PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 10



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Gopal.s
14th October 2012, 12:21 PM
வர வர சில தனி காட்டு வேந்தர்களின் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. பதிவை ஆரம்பிக்கும் போதே சிலர் இப்படி,பலர் அப்படி என்று குறை சொல்லும் பாணிதான். யாராவது புண்ணியவான் ,ஆறாவது கட்டளையாக, வருபவர் எல்லோரையும் insult செய்து கொண்டே இருக்க கூடாது என்பதையும் சேர்த்தால் முதல் சங்கல்பம் எடுக்கும் ஆளாக இருப்பேன். நிறைய hits தான். எல்லோருக்கும் மாற்றி மாற்றி குறி வைத்து கொடுக்கிறார்.
போட்டிக்கு பிள்ளை பெற்ற,நடிப்பு சீரியல் என்ன ஆனது?

Gopal.s
14th October 2012, 01:01 PM
திரை இசை திலகம் கே. வீ. மகாதேவன்-

தமிழ்,தெலுங்கு இரண்டு film industries கொண்டாடும் நபர்.

folk (மக்களை பெற்ற மகராசி ,குமுதம்) ,குத்து (வண்ணக்கிளி),classical based folk (முதலாளி), light classical (பாவை விளக்கு) ,ghazal(தொழிலாளி) ,classical (திருவிளையாடல்,சங்கராபரணம்) எல்லாவற்றிற்கும் trend -setter (50 களில் இருந்து).இவரை தன் குரு என்று சொல்லி கொண்டாடினார் மெல்லிசை மன்னர்(அவர் குரு என்று அழைதத மற்றையோர் ராம மூர்த்தி, சுப்பையா நாயுடு,நவஷாத்).

இவருடன் நடிகர் திலகம் பயணம் கூண்டு கிளி(1954 )யில் தொடங்கி, சிம்ம சொப்பனத்தில் (1984)முடிவுற்றது. இவர் மக்களை பெற்ற மகராசி, படிக்காத மேதை,பாவை விளக்கு,எல்லாம் உனக்காக,வளர்பிறை,வடிவுக்கு வளைகாப்பு,இருவர் உள்ளம்,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம,அன்னை இல்லம்,நவராத்திரி(100 வது NT படம்),செல்வம்,பேசும் தெய்வம்,பாலாடை,தில்லானா மோகனாம்பாள்,விளையாட்டு பிள்ளை,வியட்நாம் வீடு,எதிரொலி,அருணோதயம்,குலமா குணமா,வசந்த மாளிகை,எங்கள் தங்க ராஜா,சத்தியம்,உத்தமன்,சிம்ம சொப்பனம் என்ற சமூக படங்களுக்கும் , சம்பூர்ண ராமாயணம்,திருவிளையாடல்,மகாகவி காளிதாஸ்,சரஸ்வதி சபதம்,கந்தன் கருணை,திருவருட்செல்வர்,திருமால் பெருமை,ஹரி சந்திரா என்ற புராண படங்களுக்கும் நடிகர் திலகத்துக்காக கொடுத்துள்ளார்.

1963 , 1966 இரண்டு ஆண்டுகளில் NT க்காக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் ஆவார்.
.

Murali Srinivas
14th October 2012, 11:41 PM
வரும் புதன் அக்டோபர் 17அன்று நடிகர் திலகத்தின் திரையுலக வைர விழா ஆண்டு நிறைவாக மலர்வதை முன்னிட்டு அன்று காலை 11 மணி அளவில் ஒரு விழா நடக்கிறது. நடிகர் திலகம் முதன் முதலாக சக்சஸ் என்ற வசனம் பேசிய அந்த இடத்தில [ஒரு நினைவு சின்னம் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில்] இந்த விழா நடைபெறும்.கூடுதல் விவரங்கள் தெரிந்தவுடன் பதிவிடப்படும்.

அன்புடன்.

கோவை டிலைட் திரையரங்கில் தங்கைக்காக திரையிடப்பட்டிருக்கிறது. [இளவல் ராகுல் ராமும் இதை பதிந்திருக்கிறார். நன்றி]

Gopal.s
15th October 2012, 06:36 AM
Murali Sir,
I am doing the cut-paste of the Thiruvilaiyadal ,Baby Albert write-up of yours from the other thread.
இன்று மாலை பேபி ஆல்பட் திரையரங்கில் [House Full] திருவிளையாடல் காவியத்தின் 25-வது நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரையரங்கிற்கு வெளியே ஆரம்பித்து உள்ளே திரையரங்க வெளி வளாகம் முழுவதையும் பராசக்தி வைர விழாவிற்கு தயாரிக்கப்பட்ட பானர்கள் அலங்கரிக்க பலவற்றிக்கும் மாலை அணிவிக்கப்பட்டு ராஜ கம்பீரத்தோடு காட்சியளித்தன. வெளியே வெடிக்கப்பட்ட பட்டாஸ்-களின் எண்ணிக்கைக்கு கணக்கேயில்லை. எண்ணிக்கையில் மட்டுமல்ல அவை ஏற்படுத்திய ஒலி அதிர்வுகள் எக்மோர் ரயில் நிலையத்தையும் தாண்டி கேட்டிருக்கும். போக்குவரத்து ஸ்தம்பிக்க மக்கள் கூட்டம் இரு பக்கம் குவிய வாழ்தொலிகளும் ஆட்டங்களும் பட்டாஸ்-களின் வெடி சத்தமும் அந்த சுற்றுவட்டாரத்தையே சற்று நேரம் கலக்கி விட்டது உண்மை. அந்த வழியாக சென்றவர்கள், படம் பார்க்க அரங்கிற்கு வந்தவர்கள் அனைவரும் முதலில் புதிதாக வந்துள்ள படத்திற்குதான் இந்த அமர்க்களம் என நினைத்தனர். பிறகு நடிகர் திலகத்தின் பானர்களையும் சிவாஜியின் பெயர் வாழ்தொலிகளில் சொல்லபடுவது கேட்டு உண்மையை புரிந்துக் கொண்டனர்.

திரையரங்க ஸ்டாலில் இருப்பவர்கள் நம்மிடம் அடித்த கமண்ட். நாங்களும் எத்தனையோ படங்களுக்கு ரசிகர்களையும் அவர்களின் ஆட்டப்பாட்டங்களையும் பார்த்திருக்கோம். ஆனால சிவாஜி ரசிகர்கள் போல் இவ்வளவு உணர்ச்சிமிக்க விசுவாசமிக்க ரசிகர்களை பார்த்ததேயில்லை. அது போல் இடைவேளையின் போது இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் இடைவெளி விடப்பட நமது ரசிகர்களின் அலப்பறையை பார்த்து இளைஞர்களே அதிசயித்து போனதோடு மட்டுமல்லாமல் அந்த அலப்பறையை தங்களின் அலைபேசிகள் மற்றும் சிலர் காமராவில் பதிவு செய்துக் கொண்டனர், அரங்கிற்கு உள்ளே வழக்கம் போல் பலத்த வரவேற்பு அதிலும் குறிப்பாக இறுதி எபிஸோடு வழக்கம் போல் மிகுந்த ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது எப்போதும் போல் பாட்டும் நானே அதிலும் ஆடும் கலையின் நாயகன் நானே வரியெல்லாம் உச்சகட்டம்.

இறுதியாக ஒன்று. ஒரு நடுத்தர வயதுடைய நபர் அவருடன் மேலும் இரண்டு பேர்கள், அவர் ஒரு கேள்வி கேட்டார். சிவாஜி இறந்து பல வருஷம் ஆயிடுச்சிலே?

ஆமாம் பதினோரு வருஷம் ஆயிடுச்சு.

இப்பவுமா இவ்வளவு பேர் இப்படி இருக்காங்க?

இன்னும் நிறையப் பேர் இருக்காங்க. ஏன் அப்படி கேட்கீறிங்க?

இல்லே எதாவது லாபம்,பதவி பணம் இப்படி எதுவுமே கிடைக்க சான்ஸ் இல்லையே இருந்தும் இப்படி இருக்காங்கனா ரொம்ப உண்மையான மனுஷங்க என்று சொல்லிவிட்டு கூட வந்தவர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டே போனதுதான் ஹைலைட்.

அன்புடன்
Reply With Quote

Gopal.s
16th October 2012, 07:40 AM
sathish,
Thanks for your links.

Gopal.s
16th October 2012, 07:46 AM
murali sir,
Is thiruvilayadal going to be released like Karnan?The legal matter is solved ,I suppose?

Gopal.s
16th October 2012, 07:48 AM
கே.வீ.மகாதேவன் சாரிடம் உள்ள சிறப்பம்சங்கள்-

1) 95 % பாடல்களில், இந்திய பாரம்பரிய இசை கருவிகளை மட்டுமே உபயோக படுத்தி உள்ளார்.
2)90 % பாடல்கள் பாட்டு எழுதி இசை அமைக்க பெற்றவை. கண்ணதாசன் வார்த்தைகளில், ஒரு கட்டுரை எழுதி கொடுத்தாலும் இசை அமைக்கும் வல்லமை கொண்டவர்.
3) எடுத்து கொண்ட படத்துக்கு உரிய இசையை கொடுப்பார். இவரா அவரா என்றெல்லாம் பார்த்து இசையமைக்கும் வழக்கம் அறவே இல்லை.
4) improvised மியூசிக் கொடுத்திருக்கிறாரே தவிர , assembled arrangements பாணியில் பண்ணியதே இல்லை.சில ஹிந்தி பாடல்களை உபயோக படுத்தி இருந்தாலும்,பெரும்பாலும் அசலானவை. ஸ்பானிஷில் கொஞ்சம்,arabian இல் கொஞ்சம் என்று உருவியதே கிடையாது.
5) இவர் ஸ்டைல், இந்திய -வெஸ்டேர்ன் பாணி action படங்களுக்கு ஒத்து வராது. மற்ற படி எல்லா படங்களுக்கும் பொருந்துவார்.
6) இவர் 69 இல் இருந்து 80 வரை தெலுங்கில் பிஸி ஆக இருந்ததால் தமிழில் ஆர்வம் காட்டவில்லை.

என்னை கவர்ந்த பாடல்கள்-

சமூக படங்களில்-
சிட்டு குருவி சிட்டு குருவி, மணப்பாறை, போறவளே, ஆகா நம் ஆசை,ஏரி கரையின் மேலே , சீவி முடிச்சு,ஒரே ஒரு ஊரிலே,படித்ததினால்,ஆயிரம் கண் போதாது, வண்ண தமிழ்,காவியமா,ஆத்திலே தண்ணி வர,மாட்டுகார வேலா,வண்டி உருண்டோட,சித்தாடை கட்டிக்கிட்டு, மாமா மாமா மாமா,கல்யாணம்,கல்லிலே,என்னை விட்டு, மியாவ் மியாவ்,ஒருத்தி ஒருவனை,மெல்ல மெல்ல அருகில்,தட்டு தடுமாறி,கண்ணுக்குள்ளே,சிரித்து சிரித்து, ஹலோ ஹலோ,காட்டு ராணி, காட்டுக்குள்ளே,கட்டான,மலரும் கொடியும்,கங்கை கரை,கடவுள் மனிதனாக, யாரடி வந்தார்,காலம் என்னும் நதியினிலே, ராதே, இரவுக்கு ஆயிரம்,பகலிலே, உன்னை சொல்லி, கள்ள மலர், மயக்கம் எனது, தூங்காத கண்ணென்று(நிறைய பேர் லிஸ்டில் தமிழின் நம்பர் one ),பூந்தோட்ட, சின்னஞ்சிறிய,குங்குமம்,பறவைகள்,கண்ணெதிரே, இதய வீணை,கண்ணே கண்ணே, புத்தி சிகாமணி,நதிஎங்கே,அழகு சிரிக்கின்றது,ஏனழுதாய், பசுமை நிறைந்த, புத்தன் வந்த,தாழம் பூவே,பனி படர்ந்த,வாடை காற்றம்மா,மடி மீது,நடையா,எண்ணிரண்டு,மஞ்சள் முகமே,உன்னையறிந்தால்,சீட்டுக்கட்டு,வெள்ளிநிலா,ஆண்ட வன், என்ன கொடுப்பாய்,கன்னத்தில் என்னடி, ஒரே முறைதான், நவராத்திரி, இரவினில், சொல்லவா,போட்டது,
ராஜாதி ராஜ மகா,அவளா சொன்னால்,என்னடி,ஒன்றா இரண்டா,எனக்காகவா,பட்டாடை,எங்கே ஆஹா எங்கே,அழகு தெய்வம்,நான் அனுப்புவது,இதய ஊஞ்சல்,பத்து மாதம்,பிள்ளை செல்வமே,நலம்தானா,மறைந்திருந்து,பாண்டியன் நானிருக்க,மழை முத்து ,கேளம்மா,உனக்கும் எனக்கும்,என்றும்,நல்ல நல்ல,எவரிடத்தும்,காதல் எந்தன் ,என்னம்மா,எலந்த பயம், அலேக்,மெல்ல,,மாறியது,சந்திப்போமா,காலமிது,சிரிப்பேன ்,ஒரு பக்கம்,பூ வைத்த,நெஞ்சம் உண்டு,கடவுள் ஏன்,நீல நிறம்,ஆசையிருக்கு,பாலக்காட்டு,உன்கண்ணில்,தொட்டால், டிக் டிக்,பதினாறு வயதினிலே,ஏன் ஏன் ஏன் ,குடிமகனே,மயக்கம் என்ன,இரண்டு மனம,யாருக்காக,கல்யாண ஆசை,இரவுக்கும் பகலுக்கும்.

புராண,சரித்திர, படங்கள்-
நான் சொல்லியா தெரிய வேண்டும்? திருவிளையாடல் முதல் ஆதி பராசக்தி வரை.

joe
16th October 2012, 07:14 PM
சண்டியர் கரண் என்ற கமல் ரசிகர் இந்த மன்றத்திலும் உறுப்பினராக இருக்கிறார் என நினைக்கிறேன் .

அவர் தன் வலைப்பூவில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார் ..அதாவது கமல் மற்றும் எம்.ஜி.ஆர் படங்கள் மட்டும் தான் மறுவெளியீட்டில் ஓடியிருக்கிறதாம் .
http://www.sandiyarkaran.com/2012/10/FilmReRelease.html

கமல் , எம்.ஜி.ஆரோடு அவர் நிறுத்தியிருந்தால் நமக்கு வேலையில்லை .ஆனால் ஒரு பொன்மொழியை உதிர்த்தார் பாருங்கள்

சில நடிகர்களுக்கு ஒன்றிரண்டு படம் ரி-ரிலீஸ் ஆகலாம், அதில் ஒரு படம் கூட (கர்ணன்) ஒரு வாரம் ஓடலாம்

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் :rotfl:

கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு :huh:

Murali Srinivas
16th October 2012, 11:12 PM
ஜோ,

இவரின் முந்தைய பதிவுகளையும் கூட நான் பார்த்தேன். அதில் சிவாஜி விரோதம் தெளிவாக தெரிந்தது. மேலும் பழைய படங்களைப் பற்றிய எந்த விதமான விவரங்களும் தெரியாதவர் என புரிந்தது. உதாரணமாக ஜஸ்டிஸ் கோபிநாத் மற்றும் நான் வாழ வைப்பேன் படங்களின் நாயகன் யாரென்று கூட தெரியாமல் தவறாக எழுதியிருந்தார். இப்போது ரீரிலீசில் கர்ணனை தவிர வேறு எதாவது சிவாஜி படம் ஓடியிருக்கிறதா என்று கேட்கும் போதே தெரியவில்லையா? ஆகவே இப்படிப்பட்டவர்களின் பதிவுகளை எல்லாம் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. எத்தனை பேர் எத்தனை முறை எத்தனை வருடங்களாக முயற்சிக்கின்றனர்? ஆகவே இதையெல்லாம் ஓரத்தில் ஒதுக்கி நாம் நம் பயணத்தை எப்போதும் போல் தொடர்வோம்.

அன்புடன்.

Murali Srinivas
16th October 2012, 11:49 PM
Come tomorrow October 17th will dawn. What is so great? Every year October 17th comes and goes.But this year is something special. Come tomorrow, Oct 17th signifies the Sashti poorthi celeberation of Nadippu in the world of Cinema. 60 years back on this day, one frail man answering to the name of V.C.Ganesan knocked at the doors of the film world and a day after he not only found the throne of the film world at his feet, he became the Monarch of all he survived. He also found a place in the hearts of millions and millions of people where he is firmly entrenched and will continue to remain there for eternity.

Yes, the Kohinoor diamond of Tamil Cinema celebrates Diamond jubily tomorrow. Let it go on on on and on!.

தமிழ் சினிமாவின் பொற்காலத்தை அதன் பல்வேறு வடிவங்களை தன திறமையினாலும் வெவ்வேறு பாத்திரப் படைப்புகள் மூலமாகவும், சிறப்பான கதையம்சம் கொண்ட திரை காவியங்களினாலும் அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாய் தன படங்களின் மூலம் நமக்கு வாரி வழங்கிய நடிப்புலக மேதை நடிகர் திலகம் அவர்கள் திரையில் தோன்றிய இந்த நன்னாளில் அவரை நமது கலையுலகிற்கு ஈன்ற கலை மகளுக்கு நமது மனமார்ந்த வணக்கங்கள்.

சாகா வரம் பெற்ற கலையுலக சிரஞ்சீவி அவர்களின் திரை காவியங்களை என்றென்றும் கண்டு மகிழ்வோம்.

அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்து அவரின் கலை திறமையை நாம் தரிசிக்க நமக்கு வாய்ப்பளித்ததற்கு இறைவனுக்கு மீண்டும் நன்றி.

என்றென்றும் வாழட்டும் அவர் பெயர்! என்றென்றும் வளரட்டும் அவர் புகழ்! என்றென்றும் ஒலிக்கட்டும் அவர் சிம்ம குரல்!

அன்புடன்

Avadi to America
17th October 2012, 01:27 AM
சண்டியர் கரண் என்ற கமல் ரசிகர் இந்த மன்றத்திலும் உறுப்பினராக இருக்கிறார் என நினைக்கிறேன் .

அவர் தன் வலைப்பூவில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார் ..அதாவது கமல் மற்றும் எம்.ஜி.ஆர் படங்கள் மட்டும் தான் மறுவெளியீட்டில் ஓடியிருக்கிறதாம் .
http://www.sandiyarkaran.com/2012/10/FilmReRelease.html

கமல் , எம்.ஜி.ஆரோடு அவர் நிறுத்தியிருந்தால் நமக்கு வேலையில்லை .ஆனால் ஒரு பொன்மொழியை உதிர்த்தார் பாருங்கள்


நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் :rotfl:

கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு :huh:

here, a list of movies i saw in rerelease during late 80's... those days my parents used to take mostly sivaji or MGR movies occassionally Gemini movies.....I saw following sivaji movies those days in tent theatre (AANDAVAR KOTTAGAI in AVADI).
1. Enga mama
2. Rajapart ranga durai
3. keezhvanam sivakum
4. manogara
5. vasantha maligai

I don't know why people talk shit without knowing the fact....sivaji and MGR movies have been rereleased for more than twenty years. But the most pathetic one is nobody talks about gemini ganesan.... i had seen his movies also constantly rereleased in 80s.

Avadi to America
17th October 2012, 01:41 AM
A2A, trouble with this thread is, it's too gargantuan in emotion that small ernest post that get's no notice.

As mentioned many times before, this has easily be Kamal's challenge for creating MMKR, just as Navarathiri is a challenge for Dasa. In terms of comedy quotient, it is usually seen as lesser compared to films that came decades later, but I laugh my ass off still. Especially Marudthu and his walk towards camera schene. For the copycat watchers out there, MRR's scene with his double is picked up from Marx Bros Duck Soup movie (the mirror scene). Still, this is a classic, because I ton't want t be a half-assed-cynic-who looks at half empy bottle, because I was told told that my territory might suffer from water problem.

you are right. i just forgot to mention it. the songs are gem...Athi Kai Kai, Nan Ena Sollivetain, Vaazha Ninaiththaal.... the lyrics are too good i beleive it shoudl be kaviyarasar... i didn't know that it was directed by B R bandhulu.... it's very poor nowadays people really do know him.....

Gopal.s
17th October 2012, 08:12 AM
நான் வணங்கும் ஒரே கடவுள், உலகுக்கு காட்சி தந்த நாள். இன்னும் சாதனையாகவே மிஞ்சியுள்ள பெரும் சாதனை.
உலகிற்கு ஒளி கிடைத்து அறுபது ஆண்டுகள்தானா ஆகிறது?எனக்கு வாழ்வில் கிடைத்த ஒரே பெருமை உன் அடிமையாகவே தொடர்வது.

eehaiupehazij
17th October 2012, 09:51 AM
amidst the competition between NT and MT movies Gemini Ganesan proved his prowess by way of his natural acting capacities and a very decent approach in love scenes that are seen repeatedly even today and liked for the good music and songs particularly with AM Raja and PBS. His movies like Sumaithangi, Kalyana Parisu, Vanjikkottai Valiban, Missiamma, Ramu, VAzhkkai Padagu, Then Nilavu, Parthal Pasi Theerum, Punnagai, Iru Kodugal, Naan Avanillai, Kalathur Kannamma, Kaathiruntha Kangal...... are still remaining the choice lot for viewers. He can never be underrated since his contributions to tamil cinema is equal to NT and MT movies considering his one of the Moovendars of Tamil Cinema.He has the distinction of uncrowned King of Roamace in Tamil Cinema. Regarding the rerun values of Tamil Movies, NT dominates as proved by Karnan rerelese records! MGR movies are outdated for their contents in present situations and are now finding it very difficult to create the so called 'magic' as claimed by his fans in yester years!Others movies are only seasonal.Rerun records are only for two actors across the world. Sean Connery's classic James Bond movies enjoyed minimum of 5 weeks to 50 days rerun records whenever released. NT has proved time and again with the thumping success of Karnan that can not be broken by any other actor including MT or Kamalahasan or so..

parthasarathy
17th October 2012, 01:26 PM
நீ இந்தத் திரையுலகில் அவதரித்து அறுபது ஆண்டுகள் நிறைந்து விட்டது.

தமிழும், கலையும், இப்பூவுலகும் உள்ளவரை, நீ இருப்பாய்.

மற்றவரெல்லாம் பிறந்த பின் நடிக்கையில், நீ ஒருவன் தான் நடிப்பதற்கென்றே பிறந்தாய்! அதனால், கலைக் கடவுளானாய்!!

என்றும் உன் பக்தன்,

இரா. பார்த்தசாரதி

groucho070
17th October 2012, 03:33 PM
Someone just clipped this part of Gouvaram. Can anyone get away with this type of amped up performance and still look awesome?????? MudiyumA? MudiyumAnggiren.

http://www.youtube.com/watch?v=8PljHuFQ6vk

Murali Srinivas
18th October 2012, 12:44 AM
Rakesh,

The one thing that never ceases to amaze me is the fact that this was the scene that was shot on the very first day of the shooting after the Pooja. Just think about this man's caliber! Just sliding into the climax scene effortlessly on the very first day!

Here was an actor! When comes another?

Regards

bsriharsha2000
18th October 2012, 01:48 AM
now rereleased thiruvilayaadal is it run as karnan

groucho070
18th October 2012, 06:00 AM
First day of shooting after pooja-vA????? :shock: I need time to digest this.

NOV
18th October 2012, 07:08 AM
are you serious Murali?
unimaginable!!!! :omg:

RAGHAVENDRA
18th October 2012, 08:55 AM
http://www.reocities.com/hollywood/1096/hatsoff.gif

டியர் பம்மலார்
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
22 ஜூலை 2012ல் தொடங்கி இன்று 18.10.2012 வரையில் இந்த 89 வது நாளில் 1722 பதிவுகளுடனும் 85,982 - கிட்டத்தட்ட 86000 பார்வையாளர்கள் எண்ணிக்கையுடனும் நடிகர் திலகம் பற்றிய புதிய திரியினை நடத்திச் சென்றுள்ளீர்கள். இந்த வேகத்தினால் எந்த விதத்திலும் திரியின் மேன்மை பாதிக்காமல் தங்கள் பதிவுகளாலும், மற்றும் வாசுதேவன் அவர்களின் பதிவுகளாலும் சிறப்புறச் செய்து பீடு நடை போடுகிறீர்கள். இந்த சிறப்பிற்கு காரணமாயிருந்த அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
தொடர்ந்து தங்கள் பங்களிப்பில் மேலும் சிறப்புடன் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை.

அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
18th October 2012, 08:56 AM
டியர் நவ் மற்றும் ராகேஷ் சார்,
முரளி சார் கூறியது சரி. கௌரவம் படத்தில் முதன் முதலில் அந்தக் காட்சி தான் படம் பிடிக்கப் பட்டது.

RAGHAVENDRA
18th October 2012, 08:57 AM
கோபால் சார்,
வந்தாச்சு. இனிமேல் சகட்டு மேனிக்கு என்னை நீங்கள் இங்கேயே திட்டலாம்.

RAGHAVENDRA
18th October 2012, 08:58 AM
சென்னை வடபழநியிலுள்ள ஏவி.எம். படப்பிடிப்பு அரங்க வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பராசக்தி திரைப்படத்தில் நடிகர் திலகம் முதன் முதல் பேசிய வசனமான சக்ஸஸ் என்ற வாசகம் படப்பிடிப்பு நடத்தப் பட்ட இடத்திலுள்ள நினைவுச் சின்னத்தில் ரசிகர்களால் எளிய முறையில் விழா நடத்தப் பட்டது. வார நாள், மழை பெய்யும் சூழ்நிலை போன்ற காரணங்களையும் பொருட் படுத்தாமல் ரசிகர்கள் விழாவுக்கு வருகை புரிந்தனர். தன்னுடைய தள்ளாத வயதிலும் உடல் நிலையிலும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த, பராசக்தி படத்தில் நடிகர் திலகத்திற்கு ஒப்பனை செய்த திரு டி.எம். ராமச்சந்திரன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திரு ராமச்சந்திரன் அவர்கள் அந்த நினைவுச் சின்னத்தில் அமைந்துள்ள நடிகர் திலகத்தின் உருவிற்கு மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட சில நிழற்படங்கள் நம் பார்வைக்கு.

திரு ராமச்சந்திரன்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Parasakthi60/successfn07fw_zps8bdad93a.jpg

சக்ஸஸ் வசனம் பேசிய நடிகர் திலகத்தின் காட்சி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Parasakthi60/successfn06fw_zpsa678df76.jpg

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு ராமச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப் பட்ட நினைவுப் பரிசு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Parasakthi60/successfn04fw_zpsb82e087a.jpg

படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களின் பட்டியல் கல்வெட்டாக

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Parasakthi60/successfn03fw_zps7ee2d606.jpg

படத்தின் பாடல்களைப் பற்றிய விவரம் கல்வெட்டாக

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Parasakthi60/successfn02fw_zpse4180d77.jpg

அலங்கரிக்கப்பட்ட கல்வெட்டின் முழுத் தோற்றம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Parasakthi60/successfn01fw_zps4f963641.jpg

Gopal.s
18th October 2012, 09:52 AM
கோபால் சார்,
வந்தாச்சு. இனிமேல் சகட்டு மேனிக்கு என்னை நீங்கள் இங்கேயே திட்டலாம்.

சிங்கத்தின் குகைக்குள் தலை நுழைக்கும் வஞ்ச மனம் கொண்ட சிறு நரியே. யாரை பார்த்து சொல்கிறாய் திட்ட?ஏன் திட்ட வேண்டும் உன்னை?
உன் போன்ற ரசிகர்கள் என் தலைவனுக்கு நிறைய இருந்திருந்தால்,நாமல்லவோ நாடாண்டிருப்போம?உன்னை மாதிரி பொக்கிஷம் எங்களுக்கு கிடைக்குமா?உன்னிடம் மாறா அன்பு கொண்டிருக்கும் ஒரு சகோதரனை போய் உன்னை திட்ட பணிக்கிறாயே? உன் இதயமென்ன கல்லா?
நல்ல இடம்,நீ வந்த இடம் ,வர வேண்டும் எங்கள் ரசிகா நீ!!

groucho070
18th October 2012, 12:15 PM
டியர் நவ் மற்றும் ராகேஷ் சார்,
முரளி சார் கூறியது சரி. கௌரவம் படத்தில் முதன் முதலில் அந்தக் காட்சி தான் படம் பிடிக்கப் பட்டது.Truly amazing-sir. He is not a man, he's a superman!!!

Vankv, its this scene from Gouvaram:

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8PljHuFQ6vk

joe
18th October 2012, 10:17 PM
are you serious Murali?
unimaginable!!!! :omg:

என்னண்ணே ஆச்சரியம் !
ஆரம்பம் , முடிவு , வரிசையெல்லாம் நடிகர்களுக்குத் தான் ..நடிப்புக்கே அல்ல !

NOV
19th October 2012, 06:21 AM
irundhaalum oru continuity vEnum illaiyaa? I mean that is not an ordinary scene ... its the climax!!!

joe
19th October 2012, 07:32 AM
irundhaalum oru continuity vEnum illaiyaa? I mean that is not an ordinary scene ... its the climax!!!
அது என்ன இருந்தாலும் -ங்கிறேன் :lol:
யாரைப் பத்தி பேசிட்டிருக்கோம்-ன்னு நினைச்சு பாருங்க யுவர் ஆனர் :)

NOV
19th October 2012, 07:37 AM
enna thaan piravi nadigaraa irundhalum, idhellaam mei-silurthufying stuff'nga...

Gopal.s
19th October 2012, 08:22 AM
Not only climax scene. This is also one of the movies he is acting the same day among many varied roles. Movies like Navarathri,he acted in callsheet from 9.00 PM-2.00 AM. as he was busy with Pudhiya paravai,Muradan Muthu in other schedules.

joe
19th October 2012, 11:13 AM
Not only climax scene. This is also one of the movies he is acting the same day among many varied roles. Movies like Navarathri,he acted in callsheet from 9.00 PM-2.00 AM. as he was busy with Pudhiya paravai,Muradan Muthu in other schedules.
huh ..This guy was sure a magician

Gopal.s
21st October 2012, 12:55 PM
ராகவேந்தர்/முரளி சார்,
NT Fans சார்பில் நீலவானம் திரையீட்டுக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு பிடித்த படங்களுள் ஒன்று.

Murali Srinivas
21st October 2012, 11:58 PM
இன்று மாலை நீலவானம். பல முறை பார்த்த படம்தான். இருந்தும் கூட ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தின் வலிமை குறையவில்லை. ஒரு வித பாரம் மனதில் தானாகவே ஏறிவிடும். ஆண்டுகள் பல கடந்தாலும் படத்தை பார்க்கும் போது அந்த திரைக்கதை வளரும் போது பார்வையாளனை ஒரு சோகம் மெதுவாக கவ்விக் கொள்ள துவங்கி இறுதியில் முழுமையாக ஆக்கிரமித்து விடும் அந்த நிகழ்வு இன்றும் நடந்தது. நடிகர் திலகமும் சரி தேவிகாவும் சரி நம்மை இழுத்துக் கொள்கிறார்கள். கதை திரைக்கதையின் depth என்று சொல்லுவார்கள் அது இந்தப் படத்தில் எந்தளவிற்கு இருக்கிறது என்பது இன்று படம் பார்க்கும் போது புரிந்தது.

மொத்தத்தில் ஒரு மறக்க முடியாத படத்தை மீண்டும் மறக்க முடியாத மாலையில் பார்த்த திருப்தி

அன்புடன்

Gopal.s
22nd October 2012, 06:40 AM
நீலவானம் நினைவுகள்-
நான் கிண்டியில் இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த நாட்களில் ,எங்கள் கல்லூரி ஆடிடோரியம் பேர் பெற்றது.நிறைய பழைய தமிழ் படங்கள்(பெரும்பாலும் சிவாஜி) திரையிட படும். மிக சிறு வயதில் நான் பார்த்த நீலவானம் படம்(எட்டு வயதில்), மீண்டும் பதினெட்டு வயதினில் (1977 )பார்க்கும் அனுபவம். எதிர்பார்ப்பு அதிகம் இல்லாமல் போனதாலோ என்னவோ ரொம்ப பிடித்திருந்தது. மாணவர்கள் once more கேட்டு ரசிப்பது வாடிக்கை. அவர்களால் அதிக முறை (மூன்று) கேட்டு ரசிக்க பட்டவைகளில் ஒன்று ஒஹஹோ லிட்டில் ப்ளவேர் பாடல்.(மற்றவை வரவு எட்டணா,ஏன் ஏன் ஏன்,அனுபவம் புதுமை)
எனக்கு நினைவில் பச்சென இருப்பவை.
ஆரம்ப நகைச்சுவை காட்சிகள்.(சாந்தி தியேட்டர்,பிறந்த நாள், சிவாஜி வசிப்பிடம்)
தேவிகா- சிவாஜி சம்பந்த பட்ட ஆரம்ப காட்சிகள்.
ஒஹஹோ லிட்டில் பிலோவேர்.
சிவாஜி-தேவிகா முதலிரவு(செம chemistry ),கொடைக்கானல் காட்சிகள்(ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே)
சிவாஜி-தேவிகா குழந்தைக்கு பேர் வைக்கும் காட்சி.
தேவிகா போட்டோ எடுத்து கொள்ள ஆசை படும் காட்சியில் சிவாஜி natural - overplay -underplay மூன்றையும் மூன்றே நிமிடத்தில் அடுத்தடுத்து கலந்து பண்ணும் அதகளம்.
பாலச்சந்தரின் வசனங்கள்-லாஜிக் அருமை.
மற்றவற்றை நேற்று பார்த்த அதிர்ஷ்டசாலிகள் விளக்கட்டும்.

Gopal.s
22nd October 2012, 08:36 AM
http://dharumi.blogspot.com/2008/07/265.html

joe
22nd October 2012, 11:29 AM
http://dharumi.blogspot.com/2008/07/265.html


பதிவர் நண்பர் ஜோ அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்
:) தருமி என்னுடைய வலைப்பதிவுலக வாத்தியார். மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் பேராசிரியர்

Gopal.s
22nd October 2012, 12:32 PM
:) தருமி என்னுடைய வலைப்பதிவுலக வாத்தியார். மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் பேராசிரியர்

பார்த்தேன். பதிவர் பலருக்கு முன்னோடி. எனக்கு மிக மிக பிடித்த பதிவர்களில் ஒருவர்.

Gopal.s
22nd October 2012, 01:28 PM
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, சரஸ்வதி மைந்தன் நடிப்பு கடவுளின் திரியின் அங்கத்தினர் ,விருந்தினர் அனைவருக்கும் எங்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

NOV
23rd October 2012, 09:44 AM
Saraswathy Poojai greetings to all!


http://www.youtube.com/watch?v=nx40d_SkBEg

Murali Srinivas
23rd October 2012, 10:54 PM
கோபால்,

நீலவானம் பற்றி பார்த்தவர்கள் எழுதலாமே என்று ஒரு வரி போட்டு விட்டீர்கள். நான் ஏற்கனவே இந்தப் படத்தைப் பற்றிய ஒரு நீண்ட ஆய்வை இந்த திரியில் எழுதியுள்ளேன் இந்தப் படத்தை பற்றிய ஒரு awareness பலருக்கும் ஏற்பட வேண்டும் என்று ஏராளமான நபர்களுக்கு அந்த கட்டுரையையும் அனுப்பி வைத்துள்ளேன். இன்னும் சொல்லப்போனால ராகவேந்தர் போன்றவர்கள் என்னைப் பற்றி சொல்லும்போது இந்தப்படத்தையும் ஆண்டவன் கட்டளை படத்தையும் நான் எப்படி promote செய்தேன் என்று வெளியுலக நண்பர்களிடம் அடிக்கடி கூறுவர். அந்தளவிற்கு என்னை ஈர்த்த படம். என்னவோ தெரியவில்லை 1964 முதல் 1969 வரை வெளிவந்த சில பல நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றில் ஒரு சில பெரிய வெற்றியை பெறாமல் போயிருக்கலாம். ஆனாலும் அவை எனக்கு மிகவும் பிடித்தவை. அதில் நீலவானத்திற்கு தனி இடம் உண்டு.

ஆரம்பம் முதல் முடிவு வரை நாயகியை முன்னிறுத்திய படம் என்ற போதிலும் எவ்வளவு வலிமையாக தன முத்திரையை ஆழமாக அதே சமயம் அமைதியாக பதித்திருக்கிறார் நடிகர் திலகம் என்றே எனக்கு வியக்க தோன்றும். அனாயாசமான நகைச்சுவை எல்லாம் தண்ணீர் பட்ட பாடாக பண்ணியிருப்பார். ராஜஸ்ரீயிடம் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் விதம் பற்றி A ரோ B ரோ C ரோ என்ற கமன்ட், மில்லில் வேலை கிடைத்தவுடன் அறை நண்பன் I S R-யிடம் இனிமேல் டிக்கெட் கிழிக்க வேண்டியதில்லை கால் மேல் கால் போட்டு நாற்காலியில் உட்காருவேன் என்று சொல்லிக்கொண்டே மறந்து போய் ஓட்டை easy chair-ல் உட்கார்ந்து விழுவது எல்லாம் அதற்கு உதாரணம்.

குழந்தைக்கு பெயர் வைக்கும் போது ராமசாமி, கந்தசாமி கருப்புசாமி என தேவிகாவை கிண்டல் அடிப்பது, உங்க அப்பா பெயரை வைக்கலாம் என்று தேவிகா சொல்லிவிட்டு உங்க அப்பா பெயர் என்ன என்று கேட்க பிச்சைகண்ணு என்று சொல்லிவிட்டு நல்லாயில்லைலே என்று மீண்டும் சிரித்துக் கொண்டே கிண்டலடிப்பது எல்லாமே ரசனை.

