சந்திரனாக கோல்டன் சுரேஷ்்
ரேவதி = பிரியங்கா
அஸ்வினி / கிருத்திகை யார் ???
Printable View
சந்திரனாக கோல்டன் சுரேஷ்்
ரேவதி = பிரியங்கா
அஸ்வினி / கிருத்திகை யார் ???
சென்ற வெள்ளியன்று தொலைக்காட்சி இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தொடரைக் காணா இயலவில்லை. இவ்வாரத்தின் ஆரம்பத்தின் சந்திரன் சிவனிடம் முறையிடும் காட்சியிலிருந்து ஆரம்பித்திருந்தார்கள். எனில், சந்திரனை தக்ஷன் சாபத்திர்க்கு உள்ளாக்கியிருக்கவேண்டும். சந்திரனின் தேஜஸ் குறைந்து குன்றி அவன் தேய்ந்தே இறந்து போகும் படி சாபமிடுகிறான் தஷன். இதனைத் தொடந்து பயத்தில், இறைவனாம் ஈசனை சந்திரன் நாடுவதாக கதை உண்டு.
இறைவனிடம், சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை எடுத்துரைத்து கருணை வேண்டி நிற்கிறான். இறைவனும், 'மாதத்தின் 15 நாட்கள் தேய்ந்து மங்கிப் போனாலும் மீதமுள்ள 15 தினங்கள் உன் ஒளி கூடி, வளர்ந்து பூரணமடைவாய்' என்று சாபத்தை தணிக்கிறார்.
இதனைக் கேள்விப்பட்ட தஷன், தாங்கொணா கோபத்திற்குள்ளாகிறான். 'பெற்று வளர்த்தவன் நான், பெற்றவனுக்கல்லவா தெரியும் வாழாத பெண்களின் துயரம். இவன் சர்வலோக நாயகன் என்ற பட்டதை ஒரு காலத்தில் பெற்றவனாய் இருக்கலாம். அவனிடமிருந்து நான் அதைப் பறித்து பலகாலமாகிவிட்டது. என் வரத்தை தணிக்க இவன் யார்!' என்றெல்லாம் ஆத்திரத்தில் கூச்சலிடுகிறான். இதனைக் கேட்ட தாக்ஷாயணி வேதனை அடைகிறாள். அவன் சிவ நிந்தனை செய்வது தவறு என்று எடுத்துரைக்கிறாள். என் மகளாய் இருந்தும் நீ ஈசனுக்கே பரிந்து பேசுகிறாயே என்று தக்ஷன் கடிந்து கொள்ளும் போது, அப்பேர்பட்ட பக்தியை அவளுக்கு கற்றுக்கொடுத்ததே அவள் தந்தை என்பதை நினைவு படுத்துகிறாள். தக்ஷனுக்கு மீண்டும் தன் வரம் நினைவுக்கு வர சிவனை தனக்கு அடங்கச் செய்யும் நாள் வெகு விரைவில் வரவிருக்கிறது என்று நினைத்து புன்னகைக்கிறான்.
சதா சிவ பூஜையில் ஈடுபட்டிருக்கும் தாஷாயணியை, தன் வயதொத்த பெண்களைப் போல் ஆடிப்பாடி களிக்கக்கூடாதா என்று வினவுகிறாள் அவள் தாய். வயதிற்கும் பக்திக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. என் மனம் ஆடிப்பாடி களிப்பது சிவனை துதிக்கும் போது தான் என்று பதிலளிக்கிறாள். அவள் சிவனிடம் கொண்டிருப்பது பக்தி மட்டுமல்ல, அவள் செய்வது பூஜை மட்டுமல்ல, அவரையே அடையவதற்கான தவம், அவரையே திருமணம் செய்து கொள்ள அவள் விழைவதாய் கூறுவது வேதவல்லிக்கு பெரும் கவலையை அளிக்கிறது.
