PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan Part 10



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17

IliFiSRurdy
31st January 2013, 10:38 AM
naatu makkalukkor narseythi..
as my desk top is out of order,I am using my lap top's lap top and hence may not be frequent for the next couple of days.

KCSHEKAR
31st January 2013, 10:59 AM
Dear Murali Sir,

Wish you many more happy returns of the day

kaveri kannan
31st January 2013, 11:36 AM
முரளி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

நேற்றுதான் உங்களின் நடிகர்திலகம் சாதனைச் சிகரங்கள் ஒட்டி ( ஸ்டிக்கி) வாசித்து மலைத்துப்பூரித்தேன்.

http://www.mayyam.com/talk/showthread.php?7186-Sivajiyin-Sadhanai-Sigarangal-by-Murali-Srinivas

நடிப்பு ஆதவனைப் பற்றி எழுதுவதென்றால் நம் இதயக்கமலங்களுள் எத்தனை எழுச்சி...
அத்தனை உழைப்பு, உத்வேகமும் பளிச்சிடும் திரி அது..

வரும் தலைமுறைக்கும் உதவும் நல் ஆவணப் பதிவு..

..பல்லாண்டு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்

KCSHEKAR
31st January 2013, 12:15 PM
Nadigarthilagam Portrait Opening Function at INTUC Office Tirunelveli on 28th January 2013 (Press Coverages)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Dinakaran29Jan2013_zps674ea124.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/DinamaniDinathanthi29Jan2013_zps322e4ed1.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Dinamalar30Jan2013_zps54ac4e57.jpg

kaveri kannan
31st January 2013, 12:22 PM
தொடர்ந்து நம் உணர்வுதீபங்களைக் காத்து வெளிப்படுத்தும் உன்னதப்பணி..
பாராட்டும் நன்றியும் சந்திரசேகர் அவர்களே!

kalnayak
31st January 2013, 02:49 PM
Murali Sir,
Wish You Many More Happy Returns of the Day - Happy Birthday to You.

vasudevan31355
31st January 2013, 03:36 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/vlcsnap-10866_zps792ec745-1_zps81ba877c.jpg

vasudevan31355
31st January 2013, 03:41 PM
கோபால் சார்,

ரொம்ப அதிகமாக கோமாளி அது இது என்று எழுதுகிறீர்கள். வார்த்தைகளை அளந்து எழுதுங்கள். எதற்கும் ஒரு லிமிட் உள்ளது. நீங்கள் மூத்த ஹப்பரான ராகவேந்திரன் சாரை அவமரியாதை செய்வதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Gopal.s
31st January 2013, 05:13 PM
கோமாளி என்பது கெட்ட வார்த்தையல்லவே? நகைப்புக்குரியதை நாசூக்காக குறிப்பிடும் சொல்தானே அது? ஏன் ராகவேந்தர் சாரை மட்டும் முன்னால் தள்ளுகிறீர்கள்?

Gopal.s
31st January 2013, 07:05 PM
வாசு சார்,
NT இளைய தலைமுறையுடன், அவர்களுக்கு உரிய மதிப்பையும் கொடுத்து ,கிண்டலாய் கலாய்க்கும் உரிமை கலந்த பாசம் அலாதியான உயர் குணம். நன்றிகள்.
என்தம்பி, பாச மலர் பதிவுகள் அருமை. என் favourite ஜோடியின் favourite பாடலுக்கு special thanks .
Life of Pi , vasanthamaligai posture scene is a master-stroke.

காவேரி கண்ணன்-
ஒவ்வொரு வரிகளும் வைரத்தில் தோய்த்த தங்கங்கள்.தொடருங்கள்.

ராகவேந்தர் சார்,
ரசிக்க ,சுவைக்க பட வரிசை. நீங்கள் எங்கள் பொக்கிஷம்.

வனஜா மேடம்,
மார்ச் முதல் வாரம் முதல் தாங்கள் இட்ட பணியை சிரத்தையாய் மேற்கொள்வேன்.

சந்திர சேகர் சார்,
உங்களை எவ்வளவு புகழ்நதாலும் திருப்தி வரவில்லை. எனது நமஸ்காரங்கள் உங்கள் பலன் கருதா சேவைகளுக்கு. நாங்கள் மிக மிக கடன் பட்டுள்ளோம்.

Gopal.s
31st January 2013, 07:42 PM
http://tamil.oneindia.in/movies/television/2013/01/sun-tv-s-timely-advice-kamal-168919.html#slide63235

RAGHAVENDRA
1st February 2013, 07:01 AM
டியர் வாசு சார்,
தங்களுடைய அன்பான மற்றும் ஆதரவான வார்த்தைகளுக்கு என் உளமார்ந்த நன்றி

Gopal.s
1st February 2013, 07:19 AM
டியர் வாசு சார்,
தங்களுடைய அன்பான மற்றும் ஆதரவான வார்த்தைகளுக்கு என் உளமார்ந்த நன்றி
வாசு சார்,
இதே அன்பான ,ஆதரவான ,கனிவான பதிவுகளை, மற்ற பதிவாளர்களுக்கு எதிரான பதிவுகளிலும் எதிர்பார்க்கிறோம்.(இதில் நட்பு,சுற்றம் என்றெல்லாம் வித்யாசம் பார்ப்பவரில்லை நீங்கள் என்பது தெரிந்த விஷயம்)

Gopal.s
1st February 2013, 07:24 AM
Mr Gopal,
my bro tells me you are from Malaysia, is that true?
வனஜா மேடம்,
நான் படித்தது (எஸ்.எஸ்.எல்.சி வரை) நெய்வேலி. பிறகு இளநிலை,முதுநிலை பொறியியல் அண்ணா பல்கலை கழகம் சென்னையில். வாழ்ந்தது,வாழ போவது சென்னையில். ஒரு இருபது வருடங்களாக, தாய்லாந்த், இந்தோனேசியா, வியட்நாம், என்று வாழும் என்.ஆர்.ஐ.

vasudevan31355
1st February 2013, 09:27 AM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (11) ஜமுனா

ஜமுனாவின் அழகிய தோற்றம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/jam0.jpg

நடிகர் திலகத்தின் முக்கியமான ஜோடிகளில் ஒருவர். தெனாலி ராமன், பொம்மைக் கல்யாணம், 'பொம்மல பெள்ளி' (தெலுங்கு) தங்கமலை ரகசியம், நிச்சயத் தாம்பூலம், மருத நாட்டு வீரன் ஆகிய படங்களில் நடிகர் திலகத்திற்கு இவர் இணை. அன்றைய நாட்களில் ஸ்லிம்மாக இருந்த ஒரு சில நடிகைகளில் இவரும் ஒருவர். இவரது முக ஜாடை வட இந்தியக் 'கனவுக் கன்னி' ஹேமமாலினி அவர்களின் முக ஜாடையை சற்றே ஒத்திருப்பது போல எனக்கு தோன்றும். அழகான அலட்டல் இல்லாத நடிகை. 'அமுதைப் பொழியும் நிலவாக' அமர்க்களம் புரிந்தவர். "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?" பாடலை நாம் கேட்கும் போதெல்லாம் நடிகர் திலகத்திற்கு பிறகு நம் மனதில் இவர் நிழலாடுவது தவிர்க்க முடியாத ஒன்று. 'பொம்மைக் கல்யாணம்' திரைப்படத்தில் வரதட்சணைக் கொடுமையால் அவதியுறும் நாயகியாக அற்புதமாக நடித்திருப்பார். 'நிச்சயத் தாம்பூல'த்திலும் ('நெற்றியிலே ஒரு குங்குமப் பொட்டு' பாடலை மறக்க முடியுமா?!) அருமையான ரோல். கணவன் சந்தேகத்தால் அவதியுறும் மனைவி கேரக்டர். இதிலும் முத்திரை பதித்திருப்பார். 'தெனாலி ராமன்' திரைப்படத்தில் அமைதியே உருவாக ராமனின் மனைவியாக நடித்திருப்பார். தெலுங்கில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகை. கர்நாடகத்தில் பிறந்த இவர் ஆந்திராவில் செட்டிலானவர். தெலுங்கில் சாவித்திரிக்கு ஈடான புகழ் பெற்றவர். தனது 14-ஆவது வயதிலேயே 'மாபூமி' என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர். 'மிலன்' (1967) என்ற இந்திப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது இவருக்குக் கிடைத்தது. (சாவித்திரி அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்து இயக்கிய 'பிராப்தம்' படம் 'மிலன்' இந்தியைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் சந்திரகலா ஏற்று நடித்த பாத்திரத்தை இந்தியில் ஜமுனா செய்திருந்தார்).1980-இல் இந்திரா காந்தி அவர்களின் தயவால் எம்பியாக காங்கிரசிலும், பின் பிஜேபி யிலும் இருந்தவர். சமூக நலப் பணிகளில் ஆர்வம் உடையவர்.

'பொம்மைக் கல்யாணம்' திரைப்படத்தில் ஜமுனா

http://padamhosting.com/out.php/i140140_vlcsnap2012012408h23m56s101.png

'தங்கமலை ரகசியம்' திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன்.

http://padamhosting.com/out.php/i88823_vlcsnap2011062110h31m29s130.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/jam1.jpg

நடிகர் திலகத்தின் படங்களில் தொடர்ந்து நடித்ததால் சிவாஜி தரப்பு நடிகை என்ற மாபெரும் பெருமை பெற்ற நடிகர். இதை அவரே ஒரு பேட்டியிலும் சொல்லியிருக்கிறார். மற்றவர்களுடன் இவர் நடித்த படங்களில் 'குழந்தையும் தெய்வமும்' மற்றும் 'அன்புச் சகோதரர்கள்' படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஏவிஎம்மின் 'தூங்காதே தம்பி தூங்காதே' படத்தில் கமலின் தாயாராக நடித்துள்ளார்.

'தங்கமலை ரகசியம்' திரைப்படத்தின் தலைவர், ஜமுனாவுக்கான அற்புதமான டூயட். ("இகலோகமே... இனிதாகுமே...")


http://www.youtube.com/watch?v=9kzJUIcahGE&feature=player_detailpage

'நிச்சயத் தாம்பூலம்' படத்தில் மறக்க முடியாத ("பாவாடை தாவணியில் பார்த்த உருவமா!")


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=wi-G7fvgZ7g

'பொம்மைக் கல்யாணம்' திரைப்படத்தில் ("இன்பமே பொங்குமே!") அபூர்வமான அருமையான டூயட். ('தங்கச் சுரங்க'த்தின் தலைவரின் ஸ்டைலை 'பொம்மைக் கல்யாண'த்திலேயே காணலாம். தலைவர் என்ன அழகு! என்ன ஒரு dress sense!)


http://www.youtube.com/watch?v=ASDtDM6DZa4&feature=player_detailpage

'மருத நாட்டு வீரன்' படத்தில் மறக்க முடியாத ("பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா!!") அட்டகாசமான டூயட்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=T5iEm9kt7Gs

Gopal.s
1st February 2013, 09:37 AM
கொஞ்சம் சிதாரா ஞாபகம் வருது.
என்னா cute தெனாலி ராமன் , பொம்மை கல்யாணம் படங்களில் !!! நல்ல ஜோடி சாரே.

RAGHAVENDRA
1st February 2013, 09:39 AM
டியர் வாசு சார்
நடிகர் திலகத்தின் பட நாயகியர் வரிசையில் ஜமுனா அவர்களைப் பற்றி மிக அழகாக விரிவாக சொல்லியிருக்கிறீர்கள். பொம்மை கல்யாணம் இன்பமே பாடல் திரையரங்கில் எப்போதுமே ஆரவாரமாக வரவேற்கப் படும். அதே போல் மருத நாட்டு வீரன் படத்தில் ஒரு ராக மாலிகை பாடலை எஸ்.வி.வெங்கட் ராமன் அவர்கள் அமைத்திருப்பார். டி.எம்.எஸ். சுசீலா குரல்களில் நெஞ்சையள்ளிக் கொண்டு போகும். மிகவும் அபூர்வமான பாடல். இப்பாடல் நெடுந்தகட்டில் இடம் பெற்றதாகத் தெரியவில்லை.


http://youtu.be/G0A8k7Kr2UA

இப்பாடலைத் தரவேற்றிய நண்பருக்கு நமது நன்றி.

Gopal.s
1st February 2013, 09:46 AM
திரு கோபால்

நீங்கள் வெளிநாட்டில் வசிப்பதால் உங்கள் நாட்டு நண்பர்களோடு நல்ல நட்புப்பாராட்ட விரும்புகிறீர்கள் என்பது தெரிகிறது; திரு வாசு + திரு ராகவேந்தர் உட்பட எல்லோர் மீதும். ஆனால் உங்கள் நட்பை எப்படி வெளிப்படுத்துவது என்பதில் தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். அவர்களின் கவனம் உங்கள் மீது வரவேண்டும் என்பதற்காக தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துகிறீர்கள். நானும் சிலவேளைகளில் இப்படி நடந்து கொண்டு சில நல்ல நட்புகளை இழந்திருக்கிறேன் என்பதால் சொல்கிறேன், தவறாக நினைக்கவேண்டாம்.
கவன ஈர்ப்பல்ல நான் விழைவது. பல நாடுகளில் நண்பர்களால் என் visiting card folder நிரம்பி வழிந்தாலும், நான் விழைந்தது என் நாட்டு நட்பல்ல. நடிகர் திலகத்தை தெய்வமாகவும், அவரது பக்தர்கள் குழுமத்தை மதமாகவும் பாவித்த நட்பு. இந்த வட்டம் எனக்கு மகிழ்ச்சியே தந்துள்ளது. யார் எப்படி நடந்து கொண்டாலும், எனது மதத்தை (சிவாஜி மதம்)சேர்ந்தவர்களை நான் ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டேன்.எவ்வளவு நமக்குள் சிறு பூசல்கள் நேர்ந்த போதும்.கவலை வேண்டாம் சகோதரி, ஒரு நட்பை கூட இது வரை நான் இழந்ததில்லை.

vasudevan31355
1st February 2013, 09:47 AM
Exclusive

சமீபத்தில் வெளி வந்த 'Life of Pie' ஆங்கிலப் படத்தில் நமது நடிகர் திலகத்தின் 'வசந்த மளிகை' போஸ்டர் இடம் பெற்றுள்ள காட்சி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/a1944ac0-d6f5-417f-8cbf-993ad58f7d3d.jpg

Gopal.s
1st February 2013, 10:18 AM
எனக்கு பிடிக்காத விஷயம் தொட்டார்ச்சுருங்கி குணமும் குதர்க்க வாதங்களும்.(எதிர் வாதங்களல்ல) எதிர் கருத்து கொண்டவர்களை, எதிரியாக பாவித்தால் நான் பொறுப்பல்ல. கவனித்து பார்த்தீர்கள் என்றால், திரியில் நான் விழைவது வேற்றுமையில் ஒற்றுமை. கோபித்து கொண்டு பிளப்பது, தனியாக ஆள் சேர்த்து ஒற்றுமையை குலைப்பது,ஆள் பார்த்து பதிவு போடுவது என்பதெல்லாம் என் அகராதியில் இல்லை. திரி ஒற்றுமையாக, மிக அதிக viewership உடன் இயங்குவதே என் குறிக்கோள்.
நேற்று கூட மனமார அவரை பொக்கிஷம் என்றுதானே கூறினேன்? தனியாக திரி கண்ட போது கூட நண்பர்கள் திரியில் நான் ரசித்தவைகளை தொகுத்து பாராட்டியுள்ளேன். பதிலுக்கு, என் திரி இப்படியாக்கும்,அப்படியாக்கும் என்று எல்லோரையும் உசுப்பும் பதிவுகள் எங்கிருந்து வந்தன? சரித்திரத்தை நோக்கி விட்டு அம்பை எய்யுங்கள் சகோதரி. வெளிப்படையானவர்கள் எல்லாம் வில்லன்கள் அல்ல.

Gopal.s
1st February 2013, 11:19 AM
Sorry if I sounded too authoritative, Mr Gopal. I just like your interaction in this thread and it's amusing at times when you come across with some 'objections', but sometimes I am apprehensive and have fear of loosing nice friendships.
வனஜா மேடம்,
நீங்கள் தப்பு தப்பாகவே பிரச்சினையை புரிந்து கொண்டுள்ளீர்கள். முதல் கோணல்.முற்றிலும் கோணல். நான் ,யார் ரசனையையும் குறை சொன்னதில்லை. ஆனால் ,நான் இப்படி எழுத கூடாது, அப்படி எழுத கூடாது, உன் கருத்துகளை வெளியிட்டால் குதர்க்க வாதம் புரிவேன்.(இரும்பு திரை விமரிசனத்தில் சில வருடங்கள் மிக மிக சிறந்தவை, என்றதும் மற்றவை குப்பைகளா போன்ற குதர்க்கம். நான் நல்லவன் என்றால் அப்போது நான் கேட்டவளா என்று நீங்கள் கேட்பது போன்றது) .அவர் வழிக்கே போகாமல், இருந்த போது வலுவில் வந்து என்னை தாழ்த்தி காட்டி ,நான் ரசிகனே இல்லை,மாற்று முகாம் என்று நிறுவ முயன்று, இதை எப்படி பொறுப்பது? இப்போது, யாரிடமும் சொல்லாமல், மூன்றாவது திரி. எங்கு போய் முட்டி கொள்வது?(என் பதிவுகளை முழுவதும் படியுங்கள். )நான் யாரிடமும் விரோதம் பாராட்டும் குணம் கொண்டவனல்ல. infact ,seriousness என்னவென்றே அறியாத ஜாலி பேர்வழி.(வசந்த மாளிகை ஆனந்த் இடைவேளை வரை என்று வைத்து கொள்ளுங்கள்)

Gopal.s
1st February 2013, 12:02 PM
ok, fine. I do not want to go through that 'you said this on ....such and such..' forget it. I am actually telling all these because I somehow judge you as a fun+friendly guy same as Ganpat and thought good to interact with you. But you seem so touchy on every thing I say. And, please do not call me Madam, it sound so ..ancient! or rather, I feel so old!
ஒகே வனஜா. done . back to fun . நான் தங்கள் விருப்பப் படி, இது வரை தொடாத படங்களின் விமரிசனத்தை தொடர்வேன். மார்ச் முதலாக.

Gopal.s
1st February 2013, 12:03 PM
ok, fine. I do not want to go through that 'you said this on ....such and such..' forget it. I am actually telling all these because I somehow judge you as a fun+friendly guy same as Ganpat and thought good to interact with you. But you seem so touchy on every thing I say. And, please do not call me Madam, it sound so ..ancient! or rather, I feel so old!
ஒகே வனஜா. done . back to fun . நான் தங்கள்(உன் -ஒகே?) விருப்பப் படி, இது வரை தொடாத படங்களின் விமரிசனத்தை தொடர்வேன். மார்ச் முதலாக.

Gopal.s
1st February 2013, 12:29 PM
ராகவேந்தர் சார்,

முதல் படத்திலிருந்து ,ஒன்பதாவது படம்(மனிதனும் மிருகமும் ) வரை அற்புதமாக சென்று கொண்டிருக்கிறது http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events. உங்கள் உழைப்பும், அர்பணிப்பும் மிக மிக மெச்ச தக்கது. எத்தனை தகவல்கள்!! அத்தனை ரசிகர்களும், பக்தர்களும், நடிகர்திலகத்தை பற்றி அறிய விரும்பும் நடுநிலையாளர்களும்(ஏன் ,எதிரணியினர் கூட)பார்த்தே தீர வேண்டிய திரி. அற்புதம். மிக மிக ரசித்தேன். உங்களுக்கு special நன்றிகள். 306 வரை தொடருங்கள்.

Gopal.s
1st February 2013, 12:35 PM
Since I'm off today, I'm going to read all your (and others) previous articles!
அதுதான் அண்ணனை திருத்தி ,நல்வழிக்கு கொண்டு வந்தாயிற்றே? இனி நிம்மதியாய் ஓய்வெடுங்கள்.

vasudevan31355
1st February 2013, 01:05 PM
பட்டையைக் கிளப்பும் பைத்தியக்கார ரோலில்

http://padamhosting.com/out.php/i137459_vlcsnap2012010915h18m09s92.png

adiram
1st February 2013, 01:14 PM
Dear Chandrasekhar sir,

Your 'Sivaji Samooganala Peravi' acticities are very very excellent.

Real activities of spreading Shiavji's fame to everyone, by action sense.

Long live Samooganala Peravai Leader and its members.

adiram
1st February 2013, 02:01 PM
Dear Vasudevan sir (of Neyveli),

Very good coverage about 'Shivaji camp Heroine' Jamuna. (I also read that she has mentioned that with proud)

I always like her actions with calm and polite. No one can forget her family look and action in Nichaya Thamboolam, espacially in the song "Maalai soodum mananaal". OOh, what a song by KD, VR and PS.

In 'amudhai pozhiyum nilave' both happy and sad versions she is fine.

In Marudha naattu veeran both 'paruvam paarththu arugil' and 'vizhiayali mele' are excellent.

Also nice in Kuzhandhaiyum Dheivamum and later years in Thoongathe thambi (naanaaga naanillai thaaye)

She was the heroine with Gemini in Savithri's debut directed Tamil movie 'kuzhandhai ullam'.

(Vasu sir, I think you have started 'Nadigarthigathin Naayagigal' series in another thread, but now jumped here).

Nice analysis, continue...

Gopal.s
1st February 2013, 02:18 PM
பட்டையைக் கிளப்பும் பைத்தியக்கார ரோலில்

http://padamhosting.com/out.php/i137459_vlcsnap2012010915h18m09s92.png
நீ வருவாய் என நான் காத்திருந்தேன்.

parthasarathy
1st February 2013, 05:44 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)

7. "எல்லோரும் கொண்டாடுவோம்" படம்:- பாவ மன்னிப்பு (1961); பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன், நாகூர் ஹனீபா மற்றும் குழுவினர்; பாடல் ஆசிரியர்:- கவியரசு கண்ணதாசன்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- ஏ.பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன்/சித்தூர் நாகையா மற்றும் குழுவினர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, என்னுடைய பாடல் ஆய்வினைத் தொடர சந்தர்ப்பம் அளித்த இறைவனுக்கு முதற்கண் நன்றி.

இந்தத் தொடர் நடிகர் திலகத்தின் புதிய வித்தியாசமான முன்னோடி முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுபடியும் குறிப்பிடுகிறேன்.

சுற்றிப் பின்னப்பட்ட சதி வலையால், குழந்தையாய் இருக்கும்போது, ஒரு இஸ்லாமியப் பெரியவரிடம் வளர்ந்து வரும் ரஹீம் (நடிகர் திலகம்) வரும் அறிமுகக் காட்சி. ஒரு பாடலோடு நடிகர் திலகம் அறிமுகமாகும் இந்தக் காட்சியை ஒவ்வொரு முறை இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் தவற விட்டதில்லை. அந்த முதல் காட்சியிலேயே, ஒரு இஸ்லாமிய சகோதரர் எப்படி இருப்பார் என்ற இலக்கணத்தையும், ரசிகனின் கற்பனை மற்றும் எதிர்பார்ப்பினையும் நூறு சதவீதம் பூர்த்தி செய்திருப்பார். ஆக, தோற்றத்தின் மூலம் அந்தக் கதாபாத்திரத்துக்குள் முதலில் முழுமையாக நுழைந்து, பார்க்கும் ஒவ்வொருவரையும் அவருள் நுழைத்துக் கொண்டு விடும் (வழக்கம் போல்) நடிகர் திலகம், கையில் உள்ள மேளத்தை இலாகவமாகவும் தேர்ந்த கலைஞரைப் போலும் சர்வ சாதாரணமாக அதே நேரத்தில், உயிர்ப்புடனும் தட்டிக் கொண்டு துவங்கும் அழகு!

இந்தப் பாடலில் பொதிந்துள்ள அழகு வேறெந்தக் கலைஞருக்கும் கிட்டாதது.

இந்தப் பாடல் மற்றப் பாடல்களைப் போல வாயசைப்பு மற்றும் அதற்கேற்ற பாவனைகள் இல்லாமல், இசைக் கருவியையும் சேர்த்து இயக்கிக் கொண்டே பாட வேண்டிய கட்டாயம் கொண்ட பாடல்.

முதலில் வாயசைப்பு:-

“எல்லோரும் கொண்டாடுவோம்” என்று துவங்கி "அல்லாவின் பெயரைச் சொல்லி" எனும் போது கோரஸோடு பாடும் போது, சாதாரணமாக இருக்கும் அவரது வாயசைப்பு, க்ளோசப்பில், அவரை மட்டும் காண்பிக்கும் போது, தனியாக அவர் மட்டும் "அல்லாவின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி" என்று முடிக்கும் போது மட்டும் இலேசாக வாயசைப்பில் ஒரு அழுத்தம் பெறும். அந்த இடத்தில் அழுத்தம், பாடியவர் கொடுத்ததால், அந்த வரிகளுக்குத் தேவைப் படுவதால். அதுவும் மிகச் சரியாக க்ளோசப்பில் அவரது முகம் வரும் போது இது இன்னும் கூடுதல் கவனம் பெறுகிறது. அதனால், அந்த வரிகளுக்கே ஒரு வசீகரம் வருகிறது. இப்போது முதல் சரணம், "கல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே... என்று கூறி “கல்லாகப் படுத்திருந்து” என்று அவர் நிறுத்த, "களித்தவர் யாருமில்லே" என்று கூட்டத்தில் ஒருவர் (நகைச்சுவை நடிகர் மற்றும் எழுத்தாளர் ஏ.வீரப்பன் அவர்கள்) சத்தமாக முடிப்பார். இப்படிப் போய் "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று முடியும் போது, இந்த முதல் சரணத்தில் மட்டும் ஒரு நார்மலான வாயசைப்பு இருக்கும். இரண்டாவது சரணம். தொகையறாவில் தொடங்கும். "நூறு வகை பறவை வரும்... ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ஆ..ஆ..ஆ" என்று முடிக்கும் போது ஒரு தேர்ந்த பாடகனுக்குரிய வாயசைப்பு. "முதலுக்கு தந்தை என்போம் முடிவுக்கு அன்னை என்போம்" எனும்போது அழுத்தம் தரும் வாயசைப்பு. மூன்றாவது சரணம். மறுபடியும் தொகையறாவில் தொடங்கும். "ஆடையின்றிப் பிறந்தோமே...ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ஒ..ஒ..ஒ.." என்று மறுபடியும் தேர்ந்த பாடகருக்குரிய வாயசைப்பு. "எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்" என்று முடிக்கும் போது அழுத்தம் கொடுக்கும் வாயசைப்பு.

அடுத்தது, முக பாவம்:-

பாடல் துவங்கும் போது, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று கூட்டமாகச் சேர்ந்து வரும் போது தெரியும், ஒரு இலேசான குதூகலம். அப்படியே மேளத்தை இசைத்துக் கொண்டே, பாடிக் கொண்டே, தந்தையாரை பார்த்து பாவத்திலேயே acknowledge செய்யும் அழகு. முதல் சரணத்தில் அந்த வரிகளின் பொதுவான கருத்துகளுக்கேற்ப சாதாரணமான (normal) பாவம். “வந்ததை வரவில் வைப்போம் செய்ததை செலவில் வைப்போம்” எனும் போது கொடுக்கும் அழுத்தம். இரண்டாவது சரணம் – “நூறு வகை பறவை வரும்……… ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா" என்ற தொகையறாவில் கொடுக்கும் ஒரு விதமான தெய்வீக பாவம். மூன்றாவது சரணம். "ஆடையின்றிப் பிறந்தோமே" என்று துவங்கி, "ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ" எனும் தொகையறாவில் இலேசாக கண் கலங்கி கண்களில் கண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டே பாடும் போது, பார்க்கும், ஏன் பாடல் இயற்றியவனே கண் கலங்கியிருப்பானே! உடனே, “எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்” எனும் போது சுதாரித்துக் கொண்டு, அந்த வரிகளுக்குத் தேவைப்படும் அந்த அழுத்தம் கலந்த சூளுரையைக் காண்பிக்கும் விதம்!

இப்போது, மேளம் தட்டும் அழகு.

பாடல் துவங்கி மேளம் அடிக்கத் துவங்கியவுடன், அவரது கைகள் மேளத்தில் நர்த்தனம் ஆடும் அழகு; லயம். அப்படியே போய், அந்தத் தாளம் முடிந்து, நாகைய்யாவைப் பார்த்துக் கொண்டே, அவரை acknowledge செய்து கொண்டே, தாளம் அழுத்தமாக முடியும் போது, அதே அழுத்தத்தைக் காட்டி முடித்து, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று துவங்கும் அழகு. முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசை மற்றும் தாள கதிக்கேற்ப இவர் மேளத்தைத் தட்டி கொண்டே இருப்பார். இசையும் தாளமும் முடிந்து முதல் சரணம் துவங்கும் போது, மேளத்திலிருந்து கையை எடுத்து, "கல்லாகப் படுத்திருந்து" என்று துவங்கும் போது, சரியாக மறுபடியும் தாளத்துடன் பாடி/தட்டிக் கொண்டே துவங்குவார். பாடிக் கொண்டே, "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று ஒவ்வொரு வார்த்தையின் அழுத்தமான தாளத்துடன் ஒன்றி மேளத்தை அழுத்தமாக அதே தாள கதியில் அடித்து/ பாடிக் கொண்டே முடித்து, மறுபடியும் அனு பல்லவி வேறொரு தாளத்தில் வலுவாகத் துவங்கும் போது, உடனே, அந்த தாள அழுத்தத்தை மேளத்தில் தட்டித் துவங்குவார். இந்த கையசைப்பை, ஒவ்வொரு முறை சரணம் முடிந்து அனு பல்லவி துவங்கும் போதும், சரியாகச் செய்திருப்பார். பாடல் நிறைவடையும் போது, கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தாளம் அந்த வலுவைக் குறைத்துக் குறைத்து முடியும் அழகை, தன்னுடைய விரல்களில் மிகச் சரியாகக் காட்டிக் கொண்டே முடிப்பார்.

ஆக, ஒரு பாடலுக்கு ஒரு மிகச் சிறந்த நடிகன் காட்டும், இரண்டு பாவங்களையும் - அதாவது, வாயசைப்பு, பாடும் வரிகளுக்கேற்ப பாவத்தை முகத்தில் காண்பிப்பது. இவற்றைக்காட்டியாகி விட்டது. எப்பேர்ப்பட்ட நடிகனும் இரண்டு விஷயங்களைக் கஷ்டப்பட்டு செய்து விடுவான். ஆனால், மூன்றாவதாக, ஒரு கருவியை இசைத்துக் கொண்டே வாயசைப்பையும், வார்த்தைகளுக்கேற்ற பாவங்களையும் சுருதி கொஞ்சமும் பிசகாமல் செய்வது பிரம்ம பிரயத்தனம். இது கூட உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக மிகச் சிலரால் முடியும்.
ஆனால், மேற்கூறியவை மட்டுமல்லாமல் பாடல் நெடுக, நடிகர் திலகம் அவரது பிரத்தியேக ஸ்டைலில் தலையை ஒருவாறு மிதமாக ஆட்டிக் கொண்டே பாடுவதும், அவ்வப்போது தந்தையாரையையும் மற்றவரையும் acknowledge செய்யும் விதமும்! எப்படி இந்த மனிதர் ஒரே நேரத்தில், இத்தனை விஷயங்களை, ஒன்றோடொன்று அழகாக இணைத்து, காட்சியையும், பாடலையும், வேறொரு உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றார் என்பது இன்று வரை புரியாத புதிராகத் தான் இருக்கிறது.
இந்தப் பாடல் மற்றும் நடிகர் திலகத்தின் பல பாடல்கள் மற்றும் படங்கள்/காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் திரு முக்தா சீனிவாசன் அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது. "சதை படர்ந்த அந்த முகத்தில் ஒவ்வொரு அணுவும் நடிக்கும், முகம் நடிக்கும்; முகத்தில் உள்ள முடியும் நடிக்கும்".
ஒரு படத்தில், பாடலில், எத்தனையோ நடிகர்கள் இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டே நடித்திருக்கிறார்கள். நான் மேற்கூறிய முதல் மூன்று பாவங்கள் - வாயசைப்பு, வார்த்தைகளின் அர்த்தங்களுக்கேற்ற பாவம், மற்றும் இசைக்கருவியையும் கூடவே பிசிறில்லாமல் வாசிக்க வேண்டிய கட்டாயம். இவைகளை கோர்வையாக, மிகச் சரியாக செய்தது மட்டுமல்லாமல், கூடவே ஒரு வித ஸ்டைலையும், சுற்றி இருப்பவர்களை கவனித்தல்/மற்றும் acknowledge செய்தல், இவைகளையும் கோர்வையாகச் செய்து, இந்தப் பாடலைக் காட்சிப்படுத்திய வகையில், இந்தப்பாடல் முன்னோடி மட்டுமல்ல. இனி வேறொருவரால் வெற்றிகரமாக செய்வதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகிறது.

இந்தப் பாடலின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அத்தனை கலைஞர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு கோரஸ் பாடலில், கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் சரியாகப் பங்களித்து பாடலை மேலும் ரசிக்கும்படி செய்திருப்பார்கள். இந்தப் பாடலில் தான் படத்தில் வரும் பிரதான பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள் (ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் தேவிகா).

தொடரும்,

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

RAGHAVENDRA
1st February 2013, 06:24 PM
தங்கள் பாராட்டிற்கு நன்றி, கோபால் சார்.

