Plum,
You try to potray sivagangai seemai as quality movie (That is OK) ,but VKP is qualityless just commercial movie :lol:
Quality illamala Asia Africa best actor ,best music score kuduththanga cairo-la? :roll:
Printable View
Plum,
You try to potray sivagangai seemai as quality movie (That is OK) ,but VKP is qualityless just commercial movie :lol:
Quality illamala Asia Africa best actor ,best music score kuduththanga cairo-la? :roll:
Shankar,Quote:
Originally Posted by wrap07
Sorry for the name mixup. My fault. Yes, we would try to meet next time.
Plum,
We will keep on disagreeing. But still, I always like your open comments about your unfulfilled expectations on NT.
நன்றி சாரதா.
அதே பேசும் படத்தில் கட்டபொம்மன் நூறாவது நாள் விழாவில் நடிகர் திலகம் மனம் வருத்தப்பட்ட விஷயமும் இருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னமே கட்டபொம்மன் நாடகமாக நடத்தப்பட்டது. நாடகத்தை பார்த்த பிறகும் இந்தப் படத்தை எதிர்க்க/போட்டி போட நினைத்தது தான் வியப்பாக இருக்கிறது.
வரும் மே மாதம் 16-ம் நாள் கட்டபொம்மன் படத்தின் பொன் விழா. ஆம், 16.05.2009 அன்று [வெளியான நாள் 16.05.1959] படம் வெளியாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. அதை ஒரு சிறப்பான விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விவரங்கள் விரைவில்
அன்புடன்
Joe, apdi illai. Idhai munnadiye ezhudhalamnu ninaichen - this can be the excuse:
My first introduction to Sivaji Ganesan was when a squeaky-voiced Teresa Thilakavathi (name changed), Age 10, IV B, squealed "Vaanam poligiradhu, buumi vilaigiradhu, unken thara venum kisthi" (the mistakes are not my typing, it was as that little girl, bless her, spoke it). I must have been around 11 then. Thus began my journey with the greatest actor Tamil filmdom has ever seen. I went back home and demonstrated this new trick that I had learned to my father, and he smiled. That smile said "Welcome to the club, my dear friend", though I didnt realise it then. We didnt have a television set then and it would be 2 years more before I got my first glimpse of the thespian on screen. I had seen Sangili on big screen, in between, though, but technically, I dont count it as it was a completely different Ganesan there. Meanwhile, VPK was all the rage among my classmates, and reciting THAT monologue on what the British Collector knew about farming techniques and wooing techniques in rural tamil land were like, was your passport to the hall of fame in the class. So, yes, I would be the last to diss Veerapandiya Kattabomman, the movie.
It is a long story from there how I got to see paasa malar, paarthal pasi theerum and paava mannippu thanks to Doordarshan, and my father gleefully fuelled and nurtured my love for this great actor.
Cutting that long story short, much of my views on the specific Sivaji Ganesan I wanted to see are post this phase and exposure to a wider canvas of movies, again thanks to Doordarshan and Sunday 1:30PM. Sivagangai Seemai is a movie I got to see post this phase, and as I mentioned, my father was post his "Only Sivaji Else Death" phase as well. We saw it together and there was much subtleness and an understated elegance to that movie - now, SSR barely fitted in but the mood of the movie suited his blandness and his limitations didnt hamper the movie that much. My father told me about the politics behind and what had stopped him from so much as looking up a sivagangai seemai poster for 30+ years. Perhaps, as always, his influence stays with me on this, too, and his conversion on Sivagangai Seemai has a profound impact on me to rate the latter a tad higher.
Dont get me wrong, I just said that I would have loved to see Sivaji Ganesan in that subtle, understated role(with the mandatory big dialogue in the end though) in Seemai. SSR was adequate and that is perhaps what gave the movie a blandness that wasnt box-office. But my view is that if Sivaji had been in it, it would have been an equally milestone movie in Tamil filmdom.
Murali, thanks for your understanding. My intention is not to undermine the appreciation people here have for what Sivaji actually accomplished - and I surely relish a VPK as much as anyone else here not the least for the reasons I mentioned earlier in the post - but I am just greedy for more from him - to put it simply, I would have wnated him to do Sivagangai Seemai AS WELL AS Kattabomman - alas, that greed will never be satisfied now.
So simple-a :)Quote:
Originally Posted by Plum
Kannadasan kettiruntha NT enna vendam-na solliyiruppar ..Avar kekkala ..ivar pannala. :lol:
Even though Kannadaasan never wished it, there was a race between VPK and SS right from the beginning as Kannadaasan gave a full page colour advertisement for SS in all major Tamil papers. Kannadaasan was like a puppet in the hands of some hidden powers. As the film was finished he invited Annadurai and AVM among others for a preview. After watching the movie Anna said," You have made a very good film but with the actors you have lost. SSR fighting against PSVeerappa is like a kid fighting against a giant. You have no chance against VPK." AVM said if Kannadasan would release the film a bit later he could atleast recover the money he invested.
