தாங்கள் தமிழில் எழுதத் தொடங்கியதற்கும்.


பாகப்பிரிவினை

ஒரு குடும்பத்தின் மூத்த மகன் ஆன நடிகர் திலகம் தன 7 அவது வயதில் கரண்ட் ஷாக் அடித்தால் ஒரு கை மற்றும் கால் ஊனம் ஆகிறது .நடிகர் திலகம் தன பெரியப்பா (ts. Balaiah ) , பெரியம்மா (c. K. சரஸ்வதி), தன் அப்பா (s. V. Subbaiah ) , அம்மா (m. V. ராஜம்மா ) உடன் ஒரு கிராமத்தில் வாழ்கிறார் . நடிகர் திலகத்தின் தம்பி நம்பியார் ஒரு பட்டதாரி . Ck சரஸ்வதி யின் தம்பி mr ராதா சிங்கப்பூர் ல் இருந்து தன் தங்கை உடன் வருகிறார் . அவர் ஒரு பாம்பு போல . அவர் வந்த உடன் குடும்பத்தில் பிரச்சனை வருகிறது இதனால் சொத்து பாகப்பிரிவினை செய்யபடுகிறது . நம்பியார் mr ராதா வின் தங்கையை கல்யாணம் பண்ணிக்கிறார் . சிவாஜி அவர் வீட்டில் வேலை செய்யும் சரோஜா தேவி யை கல்யாணம் செய்து கொள்கிறார் . இவர்களுக்கும் ஆன் குழந்தை பிறக்கிறது .
.

m.r.ராதாவின் தங்கை சிவாஜி, நம்பியாருக்கு சித்தி முறை வருமே!

vasudevan31355
24th May 2013, 09:03 AM
டியர் முரளி சார்,

தங்கள் உயரிய பாராட்டிற்கு என் தலைவணங்கிய நன்றிகள்.

தங்களுடைய நேரமின்மையை நன்கு அறிந்தவன் நான். அதனால்தான் தங்களை கைபேசியில் அழைக்க பலமுறை யோசிப்பேன். நாள் முழுவதும் ஆபிஸில் உழைத்துவிட்டு இரவும் வந்து பதிவிடுவது மிகச் சிரமமான ஒரு வேலை. (சில பேராட்டம் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறோம் என்று ஆபிஸ் கம்ப்யூட்டரில் அரட்டை அடிக்க தங்களாலும் முடியாது. என்னாலும் இயலாது. பலமுறை இரவு நேரங்களில் தாங்கள் பதிவிடுவதை பார்த்திருக்கிறேன். தங்கள் உடல்நலனும் மிக முக்கியமானது.

தங்களைப் போன்ற அனுபவசாலிகளின் எழுத்துக்களே எங்களையெல்லாம் வழி நடத்துகின்றன. தாங்கள் பாதை அமைத்துக் கொடுத்துள்ளீர்கள். நாங்கள் சுகமாக அதில் பயணித்து வருகிறோம்.

'இருவர் உள்ளம்' மிஸ் ஆனது பற்றி கவலை வேண்டாம். நான் பதிவு செய்து வைத்துள்ளேன். அடுத்த முறை தங்களை சந்திக்கையில் தருகிறேன்.

தாங்கள் சொன்னது போல நம் திலகத்தைப் பற்றி எழுத பத்து ஆயுள் இருந்தாலும் போதாது.

நேரம் கிடைக்கையில் 'ஞானஒளி' பற்றி எழுதுவதாக நீங்கள் சொல்லியிருப்பது எனக்குக் கிடைக்க இருக்கும் 'ஜாக்பாட்'. கோபால் அவர் பாணியில் பிய்த்து உதறுவார். மொத்தத்தில் எனக்குதான் கொண்டாட்டம்.

மீண்டும் தங்களுக்கு என் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

vasudevan31355
24th May 2013, 09:13 AM
ராகுல்,

'பாகப்பிரிவினை' பதிவை எதிர்பாராமல் அளித்து வியக்க வைத்து விட்டீர்கள். அருமையான தேர்வு. தங்கள் தந்தைக்கு எங்கள் வணக்கங்களைத் தெரிவியுங்கள். வசூலில் இமாலய சாதனை புரிந்த படம். மறு வெளியீடுகளில் வசூலில் மிரட்டிய படம். இருபது வருடங்களுக்கு முன் பண்ருட்டி புவனேஸ்வரி திரையரங்கில் மறு வெளியீட்டில் பேயோட்டம் ஓடியது. தினத்தந்தி கடைசி பக்கத்தில் half பக்கத்திற்கு ஒரு அருமையான விளம்பரம் அளித்திருந்தார்கள். புவனேஸ்வரி திரையரங்கு ஜனத்திரளில் நிரம்பி வழியும் புகைப்படத்துடன் இரண்டாவது வாரம் வந்த விளம்பரம் அது. எங்கேயோ மிஸ் ஆகி விட்டது. பண்ருட்டியில் வெளிவந்த இரண்டாவது ரிலீஸ் படங்களில் பாகப்பிரிவினையை இதுவரை எந்தப் படமும் மிஞ்சியதாகத் தெரியவில்லை. அருமையான பழைய நினைவுகளை தங்கள் பதிவு மூலமாக ஞாபகப்படுத்தியதற்கு நன்றி!

இன்னும் தமிழில் கோர்வையாய் எழுதுங்கள். உங்களால் முடியும். நீங்கள் எங்களுக்குக் கிடைத்த செல்லப்பிள்ளை.

ScottAlise
24th May 2013, 10:21 AM
நன்றி ராகுல்ராம் அவர்களே. தாங்கள் தமிழில் எழுதத் தொடங்கியதற்கும்.m.r.ராதாவின் தங்கை சிவாஜி, நம்பியாருக்கு சித்தி முறை வருமே!

cha its my bad mistake, thanks Vidyasankankar sir for pointing it out.

Gopal.s
24th May 2013, 10:28 AM
உனக்குத்தான் தனியே ஒரு திரியை ஒதுக்கி தனிக்குடித்தனம் வைத்தாயிற்றே! ஒழுங்கா குடித்தனம் பண்ணு. சரி... சவுரி சார் தான் உன்னைக் கட்டி மேய்க்க சரியான ஆ(வா)ளு.
சம்சாரம் அது மின்சாரம் ரகுவரன் போல, தனி குடித்தனம் போனாலும் லீவ் நாட்கள்,ஓய்வு நாட்களில் வந்து உங்களோடுதான் சாப்பிட்டு(ஓசியில்தான்),கழுத்தறுத்து விட்டு செல்வேன்.

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள கண்ணியமான சௌரி சாரை, இந்த மாதிரியா அடியாள் range க்கு use பண்ணுவது?

Gopal.s
24th May 2013, 10:35 AM
முரளி ,
உன் வருகைக்கு நன்றி. உன் நேரமின்மை புரிகிறது. ஆனால் நீ எனக்கு தனி குடித்தனம் ஏற்பாடு செய்ததும் இங்கு வருவது பலவித யூகங்களுக்கு இடமளிக்கிறது.
jokes apart , உன் எழுத்துக்கள் எப்பவுமே திரிக்கு உத்வேகம் கொடுக்கும் சக்தி கொண்டது. சனி,ஞாயிறுகளில் கொஞ்சம் நேரம் ஒதுக்கு. கார்த்திக் சாரையும் அழைத்து வா.

ராகுல்,
வாழ்த்துக்கள். paa பேச்சை கேட்டு பா வரிசை வரிசை படங்களை பார்ப்பது சந்தோசம்.

ஆதிராம் சார்,
ரொம்ப நாள் கழித்து தமிழை கை பிடித்து அழைத்து வந்ததற்கு நன்றி. தங்கள் குறை எனக்கும் உண்டு.பம்மலார் ,வாசு,வேந்தர் மனசு வைத்தால் மார்க்கமுண்டு.

Gopal.s
24th May 2013, 10:38 AM
வேந்தரே,
தங்களுக்கு நான் பட்ட கடனை அடைக்க இன்னொரு பிறவி வேண்டும். நான் மொத்தம் எழத எடுத்து கொண்டதை விட அதிக நேரம் எடுத்து ஒழுங்கு படுத்தி உதவியுள்ளீர்கள். மிக்க நன்றி.

KCSHEKAR
24th May 2013, 03:23 PM
திரு.கண்ணன் அவர்களே,

வருக! வருக!

KCSHEKAR
24th May 2013, 03:25 PM
திரு.முரளி சீனிவாஸ் அவர்களே,

சிவாஜியின் சாதனை சிகரங்கள் திரியில் தங்களுடைய பதிவுகளை தற்போதுதான் படித்தேன். மிகவும் சிறப்பான அரிய தகவல்களுடன் கூடிய பதிவு. நன்றி.

KCSHEKAR
24th May 2013, 03:26 PM
திரு.ராகுல் அவர்களே,

தங்களுடைய பாகப்பிரிவினை பதிவும், தங்களுடைய தந்தையார் பற்றிய தகவலும் சிறப்பு.

KCSHEKAR
24th May 2013, 03:28 PM
திரு.ராகவேந்திரன் அவர்களே,

தங்களுடைய மோகனப்புன்னகை பாடல் இணைப்பும் அதற்கு தங்களுடைய கருத்துக்களும் அரு

KCSHEKAR
24th May 2013, 03:29 PM
திரு.வாசுதேவன் சார்,

புகைப்பட வாரம், சண்டைக் காட்சிகள், நடிகர்திலகத்தின் நாயகியர் என்று தங்களுடைய தொடர்கள் அனைத்தும் அசத்தல். நன்றி.

KCSHEKAR
24th May 2013, 05:38 PM
Dinamalar & Malaimalar - Thanjavur News

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/DinamalarThanjavur_zps5a0eb56b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/DinamalarThanjavur_zps5a0eb56b.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarThanjavur_zpse110efb3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarThanjavur_zpse110efb3.jpg.html)

Gopal.s
24th May 2013, 06:53 PM
எஸ்வி சார்,
திரும்ப திரும்ப சீண்டும் பதிவுகள் தொடர்கின்றன. தங்கள் பதிவில் நடிப்புலக மாமேதையை நீக்கி விடுவது நல்லது. ஏனென்றால் நடிகர்திலகம் பெற்றதுதான் திறமையால் மட்டுமே அடைந்த உண்மையான மக்கள் செல்வாக்கு. மாய பிம்பங்களின் ஏமாற்று விளையாட்டல்ல.
தங்களை பற்றி நல்ல image உள்ளது. விதண்டா வாதம் தலை தூக்க விடாதீர்கள்.அப்புறம் கண்ணதாசன் இடை பட்ட காலத்தில் எழுதியவைகளை நினைவு கூற வேண்டியிருக்கும்.
அத்தோடு தங்கள் பதிவு கலைஞானி கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களையும் மிக வேதனையடைய செய்யும். எல்லோரும் நல்ல திறமையை காட்டி புகழ் பெறத்தான் திரையுலகிற்கு வந்தார்களேயன்றி ,திரை புகழை வைத்து அரசியல் லாபம் அடைய அல்ல.

Gopal.s
24th May 2013, 07:36 PM
மாசானம் சார்,
நீங்கள் எங்கள் திரிக்கு வந்து போதனை செய்து விட்டு போனதை நினைவு கூறுகிறோம். யாரை எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளுங்கள். ஆனால் உலக தமிழர்களில் உன்னதம் கண்ட எங்கள் திரையுலக தெய்வத்தை சீண்டாதீர்கள். ஆயிரம் நீதி போதனை பாடல் கேட்டும் மற்றவர்களுத்தான் அறிவுரை என்று வாழ்ந்தால்?

Gopal.s
24th May 2013, 07:57 PM
கோபால் ஸார், மக்கள் திலத்தைப் பற்றி மட்டுமே பதிவிடுகிறேன். மற்ற கலைஞர்களை நான் ஒருபோதும் அவதூறு செய்வது/செய்தது இல்லை. என்னுடைய பதிவுகளைப் பார்த்தால் தெரியும். மக்கள் திலத்தைப் பற்றிய Glorification மட்டுமே என்னுடைய பதிவுகள். நன்றி ஸார்.
எஸ்வி சாரின் பதிவுகளில் எங்களுக்கு ஆட்சேபிக்க வேண்டிய பகுதிகள் உள்ளன. அதை நீங்கள் reply with quote செய்துள்ளது உங்களின் போதனையை நீங்களே மீறுவதை காட்டுகிறது. மக்கள் சமூகம் ,சரியான புரிதல் இல்லாத காலத்தில் எவ்வளவோ நடந்திருக்கலாம். popularity அளவை மட்டுமே வைத்து பார்த்தால் காந்தியை விட ஹிட்லர் ,இடி அமீன் முன்னணியில் வர வாய்ப்புண்டு.(அவர்கள் காலத்திலேயே பொய் பிரசாரத்தின் மூலம் அவர்கள் அடைந்த மக்கள் செல்வாக்கை விடவா மற்றவர்கள் அடைய போகிறார்கள் ?)

Gopal.s
24th May 2013, 08:28 PM
நாங்களும் புத்தகங்களில் இருந்து மேற்கோள் காட்டலாமா? நீங்களே சொல்வதற்கு பதில் ஆள் வைத்து சொன்னால் ,அது உங்கள் சார்பில் எழுத பட்ட புத்தகங்களில் இருந்தென்றால்?
இணைய தளத்திலும்,குப்பை புத்தகங்களிலும் இருந்து உங்களை பற்றி மேற்கோள் காட்டி கொண்டு உங்களுக்குள்ளே பேசி கொண்டிருங்கள். எங்கள் உலக தமிழர்களின் ஒப்பற்ற நடிப்பு தெய்வத்தை வீணில் இழுக்க வேண்டாம்.அதை பம்மலாரே விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன்..
ஆனாலும் நண்பர்களை பாராட்டத்தான் வேண்டும். நேருவை பற்றிய பதிவுகளில் இமேஜ் உருவாக்க படும் விதம் பற்றி குறிப்பிட்டு ,ஒப்புதல் வாக்குமூலங்கள் வழங்கியதற்காக.

திரையுலக செல்வாக்கை பொறுத்த வரை நடிகர் திலகம் பெற்ற ,பெற்று கொண்டிருக்கும் ,பெற போகும் செல்வாக்கை மற்றவர்களால் கனவு கூட காண முடியாது.

RAGHAVENDRA
24th May 2013, 08:53 PM
ஒப்பீடு செய்யும் போது பாதிக்கப் பட்டவர் குரல் கொடுப்பது ஜனநாயகத்தில் மட்டுமல்ல, பகுத்திறிவிலும் உலகெங்கும் ஒப்புக் கொள்ளப் பட்ட விஷயம். மீண்டும் மீண்டும் நடிகர் திலகத்தை சீண்டும் விஷயம் வரும் போது அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும். செல்வாக்கு என்பது தேர்தலை வைத்து அளக்கப் படும் விஷயமல்ல என்பதை பல முறை கூறியாகி விட்டது. நடிகர் திலகம் யாருக்காக தான் கஷ்டப் பட்டு வளர்த்த இயக்கத்தை விட்டு விலகினார், யாருக்காக தேர்தலில் ஓட்டுக் கேட்டார் என்பதையெல்லாம் மனசாட்சியுள்ள ஒவ்வொரு எம்.ஜி.ஆர் அவர்களின் ரசிகரும் மறக்க மாட்டார்கள். அதையெல்லாம் மறந்து விட்டு அவர்கள் திரும்பத் திரும்ப நடிகர் திலகத்தின் செல்வாக்கை குறைத்துக் கூறுகிறார்கள் என்றால் அது அவர்களின் மனசாட்சி தான் எடுத்துரைக்க வேண்டும். இதை யார் உணருகிறார்களோ இல்லையோ வினோத் சார் போன்று எம்.ஜி.ஆர். அவர்களின் உண்மையான பக்தர்கள் நினைத்துப் பார்ப்பார்கள் என்று நம்புவோம்.

RAGHAVENDRA
24th May 2013, 10:17 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/IU01_zps765af029.jpg

இந்த முகம் போதுமய்யா எங்களுக்கு ...
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்....
தொடர்வோம் எங்கள் பணியை ...

எம் கடன் தங்கள் புகழ் பாடிக் கிடப்பதே...

venkkiram
24th May 2013, 11:03 PM
"நன்னா சொன்னேள் போங்கோ!" னு உங்ககிட்ட சிவாஜி சொல்லிக்கொண்டே சிரிப்பது போல இருக்கு.

Gopal.s
25th May 2013, 05:07 AM
இந்த மாதிரி புகழ்வதற்கு பதில் திட்டியே எழுதலாமே? நடிகர்திலகம் ,"அவரை மாதிரி செலக்ட் பண்ணி நடிச்சிருக்கணுமாம்.". இதை விட insult தேவையே இல்லை.அப்படியெல்லாம் செய்யாததனால்தான் அவர் உலகத்தில் எந்த நடிகனும் கனவு காண கூட முடியாத அளவு வித விதமான character கள் செய்து உலக புகழ் அடைந்து இந்தியாவிலேயே முதன் முறையாக international Award வாங்கி,அமெரிக்க அரசாங்கத்தால் கௌரவிக்க பட்ட முதல் இந்திய கலைஞர் ஆகி , Chevaliar பெற்று அன்றும் இன்றும் என்றுமே எல்லோரும் போற்றும் படி அவர் தொழிலில் No 1 ஆக விளங்கினார்.அவர்தான் உலகத்துக்கே role model . அவர் வேறு யாரையும் role model ஆக கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அவர் அடைந்திருக்க வேண்டிய உயரம் இன்னும் அதிகம் என்று ஒப்பு கொள்கிறோம். அதை அடைய விடாமல் செய்த "முறைகளும் " எங்களுக்கு தெரியும்.
ராகவேந்தர் சார் சொன்ன படி தேர்தல் வெற்றிகளை வைத்து தீர்மானிக்க படுவதில்லை சாதனைகளும்,உன்னதங்களும்.

Richardsof
25th May 2013, 06:14 AM
நட்புடன் - உரிமையுடன் உரியவருக்கு

நடிகர் திலகம் அவர்களின் நடிப்பை பற்றி மக்கள் திலகம் பல முறை மக்கள் மத்தியிலும் - சினிமா விழாக்களிலும் -புகழ்ந்து பேசியுள்ளார் . கடைசி வரை இருவரும் நட்புடன் இருந்து வந்தனர் .

தொழில் ரீதியாக இருவரின் நிலையும் , நடிப்பும் இருவகையாக இருந்ததால் இரண்டு ரசிகர்கள் குழுவாக பிரிந்தது இயற்கையே.

மக்கள் திலகத்தின் தனிப்பட்ட நடிப்பு

அவரது கொள்கை சார்ந்த கதா பாத்திரங்கள்

கதைக்கு ஏற்ற வசனங்கள் - பாடல்கள் அவருக்கு பொருத்தமாக இயற்கையாகவே அமைந்த காரணத்தால் அவர் படங்கள் மீது மக்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு இருந்தது .

அவரது புகழ் பற்றி சில முரண்பாடான கருத்துக்கள் - விமர்சனங்கள் வருவது தவிர்க்க முடியாதது .

''யாருடைய உயர்வையும் - முன்னேற்றத்தையும் - வளர்ச்சியினையும் கண்டு பொறாமை படவோ - தடுக்கவோ ''
இல்லை . மீண்டும் மீண்டும் அதே கருத்தை கூறுவது
ஏமாற்றத்தின் '' உச்சத்தில் இருக்கும் ஒருவரின் மன நிலை குறித்து பரிதாப படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் .

நடிகர் திலகம் அவர்களின் படங்கள் - அவரது பட சாதனைகள்

தனிப்பட்ட அவரது புகழ் மீது எங்களுக்கு மதிப்புள்ளது .


பத்திரிகைகள் - ஊடகங்கள் - இணயதளம் - மற்றும் பொது மக்கள் ;''விமர்சனம் என்று வரும்போது ,காரணங்களை அலசும்போது ஒப்பீடு செய்யும்போது மாறுபட்ட கருத்துக்கள்
கூறுவார்கள் . அதை தாங்க கூடிய பக்குவம் இல்லாதவரின்
மறு முனை கிண்டல் தாக்குதல் மூலம் அவரது அறியாமையை
வெளிபடுகிறது .

''கூட்டு குடும்பத்தில் இருந்தால் கலகலப்புடன் மகிழ்ச்சியாக வாழலாம் . என்ன செய்வது என் நண்பரை தனிக்குடுத்தனம் வைத்துவிட்டார்கள் . தனிமை அவரை இந்த நிலைமைக்கு தள்ளிவிட்டது .''

