PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 10



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17

Murali Srinivas
11th December 2012, 01:02 AM
காவேரி கண்ணன் அவர்களே! நடிகர் திலகத்தின் நிரந்தர ரசிகரே! உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்!

விரைவில் மீண்டும் நீங்கள் சென்னை வாசியாக எங்களது வாழ்த்துகள்!

ஜோ/வாசுதேவன்,

வசந்த மாளிகையின் மறு வெளியீடு தாமதமானதற்கு தணிக்கை சான்றிதழ் காரணமல்ல. இப்போது தமிழ் படங்களுக்கு வரிவிலக்கு கொடுப்பதா வேண்டாமா என்பதனை முடிவு செய்வது ஒரு குழுதான். பழைய படமாக இருந்தாலும் புதிய படம் போல ஸ்கிரிப்ட் உட்பட அனைத்தையும் முறையாக விண்ணப்பத்துடன் இணைத்து அந்த குழுவிடம் அளிக்க வேண்டும். ஒரிஜினல் ஸ்கிரிப்ட் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமே வெளியீடு தள்ளி போனதற்கு காரணம். அடுத்த இரண்டு வாரங்களில் பல புதிய திரைப்படங்கள் வெளி வருவதால் வசந்த மாளிகை டிசம்பர் 28 அன்று வெளியாகலாம்.

அன்புடன்

ஜோ,

டிசம்பர் 28 நாஞ்சில் நகரில் இருப்பீர்களா?

joe
11th December 2012, 09:27 AM
ஜோ,
டிசம்பர் 28 நாஞ்சில் நகரில் இருப்பீர்களா?
இருப்பேன் .. அடுத்த நாள் தான் கிளம்புகிறேன்.

RAGHAVENDRA
11th December 2012, 04:34 PM
NT'S GLOBAL REACH - WHAT A GLORIOUS MOMENT !

Dear friends,
It will be a great moment to cherish.
A Distinguished Foreign Academician is to be honoured in the name of Nadigar Thilagam Sivaji Ganesan ...
It's really a great beginning for the glories / encomiums to come on Sivaji Ganesan.
The Russian Centre of Science and Culture, Chennai, as writer D. Jayakanthan as its President, celebrates its 40th anniversary and as a part of the celebrations awards are instituted to be conferred on eminent academicians/ personalities. For the first time, an International Award is instituted in the name of Nadigar Thilagam Sivaji Ganesan and the receipient is also a foreign national, viz. Russia.
Mr. Fyodor Rozovsky, Counsellor, Head of the Cultural Department of Embassy of Russian Federation in India, is chosen for the prestigious
NADIGAR THILAGAM SIVAJI GANESAN AWARD.

The image of the invitation is produced below which is for information purpose. Details for invitations are given in the banner image of our nadigar thilagam website which is also reproduced below. Please be present without fail.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rcscforinvite.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ntsitewelcomebnrfw.jpg

IliFiSRurdy
12th December 2012, 08:33 AM
தலைவர் ரசிகர்களுக்கு என் வணக்கம்..

உலக சினிமா என்ற தலைப்பில் திரு எஸ் ராமகிருஷ்ணன் நிகழ்த்திய பேருரைகளின் இறுதி நாளில் "சார்லி சாப்ளின்" பற்றி அவர் சுமார் இரண்டு மணி நேரம் பேசினார்.நன்றாக இருந்தது.(என்னால் இந்த ஒரு நாள் மட்டும்தான் போக முடிந்தது)

ஆனால்,
ஆனால்...
நம்,பிரபு,ஸ்ரீனிவாஸ்,கோபால்,ராகவேந்தர்,பார்த்தசாரத ி போன்றோர் எழுதும் விமரிசனங்களின் ஆழத்தோடும்,கூர்மையோடும் ஒப்பிட்டால் இந்த பேருரை மிக சாதாரணம் என்பது என் துணிபு.
The opposite of Best is good எனும் வாக்கியத்தின் பொருள் இதுதான்.
உலகின் மிகச்சிறந்த கலைஞரின் பரம ரசிகராக இருக்கும் தகுதி ஒன்றே,
அந்த ரசிகரையும் உலகின் மிகச்சிறந்த ரசிகராகவும்,விமரிசனராகவும்
ஆக்கிவிடுவது தெளிவாகிறது.

பன்னிரண்டு கை வேலவனைப்பெற்றவனை, நமக்கு திரையில் காட்டிய,
அந்த பரமேஸ்வரனின் பாதம் வணங்க,இந்த 12-12-12 ஐ விட
வேறு ஒரு சரியான நாள் கிடைக்குமா என்ன?

sankara1970
12th December 2012, 12:03 PM
best wishes on the occasion of award in the name of NT-it's celebration time!

Murali Srinivas
13th December 2012, 11:37 PM
தியாகம் - சில நிகழ்வுகள்! சில நினைவுகள்! -Part I

தியாகம் படம் 1977 அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டது. வழக்கம் போல் 1978 ஜனவரி 26-ந தேதி வெளியிடலாம் என்று பாலாஜி பிளான் செய்தார். ஆனால் அண்ணன் ஒரு கோவிலுக்கு முன்பாகவே படப்பிடிப்பை ஆரம்பித்து விட்ட முக்தா ஸ்ரீனிவாசன் தன அந்தமான் காதலியை ஜனவரி 26 அன்று வெளியிட முன் நிறுத்தினார் எந்த தயாரிப்பாளரோடு போட்டிப் போட்டாலும் எப்போதும் வி-சி.சண்முகம் டிக் அடிப்பது பாலாஜிக்குதான் இருக்கும். ஆனால் இந்த முறை நடிகர் திலகத்தின் மற்றொரு அபிமான தயாரிப்பாளர் இயக்குனர் முக்தாவோடு போட்டி போட்ட போது முக்தாவிற்கே அதிர்ஷ்டம் அடித்தது. இதில் சிறிது வருத்தம் இருந்தாலும் பாலாஜி அந்தமான் காதலிக்கு ஒரு ஐந்து வார இடைவெளியை கொடுத்து மார்ச் 4 அன்று ரிலீஸ் செய்தார்.

எப்போதும் வேற்று மொழியிலிருந்து ரீமேக் செய்து படங்களை தயாரிக்கும் பாலாஜி, தீபம் போன்றே இந்தப் படத்திற்கும் மலையாளத்தை நாடினார்.மது நடித்து வெளிவந்த "இதா ஒரு மனுஷ்யன்" படத்தின் தமிழ் உரிமையை வாங்கினார். ஆனால் அதுவே பெங்காலியில் உத்தம் குமார் நடித்து வெளிவந்த அமானுஷ் [ஆ மானுஷ்?] படத்தின் தழுவலாகும். படத்தின் கதையை எடுத்துக் கொண்டோமானால் தமிழ் nativity அடி வாங்கும் கதை. back waters, சுற்றிலும் கள் சாராய கடைகள், ஸ்டீம் boat போன்றவைகள் தமிழுக்கு சற்றே அன்னியப்பட்டவை. இன்னும் சொல்லப் போனால் கதாநாயகி லட்சுமியிடம் வி.கே.ஆர். கோவிலில் வைத்து வழி மறித்து வம்பு செய்யும் காட்சியை எடுத்துக் கொண்டால் அந்த கோவில் அப்படியே கேரள பாணியில் அமைந்திருக்கக் கூடிய கோவில். இவ்வளவு ஏன் ஒரு முறை வேலை நிமித்தமாக பக்கத்து ஊருக்கு புறப்படும் நடிகர் திலகம் சொல்லும் வசனம் ஒன்று வரும். "இங்கே பக்கத்திலே இருக்கிற சாலக்குடிக்குதானே போப்போறேன்" என்பார். ஆக அங்கே ஒரு ரிஸ்க் இருந்தது. பிராப்தம் படத்திலும் இது போன்ற nativity பிரச்னை இருந்தது நினைவிருக்கும்.

படம் ஒரு மசாலா சித்திரம் என்று படம் வெளியாவதற்கு முன்பே ஒரு தகவல் கசிந்திருந்தாலும் அது எந்தளவிற்கு உண்மை என்பது படம் பார்த்த பின்தான் தெரிந்தது. ஒரு மாஸ் ஹீரோவின் கமர்ஷியல் திரைப்படத்தில் எந்தளவிற்கு கமர்ஷியல் அயிட்டங்கள் இடம் பெறுமோ அது சற்றும் குறைவில்லாமல் இருந்தது. முதல் நாள் ஓபனிங் ஷோ பார்க்க முடியவில்லை. மாலைக் காட்சிதான் போனோம். ஆனால் அதற்குள் படத்தைப் பற்றிய நல்ல ரிப்போர்ட் வந்து விட்டது. மாலைக் காட்சிக்கே சரியான கூட்டம் என்றால் நாங்கள் படம் முடிந்து வரும்போது இரவுக் காட்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம். சிந்தாமணி திரையரங்கம் அமைந்திருக்கும் கீழ வெளி வீதியில் ஒரே டிராபிக் ஜாம்.

நாங்கள் படத்தை ரசித்துப் பார்த்தோம். இந்தப் படத்தில் நாயகி லட்சுமி உடுத்தி வரும் அனைத்து புடவைகளும் அழ்காய் அமைந்திருக்கும். புடவை என்றதும் நினைவிற்கு வருகிறது. இந்தப் படத்தில்தான் புடவை துணியை நடிகர் திலகத்தின் ஷர்ட் material ஆக பயன்படுதியிருப்பார்கள். அது நன்றாக செட் ஆனது.படம் நண்பர்களோடு சேர்ந்து பார்த்துவிட்டு சிந்தாமணி அரங்கிற்கு எதிர் வரிசையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் உணவருந்திக் கொண்டே படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். படம் வெற்றி பெறும், 100 நாட்களை கடந்து ஓடும் என்பதில் எங்களுக்கு சந்தேகமேயில்லை. ஆனால் இவ்வளவு பிரம்மாண்ட வெற்றியை எதிர் பார்க்கவில்லை. எப்படி பட்டிக்காடா பட்டணமா பெரிய வெற்றிப் பெற்றதோ அது போன்ற ஒரு சாதனையை தியாகம் நிகழ்த்திக் காட்டியது. முன்னரே சொன்னது போல் மாஸ் படம் என்பதால் சென்னையில் சாந்தியை விட, வட சென்னையின் கிரவுன் திரையரங்கில் படத்திற்கு பெரிய வரவேற்பு. கிரவுன் அரங்கில் மட்டும் தொடர்ந்து 214 அரங்கு நிறைந்த காட்சிகள். நண்பர் சுவாமி ஒரு விஷயம் சொல்வார். தியாகம் வெளியான நேரத்தில் கிரவுன் அரங்கின் ஊழியர் ஒருவர் ப்ளாக் டிக்கெட் விற்றே மகளின் கல்யாண செலவை ஈடு கட்டினாராம்.

இந்த சாதனை அவ்வளவு எளிதாக நிகழ்த்தப்பட்டதல்ல வேறு ஒரு பதிவில் குறிப்பிட்டது போல நடிகர் திலகத்தின் படங்களே பல்முனை போட்டியை ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரம். இந்தப் பக்கம் அந்தமான் காதலி என்றால் அந்தப் பக்கம் 14 நாட்கள் இடைவெளியில் வெளியான என்னைப் போல் ஒருவன். தியாகம் 70 நாட்களை கடந்த போது வெளி வந்த புண்ணிய பூமி, 100 நாட்களை நிறைவு செய்த போது வந்த ஜெனரல் சக்கரவர்த்தி என பல படங்கள். அது மட்டுமல்ல அன்றைய கால கட்டத்தில் புயலென புகுந்த இளைய தலைமுறையினரின் பல்வேறு படங்கள் இடைவெளி இல்லாமல் வெளியாகி போட்டியை ஏற்படுத்தின. எங்கள் மதுரையை எடுத்துக் கொண்டோமானால் ஒரு பெரிய பட்டியலையே சொல்ல வேண்டியிருக்கும்.

1975-ல் அபூர்வ ராகங்கள் மூலமாக அறிமுகமாகி 1977-ல் பரபரப்பாக முன்னேறினார் ரஜினி. 1977 தீபாவளிக்கு வெளியான ஆறு புஷ்பங்களுக்கு பிறகு ஒரு மூன்று மாத இடைவெளியில் ரஜினி விஜயகுமார் ஜெய் கணேஷ் போன்றவர்கள் நடித்த சங்கர் சலீம் சைமன் தியாகம் வெளியாவதற்கு 3 வாரங்களுக்கு முன்பு [பிப் 10] வெளியானது. தியாகம் வெளியான ஒரே வாரத்தில் நடிகை ஷீலா மலையாளத்தில் இயக்கிய யக்ஷ கானம் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து ஆயிரம் ஜென்மங்கள் என்ற பெயரில் ரஜினி விஜயகுமார் லதா போன்றவர்கள் நடிக்க மார்ச் 10 அன்று வெளியிட்டார் இயக்குனர் துரை. இந்தப் படம் சிந்தாமணிக்கு அருகில் அமைந்துள்ள அலங்காரில் வெளியானது. அதே நாளில் சிவகுமார் ஸ்ரீதேவி நடித்த மச்சானை பார்த்தீங்களா படமும் கல்பனாவில் வெளியானது [இந்தப் படத்தில்தான் சந்திரபோஸ் இசையில் மாம்பூவே சிறு மைனாவே என்ற யேசுதாஸ் சுசீலாவின் சூப்பர் ஹிட் பாடல் இடம் பெற்றது]. மார்ச் 18 அன்று தங்கத்தில் என்னைப் போல் ஒருவன் ரிலீஸ். மார்ச் 30 அன்று கமல் - பாலசந்தர் கூட்டணியில் உருவான நிழல் நிஜமாகிறது ஸ்ரீதேவியில் வெளியானது. நல்ல வரவேற்ப்பை பெற்றது. மார்ச் 31 அன்று ரஜினியின் சகோதர சபதம் சென்ட்ரலில் வெளியானது. இத்தனை படங்கள் வெளியாகியும் தியாகம் மார்ச் 4 முதல் 31 வரை 28 நாட்களில் நடைப்பெற்ற 92 காட்சிகளும் ஹவுஸ் புல்.

ஏப்ரல் மாதம் 14 அன்று நடிகர் திலகத்தின் தெலுங்கு படமான ஜீவன தீரலு, வாழ்க்கை அலைகள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மீனட்சியில் வெளியானது. அதே நேரத்தில் சுஜாதா எழுதிய காயத்ரி நாவலை திரைப்படமாக்கி வெற்றி கண்ட இயக்குனர் பட்டாபிராமன் [R.பட்டு] குழுவினர் அதே சுஜாதாவின் அனிதா இளம் மனைவி என்ற நாவலை இது எப்படி இருக்கு என்ற பெயரில் ஜெய்சங்கரை வைத்து தயாரித்து வெளியிட்டனர். அது தங்கத்தில் வெளியானது. இதை தவிர வேறு ஒன்றிரண்டு படங்களும் அந்த மாதத்தில் வெளியான நினைவிருக்கிறது. இந்தப் படங்களை தவிர ஏற்கனவே வெளியாகி ஓடிக் கொண்டிருந்த நடிகர் திலகத்தின் படங்களையும் எடுத்துக் கொண்டால், ஏப்ரல் 30 அன்று அந்தமான் காதலி 95 நாட்களை நிறைவு செய்து சினிப்ரியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது. என்னைப் போல் ஒருவன் ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் தியாகம் மார்ச் 4 முதல் ஏப்ரல் 30 வரை 58 நாட்களில் சிந்தாமணியில் நடைபெற்ற 192 காட்சிகளும் ஹவுஸ் புல்.

மே மாதம் பிறக்கிறது. மே 5 அன்று அந்தமான் காதலி 100 வது நாள். என்னைப் போல் ஒருவன் 50-வது நாள். தியாகம் சிந்தாமணியில் 63 நாட்களை நிறைவு செய்கிறது.அந்த 63 நாட்களில் நடைபெற்ற 207 காட்சிகளும் ஹவுஸ் புல். இதனால் ஏற்பட்ட கண் திருஷ்டியோ என்னவோ தெரியவில்லை, அன்றைய தினத்தில் கேரளத்தில் தச்சோளி அம்பு திரைப்படத்தின் படப்பிடிப்பில் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது தவறி விழுந்ததில் நடிகர் திலகத்திற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டாய ஒய்வு எடுக்க நேர்ந்தது.இருப்பினும் அவர் ஏற்கனவே முடித்துக் கொடுத்திருந்த புண்ணிய பூமி மே 12 அன்று கல்பனாவில் வெளியானது. மே 19 அன்று வி.சி.குகநாதன் இயக்கத்தில் ரஜினி விஜயகுமார் நடித்த மாங்குடி மைனர் சென்ட்ரலில் வெளியானது. இந்த நேரத்தில் வேறு ஒன்றையும் சொல்ல வேண்டும். புதிய தமிழ் படங்கள் மட்டுமல்ல வேற்று மொழிப் படங்களும் பலமான போட்டியை ஏற்படுத்தின. யாதோன் கி பாராத் போன்ற இந்தி musical entertainers படங்களை எடுத்த தயாரிப்பாளர் நாசர் ஹுசைன் [இன்றைய சூப்பர் ஹீரோ அமீர்கானின் uncle] அதே பாணியில் தயாரித்த Hum Kisise Kam Nahin அந்த மே மாதம் சினிப்ரியா காம்ப்ளெக்ஸ்-ல் வெளியாகி இளைஞர்களை சுண்டி இழுத்துக் கொண்டிருந்தது. இது மட்டுமா? நடிகர் திலகத்தின் பழைய படங்கள் வேறு மறு வெளியீடு செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரம். மே 19 அன்று பார்த்தால் பசி தீரும் ஸ்ரீமுருகனில் வெளியானது, பெரும் வரவேற்பை பெற்றது. இத்தனைக்கும் அதற்கு ஒரு பத்து மாதங்களுக்கு முன்புதான், குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 1977 ஜூலை 1 அன்று கல்பனாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி அடுத்தடுத்த அரங்குகளில் ஷிப்ட் ஆகி ஓடியிருந்தது. அந்தப் படத்தை தொடர்ந்து அதே அரங்கில் விடிவெள்ளி வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதே மே மாதம் 26-ந தேதி பேசும் தெய்வம் ஸ்ரீமீனாட்சியில் வெளியானது. படம் வெளியான அன்று வெள்ளிக்கிழமை மதியக் காட்சிக்கு நண்பர்களுடன் நான் சென்ற போது சரியான கூட்டம். குறிப்பாக தாய்மார்கள் கூட்டம் அலை மோதியது. இப்படி தமிழில் புதிய படங்கள், இந்திப் படங்கள், தான் நடித்த பழைய திரைப்படங்கள் என சுற்றி நின்று opposition கொடுத்த போதினும் கூட நடிகர் திலகம் தியாகத்தின் மூலமாக வரலாறு படைத்துக் கொண்டிருந்தார். மே மாதம் நிறைவு பெறும்போது தியாகம் 89 நாட்களை நிறைவு செய்திருந்தது.

ஜூன் மாதம் தொடக்கம். ஜூன் 2 அன்றே ரஜினி முதன் முதலாக ஹீரோவாக நடிக்கும் என்ற விளம்பரத்துடன் பைரவி ஸ்ரீதேவியில் வெளியாகிறது. இளையராஜா இசையில் கட்டபுள்ள குட்டபுள்ள மற்றும் நண்டூருது நரியூரூது பாடல்கள் ஹிட்டடிக்க படத்திற்கு ஆதரவு கிடைக்கிறது.அடுத்த வாரம் 9-ந தேதி அதைவிட பெரிய போட்டி வருகிறது. கமலும் ரஜினியும் இணைந்த ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலாடுகிறது சினிப்ரியாவில் வெளியாகிறது. இதிலும் பாடல்கள் சூப்பர் ஹிட். ஆலயமணியின் உல்டா என்ற போதினும் ஸ்ரீதர் படத்தை இளமை பொங்க எடுத்திருந்த விதம் மக்களுக்கு பிடித்துப் போக படம் சூப்பர் ஹிட் ஆகிறது. இது போதாதென்று அதே ஜூன் 9 அன்று சிவகுமார் இரட்டை வேடங்களில் நடித்த சிட்டுக் குருவி சென்ட்ரலில் வெளியானது. இதிலும் இளையராஜா. என் கண்மணி உன் காதலி, உன்னை நம்பி நெத்தியிலே போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் மக்களை தியேட்டருக்கு வரவழைத்தன. 9-ந தேதி இளமை ஊஞ்சலாடுகிறது பார்த்துவிட்டு 10-ந தேதி சிட்டுக் குருவி பார்த்துவிட்டு 11-ந தேதி ஞாயிற்றுக்கிழமை தியாகம் போகிறோம். அன்று தியாகம் 100-வது நாள். மாலைக் காட்சிக்கு போனால் முதல் இரண்டு நாள் பார்த்த கூட்டமெல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்றிவிட்டது. 100-வது நாள் ஓடும் படத்திற்கு நாங்கள் டிக்கெட் வாங்க பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும். ஒரு வழியாக உள்ளே சென்றால் நண்பர்கள் அனைவருக்கும் சேர்ந்தாற்போல் அமர்வதற்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. அலப்பறை என்றால் அப்படி ஒரு அலப்பறை.அன்று மாலைக் காட்சி பார்த்தவர்கள் அந்த அலப்பறையை வாழ்நாளில் மறக்க மாட்டார்கள்.[சாதாரணமாக அலப்பறை அதிகம் கொடுக்கும் இரண்டு நண்பர்கள் அமைதியாக வேறு ஒரு பக்கத்திலிருந்து படம் பார்ப்பதை கண்டவுடன் வியப்பு. என்னடா விஷயம் என்பது இடைவேளையின்போது புரிந்தது. அந்த அமைதிக்கு காரணம் அவர்களுக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோருடன் வந்த ஒரு இளம் பெண்தான் என்பது இப்போது நினைத்தாலும் சுவாரஸ்யமான நிகழ்வாகவே மனதில் தங்கியிருக்கிறது]. 100 நாட்களில் சிந்தாமணியில் மிகப் பெரிய வசூலை பெற்று சாதனை புரிந்தது தியாகம்.

நடுவில் மீண்டும் ஒரு இந்தி சித்திரம். மதுரையின் மையப் பகுதியான நாயக்கர் புது தெருவில் ஒரு புதிய தியேட்டர் complex கட்டி முடிக்கப்பட்டு அதில் அமைந்திருந்த இரண்டு தியேட்டர்களுக்கும் முறையே சக்தி சிவம் என பெயரிடப்பட்டு அதில் சக்தி மட்டும் ஜூன் 15 அன்று திறந்து வைக்கப்பட்டது. முதல் படமாக அமிதாப், வினோத் கண்ணா மற்றும் ரிஷிகபூர் நடித்த பிரபல இந்தி இயக்குனர் மன்மோகன் தேசாயின் அமர் அக்பர் ஆண்டனி திரையிடப்பட்டது. புதிய அரங்கம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வரும் கூட்டம் ஒரு பக்கம் என்றால் வடநாட்டிலும் சென்னையிலும் தூள் கிளப்பிக் கொண்டிருந்த இந்த படத்தை பார்க்கவும் கூட்டம் அலை மோதியது.ஆக ஒரே நேரத்தில் இரண்டு இந்திப் படங்களின் opposition வேறு.

அடுத்த நாள் 16-ந தேதி வெள்ளிகிழமை ஜெனரல் சக்கரவர்த்தி அலங்காரில் ரிலீசானது. படத்தின் தயாரிப்பாளரும் அகில இந்திய சிவாஜி மன்ற தலைவருமாக இருந்த சின்ன அண்ணாமலை சென்னையில் சாந்திதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க தியாகம் மாற்றப்பட்டது. ஆனால் மதுரையில் இந்த சிக்கல் இல்லை என்பதால் தியாகம் சிந்தாமணியில் தொடர்ந்தது. ஜெனரல் சக்கரவர்த்தி நல்ல குடும்ப சித்திரம் என்ற பெயரைப் பெற்று family audience மற்றும் தாய்குலங்களை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது. அடுத்த வெள்ளிகிழமை 23-ந தேதி மீண்டும் இரண்டு படங்கள் ரிலீஸ். அண்ணாவின் ஆசைக்குப் பிறகு பாலாஜி, நடிகர் திலகத்தை வைத்து எடுக்காமல் வேறு ஹீரோவை வைத்து தயாரித்த முதல் படம் ராதைக்கேற்ற கண்ணன். சிவகுமார் ஸ்ரீவித்யா நடித்த இந்த வண்ணப்படம் பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கே-வி.மகாதேவன் இசையில் உருவாகி வெளியானது. இது கல்பனாவில் வெளியானது. அதே நாளில் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா நடித்த இளையராணி ராஜலட்சுமி திரைப்படம் மீனாட்சியில் ரிலீசானது. அடுத்த வெள்ளிக்கிழமை 30-ந தேதி அன்றைய நாடக கதாசிரியர் விசு எழுதி மேடை நாடகமாக பெரும் வெற்றிப் பெற்ற பாரத மாதர்க்கு ஜே!, துரை அவர்களின் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரீகாந்த் நடிக்க சதுரங்கம் என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. இது தமிழகமெங்கும் ஓரிரண்டு வாரங்களுக்கு முன்னரே வெளியாகி விட்ட போதிலும் மதுரையில் 30-ந தேதிதான் சென்ட்ரல் சினிமாவில் வெளியானது. அன்றைய நாளிலேயே ஸ்ரீகாந்த் லட்சுமி நடித்த பீம்சிங் இயக்கிய ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படமும் ஸ்ரீதேவியில் வெளியானது. இத்தனை ரிலீஸ் படங்களுக்குமிடையே ஜூன் 30 அன்று தியாகம் சிந்தாமணியில் 119 நாட்களை நிறைவு செய்து [17 வாரங்கள்] மேலும் பல புதிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது.

ஜூலை பிறந்தது. முதலில் நடிகர் திலகத்தின் பழைய படமான அன்னை இல்லம் தினமணியில் வெளியானது. இந்த திரையரங்கம் எப்படி என்றால் பழைய கால திரையரங்கம்.ஆனால் இருக்கைகள் அதிகமாக அமைந்த அரங்கம். இங்கேதான் கர்ணன் 1972-ம ஆண்டு (என நினைவு) வெளியிடப்பட்டு பலத்த வரவேற்புடன் ஓடியது மீண்டும் 1978-கு வருவோம் இந்த திரையரங்கம் அமைந்திருக்கும் இடத்திற்கு முனிச்சாலை என்று பெயர் சிந்தாமணிக்கும் அலங்காருக்கும் அருகாமையில் அமைந்திருக்கும். ஒரு பக்கம் சிந்தாமணியில் தியாகம் மறுபக்கம் அலங்காரில் ஜெனரல் சக்கரவர்த்தி, தினமணியில் அன்னை இல்லம். Beauty என்னவென்றால் மூன்று படங்களுக்கும் கூட்டம். ஜூலை 14 வெள்ளியன்று மீண்டும் double attack. ஆம், கமல் இரட்டை வேடங்களில் நடித்த டி.என்.பாலுவின் சட்டம் என் கையில் சென்ட்ரலிலும் ரஜினி ஸ்ரீதேவி நடித்து, AC.T இயக்கிய வணக்கத்துக்குரிய காதலியே [எழுத்தாளர் ராஜேந்திர குமார்'எழுதிய நாவல்] கல்பனாவிலும் வெளியானது. சட்டம் என் கையில் பாடல்களும் கமலின் நடனமும் தமிழ் படத்தில் முதன் முதலாக இதழ் முத்தக் காட்சி இடம் பெற்றிருக்கிறது என்ற பரபரப்பும் படத்திற்கு கூட்டத்தை சேர்க்கிறது.

இதற்கு இடையில் ஒரு அரசியல் நிகழ்வு.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
13th December 2012, 11:44 PM
தியாகம் - சில நிகழ்வுகள்! சில நினைவுகள்! - Part II

1969-க்கு பிறகு தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலே நடைபெறவில்லை. பல காரணங்களை சொல்லி அவை தள்ளிப் போடப்பட்டன. இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்கு மட்டும் தேர்தல் என்று அன்றைய அதிமுக ஆட்சி அறிவித்தது. 1969-ல் தேர்தல் நடந்த போது நகராட்சியாக் இருந்த மதுரை 1971 மே 1 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது சென்னைக்கு பிறகு மாநகராட்சி ஸ்தானம் கிடைத்தது மதுரைக்குத்தான் அன்றைய நாளில் மதுரை நகராட்சி தலைவராக இருந்த மதுரை முத்து முதல் மேயரானார். அவர் 1975 ஆண்டு இறுதியில் திமுகவை விட்டு விலகி அதிமுகவில் சேர்ந்தார். ஆக அந்த 1978-ம ஆண்டு ஜூலை மாதம் மதுரையில் மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. 1977-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் ஆளும் கட்சியும் சரி எதிர்கட்சியும் சரி போட்டி போட்டுக் கொண்டு களத்தில் குதித்தனர். அன்றைய முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் மதுரையில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் செய்ய மதுரையே அனலாக கொதித்தது. அந்த தேர்தலில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின் நடிகர் திலகத்தின் ரசிகர்களும் பங்கு பெற்றனர்.அதன் காரணம் என்னவென்று தெரிந்துக் கொள்ள ஒரு சின்ன flash back தேவைப்படுகிறது.

அண்ணன் ஒரு கோவில் பதிவில் 1977-ம ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஒரு சில அரசியல் நிகழ்வுகளை பார்த்தோம். அதன் தொடர்ச்சிதான் நாம் இப்போது சொல்லவிருப்பது. இந்திரா காந்தி அம்மையார் கைது செய்யப்பட்ட போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமாக இருந்த பிரம்மானந்த ரெட்டி இருந்தார். அவரும் அவருடன் இருந்த அன்றைய பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சவான் போன்றவர்கள் ஜனதா ஆட்சிக்கு மறைமுக ஆதரவு தருகிறார்களோ என்ற சந்தேகம் இந்திரா அம்மையாருக்கு எழ, அவர் மீண்டும் தன வழக்கமான அதிரடி அரசியலை ஆரம்பிக்க எண்ணினார். அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ஒரு சில மாதங்களில் ஆந்திரா மற்றும் கர்நாடக சட்டசபை பொது தேர்தல் நடக்கவிருந்தது. தென்னகம் எப்போதும் தன பக்கம் நிற்கும் என்பதில் இந்திரா காந்தி அம்மையாருக்கு சந்தேகமியில்லை. ஆகவே 1978-ம ஆண்டு ஜனவரி 1 அன்று தன ஆதரவாளர்கள் கூட்டத்தை அன்னை இந்திரா அவர்கள் கூட்ட, அந்த கூட்டம் செல்லாது என்று ரெட்டியும் சவானும் அறிவிக்க மீண்டும் காங்கிரஸில் ஒரு பிளவு. இந்திரா அம்மையாரின் தலைமையில் காங்கிரஸ்(I) உதயமானது.

ஜனவரியில் அவர்கள் இதை அறிவிக்க பிப்ரவரியில் ஆந்திர கர்நாடகா தேர்தல்கள் அறிவிக்கப்படுகின்றன. பசுவும் கன்றும் சின்னம் முடக்கப்பட்டதால் இந்திரா அம்மையார் கை சின்னத்தை தேர்ந்தெடுக்கிறார். ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் அவர் முழு வீச்சில் பிரச்சாரம் செய்ய ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் இந்திரா காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியை பிடிக்கிறது. ஆந்திராவில் சென்னா ரெட்டியும் கர்நாடகத்தில் தேவராஜ் அர்ஸ் அவர்களும் முதல்வர் பதவியை ஏற்றார்கள். இந்த தேர்தல்களின்போது உத்திர பிரதேச மாநிலத்தில் ஆசாம்கர்க் என்ற பாராளுமன்ற தொகுதிக்கும் இடை தேர்தல் நடைபெற்றது. 1977-ல் உபி-யில் உள்ள 85 பாராளுமன்ற தொகுதிகளிலும் தோற்ற காங்கிரஸ் இம்முறை அங்கே வெற்றிக் கனியை பறித்தது. பின்னாட்களில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கை தொடர்பாளராக பணியாற்றிய மோஷினா கித்வாய் அந்த தொகுதியில் வெற்றிப் பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள் காலையில் [சென்னையில் முதல் நாள் மாலை] நவசக்தி நாளிதழின் தலைப்பு செய்தி இப்போதும் பசுமரத்தாணியாக மனதில் நிற்கிறது. ஒரு புறம் பெருந்தலைவரின் புகைப்படம், மற்றொரு புறம் அன்னை இந்திராவின் புகைப்படம், நடுவே வந்த தலைப்பு இப்படி இருந்தது.

அறத்தின் வெற்றி! அன்னை உன் கரத்தின் வெற்றி!

தர்மத்தின் வெற்றி! தலைவா உன் லட்சிய கொள்கைக்கு வெற்றி!.

ஆந்திரா கர்நாடக ஆசாம்கர்கில் காங்கிரஸ் அமோக வெற்றி!

இதன் வழியாக இந்திரா அம்மையார் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தன கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தார். பொதுவாகவே ஆளும் கட்சியாக இருக்கும் போது மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். அதிலும் ஜனதா போன்ற நான்கு வித்தியாசமான கட்சிகள் ஒன்றாக சேரும் போது அதிலும் அதன் தலைவர்கள் ஒவ்வொரு திசைக்கு இழுக்கும் போது அந்த அதிருப்தி அதிகரிக்கும். அவ்வகை அதிருப்தியின் விளைவாக இந்திரா காங்கிரசை விட்டு விலகி நின்ற நடிகர் திலகத்தின் ரசிகர்களும் அந்த கட்சியின் ஆதரவாளர்களாக மாற தொடங்கிய நேரம். இந்த நேரத்தில் ஜூலை 15 அன்று வரும் பெருந்தலைவரின் பிறந்தநாளை மதுரையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவெடுத்து அதற்கு இந்திரா அம்மையாரையும் வரவழைத்து ஒரு கூட்டம் நடத்தினார் நெடுமாறன். அந்த நேரத்தில் இந்த மாநகராட்சி தேர்தல் வந்து விடவே two in one ஆக இந்த பிறந்த நாள் கூட்டம் அமைந்தது. அனைத்து வார்டுகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் முதன் முதலாக கை சின்னம் அறிமுகமானது மதுரையில்தான். இந்த தேர்தலின்போதுதான்.விமான நிலையத்திலிருந்து திறந்த காரில் ஊர்வலமாக வந்த இந்திரா அம்மையார் ஒரு சில இடங்களில் பிரச்சாரம் செய்தார். அவரின் இந்த வருகையும் பிரசாரமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தின என்றே சொல்ல வேண்டும். இதை தவிர வேறு ஒரு காரணமும் இருந்தது. தச்சோளி அம்பு படப்பிடிப்பில் விபத்தில் கை முறிந்த நடிகர் திலகம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் கையின் உள்ளே முறிந்த எலும்பை ஒன்று சேர்க்க மெட்டாலிக் பிஷ் பிளேட் ஒன்றை பொருத்தினார்கள். இந்த அறுவை சிகிச்சை காரணமாக அவரது ஓய்வு அதிகமானது.

அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த மூப்பனார் நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் இந்த தேர்தலில் நடிகர் திலகத்தின் பிரச்சாரம் இருக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே விபத்திற்கு பின் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்தை அழைத்துக் கொண்டு மதுரை வந்தார். ஏற்கனவே இந்திரா அம்மையார் வந்ததினால் ஏற்பட்ட சுறுசுறுப்பு நடிகர் திலகம் வந்ததினால் மேலும் கூடியது. மதுரா கோட்ஸ் ஆலைக்கு பக்கத்தில் கரிமேடு என அழைக்கப்படும் இடத்தில முதல் பிரசார கூட்டத்தில் பேசிய நடிகர் திலகம் மேலும் இரண்டு கூட்டங்களில் பேசி விட்டு திரும்பி சென்றார். தேர்தல் பிரச்சாரம் அன்றைய காலகட்டத்தில் கட்டுப்பாடுகளற்ற ஒன்றாகவே இருந்தது. மேலும் ஒரே ஒரு ஊரில் வார்ட் வாரியாக நடக்கும் தேர்தல் எனபதால் அடிக்கடி மோதல்கள் உரசல்கள் இருந்தன. தேர்தல் முடிவுகள் வந்த போது காங்கிரஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 9 மாமன்ற உறுபினர்களில் ஒரு K..N.அழகர் சாமி (நாயுடு -ஆம் அப்படிதான் அவர் பெயரை பிரசாரத்தில் பயன்படுத்தினார்கள்)யும் அடங்குவார் [யாரென்று யோசிப்பவர்களுக்கு -இப்போதைய சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரின் தந்தை).

முன்னரே சொன்னது போல் புதிய படங்கள் போதாதென்று தேர்தல் வேறு நடக்கிறது. ஒரு படம் normal சூழலில் ஓடுவது வேறு. ஆனால் எங்கே வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் வன்முறை வெடிக்கலாம் என்ற சூழலில் மக்கள் தியேட்டருக்கு வருவது அதிலும் பெண்கள் வருவது என்பது அரிது. ஆனால் இந்த நேர்மறையான சூழலில் கூட தியாகத்திற்கு கூட்டம் குறையவில்லை. ஜூலை 14 வணக்கத்துக்குரிய காதலியே பார்த்து விட்டு 15-ந தேதி சட்டம் என் கையில் பார்த்து விட்டு 16-ந தேதி ஞாயிற்றுக்கிழமை தியாகம் போனால் ஹவுஸ் புல். டிக்கெட் கிடைக்கவில்லை. சரி அலங்காருக்கு சென்று ஜெனரல் சக்கரவர்த்தி பார்க்கலாம் என்று போனால் அதுவும் Full. வெறுத்துப் போய் திரும்பி வந்தோம்.

