PDA

View Full Version : Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO EmperorPages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13

pammalar
15th August 2012, 03:47 AM
அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NationalFlag1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/VeerapandiyaKattabomman1-1.jpg

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
15th August 2012, 04:15 AM
டியர் வாசுதேவன் சார்,

'நடிகர் திலகமும் இசைக்குயில்களும்' அற்புதப்பதிவை எனக்கு dedicate செய்தமைக்கு எனது தலையாய நன்றிகள்..!

பதிவில் உள்ள ஒவ்வொரு வரியும் உணர்ச்சிமயம்..! தளபதி ராம்குமார் அவர்களே மிக உருக்கமாக இத்தகவல்களைக் கூறியுள்ளார். ஆங்கிலத்தில் வந்திருந்த இந்த அரிய தகவல்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியமைக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!

நிழற்படங்களும் படுஅமர்க்களம்..! அதிலும் 'லதாஜி குனிந்து மாலைகளை ஏற்றுக் கொள்ளும்போது அருகே கம்பீரத்திலகமாக வெள்ளைச் சிரிப்போடு நமது நடிகர் திலகம்' இருக்கும் அந்த நிழற்படம் அதியற்புதம்..!

இப்பேர்ப்பட்ட ஒரு சிறந்த பதிவினை வழங்கி அதனை எனக்கு dedicate செய்த தங்களுக்கு மீண்டும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
15th August 2012, 04:36 AM
டியர் சந்திரசேகரன் சார்,

பாராட்டுக்கு நன்றி..!

சிவாஜி பேரவை சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழா சிறக்க வாழ்த்துக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
15th August 2012, 04:53 AM
சுதந்திரத் திருநாள் ஸ்பெஷல்

'நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது...'


http://www.youtube.com/watch?v=LiK_4pdcvv4

பக்தியுடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
15th August 2012, 06:38 AM
டியர் பம்மலார்,
விடுதலை நாள் என்றாலே தேசியக் கொடியும் நடிகர் திலகமும் அனைவரின் நெஞ்சங்களும் நிழலாடும் வண்ணம் தன் படங்களை தேசீய உணர்வுடன் படைத்த வண்ணம் அமையும் படி செய்த நடிகர் திலகத்தின் படங்களை பதிவிட்டு விடுதலை நாளை கொண்டாட செய்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.
face book இணைய தளத்தில் நண்பர் ஒருவரின் பதிவாக இடம் பெற்றுள்ள நாளிதழின் நிழற்படம் நம் நாடு விடுதலை பெற்ற செய்தியை அறிவிக்கும் சிறப்பை பாருங்கள்.

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/418709_513440782004544_1137132513_n.jpg

Richardsof
15th August 2012, 08:32 AM
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் உரையாடும் ஒரு கற்பனை தொகுப்பு .

மதி ; சுதந்திர தின வாழ்த்துக்கள் தம்பி ..

நதி ; உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.அண்ணே .

மதி. இந்த நன்னாளில் சுதந்திர தியாக வரலற்று நினைவுகள் என்றால் உன்னுடைய படங்களில் இடம் பெற்ற வீர வசனம் மற்றும் பாடல்கள் மறக்க முடியுமா தம்பி .

நதி; நீங்க மட்டும் என்ன அண்ணே ... உங்கள் புரட்சிகரமான பாடல்கள் .. அதோ அந்த பறவை போல ... .தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை .. போன்ற பாடல்களை கேட்டல் நரம்பெல்லாம் முறுக்கேறும் அண்ணே.
மதி; தம்பி ..உனது புகழையே தங்கள் உயிர் மூச்சாக கொண்டுள்ள ரசிக உள்ளங்கள் உனது பெயரிலே வெற்றிநடை போடும் இந்த திரியில் கலந்து உனது படங்கள் மற்றும் உன்னை பற்றி எல்லா தகவல்களையும் தொடர்ந்து வருவது மிகவும் சந்தோஷம் தம்பி .

நதி; அண்ணே . நீங்க சொல்ற என் உயிர் பம்மலார், ராகவேந்திரன் , வாசுதேவன் ,சந்திரசேகரன் ,கார்த்திக் ,கோபால் ,முரளி ஸ்ரீநிவாஸ் ,கல்நாயக் சகோதரி சாரதா, joe மகேஷ் மற்றும் எண்ணற்ற அன்பு உள்ளங்களை எப்படி அண்ணே மறக்க முடியும் .
பசங்க திரியிலே சும்மா வெளுத்து தூள் கிளப்புகிறார்கள் .

மதி .தம்பி .. நானும் தினமும் படித்துகொண்டு வருகின்றேன் .ராகவேந்திரன் பிரமாதமாக உன்னை பற்றி ஆய்வு கட்டுரைகளை எழதி வருகிறார் .
உன் படத்தின் எல்லா தகவல்கள் அறிந்து கொள்ள பம்மலார் & வாசுதேவன் இருவரும் இரவு பகல் பாராது பதிவிட்டு வருவது சாதனைதான் .

நதி ;போங்க அண்ணே ... நீங்க மட்டும் என்ன ... உங்க சினிமா சாதனை என்ன சும்மாவா உங்க பசங்க திரியிலே கலக்கி பிரமாதமாக உங்கள் படங்கள் ,பாடல்கள் ,கட்டுரைகள் , சாதனைகள் என்று எங்கள் பசங்களும் சேர்ந்து உங்களை கெளரவம் செய்கிறார்களே .

மதி; இந்த ஒற்றுமைதான் நான் எதிர் பார்த்தேன் .நாம் திரை உலகில் இருந்த நேரத்தில் இரண்டு பிரிவுகள் தவிர்க்க முடியாத சூழ் நிலையில் இயங்கி வந்தது .

நதி; அண்ணே நீங்க பாடிய மாதிரி ஒரு தாய் மக்கள் நாமென்போம் .. ஒன்றே எங்கள் .. .
குலமென்போம் . என்ற வரிகளின் தாக்கம் இரண்டு ரசிகர்களின் உள்ளங்களிலும் குடி கொண்டுள்ளது ..

மதி; ஆமாம் .. தம்பி இந்த வருடம் உனது சாதனை படு பிரமாதம் ....

நதி; என்ன சொல்றீங்க அண்ணே .

மதி; என் தம்பி கர்ணன் ... நீ நடித்த வரலாற்று காவியம் .. மீண்டும் கர்ணனுக்கு உயிர் கொடுத்த தம்பியே ......

நதி ;அண்ணே ..உங்களின் இந்த வாழ்த்து எனக்கு கிடைத்த பாக்கியம் ...
எனது வெற்றிக்கு காரணம் எனது அன்பு பிள்ளைகளின் பாச பிணைப்பு .
மதி ; நமது இருவரின் புகழுக்கு பாடுபடும் நமது செல்வங்கள் எல்லோருக்கும் இன்று இனிய சுதந்திர வணக்கங்கள் .

நதி ;அண்ணே ..உங்களின் ஆசியாலும் எனது பசங்களின் ஆரவாரமான பதிவுகளும் நான் எல்லையில்லா ஆனந்தம் பெற்றுள்ளேன் .

மதி ; எல்லோருக்கும் விடை பெறுகிறேன் ....

நதி; மீண்டும் சந்திப்போம். சந்திப்பு விளம்பரங்கள் தூள் பம்மலாரே...................

http://i47.tinypic.com/2ywbn1l.jpg

kalnayak
15th August 2012, 11:40 AM
அனைவருக்கும் இந்திய சுதந்திர திருநாள் வாழ்த்துகள்!!!
வாழ்த்துகளை பகிர்ந்துகொண்ட அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன்.

kalnayak
15th August 2012, 12:01 PM
மதியும் நதியும் உரையாடும் கற்பனை அபாரம்!!!
இருவரும் சந்தித்தால் நிச்சயம் இப்படித்தான் உரையாடுவர்

KCSHEKAR
15th August 2012, 12:23 PM
Dear esvee Sir,

Mathi- nadhi - sandhippu - urayadal

- Very nice one. Well done.

KCSHEKAR
15th August 2012, 12:24 PM
Dear Pammalar,

சுதந்திரத் திருநாள் ஸ்பெஷல்

'நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது...' - Very Fitting one for the situation. Thanks

KCSHEKAR
15th August 2012, 12:27 PM
Dear Vasudevan Sir,

நடிகர் திலகம் சிவாஜியும், 'இசைக்குயில்' லதாஜியும் - Very nice and really a நெகிழ்ச்சிப் பதிவு. Thanks

mr_karthik
15th August 2012, 12:46 PM
அனைவருக்கும் விடுதலைநாள் நல்வாழ்த்துக்கள்....

அன்புள்ள பம்மலார் அவர்களே,

'சந்திப்பு' திரைக்காவியத்தின் 100-வது நாள் விளம்பரம் மிக மிக அற்புதம். அதுவும் சென்னை, மதுரை இரு பதிப்புகளிலும் வந்தவற்றை அள்ளித்தந்திருக்கிறீர்கள். இந்த விளம்பரம் பத்திரிகையில் பார்த்த நினைவில்லை. அதனால் சந்திப்பு படத்தின் முந்தைய விளம்பரங்களைப்போல இதுவும் நீளவாக்கில் அமைந்திருக்குமோ என்று அச்சப்பட்டேன். அப்படியில்லாமல் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்திருப்பது கண்டு ரொம்பவே சந்தோஷம். (நீளவாக்கில் வரும் விளம்பரங்கள் அவ்வளவாக கவருவதில்லையெபது உண்மைதானே. திரு. பாலாஜிதான் தன் படங்களுக்கு நீளவாக்கில் விளம்பரங்கள் அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்).

விடுதலைநாளை முன்னிட்டு நீங்கள் அளித்திருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் காவியத்தில் அண்ணனின் ஆக்ரோஷத்தோற்றம், இப்படம் எப்போது டிஜிட்டலில் வரும் என ஏங்க வைக்கிறது. உண்மையில் திருவிளையாடலுக்கு முன் கட்டபொம்மனைத்தான் நவீன தொழில் நுட்பத்தில் எதிர்பார்த்தேன். சற்று ஏமாற்றமே. இருப்பினும் பொறுத்திருப்போம்.

இந்நேரத்தில் என்னுடைய இன்னொரு ஆதங்கம். ரசிகர்களும், பொதுமக்களும், இளம் தலைமுறையினரும் பழைய படங்களில் ஆர்வம் காட்டிவரும் இவ்வேளையில், நமது தேசீயத் திலகத்தின் 'கப்பலோட்டிய தமிழன்' திரைக்காவியத்தை டிஜிட்டல், 3டி போன்ற எந்த நவீன தொழில்நுட்பமும் செய்யாமல், புத்தம்புது காப்பிகளாக மட்டும் தயார் செய்து, முன்கூட்டியே நல்ல விளம்பரங்கள் செய்து, மக்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து, நல்ல திரையரங்குகளில் திரையிட்டால் மிகுந்த வரவேற்பைப்பெறும் என்பது என் எண்ணம்.

இப்போது அடுத்து வரப்போகும் திருவிளையாடல், கலக்கி ஓய்ந்த பிறகாவது தயாரிப்பாளர்கள் / வினியோகஸ்தர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டால் நல்லது.

தங்களின் சி.ஐ.டி. பார்வையில் இருந்து எந்த சின்ன விஷயமும் தப்பாது என்பதற்கு உதாரணம், நடிகர்திலகத்தின் விபூதியணிந்த நிழற்படம் 60-ல் எடுக்கப்பட்டிருந்தாலும் 66-க்குப்பின்புதான் சட்டமிடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கண்டுபிடித்த விதம்.

அனைத்துப்பதிவுகளுக்கும் மிக்க நன்றி.

Thomasstemy
15th August 2012, 01:11 PM
Anbulla Pammalar, Raghavendran sir, Murali Sir,Karthik Sir,Vasudevan sir, Joe Sir, Sivaji Senthil Sir, matrum Nadigar Thilaga Thiri Nanbargal Anaivarkkum, Thilaga Sangamathin Mudhal,Mukkiya Nanbar Thiru ESVEE Avargalukkum En Iniya Sudhandhira Dhina Nall Vazhthukkal,

15th August - As we celebrate our Independence, we still need to remember that we are in dependence for many things from other countries. The day, we are not dependence on others will mark our Independence. Have wondered on the team work of Freedom Fighters like Subramania Bharathi, Subramania Siva, Tirupur Kumaran, Vaanchinathan, and who could forget The Great Kappal Oatiya Thamizhar V.O.Chidambaram, Bhagat Singh - the lion who roared "Inquilab Zindabad, Hindustan Zindabad"

- While, remembering them, it is equally to be remembered, A National Actor with International Capabilities, who ensured, he donned the role of various Freedom Fighters as a part of his career, re-introducing them to the People of Tamilnadu and making them understand whatever possible extent the difficulties, the fighters underwent for Independence.

Nadigar Thilagam Sivaji Ganesan's Contribution in bringing the freedom Fighters and their hardships into the minds of the people stressing on the importance of Independence was AWESOME & APPRECIABLE.

Be it is Veera Pandiya Kattabomman (or) V.O.Chidambaram (or) Kodi Kaatha Kumaran (or) Vanchinathan (or) Subramania Bharathi (or) Bhagat Singh, "Nadigar Thilagam"Sivaji Ganesan ensured Nationalism reaching the minds of people.

The Tamil film world should be ashamed that NO OTHER TAMIZH ACTOR CARED FOR SUCH NOBLE THINGS AS A PART OF THEIR CAREER.

Vandhey Maadharam !!!

Kappal Oatiya Thamizhan Desiyakavi Subramania Bharathiyin Paadalai Paadum Kankolla Kaatchi...What a Team Work !

http://www.youtube.com/watch?v=4fPff1_R7mA&feature=relmfu

mr_karthik
15th August 2012, 01:22 PM
'நட்புத்திலகம்' வினோத் அவர்களே,

நமது நாட்டின் விடுதலைநாளை முன்னிட்டு நடிகர்திலகமும், மக்கள்திலகமும் உரையாடுவதாக அமைந்த கற்பனை வெகு ஜோர். அதில் நடிகர்திலகம் அவர்கள் என் பெயரையும் உச்சரிப்பதாக நீங்கள் பதிவிட்டிருந்தது கண்டு அளவில்லா ஆனந்தம். கற்பனை உரையாடலுக்கு தோதான அற்புதப் புகைப்படத்தையும் இணைத்து அழகு சேர்த்துவிட்டீர்கள்.

நிலா வெளிச்சத்தில் ஆற்றில் பயணம் செய்வது போல (அதுதாங்க உங்க பாணியில் 'மதி'யும் 'நதி'யும் ஒன்று சேர) நீங்கள் தரும் பதிவுகளனைத்தும் அற்புதம்.

பாராட்டுக்கள், நன்றிகள்.

Thomasstemy
15th August 2012, 01:25 PM
15th August - An icing on the cake - No Independence Day is complete as far as Tamilnadu is concerned without this song of Nadigar Thilagam Sivaji Ganesan that focuses on the being Indian and National Integration irrespective of religion and language.

The song "Indhiya Naadu En Veedu from Bharatha Vilas is performance by the kids at Newcastle Panthers club, Australia for the cultural celebrations of Indian Independence Day on 15 August 2009.

Be it is celebration in India (or) Australia (or) where ever across globe.....No doubt, Nadigar Thilagam's song are the most suited for all occasions !!!!

Nadigar Thilagaththin Paadalgal Evalavu Periya Thaakkaththai Aerpaduththi irukinradhu Paarungal .........Engal Thirai Ulaga Avathaara Purushar Nadigar Thilagam Sivaji Ganesan Avargal Pugazh Men Maylum Sirakkavayndum http://www.youtube.com/watch?v=sZVPtYdJs8Q&feature=related

mr_karthik
15th August 2012, 01:36 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

விடுதலை நாளை முன்னிட்டு நீங்கள் அளித்திருக்கும் காணக்கிடைக்காத மாபெரும் பொக்கிஷத்துக்கு மிக்க நன்றி. நாடு விதலை பெற்ற அந்த நற்செதியைத்தாங்கி வெளிவந்த 1947 ஆகஸ்ட் 15 தேதியிட்ட 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தித்தாள் எவ்வளவு அரியதொரு ஆவணம்....!!!.

அதைத் தன் முகநூலில் பதிவிட்ட அந்த நண்பருக்கும், அதனை எங்கள் அனைவரின் பார்வைக்கும் அளித்திட்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்.

mr_karthik
15th August 2012, 02:11 PM
அன்புள்ள பம்மலார் அவர்களே,

நடிகர்திலகத்தின் தனிப்பாடல்களில் என் மனதில் உயரிய இடம் கொடுக்கும் பாடலான 'நான் பிறந்த நாட்டுகெந்தநாடு பெரியது' பாடலை காணொளியாகத்தந்த்மைக்கு மிக்க நன்றி. மிகவும் பிடித்தபாடலாக இப்பாடல் அமைந்ததற்கு பல காரணங்கள்.

1. சமூகப்படங்களின் புதிய பறவைக்குப்பின் வண்ணப்படத்தில் அவரைக்காண ஏங்கிய நேரத்தில் வந்த படம் தங்கச்சுரங்கம். (இடையில் அவர் நடித்த வண்ணப்படங்கள் அனைத்தும் ஏ,பி.என்னின் புராணப்படங்களே)

2. தமிழ்நாட்டின் பெருமை பேசும் அழகிய பாடலாக அமைந்தது. நடிகர்திலகத்தின் தனிப்பாடல் என்றால் ஒன்று சோகப்பாடல், அல்லது ஆக்ரோஷப்பாடல்கள் மட்டுமே என்ற நிலையை மாற்றி, ஜாலியாக ரசிக்கும்படி அமைந்த பாடல்.

3. அவர் மகா ஒல்லியாக அழகிய தோற்றத்தில் இருந்த காலத்தில், ஸ்மார்ட்டாக ட்ரெஸ் அணிந்து, தலையில் ஸ்டைல் தொப்பி, கையில் ப்ரீஃப்கேஸ் சகிதம் ரசிகர்களை உற்சாகப்படுத்திய பாடல். (உண்மையைச்சொல்வதற்கென்ன.... மக்கள் திலகத்தின் 'புதியவானம்.. புதியபூமி' பாடலைப்பார்த்துவிட்டு, தலைவருக்கு இதுபோன்ற பாடல் ஒன்று வண்ணத்தில் அமையவில்லையே என்று ஏங்கிய ரசிகர்களின் வாட்டத்தைப்போக்க வந்த பாடல்).

4. தமிழ்நாட்டையே சிம்லா போல எடுத்துக்காட்டுகிறோம் என்று ஒளிப்பதிவாளர்கள் துரையும் அமிர்தமும் கண்ணுக்கு குளிர்ச்சியாக கிராமத்து அழகை எடுத்துக்காட்டிய பாடல்.

5. மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அழகாக மெட்டமைத்து, அதற்கு ராமண்ணா அழகிய வடிவம் கொடுத்த பாடல்.

6. எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத பாடல்.

இத்தனை சிறப்புக்கள் அமைந்த, நம் நாட்டு பெருமை பேசும் பாடலான இப்பாடலை அனைவரையும் காணச்செய்ததற்கு தங்களுக்கு அளவில்லா நன்றிகள்.

(தொலைக்காட்சி சேனல்களில் பாடல்களைத் தொகுத்து வழங்கும் காம்பியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். கதாநாயகர்களின் தனிப்பாடல்கள் என்றதும் 'அந்தப்பக்கம்' நல்ல நல்ல பாடல்களாகத் தேர்ந்தெடுக்கும் அதே நேரத்தில், நடிகர்திலகத்தின் தனிப்பாடல்கள் என்றதும், அவர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் பாடல்களாகத்தேடாமல், இதுபோன்ற அற்புதமான பாடல்களை தயவு செய்து... தயவு செய்து... தேர்ந்தெடுத்து ஒளிபரபுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப்போகும்).

uvausan
15th August 2012, 02:11 PM
Happy Independence day to all of you - there is no much difference then and now - we were fighting for freedom from British and today we are fighting for a free India from corruption . It is routed so deepily and becoming a potential killer for our values .. All interviews in TVs are with new faces and their cine lives and less importance to freedom fighters - there are many NT movies which could be screened to infuse a sense of patriatism to young blood . Once in a year , this kind of tribute is required to show the great values we had in those days. Esvee 's imaginary dialogues between MT and NT is really interesting - karnan is for 3 shows today in satyam - an interesting news .

mr_karthik
15th August 2012, 02:34 PM
அன்புள்ள பாரிஸ்ட்டர் சார்,

வண்ணமயமான தங்கள் வாழ்த்துக்களுக்கும், அவற்றில் அடங்கியுள்ள சிறப்பான விவரங்களுக்கும், அவற்றுக்கு அழகு சேர்க்கும் இரு அழகிய பாடல்களின் காணொளிக்கும் நன்றி.

நீங்கள் குறிப்பிட்டதுபோல, விடுதலைநாள் சிறப்பு நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் இடம்பெறுபவை நடிகர்திலகத்தின் பாடல் காட்சிகளே என்பது உண்மை.

Thomasstemy
15th August 2012, 03:16 PM
Ilaya Thilagam's Look revealed :

Ilaya Thilagam Prabhu's latest Avtaar in a 3D Bilingual directed by Vinayan. The Film Titled "Dracula 2012" in Malayalam & "Naangaam Pirai" in Tamizh.

Ilaya Thilagam dons the role of Psychiatrist who along with Nazer Playing as Tantric, saves people from the clutches of "Dracula". This movie is shot extensively in Romanian Countries where all Dracula movies are produced.

We wish our ilaya thilagam Prabhu, all the best in his endeavour.

:smokesmile:

http://img.bharatmovies.com/4964/naangam-pirai-9.jpg

http://img.bharatmovies.com/4964/naangam-pirai-7.jpg

http://img.bharatmovies.com/4964/naangam-pirai-4.jpg

pammalar
15th August 2012, 03:41 PM
சுதந்திரத் திருநாள் ஸ்பெஷல்

நடிகர் திலகம் அளித்த பேட்டிகள் /
எழுதிய கட்டுரைகள் : 2

பொக்கிஷாதி பொக்கிஷம்

சுதந்திரப் போராட்ட வீரரான தனது தந்தையார் தியாகி சின்னையா மன்றாயர் குறித்து தேசிய திலகம் எழுதிய உணர்வுபூர்வமான கட்டுரை

வரலாற்று ஆவணம் : தினத்தந்தி : 15.8.1997
['தினத்தந்தி' சுதந்திர தின பொன்விழா மலர் 1947-1997]

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6467-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6464-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6465-1.jpg
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6466-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
15th August 2012, 03:48 PM
சுதந்திர தின சிறப்புப் பதிவு.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YwTH0qVCyIo

விடுதலை நன்னாளை முன்னிட்டு அனைவருக்கும் நடிகர் திலகத்தைப் பற்றிய ஓர் அற்புதப் பதிவு. 'அப்பா தந்த சுதந்திரம்' என்ற தலைப்பில் இளைய திலகம் பிரபு அவர்கள் 21-8-1987 'ஜெமினி சினிமா' இதழுக்கு அளித்த மனம் திறந்த பேட்டி. அன்பான அப்பாவைப் பற்றியும்,தன்னைப் பற்றியும் இளைய திலகம் தெரிவித்துள்ள கருத்துக்கள் அருமை. 'ஜெமினி சினிமா' தன் முன்னுரையில் தலைவரைப் பற்றியும்,தலைவரின் தந்தையார் சுதந்திரப் போராட்ட தியாகி திரு.சின்னையா மன்றாயர் அவர்களைப் பற்றியும் புகழ்ந்திருப்பது அதைவிட அருமை. படிக்க ஆரம்பிக்கலாம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-124.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-95.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-74.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-58.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
15th August 2012, 04:20 PM
சுதந்திர தின ஸ்பெஷல் விளம்பர நிழற்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Kappalottiyat.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
15th August 2012, 04:53 PM
இந்த இனிய சுதந்திர தினத் திருநாளில் 'படிக்காத மேதை'களை தேச பக்தியுடன் வணங்குவோம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ka-2-1-1.jpg?t=1345032639t=1345029559

vasudevan31355
15th August 2012, 05:12 PM
சுதந்திரத்தை நாட்டுக்கு நல்கிய தலைவர்கள்.

அண்ணலும், மனிதருள் மாணிக்கமும்

Mahatma Gandhi standing outside railway compartment-Manapparai,Madras state.(Tamil nadu)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/manaparai.jpg

Jawaharlal Nehru at Madras(CHENNAI) Central railway station in October 1936

http://www.thehindu.com/multimedia/archive/00288/17MPJAWAHARLALNEHRU_288296a.jpg

pammalar
15th August 2012, 05:55 PM
சுதந்திரத் திருநாள் ஸ்பெஷல்

முத்தமிழ் வித்தகர் உதிர்ந்த முத்துக்கள் : 1

பொக்கிஷாதி பொக்கிஷம்

நமது இந்திய சுதந்திரப் பொன்விழாவின்போது
தேசிய திலகம் உதிர்ந்த நல்முத்து

வரலாற்று ஆவணம் : சினிமா எக்ஸ்பிரஸ் : 15.8.1997
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6474-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

mr_karthik
15th August 2012, 06:30 PM
மிஸ்ட்டர் கார்த்திக் : "அண்ணன் வீரப்பா அவர்களே..!. நமது சுதந்திர திருநாளையொட்டி, அது தொடர்பான ஆவணங்களை அள்ளி அள்ளித்தருவதில் பம்மலார் அவர்களும் வாசுதேவன் அவர்களூம் சளைக்காமல் ஈடுபட்டிருப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?"

பி.எஸ்.வீரப்பா: "சபாஷ்..!, சரியான போட்டி...ஹா...ஹா...ஹா...ஹா...!!!!"

pammalar
15th August 2012, 06:50 PM
சுதந்திரத் திருநாள் ஸ்பெஷல்

பொக்கிஷாதி பொக்கிஷம்

அட்டைப்படம் : சிவாஜி ரசிகன் : 15.8.1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6469-1.jpg


உள்பக்கம் : சிவாஜி ரசிகன் : 15.8.1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6470-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
15th August 2012, 07:21 PM
சுதந்திரத் திருநாள் ஸ்பெஷல்

நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 2

தேசிய திலகம் பற்றி இயக்குனர் திரு. முக்தா வி. சீனிவாசன்

பொக்கிஷாதி பொக்கிஷம்

வரலாற்று ஆவணம் : தினமணி : 29.7.2001
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6468-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

KCSHEKAR
15th August 2012, 07:58 PM
டியர் பம்மலார்,

சிறப்பு புகைப்படம், பாடலில் ஆரம்பித்து,
1976 - சினிமா ரசிகன் கவிதை,
1997 - சினிமா எக்ஸ்பிரஸ், தினத்தந்தி சுதந்திர தின சிறப்பு மலரில் வெளியான பேட்டிகள்,
2001 - தினமணியில் வெளியான முக்தா சீனிவாசன் பேட்டி என்று தாங்கள் வழங்கிய
சுதந்திரத் திருநாள் ஸ்பெஷல் அனைத்தும் சூப்பர்.

pammalar
15th August 2012, 08:09 PM
சுதந்திரத் திருநாள் ஸ்பெஷல்

நடிகர் திலகம் அளித்த பேட்டிகள் /
எழுதிய கட்டுரைகள் : 3

பொக்கிஷாதி பொக்கிஷம்

சுதந்திரத் திருநாள் குறித்தும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தை பலப்படுத்தி வலுப்படுத்த அவ்வமயம் தான் மேற்கொண்ட தமிழகம் தழுவிய பாதயாத்திரை பற்றியும் தேசிய திலகம் உணர்ச்சிப்பெருக்கில் வடித்த உருக்கமான கட்டுரை

வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 15.8.1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6471-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6472-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6473-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

KCSHEKAR
15th August 2012, 08:17 PM
டியர் வாசுதேவன் சார்,

சிறப்பு சிறப்பு புகைப்படம், பாடலில் ஆரம்பித்து,
1987 - ஜெமினி சினிமா இளையதிலகம் பிரபு சிறப்பு பேட்டி, கப்பலோட்டிய தமிழன் விளம்பரம், மகாத்மா, நேரு - ஸ்பெஷல் புகைப்படங்கள் என தங்களின் சுதந்திரதின ஸ்பெஷல் பதிவுகள் அருமை.

vasudevan31355
15th August 2012, 08:35 PM
டியர் பாரிஸ்டர் சார்,

தங்கள் அன்பிற்கு நன்றி! தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் பல்வேறு சுதந்திரப் போராட்ட செம்மல்களையும், தியாகிகளையும் நமக்கு அடையாளம் காட்டிய சுந்தர புருஷர் நடிகர் திலகம். சுதந்திர உணர்வு அணைந்து விடாமல் இன்னும் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு நடிகர் திலகத்தின் பங்கு பெரும்பான்மையானது என்பதை மறுக்கவே முடியாது.

அற்புதமான கப்பலோட்டிய தமிழன் பாடலுக்கு நன்றிகள். நடிகர் திலகத்தின் பாடல்கள் உலகெங்கும் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று தாங்கள் கூறியுள்ளது முற்றிலும் சரியே! அதற்கு தாங்கள் அளித்திருக்கும் பாடலே அத்தாட்சி.

vasudevan31355
15th August 2012, 09:06 PM
அன்பு பம்மலார் சார்,

மூவர்ணக் கொடியுடன் தாங்கள் தொடங்கிய சுதந்திர தின பதிவுகள் பிரளயம்... அசுரப்பதிவுகள் மட்டுமல்ல அசர வைக்கும் பதிவுகள்.

கட்டபொம்மரின் வாளின் கூர்மையைப் போல தாங்கள் அளித்துள்ள 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' புகைப்படம் படு ஷார்ப்.

'நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது...' பாடல் அசத்தல். நடிகர் திலகத்தின் கூடவே இயற்கை அழகை எங்களையும் கண்டு மகிழச் செய்து விட்டீர்கள். பொருத்தமான நாட்டுப்பற்றை விளக்கும் பாடலை டைமிங்கில் பதித்ததற்கு நன்றி!

தனது தந்தையின் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை நினைவு கூர்ந்த நம் இதய தெய்வத்தின் பேட்டி அருமை. சின்னையா மன்றாயர் அவர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சுதந்திரத்திற்காக பாடுபட்டதை நடிகர் திலகம் உணர்வு பொங்க கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவற்றை படிக்கையில் மெய் சிலிர்க்கிறது. அதுவும் எங்கள் கடலூருக்குப் பக்கத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தில் மன்றாயர் அவர்கள் ரயிலுக்கு வெடிகுண்டு வைக்கச் சென்றது இன்னும் த்ரில். ( நடிகர் திலகம் அவர்கள் வாயாலேயே இந்த நிகழ்வுகளை நான் நேரிடையாகக் கேட்டிருக்கிறேன் எனபது தாங்கள் அளித்த இந்தப் பதிவைப் படித்ததும் எனக்கு ஞாபகம் வந்து விட்டது. அதற்காக தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்). தனயருக்கு அன்புத் தந்தை திருநீறு இட்டு வாழ்த்துவது அருமையோ அருமை. எங்களுக்கெல்லாம் பெருமையோ பெருமை.

நமது இந்திய சுதந்திரப் பொன்விழாவின்போது நடிகர் திலகம் அவர்கள் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் அளித்துள்ள அறிவுரைகள் அதியற்புதம்.

'சிவாஜி ரசிகன் 'அட்டைப்படம் அம்சம். அண்ணலின் சிலை அருகே மௌனமாய் தலைவர் அமர்ந்திருப்பது அண்ணலின் மேல் அவர் வைத்திருக்கும் அபரிமிதமான பக்தியை வெளிப்படுத்துகிறது. பெருந்தலைவருக்கு மாலை அணிவித்து மகிழும் மனிதர்குல மாணிக்கத்தை 'அவன் ஒரு சரித்திரம்' என்று உலகம் புகழ்வதில் வியப்பென்ன!

நடிகர் திலகம் பற்றி இயக்குனர் திரு.முக்தா வி.சீனிவாசன் தெரிவித்திருந்த கருத்துக்கள் நம் கண்களில் கண்ணீரைப் பெருகச் செய்கின்றன. தயாரிப்பாளர்களுக்கு அவர் கொடுத்த ஒத்துழைப்புகள் நிஜமாகவே மலைப்பைத் தரக் கூடியவை. அதே போல் காமாராஜர் அவர்கள் கண்டு களித்த 'வாஞ்சிநாதன்' பற்றி நடிகர் திலகம் பெருமைப் பட்டுக்கொண்டது அவர் பெருந்தலைவர் மேல் கொண்ட அளவு கடந்த பாசத்தை எடுத்துரைக்கிறது.