Kannadasan writes very openly in his Manavasam about this incident and regrets that he had to compete against VPK.
வீரபாண்டிய கட்டபொம்மனில் நடிகர்திலகத்தை நீக்க்கிவிட்டுப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை என்பதுபோல சொல்லியிருப்பதை ஏற்பதற்கில்லை. கட்டபொம்மன் எல்லா வகையிலும் ஒரு முழுமையான படம். அன்றைக்கு இருந்த டெக்னிக்கல் உத்திகளைக் கொண்டு இப்படிப்பட்ட போர்க்களக்காட்சிகளைப் படமாக்குவது என்பதெல்லாம் இமாலய சாதனைகளே. பீரங்கிக்குண்டுகள் பாய்ந்து கோட்டை மதில்கள் தகர்வது எல்லாம் அன்றைய நாளில் படமாக்குவது நினைத்துப் பார்க்க கூடியதா?.
அதே சமயம் கண்ணதாசனின் 'சிவகங்கைச்சீமை' படத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. நாட்டு விடுதலைக்காக வெள்ளையர்களை எதிர்த்துப்போராடிய வீரனின் வரலாறு என்ற வகையில் அப்படி ஒரு படம் தயாரித்த கண்ணதாசனைப் பாராட்ட வேண்டும். ஆனால், நான் முன்பு சொன்னதுபோல இரண்டு படங்களையும் பார்த்த திரு ஏ.வி.எம். செட்டியார் சொன்னதைக்கேட்டு சி.சீமையை தனியே வெளியிட்டு இருந்தாரானால், அதுவும் வெற்றியடைந்திருக்கும். கட்டபொம்மன அளவுக்கு பிரம்மாண்ட வெற்றியடைந்திருக்காவிட்டாலும், ஓரளவு வெற்றி பெற்று கண்ணதாசனை நஷ்ட்டத்திலிருந்து காப்பாற்றியிருக்கும்.
ஆனால் அப்போது அவர் சார்ந்திருந்த கட்சியினரின் நோக்கம், கண்ணதாசனின் சிவகங்கைச்சீமை படம் வெற்றியடைய வேண்டும் என்பதல்ல, இப்படத்தை கேடயமாக பயன்படுத்தி கட்டபொம்மனின் புகழைக்குறைக்க வேண்டும் என்பதுதான். அதனால் அவர்கள் கவிஞரை உசுப்பி விட்டு போட்டியில் இறக்கி விட்டார்கள். வாழும் காலம்வரை குழந்தையாகவும், எடுப்பார் கைப்பிள்ளையாகவுமே வாழ்ந்த கண்ணதாசன், இவர்களின் துர்ப்போதனைக்கு பலியாகி நஷ்ட்டமடைந்தார். அப்படி கண்ணதாசனை உசுப்பி விட்டவர்களில் முக்கியமானவர் மதுரை சண்டியர் ஒருவர். 'மதுரையில் கட்டபொம்மன் வெளியாகும் தியேட்டரைக் கொளுத்துவோம்' என்று ஆவேச முழக்கமிட்டார். (இதே சண்டியர்தான் பின்னொருமுறை 'உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸானால் சேலை கட்டிக்கொண்டு மதுரையை வலம் வருவேன்' என்று முழங்கிவிட்டு பின்னர் எம்.ஜி.ஆர்.காலில் விழுந்தவர்). இவரது சவா(டா)லை நிஜமென்று நம்பி, 'கட்டபொம்மன்' படம் ஓடிய மதுரை நியூ சினிமா தியேட்டருக்கு 50 நாட்கள் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கடைசியில் எதிர்ப்பு புஸ்வாணம் ஆனது. எந்த மதுரையில் கட்டபொம்மன் வெளியாகக்கூடாது என்று சவால் விட்டார்களோ, அதே மதுரை நியூ சினிமாவில் வெள்ளிவிழாவைக்கடந்து ஓடியது கட்டபொம்மன். (முன்னர் முரளி அவர்கள் சொன்னதுபோல, சண்டியரது முகத்தில் கரியைப்பூசத்தான் மதுரை விநியோகஸ்தர், கட்டபொம்மன் வெற்றியைக்கொண்டாடும் விதத்தில் அம்மாவட்ட பள்ளிக்குழந்தைகளுக்கு பென்சில், பேனா, சிலேட்டுப்பலகைகள் வழங்கியிருப்பார் போலும்).
