சூப்பர் சிங்கர்
விஜய் டிவியின் "சூப்பர் சிங்கர்'' நிகழ்ச்சியில் இப்போது டாப் 7 போட்டியாளர்களான ஆஜீஷ், ரவி, விஜய் நாராயணன், பிரசன்னா, ரேனு, ராகினிஸ்ரீ, ரஞ்சனி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
திங்கள் முதல் புதன் வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் 7 பேரும் "நட்பு'' என்னும் தலைப்பில் தமிழ் திரைப்படங்களில் வெளியான பாடல்களை தேர்வு செய்து பாட உள்ளனர். உறவுகளில் மகத்தான தாய் உறவு பற்றிய பாடல்களையும் போட்டியாளர்கள் பாட உள்ளனர்.
இந்த சுற்றின் சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகர் உன்னிமேனன் பங்கேற்கிறார்.