அத்தனை பதிவுகளையும் வெகு சிரத்தை எடுத்து இங்கு பதித்து எங்களை இன்ப சாகரத்தில் மூழ்கடித்த தங்களுக்கு தன்னிகரில்லா நன்றிகள். 'சந்திப்பு' வசூல் பிரளயம் செய்தது. எங்கள் பம்மலாரோ பதிவுப் பிரளயம் செய்து விட்டார் இந்த இனிய சுதந்திர நாளன்று. வாழ்க! வளர்க!

pammalar
15th August 2012, 09:17 PM
சுதந்திரத் திருநாள் ஸ்பெஷல்

சிங்கத்தமிழன் குறித்த சீரிய கட்டுரைகள் : 1

பொக்கிஷாதி பொக்கிஷம்

வரலாற்று ஆவணம் : ராணி : 19.8.2001
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6475-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6476-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6477-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

J.Radhakrishnan
15th August 2012, 09:28 PM
டியர் பம்மலார் சார்,

சுதந்திர தின நன் நாளில் நம் தலைவர் அவர்கள் தனது தந்தையின் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை நினைவு கூர்ந்த பேட்டி, மேலும் 1976 ல் தலைவரின் சுதந்திர தின செய்தி மற்றும் நம்மவரை பற்றி முக்தா சீனிவாசன் அவர்களின் பேட்டி என அசத்தி விட்டீர்கள், நன்றி!

J.Radhakrishnan
15th August 2012, 09:50 PM
டியர் வாசு சார்,

நம் தலைவரை பற்றி பிரபு அவர்களின் "ஜெமினி சினிமா" பேட்டி மற்றும் கப்பலோட்டிய தமிழன் விளம்பரம் & பெருந்தலைவருடன் நம் இதய தெய்வம் என தாங்கள் வழங்கிய சுதந்திரத் திருநாள் பதிவுகள் அனைத்தும் அற்புதம். நன்றி!

vasudevan31355
15th August 2012, 10:39 PM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

(தொடர்-4)

சுதந்திர தின சிறப்புக் கதாநாயகி

நடிகர் திலகத்தின் நாயகிகள் (4) ருக்மணி

படம்: 'கப்பலோட்டிய தமிழன்' '

'குமாரி' ருக்மணி என்று அழைக்கப்பட்ட ருக்மணி அவர்கள் நடிகை லக்ஷ்மி அவர்களின் தாயார். பழம்பெரும் நடிகை. ஏ.வி.எம்மின் 'ஸ்ரீவள்ளி' படத்தின் நாயகியாய் நடித்து பெரும்புகழ் பெற்றவர். ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம். 'கப்பலோட்டிய தமிழன்' காவியத்தில் காவியப் பெருமகனுக்கு நாயகியாகும் பாக்கியத்தைப் பெற்றார். வ.உ.சி அவர்களின் அருமை மனைவி மீனாட்சி அம்மையார் வேடம். பொருத்தமாகவும், பாங்காகவும் நடிகர் திலகத்தின் துணைவியாராக மிகத் திறம்பட நடித்திருந்தார் ருக்மணி. அதுவும் 'கப்பலோட்டிய தமிழன் காவியத்தில் வரும் இறுதிக் காட்சியில் நடிகர் திலகத்தை தன் மடியில் கிடத்தி ருக்மணி அவர்கள் கண்ணீர் மல்க பாடும் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?" பாடலில் கரையாத மனமும் கரைந்துருகுமே! இந்த இனிய சுதந்திர தினத்தில் நடிகை ருக்மணி அவர்கள் நடிகர் திலகத்தின் சிறப்புக் கதாநாயகியாக நமது திரியில் இடம் பிடிக்கிறார்.

ஏ.வி.எம்மின் 'ஸ்ரீவள்ளி' படத்தில் நடிகை 'குமாரி' ருக்மணி

http://cdn.600024.com/store/image/cache/data/moserbaer/Sri%20Valli-250x250.jpg

'கப்பலோட்டிய தமிழராக' நடிகர் திலகமும், 'மீனாட்சி அம்மையாராக' ருக்மணி அவர்களும் (இளமைத் தோற்றத்தில்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-96.jpg

(முதுமைத் தோற்றத்தில்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-125.jpg

(ஜோடிகள் தொடரும்)

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
15th August 2012, 11:10 PM
'கப்பலோட்டிய தமிழன் காவியத்தில் தலைவரின் ஜோடியாக நடித்த அதே ருக்மணி 'விளையாட்டுப் பிள்ளை' திரைக்காவியத்தில் நடிகர் திலகத்தின் மாமியாராக அதாவது பத்மினியின் அம்மாவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'விளையாட்டுப் பிள்ளை' திரைக் காவியத்தில் ருக்மணி, நடிகர் திலகம், பத்மினி, எஸ்.என்.லட்சுமி, வி.எஸ்.ராகவன்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ru.jpg

ஏ.வி.எம்மின் 'ஸ்ரீவள்ளி' படத்தில் நடிகை 'குமாரி' ருக்மணி அவர்களின் அழகிய தோற்றம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/SriValli-1.jpg

Murali Srinivas
16th August 2012, 12:31 AM
அனைவருக்கும் இனிய விடுதலை நாள் வாழ்த்துக்கள்!

இந்திய சுதந்திர திருநாளை முன்னிட்டு பல்வேறு வருடங்களில் வெளிவந்த நடிகர் திலகத்தின் பல பேட்டிகளைப் ஒரு சேர படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சுவாமிக்கு நன்றிகள் பல. அதில் எனக்கு மிகவும் பிடித்தது 1976- ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சிவாஜி ரசிகன் இதழில் வெளிவந்த கட்டுரை.

சுப்பு குறிப்பிட்டது போல இந்திய சுதந்திர நாள் என்றால் தமிழகத்திற்கு தமிழர்களுக்கு நடிகர் திலகமும் அவர் கூடவே பெருந்தலைவரும்தான் நினைவிற்கு வருவார்கள். அவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம், அண்ணல் மற்றும் மனிதருள் மாணிக்கம் படங்கள், ஜெமினி சினிமா பிரபு கட்டுரை, நடிகர் திலகத்தின் நாயகியர் வரிசையில் இன்றைய நாளுக்கு பொருத்தமான நாயகி ருக்மணி அவர்களைப் பற்றிய குறிப்பு மற்றும் புகைப்படம் என்று அள்ளி வழங்கிய வாசுவிற்கு நன்றி.

சிவாஜி - எம்.ஜி.ஆர் இருவரும் இன்று உரையாடினால் என்ற சுவையான கற்பனைக்கு வார்த்தை வடிவம் தந்தற்கும் அதில் என் பெயரையும் குறிப்பிட்டதற்கு வினோத் அவர்களே மிக்க நன்றி

அன்புடன்

<Dig>

வினோத் உங்களிடம் ஒரு சின்ன clarification தேவைப்படுகிறது. மீனவ நண்பன் ரிலீஸ் தேதி 1977 ஆகஸ்ட் 14 -ந் தேதிதானே? நீங்கள் அதை ஆகஸ்ட் 15 வெளியான படம் என்று திரியில் குறிப்பிட்டிருப்பதால் கேட்கிறேன். ஆகஸ்ட் 14 ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் எங்கள் மதுரை சிந்தாமணியில் வெளியானது. எனது நண்பன் ஒருவன் அன்று காலை 7 மணிக்கு சிறப்புக் காட்சியாக நடைபெற்ற ஓபனிங் ஷோவிற்கு சென்றிருந்தான். எனக்கு நினைவு தெரிந்து விசேஷ நாட்கள் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியான இரண்டு படங்களில் மீனவ நண்பன் ஒன்று. மற்றொன்று 1976 மே 23-ந் தேதி வெளியான உழைக்கும் கரங்கள். சரிதானே?

<end dig>

pammalar
16th August 2012, 01:16 AM
இன்று 15.8.2012, 66வது சுதந்திரத் திருநாளன்று ஆரம்பித்து, வீறுகொண்டு வரப்போகின்றது "கப்பலோட்டிய தமிழன்" மறுவெளியீட்டு ஆவணப் பொக்கிஷங்கள். [அடியேன் கைவசம் உள்ளவை அனைத்தும் பதிக்கப்படும்]. வரிவிலக்கு(Tax-Free) அளிக்கப்பட்டு, 1977-ல் சென்னையைக் கலக்கிய இக்காவியத்தின் மறுவெளியீட்டு விளம்பரங்கள் இனி வரிசையாக:

திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 7

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 31.12.1976
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6478-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
16th August 2012, 01:22 AM
மிஸ்ட்டர் கார்த்திக் : "அண்ணன் வீரப்பா அவர்களே..!. நமது சுதந்திர திருநாளையொட்டி, அது தொடர்பான ஆவணங்களை அள்ளி அள்ளித்தருவதில் பம்மலார் அவர்களும் வாசுதேவன் அவர்களூம் சளைக்காமல் ஈடுபட்டிருப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?"

பி.எஸ்.வீரப்பா: "சபாஷ்..!, சரியான போட்டி...ஹா...ஹா...ஹா...ஹா...!!!!"

கார்த்திகேயரே, கலக்குறீங்க..!

pammalar
16th August 2012, 02:24 AM
டியர் முரளி சார்,

தாங்கள் வழங்கிய முத்தான பாராட்டுக்கு எனது சத்தான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th August 2012, 02:29 AM
டியர் பம்மலார் சார்,

சுதந்திர தின நன் நாளில் நம் தலைவர் அவர்கள் தனது தந்தையின் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை நினைவு கூர்ந்த பேட்டி, மேலும் 1976 ல் தலைவரின் சுதந்திர தின செய்தி மற்றும் நம்மவரை பற்றி முக்தா சீனிவாசன் அவர்களின் பேட்டி என அசத்தி விட்டீர்கள், நன்றி!

டியர் ஜேயார் சார்,

தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th August 2012, 04:24 AM
Dear Pammalar,

சுதந்திரத் திருநாள் ஸ்பெஷல்

'நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது...' - Very Fitting one for the situation. Thanks


டியர் பம்மலார்,

சிறப்பு புகைப்படம், பாடலில் ஆரம்பித்து,
1976 - சினிமா ரசிகன் கவிதை,
1997 - சினிமா எக்ஸ்பிரஸ், தினத்தந்தி சுதந்திர தின சிறப்பு மலரில் வெளியான பேட்டிகள்,
2001 - தினமணியில் வெளியான முக்தா சீனிவாசன் பேட்டி என்று தாங்கள் வழங்கிய
சுதந்திரத் திருநாள் ஸ்பெஷல் அனைத்தும் சூப்பர்.

டியர் சந்திரசேகரன் சார்,

தங்களின் சரமாரியான பாராட்டுதல்களுக்கு எனது சிரந்தாழ்த்திய நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th August 2012, 04:42 AM
டியர் mr_karthik,

தங்களின் இதயபூர்வமான பாராட்டுதல்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!

நீளவாக்கில் (வால் போல்) வரும் விளம்பரங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் பாதுகாப்பதும் மிகமிகக் கடினம். எத்தனை ஜாக்கிரதையாக பார்த்து பார்த்துவைத்தாலும் லேசாகவாவது கிழிந்து விடுகிறது.

தங்கள் கருத்தே என் கருத்தும். "கப்பலோட்டிய தமிழன்" காவியத்தை எந்தவித ஜோடிப்பும் செய்யாமல், அப்படியே புத்தம்புது பிரிண்டுகளாகப் போட்டு. "கர்ண"னைப் போல் தமிழகமெங்கும் ஒரே சமயத்தில் வெளியிட்டால் நிச்சயம் பிரம்மாணட வெற்றி பெறும்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th August 2012, 04:50 AM
டியர் பாரிஸ்டர் சார்,

தேசிய திலகத்தின் புகழ் பாடும் அருமையான பதிவுகளையும், அட்டகாச பாடல் வீடியோக்களையும் அளித்து அசத்தி விட்டீர்கள், பாராட்டுக்கள்..!

தாங்கள் பதித்த புத்தம்புது பிரபு ஸ்டில்ஸ் ரொம்பப் பிரமாதம்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th August 2012, 05:07 AM
அன்புள்ள பம்மலார் அவர்களே,

நடிகர்திலகத்தின் தனிப்பாடல்களில் என் மனதில் உயரிய இடம் கொடுக்கும் பாடலான 'நான் பிறந்த நாட்டுகெந்தநாடு பெரியது' பாடலை காணொளியாகத்தந்த்மைக்கு மிக்க நன்றி. மிகவும் பிடித்தபாடலாக இப்பாடல் அமைந்ததற்கு பல காரணங்கள்.

1. சமூகப்படங்களின் புதிய பறவைக்குப்பின் வண்ணப்படத்தில் அவரைக்காண ஏங்கிய நேரத்தில் வந்த படம் தங்கச்சுரங்கம். (இடையில் அவர் நடித்த வண்ணப்படங்கள் அனைத்தும் ஏ,பி.என்னின் புராணப்படங்களே)

2. தமிழ்நாட்டின் பெருமை பேசும் அழகிய பாடலாக அமைந்தது. நடிகர்திலகத்தின் தனிப்பாடல் என்றால் ஒன்று சோகப்பாடல், அல்லது ஆக்ரோஷப்பாடல்கள் மட்டுமே என்ற நிலையை மாற்றி, ஜாலியாக ரசிக்கும்படி அமைந்த பாடல்.

3. அவர் மகா ஒல்லியாக அழகிய தோற்றத்தில் இருந்த காலத்தில், ஸ்மார்ட்டாக ட்ரெஸ் அணிந்து, தலையில் ஸ்டைல் தொப்பி, கையில் ப்ரீஃப்கேஸ் சகிதம் ரசிகர்களை உற்சாகப்படுத்திய பாடல். (உண்மையைச்சொல்வதற்கென்ன.... மக்கள் திலகத்தின் 'புதியவானம்.. புதியபூமி' பாடலைப்பார்த்துவிட்டு, தலைவருக்கு இதுபோன்ற பாடல் ஒன்று வண்ணத்தில் அமையவில்லையே என்று ஏங்கிய ரசிகர்களின் வாட்டத்தைப்போக்க வந்த பாடல்).

4. தமிழ்நாட்டையே சிம்லா போல எடுத்துக்காட்டுகிறோம் என்று ஒளிப்பதிவாளர்கள் துரையும் அமிர்தமும் கண்ணுக்கு குளிர்ச்சியாக கிராமத்து அழகை எடுத்துக்காட்டிய பாடல்.

5. மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அழகாக மெட்டமைத்து, அதற்கு ராமண்ணா அழகிய வடிவம் கொடுத்த பாடல்.

6. எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத பாடல்.

இத்தனை சிறப்புக்கள் அமைந்த, நம் நாட்டு பெருமை பேசும் பாடலான இப்பாடலை அனைவரையும் காணச்செய்ததற்கு தங்களுக்கு அளவில்லா நன்றிகள்.

(தொலைக்காட்சி சேனல்களில் பாடல்களைத் தொகுத்து வழங்கும் காம்பியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். கதாநாயகர்களின் தனிப்பாடல்கள் என்றதும் 'அந்தப்பக்கம்' நல்ல நல்ல பாடல்களாகத் தேர்ந்தெடுக்கும் அதே நேரத்தில், நடிகர்திலகத்தின் தனிப்பாடல்கள் என்றதும், அவர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் பாடல்களாகத்தேடாமல், இதுபோன்ற அற்புதமான பாடல்களை தயவு செய்து... தயவு செய்து... தேர்ந்தெடுத்து ஒளிபரபுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப்போகும்).

தங்களது அவ்தார் [ovu] காவியத்தை விட்டுவிட்டீர்களே..!

தங்களது பதிவை அப்படியே வழிமொழிகிறேன்..!

pammalar
16th August 2012, 05:19 AM
டியர் பம்மலார்,
விடுதலை நாள் என்றாலே தேசியக் கொடியும் நடிகர் திலகமும் அனைவரின் நெஞ்சங்களும் நிழலாடும் வண்ணம் தன் படங்களை தேசீய உணர்வுடன் படைத்த வண்ணம் அமையும் படி செய்த நடிகர் திலகத்தின் படங்களை பதிவிட்டு விடுதலை நாளை கொண்டாட செய்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.
face book இணைய தளத்தில் நண்பர் ஒருவரின் பதிவாக இடம் பெற்றுள்ள நாளிதழின் நிழற்படம் நம் நாடு விடுதலை பெற்ற செய்தியை அறிவிக்கும் சிறப்பை பாருங்கள்.

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/418709_513440782004544_1137132513_n.jpg

டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..!

சுதந்திரத் திருநாளன்று கிடைத்துள்ள இந்த ஆவணம் பொக்கிஷாதி பொக்கிஷம்..! இதனை இணையத்தில் பதித்த நண்பருக்கும், சுடச்சுட இங்கே இடுகை செய்த தங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th August 2012, 05:25 AM
டியர் esvee சார்,

தங்களின் கற்பனைவளத்துக்கு ஒரு சபாஷ்..!

ம.தி.-ந.தி. சந்திப்பு உரையாடல் பதிவு simply superb..! பாராட்டுக்கள்..!

இந்த எளியவனின் பெயரையும் பிரதானமாகக் குறிப்பிட்ட தங்களின் பெரிய மனதுக்கு எனது மலையளவு நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
16th August 2012, 05:39 AM
டியர் வாசுதேவன் சார்,

சுதந்திர திருநாள் ஸ்பெஷலாக தாங்கள் அள்ளி அளித்த அசத்தல் பதிவுகளுக்கு எனது அற்புதமான நன்றிகள்..!

'பகத் சிங்' படமும், 'சந்தனத் தேவர்' பாடலும் அருமை..!

1987-ம் ஆண்டு 'ஜெமினி சினிமா' சுதந்திர தின மலரில் வெளிவந்த, தந்தையார் பற்றி பிரபு அளித்த பேட்டி அற்புதம்..!

"கப்பலோட்டிய தமிழன்" காவிய விளம்பரம், படிக்காத மாமேதைகளின் புகைப்படம், காந்தி தாத்தா, நேரு மாமா புகைப்படங்கள் அட்டகாசம்..!

சுதந்திர தின சிறப்புக் கதாநாயகியாக, "கப்பலோட்டிய தமிழன்" ஜோடி குமாரி ருக்மணியை சிலாகித்த பதிவுகள் சிகரம்..!

மீண்டும் மீண்டும் எனது அன்பான பாராட்டுதல்களுடன் கூடிய நெஞ்சார்ந்த நன்றிகள்..!

தாங்கள் இந்த நன்னாளில் எனக்கு வழங்கிய புகழுரை நான் பெற்ற பெரும் பேறு..!

பாசத்துடன்,
பம்மலார்.

Richardsof
16th August 2012, 06:41 AM
Dear murali sir
as you mentioned meenava nanban released on 14th aug 1977 & uzhaikkum karangal released on 23rd may 1976.
Thanks for the correction.

mr_karthik
16th August 2012, 01:21 PM
அன்புள்ள பம்மலார் சார்,

நம் நாட்டில் விடுதலைத்திருநாள் நேற்று ஒரே நாளில் முடிந்துவிட்டபோதிலும், நமது திரியில் இன்னும் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது.

'தினத்தந்தி' சுதந்திர தின சிறப்பிதழில், தேசீயத்திலகம் அண்ணன் அவர்கள் தனது தந்தையாரின் விடுதலைப்போராட்ட பங்கு பற்றியும், அதன்விளைவாக அவரது தந்தைக்கு கிடைத்த ஏழு ஆண்டு சிறைத்தண்டனை (பின்னர் நாலரை ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது) பற்றியும், குடும்பத்தலைவனை சிறைக்கனுப்பி விட்டு அந்தக் குடும்பம் திசைதெரியாமல் தவித்ததைப்பற்றியும் கூறியுள்ளதைப் படித்தபோது, கண்கள் கலங்கின. எப்பேற்பட்ட தியாகக்குடும்பத்தில் பிறந்த நம் தலைவருக்கு, ரத்தத்திலேயே தேசீயம் ஊறியிருந்ததில் அதிசயமில்லை. அதனால்தான் இடையிலே ஏற்பட்ட திராவிட பந்தம் இடையிலேயே அறுந்துபோய், இறுதிவரையில் அவர் தேசீயவாதியாகவே திகழ்ந்தார். அவர் மூச்சுக்காற்று முழுக்க பெருந்தலைவர் கலந்திருந்ததில் ஆச்சரியமில்லை.

தலைவரின் தந்தையாரைப்போன்ற நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தியாகிகளின் ரத்தத்தால் கிடைத்த சுதந்திரத்தின் பலனை, சுதந்திர போராட்டத்துக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர்கள் எல்லாம் ஆண்டு அனுபவித்து, முடிந்தவரை கொள்ளையும் அடித்து வந்ததை / வருவதைக் காணும் ஒவ்வொரு தேசீய நெஞ்சமும் கனலாக எரியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தான் சார்ந்திருந்த கட்சியின் வளர்ச்சிக்காக, பாதயாத்திரை சென்ற தலைவரது உழைப்பை அவர் சார்ந்திருந்த காங்கிரஸும் கண்டுகொள்ளவில்லை. அவரது பாதயாத்திரையைப்பற்றி அன்றைய பிரபல பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் மாநிலங்களவை எம்.பி. பதவியை யாருக்குக் கொடுப்பது என்ற விவாதம் டெல்லியில் நடந்தபோது, "தியாகமா, அப்படீன்னா என்ன? அது எந்தக்கடையில் கிடைக்கும்?" என்று கேட்கக்கூடிய அமிதாப்புக்கு சிபாரிசு செய்திருக்கிறார் ராஜீவ்காந்தி. கட்சிக்காக நடிகர்திலகத்தின் உழைப்பை அறிந்திருந்த இந்திரா அம்மையார் மட்டும் இல்லாதிருந்தால், எத்தனையோ கௌரவங்கள் நடிகர்திலகத்துக்கு கிடைக்காமல் போனதுபோல, எம்.பி.பதவியும் கிடைக்காது போயிருக்கும்.

நடிகர்திலகத்தின் தேசீய உழைப்புக்கான பல்வேறு ஆவணங்களைத் திரட்டி இங்கே பதிவுகளாகத் தந்துகொண்டிருக்கும் தங்களுக்கு, அண்ணனின் உலகளாவிய ரசிகப்பெருமக்கள் அனைவரின் சார்பிலும் நன்றிகள் பல்லாயிரம்.

vasudevan31355
16th August 2012, 03:13 PM
டியர் ராகவேந்திரன் சார்,

நம் நாடு விடுதலை பெற்ற செய்தியை அறிவிக்கும் 'டைம்ஸ் ஆப் இந்தியா' வின் நிழற்படத்தை அளித்து அனைவரது மனதிலும் தேசிய உணர்வைக் கொழுந்து விட்டு எரியச் செய்து விட்டீர்கள். அற்புதம். பதிவிட்ட face book இணைய தளத்தின் நண்பர் அவர்களுக்கும் நன்றிகள்.

டியர் வினோத் சார்,

அழகான கற்பனை. நிஜமாகவே ரசித்துப் படித்தேன். வெகு ஜாக்கிரதையாக கையாள வேண்டிய மேட்டர். சர்வ சாதாரணமாக கையாண்டு விட்டீர்கள். தங்கள் திறமைக்கு ஒரு சல்யூட். கற்பனை உரையாடலில் நடிகர் திலகம் வாயால் எங்கள் அனைவரின் பெயரையும் உச்சரிக்க வைத்ததற்கு தங்களுக்கு ஒரு கோடி நன்றிகள். அதுமட்டுமால்... கள்ளமில்லா வெள்ளை உள்ளத்துடன் ஒரு சிறு குழந்தை போல சிரிக்கும் எங்கள் இதய தெய்வத்துடன் மக்கள் திலகம் மகிழ்ந்து பேசி மகிழும் அந்த புகைப்படம் பட்டைகிளப்புகிறது. அதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

டியர் கல்நாயக் சார்,

தங்கள் அன்பான சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்களுக்கு நம் கடலூர் சார்பாக நன்றி!

டியர் சந்திரசேகரன் சார்,

தங்கள் பாராட்டிற்கு என் நெஞ்சு நெகிழ்ந்த நன்றிகள்.

டியர் ராதாகிருஷ்ணன் சார்,

சுதந்திரத் திருநாள் பதிவுகளைக் கண்டு களித்து பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

vasudevan31355
16th August 2012, 03:14 PM
அன்பு பம்மலார் சார்,

கப்பலோட்டிய தமிழன் 'தினத்தந்தி' மறு வெளியீட்டு விளம்பரம் கன கச்சிதம். 'அடியேன் கைவசம் உள்ளவை ("கப்பலோட்டிய தமிழன்" மறுவெளியீட்டு ஆவணப் பொக்கிஷங்கள்)அனைத்தும் பதிக்கப்படும்' என்று நீங்கள் அறிவித்திருப்பது பதிவுகள் அளிப்பதில் நீங்கள் கொடை வள்ளல்

https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcQfbFy56gibqQ_AnObjkFnhK8-ZVq8wiHYB25HWZrOEDsXsFm9b

என்பதைக் காட்டுகிறது

சிங்கத்தமிழன் குறித்த 'ராணி' வார இதழின் பக்கங்களைப் பதித்ததற்கு நன்றி. அந்த அட்டைப்படம் ஒன்று போதாதா! நடிகர் திலகத்தின் கொடைத்தன்மையை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிய ராணிக்கு நன்றிகள் என்றால் அந்த அருமையான பதிவை இங்கே மிகச் சரியான தருணத்தில் பதித்த தங்களுக்கு அதைவிட பல்லாயிரம் மடங்கு நன்றிகள்.

vasudevan31355
16th August 2012, 03:14 PM
அன்பு கார்த்திக் சார்,

'நான் பிறந்த நாட்டுகெந்தநாடு பெரியது' பாடலைப் பற்றி அற்புதமாக ஒரு குறு ஆய்வையே செய்து விட்டீர்கள். மிக்க நன்றிகள் சார்! எந்த அளவிற்கு இந்தப் பாடல் தங்களை ஈர்த்துள்ளது என்பது புரிகிறது. இதே போல 'தர்மம் எங்கே' திரைப் படத்தில் வரும் "சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்" பாடல் ரொம்ப ரொம்ப என்னைக் கவர்ந்த பாடல். ம்... இணையத்தில் தேடிப் பார்ப்போம்... இல்லையென்றால் அப்லோட்தான்.

vasudevan31355
16th August 2012, 03:19 PM
முத்தான முரளி சார்,

சுதந்திரத் திருநாள் பதிவுகளுக்காக தங்களின் மனமுவந்த பாரட்டுக்களுக்கு என் குளிர்ச்சியான நன்றிகள்.

தங்கள் அற்புதமான பதிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும்

vasudevan31355
16th August 2012, 04:19 PM
நடிகர் திலகம் அவர்களுக்கு பல் மருத்துவம் பார்த்த பிரபல பல் மருத்துவ நிபுணர் திரு ஜானகிராமன் அவர்களின் நீங்காத நினைவுகள்.

நன்றி: denta-vista.com

http://denta-vista.com/blog/wp-content/uploads/2012/06/sivajinews.jpg

Richardsof
16th August 2012, 04:34 PM
http://i47.tinypic.com/zsvbec.jpg
நவரசங்களின்

நாயகனே

நாடு போற்றும் வேந்தனே!

உலகம் போற்ற

தமிழ்சினிமாவை

உயர்த்திப் பிடித்துக் காத்தவனே!

நடிப்புக்கே நடிப்பு

கற்று கொடுத்த

எங்கள் நடிகர் திலகமே!

நீ பிறந்தாய்!தமிழ் சினிமா சிறந்தது!!

எங்கள் தமிழ் சினிமாவே பிறந்தநாள் வாழ்த்துகள்!

kalnayak
16th August 2012, 04:47 PM
சுதந்திர திருநாள் சிறப்பு பதிவுகள் ஒவ்வொன்றும் உண்மையான சுதந்திர திருநாள் பற்றி கொண்டாடவேண்டிய தகவல்களை கொண்டவைகளாகும். இப்படிப்பட்ட பதிவுகளை பார்த்தாவது தொலைகாட்சி நடத்துவோர்கள் சுதந்திர தினத்தில் என்ன மாதிரியான சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கலாம், எந்த திரைப்படங்களை ஒளிபரப்பலாம் என்று கற்றுக்கொள்ளவேண்டும். அது நடக்காது. இருப்பினும் ஒரு ஆதங்கம்தான்.

பம்மலார் சார்,
நடிகர் திலகத்தின் சுதந்திர தின பேட்டிகள், ராணியில் வந்த 'விடுதலை போரில் சிவாஜி' கட்டுரை, விடுதலை போராட்ட வீரர்களின் (நடிகர் திலகத்தின் உருவில்) புகைப்படங்கள் நம்மிடம் இன்னும் அந்த போராட்டத்தின் சுவடுகளை நினைவில் வைத்திருக்கச்செய்யுமாறு அமைந்திருக்கின்றன.

வாசுதேவன் சார்,
சுதந்திர தினத்திற்கு ஏற்றவாறு 'நடிகர் திலகத்தின் நாயகிகள்' தொடரில் கப்பலோட்டிய தமிழன் நாயகி - திருமதி ருக்மணி அம்மாள் அவர்களை பதிவு செய்தது சிறப்பு. 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற பாடலைப் பற்றி எழுதி இதயம் கனக்கச் செய்துவிட்டீர்.
ருக்மணி அவர்களே நடிகர் திலகத்திற்கு மாமியாராய் நடித்ததை எழுதி, இப்படி பலர் நடிகர் திலகத்துடன் பல வேடங்களில் நடித்ததை நினைவு செய்யவும் வைத்துவிட்டீர். அவரது மகள் லக்ஷ்மி நடிகர் திலகத்துக்கு மகளாகவும், ஜோடியாகவும் நடித்திருக்கிறார். ஆமாம் வேறு எந்த நடிகராவது அம்மாவுடனும் ஜோடியாக நடித்து மகளுடனும் ஜோடியாக நடித்திருக்கிறாரா? நடிகர் திலகம் மட்டுமே இப்படி இரண்டு அம்மா-மகள்களுடன் (சந்தியா- ஜெ.ஜெயலலிதா மற்ற ஜோடி) ஜோடியாக நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். உங்கள் தொடரில் இது போன்ற விபரங்களை பதியும் போது சுவாரஸ்யம் இன்னும் அதிகரிக்கிறது. நன்றி.

vasudevan31355
17th August 2012, 08:44 AM
டியர் கல்நாயக் சார்,

பதிவுகளைப் பாராட்டும் தங்கள் உயர் குணத்திற்கு நன்றி! நடிகர் திலகம் நிஜ அம்மா மற்றும் மகள்களுடன் ஜோடியாக நடித்ததை அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மிக உயர்ந்த ரசனை கொண்ட தங்களுக்கு என் அன்புப் பாராட்டுக்கள்.

vasudevan31355
17th August 2012, 08:46 AM
டியர் வினோத் சார்,

நடிகர் திலகத்தைப் பற்றிய பிறந்த நாள் கவிதையை அருமையாக இங்கு பதித்ததற்கு நன்றி.

நடிப்புக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் உயிர் தந்து வாழ வைத்துக் கொண்டிருக்கும் உத்தமத் தெய்வம் நடிகர் திலகம்.

vasudevan31355
17th August 2012, 09:11 AM
மிக மிக அரியதொரு ஆவணம்.

'இதயம் பேசுகிறது' அக்டோபர் (5-11, 1986) இதழில் வந்த அற்புத பொக்கிஷம்.

நடிகர் திலகத்தின் பொன்விழா ஆண்டு சிறப்புப் பேட்டி.

மணியனுடன் மனிதப் புனிதரின் மனந்திறந்த மணியான ஒரு சிறப்புப் பேட்டி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-126.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-97.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-75.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-59.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-46.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-48.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-32.jpg

(ஆவணங்களைத் தந்து உதவிய திரு 'வியட்நாம்' கோபால் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி)

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
17th August 2012, 09:27 AM
டியர் பம்மலார்,
ராணி வார இதழின் கட்டபொம்மன் அட்டைப் படத்துடன் கூடிய கட்டுரை உள்பட மிக அரிய ஆவணங்களை அளித்து அசத்தி வருகிறீர்கள். கார்த்திக் அவர்கள் அடிக்கடி கூறுவது போல் தங்களுக்கு நன்றி கூற மட்டுமே தனி திரி தொடங்க வேண்டும். அதுவே மிக மிக வேகமாக பக்கங்கள் ரொம்பி விடும். தங்களுக்கு கூறும் அதே கருத்துக்கள் தான் வாசு சாருக்கும். நிழற்படங்கள் இதயம் பேசுகிறது பக்கங்கள் என அவரும் தூள் கிளப்புகிறார். தங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.

