http://i66.tinypic.com/1z6bf3a.jpg
Printable View
'வெண்ணிலா ஜோதியை வீசுதே'
'மணமகன் தேவை' படப் பாடல் அலசல்.
'மதுர கானங்களி'ல் மணம் வீசும் பாடல் அப்படியே நடிகர் திலகம் திரிக்கும்.
'The Fabulous Senorita' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவலே 'மணமகன் தேவை'. 39-ஆவது படம் நடிகர் திலகத்திற்கு
http://i1087.photobucket.com/albums/..._002448911.jpg
நடிகர் திலகம் கண்டசாலா குரலில் கிடார் இசைத்து அப்படியே இங்கிலீஷ் பிக்சர்தான் பார்க்கிறோமோ, ஹாலிவுட்டில்தான் இருக்கிறோமா என்று எண்ணுமளவிற்கு மேற்கத்திய இசையில் பால்கனியில் நின்று பார்க்கும் பானுமதியை பார்த்து பாடல் இசைக்க, ஒரே பானுமதி இரண்டு பெண்ணாக நடித்து இன்னொரு பக்கம் வேக வேகமாகப் பாடும் 'முட்டைக் கண்ண'ரையும் சமாளிக்க... அடடா! மீசை மழித்து நடிகர் திலகம் என்ன ஒரு ஆங்கில நடிகர் தோற்ற தேஜஸ்! என்ன மாதிரி வாயசைப்பு! (கண்டசாலாவும் நடிகர் திலகத்தை மனதில் வைத்து அழுத்தந்திருத்தமாகப் பாடி அசத்தியிருப்பார்)
'வெண்ணிலா ஜோதியை வீசுதே
மண்ணிலே வெண்முலாம் பூசுதே
என் மனம் இன்பமே காணுதே'
என்று கண்டசாலா எம் கணேசப் பெம்மானுக்குப் பாட,
உடன் ஒலிக்கும் பானுமதியின் இனிமையான குரலை எதனுடன் ஒப்பிடுவது! எப்படி ஒப்பிடுவது!
'தென்றலே இனிமையாய் வீசுதே
கண்களே காதலைப் பேசுதே
என் மனம் இன்பமே காணுதே'
நடிகர் திலகம் கீழே படுஸ்டைலாக நின்றுகொண்டு கிடார் இசைக்கும் அழகைக் காணுங்கள். 'டை'யுடன் டிரஸ் அமர்க்களம். இன்னிங் அவ்வளவு அழகாக, பெர்பெக்டாக இருக்கும் அவருக்கு.
'அன்பினால் நெஞ்சமே ஆடிப்பாடுதே
ஆசையும் நேசமும் உன்னை நாடுதே
கொஞ்சிடும் கோகிலம் சொந்தமே ஆகிடும்
அந்த நாள் காணவே ஏங்குதே'
'பொட்டு வைத்த முகமோ'விற்கு 'சுமதி என் சுந்தரி'யில் பாலாவிற்குத் தக்கபடி நடிகர் திலகம் வாயசைத்தது இருக்கட்டும். அது 1971ல்.ஆனால் 1957ல் வந்த 'மணமகன் தேவை' படத்திலேயே தனக்குப் பொருந்தாத கண்டசாலா குரலையும் கூட தன் திறமையான வாயசைப்பினால் அப்போதே பொருந்த வைத்த சிங்கக் குட்டி அல்லவோ எங்கள் சூரக்கோட்டை சிங்கம்.
பானுமதி அதற்கு பதில் கொடுப்பார் பாருங்கள் 'ஷாவ்லின் டெம்பிள்' சைனா கதாநாயகி மாதிரி.
'அந்தநாள் விரைவிலே வந்து சேருமே
சிந்தனைக் கனவுகள் நனவு ஆகுமே (சூப்பர்)
பண்புறும் இலலறம்
மாசில்லா நல்லறம்
தன்னிலே மகிழலாம் என்றுமே'
பானுமதி 'வெண்ணிலா ஜோத்தியை' என்று உச்சரிப்பது வெகு அழகு.
