PDA

View Full Version : Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 [13]

oowijaez
29th January 2013, 08:37 AM
கமலுக்கு பெண் வேடம் பொருந்தாதா? என்ன ஒரு திமிர். அவர் ஆண் வேடத்தில் வரும் போதே பெண்மை மிளிரும். இப்படி ஒரு கருத்தை வெளியிட என்ன தைரியம்?? ஒரு விடயம் தெரியுமோ? கமல் சொந்த குரலில் பேசி நடித்த ஒரே படம் ஒவ்வை ஷண்முகிதான்(மற்ற படங்களில் false voice தான்).

அய்யய்யோ! உலக நாயகன் வேதனையில் இருக்கும் இத்தருணத்தில் இது வேறு தேவையா? அவர் ரசிகர்கள் கொதித்தெழுவார்கள்.

oowijaez
29th January 2013, 08:51 AM
கமலுக்கு பெண் வேடம் பொருந்தாதா? என்ன ஒரு திமிர். அவர் ஆண் வேடத்தில் வரும் போதே பெண்மை மிளிரும். இப்படி ஒரு கருத்தை வெளியிட என்ன தைரியம்?? ஒரு விடயம் தெரியுமோ? கமல் சொந்த குரலில் பேசி நடித்த ஒரே படம் ஒவ்வை ஷண்முகிதான்(மற்ற படங்களில் false voice தான்).

In fact, சரியாக அவ்வை ஷண்முகி போலவே ஒரு higher ranking officer எங்கள் office இல் இருக்கிறார்! (பெண் தான்). :rotfl2:

selva7
29th January 2013, 11:40 AM
கமலுக்கு பெண் வேடம் பொருந்தாதா? என்ன ஒரு திமிர். அவர் ஆண் வேடத்தில் வரும் போதே பெண்மை மிளிரும். இப்படி ஒரு கருத்தை வெளியிட என்ன தைரியம்?? ஒரு விடயம் தெரியுமோ? கமல் சொந்த குரலில் பேசி நடித்த ஒரே படம் ஒவ்வை ஷண்முகிதான்(மற்ற படங்களில் false voice தான்).
திரு கோபால் அவர்களே,
நடிகர் திலகத்தின் இத்திரியைத் தொடர்ந்து வாசித்து பின்தொடர்பவன் என்ற வகையில் எழுதுகிறேன். பொதுவாகவே உங்கள் எழுத்துகள் nt ரசிகர்களையே நிறைய சந்தர்ப்பங்களில் காயப்படுத்தி இருக்கிறது. இது போதாது என்று இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் கமல்ஹாசன் பற்றி கருத்துகள் வெளியிட்டு உள்ளீர்கள்.
இது வருந்ததக்கது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது சம்பந்தமாக உங்களுடன் எதிர்மறையான லாவணி பாட நான் விரும்பவில்லை.



"அடக்கம் அமரருள் உய்க்கும்"

oowijaez
29th January 2013, 12:05 PM
ஐயையோ! பேசாம 'நான் ஒரு ஓட்டை வாய் பா' என்று மணிவண்ணன் பாணியில் சொல்லிவிட வேண்டியது தான்:(

Gopal.s
29th January 2013, 12:10 PM
Deleted.

Gopal.s
29th January 2013, 12:11 PM
திரு கோபால் அவர்களே,
நடிகர் திலகத்தின் இத்திரியைத் தொடர்ந்து வாசித்து பின்தொடர்பவன் என்ற வகையில் எழுதுகிறேன். பொதுவாகவே உங்கள் எழுத்துகள் nt ரசிகர்களையே நிறைய சந்தர்ப்பங்களில் காயப்படுத்தி இருக்கிறது. இது போதாது என்று இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் கமல்ஹாசன் பற்றி கருத்துகள் வெளியிட்டு உள்ளீர்கள்.
இது வருந்ததக்கது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது சம்பந்தமாக உங்களுடன் எதிர்மறையான லாவணி பாட நான் விரும்பவில்லை.



"அடக்கம் அமரருள் உய்க்கும்"

செல்வா சார்,
நானும் கமல் ரசிகன்தான். ஒரு ஜாலிக்காக எழுத பட்ட பதிவு. serious ஆக எடுத்து கொள்ள வேண்டாம். ஏன் அடிக்கடி நீங்கள் எழுதுவதில்லை?

JamesFague
30th January 2013, 06:11 PM
Mr Pammalar,

Come soon and start your postings.

Gopal.s
31st January 2013, 07:03 AM
அன்பர்களே,

எனக்கு ஒரு விஷயம் தெளிவு படுத்த பட வேண்டும். கோமாளி தனமாக புதுசு புதுசாக அதே topic அதே dicussions உடன் மூன்று திரிகள். இந்த கோமாளி கூத்துகளை அரங்கேற்றியவர்கள் யார் என்று உங்களுக்கே தெரியும். அதே பதிவர்களுடன் மூன்று திரிகள். அதே content . எந்த கோமாளி எதை செய்தாலும் தீர்க்கும் பொறுப்பு எனக்குதானே.

கீழ்கண்டவற்றை propose செய்கிறேன்.

பாகம் 10 உடன் பாக்ஸ் ஆபீஸ் emperor திரியை இணைத்து , விமரிசன்ம் ,உரையாடல்களுக்காக மட்டும் பயன் படுத்தலாம்.
ராகவேந்தர் சாரின் புதிய திரியில், filmography ,ஆவணங்கள், சரித்திர பதிவுகள், புகை படங்கள், NT சம்பத்த பட்ட விழா நிகழ்வுகள்(சிவாஜி பேரவையையும் சேர்த்து) என்று suggest செய்கிறேன்.

மூன்று திரிகளுக்கும் மாறி மாறி போக வேண்டியிருப்பது நிறைய நேரம் வீண். எல்லா திரிகளுமே,பார்வையாளர்களை இழக்க நேரிடுகிறது.

சிலரிடமிருந்து சிலர் தப்பிக்க பார்த்தாலும்,இங்கே எழுதுவதை அங்கே வந்து எழுத முடியாதா?