அந்த மாதத்திலேயே விஜயகுமார் நடித்த இவள் ஒரு சீதை படம் தங்கத்தில் வெளியானது. புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் வெற்றியை தொடர்ந்து எழுத்தாளார் மகரிஷியின் நாவலான வட்டத்துக்குள் சதுரம் திரைப்படமாக அதே Sp.முத்துராமன் இயக்கத்தில் ஜூலை 28 அன்று வெளியானது. ஜூலை 3-ம வாரத்தில் வெள்ளைக்கண்ணுவில் தங்கப்பதக்கம் வெளியானது. இதனை களேபரங்களுக்கு மத்தியிலும் தியாகம் வெற்றிகரமாக ஓடி ஜூலை 31 அன்று 150-வது நாளை நிறைவு செய்தது. அந்த நாளில் மாலை காட்சிக்கு போயிருந்தோம். திங்கட்கிழமையாக இருந்த போதும் படத்திற்கு வந்த கூட்டம் ஆச்சரியப்படுத்தியது. அதே நேரத்தில் ஜெனரல் சக்கரவர்த்தியும் 50 நாட்களை நிறைவு செய்யும் நேரம். அந்தப் படத்தின் 50 நாள் வசூலும் பிரமாதமாக அமைந்திருந்தது.

ஆகஸ்ட் பிறந்தது. அந்த நேரத்தில் புதுப் படங்களின் வருகையோ போட்டியோ நிற்கவில்லை. 1977-ல் தன் 16 வயதினிலே மூலமாக தமிழ திரையுகையே திரும்பி பார்க்க வைத்த பாரதி ராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆகஸ்ட் 10 அன்று கல்பனாவில் வெளியானது. இந்த படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பற்றி நான் சொல்லாமலே அனைவருக்கும் தெரிந்திருக்கும் இதுவும் தியாகத்தைப் பொறுத்தவரை ஒரு பெரிய opposition-ஆக அமைந்தது. ஆகஸ்ட் 18 அன்று மற்றொரு பரபரப்பு படம் வந்தது. குமுதம் வார இதழில் கவியரசர் கண்ணதாசன் தொடர்கதையாக எழுதிய அதை விட ரகசியம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, பல இளைய தலைமுறையினரை கவர்ச்சியின் அடிப்படையில் தியேட்டருக்கு இழுத்த இந்தப் படம் ஆகஸ்ட் 18 அன்று சக்தி திரையரங்கில் வெளியானது.

ஆக இப்படி எங்கெங்கு காணினும் போட்டி போட்டுக் கொண்டு புதிய படங்கள் பழைய படங்கள், அந்நிய மொழி படங்கள் அரசியல் நிகழ்வுகள் இவை ஒரு புறம் நிகழ்ந்துக் கொண்டிருக்க அதையெல்லாம் எதிர்கொண்டு 1978 ஆகஸ்ட் 25 வெள்ளியன்று 175வது வெள்ளிவிழா நாட்களை சிந்தாமணியில் நிறைவு செய்தது தியாகம். 175 நாட்களில் ஆறு லட்சத்தி எழுபத்தி நாலாயிரத்து நூற்று பன்னிரண்டு ரூபாய்.வசூல் செய்தது.[Rs 6,74,112/-]. ஒரே அரங்கில் மட்டும் திரையிடப்பட்டு 175 நாட்களில் இத்தனை பெரிய வசூலை ஈட்டிய முதல் படம் தியாகம். தான்.175-வது நாள் அன்றும் மாலைக் காட்சிக்கு நலல கூட்டம். படம் மாற்றப்படாமல் தொடர்ந்து ஓடியிருந்தால் மதுரையில் ஒரே திரையரங்கில் மட்டும் திரையிடப்பட்டு 7 லட்சம் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை தியாகம் தட்டி சென்றிருக்கும். இதற்கு பிறகு இதே திரையரங்கில் வெளியான வயசு பொண்ணு படமும் சரி நீண்ட நாள் தயாரிப்பிலிருந்து வெளியான கே.சி.பிலிம்ஸ் கோவை செழியன் தயாரித்த சீர்வரிசை படமும் சரியாக போகவில்லை. இந்தப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த தியேட்டர் ஊழியர்கள் எங்களிடம் இந்தப் படங்களை ஓட்டுவதற்கு பதிலாக தியாகம் படத்தை தொடர்ந்து திரையிட்டுருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும் என்ற அவர்களின் ஆதங்கத்தை பகிர்ந்துக் கொண்டனர்.

இந்த நீண்ட நெடிய குறிப்பையும் அந்த காலகட்டத்தில் வெளியான படங்களை பட்டியலிட்டதும் நடிகர் திலகத்தின் படங்களின் வெற்றி எந்த சூழலில் இன்னும் சொல்லப் போனால் எந்தெந்த சூழலையெல்லாம் கடந்து வந்து வெற்றிக் கனியை பறித்தது என்பதை கோடிட்டுக் காட்டவே. பல முறை பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பட்ட போதெல்லாம் பார்க்க முடியாமல் போன தியாகம் இரண்டு வாரங்களுக்கு முன்பு முரசு தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்த போது [முழுமையாக இல்லாவிடினும் கூட] மனதில் இந்த நிகழ்வுகளெல்லாம் அலையடித்துக் கொண்டேயிருந்தன. அதை இங்கே பகிர்ந்ததில் மகிழ்ச்சி.

நிறைவாக ஒன்று சொல்ல வேண்டும். 1973 ஜூலை 14 தொடங்கி 5 வருட விநியோக உரிமை முடிந்து Rm.S பிலிம்சிலிருந்து கைமாறி 1978ம் ஆண்டு ஜூலை மாதம் வேறு விநியோகஸ்தரிடம் வந்தார்கள் Dr ராஜாவும் பட்டாகத்தி பைரவனும். அந்த விநியோகஸ்தர் புத்தம் புதிய கண்ணாடி போன்ற பிரிண்ட் போட்டு தியாகம் 175வது நாளை நிறைவு செய்த போது அதே நாளில் ஆகஸ்ட் 25 அன்று எங்கள் தங்க ராஜா படத்தை ஸ்ரீதேவியில் திரையிட்டார். படத்திற்கு பெரிய வரவேற்பு. 27-ந தேதி ஞாயிறு மாலை ஸ்ரீதேவி அரங்கமே இரண்டானது.

இந்த trip down memory lane பயணம் போக வாய்ப்பளித்த முரசு தொலைகாட்சிக்கு நன்றி!.இந்த nostalgic memories-ஐ படித்த அனைவருக்கும் நன்றி!

அன்புடன்

Gopal.s
14th December 2012, 10:42 AM
Dear hubber brothers,
I am extremely sorry for my long abstinence.I just commenced my work after a break and have lot of year end pressures. i will be relaxed a little after Chinese new year .
Murali,
Amazing article on thiyagam. I found it lot more literary than this stupid writers like Kalapriya,S.ramakrishnan and Charu Nivedita so called literary heavy weights of contemporary Tamil writers. You can write regularly in English and Tamil both and take it as your post retirement passion cum profession.

JamesFague
14th December 2012, 10:46 AM
Mr Murali Sir,

What a wonderful analysis of Thygam Vetri Nadai.Hats Off Sir. One thing which I have want to
mention is that NT movies are always watchable not only for today's trend but for many
more years to come. No one can touch our NT's records. Most of them were screen their movies
in small theatres and make it to run for 175 days, but in the case of NT Thirisoolam which ran for
housefull 175 days has been given way to Imayam at Shanthi.

parthasarathy
14th December 2012, 03:00 PM
Dear Mr. Murali,

As usual, fantastic write-up. What a flow! Also, the way you are able to give minute statistics is really amazing!.

"Thiyagam" is one of my favourite NT movies and "Nallavarkellaam" is one of the songs I still murmur.

Regards,

R. Parthasarathy

HARISH2619
14th December 2012, 05:43 PM
திரு முரளி சார்,

வழக்கம் போல தங்களின் தியாகம் நினைவலைகள் சூப்பர் .தங்களின் எழுத்தில் உள்ள சுவாரஸ்யமே அந்த படம் ஓடிகொண்டிருந்தபோது இருந்த அரசியல் மற்றும் திரையுலக நிகழ்வுகள் அந்த படத்தை எந்த அளவுக்கு பாதித்தது என்பதை விலாவரியாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் சொல்வதுதான் .

தியாகம் வெளியான போது எனக்கு 3 வயது.எனக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக பழனி கோவிலுக்கு சென்றிருந்தபோது அங்குதான் இந்த படத்தை பார்த்ததாக என் தந்தை கூறுவார்கள் .அது நினைவில் இல்லை என்றாலும் அதன் பிறகு இரண்டு முறை பழனி சென்றபோது ஒரு முறை அறிவாளியும் இன்னொருமுறை தில்லானாவும் பார்த்தோம் .நினைவு தெரிந்த பிறகு பெங்களூர் தியேட்டர்களில் பல தடவை தியாகம் பார்த்திருக்கிறேன் .அறிமுக காட்சியில் தம்மடித்துகொண்டே பாலத்தில் நடந்துவரும் சீன் ,ஹோலி டான்ஸ் ,உலகம் வெறும் இருட்டு மற்றும் நல்லவர்க்கெல்லாம் பாடல் காட்சிகளிலெல்லாம் தியேட்டர் இரண்டுபடும் என்பது உண்மை.

சுகமான பழைய நினைவுகளையெல்லாம் அசைபோட வைத்ததற்கு நன்றி


btw,how is kumki ? What is the response in tamilnadu ? I request the hubbers who have seen the movie to review

JamesFague
14th December 2012, 06:09 PM
Mr Harish,

The review has been posted by our Mr Raghavendra Sir in Kumki Thread. Overall
the reviews are positive.

RAGHAVENDRA
15th December 2012, 12:36 AM
தியாகம் முரளி சாரின் நினைவுகள் நம் எல்லோரையும் அந்த நாட்களுக்கு அழைத்துச் செல்வதில் வியப்பில்லை. அந்த கிரௌன் திரையரங்கத்தில் பணியாற்றியவரைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். அவர் சற்று ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் நல்ல மனிதர். தன்னுடைய சம்பளம் போதவில்லை என்ற போதிலும் அவர் அதனை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். அப்போது அவர் நடுத்தர வயதைக் கடந்தவர். படம் வெளியாகும் கால கட்டத்தில் நம் ரசிகர்கள் மொத்தமாக ஆளுக்குக் கொஞ்சம் என பங்களித்து அவரிடம் கொடுத்து டிக்கெட் வாங்கியதுண்டு. ஆனால் நான் பார்த்த வரை அவர் பிளாக்கில் டிக்கெட் விற்றதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படத்தின் போதும் ஓரளவு ரசிகர்கள் மனமுவந்து டிக்கெட் கட்டணத்தை விட சற்றே கூடுதலாகத் தந்து அவருடைய வறுமையைப் போக்க உதவினர். அனைத்து ரசிகர்களையும் பெயர் சொல்லிக் கூப்பிடக் கூடிய அளவிற்குப் பழக்கமானவர். தங்கைக்காக படத்தை இரண்டாம் நாள் கிரௌன் திரையரங்கில் பார்த்த போது, 07.02.1971 அன்று படம் ஆரம்பிக்கும் முன் நண்பர் ஒருவர் மூலம் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது நடிகர் திலகத்தின் படங்கள் அத்திரையரங்கில் பெறக் கூடிய வரவேற்பினை மிகவும் சிலாகித்துக் கூறுவார். அதற்கு முன் நம் படங்கள் பெரும்பாலும் கிருஷ்ணா திரையரங்கில் தான் வெளியாகும் அல்லது பிரபாத் திரையரங்கிற்கு சென்று விடும். அதைப் பற்றியெல்லாம் விரிவாக பேசுவார்.

வாய்ப்புக்கு நன்றி.

KCSHEKAR
15th December 2012, 12:43 PM
தியாகம் - சில நிகழ்வுகள்! சில நினைவுகள்! - Part II

அன்புடன்

Dear Murali Sir,

Really good one. Thanks

JamesFague
15th December 2012, 12:48 PM
Expecting many more from Mr Murali Sir

HARISH2619
15th December 2012, 06:03 PM
கும்கி பட வெளியீட்டை முன்னிட்டு நமது ஹப்பர் திரு குமரேசன்பிரபு அவர்கள் மற்றும் கர்நாடக மாநில சிவாஜி பிரபு மன்ற நிர்வாகிகள் நாளை ஞாயிறன்று பெங்களூர் லாவண்யா தியேட்டர் முன்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகள்

1.மாபெரும் மலர்மாலை ஊர்வலம் (செப்பிங்க்ஸ் சாலையில் துவங்கி லாவண்யா தியேட்டர் சென்றடையும் )

2. அன்னதானம்

3. 2013ம் ஆண்டு காலண்டர் வெளியீடு

4.கட் அவுட்டிற்கு வரவேற்பு மலர் அலங்காரம்

5.மாலை 6 மணிக்கு வான வேடிக்கை .

நன்றி : தினசுடர் நாளேடு 15-12-12

rangan_08
16th December 2012, 12:25 PM
நேற்று மாலை நமது NT FAnS அமைப்பின் சார்பாக ஆலய மணி.

நண்பர் சாரதியோடும் ராகவேந்தர் சாரோடு பேசும் போதும் நான் குறிப்பிட்ட விஷயம் ஒன்று உண்டு. சின்ன வயதில் பார்த்த போதும் படம் பிடித்தது. ஆனால் அப்போது பிடித்த காட்சிகள் வேறாக இருந்தது. கலூரியில் பயிலும் காலகட்டத்தில் வேறு சில காட்சிகள் கவர்ந்திழுத்தன. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து வேறு சில காட்சிகள் வியப்பை அளித்தன. இப்போது பார்க்கும் போது அப்படி தனி தனி காட்சிகளாக இல்லாமல் முதலிருந்து கடைசி வரை ஒவ்வொரு frame-மும் எப்படி செதுக்கப்பட்டிருகின்றன.என்பதை தெளிவாக உணர முடிந்தது.

அன்புடன்


Very true ! As we grow up, not only in age, but in all respect, it is inevitable for a true connoisseur to experience this epiphany.

rangan_08
16th December 2012, 12:43 PM
Watched Paalaadai for the first time recently. The moment i started watching it i was immediately attracted towards NT's cool, casual & natural performance. And, My GOD !!! the scene where he explains his dream sequence to KR Vijaya...just brilliant !!!.

Co-incidentally, i was glad to go through Murali sir's post on the film. While reading the first part, i was little disappointed since there was no mention about this scene i have mentioned above. I patiently went through the second post and there it was!! A great fan like Murali sir can never afford to miss such a wonderful performance. Yes, he has aptly mentioned this performance as the icing on the cake !!

While watching for the first time itself it gave me goose bumps !!! It was like a symphony....NT begins to explain the sequence softly....gradually gains momentum...inserts a few interesting notes here & there, mesmerizes you (again, rightly mentioned by Murali sir ) for quite some time....employs effective pauses to give stunning impact...and then reaches the crescendo !!!!

Hats off to the MASTER !!!!

rangan_08
16th December 2012, 12:48 PM
Hope fans are aware that SARASWATHI SABATHAM is playing daily 3 shows at Mahalakshmi theatre (Pattalam, Chennai) from Dec 14 onwards.

Murali Srinivas
17th December 2012, 04:19 PM
Sorry friends! Was out of station for a couple of days and so couldn't reply immediately.

Thank you Gopal, S.Vasudevan, Parthasarathy and Sasidharan.

செந்தில், வழக்கம் போல் பாராட்டி தள்ளி விட்டீர்கள். மிக்க நன்றி,

ராகவேந்தர் சார்,

கிரவுன் தியேட்டர் ஊழியரை பற்றி எனக்கு நேரிடையாக தெரியாது. முன்பொரு முறை நண்பர் சுவாமி அவர்கள் தியாகம் பற்றி சொல்லும்போது இந்த தகவலை பகிர்ந்துக் கொண்டார். அதைதான் இங்கே குறிப்பிட்டேன். அப்படி இல்லை அவருக்கு ரசிகர்கள் உதவி செய்தார்கள் என அறிந்ததில் மகிழ்ச்சி.

வாசுதேவன் அவர்களே,

நேரம் கிடைக்கும்போது இது போன்ற பதிவுகளை தொடர்ந்து தருவேன்.

அன்புடன்

Murali Srinivas
17th December 2012, 04:38 PM
அந்த 1978 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகி நான் எழுத விட்டு விட்ட ஒரு படம் இருக்கிறது. அது பிறகுதான் நினைவிற்கு வந்தது. ஆகஸ்ட் 15 அன்று அதுவரை கதை வசனகர்த்தாவாக இருந்த மகேந்திரன் இயக்குனராக புது அவதாரம் எடுத்தார். தமிழ் சினிமாவின் குறிப்பிட தகுந்த இயக்குனராக இன்றும் அறியப்படும் மகேந்திரன் எழுத்தாளர் உமா சந்திரனின் நாவலை முள்ளும் மலரும் என்ற பெயரில் படமாக்கி அதில் ரஜினியை நாயகனாக நடிக்க வைத்தார். இந்தப் படமும் அதில் இளையராஜா இசையும் எப்படி புகழ் பெற்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆக கடைசி 10 நாட்கள் என்ற போதும் மதுரை அலங்காரில் வெளியான இந்தப் படமும் ஒரு opposition என்றே சொல்லலாம்.

அன்புடன்

Thanks Chandrasekaran Sir.

RAGHAVENDRA
17th December 2012, 11:09 PM
Hearty welcome to the delegates of the 10th Chennai International Film Festival to Woodlands Symphony Theatre on 18th December 2012 for the screening of the magnum opus of NT "KARNAN" under the "Tribute to 100 Years of Indian Cinema" Section.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/karnanscreeningfw_zpsf290e9be.jpg

Murali Srinivas
17th December 2012, 11:21 PM
கிரௌன் தியேட்டர் ஊழியர் பற்றி தகவல் சொன்னது சுவாமி அவர்கள். கவனக்குறைவால் சாரதி பெயரை எழுதி விட்டேன். மன்னிக்கவும்.முன் பதிவுகளில் அந்த தவறையும் திருத்தி விட்டேன்.

கோவை திரையரங்கில் எங்க மாமாவிற்கு நல்ல வரவேற்பு. ஞாயிறு மாலைக் காட்சியெல்லாம் அமர்களமாக இருந்ததாம். கோவையில் இதை பார்த்துவிட்டு தகவல் சொன்ன ராமஜெயம் அவர்களுக்கு நன்றி

அது போன்றே சென்னை மகாலட்சுமி திரையரங்கில் சரஸ்வதி சபதம் மிக சிறப்பாக வெற்றி நடை போடுகிறது என்ற செய்தியையும் நேற்று ஞாயிறு மாலை காட்சிக்கு ஒரு திருவிழா atmosphere இருந்ததையும் பகிர்ந்துக் கொண்ட நண்பர் சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்

groucho070
18th December 2012, 07:57 AM
Just finished reading your piece on Thyagam, Murali-sir. My head was spinning during the first part, soooo many films!!!!! So much of competition, and NT himself is a competitor with his other films. What an era, that was! Second part got lost a bit on the politics. I need to reread them, but I got your point. With all these going on, Thyagam went on to be a smash hit.

Murali Srinivas
18th December 2012, 11:27 PM
Thanks Rakesh. I know that the journalist in you would love to have that info for his future reference. Do read the second part again and it would give an insight about the odds stacked against the film's success journey.

Regards

Thomasurink
19th December 2012, 11:37 AM
hi everybody,
Sorry for my absence for a very long time.
After attending Karnan 100 days function at Satyam I was busy with my office work.
Ramanujan Sir How are you?
I saw Kumki with family.
What is your opinion about the Movie?
I liked very much.

Shivaji Mohan

JamesFague
19th December 2012, 12:23 PM
Welcome Mr Shivaji Mohan after a long gap.

Thomasurink
21st December 2012, 09:22 PM
Welcome Mr Shivaji Mohan after a long gap.

Thanks Vasudevan Sir.

Thomasurink
21st December 2012, 09:26 PM
Hi All,

Watch my review on KUMKI on the following link.

http://www.youtube.com/watch?v=Mamnk1gfqL0

Shivaji Mohan

Murali Srinivas
24th December 2012, 01:15 PM
எல்லா வருடமும் டிசம்பர் மாதத்தில் டி டி.கே. ரோட்டில் அமைந்திருக்கும் ஏவிஎம் Sound Zone -ல் டிவிடி களின் sales நடைபெறும். இந்த வருடமும் அது போன்றே நடந்து வருகிறது. அனைத்து டிவிடி வெளியிட்டாளர்கள் தங்கள் படைப்புகளை அங்கே காட்சிபபடுத்தியிருக்கின்றனர். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் உள்ள டிவிடிகள் கிடைப்பதாலும் திரைப்படம் தவிர கர்நாடக சங்கீத மற்றும் நாட்டியம் சம்பந்தப்பட்ட டிவிடிகளும் கிடைக்கின்றன என்பதாலும், பல்வேறு வயது வரம்பிலான குழந்தைகளுக்கான ஒலி/ஒளி இழைகளும் அங்கே இருக்கின்றன என்பதாலும் பொது மக்கள் பலரும் ஆர்வமாக வந்து வாங்கி செல்லும் காட்சியை காண நேர்ந்தது. புத்தகங்களும் தள்ளுபடியில் விற்கப்படுவதால் ஒரு added advantage கிடைக்கிறது.

வழக்கம் போல் நடிகர் திலகத்தின் படங்களுக்குதான் demand அதிகம். நான் அங்கே செலவழித்த இரண்டு மணி துளிகளில் நடிகர் திலகத்தின் பல்வேறு திரைப்படங்களை தேடி தேடி எடுத்தும், அங்கே இருக்கக்கூடிய விற்பனையாளர்களிடம் இல்லாத படங்களைப் பற்றி கேட்பதும் என பலரும் சிவாஜி படங்களை வேண்டும் என கேட்டு வாங்கி செல்வதை கண்கூடாய் காண முடிந்தது. ஒருவர் மணமகன் தேவை படம் வேண்டும் என்று பொறுமையாய் தேடி எடுத்து சென்றார். மற்றொரு பெண்மணியின் முகத்தில் வசந்த மாளிகை டிவிடியை பார்த்தவுடன் வந்த சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே! பலரும் மோட்டார் சுந்தரம் பிள்ளை டிவிடியை வாங்குவதை பார்க்க முடிந்தது. அது போன்றே உயர்ந்த மனிதன்! Moser baer டிவிடிகளில் பராசக்தி அந்த நாள் combination -க்கு நல்ல வரவேற்பு இருப்பதை காண முடிந்தது. கர்ணன் எப்போதும் போல் நம்பர் 1, closely followed by திருவிளையாடல்! தூக்கு தூக்கி, ஆலய மணி, ஆண்டவன் கட்டளை, பாசமலர் and of course புதிய பறவை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த ஹாலில் வைத்து இளைஞர் ஒருவர் அறிமுகமானார். வெகு சுவாரஸ்யமான விஷயங்கள் சிலவற்றை அவரிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தது. அவற்றை பற்றி தனியாக எழுதுகிறேன். சென்னை வாழ் அன்பர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஜனவரி முதல் வாரம் வரை விற்பனை நடைபெறும்!

அன்புடன்

Gopal.s
24th December 2012, 03:03 PM
சரிதான். ஊர் கூடி வடம் இழுத்து தேரை சரியாக வலம் வர செய்வோம். என் பங்கிற்கு, முதலில், வருடம் ஒரு படம் தேர்ந்தெடுத்து , முழுதாய் ஆய்வுகள் எழுதுவேன். எல்லோரையும் வர வேண்டும் ,பதிவுகள் இட வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்.

Gopal.s
25th December 2012, 10:25 AM
விரைவில் எதிர்பாருங்கள்,
பம்மலாரின் இரும்புத்திரை .
சதீஷ் மற்றும் வாசுதேவனின் சவாலே சமாளி.

KCSHEKAR
25th December 2012, 10:26 AM
Kumudham - 26-12-2012

http://www.facebook.com/photo.php?fbid=240742859390527&set=pcb.240742889390524&type=1&theater

http://www.facebook.com/photo.php?fbid=240742846057195&set=pcb.240742889390524&type=1&theater

JamesFague
25th December 2012, 10:30 AM
The other name of dedication = Nadigar Thilagam

KCSHEKAR
25th December 2012, 10:35 AM
Happy Christmas

http://www.youtube.com/watch?v=Iuhj3EIBepM

guruswamy
25th December 2012, 04:45 PM
Dear Mr. Mohan,

Very good analysis, i was very happy viewing your feedback about Kumki, the raising star your son, infact proved that our N.T. Legend will live long. Hats off to you to take N.T. to the next generation.

I'm from Bangalore and I'm adherent fan of N.T. I highly appreciate your views/thoughts about Kumki.

My best wishes to your son....

JAIHIND
M. Gnanaguruswamy

Thomasurink
25th December 2012, 07:44 PM
Dear Mr.Guruswamy,
Thank you very much for your feed back sir.
I am also staying in Bangalore.My second son Nikhil is also likes NT movies.
He is born & brought up in MUmbai and now in Bangalore studying in DPS.
During Karnan 100 days function at Satyam he was interviewed by Dinamalar
and openly said to the media that all todays actors including Kamal & Rajani are
copying from NT.

Shivaji Mohan

KCSHEKAR
27th December 2012, 01:54 PM
Dinathanthi - Madurai - 26-12-2012

http://www.facebook.com/photo.php?fbid=241642495967230&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

JamesFague
27th December 2012, 02:33 PM
Mr K Chandrasekaran Sir,

Best wishes for the success of the function and you are doing great service in propagating
the glory of our NT.

KCSHEKAR
27th December 2012, 06:09 PM
Mr K Chandrasekaran Sir,

Best wishes for the success of the function and you are doing great service in propagating
the glory of our NT.

Thanks for your appreciation

Murali Srinivas
28th December 2012, 12:36 AM
ஏவிஎம் Sound Zone Annual Sales-ல் வைத்து இளைஞர் ஒருவர் அறிமுகமானார் என்று எழுதியிருந்தேன். அவருடன் நடந்த சில சுவையான உரையாடல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் அவர் அறிமுகமான விதம்.

ஹாலில் குவித்து வைக்கப்பட்டுள்ள திரைப்படங்களின் டிவிடிகளை குறிப்பாக பழைய படங்கள அதில் நடிகர் திலகத்தின் படங்களை நான் புரட்டிக் கொண்டிருந்த போது இந்த இளைஞர் எதிர்பாராதது படம் இருக்கிறதா என அங்குள்ள விற்பனையாளரிடம் கேட்க அந்த sales man வந்து எடுத்துக் கொடுத்துவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து அந்த இளைஞர் அன்னையின் ஆணை பற்றி கேட்க அது இருக்கும் இடத்தை நான் சுட்டிக் காட்டினேன். 30-35 வயதுக்குட்பட்ட இளைஞர் இவ்வகைப்பட்ட படங்களை பற்றி விசாரித்து வாங்கும் போதே அவரை கவனிக்க ஆரம்பித்த நான் அவருடன் பேச்சு கொடுக்க, பழைய படங்களின் மீது அதிலும் நடிகர் திலகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர் எனபது அவர் பேச்சில் தெரிந்தது. பல நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி அவர் கேட்க நான் தெரிந்தவற்றை சொல்ல அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இருவரும் வெளியே வந்தோம். பொதுவாக பேச்சு வந்த போது இணையம் பற்றியும் பேச்சு வர, நான் நமது Hub பற்றி குறிப்பிட்டேன். அவர் உடனே தெரியும் என்று சொல்லி விட்டு நமது நடிகர் திலகம் திரியை படித்திருப்பதாக சொன்ன அவர் அண்மையில் தியாகம் பற்றி எழுதியிருப்பதை பற்றி குறிப்பிட, அதை எழுதியது நான்தான் என்று சொன்னவுடன் அவருக்கு ஒரே சந்தோஷம். காரணம் அவரும் மதுரையை சேர்ந்தவர்தானாம். அனால் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் சென்னைக்கு வந்து விட்டார்களாம். ஆனாலும் மதுரை பற்றி அந்த தியேட்டர்களைப் பற்றி படிக்கும் போது பழைய நினைவுகள் எல்லாம் வந்ததாக சொன்னார். அவர் தந்தையார் வெகு காலம் மதுரையில் இருந்ததாகவும் அவரும் நடிகர் திலகத்தின் ரசிகர் என்றும், தன் தந்தையார் மூலமாகவே நடிகர் திலகத்தின் படங்கள் தனக்கு அறிமுகமானதையும் குறிப்பிட்டார்.

பள்ளி கல்லூரி மற்றும் தற்போதைய வேலைப் பற்றியெல்லாம் பேசினோம். திடீரென்று ஒரு கேள்வி கேட்டார். சார் சாதனை என்றால் என்ன? அவர் என்ன அர்த்தத்தில் கேட்கிறார் என்பதை புரிந்து கொள்ள நீங்கள் எந்த அடிப்படையில் கேட்கிறீர்கள் என நான் திருப்பி கேட்டேன். அதற்கு அவர் இந்த வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. நிகழ்பவை எல்லாம் சாதனையாகி விடுமா? என்று அவர் கேட்க நிகழ்பவை எல்லாவற்றையும் அப்படி சொல்லிவிட முடியாது. ஆனால் எதை அடிப்படையாக வைத்து சொல்கிறோம் என்பதில்தான் பயன்படுத்தப்படும் வார்த்தையின் உண்மையான மதிப்பு இருக்கிறது என குறிப்பிட்டேன். இளைஞர் சொன்னார் நீங்கள் எழுதும் போது மதுரையின் சாதனையாளர் என்று குறிப்பிடுகிறீர்கள். அது என்ன அடிப்படையில் என்பதை தெரிந்துக் கொள்ளவே கேட்டேன் என்றார். அவருக்கு நான் சொன்ன பதிலின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்.

நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் முதல் கால் நூற்றாண்டை எடுத்துக் கொண்டு எனது பதிலை சொன்னேன் காரணங்கள் சில. ஒரு கலைஞன் எப்படி சாதித்தான் எனபதற்கு 25 வருடங்கள் ஒரு அளவுகோல். இரண்டாவது காரணம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய தலைமுறை பரபரப்பாக நுழைந்த ஒரு காலகட்டம் 1977 -78 என்பதாலும் அந்த கால அளவை குறிப்பிட்டேன். இனி என் பதில்கள்.

1. ஒரு Calender வருடத்தில் [ஜனவரி to டிசம்பர்] வெளியான ஒரு கதாநாயக நடிகரின் 2 படங்கள் வெள்ளி விழா ஓடுவது என்ற நிகழ்வை மதுரை மாநகரிலே மொத்தம் மூன்று முறையும் முதல் கால் நூற்றாண்டிலேயே 2 முறையும் செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.

1959

வீரபாண்டிய கட்டபொம்மன் - நியூசினிமா -181 நாட்கள்

பாகப்பிரிவினை -சிந்தாமணி - 216 நாட்கள்.

1972

பட்டிக்காடா பட்டணமா - சென்ட்ரல் - 182 நாட்கள்

வசந்த மாளிகை - நியூசினிமா - 200 நாட்கள்.

மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.

2. ஒரே நாளில் வெளியான ஒரே கதாநாயக நடிகரின் 2 படங்களும் 100 நாட்கள் ஓடுவது என்ற நிகழ்வை செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.

1970 அக்டோபர் -29 -தீபாவளி

சொர்க்கம் -சென்ட்ரல் -100 நாட்கள்

எங்கிருந்தோ வந்தாள் - ஸ்ரீதேவி - 100 நாட்கள்.

மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.

3. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கம் தியேட்டரில் ஒரு கதாநாயக நடிகர் நடித்த மூன்று படங்கள் 100 நாட்களை கடப்பது என்ற நிகழ்வை செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.

1952 - பராசக்தி - 112 நாட்கள்

1960 - படிக்காத மேதை - 116 நாட்கள்

1964 - கர்ணன்- 108 நாட்கள்.

தங்கம் தியேட்டரின் 42 வருட சரித்திரத்திலேயே [1952 -1994] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.

[1952 -ம் ஆண்டு திறக்கப்பட்ட தங்கம் தியேட்டர் 1994-ம் ஆண்டு மூடப்பட்டு விட்டது]

4. ஒரு Calender வருடத்தில் [ஜனவரி to டிசம்பர்] வெளியான ஒரு கதாநாயக நடிகரின் 4 படங்கள் 100 நாட்கள் ஓடுவது என்ற நிகழ்வை மதுரை மாநகரிலே செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.

1964

கர்ணன் - தங்கம்

பச்சை விளக்கு - சிந்தாமணி

கை கொடுத்த தெய்வம் - சென்ட்ரல்

நவராத்திரி - ஸ்ரீதேவி.

மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.

5. ஒரே கதாநாயக நடிகர் - ஒரே இயக்குனர். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த ப/பா வரிசை படங்களில் தொடர்ந்து 8 படங்கள் நூறு நாட்களும் அதற்கு மேலும் ஓடிய நிகழ்வை மதுரை மாநகரிலே செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.

1958 - பதி பக்தி - கல்பனா

1959 - பாகப்பிரிவினை (216 நாட்கள்) -சிந்தாமணி

1960 - படிக்காத மேதை - தங்கம்

1961 - பாவ மன்னிப்பு -சென்ட்ரல்

1961 - பாச மலர் -சிந்தாமணி

1961 - பாலும் பழமும் -சென்ட்ரல்

1962 - பார்த்தால் பசி தீரும் -சென்ட்ரல்

1962 - படித்தால் மட்டும் போதுமா -நியூசினிமா

மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணி மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறது. இதன் பெயர் சாதனை.

[அதிலும் 1961-ம் ஆண்டு மட்டும் 3 படங்கள்.இது தனி சாதனை]

6. ஒரே திரையரங்கில் ஒரே கதாநாயக நடிகர் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து 444 நாட்கள் [இதில் ஒரு முழு calender வருடமும் அடங்கும்] ஓடுவது என்ற நிகழ்வை மதுரை மாநகரிலே செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.

அரங்கம் -ஸ்ரீதேவி

படங்கள்

1970 அக்டோபர் 29 முதல் 1971 பிப்ரவரி 5 வரை - எங்கிருந்தோ வந்தாள்

1971 பிப்ரவரி 6 முதல் 1971 மார்ச் 25 வரை - தங்கைக்காக

1971 மார்ச் 26 முதல் 1971 ஜூலை 3 வரை - குலமா குணமா

1971 ஜூலை 3 முதல் 1971 அக்டோபர் 17 வரை - சவாலே சமாளி

1971 அக்டோபர் 18 முதல் 1972 ஜனவரி 14 வரை - பாபு

மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.

7. நடிகர் திலகம் நடிக்க வந்த பிறகு அதிகமான நாட்கள் மதுரை மாநகரிலே ஓடிய கருப்பு வெள்ளை திரைப்படம் -பாகப்பிரிவினை - சிந்தாமணி - 216 நாட்கள்.

8. நடிகர் திலகம் நடிக்க வந்த பிறகு அதிகமான வசூலை மதுரை மாநகரிலே ஈட்டிய கருப்பு வெள்ளை படம் பட்டிக்காடா பட்டணமா - சென்ட்ரல் - 182 நாட்கள் - Rs 5,61,495.20 p.

1952-க்கு பிறகு மதுரை மாநகரின் 60 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1952 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.

9.இவற்றுக்கெல்லாம் முத்தாய்பாக 1952 முதல் 1978 வரை நடிகர் திலகம் நடித்த 48 படங்கள் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடியிருக்கின்றன. அவற்றுள் வெள்ளி விழா படங்களும் 150 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழாவை நூலிழையில் தவற விட்ட படங்களும் அடங்கும். இன்னும் சொல்லப் போனால் 90 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய பல படங்களை [தங்கப்பதுமை, வியட்நாம் வீடு, பாபு, ஞான ஒளி, ராஜ ராஜ சோழன் மற்றும் மன்னவன் வந்தானடி போன்றவை] நாம் கணக்கில் சேர்க்கவில்லை.

மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] முதல் கால் நூற்றாண்டிலேயே இத்தனை 100 நாட்கள் படங்களை கொடுத்தவர் நடிகர் திலகம் மட்டுமே. வேறு எந்த கதாநாயக நடிகரும் அவர்களின் திரைப்பட வாழ்க்கையை முழுமையாக எடுத்துக் கொண்டால் கூட மதுரை மாநகரில் இத்தனை 100 நாட்கள் படங்களை கொடுத்ததில்லை. இதன் பெயர் சாதனை.

[மதுரையில் 1952 முதல் 1978 வரை 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய நடிகர் திலகத்தின் படப் பட்டியல் தனி பதிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது].

இவை மட்டுமல்ல இன்னும் பல சாதனைகளை புரிந்தவர் நடிகர் திலகம் என்பதையும் [ஒரு நடிகர் நடித்த ஒரு படம் தொடர்ந்து 120 நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் ஆவது போன்ற,175 நாட்கள் மட்டும் ஓடி அதிக வசூல் செய்தது போன்ற, அதிகமான படங்கள் 100 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ் புல் ஆவது போன்ற ] அவருக்கு கூறினேன். மறு வெளியீடுகளின் சாதனைகளெல்லாம் இதில் வரவேயில்லை.

இப்போது சொல்லுங்கள் நடிகர் திலகத்தை மதுரையின் சாதனையாளர் என்று சொல்லுவதில் ஏதேனும் தவறிருக்க முடியுமா என்று நான் கேட்க அந்த இளைஞர் பிரமித்துப் போய் நிற்கிறார். சார் அவரை இதுவரை ஒரு கிரேட் actor என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கிறது என்றார். நான் சொன்னேன் இதைதான் நண்பர் சுவாமிநாதன் ஒரு திரியின் தலைப்பாகவே [Nadigar Thilagam -The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor] வைத்திருக்கிறார் எனபதை சுட்டிக் காட்டினேன்.

During our conversation since he showed interest in Cricket, I told him to check the career graph of NT and that would resemble Sachin's career. It will be consistent with the milestones being achieved at frequent intervals. Whereas the likes of Ponting and Mathew Hayden had a purple patch for a few years time during which time they scored heavily but otherwise it was just ordinary stuff. That made him understand more clearly on what I was talking about.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
28th December 2012, 12:41 AM
மதுரையில் 1952 முதல் 1978 வரை நடிகர் திலகத்தின் 100 நாட்கள் ஓடிய படங்களின் பட்டியல்.

