TIMES OF INDIA -03/09/17
http://i280.photobucket.com/albums/k...psnllu2skb.jpg
Printable View
TIMES OF INDIA -03/09/17
http://i280.photobucket.com/albums/k...psnllu2skb.jpg
தின இதழ் - 03/09/17
http://i280.photobucket.com/albums/k...pskotnnq4q.jpg
தமிழ் இந்து -03/09/17
http://i280.photobucket.com/albums/k...pspzxu2g1h.jpg
தின செய்தி -03/09/17
http://i280.photobucket.com/albums/k...psk2s6mslg.jpg
தினமணி -03/09/17
http://i280.photobucket.com/albums/k...psf8ss0l6s.jpg
தினமலர் -03/09/17
http://i280.photobucket.com/albums/k...pshvfocvif.jpg
தற்போது சன்லைப் சானலில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஆணையிட்டால் " திரைப்படம் காலை 11 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .
இன்று இரவு 7 மணிக்கு நடிகமன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "ரிக்ஷாக்காரன் " சன்லைப்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .
03/09/17 - ஜெயா மூவிஸ் - இரவு 10மணி -கன்னித்தாய்
மக்கள் குரல் -03/09/17
http://i280.photobucket.com/albums/k...psifb6zjxo.jpg
மாலை மலர் -03/09/17
http://i280.photobucket.com/albums/k...pswdezhzxq.jpg
மக்கள் திலகம் அடுத்த பாகம் அருமையாக துவங்கவிருக்கும் நேச நண்பருக்கு முன்னதாகவே பாச பாராட்டுக்கள்...
அனுதாப செய்தி
---------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர பக்தரும் ,முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அவர்களுடன் நெருங்கி நண்பராக பழகியவரும் ஆகிய திரு.நாகராஜன்
(மாநகர போக்குவரத்து கழகம் -பணி ஒய்வு பெற்றவர் ) உடல் நல குறைவால்
நோய்வாய்பட்டு , மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தார் என்கிற
செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய அவர் வணங்கிய இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .
அவரை இழந்து வாடும் அவரது மனைவி,மகள், மகன் மற்றும் குடும்பத்தினருக்கு
என் சார்பாகவும் , ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
சார்பாகவும் கனத்த இதயத்தோடு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் .
மறைந்த திரு.நாகராஜன் அவர்களின் பூத உடல் நாளை (05/09/17) பிற்பகல் கீழ்காணும் முகவரியில் இருந்து புறப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என்று நண்பர்கள்
தகவல் அளித்துள்ளனர் .
எண் .103, ஜீனிஸ் சாலை, (ஜோன்ஸ் சாலை அருகில் ) ,சைதாப்பேட்டை, சென்னை-600015.
ஆர். லோகநாதன் .
மறைந்த நண்பர் திரு.நாகராஜன் என்னுடன் பல ஊர்களுக்கு சுற்றுலா (குற்றாலம் ,
மதுரை, மைசூர், மெர்க்காரா, பேலூர், ஹலீபீடு , சுப்ரமண்யா ) வந்துள்ளார் என்பதை
நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது
நினைவாக சில புகைப்படங்கள் பதிவிட்டு (மலரும் நினைவுகள் ) அவரது நட்பையும்
பழகும் பாங்கினையும் போற்றுகிறேன் .
பாபநாசம் தலையணையில் (பாபநாசம் கோவிலுக்கு பின்புறம் )
http://i280.photobucket.com/albums/k...pswnrtf9vh.jpg
குற்றாலம் பிரதான அருவி அருகில்
http://i280.photobucket.com/albums/k...psojw2e7qf.jpg
http://i280.photobucket.com/albums/k...psel4kfq5l.jpg
தென்காசி ராஜகோபுரம் அருகில்
மதுரை மீனாட்சி கோவில் அருகில்
http://i280.photobucket.com/albums/k...psi7lfklcp.jpg
மறைந்த திரு.ராஜ்குமார் (இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் )
அவர்களுடன் குற்றாலம் செல்ல ரயிலில் பயணம் செய்தபோது .
தற்போது மறைந்த திரு.ராஜ்குமாருடன் இணைந்து விண்ணுலகில் பயணம் .
http://i280.photobucket.com/albums/k...psgevtfrxj.jpg
,மெர்க்காரா அருகில் உள்ள மலை உச்சியில் அமர்ந்துள்ள காட்சி.
