http://i59.tinypic.com/2wftlz9.jpg
Printable View
வாங்க வாங்க எஸ்வி சார் சுகமா ? .
வாசு சார் எஸ்வி சார்க்கு ஒரு சோடா கொடுக்கவும் :) நான் பீடா கொடுக்கிறேன் :):)
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
என்னது காலையில் மனதில் ஒலிக்கும்பாட்டா.. நித்தம் நித்தம்மாறுகின்றதெத்தனையோ நெஞ்சில் நினைத்ததெல்லாம் நடந்ததுவும் எத்தனையோ.. என்ன படம் என நினைவிலில்லை..
வாசு சார்..குட்டியாய் இரண்டே இரண்டு பாரா மட்டும்..பின் இதுபற்றிப்பேசமாட்டேன்..முதலிலேயே சொல்லிவிடுகிறேன்..வாசக தோஷ ஷந்தவ்யஹ..
உங்களுடைய பதிவைப் படித்த போது உங்கள் மனத்தில் கனன்று கொண்டிருந்த வேதனையின் வெளிப்பாடு எரிமலையாகப் பொங்கி வழிந்திருக்கிறது என்பது என் எண்ணம்..மிகச்சிறந்த கலைஞர் ந.தி. அவரது மிகச் சிறந்தபக்தர்களுள் ஒருவர் தாங்கள்..ஆனால் ஒருவர் எழுதிய பதிவு புண்படுத்தி ந.தி இழைக்குள்ளேயே போக இயலவில்லை என்ற காரணம் எனக்கு சரிவரப் புரியவில்லை.. சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.. சொல்லாவிட்டாலும் ஓ.கே.. ஒரு படைப்பாளியின் வேதனை இன்னொரு படைப்பாளிக்குத்தான் புரியும் அது போல ஒரு தக்குணியூண்டு சின்னதாய் எழுதிப்பார்க்கும் சக படைப்பாளி (?!) என்ற வகையில் எனக்குப் புரிகிறது..
வாழ்க்கையில் வெகுவாய் அடி வாங்கி இதுவும் கடந்து போகும் என்ற கீதையின் மன நிலைக்கு வந்து விட்டவன் நான்..நான் நடிகைகளை வர்ணித்து எழுதுவதெல்லாம் ரசனையின் வெளிப்பாடே..உள்ளொன்று வைத்துப் புறமொன்று எழுதுவதில்லை..எழுதுவது ஒரு சுகம்..அதுவும் எப்படிப்பட்டதையும் எந்த வித சூழ் நிலையையும் எந்த வித நபரையும் நமக்கு மேலான ஆண்டவனையும் சுவாரஸ்யம் குறையாமல் வித்தியாசமாக (அடிப்பது ஜல்லியானாலும்( எழுதிப் பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை..அதற்காக இடைவிடாமல் முயற்சியும் செய்து கொண்டு வருகிறேன். எழுதத் தான் வரமாட்டேன் என்கிறது.. அதற்காக என் முயற்சியைத்தவற விடுவதில்லை..