Gopal.s
31st January 2013, 08:24 AM
முரளிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

oowijaez
31st January 2013, 08:36 AM
Happy Birthday to you Mr Murali!:-D

oowijaez
31st January 2013, 08:40 AM
அன்பர்களே,
எனக்கு ஒரு விஷயம் தெளிவு படுத்த பட வேண்டும். கோமாளி தனமாக புதுசு புதுசாக அதே topic அதே dicussions உடன் மூன்று திரிகள். இந்த கோமாளி கூத்துகளை அரங்கேற்றியவர்கள் யார் என்று உங்களுக்கே தெரியும். அதே பதிவர்களுடன் மூன்று திரிகள். அதே content . எந்த கோமாளி எதை செய்தாலும் தீர்க்கும் பொறுப்பு எனக்குதானே.
கீழ்கண்டவற்றை propose செய்கிறேன்.
பாகம் 10 உடன் பாக்ஸ் ஆபீஸ் emperor திரியை இணைத்து , விமரிசன்ம் ,உரையாடல்களுக்காக மட்டும் பயன் படுத்தலாம்.
ராகவேந்தர் சாரின் புதிய திரியில், filmography ,ஆவணங்கள், சரித்திர பதிவுகள், புகை படங்கள், NT சம்பத்த பட்ட விழா நிகழ்வுகள்(சிவாஜி பேரவையையும் சேர்த்து) என்று suggest செய்கிறேன்.
மூன்று திரிகளுக்கும் மாறி மாறி போக வேண்டியிருப்பது நிறைய நேரம் வீண். எல்லா திரிகளுமே,பார்வையாளர்களை இழக்க நேரிடிகிறது.
சிலரிடமிருந்து சிலர் தப்பிக்க பார்த்தாலும்,இங்கே எழுதுவதை அங்கே வந்து எழுத முடியாதா?

Good Morning Mr Gopal, can I answer your question, if you don't mind?

Gopal.s
31st January 2013, 08:43 AM
Good Morning Mr Gopal, can I answer to your question, if you don't mind?
ஆஹா, வந்துட்டான்யா(ள் ?), வந்துட்டான்!! தாராளமாய் சகோதரி.

oowijaez
31st January 2013, 09:01 AM
அன்புள்ள கோபாலண்ணா! உங்களிடமிருந்து தப்பிக்கத்தானே ராகவேந்தர் அண்ணா எதோ தான் உண்டு தன் 'திலக'முண்டு என்று 'தன் பணி NT தொண்டு செய்து கிடப்பதே' என்று இருக்கிறார்? விட்டுடுங்கோளேன். நாம் NT படங்களை (அவரது பெருமை குன்றாமல்)ஜாலியாய் விமர்சனம் செய்வதற்கும் ஒருவரையொருவர் கலாய்ப்பதற்கும் இந்த திரி தான் இருக்கிறதே. Anyway I thought you are forbidden to enter his thread!:smokesmile:

oowijaez
31st January 2013, 09:17 AM
My suggestion is; close this thread -'Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor' as it has reached 300 pages and the info on NT's box office hits can be followed on Mr Raghavandar's new thread. Keep the 'Nadigar Thilakam part 10' for now, then close it and open part 11 soon.

Gopal.s
31st January 2013, 09:34 AM
அன்புள்ள கோபாலண்ணா! உங்களிடமிருந்து தப்பிக்கத்தானே ராகவேந்தர் அண்ணா எதோ தான் உண்டு தன் 'திலக'முண்டு என்று 'தன் பணி NT தொண்டு செய்து கிடப்பதே' என்று இருக்கிறார்? விட்டுடுங்கோளேன். நாம் NT படங்களை (அவரது பெருமை குன்றாமல்)ஜாலியாய் விமர்சனம் செய்வதற்கும் ஒருவரையொருவர் கலாய்ப்பதற்கும் இந்த திரி தான் இருக்கிறதே. Anyway I thought you are forbidden to enter his thread!:smokesmile:
விட்டுவிட்டேன். புற முதுகு காட்டும் கோழைகளை ,ஓட ஓட துரத்தும் கயவனில்லை நான்.

oowijaez
31st January 2013, 09:40 AM
இதென்ன boxing ring ஆ? அல்லது நீங்கள் தான் Mike Tyson ஆ? காதைக்கடிப்பதற்கு?

oowijaez
31st January 2013, 10:04 AM
சகோதரர் கோபால் அவர்களே உங்கள் ஆரம்பகால தெய்வப்பிறவி விமர்சனம் படித்தேன், மிக நன்றாக இருந்தது. NT க்கு இன்னொரு anti-hero character. எப்போதோ இலங்கை 'ரூபவாஹினி'யில் பார்த்து மறந்துபோன படத்தை மறுபடியும் பார்க்கும் ஆவலைத் தூண்டியது.

யாரும் முன்னர் எழுதாத பட விமர்சனத்தை எழுதலாமே. அல்லது யாராவது எழுதினால் தான் என்ன? நீங்கள் உங்கள் பாணியில் எழுதுங்கள். ஸ்ரீதரின் மோகனப்புன்னகை - ராகவன் ஐ character + psychological analysis பண்ணுவதற்கு பொருத்தமாகவிருக்கும். நான் நினைக்கிறேன், ஸ்ரீதர் எதையோ சொல்ல முற்பட்டு ஆனால் அதை சரியாக சொல்லமுடியாமல் போய்விட்டது என்று. minus நாகேஷ், அது ஒரு above average படம். 80 களில் NT இன் சில படங்களிலிருந்து வித்தியாசமான நடிப்பு. ஒவ்வொரு பெண்ணிடமும் காதல் கொண்டு பின்னர் தோல்வியில் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்துபோய் இறுதியில் உயிர் விடும் துயரம் மனதை உருக்கும்.

KCSHEKAR
31st January 2013, 11:00 AM
Dear Murali Sir,

Wish you many more happy returns of the day

J.Radhakrishnan
31st January 2013, 11:06 AM
Happy Birthday wishes to you Mr Murali sir

sankara1970
31st January 2013, 11:09 AM
Many more happy returns to Murali sir.

KCSHEKAR
31st January 2013, 12:13 PM
Nadigarthilagam Portrait Opening Function at INTUC Office Tirunelveli on 28th January 2013 (Press Coverages)

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Dinakaran29Jan2013_zps674ea124.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/DinamaniDinathanthi29Jan2013_zps322e4ed1.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/Dinamalar30Jan2013_zps54ac4e57.jpg

KCSHEKAR
31st January 2013, 12:39 PM
Ananda Vikatan - Pokkizham - 06-02-2013

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/AnandhaVikatan021_zpsb83e4223.jpg

oowijaez
31st January 2013, 05:55 PM
[QUOTE=KCSHEKAR;1009790]Ananda Vikatan - Pokkizham - 06-02-2013












Wow! what a rare photo!