பருவப்பெண்ணாய் வளர்ந்து விட்ட தாஷாயணியின் சிவபூஜைக்கு செவி சாய்க்கும் நேரம் வந்துவிட்டதால், இனி தாமதம் செய்யலாகாது என்று சிவன் பூலோகத்திற்கு புறப்படுகிறார். தன் சிநேகிதிகளுடனும், தமக்கைகளுடனும் நந்தவனத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது, அங்கே திடீரென ஒரு கிழவர் தோன்றுகிறார். (அட சரியாய் யூகித்துவிட்டீர்களே...வேறு யாரும் அல்ல நம் சிவன் தான ) கிழவர் வேடத்தில் பெண்களிடம் வம்பு செய்கிறார் இறைவன். வம்பு வளர்த்து, தாஷாயணி மேல் தனக்கு பிரியம் இருப்பதாகவும், அவளை தூக்கிக்கொண்டு போய் திருமணம் செய்யவும் தயார் என்று சிரிக்கிறார். தாஷாயணி சற்று நேரம், பரிச்சயமான அவரின் பார்வையில் தன்னை மறந்தாலும், கிழவரின் பேரில் பெரும் கோபம் கொண்டு, அவரை விரட்டி விட எத்தனிக்கிறாள். 'நீ விரட்ட வேண்டாம், நானே சென்று விடுகிறேன்' என்று சிவன் மாயமாய் மறைந்து விடவும், எல்லோருக்கும் பீதி அதிகரிக்கிறது.
விரைந்து வந்து தங்கள் அன்னையிடம் முறையிட, அங்கும் அந்த கிழவனின் தோற்றம் தாஷாயணியின் கண்களுக்கு மட்டும் தெரிகிறது. அவள் நோக்கும் இடமெங்கும் கிழவன் சிரிப்பும், அழைப்பும் அவளுக்கு மட்டும் தெரிய, பீதி அதிகரிக்கிறது.
(தொடரும்)
தலையலங்காரங்கள் அழகாய் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். சுஜிதா கொள்ளை அழகுடன் வலம் வருகிறார். மற்ற இரு பெண்களான அச்வினியும், ரேவதியும், தங்களின் தந்தையர் வீட்டில் இன்னும் அழகாய் ஆடை அலங்காரத்துடன் காட்சியளிப்பது, பாராட்டத்தக்கது (அஃதாவது சந்திரன் அவர்களை சரியாய் பராமரிக்க தவறிய போது அவர்கள் ஆடைகள் சற்றே சுமாராக உடுத்தியது) ஆனாலும் அணியும் உள்ளாடைகளின் நிலை மட்டும் அப்படியே இருக்கிறது.
சந்திரன் தேய்வதும், குன்றுவதும் அழகாய் (சரியாய்) காண்பித்திருந்தனர். சுமங்கலியாய் வந்தவர் நன்றாக செய்கிறார் என்றாலும் "நந்தவனத்தில் கிழவன் ஒருவன் இருக்கிறானம்மா" என்று பெண்கள் வந்து முறையிட்டதும்,
"என்னது...நந்தவனத்தில் கிழவனா!" (குமரன் இருந்தால் மட்டும் பரவாயில்லை என்பது போல்) என்று பதபதைக்கும் போது நமக்கு சிரிப்பு வருகிறது. ஒருவேளை அங்கு அமைந்திருந்த வசனம் காரணமாய் இருக்கலாம்.
கதை மெல்லமாய் ஊர்ந்து செல்கிறது. இன்னும் கொஞ்சம் துரிதப்படுத்தலாம். கதை தெரிந்ததாய் இருந்தாலும், புரிந்ததாய் இருந்தாலும், ஒரே வரிக்கதையாய் இருந்தாலும் கூட, திரைக்கதையும், வசனமும் கொண்டு ஈர்ப்பை இருக்கச்செய்துவிடலாம்.
அந்த விஷயதில் இவர்கள் ... இன்னும் முயலவேண்டும்!
