-
புரட்சித்தலைவர் அவர்கள் குண்டடி பட்டு மீண்டும் நடிக்கும்போது, அவருக்கு வசன உச்சரிப்பில் சில வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது.
ஆம், புரட்சித்தலைவர் அவர்கள் பேசுவது சமூக சீர்திருத்தங்கள், அரசியல் கருத்துக்கள், சமூக கருத்துக்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லாமல் வசனங்களின் நீளம் குறைக்கப்பட்டது. அத்தகைய கடமையைச் செவ்வனே செய்தவர் உயர்திரு. "முரசொலி" செண்ரணம் அவர்கள். அவரை போலவே உயர்திரு ஆர்.கே.சண்முகம் அவர்களும் .... இவர்கள் இருவரும் புரட்சித்தலைவரின் அங்கீகாரத்தை பெற்ற திரைக்கதை வசனகர்த்தாவாக திகழ்ந்தார்கள்.
"மாட்டுக்கார வேலன்" படத்தில் எழுத்து உயர்திரு. ஏ. எல். நாராயணன் என்று வரும். அவருக்கு நீண்ட வசனங்கள் எழுதியே பழக்கம்.........! நிலைமையை புரிந்துகொண்ட அவராகவே "நான் விலகிக்கொள்கிறேன்" என்று புரட்சித்தலைவரிடம் சொல்லிவிட்டார். அதைப்பிறகு உயர்திரு "முரசொலி" சொர்ணம் அவர்கள் தான் உரையாடல் எழுதியது. மேலும் அந்த படத்தில் புரட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோலின்படி பின்னணி குரல் கொடுத்துள்ளார் [ மனசாட்சி பேசுவது - வேலா நீ ஒரு ....................கண்ணீர்விடு]..............
. Thanks wa.,
-
திரு. கலைஞானம் அவர்களுக்கு,
விளம்பரம் என்றால் திரு. "கலைப்புலி" தாணு அவர்கள் தான். யாருக்கு சந்தேகம் இல்லை.
ஆனால் :
புரட்சித்தலைவரின் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" வந்த தேதி 14/1/1978 பைரவி வந்த தேதி 2/6/1978 !!!
பைரவி படம் வந்த நேரத்தில் புரட்சித்தலைவர் நடிகர் அல்ல தமிழகத்தின் முதல்வர் அதாவது திரு துறையில் இல்லை சார்.
புரட்சித்தலைவர் நடித்துக்கொண்டு இருந்த காலத்திலேயே பெரிய பதாகை/ கட் அவுட் என்பது இருந்தது சார்!!!
மேலும் என் அண்ணன் படத்துக்கு வானளாவிய கட் அவுட் ......மேலும் ஊருக்கு உழைப்பவன் .......மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை சென்னை மவுண்ட் ரோடு சாலையில் இருந்த பதாகைகள் தணல் பார்த்ததில்லையா??
இந்த ஆதாரம் போதுமா, மேலும் ஆதாரம் தேவையா???
.............. Thanks wa.,
-
அண்ணன் விஜயன் அவர்கள் 15 தலைவரின் பக்தர்களை தலைவரின் படுக்கை அறைக்கே அழைத்து சென்றார்.இந்த வாய்ப்பு அவரால் மட்டுமே நடந்தது.அப்பொழுதுதான் தலைவர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார் என்பதில் பூரிப்படைவதைவிட தலைவர் மேல் எனக்கு முதல் முறையாக பொய்கோபம்தான் வந்தது.காரணம் சாதாரண கூலித்தொழிலாளி கூட ஓரளவு வசதியை எதிர்பார்பான். ஆனால் எத்தனையோ ஜூவன்களுக்கு படியளக்கும் என்தெய்வம் ஏன் தன்னை வருத்தி வாழவேண்டும் என்று வருந்தினேன். இதைவிட கழிவறை இன்னும் சிறியது.சின்ன கண்ணாடி.ஒருஷேவிங்மிஷின்.குழந்தைகள் குளிக்ககூடிய அளவில் சின்ன டப்பு.. இவ்வளவுதான்.அதில் ஒரே ஒரு கொடுப்பினை என்னவென்றால் கழிவறையில் தலைவரின் கால்கள் படும் தடத்தை என் இருகண்களால் ஒற்றிக் கொண்டேன்.என்ன தவம் செய்தேனோ இந்த பெரும் பாக்கியத்தை நான் பெற அண்ணன் அமரர் விஜயன் அவர்களை என் வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாது.............. Thanks wa.,
-
கடந்த வாரம் (31/05/19) திண்டுக்கல் என்.வி.ஜி.பி. யில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகளில் 5 நாட்கள் நடைபெற்றது .