நீங்கள் குறிப்பிட்டது போல் கொடைக்கானலில் அந்த குச்சி ஐஸ் சாப்பிடும் காட்சி கவிதை. மனைவி விரும்பி கேட்கிறாள் என்று தெரிந்தவுடன் இதுவா என்று ஒரு வித பிடிக்காத பாவத்துடன் யாராவது பார்த்து விட்டால் என்ற தர்மசங்கடத்துடன் முகத்தின் ஒரு பகுதியை கர்சீப்-பால் மூடிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தவுடன் எதிரில் நிற்கும் ஆளை பார்த்தவுடன் [ஒரு குழந்தை] அப்படியே அந்த சங்கடம் நீங்கி சந்தோஷமாக சிரிப்பாரே என்ன அருமையான வெளிப்பாடு?

நீங்கள் குறிப்பிட்ட மற்றொரு விஷயம் வசனம். உண்மை, அந்த novaljin வசனத்தை விட்டு விட்டால் படு இயல்பு. தன் மகளை கல்யாணம் செய்துக் கொள்ள கேட்கும் முதலாளியிடம் பேசும் "வைத்தியம் பார்க்க வேண்டிய பொண்ணுக்கு கல்யாணம் பண்ணறேன்-னு சொல்லுறீங்களே" அதில் ஒன்று. அதே காட்சியில் தன் காதலிக்கு துரோகம் செய்ய முடியாது என்று நடிகர் திலகம் கூற அதற்கு சஹஸ்ரநாமம் சொல்லும் "துரோகம்-ங்கிற வார்த்தையை நீ சொன்னா தியாகம்-ங்கிற வார்த்தைக்கே அர்த்தமில்லாமல போயிடும்" மற்றொரு சாம்பிள்.

படத்தின் இறுதிப் பகுதியில் தேவிகாவிற்கு உண்மை தெரிந்தவுடன் [உண்மை என்றால் சிவாஜி ராஜஸ்ரீயை காதலித்தது, தனக்கு கான்சர் இருப்பது] அவர் நடிகர் திலகத்திடம் நான் கர்ப்பிணி என்று சொன்னதையும் பொய்னு சொல்லிடாதீங்க என்று கெஞ்சி விட்டு, பொய்யா? என்று கேட்க பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு நடிகர் திலகம் ஆமாம் என்று தலையாட்ட ஏன் அப்படி சொன்னீங்க என்று தேவிகா கேட்க நீ சந்தோஷமா இருக்கணும்-னு டாக்டர் சொன்னதனால பொய் சொன்னேன் என்று நடிகர் திலகம் சொல்ல "என்கிட்டே நீங்க பொய்யை தவிர வேற ஒண்ணுமே சொன்னதில்லையா" என்று விரக்தியாக கேட்கும் இடம் அப்படியே மனதில் தைத்து விடும்.

வாங்க என்ற வெறும் ஒரு வார்த்தையை மட்டும் பேசி ஒரு மனிதனால் அரங்கில் அமர்ந்திருக்கும் அனைவரையும் ஆகர்ஷிக்க முடியுமா? முடியும் என காட்டியிருப்பார் நமது நடிகர் திலகம். [இதை எழுதும் போது என் அருகில் அமர்ந்து படம் பார்த்த நமது அருமை நண்பர் பார்த்தசாரதி அடித்த கமன்ட் நினைவிற்கு வருகிறது. "நீங்க அவர் ஒரு வார்த்தை வசனம் பேசுவதற்கு போயிட்டீங்க. ஒண்ணுமே பேசாம தலையில் ஒரு round hat கண்ணுக்கு கூலிங் கிளாஸ் போட்டு காலை மட்டும் வளைச்சு நிப்பார். தியேட்டரே அதிரும்"].

இப்படி காட்சிவாரியாக சொல்லிக் கொண்டே போகலாம்.பிறிதொரு நாளில் பிறிதொரு நேரத்தில் பேசலாம்.

அன்புடன்

Gopal.s
24th October 2012, 08:13 AM
nandri murali.

Gopal.s
24th October 2012, 08:15 AM
முரளி சார்,
என் ஒரு வரிக்கு இவ்வளவு மதிப்பு அளித்ததற்கு நன்றி.
எனக்கு மிக பிடித்து ,எதிர்பார்த்த வெற்றியை அடையாத கருப்பு-வெள்ளைகள்-- (1965 -1971 ) நீல வானம்,செல்வம்,பேசும் தெய்வம்,பாலாடை,தேனும் பாலும்.

Avadi to America
25th October 2012, 10:45 PM
நீலவானம் நினைவுகள்-
நான் கிண்டியில் இன்ஜினியரிங் படித்து கொண்டிருந்த நாட்களில் ,எங்கள் கல்லூரி ஆடிடோரியம் பேர் பெற்றது.நிறைய பழைய தமிழ் படங்கள்(பெரும்பாலும் சிவாஜி) திரையிட படும். மிக சிறு வயதில் நான் பார்த்த நீலவானம் படம்(எட்டு வயதில்), மீண்டும் பதினெட்டு வயதினில் (1977 )பார்க்கும் அனுபவம். எதிர்பார்ப்பு அதிகம் இல்லாமல் போனதாலோ என்னவோ ரொம்ப பிடித்திருந்தது. மாணவர்கள் once more கேட்டு ரசிப்பது வாடிக்கை. அவர்களால் அதிக முறை (மூன்று) கேட்டு ரசிக்க பட்டவைகளில் ஒன்று ஒஹஹோ லிட்டில் ப்ளவேர் பாடல்.(மற்றவை வரவு எட்டணா,ஏன் ஏன் ஏன்,அனுபவம் புதுமை)
எனக்கு நினைவில் பச்சென இருப்பவை.
ஆரம்ப நகைச்சுவை காட்சிகள்.(சாந்தி தியேட்டர்,பிறந்த நாள், சிவாஜி வசிப்பிடம்)
தேவிகா- சிவாஜி சம்பந்த பட்ட ஆரம்ப காட்சிகள்.
ஒஹஹோ லிட்டில் பிலோவேர்.
சிவாஜி-தேவிகா முதலிரவு(செம chemistry ),கொடைக்கானல் காட்சிகள்(ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே)
சிவாஜி-தேவிகா குழந்தைக்கு பேர் வைக்கும் காட்சி.
தேவிகா போட்டோ எடுத்து கொள்ள ஆசை படும் காட்சியில் சிவாஜி natural - overplay -underplay மூன்றையும் மூன்றே நிமிடத்தில் அடுத்தடுத்து கலந்து பண்ணும் அதகளம்.
பாலச்சந்தரின் வசனங்கள்-லாஜிக் அருமை.
மற்றவற்றை நேற்று பார்த்த அதிர்ஷ்டசாலிகள் விளக்கட்டும்.

gopal sir,

It's nice to hear theat the tradition of playing movies in CEG auditiorium is indeed long. I hope they still follow it.

Murali Srinivas
26th October 2012, 12:47 AM
A to A,

Not only in GEC, almost all colleges in Tamilnadu including Arts Colleges had this practice of screening old films in 16 mm format in their open air auditoriums. My college at Madurai [American] and Madura College had this practice and we had seen so many movies through this system.

I have read app_engine write about this practice at REC, Trichy and Joe had in fact written how he had conducted this screenings at St.Joesph's,Trichy. With the advent of VCRs and later CDs and other advancements, this practice slowly stopped, I believe.

Regards

jaiganes
26th October 2012, 02:14 AM
Someone just clipped this part of Gouvaram. Can anyone get away with this type of amped up performance and still look awesome?????? MudiyumA? MudiyumAnggiren.

http://www.youtube.com/watch?v=8PljHuFQ6vk
Singamna idhu singam.
posture, dialogue delivery, expressions - one needs to freeze every frame and understand what is acting.
high pitch low- pitch - it is nothing - this is pichu odharifying stuff.

Gopal.s
26th October 2012, 07:00 AM
A to A,

Not only in GEC, almost all colleges in Tamilnadu including Arts Colleges had this practice of screening old films in 16 mm format in their open air auditoriums. My college at Madurai [American] and Madura College had this practice and we had seen so many movies through this system.

I have read app_engine write about this practice at REC, Trichy and Joe had in fact written how he had conducted this screenings at St.Joesph's,Trichy. With the advent of VCRs and later CDs and other advancements, this practice slowly stopped, I believe.

Regards

முரளி சார்,
என்னுடைய கண்டனத்தை பதிவு செய்கிறேன்.எங்களுடையது ஒரு proper theatre with good sound system .35 mm ,closed , 600 பேர் உட்கார்ந்து பார்க்கலாம்.
அருமையான seating arrangements .இதை கண்ட கண்ட கல்லூரிகளின் open -air 16 mm களுடன் ஒப்பிட்டதற்கு தாங்கள் மன்னிப்பு கேட்கவில்லைஎன்றால், விளைவுகள் விபரீதமாகும்.

Avadi to America
26th October 2012, 09:05 AM
Singamna idhu singam.
posture, dialogue delivery, expressions - one needs to freeze every frame and understand what is acting.
high pitch low- pitch - it is nothing - this is pichu odharifying stuff.

man.... extraordinary acting.... thanks groucho for the clippings..

Gopal.s
26th October 2012, 12:13 PM
I am cutting and Pasting Mr.Raghanedhar's original posting in other thread-
அன்பு நண்பர்களே,
சில நாட்களாக நம் திரிகளின் வேகம் [பாகம் 10ஐயும் சேர்த்து] குறைந்து வருகிறது. இதைப் பற்றி ஓரிரு நண்பர்கள் என்னிடம் வருத்தப் பட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கும் மற்ற நம் நண்பர்களுக்கும் சில விஷயங்களை சொல்ல விழைகிறேன்.

நம் திரியின் தூண்களாக விளங்கும் பம்மலாரும் வாசுதேவனும் நாள் பொழுது பாராமல் ஊனுறக்கம் பாராமல், தம் பொருள் நேரம் அனைத்தையும் செலவழித்து இங்கே பல ஆவணங்களையும் நிழற்படங்களையும் தருகிறார்கள். சொந்த மன வருத்தங்களையும் பாராமல் அடியேனும் முடிந்த வரை கருத்துக்களையும் ஆவணங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறேன். இதற்காக அவர்கள் பிரதி பலன் எதிர்பார்ப்பது இல்லை. ஆனால் நம் நண்பர்கள் குறைந்த பட்சம் ஒரு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இவர்களுடைய உழைப்பை கேலி செய்யும் விதத்தில் பதிவுகள் வரும் போது, அதனால் அவர்கள் மன வருத்தம் ஏற்படும் போது வாளாயிருப்பதும், நமக்கென்ன என்று இருப்பதும் பிறகு பதிவுகள் வரவில்லையே எனக் குறை கூறுவதும் வியப்பாகவும் வருத்தமாகவும் உள்ளது. ஏன் பதிவுகள் வருவதில்லை என்று ஒரு வினாடி சிந்தித்தாலும் விடை கிடைத்து விடும். தவறு எங்குள்ளது எனக் கண்டு பிடித்து அதனைக் களைந்தால் தானாக வேகம் தொடர்ந்து விடும். ஆனால் ஒவ்வொரு நண்பரும் கேள்வி கேட்பதில் காட்டும் வேகத்தை அதற்கான பதிலைத் தேடுவதில் காட்டுவதில்லை. பதிலைத் தேட வேண்டாம். அது அவர்கள் மனதிலேயே உள்ளது. மனிதாபிமான அணுகுமுறை அந்த பதிலைக் கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.

எனவே சிந்தியுங்கள். நம் நண்பர்களுக்கு மன வருத்தம் என்றால் நமக்கே ஏற்பட்ட மாதிரி யல்லவா. அதைக் களைவதற்கான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள்.

தங்களுடைய உண்மையான அன்பை வெளிப்படுத்துங்கள்.

Unquote-


ராகவேந்தர் சார், வாசு சார், பம்மலார் சார்,

உங்கள் அனைவர் பதிவுகளையும் ரசித்து போற்றும் முதல் ஆள் நான்தான். நான் கிண்டலடிப்பது யார் மனதையும் புண்படுத்த அல்ல. ஒரு ஜாலியான relaxed atmosphere திரியில் உண்டாக்கவே. NT மாதிரி(ஜாலியாய்) பேசி,நடித்து காட்டுபவர்கள் பலர் அவரது பக்தர்கள்.நமக்குள் உள்ள நகைச்சுவை குறைபாட்டை களைந்தால் பல உண்மைகளுக்கு விடை கிடைத்து விடும். நான் வாசு சாரின் டூரிங் டாக்கீஸ் என்ற பிடித்த பதிவுக்கு பாராட்ட ,உங்கள் மூவர் பாணியில் ஒரு ஜாலி பாராட்டு பதிவு. அதையும் நீக்கியாயிற்று.(நீங்கள் எல்லோரும்,நான் கஞ்ச தனமாக பாராட்டுவதாக குத்தி காட்டியதால்)

என்னை தாக்கி பதிவுகள் போடும் படி தாங்கள் போட்ட வேண்டுகோள் பதிவை மதித்து ,எல்லோரும் செயல் படும் படி,என் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

Gopal.s
26th October 2012, 12:53 PM
நண்பர்கள் திரியில் நான் ரசித்தவை-(அக்டோபர் 2012 )

வாசு தேவன் (நெய்வேலி)-பிறந்த நாள் புகைப்படங்கள்,ஹெர்குலிஸ் இதழ் கட்டுரை, 150 ஆவது பக்கம்,மாலை மலர் ,தினத்தந்தி பிறந்த நாள் பதிவுகள் ,ஜெயா,பாலிமர் வீடியோ,காமராஜ்,லால் பகதூர் நினைவு புகை படங்கள்,தினமலர் தியாகராஜன் பேட்டி,celebration picture sites ,சிவந்த மண் படங்கள்,துணை ஆய்வு கட்டுரை(இம்மாத மிக சிறந்த பதிவு),நாயகிகள் (சரஸ்வதி) தொடர்,சண்டை காட்சி தொடர்(எங்கள் தங்க ராஜா), பிரபு பேட்டி,ஜகந்நாதன் அஞ்சலி,நெஞ்சிருக்கும் வரை படம், இதயக்கனி அப்துல் அமீத் பேட்டி,முக்தா நினைவுகள்,தமிழன் எக்ஸ்பிரஸ் பீட்டர் அல்போன்ச ,டூரிங் டாக்கீஸ் அனுபவம்(இம்மாத இரண்டாவது மிக சிறந்த பதிவு),திருப்பு முனை திரைப்படங்கள்,நன்றி கேட்ட(சினிமா) உலகம்.

பம்மலார்- மாவீரன் சிவாஜி கலர் போட்டோ,எங்க ஊர் kalaigner ,43 வது பிறந்த நாள்,மனம் திறந்து பேசுகிறேன்,சவாலே சமாளி விளம்பரம்,எங்கள் தங்க ராஜா,சிவாஜி ஒரு சகாப்தம், எல்லா புகைப்படங்களும்.

எஸ்வி சார்- ராமன் எத்தனை ராமனடி பிறந்த நாள் வாழ்த்து, வாசு 2000 பதிவு ஞான ஓளி வாழ்த்து,60 வது வருட பராசக்தி வாழ்த்து, அறிவாளி(ஹிந்து).

ராகவேந்தர்- சினாத்ரா பாட்டில் சிவாஜி வீடியோ,அனந்த விகடன் tribute ,வைர விழா பதிவுகள், சங்கல்பங்கள்,சித்தூர் ராணி பத்மினி வீடியோ,இலக்கிய அணி பிறந்த நாள் காணொளிகள்,இதய கனி பிறந்த நாள் சிறப்பிதழ்,woodlands திருவிளையாடல் 25 வது நாள்,கண்ணதாசன் படம்,பராசக்தி கொண்டாட்ட பதிவு,

கார்த்திக்- துணை பாராட்டு பதிவு,வயிற்றெரிச்சல் கொசுறு இணைப்பு,இசையமைப்பாளர் பதிவு,டூரிங் டாக்கீஸ் தொடர்ச்சி(அருமை).

பார்த்தசாரதி-தவப்புதல்வன்,நல்லவன் ,நெஞ்சிருக்கும் பாடல்கள் ஆய்வு,, இசையமைப்பாளர் சர்ச்சை(என் ஆதரவாளராய்),.

முரளி- திருவிளையாடல் ஆல்பர்ட்-25 வது நாள்.

செல்வகுமார்- ஞான ஓளி பதிவு.

சதீஷ்- படங்கள் லிங்க்.

ABKHLABHI - இமயத்துக்கு இதய அஞ்சலி.

புதுவரவு- jeev ,VankV ,pappimma ,எஸ்..வாசுதேவன் ,- வருக,வருக,வருக. தங்கள் பங்களிப்புகளை நல்குக.

Rangarajan nambi
26th October 2012, 01:25 PM
Gopal neenga nallavara kettavara ?

Gopal.s
26th October 2012, 01:33 PM
Gopal neenga nallavara kettavara ?

தெரியலியேப்பா!!!???

Gopal.s
27th October 2012, 09:23 AM
நடிப்பை பற்றி ஓரளவு தெரியும் ,புரியும் என்ற மமதை கொண்டிருந்தேன். ஒருவர் எனக்கு சாட்டையடி கொடுத்து விட்டார். shuttle acting என்பதை சொல்லி. நான் கேள்வி படாத புதுமை. நன்றி ராகவேந்தர் ஐயா. நான் subtle acting என்று நம்பி கொண்டிருந்தேன். மன்னிக்கவும். திருத்தி கொள்கிறேன்.

RAGHAVENDRA
27th October 2012, 09:50 AM
The original meaning of the word shuttle is the device used in weaving to carry the weft. By reference to the continual to-and-fro motion associated with that, the term was then applied in transportation and then in other spheres. Thus the word may now also refer to:
-from wikipedia- (http://en.wikipedia.org/wiki/Shuttle)


இந்தக் காட்சியில் பல்வேறு உணர்ச்சிகளுக்கு இடையில் ஆடை நெய்வது போல் மனம் அங்கும் இங்கும் அல்லாடுவதைத் தான் ஷட்டில் என்று நான் குறிப்பிடுகிறேன். முதலில் அறையில் நுழையும் போது புன்னகையுடன் நுழைவார் .. அங்கு முதலிரவு அறைக்குள் நுழையும் ஒரு மகிழ்வு ... எல்லோருக்கும் இயல்பான உணர்வு ... திடீரென தன்னையும் அறியாமல் அவள் ஊனம் ஒரு நொடியில் அவருடைய உணர்வினைத் தாக்குகிறது.. இந்த இடத்தில் ஒரு சராசரி மனிதனுக்குண்டான உணர்வுக்குள் இருக்கிறார். முகத்தில் மலர்ச்சி மறைகிறது ... பின் அந்த இடத்தை விட்டு நகர்கிறார். வேறொரு இடத்தில் செல்லும் போது நடையில் தளர்வு ஏற்படுகிறது. சாவித்திரி அவரைப் பின் தொடர்கிறார். மலர்ந்த முகத்துடன் இருந்த சாவித்திரி அவருடைய முக வாட்டத்தைக் கண்டவுடன் தன் முகத்திலும் வாட்டம் வருவதை உணர்கிறார். வெறித்துப் பார்த்த படி நின்று கொண்டிருக்கும் நடிகர் திலகத்திடம் தன்னுடைய உள்ளத்தில் உள்ள நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்துகிறார். இப்போது ஒரு வித பெருமிதம் நடிகர் திலகத்தின் முகத்தில் லேசாக எட்டிப் பார்க்கிறது. நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்து திரைக்கு முதுகைக் காட்டிய படி நிற்கிறார். [இதையெல்லாம் அவருக்கு யார் சொல்லித் தந்தார்கள் என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்]. பறவைகளின் பாஷைகளைப் பற்றி சாவித்திரி கூறும் போது சற்றே கவனம் தந்து தன் உணர்வை திசை திருப்புகிறார். அவருடைய இசை அறிவை அறிந்து பாடச் சொல்லும் போது உணர்ச்சிகளில் மாற்றம் ஏற்பட்டு அந்த சூழலை மாற்ற முயல்கிறார். தொகையறா தொடங்க அப்படியே திரையீட்டு அறைக்கு வருகின்றனர். அங்கே சாதாரணமாக ஒரு திரைப் படத்தைப் பார்க்கும் மனோபாவத்தில் நிற்கிறார். சாவித்திரி ஆடிப் பாடும் காட்சி தொடங்கிய வுடனேயே அவரையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு அங்கே ஏற்படுகிறது. திரையில் ஆடும் சாவித்திரியா இவர் என மனதில் ஒரு பச்சாதாபத்துடன் பார்க்கும் போது வேறு உணர்வு ஏற்படுகிறது. இந்தப் பாடலின் போக்கில் உணர்ச்சிகள் மெல்ல அன்பாய் மாறி மனைவியைக் காதலிக்கத் தொடங்குகிறார். இந்த transportation தான் இந்தக் காட்சியை விவரிக்க ஷட்டில் என்ற வார்த்தையில் பயன் படுத்தப் பட்டு இருக்கிறது.

subtle acting என்பதையும் நடிகர் திலகம் காண்பித்திருக்கிறார். அது வேறொரு காட்சியில் இந்தப் படத்திலேயே இருக்கிறது. அது ரங்கா ராவ் அவர்களுடன் விவாதம் செய்யும் போது.

Gopal.s
27th October 2012, 11:00 AM
அரூர் தாசிற்கு இவ்வளவு போட்டியா? oscilatting or shuttling or switching emotions என்று சொல்லலாம். shuttle acting என்பது தவறான பிரயோகம்.தங்கள் கூற்று படி விமரிசகர்கள் இதை உபயோகிக்கிறார்கள் அதுவும் முதுகை திருப்பி கொண்டு நிற்பதில் என்று கூறியுள்ளீர்கள்.
நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே.

RAGHAVENDRA
27th October 2012, 12:38 PM
பிரயோகம் என் உரிமை. அது தவறு அல்லது சரி என்பதும் என் தீர்மானம். நடிகர் திலகம் என்கிற அட்சய பாத்திரம் நடிப்பு என்னும் அமுதை அள்ள அள்ளக் குறையாமல் தருகிறது. அதை நாம் எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம். அதற்கு எந்த எல்லையும் இல்லை. வரைமுறையும் இல்லை. அது போல் எனக்கு நெற்றியும் இல்லை கண்ணும் இல்லை. எனக்கு எதிரே நிற்பது சிவனும் இல்லை.

இருந்தாலும் Shuttle மற்றும் Subtle இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க வாய்ப்புத் தரவேண்டாம் என்கிற எண்ணத்தில் தலைப்பு மாற்றப் பட்டுள்ளது.

Gopal.s
27th October 2012, 12:47 PM
கோச்சுக்காதீங்க பாஸ். ஞானத்தை ஒழித்தவநெல்லாம் இப்படித்தான் பேசுவான் என்று விட்டு விடுங்கள்.

Gopal.s
27th October 2012, 12:58 PM
sabaash sariyaana potti:banghead:

இன்னா தலீவா,
வைஜயந்தி, பத்மினி போட்டோல்லோ போடோணும்!!?? வீரப்பால்லாம் கூட techsavvy ஆயிட்டாங்கோ!

joe
27th October 2012, 04:10 PM
Joe had in fact written how he had conducted this screenings at St.Joesph's,Trichy.
http://anthimaalai.blogspot.sg/2011/10/blog-post_16.html

Gopal.s
27th October 2012, 08:32 PM
http://anthimaalai.blogspot.sg/2011/10/blog-post_16.html
Thanks Joe.

I sent it to my brothers also. They both did their B.Com from St.Joseph's stayed in hostel.1982-1985 one,1983-1986-other.
By the way Galatta Kalyanam Madhan (Sivaji) is also from St.Josephs'.

Gopal.s
28th October 2012, 01:27 PM
எல்லா landmark படங்களுமே முத்திரை படைப்புகளாய் , வெற்றி படங்களாய் அமைந்த ஒரே உலக பாக்ஸ் ஆபீஸ் Emperor நமது நடிகர் திலகம் மட்டுமே.

1 பராசக்தி
25 கள்வளின் காதலி
75 பார்த்தால் பசி தீரும்
100 நவராத்திரி
125 உயர்ந்த மனிதன்
150 சவாலே சமாளி
175 அவன்தான் மனிதன்
200 திரிசூலம்
225 தீர்ப்பு
275 புதிய வானம்

விதி விலக்குகள்- 50 சாரங்கதாரா 250 நாம் இருவர் .இதிலாவது 50 கு பதில் 51 ஆகிய சபாஷ் மீனாவை ஐம்பதாக்கி இருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ஆனால் 250 ?? இதற்கு பதில் 251 ஐ 250 ஆக்கி இருக்கலாமே என்று நினைத்தால்? 250 தேவலாம். compare பண்ண பெஞ்ச்மார்க் இல்லை அட்லீஸ்ட்.

251 இன்னும் கேவலமான படம். படிக்காத பண்ணையார் திறைமை சாலிகளின் மொத்த அணிவகுப்பு சிவாஜி, விஜயா, கல்கத்தா விஸ்வநாதன், கே.எஸ்.ஜி.,இளைய ராஜா இப்படி.

ஆனால் தரம்?

கே.எஸ்.ஜி தன்னுடைய மிக சிறந்த படைப்புகளில் ஒன்றான கண்கண்ட தெய்வம் படத்தை ரீமேக் என்ற போர்வையில் சொதப்போ சொதப்பு என்று சொதப்பி அருவருக்க வைத்திருந்தார். ஹும்... ரங்கா ராவ், சுப்பையா,பத்மினி, மாமா, இவர்களை நினைத்து பெருமூச்சு தான் விட முடியும்.

Gopal.s
29th October 2012, 08:35 AM
நாயகன் -25 வது ஆண்டு நிறைவு.-வாழ்த்துக்கள்.

எனக்கு சில மனக்குறைகள் உண்டு. அதில் முக்கியமான குறை டைம்ஸ் வெளியிட்ட சிறந்த நூறில் ஆங்கில படங்களின் பிரதி-தழுவலான நாயகன் இடம் பெற்றதுதான். சில மேட்டுக்குடி லாபி எப்பவுமே வலுவானவை. ஆனால் அதில் இடம் பெற்றிருக்க வேண்டிய அசலான ஒரே இந்திய படம் தில்லானா மோகனாம்பாள்தான் என்று அடித்து கூற முடியும்.

ஆனாலும் நாயகன் ஒரு சிறந்த படம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.(அதிலும் வயதான வேலு நாயக்கர்,நமது NT யின் திருவருட்செல்வர் நடையை பின் பற்றி நடித்திருப்பார்). முக்தா ஸ்ரீநிவாசன் எடுத்ததிலேயே சிறந்த படம் நாயகன்தான்.
இப்போது அவர்களுக்குள் நடந்து வரும் காரசாரமான வாக்குவாதங்கள், பதில்களை விட சிறந்த கேள்விகளையே நம் முன் எழுப்புகின்றன. திரைப்பட உருவாக்கத்தில் மிக சிறந்த முறை studio instituted ஹாலிவுட் முறைதான். ஆனால் தமிழ் பட உலகம் நட்சத்திர பிடியில் சிக்கிய பிறகு, ஒரு நடிகர் என்பதையும் மீறி, ஒரு கதாநாயக நடிகர் , சக நடிகர்கள்,கதை-வசனகர்த்தாக்கள்,பாடலாசிரியர்,இசையமைப்பாளர்,இயக்குன ர் போன்றவர்களை தேர்ந்தெடுத்து அனைத்திலும் பங்கு பெற்று, வியாபார ,வெளியீட்டு விஷயங்களிலும் பங்கு பெற வேண்டிய அவசியங்கள் உருவானது .(விரும்பதகாததெனினும்).இந்த முறையில் மிக பாதிப்படைந்த ஒரு மகா மேதை நம் NT போன்றவர்கள். NT ,ஒரு தயாரிப்பாளரின்,இயக்குனரின் நடிகர். எந்த விதமாகவும்,அவரை உபயோகித்து,மிக சிறந்த படைப்புகளை உருவாக்கி ,உலகையே திரும்பி பார்க்க செய்திருக்க முடியும்.ஆனால் அந்த அப்பாவி மேதை ,பல உப்புமா தயாரிப்பாளர்களுக்கு பணம் பண்ணும் இயந்திரமாக, ஓயாது உழைத்து , வியாபார உத்திகளன்றி, மாதம் ஒன்றாக நடித்து குவித்தார். ஆனால் இவ்வளவு தடைகளை மீறி பேர் சொல்லும் 50 மிக மிக தரமான படங்கள் நமக்கு கிடைத்தது சிவாஜி என்ற ஒரே ஒரு உலக மேதையின் (One man Army ) சாதனை என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது.

சில கேள்விகள்-

1) சூழ்நிலை புரிந்து ,தான் நடிகர் என்பதை மீறி மற்ற திறமைகளை வளர்த்து உபயோகிப்பவர்களால் மட்டுமே, மிக தரமான ,வித்தியாசமான, வியாபார நோக்கத்தையும்,கலையையும் இணைத்து படங்களை தர முடிந்தது.(ராஜ் கபூர்,குருதத், கமல்)

2)இவர்கள் யாருமே ,நடிப்பு திறமை என்ற அளவு கோலில் மட்டும் வைத்து பார்த்தால் NT யை நெருங்கும் அருகதை கூட அற்றவர்கள். ஆனால் என்ன செய்வது?திரை படங்கள் தனி நடிப்பு போட்டியல்லவே?

3)இந்தியர்களின் மனோபாவமே, வலுவான தலையீடு இருந்தால் மட்டுமே ஒழுங்காக பணி புரிவேன் என்பது.(ஒரு இசை மேதை வாரா வாரம் மெகா டிவியில் இதை சொல்லியே தன்னையும் தரம் தாழ்த்தி கொண்டுள்ளார்).இந்த நிலையில் ,நான் எதிலும் தலையிடாமல் என் வேலையை மட்டுமே பார்ப்பேன் என்று இருப்பது சரியான strategy தானா?(ஊரோடு ஒத்து போ)Holly wood முறை இந்தியர்களுக்கு பொருந்தாது.(வாசன் விதிவிலக்கு)

4) இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளரின் பணியில் தலையிட்டு,நல்ல படத்தை கொடுப்பதில் என்ன தவறு? பிசைதலுக்கு இசைதல் என்பது இந்திய சூழ்நிலையில் சரியா?ஸ்ரீநிவாசன் இஷ்டத்துக்கு விட்டிருந்தால், நாயகனுக்கு பதில் இரு மேதைகளாய் வந்திருக்கும்.

5) ஆனால்,இவ்வளவுதான் என்னால் முடியும் என்கிற தயாரிப்பாளர்களிடம்,முதலில் ஒரு budget கொடுத்து விட்டு, பிறகு ஒவ்வொரு சுமையாக ஏற்றுவது ethical விதிகளின் படி முரணானது. தப்பாட்டம். இதைத்தான் கமலும், மணியும் செய்துள்ளனர்.

Gopal.s
29th October 2012, 10:03 AM
என்னை விட்டு விடுங்கள். எனக்கு தமிழ் படம் இயக்கும் எண்ணமே இருந்ததில்லை. ஆனால், ஒரு சத்யஜித்ரே,பிமல் ராய்,மிருனாள் சென்,அடூர் கோபாலக்ருஷ்ணன்,ஷாம் பெனேகல்,மகேந்திரன்,பாலு மகேந்திரா, இப்படிப்பட்ட இயக்குனர்கள் கையில் nt .........
ஹும்.... மீண்டும் பெருமூச்சுதான்.

Gopal.s
29th October 2012, 11:08 AM
ராகவேந்தர் ஐயா,
எனக்கும் சிவாஜி தவிர வேறு உலகம் வேண்டாம். தினமும் இரு முறையாவது அவர் படங்களையோ,பாட்டுக்களையோ பார்க்கா விட்டால் தூக்கம் வராது. ஆனால் ஒரு சில பதிவுகள், நம் எழுத்துக்களில் உள்ள உண்மை தன்மையை குறைக்கும் என்று வலுவாக நம்புபவன். I am genuine . 306 படங்களும் ஒரே தரத்தில் நிலை நிறுத்த பட வேண்டியவை என்பதில் உடன்பாடு இல்லை. ஆனால் தங்கள் மேல் உள்ள மரியாதையால்,இந்த எச பாட்டை நிறுத்தி கொள்கிறேன். நான் என் வழியில் தான் தொடர்வேன்.

Gopal.s
29th October 2012, 11:58 AM
P.b.ஸ்ரீனிவாஸ் ,ntக்காக குரல் கொடுத்தவை நான் சொல்லும் ரகசியம் படத்தில் கண்டேனே உன்னை கண்ணாலே (கிட்ட தட்ட இன்பம் பொங்கும்)

புனர் ஜென்மத்தில் என்றும் துனபமில்லை. (tmsம் பாடுவார் இதே பாட்டை)
.
கண்டேனே உன்னை கண்ணாலே எனக்கு பிடித்த டூயட் காட்சி.சிவாஜி (ஸ்ரீனிவாசுக்கு தோதாக)வாயசைத்து ,துரு துருப்பாக ,நடிக்கும் அழகே அழகு.

groucho070
29th October 2012, 02:19 PM
Posted by Lal-ettan in his Facebook:

http://www.mayyam.com/talk/attachment.php?attachmentid=1879&d=1351500500

RAGHAVENDRA
29th October 2012, 04:45 PM
ஆனால் ஜால்ரா பதிவுகள், நம் எழுத்துக்களில் உள்ள உண்மை தன்மையை குறைக்கும் என்று வலுவாக நம்புபவன். I am genuine

இந்த பதிலை உங்களுக்கு ஆதரவாக வரக்கூடிய பதிவுகளுக்கான விளக்கம் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.

Gopal.s
29th October 2012, 04:56 PM
edited

Murali Srinivas
30th October 2012, 12:53 AM
பாலாடை - PART I

தயாரிப்பு: கமலா பிலிம்ஸ்
இயக்கம்: ஏ.பீம்சிங்
வெளியான தேதி: 16-06-1967

நகரத்திலே மிக பிரபலமான சிவில் இஞ்சீனியர் சேகர். சேகரின் மனைவி ஜானகி. மனமொத்த தம்பதிகள். ஆனால் ஒரே குறை திருமணம் ஆகி பத்து வருடங்களாகி விட்டன, ஆனால் குழந்தை இல்லை. அந்த வீட்டில் சேகரின் சித்தப்பா அவர்களுடன் தங்கியிருக்கிறார்.

ஜானகியின் தங்கை சாந்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். ஜானகி மற்றும் சாந்தாவிற்கு பெற்றோர்கள் இல்லாததால் சேகரின் பராமரிப்பில் சாந்தா படிக்கிறாள். படிப்பு முடிந்து வரும் அவள் அக்காவின் வீட்டிலேயே தங்கி விடுகிறாள்.

ஒரு நண்பரின் வீட்டிற்கு செல்லும் சேகர் தம்பதியினரிடம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ளும்படி நண்பர் கேட்க அப்போதுதான் குழந்தை இல்லாத குறை அவர்கள் மனதை வாட்டுவது நண்பருக்கு தெரிய வருகிறது. டாக்டரிடம் சென்று காண்பிக்குமாறு நண்பர் சொல்ல தம்பதியர் குடும்ப டாக்டரை சென்று பரிசோதனைக்கு உட்படுகிறார்கள்.

சேகர் வெளியே காத்திருக்க ஜானகியை பரிசோதனை செய்யும் டாக்டர் அவளிடம் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என்ற விவரத்தை சொல்கிறார். இதைக் கேட்டு இடிந்துப் போகும் ஜானகி தன் கணவரிடம் இதைப் பற்றி இப்போது சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறாள். கணவனிடம் டாக்டர் கவலைப்பட வேண்டாம் குழந்தை நிச்சயமாக பிறக்கும் என்று சொன்னதாக சொல்லி விடுகிறாள். அதை கேட்டு சந்தோஷமடையும் சேகர் வழக்கம் போல் தன் வேலைகளில் ஈடுபட ஜானகியோ மனதில் பெரும் பாரத்துடன் காலம் தள்ளுகிறாள்.

ஒரு நாள் சேகர், ஜானகி மற்றும் சாந்தா ஒரு பொருட்காட்சிக்கு செல்ல அங்கே குடும்பத்துடன் வந்திருக்கும் டாக்டரை சந்திக்கிறார்கள். பெண்கள் எல்லோரும் கடைக்குள் சென்று விட டாக்டரின் மகனுடன் சேகர் பேசிக் கொண்டிருக்கிறான். அப்போது குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும் அது உங்கள் மனதையும் வாழ்க்கையும் பாதிக்காமல் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தும் நீங்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்று டாக்டரின் மகன் சொல்ல ஜானகி மறைத்த உண்மை பளாரென்று சேகரை தாக்குகிறது.

மனதில் இதை நினைத்து மருகி கொண்டே வீட்டிற்கு வரும் சேகர் ஜானகியிடம் நேரிடையாக பேசாமல் யாரோ ஒருவருடன் பேசுவது போல் தன ஆதங்கத்தை கொட்டி தீர்க்க பதில் சொல்ல முடியாமல் ஜானகி சேகரிடம் மன்னிப்பு கேட்டு அழுகிறாள். குழந்தை இல்லை என்ற குறை தனக்கு எப்போதும் வராது என்று ஜானகியை தேற்றுகிறான் சேகர். இதைப் பற்றி எதுவும் தெரியாமல் அவர்களிடம் வழக்கம் போல் கேலியும் கிண்டலுமாக உறவாடுகிறாள் சாந்தா.

