-
ஆற்றங்கரையில் பாலாஜியுடன் சந்திக்கும் முதல் காட்சி. சாராய பாட்டிலுடன் லேசாகத் தள்ளாடி வருவார். பேன்ட்டை கால் முட்டிகள் வரையில் மடித்து விட்டிருப்பார்.
பாலாஜி சிகரெட் பிடிக்கும் போது பார்ப்பவர் 'செல்பிஷ்! நீங்க மட்டும் சிகரெட் பிடிச்சா?' என்று கூறி 'எனக்குக் கிடையாதா?' என்பதை ஜாடையாகக் கேட்பார். பாலாஜி தன்னிடமிருக்கும் சிகரெட் பாக்கட்டை இவரிடம் தந்ததும் 'தேங்க்யூ' சொல்லி விட்டு, பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பக்கவாட்டில் மூக்கருகே வைத்து, முகர்ந்து பார்த்து, பின் காதில் மேல்புறம் செருகிக் கொள்வார். பிறகு இன்னொரு சிகரெட்டை எடுத்தபடி,
'ஓசியிலே கிடைக்குதுங்கிறதுக்காக எல்லாத்தையும் சுருட்டிட மாட்டேன்' என்று ஜோராகச் சொல்லுவார். அந்த சிகரெட்டை வாயில் ஸ்டைலாக வைத்து, அதை விட ஸ்டைலாக கைவிரல்களால் ஒரு சொடுக்கு போட்டு சிகரெட் உள்ள வாயுடன் 'மேட்செஸ்' என்பார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அந்த மாதிரி சொடுக்கை இதுவரை எவரும் போட்டு நான் பார்த்ததில்லை. அவ்வளவு ஏன்? அவரே இது போல சொடுக்கு போட்டு நான் பார்த்தது கிடையாது. படம் இருந்தால் நீங்கள் போட்டுப் பாருங்கள் ஆண்டவரின் இந்த ஸ்டைலை.
http://i1087.photobucket.com/albums/...1355073/11.jpg
சிகெரெட்டை ஒரு 'பப்' இழுத்துவிட்டு அதன் சுவையை சில வினாடிகள் சுவைத்து ரசிப்பார். பின் புகையை வெளியில் விட்டு, புகையும் அந்த சிகெரெட்டை சற்று தள்ளி வைத்து உற்றுப் பார்த்துவிட்டு 'நாட் பேட்' என்பார். பணக்கார ஜமீன் பிள்ளை அல்லவா? இதை விட காஸ்ட்லியான சிகெரட்டெல்லாம் பிடித்திருப்பாரே. இப்போது ஏமாற்றப்பட்டு ஏழை ஆகிவிட்டதால் பாலாஜி கொடுத்த அந்த சிகெரெட்டை சுவை பார்த்துவிட்டு 'பரவாயில்லை' என்று சர்டிபிகேட் வழங்குவது அற்புதமான கதையோடு தொடர்புடைய கன்டின்யூட்டிகள் கெடாத காட்சியமைப்பு. வாவ்! என்ன மாதிரி ஒரு படம்! 'சவாலே சமாளி' மாதிரி இந்த தியாக 'ராஜா' எதிலும் சேராத தனிக்காட்டு ராஜா. வண்டி வண்டியாய் இருக்கிறது சொல்வதற்கு.
-
பாலாஜியிடம் சவுக்கால் அடிபட்டு மேஜரிடம் சென்று மருந்து போட்டுக் கொண்டிருக்கும் போது உடம்பு வலியோடு சேர்ந்து லஷ்மி மீதான காதல் வலியிலும் துடிப்பார். உடம்பில் பட்ட காயத்தைவிட மனதினில் பொங்கும் காதல் காயம் பெரிதாக இருக்கும்.
மேஜர் மருந்து போடும் போது ஊர் ஜனகளைப் பற்றி கோபமாகப் பொருமுபவர் மேஜர் தன்னிடம்,
http://i1087.photobucket.com/albums/...1355074/12.jpg
'யார் என்ன சொன்னாலும் என்னைப் பொறுத்த மட்டிலே நீங்க உத்தமமானவர்தான்' என்று கூறியதும்
முன்னால் இருந்த அந்த கோபத்தைக் கொஞ்சம் மறந்து, மேஜரின் அந்த ஆறுதல் வார்த்தைக்கு சற்றே அடிமையானவராக லேசாக சிரித்தபடி, கழுத்தை வலது தோள்பட்டை பக்கம் சாய்த்து, முதுகில் பட்ட சவுக்கு வரிகளை கவனித்தபடியே மேஜருக்கு 'தேங்க் யூ' சொல்வார். அற்புதமாக இருக்கும். அவ்வளவு கோபப்படும் காட்சியில் அந்த ஒரு சில வினாடிகள் மட்டும் பெருமை பொங்க சந்தோஷம் காட்டி நன்றி கூறுவார்.
