-
நண்பர் திரு.ஜி.கிருஷ்ணா சார் அவர்களுக்கு,
எனது வேண்டுகோளை ஏற்று ‘தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்..’ பாடல் வாசஸ்பதி ராகம் என்று தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. நான் உங்களை நேரில் பார்த்தில்லை, பேசியதில்லை. இருந்தாலும் மனதைக் கவரும் மதுரகானங்கள் திரியில் தங்கள் எழுத்துக்களை படித்ததை வைத்து நீங்கள் சிறந்த சங்கீத ரசிகராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது கணிப்பு தவறவில்லை. என்னைப் பாரட்டியதற்கு நன்றி. என்றாலும் நான் அதற்கு தகுதியில்லாதவன். (ஏதோ அடக்கத்துக்காக கூறவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள ராகங்கள் பெயரைக் கேட்டிருக்கிறேன் என்றாலும் 63,64, ....65வது மேளகர்த்தா ராகங்கள் என்பது நெஜமாவே புரியல சாமியோவ்..)
எனது ஒரு கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி. இந்தப் பாடலைப் பற்றி ஆய்வு செய்து மக்கள் திலகம் திரியில் எழுத வேண்டும் என்ற எனது இன்னொரு கோரிக்கையையும் விரைவில் நிறைவேற்றுவீர்கள் என்பது, அதற்கான ஆவல் ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் கூறியதிலிருந்தே தெரிகிறது. விரைவில் வெளியாக இருக்கும் உங்களின் அந்த கட்டுரைக்காக முன்கூட்டியே நன்றி. நான் எழுதியது குறித்து தங்களுக்கு தகவல் தெரிவித்த நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
நண்பர்களுக்கு வணக்கம்.
திரு.எஸ்.வி. சார் தங்களது பதிவுகள் பிரமாதம். அதற்கான உழைப்பை நினைத்தால் மலைப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் அதிகாலை 5.30 மணிக்கே ஆரம்பித்து விடுகிறீர்கள். திரு.ராமமூர்த்தி சார், திரு.கலியபெருமாள் சார், திருப்பூர் ரவிச்சந்திரன் சார் ஆகியோரின் பதிவுகள் அற்புதம். கலியபெருமாள் சாரிடம் மூட்டைக் கணக்கில் ஆவணங்கள் இருக்கும் போலிருக்கிறது. தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் பாடல் காட்சியை தரவேற்றம் செய்த திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி. திரு. ராமமூர்த்தி சார் குறிப்பிட்டதைப் போல ஸ்டில்ஸ் என்றால் அது திரு. செல்வகுமார் சார்தான்.
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தலைவர் நடித்த படங்களில் இருந்தும் பாடல் காட்சிகளில் இருந்தும் நீங்கள் ரசித்தவற்றை எழுதினால் எல்லாரும் ரசிக்கலாம். முரசு, சன் லைப் தொலைக்காட்சிகளில் அதிக அளவில் தலைவரின் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன. அவற்றை பார்த்து உங்களை கவர்ந்தவற்றை எழுதலாம். தொழில்நுட்ப ரீதியாகவும் நீங்கள் ரசித்ததை எழுதலாம்.
குறிப்பாக திரு. ரூப் குமார் சார் அவர்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். ஒளிவிளக்கு பற்றி நான் கூறியதைத் தொடர்ந்து, தலைவரும் சோவும் சந்தித்துப் பேசும் காட்சியை அவர் குறிப்பிட்ட விதமும் இரண்டு கேமராக்களை பயன்படுத்தி அந்த காட்சி எப்படி எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கிய விதத்தையும் பார்த்து பிரமித்துப் போனேன். அதிலும் சமீபத்தில், பல்லாண்டு வாழ்க படத்தில் ஒன்றே குலமென்று பாடுவோம் பாடல் காட்சியில் இடம் பெற்ற ஸ்டில்லை பார்த்து தலைவரின் விரல்களில் நகம் வெட்டப்படாமல் இருந்தது குறித்து வியப்பு தெரிவித்திருந்தார். என்ன ஒரு கூர்மையான கவனிப்பு. அதன் பிறகுதான் நானே கவனித்தேன். (அதற்கும் காரணம் இருக்கு சார். ஜெயிலர் ராஜன் 6 கைதிகளை திருத்துவற்காக ஊரை விட்டு ஒதுக்குப் புறத்தில் விடுதலை நகரில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் இருக்கிறார். அது ஒரு அத்துவானக் காடு. பக்கத்தில் கடைகள் கிடையாது. அதனால், கத்திரிக்கோலோ நெயில் கட்டரோ கிடைக்கவில்லை. தலைவருக்கு நகம் கடிக்கும் பழக்கம் கிடையாது. அதான் அப்படி...... எப்பூடி?)
