Thanks Mr.karthik and you are right.
Printable View
Thanks Mr.karthik and you are right.
நாலும் தெரிந்தவன் டைட்டில் கார்டில் திரையுலக இளவரசன் ரவி சந்திரன் என்று போடுவார்கள். ஆமாம் ஒரே ஒரு அரசன் நடிகர்திலகம். அவரே இளவரசராக மறு அவதாரம் எடுத்து தங்கை, தங்கசுரங்கம் ,திருடன், ராஜா என்று தூள் பரத்தியதில் ,இந்த கெட்ட குணங்கள் நிறைந்த இளவரசர் தொடர்ந்து சோபிக்க முடியாமல் ஓரங்கட்ட பட்டு விட்டார்.
மகேந்திரா சார்,
ரவியின் இரண்டாவது படமான நல்வரவு பற்றி ஏதேனும் விவரம் உண்டா? இருந்தால் பதியுங்களேன்.
நல்வரவு
தயாரிப்பு - எஸ்.வி. மூவீஸ்
தணிக்கை - 27.02.1964
வெளியீடு - 05.03.1964
தயாரிப்பாளர் - கே.என். நடராஜன்
வசனம் - வே.லட்சுமணன்
இசை - டி.சலபதி ராவ்
இயக்கம் - சார்லி, மணியம்
நடிகர்கள் - முத்துராமன், புஷ்பலதா
இந்தப் படத்தைப் பற்றி பிலிம் நியூஸ் அனந்தன் அவர்களின் திரைக்கலை புத்தகத்தில் தரப்பட்டுள்ள விவரங்கள் இவ்வளவே. இதில் ரவிச்சந்திரன் பெயர் இடம் பெறவில்லை. என்றாலும் அவருக்கு இது இரண்டாம் படம் என்பதில் ஐயமிருக்க வாய்ப்பில்லை.
ரொம்ப நன்றி ராகவேந்தர் சார். இதற்கு மேலும் இந்த படத்தை பற்றி தகவல் இருக்கா என்று பார்க்கிறேன்.
கலை நிலவின் நினைவலைகள் : 3
தங்கத் தம்பி [வெளியான தேதி : 26.1.1967]
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 26.1.1967
http://i1110.photobucket.com/albums/...8bf652236e.jpg
தொடரும்.....
அன்புடன்,
பம்மலார்.
அடிகளாரே, குஷிதானே...!
"தங்கத் தம்பி" 'இன்று முதல்' விளம்பரத்தைக் கண்டவுடன், குதூகலத்தில் mr_karthik வானத்துக்கும், பூமிக்கும் குதிப்பது மனக்கண் முன் தெரிகிறது...!
அன்புடன்,
பம்மலார்.
வானத்தை தாண்டியும் குதித்தேன். ரவியின் துடிப்பு எங்களுக்கும் இருக்காதா? Pleasant Surprise இதுதான். நன்றி pams .
Home
Music Dir.
Albums
Singers
Artists
Year
Search
TP Collections
Thanga Thambi Songs
தமிழ்
Album: Thanga Thambi
Cast:
Music: Old
Year: Not Available
Director: Not Available
Play Selected Play All Add to Playlist
Songs Singers Duration Lyrics
Azhuvadhrka Pirandhen P.Susheela 3:28 Not Available
Pozhudhellam Pesach Chollum P.Susheela 4:36 Not Available
Vetkam Enna Thendral Vandhu Thottalum P.Susheela 4:17 Not Available
Alukkoru muththam intha amma kannathile
Aaroro darling
1967 139’ b&w Tamil d Francis Ramanath pc Unmayal Prod. st/dial M. Karunanidhi lp Sundarrajan, Ravichandran, Vanisree, Bharati, Nagesh, Manorama, O.A.K. Thevar
Karunanidhi’s domestic melodrama about two loving brothers torn apart by their respective wives. Elder brother Varadan (Sundarrajan) marries Sundari (Vanisree). He wants younger brother Venu (Ravichandran) to marry a rich woman, but Sundari wants a poor and obedient sister-in-law. Although Sundari initially refuses pregnancy for fear of ruining her looks, she eventually bears a child at the same time as the meek sister-in-law Parvathi (Bharati). Parvathi raises both children, causing an estrangement between the brothers.
நாம் மூவர் படத்தில் சிங்கப்பூரு மச்சான் பாட்டும் ,அதற்கு ரவியின் நடனமும் எனக்கு பிடித்த ஒன்று.
