சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புராணத் தொடர் திருவிளையாடல்.Quote:
சிவபெருமான், பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தன்னை வழிபடும் பக்தர்களிடத்தில் நிகழ்த்திய சம்பவங்களே திருவிளையாடல் என்று அழைக்கப்படுகிறது.
இத்தகைய திருவிளையாடல்கள் திருவிளையாடற்புராணம், சிவபுராணம், சிவமகாபுராணம், பெரியபுராணம், கந்தபுராணம் முதலான நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சுவாரஸ்யமான கதைகளின் தொகுப்பே இந்த திருவிளையாடல். தொடரில் இடம் பெறும் மாயாஜாலக் காட்சிகளை திரையில் கொண்டு வருவதற்கென்று சுமார் ஐம்பது பேர் கொண்ட கிராபிக்ஸ் குழு பணியாற்றி வருகிறது.
சிவபெருமானாக ஸ்ரீதரும், உமாமகேஸ்வரியாக யமுனாவும், அவ்வையாராக மனோரமாவும், நாரதராக ராதாரவியும், இந்திரனாக ப்ரித்விராஜனும், இந்திராணியாக யுவராணியும், தொடக்க கதையில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.
இசை:கங்கை அமரன், ஒளிப்பதிவு:சரவணபாண்டியன், எபிசோட் டைரக்டர்:செல்வபாண்டியன், திரைக்கதை வசனம்: ஸ்ரீமான் கவிச்செல்வர். இயக்கம்: ராகேஷ், சின்ஹா.
ரேடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தொடரை தயாரிக்கிறது.
################################
WHO ACT AS VINAYAGAR?