Dear Chandrashekar, I totally agree with you. :)Quote:
Originally Posted by KCSHEKAR
Printable View
Dear Chandrashekar, I totally agree with you. :)Quote:
Originally Posted by KCSHEKAR
பரமசிவம்...Quote:
Originally Posted by PARAMASHIVAN
நீங்கள் குறிப்பிட்டுள்ள 'குங்குமப்பொட்டின் மங்கலம்' பாடல் நடிகர்திலகத்தின் படத்தில் இடம்பெற்றதல்ல.
மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்து 1968-ல் வெளியாகி பெரும் வெற்றியடைந்த "குடியிருந்த கோயில்" படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா பாடியது. மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த இப்பாடலை இஸ்லாமிய பெண் கவிஞரான 'ரோஷனாரா பேகம்' என்பவர் எழுதியிருந்தார். இவர் கவிஞர் வாலியின் நண்பரான, கோவையைச்சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள். திரைப்படத்துக்கு பாடல் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் இந்த ஒரு பாடல் மட்டுமே எழுதினார்.
படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., மற்றும் கலைச்செல்வி ஜெயலலிதா இப்பாடலுக்கு நடித்திருந்தனர். ஒரு பூங்காவில் அழகாக படமாக்கப்பட்டிருந்த இப்பாடலில் ஜெயலலிதா அழகாக சேலையிலும். எம்.ஜி.ஆர். வழக்கம்போல சிவப்பு கோட், சிவப்பு பேண்ட்டிலும் வருவார்கள். பாடலின் இறுதியில் ராஜஷ்ரீயும், ஜஸ்டினூம் கூடத் தோன்றுவார்கள். கே. சங்கர் படத்தை இயக்கியிருந்தார்.
பாடலை எழுதியவரோ 'இஸ்லாமிய' பெண் கவிஞர். அவர் எழுதிய பாடலோ 'குங்குமப்பொட்டின் மங்கலம்'. நம் நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?.
'குடியிருந்த கோயில்' படமும் சரி, இப்பாடலும் சரி, தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகியுள்ளன, இப்போதும் ஒளிபரப்பாகின்றன.
சாரதா மேடம் அளித்த இமயம் பதிவுகள் அருமை. திரு.ராகவேந்திரன் அளித்த தகவல்களும் நமக்கு புதிது.
Dear Ms.Sharada/Mr.Ragavendra
Many thanks for your wonderful posting on "Imayam". As usual there were a lot of new infos and details.
Looking forward to Mr.Murali Srinivas's post.
Regards
Shivram
நன்றி ராகவேந்தர் / முரளி / ஷிவராம் / சந்திரசேகர்...
முந்திய பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் 'இமயம்' பட விமர்சனத்தில் விடுபட்டுப்போன சில விவரங்கள். குறிப்பாக நடிகர்திலகத்தின் பங்களிப்பு....
'இமயத்தில்' நடிகர்திலகத்தின் பாத்திரம்:
இப்படமும் சரி, அவர் ஏற்றிருந்த கங்காதரன் ரோலும் சரி அவருடைய முழுத்திறமையையும் காண்பிக்க ஏதுவாக அமைந்தவை அல்ல. சொல்லப்போனால், அலட்டிக்கொள்ளாத, மிகவும் 'லைட்'டான பாத்திரம். சிலர் விரும்புவது போல 'யதார்த்த' நடிப்புடன் கூடிய படம். இப்படம் படப்பிடிப்பு துவங்கிய நேரத்தில், இவருடைய ரோல் பற்றி ரசிகர்கள் முக்தாவிடம் கேட்டபோது, 'இப்படத்தில் அவருக்கு 35 வயது இளைஞர் ரோல். அதனால் ஜோடியாக ஸ்ரீவித்யா நடிக்கிறாங்க' என்று சொன்னாராம்.
ஸ்ரீவித்யா முதல் முறையாக ஜோடியாக நடித்தபோதிலும், மனைவி ரோலுக்கு மிகவும் அழுத்தமாகப்பொருந்தினார். அப்படத்திலிருந்த நடிகர்திலகத்தின் உடல்வாகுக்கு இவர் உடல்வாகு நன்கு பொருந்தியது. 'கங்கை யமுனை' பாடலில், இவர் நடிகர்திலகத்தின் தோளில் சாய்ந்துகொண்டு போகும்போது ஒரு அந்நியோன்யம் (கெமிஸ்ட்ரி...???) தெரிந்தது. அதனால் நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி ரொம்பவே பிடித்திருந்தது.
தன் மனைவியிடம் நெருக்கமாக நின்று பேசும் நேரங்களில் ஸ்ரீவித்யாவின் வயிற்றில் வலது கையால் இடையிடையே செல்ல்மாக குத்துவார். அதைவிட, இதேபோன்ற இன்னொரு சமயத்தில் கணவரிடம் பேசும்போது, சிணுங்கிக்கொண்டே நடிகர்திலகத்தின் வயிற்றில் ஸ்ரீவித்யா குத்தும்போது, இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்களிடையே ஆரவாரம்.
இதற்குமாறாக, வீட்டைவிட்டு வெளியேறும்போது மீரா, நடிகர்திலகத்தைப் பார்த்து, 'நீங்க இரக்கமில்லாத அரக்கன். கோட்டுப் போட்ட காட்டுமிராண்டி' என்று திட்டும்போது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆட்சேபக்குரல்.