RAGHAVENDRA
1st February 2013, 06:42 PM
அன்புச் சகோதரி வனஜா அவர்களே,
எனக்காகத் தாங்கள் கூறியுள்ள ஆதரவு வார்த்தைகளுக்கு என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்

kaveri kannan
1st February 2013, 11:44 PM
வாசுதேவன் அவர்களே..

நடிகர்திலகத்தின் படர்ந்த மார்பில் முதுகை இணைத்துத் தம் இடது கன்னத்தை அவர் கழுத்து -தாடையில் இணைத்து தரும்
ஜமுனாவின் முகபாவம் - உலகை வென்ற பெண்ணின் பெருமிதம் காட்டும்..

தெத்துப்பல் புன்னகையும் தத்திய மென்நடையும் சிரிக்கும் விழியோடும் அடிக்கும் ஜடையோடும் காட்டும்
மெல்லிய அந்நியோன்யம் நடிகர்திலகம் - ஜமுனா இணைக்குச் சிறப்பு அடையாளம்..


உங்கள் தொகுப்புரை அருமை.. நன்றி..


மாலை சூடும் மணநாள்..
வறுமையில் செம்மை தேடும் ஆதர்ச தம்பதி காணுங்கள்..

http://www.youtube.com/watch?v=7zRfhAMqOKA

kaveri kannan
1st February 2013, 11:59 PM
பார்த்தசாரதி அவர்களே...

மிக நுணுக்கமான ஆழமான அலசலால் அசத்தியமைக்குப் பாராட்டுகள்.

தொடர்ந்து வழிபடுவதால் நெற்றியில் தழும்பேறியதைக் காட்டிய நடிகர்திலகமே...
நீரே உமக்கு என்றும் நிகரானவர்...

kaveri kannan
2nd February 2013, 12:09 AM
டியர் வாசு சார்
நடிகர் திலகத்தின் பட நாயகியர் வரிசையில் ஜமுனா அவர்களைப் பற்றி மிக அழகாக விரிவாக சொல்லியிருக்கிறீர்கள். பொம்மை கல்யாணம் இன்பமே பாடல் திரையரங்கில் எப்போதுமே ஆரவாரமாக வரவேற்கப் படும். அதே போல் மருத நாட்டு வீரன் படத்தில் ஒரு ராக மாலிகை பாடலை எஸ்.வி.வெங்கட் ராமன் அவர்கள் அமைத்திருப்பார். டி.எம்.எஸ். சுசீலா குரல்களில் நெஞ்சையள்ளிக் கொண்டு போகும். மிகவும் அபூர்வமான பாடல். இப்பாடல் நெடுந்தகட்டில் இடம் பெற்றதாகத் தெரியவில்லை.


http://youtu.be/G0A8k7Kr2UA

இப்பாடலைத் தரவேற்றிய நண்பருக்கு நமது நன்றி.


பதிவுக்கும் சுட்டிக்கும் நன்றி இராகவேந்தர் அவர்களே..

பழகிய குதிரையை ஜமுனாவுக்கு அளித்து,
குறுக்கு வசம் அடிக்கடி குதர்க்கமாய் செல்லும் குதிரையையும் சமாளித்தபடி
பாடலுக்கும் நியாயம் செய்யும் நடிப்பரசரின் லாவகம் காணக் கண் கோடி வேண்டும்!

Murali Srinivas
2nd February 2013, 12:10 AM
எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த அன்பு உள்ளங்கள்

கோபால் [அலைபேசியிலும் வாழ்த்து]
சித்தூர் வாசுதேவன்
கணேஷ்
சந்திரசேகர்
காவேரி கண்ணன்
கல்நாயக்
நெய்வேலி வாசு [அற்புதமான புகைப்படத்திற்கு ஸ்பெஷல் நன்றி!]
ராதாகிருஷ்ணன்
சங்கரநாராயணன்

அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய

ராகவேந்தர் சார்

பார்த்தசாரதி

ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

அன்புடன்

vasudevan31355
2nd February 2013, 08:01 AM
அன்பு ஆதிராம் சார்,

தங்கள் கனிவான பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி! தாங்கள் குறிப்பிட்டது உண்மைதான். அன்பு பம்மலார் ஆரம்பித்த திரியில்தான் நடிகர் திலகத்தின் நாயகியர் தொடர் தொடங்கப்பட்டது. தற்சமயம் நடிகர் திலகம் திரி மூன்று திரிகளாக இருப்பதால் ஒவ்வொன்றிலும் பிரித்துப் போடலாமே என்ற எண்ணத்தில்தான் பார்ட் 10-இல் போட்டுள்ளேன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் வந்துள்ள தங்கள் வருகை மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தங்களுக்கும் என்னைப் போல ஜமுனாவை பிடிக்கும் என்பது மிகுந்த சந்தோஷம். தங்களுக்காக உங்களுக்கு மிகவும் பிடித்த 'அமுதை பொழியும் நிலவே!' இதோ.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=o7n8di18mT8

vasudevan31355
2nd February 2013, 08:07 AM
ஜமுனா பதிவு பற்றிய தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி வனஜா அவர்களே! திருவாளர் பார்த்தசாரதி அவர்களின் பாடல் ஆய்வை அணு அணுவாக தாங்கள் ரசித்துள்ளது தங்களின் ரசனையின் மேன்மையை நன்கு உணர்த்துகிறது. பாராட்டுக்கள்.

vasudevan31355
2nd February 2013, 08:13 AM
டியர் பார்த்தசாரதி சார்,

தங்கள் 'எல்லோரும் கொண்டாடுவோம்' பாடல் ஆய்வை இரு முறை படித்து மகிழ்ந்தேன். பிரமாதமான ஆய்வு. உங்களின் இந்த அற்புத ஆய்வுக்காக தங்களை நாங்கள் "எல்லோரும் கொண்டாடுவோம்".


http://www.youtube.com/watch?v=ruMVBLeUsEw&feature=player_detailpage#t=3s

vasudevan31355
2nd February 2013, 08:16 AM
இனிய நண்பர் காவேரி கண்ணன் அவர்களே!

தங்கள் அன்பு உள்ளத்திற்கு நன்றி! மாலை சூடும் மண நாளைக் கொடுத்து மனம் மகிழச் செய்து விட்டீர்கள். (வழக்கம் போல அழகுத் தமிழிலே) நன்றி அய்யா!

vasudevan31355
2nd February 2013, 08:45 AM
நடிகர் திலகம் திரிகள் களைகட்ட ஆரம்பித்து விட்டன. அனைத்து உறுப்பினர்களும் பங்கு கொள்ளத் துவங்கி விட்டனர். ராகவேந்திரன் சாரின் அற்புதமான அரிய பதிவுகள், பார்த்தசாரதி சாரின் பாடல் ஆய்வு, சகோதரி வனஜா அவர்களின் அழகான பதிவுகள், காவேரி கண்ணன் சாரின் சொக்க வைக்கும் தமிழ் பதிவுகள், கோபால் சாரின் கோபப் பதிவுகள், ஆதிராம் சாரின் வருகை என்று வேகம் கூட ஆரம்பித்து விட்டது. இப்படியே தொடர்ந்தால் பாகம் பதினொன்றை விரைவில் காணலாம். அதற்கு அத்துணை பெரும் தத்தம் பங்களிப்பை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. வராத உறுப்பினர்களும் அவசியம் பங்கு பெற கோரிக்கை விடுக்கிறேன். அனைவருக்கும் நன்றி!

vasudevan31355
2nd February 2013, 12:25 PM
சிஸ்டர்,

வாசு, கோபால் நட்பு இவர்களைப் போன்றது. (கண்டிக்கும் தலைவர் நானாக்கும்! How is it?)

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcS0uk-xkvKaWkMF4UtCOitUGx7vFrdVlBJLUFzrj3vacwRgLnf2

vasudevan31355
2nd February 2013, 12:31 PM
சிஸ்டர்,

உங்களுக்கு மிக விரைவில் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. இப்போது சொல்ல மாட்டேன். பாதுகாப்பு கட்டுரையை படித்து முடித்து விட்டீர்களா! நமது அருமை ஹப்பர் திரு.கார்த்திக் (எங்கே போனார்?!) அவர்களுக்கு மிகவும் பிடித்த கட்டுரை. பம்மலார் கூட அடிக்கடி என்னிடம், "எனக்கு பாதுகாப்பு அளித்த கட்டுரை" என ஜாலியாகச் சொல்வார். இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் நேரம்தான் இல்லை. ஆதிராம் சாரால்தான் நான் இழுக்கப்பட்டு இந்த திரிக்கு வந்தேன் என்றால் அதற்காக ஆதிராம் சாருக்கு என்னுடைய தேங்க்ஸ். உங்களுக்கும்தான். நன்றி அம்மா!

vasudevan31355
2nd February 2013, 12:35 PM
இறைவன் உலகத்தைப் படைத்தானாம்....
இம்சையையும் அவன்தான் படைத்தானாம்...

எந்தா சாரே! வல்லிய பிசியோ.....

kaveri kannan
2nd February 2013, 12:52 PM
மிகப்புதியவன் என்றாலும் வனஜா அவர்களின் கோரிக்கைக்கு நானும் துணையாய் என் வேண்டுதலைப் பதிகிறேன்..

தேரிழுப்போர் கால் மிதிபட்டாற்போல் வலிகள் வந்தாலும்
உற்சவர் ஊர்வலமே உள்ளமுழுதும் என்பதால்
உற்சாக ஊற்றில் வலிகள் கரைந்தோடடும்..

அன்பர் வாசு கூற்றுப்படி...
அழகு ஊர்வலம் அடுத்த வீதி ( எண் 11) விரைந்து எட்டட்டும்!

பம்மலார், இராகவேந்திரர், முரளி சீனிவாஸ், ஜோ, பார்த்தசாரதி, சாரதா, வாசுதேவன், ஆதிராம், வனஜா உள்ளிட்ட
அனைத்துப் பக்த திலகங்களுக்கும் என் வந்தனங்கள்..

adiram
2nd February 2013, 02:53 PM
என்னதான் சொல்லுங்கள் கோபக் கோபால் அண்ணா வந்தால் இந்த திரியே பரபரத்துக் களைகட்டுகிறது. ராகவேந்தர் அண்ணா அவரைக்கண்டதும் கோபாலண்ணா 'கடி' தாங்க முடியாமல் தனது திரி (வளை) க்குள் போய் ஒளிந்துவிடுவார். பின்னர் கோபாலண்ணா போனால் தான் இங்கே வருவார்.

Vanaja,

unga post padikkumpothellaam backgoundil 'narayana... narayana...' endru sound ketkirathe, why..?.

kalnayak
2nd February 2013, 04:26 PM
Vanaja,

unga post padikkumpothellaam backgoundil 'narayana... narayana...' endru sound ketkirathe, why..?.

சேச்சே எனக்கு சம்போ மகாதேவா-ன்னு தான் கேட்குது. (திருவிளையாடல்). சரஸ்வதி சபதம் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டன!!!

vasudevan31355
2nd February 2013, 07:34 PM
:shoot:
இம்சை அரசன் வருவார் உங்களுக்கெல்லாம் தரவேண்டியதைத் தருவார் :shoot:

தோசை சுடுபவர் கையில் துப்பாக்கியைக் கொடுத்து விட்டீர்களே சோதரி! என்ன கொடுமை தங்கை இது!

raagadevan
3rd February 2013, 02:12 AM
A revolution betrayed

"Just because you came around chanting names and offered flowers to the stone, would it become a god,” the protagonist of the film Parasakthi asks, mocking the audiences in 1952."

http://www.thehindu.com/news/national/a-revolution-betrayed/article4373069.ece?homepage=true

IliFiSRurdy
3rd February 2013, 01:08 PM
அன்புள்ள பார்த்தசாரதி ஸார்!

ஒரு பாடலுக்கு,இப்படி ஒரு dissection ஆ? பிரமிக்கிறேன்.வாழ்க.

ஒரு பாடலுக்கு வாயசைப்பது என்றால் என்ன என இலக்கணம் எழுதிய தொல்காப்பியர், நம் தலைவர் .

ஒரு பாடலை பாடும்போது கண்கள் அடிப்படை உணர்வை முதலிலிருந்து, முடிவு வரை பிரதிபலிக்கவேண்டும்.

உதடுகள் தேவையான அழுத்தத்தை தேவையான இடத்தில அளிக்கவேண்டும்.

வாய் திறக்கும் அளவு, கன்னத்தை அசைக்கும் அளவு இவைகளை கவனமாக கையாளவேண்டும்.

கண்களில் நீர் தேக்கி வைத்து அதை தேவையான உணர்வுடன்(ஆனந்தம்/சோகம்) சொட்டு சொட்டாக வெளியேற்றவேண்டும்.

இத்தனையும் தலைவர் செய்யக்காணலாம்.

இறைவன் அளித்த,

நவ பா(bhaa)வத்தை வெளிப்படுத்தும் நயனங்கள்,

ருமானி மாம்பழ கதுப்பு போன்ற கன்னங்கள்,

மூடினால் உயர்ந்த மனிதனையும்,பிரித்தால் உழைக்கும் மனிதனையும்,
கண் முன் கொண்டுவரும் உதடுகள்,

இப்படி ஒவ்வொரு அவயங்களும் gifted!

எல்லோரும் கொண்டாடுவோம் பாடல்..

பாடல் முழுவதும் கண்கள் சாந்தத்தை பிரதிபலிக்கும்.
மற்ற வரிகள் முழுதும் நீங்கள் விவரித்தது போல.

வந்த நாள் முதல் பாடல்..
பாடல் முழுவதும் கண்கள் கம்பீரத்தை பிரதிபலிக்கும்.

அப்படியே,அவர் கண்கள் பிரதிபலிப்பது,

ஏன் பிறந்தாய் மகனே ...இயலாமை கலந்த சோகம்.

பார் மகளே பார்...குற்ற உணர்வு கலந்த சோகம்.

போனால் போகட்டும் போடா..விரக்தி கலந்த சோகம்.

எங்கே நிம்மதி?..கோபம கலந்த சோகம்..

சோதனை மேல் சோதனை..கலப்படமற்ற 100% அக்மார்க் சோகம்..

அவர் இன்று நம்மிடையே இல்லை எனும் நினைக்கும் நமக்கோ,
இயலாமை,குற்ற உணர்வு,விரக்தி,கோபம்
கலந்த சோகம்

நன்றி.

kaveri kannan
3rd February 2013, 01:50 PM
அன்புள்ள கண்பட் அவர்களே..

கண்படுமோ எனும் அளவுக்கு நம்மவரை அலங்கரிக்கும் அழகுப்பதிவு..

உங்கள் ரசனையை ரசித்து வாழ்த்துகிறேன்..

kaveri kannan
3rd February 2013, 03:16 PM
தவறிய முத்துகள்...

கையில் இருப்பவற்றைவிட கைப்பற்ற தவறவிட்டவை மேல் ஓர் ஆற்றொணா ஏக்கம் இருக்கும்..

விந்தை மனது நமது..

அருகில் இருக்கும் மகனைவிட அயல்தேசத்தில் இருக்கும் மகனை எண்ணி நெடுமூச்செறியும் தாய்மனம் போல...

நாம் காணாமலே மறைக்கப்பட்ட - தயாரிப்பு நிலையியிலேயே முடங்கிவிட்ட பாடல்கள், படங்கள் பற்றி எப்பொழுதும் எனக்கு தனி ஏக்கம் உண்டு..

ஞாயிறும் திங்களும் - இராகவேந்திரர் அளித்த நிழற்படங்கள் - அக்கனலை இன்னும் மூட்டிவிட...

என் நினைவனல்கள்....

--------------------------------------------

என் நினைவு ஒன்றுதான் - அவன் ஒரு சரித்திரம் படத்துக்காக உருவாக்கப்பட்ட பாடல்.. ( பின்னர் அதே தயாரிப்பாளரின் பெருமைக்குரியவளில் சேர்ந்தது)

அடேயப்பா ராஜப்பா சங்கதி என்ன - வசந்தமாளிகை. வாணிஶ்ரீயுடன் இணைந்த இந்த அதிரடிப்பாடல் கண்டிருந்தால் என் கதி என்ன?????

பொம்பளயா லட்சணமா பொடவையக் கட்டு, கேட்டாயே ஒரு கேள்வி - இளைய தலைமுறை

( வாணிஶ்ரீ என்றாலே பாடல்கள் சேதாராமகும் போல...

------------------------------------------------------------------------------------

நடிகர்திலகம் ஒருவர் மட்டுமே படம் முழுதும் அவர் ஒருவர் மட்டுமே வரும் வையில் அமைந்த கதை செய்து படம் எடுக்க ஶ்ரீதர் வைத்திருந்த திட்டம்..

திப்புசுல்தான் - தஞ்சைவாணன் முயற்சியில் இராஜாஜி ஆசையை நிறைவேற்ற நடிகர்திலகம் செய்த முயற்சி..

தந்தை பெரியாராய் வாழ்ந்துகாட்டிவிட அவர் கொண்டிருந்த ஆசை..

மாடிவீட்டு ஏழை விளம்பரத்துடன் வந்து ஆசை மூட்டிய துள்ளி வருகுது வேல் விளம்பர மிரட்டல் தோற்றம்..

---------------------------------------------------

நிறைவேறாக் கனவுகளும் ஒரு வகையில் சுகமானவையே!

Gopal.s
3rd February 2013, 03:43 PM
mouses are jumping when the cat is not around!!!???

IliFiSRurdy
3rd February 2013, 04:22 PM
உண்டு பசியாற,
உலகம் வரட்டுமென்று,
கண்டு தேன் கலந்து
கறந்த பால் கறந்தபடி
கொண்டு வந்து வைத்து
கூப்பிட்டேன் வருகவென்று

பசியாற ஓடி வந்த
பத்து பேர் மத்தியிலே,
பகையாற ஒருவன் வந்த
பாவத்தை என்ன சொல்வேன்!!

IliFiSRurdy
3rd February 2013, 04:32 PM
மிக்க நன்றி காவேரிக்கண்ணன் அவர்களே..
என் விரல்களை தட்டச்சில் ஓட வைப்பது,
அதில் ஓடும் ரத்தமாகிய உங்களைப்போன்ற
சிறந்த பதிவர்கள் இடும் பதிவே..

adiram
3rd February 2013, 04:34 PM
// ஒரு பாடலுக்கு வாயசைப்பது என்றால் என்ன என இலக்கணம் எழுதிய தொல்காப்பியர், நம் தலைவர் .

ஒரு பாடலை பாடும்போது கண்கள் அடிப்படை உணர்வை முதலிலிருந்து, முடிவு வரை பிரதிபலிக்கவேண்டும்.

உதடுகள் தேவையான அழுத்தத்தை தேவையான இடத்தில அளிக்கவேண்டும்.

வாய் திறக்கும் அளவு, கன்னத்தை அசைக்கும் அளவு இவைகளை கவனமாக கையாளவேண்டும். //

"naalai pOgaamal naan iruppEnOOOOO.........OOOOOOO......OOOOOO"

(nandhanar keerthanai in Rajapart Rangadurai)

vaayasaippadhu eppadi endru ilakkanam vaguththavar.

IliFiSRurdy
3rd February 2013, 04:43 PM
To whomsover it may concern.
என் கட்சிக்காராகிய ganpat என்று பெயருள்ள ஒரு அப்பாவி,
எந்த உள்குத்துமின்றி தலைவரின் ரத்த திலகம் படத்தின் ஒரு பாடல் வரிகளை,
பிறர் கண்டு மகிழ போட்டுள்ளார்.அதில் ஒவ்வொரு வார்த்தையாக பெயர்த்து எடுத்து,
அதன் அர்த்தம என்ன தலையை தட்டியபடி யோசிப்பது சட்டப்படி குற்றமாகும்.
அதற்கு என் கட்சிக்காரர் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார் என தெரிவித்துக்கொள்கிறேன்..
இப்படிக்கு..
பாரிஸ்டர் ரஜினிகாந்த்.

kaveri kannan
3rd February 2013, 04:50 PM
கண்பட் அவர்களே

சிலவற்றை நான் எழுதினால் எப்படி இருக்கலாம் என என் மனச்சித்திரம் எழுகிறதோ
அதை விஞ்சும் பலபல பதிவுகள் இங்கே..

நீங்கள், அன்பு வாசு, முரளி ஶ்ரீனிவாஸ், சாரதா, பார்த்த- சாரதி ( நன்றி - வனஜா அவர்களுக்கு) என நான் கண்டு வியந்து ரசிக்கும் எழுத்தர்கள் அநேகம்..

அத்தனை விரல்களுக்கும் ஒரே உத்வேகர் நம் உற்சவ கணேசமூர்த்தி அல்லவா?

------------------------------------------

உங்கள் பாலமுதப் பரிமாறக் கவிதைக்கும்
பூனை உவமையுடன் வந்த கோபால் பக்தருக்கும்..


அண்ணலின் பாடல் வரிகள் சில-

அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
தடவிப்பார்த்தால் இனிக்கின்றது
தாய்மை உள்ளம் துடிக்கின்றது..


--------------------------------

கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்துபோகலாம் - வானில்
கூடிவரும் மேகங்களும் கலைந்துபோகலாம்..

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்...

adiram
3rd February 2013, 04:55 PM
Mr. PARTHASARATHY,

"ellorum kondaaduvom Allahvin peyarai solli"

"ellorum kondaadinom.. ungal arputhamaana virivaakkaththai padiththu"

you have observed each and every moment and movement of nadigarthilagam.
what an involvement you poured in each song. excellent sir.

you have capable of working for a doctorate. good.

IliFiSRurdy
3rd February 2013, 06:44 PM
மாலை வணக்கங்கள், கண் பட்டாரே

நீவிர் மறைமுகமாகப் பேசவேண்டியதில்லை. சொல்லவந்ததைச் சபையில் தாராளமாக சொல்லலாம். இங்கே சகலருக்கும் சகல உரிமைகளும் உண்டு.நீவிர் அப்பாடலை இச்சமயத்தில் போடவேண்டிய காரணமென்ன என்று தான் யோசித்தேன்..

மாலை வணக்கங்கள்,வனஜா அம்மணி!

நலந்தானா?
நலந்தானா??
உடலும் உள்ளமும் நலந்தானா?

ஏதேது,இப்போ நான்,

தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்.

என்ற வரிகளைப்போட்டால் கூட
ஆபத்து போலிருக்கே!!

kaveri kannan
3rd February 2013, 07:04 PM
அன்பு கண்பட்

சூழ்நிலைப் பாடல் மேற்கோள்வதில் மிக வல்லவர் தாங்கள். மெச்சுகிறேன் நண்பரே!

kaveri kannan
3rd February 2013, 07:08 PM
நண்பரும் பகைபோல் தெரியும் - அது
நாள்பட நாள்பட புரியும்..ம்ம்ம்ம்...!

RAGHAVENDRA
3rd February 2013, 07:38 PM
http://youtu.be/SulCj23RsIY

திகைக்க வேண்டாம் ... நீங்களெல்லாம் சொன்னது தான் ...

IliFiSRurdy
3rd February 2013, 07:39 PM
சொல்லில் வருவது பாதி நெஞ்சில்

தூங்கி கிடப்பது நீதி

அது !

:-d

kaveri kannan
3rd February 2013, 08:34 PM
அபாரம் இராகவேந்திரரே....

சோலைமலர்க்கூட்டம் சொந்தம் கொண்டாடி சிரித்து உறவாடுமே
மலைப்பனிமூட்டம் மலர்கள் இடைதோன்றி மறைத்து விளையாடுமே...

என மக்கள்திலகம் பாடல்வரிகளைப் பதிக்கலாமே என நான் எண்ணிவந்தால்..

நடிகர்திலகமே நம்மிடை வந்து ஒரே கட்சியாய் இருப்போம் எனச் சாந்தி நிலவ, புத்தர் வழி சொல்லும் மிக மிகப் பொருத்தமான சூழற்பாடல்..

எப்படிப் பாராட்ட?

பெருநூலகத்தில் தகுந்த மேற்கோள் ஏட்டைச் சட்டென எடுத்துத்தரும் சிறந்த நூலகராய் உங்களைக் காண்கிறேன்..


( இப்பாடலிலும் வாயசைவுக்கு ஒரு விரிவுரை நிகழ்த்துகிறார் நடிப்பாசான்..)

vasudevan31355
3rd February 2013, 08:44 PM
கன்பட் சார்,

'கன்பைட் காஞ்சனா' I Mean விஜயலலிதாவுக்கு பதிலடி இல்லையா? உங்களுக்கா சொல்லித் தரணும்!

kaveri kannan
3rd February 2013, 08:54 PM
http://www.mayyam.com/talk/showthread.php?8593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-9/page125

அன்பு வாசு,

வனஜா அவர்கள் சுட்டியவழி சென்று படித்து அசந்தேன் ..

என்ன ஓர் உணர்வு தோய்ந்த நினைவேடு!
இன்றும் மணக்கிறது புதிதாய்.
மென்மையாய் மனம் வருடுகிறது
புத்தக நடு மயிலிறகாய்..

பின்னர் நடிகர்திலகத்தை நேரில் வாராவாரம் சந்தித்ததாய்க் கோடிட்டுருக்கிறீர்கள்..

அவற்றை எழுதியிருந்தால் சுட்டுங்கள்...



---------------------------------------------------

தர்மம் எங்கே - பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலும் கடலூர் கழிமுகங்களில் படமாக்கப்பட்டதல்லவா?

தூரத்து இடிமுழக்கம் போல் பின்னர் கடலூர் பக்கம் படமாக்கப்பட்ட படங்கள் வணிகவெற்றி பெற்றிருந்தால்
தமிழகத்தின் சிறு கேரளமாம் கடலூர் இன்னும் படங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும்..

IliFiSRurdy
4th February 2013, 06:45 AM
வாசுதேவன் அவர்களுக்கு,
காலை வணக்கம்.
நீங்கள் தலைவரை 'பாதுகாப்பு'டன் சந்தித்த விவரங்கள் நெஞ்சை நெகிழ வைத்தது.ஒரு வீடியோ பதிவு போல நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வை விவரித்துள்ளீர்கள்.அன்னை இல்லத்திலிருந்து சுமார் 1100 மீட்டர் தொலைவில் என் இல்லம் இருந்தாலும் எனக்கு இந்த பேறு கிட்டவில்லை. ம்ம்ம் என்ன செய்வது?What I have given and kept is only that much!!
உங்களுக்கெல்லாம் தெரிந்த என் நெருங்கிய நண்பர் ஒருவர்,தலைவரை கோவை விமான நிலையத்தில் அகஸ்மாத்தாக சந்தித்து அப்படியே நெடுஞ்சாண் கிடையாக 'அவர்' காலில் விழுந்து, 'அவரை'யே தூக்கி வாரிபோடவைத்த விவரமும் சுவையாக இருக்கும்.அதன் பின் அவர், தலைவர் அருகிலிருந்த, தனக்கு சற்றும் அறிமுகம் இல்லாத, நடிகர் சரத்குமாரிடம் சொன்னதோ!!!! என்ன செய்வது அறிமுகமானவர்களை அதிகம் சோதிப்பதும் அறிமுகமாகாதவர்களை அதைவிட அதிகம் சோதிப்பதும் அவர் சுபாவம் அல்லவா!
நன்றி.

Gopal.s
4th February 2013, 07:00 AM
பகையாற ஒருவன் ??????:confused2:
பகையாக இரூவன் வந்த பாவத்தை என்ன சொல்வேன்.???!!!(தற்போது மூவர்????!!!!!!!!!!!)

Gopal.s
4th February 2013, 07:12 AM
பார்த்த சாரதி,
எல்லோரையும் கொண்டாட வைத்து விட்டீர்கள். இன்னும் எத்தனை எத்தனை பாடல்கள். நானும் உங்களுக்கு துணையாக அடுத்து,ஒரு முக்கிய பாடல் சிவகாமியின் செல்வனில் இருந்து எடுத்து விரிவாக ஆராய போகிறேன்.

கண்பட்-
இப்போது நாம் பகையாளிகள். பங்காளிகள். கோர்ட்லே சந்திப்போம். பூனைக்கு தோழனாய் இருப்பதை விட்டு விட்டு......... ஹூம். எடுத்து கொண்ட காரியத்தின் தன்மை அப்படி,அப்படி பொய் யுடம்பு போர்த்த தூண்டியுள்ளது உம்மை.

காவேரி கண்ணன்,
மிக அற்புதமாய் உள்ளன. தொடர்ந்து விரிவாக எழுதுங்கள். தாங்கள் உயர்ந்த மனிதனுக்கு எழுதிய அம்சத்தை பாகம் பத்தில் எனது விமரிசனத்தில் சுட்டி காட்டியுள்ளேன். பக்கம் 91 என்று ஞாபகம்.http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10/page91

வாசு
எப்படி தலைவருக்கு இவ்வளவு இழிவு நேர்ந்த போதும் சும்மாயுள்ளார் வேந்தர்? ஓஹோஹோ ,இழிவு படுத்த உலக உரிமை போலும்.(உனக்காக நான்!!!!). தங்கள் பாதுகாப்புக்கு நானும் உடன் வருகிறேன்.

vasudevan31355
4th February 2013, 07:25 AM
பார்த்த சாரதி,
எல்லோரையும் கொண்டாட வைத்து விட்டீர்கள். இன்னும் எத்தனை எத்தனை பாடல்கள். நானும் உங்களுக்கு துணையாக அடுத்து,ஒரு முக்கிய பாடல் சிவகாமியின் செல்வனில் இருந்து எடுத்து விரிவாக ஆராய போகிறேன்.



அய்யய்யோ...போச்சுடா

IliFiSRurdy
4th February 2013, 07:34 AM
ஹே...ஹே

நாங்க கழகங்களோட சேர்ந்து பொறந்து வளர்ந்தவங்க இல்ல!

எப்போ பூனைக்கு தோழனா இருக்கணும் எப்போ பாலுக்கு காவலா இருக்கணும் என்பதெல்லாம் அத்துபடி இல்ல!!

ரொம்ப தொந்தரவு கொடுத்தீங்கனா,

நான் தமிழகத்தை விட்டு போய் விடுவேன் என ஒரு ப்ரெஸ் மீட்டிலோ,

வியட்நாமில் ஒரு தீவிரவாதி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று போலீசிடமோ

சொல்லிடுவோமில்ல!

ஏதோ போனோமா, நூல வித்தோமா,ரெண்டு காசு சேர்த்தோமா ன்னு இருங்கப்பூ!!

அத விட்டுபூட்டூ....

vasudevan31355
4th February 2013, 07:50 AM
அது என்ன பாட்டு என்று எனக்குத் தெரியும்:smokesmirk:

என்னவோ உங்களுக்கு மட்டும் தெரிந்தா மாதிரி சொல்றீங்க... அது ஒலகத்துக்கே தெரிந்த மேட்டராச்சே!

vasudevan31355
4th February 2013, 07:53 AM
கோ... ஒழியுது... அனுபவிச்சுட்டுப் போ.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-sY-0RpKWBM

Gopal.s
4th February 2013, 07:59 AM
பாலுக்கு காவலாய் இல்லை.எலிகளுக்கு தோழனாய் ,பொய் யுடம்பு போர்த்தியுள்ளீ ர்கள்.
மசால் வடைக்கு ஆசை பட்டு பொறியில் சிக்குவீர்கள் . மசால் வடையில் சிக்காவிட்டால் பூனை.....ஹா ஹா ஹா ,விருந்து காத்திருக்கிறது.

Gopal.s
4th February 2013, 08:01 AM
ஆஹா, ஒரே பதிவில் என்னை சாந்த படுத்தி,அனைவரையும் காத்து விட்டாயே நண்பா??!!!
எல்லோருக்கும் ,இன்று பொது மன்னிப்பு வழங்க படுகிறது.

vasudevan31355
4th February 2013, 08:18 AM
ஆஹா, ஒரே பதிவில் என்னை சாந்த படுத்தி,அனைவரையும் காத்து விட்டாயே நண்பா??!!!
எல்லோருக்கும் ,இன்று பொது மன்னிப்பு வழங்க படுகிறது.

எந்த சாட்டையை எடுத்தா புலி (பெரிய புலி!) அடங்குமுன்னு எனக்குத் தெரியாதா!

vasudevan31355
4th February 2013, 08:19 AM
ஆஹா, ஒரே பதிவில் என்னை சாந்த படுத்தி,அனைவரையும் காத்து விட்டாயே நண்பா??!!!
எல்லோருக்கும் ,இன்று பொது மன்னிப்பு வழங்க படுகிறது.

கோ,

நிஜமாகவே மனமார ரசித்து சிரித்தேன்.

vasudevan31355
4th February 2013, 08:21 AM
கோ,

அழித்தல் உனது தொழில். காத்தல் எமது தொழில்.

vasudevan31355
4th February 2013, 08:29 AM
சின்னப்புலி யார்?

அப்படி அல்ல. பெரிய்ய்..............ய புலி என்று கலாய்ப்போமே... அப்படி.

Gopal.s
4th February 2013, 08:45 AM
கோ,

அழித்தல் உனது தொழில். காத்தல் எமது தொழில்.