1952

1.பராசக்தி - தங்கம் - 112

1954

2.மனோகரா - ஸ்ரீதேவி - 156

1958

3.உத்தம புத்திரன் - நியூசினிமா - 104

4.பதி பக்தி - கல்பனா - 100

5. சம்பூர்ண ராமாயணம் - ஸ்ரீதேவி - 165

1959

6. வீரபாண்டிய கட்டபொம்மன் - நியூசினிமா - 181

7. பாகப்பிரிவினை - சிந்தாமணி - 216

1960

8. படிக்காத மேதை - தங்கம் - 116

9. விடி வெள்ளி - சிந்தாமணி - 100

1961

10. பாவ மன்னிப்பு - சென்ட்ரல் - 141

11. பாச மலர் - சிந்தாமணி - 164

12. பாலும் பழமும் - சென்ட்ரல் - 127

1962

13. பார்த்தால் பசி தீரும் - சென்ட்ரல் - 110

14. படித்தால் மட்டும் போதுமா - நியூசினிமா - 100

15. ஆலய மணி - சென்ட்ரல் - 100

1963

16. இருவர் உள்ளம் - நியூசினிமா - 100

1964

17.கர்ணன் - தங்கம் - 108

18. பச்சை விளக்கு - சிந்தாமணி - 105

19. கை கொடுத்த தெய்வம் - சென்ட்ரல் - 108

20. நவராத்திரி - ஸ்ரீதேவி - 108

1965

21. திருவிளையாடல் - ஸ்ரீதேவி - 167

1966

22. மோட்டார் சுந்தரம் பிள்ளை - கல்பனா - 100

23. சரஸ்வதி சபதம் - ஸ்ரீதேவி - 104

1967

24. கந்தன் கருணை - நியூசினிமா - 125

25. ஊட்டி வரை உறவு - சென்ட்ரல் - 114

1968

26. தில்லானா மோகனாம்பாள் - சிந்தாமணி - 132

1969

27. தெய்வ மகன் - நியூசினிமா - 100

28. சிவந்த மண் - சென்ட்ரல் - 117

1970

29. ராமன் எத்தனை ராமனடி - நியூசினிமா - 104

30. சொர்க்கம் - சென்ட்ரல் - 100

31. எங்கிருந்தோ வந்தாள் - ஸ்ரீதேவி - 100

1971

32. குலமா குணமா - ஸ்ரீதேவி - 100

33. சவாலே சமாளி - ஸ்ரீதேவி - 107

1972

34. ராஜா - சென்ட்ரல் - 101

35. பட்டிக்காடா பட்டணமா - சென்ட்ரல் - 182

36. வசந்த மாளிகை - நியூசினிமா - 200

1973

37. பாரத விலாஸ் - சென்ட்ரல் - 100

38. எங்கள் தங்க ராஜா - நியூசினிமா - 103

39. கெளரவம் - சிந்தாமணி - 100

1974

40. வாணி ராணி - நியூசினிமா - 112

41. தங்கப்பதக்கம் - சென்ட்ரல் - 134

42. என் மகன் - நியூசினிமா - 101

1975

43. அவன்தான் மனிதன் - சென்ட்ரல் - 105

1976

44. உத்தமன - நியூசினிமா - 105

1977

45. தீபம் - சிந்தாமணி - 100

46. அண்ணன் ஒரு கோவில் - நியூசினிமா - 100

1978

47. அந்தமான் காதலி - சினிப்ரியா - 100

48. தியாகம் - சிந்தாமணி - 175

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
28th December 2012, 12:44 AM
அரசியல் பற்றி பேச்சு வந்தது. எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்த அந்த இளைஞர் தமிழகத்தின் பழைய வரலாறு பற்றி கேள்வி கேட்டார். நீண்ட காலம் தொடர்ந்து முதல்வர் பதவி வகிப்பது பற்றி பேச்சு வந்தது. தொடர்ச்சியாக அதிக காலம் முதல்வர் பதவி வகித்தது பெருந்தலைவர்தான் என்றேன்.அவருக்கு ஆச்சரியம். நான் அப்படி கேள்விப்படவில்லையே என்றார். நான் சொன்னேன் ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் 9 1/2 ஆண்டுகள் தமிழக முதல்வர் பதவி வகித்தது பெருந்தலைவர்தான் என்பதை அவருக்கு கூறினேன்.1954-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி முதல் 1963-ம் ஆண்டு அக்டோபர் 2 வரை அவர் முதல்வராக இருந்தார். ஒரு நாள் கூட நடுவில் இடைவெளி விழாமல் இத்தனை நீண்ட காலம் வேறு யாரும் தமிழகத்தில் முதல்வராக பணி புரியவில்லை என்ற உண்மையை சொன்னேன்.

அப்போது முன்பே பேசிக் கொண்டிருந்த சாதனை பற்றி குறிப்பிட்ட நான், தமிழக அரசியலில் பெருந்தலைவர் ஏற்படுத்திய சாதனையைப் சுட்டிக் காட்டினேன். தமிழகத்தில் ஒரு கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று பொது தேர்தலில் நின்று அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து 5 வருடங்கள் முழுமையாக ஆட்சி புரிந்து [அதாவது சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவோ அல்லது தள்ளி வைக்காமலோ] மீண்டும் தேர்தலை சந்தித்து அறுதி பெரும்பான்மை பெற்று வெற்றிகரமாக மீண்டும் ஆட்சி அமைத்த ஒரே தலைவன் பெருந்தலைவர் மட்டும்தான். 1957 பொது தேர்தலை சந்தித்து அறுதி பெரும்பான்மையோடு வெற்றி கண்ட அவர் 5 வருடங்களை நிறைவு செய்து 1962 பொது தேர்தலை சந்தித்து அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கடந்த 65 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் இந்த சாதனையை செய்த ஒரே மனிதன் பெருந்தலைவர் மட்டுமே. சுருக்கமாக சொன்னால் தனது ஆட்சியின் சாதனைகளையும் மேன்மைகளையும் முன்னேற்ற திட்டங்களின் செயல்பாடுகளை மட்டுமே முன்னிறுத்தி வாக்கு சேகரித்த ஒரே தலைவன் பெருந்தலைவர் மட்டுமே. அந்த மனிதன் நடத்திய அரசின் செயல்பாட்டை மக்கள் ஏற்றுக் கொண்டு வாக்களித்ததன் விளைவுதான் அந்த வெற்றி. இன்னும் சொல்லப் போனால் பெருந்தலைவர் தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரை அவர் தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை வழி நடத்திக் கொண்டிருந்தவரை திராவிட கட்சிகளால் அவரை வெற்றிக் கொள்ள முடியவில்லை. 1963-ல் K-பிளான் என்னும் தான் வகுத்த திட்டத்திற்கு ஏற்ப பதவியை துச்சமென மதித்து முதல்வர் பதவியை விட்டு விலகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அவர் டெல்லி சென்ற பிறகுதான், அங்கே பிரதமர்களை உருவாக்கும் கிங் மேக்கர் என்ற நிலையில் அவர் அகில இந்திய அரசியலில் கவனம் செலுத்த, இங்கே மாணவர்களையும் இளைஞர்களையும் மக்களையும் எளிதில் உணர்ச்சி வசப்படுத்த கூடிய மொழி பிரச்சனையும் பாகிஸ்தானோடு ஏற்பட்ட போரினால் உண்டான உணவு தான்ய பற்றாக்குறையும் மற்றும் வேறு சில விஷயங்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திராவிட கட்சிகள் வெற்றி பெற்றதை அவருக்கு விளக்கினேன்.

அந்த இளைஞர் [அவர் பெயர் அபிஷேக்] இந்த தகவலகளையெல்லாம் கேட்டவுடன், சார், இந்த உண்மைகளை எல்லாம் ஏன் யாருமே சொல்லவோ எழுதவோ செய்யவில்லையே என்று கேட்டார். நான் சொன்னேன் இன்றைக்கு media-வில் [electronic/print] பணி புரியும் 90- 95 சதவீத நபர்களுக்கு தமிழக/இந்திய வரலாறே தெரியாது. அது அரசியலாகட்டும் சினிமாவாகட்டும் இல்லை ஸ்போர்ட்ஸ் ஆகட்டும் ஒரு பத்து வருட காலகட்டத்தில் நடந்தவற்றை மட்டுமே அறிந்து வைத்திருப்பவர்கள்தான் பெரும்பான்மையோர். வரலாறு தெரிந்த ஒரு சிலரும் இதையெல்லாம் எழுதுவதில்லை. காரணம் பெருந்தலைவரையோ நடிகர் திலகத்தையோ பற்றி உண்மையாக எழுதுவதால் அவர்களுக்கு என்ன லாபம் கிடைத்து விடப் போகிறது? அதே நேரத்தில் மற்றவர்களை வானளாவ புகழ்ந்தால் அவர்களுக்கு தேவைப்படும் benefit கிடைக்கும் என்றேன். இளைஞர் புரிந்து கொண்டார்.

இரவு வெகு நேரமாகி விட்டதால் அந்த இளைஞர் மீண்டும் தொடர்பு கொள்வதாக கூறி பிரியா விடை பெற்று சென்றார்.அவர் காரணம் மீண்டும் ஒரு trip down the memory lane போய் வர நேர்ந்தது. இங்கே அவற்றை பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது.

அன்புடன்

sivaa
28th December 2012, 03:23 AM
saradhaa_sn


Senior Member Veteran Hubber
--------------------------------------------------------------------------------
Join Date: Jul 2005Location: ChennaiPosts: 2,180











Originally Posted by Mahesh_K

Saradhaa madam,

திரு. சின்ன அண்ணாமலை கவியரசர் கண்ணதாசனின் உறவினர், சுதந்திரப் போராட்ட வீரர், மிகச்சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். அவரது 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' என்ற புத்தகம் வியப்பூட்டும் பல குறுந்தகவல்கள் அடங்கியது - நான் சிறு வயதில் படித்து வியந்திருக்கிறேன். இங்கே ஒப்பீடு செய்யப்பட்டிருப்வர்களை விட நிச்சயம் சிறந்தவரே. கல்கண்டு விமர்சனம் எதன் அடிப்படையில் அமைந்து என்று புரிந்து கொள்ள முடியவில்லை. Organising skills குறைவாக இருந்திருக்கலாம். தேசியவாதியான அவர் இந்த விஷயத்தில் திராவிட இயக்கதவருடன் போட்டியிட முடிந்திருக்காது என்பதுதானே தமிழகத்தின் யதார்த்தம் -அன்றும் இன்றும்.
மகேஷ்...

திரு சின்ன அண்ணாமலை ஒரு தேசியவாதி, இலக்கியவாதி, தியாகி என்பதிலெல்லாம் எந்த ஐயமும் இல்லை. அதுபோன்ற பின்புலங்கள் திரு. முசிறி புத்தனுக்கு இல்லை என்பதும் உண்மை.

ஆனால் இங்கே ஒப்பீடு செய்ய எடுக்கப்பட்டிருக்கும் ஒரே அளவுகோல்.....
சின்ன அண்ணாமலை - சிவாஜி மன்றத்தலைவர்
முசிறிபுத்தன் - எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர்
என்பது மட்டுமே.

நான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கும் படங்கள் மட்டும் திரு எம்.ஜி.ஆர் படங்களாயிருந்திருந்தால் ஆர்.எம்.வீரப்பன், முசிறிபுத்தன் போன்றோரின் பெருமுயற்சியால் 100 நாள் மற்றும் வெள்ளிவிழாப்படங்களாயிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த விஷயத்தில் 'நம்ம ஆட்கள்' கொஞ்சம் மாற்று கம்மிதான். ரசிகர்களிடம் இருந்த உத்வேகம் தலைவர்களிடம் இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நடிகர் திலகம் பாகம் 6 .....பக்கம் 83


இந்த ஆதங்கம் எனக்கு நிறையவே இருக்கிறது

sivaa
28th December 2012, 04:49 AM
#961




Mahesh_K


Senior Member Regular Hubber
--------------------------------------------------------------------------------
Join Date: Mar 2010Posts: 239






NT ரசிகர் ஒருவர் கொடுத்த தகவல். 70களிலும் 80களிலும் தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய பொழுது போக்காக இருந்தது இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை. அப்துல் ஹமீது போன்ற பல அறிவிப்பாளர்களின் கவர்ச்சியான குரல் வளம் மற்றும் (ஆல் இந்தியா ரேடியோவில் கேட்கமுடியாத) புதிய திரைப்படப் பாடல்களால் தென் மாவட்ட மக்களின் மனம் கவர்ந்தது இலங்கை வானொலி. அதில் ஒவ்வொரு வாரமும் பாடல்கள் ரசிகர்களின் வாக்குகள் ( போஸ்ட் கார்டில் அனுப்பலாம்) அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும்.

10 வது பாடலில் தொடங்கி வாக்குகளின் எண்ணிக்கையோடு ஒவ்வோரு பாடலும் அறிவிக்கப்படுவதைக் கேட்க வீடுகளிலும், டீக்கடைகளிலும் பெரும் திரளான மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்களாம்.

இந்தப் போட்டியில் மிக அதிகமான வாரங்கள் ( 50க்கு மேல் இருக்கக்கூடும்) முதலிடத்திலேயே இருந்த பாடல்கள் "எங்கெங்கோ செல்லும்" மற்றும் சங்கிலி படத்தில் வரும் " நல்லோர்கள் வாழ்வைக் காக்க" இரன்டும் தானாம். இவை இரண்டுமே NT + S.P.B யின் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1983க்குப் பின் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சக்தி குறைக்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களில் கேட்பது நின்றுவிட்டது.

ஒரு உபரி தகவல் - இதே நிகழ்ச்சியில் அதிக வாரங்கள் முன்னணியில் இருந்த மற்றொரு பாடல் இளையராஜா இசையமைத்த "ஓரம்போ..ஓரம்போ" என்ற பாடல். அதாவது T.M.S அவர்களால் விமர்சிக்கப்பட்டு சர்ச்சையை ( between Ilayaraaja and TMS) ஏற்படுத்திய பாடல்.

(நடிகர் திலகம் பாகம் 6......பக்கம் 97)


இங்கே ஒன்றை குறிப்பிட வேண்ணடும் ஒரு முறை சங்கிலி படத்தில் இடம் பெற்ற
நல்லோர்கள் வாழ்வை காக்க ....... என்ற பாடல் பல வாரங்கள் ஏன் மாதக்கணக்கென்று சொல்லலாம்
இசை அணித் தேர்வில் முதல் இடத்தில் இருந்து வந்தது

ஒருவாரம் தடீரென இப்பாடல் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு
தேர்வில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது (ஏதோ உள் சதி நடை பெற்றிருக்கிறது)
முதல் இடத்தில் இருக்கும் ஒரு பாடல் திடீரென கடைசி இடத்திற்கு செல்லுமென்று
யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எம் ஜீ ஆர் ரசிகர்கள்கூட அதனை ஏற்றுக்கொள்ளவில்லை
இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு சென்று பின்னர் வெளியேற்றப்பட்டிருந்தாலும்
அதனை உண்மையென ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அங்கே நடந்தது சதி சதி சதி

எல்லா இடங்களிலும் அண்ணனின் பேர் புகழை சதிமூலம்தான் வீழ்த்தபார்hதிருக்கிறார்கள்

JamesFague
28th December 2012, 10:54 AM
Mr Murali Sir,

The way in which you put your views abount the Box Office success of
NT's Film is amazing. The TN people are paying the price by replacing the
Perunthalaivar Rule. No development, nothing and only selfish politics
as well as Jalra Kootam.

We are fortunate enough to have you in this Hub for your excellent work
in propagating the glory of our NT.

Gopal.s
28th December 2012, 04:25 PM
http://www.cablesankaronline.com/2012/12/2012.html

KCSHEKAR
28th December 2012, 05:07 PM
டியர் முரளி சார்,

மதுரை சாதனை குறித்த தங்களுடைய தகவல்கள் அருமை. தாங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல பெருந்தலைவர் பற்றியும் நடிகர்திலகம் பற்றியும் உண்மைத் தகவல்கள் பலருக்குத் தெரிவதில்லை. தாங்களாகவே, தவறாக சித்தரித்து எழுதவும், பேசவும் செய்கிறார்கள் என்பதுதான் வேதனை.

JamesFague
28th December 2012, 06:24 PM
No doubt about that. The year 2012 belongs NT's Mega Hit Karnan only.

rangan_08
29th December 2012, 01:04 PM
Recently saw "Maragatham" in dvd for the first time. It was a big disappointment. Throughout the film only Padmini, S. Balachander, T.S. Durairaj & Balaiah appeared in most of the scenes and it was almost a cameo for NT. Any other ordinary actor could have played NT's character and i wonder why he choose to act in this film (Political reasons ???? Murasoli Maran ???? Not sure.)

Contrary to above post, there are so many characters which ONLY OUR NT could have given dignity & immortality. One such character is Narahsimmachari in Paritchaikku Neramachu (telecasted in Sun Life a few days back). My God!!! just terrific. In most of the scenes i was just chocked and my eyes were filled with tears....not because of the background or the impact of the story but simply because of this great actors performance and performance alone !!! Amazing....thalaivar's simmakural, his gestures and entire screen presence was all enough to do the magic.

I remember watching the film at Roxy theatre, Purasawalkam (now, Saravana Stores has come up in that place) during my school days. But, watching the film now was thoroughly a new experience. As a fan, it was a pleasure watching Narahsimachari roaring on the screen. Thanks Sun Life.

rangan_08
29th December 2012, 01:06 PM
எல்லா வருடமும் டிசம்பர் மாதத்தில் டி டி.கே. ரோட்டில் அமைந்திருக்கும் ஏவிஎம் Sound Zone -ல் டிவிடி களின் sales நடைபெறும். இந்த வருடமும் அது போன்றே நடந்து வருகிறது. அனைத்து டிவிடி வெளியிட்டாளர்கள் தங்கள் படைப்புகளை அங்கே காட்சிபபடுத்தியிருக்கின்றனர். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் உள்ள டிவிடிகள் கிடைப்பதாலும் திரைப்படம் தவிர கர்நாடக சங்கீத மற்றும் நாட்டியம் சம்பந்தப்பட்ட டிவிடிகளும் கிடைக்கின்றன என்பதாலும், பல்வேறு வயது வரம்பிலான குழந்தைகளுக்கான ஒலி/ஒளி இழைகளும் அங்கே இருக்கின்றன என்பதாலும் பொது மக்கள் பலரும் ஆர்வமாக வந்து வாங்கி செல்லும் காட்சியை காண நேர்ந்தது. புத்தகங்களும் தள்ளுபடியில் விற்கப்படுவதால் ஒரு added advantage கிடைக்கிறது.

வழக்கம் போல் நடிகர் திலகத்தின் படங்களுக்குதான் demand அதிகம். நான் அங்கே செலவழித்த இரண்டு மணி துளிகளில் நடிகர் திலகத்தின் பல்வேறு திரைப்படங்களை தேடி தேடி எடுத்தும், அங்கே இருக்கக்கூடிய விற்பனையாளர்களிடம் இல்லாத படங்களைப் பற்றி கேட்பதும் என பலரும் சிவாஜி படங்களை வேண்டும் என கேட்டு வாங்கி செல்வதை கண்கூடாய் காண முடிந்தது. ஒருவர் மணமகன் தேவை படம் வேண்டும் என்று பொறுமையாய் தேடி எடுத்து சென்றார். மற்றொரு பெண்மணியின் முகத்தில் வசந்த மாளிகை டிவிடியை பார்த்தவுடன் வந்த சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே! பலரும் மோட்டார் சுந்தரம் பிள்ளை டிவிடியை வாங்குவதை பார்க்க முடிந்தது. அது போன்றே உயர்ந்த மனிதன்! Moser baer டிவிடிகளில் பராசக்தி அந்த நாள் combination -க்கு நல்ல வரவேற்பு இருப்பதை காண முடிந்தது. கர்ணன் எப்போதும் போல் நம்பர் 1, closely followed by திருவிளையாடல்! தூக்கு தூக்கி, ஆலய மணி, ஆண்டவன் கட்டளை, பாசமலர் and of course புதிய பறவை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.



அன்புடன்


Thanks for the info, Sir. Will try to catch up.

Please check you pm.

rangan_08
29th December 2012, 01:41 PM
Murali sir, just finished reading Thaygam part 1.

Right from the ambiguity to release either Balaji's film or Muktha's (clearly highlighted VCS's upper hand, authority and dominance), acquiring the rights of the malayalam film, concern about nativity etc., and till the the successful completion on 119 days at Chintamani, your information-filled write up made for interesting read.

Details about films of other actors, films which had super hit songs, even hindi films (details like opening of new theatres Shakthi Sivam etc., was very interesting to read )and our own NT's other films ...just amazing write up...i think you must have covered almost all the films which got released during that period. Another testimony for your extra-ordinary memory power.

I was well aware that Thyagam was a super hit film (my father-in-law used to say) but to know that in spite of all those hurdles, Thyagam emerged victorious was great news. Thank you sir.

I wish i could share my views more elaborately here, but due to time constraint i couldn't. Will sure talk about it in details once we meet in person.

It was a very interesting article sir. Will catch up with part II soon.

rangan_08
29th December 2012, 01:43 PM
Dear fans,

"Ooty varai Uravu" started playing in Balaji theatre @ brick kiln road, purasawalkam, from y'day - daily 3 shows. Any plans for tomorrow ???

KCSHEKAR
29th December 2012, 05:04 PM
Malaimalar - Chennai - 29-12-2012

http://www.facebook.com/photo.php?fbid=242491759215637&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater



Malaimurasu - Chennai - 29-12-2012

http://www.facebook.com/photo.php?fbid=242498255881654&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

Murali Srinivas
29th December 2012, 07:20 PM
Thanks Vasudevan Sir, Chandrasekar sir, Sivaa and Mohan.

Mohan,

I am happy that you were able to get into the skin of the Thiyagam post [if I could call it that way] and thanks again for highlighting the points. Seen your pm.

Regards

adiram
30th December 2012, 12:11 PM
Mr. MURALI SRINIVAS,

Amazing writeup about the glorious period of Thiyagam. This is the difference between you and others.

I am sure none of the hubbers eloborate this much about the situations during the period of the movie releases. You know the magic of taking all of us to the exact period and to munch the sweet memories about them.

Your knowledge about the past, your extraordinary memory power and the way you are nerrating them are really awsome.

No doubt you are the asset of Shivaji sir's forum, and sure nobody can come near you, except Pammalar.

More and more please in very future.

adiram
30th December 2012, 12:31 PM
Mr. MURALI SRINIVAS,

Your Video shop experiences are very interesting.

Your definition for the word SAADHANAI and the exgamples given from Shivaji sir's movies are wonderful.

The list of Shivaji sir's films which have crossed 100 days and Silver Jubilee in MADURAI is excellent. (very celeverly you have covered his achivements from 1952 to 1978, the period of which MGR was also in the field. so nobody can claim Shivaji acheived only after MGR left). How talented you are.

Real way of fame spreading of Shivaji, you are doing from the very beginning of this forum. GREAT.

Gopal.s
31st December 2012, 12:19 PM
Wishing you and your family Happy new Year.



Let the new year brings you more



happiness, creativity and energetic life.

J.Radhakrishnan
31st December 2012, 03:20 PM
Mr. MURALI SRINIVAS,

Amazing writeup about the glorious period of Thiyagam. This is the difference between you and others.

I am sure none of the hubbers eloborate this much about the situations during the period of the movie releases. You know the magic of taking all of us to the exact period and to munch the sweet memories about them.

Your knowledge about the past, your extraordinary memory power and the way you are nerrating them are really awsome.

No doubt you are the asset of Shivaji sir's forum, and sure nobody can come near you, except Pammalar.

More and more please in very future.


ஆதிராம் சார்,

தாங்கள் முரளி சார் மற்றும் பம்மலார் பதிவுகளை பாராட்டும் அதேவேளை வேறு "யாராலும் நெருங்கமுடியாது" என்பது போன்ற வார்தைகளை தவிர்த்திருக்கலாம். நம் ரசிகர்களுக்குள் "சிண்டு" முடியவேண்டாம்

Murali Srinivas
31st December 2012, 08:47 PM
நண்பர் ஆதிராம் அவர்களுக்கு,

என்னை பாராட்டுகிறேன் என்ற பெயரில் நமது நடிகர் திலகம் ரசிகர்கள அனைவரும் வருத்தம் கொள்ள செய்யும் வகையில் நீங்கள் எழுதியது சரிதானா? ஒருவர் போல் மற்றொருவர் எழுத முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் தங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இந்த திரிக்கு வரும் முன்னரே இதை முன்னெடுத்து சென்ற ஜோ, எழுத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அனைவரையும் கவர்ந்த சாரதா, மனதில் தோன்றுவதை மறைக்காமல் எழுதும் கார்த்திக், யாருடைய பாணியையும் பின்பற்றாமல் சுயமாக எழுதும் நெய்வேலி வாசு [பாதுகாப்பு படப்பிடிப்பு, சந்திப்பு ஓபனிங் ஷோ மற்றும் வசந்த மாளிகை நினைவலைகள்], பாடல்களை அலசுவதில் ஒரு முனைவர் பட்டமே கொடுக்கலாம் என அனைவராலும் பாராட்டப்படும் சாரதி, அதிரடி எழுத்து மன்னன் கோபால், விழாக்களையும் முக்கியமான நிகழ்வுகளையும் உடனே நிழற்படமாக பதியும் ராகவேந்தர் சார், பலவிதமான சமூக நற்பணிகளை நடத்தி அதை இங்கே பதிவிடுவதன் மூலம் நடிகர் திலகத்தின் பெயரால் நடக்கும் நற்பணிகளை உலகறிய செய்யும் சந்திரசேகர், யாழ் நகரில் நடிகர் திலகத்தின் சாதனைகளை மட்டுமல்ல சேலம் மாநகரத்திலும் அவரின் சாதனைகளை இங்கே பதிவு செய்யும் சிவா, சசிதரன், ராதாகிருஷ்ணன், மூத்த ரசிகர் ராமஜெயம், இப்போது அவ்வளவாக பதிவிடாவிட்டாலும் முன்னர் தன் நுணுக்கமான விமர்சனத்தால் அனைவரையும் கவர்ந்த மோகன் (ரங்கன்), நடிகர் திலகம் நடித்த படங்களின் online சுட்டிகள் மற்றும் அழகான புகைப்படங்களை தந்துக் கொண்டிருக்கும் சதீஷ், நெல்லை அனுபவங்களை சுவைப்பட எழுதிய கிருஷ்ணாஜி, நடிகர் திலகத்தை பற்றிய தவறான செய்தியோ, இல்லை வீண் வாதமோ வந்தால், அதை லாவகமாக எதிர்கொண்டு நகைச்சுவை இழையோட பதிலுக்கு பதில் கொடுத்திருந்த நண்பர் மகேஷ், அழகான தமிழில் பதிவிட்ட காவேரி கண்ணன் மற்றும் சிவாஜி தாசன், ஆனந்த், சிவாஜி செந்தில், மோகன் சுப்ரமணியன், குருசுவாமி முன்பு வெகு ஆர்வமாக பதிவிட்டுக் கொண்டிருந்த ஷிவ், இப்போது அதே ஆர்வத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் சித்தூர் வாசுதேவன், அற்புதமாக எழுதக் கூடிய ராகேஷ், முன்பு active-ஆக எழுதிக் கொண்டிருந்த tacinema, சிவன்K, சற்று அதீதமாய் உணர்ச்சிவசப்பட்டாலும் நடிகர் திலகத்தின் மேல் அதீத அன்பு கொண்ட சுப்ரமணியன், இளமையின் துடிப்போடு நடிகர் திலகத்தின் படங்களின் விமர்சனங்களை பதியும் ராகுல்ராம், நமது NOV மற்றும் எழுத்து சித்தர் பிரபுராம், மற்றும் நான் இங்கே குறிக்க விட்டுப் போன ஏதேனும் நபர்கள் [அவர்கள் மன்னிக்க] இப்படி பலர் இந்த திரியில் பெரும் பங்காற்றியிருக்க என்னை மட்டுமே முன்னிறுத்தி நீங்கள் எழுதியது பலரையும் [நான் உள்பட] வேதனைப்படுத்தியிருக்கிறது.

நீங்கள் சொன்ன ஒரே ஒரு விஷயத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். அது அருமை நண்பர் சுவாமி பற்றி சொன்னது. நாங்கள் எவ்வளவோ எழுதலாம். ஆனால் அந்த எழுத்துகளின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தியது சுவாமி அவர்கள் பதிவிட்ட ஆவணங்கள்தான். அவரின் பங்களிப்பு அசாத்தியமானது.

ஆகவே பாராட்டுங்கள் அனைவரையும் என கேட்டுக் கொண்டு

அன்புடன்

Murali Srinivas
31st December 2012, 08:57 PM
Wishing All The Hubbers A Very Happy And Prosperous New Year 2013!

Let this New Year bring all health, wealth and glory to everyone.

Like 2012, let 2013 also see the glorious spectacle of NT films hogging the limelight and being right there at the top!

Regards

RAGHAVENDRA
31st December 2012, 10:37 PM
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டிலும் நடிகர் திலகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறந்து இனி வரும் காலம் நமதே என பறை சாற்றப் போகிறது. அதற்காக உழைக்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் முன்கூட்டியே பாராட்டுக்கள்.

முரளி சாரையும் பம்மலாரையும் ஆதிராம் பாராட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. இதில் அனைவரும் உடன் படுவதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதனை அவர் உளமார சொல்லியிருந்தாரென்றால் மற்ற கருத்துக்கள் அங்கே இடம் பெற்றிருந்திருக்காது.

யாரைப்பற்றி சொன்னாலும் சொல்லா விட்டாலும் பம்மலாரும் வாசுவும் ஆற்றியுள்ள மகத்தான பணியினை நாம் ஒவ்வொருவரும் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம். சாதனைகளின் சக்கரவர்த்தி என்ற தலைப்பை ஆணித்தரமாகக் கூறும் வண்ணம் பம்மலார் தன்னிடமிருந்த ஆவணங்கள் மூலம் நடிகர் திலகத்தின் பெருமையை நிலைநாட்டினார் என்றால் நெய்வேலி வாசுதேவன் சார் ஆற்றியுள்ள பணி மற்றொரு பக்கம் மகத்தானது. எண்ணிலடங்கா இரவுகள் உறக்கத்தினை துறந்து காணொளிகள், நிழற்படங்கள் என நடிகர் திலகத்தின் பரிணாமங்களை உலகறியச் செய்தார். நடிகர் திலகத்தின் நாயகியர் தொடர் இத்திரிக்கு ஒரு மகுடமாக திகழ்ந்தது. அபூர்வமான பல தகவல்களுக்கு பொக்கிஷமாக விளங்கின அவருடைய பதிவுகள். அதே போல் பலரும் பார்த்திராத ஸ்கூல் மாஸ்டர் கன்னடம், மனோகரா தெலுங்கு, பக்த ராமதாஸு, தர்த்தி போன்ற நடிகர் திலகத்தின் இதர மொழிப்படங்களிலிருந்து காணொளிகள், சிவாஜிக்கும் சண்டைக் காட்சிக்கும் ரொம்ப தூரம் என்று கேலி பேசியவர்களின் வாயை அடைத்து நடிகர் திலகத்தின் ஸ்டன்ட் காட்சிகளுக்கென்றே தனிப் பதிவுத் தொடர் தந்தது அதுவும் அந்தக் காட்சிகளை தனியாகப் பிரித்து அதனை காணொளியாக்கி, இணையத்தில் தரவேற்றி நமக்காக இங்கே தர அவர் மேற்கொண்ட உழைப்பும் சக்தியும் நம் யாராலும் திருப்பித் தரமுடியாத பங்களிப்பு, அதே போல் பம்மலாரும் வெறும் சாதனை ஆவணங்கள் மட்டுமின்றி [அவர் 2009லேயே இங்கே வந்து விட்டார், 2011ல் தான் விளம்பர ஆவணங்கள் தரத் துவங்கினார், அதற்கு முன்னர் அவர் அளித்துள்ள பங்களிப்பினை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும், நடிகர் திலகத்தைப் பற்றிய அவருடைய கேள்வி பதில் தொகுப்பு ஒரு உதாரணம், பல்வேறு நாளிதழ்கள் பருவ இதழ்களில் வெளிவந்த நடிகர் திலகத்தைப் பற்றிய பல அபூர்வ தகவல்கள் வேறு எங்கும் கிடைக்காதவை] இது போன்று பல பதிவுகள் இந்த இருவரும் இந்த மய்யத்தில் நடிகர் திலகத்தின் திரிக்கு எவ்வளவு பெரிய தூண்களாக விளங்கினர் என்பதற்கு சான்று. இங்கு நாம் அனைவருமே ஒருவரை ஒருவர் பாராட்டி பதிவுகளால் நடிகர் திலகத்தின் புகழைப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவ்வப்போது யாராவது இங்கே இது போன்ற பதிவுகளால் மன வருத்தத்தை உண்டாக்க முற்படுவது, மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இது போன்ற தொரு மன வருத்தம் சில மாதங்களுக்கு முன் வந்த சில பதிவுகளால் ஏற்பட்டு அதனுடைய காயம் ஆறு முன் மீண்டும் அதே போன்ற தொரு காயம் உண்டாகும் சூழ்நிலை வருவதை நம்மால் ஏற்க முடியவில்லை.

வரும் ஆண்டில் நடிகர் திலகத்தின் படங்கள் பெறக் கூடிய வெற்றி, அதற்கான நம்முடைய உழைப்பு அதனை நாம் நிறைவேற்ற எந்த அளவிற்கு முனைப்புடன் ஈடுபடப் போகிறோம் என்பதையெல்லாம் நம்மிடையே ஏற்படக் கூடிய புரிந்துணர்வு தான் நிர்ணயிக்கும்.

அந்த அடிப்படையில் நாம் வரும் ஆண்டை எதிர்நோக்குவோம்.

sivaa
1st January 2013, 03:36 AM
அனைவருக்கும் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

parthasarathy
1st January 2013, 12:59 PM
Dear Friends,

Wish you all a very happy and prosperous New Year.

Regards,

R. Parthasarathy

adiram
2nd January 2013, 10:51 AM
Dear Mr. MURALI SRINIVAS,

I gone through the detailed reply given by you, mentioning the participation and contributions of EACH & EVERY hubber here, by mentioning more than 50 names. This is our MURALI sir.

My respect on you increases day by day and by your each and every post.

But you see, the 'one' hubber who blamed me that I am admiring only you and Pammalar, he admired the contribution of only one hubber in his post, leaving other's contributions as 'ambo'.

That is the difference between you and others, and my openion is the same 'You and Pammalar' are matchless, and in fact Mr. CHANDRASEKHAR too, by his public services.

joe
2nd January 2013, 12:31 PM
இந்த மன்றத்தில் நடிகர் திலக்கத்தின் முதல் திரி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து வருபவன் என்ற முறையில் சில வார்த்தைகள் சொல்ல விழைகிறேன்..


நடிகர் திலகத்தின் திரி என்பது முழுக்க முழுக்க நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதற்கும் , தொடர்ந்து அவர் நினைவை அசை போடுவதற்கு ஏற்ற இடமாக பல வருடங்களாக தொடர்ந்து வந்துள்ளது .பல்வேறு கால கட்டங்களில் பலர் இங்கே பங்களிப்பை அளித்து வந்திருக்கிறார்கள் .. காலச்சுழற்சியில் தனி மனித சூழ்நிலைகளின் காரணமாக பலர் தொடர்ந்து நடைபோட முடியாமல் சென்றிருக்கிறார்கள் .மீண்டும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது மீண்டும் வந்து தங்கள் பங்களிப்பை தொடர்ந்திருக்கிறார்கள் ..மாறி மாறி பல பேர் வந்து சென்றாலும் நடிகர் திலக்கம் திரி என்ற இந்த தேர் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது ..காரணம் தேரை இழுப்பது தேரில் அமர்ந்திருக்கும் நடிகர் திலகத்துக்காக மட்டுமே , தேரை இழுத்துச் செல்லும் நம் ஒவ்வொருவருக்காகவும் அல்ல என்ற புரிதல் மிகபெரும்பான்ன்மையான பேருக்கு இருந்ததாலேயே இது சாத்தியப்பட்டது .


இங்கே அவரவருக்கு அந்தந்த காலகட்டத்தில் கிடைக்கும் வாய்ப்பு , நேரம் பொறுத்து அற்புதமான பங்களிப்பை பலர் வழங்கி வந்திருக்கிறார்கள் ..அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் என்பதி சந்தேகம் இல்லை .அற்புதமான ஒரு எழுத்துப் பங்களிப்பின் போதோ , ஆவண வழங்கலின் போதோ , தகவல் பகிர்தலின் போதோ அதற்காக அவர்களை பாராட்டுவது , நன்றி நவில்வதும் கண்டிப்பாக இயல்பான ஒன்று .அதையும் யாரும் எள்ளளவும் குறை சொல்ல முடியாது . ஆனால் பிரச்சனை ஆரம்பிப்பதே பாராட்டுகளில் ஒப்பீடுகளும் உயர்வு நவிற்சி உச்சங்களும் மலிந்து விடும் போது தனி மனித ஈகோவும் எதிர்பார்ப்பும் முளைத்து விடுவது இயல்பு .


உதாரணத்துக்கு நம்முடைய முரளி சாரை எடுத்துக்கொள்வோம் . எத்தனை எத்தனை ஆண்டுகளாக அற்புதமான பங்களிப்பை அளித்து வருகிறார் . நான் உட்பட அவரை பாராட்டி மகிழாதோர் இல்லை . அவர் சிறப்பான இடுகை ஒன்றை தரும் போது அதற்காக "நன்றி முரளி சார்" என்றோ "மிகச் சிறப்பான எழுத்து .அருமை" என்றோ பாராட்டுவது போதுமானது .. அதை விடுத்து "முரளி சார் ..உங்களைப் போல எழுத உலகத்தில் யாருமில்லை " என்றோ "எழுத்துலக திலகமே " "ரசிக உலகின் உச்சமே" என்றோ அவரே கூச்சப்பட்டு நெளியும் வகையில் சொன்னால் அதை அவரே விரும்ப மாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் . எனவே இத்தகைய உச்ச பட்ச உயர்வு நவிற்சிகளை தேரிலே வைத்து நாம் இழுத்துக்கொண்டிருக்கும் நடிகர் திலகத்துக்கு மட்டும் சூட்டி , தேரை இழுக்கும் இழுப்போரிடையே இவர் முதல்வர் , இவர் இரண்டாமவர் என குறுக்குசால் ஓட்டாமல் இருப்பது நலம் .