தற்போது யாரும் காணாத எல்லைக்கு சென்றுவிட்டார் .
http://i280.photobucket.com/albums/k...psqha1uilk.jpg
கர்நாடக மாநிலம் குக்கே சுப்ரமண்யா கோவில் அருகில்
http://i280.photobucket.com/albums/k...psfveyxdyh.jpg
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் மறைந்த திரு.ராஜ்குமாருடன் திரு.நாகராஜன்,
திரு.சி.எஸ்.குமார் (பெங்களூரு )
http://i280.photobucket.com/albums/k...psx10mtapw.jpg
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் தற்போது மறைந்த திரு.நாகராஜுடன் ,
திரு.ஆர். லோகநாதன், திரு.சி.எஸ். குமார் (பெங்களூரு )
http://i280.photobucket.com/albums/k...psuwtyrjcf.jpg
தின இதழ் -04/09/17
http://i280.photobucket.com/albums/k...pszrxurkpr.jpg
தின செய்தி -04/09/17
http://i280.photobucket.com/albums/k...pst3mnskcu.jpg
தின இகழ் -04/09/17
http://i280.photobucket.com/albums/k...pssnl2c4hg.jpg
தமிழ் இந்து 04/09/17
http://i280.photobucket.com/albums/k...psslt48oek.jpg
பழைய திரை பட ஆவணங்கள் இடம் பெற்ற மக்கள் திலகம் புகழ் கூறும் பதிவுகளை எதிர் நோக்கும் நண்பர்கள்...
Many Happy wishes for Emperor of Emperors Makkal Thilagam Part 22 Inaugural...
மக்கள் திலகம் பக்தர் திரு குருநாதன் அவர்கள் பதிவிலிருந்து.....
நீங்கள் அறிமுகமான திரைப்படத்தில் இருந்து கடைசி படம் வரை
திரைப்படங்களில் கெட்டவன் கதா பாத்திரங்களை ஏற்காதவர்
திரைப்படங்களில் கெட்ட பழக்க வழக்கங்களை கற்பிக்காதவர்
உத்தமனாக -ஒழுக்க சீலனாக மட்டுமே திரைப்படங்களில் தோன்றியவர்
தாய் - தந்தை சொல்லை தட்டாமல் மதித்து நடக்க கற்று தந்தவர்
தீய சக்திகளை எதிர்த்து நம்நாடு முன்னேற நன்றாக பாடுபட்டவர்
குடியையும் - புகை பிடிப்பதையும் அறவே தவிர்த்தவர்
வரதட்சணை வாங்குபவரை மதிக்காதவர்
வசனங்களாலும் - பாடல்களாலும் உழைப்பின் மேன்மையை உயர்த்தியவர்
கொள்கை பாடல்களால் தொண்டர்கள் மனதில் உற்சாகத்தை விதைத்தவர்
தனக்கு நிகரான நடிகர்களுடன் சண்டை காட்சிகளில் மோதியவர்
உடன் நடித்த நடிகர்களுக்கு உடனே ஊதியம் கிடைத்திட செய்தவர்
தரக்குறைவான வசனங்களை பேசாதவர்
எதிரியை கூட ஏறிட்டு நோக்கி நண்பனாக்கி கொண்டவர்
இமாலய வெற்றிகள் தேடிவந்த போதும் இறுமாப்பு கொள்ளாதவர்
இப்படி நல்லவராக நடித்து நல்லவராக வாழ்ந்து ....
நல்லதொரு தலைவராய் ,நல்லதொரு முதல்வராய் மக்கள் மனதில் பதிந்து
எங்களையும் நல்வழிக்கு திருப்பிய நாடோடி மன்னனே - வாழ்க உங்கள் புகழ்
சமீபத்தில் "நாடாளுமன்றத்தில் வைகோ"என்ற நூலைப் படித்தபோது,
முதலமைச்சராக இருந்தபடி எம்.ஜி.ஆர்.எடுத்த ஒரு முக்கிய நிலைப்பாட்டை நூலாசிரியர் திரு.மு.செந்திலதிபன் மிக செறிவாகப்
பதிவு செய்திருப்பதைப் பார்த்தேன்.
இராமேஸ்வரத்திலிருந்து ஈழத்திற்கு ஆயிரம் இளைஞர்களுடன் படகில்
செல்லப்போவதாய் திரு.பழ.நெடுமாறன் அறிவித்தார். அவர் புறப்படும்
இடத்தில் கைதாவார் என்றும் இராமேஸ்வரத்தில் கைதாவார் என்றும்
வதந்திகள் உலவின. இராமேஸ்வரம் கடற்கரைக்கு நெடுமாறன் குழுவினர்
சென்று நின்றபோது கரையில் ஒரு படகைக்கூட காணோம். போராட்டக்
குழுவினர் திரும்ப நேர்ந்தது.
இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தபோது எம்.ஜி.ஆர் தந்த
பதில் இது: " அன்னை இந்திராகாந்திக்கு ஓர் ஆபத்து நேர்ந்தபோது,
அவர் உயிரைக் காத்தவர் மாவீரர் நெடுமாறன்.ஆனால் கடலில் போகும்
வேளையில் அவர் உயிருக்குப் பாதுகாப்பு உண்டா?எதிரிகள் வந்து சுட்டால் அவரால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியுமா? ஒரு நெடுமாறனை இழந்தால் இன்னொரு நெடுமாறனை உருவாக்க முடியுமா?
அதனால்தான் படகுகளை அப்புறப்படுத்தச் சொன்னேன்.
ஆனால் மக்கள் நடுவே இனவுணர்வை மேம்படுத்த அவர் செய்து வரும்
பிரச்சாரம் விலைமதிப்பில்லாதது.ஒரு முதலமைச்சராக இருப்பதால் நான்
செய்ய முடியாத பிரச்சாரத்தை அவர் செய்கிறார். எனவே அவரைக் கைது
செய்ய வேண்டாமென்று சொன்னேன்"என்றாராம் எம்.ஜி.ஆர்.
படகோட்டிகளை அப்புறப்படுத்தியதிலும் அந்தப் படகோட்டி
வித்தியாசமாகத்தான் சிந்தித்திருக்கிறார்.
தமிழக அரசியலில் மறக்க முடியாத எழுத்தாளர் சோலை!- சில நினைவுகள்
எம்ஜிஆருடன் அறிமுகம்
நிலம் பற்றிய சோலையின் கட்டுரை ஒன்று ஜீவானந்தம் அவர்களை வெகுவாக கவர்ந்தது. ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளின் ஈடுபாடினால் அமரர் ஜீவானந்தம் அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஜீவானந்தம் எளிமையானவர் என்பது ஊரறிந்த ஒன்று. அவருடன் பழைய தாம்பரத்தில் ஒரு ஓலை குடிசையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு முறை அமரர் எம்.ஜி.ஆர்., ஜீவானந்தம் அவர்களைச் சந்திக்க வந்தபோது, சோலையை யாரென கேட்டறிந்தார்.
ஜீவானந்தம் மறைந்த பின், உதவியாளரை அனுப்பி சோலையை அழைத்து வரச் சொன்னார். திருசெந்தூர் தேர்தலுக்கு ஒரு வேனில் பயணிக்கும்பொழுது, எம்.ஜி.ஆர்., சோலையின் கையைப் பிடித்து, "கடைசி வரை என்னுடன் இருப்பாயா?" என கேட்டார். பல முறை அரசியலில் இக்கட்டான சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் சோலைதான்.
எம்ஜிஆரின் பெருந்தன்மை
எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணா பத்திரிகை ஆரம்பிக்க முடிவு செய்து, அண்ணா பத்திரிக்கை விளம்பரத்தில் ஆசிரியர் சோலை என வெளிவந்தது. விளம்பரத்தை எடுத்துக்கொண்டு நேராக எம்.ஜி.ஆர். அவர்களிடம் சென்று, ஆசிரியர் என உங்கள் பெயர் போடுவதுதானே சரி என கேட்டார் . அதற்கு எம்.ஜி.ஆர்.,"வாசகர்களுக்கு எம்.ஜி.ஆர்.ஐ விட சோலைதான் நம்பிக்கையான பத்திரிகையாளர்" என கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். அவர்களின் கையில் இருந்த காகிதத்தை வாங்கி, ஆசிரியர் எம்.ஜி.ஆர்., துணை ஆசிரியர் சோலை என எழுதி கொடுத்துவிட்டு சென்றார். அனால் விளம்பரத்தில் துணை ஆசிரியருக்குப் பதில் இணையாசிரியர் சோலை என்றே போடச் சொன்னார் எம்ஜிஆர்.