ஒரு காலத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் மனம் புண்பட்ட போது தொலைபேசிய பல நண்பர்களில் ஒருவர் கோபால்.. அவரது சில கோபத்தின் வெளிப்பாடான இடுகைகள் பார்க்கும் போது எனக்கு சின்னவயது சி.க நினைவு தான் வரும்..(இந்த “சின்ன” என்ற அடைமொழிகூட எனக்கு நான் கொடுத்துக் கொண்டதன் காரணம் வலை வாழ் அறிஞர் தம் அடியார்க்கும் அடியேன் என்பதால் தான்).. நான் மாறியிருக்கிறேன்.. அதே போல மனம் புண்பட்ட காலத்தில் சி.கவை இப்படிப் பேசியிருக்க வேண்டாம் என மொழிந்த பல நண்பர்களில் ஒருவர் வெங்க்கி ராம்.. கவிதைக்குக் கவிதையில் என்னுடன் விளையாடிய நண்பர்களில் ஒருவர். அப்போது தான் அவரது இடுகையை ந.தி திரியில் முதன் முதலில் பார்த்தேன்.. (முன்னால் எழுதியிருக்கலாம் நான் பார்த்ததில்லை)
வாசு சார்.. மனதில் பாரமிறக்கிவிட்டீர்கள் அல்லவா..யூ ஹேவ் டு கோ டு ந.தி த்ரெட் அண்ட் யூ ஹாவ் டுகிவ் யுவர் காண்ட்ரிப்யூஷன்ஸ் ஓவர் தேர் ஆல்ஸோ.. தவிர இந்த மதுர கானங்கள் என்பது மன இளைப்பாறல் என்பதற்கான் திரி என்பதை விட பகிர்ந்ததைப் படிப்பதற்கும் பகிர்ந்து எழுதப் பார்ப்பதற்கும் உண்டான திரி.. எனக்குத் தான் படங்கள் வீடியோபோடுவது மறந்து விட்டது..
( இரண்டு பாரா என்று விட்டு நான்காகி விட்டது..!)
மதுர கானங்கள் பாகம் மூன்றை வெற்றிகரமாக தொடங்கவிருக்கும் என் அருமை ராஜேஷ்ஜிக்கு என் மனப்பூர்வமான இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
http://www.pegham.com/images/imported/2009/02/545.jpg
http://www.cottoneauctions.com/uploa...1/1202ph51.jpg
கிருஷ்ணா சார்
ம.ம. ம. கானம் -பாகம் -2 சிறப்பாக நடத்தி சென்ற உங்களுக்கு எனது அன்பான பாராட்டுக்கள் .
எட்டு வாரங்களில் அறுபத்தி எட்டாயிரம் பார்வையாளர்களுடன் இனிதே இன்றே நிறைவு பெறும்
மதுர கானத்திற்கு வாழ்த்துக்கள் .எத்தனை பாடல்கள் .... அலசலகள் - கட்டுரைகள் - எல்லோருக்கும்
அன்பான பாராட்டுக்கள் .
இனிய நண்பர் திரு ராஜேஷ் அவர்கள் பெருமையுடன் துவக்கும் ம.ம.ம .கானம் -3 வெற்றி பெற
வாழ்த்துக்கள் .
திகம்பர சாமியாரும் பல தோற்றங்களும் (பாத்திரங்கள் அல்ல!)
நானும் யாராவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இதுவரை இல்லை என்பதால் எழுதுகிறேன். நெய்வேலியார் சற்றே "கெட்டப்புகள்" என்று சிறிதாக எழுதி இருந்தார்.
இன்றும் கூட பல கலைஞர்கள் இந்த பல்வேறு கெட்டப்புகளில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
திகம்பர சாமியார் படத்தில் மறைந்த நம்பியார் அவர்கள் பல்வேறு கெட்டப்புகளில் தான் நடித்தார். பாத்திரங்களில் அல்ல.
ஆனால், நடிகர் திலகமோ நவராத்தியில் ஒன்பது வெவ்வேறு குணாதிசயம் கொண்ட வேறு வேறு பாத்திரங்களில் நடித்தார் - அல்ல, வாழ்ந்தார்! ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வோர் உடல் மொழி, குரல், etc. அவருக்கு செவாலியே விருது வழங்கப்பட்டதற்கு, இந்தப் படத்தில் அவர் காட்டியிருந்த சாதனை தான் மூல காரணம். இத்தனைக்கும், ஹாலிவுட்டின் MGM நிறுவனத்தினர் படம் வந்த புதிதிலேயே, பார்த்து மிரண்டு, இந்த நடிகர் மட்டும் எங்கள் ஊரில் இருந்தால், நாங்கள் தங்கச் சுரங்கத்தையே செய்து விடுவோம் என்றனர்.