ஒரு நாள் இரவு தூக்கம் பிடிக்காமல் மாடியிலிருந்து இறங்கி வரும் சேகர் ஓடிக் கொண்டிருக்கும் ரேடியோவை நிறுத்த ஏன் என்று கேட்க வரும் சாந்தாவிடம் தான் கண்ட ஒரு கனவைப் பற்றி கூறுகிறான். அந்த கனவில் நிகழ்ந்தவை என சேகர் கூறும் விஷயங்கள் அவன் மனதில் குழந்தை மீது எத்துனை ஆசை வைத்திருக்கின்றான் என்று வெளிப்படுத்துகிறது. கணவனை காணாமல் ஹாலிற்கு வரும் ஜானகியும் கணவனின் கனவைப் பற்றி பேசுவதை கேட்டு விடுகிறாள். அவள் மனம் பல வித யோசனைகளில் ஆழ்கிறது.

இறுதியாக ஒரு முடிவிற்கு வரும் ஜானகி முதலில் சேகரின் சித்தப்பாவிடம் அதை கூறுகிறாள். பின்னர் சாந்தாவை பூஜையறைக்கு அழைத்து செல்லும் ஜானகி அங்கே தன நிலைமையை கூறி தன கணவனுக்கு இரண்டாம் தாரமாய் வாழ்கைப்படுமாறு தங்கையை வேண்டுகிறாள். முடியவே முடியாது என கூறும் தங்கையிடம் தன நிலையையும் அந்த குடுமபத்தின் வாரிசு பரம்பரை தொடர வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி சம்மதம் பெறுகிறாள்

அடுத்து கணவனிடம் செல்கிறாள். தன் வேண்டுகோளை சொல்கிறாள். வெகுண்டு எழும் சேகர் அவளை சத்தம் போட, முன்னொரு நாளில் தான் என்ன கேட்டாலும் அதை வாங்கி தருவதாக சேகர் கொடுத்த அந்த சத்தியத்தை நினைவுப்படுத்தி தான தங்கையை மணக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்கிறான்.

திருமணம் முடிகிறது. முதல் இரவிற்கு தன தங்கையை அனுப்பி வைக்கிறாள். இது நாள் வரை ஒரு குழந்தையாக பார்த்த மனைவியின் தங்கையை மனைவியாக பார்க்க முடியாமல் சேகர் தடுமாற அவனை தன நகைச்சுவை பேச்சால் இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறாள் சாந்தா. முதலிரவிற்கு கணவனையும் அவனை மணமுடித்த தங்கையையும் அனுப்பி வைத்துவிட்டு தன அறைக்கு வரும் ஜானகிக்கு தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுகிறாள். டாக்டர் வந்து பரிசோதனைகள் செய்து பார்த்து விட்டு ஜானகி கர்ப்பம் தரித்திருக்கும் சந்தோஷ செய்தியை சொல்கிறார்.

வெகு நாட்களாக காத்திருந்து தனக்கு இனிமேல் கிடைக்காது என நம்பிக்கை இழந்த ஒன்று தனக்கு வரப்பிரசாதமாய் கிடைத்திருக்கும் மகிழ்வு ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இந்த பாக்கியம் தன்னுடைய கணவனின் குடும்பத்திற்கு வேண்டுமென்பதற்காக தானே தன தங்கையை தன கணவனுக்கு கட்டி வைத்துவிட்ட வருத்தம் ஒரு புறம். யோசனையின் முடிவில் யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லாமல் மறைத்து விடுகிறாள்.

இந்த நிலையில் வெளியூரில் ஒரு அணைக்கட்டு கட்டிட வேலைக்கு சேகர் செல்ல நேரிடுகிறது. அவனுடன் சாந்தாவையும் அனுப்பி வைக்கிறாள் ஜானகி. அங்கே சென்றவுடன் சேகர் வேலையிலே கவனமாகி விட அவனால் சாந்தாவை கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. மனதில் அந்த குறை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சாந்தா நடமாடுகிறாள்.

இந்நிலையில் வீட்டிற்கு வரும் நர்ஸ் மூலமாக ஜானகி கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்ற செய்தி சேகரின் சித்தப்பாவிற்கு தெரியவர அதை வர சேகருக்கு தெரியப்படுத்துகிறார். அந்த கடிதத்தை படித்தவுடன் சேகர் உடனே சென்னைக்கு ஓடோடி வந்து விடுகிறான். வெளியே சென்றிருந்த சாந்தாவை அப்படியே மறந்து விடும் சேகர் சென்னைக்கு ஓடி வந்து விட அது ஜானகிக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விடுகிறது. சேகரை திருப்பி அனுப்பி அவளை கூட்டி வர செய்கிறாள்.

ஆனால் ஜானகி கர்ப்பம் என்று தெரிந்தவுடன் சேகரின் attitude மாறி விடுகிறது. எப்போதும் அவளைப் பற்றிய சிந்தனை,பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றிய கனவுகள் அவற்றைப் பற்றிய பேச்சுக்கள் என்று அவன் உலகம் சுழல ஆரம்பிக்க சேகரின் இந்த போக்கு சாந்தாவை தனிமைப்படுத்த தொடங்குகிறது.

ஒரு கட்டத்தில் சாந்தா இந்தக் குடும்பத்தில் தான் தேவையில்லாமல் நுழைந்துவிட்டதால் வந்த குழப்பங்கள்தான் இவை என்ற முடிவிற்கு வருகிறாள். எனவே சேகர் ஜானகி இடையே தான் இருக்க வேண்டாம் என நினைத்து ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறாள். சாந்தா இப்படி ஒரு முடிவு எடுக்கும் போது, தான் இந்த நேரத்தில் கர்ப்பம் ஆனதுதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என நினைக்கும் ஜானகி குடும்ப டாக்டரிடம் சென்று தன கர்ப்பத்தை கலைக்குமாறு வேண்டுகிறாள். இதனை காலத்திற்கு பின் கர்ப்பம் தரித்திருக்கும் நீ இதை செய்ய சொல்லலாமா என கேட்டு டாக்டர் மறுக்க அந்நேரம் அங்கே வரும் சேகர் மனம் உடைந்து போகிறான். இனி இப்படி செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்ய சொல்லும் சேகரிடம் அவன் இனிமேல் சாந்தவை சந்தோஷமாக் கொள்ள வேண்டும் என பதில் சத்தியம் கேட்கிறாள் ஜானகி. வீட்டை விட்டு வெளியேறிய சாந்தவை கண்டுபிடித்து கூட்டி வரும் சேகர் நடந்தவற்றையெல்லாம் சாந்தாவிடம் கூறுகிறான்

ஜானகிக்காக சத்தியம் செய்துக் கொடுத்தாலும் சேகரால் சாந்தாவிடம் சந்தோஷமாக நடந்து கொள்ள முடியவில்லை. வெளியில் இருவரும் நடிக்கிறார்கள். இதனிடையில் ஜானகிக்கு பிரசவ நேரம் நெருங்குகிறது. சேகர் சாந்தா சந்தோஷத்தைப் பற்றி சந்தேகப்படும் ஜானகி மற்றும் சித்தப்பா இருவரும் இதை பற்றி கேள்வி கேட்க கல்யாணமான நாள் முதல் தாங்கள் ஒரு நாள் கூட சந்தோஷமாக் இருந்ததில்லை என்ற உண்மையை சாந்தா போட்டு உடைக்க அதை தாங்க முடியாமல் அறையை விட்டு வெளியே ஓடிவரும் ஜானகி மாடிப்படிகளில் தவறி விழுந்து அடிபடுகிறாள். டாக்டரை அழைக்க கார் எடுத்து செல்லும் சாந்தா வழியில் விபத்தில் சிக்கிக் கொள்கிறாள்

அக்கா தங்கை இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் குழந்தையை பெற்று எடுத்துவிட்டு ஜானகி இறந்து போக சாந்தா பிழைத்துக் கொள்கிறாள்.

பிறந்தவுடன் பெற்ற தாயை இழந்த அந்த குழந்தைக்கு தாயாகும் சாந்தா அதற்கு பாலாடை மூலமாக பாலூட்ட படம் நிறைவு பெறுகிறது.

(தொடரும்)

அன்புடன்

Saai
30th October 2012, 01:03 AM
க்கு சில மனக்குறைகள் உண்டு. அதில் முக்கியமான குறை டைம்ஸ் வெளியிட்ட சிறந்த நூறில் ஆங்கில படங்களின் பிரதி-தழுவலான நாயகன் இடம் பெற்றதுதான். சில மேட்டுக்குடி லாபி எப்பவுமே வலுவானவை.ஆனால் அதில் இடம் பெற்றிருக்க வேண்டிய அசலான ஒரே இந்திய படம் தில்லானா மோகனாம்பாள்தான் என்று அடித்து கூற முடியும்.

"பிரதி-தழுவலான" - what is this? pradhiya? thazhuvalaa? dont confuse yourself and others!


ஆனால் தமிழ் பட உலகம் நட்சத்திர பிடியில் சிக்கிய பிறகு, ஒரு நடிகர் என்பதையும் மீறி, ஒரு கதாநாயக நடிகர் , சக நடிகர்கள்,கதை-வசனகர்த்தாக்கள்,பாடலாசிரியர்,இசையமைப்பாளர்,இயக்குன ர் போன்றவர்களை தேர்ந்தெடுத்து அனைத்திலும் பங்கு பெற்று, வியாபார ,வெளியீட்டு விஷயங்களிலும் பங்கு பெற வேண்டிய அவசியங்கள் உருவானது .(விரும்பதகாததெனினும்).இந்த முறையில் மிக பாதிப்படைந்த ஒரு மகா மேதை நம் NT போன்றவர்கள். NT ,ஒரு தயாரிப்பாளரின்,இயக்குனரின் நடிகர். எந்த விதமாகவும்,அவரை உபயோகித்து,மிக சிறந்த படைப்புகளை உருவாக்கி ,உலகையே திரும்பி பார்க்க செய்திருக்க முடியும்.ஆனால் அந்த அப்பாவி மேதை ,பல உப்புமா தயாரிப்பாளர்களுக்கு பணம் பண்ணும் இயந்திரமாக, ஓயாது உழைத்து , வியாபார உத்திகளன்றி, மாதம் ஒன்றாக நடித்து குவித்தார். ஆனால் இவ்வளவு தடைகளை மீறி பேர் சொல்லும் 50 மிக மிக தரமான படங்கள் நமக்கு கிடைத்தது சிவாஜி என்ற ஒரே ஒரு உலக மேதையின் (One man Army ) சாதனை என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது.


Does that mean Shivaji Ganesan did not have any say in selecting his co-stars and technicians? :)

Murali Srinivas
30th October 2012, 01:03 AM
பாலாடை PART II

இந்தப் படத்தைப் பொருத்தவரை நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த படம் எனபது ரசிகர்களை தவிர பொது மக்களுக்கு பரவலாக தெரியுமா என்றால் தெரியாது என்றே பதில் வரும். காரணம் படத்தை பற்றிய சரியான விளம்பரமின்மை. அதை பற்றி பேசுவதற்கு முன் நமது நடிகர் திலகத்தின் performance பற்றி பார்த்து விடலாம்.

நாம் ஆய்விற்காக எடுத்துக் கொள்ளும் படங்களில் சொன்ன அதே வரிதான் இப்போதும் சொல்ல வேண்டியிருக்கிறது. அதாவது எந்த விதமான மிகைப்படுத்தலும் இல்லாமல் வெகு இயல்பான நடிப்பை இந்தப் படத்திலும் வெளிப்படுத்தியிருப்பார். மனைவி மீது அளப்பரிய அன்பு வைத்திருக்கும் ஒரு கணவன்தான் இந்த சேகர் என்பதை முதல் காட்சியிலேயே establish பண்ணி விடுவார். நீ இதுவரை எதுவுமே என்னிடம் கேட்டதிலையே என்று அவர் கேட்கும் காட்சியிலே படத்தின் நடுவில் வரப்போகும் முடிச்சிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு விடும்.

நண்பனின் வீட்டிற்கு நவராத்திரி கொலுவிற்கு மனைவியுடன் செல்கிறார். நண்பனின் நண்பன் insurance ஏஜென்ட் பாலிசி எடுப்பது பற்றி பேச ஆரம்பிக்கிறார். அப்போதுதான் பத்து வருடங்களாகியும் குழந்தை இல்லை என்ற செய்தி சேகரின் நண்பனால் சொல்லப்படுகிறது. ஏன் சார் டாக்டரை பார்க்கலாமே என்ற கேள்வி வருகிறது. குழந்தை இல்லை என்பதே sensitive ஆன விஷயம். அதை பற்றிய ஒரு discussion வரும்போது அதிலும் குறிப்பாக அறிமுகமில்லாத முதன் முறை சந்திக்க நேர்கிற ஓர் மனிதனுக்கு முன்பு பேச வேண்டும் என்கிறபோது பாதிக்கப்பட ஒரு ஆண் மகன் எப்படி தர்மசங்கடப்படுவான், பதில் சொல்ல எப்படி தடுமாறுவான் என்பதை அச்சு அசலாக காட்டியிருப்பார் நடிகர் திலகம். அடுத்து டாக்டர் கிளினிக். உள்ளே மனைவிக்கு பரிசோதனைகள் நடந்துக் கொண்டிருக்க வெளியே உட்கார்ந்து அங்கே இருக்கும் ஒரு பருவ இதழில் வந்துள்ள குழந்தைகளின் புகைப்படங்களை ரசிக்கும் அந்த மனிதன் மனதில் உள்ள குழந்தை ஆசை பார்வையாளனக்கு உணர்த்துவார். வெளியே வரும் மனைவியின் முகத்திலிருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் டாக்டரை பார்க்க நான் ஜானகிகிட்டே சொல்லியிருக்கிறேன்-னு சொல்ல பத்மினி குழந்தை பிறக்கும்னு சொல்லியிருக்காங்க என்றவுடன் சந்தோஷத்தில் வார்த்தை வராமல் போகலாம் என்று மனைவியை கூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டு சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்தது போல் திரும்பி உள்ளே வந்து டாக்டரிடம் Thank You டாக்டர் என்று சொல்லிவிட்டுப் போகும் அந்த elegance, அழகாய் செய்திருப்பார்.

பின்னாளில் பொருட்காட்சியில் வைத்து டாக்டரின் மகனைப் பார்த்து பேசும்போது உண்மை தெரிய வர அந்த அதிர்ச்சியை அவர் மறைக்கும் விதம் பிரமாதம். என்ன சொல்றது ராமு என்று ஆரம்பித்து விட்டு என்ன சொல்றது என்று மட்டும் சொல்லி ஒரே வார்த்தையை வேறு அர்த்தத்தில் அவர் சொல்லும்போது ஏமாற்றப்பட்ட கையாலாகாத அந்த முகபாவம் எல்லாம் வெகு இயல்பு.

வீட்டிற்கு வந்து யாரோ ஒருவருடன் பேசுவது போல தன் மனதில் இருப்பதை கொட்டி தீர்ப்பது [எப்படிப்பட்ட விஷயம் அதை யார்ட்டே மறைக்கிறது? கட்டின கணவன்கிட்டேவா?], குழந்தை மட்டுமே தன்னுடைய ஆசை இல்லை மனைவியும் அவள் மேல் இருக்கும் அன்பும்தான் முக்கியம் என்பதை மனைவியின் மனதில் பதிய வைக்கும் அந்த காட்சியும் அவர் நடிப்பில் பரிமளிக்கும்.

அவரின் நடிப்பில் icing of the cake என்று இந்த படத்தில் சொல்ல வேண்டும் என்றால் அவர் தான் கண்ட கனவு பற்றி கே.ஆர்.விஜயாவிடம் விவரிக்கும் அந்தக் காட்சியைத்தான் சொல்ல வேண்டும். ரூமிலிருந்து நடந்து வரும் சிவாஜி. ரேடியோவில் ஒலிப்பரப்பி கொண்டிருக்கும் மலர்ந்தும் மலராத பாடலை நிறுத்தி விட்டு ஒரு வெறித்த பார்வையுடன் வந்து உட்காரும் சிவாஜி. இதை பார்த்தவுடன் தன்னுடைய அறையிலிருந்து வந்து என்ன ஆச்சு என்று கேட்கும் விஜயா. கனவை விவரிக்கும் சிவாஜி. வாசலிலே பெல் சத்தம். போய் பாக்கறேன் தங்க விக்கிரகம் மாதிரி ஒரு குழந்தை அப்படியே ஓடி வரான் இந்த சோபாவிலே வந்து உட்காறான் என்று ஆரம்பிப்பார். அப்போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே. இங்கேயா என்று விஜயா கேட்க, yes இந்த இடத்திலிருந்து ஓடி அங்க மாட்டியிருக்கிற கண்ணாடி மேல இந்த சாமானை எறியறான். கண்ணாடி உடைந்து சிதறுது. வாயெல்லாம் ரத்தம். ஏன்பானு கேட்க கடகடன்னு சிரிக்கிறான். ரத்தத்தை துடைக்கலாம்னு போறேன்" என்று பேசிக்கொண்டே அந்த அறையை சுற்றி வருவார். Mesmerising என்று வார்த்தையின் அர்த்தத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பை பார்த்தல் போதும். இந்தக் காட்சியைப் பொறுத்தவரை கவனித்தோம் என்றால் ஒன்று புலப்படும். உளவியாளர்கள் சொல்வது என்னவென்றால் ஒரு பொருளை ஒரு விஷயத்தை நாம் அளவிற்கு அதிகமாக விரும்புகிறோம் ஆனால் நமக்கு அது கிடைக்கவில்லை என்ற பட்சத்தில் ஆழ் மனது hallucinations எனப்படும் ஒரு வித பிரமையில் சிக்கிக் கொண்டு ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத நிகழ்வுகளை கனவு வடிவத்தில் கற்பனை செய்யும் என்கிறார்கள்.[உடல் நிலை சரியில்லாத போது உட்கொள்ளும் strong anti biotics கூட எப்போதும் ஏதாவது பிரச்சனைகளில் அல்லாடிக் கொண்டிருக்கும் சஞ்சல மனம் உடையவர்களுக்கு இது போன்ற hallucinations-ஐ கொண்டு வரும் என்று சொல்கிறார்கள்].அத்தகைய illusions மிகவும் weird ஆக இருக்கும் என்றும்
உளவியாளர்கள் சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு மனோநிலையில்தான் நமது நாயகன் இருக்கின்றான் என்பதை இப்படி ஒரு காட்சியமைபபின் மூலமாக திரைக்கதையில் கொண்டு வந்த கதாசிரியருக்கும் அதை சரியான விதத்தில் கையாண்ட இயக்குனருக்கும் அதை அழகாய் உள்வாங்கி தன அற்புதமான நடிப்பால் திரையில் ஒரு காவியமாக உருவாக்கிய நடிகர் திலகதிற்கும் ஒரு royal salute.

இதை தவிர அவர் நடிப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் கே.ஆர்.விஜயாவிடம் கல்யாணத்திற்கு முன்பும் பின்பும் அவர் பழகும் விதம் பற்றி சொல்ல வேண்டும். கல்யாணத்திற்கு முன் மனைவியின் தங்கை என்ற உரிமையில் கிண்டல் செய்வது கேலியாக கமண்ட் அடிப்பது என்று ஜாலியாக இருக்கும் அவர் உடல் மொழி. அதே பெண் சந்தர்ப்ப சூழல் காரணமாக தன மனைவியாக வந்தவுடன் அவளிடம் ஓட்ட முடியாமல் விலகி விலகி போவதை அருமையாக செய்திருப்பார். அந்தப் பெண்ணும் மனைவிதான். ஆனாலும் முதல் மனைவியிடம் உள்ள attachment இரண்டாவதில் இல்லை எனபதை அவர் உணர்த்தும் விதம் நேர்த்தி.

இறுதிக் காட்சியில் உயிருக்குயிராய் நேசித்த மனைவி தான் விரும்பிய குழந்தையை கொடுத்துவிட்டு இறந்து விடும் போது அந்த scene ஒரு melodrama-வாக மாறி விடக் கூடிய அனைத்து சாத்தியங்களும் இருந்தும் அதற்கு இடம் கொடுக்காமல் அடக்கி வசிப்பது அவர் எந்தளவிற்கு பல படங்களில் subtle acting செய்திருக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம்.

ஒரு சில நடிகர் திலகத்தின் படங்களில் அவரை தவிர வேறு யாரும் குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள் பாலாடை படமும் அதில் ஒன்று. மனைவியாக வரும் நாட்டியப் பேரொளியும் சரி இரண்டாவது மனைவியாக தோன்றும் புன்னகை அரசியும் சரி மனதில் தங்குகிற மாதிரி பெரிதாக ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள்.

படத்தின் கதையைப் பற்றி எழுதிய முதல் பார்ட்டில் நான் குறிப்பிடாத நகைச்சுவை பகுதியும் உண்டு இந்தப் படத்தில். அன்றைய நாட்களில் படவுலகில் எழுதப்படாத சட்டப்படி நாகேஷ் மனோரமா நகைச்சுவை பகுதியும் உண்டு. படத்தின் கதைக்கு தொடர்பு வேண்டும் என்பதற்காக சிவாஜியின் சித்தப்பாவாக வரும் வி.கே.ஆர் பாத்திரத்தையும் இந்த நகைச்சுவை காண்டத்தில் சேர்த்திருப்பார்கள். ஆனால் நீலவானம் படம் போல இந்தப் படத்திலும் நகைச்சுவை ஒட்டாது என்பது மட்டுமல்ல ரசிக்கும்படியாகவும் இருக்காது.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
30th October 2012, 01:06 AM
பாலாடை PART III

மோகன் ஆர்ட்ஸ் என்ற பானர் வரையும் நிறுவனத்தை நடத்தி வந்த மோகன், நடிகர் எம்.ஆர்.சந்தானத்துடன் சேர்ந்து ராஜாமணி பிச்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி காலத்தால் அழிக்க முடியாத காவியமான பாச மலர் திரைக் காவியத்தை 1961-ல் நமக்கு அளித்தனர். பிறகு 1963-ல் அதே பானரில் அவர்கள் தயாரித்த படம் குங்குமம். படத்தின் திரைக்கதையை படமாகும் நேரத்தில் நேர்ந்த பிழையால் நாயகனும் நாயகியும் ஒரே தந்தைக்கு பிறந்தவர்கள் அதாவது அண்ணன் தங்கை முறை வருகிறது என்ற சந்தேகம் எழுந்ததினால் சென்சாரில் சில பல காட்சிகள் வெட்டப்பட்டது. படத்தின் சில பல காட்சிகளை ரீ-ஷூட் செய்ய வேண்டும் என்ற நிலைமை உருவானது. அனால் அந்த நேரத்தில் பெரும் பொருட்செலவில் பந்துலு தயாரித்து இயக்கி கொண்டிருந்த கர்ணன் படத்திற்காக ஜெய்ப்பூரில் முகாமிட்டிருந்தார் நடிகர் திலகம். அதை விட்டு விட்டு வந்தால் பந்துலு பாதிக்கப்படுவார் என்பதானால் தன சொந்த படம் போன்ற குங்குமத்தை அதுவும் தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய கிருஷ்ணன் பஞ்சு அவர்களின் இயக்கம் என்ற போதிலும் அதற்கு முக்கியத்துவம் தராமல் கர்ணன் படபிடிப்பில் தொடர்ந்தார் நடிகர் திலகம். இந்த செய்திகளை இதற்கு முன்னரே நமது நடிகர் திலகம் திரியில் பேசியிருக்கிறோம். இந்த காரணத்தினால் ரீ-ஷூட் செய்யப்படாமல் குங்குமம் 1963 ஆகஸ்ட் 2 அன்று வெளியானது மேற் சொன்ன காரணங்களினால் படம் பெற வேண்டிய வெற்றியை பெற முடியவில்லை. அந்த படத்திற்கு பிறகு ராஜாமணி பிச்சர்ஸ் படம் எதுவும் தயாரிக்கவில்லை.

இந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருந்த எம்.ஆர்.சந்தானம்.[இயக்குனர் சந்தானபாரதியின் தந்தை] இதற்கிடையில் கமலா பிச்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அன்னை இல்லம் படத்தை தயாரித்தார்.இது 1963-ம் வருடம் நவம்பர் 15 அன்று வெளியானது. சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு படம் தயாரிக்க துவங்கி அதற்கு தங்களின் முதல் பட இயக்குனரான பீம்சிங்கை ஒப்பந்தம் செய்தார். 1965-ல் வெளிவந்த பழனி, சாந்தி திரைப்படங்களுக்கு பிறகு பீம்சிங் இந்தி படவுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இருப்பினும் இந்தப் படத்தை இயக்குவதற்கு ஒப்புக் கொண்டார்.

அந்தக் காலத்தில் பருவ இதழ்களில் கதை தொடர்கதை எழுதிக் கொண்டிருந்தவர் பிலஹரி. ராமன் என்ற இயற் பெயருடைய இவருடைய கதைதான் பாலாடை. அவரே வசனம் எழுத படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் தமிழ் இந்தி என்று ஒரே நேரத்தில் இரட்டை குதிரை சவாரி செய்துக் கொண்டிருந்த பீம்சிங்கால் இந்தப் படத்தில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் படபிடிப்பு விட்டு விட்டு நடந்தது.

கல்யாணமாகி பல வருடங்கள் குழந்தை இல்லாத மனைவி தன கணவனுக்கு வாரிசு வேண்டும் என்று முடிவு செய்து தன் தங்கையையும் கணவனையும் இரண்டாம் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறாள். திருமணம் முடிந்து அவர்கள் முதலிரவுக்கு செல்லும் நேரத்தில் இங்கே இவள் கர்ப்பம் என்று தெரிய வருகிறது. இந்த சுவாரசியமான முடிச்சு விழும் போது இடைவேளை. ஆடியன்ஸ் நிமிர்ந்து உட்காரும் நேரம். ஆஹா இதை எப்படி கொண்டு போகப் போகிறார்கள் என கற்பனை செய்யும் போது அந்த சுவாரஸ்யத்திற்கு ஈடு கொடுக்காமல் தடுமாறும் திரைக்கதை இறுதிவரை அப்படியே அதே பாட்டையில் பயணிக்க ஆடியன்ஸ் ஏமாற்றமடைகின்றனர். இது எதனால் நேர்ந்தது என்பது நமக்கு தெரியாத புதிர்.

முன்பே சொன்னது போல் பிலஹரி கதை வசனம் எழுதியிருக்க பீம்சிங் இயக்கினார். பீம்சிங் இந்தியில் பிசியாக இருந்த நேரம் எனவே அவரின் associate இயக்குனர்கள் திருமலை மகாலிங்கம் பல காட்சிகளை இயக்கியதாக அன்றைய நாளில் ஒரு பேச்சு உண்டு.

இந்தப் படத்திற்கு இசை கே.வி.மகாதேவன். பாசமலர் படத்திற்கு மெல்லிசை மன்னர்களை பயன்படுத்திய ராஜாமணி பிக்சர்ஸ் தங்களது அடுத்த படமான குங்குமம் படத்திற்கு மகாதேவனை ஒப்பந்தம் செய்தார்கள். இரண்டிலுமே பாடல்கள் பெரும் புகழ் பெற்றன. எம்.ஆர்.சந்தானம் தனியாக எடுத்த அன்னை இல்லம் படத்திற்கு மாமாவை ஒப்பந்தம் செய்தார். குங்குமம் படத்தில் மாமாவை பயன்படுத்திக்கொண்ட அந்த நெருக்கமோ என்னவோ அன்னை இல்லம் பிறகு பாலாடை ஆகியவற்றுக்கும் மகாதேவனே இசையமைப்பாளர் ஆனார்.

நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த படங்களில் இரண்டிற்கு மட்டுமே மாமா மியூசிக்.ஒன்று படிக்காத மேதை மற்றொன்று பாலாடை.[இதே கூட்டணியில் வெளிவந்த ராஜா ராணி படத்திற்கு டி.ஆர். பாப்பாவும், பெற்ற மனம் படத்திற்கு C.ராஜேஸ்வர ராவும் இசையமைத்தனர். மற்றவை எல்லாம் மெல்லிசை மன்னர்கள்.இந்தக் கூட்டணியின் கடைசி படமான பாதுகாப்பு மட்டும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள்].

அந்தக் காலகட்டத்தில் புராணப் படங்களிலும் சமூக படங்களிலும் [பேசும் தெய்வம் போன்றவை] வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த மாமா இந்தப் படத்தில் கோட்டை விட்டிருப்பார்.

பட்டாடை தொட்டில் கட்ட வேண்டும் என் கண்ணுக்கு - நடிகர் திலகத்திற்கு உண்மை தெரிந்தவுடன் பத்மினியிடம் மனதில் உள்ளதை கொட்டி தீர்க்க பத்மினி மன்னிப்பு கேட்க அந்நேரத்தில் இது எதுவும் தெரியாமல் உள்ளே வரும் கே.ஆர். விஜயா பாடுவது. இது ஓரளவிற்கு பிரபலமான பாடல். சுசீலாவின் குரல் இனிமை பிளஸ்.

அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும் - அணைக்கட்டு வேலைக்கு சென்றிருக்கும் போது அங்கே நடக்கும் ஒரு பிறந்த நாள் விழாவிற்கு சிவாஜியும் விஜயாவும் போவார்கள். அந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பாடுவதாக வரும் பாடல். நடிகர் திலகத்தின் சிகரெட் ஸ்டைலை இந்தப் பாட்டில் ரசிக்கலாம்.

டூயட் டூயட் பாடும் முதலிரவு - நாகேஷ் மனோரமா முதலிரவில் பாடுவதாக வரும் பாடல். தாராபுரம் சுந்தர்ராஜன் பாடியிருப்பார்.

எங்கே எங்கே எங்கே என் கண்ணுக்கு விருந்தெங்கே - படத்தில் நடிகர் திலகத்திற்கு ஒரே பாடல் இது மட்டும்தான். அதுவரை காய்ந்து கிடந்த ரசிகர்களுக்கு கைதட்ட ஆராவரிக்க ஒரு சீன். அந்த ஸ்டைல் போஸ் தனித்துவமான அந்த நடை என்று கலகலப்பாய் போகும்.

தயாரிப்பில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக படம் 1967 ஜூன் 16-ல் வெளியானது. ஆனால் அதற்குள்ளாகவே கிட்டத்தட்ட இதே போன்ற கதையமைப்பை கொண்ட இதே நாயகனும் நாயகியும் நடித்த பேசும் தெய்வம் 1967 ஏப்ரலில் வெளியாகி வெற்றியும் பெற்று பாலாடை வெளியாகும் போது ஓடிக் கொண்டிருக்கிறது.அது மட்டுமல்ல நடிகர் திலகத்திற்கு action hero என்ற ஒரு புதிய இமேஜ் நல்கிய தங்கை படமும் 1967 மே-யில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய நேரத்தில் வெளியான பாலாடை போதிய வெற்றியை பெறாமல் போனது. மெயின் நகரங்களில் எல்லாம் ஐம்பது நாட்களை கடந்து ஓடிய பாலாடை எங்கள் மதுரை மாநகர் மீனாட்சி திரை அரங்கில் தன அதிக பட்ச நாட்கள் ஓட்டத்தை பதிவு செய்தது.

நடிகர் திலகத்தின் படங்களைப் பொருத்தவரைக்கும் எது எப்படி இருப்பினும் அவருக்காக [மட்டும்] சில படங்களை பார்க்க நேரிடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் பாலாடை

அன்புடன்

madhu
30th October 2012, 06:22 AM
முரளி ஜி :clap: :clap: :clap:

Gopal.s
30th October 2012, 07:05 AM
[QUOTE=Saai;972768]"பிரதி-தழுவலான" - what is this? pradhiya? thazhuvalaa? dont confuse yourself and others!

பிரதி-தழுவல் என்பது trans -creation என்பதின் தமிழாக்கம்.மாற்றுருவாக்கம் என்றும் சொல்லலாம்.

தில்லானா மோகனாம்பாளை நான் தேர்ந்தெடுக்க காரணம்-

அசலான தமிழ் கதை. எதனையும் தழுவியது அல்ல.

எல்லா தரப்பிரனரும் ஏற்று பாராட்டிய படம்.

நடிப்பு,உடை, காட்சியமைப்பு,வண்ணங்கள் உட்பட அனைத்தும் நமது மரபை ஒட்டியே இருந்தது.

நமது பாரம்பரிய கலைகளுக்கு அங்கீகாரம் அளித்தது.

இத்தனையும் மீறி மிக மிக சுவாரஸ்யமான படம்.

Gopal.s
30th October 2012, 07:09 AM
Does that mean Shivaji Ganesan did not have any say in selecting his co-stars and technicians? :)[/QUOTE]

பெரும்பாலும் தலையீடு இருந்ததில்லை நண்பரே. ஒன்றிரண்டு ஆலோசனைகள் இருந்திருக்கலாம். மாற்று கருத்து கொண்டு ,அவரை விமரித்தவர்கள் கூட அவர் படத்தில் இடம் பெற்றதுண்டு.

Gopal.s
30th October 2012, 07:41 AM
Dear Murali,
பாலாடை- NT நாள் அதிகமானதால் புளித்து விட்டது என்று விமரிசித்தார். தாங்கள் பிய்த்து கொடி நாட்டிய பிறகு நான் என்ன சொல்வது?
பல தளங்களில் அப்போது வந்த ஏனைய படைப்புகளை விட உயர்ந்த தரத்தில் நின்ற படம் பாலாடை.
விஜயாவை ,அவர்,வளர்ப்பு மகள் போலவே பாவிப்பார். அவர்கள் இருவருக்கும் ,அன்னியோன்யம் ஏற்படுத்த,தனியாக அனுப்ப படும் போது,ஒரு விழாவில் ,சிகரட் ஊதி, சிறிது உரிமை கூடுவார் .ஆனால், பத்மினி கற்பமுற்றிருக்கும் உண்மை தெரிந்த காட்சியில்,மீண்டும் இருவரும் குழந்தை போல உரிமை விளையாட்டு விளையாடி ,பழைய உறவையே தொடர்வார்கள்.
நான் பார்த்த தமிழ் படங்களின் மிக சிறந்த காட்சிகளில் ஒன்று,NT ,தன கனவை விவரிப்பது.
பிலஹரி போன்றவர்களை தொடர்ந்து உபயோக படுத்தாமல் விட்டது நமது துரத்ரிஷ்டம்.வியட்நாம் வீடு சுந்தரம் போல்,நமது படங்களுக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டு ,ஆரூர் தாஸ் போன்ற வசனகர்த்தாக்களிடம் இருந்து நமது படங்களுக்கு விடுதலை கிடைத்திருக்கும்.
படத்தை குட்டிச்சுவர் பண்ணுவது நாகேஷ். இவர் பண்ணிய கூத்து படத்தின் சுவாரஸ்யத்தையும், mood அண்ட் tone இரண்டையும் கெடுத்தது. நாகேஷ்,புதிய பறவை,சிவந்த மண் போன்ற படங்களில் இருந்து தூக்கி எறிய பட்டிருக்க வேண்டும். இந்த அழகில்,கண்ட்றாவி call -sheet கிடைக்காமல் காத்திருப்பார்களாம். ஒரு தருமி,ஒரு வைத்திக்காக, எவ்வளவு கருமங்களை சகித்தோம்?
மாமாவின் இசை,படத்துக்கு ஒரு அமைதியான மெருகை அளிக்கும்.
என் மிரட்டலுக்கு பணிந்து ,தங்கள் பாலாடை பதிவை அளித்ததற்கு கோடி நன்றிகள்.தியாகராஜர் எல்லா பாட்டிலும் தன் முத்திரை பதிப்பாராம். அது போல,என்ன ,எல்லா பதிவிலும் மதுரை?

Gopal.s
30th October 2012, 08:11 AM
edited

Saai
30th October 2012, 09:56 AM
"பிரதி-தழுவலான" - what is this? pradhiya? thazhuvalaa? dont confuse yourself and others!

பிரதி-தழுவல் என்பது trans -creation என்பதின் தமிழாக்கம்.மாற்றுருவாக்கம் என்றும் சொல்லலாம்.

தில்லானா மோகனாம்பாளை நான் தேர்ந்தெடுக்க காரணம்-

அசலான தமிழ் கதை. எதனையும் தழுவியது அல்ல.

எல்லா தரப்பிரனரும் ஏற்று பாராட்டிய படம்.

நடிப்பு,உடை, காட்சியமைப்பு,வண்ணங்கள் உட்பட அனைத்தும் நமது மரபை ஒட்டியே இருந்தது.

நமது பாரம்பரிய கலைகளுக்கு அங்கீகாரம் அளித்தது.

இத்தனையும் மீறி மிக மிக சுவாரஸ்யமான படம்.

Nayagan maaRRuruvakkamaa? neenga Godfather pathurukeengalaa?

adhenna "Thillana Mohanambal" thaan orE indhiya padam? I know we tamilians are known for unwanted hyper boles. Coming to "marabu" that you are talking about - There were N number of movies based on whatever you have told like Sagara sangamam and Vanaprastham. If you are talking about Shivaji, you donot have to belittle others.