நடிகர்திலகம் தன்னை கெட்டவன் என்று நிரூபிக்க எடுத்த ஒவ்வொரு முயற்சியையும் தான் எப்படி முறியடித்தேன் என்பதை தெனாவட்டாக விவரித்து, அந்த தோல்வி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பழத்தை பரிசளிப்பதாக ஜெய்கணேஷ் கிண்டலடிப்பதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்கும் நடிகர்திலகம், இறுதியாக தன் கோட் பையிலிருந்து சிறுவனின் 'பிறந்த சர்டிபிகேட்'டை எடுத்துக்காட்டி, "பார்த்தியா... யமுனா என் மகன்தான் என்று நீயே கையெழுத்துப்போட்டுக் கொடுத்த ஆஸ்பத்திரி ரெக்கார்ட். இதுக்கு பரிசா என்ன பழத்தைக்கொடுக்கப்போறே?" என்று கேட்க ஆடிப்போகும் ஜெய்கணேஷ் "சார். இதை யார்கிட்டேயும் காட்டிடாதீங்க" என்று கெஞ்ச.....
"நோ... என்னை ஒரு பைத்தியக்காரன்னு நினைச்சுக்கிட்டிருக்காளே ஒரு பைத்தியக்காரி, என்மனைவி, அவ கிட்டே காட்டப்போறேன். தன் தம்பி ஒரு தங்கக்கம்பின்னு நினைச்சுக்கிட்டிருக்கானே ஒரு மடையன், உன் அண்ணன், அவன் கிட்டே காட்டப்போறேன், உன்னை ஒரு யோக்கியன்னு நம்பிக்கிட்டிருக்காளே நான் வளர்த்த ஒரு குட்டிக்கழுதை, அவ கிட்டே காட்டப்போறேன். Look... நாளை நடக்கப்போகும் உன் மாப்பிள்ளை அழைப்புக்கு நான் வருவேன். அதுக்கு முன்னால் உன்னுடைய பாவ சங்கீதத்தை எல்லோருக்கும் முன்னால பாடி முடிச்சுடனும். இல்லே ராகம், தானம், பல்லவியோடு நான் பாடுவேன்.... பேட்டா, எனக்கா பழம் கொடுக்கிறே?. இப்போ நான் உனக்கு கொடுக்கிறேண்டா பழம்" என்று சொல்லி, ஒரு வாழைப்பழத்தை ஜெய்கணேஷ் வாயில் செருகிவிட்டு ஸ்டைலாக நடந்து போகும்போது, கைதட்டலில் அரங்கமே குலுங்கும்.
Thanks Saradha madam for your wonderful writingup about our god's "Imayam" movie. This is one of the NT movie I have not watched till now. But you have fullfilled my wish.
I have watched song "Gangai Yamunai" so many times in DVD. NT is simply superb and from this song NT has show the trend to younger actors how to act in duet songs. Simply superb NT face with Napelese cap.
As you guys will enjoy "Pudiya Paravai" in Chennai, I watch PP in Sydney at my home now. With watching PP in 40 inch LCD TVs, I enjoy NT frame by frame.
But still missing of watching PP in the Madurai theatres on Sunday. I have watched PP in re-release in Madurai Alankar theatre with so much "Allapparai" in theatres. Full of garlands to NT face in theatre and papers and flowers, movies song book and coins flown inside the theatres. Specially thalaivar's walk in the song "Aha melll mella nada" what a style and glamour. Just for this song I can watch PP for life.
Cheers,
Sathish
Thanks Sathish for your appreciation.Quote:
Originally Posted by goldstar
If possible to watch 'Imayam' atleast (as Raghavendar said) for NT / MSV / NB (eventhough Muktha and Professor ASP stands apart).
Yes, as you said NT will be nice with Nepali cap (after 'ullam rendum' in Sivakamiyin Selvan) in the first part of the song, and with Indian National Flag in his left arm in second part.
Between NT & Shree Vidhya, not only Chemistry, but other things like Physics, Biology, Natural Science, Economics, History, Mathematics... all will work-out. Surprise, why directors not used her as NT's pair in further some movies, instead of KRV and Sujatha.
Hi everybody,
Pudhiya Paravai released @ Amaindakarai Lakshmi theatre from this week. Wishing it a grand success.
Roger Ebert on Bonnie & Clyde……
“ There is a moment in "Bonnie and Clyde'' when Bonnie, frightened and angry, runs away from Clyde through a field of wheat, and as he pursues her, a cloud sweeps across the field and shadows them. Seen in a high, wide-angle shot, it is one of those moments of serendipity given to few movies. Today the cloud could be generated by computers; on the day the scene was filmed in Texas, it was a perfectly timed accident of nature “.
It reminds us of a similar moment in one of our own gem of a song, “ Devaney ennai parungal……” from “ Gnana Oli “, isn’t it ?
[/i]
neenga nijamAgavE theriyAmalthAn kEtkireengannu nAnga nambitOm.Quote:
Originally Posted by PARAMASHIVAN
me too...Quote:
Originally Posted by gopalu_kirtinan
but will it be possible in this latest 'trend & taste' of the young..?. (doubtful)
சகோதரி சாரதா,
தங்களின் "இமயம்" திரைப்படத் திறனாய்வுப் பதிவுகள் வழக்கம் போல் அருமை, அபாரம், அற்புதம். இமயமலைச் சாரலுக்கே எங்களை கொண்டு சென்று விட்டீர்கள். பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்!
