உற்சாகத்தில் உத்தமத் தலைவனின் ரசிகப்பெருமக்கள்.
http://i58.tinypic.com/2ekm8tu.jpg
Printable View
உற்சாகத்தில் உத்தமத் தலைவனின் ரசிகப்பெருமக்கள்.
http://i58.tinypic.com/2ekm8tu.jpg
நடிகர் சார்லி மக்கள் திலகத்தின் மாண்புகள் குறித்து பேசியபோது
http://i62.tinypic.com/ao5d7b.jpg
http://i59.tinypic.com/23tiyd.jpg
http://i57.tinypic.com/ifv31y.jpg
இனியர் நண்பர்கள் ராம் மற்றும் லக்ஷ்மன் [Lakshman Sruthi]அவர்களுக்கு,
அந்த நாள் ஞாபகம்: தாங்கள் டெல்லி சென்று அங்கே நடந்த போட்டியில் [1986-87]வெற்றி கண்டு அதை தங்கள் என்னை வகுப்பு அறைக்கு அழைத்து இனிப்பு வழங்கி கொண்டாடியது இன்றும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது.
அதை போல் 1986-1987 மாணவர் தேர்தல் நடைபெற்ற பொது தங்கள் எனது அழைப்பை ஏற்று மாலை 3:30 முதல் 5:00 வரை பேரறிஞர் அண்ணா சிலை கிழ அமர்ந்து தங்களுக்கே உரிய பணியில் பலகுரலில் பேசு அசத்தியது. மேலும் அதை பார்த்த மாணவர், பொது மக்கள் அனைவரும் கை தட்டல் எழுப்பி, மாணவர் தேர்தல் நடப்பதை, வகுப்பு நடப்பதை எல்லாம் மறந்து நின்றது - தாங்கள் திறமையை மதித்து ஆரவாரம் செய்தது - அதைவிட ஒரு பெரிய பாராட்டு உங்களுக்கு வேறு என்ன வேண்டும். தங்கள் இருவரும் மேலும் புகழ் அடைய எல்லாம் வல்ல சக்தி நமது பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் ஆசி என்றும் உண்டு.
நன்றி
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழ சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்ற்றும் அணைத்து பக்தர்கள்.
http://i60.tinypic.com/sxgfox.jpg
Ayirathil Oruvan movie in Digital and DTS format really fantastic. Must watch minimum 1000 times. Superb print quality and superb sound effect.
தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் மக்கள் திலகத்தின் 97ஆம் பிறந்த நாள் விழா. அசத்தல் ஏற்பாடுகளைச் செய்த இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவைச் சார்ந்த அனைவருக்கும், குறிப்பாக சைதை. ராஜ்குமார் அவர்களுக்கும், பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும், அருமையாகத் தொகுத்து வழங்கிய அருமை நண்பர் திருப்பூர்.ரவிச்சந்திரன் அவர்களுக்கும், அருமை நண்பர்கள் லோகநாதன் உள்ளிட்ட அனைவருக்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு சார்பில், சென்னை காமராஜர் அரங்கில் கடந்த 16-03-2014 அன்று நடைபெற்ற "மக்கள் திலகத்தின் 97வது பிறந்த நாள் - பக்தர்கள் திருவிழா"வில் பங்கு கொண்ட பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். பக்தர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். அபிமானிகள் உட்பட பொது மக்கள் தெரிவித்த கருத்துக்கள் :
1. அழகர் சாமி, கரூர் (தீவிர எம். ஜி. ஆர். ரசிகர் ) :
இதுவரை சென்னையில் புரட்சித்தலைவருக்கு பல விழாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால்,
இம்முறை திரண்ட மக்கள் வெள்ளம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.
2. திண்டுக்கல் மலரவன் (தீவிர எம். ஜி. ஆர். பக்தர்)
பத்திரிகைகள் சார்பில்தான், மக்கள் திலகத்தின் விழாக்கள் நடப்பது என்றிருந்த நிலையில்,
புதுமையாக, முழுக்க முழுக்க பக்தர்களால் மட்டுமே முதன் முதலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
விழா, வெற்றி விழாவாக அமைந்தது கலியுக கடவுளின் பரிபூரண ஆசிகளால் தான்.
இது ஒரு மகத்தான சாதனை என்றே சொல்ல வேண்டும். வெளியூர் ரசிகர்களை இந்த விழாவில்தான்
முறைப்படி மேடையில் அறிமுகப்படுத்தி விருது வழங்கினார்கள்.
3. விருகம்பாக்கம் சுந்தரேசன் (பொது மக்களில் ஒருவர்)
நான் பல நிகழ்சிகளுக்கும், விழாவிற்கும் சென்றிருக்கிறேன். ஆனால் இன்று
நடைபெற்ற விழா திட்டமிட்டு முறையாக, எவ்வித தொய்வுமில்லாமல், விறுவிறுப்பாக,
ரசிக்கும் படி இருந்தது.
4. மடிப்பாக்கம் வரலட்சுமி : நான் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகை.
அவர் சம்பந்தப்பட்ட விழாவிற்கு என்னால் முடிந்த வரையில் பங்கு
கொள்வேன். பங்குனி மாத பவுர்ணமி சுப தினமாகிய இன்று நடைபெற்ற இந்த
விழாவில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட எம். ஜி. ஆர். ரசிக - ரசிகையர்களை
காணும் போது, பெரும் உற்சாகம் அடைந்தேன்.மக்கள் திலகம் மறைந்து 27 ஆண்டுகள் ஆகியும்
மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று எண்ணும்போது மிக மிக பெருமை
அடைகிறேன்.
