-
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் 1975-ம் ஆண்டு சாதனைப் பட்டியல்:
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)
1. தொட்டதெல்லாம் பொன்னாகும் - 10.1.1975 - பாரகன், பாண்டியன், சயானி, ராம்
2. எங்க பாட்டன் சொத்து - 24.1.1975 - சாந்தி, கிரெளன், புவனேஸ்வரி
3. சினிமா பைத்தியம் - 31.1.1975 - தேவிபாரடைஸ், அகஸ்தியா, சரவணா
4. யாருக்கு மாப்பிள்ளை யாரோ - 7.3.1975
5. சொந்தங்கள் வாழ்க - 21.3.1975 - பிளாசா, செலக்ட், சயானி, கிருஷ்ணவேணி
6. பிஞ்சு மனம் - 21.3.1975
7. எங்களுக்கும் காதல் வரும் - 29.8.1975
8. எடுப்பார் கைப்பிள்ளை - 19.9.1975
9. தாய் வீட்டு சீதனம் - 3.11.1975
10. ஹோட்டல் சொர்க்கம் - 12.12.1975
குறிப்பு:
சினிமா பைத்தியம் திரைப்படத்தில், வாஞ்சிநாதனாக, கெளரவ வேடத்தில், நடிகர் திலகம் தோன்றி நடித்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
அன்புடன்,
பம்மலார்.
-
வைரம் படத்தில் எஸ்.பி.பி., ஜெயலலிதா குரல்களில் ஒலித்த "இது மாங்கனி போல் இதழோரம் ஏங்குது மோகம்" மிகவும் பிரபலமான பாடல்.
அக்கரை பச்சை போல் ஒரு சில ஜெய் படங்கள் பற்றியும் நீங்கள் எழுத வேண்டும். "தொட்டதெல்லாம் பொன்னாகும்". ஜெய்யும் அவர் பிசினஸ் பார்ட்னரும் கீதசித்ரா கம்பைன்ஸ் சார்பில் தயாரித்த இந்த படம்தான் பஞ்சு அருணாச்சலத்தை பிரபலமாக்கியது. "ஆவணி மலரே ஐப்பசி மழையே" மற்றும் 'பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில் திருக்குறள் படிக்கட்டுமா" என்று இரண்டு சூப்பர் ஹிட் பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்றது.
அது போல் ஜெய் குணசித்திர வேடத்திற்கு மாறிய பிறகு வெளி வந்த மௌலியின் "ஒரு வாரிசு உருவாகிறது" பற்றியும் எழுதுங்கள்.
அன்புடன்
-
சகோதரி சாரதா அவர்களுக்கு,
நடிகர் திலகத்தின் திரியில், தங்களது பதிவுகளை தொடக்கத்திலிருந்தே, எல்லோரையும் போல் படித்து வருபவன் நான். இன்னும் பற்பல திரிகளில், தங்களின் பல நல்ல, சிறந்த பதிவுகளை வாசித்து வியந்திருக்கிறேன், வியந்து கொண்டுமிருக்கிறேன். தங்களின் பேனா சேவை பாராட்டுக்குரியவை. எல்லாவற்றுக்கும் மேலாக, 2009-ல் தாங்கள் மக்கள் கலைஞர், கலை நிலவு, தேசிய நடிகர் ஆகியோருக்கு திரிகளைத் தொடங்கி, அத்திரிகளில் சிரத்தையோடு சிறப்பான பல பதிவுகளை (திரைப்படக் கண்ணோட்டங்கள் / திறனாய்வுகள் / விமர்சனங்கள் என்ன, இக்கலைஞர்களைப் பற்றிய சுவையான அரிய தகவல்கள் என்ன - எதைச் சொல்வது, எதை விடுவது - எல்லாமே பிரமாதமாயிற்றே) செய்து வருவது, தமிழ் சினிமாவிற்குத் தாங்கள் செய்யும் ஈடு, இணையற்ற தொண்டு. கிட்டத்தட்ட மறக்கப்படும் சூழ்நிலைகளில் உள்ள இந்த சிறந்த கலைஞர்களை, தங்களின் திரிகளும், அதில் தாங்கள் வெளியிடும் பதிவுகளும், அவர்களை என்றென்றும் நினைவில் நிறுத்தும் வண்ணம் உள்ளன. இத்தகைய சிறந்த சேவைகளை மனதிற் கொண்டு, தங்களுக்கு "தமிழ் சினிமாவின் சிகர ரசிகை" என்கின்ற பட்டத்தினை, இந்த எளியேன் வாழ்த்துக்களோடு வழங்குகின்றேன். இதைத் தாங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனது கூற்றை, இங்குள்ள அனைவருமே ஆமோதிப்பார்கள் என்பது உறுதி.
தமிழ் சினிமாவின் சிகர ரசிகை சகோதரி சாரதா அவர்களின் மேலான சேவை எங்களுக்கும், தமிழ் சினிமா உலகிற்கும் அவசியம் தேவை.
சிகர ரசிகைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள் என்றென்றும்!!!
அன்புடன்,
பம்மலார்.
-
Just read Vairam review, mdm. I have the VCD, and I thought the two Js did a good job, especially as I am very fond of JJ of that period (great chemistry with NT). All the same, I felt Asohan and MRR Vasu ruined it with ridiculous "komalitanam". The film didn't work for me, and no thanks, to use your word, these two's "dominat"ion. Otherwise, keep writing ma'am :clap:
-
Is it me or do you folks feel that who feel that MRR>>>>>>>>>>MRRR>>MRRV? Okay, forget about MRR, that man is an incomparable genius. MRR Vasu is definitely lesser in talent, resorting purely to dad's style. Radha Ravi managed to rid of Dad's mighty shadow and managed to be on his own. But then what do I know :?
Sorry for the digression, madam.
-
Radha ravi always tried to be different and had individual mannerisms in each character. he was good at comedy as well right from guru sishyan , chinna mapillai etc .
it's Radha, Radharavi and Vasu .. that should be the order. Vasu was irritating in few movies.
-
I agree, it depends on the role. Vasu was good in Sorgam (and you got to give same credit to Sachu there). Radha Ravi could've done more comedic roles, he was awesome in Chinna Mappilai. Okay, end of digression, sorry again Saradha mdm. :)
-
Jaishankar movies
சாரதா புண்ணியத்தில் இந்த thread-ஐ பார்க்க முடிந்தது. முன்னாலேயே பார்த்திருந்தால் நானும் ஏதாவது எழுதி இருப்பேன்.
எங்கள் தளத்தில் சில ஜெய்ஷங்கர் பட விமர்சனங்கள்:
ஆயிரம் பொய் (Aayiram Poi)
காயத்ரி (Gayatri)
கன்னிப் பெண் (Kannip Penn)
பாலாபிஷேகம் (Palabishekam)
வந்தாளே மகராசி (Vanthale Maharasi)
-
பட்டணத்தில் பூதம் விமரிசனத்தை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். நன்றி, சாரதா!
http://awardakodukkaranga.wordpress....#2980;ா/
நானும் விமர்சனம் எழுதலாம் என்று இருக்கிறேன். விகடன் பொக்கிஷத்தில் வந்த விமர்சனத்தையும் மீள்பதிவு செய்ய நினைத்திருக்கிறேன். ராண்டார்கை ஏதாவது எழுதி இருக்கிறாரா என்று தேடித் பார்க்க வேண்டும்.
-
பட்டணத்தில் பூதம் விகடன் விமரிசனத்தை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். http://awardakodukkaranga.wordpress....#2993;ி/