'சிவகங்கைச்சீமை' படம் ஓடவில்லையே என்று, இன்று நாம் வருத்தப்படும் அளவுக்குக்கூட, அன்று அவர்கள் வருத்தப்படவில்லை என்பதுதான் சோகம். தங்கள் பருப்பு வேகவில்லை என்றதும், அவர்கள் தங்கள் கட்சி வேலைகளைப்பார்க்க போய்விட்டனர். பாவம் கண்ணதாசன்தான் நஷ்ட்டமடைந்து தெருவில் நின்றார்.
saradha_sn, truly I dont disagree at all. Enakku VPK pidikkum for various reasons including its own quality. I know about the politics of the movie and why someone who grew along those 'politically charged Sivaji vs someone else' times feel passionate about VPK in the comparison with Seemai. As I said, I have learnt enough from my father on this and as I said, it took 30 years for him to lose the bitterness against Sivagangai Seemai.
The production values of VPK were undoubtedly much much better than Seemai. But as a script, Seemai was more realistic and Kannadasan's dialogues, though not bombastic as Vaana Pozhigiradhu(without which I might not even have started to know Sivaji, remember), had a certain understated elegance. I wish that
a) Either Sivaji had done both movies
b) Or there had been a combo of these movies with VPK's production values, casting strength and Seemai's understated elegance and ofcourse, Kannadasan's dialogues - even if that means I would never have had a vaanam pozhigiradhu to get introduced to sivaji :-)
It is this attitude of tamilan that eluded our NT an Oscar.
Many of his films deserved nomination for Oscar. Though only Theiva Magan was sent to Oscar.
His films did not get Oscar that does not mean they are below par. But international recognition is important. But sadly national recognition came to him very late.
Moreover, in this generation, if we sit and have a look at his works, it is simply great. What a great service he has done!
His films are lessons for people. There was no unity among tamils and that attitude to pull leg of others is sad one.
There could be many reasons for this. But consider the early winners of Bharath award, which never went to NT, you will understand the quality of performances that the central award committees were looking at.Quote:
Originally Posted by sankara1970
The thing is, I feel NT’s style of generic, home-made acting baffled them. They have not seen anything like that, and they may have felt that the international community would be baffled as well. When in fact, the international community are actually looking at something different than their own. They don’t want a Thailand Brando, or a Japanese James Dean, they have it back in US, and the other respective countries has their own respective great actors. Even in English speaking countries, you have different styles of acting. Oliver and Guiness’ style and approach are totally different from Brando or Newman’s.
So, NT is NT. He is not our Brando or Olivier. He is NT, and he has his own brand of acting, the NT brand. It would have (an it did many times) been appreciated by the international community. As Kamal said, Oscar is for US films, it doesn’t matter if NT’s film didn’t make it there, but they did make it to other film festivals.
If Indians were as widespread all around the world like it is now, NT’s reach would have been wider too. There could have been bigger marketing budget for his films. Then, Oscar would have been knocking on NT’s door.
Plus Oscar is sometime seasonal. There was a time when they were worshipping Hong Kong films, now its India’s turn. ARR’s score in Slumdog Millionair is nothing compared what he has done in scores of other Indian films. And it got recognised only now. Oscar eppothumey late-thaan (they give out awards either when the actor is in his twilight, or dead).
Romba ularitten-nu nenekkiren.
Illa ..Unmaiya thaan ULaritteenga :)Quote:
Originally Posted by groucho070
Most of NT films before '75s well deserved for super hits. but due to political and some other reasons which we are not known caused the failure of some good NT films. If go on dig and to PM, so many hidden truth will come out for his film failure (for ex.VKP failure as per media). some one has to bell the cat. Some of his films failed at BO but his acting never fails in any movie. fortunately I got some imformation in Pesum Padam and forward to Murali. since I think he is the right person to do something in this regard.
:lol:Quote:
Originally Posted by Plum
[tscii]
I always feel oscar is BEST amongst those selected / represented .Quote:
Olivier. He is NT, and he has his own brand of acting, the NT brand. It would have (an it did many times) been appreciated by the international community. As Kamal said, Oscar is for US films, it doesn’t matter if NT’s film didn’t make it there, but they did make it to other film festivals.
What kinda movies get selected or represent india for oscar?
Regional movies have lil chance compared to national movies for political reasons.
Then comes hands on higher officials, movies with foreign hand has say?
Our very own nagesh was not even given a padmashree. Award has a huge play on politics and LUCK.
Plum,
VPK occupies a special position in most of the fans' heart and that's the reason why even silent readers (of course NT Fans) like Sivan, Sankara Narayanan (sankara 1970) and Balkrishnan (abkhlabhi) have opened out.
In hindsight we can wish that NT had acted in SS but it would have never happened. As you have indicated your father must have briefed you about the political situation then. There was a group which badly wanted NT out of the way and they tried all tricks. Unfortunately Kannadasan fell prey to their machinations but soon he learnt the bitter lessions when he along with Sampath was forced to quit within 2 years.
But here comes NT's magnanimity. After all these happenings, in the same year (1959) when Bhimsingh wanted Kannadasan to write for his Bagha Pirivinai, NT did not oppose and the combination thereafter went on a uninterupted run till 1981,when Kannadasan passed away.