-
http://manaserials.com/?url=4334071&source=playwire
Karnan Iravum Neelavum song in Telugu - Padutha thiyaga yesterday show
-
http://i1087.photobucket.com/albums/...1355076/13.jpg
பாலாஜி கூப்பிட்டு அனுப்பியபின் போலீஸ் ஸ்டேஷனுக்குள் 'நானே வந்துட்டேன்'என்றபடி நுழைவார். பாலாஜி 'யூ' என்று கோபமாகக் கத்தியவுடன் 'எஸ்.. ஐ' என்று தள்ளாடியபடியே நடந்து வந்து சேரை இழுத்துப் போட்டு 'மார்த்தாண்ட ராஜசேகர சேதுபதி' என்றவாறே இடதுகாலை அலட்சியமாக சேரின் மீது தூக்கி வைத்துக் கொண்டு அமர்வார். (அமர்ந்திருக்கும் திமிர்த்தனமான ஸ்டைலைப் பாருங்கள்) கையை அந்தக் காலின் முட்டியின் மீது வைத்திருப்பார். பாலாஜி 'இது போலீஸ் ஸ்டேஷன்... உன் வீடில்ல' என்று கோபப்பட்டு மேசையில் இருந்த சாராய பாட்டிலை தன போலீஸ் தடியால் தட்டி விட்டதும் அதிர்ந்து சேரிலிருந்து முன்னோக்கி வருவார். கையை டேபிளின்மீது வைத்து 'த்சொ த்சொ த்சொ' கொட்டியபடி,
'இன்ஸ்பெக்டர்! கௌரவம் ஆபீசருக்கு மட்டுமல்ல....பிரஜைக்கும் உண்டு' என்று ஆணித்தரமாகச் சொல்வார். ஆபிசர் எனும்போது விரல் பாலாஜி பக்கமும், பிரஜை எனும்போது கைவிரல்கள் குவிந்து தன் மார்பையும் சுட்டிக்காட்டும்.
-
THE UNCOMMON GOD& a common man
THAVAPUDHALVAN
Before going into the movie,more than NT we the fans are THAVAPUDHALVARGAL.Why i am saying this is "ingu ivarai yaam peravae enna dhavam seidhu vittoam'.So for our DHAVAM only we fans to him.What a range of characters,from a rich,to a beggar,king,poet,policeman,arrogant son,loving brother,lunatic,lawyer,father,fatherin law,priest,thief,CID,leprosy,hunter,illiterate,dru nkard,and GOD andso on.Lucky that he was not caught in the GOLDEN CAGE called IMAGE.It was AANDAVAN KATTALAI that he lived thousand life in single birth.
Coming back to THAVAPUDHALVAN,what a song Kingini Kingini ena varum mani osai,
His expression,TMS 'S pathos ,Lyrics,in these lines,THATTI THADAVI THADUKKI VIZHUNDHAAL SIRIPPAYO EN KANNAE"
In what mood we are ,this will capture us take to that mood of a old-man,who is unable to see,falls but not angry over the children who laughs but makes them to feel the pain of him.
AANDAVAN KATTALAI?what a movie.How good we are if we become prey towards our feelings,emotions it will take us to hell.A sincere lecturer faces the worst part of his life after falling with love.Most cruel part of his life is when the lecturer (NT) stands along with the worst student in his class(chandrababu)in the same que for a job.
Almost same thing happened to me but in a positive way when I was stuying Diploma.
(to be continued)
-
Dear RKS,
Please read this week Varamalar, M.M.A. Chinnappa Thever serial. In that also written badly about NT, by same writer.
(1966ல், எம்.ஜி.ஆர்., ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துக் கொண்டிருந்த காலம். சிவாஜி கணேசன் மார்க்கெட் மொத்தமாக காலியானது போன்ற சூழல்! இந்நிலையில், அன்று, தேவர் அலுவலகத்திற்கு வேகமாக வந்து கொண்டிருந்தார் சிவாஜி கணேசன். படிய வாரப்பட்ட தலை, நெற்றியில் விபூதி, வழக்கமான பைஜாமா, ஜிப்பா, இதழ்களில் புன்சிரிப்பு!
வருவது அவர் தானா என ஆச்சரியமாக பார்த்தனர் அங்கிருந்தோர். சிவாஜி கணேசனைப் பார்த்த தேவர், 'என்ன முருகா... இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்துருக்கீங்க...' என்றார்.
