உலகம் சுற்றும் வாலிபன் - 42 வது ஆண்டு துவக்கம் .-சிறப்பு பார்வை
----------------------------------------------------------------------------------------------------------------------
1.உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் சந்தித்த சோதனைகள் ஏராளம் .
2.உலகம் சுற்றும் வாலிபன் சாதித்த/சாதிக்கின்ற /சாதிக்க போகின்ற
சாதனைகள் அதைவிட ஏராளம்.
3.உ.சு.வாலிபன் தயாரிப்பு பற்றி , பொம்மை மாத இதழில் திரைகடலோடி
திரைப்படம் எடுத்தோம் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
ஏற்கனவே பேட்டி அளித்துள்ளார்.
4. தற்போது தினமலர் வாரமலரில் , ஞாயிறு தோறும் உ.சு. வாலிபன் தயாரான விதம் பற்றி புரட்சி தலைவர் எழுதிய "நான் ஏன் பிறந்தேன் "
தொடரிலும் செய்திகள் வெளியாகின்றன.
5. 1973ல் படம் வெளியாகும் முன்பே தி.மு. க.வினர் வரும் . ஆனால்
வராது. என்றனர்.வந்தால் சேலை கட்டிக்கொள்ள தயார் என மதுரை முத்து அறிக்கை வெளியிட்டார். பின்னாளில் அதே மதுரை முத்துவை
புரட்சி தலைவர் தன வசமாக்கி அவருக்கு பதவி அளித்து பெருமை
சேர்த்தார் என்பது வேறு விஷயம்.
6.தி.மு.க.வினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் சென்னை
ஏழுகிணறு (வடசென்னை) பகுதியில் நடந்த பொதுகூட்டத்தில் 1973 மார்ச் மாதத்தின்போது , கூட்டத்தில் இருந்த பகுதியினர் ஆர்வமிகுதியில் உ.சு.வாலிபன் பற்றி கேட்ட போது மே மாதம் 2 வது வாரம் உ.சு. வாலிபன் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவித்தபோது மக்கள் இடையே எழுந்த மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரமானது.
7.சத்யா ஸ்டுடியோவில் பின்னணி இசை சேர்ப்பு நடக்கும்போது, தி.மு.க. வின் அடக்கு முறை, அராஜக ஆட்சியில் வேண்டுமென்றே அந்த பகுதியில் மின்வெட்டை அதிகபடுத்தி மின் விநியோகத்தை சராசரி
அளவைவிட குறைந்த அளவில் அளித்து தொல்லைகள் கொடுத்த காலமும் உண்டு.
8. உ.சு. வாலிபன் வெளியாகும் தருணத்தில் சுவரொட்டிகளுக்கு
மாநகராட்சிகள் வரி அதிகம் விதித்தால் சுவரொட்டிகள் ஓட்ட முடியவில்லை. முதல் வெளியீட்டில் சுவரொட்டி விளம்பரம் இல்லாமல் ஓடிய ஒரே படம்
9. உ.சு. வாலிபன் வெளியான பெருவாரியான் அரங்குகளில், மின்வெட்டு
அமுலில் இருந்த காரணத்தினால் , ஜெனெரேட்டர்கள் பொருத்தப்பட்டு
படம் வெளியானது. மின்வெட்டை பற்றி வாய் கிழிய பேசும் தி,மு.க. வினர் இந்த திரைப்படம் வெளியிடாமல் இருக்க அந்த காலத்தில்
எவ்வளவு நெருக்கடி கொடுத்தார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.
10. திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் படத்தை திரையிட்டால் பல
தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும் என பகிரங்கமாக அரசு இயந்திரம்
பயன்படுத்தப்பட்டது.
11. எக்ஸ்போ 70-ல் படமாக்கப்பட்ட ஒரே தமிழ் படம்.
12. மலேசியா, சிங்கப்பூர் , ஜப்பான், பாங்காக் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்.
13. 1973 க்கு முன்பும் , பின்பும் வெளியான/வெளியாகின்ற /வெளியாகபோகிற அனைத்து தமிழ் திரைப்படங்களின் வசூலையும் ,
பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும்/ திரை அரங்குகளில் ஓடும்
நாட்களையும் முறியடித்த /முறியடிக்கின்ற/முறியடிக்க போகின்ற
ஒரே சாதனை திரைப்படம்.
14.எப்போது திரையிட்டாலும் வசூலை வாரி குவிக்கும் விநியோகஸ்தர்களின் அமுதசுரபி.
15.தமிழ் திரைப்பட உலகில் முதன் முறையாக 25 அரங்குகளுக்கு மேலாக 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது
16.சென்னை தேவி பாரடைசில் அட்வான்ஸ் புக்கிங்கில் 160 காட்சிகள்
தொடர்ந்து அரங்கு நிறைந்தது. கரண்ட் புகிங்கில் தொடர்ந்து 227 காட்சிகள் அரங்கு நிறைந்தது.
17.அகஸ்தியா , உமா, வில்லிவாக்கம் ராயல் ஆகிய அரங்குகளிலும்
தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்தது.
18.மதுரை மீனாட்சியில் 250 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்.
19.25 அரங்குகள் மேல் 100 நாட்கள் ஓடிய படம்.
20.சென்னை தேவி பாரடைஸ் 182 நாட்கள். அகஸ்தியாவில் 175 நாட்கள்
(வட சென்னையில் தினசரி 3 காட்சிகளில் ஓடிய ஒரே படம் )
உமாவில் 112 நாட்கள். வில்லிவாக்கம் ராயலில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம். திருச்சி பேலஸ் -203 நாட்கள். மதுரை மீனாட்சியில் 217 நாட்கள் பெங்களுரு -3 அரங்குகளில் 105 நாட்கள். இலங்கையில்
கொழும்பு கேபிடல் -200 நாட்கள்..
21.மறு வெளியீடுகளில் விநியோகஸ்தர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.
22.பாடல்களில் / பின்னணி இசையில் பிரம்மாண்டம்.
23.முதல் பாடலே (டைட்டில் ) அசத்தலானது. நமது வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லும் - 1973-ல் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில்
வெற்றி. உ.சு. வாலிபன் தயாரிப்பு /படமாக்கம் / வெளியீடு வெற்றி
என்று மக்கள் திலகம் ரசிகர்களுக்கும், புரட்சி தலைவர் தொண்டர்களுக்கும் இரட்டை இலையில் விருந்தளித்தார்.
தொடரும் ............
17.