-
#சரித்திரத்தில் #ஒரு #சரித்திரம்
எம்ஜிஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக,மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல்சக்கரவர்த்தியாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்கவீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரகமந்திரமாக, #புவி #போற்றிடும் #புரட்சித்தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி,தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக் கண்டத்திலேயே எந்தநடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.
115 படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்த எம்ஜிஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவரமுடிந்தது ? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? எனறெல்லாம் வினாக்கள் எழும்!
எம்ஜிஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப்பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர்எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ஈட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?
இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஏவி.எம்.ராஜன்போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவைஎம்.ஜி.ஆர். மட்டும் கண்டது எப்படி?
கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை,அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட கமல்ஹாசன், ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?
இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்ஜிஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.
எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்லர். அவர் அனைத்துக்கலைநுட்பங்களையும் நுணுக்கமாக அறிந்த கலைவித்தகர். நாட்டு மக்களின் இரசனைகளை நாடிபிடித்து அறிந்தவர். எனவேதான், அவரதுபடங்களில் வரும் பாடல்களை ஒலிப்பதிவு அறைகளில் அமர்ந்து, சொல்லுக்குச் சொல் கேட்டே, பதிவு செய்திடஅனுமதிப்பார். அதேபோல், படங்களில் இடம்பெறும் வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்தே இடம்பெறச் செய்வார். இவையே அவரது வெற்றியின்மூல இரகசியமாகும்.
நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டிய,செய்யவேண்டிய நல்ல கருத்துகளையும், செயல்களையுமே தனது படங்களின் பாடல்கள்,வசனங்களில் எம்ஜிஆர் இடம்பெறச் செய்தார்.அவ்வாறு செய்த காரணத்தால் தான், #எம்ஜிஆர் #என்ற #மந்திரசக்தி இன்றளவும் மக்களின் இதயங்களில் மாமகுடம் தாங்கி வீற்றிருக்கிறது.
சத்யா எனும் தாய், கருவினிலே வளர்ந்த போதே தனது அன்பு மழலையாம், எம்ஜிஆர் என்றமகனுக்குத் தைரியத்தை ஊட்டி வளர்த்த தாயல்லவா!
பெற்ற தாயின்மீது பெறுதற்கரிய பாசத்தைச்செலுத்தியதோடு, நாட்டிலுள்ள தாய்மார்களின் மீதெல்லாம் அளவிடற்கரிய பாசத்தைச் செலுத்தி, அவர்களது மானம் காக்க, களங்கத்தைப் போக்கக்காலமெல்லாம் துணையாய் நின்ற காவல்தெய்வமல்லவா எம்.ஜி.ஆர்! அதனாலன்றோ இன்றும்தாய்க்குலத்தின் தணியாத செல்வாக்கோடு,மறைந்தும் இம்மண்ணில் மங்காத புகழோடு எம்.ஜி.ஆர் வாழ்கின்றார்.
#கோடிமக்கள் #இம்மண்ணில் #வாழ்ந்ததுண்டு. #வாழ்ந்தசுவடுகள் #தெரியாமல் #மறைந்ததும் #உண்டு. #ஆனால்மக்களின் #மனங்களில் #நிலைத்து #நிற்பவர் #யாவர்?
#மாபெரும் #வீரர்! #மானத்தைக்காப்போர்!
இவர்கள் மக்கள் மனங்களில் மட்டும் அல்ல….#வருங்காலச்சரித்திரத்திலும் #சாய்ந்துவிடாது #நிலைத்து #நிற்பர்.
உண்மைதானா? உண்மையே! உதாரணம்.....#நம் #பொன்மனச்செம்மல் #புரட்சித்தலைவரே!!!.........
-
"மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" புரட்சி தலைவரின் கடைசி படம். 1978
ஜன 14 பொங்கல் திருநாளுக்கு வெளிவந்த வெற்றிப் படம். இந்த படத்தின் வெற்றியில் எதிர்முகாமை சேர்ந்தவர்களுக்கு சிறிது சந்தேகம் இருப்பதால் இந்தப்படம் அடைந்த வெற்றியை பற்றி பேசலாம். முதலில் இந்த படமே எம்ஜிஆரின் முழு கைவண்ணத்தில் வந்த படமல்ல.
தலைவர் முதலமைச்சர் ஆகி விட்ட
படியால் அவசரமாக முடித்து கொடுத்த படம். அவருக்கு நேரம் இருந்திருந்தால் இன்னும் டச்அப் காட்சிகளை எடுத்து படத்துக்கு இன்னும் மெருகேற்றியிருப்பார்.
படமும் முழு வளர்ச்சி பெற்றிருக்கும்.
சரித்திர படம் இவ்வளவு குறைந்த நீளத்தில் வந்ததை வைத்து தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் எம்ஜிஆர் படமல்லவா? சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் அதன் சீற்றம் குறையுமா? அப்படி சீற்றத்துடன் வந்த சிங்கத்தின் வெற்றியை பற்றி பார்ப்போம்.
சென்னையில் தேவிபாரடைஸ், அகஸ்தியர, உமா, கமலாவில் திரையிடப்பட்டு மொத்தம் 186 நாட்களில் வசூலாக பெற்ற தொகை ரூபாய்11,56,560-62
ஆனால் எங்கும் 100 நாட்கள் ஓட்டப்படவே இல்லை. ஆனால்
"அந்தமான் காதலி" என்ற சிவாஜி நடித்த முக்தாவின் படம், முக்தாவின் படங்களிலேயே அதிக வசூலை பெற்றதே இந்தப்படம் தான். அந்தப்படம்
சென்னையில் 100 நாட்கள் ஓடியதாக விளம்பரம் செய்திருந்தனர். சென்னையில் மொத்தம் 243 நாட்களில் பெற்ற வசூல் ரூ 9,69,715.20 தான்.
ஆனாலும் தமிழ்நாட்டில் சுமார் 5 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓட்டி விட்டார்கள். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதை போல
ஒவ்வொரு படத்துக்கும் இதையே திருப்பி திருப்பி செய்து தங்கள் தோல்வியை மறைக்க அரும்பாடு படுவதை பார்க்கும் போது சற்று பரிதாபமாகத்தான் இருக்கிறது. மேலும்
சிவாஜியின் 100 நாட்கள் படங்களான "சொர்க்கம்" "எ.வந்தாள்"
"வி.வீடு" "சவாலே சமாளி" "பாபு" "பா.விலாஸ்" "எ.த.ராஜா" "கெளரவம்"
"ம.வந்தானடி" போன்ற நிறையபடங்கள்
100 நாட்கள் ஓட்டப்பட்டதே தவிர அனைத்தும் ம.மீ.சு.பாண்டியனிடம் வசூலில் மண்டியிட்ட படங்கள்தான்.
ஆனால் வாய் கூசாமல் ம.மீ.சு.பாண்டியனை தோல்வி படம் என்று கூறுகிறீர்களே
தைரியமிருந்தால் உங்கள் பட வசூலை வெளியிட்டு நிரூபித்து காட்டுங்கள்.
நெல்லையில் "ம.மீ.சு.பாண்டியன்" பெரிய திரையரங்கமான சென்ட்ரலில் வெளியாகி 55 நாட்கள் ஓடி சிவாஜியின் வெள்ளிவிழா படங்களான "ப.பட்டணமா"? "வசந்த மாளிகை" வசூலை அநாயசமாக தூக்கி எறிந்ததை கண்ணுற்றால் சிங்கத்தின் சீற்றத்தை நாம் புரிந்து கொள்ளலாம். "ம.மீ.சு.பாண்டியன்" நெல்லையில் 55 நாட்களில் பெற்ற வசூல் ரூ 1,50,009.45 .
சிவாஜியின் வெற்றிப் படங்கள் ஏதாவது இந்த சாதனையை சமன் செய்திருக்கிறீர்களா? வசூலை ஆராய்ச்சி செய்து சொல்லுங்கள். மதுரை சென்ட்ரலில் 76 நாட்கள் ஓடி வெற்றியை பதிவு செய்தது. கோவை கர்னாட்டிக் 41 நாட்கள் காலைக்காட்சி 7 நாட்கள் என மொத்தம் 48 நாட்கள் ஓடியது. தொடர்ச்சியாக கோவை ஸ்ரீபதியில் 7 நாட்கள் 3 காட்சி வீதம் ஓடியது. சேலம் சங்கீத்தில் 55 நாட்களும் srvயில் 6 நாட்களும், நாகர்கோவில் தங்கத்தில் 63 நாட்களும் ஓடி வெற்றிக்கொடி நாட்டியது குறிப்பிடத்தக்கது. திருச்சி கலையரங்கத்தில் 48 நாட்கள் ஓடி சுமார் ரூ 3,00,000 தாண்டி வசூல் செய்தது.
இதை விட முக்கியமான ஒரு சாதனை பட்டுக்கோட்டையில் நடத்தியிருக்கிறார் சுந்தர பாண்டியனார். இதுவரை வெளிவந்த எந்த ஒரு படமும் செய்யாத சரித்திர சாதனையாக தொடர்ந்து 101 காட்சிகள் ஹவுஸ்புல்லாகி வசூலிலும் புரட்சி செய்திருக்கிறார்.. இந்த சாதனையை யாராலும் இதுவரை முறியடிக்க முடியவில்லை.
அரசியலிலும் சினிமாவிலும் வெற்றி வாகை சூடியவர் புரட்சித் தலைவர். அரசியலிலும் சினிமாவிலும் தோற்று புறமுதுகு காட்டி ஓடியவர்களை நாம் மன்னித்து ஏற்றுக் கொண்டாலும் குள்ளநரிகள் போல ஒரு சிலதுகள் ஊளையிட்டு என்ன பயன்?. திருந்தினால் தலைவரைப் போல் மன்னிப்போம்! மறப்போம்! என்று அவர்களை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயார்..........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*18/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை பற்றி நாம் பகிர்ந்து கொள்கின்ற பல்வேறு விஷயங்கள் ஆச்சர்யப்படத்தக்கவை .அதிசயிக்கத்தக்கவை .மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு சென்னை பல்கலை கழகமும், அமெரிக்காவின் அரிசோனா பல்கலை கழகமும் டாக்டர் பட்டங்கள் வழங்கின .அவரை புரட்சி நடிகர் என்று கலைஞர் கருணாநிதி வாழ்த்தினார் . கிருபானந்த வாரியார் பொன்மன செம்மல் என்று போற்றினார் .அவரை மக்கள் திலகம் என்று கல்கண்டு இதழ் ஆசிரியர் தமிழ்வாணன் புகழ்மாலை சூட்டினார் . எந்தெந்த பட்டங்கள் ,விருதுகள்* எப்படி வழங்கப்பெற்றாரோ* அதற்கு தகுந்தபடி*, சினிமா, அரசியல் , பொது வாழ்க்கை அனைத்திலும் அனைவரும் போற்றும்படி, பாராட்டும்படி , வாழ்த்தும்படியான*செயல்களை*,காரியங்களை அவர் செய்ய மறக்கவில்லை .
தன்னுடைய*தானை தலைவர் பேரறிஞர் அண்ணா*தோற்றுவித்த தி.மு.க. கட்சியை*, அண்ணா அவர்கள் வாழ்ந்த*போதும் , மறைந்த*பின்னரும்*அந்த கட்சிக்கு*தன்னுடைய*உடல், பொருள், உழைப்பு , திறமை, ஆற்றல் , கொடை*உதவி அனைத்தும் அளித்து , பல்வேறு வகைகளில்*திரைப்படங்களில் கட்சியை*சின்னத்தை*விளம்பரப்படுத்தி , நாடு, நகரங்கள் ,பட்டி ,தொட்டியெல்லாம் கட்சியை, சின்னத்தை கொண்டுபோய் சேர்த்து , அந்த* க*ட்சி*ஆலமரமாக*வேரூன்றி ,பரந்து*விரிந்து வளர்ந்த*பின்னர் , அதே கட்சியால் பதவி நீக்கம் ,அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் பெற்றவர் , அந்த பெரிய கட்சியை எதிர்த்து*தானே*அண்ணா*திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை*துவக்கி , மக்களுக்கு*தன் கொள்கைகளை திட்டங்களை*தெளிவாக சொல்லி , எதிர்க்கட்சியின் ஊழல்கள் , அராஜகங்கள் ,குறைகள் ஆகியவற்றை* *எடுத்துரைத்து* மக்களின்*ஏகோபித்த ஆதரவை*பெற்று ஒரு முறை அல்ல தொடர்ந்து மூன்று முறை முதல்வராக ஆட்சி நடத்தி ,முதல்வராகவே மறைந்தார்* என்பது*எம்.ஜி.ஆரால்*மட்டுமே*முடிந்த காரியம் .வேறு எவராலும் சாத்தியம்*இல்லாத விஷயம் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நடிக்க தெரியாது*என்று பரவலாக பேசப்பட்டது .நடிக்க தெரியாமலா*அவரது*படங்களை*மக்கள் ரசித்தார்கள் . ஒரு சில*ஆண்டுகள்*தவிர ,ஏறத்தாழ 30 ஆண்டுகள்*வசூல் சக்கரவர்தியாகவும் ,*முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்தார் என்றால் எப்படி சாத்தியம் . இந்த சாதனைகளை*பொறுக்காத*பொறாமைக்காரர்களின் விமர்சனம்தான்*அது .அவற்றை*எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவேயில்லை .தனித்தன்மை என்று ஒன்று இல்லாவிட்டால் வாழ்க்கையில்*எந்த விஷயத்திலும் தனி மனிதன் , நடிகன் வெற்றிபெற*முடியாது என்பது எம்.ஜி.ஆருக்கு*நன்றாக தெரிந்து இருந்தது .அனுபவபூர்வமாக நாடக காலத்தில் சிவாஜி*கணேசன் மனோகரா*படத்தில் நடித்தது போல நாடகத்தில் மனோகரா*வேடத்தில்*நடித்துள்ளார் .தனக்கு*என்று ஒரு* தனி பாணி வேண்டும் .* அந்த பாணியை*யாரும் பின்பற்றல் ஆகாது*என்பதில்*உறுதியாக இருந்தார் .
நடிப்பு என்றால் என்ன , நடிப்பின் இலக்கணம் என்ன என்பதை அறிந்தவர் .ஒரு நடிகன் காமிராவின் முன்பு நிற்கும்போது இடதுபுறம்* உள்ள அவனுடைய**தோற்றம் ,வலதுபுறம்* உள்ள**தோற்றத்துடன் ஒப்பிடும்போது வெவ்வேறாக இருக்கும் .* எந்த தோற்றம் உகந்ததாக இருக்கும் .எந்த தோற்றம் சரியாக*காமிராவில்* அமையாது*என்பதையெல்லாம் நுட்பமாக அறிந்தவர் .பொதுவாக இரட்டை வேடங்கள்*ஏற்று நடிக்கும்போது ,எந்த வேடத்தில்*, குரல், முக பாவம் மட்டுமல்ல , மனோபாவமும்* எப்படி இருக்க வேண்டும் ,மனோரீதியான நடை, உடை, பாவனை போன்ற எல்லாவற்றையும் கொண்டு வருவதில்*எம்.ஜி.ஆர். வல்லவராக இருந்தார்*என்பதை*உதாரணமாக* .எங்க வீட்டு*பிள்ளை படத்தின்*இமாலய வெற்றிக்கு*காரணமாக* ,கோழை*,வீரன் என்ற இரண்டு பாத்திரங்களிலும் நல்ல வித்தியாசம் காட்டி அசத்தியிருப்பதை காணலாம் . . அதை தொடர்ந்து வந்த* பல**இரட்டை வேட*படங்களில் அதே முறையை கையாண்டார் . இரட்டை வேட*படங்களில் நடிக்கும்போது சிரிப்பு ,புருவத்தை*உயர்த்துதல் , தாழ்த்துதல், புன்னகை வரவழைத்தல்*, பாசம், அன்பு, வீரம் , துணிவு, காதல், கனிவு, கோபம்*என்று பலவிதமான*உணர்ச்சிமிக்க* காட்சிகளில் நடிப்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பல்வேறு கருத்துக்கள் வெளியிட்டுள்ளார் .
நடிப்பின்*பல்வேறு விதமான கலைகளையும், பல்வேறு அம்சங்களையும் தெரிந்து வைத்திருந்தார் . நடிப்பு பற்றி சிலர் சொல்வது*போல அறியாதவரல்ல*தனக்கென்று ஒரு**பாணியை கடைபிடித்தார் .* அதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் .அதைத்தான் செய்ய முடியும்* ,பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள் அனைவரின்*நிதி நிலைமை , வருமானம்* பராமரிப்பு, செலவினம்*ஆகியவற்றை கருத்தில் கொண்டு*அவ்வாறு செய்தால்தான் திரைப்படத்துறை வளர்ச்சி பெறும், படங்கள்*வியாபார*ரீதியில்* நல்ல* விற்பனை ஆகும்**அரசுக்கும்*கணிசமான வரி என்கிற வகையில் வருமானம் பெருகும்*என்ற*நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை , பயனுள்ளதாக செயல்படுத்தினார் .*
தன்னுடைய வழக்கமான*பார்முலாவில் இருந்து சற்று விலகி, வித்தியாசமான பாத்திரத்தில்*உணர்ச்சிகளை கொட்டி*நடித்த*படம் பெற்றால்தான் பிள்ளையா*.இந்தப்படத்திற்கு பல சிறப்புகள் உண்டு . எம்.ஜி.ஆர். தான் நடித்த*மிக சிறந்த ,பிடித்த*படங்களில் ஒன்று . நடிகர் சிவாஜி கணேசன் இந்த கதையில் நடிப்பதாக இருந்தது*என்று பேசப்பட்டது . அவரும்*வசன ஆசிரியர் ஆரூர்தாஸிடம் இந்த காதையை*என்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேன் என்று சொன்னதாக தகவல்கள் வெளியாகின .. எம்.ஜி.ஆர். சரோஜாதேவி ஜோடி கடைசியாக* நடித்து வெற்றிகரமாக 100 நாட்கள்*ஸ்டார், மகாராணி அரங்குகளில்**கடந்த படம் .எல்லாவற்றிற்கு மேலாக இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போது தான் ராமாவரம் தோட்டத்திற்கு பட தயாரிப்பாளர் வாசுவுடன் வந்த*எம்.ஆர். ராதா , எம்.ஜி.ஆரிடம்*பேசிக் கொண்டிருந்தபோதே வாக்குவாதம் ஏற்பட்டு*துப்பாக்கியால் சுட்டு, தானும் சுட்டுக் கொண்டார் .இந்த படத்தில்*நான்* குணச்சித்திர வேடத்தில்*நடிப்பது*போல ஒரு உணர்வு உள்ளது . அதனால்*சண்டை காட்சிகள் அமைப்பதை தவிர்க்கலாமே என்று இயக்குனருக்கு யோசனை தெரிவித்தார் .எம்.ஜி.ஆர்.*ஒரு சில*சண்டை காட்சிகள் கூட இல்லையென்றால் உங்கள் ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்நோக்குவது மிகவும் கடினம்*. உங்கள் ரசிகர்கள் அதை எதிர்பார்ப்பார்கள் , நிச்சயம் வரவேற்பார்கள் .அவசியமான*கட்டத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று இயக்குனர்கள் சமாதானம்*சொன்னார்கள் .இதற்காக*எம்.ஜி.ஆர். அரை மனதுடன்*, வருத்தத்துடன் சம்மதித்து இருக்கிறார் .படத்தின்*வெற்றி செய்தி வந்த பிறகு அனைவரும் மகிழ்ச்சியுற்றனர் .படங்களிலே காதல்*காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் . எந்த அளவுக்கு நளினமாக, அதே சமயத்தில் மிகவும்**தூக்கலாக* இருக்கக் கூடாது .ஒரு வரைமுறை , வரம்பு இருக்கவேண்டும் என்று விலாவாரியாக இயக்குனர்களிடம் விளக்குவார் .எம்.ஜி.ஆர். ஒரு கதாசிரியர், எடிட்டர்,காமிராமேன் , சவுண்ட்*பொறியாளர் ,என்று* பல்வேறு துறைகளிலும் நுட்பங்களை அறிந்தவர் .*திரைப்படத்துறையில் எந்த இடத்தில,பகுதியில் தவறுகள் நிகழ்ந்தாலும் அதை எளிதில்*கண்டுபிடித்து*நீக்குவதற்கு யோசனை தெரிவித்து உதவுவார் .
பிரபல*நகைச்சுவை நடிகர்*சார்லி*சாப்ளின் பாதிப்பு இல்லாமல் நடித்த*நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் . எம்.ஜி.ஆர். அவர்கள்*பெற்றால்தான் பிள்ளையா படத்தில்*கால்களை அகற்றியவாறு வித்தியாசமான நடையை காட்டியிருப்பார் . தேடி வந்த*மாப்பிள்ளை படத்தில் சார்லி சாப்ளினை போல நடை, உடை , பாவனைகள் ,கையில்*வாக்கிங் ஸ்டிக்*, தலையில் குல்லா*,கருப்பு*கண்ணாடி*;அணிந்து*பாட்டு வாத்தியாராக வந்து மேலைநாட்டு*பாடலான, தொட்டு காட்டவா, மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டு காட்டவா* என்று**பாடி, ஆடி , அசத்தியிருப்பார் .*
அடிமைப்பெண் படத்தில் ஏமாற்றாதே, ஏமாற்றாதே ,பாடலை*டி.எம்.சௌந்தரராஜன் பாடுகிறார் .எம்.ஜி.ஆருக்கு திருப்தியில்லை .இரண்டு, மூன்று முறை பாடியும்* நான் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை என்றார் எம்.ஜி.ஆர். அதாவது பொது நீதிக்கும்*நேர்மைக்கும் பயந்துவிடு ,*நல்ல அன்புக்கும் , பண்புக்கும்*வளைந்து கொடு*என்ற இடத்தில* இன்னும்* தெளிவான**உணர்ச்சிகளும் , பாவங்களும் கொஞ்சம் அழுத்தமாக இருக்க வேண்டும் என்கிறார் .ஒரு கட்டத்தில் டி.எம்.எஸ். ஏன் நம்மை*இத்தனை முறை பயிற்சி எடுக்க வைக்கிறார்கள் . வேண்டுமானால் வேறு பாடகரை வைத்து பாட வைத்துக் கொள்ளுங்கள் என்று இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் குறைபட்டுக் கொண்டாராம் . கடைசி முறையாக பாடும்போது*பாடல் நன்றாக அமைந்ததும்*எம்.ஜி.ஆர். டி.எம்.எஸ்.ஸை* கட்டி பிடித்து* இதைத்தான்*நான் எதிர்பார்த்தேன் என்று பாராட்டினாராம் ..எம்.ஜி.ஆருக்கு இசை ஞானம் இருந்ததால்தான் , அவர் எதிர்பார்க்கிற அளவிற்கு , பாடலில் , அழுத்தம், ஆழம் ,*உணர்ச்சிகள், பாவங்கள்*, ஆகியவற்றை நுட்பமாக பின்னணி பாடகர்கள், பாடகிகளிடம் இருந்து வற்புறுத்தி* வழங்கப்பெற்று , பாடல்களை பதிவு செய்தார் .* அதனால்தான் அன்றும், இன்றும் , என்றும் எம்.ஜி.ஆர் அவர்களின்*பாடல்கள்*காலத்தை வென்று , கடந்து நிற்கின்றன .*
தனது பாணி இதுதான் என்று மக்களுக்கு அறிமுகம் செய்தார்*, கடை பிடித்தார் , மக்களின் நம்பிக்கையை பெற்றார் .,அதில்*வெற்றியும்* பெற்றார் .அந்த மக்கள் நம்பிக்கைதான்*இன்று நாடாள வைக்கும்*அளவிற்கு அவரை கொண்டு போய்*நிறுத்தியது .மற்ற விஷயங்கள்*அடுத்த அத்தியாயத்தில் தொடரும் ......
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------
1.பாட்டு ஒரு பாட்டு - தாய் சொல்லை தட்டாதே*
2. தர்மம் தலை காக்கும் பாடல் - தர்மம் தலை காக்கும்*
3.எம்.ஜி.ஆர். -எம்.ஆர்.ராதா உரையாடல் - தர்மம் தலை காக்கும்*
4.உன்னை*அறிந்தால்*உலகத்தில் போராடலாம்*- வேட்டைக்காரன்*
5.ஒரு பக்கம்* பாக்குறா* - மாட்டுக்கார வேலன்*
6.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - பெற்றால்தான் பிள்ளையா*
7.தொட்டு காட்டவா,மேலை நாட்டு சங்கீதத்தை -தேடி வந்த மாப்பிள்ளை*
8.ஏமாற்றாதே, ஏமாற்றாதே - அடிமை பெண்*
-
.மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு சென்னை பல்கலை கழகமும், அமெரிக்காவின் அரிசோனா பல்கலை கழகமும் டாக்டர் பட்டங்கள் வழங்கின .அவரை புரட்சி நடிகர் என்று கலைஞர் கருணாநிதி வாழ்த்தினார் . கிருபானந்த வாரியார் பொன்மன செம்மல் என்று போற்றினார் .அவரை மக்கள் திலகம் என்று கல்கண்டு இதழ் ஆசிரியர் தமிழ்வாணன் புகழ்மாலை சூட்டினார் . எந்தெந்த பட்டங்கள் ,விருதுகள் எப்படி வழங்கப்பெற்றாரோ அதற்கு தகுந்தபடி , சினிமா, அரசியல் , பொது வாழ்க்கை அனைத்திலும் அனைவரும் போற்றும்படி, பாராட்டும்படி , வாழ்த்தும்படியான செயல்களை ,காரியங்களை அவர் செய்ய மறக்கவில்லை .
தன்னுடைய தானை தலைவர் பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த தி.மு.க. கட்சியை , அண்ணா அவர்கள் வாழ்ந்த போதும் , மறைந்த பின்னரும் அந்த கட்சிக்கு தன்னுடைய உடல், பொருள், உழைப்பு , திறமை, ஆற்றல் , கொடை உதவி அனைத்தும் அளித்து , பல்வேறு வகைகளில் திரைப்படங்களில் கட்சியை சின்னத்தை விளம்பரப்படுத்தி , நாடு, நகரங்கள் ,பட்டி ,தொட்டியெல்லாம் கட்சியை, சின்னத்தை கொண்டுபோய் சேர்த்து , அந்த க ட்சி ஆலமரமாக வேரூன்றி ,பரந்து விரிந்து வளர்ந்த பின்னர் , அதே கட்சியால் பதவி நீக்கம் ,அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் பெற்றவர் , அந்த பெரிய கட்சியை எதிர்த்து தானே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை துவக்கி , மக்களுக்கு தன் கொள்கைகளை திட்டங்களை தெளிவாக சொல்லி , எதிர்க்கட்சியின் ஊழல்கள் , அராஜகங்கள் ,குறைகள் ஆகியவற்றை எடுத்துரைத்து மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒரு முறை அல்ல தொடர்ந்து மூன்று முறை முதல்வராக ஆட்சி நடத்தி ,முதல்வராகவே மறைந்தார் என்பது எம்.ஜி.ஆரால் மட்டுமே முடிந்த காரியம் .வேறு எவராலும் சாத்தியம் இல்லாத விஷயம் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நடிக்க தெரியாது என்று பரவலாக பேசப்பட்டது .நடிக்க தெரியாமலா அவரது படங்களை மக்கள் ரசித்தார்கள் . ஒரு சில ஆண்டுகள் தவிர ,ஏறத்தாழ 30 ஆண்டுகள் வசூல் சக்கரவர்தியாகவும் , முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்தார் என்றால் எப்படி சாத்தியம் . இந்த சாதனைகளை பொறுக்காத பொறாமைக்காரர்களின் விமர்சனம்தான் அது .அவற்றை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவேயில்லை .தனித்தன்மை என்று ஒன்று இல்லாவிட்டால் வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் தனி மனிதன் , நடிகன் வெற்றிபெற முடியாது என்பது எம்.ஜி.ஆருக்கு நன்றாக தெரிந்து இருந்தது .அனுபவபூர்வமாக நாடக காலத்தில் சிவாஜி கணேசன் மனோகரா படத்தில் நடித்தது போல நாடகத்தில் மனோகரா வேடத்தில் நடித்துள்ளார் .தனக்கு என்று ஒரு தனி பாணி வேண்டும் . அந்த பாணியை யாரும் பின்பற்றல் ஆகாது என்பதில் உறுதியாக இருந்தார் .