Gopal.s
31st January 2013, 07:41 PM
http://tamil.oneindia.in/movies/television/2013/01/sun-tv-s-timely-advice-kamal-168919.html#slide63235

Gopal.s
1st February 2013, 12:36 PM
ராகவேந்தர் சார்,

முதல் படத்திலிருந்து ,ஒன்பதாவது படம்(மனிதனும் மிருகமும் ) வரை அற்புதமாக சென்று கொண்டிருக்கிறது http://www.mayyam.com/talk/showthrea...ews-and-Events. உங்கள் உழைப்பும், அர்பணிப்பும் மிக மிக மெச்ச தக்கது. எத்தனை தகவல்கள்!! அத்தனை ரசிகர்களும், பக்தர்களும், நடிகர்திலகத்தை பற்றி அறிய விரும்பும் நடுநிலையாளர்களும்(ஏன் ,எதிரணியினர் கூட)பார்த்தே தீர வேண்டிய திரி. அற்புதம். மிக மிக ரசித்தேன். உங்களுக்கு special நன்றிகள். 306 வரை தொடருங்கள்.

parthasarathy
1st February 2013, 05:45 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)

7. "எல்லோரும் கொண்டாடுவோம்" படம்:- பாவ மன்னிப்பு (1961); பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன், நாகூர் ஹனீபா மற்றும் குழுவினர்; பாடல் ஆசிரியர்:- கவியரசு கண்ணதாசன்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- ஏ.பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன்/சித்தூர் நாகையா மற்றும் குழுவினர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, என்னுடைய பாடல் ஆய்வினைத் தொடர சந்தர்ப்பம் அளித்த இறைவனுக்கு முதற்கண் நன்றி.

இந்தத் தொடர் நடிகர் திலகத்தின் புதிய வித்தியாசமான முன்னோடி முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுபடியும் குறிப்பிடுகிறேன்.

சுற்றிப் பின்னப்பட்ட சதி வலையால், குழந்தையாய் இருக்கும்போது, ஒரு இஸ்லாமியப் பெரியவரிடம் வளர்ந்து வரும் ரஹீம் (நடிகர் திலகம்) வரும் அறிமுகக் காட்சி. ஒரு பாடலோடு நடிகர் திலகம் அறிமுகமாகும் இந்தக் காட்சியை ஒவ்வொரு முறை இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் தவற விட்டதில்லை. அந்த முதல் காட்சியிலேயே, ஒரு இஸ்லாமிய சகோதரர் எப்படி இருப்பார் என்ற இலக்கணத்தையும், ரசிகனின் கற்பனை மற்றும் எதிர்பார்ப்பினையும் நூறு சதவீதம் பூர்த்தி செய்திருப்பார். ஆக, தோற்றத்தின் மூலம் அந்தக் கதாபாத்திரத்துக்குள் முதலில் முழுமையாக நுழைந்து, பார்க்கும் ஒவ்வொருவரையும் அவருள் நுழைத்துக் கொண்டு விடும் (வழக்கம் போல்) நடிகர் திலகம், கையில் உள்ள மேளத்தை இலாகவமாகவும் தேர்ந்த கலைஞரைப் போலும் சர்வ சாதாரணமாக அதே நேரத்தில், உயிர்ப்புடனும் தட்டிக் கொண்டு துவங்கும் அழகு!

இந்தப் பாடலில் பொதிந்துள்ள அழகு வேறெந்தக் கலைஞருக்கும் கிட்டாதது.

இந்தப் பாடல் மற்றப் பாடல்களைப் போல வாயசைப்பு மற்றும் அதற்கேற்ற பாவனைகள் இல்லாமல், இசைக் கருவியையும் சேர்த்து இயக்கிக் கொண்டே பாட வேண்டிய கட்டாயம் கொண்ட பாடல்.

முதலில் வாயசைப்பு:-

“எல்லோரும் கொண்டாடுவோம்” என்று துவங்கி "அல்லாவின் பெயரைச் சொல்லி" எனும் போது கோரஸோடு பாடும் போது, சாதாரணமாக இருக்கும் அவரது வாயசைப்பு, க்ளோசப்பில், அவரை மட்டும் காண்பிக்கும் போது, தனியாக அவர் மட்டும் "அல்லாவின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி" என்று முடிக்கும் போது மட்டும் இலேசாக வாயசைப்பில் ஒரு அழுத்தம் பெறும். அந்த இடத்தில் அழுத்தம், பாடியவர் கொடுத்ததால், அந்த வரிகளுக்குத் தேவைப் படுவதால். அதுவும் மிகச் சரியாக க்ளோசப்பில் அவரது முகம் வரும் போது இது இன்னும் கூடுதல் கவனம் பெறுகிறது. அதனால், அந்த வரிகளுக்கே ஒரு வசீகரம் வருகிறது. இப்போது முதல் சரணம், "கல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே... என்று கூறி “கல்லாகப் படுத்திருந்து” என்று அவர் நிறுத்த, "களித்தவர் யாருமில்லே" என்று கூட்டத்தில் ஒருவர் (நகைச்சுவை நடிகர் மற்றும் எழுத்தாளர் ஏ.வீரப்பன் அவர்கள்) சத்தமாக முடிப்பார். இப்படிப் போய் "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று முடியும் போது, இந்த முதல் சரணத்தில் மட்டும் ஒரு நார்மலான வாயசைப்பு இருக்கும். இரண்டாவது சரணம். தொகையறாவில் தொடங்கும். "நூறு வகை பறவை வரும்... ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ஆ..ஆ..ஆ" என்று முடிக்கும் போது ஒரு தேர்ந்த பாடகனுக்குரிய வாயசைப்பு. "முதலுக்கு தந்தை என்போம் முடிவுக்கு அன்னை என்போம்" எனும்போது அழுத்தம் தரும் வாயசைப்பு. மூன்றாவது சரணம். மறுபடியும் தொகையறாவில் தொடங்கும். "ஆடையின்றிப் பிறந்தோமே...ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ஒ..ஒ..ஒ.." என்று மறுபடியும் தேர்ந்த பாடகருக்குரிய வாயசைப்பு. "எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்" என்று முடிக்கும் போது அழுத்தம் கொடுக்கும் வாயசைப்பு.