(அப்படியென்றால் இவர் (நான்) இப்படித் தான் சொல்கிறார் . இதைத் தான் சொல்லியிருக்க வேண்டும் என வழக்கம் போல பொழிப்புரையும் தீர்ப்பும் வழங்கினாலும் எனக்கொன்றும் இல்லை ..எனக்கு தேரும் தேரில் இருக்கும் நடிகர் திலகமும் தான் நோக்கம் , இங்கு நல்ல பெயர் வாங்குவதோ அல்லது தனி நபர்களை தூக்கிப்பிடிப்பதோ அல்ல .நன்றி)

JamesFague
2nd January 2013, 02:53 PM
I totally agree with the views expressed by Mr Joe.

Gopal.s
3rd January 2013, 06:53 AM
ஆதிராம் சார்,
ஒரு சின்ன விண்ணப்பம். திரி என்பது ஆராய்ச்சி கூடமல்ல. பொதுவில் ஒரு விஷயத்தில் நாட்டம் கொண்டவர்கள் கூடி விவாதித்து பரிமாறி கொள்ளும் இடம்.எப்போதும் எல்லா விஷயங்களும் ,எல்லோரிடமிருந்தும் புதுசாக வர முடியாது.ஆனால் எல்லோரும் பரிமாறி கொள்ளும் போது ,ஓரிரண்டு புதுசாக அக படும். அத்தோடு ,புதிது புதியதாய் பார்வையாளர்கள் வருவர். அவர்கள் ,பழைய பாகங்களை முழுதாக படிப்பார் என்றும் சொல்ல முடியாது.அப்போது ,எந்த விஷயமாயினும்,அவர்களுக்கு சுவையானதாகவே இருக்கும். யாரையும் திட்டி, விமரிசித்து, அவர்களை திரியிலிருந்து விரட்ட வேண்டாமே ப்ளீஸ்.
எல்லோர் பங்களிப்பையும் வர வேற்போம். நல்லதை பாராட்டுவோம். மற்றவற்றிற்கு, மௌனியாய் இருத்தல் நலம்.

KCSHEKAR
3rd January 2013, 11:35 AM
http://www.facebook.com/photo.php?fbid=244503045681175&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

parthasarathy
4th January 2013, 12:24 PM
அன்புள்ள நண்பர்களே,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வேலை நிமித்தமாகவும் உடல் நிலை காரணமாகவும், ஒரு இடைவெளி விழுந்து விட்டது.

சீனியர்கள் திரு. முரளி, திரு. ராகவேந்திரன் போன்றோர் தொடர்ந்து பங்களித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

திரு. ராகவேந்திரன் அவர்களின் நிழற்படப் பதிவுகளும் 3-d பதிவுகளும் மிக நன்றாக இருந்தன.

திரு. முரளி அவர்கள் வழக்கம் போல எளிய மற்றும் சுவாரஸ்யமான ஈர்ப்புடன் தியாகம் மற்றும் மதுரை மாவட்ட நினைவலைகளை அற்புதமாக எழுதியிருந்தார்.

அண்மையில், வனஜா மேடம் அவர்களின் இரண்டு கட்டுரைகள் மிகவும் சுவையாகவும் உயிர்ப்புடனும் இருந்தன. எண்பதுகளில், நடிகர் திலகத்தின் திறமையை இன்னும் நன்றாக வெளிக் கொணர்ந்திருக்கலாம் என்ற கருத்துடன் உடன்படாதவர்கள் யாரும் இல்லை. கடைசி வரை, அவர் "இயக்குனரின் நடிகராகத்" தான் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவரது சில முக்கியமான படங்கள் அவற்றில் அவரது பங்களிப்பைப் பற்றி நீண்ட கட்டுரைக்கான எண்ணங்கள் ரொம்ப நாளாகவே என் மனதில் இருக்கிறது. நிச்சயம் அவற்றை எழுதுவேன். நடிகர் திலகம் வாணிஸ்ரீ ஜோடிப் பொருத்தம் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. நடிகர் திலகத்தின் பிரத்தியேக ரசிகனாகப் பார்த்து ஒரு வகையாகவும், ஒரு படைப்பாளியின் பார்வையிலிருந்து வேறு வகையாகவும் எழுதலாம். அது தான் நடிகர் திலகத்தின் தனித் தன்மை. இந்த ஒரு கலைஞன் தான் பல கோணங்களிலிருந்தும் பார்த்து விமர்சனம் எழுதும் படி செய்தவர். அண்மையில், கெளரவம் "பாரிஸ்டர் ரஜினிகாந்த்" பாத்திரத்தில் அவரது நடிப்பை வேறு கோணத்தில், ஒரு ஹப்பர் அற்புதமாக ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.

திரு. சந்திர சேகர் அவர்களைப் பற்றியும் அவரது சமூகத் தொண்டினைப் பற்றியும் போற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை.

திரு. ராகுல் ராம் அவர்களின் ஆய்வுகளும் மிகவும் சுவையாக இருந்தன.

திரு. கோபால் அவர்கள் மறுபடியும் "இரும்புத் திரை" பட ஆய்வு மூலம் துவங்கி இருக்கிறார். மிக்க மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று. நடிகர் திலகம் வைஜெயந்தி மாலா ஜோடிப் பொருத்தம் அற்புதமாக அமைந்து, துரதிர்ஷ்ட வசமாக சொற்ப படங்களுடன் முடிந்தது. ஒரு சோலை வனத்தில், இருவருக்கும் நிகழும் இரு சந்திப்புகள் மிகவும் சுவையாகவும், இயல்பாகவும் அமைந்திருக்கும். தொடருங்கள்.

சிலரது பெயர் விட்டுப் போயிருந்தால், தயை கூர்ந்து மன்னிக்கவும்.

திரு. பம்மலார், திரு. வாசுதேவன் (நெய்வேலி) மற்றும் மற்ற சீனியர்களின் வருகை இந்தத் திரிக்கு மேலும் சுவையும் சுவாரஸ்யமும் கூட்டும்.

இது ஒரு தேர். ஊர் கூடித் தான் ஒன்றுபட்டு இழுக்க வேண்டும். யார் எதை எழுதினாலும், கிண்டல் செய்யாமல், முடிந்தால் திரு. ஜோ அவர்கள் சொல்லியபடி எளிய வார்த்தைகளால் பாராட்டுங்கள். நடிகர் திலகமே கூறியபடி, ஒவ்வொரு கலைஞனும் அங்கீகாரத்துக்கு ஏங்குபவன். இங்கு பங்களிக்கும் அனைவருமே கலைஞர்கள் தான். ஊக்கம் தான் அவர்களை மேலும் மேலும் பங்களிக்க, எழுத வைக்கும். என்னதான் சுய திருப்திக்காக செய்கிறோம் என்று கூறிக் கொண்டாலும் (நான் உட்பட), மற்றவர்களுடைய அங்கீகாரம் தரும் ஊக்கம் தனி தான்!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

KCSHEKAR
4th January 2013, 04:52 PM
நான் தமிழுடன் மறுபடியும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்தத் திரி நல்லதொரு சந்தர்ப்பத்தை எனக்கு அளித்திருக்கிறது. அதற்கு நான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குத்தான் நன்றி கூறவேண்டும்.

எல்லோருடைய உணர்வுகளையும் ஒரு வரியில் கூறிவிட்டீர்கள். நன்றி.

Murali Srinivas
5th January 2013, 12:18 AM
நடிகர் திலகத்தின் திரிக்கு வருகை தந்து குறுகிய நாட்களிலே பலரது கவனத்தை கவர்ந்திருக்கும் வனஜா அவர்களே! உங்கள் வருகைக்கு நன்றி! பலரையும் எழுத தூண்டும் உங்கள் எழுத்து நடைக்கு நன்றி! இந்த திரியில் இதுவரை அதிகமாக பங்கு பெற்ற சாரதா, சக்திபிரபா, ரோஷன், tfmlover மற்றும் தமிழ் என்ற ஐந்து பெண்மணிகளுக்கு பிறகு ஆறாம் தினையாக வந்துள்ள உங்களை மன மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்! தொடருங்கள்! [உஷா சங்கர் மற்றும் சுதா ஆகிய இரு பெண்மணிகளும் கூட தங்கள பங்களிப்பை இந்த திரிக்கு தந்துள்ளனர். அவர்களையும் இந்த நேரத்தில் நினைவு கூறுவோம்]

அதே போன்று புதிய வரவாக களமிறங்கியிருக்கும் நண்பர் முத்துராமன் அவர்களையும் நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி வருக வருக என வரவேற்கிறேன்!

கோபால்,

"மாணிக்கத்தை" எடுத்தால் மட்டும் போதாது. அதை துடைத்து பளிச்சென அதன் பிரகாசம் பலருக்கு தெரியும்படி செய்ய வேண்டும். அதற்கு ஏன் இந்த தாமதம்?

அன்புடன்

இந்த திரியில் பங்களித்தவர்களைப் பற்றிய எனது பதிவில் பெயர் விடுப்பட்டு போன அருமை தம்பி செந்திலிடம் (ஹரிஷ்) சொல்ல விரும்புவது மன்னிக்க வேண்டுகிறேன். அது போன்றே சேலம் பாலா ஹைதராபாத் ரவிக்குமார் ஆகியோரிடமும் அதே வார்த்தைகள்!

HARISH2619
5th January 2013, 01:59 PM
திரு முரளி சார்

இந்த திரியில் இருக்கிறேன் என்பதைவிட உங்கள் மனதில் இருக்கிறேன் என்பதுதான் எனக்கு பெருமகிழ்ச்சி

Gopal.s
6th January 2013, 01:53 PM
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971- பகுதி-1

1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.

மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலக்ருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.

விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.

இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.

வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.

(தொடரும்)

Gopal.s
6th January 2013, 05:48 PM
சவாலே சமாளி- 1971- பகுதி-2

சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.

வீ.எஸ்.ராகவன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.

பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.

நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.

(தொடரும்)

Gopal.s
6th January 2013, 06:14 PM
சவாலே சமாளி- 1971- பகுதி-3

சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.

வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள் )

இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.

ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.

நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)

எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.

(முற்றும்)

Murali Srinivas
7th January 2013, 01:15 AM
இன்றைய தினத்தில் மதுரை மாநகரில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றிருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு துவங்கிய விழா மதியம் 2.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரையிலும் நடைபெற்றிருக்கிறது.

காலையில் நடிகர் திலகம் நடித்த பல்வேறு படங்களின் கிளிப்பிங்க்ஸ் திரையிடப்பட்ட நிகழ்வோடு விழா தொடங்கியிருக்கிறது. 11 மணிக்கு மேல் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றியிருக்கின்றனர். இறுதியாக சிறப்பு விருந்தினராக வந்திருந்த திருச்சி சிவா அவர்கள் மதியம் 1.30 மணிக்கு பேச துவங்கி 2.30 வரை பேசியிருக்கிறார். நண்பகல் நேரம் ஆயினும் கூட ஒருவர் கூட கலைந்து செல்லாமல் பேச்சை கேட்டிருந்தனராம்.

மாலை 6 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடைப்பெற்றிருகிறது. நடிகர் திலகம் நடித்த படங்களிருந்து பாடல்கள் பாடப்பெற்றனவாம். மெல்லிசை குழுவில் இசை கருவிகளை இசைத்தவர்களும் பாடகர்களும் தங்கள் பங்கை செவ்வனே செய்தனர் என்று கேள்வி.

இனி சில விழா துளிகள்.

விழா நடைபெற்ற இடம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள v.s.செல்லம் கல்யாண மஹால். ஒரு காலத்தில் மதுரையில் மிகவும் பிரபலமாக விளங்கிய v.s.செல்லம் சோப் நிறுவனத்தினர் ஒரு திரையரங்கை புதிதாக கட்ட வேண்டும் என்று எண்ணத்தில் காமராஜர் சாலையில் [மாரியம்மன் தெப்பகுளத்திற்கு சற்று முன்னதாக] கணேஷ் தியேட்டருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் /தினமணி பத்திரிக்கை அலுவலகத்திற்கும் நடுவில் உள்ள இடத்தை தேர்ந்தெடுத்தனர். ஆனால் பிறகு அவர்கள் திட்டம் மாறி அந்த இடத்தில கல்யாண மண்டபம் கட்டினார்கள். தியேட்டர் என்பதற்காக பெரிய இடம் வாங்கப்பட்டு பின்னர் அது மண்டபமாக மாறியதால் மதுரையில் அமைந்துள்ள பெரிய திருமண மண்டபங்களில் இதுவும் ஒன்று. அந்த மண்டபம் வழிய வழிய ஆட்கள திரண்டு விட்டனராம்.உள்ளே நிற்க கூட இடம் இல்லாமல் மண்டபத்திற்கு வெளியே, மண்டப வளாகத்தையும் தாண்டி சாலையில் ரசிகர்கள் கூட்டம் அணி திரண்டிருந்ததாம். காலை பத்து மணிக்கு விழாவிற்கு சென்ற நண்பன் அப்போதே மண்டபத்தில் இருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் மண்டபம் நிறைந்து விடும் என அலைபேசியில் தகவல் சொன்னான். அதே போன்றே நடந்தது. ஆயிரக்கணக்கில் ஆட்கள் வந்திருந்ததாக தகவல்.

காலையில் கே.கே.நகரில் ராஜா முத்தையா மன்றம் மற்றும் நீதிமன்றத்திற்கு எதிரில் அண்மையில் காலமான திரு வி.என். சிதம்பரத்தால் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலாக்தின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ரசிகர்கள் வாகனங்களில் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு சென்றதாக தகவல். செல்லும் வழியெல்லாம் ஒரே அலப்பரையாம்.

மாலையில் மண்டபத்தை சுற்றிலும அமைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் பானர்களுக்கும் கட் அவுட்களுக்கும் மாலை எல்லாம் அணிவிக்கப்பட்டு தெருவில் ஒரே அமர்க்களமாம்.(வழக்கம் போல்) போலிஸ் வந்து ரசிகர்களை மண்டப வளாகத்திலேயே கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனராம்.

மதியம் உணவு தயாராக இருந்தும் கூட காலை விழா முடியும் வரை யாரும் எழுந்து செல்லாமல் பேச்சை ரசித்து கேட்டனராம். நெருங்கிய உறவினர் வீட்டு திருமணங்களில் கூட சாப்பிட்டவுடன் கிளம்பி போய் விடும் இன்றைய காலகட்டத்தில் மதிய உணவு அருந்திய பிறகும் கூட, அதன் பிறகு மாலை 6 மணிக்குதான் விழா நிகழ்ச்சிகள் என்று தெரிந்திருந்த போதும் யாரும் மண்டபத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே அமர்ந்து பல பழைய நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தனராம்.

நடிகர் திலகத்தின் மேல் ரசிகர்ள் வைத்துள்ள இத்தகைய அன்பை சுட்டிக் காட்டிய திருச்சி சிவா இப்படி பேசினாராம்.ஒரு மனிதன் வாழும் போது மனிதர்கள் அபிமானிகள் அவனை சூழ்ந்திருப்பது அதிசயமல்ல. ஆனால் ஒருவன் மறைந்த பிறகு, அவன் இறந்து 11 வருடங்கள் ஆன பிறகு, இறக்கும் போது எந்த அரசு/கட்சி பதவிகளிலும் இல்லாத ஒரு மனிதன், அவன் பெயர் நினைவில் நிறுத்தப்படுகிறது, அவன் புகழை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அதன் பின்னால் வலுவான சக்தி இயங்க வேண்டும், அப்படிதான் நாம் இதுவரை கண்டு வருகிறோம். ஆனால் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் கூட்டத்தை பார்த்தோமென்றால் அரசியல் ரீதியிலான இயக்கம் பின்னணியில் இல்லை. அரசாங்க நிர்வாகத்தின் பின்துணை இல்லை. அரசு பதவிகளிலோ அல்லது அதிகாரிகள் மட்டத்திலோ இவற்றை தூக்கி நிறுத்தும் முயற்சிகள் இல்லை. இதை செய்தோம் என்றால் பட்டம் பதவி காசு பணம் என்று பிரதி பலன் கிடைக்ககூடிய வாய்ப்புகள் இல்லை. கூட்டத்திற்கு வந்து போவதற்கு காசு பணம் கொடுப்பதில்லை இத்தனை இல்லைகளையும் மீறி இங்கே ஆயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால் இன்னும் வர முடியாத இது போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் இப்படிப்பட்ட படை இப்படிப்பட்ட ஒரு மாஸ் வேறு யாருக்கும் அமைந்திருக்காது. இப்பேர்பட்ட ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று சொன்னால் நடிகர் திலகம் கொடுத்து வைத்தவர்.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசிய சிவாவின் பேச்சு மிகவும் ரசிக்கத்தக்கதாய் அமைந்திருந்தது என்று சொன்னார்கள். மேடையிலும் மண்டபத்திலும் மகாத்மா பெருந்தலைவர் மற்றும் நடிகர் திலகத்தின் படங்கள் வைக்கப்பட்டிருந்தனவாம்.

இது நண்பர்கள் மூலமாக சேகரித்த தகவல்கள். மேலதிக்க தகவல்கள் கிடைத்தவுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த விழாவை இத்துணை சிறப்பாக நடத்திய சந்திரசேகர் அவர்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் பல்வேறு வகையில் உதவி ஓத்துழைப்பு நல்கிய அனைத்து நல இதயங்களுக்கும், வெளியே தன பெயரை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் விழா சிறப்பாக நடைபெற உதவிய நண்பர் மதுரை சந்திரசேகர் போன்றவர்களுக்கும் நான்மாடக்கூடல் வாழ் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் நமது இதயங்கனிந்த நன்றியும் நல்வாழ்த்துகளும்!

தன் மன்னவன் யார் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்த மதுரையே! உனக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கம்!


அன்புடன்

joe
7th January 2013, 09:03 AM
நடிகர் திலகத்தின் மேல் ரசிகர்ள் வைத்துள்ள இத்தகைய அன்பை சுட்டிக் காட்டிய திருச்சி சிவா இப்படி பேசினாராம்.ஒரு மனிதன் வாழும் போது மனிதர்கள் அபிமானிகள் அவனை சூழ்ந்திருப்பது அதிசயமல்ல. ஆனால் ஒருவன் மறைந்த பிறகு, அவன் இறந்து 11 வருடங்கள் ஆன பிறகு, இறக்கும் போது எந்த அரசு/கட்சி பதவிகளிலும் இல்லாத ஒரு மனிதன், அவன் பெயர் நினைவில் நிறுத்தப்படுகிறது, அவன் புகழை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அதன் பின்னால் வலுவான சக்தி இயங்க வேண்டும், அப்படிதான் நாம் இதுவரை கண்டு வருகிறோம். ஆனால் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் கூட்டத்தை பார்த்தோமென்றால் அரசியல் ரீதியிலான இயக்கம் பின்னணியில் இல்லை. அரசாங்க நிர்வாகத்தின் பின்துணை இல்லை. அரசு பதவிகளிலோ அல்லது அதிகாரிகள் மட்டத்திலோ இவற்றை தூக்கி நிறுத்தும் முயற்சிகள் இல்லை. இதை செய்தோம் என்றால் பட்டம் பதவி காசு பணம் என்று பிரதி பலன் கிடைக்ககூடிய வாய்ப்புகள் இல்லை. கூட்டத்திற்கு வந்து போவதற்கு காசு பணம் கொடுப்பதில்லை இத்தனை இல்லைகளையும் மீறி இங்கே ஆயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால் இன்னும் வர முடியாத இது போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் இப்படிப்பட்ட படை இப்படிப்பட்ட ஒரு மாஸ் வேறு யாருக்கும் அமைந்திருக்காது. இப்பேர்பட்ட ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று சொன்னால் நடிகர் திலகம் கொடுத்து வைத்தவர்.
:clap:

JamesFague
7th January 2013, 11:15 AM
Mr Gopal,

Excellent analysis on Manickam.

Mr Murali Sir,

We too agree that Madurai city is very affectionate to our NT by giving more hits. We must thank Mr Chandasekarn for
doing this wonderful job by conducting numerous welfare schemes in the name of our NT.

adiram
7th January 2013, 06:37 PM
Mr. GOPAL.S,

Excellent analysis about two giant movies Irumbuthirai and Savale Samali.

Your way of analysing the charectors is something different and acceptable. For exgample, what you told about T.K.Bagavathi in savale samaali is correct. It is a miscast. If it was VKR, there would be little powerful (ex: Thiyagam).

MSV music is not that much poor in SS as you told. 'chittukuruvikkenna kattuppaadu' is the national award song for P.Susila. Only 'nilavaippaarthu vaanam sonnadhu' song is little bit like 'urainadai' form.

Verygood analysis.

KCSHEKAR
7th January 2013, 07:36 PM
திரு கோபால் அவர்களே ,

சவாலே சமாளி - தங்களின் விமர்சனக் கட்டுரை அருமை.

KCSHEKAR
7th January 2013, 07:39 PM
திரு.முரளி சார்,

மதுரையில் நடிகர்திலகம் சிவாஜி சமூநலப்பேரவை சார்பில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா தொகுப்பை சுருக்கமாக அழகாக அளித்ததற்கும், தங்களின் பாராட்டுக்கும் நன்றி.

இந்த நிகழ்வு குறித்து அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியுள்ளது. அவை எனக்கு வரப்பேற்றவுடன் பதிவிடுகிறேன்.

KCSHEKAR
8th January 2013, 12:03 PM
மதுரையில் நடிகர்திலகம் சிவாஜி சமூநலப்பேரவை சார்பில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா - பத்திரிக்கை செய்திகள் தொகுப்பு -1

http://www.facebook.com/photo.php?fbid=246704808794332&set=pcb.246705192127627&type=1&theater

http://www.facebook.com/photo.php?fbid=246704832127663&set=pcb.246705192127627&type=1&theater

Gopal.s
8th January 2013, 08:19 PM
மோட்டார் சுந்தரம் பிள்ளை- 1966- பகுதி-1

ஒரு லாரி டிரைவர் ,அமெரிக்காவில், இரு குடும்பங்களை இரு நகரங்களில் ,ஒருவருக்கு தெரியாமல்,மற்றதை வைத்திருந்து, அவர் ஒரு விபத்தில் இறந்து விட,இரு மனைவியரும் ,இழப்பீடு கோரி ,காப்பீட்டு நிறுவனத்தை அணுகிய பிறகே உண்மை தெரிந்தது என்ற பர பரப்பான உண்மை கதையை, "The Remarkable Mr .Penny Packer" என்ற பெயரில் நாடகமாகவும்,பிறகு இதே பெயரில் ஹாலிவுட் படமாகவும் வந்து வெற்றி கண்டது.

வேப்பத்தூர் கிட்டு என்ற ஜெமினி கதை இலாகா எழுத்தாளர், இதை வாசனுக்கு சிபாரிசு செய்து, திரைக்கதை அமைத்தார். இதில் நடிக்க ,நடிகர் திலகமே சரியானவர் என்று முடிவு செய்து,அவரை 1962இல் அணுகிய போது ,என்ன காரணத்தாலோ மறுத்து விட்டார். வாசன் வேறு வழியின்றி, அசோக் குமாரை வைத்து, க்ருஹஸ்தி என்ற பெயரில் ஹிந்தியில் படமாக்கி வெற்றி கண்டார்.இந்த படத்தை பார்த்த சிவாஜி ,இதில் நடிக்க ஒப்புதல் கொடுக்க மளமளவென்று ,ஜெமினி நிறுவன தயாரிப்பாக ,அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில், வளர்ந்து 1966 இல் வெளியாகி, வெற்றி கண்டது. சிவாஜி,சற்றே உடல் நிலை சரியின்றி,ஓய்வு எடுத்து,துரும்பாக இளைக்க தொடங்கிய 1966 இல் வந்த நான்கே படங்களில் ஒன்றானது.

ஒரு கார் garage வைத்திருக்கும் சுந்தரம் பிள்ளை தன் பழைய vintage காரிலேயே பயணிக்கும் பெரிய குடும்பஸ்தர். மனைவி மீனா, பிள்ளைகள் பாபு,விஜி,ராஜி,லல்லி,நிர்மலா,மாலா,விமலா,கமலா , அக்கா, அக்கா மகன் சாம்பு என அழகான குடும்பம். வெள்ளி இரவு வீடு வந்து, மனைவி மக்களுடன் தங்கி ,திங்கள் காலை தன் தொழிற்சாலை வேலைக்கு பட்டணம் செல்லும் குடும்பஸ்தர். மென்மையான, அதிர்ந்தும் பேசாத நற்பண்பாளர்,அனைவராலும் மதிக்க படும் பெரிய மனிதர், பல உதவிகள் சமூகத்துக்கு புரிபவர். மூத்த பெண் கமலா கல்யாணம் ஆகியும், கணவர் படித்து கொண்டிருப்பதால் ,புகுந்த வீட்டின் நிர்பந்தத்தின் பேரில், பிறந்த வீட்டிலேயே ,தாம்பத்யம் துறந்து ,தங்கியுள்ளாள்.அந்த ஊர் ஸ்டேஷன் மாஸ்டர் பையன் சேகரை, இரண்டாவது பெண் விமலா காதலிக்கிறாள் . சேகரின் தங்கை ரேவதியை சாம்பு விரும்புகிறான். மூன்றாவது பெண் மாலா ,principal பையன் மோகனை விரும்புகிறாள். இதற்கிடையில், மீனா கற்பமாகி, சுந்தரம் பிள்ளைக்கு ஒன்பதாவது குழந்தை பிறக்கிறது.கமலாவின் கணவன் கோபால் அப்பாவுக்கு தெரியாமல், சுந்தரம் பிள்ளை வீட்டுக்கு வந்து ,மனைவி கமலாவுடன் தங்கி செல்கிறான்.

பெண்களின் விருப்பம் அறிந்த சுந்தரம் பிள்ளை , principal ,ஸ்டேஷன் மாஸ்டர் வீடு சென்று சம்பந்தம் பேசி முடித்து, நிச்சயதார்த்த நாளை குறித்து,
நாளும் வருகிறது.

சம்பந்திகள் கூடி இருக்கும் போது ,சுந்தரம் பிள்ளைக்காக அனைவரும் காத்திருக்க, கண்ணன் என்ற விடலை சிறுவன் வீட்டுக்கு வந்து சுந்தரம் பிள்ளைதான் தன தந்தை என்றும்,அவசரமாய் school fees காட்ட பணம் வேண்டியிருப்பதால், factory சென்று அங்கும் இல்லாததால், விலாசம் விசாரித்து இங்கு வந்ததாக சொல்ல வீடே அல்லோல கல்லோல பட்டு நிச்சயதார்த்தம் நிற்கிறது. வீடு வரும் சுந்தரம் பிள்ளை கண்ணனை அன்போடு உபசரித்து பணம் கொடுத்து ,விடை கொடுக்கிறார். மொத்த குடும்பமே ,சுந்தரம் பிள்ளைக்கு எதிராக திரள, சுந்தரம் பிள்ளை வீட்டை விட்டு கிளம்புகிறார்.பிறகு,குடும்பத்தினர் வற்புறுத்தலால் திரும்பி வந்து, எல்லோரையும் சமாதான படுத்துகிறார். மீனா ஒருநாள், கணவனின் அடையாறு வீட்டின் தகவல் தெரிந்து அங்கே செல்ல, அங்கே தாயிழந்து தனித்து வாழும் லீலா,ரமேஷ்,கண்ணன்,சாந்தி என்ற நான்கு குழந்தைகளும் தன கணவன் குழந்தைகளே என்றறிந்து, இறந்த தாயில் படத்தை பார்த்து மயங்கி விழுகிறாள்.இதற்கிடையில் , கணவன் படிப்பு முடிந்து கமலா புகுந்த வீடு சென்று, அங்கே அவள் ஏற்கெனெவே கற்பம் என்ற உண்மை தெரிந்து திருப்பி கொண்டு விட படுகிறாள்.அங்கு ஏற்கெனெவே சுந்தரம் பிள்ளை வேண்டி வற்புறித்தி வர வழித்த ஸ்டேஷன் மாஸ்டர், பிரின்சிபால் இவர்களுடன் மூத்த சம்பந்தியும் அமர வைக்க பட்டு ,தன கதையை சொல்கிறார்.

மாமா வீட்டில் வளரும் சுந்தரம் பிள்ளை மாமாவின் இளைய பெண் மரகதத்தை விரும்ப, மாமா தன மூத்த பெண் மீனாவை அவள் விருப்பபடிsundaram உடன் கல்யாணம் செய்ய திட்டமிடுகிறார். அக்கா விருப்பமறிந்து ,மரகதம் ,காதலை விட்டு கொடுத்து அந்த திருமணத்தை நடத்தி வைக்கிறாள்.சுந்தரம் தன அக்கா கணவர் வேலை வாங்கி கொடுக்க ,குடும்பத்துடன் ரங்கூன் செல்கிறான்(யுத்த காலம்) அங்கு ஒரு விபத்தில் ,மனைவி, அக்கா குடும்பம் இறந்து விட்டதை எண்ணி, திரும்பி ஊர் வந்து சேர்கிறான். தன தவறையுணர்ந்த மாமா வற்புறுத்தலின் பேரில் மரகதத்தை மீண்டும் மணக்கிறான். திடீரென்று, அக்கா,அவள் மகன் சாம்பு, மீனா அனைவரும் உயிரோடு திரும்புவதாக சேதி வர, மாமாவின் கடைசி ஆசை படி, இருவருக்கும் பாதகம் வராமல், இருவரோடும் ஒருவர் அறியாமல் இன்னொருவரோடு குடும்பம் நடத்துகிறான்.கடைசியில் எல்லோரும் உண்மையறிந்து ,சமாதானமாகி சுபமாய் முடியும்.

(தொடரும்)

eehaiupehazij
9th January 2013, 07:31 AM
Motor Sundaram Pillai is a remarkable NT movie in which his subtle acting makes you feel like you are also with him till the end of the movie. No songs for him! He was the father of Jayalalitha, Kanchana .... who has the guts to act like this at this age! Without any dialogue in the climax NT brought the screen down in Karnan and in this movie he makes us tear jerking by his depiction as a victim father of circumstances!

KCSHEKAR
9th January 2013, 11:28 AM
Junior Vikatan - 13-01-13

http://www.facebook.com/photo.php?fbid=247116742086472&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

Gopal.s
9th January 2013, 06:35 PM
மோட்டார் சுந்தரம் பிள்ளை- 1966- பகுதி-2

நடிகர்திலகத்தின் மிக சிறந்த படங்களில் ஒன்றாக ,பல விமரிசகர்கள் இதை கொண்டாடுகிறார்கள். நடிகர்திலகத்தின் நடிப்பும் மிக மிக சிலாகிக்க படுகிறது. நடிகர்திலகம்,ஒரு இடத்தில் கூட குரலையே உயர்த்த மாட்டார். உடலசைவுகள் பத்திரத்தை ஒட்டியே இருக்கும். பின்னால் அவரின் கதாநாயகிகளாய் வலம் வந்த ஜெயலலிதா, காஞ்சனா ஆகியோருக்கு அப்பாவாக. அதுவும் ,அவர்கள் இருவருடனும் முதல் படம். அகில இந்தியாவிலும், இந்த தைரியம் , இமேஜ் என்பதை நடிப்பு திறமையால் உடைக்கும் திறமை, ரசிகர்களுடன் உள்ள நம்பிக்கை ,எவனுக்கும் இன்று வரை கிடையாது.

குழந்தைகள் ,மனைவி ஆகியோருடன், subtle demonstrative பாணியில் தன் வாஞ்சை,பாசம் ஆகியவற்றை வெளிபடுத்தும் அழகு. வாரம் ஒரு முறை குடும்பத்துடன் கழிக்கும் ,தலைவன் பாத்திரத்துக்கு அவ்வளவு மெருகு சேர்க்கும். இந்த பாத்திரத்தில், ஒரு குற்ற உணர்ச்சியில்லாத , எச்சரிக்கையான ஒரு உணர்வினை படம் முழுதும் தேக்கி ,தனது அசைவுகள் வசனம் பேசும் முறை அனைத்திலும் காட்டுவார். குழந்தை பிறக்க போகும் செய்தியை ஒரு மென்மையான கூச்சத்துடன்,இயல்பாய் அணுகும் கட்டம் இருக்கிறதே ,அடடா. வீட்டுக்கு வந்து,குழப்பத்துக்கு காரணமான மகனுக்கு, துளிகூட ,வேண்டா விருந்தாளி என்ற உணர்வோ, அல்லது குற்ற உணர்வோ எழ கூடாது, என்று அழகாய் உபசரணை செய்து, அனுப்பிய பிறகு, சிறிது uneasiness காட்டுவார். குடும்பத்தினருடன், பிடிபட்ட உணர்வு இன்றி, அவர்கள் நம்பிக்கையை தெரிந்து கொள்ளும் காட்சி, சிறியது ஏமாற்றத்துடன் வெளியேறும் காட்சி, பிறகு தான் தவறு செய்தவன் அல்ல என்ற ரீதியில் எல்லாரையும் பேச்சாலும்,செயலாலும் அணைத்து செல்லும் காட்சிகள்.(எவ்வளவு வேறுபாடு காட்டுவார் ,முன்னாள் வந்த பார் மகளே பார், வர போகும் உயர்ந்த மனிதன் சாயல்கள் துளியும் வராமல்)முரண்டும், சுந்தரராஜன்(சம்பந்தியை) உட்கார வைத்து உண்மையை உணர்த்த , ஒரு சில decibel கண்டிப்போடு உயர்த்தி பணிய வைப்பாரே!!!flashback காட்சியில் சைக்கிள் ஓட்டி வரும் காட்சியில், சிறிது இளைக்க ஆரம்பித்து,இளமையும்,அழகும்,துறுதுறுப்பும் மின்ன அவ்ளோ அழகுனா அப்படி ஒரு அழகு. ஒவ்வொரு வேறு பட்ட உறவுகள் ,நண்பர்களுடன் வேறு பட்ட சூழ்நிலைகளில் பேசும் போது ,subtle acting முறையில் staleness வர வாய்ப்புள்ளது. ஆனால் நடிகர்திலகம்,அதை handle செய்திருக்கும் விதம், ஏன் இன்று வரை இத்தனை கோடி பேர் உலக நடிப்பு மேதைகளில் முதல்வர் என்று கொண்டாடுகிறோம் என்ற காரணம் விளங்கும்.

supporting cast ,நிறைய கூட்டமாக வர வேண்டியிரு ப்பதால் ,NT தவிர யாருக்குமே தனி கவனம் போகாவிட்டாலும், சௌகார், பண்டரி பாய், மணிமாலா மனதில் நிற்பார்கள்.(சரோஜாதேவிக்கு பின் பின்னழகு ராணி என்றால் மணி மாலாதான்). எல்லாரும் ,அவரவர் பங்கை நன்கு பண்ணியிருப்பார்கள். crowded shots ,அபார கவனத்துடன் கையாள பட்டிருக்கும். ரவிச்சந்திரன்,சிவகுமார்,சுந்தரராஜன்,ஜெயலலிதா, காஞ்சனா எல்லோருக்கும் நடிகர்திலகத்துடன் முதல் படம்.

நகைச்சுவை காட்சிகள்,ஆனந்த விகடனில் தொடராக வந்த,தேவன் அவர்களின் துப்பறியும் சாம்பு ,நகைச்சுவையை ஒட்டி அமைந்திருக்கும்.(நாகேஷ் பெயரும் சாம்பு) கதையின் போக்கை ரொம்ப நெருடாமல், சுமாராக இருக்கும். வித்தியாசமான இந்த கதைக்கு, சுவாரஸ்யம் கெடாமல்(அத்தனை பாத்திரத்துக்கும் தேவையான spacing ,காட்சிகள் கொடுத்து) கம்பி மேல் நடக்கும் வித்தையை நன்றாக கையாண்டு,இயல்பான ,உயிரோட்டமான, பாத்திரத்தின் தன்மைக்கு இடைஞ்சல் தராத வசனங்களையும் அமைத்திருப்பார் வேப்பத்தூர் கிட்டு. (கிட்டு, கே.ஜே .மகாதேவன், கொத்த மங்கல ம் சுப்பு போன்றோரை தமிழ் பட உலகம் இன்னும் நன்றாக பயன் படுத்தி இருக்கலாம்).எஸ்.எஸ்.பாலன் இந்த படத்தை மிக நன்றாக ,தந்தை மேற்பார்வையில் கையாண்டிருப்பார். அந்த நாய்க்குட்டியை அழகாக பயன் படுத்தியிருப்பார்.குழந்தையை காட்ட ,எல்லோரும் பார்க்க முந்தும் காட்சியில் ,நாய் குட்டியும் முண்டியடித்து பார்க்கும். சிவாஜிக்கு எதிராக குடும்பமே அம்மா பக்கம் நிற்கும் போது ,நாய் குட்டியும் அம்மா பக்கம் போகும் அழகு.(நீயுமா என்று சிவாஜி செல்லமாக வெதும்புவார்).

சிவாஜி-மணி மாலாவிற்கு ஒரு நல்ல duet கொடுத்திருக்கலாம். காத்திருந்த கண்களே ,MSV இசையில் super -hit பாடல்.ரவிச்சந்திரன்-ஜெயலலிதா ஜோடி கண் படும் அளவு அவ்வளவு பொருத்தம்.மற்ற பாடல்கள் ஓகே ராகம்.(துள்ளி துள்ளி விளையாட, மனமே முருகனின், ஜிகு ஜிகு ஜிகு , காதல் என்றால் என்ன)MSV க்கு வாழ்க் கை படகு அளவு scope உள்ள படமல்ல.

மற்ற படி ஜெமினி நிறுவங்களின் பிரம்மாண்ட படங்களை விடவும்,இன்றளவும் பேச படுகிற படம் இது. (மற்றவை சந்திரலேகா ,ஒளவையார்,வஞ்சிகோட்டை வாலிபன்,இரும்புத்திரை ).

(முற்றும்)

JamesFague
9th January 2013, 07:02 PM
Mr Gopal,

Indepth analysis on MSP. As you mentioned, nobody have the guts
to takeup this type of role. This shows our NT not bothered about
image.

Subramaniam Ramajayam
9th January 2013, 09:47 PM
இன்றைய தினத்தில் மதுரை மாநகரில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றிருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு துவங்கிய விழா மதியம் 2.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரையிலும் நடைபெற்றிருக்கிறது.