அழித்தல் சிவனின் தொழில். NT பக்தர்கள் அனைவரும் சிவனை தொழும் அடியவர்கள். காத்தல் தொழில் என்று confess செய்து, நீ மாற்று முகாமை சேர்ந்தவன் என்று காட்டி விட்டாய்.

vasudevan31355
4th February 2013, 09:01 AM
அழித்தல் சிவனின் தொழில். NT பக்தர்கள் அனைவரும் சிவனை தொழும் அடியவர்கள். காத்தல் தொழில் என்று confess செய்து, நீ மாற்று முகாமை சேர்ந்தவன் என்று காட்டி விட்டாய்.

மாற்றுமுகாம் மொத்திலிருந்து உன்னைக் காத்தவனும் நானே! நன்றி மறக்காதே. சிஸ்டருக்கு தெரிய வைக்காதே.

Gopal.s
4th February 2013, 09:22 AM
சரி சரி ,விஷயத்துக்கு வருவோம்.

நேற்று ஒலி பரப்ப பட்ட , முப்பெரும் விழா(வசந்த் குமார்)வில், குமரி அனந்தன் நம் தலைவரை நினைவு கூர்ந்த விதம் அருமை.(பெருந்தலைவரின் கடைசி வாழ்த்து)

சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர், நம் தலைவரை பற்றி மிக சிலாகித்து பேசினார் வின் டிவி யில் உலக சினிமா பற்றி பேசும் போது .

(தலைவரின் unofficial P .R .O வாக , கர்ணனை பற்றி sify ,behind woods எழுதியது, cablesankar எழுதியது,only super star sundar, RP .Rajanyahem எழுதியது, இப்போது சாரு -இந்த அணிலின் பங்கு சிறிதாவது உண்டு.)

Gopal.s
4th February 2013, 10:00 AM
:(நீங்கள் இன்னும் nt ஐ சந்தித்தது பற்றி சொல்லவில்லையே!
எங்கள் நடிப்பு தெய்வத்தின் அவதார நாள்- எங்கள் திருவிழா இன்றுதான்.

கணினி வருமுன்னே கடவுச்சொல் எங்களுக்கு உண்டு. சிவாஜி என்ற பெயர் மட்டுமே உயர் நட்புக்கான கடவு சொல். இன்று வரை மாறா கடவு சொல்.

அவ்வப்பொழுது காங்கிரஸ் மேடைகளில் ,முக்கிய தலைவர்கள் வருமுன் முழங்கியதுண்டு மாணவர் அணி சார்பில்.பெருந்தலைவரிடம் என்னை கொண்டு சேர்த்தவர்கள் பெரியாரும்(பச்சை தமிழன்),நடிகர் திலகமும் ஆவர். தலைவர்(nt) பிரசார கூட்டத்துக்கு வருகிறார் என்றதும் ,முட்டி மோதி ,குட்டி தலைவர்களின் தயவால் முக்கிய இடத்தில் நின்று தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம்.ஒரு 8 நண்பர்கள். என் இதயத்தை இந்த மாபெரும்நடிகனிடம் ஆறு வயதில் தொலைத்து விட்டேன். என் இதயத்தை நானே காண ஆவலுடன் நின்றேன். ஆறு என்று சொல்லி ஆறு மணிக்கே வந்த அதிசய தலைவன்.

பாய்ந்து பாய்ந்து நாங்கள் கேட்டு மகிழ்ந்த சிம்மக்குரல் ,அன்று என் செவியை எட்டாததற்கு நீயே பொறுப்பு.உன்னை தரிசித்த பிரமிப்பு.நீதான் எத்தனை ஆண்மை நிறை திராவிட அழகன்?

பிறகு நீ ஒரு விருந்தினர் மாளிகையில் சிறு ஓய்வுக்கு வருகிறாய் என்றறிந்து உன்னை நெருக்கமாய் நேரின் காண ஓடி வந்தோம். வந்தாய் நீ. கலைந்த தலையோடு.வேர்வை படிந்த உடையோடு. ஓய்வெடுத்து ,எங்களை காண்பாய் என்று எண்ணியதற்கு மாறாய்,நேராய் எங்களிடம் வந்தாய். நீங்கெல்லாம் படிக்கிற பசங்க. ஏம்பா நேரத்தை வீண் பண்றீங்க? போங்க. எனைத்தான் சினிமாவில் பார்க்கிறீர்களே? என்று என்னை பார்த்து உன்னை பார்த்தால் பார்ப்பன பையன் மாதிரி இருக்கியே? நீங்கள்ளான் கூடவா? போங்க.போங்க. என்றார்.

அந்த ஞான தந்தையின் ஆசியால் இன்று நான் நன்கு படித்து முன்னேறியுள்ளேன். இதுதான் இந்தியாவின் தேசிய தலைமை பண்பாக இருந்திருக்க வேண்டுமோ?

Gopal.s
4th February 2013, 10:12 AM
Fantastic, I envy you! what about the airport story?
அடுத்து, நான் தாய்லாந்தில் வேலை புரிந்த போது , ஒரு வியாபார விஷயமாய் கோவை சென்று கொண்டிருந்தேன். விமான நிலையத்தில், ஒரு இன்ப அதிர்ச்சியாய் ,நடிகர்திலகம் தன துணைவியாருடன். கிடுகிடுவென்று முன்னேறி போய் ,அவர் வந்து கொண்டிருக்கும் போதே பேச நா எழாமல், சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினேன்.(பொதுவாக நான் சுத்த காரன்.கோவிலில் கூட விழுந்தெ ல்லாம் வணங்க மாட்டேன் அழுக்கு படுமென்று)

ஆனந்தத்தில் கண்ணில் நீர் முட்டி நின்றது. வாழ்நாளெல்லாம்,என்னை மகிழ்வித்த(இன்னும் மகிழ்வித்து கொண்டிருக்கும்),என் வாழ்நாளின் 15% ஆவதையாவது ஆக்ரமிக்கும் மேதைக்கு,நான் செலுத்திய முதல் மரியாதை. ஆனால் ,இறுதி மரியாதை செலுத்த இயலாமல் போன தருணத்தில்,என் சார்பில் என் நண்பர் அந்த கடனை நிறைவேற்றினார்.

அதே விமானத்தில் ஏற அன்று சரத், குமரி அனந்தன்.

Gopal.s
4th February 2013, 10:28 AM
அன்று அந்த மேதையிடம் என்னை கவர்ந்த விடயம்.(சகோதரியின் influence )
விமானத்தில் ஏற சொல்லி விட்டு,திடீரென்று technical problem என்று இறங்க சொன்னார்கள்.
வேதனையோடு, அருகில் இருந்த எங்களுடன் ஏறுவதற்கு முன்னாலேயே இதையெல்லாம் check செய்ய மாட்டார்களா? என்று நொந்தார். பிறகு,ஒரு வெளிநாட்டு காரர் அங்கிருப்பதை சுட்டி, நம்மை பற்றி அவர்களெல்லாம் என்ன நினைப்பார்கள் என்று வருந்தினார். அவருடைய perfection நாடும் இயல்பு,நாட்டு அக்கறை எல்லாம் வெளிப்பட்டது மிக இயல்பாக.
அப்போது, சரத் காங்கிரஸில் சேர இருப்பதாக வதந்தி. சரத்துடன் ,குமரி ஆனந்தனை சுட்டி, இவங்களை நம்பியா போற , என்னை பார்த்தும் அவ்ளோ நம்பிக்கையா என்று இயல்பாக கலாய்த்தார்.அதற்கு முந்திய தினமே, சரத்தை ஒரு fivestar hotel restaurant இல் சந்தித்து பேசி கொண்டிருந்ததால், பொதுவாக பேசி கொண்டிருந்தோம், ஒருவரையொருவர் அடையாளம் கண்டு.

Gopal.s
4th February 2013, 10:47 AM
நான பொதுவாகவே கடின மனது காரன்.(sense of humour வேறு விஷயம்).எதற்கும் சாப்பாட்டை ஒரு வேளை கூட துறக்காதவன். ஜூலை 21,2001. இந்தியன் அம்பாசடரின் பிரத்யேக அழைப்பாளியாக சிலர் விருந்திற்கு சென்றிருந்தோம்(ஜகார்தாவில்). வழக்கமாக, ஸ்டார் conversationist ஆக lead எடுத்து entertain செய்யும் நான் அலை பாயும் மனதுடன் அரை மனதாகவே கலந்து கொண்டேன். சீக்கரமாகவே வீட்டிற்கு வந்தால் ஒரு phone call .டிவி பார்த்தாயா என்று. டிவி பார்த்ததுமே செய்தி கிடைத்தது.
பிறகு ,ஐந்து நாட்களாய் சுற்றியிருந்த எதிலும் நாட்டமின்றி , தூக்கம்,சாப்பாடு எல்லாம் முற்றிலும் துறந்து கதறி சோர்ந்து, இனி தமிழுக்கும்,தமிழ் நாட்டுக்குமே எனக்கிருந்த பந்தம் அறுந்ததான பிரமை. என் மனைவி,குழந்தைகள் என் வலியறிந்து,தேற்ற கூட முடியாமல் அவதியுற்றனர். யூ.எஸ்.,கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ்,இந்தியா என்று எல்லா இடத்திலிருந்தும் நண்பர்களின் கதறலுடன் துக்க விசாரிப்புகள்.ஜகார்தாவில், மற்ற ரசிகர்கள்,தமிழ் மன்றத்தை சார்ந்தவர்கள்,(ஏன் என் மனமறிந்த பெங்காலி,காஷ்மிரி,யூ.பீ நண்பர்களும் செய்தி பார்த்து விட்டு) வீட்டிற்கே வந்து துக்கத்தை பகிர்ந்தனர்.
எப்படி மீண்டேன் என்று எனக்கே புதிர். அப்படி ஒரு இழப்பின் வலி யை நான் உணர்ந்ததே இல்லை,இன்று வரை.

parthasarathy
4th February 2013, 11:34 AM
அன்புள்ள திருவாளர்கள். ராகவேந்தர், நெய்வேலி வாசுதேவன், கோபால், ராதாகிருஷ்ணன், காவேரி கண்ணன், வாசுதேவன், சந்திரசேகர், கண்பட், ஆதிராம் மற்றும் வனஜா மேடம் அவர்களே,

எனது "எல்லோரும் கொண்டாடுவோம்" பாடல் ஆய்வைக் கொண்டாடிய உங்கள் எல்லோருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

தங்கள் எல்லோருடைய ஊக்கமும், நடிகர் திலகத்தின் ஆளுமையும், என்னை மேலும் மேலும் எழுத வைக்கும்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
4th February 2013, 05:41 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் வெளி வந்த பாடல்கள் (தொடர்ச்சி...)

8. "எங்கே நிம்மதி" படம்:- புதிய பறவை (1964); பாடல்: கவியரசு கண்ணதாசன்; பாடியவர்கள்:- டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழுவினர்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- தாதா மிராசி; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் சரோஜா தேவி.
இந்தப் பாடல் தமிழ்த் திரையுலகுக்கு மிகவும் புதிய முறையில் அளிக்கப் பட்ட பாடல். பொதுவாக, கனவுப் பாடல்கள் பெரும்பாலும் டூயட்டுகளாகவே இருக்கும் நிலையில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்கள் அவனை நிம்மதி இல்லாத மன நிலைக்கு இட்டுச் செல்ல, அவன் நனவுலகத்திலிருந்து விலகி, கனவுலகத்திற்குச் சென்று அங்கும் அல்லல் படுவதை, ஒரு வகை "fantasy " என்று சொல்லக் கூடிய முறையில் எடுத்திருப்பார்கள்.

இதற்கு முன்னரே, "நிச்சய தாம்பூலம்" படத்தில், "படைத்தானே" பாடலில் இந்த முறையை நடிகர் திலகம் சிறப்பாகக் கையாண்டிருந்தாலும், அந்தப் பாடலை விட, "எங்கே நிம்மதி" பாடலை இன்னமும் செம்மைப் படுத்தியிருந்ததால், இந்தப் பாடலை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன்.

இந்தப் பாடலின் பல்லவியான "எங்கே நிம்மதி" வரிகள் முதலில் கவியரசருக்குக் கிடைக்கவில்லை எனவும், கவியரசு, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மற்றும் நடிகர் திலகம் மூவரும் பாடல் எடுப்பதற்கான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்த பின்னரும் அந்த முதல் வரி எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை என்று ஏமாற்றத்துடன் (ஏனென்றால், கவியரசு எப்போதுமே முதல் வரியிலேயே மொத்தப் பாடலின் காலத்திற்கு அவரும் சென்று கேட்பவரையும் அழைத்துச் சென்று விடுவார், நடிகர் திலகம் நடிப்பில் காட்டுவது போல் - "கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே" என்று ஒரு கரிய நிறம் கொண்ட பெண்ணின் இறைவன் கண்ணனை நோக்கிய முறையீட்டில் தந்தவர். இது ஒரு சிறிய ஒரு உதாரணம். இது போல் பல உதாரணங்கள் கூறலாம்.), வீடு சென்றதாகவும், நள்ளிரவில், திடீரென்று நடிகர் திலகமே, அந்த வரிகள் மனதில் வரப் பெற்று, மற்ற இருவருக்கும் தொலைபேசி செய்து, அன்றிரவே, பாடலைப் பதிவு செய்ததாகவும் பல வருடங்களுக்கு முன்னர் படித்திருக்கிறேன். பொதுவாக, நடிகர் திலகம் பிற துறைகளில் அதீதமாகத் தலையிட மாட்டார் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வார்கள் என்றாலும் இந்தக் கூற்று உண்மையல்ல. இந்தப் பாடலே அதற்கு உதாரணம். இது போல் பல படங்களைச் சொல்லலாம். அவர் அதீதமாகத் தலையிட மாட்டாரே தவிர, படம் முழுமையாக வர, அவரது ஆலோசனைகளை வழங்கி, முழு ஈடுபாட்டினையும் காட்டித்தான் வந்திருக்கிறார் - சக கலைஞர்களின் பங்களிப்பையும் பட்டை தீட்டுவது உட்பட.

இந்தப் பாடல் பல ஆண்டுகள், உலகின் எந்த மூலையில் மெல்லிசைக் கச்சேரி நடந்தாலும் மறக்காமல் முயற்சி செய்து பாடப்பட்ட பாடல். இன்றும் இது தொடர்கிறது. மெல்லிசை மன்னர்களின் மிகச் சிறப்பான டியூனும், எண்ணற்ற வாத்தியக் கருவிகளின் ஆர்ப்பரிப்பும், இன்றளவும் ஒவ்வொரு இசையமைப்பாளரையும் இன்னமும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பாடல் வரிகளோ கேட்கவே வேண்டாம். முக்கியமாக, "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே" சிரஞ்சீவித்தன்மை பெற்ற வரிகள். டி.எம்.எஸ்ஸின் அற்புதப் பங்களிப்பில், பாடல் எடுக்கப்பட்ட விதமும், அதில் நடித்த அனைத்து கலைஞர்களின் நடிப்பும் இன்றளவும் புதிதாகத் தோற்றமளிக்கிறது.

இப்போது, நடிகர் திலகத்தின் வித்தியாசமான முயற்சிக்கு வருவோம். இந்தப் படத்தை முதலில் பார்த்தபோது, நடிகர் திலகம் அவருடைய முயற்சியில் தோற்று (சௌகாரின் கை ரேகையை பிரதி எடுக்க முயன்று தோற்று, நடிக வேள் எம்.ஆர். இராதாவால் மேலும் மனம் உடைந்து போயிருப்பார்) மிகுந்த மன உளைச்சலுடன் படுக்கையில் புரளுவார் - "என் நிம்மதியே போய்டும் போலிருக்கே!" - அப்போதே, திரை அரங்கம் ஆர்ப்பரிக்கத் துவங்கி விட்டது. அப்போதே எனக்கும் விளங்கி விட்டது - படத்தின் மிக முக்கியமான highlight பாடலான "எங்கே நிம்மதி" வரப் போகிறதென்று.

இந்தப் பாடல் முழுக்க நடிகர் திலகத்தின் உடல் மொழி கொடி கட்டிப் பறக்கும். பாடல் முழுவதிலும், அவரது கைகளும், கால்களும் காண்பிக்கும் அபிநயங்களை வேறெந்த நடிகன் முயற்சித்திருந்தாலும், நகைப்புக்கிடமாகத்தான் போயிருக்கும். எந்த விஷயத்தையும் பரீட்சித்துப் பார்ப்பதில் (சோதனை முயற்சி சில முறை ஜெயிக்கலாம் சில முறை தோற்கலாம். ஆனால் அதைப் பற்றி என்றுமே கவலைப் படாமல், கடைசி படம் வரை, வித்தியாசப் படுத்தி நடிப்பதில் பிடிவாதம் காட்டியவரல்லவா?) முனைப்பு காட்டும் நடிகர் திலகம் இந்த முறை, ஏற்கனவே "படைத்தானே" பாடலில் செய்த சோதனை முயற்சியை விட பல படிகள் முன்னே போய், அவரது நம்பிக்கைக்குரிய குழுவின் மூலம் (கவியரசு/டி.எம்.எஸ்./மெல்லிசை மன்னர்கள் - "படைத்தானே"வும் இதே குழு தான்!) ஒரு பரீட்சார்த்த பாடல் முயற்சியை செய்திருப்பார்.

அந்த மெல்லிய வெள்ளை சட்டை, முழங்கைக்கு மேல் மடித்து விட்ட விதம், அந்த வெளிர் நீல பாண்ட், சரியாக சவரம் செய்யப்படாத முகம் - இவைகளை மட்டும் வைத்துக் கொண்டே, துவக்கத்திலேயே, அந்தப்பாடலின் சூழலுக்கு உடனேயே சென்று, பார்க்கும் அனைவரையும் இழுத்துச் சென்று விடுவார் வழக்கம் போல்.

பாடல் துவங்கி கேமரா கீழே படுத்துக் கொண்டிருக்கும் அவர் மீது zoom செய்யப் பட, கோரஸில், பலர் "ஒ..." என்று கூவத் துவங்கும்போதே, அவர் எச்சிலை மிடறு விழுங்கி அந்தச் சூழலின் பயங்கரத்தைக் காண்பிப்பார். உடனே தொடரும் ஒரு அதிரடி இசைக்கு சட்டென பின்னோக்கி நடக்கும் போது அரங்கம் அதிரத் துவங்கும்.

"எங்கே நிம்மதி" எனப் பல்லவி பாடும் போது, இரண்டு கைகளையும் ஒரு விதமாக relaxed - ஆக stretch செய்து, மிகுந்த மன உளைச்சலில் இருப்பவனின் ஆயாச உணர்வினை எடுத்துக் காட்டும் விதம் பிரமிக்க வைக்கும்; கூடவே அரங்கமும் அதிரும்.

பல்லவி முடிந்தவுடன் சௌகார் மற்றவர்கள் சகிதம் வந்து அவரை இம்சை செய்யத் துவங்கியவுடன், அந்த இம்சையை எதிர் கொள்ளும் விதம்!

இப்போது சிறிய சரணம். அந்தக் கூட்டத்திடமிருந்து விலகி ஓடி வந்து, வலது கையை மட்டும் ஸ்டைலாக மேலே பின்னோக்கித் தூக்கி "எங்கே மனிதன் யாரில்லையோ" என்று சொல்லி இப்போது இடது கையைத் இலேசாக மேலே தூக்கி "அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று பாடுவார். இதற்கும் அரங்கம் அதிரும்!

இப்போது சரணம். "எனது கைகள்" எனும்போது, இடது கையை மேலே தூக்கி, "மீட்டும் போது வீணை அழுகின்றது" எனும் போது வலது கையை இடது கை அருகாமையில் கொண்டு சென்று வீணை போல் மீட்டி, "எனது கைகள் தழுவும் போது" என்று கூறும் போது, கைகளை உடனே X (எக்ஸ்) போல் ஆக்கி, தழுவுவது போல் வித்தியாசமாய்க் கைகளைக் கையாண்டிருப்பார். பொதுவாகத் தழுவுவது என்பது கைகளை நேரிடையாகத் தழுவுவது போல் தான் வரும். இருப்பினும் அதற்கு முன்னர் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு வீணை வாசிக்கும் பாவனையைக் காட்டிக் கொண்டே, அதே கோணத்தில், எதிரிடையாக X (எக்ஸ்) குறியில், தழுவும் பாவனையைக் காண்பித்திருப்பார். (ஆங்கிலத்தில், follow through என்று கூறுவார்களே, அது தான் இந்த நடிகர் திலகத்திடம் எத்தனை முறை பாடம் காண்பிக்கப்பட்டிருக்கிறது!) அப்படியே, பின்னோக்கிப் போய்க் கொண்டே "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே; ஓ! இறைவன் கொடியவனே" எனும் போது மேலே தூக்கிய இரண்டு கைகளையும் சட்டென்று கீழே இறக்கி "இறைவன் கொடியவனே" என்று சரியான follow through முறையில் கீழே கொஞ்சம் வேகமாகவும், ஒரு வித அலுப்பு கலந்த வன்மையோடும் கீழே இறக்கி அந்த வரிகளுக்கு அதாவது "இறைவன் கொடியவனே" என்ற அந்த வரிகளுக்குரிய வன்மையைக் காட்டியிருப்பார்.

முதல் சிறிய சரணம் முடிந்து அனு பல்லவியில் "எங்கே நிம்மதி...எங்கே நிம்மதி...அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று அந்த மேல் நோக்கிச் செல்லும் வழியில் ஏறும் போது, அலுப்பையும் ஆயாசத்தையும் நடையில் காட்டிய நடிப்புலக மன்னர் மன்னன், இந்த இரண்டாம் சரணம் முடிந்து - அதாவது "எனது கைகள் மீட்டும் போது..." என்கிற சரணம் - ஒரு வித வேகத்துடன் "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி" என்று இரு புறமும் திரும்பித் திரும்பி நடித்திருப்பார் - ஏன்? முதல் முறை, ஆயாசத்தையும், இரண்டாவது முறை, வேகத்தையும், பாடிய டி.எம்.எஸ். தந்ததால்!

மூன்றாவது சரணம் - "பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே" சரோஜா தேவி அருகில் வந்ததும், பாலைவனத்தில் சோலையைக் கண்ட மன நிலையுடன், ஒரு வித ஆயாசம் கலந்த relief-உடன் சென்று, அவரை முழுமையாகத் தழுவாமல், "உன்னிடம் தஞ்சம் புகுந்தேன்" என்ற மன நிலையில் கண்ணியத்துடன் தழுவி நடந்தவுடன், திரும்பவும் "பழைய பறவை போல ஒன்று" என்று அதே சரணம் இரண்டாவது முறை வரும் போது, உள்ளே இருந்து சௌகார் வேகமாக வந்தவுடன், அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து, ஸ்டைலாக பின்னோக்கி செல்லும்போது, மீண்டும் அரங்கம் அதிரும்! மறுபடியும் சரோஜா தேவி வந்தவுடன், "என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே என்று வேதனையுடன் (அளவான) கூறி அப்படியே கீழே உட்கார்ந்து, அவரது மடியில் படுத்து, "இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே" என்று கூறி, "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?" என்று படுத்துக் கொண்டு சரோஜா தேவியைப் பார்க்கும் போது, அப்போது தான் முதன் முறையாக அவரது முகத்தில், ஒரு வித relief தெரியும்! சௌகாரின் இம்சை போய், காதலி சரோஜா தேவியைப் பார்த்த திருப்தியில்!

மீண்டும் அனு பல்லவி துவங்கி, பலர் சௌகாருடன் சேர்ந்து அவரை இம்சித்து, அப்படியே, நடிகர் திலகம் சௌகாரின் பிடியில் freeze ஆகி நிற்பது போல் முடியும்.

நடிகர் திலகம் வேறொரு உலகத்திற்குச் சென்று, பார்க்கும் எல்லோரையும் அந்த உலகிற்கு அழைத்துச் சென்றிருப்பார்! பாடல் முடிந்து, நனவுலகதிற்குச் சென்று மீண்டும், அவரது முகம் க்ளோசப்பில் காட்டப்படும் போது, அவர் முகத்தில் தெரியும் ஆயாசம் கலந்த அதிர்ச்சி நம்மையும் தொற்றியிருக்கும்!!

அந்தப் பாடல் முடியும் போது இருக்கும் shot - சௌகாரின் பிடியில் freeze -ஆகி நிற்கும் காட்சி - ஆங்கில நாடகங்களில் பாலே போன்ற நடன நாடகங்களின் inspiration தெரியும்! இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும், பாடலும் (இந்தப் பாடலையும் சேர்த்து!), அரங்க அமைப்பும், நடை/உடை/பாவனைகளும், களமும், கலைஞர்களின் உழைப்பும் (நடிகர் திலகம் துவங்கி), ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இருக்கும்.

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னரே, "ahead of times" என்று கூறிய, இன்றும், படத்தைப் பார்ப்பவர்கள் (இன்றைய தலைமுறையினர் உட்பட) வாய் பிளந்து அதிசயிக்கும் இந்தப் படத்தை, almost ghost direct செய்தது நடிகர் திலகமே தான் என்று கூறுவார்கள். பின் எப்படி, அவருக்கு சினிமா என்ற ஊடகத்தில், பிற துறைகள் அந்த அளவிற்குத் தெரியாது என்று சொல்லப் போயிற்று?!!!!

தொடரும்,

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
4th February 2013, 06:04 PM
அன்புள்ள காவேரி கண்ணன் அவர்களே,

தங்கள் கவித்திறன் மெய் சிலிர்க்க வைக்கிறது. தங்களிடம் மேலும் நிறைய எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து எங்களை தமிழின் மழையில் நனைத்திடுங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி



அன்புள்ள கண்பட் அவர்களே,

தங்கள் தமிழ்த் திறம் இந்தத் திரியை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. தாங்களும், திரு. காவேரி கண்ணனும் தமிழ்ப் புலமையில் மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள்.

தொடர்ந்து எல்லோரையும் மகிழ்வியுங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
4th February 2013, 06:33 PM
அன்புள்ள திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்களே,

"தங்களுடைய "பார்வை யுவராணி கண்ணோவியம்" பாடல் பதிவு மிகச் சிறப்பாக இருந்தது. நடிகர் திலகத்தின் இளமை துள்ளும் அழகும், உடல் மொழியும் ஒருங்கே அமைந்த, எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

தொடருங்கள்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி



அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

நடிகர் திலகத்துடன் நேரிடையாக சங்கமித்த தங்கள் அனுபவங்கள் உணர்ச்சிக் குவியலாக இருந்தது.

இன்று பேசும் போது, அவரது உடல் மொழி ஆராய்ச்சியைத் தொடரச் சொன்னீர்கள். அவரது ஒவ்வொரு பாடலின் அங்க அசைவை நான் பாடல் வாரியாகப் பத்தி பத்தியாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது, எங்ஙனம் உடல் மொழியைத் தனியாக ஆய்வு செய்வது? அதற்கு எங்கே நடிகர் திலகம் வாய்ப்பளிக்கிறார்? ஏதோ அவர் பாட்டுக்கு நடித்து விட்டுப் போய் விட்டார் பார்க்கும் நமக்குத் தானே மலைப்பாக இருக்கிறது?

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

IliFiSRurdy
4th February 2013, 07:24 PM
நான பொதுவாகவே கடின மனது காரன்.(sense of humour வேறு விஷயம்).......... அப்படி ஒரு இழப்பின் வலி யை நான் உணர்ந்ததே இல்லை,இன்று வரை.

இன்று எங்களூரில் கும்ப மேளா என்பதால் காலை சீக்கிரம் எழுந்து நண்பர் வாசுவின் "பாதுகாப்பு" பதிவிற்கு என் பதிலை போடும்போதே 'அந்த நாளை' பற்றியும் எழுத நினைத்து, எதற்கு இதை அதிகாலையில் தொட்டு எல்லார் moodஐ யும் கெடுக்கவேண்டும் என நிறுத்தி விட்டேன்.

ஆனால் கோபால் ஸார்!உங்கள் பதிவு என்னை மீண்டும் உசுப்பி விட்டது.

நான் முதன் முதலில் அன்னை இல்லத்தில் நுழைந்த நாள் அது.
கூட என் தங்கை.காலை சுமார் பத்து மணி.
ரசிகர்கள் வரிசை நீண்டு இருக்க,நாங்கள் இருவரும் VIP நுழைவில் உள்ளே சென்று விட்டோம்.

எங்களை வரவேற்க வாசலிலேயே தலைவர்..
மனம் நடுங்குகிறது..
என்ன நிரம்ப களைப்போ? ..
உறங்கி கொண்டிருக்கிறார்.ஆனால்...ஆனால் ..
ஏன் கண்ணாடி பெட்டியில்?..
ஒரு சிறு நப்பாசை..நடிப்பின் இலக்கணம் அவர்..
ஒருவேளை இதுவும் ஒரு நடிப்போ?
அதை எப்படி முடிப்பது?
மேலும் 'கட்' என்று சொல்லவேண்டிய பல டைரக்டர்களே அங்கு அழுதவண்ணம் உள்ளனரே?

பிரபுவின் கையைப்பற்றுகிறேன்..என்ன சொல்வது?.
அவர் என் தோளைத்தொட்டு சமாதானப்படுத்துகிறார்.
ஆயிற்று தலைவரின் ஸ்பரிசமும் கிட்டியாகிவிட்டது..

வெளியே வருகிறேன்..
ஒரு ஓரமாக ஒரு செடியின் பக்கம் நின்றவாறு யாரோ ஒரு இளைஞர் (வயது சுமார் 30 இருக்கும் )..
எதையும் லட்சியம் செய்யாது ,...
கதறிக்கொண்டிருக்கிறார்.

ஆயிற்று ,ஆண்டுகள் பன்னிரண்டு..ஆனால் அந்த நாள்?? எப்படி மறப்பேன்?

IliFiSRurdy
4th February 2013, 07:29 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் வெளி வந்த பாடல்கள் (தொடர்ச்சி...)

8. "எங்கே நிம்மதி" படம்:- புதிய பறவை (1964); பாடல்: கவியரசு கண்ணதாசன்; பாடியவர்கள்:- டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழுவினர்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- தாதா மிராசி; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் சரோஜா தேவி.
.................................................. ...............................................
அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

Dear Dr.Parthasarathy,Ph.D

Well I think I have said all!

I remain,

Yours
Ganpat

RAGHAVENDRA
4th February 2013, 07:50 PM
டியர் சாரதி சார்,
ஒவ்வொரு சிவாஜி ரசிகர் நெஞ்சிலும் உணர்வுகளோடு கலந்து விட்ட பாடலைத் தங்களுக்கே உரிய புதிய பரிணாமத்தில் ஆய்வு செய்யும் பாணியில் எழுதி, இப்பாடலின் சிறப்பினை இதுவரை காணாத புதிய கண்ணோட்டத்தில் எங்களையெல்லாம் பார்க்க வைத்துள்ளீர்கள். தாங்கள் கூறியது போல் இப்பாடலில் பங்கு பெற்றுள்ள ஒவ்வொரு கலைஞருக்கும் பாராட்டுக்கள் சேர வேண்டும். திரைப்படத்தின் ஒவ்வொரு துறையிலும் நன்கு பரிச்சயம் இருந்தாலும் அந்தந்த கலைஞர்களின் திறமைக்கு மரியாதை கொடுத்து ஒத்துழைக்கும் மிகச் சிறந்த கலைஞர் நடிகர் திலகம்.

இப்படி இப்பாடலில் உள்ள சிறப்பினை சாரதி கூறிய கண்ணோட்டத்தில் நாம் பார்ப்போம். புதிய தகவல்கள் அதில் புதைந்துள்ளன.


http://youtu.be/GeHzASYET2Y

IliFiSRurdy
4th February 2013, 07:53 PM
hope it wouldn't sound so amatory!

:omg:
நான் எஸ்கேப்!!
:fishgrin:

RAGHAVENDRA
4th February 2013, 07:53 PM
டியர் கணேசன் சார்,
முதன் முதலில் நமது இதய தெய்வத்தைத் தாங்கள் தெய்வப் பிறவியாகப் பார்த்ததைப் படிக்கும் போது நம்மால் உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடியவில்லை. கண்கள் குளமானது என்னவோ உண்மை.

IliFiSRurdy
4th February 2013, 07:55 PM
திரு.ராகவேந்தர் மற்றும் நண்பர்கள்,

என்னை மன்னிக்கவும்..

நன்றி.

IliFiSRurdy
4th February 2013, 08:50 PM
oh, don't pretend to be coy, I know you would love it!!! you are his friend afterall

:oops:
இது என்ன கருணாநிதி-கண்ணதாசன் நட்பா என்ன?

M/s வாணிஸ்ரீ,காஞ்சனா,பாரதி இருக்கும் திசை நோக்கிக்கூட
படேன் எனத் தலையில் அடித்து சத்தியம் பண்ணி கொடுத்திருக்கிறேனாக்கும்!

என் வலி, தனி வலி!

:cry2:

IliFiSRurdy
4th February 2013, 09:22 PM
யார் வாணிஸ்ரீ தலையிலா?

மன்னி-க்கவும் அதை சொல்வதற்கில்லை!

kaveri kannan
4th February 2013, 10:06 PM
திரு கோபால் அவர்களுக்கு

நடிகர்திலகத்துடனான சந்திப்புகள், உங்கள் உள்ளுணர்வு நிரம்பிய எழுத்துகளால்.. உயிர்பெற்று உலவுகின்றன.
நேரில் ஒப்பனையின்றி காணும்போதும்...
பிரச்சார வெயிலில் கருத்து, குரல் கம்மி இருந்தபோதும்
காண்பவரை ஆகர்ஷிக்கும் திருவுரு..
ஆண்மையின் சிவத்தின் மறுவுரு..