எப்படியோ 24 x 7 நம் தலைவரின் நினைவுகள் அவரது நெஞ்சிலும் அலைபாய்கிறது என்பதை அறியும்போது
அனுமன் இதயத்தில் ராமன் உள்ளது போல் நம் நண்பரின் இதயத்திலும் மக்கள் திலகம் இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி
''கடல் கடந்து வாழும் பத்மநாப பாரதவிலாசே ''.

Gopal.s
25th May 2013, 06:36 AM
எஸ்வி சார்,
உங்கள் வருகைக்கு நன்றி. நீங்களே பார்த்திருப்பீர்கள் ,எங்கள் திரியில் யாரையும் குறித்து எந்த எதிர் மறையான கருத்தும் வராமல் கவனமாக தவிர்க்கிறோம். அந்த மாதிரி லட்ச கணக்கில் எதிர்மறை கருத்துக்கள் குவிந்துள்ளன. ஆனால்,எங்கள் நடிகர்திலகத்தை புகழ எங்களுக்கு கோடி விஷயங்கள் குவிந்துள்ள போது , குப்பைகளை தவிர்த்தே வருகிறோம்.
நானும் ஒப்பு கொள்கிறேன்.இருவரும் நட்புடன் இருந்ததை. மலைக்கள்ளன் படத்தில் நடிக்க சொல்லி பட்ஷி ராஜா நடிகர்திலகம் வீட்டு வாசலில் தவம் இருந்த போது ,adventure படத்திற்கு அண்ணனை போடுங்கள் ,எனக்கு தற்போது நேரம் இல்லை என்று தன் போட்டியாளரிடமும் பெருந்தன்மை காட்டியவர் நடிகர்திலகம்.பின்னாளில் இதே பட்ஷி ராஜா நடிகர்திலகத்தை வைத்தே தொடர்ந்து படங்கள் எடுத்தார்.
தாங்கள் செல்வாக்கு விஷயத்தில் தவறான ஒரு விஷயத்தை quote செய்ததால் நான் இடையூறு செய்ய நேர்ந்தது. தொடருங்கள்.
தனி குடித்தனம் என்பதெல்லாம் சரக்குள்ளவர்களுக்கே தகுதியான விஷயம்.அதை பற்றி தாங்கள் கவலை படவே தேவையில்லை.தற்காலத்துக்கு பொருத்தமானதும் கூட..

RAGHAVENDRA
25th May 2013, 07:37 AM
இன்றைய நாளை இனிய நாளாக்க இனிதாய்க் காண்போம் நம் இதய தெய்வத்தை

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/NTIU06_zpsb8597571.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/NTIU06_zpsb8597571.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/NTIU05_zpsd9ed5c98.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/NTIU05_zpsd9ed5c98.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/NTIU04_zps8e2c361b.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/NTIU04_zps8e2c361b.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/NTIU02_zps43a64f7d.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/NTIU02_zps43a64f7d.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/NTIU01_zpsff427102.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/NTIU01_zpsff427102.jpg.html)

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/BANDHAMNT_zpsf3586abd.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/BANDHAMNT_zpsf3586abd.jpg.html)

RAGHAVENDRA
25th May 2013, 07:38 AM
இந்தப் படத்தின் ஒரிஜினல் கிடைக்குமா...

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/NTIU03_zps7297cb4e.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/nt%20snaps/NTIU03_zps7297cb4e.jpg.html)

vasudevan31355
25th May 2013, 08:22 AM
இந்த நாள் இனிய நாளாகும் என்பதில் ஐயமில்லை. அசத்தல் நிழற்படங்கள். அதுவும் பாலாஜியுடன். அசத்தல் ராகவேந்திரன் சார்.

ScottAlise
25th May 2013, 10:24 AM
என்னோட பாகபிரிவினை writeups க்கு hubbers குடுத்த feedbacks க்கு நன்றி .

ScottAlise
25th May 2013, 10:25 AM
பார்த்தல் பசி தீரும்

ஒவ்வொரு பா series படங்களும் ஒரு theme அதாவது ஒரு மைய கரு வின் அடிப்படையில் அமைந்து இருக்கும் . பாகபிரிவினையில் அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பம்தின் நிறைகள் , இந்த பார்த்தல் பசி தீரும் படத்தில் நாடு பற்று, மற்றும் friendship தான் highlight மற்றும் under current theme .

இந்த படம் தின் கதை என்று பார்த்தல் வேலு(ஜெமினி) மற்றும் பாலு (சிவாஜி)வும் , airforce யில் வேலை பார்கிறார்கள் . யுத்தத்தில் அவர்கள் விமானம் ஜப்பான் வீரர்களால் சுடப்பட்டு , அஸ்ஸாம் எல்லையில் காயத்துடன் உயிர் தப்புகிறார்கள் .
இதுக்கு இடையில் ஒரு நாள் சிவாஜி ஜப்பான் வீரர்களால் கைது செய்ய படுகிறார்
இங்கே இந்திரா(சாவித்திரி)யை சந்திக்கும் ஜெமினி அவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .
சில நாட்களில் இந்திய ராணுவம் அவரை கண்டுபிடித்து திரும்பவும் பணிக்கு அழைத்து செல்கின்றனர் .

யுதத்தில் சாவித்திரி வின் கிராமம் அழிந்து விடுகிறது . சாவித்திரி மற்றும் சாவித்ரியின் தந்தையை தேடி செல்லும் வேலு இதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

II ND world வார் முடிந்த உடன் பாலு ஜப்பான் அரசாங்கத்தினால் விடிதலை செய்யப்பட்டு , நேதாஜியின் INA வில் பணியாற்றி விட்டு டெல்லி வந்து சேர்கிறார். அங்கே பேப்பர் விக்கும் ஒரு தமிழ் சிறுவனை சந்திக்கிறார் , அந்த சின்ன பய்யன் தான் கமல்ஹாசன் , அவர் மூலம் தன உடன் பிறவா சகோதரி (சாவித்திரி) உயிரோட இருபதை தெரிந்து கொண்டு , அவர்களுக்கு யாரும் இல்லை என்ற சூழ்நிலையில் அவர்களை தானே அடைக்கலம் தருகிறார் . கதை சென்னைக்கு நகருகிறது. அங்கே ஜெமினி வின் கம்பெனியில் வேலை செய்கிறார் .ஜெமினியை அவர் வீட்டில் சந்தித்து இந்திரா மற்றும் சிறுவன் பாலு உயிருடன் இருப்பதாய் சொல்லல வரும் பொழுது , ஜெமினி வின் மனைவி ஜானகி (சௌகார் ) மற்றும் குமார் ( again கமல் ) யை அறிமுகம் செய்து வைக்கிறார் ஜெமினி , கூடவே சௌகார் ஒரு இதய நோயாளி என்பதையும் தெரிவிக்கிறார் . இதனால் சிவாஜி சொல்ல வந்த உண்மையை சொல்லாமலே சென்று விடுகிறார் .

சில நாட்கள் கழித்து தற்செயலாக சிவாஜியின் வீட்டுக்கு வரும் ஜெமினி மற்றும் சௌகார் அங்கே சிறுவன் கமல் (பாலு) மற்றும் சாவித்திரி யை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

சிவாஜி தனிமையில் ஜெமினியிடம் , இந்திரா (சாவித்திரி)க்கு கண் பார்வை பறிபோய்விட்டது என்ற உண்மையை சொல்கிறார் . மேலும் சாவத்ரியின் தந்தை காலம் ஆகிவிட்டதையும் , தான் அவர்களுக்கு அடைக்கலம் தருவது பற்றி உண்மையை சொல்கிறார் .
இது தெரியாத சரோஜா (சரோஜா தேவி) சிவாஜியை காதலிக்கிறார் . சரோஜா ஜெமினியின் sister in law .
இந்த உண்மை தெரிந்த ஜெமினியால் எதிலும் concentrate செய்ய முடியவில்லை . பாலு மற்றும் குமாரும் நண்பர்கள் நண்பர்கள் ஆகி விடுகிறார்கள் .

பாலுவின் மூலம் சௌகார்க்கு சாவித்திரி தான் சிவாஜியின் மனைவி என்று நினைத்துகொண்டு ஜெமினிவிடம் சிவாஜி யை பற்றி தவறாக சொல்கிறார் .

ஜெமினி சிவாஜி பேரில் தன் குடும்பத்துக்காக சொத்து எழுதி வைக்கிறார் , இதுவும் சௌகார் க்கு பிடிக்கவில்லை .அவர் சரோஜாவுக்கு சிவாஜியை பத்தி சொல்லிவிடிகிறார் . சிவாஜி மற்றும் சரோஜா க்கு இடையில் வாக்குவாதம் வந்து அதை கமல் (பாலு) மற்றும் இந்திரா (சாவித்திரி) கேட்டு விடுகிறார்கள் .

இந்திரா மற்றும் பாலு ஜெமினி யின் வீட்டுக்கு வந்து விடுகிறார்கள் .ஜெமினி உண்ம்மையை உணர்ச்சியை கட்டு படுத்த முடியாமல் உண்மையை சொல்லி விடுகிறார் . அதிர்ச்சி அடைந்த சௌகார்யின் உயிர் பிரிகிறது .சிவாஜி மற்றும் சரோஜா , ஜெமினி மற்றும் சாவித்ரி இணைகிறார்கள் .
படம் இனிதே முடிகிறது

சிவாஜி இந்த படத்தில் சற்று பூசினது போல் இருக்கிறார். அது அவருக்கு , அவர் ஏற்ற்று கொண்ட கதாபாத்திறதுக்கு வலு சேர்க்கிறது . பொதுவாக ராணுவதில் இருந்து வருவோர்கள் இப்பிடி இருப்பதாய் நாம் பார்க்க முடியும் . இந்த படத்தில் அவர் கால் சற்று ஊனம், இருந்தாலும் அதில் ஒரு கம்பீரம் , அந்த நடையில் ஒரு ராஜா நடை . அவர் புருவம் சற்று தடியாக இருக்கிறது . இந்த படத்தில் அவர் கதாபாத்திரம் நட்புக்கும் அவர் எது கொண்ட பொறுப்புக்கும் இடையில் சிக்கி கொண்டு , ஆனால் அதை ஒரு சுமையாக கருதாமல் வாழ்கிறார் , திரையில் மட்டும் இல்லை நம் மனதிலும் தான் . அவர் நடிப்பை சொல்லுவதுக்கு என்னக்கு வயசு பத்தாது, சொல்லி சொல்லி வாய் வலிகிறது அனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை . எப்படி ஒரு நடிகர் எல்லா படத்திலும் தன்னோட பெஸ்ட் யை கொடுக்க முடியாதோ . குறிப்பாக பிள்ளைக்கு தந்தை ஒருவன் யில் அவர் நடிப்பு , கோடி அசைந்ததும் கற்று வந்தாதா என்ற டூயட் ல் அவர் உதடு அசைவு , இனிமையான பாடல் வரிகள் டாப் .
இந்த படத்தை பார்க்கும் பொழுது நமக்கும் இப்படி ஒரு நண்பர் இல்லை என்ற ஒரு வித பொறமை தொற்றி கொள்கிறதை தவிர்க்க முடியாதது.

ஜெமினி முதலில் காதல் வயபடும் காட்சிகள் நல்ல நகைச்சுவை , அது அப்புறம் அவர் இரு கொல்லி நெருப்பாக எறிகிறார். நடிகர் திலகத்துக்கு apt foil , puccka second fiddle . ஒரு வித ஈகோ வும் இல்லாமல் அவருக்கு குடுக்க பட்ட கேரக்டர் யை சும்மா பிச்சு உதறிக்கிறார் .

நடிகையர் திலகம் அசாம் பெண் அக introduce ஆகி , கண் தெரியாமல் நடிப்பில் ஸ்கோர் செய்து , அவரும் அழுது , நம்மளையும் அழ வைத்து விடுகிறார் . சௌகார் யின் பாத்திரம் இரு கோடுகள் , உயர்ந்த மனிதன் யின் செயல் தெரிகிறது . Of Course இந்த படம் தன் முதலில் வந்தது , இந்த படத்தின் பதிப்பு , வெற்றி யின் reach இந்த characters டிசைன் செய்ய பட்டு இருக்கும் என்று நினைக்கிறன் .

பாகபிரிவினை படத்தில் சரோஜா விக்கு நடிப்பு scope அதிகம் இந்த படத்தில் இத்தனை ஸ்டார் performers க்கு இடையில் காணமல் பொய் விடுகிறார் .இருந்தாலும் சிவாஜி உடன் confrontation சீன் யில் கிடைத்த சான்ஸ் யை நன்றாக பயன்படுத்தி கொள்கிறார் .

சிறுவன் கமல் தோல் ரோல்யில் தன் மனசிக குரு நடிகர் திலகம் , ஜெமினி , சாவித்திரி , சௌகார் உடன் நடித்து கல்கி உள்ளார் .

தங்கவேலு காமெடி as usual டாப். குறிப்பாக அவர் ஜெமினி விடம் சிவாஜிக்கு வேலை கேட்கும் பாங்கு.
3 பாடல்கள் சாக வரம் பெற்று விட்டது .
இந்த படத்தின் கதை திரு AC Tirlok . பிற்காலத்தில் சிவாஜியை வெச்சு நிறைய படங்கள் , வெற்றி படங்கள் கொடுத்து உள்ளார்.

பார்தால் பசி தீரும் படத்தை பார்த்தல் பார்வையாளர்களுக்கு நல்ல படம் பார்த்த பசி தீரும் .

ScottAlise
25th May 2013, 10:25 AM
Hope my Tamil is better this time

ScottAlise
25th May 2013, 10:28 AM
Dinamalar & Malaimalar - Thanjavur News

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/DinamalarThanjavur_zps5a0eb56b.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/DinamalarThanjavur_zps5a0eb56b.jpg.html)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/MalaimalarThanjavur_zpse110efb3.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/MalaimalarThanjavur_zpse110efb3.jpg.html)

Nice Initiative to safeguard NT 's movie 's fame

vasudevan31355
25th May 2013, 10:29 AM
நயாகரா மேயர் கௌரவம். ஜவஹர்லால் நேருவிற்குப் பிறகு கிடைக்கப் பெற்ற ஒரே செல்வாக்கான இந்தியன் எங்கள் மனித தெய்வம். நடிக தெய்வத்தின் காலடி எங்கள் மண்ணில் படவேண்டும் என்று வேண்டி விரும்பி அழைத்து கௌரவித்தது அமெரிக்கா.

'செவாலியே' தந்து தனக்கு செல்வாக்கைத் தேடிக் கொண்டது பிரான்ஸ். தலைசிறந்த நடிகர் விருது தந்து ஆசியாவும், ஆப்பிரிக்காவும் தலைவணங்கின. உலக நாடுகளில் தன் நடிப்பால் உன்னதப் புகழ் அடைந்த மமதை இல்லாத மாமேதை.

சென்ற இடமெல்லாம் செல்வாக்கு பெற்ற மாமனிதர்.
அந்நியர் மண் தூக்கி வைத்துக் கொண்டாடியது அவர் பெருமை கண்டு.
அவரை சீண்டி சீரழிந்து போனது நமது மண்.

நஷ்டம் அவருக்கல்ல...
எங்களுக்கல்ல...

இந்த பாழாய்ப் போன பூமிக்கு.

நடிகர் திலகத்தின் செல்வாக்கைக் கண்டு ஓடி ஒளிந்த வடநாட்டு நடிகர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1-39.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/1-39.jpg.html)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-38.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/2-38.jpg.html)

ScottAlise
25th May 2013, 10:29 AM
Dear Ragavendran sir,

Photos are too good especially the black & white one , with pattu sattai, looks like smiling us, with a divine touch

vasudevan31355
25th May 2013, 12:56 PM
இதுவரை எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத இமாலய வசூல் சாதனை புரிந்த, முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்த திரிசூலம் 200-ஆவது நாள் வெற்றிவிழாக் கேடயம்.

http://www.oocities.org/vijayalakshmifilms/trisoolam.jpg

RAGHAVENDRA
25th May 2013, 01:32 PM
உங்களுக்குத் தெரியுமா - அபூர்வத் தகவல் தொடர்

http://insidecroydon.files.wordpress.com/2011/04/david_lean460.jpg

David Lean என்ற புகழ் பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர்-இயக்குநர் நமது பாரத தேசத்திற்கு வருகை புரிந்தது தெரிந்திருக்கும். 1962-63 காலத்தில் நடிகர் திலகத்தை அன்னை இல்லத்தில் சந்தித்தார். நடிகர் திலகம் அவரை உபசரித்து விருந்தளித்ததோடு, பார் மகளே பார் திரைப்படத்தின் அரங்கத்திற்கும் அவரை அழைத்துச் சென்றார். அப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்து டேவிட் லீன் மெய்ம்மறந்து நின்றதெல்லாம் வரலாறு. தெரியாத விஷயம். அந்த வருகைக்கான காரணம்.

http://www.eatsleeplivefilm.com/wp-content/uploads/2012/11/lawrenceofarabia-C40x60-13803-vf.jpg

தனது Lawrence of Arabia திரைப்படத்தில் நடிக்க நடிகர் திலகத்தை அழைப்பதற்கே. நடிகர் திலகம் தனது தாய் மொழியும் தாய்நாடும் பெரிது, அதில் நல்ல பெயர் கிடைத்தாலே போதும் என்ற மொழி உணர்வுடன் அந்த வாய்ப்பை மறுத்து விட்டார். அதன் பிறகு டேவிட் லீன் திலீப் குமார் அவர்களை அணுகியதெல்லாம் வேறு கதை.

நிறைகுடம் தளும்பாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் நடிகர் திலகம்.

vasudevan31355
25th May 2013, 03:11 PM
அசத்தல் ஆர்ட்டில் ஆண்டவன் 'கர்ணன்'

http://fc03.deviantart.net/fs71/i/2012/241/c/f/sivaji_ganesan_by_thelfs-d5cu1t2.png

RAGHAVENDRA
25th May 2013, 05:17 PM
http://tamilmoviesongs.net/wp-content/uploads/2012/03/T.M.-Soundararajan.jpg


from Maalaimalar website:

சென்னை, மே 25-

பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல்நல குறைவு காரணமாக கடந்த 12-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 19-ந்தேதி வீடு திரும்பினார். மூச்சுக் கோளாறுக்கு வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்த டி.எம். சவுந்தரராஜன், பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசை பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார்.

1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனது கம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.

எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் டி.எம். சவுந்தரராஜனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்காகவும் பாடியுள்ளார்.

2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.


நம்முடைய துயரத்தைக் கூற வார்த்தைகள் இல்லை. தமிழ்த்திரையுலகை தாங்கிப் பிடித்த தூண் சரிந்து விட்டது. தமிழ் சினிமா என்றால் டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் பங்கு தான் கண் முன் நிற்கிறது. 91வயது வரை அவர் வாழ்ந்தது நமக்கு ஒரு புறம் ஆறுதல் என்பது தான் சொல்லிக் கொள்ள முடியும். அவரை இழந்து வாடுவது அவர் குடும்பம் மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகமே... அதில் ரசிகர்கள் என்கிற முறையில் நாமும் அடங்குவோம்.

நமக்கு நாமே ஆறுதல் கூறிக் கொள்வது தான் நம்மால் முடியும். அவர் குரலிலேயே ...

இரவல் தந்தவன் கேட்கின்றான் ... அதை
இல்லையென்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா..

நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகமாடும் கலைஞனடா

vasudevan31355
25th May 2013, 05:41 PM
http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/301768_220256808083820_1490824845_n.jpg

http://i1.ytimg.com/vi/h--sHLpguvA/hqdefault.jpg

பாடகர் திலகம் மறைந்தார். இசை தன் புதல்வனை இழந்தது. நீ மறைந்தாலும் உன் குரல் வித்தைகள், ஜாலங்கள் மறையுமோ!

இருமாதங்களுக்கு முன் கூட சுறுசுறுப்பாய் என் தெய்வத்தை வசந்த மாளிகையில் காண ஆல்பர்ட்டுக்கு வந்தாயே! ரசிகரோடு ரசிகராகத்தான் படம் பார்ப்பேன் என்று அவ்வாறே அமர்ந்து உன் குரலுக்கு என் தலைவன் வாயசைத்ததைக் கண்டு பரவசமடைந்தாயே!

அதற்குள் ஏன் பிரிந்து விட்டாய்?

திலகங்களுக்குத் தக்கவாறு தித்திக்கும் தமிழை உச்சரித்து மாயாஜாலங்கள் புரிந்தவனே!