நமது நடிகர் திலகம் எவ்வளவு பெருந்தன்மை வாய்ந்தவர் என்பதற்கு, தாங்கள் தொகுத்து வழங்கியுள்ள, அவரது திரைப்படங்களில் வரும், 'சக நடிகர்'களின் டூயட் பாடல்கள் பட்டியலே உயர்ந்த சான்று. அந்த அருமையான தொகுப்பில் சேர்ப்பதற்கு இன்னும் சில:
கண்ணான கண்ணனுக்கு அவசரமா - ஆலயமணி
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா - மக்களை பெற்ற மகராசி
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை - இருவர் உள்ளம்
ஆதி மனிதன் காதலுக்குப்பின் - பலே பாண்டியா
இல்வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம் - பராசக்தி
கல்யாணக் கோவிலின் தெய்வீகக் கலசம் - சத்யம்
ஆகாயம் மேலே பாதாளம் கீழே - நான் வாழவைப்பேன் (ஸோலோ)
இமய வெற்றியைப் பெற்ற "திரிசூல"த்திற்குப்பின் வந்த இந்த "இமயம்", சராசரிக்கு சற்றுக் குறைவான வெற்றியைப் பெற்றதற்கான காரணங்களையும் விரிவாக விளக்கியுள்ளீர்கள். ["இமயம்" இலங்கையில் 100 நாட்கள் ஓடியதாக கூறப்படுகிறது. இன்னும் அதற்கு சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எப்படியிருப்பினும், வட இமயத்திற்கு எதிர்முனையில், அடிச்சுவட்டில் இருக்கும் தென் இலங்கை நமது "இமயத்"திற்கு முடிசூட்டி மகிழ்ந்துள்ளது.]
ஸ்ரீவித்யா, கடினமான குணச்சித்திரங்களை கச்சிதமாக செய்யக் கூடிய சிறந்த நடிகை. சிவாஜி - ஸ்ரீவித்யா காம்பினேஷனில் தொடர்ந்து படங்கள் வராமல் போனது தமிழ் சினிமாவின் துரதிருஷ்டம்.
கூடுதல் தகவல்களை வழங்கிய ராகவேந்திரன் சாருக்கும் நன்றி!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 127
கே: சிவாஜியை நடிகர் என்று அழைப்பது சரியா, கலைஞர் என்று அழைப்பது சரியா? (இராம.மோகன், புதுவை)
ப: நடிகர் என்று தான் அழைக்க வேண்டும். கலையுலகில் நுழைந்து விட்ட எல்லோருமே கலைஞர்கள் என்று அழைக்கப்பட்டாலும், நடிகர் என்று அழைக்கப்பட, சிவாஜி போன்ற சிலர் தானே இருக்கிறார்கள்!
(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1970)
அன்புடன்,
பம்மலார்.
உண்மை திரு பம்மலார் அவர்களே ,
இன்றும் நடிகர் என்றால் அது நம் NT அவர்களையே குறிக்கும், இன்றும் எனக்கு தெரிந்த பல நண்பர்கள் அவர்கள் COMPUTERஇல் PASSWORD ஆக நடிகர் என்று நம் NT அவர்களையே வைத்துள்ளார்கள்
திரு.ஜேயார்,
தங்களது பாராட்டுக்கும், தகவலுக்கும் எனது பற்பல நன்றிகள்!
அந்த இனிய நண்பர்களுக்கு எனது பணிவான, கனிவான வணக்கங்களுடன் கூடிய நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 128
கே: 'இன்ன நடிகையுடன் தான் நடிப்பேன்' என்று சிவாஜி சொல்வதில்லையே, ஏன்? (கே.எல்.சாந்தி கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)
ப: அவர் தன் திறமையில் நம்பிக்கை கொண்டவர்.
(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1971)
அன்புடன்,
பம்மலார்.
October 1 - Nadippu Dhinam
On Astro Vaanavil - Avan Thaan Nadigan, led by YG Mahendran.
On Astro Vellithirai 9pm - Thillaana Mohanambal
சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 11
[புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]
இணைந்த இதயங்களுக்கு சொந்தக்காரர்களான லதா-கோபால் காரில் மாளிகைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். காரை கோபால் ஓட்டி வர, அருகே லதா அமர்ந்திருக்கிறார். இரவு நேரம், போதாக்குறைக்கு மழை வேறு.
மீண்டும் 'மூடப்பட்ட' ரயில்வே கேட்; 'மூட்' அவுட்டாகின்ற கோபால்; ரயில் 'குப்குப்'; கோபால் 'பக்பக்'.
ரயிலின் சப்தம் அதிகமாக, கோபாலின் BP எகுறுகிறது. பயம், அதிர்ச்சி, இயலாமை போன்ற எதிர்மறை உணர்வுகளை, எதிர்முனையில் இருப்பவர்கள் கூட எதிர்வாதம் செய்யாமல் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு என்னமாய் முகத்திலும், அகத்திலும், புறத்திலும் பிரதிபலித்துக் காட்டுகிறார் அண்ணல். "எப்படி பம்மல் இதெல்லாம் இவ்வளவு சுலபமாக இவரால் செய்து காட்ட முடிகிறது!!!" என அருகிலிருந்த நமது நடிகர்திலகம்.காம் ஆச்சரியத்துடன் அளவளாவ, "தங்கள் நிலை தான் எனக்கும்" என அடியேன் பதிலுரைக்க, அரங்கமும் ஆச்சர்யத்தால் அதிருகிறது. சினிமாவுலகின் ஒரே ஆச்சரியக்குறி சிவாஜி தானே!