மிக அழகான பகிர்தல்களுக்கு நன்றி..

----------------------------------------------------------------------

உங்கள் உயர்ந்த மனிதன் அலசல் மிக மிக நன்று..

உளவியல் ஊசி கொண்டு கீறிக்காட்டி புதுப்பரிமாணம் தந்துவிட்டீர்கள்... நாயகனுக்கும் ஏனையோருக்கும்..

இனி அப்படம் பார்த்தால் என் பார்வையின் வீரியமும் வீச்சும் கூடுதலே!

மனமார்ந்த பாராட்டுகள்!

vasudevan31355
5th February 2013, 09:08 AM
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 8

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/DharmamEngay00001.jpg

படம்: தர்மம் எங்கே?

வெளிவந்த ஆண்டு:1972

தயாரிப்பு: பெரியண்ணா (சாந்தி பிலிம்ஸ்)

சண்டைப் பயிற்சி: A.D வெங்கடேசன், M.K சாமிநாதன், திருவாரூர் தாஸ் (மும்மூர்த்திகள்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_02_1VOB_000085520.jpg

இயக்கம்: A.C.திருலோகசந்தர் M.A

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/1a46fda5-edab-428c-81ad-4c8bb4cde521.jpg

கொடுங்கோலாட்சி புரியும் கொடியவனின் கொட்டத்தை அடக்க எரிமலையென எழுகிறான் சேகர். ஊருக்காகப் போராடும் அவன் வழக்கம் போல ஊர்மக்கள் ஆதரவின்றி வில்லனின் ஆட்களால் கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டுவரப் படுகிறான். சிறைக்காவலரும், யானை பலம் கொண்ட பயில்வான் ஒருவனும் சேகரைப் புரட்டி எடுக்கின்றனர். எரியும் தீயில் அவன் முகத்தைப் பொசுக்குகின்றனர் எதிரிகள். அனல் தாங்க மாட்டாமல் அலறுகிறான் அவன். பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா! எரிமலையாகி வெடிக்கிறான். எதிரிகளைத் தூக்கிப் போட்டுப் பந்தாடுகிறான். துவம்சம் செய்கிறான். சிறையிலிருந்து தப்பித்து சென்று ஆற்றில் குதித்தவன் ஒரு நாடோடிக் கும்பலால் காப்பாற்றப்பட்டு, கொடியவனுக்கெதிராக கொடி பிடித்து, புரட்சிப்படை அமைத்து, வில்லனை தவிடு பொடியாக்கி, தானே ஆட்சியையும் பிடிக்கிறான்.

புரட்சி வீரனாக நம் சிங்கம். சிறையில் வீரர்கள் அடைக்க வருகையில் ஆரம்பிக்கும் அனல் கக்கும் சண்டைக்காட்சி. சங்கிலியால் பிணைக்கப்பட்டு சிறைக்குக் கைதியாய் கொண்டுவரப்படும் போதே அந்த நடையிலேயே உக்கிரம் தெரிய ஆரம்பித்து விடும். மூன்று காவலர்களும், ஒரு பயில்வானுமாய் சுற்றி நின்று மாறி மாறித் தாக்க, ஒவ்வொரு அடிக்கும் நம்மவர் அலறித் துடிப்பது பார்ப்பவர் அடிவயிற்றைக் கலங்க வைக்கும். வாயில் ரத்தம் ஒழுக, கழுத்தில் சங்கிலியுடன் அவர் போராடும் போது மெய் சிலிர்க்கும். அடிகளைப் பொறுத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் தாங்க மாட்டாமல் ஒரு காவலனை கழுத்தை விடாப்பிடியாய் இறுக்கி (அவன் இறக்கும் வரை) மற்ற காவலர்கள் கண்மண் தெரியாமல் அடிக்கும் அவ்வளவு அடிகளையும் தாங்கிக் கொண்டு தன் காரியத்தை வெற்றி வெறியுடன் செய்து முடிப்பது அமர்க்களம். பின் சங்கிலியை ஆயுதமாக்கி சண்டமாருதமாய் சண்டையிடும் போது இன்னும் அமர்க்களம். பயில்வானும், ஒரு காவலனும் தன்னை அப்படியே குண்டுக்கட்டாகத் தூக்கி எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் முகத்தையையும், முடியையும் பொசுக்குகையில் அனல் பட்ட புழு போல அவர் அலறும் அலறு பாறை நெஞ்சையையும் பதைபதைக்க வைத்து விடும். முடியெல்லாம் கருகி, முகமெல்லாம் பொசுங்கி முகத்தில் அவர் காட்டும் வலிகளின் பிரதிபலிப்பு பிரமாதப்படுத்திவிடும். அந்த அவலட்சண ஒப்பனை ரத்தக் கண்ணீர் ராதாவை ஒத்திருக்கும். பின் பழி உணர்ச்சி மேலிட அதே சங்கிலியால் ஆசாத் பயிவானை மலையைக் கட்டி இழுப்பது போல பிணைத்து அதே நெருப்பில் தன்னை பொசுக்கியது போலவே பொசுக்கிப் பழி தீர்ப்பது கைத்தட்டல்களை அள்ளும். பின் தப்பித்து செல்கையில் அங்கு சங்கிலியால் தூணில் கட்டப்பட்டு நிற்கும் ஒரு அப்பாவிக் கைதியை அவ்வளவு வலி வேதனைகளிலும் விடுவித்து விட்டுச் செல்வது அவரது மனிதாபிமானத்தைக்காட்டும். அவருக்குள்ளிருக்கும் மானுடத்தை வெளிப்படுத்தும்.

மிக மிக அற்புதமான சண்டைக்காட்சி. வாயடைத்துப் போகச் செய்யும், மூக்கின் மேல் விரல் வைக்க செய்யும் கலக்கல் பைட். இந்த சண்டைக்காட்சியில் பெரும்பாலும் டூப்பே போடாமல் அவ்வளவு பிரமாதப்படுத்தியிருப்பார். (ஒரு சில லாங் ஷாட்களில் மட்டும் டூப்)

மற்ற ஸ்டன்ட் கலைஞர்கள் அவரை அலாக்காகத் தூக்கும் போதும், மற்றும் நெருப்பின் அருகில் அவர் முகத்தைக் காட்டும் போதும் எப்படி இவரால் இவ்வளவு துணிச்சலாக நடிக்க முடிகிறது என்ற கேள்விக்கணை நம் மனதில் எழாமல் இருக்காது. முகமும், உடலும் வேறு நெருப்பில் சிதைந்தது போல ஒப்பனை வேறு. அதையும் maintain செய்ய வேண்டும். மேலும் இந்த சண்டைக்காட்சியின் பிரதான அம்சம் சுறுசுறுப்பு... விறுவிறுப்பு... எதிர்பாராத பல நிகழ்வுகள் திடுமென திருப்பங்களை ஏற்படுத்தி நம்மை இருக்கையின் நுனிகளில் இருக்க வைத்துவிடும். A.D வெங்கடேசன், M.K சாமிநாதன், திருவாரூர் தாஸ் என்ற மூன்று ஜாம்பவான்களின் சண்டைப்பயிற்சி, நடிகர் திலகத்தின் ராட்சஷ ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளரின் ஒப்பில்லா ஒளிப்பதிவு இந்த மூன்றும் இந்த சண்டைக்காட்சியை எங்கோ தூக்கிக் கொண்டு போய் நிறுத்தி விடடது

இந்த அமர்க்களமான சண்டைக் காட்சியை நம்மில் பலர் மறந்திருக்கக் கூடும். சிலர் காணாமலும் இருந்திருக்கலாம். இப்படம் சற்று சரியாகப் போகாததினால் எடுபடாமலும் போய் இருக்கலாம். இப்போது பாருங்கள் எப்பேர்பட்ட சண்டைக் காட்சிகளில் நம் இதயதெய்வம் புகுந்து விளையாடி இருக்கிறார் என்று!

இணையத்தில் இந்த சண்டைக்காட்சியை முதன் முதலாக தரவேற்றி தெள்ளத் தெளிவான காணொளியாக தங்கள் எல்லோருக்கும் வழங்கியுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அற்புதமான சண்டைக்காட்சியை அன்பு Ganpat சாருக்கு ஆனந்தத்தோடு சமர்ப்பிக்கிறேன்.

முதன்முறையாக இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக


http://www.youtube.com/watch?v=9-HE9HfJ1Eo&feature=player_detailpage

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
5th February 2013, 10:01 AM
Dear Vasudevan Sir,

நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) - Superb.

Thanks

vasudevan31355
5th February 2013, 10:41 AM
கோபாலுக்கு ஏற்கனவே சம அர்ப்பணம் செய்தாகி விட்டது. கோபால் ஜெமினி என்றால் கன்பட் எனக்கு உயிர் காப்பான் தோழ(ர்)ன். அதனால்தான்.

parthasarathy
5th February 2013, 11:07 AM
அன்புள்ள திருவாளர்கள். ராகவேந்தர், கண்பட், காவேரி கண்ணன், சேகர் மற்றும் மேடம் வனஜா அவர்களே,

என்னுடைய "எங்கே நிம்மதி" பாடல் பதிவைப் பாராட்டிய தங்களுக்கு நன்றிகள்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், தங்கள் பாராட்டுகள் என்னை ஊக்கப்படுத்தி மேலும் மேலும் நிறைய எழுத வைக்கும்.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
5th February 2013, 11:08 AM
மிக்க நன்றி சந்திரசேகர் சார்.

vasudevan31355
5th February 2013, 11:38 AM
பார்த்தசாரதி சார்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி!

தங்களின் 'எங்கே நிம்மதி' பாடலின் ஆய்வை இப்போதுதான் படித்து இன்புற்றேன். என்ன ஒரு நேர்த்தி! வரிக்கு வரி திலகத்தின் திறமைகளை பிட்டு பிட்டு வைத்துள்ளீர்கள். இந்தப் பாடலை திரையில் கண்டு ரசித்தது பேரின்பம் என்றால் அதை விட ஒரு இன்பத்தை நான் அனுபவித்து இருக்கிறேன். பின்னாட்களில் இப்பாடலின் போது தியட்டரை விட்டு வெளியே வந்து விடுவேன். உள்ளே ஒவ்வொரு வரிக்கும் நடிகர் திலகத்திற்குக் கிடைக்கும் கைத்தட்டல்களை மட்டும் வெளியே இருந்து கேட்டு காது குளிர ரசித்து மகிழ்வோம். அது ஒரு தனி சுகம். தங்கள் பாடல் ஆய்வைப் படித்ததும் அந்த அருமையான நாட்கள் ஞாபகம் வந்து விட்டது. பிரமாதமாக எழுதி ஜமாய்த்த தங்களுக்கு என் இனிய பாராட்டுக்கள்.

kaveri kannan
5th February 2013, 12:04 PM
அன்பு வாசு

உங்களின் வர்ணனையுடன் தர்மம் எங்கே சண்டைக்காட்சி கண்டு உற்சாகமாய் இன்றைய பொழுது..

உங்கள் அரும் தொகுப்புக்கு என் வந்தனம்..

இது உங்கள் சாளரம்தானே -
http://www.youtube.com/user/vasudevan31355?feature=watch

vasudevan31355
5th February 2013, 12:16 PM
நன்றி கண்ணன் சார்! அதே சாளரம்தான். பிரத்தியோகமாக நமது திரிக்காகவே தொடங்கி வைத்துள்ளேன். அழகாகக் கண்டு பிடித்து விட்டீர்களே.

kaveri kannan
5th February 2013, 12:27 PM
இன்றல்ல.. இரண்டு நாட்களுக்கு முன்னமே நம்மவரைத் தேடித்தேடி உங்கள் முகத்துவாரம் அடைந்தேன்..

இணையப் பிரபஞ்சத்தில் நம் நடிப்புக்கடல் அடைய பல வழிகள்,,, அதில் நல்ல ஒரு வழி சமைத்த உங்களுக்கு நன்றி!

Gopal.s
5th February 2013, 12:29 PM
மறைந்த நடிகை பானுமதி குடும்பத்தாருக்கு , நடிகர்திலகம் ரசிகர்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்ள படுகிறது.

kaveri kannan
5th February 2013, 12:34 PM
எம் பானுமதி தில்லானா மோகனாம்பாளில் செவிலியராக வருவார்.

நடிகர்திலகத்தின் தீவிர ரசிகை என அவர் முகமே சொல்லும்.

அவர் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... அஞ்சலிகள்!

kaveri kannan
5th February 2013, 12:38 PM
வனஜா அவர்களே..

வேட்டியை மடித்துக்கட்டி விருந்து மேற்பார்வையிடும் கருணைச் சிங்கம்..
ஆட்டுக்கல் வார்த்தை வராமல் கையை ஆட்டிக்காட்டும் தன்மானம் சீண்டப்பட்ட சீறும் சிங்கம்..
சாப்பிட்டியா என மகனைக் கேட்கும் பாசச்சிங்கம்..
செத்துப்போ என பாடம் சொல்லும் ஞானச்சிங்கம்..

அரைமணியானால் என்ன? The Lion King still triumphs!!

தேவர் மகன் நினைவலைகளால் எங்களையும் கலங்க வைத்தீர்கள்..

parthasarathy
5th February 2013, 12:45 PM
பார்த்தசாரதி சார்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி!

தங்களின் 'எங்கே நிம்மதி' பாடலின் ஆய்வை இப்போதுதான் படித்து இன்புற்றேன். என்ன ஒரு நேர்த்தி! வரிக்கு வரி திலகத்தின் திறமைகளை பிட்டு பிட்டு வைத்துள்ளீர்கள். இந்தப் பாடலை திரையில் கண்டு ரசித்தது பேரின்பம் என்றால் அதை விட ஒரு இன்பத்தை நான் அனுபவித்து இருக்கிறேன். பின்னாட்களில் இப்பாடலின் போது தியட்டரை விட்டு வெளியே வந்து விடுவேன். உள்ளே ஒவ்வொரு வரிக்கும் நடிகர் திலகத்திற்குக் கிடைக்கும் கைத்தட்டல்களை மட்டும் வெளியே இருந்து கேட்டு காது குளிர ரசித்து மகிழ்வோம். அது ஒரு தனி சுகம். தங்கள் பாடல் ஆய்வைப் படித்ததும் அந்த அருமையான நாட்கள் ஞாபகம் வந்து விட்டது. பிரமாதமாக எழுதி ஜமாய்த்த தங்களுக்கு என் இனிய பாராட்டுக்கள்.

அன்புள்ள திரு. (நெய்வேலி) வாசுதேவன் அவர்களே,

எனது "எங்கே நிம்மதி" பாடல் பதிவிற்கு உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.

உங்கள் "நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகள்" தொடரின் அண்மைப் பதிவான "தர்மம் எங்கே" பட சண்டைக் காட்சியும் அதற்கு உங்கள் வர்ணனையும் மிகவும் நுணுக்கமாக இருந்தது. "தர்மம் எங்கே" படம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் 1972-ஆம் வருடம் வெளிவந்து, எதிர்பார்ப்பை அந்த அளவிற்கு நிறைவேற்ற முடியாததால், பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனது இன்றளவும் அனைத்து நடிகர் திலக ரசிகர்களுக்கும் வருத்தம் தான். இந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தால், 1972-ஆம் வருட சாதனை முழுமை பெற்றிருக்கும் (7 படங்களில் இது ஒன்று தான் வெற்றி பெறவில்லை. தோல்வி என்று சொல்ல முடியாது என்றாலும்!). என்னைப் பொறுத்த வரை, நடிகர் திலகம் ஒரு swashbuckling action role-ஐ அவருக்கேயுரிய நேர்த்தியுடன் செய்திருப்பார். திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு தொய்ந்ததும், தமிழ் நேட்டிவிட்டி குறைபாடும் தான் படத்தின் பெரிய வெற்றிக்கு இடையூறாக அமைந்தவை. இது பற்றி திரு. முரளி அவர்கள் விரிவாக ஏற்கனவே எழுதி இருக்கிறார் அவருக்கேயுரிய சரளமான புள்ளி விவரங்களுடன் கூடிய நடையில்!

உங்களின் அடுத்தடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
5th February 2013, 12:58 PM
வனஜா மேடம் அவர்களே,

தங்கள் "தேவர் மகன்" பதிவு சுருக்கமாக இருந்தாலும், நேர்த்தியாகவும் சுவையாகவும் இருந்தது.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
5th February 2013, 01:08 PM
'இந்த அடிப்படையில் பார்த்தால் அந்தக் காட்சியில் தேவரின் கண்களில் தெரிவது அந்த ஆதங்கம், பயம், தான் தனது கடைசிக்காலத்தில் எங்கே தனியாக விடப்பட்டு விடுவேனோ என்கிற ஏக்கம்....கவலை, கலக்கம்.. எல்லாமே. 'அப்பா! நான் இருக்கிறேன்' என்று மகன் தனக்கு உறுதி அளிக்கவேண்டும் என்கிற அவா. 'என்னை விட்டுப் போய்விட மாட்டியே'? என்று கேட்கும் அந்தப் பரிதாபமான கண்களை நான் பார்த்தேன்.
:(

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSICPK_Uw8Px4fRjTaCa60xvMkIE4vvj euF_hb8LqgxhJQbjNzC

அதே போல 'பசும்பொன்' தேவர். தன் மகள் விதவையாகி விட்டதால் மருமான் சிவக்குமாரிடம் புலம்பும் புலம்பல். அலம்பல். ("பொட்டல்ல நட்ட மரமாப் போச்சே அவளுடைய பொழைப்பு".).. அவளுக்கு மறுவாழ்வு கிடைக்குமா என்ற ஏக்கம். எல்லா சுப காரியங்களுக்கும் முதல் மனுஷியாகச் சென்ற மகள் இனி எப்படி அனைத்திலும் கலந்து கொள்ள முடியும் என்ற துயரம். ("சே! கோடி கோடியாய் சொத்திருந்து என்னடா பிரயோஜனம்...எம் பொண்ணுக்கு எட்டணா குங்குமமும் நாலணா பூவும் வாங்கி என்னால கொடுக்க முடியலையேடா!) சிவக்குமாரிடம் இனி தன் மகளுக்கு இவன்தான் துணை என முடிவெடுத்து ,"கதிரேசா.. என் பொண்ணுக்கு அந்தப் பூவையும் பொட்டையும்"என்று நிறுத்தி சிவாவிடம் அவளுக்கு வாழ்வு கொடுக்க கெஞ்சுவது என்று அதகளம் புரிவார். தேவர் மகன் தேன் என்றால் பசும்பொன் பத்தரை மாற்றுத் தங்கம். ஆனால் தேவர் மகன் தான் எடுபடுகிறது. தேவர் மகனுக்கு கொஞ்சமும் குறைவில்லாத 'பசும்பொன் அவ்வளவாக அலசப்படுவதில்லை. இது ஏன் என்று கிஞ்சித்தும் எனக்கும் புரிய வில்லை.

vasudevan31355
5th February 2013, 01:31 PM
நடிகர் திலகத்துடன் எம். பானுமதி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_6VOB_000143102.jpg

vasudevan31355
5th February 2013, 01:34 PM
நான் நினைக்கிறேன் அந்தக் கடைசிக் காட்சி கொஞ்சம் நீண்டுவிட்டது என்று.

நான் காட்சியைப் பற்றி சொல்லவில்லை. நடிகர் திலகத்தின் ஆட்சியைப் பற்றி சொல்ல வந்தேன். ஆமாம்... வாங்குகிற சம்பளத்திற்கு கொஞ்சமாவது வேலை பார்க்க வேண்டாமோ!

நமது ஆசான் நடிகர் திலகம் தொழிலை தெய்வமாக அல்லவோ மதித்தார்!

vasudevan31355
5th February 2013, 01:46 PM
பானுமதி

காதல் மலர்க் கூட்டம் ஒன்று என மலர்களின் கூட்டத்தில் ஒரு மலராக தெய்வ மகனில்

திலகத்தின் வளர்ப்பு மகளாக ராமன் எத்தனை ராமனடியில்

நாகேஷின் ஜோடியாக வியட்நாம் வீட்டில்.

செவிலியாக தி.மோகனாம்பாவில்.

நடிகர் திலகத்துடன் நாடக மேடைகளில் ஏராளமாக.

இன்னும் நிறைய.

மறக்க முடியவில்லை.

P_R
5th February 2013, 01:47 PM
கிஞ்சித்தும் குறைவில்லாத என்று சொல்ல முடியுமா. நடிப்பைப் பத்தி சொல்கிறீர்களா, பாத்திரப்படைப்பையுமா?
பசும்பொன்னை எல்லா காட்சிகளும் நினைவில் இல்லை. ஆனால் அது பெரிய தேவர் அளவு பற்பல எண்ண ஓட்டங்கள், சூழ்நிலைகள் இருந்தனவா?
சிவாஜியின் சிறப்பம்சங்களில் ஒன்று - ஒரே நேரத்தில் பற்பல உணர்ச்சிகளை தெளிவாக வெளிப்படுத்துவது. கோவம்-அவமானம், கையாலாகாமை-வெறுமை, ஊர்த்தலைவனாக சோகம் - தந்தையாக பெருமிதம் - என்று மிக நுட்பமான தருணங்கள். அவை கமலுடைய எழுத்தின் ஆழத்தால் கைகூடியவை. இப்படிப்பட்டவருக்குத் தான் அப்படிப்பட்ட காட்சிகளை எழுத முடியும் என்பது needless to say.

பாரதிராஜாவின் signature ஒரு உணர்ச்சியை எடுத்துக்கொண்டு அதைத் தீவிரமாக வெளிப்படுத்துவது என்று சொல்ல நினைக்கிறேன். அத்தகைய ஒரு நடிப்பை சிவாஜியிடம் பெற்றுக்கொண்டார் என்று நினைக்கிறேன். நடிப்பளவில் ஒன்றுக்கொன்று குறை என்று சொல்வதற்கில்லை. அந்த கதை சொல்லும் முறை, காட்சி-படத்தின் அழகியலுக்குத் தகுந்தது. நீங்கள் குறிப்பிட்ட காட்சியில் அதைப் பார்க்கலாம்.

முதல்மரியாதை வேறு பிராணி - அதில் ஒரு sexual frustration undercurrent இருக்கும். அதை மிகக்கச்சிதமாகக் கையாண்டிருப்பார். அந்த flirtatiousness கொஞ்சம் பிசகினாலும் நன்றாக வந்திருக்காது. ஆனால் கதைக்கு அது மிக முக்கியம். என்றாலும் கூட ஒரு காட்சியில் அனேகமாக 'ஒரு உணர்ச்சி'யே மேலோங்கி நிற்கும். அதை சிறப்பாக வெளிக்கொணர்வதே அவர் பாணி என்பேன் (Let me know if any of you disagree, it would be interesting to hear).

ஆனால் கமல் - அவரது எழுத்துப் பொற்காலமான 89-95ல் எழுதிய கதைகளில் பல simultaneity of multiple emotions வந்துகொண்டே இருக்கும். சில நேரம் ஒரே காட்சியில் இருவேறு கதைமாந்தர்கள் இருவேறு விதமாக ரியாக்ட் செய்து கொண்டு இருப்பார்கள். ஒரு திரையெழுத்தாளராக தன்னைத் தானே challenge செய்துகொள்ளும் இடங்கள் அவை.

ஆனால் சிவாஜி கிடைத்ததும் ஒரே நபருக்கே ஒரே தருணத்தில் உருவாக்கி விளையாடியிருப்பார்கள். What fun he must have had writing those scenes with Sivaji in mind! He would have tried to up the challenge: let us make the emotions more and more complex, let us create more moments where the acting would shine through, where a crackle of the voice and demeanor would convey the emotion of the scene.


Vankv, உங்கள் இளைய மகன்-அப்பா insightஐ ரசித்தேன். கமலும் ஒரு கடைசிப்பிள்ளை.

vasudevan31355
5th February 2013, 01:51 PM
Dramas

‘Jahangir', ‘Neethiyin Nizhal', ‘Kalam Kanda Kavingan', ‘Vengayin Maindhan' and ‘Vietnam Veedu'

Gopal.s
5th February 2013, 01:58 PM
கிஞ்சித்தும் குறைவில்லாத என்று சொல்ல முடியுமா. நடிப்பைப் பத்தி சொல்கிறீர்களா, பாத்திரப்படைப்பையுமா?
பசும்பொன்னை எல்லா காட்சிகளும் நினைவில் இல்லை. ஆனால் அது பெரிய தேவர் அளவு பற்பல எண்ண ஓட்டங்கள், சூழ்நிலைகள் இருந்தனவா?
சிவாஜியின் சிறப்பம்சங்களில் ஒன்று - ஒரே நேரத்தில் பற்பல உணர்ச்சிகளை தெளிவாக வெளிப்படுத்துவது. கோவம்-அவமானம், கையாலாகாமை-வெறுமை, ஊர்த்தலைவனாக சோகம் - தந்தையாக பெருமிதம் - என்று மிக நுட்பமான தருணங்கள். அவை கமலுடைய எழுத்தின் ஆழத்தால் கைகூடியவை. இப்படிப்பட்டவருக்குத் தான் அப்படிப்பட்ட காட்சிகளை எழுத முடியும் என்பது needless to say.

பாரதிராஜாவின் signature ஒரு உணர்ச்சியை எடுத்துக்கொண்டு அதைத் தீவிரமாக வெளிப்படுத்துவது என்று சொல்ல நினைக்கிறேன். அத்தகைய ஒரு நடிப்பை சிவாஜியிடம் பெற்றுக்கொண்டார் என்று நினைக்கிறேன். நடிப்பளவில் ஒன்றுக்கொன்று குறை என்று சொல்வதற்கில்லை. அந்த கதை சொல்லும் முறை, காட்சி-படத்தின் அழகியலுக்குத் தகுந்தது. நீங்கள் குறிப்பிட்ட காட்சியில் அதைப் பார்க்கலாம்.

முதல்மரியாதை வேறு பிராணி - அதில் ஒரு sexual frustration undercurrent இருக்கும். அதை மிகக்கச்சிதமாகக் கையாண்டிருப்பார். அந்த flirtatiousness கொஞ்சம் பிசகினாலும் நன்றாக வந்திருக்காது. ஆனால் கதைக்கு அது மிக முக்கியம். என்றாலும் கூட ஒரு காட்சியில் அனேகமாக 'ஒரு உணர்ச்சி'யே மேலோங்கி நிற்கும். அதை சிறப்பாக வெளிக்கொணர்வதே அவர் பாணி என்பேன் (Let me know if any of you disagree, it would be interesting to hear).

ஆனால் கமல் - அவரது எழுத்துப் பொற்காலமான 89-95ல் எழுதிய கதைகளில் பல simultaneity of multiple emotions வந்துகொண்டே இருக்கும். சில நேரம் ஒரே காட்சியில் இருவேறு கதைமாந்தர்கள் இருவேறு விதமாக ரியாக்ட் செய்து கொண்டு இருப்பார்கள். ஒரு திரையெழுத்தாளராக தன்னைத் தானே challenge செய்துகொள்ளும் இடங்கள் அவை.

ஆனால் சிவாஜி கிடைத்ததும் ஒரே நபருக்கே ஒரே தருணத்தில் உருவாக்கி விளையாடியிருப்பார்கள். What fun he must have had writing those scenes with Sivaji in mind! He would have tried to up the challenge: let us make the emotions more and more complex, let us create more moments where the acting would shine through, where a crackle of the voice and demeanor would convey the emotion of the scene.


Vankv, உங்கள் இளைய மகன்-அப்பா insightஐ ரசித்தேன். கமலும் ஒரு கடைசிப்பிள்ளை.
அப்பாடா,

வந்தாரப்பா இந்த திரியின் கடை குட்டி செல்ல பிள்ளை.

உன்னுடன் 100% உடன் படுகிறேன். நடிகர்திலகத்தின் நடிப்பு, herzog இயக்கிய nosferatu போன்ற படங்களில் உபயோக படுத்த பட்டிருந்தால்,எத்தனை எத்தனை depth கிடைத்திருக்கும். நானே, அவரின் வித விதமான scene களை தொகுத்து ஒரு multi -layered திரைகதையில் கற்பனையில் பொருத்தி பார்ப்பேன்.

Gopal.s
5th February 2013, 02:01 PM
vanaja ,
Brilliant write-up with lot of depth.
Kaveri Kannan
Thanks a lot and it is nice hear from the man whose writing ,I enjoy a lot.
Vasu Sir,
Dharmam Enge-A good scene well chorepgraphed and designed fight. Thanks for Nice still on Banumathi.

vasudevan31355
5th February 2013, 02:40 PM
நன்றி பிரபுராம் சார்.

அருமை. நடிப்பைப் பற்றித்தான் சொல்கிறேன். என்னுடைய ஆதங்கம் பசும்பொன் பேசவோ அலசவோ படவே இல்லை என்பது. குறிப்பிட்ட அந்த சீனில் "ச்சே !என்னடா இது" என்ற சலிப்பு பேசப்பட்டிருக்க வேண்டும் என்பதே! இன்னும் கூட அற்புதங்கள் இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரியில் தங்கள் பதிவு வந்ததற்கு மிக மிக சந்தோஷம் கொள்கிறேன். தங்களுடைய எவர்க்ரீன் பதிவான தேவர் மகனை நான் எத்தனை முறை படித்தேன் என்று எனக்கே தெரியாது. அதுபற்றி கோபாலும் நானும் பலமுறை அலைபேசியில் உரையாடி மகிழ்ந்திருக்கிறோம். தேவர் மகன் பற்றிய பதிவுகள் மட்டுமல்லாமல் மற்ற தங்களுக்குப் பிடித்தமான பதிவு அலசல்களுக்கும் நீங்கள் வரவேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமும். நன்றி!
(நீங்கள் என் பெயரை தாராளமாய் குறிப்பிட்டு எழுதலாம்)

Gopal.s
5th February 2013, 03:13 PM
PR குறிப்பிட்டது போல முதல் மரியாதை தேவரின் sexual frustration ஐப்பற்றி நம்ம கோபாலாண்ணா விரிவாக - a psychological analysis எழுதலாமே. there are many things to be said about that poor fellow, I mean Thevar!
தங்கச்சி,
எனக்கு மிக மிக பிடித்த முதல் மரியாதையை எழுத ஆசை. ஆனால்,பிரபுவிற்கும்,எனக்கும் ஒரு ஒப்பந்தம். அதை அவன்தான் எழுதணு ம்னு, அவனுக்கு நிபந்தனை போட்டு விட்டு,காத்திருக்கிறேன்.

JamesFague
5th February 2013, 03:14 PM
Madam congratulation for reaching the 500 posts. Pls reach 5000 posts
at the earliest.

P_R
5th February 2013, 03:16 PM
(நீங்கள் என் பெயரை தாராளமாய் குறிப்பிட்டு எழுதலாம்)
ஹாஹா. QUOTE பண்ணக்கூடாதுன்னுல்லாம்ம் இல்லை.

VankV இடுகைக்கு அடியில எழுத ஆரம்பிச்சேன். நான் நீட்டி முழக்குறதுக்குள்ள 2-3 இடுகை வந்துபோனதான தோண்டி எடுத்து பதில் சொல்ற ஒரு பிம்பம் ஏற்பட்டுப்போச்சு :-)

Vankv, landlordம் தப்பு, absenteeயும் தப்பு :-)
இங்க தான் இருக்கேன். திரியையும் விட்டுவிட்டு படிச்சிகிட்டு இருக்கேன். I have little to add. எனக்குச் சொல்லத் தெரிஞ்ச ஒண்ணு ரெண்டு விஷயம் சம்மந்தமா பேச்சு வரும்போது ஆஜர் ஆவேன். அவ்வளவே :lol2:

P_R
5th February 2013, 03:19 PM
தங்கச்சி,
எனக்கு மிக மிக பிடித்த முதல் மரியாதையை எழுத ஆசை. ஆனால்,பிரபுவிற்கும்,எனக்கும் ஒரு ஒப்பந்தம். அதை அவன்தான் எழுதணு ம்னு, அவனுக்கு நிபந்தனை போட்டு விட்டு,காத்திருக்கிறேன்.

அவ்வளவு எல்லாம் pressure போடாதீங்க. கொஞ்ச நாளாவே செய்ய நினைச்சு நேரம் கிடைக்கமாட்டேங்குது. I'll feel if I am holding you all up.
இந்தத் திரி'ல நான் முதல்ல ஒரு வாசகன். அதுனால நீங்கல்லாம் பேசுங்க, நானும் ஜோதில ஐக்கியம் ஆயிக்குவேன்.

JamesFague
5th February 2013, 03:21 PM
Shortly Mr Neyveli Vasudevan also will reach the magic figure of 3000 posts
and in another short time he will reach 300000000000000000 posts

Gopal.s
5th February 2013, 05:19 PM
பார்த்தசாரதி சார்,

குறுகிய காலத்தில் இரண்டு இன்ப அதிர்ச்சிகள் அடுத்தடுத்து. மிக அழகிய பதிவு.நான் சிறிதே சேர்க்க விழைகிறேன்.

இது நீங்கள் சொன்ன மாதிரி fantasy genre அல்ல. sur -realistic என படும் வகை. இந்த scene low key lighting with seperation lighting இல் கேமரா மேதை பிரசாத் விளையாடி இருப்பார்.