இன்று 17.08.2012 தினகரன் நாளிதழுடன் வெளிவந்திருக்கும் வெள்ளி மலரில் மேஜரைப் பற்றி வந்திருக்கும் கட்டுரையில் நடிகர் திலகத்தைப் பற்றி வந்துள்ளது.

நம் பார்வைக்கு

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/wriite-ups%20on%20NT/th_dinakaranwriteup17812vellimalar.jpg (http://s872.photobucket.com/albums/ab289/ragasuda/wriite-ups%20on%20NT/?action=view&current=dinakaranwriteup17812vellimalar.jpg)

vasudevan31355
17th August 2012, 09:37 AM
நடிகர் திலகத்தின் ரம்மியமான வடிவம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/n.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
17th August 2012, 09:42 AM
'வாணி ராணி' விளம்பர நிழற்படம்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/va.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

KCSHEKAR
17th August 2012, 10:33 AM
Dear vasudevan sir,

'இதயம் பேசுகிறது' அக்டோபர் (5-11, 1986) இதழில் வந்த நடிகர் திலகத்தின் பொன்விழா ஆண்டு சிறப்புப் பேட்டி. - very nice. Thanks

Richardsof
17th August 2012, 12:52 PM
APOORAVAMANA NATHIYIN STILLS FROM NET.
http://i47.tinypic.com/2usudrb.jpg

Richardsof
17th August 2012, 12:54 PM
http://i45.tinypic.com/2wc4jkj.jpg

Richardsof
17th August 2012, 12:57 PM
http://i49.tinypic.com/21m9tgh.jpg

Richardsof
17th August 2012, 12:58 PM
http://i47.tinypic.com/212ftjs.jpg

mr_karthik
17th August 2012, 01:21 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

சுதந்திர தினத்தையொட்டி தாங்கள் அளித்திருந்த அனைத்து ஆவணங்களும் சூப்பரோ சூப்பர். 'ஜெமினி சினிமா'வில் வெளிவந்த இளையதிலகம் பிரபுவின் கட்டுரை கனஜோர். தன் தந்தையாரைப்பற்றியும், தந்தையின் தந்தையாரைப்பற்றியும் சிறப்பாக நினைவுகூர்ந்துள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் விளம்பரமும் அசத்தலாக, டைம்லி பிரசண்டேஷனாக இருந்தது. பெருந்தலைவரும் அண்ணனும் இணைந்திருக்கும் நிழற்படமும் அருமை.

நடிகர்திலகத்தின் திரைநாயகியர் வரிசையில், சுதந்திர திருநாளையொட்டி 'திருமதி வ.உ.சி.'யாக ருக்மணி தோன்றிய ஸ்டில்களைப்ப்தித்ததும் டைம்லி ஆக்ஷன். நீங்கள் குறிப்பிட்ட படங்களோடு, சமீபத்தில் தமிழகத்தையே கலக்கிய 'கர்ணன்' திரைக்காவியத்தில் கர்ணனின் வளர்ப்புத்தாயாகவும் நடித்திருக்கிறார் ருக்மணி. (நாயகனாக பிரபுவின் அப்பா, தாயாக லட்சுமியின் அம்மா, மாமியாராக ஜெயலலிதாவின் அம்மா, ஜோடியாக கனகாவின் அம்மா, எதிரியாக கார்த்திக்கின் அப்பா... ஒரே கலக்கல்தான்).

இதயம் பேசுகிறது பத்திரிகைக்காக அதன் ஆசிரியர் மணியனே நேரடியாக நடிகர்திலகத்தை பேட்டிகண்ட அரிய ஆவணத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி.

1967-ல் தன்னுடைய முதல் வெளிநாட்டுப்பயணத்துக்கு நடிகர்திலக்ம் மாலையிட்டு ஆசி வழங்கியதை நினைவுகூர்ந்துள்ளார் மணியன் (இந்நேரத்தில் 67-ல் அழகிய சுருள்முடியுடன் கூடிய ஸ்லிம்மான நடிகர்திலகத்தை நாம் மனக்கண்ணில் நிறுத்த வேண்டும்). ஆனால் அப்படிப்பட்ட மணியன் இடையில் ஏன் தடம்புரண்டதோடு இடையூறுகளிலும் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை.

1968 இறுதியில், ஐரோப்பிய நாடுகளில் சிவந்த மண் படப்பிடிப்பை முடித்து விட்டு வந்த கையோடு, அந்த அனுபவங்கள் குறித்து, படம் வெளிவருவதற்கு முன்பாகவே, தான் துணையாசிரியராக இருந்த ஆனந்த விகடன் பத்திரிகையில் எழுதுவது தொடர்பாகவும் நடிகர்திலகத்தை சந்தித்தார் மணியன். நடிகர்திலகம் எழுதிய அந்த தொடர்கட்டுரையின் தலைப்பு 'அந்நிய மண்ணில் சிவந்த மண்'. நடிகர்திலகத்தின் கட்டுரை துவங்கிய அதே இதழில் மணியன் 'உண்மை சொல்ல வேண்டும்' என்ற தன் புதிய தொடர்கதையையும் துவங்கினார். (அதற்கு முன்பு 'உன்னை ஒன்று கேட்பேன் என்ற தொடர்கதையையும், பின்னர் 74-வாக்கில் 'என்னைப்பாடச்சொன்னால்' தொடர்கதையையும் எழுதினார்).

அப்போது நடிகர்திலகத்தும் மணியனுக்குமிடையே நடந்த உரையாடலும் ஆனந்தவிகடனில் பேட்டியாக வெளியாகியிருந்தது. அதன்பின்னர் மணியன் நடிகர்திலகத்தை விட்டு விலகிப்போனார்.

அப்புறம் நடந்தவற்றை நடிகர்திலக்ம் திரியின் 9-ம் பாகத்தில் நமது வரலாற்று விற்பன்னர் முரளி சீனிவாஸ் அவர்கள் எழுதிய மெகா கட்டுரையில் பார்த்திருக்கலாம்.

mr_karthik
17th August 2012, 01:40 PM
அன்புள்ள 'நட்புத்திலகம்' வினோத் சார்,

கிடைத்தற்கரிய பொக்கிஷங்களான 'எங்கிருந்தோ வந்தாள்' 100-வது விழாவில் நடிகர்திலகம் ஷீல்டு பெறும் நிழற்படத்தையும், 'திரிசூலம்' வெள்ளி விழாவில் ஷீல்டு வழங்கும் நிழற்படத்தையும் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள்.

திரிசூலம் வெளிவந்த காலத்தில் நடிகர்திலகம், முன்பு பல காலமாக அணிந்து வந்த சந்தன கலர் குர்தாவிலிருந்து மாறி, மெரூன் கலரில் வேஷ்டியும் அதே கலரில் ஜிப்பாவும் அணிவதை வழக்கமாக வைத்திருந்தார். (நட்சத்திரம் படத்தில் இறந்துபோன ஸ்ரீபிரியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும்போது அதே உடை அணிந்திருப்பார்). திரிசூலம் விழாவில் அணிந்திருப்பதும் அதே உடைதான்.

அசத்தல் ஆவணங்களுக்கு நன்றி

Richardsof
17th August 2012, 05:18 PM
http://i48.tinypic.com/23rmsds.jpg NT WITH MALI

Richardsof
17th August 2012, 05:19 PM
NT WITH BANDHULU
http://i45.tinypic.com/2qjx5ed.jpg

Richardsof
17th August 2012, 05:22 PM
http://i47.tinypic.com/2re70ig.jpg

Richardsof
17th August 2012, 05:23 PM
http://i48.tinypic.com/2qiqxs2.jpg

Richardsof
17th August 2012, 05:25 PM
http://i48.tinypic.com/15nakn4.jpg

Richardsof
17th August 2012, 05:27 PM
http://i45.tinypic.com/2my7sxf.jpg

kalnayak
17th August 2012, 07:03 PM
டியர் வினோத் சார்,
நீங்கள் அளித்திருக்கும் புகைப்படங்கள் அத்தனையும் அற்புதங்கள். குறிப்பாக நதியும், b.r. பந்துலுவும் எடுத்துக்கொண்ட படம், எகிப்தின் பிரமீடுகள் அருகே (உடனிருக்கும் மற்றொருவர் யாரென தெரியவில்லை) எடுத்துக்கொண்டவைகள், வீரபாண்டிய கட்டபொம்மன் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்டவைகள் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் ஆசியா-ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் பெற்ற விருதுகளை பறை சாற்றுகின்றன. , மதியும் நதியும் இணைந்திருக்கும் படம் மதி நதியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்காக வாழ்த்தும் தருணத்தில் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன். வாழ்த்துகள்.

KCSHEKAR
17th August 2012, 08:16 PM
Dear Vinod sir (esvee),

Thanks for the excellent & rare photos.

Murali Srinivas
18th August 2012, 12:19 AM
சென்ற வருடம் 2011 ஜூலை மாதம் நினைவு நாளை ஒட்டி சென்ட்ரலில் வெளியான இரு மலர்கள் படத்திற்கு பிறகு ஒரு வருட இடைவெளிக்கு பின் [கர்ணன் திரைப்படத்தை கணக்கில் சேர்க்கவில்லை] மீண்டும் நான்மாடக்கூடலுக்கு நடிகர் திலகம் விஜயம். இன்று 17-ந் தேதி வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக மதுரை சென்ட்ரலில் தன்னந்தனிக் காட்டு ராஜாவாக எங்க மாமா விஜயம். புத்தம் புதிய பிரிண்ட் என்று விளம்பரம் வந்திருக்கிறது. மதுரையிலிருந்து நண்பன் செய்தி அனுப்பியிருக்கின்றான்.புகைப்படங்களும் வரும்.

அன்புடன்

RAGHAVENDRA
18th August 2012, 06:32 AM
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் எங்க மாமா திரையிடப் படுவதைக் கூறும் போஸ்டர்களின் நிழற்படங்கள். நன்றி திரு முரளி ஸ்ரீநிவாஸ்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20films%20outside%20Chennai/EMMDY2012-1.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20films%20outside%20Chennai/EMMDY2012-2.jpg

Richardsof
18th August 2012, 08:18 AM
இனிய நண்பர்கள் திரு .கார்த்திக் , திரு .கல்நாயக் , திரு சந்திரசேகர்

உங்களின் அன்பு பாராட்டுக்கு நன்றி .இணைய தளத்தில் பல்வேறு பகுதிகளில் நமது தமிழ் அன்பர்கள் பதிவிட்ட மதி- நதி படங்கள் ,விமர்சனங்கள் ,கட்டுரைகள் என்று தேட தேட கிடைப்பது எல்லையில்லா ஆனந்தம் அளிக்கிறது .அவர்களுக்கும் நமது திரியின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வோம் .

Richardsof
18th August 2012, 08:24 AM
தூணிலும் இருப்பார் .... துரும்பிலும் இருப்பார் ... என்பது பழமொழி .

மக்கள் திலகமும் நடிகர்திலகமும் மதுரை - எங்கமாமா விளம்பரம் வந்துள்ள படத்தில் உள்ள தூணில் மதியின் படம் இருப்பது மேலே சொன்ன பழமொழி நினைவு படுத்துகிறது ராகவேந்திரன் சார் .

vasudevan31355
18th August 2012, 08:26 AM
'Enga mama' show times in Madurai Central cinema hall.

http://entertainment.oneindia.in/movie_listings/Madurai+Enga+Mama+8.html

vasudevan31355
18th August 2012, 10:13 AM
இவரை யாரென்று தெரிகிறதா?

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/eswar.jpg

தமிழ் சினிமாவின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களில் நம் அபிமான நடிக, நடிகைகளை தன் கைப்பட வரைந்து தனெக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர் ஈஸ்வர். பல திரைப்பட விளம்பரங்களுக்கு டிசைனராக பணி புரிந்தவர். பலவித ஆர்ட்களில் நம் நடிகர்திலகத்தை போஸ்டர்களிலும், பேனர்களிலும் நம் கண்முன் கொண்டு வந்து ரசிக்க வைத்தவர். அவர் கூறுவது.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/e3.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/e5.jpg

ஈஸ்வர் அவர்கள் தீட்டிய வசந்த மாளிகை போஸ்டர் டிசைன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ees.jpg

vasudevan31355
18th August 2012, 10:38 AM
(அபூர்வ நிழற்படம்).

கதை வசனகர்த்தா, இயக்குனர் திரு.காரைக்குடி நாராயணன் அவர்களுடன் நடிகர் திலகம்.'அச்சாணி' நாடக வெற்றிவிழாவில் நடிகர் திலகம் திரு நாராயணன் அவர்களுக்குக் கேடயம் வழங்கி கௌரவித்த போது எடுத்த படம். (உடன் மேஜர்).

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/knara.jpg

RAGHAVENDRA
18th August 2012, 11:13 AM
டியர் வாசுதேவன் சார்
கையைக் குடுங்க.... கலக்கிட்டீங்க.... என்னுடைய அபிமான டிசைனரின் படத்தைப் போட்டு உள்ளம் குளிர வைத்து விட்டீர்கள்....எலிகண்ட் பப்ளிசிட்டீஸ் நிறுவனத்தின் ஆஸ்தான டிசைனராக இருந்த ஈஸ்வர், தான் பங்கு கொண்ட நடிகர் திலகத்தின் பெரும்பாலான பட விளம்பரங்களில் அவருடைய உருவத்தை கையால் வரைந்து வெளியிடுவார். மிகவும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் விளம்பரங்கள், அதுவும் முழுப்பக்கத்தில் பிரம்மாண்டமான ஓவிய வடிவில் நடிகர் திலகத்தைக் காணும் போது அதனை போற்றிப் பாதுகாக்கும் என்கிற எண்ணம் யாருக்கும் வரும். இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகத்தின் பட விளம்பரங்களை சேகரிக்க வேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்தியவை ஈஸ்வரின் டிசைனில் வெளி வந்த விளம்பரங்கள் என்றால் மிகையில்லை. ஏ.பி.என். பட விளம்பரங்களும் தனித்துவம் பெற்று பளிச்சிடும் காரணம் அ்வை டிசைனர் பக்தாவின் கைவண்ணத்தில் வந்தவை. அவர் டிசைனர் மட்டுமின்றி புகைப்பட நிபுணரும் கூட. அதே போல் பாலாஜியின் படங்களில் எஸ்.ஏ.நாயர் அவர்களும், பாலச்சந்தர் படத்தில் உபால்டு அவர்களும் ஸ்ரீதர் படங்களில் ஈஸ்வர் மற்றும் பரணி மாறி மாறியும் பங்கு பெற்றனர். இப்போதெல்லாம் கிடைக்கும் கணினி வசதிகள் இல்லாத அந்த காலத்தில் அவர்கள் உருவாக்கிய டிசைனில் ஒரு ஜீவன் இருந்தது. உயிர் இருந்தது. ஆனால் இப்போது என்னதான் அழகான விளம்பரங்கள் வந்தாலும் அந்தக் காலத்தைப் போன்று விளம்பரங்களில் ஜீவன் குறைகிறது. இதற்கு டிசைனர்களைக் காரணம் சொல்ல முடியாது என்றாலும் கூட, தற்போதைய விளம்பரங்களில் ஜீவன் குறைவதை நம்மால் உணர முடிகிறது என்பதென்னவோ உண்மை.

தங்களுக்கு மீண்டும் என் பாராட்டுக்களும் நன்றிகளும். அவர் வரைந்த ஓவியம் அடங்கிய ஏதாவது ஒரு விளம்பரத்தை இங்கே நாம் பார்த்தோமானால் ஈஸ்வரின் கைவண்ணம் விளங்கும்.

vasudevan31355
18th August 2012, 11:29 AM
டியர் ராகவேந்திரன் சார்,

ரொம்ப ரொம்ப நன்றி... இப்போதே பார்த்து விடுவோம். ஈஸ்வர் அவர்களின் மேல் உள்ள தங்களின் ஈடுபாடு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. அவருடைய ஓவியங்களில் ஜீவன் தாண்டவமாடுவது உண்மை. இதோ! மீண்டும் தாங்கள் மனம் குளிர ஈஸ்வர் அவர்கள் வரைந்த நம் தலைவரின் 'தங்கப் பதக்கம்' தெலுங்கு பதிப்பிற்கான மிக அபூர்வமான போஸ்டர் டிசைன். இந்த போஸ்ட்டரை பதிப்பித்த Idlebrain.com ற்கு நன்றி.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/launch-cinemaposter194.jpg

'வசந்த மாளிகை' ஈஸ்வரின் கைவண்ணத்தில் உலகப் புகழ் பெற்ற போஸ்டர் டிசைன்

(ஆஹா! தலைவர் முகம் எவ்வளவு அழகாக வரையப்பட்டிருக்கிறது!)

http://www.idlebrain.com/news/functions/launch-cinemaposter/images/launch-cinemaposter198.jpg

vasudevan31355
18th August 2012, 11:41 AM
'வசந்த மாளிகை' ஈஸ்வரின் கைவண்ணத்தில் உருவான நடிகர் திலகத்தின் வண்ணப் போஸ்டர் டிசைன்

http://www.idlebrain.com/news/functions/launch-cinemaposter/images/launch-cinemaposter252.jpg

kumareshanprabhu
18th August 2012, 12:11 PM
hi Pammalar.vasudevan Raghavendra, my genius KCK Murali Sir

i just opened this today all the best to u all

regards
kumareshanprabhu

mr_karthik
18th August 2012, 01:51 PM
அன்புள்ள வாசுதேவன் சார், மற்றும் ராகவேந்தர் சார்,

விளம்பர டிஸைன் ஓவியர் ஈஸ்வர் அவர்கள் பற்றிய பதிவுகளைத்தந்து அந்தக்காலத்துக்கு கொண்டு சென்று விட்டீர்கள். ராகவேந்தர் சார் சொன்னது 10க்கு 100 உணமையே அன்றி வேறில்லை. அன்றைய தினத்தந்தி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் வந்த கருப்புவெள்ளை விளம்பரங்களில் இருந்த ஜீவன் இப்போது வரும் வண்ண விளம்பரங்களில் கண்டிப்பாக இல்லை.

வெள்ளை பின்னணியில் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் அல்லது கையால் வரையப்பெற்ற ஓவியங்களுடன் (பாத்திரத்தின் தன்மைக்கேற்ப பெரியதில் ஆரம்பித்து சிறியது வரை), மேலே அல்லது பக்கவாட்டில் தியேட்டர்கள் பெயர்களைத்தாங்கி, கீழே படத்தின் பெயருடன், சற்று சிறிய எழுத்துக்களில் பிரதான டெக்னிஷியன்களின் பெயர்களுடன் வந்த அன்றைய விளம்பரங்களோடு ஒப்பிடுகையில், அள்ளித்தெளித்த கோலமாக வண்ணங்களை அள்ளிப்பூசிக்கொண்டு வரும் இன்றைய வண்ண விளம்பரங்களில் கண்டிப்பாக ஒரு ஜீவனோ, ஈர்க்கும் சக்தியோ, அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற ஆர்வமோ கண்டிப்பாக இல்லை.

சென்ற ஆண்டு சாந்தியில் மறு வெளியீடு செய்யப்பட்ட 'புதிய பறவை' விளம்பர போஸ்ட்டரையும் சேர்த்தே சொல்கிறேன். தவிரவும் பழைய படங்களை மறுவெளியீடு செய்யும்போது போஸ்ட்டர்களிலும், பத்திரிகை விளம்பரங்களிலும் அவற்றின் ஒரிஜினல் டைட்டில் டிசைனையும் இப்போது மாற்றி விடுகின்றனர். (உதாரணம் நடிகர்திலகத்தின் 'புதிய பறவை' மற்றும் மக்கள் திலகத்தின் 'ஆயிரத்தில் ஒருவன்'). அவை பழைய ஒரிஜினல் வடிவத்திலேயே (படத்தின் டைட்டிலில் வருவதுபோலவே) நம் மனதில் பதிந்துள்ளதால், இவ்வாறு மாற்றம் செய்யும்போது நம் மனதில் ஒட்டவில்லை.

1960 முதல் 1980 வரையான காலகட்டம், செய்தித்தாள் விளம்பரங்களின் பொற்காலம் என்று சொல்லலாம். அதிலும், இவற்றில் மற்ற ஓவியர்களின் டிசன்களைவிட ஈஸ்வரின் டிசைன் மிக அருமை. அதற்குக்காரணம், அவர் பெரும்பாலும் நட்சத்திரங்களின், குறிப்பாக நடிகர்திலகத்தின் முகபாவங்களையும் உணர்ச்சிப்பெருக்கையும் வரைகோட்டு ஓவியங்களாகவே வரைந்து விடுவார்.

நீங்கள் ஈஸ்வரைப்பற்றிய பதிவை இடுமுன்பே நண்பர் வினோத் அவர்கள் 821-வது பதிவாகத்தந்துள்ள 'சத்யம்' படத்தின் விளம்பரத்தில் நடிகர்திலகத்தின் முகபாவத்தை அப்படியே வரைகோட்டு ஓவியமாக ஈஸ்வர் தீட்டியுள்ள அழகைப்பாருங்கள்.

கே.ஆர்.வி.பக்தா, பரணி போன்றவரகளின் விளம்பர டிசைன்களும் அருமையானவை என்ற போதிலும் அவை பெரும்பாலும், படத்தில் வரும் புகைப்படங்களை வெட்டி ஒட்டி, மேற்கொண்டு நகாசு வேலைகள் செய்த விளம்பரங்களாயிருக்குமே தவிர, ஈஸ்வரின் விளம்பரம் போல வரைகோட்டுச்சித்திரங்களை அவர்களின் விளம்பரங்களில் காண்பது அபூர்வமே.

ஈஸ்வரின் கைவண்ணத்துக்கு இன்னுமொரு சான்று வேண்டுமென்றால், சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நடிகர்திலகம் திரியில் நமது 'பாசமுள்ள பம்மலார்' அவர்கள் தந்திருக்கும், 1972-ல் வெளிவந்த 'Hero 72' விளம்பரத்தையும், 1975-ல் வெளிவந்த வைரநெஞ்சம் விளம்பரத்தையும் பார்த்தோமானால், புகைப்படத்தை விட தத்ரூபமாக நடிகர்திலகம் மற்றும் முத்துராமன் ஆகியோரின் முகங்கள் வரைகோட்டுச் சித்திரங்களால் ஈஸ்வர் அவர்கள் தீட்டியிருப்பதைக்காணலாம்.

ஒரு அருமையான கலைஞரான நம் உள்ளம் கவர்ந்த ஓவியர் ஈஸ்வர் அவர்களை நினைவு கூர்ந்ததற்கு தங்கள் இருவருக்கும் என் நன்றிகள்.

pammalar
18th August 2012, 06:29 PM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :18

நடிகர் திலகத்தின் 235வது காவியம்

சந்திப்பு [வெளியான தேதி : 16.6.1983]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

வெள்ளிவிழா விளம்பரம் : தினத்தந்தி : 1.12.1983
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Sandhippu-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
18th August 2012, 06:36 PM
hi Pammalar.vasudevan Raghavendra, my genius KCK Murali Sir

i just opened this today all the best to u all

regards
kumareshanprabhu

Dear kumareshanprabhu Sir,

Welcome..! Thanks for your wishes..!

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
18th August 2012, 07:04 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 8

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 7.1.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6490-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
18th August 2012, 08:50 PM
டியர் mr_karthik,

சுதந்திரத் திருநாள் சிறப்புப் பதிவுகளைப் பாராட்டி தாங்கள் அளித்த அருமையான பதிவுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

சுதந்திரப் போராட்டத்தில் நமது தேசிய திலகத்தின் தந்தையார் ஒரு Unknown Soldier. அவரைப் போன்றவர்கள் நாடெங்கும் பலர் இருந்தார்கள், இன்றும் சிலர் இருக்கிறார்கள். எனது பாட்டனார் [அமரர் D.R. நாகராஜன், அம்மாவின் அப்பா]வும், இதுபோன்று ஒரு Unknown Soldier. 1940களில் குடந்தை-தஞ்சாவூர்-திருவாரூர் பகுதிகளில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றிருக்கிறார். சுதந்திரத்துக்குப்பின் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் ஒரு அதிதீவிரதொண்டராக செயலாற்றினார். 'சுதேசமித்ரன்' நாளிதழில் நிருபராகவும் பணிபுரிந்தார். குடவாசலுக்கு மிக அருகே இருக்கும் எங்கள் ஒகை அக்ரஹாரத்தில் உள்ள எங்கள் வீட்டிற்கு ஒரு முறை மூதறிஞர் ராஜாஜியும், ஒரு முறை பெருந்தலைவர் காமராஜரும் வருகை புரிந்து சில மணித்துளிகள் தங்கி உணவருந்திச் சென்றிருக்கிறார்கள். இதை எனது பாட்டியும், எனது தாயாரும் அடிக்கடி பெருமை பொங்கக் கூறுவார்கள். அந்த ஓகை அக்ரஹார வீட்டிற்கு, 1978-ம் ஆண்டு, [எனக்கு ஐந்து நிரம்பி ஆறு வயது நடைபெறும்போது], சென்னையிலிருந்து கோடை விடுமுறைக்காகக் சென்றிருந்தபோதுதான், ஒருநாள் குடவாசல் 'ஃபிலிப்ஸ்' டூரிங்கில் "திருவிளையாடல்" திரைக்காவியத்திற்கு வீட்டில் அழைத்துச் சென்றார்கள். எனக்கு அன்று "திருவிளையாடல்" பார்த்ததை நினைவுகூர்ந்தால் இன்றும் மெய்சிலிர்க்கும். நான் பார்த்த முதல் திரைப்படமும், முதல் நடிகர் திலகத்தின் திரைப்படமும் என் வாழ்க்கையில் அதுதான். அன்று படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த பின்னர், படத்தில் நடித்த நாகேஷ்(தருமி), பாலையா(பாகவதர்), மகாலிங்கம்(பாணபத்திரர்) ஆகியோரைப் பற்றியெல்லாம் என்னிடம் சொல்லி எனக்கு அவர்களை பிடித்திருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்கள். நானோ அவர்களுக்கு சற்றும் பிடிகொடாமல், அவர்களிடம் 'எனக்கு இப்படத்தில் நடித்த வேறு யாரையும் பிடிக்கவில்லை. சிவபெருமானாக வந்து நிற்கிறாரே-நடக்கிறாரே-பாடுகிறாரே-டான்ஸ் ஆடுகிறாரே, அவரை மட்டும்தான் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது' என்று கூறியிருக்கிறேன். என் அம்மாவழி உறவுகள் இன்றும் என்னிடம் இதனை நினைவுகூர்வதுண்டு. அன்று தொடங்கிய நமது இதயதெய்வத்துடனான பயணம்..இன்று வரை..என்றென்றும்..! சரி, விடுதலைப் போராட்டத்தின் Unknown Soldiersக்கு வருகிறேன். நமது தேசிய திலகம் "கப்பலோட்டிய தமிழன்" காவியத்தில் முழங்குவது போல், 'அவர்களை இந்த சரித்திர ஆசிரியர்கள் வேண்டுமானால் மறந்துவிடலாம்..ஆனால் சத்தியம் மறக்காது..'. அன்றிருந்த தியாகத்தலைவர்கள்-தியாகிகள் தங்கள் வீட்டிலிருந்தவற்றை தாய்நாட்டிற்காகத் தந்தார்கள். 'தியாகம், தொண்டு என்றால் என்ன' எனக் கேட்கும் இன்றிருக்கும் அரசியல்வியாதிகளோ ஸாரி அரசியல்வாதிகளோ நாட்டிலிருப்பவற்றை தங்கள் வீட்டிற்கும்-குடும்பத்துக்கும் எடுத்துக் கொள்கிறார்கள்.

தேசிய திலகத்தின் பாதயாத்திரை பற்றி மேலும் சில ஆவணங்கள் உள்ளன. அதனையும் சமயம்வரும்போது அவசியம் பதிவிடுகிறேன்..!

["பாசமுள்ள பம்மலார்" எனத் தாங்கள் எழுதியிருந்தது என்னை மெய்சிலிர்க்கச் செய்தது].

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
18th August 2012, 09:40 PM
நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 3

ஃபிரான்ஸ் அளித்த அங்கீகாரம்

'செவாலியே' விருது விழா

22.4.1995 [சனிக்கிழமை]

எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் : சேப்பாக்கம் : சென்னை

தமிழக முதல்வர் கலைச்செல்வி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமை வகிக்க, ஃபிரான்ஸ் நாட்டுத் தூதர் திரு. ஃபிலிப் பெடிட் அவர்கள், தங்கள் நாட்டின் மிகமிக உயர்ந்த விருதான 'செவாலியே' விருதை, உலக நடிகர் திலகத்துக்கு வழங்கினார். சிங்காரச் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, இந்தியத் திரையுலகமே திரண்டு வந்து, நமது சிங்கத்தமிழனை வாழ்த்தி, பெருமை தேடிக் கொண்டது. அந்தக் கோலாகலமான விழாவின் வரலாற்று ஆவணங்கள் தொடர்கின்றன:

பொக்கிஷாதி பொக்கிஷம்

வரலாற்று ஆவணம் : தினத்தந்தி : 23.4.1995
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6448-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6450-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6451-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
18th August 2012, 10:54 PM
டியர் குமரேசன் சார்,

தங்களுக்கு மனமார்ந்த என் நல்வரவு. நீண்ட நாட்களாய் தங்கள் பதிவுகளைக் காண வில்லை. இப்போது பார்க்கையில் மிக சந்தோஷம். 'கும்கி' பிசியோ?.

pammalar
18th August 2012, 11:00 PM
டியர் கல்நாயக் சார்,

சுதந்திரத் திருநாள் பதிவுகளைப் பாராட்டி மகிழ்ந்த தங்களுக்கு எனது கனிவான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th August 2012, 11:01 PM
டியர் esvee சார்,

இணையதளத்தில் இருக்கும் நடிகர் திலகத்தின் அருமையான நிழற்படங்களையும், அரிய விளம்பரங்களையும் இங்கே தொடர்ந்து இடுகை செய்து வருவதற்கு இனிய நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
18th August 2012, 11:23 PM
சிவாஜி சினிமா : பத்திரிகை விமர்சனம் : 4

பொக்கிஷாதி பொக்கிஷம்

வாழ்க்கை

ஆனந்த விகடன் : 1984

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6493-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6494-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6495-1.jpg

பக்தியுடன்,
பம்மலார்.

Murali Srinivas
19th August 2012, 12:06 AM
நேற்று மதுரையில் வெளியான "கோடீஸ்வரனுக்கு" பிரமாத வரவேற்பு என்று கேள்வி. சென்ட்ரலில் கோடிஸ்வர ராஜ்ஜியம் என்றால் ராம் திரையரங்கில் கர்ண சாம்ராஜ்ஜியம். ஆம் நேற்று முதல் மதுரை ராம் திரையரங்கில் கர்ணன் வெளியாகி வெற்றிவாகை சூடி வருகிறது.

இதை தவிர கோவை மாநகர் டிலைட் திரையரங்கில் புதிய பறவை வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த தகவல்களை வழங்கிய திரு ராமஜெயம் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்

Murali Srinivas
19th August 2012, 12:53 AM
மணியனின் இதயம் பேசுகிறது இதழில் வெளியான பேட்டியை வெளியிட்ட வாசு அவர்களுக்கு நன்றி.

<dig>
அதன் தொடர்ச்சியாக கார்த்திக் அவர்கள் ஒரு சில விஷயங்களை குறிப்பிட்டிருந்தார். நான் எழுதிய ஒரு பதிவையும் சுட்டிக் காட்டியிருந்தார். நான் ஏற்கனவே எழுதியிருந்தது போல மணியனும், அவர் மூலமாக விகடனும் 1968 இறுதியிலிருந்து மெல்ல மெல்ல நடிகர் திலகத்திடமிடமிருந்து விலகி மாற்று முகாம் நோக்கி பயணப்பட்டனர். அந்த கால கட்டத்தை பற்றியும் அதன் பிறகு மணியன் விகடனிலிருந்து விலகி இதயம் பேசுகிறது இதழ் ஆரம்பித்து அ.தி.மு.க,வின் அதிகாரப்பூர்வ இதழ் போன்றே நடத்தி வந்த காலங்களைப் பற்றி அந்த பதிவுகளில் நான் பதிவு செய்திருந்தேன்.