Gopal.s
30th October 2012, 10:18 AM
Nayagan maaRRuruvakkamaa? neenga Godfather pathurukeengalaa?

adhenna "Thillana Mohanambal" thaan orE indhiya padam? I know we tamilians are known for unwanted hyper boles. Coming to "marabu" that you are talking about - There were N number of movies based on whatever you have told like Sagara sangamam and Vanaprastham. If you are talking about Shivaji, you donot have to belittle others.
சாய்,
தயவு செய்து என் பதிவுகளை ஒழுங்காக படியுங்கள்.நான் எதையும் மிகை படுத்துபவன் அல்ல. எந்த நல்ல தமிழ்,இந்திய படங்களை எடுத்தாலும் ,ஏதோ ஒரு அந்நிய படத்தை தழுவியது.(அந்த நாள்,நெஞ்சில் ஓர் ஆலயம், உட்பட) ஒரு அசல் தமிழ் தொடர்கதையை ,மிக அழகான திரைக்கதையாக்கி, ஓரளவு இயல்பு தன்மையுடன் கொடுத்த படம் தில்லானா மோகனாம்பாள் மட்டுமே..

Gopal.s
30th October 2012, 10:23 AM
Saai,
You better know whom you are talking to? There is no good movie in the world which I have not seen and I was an active member of Film society.How dare you ask me silly questions like whether I have seen God Father?

Anban
30th October 2012, 11:41 AM
Saai,
You better know whom you are talking to? There is no good movie in the world which I have not seen sir, nobody in this world can claim like this.

Gopal.s
30th October 2012, 12:03 PM
sir, nobody in this world can claim like this.

Anban, I am claiming this openly. Can you challenge me? Dont be a frog in the pond, thinking that whatever you dont know,doesn't exist.

joe
30th October 2012, 02:22 PM
My 2 cents..


*அற்புதமான நடிகர் நடித்ததால் ஒரு படம் அற்புதமான படம் என்றிருக்க வேண்டிய அவசியமில்லை ..அற்புதமான படங்களில் நடித்தவர்கள் அற்புதமான நடிகர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.


* நடிகர் திலகத்தின் பெரும்பான்மையான படங்கள் அந்தந்த காலகட்டத்தில் தமிழ் மக்களின் ரசனையை வைத்தும் சிவாஜி என்னும் சிங்கத்தை மனதில் வைத்தும் உருவாக்கப்பட்டவை .


* யதார்த்த திரைப்படங்கள் என்னும் கோணத்தில் எடுக்கப்படும் படங்களுக்கு குறைந்தபட்ச திறமை கொண்டு சொன்னதை செய்யும் நடிகர்கள் இருந்தாலே போதும் .ஆனால் காவியத்தன்மை கொண்ட பொழுதுபோக்கு படங்கள் உருவாக்கும் போது நடிகர் திலகம் போன்ற பெரும் கலைஞர்கள் தேவை.


* என்னைப் பொறுத்தவரை நடிகர் திலகத்தின் படங்களை நான் நடிகர் திலகத்துக்காகத் தான் பார்க்கிறேன் .நடிகர் திலகம் தன் முத்திரையை பதிப்பதற்கு வாய்ப்புள்ள படங்கள் அதில் தனித்தன்மையுடன் திகழ்கின்றன .அதோடு கதை , இசை , பாடல்கள் போன்ற மற்ற அம்சங்களும் கூடி வரும் போது அவை மறக்க முடியாத படங்களாக இருக்கின்றன.


* நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை.


கோபால்,
சாய் , அன்பன் போன்றவர்கள் மிக இளம் வயதுடையவர்கள் ..இவர்களை போன்றவர்களை நடிகர் திலகம் திரியில் காணும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும் . அவர்களை அரவணைத்து செல்வோம்.

groucho070
30th October 2012, 02:55 PM
Joe, I have feeling that we were twins in previous birth (if such thing exist). Agree 100000000000% (if such percentage exist)

Gopal.s
30th October 2012, 03:07 PM
Well said Joe. You put it tellingly, and I am haapy to agree with you on all the points that you mentioned. Thanks.

Gopal.s
30th October 2012, 03:08 PM
Mr.Sai/Mr.Anban,
You are most welcome to stay with us and contribute. You are bringing in fresh air to the thread.

joe
30th October 2012, 03:31 PM
Bro,
Signature--ஆவே போட்டுட்டீங்களா :lol:

joe
30th October 2012, 03:33 PM
Mr.Sai/Mr.Anban,
You are most welcome to stay with us and contribute. You are bringing in fresh air to the thread.
Thanks for the understanding :notworthy:

groucho070
30th October 2012, 03:35 PM
Pinna viduvOmA, bro, what a lovely thought, and so true to my heart but you said it eloquently and powerfully!!!

parthasarathy
30th October 2012, 05:14 PM
திரு. முரளி,

ஒரு இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் ஒரு அற்புதமான ஆய்வு. அதுவும், தங்களுடைய வழக்கமான எளிமையான ஆனால் சரளமான, அழகான நடையில்.

இந்தப் படத்தை இதுவரை பார்க்காத அனைவரையும் (என்னையும் சேர்த்துத் தான்!) பார்த்துவிடத் தூண்டும் ஆய்வு.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
30th October 2012, 05:15 PM
My 2 cents..


*அற்புதமான நடிகர் நடித்ததால் ஒரு படம் அற்புதமான படம் என்றிருக்க வேண்டிய அவசியமில்லை ..அற்புதமான படங்களில் நடித்தவர்கள் அற்புதமான நடிகர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.



* நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை.



திரு. ஜோ,

அற்புதம். அழகாகக் குறிப்பிட்டீர்கள்.

நன்றி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

JamesFague
30th October 2012, 07:01 PM
Mr Joe,

Nice Sir.

Thomasstemy
30th October 2012, 09:48 PM
முரளி சார்,
என் ஒரு வரிக்கு இவ்வளவு மதிப்பு அளித்ததற்கு நன்றி.
எனக்கு மிக பிடித்து ,எதிர்பார்த்த வெற்றியை அடையாத கருப்பு-வெள்ளைகள்-- (1965 -1971 ) நீல வானம்,செல்வம்,பேசும் தெய்வம்,பாலாடை,தேனும் பாலும்.

Dear Gopal Sir,

Edhirpaartha Vetri Adayadha Karuppu Vellaigalil - Selvam, Pesum Deivam irandayum eduthu vidalaam kaaranam Irendumae Nalladhoru Vetriyai mattum alla Nalla Magasoolayum alliththa padangal.

Neelavaanam, Paalaadai matrum Thenum Paalum patri enakku adhigam theriyaadhu..Irundhaalum, Naan Visaariththa varayil Padathin Production cost matrum publicity cost irandayumae Producers and Distributors did recover. Laabam endru paarkumboadhu, indha Moonril Neelavaanam matrum Paaladai double digit profit percentage petruthandhaadhu unmai. Break Even endru sollapaduvadhu "Thenum Paalum Mattumae"

Anbudan,
:smokesmile:

Murali Srinivas
31st October 2012, 01:00 AM
Thanks Madhu ji!

Thank You Mr.Sasidharan. I am glad that my review had made you immensely happy. Will try to do more of its kind.

நன்றி பார்த்தசாரதி அவர்களே! படத்தைப் பாருங்கள். நடிகர் திலகத்தை ரசியுங்கள்.

கோபால் சார்,

பாராட்டிற்கு நன்றி. ஒரு வருட காலமாக நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய பதிவுகளை நேரமின்மையால் எழுத முடியாமல் இருந்தது உண்மை. அக்குறை பாலாடை மூலமாக நீங்கியிருக்கிறது. எப்போதும் ஏன் மதுரை என்றால் நடிகர் திலகத்தை எந்த பிரதிபலனும் இல்லாமல் உண்மையாய் நேசித்த ஏராளமான ரசிகர்கள் வாழும் ஊர். அதன் காரணமாகவே நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்கள் அதிக நாட்கள் ஓடிய பெருமையையும் பெற்ற ஊர் எங்கள் நான் மாடக் கூடல். ஆகவே எங்களின் மதுரையின் பெருமையை எப்போதும் காலரை தூக்கி விட்டுக் கொண்டு சொல்வோம்.[உங்களிடமிருந்து என்ன பதில் வரும் என்று எனக்கு தெரியும்.அது ஒரு சில சதி வேலைகள் காரணமாக நடந்த ஒரு aberration]

அன்புடன்

NOV
31st October 2012, 06:36 AM
What happened to Thiruvilaiyadal re-release? aarambaththula irundha paraparappu ippO illaiyE?
why wasnt the same method of promotions done for Karnan, not done for this movie?
overseas releases kooda illai :(

Gopal.s
31st October 2012, 06:46 AM
Thanks Madhu ji!

Thank You Mr.Sasidharan. I am glad that my review had made you immensely happy. Will try to do more of its kind.

நன்றி பார்த்தசாரதி அவர்களே! படத்தைப் பாருங்கள். நடிகர் திலகத்தை ரசியுங்கள்.

கோபால் சார்,

பாராட்டிற்கு நன்றி. ஒரு வருட காலமாக நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய பதிவுகளை நேரமின்மையால் எழுத முடியாமல் இருந்தது உண்மை. அக்குறை பாலாடை மூலமாக நீங்கியிருக்கிறது. எப்போதும் ஏன் மதுரை என்றால் நடிகர் திலகத்தை எந்த பிரதிபலனும் இல்லாமல் உண்மையாய் நேசித்த ஏராளமான ரசிகர்கள் வாழும் ஊர். அதன் காரணமாகவே நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்கள் அதிக நாட்கள் ஓடிய பெருமையையும் பெற்ற ஊர் எங்கள் நான் மாடக் கூடல். ஆகவே எங்களின் மதுரையின் பெருமையை எப்போதும் காலரை தூக்கி விட்டுக் கொண்டு சொல்வோம்.[உங்களிடமிருந்து என்ன பதில் வரும் என்று எனக்கு தெரியும்.அது ஒரு சில சதி வேலைகள் காரணமாக நடந்த ஒரு aberration]

அன்புடன்

தலைவா,

வணங்காமுடியான,தெய்வ பிறவி உன்னை,பெண்ணின் பெருமையை விளக்கும் மங்கையர் திலகமாம் மீனாவுடன்,இரு மலர்களுடன்,கல்யாணம் பண்ணி பிரம்மச்சாரியாய் இருக்க சொல்லி ,அமர தீபத்துடன் ,ஞானஒளி பெற்றவுடன், வியட்நாம் வீட்டில் குடியேற்றி பாபுவை விட்டுஉதைத்து நீதி கேட்போம். .

Gopal.s
31st October 2012, 07:00 AM
Dear Gopal Sir,

Edhirpaartha Vetri Adayadha Karuppu Vellaigalil - Selvam, Pesum Deivam irandayum eduthu vidalaam kaaranam Irendumae Nalladhoru Vetriyai mattum alla Nalla Magasoolayum alliththa padangal.

Neelavaanam, Paalaadai matrum Thenum Paalum patri enakku adhigam theriyaadhu..Irundhaalum, Naan Visaariththa varayil Padathin Production cost matrum publicity cost irandayumae Producers and Distributors did recover. Laabam endru paarkumboadhu, indha Moonril Neelavaanam matrum Paaladai double digit profit percentage petruthandhaadhu unmai. Break Even endru sollapaduvadhu "Thenum Paalum Mattumae"

Anbudan,
:smokesmile:

நண்பரே,
செல்வம், வெள்ளி விழா கண்டிருக்க வேண்டிய படம். காதல்,தாபம், சிக்கல், முடிச்சு, நகைச்சுவை,விறு விறுப்பு, கருத்து,மிக சிறந்த பாடல்கள்,நடிப்பு(ரமாப்ரபா உட்பட) அனைத்தும் ஒருங்கே அமைந்த படம். பேசும் தெய்வம் ,நூறு நாள் கண்டிருக்க வேண்டும்.ஆனாலும் வெற்றி படங்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தேனும் பாலும்,பாலாடை சிறிது இழுத்ததால் நேரம் தவறி வந்து எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. நீலவானம், ரசனை மாற்றம் நிகழும் தருணத்தில் அகப்பட்டு (பழனி,அன்பு கரங்கள் போல்) சுமாரான ஓட்டத்தை கண்டது.

Gopal.s
31st October 2012, 07:03 AM
What happened to Thiruvilaiyadal re-release? aarambaththula irundha paraparappu ippO illaiyE?
why wasnt the same method of promotions done for Karnan, not done for this movie?
overseas releases kooda illai :(

Dear Nov,
Apparently,there are some legal issues to be cleared and sorted out. The release was like a teaser prelude and we expect a great grand release fare as soon as the legal loop-holes are plugged.

groucho070
31st October 2012, 07:57 AM
Murali-sir, just finished reading. Always enjoyed the behind the scene story you narrate, not that your review is less enjoyable. Fantastic posts. By the way, I always get confused between the plots of these movies, Paladai, Neelavanam and Pesum Theivam.

NOV
31st October 2012, 09:49 AM
Written many years ago....
Selvam
Sivaji Ganesan, KR Vijaya, Ranga Rao, Kannamba, Nagesh
Music: KV Mahadevan
Directed by : KS Gopalakrishnan


If Manidhanum Deivamaagalaam was between theism vs atheism, Selvam is about superstitions and how they can wreck lives.

Selvam (Sivaji) returns home from overseas after completing his education to a waiting Valli (KR Vijaya). ennadi iththanai vEgam idhu edhunaal vandha mOgam (PS & TMS) is begun by Valli and ended by Selvam.

Their marriage is finalised and Selvam's mother seeks the astrologist who says that Valli will become a widow if she marries Selvam! :shock: Selvam's mother coaxes Valli to reject Selvam which she reluctantly does. Sivaji is unable to accept this! avalaa sonnaal? irukkaadhu! irukkavum koodaadhu! namba mudiyavillai illai illai....

Things happen fast when at a temple function for Valli-Murugan Thirumanam, Selvam takes the thaali and ties it around his lover Valli's neck! Without much choice Selvam's mother accepts the marriage and now announces a new condition - parigaaram! Selvam and Valli must not have physical relations for a year or the prophecy will come true!

Valli goes to stay with her family and we are introduced to a new character - Selvam's cousin - with lilly, lallie, jimmy, jikki, rosie. She is a carefree child like character but whose lifelife is strong and thus is selected as the 2nd wife for Selvam! The family tries to bring Selvam and his cousin closer but to no avail.

In the meantime, Selvam's needs grow and he goes over to Valli's house. ondraa irandaa eduththu solla ulla unarchiyai vaarththaiyil vadiththu solla... Valli finishes it reminding him of his saththiyamE. :D

His apetite unsatiated, he returns home but not for long. Doctor Ranga Rao announces that Selvam needs entertainment and whicle watching an English couple dancing, our hero's mOham grows and this time he takes the car and drives in fury. From the car radio comes the song... enakkaagavaa naan unakaagavaa setting the stage for the final culmination!

Selvam and Valli are now feeling guilty but the secret lies within them. The days go by and finally the last week arrives. Valli vomits and the doctor is summoned. Selvam shivers in anticipation. But Ranga Rao pretends that Valli is just having mild problems.

A stage show is held to keep Selvam's mind occupied. Educated though he is, he is now a complete believer in superstitions and imagines that he is going to die soon, especially since he had had intimate relations with Valli. The stage show vidhi vasam endraalum of course adds on to Selvam's fears!

Selvam now sees Ematharma rajaa!!! And so does his mother! :frightened:

It turns out to be Rangarao who is on the way from a drama. :rotfl: The film takes on a comic-serious tone from then on. :lol: Rangarao is one helluva comedian and the part where he is dumped from the bed by the three women had me literally :rotfl2:

Valli is counting the hours... when suddenly a snake is spotted in the room! Is Selvam destined to die? Do supersitions make sense? Or is there human interference? See the film for the answers! :D

Anban
31st October 2012, 09:57 AM
Anban, I am claiming this openly. Can you challenge me? Dont be a frog in the pond, thinking that whatever you dont know,doesn't exist.

Sir, have you seen all the good movies in Korean language?

Gopal.s
31st October 2012, 11:35 AM
Sir, have you seen all the good movies in Korean language?
Yes Sir. My favourite is Kim Ki Duc and I watched spring summer autumn winter spring atleast 20 times. I have a collection of chan-wook.park,jee woon Kim,Joon-Ho Bong ,chang-dong Lee. My other picks are movies like Old Boy,Tale of two sisters,mother.

Gopal.s
31st October 2012, 11:37 AM
Written many years ago....

Nov,
Modesty prevents me in saying "Great men think alike". Thanks for the write-up.

Gopal.s
31st October 2012, 11:50 AM
Dear Anban,
I have to break my modesty to let you know my passions.-----Reading,moviesand Music.. I have a healthy collection of books(Around 3000) from ancient Tamil literature to Latin American. I have a collection of more than 1500 World movies of all significant ones and good music collections(not as good as books and movies). Right from citizen Cane to Caterpillar. All Cannes winning,Oscar winning, collectors Fellini,Godart,Bergmen,Kurosowa,Michael angelo, polanski,all significant European,Iran,China,Korea,Japan,India(Ritwik Ghatak,Satyajit Ray,Adoor Gopalakrishnan,mahendran,arvindan, mani kaul), All sivaji movies,kamal movies,to name a few. The best thing is I read the books and I have seen all the movies.it is not mere collection. I am a globe trotter also. But My number one rating for genius is our Great Sivaji Ganesan and he is my choice after so many exposures..

Saai
31st October 2012, 12:40 PM
-Edited-

Saai
31st October 2012, 12:42 PM
There you go, Mr Anban. looks like Mr Gopal is an encyclopeadia of movies and you don't want to mess with him. Stop trying to pick him on and stick with the 'only subject' - Sivaji Ganesan, the great!

Thats what we are trying to say too. Stop ridiculing other actors while keeping Shivaji on a higher pedestral and kindly stick to the subject matter. Shivaji doesnt need that comparison "walking stick". He can very well stand on his own.

Gopal.s
31st October 2012, 12:46 PM
Thats what we are trying to say too. Stop ridiculing other actors while keeping Shivaji on a higher pedestral. Shivaji doesnt need that comparison "walking stick". He can stand on his own.
Yes Sir. But in my postings ,I never degrade Kamal. I respect him a lot and I was in his friend circle once upon a time.

Saai
31st October 2012, 12:48 PM
Yes Sir. But in my postings ,I never degrade Kamal. I respect him a lot and I was in his friend circle once upon a time.

Fine Sir. Sorry if we have troubled the flow of the thread. Kindly continue.

Anban
31st October 2012, 12:53 PM
Dear NT fans,
I am a very regular reader of this thread but i don't post much as i don't have much to contribute. I read these posts and even share it with my family members who are all NT fans. Let the discussion continue. Sorry for the digression.

joe
31st October 2012, 01:23 PM
Sai , Anban,
As I told you earlier , I always feel happy when i see youngsters like you in this thread .. Being a fellow Kamal fan , I request you to continue visiting here and participate in discussion whenever possible .Thanks.

Gopal.s
31st October 2012, 01:39 PM
Sai , Anban,
As I told you earlier , I always feel happy when i see youngsters like you in this thread .. Being a fellow Kamal fan , I request you to continue visiting here and participate in discussion whenever possible .Thanks.

I second this proposal strongly. most welcome young men.

HARISH2619
31st October 2012, 01:43 PM
திரு முரளி சார்,
நீண்ட நாட்களாக நமது ஹப் பக்கம் வர முடியாமல் போனதால் தங்களின் ஆய்வு கட்டுரையை இன்றுதான் பார்த்தேன்.மிகவும் ஆழமான அற்புதமான ஆய்வு இதுவரை இந்த படத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் முழு படத்தையும் பார்த்த ஒரு சந்தோஷத்தை தங்களின் கட்டுரை கொடுத்தது.சிங்கம் மீண்டும் களமிறங்கி இருப்பதால் இதுபோன்ற பல ஆய்வுக்கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்,நன்றி

groucho070
31st October 2012, 02:20 PM
Written many years ago....How to get to the links of writeup and reviews that we list in the first page?

NOV
31st October 2012, 05:07 PM
A round of applause to the young gentlemen :bow:


How to get to the links of writeup and reviews that we list in the first page?I googled for it Rakesh :oops:
If you need any of your write-ups, do tell me..... it may take a while, but it can be recalled.

goldstar
1st November 2012, 04:00 AM
Dear all,

Few days ago watching SSJ3 final and first 2 songs were our beloved NT songs. First one from "Thiruvilaiyadal" Pattum Naane Pavavum Naane, within few lines I become more emotional and by just closing the eyes could see our NT visuals and next one from "Thiruvarutchelvan" Mannavar Vanthanadi Thozhi, again just NT walk was coming in the mind. No other actor in the world can make this kind of impact on the audience.

Long live NT fame.

Cheers,
Sathish

NOV
1st November 2012, 09:20 AM
Friends, personal abuses are rearing its ugly head again.

இவரை அவர் மட்டம் தட்டுவதும், அவரை இவர் மட்டம் தட்டுவதும்... நிஜமாகவே அசிங்கமாக இருக்கிறது... நாமெல்லாம் படித்தவர்கள். ஏன் இப்படியெல்லாம் மற்றவர்களையும் அசிங்கப் படுத்தி, தானும் அசிங்கப் பட வேண்டும்? திரி சம்பந்தப் படாத மற்ற பதிவுகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது மற்றவர்களை புண்படுத்தாவண்ணம், ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள வண்ணம் அனைவரும் ரசிக்கும் படி நகைச்சுவை இழையோட இருந்தால் தவறே இல்லை. எதற்கு வீண் சண்டைகள் சச்சரவுகள்? இதனால் கிடைக்கக் கூடிய பலன்தான் என்ன? இதனால் திரிகளின் கௌரவம் காற்றில் பறக்கிறது என்பதுதான் உண்மை. நடிகர் திலகம் திரிகளின் மீது viewers பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவர்களெல்லாம் இப்படிப்பட்ட பதிவுகளைப் படித்து விட்டு என்ன நினைப்பார்கள்?

எனவே தயவு செய்து இது போன்ற தனிப்பட்ட மோதல்கள், கருத்துக்கள், கேலி, கிண்டல்கள் இல்லாதாவாறு பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். பதிவுகள் யார் மனத்தையும் புண்படுத்தவே வேண்டாம்.

Murali Srinivas
2nd November 2012, 12:50 AM
Rakesh,

Thanks. I know, as a journalist you would always find the behind the scenes activities more interesting. I too share the same interest.

செந்தில்,

மனமார்ந்த நன்றி.ஆனால் அந்த அடைமொழி adjective எல்லாம் வேண்டாமே.

கோபால் சார்,

உங்கள் லிஸ்டிலிருந்து முதல் படத்தையும் கடைசி படத்தையும் [வணங்காமுடி, நீதி] எடுத்து விடுங்கள். அவை இரண்டும் தங்கம் தியேட்டரில் வெளியானது. வணங்காமுடி சாதனை புரிந்த படம். தங்கமலை ரகசியம் படத்திற்காக மாற்றப்பட்டது. நீதி மதுரையில் ஓடிய நாட்கள் மற்ற தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியதற்கு சமம். மற்றபடி நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு படங்களின் ஓட்டத்திற்கு பதில் சொல்வதை காட்டிலும் நான் சொல்ல விரும்புவது இதுதான்.

மொத்தமுள்ள நடிகர் திலகத்தின் படங்களை எடுத்துக் கொள்வோம் அவை அனைத்தும் அதிக பட்சம் ஓடிய நாட்கள் என்னவென்று பார்ப்போம். அதிகமான படங்கள் அதிகபட்ச நாட்கள் ஓடிய நகரம் எது என்று பார்த்தால் வரும் விடை மதுரை மாநகர் என்றுதான் இருக்கும்.

அன்புடன்

Murali Srinivas
2nd November 2012, 01:10 AM
Gopal,Sasidharan, Subbu,

For you people, who want to read about Selvam, here is the link for the review that I did on Selvam nearly 2 years back.

http://www.mayyam.com/talk/showthread.php?9590-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-7/page91

Regards

Gopal.s
2nd November 2012, 07:07 AM
murali sir,
agreed. Madurai is our silver city.

Gopal.s
2nd November 2012, 07:08 AM
ஞாயிறும் திங்களும்- தேவிகா-சிவாஜி ஜோடியின் படமாக 1967 இல் வெளியாகி இருக்க வேண்டும்.
சிவாஜி ஒரு ஹாக்கி விளையாட்டு வீர்ர். தேவிகா காதலி. சந்தர்ப்ப சூழ்நிலையால் தேவிகாவின் தந்தைக்கே வளர்ப்பு மகன் ஆகி,தேவிகாவின் சகோதரன் போன்ற உறவு. தேவிகாவிற்கு தானே மாப்பிள்ளை தேட வேண்டிய சூழ்நிலை.
பட்டிலும் மெல்லிய பெண்ணிது- எனக்கு மிக பிடித்த பாடல்.
இதே கதை பிறகு ஹிந்தியில் அமிதாப் நடித்து ஜாமிர் என்ற பெயரில் வெளியானது என்று நினைக்கிறேன்.

groucho070
2nd November 2012, 07:30 AM
A round of applause to the young gentlemen :bow:

I googled for it Rakesh :oops:
If you need any of your write-ups, do tell me..... it may take a while, but it can be recalled.pazhaya NT thread-a pudicha, antha links ellAm pudichidalAm. Forget about mine, I am more interested in others' reviews. Especially Murali-sir and Saradha mdm's, and yours of course, you "what will happen next, watch and find out" reviews :smile:

groucho070
2nd November 2012, 07:32 AM
hah! kandupudichen, kandupudichen, pazhaya thread-a kandupudichen, the links are in the first page:

http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9

NOV
2nd November 2012, 07:43 AM
"what will happen next, watch and find out" reviews :smile:inspired by Indian Movie News of the 70s :D

groucho070
2nd November 2012, 07:51 AM
I know, I know. Miss those old ones, edited by the guy before S.A. Nathan...gad I forgot his name.

NOV
2nd November 2012, 08:12 AM
How can you? SS Sharma :D

60-year old magazine :shock:

joe
2nd November 2012, 08:18 AM
Groucho,
All those old links became invalid after the hub changed to new format :(

groucho070
2nd November 2012, 08:32 AM
Oh crap :sad:

parthasarathy
2nd November 2012, 05:54 PM
நடிகர் திலகத்தின் நுணுக்கமான நடிப்பாற்றல்:-

நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி பலர் பலவிதமாக ஆராய்ச்சி செய்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் திரியில், நாமும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.

எந்த ஒரு சிறந்த கலைஞனும் ஒரு படைப்பினைத் தரும்போது, முதலில், தன்னை அந்தக் கட்டம் மற்றும் கணத்துக்குள் தன்னுடைய மனதை மட்டும் நுழைத்துக் கொண்டு, அதுவாகவே பாவித்து, தன்னுடைய அனுபவம், அறிவு மற்றும் திறமை மூலம், ஒரு படைப்பினைத் தர முயற்சிக்கிறான். இந்த internalisation பரிபூரணமாக அமையப் பெற்ற உன்னதக் கலைஞன் உலகில் நடிகர் திலகம் ஒருவரே என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அவருக்கு நடிப்புக் கலை என்பது கலைமகள் அருளிய வரம். அவரிடம் இருந்த spontaneity இதனை நிரூபிக்கும். இருப்பினும், தன்னுடைய வாழ் நாளில் கடைசி வரை, எப்போதும், தன்னுடைய கலையை அவர் மெருகேற்றிக் கொண்டே வந்திருக்கிறார் - பல வித முறைகள் மூலம். இதில், மிக முக்கியமானது அவரது ஆழ்ந்த, கூர்ந்து நோக்கி அணுகும் திறன். எந்த ஒரு விஷயத்தையும், அவர் மேம்போக்காக அணுகாமல், நூறு சதவிகித பரிபூரணத்துவத்துடன் தான் அணுகிக் கொண்டு வந்திருக்கிறார். இதனால் தான், அநேகமாக அவருடைய எல்லா படங்களும் கனமாகவே இருக்கும். இலேசான படங்கள் (so called light movies) அவரிடமிருந்து மிகவும் குறைவு தான்.

சில நாட்களுக்கு முன்னர், நண்பர் திரு. வாசுதேவன் அவர்கள், "அன்னை இல்லம்" படத்தில் ஒரு (இல்லை இது மூன்று ஒன்றோடொன்று தொடர்புடைய காட்சிகள்) காட்சியைத் தரவேற்றியிருந்தார். இந்தக் காட்சியில், நடிகர் திலகம் முத்துராமன் வீட்டிற்கு வந்து, உண்பதற்கு அமர்ந்து எம்.வி.ராஜம்மா அவர்களைப் பார்த்து (அவருடைய சுமங்கலித் தோற்றத்தைப் பார்த்து), பக்கத்தில், அவருடைய கணவருக்காக வைக்கப் பட்டிருக்கும் இலையையும் பார்த்து, 'அம்மா! உங்களது இந்த சுமங்கலிக் கோலம் சீக்கிரம் போகப் போகிறது' என்று நினைத்து வெதும்பி, எதுவும் சொல்லாமல், வெறும் முக பாவனைகளின் மூலம் அந்த சோகத்தைக் காண்பித்து அங்கிருந்து சென்று விடுவார். (எம்.வி. ராஜம்மா அவருடைய கணவர் எஸ்.வி. ரங்கா ராவ் உயிருடன் தான் இருக்கிறார் என்று வலுவாக நம்பி எப்போதும், அவருக்காக ஒரு இலையைப் போட்டு அதில், உணவு வகைகளை எப்போதும் பரிமாறி வைப்பார், என்றாவது ஒரு நாள் திரும்பி வந்து சேர்ந்து உண்டு மகிழ்வார் என்ற நம்பிக்கையில்!. எம்.வி ராஜம்மாவிற்கு, ரங்காராவ் கூடிய சீக்கிரம் மரண தண்டனை பெற்று இறக்கப் போகிறார் என்று தெரியாது. இது நடிகர் திலகத்துக்கும் தேவிகாவுக்கும் மட்டுமே தெரியும்.). அடுத்து, வழக்கறிஞரை சந்தித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி, இப்போது, வாய் விட்டுக் கூறிக் கதறுவார், தேவிகாவிடம்! முதல் இரண்டு காட்சிகளில் ஒரு சிகை அலங்காரத்துடன் வரும் நடிகர் திலகம், அடுத்த காட்சியில், வேறொரு சிகை அலங்காரத்துடன் வருவார். அதாவது, முதல் இரண்டு காட்சிகளில் நீளமாக இருக்கும் கிருதா உடனே வரும் அடுத்த காட்சியில், சிறியதாக இருக்கும். ஆக, அடுத்தடுத்து வரும் இந்த மூன்று காட்சிகளில், முதல் இரண்டு காட்சிகளும், மூன்றாவது காட்சியும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், முதல் இரண்டு காட்சிகளுக்கும் அடுத்த காட்சிக்கும் இருக்கும் அந்த உணர்ச்சிமயமான தொடர்பு சிறிதும் குறைந்திருக்காது. சரிய்யா, அவர் நுணுக்கமான நடிகர் என்று இப்போது தானே சொன்னீர், அதனால், அவருக்கு இருக்கும் நுணுக்கமான அறிவினாலும், ஈடுபாட்டினாலும், அவரைப் பொறுத்த வரை இது சுலபம் என்று நீங்கள் சொல்லலாம். ஒத்துக் கொள்கிறேன்.

இப்போது, அதே படத்தில் இடம் பெற்ற வேறொரு காட்சியைப் பார்ப்போம்.

இந்தக் காட்சி, முந்தைய காட்சியைப் போல பெரிய உணர்ச்சிக் குவியலான காட்சியல்ல. முந்தைய காட்சி படத்தின் இறுதிக் கட்டத்தில் வரும். இந்தக் காட்சியோ, படத்தின் நடுவில் வரும்.

நடிகர் திலகமும், முத்துராமனும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போல, பக்கத்தில் ரங்கா ராவுக்காக ஒரு இலை போடப்பட்டு உணவு பரிமாறப் பட்டிருக்கும். அப்போது தான், முதன் முதல், அந்த வீட்டில் நடிகர் திலகம் சாப்பிடுவார். அப்போது தான், அவருக்கு அந்த இலையின் முக்கியத்துவம் தெரியும். எம்.வி. ராஜம்மாவின் பண்பை வியந்து பாராட்டி (எல்லாம் சாப்பிட்டுக் கொண்டே!), அவர்களை தன்னுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்னும் போது, எம்.வி. ராஜம்மா அவரிடம் "கண்டிப்பாக வருகிறோம். கல்யாண சாப்பாட்டிற்கு, வடை பாயாசத்துடன்" என்பார். அதற்கு, நடிகர் திலகமோ, "வடையாவது பாயாசமாவது, இங்கு உங்கள் வீட்டில், அந்த விருந்து, எனக்கு முன் வரப் போகிறது" என்று சொல்லி, முத்துராமனுடைய காதலைப் பற்றிக் கூறி, அந்தப் பெண் நல்ல நிறம், செக்கச் செவேரென்று இருப்பாள் என்று கூறி, மேலும் சில சம்பாஷணையுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சி இரண்டு நிமிடங்கள் தான் வரும். இந்தக் காட்சியில், துவக்கத்திலிருந்து நீளமான கிருதாவுடன் வரும் நடிகர் திலகம், "அந்தப் பெண் செக்கச் செவேரென்று இருப்பாள்" என்று கூறும் அந்த ஒரு சில நிமிடங்கள் மட்டும், சடாரென்று, சிறிய கிருதாவுடன் காட்சி தருவார்! இது க்ளோசப்பில் எடுக்கப் பட்டிருக்கும். உடனே, மறுபடியும் அந்த சம்பாஷனை தொடரும் போது, பழைய நீள கிருதாவுக்கு மாறி விடுவார்! இத்தனைக்கும், முந்தைய காட்சியைப் போல, வேறு வேறு காட்சிகளல்ல இந்தக் காட்சி. தொடர்ந்து, இரண்டு நிமிடங்களுக்கு, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் எம்.வி. ராஜம்மா நடிக்கும் காட்சி. இரண்டு வேறு வேறு காட்சிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் படும் போதே (எனக்குத் தெரிந்து குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் கழித்து தான் எடுக்கப் பட்டிருக்கும்), தொடர்பு காட்டுவதற்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். நிலைமை இப்படியிருக்க, ஒரே நேரத்தில் எடுக்கப் பட்ட, நாம் மேலே கூறிய இந்தக் காட்சியில், தொடர்ந்து வரும் இரண்டு நிமிடங்களில், ஒன்றே முக்கால் நிமிடம் ஒரு ஒப்பனை, நடுவில், சில நொடிகள் மட்டும் வேறொரு ஒப்பனை; உடனே, கடைசி சில நொடிகளில் வேறொரு ஒப்பனை! இதுவும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் பட்ட காட்சிகள். அப்படி என்றால், எந்த அளவிற்கு, நடிகர் திலகம் ஈடுபாடும், அர்ப்பணிப்பும், முனைப்பும், முயற்சியும் செய்திருக்கிறார்!!

இது போல், பல படங்களில் காணலாம். ஆனால், அவை எல்லாம் வேறு வேறு காட்சிகளாய் வரும். உதாரணத்திற்கு, புதிய பறவையில், வரும் "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து" பாடலின் முதல் சரணம் பூராவும், படம் தொடங்கும் போதே எடுக்கப் பட்டிருக்கும். வேறொரு நீள கிருதாவுடன் வருவார். பல்லவியிலும், அனு பல்லவியிலும், இரண்டாவது சரணத்திலும், படம் நெடுகிலும் வரும் சிறிய கிருதாவுடன் வருவார். ஆரம்பத்தில், ஊட்டி ரேஸ் கோர்ஸில், சரோஜா தேவியுடன் பேசும் ஒரு காட்சியிலும், அடுத்தடுத்து, இதே போல், வேறு வேறு கிருதாக் கோலங்களில் வருவார்.

நடிகர் திலகம் 1953-லிருந்து, 1987 வரை, தொடர்ந்து, மூன்று ஷிப்டுகளில், நடித்துக் கொண்டே இருந்தார். வருடத்திற்கு ஆறு, ஏழு படங்களில் (சில வருடங்கள் நீங்கலாக - 1965, 1966, 1977, மற்றும் சில வருடங்கள்) நடித்துக் கொண்டு! வேறு வேறு கெட்டப்புகளில், வேறு வேறு பாத்திரங்களில், ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், காலங்களில்! அப்படி இருந்தும், காட்சித் தொடர்பினைத் (continuity) தொடர்ந்து நூறு சதவிகிதம் கடைப்பிடித்தார். இப்போதெல்லாம், ஒரு நடிகர் ஒரு நேரத்தில், ஒரு படம் மட்டுமே நடிக்கின்றார், நன்றாக concentrate செய்து நடிப்பதற்கு! இன்னும் சொல்லப் போனால், வட நாட்டின் புகழ் பெற்ற நடிகர் திலீப் குமார் அவர்கள், அந்தக் காலத்திலேயே, ஒரு நேரத்தில், ஒரு படம் தான் நடித்தார், மேற்கூறிய காரணத்துக்காக!

வேறு வேறு காட்சிகள் என்றால், ஓரளவு நடித்து விடலாம். ஒரே காட்சியில், இரண்டே நிமிடங்கள் தொடர்ந்து பேசும் வசனக் காட்சியில், இடையில், ஒரு சில நொடிகள் மட்டும் வேறு ஒரு கட்டத்தில் எடுக்கப்படும் போது கூட, எப்படி அவரால் பரிபூரணத்துவத்தைக் காட்ட முடிந்தது? இத்தனைக்கும், அப்போதெல்லாம் நேரடியாக பேசி நடித்தாக வேண்டும். இப்போது போல தனி ட்ராக் எல்லாம் கிடையாது! எல்லாம் அந்தக் கலைக் கடவுளுக்கும், அவரை தமிழ் நாட்டிற்கு ஈந்த அந்தக் கலைமகளுக்கும் தான் வெளிச்சம்!!