மீண்டும் கோபால், ரயிலைக் கண்டவுடன் துடிப்பதைக் கண்ட லதா, ரயிலுக்கும் அவரது வாழ்க்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது எனத் தெளிந்து கோபாலைக் குடைந்தெடுக்க, முதலில் மறுக்கும் கோபால், சில நொடிகளிலேயே மனம் மாறி, "சொல்றேன், சொல்றேன்" என்கிறாரே, அந்த இடத்தில் அந்த ஒரு நொடியில் எத்தனை உச்ச உணர்ச்சிகளை முகத்தில் காட்டுகிறார். ஒரு கம்ப்யூட்டரை அவரருகில் வைத்து உணர்ச்சிகளை கணிக்கச் சொன்னால், அது infinite என்று தான் காட்டும்.
இந்த சமயத்தில் நமது ராகவேந்திரன் சார் ஒரு அரிய தகவலை பகிர்ந்து கொண்டார். "கோபாலும், லதாவும் காரில் அமர்ந்து கொண்டு எமோஷனலாகப் பேசும் க்ளோசப் காட்சிகள் எல்லாம் indoorலேயே படமாக்கப்பட்டவை. இருப்பினும், outdoorக்கான எஃபெக்ட்களை எவ்வளவு கனக்கச்சிதமாக தங்களது நடிப்பில் இருவரும் கொடுத்திருக்கிறார்கள், பாருங்கள்" என்றார். நன்றி, ராகவேந்திரன் சார். இதற்காகவே இருவருக்கும் Special Salutes.
தனது கடந்த கால சிங்கப்பூர் வாழக்கையை கிளைமாக்ஸோடு தொடங்குகிறார் கோபால். அதாவது, தான் ஏற்கனவே திருமணமானவன் என்கின்ற உண்மையை முதலில் கூறுகிறார். சுதாரித்துக் கொள்ளும் லதா முழுவதையும் கேட்கத் தயார் ஆகிறார். தனது பெற்றோருக்கு தான் ஒரே மகன் என்பதால் செல்வத்திலும், செல்வாக்கிலும் புரண்டதாகவும், கவலை, கண்ணீர், கஷ்டம் ஆகியவை என்னவென்றே தெரியாமல், மகிழ்ச்சியில் மட்டுமே திளைத்து வளர்ந்ததாகவும் கூறுகிறார். அமைதியான, அழகிய வங்கக் கடலோரம் எழும்பிய சுனாமி போல், அவரது இன்ப வாழ்விலும் சுனாமி உருவாக, அடுத்தடுத்து அடுக்கடுக்கான துயரங்கள்.
முதல் துயரமாக அவரது அன்னையார் அமரராகிறார். சோகம் என்றால் என்னவென்றே அறியாத கோபாலுக்கு, தாயின் மறைவு தாங்கொணாத் துயரத்தை ஏற்படுத்துகிறது. அவரது தந்தையார் அவருக்கு எவ்வளவோ ஆறுதல் கூறியும் அவர் மனம் சாந்தி அடையவில்லை. பைத்தியம் பிடித்தவர் போல் சிங்கப்பூர் எங்கும் அலைகிறார். மதி மயங்கிய நிலையில், நிம்மதியை நாடி முதல் தடவையாக, ஒரு நைட்க்ளப்பிற்குள் காலை வைக்கிறார். [அதன் மூலம் காலனையும் அழைக்கிறார் போலும்!]
அண்ணலின் profile close-up pose. அவர் வெள்ளித்திரையில் சுருட்டை பற்ற வைக்க, அவரின் அடியார்கள் திரையரங்கில் சூடத்தைப் பற்ற வைக்கிறார்கள். அரங்க மேடையில் தானே சூடம் ஏற்றக் கூடாது. எனது நாக்கையே மேடையாக்கினால் யார் என்ன சொல்ல முடியும் என ஒரு அடியவர் தனது நாவிலே சூடத்தை ஏற்றி இதயதெய்வத்திற்கு ஆரத்தி எடுக்கிறார். பக்தர்கள் பலர் தங்களது அன்புக்கரங்களில், கற்பூரத்தை பற்ற வைத்து, ஒரு வித வரிசையில் அருகருகே நின்று கொண்டு, அழகுற ஆரத்தி எடுக்கின்றனர். காணக் கண் கோடி வேண்டும்!