எனது கைகள் நீட்டும் போது வரிகளில், தனது கையை தானே தூர படுத்தி ,அந்நிய படுத்துவார். follow thru eye movement இந்த alienation ஐ highlight செய்யும். பொதுவாக இந்த பாட்டின் hand -eye coordination with graceful foot movement ஒரு தேர்ந்த ballet கலைஞனை நினைவு படுத்தும்.

இந்த பாடல் திரை பட வரலாற்றில் நீடித்த குறிஞ்சி மலர். நன்றி சாரதி.

IliFiSRurdy
5th February 2013, 05:45 PM
இந்த சிறுவனையும் மதித்து தன் அருமையான பதிவை எனக்கு சமர்ப்பணம் செய்துள்ள வாசு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..

வனஜா அம்மணியாரின் தேவர் மகன் அலசல், அசத்தல்.கேரளாவில் பால் பாயசம் செய்வது ஒரு புது முறையில்.வாய் அகன்ற ஒரு அண்டாவில் பாலை சுண்டக்காய்ச்சுவார்கள்.பால் காய்ந்து காய்ந்து குறுகி வரும்.அதன் வெள்ளை நிறம் மறைந்து சற்றே மஞ்சள் நிறம் வரும் போது சர்க்கரையை சேர்த்து சிறிது நேரத்தில் பாதம்,குங்குமப்பூ சேர்த்து இறக்குவார்கள்.ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் உச்சி முதல் பாதம் வரை இனிப்பு பரவுவது தெரியும்.கண்கள் கிறங்கும்..1952 இல் கறக்கப்பட்ட பசும் பால் சுமார் நாற்பது ஆண்டுகள் சுண்டக்காய்ச்சப்படுகிறது.
கமல்,எனும் சர்க்கரை சேர்க்கப்பட்டு,திரைக்கதை எனும் பாதம்,இளைய ராஜா எனும் குங்குமப்பூ சேர்த்து பரிமாறப்படுகிறது.எததனை குடித்தாலும் அலுக்குமா என்ன ??

அறுசுவை நடராஜன் (வனஜா அம்மணி) செய்த பாயசத்தின் ருசி , சிலகாலம் மறைந்திருந்த நள மகராஜனையும் வெளிக்கொணர்ந்து விட்டது.Welcome Back Prabhu..Keep posting..

நாம் எல்லோரும் தமிழில் எழுதிக்கொண்டிருக்க, காவேரி கண்ணனோ தமிழில் விளையாடிக்கொண்டிருக்கிறார்.

இவர் எழுத்து, மூன்று நிறம் தெரியும் பொறை உள்ள மைசூர் பாக்..(க் மிகவும் முக்கியம்;மைசூர் பா என்ற சமீப கால கொடுமை, மணிரத்னம் இயக்கத்தில்,"தில்லானா மோகனாம்பாள்" எடுப்பதற்கு நேர்)

இதோ ஜெயா சானலில் புதியபறவை பறந்து கொண்டிருக்கிறது.இந்த ஒரு படம் கி.பி 2113 இல் கூட fresh ஆக இருக்கும்..

ஆமாம்! வியட்நாம் வீட்டில், ஜெயா தெரியுமோ? :confused2:

IliFiSRurdy
5th February 2013, 05:56 PM
#1873.

கோபாலாரே

ஆஹா அந்த சுட்டு விரல் அசைவு!! யாருக்கையா வரும் அந்த ஸ்டைல்??

கையை அசைத்தால் அது வேண்டாம் என பொருள்.சுட்டு விரலை மட்டும் அசைத்தால் அது இல்லை என பொருள் என்று இலக்கணம் எழுதியவரல்லவோ அவர்!

சுட சுட பார்த்துவிட்டு எழுதுகிறேனாக்கும்!

Gopal.s
5th February 2013, 06:31 PM
மூவாயிரம் பதிவுகளை கடந்தும், எங்கள் பீஷ்மாச்சாரியார் தொடர்ந்து களத்தில் விளையாடி கொண்டிருக்கிறார். வேந்தரே, என் மன பூர்வமான வாழ்த்துக்கள். தங்களால் ஒதுக்க பட்ட இந்த கர்ணன், வேறு களத்தில், விளையாடி கொண்டிருக்கிறேன். உங்கள் திரி அமோகமாய் வெற்றி கொடி நாட்டி வருகிறது.

எஸ்வி சார், நாங்களே நேரம் கடந்து கவனிப்பவைகளை, விரைவாக கவனித்து எங்களை வாழ்த்தும் இந்த கனிவுக்கு, என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

RAGHAVENDRA
5th February 2013, 06:39 PM
டியர் கோபால் சார்,
தங்களுடைய பாராட்டிற்கு நன்றி.
நான் யாரையுமே ஒதுக்கவில்லை, அப்படி யிருக்கும் போது உங்களை மட்டும் ஒதுக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. விவாதங்களுக்காக மற்ற இரு திரிகளையும் வைத்துக் கொண்டு தகவல்களுக்கு என்று இதை வைத்துக் கொள்ளலாமே என்கிற நோக்கத்தில் தான் அந்தத் திரி துவங்கப் பட்டது. பாடல்களைக் கூட நம்முள் நிழலாடும் பழைய நினைவுகளின் பகிர்மானங்களுக்கு வடிவம் கொடுக்கலாமே என்ற நோக்கத்தில் என் விருப்பம் பகுதியும் துவங்கப் பட்டது.

தாங்கள் எந்தக் களத்திலும் புகுந்து விளையாடுவீர்கள் என்பதை அறியாதவனா நான்.

Filmography is like other NT threads. Every one can contribute.

அன்புடன்
ராகவேந்திரன்

Gopal.s
5th February 2013, 07:05 PM
படம் - சிவகாமியின் செல்வன். -26 ஜனவரி 1974.
பாடல்- எத்தனை அழகு கொட்டி கிடக்குது.
பாடலாசிரியர்- புதுமை பித்தன்
இசையமைப்பு- மெல்லிசை மன்னர்.
நடிப்பு- சிவாஜி-வாணிஸ்ரீ.
இயக்கம்- சீ .வீ.ராஜேந்திரன்.

நான் பதினைந்து வயது வயதுக்கு வந்த விடலையாய் ,மீசை முளைக்கும் பருவத்தில், இனம் பிரியா குழப்ப இன்ப உணர்வுகள் வாட்டி வதைத்த போது ,நான் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த படம் (குடந்தை நூர்மஹாலில் வரிசையாய் ஐந்து நாட்கள்,பிறகு விரல்கள் போதாது)

அதிலும், என் விருப்பமான ஜோடியின் எத்தனை அழகு பாடலுக்காக மட்டும்(amatory மூட்,erotic arousal எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்)இத்தனை முறை!!!!????

ஆனால் அதே பாடலை, உலகத்தில் இன்பங்கள் பாக்கி உண்டா என்ற பருவத்தில் பார்க்கும் போதும், ஒரு உருது கவிதை, ஒரு erotic சிற்பம் (அ )சித்திரம் பார்க்கும் புத்துணர்வை தருகிறது என்றால் எழத பட வேண்டியதே.

பொதுவாக சிவாஜி,பெண்களை விட ,பெண்களின் அம்மாக்களையே குறி வைத்தவைத்த முதல் அறுபதுகளில் இருந்து விடு பட்டு, பெண்களையும்,வாலிபர்களையும் ஈர்க்க தொடங்கி ,வசந்த மாளிகையில் ராஜாவாய் சுமதி சுந்தரியுடன் , இளைய மன்மதனாக ஜொலித்த கால கட்டம். வேறெந்த நடிகையுடன் நடித்ததை விட, வாணிஸ்ரீ.யுடன் அவர் நெருக்கம் உயர்ந்த மனிதனில் தொடங்கி நல்லதொரு குடும்பம் வரை தொடர்ந்தது.

காதல் காட்சி என்ற போதும் பொத்தாம் பொதுவாக நடிக்காமல், பாத்திர இயல்பு படி,வித்தியாசம் காட்டி ,சூழ்நிலை, கதையமைப்பு புரிந்து நடிக்கும் சுவை ஆஹா!! அதிலும் எத்தனை variety !!!எவன் எவனையோ காதல் மன்னன் என்று அழைக்கிறோமே?இவனல்லவோ காதல் பேரரசன் என்று தோன்றும்.

பொதுவாக erotism என்பது நமது கோவில்கள்,மத நூல்களில் கொண்டாட பட்ட போதும் ,british inhibitions காரணமாய் ,sexual slavery and deprivation இல் அகப்பட்டு, நல்ல hightened aesthetics என்று சொல்ல படும் erotic sensual intense romance என்று சொல்ல படும் காட்சிகளே எந்த இந்திய படங்களிலும் இல்லை.(அப்படியே ஒன்றிரண்டு வந்தாலும், காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்த case தான்). எனக்கு தெரிந்த வரை இந்த Erotic genre இலும் முழு மதிப்பெண் நம் நடிகர் திலகத்துக்கே.நெஞ்சத்திலே நீ-சாந்தி, மெல்ல நட-புதிய பறவை,பலூன் காட்சி-சுமதி என் சுந்தரி, plum கடிக்கும் வசந்த மாளிகை என்று ஆயிரம் இருந்தாலும் ,இந்த குறிப்பிட்ட பாடல் erotic திலகம்.

Richardsof
5th February 2013, 07:43 PM
இனிய நண்பர் திரு கோபால் சார்


நடிகர்திலகம் திரியில் எல்லா பாகங்களையும் ஒரு ரசிகன் என்ற முறையில் படித்து வருகின்றேன் .

நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அனைவரின் பங்களிப்பும் மிகவும் சுவாரசியமாகவும் ,கட்டுரைகள் -பாடல் ஆய்வுகளும்
சிறப்பாக உள்ளது .

பம்மல் சுவாமிநாதன் சார் - சாரதா மேடம் - கார்த்திக் சார்

பதிவுகள் இல்லாதது ஒரு குறை .

புதிய வரவான வனஜா மேடம் -ஆதிராம் - கல்நாயக்

கணபதி -கண்ணன் - ஆகியோரின் பதிவுகள் அருமை .

அனைவருக்கும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் .
என்றும் நட்புடன்
வினோத்

IliFiSRurdy
5th February 2013, 07:43 PM
ஏன் கன்பட்டாருக்கு சமர்ப்பணம்? அவர் தான் கோபால் அவர்களின் தம்பியாயிற்றே?

தம்ப்ரீ கோபால்,

நான் இப்பகடிக்கு பொறுப்பில்லை..

இபடிக்கு

கன்-பட்.

:shoot:

Gopal.s
5th February 2013, 07:54 PM
எத்தனை அழகு பாடலில்(ஒரே டேக்கில் படமாக்க பட்டதாம்.hats off ! ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் எடுக்கும் கலிகாலம்) முதலில் களம். தங்களுக்குள் மண பந்த ஒப்பந்தம் புரிந்த(மற்றவர்கள் அறியாமல்) ஒரு ஜோடி ஒரு மழை நிறைந்த குளிர் இரவில்,ஒரு அறைக்குள் மாட்டி, தங்களை இழக்கும் காட்சி. அவனுக்கோ இன்பத்தை சோதிக்கும் ஆர்வமும், சுவைக்க துடிக்கும் அவசரமும்,தன்னை மறந்த நிலை. அவளுக்கோ, தயக்கம் கலந்த சம்மதம், தவிக்க விடும் நாணம்,உரிமையரியா உறவின் அறியா அச்சம் என இந்த ஜோடியின் தவிப்பை, சிவாஜியும் ,வாணிஸ்ரீ யும் அற்புதமாய் expressions ,body language ,suggestive movements என்று பின்னியிருப்பார்கள்.

முதலில் இந்த பாடலில் சி.வீ.ஆரின் colour sense and psychology யை பாராட்டியே ஆக வேண்டும்.(இதை அவர் சுமதி என் சுந்தரியிலேயே அற்புதமாக கையாண்டிருப்பார்) வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்.

இதை விட hero -heroine physical ஆன எவ்வளவோ சிவாஜி பாடல்கள் கூட உண்டு. ஆனால், இந்த காட்சி தந்த intensity எந்த காட்சியும் தந்ததில்லை.

ஒரு இள விமானியை, ஒரு target நோக்கி படையெடுக்கும் adventurism ,experimentation முதலிய உணர்ச்சிகளுடன்,ஒரு அவசரம் கலந்த காம விழைவை அற்புதமாய் பிரதிபலிப்பார் NT .வாணிஸ்ரீ (AVM ராஜன் சொல்வது போல சிவாஜிக்காக பிரம்மா ஸ்பெஷல் ஆய் படைத்த கருப்பழகி) சிவாஜியுடன் இழைந்தும், தயங்கியும், உணர்ச்சி வசபட்டும், சூழ்நிலையறிந்து விலகுவதும், இறுதியில் தொடர் தூண்டுதலால் இணங்குவதும் என அற்புதமாய் NT க்கு ஈடு கொடுத்திருப்பார்.

தன இடத்திலிருந்து எழுந்த உடன் சிவாஜி தன pant அய் suggestive ஆக கையால் சிறிதே உயர்த்தும் காட்சி(ஆண்டவன் கட்டளை அழகே வாவிலும் இது உண்டு) , பிறகு ஒரு இலக்கில்லாமல் விலகும் வாணிஸ்ரீயை ஒரு குறிப்பின்றி தடவுவார். பிறகு ஒரு இலக்கில்லா passionate முத்தங்கள்(ஒரு awkward அவசரம் தெரியும்),பிறகு குறிப்பை உணர்த்தும் coat -stand காட்சி, திரை காட்சி என அவசர தூண்டல் ,ஓரு அனுபவமின்மையின் awkward desperation ஐ மிக அழகாக உணர்த்துவார். இதில், வாணிஸ்ரீயின் திரையை இறுக்கும் கைகள்,என்று எல்லாமே suggestive erotism .physical ஆக மிக குறைவான ,தேவையான அணைப்புகள் மட்டுமே இருக்கும்.

பிறகு மஞ்சத்தில் ஓரளவு தயார் நிலைக்கு ஆளானாலும் ,பிறகு அரை மனதுடன் தயங்கி விலகி, தலையணையை மார்புடன் வைத்து காத்து கொள்ள எண்ணும் வாணிஸ்ரீயை ,ஒரு இரையை குறி வைக்கும் இறுதி ஆவேசத்துடன் சிவாஜி அணைத்து இணங்க வைப்பார்.

ஆபாசம், கவர்ச்சிக்கு விடை தெரியாமல் இன்றும் முழிக்கும், நம் தமிழ் நாட்டு தாய்,தந்தை குலங்களுக்கு, இந்த காட்சியின் அழகும்,அமைப்பும், erotic hightened emotional aesthetics புரியாமல்,இந்த படத்தை கை விட்டனர்.இந்த காட்சியில்,மற்ற காதல் காட்சிகளில் இல்லாத, எந்த மிகையும் இருக்காது. சம்பத்த பட்டவர்களின் உணர்வு மிகு நடிப்பாற்றல்,அழகுணர்ச்சி மிகுந்த suggestive shots &gestures தவிர.,

P_R
5th February 2013, 08:50 PM
கோபால், ஒரு வழியா உங்க வியட்நாம் வீடு இடுகைகளைப் படிச்சேன். முதல் 2-3 பகுதிகள் நீங்க எழுதும்போதே படிச்சிருந்தேன். மிச்சத்தை இன்னிக்கு. நல்ல அலசல்.
நீங்க சொன்ன சிலபல காட்சிகள் என் நினைவில் இல்லை அப்டீன்றதுலேர்ந்தே நான் இந்த படத்தை மறுபடி பார்த்துட்டு தான் பேசணும்னு வச்சிருக்கேன்.

இதை revisit பண்றதுல எனக்கு எப்போதும் மனத்தடை உண்டு. அது கொஞ்சம் தளர்ந்திருக்கு. குறைந்தபட்சம் நீங்க எழுதினதை முழுசா appreciate பண்றதுக்காச்சும் ஒரு தடவை பார்க்கணும். பார்த்துட்டு வரேன்.

அதுக்குள்ள எங்கயாவது கௌரவத்தைப் பத்தி எழுதி வச்சிடாதீங்க :lol2:

kaveri kannan
6th February 2013, 01:59 AM
ஒரு மரத்துக் கிளிகள் ஒன்றை விட்டு ஒன்று பறந்தால்..

http://www.youtube.com/watch?v=31lPks6WVLE

நடிகர்திலகம் ஆன்மா கலங்காதா?

எதற்காகக் கூடினோம்? அதை மறக்கலாகுமா?

எல்லாரும் கொண்டாடுவோம் - நடிகர்திலகத்தை
சட்டென மறப்போம் - மற்றவற்றை..

Richardsof
6th February 2013, 06:39 AM
நன்றி திரு கண்ணன் அவர்களே.

மக்கள் திலகம் திரியில் நீங்கள் எங்களை பாராட்டியும் மக்கள் திலகத்தின் பாடலின் பெருமையினையும் பதிவிட்ட உங்களுக்கு நன்றி

vasudevan31355
6th February 2013, 07:25 AM
குருவை படமெடுக்கும் சிஷ்யர்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/835cc8aa-9d29-4dbd-adfb-b44b02c3c165.jpg

vasudevan31355
6th February 2013, 07:34 AM
'பலே பாண்டியா' ஆனந்த விகடன் விமர்சனம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/23850c2e-f6be-4261-8bc5-18570541eb8e.jpg

parthasarathy
6th February 2013, 11:47 AM
அன்புள்ள திரு. கோபால்,

எனது "எங்கே நிம்மதி" பாடல் ஆய்வைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

gkrishna
6th February 2013, 12:42 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் வெளி வந்த பாடல்கள் (தொடர்ச்சி...)

8. "எங்கே நிம்மதி" படம்:- புதிய பறவை (1964); பாடல்: கவியரசு கண்ணதாசன்; பாடியவர்கள்:- டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழுவினர்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- தாதா மிராசி; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் சரோஜா தேவி.
இந்தப் பாடல் தமிழ்த் திரையுலகுக்கு மிகவும் புதிய முறையில் அளிக்கப் பட்ட பாடல். பொதுவாக, கனவுப் பாடல்கள் பெரும்பாலும் டூயட்டுகளாகவே இருக்கும் நிலையில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்கள் அவனை நிம்மதி இல்லாத மன நிலைக்கு இட்டுச் செல்ல, அவன் நனவுலகத்திலிருந்து விலகி, கனவுலகத்திற்குச் சென்று அங்கும் அல்லல் படுவதை, ஒரு வகை "fantasy " என்று சொல்லக் கூடிய முறையில் எடுத்திருப்பார்கள்.

இதற்கு முன்னரே, "நிச்சய தாம்பூலம்" படத்தில், "படைத்தானே" பாடலில் இந்த முறையை நடிகர் திலகம் சிறப்பாகக் கையாண்டிருந்தாலும், அந்தப் பாடலை விட, "எங்கே நிம்மதி" பாடலை இன்னமும் செம்மைப் படுத்தியிருந்ததால், இந்தப் பாடலை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன்.

இந்தப் பாடலின் பல்லவியான "எங்கே நிம்மதி" வரிகள் முதலில் கவியரசருக்குக் கிடைக்கவில்லை எனவும், கவியரசு, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மற்றும் நடிகர் திலகம் மூவரும் பாடல் எடுப்பதற்கான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்த பின்னரும் அந்த முதல் வரி எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை என்று ஏமாற்றத்துடன் (ஏனென்றால், கவியரசு எப்போதுமே முதல் வரியிலேயே மொத்தப் பாடலின் காலத்திற்கு அவரும் சென்று கேட்பவரையும் அழைத்துச் சென்று விடுவார், நடிகர் திலகம் நடிப்பில் காட்டுவது போல் - "கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே" என்று ஒரு கரிய நிறம் கொண்ட பெண்ணின் இறைவன் கண்ணனை நோக்கிய முறையீட்டில் தந்தவர். இது ஒரு சிறிய ஒரு உதாரணம். இது போல் பல உதாரணங்கள் கூறலாம்.), வீடு சென்றதாகவும், நள்ளிரவில், திடீரென்று நடிகர் திலகமே, அந்த வரிகள் மனதில் வரப் பெற்று, மற்ற இருவருக்கும் தொலைபேசி செய்து, அன்றிரவே, பாடலைப் பதிவு செய்ததாகவும் பல வருடங்களுக்கு முன்னர் படித்திருக்கிறேன். பொதுவாக, நடிகர் திலகம் பிற துறைகளில் அதீதமாகத் தலையிட மாட்டார் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வார்கள் என்றாலும் இந்தக் கூற்று உண்மையல்ல. இந்தப் பாடலே அதற்கு உதாரணம். இது போல் பல படங்களைச் சொல்லலாம். அவர் அதீதமாகத் தலையிட மாட்டாரே தவிர, படம் முழுமையாக வர, அவரது ஆலோசனைகளை வழங்கி, முழு ஈடுபாட்டினையும் காட்டித்தான் வந்திருக்கிறார் - சக கலைஞர்களின் பங்களிப்பையும் பட்டை தீட்டுவது உட்பட.

இந்தப் பாடல் பல ஆண்டுகள், உலகின் எந்த மூலையில் மெல்லிசைக் கச்சேரி நடந்தாலும் மறக்காமல் முயற்சி செய்து பாடப்பட்ட பாடல். இன்றும் இது தொடர்கிறது. மெல்லிசை மன்னர்களின் மிகச் சிறப்பான டியூனும், எண்ணற்ற வாத்தியக் கருவிகளின் ஆர்ப்பரிப்பும், இன்றளவும் ஒவ்வொரு இசையமைப்பாளரையும் இன்னமும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பாடல் வரிகளோ கேட்கவே வேண்டாம். முக்கியமாக, "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே" சிரஞ்சீவித்தன்மை பெற்ற வரிகள். டி.எம்.எஸ்ஸின் அற்புதப் பங்களிப்பில், பாடல் எடுக்கப்பட்ட விதமும், அதில் நடித்த அனைத்து கலைஞர்களின் நடிப்பும் இன்றளவும் புதிதாகத் தோற்றமளிக்கிறது.

இப்போது, நடிகர் திலகத்தின் வித்தியாசமான முயற்சிக்கு வருவோம். இந்தப் படத்தை முதலில் பார்த்தபோது, நடிகர் திலகம் அவருடைய முயற்சியில் தோற்று (சௌகாரின் கை ரேகையை பிரதி எடுக்க முயன்று தோற்று, நடிக வேள் எம்.ஆர். இராதாவால் மேலும் மனம் உடைந்து போயிருப்பார்) மிகுந்த மன உளைச்சலுடன் படுக்கையில் புரளுவார் - "என் நிம்மதியே போய்டும் போலிருக்கே!" - அப்போதே, திரை அரங்கம் ஆர்ப்பரிக்கத் துவங்கி விட்டது. அப்போதே எனக்கும் விளங்கி விட்டது - படத்தின் மிக முக்கியமான highlight பாடலான "எங்கே நிம்மதி" வரப் போகிறதென்று.

இந்தப் பாடல் முழுக்க நடிகர் திலகத்தின் உடல் மொழி கொடி கட்டிப் பறக்கும். பாடல் முழுவதிலும், அவரது கைகளும், கால்களும் காண்பிக்கும் அபிநயங்களை வேறெந்த நடிகன் முயற்சித்திருந்தாலும், நகைப்புக்கிடமாகத்தான் போயிருக்கும். எந்த விஷயத்தையும் பரீட்சித்துப் பார்ப்பதில் (சோதனை முயற்சி சில முறை ஜெயிக்கலாம் சில முறை தோற்கலாம். ஆனால் அதைப் பற்றி என்றுமே கவலைப் படாமல், கடைசி படம் வரை, வித்தியாசப் படுத்தி நடிப்பதில் பிடிவாதம் காட்டியவரல்லவா?) முனைப்பு காட்டும் நடிகர் திலகம் இந்த முறை, ஏற்கனவே "படைத்தானே" பாடலில் செய்த சோதனை முயற்சியை விட பல படிகள் முன்னே போய், அவரது நம்பிக்கைக்குரிய குழுவின் மூலம் (கவியரசு/டி.எம்.எஸ்./மெல்லிசை மன்னர்கள் - "படைத்தானே"வும் இதே குழு தான்!) ஒரு பரீட்சார்த்த பாடல் முயற்சியை செய்திருப்பார்.

அந்த மெல்லிய வெள்ளை சட்டை, முழங்கைக்கு மேல் மடித்து விட்ட விதம், அந்த வெளிர் நீல பாண்ட், சரியாக சவரம் செய்யப்படாத முகம் - இவைகளை மட்டும் வைத்துக் கொண்டே, துவக்கத்திலேயே, அந்தப்பாடலின் சூழலுக்கு உடனேயே சென்று, பார்க்கும் அனைவரையும் இழுத்துச் சென்று விடுவார் வழக்கம் போல்.

பாடல் துவங்கி கேமரா கீழே படுத்துக் கொண்டிருக்கும் அவர் மீது zoom செய்யப் பட, கோரஸில், பலர் "ஒ..." என்று கூவத் துவங்கும்போதே, அவர் எச்சிலை மிடறு விழுங்கி அந்தச் சூழலின் பயங்கரத்தைக் காண்பிப்பார். உடனே தொடரும் ஒரு அதிரடி இசைக்கு சட்டென பின்னோக்கி நடக்கும் போது அரங்கம் அதிரத் துவங்கும்.

"எங்கே நிம்மதி" எனப் பல்லவி பாடும் போது, இரண்டு கைகளையும் ஒரு விதமாக relaxed - ஆக stretch செய்து, மிகுந்த மன உளைச்சலில் இருப்பவனின் ஆயாச உணர்வினை எடுத்துக் காட்டும் விதம் பிரமிக்க வைக்கும்; கூடவே அரங்கமும் அதிரும்.

பல்லவி முடிந்தவுடன் சௌகார் மற்றவர்கள் சகிதம் வந்து அவரை இம்சை செய்யத் துவங்கியவுடன், அந்த இம்சையை எதிர் கொள்ளும் விதம்!

இப்போது சிறிய சரணம். அந்தக் கூட்டத்திடமிருந்து விலகி ஓடி வந்து, வலது கையை மட்டும் ஸ்டைலாக மேலே பின்னோக்கித் தூக்கி "எங்கே மனிதன் யாரில்லையோ" என்று சொல்லி இப்போது இடது கையைத் இலேசாக மேலே தூக்கி "அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று பாடுவார். இதற்கும் அரங்கம் அதிரும்!

இப்போது சரணம். "எனது கைகள்" எனும்போது, இடது கையை மேலே தூக்கி, "மீட்டும் போது வீணை அழுகின்றது" எனும் போது வலது கையை இடது கை அருகாமையில் கொண்டு சென்று வீணை போல் மீட்டி, "எனது கைகள் தழுவும் போது" என்று கூறும் போது, கைகளை உடனே X (எக்ஸ்) போல் ஆக்கி, தழுவுவது போல் வித்தியாசமாய்க் கைகளைக் கையாண்டிருப்பார். பொதுவாகத் தழுவுவது என்பது கைகளை நேரிடையாகத் தழுவுவது போல் தான் வரும். இருப்பினும் அதற்கு முன்னர் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு வீணை வாசிக்கும் பாவனையைக் காட்டிக் கொண்டே, அதே கோணத்தில், எதிரிடையாக X (எக்ஸ்) குறியில், தழுவும் பாவனையைக் காண்பித்திருப்பார். (ஆங்கிலத்தில், follow through என்று கூறுவார்களே, அது தான் இந்த நடிகர் திலகத்திடம் எத்தனை முறை பாடம் காண்பிக்கப்பட்டிருக்கிறது!) அப்படியே, பின்னோக்கிப் போய்க் கொண்டே "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே; ஓ! இறைவன் கொடியவனே" எனும் போது மேலே தூக்கிய இரண்டு கைகளையும் சட்டென்று கீழே இறக்கி "இறைவன் கொடியவனே" என்று சரியான follow through முறையில் கீழே கொஞ்சம் வேகமாகவும், ஒரு வித அலுப்பு கலந்த வன்மையோடும் கீழே இறக்கி அந்த வரிகளுக்கு அதாவது "இறைவன் கொடியவனே" என்ற அந்த வரிகளுக்குரிய வன்மையைக் காட்டியிருப்பார்.

முதல் சிறிய சரணம் முடிந்து அனு பல்லவியில் "எங்கே நிம்மதி...எங்கே நிம்மதி...அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று அந்த மேல் நோக்கிச் செல்லும் வழியில் ஏறும் போது, அலுப்பையும் ஆயாசத்தையும் நடையில் காட்டிய நடிப்புலக மன்னர் மன்னன், இந்த இரண்டாம் சரணம் முடிந்து - அதாவது "எனது கைகள் மீட்டும் போது..." என்கிற சரணம் - ஒரு வித வேகத்துடன் "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி" என்று இரு புறமும் திரும்பித் திரும்பி நடித்திருப்பார் - ஏன்? முதல் முறை, ஆயாசத்தையும், இரண்டாவது முறை, வேகத்தையும், பாடிய டி.எம்.எஸ். தந்ததால்!

மூன்றாவது சரணம் - "பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே" சரோஜா தேவி அருகில் வந்ததும், பாலைவனத்தில் சோலையைக் கண்ட மன நிலையுடன், ஒரு வித ஆயாசம் கலந்த relief-உடன் சென்று, அவரை முழுமையாகத் தழுவாமல், "உன்னிடம் தஞ்சம் புகுந்தேன்" என்ற மன நிலையில் கண்ணியத்துடன் தழுவி நடந்தவுடன், திரும்பவும் "பழைய பறவை போல ஒன்று" என்று அதே சரணம் இரண்டாவது முறை வரும் போது, உள்ளே இருந்து சௌகார் வேகமாக வந்தவுடன், அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து, ஸ்டைலாக பின்னோக்கி செல்லும்போது, மீண்டும் அரங்கம் அதிரும்! மறுபடியும் சரோஜா தேவி வந்தவுடன், "என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே என்று வேதனையுடன் (அளவான) கூறி அப்படியே கீழே உட்கார்ந்து, அவரது மடியில் படுத்து, "இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே" என்று கூறி, "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?" என்று படுத்துக் கொண்டு சரோஜா தேவியைப் பார்க்கும் போது, அப்போது தான் முதன் முறையாக அவரது முகத்தில், ஒரு வித relief தெரியும்! சௌகாரின் இம்சை போய், காதலி சரோஜா தேவியைப் பார்த்த திருப்தியில்!

மீண்டும் அனு பல்லவி துவங்கி, பலர் சௌகாருடன் சேர்ந்து அவரை இம்சித்து, அப்படியே, நடிகர் திலகம் சௌகாரின் பிடியில் freeze ஆகி நிற்பது போல் முடியும்.

நடிகர் திலகம் வேறொரு உலகத்திற்குச் சென்று, பார்க்கும் எல்லோரையும் அந்த உலகிற்கு அழைத்துச் சென்றிருப்பார்! பாடல் முடிந்து, நனவுலகதிற்குச் சென்று மீண்டும், அவரது முகம் க்ளோசப்பில் காட்டப்படும் போது, அவர் முகத்தில் தெரியும் ஆயாசம் கலந்த அதிர்ச்சி நம்மையும் தொற்றியிருக்கும்!!

அந்தப் பாடல் முடியும் போது இருக்கும் shot - சௌகாரின் பிடியில் freeze -ஆகி நிற்கும் காட்சி - ஆங்கில நாடகங்களில் பாலே போன்ற நடன நாடகங்களின் inspiration தெரியும்! இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும், பாடலும் (இந்தப் பாடலையும் சேர்த்து!), அரங்க அமைப்பும், நடை/உடை/பாவனைகளும், களமும், கலைஞர்களின் உழைப்பும் (நடிகர் திலகம் துவங்கி), ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இருக்கும்.

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னரே, "ahead of times" என்று கூறிய, இன்றும், படத்தைப் பார்ப்பவர்கள் (இன்றைய தலைமுறையினர் உட்பட) வாய் பிளந்து அதிசயிக்கும் இந்தப் படத்தை, almost ghost direct செய்தது நடிகர் திலகமே தான் என்று கூறுவார்கள். பின் எப்படி, அவருக்கு சினிமா என்ற ஊடகத்தில், பிற துறைகள் அந்த அளவிற்குத் தெரியாது என்று சொல்லப் போயிற்று?!!!!

தொடரும்,

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி


பார்த்தசாரதி சார்,

இன்று தான் உங்களுடைய "எங்கே நிம்மதி" பாடல் பற்றிய திறனாய்வு படித்தேன் அற்புதம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை . படித்தவுடன் என் மனதில் தோன்றிய உணர்வு என்னவென்றால் "தேவாரம் திருவாசகம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம்" போன்றவை சம்பந்தர்,நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,பன்னி ரு ஆழ்வார் போன்றவர்களால் பாடப்பட்டு பின்னாளில் சேக்கிழார் அவர்களால் பெரிய புராணம் என்றும் நாத முனி அவர்களால் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றும் தொகுக்கப்பட்டு பொருள் விளக்கத்துடன் வந்தது போல் நம்மவரின் பாடல் காட்சிகளின் தொகுப்பு ஒன்று (திரு பம்மலார் அவர்கள் முயற்சியினால் ) வெளி வருமா என்று ஒரு ஏக்கம் தோன்றி விட்டது .

தமிழின் சிறப்பு நடிகர் திலகம் என்றால் வார்த்தைகளின் சிறப்பு சாரதி சார் அவர்கள் என்றால் மிகை ஆகாது

kaveri kannan
6th February 2013, 01:07 PM
ஊர் கூடி தேர் இழுப்போம்..
ஒவ்வொருவரும் தேவை..