நடிகர் திலகத்தின் பாடல் கட்டுரைகளினூடே, இந்த சிறிய பதிவை இட சந்தர்ப்பமளித்த திரு. வாசு மற்றும் திரு. வெங்கிராமுக்கு நன்றிகள்.

இந்தக் காட்சி பற்றி சொல்லி, திரு. ராகவேந்திரன் அவர்களிடம் கேட்டு, மீண்டும் ஒரு முறை அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு, அவரிடம் உதவும்படிக் கோரிய போது, அவரும் உடனே, எனக்கு அந்தக் காட்சியை மட்டும், என்னுடைய சொந்த மெய்லுக்கு அனுப்பினார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

திரு. ராகவேந்திரன் அவர்களே, எனக்காக ஒரு முறை அந்தக் காட்சியைப் பதிந்து, கோடானு கோடி சிவாஜி ரசிகர்களின் நெஞ்சை நிறையச் செய்யுங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

RAGHAVENDRA
2nd November 2012, 07:05 PM
டியர் சாரதி,
உண்மையிலேயே மிகவும் நுணுக்கமாக ஆய்ந்து எழுதப் பட்ட பதிவு. உளமார்ந்த பாராட்டுக்கள். இந்தப் படத்தைப் பற்றி ஒரு பத்திரைகயில் அந்தக் காலத்தில் விமர்சிக்கும் போது இந்தக் காட்சியைக் குறிப்பிட்டு இதே கிருதா நீளம் குறைவாக ஒரு சில பிரேம்களில் வருவதைக் குறை கூறி விமர்சித்து எழுதியிருந்தார்கள். அவர்களுக்கு இந்த தொழில் நுட்பம், அதாவது இந்த ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தனியாக எடுத்திருக்கக் கூடிய விஷயம் தெரியாமலிருந்திருக்காது. என்றாலும் விமர்சித்திருந்தார்கள். இதுவே வேறொரு நடிகராயிருந்திருந்தால் ஆஹா என்னே அவருடைய ஆற்றல், என்று வானளாவ பாராட்டியிருப்பார்கள்.

ஒரு வேளை பார்த்தசாரதி என்கிற ரசிகர் இதையெல்லாம் விரிவாக ஆராய்ந்து எழுதுவார் என்று விட்டு விட்டார்களோ...

இதோ அந்தக் காட்சி நமக்காக


http://youtu.be/vqKF4U86RAs

rsubras
2nd November 2012, 10:01 PM
there had been numerous write ups on the celebrated characters played by Sivaji ganesan sir. Interested to know if there had been similar write ups on certain low profile, less noted roles such as Bale Pandia Rowdy character, Vani Rani Vaanisree's lover character, Deiva magan younger son character etc., to be frank these are roles that I do not like that much..the rowdy character and younger son character fading in front of the more like-able and powerful roles played by NT in the same movie. Vani Rani role... I dont know if that role required some one as great as Sivaji at all....... But I believe Sivaji sir would have given some nuances in these roles also. would be nice if someone can throw light on roles such as these?

Murali Srinivas
2nd November 2012, 10:22 PM
RS,

People at various points of time had written about Vijay of Deivamagan and Marudu of Bale Pandiya including yours truly but if you ask whether it was a detailed write up on this characters, it was not. Vani Rani was an entirely different story. NT did it when CVR and Vanishree requested him to help out. Chankiya the original director of the film passed away during half stage and CVR took up the mantle from there.

The likes of Parthasarathy and Gopal would love to write about these characters and NT's depiction of the same.

Regards

RAGHAVENDRA
2nd November 2012, 10:26 PM
there had been numerous write ups on the celebrated characters played by Sivaji ganesan sir. ......But I believe Sivaji sir would have given some nuances in these roles also. would be nice if someone can throw light on roles such as these?

YOU HAVE COME TO THE POINT. THIS IS WHAT I HAVE BEEN EXPECTING FROM THE CONNOISSEURS LIKE YOU TO ASK. This is what is the approach I was looking for. Thank you Subramani. Definitely your questions will be answered. There are lots and lots of nuances in each and every film of his. Please look out for postings in these lines as usual ... usual because ... this is what we have been doing all this long .. And so in future.

In fact these roles too have nuances. Particularly the song "Parthu Po" which was picturised partly in the India International Trade Fair at Island Grounds and indoors has a few nuanced performance by NT.

Raghavendran

Murali Srinivas
2nd November 2012, 11:43 PM
சாரதி,

நடிகர் திலகத்தின் நடிப்பில் nuances எனப்படும் நுண்ணிய வெளிப்படுத்தல்களை காட்சியமைப்பின் உதவியோடு அழகாய் பதிவு செய்திருக்கிறீர்கள். ஒரு நாள் அல்லது ஒரு மாதம் ஏன் பல வருடங்கள் இடைவெளி நேர்ந்தாலும் அவரால் (மட்டும்) அதே உணர்வை முகத்திலும் சரி வசனம் பேசுவதிலும் கொண்டு வர முடியும். அது அவருக்கு கை வந்த கலை.

இதை படிக்கும் போது ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது [அதைதான் அலை பேசியில் பேசும் போது வேலை பளு இருப்பதால் சற்று நேரம் கழித்து தொடர்பு கொள்கிறேன் என்று சொன்னேன்]. ஒரு சந்தர்ப்பத்தில் இயக்குனர் நடிகர் மனோ பாலாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு செய்தியை பகிர்ந்துக் கொண்டார்

முதல் மரியாதை படப்பிடிப்பு இரண்டு மூன்று கட்டமாக மைசூர் சுற்றுவட்டாரங்களில் நடைப்பெற்றது. முதல் கட்டப் படப்பிடிப்பில் நடிகர் திலகம் ஒரு காட்சியில் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு கையில் ஒரு மம்மட்டி வைத்து தரையில் ஏதோ தோண்டி வசனம் பேசுவதாக காட்சி [படத்தில் இடம் பெற்றதா என்பது நினைவில்லை]. இயக்குனர் பாரதி ராஜாவும் சரி ஒளிப்பதிவாளார் கண்ணனும் சரி ஓகே சொல்லி விட்டனர். சென்னைக்கு திரும்பி வந்து பிலிம்-ஐ கழுவி பார்த்த போதுதான் அந்த காட்சி பிலிம்-ல் சரியாக பதிவாகாமல் Out of Focus ஆக இருந்திருக்கிறது. காட்சி எடுத்த பின் நடிகர் திலகம் இரண்டு முறை சரியாக வந்திருக்கிறதா என்று கேட்டாராம். சரி அடுத்த கட்ட படப்பிடிப்பில் adjust செய்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டனராம்

இரண்டாம் கட்டம் முடிந்து இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடக்கும் தறுவாயில் இந்தக் காட்சியின் ஞாபகம் வந்தவுடன் இதை எப்படி எடுப்பது அல்லது இதை எப்படி நடிகர் திலகத்திடம் சொல்வது என்று பெரிதும் தயங்கியிருக்கிறார்கள். காரணம் அந்த குறிப்பிட்ட காட்சியின் படபிடிப்பு முடிந்து அப்போதே ஒரு ஆறு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது பிறகு வசனம் இல்லாமல் காட்சியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். வசனத்தை voice over-ஆக செய்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

நடிகர் திலகத்திடம் சென்று இந்த costume பிளஸ் முண்டாசு கட்டி கையில் மம்மட்டி வைத்து நிலத்தை தோண்டுவது போல் போஸ் கொடுங்கள். Promotional still--ற்காக என்று சொல்லி விட்டார்கள் நடிகர் திலகமும் சரி என்று சொல்லி விட்டார். காமிராவை silent ஆக ஸ்டார்ட் பண்ணி விடுவதாக் பிளான்.

முண்டாசு கட்டி கையில் மம்மட்டி வைத்து நிலத்தை தோண்டுவதற்கு முன் நடிகர் திலகம் நிமிர்ந்து " ஏம்பா பாரதி, நான் சும்மா நிலத்தை தோண்டற மாதிரி போஸ் கொடுத்தா போதுமா இல்லை அன்னைக்கு பேசின அந்த வசனத்தையும் பேசணுமா?" என்று கேட்டாராம். அப்படியே பூமி பிளந்து தன்னை விழுங்கி விடாதா என்று ஒரு கணம் பாரதி ராஜாவிற்கு தோன்றி வெட்கி தலை குனிந்தாராம். அதன் பிறகு சிறிது நாட்களுக்கு நடிகர் திலகத்தின் முகத்தை பார்க்கவே அவருக்கு வெட்கமாக இருந்ததாம்.

இங்கே இதை குறிப்பிட காரணம் நீங்கள் சுட்டிக் காட்டிய அந்த ஒரு நுணுக்கமான நகாஸ் வேலைகள் மற்றும் நினைவாற்றல் எந்தக் காலத்திலும் அவரிடமிருந்து மறையவுமில்லை, குறையவுமில்லை.

மீண்டும் நன்றி சாரதி.

அன்புடன்

RAGHAVENDRA
3rd November 2012, 09:42 AM
டியர் சசிதரன்
தங்களுடைய பதிவினைப் படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் தங்களுடைய பணிவு, மரியாதை போன்ற நற்குணங்களை எடுத்துக் காட்டுகிறது. தாங்கள் கூறியது போல் 80களின் சூழ்நிலை பல நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பினை தங்களைப் போன்ற பல சிவாஜி ரசிகர்களுக்கு நல்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமே. உண்மையில் சொல்லப் போனால் தமிழகத்தை விட இலங்கையில் நடிகர் திலகத்தின் பல படங்கள் மக்கள் வரவேற்பை அதிக அளவில் பெற்றுள்ளன. உத்தமன், வசந்த மாளிகை, பைலட் பிரேம்நாத் போன்ற படங்களைக் கூறலாம். 70 மற்றும் 80களில் தகவல் தொழில் நுட்பம் அதிகமாக வளராத கால கட்டங்களில் கடிதப் போக்குவரத்து மட்டுமே சாத்தியமாக இருந்த கால கட்டத்தில் இலங்கையில் எனக்கு ஓரிரு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலம் நடிகர் திலகத்தின் படங்களின் வரவேற்பினைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வோம். அவையெல்லாம் மறக்கவொண்ணா நாட்கள்.

தங்களிடம் விஎச்எஸ் பிரதிகள் இன்னும் உள்ளதா. அவற்றை ஓரளவு சரி செய்து பிரதி எடுக்க முடியுமாயின் தயவு செய்து மறக்காமல் செய்யுங்கள். காரணம் தற்போது வெளிவரும் நெடுந்தகடுகள் பல முழுப்படத்தைக் கொண்டு வருவதில்லை. சில படங்களின் முக்கியமான காட்சிகள் விடுபடுகின்றன. எனவே தாங்கள் விஎச்எஸ் பிரதிகளை முடிந்த வரை பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின் மேலும் தொடரும்

அன்புடன்
ராகவேந்திரன்

Gopal.s
3rd November 2012, 02:03 PM
there had been numerous write ups on the celebrated characters played by Sivaji ganesan sir. Interested to know if there had been similar write ups on certain low profile, less noted roles such as Bale Pandia Rowdy character, Vani Rani Vaanisree's lover character, Deiva magan younger son character etc., to be frank these are roles that I do not like that much..the rowdy character and younger son character fading in front of the more like-able and powerful roles played by NT in the same movie. Vani Rani role... I dont know if that role required some one as great as Sivaji at all....... But I believe Sivaji sir would have given some nuances in these roles also. would be nice if someone can throw light on roles such as these?
Subra Sir,
My short write up on Deiva magan Vijay.
http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=843592#post843592

Gopal.s
3rd November 2012, 02:06 PM
I would like read more info about NT movies which were never released.

You may find it interesting
http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9&p=844723#post844723

Gopal.s
3rd November 2012, 02:36 PM
YOU HAVE COME TO THE POINT. THIS IS WHAT I HAVE BEEN EXPECTING FROM THE CONNOISSEURS LIKE YOU TO ASK. This is what is the approach I was looking for. Thank you Subramani. Definitely your questions will be answered. There are lots and lots of nuances in each and every film of his. Please look out for postings in these lines as usual ... usual because ... this is what we have been doing all this long .. And so in future.

In fact these roles too have nuances. Particularly the song "Parthu Po" which was picturised partly in the India International Trade Fair at Island Grounds and indoors has a few nuanced performance by NT.

Raghavendran
Well said Subras sir, Raghavendar Sir. It is my wish also to throw more light on unnoticed ,well-done characters and scenes. I'll try my best to bring it up in my future write-ups.

rsubras
3rd November 2012, 10:45 PM
thanks to the stalwarts :) Ragavendra sir, Murali sir and Gopal sir for your kind response :) Please also add the nitchaya thamboolam hero character as well to the list... that I believe is by far the very common man character (played by Sivaji) without any heroism, special talents, any extreme qualities be it positive or negative....

kiamqewaf
4th November 2012, 01:28 PM
இன்று மாலை நீலவானம். பல முறை பார்த்த படம்தான். இருந்தும் கூட ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தின் வலிமை குறையவில்லை. ஒரு வித பாரம் மனதில் தானாகவே ஏறிவிடும். ஆண்டுகள் பல கடந்தாலும் படத்தை பார்க்கும் போது அந்த திரைக்கதை வளரும் போது பார்வையாளனை ஒரு சோகம் மெதுவாக கவ்விக் கொள்ள துவங்கி இறுதியில் முழுமையாக ஆக்கிரமித்து விடும் அந்த நிகழ்வு இன்றும் நடந்தது. நடிகர் திலகமும் சரி தேவிகாவும் சரி நம்மை இழுத்துக் கொள்கிறார்கள். கதை திரைக்கதையின் depth என்று சொல்லுவார்கள் அது இந்தப் படத்தில் எந்தளவிற்கு இருக்கிறது என்பது இன்று படம் பார்க்கும் போது புரிந்தது.

மொத்தத்தில் ஒரு மறக்க முடியாத படத்தை மீண்டும் மறக்க முடியாத மாலையில் பார்த்த திருப்தி

அன்புடன்

with regards,
This is really true. So many good movies are there acted by Sivaji Ganesan and Devika. But Neelavanam is defenitely a different
one and acting by both is fantastic. I used to see immediately 'Kulamagal Radai/Andavan Kattalai " after this movie.

Gopal.s
5th November 2012, 04:28 PM
ஆலய மணி- 1962 -part 1

மன நலம் குன்றியவர்களை சமூகம் நடத்திய விதம் குறித்து ஆராய்ந்தால் மனம் பதைக்கும். 20 ஆம் நூற்றாண்டில்தான் psycho -analysis துறை fraeud என்பவரால் அறிமுக படுத்த பட்டு ,முன்னேற்றம் கண்டது. மன நலம் குன்றியவர் குறித்து சமூகத்தின் பார்வையும் மாறியது. அதற்கு முன் அவர்களுக்கு சமூகத்தால் சிகிச்சை என்ற பெயரிலும் (அரைகுறை வைத்தியர்,பூசாரி),வேண்டாத பிரஜைகள் என்ற முறையிலும் பட்ட கொடுமைகளை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். இதிலாவது,தன உலகத்தில் வாழும் ,வெளியுலகம் அறியா முழு மனம் குன்றியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். விளிம்பு நிலை மனிதர்களோ தன் உலகம்,சமூக உலகம் இரண்டிலும் ஊசலாடி, இரு நிலை பாதிப்பினால் சொல்லொணா துயரம் எய்தினர். இந்த வகை மன நிலை பிறழ்வுகளை வைத்து , 1950 களிலும், 1960 களிலும், வெகு சில ஹாலிவுட் படங்களே வெளியாயின. அவையும் பெரும்பாலும் thriller வகைதான். ஆனால் இந்திய சினிமா சரித்திர வரலாற்றிலேயே ,முதன் முறையாய், விளிம்பு நிலை பிறழ்வு கொண்ட ஒரு கதாநாயகனை, முன்னிறுத்தி , வடிவம்,உள்ளடக்கம் எல்லாவற்றிலும் ,மாறுபட்ட படமாய்(ஒரு அந்நிய பட inspiration ) ஒரு தமிழ் படம், சிவாஜி, ஜி.பாலசுப்ரமணியம்,ஜாவர் சீதாராமன்,கே.சங்கர், பீ.எஸ்.வீரப்பா கூட்டு முயற்சியில் வெளியானதும் இன்றி, எல்லாதரிப்பினராலும் ஆதரிக்க பட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்று, பிறகு தெலுங்கு,ஹிந்தி எல்லா மொழிகளிலும் தழுவ பட்டது. சினிமா சரித்திரமே, அதற்கு முன்னும்,பின்னும் ,அந்த ரசவாத அதிசயத்தை கண்டதில்லை.காணவில்லை. காதல்,நட்பு,விசுவாசம்,பொறாமை, possessiveness , மனித-மிருக மனநிலை போராட்டம்,எல்லாம் சம நிலையில் தேக்கிய ஒரு positive approach கொண்ட மிக நல்ல காவிய சித்திரம்தான் ஆலய மணி.

ஆலய மணியின் கதையை பார்ப்போம்.

பெரும் பணக்காரன் தியாக ராஜன் ,உறவினர் யாருமின்றி வாழும் தனியன். சிறு வயதில் அதீத possessive குணத்தினால்,நண்பன் ஒருவன் மரணத்திற்கு காரணமாகி (மீனா என்று பெயரிட பட்ட பொம்மைக்காக ) , சீர்திருத்த பள்ளியில் இருந்து மீண்டு , deep seated trauma வின் பாற்பட்டு குற்ற உணர்வில் இருந்து மீள துடிப்பவன்.அதீத கருணை, மனித நேயம், வள்ளன்மை,பெருந்தன்மை ஆகிய குணங்களை வளர்த்து மிருக குணங்களை பொசுக்கி வாழ நினைத்தாலும் அவ்வப்பொழுது தலை தூக்கும் போட்டி,பொறாமை குணங்களால் உந்த படுபவன். தற்செயலாய், சேகர் என்ற டாக்டருக்கு படிக்கும் ஒருவனின் நற்பண்புகளால் கவர பட்டு ,ஏழையான அவனை,சம-நிலை நண்பனாய் பாவித்து ஆதரித்து அன்பு செலுத்துகிறான்.சேகருக்கு வானம்பாடி என்ற புனை பெயர் காதலி. சேகருடன் சேர்ந்து படிக்கும் பிரேமா சேகரை ஒரு தலையாய் விரும்புகிறாள். பிரேமாவின் அப்பா ஆட்கொண்டான் பிள்ளையோ பண பேய். பெண்ணை தியாகுவிற்கு மணமுடிக்க விரும்புகிறார். தற்செயலாய் எஸ்டேட் கணக்கு பிள்ளை முத்தையாவின் இளைய மகள் மீனாவை சந்தித்து விரும்ப ஆரம்பிக்கிறான் தியாகு. சந்தர்ப்ப வசமாய் முத்தையாவின் மூத்த பெண் ,ஆட்கொண்டானால் வஞ்சிக்க படும் போது தலையிட்டு ,அந்த பெண்ணை விரும்பியவனே மணக்க காரணமான தியாகு,தன் நண்பன் சேகர் மூலம் தான் மீனாவை மணக்க விரும்புவதை தெரிவிக்கிறான். ஆனால் அந்த மீனாதான் ,தான் விரும்பிய வானம்பாடி என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சியடையும் சேகர்,தன் நண்பனின் விருப்பத்தை மதித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான்.மீனாவிடம் உண்மையை தியாகுவிடம் இருந்து மறைக்க சொல்கிறான்.
இதனால் பொறாமையடையும் ஆட்கொண்டான், மீனாவை பழிவாங்க, காரின் brake ஐ பிடுங்க,காப்பாற்ற முனையும் தியாகு,brain concoction மற்றும் multiple -fracture இனால் கால்களின் செயல் பாட்டை இழக்கிறான். திருமண நிச்சயம் செய்ய பட்ட மீனா ,தியாகுவிடம் ,தொடர்ந்து அன்பு செலுத்தி ஆதரவு காட்டுகிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால்,மீனா -சேகரின் மேல் சந்தேகம் கொண்டு,சேகரை கொலை செய்ய மரண பாறைக்கு அழைத்து செல்கிறான் தியாகு . கொலை முயற்சியில் தப்பிக்கும் சேகர், உண்மையை சொல்ல,குற்ற உணர்ச்சியில் தியாகு தானே ,மரண பாறையில் இருந்து குதித்து விடுகிறான். பிறகு ,காப்பாற்ற பட்டு, கால்களை பெற்று, பிரேமா-சேகர், மீனா -தியாகு ,ஒன்று சேர சுபம்.

(தொடரும்)

Gopal.s
5th November 2012, 06:23 PM
ஆலய மணி- 1962 -Part -2

இந்த படத்தில் நடிகர் திலகம் ,பாத்திரத்தை மிக புரிந்து அசத்துவார். தாயன்பு அறியாத,தந்தையால் உதாசீன படுத்த பட்ட ,தனிமை பட்ட, தன்னை தூயவனாய் மாற்றி கொள்ள விழையும் பாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து ,கண் முன் நிறுத்துவார். (வழக்கொழிந்து கொண்டிருந்த தூய தமிழ் வசனங்கள் உறுத்தினாலும்).நண்பனுடன், என்னிடம் இல்லாத உயர்ந்த பண்பு உன்னிடம் உள்ளது என்று குறிப்பிட்டு, தானே ஒரு possessive type என்ற போதிலும்,நண்பன் ,ஒரு வாக்குவாதத்தில்(யார் காதலி உயர்ந்தவர்?) சட்டையை பிடித்து விட,ஒரே நொடியில் சுதாரிப்பார்.சம நிலை அடைவார். ஒரு explicit demonstrative பாணியில் நடிப்பார். நல்ல தன்மையை வளர்த்து கொள்ள விழையும் ஒருவனின் துடிப்பு அதில் நன்கு தெரியும். சரோஜா தேவியை முதல் முறை பார்த்து, ஒரு ஆச்சர்யம் கலந்த ஆசை பார்வை வீசும் போதும்,பிறகு ,உங்கள் பெண்ணின் வாழ்வு மலரட்டும் என்று சரோஜா தேவியிடம் திரும்பி ,ஒரு நொடி அர்த்தமுள்ள வாஞ்சையுடன் பண்ணும் gesture , deep seated trauma with shock and despair என்பதை காட்டும் சிறு வயது சம்பந்த பட்ட காட்சிகள், கால்கள் இழந்ததை உணரும் தருணம்,தனித்திருக்க விரும்பவதை வறட்சியுடன் சொல்வது எல்லாம் அற்புதம். நடிகர் திலகம் ,விஸ்வரூபம் எடுக்கும் இடங்கள்,, சந்தேகம் சூழ்ந்து மிருக உணர்ச்சி தலை தூக்கும் இடங்கள்.ஆசையுடன் ,தன் நிச்சயிக்க பட்ட பெண்ணை வெறிக்கும் எஸ்.எஸ்.ஆரை பார்த்து ஆத்திரப்பட்டு கத்தும் இடம், feeling of inadequacy யினால், விபரீத கற்பனையில் மூழ்கி(mind picture gives rise to restive passion and subsequent revenge attitude ),மிருக குணத்தில் தன்னை அமிழ்த்தும் இடங்களில்,அடடா முழு படமும் மிருகமாகவே இருந்திருக்கலாமே என்று ஏங்க வைக்கும் நடிப்பு.

இந்த படத்தை உயரத்தில் தூக்கி நிறுத்துவது, கதை,திரைக்கதை , எடிட்டிங், இயக்கம்,பாடல்கள்,இசை,சக நடிக-நடிகையரின் அபார பங்களிப்பு ஆகியவை. சிறிது சறுக்க வைப்பது out -dated தூய தமிழ். அதுவும் ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே தூய தமிழ் பேசும். நல்ல வசனங்களை கொண்டிருந்த ஆலய மணி,ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் இந்த வகை வசனங்கள் பெரும் குறையாக படும்.

மிக மிக குறிப்பிட பட வேண்டியது எஸ்.எஸ்.ஆரின் அபார நடிப்பும்,சரோஜா தேவியின் நல்ல பங்களிப்பும்.(பாலும் பழமும்,இருவர் உள்ளம் போல்)

விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கேட்கவே வேண்டாம். full form இருந்த போது வந்த படம்.கண்ணதாசன் - இரட்டையர் இசையில், கண்ணான கண்ணனுக்கு,தூக்கம் உன் கண்களை ,மானாட்டம்,பொன்னை விரும்பும், கல்லெல்லாம் மாணிக்க, சட்டி சுட்டதடா,எல்லாமே பயங்கர ஹிட் பாடல்கள்.படத்திலும் மிக நல்ல முறையில் படமாக்க பட்டிருக்கும்.

பட துவக்கமே ,அன்றைய ரசிகர்களுக்கு shock value கொண்டதாக பட்டிருக்கும். கதாநாயகிகள் கற்புக்கரசிகளாய் வலம் வந்த இந்திய திரையில் infatuation பற்றி பேசியது சாதா விஷயமல்ல. அன்றைய முதல் இடத்தில் இருந்த ஸ்டார் நடிகரின் படத்தில் இரண்டாம் ஹீரோ கதாநாயகியுடன் டூயட் பாடியது, கதாநாயகனை விட ,நண்பனை உயர் குணத்துடன் சித்தரித்தது எல்லாவற்றையும் பார்த்தால், நடிகர் திலகம் என்பவர் எப்படி நல்ல படங்களுக்காக ஒத்துழைத்தார் என்பது இமேஜ் இமேஜ் என்று ஓவர்-மார்க்கெட் செய்யும் இளைய தலை முறைக்கு பாடம்.

(தொடரும்)

Gopal.s
5th November 2012, 06:59 PM
ஆலய மணி- 1962 -part -3

ஆலய மணியில் எடிட்டர் ,இயக்குனர் கே.சங்கரின் பங்களிப்பு அபாரமானது. கத்தி மேல் நடப்பது போன்ற கதையமைப்பில் ,சிறிதும் சறுக்காமல், அனைத்தையும் லாஜிக் உடன் justify பண்ணும் இயக்கம்.ரசிகர்கள் விரும்பும் அம்சங்களையும் அழகாக கலந்து, காமெடி அது-இது என்ற கதையை தொய்ய வைக்காத அற்புத இயக்குனர். trauma சம்பந்த பட்ட காட்சி, பின்னால் சிவாஜியின் மன போராட்ட காட்சி(ஆண்டவன் கட்டளையிலும் அற்புதமாய் வந்திருக்கும்-தேவிகாவினால் அலைக்கழிக்க படும் காட்சிகளில்) என்று, எடிட்டிங்,நடிப்பு,இசை,இயக்கம் எல்லாம் கை கோர்த்து படத்தையே உயர்த்தும்.

சில சுவையான தகவல்கள் உண்டு. சங்கர் எம்.ஜி.ஆரை வைத்து பணத்தோட்டம் படத்தை சம காலத்தில் இயக்கி வந்த போது,நிறைய re-take கேட்கும் போது எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக, நீங்க யாரையோ மனசிலே வைச்சி என்னிடம் ரொம்ப எதிர்பாக்கிறீங்க. இந்த ராமச்சந்திரனிடம் என்ன முடியுமோ அதை மட்டும் கேளுங்க என்றாராம்.(எம்.ஜி.ஆருக்கு மிக பிடித்த சிவாஜி படங்கள் ஆலய மணி,தில்லானா மோகனாம்பாள் என்று கேள்வி)

இந்த படத்தை பொறுத்த வரை முதல் ஹீரோ கதைதான். ஜி.பாலசுப்ரமணியம் ஒரு மூல கதை மேதையாகவே போற்ற பட்டார்.(கே.எஸ்.ஜி, சோலைமலை,செல்வராஜ் போல்) சிக்கலான அமைப்பை கொண்ட கதைக்கு, மிக சிறந்த திரைகதையை கொடுத்த ஜாவர் பாராட்டுக்குரியவர்.

கோப காரன்,பொறாமைக்காரன், பாதி மனிதன்-பாதி மிருகம்,அழித்து விடும்(nihilistic ) உணர்வு மிகும் possessive உணர்வு கொண்ட மனிதன்,personality disorder இனால் வரும் நம்பிக்கை குலைவு(Feeling of inadequecy accentuates it), அதனால் எழும் பின்னலான மனித மன உணர்வுகள், மனித உணர்வுகளில் கறுபபு கறை படிந்து , அதன் நிழலில் மனசாட்சியின் குரலை நசித்து, மிருக வசப்படும் உணர்வை, மிகையில்லாமல், melo -drama குறைத்து , positive ஆக சொன்ன மிக மிக சிறந்த படைப்பு ஆலய மணி என்று அடித்து சொல்லலாம்.

(முற்றும்)

adiram
5th November 2012, 08:11 PM
Excellent Mr. Gopal,

You analysis about Aalayamani, took your taste to new hights.

Aalayamani came as in Rank 1 at box office in 1962.

venkkiram
5th November 2012, 11:27 PM
சிறப்பான அலசல் திரு கோபால். படத்தை இன்னும் நான் பார்த்ததில்லை. உங்களின் கட்டுரையை வாசித்த பிறகு ஆலயமணி என்னுள் புதியதொரு அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. நன்றிகள் பல.

:notworthy:

Murali Srinivas
6th November 2012, 12:51 AM
நன்மைக்கும் தீமைக்கும் நடுவே, மனித தன்மைக்கும் மிருக தன்மைக்கும் நடுவே, பாசத்திற்கும் பொறாமைக்கும் நடுவே ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு சின்ன கயிற்றில் நடந்து செல்லும் ஒரு விளிம்பு நிலை மனிதனான தியாகுவைப் பற்றிய ஆய்விற்கு நன்றி.

Split personality என்ற வார்த்தையெல்லாம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே அத்தகைய ஒரு மனிதனை நம் கண் முன் காட்டிய நடிகர் திலகம் அவர்களை நாம் என்ன சொல்லி பாராட்டுவது? அதற்கு உறுதுணையாக் இருந்த K.சங்கர், G.பாலசுப்ரமணியன், ஜாவர் மற்றும் P.S. வீரப்பாவிற்கும் நமது நன்றியும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

தமிழ் சினிமா கதாநாயகர்களில் என்றுமே மறக்க முடியாத ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் தியாகு தன் 50 வயது பொன் விழாவை பூர்த்தி செய்யும் இந்த நேரத்தில் தங்கள் ஆய்வு வெளிவந்திருப்பது மிகப் பொருத்தம். [ஆலய மணி - 23.11.1962 - 23.11.2012].

என்ன, நடிகர் திலகத்தைப் பற்றியும் அவரின் நடிப்பில் மிளிரும் காட்சிகளை பற்றியும் அதிகமாக எழுதி இருக்கலாம். குறிப்பாக my meena is great and great பற்றி சொல்லியிருக்கலாம். கல்யாண ரிசப்ஷனுக்கு கூட்டிக் கொண்டு போக சொல்லும் அந்த காட்சியில் சேகர் என்று அந்த நண்பனை விளிக்கும் முறையே எப்படி மாறும் என்பதையும் அந்த வாய்ஸ் modulation பற்றியும் சொல்லியிருக்கலாம்.

அந்த "எஜமான் நடையழகை பார்த்தியாடா" பற்றியாவது கொஞ்சம் எழுதியிருக்கலாம்.

ஆனால் அந்த விளிம்பு நிலை மனிதனின் மன நிலையைப் பற்றி எழுதிய விதம் top. வாழ்த்துக்களும் நன்றியும்.!

அன்புடன்

Gopal.s
6th November 2012, 06:52 AM
நண்பரே,
ஒரு சின்ன மறுப்பு.

split personality என்பது வேறு. ஓபன் ஆக சொல்ல படா விட்டாலும் கிட்டத்தட்ட எங்கள் தங்க ராஜா தான் அந்த type .(though this is not explicitly stated in that film,more or less Dr.Raja's bairavan transformation fits the bill).
Dissociative identity disorder (DID), also known as multiple personality disorder (MPD),[1] is a mental disorder characterized by at least two distinct and relatively enduring identities or dissociated personality states that alternately control a person's behavior, and is accompanied by memory impairment for important information not explained by ordinary forgetfulness. These symptoms are not accounted for by substance abuse, seizures, other medical conditions or imaginative play in children.[2] commonly known as split personality.

ஆலயமணியின் தியாகு கீழ்கண்ட வகை.
borderline personality (disorder) a personality disorder marked by a pervasive instability of mood, self-image, and interpersonal relationships, with fears of abandonment, chronic feelings of emptiness, threats, anger, and self-damaging behavior.

Gopal.s
6th November 2012, 08:10 AM
குறுகிய காலத்தில் நூறாயிரம் கண்ட நண்பர்கள் திரிக்கு எங்கள் வாழ்த்துக்கள். மூவேந்தர்களாய் திரியை காத்து கொண்டிருக்கும் பம்மலார்,வாசுதேவன்,ராகவேந்தர் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். . பம்மலார் மீண்டும் பதிவுகள் இடும் நாளை நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Murali Srinivas
6th November 2012, 09:33 AM
Dear Gopal,

Thanks for correcting me. Sort of a confusion may be due to midnight posting.

Regards

adiram
6th November 2012, 10:35 AM
Sasidharan,

When you listed out the negative rolls by Sivaji, you forgot a very important roll Engineer Rajan in 'Andha Naal'.

Gopal.s
6th November 2012, 11:36 AM
[QUOTE=Gopal,S.;974968]ஆலய மணி-

Fantastic analysis, Mr Gopal.

I agree with you 100%, especially with the following:
*(வழக்கொழிந்து கொண்டிருந்த தூய தமிழ் வசனங்கள் உறுத்தினாலும்).
*சிறிது சறுக்க வைப்பது out -dated தூய தமிழ். அதுவும் ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே தூய தமிழ் பேசும். நல்ல வசனங்களை கொண்டிருந்த ஆலய மணி,ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் இந்த வகை வசனங்கள்
பெரும் குறையாக படும்.
*பட துவக்கமே ,அன்றைய ரசிகர்களுக்கு shock value கொண்டதாக பட்டிருக்கும். கதாநாயகிகள் கற்புக்கரசிகளாய் வலம் வந்த இந்திய திரையில் infatuation பற்றி பேசியது சாதா விஷயமல்ல. அன்றைய முதல் இடத்தில் இருந்த ஸ்டார் நடிகரின் படத்தில் இரண்டாம் ஹீரோ கதாநாயகியுடன் டூயட் பாடியது, கதாநாயகனை விட ,நண்பனை உயர் குணத்துடன் சித்தரித்தது எல்லாவற்றையும் பார்த்தால், நடிகர் திலகம் என்பவர் எப்படி நல்ல படங்களுக்காக ஒத்துழைத்தார் என்பது இமேஜ் இமேஜ் என்று ஓவர்-மார்க்கெட் செய்யும் இளைய தலை முறைக்கு பாடம்.
*கத்தி மேல் நடப்பது போன்ற கதையமைப்பில் ,சிறிதும் சறுக்காமல், அனைத்தையும் லாஜிக் உடன் justify பண்ணும் இயக்கம்.ரசிகர்கள் விரும்பும் அம்சங்களையும் அழகாக கலந்து, காமெடி அது-இது என்ற கதையை தொய்ய வைக்காத அற்புத இயக்குனர்.
*மனசாட்சியின் குரலை நசித்து, மிருக வசப்படும் உணர்வை, மிகையில்லாமல், melo -drama குறைத்து , positive ஆக சொன்ன மிக மிக சிறந்த படைப்பு ஆலய மணி என்று அடித்து சொல்லலாம்.


As you mentioned Mr Gopal, I personally believe, a few of NT movies have lost their well deserved recognition from the younger generation now, just because of their 'தூய தமிழ் வசனங்கள்'. Alayamani could have been an national award winning movie in terms of acting, story and songs...etc. But the beauty of these kind of movies where NT spoke 'தூய தமிழ் வசனங்கள்', he spoke the dialogues perfectly without any of the emotions/nuances affected, which could've been spoken in 'normal' Tamil. I most like Sivaji in negative characters; i,e: Vikaraman in 'Uthama Puthiran', Selvam in 'Iruvar Ullam', Barrister Rajinikanth and so on.. accordingly I like 'Alayamani' Thiyagu too.


QUOTE]
Sasidharan Sir,
This old posting recap for your eyes as you mentioned Vikraman.(My favourite character too!)
I have major regret in life for not being born on 7th Feb instead of 7th Nov.7th Feb is the date of release of Uthama Puthran,my No 1 rating of NT roles(Even NT rated it so,I suppose) .Though I share my date with Kamal&CV Raman and born on the date of release of Kathavarayan(One of the favourites of our dear Premium hubber"Vasu the Great"),I cant help carrying this remorse.I decided to name my 2 boys(when I was only 11!!??) as Vikram(Uthama Puthran) & Vijay(Deiva Magan),but I could implement my plan with the second as he was born on VijayDashmi Day.vikram is waiting for my Grand Son.
Vikram-In short,first time in the history of Indian Cinema(Modesty prevents me from quoting world),an actor is depicting a character with so many hues with underlying emotions without affecting the flow of a clean entertainer and makes it enjoyable too(Thanks to sridhar&Prakash Rao).
Vikram-A Narcist,Selfish,Pervert,Spoilt Child distanced from his mother since birth(No love No Hate),Highly egoistic ,accepts challange without thinking when ego is offended,Scant regard or concern for others including his close ones(Even give them up if it suit his means with a tinge of vicarious sadism),Easily influenced by his mentor(Eduppar Kai pillai in Tamil),Opportunist when it comes to crisis.
Is it not strangulating even when try to explain!! Imagine ,an actor without formal education in Acting like Marlon Brando(Elia Karzan),No DVDs to copy,No predecessors,No directors of world calibre,Simultaneously acting in 4 movies unlike todays artists, depicting this role to such a perfection!!!!You know even today ,I marvel at this role more than any of his other ones.
To substantiate my Character study,I am enlisting Scenes but I am not going into indepth analysis as I dont want to stand between you and your viewing experience.
Scene 1- Vikram's day of carnation ,his interaction with women around and his public speech.
Scene 2- First time his meet with Minister's daughter and his expressions to his uncle on his desire.
Scene 3- His first encounter with Mother where he sits and swings in a swing without a word.
scene 4- The scene inwhich Minister's daughter is brought to Andhapuram(Kathiruppan)
Scene 5- His discussions with his uncle on impending plans to capture the twin brother.
Scene 6- His expression of displeasure on his uncle on the failed attempt to capture Pathipan.
Scene 7- The scene inwhich Parthipan is captured and his reaction to Parthipan and Amudha.
Scene 8- After imprisoning Parthipan,his mercurial swings on his mother,uncle and the captured brother's mixed bag interractions.
Scene 9- When Parthipan decides to impersonate, Vikram's evasive and sort of delineation from his past almost a begging tone(like a child).
Scene 10- Climax where his anger peaks with his hurt ego.
I suppose that is the first and only movie where an actor shows that when he tries to imposter the other,it is not to 100% perfection like expression of his eyes and lesser perfection in body language .Wah! a third dimension to relish when Parthipan tries to act like Vikram and vice versa!!
The only movie inwhich I hated the hero and loved Villain so so so much.

