மிக்க நன்றி, ராகவேந்திரன் சார் & வாசுதேவன் சார்..!
நன்றி, கோல்ட்ஸ்டார் & பாலா சார்..!
சுட்டிகளுக்கு நன்றி, பாலா சார்..!
மிகமிக நன்றி, mr_karthik..!
Printable View
மிக்க நன்றி, ராகவேந்திரன் சார் & வாசுதேவன் சார்..!
நன்றி, கோல்ட்ஸ்டார் & பாலா சார்..!
சுட்டிகளுக்கு நன்றி, பாலா சார்..!
மிகமிக நன்றி, mr_karthik..!
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் உயர்வான பாராட்டுக்கு எனது தூய்மையான நன்றிகள்..!
தாங்களும், நமது ராகவேந்திரன் சாரும் அளித்த "கர்ணன்" கொண்டாட்டப் புகைப்படங்களும் ரொம்பப் பிரமாதம்..!
"ராஜா"வின் ட்ரிபிள் சந்திரபாபு காண்பவர்தம் கண்களுக்கு செமட்ரீட் மட்டுமல்ல, அந்த நகைச்சுவை மாமேதைக்கு தாங்கள் செய்த சிறந்த ராஜமரியாதை..! [இதைச் செய்ய தங்களை உசுப்பிவிட்ட அருமைச் சகோதரர் mr_karthik அவர்களுக்கும் பாராட்டுக்கள்..!]
அன்புடன்,
பம்மலார்.
வீடியோ சக்கரவர்த்தி வாசுதேவன் சார்,
தாங்கள் சிரமங்களைக் கருதாமல் மிகுந்த சிரத்தையுடன் எடுத்து, இணையத்தில் பதித்து, இங்கே இடுகை செய்துள்ள இந்த அருமையான நான்கு வீடியோக்களுக்கும், இந்த நானிலமே தங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது. இணைய அன்பர்களுக்கு இதைவிட ஒருசிறந்த "கர்ணன்" 101வது நாள் அன்புப்பரிசை யாராலும் தர இயலாது.
இதயதெய்வத்தின் தொண்டரடிப்பொடியாழ்வாரே,
நீவீர் வாழிய பல்லாண்டு..!
[போனஸ் ஆக தாங்கள் இங்கே பதித்துள்ள மேலும் இரண்டு வீடியோக்களும், ஏனைய புகைப்படங்களும் அசத்தலோ அசத்தல்..!]
பாசத்துடன்,
பம்மலார்.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களின் பாராட்டுதல்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்..!
சிவாஜி பேரவை சார்பில், "கர்ணன்" 101வது நாள் வெற்றிவிழாவை சென்னை 'சத்ய'த்தில் மிக சிறப்பாக கொண்டாடியுள்ளீர்கள்..! வெற்றிவிழாப் புகைப்படங்களுக்கு இனிய நன்றிகள்..!
சிங்காரச் சென்னையின் எழிலைக் கூட்டும் நமது சிங்கத்தமிழனின் சிலைக்கு, "கர்ணன்" 101வது நாள் மெகாவெற்றியை முன்னிட்டு, மலரலங்காரம் செய்து புகழ்பாடும பதாகைகளையும் அமைத்தது எல்லாவற்றுக்கும் சிகரம்..!
வீறுகொண்டு தொடரட்டும் தங்களின் வீரத்தொண்டு..!
அன்புடன்,
பம்மலார்.
Dear Mr. Ravikumar,
A warm & pleasant welcome to you to the world of Nadigar Thilagam..!
Best Wishes & Regards,
Pammalar.
"கர்ணன்" [டிஜிட்டல்]
101வது நாள் வெற்றித்திருவிழா
சென்னை சத்யம் சினிமாஸ் : 24.6.2012 [ஞாயிறு] : மாலை 4 மணி முதல் 6:30 வரை
அசத்தல்..ஆரவாரங்கள்..ஆல்பமாக..
முன்னாள் மத்திய இணையமைச்சர் திரு.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் உரையாற்றுகிறார்
http://i1110.photobucket.com/albums/...GEDC5993-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5995-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5990-1.jpg
பதாகை மயம்.....
http://i1110.photobucket.com/albums/...GEDC6001-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5999-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
Thank you Ravikumar and welcome to NT thread. All the NT fans feelings are same. A movie which is heading for 125th day and first time in 81 years Tamil history, this should be celebrated like Deepavali by TN film personalities. But again for our NT movies we don't need all these things. As Y.G. Mahendra said after 48 years Karnan would be released again and will run for another 100 days. That is magic of NT. His quality movies will stay for decades go come.
