தங்களின் மனம் கனிந்த பாராட்டுகளுக்கு என் தலையாய நன்றிகள் பம்மலார் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
Printable View
தங்களின் மனம் கனிந்த பாராட்டுகளுக்கு என் தலையாய நன்றிகள் பம்மலார் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் சந்திரசேகரன் சார்,
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முடித்து சிறப்பான பணிபுரிந்தமைக்கு தங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களும் நன்றிகளும் சார்.
அன்புடன்,
வாசுதேவன்.
வாசுதேவன் சார்,
'வசந்த மாளிகை'யில் நடிகர்திலகத்தின் உடையலங்கார அணிவகுப்பு பிரமாதம். மிகவும் சிரமப்பட்டு திரட்டியிருக்கிறீர்கள். உங்கள் ஆல்பம் பார்த்தபிறகுதான் அப்படத்தில் நடிகர்திலகம் இத்தனை உடையணிந்து வருகிறாரா என்று ஆச்சரியமாக இருக்கிறது. படம் பார்க்கும்போது, அவர் நடிப்பிலேயே மனதைப்பறிகொடுத்து விடுவதால் இதைக்கவனிக்கத்தோன்றவில்லை. சரியாகச்சொன்னால் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு உடையணிந்து நடித்திருக்கிறார்.
இதில் இன்னொரு ஆச்சரியம், இவரால் அந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போக முடியும், இந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போக முடியும் என்று நமக்கு உணர்த்தும் வகையில், வசந்த மாளிகை படத்துக்கு அடுத்த படமான 'நீதி' படத்தில் டைட்டில் முதல் வணக்கம் வரை ஒரே உடை. 'எங்களது பூமி' பாடலுக்கு மட்டும் இன்னொரு உடையான ஒரு வெள்ளை ஜிப்பா பைஜாமா.
எனவே 'நீதி' படத்தின் உடையலங்காரத்தை நீங்கள் பதிப்பதாயிருந்தால், என்ன தலைகீழாக நின்றாலும் இரண்டு ஸ்னேப்புக்கு மேல் போடவே முடியாது.
1) டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்ட், சட்டை
2) வெள்ளை ஜிப்பா, பைஜாமா
கதை முடிந்தது.
இப்போது துவங்கியிருக்கும் 'திருடன்' பட ஆல்பத்துக்கும் பாராட்டுக்கள்.
DEAR KUMARESAN SIR,
There was no ad for VM release in sunday newspapers,what is the reason?
டியர் கார்த்திக் சார்,
தங்களின் அன்பான பாராட்டுதல்களுக்கு என் பணிவான நன்றிகள். உங்கள் கூற்று நூற்றுக்கு நூறு சரியே. நம்மவரால் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போக முடியும். ஒரு ட்ரெஸ்ஸே ஆனாலும் நீதியில் அந்த புளூ கலர் ஜீன்சும்,ஷர்ட்டும் அவருக்குத்தான் எத்தனை அழகு! அது கூட இடது பக்க தோள்பட்டையில் சற்று கிழிந்து போய் இருக்கும். வெள்ளை ஜிப்பா, பைஜாமாவை ஜெயகௌசல்யா இவரிடம் தந்து போட்டுக் கொள்ளச் சொன்னவுடன் ஷர்ட்டை மட்டும் கழற்றிவிட்டு வெள்ளை ஜிப்பாவை மட்டும் போட்டுக் கொண்டு வருவார். அந்த ஜிப்பாவுக்காக பிறந்தது போல அவ்வளவு ஸ்லிம்மாக தரிசனம் தருவார். உங்களுக்குத் தெரியாததா? ஜெயகௌசல்யா உடனே "அண்ணா! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கண்ணா!" என்று பாராட்டுவார். உண்மையும் அதுதானே! அவர் ஒருவரைத் தவிர வேறு யார் அத்தனை அழகு? நீதியை நினைக்க வைத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார். உங்களுக்காக ஒரு சிறிய அன்பளிப்பு.
http://3.bp.blogspot.com/_2I2hYF2DQt...5.15.07%5D.jpg
http://udhayamgold.files.wordpress.c...pg?w=240&h=271
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
"திருடன்", "நீதி" ஆல்பங்களை வெளியிட்டு திருடனுக்கு நீதி கிடைக்கச் செய்துவிட்டீர்கள் !
