-
மக்கள் திலகத்தின் படங்கள் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சிறு கிராமங்களில் தினசரி 2 காட்சிகளாக ஓடி கொண்டிருப்பது வியப்பாக உள்ளது .
நண்பர் திரு ராமமூர்த்தி அவர்கள் ஆம்பூர் , பூட்டுதாக்கு போன்ற இடங்களில் வெளியான போஸ்டர்ஸ் படத்தை மக்கள் திலகம் திரிக்கு அனுப்பி வைத்தமைக்கு நன்றி ராமமூர்த்தி சார் .
-
வினோத் சார்,
ராக்கெட் வேகத்தில் இந்த திரியை செலுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றி.
-
www.dinathirai.com
புரட்சித்தலைவர் நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கு கவியரசு கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் படமாக்கப்பட்ட பின்னரும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் வேறு சில பாடலாசிரியர்களையும் அழைத்து பாடல் எழுதச்சொல்லியிருகிறார்.
http://www.dinathirai.com/images/stories/mgr%20news.jpg
ஆனால் பல முன்னனி கவிஞர்கள் எழுதியும் திருப்தியடையாத எம்.ஜி.ஆர், ஒரு மூத்த கவிஞரை வரச்சொல்லி, உங்களால்தான் இந்த பாடலை எழுத முடியும் என்று கேட்டுக்கொண்டிருகிறார்.
கண்ணதாசன் எழுதி, படமாக்கப்பட்டுவிட்ட" நான் பொறந்த சீமையிலே நாலுகோடிப்பேருங்க, நாலு கோடிப்பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க -என்ற அந்தப் பாடலைக் கேட்ட அந்த மூத்த கவிஞர், “ இந்தப் பாடலே நல்லாயிருக்குதே! இதை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்? ”என்று கேட்டிருகிறார்.
அதற்கு பொன்மனச் செம்மலோ, " ஆயிரத்தில் ஒருவன் என்று படம் எடுத்துவிட்டோம்! இப்போது நாலு கோடி பேர்களில் ஒருவன் என்பது மிகச் சாதாரணமாக இருக்கிரது" என்று கூறியிருகிறார்.
எம்.ஜி.ஆரின் சிந்தனையை எண்ணி வியந்த மூத்தகவிஞர் புதிய பாடல் எழுதிக்கொடுத்திருக்கிறார். அந்த பாடல் " கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்". அந்த மூத்த கவிஞர் அ.மருதகாசி.
-
-
-
-
-
-
Thank u mr.vasu for the news about kannai nambathey song.
-