இந்த நிலைமை 1984 அக்டோபர் மாதம் வரை தொடர்ந்தது. அதன் பிறகு எம்.ஜி.ஆரின் inner circle எனப்படும் உள்வட்டதிலிருந்து மணியன் வெளியேற்றப்பட்டார். அதாவது எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்படும் போது அன்று வரை வெளிநாட்டு பயணம் என்றால் மணியன்தான் ஒருங்கிணைப்பாளர் அதிலும் அமெரிக்கா என்றால் மணியன் பிளஸ் எம்.எஸ்.உதயமூர்த்தி என்ற நிலை மாறி பழனி.ஜி.பெரியசாமி போன்றவர்கள் அந்த இடத்தை நிரப்ப கொண்டு வரப்பட்டனர். இது மணியனுக்கு ஒரு பெரிய ஷாக் ஆக அமைந்தது. எம்.ஜி.ஆர். நலமடைந்து இந்தியா திரும்பியவுடன் மணியன் அவரை சந்தித்து மீண்டும் அவரது உள்வட்டத்தில் இணைய எடுத்த முயற்சிகள் தோல்வியிலே முடிந்தது. எம்.ஜி.ஆரின் இறுதிக் காலம் வரை பழனி.ஜி. பெரிய சாமியை அகற்ற மணியனால் முடியவில்லை.

அது மட்டுமல்ல 1982 வரை இதயம் பேசுகிறது இதழுக்கு கொடுத்து வந்த ஆதரவிலும் ஒரு மாற்றம் நிகழ ஆரம்பித்தது. வார இதழ் உலகில் விகடனிலிருந்து வெளியேறி இதயம் பேசுகிறது ஆரம்பித்த மணியனுக்கும் தினமணி கதிரிலிருந்து வெளியேறி சாவி இதழ் ஆரம்பித்த சாவி அவர்களுக்கும் ஒரு பெரிய தொழில் முறை போட்டியே இருந்தது.[சாவி முதலில் குங்குமம பத்திரிக்கை ஆசிரியராக இருந்து பின்னர் சாவி இதழை தொடங்கினார்] முதலில் கலைஞர் ஆதரவாக வெளிவந்த சாவி பின் அவருடன் ஏற்பட்ட ஒரு மனஸ்தாபத்தினால் எம்.ஜி.ஆர். பக்கம் சாய ஆரம்பித்தது. அதுவரை எம்.ஜி.ஆரின் படத்தை போட மாட்டேன் என்று சொன்ன சாவி 1980 ஜூலையில் ஒரு முறையும் 1981 ஜனவரியில் ஒரு முறையும் அட்டைபடத்தில் எம்.ஜி.ஆரை வெளியிட்டார். அதிலும் இரண்டாவது முறை தோட்டம் முதல் கோட்டை வரை என்று ஒரு நாள் முழுக்க எம்,ஜி.ஆரோடு தன் ஆசிரியர் குழுவினரை இருக்க வைத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டார் [அந்த கட்டுரையை எழுதியவர் அன்று தமிழன் என்ற புனைப் பெயரில் எழுதிக் கொண்டிருந்த மாலன்]. அது மணியனுக்கு கிடைத்த முதல் அடி.

அந்த வருடத்திலேயே எம்.ஜி.ஆரின் சொந்தப் பத்திரிக்கையான தாய் வார இதழ் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் அப்பு ஆசிரியராக இருந்து நடத்திய அந்த இதழுக்கு பின்னர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் ஆசிரியராக பொறுப்பேற்றார். அதன் பிறகு தாய் இதழின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது. அன்றைய நம்பர் 1 இதழான குமுததிற்க்கே சவால் விடும் வகையில் அமைந்தது தாய். அந்த நேரத்தில் அ.தி.மு.கவில் இணைந்த செல்வி ஜெயலலிதாவும் எனக்கு பிடித்த என்ற தலைப்பில் கட்டுரைகளை வாராவாரம் எழுதினார். தவிரவும் குமுதத்தில் அவர் எழுதிக் கொண்டிருந்த தொடர் கதையை நிறுத்தி விட்டு அதை இங்கே தொடர்ந்தார். இவை எல்லாம் தாய் இதழுக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.

இந்த பாராமுகம் பின்னர் 1984 அக்டோபர் முதல் விலக்கி வைக்கப்பட்டது, மீண்டும் இணைய முயற்சி எடுத்தும் முடியாமற் போனது இவை அனைத்தும் சேர்ந்துதான் 1986-ல் மீண்டும் நடிகர் திலகம் பேட்டியை எடுக்க காரணமாக அமைந்தது ஆக எப்போதும் தன்னலம் கருதி செயல்ப்பட்ட மணியன் இந்தப் பேட்டியின் போதும் அதைதான் கடைப்பிடித்தார்.
<end dig>

அன்புடன்

pammalar
19th August 2012, 01:38 AM
டியர் ராகவேந்திரன் சார்,

சுதந்திரத் திருநாள் பதிவுகளைப் படித்துக் களித்து தாங்கள் வழங்கிய உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது உயர்வான நன்றிகள்..!

மதுரை 'சென்ட்ரல் சினிமா'வில் "எங்க மாமா" : நிழற்படங்களுக்கு முரளி சாருக்கும், தங்களுக்கும் நன்றி..!

கலையுலக கோடீஸ்வரர் மதுரையில் வெற்றிநடைபோடுகிறார் என 'சுட்டி'க்காட்டிய நமது 'திரைக்களஞ்சியக் கோடீஸ்வரர்' நெய்வேலியாருக்கும் நன்றி..!

அன்புடன்,
பம்மலார்.

Subramaniam Ramajayam
19th August 2012, 06:28 AM
Manian personaly nice person but for business purpose very selfish person. thamks for murali srinivas for the article about manian. way back in 86 he has released some casttes about sri raghavenra swamigal and he himself supervised the sales in front of the temple at tripilicane that time I happened to interact with him and he was very upset over the present happenings ie 84 delink from political scenes etc. very pity.

Richardsof
19th August 2012, 06:57 AM
MAKKAL THILAGAM . NADIGARTHILAGAM, PREM NAZIR, KANNADA ACTOR RAJKUMAR

THE VETRAN ACTOR M.K.RADHA .

http://i49.tinypic.com/2z9bbyx.jpg

vasudevan31355
19th August 2012, 07:25 AM
''சந்திப்பு' வெள்ளி விழா சிறப்பு நிழற்படம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/xascv.jpg

vasudevan31355
19th August 2012, 07:42 AM
'சந்திப்பு' வெள்ளி விழாக் காவியத்தில் நடிகர் திலகத்தின் அற்புதமான நடனத்துடன்

இளைய திலகம், ஸ்ரீதேவி, ராதா, சரத்பாபு ஆகியோரின் அற்புத பங்களிப்புடன்

பிரம்மாண்ட செட்டிங்குடன்

மெல்லிசை மன்னரின் ஆர்ப்பாட்டமான இசையுடன்

'ஷோலாப்பூர் ராஜா...
ஷோலாப்பூர் ராணி
ஜோடி சேரும் நேரமோ'...


http://www.youtube.com/watch?v=BJTfWIfKORU&feature=player_detailpage

"ஆனந்தம் விளையாடும் வீடு...
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு"


http://www.youtube.com/watch?v=bzRQIs5OIuA&feature=player_detailpage

ஸ்ரீதேவியின் அசத்தல் மூவ்மென்ட்களில், மெல்லிசை மன்னரின் அற்புதமான இசையில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வாணி ஜெயராமின் வசீகரக் குரலில்.

"ராத்திரி நிலாவில்
ரகசியக் கனாவில்
காதல் சங்கீதம் தான் நான் பாடவோ!"

இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். இந்தப் பாடலை நான் கேட்காத நாளே கிடையாது. அவ்வளவு இனிமையான பாடல். பலர் இந்தப் பாடலை அதிகம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இப்போது கேட்டுப் பாருங்கள்... என்ன ஒரு இனிமையான இசை!... நடுவில் வரும் நடிகர் திலகத்தின் அந்த 'டேப்' டான்ஸ் இந்தப் பாடலுக்கு மிகவும் அழகையும், மெருகையும் சேர்க்கிறது.


http://www.youtube.com/watch?v=rK8TXOEPcFE&feature=player_detailpage

ஸ்ரீதேவியுடன் நடிகர் திலகத்தின் டூயட்.

"வார்த்தை நானடி கண்ணம்மா..
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா "

நடிகர் திலகத்தின் புகழ் பாடும் வைர வரிகள்.

"விழியில் வீரம் விளங்கும் போது கட்டபொம்மன் போலே
அன்பை வாரி வாரி வழங்கும் போது வள்ளல் கர்ணன் போலே"

"உன்னை மிஞ்சும் நடிகன் இந்த உலகில் தோன்றவில்லை"


http://www.youtube.com/watch?v=du7OfHBgeZ8&feature=player_detailpage


'இளையதிலகம்' பிரபு ராதாவுடன் அசத்தும் ஜனரஞ்சக டூயட் பாடல்.

"அடி நான் வாங்கி வந்தேண்டி நாலு முழப் பூவு"
அதப் பின்னாடி வைப்பேன்டி வாசனையைப் பாரு"...

SPB மற்றும் ஜானகியின் கலாட்டா குரல்களில்


http://www.youtube.com/watch?v=E36NsN8l8Ro&feature=player_detailpage

Richardsof
19th August 2012, 07:46 AM
http://i45.tinypic.com/t5rhc6.jpg

RAGHAVENDRA
19th August 2012, 07:55 AM
Attn. VASUDEVAN

வந்துட்டாரய்யா வந்துட்டாரு....

vasudevan31355
19th August 2012, 08:20 AM
டியர் ராகவேந்திரன் சார்,

ஆவல் தாங்க முடியல...

RAGHAVENDRA
19th August 2012, 08:52 AM
நன்மையில் முடிக்க வேண்டியவர்...

pammalar
19th August 2012, 11:32 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களின் இதயம் நிறைந்த பாராட்டுக்களுக்கு எனது இனிய நன்றிகள்..!

பிரபல பல் மருத்துவர் ஜானகிராமன் அவர்கள் நடிகர் திலகத்துக்கு பல் மருத்துவம் செய்த தகவல் அருமை. காணாமல் போன பல்லை அவர் பின்னர் கண்டுபிடித்து மகிழ்ந்தது படுசுவாரஸ்யம். 2003-ம் ஆண்டு 'தி ஹிந்து' நாளிதழில் வந்த இத்தகவல், இன்னும் சற்று விரிவாக, அதே ஆண்டு 'குமுதம்' வார இதழிலும் வந்திருந்தது.

நடிகர் திலகத்தின் கலையுலகப் பொன்விழாயொட்டி, மணியனின் 'இதயம் பேசுகிறது' இதழில் வெளியான அவரது பேட்டி மிக அருமை. நேர்காணல்களின்போது பத்திரிகையாளர்களிடம் எப்பொழுதுமே நடிகர் திலகம் மனதில்பட்டதை-உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசிவிடுவார். அதிலும் குறிப்பாக மணியன் போன்றவர்களிடம் பேசும்போது படுகேஷுவுலாகவும், ஜாலியாகவும் பதிலளிப்பார். 1990களில், இதே இதழுக்காக அளித்த பேட்டியில், நடிகர் திலகம் மணியன் அவர்களிடம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், 'நீங்கள் தானே நான் மிகையாக நடிக்கிறேன் அதாவது ஓவர் ஆக்ட் செய்கிறேன் என்று பத்திரிகையில் முதன்முதலில் எழுதினீர்கள்' என்று மணியனிடமே சொல்லி அவரை திக்குமுக்காட வைத்தார். 1986-ல் வெளிவந்த இந்த மணியான பேட்டியை இங்கே இடுகை செய்த தங்களுக்கும், இந்த கிடைத்தற்கரிய ஆவணங்களை தங்களுக்கு அள்ளி வழங்கிய அன்பு அடிகளாருக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்..! [நடிகர் திலகத்தின் கலையுலகப் பொன்விழா, 1984-ம் ஆண்டிலிருந்து 1986-ம் ஆண்டு வரை நமது பத்திரிகைகளால் கொண்டாடப்பட்டது. 1986-ல் அவரது கலையுலகப் பொன்விழா மிகப் பிரம்மாண்டமான முறையில் ஒரு விழாவாகவும் நடைபெற்றது. இவ்விழா குறித்த ஆவணப் பொக்கிஷங்களை அடியேன் ஏற்கனவே எட்டாம் பாக நடிகர் திலகம் திரியில் அளித்திருக்கிறேன்].

திரைப்பட விளம்பர டிசைன் திலகம் திரு. ஈஸ்வர் அவர்களைப் பற்றிய தகவல்களும், அவரது டிசைன்களின் இமேஜுகளும் தாங்கள் வழங்கிய பதிவுகளிலேயே மிகமிக வித்தியாசமான பதிவுகள். அதற்காக தங்களுக்கு எனது ஸ்பெஷல் பாராட்டுக்கள். ராகவேந்திரன் சார், mr_karthik மற்றும் தங்களுடைய கைவண்ணங்கள் வாயிலாக, ஈஸ்வர் அவர்களின் கைவண்ணம் குறித்து நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது.

"வாணி ராணி" விளம்பரமும், பத்திரிகையில் வெளிவந்த நடிகர் திலகத்தின் வண்ணப்படமும், காரைக்குடி நாராயணன் அவர்கள் நமது திலகத்துடனும், மேஜருடனும் இருக்கும் புகைப்படமும் கனஜோர்..!

அன்புடன்,
பம்மலார்.

vasudevan31355
19th August 2012, 12:30 PM
அன்பு பம்மலார் சார்,

பாராட்டுக் குவியல்களுக்கு பாசமான நன்றிகள்.

'சந்திப்பு' 'தினத்தந்தி' வெள்ளிவிழா விளம்பரத்தை இணையத்தில் முதன்முறையாக பதிப்பித்து (இணையத்தில் முதன்முறையாக என்பது தங்கள் பதிவுகளுக்குத்தான் சாலப் பொருந்தும். எங்கு தேடினாலும் கிடைக்காத பொக்கிஷப் பதிவுகளை தங்களைத் தவிர வேறு யார் இவ்வளவு சிறப்பாகத் தர முடியும்?) சந்திப்பின் தன்மானத்தை எவ்வித சன்மானமும் எதிர்பாராமல் காத்து, எங்களை தலை நிமிர்ந்து நடக்கச் செய்தமைக்கு நன்றி!

'கப்பலோட்டிய தமிழன்' மறு வெளியீட்டு விளம்பரம் கலக்கல்.

தங்களது பாட்டனார் 'தேசியச் செம்மல்' அமரர் திரு.D.R. நாகராஜன் அவர்களின் சுதந்திரப் போராட்ட உணர்வுகளை தாங்கள் விளக்கியிருந்தது நிஜமாகவே பெருமிதம் அடையச் செய்து விட்டது. ஒரு தேசியக் குடும்பத்துப் பிள்ளையாகிய தாங்கள் எங்களுக்கெல்லாம் அன்புச் சகோதரராய் கிடைத்தது எண்ணி பெருமகிழ்வு அடைகின்றேன்.

ஐந்தாவது வயதிலேயே நம் சிவபெருமானின் திருவிளையாடல் கண்டு தாங்கள் நடத்திய திருவிளையாடல் ரகளை. தங்களைப் போலத்தான் நானும். நான் என் வாழ்வில் கண்ட முதல் காவியம் 'பார்த்தல் பசி தீரும்'. ஆனால் இன்று வரை அவர் மேல் கொண்ட பசி தீரவே இல்லை. தீரவும் தீராது.

தியாகப் பெருந்தகையின் பேரச் செல்வமே! தங்கள் தாயை பெற்றெடுத்த தங்கள் தியாகத் தாத்தாவிற்கும், தங்களை எங்களுக்களித்த எங்கள் அருமைத் தாய்க்கும் என்னுடைய ஆயிரம் கோடி வந்தனங்களும், நமஸ்காரங்களும்.

தாங்கள் கண்டு களித்த முதல் காவியம்

http://lulzimg.com/i23/acf068.png

தங்களுக்காக தலைவரின் 'ருத்ர தாண்டவம்' (வீடியோவாக)


http://www.youtube.com/watch?v=RJhyuTQb0hY&feature=player_detailpage

நான் கண்டு களித்த முதல் காவியம்

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/ParthalPasiTheerum0005.jpg

நம் எல்லோருக்காகவும் "பிள்ளைக்குத் தந்தை ஒருவன்" (நடிப்புக்குத் தந்தை நம் இறைவன்)


http://www.youtube.com/watch?v=zsJJ4zVdC7g&feature=player_detailpage

தங்களது பாட்டனார் 'தேசியச் செம்மல்' அமரர் திரு.D.R. நாகராஜன் அவர்களுக்கு சமர்ப்பணம்.


http://www.youtube.com/watch?v=uZlh5o55QN0&feature=player_detailpage

vasudevan31355
19th August 2012, 02:06 PM
நன்றி முரளி சார்.

'இதயம் பேசுகிறது' கட்டுரைப் பதிவைத் தொடர்ந்து தாங்கள் வெளி உலகிற்கு அதிகம் தெரியாத பல தகவல்களை அற்புதமாக வழங்கியுள்ளீர்கள். வெரி இன்ட்ரெஸ்ட்டிங். "இந்த நிலைமை 1984 அக்டோபர் மாதம் வரை தொடர்ந்தது... அதன் பிறகு எம்.ஜி.ஆரின் inner circle எனப்படும் உள்வட்டதிலிருந்து மணியன் வெளியேற்றப்பட்டார்" என்று தாங்கள் கூறியுள்ளது சற்று திடுக்கிட வைத்தது. மணியன் அவர்களுக்கு இந்த நிலைமைக்கு காரணம் ஏதும் உண்டா?... ஏனெனில் எம்ஜியார் அவர்களின் பேரன்பிற்கு பாத்திரமான மணியன் தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை.

Thomasstemy
19th August 2012, 03:50 PM
EID MUBARAK

Ramaḍān, is the ninth month of the Islamic calendar. Muslims worldwide observe this as a month of fasting. This annual observance is regarded as one of the Five Pillars of Islam. The month lasts 2930 days based on the visual sightings of the crescent moon, according to numerous biographical accounts compiled in hadiths.

The word Ramadan comes from the Arabic root ramida or ar-ramad.

A crescent moon can be seen over palm trees at sunset in Manama, marking the beginning of the Islamic month of Ramadan in Bahrain as shown in the Snap.

While wishing all my Islam Friends for Ramadan,
I was also thinking, what Ramzan it would be without fuel to the fire...i mean adding our Thalaivar, The Pride of Tamizhnadu - RAHIM BHAI's song.http://www.youtube.com/watch?v=ruMVBLeUsEw

Insha Allah !!

:smokesmile:
1693

RAGHAVENDRA
19th August 2012, 04:11 PM
தியாகியின் வழி வந்த தன்னலமற்ற தொண்டரே, தங்களை நண்பராகப் பெற நாங்கள் பெற்ற பேறுதான் என்னே. வாசுதேவன் பதிவுகளில் உள்ள வார்த்தைகள் அனைவரின் எண்ணங்களையும் பிரதிபலிப்பதால் அவருடைய கூற்றுக்களுக்கெல்லாம் அப்படியே

http://ponnivala.com/Education/Resources/gallery8.jpg?589

டியர் பாரிஸ்டர்
தங்களின் ஈத் முபாரக் வாழ்த்து சிவாஜி ரசிகர்கள் அனைவரும் ஒரே எண்ண ஓட்டத்தில் இருப்பவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. பாராட்டுக்கள்.

நமது திரியின் பிரமிக்கத் தக்க வேகத்தைப் பற்றி மற்றொரு புள்ளிவிவரம்

நமது ந.தி.பாகம் 10 தொடங்கியது - 14.6.2012. இன்று 19.8.12 தேதி மாலை 3.50 மணி வரை பதிவுகளின் எண்ணிக்கை 862 - நாட்கள் - 67
பம்மலார் தொடங்கிய சாதனைத் திரியின் நிலவரம் . 19.8.12 தேதி மாலை 3.50 மணி வரை பதிவுகளின் எண்ணிக்கை 867 - நாட்கள் - 29
பம்மலார் தொடங்கிய சாதனைத் திரியின் போது பாகம் 10ன் நிலவரம் - 21 ஜூலை மாலை 4.29 மணி க்கு சந்திர சேகர் அவர்களுடைய பதிவைச் சேர்த்து 661
22.07.2012 தொடங்கி இன்று 19.08.2012 பகல் 3.50 மணி வரை பாகம் 10ல் வந்துள்ள பதிவுகளின் எண்ணிக்கை - 201.
இதே காலத்தில் பம்மலார் தொடங்கிய திரியின் பதிவுகளின் எண்ணிக்கை . 867.

இந்தப் புள்ளி விவரம் இனிமேலாவது சம்பந்தப் பட்டவர்களுக்கு நிலைமையப் புரிய வைக்கும் என்று நம்புகிறேன். இதைச் சொல்வதற்குக் காரணம், பி.ஆர். அவர்களைப் பாராட்டும் சாக்கில் ஒரு நண்பர் எழுதியிருப்பது தான். மற்றவர்கள் தூண்டியும் உசுப்பேற்றியும் விட்டதாகவும் அவர் பொறுமையுடனும் பக்குவத்துடனும் அளந்தும் பதில் அளித்திருப்பதாகக் கூறியிருக்கிறார். யார் உசுப்பேற்றி விட்டார்கள். யார் மனதைப் புண்படும் படி எழுதினார்கள். யார் தூண்டி விட்டார்கள் என்பதைப் பற்றி அவருக்குத் தெரியாதா அல்லது மீண்டும் கலகமூட்டி விடும் வேலையைத் துவக்க எண்ணுகிறாரா என்பதை நண்பர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.

அன்புடன்

Richardsof
19th August 2012, 05:59 PM
நடிகர் திலகம் நடித்த 'ஞான ஒளி' படத்தில் இடம்பெற்ற...

தேவனே என்னைப் பாருங்கள் -என்
பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
என்ற பாடலை மறக்க முடியுமா?

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த இந்த பாடலின் நடுவே..

" ஓ...மைலார்ட்...பார்டன் மீ....

உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய்விட்டன...

இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே..."

என்று உணர்வுபூர்வமாக வசனங்கள் இடம் பெற்றிருந்ததன.

டி.எம்.எஸ் பாடிய அந்தப் பாடலில் வரும் மேற்படி வசனங்களை மட்டும்... நடிகர் திலகத்தையே பேசும்படி எம்.எஸ்.வி வேண்டுகேள் விடுத்தார்.

இந்த வசனங்கள்... பாடலில் எந்த இடத்தில் வருகின்றன என்பதை பாடிக்காட்டுங்கள்" என்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிவாஜி கேட்க உடனே எம்.எஸ்.வி...

" ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம்..
நீங்கள் அறிவீர் ...மன்னித்தருள்வீர்"
என்று பாடிக் காட்டி ....

இந்த இடத்தில் தான் தாங்கள்....'O My Lord Pardone Me' என்று ஆரம்பமாகும் வசனத்தை பேசவேண்டும் என்றார்.

இவ்வளவு உச்ச ஸ்தாயியில் கொண்டு போய் பாடலை நிறுத்தி இருக்கிறீர்களே.... அதற்கு ஈடுகொடுத்து என்னால் பேச முடியாது என்றே நினைக்கிறேண். வேறு பொருத்தமானவரை அழைத்து அந்த வசனங்களைப் பேச வையுங்கள் என்றார் நடிகர் திலகம் தமக்கே இயல்பான வெளிப்படைப் பண்புடன்'

வயலின் வாத்தியக் கலைஞரும் , தமது உதவியாளருமான ஜோசப் கிருஷ்ணாவை அழைத்து அந்த வசனங்களைப் பேச வைத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஆனால் அவரது குரல் அந்தப் பாடலின் வீச்சுக்குப் பொருத்தி வரவில்லை.

'பல்குரல் வித்தகர்' சதன் என்பவரைக் கூப்பிட்டு ('அவள் ஒரு தொடர்கதை' படத்தில் எஸ்.பி.பி. பாடிய கடவுள் அமைத்து வைத்த மேடை' பாடலில் பல குரல்களில் அமர்க்களப்படுத்தியவர் இந்த 'சதன்') இதே வசனத்தைப் பேச வைத்தார் எம்.எஸ்.வி.

ஆனால் , அதுவும் பாடலின் போக்கோடு ஒன்றிப்போகாமல் தனித்து நின்றது.

நடப்பதை எல்லாம் தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் கிருஷ்ணன் - பஞ்சு, எம்.எஸ்.வியை அழைத்து...

பாடலைப் பாடிய டி.எம்.எஸ்ஸையே அந்த வசனங்களையும் பேச வைத்துப் பார்க்கலாமே என்றார்.

எம்.எஸ்.வி.... டி.எம்.எஸ்ஸிடம் அந்த வசனங்களைக் கொடுத்துப் பேசுமாறு வேண்டினார்.

டி.எம்.எஸ் உடனே நடிகர் திலகத்தின் அருகில் சென்றார்.

அந்த வசனங்களை நடிகர் திலகத்திடம் கொடுத்தார்.

"உங்கள் சிம்மக்குரலில்...அந்த வசனங்களை ஒரு தடவை எனக்குப் பேசிக்காட்டுங்கள் அய்யா" என்றார்.

நடிகர் திலகம் , அந்த வசனங்களை தமது பாணியில் டி.எம்.எஸ்ஸிடம் பேசிக்காட்டினார்.

அந்த வசனங்களைப் பேசிய போது, நடிகர் திலகத்தின் குரலில் இருந்த பாவங்களையும் ஏற்ற இறக்கங்களையும்,உணர்வுக் குமிழிகளையும் , உன்னதங்களையும் அப்படியே தமது மனதில் உள் வாங்கிக் கொண்டார் டி.எம்.எஸ்.

"நான் தயார்... ஒலிப்பதிவை ஆரம்பிக்கலாமா?" என்று டி.எம்.எஸ் சொன்னதும் ...எம்.எஸ்.வி கையசைத்தார்.

ஏக்கமும் விரக்தியும் தேவ விசுவாசமும் கொண்ட ஒரு பக்தனின் 'ஞானத் தேடல்' விளங்கும் விதமாக... உணர்ச்சிப் பிழம்பாக மாறி அந்த வசனத்தைப் பேசினார் டி.எம்.எஸ்

'அருமை டி.எம்.எஸ் அற்புதம் ' ENDAR NADIGAR THILAGAM

vasudevan31355
19th August 2012, 07:11 PM
டியர் வினோத் சார்,

தூள். என் மனம் கொள்ளை கொண்ட 'ஞான ஒளி' காவியத்தின் பாடலைப் பற்றிய அம்சமான குறிப்புகளைத் தந்து அசத்தி விட்டீர்கள். தன்னால் எதுவும் செய்து காட்ட முடியும் என்று தெரிந்திருந்தாலும் கூட "தேவனே... என்னைப் பாருங்கள்" பாடலுக்கு .''O My Lord Pardone Me" என்ற உணர்வு பொங்கும் வார்த்தையை டி.எம்.எஸ் அவர்களே குரல் கொடுத்துப் பாடினால்தான் மிக அம்சமாக இருக்கும் என்ற உயரிய உள்ளமும், தன்னால் பாடகருக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற உயரிய நன்னோக்கமும், அவரவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை அவரவர்கள்தான் செய்ய வேண்டும் என்ற உறுதியான செயல்பாடும் கொண்டவர்தான் நடிகர் திலகம் என்பது இதன் மூலம் உறுதியாகிறதல்லவா! அதனால்தான் எல்லோர் மனங்களிலும் நடிகர் திலகம் மனிதப் புனிதராக உயர்ந்து நிற்கிறார். அருமையாக பதிவளித்தமைக்கு நன்றிகள்.

pammalar
19th August 2012, 07:56 PM
ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களே,

தங்களின் பதில் பதிவு என்னை மெய்சிலிர்க்கச் செய்துவிட்டது. உணர்ச்சிப்பெருக்கின் உச்சத்தில் கண்கள் குளமாயின. பேசவோ, எழுதவோ வார்த்தைகள் வரவில்லை. தங்களுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்..!

பாசப்பெருக்கில்,
உங்கள் அன்புச் சகோதரன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

vasudevan31355
19th August 2012, 08:11 PM
அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/ram.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/p2-3-1.jpg?t=1345386162அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
19th August 2012, 08:16 PM
http://dribbble.s3.amazonaws.com/users/69632/screenshots/644479/ramadhan-mubarak-animation.gif

நடிகர் திலகத்தின் தொழுகை வழிபாடு


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=f1iKN6xOJ6o

அன்புடன்,
வாசுதேவன்.

pammalar
19th August 2012, 08:32 PM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் எல்லையில்லா அன்பிற்கும், பெருந்தன்மை பொங்கும் உள்ளத்துக்கும் எனது தூய்மையான நன்றிகள்..!

'புள்ளிவிவரப்புலி' என்பதனை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
19th August 2012, 08:36 PM
அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Rahim1-1.jpg

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
19th August 2012, 09:06 PM
ரம்ஜான் பெருநாள் சிறப்புப் பாடல்

"எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம் !!!"

பாவமன்னிப்பு(1961) திரைக்காவியத்திலிருந்து...


http://www.youtube.com/watch?v=ruMVBLeUsEw

'எல்லோரும் கொண்டாடுவோம்' பாடல்
இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனீஃபா அவர்களின் வெண்கலக்குரலில்:


http://www.youtube.com/watch?v=FIhoh7eifLE


http://www.youtube.com/watch?v=voEJGKqd70I

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
19th August 2012, 09:11 PM
"அல்லா..அல்லா... நீ இல்லாத இடமே இல்லை".

'முகமது பின் துக்ளக்' திரைப்படத்தில் எம்.எஸ்.வியின் அற்புதமான குரலில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=I0M6mgDA3nI

pammalar
19th August 2012, 10:14 PM
மதுரை லேட்டஸ்ட்

19.8.2012 : ஞாயிறு

டிஜிட்டல் "கர்ணன்", 'ராம்' திரையரங்கில், இன்று மாலைக் காட்சி ஹவுஸ்ஃபுல் !

"எங்க மாமா", 'சென்டரல் சினிமா'வில், இன்று மாலைக் காட்சி நியர் ஹவுஸ்ஃபுல் !

சாக்லேட் நியூஸை சுடச்சுட வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ். ராமஜெயம் அவர்களுக்கு ஸ்வீட் தேங்க்ஸ்..!

அன்புடன்,
பம்மலார்.

Thomasstemy
19th August 2012, 10:35 PM
மதுரை லேட்டஸ்ட்

19.8.2012 : ஞாயிறு

டிஜிட்டல் "கர்ணன்", 'ராம்' திரையரங்கில், இன்று மாலைக் காட்சி ஹவுஸ்ஃபுல் !

"எங்க மாமா", 'சென்டரல் சினிமா'வில், இன்று மாலைக் காட்சி நியர் ஹவுஸ்ஃபுல் !

சாக்லேட் நியூஸை சுடச்சுட வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ். ராமஜெயம் அவர்களுக்கு ஸ்வீட் தேங்க்ஸ்..!

அன்புடன்,
பம்மலார்.


Anbu Pammalar Avargalukku,

Aedho oru thiraipadathil Thiru.Goundamani Kooriyadhai poala....." ADRA SAKKA ! ADRA SAKKA !! ADRA SAKKA !!! "ENGA MAMA KARNAN AACHAE SUMMAVA !!! GETHTHU !!!!

INDHA SANDHOSHATHA INDHA PAATA PAATHU SANDHOSHA PADALAAMA ?

AETHUDA...SAMBANDHAMAE ILLAMA INDHA PAATU VARUDHU APPUDINNU YOSIKKAREENGALA?????

SAMBANDHAM VARAPOAGUDHEY !! ADHUKKUDHAAN !!!


http://www.youtube.com/watch?v=Gu4t6mhZDK4


:smokesmile:

Murali Srinivas
19th August 2012, 11:52 PM
மதுரை நிலவரத்தை இங்கே பதிவிடலாம் என்று வந்தால் எனக்கு முன்னேரே சுவாமி அதை செய்திருக்கிறார். நன்றி சுவாமி. ராம் திரையரங்கைப் பொறுத்தவரை சில பல வருடங்களுக்கு பிறகு இன்றுதான் ஹவுஸ் புல் போர்ட் மாட்டினார்களாம். பெரும்பான்மையான ரசிகர்கள் சென்ட்ரலில் குழுமியிருக்க பொதுமக்களால் மட்டுமே இந்த ஹவுஸ் புல் என சொல்லும்போது கர்ணனின் வெற்றி வீச்சை புரிந்துக் கொள்ளலாம். சென்ட்ரலில் இன்று மாலை ரசிகர்கள் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். கூடுதல் விவரங்கள் விரைவில் வரும்.

பதிவைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி, வாசு சார், எந்த ஒரு இடத்திலும் ஒருவர் செல்வாக்கோடு விளங்கினால் அவருக்கு எதிராக ஒரு சிலர் அணி திரள்வர். அதுதான் அங்கே நடந்தது. மேலும் 84 அக்டோபர்-க்கு பிறகு ஆளும் கட்சியில் கோஷ்டிப் பூசல் வெளிப்படையாக வெடித்தது. அப்போது செல்வாக்கோடு இருந்த ஆர்.எம்.வீ . தனக்கு வேண்டிய ஆட்களை முக்கியமான இடங்களில் அமர்த்திக் கொண்டார். அப்போது நிகழ்ந்ததுதான் மணியனின் வெளியேற்றம். இதில் இன்னும் ஆழமாக இறங்கினால் அது வேறு சில விஷயங்களுக்குள் நம்மை இழுத்து சென்று விடும் என்பதனால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம். நேரில் உரையாடும்போது நிறையப் பேசலாம்.

அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் ஈஃத் முபாரக்

அன்புடன்

RAGHAVENDRA
20th August 2012, 12:59 AM
மறுவெளியீட்டின் மறுவெளியீட்டில் கர்ணன் அரங்கு நிறைவு கண்டு மதுரை சென்னையைத் தொடர்ந்து நடிகர் திலகத்தின் ரசிகர்களின் கோட்டை என்று கூறியுள்ளது மகிழ்வூட்டும் செய்தியாகும். இச்செய்தியை வழங்கிய பம்மலாருக்கும் ராமஜெயம் அவர்களுக்கும், எங்க மாமா அரங்கு நிறைவு செய்திக்காகவும் முரளி சார் உள்பட அனைவருக்கும் உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.

மற்றொரு தேனான செய்தி.

நடிகர் திலகத்தின் சொந்தக் குரலில் விஸ்வநாத நாயக்கடு தெலுங்கு திரைக்காவியம் விரைவில் தமிழகத்தில் பவனி வர உள்ளது. இப்படம் வண்ணங்கள் மெருகேற்றப் பட்டு புத்தம் புதிய பிரதியாய் வலம் வர உள்ளது. அநேகமாக விஸ்வநாத நாயக்கடு திரைப்படத்தை திரையில் பார்க்கும் வாய்ப்பு நம் ரசிகர்களிலேயே மிகப் பெரும்பான்மையோருக்கு இதுவே முதல் முறையாய் இருக்கும்.

அமோக வரவேற்பிற்கு ஆவலாய்க் காத்திருப்போம்.

அன்புடன்

pammalar
20th August 2012, 01:16 AM
Really a great news, Raghavendran Sir..!

Thank you so much..!

pammalar
20th August 2012, 01:18 AM
அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !

திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :19

நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியம்

பாவமன்னிப்பு [வெளியான தேதி : 16.3.1961]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மகாமெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 5.3.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6496-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
20th August 2012, 01:26 AM
மகிழ்ச்சியான தருணத்தில் தாங்கள் வழங்கிய 'என்னோடு பாடுங்கள்' பாடல் வீடியோவுக்கு [அதுவும் பாடகர் திலகத்தின் பின்னணிக் குரலில் வழங்கியமைக்கு] மனமார்ந்த நன்றிகள், பாரிஸ்டர் சார்..! தங்களுக்கும், "நான் வாழவைப்பேன்" மறுவெளியீட்டின் மூலம், அக்காவியம் அவ்வெளியீடுகளில் பெறப்போகும் மாபெரும் வெற்றியின் மூலம், பற்பல மகிழ்ச்சியான தருணங்கள் வெகு சீக்கிரத்தில் வரவிருக்கின்றன. அதற்காக தங்களுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!

மதுரை லேட்டஸ்ட் : மேலதிக விவரங்களுக்கு மேன்மையான நன்றிகள், முரளி சார்..!

pammalar
20th August 2012, 01:38 AM
டியர் பாரிஸ்டர் சார்,

"பாவமன்னிப்பு(1961)" திரைக்காவியத்திலிருந்து நமது ரஹீம்பாய் பாடும் 'எல்லோரும் கொண்டாடுவோம்' பாடல் வீடியோவை ரம்ஜான் பெருநாள் சிறப்புப் பாடலாக அளித்து அசத்திவிட்டீர்கள்..! பாராட்டுக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th August 2012, 01:41 AM
டியர் வாசுதேவன் சார்,

ரம்ஜான் பெருநாள் சிறப்புப் பதிவுகளாக தாங்கள் அளித்த "எழுதாத சட்டங்கள்(1984)" பஷீர்பாய் நிழற்படம், "பாவமன்னிப்பு(1961)" ரஹீம்பாய் நிழற்படம், பஷீர்பாய் தொழுகை செய்யும் வீடியோ, "முகமது பின் துக்ளக்(1971)" திரைப்படத்திலிருந்து 'அல்லா அல்லா' பாடல் வீடியோ என அனைத்தும் அருமை..! பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

Richardsof
20th August 2012, 06:18 AM
மக்கள் திலகத்தின் ஒன்றே சொல்வான் நன்றே செய்வான் என்ற பாடலை ரம்ஜான் நினைவாக வழங்கிய இனிய நண்பர் திரு பம்மலார் அவர்களுக்கு நன்றி .
முரசு தொலைகாட்சியில் நேற்று தாயின் மடியில் கண்டு களித்த நிலையில் . அப்படத்தின் நிழற் படங்களை அள்ளி தெளித்த இனிய நண்பர் திரு .ராகவேந்திரன் அவர்கட்கு நன்றி .
ஞா ன ஒளி வேந்தர் வாசு தேவன் சார்
உங்களின் மின்னல் வேக பதிவுகளுக்கு பாயிண்ட் டு பாயிண்ட் , அருமை ....
அன்புடன்
எஸ்வீ

MAKKAL THILAGAM, NADIGARTHILAGAM . KANNADASAN . WITH MUSIC LEGEND SUBBIAH NAIDU .
http://i47.tinypic.com/ifpiu1.jpg

RAGHAVENDRA
20th August 2012, 08:07 AM
விஸ்வநாத நாயக்கடு படம் பற்றிய ஒரு விளக்கம். வெளியாக இருப்பது, நடிகர் திலகத்தின் குரலில் விஸ்வநாத நாயக்கடு படத்தின் தமிழாக்கம். எனவே மீண்டும் சிம்மக்குரல் திக்கெட்டும் ஒலிக்கும்.

Richardsof
20th August 2012, 10:00 AM
NostalgiaBrothers G. Manikkavel and G. Ratnavel, talk of their father M.A. Gurusamy Nadar, who founded Royal Theatre and the Royal Hindu Restaurant. They describe the times when 100-day celebrations at theatres were routine

“Those were the golden days of cinema,” reminisces G. Ratnavel of Royal Theatres. Classics such asChandralekha,Avvaiyyar,Baga Pirivinai, andPaasamalarruled. Almost every single film was a success story. Royal Theatres on Town Hall Road buzzed as people thronged the theatres and watched their matinee idols. “Every film ran for 100 days. We needed just three films in a year to run the show. Cinema was a big attraction. The only entertainment in Coimbatore was cinema,” says the youngest son of M. A. Gurusamy Nadar, the founder of Royal Theatre and the Royal Hindu Restaurant. It was at Royal that director K. Balachander's Telugu filmMaro Charitra, starring Kamal Hassan and Saritha, set a record. “It ran to packed houses for 420 morning shows,” he recalls.

In the 1920s Gurusamy Nadar who worked in Kolkata, helped one of his relatives set up a hotel in Coimbatore. He took over that hotel and the Royal Hindu Restaurant (RHR) was born on V. H. Road in 1936, opposite the current back gate of the railway station. When the gate shifted, he moved the restaurant including boarding and lodging to its current location in 1938.

Young Gurusamy Nadar had a flair for drama. He brimmed with ideas. His acquaintance with theatre stalwarts such as M.K.Thyagaraja Bhagavathar, Pulimoot Ramasamy and N. S. Krishnan, who frequented Coimbatore to conduct dramas, introduced him to world of arts. They were regular guests at RHR.

Theatre artist R. S. Manohar, who immortalised villain roles on screen, stayed at RHR, when he performed his super hit “Lankeswaran” at VOC Park Grounds. So did N.S. Krishnan, whose theatre movement used comedy to drive home social messages.

Gurusamy Nadar built the Royal Theatre during the independence period, basically for dramas. T. K. Shanmugham and T. K.Bhagavathy, popular artists of a travelling troupe stagedAvvaiyar,almost every day. T. K. Shanmugham mastered the art of make-up. “He would start to put on the make-up hours before the show to get the drooping chin and shrivelled skin of Avvaiyar just right. Kamal Hassan's make-up technique in films such asIndianandAvvai Shanmugi is much talked about but T.K. Shanmugham introduced it much earlier,” says Ratnavel. The travelling drama troupe constructed Shanmugha Theatre and ended their nomadic life. The dramas were performed there. Then, Royal Theatre opened its gates for films. When Gurusamy Nadar passed away when he was 51, his wife Chinnathaimmal, a courageous woman, took over.

Ratnavel talks about the association with one of RHR's guests, the 16-year-old MGR, who was a part of a drama troupe. Gurusamy's eldest son G. Sundravel and MGR became good friends and the future CM became like family.

“On every visit to Coimbatore as a CM right till he breathed his last, MGR made it a point to visit my mother at our home,” says Ratnavel. During his shooting schedule in Coimbatore, food always went from the RHR home. “He loved chicken,” he says fondly. Whenever Sivaji Ganesan stayed at the hotel, he had food at their home, a stone's throw away from the hotel. Coimbatore's hospitality bowled over the stars. Several other stars including Nagesh, Nambiar and Saroja Devi bonded with the family. “They frequented the city as their films invariably ran for 100 days and the celebrations that followed brought them on the dais in front of the audience,” he says.
http://i49.tinypic.com/2zg9lhs.jpg

vasudevan31355
20th August 2012, 10:47 AM
மிக மிக அபூர்வ புகைப்படம்.

நடிகர் திலகத்தின் காவியங்களில் ஒரு காவியம் நூறாவது நாள் வெற்றி விழா கண்ட போது விழாவில் நடிகர் திலகம் கலந்துகொண்ட அற்புத புகைப்படம் ஒன்று இணையத்தில் கிடைத்தது. அதை உடனே தங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. புகைப்படம் சற்று சிறிய வடிவில் இருந்ததால் அதை பெரிதாக்கித் தந்துள்ளேன். நிஜமாகவே அபூர்வ படம் தானே! (நடிகர் திலகத்தை காணத் துடிக்கும் ஜனத்திரளைப் பாருங்கள்)

when one of sivaji's movies ran for more than 100 days in one theater we had to come to receptions in various cities. here are some of the pictures of such events. it was pretty frightening.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/rare.jpg

இந்த அரிய படத்தைத் தரவேற்றிய அன்பருக்கு கோடி நன்றிகள்.

vasudevan31355
20th August 2012, 10:53 AM
மற்றுமொரு அரிய புகைப்படம்.

Gamal Abdel Nasser, then president of Egypt, came to Madras, India, to give sivaji ganesan the all africa-asia filmprice as best actor!

http://www.fotothing.com/photos/7d9/7d958efcc297e7975f645eb67666520b.jpg

vasudevan31355
20th August 2012, 11:54 AM
திரைப்படத் துறையில் நீண்ட காலம் சவுண்ட் எஞ்சினியராகப் பணி புரிந்த திரு.N. சேஷாத்ரி அவர்களுடன் அட்டகாசமான தோற்றப் பொலிவுடன் நடிக தெய்வம்.

நன்றி: தி ஹிந்து.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sound.jpg

mr_karthik
20th August 2012, 01:47 PM
முந்தாநாள் பதிவுகளின் எண்ணிக்கையைப் பார்த்தபோது, 'முந்துவதற்கு இன்னும் 11 பதிவுகள் பாக்கியிருக்கின்றன. முந்தியதும் இரண்டையும் ஒப்பிட்டு இதுபற்றிய ஒரு பதிவு இடவேண்டும்' என்று நான் எண்ணியிருக்க, நேற்று வர முடியாததால் இன்று வந்து பார்த்தால் ராகவேந்தர் சார் சூப்பராக ஒப்பீடு செய்து அருமையான பதிவை அளித்து விட்டார்.

இதைப்ப்பார்த்ததும், கடந்த காலங்களில் நடிகர்திலகத்தின் படங்களே ஒன்றையொன்று மிஞ்சிய வரலாறுகள்தான் நினைவுக்கு வருகின்றன.

'அங்கே' 27 நாட்களில் 201 பதிவுகள்
'இங்கே' 27 நாட்களில் 867 பதிவுகள்

மகத்தான சாதனை.

vasudevan31355
20th August 2012, 02:01 PM
அன்பின் வடிவங்கள் ரஹீம், மேரி ஜோடியின் அன்பான ஈஃத் பெருநாள் வாழ்த்துக்கள்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/fgvhm.jpg

KCSHEKAR
20th August 2012, 04:46 PM
Maalaimalar - 20-08-2012

http://cinema.maalaimalar.com/2012/08/20155454/Re-release-sivaji-telugu-movie.html

KCSHEKAR
20th August 2012, 04:57 PM
இரண்டு நாட்கள் திரியைப் பார்க்காமல் விட்டால், பத்து நாட்கள் லீவு போட்ட பள்ளி மாணவனுக்கு மலைபோல் சேரும் home work போல், அடுக்கடுக்கான, அருமையான பதிவுகள்.

திரியின் தூண்களுக்கு நன்றி.

pammalar
20th August 2012, 07:01 PM
நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 3

தேசிய திலகம் பற்றி அமரர் ராஜீவ் காந்தி

நடிகர் திலகம் கலையுலகில் 50 ஆண்டுகள் கோலோச்சி பீடுநடை போடுகின்றதைப் பாராட்டி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் எழுதிய 25.9.1984 தேதியிட்ட பாராட்டுக் கடிதத்தின் நகல் [உதவி : நமது ஹப்பர் திரு.கே.சந்திரசேகரன்]

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4369aa.jpg

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/Rajiv1-1-1.jpg

இன்று 20.8.2012 முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் 69வது பிறந்த தினம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
20th August 2012, 08:15 PM
அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !

திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :20

நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியம்

பாவமன்னிப்பு [வெளியான தேதி : 16.3.1961]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மகாமெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 5.3.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6519-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
20th August 2012, 09:06 PM
டியர் வாசு சார் & esvee சார்,

Webல் காணப்படும் அருமையான அரிய நிழற்படங்களை நமது Hubல் அள்ளி அளித்துவரும் தங்களுக்கு எனது அகம் குளிர்ந்த நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
20th August 2012, 09:07 PM
இரண்டு நாட்கள் திரியைப் பார்க்காமல் விட்டால், பத்து நாட்கள் லீவு போட்ட பள்ளி மாணவனுக்கு மலைபோல் சேரும் home work போல், அடுக்கடுக்கான, அருமையான பதிவுகள்.

திரியின் தூண்களுக்கு நன்றி.

மிக்க நன்றி, சந்திரசேகரன் சார்..!

"விஸ்வநாத நாயக்குடு" குறித்த 'மாலை மலர்' சுட்டிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!

pammalar
20th August 2012, 09:09 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 9

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 9.1.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6491-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

vasudevan31355
21st August 2012, 07:20 AM
Vishvanatha Nayagudu in Tamil

http://www.behindwoods.com/tamil-movie-news-1/aug-12-03/sivaji-ganesan-karnan-20-08-12.html

vasudevan31355
21st August 2012, 07:28 AM
http://www.tamilkey.com/sivaji-to-wow-as-nagama-nayakar.html

vasudevan31355
21st August 2012, 07:29 AM
http://tollywoodmovies.com/sivaji-ganesans-next/

vasudevan31355
21st August 2012, 07:39 AM
http://articles.timesofindia.indiatimes.com/2012-08-20/news-interviews/33273738_1_sivaji-ganesan-telugu-film-tamil-version

vasudevan31355
21st August 2012, 07:54 AM
விஸ்வநாத நாயகுடு (தெலுங்கு) (1.5.1987)

http://i142.photobucket.com/albums/r92/icffans/vlcsnap-4768484.png

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/9-15-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-98-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-36-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-21-1.jpg

1.5.1987- இல் வெளிவந்த நடிகர் திலகத்தின் நேரடி தெலுங்கு வெற்றிச் சித்திரம் 'விஸ்வநாத நாயகுடு'.

விஜயநகர சரித்திரப் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் நடிகர் திலகத்தின் மிக அரிய காவியங்களில் ஒன்று.

திரைக்கதை, வசனம், இயக்கம் தாசரி நாராயண ராவ்.

நாகம்ம நாயக்கர் என்ற அற்புத ரோலில் நடிகர் திலகம். பழைய மனோகராவை நினைவுபடுத்தும் சங்கிலிப் பிணைப்புக் காட்சிகள். அதிர வைக்கும் வசனங்கள். வயதானாலும் சிங்கம் சிங்கம்தான் என்று தலைவர் மீண்டும் நிரூபித்த படம்.

நடிகர் திலகத்தின் மகனாக டைட்டில் ரோல் விஸ்வநாத நாயகுடுவாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா.

உடன் ஏராளமான நட்சத்திரக் குவியல். கே .ஆர்.விஜயா, கிருஷ்ணதேவராயராக கிருஷ்ணம்ராஜ், (நடிகர் திலகத்தின் மற்றொரு தெலுங்குத் திரைப்படமான 'ஜீவன தீராலு' (தமிழில் 'வாழ்க்கை அலைகள்') பட ஹீரோ, ராமகிருஷ்ணா ('புண்ணியபூமி' திரைப்படத்தில் தலைவரின் அண்ணனாக வேடமேற்றவர்), கிருஷ்ணாவின் ஜோடியாக, கலாவதியாக ஜெயப்பிரதா, சுமலதா, ராஜசுலோச்சனா, திம்மராசுவாக பிரபாகர் ரெட்டி ('விஸ்வரூபம்' படத்தில் தலைவருக்கு அடைக்கலம் தரும் வில்லன்), சோமையாஜுலு, பிரம்மானந்தம், காந்தாராவ், சரத்பாபு, ரங்கநாத், ஜெயபிரபா என்று தெலுங்குத் திரைப்படவுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் திலகத்துடன் இணைந்து பெருமையடைந்தார்கள்.

இசை G.ராகவலு.

ஒளிப்பதிவு V.S.R. சாமி.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகத்திற்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் தெலுங்குப் படவுலகின் புகழ் பெற்ற நடிகர் ஜக்கையா அவர்கள்.

சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான ஆந்திர அரசின் 'நந்தி' விருது இப்படத்திற்காக நம் P.சுசீலா அவர்களுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

vasudevan31355
21st August 2012, 09:10 AM
விஸ்வநாத நாயகுடு (தெலுங்கு) (1.5.1987)

மிக அரிய வீடியோப் பதிவு.

'கர்ணன்' ஜுரம் போய் இப்போது 'விஸ்வநாத நாயகுடு' ஜுரம் திரையுலகைப் பற்றிக் கொண்டு விட்டது. நடிகர் திலகத்தின் சொந்தக் குரலில் தமிழ்நாடெங்கும் விரைவில் கர்ஜனை புரியப் போகிறார் 'விஸ்வநாத நாயகுடு'. மிக மிக அபூர்வ படமான இந்தப் படத்தின் dvd எங்கும் இல்லை. பெரும்பான்மையானோர் பார்த்திருக்கவே முடியாத காவியம் இது. இப்போது அந்த அரிய வாய்ப்பு 'கர்ணன்' மூலம் நமக்குக் கிட்டியுள்ளது நமக்கெல்லாம் மிகப் பெரிய சந்தோஷத்தை அளித்துள்ளது.

நம் அனைத்து நண்பர்களும் திரையில் நாகம்ம நாயக்கரை கண்டு களிப்பதற்கு முன்னால் நமது திரியில் அவரைக் கொஞ்சமேனும் கண்டு குதூகலிக்க வேண்டாமா! அதனால்தான் இந்த அரிய வீடியோப் பதிவு. முன்பொருமுறை (கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னால்) நல்ல வேலையாக, அதிர்ஷ்டவசத்தால் இப்படத்தை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருந்தேன். (இப்போது எந்த தளத்திலும் இப்படம் இல்லை) இப்போது எப்படி உதவுகிறது!

கிருஷ்ணதேவராயரின் பேரன்பிற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமான நாகம்மா நாயக்கர் தன் மகன் விஸ்வநாத நாயகுடுவாலேயே விதிவசத்தால் போர்க்களத்தில் கைது செய்யப்பட்டு, ராஜ துரோகியாக குற்றம் சாட்டப்பட்டு, நடு வீதிகளில் வண்டியில் கைதியாய் கட்டி இழுத்து வந்து அவமானப் படுத்தப்பட்டு, பின் ராஜ சபையில் மனோகரனைப் போல சங்கிலியால் பிணைக்கப்பட்டு ராயரின் முன் நிறுத்தப் படுகையில்...

நம் நடிக மாமன்னரின் அட்டகாசங்களை இனி சொல்லித்தான் தெரிய வேண்டுமோ! சாம்பிளுக்கு பார்த்தே விடுவோமே!


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TiIg2EgJ1Mo


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
21st August 2012, 11:51 AM
'விஸ்வநாத நாயகுடு' வெள்ளித்திரையில் தமிழில் பவனி வரப்போகும் சந்தோஷப் பதிவை அளித்த ரசிக வேந்தருக்கு நன்றி. திரியின் சாதனை பற்றிய புள்ளி விவரங்களும் கலக்கல்.

vasudevan31355
21st August 2012, 12:23 PM
அன்பு பம்மலாரே!

தங்கள் அன்புப் பாராட்டிற்கு நன்றிகள்.

திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் வரிசையில் 'பாவமன்னிப்பு' முதல் வெளியீட்டு விளம்பரங்கள் ரகளை. ரம்ஜான் திருநாள் அன்று விளம்பரங்களை பதிவு செய்தது டைமிங்.

'தேசிய திலகம்' பற்றி அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் பாராட்டுக் கடித நகல் பதிவிட்டமைக்கு நன்றிகள். ஏழைகளுக்கு பேருதவிகள் புரிந்த நடிகர் திலகத்தை திரு. ராஜீவ் அவர்கள் கடிதத்தில் நினைவு கூர்ந்து பாராட்டியிருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. ராஜீவ் அவர்களுடன் நம்மவர் சிரித்தபடி போஸ் கொடுப்பது அம்சம். ராஜீவ் பிறந்த தினத்தை மறக்காமல் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருப்பது போற்றுதலுக்கிரியது.

'கப்பலோட்டிய தமிழன்' மறு வெளியீட்டு விளம்பரமும் அருமையாக உள்ளது. நான் ஆறாம் வகுப்பு படிக்கையில் எங்கள் பள்ளியில் அனைவரையும் கொட்டும் மழையில் கடலூர் துறைமுகம் கமர் தியேட்டருக்கு அழைத்துச் சென்று 'கப்பலோட்டிய தமிழன் 'காவியத்தை பள்ளி நிர்வாகம் காண்பித்து மகிழச் செய்தது தங்களால் இப்போது நெஞ்சில் நிழலாடுகிறது. அதற்காக தங்களுக்கு என் மனம் குளிர்ந்த நன்றிகள்.

vasudevan31355
21st August 2012, 12:28 PM
டியர் சந்திரசேகரன் சார்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி. அருமையான மாலை மலர் இணைப்புக்கு நன்றி! ஹோம் வொர்க் அதிகமாக இருந்தாலும் அதை சந்தோஷமாக செய்கிறீர்களே! அதற்காக என் நன்றிகள்.

mr_karthik
21st August 2012, 04:43 PM
அன்புள்ள பம்மலார் சார்,

'ரமலான் ஈத்' பண்டிகையையொட்டி தாங்கள் பதித்திருந்த பதிவுகள் அனைத்தும் அருமையோ அருமை. குறிப்பாக 'பாவமன்னிப்பு' விளம்பரங்கள் இரண்டும் அட்டகாசம். (துவக்கி விட்டீர்கள், தொடர்ந்து அப்படத்தின் 50-வது நாள், 100-வது நாள், வெள்ளிவிழா விளம்பரங்கள் வரை, தங்களிடம் இருக்கும் பட்சத்தில், பதிவிட்டு அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்).

'கப்பலோட்டிய த்மிழன்' மறு வெளியீட்டு விளம்பரங்களும் அசத்தல் ஆவணங்கள். அப்படத்துக்கு 1976-ல் எமர்ஜென்ஸி காலத்தின்போதுதான் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அப்படத்தை முழு கட்டணத்திலேயே அரங்கு நிறைந்த காட்சியாக கண்டுகளித்த அனுபவம் எனக்கு.

1961 தீபாவளியன்று வெளியான இக்காவியம், அதன்பின்னர் என் நினைவுக்கெட்டிய காலம் வரை மறு வெளியீட்டுக்கு வராத நேரம். அந்த ஆண்டு வெளிவந்த மூன்று 'பா' வரிசைப் படங்களும் அடிக்கடி தியேட்டர்களில் திரையிடப்பட்டுக்கொண்டிருந்த போதிலும், ஏனோ கப்பலோட்டிய தமிழன் வரவில்லை. முதல் வெளியீட்டில் கிடைத்த ரிசல்ட்டைப்பார்த்து விநியோகஸ்தர்கள் பயந்தார்களோ என்னவோ தெரியவில்லை. அதன் காரணமாகவே இப்படத்தின் மீது அதிக ஆவலும் எதிர்பார்ப்பும் எகிறிப்போயிருந்தது.

இந்நிலையில் எனது பள்ளிமாணவப் பருவத்தின்போது 1972-ஜூன் மாதம் திடீரென்று தினத்தந்தியின் கடைசிப்பக்கத்தில் 'வெள்ளிக்கிழமை முதல் சித்ராவில்' என்று தலைப்பிட்டு கப்பலோட்டிய தமிழன் படத்தின் கால்பக்க விளம்பரம் வந்திருப்பதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் விழிகள் அகன்றன. எவ்வளவு நாள் காத்துக்கிடந்த வாய்ப்பு என்று மனம் குதூகலித்தது. விளம்பரத்தில், கட்டம் போட்ட கைதி உடை மற்றும் தொப்பியுடன் நடிகர்திலகம் கீழே கிடக்க, ஒரு பெரிய பூட்ஸ் அணிந்த கால் (கால் மட்டும்தான்) அவரை மிதிக்க உயர்ந்திருப்பது போல விளம்பரமிட்டிருந்ததைப் பார்த்து மனம் எகிறியது. நண்பர்கள் கூடிப்பேசினோம். எப்படியும் முதல்நாளே பார்த்துவிட வேண்டுமென்று மனம் துடித்தது. ஆனால் கையில் காசு இல்லை. அதனால் வெள்ளிக்கிழமை போக முடியவில்லை. நண்பர்கள் சிலர் 'எப்படியும் சுற்றியடித்து நம்ம ஏரியா (வடசென்னை) தியேட்டருக்கு வரும் அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்றனர். ஆனால் எனக்கு பொறுமையில்லை. இங்கே வரும் என்பது என்ன நிச்சயம்?. ஒருவேளை வராமல் போய்விட்டால்?. வந்த வாய்ப்பை விட்டுவிட முடியுமா?. (அப்போதெல்லாம் படம்பார்க்க தியேட்டரை விட்டால் வேறு வழி கிடையாது).

சனிக்கிழமை காலை தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அப்பாவிடம் போய் விளம்பரத்தைக்காட்டி, படம் பார்க்க பணம் கேட்டேன். (ஒரு மகன் தந்தையிடம் தைரியமாக சினிமாவுக்கு பணம் கேட்கும் அளவுக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே வந்த தரமான படங்களில் ஒன்றல்லவா இக்காவியம்). படத்தின் விளம்பரத்தைப்பார்த்ததும் அவரும் மறுபேச்சுப் பேசாமல் மூன்று ரூபாயை எடுத்துத்தந்தார். (அப்போது முதல் வகுப்பு டிக்கட் 2.60 ). மீண்டும் விளம்பரத்தைப்பார்த்து எந்த தியேட்டர் என்று உறுதி செய்து கொண்ட அவர், 'இந்தப்படத்துக்குத்தானே போறே?. போய்ட்டு வந்ததும் என்கிட்டே டிக்கட்டைக்காட்டணும்' என்று கண்டிஷன் போட்டார். (பைத்தியக்கார அப்பா, அவரே போகச்சொன்னாலும் இந்தப்படத்தை விட்டு வேறு படத்துக்குப்போக மாட்டேன் என்பது அவருக்குத்தெரியவில்லை).

பிராட்வே பஸ் ஸ்டாப்பில் ஏறி மவுண்ட்ரோடு தபால் நிலையத்தில் இறங்கினால் 25 பைசா டிக்கட். அதுவே பாரீஸ் வரை நட்ந்துபோய் அங்கு ஏறி, Hindu பத்திரிகை அலுவலகம் முன்பு இறங்கினால் டிக்கட் 15 பைசா. சிறிது தூரம் நடந்தாலும் பரவாயில்லையென நாங்கள் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தோம். மாலைக்காட்சிக்கு நேரமாகிவிட்டதால், ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்றால், சித்ரா தியேட்டரின் வாசல்கேட்டில் மாட்டியிருந்த ‘Housefull’ போர்டு எங்களை வரவேற்றது. எங்களுக்கு, குறிப்பாக எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. நான் டிக்கட் வாங்கியபின் இந்த போர்டை மாட்டியிருந்தால் என்னைவிட சந்தோஷப்படுபவர் யாரும் இல்லை.

வந்ததற்கு எந்தப்படத்தையாவது பார்த்துவிடவேண்டும் என்று வந்திருந்த நண்பர்கள் உடனடி முடிவெடுத்து, 'சென்னை கங்கை'யின் மறு கரையிலிருந்த கெயிட்டி தியேட்டருக்கு ('குறத்தி மகன்' என்று நினைக்கிறேன்) பார்க்கப்போய்விட்டனர். ஆனால் கப்பலோட்டிய தமிழனைத்தான் பார்க்கவேண்டும் என்று வந்திருந்த நான் மட்டும், கேட்டுக்கு வெளியே கொஞ்சம் நேரம் நின்று, காம்பவுண்டுக்கு மேலே இருந்த தட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த இரண்டு பிரம்மாண்ட போஸ்ட்டர்களையே சிறிது நேரம் ஏக்கத்துடன் பார்த்துகொண்டிருந்து விட்டு மீண்டும் 15 பைசா டிக்கட்டில் வீடு திரும்பினேன்.

பெரிய வால்வு ரேடியோவில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக்கொண்டிருந்த அப்பா சற்று ஆச்சரியமாக தலையைத்தூக்கி, 'ஏண்டா, போகலையா?' என்று கேட்டார். 'போனேன்பா, நாங்க போகமுன்னாடியே ஃபுல் ஆயிடுச்சு' என்றதும், 'சரி அப்போ நாளைக்குப்போ' என்றவர் சட்டென்று 'வேணாம், நாளைக்கு இன்னும் கூட்டமாயிருக்கும். திங்களன்னைக்கு ஸ்கூல் விட்டு வந்ததும் போ' என்றார். பணத்தை திருப்பி வாங்கிக்குவாரோ என்று பயந்த எனக்கு குதூகலமாயிருந்தது. எனக்கென்னவோ, தன் மகன் எப்படியாவது இந்தப்படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று அவரும் ஆர்வமாக இருந்தது போலத்தோன்றியது.

திங்கள் மாலை பள்ளிவிட்டு வந்ததும் தாமதிக்காமல் நான் மட்டும் தனியாக பஸ்ஸில் போனேன். பின்னே, நண்பர்கள்தான் இருந்த காசுக்கு 'குறத்திமகன்' பார்த்துவிட்டனரே. பாலத்தைக்க்டக்கும்போதே தென்பட்ட கூட்டம் மீண்டும் பயத்தைக்கிளப்பியது. இருந்தாலும் கிட்டே போய்ப் பார்த்தபோது சற்று தைரியம் வந்தது. சற்று முன்னமேயே சென்றுவிட்டதால் 2 ரூபாய் டிக்கட்டே கிடைக்கும்போல இருந்தது. சித்ரா தியேட்டரில் 2 ரூபாய் டிக்கட் எத்தனை என்று போர்டில் பார்த்து, அதில் பாதியை பெண்களுக்கு கழித்துவிட்டு, கியூவில் நின்றவர்களை தோராயமாக எண்ணிப் பார்த்ததில், டிக்கட் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தோன்றியது. கவுண்ட்டர் திறந்ததும், வழக்கம்போல பிஸ்த்தாக்கள் ஒரு பத்துபேர் வரிசையில் நடுவில் நுழைந்தனர். அச்சத்துடன் நெருங்கிப்போக, டிக்கட் கிடைத்து விட்டது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே உள்ளே போகாமல், எனக்குப்பின் இன்னும் எத்தனை பேருக்கு டிக்கட் கிடைக்கிறதென்று பார்த்துக்கொண்டிருக்க, ஐந்தாறு பேர் வாங்கியதும் கவுண்ட்டர் அடைக்கப்பட்டது. நல்லவேளை 'வஸ்தாதுகள்' இன்னும் ஒரு ஐந்து பேர் நுழைந்திருந்தால் என் கதி அவ்வளவுதான். உள்ளே போய் சீட்டில் கர்சீப் போட்டுவிட்டு, வெளியே வந்து முதல் வகுப்பு பக்கம் போனால், அதுவும் ஃபுல். கடைசி கிளாஸ் டிக்கட் முடிந்ததும் திங்களன்றும் ‘Housefull’ போர்டு போட்டார்கள். சந்தோஷத்துக்குக் கேட்கணுமா?. நிறையப்பேர் இந்தப்படத்தை எதிர்பார்த்திருப்பார்கள் போலும்.

