ராஜேஷ் - உங்கள் "திரையில் பக்தி " என்னவாயிற்று ? intermission ஆ ??
Printable View
ராஜேஷ் - உங்கள் "திரையில் பக்தி " என்னவாயிற்று ? intermission ஆ ??
திரு கல்நாயக் - பூக்களை பறித்துவிட்டு மாலையாக தொடுக்கா விட்டால் அவைகள் வாடிப்போக வாய்ப்பு அதிகம் - நீங்கள் இதுவரை போட்ட பூக்கள் பதிவுகளை நுகர்ந்தவுடன் , வீட்டில் இருந்த எல்லா நறுமண , வாசனை திரவியங்களையும் தூக்கி எறிந்து விட்டேன் - பூக்கள் வரவில்லை என்றால் , மீண்டும் தூக்கி எறிந்த பொருள்களை தேவை இல்லாமல் வாங்க வேண்டியதாகி விடும் . தொடர வேண்டுகிறேன் ----
டியர் வாசு சார்,
சத்தியம் தவறாதே படத்தில் இடம்பெற்ற 'முத்துக் குளிப்பவரே' பாடல் அலசல் அருமை (ஸர்ப் எக்ஸல்..??)
சின்ன வயது விஜயநிர்மலா என்றால் எனக்கு எப்போதும் ஒரு கிக்தான். (கிருஷ்ணா இந்த பதிவெல்லாம் படிக்க மாட்டார்தானே..! அட, நம்ம கிருஷ்ணாஜி இல்லீங்க, திருவாளர் விஜியைச் சொன்னேன்). விஜி கொஞ்சம் கருப்பு நிறம்தான். கருப்புவெள்ளை படங்களிலேயே நடித்ததால் தெரியவில்லை. ஆனால் என் அண்ணன் காட்டிக்கொடுத்து விட்டார்.
இதென்ன அதிசயம்..?.
பணமா பாசமா, மோசக்காரனுக்கு மோசக்காரன் எல்லாம் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் ஞான ஒளியைக் காணோம்.
நீங்களாவது..., ஞான ஒளியையாவது... தவிர்ப்பதாவது..... எப்படி?.
'சவாலே சமாளி'...'தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி'
ஆதிராம் சார்,
கலக்கல். விழுந்து விழுந்து சிரித்தேன். நன்றி!
எனக்கு ஒளியை மற்றவற்றுடன் கலக்க மனதில்லை சார். அது த.........னி. 'மோசக்காரனுக்கு மோசக்கார'னுடன் சேர்த்து மோசம் போகாமல் காத்துக் கொண்டேன்.:)
இப்போ வேலை வைத்து விட்டீர்களே! தமிழில் வர்ணத்தில் திருமதி கிருஷ்ணா வேறு எதிலாவது அகப்படுகிறாரா என்று தேட வேண்டுமே!:)
http://rymimg.com/lk/f/l/d9ea44bd406...9a/4430891.jpg
'ஒளி' தவிர்த்து பார்த்தால் என் ஓட்டு 'உயிரா மானா' விற்கே. விஜி விளையாடுவார் இந்தப் படத்தில்.
நம் தலைவரின் பட டைட்டிலின் தலைப்பு உள்ள பாடல் வரியில் ஜெய்யுடன் இணைந்து அம்மணி அட்டகாசம் பண்ணுவாரே ஆண்பிள்ளை ரேஞ்சுக்கு.
போதாதற்கு என் ராட்சஸி (இதற்கு 'நம்' ராட்சஸி போட மாட்டேன்):) வேறு குரலாயிற்றா? பாடகர் திலகம் உடன் சேர்ந்து பட்டை கிளப்புவார். சின்னா பார்க்காத புயலை, இன்பப் புயலை இப்பாட்டில் அனுபவிக்கலாம்.
இன்னா ஆட்டம்... இன்னா பாட்டம்... இன்னா லிரிக்ஸ். அமர்க்களம் போங்க.
எப்பேர்ப்பட்ட கோழைக்கும் தன்னம்பிக்கை தந்து வீரமாக்கிவிடும் அசுரப் பாடல்.