'நல்ல விஷயமாத்தேன் வந்துருக்கேண்ணே...' என்றார் சிவாஜி கணேசன். தொடர்ந்து தேவரின் அறையில் ஒலித்த உற்சாகம் கலந்த உரையாடல், கதை இலாகாவை எட்ட, அவர்கள் விஷயத்தை அறிந்து கொள்ள வராண்டாவுக்கு வந்தனர்.
'அண்ணே... சிவாஜி இங்க எதுக்காக வந்துருக்காரு... உங்களுக்கு ஏதாவது தெரியுமா...' என எடிட்டர் பாலுராவைக் கேட்டனர். அவர் தெரியாது என்றதும், 'பத்மஸ்ரீ விருது கிடைச்சுருக்கில்ல... அதுக்கு ஆசிர்வாதம் வாங்க வந்திருப்பார்...' என்றும், 'இப்ப சிவாஜி கணேசனோட மார்க்கெட் அவுட்டுப்பா... மோட்டார் சுந்தரம்பிள்ளை கூட, இந்தியில வசூல் ஆன மாதிரி, இங்கே போகாதுங்கறாங்க; புதுப்படம் எதுவும், 'புக்' ஆகலே. அதான் வாய்ப்பு கேட்டு வந்திருப்பார்...' என்றும் ஆளாளுக்கு கருத்துக் கூறினர்.).
But NT what done.
'அண்ணே... சிவாஜி இப்ப எதுக்காக வந்தாருன்னு சொன்னாத் தான் எங்களுக்கு வேலை ஓடும்...' என்றனர்.
'என் பெரிய பொண்ணு சுப்புலட்சுமிக்கு, கணேசன் வரன் கொண்டு வந்துருக்காருப்பா. நாம அவருக்கு தொழில் கொடுக்கலன்னாலும், அவருக்கு என்மேல ஒரு தனிப் பாசம் இருக்கத் தான் செய்யுது. அவரே வீடு தேடி வந்து பேசிட்டுப் போறாரு...' என்று கணேசனை, புகழ்ந்து தள்ளினார் தேவர்.
மாப்பிள்ளை ஆர்.தியாகராஜனின் மூத்த சகோதரர் சேது, பொள்ளாச்சியில் பிரபல வணிகர்; சிவாஜி கணேசனின் நண்பர். கணேசனின் முயற்சியால், ஜூன் 1, 1966ல் தேவர் மகள் சுப்புலட்சுமி, திருமதி தியாகராஜன் ஆனார்
-
வாசு சார்
தியாகம் திரைக்காவியத்தில் தலைவரின் நுணுக்கமான விஷயங்களைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளீர்கள். தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
முத்தையன்
சிவாஜிி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கிரகப் பிரவேசம் படத்தை மீண்டும் பார்த்த உணர்வினை அளித்தது, தங்களுடைய நிழற்படங்கள். ஒவ்வொன்றும் மற்றதை மிஞ்சும் தரம். தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் கூறிக்கொள்கிறேன்.
-
https://scontent-sin1-1.xx.fbcdn.net...67&oe=56B3A91D
தமிழக சட்டசபையின் முன்னாள் உறுப்பினர் திருமதி ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்கள் மறைவு தமிழக காங்கிரஸாருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். குறிப்பாக நடிகர் திலகத்தின் தோளில் வலுவாக நின்றிருந்த ஸ்தாபன காங்கிரஸ் இயக்கம் சார்பில் சட்டமன்றத்தில், திருமதி அனந்த நாயகி, திரு விநாயகம், திரு பி.ஜி.கருத்திருமன் போன்ற சான்றோர்களோடு பொன்னம்மாள் அவர்களும் சேர்ந்து தங்கள் தொகுதிக்காக வாதாடியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி ஸ்தாபன காங்கிரஸுக்காகவும் பல போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.
அவரது மறைவு என்னைப் போன்ற அந்நாளைய ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தோழர்களுக்கும் மனதில் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
-
1966 ல் மோட்டார் சுந்தரம் பிள்ளை
சரஸ்வதி சபதம் ,செல்வம் ,kanthan karunai
மகா கவி காளிதாஸ் எல்லாம் வெற்றி படங்கள் இல்லாமல் தோல்வி படங்களா.
எழுதுபவர்கள் யோசிக்கும் திறனே அற்று போனவர்களா?
தற்போது பார்த்து எழுத எவ்வளவோ வழிகள் உண்டே .கண்ணிருந்தும் பார்வையற்றவர்கள் போல் எழுதுவதிற்கு என்ன நோக்கமோ?