வேண்டாம் பிரிவு நடிகர்திலகத்தின் இதயங்களே..
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே!



http://www.youtube.com/watch?v=5PYAmWkBwc4

IliFiSRurdy
6th February 2013, 04:51 PM
என்ன நடக்கிறது இங்கே?
இந்த தளத்தின் பதிவுகளால் கவரப்பட்டு,நானும் ஏதாவது எழுதலாமே எனும் ஆசையில் கடந்த ஏப்ரல மாதம் என் பெயர் மற்றும் விவரங்களைப்பதிவு செய்தேன்.ஏதோ அழைப்பு வரும் என நினைத்தால் மாதங்கள் ஆறு ஆகியும் ஒன்றையும் காணோம்.இத்தனைக்கும் இங்கு moderator என கருதப்படும் நபர்களுக்கு பிரத்யேக messages வேறு அனுப்பியும் ஒரு பலனும் இல்லை.சரி இது இந்திய அரசால் நடத்தப்படுகிறது போலும் என மனதை திடப்படுத்திக்கொள்ள,திடீரென நண்பர் கோபால்,பிரபு,முரளி,பார்த்தசாரதி அபயமளித்து என்னை ஒரு அங்கத்தினர் ஆக்கினர்.

உள்ளே வரும்போதே சில துவந்த யுத்தங்கள் நடைபெற்றுகொண்டிருந்தன.பெயர்கள் இங்கு தேவையில்லை.
Being a system dependent person,I found these things funny and indigestible.சரி நாம் நம் வேலையை செய்யலாம்
என ஆரம்பித்தேன்.எனக்கு மகாஸ்ரீஸ்ரீ உ.வே.சா. போல பரண் மீது ஏறி ஓலைச்சுவடிகளை தட்டியெடுத்து அதை பிரசுரிக்கும் மனப்பாங்கு இல்லை.நடிகர் திலகம் அவர்களின் சில சிறப்புகளை வேறொரு பரிமாணத்தில் காண்பிக்க ஆவலும் ஆர்வமும் கொண்டு, அதே மனப்பாங்குடன் எழுதி வந்த சில அங்கத்தினர்களுடன் அளவளாவி நட்பு பாராட்டி வந்தேன்.அதில் முக்கியமானவர் வனஜா.ஒரு சிறந்த நட்புணர்வோடும்,நகைச்சுவை உணர்வோடும் அவர் எல்லாரிடமும் பழகிய விதம என்னை கவர்ந்தது.

அப்பொழுது கோபால் அவர்களின் அந்த பதிவு வெளியாகியது.அதை திடீரென வாசு கடுமையாக எதிர்த்தபோது ,வனஜா இயல்பாக "அதில் ஒரு குற்றமும் இல்லையே?நம் நடிகர் திலகம் நடித்து வெளிவந்து நாம் எல்லாரும் பார்த்த ஒரு படக்காட்சியைத்தான் கோபால் விவரித்துள்ளார்?" என வினவியபோது,வாசுவின் பதில் மிக அநாகரீகமாக அமைந்து, வனஜாவை இந்த தளத்தை விட்டு வெளியேற வைத்தது.அது மிக சரியான முடிவு.

அதை தொடர்ந்து கோபாலும் தார்மீக பொறுப்பேற்று வெளியேறியுள்ளார்.அதுவும் சரியான முடிவே!

ஆனால் வாசுவும் வெளியேறப்போவதாக சொல்லியிருப்பது வியப்பாக இருக்கிறது.அவர் தான் எழுதிய பதிவிற்கு வனஜாவிடம் வருந்தியிருந்தாலே போதுமே! யாரும் வெளியேற வேண்டாமே!

சரி ஒரு பதிவு எதாவது ஒரு காரணத்திற்காக ஒரு அங்கத்தினருக்கு பிடிக்கவில்லை என வைத்து கொள்வோம்.
அப்பொழுது அவர் செய்ய வேண்டியதுதான் என்ன? சற்று யோசிப்போம்.

தொடர்கிறேன்..

IliFiSRurdy
6th February 2013, 09:24 PM
என்ன நடக்கிறது இங்கே?

தொடர்கிறேன்..

அவர் மறுபதிவு ஒன்றை இட்டு தன் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
அதை moderators க்கும் அனுப்பி அந்த ஆட்சேபகரமான பதிவை நீக்கும்படி வலியுறுத்தலாம்.
இதற்கான வழிமுறைகள் இங்கு தற்போது உள்ளனவா எனத்தெரியவில்லை.
அதை உடனடியாக அமல படுத்த வேண்டும்.

ஆனால் வாசு செய்தது moral policing வேலை..நம் பஜ்ரங் தால் செய்வதுபோல தானே கோதாவில் இறங்கி சரி செய்யப்பார்த்தது.அது மிகத்தவறான அணுகுமுறை.நாளை நானே "கப்பலோட்டிய தமிழன் படத்தில் சில காட்சிகளில் சுப்பையா நடிப்பு தலைவர் நடிப்பையும் விஞ்சியது" என்று எழுதினால்.."ஏண்டா கண்பத்துன்னுபேர வச்சுகினுகிரே.அத்தனையுமா குருடு?"என ஒரு அன்பர் பதில் எழுதினால்?

முடிவாக moderators களுக்கு ஒரு வேண்டுகோள்..

போஸ்ட் எண் 1907 ஐப்படியுங்கள்.

நீங்கள் வாசு செய்தது சரி என நினைத்தால் அவரை மீண்டும் பதிவிட அழையுங்கள்.வனஜாவும் கோபாலும் வருவதும் வராததும் அவர்கள் இஷ்டம்.

அதற்கு மாறாக நீங்கள் வாசு செய்தது தவறு என நினைத்தால்அதை இங்கு பதிவு செய்து, வனஜா & கோபாலை மீண்டும் வர அழைக்கவும்.அப்படி வாசுவும் திரும்ப வர வேண்டுமென்றால் அவர் மேற்கண்ட தன் பதிவுக்கு வனஜா விடம் வருத்தம் தெரிவித்த பிறகே அனுமதிக்க வேண்டும்.

உங்கள் முடிவிற்கு (வெளியிலிருந்து) காத்திருப்பேன்.

நன்றி.

IliFiSRurdy
6th February 2013, 09:27 PM
Ganpat,

When reading your post, when you support the 'pogiren' decision by Vanaja & Gopal, I suspect you also will end your post with 'pogiren', but you ended with 'thodargiren'.

that is a good one.

.

Adiram,

My thodarkiren is for the post and not for posts.
Kindly go thro' the second part which is self explanatory.

Thanks,

kaveri kannan
7th February 2013, 12:05 AM
அனைவருக்கும்

நேருக்கு நேர் பேசுவதிலே 40 சதமே சொல்வழி கேட்பவர் மனம் சேரும்..
மீதி எல்லாம் உடல்மொழி, குரல் பாவம்.
இவைதான் பிரதான தொடர்பு சாதனங்கள்.

தொலைபேசியில் பேசினால் 30 சதத்துக்கும் குறைவாய்த்தான் சேரும்.
அதனால்தான் தொலைபேசியில் பேசும்போதும்
மகிழ்ச்சி என்றால் முகம் மலர்ந்தபடி பேசினால் கேட்பவர்க்கு அந்த உணர்வு கொஞ்சம் சேரும்..


சரி, எழுத்தால் எத்தனை சதம் சேர்ப்பிக்க முடியும்?
அதுவும் ஒரு நிமிட எதிர்வினைப் பதிவில்..
ஒரு வரி சொல்லாடல் பதிவில்..

புரிந்துகொள்ளப்படாமைக்கும்
தவறாக புரிந்துகொள்ளப்படுதலுக்குமான
Recipe -- அவசர எழுத்தில் இயற்கையாகவே இருக்கிறது.


நேற்று நடந்தவை எழுத்துச் சிதறல்கள்..
நம் அனைவரின் மனமும் சிவாஜி பாசம் என்ற பந்தத்தால் பிணைக்கப்பட்டன அல்லவா?

சம்பந்தப்பட்ட அனைவருமே ஒருவரை ஒருவர் அனுசரித்து, புரிய முயன்று மீண்டும் வாருங்கள் என அழைக்கிறேன்..

தீர்ப்புகள் அல்ல.. தீர்வுகள் போதும் நட்புக்குள்.. குடும்பத்துள்..

RAGHAVENDRA
7th February 2013, 07:12 AM
டியர் கண்பத்,
நான் இந்த விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்று தான் இருக்கிறேன். வாசு மேல் உள்ள கருத்து வேற்றுமையில் என் பெயரையும் இழுத்து திரியை நாங்கள் எங்கள் பாணியில் கொண்டு செல்ல விழைவதாக நண்பர் எழுதியிருக்கிறார். நான் மேலும் மேலும் வளர்க்க வேண்டாம் என அமைதியாய் இருக்கிறேன். தங்களுடைய விவாதங்களில் என் பெயர் ஏன் அடிபடுகிறது. தெரியவில்லை.
தாங்கள் ஏப்ரல் 2012ல் தான் வந்துள்ளீர்கள். இன்னும் 100 பதிவுகள் வரவில்லை. தங்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன் வந்தவர் வாசுதேவன். இரவு பகலாக உழைத்து இன்று 3000 பதிவுகளை எட்டும் நிலையில் இருக்கிறார். பல்வேறு சொந்த அலுவல்களுக்கிடையில் நாங்கள் - தங்கள் பாஷையில் சொல்வதானால் - பரண் மேல் ஏறு தூசு தட்டி ஆவணங்களை இங்கு பதிவிடுகிறோம். இவற்றின் அருமை தங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அதனை கேலி செய்யும் வகையில் பதிவினை எழுதியது அதிர்ச்சியளிக்கிறது. ஆய்வெழுத எவ்வளவு சிரமம், எவ்வளவு நேரம், எவ்வளவு உழைப்பு தேவைப் படுகிறதோ அதைப் போல் பல மடங்கு, ஆவணங்களைத் தருவதற்கு தேவைப் படுகிறது. இன்றைக்கு ஒரு பழைய பேப்பர், சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பான நாளிதழைத் தேடி எடுத்து பிரதி எடுக்க தேவைப் படும் சிரமங்களை யும் பொருட்செலவையும் சற்றே விசாரித்துப் பாருங்கள், தங்களுக்கு அதனுடைய மதிப்புத் தெரியும். அந்த அடிப்படையில் பார்த்தால் நமது பம்மலார் இதுவரை நமக்கு அளித்துள்ள ஆவணங்கள் - விலை மதிப்பற்றவை என்பது ஒரு பக்கம் - குறைந்த பட்சம் 70 ஆயிரம் ரூபாய்களிலிருந்து ரூ. 1.0 லட்சம் வரைக்கும் மதிப்புப் பெறும். பம்மலார், வாசுதேவன் போன்ற நமது சிவாஜி ரசிக நண்பர்களெல்லாம் பிரதிபலன் எதிர்பார்த்தா செய்கிறார்கள்.
வாசு சொன்னது என்ன நாகரீகமாக எழுதுங்கள் என்றார். அவர் மேற்கோள் காட்டியது நடிகர் திலகத்தின் இளைய தலைமுறை படப் பாடல் என்பதும் தங்களுக்குத் தெரியாததல்ல ..அவர் எழுதியது போல் இது அறிவுஜீவிகளுக்கு மட்டுமான திரியில்லை, சாதாரணமானவர்களும் படிக்கிறார்கள். நிறைய மகளிரும் படிக்கிறார்கள். சிவகாமியின் செல்வன் பாடலைப் பற்றி முதல் பதிவில் இருந்த நாகரீகம் இரண்டாம் பதிவில் இல்லாததாக உணர்ந்து வாசு தன் மன வருத்தத்தை எழுதியிருக்கிறார். தாங்கள் இரு சாராரையும் உரிமையோடு கண்டித்திருந்தால் அதில் நிச்சயம் அனைவரும் பாராட்டி யிருப்பர். ஆனால் யாராவது ஒருவர் போக வேண்டும் எனத் தாங்கள் எழுதியிருப்பது வியப்பை அளிக்கிறது. மற்ற அனைவரும் மன வருத்தங்களை மறந்து மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து நடிகர் திலகத்திற்காக பதிவுகளை இட வேண்டும் என பொதுவாக கேட்டுக் கொள்வார்கள். ஆனால் தாங்களோ யாராவது ஒருவர் போக வேண்டும் என்று பொருள் தரும் வகையில் எழுதியுள்ளீர்கள். அல்லது அப்படி எனக்குத் தோன்றுவது தவறா தெரியவில்லை.
தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் நடிகர் திலகத்தின் நடிப்பின் சிறப்பையும் அவருடைய சமுதாயப் பணிகளையும் பற்றி விவாதிக்கலாமே என வாசுதேவன் ஆலோசனை கூறியதில் என்ன தவறு உள்ளது என எனக்கு தெரியவில்லை.

IliFiSRurdy
7th February 2013, 09:22 AM
Dear Thiru.Raghavendra,

தெரிந்தோ தெரியாமலோ உங்களிடத்தில் ஒரு பலவீனம் இருக்கிறது.பிறர் சொல்வதை தவறாக புரிந்து கொள்வதோடு மட்டுமின்றி, அதை உங்கள் இஷ்டத்திற்கு திரிக்கவும் செய்கிறீர்கள்.(எனக்கு மைசூர் போண்டா பிடிக்கும் என்று சொன்னால், Ganpat மங்களூர் போண்டாவின் பரம எதிரி எனபது போல).

ஒரு நிறுவனத்தில் production, engineering, sales, personnel, என்று பல துறைகள் இருக்கும். அனைத்தும் அவசியம்.ஆனால் சிலர் இயல்பிலேயே சில துறைக்குத்தான் சரிபட்டு வருவார்கள்.நான் சொல்ல வந்தது அதுவே."எனக்கு ஊர் ஊராக திரிந்து பொருள்களை விற்கும் மனப்பாங்கு இல்லை" என்று சொல்வதால் நான் sales ஐ மட்டம் தட்டுவதாக அர்த்தம இல்லை.

மகா ஸ்ரீ ஸ்ரீ உ.வே.சா.பரண் மேல் ஏறாதிருந்தால் நமக்கு ஐம்பெருங்காப்பியங்ககள் கிடைத்திரா.அது கூட தெரியாத அப்பாவி இல்லை நான்.மேலும் என் பதிவில் உங்களை பற்றியும் நான் எதுவும் சொல்லவில்லை.எனவே ...

தங்களுடைய விவாதங்களில் என் பெயர் ஏன் அடிபடுகிறது. தெரியவில்லை.
தாங்கள் ஏப்ரல் 2012ல் தான் வந்துள்ளீர்கள். இன்னும் 100 பதிவுகள் வரவில்லை. தங்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன் வந்தவர் வாசுதேவன். இரவு பகலாக உழைத்து இன்று 3000 பதிவுகளை எட்டும் நிலையில் இருக்கிறார். பல்வேறு சொந்த அலுவல்களுக்கிடையில் நாங்கள் - தங்கள் பாஷையில் சொல்வதானால் - பரண் மேல் ஏறு தூசு தட்டி ஆவணங்களை இங்கு பதிவிடுகிறோம். இவற்றின் அருமை தங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அதனை கேலி செய்யும் வகையில் பதிவினை எழுதியது அதிர்ச்சியளிக்கிறது. ஆய்வெழுத எவ்வளவு சிரமம், எவ்வளவு நேரம், எவ்வளவு உழைப்பு தேவைப் படுகிறதோ அதைப் போல் பல மடங்கு, ஆவணங்களைத் தருவதற்கு தேவைப் படுகிறது. இன்றைக்கு ஒரு பழைய பேப்பர், சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்பான நாளிதழைத் தேடி எடுத்து பிரதி எடுக்க தேவைப் படும் சிரமங்களை யும் பொருட்செலவையும் சற்றே விசாரித்துப் பாருங்கள், தங்களுக்கு அதனுடைய மதிப்புத் தெரியும். அந்த அடிப்படையில் பார்த்தால் நமது பம்மலார் இதுவரை நமக்கு அளித்துள்ள ஆவணங்கள் - விலை மதிப்பற்றவை என்பது ஒரு பக்கம் - குறைந்த பட்சம் 70 ஆயிரம் ரூபாய்களிலிருந்து ரூ. 1.0 லட்சம் வரைக்கும் மதிப்புப் பெறும். பம்மலார், வாசுதேவன் போன்ற நமது சிவாஜி ரசிக நண்பர்களெல்லாம் பிரதிபலன் எதிர்பார்த்தா செய்கிறார்கள்.

.....என்பது விவாதத்தை திசை திருப்ப நீங்கள் செய்துள்ள ஒரு அதீத கற்பனை மட்டுமே.

ஆனால் யாராவது ஒருவர் போக வேண்டும் எனத் தாங்கள் எழுதியிருப்பது வியப்பை அளிக்கிறது. மற்ற அனைவரும் மன வருத்தங்களை மறந்து மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்து நடிகர் திலகத்திற்காக பதிவுகளை இட வேண்டும் என பொதுவாக கேட்டுக் கொள்வார்கள். ஆனால் தாங்களோ யாராவது ஒருவர் போக வேண்டும் என்று பொருள் தரும் வகையில் எழுதியுள்ளீர்கள். அல்லது அப்படி எனக்குத் தோன்றுவது தவறா தெரியவில்லை.

மீண்டும் உங்களது திரிக்கும் மனப்பான்மை வெளிப்படுகிறது.நான் கேட்பதெல்லாம் இதுதான்.வாசுவின் 1907 எண் பதிவு நாகரீகமானதா இல்லையா? இதை moderators தீர்மானிக்கட்டும்.அப்படி அதில் தவறில்லை எனும் பட்சத்தில், வனஜா &கோபால் திரும்பி வருவது அவர்கள் இஷ்டம்.அதற்கு மாறாக முடிவெடுத்தால், அதை எழுதியதிற்கு வாசு வருத்தம் தெரிவித்து விட்டுதான் வரவேண்டும் என்பதே.இதை எப்படி நீங்கள் யாராவது ஒருவர் போக வேண்டும் என்று பொருள் தரும் வகையில் எழுதியுள்ளீர்கள். என குயுக்தியாக எடுத்துக்கொண்டீர்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

சிலம்பு கண்ணகியுடையதா கோப்பெருந்தேவியுடையதா எனும் வழக்கில், கண்ணகியுடையதே என நிரூபணம் ஆன பிறகு, தவறான தீர்ப்பு அளித்த குற்றத்திற்கு தன் உயிரையே கொடுத்து தன்னை தண்டித்து கொண்டான் பாண்டிய மன்னன்.அதுதான் அந்தகால மனு நீதி..

ஆனால் தவறு எல்லார் பேரிலும் உள்ளது.கண்ணகி சோழ நாட்டை சேர்ந்தவள்.பாண்டிய நாட்டிற்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. பொற்கொல்லனோ நம் இனம். 300 மாதங்களாக இங்கு நம்முடன் பணி புரிகிறான்.எனவே அவனையும் தண்டிக்க முடியாது.ஆகவே சிலம்பு 6 மாதம் அதன் உரிமையாளரான கண்ணகியிடத்தும்,5 மாதம் மகாராணியிடத்தும் 1 மாதம் பொறகொல்லனின் மனைவியிடத்தும் இருக்கவேண்டும் எனும் தீர்ப்பு ..தற்போதய கழக நீதி..

இங்கு வழங்கப்படும் தீர்ப்பை பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி.

RAGHAVENDRA
7th February 2013, 09:47 AM
டியர் கண்பத் சார்,
பல்வேறு சொந்த மனக்கஷ்டங்கள் மற்றும் அலுவல்களுக்கிடையில் நேரம், உழைப்பு, யாவையும் செலவழித்து இங்கு நடிகர் திலகத்தின் சிறப்புகளை எடுத்தியம்பவே நான் இங்கு முனைந்து வருகிறேன். விவாதங்களைத் திரித்து மனக் கசப்புகளை வளர்த்து விரோதங்களை வளர்க்கும் மனப் பான்மை எனக்குக் கொஞ்சமும் கிடையாது அதற்கான நேரமும் அவசியமும் கிடையாது. ஆவணங்களைத் தேடிப் பிடித்து இங்கு தருவதில் உள்ள சிரமங்களை சொல்வதில் என்ன திசை திருப்பும் முயற்சி உள்ளது எனத் தெரியவில்லை. தாங்கள் உ.வே.சா. வைப் பற்றி எழுதிய வரிகளுக்குக் தான் பதில் எழுதினேன். தங்களுக்கு அவ்வாறு மனப்பான்மை இல்லை என்றால் இல்லை என்று சொல்லுங்கள். இதில் திசை திருப்பும் முயற்சி என்று எழுதுவது ஏன். அதில் என்ன கற்பனை உள்ளது.

அதே போல் தங்கள் விவாதங்களில் என் பெயர் இடம் பெறுகிறது என்பதற்கு பொருள் ... சிவகாமியின் செல்வன் பாடலைப் பற்றிய தங்கள் அனைவரின் விவாதங்களில் என்பதையே நான் குறிப்பிட்டுள்ளேனே தவிர , உங்கள் ஒருவரைத் தனியாகக் குறிப்பிட வில்லை. அதில் என் பெயரை தாங்கள் எழுதவில்லை என்பதையும் நான் அறியாதவனல்ல. சம்பந்தமில்லாமல் என் பெயரை இந்த விவாதத்தில் ஏன் கொண்டு வர வேண்டும்.

அதே போல் ஒரே ஒரு பதிவினை மட்டும் தாங்கள் குறிப்பிட்டு கூறுவதிலிருந்து தங்களிடம் பேசிப் பயனில்லை என நான் உணர்கிறேன். எனவே இனிமேல் இதில் கருத்துக்களைக் கூறுவதில் எனக்கு உடன் பாடு இல்லை.

என் எழுத்துக்களில் ஏதேனும் பிழையிருந்தால் அல்லது தங்களைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும். ஏனென்றால் தெரிந்து யார் மனதையும் புண்படுத்தும் தைரியமும் குணமும் எனக்கில்லை.

IliFiSRurdy
7th February 2013, 10:17 AM
நன்றி திரு ராகவேந்தர்..
உங்கள் பேரிலும் எனக்கு எந்த கோபமோ,வருத்தமோ இல்லை..
மேலும் எனக்கும் இந்த விவாதத்தை இழுக்க மனமில்லை.
இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.
வணக்கம்.

JamesFague
7th February 2013, 10:46 AM
Hope everyone must forget their differences and come
back to this wonderful thread of our NT.

kaveri kannan
7th February 2013, 11:27 AM
பிரபு அவர்கள் நடிக்கத்தொடங்கிய காலகட்டத்தில் மக்கள்திலகத்திடம் ஆசிபெற்றபோது கீழ்வரும் பொருள்படி அவர் சொன்னதாய்ப் படித்திருக்கிறேன் -

'' சண்டைக்காட்சிகளில் வேண்டுமானால் என்னை ஆசானாய்க் கொள். ஆனால் காதல் இணைப்பாடல் காட்சிகளுக்கு உன் தந்தையே மிகச்சிறந்த முன்னோடி..'' .


.


நாயகியின் கரம் தன்வசம் வந்தால் அதை உரிமை, அன்பு, காதல் கலந்து வருடி ஆராதிக்கும் அழகு உடல்மொழி நடிகர்திலகம் தனிமொழி..

சிட்டுக்குருவி முத்தம்கொடுத்து பாடலில் மரக்கிளை அருகே சரோஜாதேவி கைக்கு அவர் நடத்தும் காதல் ஆராதனை நினைவிருக்கிறதா?


------------------------

நீலவானம்
பசுந்தரை
வெண்-சேலை, மல்லிகை,கழுத்து நகை. புன்னகை..- நாயகி
கருங்கேசம், வசீகர முகம், மென்னடர் நிற உடை, உள்ளங்கவர் நடை - நாயகன்

ஶ்ரீதர்,மெல்லிசை மன்னர், கவியரசர், ஒளிப்பதிவாளர் என எல்லாரும் உச்சத்தில் துணைநிற்க
நடிகர்திலகத்தின் காதலிணைப்பாடல்கள் எனும் தேன்குடத்தில் ஒரு துளி..



http://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U

JamesFague
7th February 2013, 11:37 AM
Mr Kaveri Kannan

Superb Sir your Kavithai Nadai.

goldstar
7th February 2013, 04:26 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/madurai_zps40139d00.jpg

kaveri kannan
8th February 2013, 01:49 AM
நன்றி திரு கோல்ட்ஸ்டார் அவர்களே!

NOV
8th February 2013, 12:21 PM
It is with utter disappointment and embarrassment that moderators are continually called to moderate this thread. Even Ajith and Vijay threads are running without any moderation these days as those fans seem to know where to draw the line.

The purpose of Hub is for mutual discussion and exchanging of thoughts and NOT the place for childish arguments and name-calling. Very very disappointing!

WARNING

1. No personal abuses will be tolerated and will result in the respective Hubber banned immediately.

2. All posts should ONLY discuss Sivaji Ganesan and his movies.

3. Action will be taken on anyone making provocative posts.

NOV
8th February 2013, 12:46 PM
NOV sir,

Congradulations for acheiving 20,000 posts in the hub (ammadiyoooo...)

Waiting for your 50,000 goal.This EXACTLY what I am referring to.
What does it matter about posts? What has it got to do with NT? Does it add any value to the discussion here?

People who open the thread to find a new discussion, end up feeling frustrated and eventually won't even bother coming back here.

PLEASE STOP THIS NONSENSE.

kaveri kannan
8th February 2013, 01:37 PM
இமயம் பட விமர்சனத்தில் விகடன் இப்படி எழுதியது நினைவிருக்கிறது.

''நடிகர்திலகம் தம் சினிமா அனுபவ வயதுள்ள மற்ற இளைய நடிகர்களுக்கெல்லாம் சவால் விடும் தரத்தில் இந்தப் பாடலில் அசத்தியுள்ளார் ''

ஶ்ரீவித்யா ( இமயம், நீதியின் நிழல்) இணைந்த படங்கள் இன்னும் இன்னும் இருந்திருக்கக்கூடாதா எனச் சிறு ஏக்கம் உண்டு எனக்கு!



http://www.youtube.com/watch?v=blmm8EdNdM8

KCSHEKAR
8th February 2013, 03:43 PM
Nakkeeran - 2013 - Feb - 06 - 08

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NakkeeranArticleManushyaputhiran/NakkeeranPage1_zpscbfa08fe.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NakkeeranArticleManushyaputhiran/NakkeeranPage2_zps31ff6f44.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NakkeeranArticleManushyaputhiran/NakkeeranPage3_zps63283f6d.jpg

RAGHAVENDRA
8th February 2013, 11:38 PM
நக்கீரன் இதழ்ப் பக்கங்கள் விருதுகளைப் பற்றிய பதிவிற்குப் பாராட்டுக்கள் சந்திரசேகர் சார்.

என் விருப்பம்


http://youtu.be/t2Zmj1ShKLo

அதிகம் பேர் பார்த்திருக்க மாட்டார்கள். இப்பாடலை நான் விரும்பக் காரணம், அந்தக் கால கட்டத்தை மனதில் வைத்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள். இப்படம் 1971 தேர்தல் பிரச்சாரம் துவங்க இருந்த நேரம். ஸ்தாபன காங்கிரஸ் இளைஞர்கள் மத்தியில் மிகவும் தாக்கம் ஏற்படுத்திய நேரம். குறிப்பாக சிவாஜி ரசிகர்களின் உழைப்பில் திராவிட இயக்கங்களுக்கு சவாலாக விளங்கிய நேரம். பெருந்தலைவரை மனதில் வைத்து கண்ணதாசன் எழுதிய வரிகள், உனைத் தேடி வரும் எதிர்காலம்.

இப்பாடலில் கை விரல்களை சொடுக்கிக் கொண்டே வரும் நடிகர் திலகம் பின்னர் அப்படியே பின் பக்கம் தலைக்கு மேலே எடுத்துச் சென்று சுழற்றும் ஸ்டைலைப் பாருங்கள். கண்ணிமைக்க மறந்து விடுவீர்கள்.

அது மட்டுமின்றி இப்பாடலில் நடிகர் திலகம் அணிந்திருந்த சட்டையின் டிசைன் மிகவும் பிரபலம். சுமதி என் சுந்தரி வரும் வரையில் இந்த டிசைன் தான் ரசிகர்கள் மத்தியில் ஒரு கிரேஸாக இருந்தது. அது மட்டுமின்றி வெண்ணிற ஆடை நிர்மலா ஜோடியாக நடித்த ஒரே படம். [தங்க சுரங்கம் படத்தில் நடிப்பிற்காக வருவது போல் காட்சி வரும்]

மெல்லிசை மன்னரின் இசையில், டி.எம்.எஸ்., எஸ்.ஜானகி குரல்களில் மிகவும் அருமையான பாடலாயிற்றே..

kaveri kannan
9th February 2013, 01:52 AM
நக்கீரன் கட்டுரைக்கு நன்றி திரு கேசி அவர்களே..


தங்கைக்காக படத்தில் மறைந்திருந்த தங்கத்தை வெட்டித்தந்த இராகவேந்திரருக்கு நன்றியும் பாராட்டும்!

JamesFague
9th February 2013, 10:26 AM
Mr Raghavendra Sir,

Thokku Thooki indeed a remarkable fillm in NT's career.
I have no other option than to watch the movie tonight.
Thank you sir.

kiamqewaf
9th February 2013, 11:28 AM
நான் நினைப்பதுண்டு. எப்படி இந்த மாதிரி cliched ஆக படங்களில் காட்சியமைப்புகள் வருகின்றனவே என்று!! என்னதான் காதலியை சந்திப்பது இதம் என்றாலும் ,அன்று கதாநாயகனுக்கு குடும்ப பிரச்சினை காரணமாய் mood -out ஆகியிருந்தாலோ, அல்லது constipation போன்ற உடல் உபாதைகள் இருந்தாலோ, அவனால் காதல் காட்சியில் எப்படி romantic ஆக இருக்க முடியும்?
ஆனால் எனக்கொரு பெரிய surprise பந்தபாசம் (1962)படத்தில்.
காதலியை, வழக்கமான பார்க்கில் சந்திப்பார். ஆனால் குடும்ப பிரச்சினை சம்பந்தமாக குழப்பத்தில் இருப்பார். காதலி பேச பேச,பதில் கூட பேசாமல் ,கடு-கடுவென்று உட்கார்ந்திருந்து ,நகர்ந்து விடுவார்.
NT is always a wonder and much ahead of his time !!!


It is really a good movie. who is that heroine Devika or sarojadevi

kaveri kannan
9th February 2013, 12:23 PM
குமார் அவர்களே!

பந்தபாசம் படத்தில் நடிகர்திலகத்தின் இணை - தேவிகா..

இன்ப நினைவுகளை எழுப்பும் பாடல்..

http://www.youtube.com/watch?v=r0FWaYlH5Gs

kaveri kannan
9th February 2013, 12:35 PM
எஸ், வாசுதேவன் அவர்களைப் பின்பற்றி

எதிர்பாராதது படப்பதிவுக்கான


http://www.mayyam.com/talk/showthread.php?10239-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Filmography-News-and-Events&p=1014920#post1014920

என் நன்றியை இங்கே பதிக்கிறேன்.


பின்னாளில் வந்த மூன்று முடிச்சு கதை முடிச்சு இதை ஒட்டியே , இல்லையா?

சிக்கலான கதையைச் சிறப்பாய் எடுத்து, நடித்ததால் முதல் வெற்றியாகி
வேறு மொழிகளில் வெற்றி பெறவும் முன்னோடியாகி
- எதிர்பாராதது - '' புதிய அலை'' பாணி படம்.
நடிகர்திலகம் திரைவாழ்வில் முக்கிய மைல்கல்!

நன்றி ராகவேந்திரா அவர்களே!

அடிபட்டவன் நான், சிகிச்சை பத்மினிக்கா - நகைச்சுவை உணர்விலும் நம்மவர் திலகம்தான்!

JamesFague
9th February 2013, 12:37 PM
The other name of experimentation = NT

KCSHEKAR
9th February 2013, 02:22 PM
திரு.காவேரி கண்ணன் அவர்களே,

இமயம், பந்தபாசம் பாடல் இணைப்புகள் அருமை.

திரு.வாசுதேவன் அவர்களின் "எதிர்பாராதது" திரைப்படப் பதிவை எதிர்பாராமல் இணைத்தது இன்ப அதிர்ச்சி.

நன்றி!

RAGHAVENDRA
9th February 2013, 03:20 PM
பாராட்டுக்களுக்கு நன்றி வாசுதேவன், காவிரிக்கண்ணன் மற்றும் சேகர் சார்.


http://imageshack.us/scaled/landing/143/tpathak0001.jpg

மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நேற்று 08.02.2013 முதல் நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றிக் காவியமான தங்கப் பதக்கம் திரையிடப் பட்டுள்ளது. சிறப்பான வரவேற்பைப் பெற்று வருவதாக தகவல்.

இத்தகவலைத் தந்த திருச்சி செல்வம், மற்றும் ராமஜெயம் நண்பர்களுக்கு மிக்க நன்றி.

kaveri kannan
9th February 2013, 07:45 PM
என் விருப்பம்

எனக்கு 10 வயதிருக்கும்போது இப்பாடலில் மயங்கினேன்..
40 ஆண்டுகள் கழித்தும் மயக்கம் குறையவில்லை.