எந்த வித தொழில் நுட்ப உத்தியும் இல்லாத காலத்தில் தன்னுடைய கற்பனை வளத்தை மட்டுமே வைத்துக் கொண்டு (கூடுமான வரை, அவரே ஒப்பனையும் செய்து கொண்டு விடுவார்!) ஒன்பது பாத்திரங்களில் நடித்தது, ஒப்பு உயர்வற்ற சாதனை.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
தாரளமாக. சின்னக் கண்ணன் சார்! உங்கள் உரிமையை நான் ரொம்ப மதிக்கக் கடமைப்பட்டவன். ஆனால் நீங்களும் குழந்தை போன்றவர். விரைவில் பி.எம்.அனுப்புகிறேன். அப்போது எல்லாம் விவரமாக புரிந்து கொள்வீர்கள். ஆனால் ஒன்று. எந்தக் காலத்திலும் நியாயம் தவறி நடக்கவே தெரியாது. அதுதான் என் தெய்வம் எனக்கு நேரிலே கூட சொல்லிக் கொடுத்த பாடம்.
வருக பார்த்தசாரதி சார்! நலமா!
இப்படி பாகம் தொடங்கும் போதும் முடிவடையும் போதும்தான் வருவதா?:) உங்கள் பொன்னான எழுத்துக்களை எவ்வளவு மிஸ் செய்கிறோம் தெரியுமா? இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை என்று சகோதர உரிமையோடு சொல்கிறேன்.
மிஸ் என்றால் சின்னக் கண்ணனார் கனவில் மிட்டாய் நமீதா வருவார்.:) அப்புறம் எங்கள் பாடு திண்டாட்டமே!:)
வாசு சார்
எல்லோருக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டிய நேரம் இது.
மனதை மயக்கும் மதுர கானம் பாகம் இரண்டு நிறைய பாடல்களுடன்,
எஸ்வி சார் அவர்களின் ஆவணங்கள்,
மது சார் அவர்களின் கண்டுபிடித்து கொடுத்த பாடல்களின் காணொளி,
ராஜேஷ் சார் அவர்களின் பன்மொழி பாடல்கள்,
கோபு சார் அவர்களின் நன்றி மற்றும் ஊக்க பதிவுகள்,
சின்ன கண்ணன் சார் அவர்களின் கவிதை வரிகள் உடன் கூடிய பல பாடல்கள்,
வெங்கிராம் சார் அவர்களின் பாடல் பதிவுகள்,
குருஜி ராகவேந்தர் சார் அவர்களின் பொங்கும் பூம்புனல்,
கார்த்திக் சார் அவர்களின் ரசனையுடன் கூடிய பாடல் வெளியீடுகள்,
புதிதாக வந்து நிறைய பழைய பாடல்கள் தகவல்களை தந்த பேராசிரியர் ராஜ் ராஜ் சார் அவர்கள்,
விமர்சனத்துடன் சிலாகிக்க கூடிய திரு கோபால் அவர்களின் பதிவுகள்,
சிதூர் வாசு சார் அவர்களின் மெலடி கலந்த ஹிந்தி பாடல்கள்,
முரளி சார் அவர்களின் முக்கியமான பாடல் பதிவுகள்,
எஸ்எஸ்எஸ் அவர்களின் பதிவுகள் ,
ரவி கிரண் சார் அவர்களின் பதிவுகள்,
யுகேஷ் பாபு அவர்களின் பதிவுகள் ,
திகம்பர சாமியார் என்பது தோற்றம் ,நவராத்திரி என்பது பாத்திரங்கள் என்று விளங்க வைத்த நண்பர் சாரதி அவர்களக்கும்
(வேறு யாரவது விட்டு போய் இருந்தால் வாசு சார் அவர்கள் நினைவு படுத்து வேண்டுகிறேன் )
மற்றும் பல சினிமினி தகவல்கள் கலந்து நிறைவடையும் நேரம் இது
வாய்ப்பு தந்த வாசு சார் அவர்களுக்கும் ஓத்துழைப்பு நல்கிய அனைத்து நெஞ்சகளுக்கும் மனமார்ந்த நன்றி
மூன்றாவது பாகத்தை தொடங்க இருக்கும் திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
வணக்கம் வினோத் சார். மதுர கானங்களில் மகத்தான ஆவணப் பங்கு உங்களுடையது. அதற்கான நன்றி எங்களுடையது. அ .ச.புகைப்படம் அம்சம். நன்றி!