அடுத்தது, முக பாவம்:-

பாடல் துவங்கும் போது, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று கூட்டமாகச் சேர்ந்து வரும் போது தெரியும், ஒரு இலேசான குதூகலம். அப்படியே மேளத்தை இசைத்துக் கொண்டே, பாடிக் கொண்டே, தந்தையாரை பார்த்து பாவத்திலேயே acknowledge செய்யும் அழகு. முதல் சரணத்தில் அந்த வரிகளின் பொதுவான கருத்துகளுக்கேற்ப சாதாரணமான (normal) பாவம். “வந்ததை வரவில் வைப்போம் செய்ததை செலவில் வைப்போம்” எனும் போது கொடுக்கும் அழுத்தம். இரண்டாவது சரணம் – “நூறு வகை பறவை வரும்……… ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா" என்ற தொகையறாவில் கொடுக்கும் ஒரு விதமான தெய்வீக பாவம். மூன்றாவது சரணம். "ஆடையின்றிப் பிறந்தோமே" என்று துவங்கி, "ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ" எனும் தொகையறாவில் இலேசாக கண் கலங்கி கண்களில் கண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டே பாடும் போது, பார்க்கும், ஏன் பாடல் இயற்றியவனே கண் கலங்கியிருப்பானே! உடனே, “எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்” எனும் போது சுதாரித்துக் கொண்டு, அந்த வரிகளுக்குத் தேவைப்படும் அந்த அழுத்தம் கலந்த சூளுரையைக் காண்பிக்கும் விதம்!

இப்போது, மேளம் தட்டும் அழகு.

பாடல் துவங்கி மேளம் அடிக்கத் துவங்கியவுடன், அவரது கைகள் மேளத்தில் நர்த்தனம் ஆடும் அழகு; லயம். அப்படியே போய், அந்தத் தாளம் முடிந்து, நாகைய்யாவைப் பார்த்துக் கொண்டே, அவரை acknowledge செய்து கொண்டே, தாளம் அழுத்தமாக முடியும் போது, அதே அழுத்தத்தைக் காட்டி முடித்து, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று துவங்கும் அழகு. முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசை மற்றும் தாள கதிக்கேற்ப இவர் மேளத்தைத் தட்டி கொண்டே இருப்பார். இசையும் தாளமும் முடிந்து முதல் சரணம் துவங்கும் போது, மேளத்திலிருந்து கையை எடுத்து, "கல்லாகப் படுத்திருந்து" என்று துவங்கும் போது, சரியாக மறுபடியும் தாளத்துடன் பாடி/தட்டிக் கொண்டே துவங்குவார். பாடிக் கொண்டே, "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று ஒவ்வொரு வார்த்தையின் அழுத்தமான தாளத்துடன் ஒன்றி மேளத்தை அழுத்தமாக அதே தாள கதியில் அடித்து/ பாடிக் கொண்டே முடித்து, மறுபடியும் அனு பல்லவி வேறொரு தாளத்தில் வலுவாகத் துவங்கும் போது, உடனே, அந்த தாள அழுத்தத்தை மேளத்தில் தட்டித் துவங்குவார். இந்த கையசைப்பை, ஒவ்வொரு முறை சரணம் முடிந்து அனு பல்லவி துவங்கும் போதும், சரியாகச் செய்திருப்பார். பாடல் நிறைவடையும் போது, கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தாளம் அந்த வலுவைக் குறைத்துக் குறைத்து முடியும் அழகை, தன்னுடைய விரல்களில் மிகச் சரியாகக் காட்டிக் கொண்டே முடிப்பார்.

ஆக, ஒரு பாடலுக்கு ஒரு மிகச் சிறந்த நடிகன் காட்டும், இரண்டு பாவங்களையும் - அதாவது, வாயசைப்பு, பாடும் வரிகளுக்கேற்ப பாவத்தை முகத்தில் காண்பிப்பது. இவற்றைக்காட்டியாகி விட்டது. எப்பேர்ப்பட்ட நடிகனும் இரண்டு விஷயங்களைக் கஷ்டப்பட்டு செய்து விடுவான். ஆனால், மூன்றாவதாக, ஒரு கருவியை இசைத்துக் கொண்டே வாயசைப்பையும், வார்த்தைகளுக்கேற்ற பாவங்களையும் சுருதி கொஞ்சமும் பிசகாமல் செய்வது பிரம்ம பிரயத்தனம். இது கூட உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக மிகச் சிலரால் முடியும்.
ஆனால், மேற்கூறியவை மட்டுமல்லாமல் பாடல் நெடுக, நடிகர் திலகம் அவரது பிரத்தியேக ஸ்டைலில் தலையை ஒருவாறு மிதமாக ஆட்டிக் கொண்டே பாடுவதும், அவ்வப்போது தந்தையாரையையும் மற்றவரையும் acknowledge செய்யும் விதமும்! எப்படி இந்த மனிதர் ஒரே நேரத்தில், இத்தனை விஷயங்களை, ஒன்றோடொன்று அழகாக இணைத்து, காட்சியையும், பாடலையும், வேறொரு உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றார் என்பது இன்று வரை புரியாத புதிராகத் தான் இருக்கிறது.
இந்தப் பாடல் மற்றும் நடிகர் திலகத்தின் பல பாடல்கள் மற்றும் படங்கள்/காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் திரு முக்தா சீனிவாசன் அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது. "சதை படர்ந்த அந்த முகத்தில் ஒவ்வொரு அணுவும் நடிக்கும், முகம் நடிக்கும்; முகத்தில் உள்ள முடியும் நடிக்கும்".
ஒரு படத்தில், பாடலில், எத்தனையோ நடிகர்கள் இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டே நடித்திருக்கிறார்கள். நான் மேற்கூறிய முதல் மூன்று பாவங்கள் - வாயசைப்பு, வார்த்தைகளின் அர்த்தங்களுக்கேற்ற பாவம், மற்றும் இசைக்கருவியையும் கூடவே பிசிறில்லாமல் வாசிக்க வேண்டிய கட்டாயம். இவைகளை கோர்வையாக, மிகச் சரியாக செய்தது மட்டுமல்லாமல், கூடவே ஒரு வித ஸ்டைலையும், சுற்றி இருப்பவர்களை கவனித்தல்/மற்றும் acknowledge செய்தல், இவைகளையும் கோர்வையாகச் செய்து, இந்தப் பாடலைக் காட்சிப்படுத்திய வகையில், இந்தப்பாடல் முன்னோடி மட்டுமல்ல. இனி வேறொருவரால் வெற்றிகரமாக செய்வதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகிறது.

