TIRUNELVELI- REMOTE VILLAGE TENT VIEW
http://i62.tinypic.com/4g0ksi.jpg
Printable View
TIRUNELVELI- REMOTE VILLAGE TENT VIEW
http://i62.tinypic.com/4g0ksi.jpg
கீற்று கொட்டகை - இந்தியா எங்கும் ஒருகாலத்தில் கிராமங்களில் மக்களுக்கு நல்ல ஒரு பொழுதுபோக்கை கொடுத்த வசந்த மண்டபம்.
எனது சொந்த ஊரான திருத்தால என்கிற கிராமம். கேரளாவில் பட்டாம்பி என்ற ஊருக்கு அருகில் உள்ள குக்கிராமம். அங்கு பாபு என்ற கீற்றுகொட்டகை மிகப்ரபலம். இப்போது அங்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளது. ( கேரளாவில் ஏன் அதிக சதவிகித படித்தவர்கள் என்று இப்போது புரிந்துருக்குமே ?)
பள்ளி விடுமுறை நாட்களில் த்ருத்தாலா செல்வது வழக்கம். அந்த கிராமத்தின் கடவுள் " தாலத்தில் அப்பன் " - பரமசிவனின் லிங்கம் சுயம்புவாக ஒரு தட்டில் தோன்றியதால் அந்த பெயர் ! தாலம் என்றால் தட்டு என்பது பொருள்.
9 ஆவது அல்லது 11வது படிக்கும்போது பள்ளி இறுதி தேர்வு முடிந்தவுடன் வழக்கம் போல கிராமம் சென்றேன். தினமும் என்னுடைய கேரளா நண்பர்களுடன், அரட்டை, பாட்டு, கிரிக்கெட், கால்பந்து என்று பொழுதை கழிப்பதே ஒரு அலாதி இன்பம்.
தாத்தா மற்றும் பாட்டி மட்டுமே எங்கள் வீட்டில் அங்கு உள்ளார்கள். 9 பேத்திகளுக்கு பின் நான் பிறந்ததால் அந்த வீட்டில் "நானே ராஜா" !
இருந்தாலும் அவர்கள் வயதான காரணத்தினால் அவர்களை நான் எந்த தொந்தரவுக்கும் ஆளாக்குவதில்லை. என்ன தருகிறார்களோ அதை உண்டு, பொழுதை இப்படி கழிப்பது வழக்கம்.
போலியான நகர வாழ்க்கைக்கு நடுவே அப்படி ஒரு இடம் நமக்கு தேவை என்று இப்போது நினைப்பதுண்டு.
அங்கு உள்ள மிக பிரபல கீற்று கொட்டகை " பாபு ". இரண்டு காட்சிகள் மட்டும் ..நம்முடைய கோவை டிலைட் போல. மத்யம் மற்றும் மாலை காட்சி மட்டும். 95% மலையாள பழைய திரைப்படங்கள் மட்டும் திரையிடும் கொட்டகை. எங்கள் கிராமம் பக்கத்தில் கும்பிடி, கடவு என்ற இரு குக்ராமங்கள் உண்டு. அவர்களுக்கும் "பாபு" ஒரு திரை அரங்கே பொழுதுபோக்கு.
பெரும்பாலும் இங்கு பிரேம் நசிர், மது, சத்யன், ஜெயன், வின்சென்ட், இவர்களுடைய விறுவிறுப்பு நிறைந்த படங்கள் மற்றும் சரித்திர கதைகளம் கொண்ட வடக்கன் பாட்டு எனப்படும் தச்சோளி சஹோதரர்கள் மையமாமான படங்கள் இங்கு பெரும் பாலும் வசூலை குவித்துவிடும்.
இப்படி ஒரு தருணத்தில் ஒரு புதன் கிழமை என்னுடைய நண்பரில் ஒருவன் ஒரு நோட்டீஸ் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தான்...சிரித்துக்கொண்டே ....டா..குமாரா (என்னுடைய ஊர்இல் அனைவரும் அழைக்கும் பெயர் குமார் என்பதாகும் ).நிங்களுடே ராஜ்யதிண்டே சிவாஜி கணேசன் சிநேமையா ஈஆழ்ச்சா என்று !! அதாவது உங்கள் ஊரின் சிவாஜி கணேசன் சினிமா இந்த வாரம் என்பது பொருள்.
