ரவிச்சந்திரன் சார்
மக்கள் திலகம் -இளயராஜா படம் நன்றாக உள்ளது
மக்கள் திலகத்தை பற்றி அவரது பதில் மூலம் மக்கள் திலகத்தின் உறுதிப்பாடு பற்றி அறிய முடிகிறது ..
Printable View
ரவிச்சந்திரன் சார்
மக்கள் திலகம் -இளயராஜா படம் நன்றாக உள்ளது
மக்கள் திலகத்தை பற்றி அவரது பதில் மூலம் மக்கள் திலகத்தின் உறுதிப்பாடு பற்றி அறிய முடிகிறது ..
சைலேஷ் பாபு சார்
மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு படத்தில் இடம் பெற்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் நாலு பேருக்கு நன்றி பாடலை வீடியோ பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி .
மக்கள் திலகம் தன்து சோக நடிப்பினை மிக மிக அருமையாக ,இயற்கையாக ,முகம் பாவத்துடன் வாயசைப்பு
இல்லாமலே அபாரமான ,பல்வேறு உணர்ச்சிகளை தனது நடிப்பின் மூலம் வெளிகாட்டியிருப்பது ரசிகர்களின் உள்ளத்தில் என்றென்றும் குடியிருக்கும் பாடல் .
என்றும் அன்புடன்
esvee
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் என்று எம்.ஜி.ஆர். சினிமாவில் பாடியதை யாராவது அறிந்துள்ளாரா? (அல்லிராஜ், கோவை )
பதில் : “நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றாக அறிந்துள்ளார். நிரந்தர முதல்வர், நிரந்தரத் தலைவர், நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று நிரந்தரம் பற்றி ஒப்பிக்கப்படும் இந்த காலத்தில் ரஜினி தான் கலந்துகொண்ட ‘கும்கி’ பட விழாவில் இப்படி சொன்னார்…”
“நோய் எதிர்ப்புச் சக்தி இன்னும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அதுவரை பொது நிகழ்ச்சிகளுக்கு போக வேண்டாம் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். மூளையை மட்டும் பயன்படுத்துவதற்கு நான் டைரக்டரோ எழுத்தாளரோ அல்ல. நான் நடிகன். எனக்கு உடம்பு வேலை செய்ய வேண்டும்.”
courtesy-onlysuperstar.com
உன்னை அறிந்தால்…நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா
மாபெரும் சபையினில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும் – ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்…நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(சூப்பர் ஸ்டாருக்கு ரொம்ப பிடிச்ச வாத்தியார் பாட்டுங்க இது. இதைத் தவிர அவருக்கு வாத்தியார் பாட்டு இன்னொன்னு ரொம்ப பிடிக்கும். அது பத்தி அப்புறம் சொல்றேன்! அதுக்கு தனி பதிவே போடவேண்டியிருக்கும்! அந்தளவு டாப் டக்கர் பாட்டு அது!)
courtesy-onlysuperstar.com
கே: அறிஞர் அண்ணா உங்களுக்கு மிகவும் நெருக்கம்
இல்லையா?
ப: ஆம். அண்ணா என்னை 'மணித்தம்பி' என்று கூப்பிடுவார்.
அது அவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு முந்தைய
காலம். அவருடன் பல சினிமாக்கள் பார்த்திருக்கிறேன்.
அவருடைய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்துப் பலமுறை
சண்டை போட்டிருக்கிறேன். சிரித்துக் கொண்டு மௌனமாக
அமர்ந்திருப்பார். இல்லாவிட்டால் அவருடைய உதவியாளரிடம்,
“சிங்காரம், தம்பி என்ன சொல்லுது பாரு!" என்பார்.
1969ல் காலமான அண்ணா இன்னும் ஒரு பத்தாண்டுகள்
மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டின் தலைவிதியே
மாறியிருக்கும். தமிழகம் எங்கேயோ போயிருக்கும். இப்போது
இருப்பதைவிடப் பல மடங்கு மிக நன்றாக வந்திருக்கும்.
ஏனென்றால் அவர் எல்லாவற்றையும் புரிந்து வைத்திருந்தார்.
அவர் பேசினால்மிகவும் சீனியரான எச்.வி. காமத் எழுந்து வந்து
கை கொடுப்பார். பாராட்டுவார். வடக்கு வாழ்கிறது; தெற்கு
தேய்கிறது என்றெல்லாம் சொன்னவருக்கு, வடக்கில் நிகழ்ந்த
அனுபவங்கள் வித்தியாசமானவை. பின்னால் அண்ணா
முதலமைச்சர் ஆனார். ஆனால் அதன் பிறகு அவரை நான்
சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.
அதுபோல எம்ஜிஆருடனும் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.
அவர் மிகுந்த மனிதநேயம் கொண்டவர். எல்லோரிடமும்
அன்பாக, மிக மரியாதையாக நடந்து கொள்வார். தனக்காகப்
பிறர் செலவழிப்பதை விரும்ப மாட்டார். அவர்கூடவே நாயர்
என்று ஒருவர் வருவார். நாம் ஏதாவது செலவழித்தால்
எல்லாவற்றையும் குறித்துக் கொள்வார். எம்ஜிஆர் விடைபெற்று
ஏர்போர்ட் செல்லக் காரில் காத்திருப்பார். நாயர் வந்து, நாம்
வேண்டாம் என்று சொன்னாலும், “அவர் கோபித்துக் கொள்வார்"
என்று சொல்லிப் பணத்தை நம் பாக்கெட்டில் திணித்து விடுவார்.
திணித்த பணம், நாம் செலவழித்ததைவிட இரண்டு மடங்கு
அதிகம் இருக்கும். அதுதான் எம்ஜிஆர். இதற்கு நேர்மாறான
குணங்கள் கொண்ட மனிதர்களோடும், நடிகர்களோடும் நெருங்கிப்
பழகியிருக்கிறேன்.
Courtesy - bharathimani - newdelhi
TO DAY DINAMALAR PIC-29-11-2012
http://i49.tinypic.com/15yhmrq.jpg