படம் துவங்கியதும் ரொம்ப உணர்ச்சி மயமாகப்போனது. ஆரம்பத்தில் கைதட்டியதுதான். அதன்பிறகு கைதட்டலுக்கெல்லாம் வேலையில்லாமல் அனைவரும் படத்தோடு ஒன்றிப்போனார்கள். ஆனால் கலெக்டர் வின்ச் துரை (எஸ்.வி.ரங்காராவ்) யிடம் நடிகர்திலகம் பேசும்போது, வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரைக்குறிப்பிட, வின்ச்துரை அதிர்ச்சியுடன் சிதம்பரனாரைப் பார்க்கும்போது அங்கே வ.உ.சி. முகம் மறைந்து கட்டபொம்மன் தெரியுமிடத்தில் கைதட்டலால் தியேட்டரே அதிர்ந்தது.

ஆனால் ஜெமினிகணேஷ் ஏற்றிருந்த மாடசாமி ரோலுக்கு தேவையில்லாமல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதிக சீன்களும், ஒன்றுக்கு இரண்டாக டூயட் கொடுத்ததும் அந்த வயதில்கூட எனக்குப்பிடிக்கவில்லை. படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர்கள் போலத்தோன்றியது.

ஒரு விஷயம் சொன்னால் உங்களில் பெரும்பாலோருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். படத்தின் சென்ஸார் சர்டிபிகேட் காண்பிக்கப்பட்டபோது, Kappalottiya Thamizhan (Part Colour) என்று சர்ட்டிபிகேட்டில் இடம்பெற்றிருந்தது. அதைப்பார்த்து விட்டு, படம் துவங்கியதும் அதை மறந்து போனேன். ஆனால் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, சிதம்பரனார் சுதேசி கப்பல் கம்பெனிக்காக கப்பலை வாங்கிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் அந்த வரலாற்று நிகழ்வில், கரையிலிருக்கும் திரண்ட கூட்டத்தோடு, பாரதியும், சுப்பிரமணிய சிவாவும் பாட, வ.உ.சி. கப்பலில் கையசைத்துக்கொண்டே வரும் "வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்" என்ற பாடல் மட்டும் கேவா கலரில் எடுக்கப்பட்டிருந்தது, ஆச்சரியமாக இருந்தது.

அதன்பிறகு இதுவரை கப்பலோட்டிய தமிழன் படத்தை குறைந்தது 25 முறையாவது பார்த்திருப்பேன். ஆனால் அந்தப்பாடலை கலரில் பார்த்தது அந்த ஒருமுறை மட்டுமே. அதன்பிறகு பார்த்ததபோது படம் முழுக்க கருப்புவெள்ளையில்தான். 1972-ல் முதன்முறையாக நான் பார்த்தபோது திரையிடப்பட்ட அந்த பிரிண்ட், அநேகமாக 1961-ல் படம் ரிலீஸானபோது உருவாக்கப்பட்ட பிரிண்ட்டாக இருக்கலாம். அதன்பிறகு எடுக்கப்பட்ட பாஸிட்டிவ்கள் அனைத்தும் கருப்புவெள்ளையில்தான் எடுக்கப்பட்டது.

வ.உ.சி. சிறைக்குச்செல்லும்போதே கண்களில் நீர்கட்டத்துவங்கி விட்டது. சிறையில் வழங்கப்படும் உணவின் வாடை தாங்காமல், அப்படியே வைத்து விட்டு, ஓட்டைவிழுந்த தகரக்குவளையிலிருந்து தண்ணீர் குடிக்க எடுக்கும்போது, தண்ணீர் முழுவதும் ஓடி, குவளை காலியாக இருக்கும் காட்சியில் கண்ணீர் வடியத்துவங்கியது. செக்கடியில் அவர் கழுத்தில் மாடுகளின் கழுத்தில் பிணைக்கும் சங்கிலியை மாட்டி, சிறைக்காவலன் அவரை அடித்து செக்கிழுக்கச்செய்ய, இவரும் கால்கள் தரையில் இழுபட செக்கிழுக்கும் காட்சியில் கேவிக்கேவி அழத்தொடங்கிவிட்டேன். என் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அந்தக்கண்ணீர் வ.உ.சி.யின் தியாகத்துக்கா, நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்புக்கா, பாரதத்தாயின் அடிமைத்தனத்தை நினைத்தா என்பது தெரியவில்லை. தியேட்டர் முழுவதும் கேவல்கள், விசும்பல்கள்.

(அன்றைய இளம்பிராயத்தில்தான் அப்படியென்றில்லை. இன்றைக்கும் கப்பலோட்டிய தமிழனைப் பார்க்கும்போதெல்லாம், நினைக்கும்போதெல்லாம், ஏன் இப்போது பதிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் அதே நிலைதான்).

படம் முடிந்து பஸ்ஸில்போகும்போதும் கண்ணீர்தான். இரவு சாப்பிடாமலேயே படுத்து விட்டேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று தெரியாது. காலையில் கண்விழித்தபோது கண்கள் இரண்டும் சிவந்திருந்தன.

uvausan
21st August 2012, 06:22 PM
Excellent Mr.karthik - wonderfully narrated - taken all of us with you to our childhood days. I shed more tears in reading your narration than what I did it in theatre . Thanks once again for a rewinding ...

joe
21st August 2012, 07:54 PM
கார்த்திக் :notworthy:

SoftSword
21st August 2012, 08:04 PM
பைத்தியக்கார அப்பா, அவரே போகச்சொன்னாலும் இந்தப்படத்தை விட்டு வேறு படத்துக்குப்போக மாட்டேன் என்பது அவருக்குத்தெரியவில்லை.


:lol:
super malarum ninaivugal karthik...

joe
21st August 2012, 08:11 PM
அச்சில் ஏறும் இலக்கியங்களுக்கு எள் முனையளவும் குறைவில்லாத எழுத்து .அருமையான நடை கார்த்திக் :clap:

RAGHAVENDRA
21st August 2012, 08:22 PM
அந்தக்கண்ணீர் வ.உ.சி.யின் தியாகத்துக்கா, நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்புக்கா, பாரதத்தாயின் அடிமைத்தனத்தை நினைத்தா என்பது தெரியவில்லை.

பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வாக்கியம்
நெஞ்சை நெகிழச் செய்யும் சிலாக்கியம்
கார்த்திக்.
உங்கள் எழுத்தைப் படிப்பது எங்கள் பாக்கியம்....

தாங்கள் கூறியது போல் வெள்ளிப் பனி மலையின் பாடலில் மட்டும் வண்ணத்தில் திரையிட்டது இன்றும் நினைவில் நிழலாடுகிறது. முதல் வெளியீட்டில் பார்க்க முடியவில்லை எனக்கும். ஆனால் 1964ல் சென்னை மெரீனாவில் உள்ள விளையாட்டுத் திடலில் மீன் வளக் காட்சி நடைபெற்றது. அங்கு பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொம்மலாட்டம், கரகாட்டம் போன்றவற்றோடு அன்றாடம் திரைப்படத் திரையீடும் உண்டு. அப்படி ஒரு நாள் நான் பார்த்தது தான் கப்பலோட்டிய தமிழன். திறந்தவெளியில் அந்தப் படத்தை மாலை நேரத்தில் பார்த்தது மறக்க முடியாத அனுபவம். அப்போது திரையிடப் பட்ட பிரதியில் தான் அந்தப் பாடல் வண்ணத்தில் ஒளி பரப்பானது. தாங்கள் எவ்வளவு சிரமப்பட்டு அந்தப் படத்தைப் பார்த்தீர்களோ, அதற்கு நேரெதிராக வீட்டுக்கு அருகாமையில் இலவசமாக அந்தப் படத்தை நான் பார்த்தது நினைவுக்கு வருகிறது. ஆனால் அப்போது சிறு வயது. அதே கப்பலோட்டிய தமிழன் படத்தை ஓடியன் திரையரங்கில் நன்கு தீவிரமாக முற்றி விட்ட சிவாஜி ரசிகனாக டிக்கெட்டை முண்டியடித்துக்கொண்டு வாங்கியதும் கூட்டத்தோடு ஆரவாரத்தோடு பார்த்ததும் கிட்டத் தட்ட தங்களுடைய அனுவங்களே. இருந்தாலும் அந்தப் படத்திற்காக தாங்கள் பட்ட கஷ்டங்கள் தங்களுக்கு மட்டுமல்ல படித்த அனைவரின் கண்களையும் ஈரமாக்கியிருக்கிறது என்பது திண்ணம்.

அன்புடன்
ராகவேந்திரன்

J.Radhakrishnan
21st August 2012, 09:29 PM
"(அன்றைய இளம்பிராயத்தில்தான் அப்படியென்றில்லை. இன்றைக்கும் கப்பலோட்டிய தமிழனைப் பார்க்கும்போதெல்லாம், நினைக்கும்போதெல்லாம், ஏன் இப்போது பதிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் அதே நிலைதான்).

படம் முடிந்து பஸ்ஸில்போகும்போதும் கண்ணீர்தான். இரவு சாப்பிடாமலேயே படுத்து விட்டேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று தெரியாது. காலையில் கண்விழித்தபோது கண்கள் இரண்டும் சிவந்திருந்தன. "

Mr.karthik sir,

Excellent! Excellent! Excellent!

Murali Srinivas
21st August 2012, 09:38 PM
அற்புதம் என்ற ஒரு வார்த்தையை தவிர வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை! தொடருங்கள் கார்த்திக்.

அன்புடன்

anm
21st August 2012, 09:46 PM
அன்பு நண்பர் கார்த்திக் அவர்களுக்கு,

மனதை கசக்கிப் பிழிந்து விட்டீர்கள் உங்களுடைய உண்மையான எழுத்தின் மூலம், ஏனென்றால் அந்தப் படத்தை எப்பொழுது பார்த்தாலும் எனக்கும் அதே நிலை தான்.

எல்லாவற்றிர்க்கும் முத்தாய்ப்பாக, வயதான சிதம்பரனராக வரும் ஒவ்வொரு காட்சியும் சொல்லில் அடங்காதது.

நன்றிகள், எங்கள் எல்லோருடைய உள்ளத்திலும் இந்த உணர்ச்சிகளைத் தட்டிவிட்டதில்.

ஆனந்த்

vasudevan31355
21st August 2012, 09:52 PM
http://i163.photobucket.com/albums/t288/Snag_Sets/Non%20Animated/Creddy%20Megaphone/GoodJob.gif

டியர் கார்த்திக் சார்,

ரியலி ஒன்டர்புல். அனுபவித்துப் படித்து மகிழ்ந்தேன். தெள்ளத் தெளிவான நீரோடை போன்ற நடை. அந்த இளம் பிராயத்திலேயே கப்பலோட்டிய தமிழனைக் காண வேண்டும் என்ற தணியாத தங்கள் தாகம்... டிக்கெட் கிடைக்காவிட்டாலும் வேறு படம் பார்க்கும் எண்ணம் இல்லாமல் வீட்டுக்கு திரும்பிய பிடிவாதம்... மறுபடி புதிய உத்வேகத்துடன் ஒருநாள் விட்டு மறுநாள் மறுபடியும் விடா முயற்சியுடன் காவியத்தை கண்ட வேகம்... க.தமிழன் மீதுள்ள மோகம்...மோகத்தினால் நெஞ்சம் முழுக்க ஏற்பட்ட சோகம்.. அனைத்து அனுபவங்களும் அற்புதம்.

நேற்று கூட அருமை பம்மலார் அவர்களும் நானும் கை பேசியின் வழியே கப்பலோட்டிய தமிழனில் நடிகர் திலகத்தின் நடிப்பு ராஜாங்கத்தைப் பற்றி நெக்குருக உரையாடிக் கொண்டிருந்தோம். அதுவும் கிளைமாக்ஸ் காட்சிகளில் இதயத்தின் மேல் இமயமலையை தூக்கி வைத்தாற்போன்ற பாரம் ஏற்படுவது நிஜம். நேற்று முழுப்படத்தையும் பார்த்து முடித்ததற்கு அப்புறம் தான் தெரிந்தது (பலமுறை பார்த்திருந்தாலும் கூட) நடிகர் திலகம் தான் நடித்த கேரக்டர்களில் தனக்குப் பிடித்த கேரக்டராக ஏன் கப்பலோட்டிய தமிழனைச் சொன்னாரென்று!

அருமையான பதிவுக்கு அகம் மகிழ்ந்த நன்றிகள் சார்..

anm
21st August 2012, 09:59 PM
அன்பு நண்பர் வாசுதேவன் அவர்களுக்கு,

அட்டகாசமான "விஸ்வநாத நயகுடு" வீடியோ பதிவிற்கு, மகத்தான நன்றிகளும் வாழ்த்துக்களும்.

ஆனந்த்

RAGHAVENDRA
21st August 2012, 10:05 PM
அருமை பம்மலார் சார்,
கார்த்திக் அவர்களை நெஞ்சை நெகிழ வைக்கும் உணர்வுகளில் மூழ்கச் செய்தது மட்டுமின்றி, எங்களையும் துணைக்கு அழைத்துச் சென்றதற்கு காரணமான தங்களுடை கப்பலோட்டிய தமிழன் பதிவு உணர்வு பூர்வமான ஒன்று. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.

அன்பு வாசுதேவன் சார்,
நாகம்ம நாயக்கடு பாத்திரத்தினைப் பற்றி மஹேந்திராவின் பார்வையிலே நிகழ்ச்சியினை வசந்த் தொலைக் காட்சிக்காக வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் பகிர்ந்து கொண்டது நினைவுக்கு வருகிறது. அவர் தர்பாரில் நடந்து வரும் காட்சியினைப் பற்றி ஒரு செய்தியினை அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். அந்த சுவையான செய்தியினை அந்தப் படம் வெளிவந்து நம் நண்பர்கள் பார்த்த பிறகு பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

தெரிந்தவர்கள் அமைதி காக்கவும்,
தெரியாதவர்கள் பொறுமை காக்கவும்.

அன்புடன்
ராகவேந்திரன்

vasudevan31355
21st August 2012, 10:10 PM
டியர் ஆனந்த் சார்,

தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

pammalar
21st August 2012, 11:52 PM
டியர் mr_karthik,

1972-ல் அதனுடைய முதல் மறுவெளியீட்டில், தாங்கள் உணர்ச்சிப்பெருக்கில் பார்த்து எமோஷனலான "கப்பலோட்டிய தமிழன்" காவிய அனுபவங்கள் பற்றிய தங்களின் பதிவு, தங்களது முந்தைய சிகர பதிவான "அவன் ஒரு சரித்திரம்(1977)" வெளியீட்டு நாள் அனுபவங்கள் பதிவை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டது. அத்தனை அதியற்புதமான write-up..! தங்கள் பதிவின் அந்தக் கடைசி பதினோரு வரிகள் என் கண்களையும் குளமாக்கின. [இச்சமயத்தில் தங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் : "கப்பலோட்டிய தமிழன்" காவியம் கூடிய விரைவில் "கர்ண"னைப் போல் மறுவெளியீடு செய்யப்படும் சமயம், கர்நாடகாவில் இருக்கும் தாங்கள் அந்த நேரத்தில் ஒரு நாளேனும் சென்னைக்கு விஜயம் தந்து எங்கள் எல்லோருடனும் அக்காவியத்தை தரிசித்துவிட்டுச் செல்ல வேண்டும். இந்த வேண்டுகோளை நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். தங்களை நாங்கள் (குறிப்பாக அடியேன்) நேரில் காண பிரியப்படுகிறோம், காண்பதற்கு மிகுந்த ஆவலாய் உள்ளோம்..!]

"கப்பலோட்டிய தமிழன்", முதல் மறுவெளியீடாக, ஜூன் 1972-ல் 'சித்ரா'வில் வெளியானதாக தங்களின் அபார நினைவு ஏட்டிலிருந்து எடுத்தியம்பியிருந்தீர்கள். என்னிடம் அந்த விளம்பரம் கைவசம் இல்லை. கிடைத்தவுடன் இடுகை செய்து விடுகிறேன். 'சித்ரா'வில் ஜூன் 1972-ல் என்றால் வெளியான தேதி கண்டிப்பாக 23.6.1972 வெள்ளியன்றுதான் வரும். ஏனென்றால் 10.3.1972 வெள்ளியிலிருந்து 'சித்ரா'வில் புதிய திரைப்படமாக வெளியாகி ஓடிக் கொண்டிருந்த மக்கள் திலகத்தின் "நல்ல நேரம்", 105 வெற்றி நாட்களை 22.6.1972 வியாழனன்று பூர்த்தி செய்தது. பின்னர் 'சித்ரா'வில் புதிய திரைப்படமாக மக்கள் கலைஞர் ஜெய்யின் "அவசர கல்யாணம்", 29.6.1972 வியாழனன்று வெளியானது. அந்த இடைப்பட்ட காலகட்டத்தில் [23.6.1972 வெள்ளி முதல் 28.6.1972 வரை], "கப்பலோட்டிய தமிழன்" வெளியாகி சக்கைபோடு போட்டிருக்கிறது.

'தனது மகன் நல்ல, சிறந்த திரைப்படங்களை மட்டும்தான் பார்க்கவேண்டும்' என்று தங்கள் அன்புள்ள அப்பா நினைத்ததில் தவறில்லை. தாங்கள்தான் தேசிய திலகத்தின் பக்தராயிற்றே..! "கப்பலோட்டிய தமிழன்" தவிர்த்து அன்று வேறு எந்தத் திரைப்படத்திற்கும் போகமாட்டீர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..! தங்களின் இந்த அருமையான பதிவில் ஒரு மினி பயணப்பதிவும் இடம்பெற்றிருப்பது வெகு சுவாரஸ்யம். அதில் அன்றைய பஸ் கட்டண நிலவரங்களெல்லாம் தெரிய வருகிறது. முரளி சார், ராகவேந்தர் சார் மட்டுமா வரலாற்று விற்பன்னர்கள், தாங்களும்தான்..! 'சித்ரா'வில் நீங்கள் சென்றபோது 'ஹவுஸ்ஃபுல்' போர்டு மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு வருத்தமடைந்திருந்தாலும் படம் நன்றாகப் போகிறது என்று மகிழ்ச்சியும் அடைந்திருப்பீர்கள்..! பின்னர் திங்களன்று டிக்கெட் கிடைத்து படம் பார்த்த அனுபவம் லாட்டரியில் கோடி கிடைத்தது போன்றதொரு உணர்வுக்கும் மேலிருக்கும்..! அது சரி, பிஸ்தாக்களுக்கும், வஸ்தாதுகளுக்கும் எந்தக் காலத்தில்தான் குறைச்சல்..!

'வெள்ளிப்பனிமலையின் மீதுலவுவோம்' பாடல் கேவா கலரில் படமாக்கப்பட்டிருந்தது என்பது ஒரு அரிய-புதிய தகவல். தேசிய திலகம் வாழ்ந்து காட்டிய "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சி. பாத்திரம் தாங்கள் உட்பட படம் பார்த்த அனைவரையும் எமோஷனலாக்கியதைப் படிக்கும்போது எனது கண்களிலும் கண்ணீர்..! அடியேனும் அடிக்கடி குறுந்தகட்டில் பார்க்கும் திரைக்காவியம் "கப்பலோட்டிய தமிழன்". அப்படிப் பார்க்கும் போதெல்லாம் கண்கள் குளமாகாத சமயமே இல்லை.

தேசிய திலகத்தின் உயிரும், உள்ளமும், உணர்வும் மட்டுமா அக்காவியத்தில். அவரது அடியொற்றிய தேசிய நெஞ்சங்களான நமது உயிரும், உள்ளமும், உணர்வும் கூட இதில்தானே..!

சிதம்பரனார் குறித்த சிகர பதிவை வழங்கிய தங்களுக்கு இந்த சுவாமிநாதன் வழங்கும் இரு சிறந்த பரிசுப் பொக்கிஷங்கள்:

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/VOCColor1a-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6525-1.jpg

தாங்கள் வழங்கிய மனம் திறந்த பாராட்டுக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!

உணர்ச்சிப்பெருக்கில்,
பம்மலார்.

pammalar
22nd August 2012, 02:10 AM
நமது தேசிய திலகத்தின் போர்வாள்
தேசிய நடிகர் அமரர் சசிகுமார் அவர்களுக்கு
38வது ஆண்டு நினைவாஞ்சலி

[22.8.1974 - 22.8.2012]

அட்டைப்படம் : சிவாஜி ரசிகன் : 1.9.1974
[உதவி : நமது வாசுதேவன் சார் மற்றும் ராகவேந்திரன் சார்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Sasitrib011-1.jpg


தேசிய திலகம் பற்றி தேசிய நடிகர்

வரலாற்று ஆவணம் : நடிகர் திலகத்தின் 175வது திரைக்காவியமான "அவன் தான் மனிதன்(1975)" காவிய சிறப்பு மலர் [வெளியீடு : 'சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன் புகழ் பரப்பும் குழு', புதுவை]

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6526-1.jpg

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
22nd August 2012, 02:46 AM
டியர் வாசுதேவன் சார்,

மிகமிக அரிய "விஸ்வநாத நாயக்குடு(1987)" நிழற்படங்களுக்கும், காணொளிக்கும், தகவல்களுக்கும் மற்றும் தாங்கள் வழங்கிய அன்பான பாராட்டுக்களுக்கும் எனது வளமான நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
22nd August 2012, 02:46 AM
டியர் பம்மலார் சார்,
உறக்கம் வராமல் எதேச்சையாக கணினியில் நம் மய்யம் திரியினை பார்த்த பொழுது தங்களுடை பதிவு.. காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் தங்களின் நலன் காப்பதில் நம் அனைவருக்கும் பங்கு இருக்கும் உரிமையில் வேண்டுகோள் விடுக்கிறேன். எப்போது சமயம் கிடைக்கிறதோ அப்போது தவறாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். தங்களைப் போல் இந்த நேரத்தில் முழு ஈடுபாட்டோடு உழைப்பதில் எனக்கும் சௌகரியம் தான். அதனால் அந்த சுகம் எனக்கும் தெரிகிறது. தவறாமல் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தைப் பேணுங்கள்.

சசிகுமாரின் நினைவாஞ்சலிப் பதிவு மீண்டும் கண்களில் நீர் வரச் செய்கிறது. சென்ற ஆண்டு இட்ட பதிவினையே மீண்டும் தருவதே பொருத்தமாயிருக்கும் என எண்ணுகிறேன்.


சசிகுமார் நினைவாக சில பதிவுகள்...படங்கள் மட்டும்.. அவரைப் பற்றி எழுத என்னால் இயலவில்லை.. கண்ணீர் தான் வருகிறது...அவர் அளவிற்கு நடிகர் திலகத்தின் மேல் பாசம் கொண்டவர்கள் அந்தக் காலத்திலும் அதற்கு அடுத்த காலத்திலும் யாரையும் காண இயலவில்லை. தற்போதைய காலத்தில் சசிகுமார் இடத்தை நம் ஒய்.ஜி.மகேந்திரன் நிரப்பி வருகிறார் எனலாம்.
.....
சசிகுமாரின் மறைவையொட்டி நடிகர் திலகத்தின் கண்ணீர் அஞ்சலி

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Sasikumar%20Tribute/Sasitrib03.jpg
....

சசிகுமார் அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனியவர். பேசும் போது நொடிக்கு ஒரு முறை நடிகர் திலகத்தைப் பற்றி சொல்லாமல் இருக்க மாட்டார். அண்ணா என்று தான் சொல்வார். நான் கேட்டேன், நீங்கள் அண்ணா என்று சொன்னால் அது அண்ணாதுரை அவர்களையல்லவா குறிக்கும் என்றதற்கு, என்னைப் பொறுத்த வரை அண்ணா என்றால் நடிகர் திலகம் மட்டும் தான் என்றார். அது மட்டுமல்ல, அண்ணன் என்றால் மரியாதைக் குறைவு, என்னால் அப்படி என்னை விட வயதானவரை மரியாதைக் குறைவாக அழைக்க முடியாது என்றார். நான் ஏற்கெனவே ஒரு முறை குறிப்பிட்டிருந்தது போல் ராஜபார்ட் ரங்கதுரை மறுமணக் காட்சி படப்பிடிப்பு முடிந்த சில நாட்களில் அவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவருடைய கார் மெக்கானிக்கினால் பழுது பார்க்கப் பட்டு முடிந்து அவர் வந்து அழைத்த பின்னும் அவர் அடியேனுடன் நடிகர் திலகத்தைப் பற்றியும் பெருந்தலைவரைப் பற்றியும் இந்த நாட்டைப் பற்றியும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

அவரை மறக்க முடியுமா...


சென்ற ஆண்டு சசிகுமார் நினைவாக நம் நண்பர்கள் இட்ட பதிவுகளுக்கான இணைப்பு

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page118

கண்ணீருடன்

pammalar
22nd August 2012, 02:59 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் அன்புக்கட்டளையை சிரமேற்கிறேன்..!

தேசிய நடிகர் சசிகுமார் குறித்த பதிவுகள் மீண்டும் கண்களை குளமாக்கிவிட்டது.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

parthasarathy
22nd August 2012, 09:11 AM
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

தங்களுடைய "கப்பலோட்டிய தமிழன்" படத்தைப் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பாகவும், சுவை படவும் அதே நேரம் பல இடங்களில் கண்களில் நீரை வரவழைப்பதுமாயும் இருந்தது.

மிக்க நன்றி.

அன்புடன்,

இரா. பார்த்தசாரதி

vasudevan31355
22nd August 2012, 09:31 AM
'தேசிய நடிகர்' சசிகுமார் அவர்களின் 38வது ஆண்டு நினைவாஞ்சலி (ஒரு அர்ப்பணப் பதிவு)

'தேசிய நடிகர்' சசிகுமார் அவர்களின் 38வது ஆண்டு நினைவாஞ்சலி. நடிகர் திலகத்தின் மேல் தீவிர பற்றுதல் உள்ளவராகவும், ரசிகர் மன்ற வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவராயும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தீவிர தொண்டராகவும், நாட்டுக்குழைத்த ராணுவ வீரராகவும், அழகும், திறமையும் வாய்ந்த நல்ல நடிகராகவும், மனைவியைக் காப்பாற்ற தன்னுயிரையே தந்த தியாகக் கணவராகவும் பல்வேறு பரிமாணங்களில் நம் நெஞ்சில் குடியேறியவர். அவர் நினைவு தினத்தில் அவரை வணங்கி அவர் புகழ்பாடுவோம்.

திரு சசிகுமார் அவர்கள் தன்னைப் பற்றி கூறுவதாவது.

http://www.kalyanamalaimagazine.com/images/Sasikumar.jpg

"என்னுடைய இயற்பெயர் விஜயகுமார். என்னுடைய அப்பா தந்தை பெரியார் அவர்களின் தீவிர அபிமானி. என்றும் பெரியார் வழியையே கடைபிடித்தவர். ஆதலால் தந்தை பெரியார் அவர்கள் எனக்கு 'வெற்றிசெல்வன்' எனப் பெயர் சூட்டினார். நான் ராணுவத்தில் பணிபுரிந்த போது என்னுடைய பெயர் வெற்றிசெல்வன் மட்டுமே. நான் ராணுவத்திலிருந்து சினிமாவுக்கு வந்ததும் என்னுடைய பெயரை சசிகுமார் என மாற்றி வைத்துக் கொண்டேன். நான் ஒரு தேசத்தைக் காக்கும் வீரன். காங்கிரஸ் கொள்கைகளில் தீவிர பற்றுடையவன். என் உயிருள்ளவரை காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை, அக்கட்சியின் தியாகங்களை நாட்டுக்கு எடுத்துரைத்துக் கொண்டே இருப்பேன். சினிமா எனது உயிர் மூச்சு. என் இறுதி மூச்சு உள்ளவரை சினிமாவில்தான் இருப்பேன்".

'ராஜபார்ட் ரங்கதுரை'யில் நடிகர் திலகத்துடன் சசிகுமார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-99.jpg

'ராஜபார்ட் ரங்கதுரை'யில் சசிகுமார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-76.jpg

'காசேதான் கடவுளடா' படத்தில் சசிகுமார்.

http://www.shotpix.com/images/88111007416952263816.png

சசிகுமாரின் மகன் விஜயசாரதி (சன் டிவி "நீங்கள் கேட்ட பாடல்" நிகழ்ச்சியின் காம்பியராக இருந்தவர்)

http://www.hindu.com/mp/2005/01/01/images/2005010100450701.jpg

விஜயசாரதி நேயர்களின் விருப்பப் பாடல்களை கேட்கிறார்

http://bp2.blogger.com/_4lEybjSEwmY/SAMxFMrxpRI/AAAAAAAABuY/hMD_CxuAM4w/s320/vijaya.jpg

சசிகுமாரின் மகன் விஜயசாரதி தன் தந்தை சசிகுமார் அவர்களைப் பற்றி கூறுவதாவது.

"என்னுடைய தந்தை 1974 இல் எண்ணூரில் நடக்கவிருந்த ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச தயாராகக் கிளம்பினார். கிளம்புவதற்கு முன் சூடாகப் பால் சாப்பிட்டுவிட்டு கிளம்புவது அவருக்கு வழக்கம். என் தாயார் எங்கள் அனைவருக்கும் பால் காய்ச்சுவதற்காக ஸ்டவ்வை பற்றவைக்க பம்ப் செய்யும் போது எதிர்பாராதவிதமாக ஸ்டவ் வெடித்தது. என்னுடய அம்மாவின் சேலை தீப்பற்றிக் கொண்டது. நானும், என் தங்கையும் அப்போது சிறுவயதுக் குழந்தைகள். எனக்கு அப்போது வயது நான்கு. எனது சகோதரிக்கு வயது ஆறு. ஆகையால் நாங்கள் தெருவில் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே ஓடினோம். என்னுடைய தந்தை அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு கிச்சனுக்கு ஓடி அம்மாவின் மேல் பற்றிய நெருப்பை அணைக்க அம்மாவை இறுகப் பற்றிக் கொள்ள நெருப்பு அவரையும் கவ்விக் கொண்டது. என் தாயும், தந்தையும் எப்படியோ பாத்ரூமிற்கு ஓடி ஷவரில் தண்ணீரைத் திறந்து விட்டு தம் மீது பற்றிக்கொண்ட நெருப்பை அணைக்க முயன்றனர். இருவருக்குமே பெரிய அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் இருவரும் ராயப்பேட்டா மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர். என்னுடைய தந்தை என்னையும், என் சகோதரி நந்தினியையும் அழைத்து கண்டிப்பாக குணமடைந்து வீடு திரும்பி விடுவோம் என்று நம்பிக்கையுடன் சைகையால் கூறினார்.