Long live NT fame.
Cheers,
Sathish
"கர்ணன்" [டிஜிட்டல்]
100வது நாள் மெகாவெற்றி விழா
பத்திரிகை ஆவணங்கள்
மாலை மலர் : 24.6.2012
http://i1110.photobucket.com/albums/...GEDC6031-1.jpg
தினமணி : 25.6.2012
http://i1110.photobucket.com/albums/...GEDC6033-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
கலைச்சூரியனின் ஜூன் கதிர்கள்
தங்கப்பதக்கம்
[1.6.1974 - 1.6.2012] : 39வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
வரலாற்று ஆவணம் : திரைவானம் : 1974
["தங்கப்பதக்கம்" திரைக்காவிய சிறப்பு மலர்]
http://i1110.photobucket.com/albums/...GEDC6034-1.jpg
பளபளக்கும்...
பக்தியுடன்,
பம்மலார்.
Dear Mr. Ravikumar,
A warm welcome to you to the world of Nadigar Thilagam..!
I have received your email now only. Before I post your mail, I have seen your mail content in this thread from our friends Mr.Goldstar Sathish and others.
Dear Mr.Satish and Pammalar and others - thanks for welcoming me and permitted me to join this great thread . I'm still curious to know why the programme planned with CM was not executed finally - this would have facilitated our long pending request of manimandabam to see the light . We are still unable to appreciate a well deserving person (NT) beyond colours, community , politics - our own ego stops us in giving a lavish appreciation if some one deserves .---When NT was alive we refused to honour him with national award and when he is still creating waves after his demise , we dont want to come forward in mass to appreciate this great actor in public-- ( I meant "we" as general public not NT fans) Can anyone help me how to transalate communication in Tamil ?? Nenchirukkum Varai is very close to my heart depite the fact the second half was a little bit repetitive - NT demonstrated a man of self confidence and conviction despite there he was not in a conducive environment and failure in his love - I shall be grateful if this movie is taken up for more deliberation -- with kind regards - Ravi
Dear Ravikumar
A warm welcome from everybody here. We will be more happy to read another dimension in the vision of NT the great. Eager to know your experiences in the past as a fan of NT.
Raghavendran
வாசுதேவன் சார்,
அட்டகாசமான வீடியோக்களையும் படங்களையும் தந்து கர்ணன் 100வது நாள் விழாக்களை எல்லோரையும் நேராய்க் காணும் உணர்வில் ஆழ்த்தி விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.
ராகவேந்திரன்
சந்திரசேகர் சார், தங்கள் பங்கிற்கு தாங்களும் கர்ணன் 100வது நாள் விழாவை தங்களுக்கே உரிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி விட்டீர்கள்.பாராட்டுக்கள்.
ராகவேந்திரன்
பம்மலார் சார்,
என்ன சொல்வது, கார்த்திக் கூறுவது போல் நன்றி சொல்லவே 1000க் கணக்கான பதிவுகளை நாங்கள் ஒதுக்க வேண்டும். ஜூன் மாத அளப்பரை ஆரம்பமாகி விட்டது தங்கப் பதக்கத்தின் மூலம். வெளுத்துக் கட்டுங்கள்.
ராகவேந்திரன்
அன்புள்ள வாசுதேவன் சார்,
அளப்பரிய சேவை தங்களுடையது.
கர்ணனைன் 101-வது நாள் கொண்டாட்டங்களை நேரில் காணமுடியாத பல்லாயிரக்கான ரசிகர்களையும், மற்றவர்களையும் விழாவை நேரில் கண்டுகளித்த உணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தாங்கள் தரவேற்றியுள்ள வீடியோ பதிவுகளுக்கு மிக மிக நன்றி. ஆரவாரங்களையும் அலப்பரைகளையும் பார்க்கும்போது சென்னையில் இல்லாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் ஏற்படுகின்றது. எனினும் அந்த வருத்தத்துக்கு இதமளிக்கும் விதமாக தங்கள் வீடியோ பதிவுகள் அமைந்துள்ளன.
அண்ணன் புகழ் பரப்பும் தங்கள் தன்னலம் கருதா சேவைக்கு ஏராளமான நன்றிகள்.