பாட்டுக்கோட்டை கட்டிய பட்டுக்கோட்டையார் - எத்தனை எளிய சரளமான கருத்துள்ள வரிகள்
மெல்லிசை மன்னர்கள் - என்ன எளியோருக்கான துள்ளல் தாளம், லயம்
சந்திரபாபு - என்ன பொருத்தமான சுறுசுறுப்பான துணை
டி. எம். எஸ் - எத்தனை பாந்தமான குரல், நயம்..

Prop - எனப்படுவதைக் கையாளும் திறன்..
இங்கே ரிக்*ஷா நடிகர்திலகத்தால் எத்தனை அழகாய்க் கையாளப்படுகிறது..!

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கவைக்கு உதவாத வெறும்பேச்சு..

என் வாழும் நெறி தந்த இவ்வரிக்காகவே பதிபக்தி படப்பாடல் என் மனதுக்கு நெருக்கம்.. விருப்பம்!

http://www.youtube.com/watch?v=PafwC_0zKxc

RAGHAVENDRA
10th February 2013, 09:27 AM
டியர் காவிரிக் கண்ணன்,
தாங்கள் கூறிய படி பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் தனி பாணி தான். காலத்தைக் கடந்து நிற்கும் கருத்தாழமிக்க வரிகள். இந்தப் பாடலிலேயும் சமுதாயத்திற்கு இன்றைக்கும் பொருந்தும் வகையில் வரிகள் அமைந்துள்ளது அவர்களுடைய முன்னோக்குப் பார்வையினை எடுத்துக் காட்டுகிறது. நடிகர் திலகத்தின் பாடல்களில் இது போன்ற அபூர்வமான பாடல்களை தாங்கள் மேலும் மேலும் தர வேண்டும் என்பது என் விருப்பம்.

RAGHAVENDRA
10th February 2013, 10:48 AM
My Choice என் விருப்பம்

மாங்காய் பாலுண்டு - காவேரி - இசை ஜி.ராமநாதன் - குரல் சி.எஸ்.ஜெயராமன்

நடிகர் திலகத்தின் நடிப்பு ஒரு முழுமையான இலக்கண ஏடு என்பதற்கு ஓர் உதாரணம், அவருடைய நடனக் காட்சிகள். எந்த வித நடனமானாலும் அவருடைய தனித்துவம், அதனுடைய சிறப்பு அதில் மிளிரும். பல ரசிகர்கள் அதிகம் அறிந்திராத சில படங்கள் அல்லது பாடல் காட்சிகளில் அவருடைய சிறப்பான நடனங்கள் எடுத்துக் கூறவேண்டியது நம் கடமை. அந்த வரிசையில் மட்டுமின்றி, என் விருப்பமான பாடலாகவும் இந்தப் பாடல் காட்சி சேர்கிறது. மாங்காய்ப் பாலுண்டு என்று துவங்கும் இப்பாடலை நாம் அடுத்து திரைப் பட்டியலில் இடம் பெற இருக்கும், காவேரி திரைப்படத்தில் காணலாம். நம் அருமை நண்பர் பார்த்தசாரதி அவர்கள் நடிகர் திலகத்தின் வாயசைப்பின் சிறப்பைப் பற்றி இங்கே ஏற்கெனவே மிக அழகாக விவரித்துள்ளார். அதனை மேலும் வலுவாக்கிடும் வண்ணம் அமைந்தது இப்பாடல். இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் அவர்களின் குரலின் தன்மைக்கேற்றவாறு இப்பாடலில் நடிகர் திலகத்தின் வாயசைப்பு இருக்கும். இந்த வித்தியாசத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நடிகர் திலகத்திற்காக டி.எம்.எஸ். பாடிய பாடல், ஏ.எம். ராஜா பாடிய பாடல் போன்று ஒவ்வொரு பாடகரின் பாடல் காட்சிக்கும் அவர் வாயசைத்துள்ள விதத்தை கவனித்தால் தான் புரியும்.

இப்பாடல் காட்சியில் அவருடைய நளினமான நடனத்தைப் பாராட்டுவதா, கண்களில் காட்டும் வசீகரத்தை சொல்வதா, புன்னகையின் மகத்துவத்தை சொல்வதா, கால்களில் அவர் காட்டக் கூடிய தாளத்தை சொல்வதா, சரியான நேரக் கட்டில் பின்னால் சென்றவாறே பாட்டிற்கு வாயசைத்துக் கொண்டே நடன அசைவையும் செய்து கொண்டே அவர் நம்மை கட்டிப் போடும் மந்திரத்தை சொல்வதா ...

பாருங்கள் .... உணருங்கள் ...


http://youtu.be/XvLNA-AewBE

RAGHAVENDRA
10th February 2013, 11:04 AM
Rare Images

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/rare%20images/rare04_zps8352161c.jpg

JamesFague
10th February 2013, 02:15 PM
Rare Photo of NT is simply superb.

JamesFague
10th February 2013, 02:26 PM
Mr Raghavendra Sir,

I have one suggestion.When you post the NT's movies one by one, you
can also post the views of NT at the bottom of the every film. It has
been posted by Mr Pammalar long time back and it will be very opt for
this thread.

It is only a suggestion.

RAGHAVENDRA
10th February 2013, 03:49 PM
Really a very valuable suggestion. Shall definitely try to do it.

kaveri kannan
10th February 2013, 07:20 PM
காவேரி படப் பதிவுகளுக்கும் பாடல் சுட்டிகளுக்கும் நன்றி ராகவேந்திரா அவர்களே..

நீங்கள் சொன்னதுபோல் மாங்காய்ப்பால் பாடலில் நடிகர்திலகம் காட்டும் நவரச பாவங்கள் - பன்முகத் திறமையைப் பறைசாற்றும் சான்றுகள்..

அன்பு வாசு முன்னர் அளித்த காவேரி நாயகரின் கலைவண்ணப் படம் அழகோ அழகு. நன்றி!

kaveri kannan
10th February 2013, 07:50 PM
வெள்ளை உடையில் சமூகக் கறுப்பைச் சாடும் புயலைக் காண-

''உண்டு'' என்று சொல்ல எப்படி உதடுவைத்தால் மொழியின் அழகு சிதறாமல் உச்சரிக்கலாம் எனக் கற்க -

காமிரா எங்கிருக்கிறது.. எந்த கோணத்திலும் அழகாய்த் தெரியும் தம் முகத்தை அதிகபட்சம் எப்படி அதன் கண்களுக்கு விருந்தாக்கலாம் என்பதன் அரிச்சுவடி அறிய...

இதோ லக்ஷ்மி கல்யாணம் பாட(ல்)ம் - என் விருப்பம்!


http://www.youtube.com/watch?v=RABmwdzsOYw

Murali Srinivas
10th February 2013, 09:35 PM
நீண்ட நாட்களுக்கு பிறகு திரிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியுடன் வரவு.

1974 ஜூன் 1 முதல் எப்போது வருகை புரிந்தாலும் மதுரை மாநகரை, அதன் மக்களை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து விடும் S.P சௌத்ரி இந்த முறையும் மதுரை மக்களை தன வசப்படுதியிருக்கிறார். வெள்ளியன்று சென்ட்ரலில் திரையிடப்பட்ட இந்தப் பதக்கம் முதல் இரண்டு நாட்களில் பெற்ற வரவேற்பு அமோகம்! கடந்த பல மாதங்களாக எந்த படமும் பெறாத வசூலை முதல் இரண்டு நாட்களிலேயே பெற்றிருக்கிறது. வெள்ளி மற்றும் சனி இரவுக் காட்சிக்கு கூட அண்மையில் எந்தப் படத்திற்கும் வராத கூட்டம் வந்திருக்கிறது. இன்று வரவேற்பு உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. மதியக் காட்சிக்கே கணிசமான பேர் திரண்டு வந்திருந்தனராம்! மதியக் காட்சிக்கு பால்கனியில் பாதிக்கு மேல் தாய்க்குலங்கள் என்பதை தியேட்டர் ஊழியர்களே ஆச்சரியமாக சொன்னார்களாம்!

மாலைக் காட்சிக்கு 5 மணி முதலே அலப்பரை ஆரம்பித்து விட்டதாம். மிகப் பெரிய பானர்கள் இரண்டு வைக்கப்பட்டிருந்தன என்றும் மாலைகளின் அணிவகுப்பு குவிந்து விட்டதாகவும் செய்தி. 1000 மற்றும் 5000 வாலாக்கள் காதை கிழிக்க [அலைபேசியில் சத்தம் கேட்ட எனக்கே நேரில் கேட்பது போல்] டவுன் ஹால் ரோடே ஸ்தம்பித்ததாம். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு [கோவிலின் மேல கோபுர வாசலுக்கு அந்த ரோடு வழியாகதான் செல்ல வேண்டும்] சுற்றுலா வந்திருந்த பல வெளிநாட்டினர் இதை கண்டு வியந்து என்னவென்று விசாரித்து விஷயம் புரிந்தவுடன் பிரமித்து புகைப்படம் எடுத்தனராம்.

நமது நண்பரிடம் பேசிய இரு வெளிநாட்டினர் படம் 39 வருடங்களுக்கு முன்பு வெளியான பழைய படம் என்பதையும் படத்தின் நாயகன் இறந்து 12 வருடங்கள் ஆகிறது என்பதையும் கேட்டு அசந்து விட்டனராம் இந்திய, தமிழக அரசியலை பற்றி சிறிது அறிந்து வைத்திருந்த அவர்கள் " Do you get any political support for this ?" என கேட்டனராம். இல்லை என்றதும் ஆச்சரியப்பட்டனராம்.

வெகு நாட்களுக்கு பின் சென்ட்ரல் திரையரங்கில் இன்றைய மாலைக்காட்சிக்கு நீண்ட வரிசையில் நின்று மக்கள் டிக்கெட் வாங்கி சென்றதாக கூறினார். தியேட்டரில் க்யூ வரிசையைப் பார்த்தே நாளாயிற்று என சொன்னார்களாம்!

எல்லாவற்றையும் விட முக்கியமான செய்தி இன்று மதியக் காட்சி வரை வந்த வசூலிலேயே தியேட்டரின் ஒரு வார வாடகை [30,000 ரூபாய்] கவர் ஆகி அதற்கும் மேலாக சென்று விட்டதாம். இன்று இரவுக் காட்சியோடு வசூல் ரூபாய் 45,000/- ஐ தொடும் என தெரிகிறது. அண்மைக் காலங்களில் பல படங்கள் ஒரு வாரத்தில் பெற்ற மொத்த வசூலை விட இது அதிகம்!.

இந்த நாளிலும் இந்த சாதனை எளிதாக வரவில்லை. சுற்றுலாவை ஊக்கப்படுத்தவும் மதுரையும் சிறப்புகளை வெளிநாட்டினரும் மற்றவர்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் கடந்த மூன்று நாட்களாக [வெள்ளி சனி மற்றும் இன்று ஞாயிறு] மதுரையின் தொன்மையான சங்க காலம் தொட்டு விளங்கி வரும் பாரம்பரிய சிறப்புகளை, பைந்தமிழரின் பல்வேறு வாழ்கை முறைகளை, பாரம்பரிய கலை வடிவங்களை கண்காட்சியாகவும், நகரின் மையப் பகுதியில் ஊர்வலங்கள், தெருமுனை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வடிவங்கள் மூலமாக வெளிப்படுத்தும் "மாமதுரை போற்றுவோம்" என்ற பெயரில் அரசு நிர்வாகம் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பேருந்துகள் போலும் நகரின் மையப் பகுதிக்கு வர முடியாமல் சுற்றி செல்கின்றனவாம். போக்குவரத்து வழிகள் மாற்றப்பட்டு நினைத்த இடத்திற்கு செல்லும் பயணம் கடினமாகியிருக்கிறது. இதன் காரணமாக பலர் கார் மற்றும் வாகனங்களை வெளியில் எடுக்கவில்லையாம். இருப்பினும் சென்ட்ரல் திரையரங்கிற்கு மட்டும் கூட்டம் குறையவில்லை.

அது போன்றே படத்தின் பிரிண்ட்-ம் சுமார் ரகம்தானாம். பிரிண்ட் மட்டும் நன்றாக இருந்திருந்தால் படம் இன்னும் உயரம் தொட்டிருக்கும் என சொல்கிறார்கள்.

எத்தனை இடர் வந்தால் என்ன! எத்தனை சோதனைகள் வந்தால் என்ன! அனைத்தையும் வெல்லும் திறன் பெற்றவரல்லவா சௌத்ரி! அவர் பெயரே சொல்லுமே அதை!

S.P.சௌத்ரி என்றாலே Supreme Performer சௌத்ரி என்றுதானே அர்த்தம்!

அன்புடன்

kaveri kannan
10th February 2013, 10:22 PM
மிக இனிக்கும் சேதி தந்த திரு முரளி ஶ்ரீனிவாஸ் அவர்களுக்கு நன்றி..

ஜூன் 1 - புதுவகுப்புக்கான பாடநூல்கள், எழுதுபொருட்கள் மாலை 5 மணியளவில் வாங்கி, அதை இருவர் மடியிலும் சுமந்தபடி
நானும் என் அன்பு அப்பாவும் தங்கப்பதக்கம் பார்த்த அந்த ஆறுமணி மாலைக் காட்சி..

கதவடைக்குமுன் அரங்குள் எட்டிப்பார்த்த சூரியனின் கதிர்க்கீற்று வெளிச்சம் இன்னும் என் மனதில் அழியாக் கோலமாய்..
அரங்கிருண்டபின் எஸ் பி சவுத்ரியின் ஆர்ப்பரிப்பில் அடங்கிப்போன அத்தனை ரசிக இதயங்களின் துடிப்பு இன்னும் உணரத்தக்கதாய்..

நடிகர்திலகம் - நான் விழித்திருந்த பொழுதுகளில் எத்தனை சதம் இவரால் ரசனை நிரம்பிக் கழிந்திருக்கும்!

நன்றி நடிகர்திலகத்துக்கு!

kaveri kannan
10th February 2013, 11:28 PM
1968 - எனக்கு 5 வயது.

அப்போதுதான் படிக்கப்பழகிய நேரம்.

சிவாஜி ரசிகர்களான என் அப்பா -அம்மா இருவருமே ஏற்கனவே எங்க ஊர் ராஜா பார்த்துவிட்டார்கள்.. ( எனக்குத் தெரியாமலே!!!!)

என்னை ஒரு நாள் மாலைக் காட்சிக்கு அழைத்துச் சென்றார்கள் என் பெற்றோர். சிவாஜி படம் என்றால்தான் வருவேன் என்றபடி சென்றேன்.

அரங்க வாசலில் உயிரா மானமா என எழுத்துக்கூட்டிப் படித்துவிட்டு, எங்க ஊர் ராஜா படத்துக்குத்தான் போகணும் என அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்த
என்னை - மற்றவர்கள் ஆர்வத்துடன் பார்த்து விமர்சனம் செய்ததும், என் அப்பா -அம்மா நிலை தர்மசங்கடமானதும்..

ஒரு வழியாய் அழுத்திக் கிள்ளி என்னைப் பலவந்தமாய் உள்ளே தள்ளிப்போன என் அப்பா -அம்மாவிடம் பிணங்கியபடி வேண்டாவெறுப்பாய் அரங்கில் இருந்த என் மனம்
அப்படம் நெடுக... இந்நேரம் எங்க ஊர் ராஜா பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என ஏங்கிய ஏக்கம்... இன்னும் நினைவில் பசுமையாய்..


எத்தனை ஆண்டுகளாய் என் இதயத்தின் ரசனை அங்கம் நம் நடிகர்திலகம் வசம்..


http://www.youtube.com/watch?v=gKm6s5Axz5Q

KCSHEKAR
11th February 2013, 10:36 AM
Dear Murali Sir,

Thanks for your information. "S.P.சௌத்ரி என்றாலே Supreme Performer சௌத்ரி என்றுதானே அர்த்தம்!" - Exactly said.

JamesFague
11th February 2013, 10:38 AM
Mr Murali Sir,

Madurai always for NT. As you told, not only for SP for other NT's movies
the response will be similar or more than that. If you could get any
photos of the allapparai pls post the same.

KCSHEKAR
11th February 2013, 10:42 AM
டியர் காவேரி கண்ணன் சார்,

தங்களின் "எங்க ஊர் ராஜா" அனுபவம் அருமை. சுருங்கச் சொன்னாலும் பசுமையான தங்களின் நினைவுகளை, என் விருப்பம் மற்றும் பாடல் காட்சிகள் வர்ணனையை அழுத்தமாக, அழகாகச் சொல்லும் தங்களின் பாங்கு சிறப்பாக உள்ளது. நன்றி.

KCSHEKAR
11th February 2013, 12:31 PM
"KUMUDHAM - 13-02-2013"

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KumudhamPage1_zps9078e784.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/KumudhamPage2_zps87739256.jpg

kaveri kannan
11th February 2013, 10:37 PM
ஜானகி அம்மாவின் பேட்டிப் பதிவுக்கு நன்றி திரு கேசி அவர்களே..

தகுதியற்றவர்களுக்கு உயர்வு தந்த தேசங்களின் பின்கால வரலாற்றில் அங்கீகாரங்கள் பிடுங்கப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டதை அறிவோம்..

உண்மையை அரசியல்/ சர்வாதிகாரம்/ குழும மனப்பான்மையால் அமுக்கி எழுதிய தப்பான வரலாற்றுப் பந்துகளை காலவெள்ளம் மேலே கொண்டு வந்து தள்ளும்..
இளைய தலைமுறை அந்த ஊதல் பந்துகளை நசித்துக் கிழித்து காணாமல் போக்கும்..

உண்மையான திறமையாளர்களை அங்கீகரிக்கத் தவறிய நாடும் அரசும் அடுத்தடுத்த காலகட்டங்களில், அந்தப் புதுத்தலைமுறையிடம் நாணி மன்னிக்க வேண்டி மண்டியிடும்..

கர்ணன் கண்ட இந்தத் தலைமுறை கேட்காதா?

இவரை விடவா '' பாரத்'' பெற இன்னொருவர் இந்த தேசத்தில்?

RAGHAVENDRA
11th February 2013, 11:16 PM
My Choice என் விருப்பம்

பாடல் - அழுவதா இல்லை சிரிப்பதா
குரல்கள் - டி.எம்.எஸ், பி.சுசீலா
இசை - பெண்டியாலா நாகேஸ்வரராவ்
படம் - பெண்ணின் பெருமை

பொதுவாகவே நடிகர் திலகம் என்றாலே சோகம் என்று கூறும் அளவிற்கு தவறான ஒரு கண்ணோட்டம் பரவியிருக்கிறது. இது ஏன் என்று தெரியவில்லை. நெடுந்தகடு நிறுவனங்கள் கூட நடிகர் திலகம் படப் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டால் உடனே சோகம் தத்துவம் அல்லது டூயட் என்ற வரையறைக்குள் நின்று விடுகிறார்கள். இந்த தவறான கண்ணோட்டத்தை உடைத்தெறிவது நம் கடமை. அதற்கு நமக்கு பயன் படக் கூடியவை அவர் நடித்த ஜாலியான பாடல்கள்.

இந்த அழகு யாருக்கு வரும், வசீகர புன்னகை என்று பலவாறு வர்ணனைகளை நாம் கண்டிருக்கிறோம், கேட்டிருக்கிறோம். அழகு முகம் பழகு சுகம் என்று சொர்க்கம் திரைப் படத்தில் கவியரசர் வர்ணித்ததற்கேற்ப, அழகு சொட்டும் இந்த முகத்தைப் பாருங்கள். இந்தப் புன்னகையில் வசீகரிக்கப் படாதவர்கள் இப்புவியில் இருப்பரோ.

பெண்ணின் பெருமை திரைப்படத்தில் இடம் பெற்ற அழுவதா இல்லை சிரிப்பதா என்கிற இப்பாடல் என் மிக விருப்பமான பாடல்களில் ஒன்று. மிகவும் சிறிய வயதில் விவரம் தெரியாத பிராயத்தில் இந்தப் பாடலின் ஹார்மோனிய ஒலியும் நடிகர் திலகத்தின் சிரிப்பும் அப்படியே பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்து விட்டன. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக என் நெஞ்சில் தங்கியுள்ள பாடல்களில் இதுவும் ஒன்று.

டி.எம்.எஸ். மற்றும் பி.சுசிலா என்கிற இணையற்ற டூயட் பாடகர்களின் சாம்ராஜ்யத்தை துவக்கி வைத்த பாடல் அல்லவா. சரியான துவக்கம். டி.எம்.எஸ். மற்றும் சுசீலா குரல்கள், நடிகர் திலகம் மற்றும் எம்.என்.ராஜம் இருவரின் வசீகரப் புன்னகை, பின்னணி இசை, சக நடிகர்களின் ஈடுபாடு கலந்த உழைப்பு யாவையும் இப்பாடலை சிரஞ்சீவித்துவம் பெற வைத்து விட்டன.

பாடலைப் பாருங்களேன். நீங்களே உணர்வீர்கள்.


http://youtu.be/_JbAAtuLGJE

kaveri kannan
12th February 2013, 06:45 AM
விருப்பப்பதிவுக்கு நன்றி திரு ராகவேந்திரா அவர்களே..

எதையுமே சிறப்பாகச் செய்யும் திறமை பெற்றவர் நம் நடிகர்திலகம்..

சோகச்சுவையையும் அவர் மிகச் சிறப்பாய்ச் செய்ததனால்..
அச்சுவையை அவரைக் கொஞ்சமும் விஞ்சி எவரும் செய்யாததனால் அப்படி தொகுப்புகள் வருகின்றன .. என நினைக்கிறேன்.

இப்பாடலில் இடது கையில் கடிகாரம் ..

பின்னாளில் பல படங்களிலும் அது வலது கையில்!

KCSHEKAR
12th February 2013, 01:07 PM
http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/603996_266775346787278_124865394_n_zpsb8f47968.jpg

நடிகர்திலகத்தின் பன்முகச் சிறப்புகளை விளக்கும் வண்ணம், தொகுக்கப்பட்டு, 2009-ல் வெளிவந்த "சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு" நூலின அடுத்த பதிப்பு "நக்கீரன் பதிப்பகம்" மூலம் வெளிவந்திருக்கிறது.

தேவைப்படுவோர் கீழ்க்கண்ட முகவரியில் அணுகி பெற்றுக்கொள்ளவும்.

நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
105. ஜான் ஜானிகான் ரோடு
ராயப்பேட்டை
சென்னை - 600014
தொலைபேசி : 044 - 43993000 / 43993007

kaveri kannan
12th February 2013, 01:15 PM
திரு கே.சி. அவர்களே..

உங்களின் முயற்சி, உழைப்பால் உருவான இப்புகழ்மாலை நடிகர்திலகத்தின் இரசிகர்களின் கரங்களில் அதிகம் தவழ்ந்து
அடுத்த தலைமுறைக்கும் அவர் பெருமை பரவட்டும்!

வாழ்த்துகள்!

KCSHEKAR
12th February 2013, 04:18 PM
Dear Mr. Kaveri Kannan

Thanks for your appreciation.

kaveri kannan
13th February 2013, 03:24 AM
நம் நடிகர்திலகம் சிவனை திலகமே தமிழ்நாட்டின் கலையுலகத் திலகமே என அழகாய் அழைத்துப் பாடும் காட்சி..

கனிந்த முகத்தில் கருணை, பக்தி, இரக்கம், நம்பிக்கை, வியப்பு என எத்தனை உணர்வுகள்...

நம்மில் அதிகம் பேர் கவனத்தில் வைத்திருக்காத இந்த அத்திப்பூ பாடலைத் தரவேற்றிய beeveeyaar + youtube --க்கு நன்றி

(இது நம் திரு ராகவேந்திரா சாளரம் என நினைக்கிறேன்..)


வடிவுக்கு வளைகாப்பு படத்தில் திலகம் பாடும் திலகமே!

http://www.youtube.com/watch?v=N0NH4iyPn_A

JamesFague
13th February 2013, 10:05 AM
See the NT's Smart face in Thookku Thooki and the charmness is the
divine gift to our NT.

sankara1970
13th February 2013, 11:17 AM
திரு. கே.சி அவர்களே நடிகர் திலகம் வரலாற்றின் வரலாறு புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்

KCSHEKAR
13th February 2013, 12:03 PM
திரு. கே.சி அவர்களே நடிகர் திலகம் வரலாற்றின் வரலாறு புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்

Dear sankara,

Thanks for your wishes

JamesFague
13th February 2013, 12:32 PM
Mr K C Sir,

I saw the book in Koyambedu Bus Stand and due to
time factor I could not purchase the same. Whenever
I visit Chennai I try to purchase the book.

kaveri kannan
13th February 2013, 01:36 PM
நவராத்திரி கூத்துப் பாடலை நேற்று ரசித்தபோது நினைவுக்கு வந்த -
என் தம்பி படத்தில் நடிகர்திலகம் நாடகநடிகராய் நடிக்கும் முந்தி முந்தி பாடல்காட்சியை இணையத்தில் தேடியும் எனக்கு அகப்படவில்லை.

நண்பர்கள் உதவுவீர்களா? நன்றி!

kaveri kannan
14th February 2013, 11:39 AM
இந்த வார விகடன் - மேடையில் எம் எஸ் வி கேள்வி-பதில் பகுதியில்
அவருக்குப் பிடித்த டாப்-10 பாடல்களைப் பட்டியல் இட்டுள்ளார்.

அதில் முதல் 4 இடங்கள் நடிகர்திலகம் பாடல்களே..

1. எங்கே நிம்மதி (புதிய பறவை)
2. யார் அந்த நிலவு ( சாந்தி)
3. தெய்வமே தெய்வமே ( தெய்வ மகன்)
4. தேவனே எம்மைப் பாருங்கள் ( ஞான ஒளி).

மேலும் எதற்கும் ஒரு காலம் உண்டு ( சிவகாமியின் செல்வன்) பாடலும் ''உயர் பத்து'' பட்டியலில் உண்டு!


எம் எஸ் வி மிகவும் கடினப்பட்டு இசைமயமைத்தது , கவியரசரின் வைர வரிகளுக்கு நியாயம் செய்ய நேரம் எடுத்து பல மெட்டுகள் போட்டு சலித்து எடுத்து கடைசியில் திருப்தியாய்த் தந்தது -
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே ( அவன்தான் மனிதன்)

abkhlabhi
14th February 2013, 03:01 PM
நிஜகர்ணனாக from facebook

http://www.facebook.com/photo.php?fbid=125320490976602&set=a.109409639234354.15900.100004959549645&type=1&theater

JamesFague
14th February 2013, 04:11 PM
In this world there is no recognition for Nija Karnan.
Vilambarathai Virumbatha Vindhai Manithar.
Kalam oru naal bathil sollum.

kaveri kannan
15th February 2013, 02:55 AM
நிஜகர்ணனாக from facebook

http://www.facebook.com/photo.php?fbid=125320490976602&set=a.109409639234354.15900.100004959549645&type=1&theater

நன்றி abkhlabhi அவர்களே!

விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
விளக்கிருந்தாலும் எண்ணெயில்லாமல் வெளிச்சம் கிடைக்காது

காற்றைக் கையில் பிடித்தவனில்லை
தூற்றித் தூற்றி வாழ்ந்தவர் இல்லை!


http://www.youtube.com/watch?v=_pyYU7U4kQs

RAGHAVENDRA
15th February 2013, 11:23 AM
http://i.ytimg.com/vi/Xr4gvXXgCnU/0.jpg

இன்று முதல் ஈரோடு விஜயா திரையரங்கில் தினசரி 2 காட்சிகளாக நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக் காவியம்

என்னைப் போல் ஒருவன்

தகவல் உபயம் - நண்பர் சுப்பு எ சுப்ரமணியம்

RAGHAVENDRA
15th February 2013, 07:26 PM
ஈரோடு விஜயா திரையரங்கினைப் பற்றி திரு சுப்பு அவர்கள் தந்த தகவல்கள்

அரங்கின் இருக்கை சுமார் 200 பேர் இருக்கும்.
பிரதான ரயில் நிலையத்தின் அருகில் உள்ளது.
நுழைவுக் கட்டணம் ரூ 15.00
ஒரு நாளைக்கு புதிய படங்கள் ரூ.800லிருந்து 1000 வரை வசூலாகுமாம். ஆனால் பழைய படங்கள் நல்ல வசூலைத் தருமாம். குறிப்பாக சிவாஜி எம்ஜிஆர் படங்கள் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்குமாம்.
ஒரு நாளைக்கு இரு காட்சிகள் மட்டும். மாலை மற்றும் இரவு காட்சி.
நேற்று ஒரு நாளைக்கு மட்டும் என்னைப் போல் ஒருவன் கிட்டத் தட்ட ரூ.2,500 வசூல் செய்துள்ளதாம்.

மேற்கொண்டு நிழற்படங்கள் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

அவருக்கு நமது நன்றி.

vasudevan31355
15th February 2013, 10:34 PM
மெய் சிலிர்க்க வைத்த மெய்யான நடிகர்.

தந்தை என்பது தெரியாமல் தங்கம் கடத்தும் தொழிலின் தலைவர் ஸ்பையைப் பிடிக்கப் போராடுகிறான் சிபிஐ அதிகாரி ராஜன். ஒவ்வொரு முறையும் ஸ்பையைப் பிடிக்க முயலும் போதெல்லாம் ராஜனின் திட்டங்கள் தோல்வியுறுகின்றன. ஸ்பை சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் ராஜனிடமிருந்து தப்பித்து விடுகிறான். யாரோ ராஜனுடைய திட்டங்களை ஸ்பைக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி விடுகிறார்கள். யார் அது?! குழம்புகிறான் ராஜன். அப்படி யாரும் இருப்பதாக அவன் நினைவுக்கு எட்டிய வரையில் வரவில்லை. ஆனால் அவன் தன்னுடைய தொழில் ரகசியங்களை தான் தாயிடம் மட்டுமே கூறுவான். இறுதியாக ஸ்பையை பிடிக்க இருக்கும் திட்டத்தை ராஜன் தன் தாயிடம் தெரியப்படுத்தி இருந்தான். இதிலும் ஸ்பை எஸ்கேப். இப்போது வருகிறது சந்தேகம் ராஜனுக்கு.

தாயிடம் கோபமும் வருத்தமும் கலந்த நிலையில் வருகிறான் ராஜன். அவன் முகத்தைக் கண்டே அவன் தாய் அவன் உள்ளத்தைப் புரிந்து கொண்டு விடுகிறாள். தன் கணவனான ஸ்பையைக் காப்பாற்ற ராஜனின் திட்டங்களை ஸ்பையிடம் சொல்லி ஸ்பையை தப்பிக்க வைப்பவளே அவள்தானே! மேலும் தன் கணவனைப் பற்றி ராஜனிடம் அவள் மூச்' விட்டதில்லை. அப்படி சொன்னால் ராஜன் தன் தந்தையை அரெஸ்ட் செய்து விடுவானே!

மகனின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தவிக்கிறாள் தாய். போன காரியம் வெற்றியடையாமல் திரும்பி வந்ததை மகனின் முகம் காட்டுகிறது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு போன காரியம் வெற்றியடந்ததா என்று மேலுக்குக் கேட்கிறாள். ராஜன் வெற்றியடைந்து விட்டதாக ஜாடை செய்கிறான் வேண்டுமென்றே! பதறுகிறாள் தாய். தன் கணவன் தன் மகனிடம் பிடிபட்டு விட்டானோ என்று ஒருகணம் ஸ்தம்பித்துப் போகிறாள். அந்தக் கணமே தன் தாயின் முக பிரதிபலிப்புகளின் மூலம் தன் திட்டங்களுடைய தோல்விகளுக்கெல்லாம் அவள்தான் காரணம் என்று கண்டுபிடித்து விடுகிறான் ராஜன்.

எரிமலையாய் வெடிக்கிறான் ராஜன். தன் தாய் யாரோ ஒருவனைக் காப்பாற்ற தன்னை ஏன் பலிகடா ஆக்கினாள் என்று குமுறுகிறான். வார்த்தைகளால் அவளைக் கொல்கிறான். தன் தாய் இரண்டாவதொரு வாழ்க்கை வேறொருவனிடம் வாழ்கிறாள் என்று அவளிடமே கேட்டு அவளைத் துடிக்க வைக்கிறான். அப்போதுதான் அந்தத் தாய் மகன் தேடும் அந்த ஸ்பைதான் அவனின் தந்தை என்ற உண்மையை வெளிப்படுத்துகிறாள். அதிர்ச்சியில் சிலையாய் உறைகிறான் ராஜன். தன் தாய் குற்றமற்றவள் என உணருகிறான். அதே சமயம் ஒரு பயங்கரக் குற்றவாளியைத் தப்பிக்க வைத்த குற்றவாளியாய் தன் தாயைப் பார்க்கிறான். சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாச பந்தங்களை அறுத்து, தாயென்றும் பாராமல் அவளைக் கைது செய்கிறான். வேதனையின் விளிம்புக்கே செல்கிறான்.

தாயாக எஸ்.வரலஷ்மி. தந்தையாக O.A.K.தேவர்.

சிபிஐ அதிகாரி ராஜனாக நம் நடிகர் திலகம்.

கேட்கவும் வேண்டுமோ! அற்புதமான சில நிமிடக் காட்சிகள்.