நோடிசை வாங்கி பார்த்தேன். நடுநாயகமாக நம்முடைய நடிகர் திலகம் சுருள் வாளுடன் ஆக்ரோஷ போஸில் இடதுபுறம் பிரேம் நசிர் வலதுபுறம் ஜெயன் இவர்கள் புகைப்படம்.
கொட்டை எழுத்துக்களில் "தென் இந்திய சினிமாயுடே சிம்ஹம் சிவாஜி கணேசன் ஒப்பம் நம்முடெ ப்ரியன்கரன் நசிரும், ஜெயனும் அவதரிபிகுன்ன - தச்சோளி அம்பு !
அதை பார்த்தவுடன் வெள்ளி மதியமா அல்லது ஞாயிறா எப்போது என்ற குழப்பம் ..இருப்பினும் வெள்ளியே வென்றது !
வெள்ளிகிழமை எப்போழுதுவரும் என்ற ஏக்கத்தில் வெள்ளியும் வந்தது...மதிய உணவு முடித்து...ஒரு 12 அல்லது 15 பேர் கொண்ட குழுவாக
கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் நடந்து ...பாபு கீற்றுகொட்டகை நோக்கி படையெடுப்பு. நண்பர்கள் அவரது அக்காள் தமக்கை என எப்படியும் ஒரு 15 பேர் இருப்போம் என்று நினைக்கிறன்.
ருபாய் 1-25 பைசா டிக்கெட் வாங்கி உள்ளே சென்று பலகையில் உட்கார்ந்து பார்த்து பரவசம் அடைந்த படம் தச்சோளி அம்பு. இரண்டு தியேட்டர் மக்கள் அந்த ஒரு கீற்று கொட்டகையில். கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளுக்குமே விசில் ..கைதட்டல் என்று...இடைவேளையில் கப்பலண்டி (வேர் கடலை) வாங்கி அனைவரும் தோல் உரித்து உண்பது இன்னொரு டைம் பாஸ்.
படம் முடிந்து வரும்போது நடிகர் திலகம் அவர்களை துப்பாகியால் சுடும் வில்லனை அனைவரும் "துஷ்டன் " என்று திட்டி தீர்த்தது இப்போதும் காதில் ரீங்காரம் !
கேரளாவை பொருத்தவரை அன்றும் சரி இன்றும் சரி...நடிகர் திலகம் அவர்களுக்கு , அவரது படங்களுக்கு இருந்த வரவேற்ப்பு போல வேறு எவருக்குமே இல்லை என்று கூட சொல்லலாம் ! மருத நாடு வீரன் படம் கூட தமிழகத்தில் 100 நாட்கள் ஓடவில்லை ஆனால் திருவனந்தபுரத்தில் 119 நாட்கள் ஓடியுள்ளது. அந்த அளவுக்கு நடிகர் திலகத்திற்கு தமிழகத்தை விட அவர் மீது பற்று கொண்ட வெறியர்கள் அதிகம் !
சென்னையில் பாரகோன், பிளாச, சித்ரா, ஸ்டார், காமதேனு, கபாலி ஆகிய திரை அரங்கில் கிட்டத்தட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய 305 இல் கிட்டத்தட்ட 210 உக்கும் மேற்பட்ட படங்கள் , திரு m g ராமசந்திரன் அவர்களுடைய 136 இல் 60 உக்கும் மேற்பட்ட படங்கள், திரு ஜெய்ஷங்கர் அவர்களுடைய 180 இல் 50 உக்கும் மேற்பட்ட படங்கள் பார்த்திருக்கிறேன். இதை தவிர விட்டலாச்சார்யா, ஜெமினிகணேசன் , அனால் இவைகள் எவையும் கீற்றுகொட்டகைகள் அல்ல ! இந்த அரங்கில் படம் பார்ப்பது அது ஒரு தனி மகிழ்ச்சி !
மிழில் முதல் சினிமா ஸ்கோப் - ராஜ ராஜ சோழன் - நூறு நாட்கள்
மலையாளம் முதல் சினிமா ஸ்கோப் - தச்சோளி அம்பு - 163 நாட்கள்
தெலுகு முதல் சினிமா ஸ்கோப் - சாணக்ய சந்திர குப்தா - 175 நாட்கள்
மூன்றிலுமே நடிகர் திலகத்தின் ஆளுமை. திரை உலகின் முழு முதற் கடவுளாக வணங்கப்படும் நடிகர் திலகத்திற்கு கிடைத்த மரியாதை !
for jaisankar fans
http://i1170.photobucket.com/albums/...ps02c032dc.jpg
அடேயப்பா...
