'இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்
வந்து பாய்ந்திடும் மழைச்சரமே
நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது
தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது'
நேற்று நைட் சென்னை இரவு 10 மணி வரை அனல்
பிறகு இடி மின்னல் புயல் மழை
வீட்டுக்கு வீடு பட்டு பாகவதர் மாதிரி
Printable View
'இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்
வந்து பாய்ந்திடும் மழைச்சரமே
நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது
தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது'
நேற்று நைட் சென்னை இரவு 10 மணி வரை அனல்
பிறகு இடி மின்னல் புயல் மழை
வீட்டுக்கு வீடு பட்டு பாகவதர் மாதிரி
http://jagdishk.dinstudio.com/files/mohd-rafi.jpg
எனது உடலின் மீது சந்தனக் கட்டைகளை ஏன் அடுக்குகிறீர்கள் ? நான் இறவாதவன்....எங்கெல்லாம் நீங்கள் வாழ்க்கையில் இடறி விழுந்து துயரத்தை உணர்கிறீர்களோ அங்கெல்லாம் எனது குரல் உங்களுக்ககா ஒலிப்பதை நீங்கள் கேட்கலாம்....
முகமது ரஃபி தனக்காகவே பாடிய பாடல் போல உள்ள இந்தப் பாட்டு இடம் பெற்ற படம் நஹ்னிஹால். படத்தில் ஜவகர்லால் நேருவுக்காக பாடப்படுகிறது.
இந்திய திரையிசைப் பாடகர்களில் முகமது ரஃபிக்கு நிகரானவர் யாருமில்லை. எத்தனை எத்தனையோ குரல்கள் மூலம் நமது திரைப்படப் பாடல்கள் மற்றும் அதன் ரசனை மேம்பட்டு இருப்பினும்,முகமது ரஃபியின் பாடல்கள் துயரத்தின் எதிரொலிகளாக நமது வருத்தமான நேரங்களில் நம்முடன் அழுதும், ஆறுதல் கூறியும் துணை நிற்கின்றன.
முகமது ரஃபியின் குரல் எதிரொலியைப் போன்றது. நமது துயரம் மிகுந்த ஆன்மாவின் தவி்ப்பை இக்குரல் உணர்த்துவதால், வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும் வரை, அதில் துன்பமும் நீடிக்கும் வரை ரஃபியின் பாடல்களும் நிலைத்திருக்கும்.
மிகவும் அடர்ந்த பெரும் துயரத்துடன் முகமது ரஃபி பாடும் அனுபவம் சில நேரங்களில் தியானத்தைக் கூட பின்னுக்குத் தள்ளி விடுகிறது.அதனுடன் லயிக்கும் போது மனதின் இறுகிய வெளிகள் கசிந்துருகி நெகிழ்வுறுவதைக் காணலாம். கண்களில் நிரப்பாமல் நம்மால் அந்தப் பாடல்களை ரசிக்க முடியாது. அவருடைய சில பாடல்கள் நம்மை உடனடியாக அழ வைக்காது.ஆனால் நெஞ்சில் ஆறாத ஒரு வடுவை கிளறிவிட்டுப் போகும். அது அவ்வப்போது வலிக்கும். அதன் சொல்லியழ முடியாத துக்கம் நம்மை செயலிழக்க வைக்கும். அதுதான் முகமது ரஃபியின் தனித்தன்மை. எனவேதான் அதனை துயரத்தின் எதிரொலி என்று அழைக்கிறேன். ரஃபி பாடும் இடங்கள் திரைப்படத்தில் பெரும்பாலும் துயரமான காட்சிகளை ஒட்டியே இருக்கும். துயரத்தை ரஃபியின் குரல் அழுது. ஆராதித்து நம்மிடம் அதன் வலியை குறைக்காமல் வழங்குகிறது.
முகமது ரஃபி 1924ம் ஆண்டு அமிர்தசரஸ்அருகில் பிறந்தார். பிரிவினைக்குப் பின்னர் அப்பகுதி பாகிஸ்தானுடன் இணைந்து விட்டது. உஸ்தாத் படே குலாம் அலி கான் என்பவரிடம் முறைப்படி சங்கீதம் கற்றார். முகமது ரஃபிக்கு 13 வயதாகும் போதே முதல் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது முடிசூடா மன்னராக விளங்கிய பாடகர் சைகல் .இவர் பாடவில்லையென்றால் அந்தப் படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள்.அப்படியொரு வெறிபிடித்த ரசிகர் கூட்டம் சைகலுக்கு உண்டு. மலையாளத்தின் புகழ்மிக்க எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரும் தீவிரமான சைகலின் ரசிகர். சைகலின் சோஜா ராஜகுமாரி பாட்டைக் கேட்காமல் தூங்கமாட்டாராம். இப்படிப்பட்ட சைகல் பாடும் போது திடீரென மின்சாரம் தடைபட்டது. கெட்ட சகுனமாக கருதி சைகல் பாட மறுத்துவிட்டார்.அப்போது அவரது பாடல்களை மேடையில் பாடினார் முகது ரஃபி.
