Originally Posted by
venkkiram
இரண்டு பக்கங்களிருந்தும் நியாயங்களைப் பார்க்கிறேன். சந்துரு தவறான நோக்கத்தில் தாமினியை காதலித்து வந்திருக்கிறார் என்றாலும் கூட, அவரை விரும்புவது/விட்டு விலகுவது தாமினி மட்டுமே செய்யவேண்டிய ஒன்று. அடக்குமுறையால் நிர்பந்தப் படுத்தப் கூடாது. தாமினி தன் வாழ்க்கையை தானாகவே சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய வயது, பக்குவம் இருக்கிறது என நம்புகிறேன். சந்துருவைப் பொறுத்தவரை, அவருடைய குடும்ப உறவுகளின் செயற்பாடுகள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுவிட்டதால், அதெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் இனி திருந்தி வாழ, தாமினியொடு சிறந்த முறையில் குடும்பம் நடத்த வாய்ப்பு இருக்கிறது. அதை அவர் சரியான முறையில் பயன்படுத்தி, சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டலாம். சேரன் செய்யவேண்டியது இதுதான்.. தன் மகளுக்கு எந்தவிதத்திலும் சந்துரு மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களிடமிருந்து பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஒருவேளை வந்தால் அதை சமாளித்து வரக்கூடிய வகையில் மகளுக்கு நல்ல போதனைகளைச் சொல்லி மகளை சுதந்திரமாக செயல்பட வேண்டும்.