http://i66.tinypic.com/2h5678g.jpg
http://i63.tinypic.com/153nrrc.jpg
http://i65.tinypic.com/29lhjd0.jpg
http://i68.tinypic.com/2yxnc0g.jpg
-
இன்று முதல் (07/06/19) கோவை சண்முகாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகளில் வெற்றி விஜயம்
http://i67.tinypic.com/zvsexd.jpg
-
இன்று முதல் (07/06/19) சென்னை அகஸ்தியாவில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 2 காட்சிகள் (மேட்னி / மாலை ) நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/27zf3t4.jpg
-
ஜெனோவா மலையாளத்தில் முதலில் 24/4/1953ல் வெளியானது .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,பி..எஸ்.சரோஜா , ,பி.எஸ்.வீரப்பா , எம்.ஜி.சக்கரபாணி , ஆர். பாலசுப்ரமணியம் ,ஜூனியர் கண்ணாம்பா ,ராஜாமணி ஆகியோரது நடிப்பில்
தமிழில் "ஜெனோவா "05/06/1953ல் வெளியானது,
பட நிறுவனம் : சந்திரா பிக்ச்சர்ஸ் , ஆலப்புழை .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் : சிப்ரஸோ
பாடல்கள் : சுரதா, ரமணி ,
இசை அமைப்பு, எம்.எஸ். விஸ்வநாதன் ( முதல் எம்.ஜி.ஆர். படம் ).ஞானமணி, கல்யாணம்
வசனம் : சுரதா, இளங்கோவன் , நெடுமாறன்
இயக்குனர் : எப் . நாகூர்
கதை : ஸ்வாமி பிரம்மவரதன்
ஒளிப்பதிவு : ஜி.விட்டல்ராவ் .
ஸ்டண்ட்: சோமு & பார்ட்டி
சென்னை பாரகன் , பிரபாத், மகாலட்சுமி, காமதேனு அரங்குகளில் வெளியானது .
திருச்சி ராஜாவில் 112 நாட்கள் ஓடியது .
http://i68.tinypic.com/300efci.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொது # மக்கள் # கூட்டத்தில் # பட ரிலீஸ் # தேதியை # வெளியிட்ட # வாத்தியார்
இன்றைய நாட்களில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து முடிவு செய்து, பின்னர் ஊடகங்கள் மூலம் தெரிய படுத்துவது வழக்கம்.
ஆனால் நம் தலைவர் எம்.ஜி.ஆரோ மக்கள் கூட்டத்தில் முதன்முதலில் பட ரிலீஸ் தேதியை அறிவித்தது வேறு எங்குமே நடைபெற்றிறாத ஒன்று. அது பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ!!!
அப்போது 1973ம் ஆண்டு மே மாதம்.திண்டுக்கல் இடைத்தேர்தல் நேரம்.எம்.ஜி.ஆர் தீவிரமாக தொகுதி முழுவதும் பம்பரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அனைத்து கூட்டங்களிலும் மக்கள் எம்.ஜி.ஆரைப் பார்த்து "தலைவா! உலகம் சுற்றும் வாலிபன் படம் எப்போது வெளியாகும்" என் கேட்பது வழக்கமாக இருந்தது.தலைவரும் படம் நிச்சயம் வரும் என சொல்லிக் கொண்டு இருந்தார்.
அப்போது மே 1 ஆம் தேதி வத்தலக்குண்டு நகரில், திண்டுக்கல் சாலை, பெரியகுளம் சாலை, மதுரை சாலை என் நாலாபுறமும் சந்திக்கும் இடத்தில் மக்கள் கூட்டம். வழி நெடுக பல கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் திரள்.
மாலை 4 மணிக்கு வரவேண்டிய எம்.ஜி.ஆர் வாகனம் இரவு 10 மணிக்கு வருகிறது. எம்.ஜி.ஆர் முகம் பார்த்ததும், கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் முகங்களில் பிரகாசம் பொங்கி வழிகிறது.மகிழ்ச்சி பொங்க ஆரவாரம் செய்கிறார்கள். ஆனந்த கூத்தாடுகிறார்கள்.