பின்னர் 1942ம் ஆண்டு பஞ்சாபி படம் ஒன்றில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.இசையமைப்பாளர் ஷியாம் சுந்தர் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கினார்.அந்தப் பாடல் பெரிதாக கவனம் பெறவில்லை.
1944ல் வாய்ப்பு தேடி மும்பைக்கு சென்ற ரஃபி, அங்கு மெஹ்பூப் ஸ்டூடியோவின் அதிபருக்கு அறிமுகம் ஆனார். அவர் மூலம் இசையமைப்பாளர் நௌஷாத்தின் நட்பு ரஃபிக்கு கிடைத்தது. ஆனாலும் நௌஷாத்தின் கோரஸ் கூட்டத்தில் ஒருவராகத்தான் ரஃபி இருந்தார். பின்னர் ரஃபியின் குரலை அடையாளம் கண்ட நௌஷாத் ஹிந்துஸ்தான் கே ஹை ஹம் என்ற படத்தில் தனியாகப் பாட வாய்ப்பளித்தார். அந்தப் பாடல்தான் ரஃபி பாடிய முதல் இந்திப் பாடல்
1952 ல் வெளியான பேஜூ பாவ்ரா படம் ரஃபியின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. அந்தப் படத்தில் அவர் பாடிய பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தன. இதன் பிறகு பல பிரபல இசையமைப்பாளர்கள் ரஃபியை அழைத்துப் பாட வைத்தனர். நீல்கமல் படத்தில் பாடி தேசிய விருதையும் வென்றார் ரஃபி.பல லட்சம் ரூபாய் வாங்கி பாடிய ரஃபி தமக்கு வேண்டியவர்களுக்கு ஒரு ரூபாய் வாங்கியும் பாடிக் கொடுத்திருக்கிறார்.
ரஃபியுடன் பலநூறு பாடல்களை இணைந்துப் பாடியவர் லதா மங்கேஷ்கர். ஆனால் 1960ல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. 55 சத வீதம் ராயல்டி கேட்டு லதா இசையமைப்பாளர்களை நெருக்கியது ரஃபிக்கு உடன்பாடாக இல்லை. தமது சம்பளத்திற்கு மேல் பாடகர்கள் ராயல்டி கேட்பது சரியல்ல என்று சலீல் சவுத்திரியும் கருத்து தெரிவித்தார். இதனை லதா மங்கேஷ்கர் ஏற்கவில்லை.இப்பிரச்சினையால் ரஃபியுடன் பாடுவதைத் தவிர்த்தார் லதா மங்கேஷ்கர்.பின்னர் இருவருக்கு இடையிலும் சமரசம் ஏற்பட்டது.ஆனால் 1980ல் ரஃபி மறையும் வரை இருவருக்கும் இடையில் இந்த வேறுபாடு நீடித்தே வந்தது.
ரஃபி ஜாலியான பாடல்களையும் பல சந்தோஷமான பாடல்களையும் பாடியிருக்கிறார். நிச்சயம் அவை அற்புதமான பாடல்கள்தாம். ஆனாலும் முகமது ரஃபியின் குரல் துயரமான காட்சியில் ஒலித்த போதெல்லாம் அந்தப் பாடல் சாகா வரம் பெற்றுவிட்டது. சந்தோஷமான பாடல்களை எல்லாம் எத்தனை அலட்சியமாக ரஃபி பாடினார் என்பதை கூறத் தேவையில்லை.
ரஃபி மகிழ்ச்சியாகப்ப பாடிய பாடல்களில் முக்கியமானது நசீப் படத்தி்ல் அமிதாப்புக்காக அவர் பாடிய பாடல். ஜான், ஜானி, ஜனார்த்தன் என்ற அந்தப் பாடல் ஒரு ரம்மியமான அனுபவத்தை ஏற்படுத்தக் கூடியது.