நடிப்பு என்றால் என்ன , நடிப்பின் இலக்கணம் என்ன என்பதை அறிந்தவர் .ஒரு நடிகன் காமிராவின் முன்பு நிற்கும்போது இடதுபுறம் உள்ள அவனுடைய தோற்றம் ,வலதுபுறம் உள்ள தோற்றத்துடன் ஒப்பிடும்போது வெவ்வேறாக இருக்கும் . எந்த தோற்றம் உகந்ததாக இருக்கும் .எந்த தோற்றம் சரியாக காமிராவில் அமையாது என்பதையெல்லாம் நுட்பமாக அறிந்தவர் .பொதுவாக இரட்டை வேடங்கள் ஏற்று நடிக்கும்போது ,எந்த வேடத்தில் , குரல், முக பாவம் மட்டுமல்ல , மனோபாவமும் எப்படி இருக்க வேண்டும் ,மனோரீதியான நடை, உடை, பாவனை போன்ற எல்லாவற்றையும் கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர். வல்லவராக இருந்தார் என்பதை உதாரணமாக .எங்க வீட்டு பிள்ளை படத்தின் இமாலய வெற்றிக்கு காரணமாக ,கோழை ,வீரன் என்ற இரண்டு பாத்திரங்களிலும் நல்ல வித்தியாசம் காட்டி அசத்தியிருப்பதை காணலாம் . . அதை தொடர்ந்து வந்த பல இரட்டை வேட படங்களில் அதே முறையை கையாண்டார் . இரட்டை வேட படங்களில் நடிக்கும்போது சிரிப்பு ,புருவத்தை உயர்த்துதல் , தாழ்த்துதல், புன்னகை வரவழைத்தல் , பாசம், அன்பு, வீரம் , துணிவு, காதல், கனிவு, கோபம் என்று பலவிதமான உணர்ச்சிமிக்க காட்சிகளில் நடிப்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பல்வேறு கருத்துக்கள் வெளியிட்டுள்ளார் .
நடிப்பின் பல்வேறு விதமான கலைகளையும், பல்வேறு அம்சங்களையும் தெரிந்து வைத்திருந்தார் . நடிப்பு பற்றி சிலர் சொல்வது போல அறியாதவரல்ல தனக்கென்று ஒரு பாணியை கடைபிடித்தார் . அதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் .அதைத்தான் செய்ய முடியும் ,பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள் அனைவரின் நிதி நிலைமை , வருமானம் பராமரிப்பு, செலவினம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவ்வாறு செய்தால்தான் திரைப்படத்துறை வளர்ச்சி பெறும், படங்கள் வியாபார ரீதியில் நல்ல விற்பனை ஆகும் அரசுக்கும் கணிசமான வரி என்கிற வகையில் வருமானம் பெருகும் என்ற நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை , பயனுள்ளதாக செயல்படுத்தினார் .
தன்னுடைய வழக்கமான பார்முலாவில் இருந்து சற்று விலகி, வித்தியாசமான பாத்திரத்தில் உணர்ச்சிகளை கொட்டி நடித்த படம் பெற்றால்தான் பிள்ளையா .இந்தப்படத்திற்கு பல சிறப்புகள் உண்டு . எம்.ஜி.ஆர். தான் நடித்த மிக சிறந்த ,பிடித்த படங்களில் ஒன்று . நடிகர் சிவாஜி கணேசன் இந்த கதையில் நடிப்பதாக இருந்தது என்று பேசப்பட்டது . அவரும் வசன ஆசிரியர் ஆரூர்தாஸிடம் இந்த காதையை என்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேன் என்று சொன்னதாக தகவல்கள் வெளியாகின .. எம்.ஜி.ஆர். சரோஜாதேவி ஜோடி கடைசியாக நடித்து வெற்றிகரமாக 100 நாட்கள் ஸ்டார், மகாராணி அரங்குகளில் கடந்த படம் .எல்லாவற்றிற்கு மேலாக இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போது தான் ராமாவரம் தோட்டத்திற்கு பட தயாரிப்பாளர் வாசுவுடன் வந்த எம்.ஆர். ராதா , எம்.ஜி.ஆரிடம் பேசிக் கொண்டிருந்தபோதே வாக்குவாதம் ஏற்பட்டு துப்பாக்கியால் சுட்டு, தானும் சுட்டுக் கொண்டார் .இந்த படத்தில் நான் குணச்சித்திர வேடத்தில் நடிப்பது போல ஒரு உணர்வு உள்ளது . அதனால் சண்டை காட்சிகள் அமைப்பதை தவிர்க்கலாமே என்று இயக்குனருக்கு யோசனை தெரிவித்தார் .எம்.ஜி.ஆர்.
ஒரு சில சண்டை காட்சிகள் கூட இல்லையென்றால் உங்கள் ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்நோக்குவது மிகவும் கடினம் . உங்கள் ரசிகர்கள் அதை எதிர்பார்ப்பார்கள் , நிச்சயம் வரவேற்பார்கள் .அவசியமான கட்டத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று இயக்குனர்கள் சமாதானம் சொன்னார்கள் .இதற்காக எம்.ஜி.ஆர். அரை மனதுடன் , வருத்தத்துடன் சம்மதித்து இருக்கிறார் .படத்தின் வெற்றி செய்தி வந்த பிறகு அனைவரும் மகிழ்ச்சியுற்றனர் .படங்களிலே காதல் காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் . எந்த அளவுக்கு நளினமாக, அதே சமயத்தில் மிகவும் தூக்கலாக இருக்கக் கூடாது .ஒரு வரைமுறை , வரம்பு இருக்கவேண்டும் என்று விலாவாரியாக இயக்குனர்களிடம் விளக்குவார் .எம்.ஜி.ஆர். ஒரு கதாசிரியர், எடிட்டர்,காமிராமேன் , சவுண்ட் பொறியாளர் ,என்று பல்வேறு துறைகளிலும் நுட்பங்களை அறிந்தவர் . திரைப்படத்துறையில் எந்த இடத்தில,பகுதியில் தவறுகள் நிகழ்ந்தாலும் அதை எளிதில் கண்டுபிடித்து நீக்குவதற்கு யோசனை தெரிவித்து உதவுவார் .
பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பாதிப்பு இல்லாமல் நடித்த நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் . எம்.ஜி.ஆர். அவர்கள் பெற்றால்தான் பிள்ளையா படத்தில் கால்களை அகற்றியவாறு வித்தியாசமான நடையை காட்டியிருப்பார் . தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் சார்லி சாப்ளினை போல நடை, உடை , பாவனைகள் ,கையில் வாக்கிங் ஸ்டிக் , தலையில் குல்லா ,கருப்பு கண்ணாடி ;அணிந்து பாட்டு வாத்தியாராக வந்து மேலைநாட்டு பாடலான, தொட்டு காட்டவா, மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டு காட்டவா என்று பாடி, ஆடி , அசத்தியிருப்பார் .
அடிமைப்பெண் படத்தில் ஏமாற்றாதே, ஏமாற்றாதே ,பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடுகிறார் .எம்.ஜி.ஆருக்கு திருப்தியில்லை .இரண்டு, மூன்று முறை பாடியும் நான் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை என்றார் எம்.ஜி.ஆர். அதாவது பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு , நல்ல அன்புக்கும் , பண்புக்கும் வளைந்து கொடு என்ற இடத்தில இன்னும் தெளிவான உணர்ச்சிகளும் , பாவங்களும் கொஞ்சம் அழுத்தமாக இருக்க வேண்டும் என்கிறார் .ஒரு கட்டத்தில் டி.எம்.எஸ். ஏன் நம்மை இத்தனை முறை பயிற்சி எடுக்க வைக்கிறார்கள் . வேண்டுமானால் வேறு பாடகரை வைத்து பாட வைத்துக் கொள்ளுங்கள் என்று இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் குறைபட்டுக் கொண்டாராம் . கடைசி முறையாக பாடும்போது பாடல் நன்றாக அமைந்ததும் எம்.ஜி.ஆர். டி.எம்.எஸ்.ஸை கட்டி பிடித்து இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்று பாராட்டினாராம் ..எம்.ஜி.ஆருக்கு இசை ஞானம் இருந்ததால்தான் , அவர் எதிர்பார்க்கிற அளவிற்கு , பாடலில் , அழுத்தம், ஆழம் , உணர்ச்சிகள், பாவங்கள் , ஆகியவற்றை நுட்பமாக பின்னணி பாடகர்கள், பாடகிகளிடம் இருந்து வற்புறுத்தி வழங்கப்பெற்று , பாடல்களை பதிவு செய்தார் . அதனால்தான் அன்றும், இன்றும் , என்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்கள் காலத்தை வென்று , கடந்து நிற்கின்றன .
தனது பாணி இதுதான் என்று மக்களுக்கு அறிமுகம் செய்தார் , கடை பிடித்தார் , மக்களின் நம்பிக்கையை பெற்றார் .,அதில் வெற்றியும் பெற்றார்.........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 20/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.என்கிற சொல் பல சாமானியர்களை மாமனிதர்களாக பல்வேறு பதவிகளுக்கு உயர தூக்கிவிட்ட ஒரு மந்திரச்சொல் .* அந்த மந்திர சொல்லை பலரும் கொண்டாடி கொண்டிருக்கும் காலம் இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன .அன்றைக்கு அந்த மலர்ச்சிக்கான ஒரு விதையாக, வித்தாக தான் இருந்ததாக சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி பெருமை பட்டுக் கொள்கிறார் . அதில் நியாயம் இருக்கிறது .ஏனென்றால் , எங்கேயாவது ஒரு சிறு துளியில்தான்* பெருவெள்ளம் காத்திருக்கிறது என்பதற்கு அன்றைக்கு* ஆட்சியை அலங்கரித்து பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வந்த* அ .தி.மு.க.தலைவர் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளே காரணம் .
அப்படியான தொண்டர்களின் குரலை பொறுமையாக கேட்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார் எம்.ஜி.ஆர். ஒருமுறை* இரண்டு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளில்*தலைமை பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வது , பொறுப்புகளை யார் பகிர்ந்து கொள்வது என்பதில் ,பிரச்னைகள், குழப்பங்கள் ஏற்பட்டு , இரண்டு அமைப்பினரும் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை சந்திக்க சென்றனர் . உங்களுக்குள் சமாதானம் ஏற்பட்டு பொறுப்புகளை பகிர்வதில் தொடர்ந்து சண்டை சச்சரவுகள் செய்தால் அந்த மன்றங்களை கலைப்பதை தவிர வேறு வழியில்லை என்றார் எம்.ஜி.ஆர். அதை கேட்ட ஒருவர் உரிமையுடன்* ,தலைவரே உங்களுக்காக தான் மன்றங்கள் செயல்படுகின்றன . நாங்கள்தான் மன்றங்களை உருவாக்கினோம் . நாங்களே பிரச்னைகளை தீர்த்து கொள்கிறோம் . மன்றங்களை நீங்கள் கலைக்கும் அளவிற்கு நிலைமை நீடிக்காது என்றார் .அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர் .மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வாசகத்தை எம்.ஜி.ஆர். மதித்தார் .அவரே சொல்லியிருக்கிறார் என்னவென்றால் ஆலந்தூர் மோகனரங்கம் துவக்கிய அ.தி.மு.க .வில் நானும் ஒரு தொண்டனாக* என்னை இணைத்துக் கொண்டேன் என்று .ஒருபோதும்* . தான் ஒரு தலைவன் என்ற மமதையில் எப்போதும் தொண்டர்களிடம் எம்.ஜி.ஆர். பேசியதில்லை .*தொண்டர்கள்தான் அவரை தலைவர் என்று அழைப்பார்கள் .பல ஊர்களுக்கு ,நகரங்களுக்கு, கிராமங்களுக்கு எம்.ஜி.ஆர். தேர்தல்* பிரச்சாரத்திற்காகவும் , கட்சி பொது கூட்டத்திற்காகவும் , அரசு சார்பில் நடக்கும் விழாக்களுக்கும் செல்லும்போது முதலமைச்சர் வருகிறார் என்பதைவிட ,எம்.ஜி.ஆர். வருகிறார் என்று சொல்லப்படுவதைத்தான் பெரிதும் விரும்புவார் .காரணம் அரசு பதவி, முதல்வர் பதவி என்பது 5 ஆண்டுகள் மட்டுமே , எம்.ஜி.ஆர். என்ற சொல்தான் எப்போதும் நிரந்தரம் என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார் .
ஒருமுறை சிலம்பு செல்வர் ம .பொ.சிவஞானம் அவர்கள் வரவேற்று* பேசும்போது எங்கள் முதலமைச்சரே வருக என்று* சேலம் அருகே உள்ள ஒரு ஊரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில்* பேசினார் . மேடையில் இருக்கும் ஒருவர் அப்போது எப்படி எம்.ஜி.ஆர். அவர்களை எங்கள் முதலமைச்சரே வருக என்று அழைக்கலாம் . அவர் அனைவருக்கும் பொதுவானவர் , ஒரு மாநிலத்தின் முதல்வர் ,எப்படி நீங்கள் சொந்தம் கொண்டாடலாம் என்றார் .பதிலுக்கு ம.பொ.சி.அவர்கள் நாம் ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு செல்லும்போது குழந்தையிடம் பரிசு பொருள் கொடுத்தபின்**தூக்கி கொஞ்சும்போது ,என் செல்லமே, என் தங்கமே என்று கொஞ்சவில்லையா அதுபோலத்தான் என்று நினைத்துக் கொள்ளுங்கள் அந்த* கண**நேரத்தில் அந்த குழந்தை நமக்கு சொந்தம் என்பது போலஒரு பாவனையில் கொண்டாடி*மகிழ்ச்சி அடைகிறோம் இல்லையா* அது போலத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்தின் முதல்வராக இருந்தாலும்கூட , மாநிலத்தின் எந்த பகுதிக்கு செல்கிறாரோ, அந்த மண்ணின் மக்கள் அவரை சொந்தம் கொண்டாடுவதை*யாரால் தடுக்கமுடியும் என்றார் .**
ஒரு மாநிலத்தில் மக்கள் தங்கள் பிரச்னைகளுக்காக உரிமையோடு மாநில முதல்வரை அணுகி கோரிக்கைகள் வைக்கலாம்* கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் போராடலாம் . ஆனால் ஒரு மாநில முதல்வரே மக்களின் பிரச்னைக்காக* மத்திய அரசு போதிய அளவு அரிசி* வழங்க மறுத்ததற்காக*சென்னை கடற்கரையில் எம்.ஜி.ஆர். ஒருநாள் முழுதும் உண்ணாவிரதம் கடைபிடித்தார் . அந்த நிகழ்ச்சியில் பல தாய்மார்கள் எம்.ஜி.ஆர். அவர்கள் இடையில்* ஒரு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததை சைகை மூலம் மறுத்து , மத்திய அரசின்* ஒப்புதல் கிடைத்ததும்*உண்ணாவிரதத்தை* முடித்துக் கொண்டு இறுதியில் கொஞ்சம் பழச்சாறு சாப்பிட்டார் .அதாவது மக்கள் பிரச்னையை மத்திய அரசின் முன்வைத்து போராடும்போது* அந்த பிரச்னைகள் சுமுகமாக முடியவேண்டும் என்பதில்தான்*தீர்மானமாக இருந்தார் எம்.ஜி.ஆர். என்பதற்கு இது ஒரு உதாரணம் .
எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலர், திரைப்படங்களில் அவர் போதித்த பல நல்ல குணங்களை பின்பற்றி நடந்து வருகிறார்கள் .உதாரணமாக உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவருடன் நடித்த தாய்லாந்து நடிகை மேத்தா ரூங் ராத் (பச்சைக்கிளி முத்துச்சரம் என்கிற புகழ் பெற்ற பாடலில் நடித்தவர் ) இப்போது அவர் முதிய பெண்மணி ..இந்த முதுமையான வயதிலும் ,அவர் தாய்லாந்தில் உள்ள மருத்துவமனைகளில் மது அருந்துவது, புகை பிடிப்பது ஆகியவற்றிற்கு எதிராக* பிரச்சாரம் செய்துகொண்டு வருகிறாராம் .இதுதான் எம்.ஜி.ஆர். விதைத்துவிட்டு போன விதையின் ,விருட்சத்தின் நிழல்*
எம்.ஜி.ஆர். பள்ளி படிப்பு அதிகம் படிக்காதவர் என்றாலும் ,அவரது வீட்டு நூலகத்தில் தமிழகத்தில் வந்த*, இலக்கியத்தில் மிகப்பெரிய பேர் வாங்கிய ஜாம்பவான்கள் அடங்கிய மணிக்கொடி புத்தகங்களின் தொகுப்பு கைவசம்* இருந்தது .இவை ஒரு அரிய தகவல்கள் அடங்கிய பொக்கிஷங்கள் .எம்.ஜி.ஆர். என்கிற பெயர் ஒரு தன்னம்பிக்கை,ஒரு மந்திரச்சொல், ஒரு உற்சாகம் .ஒரு உந்துசக்தி .இந்த மந்திர சொல்லை பூஜித்து கொண்டிருப்பவர்கள் ஏராளம், ஏராளம் .அவர்களெல்லாம் இந்த சகாப்தம் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து ஊக்கமும், உற்சாகமும் தந்து வருகிறார்கள் .* தொடர்ந்து நாம் அந்த மாமனிதரின் வாழ்க்கை கனவுகளை , நனவாக்க, பயணப்பட்டு , சிந்திப்போம், பேசுவோம், செயல்படுவோம் .மேலும் தகவல்கள் அறிய அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1. என்னை தெரியுமா, நான் சிரித்து பழகி* *- குடியிருந்த கோயில்*
2.நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற - இதயக்கனி*
3.நான் உங்கள் வீட்டுப்பிள்ளை - புதிய பூமி*
4.நகரசபை கூட்டத்தில் எம்.ஜி.ஆர். - நம் நாடு*
5.வீராங்கன் - மார்த்தாண்டன் சந்திப்பு - நாடோடி மன்னன்*
6.பச்சைக்கிளி முத்துச்சரம் ,முல்லைக்கொடி -உலகம் சுற்றும் வாலிபன்*
7.காஷ்மீர் பியூட்டி புல் காஷ்மீர்* *- இதய வீணை*
8.விழியே, விழியே உனக்கென்ன வேலை - புதிய பூமி*
-
தனியார் டிவிக்களில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்* 01/08/20*முதல் 07/08/20 வரை ஒளிபரப்பான*விவரங்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
01/08/20* - முரசு டிவி - மதியம் 12 மணி /இரவு 7 மணி - பெற்றால்தான் பிள்ளையா*
02/08/20* -மெகா 24 - பிற்பகல் 2.30 மணி - தாய் சொல்லை தட்டாதே*
03/08/20 - சன் லைப் - காலை 11 மணி - இதயக்கனி*
* * * * * * * * * *முரசு டிவி -மதியம் 12மணி/இரவு 7 மணி -ஆனந்த ஜோதி*
* * * * * * * * *கிங் டிவி* - பிற்பகல்* 2 மணி* - அன்பே வா*
* * * * * * * *பாலிமர் டிவி - பிற்பகல் 2 மணி - இன்றுபோல் என்றும் வாழ்க*
* * * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி - தனிப்பிறவி*
04/08/20* -சன் லைப் - மாலை 4 மணி - உழைக்கும் கரங்கள்*
* * * * * * * *புதுயுகம் டிவி* -இரவு 7 மணி - சங்கே முழங்கு*
*05/08/20- சன் லைப் -காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * * *தமிழ் மீடியா* - பிற்பகல் 2 மணி - மதுரை வீரன்*
* * * * * * *மெகா 24 -* இரவு 9 மணி - தாய்க்கு பின் தாரம்*
* * * * * * * வேந்தர் டிவி - இரவு 10.30 மணி - தனிப்பிறவி*
06/08/20 - ஜீ திரை - அதிகாலை 4.30 மணி - பறக்கும் பாவை*
* * * * * * * * முரசு டிவி - மதியம் 12 மணி /இரவு 7 மணி - தொழிலாளி*
** * * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி - தர்மம் தலைகாக்கும்*
07/08/20 - சன்* லைப் - காலை 11 மணி* - எங்கள் தங்கம்*
* * * * * * * * *சித்திரம் டிவி -காலை 11 மணி /மாலை 6 மணி - அபிமன்யு*
* * * * * * * *மீனாட்சி* டிவி- மதியம் 12 மணி - நல்ல நேரம்*
* * * * * * * *விஷ்ணு டிவி* - பிற்பகல் 2.30 மணி - படகோட்டி**
-
திமுகவை போல அலட்டிக் கொள்ளாமல் சரித்திர சாதனை படைத்த எம்.ஜி.ஆர்..!
'இதில் வேடிக்கை என்னவென்றால், இடையில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போன தி.மு.க.வால் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டங்கள் எதிலும் கைவைக்க முடியவில்லை.*
சாமான்யருக்கான சமூகத் திட்டங்கள். எம் ஜி ஆர் கொண்டு வந்த நலத் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், கடுமையான விமர்சனங்கள், கண்டனங்களை முன்வைத்தன. எல்லாரும் சொன்ன பொதுவான குற்றச்சாட்டு - 'அரசுப் பணம் வீணாகிறது'. 'இலவசங்கள் கொடுத்து அரசுக் கருவூலத்தைக் காலி செய்கிறார்'!*
இந்தப் புகார்களுக்கு எல்லாம், பல்லாண்டுகளுக்கு முன்பே பதில் கூறி விட்டார் எம்.ஜி.ஆர். தனது சொந்தத் தயாரிப்பான 'நாடோடி மன்னன்' படத்தில் கூறுவார்:'மக்களிடம் இருந்து பெற்ற வரிப் பணத்தை மக்களுக்காகச் செலவிடுகிறோம்.'இதில் வேடிக்கை என்னவென்றால், இடையில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போன தி.மு.க.வால் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டங்கள் எதிலும் கைவைக்க முடியவில்லை. காரணம், இவற்றால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட நற்பயன்கள். உதாரணத்துக்கு, சத்துணவுத் திட்டம். சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் இரத்த வாந்தி எடுத்தனர் என்றெல்லாம், தனது ஆதரவு நாளிதழ் மூலம், பீதியைப் பரப்பியவர்கள், ஆட்சிக்கு வந்து ஏன் அந்தத் திட்டத்தைக் கைவிடவில்லை..? வலுவான காரணம் இருந்தது.*
சத்துணவுத் திட்டம் அமலாக்கப்பட்ட முதல் ஆண்டில், சுமார் 2,63,000 குழந்தைகள் புதிதாக பள்ளிகளில் சேர்ந்தனர். அடுத்த ஆண்டில், 2,68,000 பேர் சேர்ந்தனர். எம்.ஜி.ஆர். மறைந்த 1987இல், தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 100% என்று உச்சத்தைத் தொட்டு இருந்தது. 'பள்ளிக் கூடத்தின் பக்கம்' போகாதவர்களே இல்லை என்கிற நிலையை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆர். ஆட்சி. இந்தச் சாதனையில், சத்துணவுத் திட்டம் மிக முக்கிய பங்கு வகித்தது.*
இதேபோன்று, மேலும் பல திட்டங்களும் காரணம் ஆகும்.
அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது - பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச காலணி திட்டம். தமிழ்நாட்டில் பல ஊர்களில் பல பகுதிகளில் சாதிய அடக்குமுறை மேலோங்கி இருந்தது.காலில் செருப்பு அணிந்து கொண்டு ஊருக்குள் நடந்து செல்ல முடியாத அவலநிலை இருந்தது. மாற்றி அமைக்க எண்ணினார் எம்.ஜி.ஆர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசக் காலணி வழங்கினார். அதனை அணிந்து கொண்டு,'எம்.ஜி.ஆரு குடுத்தது' என்று ஆனந்தமாய்க் கூறியபடி ஊருக்குள் சுற்றி வர முடிந்தது. மௌனமாய் ஒரு மிகப் பெரிய சமுதாயப் புரட்சியை நடத்திக் காட்டினார் மக்கள் திலகம்.*
சாதிக்கு எதிராகப் போராடுவதாக சொல்லிக் கொல்லும்... மன்னிக்கவும், சொல்லிக் கொள்ளும் கட்சி, தான் ஆட்சியில் இருந்த போது செய்யத் துணியாத காரியத்தை, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, எவருடைய எதிர்ப்பும் இல்லாமல், அமைதியாக செய்து முடித்தார் எம்.ஜி.ஆர். சாதிகளை மறந்து அ.தி.மு.க. பக்கம் மக்கள் நிற்பதற்கு முழுமுதற் காரணமே சாதிகளைக் கடந்த அதன் பார்வைதான். எம்.ஜி.ஆர். இட்ட அடித்தளம், ஜெயலலிதா எழுப்பிய கற்கோட்டை, மக்களின் பேராதரவு பெற்று விளங்குவதற்குக் காரணமே சாதிகளுக்கு அப்பாற்பட்டு எல்லாருக்கும் பொதுவான இயக்கமாக அது இருப்பதுதான்.*
இந்தச் சமயத்தில் சத்துணவு திட்டம் குறித்த இன்னொரு தகவலையும் குறிப்பிட வேண்டும். *இந்தத் திட்டம் அறிமுகமான ஆண்டிலேயே, 17.4 லட்சம் (13.7%) *எஸ்.சி., எஸ்.டி. பிள்ளைகள், இதனால் பயன் பெற்றனர்; ஒரு மிகப் பெரிய சமூக, பொருளாதார பிரசினைக்கு சுமுகமான நிரந்தரத் தீர்வு கண்டார் எம்.ஜி.ஆர்.
சாதிய ஏற்றத் தாழ்வுகளை முற்றிலுமாகக் களைந்து சமதர்ம சமுதாயமாகத் தமிழ்நாடு மலர வேண்டும் என்பதில், உண்மையான அக்கறை கொண்ட இயக்கமாக அதிமுக இருப்பதால், அனைத்து சாதிப் பிள்ளைகளும் ஆரோக்கியத்துடன், தரமான கல்வி பெற்று வாழ்க்கையில் உயர்வதற்கான*திட்டங்களை அடுக்கடுக்காய் நிறைவேற்றி வருகிறது.
பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய அரும் பணியால் 1976-77இல், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் 942 இருந்தன. இவற்றில் உயர்நிலைப் பள்ளிகள் (High Schools) 21; நடுநிலைப் பள்ளிகள் - 80; தொடக்கப் பள்ளிகள் - 841. *இந்தச் சிறப்புப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 1,65,822 பேர். எம்.ஜி.ஆர். அமரரான போது என்ன நிலைமை..? எந்த அளவுக்குத் தரம் உயர்த்தப் பட்டன பாருங்கள்: மேல்நிலைப் பள்ளிகள் - 963; உயர்நிலைப் பள்ளிகள் - 51; தொடக்கப் பள்ளிகள் - 844. மொத்தம் - 963. பயன் பெற்றவர்கள் - ஆண் பிள்ளைகள் - 124503; பெண் பிள்ளைகள் - 104018. மொத்தம் - 2,28,521.*
இப்பள்ளிகளில் 1 - 8ஆம் வகுப்பு படித்த அத்தனை பேருக்கும், ஆண்டுதோறும் இலவச சீருடைகள், இரண்டு வழங்கப்பட்டன. அரசு நடத்திய விடுதிகளில் ('ஹாஸ்டல்') தங்கிப் படித்த அனைவருக்கும் கூட இலவச சீருடை வழங்கப் பட்டது. இலவச புத்தகங்கள், நோட்டுகள் வழங்கும் திட்டம் அமலாக்கப் பட்டது.