இந்தப் பாடலின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அத்தனை கலைஞர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு கோரஸ் பாடலில், கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் சரியாகப் பங்களித்து பாடலை மேலும் ரசிக்கும்படி செய்திருப்பார்கள். இந்தப் பாடலில் தான் படத்தில் வரும் பிரதான பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள் (ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் தேவிகா).

தொடரும்,

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

oowijaez
1st February 2013, 08:56 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)


இரா. பார்த்தசாரதி



திரு பார்த்தசாரதி

நீங்கள் நடிகர் திலகத்தின் அசைவுகளை ஒன்று விடாமல் 'பார்த்த' சாரதி :-d

Murali Srinivas
2nd February 2013, 12:11 AM
எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த அன்பு உள்ளங்கள்

கோபால் [அலைபேசியிலும் வாழ்த்து]
சித்தூர் வாசுதேவன்
கணேஷ்
சந்திரசேகர்
காவேரி கண்ணன்
கல்நாயக்
நெய்வேலி வாசு [அற்புதமான புகைப்படத்திற்கு ஸ்பெஷல் நன்றி!]
ராதாகிருஷ்ணன்
சங்கரநாராயணன்

அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய

ராகவேந்தர் சார்

பார்த்தசாரதி

ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

அன்புடன்

JamesFague
2nd February 2013, 10:23 AM
Mr Parthasarathy Sir,

Your pinpoint analysis of our NT is simply superb.

HARISH2619
2nd February 2013, 01:55 PM
Dear murali sir,
belated birthday wishes to you.
As i was out of station i could not come to this thread for the past three days,sorry

JamesFague
2nd February 2013, 02:37 PM
Mr K C Sir,

Your effort will never fails. One day the entire world will know about
our NT.

KCSHEKAR
2nd February 2013, 03:23 PM
Dear Parthasarathy Sir,

நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் - Excellent. Thanks

KCSHEKAR
2nd February 2013, 03:23 PM
Mr K C Sir,

Your effort will never fails. One day the entire world will know about
our NT.

Thanks Mr.Vasu Sir.

parthasarathy
4th February 2013, 11:35 AM
அன்புள்ள திருவாளர்கள். ராகவேந்தர், நெய்வேலி வாசுதேவன், கோபால், ராதாகிருஷ்ணன், காவேரி கண்ணன், வாசுதேவன், சந்திரசேகர், கண்பட், ஆதிராம் மற்றும் வனஜா மேடம் அவர்களே,

எனது "எல்லோரும் கொண்டாடுவோம்" பாடல் ஆய்வைக் கொண்டாடிய உங்கள் எல்லோருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

தங்கள் எல்லோருடைய ஊக்கமும், நடிகர் திலகத்தின் ஆளுமையும், என்னை மேலும் மேலும் எழுத வைக்கும்.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

parthasarathy
4th February 2013, 05:43 PM
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் வெளி வந்த பாடல்கள் (தொடர்ச்சி...)

8. "எங்கே நிம்மதி" படம்:- புதிய பறவை (1964); பாடல்: கவியரசு கண்ணதாசன்; பாடியவர்கள்:- டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழுவினர்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- தாதா மிராசி; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் சரோஜா தேவி.
இந்தப் பாடல் தமிழ்த் திரையுலகுக்கு மிகவும் புதிய முறையில் அளிக்கப் பட்ட பாடல். பொதுவாக, கனவுப் பாடல்கள் பெரும்பாலும் டூயட்டுகளாகவே இருக்கும் நிலையில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்கள் அவனை நிம்மதி இல்லாத மன நிலைக்கு இட்டுச் செல்ல, அவன் நனவுலகத்திலிருந்து விலகி, கனவுலகத்திற்குச் சென்று அங்கும் அல்லல் படுவதை, ஒரு வகை "fantasy " என்று சொல்லக் கூடிய முறையில் எடுத்திருப்பார்கள்.

இதற்கு முன்னரே, "நிச்சய தாம்பூலம்" படத்தில், "படைத்தானே" பாடலில் இந்த முறையை நடிகர் திலகம் சிறப்பாகக் கையாண்டிருந்தாலும், அந்தப் பாடலை விட, "எங்கே நிம்மதி" பாடலை இன்னமும் செம்மைப் படுத்தியிருந்ததால், இந்தப் பாடலை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன்.

இந்தப் பாடலின் பல்லவியான "எங்கே நிம்மதி" வரிகள் முதலில் கவியரசருக்குக் கிடைக்கவில்லை எனவும், கவியரசு, மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மற்றும் நடிகர் திலகம் மூவரும் பாடல் எடுப்பதற்கான ஆயத்தங்கள் அனைத்தையும் செய்த பின்னரும் அந்த முதல் வரி எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை என்று ஏமாற்றத்துடன் (ஏனென்றால், கவியரசு எப்போதுமே முதல் வரியிலேயே மொத்தப் பாடலின் காலத்திற்கு அவரும் சென்று கேட்பவரையும் அழைத்துச் சென்று விடுவார், நடிகர் திலகம் நடிப்பில் காட்டுவது போல் - "கண்ணா கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே" என்று ஒரு கரிய நிறம் கொண்ட பெண்ணின் இறைவன் கண்ணனை நோக்கிய முறையீட்டில் தந்தவர். இது ஒரு சிறிய ஒரு உதாரணம். இது போல் பல உதாரணங்கள் கூறலாம்.), வீடு சென்றதாகவும், நள்ளிரவில், திடீரென்று நடிகர் திலகமே, அந்த வரிகள் மனதில் வரப் பெற்று, மற்ற இருவருக்கும் தொலைபேசி செய்து, அன்றிரவே, பாடலைப் பதிவு செய்ததாகவும் பல வருடங்களுக்கு முன்னர் படித்திருக்கிறேன். பொதுவாக, நடிகர் திலகம் பிற துறைகளில் அதீதமாகத் தலையிட மாட்டார் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வார்கள் என்றாலும் இந்தக் கூற்று உண்மையல்ல. இந்தப் பாடலே அதற்கு உதாரணம். இது போல் பல படங்களைச் சொல்லலாம். அவர் அதீதமாகத் தலையிட மாட்டாரே தவிர, படம் முழுமையாக வர, அவரது ஆலோசனைகளை வழங்கி, முழு ஈடுபாட்டினையும் காட்டித்தான் வந்திருக்கிறார் - சக கலைஞர்களின் பங்களிப்பையும் பட்டை தீட்டுவது உட்பட.