முகமது ரஃபி பிறப்பால் முஸ்லீமாக இருப்பினும் இந்து மதத்தின் திரையிசை பக்திப் பாடல்களை அதிகமாகப் பாடியவர் அவர். அந்தப் பாடல்கள் எல்லாம் இன்றும் அமர்த்துவம் வாய்ந்த பக்தி கீதங்களாக பல்லாயிரம் வீடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
தேச பக்தி பாடல்களிலும் ரஃபி தனி முத்திரைப் பதித்துள்ளார். ஆயினும் அவரது குரல் அதிகமாக தத்துவம் மற்றும் துயரம் சார்ந்த பாடல்களில் பொன்னாக மின்னியது.
ரஃபியின் பெயருக்கு அடையாளமாக விளங்குபவை அவரது துயரமான பாடல்களே. ரஃபியின் பாடலைக் கேட்டால் நெஞ்சு வலிக்கிறது என்று என் அப்பா கூறுவதைக் கேட்டிருக்கிறேன். எனக்கும் என்றைக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் அது ரஃபியின் குரல் கேட்டபடி தான் என் உயிர் பிரிந்தது என்று நீங்கள் அனுமானிக்கலாம. அப்படி ஒரு சாவுக்காகத்தான் ஆசைப்படுகிறேன்.
ரஃபியின் பாடல்கள் வலி நிறைந்தவை. ஒவ்வொரு வரியும் வயலின் மற்றும் பியானோவில் கலந்து நம்மை துடிக்க வைப்பது.
நீல் கமல் படத்தில் தேசிய விருதைப் பெற்ற ரஃபியின் பாட்டு பாபுல் கீ துவாயேன் லேத்தி ஜா என்ற பாடல். நடித்தவர்கள் பல்ராஜ் சஹானி என்ற மகத்தான நடிகரும் வஹிதா ரஹ்மானும்.
மகளை மணமுடித்து அனுப்பும் தந்தையின் உணர்வை கூறும் பாடல் இது. தான் பாசமாக கொஞ்சி வளர்த்த குழந்தை பெரியவளாகி திருமணப் பெண்ணாக பிரியும் போது ஒலிக்கத் தொடங்கி விடுகிறது ரஃபியின் குரல் (நடிகர் திலகத்தின் நீதிபதி ,அன்புள்ள அப்பா நினைவிற்கு வரலாம் )
இந்தியில் லாட்லி என்றொரு சொல் உண்டு. செல்லக் குழந்தை என்று அதன் அர்த்தம். மிகுந்த அன்புடன் உச்சரிக்கப்படும் சொல் இதுதான். தாய்மையின் அன்பு பொங்கும் சொல் இது. இந்தப் பாடலில் லாட்லியின் கால்களில் முட்கள் குத்தாமல் இருக்கட்டும் என்று ரஃபி பாடுவார். அப்போது வகிதா ரஹ்மானின் காலில் உடைந்த கண்ணாடிகள் குத்தி ரத்தம் கசியும். ஒரு முள்கூட என் செல்லக் குழந்தையைக் காயப்படுத்தக் கூடாது என்று தாய்மை ததும்பும் குரலில் ரஃபி பாடுவதைக் கேட்டுப் பாருங்கள். லாட்லி என்ற அந்தச் சொல்லை அவர் உச்சரிக்கும் போதே உடைந்து அழுவதை உணரலாம். நம்மையும் நமது குழந்தைச் செல்வங்களை எண்ணி அந்தக் கணம் அழ வைத்து விடும்.ரஃபியின் குரல் நமது உள்ளத்தின் எட்ட முடியாத ஆழத்தை அடைந்து அங்கு வலியாக உறைந்துப் போய் விடுகிறது.
http://upload.wikimedia.org/wikipedi...ilm_poster.JPG
http://www.youtube.com/watch?v=pABBYGFNXts
செந்தூரம் இதழில் வெளியான நண்பர் சன் டிவி ஜகதீஷ் அவர்களின் கட்டுரையின் சில பகுதிகள்...