அதுவும் விஜி... பட்டுப் பாவாடை தாவணியில் பளீர் என்று, பாவாடையைத் தூக்கி இடுப்பில் செருகிக் கொண்டு, 'குதிரைவால்' கொண்டை போட்டு, 'மக்கள் கலைஞ'ருடன் மகா நெருக்கம். (அந்த மச்சம் வேறு மனுஷனைப் பாடாப் படுத்துது). 'மயங்கும் வயது' பாடலில் எம்.ஜி.ஆர் அவர்களும், மேடமும் பண்ணும் அதே காரியங்களைத்தான் இங்கே இவர்களும் செய்கிறார்கள்.:) பாறாங்கல் குன்றுகளின் மீது நின்று டப்பாப்ங்குத்து குத்தாட்டம் போடுவது குற்றால குதூகலம். ஜெய் பல இடங்களில் ஜாலியாக ஆடினாலும் சில இடங்களில் தடுமாறுவார்.
கருங்கல் குன்று ஒன்றின் மேல் விஜி துணிச்சலாக ஏறி நின்று, அந்தக் கால ஏர் உழவன் ரேஞ்சிற்கு கைகளை உயர்த்தி, 'எதிர்த்து நின்னு கணக்கு பண்ணி' நம்மை சமாளிக்க சொல்வது உண்மையிலே பார்க்கும் நமக்கு 'மூச்சு முட்டும்' சவால்தான் சாமி.
ஜெய்யாவது பரவாயில்லை... மனிதர் ஷூ போட்டுக் கொண்டு சமாளித்து ஆடுவார். ஆனால் விஜியோ காலில் காலணி இல்லாமலேயே அந்த கற்பாறைகளின் மீது வெயிலில் கால் சூடையும் கண்டு கொள்ளாமல் ஆடுவார்.
அந்தக் காலத்தில் அப்படி ஒரு தொழில் பக்தி, சின்ஸியாரிட்டி, அர்ப்பணிப்பு இருந்தது. பெண்டு கழன்று விடும். இப்போது காரவான், ஏ.சி சொகுசு என்று இளசுங்க நோகாம மினுக்கிகிட்டு 'கேட் வாக்' போகுதுங்க. பணமா சம்பாதிச்சி ரியல் எஸ்டேட் பிசினெஸ் பண்ணுதுங்க.
ராட்சஸியப் பத்தி சொல்லாமலா? வேறு எவரையும் இந்தப் பாட்டிற்கு இவரை விட்டால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
தெனாவாட்டு, திமிர், 'சொல்வதை அப்போதே கேட்டு செய்' என்பது போல உத்தரவு, அகங்காரம், ஆணை, அலட்சியம் என்று வார்த்தைகளில், எழுத்துக்களின் உச்சரிப்பில் உன்னத அதிசயங்கள் படைப்பார்.
ஒரே ஒரு இடம் உதாரணத்திற்கு சொல்கிறேனே...
'கெழவன் கூட சமாளிக்கும் சவ்..வாலே
நீ குமரனய்யா கம்பெடுத்து ச...மாளி'
இந்த வரிகளை அவர் பாடுவதை கவனியுங்கள். அப்படியே சரண்டர் ஆகி விடுவீர்கள். 'சவாலே' என்பதை அழுத்தி அதனுடன் வ்' சேர்த்து சவ்..வாலே' என்று அவர் உச்சரிக்கும் போது நம் உடல் சிலிர்த்துப் போகும். 'லே' முடிவதே தெரியாது. கண்ணதாசனின் வலுவான வரிகளுக்கு எல்.ஆர் ஈஸ்வரி மேலும் வலு சேர்த்திருப்பார். இசை 'மெல்லிசை மன்னர்'. ராட்சஸியை யூஸ் பண்ணும்போதே தெரியுதே.
அமர்ஜோதி மூவீஸ் அளிக்கும் இப்படத்தை இயக்கியவர் 'கேள்வி தலைப்பு' இயக்குனர் கே.எஸ்.ஜி.:)
இன்று ஞாயிற்றுக் கிழமை. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தேன். வச்சார் ஆதிராம் வேலை. விஜி நினைவுகளை அவர் கிண்டிவிட, நான் அதற்கு மண்டியிட, வந்தது இன்ப ஆபத்து.