அன்புள்ள சந்திரசேகர் சார்,
கர்ணனின் 101-வது நாள் விழாக் கொண்டாட்டங்களில் சமூகநலப்பேரவையின் பங்களிப்பு இல்லாமலா என்று போற்றும் வண்ணம், நடிகர்திலகம் சமூக நலப்பேரவையின் நிகழ்ச்சிகள் அருமை.
எல்லோரின் கவனமும் படம் ஓடும் திரையரங்குகளை அலங்கரிப்பதில் இருக்கும்போது தங்கள் பேரவையின் கவனம், நடிகர்திலகத்தின் சிலையை மலர்களால் அலங்கரித்து, சுற்றிலும் கர்ணன் வெற்றி விழா பேனர்கள் அமைக்கத்தோன்றிய பாங்கு போற்றுதலுக்குரியது.
எங்களின் ஆதங்கமெல்லாம், தங்களின் அயராத உழைப்புக்காகவாவது நடிகர்திலகம் மணிமண்டபம் அமைந்தே தீர வேண்டும். அது விரைவில் நடக்க வேண்டும்.
Dear Pammalar sir,
Ur information on Karnan is mindblowing thanks searching for words to thanking you as it may sound routine one also
karnan functions photos were too good.(thanks to persons who were involved in presenting these photos)
But why no discussions are made in this thread like previous thread. Hubbers could discuss on any movie for a week after pammalar posts its records, cuttings , I have mentioned it many times but no one has seconded Iam sure if discussions are made everyone can participate with likes of Pammalar, Ragavenderan, Karthik, KC shekar, Gopal, Joe, Sivaji dhasan, Senthil , Vasu, Murali Srinivas and fine tune their knowledge with regard to NT the thread will also be more interactive.
This is my humble request pardon me if Iam wrong
Also pl take steps to navigate directly to the current thread instead of coming from 9th thread
Warm WElcome Mr. Ravikumar sir,
I too don't understand the reasons for big stars like Rajini, Kamal other film fraternities didn't attend the function ( Iam a big fan of Rajini, Kamal) for Karnan has shown the way that a old classic if restored properly & marketed would reach greater heights and if the function would have been held as per planning (WIth C.M. Madam )It would have gained more prominence and Mani Mandapam issue could have been pressed for .
But Kudos to YGM & his daughter for coming all the way for participating in grand function & also it was fan centric occasion & not a Star studded function
Though NT makes records even after his death , accolades are given by fans, public but Film fraternity is yet to rise to the occasion and its really disheartening .
I really don't know what more achievements are needed for film fraternity to honour this thespian
Dear Mr. Ravikumar,
We extent to you a very warm welcome to this glorious thread.
Would like to know more from your angle on our beloved NT frequently.
Regards,
R. Parthasarathy
அன்புள்ள நண்பர்களே,
இந்த அற்புதமான திரியில் என்னுடைய பதிவுகளை இட்டு வெகு காலமாகி விட்டது. வேலை பளு தான் காரணம்.
வழக்கம் போல், திருவாளர்கள் பம்மலார், வாசுதேவன், ராகவேந்திரன் போன்றோர் அமர்க்களப்படுத்தி வருகிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரு. முரளி மற்றும் திரு. கார்த்திக் அவர்களின் வருகையும் திரியை மேலும் வளப்படுத்தி இருக்கிறது.
திரு. சந்திர சேகரும் தொடர்ந்து தன்னலம் கருதா சேவையை அளித்து வருகிறார்.
பல புதிய நண்பர்களும் திரிக்கு வளம் சேர்த்திருக்கிறார்கள்.
திரு. கோபால் அவர்கள் ஒரு தற்காலிக விடுப்பை எடுத்திருப்பது புரிகிறது. எனினும், அவ்வப்போது, சிறிய பதிவுகளையாவது அவர் பதிந்தால் நலம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
சமீபத்தில், நடிகர் திலகத்தின் ஒப்பற்ற ஓவியமான "ஞான ஒளி" படத்தைப் பற்றிய பதிவுகள் அற்புதமாக இருந்தது.
நடிகர் திலகத்தின் பத்து மிகச் சிறந்த படங்கள் பிற மொழிகளில் எடுக்கப் பட்டதை வைத்து போன வருடம் ஒரு நீண்ட கட்டுரையை எழுதிய போது, அதில் எட்டாவது படமாக ஞான ஒளியைப் பற்றி ஒரு நீண்ட பதிவினைப் பதிந்திருந்தேன்.