[பலமான சாட்சியாக mr_karthik இருக்கும்போது நீதி கிடைக்காமலா போய்விடும் !]
அன்புடன்,
பம்மலார்.
1.10.2011 : 84வது சிவாஜி ஜெயந்தி
சுவரொட்டிகள்-பதாகைகள் ஆல்பம் [தொடர்ந்து நிறைகிறது]
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4713.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4717.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4712.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4719.jpg
அன்புடன்,
பம்மலார்.
'திருடன்' திரைவிழா தொடர்கிறது...
'நினைத்தபடி...கிடைத்ததடி... வராதவன் வந்துவிட்டான்'
'திருடன்' திரைக்காவியத்தில் நடிகர் திலகத்தின் படு ஸ்டைலான நடைகளிலும், நடிப்பிலும் நம் மனதை கொள்ளை கொண்டு போகும் அசத்தலான 'நினைத்தபடி... கிடைத்ததடி... வராதவன் வந்துவிட்டான்' பாடலின் வீடியோக் காட்சி. ரசிக்க ஆரம்பிப்போமா?...
http://www.youtube.com/watch?v=LPK9D...yer_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
Dear Mr. Kumaresh
Bit concerned i could not see any ad at Lavanya about V.M. releasing dates. Please confirm it would be great if V.M. release dates are announced early.
JAIHIND
M. Gnanaguruswamy
திரு.வாசுதேவன் அவர்களே! தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
திருடன், நீதி அணிவகுப்பு அருமை. தொடரட்டும் உங்கள் சீரிய பணி.
Text of our hubber Subramaniam Ramajayam sent to me through email :
Quote:
From:
Ramajayam Subramanian <.......@yahoo.com>
Sent: Wed 12/10/11 12:13 AM
To:
.......
Priority: Normal
Subject:
nadigar thilagam birthday coverage
dear raghavendran,
we hae enjoyed NADIGARTHILAGAM'S BIRTHDAY CELEBRATIONS
throgh hub and yourwebsite very well.great job done by all hubbers and my sincere thanks toall members ammalar.vasudean chandrasekar and every hubber wo made it glorious. great and simply suerb. as i am not able to send thisdirectly to the hubon techinical reasons,iam sending here with a request to forwardto hub.
LONG LIVE NADIGAR THILAGAM FAME AND GLORY
GREETINGS
ramajayam
Dear Pammalar Vasudevan Raghavendra Murali Sir
Our NT 83RD Birthday coverage was superb
HI harish, Guru
i was not there in Bangalore I came yesterday we all met the distributor he has got some problem with the theater owners regarding rent, so we are planning to release the VM movie by us, i am negotiating the rates, our NT fans will release the movie shortly
regards
kumareshanprabhu
அன்பு நண்பர்களே!
அக்டோபர் 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' மாத இதழில் நடிகர் திலகம் சிவாஜியின் 84-ஆவது பிறந்த நாள் சிறப்பிதழில் வெளி வந்துள்ள நடிகர் திலகம் நடித்து வெளிவராத இரு படங்களின் அபூர்வ ஸ்டில்ஸ் உங்கள் பார்வைக்காக இதோ. அனைவரும் வாங்கிப் போற்றிப் பாதுக்காக்கப் பட வேண்டிய அற்புத பொக்கிஷம் இந்த இதழ். வாங்கிப் பயனுறவும்.
http://i1087.photobucket.com/albums/...Photo-0043.jpg
http://i1087.photobucket.com/albums/...Photo-0045.jpg
http://i1087.photobucket.com/albums/...Photo-0046.jpg
http://i1087.photobucket.com/albums/...Photo-0047.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
வாசுதேவன் சார்,
வெளிவராத படங்களில் இருந்து நடிகர்திலகத்தின் ஸ்டில்கள் அருமை. பதிப்பித்த இதயக்கனி ஆசிரியருக்கும், எங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய உங்களுக்கும் நன்றி.