மதுர கானத்தை கேட்டு, கண்டு, களித்து ஊக்குவிக்கும் ஸ்டெல்லா மேடத்துக்கும் நன்றி சொல்வோம் கிருஷ்ணா சார்.
Here’s a review of the Aboorva sagotharargal movie from the NY Times:
Following up on S. S. Vasan’s 1948 mega-hit Chandralekha, this sequel was inspired by Douglas Fairbanks Jr.’s 1941 film The Corsican Brothers. The film opens with the dastardly Zoravar Singh vanquishing a rival kingdom and usurping its throne. A trusted servant spirits away the twin princes Vikram and Vijay who are heirs to the crown. Though raised separately, Vikram grows up in the city while Vijay lives his childhood in a forest, both become obsessed with avenging their father and both fall for the same beautiful lass (Bhanumathi). This film was produced in three different languages– Tamil, Telugu, and Hindi — with three different directors credited — T. G. Raghavachyran, C. Pullaiah and S. S. Vasan respectively. ~ Jonathan Crow, All Movie Guide
கார்த்திக் சார் இந்த நல்ல நேரத்தில் இல்லாதது ஒரு பெரும் குறை.
அற்புதமான அரிய பாடல்களின் வீடியோக்களை சிரமப்பட்டு இங்கே பதித்த மது அண்ணாவுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
மனதை மயக்கும் மதுர கானங்கள் பாகம் 2
இதுவரை
Replies: 3,978
Views: 69,030
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம் (அக்.8, 1959) (பிறப்பு ஏப்ரல் 13 1930 ) 29 வயதில் மறைந்து விட்டார்
https://encrypted-tbn3.gstatic.com/i...S7iWZVL_OWbr0A
இவருடைய பாடல்கள் பெரும்பாலும் கிராமியத்தை தழுவியதாக இருககும். பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். 1955-ஆம் ஆண்டு ‘படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி, சினிமாவில் அழுத்தமான முத்திரையை பதித்தார்.
189 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திடீர் மறைவுச் செய்தியை கண்ணதாசனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 'பட்டுக்கோட்டை சாய்ந்ததா? இல்லை பாட்டுக் கோட்டையே சாய்ந்ததம்மா!' என்று கண்ணதாசன் பட்டுக்கோட்டையார் மறைவு குறித்து மிக உருக்கமாக பாடினார்.
பாண்டித் தேவன்' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலில் சில வரியை இங்கே காணலாம்.
'சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
என்ன பண்ணி கிழிச்சீங்க!'
கண்திறந்தது' என்ற படத்தில் மிக புரட்சிகரமான வரிகளை பட்டுக்கோட்டையார் பாடலாக்கி இருக்கிறார்.
'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்...'
இதே போல் 'சங்கிலித் தேவன்' என்ற திரைப்படத்தில் தொழிலாளர் மேன்மையை சொல்லுகிற ஒரு அருமையான பாடலை பட்டுக்கோட்டையார் எழுதி இருந்தார்.
'வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடு கட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி
எதற்கும் உழைப்பு தேவை!
'திருடாதே' திரைப்படத்தில் (மக்கள் திலகத்தின் துடிப்பான நடிப்பை கொண்ட படம் ) குழந்தைக்கு புத்தி சொல்வது மாதிரி பெரியவர்களுக்கே பொதுவுடமை தத்துவத்தின் சாறு எடுத்து கவிதையாக்கி ஊட்டி இருக்கிறார். அதில் சில வரிகளை பாருங்கள்.
'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம்
வளராது மனம்
கீழும் மேலும் புரளாது
கோபால் சும்மா சொல்ல கூடாது நீங்கள் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல . அங்கேயுமல்ல .. இனி எங்கேயும் இல்ல நிம்மதியாக இருக்கவும் ..