விஷயம் அறிந்ததும் நடிகர் திலகம், மக்கள் திலகம், மேஜர் சுந்தர்ராஜன், ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா அனைவரும் ஓடோடி வந்து டாக்டர்களை கலந்து ஆலோசித்தனர். திரு ஏ.வி.எம்.சரவணன் அவர்களும், கே.ஆர்.விஜயா அவர்களும் ஏர்கூலர்களை வாங்கி வந்து எங்கள் பெற்றோரின் அறையில் பொருத்தச் செய்தனர். பல நல்ல உள்ளங்கள் ரத்த தானம் செய்ய முன்வந்தனர். மூன்று நாட்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் என் பெற்றோர்களைக் காப்பாற்ற முடிய வில்லை. என் தந்தை தன் கடைசி நிமிடங்களில் தன்னை சூழ்ந்திருந்த அனைவரையும் 'வந்தே மாதரம்' சுலோகத்தை உரக்கச் சொல்லச் சொன்னதும், 'ஜன கன மன' தேசிய கீதத்தை பாடச் சொன்னதும் நன்றாக நினைவில் இருக்கிறது. 22-8-1974 அன்று எனது பெற்றோர் அகால மரணமெய்தினர். என் தாய் இறந்த இரண்டு மணி நேரங்களில் சிகிச்சை பலனளிக்காமல் என் தந்தையும் இறைவனடி சேர்ந்தார். கண்ணம்மா பேட்டை இடுகாட்டில் ராணுவ மரியாதைகளுடன் என் பெற்றோர்களின் இறுதிச் சடங்கு நடந்தது. அனைத்து திரையுலக பிரபலங்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் 'வந்தே மாதரம்' என முழங்க அனைத்து திரையுலகினரும் ஒரு சேர 'வந்தே மாதரம்' என முழங்கி எனது பெற்றோர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். என் தந்தை நடித்த திரைப்படங்களைப் பார்க்கையில் என் கண்களின் கண்ணீரை என்னால் எப்படி கட்டுப் படுத்த முடியும்?"

சசிகுமார் நடித்து அவர் மிகவும் புகழ் பெற்ற 'அவள்' திரைப்படத்தில் இருந்து ஒரு மறக்க முடியாத டூயட் பாடல்.(வீடியோவாக)

"கீதா... ஒருநாள் பழகும் உறவல்ல".


http://www.youtube.com/watch?v=6DE36xVE9dw&feature=player_detailpage

ஆத்மார்த்தமான அர்ப்பணிப்புடன்
வாசுதேவன்

KCSHEKAR
22nd August 2012, 12:44 PM
திரு. கார்த்திக் அவர்களே,

தங்களுடைய "கப்பலோட்டிய தமிழன்" படத்தைப் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பாகவும், உணர்ச்சிப் பெருக்கோடும் இருந்தது.

மிக்க நன்றி.

KCSHEKAR
22nd August 2012, 12:46 PM
டியர் வாசுதேவன் சார்,

மிகமிக அரிய "விஸ்வநாத நாயக்குடு" நிழற்படங்களுக்கும், தகவல்களுக்கும் நன்றிகள்..! 'தேசிய நடிகர்' சசிகுமார் அவர்களின் 38வது ஆண்டு நினைவாஞ்சலி - மிகவும் சிறப்பு

KCSHEKAR
22nd August 2012, 01:00 PM
டியர் ராகவேந்திரன் சார்,

"விஸ்வநாத நாயக்குடு" வெளியீட்டுத் தகவலுக்கு நன்றி.

KCSHEKAR
22nd August 2012, 01:06 PM
டியர் பம்மலார்.

பாவமன்னிப்பு. கப்பலோட்டிய தமிழன் வெளியீட்டுப் பதிவுகள் அருமை. தேசிய திலகத்தின் போர்வாள் தேசிய நடிகர் சசிகுமார் அவர்களுக்கு தங்களுடைய 38வது ஆண்டு நினைவாஞ்சலி சிறப்பு. நன்றி.

mr_karthik
22nd August 2012, 02:02 PM
கப்பலோட்டிய தமிழன் பதிவைப்படித்து உணர்ச்சி பூர்வமாக பாராட்டிய பம்மலார், ராகவேந்தர், ஜோ, வாசுதேவன், முரளி சீனிவாஸ், ராதாகிருஷ்ணன், ஆனந்த், சந்திரசேகர், பார்த்தசாரதி, Softsword, g04127302 மற்றும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் நன்றி.

கப்பலோட்டிய தமிழன் முதல் வெளியீட்டில் ஒரு பாடல் வண்ணத்தில் இடம்பெற்றிருந்தது என்ற என் கூற்றுக்கு, தானும் பார்த்த அனுபவத்தின் மூலம் வலு சேர்த்த ராகவேந்தர் அவர்களுக்கும், பாராட்டியதோடு பரிசாக இரண்டு அரிய நிழற்படங்களையளித்த பம்மலார் அவர்களுக்கும் மிக்க நன்றி.

RAGHAVENDRA
22nd August 2012, 07:19 PM
நாளை 23.08.2012 பகல் 12.00 மணிக்கு மெகா டி வி யில் நடிகர் திலகத்தின் வெற்றிச் சித்திரம் ,, வசந்த் பிக்சர்ஸ் மனிதரில் மாணிக்கம்.

RAGHAVENDRA
23rd August 2012, 07:19 AM
மலேசியா பிநாங்கு நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஈஸ்டர்ன் அண்ட் யூரோபியன் ஹோட்டலுக்கு நடிகர் திலகம் விஜயம் செய்ததை என்றும் நினைவு கூறும் வகையில் அவருடைய திருவுருவப் படம் வைக்கப் பட்டுள்ளது. அதன் நிழற்படம் நம் பார்வைக்கு. இதனை நமக்கு அனுப்பி வைத்த நண்பருக்கு நம் உளமார்ந்த நன்றி

நடிகர் திலகத்தின் நிழற்படம் வைக்கப் பட்டிருக்கும் இடத்தையும் அந்தப் படம் சற்றே பெரிதாக கீழே தரப்பட்டிருப்பதையும் காணலாம்.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/culverts%20and%20memoirs/PENANGHOTELNTIMG01.jpg

அந்த ஹோட்டலின் மற்றொரு பகுதி

http://www.eohotels.com/images/gallery/e-o-hotel_1885.jpg

அந்த ஹோட்டலின் நுழைவாயில்

http://www.eohotels.com/images/gallery/e-o-hotel_entrance2.jpg

ஈஸ்டர்ன் அண்ட் யூரோப்பியன் ஹோட்டலின் இணைய தளத்திற்கான இணைப்பு (http://www.easternandoriental.com/#/home)

vasudevan31355
23rd August 2012, 04:26 PM
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

(தொடர்-5)

நடிகர் திலகத்தின் நாயகிகள் (5) கிரிஜா

படம்: 'மனோகரா'

மனோகரனின் ஜோடி விஜயாவாக நடிகை கிரிஜா. 'மனோகரா' வெற்றிக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து வரலாற்றில் இடம் பெற்றவர். இதற்கு முன் நடிகர் திலகத்தின் ஐந்தாவது காவியமான 'திரும்பிப்பார்' படத்தில் நரசிம்மபாரதியின் ஜோடியாக நடித்திருப்பார். அழகான தெலுங்கு நடிகை. தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நகைச்சுவை நடிகையாக வலம் வந்தவர். ரேலங்கி என்ற புகழ் பெற்ற தெலுங்கு நகைச்சுவை நடிகருடன் பல தெலுங்குப் படங்களில் ஜோடி சேர்ந்து மிகவும் புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். ரேலங்கி கிரிஜா நகைச்சுவை ஜோடி தெலுங்கில் மிகவும் பிரசித்தம்.

'மனோகரா' தமிழ்,தெலுங்கு, இந்தி (மனோகர்) மூன்று நேரடிப்படங்களிலும் கிரிஜாதான் நடிகர் திலகத்தின் ஜோடி என்பது இன்னொரு சிறப்பம்சம்.

http://lh4.google.com/anilkumar.marri/RozrlVumK2I/AAAAAAAAAGs/PU5RA7HPK8o/r16.jpg

'மனோகரா' தமிழ்த் திரைக்காவியத்தில் நாயகி கிரிஜாவுடன் நாயகர் நடிகர் திலகம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/girija.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/g2.jpg?t=1345717505

நடிகர் திலகமும் கிரிஜா அவர்களும் இணைந்து கலக்கும் அற்புத டூயட் பாடல் 'மனோகரா' காவியத்தில்.(வீடியோ)

"சிங்காரப் பைங்கிளியே பேசு...
செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு"...


http://www.youtube.com/watch?v=V9XZf5FeRPI&feature=player_detailpage

'மனோகரா' காவியத்தில் நடிகர் திலகத்துடன் கிரிஜா.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/g1.jpg

நடிகர் திலகமும் கிரிஜா அவர்களும் இணைந்து கலக்கும் அற்புத டூயட் பாடல் 'மனோகரா' தெலுங்கு காவியத்தில்.(வீடியோ)

"கண்ணுலலோ...விண்ணுலலோ"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Kb524-hoW1s

(ஜோடிகள் தொடரும்)

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
23rd August 2012, 06:12 PM
very rare picture.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6_0003-2-1.jpg?t=1345725748

mr_karthik
23rd August 2012, 06:32 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

'விஸ்வநாத நாய்க்குடு' பற்றிய பதிவுகள், தகவல்கள், நிழற்படங்கள் அனைத்தும் மிகவும் அரிய தொகுப்பு. பலர் இப்படத்தைப்பார்த்திருக்க வாய்ப்பில்லை. பார்த்தால் நிச்சயம் அசந்துபோவார்கள். ராகவேந்தர் சார் சொன்னது போல, பலர் பார்த்து அதிசயிக்கும்வரை பொறுமை காப்போம்.

நடிகர்திலகத்தின் திரை நாயகியர் வரிசையில், சற்றும் எதிர்பாராமல் கிரிஜாவைக் கொண்டுவந்து விட்டீர்கள். நடித்தது மிகச்சில படங்களாயினும் 'மனோகரா' ஒன்று போதும் அவரது அழகையும் திறமையையும் எடுத்துச் சொல்வதற்கு. கிரிஜா பற்றிய தகவல்கள், நிழற்படங்கள், காணொளி இணைப்பு அனைத்தும் நன்றாக உள்ளன. மதுரக்குரலோன் ஏ.எம்.ராஜாவின் மயக்கும் குரலில் 'சிங்காரப் பைங்கிளியே பேசு' பாடல் அருமை.

இதுபோன்ற அபூர்வ நடிகைகளைப்பற்றி அறிந்துகொள்ள உதவும் 'திரை நாயகியர்' ஒரு வெற்றித்தொடர் என்பதில் ஐயமில்லை.

mr_karthik
23rd August 2012, 06:51 PM
அன்புள்ள பம்மலார் சார்,

தேசீய நடிகர், மாவீரன் 'கேப்டன்' சசிகுமார் நினைவுநாளையொட்டிய பதிவுகளைப்பார்த்ததும், சென்ற ஆண்டு நினைவு நாளன்று தாங்கள் அளித்திருந்த அனைத்துப்பதிவுகளையும் மீண்டும் கண்ணுற்றேன். மனம் சோகத்தில் மூழ்கியது. 38 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு உண்மையான தேசியவாதியின் இழப்பு.

விஜயகுமார் என்ற அவருடைய பெயர் எப்படி சசிகுமார் என்று மாறியது என்பது பற்றி, அவர் மறைந்த சமயம் அவரது மாமியார் பத்திரிகைப் பேட்டியொன்றில் சொல்லியிருந்தார்.

"மாப்பிள்ளையின் உண்மையான பெயர் விஜயகுமார். அவருக்கும் என்மகள் சசிகலாவுக்கும் திருமணம் நடந்த போது, நாங்கள் சீராக அளித்த பாத்திரங்களில் இருவருடைய பெயரையும் இணைத்து 'சசி - குமார்' என்று பெயர் பொறித்திருந்தோம். இந்தப்பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததாலும், என் மகள் மீது அவர் வைத்திருந்த எல்லையற்ற அன்பினாலும், அவளுடைய பெயரையும் இணைத்து சினிமாவில் தன் பெயரை 'சசிகுமார்' என்று மாற்றிக்கொண்டார்" என்று கண்ணீருக்கிடையே கூறினார்..... என்று பத்திரிகையில் தெரிவித்திருந்தனர்.

Subramaniam Ramajayam
23rd August 2012, 09:50 PM
Kartik sir wonderful writeup. kappalotia tamizan.
ONE OF THE COSTLIEST MISS I MADE IS I HAVE MISSED THE MOVIE SOMEHOW. WAITING FOR SEP FIRST TO HAVE THE DARSAN OF NT WITH FAMILY AND FRIENDS. THANK YOU KARTIK.

RAGHAVENDRA
23rd August 2012, 10:33 PM
அன்பு நண்பர்களே,
ஆயிரம் வார்த்தைகள் ஆயிரம் கட்டுரைகள் சொல்வதை ஒரு சித்திரம் சொல்லும் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம் வந்துள்ளது, மாடர்ன் சினிமா வெளியிட்டுள்ள சிவாஜியின் நெஞ்சை உருக்கும் பாசக் காட்சிகள்என்ற நெடுந்தகடு.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/SIVAJIEMOTIONALSCENESR1.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/DVD%20VCD%20covers/SIVAJIEMOTIONALSCENESF1.jpg

இதில் இடம் பெற்றுள்ள படங்கள்

பாச மலர்
பாலும் பழமும்
பாகப் பிரிவினை
மக்களைப் பெற்ற மகராசி
படித்தால் மட்டும் போதுமா
பட்டிக்காடா பட்டணமா
எங்க ஊர் ராஜா
ஆண்டவன் கட்டளை
லக்ஷ்மி கல்யாணம்
பாவ மன்னிப்பு
படிக்காத மேதை
குங்குமம்
நெஞ்சிருக்கும் வரை
கை கொடுத்த தெய்வம்

ஒவ்வொரு சிவாஜி ரசிகரிடமும் அவசியம் இருக்க வேண்டிய மிகச்சிறந்த தொகுப்பு. நடிகர் திலகம் என்ற phenomenon எந்த அளவிற்கு உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களுக்குள் ஆக்கிரமித்திருக்கிறது என்பதை உணர வைக்கும் உன்னதத் தொகுப்பு. ஒவ்வொரு படத்திலிருந்தும் கிட்டத் தட்ட 20 நிமிடங்களுக்கு வரும் வரையில் அந்தப் படத்திலுள்ள முக்கியக் காட்சிகளைத் தொகுத்தளித்திருக்கிறார்கள். குறிப்பாக என்னுள் மிகவும் ஆழமாய் ஊடுருவி நிரந்தரமாய்த் தங்கி விட்ட ஆண்டவன் கட்டளை திரைப்படத்தின் அந்த உள்ளம் ஊஞ்சலாடும் காட்சி ..... அப்படியே இடம் பெற்றுள்ளது .... முரளி சாருக்குத் தெரியும் அந்தக் காட்சியில் நான் எந்த அளவிற்கு என்னை மறந்து விடுவேன் என்று ....அதே போல் பட்டிக்காடா பட்டணமா படத்தையும் சுருக்கமாக தொகுத்து, நாகரீகத்தைப் பற்றி விளக்கும் காட்சி, படிக்காத மேதை -- கேட்கவே வேண்டாம். பாச மலர் சிறு வயது தொடங்கி இறுதிக் காட்சி வரை விறுவிறுப்பாக தொகுத்தளித்துள்ளார்கள். பாவ மன்னிப்பு படமும் அப்படியே. பாலும் பழமும் படத்தில் சாந்தி சாந்தி என்று வீடு முழுக்கத் தேடும் காட்சி தொடங்கி இறுதிக் காட்சி வரை, எங்க ஊர் ராஜா படத்தில் இளை சேதுபதி கம்பீரமான உடையில் பணம் கொண்டு வந்து தரும் காட்சி, குங்குமம் படத்திலும் அதே போல், நெஞ்சிருக்கும் வரை ... இப்படி ஒவ்வொரு படத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கித் தொகுத்துத் தந்துள்ளனர்.

இந்த அருமையான நெடுந்தகட்டிற்காக மாடர்ன் சினிமா நிறுவனத்திற்கு பாராட்டுக்கள்.

இதே போல் மற்றொரு நெடுந்தகடாக சிவாஜியின் வீர வசனங்கள் வெளி வந்துள்ளது. அதனைப் பற்றி விரைவில் பதிவிடப் படும்.

அன்புடன்
ராகவேந்திரன்

pammalar
24th August 2012, 12:15 AM
'நான் பாத்தாலும் பாத்தேன்டி மதராஸூ பட்டணத்த
பத்துக் கண்ணு போதாதம்மா பட்டிக்காட்டம்மா'

"தாய்(1974)" திரைக்காவியத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலான இந்தப் பாடல் முதன்முறையாக இணையத்தில், அவ்வளவு ஏன்.., "தாய்(1974)" திரைக்காவியம் குறித்த ஒரு முழுமுதற் காணொளியே இணையத்தில் இதுதான்..! மேலும் அடியேன் இணையத்தில் தரவேற்றிய முதல் திரைப்படப் பாடலும் இதுதான்..!

நமது நடிகர் திலகம் நவரசத் திலகமாக பாடி, ஆடி, சிரித்து, மகிழ்ந்து, கிண்டலும் கேலியுமாய் கும்மாளம் போடும் இந்த பம்பர் பாடலை பாருங்க..! பாருங்க..!! பாத்துக்கிட்டே இருங்க..!!!

இதோ உங்களுக்காக 'நான் பாத்தாலும் பாத்தேன்டி...':


http://www.youtube.com/watch?v=rPNjWnbehD4

இப்பாடலில் கலைக்குரிசிலின் நவரச நடிப்பை கலைச்செல்வி என்னமாய் ரசித்து மகிழ்கிறார்..!

படைப்பு : கவியரசர் கண்ணதாசன்

இசை : மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன்

பின்னணி : பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன்

[ஹய்யா...! நானும் You Tubeல் ஒரு பாடலை தரவேற்றிவிட்டேன்..!]

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th August 2012, 04:08 AM
கலை தெய்வத்தை ஈன்றெடுத்த தெய்வம்
அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களுக்கு
நாற்பதாம் ஆண்டு நினைவாஞ்சலி

[24.8.1972 - 24.8.2012]

அட்டைப்படம் : சிவாஜி ரசிகன் : 15.9.1972
[உதவி : அன்புள்ளம் திரு. ஜி.மாணிக்கவாசகம்]
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnaiRajamani-1.jpg


அரிய காட்சி : அன்னையுடன் அண்ணனும், அண்ணியும்
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/AnnaiIllamHouse1-1.jpg

சென்ற வருடம், நமது 'மய்யம்' இணையதளத்தின் எட்டாம் பாக நடிகர் திலகம் திரியில், நமது அன்னையாரின் 39வது ஆண்டு நினைவாக இடுகை செய்யப்பட்ட பதிவுகளுக்கான சுட்டி:

http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8&p=728365&viewfull=1#post728365

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.

pammalar
24th August 2012, 04:13 AM
டியர் வாசுதேவன் சார்,

நமது நடிகர் திலகத்தின் போர்வாள், தேசிய நடிகர் அமரர் சசிகுமார் அவர்களுக்கு தாங்கள் செலுத்திய அஞ்சலி நெஞ்சைத் தொட்டது. குறிப்பாக அவரது மகன் தனது தந்தையாரை நினைவுகூர்ந்த வரிகளைப் படித்ததும் எனது கண்களில் கண்ணீர்.

'நடிகர் திலகத்தின் வெள்ளித்திரை நாயகியர்' நெடுந்தொடரில், மும்மொழி "மனோகரா(1954)" நாயகி, நடிகை கிரிஜா குறித்த தகவல்கள், நிழற்படங்கள், காணொளிகள் யாவும் மிக அருமை..! இக்காவியத்தில் கிரிஜா, ராஜமாதா கண்ணாம்பாவுடனான காட்சிகளிலும் சரி, ராஜதுரோகி டி.ஆர். ராஜகுமாரியுடனான காட்சிகளிலும் சரி, அவர்களோடு போட்டிபோட்டுக் கொண்டு நடித்திருப்பார்.

குரலில் தென்றலைத் தவழ விடுவோரிடையே, குரலே தென்றலாய் வாய்த்த இசைத்தென்றல் ஏ.எம்.ராஜா மற்றும் கானமாமணி ஆர்.ஜெயலக்ஷ்மி இருவரின் குரலில் ஒலிக்கும் 'சிங்கார பைங்கிளியே பேசு' பாடல், உண்மையாகவே ஒரு கிளி கொஞ்சும் அவ்வளவு அழகான பாடல்..! உடுமலை நாராயண கவிராயரின் உன்னத வரிகளுக்கு இனியதொரு வர்ணமெட்டை வார்த்தெடுத்திருப்பார் திரை இசை மாமேதை எஸ்.வி.வெங்கட்ராமன். இக்காவியத்தின் மும்மொழிப்பதிப்பிலும் சங்கீத டைரக்ஷன் சாக்ஷாத்அவரே தான்..!

mr_karthik அவர்கள் கூறியதுபோல், ஒவ்வொரு பதிவும் அபூர்வத்தன்மை வாய்ந்ததாகக் கொண்ட இந்த 'வெள்ளித்திரை நாயகியர்' நெடுந்தொடர், ஒரு மாபெரும் வெற்றித் தொடர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th August 2012, 04:16 AM
டியர் mr_karthik,

தேசிய நடிகர் கேப்டன் சசிகுமார் அவர்களது மாமியார், தனது மருமகன் சசிகுமார் மறைவின்போது கண்ணீர் மல்கக் கூறிய தகவல் இதயத்தை கனக்கச் செய்தது.

டியர் சந்திரசேகரன் சார்,

மிக்க நன்றி..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th August 2012, 04:18 AM
டியர் ராகவேந்திரன் சார்,

மலேசிய பினாங்கு நகர் 'ஈஸ்டர்ன் & யூரோப்பியன்' ஹோட்டலுக்கு நமது நடிகர் திலகம் விஜயம் செய்ததை ஆதாரப்பூர்வமாக நிரூபணம் செய்யும் பதிவு அட்டகாசம் என்றால் 'மாடர்ன் சினிமா' நிறுவனம் தொகுத்தளித்துள்ள "சிவாஜியின் நெஞ்சை உருக்கும் பாசக் காட்சிகள்" நெடுந்தகடு வருகை குறித்த பதிவு அதகளம்..!

அன்புடன்,
பம்மலார்.

ScottAlise
24th August 2012, 09:58 AM
Sumangali
I bought this 3 in 1 DVD long time back but saw this movie yesterday. It is once again a good family movie with controlled performance by NT.
Story:
NT and YGM are lorry driver& cleaner. Once on their trip they meet Geetha. NT drops her in concert hall & he sings during their travel. Geetha is impressed with NT. While NT loves Sujatha, a freedom fighter daughter, VKR(travel owner) wants to marry his daughter Silk Smitha to NT as he does not want to lose his business, Silk loves YGM.
A triangular love story . When NT is on a tour VKR make a scene to believe NT mother (pushpalatha) that NT is in love with Silk and tempts her with Dowry offering. NT clarify motes the mistake and NT’s mother is convinced only for his son. Its only few months, VKR hatches a plan to kill NT and asks NT to go to Nagarkovil on a trip and hires a man to throw a bomb. He successfully does it.
VKR reveals it, VKR and Pushpalatha accuses Sujatha as bad omen for NT death .
Sujatha commits suicide. YGM tries to save her but could not. He blackmails VKR & marries silk (YGM captures the paid killer).
In a dramatic turn of events NT comes back with injuries and insurance for lorry .YGM says that Sujatha has died and reveals that his mother is the reason. NT moves out of the house and meanwhile Sujatha is saved by a temple priest and lives in Prabu’s house (un atheist, do gooder).Sujatha delivers a baby girl and names her as Ram thulasi (NT& Sujatha decides to name their kid if it’s a boy as Thulasi ram & if it’s a girl as Ram thulasi) (NT- Ram) (Sujatha-Thulasi)
NT & Geetha travels all around & become rich. Geetha persuades NT to marry her. He reluctantly agrees. Prabu goes to Calcutta for earning Rs 5000/- for restoring Sujatha’s eyesight .
Meena(Ram Thulasi) encounters NT & Geetha , both starts liking Meena & promises to help her mother. Geetha meets Sujatha and assures help. Chances of NT meeting Sujatha are spoiled inadvertently , though they don’t know each other are alive.
NT meets YGM, YGM feels happy & accuses VKR and makes him apologise to NT.
Sujatha ‘s eyesight is restored . Prabu arrives. Sujatha meets Pushpalatha who reveals e NT is alive
Marriage preparations are on full swing and YGM reveals to NT that he saw Sujatha & a baby.
So family is united. In the end Prabu becomes a athesit & praises God as biggest screenplay writer.
Myself & my mother watched the movie it was really good.
Key dialogues: Whenever Geeta asks when we will meet NT will reply
God is great, World is small
When Sujatha discuss the name of the kid if it’s a boy & suggests the name Ganesan
NT in his usual style will reply “ there will be atleast 4 Ganesans in each street”
We laughed like anything
No other would have uttered this dialogue. Note: NT favourite dialogue writer:Aroor Dass
Produced by Amalraj films D. Yoganand
Directed by : D. Yoganand
Its a Hindi remake.
NT versatility is shown as he is a lorry driver again after Needhi, Lorry Driver Rajkannu and Sumangali.
In sumagali his moustache, dressing, acting is different from the other movies he acted as lorry driver.
NT delivers again a matured performance in this movie a subtle acting as a lover, widower etc.
Sujatha is classy & his chemisty with NT is good as they are compatible on screen as both are matured& seasoned actors.
Prabu has nothing to do much but is quite apt in climax scene with his acceptance of atheism.
Geetha is ok used for dances mainly
Baby meena is good
Final word: A must watch for fans & for people who love family subjects and for critics who find fault that NT occupies every frame , emotes too much, acts in formula stories to change their opinion that he is a director’s actor and does not deviate from the script.

ScottAlise
24th August 2012, 09:59 AM
Is any Nt movie releasing on Sep 1st? Mr. Subramaniyam

Subramaniam Ramajayam
24th August 2012, 02:06 PM
dear raghuram.
Sep first kapplotia tamizan being screened by our NT FIlm appreciation society at chennai.
As i have missed many occassions to see the p aricular movie and secifically I want to see it theatre
iam waiting for it. hardly one two movies of sixty and seventies left unseen.

vasudevan31355
24th August 2012, 03:05 PM
அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களின் நாற்பதாம் ஆண்டு நினைவாஞ்சலி

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/Houses0.jpg

'ராஜா'வை ஈன்ற ராஜாமணி அன்னையே! உங்கள் நினைவு நாளில் தங்களின் பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறோம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/r-9.jpg

Richardsof
24th August 2012, 03:36 PM
rare pic from net.

actress sugumari.

http://i50.tinypic.com/2en7v5t.jpg

RAGHAVENDRA
24th August 2012, 08:00 PM
டியர் வாசுதேவன் சார்,
அன்னை ராஜாமணி அம்மையாரின் நினைவு நாளை யொட்டி தாங்கள் வழங்கிய பதிவு அன்னை இல்லம் ஓவியம் மற்றும் ஜெமினி கணேசன், ராமகிருஷ்ணன் சார், நடிகர் திலகம் மற்றும் அன்னையாருடன் அவர்கள் இருக்கும் நிழற்படம் சிறப்புடன் உள்ளது. பாராட்டுக்கள்.
அதே போல் நாயகியர் வரிசை .... மிகவும் சிறப்பாக உள்ளது. அவர்களின் அறிமுகம் நிழற்படங்களுடனும் காணொளிகளுடனும் வருவது முழுமையாக உள்ளது. பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
24th August 2012, 08:01 PM
டியர் வினோத் சார்,
கட்டபொம்மன் பதாகையுடன் சுகுமாரி உள்ள நிழற்படம் நெஞ்சை நெகிழ வைக்கும் உணர்வு பூர்வமாக உள்ளது. பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்

KCSHEKAR
25th August 2012, 12:26 PM
Temple function - Thanjavur

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TanjoreTemple1.jpg

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/TanjoreTemple2.jpg

pammalar
25th August 2012, 06:22 PM
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :21

நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியம்

பாவமன்னிப்பு [வெளியான தேதி : 16.3.1961]

வெள்ளிவிழாக் கொண்டாடிய மகாமெகாஹிட் காவியம்

பொக்கிஷாதி பொக்கிஷம்

முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 10.3.1961
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6527-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
25th August 2012, 07:42 PM
Dear Mr. ragulram,

A good analysis by you on the rare & fair NT film SUMANGALI(1983). Keep it up..!

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
25th August 2012, 07:45 PM
டியர் வாசுதேவன் சார்,

அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களின் நாற்பதாம் ஆண்டு நினைவாக தாங்கள் அளித்த பதிவு இதயத்தை ஈரமாக்கியது. இரு நிழற்படங்களும் சரியான சாய்ஸ்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th August 2012, 07:47 PM
டியர் esvee சார்,

'கட்டபொம்முவுடன் சுகுமாரி' : கலக்கல் ஸ்டில், பாராட்டுக்கள்..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
25th August 2012, 07:48 PM
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 10

நடிகர் திலகத்தின் 74வது காவியம்

கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

பொக்கிஷாதி பொக்கிஷம்

மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 21.1.1977
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6492-1.jpg

சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
25th August 2012, 09:01 PM
டியர் சந்திரசேகரன் சார்,

மக்கட் சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் உயரிய நோக்கோடு உண்மையான ஆன்மீகவாதியாகத் திகழ்ந்த நமது நடிகர் திலகத்தின் அடியொற்றி, தங்களின் அமைப்பான சிவாஜி சமூக நலப் பேரவை, ஆன்மீகப்பணியிலும் கோலூச்சி வருவதற்கு கண்ணியமான பாராட்டுக்கள்..! தாங்கள் இடுகை செய்துள்ள இரு நிழற்படங்களும் அருமை..! குறிப்பாக, தம்பதி சமேதராக தரிசனம்தரும் விண்ணுலக சிவபெருமானை கலையுலக சிவாஜிபெருமான் அப்பராக அமர்ந்து கும்பிடும் புகைப்படம் வெகுநேர்த்தி..!

சதா சிவாஜியைப் பற்றியே சிந்தித்து செயலாற்றி கொண்டிருக்கும் சிறந்த செயல்வீரர், தஞ்சை மாவட்ட சிவாஜி பேரவைத் தலைவர் திரு. சதா. வெங்கட்ராமன் அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்..! கடவுளர்களின் திருவுருவச்சிலைகளுக்கு உபயதாரர்களாகத் திகழும் அவருக்கும், அவரது திருக்குமாரருக்கும் நமது திரியின் சார்பில் பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்..!

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
25th August 2012, 10:51 PM
AS A PART OF MADRAS WEEK CELEBRATIONS FOR THE YEAR 2012, SHRI MOHAN V. RAMAN PRESENTED A MULTIMEDIA PRESENTATION ON THAMIZS OF SIVAJI AT THE ADYAR PARK HOTEL, T.T.K. ROAD, CHENNAI - 18 TO A VERY GOOD GATHERING. BRIEFING ABOUT NADIGAR THILAGAM'S LIFE AND HIS EVOLUTION AS THE GREATEST ARTIST, THE EVENING FOCUSSED ON THE DIFFERENT DIALECTS OF THAMIZ EXPLORED BY NADIGAR THILAGAM IN HIS FILMS, INCLUDING REGION, SECT AND PERIOD ORIENTED. CLIPPINGS INCLUDING VEERAPANDIYA KATTABOMNMAN, NAAN PETRA SELVAM, PARASAKTHI, MANOHARA, ORU YATHRA MOZHI, RAMAN ETHANAI RAMANADI, ANBU, VIETNAM VEEDU, GAURAVAM... THANK YOU MOHAN RAMAN SIR, IT WAS A REAL TRIBUTE TO THE GREAT SOUL. AND THE ANECDOTES WERE VERY INFORMATIVE AND FOR ACKNOWLEDGING THE CONTRIBUTORS.

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/NTTAMIZHMVR04.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/NTTAMIZHMVR05.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/NTTAMIZHMVR07.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/NTTAMIZHMVR06.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/NTTAMIZHMVR03.jpg

vasudevan31355
25th August 2012, 11:14 PM
டியர் ராகவேந்திரன் சார்,

மலேசியா பினாங்கு நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஈஸ்டர்ன் அண்ட் யூரோபியன் ஹோட்டலில் நடிகர் திலகம் அவர்களின் திருவுருவப் படம் கம்பீரமாக வீற்றிருப்பதை அழகாகப் பதித்து திரிக்குப் பெருமை சேர்த்து விட்டீர்கள். அருமை.

சிவாஜியின் நெஞ்சை உருக்கும் பாசக் காட்சிகள் நெடுந்தகடு பற்றிய விவரங்கள் மிகுந்த பயனுள்ளவை. வெளியிட்ட மாடர்ன் சினிமாவுக்கு நன்றி. தகவல் தந்த தங்களுக்கும் நன்றி!

vasudevan31355
25th August 2012, 11:59 PM
அன்பு பம்மலார் சார்,

தங்கள் முதல் வீடியோ அப்லோடுக்கு என் மனமார்ந்த முதல் நல்வாழ்த்துக்கள். இனி தொடரட்டும் தங்கள் வீடியோ பயணம். கண்டு களிக்க நாங்கள் ரெடி.