தொழிற் பயிற்சி பெறுவோருக்கு தொழிர்கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) திட்டமும் அறிமுகப் படுத்தப் பட்டு, 5,50,000 பேருக்கு உதவி தரப் பட்டது.*
ஆதி திராவிட மாணவர் விடுதிகள் 743 இயங்கின; இவற்றில் கல்லூரி மாணவர்களுக்கு- 48; தொழிற் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 8. இங்கே மொத்தம் 47,040 பேர் தங்கிப் படித்து, தமது அறிவாற்றலால் வாழ்க்கையில் உயர்ந்தனர்.1977 தொடங்கி 1987 வரை ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 15 விடுதிகள் கட்டப்பட்டன. ஆதி திராவிடர் நலனுக்காக வீடுகள் கட்டித் தரப் பட்டன. ஒரு அலகுக்குக் கட்டிட செலவு ரூ 4000 என்று முந்தைய அரசு வைத்து இருந்தது.*எம்.ஜி.ஆர். அதனை ரூ 10,000 என்று கணிசமாக உயர்த்தினார். இதன் மூலம் தரமான உறுதியான வீடுகள் கட்டித் தர முடிந்தது. எம்.ஜி.ஆர் ஆண்ட 10 ஆண்டுகளில், 61,000 வீடுகள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கும் வந்தன.*
நிறைவாக, ஆதி திராவிடர் குடியிருந்த பகுதிகளில் தரமான குடிநீர் வசதி செய்து தருவதிலும் எம்.ஜி.ஆர். தனிக் கவனம் செலுத்தினார். அப்போதைய கணக்குப்படி, தமிழ்நாட்டில் 25000 குடியிருப்புகள் இருந்தன; இவற்றில், 23,311 பகுதிகளில் குடிநீர்க் கிணறுகள், மேல்நிலைத் தொட்டிகள் அரசால் நிறுவப் பட்டன. இதுவும் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மிகச் சிறந்த மக்கள் நலத் திட்டமாகும். *
*
இத்தொடரை வாசிப்பவர் யாரும் தயவு கூர்ந்து, சாதி அடிப்படையிலான தகவலாக இதனைப் பார்க்க வேண்டாம். சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பகுதிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் நோக்கிய எம்.ஜி.ஆர். பார்வையும் செயல்பாடுகளும் எப்படி இருந்தன என்பதைப் பதிவு செய்யவே இந்த விளக்கங்கள். எல்லாப் பிரிவினருக்கும் பொதுவான தலைவராக விளங்கும் எம்.ஜி.ஆர். கடைப்பிடித்த அரசியல் நாகரிகம் குறித்தும் பார்த்து விடலாமா..? *
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகப்பெருமக்களை கொண்டிருந்தார். அவர் வேற்று மொழிப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும் அவருடைய படங்களை மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்கள். தமிழில் இருந்து
தெலுங்கு மற்றும் இந்தி மொழியில்
டப் செய்து வெளியிட்டார்கள்.
எல்லா மொழிகளிலும் அவர் படங்கள் இணையற்ற வெற்றியை பதிவு செய்தது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் "அடிமைப்பெண்" ஹிந்தியில் "கோயி குலாம் நயி". என்ற பெயரில் டப் செய்து கல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் 10 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டார்கள் படம் 50 நாட்களை தாண்டி ஓடி
ஒரிஜினல் ஹிந்தி படங்களை காட்டிலும் நல்ல வெற்றியை பதிவு செய்தது. ஆனால் "தர்த்தி" என்ற நேரடி ஹிந்தி படம் பார்க்க ஆளில்லாமல் பரிதவித்த கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
"நாடோடி மன்னன்".
வெற்றி காவியத்தை ஆங்கில விளக்கத்துடன் லண்டனில் திரையிட்டு சுமார் 8 வாரங்களுக்கு மேல் ஓடி வெற்றியை பதிவு செய்து
வெற்றி விருதையும் பெற்று தந்தது. அவர்கள் கொடுத்த விருதை வாங்க மக்கள் திலகம் லண்டன் சென்று தம்பட்டம் அடிக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து பெற்ற விருதினை நாவலர் நெடுஞ்செழியனிடமிருந்து எந்தவித ஆர்ப்பாட்டமும்
இல்லாமல் தலைவர் பெற்றுக் கொண்டது அவரது தன்னடக்கத்தை
காட்டுகிறது.
இலங்கை, சிங்கப்பூர், பர்மா, ரஷ்யா முதலான நாடுகளிலும் மக்கள் திலகத்தின் படங்கள் பல வெற்றிகளை குவித்துள்ளது. சிலர் நேரடி இந்தி தெலுங்கு மலையாளம் என மாற்று மொழிப்படங்களில்
நடித்தும் அந்தந்த மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டு தாய்மொழிக்கே திரும்பி வந்து உலகப்பெரும் நடிகன் என்று தற்பெருமை பேசுபவர்கள் மத்தியில் எந்த தற்பெருமையும் கொள்ளாமல் மாற்று மொழியில் மதிப்பிருந்தும் தமிழுக்கே தன்னை அர்ப்பணித்து கொண்டது தமிழ் மக்கள் செய்த பாக்கியமே. மற்ற எல்லா மொழிகளிலும் உலகப் பெரும் நடிகனின் நடிப்பை உதாசீனப்படுத்தியது மிகுந்த கண்டனத்துக்குரியது. இவரைவிட அவர்கள் மொழியில் சிறந்த நடிகர்கள் இருந்தார்களோ? என்னவோ? நமக்கேன் அடுத்த மாநில வம்பு.
தனக்கு வந்த பத்ம விருதையும் பாரத் விருதையும் மறுத்து திருப்பி அனுப்பியவர் அல்லவா? "அடிமைப்பெண்" படத்துக்காக பிலிம்பேர் அவார்டும் கிடைத்தது. விருதுகள்தான் மக்கள் திலகத்தை தேடிவருமே தவிர விருதுகளை தேடி அவர் என்றுமே போனதில்லை.
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட இந்தி படமொன்று வடக்கில் படுதோல்வி அடைந்ததுடன் பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணியது அதன் தயாரிப்பாளருக்கு. இதைத்தான் குதிரை கீழே விழுந்ததுடன் நில்லாமல் குழியையும் பறித்தது என்பார்கள்.ஆனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரம், மகாராஷ்டிரா, வங்கம் போன்ற மாநிலங்களிலும் வெற்றி கொடி நாட்டியதுடன் அங்கும் தமிழ்படத்துக்கு நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தவர் மக்கள் திலகம் எனலாம்.
இலங்கையில் மக்கள் திலகத்தின் படங்களுக்கு தனி மரியாதை உண்டு. ரஷ்யாவில் "ரகசிய போலீஸ் 115" படத்தில் வரும் சண்டை காட்சிகளை பார்த்து விட்டு ஒன்ஸ்மோர் கேட்டதாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இப்படி கடல்கடந்தும் தன்னுடைய வெற்றி கொடியை பறக்கவிட்ட மக்கள் திலகம் என்றுமே அகந்தை கொண்டதில்லை.
சிலர் வெளிநாட்டில் வற்புறுத்தி வாங்கிய விருதை
வைத்துக்கொண்டு
தம்பட்டம் அடிப்பதை பார்த்து நாடே கைகொட்டி சிரிக்கிறது என்கிறார்கள். காரணம் என்னவென்றால் அதன்பிறகும் அதற்கு முன்பும் இப்படிப்பட்ட ஒரு விருதை யாரும் கேள்விபட்டதில்லை.
தெரிந்தால் சொல்லவும் அதற்கு முன்பு யார் யார் வாங்கினார்கள்? பின்பு யார் யார் வாங்கினார்கள்? என்று. அப்படியானால் தான் விருதின் தரத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இல்லை, அந்த ஆண்டு மட்டும்தான் பிரத்யேகமாக விருது கொடுக்கப்பட்டதா? என்ற விபரங்கள் தெரிய வரும். நாசர் எகிப்தின் அதிபராக இருக்கும் போது எகிப்திந்திய உறவுக்காக காங்கிரஸில் இருந்த ஒருவருக்கு கலாசார விருதாக கொடுக்கப்பட்டதா? அந்த ஆண்டோட அவருடைய நடிப்பு நின்று போய் விட்டதா? ஏன் அடுத்தடுத்து ஆண்டுகளில் அவருக்கு கிடைக்கவில்லை?
இல்லை, இவரை விட சிறந்த நடிகர் கிடையாது என்பதற்காக விருது கொடுப்பதை நிறுத்தி விட்டார்களா? அதுவும் ஒரு நாடக சினிமாவுக்கு வெளிநாட்டில் விருது
கொடுக்கிறார்களா? அப்படியானால்
ஆஸ்கர் விருது ஏன் அந்த படத்துக்கு கொடுக்கப்படவில்லை என்ற காரணமும் புலப்படும். ஒரு தமிழனுக்கு உலகப்பெரும் விருது கிடைத்தால் மகிழ்ச்சி அடையும் முதல் தமிழன் நாமாகத்தான் இருக்க முடியும்.
இது நமக்கே தெரியவில்லை, அப்பாவி தமிழர்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும்.? இதை பார்த்து விட்டு ஆத்திரம் அடைவதை விடுத்து தகுந்த விபரங்களை. ஆதாரங்களுடன் அளித்தால் நமக்கும் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இல்லையென்றால் கல்யாண பரிசு தங்கவேல் m சரோஜாவின் "உங்களை யாரோ பூக்கடையில் பார்த்ததாக சொன்னாங்களே". காமெடி காட்சி தான் ஞாபகத்துக்கு வரும்..........
-
கிறிஸ்தவ மதமும் மக்களும்!*
எம்.ஜி.ஆர் தன் படங்களில்
சிலுவையில் அறைந்த இயேசு
கிறிஸ்துவைப் பல காட்சிகளில்
காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம்
படத்தில் அவர் ஒரு கம்பை குறுக்கே
பிடித்துக்கொண்டு நிற்பது கூட நிழல் காட்சியாக சிலுவை இயேசு போல காட்டப்படும்.
ரிக் ஷாக்காரன்
படத்தில் அங்கே சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
என்ற பாட்டில் அவர் சிலுவை இயேசு சிலையைக் கட்டிப்
பிடித்து நிற்கும் காட்சி வரும்.
எம்.ஜி.ஆர் தான் நடித்த ஜெனோவா
படத்தில் சிப்ரஸ் நாடு மன்னனாக
நடித்திருப்பார். அந்தப் படத்தில் மட்டும் அவர் முழங்காலிட்டு பைபிள் வாசிப்பது போன்ற காட்சி உண்டு.
பரமபிதா என்ற பெயரில் அவரை
இயேசுவாக நடிக்கவைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டனர். ஆனால், அவரை
சவுக்கால் அடித்து அவர் தலையில்
முள்கிரீடம் வைத்து அழுத்துவதை
ரசிகர்கள் காணப் பொறுக்க
மாட்டார்கள். திரையைக் கிழித்து
விடுவர் என்று திரையரங்க
உரிமையாளர்கள் தெரிவித்ததால் படம் எடுக்கும் முயற்சி கை விடப்பட்டது.
ஷூட்டில் எடுக்கப்பட்ட
எம்.ஜி.ஆர் இயேசுவாக தோற்றம் தரும்
படம் கேரளாவில் பலர் வீடுகளில்
மாட்டப்பட்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் ‘என்னப்பா
உயிரோடு இருக்கும்போதே என் படத்துக்கு பத்தி
கொளுத்துகிறார்களா’ என்று
சிரித்தாராம்.
எம்.ஜி.ஆர் சினிமாவில் ஏழ்மையான
சூழ்நிலையில் இருக்கும் தன் வீட்டை காட்டும் போது அந்த வீட்டில்
திருவள்ளுவர் பாரதியார் அறிஞர்
அண்ணா ஆகியோர் படங்களோடு
இயேசு கிறிஸ்து படத்தையும்
மாட்டியிருப்பார். இதனால்
கிறிஸ்தவர்கள் அவரை சீக்ரெட்
கிறிஸ்ட்டியன் என்றே சொல்ல
ஆரம்பித்துவிட்டனர்.
அவர் தனிக் கட்சி
ஆரம்பித்ததும் கிறிஸ்தவர்கள் பலரும் அவரது ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர்.
எம்.ஜி.ஆர் முதல்வரானதும்
அமெரிக்கன கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் நோவா அவரைப்
பார்த்து சிறைகளில் ஊழியம் செய்ய
அனுமதி கேட்டார். எம்.ஜி.ஆரும்
சம்மதித்தார்.
அப்போது நோவா
அவர்கள் சிறைகளில் கழிப்பறை வசதி
தேவை என்று கேட்டதும் எம்.ஜி.ஆர்
உடனே செய்து தருவதாக
ஒப்புக்கொண்டார்.
எம்.ஜி.ஆர்
காலத்தில்தான் சிறை கைதிகளின்
அறைகளுக்குக் கழிப்பறை வசதி
கிடைத்தது. அதுவரை அறையில்
வைக்கப்பட்ட சட்டிகளில்தான் அவர்கள்
இரவில் சிறுநீர் மலம் கழித்தனர்.
மறுநாள் அதை கொண்டு போய்
கொட்டிவிட்டு சுத்தம் செய்து
கொண்டு வந்து வைத்துக் கொண்டனர்.
எம்.ஜி.ஆர் டிசம்பர் 24 நாளன்று இரவில்
ஒரு மணி வரை உயிரோடு
இருந்ததாக சில செய்திகள் வந்த
போது கிறிஸ்தவர்கள் பலர் அவர்
கிறிஸ்துமஸ் அன்று மறைந்ததாகவே
கருதினர்.
எம்.ஜி.ஆர் மீதிருந்த
நன்மதிப்பு காரணமாக அவர்
கிறிஸ்தவர் அதிகமாக வாழும்
சாத்தான் குளம் தொகுதியில்
நீலமேகம் என்ற இந்துவை
நிறுத்தியபோதும் அங்கு வாழ்ந்த
கிறிஸ்தவர்கள் இரட்டை இலைக்கு
வாக்களித்து அவரை வெற்றி பெறச்
செய்தனர். .........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 21/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி அவரது ரசிக பெருமக்களும் , பக்தர்களும் அன்றாடம் அவரை போற்றி புகழ்ந்து* பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் .சகாப்தம் நிகழ்ச்சியில் அவரது அரிய தகவல்கள் பற்றி அறிந்து ,வாழ்த்து செய்திகளும், நெகிழ்வான பாராட்டுக்களும் வந்த வண்ணம் உள்ளன*இன்றைய அத்தியாயம் 90 வது* நிகழ்ச்சி .விரைவில் இந்த நிகழ்ச்சி சதம் ,/100 வது நாளை (அத்தியாயத்தை ) உங்களது பேராதரவுடன்* காண போகிறது*
1982ல் தமிழக முன்னாள் முதல்வர் அறிமுகப்படுத்திய சத்துணவு திட்டத்தின்*வெற்றி, வளர்ச்சியைக் கண்டு உலக நாடுகள் பெரிதும் பாராட்டின .இந்த மாபெரும் திட்டம்* மனிதாபிமான மிக்க**எம்.ஜி.ஆர். அவர்களுக்கு* சிறு வயதிலேயே* பசி கொடுமையை அனுபவித்ததன் காரணமாக ஆட்சிக்கு வந்ததும் எந்த குழந்தையும் தன்னைப்போல பசி கொடுமையை சிறு வயதில்* அறியக்கூடாது என்று திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது . எத்தனை முறை பசி எடுத்தாலும் ,, அத்தனை* முறை அந்த பந்தியில் உட்கார்ந்த பிறகு ,எழுப்பி வெளியே அனுப்புகின்ற அவமானத்தை சிறு வயதிலேயே அனுபவிக்கும்போது தன் மனம் என்ன பாடுபட்டது என்பதை அறிந்தவர்*எம்.ஜி.ஆர். நாடகத்தில்தான் உனக்கு இன்று வேடம் இல்லையே, வேடம் போடுபவர்களுக்குத்தான் இன்று* முதலில்**சாப்பாடு . இன்று உனக்கு வேடமில்லை. எனவே* உனக்கு கடைசியில்தான் சாப்பாடு என்று பரிகசிக்கப்பட்டவர் , வெளியேற்றப்பட்டவர் என்கிற வருத்தம் நாடகத்துறையில்* எம்.ஜி.ஆருக்கு உண்டு .பசி கொடுமையை உணர்ந்தவர் எம்.ஜி.ஆர். என்பதால்தான்**குழந்தைகள் பசியை போக்கும் இந்த மாபெரும் திட்டத்தை தாரக* மந்திரமாக செயல்படுத்தினார் .**
1973ல் கட்சி ஆரம்பித்த புதிதில் ,ஒரு இடத்தில மதிய உணவு திட்டத்தை துவக்கி வைத்தார் என்பது பலரும் அறியாத விஷயம் .அப்போது லயோலா கல்லூரியில்*முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.சி.டி.பிரபாகரன் படித்து வந்தார் .அவருடன் படித்த தாம்பரத்தில் இருந்து வரும்* மாணவர் ஒருவர்* மதிய உணவு பெரும்பாலும்* சாப்பிடுவதில்லை என்று அறிந்தார் .இதுபற்றி அந்த மாணவரிடம் கேட்டபோது , என் தாயார் வீட்டு வேலைகள் செய்வதற்காக காலையில் புறப்பட்டு சென்று மாலையில்தான் வீடு திரும்புவது வழக்கம் . எனவே மதிய உணவு அவரால் தயார் செய்து தரமுடியாததால் நான் சாப்பிட முடியவில்லை என்றார் .இதே போன்ற நிலை மேலும் பல மாணவர்களுக்கு உண்டு என்பதை அறிந்ததும் ,இதற்கு* நல்லதொரு தீர்வு காணவேண்டும் என்று விழைகிறார் .சுமார் 16 மாணவர்களுக்கு இந்த நிலைமை உள்ளது என்று தெரிந்து இவர்களுக்கு*நிரந்தரமாக மதிய உணவு அளிக்க வழிவகை செய்ய வேண்டும் . அதற்கான நிதி திரட்ட வேண்டும் என்று முடிவு செய்து, தான்* பற்றுக் கொண்டிருந்த தானை தலைவர் எம்.ஜி.ஆரை சந்திக்க சென்னை தி.நகர் , ஆற்காடு சாலையில் உள்ள அலுவலகத்திற்கு செல்கிறார் . அங்கு தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை காண, பேச பெரும் கூட்டம் கூடியுள்ளது .கட்சி ஆரம்பித்திருந்த நேரம் என்பதால் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு, அரசியல் , கட்சி கூட்டங்கள் ,கட்சி பிரமுகர்களுடன்*ஆலோசனைகள் என்று மிகவும் பிசியாக இருந்த நேரம் . அப்போது தரை தளத்தில்* டேப் பக்தன் என்பவர் ,திரு.பிரபாகரனை பார்த்து, நீங்கள் லயோலா கல்லூரி மாணவர்கள்* என்று அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் ,தலைவர் உங்களிடம் நிச்சயம் உடனே* அழைத்து**பேசுவார் என்று யோசனை தெரிவித்தார்அதன்படி பிரபாகரன் சுய அறிமுகம் செய்து கொண்டதும் ,எம்.ஜி.ஆர். உடனே அழைத்து பேசுகிறார் நீங்கள் எல்லாம் உணவருந்தி விட்டீர்களா என்று கேட்கிறார் .அவர்கள் அருந்திவிட்டோம் என்றவுடன்*. பிரபாகரன் தனது திட்டத்தை தெளிவாக எடுத்துரைத்தார் .
என்னுடன் படிக்கும் மாணவர்கள் பலர் மதிய உணவு அருந்துவதில்லை .அவர்களுக்கு நிரந்தரமாக மதிய உணவு அளிப்பதற்காக வைப்பு நிதி திரட்டி*அதன்மூலம் அவர்களது மதிய உணவு பிரச்னையை தீர்க்கலாம் என்று முடிவு எடுத்துள்ளோம். அதற்கு நடிகர் நடிகைகளை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினால் ஓரளவு நிதி திரட்டலாம் என்று யோசனை தெரிவித்தார் பிரபாகரன் .எம்.ஜி.ஆர். நல்ல திட்டம், உடனே ஏற்பாடு செய்யுங்கள் என்று சம்மதம் தெரிவித்து*. என்றைக்கு நிகழ்ச்சி வைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு அக்டொபர் 22 ம் தேதி என்று சொன்னார்கள் .விரைந்து ஏற்பாடுகளை செய்யுங்கள் .அந்த தேதியில் நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்கிறேன் என்றார் எம்.ஜி.ஆர். மாணவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி .நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். வருகை தருகிறார் என்று சொன்னாலேயே , மாணவர்கள் மத்தியில் கணிசமான அளவு நிதி திரட்ட முடியும், அத்துடன் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்* என்று திட்டமிடுகிறார்கள் .
அ .தி.மு.க. ஆதரவு பத்திரிகையான தென்னகத்தில் எம்.ஜி.ஆர். கர்நாடக மாநிலம்,ஷிமோகாவில் படப்பிடிப்பில் உள்ளார் .எனவே சென்னைக்கு 22ம் தேதிக்கு பின்னர்தான் திரும்புகிறார் என்று செய்தி பிரசுரம் ஆகியிருந்தது என்பது அறிந்ததும் பிரபாகரன் உள்பட அனைத்து மாணவர்களும் பதறிவிட்டனர் .சென்னை பல்கலை கழக நூற்றாண்டு மண்டபத்தில் நிகழ்ச்சி ஒப்பந்தம் ஆகிவிட்டது .என்ன செய்வது என்ற குழப்பத்தில் ,எம்.ஜி.ஆர். எண்ணை* தேடிப்பிடித்து பிரபாகரன் ஷிமோகாவில் உள்ள எம்.ஜி.ஆர். தாங்கும் விடுதிக்கு போனில் தொடர்பு கொள்கிறார் . பத்திரிகை செய்தி பற்றி சொன்னதும் ,நான் ஏற்கனவே ஒத்துக்* கொண்டபடி கண்டிப்பாக 22ம் தேதி மாலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் . உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என்று உறுதி அளித்தார் .மாணவர்கள் இதைக் கேட்டு ஜரூராக மற்ற பணிகளை கவனிக்கிறார்கள் .நடிகர் சங்கத்திடம் தொடர்பு கொள்ளும்போது ரூ.10,000/-கொடுத்தால்தான் நடிகர் நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்று நிர்பந்திக்கவே*ஒரு வழியாக நிதி திரட்டி பணம் கட்டுகிறார்கள் .* நிகழ்ச்சிக்கு மாலை 6 மணிக்கு எம்.ஜி.ஆர். சரியாக வந்துவிடுகிறார் . இந்த மதிய உணவிற்கான நிதி திரட்டும் ,பசியை போக்கும் திட்டத்திற்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு .என்கிறார் .மாணவர்களிடம் இருந்து நடிகர் சங்க நிர்வாகிகள் ரூ.10,000/- வாங்கியது தவறு .அதற்கு காசோலையாக என் சொந்த பணத்தில் இருந்து நான் தருகிறேன் என்று*நடிகர் சங்கத்திற்கு அளித்து, மாணவர்களின் பணத்தை திரும்ப பெற செய்தார் .இவ்வாறு* 1973ல்* லயோலா கல்லூரியில் மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். துவக்கி வைத்தார் என்பது வரலாறு .
மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.அதோ அந்த பறவை போல - ஆயிரத்தில் ஒருவன்*
2.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீனிவாசன் உரையாடல் -ரிக் ஷாக்காரன்*
3.மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா - தாய்க்கு பின் தாரம்*
4.எம்.ஜி.ஆர்.- நாகையா உரையாடல் -நம் நாடு*
5.அன்னமிட்டகை பாடல்* - அன்னமிட்டகை*
6.எம்.ஜி.ஆர்.- அசோகன் உரையாடல் - தொழிலாளி*
7.எங்கே, என் இன்பம் எங்கே - நாடோடி மன்னன்*
8.ஆண்டவன் உலகத்தின் முதலாளி - தொழிலாளி* .*
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*22/07/20 அன்று*அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------
காலத்தை வென்ற காவிய நாயகன்,மன்னாதி மன்னன், ராஜராஜன் எம்.ஜி.ஆர். அவர்கள் என்பது சகாப்தம் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் /பக்தர்கள் தரும் நல்ல வரவேற்பிற்கு அத்தாட்சி ஆகும் .
நடிகர் சங்கத்தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்க படுகிறார் . முதல் கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். வருகை தருகிறார் . சங்க உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டம் அது . அந்த கூட்டத்தில் பிலிம் நியூஸ் ஆனந்தன்காமிராவுடன்* வந்து* கலந்து கொள்கிறார் . அவரை பார்த்ததும் ,நீங்கள் ஏன் வந்தீர்கள்.தயவுசெய்துவெளியே செல்லுங்கள் .சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த கூட்டத்தில் அனுமதி என்கிறார் எம்.ஜி.ஆர்.*நடிகன் குரல் என்கிற பத்திரிகைக்கு* எம்.ஜி.ஆர். ஆசிரியராக இருந்தும், பொறுப்பு ஆசிரியராக பிலிம் நியூஸ் ஆனந்தனும் செயல்படுகிறார்கள். எம்.ஜி.ஆரின் ஆலோசனையின் பேரில் அந்த இதழ் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு தரப்படுகிறது .நடிகன் குரலுக்காக பல கட்டுரைகள் எடுத்துக் கொண்டு, ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு பலமுறை பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்றுள்ளார் .இருப்பினும் இந்த நடிகர் சங்க கூட்டத்தில் இருந்து வெளியே அனுப்பப்படுகிறார் .உடனே சிலர்,எம்.ஜி.ஆரிடம் அவரும் இந்த சங்கத்தின் உறுப்பினர்தான் என்று வலியுறுத்தி சொன்னதும் , அவரை அழைத்து வரச்சொல்லி ,கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கிறார் . விவரம் அறிந்த எம்.ஜி.ஆர். விஷயம் தெரியாமல் உங்களை வெளியே அனுப்பிவிட்டேன்,.நீங்கள் உறுப்பினர்தான் என்பது இப்போதுதான் தெரிந்தது. தாங்கள் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் . அதற்காக நான் மிகுந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு அனைவரின் முன்னிலையில் எம்.ஜி.ஆர்* எந்தவித . சங்கோஜமும்* இல்லாமல் தெரிவித்தார் .
நாடோடி மன்னன் படத்தின் 100 வது நாள் வெற்றிவிழா பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது . விழாவில் அண்ணா அவர்கள் அனைத்து நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் சுமார் 60 பேர்களுக்கு பரிசுப்பொருட்களுடன் கேடயமும் வழங்கினார் . நாடோடி மன்னன் படத்தின்*பொதுமக்கள் தொடர்பாளராக பிலிம் நியூஸ் ஆனந்தனை முதன் முதலாக* எம்.ஜி.ஆர். நியமித்திருந்தார் . நாடோடிமன்னன் படத்தின் வெற்றிவிழா குறித்து*பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன . ஆனால் நிகழ்ச்சிக்காக பாடுபட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு விருது வழங்கப்படவில்லை . இதை கேள்விப்பட்டவுடன் எம்.ஜி.ஆர். முதல் விருது நியாயமாக அவருக்குத்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறி வருத்தப்பட்டு, பின்னர் , அவருக்கென்றே பிரத்யேகமாக ஒரு கேடயத்தை தயார் செய்து ,ஒரு படப்பிடிப்பில் பல நடிகர் நடிகைகள் முன்னிலையில் கொடுத்து பாராட்டினார் .
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்மீது எம்.ஜி.ஆர். மிகவும் பற்றுக் கொண்டவர் என்பதற்கு உதாரணம் , ஒருமுறை ஒரு கூட்டத்தில் பேசும்போது*கலைவாணர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர்தான் தமிழகத்தின் முதல்வராக இருந்திருப்பார் . நான் அவரது சகாவாக இருந்திருப்பேன் என்று*கூறினார் . ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் உடல்நல குறைவால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது*எம்.ஜி.ஆர். அவரை பார்க்க சென்றார். அவர் தூங்குவதால் தொந்தரவு செய்யாமல் அடுத்த முறை வந்து பார்க்கலாம் என்று புறப்பட்டு சென்றார் .சிறிது நேரம் கழித்து கண்விழித்த கலைவாணர்*.* தனது தலையணையின் அடியில் கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்டுள்ளதை அறிந்து* நடிகர் ராமச்சந்திரன் வந்து போனாரா என்று சிஷ்யர்களாக இருந்த நடிகர்கள் காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் கே.ஏ. தங்கவேல் ஆகியோரை பார்த்து கேட்டார் .உங்களுக்கு எப்படி தெரியும் என்று அவர்கள் கேட்க, பதிலுக்கு கலைவாணர் வேறு யாருக்கு கட்டு கட்டாக பணம் உதவி தேவைப்படுபவர்களுக்கு**கொடுத்துவிட்டு போகவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.என்று தலையணையின் கீழே இருந்த பண கட்டுகளை காட்டினாராம்*எனவே ..எம்.ஜி.ஆர். கேட்டாலும், கேட்காவிட்டாலும் உதவி தேவைப்பட்டவர்களுக்கு தாமாக மனமுவந்து உதவகிறவர் என்பது*கலைவாணர் காலத்திலேயே உருவான விஷயம் என்பது சிலர் அறியாதது .
முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் திரு.கக்கன் அவர்கள் ஒய்வு பெற்று அரசு* வீட்டில் இருக்கும்போது மாத வாடகை கூட செலுத்தமுடியாமல் அவதிப்பட்டவர்* என்று சொல்லப்பட்டதுண்டு . எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பு விவரம் அறிந்து , கக்கன் அவர்கள் ஒரு நேர்மையான, எளிமையான ,நாட்டுக்கு*மக்களுக்காக உழைத்த உண்மையான தியாகி. அவருக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்கக்கூடாது என்று கூறி ,அவருடைய வாடகை பாக்கியை சரி செய்து ,அரசு சார்பில் ஒரு வீட்டை இலவசமாக ஒதுக்கீடு செய்தார் .* ஒருமுறை மதுரைக்கு அரசு விழா குறித்த நிகழ்ச்சிக்கு சென்ற எம்.ஜி.ஆர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கக்கன் அவர்கள்பொது வார்டில்* சிகிச்சையில் உள்ளார் என்று செய்தி அறிந்து ,அதிகாரிகளை ஏன் முன்னமே தெரிவிக்கவில்லை என்று கடிந்து கொண்டாராம் . பிறகு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ அதிகாரியை அழைத்து ,கக்கன் அவர்கள் இந்த நாட்டிற்காக உழைத்த உத்தமர், நேர்மையான,*எளிமையான தேசத்தியாகி .எனவே அவருக்கு உயர்தர சிகிச்சையை எனக்கு அளிப்பதாக கருதி தாங்கள் சிறப்பாக அளித்து அவர் உடல்நலம் தேறி நல்லமுறையில் குணமடைந்து வீடு திரும்ப* உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் . அதுமட்டுமின்றி, கக்கன் அவர்களின் குடும்பத்தினருக்கும் ,அவரது வாரிசுதாரர்களுக்கும் வேண்டிய நிரந்தர உதவிகள்*செய்து,நல்ல வழி காட்டியுள்ளார் எம்.ஜிஆர் .
எதிர்க்கட்சி முகாமில் உள்ள ஒருவர் எம்.ஜி.ஆரை கடுமையாக குறை சொல்லி,*விமர்சித்து கூட்டங்களில் பேசுவது, பத்திரிகைகளில் எழுதுவது என்பதை வாடிக்கையையாக கடைபிடித்தார் .* ஒருநாள் அவரது மனைவி திடீரென்று நோய்வாய் படுகிறார் .* உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ரூ.10,000/- தேவைப்படுகிறது என்கிற நிலை .* அவர் செய்வதறியாமல் ,பணமில்லாமல் தவிக்கிறார் .அவர் பணியாற்றுகின்ற கட்சி பத்திரிகை நிறுவனத்தில்* உடனடியாக பணம் பத்தாயிரம் அட்வான்ஸ் கேட்டால் தரமாட்டார்கள் என்று மனம் புழுங்கியபடி இருக்க, அவரது நண்பர் ஒருவர் நீங்கள் உடனே சென்று*எம்.ஜி.ஆரை பாருங்கள் என்கிறார் . அது எப்படி முடியும். காலம் முழுவதிலும்*நான் அவரை குறை சொல்லி, விமர்சித்து, திட்டி பேசிவிட்டேன் .* அவர் முகத்தை எப்படி சென்று பார்ப்பேன் என்கிறார் .பரவாயில்லை நீங்கள் அவசியம் சென்று பாருங்கள் என்று நண்பர் வற்புறுத்தி சொல்கிறார் . அதன்படி ராமாவரம் தோட்டத்திற்கு செல்கிறார் . அங்கு கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், முக்கிய விருந்தினர்கள் பலர் புடைசூழ எம்.ஜி.ஆர். பேசிவிட்டு புறப்படும்போது* . இவரை*பார்த்ததும் நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் . என்ன விஷயம் பரவாயில்லை சொல்லுங்கள் என்று தனியாக அழைத்து* கேட்கிறார் . முதலில் உங்களை விமர்சித்து பேசுவதற்காக என்னை மன்னியுங்கள், என் மனைவிக்கு அவசரமாக மருத்துவ சிகிச்சைக்காக* ரூ.10,000/- உதவி தேவைப்படுகிறது உங்கள் உதவி நாடி வந்துள்ளேன் என்றதும் ,*கவலைப்படாதீர்கள் . என்று கூறி அவர் எதிர்பார்த்த பணத்திற்கு மேலாக ரூ.5,000/- கொடுத்து நல்லபடியாக சிகிச்சை அளித்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, நீங்கள் எங்கு வேலை பார்க்கிறீர்கள், என்ன சம்பளம் வாங்குகிறீர்கள் என்று கேட்டு , இந்த மாதத்துடன் வேலையை விட்டு ராஜினாமா செய்துவிட்டு, அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில்*தொலைபேசி அழைப்பாளராக பணியில் சேருங்கள் .பழைய நிறுவனத்தில் வாங்கிய சம்பளத்தைவிட , நல்ல சம்பளம் தரும்படி ஏற்பாடு செய்கிறேன் என்று*காலமெல்லாம் தன்னை திட்டி தீர்த்த, விமர்சித்த, குறைசொல்லி பேசிய நபரின்*வாழ்க்கை தரத்தை மாற்றியமைத்தவர் மட்டுமல்ல ,தன்னை எதிர்ப்பவர்களை*தன் வசப்படுத்துவதிலும் வல்லவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். அவர்களை பற்றிய இலக்கிய இலக்கணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் .* அந்த மன்னாதி, மன்னன், ராஜ ராஜனின் இலக்கிய பயணம் ,நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக தொடர்வது பற்றி அடுத்த அத்தியாயத்தில் காண்போம் .
நிகழ்ச்சியில் ஒலித்த* பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.அவள் ஒரு நவரச நாடகம் - உலகம் சுற்றும் வாலிபன்*
2.பெண் பார்க்க வரும் காட்சியில் எம்.ஜி.ஆர்.-நல்ல நேரம்*
3.கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே - நாடோடி மன்னன்*
4.உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் -நாடோடி மன்னன்*
5.எம்.ஜி.ஆர்.-என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் - மதுரை வீரன்*
6.அன்புக்கு நான் அடிமை - இன்றுபோல் என்றும் வாழ்க*
6.ஒன்றே குலமென்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க*
7.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*
8.எம்.ஜி.ஆர் .- நாகேஷ் உரையாடல் - அன்பே வா*
-
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள்''
104/2020
எங்களுக்கு விபரம் தெரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' 1978 வரை
மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களை கண்டு களித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் திரை அரங்குகளில் வெளியான நேரத்தில் வண்ண தோரணங்களை கட்டியது
எம்ஜிஆரின் புதுமையான ஸ்டார்களை அலங்கரித்து வைத்தது. .
திரை அரங்கு முன்பு வைத்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தது ..
நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட''' வருகிறது'' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது .
''இன்று முதல்'' விளம்பரத்தை கண்டு ஆனந்தமடைந்தது .
ஷோ கேசில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் ஸ்டில்களை கண்டு பரவசமடைந்தது .
முன்பதிவு அன்று திரை அரங்குகளில் அலை மோதிய எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது .
முதல் நாள் , முதல் காட்சியில் எம்ஜிஆர் ரசிகர்களின் அலப்பறையில் ஆனந்தமடைந்தது .
தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்த கண்கொள்ளா காட்சியை கண்டு வியப்படைந்தது .
50,75,100,125,150,175,200,225 நாட்கள் என்று வெற்றி நாட்களை பார்த்து ரசித்தது
சில படங்கள் வெற்றி இலக்கை தொடமுடியாமல் போனது கண்டு வருந்தியது .
படம் காண வரும் மக்களை வரவேற்பு நோட்டீஸ் தந்து வரவேற்றது .
வசூலை வாரி குவித்த விபரங்களை நன்றி நோட்டீஸ் மூலம் வெளியிட்டு உற்சாகமடைந்தது .
வெற்றிவிழாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர்
கலந்து கொண்ட திரை அரங்கை அமர்க்களப்படுத்தியது .
எம்ஜிஆர் சிறப்பு மலர்கள் வெளியிட்டது .
30வருடங்கள் தொடர்ந்து எம்ஜிஆரின் படங்கள் திரைக்கு வந்த நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி போற்றியது .
நாடெங்கும் எம்ஜிஆர் மன்ற தோழர்களின் நட்பு வட்டம் இணைத்தது
வாலிப வயதில் துவங்கிய எம்ஜிஆர் நட்பு முதுமையிலும் தொடர்வது
1978க்கு பிறகு 2020 வரை எம்ஜிஆரின் 100 படங்களுக்கு மேல் மறு வெளியீடு மூலம் இன்னமும் எம்ஜிஆர் நம்மோடு வாழ்வது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் 104 வது பிறந்த நாள் காணும் 2020 லும் எம்ஜிஆர் சாதனைகளை எண்ணி ஆனந்த வெள்ளத்தில்
கடந்த காலத்தின் வெற்றிகளை நினவு கொண்டு எல்லோரும் எம்ஜிஆரின் நினைவுகளோடு வலம் வருவோம் ..........
-
அடுத்து நாம் பார்க்கப் போகிற படம்தான் "ஊருக்கு உழைப்பவன்".
இதையும் கணேசன் ரசிகர்கள் தோல்வி படம் என்று சொல்லுவதால்
"ஊருக்கு உழைப்பவனி"ன் வசூல் விபரங்களோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
1976 ம் ஆண்டு நவ 12 ம் தேதி தீபாவளிக்கு வந்த படம்தான் "ஊருக்கு உழைப்பவன்."
வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த என் அண்ணன் வெற்றிப் படத்தை அடுத்து தயாரித்த படம். சென்னையில் பைலட், மகாராணி, அபிராமி, கமலா ஆகிய திரையரங்குகளில் திரையிடப்பட்டு அதிக பட்சமாக மகாராணியில் 63
நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 190
நாட்களில் பெற்ற வசூல் ரூ913395.88. இதுவும் தேவி பாரடைஸ் போன்ற பெரிய தியேட்டரில் வெளியாகமலே இந்த வசூல். வெளியாகியிருந்தால் 10 லட்சத்தை தாண்டி வசூல் செய்து எதிரணியை இன்னும் கலங்கடித்திருக்கும். .
இந்த வசூல் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் சிவாஜி படங்களைக்காட்டிலும் அதிகம். குறிப்பாக ராமன் எத்தனை ராமனடி,
தவப்புதல்வன், குலமா குணமா
ராஜபார்ட் ரங்கதுரை,
என்மகன்,உத்தமன்,தெய்வமகன் ஞானஒளி,நீதி,மன்னவன் வந்தானடி
ஆகிய படங்களை காட்டிலும் மிக அதிகமான வசூலாகும்.
அப்படியானால் இந்த சிவாஜி படங்களெல்லாம் படுதோல்வி படங்களா?. இதையும் 100 நாட்கள் ஓட்டுவதற்கு நிறைய செலவு செய்திருப்பார்கள்.. அதையெல்லாம் கழித்துப் பார்த்தால் "உறித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது" கதைதான். "ஊருக்கு உழைப்பவன்" மதுரை சென்ட்ரலில் 70 நாட்கள் ஓடி முடிய பெற்ற வசூல்
ரூ 2,76,896 ம், நெல்லை சென்ட்ரலில்
50 நாட்களில் ஓடி முடிய ரூ 1,12,414 ம், நாகர்கோவில் பயோனியர் முத்துவில் 38 நாட்களில் ரூ 86,131 ம் வசூலாக பெற்று சாதனை படைத்தது.
நாம் பார்த்தது அத்தனையும் 'a' சென்டர்
என்றழைக்கப்படும் முக்கியமான நகரங்களின் வசூல்தான். இதற்கப்புறம். 'b' & 'c' சென்டரில் கேட்கவே வேண்டாம்.
அங்கே மக்கள் திலகம்தான் சக்கரவர்த்தி. இதை நம்மவர்களை விட இலங்கை தமிழர்கள் நன்றாக புரிந்து கொண்டு தலைவருக்கு 'நிருத்திய சக்கரவர்த்தி'
என்ற பட்டத்தை அளித்தார்கள். சிவாஜியின் படங்கள் அங்கே வசூலில் விரிசல் காண்பதால் 'கலைக்குரிசில்' என்ற
பெயரில்தான் அழைப்பார்கள்.
'பைலட் பிரேம்நாத்' என்றொரு படத்தை இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் எடுத்து விட்டு இங்கே இந்தியாவில் திரையிட்ட வேகத்தில் திரும்பி விநியோகஸ்தர் மடியில் தஞ்சமடைந்த படத்தை இலங்கையில் இந்திய துணைகண்டத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காத ஜ...வ்....வு.. மிட்டாய் போல இழுத்து ஓட்டிய கதை யாரும் அறியாததா? அதையும் சாதனை என்று சொல்ல வெட்கம் சிறிதளவாவது வேண்டாமா?
இங்கேயாவது வாணிஸ்ரீ போன்ற நடிகைகளின் தயவால் பெற்ற வெற்றியை வைத்து கூத்தாடினார்கள். அங்கே "மாலினி பொன் சேகா" என்ற
இலங்கை நடிகையின் துணை கொண்டு ஓட்டிய படத்தை பெருமையோடு சொல்வதை கேட்டால் நாடு விட்டு நாடு தாவும் பச்சைத்தமிழனின் மானம் காற்றில் பறக்காதா?. இதை எண்ணிப் பார்த்து மனம் தெளிவு பெறுங்கள்.
நெல்லையில் திரையிட்ட சிவாஜியின் 10 படங்கள் கூட இந்த "ஊருக்கு உழைப்பவனி"ன் வசூலை பெற்றிருக்க வாய்ப்பே இல்லை. அப்படியானால் மீதி அனைத்தும் படுதோல்வி படங்களா?வேண்டுமானால் உங்கள் படங்களின் உண்மையான வசூலை வெளியிடுங்கள், புரிந்து கொள்ளட்டும் மக்கள் யார் 'வெற்றித்திருமகன்' என்று.
மீண்டும் அடுத்த பதிவில்..........
-
கருணாநிதி சட்டசபை தேர்தல்களில் தோற்றதே இல்லை என்பது உபிஸ் கூட்டத்தின் பெரிய உருட்டு என்பது தெரியுமா..
இவரிடம் கலைஞர் தோற்றார் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்..?
எம்ஜீஆரின் தயவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் என்பது தெரியுமா... ?
இவர் டாக்டர் ஹெச்.வி. ஹண்டே.
மு.க வை சட்ட சபையில் கதற விட்டவர்.
இவரை, ஹண்டே சபையில் எழுந்தால் சண்டே என்பார், மு.க....
1980ம் ஆண்டு தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தது.கருணா 250 வாக்கு பின்தங்கினார். ஹன்டேவை எம்ஜிஆர் அழைத்தார். என்ன நடந்ததோ தெரியாது .. “சில பல டீல்களுக்கு” பிறகு ஹண்டே தோற்றதாக அறிவிக்கப்பட்டது.
அந்த டீலுக்கான விலை அடுத்து வரும் mlc தேர்தலில்ஹண்டேவை mlcயாக்கி சுகாதரத்துறை அமைச்சராக அமரவைத்தார் எம்ஜீஆர்...
1980 ம் ஆண்டு சென்னை அண்ணா நகர் தொகுதியில் நின்ற கலைஞர் பெற்ற வாக்குகள் 51290 ...இவரை எதிர்த்து அதிமுகவின் எச். வி. ஹண்டே பெற்ற வாக்குகள் 50591 இருவருக்குமான வாக்கு வித்தியாசம். 699..
அதற்கு பிறகு கருணா அண்ணா நகரில் நிற்கவே இல்லை.இது சரித்திரம்.எதிலும் தோற்காதவரே தோற்காத வெண்ணை என கூவாதிங்க உபிஸ்..
சுதந்திரா கட்சிக்கு போனதும் ஹன்டே கருணாவுக்கு பார்ப்பனர் ஆனார். அந்த ஹன்டேயைத்தான் ஆத்திரத்தில் பார்ப்பனன் என்பார் கருணா.
கடைசி பஞ்ச்...
காவேரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிய கடைசி காலங்களில் கருணாநிதிக்கு எட்டு மருத்துவர்கள் கொண்ட குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது . அந்த எட்டு பேர் குழுவில் இதில் இவர் யாரை பார்ப்பான் என திட்டினாரோ அந்த பார்ப்பனான எச்.வி.ஹண்டேயும் ஒருவர்..........
-
உங்களுக்கு பத்துகோடி டாலர் பெரிசு...இந்த உலகத்திலுள்ள தனி ஜீவன் எனக்கு அதைவிட பெரிது... வர்ர்ரே வாவ்...!!!
மிஸ்டர் பைரவன் ...! நீங்க சாதாரண வியாபாரின்னு நெனச்சேன்...ஆனா இப்ப தான் புரியது நீங்க சந்தைல ஏலம் போடுற வியாபாரி ...
ஆராய்ச்சிக்காக Demo காண்பிக்க, லதாவை ஒரு அடரந்த காட்டுப்பகுதிக்குள் துப்பாக்கியால் சுடச்சொல்வார். அதனால்...நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்...அதைக்கண்டு பயப்படும் லதாவிடம்,
அந்த தீயை அணைப்பதற்கான எல்லா ஏற்பாட்டையும் செய்திருப்பதாகக் கூறுவார். அந்த அளவு சமூக அக்கறை கொண்டவர்...நிரூபித்தவர்... மக்கள்திலகம்...
இப்படி...இந்த தனது ஒரு திரைப்படத்தில் மட்டுமல்ல...தனது எல்லாப் படங்களிலும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது ஒரு நீதியைப் புகுத்தியிருப்பார்.
புரட்சித்தலைவர் பற்றி எழுத எழுத நீண்டுகொண்டே தான் போகும்...
நமக்கு ஆயுள் பத்தாது...
#கெத்தான
#உலகம் #சுற்றும் #வாலிபன்.............
-
நெஞ்சில் நிற்கும் வரிகள்
சினிமா என்பது ஐயோ குய்யோ என்று மட்டும் அழுது வழியும் ஒன்றல்ல / காதல் வீரம் புரட்சி உண்மை நேர்மை தாய்மை பாசம் எழுச்சி என்று மக்கள் மேன்மைக்கு பயன் செய்யும் சாதனம், அதனை சரியாக பயன்படுத்திய ஒரே உலக நடிகர் அமரர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே, அவர் திரை வாயிலாக இரண்டடியில் கூறிய பெரிய சிந்தனைகள் பாடங்கள் காண்க .
இஞ்சினியருக்கும் டாக்டருக்கும் அட்வகேட்டுக்கும் ஏன் இந்த உலகத்துக்கே சோறு போடுபவன் யாரு ? விவசாயி விவசாயி - (விவசாயி )
அழுபவர்கள் சிரிக்க வேண்டும், சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் - (நான் ஏன் பிறந்தேன் )
நாய்க்கு வீசியெறியும் எச்சில் இலையின் மிச்ச சோறுகூட என் உடன்பிறப்புகளுக்கு கிடைக்கவில்லை என்றால் நான் வாழ்வது மனிதர்கள் மத்தியில் அல்ல அரக்கர்கள் நடுவில் - (மீனவ நண்பன் )
நாம் நாக்குக்கு அடிமையாக இருக்கக் கூடாது நாக்குத்தான் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும் - (பல்லாண்டு வாழ்க )
தனக்கு தனக்கு என்று சேர்த்து வைத்துக்கொள்ளும் ஆசையை வளர்த்தால் நம்மால் பிறருக்கு எதுவுமே
செய்ய முடியாது (ஆயிரத்தில் ஒருவன்)
பத்துக்கோடி டாலர் உங்களுக்கு பெரிசு அதைவிட இந்த உலகில் உள்ள தனி ஜீவன் எனக்குப் பெரிசு - (உலகம் சுற்றும் வாலிபன்)
பலம் உள்ளவனால்த்தான் சமாதானத்தைப்பற்றிப் பேச முடியும் - (படகோட்டி)
வலிமை உள்ளவன் வைத்ததெல்லாம் சட்டமாகாது பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டமாக்க வேண்டும். - (நல்ல நேரம்)
உதவி என்று வருபவர்களை பணம் பதவி என்ற பெயரால் உயிருடன் விழுங்கும்
திமிங்கிலம் நீ ( படகோட்டி)
கோடி செல்வம் இருந்தும், தாயன்பில்லாத மாளிகை வாசியை விட, குடிசையில் இருந்தாலும்
தாயின் கையால் உண்ணும் நான் பாக்கியசாலி - (தொழிலாளி )
இப்படி அவரின் பல படங்களில் சிந்தையை தொடும் வரிகள் வசனங்களாக பாடல்களாக நிறையவுண்டு, 5 எம் ஜி ஆர் படங்கள் பார்த்தால் ஒரு குட்டிப் பல்கலைக்கழகம் சென்று படித்த அறிவைப் பெறலாம் ..........
-
MGRamachandiran
INAINDHA KAÏGAL
இணைந்த கைகள்
(photo courtesy
of MGR Peran,
JaïShankar
and
Sailesh Basu,
thanks for them)
MGR's
Unfinished movies II
By the end of 1969,
MGR went on to make a movie under the Banner, MGR Productions “INAINDHA KAÏGAL”.
The story was inspired from a Hindi film Prithiviraj Kapoor's “DAKTHA MANSOOR”.
The story is real one from the life of Muslim Chief Mansoor who lived in Iran.
Arrangements were made the story draft was changed 3 times before it went on to shooting stage.
N.T.Ramarav was booked for the Telugu version of this movie.
A grand function was held in Sathya studios on the first day shooting of the movie, presided by "Kalaignar” Karunanidhi.
The crew involved in this movie are M.S.Visuwanadhan – Music,
Lyrics by Vâli and Pulavar Vedha,
Camera by V.Ramamurthy,
Story – Syed Hajah Mohideen alias Ravindran,
Dialogues by Sornam,
Jambu for Editing,
Stunts by Shiyam Sundhar,
Arts by Anga Muthu
and Direction by Chanakya.
The Ad placed in Daily Thanthi...
Story : Mansoor was born in Royal family, circumstances make Mansoor and his mother get separated from the family.
Mansoor was raised by a Poor man named Moosa. Mansoor becomes a thief for living. Years roll by, Mansoor helps the poor and needy by giving them food, care and money, and stand for their cause and against the reigning King.
An incident happens that he becomes changed man when he falls in Love with a girl who is a princess.
Her father is Harun Al Rashid.
Mansoor gets to know his birth mystery.
He get assisted by his Lover.
A greater task was kept in front of Mansoor to provide water to her Kingdom.
He triumphantly performs the task by breaking the mountain with that he gets to know about his Mother and finds her and finally the throne he rightly owned.
MGR planned to introduce Iranian Actress as the heroine for this movie.
Four songs were recorded three usual movie songs and one lengthy Kavali type song. The songs such as
a.”Nilavu Oru Pennagi..." (the song was used in ULAGAM SUTRUM VALIBAN – MGR and Manjula)
b."Aval Oru Navarasa Nadagam..." (this song also used in ULAGAM SUTRUM VALIBAN – MGR and Latha the one with water ballad)
c."Konjam Neram Ennai Marenthan...” (this song was used in SIRITHU VAZHA VENDUM – MGR and Latha, remember both of them in lots of costumes for that song)
A forest set was made in Sathiya Studio and shots were taken as MGR saving four girls and some dialogue scene between MGR and orphan children.
MGR and Geethanjali in INAINDHA KAÏGAL.
When the shots in studio were completed MGR asked Chitra Krishnasamy to get the permission from the Iran Government to shoot the movie in their country.
The situation changed when Chitra Krishnasamy went to meet the Government they asked the story, after reading the story they denied permission.
The reason the then Iran country was ruled by a King, it is capital punishment to mock a King or telling a story a thief becoming a King.
King and Queen are highly placed and they do not want such a story to be shot in their country.
Chitra Krishnasamy returned home and he told the sad story.
Story writer had a chance meeting Fartheen an International actor who is also one of the member from the Royal Family and asked can he do any help regarding picturising the movie.
He firmly said you can ask the King to give the greatest treasures from his kingdom but not this kind of story.
We are very strict we did not like disrespecting the King and Queen.
You might have seen that all the foreign movies running in Iran are dubbed and released in Persian language. The Censor board is very powerful than our Police.
I cannot help regarding this movie.
Then MGR made a 4th draft changing the back drop to India. Some characters are to be deleted and new ones to be created.
When M.G.Chakrapani was asked to take the role of the King Rashid he did not accept and went on to take the role of Poor Moosa.
He acted in the role of raising the child character Mansoor because he desired to raise MGR's son in real life but that did not happen for that he wanted to act as Poor Moosa to raise MGR's son in reel life.
5th draft was made and Actress Geethanjali acted with MGR for some scenes.
The movie was dropped the reason unknown then MGR went on to make “ULAGAM SUTRUM VALIBAN”.
MGR asked the story department for lavishness in the movie. Imagine the scene of breaking the mountain and the rushing water in those days.
3 Dream songs in Iranian back drop.
The sets are inspired from Arabian Nights story.
Costumes that MGR used is very different and shows individuality.
Apart from the head dress MGR keeps the knife in his throat.
Excerpts
from Nenjil Neraiantha Ponmanachemmal
and image
from
Ithayakani magazine
November 2003 issue.
Roop
(photo courtesy
of MGR Peran, JaïShankar and Sailesh Basu,
thanks for them).........
-
கோட்டையை பிடித்தது ' கோடம்பாக்கம் ' !
இத்தனை அரசியல் பரபரப்புக்கு மத்தியிலும், 1977ல் தனது 136வது படமான ' மதுரை
மீட்ட சுந்தர பாண்டியன்' படத்தில் நடித்து வந்தார் எம்ஜிஆர். அப்படத்தில்" தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை.." என்று பிரகடனப்படுத்தியபடி ஒரு பாடல்.
அதில்:
" ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
கோட்டையிலே நமது கொடி பறந்திடவேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்.
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
வீரமுண்டு வெற்றி உண்டு ; விளையாடும் களமும் உண்டு
வா.. வா.. என் தோழா ! "
- தலைவன் சொன்னதெல்லாம் வேத வாக்காக போற்றிக் கொண்டிருந்த அதிமுக கட்சி தொண்டர்களுக்கு, ரசிகர்களுக்கு இது போதாதா ! இதை விட வேறென்ன அழைப்பு வேண்டியிருக்கப் போகிறது ?..............
-
எத்தனையோ நடிகர்கள் வந்தாச்சு இன்னும் வர இருக்கிறார்கள் எவர் வந்தாலும் தமிழுக்கு ஒரே தனி மகுட நடிகன் எம் ஜி ஆர் மட்டுமே அவரின் சிறப்புக்கு கிட்ட எவரும் நெருங்க முடியாது வெறும் நடிகனாக இல்லாமல் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட அவர்
ஏழை எளிய மக்களின் இன்னல்கள் தீர தன்னால் முடிந்த உதவிகளை செய்து வாழ்ந்தார் எம்ஜிஆர் பற்றி அதிகமாக தமிழர்கள் அறிவார்கள்.
சிலருக்கு எம்ஜிஆர் என்றால் கசக்கும் காரணம் அவர்கள் மனித நேயமின்றி வாழ்வதே நல்லது ஒன்று இருந்தால் அதற்கு சாத்தானாக கொடியது ஒன்று இருக்கும் என்பதே உலக நியதி புத்தருக்கும் யேசுவுக்கும்க் காந்திக்கும் எதிரிகள் இருந்தனரே.
உலகின் கணக்கில் மேற்குறிப்பிட்டவர்கள் உத்தமர்கள் நேர்மையானவர்கள் என்று போற்றப்படுகின்றார்கள் அவர்கள் போல நல்வழியில் வாழ்ந்தவர் எம்ஜிஆர் .
தான் யார் எப்படிப்பட்ட மக்கள் சமுதாயத்தில் வாழ்கின்றேன் என்று உணர்ந்து தனது தேவைகளுக்கு மேலே வந்த செல்வத்தை சமூகத்துக்கு செலவிட்டார் அந்தளவுக்கு அவரிடம் அறிவு பக்குவம் குடிகொண்டிருந்தது.
அதை அவர் பெறுவதற்கு அவரின் அன்னையே காரணமாக இருந்திருகின்றார்.
இரசிகர்களே உண்மையில் எமக்கு சம்பளம் தரும் முதலாளிகள் என்று கூறியவர் மக்கள் திலகம், புரட்சி என்றால் என்ன என்பதற்கு எம்ஜிஆர் தந்த வரைவிலக்கணம் ஒருவன் தனது உழைப்பினால் ஈட்டிய செல்வத்தை இல்லாதவருக்கும் கொடுத்து தானும் வாழ்வதே புரட்சி என்பது அவரின் கருத்து.
அழுபவர்கள் சிரிக்க வேண்டும் சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே அவரின் அடிப்படை குறிக்கோளாக இருந்தது நொந்தவர்கள் நோவை துடைக்கும் நல்லெண்ணம்
அவரிடம் நிறைந்திருந்ததே அவரை இன்றுவரை மக்கள் நேசிக்க காரணம் வாழ்க எம்ஜிஆர் புகழ்.....