இரவின் மடியில்
மனோ வின் முதல் தமிழ் பாடல் பூவிழி வாசலிலே,அண்ணே அண்ணே நீ என்ன சொன்னே, இளையராஜா இசையில்.1987 இல்.
http://www.rakkamma.com/filmsongdeta...38&songid=1867
ஹரிஹரன் முதல் தமிழ் பாடல் ரோஜாவில் ,தமிழா தமிழா , ஏ.ஆர்.ரகுமான் இசையில் 1992.
https://www.youtube.com/watch?v=oRypXQxL6qY
சங்கர் மகாதேவன் முதல் தமிழ் பாடல் வெண்ணிலவே (சோகம்),மின்சார கனவில், 1997 ,ரகுமான் இசையில்.
https://www.youtube.com/watch?v=drZYK0B-Ze8
கார்த்திக் முதல் தமிழ் பாடல் நேர்ந்துகிட்டேன், ஸ்டார் படத்தில் 2001 இல்,ரகுமான் இசையில்.
https://www.youtube.com/watch?v=dMLWV9bKfRU
நன்றி கோபால்
உங்களின் நௌஷட் பற்றிய பதிவு தான் இந்த mohd - ரபி யின் பகிர்வுக்கு inspiration
இரவின் மடியில்
தமிழில் பாடகிகளுக்கு கணக்கே இல்லை. இவர்களின் முதல் தமிழ் பாடல்களை கவனிப்போம்.
ஜிக்கி ,படம்- ஞான சௌந்தரி, 1948,அருள் தாரும் தேவ மாதாவே ,எஸ்.வீ. வெங்கட் ராமன் இசையில்.(இது பெரிய நாயகி.ஜிக்கி பாடியது சின்ன நாயகிக்கு. சிக்கவில்லை.
https://www.youtube.com/watch?v=KRM0zm_aptg
பீ.லீலா , படம் பாதாள பைரவி,1951, என்னதான் உன் ப்ரேமையோ , கண்டசாலா இசையில்.
https://www.youtube.com/watch?v=PrH3TZhMJiY
ஜமுனா ராணி,குலுங்கிடும் பூவிலெல்லாம் , வளையாபதி -1952, தக்ஷினாமூர்த்தி இசையில் (டி.எம்.எஸ் கண்டு பிடிக்க முடிகிறதா?)
https://www.youtube.com/watch?v=PIUTLcyYeP4
பீ.சுசிலா ,படம் பெற்ற தாய் ,1953, ஏதுக்கு அழைத்தாய் ,பெண்டியாலா இசையில்.
https://www.youtube.com/watch?v=qIAdFlHhdMY
எஸ்.ஜானகி, விதியின் விளையாட்டு வெளியாகவில்லை. மகதல நாட்டு மேரி,1957 இல் ,கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை, பார்த்தசாரதி இசையில்.
http://www.inbaminge.com/t/m/Magadha...0Nere.eng.html
எல்.ஆர்.ஈஸ்வரி -நல்ல இடது சம்மந்தம்,1958, இவரேதான் அவரு, கே.வீ.மகாதேவன் இசையில்.
https://www.youtube.com/watch?v=j6rQ7dvfp9w
எங்கேயிருந்துதான் பிடிப்பாயோ வாசு?:confused2:
வாசு ஜி
நலம் தானா நலம் தானா உடலும் உள்ளமும் நலம் தானா
வாணி ஜெயராம் , தாயும் சேயும் என்ற படத்துக்காக 1973 இல் சுப்பையா நாய்டு இசையில் பாடிய படமும் பாடலும் வெளிவரவில்லை. 1974 இல் வந்த தீர்க்க சுமங்கலியின் மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலே முதலாக கருத பட வேண்டும்.எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.
https://www.youtube.com/watch?v=d9pS3G1ApiI
சுஜாதா ,என் பிரிய இசை நாயகி, அறிமுகம் கவிக்குயில்,இளையராஜா இசையில் ,1977, காதல் ஓவியம் கண்டேன் (அமீர் கல்யாணி ராகம்)
https://www.youtube.com/watch?v=IZ0Nc1smXj0
உமா ரமணன் ,1977 இல் ,கிருஷ்ணா லீலை படத்தில் கோகுல பாலன் , எஸ்.வீ வெங்கட்ராமன்(கடைசி படம்) இசையில் .
https://www.youtube.com/watch?v=fqhNoagRcqs
ஜென்சி ,திரிபுர சுந்தரி படத்தில் 1978 இல் இளைய ராஜா இசையில் ,வானத்து பூங்கிளி.
http://www.inbaminge.com/t/t/Thiripura%20Sundari/
சித்ரா ,இந்த குயிலின் முதல் பாடல் 1986 இல் வெளியான நீதானா அந்த குயில் ,இளையராஜா இசையில் பூஜைகேற்ற பூவிது.
https://www.youtube.com/watch?v=bAaI29Wzrcg
அனுராதா ஸ்ரீராம் ,இந்திரா படத்தில் 1995 இல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அச்சம் அச்சம் இல்லை.
https://www.youtube.com/watch?v=mXR2Rfq0N7M