வினோபா பாவேயின் சீடருக்காக
எண்பதுகளின் துவக்கத்தில், காந்தியவாதி வினோபா பாவே பூதான இயக்க தமிழக வாரிசு ஜெகநாதன் அவர்களின் குரல் நக்சல் இயக்கத்திற்கு ஆதரவானது என கருதி தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டார். இதை கேள்விப்பட்ட எனது அப்பா, எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்திக்க ஆற்காடு முதலி சாலைக்குச் சென்றார். எப்பொழுது வேண்டுமானாலும் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்கக்கூடிய நபராக இருந்தாலும் முன் அழைப்பு இல்லாமல் அதற்கு முன் வரை சென்றதில்லை. ‘‘அறவழியில் யாத்திரை சென்ற ஒரு காந்தியவாதி தாக்கப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதல் உங்கள் மீதும், உங்கள் ஆட்சியின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிகையை தகர்க்கும்,'' என தன் உள்ளக் குமுறலை வெளிபடுத்தினார்.
சோலையின் மற்றுமொரு முகத்தை கண்ட எம்.ஜி.ஆர். சாப்பிடக் கூட மனமின்றி அடுத்த நாளே தருமபுரியில் இருந்த அதிகாரிகள் அத்தனை பேரையும் வரவழைத்து காந்தியவாதி ஜெகநாதன் அவர்களை அழைத்து அடையாளம் காட்டச்சொன்னார். ஆனால் ஜெகநாதன் அவர்களோ, "நடவடிக்கை வேண்டாம், எச்சரிக்கை செய்து அனுப்பிவிடுங்கள்" என கூறியுள்ளார். ஏனெனில் அடித்த அதிகாரி, ஜெகநாதன் அவர்களின் உதவியால் படித்து முன்னுக்கு வந்தவர் என்ற தகவலையும் எம்.ஜி.ஆர். அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். அய்யா ஜெகநாதன் அவர்களின் துணைவியார் கிருஷ்ணம்மாள் அவர்களுக்கு சமீபத்தில் விஜய் தொலைகாட்சி "சிறந்த பெண்மணி" விருது கொடுத்து கௌரவித்தது.
எம்ஜிஆர் தந்த வீடு
ஒரு முறை எம்.ஜி.ஆர். எனது தந்தையை அழைத்து பெரியகுளம் தொகுதி தேர்தலில் நிற்கச் சொல்லி வற்புறுத்தியும் திட்டவட்டமாக மறுத்து, அவர் நண்பருக்கு அந்த தொகுதியைப் பரிந்துரை செய்ய, அந் நண்பரும் அத்தேர்தலில் வெற்றி கண்டார்.
அப்பாவுக்கு சொந்த ஊரில் வீடு இல்லை என அறிந்த எம்.ஜி.ஆர், பொருளுதவி செய்து, புதுமனை புகுவிழாவிற்கு தனது அமைச்சர்கள் புடை சூழ வந்து வாழ்த்தினார்.
எங்களது குடும்ப நபர்கள் சென்னையில் இருத்த சமயம் என்பதால், அந்த விழாவிற்கு, அவ்வூரிலிருந்த தனது தங்கையை தவிர யாருக்கும் தெரிவிக்க வில்லை. நானோ எனது உடன் பிறந்தவர்கள் யாரும் அந்த நிகழ்வில் பங்கேற்க வில்லை. எத்தனையோ அரசியல் பிரமுகர்கள் அவரைச் சந்திக்க வந்ததுண்டு , அனால் குடும்பதினர் யாரையும் எந்த ஒரு அரசியல் பிரமுகருக்கும் அறிமுகப்படுத்தியது இல்லை என் தந்தை. வார்டு கவுன்சிலர்கூட தனது அதிகார வட்டத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரத்தை பயன்படுத்தும் சூழ்நிலையில், தனது செல்வாக்கை தானும் பயன்படுத்தியதில்லை, தனது குடும்பத்தினரையும் பயன்படுத்த அனுமதித்ததில்லை.
அ தி மு க முதன் முதலில் ஆட்சி அமைத்த மாநிலம் தமிழகம் கிடையாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?
அ தி மு க வின் முதல் முதல்வர் மக்கள் திலகம் கிடையாது , அதன் முதல் முதல்வரின் பெயர் எஸ் . ராமசாமி .