உடலை மட்டுமே பிரிந்துள்ளோம். உன் குரலுடனேயே வாழ்வோம்.

அன்னாரைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கும், ரசிக இதயங்களுக்கும் நடிகர் திலகம் திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

vasudevan31355
25th May 2013, 05:55 PM
பாட்டும் நானே! பாவமும் நானே!

http://i1.ytimg.com/vi/twfWvRYnJTU/hqdefault.jpghttp://i1.ytimg.com/vi/xg_hBWlR3h0/hqdefault.jpg?feature=og

vasudevan31355
25th May 2013, 05:58 PM
இனி இப்படி உன்னை எங்கே காணப் போகிறோம்?

http://i1.ytimg.com/vi/PhJiD2DzGY0/hqdefault.jpg

vasudevan31355
25th May 2013, 06:04 PM
'அருணகிரிநாதர்' படத்தில் திரு.T.M.S அவர்கள்.

http://i.imgur.com/9werq.jpghttp://i.imgur.com/wQdrO.jpg
http://i.imgur.com/8kI5O.jpghttp://i.imgur.com/Ftthm.jpg

vasudevan31355
25th May 2013, 06:06 PM
'பட்டினத்தார்' படப்பிடிப்பில்.

http://directorksomu.com/gallery/films/patinathar/gal_1.jpg

vasudevan31355
25th May 2013, 06:08 PM
'பட்டினத்தார்' படப்பிடிப்பில்.

http://directorksomu.com/gallery/films/patinathar/gal_3.jpg

vasudevan31355
25th May 2013, 06:12 PM
'பட்டினத்தார்'

http://i2.ytimg.com/vi/E8ASzh0elHc/hqdefault.jpg

http://padamhosting.com/out.php/i135850_vlcsnap2012010223h29m51s112.png

vasudevan31355
25th May 2013, 06:14 PM
'கல்லும் கனியாகும்'.திரைப்படத்தில்.

http://i3.ytimg.com/vi/Bp8kuO1Dq-o/hqdefault.jpg

vasudevan31355
25th May 2013, 06:20 PM
'கல்லும் கனியாகும்' திரைப்படத்தில் மிக மிக அபூர்வ அற்புதப் பாடலான

"கை விரலில் பிறந்தது நாதம்.....என் குரலில் வளர்ந்தது கீதம்"....

"உலகமெல்லாம் என் இசை கேட்கும் ....
நல்ல உள்ளமெல்லாம் அதை வரவேற்கும்".....

கண்களில் கண்ணீரை பெருகச் செய்யும் டி.எம்.எஸ்ஸின் மெய் சிலிர்க்க வைக்கும் பாடல். அவருடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Bp8kuO1Dq-o

மற்றுமொரு பாடல் அதே 'கல்லும் கனியாகும்' திரைப்படத்தில்.

"எங்கே நான் வாழ்ந்தாலும் என் உயிரோ பாடலிலே...
பாட்டெல்லாம் உனக்காக பாடுகிறேன் எந்நாளும்...
பாடுகிறேன் என்னுயிரே"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wLcddb8O4M4

"நான் கடவுளைக் கண்டேன்...
என் குழந்தை வடிவிலே"...


http://www.youtube.com/watch?v=pbqQHFzDUOE&feature=player_detailpage

IliFiSRurdy
25th May 2013, 06:28 PM
மக்கள் திலகம் மறைந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பிறகு,
தலைவர் மறைந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு,
அவர்களின் பாடல் குரல் இன்று இயற்கை எய்தியது.
அன்னாருக்கு நமது அஞ்சலியை அற்புதமாக செலுத்தியிருக்கும்
நண்பர்கள் ராகவேந்தர்,வாசு விற்கு நன்றி.
Sounduள்ளவரை சௌந்தரராஜன் இருப்பார்.

Gopal.s
25th May 2013, 06:55 PM
நடிகர்திலகத்திற்கென்றே பிறந்து வளர்ந்து வாழ்ந்த குரல் ,தன்னை மட்டும் வாழ வைத்து கொண்டு ,தன்னை வாழ வைத்தவரை கை விட்டு விட்டது. நான் என்ன சொல்ல போகிறேன்?எத்தனை rafi ,kishore ,S .P .B ,P .B .S வந்தாலும் ஒரு T M S T M S தான். கம்பீரம்,கார்வை,பாவம்,அந்த காந்தர்வ குரல் lower முதல் mid -Octave(Bass - மடி மீது தலை வைத்து, உன் கண்ணில் நீர் , baritone -யாரந்த நிலவு,மலர்ந்தும் மலராத,தூங்காத கண்ணென்று) வரை அப்படியே சொக்க வைக்கும். சில fine musical notes miss ஆனால்தான் என்ன,இவர் உரை நடை பேசினாலும் மற்றவர்களை விட இனிமையே.
அவரை இழந்து வாடும் எனக்கு முதலில் ஆறுதல் சொல்லி கொண்டு , அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
ஒரு முறை வாமனன் சாரிடம் இவரை பார்க்கும் ஆசையை தெரிவித்தேன். இல்லைப்பா இவரு கொஞ்சம் ஒரு மாதிரி. சமயம் பார்த்து சொல்றேன் என்றார். இனி சொர்க்கத்தில் சந்தித்தால்தான் .
எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய அற்புதமான bio graphy T .M .S ஒரு பண்பாட்டு சரிதம் .எழுதியவர்-வாமனன்.

RAGHAVENDRA
25th May 2013, 07:15 PM
தமிழ்

தமி

ஆகி விட்டது.

iufegolarev
25th May 2013, 07:58 PM
The Performance Era of Tamil Cinema Spans for about 49 years.

Tamil Films have undergone a complete transition from a music dominated presentation to Performance dominated Presentation that had music as one component.

Thanks to the advent of Nadigar Thilagam Sivaji Ganesan. His entry into films has completely changed the way things were looked at in those days - Prior To Sivaji.

All Schools of Talents were mastered by one individual named Sivaji Ganesan. He taught Tamil Cinema how to speak the way anything to be spoken, he demonstrated the art of expression and conveying the multiple dimensions-of-feeling of a human relationship, Be it is a husband, lover, brother, uncle, stepfather, young turk ....what not...what not !

Though, there were many veterans who had the capability to showcase...were experts of either one domain or couple of domains and it would not be wrong to mention NOT ALL DOMAINS MASTERED.

Nadigar Thilagam, the first and the only actor who took cinema to the next level in-terms of portrayal even though there were many who out of Professional Jealousy & inferiority complex ensured Betrayal from time to time .

Nadigar Thilagam, the only actor who took Tamil cinema to an international level and not just taking it to the level BUT also ensured it won its distinction and mention !!

It should be admitted that Winning THE BEST ACTOR in the whole of ASIA-AFRO CONTINENT is not just an easy task...Amidst, so many foreign films and better exposed seasoned performance of actors from across the globe, if Nadigar Thilagam could win it WITHIN JUST 7 Years of his coming into the film world that too for his 55th film, am sure, every individual if unbiased and neutral, will accept his capability.

The Second International Distinction for Nadigar Thilagam was in 1962, when he was invited by the Govt of John. F.Kennedy , the then president of United States of America Ambassador representing the Indo-US Arts & Culture Exchange Programme and was made the ONE DAY MAYOR for the City of CAIRO and presented with the GOLDEN KEY OF CAIRO. It is 2013 now & till date NO INDIAN ACTOR received this honor. The Other Indian who was honored with this distinction was Our Indian Prime Minister Pandit Shri. Jawaharlal Nehru.

NT proved he is not just equated with the word famous Regionally (or) Nationally BUT ALSO ACROSS ASIA, US & EUROPE much..much to the ENVY OF OTHERS !!!

This did make other actors / politicians who were always backstabbing him at appropriate opportunities to fume more and more on his professional achievements !!!

The Biggest Achievement which NO OTHER ACTOR could achieve was that making a Rationalist leader who hated Cinema & Actors (whom he addressed as Koothaadi's) to get mesmerized with his performance to the extent of declaring and conferring him on stage the eternal title of "Sivaji". Such was his calibre.

Tamilnadu history may have different views interms of their versions of Nadigar Thilagam Performance that's a different story entangled with political biases, yet all Tamilians at the corner of their heart will confess and feel guilty of their low esteem.

Nadigar Thilagam had no complaints on this yet if we think for a while, we all will realise that POLITICIANS WERE BETTER ACTORS than ACTORS OF ALL AGES !!

Nadigar Thilagam - ANYONE CAN LIKE HIM - ANYONE CAN HATE HIM - BUT NONE CAN IGNORE HIM !!!!

During his period, NO ACTOR's History (or) Political Involvement gets completed without mentioning NADIGAR THILAGAM..! Such was his prowess !!


Nadigar Thilagam - 1952 to 2001 - The Golden years of Cinema !

eehaiupehazij
25th May 2013, 08:14 PM
TMS. Thaen Madhuram Sindhum (TMS) kuralukku sondhakkarar. The Singing Voice of NT like Rafi for Shammi Kapoor, Mukesh for Raj Kapoor and Kishore Kumar for Rajesh Kanna and AMRaja/PBS for GG. But he was unique in modifying his NT base voice to suit MGR or Jaishankar or Ravichandran! Long live TMS fame! Our sincere condolences to this doyen of Tamil Cinema's Play Back history. Unforgettable 'Engae Nimmadhi', Aaru Maname Aaru...... tear jerkers!

iufegolarev
25th May 2013, 08:39 PM
திரு T M சௌந்தரராஜன் அவர்கள் நம்மிடையே உயிருடன் இல்லை என்றாலும் அவருடைய குரல் இந்த புவி உள்ளவரை நிலைத்து இருக்கும். நடிகர் திலகத்துடன் திரு சௌந்தரராஜன் அவர்களுடைய குரலும் நடித்தது என்றால் அது மிகை அல்ல !
மக்கள் திலகம் அவர்கள் அரியணை ஏற முக்கிய ஒரு காரணம் திரு.சௌந்தரராஜன் அவர்களது குரல் பட்டிதொட்டி எங்கும் சென்றடைந்ததும் ஒன்று என்றால் அது அனைவரும் ஒத்துகொள்ளகூடிய ஒரு விஷயமாகும். அந்த அளவிற்கு அவருடைய குரலின் வலிமை ...நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற பாடலாகட்டும்...தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்....ஓடி..ஓடி..உழைக்கணும்...ஊருக்கெல்ல ாம் கொடுக்கணும்..மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்...திருடாதே...பாப்பா..திருடாதே...தூங ்காதே..தம்பி..தூங்காதே...இப்படி முக்கால் வாசி பாடல்கள் பட்டிதொட்டிஎங்கும் மிகுந்த சக்தியாக ஒலித்தது..என்றால் அது மிகையாகாது..! அதே போல Jaishankar, Muthuraman, Nagesh, Rajini, Kamal, sathyaraj, Vijayakanth ஆகிய அனிவருக்கும் அவரகளுடைய குரல் வளதிர்கெற்றால் போல பாடி இருப்பார்...

திரு.சௌந்தரராஜன் அவர்களின் கடினமாக உள்ள பாடல்களைகூட சர்வ சாதாரணமாக பாடும் திறமை நமது நடிகர் திலகத்தின் பல திரைப்படங்கள் வாயிலாக பெரும்பாலும் வெளிகொண்டுவரபட்டது என்றால் அது மிகையாகாது...பாட்டும் நானே....சுந்தரி சௌந்தரி நிரந்தரியே ....இசை கேட்டால் புவி அசைந்தாடும்..யார் அந்த நிலவு...எங்கே நிம்மதி...மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள்...சிந்தனை செய் மனமே...சின்னஞ்சிறிய வன்னபரவை என்னத்தை சொல்லுதாம்மா...எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்....சோதனை மேல் சோதனை...சட்டி சுட்டதட...கை விட்டதட..who is the blacksheep..அது யார்..யார்..யார்..இப்படி பல பாடல்கள்..திரு சௌந்தரராஜன் அவரகளுடைய பல திறமையை வெளிக்கொண்டு வந்தது..!

அதே போல ...இரவு வரும் பகலும் வரும்...அன்புள்ள மான் விழியே...மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்...வீடு வரை உறவு...வீதி வரை மனைவி...மதுரையில் பரந்த மீன்கொடியை ....மற்றும் பக்தி கானங்கள்...புல்லாங்குழல் கொடுத்த..அழகென்ற சொல்லுக்கு முருக...கந்தன் திருநீரணிந்தால்..போன்ற பாடல்கள் என்றும் மறைய அமரத்துவம் கொண்டது...!

அவர் ஆன்மா இறையடி சேர பிரார்த்திகிறேன்...


http://www.youtube.com/watch?v=mS_DsFaQl28

KCSHEKAR
25th May 2013, 09:10 PM
டி.எம்.செளந்தரராஜன் அவர்களுக்கு நமது கண்ணீர் அஞ்சலி.

tacinema
26th May 2013, 02:32 AM
கண்ணீர் அஞ்சலி. TMS - Unparalleled. An era comes to an end. The man, who gave soul to many songs for Sivaji, MGR, Jai Shankr right thru Rajini is no more. May God give courage to the bereaved family during this testing time. RIP.

Gopal.s
26th May 2013, 06:37 AM
360 degree யிலும் நடிகர்திலகத்தை பார்த்து விட்ட திருப்தி. மீண்டும் வருக நண்பரே.

Subramaniam Ramajayam
26th May 2013, 09:19 AM
TMS. Thaen Madhuram Sindhum (TMS) kuralukku sondhakkarar. The Singing Voice of NT like Rafi for Shammi Kapoor, Mukesh for Raj Kapoor and Kishore Kumar for Rajesh Kanna and AMRaja/PBS for GG. But he was unique in modifying his NT base voice to suit MGR or Jaishankar or Ravichandran! Long live TMS fame! Our sincere condolences to this doyen of Tamil Cinema's Play Back history. Unforgettable 'Engae Nimmadhi', Aaru Maname Aaru...... tear jerkers!

Our heartfelt condolences to the family of TMS who was a GIANT SINGER as for as tamil cinema concerned. PATTUM NEEYEE PAVAMUM NEEYEE endru prove panniya PADAGAR THILAGAME. MAY HIS SOUL REST IN PEACE.

Gopal.s
26th May 2013, 10:51 AM
T M S நடிகர்திலகத்துக்கு பாடிய பாடல்களில் என்னை கவர்ந்தவை .

1954-1960- பெண்களை நம்பாதே, சுந்தரி சௌந்தரி, மந்தமாருதம் தவழும்,மாசிலா நிலவே,வாடா மலரே,சித்தனை செய்,யாரடி நீ மோகினி,முல்லை மலர் மேலே,வசந்த முல்லை,கண்களோ காதல் காவியம்,அன்னையை போல், கனவின் மாயா லோகத்திலே,
சித்திரம் பேசுதடி, நிறைவேறுமா எண்ணம்,வா கலாப மயிலே,கண்ணுக்குள்ளே என்னை பாரு,தாழையாம் பூ முடிச்சு, ஏன் பிறந்தாய் மகனே, நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு.

1961-1970- வந்த நாள் முதல், சிலர் சிரிப்பார், மலர்களை போல் ,மலர்ந்தும் மலராத,பாலும் பழமும்,போனால் போகட்டும்,என்னை யாரென்று,கொடியசைந்ததும்,உள்ளம் என்பது,படைத்தானே, இது வேறுலகம் தனி உலகம்,பளபளக்குது, பூஜ்யத்துக்குள்ளே,பொன்னொன்று,நான் கவிஞனுமில்லை,நான் என்ன சொல்லி விட்டேன்,வாழ நினைத்தால்,கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு,பொன்னை விரும்பும்,கல்லெல்லாம்,பறவைகள், கண்ணெதிரே, ஏனழுதாய்,நீரோடு, அவள் பறந்து,பார் மகளே பார், உன்னை சொல்லி,தூங்காத, மயக்கம் எனது, சின்னஞ்சிறிய,பசுமை நிறைத்த, தாழம்பூவே,பனி படர்ந்த மலையின் மேலே,நமது ராஜ சபையிலே,எண்ணிரெண்டு பதினாறு, மடி மீது,இரவும் நிலவும்,மகாராஜன் உலகை,அமைதியான,ஆறு மனமே,கேள்வி பிறந்தது,சிந்து நதியின்,ஆயிரத்தில் ஒருத்தியம்மா,மெல்ல நட, எங்கே நிம்மதி,இரவினில் ஆட்டம்,யாரந்த நிலவு,பாட்டும் நானே,ஓஹஹோ லிட்டில் flower ,யார் தருவார்,ராணி மகா ராணி,முத்துக்களோ,நெஞ்சிருக்கும்,பூ முடிப்பாள்,நான் அனுப்புவது, இதய ஊஞ்சல் ஆடவா,இனியது இனியது உலகம்,சித்தமெல்லாம் எனக்கு,மாதவி பொன்மயிலாள் ,மன்னிக்க வேண்டுகிறேன்,புது நாடகத்தில்,பூ மாலையில்,அங்கே மாலை மயக்கம்,யாரை நம்பி நான், போட்டாளே உன்னையும் ஒருத்தி பெத்து,வெள்ளி கிண்ணந்தான் ,அந்த நாள்,தேரு வந்தது,வள்ளி மலை,கட்டழகு பாப்பா, சந்தன குடத்துக்குள்ளே,தெய்வமே தெய்வமே,ஒரு நாளிலே,பார்வை யுவராணி,என்னங்க, எல்லோரும் நலம் வாழ,உன் கண்ணில் நீர் வழிந்தால்,ஒரே பாடல் உன்னை,சிரிப்பின் உண்டாகும்,பொன் மகள்,ஒரு நாள் நினைத்த காரியம்.

1971- 1980- தேரு பார்க்க, நேத்து பறிச்ச ரோஜா,தாலாட்டு பாடி,ஒரு தரம் ஒரே தரம்,வரதப்பா வரதப்பா,தேவனே என்னை ,அடி என்னடி ராக்கம்மா,கேட்டுகோடி ,பள்ளியறைக்குள் வந்த,இசை கேட்டால்,ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்,குடி மகனே,மயக்கமென்ன,இரண்டு மனம், மாப்பிள்ளையை ,சக்கை போடு போடு ராஜா,ஆகாய பந்தலிலே,நல்ல காரியம்,பாலூட்டி, நீயும் நானுமா,அம்மம்மா தம்பி என்று,இனியவளே, மேளதாளம்,சுமை தாங்கி,ஊஞ்சலுக்கு பூச்சூட்டி,ஆட்டுவித்தால் யாரொருவர்,தெய்வத்தின் தேரெடுத்து,பேசாதே வாயுள்ள , நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள்,வேலாலே விழிகள்,மௌனம் கலைகிறது, எந்தன் பொன் வண்ணமே .

kalnayak
26th May 2013, 10:53 AM
நெஞ்சை அடைக்கின்றது. தமிழிசை தனது ஈடில்லா இசை மகனை இழந்துவிட்டது. நடிகர் திலகத்தின் பாடும் குரல் இறைவனடி சேர்ந்து விட்டது. பாடகர் திலகம் t.m. சௌந்தரராஜன் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவர் பாடிய திரைப்பாடல்களும், பக்திப் பாடல்களும் குறிப்பாக முருகன் மேல் அவர் பாடிய பாடல்கள் எந்நாளும் நிலைத்திருக்கும். அவரது இழப்பை எற்றுக்கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்தாருக்கும், திரை உலகத்தாருக்கும், ரசிகர்களுக்கும் இறைவன் தருவாராக!!

eehaiupehazij
26th May 2013, 11:16 AM
The power of TMS got amplified by the mind boggling facial expressions of NT in the song 'Neeye unakku endrum nigaraanavan....' in Bale Pandia which makes any other singer to sweat out! The same way songs in Thookku Thookki, Thiruvilayadal, Pudhiya Paravai, Aandavan Kattalai...... one can perceive the deep impact of NT in the minds of TMS to render a song for NT.

KCSHEKAR
26th May 2013, 12:10 PM
நினைவலைகள்

ஒரு திரைப்பட விழாவில் கந்தர்வக் குரலோன் TMS அவர்களுடன் நானும் பின்னால் அமர்ந்திருந்தபோது எடுத்த படம். உடலால் மறைந்தாலும் TMS அவருடைய குரலால் என்றென்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்.