ஸ்பையைப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியுற்று, தன் தாயின் மேல் சந்தேகப்பட்டு வீட்டுக்கு வரும் நடிகர் திலகம் எதுவுமே பேசாமல் தடுமாறும் தன் தாயைப் பார்க்கும் அந்தப் பார்வை...தன் தோல்விகளுக்கு அவள்தான் காரணமோ என்ற சந்தேகப் பார்வை... தன் தாய் குற்றவாளியா இல்லையா என்று ஊர்ஜிதம் செய்து கொள்ளத் துடிக்கும் அந்தக் கண்கள்... தன்னிடம் காபி கொடுக்கும் அவளின் கை நடுங்குவதைக் கவனித்து தீர்க்கமாக அவளையே ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் அழுத்தமான அமைதிப் பார்வை...

"போன காரியம் வெற்றியா முடிஞ்சுதாப்பா?" என்று கேட்கும் வரலஷ்மியிடம் மெளனமாக "முடிந்தது" என்பது போல தலையாட்டும் பாவம்..."அவுங்களைப் புடிச்சிட்டியா?" என்று தாய் கேட்க "ஆமாம்" என்பதற்கான ஆழமான தலையசைவு... "அவுங்க இப்ப ஜெயில்லதான் இருக்காங்களா" என்பவளிடம் அதற்கும் "ஆமாம்" என்று வசனமில்லாமலேயே பொய்யாக உணர்த்தும் அற்புதம்...

தன் கணவன் தன் பிள்ளையிடம் மாட்டிக் கொண்டானே என்று அவள் அழும் போது வெடிக்க ஆரம்பிப்பார். தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு அவள்தான் காரணம் என்று கதறுவார். "அந்த ஸ்பைக்கும் உங்களுக்கும் என்ன உறவு?" என்று கேட்டு "இரண்டாவது வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கீங்களா அம்மா?" என்று அவமானத்தால் கூனிக் குறுகிப் போவார். பின் அந்த ஸ்பைதான் ராஜனின் அப்பா என்று விளக்கியவுடன் அப்படியே சிலையாகி விடுவார். பின் அவள் தன்னுடைய பிளாஷ்பேக்கை சொல்லி தன் கணவனும் ராஜனின் தந்தையுமான ஸ்பை எப்படி தேசத்துரோகி ஆனான் என்று விளக்கும் போது சோபாவில் அண்ணாந்து சாய்ந்தபடியே வெறித்து நோக்கியபடி இருப்பார். எதையும் பேசவே மாட்டார்.

தாயைக் கைது செய்யுமுன் அவளைப் பார்க்க முடியாமல் கண்கலங்கும் காட்சி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_4VOB_000108606.jpg

பின் மேலதிகாரியிடம் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு வந்து தாயை அரெஸ்ட் செய்வார். காவல் அதிகாரிகள் தன் கண்முன்னமேயே தன் தாயை அரெஸ்ட் செய்யும் போது கண்களில் குளமாய் தண்ணீர் தேங்கி நிற்கும். கோட் தோள்களில் சுமக்கப்பட்டிருக்கும். நேராக நிற்க மாட்டார். கதவில் சாய்ந்தபடி நிற்பார். நிற்பதில் ஒரு தொய்வு தெரியும். தன் தாய் கள்ளமற்றவள் என்ற திருப்தியைத் தாண்டி தன் தாய் ஒரு தேசத் துரோகியை தப்பிக்க வைத்தவள் என்ற ஆத்திரம் மேலோங்கி இருக்கும். அவமானத்தால் அசிங்கப்பட்டு நிற்பது போல நிற்பார். அதே சமயம் தன் தாயைத் தவிர யாருமில்லாத தான் எப்படி இனித் தனியாக வாழ முடியும்? என்ற ஏக்கம் அந்த நிற்கும் பாவனையில் பிரதிபலிக்கும். தன் தாய் தன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன் தாயைப் பார்க்க முடியாமல் (பிடிக்காமல்) வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்வார். காவலர்கள் தன் தாயை கைது செய்து அழைத்துச் சென்றவுடன் தன் தாயை நானே கைது செய்து விட்டேனே என்ற குற்ற உணர்வில் கோபமும், வேதனையும் கொப்பளிக்க, உணர்ச்சிப் பிரவாகம் வெள்ளமாய்ப் பொங்க, யாரிடமும் சொல்லித் தேறுதல் படுத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலை கூட இல்லாமல் சோபாவில் அமர்ந்து கண்களைக் கைகளால் மூடியபடியே, கால்களைத் துடிக்க வைத்தபடியே துவள்வார். மௌனமும், ஆர்ப்பாட்டமுமாய் நெஞ்சு விம்ம அழுவார். அது அமைதியான அழுகையா... ஆர்ப்பாட்டமான அழுகையா என்று அந்த ஆண்டவனுக்கே தெரியாது. அப்படி ஒரு அற்புதம் கலந்த அழுகைக் கலவை அது.

தாயை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தன்னந்தனியே துடிக்கும் அற்புத சீன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/VTS_01_4VOB_000201899.jpg

மிக மிக வித்தியாசமான காட்சி. அற்புதத்திலும் அற்புதம். என் மனதை விட்டு இமைப் பொழுதும் நீங்காத காட்சி. ஆண்டவன் படைப்பின் அற்புதங்களில் அற்புதமான அண்ணனின் அற்புத நடிப்பில் நான் மெய் மறந்த, மெய் சிலிர்த்த காட்சி. நிலை மறந்த காட்சி.

படம்: தங்கச் சுரங்கம்.

kaveri kannan
15th February 2013, 10:41 PM
அன்பு வாசு அவர்களுக்கு,

தங்கத்திலே வைரம்!

முழுக்க மசாலா என எண்ணவைக்கும் தங்கசுரங்கத்தில் இருந்து இப்படி வைரம் எடுத்துத் தரும் உங்கள் அழகிய ரசனைக்கு என் வந்தனம்..

RAGHAVENDRA
15th February 2013, 10:48 PM
சூப்பர் சார்...

சோபாவில் அமர்ந்து நடிகர் திலகம் துடிக்கும் நெஞ்சுடன் அமர்ந்திருக்கும் போது பின்னணியில் அப்படியே பாடல் துவங்கும் .. எஸ்.வரலக்ஷ்மி அவர்களின் குரலில் பெற்ற மனம் சிறையிலே பாடல். ஒரே FRAMEல் ஒரு புறம் நடிகர் திலகம் ஒரு புறம் வரலக்ஷ்மி, ஒரு புறம் ஓ.ஏ.கே. தேவர் என மூவருமே தங்களுடைய உணர்ச்சிகரமான நடிப்பால் அந்த அருமையான பாடலுக்கு ஜீவன் அளித்திருப்பார்கள். அந்த FRAME COMPOSITIONஐ விளக்க வேண்டுமென்றால் பின்னாளில் மன்னவன் வந்தானடி படத்தில் காதல் ராஜ்ஜியம் எனது பாடலின் முடிவில் ஒரே FRAMEஐ நான்காக diagonalஆக பிரித்திருப்பார்கள். அதே கம்போஸிஷனில் இப்பாடல் காட்சியும் இருக்கும். மூன்று SPLITகள் சில வினாடிகள் வரும். முதலில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரின் தோற்றம் வரும். பின்னர் மூன்று ஸ்ப்ளிட்டிலூம் நடிகர் திலகம் தோன்றி கலக்கி விடுவார்.

இப்பாடல் காட்சி இப்போதெல்லாம் எந்த பிரதியிலும் இடம் பெறவில்லை.

மிகச் சிறப்பான தொரு காட்சியை பகிர்ந்து கொண்டு அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

kaveri kannan
15th February 2013, 10:51 PM
அன்பு ராகவேந்திரா அவர்களுக்கு

வாசு அவர்கள் பதித்த வைரத்தை உங்களுக்கேயுரிய கூரிய ரசனையால் பட்டைதீட்டினீர்கள்..

இன்னும் ஜொலிக்கிறது இக்காட்சி!

Murali Srinivas
15th February 2013, 11:53 PM
வாசு சார்,

தங்கசுரங்கம் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கட்டத்தை மிக அழகாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள். உங்கள் விவரிப்பில் மன கண்ணில் மீண்டும் அந்த காட்சியை காணும் வாய்ப்பு. வாழ்த்துக்கள்.

சாரதி,

எல்லோரும் கொண்டாடுவோம் மற்றும் எங்கே நிம்மதி பாடல்களை பற்றிய பதிவைப் படித்தேன். சுருக்கமாக் சொல்ல வேண்டும் என்றால் பிரமாதம். அதைப் பற்றிய கூடுதல் அலசல் செய்ய வேண்டும்.

நண்பர் ராகுல்ராம் குறிப்பிட்டது போல கோவை டிலைட் திரையரங்கில் ஹரிச்சந்திரா வியாழன் முதல் திரையிடப்பட்டு வருகிறது. இந்தப் படம் பொதுமக்களின் ஆதரவை பெரிதும் பெற்று வருவதாக செய்தி வந்திருக்கிறது. Non A/C திரையரங்கான இதில் கூட பகல் காட்சிக்கு வந்த கணிசமான பொது மக்கள் கூட்டம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. வரும் நாட்களில் வரவேற்பு அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.

நன்றி திரு ராமஜெயம் அவர்களே!

அன்புடன்

RAGHAVENDRA
16th February 2013, 09:29 AM
டியர் ஜோ சார்
இன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
தங்களுக்காக இல்லற ஜோதி திரைப்படத்திலிருந்து அனார்கலி நாடகம்


http://youtu.be/L-zuhcyBblY

படத்திற்கு வசனம் கண்ணதாசன்
அனார்கலி நாடக வசனம் கலைஞர் கருணாநிதி

JamesFague
16th February 2013, 10:25 AM
Thanga Surangathai thantha Neyveli Thangathirku Nandri.

KCSHEKAR
16th February 2013, 11:13 AM
Dear Mr.Joe,

Wish you many more happy returns of the day

KCSHEKAR
16th February 2013, 11:18 AM
Dear Vasudevan Sir,

"மெய் சிலிர்க்க வைத்த மெய்யான நடிகர்" - Article is very good.

joe
16th February 2013, 11:38 AM
மிக்க நன்றி ராகவேந்திரா சார்!
மிக்க நன்றி சந்திரசேகர் சார்!

adiram
16th February 2013, 12:03 PM
Neyveli Vasudevan sir,

Excellent nerration about the power-packed situation in Thanga Surangam. What an acting in that scene, and your nerration gives more light to that particular episode. Thanks a lot for your brief exam.

Thanga Surangam is one of my alltime favourite. When watching the still you provided, I am in surprise why the directors used wig in some movies in that period, when his real hairstyle is wonderfull. For movies like Kaval Dheivam, wig is unavoidable, but what is the necessity for a wig in movies like Niraikudam..?.

Kaveri Kannan sir,

Thanga Surangam is not just a masala movie, it is a combination of all. Who can forget the climax 'Church scene'..?.

Raghavendra sir,

I watched this movie several times from my young age. But I never seen the 'four bit scene' in any print. I saw such a scene only in Mannavan Vandhanadi (kaadhal raajiyam song) you mentioned and in 'Needhi' climax (before put vanakkam).

JamesFague
16th February 2013, 01:00 PM
As Mr Adiram mentioned in his post, most of the directors could have used
the natural hairstyle of NT.

vasudevan31355
16th February 2013, 03:35 PM
டியர் ஜோ சார்,

எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நூறாண்டு காலமும், அதற்கு மேலும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்தும்

அன்பன்
வாசுதேவன்.

http://www.garyjwolff.com/image-files/bd_candles.gif#animated%20happy%20birthday%20wishe s%20275x274


http://www.youtube.com/watch?v=jrc2VdEe1D8&feature=player_detailpage

JamesFague
16th February 2013, 03:45 PM
Mr Joe Sir,

Singapore Sivaji Rasigarukku Happy Birthday. Many More Happy Returns of the day.

vasudevan31355
16th February 2013, 04:39 PM
தங்கச் சுரங்கப் பதிவைப் பாராட்டிய ராகவேந்திரன் சார், கண்ணன் சார், முரளி சார், சந்திரசேகரன் சார், ஆதிராம் சார், சித்தூர் வாசுதேவன் சார் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!

vasudevan31355
16th February 2013, 04:59 PM
ஆதிராம் சார்,

நன்றி! தங்களைப் போலவே எனக்கும் 'தங்கச் சுரங்கம்' என்றால் மிக மிக பிடிக்கும். நடிகர் திலகத்திற்காக சில சென்டிமெண்ட் காட்சிகளை ராமண்ணா கூடச் சேர்த்திருப்பார். முழுமையான ஜேம்ஸ்பாண்ட் பாணியில் எடுத்திருந்தால் ராஜாவுக்கு முன்னோடியாய் இருந்திருக்கும். முதல் சில நிமிடங்களுக்கு வரும் கிராமத்துக் காட்சிகளைக் குறைத்திருந்தால் (முக்கியமாக "சக்தி தன்னாடு தென்னாடு பொன்னாடு"...பாடல்) இன்னும் விறுவிறுப்பு ஏறியிருக்கும். ஆனால் சென்டிமெண்ட் காட்சிகளைச் சேர்த்ததால் தாங்கள் குறிப்பிட்ட அட்டகாசமான கிளைமாக்ஸ் சர்ச் காட்சியும், தாயைக் கைது செய்து அனுப்பிவிட்டு துவளும் காட்சியும் என்றும் நம் இதயத்தில் குடிகொண்டு விட்டதே! இதயத்தை திருடிய படம்.

vasudevan31355
16th February 2013, 06:37 PM
நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்த இயக்குனர் திரு.சி.வி.ராஜேந்திரன் அவர்களின் 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழுக்கான பேட்டி. (அற்புதமான 'ராஜா' ஸ்டில்லுடன்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/84e4c34a-8aba-4552-b33d-97d037abc911.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/2-23.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/5-8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/4-11.jpg

vasudevan31355
16th February 2013, 06:47 PM
'ராஜா' ஸ்டில் தனியாக.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/6-8.jpg

RAGHAVENDRA
16th February 2013, 11:13 PM
டியர் வாசு சார்,
சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்த நமது அபிமான இயக்குநர் சி.வி.ஆர். அவர்களின் பேட்டியை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி. நடிகர் திலகத்தின் மேல் மாறாத பற்று கொண்டவர் சிவிஆர். அவருடைய அந்த பற்றும் பாசமும் அவருடைய கட்டுரையில் அழகாகக் கூறியுள்ளார்.
பாராட்டுக்களும் நன்றிகளும்.
அன்புடன்

RAGHAVENDRA
16th February 2013, 11:18 PM
My Choice என் விருப்பம்


http://www.dailymotion.com/video/xllhja_rajaa-dhi-rajnikku-viswaroopam_fun#.UR_DRfKjKWJ

இந்த விஸ்வரூபம் படம் வந்தாலும் வந்தது, நம்முடைய மனசெல்லாம் நம் நடிகர் திலகத்தின் விஸ்வரூபத்தையே சுற்றி சுற்றி வருகிறது. அதுவும் திருமண நாள் கொண்டாட்டமாக காஷ்மீரில் இடம் பெறும் அந்தப் பாடல் காட்சி ... ஆஹா.... நாளெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில் வாலியின் வரிகளில் டி.எம்.எஸ். வாணி ஜெயராம் குரல்களில் ... மெலோடி என்றால் என்ன என்பதற்கு பொருளாக இப்பாடலை சொல்லலாம். புல்லாங்குழலில் ஆரம்பித்து புல்லாங்குழலில் முடியும் இனிமையான மெட்டு ... அருமையான குரல்கள் ...

மரங்கொத்தி பறவையைப் போலே வரிகளின் போது வலது கை சுட்டு விரலினால் நாயகியின் கூந்தலில் கொத்துவது போன்ற அபிநயமாகட்டும், யாரென்று ஏனிந்த கேள்வி என்ற வரிகளின் போது அதே சுட்டு விரலை கேமிராவுக்கு முன் நீட்டி பின் அப்படியே திருப்புவதாகட்டும் ... சிம்ப்ளி சூபர்.... இப் பாடல் காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்...

kaveri kannan
16th February 2013, 11:20 PM
திரு ஜோ அவர்களுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எல்லா வளங்களும் நிறைவாய் அமையும் பெருவாழ்வு வாழ வாழ்த்துகள்..
இன்னும் அதிகமதிகம் நம் நடிகர்திலகம் பற்றிய பதிவுகள் நீங்கள் தரவும் என் வேண்டுகோள்.

kaveri kannan
16th February 2013, 11:28 PM
சிவீ ஆர் கட்டுரை தந்த அன்பு வாசு அவர்களுக்கு என் நன்றி..

வாழ்க்கை - இவரின் படங்களில் எனக்கு மிகவும் பிடிக்கும்

நடிகர்திலகத்தின் இரசிகராய் இயக்குநர் அமைந்தால் எப்படி படங்கள் அமையும் என்பதற்கு சிவிஆர் படங்களைச் சொல்லலாம்..

கலாட்டா கல்யாணம், நீதி, சுமதி என் சுந்தரி...... அழகுப் படங்கள்..

இதேபோல் கே விஜயனும் நம் நடிகர்திலகத்தை நமக்களித்த விதமும் ( தீபம், தியாகம், திரிசூலம், நல்லதொரு குடும்பம்) அழகானது!

kaveri kannan
17th February 2013, 12:01 AM
விஸ்வரூபப் பாடல் சுட்டிக்கு நன்றி அன்பு ராகவேந்திரா அவர்களே...

மனதில் நிலைபெற்ற நாயகன் நானே - என நடிகர்திலகம் பாடும்போது
வானத்துத் தேவதைகள் சொன்னது - ததாஸ்து!

அவர் மூளை கட்டளையிட்டதும் சட்டென மலரும் அந்த வசீகரமுகம்..

அது எப்படி எப்படி என எத்தனை எண்ணியும் இன்னும் என் அறிவுக்கு எட்டா ரகசியம்..

அதனால்தான் அன்னை மறைந்த சில நாட்களுக்குள்ளாகவே அவர் காதல் காட்சியில் சோபித்த அதிசயம்...

eehaiupehazij
17th February 2013, 09:00 AM
thangasurangam could have been made in line with a Bond movie.at that time NT was so slim and befitting the Bond tuxedo with a Connery shade. But, mixing lot of sentiments in a Bond pattern is like taking curd rice with chicken as the side dish. and this movie was a loose adaptation of Dean Martin starrer The Silencers and some scenes from Thunderball.Some of the songs should have been removed. NTs fight scenes were quite good, but the movie faired average due to the mixing of sentiments that are unlikely in a Bond pattern

RAGHAVENDRA
17th February 2013, 09:27 AM
என்ன சார் இது ஒரு பல்லவியாப் போச்சே... வரலாறு தெரியவில்லை என்றால் பழைய ரசிகர்களிடம் கேட்கலாமே..

தங்க சுரங்கம் வசூல் மழை பொழிந்த படம். திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் எடுக்கும் நாள் வரையிலும் அரங்கு நிறைவுடன் வெற்றிக் கொடி நாட்டிய படம். 100 நாட்கள் காணாததற்கு காரணம் அடுத்தடுத்த நடிகர் திலகத்தின் படங்களின் வரவே. இதை நாம் பல முறை சொல்லியாகி விட்டது. விஷயம் தெரியாதவர்கள் சொன்னால் பரவாயில்லை. நம்முடைய ரசிக நண்பர்களே மேம்போக்காக எழுதுவது வேதனையாக இருக்கிறது. எத்தனையோ லட்சக்கணக்கான ரசிகர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு தியேட்டரிலிருந்து படத்தை எடுத்த போது பட்ட மனக் கஷ்டம் எங்களுக்குத் தான் தெரியும். அஞ்சல் பெட்டி 520 படத்தில் ஒரு காட்சியில் சென்னை சாந்தியில் தங்க சுரங்கம் பேனரைக் காட்டுவார்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் அந்தக் கட்டுக்கடங்காத கூட்டம் இன்னும் கண் முன்னே நிற்கிறது.

படத்தைப் பற்றிய தங்கள் கருத்தில் நான் தலையிட விரும்பவில்லை செந்தில் சார். ஆனால் சராசரி ஓட்டம் என்று சொல்லாதீர்கள். வெள்ளி விழா ஓடும் அளவிற்கு ரசிகர்களின் தொடர் படையெடுப்பினைக் கண்ட படம் தங்க சுரங்கம். முதல் நாள் அன்று அந்த வெள்ளை தொப்பியுடன் நம்பியாருடன் கைகலுக்கும் காட்சியில் தியேட்டரில் ரசிகர்களின் அளப்பரையை நேரில் கண்ட என் போன்றோருக்கு அந்தப் படத்தின் வெற்றியைப் பற்றி நன்கு தெரியும்.

Thanga Surangam was a super hit movie witnessed the shows with packed houses and was not average fair as you mentioned.

eehaiupehazij
17th February 2013, 11:15 AM
oh..kindly dnt interpret the otherway sir. thanga surangam had all entertainment ingredients typical for a ramanna movie with a balancing for NTs acting prowess. I also had the pain at that time when the movie didnot touch the 100th day mark.But that was neatly compensated by same ramanna with his evergreen entertainer Sorkkam that was a superduper hit. Even NT's comment on Thangasurangam, perhaps you may know..the song by varalakshmi and other thiruvizha song were blockers for the speedy pace of the movie. Though shade of Bond is there NT had made the role memorable for his sentimental touch. Please dont take otherwise. I also just let my feel unable to bear the state of no 100th day touch for this movie.

adiram
17th February 2013, 12:22 PM
Dear friends,

Ramanna's all the three movies in colour with NT (Thanga Surangam, Sorkam, Ennaippol Oruvan) are hit in collection and running, though only one touched 100 days.

When most of the duel role movies of NT are father & son, Ramanna is the one who showed duel role in same aged in Ennaippol Oruvan, which one fans liked much.

The 50 days collection of Ennaippol Oruvan in 'Chennai Devi Paradise' was higher than 50 days collection of many hit movies in the same theatre and 70 days collection of EPO was higher than En Magan and Pallandu Vazhga.

Even in that Slim period of NT, when other directors gave again sentiment roles for him, Ramanna was the first director to use his slim body for producing a BOND movie, which gave 'nambikkai' to Balaji to buy Johny Mera Naam story and produce Raja.

When comparing to Thanga surangam, do you think there is no any slow scenes and sentiments in Raja..?. There are slow and sentiment scenes in Naghaiya episode and V.S.Raghavan episode which are speed breakers for the movie. But other interesting scenes covered this slowness well.

In fact 'Vaira Nenjam' also a good movie to watch with wonderful songs by MSV. How stylish NT in the movie. Except the initial 'final auditing' scene, no other slow or boring in Vaira Nenjam.

In my view all the three BOND movies by NT (Thanga Surangam, Raja, Vaira Nenjam) are excellent and worth watching in repeated times.

sankara1970
17th February 2013, 02:26 PM
Dear friends,


In my view all the three BOND movies by NT (Thanga Surangam, Raja, Vaira Nenjam) are excellent and worth watching in repeated times.

Dear Adiram

Sivantha Mann also an interesting adventure/action movie in same line with your selection of movies.

Murali Srinivas
17th February 2013, 02:52 PM
வெளியிட்ட முதல் மூன்று நாட்களில் மதுரை சென்ட்ரலில் சாதனை படைத்த தங்கப்பதக்கம் ஒரு வாரத்தை நிறைவு செய்த போது ஒரு வார வசூலில் புதிய சாதனை படைத்திருக்கிறது. மிக சரியான வசூல் விவரம் வெளியிடப்படவில்லை ஆனால் ரூபாய் 70 ஆயிரத்தை தாண்டிய வசூல் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மதுரை மாநகர பழைய படங்களின் வசூலில் this film has created a new bench mark [கர்ணன் வசூலை சேர்க்காமல்] என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். வாழ்த்துகள்!

அன்புடன்

சென்னை மாம்பலம் சீனிவாசா திரையரங்கில் திருவருட்செல்வர் நண்பகல் காட்சியாக திரையிடப்படிருக்கிறது.

adiram
17th February 2013, 04:56 PM
Dear Adiram

Sivantha Mann also an interesting adventure/action movie in same line with your selection of movies.

Dear Sankar sir,

Sivandha Mann is an adventurous movie (puratchikaaran story) and it will not come in BOND series.

Sivandha Mann and Dharmam Enge will come in one catagory.

adiram
17th February 2013, 05:10 PM
I am in surprise, why Mr.Pammalar Or Mr. Raghavendra or Mr Vasudevan did not publish not even one advertisement paper for the movie Thanga Surangam in the hub threads.

If any in hand, can you sir?. especially 50 days or 10th week ads.

But please dont publish Sivaji Rasigan page, because I dont like Shivaji's comment for this movie. He done the roll well, then why he told like that..?.

RAGHAVENDRA
17th February 2013, 06:42 PM
சற்று முன் கிடைத்த நிழற்படம்

கோவை டிலைட் திரையரங்கில் இன்றைய மாலைக் காட்சியில் ரசிகர்களின் கொண்டாட்டங்களில் ஒரு சில நிழற்படங்கள்

http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-prn1/13095_154893068000301_1119626458_n.jpg

http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-snc6/179635_154894824666792_1555391361_n.jpg

திரையரங்கிலிருந்து உடனடியாக முகநூலில் பதிவேற்றியுள்ள நண்பர் சிவராஜ் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி

RAGHAVENDRA
17th February 2013, 07:11 PM
Rare Images அபூர்வ நிழற்படங்கள்

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/rare%20snaps/rare05_zpsb665d7db.jpg

RAGHAVENDRA
17th February 2013, 07:14 PM
திலகப் புதிர்

நடிகர் திலகத்தின் குலமகள் ராதை திரைப்படத்தின் கதை ஒரு நாவலைத் தழுவியது.

அதன் பெயர் என்ன
அதன் ஆசிரியர் யார்

vasudevan31355
17th February 2013, 10:55 PM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTE7yNcUSQ9yxqNDrMzI8XGZorGXl595 1tTxlubb-bqzhumn4s6Cw

நாவல்: 'வாழ்வு எங்கே'

http://www.nammabooks.com/image/cache/data/Akilan/vazhvu-enge-195x311.jpg

ஆசிரியர்: அகிலன்

http://upload.wikimedia.org/wikipedia/commons/1/14/AKILAN.jpg

சரிதானே ராகவேந்திரன் சார்?

kaveri kannan
17th February 2013, 11:09 PM
புதிருக்கும் விடைக்கும் பாராட்டுகள்.

அன்பு வாசு அவர்கள் பதில் அளிப்பதிலும் ஒரு சாதனை செய்கிறார் - அற்புதப் படங்களுடன்..

அகிலன் அவர்களின் இன்னொரு நாவலும் நடிகர்திலகம் நடிக்கப் படமானது : பாவை விளக்கு

kaveri kannan
17th February 2013, 11:11 PM
தங்கப்பதக்க வசூல் விவரங்களுக்கும் ஹரிச்சந்திரா ஆராதனைப் படங்களுக்கும் நன்றி

திரு முரளி ஶ்ரீனிவாஸ் + திரு ராகவேந்திரா இருவருக்கும்!

kaveri kannan
18th February 2013, 01:43 AM
என் விருப்பம்....


யுத்த நிதிக்காக சொந்த மனைவி நகைகளைக் கொடை தந்த நாயகரின் பாடல்..

பின்னாளில் பொதுநலத்துக்காக மனைவி நகைகளைத் தானம் செய்யும் முன்னேற்பாடான வரிகள்..
அதில் அன்பும் காதலும் வர்ணிப்பும் எல்லாம் சரிவிகிதம் கலந்தால்...

இனிய இணைப்பாடல்..

மழையாலும் நனையாத உள்ளம்..

நடிகர்திலகம் விழிமொழியால் நனைந்தாடித்துள்ளும்..

ஊருக்கு ஒரு பிள்ளையைக் காண...

http://www.youtube.com/watch?v=Xm_WRRm9bTs

RAGHAVENDRA
18th February 2013, 07:04 AM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTE7yNcUSQ9yxqNDrMzI8XGZorGXl595 1tTxlubb-bqzhumn4s6Cw

நாவல்: 'வாழ்வு எங்கே'

http://www.nammabooks.com/image/cache/data/Akilan/vazhvu-enge-195x311.jpg

ஆசிரியர்: அகிலன்

http://upload.wikimedia.org/wikipedia/commons/1/14/AKILAN.jpg

சரிதானே ராகவேந்திரன் சார்?

சூப்பர் சார்...

RAGHAVENDRA
18th February 2013, 07:05 AM
முத்து மணிச் சிரிப்பிருக்க ....
மெல்லிசை மன்னரின் மற்றொரு இனிமையான படைப்பு ....
மிக அபூர்வமான தேர்வு காவிரிக் கண்ணன் சார் ..

இதை இதை இதைத்தான் ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறோம் ...

பாராட்டுக்கள்..

RAGHAVENDRA
18th February 2013, 07:08 AM
திலகப் புதிர்

கானக் குயில் எம்.எல்.வசந்தகுமாரி பாட, நடிகர் திலகம் உடன் உரையாடும் பாடல் எது? இடம் பெற்ற படம் எது? இசையமைப்பாளர் யார்?

RAGHAVENDRA
18th February 2013, 07:20 AM
My Choice என் விருப்பம்


http://youtu.be/WngSPSrIRJM

இன்றைக்கு என் விருப்பம் ... நம் அனைவரின் நெஞ்சிலும் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ள பாடல் ...
சிவகாமி உமையவளே முத்து மாரி
உன் செல்வனுக்கும் காலம் உண்டு முத்து மாரி
மகராசன் வாழ்க வென்று வாழ்த்துக் கூறி - இந்த
மக்களெல்லாம் போற்ற வேண்டும் கோட்டை ஏறி ...

தமிழ்நாட்டையே புரட்டிப் போட்ட வரிகள் ...
இந்த வரிகள் மட்டும் பலித்திருந்தால் ..

இன்றைக்கு தமிழ் நாடு

http://cdn.lightgalleries.net/4bd5ec01ccd40/images/paraguay_soy03-2.jpg

இப்படி பசுமையாக வளமாக இருந்திருக்காதா....

இப் பாடலில் ஒவ்வொரு அசைவிலும் தன்னுடைய சிறப்பைக் காட்டியிருப்பார். அதுவும் ஒரு கட்டத்தில் கால்களை மட்டும் பக்கவாட்டில் எடுத்து வைப்பது போல் ஒரு நடன அமைப்பு வரும் ... நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்..

மதுரையை அடுத்த சோழவந்தானில் டி.ஆர். மகாலிங்கம் அவர்களின் பண்ணையில் படமாக்கப் பட்டது.

மதுரையில் தங்க பதக்கத்தின் வெற்றி வசூலைப் பற்றிய தகவலைத் தந்த முரளி சாருக்காக இப் பாடல்.

RAGHAVENDRA
18th February 2013, 07:23 AM
முரளி சார் தங்க பதக்கம் வசூல் விபரம் பற்றிய தகவலுக்கு பாராட்டுக்கள். கிடைத்தால் நிழற்படங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

RAGHAVENDRA
18th February 2013, 07:38 AM
சில தினங்கட்கு முன் என்னைப் போல் ஒருவன் திரையிடப் பட்ட ஈரோடு விஜயா திரையரங்கில் எடுக்கப் பட்ட நிழற்படங்கள்

http://sphotos-a.ak.fbcdn.net/hphotos-ak-prn1/62491_3790320136274_1203989936_n.jpg

http://sphotos-e.ak.fbcdn.net/hphotos-ak-frc1/538160_3790341256802_49223418_n.jpg

http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-ash3/538095_3790365777415_1885683355_n.jpg

நன்றி நமது நண்பர் சுப்பு எ சுப்ரமணியம் அவர்கள்

vasudevan31355
18th February 2013, 09:24 AM
திலகப் புதிர்

கானக் குயில் எம்.எல்.வசந்தகுமாரி பாட, நடிகர் திலகம் உடன் உரையாடும் பாடல் எது? இடம் பெற்ற படம் எது? இசையமைப்பாளர் யார்?

படம்: பெற்ற மனம்.

இசை: S.ராஜேஸ்வர ராவ்.

http://www.inbaminge.com/t/p/Petra%20Manam/folder.jpg

பாடல்: "சிந்தனை செய்யடா சிரித்து பாரடா"

பாடலைக் கேட்க

http://www.inbaminge.com/t/p/Petra%20Manam/

குறிப்பு: 1958-இல் வெளிவந்த இந்திப் படமான 'நவ்ரங்' திரைப்படத்தில் C.ராமச்சந்திரா அவர்களின் இசையமைப்பில் மஹேந்திர கபூர் மற்றும் ஆஷா போன்ஸ்லே குரல்களில் உருவான காலத்தை வென்ற பாடலான "ஆதா ஹே சந்த்ரமா ராத் ஆதி" என்ற பாடலின் மெட்டைதான் 'பெற்ற மனம்' திரைப்படத்தில் "சிந்தனை செய்யடா சிரித்து பாரடா" பாடலுக்கு மூலமாக எடுத்திருப்பார்கள். இதே மெட்டில் இஸ்லாமிய பக்திப் பாடல் ஒன்றை நாகூர் ஹனிபா அவர்கள் பாடியிருப்பார்.

'நவ்ரங்' திரைப்படத்தில் காலத்தை வென்ற பாடலான "ஆதா ஹே சந்த்ரமா ராத் ஆதி"


http://www.youtube.com/watch?v=aasw1WDNhgY&feature=player_detailpage