காலையில் நடிகர் திலகம் நடித்த பல்வேறு படங்களின் கிளிப்பிங்க்ஸ் திரையிடப்பட்ட நிகழ்வோடு விழா தொடங்கியிருக்கிறது. 11 மணிக்கு மேல் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றியிருக்கின்றனர். இறுதியாக சிறப்பு விருந்தினராக வந்திருந்த திருச்சி சிவா அவர்கள் மதியம் 1.30 மணிக்கு பேச துவங்கி 2.30 வரை பேசியிருக்கிறார். நண்பகல் நேரம் ஆயினும் கூட ஒருவர் கூட கலைந்து செல்லாமல் பேச்சை கேட்டிருந்தனராம்.

மாலை 6 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடைப்பெற்றிருகிறது. நடிகர் திலகம் நடித்த படங்களிருந்து பாடல்கள் பாடப்பெற்றனவாம். மெல்லிசை குழுவில் இசை கருவிகளை இசைத்தவர்களும் பாடகர்களும் தங்கள் பங்கை செவ்வனே செய்தனர் என்று கேள்வி.

இனி சில விழா துளிகள்.

விழா நடைபெற்ற இடம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள v.s.செல்லம் கல்யாண மஹால். ஒரு காலத்தில் மதுரையில் மிகவும் பிரபலமாக விளங்கிய v.s.செல்லம் சோப் நிறுவனத்தினர் ஒரு திரையரங்கை புதிதாக கட்ட வேண்டும் என்று எண்ணத்தில் காமராஜர் சாலையில் [மாரியம்மன் தெப்பகுளத்திற்கு சற்று முன்னதாக] கணேஷ் தியேட்டருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் /தினமணி பத்திரிக்கை அலுவலகத்திற்கும் நடுவில் உள்ள இடத்தை தேர்ந்தெடுத்தனர். ஆனால் பிறகு அவர்கள் திட்டம் மாறி அந்த இடத்தில கல்யாண மண்டபம் கட்டினார்கள். தியேட்டர் என்பதற்காக பெரிய இடம் வாங்கப்பட்டு பின்னர் அது மண்டபமாக மாறியதால் மதுரையில் அமைந்துள்ள பெரிய திருமண மண்டபங்களில் இதுவும் ஒன்று. அந்த மண்டபம் வழிய வழிய ஆட்கள திரண்டு விட்டனராம்.உள்ளே நிற்க கூட இடம் இல்லாமல் மண்டபத்திற்கு வெளியே, மண்டப வளாகத்தையும் தாண்டி சாலையில் ரசிகர்கள் கூட்டம் அணி திரண்டிருந்ததாம். காலை பத்து மணிக்கு விழாவிற்கு சென்ற நண்பன் அப்போதே மண்டபத்தில் இருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் மண்டபம் நிறைந்து விடும் என அலைபேசியில் தகவல் சொன்னான். அதே போன்றே நடந்தது. ஆயிரக்கணக்கில் ஆட்கள் வந்திருந்ததாக தகவல்.

காலையில் கே.கே.நகரில் ராஜா முத்தையா மன்றம் மற்றும் நீதிமன்றத்திற்கு எதிரில் அண்மையில் காலமான திரு வி.என். சிதம்பரத்தால் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலாக்தின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ரசிகர்கள் வாகனங்களில் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு சென்றதாக தகவல். செல்லும் வழியெல்லாம் ஒரே அலப்பரையாம்.

மாலையில் மண்டபத்தை சுற்றிலும அமைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் பானர்களுக்கும் கட் அவுட்களுக்கும் மாலை எல்லாம் அணிவிக்கப்பட்டு தெருவில் ஒரே அமர்க்களமாம்.(வழக்கம் போல்) போலிஸ் வந்து ரசிகர்களை மண்டப வளாகத்திலேயே கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனராம்.

மதியம் உணவு தயாராக இருந்தும் கூட காலை விழா முடியும் வரை யாரும் எழுந்து செல்லாமல் பேச்சை ரசித்து கேட்டனராம். நெருங்கிய உறவினர் வீட்டு திருமணங்களில் கூட சாப்பிட்டவுடன் கிளம்பி போய் விடும் இன்றைய காலகட்டத்தில் மதிய உணவு அருந்திய பிறகும் கூட, அதன் பிறகு மாலை 6 மணிக்குதான் விழா நிகழ்ச்சிகள் என்று தெரிந்திருந்த போதும் யாரும் மண்டபத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே அமர்ந்து பல பழைய நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தனராம்.

நடிகர் திலகத்தின் மேல் ரசிகர்ள் வைத்துள்ள இத்தகைய அன்பை சுட்டிக் காட்டிய திருச்சி சிவா இப்படி பேசினாராம்.ஒரு மனிதன் வாழும் போது மனிதர்கள் அபிமானிகள் அவனை சூழ்ந்திருப்பது அதிசயமல்ல. ஆனால் ஒருவன் மறைந்த பிறகு, அவன் இறந்து 11 வருடங்கள் ஆன பிறகு, இறக்கும் போது எந்த அரசு/கட்சி பதவிகளிலும் இல்லாத ஒரு மனிதன், அவன் பெயர் நினைவில் நிறுத்தப்படுகிறது, அவன் புகழை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அதன் பின்னால் வலுவான சக்தி இயங்க வேண்டும், அப்படிதான் நாம் இதுவரை கண்டு வருகிறோம். ஆனால் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் கூட்டத்தை பார்த்தோமென்றால் அரசியல் ரீதியிலான இயக்கம் பின்னணியில் இல்லை. அரசாங்க நிர்வாகத்தின் பின்துணை இல்லை. அரசு பதவிகளிலோ அல்லது அதிகாரிகள் மட்டத்திலோ இவற்றை தூக்கி நிறுத்தும் முயற்சிகள் இல்லை. இதை செய்தோம் என்றால் பட்டம் பதவி காசு பணம் என்று பிரதி பலன் கிடைக்ககூடிய வாய்ப்புகள் இல்லை. கூட்டத்திற்கு வந்து போவதற்கு காசு பணம் கொடுப்பதில்லை இத்தனை இல்லைகளையும் மீறி இங்கே ஆயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால் இன்னும் வர முடியாத இது போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் இப்படிப்பட்ட படை இப்படிப்பட்ட ஒரு மாஸ் வேறு யாருக்கும் அமைந்திருக்காது. இப்பேர்பட்ட ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று சொன்னால் நடிகர் திலகம் கொடுத்து வைத்தவர்.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசிய சிவாவின் பேச்சு மிகவும் ரசிக்கத்தக்கதாய் அமைந்திருந்தது என்று சொன்னார்கள். மேடையிலும் மண்டபத்திலும் மகாத்மா பெருந்தலைவர் மற்றும் நடிகர் திலகத்தின் படங்கள் வைக்கப்பட்டிருந்தனவாம்.

இது நண்பர்கள் மூலமாக சேகரித்த தகவல்கள். மேலதிக்க தகவல்கள் கிடைத்தவுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த விழாவை இத்துணை சிறப்பாக நடத்திய சந்திரசேகர் அவர்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் பல்வேறு வகையில் உதவி ஓத்துழைப்பு நல்கிய அனைத்து நல இதயங்களுக்கும், வெளியே தன பெயரை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் விழா சிறப்பாக நடைபெற உதவிய நண்பர் மதுரை சந்திரசேகர் போன்றவர்களுக்கும் நான்மாடக்கூடல் வாழ் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் நமது இதயங்கனிந்த நன்றியும் நல்வாழ்த்துகளும்!

தன் மன்னவன் யார் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்த மதுரையே! உனக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கம்!


அன்புடன்
Murali sir. excellent write-up. madurai endral ninaivukku varuavar murali first and formost. neril poga mudiyatha kuraiyai pokki vittir murali sir. indrum madurai NT yin kottai ena prove panniya kc sir and madurai NT fans organisations mikka nandri.

KCSHEKAR
10th January 2013, 10:39 AM
Thamizhaga Arasiyal Magazine

http://www.facebook.com/photo.php?fbid=247560378708775&set=pcb.247560435375436&type=1&theater

http://www.facebook.com/photo.php?fbid=247560398708773&set=pcb.247560435375436&type=1&theater

parthasarathy
10th January 2013, 11:06 AM
திரு. கோபால் அவர்களே,

நடிகர் திலகத்தின் ஒப்பற்ற நடிப்பில் வெளிவந்த படங்களுள் ஒன்றான "மோட்டார் சுந்தரம் பிள்ளை" படத்தைப் பற்றிய ஆய்வு சுருக்கமாக ஆனால், அற்புதமாக வந்துள்ளது.

இந்தப் படத்தை முதலில், ஏதோ ஒரு தொலைக் காட்சி சேனலில் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர், என்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் தான் முதலில் பார்த்தேன். அதற்கு முன்னர், தியேட்டரில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. சென்னையில், அவரது பழைய படங்களில், 'ப' வரிசைப் படங்களும், தெய்வ மகன், புதிய பறவை, ஆலய மணி, இருவர் உள்ளம், வசந்த மாளிகை, ராஜா, போன்ற படங்களே வலம் வந்து கொண்டிருந்தன.

இந்தப் படத்திற்கு எனக்கு முன்னர், என் மகள்கள் இருவரும் ரசிகைகளாயினர் என்று பெருமையோடு கூறிக் கொள்கிறேன். அதன் மூலம், அவர்கள் நடிகர் திலகத்தின் மேன்மையை அறிந்து கொண்டனர். இதற்கு முழு முதல் காரணம், அவர்கள் நடிகர் திலகத்தைப் பார்க்கவில்லை. ஒரு பாசமுள்ள தந்தையை எந்த வித சினிமா பாசாங்குகளும் இல்லாத, நிஜத் தந்தையைக் கண் முன் கண்டனர். என்னுடன் (பாசிடிவாகத்தான்! நான் ஏக பத்தினி விரதன் தான்!!) அவர்களால் ஒப்பிட முடிந்தது. இந்தப் படமும், அவ்வளவு இயல்பாக வந்திருக்கும்.

இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே என் மனதில் எழுதி வைத்து விட்டதால், பின்னர் அதை எழுதுகிறேன்.

தொடர்ந்து எழுதி, தாங்களும் இன்புற்று, எல்லோரையும் மகிழ்வியுங்கள். நம் நடிகர் திலகத்தின் மேன்மையை எல்லோரும் சேர்ந்து இன்றைய, மற்றும் வரப் போகும் தலைமுறையினரும் தெரிந்து கொள்ளப் பாடுபடுவோம்!

அனைத்து நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

adiram
10th January 2013, 02:08 PM
Mr. S.GOPAL,

Excellent review and analysis about Motor Sundaram Pillai. Your way of compiling the story in short form and analysing the charector of Shivaji sir and other co artists are remarkable.

well analysed about a sophisticated movie.

groucho070
10th January 2013, 03:38 PM
Gopal,S, Savale Samali is a special movie for me, I don't know why. On surface it looks like a pre-cursor to PattikAda pattanamA NT vs JJ situation, but unlike PP which is more on cultural clash, SS is about politics. A thoroughly pro-socialism film, and NT, being the actor, not the politician, totally stood on that side for the movie. The songs are fantastic, I still play Anaikkoru kAlam vanthAl, thinking of all those privileged people who doesn't deserve it. The film is a statement. I can't write a review on it, because I am still not politically matured, there's so much of that stuff in that film. I am still wondering who this Malliyam Rajagopal is, that is a very brave film.

But apart from NT, one must bow to Muthuraman here, the climax scene where he beats the crap out of our beloved MNN - you have to see it to believe it. And earlier scenes where he asks his mistress, "ennA, karuvattu kozhambA?", softly, right after a temper flare!, there's something about this actor that the Tamizh film never made justice off. But that is a different complaint.

While all the time,Muthuraman was in the background, someone we are supposed to revile, suddenly turns up and saves the day. I looooove this movie. As you said, no heavyduty for NT, but it is a very thought provoking movie. Thanks for the review. Will be reading your other review soon.

KCSHEKAR
11th January 2013, 10:50 AM
Dinathanthi & Dinamalar

http://www.facebook.com/photo.php?fbid=247982818666531&set=pcb.247982968666516&type=1&theater

http://www.facebook.com/photo.php?fbid=247982825333197&set=pcb.247982968666516&type=1&theater

KCSHEKAR
11th January 2013, 10:51 AM
Dear Gopal sir,

Your writeup about Motor Sundaram Pillai is very nice.

KCSHEKAR
11th January 2013, 12:52 PM
Parasakthi Diamond Jubilee Celebration, Madurai - Coverages in English Dailies

The Hindu

http://www.facebook.com/photo.php?fbid=248006408664172&set=pcb.248006665330813&type=1&theater

Deccan Chronicle

http://www.facebook.com/photo.php?fbid=248006431997503&set=pcb.248006665330813&type=1&theater

The Times of India

http://www.facebook.com/photo.php?fbid=248006428664170&set=pcb.248006665330813&type=1&theater

The New Indian Express

http://www.facebook.com/photo.php?fbid=248006495330830&set=pcb.248006665330813&type=1&theater

sankara1970
11th January 2013, 01:11 PM
dear chandrasekar

kudos to sivaji peravai for organising parasakthi celebration ,
and all associated

KCSHEKAR
12th January 2013, 12:10 PM
Dear Sankara Sir

Thanks for your appreciation.

adiram
12th January 2013, 04:07 PM
Vanaja,

You got the idea of posting same messages in two threads and increase the 'number of posts'. (I am mentioning Manjula matter).

Dr.Siva-vil Manjulavin kavarchi nandraagaththaan irundhathu (jollu). But adhai idam-porul-yeval theriyamal, thalaivar Kamarajar avargalaip patriya paadalin naduve vaiththathuthaan thavaru.

Shivaji sir padangalil kolgaip paadalkal varuvathe apoorvam. Adhilum idaiyil ippadi kularupadi.

ACT thoongikkonde ippadaththai direct seythaara theriyavillai.

RAGHAVENDRA
12th January 2013, 05:52 PM
கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய ரசிக நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்தினைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வுறுகிறேன். இதில் இருக்கும் வாசகங்களையே என்னுடைய வாழ்த்தாக அளிக்கிறேன். அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NTPongalgreetingsold01fw_zps3481b954.jpg

ராகவேந்திரன்

adiram
12th January 2013, 06:10 PM
Vanaja,

Vanishreeyum, Devikavum, k.r.vijayavum bikini anindhaal yaar paarkkirathu?.

rasigargalukku avvalavu periya punishment thevaiyaa?.

After your discussion about Sivakamiyin Selvan last week, I watched SS and felt, it would be better if Shivaji sir acted with Latha with some more movies. Oru padamaanalum romba isaivaaga nadiththirundhaar.

Gopal.s
13th January 2013, 08:23 AM
deleted.

Gopal.s
13th January 2013, 08:23 AM
Hi Friends,

Kindly note that this article is prohibited for Ragavendran sir. Others should read under some intellectual guidance.

I am triggered by exemplary articles by Mr.Ganpat and I would like to give my humble tribute to him by extending Mr.Parthasarathy's psychological approach.

Hope most of you are aware of the self development book on Transactional analysis ,I am OK You are ok by Thomas Harris. His Parent-Adult - Child modelling of Transactional analysis can be applied well to Thiruvilayadal, Nakkeeran in Parent state, Lord Shiva in Adult state, Dharumi in Child state. First meeting on Shiva-Dharumi as Adult-Child crossed Transaction, Dharumi-Nakkeeran as Child-Parent transaction, Shiva-Nakkeeran confrontation as Adult-Parent Transaction.(at times with mild role reversals too)

Child is a recording of internalised events,re-living those child memories yet the stimulus for them may no longer be relevant or helpful in practical life.Parent state is a collection of recordings of external influences that a child observed adults doing and saying and it is a long list of rules and admonitions that the child was expected to believe unquestioningly.(Some are useful,some are opinions). Adult state is the one with measures of control over their environment able to explore and examine the world and have their firm ideas.

The entire episode of Shiva-Dharumi-Nakkeeran is based on I am OK,You are not OK. The communication modelling is 100% based on crossed Transaction of different ego states. Nakkeeran's parent address other states as ridiculous,disgusting and judgemental. Dharumi's Child is absolutely internal and demands his basic needs and throw tandrum on denial. Lord Shiva's adult state imposes should or ought and addressing parent state as prejudiced,child state as delusion.

As their life position affect their communications and relationships and susequent crossed transactions lead to arguments hook the child ego state of one of the participants resulting in over all negative feelings and heated arguments.

Result is fun unlimited for audience,Thanks to A.P.N and his brilliant script.

adiram
13th January 2013, 10:45 AM
Mr. S.GOPAL,

ennennamo solreenga
purinja maadhiriyum irukku.
puriyaadha maadhiriyum irukku.

KCSHEKAR
13th January 2013, 02:00 PM
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

IliFiSRurdy
13th January 2013, 10:48 PM
திரு கோபால்,

முதற்கண் நன்றி.

உங்கள் TA மிக அருமை.யாரும் இதுவரை செய்யாத approach ..இதிலும் கூர்ந்து கவனித்தால் தலைவர் தூள் கிளப்பியிருப்பார்.
தருமியுடன்...ஆரம்பத்தில் parent(நாடகத்தையே நடத்துபவனுக்கு நடிக்க முடியுமா அப்பா?) and child(கேள்விகளை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?) level
இரண்டாம் பகுதியில்...adult(உளராமல் அவையில் நடந்ததை சொல்) level

மன்னனுடன் பேசும்போது ..முழுமையான adult level..(சண்டையும் சச்சரவும் புலவர்களுக்கிடையே சகஜம்)
நக்கீரருடன்...child(நடந்தது,நடக்கப்போவது...அனைத்து ம் அறிவோம்...) and parent(என்ன குற்றம் கண்டீர் சொல்லிலா அல்லது...) level...adult level க்கு வரவே மாட்டார்.

நக்கீரர்:தருமியுடன் parent level,சிவனுடன் adult level (எல்லாப்பகுதிகளும்)

தலைவரின் ஒரே நோக்கம் நக்கீரரை child level க்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான்.எனவே ஒரு child level இல் தொடங்குவார்.ஆனால் அது நடக்காது என அறிந்து adult level லில் மோதுவார்.கடைசியாக பொற்றாமரை குளத்தில் நக்கீரர் child level ஆக தலைவர் இல் parent level இல்முடித்து வைப்பர்.

ஏ.பி.நாகராஜரே..உம் மேதைத்தனம்..தருமியை சிவன் அவையில் இழுத்துவந்து தள்ளியவுடன் அவரை நறுக்கென்று கட் செய்து பிறகு கண்ணிலேயே காட்டாமல் விடுவதிலும்,தருமியும் சிவனும் அந்த செய்யுளை சொல்வதிலேயே ஒரு தனி திரைப்படத்தை எடுத்த நேர்த்தியிலும் தெளிவாகின்றன.

நாளை பொங்கல் திருநாள்.உம்மை வணங்க வயதும், வாழ்த்த அன்பும் இருக்கும் தகுதியில் இரண்டையும் செய்து ஒரு கோரிக்கையையும் வைக்கிறேன்.சொர்க்கத்தில் குஷியாக நாளைக்கடத்தாமல் சீக்கிரம் திரும்பி வாரும்..மறக்காமல் உங்கள் ஹீரோவையும் அழைத்துகொண்டு..நல்ல திரைக்கதைகள் காத்திருக்கின்றன..அதைவிட நல்ல அறிவார்ந்த இளைய தலைமுறை ரசிகர்களும் காத்துள்ளனர்.

அனைவர்க்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

வணக்கம்.

Murali Srinivas
14th January 2013, 12:01 AM
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு பல வருடங்களுக்கு பிறகு நாஞ்சில் மாநகருக்கு தொழிலதிபர் கோபால் வருகை! நாஞ்சில் நகரில் அமைந்துள்ள கார்த்திகை திரையரங்கில் நாள் முதல் நடிகர் திலகத்தின் எவர்க்ரீன் காவியம் புதிய பறவை வெளியாகிறது! இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நண்பர் ராமஜெயத்திற்கு நன்றி!

அன்புடன்

Murali Srinivas
14th January 2013, 12:20 AM
இப்போது தமிழ் திரையுலகில் முக்கியமாக விவாதிக்கப்படுவது DTH பற்றிதான். இந்த DTH முறையில் படத்தை நேரிடையாக வீடுகளில் திரையிடும் முறையிலும் நடிகர் திலகம் நுழைகிறார் என்று ஒரு செய்தி வந்திருக்கிறது. புதிதாக மெருகேற்றப்பட்டு புது பொலிவுடன் தியேட்டர்களில் வெற்றி வலம் வந்து 2012-ல் பல திரையரங்குகளையும் வாழ வைத்த நடிகர் திலகத்தின் கர்ணன் திரைக் காவியத்தை DTH மூலமாக வெளியிட்டால் சிறப்பாகவும் லாபகரமாகவும் இருக்கும் என நினைத்த ஒரு DTH நிறுவனம் ராஜ் டிவியை அணுகியிருப்பதாகவும் அவர்கள் அதை பற்றி யோசித்து சொல்கிறோம் என்று சொல்லியிருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

ராஜ் டிவி பற்றி சொல்லும் போது வேறு ஒரு தகவலும் வந்தது. ராஜ் டிவியின் வசம் நெகடிவ் உரிமை இருந்த காலத்தை கடந்து நிற்கும் அற்புத காவியம் நடிகர் திலகத்தின் புகழை பாரெங்கும் பரப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை இந்தியாவின் மிகப் பெரிய வணிக குழுமத்தில் இடம் பெற்றுள்ள entertainment wing பெரிய விலை கொடுத்து வாங்கியிருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. படத்தை மெருகேற்றி அவர்களே உலகமெங்கும் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது! இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் இந்த காவியம் பெரிய அளவில் reach ஆகும் எனபது திண்ணம்.

அன்புடன்

Murali Srinivas
14th January 2013, 12:24 AM
நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் hub-ன் அனைத்து உறுப்பினர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

அன்புடன்

Gopal.s
14th January 2013, 07:04 AM
இப்போது தமிழ் திரையுலகில் முக்கியமாக விவாதிக்கப்படுவது DTH பற்றிதான். இந்த DTH முறையில் படத்தை நேரிடையாக வீடுகளில் திரையிடும் முறையிலும் நடிகர் திலகம் நுழைகிறார் என்று ஒரு செய்தி வந்திருக்கிறது. புதிதாக மெருகேற்றப்பட்டு புது பொலிவுடன் தியேட்டர்களில் வெற்றி வலம் வந்து 2012-ல் பல திரையரங்குகளையும் வாழ வைத்த நடிகர் திலகத்தின் கர்ணன் திரைக் காவியத்தை DTH மூலமாக வெளியிட்டால் சிறப்பாகவும் லாபகரமாகவும் இருக்கும் என நினைத்த ஒரு DTH நிறுவனம் ராஜ் டிவியை அணுகியிருப்பதாகவும் அவர்கள் அதை பற்றி யோசித்து சொல்கிறோம் என்று சொல்லியிருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

ராஜ் டிவி பற்றி சொல்லும் போது வேறு ஒரு தகவலும் வந்தது. ராஜ் டிவியின் வசம் நெகடிவ் உரிமை இருந்த காலத்தை கடந்து நிற்கும் அற்புத காவியம் நடிகர் திலகத்தின் புகழை பாரெங்கும் பரப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை இந்தியாவின் மிகப் பெரிய வணிக குழுமத்தில் இடம் பெற்றுள்ள entertainment wing பெரிய விலை கொடுத்து வாங்கியிருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. படத்தை மெருகேற்றி அவர்களே உலகமெங்கும் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது! இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் இந்த காவியம் பெரிய அளவில் reach ஆகும் எனபது திண்ணம்.

அன்புடன்
Great News. A real pongal treat for NT worshippers and in general to All genuine Tamils. Thanks for sharing.

Gopal.s
14th January 2013, 07:07 AM
Thanks to Adiram Sir, Sivaji Senthil,Vanaja madam, Grouch,Parthasarathy,Ganpat Sir,Chandra sekar Sir,S.Vasudevan .

NOV
14th January 2013, 08:01 AM
WARNING

We have found out that some members posting in this thread have been misusing Hub facilities by creating duplicate id's and have started to create trouble in this peaceful thread. We will not tolerate such trouble mongers and give 24 hours for them to own up by sending a PM to the moderators on their duplicate ids, which will then be deleted.

If this is not done within the next 24 hours, we will ban all the id's including the original ones. Please do not take this warning lightly!

sivaa
14th January 2013, 08:25 AM
அனைவருக்கும் இனிய.... தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

Gopal.s
14th January 2013, 11:44 AM
Vanaja Madam, Ragavendran Sir, Murali, Pammalar,vasudevan,S. vasudevan (Ney), adiram,Kalnayak,karthik, saradhaji, Muthram, Parthasarathy , ganpat, Nov,joe,Grouch, Subbu, Barrister,Siva, K.C.sekar,Venkiram,Radha sir,Esvee sir,P_R,plum,satish,harish,rangan.rahulram.
Wishing you Happy Pongal and Maha Shankranti to all.Best Regards from Gopal

Gopal.s
14th January 2013, 11:45 AM
Vanaja Madam, Ragavendran Sir, Murali, Pammalar,vasudevan,S. vasudevan (Ney), adiram,Kalnayak,karthik, saradhaji, Muthram, Parthasarathy , ganpat, Nov,joe,Grouch, Subbu, Barrister,Siva, K.C.sekar,Venkiram,Radha sir,Sasi,
Esvee Sir,P_R,plum,satish,harish,rangan.rahulram.
Wishing you Happy Pongal and Maha Shankranti to all.Best Regards from Gopal

Gopal.s
14th January 2013, 02:41 PM
Gopal sir, thank you and congratulation for your excellent writeup about our NT's one of best movie "Ooyartha Manithan". One of my most favorite movie and watched countless time.

Thanks a lot.

My personal request to analysis my other favorite NT movie "Savale Samale"....

Cheers,
Sathsih
Dear Sathish,
I fulfilled your wish.Why such a longtime,no news from you?

IliFiSRurdy
14th January 2013, 02:54 PM

இந்தியாவின் தவப்புதல்வன்.

சில நாட்களுக்கு முன் கணினியில் “There will be blood” எனும் ஆங்கில படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.அதில் உச்ச காட்சியில்,அதன் கதாநாயகன் டேனியல் டே லூயிஸ் நடித்த விதத்தைப்பார்த்து அதிர்ந்துபோனேன்.அப்படியே நம் தலைவரின் “தெய்வமகன்” நடிப்பு.

ஆம் இந்தியாவின் தெற்கு கோடியில் மறைந்திருந்த ஒரு மகா கலைஞனின் புகழ ஹாலிவுட வரை பரவி உள்ளது எனும் உண்மை சட்டென்று எனக்கு மட்டற்ற மகிழ்வை கொடுத்தது.அதே சமயம் இந்த கலைஞனை நாம் எவ்வளவு குறைவாக பயன்படுத்தியுள்ளோம் என்ற ஆதங்கமும் எனக்குள் எழுந்தது.

படையப்பா படத்திற்கு இவருக்கு சம்பளம் ஒரு கோடி ரூபா என செய்தி கேட்டு நம்மில் பல ரசிகர்கள் ஆனந்தமடைந்திருக்கலாம்.ஆனால் எனக்கு அது ஒரு செய்தியாகவே படவில்லை.ஆம்! பராசக்தி க்கு ஒரு கோடி ரூபா பெற தகுதி வாய்ந்த ஒரு நடிகனை நாம் கெளரவித்தது ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குப்பின்.!

அதை விடுங்கள் அவருக்கு நாம் இழைத்த இன்னொரு பெரிய அநீதி அவரை பக்கம் பக்கமாக வசனம் பேச விட்டு ரசித்தது தான்.உலகத்திலேயே உடல் மொழி பேசுவதில் இவருக்கு இணையான நடிகர் கிடையாது.இவரைப்போன்ற கற்பனா சக்தி படைத்த இன்னொரு நடிகரும் கிடையாது.பராசக்தியை எடுத்துக்கொள்ளுங்கள் ..இவரின் முதல் படம்.என்ன ஒரு உடல் மொழி!!

எங்கே அய்யா பார்த்தார் இதையெல்லாம்? குண சேகரனாக இவர் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளும் பொழுதுதானே தமிழ் திரையுலகமே எழுந்துகொண்டது.அன்று எழுந்த அம்மேதை மீண்டும் படுத்தது ஜூலை 21 2002 இல் அன்றோ! சுமார் ஐம்பது ஆண்டுகள் சக்கரவர்த்தியாக அல்லவோ ஆட்சி செய்தார்!
ஒரு விடுதி அறைக்குள் நுழைந்து அதை கண்ணால் சுற்றி பார்ப்பது ஆகட்டும்,பெட்டி கொண்டு வந்த ரூம் பையனுக்கு இனாம் அளிக்கும் ஸ்டைல் ஆகட்டும்,வங்கியில் செக்கை கொடுத்துவிட்டு காத்திருக்கும் ஒரு பாவம் ஆகட்டும்.பணத்தை பெற்றுக்கொண்டு அதை எண்ணாமல் ஒரு முறை விரல்களால் பிரித்து அந்த கட்டை பையில் போடும் ஒரு லாகவமாகட்டும்.மீண்டும் தன் அறைக்குள் நுழையும் போது அங்கு ஒரு யுவதியைக்கண்டு கண்ணில் காட்டும் மிரட்சி ஆகட்டும்.என்ன ஒரு தொழில்நேர்த்தி!

நண்பர் கோபால் தன்னுடைய சவாலே சமாளி விமரிசனத்தில் மிக அழகாக சொன்னதைப்போல "தலைவருக்கு எந்த உடை அணிவித்தாலும் ஒரு பாங்கு இருக்கும்.அவர் வேட்டியை உடுத்தும் விதமே அந்த கதாபாத்திரத்தை நமக்கு விளக்கிவிடும்".நான் மேலும் ஒரு படி மேலே சென்று சொல்வேன்:தலைவர் கண்களை மட்டுமே பார்த்தால் போதும் அவர் இடுப்பில் என்ன உடை இருக்கும் என்று கூட ஊகித்து விடலாம்.ஒரு ஆண் 20 வயதிற்கு மேல் அரை நிஜார் போடவேண்டும் என்றால் ஒன்று அவர் foreign returned ஆக இருக்கவேண்டும் அல்லது அரைகுறையாக இருக்கவேண்டும்.ராமன் எத்தனை ராமனடியில் தலைவர் தன் கண்களைகொண்டே தன் அரை நிஜாரை நமக்கு காண்பிப்பார்.அதே ஒரு கிராம வாசியாக பாகப்பிரிவினையில் அவர் வேட்டி அணியும்போது அந்த அப்பாவித்தனத்தை வேறு மாதிரி காண்பிப்பார்.

எதற்கு இத்தனை முகாந்திரம் என்று கேட்டால்,தன் முதல் படம் பராசக்தியில் இதனை மிக சிறப்பாக செய்திருப்பார்.பணக்கார இளைஞன்,வஞ்சிக்கப்பட்டு ஓட்டாண்டி ஆனா இளைஞன்,சமுக அவலங்களை கண்டு வெகுண்டெழுந்து எதிர்க்கும் இளைஞன்,தன் இன்னல்கள் அனைத்தும் நீங்கி மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் இளைஞன் என்ற அனைத்து நிலையிலும் அவருடன் சேர்த்து அவர் trousers trousers and shirt உம் நடித்திருக்கும்.

சரி சரி பொங்கல் திருநாளில் உங்கள் நேரத்தை அதிகம் எடுதுக்கொள்கிறேனோ?

மீண்டும் சந்திப்போம்.

Prabo
14th January 2013, 06:19 PM
சில நாட்களுக்கு முன் கணினியில் “There will be blood” எனும் ஆங்கில படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.அதில் உச்ச காட்சியில்,அதன் கதாநாயகன் டேனியல் டே லூயிஸ் நடித்த விதத்தைப்பார்த்து அதிர்ந்துபோனேன்.அப்படியே நம் தலைவரின் “தெய்வமகன்” நடிப்பு.


I too felt the same :-D and mentioned it here

http://www.mayyam.com/talk/showthread.php?8530-Which-non-indian-film-u-saw-recently-has-made-u-post-here/page168

Even in the movie 'The Devil's Advocate' during the scene when Pacino delivers, 'Look but don't touch, touch but don't taste, taste but don't swallow' there's a shade of NT. Now, I don't know if these gentlemen watched NT, but, think it's one style of acting which NT was so fluent and we are all so used to it and associate with NT himself.

IliFiSRurdy
14th January 2013, 10:53 PM
வனஜாவிற்கு ஜவாப்..

//உங்களுக்கு மட்டுமா?//

:-D

//பந்தம் படத்தில் break down ஆன காரிலிருந்து இறங்கி ஒன்றும் சொல்லாமல் அந்த driver ஐ ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்து போவார். //

தன் தம்பி மகள் (குழந்தை) நடனமாட அதை ரசித்துக்கொண்டே ,ஏதோ சொல்லவரும் தன் தம்பி மனைவியை தன் வலது மணிக்கட்டு அசைவிலேயே dispose செய்யும் "வீர பாண்டிய கட்டபொம்மன்"

புது வேலைக்காரன் தவறு செய்து விட்டான் என்று தன் மனைவி அவனைக்காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது,கையில் ஒரு செய்தித்தாள் சகிதம் அமர்ந்து அதை கேட்காமல் கேட்டு ரசிக்கும் "உயர்ந்த மனிதன்"

தன் நண்பன் அவன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கையில்,சற்றே தள்ளி சங்கோஜத்துடன் நின்றுகொண்டு கையில் உள்ள suitcase handle ஐ இரண்டு கைகளாலும் பிடித்திருக்கும் அக்காட்சி நம் "நெஞ்சிருக்கும் வரை" அகலுமா?

தன் உடல், மனைவி யாக நடிக்கும் பெண்ணை நோக்கி இருக்க ,முகமோ தான் நேசிக்கும் "புதிய பறவையை" நோக்கி இருக்க முன்னவள் சொல்லும் பொய்யை பின்னவள் நம்பி விடபோகிறாளே என்ற பதட்டம் உடலில் தெரிய கண்களால் காதலியை கெஞ்சும் கோபால்.
.
"தில்லானா மோகனம்பாள்" உள்ளே நுழைய,அவளை சைட் அடித்து விட்டு தன் தவில் சகாவைப்பர்த்து 'என்ன பார்த்தீரா?" என கண்சிமிட்டும் நாதஸ்வர வித்வான்,

வயது பெண் ஒருத்தியின் பின்புறத்தை தட்டும் செயல் ஒன்று காதலை அல்லது காமத்தை, மட்டுமே வெளிக்காட்டும் செயல் என்ற நியதியை மாற்றி அதன் மூலம் உரிமையையும் வெளிக்காட்டலாம் என உணர வைத்த அந்த மஹா கலைஞனுக்கு அல்லவோ நாம் "முதல் மரியாதை" செய்யவேண்டும்.

//இது என்ன படத்தில்? //
பராசக்தி! வனஜாவா இதை கேட்பது ? சான்ஸே இல்லை!(இது positive usage).

//இன்னும் தொடருங்கள் //
அதாவது முரளி,கோபால்,வாசு போன்றோருடன் என்னையும் எழுதசொல்கிறீர்கள்:(
சான்ஸே இல்லை!(இது negative usage).

Gopal.s
15th January 2013, 07:03 AM
சகோதரி வனஜா, சகோதரர் கண்பட்(புனை பெயர்!!!???)
ஏதேது ,உங்கள் இருவரின் எண்ண ஓட்டங்களுக்கு எல்லையே இல்லை போலிருக்கிறது ? இருவரும் late ஆ வந்தாலும் latest ஆ தான் வந்திருக்கீங்க!!
பேஷ், பேஷ், கச்சேரி களை (கலை) கட்டி விட்டது.

IliFiSRurdy
15th January 2013, 07:50 AM
I too felt the same :-D and mentioned it here

http://www.mayyam.com/talk/showthread.php?8530-Which-non-indian-film-u-saw-recently-has-made-u-post-here/page168

Even in the movie 'The Devil's Advocate' during the scene when Pacino delivers, 'Look but don't touch, touch but don't taste, taste but don't swallow' there's a shade of NT. Now, I don't know if these gentlemen watched NT, but, think it's one style of acting which NT was so fluent and we are all so used to it and associate with NT himself.

நன்றி பிரபோ* (!)

பொதுவாக "Great men think alike" என பகர்வர்..
அது உண்மையில் "Men think about great alike" என்று இருக்கவேண்டும் போலும்.

ஒன்று சொல்கிறேன் குறித்துக்கொள்ளுங்கள்..

கி.பி 2062 இல் ஓரு AV software இருக்கும்.உலகின் எந்த ஒரு திரைப்படத்தையும் எடுத்து, change 'so and so' to 'so and so' என்ற command கொடுத்துவிட்டால் அந்த நடிகரையோ,பாடகரையோ அது மாற்றி விடும்.
உதாரணத்திற்கு நம் சந்திரலேகா வீடியோவைப்போட்டு change M.K ராதா to சூர்யா என்று தட்டினால் பின்னவர் நடித்த சந்திர லேகாவை நாம் பார்க்கலாம்.

அப்போ Sidney Poitier,Marlon Brando,Alec Guiness,Lawrence Olivier,Peter"O'Toole,Burt Lancaster,Jack Nicholson,Spencer Tracy,Charles Laughton,Al Pacino,போன்றவர்கள் நடித்த படங்களை நான் மாற்றி பார்த்து ரசித்து கொண்டிருப்பேன்.(அந்த software ஐ வாங்கும் அளவிற்கு பணம் மட்டும் 'அப்பொழுது'என்னிடம் இருந்தால்!:smokesmile: (எச்சரிக்கை:புகை பிடித்தல் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது))

"யாரை வைத்து மாற்றி என சொல்லவில்லையே" என வினா எழுப்புவர்களுக்கு.......
................................
.......இன்றுதான் பொங்கல்.

