Quote:
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் `உறவுகள்' தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற தொடராகியிருக்கிறது. உணர்வுகளின் சங்கமமாக கூடிக்கலக்கும் குடும்பப் பிரச்சினைகள் நெகிழவைக்கும் விதத்தில் அமைந்திருப்பதுவே இதற்கு காரணம் என்கிறார், இத்தொடரின் இயக்குநர் ஹரிபாபு. கூட்டுக் குடும்பமாய் இருந்த அண்ணாமலை, அழகேசன் குடும்பம் தேவி என்ற பெண்ணின் வரவால் இன்று இரண்டாக பிரிந்து கிடக்கிறது. குடும்பப் பிரிவை தாங்கமுடியாமல் அண்ணாமலை தன் உயிரையே, விட்டுவிட, கிருஷ்ணனின் குடும்பம் அனாதையாய் நிற்கிறது.
இந்நிலையில் மனம் திருந்தி வந்த கிருஷ்ணனìன் மனைவி காயத்ரியை கிருஷ்ணனின் அம்மா ஏற்க மறுக்கிறாள். கிருஷ்ணனுக்கு தன் மனைவியுடன் சேர்ந்து வாழ ஆசை. இருந்தாலும் அம்மாவிற்காக அமைதியாய் இருக்கிறான். இதை அறிந்த கிருஷ்ணனின் அக்கா ரஞ்சனி தம்பியை அவன் மனைவி காயத்ரிìயுடன் சேர்த்து வைக்க பெரும் முயற்சி எடுக்கிறாள். அதே சமயம் கிருஷ்ணனின் அண்ணன் முகுந்தனின் கள்ளத்தனம் தெரிந்த மனைவி சித்ரா அவனை விட்டுப் பிரிகிறாள். அழகேசன் குடும்பத்தில் அடுக்கடுக்காய் வரும் பிரச்சினைகளால் முகுந்தனும் திருந்துகிறான். தன்னால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர முகுந்தன் முயற்சிக்கிறான்.
முகுந்தனின் எண்ணப்படி இரண்டு குடும்பங்களும் ரஞ்சனியின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் ஒன்று கூடுகிறது. அப்போது நடக்கப் போகும் விஷயம் தான் தொடரின் மிக முக்கியமான அடுத்த திருப்பம்'' என்று சஸ்பென்ஸ் வைக்கிறார், திரைக்கதையாசிரியர் குமரேசன்.
குடும்பத்தில் அன்றாடம் நிகழும் பிரச்சினைகளை மையப்படுத்தி காட்சிகள் வருவதால் உறவுகளுக்கு ரசிகர்களிடம் மரியாதை அதிகம் என்கிறார் இவர்.
தொடரில் பீலிசிவம், அமரசிகாமணி, ஸ்ரீகுமார், ராஜ்காந்த், ராமச்சந்திரன், வின்சென்ட்ராய், அர்ச்சனா கிருஷ்ணப்பா, துர்கா, ராஜேஸ்வரி, ரேவதிசங்கர், நித்யா, சிவகவிதா, கிச்சா, பரத், சுதா, ஆர்த்தி, கல்பனா நடித்து உள்ளனர்.
திரைக்கதை: குமரேசன். வசனம்: பாலசூர்யன். ஒளிப்பதிவு: தண்டபாணி. இயக்கம்: ஹரிபாபு, தயாரிப்பு: சேன் மீடியா.
Quote:
வில்லனே இல்லாத புதிய தொடர் -`உறவுகள்' சன் டிவி
`அகல்யா', `பந்தம்' - வெற்றித் தொடர்களைத் தொடர்ந்து சேன் மீடியா நிறுவனம் தயாரிக்கும் புதிய மெகா தொடர் `உறவுகள்'. இந்தப் புதிய தொடர் சன் டிவியில் வரும் திங்கள்கிழமை முதல் (June01) ஒளிபரப்பாகிறது.
`உறவுகள்' தொடரில் ஒரு கூட்டுக் குடும்பத்தை கதைக்களமாகக் கையாண்டு உள்ளனர். இன்றைய நாகரீக உலகில் கூட்டுக் குடும்பத்தின் அருமையும், தேவையும் முற்றிலுமாக மறைந்து விட்டது என்றே சொல்லலாம். கணவன், மனைவி ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் கூட மனதளவில் தனித்தனி மனிதர்களாகவே உலா வருகின்றனர்.
இன்னும் சில வருடங்களில் கூட்டுக் குடும்பம் என்றால் என்ன என்பதே இன்றைய இளைய சமுதாயத்தினருக்குத் தெரியாமல் போய்விடும் அபாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மனதில் கொண்டு, கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இத்தொடரின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் நல்ல மனது கொண்டவர்கள். வழக்கமாக தொலைக்காட்சி தொடர்களில் இடம் பெற்றிருக்கும் வில்லன் கதாபாத்திரம், இத்தொடரில் இல்லை என்பதே இத்தொடரின் புதுமையாகும்.
இந்தத் தொடரில் புதுமுக கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த அர்ச்சனா கிருஷ்ணப்பா அறிமுகமாகிறார். மேலும், பீலிசிவம், ஸ்ரீகுமார், அமரசிகாமணி, ராஜ்காந்த், ராமச்சந்திரன், வின்சென்ட்ராய், `அலைகள்' துர்கா, சிவகவிதா, ரேவதிசங்கர், ராஜேஸ்வரி, நித்யா, ஜெ.லலிதா, ஆர்த்தி, சுதா மற்றும் ஜெயந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கதை, சேன் மீடியா. திரைக்கதை: குமரேசன். வசனம்: சரவணன். பாடல்: கவிஞர் வைரமுத்து. முகப்புப் பாடல் இசை: டி.இமான். பாடியவர்: நித்யஸ்ரீ. பின்னணி இசை: கலைக்கதிர். இயக்கம்: எஸ்.ஹரிபாபு. தயாரிப்பு: சேன் மீடியா.
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது. `உறவுகள்'.