ரவி இந்த பாட்டுக்கு ஆடும் அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை. side ways step எடுக்கும் நேர்த்தி, partition மேல் ஏறி எடுக்கும் steps என்று கிழித்திருக்கிறார். பாட்டும் பிரமாதம்.
இந்த டான்ஸ் steps ,expressions ,grace ,style ,Agility எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு அள்ளுகிறது.
நன்றி எஸ்வி சார்.
இணையத்தில் முதன் முறையாக...
புகுந்த வீடு திரைப்படத்தின் நூறாவது நாள் விழா காட்சிகள், பேசும் பட இதழிலிருந்து.
இரு பக்கங்களாக இடம் பெற்ற நிழற்படங்கள்..
1. முழுமையாக
http://i1146.photobucket.com/albums/...ps4a5ceabe.jpg
2. இரு பக்கங்களும் தனித்தனியாக
http://i1146.photobucket.com/albums/...psc4b368e4.jpg
http://i1146.photobucket.com/albums/...ps2ffc6546.jpg
நவநீதா பிலிம்ஸ் புகுந்த வீடு திரைப்படம் தமிழகமெங்கும் சிறப்பான வெற்றி பெற்றது. நூறு நாட்கள் ஓடிய இத்திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு கேடயங்களை வழங்கி கௌரவப் படுத்தினார். அதனுடைய காட்சியைத் தான் மேலே பார்க்கிறீர்கள்.
புகுந்த வீட்டிற்கு இளைஞர்களை, பள்ளி மாணவர்களை இழுத்து வந்து அதன் பிரம்மாண்ட வெற்றிக்கு துணை புரிந்தது ரவியின் மாடி வீட்டு பொண்ணு மீனா.
இதே கதாசிரியரின் அக்கரை பச்சைக்கு தன் அமைதியான நடிப்பினால் தாய்மார்களை, நடுத்தர வயதினரை இழுத்து வந்து ,அதை மிக பெரிய வெற்றி படம் ஆக்கியதும் ரவிதான்.
ஒரு காலத்தில் விவித் பாரதியை ஆக்கிரமித்த பாடல்
http://youtu.be/Jzd82-X3vFU
நான் உன்னைத் தேடுகிறேன்.... சுசீலா பாடியது.
http://youtu.be/rUJM7yslx50
இப்பாடல் டி.எம்.எஸ். பாடியது காணக் கிடைக்கவில்லை.
ஏ.எம். ராஜாவிற்கு கிட்டத் தட்ட மறுவாழ்வு தந்தது என்று கூட சொல்லலாம் இப்பாடலை... இன்று வரை சங்கர் கணேஷ் சிறந்த இசையமைப்பிற்கு ஒரு சான்றாகவும் விளங்கும் பாடல் .... மறக்க முடியாத பாடல்
செந்தாமரையே செந்தேனிதழே..
http://youtu.be/JKAcq3l6FY4
எல்லோரும் நிமிர்ந்து நிற்க....
விரைவில் நிமிர்ந்து நில்.
முதுகு வலிக்குதே...
நீயே சொல்லு எங்கே என்று ... rare song .நன்றி. மாடி வீட்டு பொண்ணு மட்டும் காணோம்.
எதிரிகள் ஜாக்கிரதை ஜிலுக்கடி ஜிலுக்கடி ஜிகினா ஜாலி பாடல். எனக்கொரு ஆசை, நேருக்கு நேர் நின்று நல்ல duets .ரவி-விஜி pair நல்லாவே இருக்கும்.(ரவியோடு யார் வந்தாலும் எடுபடுவர்.)
ரவி அவர்களின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்ட வினோத் சாரூடன் நாமும் ரவியை நினைவு கூர்வோம்.
http://youtu.be/lwgAxxfx2TI
Plan to write about Ravichandran sir movies review weekly once
Hope you all encourage it
You are móst welcome Rahulram.Write only about our Ravichandran.
நானும் கூட வரவேற்கிறேன். கூடிய மட்டிலும் தமிழில் எழுத முயற்சியுங்கள். இன்னும் சுவையாக இருக்கும்.
இந்த கட்டுப்பாடு எதற்கு?. 'ரவிச்சந்திரனைப்பற்றி மட்டும்' என்றால் என்ன பொருள்?. உடன் நடிக்கும் பாரதி, காஞ்சனாவைப் பற்றிக்கூட எழுதக்கூடாது போலும் என்று எடுத்துக்கொள்ளப்போகிறார்...