மலரும் நினைவுகள் அளிக்கும் உத்வேகத்தின் சிறப்பு தான் என்னே... வினோத் சார் தங்களுடைய அருமையான பகிர்வுகள் இத்திரியின் முழுமைக்கு சான்றாக விளங்குகின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றியும் பாராட்டும்.
தொடருங்கள்..
டியர் ஆர்கேயெஸ்
தங்களுடைய கேரள மண்ணின் வாசம், அங்கு நடிகர் திலகத்தின் ஆளுமை போன்ற பல விஷயங்கள் இத்திரியின் மூலம் நாமெல்லாம் தெரிந்து கொள்ள உதவியாய் இருக்கிறது. தங்களுடைய அனுபவங்கள் நிச்சயம் நம்மைப் போன்ற தமிழக மக்களுக்கு புதியதாகத் தான் இருக்கும்.
பாராட்டுக்கள்.
தொடருங்கள்..
யுகேஷ் பாபு சார்
இத்திரியின் பல்வேறு பரிமாணங்களில் நட்சத்திரங்களின் அந்நாளைய நிழற்படங்களும் அடங்கும். அவ்வகையில் ஜெய்சங்கர் அவர்களுடைய அபூர்வமான நிழற்படங்கள் இத்திரிக்கு பெருமை சேர்க்கின்றன.
தங்களை ஆவலுடன் வரவேற்பதோடு மேலும் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை நல்குமாரு கேட்டுக்கொள்கிறேன்.
கண்டிப்பாக சார் என்னால் முடிந்த அளவுக்கு இத் திரியில் பங்களிக்கிறேன்
ஹாய் ஆல்..
ஹாய் ராகவேந்தர் சார்.. உங்களை வாழ்த்தவெல்லாம் எனக்கு வயதில்லை ..எனில் மை ஸின்ஸியர் நமஸ்காரங்கள் டு யூ.:).
முதன் முதலில் இங்கு வாழ்த்தலாம் என வந்தால் டெண்ட் கொட்டாய் பற்றி எரிந்துகொண்டிருந்தது..சரி அணைந்த பிறகாவது வரலாம் என்றால் முட்டை போண்டாவெல்லாம் போடவேயில்லை (ஆமாம் மாயமோதிரம் ராஜஸ்ரீ போஸ்டர் போட்ட டெண்ட் கொட்டாய் படம் கிடைக்கவில்லையா எஸ்.வி.சார்:) )
நடுவில் ராஜேஷ் மதுரை நியூசினிமாவின் ஸ்டில் ( நான் தினசரி அதைக் க்ராஸ் செய்து தான் தெ.ஆ.மூ.வீதியில் இருந்த எங்கள் கடை மற்றும் என் ஆடிட்டரின் ஆஃபீஸிற்குச் செல்ல வேண்டும்) ம்ம்..
எனில் சொன்னாற்போல நான் ஒரு காம்ப்ளான் பாயாக இருந்து வளர வளர மதுரை சிட்டி மேனாக (22 வயது வரை) இருந்தவன்.. எனில் கீற்றுக் கொட்டகை என அழைக்கப்படும் டெண்ட் கொட்டாய் எனத்தமிழில் அழைக்கப்படும் தியேட்டர்களுக்குச் செல்ல வாய்ப்பில்லை..இல்லை இல்லை வாய்ப்பில்லாமல் தான் இருந்தது..
ஆனால் ஆண்டவனுக்கும் விதிக்கும் யாரோ கிச்சு கிச்சு மூட்டினார்களோ தெரியவில்லை. ஒரு காலகட்டத்தில் ஹி ஹி எனமெளனமாகச் சிரிக்க எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வந்தது..
அப்போது கல்லூரி முடித்து மேற்படிப்பிற்குச் சேர்ந்திருந்த சமயம்..எனது சகோதரியின் கணவர் வடக்குமாங்குடியில் பேங்க் மேனேஜர்.. வீடு அய்யம்பேட்டையில் வைத்திருந்தார்.. எனில் ஒரு பரீட்சைக்கான விடுமுறையில் அங்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டது..
இந்தத் தஞ்சாவூர் டு கும்பகோணம் பாதையில் இடையில் வருவது அய்யம் பேட்டை.. இளம்பருவம்..கல்லூரி முடித்த இளங்காளை என்பதால் பச்சைப் பசேல் வயல்கள் பார்ப்பதற்கே கொஞ்சம்பரவசம்..ஆவல் எல்லாம் இருந்து அய்யம்பேட்டைக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் வந்து சேர்ந்தால்..மனதுக்குள்பலவிதபட்டாம் பூச்சிகள் வந்து சிறகுகளை பட் பட் படாரென அடித்தன..