இன்று பல கோடிகளைக் கரியாக்கி பிரம்மாண்டம் எனக் கூறிப் படமாக்குகிறார்களே, அதிலெல்லாம் எங்கே இருக்கிறது பிரம்மாண்டம்? [அவையெல்லாம் பிரம்மாண்டமா, தண்டத்திலும் தண்டம் என சகோதரி சாரதா கூறுவது காதில் விழுகிறது]. அண்ணல் profile closeupல் சுருட்டை பற்ற வைக்கும் ஸ்டைலிலிருக்கிறது நிஜமான பிரம்மாண்டம். அவர் சுருட்டிலிருந்து வரும் புகை மண்டலம் பிரம்மாண்டம். வாயிலிருந்து சுருட்டை எடுத்து அவர் புகை விடும் அழகில், அந்த ஸ்டைலில் இருக்கிறது உண்மையான பிரம்மாண்டம். மெல்லிசை மன்னர்களின் preludeல் இருக்கிறது அந்த பிரம்மாண்டம். படம் பிடிக்கும் பிரசாத்தின் கேமரா பிரம்மாண்டம். இந்த இணையற்ற கூட்டணியே பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டம். [மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. ஒரு பேட்டியில் கூறியது இத்தருணத்தில் நினைவில் நிழலாடுகிறது. 'சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களிலெல்லாம் அவர்கள் தான் பிரம்மாண்டம். அவர்களது படங்களில் வேறு பிரம்மாண்டங்கள் இருந்தால், ஒன்று அவை எடுபடாது அல்லது அவை இரண்டாம் பட்சமாகி விடும்!' எனக் கூறியிருந்தார்.]
சுசீலாவின் ஹம்மிங் இனிமை குறையாத கம்பீரத்துடன் மிதந்து வர, கண்ணீர்ப் பாவையாகவே அதுவரை தமிழ் சினிமாவில் பேர் வாங்கிய சௌகார் ஜானகி, கவர்ச்சிப் பாவையாக கலக்க வந்திருப்பதை யூகித்த கவியரசர்,
"பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ"
எனப் பல்லவி பாடி அவருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்குகிறார். இறுக்கமான மூடில் வரும் அண்ணலின் இதயத்தை இளகிய ஒன்றாக்க, tension நீங்கி அவர் casual நிலைக்குத் திரும்ப, "பார்த்த ஞாபகம் இல்லையோ" என்கின்ற ஆரம்ப வரியை ஒவ்வொரு முறையும் "பார்த ஞாபகம் இல்லையோ" என்றே அழுத்தம் கொடுக்காமல் சுசீலா பாடுகிறார். Simply Superb!
கண்ணீரும், கம்பலையும் தன்னிரு கண்கள் என இருந்த சௌகாரை கவர்ச்சிப் பதுமையாக ஆக்கிய பெருமை ஆக்டிங் தாதா சிவாஜியையும், டைரக்டர் தாதா மிராசியையுமே சாரும். Glamour doll ஆக வந்தாலும் அதுவும் தனக்கு tailor-made ரோல் தான் என இதிலும் மின்னுகிறார் சௌகார். On any basis, Sowcar is a wonderful performer. "புதிய பறவை" சித்ரா கேரக்டர், அவரது கேரியரிலேயே அவருக்கு கிடைத்த ஒரு மிக மிக வித்தியாசமான ரோல். இதனை அவரே பல முறை பேட்டிகளில் கூறியிருக்கிறார். நடிகவேளுக்குக் கூட இந்த ரங்கன் ரோல், அவரது கலைப்பயணத்தில் ஒரு மறக்க முடியாத மைல்கல்.
கவர்ச்சியின் பிம்பமாக மைக்கைப் பிடித்துக் கொண்டு ஒரு புகழ்வாய்ந்த, தலைசிறந்த பாடகி எப்படிப் பாடுவாரோ, என்னென்ன பாவங்கள் கொடுப்பாரோ அது போலவே பாடல் முழுவதும் கறுப்பு நிற காஸ்ட்யூமில் வெளுத்து வாங்குகிறார் சௌகார். கோட்-சூட்-நெக்டை சகிதம், கம்பீரமாக இருக்கையில் அமர்ந்து சிங்கரையும், சாங்கையும் ரசித்துக் கொண்டே, சுருட்டை புகைப்பதும், புகை விடுவதுமாக விதவிதமான போஸ்களில், விதவிதமான ஸ்டைல்களில் கலக்குகிறார் கலையரசர். ஒரு இடத்தில், பாடலை ரசித்துக் கொண்டே தனது ஆள்காட்டிவிரலை லேசாக கடிக்கிறார் பாருங்கள், அதில் அவர் அப்படியே சூது, வாது தெரியாத கோபால் கேரக்டரின் அப்பாவித்தனத்தை படம் பிடித்துக் காட்டுகிறார். பாத்திரத்தை உணர்ந்து நடிக்கும் பாங்கு, நமது நடிகர் திலகத்தின் தனிப்பெரும் சிறப்பாயிற்றே!
ஆட்காட்டி விரலை அவர் கடிக்க, அதனால், அவரால் ஆட்கொள்ளப்பட்ட அடியவர்கள் விசில், கிளாப்ஸ் என அதிர வைக்கின்றனர். இவற்றுக்கு இடையில் தீபாராதனை இல்லாமலா?! அதுவும் திவ்யமாக நடைபெறுகிறது.
இப்பாடலில் அண்ணல் மட்டுமா நடிக்கிறார். அவர் பிடிக்கும் சுருட்டு நடிக்கிறது. அவர் வாயிலிருந்து வரும் புகை நடிக்கிறது. அவரது ஒவ்வொரு அங்க அசைவும், அவரருகில் இருக்கும் அனைத்தும் நடிக்கிறது.
இரண்டாவது சரணத்தில்,
"உந்தன் மனதைக் கேளது சொல்லும்!
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்!"