நாம் அனைவரும் அவ்வப்போது கூறுவது போல், சினிமா உலகில், ஒரே நேரத்தில், உச்ச நட்சத்திரமாகவும் அற்புத நடிகராகவும் ஒரு சேர வலம் வந்த ஒரே ஒப்பற்ற நடிகர் நம் நடிகர் திலகம் ஒருவரே என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் புரியும்.
நடிகர் திலகத்தின் படங்களில் என் மனதுக்கு மிகவும் நெருங்கிய முதல் பத்து படங்களில், ஞான ஒளியும், ராமன் எத்தனை ராமனடியும் மிக முக்கிய இடம் பெறும். 1967-இல் தங்கை படத்திற்குப் பின்னர் தான், நடிகர் திலகம் மசாலா படங்களிலும் தன் திறமையைக் காண்பிக்கத் துவங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்குப் பின், அவரது ரசிகர் கூட்டம் மேலும் விரிவடையத் துவங்கியது. இருப்பினும், வியாபார நோக்கத்துக்காக எந்த வித சமரசமும் செய்யாமல், நல்ல கதை மற்றும் நடிப்பு இவைகளை மட்டுமே மூலதனமாக வைத்து, அவர் அவ்வப்போது மிகப்பெரிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தந்து கொண்டே இருந்தார்.
மேற்கூறிய இரு படங்களுமே, சொல்ல வந்த விஷயத்தை நேராக எந்த வித வியாபார சமரசங்களும் செய்யாமல் கூறிய அற்புதப் படங்களாகும். அப்படி இருந்தும், மிகப் பெரிய வசூலுடன் வெற்றி பெற்றன. (ஞான ஒளியில், மிகச் சிறிய அளவில், எம்.ஆர்.ஆர்.வாசு / isr கூட்டணியின் இம்சை இருந்தாலும்!)
இது தங்கைக்குப் பின் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது - தில்லான மோகனாம்பாள், உயர்ந்த மனிதன், வியட்நாம் வீடு, பாபு, சவாலே சமாளி, கெளரவம், தங்கப்பதக்கம், அவன் தான் மனிதன் ..... கூறிக்கொண்டே போகலாம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
டியர் கார்த்திக் சார்,
தங்களின் சிறப்பான பாராட்டுக்கு நன்றி.
திரு. பார்த்தசாரதி சார்,
தங்களின் பாராட்டுக்கு நன்றி.
தங்களின் வேலை பளுவிற்கிடையே சில பதிவுகளையும் பதிவிட்டு எங்களை மகிழ்விக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
http://www.mysixer.com/?p=18126
கர்ணன் – என்றும் வெற்றி நாயகன்
26th June 2012
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இன்றைய நடிகர்களுக்கு இவர் என்ன முன்னுதாரணக் (inspiration) கலைஞரா அல்லது இன்றைய நடிகர்களுக்குப் போட்டியாளாரா..(competitor) ?என்று தான் எண்ணத் தோன்றுகிறது. ஆம், அவர் நடித்து 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற கர்ணன் திரைப்படம் மறு வெளியீடு மறு வெளியீடு என்று தொடர்ந்து வெளியிடப் பட்டு வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 4 மாதங்களில் வெளியான எந்த ஒரு சக காலத்திரைப்படத்திற்கும் சளைக்காமல் இன்றைய “படைப்பாளிகளால்” கமர்ஷியல் வெற்றிச் சூத்திரங்கள் என்று அறியப்படும் மலிவான ஸ்டேண்ட் அப் காமெடிகள், குத்துப் பாட்டுகள் போன்ற காட்சிகள் இல்லாமல் ஒரு நேர்த்தியான திரையாக்கம் என்கிற கோட்பாட்டிற்கு மட்டுமே உட்பட்டு எடுக்கப்பட்ட கர்ணன் 100 நாட்களைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறது.