-
புரட்சி தலைவர் மறைந்த அன்று மறுநாள் நடந்த ஊர்வல நிகழ்வுகள் 25.12.1987 கிறிஸ்மஸ் தினத்தில் 32 மணி நேரத்தில் 75 லட்சம் பேர் அஞ்சலி. நினைவு ஊர்வலம் 5மணி நேரம். 7 கிலோ மீட்டர் நீளம். இந்தியா முழுவதும் அரசு விடுமுறை. 22 நாட்டு தூதர்கள் அஞ்சலி. அமெரிக்க பாராளுமன்றத்தில் அஞ்சலி. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்ட தலைவர். காஞ்சி திருப்பதி சென்னை பார்த்தசாரதி கோயில்களில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது. 5 லட்சம் தொண்டர்கள் மொட்டை போட்டனர். ரயில் பயணம் 2 நாள் இலவசம். இப்படி பல்வேறு சாதனையில் புரட்சித்தலைவரின் நினைவு ஊர்வலம். அன்று தமிழகமெங்கும் சென்னை தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு..........
-
உலகிலேயே சிறந்த நடிகர் எம் ஜி ஆர் .
________________________
சிரித்து வாழவேண்டும் .
________________________
நாம் வெற்றிகரமாக இயங்க கவலை கொள்ளா மனது வேண்டும்
நம் அவயங்களை செயலிழக்க செய்வதும் கவலை தான்
வெள்ளைத்தாளில் சிற்பம் வரைவது சுலபம்
எழுத்துக்களால் நிறைந்த செய்திதாளில் சிற்பம் வரைவது சாத்தியமா ?
ஆம் நடிப்பு தொழிலும் அப்படியே
பரந்து விரிந்த நிறுவனத்திற்கு தகுந்த ஆட்களை நியமித்து வியபாரத்தை வெற்றிகரமாக நடத்திட முடியும்
ஆனால் கலை அப்படி அல்லவே
ஓய்வை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து சிறதும் கவலை இன்றி முகத்தில் நவரசத்தை காட்ட இயலும்
இப்பாடலை படம் பிடிக்கும் நேரம் இராணுவத்தையே சந்திப்பேன் என்ற பலம்
பொருந்திய அரசால்
வான் மழை போல் கொட்டும் பிரச்சனைகள்
இடி முழக்கம் போல் வன்முறைகள்
போதாக்குறைக்கு புதுவையில் தேர்தல்
தாங்கியதே என் தலைவனின் உள்ளம்
சிறிதும் சலனமின்றி கவலை ரேகைகள் முகத்தில் படியாமல் பாடல் காட்சியில் நடித்துள்ளார் பாருங்கள்
இப்பொழுது விளங்கியிருக்குமே
இவர் தான் திரை உலகில் சிறந்த நடிகர் என்று .?...............
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*23/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------
திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர். பார்முலா என்பது இன்றைக்கும் வெற்றிகரமாக*பின்பற்றப்படுகிறது .* உதாரணமாக, ஜாக்கி சான் நடித்த டிராகன் பிளேட் என்கிற படத்தில் அடிமைப்பட்ட மக்களை* மீட்டு அவர்களுக்கு விடுதலை பெற்று தருவதுதான் கதையமைப்பு . ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மருத்துவராக இருக்கும் எம்.ஜி.ஆர். சந்தர்ப்ப சூழ்நிலையால் அடிமையாக்கப்பட்டு கன்னித்தீவில் கூட்டத்தினரோடு விற்கப்பட்டு விடுவார் . அவர்களுடன் சர்வாதிகாரியை எதிர்த்து போராடி வெற்றி பெற்று அடிமை விலங்கினை உடைத்து தன் இன மக்களுக்கு விடுதலை வாங்கி தந்து வெற்றி பெறுவார் . அதேபோன்ற கதை தான் டிராகன் பிளேட் என்பது .
ஜாக்கி சான் நடித்த மற்றொரு படம் 2008ல் வெளியாகியுள்ளது . எம்.ஜி.ஆர். நடித்து வெளியான பெற்றால்தான் பிள்ளையா படத்தின் தழுவல்* தான் அது .எம்.ஜி.ஆர். தான் நடித்த படங்களிலே முற்றிலும் மாறுபட்ட கதை, கதாபாத்திரம் , விரும்பி நடித்த படமும் கூட. தனக்கு பிடித்த ஒரு சில* படங்களில்*.ஒன்று .* இந்த கதையில்தான் ஜாக்கி சான் ராபின் ஹூட் என்ற* படத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடியது . எம்.ஜி.ஆர். தனக்கென உருவாக்கிய எல்லா கதைகளும், கதாபாத்திரங்களும் இன்றைக்கும் பல இளைய நடிகர்களுக்கு பொருத்தமாக*அமைந்து வருகிறது என்பது விந்தையிலும் விந்தை . விஜய், அஜீத் போன்ற நடிகர்களின் படங்களில் எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களின் காட்சிகள் உல்டாவாக்கி படமாக்கப்படுகின்றன .
மறைந்த கவிஞர் கண்ணதாசனின் இயேசு காவியம் என்கிற நூலை எம்.ஜி.ஆர். வெளியிடுகிறார் .* அப்போது பத்திரிகை நிருபர்கள் எம்.ஜி.ஆரை பார்த்து , நீங்கள் இயேசு வேடத்தில் ஒரு படத்தில் நடித்தீர்களே,அந்த படம் ஏன் வெளியாகவில்லை என்று கேட்கிறார்கள் . அதற்கு ஒரு காரணம் இருக்கிறது .இயேசுநாதர் தனது தேவாலயத்தில் ஒரு பகுதியை வியாபாரஸ்தலமாக மாற்றப்பட்டதை அறிந்து சாட்டை எடுத்து அடித்தார் என்று* ஒரு கதை உள்ளது .அது உண்மைதானா என்று பலரிடம் விசாரித்தேன் .* இப்படி விசாரணைகள் நடத்தும்போது ,இயேசுவின் நியாயமான, அலட்சியத்தனமான வேடங்கள் எனக்கு பொருந்தி வருமே என்றுதான்**உடைகள் அணிந்து,* சில புகைப்படங்கள்**எடுக்கப்பட்டதுஆனால் அதற்கு பின்பு எனக்கு தெரிந்த தகவலின்படிவந்த செய்திகள் மிகுந்த மன* வருத்தத்தை அளித்தது .அதாவதுஇயேசுநாதர் வேடத்தில் இரு கைகளை பின்புறம் கட்டி, தோளில் ஒரு அங்கியுடன்* இருந்த**புகைப்படங்களை சிலர் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜிப்பதாக அறிந்தேன் .அது மிகவும்வருத்தத்துக்குரிய செயல் . இது என் மனதை பாதித்தது .அப்படி* மேலும்**ஒரு விபரீதம் நடக்க கூடாது என்பதனால் அந்த படத்தில் நடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டேன் .*அந்த படம் தாமஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது . அவர்களுக்கு பாதிப்பு* /நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே*அதே நிறுவனத்திற்கு தலைவன் என்ற படத்தில் நடித்துக் கொடுத்தேன் .*
இரட்டை வேடங்களில் நடிப்பது என்பது ஏதோ ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொள்வது மட்டுமல்ல .* நடை, உடை, முகபாவங்கள் ஆகியவற்றில் எல்லாம் மாறுபாடுகள், வித்தியாசங்கள் இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பி செய்வார் . இதை பல படங்களிலே பார்க்கலாம் . குறிப்பாக இரட்டை வேட படங்களில் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் தவிர்த்துவிடுவது அல்லது ரசிகர்கள் விருப்பம்போல மாற்றி அமைப்பது என்பதில் உறுதியாக இருப்பார்* . நினைத்ததை முடிப்பவன் படத்தில் ஒரு கட்டத்தில் வில்லன் ரஞ்சித் சிகரெட் பிடிக்க முயலும்போது ,சுந்தரம் அதை தட்டிவிட்டு ,எனக்கு முன்பு எவரும் சிகரெட் பிடிக்கக்கூடாது என்று கூறுவார் .அதாவது எந்த பாத்திரத்தில் நடித்தாலும், தான் எம்.ஜி.ஆர். தனது இமேஜ் கெட கூடாது . மக்களுக்கு தன்னை பற்றி தவறான அபிப்பிராயம் வந்துவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். மிகுந்த அக்கறையும், கவனமும் செலுத்தினார் .
அடிமைப்பெண் படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவு ஆற்றல், திறமை மிக்கவர் என்பதை மக்களுக்கு தெரிய படுத்தவே , அவருக்கு இரட்டை வேடமளித்து, அம்மா என்றால் அன்பு என்று சொந்த குரலில் பாடவும் வைத்தார்* படத்தின் நாயகனும், தயாரிப்பாளரும் ஆகிய எம்.ஜி.ஆர். அடிமைப்பெண் படத்தில்1966ல் ஆரம்பிக்கப்பட்டபோது* முதலில்**கதாநாயகியராக* நடித்தவர்கள் சரோஜாதேவி, கே.ஆர். விஜயா .* 1967ல் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு ,குணமாகி* மீண்டும்* படத்தை ஆரம்பிக்கும்போது ,இருவரும் நீக்கப்பட்டு ,ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் தரப்பட்டு இரட்டை வேடங்கள் அளிக்கப்பட்டன .ஒன்று ஜீவா, இன்னொன்று* பவளவல்லி ராணி .* பவளவல்லி வேடத்திற்கு என்று தனி மேனரிசம் இருக்கவேண்டும் என்பதற்கு நடை, உடை, பாவனைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன . வீரமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசும்போது ராணி தன் உதட்டை* இடதுபுறம் இழுத்து ,சுழிப்பது போல அவருக்கு பயிற்சிகள் தரப்பட்டன .குறிப்பாக வேங்கையன் எனும் எம்.ஜி.ஆர்.சிறை பிடிக்கப்பட்டு, விலங்கிட்டு இருகைகளை* கட்டி சித்திரவதை செய்யப்படும்போது* அவரது உடல் திறன் , மன வலிமை,**கைகளின் பலம், ஆகியவற்றையம் வீர சாகசத்தையும்**கண்டு மெய்சிலிர்த்து ராணி, இன்றுமுதல் இவர் என் மெய்காப்பாளன் ,இத்தகைய மாவீரனை என் ஆயுட்காலத்தில் நான் பார்த்ததே இல்லை என்று புகழாரம் சூட்டுவார் . இந்த வசனம் பேசுவதற்கு முன்பு நடந்து வரும் காட்சியில் நடை, உடை, பாவனை, உணர்ச்சிகள் ஆகியவற்றில் ஜெயலலிதாவின் நடிப்பில் வித்தியாசமில்லை என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர். ,ஜீவா பாத்திரத்திற்கு வித்தியாசமாக ராணியின் வேடம் இருக்கவேண்டும் என்கிற வகையில் தொடர்ந்து**பல்வேறு வகையான பயிற்சிகள் அளித்து ,ராணி கம்பீரமாக, அலட்சியமான* பார்வையோடு* நடந்து வருவது போல* பல டேக்குகள்* எடுத்த**பின்புதான் திருப்தி அடைந்து படமாக்கினார் . இதே மேனரிஸத்தை இந்த படம் முழுவதும் ஒரே சீராக கையாண்டு நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று பாராட்டி உற்சாகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.*
ஜெயலலிதாவின் நடிப்பு ஆற்றலை எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்று பயிற்சி அளித்து , கற்று கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.* இப்படி பலருக்கு கற்று கொடுத்ததனால்தான் அவரை வாத்தியார் என்று அழைக்கிறார்கள் .எந்த இடத்தில எப்படி நடித்தால் கைதட்டல்கள் பெறுவார்கள் என்பதை அறிந்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர்.* *மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.புதிய வானம் , புதிய பூமி* - அன்பே வா*
2.எம்.ஜி.ஆர். -நம்பியார் உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*
3.பெற்றால்தான் பிள்ளையா படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.*
4.நான் செத்து பிழைச்சவன்டா* - எங்கள் தங்கம்*
5.அறிவுக்கு வேலை கொடு ,பகுத்தறிவுக்கு வேலை கொடு - தலைவன்*
6.வில்லன் ரஞ்சித் - சுந்தரம் மோதல் காட்சிகள் - நினைத்ததை முடிப்பவன்*
7.அம்மா என்றால் அன்பு - அடிமைப்பெண்*
8.எம்.ஜி.ஆர். வீர சாகசம் காட்சி - அடிமைப்பெண்*
9.எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா உரையாடல் - அடிமைப்பெண்*
10.வாங்கய்யா* வாத்தியாரய்யா* - நம் நாடு*
.**
-
அவன் தலைவன்!!
-------------------------------
எம்.ஜி.ஆர் ஒன்றை ஒருவரிடம் கேட்டுக் கொண்டு அவர் அதை செய்து கொடுக்க மறுத்திருப்பாரா?
சரி,,,எம்.ஜி.ஆரிடம் ஒருவர் ஒரு உதவியைக் கேட்டு அதை செய்ய இயலாது என்று எம்.ஜி.ஆர் மறுத்திருப்பாரா??--
நடப்பதற்கு சாத்தியம் இல்லாத இந்த இரண்டு விஷயங்களையும் இப்போதைக்கு ஒதுக்கி வைத்துவிட்டுப் பதிவுக்குள் சென்றோம் எனில்---
அது எம்.ஜி.ஆர் கட்சி தோன்றிய நேரம்!
திண்டுக்கல் வெற்றியைத் தொடர்ந்து பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்கிறார்!
அப்போது எம்.ஜி.ஆர் செய்த ஒரு செயற்கரிய செயலை வேறு எந்தத் தலைவனும் இனியும் செய்வதற்கு வாய்ப்பில்லை எனலாம்!
பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்கும் எம்.ஜி.ஆர்,,அங்கேத் தன் கட்சியைச் சேர்ந்த ராமசாமி என்பவரை முதல்வராக்கி அழகு பார்க்கிறார்!!
எம்.ஜி.ஆர் நிலையில் எவர் இருந்திருந்தாலும்,,தாம் கட்சியைத் துவக்கிய குறைந்த கால இடை வெளியில் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் தாமே முதல்வராக ஆங்கே அரியணையில் அமர ஆசைப் பட்டிருப்பார்!!
ஆனாலும் தர்ம தேவதை எம்.ஜி.ஆரை விடுவதாயில்லை-
தமிழகத்து அரியணையின் தூங்கா விளக்காகத் தொடர்ந்து மும்முறை அவரையே பிரகாசமாக எரியச் செய்தது! ஒளி விளக்கு அல்லவா அவர்??
எம்.ஜி.ஆருக்கு --ஒருவருக்கு--
கல்வித் தீயை எரிய வைக்கவும்--
பசித் தீயை அணைய வைக்கவும் தீராத வேட்கை இருந்த அதே நேரத்தில்--
அரை சாண் வயிறை எரிக்கும் அமிலத் தீயாம் குடியைக் கொளுத்த இருந்தக் கொள்கை மிக அதிகமாக இருந்தது!
எந்தத் தலைவனுமே செய்வதற்கு அச்சப் படும் ஒரு காரியத்தை அவர் சர்வ சாதாரணமாகச் செய்தார்--
குடிக்குப் பிரசித்தமான புதுவையில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்த மகோன்னதம் மூலம்,, ,,தம் மனோரதத்தை நிறை வேற்றினார்!
பிறகு தமிழ் நாட்டிலும் அதைச் செய்து காட்டினார்!
இந்த இடத்தில் எம்.ஜி.ஆர்,,தம்மைத் தாமே சுருக்கிக் கொண்டு ஆற்றிய ஒரு அரும்பணியைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்--
அதுவரை பர்மிட் முறை அமலில் இருந்த காரணத்தால் தமக்குத் தொடர்புடைய தமக்கு அறிமுகமுள்ள அத்தனை பேர்களையும் தாமே தொடர்பு கொண்டு,,அவர்களின் பர்மிட் உரிமத்தைத் தாங்களே அரசிடம் ஒப்படைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்!
இந்த விஷயத்தில் ஒருவரிடம் கேட்கிறோமே என்றுக் கொஞ்சமும் எண்ணாமல்,,மது விலக்கு வேண்டி தமது சுய கௌரவத்தைத் தியாகம் செய்தார் எம்.ஜி.ஆர் என்றே சொல்லலாம் அல்லவா???
அட! பதிவின் துவக்கத்தில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தோம் இல்லை??
ஆம்! பர்மிட் முறையை ரத்து செய்யச் சொல்லி எம்.ஜி.ஆர்,,அந்த நேரத்தில் சிவாஜியைக் கேட்டார்--தம் உடல் நிலைக்கே அது ஆபத்தாய் முடியும் என்ற மருத்துவ காரணத்தைக் காட்டி சிவாஜி கழன்று கொண்டார்--
நடிகர் கமல்,,ஒரு உதவி கேட்டு எம்.ஜி.ஆரை அணுகினார்--
பெரிய தொழில் அதிபர் ஒருவருக்கு,,பர்மிட் பெற்றுத் தரும்படியும்,,பதிலுக்கு அவர் மூலம் அ.தி.மு.கவுக்குக் கணிசமான அளவு கட்சி நிதி தரப்படும் என்றும் அவர் கேட்ட உதவியை செய்ய முடியாது என்று நிர் தாட்சண்யமாக மறுத்து விட்டார் மக்கள் திலகம்!!
அவரது கொள்கை அன்று எப்படியிருந்தது எனில்--
வறுமையில் சிக்கிய-- அடி மகன்--
ஆக வேண்டும் நல்லதொரு குடி மகன்!
ஆகக் கூடாதே குடி மகன்???!!!.........
-
மக்கள் திலகம் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு என்றால் அதில் கலந்து கொள்ளும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். படப்பிடிப்பில் உற்சாகமாக கலந்து கொண்டு அவரவர் பணிகளை எம்ஜிஆர் புகழும் வண்ணம் சிறப்பாக செய்வார்கள். மக்கள் திலகமும் எத்தனை பேர் படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும் அத்தனை பேரையும் தெரிந்து வைத்துக் கொள்வார்.
புதிதாக ஒருவர் வந்திருந்தாலும்
உன்னை நான் இதற்கு முன்னால் பார்க்கவில்லையே என்று விசாரித்து தெரிந்து கொள்வார். அவர்களுக்கு நன்றாக ஊக்கம் கொடுத்து சிறப்பாக பணியாற்ற வைப்பார்.
படப்பிடிப்பில் உற்சாகமாக பணியாற்றிய அவர்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் தலைவரிடம் சொல்லி விட்டு போக யூனிட் தொழிலாளர்கள் அத்தனை பேரும் காத்திருப்பார்கள்.
தலைவரும் ஷூட்டிங் முடிந்ததும் தயாரிப்பு நிர்வாகியை வரவழைத்து ஒருசில 10 ரூ. புது பணக்கட்டுகளை பெற்றுக்கொண்டு என் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளுங்கள் என்பார். பின்பு அந்த கட்டுகளில் உள்ள நோட்டுக்களில் நான்கைந்தை
உருவி எடுத்து கொண்டு அதை யாரும் அறியாவண்ணம் உள்ளங்கையில் சுருட்டி வைத்துக் கொண்டு ஒவ்வொரு தொழிலாளிகள் கையிலும் அடுத்தவர் அறியாத வண்ணம் வைத்து திணிப்பார்.
யார் யாருக்கு எவ்வளவு கிடைத்ததோ? அது அவரவர் யோகத்தை பொறுத்தது. அனைவரும் பணத்தை பெற்றுக்கொண்டு தலைவரிடம் விடை பெற்றுச் செல்வார்கள். அவர்களுடைய மகிழ்ச்சியை கண்டு தலைவர் பூரிப்புடன் அன்றைய ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு உற்சாகமாக அடுத்த வேலைக்கு கிளம்புவார். தொழிலாளர்களும் அடுத்த எம்ஜிஆர் ஷூட்டிங்கிற்காக காத்துக் கொண்டிருப்பார்கள்.
அன்றைய சூழ்நிலையில் மூன்று 10
ரூ நோட்டுக்கள் கிடைத்தாலும் அது அன்றைய நாள் சம்பளத்தை விட அதிகமானதாக இருக்கும். 'ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர்' புரட்சி தலைவர். இறைவனை ஒரு தடவை பார்த்தாலும் ஆசை தீராமல் அடிக்கடி பார்க்க கோயிலுக்கு செல்வோம் இல்லையா? அதுபோல் புரட்சி தலைவரும் நாள் தவறாமல் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண தவறுவதில்லை.
மற்ற ஒருசில நடிகர்கள் ஒரு ஷூட்டிங்கை முடித்து விட்டு அரக்க பரக்க அடுத்த ஷூட்டிங்குக்கு பணம் பார்க்க ஓடுபவர்கள் மத்தியில் புரட்சி தலைவர் ஒரு அபூர்வமான பிறவியல்லவா? அதனால்தான் குண்டு துளைத்தும், நோய் தாக்கியும் முப்பிறவி எடுத்து, மூன்று முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்து மக்களுக்கெல்லாம் அரும் பெரும் பொக்கிஷமாக விளங்கினார் என்றால் அது வியப்புக்குரியதல்லவா?..........
-
சென்னை சித்ரா திரையரங்கில் சிவாஜியின் 208 திரைப்படங்களில் சுமார் 168 படங்கள் வெளியானதாக ஒரு பொய்யான தகவலை சித்ரா தியேட்டர் ஊழியர் ஒருவர் சொன்னதாக வந்த செய்தியில் எள்முனையளவு கூட உண்மை இருப்பதாக தோணவில்லை. ஏனென்றால் சிவாஜி வருடத்துக்கு
8 படங்கள் நடித்தால் அதில் குறைந்த பட்சம் 4 படத்துக்கு மேல் சாந்தியில்தான் வெளியாகும்.
மிச்சம் இருக்கின்ற படங்கள் வெவ்வேறு தியேட்டர்களில்
வெளியானது போக ஒரு 60-70 படங்களாவது சித்ராவில் வெளியாகி இருக்குமா? என்பது சந்தேகமே.
எதற்காக இந்த அப்பட்டமான பொய் செய்தியை போடுகிறார்களோ தெரியவில்லை. சரி அதை விடுவோம். இத்தனை படங்கள் வெளியாகி அதில் "பாசமலரை" மட்டும் வெள்ளிவிழா ஓட்டினார்கள்.
மீதமுள்ள படங்களும் வசூலில் பெரிய அளவு சாதனை செய்த மாதிரி தெரியவில்லை.
1967 ல் வெளியான ரவிச்சந்திரனின் "நான்"
அதுவரை வெளியான அத்தனை படங்களையும் ஓரங்கட்டி வெள்ளிவிழா ஓடி வசூலில் சாதனை செய்தது. அதை அடுத்து வந்த "நம்நாடு" நவ 1ம் தேதி தொடங்கிய அட்வான்ஸ் புக்கிங் வெறும் ஒன்னே முக்கால் மணி நேரத்தில் 4 சிறப்பு காட்சிகள் உட்பட 10 நாட்கள் எல்லா காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனது சித்ரா தியேட்டர் சரித்திரத்தில் புதுமையானது. ஏனென்றால் சிவாஜி படங்கள்தான் அதிகமாக வெளியாகியிருப்பதால் இத்தகைய கூட்டத்தை கண்டிருக்க மாட்டார்கள்.
அட்வான்ஸ் புக்கிங்கில் அசுர சாதனை செய்ததோடு 100 நாள் வசூலிலும் புதிய ரிக்கார்டு வைத்தது. அதையும் தகர்த்து 1972 ல் வெளியான பிளாக்பஸ்டர் படமான "நல்லநேரம்" தொடர்ந்து 116 காட்சிகள் அரங்கு நிறைந்து வசூலில் உச்சநிலையை அடைந்தது. சித்ராவில் "நல்ல நேரம்" 105 நாட்கள் ஓடி வசூலாக ரூ
3,21,931.00. பெற்றதுதான் அதிகபட்ச வசூல்.
"எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை, அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை". என்ற புரட்சி தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, சொற்ப படங்கள் சித்ராவில் வந்தாலும் அதில் செயற்கரிய சாதனை படைப்பது தலைவர் படங்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..........
-
#வாத்தியார் #எனும் #தெய்வம்
1968இல் திரைக்கு வந்த #புரட்சித்தலைவரின் #"ஒளிவிளக்கு"#
திரைப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டினேன் எனத் தொடங்கும் பாடல். படத்தில் திருடனாக வேடமேற்ற எம்.ஜி.ஆர்., தீ விபத்தில் சிக்கிய ஒரு குழந்தையைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அப்போது அவரைக் காப்பாற்றும்படி முருகனிடம் மனமுருக வேண்டி படத்தின் முக்கியப் பாத்திரங்களில் ஒன்றான சௌகார் ஜானகி பாடுவதாக அமைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரின் வேறு பல திரைப்பாடல்களில் உள்ளதைப் போன்ற நேரடியான அரசியல் எதுவும் இல்லாத அந்தப் பாடல் எம்.ஜி.ஆரைப் பற்றிக் கட்டமைத்த பிம்பம்தான் #அவரை #மற்றவர்களோடு #ஒப்பிடப்படமுடியாதவராக #மாற்றியது.
1984இல் புரட்சித்தலைவர் , உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சிக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்த பாடல் அது.
"கடவுள் நம்பிக்கையற்ற, பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரமான நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான #எம்ஜிஆரையே #தெய்வமாக்கியது..."
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்?
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு
படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் நேர்த்தியற்ற முறையில் உருவாக்கப்பட்ட முருகனின் உருவ பொம்மை ஒன்றின் முன்னால் நின்று உள்ளம் உருகும் குரலில் சௌகார் ஜானகி பாடுவதை இப்போது கேட்டாலும் கண்கள் சுரக்கும்.
சௌகாரின் குளமான கண்களில் நிழலாடும் சோகத்தையும் எம்ஜிஆரின் மார்பின் மீது முகம் புதைத்து அவர் பரிதவிப்பதையும் கவனியுங்கள். அது தமிழக மக்களின் சோகம், அவர்களது பரிதவிப்பு. அந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும் மற்ற சில வரிகளைக் கவனியுங்கள். #அவர் #தெய்வமாக்கப்பட்டிருப்பது #தெரியும்.
அந்த தெய்வம்தான் 1968 தேர்தலில் போட்டியிட்டது; திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்தது; 1972இல் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவைத் தொடங்கியது. மக்கள் #எம்ஜிஆர் #என்ற #அந்த #தெய்வத்தை #தரிசிக்க முண்டியடித்தார்கள்; அதற்கு வாக்களித்தார்கள்; அதிகாரத்தைக் கொடுத்து முதலமைச்சராக்கினார்கள்.
1984இல் அந்த தெய்வத்துக்கு உடல் நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படட்போது மக்கள் இந்தப் பாடலை அவர் குணமடைந்து மீண்டு வருவதற்கான #பிரார்த்தனைப் #பாடலாகப் பயன்படுத்தினார்கள். அவர் மீண்டு வந்தார்.
1987இல் மறையும்வரை தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். மறைந்த பிறகும் இன்னமும் மக்கள் அவரைத் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றும்கூட அவருடன் புதைக்கப்பட்ட, இன்னும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாத அவரது கைக்கடிகாரத்தின் டிக் டிக் ஒலியைக் கேட்பதற்காக கடற்கரையில் உள்ள அவரது சமாதியின் வழவழப்பான மேற்பரப்பின் மீது சாய்ந்தபடி தம் ஒரு காதை அதன் மீது வைத்துக் காத்திருக்கும் #மக்களுக்கு #அவர் #தெய்வமாகவேதான் #தென்படுகிறார். #அவர் #மக்களின் #இதயதெய்வம்.
கேட்கும் சத்தம் இன்னும் அடங்கியிராத #அவரது #இதயத்தின் #துடிப்பு. அவர்களையெல்லாம் பார்க்கும்போது இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அது தன் துடிப்பை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்று தோன்றும்...என்பது திண்ணம்..........
-
Denmark --
டென்மார்கிலிருந்து ✍️
*Makkal Thilagam MGR* fan
- article about mgr
" *எங்கள் எம்ஜிஆர்* "
*கலைஞனாய்*– *வள்ளலாய்* – *அரசியலாளராய்* நமது நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் *சத்தியதாய்* பெற்றெடுத்த *உத்தமர் பொன்மனசெம்மலை* அடியேன் தொற்றிக்கொண்டதை நினைத்து மகிழ்ந்து ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் எழுத்து மாலையை படிக்கும் ஒவ்வொருவருக்கம் சூடி மகிழ்கிறேன்.