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/7620_1212611352152_5014539_n_zpsde0d29a5.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/7620_1212611352152_5014539_n_zpsde0d29a5.jpg.html)

vasudevan31355
26th May 2013, 12:12 PM
இன்று கலைஞர் தொலைகாட்சியில்

http://www.shotpix.com/images/35268463002927606232.png

http://www.shotpix.com/images/24786516422469904284.png

http://img846.imageshack.us/img846/299/vlcsnap2011090921h09m33.png

Gopal.s
26th May 2013, 12:43 PM
குணசேகரனை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் என்று எத்தனை முறை. ஆனால் ஒவ்வொரு முறையும் புத்தனுபவம். அப்பப்பா !!அறிமுக நடிகரா இவர்? ஹோட்டல் அறையும் நுழைவதிலிருந்து தொடரும் ஐந்து காட்சிகளை பாருங்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும். தமிழனாய் பிறந்து தமிழனாய் வாழ்வதின் தவ பயன் நடிகர்திலகமே.

RAGHAVENDRA
26th May 2013, 02:53 PM
அதிகம் பேசப் படாத ஆனால் மிக மிக அற்புதமாய் நடிகர் திலகமும் பாடகர் திலகமும் இணைந்து கலக்கிய பாடல், அடுத்து நம் திரைப்படப் பட்டியலில் இடம் பெற உள்ள சாரங்கதாரா படத்தில் ஒலிக்கும் மேகத் திரை பிளந்து பாடலாகும். கணீரென்ற குரலில் ஜி.ராமனாதன் அவர்களின் இசையில் டி.எம்.எஸ். அவர்கள் மேல் ஸ்தாயியில் பாடலைத் துவங்கி அட்டகாசமாய் பாட, அதற்கு நடிகர் திலகம் உயிர் கொடுக்க இதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அமரத்துவம் பெற்று விட்ட டி.எம்.எஸ். அவர்களின் அமரத்துவம் வாய்ந்த பாடல்


http://www.dailymotion.com/video/xrumr3_megaththirai-sarangadhara_shortfilms#.UaHRV9j_QnA

இப்பாடலில் வளையாபதி முத்துகிருஷ்ணனுக்காக பாடியிருப்பவர், ஜி.ராமநாதன் அவர்களின் உதவியாளரும் இசையமைப்பாளருமான திரு ராஜகோபால் அவர்கள். ஏ.கருணாநிதிக்குப் பாடியிருப்பவர் எஸ்.சி.கிருஷ்ணன்.

venkkiram
26th May 2013, 07:06 PM
டி.எம்.எஸ் பாடுவது இரைச்சலாக இருக்கிறது என ஒரு சில மக்கள் குறை சொல்கிறார்களே? அவர்களை எப்படி கையாள்வது? இப்போதான் "நாதஸ்வரமும் இரைச்சல்தான், அறிவிச்சிடலாம் அது தேர்ந்த வாத்தியக்கருவி அல்ல என! " என நண்பர் ஒருவருக்கு பதிவிட்டு வந்தேன்.

Gopal.s
26th May 2013, 07:40 PM
டி.எம்.எஸ் பாடுவது இரைச்சலாக இருக்கிறது என ஒரு சில மக்கள் குறை சொல்கிறார்களே? அவர்களை எப்படி கையாள்வது? இப்போதான் "நாதஸ்வரமும் இரைச்சல்தான், அறிவிச்சிடலாம் அது தேர்ந்த வாத்தியக்கருவி அல்ல என! " என நண்பர் ஒருவருக்கு பதிவிட்டு வந்தேன்.
They are right and wrong. He sang equal number of very very good ones and bad ones. His voice is more enjoyable in Bass and baritone. high Octave(Tenor and counter tenor) with nasal tone is not at all bearable. His is a karvai not Birka sareeram and this is a limitation in some fine notes. But he is one of the finest in India and there cant be another TMS.

iufegolarev
26th May 2013, 09:13 PM
SUN LIFE telecasting NADIGAR THILAGAM's 200th Film - THIRISOOLAM -

http://www.youtube.com/watch?v=SjJRQ_QpMhg

RAGHAVENDRA
27th May 2013, 07:06 AM
சமீபத்தில் சில பதிவுகள் நடிகர் திலகத்தின் திரியில் தேவையற்ற சலசலப்பினை ஏற்படுத்தி சிவாஜி-எம்.ஜி.ஆர். ரசிகர்களிடயே வீண் சச்சரவினை ஏற்படுத்துவது போன்று இடப்பட்டு சிறு சலனத்தை உண்டாக்கியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இருவருமே அமரத்துவம் அடைந்து விட்டவர்கள். தமிழ்த் திரையுலகை இன்னும் பல ஆண்டுகளுக்கு வாழ வைக்கக் கூடிய சக்தி இவர்கள் இருவரின் திரைப்படங்களுக்கு மட்டுமே உண்டு. அது மட்டுமின்றி இரு தரப்பிலும் இரு திலகங்களையும் மதிப்பவர்கள் உள்ளனர். அது மட்டுமின்றி அந்த நல்லெண்ணத்தைத் தங்கள் உழைப்பிலும் காட்டி வருகின்றனர்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களாய் இருவரைச் சொல்லலாம். திரு பம்மலார் அவர்கள் நடிகர் திலகத்தின் அதி தீவிர பக்தர், தமிழ்த் திரையுலகின் ஆவணத் திலகம் என்று கூறும் அளவிற்கு தமிழ்த் திரையுலக வரலாற்றை அறிந்து வைத்திருப்பவர். எம்.ஜி.ஆர் அவர்களின் நிழற்படங்களின் தொகுப்பாக பம்மலார் வெளியிட்டிருக்கும் மலர் இது வரை இல்லாத புது முயற்சி. இந்த பதிப்பு நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

இதற்கு சற்றும் குறைவில்லாத, சொல்லப் போனால் சற்று கூடவே, தன் நல்லெண்ணத்தைத் தன் செயலில் காட்டியுள்ளது உரிமைக்குரல் நிறுவனம். சிவாஜி ரசிகர்கள் நிறையப் பேர் பார்த்திராத திரைப்படங்களை நெடுந்தகட்டில் வெளியிட்டு மனதைக் கொள்ளை கொண்டு விட்டது உரிமைக்குரல் நிறுவனம். குறிப்பாக எங்கள் தங்க ராஜா, எந்தக் காலத்திலும் வசூலை வாரிக் குவிக்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம். அதனைப் பார்க்க ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந்தது உரிமைக்குரல் நிறுவனம் வெளியிட்ட காணொளி நெடுந்தகடு. அது மட்டுமின்றி முதல் வெளியீட்டில் இருந்ததாய் கருதப் பட்ட சிற்சில குறைகளையும் களைந்து மறு வெளியீட்டில் மிகுந்த தரத்துடன் அப்படத்தின் நெடுந்தகட்டனை வெளியிட்டு அனைத்து ரசிகர்களின் மனதிலும் அமர்ந்து விட்டது உரிமைக்குரல் நிறுவனம். அது மட்டுமா, தாயே உனக்காக, உலகம் பல விதம், ஸ்ரீ வள்ளி போன்ற அபூர்வமான படங்களையும் வெளியிட்டு இந்தப் படங்களைத் தற்போது பார்க்கும் வாய்ப்பினையும் ஏற்படுத்தித் தந்துள்ளது உரிமைக்குரல் நிறுவனம்.

உரிமைக்குரல் நிறுவனத்திற்கு நமது நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டுக்களும். இது வரை இந்த நெடுந்தகடுகளைப் பற்றி அறிந்திராத சிவாஜி ரசிகர்களுக்காக அவற்றின் முகப்புகள் இங்கே நிழற்படங்களாக.

எங்கள் தங்க ராஜா
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/etr2.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/DVD%20VCD%20covers/etr2.jpg.html)

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/etrfrfw.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/DVD%20VCD%20covers/etrfrfw.jpg.html)

தாயே உனக்காக மற்றும் உலகம் பல விதம்
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/TUPVCovefw.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/DVD%20VCD%20covers/TUPVCovefw.jpg.html)

ஸ்ரீ வள்ளி
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/SriValliF.jpg (http://s872.photobucket.com/user/ragasuda/media/DVD%20VCD%20covers/SriValliF.jpg.html)

நானறிந்து உரிமைக்குரல் நிறுவனத்தால் வெளியிடப் பட்ட நடிகர் திலகத்தின் படங்கள் இவை. இவையன்றி வேறு ஏதாவது இருந்தாலும் அதனை நண்பர்கள் யாராவது வைத்திருந்தால் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். இன்னும் சில அபூர்வமான நடிகர் திலகத்தின் படங்களை நாங்கள் மிகவும் ஆவலுடன் காணக் காத்திருக்கிறோம். அவற்றில் ஒரு சிலவற்றின் பட்டியல் இதோ


1. பெற்ற மனம்
2. அவள் யார்
3. நல்ல வீடு
4. கண்கள்
5. மனிதனும் மிருகமும்
6. பூங்கோதை
7. வளர் பிறை


இன்னும் இது போன்று மேலும் உள்ளன. இவற்றையும் உரிமைக்குரல் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வெளியிட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.

உரிமைக்குரல் நிறுவனம், பல அபூர்வமான பழைய படங்களை நெடுந்தகடாக வெளியிட்டு தமிழ்த் திரையுலகிற்கு சிறந்த சேவையாற்றி வருகிறது. அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெற உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

vasudevan31355
27th May 2013, 08:47 AM
1. பெற்ற மனம்
2. அவள் யார்
3. நல்ல வீடு
4. கண்கள்
5. மனிதனும் மிருகமும்
6. பூங்கோதை
7. வளர் பிறை

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTkhKg83OjxYgk1aIbpb2UjKni0yOC5F hb6LdUvxxrdFVM9Y-Ufpg

ராகவேந்திரன் சார் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட படங்களின் பழைய வீடியோ கேசட் யாரிடமாவது இருந்தால் தயவு செய்து அவசியம் தெரிவிக்கவும். அதை dvd ஆக மாற்றிக் கொள்ளலாம்.

RAGHAVENDRA
27th May 2013, 08:47 AM
Nt's films in tv channels this week 27.05.2013 - 02.06.2013
pls check with the channel for the confirmation
details compiled from whatsonindia website


j movies
01.06.13 – 6.00 am – gnana paravai
30.06.13- 1.00 pm – en magan
30.06.13 – 9.00 pm – andavan kattalai

jaya tv
31.05.13 – 10.00 am – padithal mattum podhuma

kalaignar tv
30.05.13 – 1.30 pm – shanthi

mega 24
29.05.13 – 1.00 pm – maragatham
29.05.13 – 6.30 p.m. – marumagal
31.05.13 – 6.30 p.m. – vaazhkkai

mega tv
30.05.13 – 12,00 noon – en magan

raj digital plus
30.05.13 – 10.00 am – amara kaaviyam
27.05.13 – 4 pm – lorry driver rajakkannu
28.-05-13 4 pm – makkalai petra magarasi
31.05.13 – 8 pm – mannukkul vairam

raj tv
27.05.13 – 1.30 pm – imaigal
31.05.13 – 10.00 pm – thaaikku oru thaalaattu

vasanth tv
27.05.13 – 2.00 pm – chitra pournami
01.06.13 – 2.00 pm – tenali raman

zee tamil
28.05.13 - 2.00 pm – lakshmi vanthachu


TODAY WE HAVE THREE MOVIES IN TV CHANNELS - IMAIGAL, LORRY DRIVER RAJAKKANNU AND CHITRA POURNAMI AS PER THE ABOVE LIST

vasudevan31355
27th May 2013, 08:56 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/AOKNAVPON.jpg

மோசர் பேர் நிறுவனம் அளித்துள்ள பொன்னூஞ்சல், அண்ணன் ஒரு கோவில், நவராத்திரி என்று மூன்று படங்களை கொண்ட தொகுப்பு dvd யில் தலைவரின் 'வளர்பிறை' ஸ்டில் கவரில் அச்சிடப்பட்டுள்ளது. மோசர் பேர் நிறுவனம் நிச்சயம் 'வளர்பிறையை' விரைவில் அளிக்கும் என்று தினம் தினம் ராகவேந்திரன் சாரும் நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

vasudevan31355
27th May 2013, 09:01 AM
நடிகர் திலகம் பாகம் பத்து முடிவடைய இன்னும் எட்டு பக்கங்களே பாக்கியுள்ள நிலையில் பாகம் பதினொன்றை தொடங்கி வைக்க திரு கோபால் சார் பெயரை நான் முன்மொழிகிறேன். ஹப்பர்ஸ் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

vasudevan31355
27th May 2013, 09:02 AM
கோ,

எதற்கும் ரெடியாக இரு.

RAGHAVENDRA
27th May 2013, 09:13 AM
நடிகர் திலகம் பாகம் பத்து முடிவடைய இன்னும் எட்டு பக்கங்களே பாக்கியுள்ள நிலையில் பாகம் பதினொன்றை தொடங்கி வைக்க திரு கோபால் சார் பெயரை நான் முன்மொழிகிறேன். ஹப்பர்ஸ் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வாசு சார்,
கை கொடுங்கள், நானும் முரளி சாரும் இதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தோம். தாங்கள் செயல் படுத்தி விட்டீர்கள். தங்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த நன்றி.

கருத்துக் கணிப்பே தேவையில்லை. இதை 100க்கு 100 சதவீதம் பேர் ஏற்றுக் கொள்வார்கள்.

கோபால் சாருக்காக இந்தப் பாடல்...

சுறுசுறுப்பாக பாகம் 11ஐத் துவக்குங்கள் ஐயா...

http://youtu.be/vTZvsa0MVuU

Subramaniam Ramajayam
27th May 2013, 09:21 AM
வாசு சார்,
கை கொடுங்கள், நானும் முரளி சாரும் இதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தோம். தாங்கள் செயல் படுத்தி விட்டீர்கள். தங்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த நன்றி.

கருத்துக் கணிப்பே தேவையில்லை. இதை 100க்கு 100 சதவீதம் பேர் ஏற்றுக் கொள்வார்கள்.

கோபால் சாருக்காக இந்தப் பாடல்...

சுறுசுறுப்பாக பாகம் 11ஐத் துவக்குங்கள் ஐயா...

http://youtu.be/vTZvsa0MVuU

I am also of the opinion GOPAL SIR the fittest person to start with NT 11 TH PART.
GOPAL SIR, please fulfill our request. NT DIALAQUE in one of our fav movies PLEASE.....

vasudevan31355
27th May 2013, 09:29 AM
கோபா(ல்)லன் எங்கே உண்டோ கோபியர் அங்கே உண்டு...

ராகவேந்திரன் சார்,

என்ன ஒரு புரிதல்!

adiram
27th May 2013, 10:05 AM
Mr. Vasudevan sir,

Thanks for publishing the rare advertisement of 'VALAR PIRAI'. Now I understood it was also released at Shanti. We request you to publish more ads in future.

I also support your idea of starting Part 11 by our Mr. S.Gopal.

KCSHEKAR
27th May 2013, 10:25 AM
="#4B0082"]நடிகர் திலகம் பாகம் பத்து முடிவடைய இன்னும் எட்டு பக்கங்களே பாக்கியுள்ள நிலையில் பாகம் பதினொன்றை தொடங்கி வைக்க திரு கோபால் சார் பெயரை நான் முன்மொழிகிறேன். ஹப்பர்ஸ் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மகிழ்ச்சியுடன் வழிமொழிகிறேன்.

abkhlabhi
27th May 2013, 10:41 AM
Tms & nt

iufegolarev
27th May 2013, 11:13 AM
நான் நிச்சயம் திரு.கோபால் அவர்கள் எழுதுவதற்கு வழிமொழிய மாட்டேன்.

திரு.கோபால் எழுதுவதற்கு நிச்சயம் என்னால் வழிமொழிய முடியாது
பின்னே...வழிமொழிவது என்ன வழிமொழிவது? அன்பு கட்டளைதான் இட முடியும் !

vasudevan31355
27th May 2013, 11:31 AM
என் உயிரில் கலந்த காட்சி.

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSMYNiaVVgyxFezAtlCFr5YFa-Zkg75ZAA4u7dHc_0km-bArbre

காவியம்: தெனாலிராமன்.

பாமினி சுல்தானின் கைப்பாவை கிருஷ்ணாவின் (பானுமதி) சூழ்ச்சியான மோக வலையில் சிக்கி நாட்டைக் கவனியாமல் வீழ்ந்து கிடக்கிறார் விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தி கிருஷ்ண தேவராயர் (என்.டி.ராமாராவ்). இதைக் கண்டு வெகுண்டெழுகிறான் ராயரின் அன்புக்கினிய தெனாலிராமன். ராஜாங்க விதூஷகனும் கூட. ராயரின் தவறை சுட்டிக் காட்டுகிறான் அவரிடமே. கிருஷ்ணாவின் மயக்கத்தில் இருக்கும் ராயர் தெனாலி ராமனின் அறிவுரையை அலட்சியப் படுத்துகிறார். அதோடு மட்டுமல்லாமல் ராயர் ராமனுக்கு மரணதண்டனை அளிக்கவும் தயங்கவில்லை.

தேசப்பற்று உடைய ராமன் மந்திரியின் (V.நாகையா) துணை கொண்டு கிருஷ்ணாவை நாட்டை விட்டு துரத்த எண்ணுகிறான். ஆனால் நடுவில் ராயர் இருக்கும் போது? ஒரு அருமையான சந்தர்ப்பம் ராமனுக்குக் கிட்டுகிறது. ராயரின் மனைவி (சந்தியா...சாட்சாத் அம்மாவின் அம்மாதான்) ராயரின் செய்கைகளினால் உடல்நலம் குன்றுகிறாள். இதைக் கேள்விப்பட்ட ராயர் தன் அன்பு மனைவியைக் காண விரைகிறார். இப்போது கிருஷ்ணா ராயரின் அந்தப்புரத்தில் தனியாக. வாட்டமான இந்த சந்தர்ப்பத்தை அழகாகப் பயன்படுத்திக் கொள்கிறான் ராமன்.

நேராக கிருஷ்ணாவிடம் செல்கிறான் ராயர் தன்னைத் தவிர யாரும் அங்கு நுழையக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளையையும் மீறி. கிருஷ்ணாவை நாட்டை விட்டுப் போய்விடும்படி எச்சரிக்கிறான். கிருஷ்ணா மசிவேனா என்கிறாள். முதலில் பொறுமையைக் கடைப்பிடிக்கும் ராமன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கோபமேறி கிருஷ்ணாவை, அவள் திட்டங்களை தவிடுபொடி ஆக்குகிறான்.

தெனாலிராமன் படத்தில் வரும் ஒரு அற்புதக் காட்சியமைப்பின் கரு இது.

இப்போது நடிகர் திலகத்திடம் வருவோம்.

தெனாலி ராமனாக நடிகர் திலகம். கிருஷ்ணாவான பானுமதியின் அந்தப்புரத்தில் நுழைந்து பானுமதியை படிப்படியாய் எச்சரிக்கும் காட்சி.

என்ன ஒரு அற்புதமான பங்களிப்பு! என்ன ஒரு தெனாவட்டான தொனி! கிருஷ்ணா ராயரில்லாமல் தனியாகத்தான் இருக்கிறாள் என்ற முழு சுதந்திரத்தில் என்ன ஒரு மிரட்டும் தோரணை! அவள் ஆள்மயக்கிதானே என்ற எகத்தாளமான கேலி! நையாண்டியும் கிண்டலும் கொண்ட 'நறுக் நறுக்' வார்த்தைப் பிரயோகம். கிருஷ்ணாவின் கேள்விகளுக்கும், மேனாமினுக்கித்தனத்திற்கும் தரும் பதிலடி. நடுவில் சிறிது கெஞ்சல் (உன் எடைக்கு எடை தங்கம் தருகிறோம்... ராயரை விட்டு விடு) இறுதியில் பலமான எச்சரிக்கை.

அந்தப்புரத்தில் நுழைந்தவுடன் கிருஷ்ணா ராமனிடம் அது முறையற்ற செய்கை என்று கோபப்பட,

அதற்கு இவர் படு நக்கலாக சிரித்துவிட்டு ,"ஏதோ...முறையான செய்கையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாமென்றுதான் வந்தேன்... ஒழுங்கான உலகத்திற்கு இலக்கணமே தாங்கள்தானே!"

என்று நையாண்டி தர்பார் நடத்தும் விதம்.

கிருஷ்ணா, "என்ன கேலியாய் செய்கிறாய்?" என்று வினவ,

"சேச்சே! அந்தரி...சுந்தரி...நிரந்தரி என்று அரசர் போற்றிப் புகழும் இந்த அற்புத உருவத்தை நானா கேலி செய்வேன்?" என்று சிரித்தபடியே விடும் நக்கல்.