தாங்கள் முதன் முதல் அப்லோட் செய்த அரிய 'தாய்' காவியத்தின் 'நான் பாத்தாலும் பாத்தேன்டி மதராஸூ பட்டணத்த...பத்துக் கண்ணு போதாதம்மா பட்டிக்காட்டம்மா' பாடலை பார்த்து மகிழ பத்தாயிரம் கண் இருந்தாலும் கூடப் போதாது. அபூர்வ அட்டகாசப் பாடலுக்கு அனந்த கோடி நன்றிகள். (இனி எனக்கு வேலை சுளுவு)

அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களுக்கு தாங்கள் செலுத்திய 'சிவாஜி ரசிகன்' அட்டைப்பட நாற்பதாம் ஆண்டு நினைவாஞ்சலி பதிவு அதியற்புதம். தலைவர் தன் அருமைத் தாயுடனும், தாரத்துடனும் அமர்ந்துள்ள காட்சி கண்களுக்கு அரும்பெரும் விருந்து.

'பாவமன்னிப்பு' முதல் வெளியீட்டு விளம்பரம் ஓஹோ!

'கப்பலோட்டிய தமிழன்' மறு வெளியீட்டு விளம்பரம் அதன் பிரம்மாண்ட இரண்டாவது ரவுண்ட் வெற்றியைப் பறை சாற்றுகிறது. ஓடியனில் நான்கு வாரங்கள் ஓடோ ஓடென்று ஓடிய அரிய விளம்பரத்தை அளித்த தங்களை ஓடி ஓடிப் பாராட்டினாலும் தகும்.

ஐந்து நற்பதிவுகளுக்கும் ஐயாயிரம் நன்றிகள் சார்.

pammalar
26th August 2012, 02:13 AM
டியர் வாசுதேவன் சார்,

தங்களுடைய உளமார்ந்த பாராட்டுதல்களுக்கும், வளமான வாழ்த்துக்களுக்கும் எனது எல்லையில்லா நன்றிகள்..!

குறிப்பாக, அடியேன் முதன்முதலில் இணையத்தில் தரவேற்றிய "தாய்" பாடலுக்காக, தாங்கள் அளித்த முதன்முதல் நல்வாழ்த்துக்கள் எல்லையில்லா ஆனந்தத்தை அளித்தது..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2012, 02:37 AM
Dear Raghavendran Sir,

Thank you very much for the 'Adyar Park' Function Photos..!

Our special appreciation & sincere thanks to our proud hubber Mohan V. Raman Sir, for the magnificent multimedia presentation on the topic 'Thamizhs of Sivaji', during the auspicious occasion..!

Warm Wishes & Regards,
Pammalar.

pammalar
26th August 2012, 03:08 AM
நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 4

ஃபிரான்ஸ் அளித்த அங்கீகாரம்

'செவாலியே' விருது விழா

22.4.1995 [சனிக்கிழமை]

எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் : சேப்பாக்கம் : சென்னை

தமிழக முதல்வர் கலைச்செல்வி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமை வகிக்க, ஃபிரான்ஸ் நாட்டுத் தூதர் திரு. ஃபிலிப் பெடிட் அவர்கள், தங்கள் நாட்டின் மிகமிக உயர்ந்த விருதான 'செவாலியே' விருதை, உலக நடிகர் திலகத்துக்கு வழங்கினார். சிங்காரச் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, இந்தியத் திரையுலகமே திரண்டு வந்து, நமது சிங்கத்தமிழனை வாழ்த்தி, பெருமை தேடிக் கொண்டது. அந்தக் கோலாகலமான விழாவின் வரலாற்று ஆவணங்கள் தொடர்கின்றன:

பொக்கிஷாதி பொக்கிஷம்

வரலாற்று ஆவணம் : தினத்தந்தி : 23.4.1995

தமிழக முதல்வர் கலைச்செல்வி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் பாராட்டுரை
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6532-3.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6533-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6531-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

pammalar
26th August 2012, 04:18 AM
இன்று [ஆகஸ்டு 26] பிறந்தநாள் காணும் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவையின் மாநிலத் தலைவர் அன்புச்சகோதரர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களுக்கு இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!

அன்பு சந்திரசேகரன் சார்,

தங்கள் குடும்பத்துடன் தாங்கள் என்றென்றும் வளமோடு வாழ்க !

சிவாஜி பேரவை இன்று போல் என்றும் சிங்கநடை போடுக !

தங்கள் பாசத்துக்குரிய பம்மலார் தங்களுக்கு வழங்கும் இனிய பிறந்தநாள் பரிசு:

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/NTWithCheetah1-1.jpg

இறையருளும், நமது இதயதெய்வம் நடிகர் திலகத்தின் ஆசிகளும்
தங்களுக்கு என்றென்றும் துணைநிற்கும் !

Once again,
Wish You A Very Very Happy Birthday Sir !
Many Many More Happy Returns !

பாசத்துடன்,
பம்மலார்.

Subramaniam Ramajayam
26th August 2012, 06:21 AM
Thank you mr raghavendran for adayar gate function inf and photos very nice.
MR KC SIR
HAPPY BIRTHDAY AND MAY GOD BLESS YOU WITH GOOD HEALTH AND WEALTH.
WE WISH YOUR UNTIRING EFFORTS FOR SIVAJI MANIMANDAPAM GETS A NOD FROM CONCERNED PEOPLE SOONER.

Richardsof
26th August 2012, 07:00 AM
தவப்புதல்வன்-1972 .


TO DAY 40 TH ANNIVERSARY.
DEAR K.C.S SIR
WISH YOU A HAPPY BIRTHDAY .WISHES FROM MAKKAL THILAGAM MGR FANS AND SPECIAL
THAVAPUDHALVAN


.http://i49.tinypic.com/10n9pvd.jpg

.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து ‘நிறைகுடம்’, ‘அருணோதயம்’ ஆகிய சிறந்த படங்களை அளித்த முக்தா பிலிம்ஸ் சீனிவாசன், அதே சிவாஜி நடிப்பில் உருவாக்கிய படம் ‘தவப்புதல்வன்’. இசைக் கலைஞராகிய சிவாஜி, பணக்கார வீட்டுப்பிள்ளை. அவருடைய மூதாதையருக்கு கொடிய மாலைக்கண் நோய் இருந்து வந்தது. அதன் காரணமாகவே அவர்கள் இறந்ததால் சிவாஜியின் தாயார் பண்டரிபாய் ஒரே மகனான சிவாஜிக்கும் அந்த நோய் வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக அவர் தன் உடலை வருத்தி பூஜை, புனஸ்காரத்தில் ஈடுபடுகிறார்.
.
சிவாஜிக்கு அந்த நோய் தாக்கினால் தான் உயிரை விட்டு விடுவேன் என்றும் பண்டரிபாய் கூறி வருகிறார். தாயார் மீது மிகுந்த பக்தி வைத்திருக்கும் சிவாஜிக்கு ஒரு கட்டத்தில் மாலைக்கண் நோய் வந்து விடுகிறது. இது வெளியே தெரிந்தால் தாயாரின் உடலுக்கு ஆபத்து என்பதால் அதை மறைப்பதற்காக ஓட்டலில் அறை எடுத்து இரவு நேரத்தில் அங்கேயே தங்கி விடுகிறார்.
இதனை பயன்படுத்திக் கொண்டு எம்.ஆர்.ஆர்.வாசுவும், அவருடைய தங்கையான ஏ.சகுந்தலாவும் சிவாஜியிடம் பணம் கறக்க ஆரம்பித்து அவரை பல வழிகளிலும் பிளாக்மெயில் செய்கிறார்கள்.

இந்த பிளாக்மெயில் கும்பலுக்கும், தாயாருக்கும் இடையே இருதலைக்கொள்ளி எறும்பாக சிவாஜி துடிக்கிறார். இந்த சூழ்நிலையில் அவர் மணக்க இருக்கும் டாக்டரான கே.ஆர்.விஜயாவின் வெறுப்பையும் அவர் சம்பாதிக்க நேர்கிறது.
இறுதியில் அந்த நோய் போனதா, சிவாஜி எப்படி அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்கிறார் என்பதே கதை.

இந்த கதையை எழுதிய தூயவன் வசனத்தையும் எழுதினார். சோ, மனோரமா, வி.கோபாலகிருஷ்ணன், செந்தாமரை, காந்திமதி ஆகியோரும் படத்தில் நடித்திருந்தனர். சிவாஜியின் மாலைக்கண் நோயை காரணம் காட்டி வீட்டுக்குள் நுழைந்து பண்டரிபாயை வளைத்துப் போட ஏ.சகுந்தலா செய்யும் சாகசமும், அதை முறியடிக்க சோவும், மனோரமாவும் போடும் திட்டங்களும் அவை அத்தனையும் புஸ்வாணம் ஆவதும் கலகலப்பான நகைச்சுவை காட்சிகளாகும்.

சிவாஜி ஒரு இசைக்கலைஞர் என்பதால் அருமையான பாடல்களை கவிஞர் கண்ணதாசனும், வாலியும் எழுதியிருந்தனர். லவ் இஸ் பைன் டார்லிங் என்ற ஆங்கில பாடலை ராண்டார்கை எழுதியிருந்தார். இந்தப் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அருமையாக இசையமைத்தார்.

‘உலகின் முதல் இசை தமிழிசையே’
‘கிங்கினி கிங்கினி கிணிகிணி என வரும் மாதா கோயில் மணியோசை, கண்மணி, பொன்மணி என துள்ளிடும் பிள்ளைகளுக்கு தாத்தா கூறும் அருளோசை’
‘இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்’
ஆகிய இனிமையான பாடல்கள் அன்றைய காலகட்டத்தில் பெரும் ஹிட்டானவை.
இசை கேட்டால் பாடலில் சிவாஜி இசை கலைஞர் தான்சேனாகவும், மாதா கோயில் மணியோசை பாடலில் கிறிஸ்துமஸ் தாத்தாவாகவும் நடித்தார்.

முக்தா பிலிம்ஸ் வி.ராமசாமி தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் வி.சீனிவாசன் அருமையாக இயக்கி இருந்தார். 26.08.1972 அன்று வெளியான இந்தப் படம் பாடல்களுக்காகவும், சிவாஜியின் நடிப்புக்காகவும் நூறு நாட்களுக்கு ஓடியது.

RAGHAVENDRA
26th August 2012, 07:31 AM
டியர் எஸ் வீ சார்
மறக்காமல் இன்றைய தேதி - ஆகஸ்ட் 26ல் - வெளியான நடிகர் திலகத்தின் படமான தவப் புதல்வனை நினைவு கூர்ந்து நெஞ்செல்லாம் நிறைந்து விட்டீர்கள். நன்றியும் பாராட்டுக்களும்.

ஆகஸ்ட் 26ல் வெளியான நடிகர் திலகத்தின் படங்கள்


1954 - கூண்டுக்கிளி, தூக்குத்தூக்கி
1955 - மங்கையர் திலகம்
1966 - தாயே உனக்காக
1972 - தவப் புதல்வன்


இது பற்றி நமது நடிகர் திலகம் திரியின் முந்தைய பாகத்தில் பம்மலார் மிக மிகச் சிறப்பாக ஆவணங்களைத் தரவேற்றி சிறப்புச் சேர்த்துள்ளார்.

இது வரை அதனைப் பார்க்காதவர்களுக்காக அதிலிருந்து சில ஆவணங்கள் இங்கே தரப்பட்டுள்ளன


http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4432a-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4425a-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4443a-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4441a-1.jpg

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/ThayeBommaiAd.jpg
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/Thayenewspaperad.jpg

முந்தைய பாகத்தில் இடம் பெற்றுள்ள பதிவுகளுக்கான இணைப்பு (http://www.mayyam.com/talk/showthread.php?9593-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-8/page125)

vasudevan31355
26th August 2012, 07:33 AM
http://caccioppoli.com/Animated%20gifs/Birthday%20(happy)/0046.gif

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2ilymfb-1-1.jpg?t=1345946427

RAGHAVENDRA
26th August 2012, 07:49 AM
Hearty greetings and best wishes Chandrasekar Sir

vasudevan31355
26th August 2012, 07:50 AM
"லவ் இஸ் பைன் டார்லிங்" ஸ்டைலோ ஸ்டைல்... செம ஸ்டைல்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Sfb4mIC4Tf8

vasudevan31355
26th August 2012, 07:56 AM
"KINGINI KINI KINI"


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Iuhj3EIBepM&list=PLD33B449B76EBF294

vasudevan31355
26th August 2012, 08:23 AM
Nadigar thilagam's fantastic performance in 'Thaye unakaga'


http://www.youtube.com/watch?v=w5X-BK6HOq8&feature=player_detailpage

vasudevan31355
26th August 2012, 08:25 AM
'koondukili' Nadigar thilagam with Makkal thilagam

http://www.oocities.org/vijayalakshmifilms/koondukili.jpg

http://www.shotpix.com/images/98914430758392356177.jpg

http://www.shotpix.com/images/99311407462333512295.jpg

http://www.shotpix.com/images/42597335849579271266.jpg

vasudevan31355
26th August 2012, 08:40 AM
தூக்கு தூக்கி.(1954)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/th.jpg

அருணா பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக மன்னனின் 17-ஆவது படமாக வந்து வெற்றிக்கொடி நாட்டிய படம். நம் தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகள் எங்கும் தெருக் கூத்தாகவும், நாடகமாகவும் வெற்றி உலா வந்து, பின் நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பால் வீர உலா வந்தது.

இப்படத்தில் பாலையா, T.N.சிவதாணு, 'யதார்த்தம்' பொன்னுசாமிப் பிள்ளை, 'சட்டாம்பிள்ளை' வெங்கட்ராமன், லலிதா, பத்மினி, ராகினி, C.K.சரஸ்வதி, M.S.S.பாக்கியம் என்று மாபெரும் நட்சத்திரக் கூட்டம்.

சுந்தரபுரி இளவரசன் சுந்தராங்கதன் நாட்டின் பொருளாதார வழிகளைப் பெருக்க தன் தந்தையாகிய மன்னரின் ஆணைக்கேற்ப நாட்டைச் சுற்றி வரும் வேளையில், ஓலைச் சுவடிகளை ஆராய்ச்சி செய்யும் ஒரு ஆராய்ச்சி மன்றத்தில் அறிஞர்கள் மத்தியில் உரையாடநேருகிறது.

கொண்டு வந்தால் தந்தை...
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்...
சீர் கொண்டு வந்தால் சகோதரி...
கொலையும் செய்வாள் பத்தினி...
உயிர் காப்பான் தோழன்...

என்று முன்னோடிகள் ஓலைச்வடிகளில் அனுபவங்களால் எழுதி வைத்த குறிப்புகளைத் தவறென்று ஆராய்ச்சி மன்றத்தில் அறிஞர்கள் நடுவே ஆணித்தரமாக வாதாடுகிறான் சுந்தராங்கதன். அந்தக் கருத்துக்கள் பொய்யானவை என்று நிரூபிப்பதாகவும் சவால் விடுகிறான்.

அதற்காக அவன் சந்தித்த சோதனைகள், துரோகங்கள்,வேதனைகள் ஏராளம்.

பொருள் கொண்டு செல்லாததால் தந்தையால் வெறுக்கப்பட்டு, அவராலேயே நாடு கடத்தப் படுகிறான் சுந்தராங்கதன். ஆனால் தாயின் அன்பு என்றும் சாஸ்வதம் என்பதை உணருகிறான். சீர் கொண்டு செல்லாததால் தன் தங்கையால் வெறுக்கப்பட்டு வேதனையுறுகிறான். தன் மனைவியே தனக்கு நம்பிக்கை மோசம் செய்வதை நேரிடையாகக் காண்கிறான். கொலைக் குற்றம் சாட்டப் படுகிறான். தன் மனைவியாலும், அவளின் கள்ளக் காதலனாலும் தன் உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலையில் தன் உயிர்த் தோழனால் காப்பாற்றப் படுகிறான். நாட்டை விட்டே வெளியேறி வேற்று நாட்டு அரண்மனையில் தூக்குத் தூக்கியாய் வேடம் புனைந்து, அங்கு இளவரசிகளின் அன்புக்குப் பாத்திரமாகி, அரண்மனையில் பல சோதனைகளைக் கடந்து தான் குற்றவாளி அல்ல என்று நிரூபணம் செய்து, முன்னோர்கள் சொன்ன தத்துவங்கள் பொய்த்துப் போவது இல்லை என்பதனையும் தன் அனுபவங்களால் உணருகிறான்.

இளவரசன் சுந்தராங்கதானாக நம் நடிகர் திலகம். கேட்க வேண்டுமா..பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். குறிப்பாக அந்த பரத நாட்டியக் காட்சிகள்.. ஏறாத மலைதனிலே, அபாய அறிவிப்பு, பெண்களை நம்பாதே, சுந்தரி சௌந்தரி பாடல்களுக்கு அவர் நடனமாடுவது காலாகாலத்திற்கும் ரசிக்க வைக்கக் கூடியது. வழக்கம் போல வீறு கொண்ட வசனங்கள்...பலதரப் பட்ட முகபாவங்கள்..பாவனைகள்..இந்தப் படத்தின் மூலம் மேலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் நடிகர் திலகம்.

வசனங்களை ஏ.டி.கே மற்றும் V.N.சம்பந்தம் அவர்கள் இணைந்து எழுத, சங்கீத விற்பன்னர் ஜி.ராமநாதன் அவர்கள் எக்காலங்களிலேயும் ரசிக்க வைக்கும் ஜனரஞ்சகப் பாடல்களுக்கு இசை அமைக்க, டி.எம்.எஸ், M.L.வசந்தகுமாரி, P.லீலா, A.P.கோமளா போன்ற ஜாம்பவான்கள் பின்னணி பாட, அற்புதமான பொழுது போக்குப் படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் R.M.கிருஷ்ணசாமி அவர்கள்.

நடிகர் திலகத்திற்கு முதன்முதலாக திரு.T.M.S.அவர்கள் பின்னணிப் பாடல்கள் பாடிய பெருமை இந்தப் படத்தையே சாரும்.

வெங்கட்ராமன் என்ற நகைச்சுவை நடிகர் தன் அபார நகைச்சுவை நடிப்பால் இந்தப் படத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரிலேயே 'சட்டாம்பிள்ளை' வெங்கட்ராமன் என்று பெரும் பெயர் பெற்றார் என்பது இன்னொரு சிறப்பு.

பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டும் ரகம்..

A. மருதகாசி அவர்கள் இயற்றிய

"இன்பநிலை காண ஏன் இன்னும் தாமதம்"....

"கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த"...

"சுந்தரி சௌந்தரி"....

திரு.உடுமலை நாராயணகவி அவர்கள் இயற்றிய

"பியாரி நம்பள் மேலே"...

"பெண்களை நம்பாதே..கண்களே..பெண்களை நம்பாதே"...

"குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்"...

http://specials.rediff.com/movies/2006/sep/26sd8.jpg

திரு.தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் இயற்றிய

"அபாய அறிவிப்பு ...அய்யா!.. அபாய அறிவிப்பு"...

"ஏறாத மலைதனிலே....வெகு ஜோரான கௌதாரி ரெண்டு"...

போன்ற காலத்தை வென்ற கானங்கள் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன.

மொத்தத்தில் அத்தனை பேர் மனதையும் கொள்ளை கொண்டு போகிறான் 'தூக்கு தூக்கி'.

இரு சூப்பர் ஹிட் பாடல்கள் ஒலி-ஒளி வடிவில்...

"கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்"


http://www.youtube.com/watch?v=eyu9Tm8v5fI&feature=player_detailpage

"ஆணும் பெண்ணை அழகு செய்வது ஆட..ஆட"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=klpiG8llt5k

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
26th August 2012, 08:50 AM
டியர் வாசுதேவன் சார்
சூப்பர்... ஆகஸ்ட் 26ஐ அட்டகாசமாகக் கொண்டாடி விட்டீர்கள்.. தொடருங்கள்..

தற்பொழுது நடைபெறுகிறது, சென்னை மஹாலட்சுமியில்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20FILMS%20IN%20CHENNAI/thanthiad26812b.jpg

uvausan
26th August 2012, 09:49 AM
Dear KC - many more happy returns and long live with propserity and good health

vasudevan31355
26th August 2012, 09:50 AM
Thookku Thookki 1954 (The Hindu)

Randor Guy

http://www.thehindu.com/arts/cinema/article696902.ece

ScottAlise
26th August 2012, 10:35 AM
Thank u Pammalar sir.

உங்க பாராட்டு எனக்கு வசிஷ்டர் வாயில் பிராமரிஷி

Thomasstemy
26th August 2012, 12:12 PM
http://www.shotpix.com/images/98914430758392356177.jpg

http://www.shotpix.com/images/99311407462333512295.jpg

[/QUOTE]

Goondu-k-Kilee - Tamizh Thirai Ulagin Iru Perum Dhuruvangal matrum Sarithira Naayagargal, Inaindha Mudhal Thirai-p-padam endra Perumayai Thirai Ulagukku Thandha Kaaviyam.


Kurippaaga Solvadharkku Indha Thiraipadaththil Idhai Thavira Enna Ulladhu endru Ikkaala Thalaimurayinar Ninaikkalaam !! Nichayamaaga Indha Kaala KadhaNaayagargal Katrukolla Niraya Irukiradhu...!!

Thirayil, KadhaaNaayagan Vaydam Mattumae Seivaen Endru Adampidipavargalluku oru Paadam Indha Padam. Indhiya Thirai ulagin Mudhal Unmayaana "Ulaga Naayagan", Namadhu Nadigar Thilagam, Tamizh Thirai Ulagil Orey Nadippu Chakravarthiyaaga Valam Vara Thodangiya Neram, Kadhayin Nayaganaaga Matummae Nadippaen Endru Vidhandavaadham Seiyaamal, Makkal Thilagam Kadhanaayaganaga nadiththa padathil, Oru Muzhumayaana Villain Paathiraththai, Thann Thiramayin mael Nambikkai Kondu Aetru Nadiththa Paathiram Dhaan "Jeeva" endra Negative Role.

Parasakthikku(1952) Piragu, Anaiththu vagai Thayyaripaalargalum Virumbi Padam Edukkum Orey Nadigaragaa Valam Vandhavar Nam Nadigar Thilagam Enbadhu Ulangai Nellikani. Nadigar Thilagamum Adhai Vanagi Varavetru, Madhippalaiththu, Thayaripaalargalai Thunbathirkku Aalakaamal, Call-Sheet Prachanai edhum seiyaamal, Varudathirkku, Sarasari 7 (or) 8 thiraipadangal, 1954 mudhalae Kodukka Thuvanginaar.

Mukkiyamaaga, Full-Time Villain / Negative Rolai, Matravargal Andha Kaalaththil Seiyya BayandhaBoadhu, Dhairiyamaga, Sarva Sadharanamaaga, Manamuvandhu, Kadhapathirathin Thanmai arindhu Aetru-k-kondadhan Vilaivu, Namakku Pokkishangal Kidaithana...Avai -

1) Thirumbipaar,
2) Pennin Perumai,
3) Andha Naal
4) Thuli Visham,
5) Goondu-k-kili,
6) Rangoon Radha,
7) DeivaPiravi,
8) UthamaPuthiran
9) Bandham

Aanal, Indrayathalaimurayinar, Oru Nadigar yedho oru thiraipadathil, thannudaya Markettai Thakka vaipadharkaaga Negative role maerkondavudan, avardhaan thairiyasaali enbadhupoal, unmayariyaadhu, pesuvadhai paarkumboadhu, Avargaludaya Ariyaamayai ninaithu Sirippudhaan Varugiradhu...

:smokesmile:

vasudevan31355
26th August 2012, 01:35 PM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/welcome_126.jpg

Thomasstemy
26th August 2012, 04:38 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NT%20Events/NTTAMIZHMVR04.jpg[/QUOTE]

Sir,

Glad to hear Mr.Mohanraman mentioning the points given by Murali sir's points and statistics in this forum like a) Number of NT's 2 Films releasing on the same day celebrating 100 days and other milestones of NT achievements.

There was few "Could have Avoided" as well,

One point that he mentioned which I strongly disagree is the point on Major Bannerman Report that Mr.Vaiko revealed it first. This is 100% wrong. Mr.Vaiko shared the information on a personal note to Mr.Ramkumar and not in any public function.

This was indeed, first revealed by Sri.Marudu Mohan in the year 2005 during the "Sivaji Dharisanam" book release function. Hope you remember if you had attended it. This function had Sri.Ramkumar and Sri.Jayakanthan, noted novelist and author. Even 2nd Time, Mr.Marudu Mohan brought it to limelight during the Kattabomman 50 years celebration in Russian Cultural.

Otherwise, it was OK i guess :-)
:smokesmile:

KCSHEKAR
26th August 2012, 05:05 PM
டியர் பம்மலார்,

தாங்கள் முதலாவதாக அளித்த முத்தான வாழ்த்துடன், சிங்கத்தமிழன் புலியோடு அமர்ந்திருக்கும் சூப்பர் புகைப்பபடப் பரிசுக்கும் இதயங்கனிந்த நன்றி.

தஞ்சாவூர் நிகழ்ச்சிப் புகைப்படங்களுக்கு தாங்கள் அளித்த பாராட்டுக்கள் உண்மையிலேயே ஊக்கம் அளிப்பவை. நன்றி.

தங்களின் = தொடரும் செவாலியே விருது விழா செய்திப் பதிவுகள் மற்றும், பாவமன்னிப்பு வெளியீட்டுப் பதிவுகள் அருமை. நன்றி.

KCSHEKAR
26th August 2012, 05:12 PM
டியர் வாசுதேவன் சார் ,

தலைவர் ஒலிபெருக்கியில் கர்ஜிக்கும் காட்சியுடன்கூடிய தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

தவப்புதல்வன், தாயே உனக்காக பாடல் காட்சி இணைப்புகள் அருமை. கூண்டுக்கிளி பற்றிய தங்களின் விமர்சனப் பதிவு, பாடல் காட்சிகள் மற்றும் the hindu - 2010 இணைப்பு என்று - திரைப்படத்தின் முழுமையான பதிவை அளித்து அசத்தியுள்ளீர்கள். நன்றி.

KCSHEKAR
26th August 2012, 05:25 PM
டியர் ராகவேந்திரன் சார் ,

தங்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்திற்கு நன்றி.

Madras week celebrations for the year 2012, விழா பற்றிய பதிவுக்கு நன்றி. Multimedia presentation on thamizhs of sivaji - அளித்த திரு மோகன்ராம் அவர்களுக்கு நன்றி.

தவப்புதல்வன் - பம்மலாரின் பதிவுகளை மறுபதிவு செய்தமைக்கு நன்றி.

pammalar
26th August 2012, 05:28 PM
டியர் esvee சார்,

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், 'மாலைச் சுடர்' நாளிதழில் ஞாயிறுதோறும், திரு.பா.காசி விஸ்வநாதன் என்பவரின் எழுத்தாக்கத்தில் வெளிவந்த ''மறக்க முடியாத திரைப்படங்கள்" என்ற திரைப்படக் கட்டுரைகள் நெடுந்தொடரில் இடம்பெற்ற, "தவப்புதல்வன்(1972)" திரைக்காவியக் கட்டுரையை இன்று [26.8.2012], அக்காவியத்தின் 41வது உதயதினத்தன்று நினைவுப்பதிவாக இங்கே பதிவிட்டு அசத்தியமைக்கு நன்றிகள் அகம் குளிர..!

அன்புடன்,
பம்மலார்.

pammalar
26th August 2012, 05:30 PM
நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 5

ஃபிரான்ஸ் அளித்த அங்கீகாரம்

'செவாலியே' விருது விழா

22.4.1995 [சனிக்கிழமை]

எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் : சேப்பாக்கம் : சென்னை

தமிழக முதல்வர் கலைச்செல்வி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமை வகிக்க, ஃபிரான்ஸ் நாட்டுத் தூதர் திரு. ஃபிலிப் பெடிட் அவர்கள், தங்கள் நாட்டின் மிகமிக உயர்ந்த விருதான 'செவாலியே' விருதை, உலக நடிகர் திலகத்துக்கு வழங்கினார். சிங்காரச் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, இந்தியத் திரையுலகமே திரண்டு வந்து, நமது சிங்கத்தமிழனை வாழ்த்தி, பெருமை தேடிக் கொண்டது. அந்தக் கோலாகலமான விழாவின் வரலாற்று ஆவணங்கள் தொடர்கின்றன:

பொக்கிஷாதி பொக்கிஷம்

வரலாற்று ஆவணம் : தினத்தந்தி : 23.4.1995

நடிகர் திலகம் 'செவாலியே' டாக்டர் சிவாஜி கணேசன் அவர்களின் ஏற்புரை
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6534-1.jpg

தொடரும்...

பக்தியுடன்,
பம்மலார்.

KCSHEKAR
26th August 2012, 05:36 PM
டியர் பம்மலார்,

தாங்கள் முதலாவதாக அளித்த முத்தான வாழ்த்துடன், சிங்கத்தமிழன் புலியோடு அமர்ந்திருக்கும் சூப்பர் புகைப்பபடப் பரிசுக்கும் இதயங்கனிந்த நன்றி.

தஞ்சாவூர் நிகழ்ச்சிப் புகைப்படங்களுக்கு தாங்கள் அளித்த பாராட்டுக்கள் உண்மையிலேயே ஊக்கம் அளிப்பவை. நன்றி.

தங்களின் = தொடரும் செவாலியே விருது விழா செய்திப் பதிவுகள் மற்றும், பாவமன்னிப்பு வெளியீட்டுப் பதிவுகள் அருமை. நன்றி.

யாமிருக்க பயமேன் - இது இறைவன் மொழி. - நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவையின் பணிக்கு, தங்களைபோன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்தும், நடிகர்திலகத்தின் ஆசியும் துணையிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு.

KCSHEKAR
26th August 2012, 05:44 PM
டியர் பம்மலார்,

Nadigar-Thilagam-The-Greatest-Actor-of-the-Universe - முதலாவது பதிவைத் துவக்கி இன்று - நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 5 - 'செவாலியே' விருது விழா பதிவின்மூலம் 100 -வது பக்கத்தைத் தொட்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

Richardsof
26th August 2012, 05:46 PM
36 DAYS

100 PAGES

REALLY A GREAT ACHIVEMENT .

OUR SINCERE WISHES TO ALL THE MEMBERS WHO PARTICIPATED IN THIS THREAD.
http://i48.tinypic.com/28vubdv.jpg
WISHES FROM MAKKAL THILAGAM FANS.

pammalar
26th August 2012, 05:47 PM
100வது பக்கம் : 100வது காவியம் : 100வது நாள் விளம்பரம்

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6528-1.jpg

ஒரு செஞ்சுரியில் ட்ரிபிள் செஞ்சுரி அடித்த ஃபீலிங் !

அன்புள்ளங்கள் அனைவருக்கும் ஆத்மார்த்தமான நன்றிகள் !!

எல்லாப் புகழும் இதயதெய்வம் நடிகர் திலகத்துக்கே !!!

பாசத்துடன்,
பம்மலார்.

KCSHEKAR
26th August 2012, 05:49 PM
டியர் சுப்பிரமணியம் ராமஜெயம் சார்

தங்களின் அன்பான பிறந்தநாள் வாழ்த்திற்கு நன்றி. தங்களின் எண்ணப்படியே, நடிகர்திலகத்தின் மணிமண்டபம் அமைய என்னாலான முயற்சிகளை, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை மூலமாகத் தொடர்கிறேன் - தங்களைப் போன்றோரின் வாழ்த்து, ஆதரவோடு.

KCSHEKAR
26th August 2012, 05:56 PM
டியர் வினோத் (esvee ) சார்,

மக்கள் திலகம் ரசிகர்கள் சார்பாக தாங்கள் அளித்த பெருமைமிகு பிறந்த நாள் வாழ்த்திற்கு இதயங்கனிந்த நன்றி. (தங்களுடைய தவப்புதல்வன் ஸ்பெஷல் புகைப்படத்திற்கும்)

தவப்புதல்வன் பற்றிய தங்களுடைய விமர்சனப் பதிவு அருமை. தங்களிடமிருந்து, நடிகர்திலகத்தின் RARE புகைப்படங்கள், விமர்சனப் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

KCSHEKAR
26th August 2012, 05:56 PM
Dear Ravikumar Sir,

Thanks for your Birthday wishes.

KCSHEKAR
26th August 2012, 06:08 PM
Dear Barister Rajinikanth Sir.

"First hero who had guts !!!" - 100% true word

KCSHEKAR
26th August 2012, 06:09 PM
Dear Pammalar,

100வது பக்கம் : 100வது காவியம் : 100வது நாள் விளம்பரம் - Super