✍️
ஈழத்தின் வடவளைவுகளை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் ”அராலி” எனது ஊராகும் குடும்பத்தினருக்கும் எம்ஜிஆருக்கும் நெருக்கம் இல்லை ஆக சிவாஜியின் கண்ணீர்காவியங்களுடன் எனது வளரும் பருவமும் கரைகிறது எனது மாமாவும் அவரின் நண்பரும் திடீர்மழையென ”சந்திரோதயம்” படம் பார்க்க என்னை கூட்டிசென்று எம்ஜிஆரின் அழகை முதன்முதலில் திரையில் காண வழிசெய்தார்கள் சந்திரபிம்பத்துள் சிரித்தமுகத்துடன் எம்ஜிஆர்
தோன்றி தனது இரசிகர்களைபார்த்து கண்சிமிட்டி தலையசைத்து செல்வார் இன்று நினைத்தாலும் மனம் உவகைபடுகின்றது.
காலங்கள் கரைந்து அடியேன் 17 வயதை தொட்டிருக்கும் காலத்தில் ஒரு நாள் தெற்குராலியில் பாட்டியாச்சிவீட்டில் 3ரூபாய்க்கு 2படம் காண்டினார்கள் முதலாவதாக சிவாஜியின் ”ரத்தபாசம்” பின்னர் புரட்சிநடிகரின் ”பாசம்” அன்று பாசம் படத்தின் கதையுடன் நன்றாய் ஒட்டிப்போன என்னால் இன்றுவரை அந்தப்படத்தின் நியாயக்கேள்வியில் இருந்து வெளிவரமுடியவில்லை
அந்தப்படத்தின் ஈர்ப்பே என்னை எம்ஜிஆரின் இரசிகனாக்கியது பின்னர் யாழ் வெலிங்டன் திரையில் ”நாடோடி” பார்க்கின்றேன் மனம் மேலும் எம்ஜிஆரை விரும்பச்செய்கின்றது காரணம் படத்தின் கதையும் அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பும் பிறகு யாழ் ராஜா திரையில்”ஒளிவிளக்கு” காலை காட்சி 10:30 க்கு 8:30க்கே முதல் வகுப்பு சீட்டை வாங்க வரிசையில் நிற்கின்றேன் நீண்டநேர வரிசைகாத்திருப்பில் பின்னால் நின்ற எனது வயதை ஒத்தவரும் அவரின் தம்பியும் எனக்கு நட்பு முகம் காட்ட மகிழ்ச்சியுடன் மக்கள் திலகத்தை தரிசிக்கும் நினைப்பில் இருக்கும் போது தீடிரென என்னை நோக்கி கதைக்கின்றான்
நாங்கள் வல்வெட்டிதுறையிலிருந்து வந்திருக்கின்றோம் நீ? என என்னை மரியாதைகுறையாக கேட்க உடனே அண்ணன் தம்பியை அதட்டி அடக்க மீண்டும் விட்டான் சிறுவன் யாழ்ப்பாணத்து மக்களின் பொதுக்கேள்வியை அதுதான் நீ என்ன சாதி- நான் கேள்வியில் சற்றே உதறி விடை சொல்
வதற்குள் அண்ணன் ஒரு குட்டு போட்டு தம்பியாரை ஒட்டு மொத்தமாய் அமுக்கிவிட்டார் இச் சம்பவம் எனக்குள் இனிய நினைவாக என்றுமே படர்ந்திருக்கின்றது. ”ஒளிவிளக்கு” திரையரங்கினுள் இரசிகர்கள் உற்சாக மழையில் நடமாடியதைப்போல் வேறெங்கும் திரையரங்கத்துள் அதீத உற்சாகத்துடன் நடமாடியதை யான் கண்டதில்லை ”தைரியமாக சொல் நீ மனிதன் தானா” பாடல் காட்சியில் 6 எம்ஜிஆரை அழகிய உடைகளில் பார்த்து இரசிக பித்து பிடித்தது உண்மை இரசிகர்களின் சீட்டி அடிப்புகள் அபாரம் உள்ளங்களை எம்ஜிஆர் தனது உற்சாக நடிப்பாலும் விறுவிறுப்பான சண்டை காட்சிகளாலும் கட்டிப்போட்டிருந்தார்.
அடுத்து வெலிங்டன் திரையில் ”அன்பேவா” ஒரு இளந்தென்றலை சுகித்து மகிழ்ந்த இன்பத்தை தந்த படம் ”புதியவானம் புதிய…” பாடல் காட்சி என்றும் மறக்கமுடியாதது ”அன்பேவா” இரம்மியமான எம்ஜிஆர் படம் அடுத்து தனபாலண்ணை வீட்டில் தொலைகாட்சி காண்பிப்பாக காட்டப்பட்ட ஊர்மக்கள் ஒன்றாக கூடி பார்த்து இரசித்த ”குடியிருந்தகோயில்” என்னென்று சொல்வது படத்தின் விறுவிறுப்பு எழுத்தோட்டம் அற்புதம் சாதாரண பழிக்கு பழி வாங்கும் கதை ஆனால் தன்னிகரற்ற விதத்தில் படத்தை எடுத்து இரசிகர்களை முழுத்திருப்திக்குள் ஆக்கியிருந்தார்கள் முதலாவது சண்டை காட்சியே படத்தின் பெருமைக்கு சான்றுபகர்க்கும் 51வயதினில் எம்ஜிஆர் ஆடிய வேகம் ”ஆடலுடன்பாடல்”காட்சியில் அற்புதம் வேறுயாரும் நினைத்து பார்க்கமுடியாது.
மேற்கொண்டு மணியக்கா வீட்டில் ”மாட்டுக்காரவேலன்” எம்ஜிஆர் படங்களில் கலகலப்புக்கு முத்தாய்ப்பான படம் நல்லதொரு பாடலான ”சத்தியம் நீயே” பாடலை எழுத்தோட்டத்துக்குள் போட்டு சாம்பாராக்கி விட்டார்கள் என்று நான் வருத்தப்படுவதுண்டு எழுத்தோட்டம் முடியவிட்டு எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு இனி ஒன்றுமே செய்யமுடியாது இருப்பதை இரசிக்க வேண்டியதே ”மாட்டுக்காரவேலன்” மாபெரும் மணிப்படம்.
வழியே ”படகோட்டி” கறுப்பு சிவப்பு ஆடையில் முதல் காட்சியிலே தோன்றி சிலம்பாடும் காட்சியுடன் எம்ஜிஆர் குதிப்பார் அழகும் விறுவிறுப்பும் நானா நீயா என போட்டி போடும் சிலம்பாடும் வேகம் அபாரம் வண்ணத்தில் வள்ளலை வைத்து சரவணாபடக்குழு எடுத்து வெற்றியீட்டியது பாட்டுக்கொரு படகோட்டியென புகழ்க்கொடி பறக்கவிட்ட ”படகோட்டி” வெற்றிவாகை சூடி நின்றது.
குலனையில் தொலைகாட்சி காண்பிப்பாக தர்மயுத்தம் வேறொரு படம் காண்பிப்பதாக சொல்லியிருந்தார்கள் முதலாவதாக தர்மயுத்தம் காண்பித்த கையுடன் ஒரு படத்தை இரண்டாவதாக போட்டார்கள் இரவின் சோம்பல்கொள்ள அங்கும் இங்குமாய் இருந்தோம் திடீரென முதியவர்கள் சிலர் அடிமைப்பெண்ணடா என்று சத்தமாய் கூவியபடி தொலைகாட்சி பெட்டியை நோக்கி முன்னேறினார்கள் உடன் நானும் சோம்பலை நீக்கி முன்னேறி நோக்கினேன் அடடா எதிர்பார மகிழ்வு
”அடிமைப்பெண்” 3மணி நேரம் படத்துடன் ஐக்கியம் இப்படியும் ஒரு வீரகாவியம் தமிழ்ப்படவுலகில் என எண்ணி பேருவகைப்படவைத்த மாபெரும் எம்ஜிஆர் சொந்தப்படம். ”தாயில்லாமல் நானில்லை” பாடல் காட்சியில் எம்ஜிஆர் வித்தியாசமான ஆடையில் புரட்சி கட்டுடன் தோன்றி இரசிகர்களை பேரானந்தப்படுத்தியிருப்பார் அதேபோல் ”உன்னைபார்த்து உலகம் சிரிக்கிறது” பாடல் காட்சியில் புரட்சி பு£வாய் மலர்ந்து இறுதியில் வீரக்கனலாவார் நடிப்பால் அதிரடியான எம்ஜிஆர் படம் என்றால் நன்றாய் பொருந்தும் அடிமைப்பெண்.
அராலி பாரதி சனசமுக நிலையத்தினர் தொலைகாட்சியில் காண்பித்த இன்னொரு பெருமைக்குரிய எம்ஜிஆர் படம் “எங்கவீட்டுபிள்ளை” இந்தப்படம் பின்னர் யாழ் புதிய றீகல் திரையில் இரண்டாம் தடவையாக வந்த பொழுது கரையுர் – பாசையுர் – நாவாந்துறை மக்களின் அன்புதொல்லை படையலுக்குள் இருந்து பார்த்து பரவசப்பட்ட படம் “நான் ஆணையிட்டால் பாடல் வருவதற்கு 3 நிமிடங்களுக்கு முன்னரே சீட்டியடிப்பும் குதூகலமும் இரசிகர்களிடமிருந்து பறியும் படமெண்டா படம்தான் என எண்ணிக்கொண்டு வெளியில்; வந்தது “எங்கவீட்டுபிள்ளை”யை பார்த்தவிட்டு.
மழையோ மழை அப்படியொரு மழையன்று யாழ் மனோகராவிலும் ஸ்ரீதர் திரையிலுமாய் மக்கள் திலகத்தின் “உலகம் சுற்றும் வாலிபன்” நனைந்தபடி இரசிகர்கள் சீட்டுக்காய் ஸ்ரீதரில் சனத்திரளுக்குள் காக்குளிருக்குள் வெளிநாட்டு அழகை 3ரூபாயுடன் நான் பார்த்து இரசித்த படம் மஞ்சுளாவை அசோகன் தொல்லை பண்ண தொடங்க எம்ஜிஆர் சப்பாத்துகயிறுகளை கட்ட யாழ்ப்பாணத்து இரசிகன்; சீட்டியொலியெழுப்ப ஆகா என்ன´மகா எதிர்பார்ப்பு கொடுக்கப்போகிறார் வாத்தியார் அசோகனுக்கென்று அருமையோ அருமை இன்று கேட்டாலும் நேற்று வந்த பாடலைப்போல் தரம் கொண்ட பாடல்களை கொண்ட படம் “உலகம் சுற்றும் வாலிபன்” புத்தர் கோயில் காட்சியமைப்பு மகா பிரமிப்பை தந்தது ஊசிக்குத்து சண்டை ஆ போட வைத்தது இன்று நடக்கும் ஆயுதமோக அழிவுகலாச்சாரத்தை எம்ஜிஆர் அன்றே தனது படக்கதையில் சொல்லியிருந்தார் எம்ஜிஆரின் சொந்தப்படமான “உலகம் சுற்றும் வாலிபன்” என்றும் மக்கள் பார்த்து பயனடைய வேண்டிய படமென்பேன்.
யேர்மனில் முன்சன் அகதிகள் விடுதியில் “குலேபகாவலி” படத்தைப் பார்த்து இரசிக்கின்றோம் திடீரென அறைக்குள் நுழைந்த மரியதாசு சொல்லுகிறார் கேலியாக உங்கா வாத்தி கிழட்டுபுலியோடை சண்டைபிடிக்குதென்று உடனே கடுப்பான இரசிகர் யோகநாதன் மரியதாசை கேட்டார் சரி எம்ஜிஆர் கிழட்டுபுலியுடன் சண்டை பிடிக்கிறார் நீ கிழட்டுபுலிக்கு முன்னால் நிப்பாயாவென்று- வெட்கித்த மரியதாசு தலையை திருப்பி அறையைவிட்ட நீங்கினார் “குலேபகாவலி” நாடறிந்த நல்ல படம்.
எம்ஜிஆர் சண்டைகளில் எனக்கு மிகவும் பிடித்தது அவரின் சிலம்பாட்டமே அற்புதமான படமாயிருந்தும் இரசிகர்களின் பேராதரவை பெறாத படம் “நீரும் நெருப்பும்” காரணம் இறுதியில் நெருப்புஎம்ஜிஆர் இறப்பதாக காண்பித்தமையாகலாம் திரைப்படத்து கதையில்கூட எம்ஜிஆர் இறப்பதை இரசிகர்கள் விரும்புவதில்லை இதுவரையில் வணக்கம் சொல்லி முடித்துக்கொள்ளுகின்றேன்.
ம.இரமேசு.........
-
"அடிமைப்பெண்" படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவு ஆற்றல், திறமை மிக்கவர் என்பதை மக்களுக்கு தெரிய படுத்தவே , அவருக்கு இரட்டை வேடமளித்து, அம்மா என்றால் அன்பு என்று சொந்த குரலில் பாடவும் வைத்தார் படத்தின் நாயகனும், தயாரிப்பாளரும் ஆகிய எம்.ஜி.ஆர். "அடிமைப்பெண்" படத்தில்1965ல் ஆரம்பிக்கப்பட்டபோது முதலில் கதாநாயகியராக நடித்தவர்கள் சரோஜாதேவி, கே.ஆர். விஜயா . 1967ல் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு ,குணமாகி மீண்டும் படத்தை ஆரம்பிக்கும்போது ,இருவரும் நீக்கப்பட்டு ,ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் தரப்பட்டு இரட்டை வேடங்கள் அளிக்கப்பட்டன .
ஒன்று ஜீவா, இன்னொன்று பவளவல்லி ராணி . பவளவல்லி வேடத்திற்கு என்று தனி மேனரிசம் இருக்கவேண்டும் என்பதற்கு நடை, உடை, பாவனைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன . வீரமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசும்போது ராணி தன் உதட்டை இடதுபுறம் இழுத்து ,சுழிப்பது போல அவருக்கு பயிற்சிகள் தரப்பட்டன .குறிப்பாக வேங்கையன் எனும் எம்.ஜி.ஆர்.சிறை பிடிக்கப்பட்டு, விலங்கிட்டு இருகைகளை கட்டி சித்திரவதை செய்யப்படும்போது அவரது உடல் திறன் , மன வலிமை, கைகளின் பலம், ஆகியவற்றையம் வீர சாகசத்தையும் கண்டு மெய்சிலிர்த்து ராணி, இன்றுமுதல் இவர் என் மெய்காப்பாளன் ,இத்தகைய மாவீரனை என் ஆயுட்காலத்தில் நான் பார்த்ததே இல்லை என்று புகழாரம் சூட்டுவார் .
இந்த வசனம் பேசுவதற்கு முன்பு நடந்து வரும் காட்சியில் நடை, உடை, பாவனை, உணர்ச்சிகள் ஆகியவற்றில் ஜெயலலிதாவின் நடிப்பில் வித்தியாசமில்லை என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர். ,ஜீவா பாத்திரத்திற்கு வித்தியாசமாக ராணியின் வேடம் இருக்கவேண்டும் என்கிற வகையில் தொடர்ந்து பல்வேறு வகையான பயிற்சிகள் அளித்து ,ராணி கம்பீரமாக, அலட்சியமான பார்வையோடு நடந்து வருவது போல பல டேக்குகள் எடுத்த பின்புதான் திருப்தி அடைந்து படமாக்கினார் . இதே மேனரிஸத்தை இந்த படம் முழுவதும் ஒரே சீராக கையாண்டு நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று பாராட்டி உற்சாகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.
ஜெயலலிதாவின் நடிப்பு ஆற்றலை எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்று பயிற்சி அளித்து , கற்று கொடுத்தவர் எம்.ஜி.ஆர். இப்படி பலருக்கு கற்று கொடுத்ததனால்தான் அவரை வாத்தியார் என்று அழைக்கிறார்கள் .எந்த இடத்தில எப்படி நடித்தால் கைதட்டல்கள் பெறுவார்கள் என்பதை அறிந்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். .........
.
-
மூன்று எழுத்து
மந்திரச் சொல்....
நிலைத்து நிற்கும்
தெய்வீகச் சொல்.....
1947 ல் இந்திய சுதந்திரம்....
அதே 1947 ல்
திரையுலகம் மூலம்
தமிழக மக்களின்
உண்மையான பிரதிநிதி
கலையுலகில்
கதாநாயகனாக
மலர்ந்த வருடம்....
1948....
1949....
இரண்டு ஆண்டுகள்
கலையுலகில்
போராடி
மீண்டும்
கதாநாயகனாக பவனி...
ஆம்.....
1950 ம் ஆண்டில்
திரையில் மிகப்பெரிய
விஸ்வரூபம் எடுத்த பெயர் எம்.ஜி.ஆர்....
1951 ம் ஆண்டு வெளியான
மர்மயோகி
திரைப்படத்தில்...
தென்னகமெங்கும்
மக்களிடம் வரவேற்பு பெற்ற புரட்சிப்பெயர்
எம்.ஜி.ஆர்.....
1953 ம் ஆண்டில்...
மேலும் மூன்றெழுத்து மந்திரம் வலுப்பெற்று...
அரசியல் என்னும்
துறை மூலம் அவதாரமெடுத்தது....
1954 ம் ஆண்டு
தென்னிந்திய திரைவானில்.....
நிலையான
மக்கள் செல்வாக்கு
பெற்ற திருமகனாக
மலைக்கள்ளன்
திரைக்காவியம் மூலம்
உயர்ந்து நின்றது....
1955 ம் ஆண்டு...
எம்.ஜி.ஆர். திருப்பெயர் தினமும் சொல்லாத
மனிதர்களே இல்லை என நிகழ்ந்த காலமாக
தமிழகம் திகழ்ந்தது...
1956 ம் ஆண்டு...
மதுரை வீரன் திரைக்காவியம் மூலம்
4 வயது குழந்தை முதல்
பல் போன....
வயோதியர் வரை
மட்டுமின்றி
எல்லா துறைகளிலும்
எம்.ஜி.ஆர் திருநாமம்
ஒவ்வொரு நிமிடத்திலும் ஒலித்தது.
1957 ம் ஆண்டு...
அன்றைய ஆளும் காங்கிரஸ்காரர் முதல்
டெல்லி வரை எம்.ஜி.ஆர் திருமந்திரத்தின்
மக்கள் செல்வாக்கு
பற்றி பேசப்பட்டது.
1958 ம் ஆண்டு...
நாடோடி மன்னன்
மூலம் உலகமெங்கும்
எம்.ஜி.ஆர் என்ற
திரு மந்திரம்
விண்னைத்தொட்டது...
எங்கும் எம்.ஜி.ஆர்....
எதிலும் எம்.ஜி.ஆர்....
சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர்....
எதிரிகளின் கூடாரத்தில் எம்.ஜி.ஆர்....
ஏழைகளின் இரட்சகராக வலம்
வரும் எம்.ஜி.ஆர்....
அனாதை இல்லங்களுக்கு
உதவிகரம் நீட்டும்
எம்.ஜி.ஆர்...
பரிதவிக்கும்
ஏழை வாழ் மக்களுக்கு
ஒடோடி சென்று உதவும் எம்.ஜி.ஆர்.....
திரையுலகில்
மகிழ்ச்சி தரும் எம்.ஜி.ஆர்....
எந்த துறையை பற்றியும் கருத்து
சொல்லும்....
பேசும் ......
உன்னத மனிதர் எம்.ஜி.ஆர்.....
இப்படி தமிழ்நாடு
செழிக்க தான் உழைத்த பணத்தை ஒவ்வொரு
நிகழ்ச்சிக்கும்....
கொடுத்த ஒரே
வள்ளல் எம்.ஜி.ஆர்....
கடையெழு வள்ளல்களை மிஞ்சிய
கருணை வள்ளல்
எம்.ஜி.ஆர் என்ற
மூன்றெழுத்து மந்திரத்தை அறியாத சில பித்தர்களே....
ஏதும் அறியாது, தெரியாத சிலர்......
எம்.ஜி.ஆர்
என்ற மூன்றெழுத்தின்
புகழை
பொய் விமர்சனம் செய்து விளம்பரம் தேடும் புல்லருவிகளே.
கடந்த 60 ஆண்டுகள் வீசிய விமர்சனங்களை
இன்று வரை
வென்று வரும்
ஒரே ரசிகன்
ஒரே தொண்டன்
ஒரே பக்தன்
நாங்கள்...
எம்.ஜி.ஆர்.
என்ற
மூன்றெழுத்தை
நித்தம்
வணங்குபவர்கள் நாங்கள்.
தினமும் .....
ஒவ்வொரு வினாடியும் .....
உலகில்
கோடி மனிதர்கள்
உச்சரிக்கும்
ஒரு சொல்
உயிர் வாழ்கின்றது
என்றால் ....அது எம்.ஜி.ஆர் என்ற புனிதபெயர்
மட்டும்தான்...
மாமனிதர்
எம்.ஜி.ஆர். என்ற
மூன்றெழுத்து
மனித சக்தியே...
பொன்மனத்தலைவர்
மறைந்து...
33 ஆண்டை
கடந்தும்....
ஒரு கோடிபேர்கள்
ஒரு தலைவரை தினமும் நினைத்து .....
அந்த புனிதபெயர் சொல்லி வாழ்கின்றார்கள் என்றால்...
மாமனிதர்
எம்.ஜி.ஆர்
அவர்களின்
மனித சக்தியின்
பிறப்பு என்பது
சாதாரணமானதல்ல...இயற்கையின்
தெய்வசக்தியாகும்.
என்றும்....
எப்பொழும்....
என்றைக்கும்....
எங்களின்....
ஒரே சொல் எம்.ஜி.ஆர்...
அத்தெய்வத்தின்
புகழைப்பாடும்
கோடிகளில்...
நானும் ஒருவன்!
பாடுவதை
நித்தம் பெருமை
கொள்கிறோம்...........r...
-
மறைந்த கவிஞர் கண்ணதாசனின் 'இயேசு காவியம்' என்கிற நூலை எம்.ஜி.ஆர். வெளியிடுகிறார் . அப்போது பத்திரிகை நிருபர்கள் எம்.ஜி.ஆரை பார்த்து , நீங்கள் இயேசு வேடத்தில் ஒரு படத்தில் நடித்தீர்களே,அந்த படம் ஏன் வெளியாகவில்லை என்று கேட்கிறார்கள் . அதற்கு ஒரு காரணம் இருக்கிறது .இயேசுநாதர் தனது தேவாலயத்தில் ஒரு பகுதியை வியாபாரஸ்தலமாக மாற்றப்பட்டதை அறிந்து சாட்டை எடுத்து அடித்தார் என்று ஒரு கதை உள்ளது .அது உண்மைதானா என்று பலரிடம் விசாரித்தேன் .
இப்படி விசாரணைகள் நடத்தும்போது ,இயேசுவின் நியாயமான, அலட்சியத்தனமான வேடங்கள் எனக்கு பொருந்தி வருமே என்றுதான் உடைகள் அணிந்து, சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டதுஆனால் அதற்கு பின்பு எனக்கு தெரிந்த தகவலின்படிவந்த செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை அளித்தது .அதாவதுஇயேசுநாதர் வேடத்தில் இரு கைகளை பின்புறம் கட்டி, தோளில் ஒரு அங்கியுடன் இருந்த புகைப்படங்களை சிலர் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜிப்பதாக அறிந்தேன் .அது மிகவும்வருத்தத்துக்குரிய செயல் .
இது என் மனதை பாதித்தது .அப்படி மேலும் ஒரு விபரீதம் நடக்க கூடாது என்பதனால் அந்த படத்தில் நடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டேன் . அந்த படம் தாமஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது . அவர்களுக்கு பாதிப்பு /நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அதே நிறுவனத்திற்கு "தலைவன்" என்ற படத்தில் நடித்துக் கொடுத்தேன். .........
.
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*25/07/20 அன்று தெரிவித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலத்தை வென்ற காவிய நாயகன் , மன்னாதி மன்னன் என்பதற்கு**ஒரு அத்தாட்சியாக இருந்து கொண்டிருக்கிறார் என்பது* , சகாப்தம் நிகழ்ச்சிக்கு தரும்* நல்ல வரவேற்பை காட்டுகிறது .
1977ல் சட்ட மன்ற பொது தேர்தல் வருகிறது . அ .தி.மு.க .கட்சி ஆரம்பித்த பின் வரும் முதல் தேர்தல் என்பதால் எம்.ஜி.ஆர். வேட்பாளர்கள் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டு தேர்வு செய்கிறார் .* தேர்தலுக்கு முன்பு மதுரை மாவட்டம் அருப்புக்கோட்டையில் கஞ்சி தொட்டி திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் அழைப்பின் பேரில் எம்.ஜி.ஆர். சென்று திறந்து வைக்கிறார் . அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க. கட்சி பிரமுகராக உள்ள பஞ்சவர்ணம்**மற்ற இடங்களில் கஞ்சி தொட்டி திறந்து வைக்கிறார் . இந்த நிகழ்ச்சிக்கான உதவிகள் , செலவினங்கள் தொடர்பாக உதவிட எம்.ஜி.ஆர். தன்*அண்ணன் சக்கரபாணி அவர்களை அனுப்புகிறார் . எம்.ஜி.சக்கரபாணி அவரகள் மதுரையில் தங்கியிருந்து அருப்புக்கோட்டை தொகுதிக்கு சென்று , தேர்தல் நிலவரம் பற்றி அறிய தொகுதியில் சுற்று* பயணம் செய்து தகவல்களை சேகரிக்கிறார் .* அந்த தொகுதி மக்கள் , எம்.ஜி.ஆர். மீது வைத்துள்ள அபரிமிதமான அன்பு , பற்று ,பாசம் ,விசுவாசம் ஆகியவற்றை அறிந்து நெகிழ்ந்து போகிறார் .அருப்புக்கோட்டையில் முக்கிய அ.தி.மு.க. பிரமுகரான ,எம்.ஜி.ஆரால் அடையாளம் காணப்பட்ட அந்த பஞ்சவர்ணம் வீட்டில் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் தங்கி கட்சியின் நிலவரம், செல்வாக்கு ,முக்கிய பிரமுகர்களின் ஆதரவு, பொதுமக்கள் எதிர்பார்ப்பு , தேர்தல் முடிவுகள் ஆகியன பற்றி தெளிவாக ஆலோசனைகள் நடத்திவிட்டு சென்னை திரும்புகிறார் . இந்த தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டால் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கணித்து , எம்.ஜி.ஆரிடம் தான் சேகரித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் .* ஒரு சில மாதங்களில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் ஜேப்பியார் அந்த தொகுதிக்கு சென்று தேர்தல் நிலவரம், கட்சி நிலவரம் , மக்களுக்கு எம்.ஜி.ஆருக்கு இருக்கும் செல்வாக்கு ஆகியவற்றை ஆராய்ந்து*சென்னைக்கு திரும்பி எம்.ஜி.ஆரிடம்* தான் சுற்றி பார்த்து சேகரித்த விஷயங்களை தெரிவிக்கிறார் . அதன்பின் அருப்புக்கோட்டையில் எம்.ஜி.ஆர். போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகிறது .தேர்தலில் எம்.ஜி.ஆர். அமோக வெற்றி பெற்று* முதல்வராவதற்கு அச்சாரமாக அருப்புக்கோட்டை தொகுதி திகழ்ந்தது .அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்தது எப்படி, காரணங்கள் என்ன என்று ,கட்சியின் முக்கிய பிரமுகரான திரு.பஞ்சவர்ணம் வின் டிவிக்கு பேட்டி அளிக்க முன் வந்துள்ளார் .கூடிய விரைவில் அவருடைய பேட்டியை* பதிவு செய்து , எம்.ஜி.ஆர். பற்றிய பல அரிய தகவல்கள் ரசிகர்கள் /பக்தர்களுக்கு பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் .
பூக்களை தேடி வண்டுகள் வருவது போல, பூக்களின் நறுமணம் ,வாசம் எங்கும் பரவுவது போல அந்த வாசத்தை எப்படி மறைக்க முடியாதோ , அதுபோல எட்டு திக்கிலும் ,திசையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் பரவிக் கொண்டே இருக்கிறது .எம்.ஜி.ஆருடைய ஆற்றல், திறமை, கொடை தன்மை,தன்னலமற்ற உதவிகள் ,பண்புகள் ஆகியன பற்றிய தகவல்கள்* சொல்வதற்கு பல்வேறு வகைகளில்*நம்மை தொடர்பு கொண்டு ஆர்வம் செலுத்துகிறார்கள் .சகாப்தம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் காட்சிகள், பாடல்கள் பற்றிய தங்கள் சுய அனுபவங்கள், நினைவுகள் அந்த காலத்தில் படங்களை எப்படி பார்த்து ரசித்தோம், சைக்கிளில் சென்றோம் , பல மைல்கள் நடந்தே* சென்றோம், மாட்டு வண்டியில் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்தோம் என்று வியப்புடன்* பகிர்ந்து கொள்கிறார்கள்*ஒவ்வொரு படத்தையும் பார்ப்பதற்கு எப்படி சூழ்நிலைகளை எதிர்கொண்டோம் .*கஷ்டத்தில், பிரச்னையில், சோகத்தில்,தோல்வியில்* இருக்கும்போது கூட அவர் படங்கள் பார்த்தால் துவண்டு* எழுந்து வழக்கமான பணிகளை பார்க்கலாம் .தற்கொலை எல்லைக்கு போனவன் கூட எம்.ஜி.ஆர். பாடல்களை கேட்டால்*வாழ்க்கையில் தன்னம்பிக்கை பிறக்கும், வெற்றி தன் வசப்படும் என்ற தாரக மந்திரம் எம்.ஜி.ஆரின் படப்பாடல்கள் . அதனால்தான் அவர் வாத்தியார் என்று அழைக்கப்படுகிறார் .