என்ற வரிகளின் போது, தன் இடது கையில் சுருட்டிருக்க, விரலால் உதட்டை வருடுகிறார் பாருங்கள், ஆஹா, ஆஹா!
அதே போல, மூன்றாவது சரணத்திற்கு முன் வரும் இணைப்பு இசையின் போது, தனது இடது கை நடுவிரலால், மேலுதட்டை வருடுவதும் ஸ்டைலின் உச்சம். இப்பாடலில், அண்ணலின் ஒவ்வொரு அசைவுக்கும், அரங்கில் ஜோதிமயம் தான்.
பாடல் நிறைவடைய, "உலகத்துலேயே நடிகன்னா என் தலைவன் ஒருத்தன் தான், வேற எவனும் கிடையாது", "எங்கள் தெய்வம் சிவாஜி", "எங்கள் உயிர் சிவாஜி" போன்ற கோஷங்களெல்லாம் பீறிட்டுக் கிளம்புகிறது. விசில் சத்தம் அடங்க நேரமாகிறது. நல்ல இசையை ரசித்த நடிகர் திலகம் திரையில் கரவொலி கொடுக்க, நல்ல performanceஐ ரசித்த நாம் அரங்கில் கரவொலி எழுப்புகிறோம்.
இசையை அவர் ரசித்தார். அவர் அசைவை நாம் ரசிக்கிறோம்!
(தொடரும்...)
பக்தியுடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 129
கே: தங்கள் படங்களில் அதிகமான பஞ்ச் டயலாக்குகளை வைக்கத் தூண்டும் ஹீரோக்களின் குறிக்கோள், படத்தின் வெற்றியா? இல்லை தற்புகழ்ச்சியா? (வ.லெட்சுமணன், இராஜவல்லிபுரம்)
ப: 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் ஒரு காட்சியில், "எங்கிட்டயே சாந்தி தியேட்டர் எங்க இருக்குன்னு காட்றியா?" என்பார் நடிகர் திலகம். இத்தனை வருஷங்கள் போன பிறகும் அந்த பஞ்ச், நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. சூட்சமம் இது தான். எப்போதாவது ஒரு முறை 'நச்'சென்று வைக்கப்பட்டால் அது பஞ்ச். படம் முழுக்க 'பஞ்ச்' தோரணமே தொங்கினால் அது 'நச்சு பிச்சு'.
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 1-15 நவம்பர் 2006)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 130
கே: வி.சி.கணேசனுக்கு அடுத்தபடியாக நடிக்கத் தெரிந்த நடிகர் யார்? (ஆர்.கே.கிருஷ்ணரங்கம், கருமாங்குளம்)
ப: பார்த்தீர்களா, பலரை எனக்கு விரோதிகளாக்கப் பார்க்கிறீர்களே!
(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1970)
அன்புடன்,
பம்மலார்.
Please click the links below & read the article and give your views:
Thanks
http://sivajiperavai.com/View_Press.php?id=91
http://sivajiperavai.com/View_Press.php?id=92
Dear Mr.Chandrasekar
Thanks for publishing the article in JV. it also shows how much pain you have undertook by running from pillar to post to get things moving for our Thalaivar's Manimandapam.
One thing is very clear. We cannot expect anything from the present office bearers of Nadigar Sangam as they only promote thier self interest and they know which side of thier bread is buttered with. The sheer thinking of thier ungratefulness on this issue will only raise our BP. They dont even have the status to utter our NT's name.
Our only hope and prayer is that current CM will sooner than later sign the order for Manimandapam and give a befitting tribute to his friend.
all this apart, each one of NT's fans have already provided a manimandapam to him in thier hearts where he is the presiding deity. Entha Kombanalum Athai Mattra Mudiyathu.
Regards
Shivram
வேலைப்பளு காரனமாக சில நாட்களாக இந்த பக்கம் வர முடியவில்லை.வந்து பார்த்தால்....10,12 பக்கங்கள் ஜெட் வேகத்தில் பறந்துவிட்டது.
பம்மல் சார்,
தங்களின் பாலும் பழமும் புள்ளி விவரங்கள் கில்லி போல சீறிப்பாய்ந்து மற்ற நடிகர்களின் ரசிகர்களை ஏக்கமடைய வைத்துள்ளது,வாழ்த்துக்கள்.
சாரதா மேடம்,
இமயத்தின் "இமயம்" பட விமர்சனம் நடுநிலையோடு அருமையாக அமைந்துள்ளது,பாராட்டுக்கள்.சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு பார்த்த படத்தை மீன்டும் பார்த்த உனர்வு.
ராகவேந்தர் சார்,
தாங்கள் குறிப்பிட்டதை போல அந்த காட்சிக்கு ரசிகர்கள் செய்த ஆரவாரம் இன்றும் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது.
முரளி சார்,ராகவேந்தர் சார்,பம்மல் சார்
லட்சுமி திரைஅரங்க கொன்டாட்டங்களின் படம் மற்றும் வர்ணனைக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்
WELL SAID SHIV SIR :clap:Quote:
Originally Posted by SHIV
டியர் பம்மலார்,
நீங்கள் எழுதிவருவது சாந்தி நிகழ்வுகள் மட்டுமல்ல, அதைத்தாண்டி 'புதிய பறவை' காவியப்படம் பற்றிய தீர்க்கமான ஆய்வுக்கட்டுரை. இத்தனை எபிசோட்களுக்குப்பின்னும் இன்னும் இடைவேளையே வரவில்லையென்றால், உங்கள் ஆழ்ந்த ஆய்வு எத்தகையது என்று தெரிகிறது.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள் என்று சொல்ல வேண்டிய எல்லைகளையெல்லாம் தாண்டிச்செல்கிறது உங்கள் ஆய்வு.