*இந்த மாதிரி பெயர் வைத்து கொள்வது நன்றாக உள்ளதே.நான் கூட என் பெயரை "mannaa" என்று மாற்றிவிடலாமா என தோன்றுகிறது..எனக்கு ஏற்கனவே 'bunமுகம்' வேறு....அதோ சொர்கத்திலிருந்து ஒரு குரல்..,,"மாமா! இதுவும் நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது"

Gopal.s
15th January 2013, 08:17 AM
என்ன தலைவரே கண்பட் ,
Full form போலிருக்கிறதே? நல்ல பந்தையெல்லாம் கூட sixer திருப்பி கொண்டிருக்கிறீர்கள்? இந்த வரிசையில் அகிரா குரசோவாவின் Favourite hero ஐ சேர்க்கவும்.(Seven samurai பார்த்தால் புரியும்)

IliFiSRurdy
15th January 2013, 08:19 AM
சகோதரி வனஜா, சகோதரர் கண்பட்(புனை பெயர்!!!???)
ஏதேது ,உங்கள் இருவரின் எண்ண ஓட்டங்களுக்கு எல்லையே இல்லை போலிருக்கிறது ? இருவரும் late ஆ வந்தாலும் latest ஆ தான் வந்திருக்கீங்க!!
பேஷ், பேஷ், கச்சேரி களை (கலை) கட்டி விட்டது.

நன்றி கோபால் ஜி..

என்னே ஒரு பேறு !!
அடுத்தடுத்து
வசிஸ்டர்,
வசிஷ்டர்
இருவர் வாயிலிருந்தும் பிரம்ம ரிஷி பட்டம்..
தன்யனானேன்..
நீவிர் (இருவரும்) நீடூழி வாழ்க.

Gopal.s
15th January 2013, 10:35 AM
நான் நினைப்பதுண்டு. எப்படி இந்த மாதிரி cliched ஆக படங்களில் காட்சியமைப்புகள் வருகின்றனவே என்று!! என்னதான் காதலியை சந்திப்பது இதம் என்றாலும் ,அன்று கதாநாயகனுக்கு குடும்ப பிரச்சினை காரணமாய் mood -out ஆகியிருந்தாலோ, அல்லது constipation போன்ற உடல் உபாதைகள் இருந்தாலோ, அவனால் காதல் காட்சியில் எப்படி romantic ஆக இருக்க முடியும்?
ஆனால் எனக்கொரு பெரிய surprise பந்தபாசம் (1962)படத்தில்.
காதலியை, வழக்கமான பார்க்கில் சந்திப்பார். ஆனால் குடும்ப பிரச்சினை சம்பந்தமாக குழப்பத்தில் இருப்பார். காதலி பேச பேச,பதில் கூட பேசாமல் ,கடு-கடுவென்று உட்கார்ந்திருந்து ,நகர்ந்து விடுவார்.
NT is always a wonder and much ahead of his time !!!

Gopal.s
15th January 2013, 11:33 AM
We all have our personal lives affect our professional lives and vice versa. But I bet NT never let his personal life problems affect his performance. He was really lucky to have an understanding and corporative wife and never heard of being 'moody' and cancelled his shootings etc..

சகோதரி,
தப்பாக புரிந்து கொண்டு விட்டீர்கள். நான் சொல்வது பட காட்சியைப்பில் proto -type வருவது பற்றி ,அதை NT உடைக்கும் விதம் பற்றி. I dont discuss about carrying personal moods to work place. I am discussing about character mood nuances in the movie scene.

Gopal.s
15th January 2013, 11:42 AM
நடிகர் திலகத்தின் உடல்மொழிக்கவிதை தொடர்கிறது.....

* சிற்றின்பம் கலவாமல் 100 பாடல்கள் பாடுவதாக ஒப்புக்கொண்டு அம்பிகாபதியாக அவையில் அமர்ந்ததும், இதெல்லாம் தனக்கு ஒரு சிறிய விடயம் என்பதுபோல, ஒரு முழுமையான தன்னம்பிக்கையுடன் ஓரக்கண்ணால் அவையிலிருப்போரை நோட்டம் விடுவார். நம்பியாருக்கு எரிச்சலில் முகம் கோணலாகும்.

* அழகர் கோவிலில் கச்சேரியை பாதி முடித்துக்கொண்டு போகும்போது, எதிரே வரும் மோகனாவை நேருக்கு நேர் அண்மையில் பார்த்ததும் awestruck ஆகி, கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்பதும். (பின்னணியில் "அற்புதம், ஆனந்தம் ....என்று குரல்கள்)

* மோகனப்புன்னகை'யில் அடுத்தடுத்து வரும் காதல் தோல்விகளால் மெல்ல மெல்ல உடைந்து, கடைசியில் கடற்கரையில் total dismay இல் உட்கார்ந்திருப்பதும்.


......யாராவது தொடர்க....
துணையில், மருமகள் தந்த பிரச்சினையால், சோர்ந்து பொய், சிந்தனையில், அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது ,அங்கு மகன் வந்து அப்பா என்று அழைக்கும் போது ,தன நிலையில் இல்லாது, குரல் வந்த திசை கூட அறியாமல், ஒரு வினாடி, தவறான திசையில் பார்த்து சமாளிப்பது......

ஆட்டுவித்தால் பாடலில் ,ஆரம்பம். ஏதோ சிந்தனையில் உள்ள போது ,கண்ணன் வேஷத்தில் வந்த ,நண்பனின் குழந்தையை, ஆச்சார்ய பார்வை பார்த்து சுதாரிப்பது.....

பாசமலர் ,வாராயென் தோழி வாராயோ பாடலில், மலராத பெண்மை மலரும், வரிகளில், தங்கை மற்றும் அவளின் நண்பிகளை கடந்து செல்லும் போது , வெட்கம், embarassment , பெருமிதம் கலந்த 10 வினாடி shot ......

IliFiSRurdy
15th January 2013, 12:00 PM
என்ன 'வா'? :confused2:எனக்கு இதெல்லாம் தெரியாது. சிவாஜி கணேசன் தெரியும். கொஞ்சம் hollywood தெரியும்; அவ்வளவுதான்.

என்னது? என்ன 'வா' வா?

உங்களுக்கு பார்த்தால் பசி தீரும் சாவித்திரிக்கு ஆரம்பித்து போல ஆரம்பிக்கவேண்டும் போல இருக்கே?(அ..ன்னா அ.அ...;ஆ ...வன்னா ஆ. ஆ.)

ஒளவையே,இப்பூலோகத்தில் நாம் நன்கு அறிந்திருந்தாலும் அறவே அறியாதது போல கண்பித்துக்கொள்ள வேண்டிய இரண்டினை கூறுக..

முருகா..சரவணா ஸ்டோர்ஸும்,ஷேர் ஆட்டோவும்..

நன்று,நன்று..நாம் அறவே அறியாதிருந்தாலும் நான்கு அறிந்தது போல கண்பித்துக்கொள்ள வேண்டிய இரண்டு?
அகிரா குரசோவாவும்,Sigmund Freud உம்..

Gopal.s
15th January 2013, 04:53 PM
இரும்புத்திரை (iron curtain )- 1960- பகுதி-1

எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம். நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.

மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார். அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.
தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.
இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
சுபம்.

(தொடரும்)

Gopal.s
15th January 2013, 04:59 PM
இரும்பு திரை- 1960- பகுதி-2

நடிகர் திலகத்தின் திரை வாழ்வை பொறுத்த வரை 1959,1960,1961,1964,1972,1978 ஆகியவை மறக்க முடியாத வருடங்கள். மிக அதிக அளவில் வெற்றி படங்கள்,தரமான படங்களால் அவர் கோப்பை நிரம்பி வழிந்த வருடங்கள். இரும்பு திரை 1960 இல் ஜெமினி நிறுவனம் தயாரித்து வெளி வந்த படம்.யதார்த்த நடிப்பில் நடிகர் திலகம் கொடி பறந்த பொற்காலம். இந்த வகை realism (அ )naturalism பாணி நடிப்பில் என்னை மிக மிக கவர்ந்தவை அந்த நாள், முதல் தேதி,ராஜா ராணி, பாக பிரிவினை, படிக்காத மேதை, தெய்வ பிறவி, இரும்பு திரை, கப்பலோட்டிய தமிழன், இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை, துணை, முதல் மரியாதை, தேவர் மகன் ஆகியவை. இந்த படங்களில் அவர் நடிப்பு stylised method acting பாணியில் இருக்காது. ஆனால் சிவாஜியை பொறுத்த வரை எந்த வகை நடிப்பாக இருந்தாலும் ,அவரை தவிர யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு perform செய்து விடுவார்.

ஒரு நல்ல இயக்குனர், வசனகர்த்தா, கூட நடிக்கும் நடிகை/நடிகர்களின் நல்ல பங்களிப்பு இருந்தால் ,நம்மவருக்கு கேட்கவா வேண்டும்?அப்படி ஒரு scope நிறைந்த படம் இரும்புத்திரை.அவருடைய பாத்திர படைப்பிலேயே,மிக கவனம் எடுத்து செதுக்கியிருப்பார்கள்.ஒரு அடக்கமான,உதவும் தன்மை நிறைந்த ,சுயமாய் தன்னை உருவாக்கி கொள்ளும் ஒரு கீழ் மத்திய வகுப்பை சார்ந்தவர். பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து ,யாருக்கும் பாதிப்பில்லாமல் தீர்க்க நினைக்கும் லட்சிய-யதார்த்த வாதி.உறவுகளை,நட்பை அது சார்ந்த பிரச்சினைகளை மென்மையாய் அணுகும் ஒரு இதமான பிள்ளை/சகோதரன்/காதலன்/நண்பன்.இதை உள்வாங்கி நடிகர் திலகம் நடிக்கும் பாங்கு இருக்கிறதே அடடா!! என்னவென்று சொல்ல!!??

ஆரம்ப காட்சியிலேயே ,வைஜயந்தி மாலா அம்மாவின் உடல் நிலைக்காக ,ரிக்ஷா தேடும் போது , உதவி செய்து(பண உதவியும்தான்) அறிமுகம் ஆவதிலிருந்து அவர் கொடிதான்.அண்ணன் ,முதலாளியுடன் அறிமுக படுத்த அழைத்து செல்லும் போது ,ஒரு முக்கிய யந்திரம் பழுதாகி விட,அதை ஒரு சவாலாக எடுத்து சரி செய்யும் காட்சியில் வசனங்கள், அத்தனை ஆழம்.ஒரு கிண்டல் தொனியிலோ அல்லது சவால் விடும் தொனியிலோ யாரையும் புண் படுத்தாமல் , நம்பிக்கை விதைத்து எதிராளிகளையும் தன மேல் நம்பிக்கை கொள்ள செய்வார்.அந்த gearwheel தயாரிப்பிலும் , இசை கருவியை கையாளும் போது காட்டும் அதே perfection காட்டுவார்.(ஒரு பொறியாளனாக நானே வியந்த காட்சி).எல்லோரிடமும் அதே மென்மை ,நயம் கொண்டு ஒரு மதிப்போடு நடுத்துவார் தன் நிலை தாழாமல்.

இந்த படத்தில் மிக மிக சிறப்பான காட்சிகள் வைஜயந்தி-சிவாஜி சம்பத்த பட்ட அற்புதமான காட்சிகள்.(இந்த ஜோடி அம்பிகாபதி,தில்லானா மோகனாம்பாள்,புதிய பறவை போன்ற படங்களிலும் சேர்ந்திருந்தால்???)அப்படி ஒரு இழைவு, இசைவு,அனுசரணை,chemistry தமிழ் பட உலகம் சில படங்களில் மட்டுமே கண்டிருக்க கூடிய அதிசயம். முதலில் அவர்களின் சோலை சந்திப்பில்,நயமான கிண்டலுடன்(தனக்கு புல்லாங்குழல் வாசிக்க தெரியாதது போல்) காதல் அரும்புவதாகட்டும்,தனது சிறு வயது infatuation அனுபவத்தை ரசித்து சொல்வதில் ஆகட்டும்(வைஜயந்தியின் reaction பத்மினியை தூக்கி சாப்பிட்டு விடும்),கண்ணில் குடியிருக்கும் பாடல் ----ஆஹாஹா துளிக்கூட காமம்,விரசம் இன்றி காதலை இப்படி ஒரு ரசனையான அனுபவம் ஆக்க முடியும் என்று ரசவாதம் புரிவார்கள் சிவாஜியும்,வைஜயந்தியும்.

சரோஜா தேவி,தன ஒரு தலை காதலை சொல்ல வலிய பேச்சு கொடுக்கும் போது ,அவரை புண் படுத்தாமல், நயமாக,நாகரிகமாக பதில் பேசி, இடையில் வரும் வைஜயந்தியிடன் எரிந்து விழும் நயம்.(பிறகு அவரிடம் வேவு பார்க்கத்தானே வந்தே என்ற சீண்டல்).இப்படி ஒரு மறுப்பை,எதிர் நிலையை நயமாக வெளியிடும் அழகு .... என்ன சொல்ல?முதலாளியிடம் பேசும் முறையிலும் ,அந்த மதிப்பை குறைக்காமல்,பிரச்சினையை நயமாக உரைத்து,அதை தீர்ப்பதிலேயே கவனம் காட்டுவாரே அன்றி ,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் பேசவே மாட்டார். இந்த காட்சிகளில் சிறிய எதிர்ப்பை உடல் மொழியில்,எதிராளி மனம் புண் படாமல் காட்டும் நயம் அத்தனை மெருகோடு இருக்கும்.பின்னொரு காட்சியில், இழப்பீடு வாங்க தங்கவேல் செய்த மோசடியை தான் ஒப்பு கொள்ளவில்லை என்பதை உணர்த்தி ,அவரை இடிக்காமல் ,சரியான பாதைக்கு திருப்புவார்.ஒரே ஒரு இடத்தில்தான் தன்னை மறந்து உணர்ச்சி வச படுவார். அண்ணன் பெண் திருமணம் பிரச்சினையில் உள்ள போது .(அப்போதும் ஒரு நம்பிக்கை தொனிக்கும்)

தான் சிறையிலிருக்கும் போது ,அன்னையின் சவ ஊர்வலம் போகும் போது , தன துக்கத்தை மிக மிதமாக,அமைதியாக வெளியிடுவார்.(இந்த மேதை ,துக்கத்தை கூட, பாத்திர தன்மையறிந்து,சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து ,பல விதங்களாக,பல படங்களில் ,வித,விதமாக நடித்து காட்டியுள்ளார்.பொத்தாம் பொதுவாக ஒரே விதமாக நடித்த சராசரிகளின் மேல் நமக்கு ஈர்ப்பு உண்டாகாமல் இருக்க, இந்த மேதைதான் முழு காரணம்)

இந்த மாணிக்கம், வைரத்தை விட அதிகமாக ஒளி வீசுவதில் ,என்ன ஆச்சர்யம்?

(தொடரும்)

Gopal.s
15th January 2013, 05:00 PM
இரும்பு திரை-1960 -பகுதி-3

இரும்பு திரையில் வைஜயந்தி மாலா ,தன் பங்கை செம்மையாய் செய்து ,நடிகர்திலகத்துக்கு ஈடு கொடுத்திருப்பார். சரோஜா தேவி, பொறாமை நிறைந்த பணக்கார பெண் பாத்திரத்தை ,உணர்ந்து நடித்திருப்பார். ரங்கா ராவ், சுப்பையா,வசுந்தரா(வைஜயந்தியின் உண்மை தாயும் கூட.),முதலியோர் நல்ல பங்களிப்பை,இந்த படத்திற்கு அளித்திருப்பார்கள்.

கதையை, ஜெமினி கதை இலாகா(மகாதேவன், வேப்பத்தூர் கிட்டு, கொத்தமங்கலம் சுப்பு,வாசன் அடங்கியது),வசனம் கொத்தமங்கலம் சுப்பு(தில்லானா மோகனாம்பாள் மூல கதாசிரியர்).இயக்கம் ஜெமினி அதிபர் இந்தியாவின் "செசில் பி டிமிலி" வாசன் அவர்கள். வசனங்களில் படு இயல்பான கூர்மை இருக்கும். பாத்திரங்கள் இயல்பு மீறாத நடிப்புக்கு வசனங்கள் துணை நிற்கும். முக்கியமாய், இந்திய பொறியாளர்களின் திறமை பற்றி சிவாஜி பேசும் வசனம். சிவாஜி-வைஜயந்தி காதல் காட்சி வசனங்கள். ரங்கா ராவ் உடன் எதிர்-நிலை வசனங்கள்.(வழிகாட்டி திருத்தும் உணர்வுடன் இருக்கும்.முதலாளியை irritate செய்வது போல் வரம்பு மீறாது. positive energy நிறைந்த வசனங்கள்.) வீட்டு பிரச்சினை,போராட்டங்கள் எல்லாமே படு பாந்தமாய் வசனங்களில் ஜொலிக்கும்.

இந்த படத்தில், சீரான விறுவிறுப்பு ,திரைகதையில் இருக்காது. ஆனால் ,ஒரு முக்கிய உலக பிரச்சினை கருவாகும் போது ,தவிக்க முடியாத குறை.

தங்கவேலு விற்கு நான்கு பாடல்கள். அவர் நகைச்சுவையும்,கல்யாண பரிசு,அறிவாளி தரத்தில் இருக்காது. ஆனால் கதையை ஒட்டிய நகைச்சுவையாய்(தொழிலார்களின் கடன் சுழல்) ,உயர்தரமாய், எதிர்மறை நிலையை விளக்கும்(misuse of compensation law )

பாடல்கள் பட்டத்துகோர் கும்பிடு, என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே, ஆசை கொண்ட நெஞ்சிரண்டு, நெஞ்சில் குடியிருக்கும் ,கையில வாங்கினேன் ஆகியவை நல்ல முறை கர்நாடக இசையை பின் பற்றியவை.(எஸ்.வீ.வெங்கட்ராமன்)மற்ற பாடல்கள் படு சுமார். எட்டு பாடல்கள் ,ஐந்தாக குறைக்க பட்டிருக்கலாம்.

பொதுவாக ,மிக சரியாக, சார்பின்றி, தொழிலாளர் பிரச்சினை பேசிய இந்த படம் , சுமாரான வெற்றி படம்.(ஆலைகள் நிறைந்த கோவை நகரில் வெள்ளி விழா).ஆனால் ஹிந்தியில் பிரம்மாண்ட வெற்றி.இந்த படத்தில் சிவாஜியின் ஈடுபாட்டையும்,நடிப்பு திறனையும் கண்ணுற்ற திலிப் குமார் ,சிவாஜி ரசிகர் ஆகி, நண்பராகவும் ஆனார்.(இவருக்காக அவர் ஆலய மணியும், அவருக்காக இவர் கங்கா ஜமுனாவும் பண்ணினார் என்று கேள்வி)

ஆனால், வாசன்-சிவாஜி உறவு சீராகவில்லை. ஒரு சின்ன பாத்திரத்துக்காக நேர்முக தேர்வுக்கு வந்த சிவாஜியை நிராகரித்து(சந்திரலேகா), மிக மோசமாக விமரிசித்த பார்ப்பன திமிரை ,சிவாஜி மன்னிக்கவே இல்லை என்று கேள்வி. ஜெமினி, திரைகதை தயாரித்து, தயாராக இருந்தவீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒப்பு கொள்ளாமல், பந்துலுவை எடுக்க வைத்தார். இரும்பு திரையிலும் நிறைய உரசல்கள்.(ஆனந்த விகடன் சக்தியறிந்து குழந்தை மனம் கொண்ட சிவாஜி விட்டு கொடுத்திருக்கலாம்). ஜெமினி கான்டீன் எழுதிய மணி,இதை குறிப்பிட்டு,உன் முதலாளிக்கு அல்வா கொடுத்து விட்டேன் என்று சிவாஜி குறிப்பிட்டதாக எழுதியுள்ளார்.(அவரும் சிவாஜி விசிறி). ஆனால் ,வாசன் சிவாஜியின் திறமையறிந்து , அவரின் மிக பிரம்மாண்ட மக்கள் செல்வாக்கு அறிந்து, இதற்கு பின்னும்,மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),விளையாட்டு பிள்ளை (1970) என்ற படங்கள் எடுத்ததுடன், சிவாஜி உலகிலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி(தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு பார்த்து) ,125 வது விழாவிலும் கலந்து கொண்டார்.

மிக மிக ,உண்மையான பிரச்சினையை எடுத்து, எடுத்து கொண்ட கருவில் விலகாமல், சரியான தீர்வை, சரியான பொழுது போக்கு விகிதத்துடன் தந்த மறக்க முடியாத Nadigar thilagam உன்னத காவியங்களுள் ஒன்று.

(முற்றும்)

IliFiSRurdy
15th January 2013, 08:19 PM
Gopal,S.;1000376]இரும்பு திரை-1960 -பகுதி-1~3[/B]



Dear Gopal,

மிக நேர்த்தியாக,நேர்மையாக ஒரு நெடு விமரிசனம் எழுதுவது எப்படியென உங்களிடம் கற்றுக்கொள்ளலாம்.இந்த திரைப்படத்தை பார்த்த ஒரு உணர்வை உங்கள் எழுத்து ஏற்படுத்தியது.
oru simple linear story ஐ அதன் சுவை குறையாமல் நமக்கு அளித்திருப்பார் தலைவர்.ஒரு ஆற்றொழுக்கு ஒப்ப நடிப்பு..ஆர்பாட்டங்கள் ஆரவாரம் கிடையாது.ஆனாலும் அழுத்தமான முத்திரை உண்டு.

மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள, காமிராவிற்கு பின்னால் நிகழ்ந்த நிகழ்வுகளும் சுவையாகத்தான் உள்ளன."யாகாவாராயினும் நாகாக்க " எனும் பொய்யா மொழியை இன்னொரு மேதையான S S Vasan would have learned in the hard way.ம்ம்ம் விதி யாரை விட்டது! ஆமாம்..AV Meyyappan episode உம் நீங்கள் அறிந்ததுதானே!

மீண்டும் நன்றி!

IliFiSRurdy
15th January 2013, 09:47 PM
ஜவாப் என்பது தமிழக எல்லையைத்தாண்டினால் அனைவராலும் அறிந்து கொள்ளப்படும் ஒரு இந்திய மொழிச்சொல்..அர்த்தம்=பதில்...(நான் ஜவாப்தாரி இல்லை எனும் கொச்சை தமிழையும் கேட்டிருப்பீர்கள்.)
இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கில்லை என்பது பொருள்.

ஜவாபின் எதிர் சொல் சவால் அதாவது கேள்வி.(TMS அவர்களால் சில சமயம் கேழ்வி என்றும் சொல்லப்படுவதுண்டு)..challenge எனும் பொருளில் தமிழர்கள் மிகவும் விரும்பும் ஒரு சொல்.
"எனக்கா சவால் விடறே" என்பது தமிழர்களுக்கு பிடித்த ஒரு வாக்கியம்."சவாலங்க்கடி கிரி கிரி,சைதாபேட்டை வட கரி" எனும் சைதாபேட்டை ஸ்தல புராணத்தை விளக்க வரும் செய்யுளும்
இதை வேராக கொண்டு உதித்தது தான்.

kaveri kannan
16th January 2013, 03:17 AM
நடிகர்திலகத்தின் உடல்மொழி:

கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..

மருத்துவ மாணவனாய் அன்று நான் பார்த்த அந்த நடிப்புதெய்வத்தின் முகபாவம் -
பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!
--------------------------------------------

நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன்
வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல்
சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...
தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...


இந்தக்கால இளசுகளின் மொழியில் -- சான்சே இல்லை !

Gopal.s
16th January 2013, 06:45 AM
நடிகர்திலகத்தின் உடல்மொழி:

கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..

மருத்துவ மாணவனாய் அன்று நான் பார்த்த அந்த நடிப்புதெய்வத்தின் முகபாவம் -
பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!
--------------------------------------------

நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன்
வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல்
சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...
தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...


இந்தக்கால இளசுகளின் மொழியில் -- சான்சே இல்லை !

ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,

எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.

அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.

ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.

அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.

விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.

Gopal.s
16th January 2013, 09:23 AM
அதற்கு இது பதில் அல்லவே !!!

Gopal.s
17th January 2013, 08:47 AM
அதே பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction .
நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .
நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .

Prabo
17th January 2013, 11:38 AM
நன்றி பிரபோ* (!)

//Dig
En pEr Prabhu-nga....since that name is already taken, Prabo-nu maathitaen. Namma real name thaan nammalaala decide panna mudiyala, virtual name ennavaavathu vachika vaendiyathu thaan...who cares.
//
Neengalaam body language pathi discuss panrathaala, enakku pidicha oru clip. Hand acting is risky...it diverts attention to hands. But, this clip can be watched once for expressions, once for hand gestures, once for dialogue delivery and once for all at a time. Wonderful.


http://www.youtube.com/watch?v=vAE6xvRMn34

IliFiSRurdy
17th January 2013, 11:54 AM
டியர் கோபால்,

Judgment at Nuremberg படம் பார்க்கும் போதெல்லாம் என் கற்பனை சிறகடித்துபறக்கும்.மானசீகமாக அதில் வரும் Spencer Tracy, Burt Lancaster & Maximilian Schell மூன்று ரோலிலும் தலைவர் நடிப்பதாக கற்பனை.ஆஹா தூள தூள கிளப்பியிருப்பார்.ஒரு உலக சாதனையே படைத்திருக்கலாம்.முதல் பாத்திரம் righteousness ,இரண்டாம் பாத்திரம் honesty, மூன்றாம் பாத்திரம்,patriotism இன் உருவகம்..இந்த படத்தை பார்த்தவர்கள் முன்வந்தால் மேலும் விவரிக்கலாம்.BTW my request to all..Pl.do not miss this movie for Heaven's sake.That too Bhakthas like us.

நன்றி.

IliFiSRurdy
17th January 2013, 01:54 PM
so much for 'share autovum saravana storesum':?
:???: :banghead:
மன்னிக்கவும் வன்கவியே! என்ன இயம்புகிறீர்கள் எனப் புரியவில்லை.தயைகூர்ந்து சற்றே தெளிவு செய்வீர்!

Gopal.s
17th January 2013, 03:32 PM
டியர் கோபால்,

Judgment at Nuremberg படம் பார்க்கும் போதெல்லாம் என் கற்பனை சிறகடித்துபறக்கும்.மானசீகமாக அதில் வரும் Spencer Tracy, Burt Lancaster & Maximilian Schell மூன்று ரோலிலும் தலைவர் நடிப்பதாக கற்பனை.ஆஹா தூள தூள கிளப்பியிருப்பார்.ஒரு உலக சாதனையே படைத்திருக்கலாம்.முதல் பாத்திரம் righteousness ,இரண்டாம் பாத்திரம் honesty, மூன்றாம் பாத்திரம்,patriotism இன் உருவகம்..இந்த படத்தை பார்த்தவர்கள் முன்வந்தால் மேலும் விவரிக்கலாம்.BTW my request to all..Pl.do not miss this movie for Heaven's sake.That too Bhakthas like us.

நன்றி.
தலைவரே,
இந்த படத்தை பார்க்காமல் விட்டிருப்பேனா? Judgement at nuremberg (By Stanley Kramer-1961)movie, சிக்ப்ரீத் லென்சின் (Siegfried Lenz)"நிரபராதிகள் காலம்" என்ற ஜெர்மன் நாடகத்தையும் இணைத்து, நான் ஒரு கற்பனை script (srilankan பிரச்சினையை முன்னிறுத்தி) பண்ணி அதில் சிவாஜிக்கு ஓமர் முக்தார் பாணியில் ஒரு ரோலும், J A N பட spencer tracy பாணியில் ஒரு ரோலும் கற்பனையில் உருவாக்கி மகிழ்ந்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் மூன்று ரோல் கற்பனை இன்னும் சூப்பர்.("You knew you were doing wrong the first time you condemned an innocent man.")

IliFiSRurdy
17th January 2013, 10:09 PM
//Dig
[I]En pEr Prabhu-nga....since that name is already taken, Prabo-nu maathitaen. Namma real name thaan nammalaala decide panna mudiyala, virtual name ennavaavathu vachika vaendiyathu thaan...who cares.
//
Neengalaam body language pathi discuss panrathaala, enakku pidicha oru clip. Hand acting is risky...it diverts attention to hands. But, this clip can be watched once for expressions, once for hand gestures, once for dialogue delivery and once for all at a time. Wonderful.



நண்பர் பிரபு,

அருமையான காணொளி பதிவிட்டிட்ட உங்களுக்கு,
நன்றி சொல்லிட விழைகிறேன்.

தலைவர் உச்சரிப்பை புகழ்ந்திடுவதா,
குரல் மாற்றங்களை புகழ்ந்திடுவதா,அல்லது
கலைஞர் எழுதிட்ட வசனங்களை புகழ்ந்திடுவதா என்று
நினைத்திட்டு,நினைத்திட்டு மனம் மருண்டிட்டதுதான் மிச்சம்.

கல் தோன்றிட்டு மண் தோன்றிடா காலத்தே,
முன் தோன்றிட்டு மூத்த செம்மொழியாம் தமிழ் மொழி தனக்கு,
ஆடைகள் பல சூட்டி,
ஆபரணங்கள் பல பூட்டி,
பூரண நிலவைக்காட்டி,
கொம்புத்தேனோடோடு கலந்திட்ட முக்கனி ஊட்டி,
உறங்கிட வைத்து போல இருந்திட்டது.

அயகோ மீண்டும் வந்திடுமோ அத்தகைய நாட்கள்!
கேட்டிடுமோ நம் செவிகள் இத்தகைய வசனங்களை!
பார்த்திடுமோ நம் நயனங்கள் இத்தகைய நடிப்பினை!
என தவித்திட்டு துடிக்குது நம் மனது.

வாழ்க தலைவர் புகழ்!

IliFiSRurdy
17th January 2013, 10:13 PM
நன்றி கோபால்,நீங்கள் இந்தப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள் என நான் கனவிலும் நினைத்திருப்பேனா?
நான் சொன்னது மற்ற நண்பர்களுக்கு..

RAGHAVENDRA
17th January 2013, 10:36 PM
http://youtu.be/N3BwK51YFgQ

டியர் கண்பத்,
இந்தப் படத்தில் நீதிபதியாக வரும் ஸ்பென்சர் டிரேசி செய்யும் மேனரிஸம் அல்லது body language போன்றவற்றை, வேறு வகையில் சொன்னால் தாங்கள் கற்பனை செய்து வைத்துள்ளவற்றை, அவள் யார் படத்திலேயே நடிகர் திலகம் நீதிபதியாக வரும் காட்சிகளில் செய்து விட்டார். சொல்லப் போனால் Judgement at Nuremberg படம் வெளிவந்தது ஹாலிவுட்டிலேயே 1961ல் தான். ஆனால் நம் நடிகர் திலகமோ அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னரே 1959லேயே அவள் யார் படத்தில் செய்து விட்டார். நம் நாட்டு மனிதர் நீதிபதியாக இருக்கும் போது செய்யக் கூடிய மேனரிஸம் அல்லது பாடி லேங்குவேஜாக அது இருக்கும்.

இது மட்டுமல்ல. தான் ஏற்றுக் கொண்ட நீதிபதி கதாபாத்திரத்திடம் வரக் கூடிய வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்ற நடைமுறைகள்முடிந்த பின்னர் வழக்கை அணுகும் முறையில் கூட ஒவ்வொரு வழக்கினிற்கும் பாணி மாறுபடும் வகையில் அந்த கதாபாத்திரத்தின் நடை உடை பாவனைகள் அமைந்திருக்கும்.

Gopal.s
18th January 2013, 06:36 AM
http://youtu.be/N3BwK51YFgQ

டியர் கண்பத்,
இந்தப் படத்தில் நீதிபதியாக வரும் ஸ்பென்சர் டிரேசி செய்யும் மேனரிஸம் அல்லது body language போன்றவற்றை, வேறு வகையில் சொன்னால் தாங்கள் கற்பனை செய்து வைத்துள்ளவற்றை, அவள் யார் படத்திலேயே நடிகர் திலகம் நீதிபதியாக வரும் காட்சிகளில் செய்து விட்டார். சொல்லப் போனால் Judgement at Nuremberg படம் வெளிவந்தது ஹாலிவுட்டிலேயே 1961ல் தான். ஆனால் நம் நடிகர் திலகமோ அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னரே 1959லேயே அவள் யார் படத்தில் செய்து விட்டார். நம் நாட்டு மனிதர் நீதிபதியாக இருக்கும் போது செய்யக் கூடிய மேனரிஸம் அல்லது பாடி லேங்குவேஜாக அது இருக்கும்.

இது மட்டுமல்ல. தான் ஏற்றுக் கொண்ட நீதிபதி கதாபாத்திரத்திடம் வரக் கூடிய வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்ற நடைமுறைகள்முடிந்த பின்னர் வழக்கை அணுகும் முறையில் கூட ஒவ்வொரு வழக்கினிற்கும் பாணி மாறுபடும் வகையில் அந்த கதாபாத்திரத்தின் நடை உடை பாவனைகள் அமைந்திருக்கும்.
Thank you Ragavendar Sir. If K.J.Mahadevan listened to our NT and released the movie Aval Yaar at a later date(instead of placing it with Baga pirivinai) ,it should have been a hit and most talked about film like andha naal. Aval yaar is an exemplary performance.

RAGHAVENDRA
18th January 2013, 06:52 AM
Yes, It's the hurry shown by KJM that made the film Aval Yaar suffer. It was definitely another parallel to Andha Naal. See a hollywood judge and Indian judge in the following two films. The eyes speak more than words.

http://filmfanatic.org/reviews/wp-content/uploads/2011/10/Judgment-at-Nuremberg-Tracy.png

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4886-1.jpg

aval yaar image courtesy: our dear pammalar

Gopal.s
18th January 2013, 07:06 AM
சகோதரி,

ஒரு காலத்தில் எனக்கு இது ஒரு பொழுதுபோக்கு. நிறைய திரைக்கதைகள் அமைப்பேன்(படமானதில்லை.). எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் கதையை மூலமாக கொண்டு.

கரைந்த நிழல்கள்(அசோக மித்திரன்),ரிஷி மூலம்(ஜெயகாந்தன்), kaafka வின் விசாரணை, silence ,கோர்ட் in progress (டெண்டுல்கர்) இரண்டையும் இணைத்து ஒன்று, காகித மலர்கள்(ஆதவன்) ,கடல் புரத்தில்(வண்ண நிலவன்) இப்படியாக,
அந்த வகையில் நான் அமைத்த திரைக்கதை (1990).(judgement at nurenberg , நிரபராதிகள் காலம், இலங்கை பிரச்சினை எல்லாம் கலந்தது) NT கேரக்டர், சிறிது பிரபாகரன், சிறிது பாலசிங்கம், சிறிது ஓமர் முக்தார் கலந்தது. திரைகதை பாணியிலேயே எழுவதென்றால், 20 பக்கங்கள் செல்லும். சுருக்கம் இதோ.(1990 )

ஒரு கற்பனை தேசம். சிவந்த மண்ணின் வசந்தபுரி போல்.

முதல் காட்சி- பேச்சு வார்த்தை- சம உரிமை, தன்னாட்சி, மொழிக்கு அந்தஸ்து, கல்வியில் சம உரிமை கோரி ஒரு சிறுபான்மை இன தலைவருக்கும்((சிறு வயது சிவாஜி),ஒரு நாட்டு அதிபருக்கும்., ஒரு ஒப்பந்தம் கையெழுத்து. அடுத்து நடு வயது சிவாஜி, வேறு அதிபர். உதட்டசைவுகள் மட்டும், மீண்டும் ஒரு ஒப்பந்த கையெழுத்து. அடுத்து 55 வயது சிவாஜி. முதல் அதிபரின் மகன் . உதட்டசைவுகள். மீண்டும் ஒரு ஒப்பந்த கையெழுத்து. அடுத்த காட்சி. 65 வயது நடிகர் திலகம். ஒரு வட்ட மேஜை அதில் வெவ்வேறு கட்சி பெயர்கள் குறிக்க பட்டு. முதலில் விவாதிக்க பட்ட அதே பிரச்சினைகள் அதே வரிசையில் மீண்டும்.அப்போது எல்லோரும் அரசின் பாராமுகத்தை விவரித்து ஆயுத போராட்ட அவசியத்தை NT சக குழுக்களுடன் விளக்குவார். முதல் பணி ,தங்கள் இனத்தையே கோடரி காம்பாய், வெட்டி கொண்டிருக்கும் இனத்துரோகி governor ஒருவனை அழித்தொழிக்கும் பணி .

புதிதாக இயக்கத்தில் சேர்ந்த ஒருவனை(இளைய NT பாத்திரம்), நம்பிக்கை வைத்து இந்த வேலையை ஒப்படைக்கிறார்கள்.(Flashback சென்று முதிய சிவாஜியின் இளமை நாட்களில்,அவர் காதலில் விழுந்து,இயக்க நடவடிக்கைகளில் சோர்வதும், அந்த பெண் , வயிற்றிலிருக்கும் குழந்தையுடன், அவருடன் சொல்லாமல் வெளியேறுவதும், மகனுடன் தந்தையை பற்றி கூறுவதுடன், தந்தையிடம் இது பற்றி சொல்ல வேண்டாம் என தெரிவித்து விடுகிறாள்.அந்த வாலிபன்தான் சொல்லாமல் இயக்கத்தில் சேரும் புது வாலிபன். இது தமிழ் பட நியதிகளை முன்னிட்டும், NT க்கு duet கொடுக்கவும் செய்த திரைகதை சதி)).அந்த வாலிபன் ,பல வேலைகளை திறமையை கையாண்டு இயக்கத்தில் வளர்கிறான். ஒரு நட்பு நாட்டில், இன்னொரு இயக்கத்தை சேர்ந்த போராளி குழு ஒன்றை சேர்ந்த நால்வரை கொல்ல அனுப்பப்பட்டு, அந்த நாட்டின் காவலர்களால் பிடி பட்டு ,சொந்த நாட்டுக்கு அனுப்ப படுகிறான். பிடிபட்ட ஐந்து சக போராளிகளுடன், இளைய NT யும் சேர்ந்து ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்க படுகிறார்கள். இவர்கள் இனத்தை சேர்ந்த ஒரு ஆறு நிரபராதிகளை(வக்கீல், பொறியாளர்,டாக்டர்,விவசாயி ,ஒரு நிறுவன தலைமை அதிகாரி, ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி என கலந்து), தேர்ந்தெடுத்து(எந்த போலீஸ் complaint இலும் வராத,தன் வேலையுண்டு என்று இருக்கும் ஆட்கள்) இதே சிறையில் தள்ளி, உண்மையை வாங்கும் பொறுப்பை ஒப்படைக்கின்றனர். அல்லது, இவர்களை சித்ரவதை செய்து கொள்ளலாம் ,கொல்லலாம் என்றும் உரிமை வழங்க படுகிறது.ஆனால்,அது வரை, இந்த ஆறு பேருக்கும் சொட்டு தண்ணீர் கூட தரப்பட மாறாது,வெளியிலும் செல்ல முடியாது என்று அரசு காவலர்களால் சொல்ல பட்டு இந்த நிரபராதிகள் ,போராளிகளுடன் அடைக்க படுகிறார்கள். ஒரு மூன்று நாட்கள், battle of wits ,ஒருவர் பக்க நியாயத்தை இன்னொருவர் புரிந்து நடக்க அறிவுருத்த பட்டு,அவரவர் வழியில் அவரவர் வேண்டுதல்,மிரட்டுதல், அடிதடி என்று ஒரு கலந்து கட்டியான நிலை. ஒவ்வொரு இரவிலும் ஒரு போராளி,யாராலோ கொல்ல படுகிறார். இறுதியில் NT ,சிறையிலுருந்து தப்பிக்க, மற்ற ஐந்து போராளிகளும், ஆறு நிரபராதிகளால் கொல்ல படுகிறார்கள்.அரசு, ஆறு நிரபராதிகளையும், விடுவிக்கின்றனர்.