முதல் படம் (தங்கவேலு, சாவித்திரி இடம் பெற்றது) அனேகமாக 'பட்டதாரி' படமாக இருக்கலாம். பீம்சிங் இயக்கத்தில் துவக்கப்பட்டு நின்றுபோன படம்.
பம்மலார் சார்,
முரளி சாரும் சாரதாவும் உங்கள் கைகளைக்கட்டிப் போட்டுவிட்டார்கள் என்பதற்காக 'திருடன்' பட விளம்பரங்களைக்கூடவா பதிக்கக்கூடாது?.
'திருடன்' பட முதல் வெளியீடு மற்றும் 50வது நாள் விளம்பரங்களைக்காண ஆவலாக இருக்கிறோம். பராசக்தி நாள் வருவதற்குள் மனமிரங்குங்கள், ப்ளீஸ்..
டியர் வாசுதேவன் சார்,
இதயக்கனி இதழில் வெளிவந்த வெளிவராத (any confusion?) படங்களின் நிழற்படங்கள் சூப்பர்... நன்றிகள் பல...
டியர் கார்த்திக்
தங்களின் ஆவலை ஓரளவு பூர்த்தி செய்யும் வண்ணம் திருடன் திரைக்காவியம் நடைபெறும் போது பொம்மை மாத இதழில் வெளி வந்த விளம்பரத்தின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...udanad01fw.jpg
அன்புடன்
வாசுதேவன் அளித்துள்ள இதயக்கனி இதழின் நிழற்படத்தின் மற்றொரு வடிவம் இதோ
http://i872.photobucket.com/albums/a...11rare02fw.jpg
டியர் ராகவேந்திரன் சார்,
நன்றிகள் பல. திருடன் பொம்மை இதழ் விளம்பரம் கண்களுக்கு பெருவிருந்து. பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். செம சூப்பர். பாராட்டுக்களும் நன்றிகளும்.
அன்புடன்,
வாசுதேவன்.
'பராசக்தி' அருள் பெற்ற குணசேகரன் விரைவாக வருகிறார்.
http://i1087.photobucket.com/albums/...5858410979.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Dear goldstar Satish,
With regard to NT's 84th birthday happenings in the Temple City, I am not sure whether our fans have taken snaps of the posters & banners or of the Sunday PPT gala. I will try my level best !
Madurai flash as of now is, NT's 84th birthday function which should have taken place on 9.10.2011 (Sunday), now being postponed to 20.11.2011 (Sunday) due to local body elections. This birthday function is an annual celebration & get-together and the credit for it fully goes to Madurai Arasamaram Chevaaliye Sivaji Groups.
Regards,
Pammalar.
Dear Ramajayam Sir,
Thank you very much !
Dear kumareshanprabhu Sir,
My sincere thanks for your praise & my best wishes to you all for screening VM.
Regards,
Pammalar.
டியர் mr_karthik,
'மனமிரங்குங்கள்' போன்ற பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சகோதரர்களாகிய நமக்குள் எதற்கு? இன்றில்லாவிட்டாலும் வரும் காலங்களில் அனைத்து ஆவணங்களும் இங்கே பதிவாகத்தான் போகிறது.
"திருடன்" 50வது நாள் விளம்பரம் கிடைத்தவுடன் அவசியம் இடுகை செய்கிறேன். நீங்கள் கேட்ட மாத்திரத்தில் அரிய வெளியீட்டு விளம்பரத்தை நமது ரசிகவேந்தர் மிக அருமையாக அளித்துவிட்டாரே ! அவருக்கு நமது நன்றி !