பொங்கும் கடலென திரண்டுள்ள மக்கள் கூட்டத்தில் சிக்கி எம்ஜிஆரின் வாகனம் நின்று விட்டது. மேடை அருகில் செல்ல முடியவில்லை. எம்ஜிஆரின் பாதுகாவலர்கள் இறங்கி வழி ஏற்படுத்திக் கொடுக்க மிகவும் சிரமப்பட்டனர். அப்படியிருந்தும் எம்ஜிஆர் வேனிலிருந்து கீழே இறங்கி செல்ல முடியாத நிலை. வேன் மேடைக்கு மிக அருகே கொண்டு செல்லப்பட்டது. வேன் மீது ஏறிய எம்ஜிஆர் முன்புறம் பேனட்டில் இறங்கி வேட்டியை மடித்துக்கட்டி அங்கிருந்து மேடைக்கு ஒரே தாவாக தாவினார்.அவ்வளவுதான். இப்படிப்பட்ட காட்சிகளை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த மக்கள் கூட்டம், நேரடியாக பார்த்ததும் உற்சாக மிகுதியில் துள்ளிக்குதித்து வாழ்த்து முழக்கங்களை எழுப்பியது.
ஆரவாரத்தை அமைதிப் படுத்திய எம்ஜிஆர் பேசத் தொடங்கினார்.வழக்கம் போல் மக்களும் ' உலகம் சுற்றும் வாலிபன்' படம் எப்போது வரும்? என்று கேட்டனர். உடனே எம்ஜிஆர் ' உலகம் சுற்றும் வாலிபன்' வந்தால், நீங்கள் படத்தைப் பார்ப்பீர்களா? தேர்தல் வேலை பார்ப்பீர்களா? என கேட்கிறார். உடனே மக்கள் "தலைவா! படமும் பார்ப்போம்.இரண்டு மடங்கு உற்சாகத்தில் தேர்தல் வேலையும் பார்ப்போம்!" என உற்சாகமாக கூறுகின்றனர்.
இதைக் கேட்ட எம்ஜிஆர் சிரித்தபடியே ' உலகம் சுற்றும் வாலிபன்' படம் நிச்சயம் வெளிவரும் என்கிறார். கூட்டத்தினர் "தேதி, தேதி" என் குரல் எழுப்ப, சொல்கிறேன் என் ஒரு நிமிடம் இடைவெளி விட்டு மேடையில் ஒரு சுற்று சுற்றி எல்லா மக்களையும் பார்த்த எம்ஜிஆர் " மே மாதம் 11ஆம் தேதி உங்கள் விருப்பப்படி 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியாகும் என உரத்த குரலில் சொல்ல, வத்தலக்குண்டு நகரமே அதிரும் வண்ணம் கரவொலியும், விசில் சத்தமும், வாழ்த்து முழக்கமும் எழுந்தன.
இந்த வரலாற்று அதிசயத்தை உங்கள் மனக்கண் மூலம் கொண்டு வந்து பார்த்தால் நம்மில் ஒரு பரவச உணர்ச்சியை நுகரலாம்.............. Thanks wa.,
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புரட்சி தலைவர் எம்ஜிஆரை வணங்கி என் காலை வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்
கழக முன்னோடிகள் அனைவரும் யார் பெரியவர் என்ற ஈகோ இல்லாமல் ஒற்றுமையாக இணைந்து அதிமுக கழகத்தை காக்க வேண்டும்!
கழகத்தின் தலைவர் எம்ஜிஆரின் உண்மை பக்தனின் வேண்டுகோள்!
---V P சிவகுமார் , நாமக்கல்,
7/6/2019.......... Thanks wa.,
-
பேராசிரியர் S.செல்வகுமார் அவர்களின் தாயார் வயதுமூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இக்கட்டான சூழ்நிலையில் இருந்த சமயத்தில் கூட பாபா மீதும்.புரட்சிதலைவர் மீதும் பாரத்தை போட்டுவிட்டு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு எத்தனையோ மக்கள் திலகத்தின் புகழ்பாடும் நிகழ்ச்சியில் தன்னுடைய கடமையை செவ்வனே ஆற்றிவந்த மகனின் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டே அந்த புனித தாய் 4.6.19 மண்ணுலகை விட்டு விடைபெற்றார்.அந்த புனித ஆன்மா எல்லாம் வல்ல (ஈசனின்) இறைவனின் பொற்பாதங்களிலும்.வாழும்தெய்வம் ( எம்ஜிஆர்) அவர்களின் பொற்கரங்களிலும் இளைப்பாற இயற்கையை வேண்டிக்கொண்டு அண்ணாரை இழந்து வாடும் அண்ணன் செல்வகுமார் அவர்களுக்கு வருத்தத்தையும்தெரிவிக்கும் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை..V.S.ஷிவபெருமாள்.............. Thanks wa.,
-
நமது மக்கள் திலகம் திரி பாகம் 25 துவங்க மூத்த புரட்சி தலைவர் பக்தர் திரு. லோகநாதன் அவர்களின் வழியே ஏற்படும் முயற்சிக்கு நம் உறுப்பினர்கள் அனைவரும் ஆதர்வளிப்பார்கள் எனும் நம்பிக்கை நிரம்ப உண்டு..............