ஆதிராம் சார்! ரொம்ப நாளாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். தூண்டுகோலாய் துணை நின்றதற்கு நன்றி!
ஆனால் எல்லாவற்றுக்கும் மூல காரணகர்த்தாவாக 'முத்துக் குளித்துவிட்டு' நம் இருவரையும் 'கொஞ்சம் பக்கத்துல வரச்' சொல்லி, புயல் வரலயேன்னு ஒரு மனுஷர் கவலைப்படுகிறாரே:) அவரை என்ன செய்தால் தகும்?
நீங்களே சொல்லுங்கள்.
http://i.ytimg.com/vi/BIVSyDEm_2g/hqdefault.jpg
இன்னொரு விஷயம்...இந்தப் படத்தின் சில காட்சிகள் நெய்வேலி டவுன்ஷிப்பில் ஷூட் செய்யப்பட்டது. நிலக்கரி வெட்டி எடுக்கும் போது வரும் மண்ணை அப்படியே மலை போல குவித்து வைத்து விடுவார்கள். விண்ணைத் தொடும் அளவிற்கு அந்த மணல் மலை இறுகி இருக்கும். அங்கேயெல்லாம் இந்தப் படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. முதலாம் அனல் மின் நிலையம், முதாலம் சுரங்கம் இவைகளின் அருகே.)
முத்துராமன் அயல்நாட்டு அம்மணி கிருஷ்ணகுமாரியிடம் பாடும்,
'நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு' (சீர்காழியார் குரல்)
பாடல் வரிகள் இன்னும் நெய்வேலிக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும்.
அற்புதமான இந்த லோ-கிளாஸ் பாடலை ஆனந்தத்துடன் கேளுங்கள். ஆனால் கருத்து ரொம்ப ஹை-கிளாஸ்.
என்ன? நண்பர்களே! சவாலை சமாளிக்கத் தயாரா?:)
https://i1.ytimg.com/vi/mnrlgPC4Pb0/hqdefault.jpg
சவாலே சமாளி
சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
வயசிருக்கு சைஸிருக்கு பவுசிருக்கு
வயசு வந்த சின்னக் குட்டி எதிரிருக்கு
வயசிருக்கு சைஸிருக்கு பவுசிருக்கு
வயசு வந்த சின்னக் குட்டி எதிரிருக்கு
சமாளி முடிஞ்சா சமாளி
சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
ஏழைக்குன்னு வறுமை விட்ட சவாலே
நீ எதிர்த்து நின்னு கணக்கு பண்ணி சமாளி
ஏழைக்குன்னு வறுமை விட்ட சவாலே
நீ எதிர்த்து நின்னு கணக்கு பண்ணி சமாளி
ஏய்ச்சி வாழும் கூட்டமிட்ட சவாலே
நீ மூச்சு நிற்கும் நேரம் மட்டும் சமாளி
நலமிருக்கு பலமிருக்கு குலமிருக்கு
நல்லவர்க்கு சாமி ஒன்னு துணையிருக்கு
நலமிருக்கு பலமிருக்கு குலமிருக்கு
நல்லவர்க்கு சாமி ஒன்னு துணையிருக்கு
சமாளி முடிஞ்சா சமாளி
சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
கையைத் தூக்கி எதிரி விட்ட சவாலே
ஆஹா காலைத் தூக்கி தலையில் வச்சி சமாளி
காசுக்கார கூட்டமிட்ட சவாலே
நீ தூசு போல தூக்கிப் போட்டு சமாளி
துணிச்சலுக்கு தோல்வி இல்லே துக்கமில்லே
துக்கம் வந்தா நானிருக்கேன் பக்கத்திலே
சமாளி முடிஞ்சா சமாளி
சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
கெழவன் கூட சமாளிக்கும் சவ்..வாலே
நீ குமரனய்யா கம்பெடுத்து ச...மாளி
கெழவன் கூட சமாளிக்கும் சவ்..வாலே
நீ குமரனய்யா கம்பெடுத்து ச...மாளி
அழகுப் பொண்ணு உனக்கு விட்ட சவாலே
நான் அதிசயமா நெனைக்குமட்டும் சமாளி
கொட்டடி மேளம் தட்டடி தாளம் போடடி சும்மா
விட்டது ஏதும் சொல்லணுமின்னா சொல்லடியம்மா
கொட்டடி மேளம் தட்டடி தாளம் போடடி சும்மா
விட்டது ஏதும் சொல்லணுமின்னா சொல்லடியம்மா
சமாளி முடிஞ்சா சமாளி
சவாலே சமாளி
தனிச்சி நின்னு துணிச்சலோடு சமாளி
சவாலே சமாளி
https://youtu.be/PthwY8km7r8
வாசுங்க்ணா. இது நியாய்மா தர்மமா நீதியா முறையா..