இந்தப் பாடல் பல ஆண்டுகள், உலகின் எந்த மூலையில் மெல்லிசைக் கச்சேரி நடந்தாலும் மறக்காமல் முயற்சி செய்து பாடப்பட்ட பாடல். இன்றும் இது தொடர்கிறது. மெல்லிசை மன்னர்களின் மிகச் சிறப்பான டியூனும், எண்ணற்ற வாத்தியக் கருவிகளின் ஆர்ப்பரிப்பும், இன்றளவும் ஒவ்வொரு இசையமைப்பாளரையும் இன்னமும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பாடல் வரிகளோ கேட்கவே வேண்டாம். முக்கியமாக, "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே" சிரஞ்சீவித்தன்மை பெற்ற வரிகள். டி.எம்.எஸ்ஸின் அற்புதப் பங்களிப்பில், பாடல் எடுக்கப்பட்ட விதமும், அதில் நடித்த அனைத்து கலைஞர்களின் நடிப்பும் இன்றளவும் புதிதாகத் தோற்றமளிக்கிறது.

இப்போது, நடிகர் திலகத்தின் வித்தியாசமான முயற்சிக்கு வருவோம். இந்தப் படத்தை முதலில் பார்த்தபோது, நடிகர் திலகம் அவருடைய முயற்சியில் தோற்று (சௌகாரின் கை ரேகையை பிரதி எடுக்க முயன்று தோற்று, நடிக வேள் எம்.ஆர். இராதாவால் மேலும் மனம் உடைந்து போயிருப்பார்) மிகுந்த மன உளைச்சலுடன் படுக்கையில் புரளுவார் - "என் நிம்மதியே போய்டும் போலிருக்கே!" - அப்போதே, திரை அரங்கம் ஆர்ப்பரிக்கத் துவங்கி விட்டது. அப்போதே எனக்கும் விளங்கி விட்டது - படத்தின் மிக முக்கியமான highlight பாடலான "எங்கே நிம்மதி" வரப் போகிறதென்று.

இந்தப் பாடல் முழுக்க நடிகர் திலகத்தின் உடல் மொழி கொடி கட்டிப் பறக்கும். பாடல் முழுவதிலும், அவரது கைகளும், கால்களும் காண்பிக்கும் அபிநயங்களை வேறெந்த நடிகன் முயற்சித்திருந்தாலும், நகைப்புக்கிடமாகத்தான் போயிருக்கும். எந்த விஷயத்தையும் பரீட்சித்துப் பார்ப்பதில் (சோதனை முயற்சி சில முறை ஜெயிக்கலாம் சில முறை தோற்கலாம். ஆனால் அதைப் பற்றி என்றுமே கவலைப் படாமல், கடைசி படம் வரை, வித்தியாசப் படுத்தி நடிப்பதில் பிடிவாதம் காட்டியவரல்லவா?) முனைப்பு காட்டும் நடிகர் திலகம் இந்த முறை, ஏற்கனவே "படைத்தானே" பாடலில் செய்த சோதனை முயற்சியை விட பல படிகள் முன்னே போய், அவரது நம்பிக்கைக்குரிய குழுவின் மூலம் (கவியரசு/டி.எம்.எஸ்./மெல்லிசை மன்னர்கள் - "படைத்தானே"வும் இதே குழு தான்!) ஒரு பரீட்சார்த்த பாடல் முயற்சியை செய்திருப்பார்.

அந்த மெல்லிய வெள்ளை சட்டை, முழங்கைக்கு மேல் மடித்து விட்ட விதம், அந்த வெளிர் நீல பாண்ட், சரியாக சவரம் செய்யப்படாத முகம் - இவைகளை மட்டும் வைத்துக் கொண்டே, துவக்கத்திலேயே, அந்தப்பாடலின் சூழலுக்கு உடனேயே சென்று, பார்க்கும் அனைவரையும் இழுத்துச் சென்று விடுவார் வழக்கம் போல்.

பாடல் துவங்கி கேமரா கீழே படுத்துக் கொண்டிருக்கும் அவர் மீது zoom செய்யப் பட, கோரஸில், பலர் "ஒ..." என்று கூவத் துவங்கும்போதே, அவர் எச்சிலை மிடறு விழுங்கி அந்தச் சூழலின் பயங்கரத்தைக் காண்பிப்பார். உடனே தொடரும் ஒரு அதிரடி இசைக்கு சட்டென பின்னோக்கி நடக்கும் போது அரங்கம் அதிரத் துவங்கும்.

"எங்கே நிம்மதி" எனப் பல்லவி பாடும் போது, இரண்டு கைகளையும் ஒரு விதமாக relaxed - ஆக stretch செய்து, மிகுந்த மன உளைச்சலில் இருப்பவனின் ஆயாச உணர்வினை எடுத்துக் காட்டும் விதம் பிரமிக்க வைக்கும்; கூடவே அரங்கமும் அதிரும்.

பல்லவி முடிந்தவுடன் சௌகார் மற்றவர்கள் சகிதம் வந்து அவரை இம்சை செய்யத் துவங்கியவுடன், அந்த இம்சையை எதிர் கொள்ளும் விதம்!

இப்போது சிறிய சரணம். அந்தக் கூட்டத்திடமிருந்து விலகி ஓடி வந்து, வலது கையை மட்டும் ஸ்டைலாக மேலே பின்னோக்கித் தூக்கி "எங்கே மனிதன் யாரில்லையோ" என்று சொல்லி இப்போது இடது கையைத் இலேசாக மேலே தூக்கி "அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று பாடுவார். இதற்கும் அரங்கம் அதிரும்!