கண்டசாலா நடிகர் திலகத்திற்கு இப்போது பல்லவி வரிகளைப் பாடி முடிப்பதற்கு முன்னாலேயே அங்கு 'ஓ'...என்று மறுபக்க பால்கனி பக்கம் ஹம்மிங் கேட்கும் .டி.ஆர்.ராமச்சந்திரன் பானுமதியைப் பற்றி உருகிப் பாட ஆரம்பித்து இருப்பார் அதே பானுமதியை சைட் அடித்துக் கொண்டு. பானுமதி பால்கனியின் மறுபக்கம் சென்று கோட் அணிந்து ராமச்சந்திரனுக்கு பரவச தரிசனம் தருவார்
'திண்டாடுதே என் கண்களே
சிங்காரி உன்னைத் தேடி
தீயாகுதே என் நெஞ்சமே
செய்யாதே வீண் காலதாமதம்
முன்னாலே வாராய்
என்னை நீ பாராய்
திண்டாடுதே என் கண்களே
சிங்காரி உன்னையே தேடி
தீயாகுதே என் நெஞ்சமே
செய்யாதே வீண் காலதாமதம்'
இப்போது ராமச்சந்திரனுக்கு பானுமதி பதில் தருவார் பாட்டிலே.
'வந்தேனே ஓடி (நடிகர் திலகத்துக்கு கல்தா கொடுத்துவிட்டு)
நான் உன்னைத் தேடி
வாடாமலே ஆடாமலே
ஒ வா மன்னா என்னைப் பாராய்'
பானுமதி 'வா மன்னா' வை அவ்வளவு வேகமாக அற்புதமாக உச்சரிப்பார். அடுத்த வரிதான் இன்னும் சூப்பர்.
'மண் மீதிலே சில நாளிலே நீ மாப்பிள்ளை ஆகப் போகிறாய்'
விரலால் உதைப்பது போன்ற பாவம் காட்டி ராமச்சந்திரனுக்கு நம்பிக்கை மோசம் தரப் போவதை அழகாக முன்னமேயே காட்டி விடுவார் பானுமதி. எப்பேர்பட்ட நடிகை! இப்போதும் இருக்குங்களே! பாவம் முட்டைக் கண்ணர். நடக்கப் போவது தெரியாமல் ஏமாந்து பரிதாபமாக உருகுவார் காதலி மீது.
'என் காதிலே தேன் பாயுதே
உன் இன்பமான மொழியாலே
திண்டாடுதே என் உள்ளமே
நம் வருங்காலம் தன்னை எண்ணியே'
http://i1087.photobucket.com/albums/..._002497821.jpg
அப்படியே கண்டசாலா குரல் இப்போது மீண்டும் ஆரம்பமாக பானுமதி மறக்காமல் கோட்டை கழற்றி அங்கேயே அதை நிற்க வைத்துவிட்டு பழைய உடையில் நடிகர் திலகத்தின் பக்கம் போய் விடுவார். (தன் கோட் மட்டுமே இருந்தால் கூடப் போதும்...அதைப் பார்த்தே ராமச்சந்திரன் தன்னை மறந்து மணிக்கணக்கில் பாடிக் கொண்டிருப்பார். ...தான் இல்லையென்று கண்டுபிடிக்க மாட்டார் என்று பானுமதிக்கு அவர் மேல் அவ்வளவு நம்பிக்கை. அவ்வளவு காதல் போதை பானுமதி மேல் ராமச்சந்திரனுக்கு)
இப்போது நடிகர் திலகம் பாடுவார்.