[குடும்பம்-அலுவல் என்கின்ற பெரும் ஜாடிக்குள் பெரும்பகுதிநேரம் இந்த ஜீபூம்பா மீண்டும் அடைபட்டுவிட்டது. மிக விரைவில் ஜாடியிலிருந்து வெளிவந்து இங்கே செய்ய வேண்டியவற்றை செய்கிறேன் !]
அன்புடன்,
பம்மலார் என்கிற பம்மல் ஆர். சுவாமிநாதன் என்கிற ஜீபூம்பா [உபயம் : தாங்கள்]
சிவாஜி இசை விழா
[2.10.2011 : காமராஜர் அரங்கம் : சென்னை]
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4707.jpg
விழாவில் இசைக்கப்பட்ட கீதங்கள்
1. மல்லிகை முல்லை - அண்ணன் ஒரு கோயில்(1977)
2. பால் போலவே.../ நாளை இந்த வேளை பார்த்து - உயர்ந்த மனிதன்(1968)
3. வாழ நினைத்தால் வாழலாம் - பலே பாண்டியா(1962)
4. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - பாபு(1971)
5. நதி எங்கே போகிறது - இருவர் உள்ளம்(1963)
6. நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா - என் மகன்(1974)
7. வெள்ளிக்கிண்ணந்தான் - உயர்ந்த மனிதன்(1968)
8. ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ - கை கொடுத்த தெய்வம்(1964)
9. காணா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா(1958)
10. நினைவாலே சிலை செய்து - அந்தமான் காதலி(1978)
11. விண்ணோடும் முகிலோடும் - புதையல்(1957)
12. கேட்டவரெல்லாம் பாடலாம் - தங்கை(1967)
13. இடை கையிரண்டில் ஆடும் - விடிவெள்ளி(1960)
14. கனவின் மாயா லோகத்திலே - அன்னையின் ஆணை(1958)
15. மலையே உன் நிலையே - வணங்காமுடி(1957)
16. மலரே குறிஞ்சி மலரே - டாக்டர் சிவா(1975)
17. கொடுத்துப்பார் பார் பார் உண்மை அன்பை - விடிவெள்ளி(1960)
18. கங்கை யமுனை - இமயம்(1979)
19. கண்டேனே உன்னைக் கண்ணாலே - நான் சொல்லும் ரகசியம்(1959)
20. பூங்காற்று திரும்புமா - முதல் மரியாதை(1985)
21. வேலாலே விழிகள் - என்னைப் போல் ஒருவன்(1978)
குறிப்பு:
1. இவ்விழாவில் ஒரே ஒரு பாடல் மட்டும் இசைக்குழுவினரால் பாடப்படாமல் ஒரிஜினல் ஒலி-ஒளிக் காட்சியாக திரையில் காண்பிக்கப்பட்டது. அந்த பெருமைக்குரிய பாடல், "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி(1954)" திரைக்காவியத்தில் இடம்பெற்ற நமது நடிகர் திலகத்திற்கு சந்திரபாபு பின்னணி பாடிய 'ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தாலி கட்டினா ஜாலி லைஃப்' பாடல். இந்தப்பாடலில் நடிகர் திலகத்தின் நடனத்திற்கும், வாயசைப்புக்கும், நடிப்பிற்கும் அரங்கமே அதிர்ந்தது.
2. "சங்கீத சக்கரவர்த்தி" என்கின்ற தலைப்பில், நமது நடிகர் திலகம் திரைக்காவியங்களில் வாயசைத்துப் பாடிய, இசைக்கருவிகளை வாசித்த முக்கிய ஒலி-ஒளிக்காட்சிகள் சற்றேறக்குறைய அரைமணி நேர குறுங்காவியமாக திரையில் காண்பிக்கப்பட்டது. Audience Spellbound !