இப்போது சரணம். "எனது கைகள்" எனும்போது, இடது கையை மேலே தூக்கி, "மீட்டும் போது வீணை அழுகின்றது" எனும் போது வலது கையை இடது கை அருகாமையில் கொண்டு சென்று வீணை போல் மீட்டி, "எனது கைகள் தழுவும் போது" என்று கூறும் போது, கைகளை உடனே X (எக்ஸ்) போல் ஆக்கி, தழுவுவது போல் வித்தியாசமாய்க் கைகளைக் கையாண்டிருப்பார். பொதுவாகத் தழுவுவது என்பது கைகளை நேரிடையாகத் தழுவுவது போல் தான் வரும். இருப்பினும் அதற்கு முன்னர் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு வீணை வாசிக்கும் பாவனையைக் காட்டிக் கொண்டே, அதே கோணத்தில், எதிரிடையாக X (எக்ஸ்) குறியில், தழுவும் பாவனையைக் காண்பித்திருப்பார். (ஆங்கிலத்தில், follow through என்று கூறுவார்களே, அது தான் இந்த நடிகர் திலகத்திடம் எத்தனை முறை பாடம் காண்பிக்கப்பட்டிருக்கிறது!) அப்படியே, பின்னோக்கிப் போய்க் கொண்டே "கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே; ஓ! இறைவன் கொடியவனே" எனும் போது மேலே தூக்கிய இரண்டு கைகளையும் சட்டென்று கீழே இறக்கி "இறைவன் கொடியவனே" என்று சரியான follow through முறையில் கீழே கொஞ்சம் வேகமாகவும், ஒரு வித அலுப்பு கலந்த வன்மையோடும் கீழே இறக்கி அந்த வரிகளுக்கு அதாவது "இறைவன் கொடியவனே" என்ற அந்த வரிகளுக்குரிய வன்மையைக் காட்டியிருப்பார்.

முதல் சிறிய சரணம் முடிந்து அனு பல்லவியில் "எங்கே நிம்மதி...எங்கே நிம்மதி...அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று அந்த மேல் நோக்கிச் செல்லும் வழியில் ஏறும் போது, அலுப்பையும் ஆயாசத்தையும் நடையில் காட்டிய நடிப்புலக மன்னர் மன்னன், இந்த இரண்டாம் சரணம் முடிந்து - அதாவது "எனது கைகள் மீட்டும் போது..." என்கிற சரணம் - ஒரு வித வேகத்துடன் "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி" என்று இரு புறமும் திரும்பித் திரும்பி நடித்திருப்பார் - ஏன்? முதல் முறை, ஆயாசத்தையும், இரண்டாவது முறை, வேகத்தையும், பாடிய டி.எம்.எஸ். தந்ததால்!

மூன்றாவது சரணம் - "பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே" சரோஜா தேவி அருகில் வந்ததும், பாலைவனத்தில் சோலையைக் கண்ட மன நிலையுடன், ஒரு வித ஆயாசம் கலந்த relief-உடன் சென்று, அவரை முழுமையாகத் தழுவாமல், "உன்னிடம் தஞ்சம் புகுந்தேன்" என்ற மன நிலையில் கண்ணியத்துடன் தழுவி நடந்தவுடன், திரும்பவும் "பழைய பறவை போல ஒன்று" என்று அதே சரணம் இரண்டாவது முறை வரும் போது, உள்ளே இருந்து சௌகார் வேகமாக வந்தவுடன், அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து, ஸ்டைலாக பின்னோக்கி செல்லும்போது, மீண்டும் அரங்கம் அதிரும்! மறுபடியும் சரோஜா தேவி வந்தவுடன், "என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே என்று வேதனையுடன் (அளவான) கூறி அப்படியே கீழே உட்கார்ந்து, அவரது மடியில் படுத்து, "இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே" என்று கூறி, "எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?" என்று படுத்துக் கொண்டு சரோஜா தேவியைப் பார்க்கும் போது, அப்போது தான் முதன் முறையாக அவரது முகத்தில், ஒரு வித relief தெரியும்! சௌகாரின் இம்சை போய், காதலி சரோஜா தேவியைப் பார்த்த திருப்தியில்!

மீண்டும் அனு பல்லவி துவங்கி, பலர் சௌகாருடன் சேர்ந்து அவரை இம்சித்து, அப்படியே, நடிகர் திலகம் சௌகாரின் பிடியில் freeze ஆகி நிற்பது போல் முடியும்.

நடிகர் திலகம் வேறொரு உலகத்திற்குச் சென்று, பார்க்கும் எல்லோரையும் அந்த உலகிற்கு அழைத்துச் சென்றிருப்பார்! பாடல் முடிந்து, நனவுலகதிற்குச் சென்று மீண்டும், அவரது முகம் க்ளோசப்பில் காட்டப்படும் போது, அவர் முகத்தில் தெரியும் ஆயாசம் கலந்த அதிர்ச்சி நம்மையும் தொற்றியிருக்கும்!!

அந்தப் பாடல் முடியும் போது இருக்கும் shot - சௌகாரின் பிடியில் freeze -ஆகி நிற்கும் காட்சி - ஆங்கில நாடகங்களில் பாலே போன்ற நடன நாடகங்களின் inspiration தெரியும்! இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும், பாடலும் (இந்தப் பாடலையும் சேர்த்து!), அரங்க அமைப்பும், நடை/உடை/பாவனைகளும், களமும், கலைஞர்களின் உழைப்பும் (நடிகர் திலகம் துவங்கி), ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இருக்கும்.

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னரே, "ahead of times" என்று கூறிய, இன்றும், படத்தைப் பார்ப்பவர்கள் (இன்றைய தலைமுறையினர் உட்பட) வாய் பிளந்து அதிசயிக்கும் இந்தப் படத்தை, almost ghost direct செய்தது நடிகர் திலகமே தான் என்று கூறுவார்கள். பின் எப்படி, அவருக்கு சினிமா என்ற ஊடகத்தில், பிற துறைகள் அந்த அளவிற்குத் தெரியாது என்று சொல்லப் போயிற்று?!!!!

தொடரும்,

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

kaveri kannan
4th February 2013, 09:51 PM
கரங்கள் சாதாரணமாய் மறறவர்க்கெல்லாம் எத்தனை கோணங்கள்... செயல்கள்... அபிநயங்கள் காட்டும்?

சிலர் - குறிப்பாய் பாடல் காட்சிகளில் கரங்களை எங்கே வைத்துவிடலாம் என அவஸ்தைப்படுவது கூட நடக்கும்..

ஆனால் கரங்களால் அதிசயங்கள் நிகழ்த்திய ஒரே உலகக்கலைஞன் நம் நடிகர்திலகம் மட்டும்தான்..