'ஆவியே ஈடில்லா உண்மைக் காதலால்
ஆனந்தம் பொங்குதே எனது வாழ்விலே'
இப்போது பானுமதி
'பூவிலே தேன்மணம்
மேவிடும் பொன்னைப் போல்
பூமியில் நாமினி வாழலாம்
தென்றலே இனிமையாய் வீசுதே
கண்களே காதலைப் பேசுதே
என் மனம் இன்பமே காணுதே'
என்று பாட, நடிகர் திலகம் 'வெண்ணிலா ஜோதியை வீசுதே' என்று மீண்டும் பல்லவி எடுக்க, அப்போது தன் கையில் உள்ள ஒற்றைப் பூவை பால்கனியிலிருந்து காதலாய் பானுமதி நடிகர் திலகத்தின் மீது வீச, அந்தப் பூ மேலிருந்து ஸ்லோவாக சுற்றியபடி அழகாக கீழே விழ, நடிகர் திலகம் பாடலைப் பாடிக்கொண்டே காதலில் வெற்றி அடைந்தவராய் அதை புதையல் கண்டது போல் குனிந்து பவ்யமாக எடுக்க, அந்த கண்கொள்ளாக் காட்சி வரும் வினாடிகள் என்ன ஒரு காவிய வினாடிகள்! அனுபவித்து ரசித்து உணர வேண்டிய காட்சிக் காதல்.
இப்போது அங்கே டி.ஆர்.ஆர்.ஓலமிட ஆரம்பிப்பார். பானுமதி அவர் பக்கம் ஓட ஆரம்பிப்பார்.
'திண்டாடுதே என் கண்களே
சிங்காரி உன்னைத் தேடி
தீயாகுதே என் நெஞ்சமே
செய்யாதே வீண் காலதாமதம்'
டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு 'பிதாபுரம்' நாகேஸ்வரராவ் என்பவர் குரல் தந்திருப்பார். இவர் குரல் வி.என்.சுந்தரம் என்ற பின்னணிப் பாடகரின் குரலை ஒத்திருப்பது போலத் தோன்றும். ('சிந்து பாடும் தென்றல் வந்து என்று ஒரு பாடலை 'நானே ராஜா' என்ற நடிகர் திலகத்தின் படத்தில் நடிகர் முஸ்தபாவுக்காக பாடி இருப்பார் சுந்தரம்)
https://i.ytimg.com/vi/0TBEL3q08PA/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/2nNjBVCHYo0/hqdefault.jpg
பாடல் என்னவோ ஒரு பெண் இரு ஆண்களை மாற்றி மாற்றி ஏமாற்றிப் பாடும் காமெடி பாடல்தான். ஆனால் அதையும் மீறி அந்தப் பெண்ணைக் காதலிக்கும் அந்த இரு ஆண்களின் ஆழமான காதலை கவித்துவமாகவும் சொல்லத் தவறவில்லை இந்த அற்புதப் பாடல். அந்தப் பெண்ணிற்காக வாழ்வையே அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் இரு இளைஞர்கள். அவள் மீது உயிரையே வைத்து, முழுவதுமாகத் தங்களை மறந்து, அவள் காதலுக்காகவே ஏங்கும் ஏக்கப் பெருமூச்சு விடும் வாலிபர்கள். கண்மூடித்தனமான, கண்ணிய முரட்டுக் காதலர்கள்.
ஜி.ராமனாதனின் அருமையான மேற்கத்திய பாணி இசை நம்மை சுண்டி இழுக்கிறது. கண்டசாலாவின் குரல் காந்தமாக இழுக்கிறது என்றால் பானுமதியின் குரல் பலாச்சுளை கலந்த தேனாய் இனிக்கிறது. நடிகர் திலகத்தின் ஆழமான அமைதிக் காதலும், ராமச்சந்திரனின் ஆர்ப்பாட்டக் காதலுமாய் இருவேறு பரிணாமங்களை காட்டும் பாடல் மட்டுமல்லாது பானுமதியின் ஒரே நேர சமாளிப்பு ரெட்டை வேட நடிப்பிலும், அவரின் அமர்க்களமான குரலிலும் வேறு சேர்ந்து இன்னொரு பக்கம் இன்னும் தனியாக ஒளிர்கிறது...மிளிர்கிறது.
கமலின் பின்னாளைய சூப்பர் ஆள்மாறாட்ட மைக்கேல் மதன காமராஜ கலட்டா, 'நாம் இருவர் நமக்கு இருவர்' பிரபுதேவா கலட்டாக்களையெல்லாம் அப்போதே பானுமதி தனி ஒருவராக பிரமாதமாக செய்து காட்டி விட்டதைக் கண்டால் வியப்பு மேலிடுகிறது! 'அஷ்டாவதானி' என்றால் இவர்தானே! 'மணமகன் தேவை' படத்தில் பானுமதியின் நடிப்பை வர்ணிக்க வார்த்தைகள் தேட வேண்டும். அவருடைய 'மாஸ்டர் பீஸ்'களில் முக்கியமான ஒன்று 'மணமகன் தேவை'. படம் முழுதும் 'கலகல' ஜாலி டைப்.
பார்த்து சிரித்து ரசித்து வியந்து மகிழுங்கள்.
http://i1087.photobucket.com/albums/..._002675673.jpg
https://youtu.be/9Ulu2WlcFjc
Chandrasekaran Veerachinnu
8 mins ·
திரு.கமல் அவர்கள் பொன் விழாவில் திரு.ரஜினி அவர்கள் பேச்சு .
என் போன்ற நடிகர்களை எல்லாம் கலை தெய்வம் கை பிடித்து கூப்பிட்டு போனாள்.
கமல் அவர்களை மட்டும் கலை தெய்வம் தோளில் தூக்கி வைத்துகொண்டது .
ஆம் 50 ஆண்டுகளுக்கு முன்னாலே கலைத் தெய்வம் தூக்கி வைத்து தாலாட்டே பாடியது.
ஸ்டைல் சக்ரவர்த்தி நடிகர் திலகத்தின் அசத்தல் காட்சிகளை அமுத சுரபி போல் அள்ளி அள்ளி வழங்கும் திரு.
முத்தையன் அவர்களுக்கு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
வாசு சார்
அபிராமி பட்டர் அமாவாசையில் வெண்ணிலவை ஒளிரச் செய்தது போல், இந்த அடாத மழையிலும் அமாவாசை நெருக்கத்திலும் வெண்ணிலவின் ஜோதியை தீப ஒளியாய் ஒளிரச் செய்து விட்டீர்கள்..
கண்டசாலாவின் குரலென்ன, அந்த கானா பாலாவே பாடினால் கூட தலைவர் அதற்கேற்றார் போல் தன் உதட்டசைவில் ஈடு செய்து விடுவார். என்ன ஒரு அருமையான பாடல். இசை மேதை ஜிஆர் அவர்களின் படைப்பில் மேற்கத்திய இசையை அடிப்படையாய் வைத்து அவர் அளித்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். யாரடி மோகினி பாடலைப் போன்று இதுவும் மேற்கத்திய இசைக்கருவிகளின் துணையோடு குறிப்பாக மேண்டலின் இசைக்கருவியின் ரம்மியமான ஒலியில் மனதைக் கவரும் மதுர கானமாய் என்றும் செவியில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கக் கூடிய பாடல்.
பாராட்டுக்கள்.
நினைப்போம்.மகிழ்வோம்-86
"ஆலயமணி."
"சட்டி சுட்டதடா" பாடல்.
வாழ்க்கையில் பட்டுத் தெளிந்த
மனச்சூழல்.
அலைகள் ஆக்ரோஷமாய் மோதும் ஓர் உயரப் பாறையில்
இருக்கை.
உரக்கப் பாடும் தத்துவம்.
"எறும்புத் தோலை உரித்துப்
பார்க்க யானை வந்ததடா."
-என்று பாடும் போது, ஞானம்
பெற்று விட்டதின் அடையாளமாய் கைகொட்டிச்
சிரிக்கும் பாவனை.
நினைப்போம்.மகிழ்வோம்-87
"திரிசூலம்."
நீண்ட காலத்திற்குப் பிறகு,
தான் விட்டுப் பிரிந்த மனைவியுடன் தொலைபேசியில் பேசுகிற
வாய்ப்புக் கிடைத்து பேசிக்
கொண்டிருக்கையில், மனைவி
வெகுகாலத்திற்குப் பிறகு
பேசுகிற ஏக்கத்தில் "என்னாங்க" என்க, அழுகையும், சிரிப்புமாய்க்
கேட்பாரே...
"என்னம்மா?"