ஆமாம் , அ தி மு க தோன்றிய , பின்னர் , முதன் முதலில் ஆட்சி அமைத்தது புதுச்சேரியில் தான் 1973 ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது , அதில் கட்சி துவங்கி 1 வருடம் கூட நிறைவு செய்யாத அ தி மு க வும் போட்டியிட்டது ,
அப்பொழுது அந்தத் தேர்தலில் , புதுச்சேரியின் 30 சட்ட மன்றத் தொகுதிகளில் 12 இடங்களை அ தி மு க பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது , எனினும் ஆட்சி அமைக்க அதற்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவைப் பட்டது . அங்கே இந்திரா காங்கிரசுக்கு 7 இடங்களும் , ஸ்தாபன காங்கிரசுக்கு 5 இடங்களும் , இந்திய கம்மியூனிஸ்ட் கட்சியும் தி மு க வும் தலா 2 தொகுதிகளும் , மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் 1 தொகுதியும் , தி மு க ஆதரவு சுயேச்சை 1 தொகுதியும் என்று முடிவுகள் அமைந்தது .
இந்தியா கம்மியூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்ம்யூநிஸ்ட் கட்சிகளின் ஆதரவை எடுத்துக் கொண்டாலும் கூட 15 இடங்கள் தான் அ தி மு க வுக்கு ஆதரவாகக் கிடைக்கும் அதில் ஒருவர் சபாநாயகர் ஆகிவிட்டால் , 14 என்று அந்த எண்ணிக்கை குறையும் . அதனால் இந்திரா காங்கிரசின் ஆதரவை கோரினார் மக்கள் திலகம் .
இதற்காக டெல்லி வந்திருந்த மக்கள் திலகத்திடம் அன்றைய பிரதமரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான இந்திரா காந்தி அவர்களை சந்தித்தார் . ஆதரவு தருவதாக உத்திரவாதம் அளித்த இந்திரா காந்தி , அதற்கு பதிலாக ஒரு உதவியை கேட்டார் , அப்பொழுது மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து சுயேச்சையாக போட்டியிட்ட அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் அதிபர் ரங்கநாதனுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கப் போவதாகவும் , அ தி மு க வும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் ....
கழகத்தின் ஆட்சி முதன் முதலில் அமைய வேண்டும் என்றால் இந்திராவின் கோரிக்கை ஏற்கப் பட வேண்டும் என்பதை புரிந்துக் கொண்ட மக்கள் திலகமும் அதற்குச் சம்மதித்தார் , ரங்கநாதனும் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார் , ஆனால் புதுச்சேரியில் எஸ் ராமசாமியின் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்த பொழுது .
தி மு க வுடன் சேர்ந்துக் கொண்டு இந்திரா காந்தி வாக்குறுதிக்கு மாறாக காங்கிரஸ் அ தி மு க வை எதிர்த்து வாக்களிக்கத்ததால் , அந்த அரசாங்கம் கவிழ்ந்தது .
இது இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே
ஹ் Kamalahassan speaks about our Puratchi Thalaivar
நான் முதன் முதலாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பார்த்தது திரையில் தான். அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும். பரமக்குடியில் மதுரைவீரன் 101 நாட்கள் ஓடியது. ஓடிய அத்தனை நாளும் மாலைக் காட்சிக்கு என்னைக் கூட்டிப் போயே ஆகவேண்டும். அதுதான் எனக்கு எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட முதல் பரிச்சயம்.
அதற்குப் பிறகு அதிர்ஷ்ட வசத்தால், ‘ஆனந்த ஜோதி’ படத்தில் அவருடன் நடித்தேன். அருணாசலம் ஸ்டுடியோவில் படம் எடுத்தார்கள். எம்.ஜி.ஆரைப் போல சண்டை போடவேண்டும் என்று நானும் படத்தில் நடிக்க வந்த இன்னும் சில சிறுவர்களும் சண்டை போடுவோம். சண்டை நிஜமாகவே ஆகிவிடும். ஒரே தகராறுதான். அவர்தான் வந்து தீர்த்து வைப்பார்.
அப்போதெல்லாம் எனக்கு எம்.ஜி.ஆரோடு சேர்ந்து நடிக்கிறோம் என்ற நினைப்புதான். பள்ளிக்கூடத்தில் போய் பெருமையாக சொல்லிக் கொள்வேன்.
ஒரு முறை தோட்டத்துக்கு கூட்டிப் போனார்கள். அங்கே ஒரு காட்சி படமெடுத்தார்கள். மதியம் சாப்பாடு எல்லோருக்கும் அவர் வீட்டிலேதான். எனக்கு பலாப்பழத்தை தேனிலே தோய்த்து என் வாயிலே ஊட்டி விட்டார். அது இன்னும் பசுமையாக நினைவிருக்கு. அப்புறம் பூஜை அறை மாதிரி ஒரு அறைக்கு என்னை கூட்டிப் போனார். அங்கே அவரது அம்மா படத்தை வைத்திருந்தார்கள். வீட்டைச் சுற்றிக் காட்டினார். என்னோடு அன்பாக இருந்தார்.