"உன் புகழ் எனக்குத் தேவையில்லை" என்று பானுமதி கூறும்போது அதை ஏற்றுக் கொள்வது போல "ஆகட்டும்" என்ற தொனியில் ஒரு சிறு தலையாட்டலில் அப்படியே அள்ளிக் கொண்டு போய்விடுவார்.

வாக்குவாதங்கள் தொடரும் போது கிருஷ்ணா தன் அழகில் மன்னர் மயக்கமாய் கிடப்பதற்கு விளக்கமளித்து ராமனிடம்," நீ ஒரு பெண்ணாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்? என்று கேட்க,

அதற்கு நடிகர் திலகம்,"மயங்கிய மன்னரின் முகத்திலே தண்ணீரைத் தெளித்து "எழுந்திரு மன்னவா! என்ன வேண்டியிருக்கிறது காதல்? (இந்த இடத்தில் அவர் காட்டும் முகபாவத்தை எப்படி எழுதுவது?) சூழ்ந்திருக்கிறார்கள் பகைவர்கள்... தூளாக்கப் புறப்படுங்கள்... என்று வாளைக் கொடுத்து வழியனுப்பி வைத்திருப்பேன்" என்று விவேகத்துடன் வீரமுழக்கமிடுவது அட்டகாசம்.

இறுதியில் "கிருஷ்ணா தேவியாரே! நீங்களாகப் போகிறீர்களா?...அல்லது உங்களைப் போக வைக்க வேண்டுமா?" என்று கைகளைக் கொட்டியபடியே விடும் எச்சரிக்கையில், அந்த சிறிய சிறிய தலைவெட்டுதல்களில் சிகரங்களையெல்லாம் தாண்டி பயணிப்பார். இறுதியில் கைகளால் "எச்சரிக்கை" என்று திரும்பியவாறே வேகமாக நடக்கத் துவங்கும் அழகே அழகு!

என் உயிரில் கலந்த காட்சி இது...

எல்லாவற்றையும் சொல்லி விட்டால்....

நீங்களே இப்போது கண்டு உணருங்கள்.... அனுபவியுங்கள்.

இணையத்தில் முதன் முதலாக....


http://www.youtube.com/watch?v=nmUFla-YzYI&feature=player_detailpage

Gopal.s
27th May 2013, 11:32 AM
எனக்கு சந்தோசம் கரை மீறுவதை உணர்கிறேன். Joe ,பம்மலார்,முரளி,வாசுதேவன் வரிசையில் வந்து ,நான் நேசிக்கும் இந்த திரியை துவக்கி வைப்பதை எனக்கு அளிக்க பட்ட உன்னத பெருமையாய் எண்ணி குதூகலம் அடைகிறேன். நான் இந்த பணியை 31/5 க்கு பிறகு அல்லது திரி 400 ஐ எட்டிய பிறகு நிச்சயம் சிரமேற்கொண்டு ஏற்கிறேன் . என் மேல் அன்பு கொண்டுள்ள உள்ளங்களுக்கு என்றென்றும் கடன் பட்டுள்ளேன்.

vasudevan31355
27th May 2013, 11:38 AM
எனக்கு சந்தோசம் கரை மீறுவதை உணர்கிறேன். Joe ,பம்மலார்,முரளி,வாசுதேவன் வரிசையில் வந்து ,நான் நேசிக்கும் இந்த திரியை துவக்கி வைப்பதை எனக்கு அளிக்க பட்ட உன்னத பெருமையாய் எண்ணி குதூகலம் அடைகிறேன். நான் இந்த பணியை 31/5 க்கு பிறகு அல்லது திரி 400 ஐ எட்டிய பிறகு நிச்சயம் சிரமேற்கொண்டு ஏற்கிறேன் . என் மேல் அன்பு கொண்டுள்ள உள்ளங்களுக்கு என்றென்றும் கடன் பட்டுள்ளேன்.

கண்கள் பனிக்கின்றன...இதயம் கனக்கிறது. (tit for tat) (நான் யாருகிட்டேயும் கடன் வச்சுக்கிறதில்ல... ரைட்)....

iufegolarev
27th May 2013, 11:45 AM
காட்டாற்று வெள்ளத்தை கரைபோட்டுதான் தடுத்திடமுடியுமா..சந்தோஷ அலைகள் கரயைதொடுவதைத்தான் நிறுத்தமுடியுமா...? முடியாது...நிச்சயமாக முடியாது...!

இந்த சந்தோஷம் ஒரு அனுபவம் ...அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது வேந்தே விவரிக்க முடியாது...!

அனுபவித்துனர்வதை அனுபாவிதுனர்ந்தால் தான் அனுபவம், அனுபவமாக இருக்கும்..இது அனுபவமாக இருந்தாலும் சரி..அனுமானமாக இருந்தாலும் சரி..!

அனுமானத்தை அனுபவத்தின் மூலம் சொல்லிவிடலாம்...
ஆனால் அனுபவத்தை அனுமானமாக சொல்லமுடியாது..

காரணம்..அனுபவத்தை அனுமானமாக சொல்ல கூட அனுபவம் தேவை...!

அப்பாட...செந்தமிழ்ல எப்படியோ எழுதியாச்சு...நம்மக்கு எப்படியும் அடுத்த சான்ஸ் குடுப்பாங்க..! ஐயா ஜாலி !!

vasudevan31355
27th May 2013, 12:43 PM
காட்டாற்று வெள்ளத்தை கரைபோட்டுதான் தடுத்திடமுடியுமா..சந்தோஷ அலைகள் கரயைதொடுவதைத்தான் நிறுத்தமுடியுமா...? முடியாது...நிச்சயமாக முடியாது...!

இந்த சந்தோஷம் ஒரு அனுபவம் ...அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது வேந்தே விவரிக்க முடியாது...!

அனுபவித்துனர்வதை அனுபாவிதுனர்ந்தால் தான் அனுபவம், அனுபவமாக இருக்கும்..இது அனுபவமாக இருந்தாலும் சரி..அனுமானமாக இருந்தாலும் சரி..!

அனுமானத்தை அனுபவத்தின் மூலம் சொல்லிவிடலாம்...
ஆனால் அனுபவத்தை அனுமானமாக சொல்லமுடியாது..

காரணம்..அனுபவத்தை அனுமானமாக சொல்ல கூட அனுபவம் தேவை...!

அப்பாட...செந்தமிழ்ல எப்படியோ எழுதியாச்சு...நம்மக்கு எப்படியும் அடுத்த சான்ஸ் குடுப்பாங்க..! ஐயா ஜாலி !!

எங்க குட்தாங்கோ?

RAGHAVENDRA
27th May 2013, 01:19 PM
வாசு சார்
தெனாலி ராமன் - உன்னத திரைக்காவியம் மட்டுமல்ல, நடிகர் திலகம் என்கிற உலக மகா கலைஞன் பரிணமிக்கக் காரணமாயிருக்கும் இன்னொரு காவியமும் கூட. பல்வேறு வித பரிணாமங்களிலும் நடிப்பின் பரிமாணத்தை உணர்த்தியவர். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இக்காட்சி. இது போன்ற அபூர்வமான திரைக்காவியங்களைப் பற்றி நமது நண்பர்களுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் உணர்த்தும் தங்கள் பணி மிகச் சிறந்தது. நடிகர் திலகத்தின் பரிபூரண ஆசி தங்களுக்குள்ளதையே இது காட்டுகிறது.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.

vasudevan31355
27th May 2013, 02:17 PM
Malai malar 26-5-2013

http://epaper.maalaimalar.com/2652013/epaperimages/2652013/2652013-md-hr-3/142638296.jpg

http://epaper.maalaimalar.com/2652013/epaperimages/2652013/2652013-md-hr-8/141821921.jpg

http://epaper.maalaimalar.com/2652013/epaperimages/2652013/2652013-md-hr-8/14181493.jpg

iufegolarev
27th May 2013, 02:40 PM
எங்க குட்தாங்கோ?

yeppo kutpaango ?

iufegolarev
27th May 2013, 02:40 PM
From today......

Nadigar thilagaththaal ninaivootapatta periyavargal thodar.....thodarum.......!

http://www.youtube.com/watch?v=q09dYjrH2LU

kalnayak
27th May 2013, 03:47 PM
காட்டாற்று வெள்ளத்தை கரைபோட்டுதான் தடுத்திடமுடியுமா..சந்தோஷ அலைகள் கரயைதொடுவதைத்தான் நிறுத்தமுடியுமா...? முடியாது...நிச்சயமாக முடியாது...!

இந்த சந்தோஷம் ஒரு அனுபவம் ...அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது வேந்தே விவரிக்க முடியாது...!

அனுபவித்துனர்வதை அனுபாவிதுனர்ந்தால் தான் அனுபவம், அனுபவமாக இருக்கும்..இது அனுபவமாக இருந்தாலும் சரி..அனுமானமாக இருந்தாலும் சரி..!

அனுமானத்தை அனுபவத்தின் மூலம் சொல்லிவிடலாம்...
ஆனால் அனுபவத்தை அனுமானமாக சொல்லமுடியாது..

காரணம்..அனுபவத்தை அனுமானமாக சொல்ல கூட அனுபவம் தேவை...!

அப்பாட...செந்தமிழ்ல எப்படியோ எழுதியாச்சு...நம்மக்கு எப்படியும் அடுத்த சான்ஸ் குடுப்பாங்க..! ஐயா ஜாலி !!

இங்க எழுதியிருக்கிற மாதிரியே ஒருத்தர் பல திரைப்படங்களில் பேசி பேசி, படங்களை இயக்கி அரங்கங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார். ஏற்கனவே நீங்க உங்க அரட்டையை ஆரம்பிச்சுட்டீங்களே. இதுக்கு மேல என்ன சான்ஸ் வேண்டி கிடக்குது? சந்தேகம் இருந்தால் 'ஆனந்த கண்ணீர்' திரைப்படம் பார்த்து தெளிந்து கொள்ளவும்.

அது சரி, இதுக்கு பேர்தான் செந்தமிழா? சொல்லவேயில்லை!!!

parthasarathy
27th May 2013, 04:19 PM
பெரிய இடைவெளி விட்டு வருகிறேன்.

எல்லோரது பதிவுகளும் அட்டகாசம். திரு. கோபால் அவர்களின் பதிவுகள்; திரு ராகவேந்திரன்; திரு. முரளி அவர்களின் சிறிய ஆனால் சுவையான பதிவு. திரு. ராகுல்ராம் அவர்களின் "பா" வரிசைப் படங்களின் பதிவுகள்; இன்னும் நிறைய ஹப்பர்களின் பதிவுகள் (பெயர் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்!.

ஆனால், என்னை நிறையவே நெகிழ வைத்தது திரு. நெய்வேலி கோபால் அவர்களின் "என் கிராமம் என் மக்கள்" மற்றும் என் மனதுக்கு மிக நெருக்கமான "ராமன் எத்தனை ராமனடி" பதிவுகள். வார்த்தைகளே வரவில்லை ஐயா! அற்புதம்.

திரு. கோபால் அவர்களே! வாருங்கள் பாகம் 11-ஐ துவக்க அற்புதத் தேர்வு! வருக!! எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துக!!!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

goldstar
27th May 2013, 05:50 PM
Rest In Peace TMS, we dearly miss you. You will be remembered for ever.

My top NT-TMS combinations, I request other friends to share their top 10

http://www.youtube.com/watch?v=BAVFuEqqV-k

http://www.youtube.com/watch?v=G3oWKwrbVlg

http://www.youtube.com/watch?v=FSdL74sUCNE

http://www.youtube.com/watch?v=vdU9LdY4wGY

http://www.youtube.com/watch?v=imwsn-J8NuM

http://www.youtube.com/watch?v=GqAtpVEu5q4

http://www.youtube.com/watch?v=qKTaS7oDn3w

http://www.youtube.com/watch?v=80efNO8cIkQ

http://www.youtube.com/watch?v=2VyResf6y0o

http://www.youtube.com/watch?v=SXyrrFIdQbs

vasudevan31355
27th May 2013, 06:11 PM
Paar Magale Paar

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/paarmagalepaar.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/paarmagalepaar.jpg.html)

IliFiSRurdy
27th May 2013, 06:50 PM
கண்கள் பனிக்கின்றன...இதயம் கனக்கிறது. (tit for tat) (நான் யாருகிட்டேயும் கடன் வச்சுக்கிறதில்ல... ரைட்)....

Dear Vasu sir,
You have chosen the right person for the job.His write ups on various schools are going to get world wide recognition in the days to come.
My best wishes to Gopal on this honourable assignment.
Thank you,

vasudevan31355
27th May 2013, 06:55 PM
மிக்க நன்றி கண்பத் சார். கோபாலின் இந்த அரிய சேவைக்கு நாம் அவருக்கு அளிக்கும் இந்த பொறுப்பு நிச்சயம் அவரை பெருமகிழ்ச்சி அடையச் செய்வதோடு நமக்கும் மிகுந்த சந்தோஷமாய் இருக்கிறது. மீண்டும் எல்லோரது சார்பிலும் அவருக்கு நம் நல்வாழ்த்துக்கள்.

iufegolarev
27th May 2013, 07:10 PM
திரு கோபால் அவர்களுக்கு ஒரு சிறந்த முறையில் டேக் ஆப் செய்ய நாம் நம்மால் ஆனா ஒரு சிறிய முயற்சி மேற்கொள்ளலாமே...

என் சார்பாக...கோபால் அவர்களுக்கு....இந்த பாடல் ....கோபால் சார் ...இந்த பாட்டை பார்த்து ஒரு சூப்பர் டேக் ஆப் குடுங்க...பகுதி 11 உக்கு

கோபால் சார் உக்கு ஒரு உந்து சக்தி தர இந்த பாடல் ...!

http://www.youtube.com/watch?v=lORp7dvVNsg

iufegolarev
27th May 2013, 07:12 PM
Paar Magale Paar

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/paarmagalepaar.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/paarmagalepaar.jpg.html)

சந்திரமுகி வேட்டய்யன் இந்த தாடி மாடல் வைத்துள்ளாரே !

iufegolarev
27th May 2013, 07:14 PM
அது சரி, இதுக்கு பேர்தான் செந்தமிழா? சொல்லவேயில்லை!!!


இதற்க்கு பேர் செந்தமிழ் அல்ல ! இதற்க்கு பேரும் செந்தமிழ் ......நாளை நாயகரே !

iufegolarev
27th May 2013, 07:17 PM
நடிகர் திலகத்தால் நினைவூட்டப்பட்ட தமிழ் பெரியர்வர்கள் வரிசையில்...நாம் முன்பு ராஜ ராஜ சோழன் வரலாறை கண்டோம்...இப்போது ...நம் நடிகர் திலகம் அவர்களின் பங்கை குறித்து காணலாம் !

kalnayak
27th May 2013, 07:20 PM
எல்லோரும் சொல்லுகின்ற பாடல்கள் எனக்கும் மிக பிடித்தவைகளாகும். அதை தவிர்த்து எனக்கு பிடித்த நடிகர் திலகத்தின் tms பாடல்கள்:
1. பெண்களை நம்பாதே (தூக்கு தூக்கி)
2. வசந்த முல்லை போலே (சாரங்கதாரா)
3. பசுமை நிறைந்த நினைவுகளே (இரத்தத் திலகம்)
4. வந்த நாள் முதல் (பாவ மன்னிப்பு)
5. பாவாடை தாவணியில் (நிச்சய தாம்பூலம்)
6. கல்லெல்லாம் மாணிக்க (ஆலயமணி)
7. சட்டி சுட்டதடா (ஆலயமணி)
8. பூமாலையில் ஓர் மல்லிகை (ஊட்டி வரை உறவு)
9. ஆட்டுவித்தால் யாரோருவர் (அவன்தான் மனிதன்)
10. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு (தியாகம்)

kalnayak
27th May 2013, 07:26 PM
நடிகர் திலகத்தின் திரி பாகம்-11 ஐ துவக்க சரியான தேர்வு கோபால் அவர்களே!!!
முன்மொழிந்த நெய்வேலி வாசுதேவனாருக்கும் வழிமொழிந்த அத்தனை பேருக்கும் நன்றி!!! கோபால் சாருக்கு வாழ்த்துகள்!!!

ScottAlise
27th May 2013, 07:27 PM
Vasu sir,

Gopal sir is the right person to inaugurate the next thread , his write ups is, are too good , its indeed a honour and recognition for his work

ScottAlise
27th May 2013, 07:28 PM
ஆலயமணி

இந்த படத்தின் கதாநாயகன் தியாகு (சிவாஜி) ஒரு எஸ்டேட் அதிபர் பெரும் பணக்காரர் . டென்னிஸ் match விளையாடும் பொழுது அவர் சேகர்யை (SSR ) சந்திக்க நேருது . சேகரின் பண்பால் கவரப்படும் தியாகு அவரை உயிர் நண்பராக எத்து கொள்கிறார் . சேகர் சரோஜா தேவியை காதலிக்கிறார் . அவரை வானம்பாடி என்று செல்லமாக அழைக்கிறார். தன் காதலை தியாகு விடம் சொல்கிறார் . ஒரு தடவை தன் எஸ்டேட்க்கு செலும் தியாகு அங்கே சரோஜா தேவியின் துடுக்குத்தனம் நிறைந்த குணத்தால் காதலிக்க தொடங்கிறார் .(சரோஜா தான் தன் நண்பனின் காதலி என்பத்தை தெரியாமலே ) . எஸ்டேட் குமஸ்தா வின் மகள் தான் மீனா (சரோஜா தேவி) மீனா வின் அக்கா விக்கு தன் சொந்த செலவிலே அவர் விரும்பும் பையன் கூட திருமணம் செய்து வைக்கிறார் .

சேகர் க்கு ஒரு விபத்தில் ரத்தம் குடுத்து அவர் உயிரை காப்பாற்றி மேலும் தியாகு சேகர்ன் மனதில் ஒரு உயர்ந்த இடத்தை பெறுகிறார்
மீனாவை தன் கல்யாணம் செய்ய விரும்புவதை மீனாவின் அப்பா (Nagaiah ) விடம் தெரிவிக்கிறார் . அவரும் இதுக்கு சம்மதிக்கிறார் . SSR குமஸ்தா வின் வீட்டுக்கு வரும் பொழுது மீனா தான் தன் நண்பருக்கு மனைவி ஆக போகுவதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார் . அவர் தியாகு விடம் தன் காதலி ஒரு பணக்காரன்யை திருமணம் செய்து கொள்ள போவதை தெரிவித்து விட்டு விரகத்தியில் வாழ்கிறார்
ஒரு நாள் கார் விபத்தில் இருந்து மீனாவை காப்பதும் பொழுது தியாகுவின் கால்கள் செயல் எழந்து விடுகிறது . தியாகுவை சேகரும் , மீனாவும் கவனித்து கொள்கிறார்கள் . ஆனால் தியாகுவின் மனதில் விஷத்தை விதிக்கிறார் ஆட்கொண்டான் (MR ராதா). அவர் தன் மகளை தியாகுவுக்கு தன் மகளை(விஜயகுமாரி ) கல்யாணம் பண்ணி வைக்க எண்ணி அது முடியாமல் போகவே எப்படி செய்கிறார் . இதனால் ஆத்திரம் அடையும் தியாகு வெறுப்பை காட்டுகிறார் . ஒரு னால் மீனாவிடம் தன் சிறு வயதில் செய்த ஒரு குற்றதை விவரிக்கிறார் . தன் உணர்ச்சியை கட்டு படுத்த முடியாமல் சேகரை கொலை செய்ய எண்ணி மலை உச்சியில் இருந்து தள்ளி விடுகிறார் . அந்த சமயத்தில் சேகர் மீது தவறு இல்லை என்பதை தெரிந்து கொண்டு தன் செய்த தவறுக்கு தண்டனையாக தன் உயிரை மாய்த்து கொள்கிறார் . ஆனால் அதிஷ்டவசமாக உயிர் பிழைக்கிறார் .இந்த விபத்தில் அவர் கால்கள் சாதாரண நிலைக்கு வருகிறது . தன் நண்பன் தன் காதலி (மீனா)யை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்து வாழ்கிறார் . தன் நண்பனுக்கு கல்யாணம் என்பதை தெரிந்து கொண்டு தன் வீட்டுக்கே ஒரு பிச்சைக்காரன் யை போல் செல்கிறார் . அங்கே சேகர் விஜயகுமாரியை கல்யாணம் செய்வதை பக்கும் அவர் மீனா தற்கொலை செய்து கொள்ள போவதை தடுக்க முற்படுகிறார் . அனால் MR ராதா சொத்துக்கு அசை பட்டு தியாகுவை மறைத்து வைக்கிறார் . இதை மீறி இருவரும் எப்படி இணைந்தார் என்பதை விளக்கும் படமே இந்த ஆலயமணி

இந்த படம் தன் PS வீரப்பா நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த முதல் படம் , இந்த படத்தின் வெற்றி அவரை ஒரு பெரிய தயாரிப்பாளராக மாற்றியது . இந்த நிறுவனம் தொடர்ந்து நிறைய படங்களை தயாரித்தது.

