as per Raghvendar list, totally 47 theatres till now.
Printable View
as per Raghvendar list, totally 47 theatres till now.
இன்று கிடைத்த தகவலின் படி மேலும் அதி நவீன தொழில் நுட்ப வடிவில் சென்னை மயிலை ஐநாக்ஸ் திரையரங்கில் மாலைக் காட்சியாக பாச மலர் திரைக்காவியம் திரையிடப் படுகிறது. நம் முரளி சாரின் இல்லத்திற்கு அருகாமையில் இருக்கும் இத்திரையரங்கம் சென்னையின் பிரம்மாண்டமான ஷாப்பிங் வளாகத்தில் ஒன்றான சிடி சென்டர் சதுக்கத்தில் அமைந்துள்ளது. இதன்றி மாயூரம் ஜெயா திரையரங்கிலும் வெளியாகிறது.
இவற்றையும் முன் தரப் பட்ட பட்டியலில் இல்லாத இன்னும் ஓரிரு திரையரங்கினையும் கணக்கில் சேர்த்தால் எண்ணிக்கை 50ஐத் தாண்டியுள்ளது.
இன்று நண்பகல் காட்சியாக பாச மலர் திரைக்காவியத்தை சென்னை சாந்தியில் நமது நண்பர்கள் புடை சூழ சென்றிருந்தோம். முரளி தண்டபாணி, ராதாகிருஷ்ணன், சித்தூர் வாசுதேவன், ராமஜெயம் ஆகியோரும் மற்றும் ஏராளமான நண்பர்களும் வருகை புரிந்தனர். தமிழகமெங்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. எங்களுடன் அரங்கில் இருந்த மக்களில் பலர் குடும்பத்துடன் வந்திருந்தது குறிப்பிடத் தக்கது. காட்சி நேரங்களின் தகவல்கள் மக்களிடம் முழுமையாக சென்று சேராத நிலையில் அரங்கில் மிகவும் கணிசமான அளவில் மக்கள் வந்திருந்தது படத்தின் வரவேற்பு எவ்வளவு பிரம்மாண்டமாய் இருக்கப் போகிறது என்பதற்கு கட்டியம் கூறுவது போல் இருந்தது.
முரளி சாரின் விரிவான பதிவிற்கு நம் அனைவருடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன்.
இன்று நண்பகல் காட்சி முடிந்ததும், சத்திய பூமி என்ற மாதமிரு முறை சஞ்சிகை திரு ஆரூர்தாஸ் அவர்களால் சாந்தி திரையரங்கில் வெளியிடப் பட்டது. திரு பூமிநாதன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வர உள்ளது இப் பத்திரிகை. நிகழ்ச்சியில் முன்னாள் அகில இந்திய சிவாஜி மன்ற நிர்வாகி திரு கொண்டல்தாசன், சோனியா வாய்ஸ் மாதமிருமுறை பத்திரிகையின் ஆசிரியர் நவாஸ், அகில இந்திய சிவாஜி மன்ற நிர்வாகிகள் திரு சி.எஸ்.குமார், திரு அருணன், திரு எம்.எல்.கான், நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் தொலைக்காட்சி திரைப்பட நடிகருமான திரு நந்தகுமார் உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
http://i1146.photobucket.com/albums/...psedc65afb.jpg
மேலே உள்ள படத்தில் இடமிருந்து வலமாக..
பத்திரிகையின் ஆசிரியர், திரு எம்.எல்.கான், திரு ஆரூர்தாஸ், அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் திரு கே.வி.பி.பூமிநாதன், திரு நந்தகுமார், திரு கொண்டல்தாசன், திரு சி.எஸ்.குமார், திரு நவாஸ்.
சென்னை சாந்தி திரையரங்கில் ரசிகர்களின் பேனர்களின் நிழற்பட அணிவகுப்பு..
http://i1146.photobucket.com/albums/...psd6f78a38.jpg
http://i1146.photobucket.com/albums/...psbcbb2dff.jpg
http://i1146.photobucket.com/albums/...ps69eed5ef.jpg
http://i1146.photobucket.com/albums/...psde7f946a.jpg
http://i1146.photobucket.com/albums/...ps49682249.jpg
http://i1146.photobucket.com/albums/...ps763b758a.jpg
http://i1146.photobucket.com/albums/...ps2f581341.jpg
http://i1146.photobucket.com/albums/...ps4626f8c9.jpg
http://i1146.photobucket.com/albums/...ps4bf758c0.jpg
From A write up in Times of India (online page)
Read full Story on the Times of India pageQuote:
Digital Pasamalar in 70 TN screens
http://d2yhexj5rb8c94.cloudfront.net...ERSIONedit.jpg
August 15, 2013, is going to be a memorable day for die-hard fans of the late legend*ary actor Sivaji Ganesan for the thespian’s evergreen classic ‘Pasamalar’ is being re-released in an enhanced digital format with DI and Cinemascope after 52 years.
The movie which hit the screens way back in 1961 was a blockbuster, and critically acclaimed for the stellar performances of late iconic stars Sivaji Ganesan and Savithri who played siblings.
.....
due to unavoidable may not be in chennai on sunday, but will be on Saturday (2morrow) - shanthi