-
Quote:
Originally Posted by
ravichandrran
மக்கள் திலகத்தின் அழகிய புகைப்படங்கள் (ஒவ்வெரு மாதத்துக்கும் ஒரு அருமையான ஸ்டில் மற்றும் ஸ்டைல் – அதுவும் முழுதாக நிற்கும் எழிலான தோற்றத்தில்) கொண்ட நாட்காட்டியை தயாரித்து வழங்கிய திரு. தாம்பரம் முரளி அவர்களுக்கும், அதனை இந்த திரியில் பதிவுசெய்த திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி. !
-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
ஒவ்வொரு வருடமும், ஆங்கில புத்தாண்டு தினத்தில், நம் இதய தெய்வம் புரட்சித்தலைவரின் நினைவிடத்துக்கு, குடும்பத்தினருடன் சென்று அவரை வணங்கி வழிபட்டு வருவதை வாடிக்கையாக கொண்ட, இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. சைதை எஸ். ராஜ்குமார் அவர்களுக்கும், அதனை பதிவிட்ட திரு. ஆர். லோகநாதன் அவர்களுக்கும் நன்றி !
-
http://i61.tinypic.com/2w3b1mp.jpg
வெளியீட்டு நாளன்று, திரண்ட பிரம்மாண்டமான கூட்டத்தை கட்டுப்படுத்த, தமிழக சிறப்பு காவல் படையின் உதவியை நாடும் அளவுக்கு, தமிழ் திரையுலகில் ஒரு புதிய வரலாற்று நிகழ்வினை ஏற்படுத்திய, மக்கள் திலகத்தின் மற்றுமொரு மகத்தான காவியம் “நீரும் நெருப்பும்” பற்றிய சிறப்பு பதிவினை பதிவிட்ட திரு. வரதகுமார் சுந்தராமன் என்றழைக்கப்படும் திரு. சி. எஸ். குமார் அவர்களுக்கு மிக்க நன்றி. ! .
-
CHENNAI - SARAVANA . FROM 2.1.2015
DAILY 3 SHOWS
MAKKAL THILAGAM MGR IN PARAKKUM PAVAI
http://i62.tinypic.com/2qd1ogk.jpg
-
-
-
-
-
THANKS TO THAMBARAM MURALI AND SALEM SUBRAMANIAN FOR THE PREPARATION OF OUR BELOVED GOD M.G.R. CALENDER 2015. IT SHOWS THE HARD AND STRENUOUS WORK OF THAMBARAM MURALI AND SALEM SUBRAMANIAN. THIS IS A BIG TREASURE TO BE KEPT IN THE HOUSE OF EVERY M.G.R. DEVOTEES. I ALSO THANK Br. THIRUPUR RAVICHANDRAN SIR FOR THE EXCELLENT POSTINGS.
-
-
-
-
-
-
மக்கள் திலகம் தெய்வம் - வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.. அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
புகழெல்லாம் எம்.ஜி.ஆர். பொன்மனம் எம்.ஜி.ஆர்.,
தெய்வமும் எம்.ஜி.ஆர்.
சத்யஅருளாலே தரணிக்கு வந்தவன், தத்துவ சோலையிலே தவமாக பூத்தவன்;
தவமாக பூத்தவன்.
அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.. அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
புகழெல்லாம் எம்.ஜி.ஆர். பொன்மனம் எம்.ஜி.ஆர்.,
தெய்வமும் எம்.ஜி.ஆர்.
காவிய தலைவன் அவன், கருணையின் வடிவம் அவன்
மன்னாதி மன்னன் அவன், மக்களின் திலகம் அவன்,
மக்களின் வேந்தன் அவன்; மக்களின் வேந்தன் அவன்.
அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.. அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
புகழெல்லாம் எம்.ஜி.ஆர். பொன்மனம் எம்.ஜி.ஆர்.,
தெய்வமும் எம்.ஜி.ஆர்.
http://i60.tinypic.com/vcuc6a.jpg
-
முத்தையன் சார்
மக்கள் திலகத்தின் நூலகம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள் .மிகவும் அருமை .
-
ஜனவரி மாதத்தில் வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
அலிபாபாவும் 40 திருடர்களும்
சக்கரவர்த்தி திருமகள்
அரசிளங்குமரி
ராணி சம்யுக்தா
பணத்தோட்டம்
வேட்டைக்காரன்
எங்க வீட்டு பிள்ளை
அன்பே வா
தாய்க்கு தலை மகன்
ரகசிய போலீஸ் 115
மாட்டுக்கார வேலன்
குமரிகோட்டம்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
-
-
-
-
-
-
-
-
மக்கள் திலகத்திற்கு மிகவும் ராசியான '' பொங்கல் '' அன்று வெளிவந்த படங்கள் பெரும்பாலும் மகத்தான வெற்றிகளை கண்டுள்ளது .
அலிபாபாவும் 40 திருடர்களும் - வேட்டைக்காரன் - எங்க வீட்டு பிள்ளை - அன்பே வா - மாட்டுக்கார வேலன் போன்ற மிகப்பெரிய வெற்றிகளையும் , சாதனைகளையும் தந்தது .