உள்ளம் என்பது ஆமையில் இருந்து, பொட்டு வைத்த முகமோ வரை...
எந்த எல்லைக்கான பாடல்களிலும் கரங்களால் நடிப்புக்கவிதை வரையும் ஆற்றலாளர் நம் நடிகர்திலகம்..


அந்த கரச்சேவைக்கு முதல் மரியாதை அளித்த பாடல் - எங்கே நிம்மதி..

மலர், தழுவுதல், வீணை, மீட்டுதல், சுடுதல், அழுதல் என விரல்மொழி பேசிய அரிய நடிப்போவியம்..

அதை அங்குலம் அங்குலமாக தங்க எழுத்தால் அலங்கரித்து மீள்பார்வைக்கு அளித்த பார்த்தசாரதிக்கு
சொல்லோவியர் எனப் பாராட்டினாலும் தகும்..


அருமையான ஆய்வு..

முனைவர் தரத்தில்..

பாராட்டுகள் பா.சா.!

KCSHEKAR
5th February 2013, 10:04 AM
Dear Parthasarathy Sir,

தங்களுடைய பாடல் ஆய்வைப் படித்தபிறகு எங்களுக்கு - "எங்கே நிம்மதி" - Thanks

parthasarathy
5th February 2013, 11:10 AM
அன்புள்ள திருவாளர்கள். காவேரி கண்ணன், மற்றும் சந்திர சேகர் அவர்களே,

என்னுடைய "எங்கே நிம்மதி" பாடல் பதிவைப் பாராட்டிய தங்களுக்கு நன்றிகள்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், தங்கள் பாராட்டுகள் என்னை ஊக்கப்படுத்தி மேலும் மேலும் நிறைய எழுத வைக்கும்.

நன்றியுடன்,

இரா. பார்த்தசாரதி

JamesFague
5th February 2013, 11:28 AM
Mr Parthasarathy Sir,

Even the NT's nails also will act. That is the speciality of our NT.
Excellent analysis of PP song.

parthasarathy
5th February 2013, 01:00 PM
Mr Parthasarathy Sir,

Even the NT's nails also will act. That is the speciality of our NT.
Excellent analysis of PP song.

Dear Mr. Vasudevan,

It's our duty to bring out every single nuances and contributions of NT to the world, which all of us will continue to do.

Thank you for your appreciation.

Regards,

R. Parthasarathy

adiram
5th February 2013, 07:50 PM
Mr. PARTHASARATHY,

eventhough we have watched this song in hundreds times before (recently by the grace of TV channels also), it is still fresh experience when reading your nerration.

what a keen observation you have, wonderful.

yes, he always use his hands very carefully and very powerfully wherever needed, not simply waving the hands here and there like others. His hand actions always memorable for each and every steps.

in ooty varai uravu, just leaning by the side of the swimming pool and showing hand expression for the line ' idhu naalai varum endru kaathirundhaal oru naalallavo veenaagum'. (no need to mention about the claps).

fine nerration, continue sir.

kaveri kannan
6th February 2013, 02:06 AM
ஆதிராம் அவர்களே


அங்கே மாலை மயக்கம் என்னையும் மயங்க வைத்த அழகுப்பாடல்..

நடிகர்திலகத்தின் அசத்தும் ஸ்டைல் ஆண்களைக்கூட நாயகியைக் காணவிடாது!

http://www.youtube.com/watch?v=Ku1Ek0yaex0

adiram
6th February 2013, 10:42 AM
Mr. KAVERI KANNAN,

Thanks for posting 'ange maalai mayakkam' video and make all of us happy and enjoy.

You have proved 'kodu pottaal roadu podubavargal Shivaji fans'.

thalaivar in white & white with original hair style.

indoor song, that too picturised just around a small water tank.

awsome NT/KRV/TMS/PS/KD/MSV/N.Balakrishnan/N.M.Shankar/Sreedhar and Gemini color lab.

adiram
6th February 2013, 11:00 AM
Dear Mr. Raghavendar & Mr. Vasudevan,

Thanks for understanding my view in a right way (this reply for our discussion in filmography thread, because I dont want to make more discussions there).

my mention about 'en viruppam' and 'pudhir' are just hints only, but main reason for the post is just requesting to keep 'that' thread only for the purpose started, ie for filmography and avoid other discussions. Openly saying, the 'vedikkai vilaiyaattu' discussions by hubbers (not by you, I know you two always serious) may be made in other two threads.

in addition to that I also included 'en viruppam' and 'pudhir' may also discussed in previous two threads, keeping the third only purely for filmography, what MGR fans are doing now.

I hope our other hubbers will also accept it. Thanks.

parthasarathy
6th February 2013, 04:39 PM
Mr. PARTHASARATHY,

eventhough we have watched this song in hundreds times before (recently by the grace of TV channels also), it is still fresh experience when reading your nerration.

what a keen observation you have, wonderful.

yes, he always use his hands very carefully and very powerfully wherever needed, not simply waving the hands here and there like others. His hand actions always memorable for each and every steps.

in ooty varai uravu, just leaning by the side of the swimming pool and showing hand expression for the line ' idhu naalai varum endru kaathirundhaal oru naalallavo veenaagum'. (no need to mention about the claps).

fine nerration, continue sir.

Dear Mr. Adiram,

Thank you very much for your appreciation.

While recognition and appreciation is certainly a catalyst to continue posting more articles, frequent misunderstanding and infight pulls us down. Hope moderators and friends like Mr. Murali Srinivas will intervene and sort out the differences so that all of us continue on our single minded goal of propagating NT's glory to the present day youth.

Regards,

R. Parthasarathy

adiram
7th February 2013, 03:00 PM
RAGHAVENDRA sir,

Thuli Visham details in Filmography thread are excellent. (I dont want to put even comments there, not to degrade thread's purpose).

Thuli Visham stills, advertisement, actors & technical crew list, Hindu paper's coverage in its original version.... everything good. It is very difficult to collect this much details for such an old movie.

we enjoyed, thanks.

goldstar
7th February 2013, 04:25 PM
http://i1302.photobucket.com/albums/ag133/nadigarthilagam/madurai_zps40139d00.jpg

JamesFague
8th February 2013, 10:48 AM
AD appeared in today's Daily Thanthi that Vasantha Maligai will be released in
the Month of March.

NOV
8th February 2013, 12:33 PM
This thread is now closed, so that there is no more redundancy.

Please continue discussions at http://www.mayyam.com/talk/showthread.php?9891-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-10/page49