நீங்கள் சொன்னதுபோல சௌகாரின் திரைப்பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல் மாத்திரமல்ல, ஒரு பெரிய திருப்புமுனையும் கூட.
நடிகர்திலகத்தைப்பற்றி கடந்த காலங்களில் யாரெல்லாம், எந்தப் பத்திரிகைகளிலெல்லாம் கேள்வி கேட்டு பதில் பெற்றுள்ளனர் என்பதைத் தேடி எடுத்து தொகுத்தளித்து வருவது, எவ்வளவு சிரமம் என்பதை உண்ர முடிகிறது. ஆயினும் அதை ஒரு கர்ம சிரத்தையாக செய்து வருகிறீர்கள்.
நடிகர் திலகத்தைப்பெற தமிழ்த்திரையுலகம் தவம் செய்திருக்கவேண்டும் என்பது எவ்வளவு உண்மையோ, அதுபோல உங்களைப்போன்றவர்களை ரசிகர்களாக அடைய நடிகர்திலகம் தவம் செய்திருக்க வேண்டும் என்பதும் உண்மை. உங்களை இங்கே பெற நாங்கள் தவம் செய்துள்ளோம் என்பது அதைவிட உண்மை.
உங்கள் தொண்டு, தொய்வின்றி தொடரட்டும்.
Murali sirQuote:
Originally Posted by Murali Srinivas
:shock: hmm I had shivaji sir in my mind when I heard the song!
:ty:
thanks Madam, oru kealviku ivalavu details soli irukeenga :)Quote:
Originally Posted by saradhaa_sn
:ty:
டியர் சந்திரசேகர்,Quote:
Originally Posted by KCSHEKAR
நடிகர்திலகத்துக்கான 'மணிமண்டபம்' தொடர்பான உங்கள் முயற்சியும், அதற்காக பட்டுவரும் சிரமங்களும் மலைக்க வைக்கின்றன. ஆயிரமாயிரம் நன்றிகள். ஒரு பெரிய புதிர் என்னவெனில், நடிகர்திலகத்தின் புதல்வர்கள் ஏன் இதில் சிரத்தை எடுப்பதில்லை?. அல்லது எடுத்திருப்பார்களெனில் அதன் பலனாகக் கிடைத்த 'நெட் ரிசல்ட்' என்ன?. நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் இளைய திலகம் பிரபு, மனோரமா போன்றவர்கள் இருந்தும் ஏன் நடவடிக்கைகளை முடுக்கி விட முயற்சிக்கவில்லை?.
'தகவ்ல அறியும் சட்டத்'தின் மூலம் நீங்கள் முயற்சிப்பதை விட அவர்கள் முயற்சிக்கும்போது, அவர்களின் செல்வாக்கைக்கொண்டு ஒழுங்கான, உருப்படியான பதிலைப்பெற முடியுமல்லவா?.
நடிகர்திலகம் மறைந்த பின், அவரது மணிமண்டபத்துக்காக, முதலமைச்சர் மட்டுமல்ல, சக நட்சத்திரம், மற்றும் 'சம்மந்தி'யான ஜெயலலிதா இடம் ஒதுக்கியபோதே, பலரும் பத்திரிகைகளில் எழுதினர். அரசுக்கு சொந்தமான எவ்வளவோ நல்ல இடங்கள் இருக்கும்போது, வேண்டுமென்றே வில்லங்கமான இடத்தை அவர் (ஜெ) ஒதுக்கியதாக எழுதினர். போதாக்குறைக்கு அவர் எதிர்க்கட்சியான பின்னர், நடிகர்திலகத்தின் சிலை அமைக்க எதிர்ப்புக்களும், இடைஞ்சல்களும் ஏற்படுத்தினார். (கலைஞர் பெயர் வாங்கிவிடக்கூடாது என்ற ஒரே நோக்கில்). ஆனால், தஞ்சையில் சிலையமைக்க அவரது தோழியின் கணவரது முயற்சி குறிப்பிடத்தக்கது.
காலம் கடந்துபோய்க்கொண்டிருந்தால், 'மணிமண்டபம்' உருவாக்கும் திட்டம் கனவாக முடிந்துவிடக்கூடாது என்பதே நமது கவலை, அச்சம். இதுவிஷயத்தில் நடிகர் சங்கத்தின் மெத்தனப்போக்கை காணும்போது அவர்கள் உருப்படியாக எதும் செய்வார்கள் என்று தோன்றவில்லை.
Please click the link to see Government Order regarding NT's Manimandapam.
http://www.sivajiperavai.com/View_Press.php?id=99
பம்மலாரின் புதிய பறவை வர்ணனை திரைப்பட ஸ்கிரிப்ட் போலவே உள்ளது. மிகவும் அருமை.
நன்றி திரு.சிவராம், சாரதா மேடம், திரு.,ஹரிஷ்.