RahulRam,
I am looking forward to your Reviews on Ravi Movies.
இந்த திரியில் என் முதல் பதிவு
பம்பாய் மெயில்109
இந்த படம் பத்தி இந்த திரியை பார்க்க வில்லை என்றல் எனக்கு தெரிந்து இருக்காது
இந்த திரியில் சாரதா மேடம் மற்றும் பலர் எழுதியதை படித்த பின்பே (கண்டந்த 3 வருடமாக ரவி சார் மற்றும் ஜெய் சாரின் படங்களை தேடி அலைந்தேன் இன்றும் தேடி கொண்டே இருக்கிறேன் என் தலையை பார்த்தல் பல DVD கடைகாரர்கள் ஒடிகிற அளவுக்கு , ஏனென்றால் கிடைக்காத பழைய படங்களை கேட்டல் வேற என்ன செய்வார்கள்
இந்த படத்தை ராகவேந்திர சார் யின் பதிவும் மற்றும் வாசு சாரின் ஸ்டில் ஆவலை தூண்டியது . தேடி அலைந்ததுக்கு பலன் நேற்று கிடைத்தது
இந்த படம் பார்த்தேன் (link கீழே கொடுக்கப்பட்டு உள்ளது)
இந்த படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்திருக்கும் ஏனென்றால் நடிகர்கள் தோற்றம் மாறி கொண்டே இருந்தது
படம் ஆரம்பம் முதலே விறுவிறுப்பு . முதல் காட்சியில் ஒரு ஆள் புதையல்க்கான பிளான் யை பூர்த்தி செய்கிறார் . ஆனால் அவர் தன வேலை ஆட்களால் கொலை செய்ய படுகிறார் . அந்த வேலை காரர்கள் (மனோகர் மற்றும் ராமதாஸ்) அந்த இறந்த மனிதர்க்கு ஒரு சின்ன மகன் இருக்கிறார் . அவர் தப்பி ஓடும் பொது ரயில்வே gaurd மேஜர் அந்த பையனை வளர்கிறார் (அந்த பையன் தான் ரவி)
படத்தின் பெயர் போட்டு முடிந்த உடன் ஒரு சண்டை காட்சி . ஓடும் ரயிலில் (ரவிக்கும் ராமதாச்ச்க்கும்) ஆமாம் கதை சில வருடங்கள் முன்னாடி சென்று விட்டது .
அந்த thirudarkalai ரவி piduthu கொடுக்கிறார் .சங்கீதா உடன் காதல் வேறு . சங்கீதா VKR யின் மகள் . VKR மற்றும் மேஜர் நண்பர்கள் . VKR யின் குடும்ப போலீஸ் தேங்காய் ஸ்ரீனிவாசன் (குடும்ப போலீஸ் தான் தப்பாக எழுதவில்லை )
ரவி தன் அப்பாவை கொன்றவர்களை பழி வாங்க துடிக்கிறார் . ராமதாஸ் யை பார்த்த உடன் அவருக்கு தன் பழைய நினைவு வருகிறது . ராமதாஸ் யை விசாரிக்க என்னும் பொது அவரை கொன்று விடுகிறார்கள் (ரவி ஒரு துப்பறியும் அதிகாரி ). ரவி க்கு கிடைத்த ஒரே குளு கொலை செய்ய பயன் படுத்திய கார் நம்பர் plate . அதை கொண்டு கார் mechanic சுரளி ராஜன் யின் உதவியை நாடுகிறார் . இடையில் பாம்பே மெயில் 109 என்ற பெயரில்( Spider man டிரஸ்) கள்ள கடத்தல் கும்பலை பந்து ஆடுகிறார் . ( பாம்பே மெயில் என்ற train யில் தான் ரவியை மேஜர் கண்டு eduthaar) வில்லன் ஆட்கள் அதே பெயரில் குழப்பம் விளைவிக்கிறார்கள் .
அந்த புதயல்க்கு வழி சொல்லும் map பாதி VKR விடம் இருக்கிறது . மீதி பாதியை கை பற்ற மனோகர் ஆட்கள் முயல்கிறார்கள்
ரவி எதை எப்படி முறி அடிக்கிறார் என்பதே கிளைமாக்ஸ் .
இந்த படத்தின் கதை வசனம் நடிகர் VKR இசை: MSV . இயக்கம் TP சுந்தரம் .