ஆடலுடன் பாடலைக் கேட்டு..
https://lh5.googleusercontent.com/pr...2O0A=w506-h380
தமிழ்த்திரை வரலாற்றில் பஞ்சாபி வகைப் பாடல்கள் இடம்பெற்ற அன்றும் இன்றும் என்றும் இந்தப் பாடல் இசையில் ஒரு குதூகலம்! திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் இப்பாடலுக்கு நிச்சயம் இடம் உண்டு! ஆடல் கலையை பயின்று அறிந்து வைத்திருந்த விஜயலட்சுமி அவர்களுடன் எம்.ஜி.ஆர் பிரத்யேகமாக பயிற்சி எடுத்து இந்தக் காட்சியில் ஆடிய நடனம் அந்நாளில் பரபரப்பாக பேசப்பட்டது
கவிஞர் ஆலங்குடி சோமு எழுதிய உச்சஸ்தாயியில் டி.எம்.செளந்திரராஜனும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய பாடல் ! இதில் ஆடலும் உண்டு! பாடலும் உண்டு! மெல்லிசை மன்னர் இசையில் புதுமையும் உள்ள முத்திரைப் பாடல்!
ஆடலுடன் பாடலைக் கேட்டு..
ரசிப்பதிலேதான்சுகம்சுகம்சுகம்
ஆசைதரும்பார்வையில்எல்லாம்
ஆயிரம்எண்ணம்வரும்வரும்வரும்
பின்னாட்களில் வெளிவந்த விக்ரமனின் புது வசந்தம் திரை படத்தில் இந்த பாடலுக்கு இரவு நேரத்தில் நிலவு வெளிச்சத்தில் லுங்கி கட்டி கொண்டு நடிகர் ஆனந்த பாபு (நடிகர் நாகேஷ் புதல்வர் ) ஆடும் நடனமும் நளினமாக இருக்கும்
http://www.cinemanewstoday.com/wp-co...8/IMG_2114.jpg
http://www.youtube.com/watch?v=BqeX54Wmvgw&authuser=0
இதே போன்று நடிகர் திலகத்துடன் ஹலம் ஆடும் பஞ்சாபி பாடல்
மன்னவன் வந்தானடி திரை படத்தில் நம்பியார் வீட்டு வாசலில் ஆடும் பஞ்சாபி நடனமும் அருமையாக இருக்கும்
'ராஜஸ்தானில் யாரோ ஒருவர் ராஜாவாக பொறந்திருக்கனாம் ரா நைனா '
http://www.youtube.com/watch?v=J5MTGhe8cqY
மதுர கானம் திரியில் ஒரு கற்பனையான கிசுகிசு
பிரபல அறிவாளி ஒருவர் தன்னை யாரும் மதிக்கவில்லை என்று சபையை சாபித்து விட்டு அவசரமாக வெளியேறிய நேரத்தில் எதிரே வந்த ஒரு சிங்கத்தை முறைத்து பார்த்தாராம் . சிங்கம்
அவரை பார்த்து ''அண்ணே என்ன கோபமாக ஓடுகிறீர்கள் என்று கேட்டதற்கு அறிவாளி
போதுமடா சாமி ..இனி இருக்கிற கொஞ்ச நாள் ''அவரின் '' புகழ் பாடி விட்டு செல்கிறேன் என்று
கூறினாராம் .
இப்போது மில்லியன் டாலர் கேள்வி
யார் ''அவர்'?
வேலா காப்பாற்று .
நீங்கள் என்ன கிழட்டு புளியா ? :) :) சாதாரண புலி அல்ல சாம்பார் புளி (கொட்டை எடுத்ததா? எடுகாததா ? :) )
https://encrypted-tbn0.gstatic.com/i...FJ501VysHg6ST3
:notworthy:
அடடா.. கொஞ்சம் தாமதமாக வந்திருந்தா ரெண்டிலிருந்து மூன்றுக்கு போயிருக்கும் போலிருக்குதே !!