அதற்குப் பிறகு ரொம்ப நாள் அவரோடு தொடர்பில்லாமல் போய்விட்டது. மறுபடியும் நான் அவரைச் சந்தித்தது ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில்தான். நான் அதில் உதவி நடன ஆசிரியராக பணி புரிந்தேன். என்னைப் பார்த்தார். வா என்று கூப்பிட்டார். போனேன், நீ… என்னோட நடிச்சே இல்லே, இப்போ என்ன பண்ணுகிறாய்? ‘திரும்ப நடிக்கிறதுல விருப்பம் உண்டா உனக்கு?’ என்று கேட்டார். தெரியலீங்க, ‘இப்போதைக்கு இதுதான் பண்ணிகிட்டிருக்கேன்’ என்றேன்.
எதுவா இருந்தாலும் உடம்பை நல்லா வச்சுக்க. இப்பவே உடற்பயிற்சி பண்ண ஆரம்பித்தால் தான் நல்லது. உடற்பயிற்சி பண்ணும்போது இரத்தம் முகத்துக்கும் கிடைத்து முகம் தெளிவாக இருக்கும்படியாகவும் செய்ய வேண்டும் என்று ஒரு பயிறசியை சொல்லிக் கொடுத்தார். ஆறேழு மாதம் விடாமல் அதைச் செய்தேன். மறுபடியும் அவரைச் சந்தித்தபோது ரொம்ப சந்தோஷப்பட்டார்.
என்னோடு வந்திருந்த டான்ஸ் மாஸ்டர் ரகுவின் பருத்த உடம்பைப் பார்த்துவிட்டு ‘உடம்பை இப்படி வைச்சுக்கொள்ளனும்’ என்று என்னைக் காட்டினார்.
மறுபடியும் ஒரு விழாவில் பார்த்தேன். பேசினேன். என் படம் ஏதாவது பார்த்தீர்களா என்றேன். மன்மதலீலை பார்த்தேன் என்றார். அது அவர் அரசியலில் தீவிரமாக இறங்கின நேரம். என்னோட நல்ல படங்கள் வரும்போது சொல்கிறேன். நீங்கள் பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.
‘நல்ல படம், கெட்ட படம் என்று தெரிந்தே பண்ணுகிறாயா நீ?’ எல்லா படங்களையும் நல்ல படங்களாக நினைச்சு பண்ண வேண்டும். அப்படி நினைக்காது போனால் அந்தப் படத்தை செய்யாதே!’ என்றார்.*
அதற்குப் பிறகும் அவரை சந்திக்கிற போது கொஞ்சம் தவறுகள் செய்திருந்தேன். அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று அறிவுறை சொன்னார். ‘நாங்கள் செய்ததையே நீங்களும் செய்யக்கூடாது. ‘உங்களுக்காக நாங்கள் 100 படி ஏறி வந்திருக்கிறோம். நீங்களும் ஒன்று இரண்டு என்று நாறு படி ஏறி வர முயலக்கூடாது. நூறாவது படியிலிருந்து ஏறி வரவேண்டும்’, என்றார்.
அவரை முதன் முதலாக மாத்திரமல்ல; ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அண்ணன் சாருஹாசனை பார்க்கும் போது எனக்குள் என்ன உள்ளுணர்வு ஏற்படுகிறதோ அதேதான் ஏற்படுகிறது.
எனக்கு கல்யாணம் ஆகிறபோது’ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்’ என்று முதல் அழைப்பிதழை அவருக்குக் கொடுத்தேன். எந்த இடம், எந்த தேதி என்று கேட்டார். ஒரு பேச்சுக்கு கேட்கிறார். எங்கே வரப்போகிறார், என்று நினைத்திருந்தேன். ஆனால் பம்பாயில் நடந்த என் கல்யாணத்துக்கு கடைசி நேரத்தில் வந்துவிட்டார். என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சர்யமாக இருந்தது.*
நிரம்ப நேரம் அங்கிருந்து குடும்பத்தாரோடு பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டு என்னை வாழ்த்திவிட்டுப் போனவர் எனக்கு இன்னொரு அண்ணன்தான்.
- கமலஹாசன்.