Gopal.s
6th November 2012, 11:47 AM
பார்த்தசாரதி சார்,
உங்கள் அன்னை இல்லம் பதிவை மிக மிக ரசித்தேன். என்ன ஒரு நுணுக்கமான கவனிப்பு!! பிரத்யேக ரசனையின் சொந்தக்காரரே! நாங்கள் பிரம்மாண்டத்தை சுருக்கி வரையும் சாதாரணர்கள். நீங்கள் குறுகியதை விரித்து விவரிக்கும் உன்னத கற்பனையாளர். நீங்கள் குறிப்பிட்ட படியே,
பல பொருளாதார தடைகள், நடிக நடிகையர் கால்ஷீட் பிரச்சினை(எல்லோரும் சேர்ந்து தோன்றும் காட்சிகளில் அதிக பிரச்னை),ஒரே நடிகர் ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு படப்பிடிப்புகள்,நேர பற்றாக்குறை,பிலிம்-ரோல் பற்றாக்குறை என்ற பல்வேறு கஷ்டங்களிலும்,
கஷ்டமேயில்லாத ஒரே விஷயம், நடிகர் திலகத்தின் continuity shots தான்.மிக அழகாக கொடுத்துள்ளீர்கள்.

Gopal.s
6th November 2012, 11:52 AM
மிக்க நன்றி ஆதி ராம் , வெங்கி ராம், முரளி,சசிதரன்.

Murali Srinivas
7th November 2012, 12:39 AM
November - 7,1958 - காத்தவராயன் தினம்.

இன்றைய நாளில் பிறந்து இன்று பிறந்த நாள் காணும் எங்கள் விக்கிரமனே!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள கோபால்ஜி

இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன்

Gopal.s
7th November 2012, 07:18 AM
November - 7,1958 - காத்தவராயன் தினம்.

இன்றைய நாளில் பிறந்து இன்று பிறந்த நாள் காணும் எங்கள் விக்கிரமனே!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள கோபால்ஜி

இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

அன்புடன்

நன்றி சகோதரா. ஆயிரம் வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்தாலும், இந்த திரியின் சகோதரர்களின் வாழ்த்து ,என்னை என் நடிப்பு தெய்வமே வாழ்த்தியதற்கு சமம். என் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் தந்த என் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் நடிகர் திலகம் என்ற நடிப்பு கடவுளை தொழுதே என் பொழுதை துவக்கினேன்.

Gopal.s
7th November 2012, 07:43 AM
நல்ல விஷயங்கள் எந்த மொழியில், உலகின் எந்த பகுதியில் இருப்பினும்,அதை தமிழுக்கு கொண்டு வந்து ,தமிழுக்கு வளம் சேர்க்க சொன்னவர் பாரதி.பாரதியாரின் ஆணையை சிரமேற்கொண்டு பல நல்ல வெளிநாட்டு திரைப்பட காவியங்களை, பல நல்ல பிற மொழி கதைகளை,படங்களை,பல நல்ல இந்திய நாடகங்களை,நமது மரபாம் தெரு கூத்து, மற்றும் காவியங்களை தமிழ் திரைப்படங்களுக்கு கொண்டு வந்து, புதிய சிந்தனைகள்,பரிசோதனை முயற்சிகள் ,புதிய வித்தியாச கதை களம், தமிழில் கொண்டு வர தளம் அமைத்த முன்னோடி நமது முழு முதல் நடிப்பு கடவுளாம் நடிகர் திலகமே. அது மட்டுமன்றி தமிழில் வெளி வந்த சிறந்த நாவல்கள்,கதைகள் திரைப்படங்களாக காரணமாய் இருந்த முன்னோடி.
நடிகர் திலகம் நடித்து படமான சில சிறந்த தமிழ் கதைகள்-
கள்வனின் காதலி- அமரர் கல்கி-
ரங்கோன் ராதா- அமரர் அண்ணா.
புதையல்- கருணாநிதி
மரகதம்- வழுவூர் துரைசாமி
பாவை விளக்கு- அகிலன்
பெற்ற மனம்- மு.வரதராசனார்.
குலமகள் ராதை- அகிலன்
இருவர் உள்ளம் - லட்சுமி
தில்லானா மோகனாம்பாள்- கொத்தமங்கலம் சுப்பு.
காவல் தெய்வம் - ஜெயகாந்தன்
விளையாட்டு பிள்ளை-கொத்தமங்கலம் சுப்பு.

joe
7th November 2012, 08:01 AM
நடிகர் திலகத்தின் சிஷ்யன் கமல்ஹாசனோடு இணைந்து பிறந்தநாள் காணும் நடிகர் திலகத்தின் ரசிகன் கோபால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Gopal.s
7th November 2012, 08:21 AM
நடிகர் திலகத்தின் சிஷ்யன் கமல்ஹாசனோடு இணைந்து பிறந்தநாள் காணும் நடிகர் திலகத்தின் ரசிகன் கோபால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

மிக்க நன்றி Joe .

Gopal.s
7th November 2012, 08:42 AM
Happy Birthday to you, Mr Gopal!
Thank you Sasi.

eehaiupehazij
7th November 2012, 09:50 AM
happy birthday wishes Mr.Gopal. Your contributions to this thread are worthwhile in stabilizing the name and fame of our emperor of acting NT.It is time for all fans of NT we tried for getting the coveted Oscar life time achievement award by suitably projecting the acting versatility of NT on a global level. NT is second to none who have already got this award

parthasarathy
7th November 2012, 09:54 AM
Dear Mr. Gopal,

Wish you many more happy returns of the day.

Regards,

R. Parthasarathy

JamesFague
7th November 2012, 10:08 AM
Mr Gopal Sir,

Wish you many more happy returns of the day.

Gopal.s
7th November 2012, 10:14 AM
Dear Mr.Sivaji senthil,
Thank you for your wishes. I am dreaming about the day of conferring life time achievement Oscar for our God.

Parthasarathy Sir,
Many thanks for your kind wishes.

Thank you vasudevan sir.

kalnayak
7th November 2012, 11:50 AM
Wish you many more happy returns of the day to S.Gopal.

groucho070
7th November 2012, 11:55 AM
Happy birthday Gopal, S. Great that you share same birthdate with Kamal.

Gopal.s
7th November 2012, 12:17 PM
Thanks a lot Rakesh, Kalnayak .

HARISH2619
7th November 2012, 01:34 PM
Dear gopal sir,
wish you a very happy and cheerful birthday

parthasarathy
7th November 2012, 02:53 PM
டியர் சாரதி,
உண்மையிலேயே மிகவும் நுணுக்கமாக ஆய்ந்து எழுதப் பட்ட பதிவு. உளமார்ந்த பாராட்டுக்கள். இந்தப் படத்தைப் பற்றி ஒரு பத்திரைகயில் அந்தக் காலத்தில் விமர்சிக்கும் போது இந்தக் காட்சியைக் குறிப்பிட்டு இதே கிருதா நீளம் குறைவாக ஒரு சில பிரேம்களில் வருவதைக் குறை கூறி விமர்சித்து எழுதியிருந்தார்கள். அவர்களுக்கு இந்த தொழில் நுட்பம், அதாவது இந்த ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தனியாக எடுத்திருக்கக் கூடிய விஷயம் தெரியாமலிருந்திருக்காது. என்றாலும் விமர்சித்திருந்தார்கள். இதுவே வேறொரு நடிகராயிருந்திருந்தால் ஆஹா என்னே அவருடைய ஆற்றல், என்று வானளாவ பாராட்டியிருப்பார்கள்.

ஒரு வேளை பார்த்தசாரதி என்கிற ரசிகர் இதையெல்லாம் விரிவாக ஆராய்ந்து எழுதுவார் என்று விட்டு விட்டார்களோ...

இதோ அந்தக் காட்சி நமக்காக


http://youtu.be/vqKF4U86RAs

அன்புள்ள திரு. ராகவேந்திரன் அவர்களே,

உங்களுடைய பாராட்டுக்கு நன்றி. அதை விட என் வேண்டுகோளை ஏற்று "அன்னை இல்லம்" படத்தில் இடம் பெற்ற அந்த அரிய காட்சியைப் பதிந்ததற்கு மிக்க நன்றிகள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
7th November 2012, 03:09 PM
சாரதி,

நடிகர் திலகத்தின் நடிப்பில் nuances எனப்படும் நுண்ணிய வெளிப்படுத்தல்களை காட்சியமைப்பின் உதவியோடு அழகாய் பதிவு செய்திருக்கிறீர்கள். ஒரு நாள் அல்லது ஒரு மாதம் ஏன் பல வருடங்கள் இடைவெளி நேர்ந்தாலும் அவரால் (மட்டும்) அதே உணர்வை முகத்திலும் சரி வசனம் பேசுவதிலும் கொண்டு வர முடியும். அது அவருக்கு கை வந்த கலை.


மீண்டும் நன்றி சாரதி.

அன்புடன்

அன்புள்ள திரு. முரளி அவர்களே,

உங்களுடைய பாராட்டுக்கு நன்றி. கூடவே, முதல் மரியாதை படத் தகவலையும் அளித்து, சுவையைக் கூட்டி விட்டீர்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
7th November 2012, 03:18 PM
இப்போது தான் நான் bloggers ஆல் முன்பு எழுதப்பட்ட write-ups களை படித்து வருகிறேன். சிலவற்றை open பண்ணமுடியாமல் இருக்கிறது. ஆனாலும் அதிலுள்ள தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவையாகவும் சிவாஜி கணேசன் பற்றிய எனது ரசனையைப் பிரதிபலிப்பவையாகவுமுள்ளன. உதாரணமாக திரு பார்த்தசாரதியின் பதிவுகள் மிகவும் நன்று. மற்றும் திரு ராகவேந்திரா, திரு முரளி திருமதி சாரதா, பம்மலார் போன்றவர்களின் பதிவுகளைப் படிக்கும்போது நடிகர் திலகம் பற்றிய அறிவில் நான் இன்னும் ஆரம்பப்பாடசாலையைத் தாண்டவில்லை (in terms of the knowledge of his nuances as well as the behind the scene info). நான் எனது பல்கலைக்கழக நாட்களில் சிவாஜி பற்றி யாருடனாவது பேசுவதற்கு ஆவல் இருந்தாலும் சரியானவர்கள் கிடைக்கவில்லை. எனது வீட்டினர் சிவாஜி ரசிகர்களாக இருந்தாலும், அவரது நடிப்பைப்பற்றிப் பேசுவதற்கு சரியானவர் கிடைக்கவில்லை. எங்கள் நாட்டின் சூழ்நிலையில் எண்பதுகளில் சிவாஜியின் முழுப்படங்களும் யாழ்ப்பாணத்துக்கு வருவதுமில்லை . 70 களில் 10, 12

வயதாக இருந்தபோது நல்ல சிவாஜி படங்களை அதுவும் வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ பார்த்ததுடன் சரி. அதற்கும் கூட கண்டிப்பான அப்பாவிடம் அனுமதி கேட்பது கடினமான காரியம்.! நான் ஒழுங்காக சிவாஜி படங்களைப் பார்க்கவும் சேர்க்கவும் ஆரம்பித்தது 90 ல் நான் லண்டன் சென்றபின் தான். ஒரு 100 சிவாஜி படங்கள் (எல்லாம் vhs) சேர்த்தேன். இப்போது அவைகள் பழுதடைந்ததும் dvd, pendrive, external hard disk போன்றவற்றில் மறுபடியும் சேர்த்து வருகிறேன். நீங்கள் எல்லோரும் எப்படி சிவாஜி படங்களை சினிமா தியேட்டர்களில் விசில் அடைத்து ஆரவாரத்துடன் பார்த்தீர்கள் என்பதைப் பார்க்க பொறாமையாக உள்ளது! எனக்கு அப்படி இரண்டு சந்தர்ப்பங்கள் கிடைத்ததன. லண்டனில் once more மற்றும் பசும்பொன் திரையிடப்பட்டன. அப்போது ரசிகர்களின் விசில் சத்தம் மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக, once more சிவாஜி ஒரு கையில் mobile phone உடன் தனக்கேயுரிய கம்பீரமான நடையில் வரும்போது ஒரே விசில் ஆரவாரம்!! இதே போல் சிவாஜியின் பழைய படங்களை சக ரசிகர்களுடன் அமர்ந்து தியேட்டரில் ஆரவாரத்துடன் பார்க்க ஆசை. நான் தமிழில் பதிவை இடுவதற்கு திரு ராகவேந்தர் மற்றும் திரு முரளியின் குறிப்புகள் உதவின, நன்றி.

அன்புள்ள திரு. Vankv அவர்களே (தங்களது பெயர்?),

உங்களுடைய பாராட்டுக்கு நன்றி.

நடிகர் திலகத்திற்கு உலகெங்கும் ரசிகர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள் / இருப்பார்கள்.

பத்து நாட்களுக்கு முன், வட இந்தியாவில் உள்ள லக்னோவுக்கு ஒரு வேலையாக என் குடும்பத்துடன் சென்றிருந்தோம். என்னுடைய நண்பர் மூலம் அங்குள்ள ஒருவருடைய உதவியால் சென்ற இடத்தில் சில வேலைகளை சுலபமாக முடிக்க முடிந்தது. மாலை அவருடைய வீட்டிற்குச் சென்று உரையாடிக் கொண்டிருந்த போது, அவ்வீட்டின் குடும்பத்தலைவி (அரசு உயர் பதவியில் வேலை செய்பவர்), நடிகர் திலகத்தைப் பற்றி பேசி, குறிப்பாக, "கர்ணன்" படத்தை சிலாகித்து நினைவு கூர்ந்தார்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
7th November 2012, 03:44 PM
பார்த்தசாரதி சார்,
உங்கள் அன்னை இல்லம் பதிவை மிக மிக ரசித்தேன். என்ன ஒரு நுணுக்கமான கவனிப்பு!! பிரத்யேக ரசனையின் சொந்தக்காரரே! நாங்கள் பிரம்மாண்டத்தை சுருக்கி வரையும் சாதாரணர்கள். நீங்கள் குறுகியதை விரித்து விவரிக்கும் உன்னத கற்பனையாளர். நீங்கள் குறிப்பிட்ட படியே,
பல பொருளாதார தடைகள், நடிக நடிகையர் கால்ஷீட் பிரச்சினை(எல்லோரும் சேர்ந்து தோன்றும் காட்சிகளில் அதிக பிரச்னை),ஒரே நடிகர் ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு படப்பிடிப்புகள்,நேர பற்றாக்குறை,பிலிம்-ரோல் பற்றாக்குறை என்ற பல்வேறு கஷ்டங்களிலும்,
கஷ்டமேயில்லாத ஒரே விஷயம், நடிகர் திலகத்தின் continuity shots தான்.மிக அழகாக கொடுத்துள்ளீர்கள்.

அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.

இந்தக் காட்சியைப் பற்றி அலை பேசியில் உங்களுடனும், திரு. ராகவேந்திரன் மற்றும் திரு. முரளி அவர்களிடமும் சொன்ன அதே விஷயம் தான்.

எப்படி இந்த விஷயம் சாத்தியப் பட்டது? கற்பனையும், நடித்துக் காட்டும் திறனும் மட்டும் இருந்தால் போதுமா? தொழில் நுட்ப விஷயங்களும் நுணுக்கங்களும் கூட தேவைப் படுகிறதே! இந்தக் காலக் கலைஞர்களுக்கு தொழில் நுட்பம் கிட்டத்தட்ட என்பது சதவிகிதம், நடிப்பும் திறமையும் தான்!!).

அந்த இரண்டு நிமிடக் காட்சியில், கடைசி சில நொடிகளுக்கு முன், ஒரு பத்து நொடிகள் மட்டுமே, வேறு முக ஒப்பனையில் வரும் காட்சியை மட்டும் பார்த்தோமேயானால், க்ளோசப்பில் எடுக்கப் பட்டிருக்கும். லாங் ஷாட்டில் எடுத்திருந்தால், அது சாத்தியப் பட்டிருக்காது. ஆகவே, ரொம்பவும் சாதுர்யமாக யோசித்து, க்ளோசப்பில், எடுக்க வைத்து, அதற்கு முன் வரும் ஒன்றே முக்கால் நிமிடங்களுக்கு என்ன மாதிரியான எனர்ஜியையும், பாவனையையும் கையாண்டாரோ, அந்த எனர்ஜியையும், உணர்ச்சிகளையும் மட்டும் maintain செய்து எந்த உறுத்தலும் இல்லாமல் அந்த இரண்டு நிமிடக் காட்சியை யாரும் பெரிய அளவிற்கு கவனித்துக் குறை காண முடியாமல் செய்திருப்பார்.

இந்தக் காட்சியின் வெற்றிக்கு, படத் தொகுப்பாளரின் அறிய பங்களிப்பையும் நாம் பாராட்டியே தீர வேண்டும்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
7th November 2012, 04:06 PM
[QUOTE=parthasarathy;975846]அன்புள்ள திரு. Vankv அவர்களே (தங்களது பெயர்?),

Sasidharan

Thank you very much Mr. Sasidharan.

Regards,

R. Parthasarathy

parthasarathy
7th November 2012, 05:50 PM
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

தங்களுடைய "ஆலய மணி" ஆய்வு மிகவும் சிறப்பாக இருந்தது.

இருப்பினும் திரு. முரளி அவர்கள் குறிப்பிட்டது போல், சில முக்கிய, புகழ் பெற்ற காட்சிகளையும் குறிப்பிட்டிருக்கலாம். ("எங்க எஜமான் நடையழகப் பாத்தியாடா?").

இந்தப் படத்தைப் பற்றிய ஆய்வை நான் ஏற்கனவே "நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த பத்து படங்கள் - பிற மொழியிலும் எடுக்கப் பட்டவை" என்கிற தலைப்பில் எழுதியிருந்தேன்.

பல காட்சிகள் - தற்கொலை முயற்சிக்குப் பிறகு, எஸ்.எஸ்.ஆரும், தான் மணக்கவிருந்த சரோஜா தேவியும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று நினைத்து, பரவாயில்லை அவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும் என்று நினைத்து, அந்தத் திருமணத்திற்கு மற்றவருக்குத் தெரியாமல் வந்து, திருமணம் எஸ்.எஸ்.ஆருக்கும் விஜய குமாரிக்கும் என்று தெரிந்து சரோஜா தேவி, அவரை மறக்காமல் இருப்பதை அவர் பேசுவதன் மூலம் கேட்கும் போது, அவர் காட்டும் முக பாவனைகள்.. அப்பப்பா! கதவருகே காது கொடுத்துக் கேட்க ஆரம்பிக்கும் போது, சரோஜா தேவி அவரைப் பற்றிப் பேசத் துவங்கும் போது, அடுத்த வார்த்தை அவருடைய வாயிலிருந்து என்ன வரப் போகிறது என்பதை இவர் தெரிந்து கொள்ளத் துடிக்கும் துடிப்பையும், அந்த ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தும் அழகும், அவரைப் பற்றிய நல்ல வார்த்தை வர, வர, இவர் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியும்....

கடைசியில், சரோஜா தேவி தற்கொலைக்குத் துணிந்து தற்கொலைப் பாறை மேல் நிற்கும் போது, கத்து கத்தென்று கத்தி கடைசியில் சரோஜா தேவி அவரை அடையாளம் கண்டு கொண்டு, ஓடி வர வர, இவர் ஓடும் ஓட்டம். கீழே விழுந்து எழுந்து ஓடும் ஓட்டம். அந்த ஓட்டத்தில் அவர் காட்டும், ஆனந்தம், அவசரம், துடிப்பு, குதூகலம், இவை எல்லாமும், அந்த நடக்க முடியாத முடவனின் நடையுடன்!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும், மனிதனின் மன வலிமையையும், இதை நிர்ணயிக்கிறது. இதை ஒரு அகழ்வாராய்ச்சி போல், 50 வருடங்களுக்கு முன்னரே, கதாசிரியரும், வசனகர்த்தாவும், இயக்குனரும், நடிகர் திலகம் என்கிற அட்சய பாத்திரத்தை வைத்து செய்து காட்டினார்கள்.

When it comes to intensity, none can even think of Nadigar Thilagam.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

Richardsof
7th November 2012, 10:00 PM
இன்று பிறந்த நாள் கொண்டாடும்

எங்கள் இதய தெய்வம் மக்கள் திலகம் நடித்த

நீதிக்கு பின் பாசம் - குமரிகோட்டம் -உரிமைக்குரல்
படங்களின் கதா பாத்திரத்தின் பெயரை கொண்டவரும்

நடிகர் திலகத்தின்

புதியபறவை -படித்தால் மட்டும் போதுமா -பாரதவிலாஸ்
படங்களின் கதா பாத்திரத்தின் பெயரை கொண்டவரும்

பத்மநாபன் - புகழ் நாட்டில் குடியிருக்கும்

அன்பு நண்பர் திரு கோபால் அவர்களுக்கு எங்களது இதயங்கனிந்த நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
http://i50.tinypic.com/14vs28x.gif
ஒரே முறைதான் உன்னோடு [உங்களோடு ] பேசி பார்த்தேன்

நீ [நீங்கள் ]ஒரு தனி பிறவி

என்றும் அன்புடன்
esvee

Gopal.s
8th November 2012, 06:54 AM
இன்று பிறந்த நாள் கொண்டாடும்

எங்கள் இதய தெய்வம் மக்கள் திலகம் நடித்த

நீதிக்கு பின் பாசம் - குமரிகோட்டம் -உரிமைக்குரல்
படங்களின் கதா பாத்திரத்தின் பெயரை கொண்டவரும்

நடிகர் திலகத்தின்

புதியபறவை -படித்தால் மட்டும் போதுமா -பாரதவிலாஸ்
படங்களின் கதா பாத்திரத்தின் பெயரை கொண்டவரும்

பத்மநாபன் - புகழ் நாட்டில் குடியிருக்கும்

அன்பு நண்பர் திரு கோபால் அவர்களுக்கு எங்களது இதயங்கனிந்த நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
http://i50.tinypic.com/14vs28x.gif
ஒரே முறைதான் உன்னோடு [உங்களோடு ] பேசி பார்த்தேன்

நீ [நீங்கள் ]ஒரு தனி பிறவி

என்றும் அன்புடன்
esvee

இனிய அதிர்ச்சி இதுதானோ? உன்னோடு என்றே சொல்லலாம்.உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் அரிய குண நலன்களை பற்றி கேட்டறிந்திருக்கிறேன். ஆனால் பேசும் போது ,இன்னும் அருமையாய் உணர்ந்தேன். முழு முதற்கடவுள் கணேசனின் ஆசி உங்களுக்கு முழுவதும் பூரணமாய் கிட்ட வேண்டுகிறேன்.
மிக்க நன்றி.

Gopal.s
8th November 2012, 07:55 AM
ராஜ ராஜ ராஜ ராஜ நடை

வால்மீகி ராமாயணத்தில் ராமனின் நடையை விளக்கும் போது நாலு வகை நடையை சிறப்பாக குறிப்பிடுவார். சிங்க நடை,புலி நடை,யானை நடை,எருது நடை என்று.

நடிப்பின் கடவுள் ஒருவர்தான் ராமனுக்கு பிறகு இந்த நான்கு வித ராஜ நடைகளையும் வித்யாசம் காட்டி நடந்தார்.பொத்தாம் பொதுவாக ராஜ நடை என்று ஒரே வகையாக நடக்காமல்(ப்ரித்வி ராஜ் கபூர் போல்) சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நடிப்பின் உச்சத்தை காட்டினார்.

சிங்க நடை-தலைமை மாண்பை கம்பீரத்துடன் குறியிடும் நடை.உத்தம புத்திரன் பார்த்திபன் கடைசி காட்சியில் நடப்பது,ஹரிச்சந்த்ராவில் நடப்பது,கர்ணன் படத்தில் ராஜாவாக பதவியேற்கும் போது நடப்பது.

புலி நடை-அதிக பட்ச கோபத்தில்,சீற்றத்தில் நடப்பது. உத்தம புத்திரன் விக்ரமன் ,பார்த்திபனை பிடிப்பதில் கோட்டை விட்ட கோபத்தில், திருவிளையாடலில் தன பாடலில் பிழை சொன்ன கோபத்தில்.

யானை நடை-பெருமித நடை.திருவருட்செல்வர் நடை,கந்தன் கருணை நடை,ராமன் எத்தனை ராமனடி சிவாஜி நடை-சாதித்த பெருமிதம்.

எருது நடை-அகந்தையை,அலட்சியத்தை குறிப்பது. உத்தம புத்திரன் விக்ரமனின் பதவியேற்பு விழா நடை,வீரபாண்டிய கட்டபொம்மன் உச்ச காட்சி நடை.

Gopal.s
8th November 2012, 08:07 AM
நான் மிக மிக ரசித்த எழுபத்தி ஆருக்கு(1976 )பிறகு வந்த நடிப்பு கடவுள் சில காட்சிகள்-----

---ரோஜாவின் ராஜா படத்தில் சினிமா தியேட்டர் காட்சி. படி படியாய் மனநோய்க்கு ஆட்படும் அருமையான காட்சிகள்.

---தீபம் படத்தில் சுஜாதா ,தன் தங்கையுடன் வீட்டுக்கு வரும் காட்சியில் அவரை கவர பேச்சு கொடுக்கும் காட்சி. அதே படத்தில் சத்யப்ரியாவை பீஸ் பீஸ் ஆக்கும் காட்சி.

---ஹிட்லர் உமாநாத்தில் தன் மனையிடம் அவள் superiority காம்ப்ளெக்ஸ் கொண்டிருப்பதை சுட்டி காட்டி பொருமும் காட்சி.

---நான் வாழ வைப்பேன் படத்தில் ,டிராவல் ஏஜென்சிக்கு விசாரணைக்கு வந்து போலீஸ் கேட்கும் கேள்விகளின் போது ,மறந்த விஷயங்களை நினைவு படுத்தி கொள்ள முயல்வது.

----வாழ்க்கை படத்தில் தனிமையில் இருக்கும் உச்ச காட்சி ,அம்பிகாவுடன் விரக்தியில் பேசும் காட்சி.

---ராஜரிஷியில் திரிசங்குவிடம் வசிட்டரை தாக்கி குத்தலாக பேசும் காட்சி.

---ஜல்லி கட்டு படத்தில் சத்யா ராஜ் இடம் சதாய்க்கும் இடங்களும் ,பிறகு தன் மனதை திறப்பதும்.

---ரிஷி மூலத்தில் மனைவியுடன் தன் பழைய வாழ்க்கையை குறிப்பிட்டு மன்னிக்க மன்றாடும் காட்சி.

---அண்ணன் ஒரு கோவிலில் தங்கையின் நிலை குறித்து புலம்பும் காட்சி.

---தியாகம் குடித்து விட்டு அறிமுகம் ஆகும் காட்சி,ஜஸ்டின் சண்டை.

---வெற்றிக்கு ஒருவன் ஆடல் பாடலில் காட்சி.

---என்னை போல் ஒருவனில் நண்பன் சுற்றத்தாரை பற்றி அறியாமல் நண்பனை போல் நடிக்கும் நயமான நகைச்சுவை காட்சி.

-----பந்தம் படத்தில் டிரைவருடன் கோபித்து நடக்க ஆரம்பிக்கும் காட்சி.

---துணை,முதல் மரியாதை ,தேவர் மகன் -முழு படமுமே . எந்த காட்சியன்று சொல்வது.

Gopal.s
8th November 2012, 09:05 AM
Your remarks about NT's famous 'walks' made me think of editing all of his 'great walks' in one video and add appropriate music for it. I always wanted to do it, but couldn't get enough time for it. Can anybody else try that?

Raghavendar Sir,
Pl.Help. uthamaputhiran last paattaabisheka kaatchi(Parthiban-amudha), thiruvilayadal angry walk,kandhan karunai-vetrivel scene,veerapandiya katta bomman-climax nadai.

RAGHAVENDRA
8th November 2012, 09:36 AM
Gopal Sir
Shall try to do it.
There is also a DVD released by Mr Srinivasan of Tiruchy which contains about 2 to 3 minutes (or may be more) of different walks of NT in films which is noteworthy.

Gopal.s
8th November 2012, 09:42 AM
Gopal Sir
Shall try to do it.
There is also a DVD released by Mr Srinivasan of Tiruchy which contains about 2 to 3 minutes (or may be more) of different walks of NT in films which is noteworthy.
Thank you raghavendar Sir. I have not touched his entire gamut of walking style. I was specific about his raja nadai only in which i went further deep on raja nadais.

Gopal.s
8th November 2012, 03:07 PM
இருவர் உள்ளம்- 1963 -பகுதி-1

நடிகர்திலகத்தின் நடிப்பின் பாணி stylised method acting ஆக விளங்கிய 60 களில் மீண்டும் அவருடைய தெய்வ பிறவி,இரும்புத்திரை பாணி,இயல்பு நடிப்பில் அடக்கி வாசித்த படம் இருவர் உள்ளம். சிவாஜியின் குரு எல்.வீ.பிரசாத் இயக்கி தயாரித்து, கருணாநிதி மீண்டும் நடிகர்திலகத்துடன் இணைந்தார் குறவஞ்சிக்கு பிறகு மூன்று வருட இடை வெளியில். எழுத்தாளர் லட்சுமியின் புகழ் பெற்ற பெண் மனம் (ஆனந்த விகடனில் வெளியான தொடர்) என்ற நெடுங்கதையை தழுவி ,கருணாநிதி அவர்களால் திரைக்கதை அமைக்க பெற்றது.மூல கதையில் இருந்த பிராமண குடும்ப கதையை(ஜகன்னாதன்-சந்திரா) பிராமணம் அல்லாததாக (செல்வம்-சாந்தா) செய்து, அருமையாய் திரைக்கதை அமைத்திருந்தார்.
சிவாஜி ,எப்பவுமே, கதாநாயகியை மையமாய் கொண்ட கதா பாத்திரங்களிலும் நடிக்க தயங்காதவர்.(ஆனாலும் முதல் பரிசை தட்டி சென்று விடுவார்)
மங்கையர் திலகம்,பெண்ணின் பெருமை ,கை கொடுத்த தெய்வம், நீல வானம்,சிவகாமியின் செல்வன்,வாணி-ராணி உதாரணங்கள். இந்த வரிசையில் நாயகியை மைய படுத்தினாலும்,கதையின் நாயகனுக்கும் நிறைய scope கொடுத்த மிக சிறந்த படம் இருவர் உள்ளம்.

இருவர் உள்ளத்தின் கதை-

மிக பெரிய செல்வந்தர் வீட்டு இளைய மகன் செல்வம் டாக்டருக்கு படிக்கிறேன் என்ற பெயரில் பெண்களுடனும்,தவறான நண்பர்களுடனும் சீரழிந்து கொண்டிருப்பவன். செல்வத்தின் தந்தை பெரிய வக்கீல். மூத்த அண்ணன் ,வக்கீலுக்கு படித்திருந்தாலும்,தொழிலில் திறமையின்றி ,நிறைய பிள்ளை குட்டிகளோடு, கூட்டு குடும்ப நிழலில் வாழ்பவன்.செல்வத்திற்கு ஒரு தங்கை.செல்வத்தின் நடவடிக்கை பிடிக்காமல் ,படிப்பை பாதியில் நிறுத்தி ஊருக்கே வர வழித்து விடுகிறார் தந்தை. செல்வம் ஊரில் வந்தும் திருந்தாமல்,இஷ்டப்படி வாழ்கிறான்.

ஒரு நாள், காரில் தன பெண் நண்பி ஒருத்தியுடன் திமிராக சென்று, சாந்தா என்ற ஏழை டீச்சர் பெண்ணை, இடிப்பது போல் நிறுத்தி tease செய்கிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ,அவள் மேல் காதலில் விழுந்து அவளை பின் தொடர்கிறான். சாந்தா காதலுக்கு பச்சை கொடி காட்ட மறுக்கிறாள்.அவளை அடையும் ஆசையில் செல்வம் ஒரு முறை, அவளை யாருமில்லா நேரம் ,தன வீட்டுக்கு தந்திரமாக வர வழைத்து அவள் காதலை வேண்டுகிறான். ஆனால் சாந்தா மறுத்து விட்டு செல்லும் போது,தவறுதலாய் பார்த்தவர்கள் ,ஊரில் தவறாக பேச,ஏழை சாந்தா விருப்பமின்றி ,செல்வத்தை மணமுடிக்கிறாள்.

மணமுடித்த நாளில் இருந்து, செல்வத்தை வெறுக்கும் சாந்தா தாம்பத்ய உறவில் விருப்பமின்றி இனங்குவதால்,செல்வம் , அவள் தன்னை விரும்பி ஏற்கும் வரை,கணவன் என்ற உரிமையை எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறான். குடும்பத்தினர் அனைவருமே,செல்வம் திருந்தி வாழ நினைப்பதை அறியாமல், செல்வத்தையே குற்றம் சொல்கின்றனர். ஒரு சமயம் ,நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில்,செல்வத்தில் பழைய பெண் நண்பியின் குறுக்கீட்டால் திரும்ப பிளவு அதிகமாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்ய,செல்வம் ,சாந்தா நெருங்கவே முடியாமல் இருக்கும் தருணம்,சாந்தா செல்வம் திருந்தி விட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை ஒப்படைக்க முயலும் தருணத்தில், செல்வத்தின் பழைய நண்பியை கொன்ற பழி(செய்தது அவளின் புது நண்பன்) விழ, தந்தை செல்வத்திற்கு எதிராகவும்,அண்ணன் செல்வத்திற்காகவும் வாதாடி, செல்வம் விடுதலையாகி ,சாந்தாவுடன் சேர்கிறான்.

(தொடரும்)

Thomasstemy
8th November 2012, 04:51 PM
We can see NT’s ‘Majestic walks’ in almost all of his movies. If not in normal scenes, they are definitely in the song sequences where he walks according to the rhythm of the music (i.e: in Karnan song ‘Aayiram karangal Potri, in ‘Uyarntha manithan: ‘Antha naal gnapakam.’). I think we can make at least an hour long DVD of those walks

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=CM1NvdUMW0Y&noredirect=1



ENJOY !

Thomasstemy
8th November 2012, 04:53 PM
Nam Nanbar Thiru Anand Avargal has compiled multiple clippings from our Kalai Avadhaaram Nadigar Thilagam Films....

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=CM1NvdUMW0Y&noredirect=1

Gopal.s
8th November 2012, 05:04 PM
இருவர் உள்ளம்-1963 - பகுதி-2

முதல் காட்சியிலேயே களை கட்டி விடும் இருவர் உள்ளம். நடிகர் திலகம் அழகென்றால் அவ்வளவு அழகாக ,ஸ்டைல் ஆக தொப்பியுடன் ,காரில் பறவைகள் பலவிதம் பாட ஆரம்பிப்பார். பல பெண்களுடன் ,நடிகர்திலகத்தின் அத்தனை பாடல்,நடன காட்சிகளும் பிரமாதமாய் வந்திருக்கும்.(யாரடி நீ மோகினி,பறவைகள் பலவிதம்,காதல் மலர் கூட்டம் ஒன்று,ஏன் ஏன் ஏன்,ராஜா யுவ ராஜா,கண்ணா லீலாவிநோதம்,என் ராஜாத்தி வாருங்கடி).கே.வீ.எம்.மாமாவின் பாடலுடன் ,மன்மதனின் ஆடல் (ஜெயந்தி முதல் பத்மினி பிரியதர்ஷினி வரை இந்த பாட்டில்) கேட்க வேண்டுமா குதூகலத்தை?