வாசு-ஜி.. ஏற்கனவே வாத்தியாரையாவும் சொல்லி இருப்பதைக் கண்டேன்.. அது "மாலை நன்னேரம் மா நதியோரம்" என்ற வார்த்தைகள்தான்.
மேலும் "புதுமலர் விழியே மதுநிற மொழியே" என்பதும் "மது நிகர் மொழியே" என்று இருக்க வேண்டும். ( என்ன இருந்தாலும் மதுன்னு இருக்குதில்லே :lol: )
அருமையாக இரண்டாம் பாகத்தைக் கொண்டு சென்று முழுமை பெற வைத்த கிருஷ்ணா-ஜிக்கும் அடுத்த பாகத்தை ஆரம்பிக்கப் போகும் ராஜேஷுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும், நன்றிகளும்...
இது போல மதுரகானங்கள் திரி இன்னும் பல பாகங்கள் வெற்றியுடன் முன்னேற இறைவனை வேண்டுவோம்.
இத்தனை பதிவுகளுக்கு ஒரு திரி போதாதுங்கோ...
படம் : உண்மையே உன் விலை என்ன
எம்.எஸ்.விஸ்வநாதன்
வி.கே.ராமசாமி
இத்தனை மாந்தருக்கு ஒரு கோயில் போதாது
http://youtu.be/sPP3s7DjccA
சக்ஸஸ்ஃபுல்லாக திரியைக் கொண்டு சென்று முடித்த கிருஷ்ணா ஜிக்கு ஒரு பெரிய நன்றியுடன்கூடிய ஓ.
.மதுண்ணா ராஜ்ராஜ் சார் எஸ்.வாசுதேவன் ஆகியோரின் அபூர்வ வீடியோ பாடல்களுக்கும் ராகவேந்திரர் சாரின் அபூர்வ பாடல்களுக்கும் (இந்த பாகத்தில் ஓசைப்படாமல் சிக்ஸர் அடித்து என் மனதை கொள்ளை கொண்டது ராகவேந்திரா சார் தான்! .. வைஷாலி பாடல் வீடியோ ).மதுண்ணா டினா முனிம் பாட்டு..ராஜ்ராஜ் சார் கேட்ட கொஞ்சல் அடுத்த பாகத்தில் எழுதணும்..
. அஸ் யூஸ்வல் இன்”றைய ஸ்பெஷலின் அசுர உழைப்பு ( மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பாடல் ஸ்டில் படக் கதை பாட்டு அப்புறம் பாட்டு வீடியோ..இவ்வளவு தானே எனத் தான் நினைக்கத் தோன்றும்.. சுவாரஸ்யம் குறையாமல் எழுதுவது என்பது ஒரு கலை..அதில் நன்கு தேர்ந்தவர் வாசு சார் )- முக்கியமாக பாடல் செலக்ட் செய்வது –என எல்லாவற்றையுமே செம்மையாகச் செய்த வாசு சாருக்கு ஒரு பெரிய ஓ ( நிறைய பாடல்கள் நான் கேட்காதது) (மிஸ் நமீதான்னுல்லாம் சொல்ல மாட்டேனாக்கும்.. இப்போ மிஸ் ப்ரியா ஆனந்த் அல்லது மோனல் கஜ்ஜார்!)
ராஜேஷின் சுசீலாம்மா பாடல்கள் கன்னட மலையாளப் பாடல்கள் (அது என்ன கே.ஆர்.விஜயா பாட்டு ராஜேஷ்) - கலக்கல்.. அவருக்கும் ஒரு நன்றி.. ராகத் தொடரைத் தொடரப் போகும் கோபால் சாருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்… எஸ் எஸ் எஸ் தீராத சந்தேகத்தைத் தீர்த்து வைத்தவர்..அவருக்கும் ஒரு ஓ..+ தாங்க்ஸ். வெங்க்கிராம் – இரு பறவைகள் பாடலுக்கு நல்ல ரைட் அப் – நன்றி..