காரணம் அவள்..(பெயர் வேண்டாமே) என் சகோதரியின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டு ஆரணங்கு..படித்துக் கொண்டிருந்தது டீச்சர்ஸ் ட்ரெய்னிங்க் கோர்ஸ்.. அப்பாவிற்கு பிஸினஸ்..ஒரு அண்ணா ஒரு தம்பி..அவ்ர்களுக்கு என்ன பிஸினஸ் என்றால்…தறி..யெஸ்..செளராஷ்டிரா தான்..(டி.எம்.எஸ் உங்களுக்கு ரிலேஷனா.. போங்க உங்களுக்கு ஆனாலும் அதீதமான கற்பனை – என அந்தக்காலத்திலேயே எனக்கு சர்டிஃபிகேட் கிடைத்ததாக்கும்)
இருந்தாலும் பாவாடை சட்டை தாவணி போட்டவண்ணம் ஒரு பைங்கிளி வீட்டிற்குள்ளேயே வந்து பேசுவது இளம்பருவ அந்தக்கால ஆடவர்களுக்கு ஒரு இயல்புக்கு மாறான விஷயம் தான்.. அவள் வருவது என் சகோதரிக்கு ஹெல்ப் வேண்டுமா என்பதற்குத் தானேயொழிய வேறெதற்குமில்லை என இங்கு தெளிவு படுத் படுத்துகிறேன்..கற்றுக் கொண்ட செள் மொழியில் நினைவிலிருப்பது ஒகமாவ் (வேகமா வா) மட்டுமே..(ம்ஹீம்..கற்பனையைக் கன்னாபின்னா என ஓட விடாதீர்கள்!)
அவளுக்கு ஒரு அண்ணன் என்றிருந்தேனே..அவன் பெயர் பிரபாகரன் என நினைக்கிறேன்.. ஹோட்டலில் ஃபுல் மீல்ஸ் ஆர்டர் செய்தால் ஒரு புளிப்பு ரைத்தா தந்தால் என்ன செய்வீர்கள்..அதைப் பொறுத்துக் கொண்டு மற்ற விஷயங்கள் நன்றாக இருக்கிறதா எனப் பார்ப்பீர்கள் அல்லவா..அதே போல அவளுக்காக இந்த்ப் புளிப்பு மிட்டாயிடம் பேசவேண்டியதாகி விட்டது..காலப்போக்கில் அவன் கொஞ்சம் ஹெல்ப் செய்ததால் (டேய் ப்ரபாகரா அந்தப் பெட்டிக் கடை வரைக்கும் போய்ட்டு வரலாமா.. ஓ..வரேங்க..) கொஞ்சம் நட்பும் ஆனான்..
அந்தப் ப்ரபாகரன் ஒரு நாள் வந்தான் என்னிடம்.. கண்ணா..
என்னா..
சினிமா போகலாமா
தஞ்சாவூரா..அக்கா வையுமே.. வந்திருக்கறது படிக்கறதுக்குப் ப்ரபாகரா.. ஹாய்..”
“ஹாய்” என்றது எதற்கோ என் சகோதரியைப் பார்க்க வந்திருந்த அவளிடம்..!
அவள் ப்ரபாகரனை முறைத்து,என்னிடம் “ நீங்க இவனோடல்லாம் சேராதீங்க” என்று விட்டு உள்ளே செல்ல ப்ரபாகரன் ஒன்றுமே நடவாதது போல் “ வர்றீங்க்ளா.. தஞ்சாவூர்லாம் இல்லை.. பசுபதி கோவில் விஜயா” என்றான்
என்னப்பா படம்
படகோட்டிங்க..
ஏற்கெனவே சாந்தி தியேட்டர்ல மதுரைல பார்த்துருக்கேனே..ஆனா கொஞ்சம் 4 வருஷம் இருக்கும்..
பின்ன என்ன.. உங்க அத்திம்பேர்கிட்ட வேணும்னா நான் பேசறேன்.. நைட் ஷோ..இங்கருந்து அண்ணாசிலை ஸ்டாப்ல இருந்து மொஃபஸல் பஸ் பிடிச்சுபசுபதி கோவில் ஸ்டாப்ல இறங்கிக்கலாம் (3 கி.மி என நினைவு) திரும்பறச்சே ஏதாவது பஸ் மாட்டும் வந்துடலாம் என்னாங்கறீங்க..