In the same manner, NT never said no to SSR. In the very next year (1960) when Deiva Piravi was made, SSR was given a plum role and in fact NT did not even object to the scene where SSR would slap NT. SSR went on to do Aalaya Mani, Kungumam, Pachhai Vilakku, Kai Koduthha Deivam, Pazhani, Shanthi along with NT with the final coming together happening in Ethiroli. On the same token check SSR's filmography with others. You'll find only a solitary film.
சாரதா,
எங்கள் மதுரை மக்கள் எப்போதும் நடிகர் திலகத்தின் பக்கமே நின்றார்கள். எந்த சண்டியர் எதிர்த்தாலும் அவர்கள் அஞ்ச மாட்டார்கள். அதற்காகவே கட்டபொம்மன் நூறாவது நாள் விழாவிற்கு நடிகர் திலகம் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக மாசி வீதிகளில் கட்டுக்கு அடங்காத கூட்டத்திற்கு நடுவில் அழைத்து வரப்பட்டார். அதற்கும் மேலாக அந்த படத்தை வெள்ளி விழா காண செய்தார்கள் மதுரை மக்கள். அதே வருடத்தில் பாகப் பிரிவினை படத்திற்கும் மிக பெரிய வெற்றியை அள்ளி வழங்கினார்கள். மதுரை சிந்தாமணி திரையரங்கில் 216 நாட்கள் ஓடியது பாகப் பிரிவினை.[அந்த சாதனையை முறியடிப்பதற்கு எவ்வளவு பாடுபட்டார்கள் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்].
அன்புடன்
Murali, I am sorry if my views hurt people here(and you). As I said, VPK has its own special place in my heart for being my gateway to NT. These views are post-facto analysis - and while I understand the incesne and pain that people who went through those politically charged phase will feel, I have seen my own father letting go of the politics after 30 years - it doesnt matter, does it now? Isnt NT's name etched indelibly in the TF hall of fame at the throne? All those lies and durpracharam, havent they been melted away? I know that an average tamil citizen today would not believe anything other than that Kattabomman was a super-duper blockbuster hit - I know that by experience- it is taken for granted. Isnt 'vaanam pozhigiradhu' still a gold standard in elocution as witnessed in school fancy shows still? I know it was 10 years back with my cousins and the odd nephew. Or have the school fancy shows have moved on to "Oru dhadavai sonna"...correct me if I am wrong - my knowledge of that arena is 10 years old.
I think having won that victory(which movie is remembered today by the average tamilian, Kattabomman or the other one?), we can afford to be magnanimous in forgiving the other side's sins. Isnt that what NT himself did?
These are just my thoughts - and I posted all that I did here purely because of that. I dont expect that everyone would feel like that - but I believe I havent crossed the limits - correct me and stop me if I did.
நடிகர்திலகத்தின் படங்களுக்கு எதிராக சிவகங்கை சீமை மட்டுமல்ல அவரின் போட்டி நடிகரின் படங்கள் கூட ஒரே நாளில் வெளியான பெரும்பாலான சமயங்களில் ,வெற்றி பெற்றவை நடிகர்திலகத்தின் படங்களே (பழனி-எ.வீ.பி போன்ற ஒன்றிரன்டு நிகழ்வுகளை தவிர)
Plum,
I fully understand your feelings. I never said that you are wrong. The only thing is, this film is special to so many persons that it would invoke strong response. That's all. Here everybody is welcome to post their own views and if someone disagrees, they will respond but never will anybody be stopped from airing his/her views.
Regards
Dear Murali,Quote:
Originally Posted by Murali Srinivas
When I saw Raja in re-release, with this nice build up, I guessed that NT fans must have had a great fun in the theater during its first release. It is true that the intensity is so build up before NT's introduction in Raja. Moreover, NT looks very handsome and stylish in Raja. I do wonder how did fans react for other wonderful introduction movies such as deiva magan, gauravam and pattikada pattanama!!??
As you know, I was vacationing in Madurai - NT related items I found:
1. NT rasigar mandrams are still visible in the city, especially during his movie releases.
2. NT movies are regularly re-released - mostly in central and meenakshi theaters. During my return week, Meenakshi released Engal Thanga Raja as brand new copy (புத்தம் புதிய காப்பி). Unfortunately, I couldn't make it there on Sunday because I had to catch the flight back to Chennai. Couple of weeks back, it seems Central had Thirisoolam release. I saw old Mandram posters and old newspaper posters highlighting Thirisoolam's original release 151th day run in all TN centers, including theater names.
Though NT had a bad run in politics, it is heartening to see that Madurai rasigars are very dedicated to him and still have fun during movie re-releases. This clearly shows the popularity of NT among Madurai fans - no wonder his movies had festival crowd. It is amazing that even today, this crowd loves NT just because he is NT - King of acting!! Now, I could imagine and visualize NT's army of fans during his peak days.