இறுதியில், போராளிகள் போராட்டத்தில் வென்று அரசமைக்க, periya NT ,இளைய NT ஐ ,நீதி துறைக்கு பொறுப்பாக்குகிறார் . அடுத்த காட்சி, முந்தைய முறை கண்ட ஆறு நிரபராதிகளும், தேடி பிடிக்க பட்டு,இளைய NT நீதிபதி பீடத்தில் அமர, விசாரணை. நடுவில்,ஒரு துப்பாக்கியை வைத்து, யார் வேண்டுமானாலும் தற்கொலை செய்து கொள்ளும்,யாரும் யாரையும் கொன்று கொள்ளும் , உரிமையும் நிரபராதிகளுக்கு வழங்க படுகிறது. விசாரணை,தீர்ப்பு, ..........

இந்த திரைக்கதையில், மூத்தவர் ஒரு cool devil type missionary .Focussed ஆக உணர்ச்சிகளுக்கு இடமளிக்காத பாத்திரம் ஆகவும், இளையவரை rebel போன்று, நிறைய பேச கூடிய,உணர்ச்சி வய படும், கொள்கைகளை கேள்விக்கு ஆட்படுத்தும், ஆர்ப்பாட்டமான பாத்திரமாக உருவாகியிருந்தேன்.

பல கேள்விகள், அந்த பத்து பேரின் உணர்ச்சி மயமான சிறை காட்சியில், தேச பற்று, தீவிர வாதம், தியாகம், தனி ஒருவனின் மனசாட்சி, சமூக மனசாட்சி, மேலிடத்தின் அழுத்தத்தினால், குற்றமிழைக்க தூண்ட படுபவரின் குற்றத்தில் பங்கு பற்றிய விவாதம், பொறுப்புணர்ச்சி, என்று பல விஷயங்கள் விவாதத்துக்கு உள்ளாகி, NT க்கு மிக மிக வாய்ப்பு கொடுக்கும் வசனங்கள்,மௌனங்கள், action என்று தூள் பரத்தும் scope . என்ன செய்வது, அவர் பிறந்து, முப்பது வருடங்கள் பின் தங்கி பிறந்து விட்ட நான் ஏங்கத்தானெ ,முடியும்?

IliFiSRurdy
18th January 2013, 08:21 AM
Ref:1491

ராகவேந்திரா ஸார்!

JAN படத்தின் ஒரு முக்கிய காணொளியை போட்டிருப்பது நீங்கள் அந்தப்படத்தை பார்த்து ரசித்திருக்கிறீர்கள் என்பதை தெரிவிக்கிறது.அந்த நம்பிக்கையில் தொடர்கிறேன்.

மனித வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திடா அக்கிரமம், ஜெர்மனி நாட்டில் ஒரு குறுகிய பத்தாண்டுகளில் நடந்தேறுகிறது.இது முடிந்து உண்மை வெளிவரும்போது ஜெர்மானியர்கள் தங்களுக்கும்,தங்கள் தந்தை நாட்டிற்கும், அழிக்கமுடியாத அவப்பெயர் ஏற்பட்டு விட்டதை எண்ணி கதி கலங்குகிறார்க்கள்.ஒவ்வொருவரும் நடந்த அக்கிரமங்களுக்கு, தாங்கள் பொறுப்பில்லை, அவை தங்களுக்கு தெரியாமல் நடந்தது.அதை தங்களால் தடுத்திருக்கமுடியாது எனும் சௌகரியமான பொய்யில் தங்களை தற்காத்துக்கொள்ள எண்ணுகிறார்கள்.

இந்நிலையில், நடந்தேறிய அக்கிரமங்களை விசாரிக்க அமெரிக்க தரப்பில் ஒரு நேர்மை மிக்க நீதிபதி(Spencer Tracy) தலைமையில் ஒரு விசாரணைக்குழு கூட்டப்படுகிறது.குற்றம் சாட்டப்படுள்ளவர்கள் அனைவரும் ஜெர்மனியின் முன்னாள் நீதிபதிகள்.தங்கள் தீர்ப்புகளின் வாயிலாக ஹிட்லரின் கொடுமைக்கு உதவியவர்கள்.இதில் ஒரே ஒரு நீதிபதி (Burt Lancaster) உலகப்புகழ் வாய்ந்தவர்.தன் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்க,நேசிக்கப்படுபவர்.இவர் தன் செய்தது குற்றமே என உணர்ந்து, குற்ற உணர்வில் வெம்பி மருகுகிறார் .ஆனால் இவர்களுக்காக வாதிடும் வழக்கறிஞரரோ (Maximilian Schell) தன் திறமையால், இவர்கள் செய்தது சட்டப்படி குற்றமில்லை என வாதிடுகிறார்.சாட்சியங்களை உடைக்கப்பார்க்கிறார்.இந்த நிலையில் அமெரிக்க அரசே பல்வேறு காரணங்களுக்காக அந்த ஜெமானிய நீதிபதிகள் தண்டிக்கப்படுவதை விரும்பாமல் அந்த விசாரணைக்குழு தலைவரை தங்கள் எண்ணப்படி தீர்ப்பு சொல்ல வைக்க முயல்கிறது.இப்படிப்பட்ட சூழ் நிலையில் அந்த விசாரணை குழுவின் தலைவர் என்ன செய்கிறார் என்பதே கதை.

இதில் இந்த மூன்று பாத்திரங்களும் மூன்று வெவ்வேறு பரிமாணத்தில் அமைந்தவை.அந்தந்த நடிகர்களால் மிக சிறப்பாக செய்யப்பட்டவை.இதில் ஒருபாததிரத்தை ஏற்று நடிக்கவே ஊர்பட்ட திறமை தேவை.ஆனால் நம் தலைவர் இந்த மூன்றையுமே தான் ஒருவராக ஏற்று நடிக்க வல்ல திறன் படைத்தவர் என்பதே என் கருத்து.
மனித மனதின் ஒழுக்கம்,வேகம், புழுக்கம் இம்மூன்றையும் அதனதன் உச்சத்தில் வெளிப்படுத்த இந்த மஹா கலைஞனை விட்டால் ஆள் எது?

மேலும் என் நோக்கில் இந்தபடத்திற்கும் நம் "அவள் யார்?" படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.உங்கள் கருத்துப்படி பார்த்தாலும் தலைவர் போடாத வழக்கறிஞர் வேடமா?

RAGHAVENDRA
18th January 2013, 08:36 AM
மேலும் என் நோக்கில் இந்தபடத்திற்கும் நம் "அவள் யார்?" படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.

அதைத் தான் நானும் கூறியுள்ளேன். இந்த மூன்று வேடங்கள் மட்டுமல்ல மற்ற பாத்திரங்களையும் அவரிடம் தந்தால் கூட ஊதித் தள்ளி விடுவார் என்பதில் சற்றும் ஐயமில்லை. நான் சொல்ல வந்தது, Indianised situation, Indianised characterisation என்பதைப் போன்று நம் ஊரில் இந்த வழக்குகள் நடந்தால் எப்படி செய்வார் என்பதையே. இதே நீதிபதி பாத்திரத்தை அவர் நீதிபதி படத்திலும் செய்திருப்பார். அங்கே அவர் முற்றிலும் வேறு. சூழ்நிலை வேறு, வழக்குகள் வேறு. சந்தர்ப்பங்கள் வேறு. ஆனால் ஏற்று நடிக்கும் நடிகர் மட்டும் ஒருவரே.

இதே JAN படத்தில் ந.தி. நடித்திருந்தால் என்பதைத் தான் தாங்கள் கற்பனை செய்து வைத்திருக்கிறீர்கள். இது போல் எண்ணற்ற படங்கள். இஸ்த்வான் ஜாபோ பட நாயகனை வடிவமைக்கும் போது நம்மால் ந.தி. யைக் கற்பனை செய்யாமல் இருக்க முடியாது. குறிப்பாக ஹங்கேரியன் ரப்சோடி படத்தில் சில காட்சிகளில் கண நேரமாவது நம் கண்முன் ந.தி. தோன்றி இதை இவர் செய்திருக்கலாமே என்கிற எண்ணம் வராமல் இருக்காது.

Gopal.s
18th January 2013, 12:31 PM
அப்படியாவது எமக்கு ஒரு தீர்வு வந்திருக்கக்கூடாதா? .

:(
Madam,
This is just touching some of your problems. Not with the intention of passing judgements or comments or solutions. But you didn't go deep into the jail scene and the final judgement scene which warrants your attention more than shallow fillers. This is to question the innocense claimed by most of the people in collective responsibility and not dwell too much into actual issue, in line with original works I mentioned. I was honest in writing this as such as I conceived this in 1990. If the same has been written in 2000/2010,it would have taken a totally different dimension.
I am sorry if it hurted any of your feelings.

IliFiSRurdy
18th January 2013, 11:39 PM
Ref # 1497

மிக்க நன்றி அம்மணி..
அதேசமயம்..

//பொதுவாக நான் hollywood இன் B &W படங்களைப் பார்ப்பதில்லை.//

இது என்ன விசித்திர கொள்கை? கிட்டத்தட்ட 'கூடை வச்சிண்டு இருக்கிறவங்களுக்கு,
நான் பெட்ரோமாக்ஸ் லைட் கொடுப்பதில்லை' என்பது போல!

உலகின் உன்னத படங்கள் என நூறை பட்டியலிட்டால்,
அதில் சுமார் எழுபது B&W ஆகத்தான் இருக்கும்.

நீங்கள் முதலில் JAN பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
வேறு நல்ல B &W படங்களை நான் சொல்கிறேன்.

kalnayak
19th January 2013, 09:05 AM
I came across a site that ranks NT's films
http://www.ranker.com/list/sivaji-ganesan-movies-and-films-and-filmography/reference

Currently 87 films are added. Users can add more films.

Gopal.s
19th January 2013, 10:12 AM
நடிப்பு தெய்வத்தின் உடல் மொழி கவிதை.

புதிய பறவை ,பார்த்த ஞாபகம் பாடலில், அன்னையின் இழப்பின் மெல்லிய சோகம், இழப்பை ஈடு செய்யும் ,பாடகியின் பாட்டில் அடையும் பரவசம்,sophisticated upbringing தந்த style ,எல்லாம் தேக்கி, நாக்கில் நெருடும் புகையிலை துகளை ,விரலால் எடுக்கும் நேர்த்தி.

அதே புதிய பறவையில், கதையை சொல்லி முடித்து, அதீத துக்கத்தினால், அடைத்து கொண்ட மூக்கை, கைகுட்டையால் சிந்தும், improvisation .
பார் மகளே பார் படத்தில், அழையா விருந்தாளியாய், வந்திருக்கும் வீ.கே.ராமசாமியுடன் காட்டும் நாசுக்கான உதாசீனம் கலந்த அலட்சியம்.

அதே பார் மகளே பார் படத்தில், தனக்கு பிடிக்காத ஒரு வியாபார விஷயத்தை பேசும், வீ.கே.ஆரிடம், light ஆக சோம்பல் முறித்து, சோர்வையும்,அக்கறையின்மை கலந்த எதிர்ப்பை காட்டும் அற்புத உடல் மொழி.

பாச மலரில், கொல்ல வந்த revolver ஐ வைத்து,பாசத்தினால் துளிர்க்கும் கண்ணீரை துடைக்கும் கவிதை.

ஆண்டவன் கட்டளை, ஆறு மனமே ஆறு பாடலில், துறவறம் கலந்த,mystic detachment உடன் வேர்கடலை ஊதி சாப்பிடும் காட்சி.

திருவருட்செல்வரின், அப்பூதி அடிகள் மனைவியின் முன் காஞ்சி பெரியவர் போல், ஒடுங்கிய துறவற pose .

வசந்த மாளிகை குடிமகனே பாட்டில், ஒரு காமம் கலந்த mischievous பார்வை. காந்தம் போல் இருக்கும்.

அதே பாடலில், அலட்சிய செல்லத்துடன் , CID சகுந்தலாவை உதைப்பது.

வசந்த மாளிகையில், plum கடித்து,தன் வன்காதலை வாணிஸ்ரீயிடம் உணர்த்தும் காமம் தோய்ந்த கவிதை வன்மொழி.

சவாலே சமாளியில், தற்கொலை முயற்சியில் ஜெயலலிதாவை காப்பாற்றி, அவர் tandrum throw பண்ணும் பொது, இவ்வளவுதானா நீ, என்னை புரிந்து கொண்டது என்று உடலசைவின்றி,பார்வையில் உணர்த்தும் அழகு.

சுமதி என் சுந்தரியில், பலூன் காட்சியில், மரத்தை கைகளால் சுரண்டி, வாலிபர்களை உன்மத்தம் கொள்ள வைத்த அழகு.

Gopal.s
19th January 2013, 10:20 AM
:goodidea:
வருட வாரியாக, நடிகர்திலகத்தின் படங்கள் என் விருப்பம்.(ஒன்றிரண்டு என்று பின்னால் வரிசை படுத்த போகிறேன்.)
1952- Parasakthi
1953-Thirumbi Paar
1954-Manohara,Andha Naal,Kalyam Panniyum Bramhachari,Thuli Visham,koondu Kili,Thooku Thooki,Ethirparadhadhu
1955-Mudhal thedhi,Mangayar Thilagam,Koteeswaran
1956-Naan petra Selvam,Nane raja,Pennin Perumai,Raja Rani,Amara deepam,Rangon radha
1957-Makkalai Petra Maharasi,Pudhayal,Manamagal Thevai
1958-Uthama Puthiran,Annaiyin Aanai,Sabash Meena
1959-Veera Pandiya Kattabomman,Maragatham,Aval yaar,Baga Pirivinai
1960-Irumbu Thirai,Deiva Piravi,Padikkatha Medhai,Pavai Vilakku
1961-Pava Mannippu,Pasa Malar,Ellam Unakkaga,Palum Pazhamum,Kappalottiya Thamizhan
1962-Parthal Pasi theerum,Valarpirai,Padithal mattum Podhuma,Bale Pandiya,Alaya Mani
1963-Arivali,Iruvar Ullam,Kulamagal Radhai,Paar magale paar
1964-Karnan,Pachai Vilakku,Andavan kattalai,Kaikadutha Deivam,Pudhia Paravai,Navarathri
1965-shanthi,Thiruvilayadal,Neelavanam
1966-Motor Sundaram Pillai,Mahakavi Kalidas,Saraswathi Sabatham,Selvam
1967-Kanthan Karunai,Pesum Deivam,Thangai,Paladai,Thiruvarutchelvar,Iru Malargal,Ooty Varai Uravu
1968-Galatta kalyanam,En Thambi,Thillana Mohanambal,Enga Oor Raja,Uyarntha Manidhan
1969-Thanga Churangam,Kaval deivam,Anjal Petti 520,Nirai kudam,Deiva Magan,Sivantha Mann
1970-Virtnam veedu,Ethiroli,Raman Ethanai ramanadi,Engiruntho Vanthal,Padhukappu
1971-Kulama Gunama,Sumathi En sundhari,Savale Samali,Thenum Palum,Babu.
1972-Raja,Gnana Oli,Pattikada pattanama,Vasantha maligai,Needhi
1973-Bharatha Vilas,Engal thanga raja,Gowravam,Rajapart Ranga Durai,Manitharil manickam
1974-Sivagamiyin Selvan,Thanga Padakkam,Anbai Thedi
1975-Avanthan Manithan,Anbe aruyire,Pattum Bharathamum
1976-Uthaman,Rojavin Raja
1977-Deepam,Ilaya Thalaimurai,Annan Oru Koil
1978-Andhaman Kathali,Thyagam,Ennai Pol Oruvan,General chakravarthi,
1979-thirisoolam,Kavarimaan,Naan Vazha vaipen
1980-Rishi Moolam
1981-Kalthoon,Lorry Driver rajakannu,Keez Vanam Sivakkum
1982-Hitler umanath,Vaa Kanna vaa,Thyagi,Thunai,Parikshaikku Neramachu
1983-Miruthanga Chakravarthi,Vellai Roja
1984-Vazhkai,Dhavaki Kanavugal
1985-Mudhal Mariadhai,Rajarishi
1986-Sadhanai,Marumagal,Anandha Kanneer,Viduthalai,Thaikku oru thalattu
1987-Anbulla Appa
1992-Thevar Magan,Chinna Marumagal,Naangal,
1996-Oru Yatra Mozhi
1997-Once more
1998-En Aasai Rasave
1999-Padayappa,Pooparikka Varugirom

Gopal.s
19th January 2013, 11:41 AM
looks like I've watched 98% of NT movies!
Madam,
The above is not the full list of his movies. It is only my pick of his movies yearwise. I watched all the movies in this list.

Gopal.s
19th January 2013, 12:10 PM
என்னை பொறுத்த அளவில் அவரின் மிக சிறந்த பத்து படங்கள்.

1)புதிய பறவை
2)தில்லானா மோகனாம்பாள்.
3)அந்த நாள்.
4)முதல் மரியாதை.
5)இருவர் உள்ளம்.
6)கர்ணன்.
7)கப்பலோட்டிய தமிழன்.
8)உயர்ந்த மனிதன்.
9)பராசக்தி.
10)தேவர் மகன்.

அவர் நடிப்பு திறனை மட்டும் வைத்து நான் தேர்ந்தெடுக்கும் சிறந்த பத்து.

1)தெய்வ மகன்.
2)கர்ணன்.
3)நவராத்திரி.
4)திருவிளையாடல்.
5)முதல் மரியாதை
6)உயர்ந்த மனிதன்.
7)உத்தம புத்திரன்.
8)தெய்வ பிறவி.
9)திருவருட்செல்வர்.
10)கெளரவம்.

IliFiSRurdy
19th January 2013, 02:20 PM
Dear Gopal,

என்னடா இன்னும் மேட்டூர் dam திறந்து விடப்படவில்லையே என இரண்டு வாரமாக யோசித்துக்கொண்டிருந்தேன்.
இப்போ வேலை முடிஞ்சது..'வெல்ல' (pun intended) அபாய எச்சரிக்கை.."கரை ஓரம்" வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நடத்துங்கள்..

IliFiSRurdy
19th January 2013, 02:24 PM
இப்படி ஒரு short list கொடுக்கப்போய்தான் நான் திருமதி சாரதா விடமிருந்து டோஸ் வாங்கி கொண்டேன்.
அது வேறு ஒரு தளத்தில்..சம்பாஷணை வெகு சுவாரசியமாக இருக்கும்.any-three interested to know the details?

Gopal.s
20th January 2013, 09:40 AM
நடிகர் திலகம் உடல் மொழி.

பாசமலரில், தன் மனைவியுடன் முதலிரவின் போது ,தங்கை மற்றும் அவள் கணவன் கொண்ட புகைப்படத்தை திருப்பி வைக்கும் ,நாணம் கலந்த பாச பண்பு.

கௌரவத்தில், மன அமைதியிழந்து தவிக்கும் தந்தை, இரவில் சரியாக தூக்கம் இல்லாத போது , ARTIFACT யானை மரமிழுக்கும் பொம்மையிலுள்ள அறுந்து போன CHAINLINK ஒன்றை சீர் செய்ய முயலும் காட்சி.

தங்க சுரங்கத்தில், சந்தன குடத்துக்குள்ளே, கிணற்று காட்சியில், SWING ஆகி ,திரும்பி வரும் , BUCKET ஐ ,ஸ்டைல் ஆக காலால் நிறுத்தும் அழகு.

எங்க மாமாவில், நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில், குழந்தைகள் ஊதல்,horn ஊதி லூட்டி அடிக்கும் போது ,அடைத்து கொள்ளும் காதை ,விரலால் CLEAR செய்யும் 10 வினாடி GESTURE .

சுமதி என் சுந்தரி, ஒரு தரம் பாட்டில், இளமை குறும்புடன், குளத்தில் கல் வீசும் bowling action .

தெய்வ மகனில், வீட்டில் திருடன் புகுந்து விட்டான் என்றெண்ணி, இளைய மகன் hocky மட்டையை எடுத்து, anxiety , சிறிது அச்சம் கலந்த, தைரியத்துடன் ,முகம் தெரியாத திருடனை எதிர்கொள்ளும் அழகு.

உத்தம புத்திரனில், பாதி ஆட்டம் பாட்டத்தில், அம்மா அட்வைஸ் பண்ண வரும் இடைஞ்சலை, ஒரு குழந்தையின் பிடிவாத மன நிலையில், காலை உதைத்து வெளியிடும் விக்ரமன்.

அதே காட்சியில், no love ,no hate ,மனநிலையில், அம்மாவிடம் உணர்ச்சி பூர்வமான ஈடு பாடு இன்றி, மறுத்தும் பேச இயலாமல், ஊஞ்சலில் casual ஆக ஆடி கொண்டு, ஓர கண்ணால் அன்னையை பார்த்து, அவர் அறிவுரைகளை ,காதில் வாங்காத பாங்கு.

அன்னையின் ஆணையில், உணர்ச்சி வச பட்டு, முரண்டி பனியனை கிழித்து, கீறி விடும் சாவித்திரியிடம் உடனே பதிலுக்கு வன்முறை பிரயோகிக்காமல்,washbasin போய் ,clean செய்து கொள்ளும், காட்சி.

IliFiSRurdy
20th January 2013, 09:52 AM
Ref:#1516

vankv: yes.

நாட்டாமை: நீங்க Ganpat ற்கு ஏதேனும் வேண்டப்பட்டவரா?

vankv: ஆம் அவர் என் நண்பர்

நாட்டாமை: செல்லாது! செல்லாது !! வேற யாரச்சும் ???

பி.கு: அகிரா குரசாவாவும் பரிச்சயம் இல்லை ..கவுண்டமணியும் தெரியாது
இப்போ விஜயகுமாராவது?

IliFiSRurdy
20th January 2013, 10:47 AM
தலைவர் கோபால் அவர்களே,,

இப்பட்டிமன்றத்தில்,

"தலைவர் உடல்மொழியில், அலட்சியம்" எனும் தலைப்பில் நான் பேச விழைகிறேன்:

அலட்சியம்... பெயரில்தான் அலட்சியம்... உண்மையில் அதை வெகு ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.
அவ்வகையில் "இலட்சிய நடிகர்" என்பது SSR ஐக்குறிக்கும் என்றால் "அலட்சிய நடிகர்" என்பது நம்மவரையே குறிக்கும்.மிக சிரத்தையாக உழைத்து நடிப்பையே அலட்சியப்படுத்திய பல நடிக நடிகையர் நடுவில், அலட்சியமாக நடித்து நடிப்பை இமயத்தின் உச்சிக்கு கொண்டு சென்றவர் தலைவர் அவர்கள்.உடனே தலைவர் கோபால் தன்னை சொல்வதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.நான் சொன்னது அவருக்கும் தலைவனை..(மன்னிக்கவும் நம் தமிழ் கலாச்சாரப்படி பட்டி மன்றம் எனும் தகுதி பெற,ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் இப்படி ஒரு மொக்கை போடுதல் அவசியம்)

"ஹ, என்ன துப்பாக்கி காட்டினால் பயந்துவிடுவேன் என நினைத்தாயா? நீ என் மனைவி தானே! கத்துவதை கத்திவிட்டு சமையலறைக்குள் ஒடுங்கு" என சொல்வது போல தான் பாட்டிற்கு துணிமணிகளை பயணத்திற்கு பெட்டிக்குள் வைத்துக்கொண்டே,பண்டரிபாயை அலட்சியப்படுத்துவதை சொல்வதா?

"நாயே! சில காலத்திற்கு முன் என்னிடமே வேலைதேடி வந்து, என் தயவால் வாழ்ந்து கொண்டு, இப்போ எனக்கு எதிராகவே கொடி பிடிக்கிறாயா,உன் வாலை ஓட்ட நறுக்குகிறேன் பார்!" என சொல்வது போல , தன் முன்னே குதித்துக்கொண்டிருக்கும் ஜெமினியை, பர்ர்க்ககூட செய்யாமல், ஒரு பென்சிலை தன் கண் முன் நிறுத்தி, அதை பார்த்து பேசும் அலட்சியத்தை சொல்வதா?

தலைவரே சற்று முன் நீங்களே சொன்னது போல (இது பட்டிமன்ற ஐஸ்) "இவன் என்ன இங்கே? சமய சந்தர்ப்பம் தெரியாமல்!" என நினைத்து தன் முன்னாள் நண்பன் ராமசாமியை, கண்டும் காணாதது போல காட்டும் அலட்சியத்தை சொல்வதா,

"என்னால் அலட்சியப்படுத்தப்படும் அளவிற்கு கூட உனக்கு தகுதியில்லை. நீ ஒரு வெத்து சவடால் வைத்தி! கபடனும் கூட" என நாகேஷிற்கு சொல்லாமல் சொல்வது போல அவருடன் இணையும் ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் அலட்சியத்தை சொல்வதா,

"நீ நல்லவன் ,ஆனால் அப்பாவி. அதனால் நீ உன் எஜமானியிடம், (அதாவது என் மனைவியிடம்) படும் பாட்டை பார்த்து வருந்திகொண்டே, ரசிக்கிறேன்.ஏனெனில் அவளும் அப்பாவிதான்! ஆனால் என்ன, பணக்கார அப்பாவி! enjoy. ஆனால் நான் உன் எஜமானன்; பணக்கார சமர்த்தன். ஆகவே நம் இடைவெளி அப்படியே இருக்கட்டும்" என சிவகுமாரிடம் சொல்லாமல் சொல்லும் ஒரு உயர்ந்த மனிதனின் நேர்மையான அலட்சியத்தை சொல்வதா,

"என்னை அவன் ஜெயிச்சுடுவானோ! ஹ! நாளைக்கு, அவனுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை கோர்ட்டில் கறபிக்கிறேன்!" என அலட்சியத்தை உடலாலும்,ஆனால் 'அப்படி எதாவது அவன் ஜெயிச்சுட்டானா?' எனும் மனதில் உதிக்கும் ஒரு சிறிய பயத்தை கண்ணாலும்,அதை அடக்க இன்னும் அலட்சியத்தை ஏற்ற, புகைக்கும் பைப்பை ஊதி ஊதி காட்டுவது..
எனும் இந்திய திரைப்படங்களுக்கே ஒரு கெளரவம் ஏற்படுத்திய காட்சியை சொல்வதா,

"எனக்கு எப்படிடா நீ வந்து பொறந்தே? உதவாக்கரை! வயசுதான் ஆறது கழுதைபோல. ஆனால் படிப்பும் கிடையாது! வேலை வெட்டியும் கிடையாது!" என சொலவது போல "அப்பா!" என மரியாதையை கலந்த பயத்துடன் விளிக்கும் பாண்டியராஜனை "என்ன?" என ஒரு சொல்லால் குத்தி சாய்க்கும் அந்த தந்தைக்கே உரித்தான affectionate அலட்சியத்தை சொல்வதா,

அல்லது

அதே "என்ன?" எனும் சொல்லை, தான் உயிர் நண்பன் என நினைத்திருக்கும் தன் நம்பிக்கை சின்னாபின்னமாக, தன் மேல் அபாண்ட களங்கம் சுமத்தி, தன் தங்கையை திருமணம் செய்ய மறுக்கும் ஒரு சந்தேகப்பேர்வழியை, பயமுறுத்தி, திருமணத்திற்கு இணங்க செய்துவிட்டு, "எப்படியோ எடுக்கப்படவேண்டிய இந்த முடிவு, இப்படி எடுக்க நேரிட்டதே!" எனும் விரக்தி கலந்த துக்கத்தைத் தேக்கி, நண்பன் அறையை விட்டு மெதுவாக வெளியேறும் போது, "ஆனால் ஒன்று!" என அவன் கூவ, மிக அலட்சியமாகக் திரும்பிச் சொல்லும் அந்த காட்சி, நெஞ்சிருக்கும் வரை நிலைத்திருக்கும் அல்லவா?

Gopal.s
20th January 2013, 12:49 PM
என் அப்பா 45% பத்மநாப ஐயர், 20% barrister, 35% தா.ஒ.தா. ராஜசேகர்!! அப்பா கோபப்படும்போது இந்த அனைவரதும் உடல் மொழி ஒன்றாக தெரியும். அப்பா! 'hope you are comfortable up there!!, luv u!!:-D'

So as my grand pa.(mom's side). Both of them will be smiling at us on this strange remembrance and will be confortable up there .

Gopal.s
20th January 2013, 12:50 PM
Ganpat,
Great "alakshiyam" from your side.

IliFiSRurdy
20th January 2013, 02:50 PM
என் அப்பா 45% பத்மநாப ஐயர், 20% barrister, 35% தா.ஒ.தா. ராஜசேகர்!! அப்பா கோபப்படும்போது இந்த அனைவரதும் உடல் மொழி ஒன்றாக தெரியும். அப்பா! 'hope you are comfortable up there!!, luv u!!:-D'

இதுதான் அவரின் சாதனை!

பாசமலர் பார்த்துவிட்டு வீடு திரும்பும் எந்த ஆணும தன் தங்கைக்கு ஒரு முழம் பூவாவது வாங்கி செல்வான்.

திருவிளையாடல் பார்த்த எவரும் ஒரு தடவை சிவன் கோவிலுக்கு செல்வர்.

தங்கப்பதக்கத்தை மனைவி சகிதம் பார்க்கும் எவனும் "அந்த காட்சி"யில் தன்னையும் அறியாமல் அருகில் அமர்ந்திருக்கும் மனைவியின் கையை பற்றுவான்.வியந்து திரும்பும் அவன் மனைவியின் பார்வையிலிருந்து அவன் விழிகளிலோடும் நீரை, அரங்க இருட்டு மறைக்கும்.வெளியே வந்த மனைவிக்கு இன்னுமொரு அதிசயம்..தன் முசுட்டுக்கணவனா "ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீடு போலாமா?" என வினவுவது! பாவம் அவள் எப்படி அறிவாள்? அது நோபல் பரிசு பெறத்தக்க "சவுத்ரி effect " என்று!

இவ்வளவு ஏன்? நேற்றைய நிகழ்ச்சியில் (Vijay TV) வ.உ.சி. யின் கொள்ளுப்பேரன் சொல்கிறார்."நான் என் பாட்டனாரை நேரில் கண்டதில்லை. அந்த குறையை "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படம் தான் தீர்த்து வைத்தது" என்று.

இன்னொரு ரசிகர், தன் தாயை நான்கு வயதில் பறிகொடுத்துவிட்டு சிலகாலம் சென்றபின் தன் தந்தையுடன் "நான் பெற்ற செல்வம்" திரைப்படத்திற்கு சென்றதையும் அங்கு "நான் பெற்ற செல்வம்" பாடலின் போது தன் தந்தை விம்மி அழுவதைப்பார்த்த தான், காரணம் அறியாது திகைத்ததையும் நினைவு கூர்ந்தார்.

தெய்வ பக்தி,தேசபக்தி,அன்பு,பாசம்,காதல்,வீரம்,கம்பீரம்,பெ ருந்தன்மை இவற்றின் ஊற்றல்லவோ அவர் ஏற்ற வேடங்கள்.

முடிவாக தலைவர் அழுது நடிப்பதை கிண்டல் செய்து செக்கச்லோவாக்கியா திரை நிபுணர்களும்,மிருனாள் சென்னும், ஆண்கள் அழக்கூடாது என சொல்லியுள்ளதாக RP ராஜநாயகம் என்பவர் தன் பதிவில் எழுதியிருந்ததிற்கு நான் கொடுத்த பதில்:

நல்ல வேளை...
செக்கோஸ்லோவாக்கியர்களோ,மிருணாள் சென்னோ இதை பார்க்கவில்லை!

மேலும் மிருணாள் சென் கமல் அழுது பார்த்ததில்லை..

ஆண் அழுகைக்கே bench marks..

சிவாஜி தங்கபதக்கம் படத்தில் தன் மனைவியின் உடல் முன் அழுவது.

நடிகர் சாமிக்கண்ணு உதிரிப்பூக்கள் படத்தில் தன் தாயை இழந்த சிறுவனுக்கு மொட்டை போட தலையில் கத்தி வைத்து விட்டு அழுவது.

மகாநதியில் கமல் தன் மகளை சிகப்பு விளக்கு பகுதியிலிருந்து மீட்டு வந்து விட்டு வீட்டில் அவள் தூக்கத்தில் உளருவதைப்பார்த்து அழுவது..

என்னது ஆண்கள் அழக்கூடாதா?

to hell with Mirunal sen and the Czechoslovakians.

IliFiSRurdy
20th January 2013, 03:07 PM
ref: # 1524
Dear Gopal,
இருக்காதா பின்னே!
எனக்கும் அவருக்கும், ஒரே பேர், ஒரே ஜன்ம நட்சத்திரமில!!

Gopal.s
21st January 2013, 09:51 AM
பீம்சிங்- நடிகர் திலகம் கூட்டணியின் படங்களில் வரிசைப்படி எனக்குப்பிடித்தவை:

1- படித்தால் மட்டும் போதுமா

2- படிக்காத மேதை

3- பாசமலர்

4- பாவமன்னிப்பு

5- பார் மகளே பார்

6- பாலாடை

7- சாந்தி?

8- பாலும் பழமும்

9- பச்சை விளக்கு

10- பலே பாண்டியா

மற்றவை பார்க்கவில்லை
பலே பாண்டியா- பந்துலு- பீம்சிங் இல்லை.

எனது top 10- NT -பீம்சிங் கூட்டணியில்.
1)படிக்காத மேதை.
2)பாக பிரிவினை.
3)ராஜா ராணி.
4)பாச மலர்.
5)படித்தால் மட்டும் போதுமா?
6)பாலும் பழமும்.
7)பார் மகளே பார்.
8)பாவ மன்னிப்பு,
9)பாலாடை.
10)பாதுகாப்பு.

Gopal.s
21st January 2013, 10:51 AM
இதென்ன தனியான ஒரு screen play? சரி சரி, சொந்த அனுபவம் போல. கண்பட்டண்ணாவும் கோவாலண்ணாவும் ஒண்ணோ? :rotfl2:

sorry, I couldn't help myself laughing!
சகோதரி,
என்னையும் ஆபத்தில் மாட்டி, ID cancel பண்ண வழியா? நல்ல பீம்சிங் ரசிகை! நல்ல பாசமலர் தங்கை!!!

IliFiSRurdy
21st January 2013, 11:22 AM
இதென்ன தனியான ஒரு screen play? சரி சரி, சொந்த அனுபவம் போல. கண்பட்டண்ணாவும் கோவாலண்ணாவும் ஒண்ணோ? :rotfl2:

sorry, I couldn't help myself laughing!

சரி சரி, சொந்த அனுபவம் போல.

1974 ஆம் ஆண்டு சென்னை சாந்தி திரையரங்கில்,இவ்வாறு நான் செய்திருந்தால் "தர்ம அடி" கிடைத்திருக்கும்.
1981 ஆம் ஆண்டிற்கு பின் இப்படத்தை பார்க்கும் பேறு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.

கண்பட்டண்ணாவும் கோவாலண்ணாவும் ஒண்ணோ?

ஆம் .. அறிவால்,நகைச்சுவை உணர்வால்,ரசனையால்,நேர்மையான மனதினால்,வணங்கும் தெய்வத்தால்,பெற்ற பட்டத்தால் (Degree),பணி புரிந்த நிர்வாகத்தால்,'சில' பலவீனங்களால்,,

இல்லை..துடிப்பால்,சக்தியால்,தோற்றதால்,தைரியத்தால், ஜாதகத்தால்....

sorry, I couldn't help myself laughing!

என்னே உங்கள் ஹாஸ்ய உணர்வு !!

Gopal.s
21st January 2013, 12:12 PM
..........
அம்மணி,
NT யின் double role ,triple role ,nine roles ரசிக்க படும் திரிகளில், அவர் ரசிகர்களால், சக ரசிகர்களின் double role , triple role ரசிக்க படுவதில்லை, தண்டனை உண்டு என்று உணர்ந்த பின்னும் , துணிந்து double role எடுத்து கொள்வேனா சகோதரி.

Gopal.s
21st January 2013, 12:35 PM
Oh come on, it's a joke. I know you two are really TWO, both of you are online now. It's me and my quirky sense of humor!!!:-D
அப்பாடா! ஹாஷ்யம்தானா? பயந்து நடுங்கி காய்ச்சலே வந்து விட்டது சகோதரி.

Gopal.s
21st January 2013, 12:36 PM
Let me suggest something; why don't you two go to one of those special NT movie releases and authenticate your id's?
one of the moderators saw us together in person.

Gopal.s
21st January 2013, 12:51 PM
Oh good, then it's my turn. will have to do that when I visit Chennai next time!
Sure sister. Its our pleasure.

Gopal.s
21st January 2013, 01:38 PM
உடல் மொழி காவியம்-

உத்தம புத்திரனில் ,மாட்டி கொண்ட பார்த்திபனை, குரூரம்,வன்மம், குரோத சிந்தனை இவற்றோடு சுற்றி வருவது. அதே காட்சியில் பத்மினியிடம், காமம் கலந்த வன்மத்துடன் நோக்குவது.

தெய்வ மகனில், தன்னை தானே வெறுக்கும், சுய வெறுப்பின் உச்சமாக, கண்ணாடியில் தன உருவத்தின் மீது தானே காறி உமிழ்வது.