சமீபத்தில் எங்களது சகோதரர்கள் யாரும் எழுத்தில் ‘இளைத்தவர்கள்’ அல்ல என்று கூறியிருந்தேன். அதை அனைவரும் நிரூபிப்போம். (அதற்காக யாரும் பெரிய பாயிண்டில் போட வேண்டாம் என்று அன்போடு கோருகிறேன்)
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
http://i60.tinypic.com/4uv14p.jpg
Couresty: The India Movie News, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
குடியிருந்த கோயில் படத்தில் இடம் பெற்ற இந்த சண்டை காட்சியில் மக்கள் திலகமும் ,நடராஜனும் மோதும் .விறு விறுப்பான காட்சிகள் .மக்கள் திலகத்தின் சுறு சுறுப்பான நடிப்பு அமர்க்களம்
http://youtu.be/jTj2XZ5VPB8 .
-
நண்பர் ரவிகிரன் சூர்யா அவர்கள் வெளியிட்ட உயர்நீதிமன்ற நீதிபதியின் இக்கால திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்ற தீர்ப்பின் பதிவை படித்த உடன் ஏற்பட்ட ஒரு தாக்கம் இந்த கட்டுரை .சமீபத்திய சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது . நிறைய பேர் இதை படித்து இருக்கலாம் . இருந்தாலும் படிக்காதவர்கள் இருந்தால் படித்து இக்கால திரை உலகத்தின் போக்கு பற்றி கட்டுரையாளரின் வருத்தம் உணரப்பட வேண்டும் என்ற அவாவின் வெளிபாடே இந்த பதிவு
"படகோட்டி'யில் எம்.ஜி.ஆர். மீனவராக நடித்திருப்பார்."பச்சைவிளக்கு' படத்தில் சிவாஜி கணேசன் ரயில் ஓட்டுநராக நடித்திருப்பார். "பாசமலர்', "பாகப்பிரிவினை', "தங்கப்பதக்கம்', "ரிஷிமூலம்', "ரிக்ஷாக்காரன்', "நல்லநேரம்', "அவர்கள்', "அபூர்வ ராகங்கள்', "நினைத்தாலே இனிக்கும்' என எந்தப் படத்தைப் பார்த்தாலும் கதாநாயகன் யார் என்று ஒரு பிடிமானம் இருக்கும். ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். அவர் கல்லூரி மாணவராகவோ, வேலை தேடுபவராகவோ இருப்பதும்கூட கதாபாத்திரத்தின் வேர் எங்கே ஊன்றப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும்.
சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சினிமாக்களில் ஹீரோக்கள் வெட்டி ஆபீஸராக வந்து கொண்டிருப்பதுதான் வேதனை.
காதல் செய்வதோ, காதலர்களைச் சேர்த்துவைப்பதோ மட்டுமே முழு நேரப்பணியாகக் காட்டப்படுவதுடன் இந்த வேலைவெட்டி இல்லாதவர்களுக்குக் கல்லூரி மாணவிகள், கல்லூரி பேராசிரியைகள் காதலிகளாக அமைந்திருப்பது அடுத்தக் கட்ட வேதனை.
அமீர் இயக்கிய "பருத்திவீரன்' படத்தில் கார்த்தி ரெüடித்தனம் பண்ணிவிட்டு ஜெயிலுக்குப்போவதைப் பெருமையாக நினைப்பவர். கைது செய்து காவல்துறையினர் போட்டோ எடுக்கும்போது கம்பீரமாகப் போஸ் கொடுப்பவர். அவருக்கு பள்ளிமாணவி பிரியாமணி காதலி!