சிவன் கிழவன் வேடத்தில், ஸ்ரீதர் நன்றாகச் செய்திருந்தார். இவர் தான் சிவன் என்று இருவினாடிகள் கழித்தே புரியுமளவுக்கு ஒப்பனை நன்றாக இருந்தது. ஆனாலும் என் எட்டு வயதுப் பெண், "அம்மா இது சிவன் தானே கிழவன் வேஷத்தில்" என்ரு ஒரே நொடியில் கண்டு பிடித்து விட்டாள். அவளுக்கு கதை கூட சில நேரம் புரியாத போது ஒப்பனை சட்டென்று கண்டுபிடித்து விட்டாள்.
இக்கால குழந்தைகள் படு சுட்டிகள். இவர்களெல்லாம் பழைய எம்.ஜி.ஆர் படங்களில் வெறும் தாடி, மீசை வைத்து வேறு வேடம் கட்டும் நடிகர்களை, அதையும் கூட கண்டுபிடிக்க முடியாமல் ஏமார்ந்து போகும் வில்லன்களைக் கண்டால் என்ன சொல்வார்கள்!
avlO nallaa irukkaa, indha program.. :roll:
I dont know about that sarna, I watch it only because, it talks on mythology and religion and I AM FOND of mythology and religion.
I aint interested in watching anything else.
ok .... :P
ஆச்சரியமான அழகான விஷயம் நம் புராணக் கதைகள். புனைவுக் கதைகளை அதன் கற்பனை வளம் குன்றாமல் ரசிக்க முயன்றால், மிகப் புதுமையான உலகுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. பூமியின் சுழற்சிக் காரணமாய் மறைந்தும் மறையாமலும் தோன்றும் நிலவுக்குத் தான் எத்தனைப் புனைக்கதைகள்!
:DQuote:
Originally Posted by Shakthiprabha
:rotfl:
:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
வேறு யார் கண்களுக்கும் தெரியாத கிழவன் தாக்ஷாயணியின் கண்களுக்கு மட்டும் எப்படித் தெரிகிறான்? தன் படுக்கையறையிலும் அக்கிழவன் வந்து தொல்லைக் கொடுப்பதாய் முறையிடுகிறாள் தாஷாயணி. தஷனும், வேதவல்லியும் ஏனையரும் செய்வதறியாது நின்றிகின்றனர். இத்தனைக் கட்டுக்காவல்களை மீறி ஒருவன் அதுவும் கிழவன் எப்படி நந்தவனத்திற்குள்ளும படுக்கையறையிலும் நுழைந்திருக்க முடியும்! என்று பலவாறு குழம்புகின்றனர். தஷனின் மாளிகையின் காவலை மீறும் அளவு, எப்படி இத்தனைத் துணிச்சல் ஒருவனுக்கு இருக்க முடியும்? ஒரு வேளை புத்தி பேதலித்தவனாய் இருப்பானோ என்று தஷன் சந்தேகம் கொள்கிறான்.
அடுத்த தினம் சகோதரிகள் மூவரும் ஒரு திட்டம் தீட்டுகின்றனர். நந்தவனத்தில் அவர்கள் தனியே நடமாடும் போது அக்கிழவன் தோன்றினால், வம்பு செய்தால், தாஷாயணி அவனுக்கு ஒப்புதல் அளிப்பது போல் அவனுடன் ஆசையுடன் பேசி அளவளாவ வேண்டும். இதற்குள் மற்றவர்கள் சென்று அரண்மணைக் காவலாளிகளைக் கொண்டு அவனை கையும் களவுமாய் பிடிக்கலாம் என்று யுக்தி செய்கின்றனர். அதன்படி கிழவனாய் சிவன் தோன்றவே தாஷாயணியும் அவருடன் சிரித்து பேசி அவரைத் தக்கவைத்துக் கொள்ளப் பார்க்கிறாள். இதற்குள் மற்ற சஹோதரிகள் சென்று தஷன், ஏனைய காவலாளிகள் வந்து அவனை பிடித்து விடுகின்றனர்.
கிழவனும், மாட்டிக்கொண்டது பொல் பரிதவித்து, அவர்களுடன் அரண்மணைச் செல்கிறான். தஷன் கிழவன் ஒரு மாயாவி என்ற முடிவு கட்டி, கிழவனுக்கு மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து மந்திரவாதிகளை எல்லாம் கழுவில் ஏற்ற உத்தரவிடுகிறான்.