As you all know, Y G Mahendra is reviving Sivaji Nadaka Mandram's classic Vietnam Veedu. Today's Hindu carries this: Revisiting a Sivaji classic on stage: http://www.hindu.com/fr/2009/02/27/s...2750120200.htm
Regards
To do something like this YGM really got guts. As he said, let's hope he can do at least 10%.Quote:
Originally Posted by tacinema
Hope hubbers who are planning to watch the show will comment on it here.
Dear friends,
Those who would like to watch Vietnam Veedu by YGM on 7th March 2009 (inaugural play), can avail concessional rates on the tickets through our website, www.nadigarthilagam.com. Pls refer the site for more info.
Raghavendran.
வாரம் ஒரு படம் பகுதியில் நம்முடைய இணையதளத்தில் (www.nadigarthilagam.com), தற்பொழுது யோகசித்ராவின் இளைய தலைமுறை படம் இடம் பெற்றுள்ளது.
ராகவேந்திரன்
விகடன் சினிமா விமர்சனம்: அன்னையின் ஆணை
சந்தர் - சேகர்
சந்தர்: ஹலோ சேகர், எங்கே இப்படி?
சேகர்: மார்லன் பிராண்டோ படம் ஒண்ணு ஓடுகிறதே, அதைப் பார்க்கப் போயிருந்தேன்!
சந்தர்: என்ன மிஸ்டர் அளக்கறே? எனக்குத் தெரிந்து அப்படி ஒரு படம் எங்கேயுமே ஓடலியே?
சேகர்: தமிழ்நாட்டு மார்லன் பிராண்டோ சிவாஜிகணேசன் நடித்த படம்!
சந்தர்: ஓ... சிவாஜியா? ஏன் அந்த மார்லன் பிராண்டோ தான் ஆங்கில நாட்டின் சிவாஜிகணேசனாக இருக் கட்டுமே! நீயா அவருக்குப் பட்டங்களெல்லாம் கொடுக்காதே!
சேகர்: நான் கொடுக்கலே. படத்திலேயே கொடுத்திருக்காங்க! 'சாம்ராட் அசோகன்' நாடகம் ஆன பிறகு, கணேசனை இப்படிப் புகழ்ந்து பாராட்டுகிறார் கருணாகரர்.
சந்தர்: சரி, ஸ்டோரி என்ன?
சேகர்: கொஞ்சம் புதுமை! பிளாஷ்பாக் கதையும் நேர்முறைக் கதையையும் மாற்றி மாற்றிக் காட்டுகிறார்கள்.
சந்தர்: 'அவுட்லைன்' சொல்லேன்?
சேகர்: பலரை வஞ்சித்து வாழுகிறார், பணக் கார பரோபகாரம். மானேஜர் சங்கர் இல்லாத சமயம் அவர் மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயல்கிறார். விஷயம் அறிந்த சங்கர், சண்டைக்குப் போகிறான். ஆனால், தந்திர மாக அவன் மீதே கொலைக் குற்றம் சாட்டி விடுகிறார் பரோபகாரம். சங்கர் சிறைப்படுகிறான்.பிரசவ வேதனையில் இருக்கும் தன் மனைவியை நினைத்துக்கொண்டு, ஒரு நாள் சிறையிலிருந்து தப்பித்துவிடுகிறான். ஆனால், போலீசாரால் சுடப் பட்டு இறந்துவிடுகிறான். அந்த இடத்தில் கணேசனின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது!
சந்தர்: என்னது... வந்த உடனேயே இறந்துவிடுகிற வேஷமா அவருக்கு?
சேகர்: முழுக்கக் கேளேன்... இறந்தது தந்தை கணேஷ்! பிறகுதான் மைந்தன் கணேஷ் வருகிறார்.
சந்தர்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா? டபிள் ரோலா?
சேகர்: டபிள் மட்டும் இல்லை இன்னும் அநேக ரோல்கள்! கல்லூரி மாணவனாக கலாட்டா செய்யும் போதும், சாம்ராட் அசோ கனாக நடிக்கும்போதும், பரோபகாரத்தைப் பழி வாங்கும்போதும் அவருடைய நடிப்பில் எவ்வளவு முகபாவங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், உள்ளப் போராட்டங்கள்! அநேக இடங்களில் இங்கிலீஷிலேயே வெளுத்துவாங்குகிறார். லவர்ஸ் அறிமுகமே பிரமாதம்! 'பூப்பறிக்கக் கூடாது என்ற போர்டு கண்ணுக்குத் தெரியவில்லையா?' என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்கிற தோரணையே ஜோர்! அப்புறம் 'வெரி மிஸ்ச்சிவஸ் கேர்ள்'னு அலட்சியமாக...
சந்தர்: வில்லன் யார்?