நடிகர்திலகம் மணிமண்டபம் தொடர்பாக நம்மாலான முயற்சிகளைத் தொடர்வோம். நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு - நம்மைப் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது மட்டும் உறுதி.நடிகர்திலகம் மணிமண்டபம் தொடர்பாக நம்மாலான முயற்சிகளைத் தொடர்வோம். நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு - நம்மைப் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது மட்டும் உறுதி.
சந்திரசேகர் அவர்களின் பேரவை இணைய தளத்திற்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள். நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பாடல்கள் சிறப்பு.
மேலும் ஓங்கி வளர நமது நல்வாழ்த்துக்கள்.
சற்று முன் வந்த தகவல். வருகின்ற ஞாயிறு 26.09.2010 தேதியிட்ட தினமலர் வாரமலர் இதழில் மூன்று பக்க அளவிற்கு நடிகர் திலகத்தைப் பற்றிய ஓய்.ஜி.மகேந்திரன் அவர்களுடைய கட்டுரை வர இருக்கிறது.
அனைவரும் தவறாமல் வாங்கிப் படிக்கவும். அனைத்து நண்பர்களுக்கும் தகவலைத் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
சகோதரி சாரதா,
தங்களது பதிவைப் படித்ததும், என் கண்களில் ஆனந்த நீர்த்துளிகள்.
தங்களது உச்சமான பாராட்டுப் பதிவுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!
உற்சவமூர்த்தியாக உலக மகாநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கும் தங்கத்திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் எண்ணற்ற பக்தர்களில் அடியேனும் ஒருவன். தாங்கள் ஆறாண்டுகளுக்கும் மேலாக இத்திரியில் ஆற்றி வரும் அருந்தொண்டிற்கு ஈடு இணை இல்லை.
தங்களது திருத்தொண்டு மென்மேலும் சிறந்தோங்க, எல்லாம் வல்ல இறைவனின் இறையருளும், நமது இதயதெய்வத்தின் அருளாசிகளும் தங்களுக்கு என்றென்றும் துணை நிற்கும்!
அன்புடன்,
பம்மலார்.
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி!
"சிவாஜி பேரவை" இணையதளம் சீரும், சிறப்பும் பெற வளமான வாழ்த்துக்கள்!!
தாங்கள் தொடர்ந்து எடுத்து வரும் பெருமுயற்சிகளுக்கு, பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்!!!
டியர் செந்தில் சார்,
பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்!
தவிர்க்க முடியாத காரணங்களினால், நாங்கள் மூவருமே லட்சுமி அரங்கிற்கு செல்ல முடியவில்லை. இருப்பினும், கேள்விப்ப்ட்ட தகவல்கள் அனைத்தும் வெளியிடப்படும்.
டியர் ராகவேந்திரன் சார்,
வெளிவரவிருக்கும் தகவலைப் பற்றி தாங்கள் வெளியிட்டிருக்கும் தகவலுக்கு தலையாய நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
பாட்டும் நானே பாவமும் நானே - நடிகர்திலகம் போல
கேள்வியும் நானே பதிலும் நானே என்று இத்திரியில் கலக்கிவரும்
இனிய நண்பர் பம்மலார் அவர்களுக்கு இதயம் கணிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
சிவாஜி பேரவை இணையதளத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த திரு.பம்மலார், திரு. ராகவேந்திரன் ஆகியோருக்கு நன்றி.
இணையதளம் இன்னும் முழுமையடையாததால் தகவலை இத்திரியில் தெரிவிக்கவில்லை. மன்னிக்கவும்.
இத்திரியில் பங்கேற்றுள்ள நண்பர்கள் www.sivajiperavai.com இணையதளத்திற்கு சென்று பார்த்து விமர்சனம் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு பணிவண்போடு கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில்
Dear Mr.Pammalar
Wishing you a Very Happy Birthday. May god and NT ( both are same for us) shower thier choicest blessings on you for a long, healthy & Wealthy life.
Best Regards
Shivram
Dear Pammalar
Just now this song hit me (from Theerpu)for your birthday;
"Kaatril anayatha Deepam enave Neengal Oli veesungal
Kaalam maravatha Kamarajar thiagam dinam pesungal
nenjodu naan konjum rojakkale Nehru Pugazh pesungal
Ellorum Kondadum "Nadigar Thilagam" ena Nattai uruvakkungal"
Regards
Shivram
:D :2thumbsup: Happy Birthday Mr. Pammalar :2thumbsup: :D
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க
:clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap:
நடிகர்திலகத்தின் புகழ்பரப்பும் சீரிய பணியை செவ்வனே ஆற்றிவரும் அன்புச்சகோதரர் பம்மலார் சுவாமி அவர்களுக்கு என் இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நடிகர்திலகத்தின் புகழையும் சாதனைகளையும் பாடும் வானம்பாடியாக, அவரைப்பற்றிய அருமையான அரிய தகவல்களைத் தேடிச்சேகரித்து தரும் தேனீயாக பணியாற்றிவரும், 'வசந்த'ம் நிறைந்த பத்திரிகை'மாளிகை'யின் ஆசிரியர் பம்மலார் அவர்கள், இதுவரை சென்ற வயது போக, மேலும் நூறு வயதுக்கு மேல் வாழ்ந்து, நடிகர்திலகத்தின் பெருமையையும், புகழையும் நான்காம் தலைமுறைக்கும் எடுத்தோத வேண்டும் என உளமாற வாழ்த்துகிறேன்.