-
இன்றைய விநியோகஸ்தர்களே ........
1965ல் ''எங்க வீட்டு பிள்ளை '' படத்தை சென்னை நகரில் எம்ஜிஆர் பிக்சர்ஸ் விநியோக உரிமை பெற்று படத்தை
வெளியிட்டார்கள் .படம் வெற்றிகரமாக ஓடிகொண்டிருந்த போதே எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக கிடைத்ததால் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ரூ ஒரு லட்சத்திற்கான காசோலையை அப்படத்தின் தயாரிப்பாளருக்கு அனுப்பி வைத்தார் . தயாரிப்பாளர் நாகிரெட்டி அவர்கள் வியந்து போய் எம்ஜிஆரின் பெருந்தன்மையை பாராட்டி மனம் மகிழ்ந்து அந்த பணத்தை நற்காரியங்களுக்கு பயன் படுத்த எம்ஜிஆருக்கே திருப்பி அனுப்பி வைத்தார் .
எம்ஜிஆரின் நியாயமான அணுகுமுறையும் , மனிதநேயமும், சிறந்த பண்பாளரான தயாரிப்பாளர் நாகிரெட்டியும் நடந்து கொண்ட விதமும் வியக்க வைக்கிறது . 50 ஆண்டுகள் முன்பு இருந்த மனிதநேயம் - நட்பு இலக்கணம் இப்போது இல்லையே .சிந்திக்கவும் . இன்றய நடிகர்கள் - தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள்
எல்லோருக்கும் பணம் ஒன்றே பிரதானம் .எப்படி நிம்மதி கிடைக்கும் .
-
புயலென திரி 13உக்கு பயணிக்கவைத்த அனைத்து மக்கள் திலகம் திரி பக்தர்களுக்கு என்னுடைய புத்தாண்டு நல வாழ்த்துக்கள். மற்றும் வர இருக்கும் தை திருநாள் அனைவருக்கும் நல்லதொரு வளமையும், வலிமையும், சீரையும், சிறப்பையும் கொடுக்கட்டும் என்று ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.
புதிதாக வந்திருக்கும் திரு cs குமார் சார் ...வருக...வருக...தங்கள் வருகை நல வரவாகுக..!
எஸ்வி சார்...உங்களுக்கு என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். !
திரு யுகேஷ் ...இரு திரிக்கும் பாலமாக அமைந்திருக்கும் தங்களுடைய நல்ல மனதிற்கும் நல்ல எண்ணத்திற்கும் கோடானு கோடி நன்றிகள்..! தங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்...!
கலைவேந்தன் சார் ! சௌக்கியமா ? சிறந்த நகைச்சுவையுடன் கூடிய சிந்தையை கிளரும் தங்களுடைய பதிவை படித்து நிறைய நாளாகிவிட்டது..! ஒரு பதிவு பதிவிட்டீர்களேயானால் மிகவும் நன்றாக இருக்கும்..! தங்களின் பங்களிப்பு இந்த திரிக்கு தனி பலத்தை சேர்த்துள்ளது..! இந்த புதுவருடத்தில் தை பிறக்கவிருக்கும் நிலையில் தங்களுக்கு எல்லா வளமும் இறைவன் கொடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு என்னுடைய புதுவருட மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
மற்றும் இந்த திரி நண்பர்கள் திரு கலியபெருமாள், வெல்லூர் ராமமூர்த்தி சார், திரு சைலேஷ்பாபு சார்..மற்றும் திரியின் "புதுப்புயல்" முத்தையன் சார், மற்றும் அனுபவஸ்த்தர், தகவல்களின் கருவூலம் திரு பேராசிரியர் செல்வகுமார் சார், புதிதாக இணைந்துள்ள பெங்களூரை சேர்ந்த பழுத்த அனுபவஸ்த்தர், "ஞ்யாயஸ்த்தர்" அண்ணன் திரு cs குமார் அவர்கள் மற்றும் பெயர் விட்டுப்போன அனைத்து நண்பர்களுக்கும் இந்த ஆண்டு இனியதொரு ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி என் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
Jaihind !
Rks
-
-
-
-
திரு தமிழ் நேசனின் தயார் மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் .
-
-
-
-
மதுரை நண்பர் திரு. தமிழ்நேசன் அவர்களின் அன்புத்தாயார் மறைந்த செய்தி கேட்டு
துயருற்றேன். தன் தாயை இழந்து வாடும் திரு. தமிழ்நேசன் அவர்களுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .
ஆர். லோகநாதன்.
-
சென்னை சரவணாவில் கடந்த 02/01/2015 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "பறக்கும் பாவை " தினசரி 3 காட்சிகள் நடைபெற்று வருகிறது.
http://i58.tinypic.com/5yezd2.jpg
தகவல் உதவி.:திரு.சுந்தர், மடிப்பாக்கம்.
-
இந்த வார ஜூனியர் விகடனில் வெளியான கேள்வி பதில்.
-----------------------------------------------------------------------------------------------
http://i62.tinypic.com/2zswdhj.jpg
http://i59.tinypic.com/2mmz1og.jpg
http://i59.tinypic.com/2d9a4bb.jpg
-
-
-