சேகர்: பரோபகாரம் ரங்காராவ்தான் வில்லன். நம்பியார் அவருக்கு மேலே பெரிய வில்லன். எம்.என். ராஜத்தை மயக்கி, கடைசியில் வேறு வழியில்லாமல் மணந்துகொண்டு, பரோபகாரத்திற்கும் அவர் மகள் சாவித்திரிக்கும் தீங்கு செய்கிறார். இந்தப் படத்தில் எல்லோர் நடிப்புமே அற்புதம். ஆனால், அன்னையின் ஆணையை நிறைவேற்ற பரோபகாரத்தைப் பழிவாங்கும் படலம்தான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. இருந்தாலும் நாராயண மூர்த்தியின் டைரக்ஷனும், மாறனின் வசனங்களும் பிரமாதம். எல்லாவற்றையும்விட சிவாஜி நடிப்புதான்...
சந்தர்: சிகரமா..?
சேகர்: சாதாரண சிகரமல்ல; எவரெஸ்ட்!
(நன்றி: விகடன்.காம்)
This thread seems to be deserted. What happened? On the personal side, my PC was/is down and no access at office. Would be back soon and hope to see more activity by then.
Regards
அவர் பெரியவர்
சமீபத்தில் வீனஸ் பிக்சர்ஸ் "கல்யாண பரிசு" வெள்ளி விழா விஜயா கார்டனில் கொண்டாடப்பட்டது. நாகய்யாவை குணச்சித்திர நடிகர் என்று ஸ்ரீதர் குறிப்பிட்டார், நாகய்யா பேசுகையில் " நான் குணச்சித்திர நடிகன் என்று இளைஞர் ஸ்ரீதர் குறிப்பிட்டார். இருக்கலாம். அனால் அது பத்து ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது உங்கள் முன் ஒரு குணச்சித்திர நடிகர் இருக்கிறார். அவர் எந்த பாத்திரத்திலும் அற்புதமாக நடிக்கும் தகுதி உள்ளவர். அவர் தான் இந்தியாவின் பெருமையை உயர்த்தக்கூடிய ஒப்பற்ற கலைஞர்" என்று கூறிவிட்டு "இதோ இருக்கும் சிவாஜி கணேசனைத்தான் குறிப்பிடுகிறேன்" என்றார். சபையிலே கரகோஷம் வானைப் பிளந்தது. நாகய்யா அனுபவமும் வயதும் முதிர்ந்த உயர்ந்த நடிகர். அவர் சிவாஜி கணேசன் தன்னை விட உயர்ந்தவர் என்று கூறி மேலும் உயர்வு பெற்று விட்டார். அவர் பண்பு பாராட்டத்தக்கது.
சுஜாதா
சென்னை
பேசும் படம் - நவம்பர் - 1959
[நன்றி பாலகிருஷ்ணன்]
அன்புடன்
சிவந்த மண் வெற்றியை பற்றி இங்கே ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டோம். அண்மையில் சித்ராலயா கோபுவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன தகவல். சிவந்த மண் எங்களுக்கு மிகப் பெரிய வெற்றிப் படம். நாங்கள் செலவழித்ததை விட கூடுதலாக எங்களுக்கு லாபம் கிடைத்த படம். அதன் இந்தி பதிப்பு "தர்த்தி" தான் எங்களுக்கு கஷ்டத்தை கொடுத்தது. அது கூட வட இந்திய விநியோகஸ்தர்கள் எங்களை ஏமாற்றி விட்டனர். ஸ்ரீதர் அவர்களை பெரிதும் நம்பினார். ஆனால் உண்மையான வசூலை எங்களுக்கு சொல்லாமல் நஷ்டக் கணக்கு காண்பித்து விட்டார்கள் என்று சொன்னார்.
இதற்கும் மேல் ஸ்ரீதரே சொன்ன பதில்.
உங்களுக்கு சிவந்த மண் வெற்றிப் படம் இல்லை என்று சிலர் சொல்லுகிறார்களே?
(என்.என்.சுந்தர், திருவனந்தபுரம்)
அவர்கள் - இதையே வருமான வரித் துறை அதிகாரிகளிடம் போய் சொன்னால் - எனக்கு பெரிய உதவியாக இருக்கும்.
சித்ராலயா - 10.07.1970
அன்புடன்
ஜோ, நீங்கள் கொடுத்துள்ள வலைப்பூ இணைப்பில் ஆண்டவன் கட்டளை படத்திற்கு இவ்வளவு ரசிகர்களா என்று அவர் கேட்டிருக்கிறார். அந்த படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று அவரிடம் சொல்லுங்கள்.
"ஜோ, நீங்கள் கொடுத்துள்ள வலைப்பூ இணைப்பில் ஆண்டவன் கட்டளை படத்திற்கு இவ்வளவு ரசிகர்களா என்று அவர் கேட்டிருக்கிறார். அந்த படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று அவரிடம் "
Adhaane...
Dear friends,
Another new feature, rare information and images, added in our website, www.nadigarthilagam.com.
On 16th May 2009, Veerapandiya Kattabomman completes 50 years of its release. A function is being contemplated.