அப்ப மூணாம் பாகத்துல பார்த்த சாரதி சாருடைய கான் ட்ரிப்யூஷன் நிறையப் பார்க்கலாம்னு பட்சி பட்சி சொல்லுது.:)
.
மிக்க நன்றி மது சார் மற்றும் சி கே சார்
உங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி
பாகம் மூன்றிலும் உங்கள் முத்தான மற்றும் சத்தான பதிவுகளை நாடும்
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
https://encrypted-tbn2.gstatic.com/i...hBLrswI3RGC44I
https://encrypted-tbn1.gstatic.com/i...fIYIY58Cbl23M3
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆறேழு நாட்கள் போகட்டும் என்று சொல்லாமல்
தள்ளி போடாமல்
இப்போதே அள்ளி கொள்ள காத்து இருக்கும்
ராஜேஷ் சார் அவர்களுக்கு
மனதை மயக்கும் மதுர கானம் பாகம் மூன்றை துவக்க நம் திரி நண்பர்கள் அனைவரின் சார்பாக அன்புடன் அழைகிறேன்.
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
பாலா ஈஸ்வரி இணை குரல்களில் துள்ளல் பாடல் .இளமை ரவியும் கொஞ்சம் கோயம்பேடு முற்றல் முருங்கை சௌகார்
மது ஜி கொஞ்சம் விடியோ ப்ளீஸ் இந்த பாடலுக்கு அடுத்த பாகத்தில் :)
வெற்றிகரமாக இரண்டாவது பாகத்தை முடித்து அடுத்த மூன்றாவது பாகத்தில் நுழைய இருக்கும்
மனதை மயக்கும் மதுர கானம்....
மனதை கவரும் மதுர கானம் ....
திரிக்கு வாழ்த்துக்கள்..
துவக்கி வைத்த வாசு சார் மற்றும் கிருஷ்ணா ஜீக்கு வாழ்த்துக்கள்...
இணைந்து கரம் கோர்த்து நடத்தி வைத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..
அடுத்த பாகத்தின் ஆரம்பம் யாரிடம்...
ராஜேஷ் உங்களிடம் தான்
http://www.youtube.com/watch?v=fowi1edjaKE
Best wishes to Mr Rajeshji for starting the 3rd part of Madura Ganam.
Regards
கண்டிப்பாக....
இப்போதைக்கு ...
ஆரம்ப காலத்தில் அது.....
http://youtu.be/qkPmMF_OwPI
மூன்றாம் பாகம் ஆரம்பிக்க உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் தேவை
...................சில மணி நேரத்தில் வரும் மூன்றாம் பாகம் .................................................. .(ராஜேஷ்)
இரண்டாம் பாகத்தை வெற்றிகரமாக கொண்டு சென்ற அனைத்து ரசிக உள்ளங்களுக்கும் நன்றி ..
ஆரம்ப காலத்தில் அது இருக்கும் அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்..
மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம் அது தானே பெண் என்பது… ஜெயசுதா சசிகுமார், ஜெய்ஷங்கர் லஷ்மி, கமல் ?? ட்ரிபிள் ட்ரீட் என்பது இது தானோ..
ஆரம்ப காலத்தில் மழைதரும் மேகம் அந்த மழை நீர் படிய மனதினில் மோகம்.. (தப்போ ?!) :) வாங்க ராஜேஷ் ஜி.. வருக (இந்தாங்க லைட்டர்.. திரியைக் கொளுத்துங்கள்..!) நான் அவ்வப்போது வந்து வெடி போடறேன்.. (கே.ஆர்.வி பாட்டு நினைவு படுத்தியமைக்கு நன்றி!)
Fantastic melody from the music of the Great RD sung by the one & only Kishore Kumar.
Mr Rajeshi Ji listen to this melody and start .
http://youtu.be/jFYlChHSdzo
Wow Navin Nischol... very handsome guy. Thanks for the song S.Vasudevan ji
this is a very funny and meaning ful movie .. omprakash was outstanding