இந்த படம் ரிலீஸ் அன்று மக்கள் திலகம் திரு சங்கவிடம் ஒரு வெற்றி படத்தை இயக்கி இருக்கிர்கள் என்று வாழ்த்தினர் . இந்த படம் தெலுங்கு , ஹிந்தி பேசியது .

இந்த படத்தில் சிவாஜி யின் நடிப்பு ஒரு வித குற்ற உணர்ச்சியல் அவதி பாடுபவரை போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது . சிறு வயதில் தன் ஈகோ வினால் ஒரு உயிர் போக காரணம் , அவர் மனதை போட்டு அரித்து கொண்டே இருக்கிறது . இதே பாதிப்பில் நடிகர் திலகம் நடித்து புதிய பறவை என்ற படமும் வந்தது . அது தெரியாமல் செய்த ஒரு கொலை என்ற ஒற்றுமை என்பது உடன் முடிந்து விடுகிறது .

ஆனால் இதே கதை 2001 ல் விஜய் நடிக்க ப்ரிண்ட்ஸ் (FRIENDS ) என்ற பெயரில் வந்தது . வேடிக்கை என்ன வென்றால் FRIENDS மலையாளம் படத்தின் ரீமேக் . of course base கதை மட்டும் தான் .

அதே மாதிரி இதே போல் ஒரு கதையை தன் அற்புத treatment மூலம் இளமை உஞ்சல் ஆடுகிறது ஆக கொண்டு வந்தார் திரு ஸ்ரீதர் அவர்கள் .

இந்த படத்தின் கதை திரு G பாலசுப்ரமணியம் . மிக பெரிய கதை ஆசாரியர் . அவர் ரகசிய போலீஸ் 115 , துணைவன் , தங்க சுரங்கம்,எங்க ஒரு ராஜா போன்ற வெற்றி படங்களை கொடுத்து உள்ளார் .

இந்த படத்தில் நடிகர் திலகத்தின் பாதிரம் தான் சிறு வையத்தில் செய்த ஒரு தவறினால் psychologically depressed ஆக தனியாக இருக்கும் பொழுது காண படுகிறார் . அவர் அந்த சம்பவதை விவரிக்கும் பொழுது அவர் குரலில் தென்படுகிறது ஒரு வித பயம் , கலக்கம் , அதே தியாகு அறிமுகம் ஆகும் காட்சி டென்னிஸ் மாட்சில் அவர் தோல்வியை நெருங்க முர்போடும் பொழுது அவர் முகத்தில் காட்டும் ஒரு reaction அவர் வாழ்வில் ஒரு கருப்பு பக்கம் இருக்கும் என்பதை நமக்கு சொல்லி விடுகிறது . பிறகு அவர் SSR யை தான் வீடுக்கு அழைத்து வந்து தான் பணியாளர்கள்யிடம் அறிமுகம் செய்யும் பொழுது ஒரு மிடுக்கான ஆள் போல காட்சி அழைக்கிறார் .

முதல் முதலில் ஒரு பெண்யை சந்திக்கும் பொழுது , அதுவும் சரோஜாவின் துடுக்குதனம் கலந்த குரும்பை ரசிக்கும் அதே சிவாஜி பேச முடியாமல் முழிக்கிறார் சரோஜா சிவாஜியை மக்கு என்று சொல்லும் பொழுது அவர் காட்டும் reaction க்கு இடு இணை இல்லை , பிறகு அதே சரோஜா சிவாஜி யிடம் மனிப்பு கேட்கும் விடம் அதை அவர் சரோஜா முன்பு அவர் பேசியது போலவே handle செய்து நடக்கும் காட்சி , அதில் அவர் அணிந்து இருக்கும் half pant , அவர் தன் கையில் வைத்த இருந்த ஸ்டைல் வாக்கிங் stick கூட நடித்து இருக்குது.

அதே சிவாஜி தன் நண்பனிடம் தன் காதல் யை சொல்லும் பொழுது பியானோ வில் ஸ்டைல் ஆக தானே வசிப்பது போல தூள் செய்து விடுகிறார் , அதுக்கு அப்புறம் ஸ்டைல் ஆக சிகரெட்டே யை flip செய்வர் அது கேமரா முன்பு விழும் , அதூடன் அந்த சாட் முடியம் .
அவர் கால் ஊனம் ஆகும் பொழுது , அவர் என் சிம்மாசனத்தில் என்னை உக்கார வையுங்கள் என்று ஒரு ராஜா வை போல் சொல்லி மறு நொடி நொருங்கி போவர் . பாடல்களில் குறிப்பாக பொன்னை விரும்பும் ,கல்லெல்லாம் மாணிக்க,சட்டி சுட்டதடா பாடல்கல், அதில் அவர் நடிப்பு அபாரம்.

அதுவும் அவர் மனசாட்சி அவர்யை விட உயரமா தெரியும் பொழுதே symbolic representation ஆக தெரிகிறது அவர் மனசாட்சியை கட்டு படுத்த முடியாம தவிக்கிறார் என்று . அதே சிவாஜி தன் மனகண்ணில்ஓடும் காட்சியை( தன் நண்பனை சந்தேகிக்கும் காட்சியை) ஒரு பெரிய கண்ணாடி மூலம் விவரிப்பது அற்புதமான இயக்கம் , ஒளிபதிவு .(தம்பு )

SSR perfect செகண்ட் ஹீரோ . கொஞ்சம் கூட மிகை இல்லாத நடிப்பு .
சரோஜா தேவி அவர்கள் மீண்டும் ஒரு முறை அருமையாய் நடித்து இருக்கிறார் .

MR ராதா வின் கரடி காமெடி சூப்பர் .
1962 ல் வந்த இந்த படம் இன்றும் வசிகரிகிறது .

ScottAlise
27th May 2013, 07:29 PM
Hope my Tamil is better now compared to previous postings

iufegolarev
27th May 2013, 07:34 PM
ராஜராஜ சோழனை பற்றி வரலாற்றில் குறிப்பிட்டிருப்பதை போல நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, தந்தையின் கனிவு கொண்ட கண்கள், அதே நேரம் அரசவையில் கம்பீர தோற்றம், தவறு செய்பவர்களை பார்வையால் தண்டிக்கும் பாங்கு...இப்படி போகிறது ராஜராஜனை பற்றிய வர்ணனை.

தமிழ் ஆர்வம் பெருகிவரும் காட்டாற்று வெள்ளம் போல, வார்த்தை ஜாலங்கள் அர்ஜுனன் வில்லிலிருந்து விடுபட்ட அம்புகள் போல் ...திறமையில் முதன் முதல் திறமை..பலகுரலில் பேச பழகி தேர்ச்சிபெற்ற வேந்தன்...இப்படி சொல்லிகொண்டே போகலாம்...!

ராஜராஜனின் இவ்வளவு மிடுக்கும், ஆண்மையும், கம்பீரமும், தோற்றப்பொலிவும், பேசும் திறமும், ஒருங்கே பெற்ற ஒரு நடிகன் தமிழ் திரை உலகில் யார் என்ற கேள்வி எழும்போதெல்லாம் எந்த சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒருமித்த குரலில் தஞ்சை பெரியகோவிலிலுள்ள மணியின் " நங் " என்ற ரீங்காரமிடும் நாதம் போல உரைப்பது திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் என்பதை வீடறியும், நாடறியும், தமிழர்கள் உள்ள புவி அறியும்...அதனுடன் நாமும் அறிவோம்..!

ஒரு மன்னனுக்குரிய அனைத்து லக்ஷணங்களும் ஒருங்கே பெற்ற நடிகர் திலகம்...தஞ்சை பெரியகோயில் நந்திக்கு, கோவில் கும்பாபிஷேக பூஜை செய்யவரும் காட்சியை பாருங்கள்....!

http://www.youtube.com/watch?v=5DhrsSQ-2aY

RAGHAVENDRA
27th May 2013, 08:35 PM
அபூர்வ நிழற்படங்கள். நன்றி முகநூல் நண்பர்.

http://sphotos-e.ak.fbcdn.net/hphotos-ak-ash4/383395_341634919295466_1340367771_n.jpg

http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-frc3/970938_341634572628834_99750220_n.jpg

RAGHAVENDRA
27th May 2013, 08:40 PM
அபூர்வ நிழற்படங்கள் தொடர்ச்சி

http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-ash4/312161_486326804774495_1642682470_n.jpg

டி.எம்.எஸ், நடிகர் திலகம், சி.சுப்ரமணியம், விஸ்வநாதன், ராமமூர்த்தி

KCSHEKAR
27th May 2013, 08:45 PM
Dear Gold star Sathish Sir,

Your Top 10 Selection are good.

My top 10 (NT - TMS combination): (It is very tough to select only 10)

1) Paattum Naane Baavamum Naane
2) Olimayamaana Ethirkaalam
3) Kallellaam Maanikka Kallaagumaa
4) Enge Nimmathi
5) Attuviththaal Yaaroruvar
6) Malarnthum Malaraatha
7) Ponnai Virumbum Boomiyile
8) Aaru Maname Aaru Antha Andavan Kattalai Aaru
9) Yarukkaaga Ithu Yarukkaaga
10) Naan Kavignanumillai Nalla Rasiganumillai

RAGHAVENDRA
28th May 2013, 06:34 AM
ஜூலியஸ் சீஸர் - சொர்க்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி என்றைக்கும் பசுமையாக நினைவிருக்கும். சென்ற ஆண்டு சொர்க்கம் சென்னை அண்ணா திரையரங்கில் திரையிடப் பட்டபோது ரசிகர்கள் கொண்டாட்டம் மறக்க முடியாது. குறிப்பாக இந்தக் காட்சியில் உணர்ச்சி வசத்துடன் அவர்கள் வரவேற்றது காணொளியாக நம் பார்வைக்கு

http://youtu.be/8QGcROdOqDc

நன்றி நமது அருமை நண்பர் விஜயகுமார் அவர்களுக்கு

அவருடைய மற்ற காணொளிகளுக்கு - http://www.youtube.com/channel/UCo0HWsLuG3n7rtCjhSh1ldQ?feature=watch

vasudevan31355
28th May 2013, 07:17 AM
ராகவேந்திரன் சார்,

அருமையான தலைவரின் அபூர்வ நிழற்படங்கள். தலைவர் மேல் பாசம் வைத்துள்ள இன்றைய இளைஞர்கள் பலர் தங்கள் fb யில் தலைவரின் அபூர்வ நிழற்படங்களை வெளியிடுவது மிக்க சந்தோஷம் தருகிறது.

பிறந்த குழந்தையையும் தன்னை ரசிக்க வைக்கும் பேராற்றல் கொண்டவரல்லவா நம் திலகம்!

இது போன்ற அபூர்வ புகைப்படங்களை தேடிக் கொணர்ந்து இங்கே அளித்து சந்தோஷப்படுத்துவதற்கு நன்றி!

vasudevan31355
28th May 2013, 07:49 AM
அளப்பறை ஆர்ப்பாட்டங்கள் நம் ஆண்டவர் காவியங்களுக்கு

திரையரங்குகளில் அளப்பரை என்றால் நம் தலைவரை மிஞ்ச ஆளில்லை. கைத்தட்டல்களும், ஆரவாரமும், பூமாரி பொழிதலும், காட்சிக்குக் காட்சி கரகோஷங்களும், நூற்றுக்கணக்கானவர் இருக்கைகளில் அமராமல் ஸ்கிரீன் அருகிலேயே நின்று மகிழ்ச்சித் தாண்டவங்கள் ஆடுவதும், தலைவரை தொட்டுக் கும்பிடுவதுமாக கொஞ்ச நஞ்ச அட்டகாசமா என்ன! அத்தனை ஆதாரப் பதிவுகளும் நம்மிடம் உள்ளன. திரையரங்கின் உள்ளேயும் வெளியேயும் நம் நடிகர் திலகத்தின் படங்களுக்குக் கிடைக்கும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அன்றுமுதல் இன்றுவரை ஒரு சாதனையாகவே தொடர்கிறது. இனியும் அப்படித்தான். பாருங்கள் 'புதிய பறவை' சாந்தியில் வெளியானபோது நம் ஆட்கள் செய்யும் ரகளைகளை.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sNGCaYhob8I


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ajgfdLFtKrE

'கௌரவம்' சாந்தியில்


http://www.youtube.com/watch?v=viTgCCOsBTo&feature=player_detailpage&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg

'வசந்த மாளிகை' ஆல்பர்ட்டில்.


http://www.youtube.com/watch?list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg&v=HDht5LxmRsM&feature=player_detailpage

'வசந்த மாளிகை' பெங்களூரூ நடராஜில்


http://www.youtube.com/watch?v=eBFhIrsUQfQ&feature=player_detailpage&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg

'கர்ணன்' சாந்தியில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qIeCwcLFCB4&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg

இன்னும் ராஜபார்ட் ரங்கதுரை, திருவருட்செல்வர், எங்கள் தங்க ராஜா, மன்னவன் வந்தானடி, சொர்க்கம், என்னைப் போல் ஒருவன் என்று அப்லோட் செய்யப்படாத ஆர்ப்பாட்டங்கள் ஏராளமாய் உள்ளன. மேற்கூறியவை சில சாம்பிள்ஸ்தான்.

vasudevan31355
28th May 2013, 07:58 AM
'தர்த்தி'

காணக் கிடைக்காத தலைவர் நடித்த அபூர்வ இந்திப்படமான 'தர்த்தி' திரைப்படத்தின் காட்சிகள் இதுவரை காணாதவர்களுக்கு. பார்த்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு


http://www.youtube.com/watch?v=lZBZt40ZhZ4&feature=player_detailpage&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg


http://www.youtube.com/watch?v=A0plsvQDcbA&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg&feature=player_detailpage


http://www.youtube.com/watch?v=crCsNMnQ4s8&feature=player_detailpage


http://www.youtube.com/watch?v=SzIdXkNHOdY&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg&feature=player_detailpage

Subramaniam Ramajayam
28th May 2013, 08:26 AM
அளப்பறை ஆர்ப்பாட்டங்கள் நம் ஆண்டவர் காவியங்களுக்கு

திரையரங்குகளில் அளப்பரை என்றால் நம் தலைவரை மிஞ்ச ஆளில்லை. கைத்தட்டல்களும், ஆரவாரமும், பூமாரி பொழிதலும், காட்சிக்குக் காட்சி கரகோஷங்களும், நூற்றுக்கணக்கானவர் இருக்கைகளில் அமராமல் ஸ்கிரீன் அருகிலேயே நின்று மகிழ்ச்சித் தாண்டவங்கள் ஆடுவதும், தலைவரை தொட்டுக் கும்பிடுவதுமாக கொஞ்ச நஞ்ச அட்டகாசமா என்ன! அத்தனை ஆதாரப் பதிவுகளும் நம்மிடம் உள்ளன. திரையரங்கின் உள்ளேயும் வெளியேயும் நம் நடிகர் திலகத்தின் படங்களுக்குக் கிடைக்கும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அன்றுமுதல் இன்றுவரை ஒரு சாதனையாகவே தொடர்கிறது. இனியும் அப்படித்தான். பாருங்கள் 'புதிய பறவை' சாந்தியில் வெளியானபோது நம் ஆட்கள் செய்யும் ரகளைகளை.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sNGCaYhob8I


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ajgfdLFtKrE

'கௌரவம்' சாந்தியில்


http://www.youtube.com/watch?v=viTgCCOsBTo&feature=player_detailpage&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg

'வசந்த மாளிகை' ஆல்பர்ட்டில்.


http://www.youtube.com/watch?list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg&v=HDht5LxmRsM&feature=player_detailpage

'வசந்த மாளிகை' பெங்களூரூ நடராஜில்


http://www.youtube.com/watch?v=eBFhIrsUQfQ&feature=player_detailpage&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg

'கர்ணன்' சாந்தியில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=qIeCwcLFCB4&list=UUzu2kbRXnmwh4-gNJWeCCdg

இன்னும் ராஜபார்ட் ரங்கதுரை, திருவருட்செல்வர், எங்கள் தங்க ராஜா, மன்னவன் வந்தானடி, சொர்க்கம், என்னைப் போல் ஒருவன் என்று அப்லோட் செய்யப்படாத ஆர்ப்பாட்டங்கள் ஏராளமாய் உள்ளன. மேற்கூறியவை சில சாம்பிள்ஸ்தான்.
IDU PODUMA INNAMUM VENDUMA andrum indrum endrum NADIGARTHILAGATHIN MEETHU RASIGARGAL kattugirndra anbukku
GOOD samples nICE captured videos kudos to vasu raghandran vijayakumar and ganesan and others.

RAGHAVENDRA
28th May 2013, 08:39 AM
டியர் நடிகர் திலகம் 360 டிகிரி சௌரி சார்
தங்களுடைய புதிய தொடர் புதிய கோணத்தில் நடிகர் திலகத்தின் சிறப்பை அணுகுவது வித்தியாசமாகவும் சிறப்பாகவும் உள்ளது. இதனைத் தாங்கள் விரிவாக எழுதுங்கள். ஏற்கெனவே இங்கு தொடங்கியதை அப்படியே இங்கேயே தொடருங்கள். காலப் போக்கில் புதிய திரியைத் தேட வேண்டியதாகி விட்டால் தங்களுடைய கடினமான உழைப்பு தெரியாமல் போய் விடும் வாய்ப்புள்ளது. எனவே புதிய திரிக்குப் பதில் இங்கேயே தொடர்ந்து, ஒவ்வொரு 10 பதிவுக்கும் இங்கே ஒரு முறை இணைப்புகளை அளித்து விட்டால் போதுமானது. இதனைப் பற்றிய குறிப்பினை தங்களுடைய signature பகுதியில் பதிவிட்டால் நினைவூட்டலாக இருக்கும். எனவே புதிய திரியினை இதனுடன் இணைத்து விடுமாறு வேண்டுகிறேன். இது மேலும் மேலும் பலர் படிக்க வேண்டிய தொடர் என்பதால் இந்த வேண்டுகோள்.

இது பற்றி நமது மற்ற நண்பர்களின் கருத்தையும் அறிய ஆவலாயுள்ளேன்.

J.Radhakrishnan
28th May 2013, 12:08 PM
நடிகர் திலகத்தின் திரி பாகம்-11 ஐ துவக்க சரியான தேர்வு கோபால் அவர்களே!!!
முன்மொழிந்த நெய்வேலி வாசுதேவனாருக்கும் வழிமொழிந்த அத்தனை பேருக்கும் நன்றி!!! கோபால் சாருக்கு வாழ்த்துகள்!!!

Yes! Gopal sir is a correct choice.

iufegolarev
28th May 2013, 02:40 PM
டியர் நடிகர் திலகம் 360 டிகிரி சௌரி சார்
தங்களுடைய புதிய தொடர் புதிய கோணத்தில் நடிகர் திலகத்தின் சிறப்பை அணுகுவது வித்தியாசமாகவும் சிறப்பாகவும் உள்ளது. இதனைத் தாங்கள் விரிவாக எழுதுங்கள். ஏற்கெனவே இங்கு தொடங்கியதை அப்படியே இங்கேயே தொடருங்கள். காலப் போக்கில் புதிய திரியைத் தேட வேண்டியதாகி விட்டால் தங்களுடைய கடினமான உழைப்பு தெரியாமல் போய் விடும் வாய்ப்புள்ளது. எனவே புதிய திரிக்குப் பதில் இங்கேயே தொடர்ந்து, ஒவ்வொரு 10 பதிவுக்கும் இங்கே ஒரு முறை இணைப்புகளை அளித்து விட்டால் போதுமானது. இதனைப் பற்றிய குறிப்பினை தங்களுடைய signature பகுதியில் பதிவிட்டால் நினைவூட்டலாக இருக்கும். எனவே புதிய திரியினை இதனுடன் இணைத்து விடுமாறு வேண்டுகிறேன். இது மேலும் மேலும் பலர் படிக்க வேண்டிய தொடர் என்பதால் இந்த வேண்டுகோள்.