எம்.ஜி.ஆருடைய* பாடல்கள், படங்கள் இன்றைக்கும்* வாழ்க்கையில் துளிர்த்து எழுப்பும் வழிகாட்டியாக* ஒரு நெம்புகோலாக இருக்கிறது* என்பதற்கு காரணம்*பாடலின் ஒவ்வொரு,எழுத்து,* வார்த்தை, வரிகள் ஆகியவற்றை கவிஞர்களை வைத்து செதுக்கியுள்ளார்* அந்தப்பாடல்கள்* ஒவ்வொரு மனிதனின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார் . 1961ல் ஒரு படத்திற்கு நல்லதுக்கு காலமில்லை என்ற தலைப்பை வைப்பதற்கு யோசனை சொன்னதற்கு , எப்போதும் நாம் எதிர்மறை தலைப்பு, கருத்துக்கள் ஆகியவற்றை அறவே தவிர்ப்பது நல்லது . பல லட்சங்கள் செலவு செய்து வருமானத்தை பெருக்குவதில் நாட்டம் காட்டாமல் நமக்கென்று சில லட்சியங்களோடு படம் எடுத்தோமானால் மக்கள் மனதில் நாம் நீங்கா இடத்தை பெற முடியும் என்று சொல்லி அந்த படத்திற்கு திருடாதே என்கிற நேரடியான பாசிட்டிவ் கருத்தான தலைப்பை சூட்டினார் . படமும் சென்னையில் பிளாசா, பாரத், மகாலட்சுமி* மற்றும் தென்னகத்தில் பல நகரங்களில் 100 நாட்கள் மேல் ஓடி மகத்தான வெற்றி பெற்றது .இந்த படத்தில் இடம் பெற்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்*திருடாதே , பாப்பா திருடாதே, வறுமை நிலைக்கு பயந்து விடாதே, திறமை* இருக்கு மறந்து விடாதே பாடல் காலத்தை வென்று ரசிக்கப்படுகிறது .இன்றைக்கும் லட்சோப லட்சம் மக்களின் அடி நாதமாக இருக்கிற ஒரு நம்பிக்கை கோட்பாடு,மிக பெரிய தத்துவங்கள் கொண்டது. வாழ்க்கையில் மிக எளிமையான* மனிதனுக்கு , எளிமையாக வாழ்வதற்கு ஒரு நெம்புகோல் தத்துவமாக விளங்கிக் கொண்டிருக்கிறது .
எம்.ஜி.ஆர். என்றால், அழகு, கொடை வள்ளல், மற்றவர்க்கு உதவும் பண்பாளர் ,வசீகரமானவர் , பிறர் துன்பம் அறிந்து உதவுபவர் , வீரம், தமிழ் பற்றுடையவர் , தமிழின் அகமும், புறமும்* என்று அவரை பற்றி பலவேறு வகைகளில் இலக்கண இலக்கியங்கள் சொல்லிக்கொண்டே இருக்கலாம் .அவருடைய வாழ்க்கையின் வெற்றி பயணம் , நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக தொடரும் என்று கூறி மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------------------
1.புதியதோர் உலகம் செய்வோம்* -பல்லாண்டு வாழ்க*
2.காலத்தை வென்றவன் நீ .காவியமானவன் நீ - அடிமைப்பெண்*
3.இதயவீணை படத்தில் ஒரு காட்சி யில் எம்.ஜி.ஆர்.*
4.நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும் -விவசாயி*
5.ஏத்தமுன்னா ஏத்தம் -அரசிளங்குமரி*
6.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை*
7.நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற - இதயக்கனி*
8.சின்னவளை, முகம் சிவந்தவளை* - புதிய பூமி*
9.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*
10.நாளை உலகை ஆள வேண்டும்* - உழைக்கும் கரங்கள்*
11.பேசுவது கிளியா ,இல்லை பெண்ணரசி மொழியா -பணத்தோட்டம்*
-
1978-1979-ம் ஆண்டுகளில் புயல், மழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதில் கோவை மண்டலமும் தப்பவில்லை. நொய்யல் பொங்கிப் பிரவாகமெடுத்திருந்தது.
இந்த ஆறு சார்ந்த 100-க்கும் மேற்பட்ட நீரோடைகள், ஆறுகள்போல மாறின.
அணைகள், தடுப்புச் சுவர்கள், வாய்க்கால் மதகுகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்தது.
ஏறத்தாழ 32 குளங்களின் மதகுகள் உடைந்து, பல குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.
கோவை நகருக்கு 2 கிலோமீட்டர் மேற்கே உள்ள செல்வசிந்தாமணி குளம் கரை உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, செட்டிவீதி, சுண்டக்காமுத்தூர் பிரிவு பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
அதேபோல நகருக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்காநல்லூர் குளத்தில் உடைப்பெடுத்து, உபரி நீர் ஒண்டிப்புதூர் ரயில்வே பள்ளம், ஆணைவாரி பள்ளம் வழியாக பெருக்கெடுத்தது
செட்டி வீதி, ஸ்டேன்ஸ் காலனி, காமாட்சிபுரம், நெசவாளர் காலனி பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் அவதிப்பட்டனர்.
அதே போல குனியமுத்தூர் செங்குளத்தில் உடைப்பு ஏற்பட்டு குனியமுத்தூர் பகுதிக்குள்ளும் வெள்ளநீர் புகுந்தது...
தமிழக முதல்வர் #மக்கள்திலகம் அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்த அவர் வேஷ்டியை மடித்துக்கட்டிக் கொண்டு வெள்ளத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்...
நீங்கள் பார்க்கும் இந்த காணொளியில் ஆரம்ப காட்சிகள் மற்றும் நடுவே ஒரு சிலகாட்சிகள் கோவை செல்வபுரத்தில் பொன்மனச்செம்மல் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட காட்சிகளே...
அப்போது புரட்சித்தலைவருடன் இருந்தவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் கூறியது:
"கோவையில் வெள்ளம் வந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த தலைவரிடம், செட்டிவீதி, செல்வபுரம், சுண்டக்காமுத்தூர் பகுதிகளில் வெள்ளம் புகுந்து விட்டதை தெரிவித்தேன்.
உடனே அவர் காரிலேயே என்னையும் அழைத்துக்கொண்டு வந்தார். குடியிருப்புகளில் தேங்கி நின்ற தண்ணீருக்குள் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்தபோது, ஓரிடத்தில் தலைவருக்கு முள்குத்திவிட்டது.
மக்களின் துயரத்தையும், வெள்ளத்தில் தத்தளித்த குடியிருப்புகளையும் பார்த்த நம் பாரி வள்ளல்
உணர்ச்சிவசப்பட்டு, செருப்பை காரிலேயே விட்டுவிட்டு வந்திருந்தது அப்போதுதான் தெரிந்தது.
எனது செருப்பை அவரை அணியும்படி கேட்டுக்கொண்டேன்.
“நீ என்ன செய்வே?“ என்று வள்ளல் கேட்க,
“நான் சமாளிச்சுக்குவேன்” என்று கூறினேன்.
அன்று என் செருப்பை அணிந்து கொண்டுதான் #மக்கள்திலகம் தண்ணீருக்குள் நடந்தார் என்பது என்றும் என்னால் மறக்க முடியாதது.
அப்போது செல்வ சிந்தாமணி குளத்தின் கரையும், ஒரு பக்க மதகும் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம், பக்கத்தில் இருந்த பிரதான தார் சாலையை மூழ்கடித்து, அடுத்ததாக இருந்த செட்டி வீதி மற்றும் சுண்டக்காமுத்தூர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்திருந்தது.
கரை உடைந்த பகுதியில் ஒரு மதகு கட்டி, அதில் திறக்கப்படும் நீர் அங்கிருந்த வாய்க்கால் மூலம் உக்கடம் பெரியகுளத்துக்கு செல்லவேண்டும்.
அங்கேயே பாலம் கட்டித் தடுப்புச் சுவர் ஏற்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு #புரட்சித்தலைவர் ஆணை பிறப்பித்தார்
.
அதன் பின்னர் புதிய மதகும், தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டது. தற்போதும் அந்த மதகை எம்.ஜி.ஆர். மதகு என்றே மக்கள் அழைக்கிறார்கள்.".........
-
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் சிறப்புகள்
---------------------------------------------------------------------
உலக சினிமா சரித்திரத்தில் , 1995ம் ஆண்டு இடம் பெற்ற மூன்று இந்தியர்களில் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்..
புரட்சி நடிகர் , மக்கள் திலகம் , பொன்மன செம்மல் , கொடை வள்ளல், எட்டாவது வள்ளல் ,வாத்தியார் , கொள்கை வேந்தன், கலை வேந்தன், கலைச்சுடர், நிருத்திய சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி, ஏழை பங்காளன் , கலைக்காவலன் , விநியோகஸ்தர்களின் அமுதசுரபி , நடிக மன்னன் , மக்கள் தலைவர் , பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி ,ஏழைகளின் இதயதெய்வம் , போன்ற எண்ணற்ற பட்ட பெயர்களை பெற்றவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .
நடிகர்களில் தேசிய அளவில் பாரத் விருது பெற்றதில் முதல்வர் .
மூன்றுமுறை தொடர்ந்து முதல்வராக 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டவர் .முப்பிறவி கண்ட முதல்வர் .
1967ல் குண்டடிபட்டு , அரசு மருத்துவமனையில் அமர்ந்து கொண்டே தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே சட்ட மன்ற உறுப்பினராக ஆனதோடு , தி.மு.க. அரசு கட்டிலில் அமர முழுமுதல் காரணமாக திகழ்ந்தவர் .- பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது .
1984ல் அமெரிக்காவில் படுத்துக் கொண்டே பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே மீண்டும் வெற்றி பெற்று ,
தமிழக முதல்வராக ,எதிரிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து பதவி ஏற்றவர் .
1987ல் மறைந்த பின்னர்,மறைந்தும் மறையாது தமிழர்கள் நெஞ்சங்களில் வாழும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா என்கிற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .
1972ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 2022ல் பொன்விழா காண உள்ளது .
இந்த தருணத்தில் அ. தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் பயணிப்பது சிறப்பான
விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது .
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
பெயர் - மத்திய அரசு செயலாக்கம் .
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் - சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு .
மதுரை மாட்டுத்தாவணியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் செயல்பாடு - தமிழக அரசு அறிவிப்பு .
சேலம் புதிய பேருந்து நிலையம் -பாரத ரத்னா டாக்டர் எம்.ஜிஆர். பேருந்து நிலையம் என சில வருடங்களுக்கு முன்பு பெயர் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு .
திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையமாக செயல்பாடு - சில வருடங்களுக்கு முன்பு தமிழா அரசு அறிவிப்பு
சென்னை போரூர் மேம்பாலத்திற்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் அமைப்பு - சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை உருவாக்கம் .
சென்னை கே.கே.நகருக்கு அருகில் எம்.ஜிஆர். நகர் .
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் எம்.ஜி.ஆர்.நகர் , எம்.ஜி.ஆர். தெரு உருவாக்கம் .
பாராளுமன்றத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவச்சிலை .
மலேசியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலை .
சமீபத்தில் மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி..ஆர். மையம் திறப்பு .
1970ல் ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ 70ல் படமாக்கப்பட்டு , 1973 ல் வெளியாகி வசூலிலும், சாதனைகளிலும் தமிழ் திரையுலகை புரட்டிபோட்டதோடு ,மறுவெளியீடுகளில் அவ்வப்போது வெளியாகி விநியோகஸ்தர்களின் அமுதசுரபியாக திகழ்வதோடு , விரைவில் டிஜிட்டல் தொழில்நுடபத்தில் வெளிவந்து அசுர சாதனை நிகழ்த்த உள்ள ஒரே திரைக்காவியம் உலகம் சுற்றும் வாலிபன்
1978ல் சினிமாவில் நடிப்புத்துறையில் இருந்து விலகி 41 வருடங்கள் , 1987ல் உடலால் மறைந்து , உள்ளத்தால் தமிழர்களின் இதயங்களில் 32 ஆண்டுகளாக
வாழ்ந்து வரும் நேரத்தில் , சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம், நெல்லை, திருச்சி , தூத்துக்குடி, மற்றும் துணை நகரங்கள், சிற்றூர்களில்
மறுவெளியீடுகளில் முதல்வராக இன்னும் பவனி வரும் ஒரே நடிகர் எங்கள்
மக்கள் திலகம் மட்டுமே .
தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள், துணை நகரங்கள், மூலை முடுக்கெல்லாம் மக்கள் தலைவரின் மார்பளவு, மற்றும் முழு உருவ சிலைகள்.
சென்னை திருநின்றவூர் அருகில் நத்தமேடு கிராமத்திலும், பொதட்டூர்பேட்டை அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோவில்கள் .
கடந்த 13/06/2019 & 14/06/2019 நாட்களில் சென்னை தரமணியில் உள்ள மைய தொழில்நுட்ப பயிலாக வளாகத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கையின் அகில இந்திய கருத்தரங்கம்
நடைபெற உள்ளது .நிகழ்ச்சியில் கலை, பண்பாடு , மொழி, சமூகம் ஆகியவற்றில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பற்றி முனைவர்கள், சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் ,அமைச்சர் திரு.பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வர் .
வெளிநாடுகளில், சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன்,(பாரிஸ் ) பிரான்ஸ், பர்மா ,இலங்கை (கொழும்பு ), மொரீஷியஸ் , ஆகிய வற்றில்
அவ்வப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய விழாக்கள், நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன .
இந்த சிறப்புகள், இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த ஒரு நடிகருக்கும் ,மாநில தலைவருக்கும் கிடைத்திராதவை என்பது குறிப்பிடத்தக்கது .
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தினரும், பக்தர்களும், ரசிகர்களும் ,விசுவாசிகளும், அபிமானிகளும் அ .தி.மு.க. தொண்டர்களும் பெருமையாக கருதவேண்டிய விஷயங்கள்.........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர் .-வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரைபாரதி*26/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றி* பல்வேறு**சமூக வலைத்தளங்களில்* இன்றைக்கும்**பரவலாக பேசப்படுவது அவருடைய புகழை பாடும் பாடல்கள் ,திரைப்படங்களின் முக்கிய காட்சிகள்* ஆகியன . அவருடைய ஒவ்வொரு படங்களும் பாடத்திட்டங்களாக மக்களுக்கு போதனைகள் அளித்துள்ளன .இப்படியெல்லாம் விளக்கிக்* கொண்டிருக்கிறார்கள் .* அப்படியான விளக்கங்களுடன்* அவருடைய வாழ்க்கை*எப்படி நம்பிக்கையூட்டும்* விதமாக*இருந்திருக்கிறது என்பதை பலரும் ரசித்து,ரசித்து* சகாப்தம் நிகழ்ச்சியின் தகவல்களாக பரிமாறிக் கொள்கிறார்கள் .* தொடர்ந்து எம்.ஜி.ஆரின் தேசிய பயணம் எப்படி இருந்தது என்பதை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம் .
எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி ஜோடியின் கெமிஸ்ட்ரி அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது .வெற்றி ஜோடியாக கணிக்கப்பட்டது . லட்சிய ஜோடி என்றும்*அழைக்கப்பட்டது . எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக அதிகமாக 28 படங்களில் நடித்தவர் ஜெயலலிதா . அவருக்கு அடுத்தபடியாக சரோஜாதேவி 26 படங்களில் எம்.ஜி.ஆருடன்* ஜோடி சேர்ந்தார் . ஆனால் பூஜை போடப்பட்ட , சில காட்சிகள் ,சில ஆயிரம் அடிகள்* எடுக்கப்பட்ட படங்கள் சேர்த்தால் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் . பல்வேறு காரணங்களுக்காக பல படங்கள் ரத்தானது .தமிழ் திரையுலகிற்கு சரோஜாதேவியை திருடாதே படம் மூலம் எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்தார் . ஆனால் முதலில் வெளியானது எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து இயக்கி பிரம்மாண்ட வெற்றி பெற்ற நாடோடி மன்னன் நாடோடி மன்னன் மூலம் அறிமுகம் ,மற்றும் படத்தின் இமாலய வெற்றி காரணமாக சரோஜாதேவி*புகழின் சிகரத்திற்கு சென்றார் . சுமார் 30 படங்கள் ஒப்பந்தம் ஆகி கைவசம் இருந்தன .சரோஜாதேவி, முன்னாள் பாரத பிரதமர் இந்திராவின் மீது பற்றும் பாசமும் வைத்திருந்தவர் . அவர் மறைவிற்கு பின்னர் ,எம்.ஜி.ஆர். சரோஜாதேவியிடம் ,நீங்கள் விரும்பினால் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் பேசி , காங்கிரஸ் கட்சியின் மேலவை உறுப்பினர் பதவி வாங்கி தருகிறேன் என்றார் .இதை எம்.ஜி.ஆர். வற்புறுத்தி சொன்னதாக சரோஜாதேவி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் .* மற்றவர்களின் மாற்றுக்கொள்கையை மதிக்கும் தன்மை*உடையவர் எம்.ஜி.ஆர். என்பதை* இது காட்டுகிறது .
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியோடு எம்.ஜி.ஆருக்கு கருத்து வேறுபாடு இருந்ததா என்றால் இருந்தது . எப்போது என்றால் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு*மகாத்மா காந்திக்கும் , சுபாஷ் சந்திர போஸுக்கும் போட்டியிடுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது . பட்டாபி சீதாராமைய்யா என்பவர் தோற்றபோது காந்தி*இது நானே தோற்றது போன்றது என்று கருத்து வெளியிட்டார் . அந்த நேரத்தில் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார் .* நேதாஜியின் வெளியேற்றம் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது .எனவே*காங்கிரஸ் கட்சியின் மீது இருந்த பற்றுதலை* துறந்தார் . கதர் ஆடைகள் அணிவதை தவிர்த்தார் .மற்ற உடைகள் அணிய ஆரம்பித்தார் . இருந்தாலும் ,மகாத்மா காந்தி மீது அவர் கொண்டிருந்த விசுவாசம் ,பற்றுதல் ஒருபோதும்* கொஞ்சம் கூட மாறவில்லை . நேதாஜியின் வீரத்தை மதித்தார் .* இலங்கையில்*தமிழ் இயக்கத்தை சார்ந்த விடுதலைப்புலி வீரர்கள் சிங்கள அரசுக்கு எதிராக போரிட்டபோது , அவர்களுக்கு, பணம், பொருள், ஆயுதங்கள், போர் கருவிகள் என்று பல்வேறு வகைகளில் உதவினார் எம்.ஜி.ஆர். .
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி சென்னைக்கு விஜயம் செய்தபோதெல்லாம் ராஜ்பவனில் சந்திக்கும்போது , அவர் பிரதமராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி , அவர்முன்பு அமருவதை எம்.ஜி.ஆர். தவிர்த்தார் . ஒரு கட்டத்தில் இந்திரா அவர்கள் ,திரு.முதல்வர் அவர்களே*நீங்கள் அமரவில்லையென்றால் நானும் எழுந்து நிற்க வேண்டி வரும் என்று சொன்ன பிறகுதான் உட்கார்ந்தார் . அந்த அளவிற்கு காங்கிரசின் உயர்மட்ட தலைவர்கள் மீது அளவற்ற அன்பு, பாசம், மரியாதை வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.*தனது திரைப்படங்களில் காந்தியின் புகைப்படங்கள், அவரை பற்றிய வசனங்கள் , பாடல்கள்* அதிகம் இடம் பெறும்படி பார்த்துக் கொண்டார் .* எனவே தேசியக்கொள்கைக்கு எதிராக , குந்தகம் விளைவிக்கும் வகையிலோ , பிரிவினை வாதங்களை ஆதரிக்கும் செயலிலோ எம்.ஜி.ஆர். எப்போதும் ஈடுபட்டதில்லை .
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் வரும் பாடலில் தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை , தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்*சுதந்திரம் என்பது தாய்நாட்டின் மீதுள்ள நேசம்,பாசம், பற்று ,மதிப்பு, மரியாதை*என்பதுதான் . பல்லாண்டு வாழ்க படத்தில் ஒரு காட்சியில் கல்லூரி மாணவிகளை சந்திக்கும்போது ஒரு இந்தியா வரைபடத்தின் பின்னால் ஒரு மனிதனின் உருவம் வரைந்து கொண்டிருப்பார் . பின்பு அந்த வரைபடத்தை பல துண்டுகளாக கிழித்துவிட்டு இப்போது இந்தியா வரைபடத்தை ஒன்று சேருங்கள் என்று சொல்லுவார் .அவர்கள் ஒன்றுசேர்க்க முடியாமல் திண்டாடுவார்கள் .அப்போது மனிதனின் உருவத்தை ஒன்று சேருங்கள் என்பார் .அவர்கள் மனிதனின் அங்க அடையாளங்கள், உறுப்புகள் வைத்து வெகு சுலபமாக ஒன்று சேர்த்துவிடுவார்கள் .* அப்போது எம்.ஜி.ஆர். இப்படி மனிதனின் உருவத்தை ஒன்று சேர்த்துவிட்டால் அதை அப்படியே திருப்பி பார்க்கும்போது , இந்தியா வரைபடமும் சரியாக வந்துவிடும் இல்லையா . அப்படி ஒவ்வொரு தனி மனிதனும் சரியாக இருந்தால் , ஒட்டு மொத்த இந்தியாவே சரியாகிவிடும் இல்லையா என்று மாணவிகளுக்கு அறிவுரை கூறுவார் .* இதயவீணை படத்தில் வரும் காஷ்மீர் பியுட்டிபுல் பாடலில் , தாய் நாட்டிற்காக எல்லையில் காவல் காக்கும் படைவீரர்கள் பற்றி சில வரிகள் இருக்கும்* அதாவது எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள், அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள் என்று .இப்படி பல படங்களில் , பாடல்களில், காட்சிகளில், வசனங்களில், தேச பக்தி, நாட்டுப்பற்று,*தேசிய ஒற்றுமையை* வலியுறுத்தி எம்.ஜி.ஆர். நடித்து தன் தேசபற்றை,தேசத்தொண்டை* வெளிப்படுத்தி* தேசத்தை நேசித்தவர் எம்.ஜி.ஆர்.*
திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் ராணுவத்தில் சேர்வது என்று ஒரு திட்டம் இருந்தது .* தமிழக முதலவர் ஆனபின்பு ஒரு கட்டத்தில்* *ராணுவத்தையே சந்திக்க தயார் என்று அறிவிப்பும் வெளியிட்டுள்ளார் .*அப்படி ஒரு சரித்திரத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தேசத்தின் மீதும் , தேச தியாகிகள் மீதும் இருந்த பற்று, பாசம், நேசம் , மதிப்பு, மரியாதை ஆகியன ஒருபோதும் குறைந்ததில்லை* மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் .தொடரும்*
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------------------
1.கடவுள் வாழ்த்து பாடும்* - நீரும் நெருப்பும்*
2. நாடு அதை நாடு - நாடோடி*
3..அச்சம் என்பது மடமையடா* - மன்னாதி மன்னன்*
4.எம்.ஜி.ஆர். -எம்.என்.ராஜம் உரையாடல் -நாடோடி மன்னன்*
5.இது நாட்டை காக்கும்* கை - இன்றுபோல் என்றும் வாழ்க*
6.பட்டத்து* ராஜாவும் , பட்டாள சிப்பாயும் - மீனவ நண்பன்*
7.நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து* = நேற்று இன்று நாளை*
-
இந்தப் பேச்சாளர்கள் அனைவருக்கும் 'எம்.ஜி.ஆர்.' மட்டுமே இலக்கு; அவருக்குப் பெண்கள் மத்தியில் இருந்த அபரிமிதமான செல்வாக்கு, அவர்களைப் பாடாய்ப் படுத்தியது. ஆபாசப் பேச்சால் பெண்களிடம் செல்வாக்கை இழந்த திமுக... எம்.ஜி.ஆர். காட்டிய பொது நாகரிகம்..!
.................................................. .........
1970களின் தொடக்கம். தமிழக அரசியல் மேடைகளில், அவதூறுகளும் ஆபாசங்களும் மிகுந்து இருந்த காலம். ஒரு குறிப்பிட்ட கட்சி, ஆபாசப் பேச்சாளர்களை அடுக்கடுக்காய் களம் இறக்கியது. இவர்களின் பேச்சுகளைக் கேட்டு ரசிப்பதற்கு என்றே ஒரு பட்டாளம் எல்லா ஊர்களிலும் இருந்தது.
என்ன ஒன்று... இவ்வகைப் பேச்சாளர்கள் வருகிறார்கள் என்றால், அன்றைக்கு, ஊரில் ஒரு பெண்மணி வீட்டை விட்டு வெளீயில் தலைகாட்ட முடியாது. முழுக்கவும் ஆண்களுக்கான அதிலும் ஆபாசத்தை ரசிக்கிற ஆண்களுக்கான கும்பல் மட்டும் மேடையைச் சுற்றி இருக்கும். இந்தப் பேச்சாளர்கள் அனைவருக்கும் 'எம்.ஜி.ஆர்.' மட்டுமே இலக்கு; அவருக்குப் பெண்கள் மத்தியில் இருந்த அபரிமிதமான செல்வாக்கு, அவர்களைப் பாடாய்ப் படுத்தியது. தங்களது ஆற்றாமையை ஆத்திரத்தை, கொச்சைப் பேச்சாக கூச்சம் இன்றிப் பரப்பினார்கள்.
தாய்க்குலத்துக்கு எம்.ஜி.ஆர். மீது இருந்த அளவிட முடியாத பாசம் ஒருபுறம்; அவருக்கு எதிராக இறக்கி விடப்பட்ட சிறப்புப் பேச்சாளர்களின் ஆபாசம் மறுபுறம். இந்த 'யுக்தி' (குயுக்தி) எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பிறகு, ஜெயலலிதா காலத்திலும் தொடர்ந்தது. இதனால் பெண்களின் ஓட்டு என்றைக்குமே 'எதிர்க் கட்சிக்கு' கிட்டாமலே போனது. இது ஒரு வகையில், அதிமுகவுக்கு எதிர்பாராமல் கிடைத்த 'போனஸ்'! இன்றளவும் அதிமுகவின் தீவிர ஆதரவாளர்களாகப்
பெண்கள் இருப்பதற்கு எதிர் முகாமின் ஆபாசப் பிரச்சாரமும் ஒரு காரணம்.
சரி.. இத்தனை பேர் எம்.ஜி.ஆர். என்கிற தனி மனிதரைக் குறி வைத்துத் தாக்கினார்களே... இதற்கு எம்.ஜி.ஆர். தந்த பதில் என்ன..? ''பெயத்தக்க நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்'' என்கிறது உலகப் பொதுமறை. இதனை அப்படியே தனது வாழ்க்கையில் கடைப்பிடித்தார் மக்கள் திலகம்.
1972 அக்டோபர் 17 - அதிமுக தோன்றிய நாள் தொட்டு, 1987 டிசம்பர் 24 அன்று அமரர் ஆன நாள் வரையில், யாரைப் பற்றியும் அநாகரிகமாக ஒரு வார்த்தை கூட ஒரு நாளும் எம்.ஜி.ஆர். பேசியதே இல்லை. 1977 தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தலின் போது எம்.ஜி.ஆர். பேசிய பரப்புரை / விளக்கவுரை குறித்து ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம். அதற்கு இணையான தேர்தல் பிரச்சாரப் பேச்சு இன்றுவரை இல்லை. இது குறித்து விரிவாகப் பிறகு பார்ப்போம்.