இனி தன் விளையாட்டை நிறுத்திக் கொள்ள தீர்மானித்து, கிழ உருவைக் கலைதது விட்டு, சிவனாய் தரிசனம் தருகிறார். மிதமிஞ்சிய ஆச்சரியம், மகிழ்ச்சி கொப்பளிக்க தஷனும், தாஷாயணியும் மற்றோரும் அவரை வரவேற்கின்றனர்.
"என் மகளைத் தா என்று கேட்டால் தந்திருக்க மாட்டேனா, உங்களுக்காகவே தானே அவளை நான் வளர்த்து வருகிறேன்" என்று தஷன் பவ்யமாய் கூறுகிறான். திருமண ஏற்பாடுகள் அனைவரும் தயாராகின்றனர். தஷனிடம், மகிழ்ச்சியின் ஊடே ஆணவமும் தலை தூக்கை அதை இறைவன் மட்டும் கண்டு புன்னகைக்கிறார்.
"இவள் செய்தது பக்தி என்று நினைத்தோம் பதி-பக்தி என்று இப்பொதல்லவா தெரிகிறது" என்று சஹோதரிகள் கேலிக்கின்றனர். மணமகள் அலங்காரத்திற்கு தாஷாயணி தயாராகி நிற்க, ரேவதியும், அஸ்வினியும் முகத்தில் வாட்டமுடன் தங்கள் அன்னையிடம் எடுத்துரைக்கின்றனர்.
"திருமணத்திற்கு எல்லோரும் வந்திருக்கும் போது, தங்கள் முதல் மருமகனுக்கும் அழைப்பு விடுக்கவேண்டுமல்லவா. அவர் இல்லாமல் இருந்தால் நன்றாய் இராது, சந்திரன் வந்து விட்டால் எங்களையும் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள்!" என்கின்றனர்.
( 'முழுதாய் ஒளிர்ந்தாலும் மணாளன்....
அரையாய் தேய்ந்தாலும் ஆகமுடையான...'
என்பது புதுமொழியாம்! )
____
தஷன், கிழவனிடம் "முதியோருக்கே உள்ள பக்குவம், ஞானம், முதிர்ச்சியெல்லாம் துளியும் தென்படவில்லையே!" என்கிறான். பக்குவமும் பக்தியும் ஞானமும் முதிர்ச்சியும் வயதையொத்து வருவதல்ல. தாஷாயணியின் சிறுவயது பக்தியும் இதற்கொரு எடுத்துக்காட்டு.
ஞானமும், ஏனைய பெருங்குணமும், அவரவர் கர்மவினைப்படி, ஆன்மாவின் முதிர்ச்சியின் படி அமைவது. சிறுபிள்ளைத்தனமாய் நடக்கும் எத்தனையோ பெரியோர்களை நாம் காண்கிறோம். நற்குணங்களும், பொறுமையும் கொண்ட சிறியோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வயதிற்கும் அறிவிக்கும் (பொதுஅறிவு அல்ல) சம்பந்தமில்லை என்பது கண்கூடு!
கிழவன் சிவனாய் மாறும் போது, தஷனின் முகத்தில் தோன்றிய மாற்றம் அருமையாய் இருந்தது. மிக நன்றாகச் செய்திருந்தார். தாஷாயாணியாக சுஜிதாவும் ஈடுகொடுத்து பாவங்களை மாற்றி, வசங்களை அழகாய் உச்சரித்து, தன் பங்குக்கு உழைப்பை அளித்திருக்கிறார்!
:rotfl:Quote:
Originally Posted by Shakthiprabha
:exactly:Quote:
Originally Posted by Shakthiprabha
:clap:Quote:
Originally Posted by Shakthiprabha
nandri aana!
என் வீட்டில் சிறிது வேலைகள் இருப்பதால், இன்னும் 10/20 நாட்களுக்கு உடனுக்குடன் எழுத முடியுமா தெரியவில்லை.
முயல்கிறேன். எப்படியும் சுருக்கமாகவாவது எழுதிவிடுகிறேன்.