ரவி இந்த படத்தில் கொஞ்சம் ஓல்ட் லுக் யில் இருக்கிறார் . அனால் உடை அலங்காரம் பிரமாதம் . பைஜாமா குர்தா, ஜெர்கின்ஸ் உடைகள் பிரமாதம் .
தேங்காய் நகைச்சுவைக்கு உத்தரவாதம் . அதுவும் அவர் அடிகடி சொல்லும் வார்த்தை "all the constables follow me . typical தேங்காய் ஸ்டைல் .
கட்டுவேன் கையில் உன்னை பாடல் தேன்.
இது VKR யின் சொந்த படம் .
ஒரு rare படம் பத்தி அசை போடா vaaipu கிடைத்ததுக்கு நன்றி
Movie link 12 parts:
http://www.youtube.com/watch?v=xTcOCovLdPo
Rahul,
It is really refreshing to see your review on Bombay Mail . There are two movies suffered due to extended production time are Bombay Mail, Mayiladum Parai.
Bombay mail is an average entertainer and Ravi was little haggered in the Film.
It is really heartening to see your effort and pain and we are thankful.
Pl.continue your good effort in Ravi Thread.
You take Nimirnthu Nil as your next Review Film.
Dear Gopal Sir,
Thank you for your comments
Sorry I have not watched Nimrinthu Nil so its not possible to write
But have many rare movies (at least for me) which I will write in due course possibly once in a week
அன்புள்ள ராகுல்ராம் சார்,
தங்களின் 'பம்பாய் மெயில் 109' விமர்சனப்பதிவு நன்றாக உள்ளது. முதல் நன்றி எங்கள் வேண்டுகோளை ஏற்று தமிழில் பதிவிட்டதற்கு. ஆங்கிலத்தில் பதிவிடுவதை விட தமிழில் பதிக்க நேரமும் சிரமமும் அதிகம் என்பது தெரியும். இருந்தாலும் தமிழில் பதிவிட்டபின் அந்த மகிழ்ச்சி எல்லையில்லாதது என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் தொடர்ந்து (தமிழிலேயே) அசத்துங்கள்.
பம்பாய் மெயில் 109 படத்தை நானும் பார்த்திருக்கிறேன். ரவிச்சந்திரன் படங்களைப்பொறுத்தவரை கலகலப்பும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிச்சயம் என்பதற்கு இப்படமும் ஒரு உதாரணம். (சில குடும்ப செண்டிமெண்ட் படங்களில் நம்மை சோதித்திருக்கிறார் என்பதும் உண்மை). அவரது அறிமுகக்க்காட்சியை இன்னும் சற்று நன்றாகக் காட்டியிருக்கலாம். ரயில் நிலையத்தில் வந்திறங்கும்போது, நன்றாக தூங்கிஎழுந்தவர் போல உப்பிய முகமும் சிறுத்த கண்களுமாக இருப்பார். ஆனால் ஸ்டண்ட் காட்சிகளில் தூள்பரத்தியிருப்பார். சங்கீதா நல்ல அழகு, ரசிக்கலாம். ஆனால் அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பது வருத்தமே.
நீங்கள் சமீபத்தில் பார்த்திருப்பதால் பாடல்களை ஞாபகம் வைத்துள்ளீர்கள். நான் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் ஜெயமாலினி பாடியாடும் "நாயுடு மாமா.. நாயுடு மாமா.. நல்லா என்னைப்பாத்துக்கோ, ஆயிரம் ரூபாய் நோட்டை வீசி ஆசைதன்னைத் தீர்த்துக்கோ" என்ற பாடல் மட்டுமே நினைவில் உள்ளது. ("கர்மம்டா.. எந்தப்பாட்டைப்போய் நினைவில வச்சிக்கான் பாரு" என்று சிலர் முணுமுணுப்பது தெரிகிறது).
நீங்கள் பார்த்த ரவியின் படங்கள், உங்களிடம் உள்ள ரவியின் படங்களைப்பற்றி முதலில் எழுதுங்கள். இன்னொன்று, ஏற்கெனவே சாரதா அவர்கள் அந்தப்படங்களைப்பற்றி எழுதியிருந்தாலும் அதற்காக அவற்றை எழுதாமல் அவாய்ட் பண்ணவேண்டாம். அவர் கோணத்தில் அவர் பார்வையில் அவர் எழுதியிருந்தாலும், உங்கள் பாணியில் நீங்களும் அவற்றைப்பற்றி அலசுங்கள். 'எத்தனை கோணம் எத்தனை பார்வை'.
