-
இனிய நண்பர் வாசு சார்
நடிகை ஷீலா அவர்களின் பேட்டி - பதிவு அருமை .
பாசம் - புதிய பூமி இரண்டு படங்களிலும் ஷீலா அவர்கள்
நன்றாக நடித்து இருந்தார் .
பாசம் படத்தில் ஷீலா - கல்யாண்குமார் பாடல் காட்சி மிகவும்
அருமையாக இருந்தது .
http://youtu.be/dT1GM18diKg
http://youtu.be/hJbmC2IANYc
-
நான் ஏன் பிறந்தேன் -1972.
மக்கள் திலகம் அவர்கள் நடித்த குடும்ப சித்திரம் .
ஒரு குடும்ப தலைவனாக - தொழிலதிபரின் அலுவலக நிர்வாகியாக மிகவும் திறம்பட நடித்து இருப்பார் .
தன்னுடைய வீட்டை விற்கும் காட்சியிலும்
வேலை தேடி அலையும் காட்சியிலும்
தான் திருமணமானவன் என்பதை வேலையில் சொல்ல முடியாத நெருக்கடி காட்சியிலும்
காஞ்சனாவிடம் நேர்மையுடன் பழகும் காட்சியிலும்
மக்கள் திலகம் பிரமாதமாக நடித்திருப்பார் .
சங்கர் - கணேஷ் இசைஅமைப்பில் வந்த முதல் மக்கள் திலகத்தின் படம் .
அனைத்து பாடல்களும் தேனிசை - அமுத கீதங்கள் .
படம் சுமாரான வெற்றி பெற்றது .
நான் ஏன் பிறந்தேன் படம் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் மக்கள் திலகத்திற்கு இந்திய அரசாங்கத்தின்
சிறந்த நடிகருக்கான ''பாரத் '' பட்டம் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது .
1972 ஆண்டு மக்கள் திலகத்திற்கு மிகவும் ராசியான - சரித்திர புகழ் - வரலாற்று புகழ் கிடைத்த ஆண்டு
என்று சொல்லலாம் .
சென்னை
குளோப்- 67 நாட்கள்
கிருஷ்ணா -67 நாட்கள்
சரவணா- 50 நாட்கள்
பழனியப்பா -50 நாட்கள்
பெங்களூர் -மே 1973- தாமதமாக வெளியீடு
நடராஜ் -28 நாட்கள்
சிவாஜி -28 நாட்கள்
அபேரா -28 நாட்கள்
1.பாரத் பட்டம்
2.புரட்சித்தலைவர் - பட்டம்
3.ஒரு நடிகர் - மாநில கட்சி ஆரம்பித்த சாதனை .
4.மக்கள் திலகத்தின் புகழ் இந்தியா மட்டுமல்லாமல் அகில உலகமெங்கும் புகழ் பரவியது .
5.சென்னை நகரில் 4 அரங்குகளில் 100 நாட்கள் - தேவரின் ''நல்லநேரம் '' மட்டுமே ஓடியது .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு 1972 ஆண்டு ''உலக புகழ் எம்ஜியார்'' ஆண்டு என்பதில் மிக்க மகிழ்ச்சி .
-
-
அங்கமெல்லாம் தங்கமென மின்னும் எங்கள் ஆண்டவனின் அட்டகாசமான வண்ண ஆல்பம் (136 படங்கள்) பொலிவுடன் இப்பொழுது அச்சாகிறது..முன்பதிவிற்கு முந்துங்கள்....அனைவரையும் மயக்கும், யாரும் பார்த்திராத சோலோ ஸ்டில் உங்கள் கைகளில் தவழும் நாள் 16.06.2013...
http://i43.tinypic.com/28c386g.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i41.tinypic.com/33y5nvs.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
-
அரசகட்டளை
19.5.1967
46 வது ஆண்டு நிறைவு .
மக்கள் திலகம் அவர்கள் குண்டடிபட்டபிறகு வந்த முதல் படம் .
ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் - இனிமையான பாடல்கள்
மக்கள் திலகம் - வீரப்பா
மக்கள் திலகம் - நம்பியார்
மக்கள் திலகம் - மனோகர்
மோதும் கத்தி சண்டைகள் அனைத்தும் பிரமாதம் .
மக்கள் திலகத்தின் நடிப்பு அபாரம் .
குறிப்பாக இந்த படத்தில் அவரின் ஸ்டைல் - படு அமர்க்களம் .
சுமாராக ஓடிய படம்
http://i40.tinypic.com/2wcmuxv.jpg
http://youtu.be/WkG2AfH9XWg
-
-
-