சத்யம் திரையரங்கில் நடைபெற்ற கர்ணன் நூறாவது நாள் விழாவில் சிவாஜிகணேசனின் பரம ரசிகனும் நாடக ஜாம்பவான் – திரைப்பட நடிகர் என்கிற பன்முகத் திறமைகளைக் கொண்டவருமான ஒய்.ஜி.மகேந்திரா தலைமையில் நடந்தது. அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தின் தலைவர் கே.வி.பி.பூமிநாதன் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மதுவந்தி அருண், சிவாஜி மன்றத்தைச் சேர்ந்த எம்.கே.காந்த், இளையவேந்தன் சிவா, எம்.ஏ.மஸ்தான், சி.கே.மணவாளன், எம்.கேசவன் ஆகியோருடன் ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
http://cinema.dinamalar.com/tamil-ne...es-100-day.htm
இன்றைய காலகட்டத்தில் பெரிய நடிகர்களின் படமே தியேட்டர்களில் ஒரு மாதம் ஓடுவது குதிரைக்கொம்பாக இருக்கின்ற வேளையில், மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கர்ணன் படம், 48 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீசாகி இன்று 100நாட்களை கடந்து ஓடி சரித்திர சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. இப்படத்தின் 100-வது நாள் விழாவையொட்டி சமீபத்தில், சென்னை சத்யம் தியேட்டரில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான சிவாஜி ரசிகர்கள் கர்ணன் படம் பார்க்க திரண்டு வந்தனர்.
அப்போது சிவாஜி ரசிகர் ஒருவர் கூறுகையில், கர்ணன் என்ற மாபெரும் காவியம் 48 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் செய்து 100நாட்களை கடந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. உலகத்தில் எந்த ஒரு நடிகருக்கும் இதைப்போன்ற ஒரு மாபெரும் வரவேற்பு இருந்ததில்லை. அவருடைய படத்தை யாரும் மிஞ்ச முடியாது. அவருக்கு நிகர் அவர் தான் என்று கூறியுள்ளார்.
சிவாஜியின் இளம் ரசிகர் ஒருவர் கூறுகையில், சிவாஜி யார் என்றே எனக்கு தெரியாது. என்னுடைய அப்பா நிறைய சிவாஜி படங்களை பார்ப்பார். ஒருநாள் என்னிடம் சிவாஜியின் புதியபறவை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பார்க்க சொன்னார். நானும் பார்த்தேன். அப்படியொரு நடிப்பு. அவரை மாதிரி யாரும் நடிக்க முடியாது அப்போது முதல் அவர் ரசிகராகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கூறுகையில், கர்ணன் படம் 100 நாட்களை கடந்து ஓட காரணம். நவீன தொழில்நுட்பம் கிடையாது. முழுக்க முழுக்க அவரது நடிப்பு மட்டும் தான். அவருடைய நடிப்பு தான் இந்தக்கால இளைஞர்களையும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வைத்திருக்கிறது. சரித்திரத்தையும், புரணாத்தையும் நமது மக்களுக்கு கண்முன் காட்டிய இந்தியாவின் ஒரே நடிகர் சிவாஜி மட்டும்தான். அதேப்போல் இந்தபடத்தின் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையும், இந்தபடத்திற்காக பாடுபட்டு உழைத்த அத்தனை கலைஞர்களும் தான். கர்ணன் படம் மட்டுமல்ல புதியபறவை, தில்லானா மோகனாம்மாள் போன்ற படங்களும் இனி வெளியாக உள்ளன. இதற்கு பிறகு இனிமேல் புதிய படம் எடுப்பதற்கே பலர் யோசிக்கும் சூழல் உருவாகும் என்று கூறியுள்ளார்.
அன்புப் பம்மலார் சார்,
தங்களின் பாராட்டு மழையில் நனைந்து திக்கு முக்காடிப் போய் நிற்கிறேன். கர்ணன் நூறாவது நாள் விழாக்களுக்காக நான் எடுத்து தரவேற்றிய விழாக் காட்சிகளின் வீடியோ தொகுப்பைக் கண்டவுடன் பல்வேறு சிரமங்களுக்கிடையே என்னை தொடர்பு கொண்டு, கைபேசியின் வாயிலாக வாழ்த்துச் சொல்லிவிட்டு, மணிக்கணக்கில் அந்த காட்சிகளைப் பற்றியே பேசி, சந்தோஷப் பட்டீர்களே! தங்கள் பெருந்தன்மையை என்னவென்று புகழ்வது!