பம்பாய் மெயில் 109 அலசலுக்குப்பாராட்டுக்கள்...
அன்பு ரகுராம் சார்
பாம்பே மெயில் 109 பதிவு மிக அருமை நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம். நான் பர் உனிவேர்சிட்டி படித்து கொண்டு இருந்த நினைவு நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில்பொங்கல் அன்று பார்த்த எண்ணம் mgr சங்கீத ஜோடி . v.கே.ராமசாமி தயாரிப்பில் உருவான மற்றுஒரு திரை படம் ருத்ர தாண்டவம் என்று நினைவு விஜயகுமார் சுமித்ரா ஜோடி இதே கால கட்டத்தில் வெளி வந்தது நமது போரும் ஹப் படித்தால் நிறைய பழைய நினைவுகள்
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
Dear KArthik Sir,
Thanks for your appreciation . Will definitely write about many Ravi sir movies including which has been given by Saradha mam, will alternate between well known movies and rare ones ( as long as I could)
டில்லி மாப்பிள்ளை
இந்த படம் பற்றி அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை .
இந்த படத்தில் ரவிச்சந்திரன் உடன் சோ , ராஜஸ்ரீ , சச்சு, VKR , OAK தேவர் மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்
கதை :
VKR ஒரு மிக பெரிய செல்வந்தர் அவருக்கு இரண்டு மகன்கள் ஒருவர் சோ மற்றும் ஒருவர் ரவிச்சந்திரன் . VKR யின் தங்கைக்கு ஒரே பெண் . அவர் சச்சு . அவர் வீடு வேலைக்காரியின் மகள் ராஜஸ்ரீ . ராஜஸ்ரீ யும் , சச்சு வும் அக்க தங்கை போல் பழகுகிறார்கள் .
VKR க்கும் அவர் தங்கைக்கும் 15 வருடம் சண்டை . காரணம் VKR யின் குணம் . அவர் பழைய பஞ்சகம் , தவற பண ஆசை வேறு .
VKR க்கும் அவர் தங்கை க்கும் இருக்கும் பிரச்னையை தீர்க்க அவர் குடும்ப நண்பர் OAK தேவர் முயல்கிறார் .
VKR யின் மகன்களுக்கு அவர் போக்கு பிடிக்கவில்லை . ரவிச்சந்திரன் அவரை எதுர்கிறார் . VKR யின் சொத்துகளை
தொழிலாளிகளுக்கு குடுக்க எண்ணுகிறார் .
சோ பைத்தியம் போலே நடித்து VKR யின் சொத்துகளை ரவி உடன் சேர்ந்து எழைகுளுக்கு உதவுகிறார்
VKR ரவிச்சந்திரன்க்கு ஒரு பணக்கார பெண் யை மனம் முடிக்க எண்ணுகிறார் . இதை அறிந்து கொண்டு ரவி வீட்டை விட்டு ஓடி விடுகிறார் .
அவர் ஊட்டியில் ஒரு பங்களாவில் வேலைக்கு சேர்கிறார்
இந்த நேரத்தில் vkr மற்றும் சோ ஊட்டி வருகிறார்கள் . இந்த பக்கம் vkr யின் தங்கை மற்றும் ராஜஸ்ரீ அவர் தயார் அதே பங்களா வில் தங்குகிறார்கள் .
vkr தன மகன் யை அங்கே பார்த்து அதிர்ச்சி அடைகிறார் . ஆனால் ரவி தன தந்தை மனம் திருந்தும் வரையில் தான் இப்படியே இருக்க போவதாக சொல்கிறார்
vkr தன் தங்கை உடன் சமரசம் செய்து கொள்கிறார் . தன் மகன்க்கு , தன் தங்கை மகளை உடன் கல்யாணம் பண்ண யோசிக்கிறார் . அவர் ஒரே கண்டிஷன் வேலைக்காரியும் அவள் மகளும் இங்கே தங்ககூடாது என்பது தான் . vkr யின் தங்கை ராஜஸ்ரீ தான் தன் மகள் என்று பொய் சொல்லி , சச்சு வையும் , ராஜஸ்ரீ யும் அவுட் ஹவுஸ் யில் தங்குகிறார்கள் .
சச்சு - சோ வுக்கும் காதல் .