ஞான் முன்பே எடுத்து வைத்திருந்த பாட்டாணு இது.. நிஞ்ஞள்கிட்ட போட்டாச் கேட்ட பின்னால் போடலாம் என சவாலே சமாளியை வைத்திருந்தேன்.. நீங்கள் என்னடா என்றால் ஆற அமரத் துவைத்து சர்ஃப் எக்ஸெல் போட்டு பின் உஜாலாவும் இட்டு வெளுத்துவிட்டீர்கள்..
கேட்பதற்கு இனிமையான இந்தப் பாடலை பாகம் 4 ஆரம்பிக்கும் போது தான் பார்த்து வைத்திருந்தேன்..
விஜி நினைவுகளை அவர் கிண்டிவிட, நான் அதற்கு மண்டியிட, வந்தது இன்ப ஆபத்து. // வாங்க வாங்க வூட்டாண்ட சொல்றேன் :)
//அந்த கற்பாறைகளின் மீது வெயிலில் கால் சூடையும் கண்டு கொள்ளாமல் ஆடுவார்.// பாவம் குழந்தை கஷ்டப் பட்டிருக்கும்.:)
அதுவும் விஜி... பட்டுப் பாவாடை தாவணியில் // என்னா ஒரு பார்வை..சாமி சத்தியமா அது பட் பாவாடை தாவணின்னு நான் கவனிக்கலை..
//அவரை என்ன செய்தால் தகும்? // பாவம் இவரும் குழந்தை தான் விட்டுடுங்க.. :) தாங்க்ஸ்ங்க்ணா ஃபார் த நைஸ் எழுத்தாடல் அண்ட் காணொளி.. எதுக்கும் போற போக்குல ஒண்ணு கேட்டு வச்சுடலாம் :)
நீங்க எப்போ பாட் தரப் போறீங்க ஆதிராம் ?
டியர் வாசு சார்,
கொஞ்சம் தூண்டி விட்டால் போதும், மனிதர் நர்த்தனம் ஆடிடுவீங்களே. கிட்டத்தட்ட எனக்கு டெடிகேட் செய்தது போல வந்த 'சவாலே சமாளி' பாடல் ஆய்வு ரொம்ப ரொம்ப அருமை. பார்த்தால் சாதாரணமாக தெரியும் பாடலில் கூட எப்படி இவ்வளவு நுணுக்கங்களை ஆராய முடிகிறது என்பது ஆச்சரியமே.
ஜெய்சங்கருக்கு சண்டைபோடத் தெரிந்த அளவுக்கு ஆடத்தெரியாது. ஒருமாதிரி தையா தக்கா என்று குதித்து, தனது ட்ரேட்மார்க் நடை நடந்து 'சமாளித்து' விடுவார். 'முத்துப்பொண்ணு வாம்மா' பாடலில் ஆட்டத்தில் தேர்ந்த விஜயலட்சுமியுடன் ரொம்பவே பரிதாபப்பட வைப்பார்.