அடுத்தடுத்த காட்சிகளில் காமெடியில் தூள் பரத்துவார். பல பெண்கள் ஒன்றாக வந்து விட ஒருத்திக்கு தெரியாமல் இன்னொருத்தியை சமாளிக்கும் அழகு. தன்னை நோட்டம் பார்க்க வந்த மாமாவிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டு முழிப்பது,மாட்டுவது, முதல் காட்சியிலேயே சரோஜா தேவியை டீஸ் பண்ணி விட்டு பிறகு இம்ப்ரெஸ் ஆவது, பிறகு தங்கைக்காக சாந்தா டீச்சரை சிபாரிசு செய்து மாட்ட பார்ப்பது,டீச்சர் தங்கைக்கு டியூஷன் எடுக்கும் போது வழிவது, கீசகன் கதையை சொல்லும் சாக்கில் தன்னை கன்னா பின்னாவென்று திட்டும் சரோஜாதேவியுடன் இனிமே எதுவும் சொல்ல தேவையில்லை அவன் போறான் என்று வாபஸ் வாங்குவது, திருட்டு தனமாக டிரைவர் வேடத்தில் சரோஜா தேவியை வீட்டுக்கு வர வழைத்து விளையாட்டாய் முதலில் பேசி பிறகு தன் காதலை வெளியிட்டு கெஞ்சுவது, தன்னை புரிந்து கொள்ளாத மனைவியிடம் முதலிரவில் விட்டு கொடுப்பது, இதய வீணை பாட்டில் சரோஜா தேவி தன் துயரத்தை அப்படியே வெளியிட,நண்பர்களின் கேலி கண்டு, கூனி குறுகி, நாணி குமுறுவது,குடும்பத்தினரும் தன்னை புரிந்து கொள்ளாதது கண்டு மௌனமாய் உருகுவது , ஒவ்வொரு முறையும் மனைவியுடன் நெருங்கும் சந்தர்ப்பத்திலும் பழைய நண்பர்களாலும்,நண்பிகளாலும் கெடும் போது பதைத்து, பதறுவது, மனைவியிடம் தன் நிலையை சொல்லி வருந்துவது என்று நடிகர்திலகம் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாத படுத்துவார்.

சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பே நடிகர்திலகத்துடன் இணையும் போதுதான்.(பாக பிரிவினை,பாலும் பழமும்,புதிய பறவை,தேனும் பாலும்)என்னும் போது தோதாக இப்படி ஒரு பாத்திரம். விடுவாரா? ஆரம்ப காட்சியில் தன்னை சீண்டிய பெரிய இடத்து வாலிபனிடம் வெறுப்பை உமிழ்வதில் துவங்கி,அவனின் காதலை சொல்லும் அனைத்து முயற்சிகளையும் முறித்து போடுவது, அவமான படுத்த பட்டு கல்யாணத்திற்கு கட்டாய படுத்த படுவது, கணவனுடன் ஒட்டாத வாழ்க்கை,நெருங்க விரும்பும் நேரத்தில் கணவனின் பழைய வாழ்க்கையின் நிழல் துரத்தி அவமான பட நேரும் தருணங்கள்,பிறகு அவனின் நல்ல மனத்தை அறிந்து சேர வரும் போது,மிக பெரிய பிரச்சினையை எதிர் கொள்ள நேருவது என்ற தருணங்களில் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுப்பார்.

ரங்கா ராவ், எம்.ஆர்.ராதா,சந்தியா, ராமா ராவ்,கருணாநிதி,முத்து லட்சுமி,பத்மினி பிரிய தர்சினி,ராமச்சந்திரன் அனைவருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருப்பார்.

(தொடரும்)

Gopal.s
8th November 2012, 06:08 PM
இருவர் உள்ளம்-1963 -பகுதி-3

சிவாஜி-கருணாநிதி இணைவில் வந்த அத்தனை சமூக படங்களுமே magic தான். பராசக்தி,திரும்பிப்பார்,ராஜாராணி,புதையல்,இருவ ர் உள்ளம் எல்லாமே அருமை. (மனோஹரா ஒரு சரித்திர பட சாதனை அதிசயம்) திரைக்கதை அமைப்பில் மு.க ஒரு மேதை. மூலக்கதை சிதையாமல்,பாத்திர வார்ப்பு கெடாமல், படிக்கும் கதை வேறு பார்க்கும் படம் வேறு என்பதை தெளிந்து திரைக்கதை அமைத்த இரண்டே மேதைகள் மு.கவும்,ஏ.பீ.என். மட்டுமே. மு.க தன திரைக்கதையால் படத்தை மிக மிக சுவாரஸ்யமாக்கி பாத்திரங்களுடன் ஒன்ற வைப்பார்.வசனங்களும் அவ்வளவு அருமையாய்,காலத்தை ஒட்டியதாய் அமைத்து படத்தை மெருகேற்றும். காமெடி, பஞ்ச் வசனங்கள் என்று கலக்கியிருப்பார்.(குடுக்கும் போது வாட்ச் பண்றதாலேதான் வாட்ச்னு பெயர் வச்சாங்களா)

பிரசாத் என்ற அற்புதமான இயக்குனர் ,தயாரிப்பாளராகவும் அமைந்து விட்டால்? கேட்கவா வேண்டும்? எல்லா technical அம்சங்களும் நன்கு கவனிப்பு பெற்றிருக்கும்.(கேமரா,எடிட்டிங்) சிவாஜியும் இவரை தன் குருவாக மதித்ததால் ,இவர் சொன்னதை உள்வாங்கி மிதமாய் நடித்ததை சிவாஜியே குறிப்பிட்டுள்ளார்.அற்புதமான இயக்கம்.

கே.வீ.மகாதேவன் ,சிவாஜியுடன் இணைந்ததில் மறக்க முடியாத சமூக படங்களில் ஒன்று.(மற்றவை- பாவை விளக்கு,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,செல்வம்,பேசும் தெய்வம்,வியட்நாம் வீடு,வசந்த மாளிகை).பறவைகள் பலவிதம், புத்தி சிகாமணி, கண்ணெதிரே தோன்றினால், இதய வீணை தூங்கும் போது, நதி எங்கே போகிறது, ஏனழுதாய், கண்ணே கண்ணே உறங்காதே, அழகு சிரிக்கிறது போன்ற படத்தோடு ஒட்டிய சூப்பர்-ஹிட் பாடல்கள் கே.வீ.எம்-கண்ணதாசன் இணைப்பில். இந்த படத்தின் மிக மிக சிறப்பான அம்சங்களில் ஒன்று ரி-ரெகார்டிங் எனப்படும் பின்னணி இசை சேர்ப்பு. பின்னாளில் பெரிதாக பேச பட்ட கேரக்டர் based மூட் மியூசிக் ,எனக்கு தெரிந்து இந்த படத்தில்தான் அறிமுகமானது.(சிவாஜி,சரோஜாதேவியை பின் தொடரும் இடங்கள்).இதைதான் இளைய ராஜா தன் பதினாறு வயதினிலே,முள்ளும் மலரும் போன்ற படங்களில் தொடர்ந்து பெயரெடுத்தார்.

பெண்ணின் மனதை விலை கொடுத்து வாங்க முடியாது, அப்படி வாங்கினாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது, மனதை அடையும் ஒரே வழி தூய நல்லிதயத்தின் அன்பு ஒன்றுதான் என்ற கான்செப்ட் ,அனைவரின் கூட்டு முயற்சியால் ,பிரம்மாண்ட வெற்றி படமாகி, இன்றளவும் ரசிகர்களை மட்டற்ற குதூகலத்தில் ஆழ்த்தும் அற்புத படமாகவே,காலத்தை கடந்து ஒளி வீசி கொண்டிருக்கிறது.

(முற்றும்)

RAGHAVENDRA
8th November 2012, 07:36 PM
என்னை அவளிடத்தில் தருகிறேன் - அவள்
இன்னும் என்னை ஏன் வெறுத்து மறைகிறாள்
என்றுமவள் எங்கள் வீட்டுத் திருமகளாவாள் - அந்த
இனிய மகள்
எனது தாய்க்கு மருகளானாள் - இன்று..

கண்ணெதிரே தோன்றினாள்


http://youtu.be/FjNQ462oCec

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் பாடல்களில் உள்ள சிறப்பம்சம், பல்லவி good என்றால் சரணம் பெஸ்ட். அது அவருக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. பல்லவியை விட சரணம் சிறப்பாக அமைக்க, இசையமைப்பாளர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்தப் பாடல் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். கவியரசரின் வரிகள் ... அந்த பாத்திரத்தை இலக்கியமாய் அமைக்க, நடிகர் திலகம் அதை கவிதையாக்கி விடுவார்.

நாயகி முகத்தைக் காட்டத் தயங்கி திரும்பி நின்று கொண்டிருக்க, இவருடைய கற்பனையில் அவள் திரும்பிப் பார்ப்பதாக காட்டி அந்த வர்ணனைக்கு உயிர் கொடுப்பது இயக்குநரின் திறமைக்கு சான்று - இதே போன்ற காட்சியமைப்பு இதய கமலம் படத்தில் உன்னைக் காணாத பாடலிலும் வருவதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

RAGHAVENDRA
8th November 2012, 07:44 PM
மற்றவர்களின் படப் பாடல்கள் கேட்கக் கேட்க அலுக்காது என்றால் நடிகர் திலகத்தின் படப் பாடல்கள் ..

பார்க்கப் பார்க்கவும் அலுக்காது ...


http://youtu.be/7guKJYxRwPc

என்ன உண்மை தானே ...

பள்ளியறைப் பெண் மனதில் ஏக்கம் ஏக்கம் என்ற வரிகளின் போது கால்கள் நேராகவும் ஏக்கத்துடன் இருக்கும் ஒரு பெண்ணின் கால்களைப் போன்று தரையில் பாவாமல் தவிப்பது போன்றும், பக்கத்தில் துணையிருந்தால் வரியின் போது நாயகன் கால்கள் அருகில் வருவதும் உடனே நாயகியின் கால்கள் திரும்புவதும் பின் கேமிரா சற்றே மேற்சென்று இருவரின் முகத்தையும் காட்டும் போது இருவரின் முகத்திலும் அந்த வரிகள் உயிருடன் பிரதிபலிப்பதையும் பார்க்கும் போது ..

கோபால் சொன்ன வரிகள் 100க்கு 1000 சதவீதம் சரி ..

இவரிடம் வரும் போது தான் நடிகைகள் தாங்கள் நடிக்கவும் வேண்டும் என்பதையே உணர்ந்து நடிப்பார்கள் போல...

Gopal.s
8th November 2012, 07:46 PM
ராகவேந்தர் சார்,
நான் நல்லாவே பாடுவேன். கண்ணெதிரே தோன்றினாள் பாடி ,கிண்டி கல்லூரியில் முதல் பரிசு பெற்றிருக்கிறேன். பொன்னொன்று கண்டேன்,இரண்டு பேர் வாய்ஸ் இலும் நானே பாடி எம்.ஐ.டி யில் முதல் பரிசு.

RAGHAVENDRA
8th November 2012, 07:50 PM
இந்தப் பாடலைப் பற்றி கோபால் சார் விரிவாகக் கூறிவிட்டார் ... வேறென்ன வேண்டும் ..

பார்ப்போமே..


http://youtu.be/TwMSXh-HxMA

Gopal.s
8th November 2012, 07:53 PM
ஐயோ சார்,
இப்படி சுட சுட போட்டு தாக்கறீங்களே. ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.

parthasarathy
9th November 2012, 10:19 AM
டியர் கோபால் அவர்களே,

ஏனய்யா இப்படி இம்சை பண்ணுகிறீர்?

அடுத்தடுத்து, இரு மாபெரும் வெற்றிப் படங்களின் ஆய்வா? ஒன்று நீண்ட ஆய்வு; மற்றது சற்றே சிறிய ஆய்வு. வழக்கம் போல், மிக நன்றாக வந்திருக்கிறது.

இருவர் உள்ளம்:- நடிகர் திலகத்தின் படங்களில், இதுவும் "தெய்வ மகனும்" தான் நான் அதிக முறை தியேட்டரில் பார்த்த படங்கள். இரண்டும் 30 முறை. நடிகர் திலகத்தின் படங்களில், எனக்குத் தெரிந்து, மறு வெளியீடுகளில், "கர்ணன்" தவிர்த்து, விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும், (ஏன் ரசிகர்களுக்கும் தான்), பெரு மகிழ்ச்சியைக் கொடுத்த முதல் இரண்டு படங்கள், "வசந்த மாளிகையும்", "இருவர் உள்ளமும்" தான் (சென்னையில்). ஒற்றுமையை கவனித்தால், இரண்டுமே, சற்றேரக்குறைய ஒரே மாதிரியான கதை அம்சம் கொண்ட படங்கள்; திரை இசைத் திலகத்தின் "சூப்பர் ஹிட்" பாடல்களைத் தாங்கிய படங்கள். பார்க்கும் மக்கள் அனைவரையும், "அடடா! இரண்டும் பேரும் சேர்ந்து விட மாட்டார்களா" என்று ஏங்க வைத்த படங்கள். இரண்டு படங்களிலும், நடிகர் திலகத்தின் நடிப்பு, கதா பாத்திரத்தை ஒட்டி, subtle-ஆக இருக்கும். ரசிப்புத் தன்மையே இல்லாதவரையும் ரசிக்க வைக்கும்.

சிவந்த மண்:- நடிகர் திலகத்தின் அணுகு முறை எப்போதும் நூறு சதவிகிதம் சின்சியராக இருக்கும். எந்தக் கதா பாத்திரமாயிருந்தாலும். அதற்கு, இந்தப் படம் மிகச் சிறந்த உதாரணம். ஒரு அட்வென்ச்சர் படத்தை அவருக்கேயுரிய சின்சியாரிடியுடன் அணுகியிருப்பார். ஒரு மேம்போக்கான, ஆக்க்ஷன் படத்தில் நடிப்பது போல் தான் எந்த நடிகரும் இந்தப் படத்தில் நடித்திருப்பார். ஆனால், இவர் மட்டும் வேறு மாதிரி, மிக மிக சின்சியராக அணுகியிருப்பார்.

பிய்த்து உதறிக்கொண்டிருக்கிறீர்கள். நடக்கட்டும்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
9th November 2012, 10:37 AM
இருவர் உள்ளம் & தெய்வ மகன்:- இரண்டு படங்களிலும், நடிகர் திலகம் முதல் ப்ரேமிலிருந்தே, திரை அரங்கத்திலிருக்கும் ஒட்டு மொத்த மக்களையும் கட்டிப்போட்டிருப்பார். (இன்னும் இது போல் நிறைய படங்கள் உண்டு என்றாலும்). முன்னதில், ஜாலியாக, பின்னதில், உணர்ச்சி மயமாக.

1985-இல், இருவர் உள்ளம் சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்ட போது, மாபெரும் வெற்றியடைந்தது. தொடர்ந்து, ஒன்றரை வருடங்கள், சுற்றி சுற்றி ஓடிக் கொண்டே இருந்தது. முக்கியமாக, ஏராளமான, சமூகத்தின் பல்வேறு தட்டுகளிலிருந்து, புதிய ரசிகர்களை, நடிகர் திலகத்திற்குப் பெற்றுத்தந்தது. முக்கியமாக, ரசிகைகள்; அதுவும், இளம் ரசிகர்/ரசிகைகள்.

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

JamesFague
9th November 2012, 10:46 AM
Mr Parthasarathy Sir,

Iruvar Ullam always evergreen hit. It is money spinner for the distributors.

Murali Srinivas
10th November 2012, 12:03 AM
கோபால்,

இருவர் உள்ளம் படத்தின் ஆய்வை எங்கள் ரசிப்பிற்கு ஏற்ற வகையில் விளக்கமாக எழுதியதற்கு நன்றி. படம் பற்றிய என்னுடைய கருத்துகளை விரைவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

அன்புடன்

Gopal.s
10th November 2012, 07:06 AM
சசி சார் உங்களுக்காக,

நான் மிக மிக ரசித்த சிவாஜி காதல் பாடல் காட்சிகள் -

மயக்கம் என்ன - வசந்த மாளிகை
ஒரு தரம் ஒரே தரம்- சுமதி என் சுந்தரி
மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-சாந்தி
அம்மா கண்ணு சும்மா சொல்லு- ஞான ஒளி
மன்னிக்க வேண்டுகிறேன்- இரு மலர்கள்
விண்ணோடும் முகிலோடும்-புதையல்
காணா இன்பம் கனிந்ததேனோ-சபாஷ் மீனா
கண்டேனே உன்னை கண்ணாலே -நான் சொல்லும் ரகசியம்
ஒரு நாளிலே உறவானதே-சிவந்த மண்
உந்தன் கண்ணுக்குள்ளே என்னை பாரு-மரகதம்
நெஞ்சில் குடியிருக்கும்-இரும்பு திரை
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்-நிறை குடம்
வெள்ளி கிண்ணந்தான்- உயர்ந்த மனிதன்
பொட்டு வைத்த முகமோ- சுமதி என் சுந்தரி
அங்கே மாலை மயக்கம்- ஊட்டி வரை உறவு
எத்தனை அழகு கொட்டி கிடக்குது-சிவகாமியின் செல்வன்
மேளதாளம்- சிவகாமியின் செல்வன்
இனியவளே- சிவகாமியின் செல்வன்
சிந்து நதிக்கரை ஓரம்- நல்லதொரு குடும்பம்
சந்தன குடத்துக்குள்ளே-தங்க சுரங்கம்
முத்துக்களோ கண்கள்-நெஞ்சிருக்கும் வரை
அலங்காரம் கலையாத-ரோஜாவின் ராஜா
வாழ நினைத்தால்- பலே பாண்டியா
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்-தெய்வ பிறவி
காவியமா நெஞ்சின் ஓவியமா-பாவை விளக்கு
புது பெண்ணின் மனசை தொட்டு-பராசக்தி
ஆகாய பந்தலிலே- பொன்னூஞ்சல்
வருவான் மோகன ரூபன்- பொன்னூஞ்சல்
மதன மாளிகையில்-ராஜ பார்ட் ரங்கதுரை
வேலாலே விழிகள்- என்னை போல் ஒருவன்
பூ மாலையில்- ஊட்டி வரை உறவு
இதய ஊஞ்சல் ஆடவா- பேசும் தெய்வம்
ஒன்றா இரண்டா- செல்வம்
பாவை யுவராணி-சிவந்த மண்
கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை-விடி வெள்ளி
பத்து பதினாறு முத்தம் முத்தம்-அஞ்சல் பெட்டி 520
காதலிக்க கற்று கொள்ளுங்கள்- தெய்வ மகன்
கல்யாண பொண்ணு- ராஜா
நீ வர வேண்டும்- ராஜா
கேட்டுக்கோடி உறுமி மேளம்-பட்டிக்காடா பட்டணமா
பள்ளியறைக்குள் வந்த- தர்மம் எங்கே
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு-ராஜா
ரோஜாவின் ராஜா- ரோஜாவின் ராஜா
ஒஹஹோ லிட்டில் ப்ளவர் -நீல வானம்
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே-நீல வானம்
இங்கே ஆஹா இங்கே-பாலாடை
கங்கை யமுனை- இமயம்
அந்தபுரத்தில்-தீபம்
நாலு பக்கம் வேடருண்டு- அண்ணன் ஒரு கோயில்
அந்தமானை- அந்தமான் காதலி
காதல் ராணி கட்டி கிடக்க-திரிசூலம்
திருமாலின் திரு மார்பில்-திரி சூலம்
யமுனா நதி இங்கே-கவுரவம்
இரவுக்கும் பகலுக்கும்-எங்கள் தங்க ராஜா
மும்மும்முமும் முத்தங்கள் நூறு-எங்கள் தங்க ராஜா
ஆடிக்கு பின்னே-சிவகாமியின் செல்வன்
வந்த இடம்- கலாட்டா கல்யாணம்
மெல்ல வரும் காற்று- கலாட்டா கல்யாணம்
தேவன் வந்தாண்டி- உத்தமன்
நாளை நாளை - உத்தமன்
தாஜா பண்ணினாத்தான்- டாக்டர் சிவா
செந்தமிழ் பாடும்- வைர நெஞ்சம்.
புது நாடகத்தில்-ஊட்டி வரை உறவு.
பாலக்காட்டு பக்கத்திலே-வியட்நாம் வீடு
இரவும் நிலவும்- கர்ணன்
கனவின் மாயா லோகத்திலே- அன்னையின் ஆணை
கண்களோ காதல் காவியம்- சாரங்கதாரா
தேனுண்ணும் வண்டு- அமர தீபம்
நிறைவேறுமா - காத்தவராயன்
முல்லை மலர் மேலே- உத்தம புத்திரன்
அன்பே அமுதே அருங்கனியே- உத்தம புத்திரன்
தேன் மல்லி பூவே- தியாகம்
ஆஹா மெல்ல நட -புதிய பறவை
சிட்டு குருவி- புதிய பறவை
எனது ராஜ சபையிலே - கல்யாணியின் கணவன்
அமைதியான-ஆண்டவன் கட்டளை
நான் என்ன சொல்லி விட்டேன்- பலே பாண்டியா
இன்று நமதுள்ளமே- தங்க பதுமை
மோகன புன்னகை வீசிடும்-வணங்காமுடி
இகலோகமே- தங்க மலை ரகசியம்
பாவாடை தாவணியில்- நிச்சய தாம்பூலம்
மாலை சூடும் மண நாள்-நிச்சய தாம்பூலம்.
வசந்த முல்லை போலே வந்து-சாரங்கதாரா
தாழையாம் பூ முடிச்சு- பாக பிரிவினை
என்னங்க சொல்லுங்க-எங்க மாமா
நதி எங்கே போகிறது- இருவர் உள்ளம்
அழகு சிரிக்கிறது-இருவர் உள்ளம்
கொடியசைந்ததும் -பார்த்தல் பசி தீரும்
யாருக்கு மாப்பிளை யாரோ- பார்த்தல் பசி தீரும்
கொக்கர கொக்கரக்கோ சேவலே- பதி பக்தி
மான் தோரண வீதியில்- பாட்டும் பரதமும்
கண்ணெதிரே தோன்றினாள்-இருவர் உள்ளம்
நான் பேச நினைப்பதெல்லாம்-பாலும் பழமும்

Gopal.s
10th November 2012, 08:00 AM
நான் மிக மிக ரசித்த காதல் காட்சிகள்-

---- ராஜா ராணி
----தெய்வ பிறவி- அவர் பத்மினியை கணக்கு பண்ணும் காட்சிகள்
----இரும்பு திரை- சிவாஜி வைஜயந்தியிடன் தன் கன்று காதலை சொல்லும் காட்சிகள்
----இருவர் உள்ளம- சரோஜா தேவியிடம் காதல் முயற்சிகள் .
----ஆண்டவன் கட்டளை- அழகே வா,
-----நீலவானம்- முதலிரவு, பவுடர் பூசும், மேலும் பல பல காட்சிகள்.
----புதிய பறவை- உன்னை ஒன்று கேட்பேன்(இரண்டாம் முறை) இரவு காட்சி
----கலாட்டா கல்யாணம் - பல ஜாலி காதல் காட்சிகள்
----உயர்ந்த மனிதன் - வாணிஸ்ரீயிடம் காதல்.........
----தங்க சுரங்கம் - பாரதி டீசிங் , பாரதி-நிர்மலா சக்களத்தி போராட்ட காட்சி
----ராஜா -கல்யாண பொண்ணு லீடிங் காட்சி( அப்புறம்தான்ன்ன்)
---தெய்வமகன்- லவ் டீசிங் காட்சிகள்.
---சுமதி என் சுந்தரி- பலூன் காட்சி (லலலல்லா)
----தர்மம் எங்கே- ஒருவரை ஒருவர் செல்லமாக அடித்து காதலை வெளியிடும் காட்சி
----வசந்த மாளிகை- plum கடிக்கும் காட்சி.
--- தீபம்- சுஜாதாவை மடிக்க முயலும் காட்சிகள்.
----நவராத்திரி - கடைசி காட்சி. கண்ணோடு கண் நோக்கின்.........
---தில்லானா மோகனாம்பாள்- ரயில் காட்சி(யாருக்குத்தான் பிடிக்காது உலகில்?)
---முதல் மரியாதை- கல்லை தூக்க முயன்று வெட்கப்படும் காட்சி.
----டாக்டர் சிவா- கன்னங்கருத்த குயில் பாடலுக்குப் பின் சமாதானம்(எங்கேடா நம்ப பொண்டாட்டி)

Gopal.s
10th November 2012, 09:08 AM
Fantastic video, but some of the old black&while clips could've been avoided. 'Ulaganaayagane' song is more appropriate to Sivaji's acting only. It must have taken a hell of a time to play,f.foward & edit those clippings.

great video. Thanks Barister sir.

sakaLAKALAKAlaa Vallavar
10th November 2012, 07:52 PM
Where is pammalar nowadays? Is he posting here?! :)

Murali Srinivas
10th November 2012, 08:11 PM
Dear Vijay [SKV],

Swami is very much here in Chennai and keeps himself updated of hub happenings. He has taken a temporary sabbatical from posting due to a slight strain in his wrist. He has almost come out of that and may start posting post Deepavali.

Regards

sakaLAKALAKAlaa Vallavar
10th November 2012, 08:22 PM
Thanks Murali Sir! :) long time back, I have asked him for some old article about Ilaiyaraja! thatswhy i asked for him!

venkkiram
10th November 2012, 08:24 PM
Majestic Sivaji with powerful lyrics!

http://www.youtube.com/watch?v=_pyYU7U4kQs

Murali Srinivas
12th November 2012, 01:18 AM
இன்று மாலை தீபம் திரைப்படம் முரசு தொலைக்காட்சியில். முதலிருந்து பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆவல் இருந்த போதும் ஒரு சில வெளி வேலைகள் இருந்த காரணத்தினால் கடைசி 30 நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது. ஏமாற்றம்தான். ஆனாலும் என்ன? அந்த 30 நிமிடம் போதுமே. நடிகர் திலகம் தன 50-கள் மற்றும் 60-களின் பாணியில் அடக்கி வசித்து அசத்திய படம் அல்லவா!

படம் பார்த்த வரை மறக்க முடியாத இரண்டு காட்சிகள். ஒன்று நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தின் மீது தீரா கோபமும் வெறுப்பும் கொண்டிருக்கும் சுஜாதா தன கணவன் வழி தவறி போவதற்கு நடிகர் திலகம்தான் என்று குற்றம் சாட்டி தன்னை அடைவதற்கு இப்படி எத்தனை முயற்சி எடுத்தாலும் நடக்காது என்று சொல்ல கோபப்படாமல் தன்னிலையை விளக்கி விட்டு இறுதியாக "ராதா உனக்கு ஞாபகம் இருக்கா? உனக்கும் கண்ணனுக்கும் கல்யாணம் நடந்தப்போ அவனுக்கு அப்பா ஸ்தானத்திலிருந்து தாலி எடுத்துக் கொடுத்து கல்யாணத்தை நடத்தி வச்சேனே! அவனுக்கு அப்பா-னா உனக்கு?" என்று கேட்டு விட்டு போகும் சீன் [இதன் தொடர்ச்சியாக நடிகர் திலகத்தின் தங்கையாக வரும் சங்கீதா சுஜாதாவை வார்த்தைகளால் வறுத்தெடுக்கும் காட்சி போனஸ்]

இரண்டாவது காட்சி விஜயகுமார் வீட்டுக்கே வரவில்லை என்பதால் மனம் ஒடிந்து சுஜாதா உடல் நலமில்லாமல் இருக்கும் செய்தி கேள்விப்பட்டு வந்து நடிகர் திலகம் பேசிக் கொண்டிருக்க அப்போது வரும் விஜயகுமார் நடிகர் திலகத்தை நேரிடையாக் குற்றம் சாற்றி தரக்குறைவாக் பேசி விட்டு எனக்கு காரணம் தெரியணும் என்று சொல்ல எதுக்கப்பா உனக்கு காரணம் தெரியணும் என்று ஆரம்பித்து ஒவ்வொரு நிகழ்வையும் சொல்வாரே, அதற்கு ஒவ்வொன்றுக்கும் கணக்கு பண்ணி தானே பண்ணினீங்க என்று விஜயகுமார்'சொல்ல எதுப்பா கணக்கு என்று ஆரம்பித்து கடைசியில் வெறுப்புற்று போய் ச்சீ என்று முடிப்பாரே, அந்த சீன்.

கிளைமாக்ஸ்-க்கு முந்தின காட்சியில் [விளக்கை அணைத்து விட்டு போ-விற்கு முன்னால்] உங்க பெரிய மனசை யாரும் புரிஞ்சிக்கலையே என புலம்பும் நாகேஷிடம் காலம் வரும்போது எல்லாரும் புரிஞ்சிக்குவாங்க என்று சொல்லி விட்டு போவார். எத்துனை உண்மையான வார்த்தை!

அன்புடன்

JamesFague
12th November 2012, 10:11 AM
Mr Murali Sir,

Deepam is a wonderful movie in NT's Carreer and as you mentioned adakkiya asathiya padam.

Thanks

RAGHAVENDRA
12th November 2012, 11:28 AM
14 ஜூன் 2012 அன்று வாசுதேவன் அவர்களால் தொடங்கி வைக்கப் பட்ட இத்திரி, நடுவில் சற்று தொய்வடைந்தாலும் 152 நாட்களில் இலக்கம் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதற்கு அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.


http://www.picdesi.com/upload/comment/congrat/congratulation-034.gif

Richardsof
12th November 2012, 08:45 PM
இனிய நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள் .

மக்கள் திலகம் நண்பர்கள்

Murali Srinivas
12th November 2012, 11:18 PM
அனைத்து நண்பர்களுக்கும் உளங்கனிந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் அனைவரும் அனைத்து நலமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்.

அன்புடன்

Gopal.s
13th November 2012, 09:29 AM
Happy Deepavali to all our friends and their Families.

joe
13th November 2012, 09:39 AM
நடிகர் திலகம் ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

rsubras
13th November 2012, 12:12 PM
நடிகர் திலகம் ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

சார்பாக nu naduvula insert panniruntha innum super ah irunthirukkum.......... Happy Diwali to you as well Joe and to all hubbers who see this msg :)

sankara1970
13th November 2012, 05:48 PM
Happy Deepawali wishes to all friends and families.

madhu
13th November 2012, 06:10 PM
அனைவருக்கு இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்

http://youtu.be/lcGj62q8ZvA

joe
13th November 2012, 06:53 PM
சார்பாக nu naduvula insert panniruntha innum super ah irunthirukkum.......... Happy Diwali to you as well Joe and to all hubbers who see this msg :)
ரசிகர் என்றால் ஏதோ மன்றம் வைத்து செயல்படுபவர் என இல்லையே . நடிகர் திலகத்தை ரசிப்பவர்கள் , இந்த திரிக்கு வருபவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் தான் .. நீங்கள் உட்பட எல்லோரும் இதில் அடங்குபவர்கள் என்றே நினைக்கிறேன்.

vidyasakaran
16th November 2012, 07:28 PM
பொதிகை சானலில் கமல் சிவாஜி உரையாடல், 'களஞ்சியத்திலிருந்து' நிகழ்ச்சியில்.
கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டுமே காண முடிந்தது. :(
இணையத்தில் இருந்தால் லிங்க் கொடுங்கள் யாராவது.
நன்றி.

stULana
16th November 2012, 08:10 PM
Yes, a very good interaction (rarely captured) between both. I am sure many here would love to watch it. I happened to watch the last 10mins or so.
Kamal said many actors after 1954 (?) get inspired by Sivaji and asked as to who inspired him for doing various of roles. Sivaji said he used to watch many foreign movies, would remember how certain actors would enact various (a police or detective) roles, and said he would enact that role in a different manner. He said it was all a matter of trying different/new things and once it clicked, it would be easy to follow/take it forward.
He said nothing is more satisfying for an artiste than paaraattu (praise/accolades) in person, and thanked Kamal (humbly) for speaking high about him.

P_R
17th November 2012, 11:28 AM
Yes, a very good interaction (rarely captured) between both. I am sure many here would love to watch it. I happened to watch the last 10mins or so.
Kamal said many actors after 1954 (?) get inspired by Sivaji and asked as to who inspired him for doing various of roles. Sivaji said he used to watch many foreign movies, would remember how certain actors would enact various (a police or detective) roles, and said he would enact that role in a different manner. He said it was all a matter of trying different/new things and once it clicked, it would be easy to follow/take it forward.
He said nothing is more satisfying for an artiste than paaraattu (praise/accolades) in person, and thanked Kamal (humbly) for speaking high about him.

Hope someone uploads!
This is the one I was referring to some time back in this thread. I have caught bits of it earlier.

IIRC, Sivaji mentioned Charles Boyer's performance in Gaslight and annaiyin aaNai.

RAGHAVENDRA
17th November 2012, 08:03 PM
IIRC, Sivaji mentioned Charles Boyer's performance in Gaslight and annaiyin aaNai.

For Annaiyin Aanai, NT took inspiration from James Gagney (film not known - may be Angels with Dirty Faces / The Oklahoma Kid / Each Dawn I Die).

RAGHAVENDRA
17th November 2012, 08:16 PM
As mentioned in this thread sometime back, a DVD titled "Sarithira Nayakanin Ninaivugal" released by Jayam Audios, which contains NT's Malarum Ninaivugal.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/snnfw.jpg

P_R
18th November 2012, 10:12 AM
For Annaiyin Aanai, NT took inspiration from James Gagney (film not known - may be Angels with Dirty Faces / The Oklahoma Kid / Each Dawn I Die).

Yeah that was for the performance.
Here it is about plot similarities.
Boyer makes Ingrid Bergman think she is slowly slipping into madness.
In AA, Sivaji makes Savitri think she is being delusional when she (rightly) thinks he has her father in captivity.

Gopal.s
19th November 2012, 11:09 AM
http://rprajanayahem.blogspot.in/201...g-post_18.html
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை. ’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை.
’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை.
நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!!

பராசக்தி மூலம் புயலாக வீசி,
மனோகராவில்அசுரத்தனமாக ’குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே’ என்று சீறிய, சீரிய கலைஞன்.
உத்தம புத்திரனில் விந்தையான வேந்தனாக காட்டிய ஸ்டைல்!

’ராஜா ராணி’ படத்தில் சேரன் செங்குட்டுவனாக ஒரு lengthy single shot ல் மடை திறந்த வெள்ளம் போல பேசிய அடுக்கு மொழி வசனங்கள்.

எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.

குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்” என்ற குமுறல்.

வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.தங்கவேலு திகைத்து தவிக்கும்போது நம்பியார் ஒரு அடி பலமாக கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக சீர்காழியின் பாடல் ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.

கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்
உடல் நான் அதில் உரம் நீ
என உறவு கண்டோம் நேர்மையாய்
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்” ஆஅ ஆஅ ஆ...

இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.

”அன்பாலே தேடிய ” என்று அடி வயிற்றில் இருந்து குரல் எடுப்பது போல் பாவனை செய்வார்.

”மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையின் பொன்வண்ணம் கண்டான்”
இந்தப் பாடல் காட்சியை பார்க்கும்போது,அவர் வாயசைக்கும் நேர்த்தி பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது.
கைத்துப்பாக்கியை சுடுவதற்குத் தானே யாரும் பயன்படுத்த முடியும். எந்த நடிகனும் எத்தனை ஸ்டைலாக துப்பாக்கியைப்பிடித்தாலும் நோக்கம் சுடுவதாகத்தானே இருக்கும்.ஆனால் ஆவேசமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து,பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு,சுட வந்த கைத்துப்பாக்கி கொண்டு,கண்ணீரை துடைக்க முற்பட்ட ஒரே நடிகன் இந்த உலகத்திலேயே சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே! என்ன ஒரு கவிதாப்பூர்வம்!


”காதலிக்கிறேன் என்றாள்.அதன் பின் கல்யாண தேதி நிர்ணயித்தாள்.அதன் பின் காத்திருக்கிறேன் உங்களுக்காக என்று கை தேர்ந்த நாடகமாடினாள்.முடிவில் வாக்குத்தவறி விட்டாள்.வந்த வழியே செல்லுங்கள் என்றாள்.நடக்காது நம் கல்யாணம் என்று கூறி விட்டாள். கடைசியாகச் சென்று பார்த்தால் கல்நெஞ்சக்காரி கண்ணுறங்குகிறாள்!நம்பிக்கைக்கு துரோகமா? கல்யாணம் என்று மோசமா? கடைசியில் கண்ணுறக்கமா? ”ஆவேசமான கணேசனின் கணீர் என்ற குரல்...
இடி.. ..மின்னல்! இடி.. மின்னல்!
’ ராதா!ராதா!ராதா’என்ற கதறல்!
தொடர்ந்து டி.எம்.எஸ் பாடல்
’உன்னைச்சொல்லி குற்றமில்லை
என்னைச்சொல்லி குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி’

இன்றைக்கு அடிடா அவளை!ஒதடா அவளை!...
why this கொலவெறி..... என்று வந்த காட்சிகளுக்கெல்லாம் மூலம் இந்த ’குலமகள் ராதை’ தானே!

ஒரே நேரத்தில் உடலின் அத்தனை அங்கங்களையும் இயக்கி நடிக்கவைத்த கலைக்குரிசில் கணேசன்!

’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.

’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன்.

’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ என்ற வரிகளுக்கு முகத்தின் குளோஸ் அப் மூலம் அர்த்தம் சொன்ன கலை மேதை.

’நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா!
சட்டி சுட்டதடா கை விட்டதடா’

’நவராத்திரி’ நவரச நாயகன்.

சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா??

’நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் அரிதாரம் பூசாமலே ‘முத்துக்களோ கண்கள்!தித்திப்பதோ நெஞ்சம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை’ என்ற நெகிழ்ச்சி!

ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’

உயர்ந்த மனிதன் அவருக்கு 125 வது படம். 124 படங்களுக்குப்பிறகு புதிதான ஒரு பாத்திரத்தை எப்படி சித்தரிக்க முடிந்தது என்பதில் இருக்கிறது கணேசனின் சாதனை வீச்சு.

சுருக்கமாக ’செல்லும்’ இந்த வார்த்தைகளோடு கணேசன் நடித்த படங்களின் அத்தனைக்காட்சிகளும் முழுமையாக விரிகிற அதிசயம் நிகழ்கிறது.