சரி எனச் சொல்ல அவன் உடனே எங்கள் வீட்டின் உள் சென்று உரிமையாய் போனெடுத்து என் அத்திம்பேரின் பாங்க்கிற்குப் போன்செய்து அவரிடம் பேசி ஓகே..ஆனா எதுக்கும் அவனோட அக்காட்ட கேட்டுக்கோ என வந்த பேச்சால் என் சகோதரியிடமும் பேசி ( நைட் ஷோவா போகறீங்க.. இவளே ஒங்க அண்ணன் பார்த்து கண்ணாவக் கூட்டி வருவானா..பாவம் அதுக்கு சூது வாது தெரியாது… போங்க மேனேஜர் வீட்டம்மா ..என் அண்ணா எட்டூருக்குப் போய்ட்டு வந்துருக்கான் ஒண்ணும் ஆகாது.. நானும்கூட ப் போகலம்னு ஆசை என அவளின் குரல் வர டொய்ங்க்க் என்று எம்ஜிஆர் தனது ரதத்தைக் கொணர்ந்து எனக்குத் தர நானும் அவளும் அதில் ஏறி ராஜாவின் பார்வை எனப் பாட ஆரம்பிக்கையில் இது என்ன அவளின் குரல் தொடர்கிறதே! ஆனா நைட்ஷோன்னா ப்ராப்ளம்க்கா காலைல வேலை இருக்கு நிரம்ப எனக் கவிதை முடித்தது..
ப்ரபாகரன் சற்று நிம்மதியாய் (ஏனெனில் அவன் அப்பாவிடம் அவள் பெர்மிஷன் கேட்டு அவனுக்குக் கொடுத்துவிடுவாள்) பெருமூச்சு விட்டு ஒரு ஒன்பது மணிக்குக் கிளம்பலாம் என்று சொல்லிக் கிளம்பிச் சென்றான்..
ஒன்பது என்று சொன்னவன் வந்தது ஒன்பதேகாலோஒன்பதரையோ..பின் விசுக்விசுக்கென்று அய்யம்பேட்டை அண்ணா சிலை ஸ்டாப்பிற்குச் சென்று அந்த இருளில் (ஸ்ட்ரீட் லைட் எரியவில்லை) இருகண்களுடன் வரும் மொபஸல் பஸ்ஸிற்காகக் காத்திருந்து ஏறி இரண்டு ஸ்டாப்புகளோ என்னவோ சரிவர நினைவில்லை கடந்து இறங்கி பசுபதிகோவிலில் கொஞ்சம் நடந்தால் பளீரென மின்னலடிக்கும் இளம்பெண் சிரிப்பாய் மின்னிக்கொண்டிருந்தாள் விஜயா.பலப்பல ட்யூப்லைட் வெளிச்ச் உபயத்தில்.. .கொண்டிருந்தது விஜயா டூரிங்க் தியேட்டர்..
முன்னே எம்ஜிஆர் மீனவத்தொப்பியுடன் வாங்க என மெளனமாய் வரவேற்க கோப விழி விழித்த சர்ரோஜா தேவி போஸ்டர். உள்ளே சென்றால்.. கண்ணா தரை டிக்கட்டே வாங்கட்டா..ஏம்ப்பா எனக்குப் பழக்கமில்லையே..சரி என மனசில்லாமல் சேர் டிக்கட் வாங்கிக் கொடுத்து விட்டு அவன் தரைடிக்கட் பக்கம் போகப் பார்க்க டேய் நானும் வர்றேன் என அவனுடனேயே சேர்ந்து தரை டிக்கட்டிற்கு ச் சென்று விட்டேன்..
என்னதானிருந்தாலும் கல்லூரி இளைஞன் ஆன காரணத்தினால் பேண்ட் தான் போட்டிருந்தேன்..கொஞ்சம் டைட்..தரையில் கஷ்டப்பட்டு உட்கார்ந்தால் ர்ர்ர் எனச் சத்தம்..என்னகண்ணா வயிறு சரியில்லயா.. அடப் போடா ப்ரபாகரா. ஒண்ணும் இல்லை எனச் சமாளித்து உட்கார்ந்து (பெரிதாய்க் கிழிந்திருக்குமோ.. இருக்கிற நல்லபேண்ட்டில் ஒன்றாயிற்றே இது) ஆ எனப் படம் பார்க்க ஆரம்பித்தேன்..