ராஜபார்ட் ரங்கதுரையில், பத்து நிமிட , தங்கையின் கணவனின் இரண்டாவது திருமண காட்சி. வேதனை, வெதும்பல், தன்னிரக்கம், வெறுப்பு, இறைஞ்சல், குற்றம் சாட்டும் குறிப்பு எல்லாம் கலந்த மௌன காட்சி.

gkrishna
21st January 2013, 05:27 PM
இதுதான் அவரின் சாதனை!

பாசமலர் பார்த்துவிட்டு வீடு திரும்பும் எந்த ஆணும தன் தங்கைக்கு ஒரு முழம் பூவாவது வாங்கி செல்வான்.

திருவிளையாடல் பார்த்த எவரும் ஒரு தடவை சிவன் கோவிலுக்கு செல்வர்.

தங்கப்பதக்கத்தை மனைவி சகிதம் பார்க்கும் எவனும் "அந்த காட்சி"யில் தன்னையும் அறியாமல் அருகில் அமர்ந்திருக்கும் மனைவியின் கையை பற்றுவான்.வியந்து திரும்பும் அவன் மனைவியின் பார்வையிலிருந்து அவன் விழிகளிலோடும் நீரை, அரங்க இருட்டு மறைக்கும்.வெளியே வந்த மனைவிக்கு இன்னுமொரு அதிசயம்..தன் முசுட்டுக்கணவனா "ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீடு போலாமா?" என வினவுவது! பாவம் அவள் எப்படி அறிவாள்? அது நோபல் பரிசு பெறத்தக்க "சவுத்ரி effect " என்று!

இவ்வளவு ஏன்? நேற்றைய நிகழ்ச்சியில் (vijay tv) வ.உ.சி. யின் கொள்ளுப்பேரன் சொல்கிறார்."நான் என் பாட்டனாரை நேரில் கண்டதில்லை. அந்த குறையை "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படம் தான் தீர்த்து வைத்தது" என்று.

இன்னொரு ரசிகர், தன் தாயை நான்கு வயதில் பறிகொடுத்துவிட்டு சிலகாலம் சென்றபின் தன் தந்தையுடன் "நான் பெற்ற செல்வம்" திரைப்படத்திற்கு சென்றதையும் அங்கு "நான் பெற்ற செல்வம்" பாடலின் போது தன் தந்தை விம்மி அழுவதைப்பார்த்த தான், காரணம் அறியாது திகைத்ததையும் நினைவு கூர்ந்தார்.

தெய்வ பக்தி,தேசபக்தி,அன்பு,பாசம்,காதல்,வீரம்,கம்பீரம்,பெ ருந்தன்மை இவற்றின் ஊற்றல்லவோ அவர் ஏற்ற வேடங்கள்.

முடிவாக தலைவர் அழுது நடிப்பதை கிண்டல் செய்து செக்கச்லோவாக்கியா திரை நிபுணர்களும்,மிருனாள் சென்னும், ஆண்கள் அழக்கூடாது என சொல்லியுள்ளதாக rp ராஜநாயகம் என்பவர் தன் பதிவில் எழுதியிருந்ததிற்கு நான் கொடுத்த பதில்:

நல்ல வேளை...
செக்கோஸ்லோவாக்கியர்களோ,மிருணாள் சென்னோ இதை பார்க்கவில்லை!

மேலும் மிருணாள் சென் கமல் அழுது பார்த்ததில்லை..

ஆண் அழுகைக்கே bench marks..

சிவாஜி தங்கபதக்கம் படத்தில் தன் மனைவியின் உடல் முன் அழுவது.

நடிகர் சாமிக்கண்ணு உதிரிப்பூக்கள் படத்தில் தன் தாயை இழந்த சிறுவனுக்கு மொட்டை போட தலையில் கத்தி வைத்து விட்டு அழுவது.

மகாநதியில் கமல் தன் மகளை சிகப்பு விளக்கு பகுதியிலிருந்து மீட்டு வந்து விட்டு வீட்டில் அவள் தூக்கத்தில் உளருவதைப்பார்த்து அழுவது..

என்னது ஆண்கள் அழக்கூடாதா?

To hell with mirunal sen and the czechoslovakians.

அழுகை

நேற்று 20/01/93 அன்று உயர்ந்த மனிதன் முரளி சார்,பார்த்தசாரதி சார்,ராகவேந்தர் சார் ,பம்மலர் சார் ,மகேஷ் சார்,ராதா கிருஷ்ணன் மற்றும் பல முகம் தெரிந்த பெயர் தெரியாத நண்பர்கள் உடன் காணும் பாக்கியம் கிடைத்தது கிட்டத்தட்ட 2 1/2 மணி நேரம் சென்றதே தெரியவில்லை . பல காட்சிகளில் கண்களில் நீர் திரையிட்டது முக்கியமாக திரு ஏவிஎம் சரவணன் சார் அவர்கள் பேசும் போது திரு s .a அசோகன் இறக்கும் காட்சியில் அசோகன் அவர்களுக்கு நடிகர் திலகம் நடிப்பு சொல்லி கொடுத்து ஆனால் அதை திரு அசோகனால் 10 % மாத்திரமே வெளி படுத்த முடிந்தது மேலும் திரு அசோகன் அவர்கள் அதை பற்றி கமெண்ட் வேறு அடித்தார் என்று கூறினார். அந்த காட்சியின் போது நடிகர் திலகம் வெளிபடித்ய முக பாவம் நடிக்க விட்டு அமைதி காத்த பண்பு பார்த்த பின்பு காண்பவர்கள் கண்ணீர் சிந்த வில்லை என்றால் அவர்கள் மனிதர்களா.

parthasarathy
21st January 2013, 05:52 PM
அன்பர்களே,

"உடல் மொழி" - இந்த விஷயத்தை வைத்து நிறைய எழுதி வருகிறீர்கள். மிக நன்றாக உள்ளது.

நடிகர் திலகத்தைப் பொறுத்த வரையில், அவரது முதல் படத்திலிருந்தே, அவரது உடல் மொழி நூறு சதவீதம் துவங்கி விட்டது எனலாம். கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பவருக்கும் கேட்க வேண்டும் (பார்க்க முடியாது) என்னும் கட்டாயத்தால், நாடகம் என்கிற ஊடகத்திற்கு பெரிய உடல் மொழி தேவைப்படாது; அங்கு வசனம் பேசும் விதம், குரல் ஏற்ற இறக்கம் தான் பெரும் பங்கு வகிக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த ஊடகத்தில் பத்து வருடங்களுக்கு மேல், ஆட்சி - ஆம், அவரது நடிப்பையும், குரல் ஜாலத்தையும் காண, அவர் சென்ற இடங்களிலெல்லாம் கூடிய கூட்டம் அசாதாரணமானது. இப்படிப் பட்ட ஊடகத்திலும், அவர் உடல் மொழியைக் காட்டத் தவறியதே இல்லை. மனோகரா நாடகத்தில், அவர் மனோகரா பாத்திரமல்லாது, வசந்த சேனை, பத்மாவதி பாத்திரங்களிலும் நடித்தார்; "ஜஹாங்கீர்" நாடகத்தில், நூர்ஜஹான் வேடமும் போட்டவர். ஒரு ஆண், பெண் வேடம் வெற்றிகரமாகப் போட வேண்டும் என்றால், உடல் மொழி எந்த அளவிற்குத் தேவைப் பட்டிருக்கும் என்று விளக்கத் தேவையில்லை.

ஒரு படத்தில், துவக்கத்திலிருந்து, கடைசி வரையில், முதல் படத்திலிருந்து கடைசி படம் வரை உடல் மொழியில் ஜமாய்த்தவரின் பிரதாபங்களை எழுதுவதென்றால், அதற்கு ஒரு ஜென்மமும், ஆயிரம் ஆட்களுமே போதாதே!

என் நினைவுக்கு உடனே வருவது -

பராசக்தி:- முதலில், சென்னைக்கு வந்து ஹோட்டல் அறையில், அறிமுகமில்லாத பெண்ணைப் பார்த்தவுடன், வேர்த்து, சட்டென்று டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்வது; நிறைய சொல்லலாம்;

தூக்குத் தூக்கி:- "கோமாளி" வேட எபிசோட் முழுவதும்; கடைசியில் நீதி மன்றத்தில், தனக்காக வாதாடத் துவங்கும் போது - "மாசுண்டாள் உமது மகள் ... தெய்வம் பொறுக்குமா இத்திருக்கூத்தை?" என்று முடிக்கும் கோபம், அவமானம், ஆத்திரம், போன்ற ரசங்களைக் கொணர்ந்த அந்த கர்ஜனை;

ராஜா ராணி- "சேரன் செங்குட்டுவன்" - இந்த ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட காட்சியைப் பலரும் பேசி சிலாகித்தாகி விட்டது. இந்த ஷாட்டை எடுக்கும் முன், நடிகர் திலகம் அந்த செட் முழுவதையும் ஒரு முறை நோட்டம் விட்டு, பின்னர் சுற்றி ஏகப்பட்ட கோடுகளைப் போடச் சொன்னாராம். யாருக்கும் புரியவில்லை; பின்னர், ராஜ சுலோச்சனாவை, நான் பேசும் வசனங்களில் வரும் அந்தந்த இரசங்களுக்கு / உணர்ச்சிகளுக்கு ஏற்ப சரியான ரியேக்ஷனைத் தரச் சொல்லி விட்டு, ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசாமல் இங்குமங்கும் இலேசாக நடந்து கொண்டு பேசினாராம். அதை விட, ஒவ்வொரு வர்ணனையாக விவரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது கைகளின் அபிநயத்தை கவனியுங்கள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வசனத்தைப் பேசுவது கடினம் என்றால், அதை அந்தந்த உணர்சிகளுக்கேற்ற பாவங்களுடன் நடிப்பது தான் மிக மிகக் கடினம். இதே படத்தில், சாக்ரடீஸ் பாத்திரத்தில் வரும் போது, வரும் அந்த வயதான பாத்திரத்தின் உடல் மொழி; கூடவே, ஒரு தத்துவ ஞானிக்குரிய உடல் மொழி.

வணங்காமுடி:- தர்பாரில், தனக்கு பதிலாக, தன்னுடைய நண்பன் தான் பாடகன் என்று தவறாகப் புரிந்து கொண்டு, தங்கவேலுவைப் பாடப் பணித்து, அவர் பாடுவதற்கு யோசிக்க, அவர் அடி வாங்கிய அந்தக் கணமே, "ஆ...ஆ...ஆ... பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டுக்கு நல்ல பலன் தருமா?" என்று துவங்கும் பாடலில், அந்த "ஆ...." விற்கு, அவர் காட்டும், கோபமும், ஆத்திரமும், அப்பப்பா! அதாவது, இந்த பாவங்களைக் காட்டிக் கொண்டே பாடத் துவங்க வேண்டும்! கிட்டத்தட்ட, முப்பது வருடங்களுக்கு முன்னர் இந்தப் படத்தை வட சென்னை "பாரத்" திரை அரங்கில், காலைக் காட்சியாகப் பார்க்கும் போது, இந்த நடிப்பிற்கு, எழுந்த கைதட்டல், விண்ணையே அதிர வைத்தது, இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

இப்படி எத்தனையோ சொல்லலாம். ஒரு ஜென்மம் போதாதே!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
21st January 2013, 05:54 PM
அழுகை

நேற்று 20/01/93 அன்று உயர்ந்த மனிதன் முரளி சார்,பார்த்தசாரதி சார்,ராகவேந்தர் சார் ,பம்மலர் சார் ,மகேஷ் சார்,ராதா கிருஷ்ணன் மற்றும் பல முகம் தெரிந்த பெயர் தெரியாத நண்பர்கள் உடன் காணும் பாக்கியம் கிடைத்தது கிட்டத்தட்ட 2 1/2 மணி நேரம் சென்றதே தெரியவில்லை . பல காட்சிகளில் கண்களில் நீர் திரையிட்டது முக்கியமாக திரு ஏவிஎம் சரவணன் சார் அவர்கள் பேசும் போது திரு s .a அசோகன் இறக்கும் காட்சியில் அசோகன் அவர்களுக்கு நடிகர் திலகம் நடிப்பு சொல்லி கொடுத்து ஆனால் அதை திரு அசோகனால் 10 % மாத்திரமே வெளி படுத்த முடிந்தது மேலும் திரு அசோகன் அவர்கள் அதை பற்றி கமெண்ட் வேறு அடித்தார் என்று கூறினார். அந்த காட்சியின் போது நடிகர் திலகம் வெளிபடித்ய முக பாவம் நடிக்க விட்டு அமைதி காத்த பண்பு பார்த்த பின்பு காண்பவர்கள் கண்ணீர் சிந்த வில்லை என்றால் அவர்கள் மனிதர்களா.

Fantastic Krishnaaji!

Regards,

R. Parthasarathy

parthasarathy
21st January 2013, 06:00 PM
உடல் மொழிக் கவிதை:-

அவரது கண்கள் "ஒளி வீசும் கண்கள்" என்று கூறுவர். எத்தனையோ சொல்லலாம். குறிப்பாக, "ஆட்டுவித்தால் யாரொருவர் (அவன்தான் மனிதன்)" பாடலில், பாடல் முழுவதிலும், கண்களில் மட்டுமே சோகத்தைத் தாங்கி, பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கியவர்; "தெய்வ மகன்" விஜய் பாத்திரத்தில், கண்களில் குழந்தைத் தனத்தைக் காட்டியிருப்பார். அதே படத்தில், கோவிலில், தன் தாயை நோக்கி, ஏக்கத்தைக் கண்களில் காட்டிய விதம்!

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

adiram
21st January 2013, 06:16 PM
UDAL MOZHI
------------

In Julious Ceaser drama in Sorkam....

From the very begining with the majestic walk, then after lisening the advice from one of his subordinates, just raise his hand then move to another man, the sharpness in his eyes..... definitely no one can do even 10% of this. Action and reaction at the same time, no BGM except his shoe sounds. what a wonderful scene.

JamesFague
21st January 2013, 06:48 PM
Mr Parthasarathy Sir,

Your analysis on various expression of our action god
is simply superb. Pls continue in your own style.

sivaa
21st January 2013, 08:48 PM
2012 நவம்பருக்குமுன்னர் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய திரிகள் நாளுக்கு நாள்
விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் பக்கங்கள் அதிகரித்துக்கொண்டு போனது பார்பதற்கும் படிப்பதற்கும்
மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் கடந்த 3 மாதகாலமாக நடிகர்திலகம் சிவாஜி கணேசன் திரிகள்
தொய்வடைந்த நிலை காணப்படுகிறது

கள உறவு பம்மலர் அவர்கள் லைபிரரி ஒன்றில் பழைய பத்திரிகைகளை பார்வையிட்டு முன்னைய சிவாஜி படங்களின்
விபரங்களை சேகரித்திருப்பதாக தகவல் அறிந்தேன் இனி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரிகள் களை கட்ட
தொடங்கும் என நினைக்கின்றேன்


நான் என்னிடம் இருந்த சில ஆவணங்களை பதிவிட்டேன். மேலும் ஒரு சில ஆவணங்கள் உண்டு அவற்றை பதிவிடலாம் என்றால்
எனது பதிவிடும் பாவனை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏன் என்று தெரியவில்லை. நிர்வாகத்திற்கு தனிமடல் அனுப்பியிருந்தேன்
ஆனால் எதுவும் நடக்கவில்லை ஏனைய hub உறவுகள் உதவுவார்கள் என நினைத்தேன் ஆனால் ஒருவருமே இதுபற்றி
எதுவும் செய்யவில்லை.

RAGHAVENDRA
21st January 2013, 10:05 PM
உடலை அசைக்காமல் ஒரு உறுப்பும் அசையாமல் உடல் மொழியை மொழிந்தவரும் நடிகர் திலகம் மட்டும் தான். இரு காட்சிகள் ... திருவிளையாடல் பாட்டும் நானே பாடல் காட்சியில் நானசைந்தால் அசையும் என்று கூறி விட்டு ஒரு விநாடி கண் மட்டும் அடித்து விட்டு அதற்குப் பின் உடலசைவைத் தொடங்குவார் என்றால் அன்னையின் ஆணை படத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் உடலசைவின்றியே உடல் மொழியைப் பறை சாற்றும் உன்னத நடிகரென்பதை அன்னையைப் போல் ஒரு தெய்வமுண்டோ பாடலில் நிரூபிப்பார். நான் ஏற்கெனவே முன்பொரு முறை கூறியது போல் அன்னையின் அருமையை அவள் இல்லாத போது மனிதன் அதிகம் உணர்கிறான் என்பதை அந்தப் பாடலில் தன் முகத்தின் மூலம் கூறி விடுவார். உடலசைவின்றி அமர்ந்து கொண்டு அன்னையின் உடலை வெறித்துப் பார்த்தவாறே துக்கம் தொண்டையை அடைக்க அன்னையின் பெருமையை உணர்த்தும் அந்தக் காட்சியைப் போன்று இது வரை வேறு தமிழ்த்திரைப் படங்களில் பார்க்க முடியவில்லை.

Murali Srinivas
22nd January 2013, 12:24 AM
கணேஷ்,

உங்கள் வசீகரமான நடையில் நடிகர் திலகத்தின் அந்த அலட்சிய உடல் மொழி அற்புதமாக காட்சி பூர்வமாக வெளிப்பட்டிருக்கிறது. கோபாலின் layered நடையில் சுட்டிக் கட்டப்பட்டுள்ள காட்சிகளும் சரி, சாரதி அவர்களின் ஆற்றொழுக்கான நடையில் நம் கண் முன்னே விரியும் காட்சிகளும் சரி Body Language பற்றி ஆராய்ச்சியை மேற்கொள்பவருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

கிருஷ்ணாஜி சூப்பர்! வெகு நாட்களாக அஞ்ஞாத வாசம் புரிந்த உங்களை மில் ஓனர் ராஜசேகர் மீண்டும் கூட்டிக் கொண்டு வந்து விட்டார். தொடருங்கள்!

சிவா,

சற்று பொறுங்கள். அந்த இடர்பாட்டை நீக்குவதற்கு முயற்சி எடுப்போம்.

அன்புடன்

கணேஷ் சார், ஹாலிவுட்டின் ever green classics என்று சொல்லக் கூடியவைகளை இங்கே குறிப்பிடுவதாகட்டும், வித்தியாசமான நடையில் வரும் சில சிலேடை வார்த்தை விளையாட்டுகளாகட்டும் அனைத்துமே சுவை!

IliFiSRurdy
22nd January 2013, 08:28 AM
[QUOTE=Ganpat;1002388][

இல்லை..துடிப்பால்,சக்தியால்,தோற்றதால்,-எதில்?

கோபால்,வனஜா sorry for the typo...
அது தோற்றதால் இல்லை..தோற்றத்தால்.
தமிழ் மொழியில் 'ச்' தான் கொஞ்சம் ஜாக்கிரதையாக
கையாளப்படவேண்டிய ஒற்று எனத் தெரியும்.. :)
இப்போ, 'த்' தும் அப்படித்தான் எனத்தோன்றுகிறது.

IliFiSRurdy
22nd January 2013, 08:40 AM
#1556

திரு.முரளி,

உங்கள் பரந்த மனதிற்கு மிக்க நன்றி.

அவரே முதற்கடவுள்.அவரை நினைத்தாலே வார்த்தைகள் தானே வந்து விழாதா?

ரொம்ப சந்தோஷமாக இருக்கு..

கணேசரை பல பக்தர்கள் தங்கள் ஆசைப்படி அலங்கரிக்க ஆரம்பித்து விட்டார்கள்..

பிள்ளையார் சதுர்த்தி அன்று காலை கடை வீதியில் உள்ளதைப்போல உணர்கிறேன்.

ரொம்ப சந்தோஷமாக இருக்கு..

நேற்று டிவி யில் வ.உ.சி யைப்பார்த்தேன்..

மற்ற 300 படங்கள் எதற்கு என தோன்றியது..

IliFiSRurdy
22nd January 2013, 08:49 AM
#1558
அட!

அப்போ கண்பட் தான் கணேசா!!


ஆமா! பெரிய அகாதா கிறிஸ்டி மிஸ்டரி!!
என் புனைபெயரே அந்த கால "ராணி" புதிர் போல..
(இரண்டெழுத்துள்ள பெயர்..முதல் எழுத்து 'ர',இரண்டாவது 'வி' அது என்ன?)..
இதில் நான் clues வேறு கொடுத்துள்ளேன்..
(பெயர் மட்டுமல்ல ஜன்ம நட்சத்திரம் கூட எனக்கும் அவருக்கும் ஒன்று.)
இப்போ முரளி வந்து மொத்தமா ஓடசுட்டார்..அம்புடுத்தேன்! :(

abkhlabhi
22nd January 2013, 11:32 AM
Venkat Prabhu show in vijay tv on 19/1/2013

http://www.tamiltvshows.net/2013/01/kollywood-king-19-01-2013-vijay-tv-19.html

Gopal.s
22nd January 2013, 12:09 PM
தனி திரி தொடங்கியிருக்கும், தலைவர் ராகவேந்திர சாருக்கு, இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அடுத்த மூன்று மாதங்கள் கொஞ்சம் குறையத்தான், என்னால் வர முடியும். ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பேன். புதிய பறவைகள் வனஜா மற்றும் கணேஷின் வரவு, திரிக்கு புத்துணர்ச்சி ஊட்டியுள்ளது . அவர்களுக்கு என் நன்றிகள்.

பிறகு சந்திப்போம். நன்றிகள்.

joe
22nd January 2013, 08:43 PM
http://worldcinemafan.blogspot.sg/2013/01/2013.html

Murali Srinivas
23rd January 2013, 12:04 AM
சிவா,

நீங்கள் குறிப்பிட்ட இடர்பாட்டைப் பற்றி மாடரேட்டர்களிடம் தெரிவித்தேன், அப்படி எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என உறுதியாக பதிலளிக்கின்றனர். நீங்கள் refresh பட்டனை உபயோகித்து பார்க்கும்படி சொல்கிறார்கள். ராகவேந்தர் சார் தொடங்கியிருக்கும் புதிய திரியில் கூட அவர் பல இமேஜ்களை பதிந்திருப்பதை கவனிக்கவும். ஆகவே முயற்சி செய்யுங்கள்.

அன்புடன்

P_R
23rd January 2013, 09:04 AM
Venkat Prabhu show in vijay tv on 19/1/2013

http://www.tamiltvshows.net/2013/01/kollywood-king-19-01-2013-vijay-tv-19.html

Thank You. Was searching for this as I missed watching. My mother said this was interesting.
Did anyone from here participate?

parthasarathy
23rd January 2013, 10:10 AM
Mr Parthasarathy Sir,

Your analysis on various expression of our action god
is simply superb. Pls continue in your own style.

Dear Mr. Vasudevan,

Thanks for your kind words of appreciation.

Regards,

R. Parthasarathy

parthasarathy
23rd January 2013, 10:11 AM
கணேஷ்,

உங்கள் வசீகரமான நடையில் நடிகர் திலகத்தின் அந்த அலட்சிய உடல் மொழி அற்புதமாக காட்சி பூர்வமாக வெளிப்பட்டிருக்கிறது. கோபாலின் layered நடையில் சுட்டிக் கட்டப்பட்டுள்ள காட்சிகளும் சரி, சாரதி அவர்களின் ஆற்றொழுக்கான நடையில் நம் கண் முன்னே விரியும் காட்சிகளும் சரி Body Language பற்றி ஆராய்ச்சியை மேற்கொள்பவருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

கிருஷ்ணாஜி சூப்பர்! வெகு நாட்களாக அஞ்ஞாத வாசம் புரிந்த உங்களை மில் ஓனர் ராஜசேகர் மீண்டும் கூட்டிக் கொண்டு வந்து விட்டார். தொடருங்கள்!

சிவா,

சற்று பொறுங்கள். அந்த இடர்பாட்டை நீக்குவதற்கு முயற்சி எடுப்போம்.

அன்புடன்

கணேஷ் சார், ஹாலிவுட்டின் ever green classics என்று சொல்லக் கூடியவைகளை இங்கே குறிப்பிடுவதாகட்டும், வித்தியாசமான நடையில் வரும் சில சிலேடை வார்த்தை விளையாட்டுகளாகட்டும் அனைத்துமே சுவை!

Dear Murali Sir,

Thanks for your kind words.

Regards,

R. Parthasarathy

IliFiSRurdy
24th January 2013, 12:01 PM
2180

I drew this picture after finished school, while waiting for Uni. My art book somehow survived during extreme circumstances!

This shows a very good artist in you and hope you are continuing it..If not pl.start IMMEDIATELY.

JamesFague
24th January 2013, 12:46 PM
Madam,

Expect many more postings from you like before in other
NT Thread also.

parthasarathy
24th January 2013, 12:59 PM
This shows a very good artist in you and hope you are continuing it..If not pl.start IMMEDIATELY.

Madam,

Fantastic art! Please delight all with your other pictures!

Initially, you wrote two articles. Your flow and the language were really spontaneous and excellent. Please post continuously.

Regards,

R. Parthasarathy

parthasarathy
24th January 2013, 01:01 PM
Dear Mr. Ganesh,

Please post us more of your articles. While I am tied up with annual planning activities, which will ease up some time during the coming week after which I will be able to post some, may I request you to post your articles regularly and delight all of us.

Regards,

R. Parthasarathy

adiram
24th January 2013, 01:53 PM
Vanaja,

Nice picture you draw. As many of the friends told here, please continu and bring out the hidden artist in you.

I also know little about drawings and got some prizes in school days.

Once when I started to draw Shivaji sir's picture, keeping his photo as model by side (same like Vivek keeps his father-in-law photo as model for 'pichaikkaran' title in Parthiban Kanavu). After finished drawing it was noway connected to Shivaji's face and reminded some others. I asked some of the friends to find out who's picture is that. Many of them told it was like M.R.R.Vasu.

So, I wrote the name of M.R.R.Vasu in that picture and showed to everyone, and told them I draw Vasu's picture and got the appreciation as it was very natural. (If I started to draw Vasu's picture, it might have ended as Nambiar's. That much my drawing skill).

RAGHAVENDRA
24th January 2013, 01:58 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/rare%20snaps/vanajadrawingNT.jpg

அன்புச் சகோதரி வனஜா,
நடிகர் திலகத்தின் உருவத்தினை மிக அழகாக ஓவியமாக்கி எங்களுக்கு தந்ததற்கு உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும். இன்னும் இது போல் பல ஓவியங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

RAGHAVENDRA
24th January 2013, 02:00 PM
Dear Adhiram,
Your narration about your drawing is interesting. Pls share your drawings of NT if you have any

KCSHEKAR
25th January 2013, 09:33 PM
http://www.facebook.com/photo.php?fbid=254996517965161&set=a.101214793343335.859.100003644430621&type=1&theater

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/INTUCFunctionNellai_zps66183fd6.jpg

vasudevan31355
26th January 2013, 06:40 AM
http://greetings.webdunia.com/cards/tm/anti_drug_day/bi_republic_09_jan_16_162506.jpg

குழந்தைகள் கண்ட குடியரசு.(1960)

தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்

நடிகர்கள்: சிம்மக் குரலோன், 'ஜாவர்' சீத்தாராமன், பி.ஆர்.பந்துலு, 'குலதெய்வம்' ராஜ கோபால், கே.ஆர். சாரங்கபாணி, மாஸ்டர் கோபி

நடிகைகள்: வழக்கம் போல (பத்மினி பிக்சர்ஸ்) எம்.வி.ராஜம்மா, லட்சுமி ராஜம், பேபி லட்சுமி.

கதை: தாதாமிராசி

வசனம்: விந்தன்

பாடல்கள்: கு.மா. பாலசுப்ரமணியம்

இசை: டி .ஜி.லிங்கப்பா.

ஒளிப்பதிவு டைரக்டர் :W.R.சுப்பாராவ்.

ஒளிப்பதிவு: M .கர்ணன்.

ஒப்பனை : ஹரிபாபு. (நடிகர் திலகத்தை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்டிய இந்த 'ஹரி' ஒரு 'ஒப்பனை சிங்கம்'.)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-18_zps7e39311e.jpg

இந்த குடியரசு தினத்தில் பத்மினி பிக்சர்ஸ் 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில் தலைவரின் நடிப்பைப் பற்றி எழுதுவது பொருத்தமாய் இருக்கும் எனத் தோன்றியது. நம் ரசிகர்களே அதிகம் பார்த்திருக்க முடியாத மிக அபூர்வப் படமென்றும் சொல்லலாம். நடிகர் திலகத்திற்கு கௌரவ வேடம்தான். ஆனால் படத்திற்கே அதுதானே கௌரவம்! நடிகர் திலகத்திற்கு கௌரவத் தோற்றம்தானே என்று சொல்லி அலட்சியப்படுத்திவிட முடியாத முக்கியமான ப(வே)டம்.

B.R.பந்துலு அவர்களின் தயாரிப்பு + இயக்கத்தில் தமிழ், (குழந்தைகள் கண்ட குடியரசு) கன்னடம், (மக்கள ராஜ்யா 1960) தெலுங்கு, (பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம் 1960) என மும்மொழிகளில் வெளியானது. குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தின் கதையை ஓரிரு வரிகளில் முடித்து விடலாம்.

மாயாபுரி நாட்டின் மன்னன் (B.R.பந்துலு) நல்லவன். முடியாட்சியை முடித்து வைத்து மக்களாட்சியை மலரச் செய்வதே அவன் எண்ணம். கெட்ட எண்ணம் கொண்ட தளபதி (ஜாவர்) மன்னனை தீர்த்துக் கட்ட துணிகிறான். மன்னன் மக்களுடன் குடியாட்சியின் மகத்துவத்தைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கையில் மன்னர் குடும்பத்தை வெடி வைத்து கொல்ல தளபதி முயற்சி செய்கிறான். அதிர்ஷ்டவசமாக மன்னன் மகாராணியுடன் (எம்.வி ராஜம்மா) தப்பித்து, விதிவசத்தால் ஒரு பூதத்தின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி, பத்து வருடங்களுக்கு மாமரமாக ஆகி விடும்படி சபிக்கப்பட்டு விடுகிறான். தளபதியோ ஆட்சியைக் கைப்பற்றி, மன்னனாக மகுடம் தரித்து கொடுங்கோலாட்சி புரிகிறான். கர்ப்பம் தரித்திருந்த மகாராணி நல்லவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுக்கிறாள். இளவரசன் வில்லேந்தி (மாஸ்டர் கோபி) என்ற அந்தக் குழந்தை வளர்ந்து வீரச் சிறுவனாகிறான். மாமரமாகிப் போன மன்னரான தன் தந்தையின் சாபத்தை போக்கவும் , தாய்க்கு சாபத்தின் காரணமாக நேர்ந்த இழந்து போன ஞாபக சக்தியை திரும்பக் கொண்டு வருவதற்கும் தேவையான சர்வகலாமணியை வில்லேந்தி ஒரு விஞ்ஞானி (தலைவர்தான்) உதவியுடன் சந்திர மண்டலத்திலிருந்து எடுத்து வந்து, தாய் தந்தையரின் சாபங்களைப் போக்கி, அந்நாட்டின் குழந்தைகளுடன் (தளபதியின் பெண் சிறுமியான இளவரசியையும் சேர்த்து) கைகோர்த்து, கொடுங்கோலாட்சி புரியும் தளபதியுடன் போராடி, வெற்றி பெற்று, அவனைத் திருத்தி, குடியரசையும் மலரச் செய்கிறான்.

சிறுவனான வில்லேந்தி சாபங்களைப் போக்கும் சர்வகலாமணி சந்திர மண்டலத்தில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு சந்திர மண்டலத்திற்கு போவது எப்படி என்று விழித்து நிற்க, ஆபத்பாந்தவனாய் ஆருயிர் நடிகர் திலகம் சந்திர மண்டல ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியாக இடைவேளைக்குப் பின் அட்டகாச அறிமுகம். சந்திரனுக்கு மனிதனை தான் கண்டுபிடித்து வைத்துள்ள விண்கலத்தில் அனுப்பி ஆராய்ச்சி செய்வதே அவர் நோக்கம். மனித உயிர்கள் எவரும் அவர் முயற்சிக்கு முன் வராததால் வெறுப்புற்று சந்திரனுக்கு ஒரு நாயை சோதனை முயற்சியாக வைத்து தன்னுடைய விமானத்தில் விஞ்ஞானி அனுப்ப எத்தனிக்க, அங்கு தன் தாய், தந்தையரின் சாபங்களைப் போக்கக் கூடிய சர்வகலாமணி இருப்பதாகவும், அதைக் கொண்டுவர சந்திர மண்டலத்திற்கு தன்னை அனுப்பும்படியும் அவரிடம் வேண்டுகோள் விடுக்கிறான் வில்லேந்தி. அவனுடைய முயற்சியில் மனம் மகிழ்ச்சி கொண்ட விஞ்ஞானி தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சி நோக்கமும் நிறைவேறப் போகிறதே என்ற மகிழ்ச்சியில் வில்லேந்தியையும், அவன் தோழனையும் ('குலதெய்வம்' ராஜகோபால்) உடல் ரீதியாக பரிசோதித்து இருவரையும் பொது மக்கள் முன்னிலையில் விமானத்தில் சந்திரனுக்கு அனுப்பி வைக்கிறார். அதற்கான இயந்திரங்களை அவர் பூமியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார். எதிர்பாராத விதமாக அதில் ஒரு இயந்திரம் உடைந்து விடுகிறது. அதை எப்படியும் சரி செய்து விடுவதாகக் கூறி அதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகிறார் விஞ்ஞானி. அதற்குள் பொறுமை, மற்றும் அறிவிழந்த மானிடக் கூட்டம் விஞ்ஞானியின் திறமை மீது நம்பிக்கை இழந்து (!) சந்திர மண்டலத்திற்கு சென்ற வில்லேந்தி மற்றும் அவன் தோழன் உயிருடன் திரும்ப முடியாததற்கு காரணம் விஞ்ஞானிதான் என்று அவர் மீது அவசரப்பட்டு பழி சுமத்தி, அவரை அடித்துத் துவைத்து துவம்சம் செய்கிறது. குற்றுயிரும், கொலையுயிருமாய் மரண வாசலை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த விஞ்ஞானி தன் உயிர் போகும் அந்தத் தருவாயிலும் பழுதான இயந்திரத்தை சரி செய்து வில்லேந்தியையும், அவன் தோழனையும் திரும்ப பத்திரமாக பூமிக்கு வரவழைக்கிறார். சந்திரனுக்கு மனிதனை அனுப்பி சோதனை செய்த முயற்சியில் தனக்கு முழு வெற்றி கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் தன் உயிர் போகக் காரணமாக இருந்த மக்களையும் மன்னித்து, பரமேஸ்வரன், பார்வதியை வணங்கியபடியே உயிரை விடுகிறார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-6_zps08985ac6.jpg

தோள்பட்டை வரை நீளும் முற்றிலுமாக படர்ந்த, பஞ்சடைந்த, கலைந்த தலைமுடி. நடு வகிட்டிலிருந்து நெற்றியின் மீது இருபுறமும் கீற்றாய் படரும் வெண் முடிக் கற்றைகள். அகோரமான அருவருக்கத்தக்க மிகப் பெரிய சேதமடைந்த கருட மூக்கு. மூக்கின் கீழே வரைகோடிட்டாற் போன்ற தெரிந்தும் தெரியாத மெல்லிய மீசை. அடிக்கடி வாயிலிருந்து உதட்டோரமாய் அரணை போல வெளியே தள்ளும் நாக்கு. முழுதான கூன் விழுந்த முதுகு. கண்களுக்குக் கீழே காணச் சகியாத தடிமன் வீக்கங்கள். முகவாய்க்கட்டையிலிருந்து நீளும் சற்றே நீண்ட வெண் குறுந்தாடி. அறிவியல் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கும் அரிய பெரிய கண்கள். பருத்த கனத்த வயிறு. நீண்ட பிரில் வைத்த கருப்பு அங்கி. முதுமையை வெளிப்படுத்தும் சற்றே தள்ளாடிய தடுமாறும் ஓட்டமும் நடையுமான நடை. (அந்த சிம்மக் குரல் மட்டும் காட்டிக் கொடுக்கவில்லையென்றால் "யார் அது கணேசனா?" என்று அனைவரும் வாயடைத்துப் போவார்கள்) அப்படி ஒரு அபார ஒப்பனை. வித்தியாசம்... வித்தியாசம்... வித்தியாசம். ஆம். நடிப்பை ஆராய்ந்து முடித்த நடிப்புலக விஞ்ஞானிக்கு சந்திர மண்டல ஆராய்ச்சி செய்ய, அங்கு ஆள் அனுப்பும் இப்படி ஒரு வித்தியாச விஞ்ஞானி வேடம் இந்த 'குழந்தைகள் கண்ட குடியரசு' படத்தில். இதுவரை எந்த ஒரு படத்திலும் அவர் செய்திராத ரோல். நடிப்புக்கே ரோல் மாடலாக விளங்கியவருக்கு இந்த விஞ்ஞானி வேடம் சவால் விட்டு பின் "ஐயோ எமகாதகா' என்று எகிறிக் குதித்து அலறி இவரிடம் தோற்றோடிப் போனது. அறிவியல் ஆராய்ச்சி நிபுணர் வேடம் தரிக்க வேண்டும். அதுவும் அந்தக் கால கட்டத்திலேயே. இந்த ரோலை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பதற்கு அடையாளம் தெரிந்து கொள்ள எவ்வித முகாந்திரமும் அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை. மீடியாக்களோ, சேனல்களோ, டிவி பெட்டியோ, இணைய வலைத்தளங்களோ இல்லாத கால கட்டம். அறிவியல் சம்பந்தமாக அப்போது அல்லது அதற்கு முன்னால் எடுக்கப் பட்ட அயல் நாட்டு சினிமாக்களை முடிந்தால் பார்த்திருக்கலாம். அது சம்பந்தமான புத்தகங்கள் இருந்திருக்கலாம். படித்திருக்கலாம். ஆனால் இந்த ஜாம்பவான் கொடிகட்டிப் பறந்த அந்தக் காலத்தில் அதற்கெல்லாம் இவருக்கு நேரம் இல்லை. அப்படியே நேரம் இருந்து இவற்றையெல்லாம் பார்த்து நம்மவர் கிரகித்திருந்தாலும் பார்த்தவற்றின் பிரதிபலிப்பைக் நம்மிடம் காட்டிவிடக் கூடாது. நடிகர்களுக்கெல்லாம் நாயகர் என்பதால் காட்டிவிடவும் முடியாது. அப்படியே காட்