1960களில் மேக்கப் இல்லாமல் வேட்டி சட்டை போட்டு நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு பொது நிகழ்வுக்கு வரும்போது முகவசீகரம்.
அந்த ஸ்பெஷல் கண்கள்! அந்த ஸ்பெஷல் மூக்கு!
அந்த அடர்ந்த இயற்கையான கேசம்! 70 வயதில் கொஞ்ச காலம் குடுமி கூட வைத்துக்கொண்டிருந்தார்!
ஃபுல் சூட் கனகச்சிதமாக பொருந்திய கணவான் கணேசன்.

ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.
’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர்.
நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை.
இமேஜ் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் இல்லாதஒரே ஹீரோ நடிகர்.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாஸ்டர் பிரபாகர் நடிகர் திலகத்தைப் பார்த்து ’டே சாப்பாட்டுராமா’ என்பான்!


ராஜராஜ சோழன் படத்தை விட்டுத்தள்ளிவிடலாம்.ஆனால் அப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம் இவர் வீசும் வார்த்தைகளை எடுத்துப்பாடும் காட்சி.

’தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்.
தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் மணக்க தாயென வந்தாள்

மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்

புலவரெல்லாம் எழுதி வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்...........’

’ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.

அவருடைய 24 வயதில் ஆரம்பித்து கடைசி வரை, முதுமை வியாதிகள் அவரை சித்திரவதை செய்த போதும் சிவாஜி கணேசன் ஷூட்டிங் என்றால் சம்பந்தப்பட்ட யூனிட் ஆட்கள் பதறி அடித்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே தயாராக வேண்டும்.முழு மேக்கப்புடன் ரெடியாக ஸ்பாட்டில் ‘என்னடா ! உங்களுக்கு இன்னும் விடியலயா?’ என்று குறும்பு பேசும் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்.

நேரில் சந்திக்கிற மனிதர்களை தன் கதாபாத்திரங்களுக்கு பிரதிபலிப்பார்.

’ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடலில் கடைசி ஸ்டான்சாவில் கிருபானந்த வாரியார் (இந்தப் பாடலில் அவருடைய நடை மற்றொரு விஷேசம்) ..கடலை சாப்பிடுகிற அழகு.

திருவருட்செல்வர் ‘அப்பர்’ பாத்திரத்திற்கு காஞ்சி பரமாச்சாரியாள்

காவல் தெய்வம் பட கௌரவ வேடத்திற்கு மதுரை செண்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம்

பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா( டி.வி.எஸ் )

தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு வால்டர் தேவாரம்


1994ல் ஜெமினியோடு நான் ஒரு சில மணி நேரம் இருந்த போது-
டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”

சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
“ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” ”உனக்குமா சாவு” “உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே!

Gopal.s
20th November 2012, 03:32 PM
I checked up the link and there are many articles on celebrities, including a few on NT. But apart from this, all the other articles are either in a way degrading or abusive towards NT's image and it was shocking and disturbing to any NT fan. Even when the author (I don’t exactly know who, but I suspect it could be Gnani, who is an ardent MGR devotee) tells about other movie personalities, he had to drag NT down in every single ones and tried to demean him in every possible way. Some of the comments he made, I have never even heard of and were more appropriate to MGR, rather than NT. The funny thing is that he even stated something like MGR’s facial expressions were superb in his songs!!?? He can worship MGR as his only idol as he likes but didn’t have to be that cheap to insult one of the world’s great actors, who is no more
Sasi,
It is a person called Raja nayahem and it is not gnani. Gnani is my very close friend and he is a great sivaji fan. Rajanayahem used to be MGR Fan during his formative years and he is a great admirer of sivaji.

IliFiSRurdy
20th November 2012, 08:32 PM


கோபால்,பிரபு,முரளி ஸ்ரீனிவாஸ்,பார்த்தசாரதி மற்றும் அனைத்து "தலைவர்" பக்தர்களுக்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கம்.நீங்கள் நடத்தும் இந்த வேள்வியில் எனக்கும் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பினை தந்தமைக்கு நன்றி.
அந்த பராசக்தியை வணங்கி பணியைத்துவங்குகிறேன்..அன்பன் Ganpat

Murali Srinivas
20th November 2012, 11:55 PM
கலைத்தாயின் தலைமகனாம் சரஸ்வதி கடாட்சம் பெற்றவனாம் உலக பெரு நடிகனாம் அனைத்து மக்களையும் நடிப்பு என்ற அஸ்திரத்தினால் கட்டிப் போட்டவனாம் நம் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒன்றினைத்தவனாம் அந்த நடிகர் திலகத்தின் புகழ் பாட வந்திருக்கும் புதுக் குயிலே! வேள்வியில் பங்கு பெற வந்திருக்கும் Ganpat என்ற கணேஷ் அவர்களே! நான் இங்கே புதிதாய் வரும் அனைவரையும் வரவேற்கும் அதே வரிகளை உங்களுக்கும் அளிக்கிறேன்.

நல்ல இடம் நீங்கள் வந்த இடம்!

வாருங்கள்! உங்கள் இனிய நினைவுகளை இங்கே அனைவருடனும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!


அன்புடன்

RAGHAVENDRA
21st November 2012, 08:07 AM


கோபால்,பிரபு,முரளி ஸ்ரீனிவாஸ்,பார்த்தசாரதி மற்றும் அனைத்து "தலைவர்" பக்தர்களுக்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கம்.நீங்கள் நடத்தும் இந்த வேள்வியில் எனக்கும் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பினை தந்தமைக்கு நன்றி.
அந்த பராசக்தியை வணங்கி பணியைத்துவங்குகிறேன்..அன்பன் Ganpat

புதியதாக இவ்விடத்தில் இணைந்திருக்கும் கணேஷ் / கண்பத் அவர்களை வருக வருக என வரவேற்கும்
ராகவேந்திரன்

parthasarathy
21st November 2012, 11:08 AM
அன்புள்ள திரு. கன்பத் (கணபதி?) அவர்களே,

வருக, வருக, நடிகர் திலகத்தினைப் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களையும், அனுபவங்களையும் அள்ளித்தருக!

உங்கள் பெயரைப் பார்த்தவுடன் (கன்பத்) இரண்டு விஷயங்கள் உடனே நினைவில் வந்தன. ஒன்று, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் இருந்த பழைய ஹோட்டல்; மற்றொன்று, "தெய்வ மகன்" படத்தில் நாகேஷ் மாறு வேடம் அணிந்து வந்து கூறும் பெயர். அதை, நடிகர் திலகம் "ஹ ஹா ஹ ஹா! கன்பட்! கண்ணு பட்டுப் போற மாறி ஜோசியம் சொல்ற மேன்" என்று சொல்லும் வசனம்!

மீண்டும் வருக வருக என வரவேற்கும்,

இரா. பார்த்தசாரதி

HARISH2619
21st November 2012, 01:36 PM
A very warm welcome to mr ganpat.

IliFiSRurdy
21st November 2012, 09:33 PM
என்னை அன்புடன் வரவேற்றிருக்கும் குருமார்கள் முரளி ஸ்ரீனிவாஸ்,பார்த்தசாரதி,ராகவேந்தர்,ஹரிஷ் ஆகியோருக்கு என் நன்றி கலந்த வணக்கம்.

கவிச்சக்ரவர்த்தி கம்பர் தன் ராமகதையை ஆரம்பிக்கும் முன் சொல்வார்.
"நான் ராமனுடைய வரலாற்றையும் பெருமைகளையும் எடுத்துக்கூற முனைந்திருப்பது,பாற்கடலின் முன் நிற்கும் ஒரு பூனை, அந்த பால் அனைத்தையும் நக்கிக்குடித்துவிடலாம் என்று எண்ணுவதற்கொப்பாகும்."

கவிச்சக்ரவர்த்தியின் நிலையே அதுவென்றால்,இந்த Ganpat இன் நிலையை சொல்லவும் வேண்டுமோ?

நடிப்பின் மனித உருவான நம் சக்ரவர்த்தி, ஏதோ நடிக்க ஆரம்பித்த 10 அல்லது 20 ஆவது படங்களில் தன் முத்திரையை பதிக்க ஆரம்பித்தாரா என்றால், அதுவும் இல்லை.உலகின் வேறு எந்த நடிகனுடைய அறிமுக படத்தைப்பார்த்தாலும் இது அவர் முதல் படம் என்று சொல்லி விடலாம்.ஏதேனும் ஒரு சிலரின் நடிப்பு, இது இவர்களது மூன்றாவது அல்லது நான்காவது படமோ என எண்ணத்தோன்றும்.ஆனால் பராசக்தியைப்பார்த்தால் இது தலைவரது 300 ஆவது படம் என சொல்லிவிடலாம்.


திரையில் censor certificate தெரிகிறது ..சரியாக 9 நிமிடம் 49 வினாடிகளில் ஒரு கோடி சூரியன் உதிக்கிறது.அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு முதல் நூறு ரேங்க் அபேஸ்.என்ன ஒரு சரள/சகஜ நிலை!(fluency).அந்த பேங்க் சீன்!! தமிழ் திரை முதன் முதலில் உடல் மொழி என்பது என்ன என கண்டறிகிறது."இவா ஊதினா, அவா வருவா" போன்ற வசனங்கள் forever விடைபெற்றுக்கொள்கின்றன.
யார் இவர்?இவர் உதடுகள் மட்டும் பேசவில்லை.
கண்கள்,விரல்கள்,கால்கள்,குரல்,மூச்சு அனைத்தும் பேசுகின்றன.
அவர் ஆள்காட்டிவிரல் காதலிக்கிறது,
கட்டளையிடுகிறது,
மிரட்டுகிறது,
அலட்சியப்படுத்துகிறது..
எதை சொல்வது?
எதை விடுவது?

மும்பையில் கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதி மலபார் ஹில்ஸ் ..இங்கு புதிதாக குடியேறிய ஒரு புதுபணக்காரர் தன் பெருமையை அக்கம்பக்கத்தாருக்கு தெரிவிக்க விரும்பி அடுத்த வீட்டுக்காரரிடம் சென்று "ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை இருக்குமா?: என வினவ அவர்"நீங்கள் இந்த பகுதிக்கு புதிதோ?" என பதிலுக்கு கேட்க ,இவரும் "எப்படி கண்டுபிடித்தீர்கள்?" என,அவர் "இங்கே ஆயிரம் ரூபாயைத்தான் நாங்கள் சில்லறை என்போம்"என்றாராம்.
பம்மலார்,ராகவேந்தர்,வாசுதேவன்,முரளி,பார்த்தசாரதி,க ோபால்,பிரபு போன்ற giants இடம் ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை கேட்கும் என்னை பொறுத்தருளவும்.
இதில் என்னை floor செய்தது பிரபுதான்..அவருடைய தேவர்மகன் Thesisஐப் படித்துவிட்டு 'பலேபாண்டியா' விஞ்ஞானி சங்கர் ரேஞ்சிற்கு ஒருவரை கற்பனை செய்துகொண்டுபோனால், அவரோ 'தெய்வமகன்' விஜய் போல இருக்கிறார்.

தலைவர் புகழ் பாடி முடிக்கிறேன்:

நீங்கள் சிம்மாசனம் ஏற 25 ஆண்டுகள் ஆனது
உங்கள் ஆட்சி 50ஆண்டுகள் நீடித்தது
தமிழர்கள் மனமெனும் சிம்மாசனத்திலோ உங்களுக்கு நிரந்தர இடம்.

குணசேகரன் எழுந்துகொள்ளும் போதுதான் திரையுலகமே எழுந்துகொண்டது.

நீங்கள் நடிக்கவேயில்லை பலபிறவிகள் எடுத்தீர்கள்
கட்டபொம்மனாக,வ.உ.சி யாக,தெய்வமாக,மன்னனாக,
செல்வந்தனாக ஏழையாக,மாணவனாக,இளைஞனாக முதியவனாக,அழகனாக,குரூபியாக,…

இப்பொழுதும் வாழ்கிறீர்கள்
நடிப்பிற்கே ஒரு அளவுக்குறியீடாக!

நீங்கள் திலகமாக நெற்றியில் வீற்றிருந்தீர்
இப்போழுதுதான் ஒருவர் கழுத்துக்கே வந்துள்ளார்.

என் வம்சாவளியில் ஒருவன் பெருமை பேசுவான்
என் பாட்டனின், பாட்டனின்……… பாட்டன்
இவரை நேரில் சந்தித்திருக்கிறார் என்று!

வாழ்க நீவிர் புகழ்!

RAGHAVENDRA
21st November 2012, 10:17 PM
பராசக்தியால் கலக்கிய அந்த கணேசனைப் பற்றி அதே பராசக்தியால் கலக்குகிறார் இந்த கணேசன் ....


சரியாக 9 நிமிடம் 49 வினாடிகளில் ஒரு கோடி சூரியன் உதிக்கிறது.அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு முதல் நூறு ரேங்க் அபேஸ்

பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வரிகள் ...

JamesFague
22nd November 2012, 10:06 AM
That First rank is forever to Our NT.

Gopal.s
22nd November 2012, 02:07 PM


கோபால்,பிரபு,முரளி ஸ்ரீனிவாஸ்,பார்த்தசாரதி மற்றும் அனைத்து "தலைவர்" பக்தர்களுக்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கம்.நீங்கள் நடத்தும் இந்த வேள்வியில் எனக்கும் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பினை தந்தமைக்கு நன்றி.
அந்த பராசக்தியை வணங்கி பணியைத்துவங்குகிறேன்..அன்பன் Ganpat
Welcome sir.

eehaiupehazij
22nd November 2012, 02:43 PM
NT remains for global record as the one and only actor who got a shot to fame overnight as a hero in his maiden movie itself, Parasakthi. There upon no looking back. He donned the acting kingdom over 50 years live and even after his death by karnan's stupendous success, as an everlasting hero in the hearts and minds of millions and generations to come. All others MGR or Rajini or Kamal....or the Hollywoods ace stars like Sean Connery OO7... noone has this unique distinction since they had to strive hard step by step over years to reach their peaks. Sivaji's peak is the peak of all these peaks.His first film itself ran for more than 200 days and NT immediately became the icon to follow for aspiring actors including Hindi heroes like Sanjeev Kumar who openly admitted that he had an exclusive library of NT movies to shape up his acting career. Parasakthi till today remains the NT movie for his inimitable style of acting with originality to the core, embraced by youthfulness and energy.

JamesFague
22nd November 2012, 03:43 PM
Mr Senthil Sir,

It is an unbreakable world record which no other actor can think of it.

Murali Srinivas
23rd November 2012, 12:32 AM
Dear Sasi, Gopal and those who had wanted links to the reviews of NT films done by me, here it is. The initial period will have reviews in English and later all reviews would be in Tamil.

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)/page53 Iru Malargal

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=253687#post253687 Nenjirukkum Varai

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)/page69 Amara Deepam

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)/page82 Mohanlal on NT

[Read the Tamil translation of the above post done by Joe in the next page after this.

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)/page91 Uthama Puthiran

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)/page102 Koondu Kili

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)/page106 Bale Pandiya

http://www.mayyam.com/talk/showthread.php?5865-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-(Part-3)&p=265378#post265378 Padikkadha Medhai

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page24 Andavan Kattalai

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page27 Kulamagal Radhai

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page33 Ratha Thilagam

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page44 Chittor Rani PAdmini.


http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page46 Neela Vanam

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page50 Pesum Deivam

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page60 Mahakavi Kalidas

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5&p=423807#post423807 Kai Kodutha Deivam

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page88 Thangai

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page139 En Thambi

http://www.mayyam.com/talk/showthread.php?7207-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-5/page146 Thirudan

http://www.mayyam.com/talk/showthread.php?8234-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-6/page118 Vilayaattu Pillai

http://www.mayyam.com/talk/showthread.php?9590-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-7/page74 Annaiyin Aanai

http://www.mayyam.com/talk/showthrea...-Part-7/page91 Selvam

http://www.mayyam.com/talk/showthread.php?9590-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-7/page101 Lakshmi Kalyanam

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page18 Enga Oor Raja

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page89 Pennin Perumai

Will try to provide links for other posts also.

Regards

IliFiSRurdy
24th November 2012, 09:32 PM
Dear Shri.Murali,

#1293

என்ன ஒரு பக்தி! சிரத்தை! ஆர்வம!! ஆராய்ச்சி!!! உழைப்பு!!!!

நிஜமாக சொல்கிறேன் ..எனக்கு கீபோர்டு முன் போவதற்கே பயமாக உள்ளது.சங்கோஜமாக உள்ளது.

தலைவரின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

அன்புடன்,
Ganpat

IliFiSRurdy
24th November 2012, 10:39 PM
உண்மைதான் Mr.vankv..தலைவர் also had a soft corner for Shri.Balaji.கேள்விப்பட்ட ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது..

namakaraam என்ற ஹிந்தி படத்தை தமிழில் எடுக்க திட்டமிட்டு தலைவரை சந்தித்தார் பாலாஜி.கதையை கேட்டு விட்டு தலைவர்,இன்னொரு கதாநாயகனாக யாரை போடப்போகிறாய் என கேட்க,பாலாஜியும் ஒருவர் பெயரை சொல்லி இது உங்கள் இருவர்க்குமே எழுதப்பட்ட கதை போல உள்ளது என இழுத்தாராம்.பெரிதாக சிரித்த தலைவர்,"ஏன்டா படவா,ஒரே படத்தில் அத்தனை பணத்தையும் சம்பாதித்துவிடலாம் என பேராசையா?"என்று சொல்லி முடிவில் திரு.ஜெமினிகணேசனை அந்த வேடத்தில் போடலாம் என முடிவு எடுத்ததாக சொல்வார்கள்.
(பாலாஜி நினைத்த அந்த நடிகர் யார் என நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை)

joe
24th November 2012, 10:42 PM
சிங்கப்பூர் முஸ்தபா சென்டர் - Top seller DVD

1978


பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல :smokesmile:

Karikalen
25th November 2012, 08:09 PM
http://tamil.oneindia.in/movies/news/2012/11/vasantha-maligai-storm-theatres-again-165174.html

Great feast for Chennai fans

Best wishes

RAGHAVENDRA
26th November 2012, 06:43 AM
Times of India online coverage

http://timesofindia.indiatimes.com/city/chennai/Revisit-Vasantha-Maligai-on-Dec-7/articleshow/17367805.cms

(online edition)



CHENNAI: The trend of digitally restoring old movies is growing to cater to audiences with retro taste and to introduce the younger generation to some of cinema's classics that were hitherto buried in archives and brought out from time to time during film festivals.

A digitally restored version of 'Vasantha Maligai', a romantic hit featuring Tamil cinema icon Sivaji Ganesan, will be re-released across Tamil Nadu on December 7. P Srinivasan of Sai Ganesh Films who has just finished the restoration work at a cost of 10 lakh, says he is happy to bring the movie alive on digital restoration cinemascope. "We have been planning to restore Sivaji Ganesan's hit movies for a long time. The new generation is not aware of the talents of yesteryears. So we have restored the film mainly for the youngsters," said Srinivasan.

Directed by K S Prakash Rao, 'Vasantha Maligai', a remake of the Telugu film 'Prem Nagar", was released in 1972. With Sivaji Ganesan and Vanisree in lead roles, the movie ran continuously for 750 days in theatres. Apparently, producer D Ramanaidu also made the movie in Hindi titled 'Prem Nagar' which was released in 1974. While Akkineni Nageswara Rao and Vanisree played the lead roles in Telugu, Rajesh Khanna and Hema Malini did the same in Hindi.

It took more than five months to complete the project. "I worked hard on the negatives of the film. There were black marks and lines and some were difficult to restore. We spent time on each and every detail. And the result was positive," said Srinivasan.

Even though the restoration trend in Tamil cinema began earlier this year with 'Karnan', another Sivaji hit, the crew who finished the project under Srinivasan is optimistic about restoring more old movies. "The young generation is very keen on old movies. That doesn't mean they will sit and watch the old prints. We have to serve them old wine in new bottle. If you restore it digitally, they will like it. And that's the trend now," said D V Murali, a distributor of the digitally restored 'Vasantha Maligai'. The movie will be released all over Tamil Nadu. "There are some other films of Sivaji Ganesan in our list. We will do it in the coming months," he adds.

'Vasantha Maligai' had hit songs like 'Oru Kinnathai' (T M Soundararajan) and 'Kudimaganey' (T M Soundararajan, L R Eswari). "We have given a digital mix to the songs too. The new technique will add clarity to the music composed by veteran music director K V Mahadevan," said Srinivasan.

Murali Srinivas
27th November 2012, 12:39 AM
நேற்று மாலை நமது NT FAnS அமைப்பின் சார்பாக ஆலய மணி. என்ன சொல்வது! எப்படி சொல்வது! அப்படி ஒரு ஆனந்த அனுபவம். நிறைய மனிதர்கள் அதிலும் ரசிப்பு தன்மையுடைய கலா ரசிகர்களோடு பார்த்ததை மறக்கவே முடியாது. காட்சிக்கு காட்சி ரசிப்பு! கைதட்டல்! ஆரவாரம்!. எனக்கு மட்டும்தான் இந்த மாதிரியா என்று பார்த்தால் வந்திருந்த அனைவருமே ஒரே ஸ்வரத்தில் தங்கள் பாராட்டை தெரிவித்து விட்டு இது போன்ற படங்களை [லிஸ்ட் வேறு கொடுத்தார்கள்] தொடர்ந்து திரையிடுங்கள் என சொல்லி விட்டு சென்றனர். இன்று நேரில் பார்த்த இரண்டு நண்பர்கள் மற்றும் அலைபேசியில் தொடர்பு கொண்ட சாரதி, கோபால் மற்றும் ராகவேந்தர் சார் ஆகியோரும் இதைப் பற்றியே பேசினார்கள். ஆகா நான் மட்டும் அல்ல அனைவருக்குமே அந்த hang over தான் என்பது தெளிவானது.

நண்பர் சாரதியோடும் ராகவேந்தர் சாரோடு பேசும் போதும் நான் குறிப்பிட்ட விஷயம் ஒன்று உண்டு. சின்ன வயதில் பார்த்த போதும் படம் பிடித்தது. ஆனால் அப்போது பிடித்த காட்சிகள் வேறாக இருந்தது. கலூரியில் பயிலும் காலகட்டத்தில் வேறு சில காட்சிகள் கவர்ந்திழுத்தன. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து வேறு சில காட்சிகள் வியப்பை அளித்தன. இப்போது பார்க்கும் போது அப்படி தனி தனி காட்சிகளாக இல்லாமல் முதலிருந்து கடைசி வரை ஒவ்வொரு frame-மும் எப்படி செதுக்கப்பட்டிருகின்றன.என்பதை தெளிவாக உணர முடிந்தது. சிறிது கூட தொய்வில்லாத திரைக்கதை, அருமையான வசனங்கள், தேன் கிண்ணத்தில் தோய்க்கப்பட்ட பாடல்கள் என்று படம் பல்சுவை விருந்தாக அமைந்திருந்தது.

ஒரு ராயல் family-யில் பிறந்த மனிதனின் ஒவ்வொரு குணாதிசயத்தையும் அப்படியே கண் முன் கொண்டு நிறுத்திய இந்த மனிதனை பற்றி என்னவென்று சொல்வது? வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அந்த நடிப்பு அனுபவத்தை உணர்ந்துதான் பார்க்க வேண்டும்! ஸ்டைலிஷ் என்று சொன்னால் இது ஸ்டைலிஷ்!

ஒன்று நிச்சயமாக சொல்ல முடியும்! இந்த படம் இப்போது மீண்டும் டிஜிட்டல் மெருக்கேற்றப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்படுமேயானால் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பது திண்ணம்!

அன்புடன்

Murali Srinivas
27th November 2012, 12:51 AM
ஜோ,

தமிழகத்தில் மட்டுமல்ல எங்கெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்கிறதோ அங்கெல்லாம் கர்ணன் தான் முதலிடம் வகிப்பார் என்பதற்கான சிறு ஆதாரம்தான் இது. நான் ஒன்றின்றண்டு மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தது இதைதான். கர்ணன் மெருகேற்றப்பட்டு வெளியாகி 150 நாட்கள் ஓடிய பிறகும் டிவிடி விற்பனையில் முதலிடத்தில் இருப்பது கர்ணன்தான் என்பதை டிவிடி கடைகளில் உள்ள விற்பனையாளர்களிடம் பேசும் போது தெளிவாகிறது. அதில் வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால் பெரும்பாலான படங்களின் விலை 30 ரூபாய் 40 அல்லது ரூபாய் என வைத்து விற்கப்படுகிறது. ஆனால் கர்ணன் டிவிடி மட்டும் 219/- ரூபாய் விலை. ஆயினும் விற்பனையில் அதுவே நம்பர் 1. இரண்டாவது இடத்தை திருவிளையாடல் படமும் மூன்றாவது இடத்தை கௌரவமும் தக்க வைத்திருகின்றன.

அன்புடன்

RAGHAVENDRA
27th November 2012, 02:43 AM
நேற்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ள செய்திக் குறிப்பு .. இணைய தள இணைப்பு ..

http://cinema.dinamalar.com/tamil-news/9578/cinema/Kollywood/Sivajis-Vasantha-Maliigai-digitalised.htm

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_121125141827000000.jpg


மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் வசந்த மாளிகை படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. சிவாஜி கணேசன் - வாணிஸ்ரீ ஜோடியாக நடித்து 1973ல் ரிலீசான படம் வசந்த மாளிகை. டைரக்டர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். டி.ராமாநாயுடு தயாரித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மயக்கம் என்ன, கலைமகள் கைப்பொருளே, இரண்டு மனம் வேண்டும், யாருக்காக, ஒரு கிண்ணத்தில் ஏந்துகிறேன் ஆகிய அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள். படம் ரிலீஸ் ஆன நாட்களில் பட்டி தொட்டி எங்கும் கலக்கின.

இந்த படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர். ஏற்கனவே திருவிளையாடல், ராஜ ராஜ சோழன், கர்ணன் உள்ளிட்ட பல சிவாஜி படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆனது. பாசமலர் படமும் மீண்டும் வருகிறது என்பது கூடுதல் தகவல்.


இதனுடைய அச்சு வடிவத்தின் நிழற் பிரதி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/dinamalar261112.jpg

RAGHAVENDRA
27th November 2012, 03:03 AM
ஆலயமணி ...

ஒவ்வொரு காட்சியிலும் நடிகர் திலகத்தின் CLASS மிளிரும் படம். சென்னை நகரைப் பொறுத்த மட்டில் முற்பகல் அல்லது நண்பகல் காட்சி எனப்படும் NOON SHOW என்ற concept ஐ துவக்கி வைத்தது ஆலயமணி தான். சென்னை ஸ்டார் திரையரங்கில் - தற்போது அத் திரையரங்கு செயல்படவில்லை - நண்பகல் காட்சியாக ஆலயமணி திரையிடப் பட்டு அனைத்து நாட்களிலும் வெற்றிகரமாக நடை போட்ட படம். இதனைத் தொடர்ந்து படிப்படியாக அனைத்துத் திரையரங்குகளும் இந்த நேரத்தில் படங்களைத் திரையிட ஆரம்பித்தன. பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் வகுப்பிற்கு கட் அடித்து விட்டு சினிமா செல்ல வசதியாக அமைந்தது இந்த நண்பகல் காட்சி. குறிப்பாக தாய்மார்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் இந்த காட்சி நேரம். ஆலயமணி படம் நண்பகல் காட்சியில் பெற்ற வெற்றியே இன்று இந்த நண்பகல் காட்சி பிரம்மாண்ட வெற்றியடைய அடிகோலியது என்றால் மிகையில்லை. எனக்கு வீட்டிலிருந்து 15 நிமிட தூரம் என்பதால் பெரும்பாலான நாட்களில் மக்களின் வரவேற்பைக் காண்பதற்காகவே போவோம். 100 பேர் ஆடியன்ஸ் என்றால் கிட்டத்தட்ட 60 முதல் 65 வரை பெண்கள் இருப்பார்கள். அப்போது இந்த க்ரேஸை வைத்து சூரியகாந்தி படத்தில் மனோரமாவின் கதாபாத்திரத்தை அமைத்திருந்தார்கள் என்றால் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

படத்திற்கு வருவோம். உண்மையாகவே நானாக இருந்தாலும் சரி, என் வயதையொத்த எந்த ரசிகராயிருந்தாலும் சரி, அன்று நாங்கள் பார்த்ததை விட பற்பல மடங்கு அதிக ரசிப்புத் தன்மையோடு இன்று நடிகர் திலகத்தைப் பார்க்கிறோம் என்பதே உண்மை. அப்போதைய வேகம் வேறு இன்று நிதானமாக ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும் போது கலை சிற்பி என்று தான் நடிகர் திலகத்தைக் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் என்ன ஒரு Finishing, Perfection, Landing, Take off என்று நுணுக்கமாக செய்துள்ளார். காட்சியை முடிக்கும் போது அதனை சரியான முறையில் landing செய்வது ... அதே போல் துவக்கத்தின் போது take off செய்வது என்று Perfection தான். ஒரு காட்சியில் அவர் நுழைகிறார் என்றால் விமானம் take off செய்யும் ஒரு ஆளுமையோடு தான் நுழைகிறார். அதே போல் காட்சி முடிகிறது என்றால் ஒரு விமானம் தரையிறங்கும் போது ஏற்படும் ஒரு சிறிய அதிர்வை ஏற்படுத்தி விட்டுத் தான் முடிக்கிறார்.

குறிப்பாக அந்த வீரப்பாவிற்கு உதவும் காட்சி. தன்னுள் இருக்கும் மிருக உணர்வை வென்று விட்டேன் என்கிற பெருமையோடு - அதே சமயம் தொடர விருக்கும் காட்சியில் அதே மிருகம் தலைதூக்கும் உணர்வை அறியாதவராய் - ஆல்பத்தை எடுத்துக் கொண்டே மன நிறைவோடு இறங்கி வந்து சோபாவில் அமரும் வரை இருக்கும் ஒரு திருப்தியான உணர்வினை வெளிப்படுத்தும் முகம் ... ஆல்பத்தில் அந்த சிறுவனின் நிழற்படத்தைப் பார்த்த வுடன் அப்படியே மாறுவது குறிப்பிடத் தக்க காட்சி. தன்னால் அந்த சிறுவன் மரணமடைந்து விட்டானே என்கிற குற்ற உணர்ச்சியும் அதே சமயம் அதற்கு நியாயம் கற்பிப்பது போல் அந்த சிறுவனை பழி வாங்கி விட்டோமே என்று சிறு வயதில் ஏற்பட்ட ஒரு அல்ப சந்தோஷம் இன்னும் தொடரும் உணர்ச்சியும் ஒரு சேர வெளிப் படுத்தி அதனை அந்தக் குரலில் கொண்டு வந்து நம்மை அப்படியே மூழ்கடிக்கும் காட்சி ...

உமக்கு யாரய்யா இதையெல்லாம் சொல்லித் தந்தார்கள் ..
எந்த film institute இதையெல்லாம் போதித்தது ...

என்று தான் கேட்கத் தோன்றுகிறது .

விக்ரகமாய் பிரதிஷ்டாபனம் செய்து கோயில் கட்டி நித்ய பாராயணம் செய்து உம்மை வழிபட்டு வந்தால் சிலை கூட நடிக்கத் தொடங்கி விடும்.

ராகவேந்திரன்

JamesFague
27th November 2012, 11:47 AM
NT sylish in not only Alayamani but also in Raja, En Thambi, Deiva Magan etc
Other name of Sylish = NT

Murali Srinivas
2nd December 2012, 11:49 PM
இன்று மாலை முரசு தொலைக்கட்சியில் தியாகம் சிறிது நேரம் பார்க்க முடிந்தது. படத்தைப் பார்த்தபோது மனம் 1978 மார்ச் 4-ந தேதிக்கு பறந்து சென்றது. அன்றைய தினம் முதல் அதே வருடம் ஆகஸ்ட் 25 வரை மதுரை சிந்தாமணியையே சுற்றி சுற்றி வந்தது. பல பல இனிமையான நினைவுகள் அலை மோதின.பல பல நண்பர்களும் நினைவிற்கு வந்தனர்.படம் முழுமையாக பார்க்க முடியாவிட்டாலும் கூட வசந்த கால கோலங்கள், தேன் மல்லி பூவே மற்றும் நல்லவர்க்கெல்லாம் பாடல் காட்சிகளை மிஸ் பண்ணாமல் பார்த்தேன். நேரம் கிடைக்கும்போது அந்த பழைய இனிமையான நினைவுகளை எழுதுகிறேன்.

அன்புடன்

kaveri kannan
10th December 2012, 03:02 AM
அணிந்திருக்கும் சட்டை காலர் கூட நடிக்கும், அலைபாயும் நெற்றிகேசமும் நடிக்கும் என்பதை நல்லவர்க்கெல்லாம் பாடல் காட்சியில் காணலாம்..

தமிழரின் பெருமைமிகு அடையாளம் நம் நடிகர்திலகம்.

அவர் நினைவேடுகளை இணைய உலகில் சேமித்துச் சுவைக்கும் அனைத்து நல்லவர்க்கும் என் அன்பும் நன்றியும் பாராட்டும் ஊக்கமும்

JamesFague
10th December 2012, 10:26 AM
Mr Kaveri Kannan

Not his shirt collor our NT's nails also will act. Yesterday watched Needihi one of the finest Movie but
unfortunately the channel people have not shown the most popular song " Nalai Mudhal ". Our NT movies
are watchable not only today even after 1000 years.

joe
10th December 2012, 11:11 AM
what happened to Vasantha maaligai release?

JamesFague
10th December 2012, 11:22 AM
Mr Joe Sir,

The distributors have not obtained the revised Censor Certificate. the film
release has got delayed. Now they are on the job and hopefully everything
will end smoothly.

joe
10th December 2012, 01:45 PM
Mr Joe Sir,

The distributors have not obtained the revised Censor Certificate. the film
release has got delayed. Now they are on the job and hopefully everything
will end smoothly.

Thanks for the update :thumbsup:

KCSHEKAR
10th December 2012, 02:49 PM
தமிழ்த் திரையுலகம் உயிரோட்டமாக உலவ ஆரம்பித்தது 1952-ல்தான். ஆம், பராசக்தி-யின் விஜயம்தான் தமிழ்த் திரையுலகைப் புத்துணர்ச்சி பெறவைத்தது.
பராசக்தி திரைப்படத்தின் வைரவிழா நிறைவை வரும் ஜனவரி 6-ஆம் நாள், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் மதுரையில் கொண்டாடவுள்ளோம்.
நண்பர்களின் ஆத்ரவையும், ஆசியையும் நாடுகிறேன்.

அழைப்பிதழ் இணைப்பு:
http://www.facebook.com/photo.php?fbid=235064569958356&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

http://www.facebook.com/photo.php?fbid=235064913291655&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

J.Radhakrishnan
10th December 2012, 10:13 PM
அணிந்திருக்கும் சட்டை காலர் கூட நடிக்கும், அலைபாயும் நெற்றிகேசமும் நடிக்கும் என்பதை நல்லவர்க்கெல்லாம் பாடல் காட்சியில் காணலாம்..

தமிழரின் பெருமைமிகு அடையாளம் நம் நடிகர்திலகம்.

அவர் நினைவேடுகளை இணைய உலகில் சேமித்துச் சுவைக்கும் அனைத்து நல்லவர்க்கும் என் அன்பும் நன்றியும் பாராட்டும் ஊக்கமும்

டியர் காவேரிகண்ணன்,

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு தங்களின் பதிவு! இவ்வளவு நாள் எங்கு சென்றிருந்தீர்கள்?

kaveri kannan
11th December 2012, 12:20 AM
டியர் காவேரிகண்ணன்,

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு தங்களின் பதிவு! இவ்வளவு நாள் எங்கு சென்றிருந்தீர்கள்?அன்பு ராதா அவர்களே...

சத்தமின்றி எட்டிப்பார்த்தால் எவர் கண்டுகொள்ளப்போகிறார் என எண்ணி இருந்தேன்..

எம் நடிகர்திலகம் இரசிகர் குழாம் எதிலும் வித்தியாசமல்லவா?

சித்ரா அரங்கில் புதிய பறவை 40 வது முறையாய் 1980-களில் பார்த்தது - படம் பார்க்கவா? படம் பார்க்கவந்த சக பக்தர்களின் ஆராதனை மனோற்சவத்தில் கலந்து கரையவா?

உயர்ந்த மனிதன் இடைவேளையில் அப்போதுதான் சந்தித்த சக இரசிகருடன் ஆதிக்கால நட்புணர்வுடன் அந்த மேதையைப் பற்றி சிலாகிக்க அல்லவா 20 வது முறை சென்றது?

சிவாஜி இரசிகன் என்பது ஒரு நெறி.. ஒரு மனோ இயக்கம்..

அதனால்தான் சட்டென என் வரவைக் டு இந்த ஒரு பதிவு..

தொழிலும் அதன் சார்ந்த நெறிவுமாய் பலகாலம் இப்பக்கம் வாராமல்..


தாய்மடி போல் தேடிவந்தேன் மீண்டும்..

படிக்கும் பதிவெல்லாம் பரவசம் தரும் அனைவருக்கும் என் இதய நன்றி..


இன்னும் சில மாதங்களில் நிரந்தரமாய்ச் சென்னை வந்துவிடுவேன்..
எல்லாரையும் கண்டு அளவளாவி படங்கள் கண்டு அலசிப்பேசி மகிழ ஆசையுடன்...

உங்களில் ஒருவன்...