Originally Posted by
NTthreesixty Degree
மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழ நாட்டின் பெருமையை இவ்வையகம் உள்ளவரை நிலைத்திருக்க செய்த
[B][U]ராஜ ராஜ சோழனை பற்றி அறிவதற்கு முன்னர் சோழர் பரம்பரையை பற்றி அறிதல் நலம் - உங்கள் அனைவர்காகவும் -
சோழர் பரம்பரையின் ஆட்சி மன்னன் விசயாலயன் 846 முதல் 871 வரையிலும்
அவருக்கு பிறகு அவரது மகன் ஆதித்யன் 871 முதல் 907 வரையிலும்,
பிறகு இவர் மகன் பராந்தகன் 907 முதல் 955 வரையிலும்,
பராந்தகனின் மூன்று மகன்கள் ராஜாதித்யன், கண்டராதித்த்யன், அரிஞ்சயன் மூவருமாக
பின்பு கண்டராதித்த்யன் மகன் மதுராந்தக உத்தம சோழன் , அரிஞ்சயன் மகன் சுந்தர சோழனும் 985 வரை ஆண்டனர்.
அதற்க்கு பிறகு சுந்தர சோழனின் இரு மகன்களான கரிகாலனும், பின்னர் ராஜ ராஜ சோழனும் (985-1016) ஆண்டார்கள்,
பின்னர் அவருடைய மகன் ராஜேந்திரன் 1012-1044 ராஜேந்திரன் 1 இக்கு பிறகு,
அவர் மகன்கள் ராஜாதிராஜன், ராஜேந்திரன் 2 , வீர ராஜேந்திரன் இவர்களில், ராஜேந்திரன் 2 மன்னராக ஆண்டார். அவர்க்கு ஆண் வாரிசு கிடையாது . மதுராந்தகி என்ற பெண் குழந்தை மட்டுமே... ஆகையால் வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் ஆண்டான். இவர்களில் கரிகாலன் சோழ மரபினர் என்றும் மற்றவர் இடைகால சோழர்கள் என்றும் அழைக்க பட்டனர்.
ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை சாளுக்ய வம்சாவழி விமலாதித்யனை மணந்து அதன் மூலம் ராஜராஜன் நரேந்திரன் என்ற குழந்தையை ஈன்றெடுத்தாள்.
இவனும் சாளுக்ய வம்சவழியே. ராஜராஜன் நரேந்திரன் ராஜேந்திர சோழன்-1 மகள் அம்மன்கதேவியை மனமுடித்ததில் குலோத்துங்கன் -1 ஜனனம் .
குலோத்துங்கன் 1 வளர்ந்து ராஜேந்திரன் 2 மகள் மதுராந்தகியை மணமுடித்து அவர்களுக்கு நான்கு மகன்கள் பிறகின்றனர். அவர்கள் சாளுக்ய சோழர் என்று அழைக்கபடுகின்றனர்.
மேற்கூறியவை சுருக்கமாக சொன்ன சோழர் வழி, சாளுக்ய வழி, சோழ மரபு வம்சத்தின் தகவல்களாகும்.
பழங்கால ஏடுகளில் ராஜராஜசோழனை பற்றியுள்ள உவமை குறிப்புகள் :
ராஜராஜன் யானை மீது அமர்ந்து வரும்போது எதிரே கூட்டமாக கேசரி (சிங்கம்) வந்தாலும் ஒருகணம் திகைத்து, சிதறி நாலு பக்கம் தலை தெறிக்க ஓடும் என்று கூறுகிறது..!
அரசவையில் ராஜ ராஜன் வருகையில் நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, வலக்கரம் சென்கோலிலும் இடக்கரம் சிம்ஹாசனபிடியிலும் வைத்து கோரிக்கையை கேட்டு, தீர்ப்பு சொல்லும்பாங்கு இவை மாநிலத்து மக்களெல்லாம் இமைகொட்டமால் இறைவனை பக்தியுடன் காண்கின்ற பாங்கினை அரசவையில் தோற்றுவித்தன..!
பெரும் குற்றும் செய்தவன் கூட கொற்றவனின் பார்வை ஒருமுறை பார்க்கும் பாந்தத்தில் பனி போல நெஞ்சுருகி மனிப்பு கோருவான் ..
போர்க்களத்தில் ராஜராஜன் வாள் சுழலும் வேகம் சக்ராயுதம் போல பல திசையிலும் தலைகளை கொய்யும் பூஜ வலிமை கொண்டது என்றும் அகன்ற மார்பில் அந்த கவசம் அமர என்னபாக்கியம் செய்ததோ..என்றும் குறிபிட்டுள்ளது