3. இந்த ஒலி-ஒளிக்காட்சிகளையெல்லாம் நேர்த்தியான ஒலி-ஒளிப்பேழையாக தொகுத்துத்தந்தவர் வேறு யாராக இருக்க முடியும் ?! எல்லாம் நமது நடிகர்திலகம்.காம் தான் !
அன்புடன்,
பம்மலார்.
காமராஜர் அரங்க நிகழ்ச்சித் தொகுப்பு அருமை. நன்றி பம்மலார் அவர்களே!
//'மனமிரங்குங்கள்' போன்ற பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சகோதரர்களாகிய நமக்குள் எதற்கு?//
பம்மலார் சார்,
இது அவ்வளவு பெரிய வார்த்தையா?. வெறும் ஒன்பதே எழுத்துக்கள்தானே உள்ளன?.
குடும்பம் மற்றும் அலுவல்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் தருவது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் சொல்லியதுபோல, காலப்போக்கில் உங்களிடம் உள்ள அத்தனை ஆவணங்களும் நம் திரி வாயிலாக அனைவரையும் வந்தடையத்தான் போகின்றன.
சிவாஜி இசை விழாவில் இசைக்கப்பட்ட பாடலின் பட்டியலையும், மேலதிக விவரங்களையும் தந்தமைக்கு மிக்க நன்றி.
ராகவேந்தர் சார்,
அசத்தலான 'திருடன்' பட விளம்பரத்தைப் பதித்தமைக்கு மிக்க நன்றி. சிவாஜி இசைவிழாவில் அளிக்கப்பட்ட ஒளி-ஒலிக்கோர்வை, தங்களது அரிய முயற்சி என்று பம்மலார் அவர்கள் வாயிலாக அறிந்துகொண்டேன். பாராட்டுக்கள்.
Dear Mr. Kumaresh
Thank you for your reply. Kindly keep us posted on the releasing dates, hope V.M. will have a smooth release at Lavanya.
Jaihind
M. Gnanaguruswamy
சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் சென்னையில் நடத்திய அன்னதானம் வழங்கும் விழா மற்றும் திருச்சியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றை சிறப்பாக நடத்தி நடிகர்திலகத்துக்கு பெருமை சேர்த்தமைக்கு பாராட்டுக்கள்.
அன்னதான விழா நிழற்படங்களைப்பார்க்கும்போதுதான் இது எவ்வளவு பெரிய சாதனை என்பது தெரிகிறது. இத்ன் பின்னணியில் உள்ள தங்களின் தன்னலமற்ற அபார உழைப்பு தெரிகிறது. அதுபோலவே திருச்சியில் நடந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும் சிறப்பாக நடந்துள்ளது. இவற்றுக்கெல்லாம் எவ்வளவு கடின உழைப்பும், பொருட்திரட்டலும் அடங்கியுள்ளது என்ற உண்மை மலைப்பூட்டுகிறது.
நடிகர்திலகத்தால் உயர்வடைந்து பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்களெல்லாம் செய்யத்தயங்குகின்ற இதுபோன்ற சாதனைகளையெல்லாம், தாங்களும், தங்கள் தலைமையில் இயங்கும் சிவாஜி சமூக நலப்பேரவையும் விளம்பரமின்றி செய்து வருவது மனமுவந்து போற்றுதலுக்குரியது.
இவைபோக, நடிகர்திலகத்துக்கு நினைவு மண்டபம் அமைக்கவும், அவரது சிலைக்கு அரசுசார்பில் மரியாதை செலுத்தப்படவும், தாங்கள் சளைக்காமல் மேற்கொண்டு வரும் பெருமுயற்சிகளுக்கு, அனைத்து சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நன்றிகள்.
உங்கள் தூய தொண்டு தொய்வின்றி தொடரட்டும்.
டியர் பம்மலார் சார்,Quote:
3. இந்த ஒலி-ஒளிக்காட்சிகளையெல்லாம் நேர்த்தியான ஒலி-ஒளிப்பேழையாக தொகுத்துத்தந்தவர் வேறு யாராக இருக்க முடியும் ?! எல்லாம் நமது நடிகர்திலகம்.காம் தான் !