நான் நடிகர் திலகத்திற்கு மட்டுமல்ல...தங்களுக்கும் தொண்டரடிப் பொடியாழ்வார்தான். தங்கள் உச்சமான, உண்மையான பாராட்டுதல்களுக்கு நன்றி சொல்ல முடியாமல் செயலிழந்து நிற்கிறேன். பொதுவாகவே ஒரு துறையில் கொடி நாட்டுபவர்கள் அதே துறையை சேர்ந்தவர்களைப் பாராட்டுவது என்பது அபூர்வமான ஒரு செயலாகும். ஆனால் நீங்கள் அந்த ஈகோவை எல்லாம் உடைத்தெறிந்து விட்டு 'நான் நடிகர் திலகத்தின் பிள்ளையாக்கும்' என்று அந்த இதய தெய்வத்தின் அடியொற்றி, நல்லவைகளை வஞ்சனையின்றிப் பாராட்டும் அருங்குணத்தைப் பெற்று, அற்புதமான சேவைகளை ஆர்ப்பாட்டாம் இல்லாமல் செய்து, தனிப்பெரும் சக்தியாகத் திரியில் திகழ்வது நாங்கள் அனைவரும் செய்த பாக்கியமல்லாமல் வேறு என்ன!
தங்கள் பாச மழையில் நனைந்து கொண்டிருக்கும்
அன்புச் சகோதரன்.
நன்றி 'கோல்ட் ஸ்டார்' அவர்களே!
'கர்ணன்' விழா வீடியோக்களுக்காக தொலை தூரத்திலிருந்து உளமார, மனமார தொலைபேசியின் வழியாக வாழ்த்திய அன்பு நண்பர் திரு சதீஷ் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!
vasudevan
அன்புப் பம்மலார் சார்,
"கர்ணன்" 100வது நாள் மெகாவெற்றி விழா பற்றி 'மாலை மலர்' புகழ் மாலை தொடுத்திருப்பதை பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி!
நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற நம் ஒட்டுமொத்தக் குரலின் பிரதிபலிப்பாக 'கர்ணன்' நூறாவது நாள் விழாவில் திரு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆற்றிய உரையை 'தினமணி' வாயிலாக எங்களுக்கு உணர்த்திய தங்களுக்கு நன்றி! விழாவை வெற்றிகரமாக நடத்திய பேரவை அமைப்பிற்கும், அதன் தலைவர திரு.சந்திரசேகரன் அவர்களுக்கும் நன்றி!
'தங்கப்பதக்கம்' திரைவானம் 'தக தக' பல தெரியாத அரிய விஷயங்கள் இப்பதிவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அடேயப்பா! தங்கப்பதக்கம் நாடகத்துக்கு இவ்வளவு சிறப்புக்களா!
பதிவுகள் அனைத்திற்கும் தங்கமான நன்றிகள்.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு என்றென்றும் கடமைப் பட்டவனாவேன். பாராட்டிற்கு நன்றி!
டியர் பாரிஸ்டர் ரஜ்னிகாந்த் அவர்களே,
தங்கள் தந்தையார் உடல் நலம் பூரண குணமடைந்து மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புவார். நம் அனைவருடைய நல்லெண்ணமும் பிரார்த்தனைகளும் இதற்குத் துணை நிற்கும்.
அன்புடன்
ராகவேந்திரன்
அன்பு கார்த்திக் சார்,
உங்கள் தூய அன்பிற்கு நன்றி! தாங்கள் சென்னைக்கு வந்திருந்து நாங்கள் உங்களை சந்தித்திருந்தால் அதை விட சந்தோஷம் வேறு என்ன எங்களுக்கு இருக்க முடியும்?. தலைவரின் சாதனைகளை தரணி போற்றப் பாடும், (பாடுபடும்) உங்கள் தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
டியர் பார்த்தசாரதி சார்,
வண்ணமயமான கொண்டாட்டங்களில் தாங்கள் 'மிஸ்' ஆனதை நாங்கள் அனைவரும் மிஸ் பண்ணியதாக நினைகிறோம். எனினும் மறு வருகைக்கு மிக்க நன்றி! அடுத்து ஒரு சூப்பர் பாடல் ஆய்வுடன் வந்தால் தான் நான் தங்களுடன் பேசுவேன்
தங்கள் அன்புப் பாராட்டிற்கும் நன்றி!
உரிமையுடன்,
vasudevan
டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி! கர்ணன் நூறாவது நாள் விழாப் பதிவுகள் அருமை! அதிலும் குறிப்பாக 'sakshi' பதிவு.