இது பற்றி நமது மற்ற நண்பர்களின் கருத்தையும் அறிய ஆவலாயுள்ளேன்.


Ok..sir !

kalnayak
28th May 2013, 02:56 PM
ராகவேந்த்ரா சார், அருமையான யோசனை. நடிகர் திலகம் 360 டிகிரி-யில் நல்ல வித்தியாசமான சிறப்பான சிந்தனைகள் மலரட்டும். அடுத்த திரியிலும் தொடரட்டும்.
சௌரிராஜனுக்கு ஒரே விண்ணப்பம் - அவர் முன்னே எழுதியுள்ளது போல செந்தமிழில் எழுதினால் என்னைப்போன்ற சிலர் பயந்து விடக்கூடும் (நல்லவேளை தமிழை ஆங்கிலத்தில் தட்டெழுதுவதை மாற்றிக் கொண்டது.)

KCSHEKAR
28th May 2013, 04:01 PM
இத்திரியின் கல்தூண், ரசிகவேந்தர், திரு.ராகவேந்தர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

நடிகர்திலகத்தின்மீது மாறாத அன்பு கொண்ட தீவிரப் பற்றாளர், பணி ஓய்விற்குப் பிறகும், ஓய்வில்லாமல், நடிகர்திலகத்திற்கென ஒரு இணையதளம், நடிகர்திலத்தின் ரசிகர்களுக்கான் இந்தத் திரி ஆகியவற்றில் தனது பங்களிப்பை ஆற்றிவரும் எனது நீண்ட கால நண்பர் ராகவேந்தர் அவர்கள் மேலும் பல காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து நடிகர்திலகத்திற்கு மேலும் புகழ்சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நமது நடிப்புலக ஆண்டவன் நடிகர்திலகத்தின் ஆசி என்றென்றும் அவருக்குத் துணை நிற்கும்.

Richardsof
28th May 2013, 04:36 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்


உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

எல்லா வளமும் பெற்று ஆரோக்கியத்துடன் நீண்ட நாள்

வாழ்ந்திட வாழ்த்தும்

வினோத்

மற்றும் மக்கள் திலகம் அன்பு உள்ளங்கள் .

Gopal.s
28th May 2013, 05:11 PM
Dear Vendhar Sir.
Many Happy Returns of the Day .
Warm Regards
Gopal

RAGHAVENDRA
28th May 2013, 05:15 PM
தொலைபேசியிலும் மய்யத்திலும் எனக்கு வாழ்த்துத் தெரிவித்த அன்புள்ளங்கள் சந்திரசேகர் சார், வினோத் சார், மற்றும் இங்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த கோபால் சார், தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவித்த பம்மலார் சார், அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றி.

kalnayak
28th May 2013, 05:16 PM
ரசிக வேந்தர் ராகவேந்திரருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நீவிர் பல்லாண்டு நடிகர் திலகம் புகழ் பரப்பி பெருமை கொண்டு எல்லா வளங்களும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

JamesFague
28th May 2013, 05:40 PM
Dear Kalthoon of this thread Wish you many more happy returns of the
day.

JamesFague
28th May 2013, 05:41 PM
It is very apt to start the new thread by Mr Gopal.

ScottAlise
28th May 2013, 05:52 PM
Dear ராகவேந்திரன் சார்,

Wish you many more happy returns

sivaa
28th May 2013, 05:54 PM
திரு ராகவேந்திரன் சார்


உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Richardsof
28th May 2013, 06:21 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/de401e43-41d5-483a-b8ce-23bc3d318979_zps91287223.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/de401e43-41d5-483a-b8ce-23bc3d318979_zps91287223.jpg.html)

RAGHAVENDRA
28th May 2013, 06:53 PM
என் பிறந்த நாளை நினைவூட்டி என்னை அன்புடன் வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி கூறும் இந் நாளில் 4000 பதிவுகளைக் கடக்கும் சந்தர்ப்பமும் ஒரு சேர அமைந்தது, உண்மையிலேயே எனக்குக் கிடைத்த பேறாக நான் எண்ணுகிறேன். கலைவாணியின் அவதாரமான நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் ஆசியும் அவருடைய வைப்ரேஷனும் நம் அனைவருக்குள்ளும் இருந்து கொண்டு நம்மை வழி நடத்திக் கொண்டு வருவதால் தான் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாய்ப்பினை அவர் அளித்து அவருக்குத் தொண்டாற்றும் பாக்கியத்தை நமக்குத் தந்துள்ளார். அதன் ஒரு பகுதியாகத் தான் அடியேனுக்கும் இந்த வாய்ப்புக் கிட்டியது என எண்ணி மகிழ்கிறேன்.

தங்கள் அனைவருக்கும் பிரத்யேகமாக ஒரு முறை என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/nt%20snaps/NTSATHYASUNDAR01_zps8bef4342.jpg

RAGHAVENDRA
28th May 2013, 06:57 PM
தங்கள் அன்பு வாழ்த்துக்களைத் தெரிவித்த கல்நாயக், ராகுல்ராம், சித்தூர் வாசுதேவன், தொலைபேசியிலும் இங்கும் வாழ்த்துக்களைக் கூறிய சிவா, மற்றும் தொலைபேசியில் வாழ்த்துக் கூறிய சுப்ரமணியம் ராமஜெயம் சார் அனைவருக்கும், 4000 பதிவுகளுக்கு வாழ்த்துக் கூறிய திரு வினோத் சாருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/HUB4000THNX_zps4d91891a.jpg (http://s1146.photobucket.com/user/imagivity/media/HUB4000THNX_zps4d91891a.jpg.html)

vasudevan31355
28th May 2013, 07:14 PM
அன்பு ராகவேந்திரன் சார்,

தங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தங்களுடைய வெற்றிகரமான 4000 முத்தான பதிவுகளுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/R-2.jpg (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/R-2.jpg.html)

madhu
28th May 2013, 07:19 PM
அன்புள்ள திரு ராகவேந்திரன் அவர்களுக்கு

:cheer: இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :cheer:

vasudevan31355
28th May 2013, 07:20 PM
எங்கள் அன்பு ஆசான், வழிகாட்டி. எங்கள் குரு, நடிகர் திலகத்திற்கு முதன் முதல் இணையதளம் கண்ட மாமனிதர், திரு. ராகவேந்திரன் அவர்களின் இந்த இனிய பிறந்த நாளில் அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல எங்கள் இறைவனார் நடிகர் திலகத்தை வேண்டுகிறேன்.

அதே போல அற்புதமான 4000 பதிவுகளை நடிகர் திலகம் திரிகளில் இட்டு அரிய சாதனை புரிந்த அவர்தம் தொண்டுள்ளத்தை நினைத்து மகிழ்கிறோம்.

அவர் நீடூடி வாழ்க!

vasudevan31355
28th May 2013, 07:32 PM
அன்புள்ளம் கொண்ட மாமனிதர் திரு.ராகவேந்திரன் சார் அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

http://3.bp.blogspot.com/-8Zer8_6i1Lk/T9rXWQwxamI/AAAAAAAABr8/RWlsuRv2zcg/s640/HappyBirthday_001.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/vlcsnap-2012-05-26-11h01m53s54.png (http://s1087.photobucket.com/user/vasudevan31355/media/sivaji%20part%20-2/vlcsnap-2012-05-26-11h01m53s54.png.html)

R.வாசுதேவன்
V.அரவிந்த்
V.ஆதித்யா

மற்றும்
புவனேஸ்வரி வாசுதேவன்.

நெய்வேலி.

adiram
28th May 2013, 08:00 PM
எங்கள் அன்பு ஆசான், வழிகாட்டி. எங்கள் குரு, நடிகர் திலகத்திற்கு முதன் முதல் இணையதளம் கண்ட மாமனிதர், திரு. ராகவேந்திரன் அவர்களின் இந்த இனிய பிறந்த நாளில் அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல எங்கள் நடிகர் திலகத்தை வேண்டுகிறேன்.

அதே போல அற்புதமான 4000 பதிவுகளை நடிகர் திலகம் திரிகளில் இட்டு அரிய சாதனை புரிந்த அவர்தம் தொண்டுள்ளத்தை நினைத்து மகிழ்கிறோம்.

அவர் நீடூடி வாழ்க!

Dear Raghavendar Sir,

I cant Greet you better than this, so plase accpet this as Greeting from our family.

"MANY MORE HAPPY RETURNS OF THE DAY"
"LONG LIVE HAPPY LIFE"

by Adiram (alias) Anantharaman
Mrs Vasanthi Anantharaman &
Miss A.Roopini

RAGHAVENDRA
28th May 2013, 08:01 PM
டியர் மது சார்,
தங்களின் பிறந்த நாள் வாழ்த்திற்கு என் இதயம் கனிந்த நன்றி. தங்களைப் போன்ற அன்புள்ளங்களின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டும் என விரும்புகிறேன்.

RAGHAVENDRA
28th May 2013, 08:03 PM
டியர் அநந்த ராமன் சார்,
குடும்பத்துடன் வாழ்த்துக் கூறி என் உள்ளத்தைக் குளிர்வித்துள்ளீர்கள். தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றியும் நல்வாழ்த்துக்களும் என்றென்றும்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
28th May 2013, 08:04 PM
வாசு சார்,
தங்கள் அன்பு மழையில் என்னைக் குளிப்பாட்டி பாராட்டு அணிகலனால் அலங்கரித்து தங்கள் அனைவரின் சிம்மாசனத்தில் அமர வைத்து விட்டீர்கள். தங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் என் சிரம் தாழ்ந்த பணிவான நன்றிகள். அதே போல் 4000 பதிவுகளுக்குத் தெரிவித்த வாழ்த்துக்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.

iufegolarev
28th May 2013, 08:11 PM
அன்புள்ள ராகவேந்திரன் சார்

இன்று தங்கள் பிறந்தநாள் . வாழ்த்துக்கள் பல உண்டு ! அதிலே என்னுடையதும் ஒன்று..! இருப்பினும் ஒன்று ! இன்று சங்கடஹர சதுர்த்தி மற்றும் குருபெயர்ச்சி...தலைவர் என்னை போல் ஒருவனில் சொல்வதை போல..ஆமாம்...பேந்துடான் !

நல்ல நாள்...இனிய நாள்..தங்கள் பிறந்த நாள்..! வாழ்த்த வயதில்லை...! உங்கள் ஆசீர்வாதம் இந்நன்னாளில் பெற ஆசை..! நீங்களும் எனக்கு ஒருவிதத்தில் குருதான் !

iufegolarev
28th May 2013, 08:13 PM
ராகவேந்த்ரா சார், அருமையான யோசனை. நடிகர் திலகம் 360 டிகிரி-யில் நல்ல வித்தியாசமான சிறப்பான சிந்தனைகள் மலரட்டும். அடுத்த திரியிலும் தொடரட்டும்.
சௌரிராஜனுக்கு ஒரே விண்ணப்பம் - அவர் முன்னே எழுதியுள்ளது போல செந்தமிழில் எழுதினால் என்னைப்போன்ற சிலர் பயந்து விடக்கூடும் (நல்லவேளை தமிழை ஆங்கிலத்தில் தட்டெழுதுவதை மாற்றிக் கொண்டது.)

தம்பி...இந்த நக்கல் வுடரத நிறுத்தமாட்டே போலருக்கே..!

பின்னணியில்...தட்டட்டும் ...கை தழுவட்டும் பாட்டு உங்களுக்கு கேக்குதா ?

RAGHAVENDRA
28th May 2013, 08:16 PM
அன்புள்ள ராகவேந்திரன் சார்

இன்று தங்கள் பிறந்தநாள் . வாழ்த்துக்கள் பல உண்டு ! அதிலே என்னுடையதும் ஒன்று..! இருப்பினும் ஒன்று ! இன்று சங்கடஹர சதுர்த்தி மற்றும் குருபெயர்ச்சி...தலைவர் என்னை போல் ஒருவனில் சொல்வதை போல..ஆமாம்...பேந்துடான் !

நல்ல நாள்...இனிய நாள்..தங்கள் பிறந்த நாள்..! வாழ்த்த வயதில்லை...! உங்கள் ஆசீர்வாதம் இந்நன்னாளில் பெற ஆசை..! நீங்களும் எனக்கு ஒருவிதத்தில் குருதான் !

மிக்க நன்றி சார். என் வாழ்த்துக்கள் தங்களுக்கு எப்போதும் உண்டு.உயிர்நாடி கதைக்களம் என்றால் உயிர்மூச்சு உரையாடல்கள் அதாவது வசனம் .

மூச்சும் நாடியும் எதில் வேலை செய்யும் என்றால்.. உடலில் ..!

அந்த உடல் தான் நடிகன் !

ஆக, நடிகன் என்ற உடலில் உயிர்நாடியும் மூச்சும் ஒன்றோடொன்று சரிவர கலந்தால்தான் துடிப்பு என்ற நடிப்பு உருவாகும் !

இதில் ஒன்று கூடி ஒன்று குறைந்தாலும் நடிப்பு என்ற கலை குறையுடன்தான் இருக்கும்..!

தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் ! அதன் வலிமை, வல்லமை அப்படி...!


தங்கள் வலைப்பூவில் அட்டகாசமாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

iufegolarev
28th May 2013, 08:42 PM
முரசு தனியார் தொலைகாட்சியில் இப்போது ஒளிபரப்பில்...நமது நடிகர் திலகம் கலக்கும் "சத்திய சுந்தரம்"

ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்

http://www.youtube.com/watch?v=LsnTGLw9IGE


உங்கொப்பன் மவனே..உங்கொப்பன் மவனே ....மம்மி உனக்கு டம்மி தானப்பா...

http://www.youtube.com/watch?v=fkOuQWEGxts

iufegolarev
28th May 2013, 08:47 PM
மிக்க நன்றி சார். என் வாழ்த்துக்கள் தங்களுக்கு எப்போதும் உண்டு.தங்கள் வலைப்பூவில் அட்டகாசமாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

Thanks for your appreciation sir..

iufegolarev
28th May 2013, 08:53 PM
RECAP :

நடிகர் திலகத்தால் தமிழர் சமுதாயத்திற்கு நினைவுபடுத்தப்பட்ட உலக வரலாற்றின் நாயகர்கள்

நடிகர் திலகத்தால் தமிழர் சமுதாயத்திற்கு நினைவுபடுத்தப்பட்ட உலக வரலாற்றின் நாயகர்கள் என்ற தலைப்பில் இன்றுமுதல் தினம் ஒரு தகவலை இடுகை செய்து புதிய மற்றும் இளைய தலைமுறயினர்களுக்கு, தமிழர்களுக்கு நடிகர் திலகம் ஆற்றிய தொண்டினை புரிந்துகொள்வதற்கு ஒரு அஸ்திவாரமாய் விளங்கும் என்று நினைகிறேன் :

முன்னுரை

1952, திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரை உலகில் முதன்முதலில் காலடி எடுத்து வைக்கும்போதே தமிழை, தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தனது முதல் படத்திலயே அனைவருக்கும் அருமையானதொரு பாடம் நடத்திய ஆசான் !

உரைநடை தமிழாகட்டும், இலக்கிய தமிழாகட்டும், சங்கத்தமிழாகட்டும், கொங்குதமிழாகட்டும் ...எந்த தமிழாக இருந்தாலும் அந்த தமிழை தமிழாக அழகாக உச்சரித்த ஓர் உன்னத கலைஞன் நம் நடிகர் திலகம் என்றால் அது மிகையாகாது....

இந்த கால தலைமுறையினர் நடிகர் திலகம் வருவதற்கு முன் பழக்கத்தில் புழுகத்தில் இருந்த நடிப்பையும் தமிழை முதலில் அறிதல் வேண்டும் ..அப்போதுதான் தமிழை பிறர் பேசிய விதம் புரியும்....நடிப்பும் வசனமும் தாமரை இல்லை மேல் தண்ணீர் போல இருந்ததை உணரமுடியும்

நடிகர் திலகம் தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்பிருந்த தமிழ் சம்பாஷனைகள் சில துளிகள்

http://www.youtube.com/watch?feature...&v=4IdkG7hnwC0


http://www.youtube.com/watch?feature...&v=ovlbJ_FM3v4


http://www.youtube.com/watch?feature...&v=76MtBfrCFvM

iufegolarev
28th May 2013, 08:55 PM
ஒரு திரைபடத்தின் உயிர்நாடி என்றால் அது கதைக்களம்..

உயிர்நாடி கதைக்களம் என்றால் உயிர்மூச்சு உரையாடல்கள் அதாவது வசனம் .

மூச்சும் நாடியும் எதில் வேலை செய்யும் என்றால்.. உடலில் ..!

அந்த உடல் தான் நடிகன் !

ஆக, நடிகன் என்ற உடலில் உயிர்நாடியும் மூச்சும் ஒன்றோடொன்று சரிவர கலந்தால்தான் துடிப்பு என்ற நடிப்பு உருவாகும் !

இதில் ஒன்று கூடி ஒன்று குறைந்தாலும் நடிப்பு என்ற கலை குறையுடன்தான் இருக்கும்..!

தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் ! அதன் வலிமை, வல்லமை அப்படி...!

உதாரணமாக :

ஆஹா...என்ற இந்த ஒரு வார்த்தை சந்தோஷம், அதிர்ச்சி, வேதனை, கிண்டல், கோபம், தாபம் மற்றும் பல உணர்சிகளுக்கு பயன்படுத்தி நாம் பார்திரிகிறோம்..!
ஒன்றிற்கு வேறொன்றை பேசினால் விஷயமே மாறிவிடும்...

அதுதான் தமிழின் வலிமை...!


1952 நடிகர் திலகத்தின் முதல் படம் பராசக்தி.

அப்படி என்ன நடிகர் திலகம் பேசிவிட்டார் என்று பலர் நினைக்கலாம்...
அப்படி நினைபவர்களுக்கு : முதல் திரைப்படம் ஒரு நடிகனின் வாழ்வில், தடங்கலுடன் தொடங்கிய படம் ...8 மாதம் படபிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகரை மாற்றவேண்டும் என்று ஜாம்பவான் ஏவிஎம் செட்டியார் அடம்பிடித்த நேரம். PA பெருமாள் என்ற பங்குதாரர் எழுத்து மூலம் கொடுத்த உத்தரவாதம் என்ன தெரியுமா..செட்டியாருக்கு ? இந்த படம் கணேசன் நடித்து வெளிவந்து நஷ்டம் ஏற்பட்டால் அதை முழுவதும் தான் ஏற்கிறேன் என்ற உத்தரவாதம் தான்.

என்ன ஒரு நம்பிக்கை நடிகர் திலகத்தின் மேல் !

இதில் தோல்வி அடைந்தால் ஏவிஎம் செட்டியார் அவர்கள் கூறியது சரிதான் என்ற ஏளன பேச்சு உறுதியாகிவிடும்...முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி உண்மையாகிவிடும். ஒரு நடிகனின் மனோபாவம் அந்த தருணத்தில் எப்படி இருக்கும் என்பதை நினைத்து சற்று பார்க்கவேண்டும்..! இந்த சூழலில் படம் முடிந்து தீபாவளி அன்று திரைக்கு வருகிறது...

அந்த கணேசன் என்ற சிவாஜி கணேசன் தன திறமையால் தமிழ் தாயை தமிழாக ,அழகாக பேசி தமிழ் தாயின் ஆசியோடு தன் முதல் படத்திலேயே , ஒரே இரவில் உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்று பல சாதனைகளை படைக்கும் கலை தாகத்தோடு செல்கிறார்.

முதல் படத்தில் நவரச நடிப்பை இப்படி ஏதேனும் நடிகர் செய்திருப்பாரா என்று இதை பார்ப்பவர் சொல்லவேண்டும் !

முதல் படத்தில் நடிகர் திலகத்தின் ஹாஸ்ய நடிப்பு

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=KsqfDbJv33U


கோபம் ரோஷம் ஆதங்கம் ஆக்ரோஷமாக மாறும் விந்தையுடன் கூடிய மிரட்டலான நடிப்பு
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=B2ai_eNPkCs

iufegolarev
28th May 2013, 08:56 PM
அடுத்தது பாடல் வரிகேற்ப வாய் அசைத்தல் - முதல் படம்- அதில் திராவிட கருத்துக்களை சொல்லும் பாடல் - காட்சிபடி இதை பாடுவது ஒரு பயித்தியம் போல வேஷமிட்ட நாயகன்..கதைப்படி மற்றவர்களை பொருத்தவரை ஒரு பயித்தியம்...நடிகர் திலகத்தின் குரல் இயற்கையாக 9 டு 10 கட்டை கொண்ட சிம்ஹகுரல்...அனால்..பாடியிருப்பவர்...திரு.C S ஜெயராமன் அவர்கள்.