நன்றாகவே இருந்தது அந்த அனுபவம்.ப்ரபாகரன் உச்சியிலோ சைடிலோ இருந்த ஃபேன் பக்கமாகவே அமர்ந்திருந்தான்.. படம் வந்து இரண்டாவது வாரமோ என்னவோ தியேட்டரில் அதிகக் கூட்டமில்லை. கொஞ்சம் சேர்பக்கம் திரும்பிப்பாருங்க..பார்த்தால் சேர் டிக்கட்டில் குறைந்த நபர்களே அமர்ந்திருந்தன.ர்.. தரை டிக்கட்டில் சுமாரான கூட்டம்..
படம் ஆரம்பித்து தரை மேல் பிறக்கவிட்டான், என்னை எடுத்து தன்னைக்கொடுத்து போனவன்போனாண்டி எனபாடல்க்ள் வந்து போக இரண்டு மூன்று இண்டர்வல் என நினைவு.. படம் ஒரு வழியாய் முடிந்தது அரெளண்ட் இரண்டு இருக்கும்..
இப்ப என்னடா பண்ணப்ரபாகரா..
பஸ் கிடைச்சா போகலாங்க..
அப்படின்னா..
இல்லைன்னா நடராஜா தான்..
சாலையில் நின்று வந்தபஸ்ஸை நிறுத்தி ஏற முயற்சிக்கலாம் என்று பார்த்தால் எதுவும் நிற்கவில்லை..மோஸ்ட்லி திருவள்ளுவர் தான்..அவர்கள் நிறுத்தவும் மாட்டார்க்ள்..எனில் ப்ரபாகரன் சொன்னதுபோல நட ராஜா தான்..
நான் ப்ரபாகரன் பின் தியேட்டரில் சந்தித்த மற்றுமிரு இளைஞர்கள் (ப்ரபாவுக்குத் தெரிந்தவர்கள்) என நடக்க ஆரம்பித்தோம்..
சாலை இருபுறங்களிலும் கொஞ்சம் விளக்குகள் இருந்தாலும் மோஸ்ட்லி இருள்..தவிர மரங்களும் இருக்க கொஞ்சம் ச்ச்சிலீர் காற்றும் அடிக்க நட நட நடராஜா.. நேர் மேலே நிலா.. அய்யோ பாவம் கண்ணா இன்னும் இளச்சுடுவானேன்னு நினைத்ததோஎன்னவோ அதுவும் கூட வந்தது..(அப்போது நான் நன்கு ஒல்லியாய் இருப்பேனாக்கும்)
ஒருவழியாய் கிட்டத்தட்ட மூன்றரை வாக்கில் வீட்டிற்கு வந்து அக்கா கீழே ஒளித்துவைத்திருந்த வீட்டுச் சாவியை எடுத்துத் திறந்து ஹாலிலேயே டபக்… பட்டெனத் தூக்கம்..
மறு நாள்காலை அக்கா நன்றாகவே ப்ரபாகரனைக் கூப்பிட்டுத்திட்டினாள்.. நீ பாட்டுக்குப் பையனை ( நான் தான்!) ராவேளைல இப்படி நடத்திக்கூட்டுக்கிட்டு வரலாமா..ஏதாவது காத்து கருப்புல்லாம் அடிச்சா என்ன ஆறது.. ஏண்டி இவ்ளே நீயாவது முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாது என அவளிடமும் கேட்க அந்தப் பெண்ணின் கண்ணோரம் நீர்.. எனக்குத் தெரியாதுக்கா இது இப்படிச் செய்யும்னு என அண்ணனைக் கோப முறை முறைத்து விட்டு என்னருகில் வந்து மெல்ல மென்மையாய் என்னைக் கரம் தொட்டு “ஸாரிங்க” என்றாள்… எனக்கு நிஜம்மாகவே பேய் (மோகினி) அறைந்தாற்போல சிலிர்த்தது..!
(பி.கு. அடுத்த இருவருடங்களில் என் அத்திம்பேருக்கு மறுபடிமாற்றல் வந்து சென்னை சென்றுவிட நான் ப்ரபாகரனையும் அவளையும் மீண்டும் சந்திக்கவேயில்லை.)
நன்றி திரு ராகவேந்திரன் சார்
http://i59.tinypic.com/2zje04j.jpg
http://i57.tinypic.com/aykrhg.jpg
http://i58.tinypic.com/30icn6f.jpg
வேலூர் அண்ணா கலை அரங்கம்
தற்போது இந்த அரங்கமும் சபாவாக மாறிவிட்டது
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்