பாறை சூட்டில் விஜயநிர்மலா வெறுங்காலுடன் ஆடுவது பாவமாகத்தான் இருக்கும். போக்கிரி ராஜா படத்தின் 'போக்கிரிக்கு போக்கிரி ராஜா' பாடல் ஷூட்டிங்கில் ரஜினிக்கு மட்டும் ஷூ கொடுத்து தன்னை வெறும் கால்களுடன் ஆடச்சொன்ன எஸ்.பி. முத்துராமனுடன் போக்கிரி ராணி ராதிகா சண்டைக்குப்போனாறாம் தனக்கும் காலணி வேண்டுமென்று. "நீ போட்டிருக்கும் உடைக்கும் காலணிக்கும் பொருந்துமா?" என்று கேட்டு ரஜினிதான் நிலைமையை சமாளித்தாராம் (பெண்ணுரிமை இயக்கங்களே குறித்துக் கொள்ளுங்கள்)
'நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு' வரிகளுக்கு நடித்தவர் கிருஷ்ணகுமாரியா?. நான் பாரதி என்று நினைத்திருந்தேன். (இங்கு ஒருவர் மகாகவி பாரதியாரை நீச்சல் உடையில் கற்பனை செய்த கொடுமை வேறு).
நீங்கள் ஓய்வெடுக்கப் போவதாக சொன்னதால் விஜயநிர்மலாவின் மற்ற பாடல்களான
'வாழைத்தண்டு போல உடம்பு அலேக்' (போட்டாச்சோ?)
'சந்திப்போமா இன்று சந்திப்போமா'
'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாகக'
'அம்மா கண்ணு சும்மா சொல்லு'
போன்ற பாடல்களைப் பற்றி கேட்கவே மாட்டேன்.
நன்றியுடன்
திரு ஆதிராம் - தயிரியமாக என் பெயரை குறிப்பிட்டிருக்கலாமே - ஏன் சுத்தி வளைத்து யாரோ ஒருவர் என்று எழுதுகிறீர்கள் - நண்பர்களாகத்தானே பழகுகிறோம் - முக மூடி தேவை இல்லையே - உங்கள் பதிவுகளில் யாராவது ஒருவர் மாட்டுவார் என்று தெரியும் - ஆனால் இன்றே நான் மாட்டுவேன் என்று நினைக்கவில்லை . என் பதிவுகளுக்கு "likes " போடும் உங்களுக்கு என்னை திட்டவும் உரிமை உள்ளது - ஆனால் ஒரு நகைச்சுவை உணர்ச்சியுடன் எழுதினதை " கொடுமை " என்று நீங்கள் சொன்னததுதான் "கொடுமை " - உங்களுக்கு அதிக நகைச்சுவை உணர்ச்சிகள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .உடையினில் வறுமை என்பதை பாரதி தன் வாழ்நாள் முழுவதும் கண்டவர் . நண்பர்களாக பழகும் இந்த திரியில் மறைமுகத்தை தவிர்க்க வேண்டுகிறேன் . உங்களுக்காக இந்த பாடல் என் அன்பளிப்பு
https://youtu.be/2jI17IGAtUI
சின்னக்கண்ணன் சார்,
உடையினில் வறுமை என்று காந்தியை சொல்கிறீர்களா அல்லது பாரதியாரை சொல்கிறீர்களா?. எனக்கென்னவோ பாரதியாரை கோட்டும் முண்டாசும் இல்லாமல் ஒரு படத்திலும் பார்த்ததாக நினைவில்லை. அவருக்கு உடையினில் வறுமையா?. சரி, ஆன்றோர்கள் சொல்லும்போது நம்பித்தான் ஆகணும்
//எனக்கு டெடிகேட் செய்தது போல வந்த 'சவாலே சமாளி' பாடல் ஆய்வு ரொம்ப ரொம்ப அருமை.//
:):)
//நீங்கள் ஓய்வெடுக்கப் போவதாக சொன்னதால் விஜயநிர்மலாவின் மற்ற பாடல்களான
'வாழைத்தண்டு போல உடம்பு அலேக்' (போட்டாச்சோ?)
'சந்திப்போமா இன்று சந்திப்போமா'
'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாகக'
'அம்மா கண்ணு சும்மா சொல்லு'
போன்ற பாடல்களைப் பற்றி கேட்கவே மாட்டேன்.//
நானும் தரவே மாட்டேன்.:):)