திறமை என்பது நடிப்பில் மட்டும் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் - திரு.ஜெயராமன் அவர்களுடைய குரல் மெல்லிய மென்மையான குரல். வழுக்கிக்கொண்டு செல்லும் குரல்...நடிகர் திலகத்தின் இயற்க்கை குரலோ சிம்ஹகுரல்.
இதை எவ்வளவு திறமை அவருள் இருந்தால் இப்படி வாயசைத்திருப்பர் என்று பாருங்கள். நடிகர் திலகம் திரு.ஜெயராமன் அவர்கள் பாடும்போது, தன்னுடைய பாவத்தை, முகவாயகட்டையை சிறிது குவித்து வைத்து...அதாவது வாயில் சிறிது வெற்றிலையோ அல்லது தண்ணீரோ வைத்துகொண்டு பேசினால் என்னகுரல் வருமோ அதுபோல வாயசைத்திருப்பர் .

பின்பு நடனம் - ஒருவித தான்தோன்றித்தனமான நடனம் இதில் பார்க்கலாம்...நடன ஆசிரியர் சொல்லிகொடுத்த ஸ்டெப்ஸ் மட்டுமே இங்கே நாம் பார்க்க முடியும். காட்சிக்கு என்ன தேவையோ அதை லாவகமாக செய்திருப்பார் நம்முடைய சித்தர் ! அந்த Movements அனைத்தும் பின்னணி இசையோடு கலந்து இருக்கும் நாம் சற்று கண்ணமூடி பாடலை கேடோமேயானால்...!
அபிநயம் இந்த பாடலில் அவரது தனி முத்திரை ! பாடல் வரிகேற்ற அபிநயம். இதை எந்த டைரக்டர் சொல்லி கொடுத்திருப்பார் அவருக்கு..! உதாரணம் : நல்லவரானாலும் (காசு/பணம்) இல்லாதவரை நாடுமதிக்காது குதம்பாய் என்ற வரி...இந்த வரி வரும்போது காசு / பணம் என்ற வார்த்தை பாடலில் இடம் பெற்றிருக்காது. ஆனால் நடிகர் திலகம் தனுடைய விரலை சுண்டி காண்பித்து காசு / பணம் என்று புரியவைப்பார். !

உங்களுடைய பார்வைக்கு அதன் ஓலி ஓளி வடிவம் !
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=eCVQAzG8_14

joe
28th May 2013, 08:57 PM
ராகவேந்திரர் ஐயா-வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

iufegolarev
28th May 2013, 08:58 PM
நடிகர் திலகத்தின் நடிப்பின் உச்சம் அந்த நீதிமன்றம் காட்சி.....அவருக்கு பிறகு வந்த மூன்று முதல் நான்கு தலைமுறைகள், நடிகர் திலகத்தின் இந்த காட்சியை தங்களுக்குள்ள சினிமா ஆர்வம் தூண்டி ஒரு Directorayo அல்லது Producerayo காணும்போது பேசிகான்பிபது திரை உலகின் ஒரு வழக்கமாகவே இருந்தது என்றால் பாருங்கள்.

நமது அன்னை தமிழின் உயிர் அதன் நாடி எங்கெங்கு உள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுண்டி விட்டு படம் பார்க்கும் நம்மையும் அவருக்கு மனதளவில் சப்போர்ட் செய்யவைக்கும் திறம்,

கலைத்தாய் , தமிழ்த்தாய் நடிகர் திலகம் வரும்வரை எவ்வளவு தாகத்துடன் தமிழ் திரை உலகம் என்ற பாலைவனத்தில் இருந்திருப்பார்கள் என்று என்னிபார்தல் வேண்டும்..!

இந்த செந்தமிழை, உரைநடை தமிழை எவ்வளவு லாவகமுடன்......ல..ள..ர..ற...ழ ....அக்ஷர சுத்தியுடன் உரைத்திருக்கிறார் அதுவும் முதல் படத்தில்....இந்த காட்சியில்...கேமரா ஒரு இடத்தில் நிருத்திவைக்கபட்டதோடு சரி. எவ்வளவு நீண்ட ஒரு வசனம்..ஒரு Takeல் எவ்வளவு நீளமான காட்சி எடுக்கப்பட்டது என்று பார்க்கும் போது...நாம் கற்று இன்று பேசும் தமிழ் ஏதோ கொஞ்சம் சுமாராக இருக்கிறதென்றால் அதற்க்கு முதல் காரணம் நம் சித்தர் படங்களை பார்த்து இதைபோல நாமும் பேசவேண்டும் அக்ஷரம் பிசகாமல் என்பது தான் !

அந்த அனல் பறக்கும் நீதிமன்ற காட்சி - !
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=SdnOlP94x2g

வசன வார்தைகளுக்கேற்ற அவருடைய முகபாவம், வார்தைகேற்றவாறு கேசம்கூட ஆடவைக்கும் அந்த தலை அசைப்பு , ஆணித்தரமாக வாதிடும்போது தானாக வரும் அந்த வலதுகை, தங்கைபற்றி, குடும்பத்தைப்பற்றி பேசும்போது முதல்படதிலயே கண்ணீரை தேக்கி எப்போது வெளியே விடவேண்டுமோ அப்போது விடவைக்கும் திறன் ...அடேயப்பா..!

தமிழ்த்தாய் தன்னுடைய மகன் இவன் ஒருவன்தான் என்றல்லவா தன்னுடைய ஆசிகளை பராசக்தியின் மாபெரும் வெற்றியையும், ஒரே இரவில் தமிழ் திரைஉலகின் நிரந்தர உச்ச நட்சத்திரம் என்ற அழியா நிலையையும் வழங்கினாள் !

இதை எழுதும்போது என்னுடைய மெய்சிலிர்கிறது..ஏனெனில் ...

என் பூர்விகம் கேரளா ...தாய்மொழி மலையாளம் !

என்னை இந்த நிலையிலாவது தமிழை சுமாராக பேசவும் எழுதவும் படிக்கவும் உந்துதலாகியது நடிகர் திலகமும் அவருடைய நடிப்பின் வீச்சும் என்பதை உணர்ந்துகொண்டதன் காரணம் !

அனைவரிலும் பெரியவராக தமிழ்த்தாய் விளங்குவதால் முதல் பெரியவர் வணக்கத்திற்கு உரிய தமிழ் தாய் பற்றிய கட்டுரை நிறைவு......

நடிகர் திலகத்தால் நினைவுபடுத்தப்பட்ட பெரியவர்கள் வரிசையில் அடுத்து இடம்பெறபோவது :


மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழ நாட்டின் பெருமையை இவ்வையகம் உள்ளவரை நிலைத்திருக்க செய்த

ஏடு தந்தானடி தில்லையிலே....
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7aDsRLCqxsA

iufegolarev
28th May 2013, 08:59 PM
ராஜ ராஜ சோழனை பற்றி அறிவதற்கு முன்னர் சோழர் பரம்பரையை பற்றி அறிதல் நலம் - உங்கள் அனைவர்காகவும் -

சோழர் பரம்பரையின் ஆட்சி மன்னன் விசயாலயன் 846 முதல் 871 வரையிலும்
அவருக்கு பிறகு அவரது மகன் ஆதித்யன் 871 முதல் 907 வரையிலும்,
பிறகு இவர் மகன் பராந்தகன் 907 முதல் 955 வரையிலும், பராந்தகனின் மூன்று மகன்கள் ராஜாதித்யன், கண்டராதித்த்யன், அரிஞ்சயன் மூவருமாக பின்பு கண்டராதித்த்யன் மகன் மதுராந்தக உத்தம சோழன் , அரிஞ்சயன் மகன் சுந்தர சோழனும் 985 வரை ஆண்டனர். அதற்க்கு பிறகு சுந்தர சோழனின் இரு மகன்களான கரிகாலனும், பின்னர் ராஜ ராஜ சோழனும் (985-1016) ஆண்டார்கள், பின்னர் அவருடைய மகன் ராஜேந்திரன் 1012-1044 ராஜேந்திரன் 1 இக்கு பிறகு, அவர் மகன்கள் ராஜாதிராஜன், ராஜேந்திரன் 2 , வீர ராஜேந்திரன் இவர்களில், ராஜேந்திரன் 2 மன்னராக ஆண்டார். அவர்க்கு ஆண் வாரிசு கிடையாது . மதுராந்தகி என்ற பெண் குழந்தை மட்டுமே... ஆகையால் வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் ஆண்டான். இவர்களில் கரிகாலன் சோழ மரபினர் என்றும் மற்றவர் இடைகால சோழர்கள் என்றும் அழைக்க பட்டனர்.

ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை சாளுக்ய வம்சாவழி விமலாதித்யனை மணந்து அதன் மூலம் ராஜராஜன் நரேந்திரன் என்ற குழந்தையை ஈன்றெடுத்தாள்.

இவனும் சாளுக்ய வம்சவழியே. ராஜராஜன் நரேந்திரன் ராஜேந்திர சோழன்-1 மகள் அம்மன்கதேவியை மனமுடித்ததில் குலோத்துங்கன் -1 ஜனனம் .
குலோத்துங்கன் 1 வளர்ந்து ராஜேந்திரன் 2 மகள் மதுராந்தகியை மணமுடித்து அவர்களுக்கு நான்கு மகன்கள் பிறகின்றனர். அவர்கள் சாளுக்ய சோழர் என்று அழைக்கபடுகின்றனர்.

மேற்கூறியவை சுருக்கமாக சொன்ன சோழர் வழி, சாளுக்ய வழி, சோழ மரபு வம்சத்தின் தகவல்களாகும்.

பழங்கால ஏடுகளில் ராஜராஜசோழனை பற்றியுள்ள குறிப்புகள் :

ராஜராஜன் யானை மீது அமர்ந்து வரும்போது எதிரே கூட்டமாக கேசரி (சிங்கம்) வந்தாலும் ஒருகணம் திகைத்து சிதறி நாலு பக்கம் தலை தெறிக்க ஓடும் என்று கூறுகிறது..!

அரசவையில் ராஜ ராஜன் வருகையில் நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, வலக்கரம் சென்கோலிலும் இடக்கரம் சிம்ஹாசனபிடியிலும் வைத்து கோரிக்கையை கேட்டு, தீர்ப்பு சொல்லும்பாங்கு இவை மாநிலத்து மக்களெல்லாம் இமைகொட்டமால் இறைவனை பக்தியுடன் காண்கின்ற பாங்கினை அரசவையில் தோற்றுவித்தன..!
பெரும் குற்றும் செய்தவன் கூட கொற்றவனின் பார்வை ஒருமுறை பார்க்கும் பாந்தத்தில் பனி போல நெஞ்சுருகி மனிப்பு கோருவான் ..

போர்க்களத்தில் ராஜராஜன் வாள் சுழலும் வேகம் சக்ராயுதம் போல பல திசையிலும் தலைகளை கொய்யும் பூஜ வலிமை கொண்டது என்றும் அகன்ற மார்பில் அந்த கவசம் அமர என்னபாக்கியம் செய்ததோ..என்றும் குறிபிட்டுள்ளது

iufegolarev
28th May 2013, 09:00 PM
இனி நமது நிலைக்கு வருவோம் -

நமக்கு பல விஷயங்களில் முன்னோடியாக வாழும் முறையை கற்றுகொடுத்த பெரியவர்களை அவர்களின் அரும்பணிகளை நாம் மறக்காமல் நம்மால் முடிந்தவரை அவர்கள் புகழை குறைந்தது நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு உரைத்திடல் வேண்டும். இல்லையேல், காலபோக்கில் அவர்களை பற்றிய உண்மைகளும், அவர்களுடைய தொண்டும், புகழும், ஆற்றிய அரும்பணிகள் யாரும் அறியாவண்ணம் இருக்கும்.

வெறும் ஒரு சிலையை, கல்வெட்டை பார்ப்பது போல தான் பார்பார்கள்.

அந்த பெரியவர்களின் மகத்துவங்களை, திரை மூலமாக அடித்தட்டு மக்கள் மீண்டும் நினைத்துபார்க்கும் வண்ணம் அவர்களிடத்தில் கொண்டு சென்ற பெருமை, அந்த திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்த தயாரிப்பாளரையும் சாரும்.

அந்த தயாரிப்பாளர், தன மனதில் இது போல ஆசை வளர்ந்தால் அதை திரைப்படமாகும் முயற்சியில் எப்போது ஈடுபடுவார்?

அந்த கதாபாத்திரதுக்கான, அந்த கதாபாத்திரத்தை மிக சிறந்த முறையில் கையாளக்கூடிய கை தேர்ந்த நடிகர் இருந்தால் மட்டுமே அந்த தயாரிப்பாளரின் கனவு நனவாகும்.

அதுமட்டும் அல்ல ! இவர் எந்த நடிகர் அதை செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைகிறாரோ..இவர் மட்டும் அல்ல, அந்த திரைப்படத்தை வாங்கி திரையிடும் விநியோகஸ்தர்கள், திரை அரங்கு முதலாளிகள் இவர்கள் அனைவரும் அந்த நடிகர் செய்தால் மிக சிறப்பாக இருக்கும் என்றும் ஒருமித்த கருத்து அவர் மூவருக்கும் இருக்கவேண்டும்...

அதைவிட முக்கியம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க, அதை சிறப்பாக கையாண்டு மக்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அந்த கதாநாயகனுக்கு தைரியமும், தன் திறமை மீதும் அபார நம்பிக்கை வேண்டும் !

அப்படி உள்ள ஒரு நடிகனால் மட்டுமே இதிகாச, சரித்திர, தெய்வாம்சம்கொண்ட கதாபாத்திரங்களை கையாள முடியும்....இதில் ஒன்று குறைந்தாலும், பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அந்த கதாபாதிரதுக்கே பங்கம் ஏற்படும் !

அப்படி இந்த ராஜ ராஜ சோழன் வரலாற்றில் ஒரு சில விஷயங்களை திரைப்படமாக திரு. உமாபதி ஆனந்த் Pictures முடிவெடுத்தபோது அதுவும் அகன்ற திரையில் ஒரு மாபெரும் சோழ மன்னனை காண்பிக்க வேண்டும் என்று முடிவுசெய்தபோது ....தமிழ் திரை உலகில் பல திறமையாளர்கள் இருந்தாலும் , அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கி வருகின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சோழனாக சித்தரிக்கபட்டால், அது மிக சிறப்பாக அமையும் என்று ஏகோபித்த ஒப்புதலை விநியோகஸ்தர்கள், திரையிடும் திரை அரங்கு உரிமையாளர்கள் கொடுத்ததால்
நடிகர் திலகம் ராஜ ராஜ சோழனாகவும்,
திரு.சிவகுமார் ராஜராஜன் மகன் ராஜேந்திர சோழனாகவும்,
திருமதி. லக்ஷ்மி அவர்கள் ராஜராஜன் மகள் குந்தவயாகவும்,
திரு.முத்துராமன் அவர்கள் சாளுக்ய விமலாதித்யனாகவும் நடிக்க வைக்க முடிவெடுத்து தமிழின் முதல் Cinemascope வண்ணப்படமாக ராஜ ராஜ சோழன் 1973இல் வெளிவந்தது.

iufegolarev
28th May 2013, 09:01 PM
ராஜராஜ சோழன் வரலாற்றில் நடிக்க ஏன் நடிகர் திலகம் ஒத்துகொண்டார் ? அதற்க்கு அவர் கூறும் காரணம் என்ன ?

ராஜராஜ சோழனாக நடிகர் திலகம் நடிப்பதற்கு என்னென்ன சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது, அந்த சவால்களையும் மீறி அவர் ராஜராஜ சோழனாக பரிமளிதாரா அப்படி பரிமளித்தார் என்றால் எப்படி ?

ராஜராஜ சோழனை பற்றி வரலாற்றில் குறிப்பிட்டிருப்பதை போல நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, தந்தையின் கனிவு கொண்ட கண்கள், அதே நேரம் அரசவையில் கம்பீர தோற்றம், தவறு செய்பவர்களை பார்வையால் தண்டிக்கும் பாங்கு...இப்படி போகிறது ராஜராஜனை பற்றிய வர்ணனை.

தமிழ் ஆர்வம் பெருகிவரும் காட்டாற்று வெள்ளம் போல, வார்த்தை ஜாலங்கள் அர்ஜுனன் வில்லிலிருந்து விடுபட்ட அம்புகள் போல் ...திறமையில் முதன் முதல் திறமை..பலகுரலில் பேச பழகி தேர்ச்சிபெற்ற வேந்தன்...இப்படி சொல்லிகொண்டே போகலாம்...!

ராஜராஜனின் இவ்வளவு மிடுக்கும், ஆண்மையும், கம்பீரமும், தோற்றப்பொலிவும், பேசும் திறமும், ஒருங்கே பெற்ற ஒரு நடிகன் தமிழ் திரை உலகில் யார் என்ற கேள்வி எழும்போதெல்லாம் எந்த சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒருமித்த குரலில் தஞ்சை பெரியகோவிலிலுள்ள மணியின் " நங் " என்ற ரீங்காரமிடும் நாதம் போல உரைப்பது திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் என்பதை வீடறியும், நாடறியும், தமிழர்கள் உள்ள புவி அறியும்...அதனுடன் நாமும் அறிவோம்..!

ஒரு மன்னனுக்குரிய அனைத்து லக்ஷணங்களும் ஒருங்கே பெற்ற நடிகர் திலகம்...தஞ்சை பெரியகோயில் நந்திக்கு, கோவில் கும்பாபிஷேக பூஜை செய்யவரும் காட்சியை பாருங்கள்....!

திரை உலக சித்தர் நமது நடிகர் திலகம் ராஜ ராஜ சோழன் வேடம் புனைந்து இந்த கும்பாபிஷேக காட்சி திரைப்படமாக எடுக்கப்பட்டதை போலவா உள்ளது ?

இல்லவே இல்லை !!

நம் கண் முன்னால், உண்மையிலயே ராஜ ராஜ சோழன் நமக்காக தஞ்சை பெரியகோயில் கும்பாபிஷேகத்தை நமக்காக இன்னொருதடவை செய்வதை போல உள்ளது என்றால்.....அந்த ராஜ ராஜ சோழனாக நடிகர் திலகம் நடிக்கவா செய்தார் ? இல்லவே இல்லை அவர் தான் ராஜ ராஜ சோழனாக வாழ்ந்தார் !!!! அது தான் உண்மை !


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=5DhrsSQ-2aY

iufegolarev
28th May 2013, 09:17 PM
இளையராஜா சாதனை படத்தில் நடிகர் திலகத்தை பற்றி கூறுவது ஞ்யபகதிர்க்கு வருகிறது...அவர் கூறுவதை அனைவரும் சற்று கேட்போமே !

http://www.youtube.com/watch?v=Cnk2hFswbXw

Murali Srinivas
29th May 2013, 12:42 AM
வாசு சார் அவர்களுக்கு,

ராகவேந்தர் சார் சொன்னது போல் நானும் அவரும் 11-வது பாகத்தை துவக்கி வைக்க கோபால் அவர்களை அழைக்க வேண்டும் என நினைத்திருந்தபோது அதை முதல் ஆளாக இந்த சபையில் முன்மொழிந்ததற்கு நன்றி. அதையே நாங்களும் வழிமொழிகிறோம்.

விக்கிரமனாக ஜனிக்க ஆசைப்பட்டு ஆனால் காத்தவராய அவதாரம் எடுத்த நெய்வேலி நாயகன் கோபால கிருஷ்ணனை 11-வது பாகத்தை துவக்கி வைக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராகவேந்தர் சார்!

இது பல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன்

RAGHAVENDRA
29th May 2013, 06:16 AM
GOPAL SIR


http://www.quickblogtips.com/wp-content/uploads/2012/08/120822-ready-steady-go.jpg

RAGHAVENDRA
29th May 2013, 06:17 AM
ஜோ சார், முரளி சார்,
தங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

Gopal.s
29th May 2013, 06:31 AM
Hi Guys,
I am out of HQ and reaching only on 30 May night.Can you wait till that time?I am really sorry that I am tied up till then .I want the starting to be good and in Tamil too..I know that I am depriving you of 1 1/2 golden Day!!!Can you all put up with this inconvenience?
Otherwise tonight,I'll do it in English.

Gopal.s
29th May 2013, 06:38 AM
My wishes for 4000 Golden contributions and your birthday coinciding. May be Thiruvilayadal from heaven by Our Acting God?