Await for more details.
Raghavendran.
WISH YOU ALL A VERY HAPPY AND COLORFUL HOLI
சித்ராலயா வார இதழ்களை [1970 வருடம் மே,ஜூன் மாத இதழ்கள்] புரட்டிக் கொண்டிருந்த போது மனதில் பளிச்சிட்ட எண்ணம், ஒரே நேரத்தில் நடிகர் திலகம் நடித்துக் கொண்டிருந்த படங்களின் எண்ணிக்கை தான். அந்த காலயளவில் நடிகர் திலகம் நடிக்க தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் இருந்த படங்கள்
எதிரொலி
ராமன் எத்தனை ராமனடி
சொர்க்கம்
எங்கிருந்தோ வந்தாள் [அந்நேரம் பெயர் வைக்கப்படவில்லை]
பாதுகாப்பு
இரு துருவம்
தங்கைக்காக
அருணோதயம்
குலமா குணமா
சுமதி என் சுந்தரி [பெயர் வைக்கப்படவில்லை]
பிராப்தம்
சவாலே சமாளி
தேனும் பாலும்
மூன்று தெய்வங்கள் [பெயர் வைக்கப்படவில்லை].
இவை அனைத்துமே அடுத்த பதினைந்து மாதங்களில் வெளியானது. இதை தவிர புனித யாத்திரை என்ற படம் வேறு, சில நாட்கள் ஷூட்டிங் நடந்தது. [அதில் ஷெர்வானி குர்தா அணிந்து தலையில் குல்லாய் அணிந்து நிற்கும் இஸ்லாமியராக நடிகர் திலகத்தின் ஸ்டில் அழகு].
அவர் எந்தளவிற்கு பிஸி என்பது பற்றியும் ஒரு சிறு குறிப்பு இருக்கிறது. 1970 வருடம் ஜூன் 1ந் தேதி பழனியில் ஒரு கல்யாணம். 2,3 தேதிகளில் அருணோதயம் படத்திற்காக கொடைக்கானலில் ஷூட்டிங்[முத்து பவழம் முக்கனி சர்க்கரை பாடல்], 4ந் தேதி சென்னை திரும்பி ஒரு நாள் டப்பிங்[எதிரொலி?], அன்று இரவு மல்லியம் கிராமத்திற்கு கிளம்பி சென்று அடுத்த மூன்று நாட்கள் சவாலே சமாளி ஷூட்டிங். திரும்ப வந்து எங்கிருந்தோ வந்தாள் ஷூட்டிங் நான்கு நாட்கள். மீண்டும் மல்லியம் சென்று 12ந் தேதி முதல் 15 வரை ஷூட்டிங். 16ந் தேதி காங்கிரஸ் பொதுக்கூட்டம், 17ந் தேதி நெல்லூரில் இயக்குனர் சி.வி.ஆர் கல்யாணம். மறுநாள் 18ந் தேதி சென்னையில் இயக்குனர் மாதவனின் சகோதரி கல்யாணம். அடுத்த இரண்டு நாட்கள் அருணோதயம் ஷூட்டிங். 21ந் தேதி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முதல்வர் கருணாநிதிக்கு நடத்தும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டது, பிறகு 6 நாட்கள் தங்கைக்காக ஷூட்டிங் ----
இப்படி ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார் நடிகர் திலகம்.
அன்புடன்
"இப்படி ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார் நடிகர் திலகம்.
"
Aw! Murali, inge dhaan enakku valikkudhu. Indha uzhaippu ellame vizhalukku iraichirukkar perumbaalum. Konjam selective-a irundhirukkalam...
ஜோ,
இந்த ஐந்தாம் பகுதியின் முதல் பக்கத்தில் இணைப்பு கொடுக்க வேண்டியவை சில உள்ளன. நடிகர் திலகத்தின் 80-வது பிறந்த தின விழா நிகழ்ச்சி [Oct 2009], ஆண்டவன் கட்டளை, குலமகள் ராதை மற்றும் இரத்த திலகம் விமர்சனங்கள் முதலியவை.
அன்புடன்
Randor Guy's review of NT's Thirumbi Paar under Blast from the Past section: http://www.hindu.com/cp/2009/03/13/s...1350291600.htm
This sounds like a very interesting filem with NT in negative role. The author vividly remembers NT saying that this performance was one of his career best. What makes it more interesting is that the movie came with journalistic and political satires (penned by MuKa), in which NT seems made a strong impact and delivered a powerful performance.
I haven't seen this movie and this writing makes it wanting to see it. Consider these:
1. Randor says: "During that period as the DMK was beginning to make its presence felt, the Movement was condemned by Pandit Jawaharlal Nehru, the then Prime Minister, as “Nonsense!” In a brilliant satirical stroke, Karunanidhi had Sivaji Ganesan utter these words several times, wearing dark glasses (a la Pandit Nehru!)".