ரவி - ராஜஸ்ரீ க்கும் காதல்
ரவி படும் கஷ்டங்களை பார்த்து vkr மனம் கொஞ்சம் மாறுகிறது
தன் மகன் ( ரவி) டெல்லி யில் இருபதாக தன் தங்கை யிடம் பொய் சொல்லி விடுகிறார் . ரவி யும் இதுக்கு உடன் படுகிறார் .
கடைசியில் உண்மை தெரிந்து கல்யாண பெண்களை கடத்துகிறார்
அப்பறம் என்ன கிளைமாக்ஸ் தான்
இந்த படத்தின் கதை அய்யா பிள்ளை, திரைகதை , வசனம் : ma லக்ஷ்மன் கேமரா: கர்ணன் , இசை : KV மகாதேவன் , தயாரிப்பு : vkr , இயக்கம் : Devan
பாடல்கள் அருமை :
முதல் பாடல் : சோக் தான் ஜாலி தான் , சச்சு , ராஜஸ்ரீ அறிமுகம் ஆகும் பாடல் .
ஜிங்களே ஜிங்களே : பாடல் டிபிகல் ரவி சார் பட பாடல் , அதாவது அவர் படத்தில் வரும் டீசிங் சாங் ஆனால் இதில் சுரளி யும் மனோரமா வும் இதில் கலக்குகிறார்கள்
ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் ; தத்துவும் மற்றும் காதல் பாடல் , எனக்கு மிகவும் பிடித்த பாடல் . அனுபவம் புதுமை பாடல் ஸ்டைல் யில் , நைட் effect பாடல் உபயம் வாலி சார்
மலை முடியில் பனி அழகு பாடலில் ஊட்டி பார்வையாளர்கள் க்கு கண்களுக்கு விருந்து .
படாத பாடல் மரத்த : ஒரு டூயட் பாடல் . சுமாரான பாடல்
ரவி சார் படத்தில் ஒரே துருதுரு நடிப்பு , சண்டை காட்சியில் வேகம் . அதுவும் ஊட்டி யில் கார் ச்சே காட்சி ஒரே வேகம் கேமரா : கர்ணன் ( ஜெய் சார் பட இயக்குனர் ) சோ மற்றும் ரவி இருவரும் காமெடி யில் கலக்குகிறார்கள் . சோ அரசியல் வசனம் இல்லாமல் நம்மளை சிரிக்க வைக்கிறார் . அதுவும் டின்ன்னிங் டேபிள் யில் அவர் அடிக்கும் லூட்டி, ரவி ஓடி போன உடன் அவர் அனைவருக்கும் கடிதம் எழுதுவது டாப் கிளாஸ் .
ராஜஸ்ரீ அழகாக இருக்கிறார் , வேலைகாரி மாதிரி நடிக்கும் பொது கொஞ்சம் நடிக்கிறார் .
சச்சு நகைச்சுவைக்கு நகைச்சுவை , நடிப்பிலும் தூள்
vkr வழக்கம் போலே நேர்த்தி
கிளைமாக்ஸ் காட்சியில் ஜோடி மாறி மாறி அமர்வது நல்ல நகைச்சுவை
மொத்தத்தில் நல்ல நகைச்சுவை படம் ( without double meanings )
Clean fun entertainment .
Movie Link
http://www.youtube.com/watch?v=H9WAspPKKeU
Dear GK Krishna Sir,
Thanks for your appreciation
Delhi Mapillai is one of the clean entertainers of Ravi and enjoyable one. Rahul ,Going is very good. Thanks to you.
R. Mahendra Raj has shared a video with you on YouTube
நான் போட்டால் தெரியும் - Naan pottaal theriyum podu
by goldtreat
I am sorry for rudely interrupting this thread on our icon, Ravichandran. I was looking out for the above song for a very long time and lo, I found it on Youtube at last. I tried to copy & paste to share in this thread but was unsuccessful. Can anyone out there post it in this thread?
I must tell you that Ravi's stunts whilst miming Kaviarasar's song is unparallelled in the Tamil film history. I may be wrong but I can only recollect MGR in Aadi Vaa (Arasa Kattalai) and Kamalhassan in Saantha Pottu (Devar Magan) but both were not full length stunts like how Ravi did it in this unique song. By all standards this is one hell of an entertainment song with all the dishum-dishum effects by MS Viswanathan. Bye the way, this song was 'dedicated' to counter Karunanidhi for his fault-finding in Kannadhasan's poems.