5. குணசேகரன், பொறியியல் கல்லூரி முதல்வர் :
நான் பொன்மனச்செம்மல் எம்.ஜி. ஆர். அவர்களின் அபிமானி. அவரின் பாடல்களை மட்டுமே
விரும்பி ஆர்வமுடன் கேட்பேன். என் நெருங்கிய நண்பர், எம். ஜி. ஆர்.
பக்தர் பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் அழைப்பின் பேரில், இந்த விழாவிற்கு நான், என் தாயார்,
என் மனைவி, மற்றும் எனது மகன் மகளுடன் வந்துள்ளேன்.
சமுதாயத்தில் ஒரு மதிக்கத்தக்க மனிதனாக நான் திகழ்வதற்கு முழுக்காரணமும் மக்கள் திலகம்
எம். ஜி. ஆர். தான். இன்றைய இளம் தலைமுறையினரும் அவரை தெரிந்து கொள்ள வேண்டும்
என்ற எண்ணத்தில் அவரின் கொள்கைப்பாடல்களையும், வீரமிக்க பாடல்களையும், கருத்துள்ள
பாடல்களையும் அவர்களிடையே உரையாற்றும்போது எடுத்து சொல்வேன்.
இன்று நடைபெற்ற இந்த இனிய விழாவினை நான் என்றும் மறக்க முடியாது. இந்த அரங்கத்தில்
கூடிய கூட்டம் நான் இதுவரை பார்த்தது கிடையாது.
மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த விழாக் குழுவினரையும், எனது நண்பரையும் நான் மனதார
பாராட்டுகிறேன்.
.
6. அறிவானந்தம், தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்
அடேயப்பா ! நான் நேசிக்கும் மகான் புரட்சித் தலைவருக்கு எவ்வளவு பிரம்மாண்டமான பேனர்கள் ! .
எவ்வளவு ரசிகர்கள் ! போக்குவரத்து பாதிக்கும் அளவுக்கு திரண்ட மக்கள கூட்டத்தை பார்க்கும் போது
மலைப்பாக இருக்கிறது. என் தலைவனின் புகழை எவராலும் அழிக்க முடியாது.
7. இராசமாணிக்கம் :
நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவன். சென்னையில் நடைபெறும் புரட்சித் தலைவர் குறித்த
விழாக்களுக்கு தவறாமல் ஆஜர் ஆகி விடுவேன். நானும் பல விழாக்களுக்கு சென்றுள்ளேன்.
இன்றைய விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தலைவர் படம் வெளியாகி வெற்றிகரமாக
ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் இப்படி ஒரு கூட்டமா ?
8. டேனியல், பெரம்பூர் (தனியார் நிறுவனம்) : ( வயது 32 )
சாதி, மத இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் ஒரே நடிகரும்,
தலைவரும், நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். ஒருவரே! அவருக்கு எடுக்கப்பட்ட விழாக்களிலேயே
இதுதான் மனதுக்கு நிறைவான விழாவாக அமைந்தது.
இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவில் நான் மட்டுமல்ல. என் வயதையொத்த எனது நண்பர்கள் பலரையும்
உறுப்பினர்களாக்கி மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்ப்பது என முடிவு செய்துள்ளேன். விழாவினை
சிறப்பாக நடத்திய திரு. ராஜ்குமார் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த இதர எம். ஜி. ஆர். மன்ற
அமைப்புக்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
9. முகம்மது ஷாஜஹான், திருவொற்றியூர் : (வயது 26)
நான் என் நண்பர்கள் பலருடன் இந்த விழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டோம்.
புரட்சித் தலைவரைப் பற்றி கேள்விப்பட்டுதான் உள்ளோம்.
எனது தந்தையின் நண்பர் பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்களின் அழைப்பிற்கிணங்கி நாங்கள் ஒரு குழுவாக
இந்த அரங்கிற்கு வந்த பின்பு தான் தெரிந்தது எம். ஜி. ஆர். எவ்வளவு செல்வாக்கானவர் என்று அவரின் படப்
பாடல்களை கேட்டு நாங்கள் அனைவரும் மெய் மறந்தோம். நாங்கள் இனி, அவரது பழைய திரைப்படங்களை
பார்ப்பது என்று முடிவு செய்துளோம். நாளையே, "ஆயிரத்தில் ஒருவன்"
திரைப்படம் பார்க்க ஆவலாக உள்ளோம்.
கருத்துக்கள் தொடரும்.........
காமராஜர் அரங்கில் திரு கமல்ராஜ் தலைமையில் பல மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்ட தர்மத்தின் தலைவன் எம்.ஜி.ஆர் மன்றம் இலவச அனுமதியுடன் நடத்திய விழா புகைபபடங்கள் தொடரும்.... இந்த விழாவில் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள்/உதவிகள் வழங்கப்பட்டது. எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் நடந்த விழாவில் மக்கள் சேவை ஒன்றே பிரதானமாக கருதப்பட்டது. வாழ்க திரு கமல்ராஜ் அவருடன் வந்த மலேசியா நண்பர்கள் மற்றும் விழ சிறப்பாக நடக்க வருகை புரிந்து நடித்தி தந்த உரிமைகுரல் ஆசிரியர் திரு பீ.எஸ்.ராஜு [BSR] , பொன்மனச்சம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்க உறுப்பினர்கள் மற்ற்றும் அணைத்து பக்தர்கள்.
http://i57.tinypic.com/rhnbds.jpg
http://mmimages.maalaimalar.com/gall...3_L_galvpf.gif
http://mmimages.maalaimalar.com/gall...8_L_galvpf.gif
http://mmimages.maalaimalar.com/gall...7_L_galvpf.gif
http://mmimages.maalaimalar.com/gall...6_L_galvpf.gif
http://mmimages.maalaimalar.com/gall...5_L_galvpf.gif
This week AAyirathil oruvan got second place for box office collections- courtesy malaimalar