*** I would love to see NT's action during this scene - should be a treat!
2. Randor says that NT appears a seducer. This is what he writes: "In the film, T. P. Muthulakshmi plays the dumb wife of an elderly husband (K. A. Thangavelu) who goes to work early. Sivaji Ganesan, a seducer, who sneaks into the dumb woman’s house, alters the clock to send the husband away well before the usual time. This sequence was mercilessly scissored by the censors and what was left lost its touch of satire and innuendo!. Sivaji Ganesan was brilliant playing the fraud to the hilt. Pandari Bai was his sister who in the climax offers herself to him."
*** NT acting as a seducer - the sequence must be brilliant. Unfortunately, the sensor played its role perfectly, but NT fans missed a great show. Remember Pudhiya Paravai, a close and seducing look at Saroja Devi during slow song sequence Unnai Ondru Ketpen - a clean NT stamp not to be missed.
3. It is happy to note that unlike Andha Naal, this movie fared well at the BO. It sounds like the movie made a huge impact and achieved a mini-cult status, as the author says this: Thirumbi Paar fared well at the box office and acquired the status of a mini cult film because it had political innuendoes. Remembered for Sivaji Ganesan’s brilliant performance, Karunanidhi’s whiplash political satire and pleasing music."
The movie was released in 1953 - our man was just 1yr old on big screen. Still, NT delivered a brilliant performance that too in negative role.
Additionally, he looks very dashing, handsome and stylish in the picture. It looks like the dress in the picture resembles that of Nehru's - so, he must be mimicking Nehru uttering "nonsense!" during this sequence.
[html:1ac5aa6507]
http://www.hindu.com/cp/2009/03/13/i...1350291601.jpg
[/html:1ac5aa6507]
Thanks and Regards
Murali,Quote:
Originally Posted by Murali Srinivas
great article.
I feel that if NT had reduced the quantity, we would have had better quality movies. I haven't seen some of these movies. Definitely, movies such as இரு துருவம் are not up to his standard. He could have easily avoided movies such as இரு துருவம், பிராப்தம், and so on.
One think that is striking is his versatility. Each of these movies that you mentioned here is of different genre. The speed in which he delivered different movie forms is truly amazing.
NT veterans:
I am not sure whether this question was asked before. Which movie first got the title card : நடிகர் திலகம் சிவாஜி கணேசன்? Even VP Kattabomman has just got: சிவாஜி கணேசன்
Thanks and Regards
I will do it :DQuote:
Originally Posted by Murali Srinivas
tac,
Thanks for posting that article from Hindu. Missed it yesterday. I haven't seen this movie for a very long time. Remember seeing it for the first time in the early 70s in Madurai Shanthi [known as Chandra Talkies during those days] as a morning show movie. Later saw it once more. That Paranthaaman character was a feather in NT's cap.
Regarding the quantity vs quality debate, we can go on arguing endlessly. NT himself in one of the Chitralaya issues (that I scanned through) during the same period has said that the commitments that he has [at that point of time] for his family, political leanings and charity makes him to do more films. But in spite of doing multiple shifts, the quality he dished out in every film is amazing. Can you believe that he shot for Chithirai maadham pournami neram song [RER] in the forenoon and acted as a mentally disturbed person who defies his elder brother only to be whip lasheed by him [EV] in the afternoon on the same day?
Iru Dhruvam was done for PS Veerappa. I have talked about this many times here. Ganga Jamuna was a Super Duper hit in Hindi. It had the Chambal valley dacoity and terror unleashed by dacoits on surrounding villages as the background that perfectly suited the Hindi audience. But Tamil audience relatively free from all such problems could not relate to it.
Same thing with Praptham. Done to help Savithiri. the original Milan in Hindi and it's Telugu version Mooka Manasalu [sorry guys if I had wrongly spelt it] done by ANR and Savithiri were Super hits. But in Tamil, the rebirth concept didn't go down well and pathos was a bit too much.
Regarding another query, the first film to show the title card as நடிகர் திலகம் சிவாஜி கணேசன் was Ambikapathy. The same has been documented in the Pesum Padam Dec issue of 1957.
Joe, take your time. Why I said was, if it had been there in the first page,as I told you on the other day, you could have even given that Aandavan Kattalai link to the blog writer (vetti payal) which would have shown him, how much the film is loved by so many people.
Regards
". Can you believe that he shot for Chithirai maadham pournami neram song [RER] in the forenoon and acted as a mentally disturbed person who defies his elder brother only to be whip lasheed by him [EV] in the afternoon on the same day?
"
Yeah, this is much more difficult than playin n roles in a movie where the n roles are shot over a period of months in sequence.
On Praaptham, the telugu version actually is not that bad. Again, more than the rebirth concept, I think that blindly aping the Godavari locales was the problem - who in TN can handle that much of water? Nammalam lifetime-la andha maadhiri river paarthiruppoma :-)