தனக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்த கட்சித் தலைமை குறித்து தனது இந்த உரையில் எம்.ஜி.ஆர். கூறியது இவ்வளவுதான். 'நாநயம் இருந்தால் மட்டும் போதாது; நாணயம் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்'. பெயரைக் கூடக் குறிப்பிடவில்லை; 'நாநயம்', 'நாணயம்' என்று இரண்டு சொற்களை மட்டும் சொல்லி இருப்பார். எம்.ஜி.ஆர். யாரைக் குறித்து என்ன சொன்னார் என்று தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்கு நன்றாகப் புரிந்து போனது.
1977இல் அமோக வெற்றி பெற்று அரியணை ஏறினார் எம்.ஜி.ஆர். பதவி ஏற்பு முடிந்து, முதல் முறையாக முதல்வராக மக்கள் முன் உரையற்றினார்.சென்னையில் அண்ணா சிலை மேடையில் இருந்து அவர் பேசியதை மக்கள் திரண்டு வந்து கேட்டனர். அடுத்ததாக, 1980ஆம் ஆண்டு. எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி, ஜனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் விரோதமாக, எம்.ஜி.ஆர். ஆட்சி, பிரிவு 356இன் கீழ் நீக்கப் பட்டது.
இன்று ஜனநாயகக் காவலர்களாக வேடம் போடுகிறவர்கள், மாநில உரிமை பற்றி மூச்சு விடாமல் முழங்குகிறவர்கள், மக்கள் தேர்ந்து எடுத்த மக்கள் திலகத்தின் ஆட்சியை 'டிஸ்மிஸ்' செய்தார்கள்.1977ஐ விடவும் மோசமாக, எம்.ஜி.ஆர். மீது, தனிப்பட்ட அவதுறுப் பிரச்சாரத்தை அள்ளி வீசியது பிரதான எதிர்க் கட்சி. எம்.ஜி.ஆர். சற்றும் கலங்கவில்லை. மக்களைச் சந்தித்து நியாயம் கேட்கிறேன் என்று கிளம்பி விட்டார். அப்போதும் தனக்கு எதிராக செயல்பட்ட சதிகாரர்களைக் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை.
'நான் செய்த தவறு என்ன..?' என் மீது தவறு இருந்தால் தண்டியுங்கள்... இல்லையேல், என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்'' என்று மட்டுமே சொல்லிச் சென்றார். மதுரை மேற்கு தொகுதியில் ஒரு பிரமாண்டமான 'போஸ்டர்'. 'என்ன தவறு செய்தேன்..?' என்கிற கேள்வியுடன், 'கொடுத்துச் சிவந்த கரம் கும்பிட்டுக் கேட்கிறது. வாக்களியுங்கள் இரட்டை இலைக்கே..' என்று கேட்டது. தமிழ்நாடு முழுக்க இதுதான் அதிமுகவின் பிரச்சாரமாக இருந்தது.
அராஜகமாக ஆட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட போதும் கூட, தனது பேச்சில் நாகரிகத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடித்தார் எம்.ஜி.ஆர். மனம் நெகிழ்ந்து போன மக்கள் அமோக ஆதரவு நல்கி, முன்னினும் அதிக இடங்களைத் தந்து மகிழ்ந்தனர், இரண்டாவது முறையாக முதல்வர் ஆனார் பொறுப்பு ஏற்ற கையோடு, சென்னை அண்ணா சிலை அருகில் இருந்து உரையாற்றினார் எம்.ஜி.ஆர். பல லட்சம் மக்கள் திரண்டு வந்து கேட்டனர். அந்த மக்கள் கடலில் நானும் ஒருவன்!
காலத்தின் கோர விளையாட்டில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப் பட்டார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். 1984 அக்டோபர் 31. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தி, தனது மெய்க் காப்பாளர்களால் சுடப்பட்டு மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது மகன் ராஜிவ் காந்தி பிரதமர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். உடனடியாக, மக்களைவைக்குப் பொதுத் தேர்தலும் அறிவித்தார். அது சமயம் அதிமுகவும் முன்னதாகவே பொதுத் தேர்தலைச் சந்திக்க விரும்பி, தனது ஆட்சிக் காலத்தைக் குறுக்கிக் கொண்டு, மக்களவையுடன் மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வழி விட்டது.
அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவ மனையில் படுத்து இருந்தார் எம்.ஜி.ஆர். இங்கே தமிழகத்தில் சட்டசபைக்கான பொதுத் தேர்தல்! அப்போதும் பிரதான எதிர்க் கட்சி நேர்மறை அரசியல் செய்ய முன் வரவில்லை. 'எம்.ஜி.ஆர். இறந்து விட்டார்' என்று பொய்ப் பிரச்சாரம் செய்தது. அதுமட்டுமல்ல; 'ஒருவேளை எம்.ஜி.ஆர். திரும்ப வந்தால், அவரிடமே ஆட்சியை ஒப்படைப்பேன்' என்றெல்லாம் 'வீர வசனம்' பேசினார்கள். இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, 'எதிரணி வேட்பாளர் வந்து விட்டால், அவரிடமே ஆட்சியைத் தந்து விடுவேன்' என்று வெட்கமே இல்லாமல் ஓட்டு கேட்ட கேலிக் கூத்து அரங்கேறியது
இதனை முறியடிக்க, மருத்துவ மனையில் இருந்தபடி, வீடியோவில் தோன்றினார் எம்.ஜி.ஆர் 'தலைவர் உடல் நலம் தேறி வருகிறார்; விரைவில் தமிழகம் திரும்பி முதல்வர் பொறுப்பு ஏற்பார்' என்று அப்போதைய கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெயலலிதா ஊர்ஊராகச் சென்று தீவிரப் பிரச்சாரம் செய்தார். மீண்டும் ஒருமுறை எதிர்க்கட்சியின் அவதூறுப் பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப் பட்டது. மீண்டும் ஒருமுறை, முன்னை விடவும் அதிக இடங்கள் பெற்றது அதிமுக. மூன்றாவது முறையாக முதல்வர் ஆனார் எம்.ஜி.ஆர்.
சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர்., பரங்கிமலை மைதானத்தில் பேசினார். இப்போதும், தலைவரைக் காண்பதற்காக மக்கள் வெள்ளம். அவர்களில் நானும் ஒருவன். தமிழ்நாட்டு மக்கள் தன் மீது வைத்த அபரிமிதமான அன்புக்கு கன்ணீர் மல்க நன்றி கூறினார், மற்றபடி, ஒரு வார்த்தை கூட யாரையும் சாடிப் பேசவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அரசியல் நாகரிகத்தில் உச்சம் தொட்டவர் அவர். தனது திரையுலக வாழ்க்கையின் பிற்காலத்தில், அவரைக் கடுமையாக எதிர்த்துப் பேசியவர்களில் ஒருவர் - கண்ணதாசன். மகாகவி பாரதிக்குப் பிறகு, தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்த மாபெரும் மக்கள் கவிஞன். 'கவியரசு' என்ற சொல்லுக்கு முற்றிலும் தகுதி வாய்ந்த தன்னிகரில்லாக் கவிஞன்.
தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பொறுப்பு ஏற்ற பிறகு, அரசவைக் கவிஞராக யாரை நியமிக்கலாம் என்கிற கேள்வி எழுந்த போது, சற்றும் யோசிக்காமல் கவியரசர் கன்ணதாசன் மட்டுமே பொருத்தம் ஆனவர் என்று தீர்மானித்தார். அப்போது, பாடலாசிரியர் வாலி, தலைவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். தனது காரில் அவரை அழைத்துக் கொண்டு போன எம்.ஜி.ஆர். அவரிடமே இந்த யோசனையை சொன்னார். உடனடியாக முழு மனதுடன் ஆமோதித்தார் கவிஞர் வாலி.
நன்றாகப் பாருங்கள். கண்ணதாசனுக்குப் பதவி தருவது மட்டுமல்ல; தன்னை நம்பி, தன்னுடன் நெருங்கி இருக்கிற கவிஞனுக்கும் மனவருத்தம் இருக்கக் கூடாது என்று எண்ணியவர் எம்.ஜி.ஆர். கவியரசு கன்ணதாசன் போன்ற ஒரு மாபெரும் யுகக் கவிஞனுக்கு அரசவைக் கவிஞர் என்கிற பதவி மிகச் சாதாரணம்தான். ஆனால் அன்னாருக்கு அப்பதவியை வழங்கியதன் மூலம், தமிழ் மொழியின் மீது தலைவருக்கு இருந்த தனியார்வம் நன்கு வெளிப்பட்டது. கூடவே அவரின் நாகரிக அணுகுமுறையும் நமக்குப் புரிந்தது. பொது மேடையில் கடுஞ்சொல் உதிர்க்காத, புன்னகையை மட்டுமே வீசிச் சென்ற அந்த சரித்திரத் தலைவன், நிகழ்த்திக் காட்டிய மற்றொரு சாதனை - இந்திய ஜனநாயகத்தில் ஒரு முக்கிய மைல் கல். அது என்ன..?
(வளரும்.....).........
-
எம்ஜிஆர் - திரையுலகில்
முடிசூடா மன்னர். !m.g.r.
எப்போதுமே எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டவர் அல்ல. திரையுலகில் முடிசூடா மன்னராக இருந்தபோதும் சரி; அரசியலில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் சரி, அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருந்தபோதிலும் எதிர் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தவர் அவர். அதை விட முக்கியம், தனது கருத்தை செயல்படுத்துவதில் தானே முதலில் நிற்பார்.
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட பிறகு, அதிமுக கொடியிலேயே தனது தலைவரான அண்ணாவின் உருவத்தை பொறித்தார். 1976-ம் ஆண்டு கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எம்.ஜி.ஆர். வெளி யிட்டார். அதிமுகவின் ‘தென்னகம்’ நாளிதழில் அந்த அறிவிப்பு வெளி யானது. ‘எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் அண்ணா உருவம் பொறித்த நமது கட்சியின் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. ‘பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்று கட்சியினருக்கு எம்.ஜி.ஆர். கூறியிருந்தாரே தவிர, அது கட்டாயம் என்று அதில் சொல்லவில்லை.
‘‘ஒருவரை ஒருவர் முன்பின் தெரியா விட்டாலும், கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொள்வதன் மூலம் அதைப் பார்த்ததும் ‘இவர் நம்ம ஆள்’ என்று அடையாளம் கண்டுகொண்டு கட்சியினரிடையே ஒற்றுமை மனப் பான்மை ஏற்படும், ஒருங்கிணைந்து செயல்பட உதவும்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். இதை ஏற்று லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொண்டனர்.
எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்புக்கு கட்சியிலேயே எதிர்ப்பும் எழுந்தது. படத் தயாரிப்பாளரான கோவை செழியன், விருதுநகர் சீனிவாசன் போன்றவர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ‘‘கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். இதை ஏற்பவர்கள் செய்யலாம். பச்சை குத்திக் கொள் ளாதவர்கள் அண்ணாவின் கொள் கையை விரும்பாதவர்கள் என்றோ, கட்சியில் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றோ கூற முடியாது’’ என்று எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்தார்.
இப்படி, மாற்றுக் கருத்துக்களுக்கும் ஜனநாயகரீதியில் எம்.ஜி.ஆர். மதிப்பு அளித்தார் என்பது மட்டுமல்ல; கட்சியையும் தன்னையும் கடுமையாக விமர்சித்ததால் நீக்கப்பட்ட கோவை செழியன் போன்றவர்கள் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். தனது வழக்கமான இயல்புப்படி, தன்னை விமர்சித்தவர்களுக்கும் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகள் கொடுத்தார்.
எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். ‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கோ, என் குடும்பத்துக்கோ அல்ல’ என்று எம்.ஜி.ஆர். எப்போதுமே செயல்பட்டதில்லை. கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியான உடனே அதை செயல்படுத்திய முதல் நபர் எம்.ஜி.ஆரேதான். சென்னை மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்துக்கு (இப்போது அந்த இடம்தான் நினைவு இல்லமாக உள்ளது) பச்சை குத்துபவரை வரவழைத்து தனது கையில் பச்சை குத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
இதில் சுவாரசியமான ஒரு விஷயம், அதிமுகவில் சேர்ந்து பிறகு கட்சி மாறிய நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் கையில் கடைசி வரை பச்சை குத்தப்பட்ட அதிமுக கொடி இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகர் விஜயகுமார் கையிலும் அந்தப் பச்சை உள்ளது.
எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தின் பல காட்சிகள் கர்நாடக மாநிலம் கலசபுரா என்ற இடத் தில் படமாக்கப்பட்டன. அங்கு கதைக்கு ஏற்றபடி பாழடைந்த கட்டிடம் போல ‘செட்’ போட வேண்டும். இரண்டு, மூன்று முறை அமைத்தும் பலத்த காற்று அடித்து ‘செட்’ வீணாகிவிட்டது. காற்று சுழன்றடிக்காத இடமாக பார்த்து ‘செட் ’அமைக்குபடி எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். காற்று அடிக்காத பகுதியாக பார்த்த இடம் ஒரு குன்று பகுதி. அந்த இடத்தில் ‘செட்’ போட வேண்டும் என்றால் அங்கு பொருட்கள் வந்து சேர ஆகும் செலவும் அதிகமாகும். எம்.ஜி.ஆர். ஆலோசித்தார்.
அந்த ஊர் மக்களின் பிரதான தொழில் கல் உடைப்பது. அங்குள்ள மக்களையும் படப்பிடிப்புக்கு வந்த தொழிலாளர்களையும் கொண்டே சிறு குன்றை உடைக்கச் செய்து, பெருங் கற்களை கொண்டு பலமான காற்றடித்தா லும் அசைக்க முடியாதபடி, பாழடைந்த வீடு போன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!
படப்பிடிப்புக்குக் குறைந்த செலவில் ‘செட்’ தயாரானது. குன்று உடைக்கப்பட்டதால் குன்றை சுற்றி ஊருக்கு வராமல் நேர்வழியில் செல்ல மக்களுக்கு பாதை கிடைத்தது. முக்கியமாக, கல் உடைப்பதன் மூலம் ஊர் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு வேலை கிடைத்தது.
அப்போது, நெகிழச் செய்யும் ஒரு சம்பவம். குன்றை உடைக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பலர் தடுத்தும், ‘‘விரைவில் வேலை ஆக வேண்டும், எல்லாரும் சேர்ந்து செய்தால்தான் முடியும்’’ என்று கூறி மக்களுடன் சேர்ந்து தானும் கல் உடைத்தார்.
தான் சொன்னதற்கு, தானே முன்னுதாரணமாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.
கூட்டங்களில் எம்.ஜி.ஆர். பேசும்போது ‘‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே’’ என்று கூறி மக்களின் ஆரவாரத்துக் கிடையேதான் பேச்சைத் தொடங்குவார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத் தால் சிகிச்சை பெற்றபோது, எம்.ஜி.ஆருக்கு ஏராளமான ரத்தம் செலுத்தப்பட்டது.
‘‘எனக்கு ரத்தம் அளித் தவர்கள் யார் என்று தெரி யாது; ரத்தம் கொடுத்தவர் களுக்கே கூட அது எனக்குத் தான் அளிக்கப்பட்டது என்று தெரிந்திருக்காது. யார், யார் ரத்தம் என் உடலில் கலந்திருக்கிறதோ? அதனால்தான் ‘ரத்தத்தின் ரத்த மான’ என்று குறிப்பிடுகிறேன்.........’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.
-
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம் என்ன?
Mgr முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்கிறார்.காரில் கோட்டைக்கு போய் கொண்டே படிக்கிறார். அது ஒரு திருமண பத்திரிகை. அந்த திருமண பத்திரிகையில் எந்த ஒரு இடத்திலும் புரட்சிதலைவர் பேரோ அல்லது கட்சிக்காரர் பேரோ அல்லது தான் யார் என்ன விவரம் என்று இணைப்பு கடிதம் கூட இல்லாமல் வந்த திருமண பத்திரிகை மட்டும் இருந்தது. உதவி கேட்க வில்லை கலந்து கொள்ள கோரிக்கை இல்லை. மனதில் ஏதோ தோன்றிய எம்ஜியார் ,பிறகு தன் ரகசிய காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வர சொல்லி இந்த பத்திரிகை அனுப்பியது யார், அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் சேகரிக்க சொல்கிறார்.
பத்திரிகையில் இருந்த முகவரி கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் திரையரங்கம் அருகில் சென்று பார்க்கும் போது அந்த அரங்கத்தின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில் ஒரு செருப்பு தெய்க்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிகிறது. அவர் செருப்பு தைக்கும் உபகரணங்களுடன் சாமி படங்கள் கூட இல்லாமல் அந்த பெட்டியின் மேல நம் இதய தெய்வம் படம் மட்டும் ஒட்ட பட்டு இருந்தது விவரங்களை கேட்ட தன் மகள் திருமணம் நடக்கும் விஷயம் தனக்கு தெரிய வேண்டும் ஆனால் அதற்கு எந்த உதவியும் கேட்காத அந்த உண்மை தொண்டனை நினைத்து உருகுகிறார்.
நாளும் வந்து விட்டது. காலை 9.00 மணிக்கு முகூர்த்தம். 8.45 மணி அளவில் காவல் துறை அணிவகுப்பு அந்த ஏழை தொழிலாளி வீட்டு முன்னால் காரணம் தெரியாமல் விழிக்கும் திருமண வீட்டார். மணமகன் தாலி கையில் எடுக்கும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னால் வந்து இறங்குகிறார் வாத்தியார். 4777 வாகனம் அந்த எளியவன் வீட்டு முன்னால் வந்து நிற்பதை அந்த பகுதி மக்கள் மற்றும் பத்திரிகை அனுப்பிய அந்த தொண்டன் எதிர்பார்க்கவில்லை. கண்கள் கலங்கி இதயம் நொறுங்கி நின்ற தொண்டனுக்கு அள்ளி கொடுத்து விட்டு "நீ மட்டும்தான் சொல்லாமல் கொள்ளாமல் செய்வாயா நானும் கூட தான்" என்று சொன்னவர் , காலை உணவை அங்கே முடித்து கொண்டு புறப்படுகிறார் எட்டாவது அதிசயம் எம்ஜியார். செருப்பு தெய்க்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தது போல மதுரைவீரனில் நடித்து மட்டும் வாழ வில்லை நடைமுறை வாழ்விலும் வாழ்ந்தார் வாத்தியார்...
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
பல்லாண்டு, பசுமையுடன் நம் மனத்தில் நேசப்புன்னகையுடன், நம்மை அன்புடன் அரவணைத்து, இளமை மாறா முகத்துடன் என்றும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.............
-
பாடல் பிறந்த கதை.
மக்கள்திலகம் எம்ஜிஆருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த காலம் அது.. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்.
“இந்தக் காட்சிக்கான பாடலை கண்ணதாசன்தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர முடியும்.” – எம்.ஜி.ஆரின் இந்த திடமான வார்த்தைகளைக் கேட்டு சுற்றி இருந்த படக் குழுவினர் திகைத்துப் போனார்கள் .
“சங்கே முழங்கு” என்ற படத்திற்கான பாடல் அது..!
மதுவின் தீமைகளை விளக்கி கதாநாயகன் எம்.ஜி.ஆர். பாடுவதாக வரும் பாடல் ;
அதை , மதுவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணதாசனைக் கொண்டு எழுதச் சொன்னால் எப்படி ..?
சரி .. எம்.ஜி.ஆர். சொன்னால் சொன்னதுதான்..!
வேறு வழி இல்லை..! படக் குழுவினர் கண்ணதாசனிடம் சென்று சொன்னார்கள் . ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்ட கண்ணதாசன் பின்பு பலமாகச்
சிரித்தார் .
சில காலம் முன் அவர் எழுதி இருந்த ஒரு கவிதை :
“ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மாதுவும்
சேர்ந்திருக்கின்ற வேளையிலே என்
ஜீவன் பிரிய வேண்டும் – இல்லையென்றால்
என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாயென்றே
எனை படைத்த இறைவன் கேட்பான்..”
கண்ணதாசன் எழுதிய இந்தக் கவிதை , எம்.ஜி.ஆருக்கும் தெரியும்..!
அப்படி இருந்தும் தன்னை எம்.ஜி.ஆர் அழைக்கிறார். மதுவின் தீமைகளை விளக்கி பாடல் எழுதச் சொல்கிறார் என்றால்…?
புரிந்து கொண்டார் கண்ணதாசன்... !
மதுவினால் ஒரு மனிதன் படும் அவஸ்தைகளை மதுப் பழக்கம் இல்லாத ஒருவனால் , அனுபவித்து எழுத முடியாது .
எனவேதான் மதுக் கோப்பைக்குள் குடி இருக்கும் தன்னை தேர்ந்தெடுத்து இந்தப் பாடலை எழுத அழைக்கிறார் எம்.ஜி.ஆர்.
கண்ணதாசனுக்கு தெளிவாக தெரிந்தது..
உடனே 'சங்கே முழங்கு' படப்பிடிப்புத் தளத்திற்குப் புறப்பட்டார். அங்கே எம்ஜிஆர் கவிஞரை வரவேற்றார். பாடல் எழுத தயாரானார்..! கண்ணதாசன்.
“சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்” பாடலுக்கான பல்லவியில்...
கோப்பையிலிருந்து வழியும் மதுவாக ,
பொங்கி வந்து விழுந்தன வார்த்தைகள் ..!
“மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !”
“ஆஹா..” என்றார் எம்.ஜி.ஆர்.
அடுத்து கண்ணதாசனிடமிருந்து வழிந்த வார்த்தைகள் :
“அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே”
கூர்ந்து கவனித்தார் எம்.ஜி.ஆர்.
கண்ணதாசன் அடுத்து சொன்ன வரிகள் :
“நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது
ந*ல்ல*வ*னும் தீய*வ*னே
கோப்பை ஏந்தும் போது”
“சபாஷ்..!”-பரவசப்பட்டுப் போனார் எம்.ஜி.ஆர். இதை விட மதுவின் தீமைகளை எவரால் சொல்ல இயலும்..?
கண்களை மூடியபடி கண்ணதாசன் யோசித்தார்..மதுவின் தீமைகளை சொல்லி விட்டோம். எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி சில முற்போக்கான விஷயங்களை சொல்ல வேண்டாமா..?
“எழுதிக் கொள்ளுங்கள்” என்ற கண்ணதாசன் உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்...
“புகழிலும் போதை இல்லையோ..
பிள்ளை மழலையில் போதை இல்லையோ..
காதலில் போதை இல்லையோ..
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ..!
மனம் மதி அறம் நெறி தரும் சுகம் மது தருமோ..?
நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு..
நிம்மதியை தேடி நின்றால்
உண்மை சொல்லிப் பாரு.. !”
சொல்லி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார் கண்ணதாசன்.
படக் குழுவினரை ஏறிட்டுப் பார்த்தார் எம்.ஜி.ஆர். “என்ன..? கவிஞரை நான் ஏன் அழைத்தேன் என்று இப்போது தெரிகிறதா..?”
ஆம்...!
யாரிடம் எதை எப்படி கேட்டு வாங்க வேண்டும் என்ற வித்தை எம்.ஜி.ஆருக்கு தெரிந்திருந்தது ;
சரி .. இப்படி எந்தச் சூழ்நிலையானாலும் அதற்கேற்ற பாடல் எழுதும் வித்தை ..
கவிஞருக்கு எங்கிருந்து வந்தது ..?
இதோ.. அதை கண்ணதாசனே சொல்லி இருக்கிறார் :
“வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி..!
தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே..
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே..
உன்னைத் தவிர
உலகில் எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா..!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!”
ஆஹா..!.........
-
மக்கள் திலகத்தின் ''மீனவ நண்பன் '' 14.8.1977
43 ஆண்டுகள் நிறைவு ..........
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம்
1947ல் ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்து ,30 வருடங்கள் தொடர்ந்து தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்து மாபெரும் சாதனைகள் பெற்றார் . தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்று பெயர்
பெற்றார். உலகிலயே அதிகமான ரசிகர்களை பெற்றவர் எம்ஜிஆர் .
இன்றும் அவருடைய ரசிகர்கள் உலகமெங்கும் அவர் நினைவாகவே வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் . வசூல் சக்கரவர்த்தி என்று மலைக்கள்ளன் -1954 படத்திற்கு புகழ் கிடைத்தது .1977 வரை தொடர்ந்து நிரந்தர வசூல் மன்னன், ஏக வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை தக்க வைத்து கொண்டார் .
1977 மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் அவர் வாழ்ந்த 1987 வரை 11 ஆண்டுகளில் அவருடைய 90 படங்கள் தொடரந்து தென்னகமெங்கும் பவனி வந்தது . வசூலை வாரி கொட்டியது. 1987 முதல் 2020 இன்று வரை 33 ஆண்டுகளாக மக்கள் திலகத்தின் பல படங்கள் புத்தம் புதிய பிரதிகளாகவும் , டிஜிட்டல் வடிவிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டு வருவது உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை . சாதனை .2005 முதல் பல ஊடகங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து காண்பித்து வருகிறார்கள் . மக்கள் திலகத்தை பற்றிய நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தன . பல்வேறு அமைப்பினர் நடத்திய எம்ஜிஆர் பட விழாக்கள் ஏராளம் ..........
-
#எம்ஜிஆர்_மற்றவர்களுக்கும்_மதிப்பளித்தவர்!
M.g.r. என்னதான் மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்தபோதும் மற்றவர்களுக்கு மதிப்பளிக்க தவறியதில்லை. முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய மரியாதை அளித்தார். நிர்வாக விஷயங்களில் கட்சியினர் தலையீட்டையும் ஒருபோதும் அவர் அனுமதித்தது இல்லை.
முதல்வர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் பணிவும் பவ்யமும் காட்டுவது நாம் பார்த்து பழகிப்போன ஒன்று. திருச்சி சவுந்தர ராஜன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவரோடு பல படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர். மன்றத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவர். அவரை தனது அமைச்சரவையில் எம்.ஜி.ஆர். சேர்த்துக் கொண்டார். தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர் தானே என்று நினைக்காமல், அமைச்சருக்கு உரிய மரியாதையை அவருக்கு அளித்தார்.
1978-ல் அமைச்சராக நியமிக்கப்பட்ட திருச்சி சவுந்தரராஜன், ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபின், பொறுப்பேற்க கோட்டைக்கு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆரும் உடன் வந்து, புதிய அமைச்சரின் அறைக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து வாழ்த்தி அமைச்சருக்கான இருக்கையில் அமரச் செய்தார். அதோடு மட்டுமல்ல; வழக்கமாக முதல்வர்கள் அமர்ந்திருக்க அவர் பின்னால் மற்றவர்கள் நிற் பதை பார்த்திருப்போம். ஆனால், அமைச்சர் நாற் காலியில் திருச்சி சவுந்தரராஜன் அமர்ந்திருக்க, அவர் அருகே தானும் மற்ற அமைச்சர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.!
இதேபோன்று, அவரோடு பதவியேற்ற கே.ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அமைச்சர்களை யும் வாழ்த்தி அவர்களுக்கு அருகே நின்று எம்.ஜி.ஆர். படம் எடுத்துக் கொண்டார். அமைச்சருக் குரிய நாற்காலியில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கள் அமர்ந்திருக்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்த முதல்வர் அநேகமாக எம்.ஜி.ஆராகத்தான் இருக்கும். 1983-ம் ஆண்டு எஸ்.ஆர்.ராதா அமைச்சராக பதவியேற்றபோதும் இதே மரபை எம்.ஜி.ஆர். கடைபிடித்தார். முதல்வர் அமைச்சர் என்பதைத் தாண்டி, தம்பி கள் பொறுப்புக்கு வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் ஒரு மூத்த சகோ தரனின் பாசமும் அதில் தெரிந்தது.
எம்.ஜி.ஆர். எப்போதுமே நாட்டு நடப் பிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் விழிப்புடன் இருப்பார். அதுவும் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது மிகவும் கூர்மையாக இருந்தார். இப்போது போல அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சி கள், ஃபிளாஷ் நியூஸ், வாட்ஸ் அப் இத்யாதிகள் கிடையாது. இருந்தாலும் தமிழகத்தின் மூலை முடுக்கிலும்கூட என்ன நடந்தாலும் உடனடியாக அறிந்துகொள்வதற்காக, முதல்வர் என்ற முறையில் சில ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். செய்து வைத்திருந்தார்.
ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.
‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.
‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!
‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.
‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.
கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.
‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.
நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.
அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.
‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.
தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …
‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’
#சிறு_குறிப்பு
மத்தியில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு கவிழ்ந்த தைத் தொடர்ந்து, சரண்சிங் பிரதமராக பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்த பாலா பழனூர், சத்திய வாணி முத்து ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். தமிழகத்தின் ஒரு மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர்களை முதன்முதலில் மத்திய அமைச்சர்களாக்கிய பெருமை எம்.ஜி.ஆரையே சேரும்..........