இதற்கு முழு முதற் காரணம் திரு ஒய்.ஜி.மகேந்திரா சார் அவர்கள் தான். இந்த விழாவிற்காக ஊனுறக்கமின்றி முழு ஈடுபாட்டுடன் உழைத்தது மட்டுமல்லாமல் கிட்டத் தட்ட 13 மணி நேரம் படத்தொகுப்பில் உடனிருந்து கவனித்தவர். அது மட்டுமன்றி, இந்த எண்ணமே அவருடைய சிந்தனையின் வெளிப்பாடு தான். முழுப் பெருமையும் அவரையே சாரும். அரைத்த மாவையே அரைக்காமல் வித்தியாசமான முறையில் மட்டுமின்றி பல அபூர்வமான, மேடையில் அதிகம் இசைக்கப் படாத பாடல்களை, மேடையேற்றி விழாவை சிறப்புற நடத்தி நடிகர் திலகத்திற்கு பெருமை சேர்த்த திரு மகேந்திரா அவர்களுக்குத் தான் நாம் அனைவருமே நன்றி சொல்ல வேண்டும்.
அன்புடன்
திரு.கார்த்திக் அவர்களே!
தங்களுடைய மனமுவந்த பாராட்டுக்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகள்.
நடிகர்திலகத்தின் ஆசியும், என்னோடு ஒத்துழைக்கும் நண்பர்கள், தங்களைப்போன்ற எண்ணற்ற ரசிக உள்ளங்களின் ஒத்துழைப்பு மற்றும் வாழ்த்துக்களோடு, என்றும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியை தொய்வின்றி செய்யமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
தங்களுக்கு மீண்டும் நன்றிகள்.
அன்பு ராமஜெயம் சார்,
தங்கள் அன்புக்கும்,மனமுவந்த பாராட்டுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
அன்பு பம்மலார் சார்,
நடிகர் திலகம் சிவாஜி இசை விழாவில் இசைக்கப்பட்ட கீதங்கள் அனைத்தையும் படங்கள் வெளியான ஆண்டுகளுடன் அழகாகத் தொகுத்து 'நச்' சென்று விழாவைப் பற்றிய கவர் ஸ்டோரியை அளித்து விட்டீர்கள் . மிக்க நன்றி. இவ்விழாவிற்காக மிகுந்த சிரமம் எடுத்துக் கொண்ட அன்பிற்குரிய திரு. ராகவேந்திரன் சாருக்கும், திரு ஒய்.ஜி மகேந்திரன் சாருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் கோல்ட்ஸ்டார் சதீஷ், சந்திரசேகரன் சார், mr_karthik, ராகவேந்திரன் சார் & வாசுதேவன் சார்,
எல்லோருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
சிவாஜி பொக்கிஷம்
"சிவாஜி ரசிகன்" சிறப்பு மலர் : 1.10.1970
http://i1094.photobucket.com/albums/...EDC4755a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4756a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4757a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4758a-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
வருகிறார் குணசேகரன் "பராசக்தி"யாய்...
http://i1094.photobucket.com/albums/...karan17a-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
Please click the link to read the Article appeared in Today's The Hindu - A tribute to S.A. Kannan, who passed away recently.
http://www.thehindu.com/arts/article2534445.ece
DEAR KUMARESAN SIR,
Please try to release VM on next friday as a diwali gift to all NT fans.
Dear Chandrashekaran Sir,
Would it be possible to get the video "Chatrapathi Shivaji" produced by AVM as mentioned in the Article posted by you from Hindu.-
"SAK directed ‘Chatrapati Sivaji,’ a short film produced by AVM for the Bombay Doordarshan Kendra in 1974. Later it was telecast as the first programme on Chennai DDK. It was a marvellous mono-act show by Sivaji Ganesan"
Kindly let us know if you have any details.
Regards,
Anm