"சுப்பிரமணியபுரம்' படத்தில் கூலிப்படை ஆசாமி ஜெய்க்கும் பள்ளிமாணவிக்கும் காதல்.
"நாடோடிகள்' படத்தில் சசிகுமாரின் நண்பர்கள் பட்டாளம் அனைவருமே எந்த வேலைவெட்டியும் இல்லாமல் சும்மா பொழுதைப் போக்குபவர்கள்தான். காதலர்களைச் சேர்த்துவைப்பதுதான் இவர்களது முழுநேர வேலை. எங்கும் எப்படி! முழுநேர வேலை.
"களவாணி' படத்தில் வீட்டுக்கு அடங்காமல் அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கும் விமல் காதலிப்பது பள்ளிக்குச் செல்லும் மாணவியை.
"ஆடுகளம்' படத்தில் சேவல் சண்டை தனுஷ் காதலிப்பது கல்லூரி மாணவியை. "நந்தா' படத்தில் லைலா காதலிப்பது தாதா சூர்யாவை.
"பிதாமகன்' படத்தில் லைலா காதலிப்பது லேகிய வியாபாரம், சில்லரைத் திருட்டு எனத் திரியும் சூர்யாவை.
"அவன் இவன்' படத்தில் இன்னும் ஒருபடி மேல் திருடன் பெண்போலீஸ் விரட்டி விரட்டிக் காதலிக்கிறான்.
"படிக்காதவன்' படத்தில் படிக்காத தனுஷை காதலிப்பார் கல்லூரி மாணவி தமன்னா.
"பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் பிளஸ் டூ பாஸ் பண்ண முடியாமல் பிட் அடித்துக் கொண்டிருக்கும் ஆர்யாவை டுடோரியல் கல்லூரி ஆசிரியை காதலிப்பார்.
படிக்காத, வேலைபார்க்காத அல்லது சமூக விரோத செயல் செய்பவர்களை தமது திரையுலகக் கதாநாயகர்கள் காதலித்துக் கொண்டிருப்பது வேதனையான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தெருவோர ரோமியோக்களுக்கு இத்தகைய படங்கள் கல்லூரி மாணவிகளை காதலிக்கும் அசட்டு தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதியாக இருக்கிறது. இது போன்ற சினிமாக்களை பார்த்துவிட்டு, தெருவில் வேலைவெட்டியில்லாமல் சுற்றும் நபர்களைப் பள்ளி மாணவிகளும், படித்த பெண்களும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையைக் காதலுக்காகத் தியாகம் செய்து கொள்ளத் தொடர்கிறார். அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?
சினிமா என்கிற சக்தி வாய்ந்த மீடியம் இதற்குத்தானா பயன்பட வேண்டும்? அசட்டுத்தனமான இத்தகைய காதல்கள் அந்த நேரத்தில் படம் பார்ப்பவர்களுக்கு ஒருவகை நகைச்சுவை உணர்வைத் தருவதோடு சரி. இத்தகைய முரண்பட்ட இருவர் காதலராகிச் சேர்ந்து வாழ்வது பொருத்தமில்லாத பல்வேறு சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர்கள் உணரவேண்டும். திரைப்படக் கதாசிரியர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சமுதாயக் கடமை கிடையாதா? சினிமா பொழுதுபோக்குதான், உண்மை. ஆனால் பொழுதுபோக்கு என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழிக்க முற்படுவதுகூட ஒரு சமூகவிரோதச் செயலல்லவா!
சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான கட்டுரை
-
-
-
-
-
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
மக்கள் திலகத்தின் அபூர்வபடங்கள் மிகவும் அருமை .இதுவரை பார்க்காத நிழற்படங்கள் .
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
உங்கள் பதிவுகள் ஒரு புதிய எழுச்சியை உருவாக்கியுள்ளது .புதுமையாக உள்ளது .ரசனைகள் நிறைந்த உங்கள்
பதிவுகள் மக்கள் திலகத்தின் திரிக்கு பெருமை சேர்க்கிறது . தொடர்ந்து அசத்துங்கள் .
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்
மக்கள் திலகம் திரியில் உங்களது பங்களிப்பு மன நிறைவு தருகிறது . நன்றி .:clap::clap::clap::clap::clap::clap::clap: